தேவனே தனித்துவமானவர் VII

தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார் (I)

தேவனுடைய அதிகாரம், தேவனுடைய நீதிக்குரிய மனநிலை மற்றும் தேவனுடைய பரிசுத்தம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்

உங்கள் ஜெபங்களை நீங்கள் முடித்தவுடன், தேவனுடைய முன்னிலையில் உங்கள் இருதயங்கள் அமைதியாக இருப்பதாக உணர்கின்றனவா? (ஆம்.) ஒரு மனிதனுடைய இருதயத்தை அமைதிப்படுத்த முடிந்தால், அவர்களால் தேவனுடைய வார்த்தையைக் கேட்கவும் புரிந்துக்கொள்ளவும் முடியும். அவர்களால் உண்மையைக் கேட்கவும் புரிந்துக்கொள்ளவும் முடியும். உன் இருதயத்தால் அமைதிகொள்ள முடியாவிட்டால், உன் இருதயம் எப்போதும் தடுமாறிக்கொண்டிருந்தால், அல்லது எப்போதும் மற்ற விஷயங்களையே நினைத்துக்கொண்டிருந்தால், தேவனுடைய வார்த்தையைக் கேட்க நீ கூட்டங்களில் கலந்துக்கொள்ளும்போது, அது உன்னைப் பாதிக்கும். நாம் விவாதித்து வரும் விஷயங்களின் கருப்பொருளில் என்ன இருக்கிறது? நாம் அனைவரும் முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாம். தேவனைத் தெரிந்துகொள்வது குறித்து, அவரது தனித்துவத்தைக் குறித்து, முதல் பகுதியில், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றி விவாதித்தோம். இரண்டாவது பகுதியில், தேவனுடைய நீதிக்குரிய மனநிலையைப் பற்றி விவாதித்தோம். மூன்றாம் பகுதியில், தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி விவாதித்தோம். ஒவ்வொரு முறையும் நாம் விவாதித்த குறிப்பிட்ட உள்ளடக்கமானது உங்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? முதல் பகுதியான, “தேவனுடைய அதிகாரம்,” உங்களிடம் எத்தகைய ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது? எந்தப் பகுதி உங்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது? (தேவன் முதலில் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்தினார். தேவன் அவருடைய வார்த்தையைப் போலவே நல்லவர். அவருடைய வார்த்தை சத்தியமாகிவிடும். இதுவே தேவனுடைய உள்ளார்ந்த சாராம்சம் ஆகும்.) (சாத்தானுக்கான தேவனுடைய கட்டளை என்னவென்றால், அது யோபுவை வெறுமனே சோதிக்க வேண்டும், அவனுடைய உயிரைப் பறிக்கக்கூடாது என்பதாகும். இதிலிருந்து தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தைக் காண்கிறோம்.) இதனுடன் சேர்க்க வேறு ஏதாவது இருக்கிறதா? (வானங்களையும் பூமியையும் அவற்றில் உள்ள அனைத்தையும் சிருஷ்டிக்க தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தினார். மனிதனுடன் ஓர் உடன்படிக்கை செய்வதற்கும், மனிதனுக்கு அவருடைய ஆசீர்வாதங்களை வழங்குவதற்கும் அவர் வார்த்தைகளைப் பேசினார். இவை அனைத்தும் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்துக்கான எடுத்துக்காட்டுகள். பின்னர், கர்த்தராகிய இயேசு லாசருவை அவனுடைய கல்லறையிலிருந்து வெளியேறும்படி எவ்வாறு கட்டளையிட்டார் என்று பார்த்தோம்—இது, ஜீவிதமும் மரணமும் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையும், ஜீவிதத்தையும் மரணத்தையும் கட்டுப்படுத்த சாத்தானுக்கு அதிகாரம் இல்லை என்பதையும், தேவனுடைய கிரியை மாம்சத்திலோ அல்லது ஆவியிலோ செய்யப்பட்டிருந்தாலும், அவருடைய அதிகாரம் தனித்துவமானது என்பதையும் இது காட்டுகிறது.) இந்த ஐக்கியத்தைக் கேட்டதினால் நீங்கள் பெற்ற புரிதல் இது. தேவனுடைய அதிகாரத்தைப் பற்றி பேசுகையில், “அதிகாரம்” என்ற வார்த்தையைப் பற்றிய உங்கள் புரிதல் என்னவாக இருக்கிறது? தேவனுடைய அதிகாரத்தின் எல்லைக்குள், தேவன் என்ன செய்கிறார் என்பதையும் எதை வெளிப்படுத்துகிறார் என்பதையும் ஜனங்கள் என்னவென்று பார்க்கிறார்கள்? (தேவனுடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் நாம் காண்கிறோம்.) (தேவனுடைய அதிகாரம் எப்போதும் இருப்பதையும் அது மெய்யாகவே இருப்பதையும் நாம் காண்கிறோம். தேவனுடைய அதிகாரம் சகலத்திற்கும் மேல் அவருடைய ஆதிக்கத்தில் பெரிய அளவில் இருப்பதைக் காண்கிறோம், மேலும் ஒவ்வொரு மனித ஜீவனையும் அவர் கட்டுப்படுத்தும்போது சிறிய அளவில் அதைப் பார்க்கிறோம். தேவன், உண்மையில் மனித ஜீவனின் ஆறு சந்திப்புகளைத் திட்டமிட்டு கட்டுப்படுத்துகிறார். மேலும், தேவனுடைய அதிகாரம் தேவனையே குறிக்கிறது, தனித்துவமானது, சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்தவொரு ஜீவஜந்துவும் அதைக் கொண்டிருக்கவில்லை. தேவனுடைய அதிகாரம் அவருடைய அந்தஸ்தின் அடையாளமாகும்.) “தேவனுடைய நிலை மற்றும் தேவனுடைய நிலைப்பாடு” பற்றிய உங்கள் புரிதல் ஓரளவு கோட்பாட்டு ரீதியானதாகத் தெரிகிறது. தேவனுடைய அதிகாரம் குறித்து உங்களிடம் தேவையான புரிதல் இருக்கிறதா? (நம் சிறு வயதிலிருந்தே தேவன் நம்மைக் கவனித்து நம்மைக் காத்து வருகிறார், அதில் தேவனுடைய அதிகாரத்தைக் காண்கிறோம். நம்மீது பதுங்கியிருக்கும் ஆபத்துகள் பற்றி நமக்குத் தெரியாது, ஆனால் தேவன் எப்போதும் திரைக்குப் பின்னால் நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார். இதுவும் தேவனுடைய அதிகாரம் தான்.) மிகவும் நல்லது. நன்றாகக் கூறினீர்.

தேவனுடைய அதிகாரத்தைப் பற்றி நாம் பேசும்போது, நமது முக்கியமான அம்சம் என்னவாக இருக்கிறது? இதைப் பற்றி நாம் ஏன் விவாதிக்க வேண்டும்? இதைப் பற்றி விவாதிப்பதன் முதல் நோக்கம் என்னவென்றால், சிருஷ்டிகராகிய தேவனுடைய அந்தஸ்தைப் பற்றியும், எல்லாவற்றிலும் அவருடைய நிலையைப் பற்றியும் ஜனங்களின் இருதயங்களில் நிறுவுவதாகும். இதைத்தான் ஜனங்கள் முதலில் தெரிந்துகொள்ளவும், பார்க்கவும், உணரவும் முடியும். நீ பார்ப்பதும் நீ உணருவதும், தேவனுடைய கிரியைகள், தேவனுடைய வார்த்தைகள் மற்றும் சகல விஷயங்கள் மீதான தேவனின் கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து வருபவை. எனவே, தேவனுடைய அதிகாரத்தின் மூலமாக ஜனங்கள் தாங்கள் பார்க்கும், கற்றுக் கொள்ளும் மற்றும் அறியும் எல்லாவற்றிலிருந்தும் இருந்து என்ன உண்மையான புரிதலை அடைகிறார்கள்? முதல் நோக்கம் குறித்து ஏற்கனவே விவாதித்தோம். இரண்டாவது, தேவன் செய்த மற்றும் சொன்ன மற்றும் கட்டுப்படுத்தும் எல்லாவற்றின் மூலமாக தேவனுடைய வல்லமையையும் ஞானத்தையும் ஜனங்கள் பார்க்க அனுமதிப்பதாகும். அதாவது எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதில் தேவன் எவ்வளவு வல்லமைவாய்ந்தவர், எவ்வளவு ஞானமுள்ளவர் என்பதைக் காண உன்னை அனுமதிப்பதாகும். தேவனுடைய தனித்துவமான அதிகாரம் பற்றிய நம்முடைய முந்தைய விவாதத்தின் மையமும் முக்கியமான கருத்தும் இதுவல்லவா? அந்த விவாதம் செய்து அதிக நேரம் ஆகவில்லை, ஆனால் உங்களில் சிலர் அதை மறந்துவிட்டார்கள். தேவனுடைய அதிகாரம் குறித்து ஆழமான புரிதலை நீங்கள் பெறவில்லை என்பதை அது நிரூபிக்கிறது. மனிதன் தேவனுடைய அதிகாரத்தைக் கண்டதில்லை என்று கூட சொல்லலாம். உங்களுக்கு இப்போது கொஞ்சம் புரிதல் இருக்கிறதா? தேவன் தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதை நீ காணும்போது, நீ உண்மையிலேயே என்ன உணர்கிறாய்? தேவனுடைய வல்லமையை நீ உண்மையிலேயே உணர்கிறாயா? (ஆம்.) அவர் எல்லாவற்றையும் எவ்வாறு சிருஷ்டித்தார் என்பதைப் பற்றிய அவருடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, அவருடைய வல்லமையை நீ உணர்கிறாய். அவருடைய சர்வ வல்லமையை நீ உணர்கிறாய். மனிதர்களுடைய தலைவிதி மீது தேவனுடைய ஆதிக்கத்தை நீ காணும்போது, நீ என்ன உணர்கிறாய்? அவருடைய வல்லமையையும் அவருடைய ஞானத்தையும் நீ உணர்கிறாயா? தேவன் இந்த வல்லமையைக் கொண்டிருக்கவில்லை என்றால், இந்த ஞானத்தை அவர் கொண்டிருக்கவில்லை என்றால், அவர் எல்லாவற்றின் மீதும் மனிதர்களுடைய தலைவிதியின் மீதும் ஆதிக்கம் செலுத்த தகுதியுடையவராக இருந்திருக்க முடியுமா? தேவன் வல்லமையையும் ஞானத்தையும் கொண்டிருக்கிறார். எனவே, அவருக்கு அதிகாரம் உண்டு. இது தனித்துவமானதாகும். எல்லா சிருஷ்டிப்புகளின் மத்தியில், தேவனைப் போன்ற வல்லமையுடைய ஒரு மனிதனை அல்லது ஜீவஜந்துவை நீ எப்போதாவது பார்த்ததுண்டா? வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும் யாராவது உள்ளனரா அல்லது ஏதாவது இருக்கின்றதா? எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கக்கூடிய, மனிதகுலத்தை ஆளக்கூடிய மற்றும் வழிநடத்தக்கூடிய யாராவது உள்ளனரா அல்லது ஏதாவது இருக்கின்றதா? (இல்லை, யாருமில்லை.) தேவனுடைய தனித்துவமான அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் இப்போது புரிந்துக்கொள்கிறீர்களா? இதைப் பற்றி இப்போது உங்களுக்கு கொஞ்சம் புரிதல் இருக்கிறதா? (ஆம்.) நாம் திரும்பிப் பார்த்த தேவனுடைய தனித்துவமான அதிகாரம் என்ற தலைப்பு இத்துடன் முடிகிறது.

இரண்டாவது பகுதியில், தேவனுடைய நீதிக்குரிய மனநிலையைப் பற்றி பேசினோம். இந்த தலைப்பில் நாம் அதிகம் விவாதிக்கவில்லை. ஏனென்றால், இந்தக் கட்டம், தேவனுடைய பணி முதன்மையாக நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையை உள்ளடக்கியதாக இருக்கிறது. ராஜ்யத்தின் யுகத்தில், தேவனுடைய நீதிக்குரிய மனநிலை தெளிவாகவும் விரிவாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. அவர் சிருஷ்டிப்பு காலத்திலிருந்து ஒருபோதும் பேசிடாத வார்த்தைகளைப் பேசியிருக்கிறார். அவருடைய வார்த்தைகளில் எல்லா ஜனங்களும், அவருடைய வார்த்தையைப் படித்து அனுபவிக்கும் அனைவரும் அவருடைய நீதிக்குரிய மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எனவே, தேவனுடைய நீதியுள்ள மனநிலையைப் பற்றிய நம்முடைய விவாதத்தின் முக்கியமான அம்சம் என்னவாக இருக்கிறது? நீங்கள் அதை ஆழமாகப் புரிந்துகொள்கிறீர்களா? அனுபவத்திலிருந்து அதைப் புரிந்துக்கொள்கிறீர்களா? (தேவன் சோதோமை எரித்தார். ஏனென்றால், அந்த நேரத்தில் ஜனங்கள் மிகவும் சீர்கெட்டு, தேவனுடைய கோபத்தைத் தூண்டினார்கள். இதிலிருந்து, நாம் தேவனுடைய நீதிக்குரிய மனநிலையைக் காண்கிறோம்.) முதலாவதாக, அதைப் பார்க்கையில்: தேவன் சோதோமை அழிக்கவில்லை என்றால், அவருடைய நீதிக்குரிய மனநிலையை உன்னால் அறிந்திருக்க முடியுமா? இன்னும் நீ அறிந்திருக்க மாட்டாய். ராஜ்யத்தின் யுகத்தில் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகளிலும், மனிதனை நோக்கிய அவருடைய நியாயத்தீர்ப்பிலும், சிட்சை மற்றும் சாபங்களிலும் இதை நீங்கள் காணலாம். நினிவேயை இரட்சித்ததில் தேவனுடைய நீதிக்குரிய மனநிலையைக் காண முடியுமா? (ஆம்.) தற்போதைய யுகத்தில், ஜனங்கள் தேவனுடைய தயை, அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் காணலாம். மனிதனுடைய மனந்திரும்புதலைப் பின்பற்றும் தேவனுடைய உள்ளத்தின் மாற்றத்திலும் ஜனங்கள் அதைக் காணலாம். தேவனுடைய நீதியுள்ள மனநிலை பற்றிய நமது விவாதத்தைத் தொடங்கி வைக்க இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளையும் சொல்லியுள்ள நிலையில், அவருடைய நீதிக்குரிய மனநிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதாகக் காண்பது மிகவும் தெளிவாக உள்ளது. ஆயினும் உண்மையில், தேவனுடைய நீதியுள்ள மனநிலையின் சாராம்சம் இந்த இரண்டு வேதாகமக் கதைகளிலும் வெளிப்படுத்தப்பட்ட காரியங்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. தேவனுடைய வார்த்தையிலும் அவருடைய கிரியையிலும் நீங்கள் கற்றுக்கொண்ட, பார்த்த மற்றும் அனுபவித்தவற்றிலிருந்து, உங்கள் கண்ணோட்டத்தில் தேவனுடைய நீதிக்குரிய மனநிலை என்னவாக இருக்கிறது? உங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து பேசுங்கள். (தேவன் ஜனங்களுக்காகப் படைத்த சூழல்களில், ஜனங்கள் சத்தியத்தைத் தேடவும், தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப செயல்படவும் இயலும் போது, தேவன் அவர்களுக்கு வழிகாட்டுகிறார், அவர்களுக்கு அறிவூட்டுகிறார் மற்றும் அவர்கள் இருதயங்களில் தெளிவாக உணர அவர்களுக்கு உதவுகிறார். ஜனங்கள் தேவனுக்கு எதிராகச் சென்று அவரை எதிர்க்கும்போது அவருடைய சித்தத்தின்படி செயல்படாதபோது, தேவன் அவர்களைக் கைவிட்டதைப் போன்ற பெரும் இருள் அவர்களுக்குள் இருக்கும். அவர்கள் ஜெபிக்கும்போது கூட, அவரிடம் என்ன சொல்வது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களையும் கற்பனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தேவனுடன் ஒத்துழைக்கத் தயாராகி, தங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்போது, அவர்கள் படிப்படியாக தேவனுடைய சிரித்த முகத்தைக் காண முடிகிறது. இதிலிருந்து தேவனுடைய நீதிக்குரிய மனநிலையின் பரிசுத்தத்தை நாம் அனுபவிக்கிறோம். தேவன் பரிசுத்த ராஜ்யத்தில் தோன்றுகிறார். ஆனால் தூய்மையற்ற இடங்களில் அவர் தன்னை மறைக்கிறார்.) (தேவனுடைய நீதிக்குரிய மனநிலையை ஜனங்களை அவர் நடத்தும் விதத்தில் நான் காண்கிறேன். நம்முடைய சகோதர சகோதரிகள் அந்தஸ்திலும் திறமையிலும் வித்தியாசமாக இருக்கிறார்கள். நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தேவன் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பு வேறுபடுகிறது. நாம் அனைவராலும் தேவனுடைய அறிவொளியைப் பல்வேறு அளவுகளில் பெற முடிகிறது. இதில், தேவனுடைய நீதியை நான் காண்கிறேன். ஏனென்றால், மனிதர்களாகிய நாம் மனிதனை இவ்வாறு நடத்தும் திறன் கொண்டவர்கள் அல்ல. ஆனால் தேவன் நடத்துகிறார்.) இப்போதும், நீங்கள் அனைவரும் வெளிப்படுத்த வேண்டிய சில நடைமுறை அறிவு உள்ளது.

தேவனுடைய நீதியுள்ள மனநிலையைப் புரிந்துக்கொள்வதற்கான அறிவு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த தலைப்பைப் பொறுத்தவரையில் அனுபவத்திலிருந்து பல விஷயங்கள் கூறப்படலாம். ஆனால் முதலில் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. தேவனுடைய நீதியுள்ள மனநிலையைப் புரிந்துக்கொள்ள, ஒருவர் முதலில் தேவனுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள வேண்டும்: அவர் எதை வெறுக்கிறார், எதை அருவருக்கிறார், எதை நேசிக்கிறார், யாரிடம் அவர் சகிப்புத்தன்மையுடனும் தயவுடனும் இருக்கிறார் மற்றும் எந்த வகையான மனிதருக்கு அவர் அந்தத் தயவை வழங்குகிறார் என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். இது ஒரு முக்கியமான விஷயம் ஆகும். தேவன் எவ்வளவு அன்பானவராக இருந்தாலும், அவர் ஜனங்கள் மீது எவ்வளவு தயவு மற்றும் அன்பு வைத்திருந்தாலும், தேவன் தனது அந்தஸ்தையும் நிலையையும் புண்படுத்தும் எவரையும் சகித்துக்கொள்வதில்லை. அவருடைய கௌரவத்தை புண்படுத்தும் எவரையும் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதையும் ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். தேவன் ஜனங்களை நேசிக்கிறார் என்றாலும், அவர் அவர்களைப் பற்றிக்கொள்வதில்லை. தம் ஜனங்களுக்கு அவருடைய அன்பையும், தயவையும், சகிப்புத்தன்மையையும் தருகிறார். ஆனால் அவர் அவர்களை ஒருபோதும் அதிகப்படியாகப் பாதுகாப்பதில்லை. தேவனுக்கென கொள்கைகளும் வரம்புகளும் உள்ளன. தேவனுடைய அன்பை நீ எவ்வளவு உணர்ந்திருந்தாலும், அந்த அன்பு எவ்வளவு ஆழமாக இருந்தாலும், நீ மற்றவரை நடத்துவது போல தேவனை ஒருபோதும் நடத்தக்கூடாது. தேவன் ஜனங்களை மிகவும் நெருக்கமானவர்களாக நடத்துகிறார் என்பது உண்மைதான் என்றாலும், ஒரு மனிதர் தேவனை இன்னொரு மனிதராகக் கருதினால், அவரை மற்றொரு சிருஷ்டியைப் போல, ஒரு நண்பர் அல்லது வழிபாட்டுப் பொருளைப் போலக் கருதினால், தேவன் தம் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்து அவர்களைக் கைவிடுவார். இது அவருடைய மனநிலையாகும். ஜனங்கள் இந்தச் சிக்கலை மறக்கக்கூடாது. ஆகவே, தேவனுடைய மனநிலையைப் பற்றி தேவன் பேசியது போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி காண்கிறோம்: நீ எத்தனை பாதைகளில் பயணித்தாய், எவ்வளவு கிரியை செய்தாய் அல்லது எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாய் என்பது முக்கியமல்ல, தேவனுடைய மனநிலையை நீ புண்படுத்தியவுடன், நீ செய்ததை அடிப்படையாகக் கொண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் அவர் பதில் செய்வார். இதன் அர்த்தம் என்னவென்றால், தேவன் ஜனங்களை மிகவும் நெருக்கமானவர்களாக நடத்துகிறார். ஆனால் ஜனங்களோ தேவனை ஒரு நண்பராகவோ அல்லது உறவினராகவோ கருதக்கூடாது. தேவனை உங்கள் “நண்பன்” என்று அழைக்காதிருங்கள். அவரிடமிருந்து நீ எவ்வளவு அன்பைப் பெற்றிருந்தாலும், அவர் உனக்கு எவ்வளவு சகிப்புத்தன்மையைக் கொடுத்தாலும், நீ ஒருபோதும் தேவனை உன் நண்பராகக் கருதக்கூடாது. இது தேவனுடைய நீதியுள்ள மனநிலையாகும். உனக்கு புரிகிறதா? இதைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டுமா? இந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதேனும் முன் புரிதல் இருக்கிறதா? பொதுவாகச் சொல்வதானால், கோட்பாடுகளை அவர்கள் புரிந்துக்கொள்கிறார்களா அல்லது இந்த பிரச்சினையைப் பற்றி அவர்கள் ஒருபோதும் சிந்திக்கவில்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இது, ஜனங்கள் செய்வதற்கு எளிதான தவறாக இருக்கிறது. ஜனங்கள் தேவனைப் புண்படுத்தும் போது, அது ஒரு நிகழ்வாக அல்லது அவர்கள் சொன்ன ஒரு விஷயத்தின் காரணமாக இருக்கலாம் என்றல்ல, மாறாக அவர்கள் வைத்திருக்கும் அணுகுமுறை மற்றும் அவர்கள் இருக்கும் ஒரு நிலையின் காரணமாக இருக்கலாம். இது மிகவும் பயமுறுத்தும் விஷயம் ஆகும். சிலர் தேவனைப் புரிந்துகொள்கிறார்கள் என்றும், அவரைப் பற்றி அவர்களுக்குக் கொஞ்சம் அறிவு இருக்கிறது என்றும், அவர்களால் தேவனை திருப்திப்படுத்தும் சில காரியங்களைச் செய்யக்கூடும் என்றும் சிலர் நம்புகிறார்கள். அவர்கள் தங்களை தேவனுக்குச் சமமாக உணரத் தொடங்குகிறார்கள். அவர்கள் தங்களை தேவனுடைய நட்பைப் போல புத்திசாலித்தனமாகக் கையாண்டிருக்கிறார்கள். இந்த வகையான உணர்வுகள் மிகவும் தவறானவையாகும். இதைப் பற்றி உனக்கு ஆழமான புரிதல் இல்லையென்றால்—இதை நீ தெளிவாகப் புரிந்துக்கொள்ளாவிட்டால்—நீ தேவனை மிக எளிதாக புண்படுத்துவாய், அவருடைய நீதியுள்ள மனநிலையை புண்படுத்துவாய். இதை நீ இப்போது புரிந்துக்கொண்டாய், அல்லவா? தேவனுடைய நீதியுள்ள தன்மை, தனித்துவமானது அல்லவா? அது எப்போதாவது ஒரு மனிதனுடைய தன்மைக்குச் சமமானதாகவோ, தார்மீக நிலைப்பாடாகவோ இருக்க முடியுமா? அதனால் ஒருபோதும் அவ்வாறு இருக்க முடியாது. ஆகவே, நீ அதை மறக்கக்கூடாது, தேவன் ஜனங்களை எவ்வாறு நடத்துகிறார் அல்லது அவர் ஜனங்களை எவ்வாறு கருதுகிறார் என்பது முக்கியமல்ல. தேவனுடைய நிலை, அதிகாரம் மற்றும் அந்தஸ்து எப்போதும் மாறாது. மனிதகுலத்தைப் பொறுத்தவரையில், தேவன் எப்போதும் எல்லாவற்றிற்கும் ஆண்டவராகவும், சிருஷ்டிகராகவும் இருக்கிறார்.

தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி நீங்கள் எதைக் கற்றுக்கொண்டீர்கள்? “தேவனுடைய பரிசுத்தம்” பற்றிய அந்த பகுதியில், சாத்தானின் துன்மார்க்கம் ஒரு பிரதிபலிப்புப் படலமாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையைத் தவிர, தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய நம்முடைய விவாதத்தின் முக்கியமான உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது? தேவனும், தேவனிடம் இருப்பதும் அல்லவா? தேவனும், தேவனிடம் இருப்பதும் தனித்துவமானது அல்லவா? (ஆம்.) இது படைக்கப்பட்ட மனிதர்களிடம் இல்லை. இதனால் தான் தேவனுடைய பரிசுத்தம் தனித்துவமானது என்று நாம் கூறுகிறோம். இது நீங்கள் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றாகும். தேவனுடைய பரிசுத்தம் என்ற தலைப்பில் நாம் மூன்று கூட்டங்களை நடத்தினோம். தேவனுடைய பரிசுத்தம் என்று நீங்கள் நம்புவதை உங்கள் சொந்த வார்த்தைகளில், உங்கள் சொந்த புரிதலுடன் விவரிக்க முடியுமா? (தேவன் கடைசியாக நம்முடன் தொடர்புகொண்டபோது நாம் அவருக்கு முன்பாக பணிந்து வணங்கினோம். பணிந்து குனிந்து அவரை ஆராதிப்பதைக் குறித்து தேவன் நமக்கு சத்தியத்தை ஐக்கியங்கொண்டார். அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்பு அவரை பணிந்து ஆராதிப்பது அவருடைய விருப்பத்திற்கு இணங்கவில்லை என்பதை நாம் கண்டோம். இதிலிருந்து நாம் தேவனுடைய பரிசுத்தத்தைக் கண்டோம்.) இது மிகவும் உண்மை. வேறு ஏதேனும் உள்ளதா? (மனிதகுலத்திற்கான தேவனுடைய வார்த்தைகளில், அவர் சாதாரணமாகவும் தெளிவாகவும் பேசுவதைக் காண்கிறோம். அவர் நேராகவும் துல்லியமாகவும் பேசுகிறார். சாத்தான் சுற்றிவளைத்து பேசுகிறது. அது பொய்கள் நிறைந்தது. கடந்த முறை நாம் தேவனுக்கு முன்பாக மண்டியிட்டபோது, அவருடைய வார்த்தைகளும் அவருடைய கிரியைகளும் எப்போதும் கொள்கை ரீதியானவை என்பதைக் கண்டோம். நாம் எவ்வாறு செயல்பட வேண்டும், எப்படி கவனிக்க வேண்டும், எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர் சொல்லும்போது அவர் எப்போதும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கிறார். ஆனால் ஜனங்களோ அந்த வழியில் இல்லை. மனிதகுலத்தின் கேடு சாத்தானுடையது என்பதால், அவர்கள் தங்கள் சொந்த நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் மற்றும் அவர்களின் சொந்த விருப்பங்களை மனதில் கொண்டு செயல்பட்டுப் பேசுகிறார்கள். மனிதகுலத்தை தேவன் கவனித்துக்கொள்வது மற்றும் பாதுகாப்பது என அதுமுதல், தேவன் செய்கிற அனைத்தும் நேர்மறையாகவும் தெளிவாகவும் இருப்பதைக் காண்கிறோம். இவ்வாறுதான் தேவனுடைய பரிசுத்தத்தின் சாராம்சம் வெளிப்படுவதைக் காண்கிறோம்.) நன்றாகச் சொல்லப்பட்டது! வேறு யாராவது எதையேனும் சேர்க்க விரும்புகிறீர்களா? (சாத்தானின் தீய சாராம்சத்தை தேவன் வெளிப்படுத்தியதன் மூலம், தேவனுடைய பரிசுத்தத்தை நாம் காண்கிறோம். சாத்தானின் தீமையைப் பற்றி நாம் அதிக அறிவைப் பெறுகிறோம். மனிதகுலத்தின் துன்பத்தின் மூலத்தைக் காண்கிறோம். கடந்த காலங்களில், சாத்தானின் களத்தின் கீழ் இருக்கும் மனிதனுடைய துன்பங்களை நாங்கள் அறியாமல் இருந்தோம். தேவன் வெளிப்படுத்திய பிறகுதான் புகழ் மற்றும் செல்வத்தைத் தேடுவதால் வரும் துன்பங்கள் அனைத்தும் சாத்தானுடைய கிரியை என்பதை நாங்கள் அறிந்தோம். அப்போதுதான் தேவனுடைய பரிசுத்தமே மனிதகுலத்தின் உண்மையான இரட்சிப்பு என்று நாங்கள் உணர்ந்தோம்.) அதில் வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமா? (கேடு நிறைந்த மனிதகுலத்திற்கு தேவனைப் பற்றிய உண்மையான அறிவும் அன்பும் இல்லை. ஏனென்றால், தேவனுடைய பரிசுத்தத்தின் சாராம்சம் நமக்குப் புரியவில்லை. ஏனென்றால், அவருக்கு முன்பாக நாம் விழுந்து ஆராதனையில் அவரை வணங்கும்போது தூய்மையற்ற எண்ணங்கள் மற்றும் வெளிப்புற நோக்கங்கள் மற்றும் காரணங்களுடன் அவ்வாறு செய்கிறோம். தேவன் அதிருப்தி அடைகிறார். தேவன் சாத்தானிடமிருந்து வேறுபட்டவர் என்பதை நாம் காணலாம். ஜனங்கள் சாத்தானை வணங்குவதற்கும், புகழ்வதற்கும், அதன் முன் மண்டியிடுவதற்கும், ஆராதிப்பதற்கும் தலைவணங்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். சாத்தானுக்கு எந்தக் கொள்கைகளும் இல்லை. இதிலிருந்தும், தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன்.) மிகவும் நன்று! தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி இப்போது நாம் பேசியுள்ளோம். தேவனுடைய பரிபூரணத்தை நீங்கள் காண்கிறீர்களா? எல்லா நேர்மறையான விஷயங்களுக்கும் தேவன் எவ்வாறு ஆதாரமாக இருக்கிறார் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? தேவன் எவ்வாறு சத்தியத்தின் மற்றும் நீதியின் உருவகமாக இருக்கிறார் என்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? தேவன் எப்படி அன்பின் மூலமாக இருக்கிறார் என்று பார்க்கிறீர்களா? தேவன் செய்கிற அனைத்தும், அவர் தெரியப்படுத்தும் அனைத்தும், அவர் வெளிப்படுத்தும் அனைத்தும் குறைபாடற்றவை என்பதை நீங்கள் காண்கிறீர்களா? (நாங்கள் காண்கிறோம்.) தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி நான் கூறியவற்றின் முக்கியமான காரியங்கள் இவை. இன்று, இந்த வார்த்தைகள் உங்களுக்கு வெறும் கோட்பாடு போல் தோன்றலாம், ஆனால் ஒரு நாள், உண்மையான தேவனை அவருடைய வார்த்தையிலிருந்தும் அவருடைய கிரியையிலிருந்தும் நீ அனுபவித்து சாட்சி அளிக்கும்போது, தேவன் பரிசுத்தர் என்று, மனிதர்களிடமிருந்து தேவன் வேறுபடுகிறார் என்று, அவருடைய இருதயம், தன்மை மற்றும் சாராம்சம் அனைத்தும் பரிசுத்தமானவை என்று உன் இருதயத்தின் ஆழத்தில் இருந்து கூறுவாய். இந்தப் பரிசுத்தம் தேவனுடைய பரிபூரணத்தைக் காணவும், தேவனுடைய பரிசுத்தத்தின் சாரம் மாசற்றது என்பதைக் காணவும் மனிதனை அனுமதிக்கிறது. அவருடைய பரிசுத்தத்தின் சாராம்சமானது அவர்தாமே தனித்துவமான தேவனாக இருக்கிறார் என்பதை மனிதன் தீர்மானிக்கிறது, அதோடு கூட அவர் தான் தனித்துவமான தேவன் என்பதை நிரூபிக்கவும் பார்க்கவும் மனிதனை அனுமதிக்கிறது. இது முக்கியமான கருத்து அல்லவா? (ஆம். இது முக்கியமான கருத்துதான்.)

முந்தைய அமர்வுகளிலிருந்து பல தலைப்புகளின் கண்ணோட்டத்தை இன்று நாம் நடத்தியுள்ளோம். இதில் இன்றைய கண்ணோட்டம் முடிகிறது. ஒவ்வொரு தலைப்பு மற்றும் தலைப்பின் முக்கியமான புள்ளிகளை நீங்கள் அனைவரும் மனதில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அவற்றை வெறும் கோட்பாடாக நினைக்க வேண்டாம். உங்களுக்குச் சிறிது ஓய்வு நேரம் இருக்கும்போது, அவற்றைப் படித்துச் சிந்தித்துப் பாருங்கள். அவற்றை உங்கள் இருதயத்தில் நினைவில் வைத்து அவற்றை நிஜத்துக்கு கொண்டு வாருங்கள்—அப்போது தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்துவதையும், தேவன் மற்றும் தேவனிடம் இருப்பதை வெளிப்படுத்துவதையும், வெளிக்காட்டுவதன் யதார்த்தத்தைப் பற்றி நான் கூறிய அனைத்தையும் நீ உண்மையிலேயே அனுபவிப்பாய். இருப்பினும், நீ அவற்றை உன் குறிப்பேட்டில் மட்டும் குறிப்பிட்டு, அவற்றைப் படிக்காமல் விட்டால் அல்லது அவற்றைப் பற்றிச் சிந்திக்காமல் விட்டுவிட்டால், அவற்றை ஒருபோதும் உனக்காகப் பெறமாட்டாய். உனக்கு இப்போது புரிகிறது, அல்லவா? இந்த மூன்று தலைப்புகளில் பேசிய பிறகு, ஜனங்கள் ஒரு பொதுவானதை—அல்லது குறிப்பிட்டதைப்—பெற்றவுடன் தேவனுடைய நிலை, சாராம்சம் மற்றும் மனநிலையைப் புரிந்துகொள்வதும், தேவனைப் பற்றிய அவர்களின் புரிதலும் முழுமையாகுமா? (இல்லை.) இப்போது, தேவனைப் பற்றிய உங்கள் சொந்தப் புரிதலில், உங்களுக்கு ஆழமான புரிதல் தேவை என்று நீங்கள் நினைக்கும் வேறு ஏதேனும் பகுதிகள் இருக்கிறதா? அதாவது, இப்போதும் நீ தேவனுடைய அதிகாரம், அவருடைய நீதியுள்ள தன்மை மற்றும் அவருடைய பரிசுத்தத்தைப் பற்றிய புரிதலைப் பெற்றுள்ளாய். அவருடைய தனித்துவமான அந்தஸ்தும் நிலையும் உன் மனதில் நிலைபெற்றுள்ளன. ஆயினும், உன் சொந்த அனுபவத்தின் மூலம் அவருடைய கிரியைகள், அவருடைய வல்லமை மற்றும் அவருடைய சாராம்சத்தைப் பற்றிய உன் அறிவைப் பார்ப்பது, புரிந்துகொள்வது மற்றும் ஆழப்படுத்துவது இன்னமும் உள்ளது. இப்போது நீங்கள் இந்த அமர்வுகளைக் கேட்டிருக்கிறீர்கள். உங்கள் இருதயங்களில் விசுவாசத்தின் கட்டுரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிறுவப்பட்டுள்ளது: தேவன் உண்மையிலேயே இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார் என்பது உண்மையாகும். அவருடைய நீதியுள்ள மனநிலையை யாரும் புண்படுத்தக்கூடாது. அவருடைய பரிசுத்தமானது யாரும் கேள்வி கேட்காத ஓர் உறுதியாகும். இவை உண்மைகள். இந்த அமர்வுகள் மனிதனுடைய இருதயங்களில் ஓர் அடித்தளமாக தேவனுடைய அந்தஸ்தையும் நிலையையும் வைத்திருக்க அனுமதிக்கின்றன. இந்த அடித்தளம் நிறுவப்பட்டதும், ஜனங்கள் மேலும் புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

கதை 1: ஒரு விதை, இந்த பூமி, ஒரு மரம், அந்தச் சூரிய ஒளி, பறவைகள் மற்றும் மனிதன்

இன்று நான் உங்களுடன் ஒரு புதிய தலைப்பைப் பற்றி பேசுவேன். அதன் தலைப்பு என்னவாக இருக்கிறது? அதன் தலைப்பு: “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்.” இந்தத் தலைப்பு சற்றுப் பெரியதாக இருக்கிறதா? இது, உங்கள் வரம்பிற்குச் சிறிதளவில் அப்பாற்பட்டு இருப்பதாக உணர்கிறிர்களா? “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்”—இந்தத் தலைப்பு ஜனங்களால் புரிந்துகொள்ள இயலாததாகத் தோன்ற க்கூடும். ஆனால் தேவனைப் பின்பற்றுபவர்களால் இது புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால், இது தேவனைப் பற்றிய ஒவ்வொரு மனிதனுடைய அறிவுடனும், அவர்களுடைய திருப்தி அடையக்கூடிய மற்றும் வணங்கும் திறனுடனும் பிரிக்கமுடியாத வகையில் இணைந்துள்ளது. அதனால்தான் இந்தத் தலைப்பைப் பற்றி நான் பேசப் போகிறேன். இந்தத் தலைப்பைப் பற்றி ஜனங்களுக்கு எளிமையான, முன் புரிதல் இருப்பது சாத்தியம், அல்லது அவர்கள் அதை ஏதேனும் ஒரு மட்டத்தில் அறிந்திருக்கலாம். இந்த அறிவு அல்லது விழிப்புணர்வு, சிலரின் மனதில், எளிமையான அல்லது ஆழமற்ற புரிதலுடன் இருக்கலாம். மற்றவர்கள் தங்கள் இருதயத்தில் இந்த தலைப்புடன் ஆழ்ந்த, தனிப்பட்ட தொடர்புக்கு இட்டுச் செல்லும் சில சிறப்பான அனுபவங்களை அனுபவித்திருக்கலாம். ஆனால் அத்தகைய முன் அறிவு, ஆழமானதாக இருந்தாலும், மேலோட்டமாக இருந்தாலும், ஒருதலைப்பட்சமாக இருக்கிறது மற்றும் அது போதுமானதாக இல்லை. எனவே, இதனால்தான், நீங்கள் ஆழ்ந்த மற்றும் குறிப்பிட்ட புரிதலைப் பெறும்படியாக உங்களுக்கு உதவ நான் இந்தத் தலைப்பை அமர்வுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன். இந்தத் தலைப்பைப் பற்றி உங்களுடன் பேச ஒரு சிறப்பு முறையைப் பயன்படுத்துவேன். நாம் முன்பு பயன்படுத்தாத ஒரு முறை ஆகும். உங்களுக்குச் சற்று அசாதாரணமானதாகவோ அல்லது சற்று அசௌகரியமாகவோ இருக்கலாம். பின்னர் நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரிய வரும். உங்களுக்கு கதைகள் பிடிக்குமா? (எங்களுக்குப் பிடிக்கும்.) சரி, எனது விருப்பமான கதைகளைச் சொல்வது ஒரு நல்ல விஷயமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் அவற்றை மிகவும் விரும்புகிறீர்கள். இப்போது, தொடங்கலாம். நீங்கள் குறிப்புகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். உங்கள் சுற்றுப்புறங்கள் அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களால் நீங்கள் திசைதிருப்பப்படலாம் என்று நினைத்தால் நீங்கள் கண்களை மூடிக்கொள்ளலாம். உங்களுக்குச் சொல்ல ஓர் அருமையான கதை இருக்கிறது. இது ஒரு விதை, இந்த பூமி, ஒரு மரம், அந்தச் சூரிய ஒளி, பறவைகள் மற்றும் மனிதனைப் பற்றிய கதை. அதன் முக்கியமான கதாபாத்திரங்கள் யார்? (ஒரு விதை, இந்த பூமி, ஒரு மரம், அந்தச் சூரிய ஒளி, பறவைகள் மற்றும் மனிதன்.) தேவன் அவர்களில் ஒருவரா? (இல்லை.) அப்படியிருந்தும், இந்தக் கதையை நீங்கள் கேட்டவுடன் நீங்கள் புத்துணர்ச்சியையும் திருப்தியையும் பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்போது, தயவுசெய்து அமைதியாகக் கேளுங்கள்.

ஒரு சிறிய விதை பூமியில் விழுந்தது. ஒரு பெரிய மழை பெய்தது. விதையிலிருந்து ஒரு மென்மையான முளை வளர்ந்தது. அதே நேரத்தில் அதன் வேர்கள் கீழே உள்ள மண்ணில் மெதுவாக ஆழ்ந்து சென்றன. நேரம் செல்ல முளை வளர்ந்தது. கொடூரமான காற்று மற்றும் கடுமையான மழையைத் தாங்கி, சந்திரன் வளர்வதும் தேய்வதும் என பருவங்கள் மாறுவதையும் கண்டது. கோடையில், பூமியானது தண்ணீரின் பரிசுகளை வழங்கியது. இதனால் முளைப் பருவத்தின் வெப்பத்தை தாங்கியது. பூமியின் காரணமாக, முளை வெப்பத்தால் அவியவில்லை. இவ்வாறு கோடை வெப்பத்தின் மோசமான நிலை கடந்து சென்றது. குளிர்காலம் வந்தபோது, பூமி அதன் சூடான அரவணைப்பில் முளைகளை மூடியது. பூமியும் முளைகளும் ஒன்றையொன்று இறுக்கமாகப் பிடித்தன. பூமி முளைகளை வெப்பமாக்கியது. இதனால் அது பருவத்தின் கடினமான குளிரிலிருந்து தப்பித்தது. குளிர்காலம் மற்றும் பனிப்புயல்களால் அது பாதிக்கப்படவில்லை. பூமியால் அடைக்கலம் பெற்ற முளை தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் வளர்ந்தது. பூமியால் தன்னலமின்றி வளர்க்கப்பட்டு, அது ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர்ந்தது. மழையில் பாடுவது, நடனம் ஆடுவது மற்றும் காற்றில் பறப்பது என அது மகிழ்ச்சியுடன் வளர்ந்தது. முளையும் பூமியும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன …

ஆண்டுகள் கடந்துவிட்டன. முளை ஓர் உயர்ந்த மரமாக வளர்ந்தது. அது பூமியில் வலுவாக நின்றது. எண்ணற்ற இலைகளால் தடித்த கிளைகள் இருந்தன. மரத்தின் வேர்கள் முன்பிருந்ததைப் போலவே இன்னும் பூமியில் ஆழமாக சென்றன. இப்போது அவை கீழே உள்ள மண்ணில் ஆழமாக பதிந்தன. ஒரு காலத்தில் சிறிய முளைகளைப் பாதுகாத்த பூமி, இப்போது ஒரு வலிமையான மரத்திற்கு அடித்தளமாக இருந்தது.

மரத்தின் மீது சூரிய ஒளியின் கதிர் பிரகாசித்தது. மரம் அதன் உடலைத் தூக்கி, கைகளை அகலமாக நீட்டி, சூரிய ஒளியில் நன்றாக சுவாசித்தது. கீழே உள்ள தரை மரத்துடன் சேர்ந்து நேரத்தைச் சுவாசித்தது. பூமி புதுப்பிக்கப்பட்டதாக உணர்ந்தது. அப்போது தான், கிளைகளிலிருந்து ஒரு புதிய காற்று வீசியது. மரம் மிகுந்த ஆற்றலுடன் சிலிர்த்து மகிழ்ச்சியில் ஆடியது. மரமும் சூரிய ஒளியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன …

ஜனங்கள் மரத்தின் குளிர்ந்த நிழலில் அமர்ந்து விறுவிறுப்பான, மணம் நிறைந்த காற்று வீச படுத்துகொண்டனர். காற்று அவர்களின் இருதயங்களையும் நுரையீரலையும் சுத்தப்படுத்தியது. அது அவர்களுக்குள் இருந்த இரத்தத்தை சுத்தப்படுத்தியது. அவர்களின் உடல்கள் அதன் பின் விறைத்தோ கட்டுப்படுத்தப்பட்டோ இல்லை. ஜனங்களும் மரமும் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கின்றனர் …

மரத்தின் கிளைகளில் சிறிய பறவைகளின் கூட்டம் இருந்தது. ஒரு வேட்டையாடலைத் தவிர்ப்பதற்காகவோ, அல்லது தங்கள் குஞ்சுகளை பெறவோ அல்லது வளர்க்கவோ அவை அங்கு இறங்கியிருக்கலாம், அல்லது சிறிது நேரம் ஓய்வெடுருக்க அவை அங்கு இறங்கியிருக்கலாம். பறவைகளும் மரமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன …

மரத்தின் முறுக்கப்பட்ட மற்றும் சிக்கலான வேர்கள், பூமியில் ஆழமாகச் சென்றன. அதன் தண்டால், அது பூமியைக் காற்று மற்றும் மழையிலிருந்து மறைத்தது. பூமியை அதன் கால்களுக்குக் கீழே பாதுகாக்க அது தனது கால்களை நீட்டியது. பூமி அதன் தாய் என்பதால் மரம் அவ்வாறு செய்தது. அவை ஒன்றையொன்று பலப்படுத்தி, ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. அவற்றை ஒருபோதும் பிரிக்க முடியாது …

இவ்வாறு, அந்தக் கதை முடிகிறது. நான் சொன்ன கதை ஒரு விதை, இந்த பூமி, ஒரு மரம், அந்தச் சூரிய ஒளி, பறவைகள் மற்றும் மனிதனைப் பற்றியது. அதில் சில காட்சிகள் மட்டுமே இருந்தன. அது என்ன உணர்வுகளை உங்களுக்கு விட்டுச் சென்றது? நான் இவ்வாறு பேசும்போது, நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? (எங்களுக்குப் புரிகிறது.) தயவுசெய்து, உங்கள் உணர்வுகளைப் பற்றி பேசுங்கள். இந்தக் கதையைக் கேட்ட பிறகு உங்களுக்கு என்ன தோன்றியது? கதையின் அனைத்துக் கதாபாத்திரங்களையும் காணலாம் மற்றும் தொடலாம் என்று நான் முதலில் உங்களுக்குச் சொல்வேன். அவை உண்மையான விஷயங்கள், உருவகங்கள் அல்ல. நான் சொன்னதை நீங்கள் கருத்தில் கொள்ள விரும்புகிறேன். என் கதைக்குள் எதுவும் இல்லை. அதன் முக்கியமான விஷயங்களைக் கதையின் சில வாக்கியங்களில் வெளிப்படுத்த முடியும். (நாம் கேட்ட கதை ஓர் அழகான படத்தை வரைகிறது. ஒரு விதை ஜீவிதத்துக்கு வருகிறது, அது வளரும்போது, அது ஆண்டின் நான்கு பருவங்களை அனுபவிக்கிறது: வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் ஆகும். முளைக்கும் விதையை ஒரு தாயைப் போலவே பூமி வளர்க்கிறது. குளிர்காலத்தில் அது முளையை வெப்பமடையச் செய்கிறது. இதனால் அது குளிர்ச்சியைத் தக்கவைக்கும். முளை ஒரு மரமாக வளர்ந்த பிறகு, சூரிய ஒளியின் கதிர் அதன் கிளைகளைத் தொட்டு, மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தேவனுடைய சிருஷ்டிப்பின் மத்தியில், பூமியும் உயிருடன் இருப்பதையும், அதுவும் மரமும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதையும் நான் காண்கிறேன். மரத்தின் மீது சூரிய ஒளி அளிக்கும் மிகுந்த அரவணைப்பையும் நான் காண்கிறேன். பறவைகள், பொதுவான உயிரினங்கள் இருந்தாலும், மரம் மனிதர்களுடன் ஒன்றுபடுவதை நான் காண்கிறேன். இந்தக் கதையை நான் கேட்டபோது என் இருதயத்தில் இருந்த உணர்வுகள் இவை. இந்த விஷயங்கள் அனைத்தும் உண்மையில் உயிருடன் இருப்பதை நான் உணர்கிறேன்.) நன்றாகக் கூறினார்! யாரேனும் எதையேனும் சேர்க்க விரும்புகிறீர்களா? (ஒரு விதை முளைத்து, ஒரு உயர்ந்த மரமாக வளர்ந்து வரும் இந்த கதையில், தேவனுடைய சிருஷ்டிப்பின் அதிசயத்தை நான் காண்கிறேன். தேவன் எல்லாவற்றையும் வலுப்படுத்தி ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்கச் செய்வதையும், எல்லாவற்றையும் இணைத்து ஒருவருக்கொருவர் சேவைச் செய்வதையும் நான் காண்கிறேன். தேவனுடைய ஞானம், அவருடைய அதிசயம், மற்றும் தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார் என்பதையும் நான் காண்கிறேன்.)

நான் இப்போது பேசியது எல்லாம் நீங்கள் முன்பு பார்த்த ஒரு விஷயம் ஆகும். விதைகள், உதாரணமாக—அவை மரங்களாக வளர்கின்றன, இந்தச் செயல்முறையின் ஒவ்வொரு விவரத்தையும் நீ காண முடியாவிட்டாலும், அது நடக்கும் என்று உனக்குத் தெரியும், அல்லவா? பூமி மற்றும் சூரிய ஒளியைப் பற்றியும் உனக்குத் தெரியும். ஒரு மரத்தில் இருக்கும் பறவைகளின் காட்சி எல்லோரும் பார்த்த ஒன்று, அல்லவா? ஒரு மரத்தின் நிழலில் ஜனங்கள் தங்களை குளிர்விக்கும் காட்சி—இது நீங்கள் அனைவரும் பார்த்த ஒன்று, அல்லவா? (ஆம்.) எனவே, இந்த விஷயங்கள் அனைத்தும் ஒரே காட்சியில் இருக்கும்போது, அந்தக் காட்சி என்ன உணர்வை உருவாக்குகிறது? (நல்லிணக்க உணர்வு.) அத்தகைய காட்சியில் உள்ள ஒவ்வொன்றும் தேவனிடமிருந்து வந்ததா? (ஆம்.) அவை தேவனிடமிருந்து வந்தவை என்பதால், இந்த வெவ்வேறு விஷயங்களின் பூமிக்குரிய இருப்பின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை தேவன் அறிவார். தேவன் எல்லாவற்றையும் படைத்தபோது, ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உருவாக்கியபோது, அவர் அவ்வாறு செய்தார். அவர் அவற்றைப் படைத்தபோது, ஒவ்வொன்றும் ஜீவிதத்தில் ஊக்கமளித்தன. நம் கதையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, மனிதகுலத்தின் இருப்புக்காக அவர் உருவாக்கிய சூழல், விதைகளும் பூமியும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் இடத்தைப் போன்றதாகும். அங்கு பூமி விதைகளை வளர்க்க முடியும், விதைகள் பூமியுடன் பிணைக்கப்பட முடியும். இந்த உறவு தேவனுடைய சிருஷ்டிப்பின் ஆரம்பத்திலேயே நியமிக்கப்பட்டது. ஒரு மரம், சூரிய ஒளி, பறவைகள் மற்றும் மனிதர்களுடைய காட்சி என்பது மனிதகுலத்திற்காக தேவன் படைத்த ஜீவிதச் சூழலின் சித்தரிப்பு ஆகும். முதலாவதாக, மரம் பூமியை விட்டு வெளியேற முடியாது. சூரிய ஒளி இல்லாமல் இருக்க முடியாது. எனவே, மரத்தை உருவாக்குவதில் தேவனுடைய நோக்கம் என்னவாக இருக்கிறது? அது பூமிக்கு மட்டுமே என்று சொல்ல முடியுமா? அது பறவைகளுக்கு மட்டுமே என்று சொல்ல முடியுமா? அது ஜனங்களுக்கு மட்டுமே என்று சொல்ல முடியுமா? (இல்லை.) அவற்றுக்கு இடையிலான உறவு என்னவாக இருக்கிறது? அவற்றுக்கு இடையிலான உறவு என்பது பரஸ்பர வலுப்படுத்துதல், ஒன்றையொன்று சார்ந்திருத்தல் மற்றும் பிரிக்க முடியாதிருத்தல் ஆகியனவாகும். அதாவது, பூமி, மரம், சூரிய ஒளி, பறவைகள் மற்றும் ஜனங்கள் இருப்புக்காக ஒருவருக்கொருவர் சார்ந்திருந்து ஒருவரையொருவர் வளர்த்துக் கொள்கிறார்கள். மரம் பூமியைப் பாதுகாக்கிறது, பூமி மரத்தை வளர்க்கிறது. சூரிய ஒளி மரத்திற்கு வழங்குகிறது. அதே நேரத்தில் மரம் சூரிய ஒளியில் இருந்து புதிய காற்றைப் பெறுகிறது மற்றும் பூமியில் சூரியனின் வெப்பத்தை குறைக்கிறது. இதன் மூலம் யார் பயனடைவார்கள்? அது மனிதகுலம், அல்லவா? தேவன் படைத்த மனிதகுலம் ஜீவிக்கும் சூழலுக்கு அடித்தளமாக இருக்கும் கொள்கைகளில் இதுவும் ஒன்று. தேவன் அதை முதலில் இருந்தே பார்த்துக்கொண்டார். இந்தக் காட்சி எளிமையானது என்றாலும், அதற்குள் தேவனுடைய ஞானத்தையும் அவருடைய நோக்கத்தையும் நாம் காணலாம். பூமி இல்லாமல், அல்லது மரங்கள் இல்லாமல், பறவைகள் மற்றும் சூரிய ஒளி இல்லாமல் மனிதகுலம் ஜீவிக்க முடியாது. அது அப்படியல்லவா? அது ஒரு கதை மட்டுமே என்றாலும், வானத்தையும் பூமியையும் எல்லாவற்றையும் தேவன் உருவாக்கினார் மற்றும் மனிதகுலம் ஜீவிக்கக்கூடிய ஒரு சூழலானது அவர் அளித்தப் பரிசு என்று அது சித்தரிக்கிறது.

வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும், ஜீவிப்பதற்கான சூழலையும் தேவன் மனிதர்களுக்காகப் படைத்தார். முதலாவதாக, நம்முடைய கதை உரையாற்றும் முக்கியமான அம்சம் பரஸ்பர வலுப்படுத்துதல், ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் மற்றும் எல்லாவற்றின் சகவாழ்வு ஆகும். இந்தக் கொள்கையின் கீழ், மனிதகுலத்தின் சூழல் பாதுகாக்கப்படுகிறது. மனிதகுலத்தால் இருக்க முடியும் மற்றும் நீடிக்க முடியும். இதன் காரணமாக, மனிதகுலம் செழித்து இனப்பெருக்கம் செய்ய முடியும். நாம் பார்த்த காட்சி ஒரு மரம், பூமி, சூரிய ஒளி, பறவைகள் மற்றும் ஜனங்கள் ஒன்றாக இருந்தது ஆகும். இந்தக் காட்சியில் தேவன் இருந்தாரா? ஒருவரும் அவரை அங்கு காணவில்லை. ஆனால் காட்சியில் உள்ள விஷயங்களுக்கு இடையில் பரஸ்பர பலப்படுத்துதல் மற்றும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல் ஆகியவற்றின் விதியை ஒருவர் காணலாம். இந்த விதியில், தேவனுடைய இருப்பு மற்றும் ராஜரீகத்தை ஒருவர் காணலாம். எல்லாவற்றின் ஜீவிதத்தையும் இருப்பையும் பாதுகாக்க தேவன் அத்தகைய ஒரு கொள்கையையும் அத்தகைய விதியையும் பயன்படுத்துகிறார். இவ்வாறு, அவர் எல்லாவற்றிற்கும் மனிதர்களுக்கும் வழங்குகிறார். இந்த கதை நம்முடைய முக்கியமான கருப்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளதா? மேலோட்டமாகப் பார்க்கையில், அது இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில், தேவன் எல்லாவற்றையும் படைத்ததன் விதி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலான தன்மை ஆகியவற்றுடம் எல்லா ஜீவனுக்கும் அவர் ஆதாரமாக இருப்பதோடு நெருக்கமாகத் தொடர்புக்கொள்கிறது. இந்த உண்மைகள் பிரிக்க முடியாதவை ஆகும். இப்போது நீங்கள் சிலவற்றைக் கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டீர்கள்!

எல்லாவற்றின் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் விதிகளை தேவன் கட்டளையிடுகிறார். எல்லாவற்றின் உயிர்வாழ்வையும் நிர்வகிக்கும் விதிகளை அவர் கட்டளையிடுகிறார். அவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார். அவை இரண்டையும் வலுப்படுத்துவதற்கும் ஒருவருக்கொருவர் சார்ந்து இருப்பதற்கும் ஏற்ப அமைக்கிறார். இதனால் அவை அழிந்து போகாமல் அல்லது மறைந்து விடாமல் இருக்கிறது. இவ்வாறு மட்டுமே மனிதகுலம் ஜீவிக்க முடியும். அத்தகைய சூழலில் அவர்கள் தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் ஜீவிக்க முடியும். இந்தச் செயல்பாட்டு விதிகளில் தேவன் எஜமானர், அதில் யாரும் தலையிட முடியாது மற்றும் யாராலும் அவற்றை மாற்றவும் முடியாது. இந்த விதிகளை தேவன் மட்டுமே அறிவார். தேவன் மட்டுமே அவற்றை நிர்வகிக்கிறார். தேவன் படைத்தபோது, மரங்கள் எப்போது முளைக்கும், எப்போது மழை பெய்யும், தாவரங்களுக்கு பூமி எவ்வளவு தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும், எந்த பருவத்தில் இலைகள் விழும், எந்தப் பருவத்தில் மரங்கள் பலனளிக்கும், மரங்களுக்குச் சூரிய ஒளி எவ்வளவு ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும், சூரிய ஒளியால் உணவளித்தபின் மரங்கள் எதை வெளியேற்றும் என இவை அனைத்தையும் யாரும் மாற்ற முடியாத விதிகளாக தேவன் முன்னரே தீர்மானித்தார். தேவன் படைத்த விஷயங்கள், உயிருள்ளவையாக இருந்தாலும், மனிதனுடைய பார்வையில், உயிரற்றவையாக இருந்தாலும், அவை தேவனுடைய கரத்தில் இருக்கிறது, அவர் அவற்றை அங்கே கட்டுப்படுத்தி அவற்றை ஆளுகிறார். இந்த விதிகளை யாரும் மாற்றவோ உடைக்கவோ முடியாது. தேவன் எல்லாவற்றையும் படைத்தபோது, பூமி இல்லாமல், மரம் வேர்களை அமைக்கவும், முளைத்து வளரவும் முடியாது என்றும், மரங்கள் இல்லையென்றால் பூமி வறண்டுவிடும் என்றும், மரம் பறவைகளின் வீடாகவும், அவை காற்றிலிருந்து விலகி தஞ்சமடையக்கூடிய இடமாகவும் மாற வேண்டும் என்றும் அவர் முன்னரே தீர்மானித்தார். ஒரு மரம் பூமி இல்லாமல் ஜீவிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. சூரியன் அல்லது மழை இல்லாமல் அதனால் வாழ முடியுமா? அதுவும் முடியாது. இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதகுலத்திற்கானவை, அவை மனிதகுலத்தின் பிழைப்புக்குரியவை. மரத்திலிருந்து, மனிதன் புதிய காற்றைப் பெறுகிறான். மனிதன் பூமியில் ஜீவிக்கிறான். மரத்தால் அது பாதுகாக்கப்படுகிறது. மனிதன் சூரிய ஒளி அல்லது பல்வேறு உயிரினங்கள் இல்லாமல் ஜீவிக்க முடியாது. இந்த உறவுகள் சிக்கலானவை என்றாலும், ஒன்றையொன்று பலப்படுத்துவதற்காக, ஒன்றையொன்று சார்ந்து ஒன்றாக இருப்பதற்காக எல்லாவற்றையும் நிர்வகிக்கும் விதிகளை தேவன் படைத்தார் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் உருவாக்கிய ஒவ்வொரு பொருளுக்கும் மதிப்பு மற்றும் முக்கியத்துவம் உள்ளது. தேவன் முக்கியத்துவம் இல்லாமல் எதையாவது படைத்திருந்தால், அது மறைந்துவிடும். எல்லாவற்றிற்கும் வழங்க தேவன் பயன்படுத்தும் முறைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கதையில் “வழங்குதல்” என்ற சொல் எதைக் குறிக்கின்றது? தேவன் ஒவ்வொரு நாளும் மரத்திற்குத் தண்ணீர் கொடுக்கிறாரா? மரத்திற்குச் சுவாசிக்க தேவனுடைய உதவி தேவையா? (இல்லை.) “வழங்குதல்” என்பது தேவனுடைய சிருஷ்டிப்புக்குப் பிறகு எல்லாவற்றையும் நிர்வகிப்பதை இங்கே குறிக்கிறது. அவற்றை நிர்வகிக்கும் விதிகளை நிறுவிய பின் அவற்றை நிர்வகிக்க தேவனுக்கு அது போதுமானதாகும். பூமியில் ஒரு விதை நடப்பட்டவுடன், மரம் தானாகவே வளரும். அதன் வளர்ச்சிக்கான நிலைமைகள் அனைத்தும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவை. தேவன் சூரிய ஒளி, நீர், மண், காற்று மற்றும் சுற்றியுள்ள சூழலை உண்டாக்கினார். தேவன் காற்று, உறைபனி, பனி, மழை மற்றும் நான்கு பருவங்களை உண்டாக்கினார். மரம் வளரத் தேவையான நிபந்தனைகள் இவை. இவை தேவன் தயாரித்த விஷயங்கள் ஆகும். எனவே, இந்த ஜீவிதச் சூழலுக்கு தேவன் ஆதாரமாக இருக்கிறாரா? (ஆம்.) ஒவ்வொரு நாளும் மரங்களின் ஒவ்வொரு இலைகளையும் தேவன் எண்ண வேண்டுமா? இல்லை! “இப்போது மரங்களில் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது” என்று கூறி, மரத்தைச் சுவாசிக்கவோ அல்லது சூரிய ஒளியை ஒவ்வொரு நாளும் எழுப்பவோ தேவன் தேவையில்லை. அவர் அதைச் செய்ய வேண்டியதில்லை. விதிகளின்படி, பிரகாசிக்க வேண்டிய நேரம் வரும்போது சூரிய ஒளி தானாகவே பிரகாசிக்கிறது. அது தோன்றி மரத்தில் பிரகாசிக்கிறது மற்றும் மரம் சூரிய ஒளியைத் தேவைப்படும்போது உறிஞ்சுகிறது. அது இல்லாதபோது, மரம் இன்னும் விதிகளுக்கு உட்பட்டு வாழ்கிறது. இந்த நிகழ்வை நீங்கள் தெளிவாக விளக்க முடியாமல் போகலாம், ஆனால் இது ஓர் உண்மை ஆகும். இது அனைவரையும் பார்க்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும். நீ செய்ய வேண்டியதெல்லாம், எல்லாம் இருப்பதை நிர்வகிக்கும் விதிகள் தேவனிடமிருந்து வந்தவை என்பதை அங்கீகரிப்பதுடன், எல்லாவற்றின் வளர்ச்சியிலும் ஜீவிதத்தின் மீதும் தேவன் இறையாண்மை உடையவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இப்போது, இந்தக் கதையில் ஜனங்கள் “உருவகம்” என்று குறிப்பிடுவது உள்ளதா? அது ஓர் உருவமா? (இல்லை.) நான் ஓர் உண்மையான கதையைச் சொன்னேன். ஒவ்வொரு வகையான உயிரினங்களும், உயிரைக் கொண்ட அனைத்தும் தேவனால் ஆளப்படுகின்றன. ஒவ்வொரு உயிரினமும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டபோது அது ஜீவனால் நிரப்பப்பட்டிருந்தது. ஒவ்வொரு உயிரினத்தின் ஜீவிதமும் தேவனிடமிருந்து வந்து அதை வழிநடத்தும் போக்கையும் சட்டங்களையும் பின்பற்றுகிறது. மனிதன் அதை மாற்றத் தேவையில்லை. அதற்கு மனிதனுடைய உதவி தேவையில்லை. எல்லாவற்றிற்கும் வழங்கும் தேவனுடைய வழிகளில் இதுவும் ஒன்றாகும். உங்களுக்குப் புரிகிறது, அல்லவா? இதை ஜனங்கள் அங்கீகரிப்பது அவசியம் என்று நினைக்கிறீர்களா? (ஆம்.) எனவே, இந்தக் கதைக்கு உயிரியலுடன் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இது ஏதோ ஒரு வகையில் அறிவுத் துறை அல்லது கல்வியின் கிளையுடன் தொடர்புடையதா? நாம் உயிரியலைப் பற்றி விவாதிக்கவில்லை. நிச்சயமாக நாம் உயிரியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளவில்லை. நம்முடைய பேச்சின் முக்கியமான யோசனை என்னவாக இருக்கிறது? (தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்.) சிருஷ்டிப்புக்குள் நீங்கள் எதைப் பார்த்தீர்கள்? மரங்களைப் பார்த்தீர்களா? பூமியைப் பார்த்தீர்களா? (ஆம்.) நீங்கள் சூரிய ஒளியைக் கண்டீர்கள், அல்லவா? மரங்களில் பறவைகள் இருப்பதை நீங்கள் பார்த்தீர்களா? (நாங்கள் பார்த்தோம்.) அத்தகைய சூழலில் வாழ்வதில் மனிதகுலம் மகிழ்ச்சியடைகிறதா? (ஆம்.) அதாவது, மனிதகுலத்தின் வீட்டை, அவர்களின் ஜீவிதச் சூழலைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தேவன் தாம் படைத்த எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார். இவ்வாறு, தேவன் மனிதகுலத்திற்கும் எல்லாவற்றிற்கும் வழங்குகிறார்.

இந்த பேச்சின் நடை, நான் பேசும் விதம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? (புரிந்துக்கொள்ள எளிதாகவும் பல நிஜ ஜீவித எடுத்துக்காட்டுகளுடனும் இருக்கிறது.) இவை நான் பேசும் வெற்று வார்த்தைகள் அல்லவா? தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார் என்பதைப் புரிந்துக்கொள்ள ஜனங்களுக்கு இந்தக் கதை தேவையா? (ஆம்.) அவ்வாறான நிலையில், நம்முடைய அடுத்த கதைக்குச் செல்வோம். அடுத்த கதை உள்ளடக்கத்தில் சற்று வித்தியாசமானது. அதன் பார்வை சற்று வித்தியாசமானது. இந்தக் கதையில் தோன்றும் அனைத்தும் தேவனுடைய சிருஷ்டிப்பில் ஜனங்கள் கண்களால் பார்க்கக்கூடிய ஒன்றாகும். இப்போது, எனது அடுத்த கதையைத் தொடங்குகிறேன். தயவுசெய்து அமைதியாகக் கேளுங்கள். என்னுடைய அர்த்தத்தை நீங்கள் கண்டுபிடிக்க முயலுங்கள். கதைக்குப் பிறகு, நீங்கள் எவ்வளவு கற்றுக்கொண்டீர்கள் என்பதைப் பார்க்க சில கேள்விகளைக் கேட்பேன். இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஒரு சிறந்த மலை, ஒரு சிறிய நீரோடை, கடுமையான காற்று மற்றும் ஒரு பிரம்மாண்டமான அலை ஆகியனவாகும்.

கதை 2: ஒரு பெரிய மலை, ஒரு சிறிய நீரோடை, ஒரு கடுமையான காற்று மற்றும் ஒரு பிரம்மாண்டமான அலை

ஒரு சிறிய நீரோடை இருந்தது. அது ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் வந்து சேர்ந்தது. மலை சிறிய நீரோடையின் பாதையைத் தடுத்தது. எனவே நீரோடை அதன் பலவீனமான, சிறிய குரலில் மலையை நோக்கி, “தயவுசெய்து என்னைக் கடந்துச் செல்ல விடு. நீ என் வழியில் நின்று எனக்கு முன்னான பாதையைத் தடுக்கிறாய்.” “நீ எங்கே போகிறாய்?” என்று மலை கேட்டது. “நான் எனது வீட்டைத் தேடுகிறேன்,” என்று நீரோடை பதிலளித்தது. “சரி, மேலே சென்று என் மீது பாய்ந்து செல்!” ஆனால் சிறிய நீரோடை மிகவும் பலவீனமாகவும், இளமையாகவும் இருந்தது. எனவே அது போன்ற ஒரு பெரிய மலையின் மீது பாய வழி இல்லை. அது தொடர்ந்து மலையின் அடிவாரத்திற்கு எதிராக மட்டுமே ஓட முடிந்தது …

ஒரு கடுமையான காற்று வீசியது, மணல் மற்றும் குப்பையை மலை நின்ற இடத்திற்கு கொண்டு சென்றது. “நான் கடந்து செல்லட்டும்!” என்று மலையை நோக்கி காற்று வீசியது. “நீ எங்கே போகிறாய்?” என்று மலை கேட்டது. “நான் மலையின் மறுபுறம் செல்ல விரும்புகிறேன்,” என்று காற்று பதிலளித்தது. “சரி, என் இடுப்பை உடைக்க முடிந்தால், நீ செல்லலாம்!” என்று மலை சொன்னது. கடுமையான காற்று அங்கும் இங்குமாக வீசியது. ஆனால் அது எவ்வளவு ஆவேசமாக வீசினாலும், அதனால் மலையின் இடுப்பை உடைக்க முடியவில்லை. காற்று சோர்வடைந்து ஓய்வெடுக்க நிறுத்திக் கொண்டது—மலையின் மறுபுறத்தில், ஒரு காற்று வீசத் தொடங்கியது. அங்குள்ள ஜனங்களை அது மகிழ்வித்தது. இதுவே ஜனங்களுக்கு மலையின் வாழ்த்தாகும் …

கடலோரத்தில், கடல் சாரல் பாறைகள் நிறைந்த கரை நோக்கி மெதுவாக வந்தது. திடீரென்று, ஒரு பிரம்மாண்டமான அலை எழுந்து மலையை நோக்கிச் சென்றது. “மேலே செல்லுங்கள்!” பிரம்மாண்டமான அலைகள் கத்தின. “நீ எங்கே போகிறாய்?” மலை கேட்டது. அதன் முன்னேற்றத்தை நிறுத்த முடியாமல், அலை ஒலித்தது, “நான் எனது பிரதேசத்தை விரிவுபடுத்துகிறேன்! நான் என் கைகளை நீட்ட விரும்புகிறேன்!” “சரி, நீ என் உச்சியைக் கடக்க முடிந்தால், நான் உன்னை அனுமதிக்கிறேன்.” பெரிய அலை சிறிது தூரம் பின்வாங்கியது, பின்னர் மீண்டும் மலையை நோக்கி எழுந்தது. ஆனால் அது எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அதனால் மலையின் உச்சியை அடைய முடியவில்லை. அலை மெதுவாகக் கடலுக்கு மட்டுமே திரும்ப முடிந்தது …

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சிறிய நீரோடை மலையின் அடிவாரத்தைச் சுற்றி மெதுவாக ஓடியது. மலையின் திசைகளைப் பின்பற்றி, சிறிய நீரோடை வீட்டிற்குத் திரும்பியது. அங்கு அது ஒரு நதியில் சேர்ந்தது. நதி கடலில் இணைந்தது. மலையின் பராமரிப்பின் கீழ், சிறிய நீரோடை ஒருபோதும் அதன் வழியை இழக்கவில்லை. நீரோட்டமும் மலையும் ஒன்றையொன்று வலுப்படுத்தி ஒன்றையொன்று சார்ந்தன, அவை ஒன்றையொன்று பலப்படுத்தின, ஒன்றோடொன்று எதிர்வினையாற்றின மற்றும் ஒன்றாக இருந்தன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடுமையான காற்று அதன் பழக்கத்தைப் போலவே வீசியது. மலையை இன்னும் “பார்வையிட” அது அடிக்கடி வந்தது. காற்று வேகமாக வீசியபோது மணல் பேரளவில் சுழன்றது. அது மலையை அச்சுறுத்தியது. ஆனால் அதன் இடுப்பை ஒருபோதும் உடைக்கவில்லை. காற்றும் மலையும் ஒன்றையொன்று வலுப்படுத்தி ஒன்றையொன்று சார்ந்தன, அவை ஒன்றையொன்று பலப்படுத்தின, ஒன்றோடொன்று எதிர்வினையாற்றின மற்றும் ஒன்றாக இருந்தன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பிரம்மாண்டமான அலை ஒருபோதும் ஓய்வெடுக்கவில்லை. அது இடைவிடாமல் முன்னோக்கி அணிவகுத்து, தொடர்ந்து தனது பிரதேசத்தை விரிவுபடுத்தியது. அது கர்ஜித்து, மலையை நோக்கி மீண்டும் மீண்டும் எழுந்தது. ஆனாலும் மலை ஓர் அங்குலமும் நகரவில்லை. மலை கடலைக் கவனித்தது. இவ்வாறு, கடலில் உள்ள உயிரினங்கள் பெருகி செழித்து வளர்ந்தன. அலையும் மலையும் ஒன்றையொன்று வலுப்படுத்தி ஒன்றையொன்று சார்ந்தன, அவை ஒன்றையொன்று பலப்படுத்தின, ஒன்றோடொன்று எதிர்வினையாற்றின மற்றும் ஒன்றாக இருந்தன.

இவ்வாறு நம்முடைய கதை முடிகிறது. முதலில், சொல்லுங்கள், இந்தக் கதை எதைப் பற்றியது? முதலில், ஒரு பெரிய மலை, ஒரு சிறிய நீரோடை, கடுமையான காற்று மற்றும் ஒரு பிரம்மாண்டமான அலை இருந்தது. முதல் பத்தியில், சிறிய நீரோடை மற்றும் பெரிய மலைக்கு இடையே நடந்தது என்ன? நீரோடை மற்றும் மலையைப் பற்றி பேசுவதை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன்? (மலையின் பராமரிப்பின் கீழ், நீரோடை ஒருபோதும் அதன் வழியை இழக்கவில்லை. அவை ஒன்றையொன்று சார்ந்திருந்தன.) நீங்கள், மலை சிறிய நீரோட்டத்தை பாதுகாத்தது என்று கூறுவீர்களா அல்லது தடுத்தது என்று கூறுவீர்களா? (அது அதைப் பாதுகாத்தது.) ஆனால் அது அதைத் தடுக்கவில்லையா? அதுவும் நீரோடையும் ஒன்றையொன்று கவனித்தன. மலை நீரோட்டத்தைப் பாதுகாத்து அதைத் தடுத்தது. ஆற்றில் சேரும்போது மலை நீரோட்டத்தைப் பாதுகாத்தது. ஆனால் அது எங்கு வேண்டுமானாலும் பாயந்து வெள்ளத்தை ஏற்படுத்தி ஜனங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தாமல் இருக்க அதைத் தடுத்தது. இது பத்தியில் இருந்ததல்லவா? நீரோட்டத்தைப் பாதுகாப்பதன் மூலமும், அதைத் தடுப்பதன் மூலமும், மலை ஜனங்களின் வீடுகளைப் பாதுகாத்தது. பின்னர் சிறிய நீரோடை மலையின் அடிவாரத்தில் ஆற்றில் சேர்ந்து கடலில் பாய்ந்தது. நீரோடை இருப்பதை நிர்வகிக்கும் விதி இதுவல்லவா? நதி மற்றும் கடலில் சேர நீரோடைக்கு உதவியது எது? அது மலை அல்லவா? நீரோடை மலையின் பாதுகாப்பையும் அதன் தடங்கலையும் நம்பியிருந்தது. எனவே, அது முக்கியமான புள்ளி அல்லவா? மலைகள் தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இதில் காண்கிறீர்களா? ஒவ்வொரு மலையையும் பெரியதாகவும் சிறியதாகவும் மாற்றுவதில் தேவனிடம் அவருடைய நோக்கம் இருந்ததா? (ஆம்.) ஒரு சிறிய நீரோடை மற்றும் ஒரு பெரிய மலையைத் தவிர வேறொன்றுமில்லாத இந்த குறுகிய பத்தியில், அந்த இரண்டு விஷயங்களையும் தேவன் உருவாக்கியதன் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தைப் பார்க்க நமக்கு உதவுகிறது. அது, அவை மீதான அவருடைய ஆட்சியில் உள்ள ஞானத்தையும் நோக்கத்தையும் நமக்குக் காட்டுகிறது. அது அப்படியல்லவா?

கதையின் இரண்டாவது பத்தியில் என்ன இருந்தது? (கடுமையான காற்று மற்றும் பெரிய மலை.) காற்று ஒரு நல்ல விஷயமா? (ஆம்.) தேவையில்லாமல், சில நேரங்களில் காற்று மிகவும் வலுவடைந்து பேரழிவை ஏற்படுத்துகிறது. கடுமையான காற்றில் உன்னை நிற்கச் செய்தால் நீ எப்படி உணருவாய்? அது அதன் வலிமையைப் பொறுத்தது. அது ஒரு மூன்றாம் அல்லது நான்காம் நிலைக் காற்றாக இருந்தால், அது தாங்கக்கூடியதாக இருக்கும். அதில் அதிகபட்சமாக, ஒரு மனிதருக்கு கண்களைத் திறந்து வைப்பதில் சிக்கல் இருக்கலாம். ஆனால் காற்று கடுமையானது மற்றும் சூறாவளியாக மாறினால், அதை நீ தாங்க முடியுமா? நீ தாங்கமாட்டாய். எனவே, காற்று எப்போதும் நல்லது, அல்லது அது எப்போதும் மோசமானது என்று ஜனங்கள் சொல்வது தவறு. ஏனெனில், அது அதன் வலிமையைப் பொறுத்தது. இப்போதும், இங்கே மலையின் செயல்பாடு என்னவாக இருக்கிறது? அதன் செயல்பாடு காற்றை வடிகட்டுவது அல்லவா? கடுமையான காற்றை மலை எவ்வாறாகக் குறைக்கிறது? (ஒரு தென்றலாகக் குறைக்கிறது.) இப்போது, மனிதர்கள் வசிக்கும் சூழலில், பெரும்பாலான ஜனங்கள் சூறாவளிகளை அனுபவிக்கிறார்களா அல்லது தென்றல்களை அனுபவிக்கிறார்களா? (தென்றல்கள்.) இது தேவனுடைய நோக்கங்களில் ஒன்று அல்லது மலைகளை உருவாக்குவதில் அவருடைய நோக்கங்களில் ஒன்று, அல்லவா? தடையின்றி, வடிகட்டப்படாமல் மணல் காற்றில் பறந்து செல்லும் சூழலில் ஜனங்கள் ஜீவித்தால் எப்படி இருக்கும்? மணல் மற்றும் கல் பறக்கும் ஒரு நிலம் வசிக்க முடியாததாக இருக்கக்கூடும் அல்லவா? கற்கள் ஜனங்களைத் தாக்கக்கூடும். மணல் அவர்களைக் குருடாக்கக்கூடும். காற்று ஜனங்களைத் தள்ளாடச் செய்யாலாம் அல்லது காற்றோடு கொண்டு செல்லக்கூடும். வீடுகள் அழிக்கப்படலாம், எல்லா விதமான பேரழிவுகளும் நடக்கலாம். இன்னும் கடுமையான காற்று இருப்பதில் பயன் இருக்கிறதா? அது மோசமானது என்று நான் சொன்னேன். எனவே அதனால் எந்த பயனும் இல்லை என்று ஒருவர் உணரலாம். ஆனால் அது அப்படியானதா? அது ஒரு தென்றலாக மாறியவுடன் அதற்கு மதிப்பு உள்ளது, அல்லவா? வானிலை ஈரப்பதமாக அல்லது சூடாக இருக்கையில் ஜனங்களுக்கு மிகவும் அவசியமானது என்ன? அவர்களுக்கு ஓர் இதமான காற்று தேவை. அவர்கள் மீது மெதுவாக வீசவும், அவர்களைப் புதுப்பிக்கவும், அவர்களைத் தெளிவாக்கவும், அவர்களின் சிந்தனையைக் கூர்மைப்படுத்தவும், அவர்களின் மனநிலையைச் சரிசெய்யவும் மேம்படுத்தவும் தேவைப்படுகிறது. இப்போது, உதாரணமாக, நீங்கள் அனைவரும் பலருடன் ஒரு காற்றோட்டம் இல்லாத அறையில் உட்கார்ந்தால்—உங்களுக்கு அதிகமாகத் தேவைப்படுவது என்ன? (ஒரு மென்மையான காற்று.) காற்று கொந்தளிப்பான மற்றும் அசுத்தமான இடத்திற்குச் செல்வது ஒருவரின் சிந்தனையை மந்தமாக்கும், ஒருவரின் இரத்த ஓட்டத்தைக் குறைக்கும் மற்றும் ஒருவரின் மனநிலையின் தெளிவைக் குறைக்கும். இருப்பினும், ஒரு சிறிய இயக்கம் மற்றும் சுழற்சி காற்றைப் புதுப்பிக்கிறது. ஜனங்கள் புதிய காற்றில் வித்தியாசமாக உணர்கிறார்கள். சிறிய நீரோடை பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், கடுமையான காற்று பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், மலை இருக்கும் வரை, ஜனங்களுக்கு பயனளிக்கும் வல்லமையாக அந்த ஆபத்தை அது மாற்றிவிடும். அது அப்படியல்லவா?

கதையின் மூன்றாவது பத்தி எதைப் பற்றியது? (பெரிய மலை மற்றும் பிரம்மாண்டமான அலை.) பெரிய மலை மற்றும் பிரம்மாண்டமான அலை. இந்தப் பத்தி மலையின் அடிவாரத்தில் உள்ள கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. மலை, கடல் சாரல் மற்றும் ஒரு பெரிய அலை ஆகியவற்றைக் காண்கிறோம். இந்த நிகழ்வில் அலைக்கு மலை என்னவாக இருக்கிறது? (ஒரு பாதுகாவலர் மற்றும் ஒரு தடையாக இருக்கிறது.) இது ஒரு பாதுகாவலர் மற்றும் ஒரு தடை ஆகும். ஒரு பாதுகாவலனாக, அது கடலை மறைந்துவிடாமல் பாதுகாக்கிறது, இதனால் அதில் ஜீவிக்கும் உயிரினங்கள் பெருகி வளரக்கூடும். ஒரு தடையாக, மலை கடலின் நீர் நிரம்பி வழிந்து பேரழிவை ஏற்படுத்துகிறதிலிருந்தும், தீங்கு விளைவிப்பதிலிருந்தும், ஜனங்களின் வீடுகளை அழிப்பதிலிருந்தும் தடுக்கிறது. எனவே, மலை ஒரு பாதுகாவலர் மற்றும் ஒரு தடை என்று நாம் கூறலாம்.

பெரிய மலைக்கும் சிறிய நீரோடைக்கும், பெரிய மலைக்கும், கடுமையான காற்றுக்கும், பெரிய மலைக்கும் பிரம்மாண்டமான அலைக்கும் இடையிலான தொடர்புகளின் முக்கியத்துவம் இதுதான். அது ஒன்றையொன்று பலப்படுத்துவதற்கும் எதிர்ப்பதற்கும் மற்றும் அவர்களின் சகஜீவியத்திற்கும் முக்கியத்துவமாகும். தேவன் படைத்த இந்த விஷயங்கள், அவற்றின் இருப்புக்கான ஒரு விதி மற்றும் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. எனவே, இந்தக் கதையில் நீங்கள் தேவனுடைய எந்தக் கிரியைகளைக் கண்டீர்கள்? தேவன் அவற்றைப் படைத்ததிலிருந்து எல்லாவற்றையும் புறக்கணித்து வருகிறாரா? அவர் விதிகளை உருவாக்கி, எல்லாவற்றையும் செயல்படுத்தும் வழிகளை வடிவமைத்தாரா? அதுதான் நிகழ்ந்ததா? (இல்லை.) பிறகு என்ன நடந்தது? தேவன் இன்னும் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் தண்ணீர், காற்று மற்றும் அலைகளைக் கட்டுப்படுத்துகிறார். அவர் அவற்றைப் பரவலாக ஓட விடமாட்டார். ஜனங்கள் ஜீவிக்கும் வீடுகளுக்குத் தீங்கு விளைவிக்கவோ அழிக்கவோ அவர் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக, ஜனங்கள் நிலத்தில் ஜீவிக்கவும் பெருகவும் வளரவும் முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால், அவர் எல்லாவற்றையும் படைத்தபோது, தேவன் ஏற்கனவே இருப்பதற்கான விதிகளைத் திட்டமிட்டிருந்தார். தேவன் ஒவ்வொன்றையும் உருவாக்கியபோது, அது மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என்பதை அவர் உறுதிசெய்தார். அது மனிதகுலத்தைத் தொந்தரவு செய்யவோ அல்லது அதற்குப் பேரழிவை ஏற்படுத்தவோ கூடாது என்பதற்காக அதைக் கட்டுப்படுத்தினார். இது தேவனுடைய நிர்வாகத்திற்காக இல்லாவிட்டால், நீர் கட்டுப்பாடுடன் ஓடுமா? கட்டுப்பாடுடன் காற்று வீசுமா? நீரும் காற்றும் விதிகளைப் பின்பற்றுமா? தேவன் அவற்றை நிர்வகிக்கவில்லை என்றால், எந்த விதிகளும் அவற்றை நிர்வகிக்காது. காற்று அலறும், நீர் தடையின்றி வெள்ளத்தை ஏற்படுத்தும். அலை மலையை விட அதிகமாக இருந்திருந்தால், கடல் இருக்க முடியுமா? அது முடியாது. மலை அலை அளவுக்கு அதிகமாக இல்லாவிட்டால், கடல் இருக்காது. மலை அதன் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் இழக்கும்.

இந்த இரண்டு கதைகளுக்குள் தேவனுடைய ஞானத்தைக் காண்கிறீர்களா? தேவன் இருப்பதை எல்லாம் படைத்தார். இருப்பதற்கு எல்லாவற்றிற்குமான இறையாண்மையை உடையவர் அவர். அவர் அதையெல்லாம் நிர்வகிக்கிறார். அதற்கெல்லாம் அவர் ஏற்பாடு செய்கிறார். எல்லாவற்றிற்குள்ளும் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் அவர் பார்க்கிறார் மற்றும் ஆராய்கிறார். எனவே, மனித ஜீவிதத்தின் ஒவ்வொரு மூலையையும் தேவன் பார்க்கிறார் மற்றும் ஆராய்கிறார். ஆகவே, தேவன் தனது சிருஷ்டிப்பினுள் இருக்கும் ஒவ்வொன்றின் ஒவ்வொரு விவரத்தையும், ஒவ்வொரு விஷயத்தின் செயல்பாட்டையும், அதன் இயல்பையும், ஜீவிப்பதற்கான அதன் விதிகள் முதல் அதன் ஜீவிதத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் இருப்பின் மதிப்பு வரை அனைத்தையும் நன்கு அறிகிறார். இவை அனைத்தையும் அதன் முழுமையில் தேவனுக்குத் தெரியும். தேவன் எல்லாவற்றையும் படைத்தார்—அவற்றை நிர்வகிக்கும் விதிகளை அவர் படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் தேவன் மனித அறிவையோ அறிவியலையோ படிக்க வேண்டுமா? (இல்லை.) தேவனைப் போலவே எல்லாவற்றையும் புரிந்துகொள்ள கற்றல் மற்றும் பாலுணர்வு கொண்ட மனிதர்களிடையே ஒருவர் இருக்கிறாரா? அப்படி இல்லை, அல்லவா? எல்லா ஜீவன்களின் ஜீவிக்கும் மற்றும் வளரும் விதிகளை உண்மையாக புரிந்துகொள்ளும் வானியலாளர்கள் அல்லது உயிரியலாளர்கள் யாராவது இருக்கிறார்களா? ஒவ்வொரு விஷயத்தின் இருப்பின் மதிப்பை அவர்களால் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியுமா? (இல்லை, அவர்களால் முடியாது.) ஏனென்றால், எல்லாம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவை ஆகும். மனிதர்கள் இந்த அறிவை எவ்வளவு படித்தாலும் அல்லது எவ்வளவு ஆழமாகப் படித்தாலும், அல்லது அவர்கள் அதைக் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் முயன்றாலும், அவர்கள் ஒருபோதும் மர்மத்தையோ அல்லது எல்லாவற்றையும் தேவன் படைத்ததன் நோக்கத்தையோ புரிந்துகொள்ள முடியாது. அது அப்படியல்லவா? இப்போதும், இதுவரை நடந்த கலந்துரையாடலில் இருந்து, “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்” என்ற சொற்றொடரின் உண்மையான அர்த்தத்தைப் பற்றி நீங்கள் ஒரு பகுதியளவு புரிதலைப் பெற்றிருப்பதாக உணர்கிறீர்களா? (ஆம்.) தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார் என்னும் இந்த விஷயத்தை நான் விவாதித்தபோது—பலர் உடனடியாக மற்றொரு சொற்றொடரை நினைப்பார்கள்: “தேவன் சத்தியமாக இருக்கிறார். நமக்கு வழங்குவதற்காக தேவன் தம்முடைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்,” மேலும் தலைப்பின் அர்த்தத்துக்கு அப்பாற்பட்டதாக எதுவும் இல்லை. மனித ஜீவிதத்திற்காக தேவன் வழங்கும் அன்றாட ஆகாரம் மற்றும் தண்ணீரை, மனிதனுக்கான தேவனுடைய ஆசிர்வாதமாகச் சிலர் கருதாமல் இருக்கலாம். இவ்வாறு சிலர் உணருகிறார்கள், அல்லவா? ஆயினும்கூட, தேவனுடைய சிருஷ்டிப்பில் தேவனுடைய நோக்கம் வெளிப்படையாகத் தெரியவில்லை—மனிதகுலம் இருக்கவும் சாதாரணமாக ஜீவிக்கவும் அனுமதிப்பதாகத் தெரியவில்லை, அல்லவா? ஜனங்கள் ஜீவிக்கும் சூழலை தேவன் பராமரிக்கிறார். மனிதர்கள் ஜீவிப்பதற்குத் தேவையான அனைத்தையும் அவர் வழங்குகிறார். அவர் எல்லாவற்றையும் நிர்வகித்து, ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார். இவை அனைத்தும் மனிதகுலத்தைச் சாதாரணமாக ஜீவிக்கவும் வளர்க்கவும் பெருக்கவும் அனுமதிக்கிறது. இவ்வாறுதான் தேவன் எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் மனிதகுலத்திற்கும் வழங்குகிறார். இந்த விஷயங்களை ஜனங்கள் அங்கீகரித்து புரிந்துகொள்ள வேண்டும் என்பது உண்மையல்லவா? ஒருவேளை சிலர், “இந்தத் தலைப்பு உண்மையான தேவனைப் பற்றிய நமது அறிவிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இதை நாங்கள் அறிய விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் அப்பத்தால் மட்டும் ஜீவிக்கவில்லை, மாறாக தேவனுடைய வார்த்தையால் ஜீவிக்கிறோம்,” என்று கூறலாம். இந்தப் புரிதல் சரியானதா? (இல்லை.) அது ஏன் தவறானது? தேவன் சொன்ன விஷயங்களைப் பற்றி மட்டுமே உங்களுக்கு அறிவு இருந்தால், தேவனைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெற முடியுமா? நீங்கள் தேவனுடைய வேலையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, தேவனுடைய தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக்கொண்டால், தேவனைப் பற்றிய முழுமையான புரிதலை நீங்கள் பெற முடியுமா? தேவனுடைய அதிகாரத்தின் ஒரு சிறிய பகுதியான தேவனுடைய மனநிலையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நீங்கள் அறிந்திருந்தால், தேவனைப் பற்றிய புரிதலை அடைய இது போதுமானதாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? (இல்லை.) தேவனுடைய கிரியைகளானது, எல்லாவற்றையும் அவர் படைத்த காலத்தில் தொடங்கி இன்று வரை தொடர்கின்றன—தேவனுடைய கிரியைகள் எல்லா நேரங்களிலும், ஒவ்வொரு கணத்திலும் தெளிவாகத் தெரியும். அவர் தம்முடைய கிரியையைச் செய்வதற்கும் இரட்சிப்பதற்கும் ஒரு கூட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதற்காக மட்டுமே தேவன் இருக்கிறார் என்று ஒருவர் நம்பினால், வேறு எதற்கும் தேவனுடன் எந்த சம்பந்தமும் கொள்ளவில்லை என்றால், அவருடைய அதிகாரம், அந்தஸ்து அல்லது அவரது கிரியைகள் எதைப்பற்றியும் அறிவு இல்லை என்றால், அவருக்கு தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இருக்க வேண்டும், அல்லவா? இந்த “தேவனைப் பற்றிய அறிவு” என்று அழைக்கப்படுபவற்றைப் பெற்ற மனிதருக்கு ஒருதலைப்பட்ச புரிதல் மட்டுமே உள்ளது. அதன்படி அவர்கள் அவருடைய கிரியைகளை ஒரு கூட்டத்திடம் மட்டுமே கட்டுப்படுத்துகிறார்கள். இது தேவனைப் பற்றிய உண்மையான அறிவா? இந்த வகையான அறிவைக் கொண்டவர்கள் தேவன் எல்லாவற்றையும் படைத்ததையும், அவை மீதான அவருடைய ராஜரீகத்தையும் மறுக்கவில்லையா? சிலர் இந்த விஷயத்தில் ஈடுபட விரும்பவில்லை. அதற்குப் பதிலாக: “நான் எல்லாவற்றிலும் தேவனுடைய ராஜரீகத்தைக் காணவில்லை. இந்த யோசனை அர்த்தமற்றது. அதைப் புரிந்துக்கொள்வதில் எனக்கு அக்கறை இல்லை. தேவன் தான் விரும்புவதைச் செய்கிறார். அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தேவனுடைய தலைமையையும் அவருடைய வார்த்தையையும் மட்டுமே நான் ஏற்றுக்கொள்கிறேன். இதனால் நான் தேவனால் இரட்சிக்கப்பட்டு பரிபூரணமாக முடியும். வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை. எல்லாவற்றையும் படைத்தபோது தேவன் செய்த விதிகளுக்கும், எல்லாவற்றிற்கும் மனிதர்களுக்கும் அவர் வழங்க செய்தவற்றுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை,” என்று தங்களுக்குள் நினைத்துக்கொள்கிறார்கள். இது என்ன மாதிரியான பேச்சு? இது கிளர்ச்சியின் செயல் அல்லவா? இது போன்ற புரிதலுடன் உங்களில் யாராவது இருக்கிறார்களா? எனக்குத் தெரியும், நீங்கள் சொல்லாவிட்டாலும், இங்கே உங்களில் பலர் அவ்வாறு செய்கிறார்கள். புத்தகத்தின் மூலம் ஜனங்கள் தங்கள் சொந்த “ஆவிக்குரிய” கண்ணோட்டத்தில் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். தேவனை வேதாகமத்துக்கு மட்டுப்படுத்தவும், தேவன் பேசிய வார்த்தைகளுள் மட்டுப்படுத்தவும், உண்மையில் எழுதப்பட்ட வார்த்தையிலிருந்து பெறப்பட்ட அர்த்தத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தவும் அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் தேவனை அதிகம் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. மற்ற காரியங்களைச் செய்வதன் மூலம் தேவன் தம் கவனத்தை இழப்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்த வகைச் சிந்தனை குழந்தைத்தனமானது. இது தீவிரமான மத எண்ணமாகும். இந்தக் கருத்துக்களைக் கொண்டவர்கள் தேவனை அறிய முடியுமா? தேவனை அறிவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இன்று நான் இரண்டு கதைகளைச் சொன்னேன், ஒவ்வொன்றும் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கும். அவற்றைக் கேட்ட பிறகு, அவை ஆழமானவை அல்லது சற்றுச் சுருக்கமானவை என்றும், அவற்றைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ந்துகொள்வது கடினம் என்றும் நீங்கள் உணரலாம். தேவனுடைய கிரியைகளுடனும் தேவனுடனும் அவற்றை இணைப்பது கடினமாக இருக்கலாம். இருப்பினும், தேவனுடைய அனைத்துக் கிரியைகளும், சிருஷ்டிப்புக்குள்ளும் மனிதர்களிடையேயும் அவர் செய்த அனைத்தும், ஒவ்வொரு மனிதராலும், தேவனை அறிய முற்படும் அனைவராலும், தெளிவாகவும் துல்லியமாகவும் அறியப்பட வேண்டும். தேவனுடைய உண்மையான இருப்பு குறித்த உங்கள் நம்பிக்கையில் இந்த அறிவு உங்களுக்கு உறுதியளிக்கும். இது தேவனுடைய ஞானம். அவருடைய வல்லமை மற்றும் எல்லாவற்றிற்கும் அவர் வழங்கும் விதம் பற்றிய துல்லியமான அறிவை அது உங்களுக்கு வழங்கும். தேவனுடைய உண்மையான இருப்பைத் தெளிவாகக் கருத்தில் கொள்ளவும், அவர் இருப்பது கற்பனையானது அல்ல, ஒரு கட்டுக்கதை அல்ல, தெளிவற்றதல்ல, ஒரு கோட்பாடு அல்ல, நிச்சயமாக ஒரு வகையான ஆவிக்குரிய ஆறுதல் அல்ல, ஆனால் உண்மையான இருப்பு என்பதைக் காண இது உங்களை அனுமதிக்கும். மேலும், எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் மனிதகுலத்திற்கும் தேவன் எப்போதும் வழங்கியுள்ளார் என்பதை ஜனங்கள் அறிய இது அனுமதிக்கும். தேவன் இதை தனது சொந்த வழியில் மற்றும் தனது சொந்த தாளத்திற்கு ஏற்ப செய்கிறார். ஆகவே, தேவன் எல்லாவற்றையும் படைத்து, ஒவ்வொருவரும் அவருடைய முன்னுரிமையின் கீழ், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய, தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற மற்றும் தங்களின் சொந்தப் பாத்திரங்களைச் செய்ய அவர்களால் முடியும் என்று அவர்களுக்கு விதிகளைக் கொடுத்தார் என்பதால் அவருடைய முன்னுரிமையின் கீழ், ஒவ்வொரு விஷயத்திற்கும் மனிதகுலத்தின், மனிதகுலம் வசிக்கும் இடம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் சேவையில் மனிதரின் சொந்தப் பயன்பாடு உள்ளது. தேவன் அவ்வாறு செய்யவில்லை என்றால், மனிதகுலத்திற்கு அத்தகைய சூழல் இல்லை என்றால், தேவனை நம்புவது அல்லது அவரைப் பின்பற்றுவது மனிதகுலத்திற்குச் சாத்தியமற்றதாக இருக்கும். இது வெற்றுப் பேச்சைத் தவிர வேறொன்றுமில்லை என்பதாக இருக்கும். அது அப்படியல்லவா?

பெரிய மலை மற்றும் சிறிய நீரோடையின் கதையை மீண்டும் பார்ப்போம். மலையின் செயல்பாடு என்னவாக இருக்கிறது? உயிரினங்கள் மலையில் செழித்து வளர்கின்றன. எனவே அதன் இருப்புக்கு உள்ளார்ந்த மதிப்பு உள்ளது. அது சிறிய நீரோட்டத்தையும் தடுக்கிறது. அது விரும்பியபடி பாய்வதைத் தடுக்கிறது மற்றும் ஜனங்களுக்கு பேரழிவைத் தருகிறதைத் தடுக்கிறது. அப்படி அல்லவா? இந்த மலை அதன் சொந்த வழியில் உள்ளது. அதன் மீது எண்ணற்ற உயிரினங்கள் வளர அனுமதிக்கிறது—மரங்கள் மற்றும் புற்கள் மற்றும் மலையில் உள்ள மற்ற அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகள் வளர அனுமதிக்கிறது. இது சிறிய நீரோடையின் ஓட்டத்தின் போக்கையும் வழிநடத்துகிறது—மலை நீரோடையின் நீரைச் சேகரித்து இயற்கையாகவே அதன் அடிவாரத்தில் சுற்றி ஓட வழிநடத்துகிறது. அங்கு அவை ஆற்றிலும் இறுதியாகக் கடலிலும் பாயக்கூடும். இந்த விதிகள் இயற்கையாகவே ஏற்படவில்லை. ஆனால் குறிப்பாக தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட நேரத்தில் வைக்கப்பட்டன. பெரிய மலை மற்றும் கடுமையான காற்றைப் பொறுத்தவரை, மலைக்கும் காற்று தேவை. மலையின் மீது ஜீவிக்கும் உயிரினங்களை சீராட்டுவதற்கு காற்று தேவைப்படுகிறது. அதே நேரத்தில் கடுமையான காற்றின் வல்லமையை கட்டுப்படுத்துகிறது. அதனால் அது தன் இஷ்டம் போல வீசாது. இந்த விதி ஒரு குறிப்பிட்ட வகையில், பெரிய மலையின் கடமையைக் குறிக்கிறது. எனவே, மலையின் கடமை தொடர்பான இந்த விதி தானாகவே உருவானதா? (இல்லை.) இது தேவனால் செய்யப்பட்டது. பெரிய மலைக்கு அதன் கடமை உள்ளது மற்றும் கடுமையான காற்று அதன் கடமையையும் கொண்டுள்ளது. இப்போது, பெரிய மலை மற்றும் பெரிய அலைக்குத் திரும்புவோம். மலையின் இருப்பு இல்லாமல், நீர் தானாக ஓடும் திசையைக் கண்டுபிடிக்குமா? (இல்லை.) நீர் வெள்ளத்தில் மூழ்கும். மலை ஒரு மலையாகத் தன் சொந்த இருத்தலின் மதிப்பைக் கொண்டுள்ளது. கடல் ஒரு கடலாகத் தன் சொந்த இருத்தலின் மதிப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், அவைகள் சாதாரணமாக ஒன்றாக இருக்கக்கூடிய மற்றும் ஒன்றோடொன்று தலையிடாத சூழ்நிலைகளில், அவை ஒன்றையொன்று கட்டுப்படுத்துகின்றன—பெரிய மலை கடலைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் வெள்ளம் வராது. இதன் மூலம் ஜனங்களின் வீடுகளைப் பாதுகாக்கிறது. கடலைக் கட்டுப்படுத்தி அதற்குள் ஜீவிக்கும் உயிரினங்களை வளர்க்க அனுமதிக்கிறது. இந்த நிலப்பரப்பு அதன் சொந்த வடிவமாக இருந்ததா? (இல்லை.) இது தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது. தேவன் எல்லாவற்றையும் படைத்தபோது, மலை எங்கு நிற்கும், நீரோடை எங்கு பாயும், எந்தத் திசையில் இருந்து கடுமையான காற்று வீசத் தொடங்கும், அது எங்கு செல்லும், மற்றும் பெரிய அலைகள் எவ்வளவு உயரமாக இருக்க வேண்டும் என்பதை அவர் முன்னரே தீர்மானித்தார். இந்த விஷயங்கள் அனைத்தும் தேவனுடைய நோக்கங்களையும் குறிக்கோளையும் கொண்டிருக்கின்றன—அவை தேவனுடைய கிரியைகள். இப்போது, எல்லாவற்றிலும் தேவனுடைய கிரியைகள் இருப்பதை நீங்கள் காண முடிகிறதா? (ஆம்.)

இந்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில் நம்முடைய நோக்கம் என்னவாக இருக்கிறது? ஜனங்களை, எல்லாவற்றையும் படைக்கும் தேவனுடைய விதிகளைப் படிக்க வைப்பதா? வானியல் மற்றும் புவியியலில் ஆர்வத்தை ஊக்குவிப்பதா? (இல்லை.) பிறகு அது என்னவாக இருக்கிறது? அது, தேவனுடைய கிரியைகளை ஜனங்களுக்குப் புரிய வைப்பதே ஆகும். தேவனுடைய கிரியைகளில், தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார் என்பதை ஜனங்கள் உறுதிப்படுத்தவும் சரிபார்க்கவும் முடியும். இதை நீ புரிந்துகொள்ள முடிந்தால், உன் இருதயத்தில் தேவனுடைய இடத்தை நீ உண்மையிலேயே உறுதிப்படுத்த முடியும். மேலும் தேவனே தனித்துவமானவர், வானங்களையும் பூமியையும் மற்றும் எல்லாவற்றையும் படைத்தவர் என்பதை நீ உறுதிப்படுத்த முடியும். எனவே, எல்லாவற்றையும் பற்றிய விதிகளை அறிந்துகொள்வதும் தேவனுடைய கிரியைகளை அறிந்துகொள்வதும் தேவனைப் பற்றிய உன் புரிதலுக்கு பயனளிக்கிறதா? (ஆம்.) அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது? முதலாவதாக, தேவனுடைய கிரியைகளை நீ புரிந்துகொள்கையில், நீ இன்னும் வானியல் மற்றும் புவியியலில் ஆர்வமாக இருக்க முடியுமா? எல்லாவற்றையும் படைத்தவர் தேவன் என்பதில் கேள்வியுள்ள இருதயம் மற்றும் சந்தேகம் உங்களுக்கு இன்னும் இருக்க முடியுமா? நீங்கள் இன்னும் ஓர் ஆராய்ச்சியாளரின் இருதயத்தை வைத்திருக்க முடியுமா, எல்லாவற்றையும் படைத்தவர் தேவன் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா? (இல்லை.) தேவன் எல்லாவற்றையும் படைத்தவர் என்பதை நீ உறுதிப்படுத்தியதும், தேவனுடைய சிருஷ்டிப்பின் சில விதிகளைப் புரிந்துக்கொண்டதும், தேவன் எல்லாவற்றிற்கும் எல்லாவற்றையும் அளிக்கிறார் என்பதை உன் இருதயத்தில் உண்மையாக நம்புவாயா? (ஆம்.) இங்கே “ஏற்பாடுக்கு” ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளதா, அல்லது அதன் பயன்பாடு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைக் குறிக்கிறதா? “தேவன் எல்லாவற்றிற்கும் வழங்குகிறார்” என்பது மிகவும் பரந்த முக்கியத்துவமும் நோக்கமும் கொண்ட ஒரு சொற்றொடர் ஆகும். தேவன் வெறுமனே ஜனங்களுக்கு அன்றாட ஆகாரம் மற்றும் பானங்களை வழங்குவதில்லை. மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும், மனிதர்களால் பார்க்கக்கூடிய எல்லாவற்றையும், பார்க்க முடியாத விஷயங்களையும் அவர் வழங்குகிறார். மனிதகுலத்திற்கு இன்றியமையாத இந்த ஜீவிதச் சூழலை தேவன் ஆதரிக்கிறார், நிர்வகிக்கிறார் மற்றும் ஆட்சி செய்கிறார். அதாவது, ஒவ்வொரு பருவத்திற்கும் மனிதகுலத்திற்கு எந்த சூழல் தேவைப்பட்டாலும், தேவன் அதை ஆயத்தம் செய்துள்ளார். தேவன் மனிதனுடைய பிழைப்புக்கு ஏற்றவாறு காற்று வகை மற்றும் வெப்பநிலையையும் நிர்வகிக்கிறார். இவற்றை நிர்வகிக்கும் விதிகள் தானாக அல்லது சீரற்ற முறையில் ஏற்படாது. அவை தேவனுடைய ராஜரீகம் மற்றும் அவருடைய கிரியைகளின் விளைவாகும். இந்த விதிகள் அனைத்திற்கும் மற்றும் எல்லாவற்றின் ஜீவிதத்துக்கும் தேவன் ஆதாரமாக இருக்கிறார். நீ அதை நம்புகிறாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ அதைப் பார்க்க முடியுமா முடியாதா அல்லது நீ புரிந்துக்கொள்ள முடியுமா முடியாதா என்பதைப் பொருட்படுத்தாமல், இது ஒரு நிறுவப்பட்ட மற்றும் விவரிக்க முடியாத உண்மையாகவே உள்ளது.

வேதாகமத்தில் சேர்க்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகளிலும் வேலைகளிலும் மட்டுமே பெரும்பான்மையான ஜனங்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். ஒரு சிறுபான்மை ஜனங்களுக்கு, தேவன் தனது கிரியைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இருப்பதின் மதிப்பைக் காண ஜனங்களை அனுமதித்துள்ளார். அவருடைய நிலையைப் பற்றி அவர்களுக்கு கொஞ்சம் புரிதலும், அவருடைய இருப்பு உண்மையை உறுதிப்படுத்தவும் அவர் அனுமதித்துள்ளார். இருப்பினும், இன்னும் பலருக்கு, தேவன் எல்லாவற்றையும் படைத்தார் என்பதும், அவர் எல்லாவற்றையும் நிர்வகித்து வழங்குகிறார் என்பதும் தெளிவற்றதாகவோ அல்லது குறிப்பிடப்படாததாகவோ தெரிகிறது. அத்தகையவர்கள் சந்தேகத்தின் மனநிலையைக் கூட பராமரிப்பர். இந்த அணுகுமுறையானது, இயற்கையான உலகின் சட்டங்கள் தன்னிச்சையாக உருவாகின்றன, இயற்கையின் மாற்றங்கள், மாறுதல்கள், நிகழ்வுகள் மற்றும் அதை நிர்வகிக்கும் சட்டங்கள் இயற்கையிலிருந்தே எழுந்தன என்று அவர்கள் தொடர்ந்து நம்புவதற்கு காரணமாகிறது. தேவன் எல்லாவற்றையும் எவ்வாறு படைத்தார், எவ்வாறு அவர்கள் மீது ஆட்சி செய்கிறார் என்பதை ஜனங்கள் தங்கள் இருதயத்தில் உணர முடியாது. தேவன் எல்லாவற்றையும் எவ்வாறு நிர்வகிக்கிறார் மற்றும் வழங்குகிறார் என்பதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது. இந்த முன்மாதிரியின் வரம்புகளின் கீழ், தேவன் படைத்தார், ஆட்சி செய்கிறார், எல்லாவற்றிற்கும் வழங்குகிறார் என்று ஜனங்களால் நம்ப முடியாது. விசுவாசிகள் கூட கற்பனைகளின் யுகம், கிருபையின் யுகம் மற்றும் ராஜ்யத்தின் யுகம் ஆகியவற்றுடன் தங்கள் நம்பிக்கையில் மட்டுப்படுத்தப்படுகிறார்கள்: தேவனுடைய கிரியைகளும் மனிதகுலத்திற்கான அவருடைய ஏற்பாடுகளும் அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்கு மட்டுமே என்று அவர்கள் நம்புகிறார்கள். இது நான் பார்ப்பதற்கு மிகவும் வெறுக்கத்தக்க ஒன்றாகும், மிகவும் வேதனையை ஏற்படுத்தும் ஒன்றாகும். ஏனென்றால் தேவன் கொண்டு வரும் அனைத்தையும் மனிதகுலம் அனுபவித்து வருவதால், அவர் செய்கிற அனைத்தையும், அவர் கொடுக்கும் அனைத்தையும் அவர்கள் மறுக்கிறார்கள். வானங்களும் பூமியும் மற்றும் அனைத்தும் அவற்றின் சொந்த இயற்கை விதிகள் மற்றும் அவற்றின் சொந்த ஜீவிப்பதற்கான இயற்கையான சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன என்பதையும், அவற்றை நிர்வகிக்க எந்தவொரு ஆட்சியாளரும் இல்லை அல்லது அவற்றுக்கு வழங்குவதற்கும், அவற்றைக் காப்பதற்கும் இறையாண்மை இல்லை என்பதையும் ஜனங்கள் நம்புகிறார்கள். நீ தேவனை நம்பினாலும், இவை அனைத்தும் அவருடைய கிரியைகள் என்று நீ நம்பக்கூடாது. உண்மையில், தேவனை நம்பும் ஒவ்வொருவராலும், தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவராலும், தேவனைப் பின்பற்றும் அனைவராலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் விஷயங்களில் இது ஒன்றாகும். ஆகவே, நான் வேதாகமத்துடன் அல்லது ஆவிக்குரிய சொற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் ஒன்றுடன் தொடர்பில்லாத ஒன்றைப் பற்றி விவாதிக்கத் தொடங்கியவுடன், சிலர் சலிப்படையவோ சோர்வாகவோ அல்லது சங்கடமாகவோ மாறுகிறார்கள். என் வார்த்தைகள் ஆவிக்குரிய ஜனங்களிடமிருந்தும் ஆவிக்குரிய விஷயங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அது ஒரு பயங்கரமான விஷயம். தேவனுடைய கிரியைகளை அறிந்துகொள்ளும்போது, நாம் வானியல் பற்றி குறிப்பிடவில்லை, புவியியல் அல்லது உயிரியலை ஆராய்ச்சி செய்யவில்லை என்றாலும், எல்லாவற்றிலும் தேவனுடைய ராஜரீகத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் அவர் அளித்த ஏற்பாட்டை மற்றும் அவர் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இது அவசியமான பாடம் மற்றும் படிக்க வேண்டிய ஒரு பாடமாகும். என் வார்த்தைகளை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன், ஆம் தானே?

நான் சொன்ன இரண்டு கதைகள், உள்ளடக்கம் மற்றும் வெளிப்பாட்டின் விதத்தில் சற்று அசாதாரணமானவை என்றாலும், அவை சற்றே சிறப்பான வழியில் சொல்லப்பட்டது என்றாலும், நேரடியான மொழியைப் பயன்படுத்துவதற்கான எனது முயற்சி மற்றும் இன்னும் ஆழமான ஒன்றைப் நீங்கள் பெறவும் ஏற்றுக்கொள்ளவும் உதவும் எளிய அணுகுமுறையாகும். இது எனது ஒரே குறிக்கோள். இந்தச் சிறிய கதைகளிலும், அவர்கள் வரைந்த காட்சிகளிலும், எல்லா சிருஷ்டிப்புகளின் மீதும் தேவன் இறையாண்மை உடையவர் என்பதை நீங்கள் பார்த்து நம்ப வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்தக் கதைகளைச் சொல்வதன் குறிக்கோள், ஒரு கதையின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் தேவனுடைய எல்லையற்ற கிரியைகளைப் பார்க்கவும் அறிந்துகொள்ளவும் உங்களை அனுமதிப்பதாகும். இந்த முடிவை நீங்கள் எப்போது முழுமையாக உணர்ந்து அடைவீர்கள்—இது உங்கள் சொந்த அனுபவங்களையும் உங்கள் சொந்த முயற்சியையும் சார்ந்துள்ளது. நீ சத்தியத்தைப் பின்பற்றி தேவனை அறிய முற்பட்டவராக இருந்தால், இந்த விஷயங்கள் இன்னும் பலமான நினைவூட்டலாக செயல்படும். அவை உனக்கு ஓர் ஆழமான விழிப்புணர்வை வழங்கும். உன் புரிதலில் ஒரு தெளிவைத் தரும். அது படிப்படியாக தேவனுடைய உண்மையான கிரியைகளுக்கு உன்னை நெருக்கமாக்கிவிடும், நெருக்கம் இல்லாமல் தூரமும் பிழையும் இல்லாமல் இருக்கும். இருப்பினும், நீ தேவனை அறிய விரும்பும் ஒருவர் இல்லையென்றால், இந்தக் கதைகள் உனக்கு எந்தத் தாக்கமும் செய்ய முடியாது. அவற்றை உண்மைக் கதைகளாகக் கருது.

இந்த இரண்டு கதைகளிலிருந்தும் உங்களுக்கு ஏதாவது புரிதல் கிடைத்ததா? முதலாவதாக, இந்த இரண்டு கதைகளும் மனிதகுலத்தின் மீதான தேவனுடைய அக்கறை பற்றிய முந்தைய விவாதத்திலிருந்து ஒதுக்கப்பட்டதா? உள்ளார்ந்த தொடர்பு உள்ளதா? இந்த இரண்டு கதைகளுக்குள்ளும் நாம் தேவனுடைய கிரியைகளையும், மனிதகுலத்திற்காக அவர் திட்டமிடும் அனைத்திற்கும் அவர் அளிக்கும் முழுமையான கருத்தையும் காண்கிறோம் என்பது உண்மையா? தேவன் செய்கிற அனைத்தும், அவர் நினைக்கும் அனைத்தும் மனிதகுலத்தின் இருப்புக்காகவே என்பது உண்மையா? (ஆம்.) தேவனுடைய கவனமான சிந்தனையும் மனிதகுலத்திற்கான கருத்தும் மிகவும் தெளிவாகத் தெரியவில்லையா? மனிதகுலம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தேவன் ஜனங்களுக்குக் காற்றைத் தயார் செய்துள்ளார்—அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதைச் சுவாசிப்பது மட்டுமே. அவர்கள் புசிக்கும் காய்கறிகளும் பழங்களும் உடனடியாகக் கிடைக்கும். வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதன் சொந்த இயற்கை வளங்கள் உள்ளன. வெவ்வேறு பிராந்தியப் பயிர்கள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் தேவனால் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளன. பெரிய சூழலில், தேவன் எல்லாவற்றையும் பரஸ்பரமாக வலுப்படுத்தவும், ஒன்றுக்கொன்று சார்ந்து, பரஸ்பரமாக பலப்படுத்தவும், பரஸ்பரமாக எதிர்க்கவும், ஒன்றிணைந்து செயல்படவும் செய்தார். எல்லாவற்றின் உயிர்வாழ்வையும் இருப்பையும் பராமரிக்க இது அவருடைய முறை மற்றும் அவருடைய விதி ஆகும். இவ்வாறு, மனிதகுலம் இந்த ஜீவிதச் சூழலுக்குள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் வளர முடிந்தது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு, இன்றுவரையிலும் பெருக்கப்படுகிறது. அதாவது, இயற்கையான சூழலுக்கு தேவன் சமநிலையைக் கொண்டுவருகிறார். தேவன் இறையாண்மையுடனும் கட்டுப்பாட்டிலும் இல்லாதிருந்தால், சூழல், அது இன்னும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும் கூட, சமநிலையை நிலைநிறுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் யாருடைய திறனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்திருக்கும். சில இடங்களில் காற்று இல்லை, அத்தகைய இடங்களில் மனிதகுலம் ஜீவிக்க முடியாது. அங்கு செல்ல தேவன் உன்னை அனுமதிக்க மாட்டார். எனவே, சரியான வரம்புகளுக்கு அப்பால் செல்ல வேண்டாம். இது மனிதகுலத்தின் பாதுகாப்பிற்கானது உள்ளே மர்மங்கள் உள்ளன. சுற்றுச்சூழலின் ஒவ்வொரு அம்சமும், பூமியின் நீளமும் அகலமும், பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரினமும்—உயிருள்ள மற்றும் இறந்த உயிரினமும்—தேவனால் முன்கூட்டியே கருத்தரிக்கப்பட்டு ஆயத்தம் செய்யப்பட்டன. இந்த விஷயம் ஏன் அவசியமாகிறது? அது ஏன் தேவையற்றதாக இருக்கிறது? இந்த விஷயத்தை இங்கே வைத்திருப்பதன் நோக்கம் என்ன? அந்த விஷயம் ஏன் அங்கு செல்ல வேண்டும்? இந்தக் கேள்விகள் அனைத்தையும் தேவன் ஏற்கனவே நினைத்திருந்தார். ஜனங்கள் அவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. மலைகளை நகர்த்துவதை எப்போதும் நினைக்கும் சில முட்டாள்கள் உள்ளனர். ஆனால் அதைச் செய்வதற்கு பதிலாக, ஏன் சமவெளிகளுக்குச் செல்லக்கூடாது? உனக்கு மலைகள் பிடிக்கவில்லை என்றால், நீ ஏன் அவற்றுக்கு அருகில் ஜீவிக்கிறாய்? அது முட்டாள்தனம் அல்லவா? நீ அந்த மலையை நகர்த்தினால் என்ன நடக்கும்? சூறாவளி மற்றும் பெரிய அலைகள் வந்து ஜனங்களின் வீடுகள் அழிக்கப்படும். இது முட்டாள்தனமாக இருக்காதா? ஜனங்கள் அழிவுக்கு மட்டுமே வல்லவர்கள். அவர்கள் ஜீவிக்க வேண்டிய ஒரே இடத்தை அவர்களால் பராமரிக்க கூட முடியாது, ஆனாலும் அவர்கள் எல்லாவற்றுக்கும் வழங்க விரும்புகிறார்கள். அது சாத்தியமற்றது.

எல்லாவற்றையும் நிர்வகிக்கவும், அவற்றின் மீது ஆட்சி செய்யவும் தேவன் மனிதகுலத்தை அனுமதிக்கிறார். ஆனால் மனிதன் ஒரு நல்ல வேலையைச் செய்கிறானா? மனிதன் தன்னால் முடிந்ததை அழிக்கிறான். தேவன் அவனுக்காக உருவாக்கிய அனைத்தையும் அதன் அசல் நிலையில் வைத்திருக்க அவனால் முடியவில்லை—அவன் அதற்கு நேர்மாறாகச் செய்து தேவனுடைய சிருஷ்டிப்பை அழித்துவிட்டான். மனிதகுலம் மலைகளை நகர்த்தி, கடல்களிலிருந்து நிலத்தை மீட்டெடுத்தது, சமவெளிகளை எந்த மனிதனும் ஜீவிக்க முடியாத பாலைவனங்களாக மாற்றிவிட்டான். ஆயினும்கூட, மனிதன் தொழில் துறையை உருவாக்கி, அணுசக்தி தளங்களைக் கட்டியெழுப்பினான். எல்லா இடங்களிலும் அழிவை விதைக்கிறான். இப்போதும் ஆறுகள் இனி ஆறுகள் அல்ல, கடல் இனி கடல் அல்ல…. இயற்கைச் சூழலின் சமநிலையையும் அதன் விதிகளையும் மனிதகுலம் உடைத்தவுடன், அவனுடைய பேரழிவு மற்றும் இறப்பு நாள் வெகு தொலைவில் இல்லை. அதைத் தவிர்க்க முடியாதது. பேரழிவு வரும்போது, தேவன் அவனுக்காக உருவாக்கிய எல்லாவற்றின் விலைமதிப்பையும் அவை மனிதகுலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் மனிதகுலம் அறிந்துகொள்ளும். மனிதனைப் பொறுத்தவரை, காற்றில் மழை பெய்யும் சூழலில் ஜீவிப்பது சொர்க்கத்தில் ஜீவிப்பதைப் போன்றதாகும். அது ஓர் ஆசீர்வாதம் என்பதை ஜனங்கள் உணரவில்லை. ஆனால் அனைத்தையும் இழக்கும் தருணத்தில் அது எவ்வளவு அரிதானது மற்றும் விலைமதிப்பற்றது என்பதை அவர்கள் காண்பார்கள். அது போய்விட்டால், ஒருவர் அதை எவ்வாறு திரும்பப் பெறுவார்? அதை மீண்டும் உருவாக்க தேவன் விரும்பவில்லை என்றால் ஜனங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் செய்யக்கூடிய ஏதாவது இருக்கிறதா? உண்மையில், நீங்கள் செய்யக்கூடிய ஒன்று இருக்கிறது. அது மிகவும் எளிதானது—அது என்னவென்று நான் உங்களுக்குச் சொல்லும்போது, அது சாத்தியமானது என்பதை நீங்கள் உடனடியாக அறிந்துகொள்வீர்கள். மனிதன் தனது தற்போதைய இருப்பிடத்தில் எவ்வாறு தன்னைக் கண்டுபிடித்தான்? அவனுடைய பேராசை மற்றும் அழிவின் காரணமாகவா? மனிதன் இந்த அழிவை முடிவுக்குக் கொண்டுவந்தால், அவனுடைய ஜீவிதச் சூழல் படிப்படியாகச் சரியாகாதா? தேவன் ஒன்றும் செய்யாவிட்டால், தேவன் இனி மனிதகுலத்திற்காக எதையும் செய்ய விரும்பவில்லை என்றால்—அதாவது, இந்த விஷயத்தில் அவர் தலையிடவில்லை என்றால், மனிதகுலத்தின் சிறந்த தீர்வு அனைத்து அழிவையும் தடுத்து, அவர்களின் ஜீவிதச் சூழலை அதன் இயற்கை நிலைக்குத் திரும்பச் செய்ய அனுமதிப்பதாகும். இந்த அழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது தேவன் படைத்தவற்றின் கொள்ளை மற்றும் பேரழிவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். அவ்வாறு செய்வது, மனிதன் ஜீவிக்கும் சூழல் படிப்படியாக மீட்க அனுமதிக்கும். அதே நேரத்தில் அவ்வாறு செய்யத் தவறினால், ஜீவிதத்துக்கு இன்னும் மோசமான சூழல் உருவாகும். அதன் அழிவு காலப்போக்கில் விரைந்து செல்லும். எனது தீர்வு எளிதானதா? இது எளிமையானது மற்றும் சாத்தியமானது, அல்லவா? உண்மையில் எளிமையானது, சிலருக்கு சாத்தியமானது—ஆனால் பூமியிலுள்ள பெரும்பான்மையான ஜனங்களுக்கு இது சாத்தியமாகுமா? (அது சாத்தியமாகாது.) குறைந்தபட்சம், உங்களுக்காவது இது சாத்தியமாகுமா? (ஆம்.) “ஆம்” என்று சொல்ல என்ன காரணம்? இது தேவனுடைய கிரியைகளைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளத்திலிருந்து வந்தது என்று கூற முடியுமா? அதன் நிலை தேவனுடைய ராஜரீகத்து க்கும் திட்டத்திற்கும் கீழ்ப்படிவது என்று கூற முடியுமா? (ஆம்.) விஷயங்களை மாற்ற ஒரு வழி இருக்கிறது. ஆனால் அது இப்போது நாம் விவாதிக்கும் தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனித வாழ்விற்கும் தேவன் பொறுப்பாகிறார். அவர் கடைசிவரை பொறுப்புவகிக்கிறார். தேவன் உனக்காக வழங்குகிறார். சாத்தானால் அழிக்கப்பட்ட இந்த சூழலில், நீ நோய்பட்டாலும் அல்லது மாசுப்பட்டாலும் அல்லது மீறப்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல—தேவன் உனக்காக வழங்குவார். தேவன் உன்னை ஜீவிக்க அனுமதிப்பார். உங்களுக்கு இதில் நம்பிக்கை வேண்டும். ஒரு மனிதனை தேவன் அவ்வளவு சுலபமாக மரிக்க அனுமதிக்கமாட்டார்.

“தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்” என்பதை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை இப்போது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? (ஆம் நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.) உங்களுக்கு என்ன உணர்வுகள் உள்ளன? சொல்லுங்கள். (கடந்த காலங்களில், மலைகள், கடல்கள் மற்றும் ஏரிகளை தேவனுடைய கிரியைகளுடன் இணைக்க நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. இன்று தேவனுடைய வார்த்தையைக் கேட்கையில், இந்த விஷயங்களில் தேவனுடைய கிரியைகளும் ஞானமும் இருப்பதை நாங்கள் புரிந்துக்கொண்டோம். தேவன் எல்லாவற்றையும் உருவாக்கத் தொடங்கியபோதும், அவர் ஏற்கனவே ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு விதியையும் அவருடைய நல்ல விருப்பத்தையும் ஊக்கப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். எல்லாவற்றையும் பரஸ்பரமாக வலுப்படுத்தி ஒன்றோடொன்று சார்ந்திருக்கையில் மனிதகுலம் இறுதி பயனாளியாகும். இன்று நாங்கள் கேள்விப்பட்டவை மிகவும் புதியதாகவும் புதுமையாகவும் தெரிகின்றன. தேவனுடைய கிரியைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். நிஜ உலகில், எங்கள் அன்றாட ஜீவிதத்திலும், எல்லாவற்றையும் நாங்கள் சந்திப்பதிலும், அது அவ்வாறு இருப்பதைக் காண்கிறோம்.) நீங்கள் உண்மையிலேயே பார்த்திருக்கிறீர்கள், அல்லவா? தேவன் ஒரு நல்ல அடித்தளம் இல்லாமல் மனிதகுலத்திற்கு வழங்குவதில்லை. அவரது ஏற்பாடு ஒரு சில குறுகிய சொற்கள் மட்டுமல்ல. தேவன் இவ்வளவு அதிகமாகச் செய்திருக்கிறார். நீ காணாத விஷயங்கள் கூட உன் நன்மைக்காகவே ஆகும். இந்தச் சூழலில் மனிதன் ஜீவிக்கிறான். தேவன் அவனுக்காகப் படைத்த எல்லாவற்றின் மத்தியிலும் ஜீவிக்கிறான், ஜனங்களும் மற்ற அனைத்தும் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கிறார்கள். உதாரணமாக, தாவரங்கள் காற்றைச் சுத்திகரிக்கும் வாயுக்களை வெளியேற்றுகின்றன. ஜனங்கள் சுத்திகரிக்கப்பட்ட காற்றைச் சுவாசித்து அதிலிருந்து பயனடைகிறார்கள். இன்னும் சில தாவரங்கள் ஜனங்களுக்கு விஷமாகவும், மற்ற தாவரங்கள் விஷமுறிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. இது தேவனுடைய சிருஷ்டிப்பின் அதிசயம் ஆகும்! ஆனால் இப்போதைக்கு இந்தத் தலைப்பை விட்டுவிடுவோம். இன்று, நம்முடைய கலந்துரையாடல் முக்கியமாக சிருஷ்டிப்பின் எஞ்சிய பகுதியுடனான மனிதனுடைய சகவாழ்வு ஆகும். இது இல்லாமல் மனிதனால் ஜீவிக்க முடியாது. எல்லாவற்றையும் தேவன் உருவாக்கியதன் முக்கியத்துவம் என்னவாக இருக்கிறது? மனிதனுக்கு ஜீவிக்கக் காற்று தேவைப்படுவதைப் போல, மற்றவை இல்லாமல் மனிதனால் ஜீவிக்க முடியாது—நீ ஒரு வெற்றிடத்தில் வைக்கப்பட்டிருந்தால், நீ விரைவில் இறந்துவிடுவாய். இது மிகவும் எளிமையான கொள்கையாகும். இது மனிதன் மற்ற சிருஷ்டிப்புகளிலிருந்து தனியாக இருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. எனவே, எல்லாவற்றிடமும் மனிதனுக்கு எத்தகைய அணுகுமுறை இருக்க வேண்டும்? அவற்றைப் பொக்கிஷமாகக் கருத, அவற்றைப் பாதுகாக்க, அவற்றைத் திறம்பட பயன்படுத்த, அவற்றை அழிக்ககாமல், வீணாக்காமல், அவற்றை ஆசைக்காக மாற்றாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லாமே தேவனிடமிருந்து வந்தவை. எல்லாமே மனிதகுலத்திற்கு அவர் அளித்த ஏற்பாடு. மனிதகுலம் அவற்றை மனசாட்சியுடன் நடத்த வேண்டும். இன்று இந்த இரண்டு தலைப்புகளையும் விவாதித்தோம். அவற்றைக் கவனமாக, நன்கு சிந்தித்துப் பாருங்கள். அடுத்த முறை, சில விஷயங்களை இன்னும் விரிவாக விவாதிப்போம். இத்துடன் இன்றைய கூட்டம் முடிவடைகிறது. மீண்டும் சந்திப்போம்!

ஜனவரி 18, 2014

முந்தைய: தேவனே தனித்துவமானவர் VI

அடுத்த: தேவனே தனித்துவமானவர் VIII

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக