தேவனே தனித்துவமானவர் X

தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார் (IV)

நாம் இன்று ஒரு சிறப்பான தலைப்பில் கலந்துரையாடுகிறோம். ஒவ்வொரு விசுவாசியும் அறிய வேண்டிய, அனுபவிக்க வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. இந்த இரண்டு விஷயங்கள் என்னவாக இருக்கின்றன? முதலாவதாக ஜீவனுக்குள் ஒருவர் தனிப்பட்ட விதத்தில் பிரவேசிப்பதாகும். இரண்டாவதாக தேவனை அறிந்து கொள்ளுதல் தொடர்பானதாகும். தேவனை அறிந்துகொள்ளுதல் என்ற தலைப்பில், சமீபத்தில் நாம் பேசிய தலைப்பைப் பொறுத்த வரையில், அதை அடைய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது உண்மையில் பெரும்பாலான ஜனங்களுக்கு எட்டாத ஒன்று என்று சொல்வது நியாயமானதாகும். என் வார்த்தைகளை நீங்கள் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் ஏன் இதைச் சொல்கிறேன்? நான் இதைச் சொல்கிறேன், ஏனென்றால் நான் முன்பு சொன்னதை நீங்கள் கேட்டபோது, நான் எப்படிச் சொன்னேன் அல்லது எந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினேன் என்பதைப் பொருட்படுத்தாமல், வார்த்தையாகவும் கோட்பாடாகவும் இந்த வார்த்தைகள் எதைப் பற்றியது என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும், உங்கள் அனைவருக்குமான மிகவும் தீவிரமான பிரச்சனை என்னவென்றால், நான் ஏன் இப்படிச் சொன்னேன் அல்லது ஏன் இதுபோன்ற தலைப்புகளில் பேசினேன் என்பது உங்களுக்குப் புரியவில்லை என்பது தான். இதுவே விஷயத்தின் முக்கிய அம்சமாகும். ஆகவே, நீங்கள் இவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பது தேவனையும் அவருடைய கிரியைகளையும் பற்றிய உங்கள் புரிதலைச் சிறிது சிறிதாக அதிகரித்திருந்தாலும், தேவனை அறிந்து கொள்வது கடுமையான முயற்சியைக் குறிக்கிறது என்பதாக நீங்கள் இன்னும் உணர்கிறீர்கள். அதாவது, நான் சொல்வதைக் கேட்ட பிறகு, நான் ஏன் இதைச் சொன்னேன் அல்லது இதற்கும் தேவனை அறிந்து கொள்வதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்று உங்களில் பெரும்பாலானோருக்குப் புரியவில்லை. தேவனை அறிந்து கொள்வதற்கான அதன் தொடர்பை நீங்கள் புரிந்து கொள்ள முடியாமல் போனதற்கான காரணம், உங்கள் ஜீவித அனுபவம் மிகவும் மேலோட்டமானது என்பதேயாகும். தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய ஜனங்களின் அறிவும் அனுபவமும் மிக ஆழமான மட்டத்தில் இருந்தால், அவரைப் பற்றிய அவர்களுடைய பெரும்பாலான அறிவு தெளிவற்றதாகவும் சுருக்கமாகவும் இருக்கும். இவை அனைத்தும் பொதுவானதாக, கோட்பாடாக மற்றும் தத்துவார்த்தமானதாக இருக்கும். கோட்பாட்டு ரீதியாக, அது தர்க்க ரீதியானதாகவும் நியாயமானதாகவும் தோன்றலாம். ஆனால் பெரும்பாலான ஜனங்களின் வாயிலிருந்து வரும் தேவனைப் பற்றிய அறிவு உண்மையில் வெறுமையாக உள்ளது. அது வெறுமையாக இருப்பதாக நான் ஏன் சொல்கிறேன்? தேவனை அறிந்து கொள்வது தொடர்பாக நீ சொல்லும் விஷயங்களின் உண்மைத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து உனக்குத் தெளிவான புரிதல் உண்மையில் இல்லை என்பதே அதற்குக் காரணமாகும். எனவே, தேவனை அறிந்து கொள்வது பற்றி பெரும்பாலான ஜனங்கள் பல தகவல்களையும் தலைப்புகளையும் கேட்டிருந்தாலும், தேவனைப் பற்றிய அவர்களுடைய அறிவு இன்னும் கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டதும் தெளிவற்ற மற்றும் கற்பனையான கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டதுமாகும். அப்படியானால், இந்தப் பிரச்சனையை எவ்வாறு தீர்க்க முடியும்? அதைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? யாரேனும் சத்தியத்தைத் பின்பற்றாமல் யதார்த்தத்தை வைத்திருக்க முடியுமா? யாரேனும் சத்தியத்தைத் பின்பற்றாமல் சந்தேகத்திற்கு இடமின்றி யதார்த்தம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நிச்சயமாக தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய அறிவோ அனுபவமோ இல்லை என்பதாகும். தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் தேவனை அறிய முடியுமா? நிச்சயமாக இல்லை. இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. எனவே, பெரும்பாலான ஜனங்கள், “தேவனை அறிந்து கொள்வது ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது? என்னை அறிந்து கொள்வதைப் பற்றி நான் பேசும் போது, என்னால் மணிக்கணக்கில் பேச முடியும். ஆனால் தேவனை அறிந்து கொள்ளுதல் என்று வரும்போது என்னிடம் வார்த்தைகள் இருப்பதில்லை. இந்த விஷயம் குறித்து நான் கொஞ்சமாகப் பேசும்போது கூட, என் வார்த்தைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன, அவை மந்தமாக உள்ளன. என் வார்த்தையை நான் கேட்கும்போது கூட அது மோசமாகத் தான் தெரிகிறது” என்று சொல்கிறார்கள். இதுதான் ஆதாரமாகும். தேவனை அறிந்து கொள்வது மிகவும் கடினம் என்றும், அவரை அறிந்து கொள்ள அநேக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கிறது என்றும் அல்லது உன்னிடம் விவாதிக்கத் தலைப்புகள் எதுவும் இல்லை என்றும் மற்றும் கலந்துரையாடல் செய்ய உண்மையான எதையும் சிந்திக்க முடியவில்லை மற்றும் உனக்கும் மற்றவர்களுக்கும் வழங்க முடியவில்லை என்றும் உணர்ந்தால், நீ தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்காத ஒருவர் என்பதை அது நிரூபிக்கிறது. தேவனுடைய வார்த்தைகள் என்னவாக இருக்கின்றன? அவருடைய வார்த்தைகளானது தேவன் என்னவாக இருக்கிறார் என்ன கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது அல்லவா? தேவனுடைய வார்த்தைகளை நீ அனுபவிக்கவில்லை என்றால், தேவன் என்னவாக இருக்கிறார் என்ன கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி உனக்கு ஏதாவது அறிவு இருக்க முடியுமா? நிச்சயமாக இல்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. தேவனுடைய வார்த்தைகளைப் பற்றி உனக்கு எந்த அனுபவமும் இல்லையென்றால், தேவனுடைய சித்தத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. அவருடைய மனநிலை என்ன, அவர் விரும்புவது என்ன, அவர் வெறுப்பது என்ன, ஜனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன, நல்லவர்களிடம் அவர் என்ன மாதிரியான மனநிலையைக் கொண்டிருக்கிறார், தீயவர்களிடம் அவர் என்ன மாதிரியான மனநிலையைக் கொண்டிருக்கிறார் என்பது உனக்குத் தெரியாது. நிச்சயமாக இவை அனைத்தும் உனக்கு குழப்பமானவையாக மற்றும் தெளிவற்றவையாக இருக்கும். இத்தகைய தெளிவின்மைக்கு மத்தியில் நீ தேவனை நம்பினால், சத்தியத்தைப் பின்பற்றி தேவனைப் பின்பற்றுபவர்களில் ஒருவனாக நீ பேசும்போது, அத்தகைய கூற்றுகள் யதார்த்தமானவையாக இருக்குமா? அவை யதார்த்தமானவை அல்ல! ஆகவே, தேவனை அறிந்து கொள்வது குறித்துத் தொடர்ந்து பேசுவோம்.

கலந்துரையாடலுக்கான இன்றைய தலைப்பைக் கேட்க நீங்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளீர்கள், அல்லவா? இந்தத் தலைப்பு, “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்” என்ற விஷயத்துடன் தொடர்புடையது. இதனை நாம் சமீப காலமாக விவாதித்து வருகிறோம். எல்லாவற்றையும் தேவன் எவ்வாறு ஆளுகிறார் என்பதையும், அவர் என்ன செய்கிறார் என்பதையும், எந்தக் கொள்கைகளின்படி தேவன் படைத்த இந்தக் கிரகத்தில் எல்லாம் இருக்கும்படி அவர் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார் என்பதையும் ஜனங்களுக்குத் தெரிவிக்க வெவ்வேறு வழிகளையும் வழிமுறைகளையும் பயன்படுத்தி “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்” என்பதைப் பற்றி நிறைய பேசினோம். தேவன் மனிதகுலத்திற்கு எவ்வாறு வழங்குகிறார், அதாவது அவர் எந்த விதத்தில் அத்தகைய ஏற்பாடுகளை அளிக்கிறார், எத்தகைய ஜீவிதச் சூழல்களை அவர் ஜனங்களுக்கு வழங்குகிறார், எந்த வழிமுறைகள் மற்றும் எந்த ஆரம்ப புள்ளிகளிலிருந்து அவர் மனிதனுக்கு ஒரு நிலையான ஜீவிதச் சூழலை வழங்குகிறார் என்பவற்றைப் பற்றியும் நாம் நிறையப் பேசியுள்ளோம். தேவனுடைய ஆதிக்கத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலான நிர்வாகத்திற்கும், அவருடைய நிர்வாகத்திற்கும் இடையிலான உறவைப் பற்றி நான் நேரடியாகப் பேசவில்லை என்றாலும், அவர் எல்லாவற்றையும் இவ்வாறு நிர்வகிப்பதற்கான காரணங்கள் குறித்தும், மனிதகுலத்திற்கு அவர் வழங்குவதற்கான காரணங்கள் மற்றும் வளர்க்கும் காரணங்கள் குறித்தும் நான் மறைமுகமாகப் பேசியுள்ளேன். இவை அனைத்தும் அவருடைய நிர்வாகத்துடன் தொடர்புடையவை ஆகும். நாம் பேசிய உள்ளடக்கமானது பிரம்மாண்டமான சூழலில் இருந்து, ஜனங்களின் அடிப்படை எதிர்பார்ப்புகள் மற்றும் ஆகாரம் போன்ற மிகச் சிறிய விஷயங்கள் வரை, தேவன் எல்லாவற்றையும் எவ்வாறு ஆட்சி செய்கிறார் என்பதிலிருந்து அவை ஒழுங்கான முறையில் செயல்பட, சரியான மற்றும் நேர்த்தியான ஜீவிதச் சூழலை ஒவ்வொரு இனத்தினருக்கும் அவர் படைத்தார் என்பவை வரை மற்றும் பல என மிகவும் விரிவானதாகும். இந்த விரிவான உள்ளடக்கம் அனைத்தும் மனிதர்கள் மாம்சத்தில் எவ்வாறு ஜீவிக்கின்றார்கள் என்பதோடு தொடர்புடையதாகும். அதாவது, மலைகள், ஆறுகள், பெருங்கடல்கள், சமவெளிகள் மற்றும் பல என இவை அனைத்தும் மனிதக் கண்ணுக்குத் தெரியும் விஷயங்களுடன் மற்றும் ஜனங்கள் உணரக்கூடிய பொருள் மயமான உலகின் விஷயங்களுடன் தொடர்புடையதாகும். இவை அனைத்தும் காணக் கூடிய மற்றும் தொடக் கூடிய விஷயங்களாகும். நான் காற்று மற்றும் வெப்ப நிலையைப் பற்றி பேசும்போது, காற்றின் இருப்பை நேரடியாக உணர உங்கள் சுவாசத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் வெப்ப நிலை அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என்பதை உணர உங்கள் சரீரத்தைப் பயன்படுத்தலாம். காடுகளில் உள்ள மரங்கள், புல் மற்றும் பறவைகள் மற்றும் மிருகங்கள், காற்றில் பறக்கும் மற்றும் நிலத்தில் நடந்து செல்லும் ஜீவராசிகள் மற்றும் குழியில் இருந்து வெளிப்படும் பல்வேறு சிறிய விலங்குகள் அனைத்தையும் ஜனங்கள் கண்களால் காணலாம் மற்றும் தங்கள் சொந்த காதுகளால் கேட்கலாம். இவை அனைத்தும் தொட்டுள்ள நோக்கம் மிகவும் பரந்ததாக இருந்தாலும், தேவன் படைத்த எல்லாவற்றிலும், அவை பொருள் மயமான உலகத்தை மட்டுமே குறிக்கின்றன. பொருள்மயமான விஷயங்கள் என்பவை ஜனங்கள் பார்க்கக் கூடிய மற்றும் உணரக் கூடியவை ஆகும். அதாவது நீ அவற்றைத் தொடும்போது அவற்றை உணருகிறாய். உன் கண்கள் அவற்றைப் பார்க்கும்போது, உன் மூளை உனக்கு ஒரு படத்தை மற்றும் ஒரு காட்சியை அளிக்கிறது. அவை உண்மையானவை மற்றும் மெய்யானவையாகும். உனக்கு அவை தத்துவார்த்தமானவை அல்ல, ஆனால் ஒரு வடிவம் கொண்டவையாகும். அவை சதுரமாகவோ, வட்டமாகவோ அல்லது உயரமாகவோ, குட்டையாகவோ இருக்கலாம் மற்றும் ஒவ்வொரு பொருளும் உங்களுக்கு வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் சிருஷ்டிப்பின் பொருள் அம்சத்தை குறிக்கின்றன. எனவே, தேவனைப் பொறுத்த வரையில், “எல்லாவற்றின் மீதுமுள்ள தேவனுடைய ஆதிக்கம்” என்ற சொற்றொடரில் உள்ள “எல்லாம்” எதை உள்ளடக்கியது? மனிதர்களால் பார்க்கக் கூடிய மற்றும் தொடக் கூடிய விஷயங்களை மட்டும் அவை உள்ளடக்கவில்லை. கூடுதலாக, அவை கண்ணுக்குத் தெரியாத மற்றும் அசாத்தியமானவற்றையும் உள்ளடக்குகின்றன. எல்லாவற்றின் மீதுமுள்ள தேவனுடைய ஆதிக்கத்தின் உண்மையான அர்த்தங்களில் இது ஒன்றாகும். இதுபோன்ற விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாதவை மற்றும் மனிதர்களுக்கு அசாத்தியமானவை என்றாலும், தேவனைப் பொறுத்த வரையில், அவை அவருடைய கண்களால் கண்காணிக்கப்படக்கூடியவை மற்றும் அவருடைய ராஜரீகத்தின் எல்லைக்குள் இருக்கும் வரையில், அவை உண்மையில் இருக்கக்கூடியவை ஆகும். அவை கருத்தியலானவை, கற்பனைக்கு எட்டாதவை மற்றும் மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாதவை மற்றும் அசாத்தியமானவை என்ற போதிலும், தேவனுக்கு அவை மெய்யாகவும் உண்மையாகவும் இருக்கின்றன. தேவன் ஆட்சி செய்யும் எல்லாவற்றிலும் அது மற்றொரு உலகம் ஆகும். அவர் ஆதிக்கம் செலுத்தும் எல்லாவற்றின் நோக்கத்தினுடைய மற்றொரு பகுதியாகும். கலந்துரையாடலுக்கான இன்றைய தலைப்பு தேவன் ஆவிக்குரிய உலகை எவ்வாறு ஆளுகிறார் மற்றும் நிர்வகிக்கிறார் என்பதாகும். தேவன் எல்லாவற்றையும் எவ்வாறு ஆளுகிறார் மற்றும் நிர்வகிக்கிறார் என்பதை இந்தத் தலைப்பு உள்ளடக்கியுள்ளதால், அது பொருள்மயமான உலகத்திற்கு வெளியே உள்ள உலகத்துடன்—அதாவது ஆவிக்குரிய உலகத்துடன்—தொடர்புடையது என்பதால் நாம் புரிந்து கொள்வது முற்றிலும் இன்றியமையாததாகும். இந்த உள்ளடக்கத்தைப் பற்றி தொடர்புகொண்டு புரிந்துகொண்ட பின்னரே, “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை ஜனங்களால் உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும். இந்தத் தலைப்பை நாம் விவாதிக்கப் போகிறோம். அதன் நோக்கம் “தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார், தேவன் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார்” என்ற தலைப்பை நிறைவு செய்வதாகும். ஒருவேளை, நீங்கள் இந்த தலைப்பைக் கேட்கும்போது, அது உங்களுக்கு விசித்திரமாகவோ அல்லது புரிந்து கொள்ள முடியாததாகவோ உணரக்கூடும். ஆனால் நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, ஆவிக்குரிய உலகமானது தேவனால் ஆளப்படும் அனைத்திற்குள்ளும் ஒரு பகுதியாக இருப்பதால், இந்த தலைப்பைப் பற்றி நீங்கள் கொஞ்சமாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் புரிந்து கொண்டவுடன், “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்” என்ற சொற்றொடரின் ஆழமான உணர்வை, புரிதலை மற்றும் அறிவைப் பெறுவீர்கள்.

ஆவிக்குரிய உலகை தேவன் எவ்வாறு ஆளுகிறார் மற்றும் நிர்வகிக்கிறார்

பொருள் மயமான உலகத்தைப் பொறுத்த வரையில், ஜனங்கள் சில விஷயங்கள் அல்லது நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளாத போதெல்லாம், அவர்கள் அதற்குத் தொடர்புடைய தகவல்களைத் தேடலாம் அல்லது அந்த விஷயங்களின் தோற்றம் மற்றும் பின்னணியைக் கண்டுபிடிக்க பல்வேறு பாதைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் இன்று நாம் பேசுகிற பொருள் மயமான உலகத்திற்கு வெளியே இருக்கும் ஆவிக்குரிய உலகமான மற்ற உலகத்திற்கு வரும்போது, இதைப் பற்றி கற்றுக் கொள்வதற்கு நிச்சயமாக வழிமுறைகள் அல்லது பாதைகள் எதுவும் ஜனங்களுக்கு இல்லை. இதை ஏன் நான் சொல்கிறேன்? நான் இதைச் சொல்லக் காரணம் என்னவென்றால், மனிதகுல உலகில், பொருள் மயமான உலகில் உள்ள அனைத்தும் மனித ஜீவிதத்திலிருந்து பிரிக்க முடியாதவை மற்றும் பொருள் மயமான உலகத்தின் அனைத்தும் அதன் மனித ஜீவிதம் மற்றும் ஜீவன்களிலிருந்து பிரிக்க முடியாதவை என்று ஜனங்கள் கருதுவதால், பெரும்பாலான ஜனங்களால் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியும் பொருள் மயமான விஷயங்களை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். இருப்பினும், ஆவிக்குரிய உலகத்திற்கு வரும்போது அதாவது, அந்த மற்ற உலகத்தின் எல்லாவற்றையும் பெரும்பாலான ஜனங்கள் நம்பவில்லை என்று சொல்வது நியாயமாக இருக்கும். ஏனென்றால், ஜனங்களால் அதைப் பார்க்க முடியாது. அதைப் புரிந்து கொள்ளவோ அல்லது அதைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவோ அவசியம் இல்லை என்று நம்புகிறார்கள். ஆவிக்குரிய உலகம் எவ்வாறு பொருள் மயமான உலகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட உலகமாக இருக்கிறது என்பதையும், தேவனுடைய பார்வையில் திறந்திருப்பதைப் பற்றியும் எதையும் அவர்கள் அறிந்திருப்பதில்லை—இருப்பினும், மனிதர்களைப் பொறுத்தவரையில் அது இரகசியமாகவும் மூடப்பட்டதாகவும் இருக்கிறது—ஆகவே, இந்த உலகத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்து கொள்வதற்கான பாதையைக் கண்டுபிடிப்பது ஜனங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. ஆவிக்குரிய உலகின் பல்வேறு அம்சங்களை நான் பேசப் போகிறேன் என்பது தேவனுடைய நிர்வாகம் மற்றும் ராஜரீகத்தை மட்டுமே குறிக்கிறது. நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் எந்த மறைபொருட்களையும் நான் வெளிப்படுத்தவில்லை, எந்த ரகசியங்களையும் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. அது தேவனுடைய ராஜரீகம், தேவனுடைய நிர்வாகம் மற்றும் தேவனுடைய ஏற்பாடு ஆகியவற்றைப் குறிப்பதால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பகுதியை மட்டுமே நான் பேசுவேன்.

முதலில், நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன்: உங்கள் மனதில், ஆவிக்குரிய உலகம் என்றால் என்ன? பரவலாகப் பார்த்தால், அது பொருள் மயமான உலகத்திற்கு வெளியே உள்ள ஒரு உலகமாகும். அது கண்ணுக்குத் தெரியாத மற்றும் ஜனங்களுக்குத் தெரியாத ஒன்றாகும். உங்கள் கற்பனையில், ஆவிக்குரிய உலகம் எத்தகைய உலகமாக இருக்க வேண்டும்? ஒருவேளை, அதைப் பார்க்க முடியாமல் போனதன் விளைவாக, நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்க இயலாதிருக்கலாம். இருப்பினும், சில கட்டுக் கதைகளை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் அதைப் பற்றி இன்னும் சிந்திக்கிறீர்கள். அதைப் பற்றிச் சிந்திப்பதை உங்களால் நிறுத்த முடியாது. இதை ஏன் நான் சொல்கிறேன்? இளம் வயதிலேயே நிறைய பேருக்கு சில காரியங்கள் நடக்கும்: பேய்கள் அல்லது ஆத்துமாக்களைப் பற்றி யாராவது ஒரு பயமுறுத்தும் கதையைச் சொல்லும்போது, அவர்கள் மிகுந்த பயத்தை உணர்கிறார்கள். அவர்கள் பயப்படுவதற்கான சரியான காரணம் என்ன? அவர்கள் அந்த விஷயங்களைக் கற்பனை செய்வதால் தான். அவர்களால் அவற்றைப் பார்க்க முடியாவிட்டாலும், அவர்கள் தங்கள் அறைகளின் மறைக்கப்பட்ட அல்லது இருண்ட மூலையில் ஏதோ இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள் மற்றும் தூங்கத் துணியாத அளவுக்கு அவர்கள் பயப்படுகிறார்கள். குறிப்பாக இரவில், அவர்கள் தங்கள் அறைகளில் தனியாக இருப்பதற்கோ அல்லது தங்கள் முற்றங்களுக்கு தனியாகச் செல்வதற்கோ மிகவும் பயப்படுகிறார்கள். அதுவே உங்கள் கற்பனையின் ஆவிக்குரிய உலகமாகும். அது ஜனங்கள் பயப்படும் உலகமாகும். உண்மை என்னவென்றால், எல்லோரும் அதை ஓரளவிற்கு கற்பனை செய்கிறார்கள். எல்லோரும் அதைக் கொஞ்சமாக உணர முடிகிறது.

ஆவிக்குரிய உலகத்தைப் பற்றி பேசுவோம். அது என்னவாக இருக்கிறது? நான் உங்களுக்கு ஒரு சுருக்கமான மற்றும் எளிமையான விளக்கத்தைத் தருகிறேன்: ஆவிக்குரிய உலகம் என்பது ஒரு முக்கியமான இடமாகும். பொருள் மயமான உலகத்திலிருந்து வேறுபட்டதாகும். அது முக்கியமானது என்று நான் ஏன் சொல்கிறேன்? இதைப் பற்றி விரிவாக விவாதிக்க உள்ளோம். ஆவிக்குரிய உலகின் இருப்பு மனிதகுலத்தின் பொருள் மயமான உலகத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய ஆதிக்கத்தில் மனிதனுடைய ஜீவன் மற்றும் மரணம் என்னும் சுழற்சியில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவே அதன் பங்காகும். அதன் இருப்பு முக்கியமானது என்பதும் காரணங்களில் ஒன்றாகும். அது ஐந்து புலன்களுக்கும் புரியாத ஒரு இடம் என்பதால், ஆவிக்குரிய உலகம் இருக்கிறதா இல்லையா என்பதை யாராலும் துல்லியமாக தீர்மானிக்க முடியாது. அதன் பல்வேறு செயல்பாடுகள் மனிதன் ஜீவிப்பதுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மனிதகுலத்தின் ஜீவித முறையும் ஆவிக்குரிய உலகத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அது தேவனுடைய ராஜரீகத்தை உள்ளடக்கியது அல்லவா? அது உள்ளடக்குகிறது. நான் இதைச் சொல்லும் போது, நான் ஏன் இந்தத் தலைப்பைப் பற்றி விவாதிக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்: ஏனென்றால் அது தேவனுடைய ராஜரீகத்தை யும் அவருடைய நிர்வாகத்தையும் பற்றியதாகும். அது போன்ற உலகில்—ஜனங்களுடைய கண்ணுக்குத் தெரியாத உலகில்—அதன் ஒவ்வொரு பரலோக அரசாணை, கட்டளை மற்றும் நிர்வாக அமைப்பு ஆகியவை பொருள் மயமான உலகின் எந்தவொரு தேசத்தின் கட்டளைகளுக்கும் அமைப்புகளுக்கும் மேலாக உள்ளன. இந்த உலகில் ஜீவிக்கும் எவரும் அவற்றை மீறத் துணிய மாட்டார்கள் அல்லது அவற்றை மீறமாட்டார்கள். தேவனுடைய ராஜரீகம் மற்றும் நிர்வாகத்துடன் அது தொடர்புடையதா? ஆவிக்குரிய உலகில், தெளிவான நிர்வாக ஆணைகள், தெளிவான பரலோக பிரமாணங்கள் மற்றும் தெளிவான கட்டளைகள் உள்ளன. வெவ்வேறு நிலைகளிலும், பல்வேறு பகுதிகளிலும், உதவியாளர்கள் தங்கள் கடமைகளைக் கண்டிப்பாக கடைப்பிடித்து, விதிகளையும் முறைமகளையும் கடைப் பிடிக்கின்றனர். ஏனென்றால் பரலோகக் கட்டளையை மீறுவதன் விளைவு என்ன என்பதை அவர்கள் அறிவார்கள். தேவன் தீமையை எவ்வாறு தண்டிக்கிறார், நன்மைக்கு எவ்வாறு பலன் அளிக்கிறார் என்பதையும், எல்லாவற்றையும் அவர் எவ்வாறு நிர்வகிக்கிறார், ஆட்சி செய்கிறார் என்பதையும் அவர்கள் தெளிவாக அறிவார்கள். மேலும், அவர் தனது பரலோகப் பிரமாணங்களையும் கட்டளைகளையும் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதை அவர்கள் தெளிவாகக் காண்கிறார்கள். மனிதகுலம் வசிக்கும் பொருள் மயமான உலகத்திலிருந்து இவை வேறுபட்டவையா? அவை உண்மையில் மிகவும் வேறுபட்டவையாகும். ஆவிக்குரிய உலகம் என்பது பொருள் மயமான உலகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகமாகும். பரலோக பிரமாணங்கள் மற்றும் கட்டளைகள் இருப்பதால், அது தேவனுடைய ராஜரீகம், நிர்வாகம், மேலும், அவருடைய மனநிலை, அத்துடன் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் தேவனிடம் என்ன இருக்கிறது ஆகியவற்றை இது குறிக்கிறது. இதைக் கேட்டபின், இந்தத் தலைப்பைப் பற்றி நான் பேசுவது மிகவும் அவசியம் என்று நீங்கள் உணரவில்லையா? அதில் உள்ளார்ந்த ரகசியங்களை நீங்கள் அறிய விரும்பவில்லையா? (ஆம், நாங்கள் விரும்புகிறோம்.) ஆவிக்குரிய உலகின் கருத்து இதுதான். பொருள்மயமான உலகத்துடன் இணைந்து ஜீவித்தாலும், ஒரே நேரத்தில் தேவனுடைய நிர்வாகம் மற்றும் ராஜரீகத்துக்கு அது உட்பட்டது என்றாலும், தேவனுடைய நிர்வாகமும் இந்த உலகத்தின் ராஜரீகமும் பொருள்மயமான உலகத்தை விட மிகவும் கடுமையானவையாகும். விவரமாகப் பார்க்க வேண்டுமெனில், மனிதகுலத்தின் ஜீவன் மற்றும் மரணம் என்னும் சுழற்சியின் கிரியைக்கு ஆவிக்குரிய உலகம் எவ்வாறு பொறுப்பாகும் என்பதிலிருந்து நாம் தொடங்க வேண்டும். ஏனென்றால் அது ஆவிக்குரிய உலகின் மனிதர்களுடைய கிரியையின் முக்கிய பகுதியாகும்.

மனிதர்களிடையே, நான் எல்லா ஜனங்களையும் மூன்று வகைகளாக வகைப்படுத்துகிறேன். முதலாவதாக அவிசுவாசிகள், அவர்கள் மத நம்பிக்கைகள் இல்லாதவர்கள். அவர்கள் அவிசுவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவிசுவாசிகளில் பெரும்பான்மையானவர்கள் பணத்தின் மீது மட்டுமே விசுவாசத்தை வைத்திருக்கிறார்கள். தங்கள் சொந்த நலன்களை மட்டுமே ஆதரிக்கிறவர்கள், பொருள் சார்ந்தவர்கள் மற்றும் பொருள் மயமான உலகில் மட்டுமே நம்புகிறவர்கள் ஆவர்—அவர்கள் ஜீவன் மற்றும் மரணம் என்னும் சுழற்சியை நம்புவதில்லை அல்லது தெய்வங்கள் மற்றும் பேய்களைப் பற்றி சொல்லும் எதையும் நம்புவதில்லை. நான் இந்த ஜனங்களை அவிசுவாசிகள் என்று வகைப்படுத்துகிறேன், அவர்கள் முதல் வகையினர். இரண்டாவது வகையில் அவிசுவாசிகளைத் தவிர பல்வேறு விசுவாசமுள்ளவர்களும் அடங்குவர். மனிதர்களிடையே, இந்த விசுவாசமுள்ள ஜனங்களை நான் பல முக்கிய கூட்டங்களாகப் பிரிக்கிறேன்: முதலாவதாக யூதர்கள், இரண்டாவதாக கத்தோலிக்கர்கள், மூன்றாவதாக கிறிஸ்தவர்கள், நான்காவதாக இஸ்லாமியர்கள் மற்றும் ஐந்தாவதாக புத்த மதத்தவர்கள். இவ்வாறு ஐந்து வகையினர் உள்ளனர். இவர்கள் பல்வேறு வகையான விசுவாசிகள். மூன்றாவது வகை தேவனை நம்புபவர்களை உள்ளடக்கியது, அது உங்களையும் உள்ளடக்கியது. அத்தகைய விசுவாசிகள் இன்று தேவனைப் பின்பற்றுபவர்கள். இந்த மனிதர்கள், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் மற்றும் ஊழியம் செய்பவர்கள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த முக்கிய வகைகள் தெளிவாக வேறுபடுத்தப்பட்டுள்ளன. எனவே, இப்போது நீங்கள் மனிதர்களின் வகைகளையும் தரவரிசைகளையும் உங்கள் மனதில் தெளிவாக வேறுபடுத்திக் கொள்ள முடிகிறது, அல்லவா? முதல் வகை அவிசுவாசிகளைக் கொண்டது. அவர்கள் யாரென்று நான் சொன்னேன். வானத்தில் உள்ள பழைய மனிதன் மீது விசுவாசம் வைத்திருப்பவர்கள் அவிசுவாசிகளாக எண்ண வேண்டுமா? பல அவிசுவாசிகள் வானத்தில் உள்ள பழைய மனிதனை மட்டுமே நம்புகிறார்கள். பயிர்கள் நடவு செய்வதற்கும் அறுவடை செய்வதற்கும் காற்று, மழை, இடி மற்றும் பலவற்றை அவர்கள் நம்பியிருக்கும் இந்த பழைய மனிதன் கட்டுப்படுத்துவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆயினும், தேவன் மீதான நம்பிக்கை குறிப்பிடப்படும்போது, அவர்கள் அவரை நம்ப விரும்புவதில்லை. இதை விசுவாசம் என்று அழைக்கலாமா? அத்தகைய மனிதர்கள் அவிசுவாசிகளிடையே சேர்க்கப்பட்டுள்ளனர். இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், அல்லவா? இந்த வகைகளைத் தவறாக எண்ணாதீர்கள். இரண்டாவது வகை விசுவாசமுள்ளவர்களை உள்ளடக்கியது. மூன்றாவது வகை தற்போது தேவனைப் பின்பற்றுபவர்களை உள்ளடக்கியது. அப்படியானால், நான் ஏன் எல்லா மனிதர்களையும் இந்த வகைகளாகப் பிரித்தேன்? (ஏனென்றால் பல்வேறு வகையான ஜனங்கள் வெவ்வேறு முடிவுகளையும் இலக்குகளையும் கொண்டிருக்கிறார்கள்.) அது ஒரு அம்சமாகும். இந்த பல்வேறு இனங்களும், ஜனங்களும் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்பும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் செல்ல அவர்களுக்கு வெவ்வேறு இடம் இருக்கும் மற்றும் அவர்கள் ஜீவன் மற்றும் மரணம் என்னும் சுழற்சியின் பல்வேறு கட்டளைகளுக்கு உட்படுவார்கள். அதனால் தான் மனிதர்களை இந்த முக்கிய வகைகளில் வகைப்படுத்தியுள்ளேன்.

a. அவிசுவாசிகளின் ஜீவ மரண சுழற்சி

அவிசுவாசிகளின் ஜீவ மரண சுழற்சியில் தொடங்கலாம். மரித்த பிறகு, ஒரு மனிதர் ஆவிக்குரிய உலகத்திலிருந்து ஒரு உதவியாளரால் அழைத்துச் செல்லப்படுகிறார். ஒரு மனிதரிடமிருந்து எடுத்துச் செல்லப்படுவது என்னவாக இருக்கிறது? ஒருவரின் மாம்சம் அல்ல, ஆனால் ஒருவரின் ஆத்துமா. ஒருவரின் ஆத்துமா எடுத்துச் செல்லப்படும்போது, ஒருவர் ஆவிக்குரிய உலகின் ஒரு நிறுவனத்துக்கு வருகிறார். சிறப்பாக அது, அந்தச் சமயம் மரித்தவர்களின் ஆத்துமாக்களைப் பெறுகிறது. யாராக இருதாலும் அவர் மரித்த பிறகு செல்லும் முதல் இடம் அதுவேயாகும், அது அந்த ஆத்துமாவுக்கு விசித்திரமானதாகும். அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு அதிகாரி முதல் கட்ட சோதனைகளை மேற்கொண்டு, அவர்களுடைய பெயர், முகவரி, வயது மற்றும் அவர்களுடைய அனுபவங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்துகிறார். அவர்கள் ஜீவனுடன் இருந்தபோது செய்த அனைத்தும் ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு துல்லியத்திற்காக சரிபார்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு, அவர்கள் முழு ஜீவகாலத்துக்குமான மனித நடத்தை மற்றும் கிரியைகள் சிட்சிக்கப்படுமா அல்லது ஒரு மனிதனாக அவர்கள் தொடர்ந்து மறுபிறவிப் பெற முடிவு எடுக்கப்படுகிறதா என்பது தீர்மானிக்கப் பயன்படுகிறது. அது முதல் கட்டமாகும். இந்த முதல் நிலை பயமுறுத்துகிறதா? அது அதிகமாக பயமுறுத்தவில்லை. ஏனென்றால் அந்த மனிதர் இருண்ட மற்றும் அறிமுகமில்லாத இடத்திற்கு வந்துள்ளார்.

இரண்டாவது கட்டத்தில், இந்த மனிதர் தங்கள் ஜீவகாலம் முழுவதிலும் ஏராளமான கெட்ட காரியங்களைச் செய்து, பல பொல்லாத கிரியைகளைச் செய்திருந்தால், அவர்கள் நியாயந்தீர்க்கப்பட வேண்டிய சிட்சைக்குரிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஜனங்களின் சிட்சைக்கு வெளிப்படையாக பயன்படுத்தப்படும் இடம் அதுவாக இருக்கும். அவர்கள் எவ்வாறு சிட்சிக்கப்படுகிறார்கள் என்பதற்கான விவரக் குறிப்புகள் அவர்கள் செய்த பாவங்களையும், அவர்கள் மரிப்பதற்கு முன்பு எத்தனை பொல்லாத கிரியைகளை செய்துள்ளார்கள் என்பதையும் சார்ந்துள்ளது—அது இந்த இரண்டாம் கட்டத்தில் நிகழும் முதல் நிலையாகும். அவர்கள் செய்த கெட்ட காரியங்கள் மற்றும் மரிப்பதற்கு முன்பு அவர்கள் செய்த தீமைகளின் காரணமாக, அவர்கள் சிட்சைக்குப் பிறகு மறுபிறவி எடுக்கும்போது—அவர்கள் மீண்டும் பொருள்மயமான உலகில் பிறக்கும்போது—சிலர் தொடர்ந்து மனிதர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் விலங்குகளாக மாறுவார்கள். அதாவது, ஒரு மனிதர் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்பிய பிறகு, அவர்கள் செய்த தீமை காரணமாக அவர்கள் சிட்சிக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் செய்த பொல்லாத காரியங்களால், அவர்களுடைய அடுத்த மறுபிறவியில் அவர்கள் ஒரு மனிதனாக அல்ல ஆனால் ஒரு மிருகமாக திரும்புவார்கள். அவர்கள் மறுபிறவியில் விலங்குகளாக பிறவி எடுக்கிறார்கள். அந்த மறுபிறவியின் வரம்பு, மாடுகள், குதிரைகள், பன்றிகள் மற்றும் நாய்கள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. சிலர், பறவைகள் அல்லது வாத்துகளாக மறுபிறவி எடுக்கலாம். அவர்கள் விலங்குகளாக மறுபிறவி எடுத்த பிறகு, அவர்கள் மீண்டும் மரிக்கும் போது, அவர்கள் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்புகிறார்கள். அங்கு, முன்பு போலவே, அவர்கள் மரிப்பதற்கு முன்னான அவர்களுடைய நடத்தையின் அடிப்படையில், அவர்கள் மனிதர்களாக மறுபிறவி எடுக்கிறார்களா இல்லையா என்பதை ஆவிக்குரிய உலகம் தீர்மானிக்கும். பெரும்பாலான ஜனங்கள் அதிகப்படியான தீமைகளைச் செய்கிறார்கள். அவர்களுடைய பாவங்கள் மிகவும் கடுமையானவை. எனவே, அவர்கள் ஏழு முதல் பன்னிரண்டு முறை விலங்குகளாக அவதாரம் எடுக்க வேண்டும். ஏழு முதல் பன்னிரண்டு முறை என்பது பயமுறுத்துகிறது அல்லவா? (அது பயமுறுத்துகிறது.) எது உங்களைப் பயமுறுத்துகிறது? ஒரு மனிதர் விலங்காக மாறினால் அது திகிலூட்டுகிறது. ஒரு மனிதர் விலங்காக மாறுவது குறித்து, அவருக்கு இருக்கும் மிகவும் வேதனையான விஷயங்கள் யாவை? எந்த மொழியும் இல்லாதது, எளிமையான எண்ணங்கள் மட்டுமே இருப்பது, விலங்குகள் செய்யும் காரியங்களை மட்டுமே செய்ய முடியும் மற்றும் விலங்குகள் புசிக்கும் ஆகாரத்தை மட்டுமே புசிக்க முடியும், ஒரு விலங்குடைய எளிய மனநிலையும் சரீர மொழியும் இருப்பது, நிமிர்ந்து நடக்க முடியாமல் இருப்பது, மனிதர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது மற்றும் மனிதர்களின் நடத்தை அல்லது செயல்பாடுகள் எதுவும் விலங்குகளுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையுமாகும். அதாவது, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மிருகமாக இருப்பது உங்களை எல்லா ஜீவன்களிடமும் மிகக் குறைவானவனாக்குகிறது மற்றும் மனிதனாக இருப்பதை விட அதிகத் துன்பத்தை உள்ளடக்கியதாகும். அது மிகவும் தீமை செய்த மற்றும் பெரிய பாவங்களைச் செய்தவர்களுக்கான ஆவிக்குரிய உலகின் சிட்சையின் ஒரு அம்சமாகும். அவர்களுடைய சிட்சையின் தீவிரத்தன்மைக்கு வரும்போது, அதைப் பொறுத்து அவர்கள் எத்தகைய விலங்குகளாக மாற வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு நாயாக இருப்பதை விட பன்றியாக இருப்பது சிறந்ததா? ஒரு பன்றி ஒரு நாயை விட சிறந்ததா அல்லது மோசமாக ஜீவிக்கிறதா? மோசமாக என்பது சரியானதாகுமா? ஜனங்கள் பசுக்களாகவோ அல்லது குதிரைகளாகவோ மாறினால், அவர்கள் பன்றிகளை விட சிறந்தவர்களாக ஜீவிப்பார்களா அல்லது மோசமாக ஜீவிப்பார்களா? (சிறந்தவர்களாக.) ஒரு மனிதர் பூனையாக மறுபிறவி எடுப்பது மிகவும் வசதியாக இருக்குமா? அவர் ஒரு மிருகமாகவே இருப்பார் மற்றும் ஒரு மாடு அல்லது குதிரையாக இருப்பதை விட பூனையாக இருப்பது மிகவும் எளிதாக இருக்கும். ஏனென்றால் பூனைகள் அதிக நேரத்தை தூக்கத்தில் செலவழிக்கின்றன. ஒரு மாடு அல்லது குதிரையாக மாறுவது அதிக உழைப்பைக் குறிக்கும். ஆகையால், ஒரு மனிதர் பசு அல்லது குதிரையாக மறுபிறவி எடுத்தால், அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்—அது கடுமையான சிட்சைக்கு ஒத்ததாகும். ஒரு நாயாக மாறுவது ஒரு மாடு அல்லது குதிரையாக மாறுவதை விட சற்று சிறப்பாக இருக்கும். ஏனென்றால், ஒரு நாய் அதன் எஜமானுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. சில நாய்கள், பல ஆண்டுகளாக செல்லப் பிராணிகளாக இருந்தபின், தங்கள் எஜமானர்கள் சொல்வதை நிறைய புரிந்து கொள்ள முடிகிறது. சில நேரங்களில், ஒரு நாய் அதன் எஜமானரின் மனநிலை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளலாம் மற்றும் எஜமானர் நாயைச் சிறப்பாக நடத்துகிறார். நாய் நன்றாகப் புசிக்கிறது மற்றும் குடிக்கிறது மற்றும் அது வலியில் இருக்கும்போது, அது அதிகமாக கவனித்துக் கொள்ளப்படுகிறது. அப்போது நாய் மகிழ்ச்சியான ஜீவிதத்தை அனுபவிக்கவில்லையா? இதனால், ஒரு மாடு அல்லது குதிரையாக இருப்பதை விட நாயாக இருப்பது நல்லது ஆகும். இதில், ஒரு மனிதரின் சிட்சையின் தீவிரம் ஒரு மனிதன் மிருகமாக எத்தனை முறை மறுபிறவி எடுக்க வேண்டும் என்பதையும் எந்த வகையான மிருகமாக என்பதையும் தீர்மானிக்கிறது.

சிலர் ஜீவனுடன் இருந்தபோது பல பாவங்களைச் செய்ததால், அவர்கள் ஏழு முதல் பன்னிரண்டு பிறவி வரை விலங்குகளாக மறுபிறவி எடுத்து, அதன் மூலம் சிட்சிக்கப்படுகிறார்கள். தேவையான அளவிற்கு சிட்சிக்கப்பட்ட பின் ஆவிக்குரிய உலகிற்கு அவர்கள் திரும்பியவுடன், பல்வேறு ஆத்துமாக்கள் ஏற்கனவே சிட்சிக்கப்பட்டு, மனிதர்களாக மறுபிறவி எடுக்கத் தயாராகி வரும் ஒரு இடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த இடத்தில், ஒவ்வொரு ஆத்துமாவும் அவர்கள் எத்தகைய குடும்பத்தில் பிறப்பார்கள், அவர்கள் மறுபிறவி எடுத்தவுடன் அவர்கள் எத்தகைய பாத்திரத்தை வகிப்பார்கள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். உதாரணமாக, சிலர் இந்த உலகத்திற்கு வரும்போது பாடகர்களாக மாறுவார்கள். எனவே பாடகர்களிடையே வைக்கப்படுகிறார்கள். சிலர் இந்த உலகத்திற்கு வரும்போது வணிகர்களாக மாறுவார்கள். எனவே அவர்கள் வணிகர்களிடையே வைக்கப்படுவார்கள். மனிதனாகிவிட்ட பிறகு யாராவது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியாளராக மாற வேண்டும் என்றால், அவர்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடையே வைக்கப்படுவார்கள். அவர்கள் வகைப்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரத்திற்கு ஏற்ப, இன்று ஜனங்கள் மின்னஞ்சல்களை அனுப்புகிறது போல நியமிக்கப்பட்ட தேதிக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் ஜீவிதம் மற்றும் மரணத்தின் ஒரு சுழற்சி நிறைவடைகிறது. ஒரு மனிதர் ஆவிக்குரிய உலகில் வந்த நாளிலிருந்து அவர்களுடைய சிட்சையின் இறுதி வரை அல்லது அவர்கள் ஒரு மிருகமாக பலமுறை மறுபிறவி அடைந்து, மனிதனாக மறுபிறவி எடுக்கத் தயாராகும் வரை, இந்த செயல்முறை நடந்து முடிகிறது.

சிட்சிக்கப்பட்டு விலங்குகளாக மறுபிறவி எடுக்காதவர்களைப் பொறுத்த வரையில், மனிதர்களாக அவதாரம் எடுக்க அவர்கள் விரைவில் பொருள் மயமான உலகத்திற்கு அனுப்பப்படுவார்களா? அல்லது, அவர்கள் மனிதர்களிடையே வருவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அது நிகழக்கூடிய வேகம் என்னவாக இருக்கிறது? அதற்குத் தற்காலிகக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆவிக்குரிய உலகில் நடக்கும் அனைத்தும் துல்லியமான தற்காலிகக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டவை. அவற்றை எண்களுடன் விளக்கினால், நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஒரு குறுகிய காலத்திற்குள் மறுபிறவி எடுத்தவர்களுக்கு, அவர்கள் மரிக்கும் போது, அவர்கள் மனிதர்களாக மறுபிறவி எடுப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும். அது நிகழக்கூடிய மிகக் குறுகிய நேரம் மூன்று நாட்களாகும். சிலருக்கு, அது மூன்று மாதங்கள் ஆகும், சிலருக்கு மூன்று ஆண்டுகள் ஆகும், சிலருக்கு முப்பது ஆண்டுகள் ஆகும், சிலருக்கு முந்நூறு ஆண்டுகள் ஆகும் மற்றும் அவ்வாறு தொடரும். எனவே, இந்த தற்காலிக விதிகளைப் பற்றி என்ன சொல்ல முடியும், அவற்றின் பிரத்தியேகங்கள் என்னவாக இருக்கின்றன? பொருள் மயமான உலகத்தில்—மனிதனின் உலகத்தில்—அவை ஒரு ஆத்துமாவிலிருந்து எதிர்பார்ப்பதையும், இந்த ஆத்துமா இந்த உலகில் ஆற்ற வேண்டிய பங்கையும் அடிப்படையாகக் கொண்டதாகும். ஜனங்கள் சாதாரண மனிதர்களாக மறுபிறவி எடுக்கும்போது, அவர்களில் பெரும்பாலானோர் மிக விரைவாக மறுபிறவி எடுக்கிறார்கள். ஏனென்றால், இதுபோன்ற சாதாரண மனிதர்களுக்காக இந்த மனித உலகத்திற்கு ஒரு முக்கிய தேவை உள்ளது. எனவே, மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்கள் மரிப்பதற்கு முன்பு அவர்கள் இருந்த முற்றிலும் வேறுபட்ட ஒரு குடும்பத்திற்கு அவர்கள் மீண்டும் அனுப்பப்படுகிறார்கள். இருப்பினும், இந்த உலகில் ஒரு விசேஷித்த பாத்திரத்தை வகிக்கும் சிலர் உள்ளனர். “விசேஷம்” என்பது மனித உலகில் இந்த ஜனங்களுக்குப் பெரிய தேவை இல்லை. அத்தகைய பாத்திரத்தை வகிக்க நிறைய பேர் தேவையில்லை. எனவே அதற்கு முன்னூறு ஆண்டுகள் ஆகலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த ஆத்துமா முந்நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும். அது ஏன்? முன்னூறு அல்லது மூவாயிரம் ஆண்டுகளாக, மனிதனின் உலகில் அத்தகைய பங்கு தேவையில்லை என்பதால் தான். அவை ஆவிக்குரிய உலகில் எங்காவது வைக்கப்படுகின்றன. உதாரணமாக கன்பூசியஸை எடுத்துக் கொள்ளுங்கள்: அவர் பாரம்பரிய சீன கலாச்சாராம்சத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார் மற்றும் அவரது வருகை அந்தக் கால ஜனங்களின் கலாச்சாரம், அறிவு, பாரம்பரியம் மற்றும் சித்தாந்தத்தை ஆழமாக பாதித்தது. இருப்பினும், அது போன்ற ஒரு மனிதர் ஒவ்வொரு யுகத்திலும் தேவையில்லை என்பதால் அவர் ஆவிக்குரிய உலகில் இருக்க வேண்டியிருந்தது. மறுபிறவி எடுப்பதற்கு முன்பு முன்னூறு அல்லது மூவாயிரம் ஆண்டுகள் அங்கே காத்திருந்தார். மனிதனின் உலகத்திற்கு இதுபோன்ற ஒருவரின் தேவை இல்லாததால், அவர் சும்மா காத்திருக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அவர் போன்ற பாத்திரங்கள் மிகக் குறைவாக தேவைப்பட்டது மற்றும் அவர் செய்ய வேண்டியதும் மிகக் குறைவாக இருக்கிறது. இந்நிலையில், மனித உலகம் அவருக்குத் தேவைப்பட்டவுடன் வெளியே அனுப்பப்பட வேண்டும் என்பதற்காக அவரை ஆவிக்குரிய உலகில் எங்காவது சும்மா வைத்திருக்க வேண்டியிருந்தது. பெரும்பாலான ஜனங்கள் மறுபிறவி எடுக்கும் வேகத்திற்கான ஆவிக்குரிய மண்டலத்தின் தற்காலிக விதிகள் இவையாகும். ஜனங்கள் சாதாரணமாகவோ சிறப்புடையவர்களாகவோ இருந்தாலும், ஆவிக்குரிய உலகில் அவர்களுடைய மறுபிறப்புகளைச் செயலாக்குவதற்குப் பொருத்தமான விதிகள் மற்றும் சரியான நடைமுறைகள் உள்ளன. இந்த விதிகளும் நடைமுறைகளும் தேவனிடமிருந்து அனுப்பப்படுகின்றன. எந்தவொரு உதவியாளரோ ஆவிக்குரிய உலகில் இருப்பவர்களோ இதைத் தீர்மானிப்பதில்லை அல்லது கட்டுப்படுத்துவதில்லை. இதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள், அல்லவா?

எந்தவொரு ஆத்துமாவிற்குமான அதன் மறுபிறவியும், இந்த ஜீவிதத்தில் அதன் பங்கு என்ன என்பதும், அது எந்தக் குடும்பத்தில் பிறந்தது என்பதும், அதன் ஜீவிதம் எப்படி இருக்கிறது என்பதும் அந்த ஆத்துமாவின் முந்தைய பிறவியுடன் நெருக்கமாக தொடர்பில் இருக்கிறது. எல்லா வகையான மனிதர்களும் மனிதனின் உலகத்திற்கு வருகிறார்கள் மற்றும் அவர்கள் செய்யும் பணிகள் வேறுபடுவது போல அவர்கள் ஆற்றும் பாத்திரங்களும் வேறுபடுகின்றன. இவை எத்தகையக் கிரியைகள்? சிலர் கடன்களைத் திருப்பிச் செலுத்த வந்திருக்கிறார்கள்: அவர்கள் கடந்த கால ஜீவிதத்தில் மற்றவர்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தால், அவர்கள் இந்த ஜீவிதத்தில் அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வருகிறார்கள். சிலர், இதற்கிடையில், கடன்களை வசூலிக்க வந்திருக்கிறார்கள்: அவர்கள் முந்தைய ஜீவிதத்தில் அதிகமான விஷயங்களிலிருந்தும் அதிக பணத்திலிருந்தும் ஏமாற்றப்பட்டனர். இதன் விளைவாக, அவர்கள் ஆவிக்குரிய உலகில் வந்த பிறகு, அது அவர்களுக்கு நீதி அளிக்கிறது மற்றும் இந்தப் பிறவியில் அவர்கள் தங்கள் கடன்களை வசூலிக்க அது அனுமதிக்கிறது. நன்றியுணர்வின் கடன்களை திருப்பிச் செலுத்த சிலர் வந்துள்ளனர்: முந்தைய பிறவியில், அதாவது, அவர்களுடைய முந்தைய மறுபிறவியில்—யாரோ ஒருவர் அவர்களிடம் கருணை காட்டியுள்ளனர். இந்த ஜீவிதத்தில் மறுபிறவி எடுக்க பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டதால், அந்த நன்றிக் கடன்களை திருப்பிச் செலுத்த அவர்கள் மறுபிறவி எடுக்கிறார்கள். மற்றவர்கள், இதற்கிடையில், ஜீவனைக் கோருவதற்காக இந்த ஜீவிதத்தில் மறுபிறவி எடுத்துள்ளனர். அவர்கள் யாருடைய ஜீவனைக் கோருகிறார்கள்? முந்தைய ஜீவிதத்தில் அவர்களைக் கொன்ற ஜனங்களின் ஜீவனை என்று அவர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில், ஒவ்வொரு மனிதரின் தற்போதைய ஜீவிதமும் அவர்களுடைய முந்தைய பிறவியுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இந்த இணைப்பு பிரிக்க முடியாததாகும். அதாவது, ஒவ்வொரு மனிதரின் தற்போதைய ஜீவிதமும் முந்தைய ஜீவிதத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக, ஜாங் மரிப்பதற்கு முன்பு, லீயிடம் ஒரு பெரிய தொகையை ஏமாற்றினார் என்று சொல்வோம். பின்னர் ஜாங் லீக்கு கடன்பட்டிருக்கிறாரா? அவர் கடன்பட்டிருக்கிறார். எனவே லீ தனது கடனை ஜாங்கிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்பது இயல்பானது அல்லவா? இதன் விளைவாக, அவர்கள் மரித்த பிறகு, அவர்களுக்கு இடையே ஒரு கடன் உள்ளது, அது நியாயந்தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் மறுபிறவி பெறும்போது மற்றும் ஜாங் மனிதராக மாறும்போது, லீ அவரிடமிருந்து கடனை எவ்வாறு வசூலிப்பார்? ஒரு முறை ஜாங்கின் மகனாக லீ மறுபிறவி எடுக்க வேண்டும். ஜாங் ஒரு பெரிய தொகையை சம்பாதிக்கிறார். பின்னர் அது லீயால் பறிக்கப்படுகிறது. ஜாங் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அவரது மகன் லீ அதைப் பறிக்க வேண்டும். ஜாங் எவ்வளவு சம்பாதித்தாலும், அது ஒருபோதும் போதாது. இதற்கிடையில், அவரது மகன், சில காரணங்களால், எப்போதும் தனது தந்தையின் பணத்தை பல்வேறு வழிகளில் செலவழிக்க வேண்டும். ஜாங் குழம்புகிறார், ஆச்சரியப்படுகிறார், “என்னுடைய இந்த மகன் எப்போதும் ஏன் இத்தகைய துரதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறான்? மற்றவர்களின் மகன்கள் ஏன் நன்றாக நடந்து கொள்கிறார்கள்? என் சொந்த மகனுக்கு ஏன் லட்சியம் இல்லை, அவன் ஏன் மிகவும் பயனற்றவனாக இருக்கிறான், எந்தப் பணத்தையும் சம்பாதிக்க இயலாமல் இருக்கிறான், நான் ஏன் எப்போதும் அவனை ஆதரிக்க வேண்டும்? நான் அவனை ஆதரிக்க வேண்டும் என்பதால், நான் செய்வேன்—ஆனால் நான் அவனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், அவனுக்கு ஏன் எப்போதும் அதிகமாகத் தேவைபடுகிறது? அவனால் ஏன் ஒரு நேர்மையான அனுதின வேலையைச் செய்ய இயலவில்லை. அதற்கு பதிலாக ஊர் சுற்றுதல், புசித்தல், குடித்தல், விபச்சாரம் செய்தல், சூதாடுதல் போன்ற அனைத்து வகையான காரியங்களையும் செய்கிறான்? பூமியில் என்ன நடக்கிறது?” ஜாங் சிறிது நேரம் சிந்திக்கிறார், “முந்தைய பிறவியில் நான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன். சரி, நான் அதைச் செலுத்துவேன்! நான் அதை முழுமையாகச் செலுத்தும் வரை அது முடிவடையாது!” லி உண்மையில் தனது கடனை ஈடுசெய்த நாள் வரக்கூடும், அவன் தனது நாற்பது அல்லது ஐம்பதுகளில் இருக்கும் நேரத்தில், அவன் திடீரென்று சுயநினைவுக்கு வந்து, “நான் என் ஜீவிதத்தின் முதல் பாதியில் ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை! எனது தந்தை சம்பாதித்த எல்லா பணத்தையும் நான் வீணடித்தேன், எனவே நான் ஒரு நல்ல மனிதனாக ஜீவிக்கத் தொடங்க வேண்டும்! என்னை நானே மனதளவில் உருவாக்குவேன். நான் நேர்மையானவனாகவும் ஒழுங்காக ஜீவிப்பவனாகவும் இருப்பேன். நான் ஒருபோதும் என் தந்தைக்கு வருத்தத்தைத் தரமாட்டேன்!” என்று உணர்வடைவான். அவர் ஏன் இதை நினைக்கிறார்? அவர் ஏன் திடீரென்று சிறப்பாக மாறுகிறார்? இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா? காரணம் என்னவாக இருக்கிறது? (இதற்குக் காரணம் லீ தனது கடனைச் சேகரித்தான் மற்றும் ஜாங் தனது கடனைச் செலுத்தியுள்ளார் என்பதே.) இதில், காரணமும் விளைவும் இருக்கிறது. கதை அவர்களுடைய தற்போதைய பிறவிக்கு முன்பே, நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது. அவர்களுடைய கடந்தகால ஜீவிதத்தின் இந்த கதை நிகழ்காலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு மற்றவரையும் குறை சொல்ல முடியாது. ஜாங் தனது மகனுக்கு என்ன கற்பித்தாலும், அவரது மகன் ஒருபோதும் செவிசாய்க்கவில்லை. நேர்மையான அனுதின வேலையையும் செய்யவில்லை. ஆயினும் கடன் திருப்பிச் செலுத்தப்பட்ட நாளில், தனது மகனுக்கு அதைக் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை—அவன் இயல்பாகவே புரிந்து கொண்டான். அது ஒரு எளிய உதாரணமாகும். இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? (ஆம், உள்ளன.) அது ஜனங்களுக்கு என்ன சொல்கிறது? (அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்றும் தீமை செய்யக் கூடாது என்றும் சொல்கிறது.) அவர்கள் செய்யும் தவறுகளுக்குப் பழிவாங்குதல் உண்டு எனவே அவர்கள் எந்தத் தீங்கும் செய்யக்கூடாது! பெரும்பாலான அவிசுவாசிகள் மிகுந்த தீமையைச் செய்கிறார்கள், அவர்களுடைய தவறுகள் பழிவாங்கப்படுவது, சரியானதாகுமா? இருப்பினும், இத்தகைய பழிவாங்கல் தன்னிச்சையானதா? ஒவ்வொரு செயலுக்கும், அதன் பழிவாங்கலுக்கும் பின்னால் ஒரு பின்னணியும் காரணமும் இருக்கிறது. பண விஷயத்தில் ஒருவரை ஏமாற்றிய பிறகு உனக்கு எதுவும் நடக்காது என்று நினைக்கிறாயா? அந்த பணத்தை மோசடி செய்த பிறகு, நீ எந்த விளைவுகளையும் சந்திக்க மாட்டாய் என்று நினைக்கிறாயா? அது சாத்தியமற்றதாகும். உண்மையில் விளைவுகள் இருக்கும்! அவர்கள் யார் என்பதை அல்லது ஒரு தேவன் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்துத் தனிநபர்களும் தங்கள் சொந்த நடத்தைக்குப் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் அவர்களுடைய கிரியைகளின் விளைவுகளை ஏற்க வேண்டும். இந்த எளிய எடுத்துக்காட்டின்படியே ஜாங் சிட்சிக்கப்படுகிறார் மற்றும் லி திருப்பிச் செலுத்துகிறார்—அது நியாயமல்லவா? ஜனங்கள் இதுபோன்ற கிரியைகளைச் செய்யும் போது, அது ஒரு வகையான விளைவாகும். அது ஆவிக்குரிய உலகின் நிர்வாகத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். அவர்கள் அவிசுவாசிகளாக இருந்தபோதிலும், தேவனை நம்பாதவர்களின் இருப்பு இத்தகைய பரலோக ஆணைகளுக்கும் கட்டளைகளுக்கும் உட்பட்டதாகும். அவற்றிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இந்த யதார்த்தத்தை யாரும் தவிர்க்க முடியாது.

விசுவாசம் இல்லாதவர்கள் பெரும்பாலும் மனிதர்களுக்குத் தெரிந்த அனைத்தும் இருப்பதாக நம்புகிறார்கள். அதே நேரத்தில் பார்க்க முடியாத அல்லது ஜனங்களிடமிருந்து மிகவும் தொலைவில் உள்ள அனைத்தும் இல்லை என்று நம்புகிறார்கள். “ஜீவ மரண சுழற்சி” இல்லை என்றும் “சிட்சை” இல்லை என்றும் அவர்கள் நம்ப விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் தயக்கமில்லாமல் பாவம் செய்கிறார்கள் மற்றும் தீமை செய்கிறார்கள். பின்னர், அவர்கள் சிட்சிக்கப்படுகிறார்கள் அல்லது அவர்கள் விலங்குகளாக மறுபிறவி எடுக்கிறார்கள். அவிசுவாசிகளிடையே பல்வேறு வகையான ஜனங்கள் இந்த தீய வட்டத்திற்குள் வருகிறார்கள். ஏனென்றால், ஆவிக்குரிய உலகமானது, அனைத்து ஜீவன்களையும் நிர்வகிப்பதில் கண்டிப்பானது என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். நீ நம்பினாலும் நம்பவில்லை என்றாலும், இந்த உண்மை மெய்யாகவே இருக்கிறது. ஏனென்றால், தேவன் தனது கண்களால் கவனிப்பவற்றின் நோக்கத்திலிருந்து ஒரு மனிதனும் அல்லது பொருளும் தப்ப முடியாது. அவருடைய பரலோக ஆணைகள் மற்றும் கட்டளைகளின் விதிகள் மற்றும் வரம்புகளிலிருந்து ஒரு மனிதனும் அல்லது பொருளும் தப்ப முடியாது. ஆகவே, நீ தேவனை நம்புகிறாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், பாவம் செய்வதும் தீமை செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், எல்லாக் கிரியைகளும் விளைவுகளைத் தரும் என்றும் இந்த எளிய எடுத்துக்காட்டு அனைவருக்கும் கூறுகிறது. பண விஷயத்தில் இன்னொருவரை ஏமாற்றிய ஒருவர் சிட்சிக்கப்படும்போது, அத்தகைய சிட்சை நியாயமானதாகும். இதுபோன்று பொதுவாகக் காணப்படும் நடத்தைக்கு ஆவிக்குரிய உலகில் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோன்ற சிட்சைகள் தேவனுடைய ஆணைகள் மற்றும் பரலோகப் பிரமாணங்களால் வழங்கப்படுகின்றன. ஆகவே, கற்பழிப்பு மற்றும் கொள்ளை, மோசடி மற்றும் ஏமாற்றம், திருட்டு மற்றும் கொள்ளை, கொலை மற்றும் தீ வைத்தல் என்பன போன்ற கடுமையான குற்றவியல் மற்றும் பொல்லாத நடத்தைகள் இன்னும் பலவிதமான கடுமையான சிட்சைகளுக்கு உட்பட்டதாகும். வேறு மாதிரியான தீவிரமான குற்றங்களுக்கான சிட்சைகளில் அடங்குபவை யாவை? அவற்றில் சில நேரத்தைப் பயன்படுத்தித் தீவிரத்தின் அளவை நிறுவுகின்றன. சில வேறுபட்ட முறைகளின் மூலம் அவ்வாறு செய்கின்றன. இன்னும் சில மறுபிறவி எடுக்கும்போது ஜனங்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை தீர்மானிப்பதன் மூலம் செய்கிறது. உதாரணமாக, சிலர் இச்சகம் பேசுபவர்கள். “இச்சகம் பேசுவது” என்பது எதைக் குறிக்கிறது? மற்றவர்கள் மீது அடிக்கடி சத்தியம் செய்வதும் மற்றவர்களை சபிக்கும் தீய மொழியைப் பயன்படுத்துவதும் ஆகும். தீய மொழி எதைக் குறிக்கிறது? மனிதருக்கு தீய இருதயம் இருப்பதை அது குறிக்கிறது. மற்றவர்களைச் சபிக்கும் தவறான மொழி பெரும்பாலும் அத்தகையவர்களின் வாயிலிருந்து வருகிறது மற்றும் இதுபோன்ற தீங்கிழைக்கும் மொழி கடுமையான விளைவுகளைத் தருகிறது. இந்த ஜனங்கள் மரித்து, தகுந்த சிட்சையைப் பெற்ற பிறகு, அவர்கள் ஊமையாக மறுபிறவி எடுக்கலாம். சிலர் ஜீவனுடன் இருக்கும்போது அதிகமாகக் கணக்கிடுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுடைய சிறிய திட்டங்கள் குறிப்பாக நன்கு திட்டமிடப்பட்டவை மற்றும் அவை ஜனங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்ககூடியவை. அவர்கள் மறுபிறவி எடுக்கும்போது, அவர்கள் புத்திகூர்மை அற்றவர்களாக அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். சிலர் பெரும்பாலும் மற்றவர்களின் தனிப்பட்ட காரியத்தில் தலையிடுவார்கள். அவை இரகசியமாக இருக்கக் கூடாது என்று அவர்களுடைய கண்கள் அவற்றை அதிகமாகக் காண்கின்றன மற்றும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாததை அதிகமாக அறிந்து கொள்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் மறுபிறவி எடுக்கும்போது, அவர்கள் குருடர்களாக இருக்கலாம். சிலர் ஜீவனுடன் இருக்கும்போது மிகவும் வேகமானவர்கள். அவர்கள் பெரும்பாலும் சண்டையிட்டு தீயதைச் செய்கிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் மறுபிறவி முடக்கப்பட்டிருக்கலாம், நொண்டியாக அல்லது ஒரு கையை இழந்தவர்களாக இருக்கலாம். இல்லையெனில் அவர்கள் கூன் உடையவர்களாக அல்லது கழுத்து திருகியவர்களாக மறுபிறவி எடுக்கலாம் ஒரு காலுடன் நடக்கலாம், ஒரு கால் உச்சமாக இருக்கலாம் மற்றும் பல உள்ளன. இவற்றில், அவர்கள் ஜீவனுடன் இருந்தபோது செய்த தீமைகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சிட்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிலருக்கு சோம்பேறிக் கண் இருப்பதாக ஏன் நினைக்கிறார்கள்? அப்படிப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்களா? இந்த நாட்களில் ஒரு சிலர் அவ்வாறு உள்ளனர். சிலருக்குச் சோம்பேறித்தனமான கண் இருக்கிறது. ஏனெனில் அவர்களுடைய கடந்த கால ஜீவிதத்தில், அவர்கள் கண்களை அதிகமாகப் பயன்படுத்தினர் மற்றும் பல மோசமான காரியங்களைச் செய்தனர். எனவே அவர்கள் சோம்பேறித்தனமான கண்ணால் இந்த ஜீவிதத்தில் பிறந்தார்கள். தீவிரமான சந்தர்ப்பங்களில், அவர்கள் பார்வையற்றவர்களாகவும் பிறந்தார்கள். அது பழிவாங்கல் ஆகும்! சிலர் மரிப்பதற்கு முன் மற்றவர்களுடன் நன்றாகப் பழகுகிறார்கள். அவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், சகாக்கள் அல்லது அவர்களுடன் இணைந்த மனிதர்களுக்காக பல நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு தர்மத்தையும் கவனிப்பையும் தருகிறார்கள் அல்லது அவர்களுக்கு நிதி உதவி செய்கிறார்கள். ஜனங்கள் அவர்களைப் பற்றி அதிகம் நினைக்கிறார்கள். அத்தகையவர்கள் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்பும்போது, அவர்கள் சிட்சிக்கப்படுவதில்லை. ஒரு அவிசுவாசி எந்த வகையிலும் சிட்சிக்கப்படக்கூடாது என்பதற்கு அவர்கள் ஒரு நல்ல மனிதராக இருந்தார்கள் என்று பொருளாகிறது. தேவன் இருப்பதை நம்புவதற்கு பதிலாக, அவர்கள் வானத்தில் உள்ள பழைய மனிதனை மட்டுமே நம்புகிறார்கள். அத்தகைய மனிதன் தனக்கு மேலே ஒரு ஆவி இருப்பதாக மட்டுமே நம்புகிறான். அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் அது கவனிக்கிறது என்பதை மட்டுமே இந்த மனிதன் நம்புகிறான். இதன் விளைவாக, இந்த மனிதன் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டான். அத்தகையவர்கள் கனிவானவர்களாகவும், தொண்டு செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் இறுதியில் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்பும்போது, அது அவர்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கும் மற்றும் அவர்கள் விரைவில் மறுபிறவி எடுப்பார்கள். அவர்கள் மறுபிறவி எடுக்கும்போது, அவர்கள் எத்தகைய குடும்பங்களுக்கு வருவார்கள்? அத்தகைய குடும்பங்கள் பணக்காரர்களாக இருக்காது என்றாலும், அவர்கள் எந்தத் தீங்கும் இல்லாமல், தங்கள் குடும்பத்தினரிடையே நல்லிணக்கத்துடன் இருப்பார்கள். அங்கே, இந்த மறுபிறவி ஜனங்கள் பாதுகாப்பான, மகிழ்ச்சியான நாட்களைக் கடந்து செல்வார்கள், எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றும் நல்ல ஜீவிதத்தை ஜீவிப்பார்கள். இந்த ஜனங்கள் இளமைப் பருவத்தை அடையும் போது, அவர்கள் பெரிய, பரம்பிய குடும்பங்களைக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய குழந்தைகள் திறமையானவர்களாக இருப்பார்கள், ஜெயத்தை அனுபவிப்பார்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்—இதுபோன்ற விளைவு இந்த ஜனங்களின் கடந்தகால ஜீவிதமுடன் பெரிதும் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனங்கள் மரித்து மறுபிறவி எடுத்தபின்னர், அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுடைய கிரியைகள் என்ன, அவர்கள் ஜீவிதத்தில் எதைக் கடப்பார்கள், அவர்கள் என்ன பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும், அவர்கள் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள், யாரைச் சந்திப்பார்கள், அவர்களுக்கு என்ன நடக்கும் என இவற்றை யாராலும் கணிக்கவோ, தவிர்க்கவோ, அவர்களிடமிருந்து மறைக்கவோ முடியாது. அதாவது, உன் ஜீவிதம் அமைக்கப்பட்டவுடன், உனக்கு எதுவெல்லாம் நடக்கிறதோ, அதைத் தவிர்க்க நீ எவ்வளவாக முயற்சி செய்தாலும், எப்படி முயன்றாலும், ஆவிக்குரிய உலகில் தேவன் உனக்காக அமைத்துள்ள ஜீவிதப் போக்கை மீறுவதற்கான வழி உனக்கு இல்லை. நீ மறுபிறவி எடுக்கும்போது, உன் ஜீவிதத்தின் தலைவிதி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அது நல்லதாக அல்லது கெட்டதாக இருந்தாலும், எல்லோரும் அதை எதிர்கொண்டு முன்னேற வேண்டும். அது இந்த உலகில் ஜீவிக்கும் எவரும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாகும் மற்றும் இந்தப் பிரச்சனை உண்மையானது ஆகும். நான் சொல்லிக் கொண்டிருந்த அனைத்தையும் நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டீர்கள், அல்லவா?

இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டபின், தேவனுடைய ஜீவிதச் சுழற்சி மற்றும் அவிசுவாசிகளின் மரணத்துக்கென மிகவும் துல்லியமான மற்றும் கடுமையான சோதனைகள் மற்றும் நிர்வாகம் இருப்பதை நீங்கள் இப்போது பார்த்தீர்களா? முதலாவதாக, அவர் ஆவிக்குரிய உலகில் பல்வேறு பரலோகப் பிரமாணங்கள், ஆணைகள் மற்றும் அமைப்புகளை நிறுவியுள்ளார். இவை அறிவிக்கப்பட்டவுடன், அவை தேவனால் நிர்ணயிக்கப்பட்டபடி, ஆவிக்குரிய உலகில் பல்வேறு உத்தியோகப்பூர்வ பதவிகளில் உள்ள மனிதர்களால் மிகவும் கண்டிப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. ஒருவரும் அவற்றை மீறத் துணிய மாட்டார். எனவே, மனித உலகில் மனிதகுலத்தின் ஜீவ மரண சுழற்சியில், யாராவது ஒரு மிருகமாகவோ அல்லது மனிதனாகவோ மறுபிறவி எடுத்தாலும், இருவருக்கும் கட்டளைகள் உள்ளன. இந்தக் கட்டளைகள் தேவனிடமிருந்து வந்ததால், அவற்றை உடைக்க யாரும் துணிவதில்லை. அவற்றை உடைக்க யாராலும் முடியாது. தேவனுடைய இந்த ராஜரீகத்தால் மற்றும் அத்தகைய கட்டளைகள் இருப்பதால் மட்டுமே, ஜனங்கள் பார்க்கும் பொருள் மயமான உலகம் நேர்த்தியானதாகவும் ஒழுங்காகவும் இருக்கிறது. தேவனுடைய இந்த ராஜரீகத்தின் காரணமாகவே, மனிதர்கள் தங்களுக்கு முற்றிலும் கண்ணுக்குத் தெரியாத மற்ற உலகத்துடன் சமாதானமாக ஜீவிக்க முடிகிறது மற்றும் அதனுடன் இணக்கமாக ஜீவிக்க முடிகிறது—இவை அனைத்தும் தேவனுடைய ராஜரீகத்திலிருந்து பிரிக்க முடியாதவையாகும். ஒரு மனிதனின் மாம்ச ஜீவிதம் முடிந்த பிறகும் ஆத்துமாவுக்கு உயிர் இருக்கிறது. எனவே, அது தேவனுடைய நிர்வாகத்தின் கீழ் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? ஆத்துமா எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து, எல்லா இடங்களிலும் ஊடுருவி, மனித உலகில் உள்ள ஜீவன்களுக்கும் தீங்கு விளைவிக்கும். இத்தகைய தீங்கு மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் செய்யப்படலாம்—இருப்பினும், முதலில் தீங்கடைவது ஜனங்கள் தான். அது நிகழ்ந்திருந்தால்—அத்தகைய ஆத்துமாவானது நிர்வாகம் இல்லாமல் இருந்திருந்தால், ஜனங்களுக்கு உண்மையிலேயே தீங்கு விளைவித்திருந்தால், உண்மையில் தீய காரியங்களைச் செய்திருந்தால்—இந்த ஆத்துமாவும் ஆவிக்குரிய உலகில் சரியாகக் கையாளப்படும்: விஷயங்கள் தீவிரமாக இருந்தால், ஆத்துமா விரைவில் இல்லாமல் போகும் மற்றும் அழிக்கப்படும். முடிந்தால், அது எங்காவது வைக்கப்பட்டு பின்னர் மறுபிறவி எடுக்கும். அதாவது, பல்வேறு ஆத்துமாக்களின் ஆவிக்குரிய உலகின் நிர்வாகம் கட்டளையிடப்பட்டுள்ளது மற்றும் அது படிகள் மற்றும் விதிகளின்படி மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய நிர்வாகத்தின் காரணமாகவே, மனிதனின் பொருள்மயமான உலகம் குழப்பத்தில் சிக்காமல் இருக்கிறார்கள். பொருள்மயமான உலகின் மனிதர்கள் ஒரு சாதாரண மனநிலையையும், ஒரு சாதாரண பகுத்தறிவையும், கட்டளையிடப்பட்ட மாம்ச ஜீவிதத்தையும் கொண்டிருக்கிறார்கள். மனிதகுலத்திற்கு இதுபோன்ற இயல்பான ஜீவிதம் கிடைத்த பின்னரே, மாம்சத்தில் ஜீவிப்பவர்கள் தலைமுறை தலைமுறைகளாக தொடர்ந்து செழித்து வளர முடிகிறது.

நீங்கள் இப்போது கேட்ட வார்த்தைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவை உங்களுக்குப் புதிதானவையா? இன்றைய கலந்துரையாடலின் தலைப்புகள் பற்றி என்ன வகையானப் பதிவுகள் உங்களுக்கு உள்ளன? அவற்றுடைய புதுமை தவிர, வேறு எதையேனும் நீங்கள் உணர்கிறீர்களா? (ஜனங்கள் நன்றாக நடந்து கொள்ள வேண்டும். தேவன் பெரியவர் மற்றும் போற்றப்பட வேண்டியவர் என்பதையும் நாம் காணலாம்.) (பல்வேறு வகையான மனிதர்களின் முடிவுகளை தேவன் எவ்வாறு ஏற்பாடு செய்கிறார் என்பது பற்றிய தேவனுடைய ஐக்கியத்தை இப்போது கேட்டவுடன், ஒரு புறம், அவருடைய மனநிலை எந்தவொரு குற்றத்தையும் அனுமதிக்காது என்றும், நான் அவரை வணங்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். மறுபுறம், தேவன் எத்தகைய மனிதர்களை விரும்புகிறார், அவர் எத்தகைய மனிதர்களை விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும் என்பதால் அவர் விரும்பும் மனிதர்களில் ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன்.) இந்தப் பகுதியில் தேவன் தனது கிரியைகளில் கொள்கை அடிப்படையில் இருப்பதை நீங்கள் காண்கிறீர்களா? அவர் கிரியை செய்வதற்கான கொள்கைகள் யாவை? (ஜனங்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் ஏற்ப அவர் ஜனங்களின் முடிவுகளை அமைத்துக் கொள்கிறார்.) அது நாம் இப்போது பேசிய அவிசுவாசிகளுக்கான பல்வேறு முடிவுகளைப் பற்றியது. அவிசுவாசிகளைப் பொறுத்த வரையில், தேவனுடைய கிரியைகளுக்குப் பின்னால் உள்ள கொள்கையானது, நன்மைக்குப் பலன் அளிப்பதிலும், துன்மார்க்கரைத் தண்டிப்பதிலும் உள்ளதா? ஏதேனும் விதிவிலக்குகள் உள்ளதா? (இல்லை.) தேவனுடைய கிரியைகளுக்குப் பின்னால் ஒரு கொள்கை இருப்பதை நீங்கள் காண்கிறீர்களா? அவிசுவாசிகள் உண்மையில் தேவனை நம்புவதில்லை. அவருடைய திட்டங்களுக்கு அடிபணிவதில்லை. கூடுதலாக, அவருடைய ராஜரீகத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அவரை ஒப்புக் கொள்வதுமில்லை. அவர்கள் தேவனுக்கு விரோதமாக இன்னும் தீவிரமாக அவதூறு செய்கிறார்கள். அவரைச் சபிக்கிறார்கள். தேவனை நம்புகிறவர்களுக்கு விரோதமாக இருக்கிறார்கள். தேவனைப் பற்றி அவர்களுக்கு இத்தகு மனநிலை இருந்தபோதிலும், அவர்களை அவர் நிர்வகித்தல் என்பது அவருடைய கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லவில்லை. அவர் தம்முடைய கொள்கைகளுக்கும் தம்முடைய மனநிலைக்கும் ஏற்ப அவர்களை ஒழுங்காக நிர்வகிக்கிறார். அவர்களுடைய விரோதத்தை அவர் எவ்வாறு கருதுகிறார்? அறியாமையாக! இதன் விளைவாக, கடந்த காலங்களில், அவர் இந்த ஜனங்களை அதாவது, அவிசுவாசிகளில் பெரும்பான்மையினரை விலங்குகளாக மறுபிறவி எடுக்கச் செய்தார். எனவே, தேவனுடைய பார்வையில், அவிசுவாசிகள் என்றால் யார்? அவர்கள் அனைவரும் மிருகங்களாவர. தேவன் மிருகங்களையும் மனிதகுலத்தையும் நிர்வகிக்கிறார். அத்தகையவர்களுக்கு அவருக்கும் அதே கொள்கைகள் உள்ளன. இந்த ஜனங்களின் நிர்வாகத்தில் கூட, அவருடைய மனநிலையை காணலாம். எல்லாவற்றையும் அவர் ஆதிக்கம் செலுத்துவதற்குப் பின்னால் அவருடைய கட்டளைகள் உள்ளன. எனவே, நான் குறிப்பிட்டுள்ள அவிசுவாசிகள், தேவன் நிர்வகிக்கும் கொள்கைகளில் அவருடைய ராஜரீகத்தைக் காண்கிறீர்களா? தேவனுடைய நீதியான மனநிலையை நீங்கள் காண்கிறீர்களா? (நாம் காண்கிறோம்.) வேறு விதமாகக் கூறினால், அவர் கையாளும் எல்லாவற்றிலும், அது எதுவாக இருந்தாலும், தேவன் தம்முடைய கொள்கைகளுக்கும் மனநிலைக்கும் ஏற்பச் செயல்படுகிறார். அது தேவனுடைய சாராம்சமாகும். அவர் மிருகங்களைப் போன்றவர்களைக் குறித்தும் கருதுவதால், அவர் தாம் கட்டளையிட்ட கட்டளைகளையோ பரலோகப் பிரமாணங்களையோ ஒருபோதும் உடைக்க மாட்டார். தேவன் கொள்கையளவில் செயல்படுகிறார், பொறுப்பற்ற முறையில் அல்ல. அவருடைய கிரியைகள் எந்தவொரு காரணிகளாலும் முற்றிலும் பாதிக்கப்படுவதில்லை. அவர் செய்யும் அனைத்தும் அவருடைய சொந்தக் கொள்கைகளுக்குக் கட்டுப்படுகின்றன. ஏனென்றால், தேவனுடைய சாராம்சத்தை தேவன் கொண்டிருக்கிறார். அது அவரது சாராம்சத்தின் ஒரு அம்சமாகும். அது எந்தவொரு சிருஷ்டிகரிடமும் இல்லை. ஒவ்வொரு பொருளையும், மனிதரையும், உயிரினத்தையும் அவர் உருவாக்கிய எல்லாவற்றையும் கையாளுதல், அணுகுதல், நடத்துதல், நிர்வகித்தல் மற்றும் ஆளுதல் ஆகியவற்றில் தேவன் நேர்மையும் பொறுப்பும் உள்ளவர். இதில் அவர் ஒருபோதும் கவனக் குறைவாக இருந்ததில்லை. நல்லவர்களுக்கு, அவர் கிருபையும் இரக்கமும் உடையவர். பொல்லாதவர்கள் மீது, அவர் இரக்கம் இல்லாமல் சிட்சையளிக்கிறார். பல்வேறு ஜீவன்களுக்காக, வெவ்வேறு காலங்களில் மனித உலகின் மாறுபட்ட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சரியான நேரத்தில் மற்றும் வழக்கமான முறையில் அவர் சரியான ஏற்பாடுகளைச் செய்கிறார். அதாவது இந்த பல்வேறு ஜீவன்கள் ஒழுங்கான முறையில் தாம் வகிக்கும் பாத்திரங்களின்படி மறுபிறவி எடுக்கின்றன. அவை பொருள் மயமான உலகத்திற்கும் ஆவிக்குரிய உலகிற்கும் இடையில் ஒரு முறையான வழியில் நகர்கின்றன.

ஒரு ஜீவனின் மரணம்—ஒரு உலக ஜீவிதத்தின் முடிவு—என்பது அந்த ஜீவன் பொருள்மயமான உலகத்திலிருந்து ஆவிக்குரிய உலகிற்குச் சென்றுவிட்டது என்பதைக் குறிக்கிறது. அதே சமயம் ஒரு புதிய மனித ஜீவிதத்தின் பிறப்பு ஆவிக்குரிய உலகத்திலிருந்து ஒரு ஜீவன் வந்துள்ளது என்பதையும் பொருள் மயமான உலகம் மற்றும் அதன் பங்கை ஏற்றுக்கொள்ள மற்றும் தன் பங்கை செய்யத் தொடங்கியது என்பதையும் குறிக்கிறது. அது ஒரு ஜீவனின் புறப்பாடாக அல்லது வருகையாக இருந்தாலும், இரண்டுமே ஆவிக்குரிய உலகின் கிரியையிலிருந்துப் பிரிக்க முடியாதவையாகும். ஒருவர் பொருள் மயமான உலகிற்குள் வரும்போது, அந்த மனிதர் எந்தக் குடும்பத்திற்குச் செல்வார், அவர்கள் வர வேண்டிய சகாப்தம், அவர்கள் வர வேண்டிய மணிநேரம், ஆவிக்குரிய உலகில் அவர்களுக்கு பொருத்தமான ஏற்பாடுகள் மற்றும் வரையறைகள் மற்றும் அவர்கள் வகிக்கும் பங்கு ஏற்கனவே தேவனால் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த மனிதரின் முழு ஜீவிதமும்—அவர்கள் செய்யும் காரியங்களும், அவர்கள் எடுக்கும் பாதைகளும்—ஆவிக்குரிய உலகில் செய்யப்பட்ட ஏற்பாடுகளின்படி, சிறிதளவு விலகலும் இல்லாமல் தொடரும். மேலும், ஒரு சரீர ஜீவிதம் முடிவடையும் நேரம் மற்றும் அது முடிவடையும் விதம் மற்றும் இடமானது ஆவிக்குரிய உலகிற்குத் தெளிவாகவும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். தேவன் பொருள் மயமான உலகை ஆளுகிறார் மற்றும் அவர் ஆவிக்குரிய உலகையும் ஆளுகிறார். அவர் ஒரு ஆத்துமாவின் இயல்பான ஜீவ மரண சுழற்சியைத் தாமதப்படுத்த மாட்டார் மற்றும் அந்தச் சுழற்சியின் ஏற்பாடுகளில் அவரால் எந்தப் பிழையும் செய்ய முடியாது. ஆவிக்குரிய உலகின் உத்தியோகப்பூர்வ பதவிகளில் கிரியை செய்யும் ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட கிரியைகளைச் செய்கிறார்கள் மற்றும் அவர்கள் செய்ய வேண்டியதை தேவனுடைய அறிவுறுத்தல்களுக்கும் விதிகளுக்கும் ஏற்ப செய்கிறார்கள். இவ்வாறு, மனிதகுலத்தின் உலகில், மனிதனால் காணப்பட்ட ஒவ்வொரு பொருள் மயமான நிகழ்வும் ஒழுங்காக உள்ளன மற்றும் குழப்பங்கள் எதுவும் இல்லாமல் இருக்கின்றன. இவை அனைத்தும் தேவன் எல்லாவற்றையும் ஒழுங்காக ஆட்சி செய்வதாலும், அவருடைய அதிகாரம் எல்லாவற்றையும் ஆளுகிறது என்பதாலும் நிகழ்கிறது. அவரது ஆதிக்கத்திற்குள் மனிதன் ஜீவிக்கும் பொருள் மயமான உலகமும், மேலும், மனிதகுலத்தின் பின்னால் கண்ணுக்குத் தெரியாத ஆவிக்குரிய உலகமும் அடங்கும். ஆகையால், மனிதர்கள் ஒரு நல்ல ஜீவிதத்தை ஜீவிக்க விரும்பினால், நல்ல சூழலில் ஜீவிக்க விரும்பினால், முழுமையான கண்ணுக்குத் தெரியும் பொருள் மயமான உலகம் வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு யாரும் பார்க்க முடியாத மற்றும் மனிதகுலத்தின் சார்பாக ஒவ்வொரு ஜீவனையும் ஆளுகை செய்யும் ஆவிக்குரிய உலகமும் வழங்கப்பட வேண்டும். அது ஒழுங்கானதாகும். ஆகவே, தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார் என்று கூறுவதில், “எல்லாம்” பற்றிய நமது அறிவையும் புரிதலையும் நாம் மேம்படுத்தவில்லையா? (ஆம்.)

b. விசுவாசத்தின் பல்வேறு ஜனங்களின் ஜீவ மரண சுழற்சி

முதல் பிரிவில், அவிசுவாசிகளின் ஜீவ மரண சுழற்சியை நாம் விவாதித்தோம். இப்போது, இரண்டாவது பிரிவில், விசுவாசத்தின் பல்வேறு மனிதர்கள் பற்றி விவாதிப்போம். “விசுவாசத்தின் பல்வேறு ஜனங்களின் ஜீவ மரண சுழற்சி” என்பது மற்றொரு மிக முக்கியமான தலைப்பாகும். அதைப் பற்றி நீங்கள் கொஞ்சமாகப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். முதலாவதாக, “விசுவாசமுள்ள ஜனங்களில்” “விசுவாசம்” எந்த விசுவாசங்களைக் குறிக்கிறது என்பதைப் பற்றி பேசலாம்: யூத மதம், கிறிஸ்தவம், கத்தோலிக்கம், இஸ்லாம் மற்றும் புத்த மதம் ஆகியவை ஐந்து முக்கிய மதங்களாகும். அவிசுவாசிகளை விட அதிகமாக, இந்த ஐந்து மதங்களையும் நம்பும் ஜனங்கள் உலக ஜனத்தொகையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஐந்து மதங்களில், தங்கள் விசுவாசத்திலிருந்து ஒரு ஜீவிதத்தை உருவாக்கியவர்கள் மிகக் குறைவு. ஆனாலும் இந்த மதங்களுக்கு ஏராளமான பின்பற்றுபவர்கள் உள்ளனர். அவர்கள் மரிக்கும் போது வேறு இடத்திற்குச் செல்வார்கள். யாரிடமிருந்து “வேறுபடுவார்கள்”? நாம் இப்போது பேசிக் கொண்டிருந்தது போல அவிசுவாசிகளிடமிருந்து—விசுவாசம் இல்லாத ஜனங்களிடமிருந்து வேறுபடுவார்கள். மரித்த பிறகு, இந்த ஐந்து மதங்களின் விசுவாசிகளும், அவிசுவாசிகள் செல்லும் இடங்கள் அல்லாமல் வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். இருப்பினும், அது இன்னும் அதே செயல்முறையாகும். ஆவிக்குரிய உலகமும் இதேபோல் அவர்கள் மரிப்பதற்கு முன்பு அவர்கள் செய்த எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்கும். அதன்பிறகு அவை செயல்படுத்தப்படும். இருப்பினும், இந்த மனிதர்கள் செயல்படுத்தப்பட வேறு இடத்திற்கு அனுப்பப்படுவது ஏன்? இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது என்னவாக இருக்கிறது? அதை ஒரு எடுத்துக்காட்டுடன் உங்களுக்கு விளக்குகிறேன். எவ்வாறாயினும், நான் விளக்குவதற்கு முன்பு, நீங்கள் உங்களுக்குள் நினைத்துக் கொண்டிருக்கலாம்: “அவர்கள் தேவன்மீது கொஞ்சமாக நம்பிக்கை வைத்திருப்பது காரணமாக இருக்கலாம்! அவர்கள் மொத்த அவிசுவாசிகள் அல்ல.” இருப்பினும், அது காரணம் அல்ல. அவர்கள் மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.

உதாரணமாக, புத்த மத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்வேன். ஒரு புத்த மதத்தவர், முதலில், புத்த மதத்திற்கு மாறிய ஒருவர் ஆவார். அவர் புத்த மதத்தினருடைய நம்பிக்கை என்ன என்பதை அறிந்த ஒரு மனிதர். புத்த மதத்தவர்கள் தங்கள் தலைமுடியை வெட்டி துறவிகளாகவோ அல்லது கன்னியாஸ்திரிகளாகவோ மாறும்போது, அவர்கள் மதச்சார்பற்ற உலகத்திலிருந்து தங்களைப் பிரித்து, மனித உலகின் ஆரவாரத்தை விட்டுவிட்டார்கள் என்று அர்த்தமாகும். ஒவ்வொரு நாளும், அவர்கள் சூத்திரங்களை ஓதிக் கொண்டு, புத்த மதத்தவர்களின் பெயர்களை உச்சரிக்கிறார்கள். சைவ ஆகாரத்தை மட்டுமே புசிக்கிறார்கள். சந்நியாசியாக ஜீவிக்கிறார்கள். அகல் விளக்கின் குளிர்ந்த, பலவீனமான ஒளியுடன் மட்டுமே தங்கள் நாட்களைக் கடந்து செல்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு ஜீவிதத்தையும் இப்படிச் செலவிடுகிறார்கள். ஒரு புத்தரின் மனித ஜீவிதம் முடிந்ததும், அவர்கள் தங்கள் ஜீவிதத்தின் சாராம்சத்தை உருவாக்குவார்கள். ஆனால் அவர்கள் மரித்த பிறகு அவர்கள் எங்கு செல்வார்கள், யாரைச் சந்திப்பார்கள் அல்லது அவர்களுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் இருதயத்தில் அறிய மாட்டார்கள்: ஆழமாக, இதுபோன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெளிவான யோசனை இருக்காது. அவர்கள் தங்கள் ஜீவகாலம் முழுவதும் ஒரு வகையான விசுவாசத்தைக் கண்மூடித்தனமாக சுமப்பதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு அவர்கள் மனித உலகத்திலிருந்து தங்கள் குருட்டு விருப்பங்களுடனும் இலட்சியங்களுடனும் புறப்படுகிறார்கள். ஒரு புத்தரின் சரீர ஜீவிதம், அவர்கள் ஜீவிக்கும் உலகத்தை விட்டு வெளியேறும்போது முடிவடைகிறது. அதன் பிறகு, அவர்கள் ஆவிக்குரிய உலகில் தங்கள் மெய்யான இடத்திற்குத் திரும்புகிறார்கள். இந்த மனிதர் பூமிக்குத் திரும்பி அவர்களுடைய சுய-முன்னேற்றத்தைத் தொடர மறுபிறவி எடுக்கிறார்களா இல்லையா என்பது அவர்களுடைய மரணத்திற்கு முன்னான அவர்களுடைய நடத்தை மற்றும் நடைமுறையைப் பொறுத்ததாகும். அவர்கள் ஜீவகாலத்தில் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர்கள் விரைவாக மறுபிறவி பெறுவார்கள், மீண்டும் பூமிக்கு அனுப்பப்படுவார்கள், அங்கு இந்த மனிதர் மீண்டும் ஒரு துறவி அல்லது கன்னியாஸ்திரி ஆவார்கள். அதாவது, அவர்கள் முதல்முறையாக சுய-முன்னேற்றத்தை எவ்வாறு கடைப்பிடித்தார்கள் என்பதற்கு ஏற்ப அவர்கள் மனித ஜீவிதத்தில் சுய-முன்னேற்றத்தைப் பயிற்சி செய்கிறார்கள். பின்னர் அவர்களுடைய மனித ஜீவிதம் முடிந்தபின் ஆவிக்குரிய மண்டலத்திற்குத் திரும்புகிறார்கள். அங்கு அவர்கள் ஆராயப்படுகிறார்கள். அதன்பிறகு, எந்தவொரு பிரச்சனையும் காணப்படாவிட்டால், அவர்கள் மீண்டும் ஒரு முறை மனித உலகிற்குத் திரும்பி மீண்டும் புத்த மதத்திற்கு மாறலாம், இதனால் அவர்களுடைய நடைமுறையைத் தொடரலாம். மூன்று முதல் ஏழு முறை மறுபிறவி எடுத்த பிறகு, அவர்கள் மீண்டும் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்புவர். ஒவ்வொரு சரீர ஜீவிதமும் முடிந்தபின்னர் அவர்கள் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்பச் செல்கிறார்கள். மனித உலகில் அவர்களுடைய பல்வேறு தகுதிகளும் நடத்தைகளும் ஆவிக்குரிய உலகின் பரலோகப் பிரமாணங்களுக்கு ஏற்ப இருந்திருந்தால், இந்தக் கட்டத்தில் இருந்து அவர்கள் அங்கேயே இருப்பார்கள். அவர்கள் இனி மனிதர்களாக மறுபிறவி எடுக்க மாட்டார்கள். பூமியில் தீமை செய்ததற்காக அவர்கள் சிட்சிக்கப்படும் அபாயமும் இருக்காது. அவர்கள் மீண்டும் ஒருபோதும் இந்தச் செயல்முறைக்குச் செல்ல வேண்டியதில்லை. மாறாக, அவர்களுடைய சூழ்நிலைகளைப் பொறுத்து, அவர்கள் ஆவிக்குரிய உலகில் ஒரு நிலையை எடுப்பார்கள். இதைத் தான் புத்த மதத்தவர்கள் “புத்த நிலையை அடைதல்” என்று குறிப்பிடுகிறார்கள். புத்த நிலையை அடைவதென்பது முக்கியமாக ஆவிக்குரிய உலகின் அதிகாரியாகப் பலனை அடைவதாகும். அதன் பின்னர், மறுபிறவி எடுப்பதோ சிட்சிக்கப்படும் அபாயத்தில் இருப்பதோ அல்ல. மேலும் மறுபிறவிக்குப் பிறகு மனிதனாக இருப்பதன் துன்பங்களை இனி அனுபவியாமல் இருப்பது என்று பொருளாகும். எனவே, அவர்கள் ஒரு மிருகமாக மறுபிறவி எடுக்க இன்னும் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? (இல்லை.) இதன் பொருள் அவர்கள் ஆவிக்குரிய உலகில் ஒரு பங்கைப் பெறுவார்கள், இனி மறுபிறவி எடுக்க மாட்டார்கள் என்பதே. புத்த மதத்தில் புத்த மதத்தின் பலனை அடைவதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு ஆகும். பலனளிக்காதவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்பும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரியின் பரிசோதனை மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுவார்கள். அவர்கள் ஜீவனுடன் இருக்கும்போது, அவர்கள் சுய-முன்னேற்றத்தை விடாமுயற்சியுடன் கடைப்பிடிக்கவில்லை அல்லது சூத்திரங்களை ஓதுவதில் நேர்மையாக இருக்கவில்லை என்பதையும் புத்தத்தால் பரிந்துரைக்கப்பட்ட சூத்திரங்கள் மற்றும் புத்த மதத்தவர்களின் பெயர்களை உச்சரிப்பதற்குப் பதிலாக பல தீய கிரியைகளைச் செய்து, ஏராளமான தீய நடத்தைகளில் ஈடுபட்டதையும் கண்டுபிடிப்பார். பின்னர், ஆவிக்குரிய உலகில், அவர்கள் செய்யும் தீமை குறித்து ஒரு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவர்கள் சிட்சிக்கப்படுவது உறுதியாகிறது. இதில், விதிவிலக்குகள் இல்லை. எனவே, அத்தகைய மனிதர் எப்போது பலனை அடைய முடியும்? அவர்கள் மரிப்பதற்கு முன்பு அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்பியபின் அந்த ஜீவகாலத்தில் அவர்கள் எந்தத் தீமையும் செய்யவில்லை என்பதாகும். பின்னர் அவர்கள் தொடர்ந்து மறுபிறவி எடுத்து, சூத்திரங்களை ஓதிக் கொண்டு, புத்த மதத்தவர்களின் பெயர்களைக் கோஷமிடுகிறார்கள், அகல் விளக்கின் குளிர்ந்த, பலவீனமான ஒளியுடன் தங்கள் நாட்களைக் கடந்து செல்கிறார்கள். எந்தவொரு உயிரினத்தையும் கொல்வதை அல்லது எந்த இறைச்சியையும் புசிப்பதைத் தவிர்ப்பார்கள். அவர்கள் மனிதனின் உலகில் பங்கெடுப்பதில்லை. அதன் கஷ்டங்களை வெகுதூரம் விட்டுவிட்டு, மற்றவர்களுடன் எந்தவிதமான சர்ச்சையும் இல்லாமல் இருக்கிறார்கள். இந்தச் செயல்பாட்டில், அவர்கள் எந்தத் தீங்கும் செய்யவில்லை என்றால், அவர்கள் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்பியதும், அவர்களுடைய கிரியைகள் மற்றும் நடத்தைகள் அனைத்தும் ஆராயப்பட்டதும், அவர்கள் மீண்டும் மூன்று முதல் ஏழு முறை வரை தொடரும் ஒரு சுழற்சியில், மனித மண்டலத்திற்குள் அனுப்பப்படுகின்றனர். இந்த நேரத்தில் எந்த முறைகேடும் செய்யப்படாவிட்டால், அவர்கள் புத்த நிலையை அடைவது பாதிக்கப்படாமல் இருக்கும், அது தாமதமாகாது. அது விசுவாசமுள்ள எல்லா ஜனங்களின் ஜீவ மரண சுழற்சியின் ஒரு அம்சமாகும்: அவர்களால் “பலனை அடைய” முடியும் மற்றும் ஆவிக்குரிய உலகில் ஒரு நிலையை எடுக்க முடியும். இதுதான் அவிசுவாசிகளிடமிருந்து அவர்களை வேறுபடுத்துகிறது. முதலாவதாக, பூமியில் ஜீவித்து கொண்டிருக்கும்போது, ஆவிக்குரிய உலகில் ஒரு நிலையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் தங்களை எவ்வாறு நடத்துகிறார்கள்? எந்தவொரு தீமையும் செய்யக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்: அவர்கள் கொலை செய்யவோ, தீக்குளிக்கவோ, கற்பழிக்கவோ, கொள்ளையடிக்கவோ கூடாது. அவர்கள் மோசடி, ஏமாற்றுதல், திருட்டு அல்லது கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டால், அவர்கள் பலனை அடைய முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களுக்கு எந்தவொரு தீமையும் செய்வதில் ஏதேனும் தொடர்பு அல்லது பங்கு இருந்தால், ஆவிக்குரிய உலகத்தால் அவர்களுக்கு வழங்கப்படும் சிட்சையிலிருந்து அவர்கள் தப்ப முடியாது. புத்த நிலையை அடையும் புத்த மதத்தவர்களுக்கு ஆவிக்குரிய உலகம் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்கிறது: புத்த மதத்தை மற்றும் வானத்தில் உள்ள பழைய மனிதரை நம்புபவர்களை நிர்வகிக்க அவர்கள் நியமிக்கப்படலாம்—அவர்களுக்கு ஒரு அதிகார வரம்பு ஒதுக்கப்படலாம். அவர்கள் அவிசுவாசிகளுக்கு மட்டுமே பொறுப்பாக இருக்கலாம் அல்லது மிகச் சிறிய கடமைகளைக் கொண்ட பதவிகளைக் கொண்டிருக்கலாம். இத்தகைய ஒதுக்கீடு அவர்களுடைய ஆத்துமாக்களின் பல்வேறு இயல்புகளுக்கு ஏற்ப நிகழ்கிறது. அது புத்த மதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

நாம் பேசிய ஐந்து மதங்களில், கிறிஸ்தவம் ஒப்பீட்டளவில் சிறப்பு வாய்ந்தது. கிறிஸ்தவர்களை மிகவும் சிறப்பானதாக்குவது எது? இவர்கள் உண்மையான தேவனை நம்புகிறவர்கள். உண்மையான தேவனை நம்புபவர்களை இங்கே எவ்வாறு பட்டியலிட முடியும்? கிறித்துவம் ஒரு வகையான விசுவாசம் என்று சொல்வதில், அது சந்தேகத்திற்கு இடமின்றி விசுவாசத்துடன் மட்டுமே செய்யப்பட வேண்டும். அது வெறுமனே ஒரு வகையான விழாவாகவும், ஒரு வகையான மதமாகவும், தேவனை உண்மையாக பின்பற்றுபவர்களின் விசுவாசத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட விஷயமாகவும் இருக்கிறது. ஐந்து முக்கிய மதங்களில் நான் கிறிஸ்தவத்தைப் பட்டியலிட்டதற்கான காரணம் என்னவென்றால், அது யூத மதம், புத்த மதம் மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களின் அளவிற்கு உள்ளது. இங்குள்ள பெரும்பாலான ஜனங்கள் ஒரு தேவன் இருப்பதாக அல்லது அவர் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்பதாக நம்பவில்லை. அவருடைய இருப்பையும் அவர்கள் நம்புவதில்லை. மாறாக, அவர்கள் இறையியலைப் பற்றி விவாதிக்க வேத வசனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இறையியலைப் பயன்படுத்தி ஜனங்களுக்கு இரக்கமாக இருக்கவும், துன்பங்களைத் தாங்கவும், நல்ல காரியங்களைச் செய்யவும் கற்றுக் கொடுக்கிறார்கள். இத்தகைய மாற்றத்தை தான் கிறிஸ்தவ மதம் கொண்டுள்ளது: அது இறையியல் கோட்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மனிதனை நிர்வகிக்கும் மற்றும் காப்பாற்றும் தேவனுடைய கிரியைக்கும் அதற்கும் முற்றிலுமாக எந்தத் தொடர்பும் இல்லை. அது தேவனைப் பின்பற்றும் ஆனால் உண்மையில் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படாத ஜனங்களின் மதமாக மாறியுள்ளது. இருப்பினும், அத்தகைய மனிதர்களுக்கான மனநிலையிலும் தேவன் ஒரு கொள்கையைக் கொண்டிருக்கிறார். அவர் அவிசுவாசிகளுடன் செய்வது போல சாதாரணமாக அவர்களைக் கையாளுவதில்லை அல்லது சமாளிப்பதில்லை. அவர் புத்த மதத்தவர்களை எப்படி நடத்துகிறாரோ அதேபோல் அவர்களையும் நடத்துகிறார்: ஒரு கிறிஸ்தவர் சுய-ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்றால், பத்து கட்டளைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க முடியும் என்றால், கட்டளைகள் மற்றும் கற்பனைகளுக்கு இணங்க தங்கள் சொந்த நடத்தைகளை கோர முடியும் என்றால், அவர்களுடைய முழு ஜீவிதத்திலும் அவற்றைக் கடைபிடிக்க முடியும் என்றால், “பேரானந்தம்” என்று அழைக்கப்படுவதை உண்மையாக அடைவதற்கு முன்னர் அவர்களும் ஜீவ மரண சுழற்சிகளைக் கடந்து சென்று அதே நேரத்தை செலவிட வேண்டும். இந்த பேரானந்தத்தை அடைந்த பிறகு, அவர்கள் ஆவிக்குரிய உலகில் தங்கியிருப்பார்கள். அங்கு அவர்கள் ஒரு நிலையை எடுத்து அதன் அதிகாரிகளில் ஒருவராக மாறுகிறார்கள். அதேபோல், அவர்கள் பூமியில் தீமை செய்தால்—அவர்கள் மிகவும் பாவமுள்ளவர்களாகவும், அதிக பாவங்களைச் செய்தவர்களாகவும் இருந்தால்—அவர்கள் தவிர்க்க முடியாமல் சிட்சிக்கப்படுவார்கள். மாறுபட்ட தீவிரத்தோடுத் தண்டிக்கப்படுவார்கள். புத்த மதத்தில், பலனை அடைவது என்பது மிகப் பெரிய ஆனந்தமுள்ள பரிசுத்த நிலத்திற்குச் செல்வதைக் குறிக்கிறது. ஆனால் அவர்கள் அதை கிறிஸ்தவத்தில் என்னவென்று அழைக்கிறார்கள்? அது “பரலோகத்திற்குள் பிரவேசிப்பது” மற்றும் “பேரானந்தம்” என்று அழைக்கப்படுகிறது. உண்மையிலேயே பேரானந்தம் பெற்றவர்களும் ஜீவ மரண சுழற்சியை மூன்று முதல் ஏழு முறை கடந்து செல்கிறார்கள். அதன் பிறகு, மரித்தபின், அவர்கள் தூங்கிவிட்டதைப் போல ஆவிக்குரிய உலகத்திற்கு வருகிறார்கள். அவர்கள் தரமானவர்களாக இருந்தால், அவர்கள் ஒரு நிலையை எடுத்துக் கொள்ள அங்கேயே இருக்க முடியும். பூமியிலுள்ள ஜனங்களைப் போல் அல்லாமல், ஒரு எளிய வழியில் அல்லது வழக்கத்தின்படி மறுபிறவி எடுக்க மாட்டார்கள்.

இந்த எல்லா மதங்களிலும், அவர்கள் குறிப்பிடும் முடிவும், அவர்கள் பெற்றுக் கொள்ளப் பாடுபடுவதும் போலவே புத்த மதத்திலும் பெற்றுக் கொள்ளும் பலன் உள்ளது. இந்த “பலன்” வெவ்வேறு வழிகளில் அடையப்படுகிறது. அவை அனைத்தும் ஒரே மாதிரியானவை ஆகும். இந்த மதங்களைப் பின்பற்றுபவர்களில் தங்களுடைய நடத்தைகளில் மதக் கட்டளைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கக் கூடிய இந்தப் பகுதியினருக்கு, தேவன் ஒரு பொருத்தமான இடத்தை, செல்ல ஏற்ற இடத்தை வழங்குகிறார். அவர் அவற்றைச் சரியான முறையில் கையாளுகிறார். இவை அனைத்தும் நியாயமானவை, ஆனால் ஜனங்கள் கற்பனை செய்வது போல் இருப்பதில்லை. இப்போது, கிறிஸ்தவ மதத்தில் ஜனங்களுக்கு என்ன நடக்கிறது என்று கேட்டதன்பின், நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? அவர்களுடைய நிலை நியாயமற்றது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் அவர்களுக்காக அனுதாபப்படுகிறீர்களா? (கொஞ்சமாக.) அதற்கு எதுவும் செய்ய முடியாது. அவர்களால் தங்கள் மீது மட்டுமே குற்றம் சாட்ட முடியும். இதை ஏன் நான் சொல்கிறேன்? தேவனுடைய கிரியை உண்மையானது. அவர் ஜீவனுடன் இருக்கிறார். அவர் உண்மையானவர். அவருடைய கிரியை எல்லா மனிதர்களையும் ஒவ்வொரு தனிமனிதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அப்படியானால், அவர்கள் ஏன் இதை ஏற்கவில்லை? அவர்கள் ஏன் தேவனை வெறித்தனமாக எதிர்க்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள்? இத்தகு விளைவைப் பெறுவார்கள் என்றாலும் கூட அவர்கள் தங்களை அதிர்ஷ்டசாலி என்று கருதகிறார்கள். எனவே நீங்கள் ஏன் அவர்களுக்காக வருந்துகிறீர்கள்? அவர்கள் இவ்வாறு கையாளப்படுவது மிகுந்த சகிப்புத் தன்மையைக் காட்டுகிறது. அவர்கள் அழிக்கப்பட வேண்டிய அளவிற்கு தேவனை எதிர்க்கிறார்கள். ஆனால் தேவன் அதைச் செய்யவில்லை. அதற்கு பதிலாக அவர் எந்தச் சாதாரண மதத்தையும் போலவே கிறிஸ்தவத்தையும் கையாளுகிறார். எனவே, மற்ற மதங்களைப் பற்றி மேலும் விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளதா? இந்த எல்லா மதங்களின் நெறிமுறைகளும் ஜனங்கள் அதிக கஷ்டங்களை அனுபவிக்க, தீமை செய்யாதிருக்க, நல்ல கிரியைகளைச் செய்ய, மற்றவர்கள் மீது சத்தியம் செய்ய, மற்றவர்கள் மீது தீர்ப்பு வழங்காதிருக்க, தகராறுகளிலிருந்து தங்களைத் தூர விலக்க மற்றும் நல்ல மனிதர்களாக இருக்கச் செய்கிறது. பெரும்பாலான மதப் போதனைகள் அது போன்றவையாகும். ஆகையால், விசுவாசமுள்ள இந்த ஜனங்கள்—பல்வேறு மதங்களையும் சமயங்களையும் பின்பற்றும் ஜனங்கள்—தங்கள் மதக் கட்டளைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க முடிந்தால், அவர்கள் பூமியில் இருக்கும் காலத்தில் அவர்கள் பெரிய பிழைகள் அல்லது பாவங்களைச் செய்ய மாட்டார்கள். மேலும், மூன்று முதல் ஏழு முறை மறுபிறவி எடுத்த பின், இந்த ஜனங்கள்—மதக் கட்டளைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கக்கூடிய ஜனங்கள்—ஆவிக்குரிய உலகில் ஒரு நிலைப்பாட்டைப் பெறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்களா? (இல்லை, இல்லை.) உங்கள் பதில் எதை அடிப்படையாகக் கொண்டுள்ளது? நல்லது செய்வது மற்றும் மத விதிகள் மற்றும் கட்டளைகளை பின்பற்றுவது எளிதல்ல. புத்த மதம் ஜனங்களை இறைச்சி புசிக்க அனுமதிப்பதில்லை—நீ அதைச் செய்ய முடியுமா? நீ சாம்பல் வஸ்திரங்களை அணிந்து, சூத்திரங்களை ஓதி, புத்த மதத்தவர்களின் பெயர்களை ஒரு புத்தக் கோவிலில் நாள் முழுவதும் முழக்கமிட வேண்டும் என்றால், அதை உன்னால் செய்ய முடியுமா? அது எளிதானது அல்ல. கிறிஸ்தவத்தில் பத்து கட்டளைகளும், கட்டளைகள் மற்றும் கற்பனைகளும் உள்ளன. இவற்றைப் பின்பற்றுவது எளிதானதா? எளிதானவை இல்லை, சரிதானே? எடுத்துக்காட்டாக மற்றவர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள் என்ற கட்டளை: ஜனங்களால் இந்த விதியைக் கடைப்பிடிக்க இயலாது. அவர்கள் சத்தியம் செய்கிறார்கள் அவர்களால் தங்களைத் தடுக்க முடியவில்லை—சத்தியம் செய்தபின், அவர்களால் அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற முடியாது. இந்நிலையில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? இரவில், அவர்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மற்றவர்களிடம் சத்தியம் செய்த பிறகும், அவர்கள் இருதயத்தில் வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் அந்த ஜனங்களுக்கு மேலும் தீங்கை விளைவிக்க அதற்கான நேரத்தை திட்டமிடும் அளவிற்கு கூட அவர்கள் செல்கிறார்கள். சுருக்கமாக, இந்த மரித்த கோட்பாட்டின் மத்தியில் ஜீவிப்பவர்கள், பாவம் செய்வதையோ தீமை செய்வதையோ தவிர்ப்பது எளிதல்ல. எனவே, ஒவ்வொரு மதத்திலும், ஒரு சில ஜனங்கள் மட்டுமே உண்மையில் பலனை அடைய முடிகிறது. பலர் இந்த மதங்களைப் பின்பற்றுவதால், அவர்களில் பெரும்பாலானோர் ஆவிக்குரிய உலகில் ஒரு பங்கை எடுக்க முடியும் என்று நீ கருதுகிறாயா? பலர் இல்லை. ஒரு சிலரே உண்மையில் அதை அடைய முடியும். அது பொதுவாக விசுவாச ஜனங்களின் ஜீவ மரண சுழற்சிக்கும் ஆகும். அவர்களை வேறுபடுத்துவது என்னவென்றால், அவர்கள் பலனை அடைய முடியும் என்பதே. இதுவே அவிசுவாசிகளிடமிருந்து அவர்களை வேறுபடுத்துகிறது.

c. தேவனைப் பின்பற்றுபவர்களின் ஜீவ மரண சுழற்சி

அடுத்ததாக, தேவனைப் பின்பற்றுபவர்களின் ஜீவ மரண சுழற்சி பற்றி பேசுவோம். அது உங்களைப் பற்றியது, எனவே கவனம் செலுத்துங்கள்: முதலில், தேவனைப் பின்பற்றுபவர்களை எவ்வாறு வகைப்படுத்தலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். (தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மற்றும் ஊழியம் செய்பவர்கள்.) உண்மையில் இருவர் இருக்கிறார்கள்: தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மற்றும் ஊழியம் செய்பவர்கள். முதலில், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைப் பற்றி பேசலாம். அவர்கள் ஒரு சிலர் மட்டுமே. “தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” யாரைக் குறிக்கிறது? தேவன் எல்லாவற்றையும் படைத்து, மனிதகுலம் தோன்றிய பிறகு, தேவன் தன்னைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தைத் தெரிந்துகொண்டார். அவர்கள் வெறுமனே “தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்று குறிப்பிடப்படுகின்றனர். இந்த மனிதர்களை தேவன் தெரிந்துகொள்வதற்கு ஒரு சிறப்பு நோக்கம் மற்றும் முக்கியத்துவம் இருந்தது. தெரிந்துகொள்ளப்பட்ட சிலருக்கு மட்டுமே அது வரையறுக்கப்பட்டுள்ளது, அவர் முக்கியமான கிரியையைச் செய்யும்போது அவர்கள் வர வேண்டும். இதன் முக்கியத்துவம் என்னவாக இருக்கிறது? அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கூட்டமாக இருந்ததால், முக்கியத்துவம் மிகவும் அதிகமாகிறது. அதாவது, இந்த ஜனங்களை நிறைவுசெய்து, அவர்களை முழுமையாக்க தேவன் விரும்புகிறார். தம்முடைய நிர்வாக கிரியை முடிந்ததும், அவர் இந்த ஜனங்களைப் பெறுவார். இந்த முக்கியத்துவம் பெரியதல்லவா? ஆகவே, இந்த தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தேவனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஏனென்றால் அவர்களைத் தான் தேவன் பெற விரும்புகிறார். ஊழியம் செய்பவர்களைப் பொறுத்த வரையில், தேவனுடைய முன்னறிவிப்பு என்ற விஷயத்தில் இருந்து ஒரு கணம் ஓய்வு எடுத்துக்கொள்வோம். முதலில் அவர்களுடைய தோற்றம் பற்றிப் பேசலாம். ஒரு “ஊழியக்காரர்” என்பது உண்மையில் ஊழியம் செய்பவரைக் குறிக்கிறது. ஊழியம் செய்பவர்கள் நிலையற்றவர்கள். அவர்கள் நீண்ட காலமாக அல்லது என்றென்றும் செய்வதில்லை. ஆனால் தற்காலிகமாகக் கிரியைக்கு அமர்த்தப்படுகிறார்கள் அல்லது சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோரின் தோற்றம் என்னவென்றால், அவர்கள் அவிசுவாசிகளிடமிருந்து தெரிந்துகொள்ளப்பட்டனர். தேவனுடைய கிரியையில் ஊழியம் செய்பவர்களின் பங்கை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்பட்டபோது அவர்கள் பூமிக்கு வந்தார்கள். முந்தைய பிறவியில் அவர்கள் விலங்குகளாக இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் அவிசுவாசிகளாகவும் இருந்திருப்பர். ஊழியம் செய்பவர்களின் தோற்றம் அத்தகையவை.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களைப் பற்றி மேலும் பேசலாம். அவர்கள் மரிக்கும் போது, அவர்கள் அவிசுவாசிகளிடமிருந்தும், விசுவாசமுள்ள பல்வேறு ஜனங்களிடமிருந்தும் முற்றிலும் மாறுபட்ட இடத்திற்குச் செல்கிறார்கள். தேவதைகள் மற்றும் தேவனுடைய தூதர்களுடன் அவர்கள் இருக்கும் ஒரு இடமாகும். அது தேவனால் தனிப்பட்ட முறையில் நிர்வகிக்கப்படும் ஒரு இடமாகும். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இந்த இடத்தில் தேவனை தங்கள் கண்களால் பார்க்க முடியாது என்றாலும், ஆவிக்குரிய உலகில் வேறு எங்கும் இல்லாத அளவில் அது வேறுபட்ட இடமாகும். ஜனங்கள் மரித்த பிறகு இந்த பகுதிக்கு செல்கிறார்கள். அவர்கள் மரிக்கும் போது, தேவனுடைய தூதர்களால் கடுமையான விசாரணைக்குள் அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். எது விசாரிக்கப்படுகிறது? தேவனுடைய நம்பிக்கையில் இந்த ஜனங்கள் தங்கள் ஜீவகாலம் முழுவதும் எடுத்த பாதைகளையும், அந்த நேரத்தில் அவர்கள் தேவனை எதிர்த்தார்களா இல்லையா அல்லது அவரைச் சபித்தார்களா இல்லையா என்பதையும், அவர்கள் ஏதேனும் கடுமையான பாவங்கள் அல்லது தீமைகளைச் செய்தார்களா என்பதையும் தேவனுடைய தூதர்கள் விசாரிக்கின்றனர். இந்த விசாரணை ஒரு குறிப்பிட்ட மனிதர் அங்கு தங்க அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது வெளியேற்றப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு தீர்வு காணும். “வெளியேறு” என்றால் என்ன? “தங்க” என்றால் என்ன? “வெளியேறு” என்பது அவர்களுடைய நடத்தையின் அடிப்படையில், அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒருவராக இருக்கிறார்களா என்பதாகும். “தங்க” அனுமதிக்கப்படுவது என்பது கடைசி நாட்களில் தேவனால் முழுமையாக்கப்படுபவர்களில் அவர்கள் இருக்க முடியும் என்பதாகும். தங்கியிருப்பவர்களுக்கு, தேவனுக்குச் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. அவருடைய கிரியையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்போஸ்தலர்களாகச் செயல்பட அல்லது தேவாலயங்களுக்கு புத்துயிர் அளிக்கும் அல்லது பராமரிக்கும் கிரியையைச் செய்ய அவர் அத்தகையவர்களை அனுப்புவார். இருப்பினும், அத்தகைய கிரியைக்குத் தகுதியுள்ளவர்கள், அவிசுவாசிகளைப் போல அடிக்கடி மறுபிறவி எடுக்க கட்டளையிடப்படுவதில்லை. அவர்கள் தலைமுறை தலைமுறையாக மறுபிறவி எடுக்கிறார்கள். மாறாக, அவர்கள் தேவனுடைய கிரியையின் எதிர்பார்ப்புகள் மற்றும் படிகளுக்கு ஏற்ப பூமிக்குத் திரும்ப அனுப்பப்படுகின்றனர் மற்றும் அவர்கள் அடிக்கடி மறுபிறவி எடுக்க கட்டளையிடப்படுவதில்லை. எனவே அவர்கள் மறுபிறவி எடுக்கும்போது ஏதேனும் விதிகள் உள்ளதா? சில வருடங்களுக்கு ஒரு முறை அவர்கள் வருகிறார்களா? அவர்கள் அத்தகைய வேகத்தில் வருகிறார்களா? அவர்கள் வரமாட்டார்கள். இவை அனைத்தும் தேவனுடைய கிரியை, அதன் படிகள் மற்றும் அவருடைய எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் அவற்றுக்கு எந்த விதிகளும் இல்லை. ஒரே விதி என்னவென்றால், கடைசி நாட்களில் தேவன் தம்முடைய கிரியையின் இறுதி கட்டத்தை செய்யும்போது, இந்த தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் அனைவரும் வருவார்கள். இந்த வருகை அவர்களுடைய கடைசி மறுபிறப்பாகும். அது ஏன் அவ்வாறு இருக்கிறது? தேவனுடைய கடைசி கட்ட கிரியையின் போது அடைய வேண்டிய விளைவுகளை அது அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில் இந்த கடைசி கட்ட கிரியையின் போது, இந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்களை தேவன் முழுமையாகப் பூரணமாக்குவார். இதன் பொருள் என்னவாக இருக்கிறது? இந்த இறுதிக் கட்டத்தில், இந்த மனிதர்கள் முழுமையானவர்களாகவும், பூரணமாக்கப்பட்டவர்களாகவும் இருந்தால், அவர்கள் முன்பு போலவே மறுபிறவி எடுக்க மாட்டார்கள். மனிதர்களாக இருப்பதற்கான அவர்களுடைய செயல்முறை ஒரு முழுமையான முடிவிற்கு வந்திருக்கும். அதேபோல் அவர்களுடைய மறுபிறவி செயல்முறையும் இருக்கும். அது தங்குவோருடன் தொடர்புடையது. எனவே, தங்க முடியாதவர்கள் எங்கே போகிறார்கள்? தங்க அனுமதிக்கப்படாதவர்களுக்கு அவர்களுக்கென சொந்த இலக்கு உள்ளது. முதலாவதாக, அவர்கள் செய்த தீமைகள், அவர்கள் செய்த தவறுகள் மற்றும் அவர்கள் செய்த பாவங்களின் விளைவாக அவர்களும் சிட்சிக்கப்படுவார்கள். அவர்கள் சிட்சிக்கப்பட்ட பிறகு, தேவன் அவர்களை அவிசுவாசிகளிடையே சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அனுப்ப ஏற்பாடு செய்வார் அல்லது விசுவாசமுள்ள பல்வேறு ஜனங்களிடையே அவர்கள் செல்ல ஏற்பாடு செய்வார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களுக்கு இரண்டு சாத்தியமான விளைவுகள் உள்ளன: ஒருவர் சிட்சிக்கப்படுகிறார், ஒருவேளை மறுபிறவி எடுத்த பிறகு ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஜனங்களிடையே ஜீவிக்கிறார். மற்றவர் அவிசுவாசியாக மாறுகிறார். அவர்கள் அவிசுவாசிகளாக மாறினால், அவர்கள் எல்லா வாய்ப்பையும் இழப்பார்கள். இருப்பினும், அவர்கள் விசுவாசமுள்ள ஜனங்களாக மாறினால்—உதாரணமாக, அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால்—தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களின் வரிசையில் திரும்புவதற்கு அவர்களுக்கு இன்னமும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு மிகவும் சிக்கலான தொடர்புகள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களில் ஒருவர் தேவனைப் புண்படுத்தும் ஒன்றைச் செய்தால், அவர்கள் எல்லோரையும் போலவே சிட்சிக்கப்படுவார்கள். உதாரணமாக, நாம் முன்பு பேசிய பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். சிட்சிக்கப்படுபவருக்கு பவுல் ஒரு உதாரணமாகும். நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு ஒரு யோசனை கிடைக்கிறதா? தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நோக்கம் சரி செய்யப்பட்டுள்ளதா? (பெரும்பாலும் சரி செய்யப்பட்டுள்ளது.) அதில் பெரும்பாலானவை சரி செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதில் ஒரு சிறிய பகுதி சரி செய்யப்படவில்லை. அது ஏன் அவ்வாறு இருக்கிறது? தீமை செய்தல் என்று இங்கே மிகவும் வெளிப்படையான காரணத்தைக் நான் குறிப்பிட்டுள்ளேன. ஜனங்கள் தீமையைச் செய்யும்போது, தேவன் அவர்களை விரும்புவதில்லை. தேவன் அவர்களை விரும்பாதபோது, அவர் அவர்களைப் பல்வேறு இனங்கள் மற்றும் வகை ஜனங்களிடையே வீசுகிறார். இது அவர்களை நம்பிக்கையற்றவர்களாக ஆக்குகிறது. திரும்பி வருவதையும் கடினமாக்குகிறது. இவை அனைத்தும் தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஜீவ மரண சுழற்சியுடன் தொடர்புடையது ஆகும்.

இந்த அடுத்த தலைப்பு ஊழியம் செய்பவர்களின் ஜீவ மரண சுழற்சி தொடர்பானதாகும். ஊழியம் செய்பவர்களின் தோற்றம் பற்றி நாம் பேசினோம். அதாவது, அவர்கள் முந்தைய பிறவியில் அவிசுவாசிகளாகவும் விலங்குகளாகவும் இருந்தபின் மறுபிறவி பெற்றார்கள் என்பதே உண்மையாகும். கடைசி கட்ட கிரியையின் வருகையுடன், தேவன் அவிசுவாசிகளிடமிருந்து அத்தகைய மனிதர்களின் ஒரு கூட்டத்தைத் தெரிந்துகொண்டுள்ளார். இந்த கூட்டம் சிறப்பானதாகும். இந்த மனிதர்களைத் தெரிந்துகொள்வதில் தேவனுடைய நோக்கமானது அவர்கள் அவருடைய கிரியைக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதாக உள்ளது. “ஊழியம்” என்பது கேட்க மிகவும் நேர்த்தியாக ஒலிக்கும் வார்த்தை அல்ல. அது அனைவரின் விருப்பங்களுக்கும் ஏற்ப இருப்பதில்லை. ஆனால் அது யாரை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். தேவனுடைய ஊழியம் செய்பவர்களின் இருப்புக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. வேறு யாராலும் அவர்களுடைய பங்கை வகிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டார்கள். இந்த ஊழியம் செய்பவர்களின் பங்கு என்னவாக இருக்கிறது? தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு ஊழியம் செய்வதாகும். அவர்கள் உழைக்கிறார்களா, கிரியையின் சில அம்சங்களைச் செய்கிறார்களா அல்லது சில கிரியைகளைச் செய்கிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த ஊழியம் செய்பவர்களிடமான தேவனுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது? அவர்களிடமான எதிர்பார்ப்பில் தேவன் அதிகமாக எதிர்பார்க்கிறாரா? (இல்லை, அவர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே அவர் கேட்கிறார்.) ஊழியம் செய்பவர்களும் விசுவாசமாக இருக்க வேண்டும். உன் தோற்றம் அல்லது தேவன் உன்னை ஏன் தெரிந்துகொண்டார் என்பதைப் பொருட்படுத்தாமல், நீ தேவனுக்கு விசுவாசமாகவும், தேவன் உன்னிடம் ஒப்படைக்கும் எந்த ஆணையத்துக்கும், பொறுப்பேற்கிற கிரியைக்கும், செய்யும் கடமைகளுக்கும் நீ உண்மையாகவும் இருக்க வேண்டும். தேவனிடம் விசுவாசமாகவும் தேவனை திருப்திப்படுத்தவும் திறன் கொண்ட ஊழியக்காரர்களுக்கு, அவர்களுடைய முடிவுகள் என்னவாக இருக்கும்? அவர்கள் நிலைத்திருக்க முடியும். ஒரு ஊழியக்காரராக இருப்பது ஒர் ஆசீர்வாதமாகுமா? மீந்திருப்பது என்றால் என்ன? இந்த ஆசீர்வாதத்தின் அர்த்தம் என்னவாக இருக்கிறது? விவரித்தால், அவை தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவைப் போலல்லாமல் தோன்றுகின்றன. அவை வித்தியாசமாகத் தெரிகின்றன. ஆனால் உண்மையில், இந்த ஜீவிதத்தில் அவர்கள் அனுபவிப்பது தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட காரியங்களுக்கு ஒத்ததல்லவா? குறைந்தபட்சம், இந்தப் பிறவியில் அது ஒரே மாதிரியானதாகும். இதை நீங்கள் மறுக்கவில்லை, அல்லவா? தேவனுடைய வார்த்தைகள், தேவனுடைய கிருபை, தேவனுடைய ஏற்பாடு, தேவனுடைய ஆசீர்வாதம் என இவற்றை அனுபவிக்காதவர்கள் யார்? எல்லோரும் அத்தகைய ஏராளத்தை அனுபவிக்கிறார்கள். ஊழியக்காரரின் அடையாளம் என்பது ஊழியத்தைச் செய்பவர் என்பதே. ஆனால் தேவனைப் பொறுத்த வரையில், அவர்கள் படைத்த எல்லாவற்றின் மத்தியிலும் இருக்கும் மனிதர் தான். வெறுமனே அவர்களுடைய பங்கு ஊழியக்காரரின் பங்காக இருக்கிறது. அவர்கள் இருவரும் தேவனுடைய படைப்புகள் என்பதால், ஓர் ஊழியக்காரருக்கும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவருக்கும் வித்தியாசம் உள்ளதா? அவர்களின் பலன்களில் வித்தியாசம் இல்லை. பெயரளவில், ஒரு வித்தியாசம் உள்ளது. சாராம்சம் மற்றும் அவர்கள் வகிக்கும் பங்கின் அடிப்படையில், ஒரு வித்தியாசம் இருக்கிறது—ஆனால் தேவன் இந்த கூட்டத்தினரை நியாயமற்ற முறையில் நடத்துவதில்லை. இந்த மனிதர்கள் ஏன் ஊழியக்காரர்கள் என வரையறுக்கப்படுகிறார்கள்? இதைப் பற்றி உங்களுக்கு கொஞ்சமாக புரிதல் இருக்க வேண்டும்! ஊழியக்காரர்கள் அவிசுவாசிகளிடமிருந்து வருகிறார்கள். அவர்கள் அவிசுவாசிகளிடமிருந்து வந்தவர்கள் என்று நாம் குறிப்பிட்டவுடன், அவர்கள் ஒரு மோசமான பின்னணியைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது: அவர்கள் அனைவரும் நாத்திகர்கள், கடந்த காலத்திலும் அவ்வாறு இருந்தவர்கள். அவர்கள் தேவனை நம்பவில்லை, அவருக்கும், சத்தியத்திற்கும், நேர்மறையான எல்லாவற்றிற்கும் விரோதமாக இருந்தார்கள். அவர்கள் தேவனை நம்பவில்லை அல்லது அவருடைய இருப்பை நம்பவில்லை. எனவே, அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ள வல்லவர்களா? ஒரு பெரிய அளவிற்கு அவ்வாறு இல்லை என்று சொல்வது நியாயமானதாகும். மனித வார்த்தைகளை விலங்குகளால் புரிந்து கொள்ள முடியாது என்பது போலவே ஊழியக்காரர்களாலும் தேவன் என்ன சொல்கிறார், அவருக்கு என்ன தேவை அல்லது அவர் ஏன் இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கிறார் என்பவற்றை புரிந்து கொள்ள முடியாது. இந்த விஷயங்கள் அவர்களுக்குப் புரியாதவை மற்றும் அவர்கள் அறிவில்லாமல் இருக்கின்றனர் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. இந்த காரணத்திற்காக, நாம் பேசிய ஜீவிதத்தை இந்த ஜனங்கள் கொண்டிருக்கவில்லை. ஜீவிதம் இல்லாமல், ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? அவர்கள் சத்தியத்துடன் இருக்கிறார்களா? தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய அனுபவமும் அறிவும் அவர்களுக்கு இருக்கிறதா? (இல்லை.) ஊழியக்காரர்களின் தோற்றம் அத்தகையவையாகும். இருப்பினும், தேவன் இந்த ஜனங்களை ஊழியக்காரர்களாக ஆக்குவதால், அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு இன்னும் தரங்கள் உள்ளன. அவர் அவர்களைக் குறைத்துப் பார்ப்பதில்லை. அவர்களிடம் அக்கறையின்றி இருப்பதுமில்லை. அவர்கள் அவருடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், ஜீவனைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், தேவன் அவர்களை தயவாக நடத்துகிறார். அவரது எதிபார்ப்புகளுக்கு வரும்போது இன்னமும் தரங்கள் உள்ளன. தேவனுக்கு விசுவாசமாக இருப்பது, அவர் சொல்வதைச் செய்வது என இந்த தரங்களைப் பற்றி நீங்கள் பேசினீர்கள். உன் ஊழியத்தில், நீ தேவையான இடங்களில் ஊழியம் செய்ய வேண்டும், நீ இறுதிவரை ஊழியம் செய்ய வேண்டும். நீ ஒரு விசுவாசமுள்ள ஊழியக்காரனாக இருக்க முடியும் என்றால், இறுதிவரை சரியாக ஊழியம் செய்ய முடியும் என்றால் மற்றும் தேவனால் உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆணையத்தை நிறைவேற்ற முடியும் என்றால், நீ மதிப்புமிக்க ஜீவிதத்தை ஜீவிப்பாய். இதை உன்னால் செய்ய முடிந்தால், உன்னால் தொடர்ந்து இருக்க முடியும். நீ இன்னும் கொஞ்சமாக முயற்சி செய்தால், நீ சற்றுக் கடினமாக முயற்சி செய்தால், தேவனை அறிந்து கொள்வதற்கான உன் முயற்சிகளை இரட்டிப்பாக்கலாம், தேவனை அறிந்து கொள்வது பற்றி கொஞ்சமாகப் பேசலாம். அவருக்கு உன்னால் சாட்சி அளிக்க முடியும். மேலும், அவருடைய சித்தத்தில் ஏதாவது ஒன்றை நீ புரிந்து கொள்ள முடிந்தால், தேவனுடைய கிரியையில் ஒத்துழைக்க முடிந்தால் மற்றும் தேவனுடைய நோக்கங்களை ஓரளவு கவனத்தில் வைக்க முடிந்தால், பின்னர் ஒரு ஊழியக்காரனாக, நீ அதிர்ஷ்டத்தில் மாற்றத்தை அனுபவிப்பாய். அதிர்ஷ்டத்தில் இந்த மாற்றம் என்னவாக இருக்கும்? நீ இனி வெறுமனே இருக்க முடியாது. உன் நடத்தை மற்றும் உன் தனிப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களைப் பொறுத்து, தேவன் உன்னை தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக ஆக்குவார். அது உன் அதிர்ஷ்டத்தில் ஏற்படும் மாற்றமாக இருக்கும். ஊழியக்காரர்களுக்கு, இதைப் பற்றிய சிறந்த விஷயம் என்னவாக இருக்கிறது? அவர்கள் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாக மாறலாம். அவர்கள் அவ்வாறு செய்தால், அவிசுவாசிகளைப் போலவே அவர்கள் இனி விலங்குகளாக மறுபிறவி எடுக்க மாட்டார்கள் என்று அர்த்தமாகிறது. அது நல்லதா? ஆம், அதுவும் ஒரு நல்ல செய்தியாகும்: ஊழியக்காரர்களை வடிவமைக்க முடியும் என்பதே இதன் பொருளாகும். தேவன் ஒரு ஊழியக்காரரை ஊழியம் செய்ய முன்னரே தீர்மானித்தவுடன், அவர்கள் அவ்வாறு என்றென்றும் செய்வார்கள் என்றாகாது. அது அவசியமானதன்று. இந்த மனிதரின் தனிப்பட்ட நடத்தைக்கு ஏற்ற வகையில் தேவன் அவர்களைக் கையாண்டு அவர்களுக்குப் பதிலளிப்பார்.

இருப்பினும், இறுதிவரை ஊழியம் செய்ய முடியாத ஊழியக்காரர்கள் உள்ளனர். தங்கள் ஊழியத்தின் பாதியிலேயே கைவிட்டு, தேவனைக் கைவிடுகிறவர்களும், பல தவறுகளைச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். மிகுந்த தீங்கு விளைவிப்பவர்களும், தேவனுடைய கிரியைக்குப் பெரும் இழப்பைக் கொடுப்பவர்களும் கூட இருக்கிறார்கள். தேவனைச் சபிக்கும் பல ஊழியக்காரர்களும் இருக்கிறார்கள். சரிசெய்யமுடியாத இந்த விளைவுகள் எதைக் குறிக்கின்றன? இதுபோன்ற எந்தவொரு தீய கிரியைகளும் அவர்களின் ஊழியங்களை நிறுத்துவதைக் குறிக்கும். உன் ஊழியத்தின் போது உன் நடத்தை மிக மோசமாக இருந்ததாலும், நீ வெகுதூரம் சென்றுவிட்டதாலும், உன் ஊழியம் தரமானதாக இல்லை என்று தேவன் கண்டவுடன், ஊழியம் செய்வதற்கான உன் தகுதியை அவர் நீக்குவார். அவர் இனி உன்னை ஊழியம் செய்ய அனுமதிக்க மாட்டார். தேவன் தம்முடைய கண்களுக்கு முன்பிருந்தும் தம்முடைய வீட்டிலிருந்தும் உன்னை அகற்றுவார். நீ ஊழியம் செய்ய விரும்பவில்லை அல்லவா? நீ தொடர்ந்து தீமை செய்ய விரும்புகிறாய் அல்லவா? நீ தொடர்ந்து துரோகம் செய்கிறாய் அல்லவா? அப்படியானால், ஒரு சுலபமான தீர்வு உள்ளது: ஊழியம் செய்வதற்கான உன் தகுதியிலிருந்து நீ அகற்றப்படுவாய். தேவனைப் பொறுத்த வரையில், ஒரு ஊழியத்தைச் செய்பவருக்கு ஊழியம் செய்வதற்கானத் தகுதியை நீக்குவது என்பது இந்த ஊழியக்காரரின் முடிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதாகும். அத்துடன், அவர்கள் இனி தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதியற்றவர்களாக இருப்பார்கள். இந்த மனிதரின் ஊழியமானது தேவனுக்கு இனி தேவையில்லை. அவர்கள் என்ன நல்ல விஷயங்களைச் சொன்னாலும், அந்த வார்த்தைகள் வீணாகிவிடும். இந்த நிலைக்கு விஷயங்கள் வந்துவிட்டால், நிலைமை சரிசெய்ய முடியாததாகிவிடும். அது போன்ற ஊழியக்காரர்களுக்கு எந்த வழியும் இருக்காது. அது போன்ற ஊழியக்காரர்களுடன் தேவன் எவ்வாறு நடந்து கொள்கிறார்? அவர்கள் ஊழியம் செய்வதை அவர் வெறுமனே தடுக்கிறாரா? இல்லை. அல்லது, அவர் அவர்களை ஒரு புறம் வைத்து, அவர்கள் மனந்திரும்புவதற்குக் காத்திருக்கிறாரா? அவர் காத்திருக்கவில்லை. உண்மையிலேயே ஊழியக்காரர்களுக்கு தேவன் மிகவும் அன்பானவர் அல்ல. ஒரு மனிதர் தேவனுக்குச் செய்யும் ஊழியத்தில் இந்த மாதிரியான மனநிலையைக் கொண்டிருந்தால், இந்த மனநிலையின் விளைவாக, தேவன் அவர்களுக்கு ஊழியம் செய்வதற்கான தகுதியை அகற்றுவார் மற்றும் அவிசுவாசிகளிடையே அவர்களை மீண்டும் தூக்கி எறிவார். அவிசுவாசிகளிடையே தூக்கி எறியப்பட்ட ஒரு ஊழியக்காரரின் கதி என்னவாக இருக்கிறது? அது அவிசுவாசிகளின் சிட்சைக்கு சமமாக இருக்கிறது: அவர்கள் ஒரு மிருகமாக மறுபிறவி எடுப்பார்கள் மற்றும் அவிசுவாசியாக ஆவிக்குரிய உலகில் அதே சிட்சையைப் பெறுவார்கள். மேலும், இந்த மனிதரின் சிட்சையில் தேவன் எந்தவொரு தனிப்பட்ட அக்கறையையும் காட்ட மாட்டார். ஏனென்றால், அத்தகைய மனிதருக்கும் இனி தேவனுடைய கிரியைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, தேவன் மீது விசுவாசம் கொண்டவர்களுடைய ஜீவிதத்தின் முடிவு மட்டுமல்ல, அவர்களுடைய சொந்த விதியின் முடிவும், அத்துடன் அவர்களுடைய தலைவிதியை அறிவிப்பதும் ஆகும். இதனால், ஊழியக்காரர்கள் மோசமாக ஊழியம் செய்தால், அதன் விளைவுகளை அவர்களே தாங்க வேண்டியிருக்கும். ஒரு ஊழியக்காரர் கடைசி வரை ஊழியம் செய்ய இயலாது அல்லது நடுப்பகுதியில் கிரியை செய்வதற்கான தகுதியிலிருந்து நீக்கப்பட்டால், அவர்கள் அவிசுவாசிகளிடையே தள்ளப்படுவார்கள். அது நடந்தால், அத்தகைய மனிதர் கால்நடைகள், புத்தி அல்லது பகுத்தறிவு இல்லாத ஜனங்களைப் போலவே கையாளப்படுவார். நான் அதை அப்படிச் சொல்லும்போது, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளலாம், அல்லவா?

மேற்கூறியவை என்னவென்றால், தேவன் தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் மற்றும் ஊழியக்காரர்களின் ஜீவ மரண சுழற்சியை எவ்வாறு கையாளுகிறார் என்பது தான். இதைக் கேட்ட பிறகு, நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? இந்தத் தலைப்பைப் பற்றி நான் இதற்கு முன்பு பேசியிருக்கிறேனா? தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மற்றும் ஊழியக்காரர்கள் என்ற தலைப்பில் நான் எப்போதாவது பேசியிருக்கிறேனா? நான் உண்மையில் பேசியிருக்கிறேன். ஆனால் அது உங்கள் நினைவில் இல்லை. தேவன் தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களிடமும் ஊழியக்காரர்களிடமும் நீதியுள்ளவர். எல்லா வகையிலும், அவர் நீதியுள்ளவர். இதில் நீங்கள் தவறு காணக்கூடிய இடம் இருக்கிறதா? “தேவன் ஏன் தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடம் இவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார்? ஊழியக்காரர்களிடம் அவர் ஏன் கொஞ்சமாகச் சகித்துக்கொள்கிறார்?” ஊழியக்காரர்களுக்காக யாராவது எழுந்து நிற்க விரும்புகிறார்களா? “ஊழியக்காரர்களுக்கு தேவன் அதிக நேரம் கொடுக்க முடியுமா மற்றும் அவர்களிடம் சகிப்புத் தன்மையுடனும் பொறுமையுடனும் இருக்க முடியுமா?” அத்தகைய கேள்விக்கு கேட்பது கேட்பது சரியானதாகுமா? (இல்லை அது சரியல்ல.) ஏன் இல்லை? (ஏனென்றால், நாங்கள் சேவை செய்பவர்களாக ஆக்கப்பட்டதால் மட்டுமே எங்களுக்கு தயவு காட்டப்பட்டுள்ளது.) சேவை செய்பவர்கள் உண்மையில் சேவை செய்ய அனுமதிக்கப்படுவதால் அவர்களுக்கு தயவு காட்டப்படுகிறது! “ஊழியக்காரர்கள்” என்ற தலைப்பு இல்லாமல், அவர்கள் செய்யும் கிரியை இல்லாமல், இந்த ஜனங்கள் எங்கே இருப்பார்கள்? அவர்கள் அவிசுவாசிகளிடையே இருப்பார்கள், கால்நடைகளுடன் ஜீவித்து மரித்து விடுவார்கள். தேவனுக்கு முன்பாக வந்து தேவனுடைய வீட்டிற்கு வர அனுமதிக்கப்பட்ட அவர்கள் இன்று எவ்வளவு பெரிய கிருபையை அனுபவிக்கிறார்கள்! அது மிகப் பெரிய கிருபையாகும்! ஊழியம் செய்வதற்கான வாய்ப்பை தேவன் உனக்கு வழங்கவில்லை என்றால், நீ ஒருபோதும் அவருக்கு முன் வர வாய்ப்பில்லை. குறைந்தபட்சம், நீ ஒரு புத்த மதத்தவராகவும், பலனை அடைந்தவராகவும் இருந்தாலும், நீ ஆவிக்குரிய உலகில் சாதாரண வேலையாளாக மட்டுமே இருப்பாய். நீ ஒருபோதும் தேவனைச் சந்திக்க மாட்டாய், அவருடைய குரலையும் அவருடைய வார்த்தைகளையும் கேட்க மாட்டாய் அல்லது அவருடைய அன்பையும் ஆசீர்வாதங்களையும் உணரமாட்டாய். அவருக்கு நேருக்கு நேர் வரவும் உன்னால் முடியாது. புத்த மதத்தவர்கள் அவர்களுக்கு முன் வைத்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் எளிய கிரியைகளாகும். அவர்களால் தேவனை அறிய முடியாது. அவர்கள் இணங்குதலையும் கீழ்ப்படிவதையும் மட்டுமே செய்கிறார்கள். அதே சமயம் ஊழியக்காரர்கள் இந்த கட்டத்தில் கிரியை செய்கிறார்கள்! முதலாவதாக, அவர்களால் தேவனுக்கு நேருக்கு நேர் வரவும், அவருடைய குரலைக் கேட்கவும், அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவர் ஜனங்களுக்கு அளிக்கும் கிருபைகளையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கவும் முடிகிறது. மேலும், தேவனால் வழங்கப்பட்ட வார்த்தைகளையும் சத்தியங்களையும் அவர்களால் அனுபவிக்க முடிகிறது. ஊழியக்காரர்கள் உண்மையிலேயே இவ்வளவு காரியங்களைப் பெறுகிறார்கள்! ஆகவே, ஒரு ஊழியக்காரனாக, உன்னால் ஒரு சரியான முயற்சியைக் கூட செய்ய முடியாவிட்டால், தேவனால் உன்னை இன்னும் வைத்திருக்க முடியுமா? தேவனால் உன்னை வைத்திருக்க முடியாது. அவர் உன்னிடமிருந்து அதிகம் கேட்கவில்லை, ஆனாலும் அவர் சரியாகக் கேட்கும் எதையும் நீ செய்யவில்லை. நீ உன் கடமையைக் கடைப்பிடிக்கவில்லை. எனவே, தேவன் உன்னை வைத்திருக்க மாட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. அது தேவனுடைய நீதியான மனநிலையாகும். தேவன் உன்னைத் தூண்டுவதில்லை, ஆனால் அவர் உனக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதில்லை. தேவனுடைய கிரியையின் கொள்கைகள் இவையாகும். தேவன் எல்லா மனிதர்களையும் ஜீவன்களையும் இந்த முறையில் நடத்துகிறார்.

ஆவிக்குரிய உலகத்தைப் பொறுத்த வரையில், அதில் உள்ள பல்வேறு மனிதர்கள் ஏதேனும் தவறு செய்தால் அல்லது தங்கள் கிரியையைச் சரியாகச் செய்யாவிட்டால், அதற்காக தேவன் அதனுடன் தொடர்புடைய பரலோகப் பிரமாணங்களையும் கட்டளைகளையும் கொண்டிருக்கிறார். அது சத்தியமாகும். ஆகையால், தேவனுடைய பல ஆயிரம் ஆண்டு நிர்வாகப் கிரியைகளின் போது, தவறுகளைச் செய்த சில கடமை-செய்பவர்கள் அழிக்கப்பட்டுவிட்டனர். சிலர், இன்று வரை இன்னும் தடுத்து வைக்கப்பட்டு சிட்சிக்கப்படுகிறார்கள். ஆவிக்குரிய உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இதை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அல்லது தீமை செய்தால், அவர்கள் சிட்சிக்கப்படுவார்கள்—அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கும் ஊழியக்காரர்களுக்குமான தேவனுடைய அணுகுமுறையைப் போன்றது. இவ்வாறு, ஆவிக்குரிய உலகிலும், பொருள்மயமான உலகிலும், தேவனுடைய கிரியையின் கொள்கைகள் மாறாது. தேவனுடைய கிரியைகளை நீ காண முடிந்தாலும் முடியாவிட்டாலும், அவற்றின் கொள்கைகள் மாறாது. எல்லாவற்றிலும், தேவன் தனது அணுகுமுறையிலும், எல்லாவற்றையும் கையாளுவதிலும் ஒரே கொள்கைகளைக் கொண்டிருந்தார். அது மாறாததாகும். ஒப்பீட்டளவில் சரியான முறையில் ஜீவிக்கும் அவிசுவாசிகளிடையே தேவன் இரக்கம் காட்டுவார் மற்றும் ஒவ்வொரு மதத்திலும் நன்றாக நடந்துக்கொண்டு தீமை செய்யாதவர்களுக்கு வாய்ப்புகளை மிச்சப்படுத்துவார். தேவனால் நிர்வகிக்கப்படும் எல்லாவற்றிலும் அவர்கள் தங்கள் கடமைகளை ஆற்றவும், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்யவும் அனுமதிப்பார். இதேபோல், தேவனைப் பின்பற்றுபவர்களிடையேயும், அவர் தெரிந்து கொண்ட ஜனங்களிடையேயும் என எந்தவொரு மனிதரிடமும் தேவன் தம்முடைய இந்தக் கொள்கைகளின்படி பாகுபாடு காட்டுவதில்லை. அவரை உண்மையாக பின்பற்றக்கூடிய அனைவரிடமும் அவர் கனிவானவர். அவரை உண்மையாக பின்பற்றும் அனைவரையும் அவர் நேசிக்கிறார். இந்தப் பல வகையான ஜனங்களுக்கு—அவிசுவாசிகள், விசுவாசத்தின் பல்வேறு மனிதர்கள் மற்றும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு—அவர் அளிக்கும் விஷயங்கள் வேறுபடுகின்றன. உதாரணமாக, அவிசுவாசிகளை எடுத்துக் கொள்ளுங்கள்: அவர்கள் தேவனை நம்பவில்லை என்றாலும், தேவன் அவர்களை மிருகங்களாகவே பார்க்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் புசிக்க ஆகாரம், சொந்த இடம் மற்றும் ஒரு சாதாரண ஜீவ மரண சுழற்சி உள்ளது. தீமை செய்பவர்கள் சிட்சிக்கப்படுகிறார்கள். நன்மை செய்பவர்கள் பாக்கியவான்களாக தேவனுடைய தயவைப் பெறுகிறார்கள். அது அவ்வாறு இருக்கிறது அல்லவா? விசுவாசமுள்ள ஜனங்களைப் பொறுத்தவரையில், மறுபிறவிக்குப் பிறகு மறுபிறப்பு மூலம் தங்கள் மதக் கட்டளைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க முடிந்தால், அந்த மறுபிறவிகளுக்குப் பிறகு, தேவன் இறுதியில் தாம் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்வார். இதேபோல், இன்று உங்களுக்காக, நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவராக இருந்தாலும் அல்லது ஊழியக்காரராக இருந்தாலும், தேவன் உங்களையும் வரிசையில் கொண்டு வந்து, அவர் நிர்ணயித்த விதிமுறைகள் மற்றும் நிர்வாக ஆணைகளுக்கு ஏற்ப உங்கள் முடிவைத் தீர்மானிப்பார். இத்தகைய ஜனங்களிடையே, பல்வேறு வகையான விசுவாசமுள்ள ஜனங்களுக்கு, அதாவது, பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேவன் ஜீவிக்க இடம் கொடுத்திருக்கிறாரா? யூதர்கள் எங்கே? தேவன் அவர்களுடைய விசுவாசத்தில் தலையிட்டாரா? அவர் தலையிடவில்லை. கிறிஸ்தவர்களிடம் அவரது நிலை என்னவாக இருக்கிறது? அவர்களிடமும் அவர் தலையிடவில்லை. அவர்களுடைய சொந்த நடைமுறைகளுக்குக் கட்டுப்பட அவர் அவர்களை அனுமதிக்கிறார். அவர் அவர்களுடன் பேசுவதில்லை அல்லது அவர்களுக்கு எந்தப் பிரகாசத்தையும் கொடுக்கவில்லை. மேலும், அவர் அவர்களுக்கு எதையும் வெளிப்படுத்துவதுமில்லை. அது சரி என்று நீ நினைத்தால், அதை இவ்வாறு நம்ப வேண்டும். கத்தோலிக்கர்கள் மரியாளை நம்புகிறார்கள். அவள் மூலமாகத் தான் செய்தி இயேசுவுக்கு அனுப்பப்படுகிறது. அதுவே அவர்களுடைய நம்பிக்கையின் வடிவமாகும். தேவன் எப்போதாவது அவர்களுடைய விசுவாசத்தை சரிசெய்தாரா? அவர் அவர்களுக்கு இலவசக் கட்டுப்பாட்டைக் கொடுக்கிறார். அவர் அவர்களுக்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் ஜீவிக்க ஒரு குறிப்பிட்ட இடத்தை அவர்களுக்குக் கொடுக்கிறார். இஸ்லாமியர்கள் மற்றும் புத்த மதத்தவர்களைப் பொறுத்த வரையில், அவர் ஒன்று போல இருக்கிறார் அல்லவா? அவர் அவர்களுக்கும் எல்லைகளை நிர்ணயித்துள்ளார் மற்றும் அந்தந்த நம்பிக்கைகளில் தலையிடாமல், அவர்களுடைய சொந்த ஜீவித இடத்தை வைத்திருக்க அனுமதிக்கிறார். அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? தேவன் அதிகாரம் கொண்டவர். ஆனால் அவர் அதைத் துஷ்பிரயோகம் செய்யவில்லை. தேவன் எல்லாவற்றையும் சரியான வரிசையில் ஒழுங்குபடுத்துகிறார். அதை ஒரு ஒழுங்கான முறையில் செய்கிறார். இங்கே அவருடைய ஞானமும் சர்வ வல்லமையும் இருக்கிறது.

இன்று நாம் ஒரு புதிய மற்றும் சிறப்புத் தலைப்பில் பேசத் துவங்கியுள்ளோம். ஒன்று, ஆவிக்குரிய உலகின் விஷயங்களைப் பற்றியது. அது தேவனுடைய நிர்வாகத்தின் ஒரு அம்சத்தையும், அந்த ராஜ்யத்தின் மீதுள்ள ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இந்த விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்பு, நீங்கள், “இவை அனைத்தும் மர்மமாகும். இதற்கு ஜீவிதத்தில் நாம் பிரவேசிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விஷயங்களானது ஜனங்கள் உண்மையில் எப்படி ஜீவிக்கின்றனர் என்பதிலிருந்து வேறுபடுகின்றன. அவற்றை நாம் புரிந்து கொள்ள தேவையில்லை. அவற்றைக் கேட்க நாம் விரும்புவதுமில்லை. தேவனை அறிவதில் அவற்றுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று சொல்லியிருக்கலாம். இப்போது, அத்தகைய சிந்தனையில் பிரச்சனை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அது சரியானதாகுமா? (இல்லை.) இத்தகைய சிந்தனை சரியானதல்ல மற்றும் இதில் கடுமையான பிரச்சனைகள் உள்ளது. இதற்குக் காரணம் என்னவென்றால், தேவன் எல்லாவற்றையும் எவ்வாறு ஆட்சி செய்கிறார் என்பதை நீ புரிந்து கொள்ள விரும்பினால், நீ காணக் கூடியதையும், உன் சிந்தனை முறையால் எதைப் புரிந்து கொள்ள முடியும் என்பதையும் வெறுமனே எளிமையாக உன்னால் புரிந்து கொள்ள முடியாது என்பதே. உன் கண்ணுக்குத் தெரியாத வேறு சில உலகங்களையும் நீ புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அது நீ காணக்கூடிய இந்த உலகத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. அது தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றியது மற்றும் அது “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்” என்ற தலைப்பைப் பற்றியது. அது இதனைப் பற்றிய தகவலாகும். இந்தத் தகவல் இல்லாமல், தேவன் எல்லா ஜீவனுக்கும் எவ்வாறு ஆதாரமாக இருக்கிறார் என்பது பற்றிய ஜனங்களின் அறிவில் பிழைகளும் குறைபாடுகளும் இருக்கும். ஆகவே, இன்று நாம் பேசியது நம்முடைய முந்தைய தலைப்புகளைச் உள்ளடக்கியதாகக் கூறலாம். அத்துடன் “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்” என்ற உள்ளடக்கத்தை இது முடிவுக்குக் கொண்டு வருகிறது. இதைப் புரிந்து கொண்ட நீங்கள் இப்போது இந்த உள்ளடக்கத்தின் மூலம் தேவனை அறிந்து கொள்ள முடியுமா? மிக முக்கியமாக, ஊழியக்காரர்களைப் பற்றிய மிக முக்கியமான தகவலை இன்று நான் உங்களுக்குக் கொடுத்துள்ளேன். இது போன்ற தலைப்புகளைக் கேட்பதை நீங்கள் மிகவும் ரசிக்கிறீர்கள் என்பதையும், இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆகவே, இன்று நான் பேசியவற்றில் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா? (ஆம், நாங்கள் திருப்தியடைகிறோம்.) வேறு சில விஷயங்கள் உங்கள் மீது மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் குறிப்பாக, ஊழியக்காரர்களைப் பற்றி நான் கூறியது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தத் தலைப்பு உங்கள் ஒவ்வொருவரின் ஆத்துமாவையும் தொடுகிறது.

மனிதகுலத்தின் தேவன் எதிர்பார்க்கும் காரியங்கள்

a. தேவனுடைய அடையாளம் மற்றும் நிலை

“தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்” மற்றும் “தேவனே தனித்துவமான தேவன்” என்ற தலைப்புகளின் முடிவிற்கு வந்துள்ளோம். அவ்வாறு வந்ததால், நாம் விஷயங்களை அதன் சாராம்சத்துக்குச் சுருக்க வேண்டும். நாம் எத்தகைய சுருக்கத்தை உருவாக்க வேண்டும்? அது தேவனைப் பற்றிய ஒரு முடிவாகும். அப்படியானால், அது தேவனுடைய ஒவ்வொரு அம்சத்துடனும், ஜனங்கள் தேவனை எவ்வாறு நம்புகிறார்கள் என்பதற்கும் தவிர்க்க முடியாத தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, முதலில் நான் உங்களிடம் கேட்க வேண்டும்: இந்தப் பிரசங்கங்களைக் கேட்ட பிறகு, உங்கள் மனதில் தேவன் யாராக இருக்கிறார்? (சிருஷ்டிகராக இருக்கிறார்.) உங்கள் மனதில் உள்ள தேவன் சிருஷ்டிகர் தான். வேறு ஏதாவது உள்ளதா? தேவன் எல்லாவற்றிற்கும் கர்த்தராக இருக்கிறார். இந்த வார்த்தைகள் பொருத்தமானதா? (ஆம்.) தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் மற்றும் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார். அவர் இருப்பதை எல்லாம் படைத்தார், இருப்பதை எல்லாம் அவர் நிர்வகிக்கிறார், இருப்பதை எல்லாம் அவர் ஆளுகிறார், இருக்கும் அனைத்திற்கும் அவர் வழங்குகிறார். அது தேவனுடைய நிலையாகும். அது அவருடைய அடையாளமாகும். எல்லாவற்றிற்கும் மற்றும் இருக்கும் அனைத்திற்கும், தேவனுடைய உண்மையான அடையாளம் சிருஷ்டிகரும், சிருஷ்டிகளின் அதிபதியுமாகும். தேவன் வைத்திருக்கும் அடையாளம் இதுதான். அவர் எல்லாவற்றிலும் தனித்துவமானவர். தேவனுடைய எந்த சிருஷ்டியாலும்—அவை மனிதர்களின் மத்தியில் இருந்தாலும் அல்லது ஆவிக்குரிய உலகில் இருந்தாலும்—தேவனுடைய அடையாளத்தையும் அந்தஸ்தையும் ஆள்மாறாட்டம் செய்யவோ மாற்றவோ எந்தவொரு வழியையும் அல்லது காரணத்தையும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அடையாளம், வல்லமை, அதிகாரம் மற்றும் சிருஷ்டியை ஆளக்கூடிய திறனான நம்முடைய தனித்துவமான தேவன் இருக்கிறார். அவர் எல்லாவற்றின் மத்தியிலும் ஜீவிக்கிறார் மற்றும் இடைபடுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவரால் மிக உயர்ந்த இடத்திற்கு உயர முடியும். அவர் மனிதனாக மாறுவதன் மூலமும், மாம்சத்திலும் இரத்தத்திலும் ஒருவராக மாறுவதன் மூலமும், ஜனங்களுடன் நேருக்கு நேர் வருவதன் மூலமும், அவர்களுடன் களைப்பையும் துயரத்தையும் பகிர்ந்துகொள்வதன் மூலமும் அவரால் தன்னைத் தாழ்த்திக் கொள்ள முடியும். அதே நேரத்தில், அங்குள்ள அனைத்தையும் அவர் கட்டளையிடுகிறார், மற்றும் எல்லாவற்றின் விதியை மற்றும் அது இயங்க வேண்டிய திசை ஆகியவற்றையும் தீர்மானிக்கிறார். மேலும், அவர் எல்லா மனிதர்களின் தலைவிதியையும் வழிநடத்துகிறார் மற்றும் மனிதகுலத்தின் திசையையும் வழிநடத்துகிறார். அது போன்ற ஒரு தேவனை எல்லா ஜீவன்களும் ஆராதிக்க வேண்டும், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் மற்றும் அவரை அறிய வேண்டும். ஆகவே, நீ மனிதகுலத்தில் எந்தக் கூட்டம் அல்லது எந்த வகையைச் சேர்ந்தவன் என்பதைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு மனிதனுக்கும் ஜீவனுக்கும், தேவனை நம்புதல், தேவனைப் பின்பற்றுதல், தேவனை வணங்குதல், அவருடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உன் தலைவிதிக்கான அவருடைய ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய அனைத்தும் ஒரே இன்றியமையாதத் தேர்வாகும். தேவனுடைய தனித்துவத்தில், அவருடைய அதிகாரம், அவருடைய நீதியுள்ள மனநிலை, அவருடைய சாராம்சம் மற்றும் எல்லாவற்றிற்கும் அவர் வழங்கும் வழிமுறைகள் என அனைத்தும் முற்றிலும் தனித்துவமானவை என்பதை ஜனங்கள் காண்கிறார்கள். இந்தத் தனித்துவமானது தேவனுடைய உண்மையான அடையாளத்தை தீர்மானிக்கிறது மற்றும் அது அவருடைய நிலையை தீர்மானிக்கிறது. ஆகையால், எல்லா ஜீவன்களிடையேயும், ஆவிக்குரிய உலகிலும் அல்லது மனிதர்களிடையேயும் எந்தவொரு உயிரினமும் தேவனுக்குப் பதிலாக நிற்க விரும்பினால், ஜெயம் என்பது சாத்தியமற்றதாகும். தேவனைப் போல ஆள்மாறாட்டம் செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் சாத்தியமற்றதாகும். அதுவே உண்மையாகும். தனித்துவமான தேவனுடைய அடையாளம், வல்லமை மற்றும் அந்தஸ்தைக் கொண்ட ஒரு சிருஷ்டிகராக மற்றும் ஒரு ஆட்சியாளராக மனிதகுலத்தின் தேவை என்னவாக இருக்கும்? இது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும். அது அனைவராலும் நினைவில் வைக்கப்பட வேண்டும். அது தேவனுக்கும் மனிதனுக்கும் மிகவும் முக்கியமானதாகும்!

b. தேவனைப் பற்றிய மனிதகுலத்தின் பல்வேறு மனநிலைகள்

ஜனங்கள் தேவனிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது அவர்களுடைய தலைவிதியைத் தீர்மானிக்கிறது. அதே போல் தேவன் அவர்களை எப்படி நடத்துவார், அவர்களை எவ்வாறு கையாள்வார் என்பதையும் அது தீர்மானிக்கிறது. இந்தக் கட்டத்தில், ஜனங்கள் தேவனிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளை நான் கொடுக்கப் போகிறேன். தேவனுக்கு முன்பாக அவர்கள் தங்களை நடத்தும் பழக்கவழக்கங்களும் மனநிலையும் சரியானதா இல்லையா என்பதைக் கவனிப்போம். பின்வரும் ஏழு வகையான மனிதர்களின் நடத்தைப் பற்றிச் சிந்திக்கலாம்.

1) ஒரு வகை மனிதரிடம், குறிப்பாக தேவனுக்கான மனநிலை அபத்தமாக இருக்கிறது. இந்த ஜனங்கள் தேவன் ஒரு போதிசத்வா அல்லது ஒரு புனித மனிதரைப் போன்றவர் என்று நினைக்கிறார்கள். மனிதர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போதெல்லாம் மூன்று முறை வணங்க வேண்டும், ஒவ்வொரு ஆகாரத்திற்குப் பிறகும் தூபம் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் விளைவாக, அவருடைய கிருபைக்கு அவர்கள் மிகுந்த நன்றியுணர்வை உணரும்போதும், அவர்மீது நன்றியுணர்வை உணரும்போதும், அவர்கள் பெரும்பாலும் இத்தகைய தூண்டுதலைக் கொண்டிருக்கிறார்கள். இன்று தாங்கள் நம்புகிற தேவன், தங்கள் இருதயங்களில் அவர்கள் ஏங்குகிற பரிசுத்தத்தையும், அவர்கள் மூன்று முறை வணங்கும் வழிமுறையையும், ஒவ்வொரு ஆகாரத்திற்கும் பின் தூபம் காட்டுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

2) சிலர் தேவனை ஒரு உயிருள்ள புத்தராகவேப் பார்க்கிறார்கள். எல்லா ஜீவன்களையும் துன்பத்திலிருந்து விடுவித்து அவர்களைக் காப்பாற்றும் திறன் கொண்டவர் என்று கருதுகிறார்கள். ஒரு துன்பகரமான கடலில் இருந்து அழைத்துச் செல்லக்கூடிய ஒரு உயிருள்ள புத்தராக அவர்கள் அவரைப் பார்க்கிறார்கள். தேவன் மீதான இந்த ஜனங்களின் நம்பிக்கை அவரை ஒரு புத்தராக வணங்கச் செய்கிறது. அவர்கள் தூபம் காட்ட, பணிய அல்லது பலி செலுத்தவில்லை என்றாலும், அவர்கள் இரக்கத்துடன் தொண்டு செய்பவர்களாகவும், எந்த ஜீவனையும் கொல்லாமல், மற்றவர்களிடம் சத்தியம் செய்வதைத் தவிர்க்கும், நேர்மையாகத் தோன்றும் ஜீவிதத்தை ஜீவிக்கும் ஒருவராகவும், எந்தத் தவறும் செய்யாத ஒருவராகவும் இருக்க வேண்டும் என்று மட்டுமே கேட்கும் ஒரு புத்தரைப் போன்றவர் தேவன் என்று எண்ணுகிறார்கள். இவை அனைத்தையும் மட்டுமே தேவன் அவர்களிடம் கேட்கிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதுவே அவர்கள் இருதயங்களில் உள்ள தேவன் ஆகும்.

3) சிலர் தேவனைப் பெரியவராக அல்லது பிரபலமானவராக ஆராதிக்கிறார்கள். உதாரணமாக, இந்தப் பெரிய மனிதர் எந்த வகையில் பேச விரும்புகிறார், அவர் எந்த எண்ணத்தில் பேசுகிறார், அவர் எந்த வார்த்தைகளை மற்றும் சொற்களைப் பயன்படுத்துகிறார், அவரது தொனி, கை சைகைகள், அவரது கருத்துக்கள் மற்றும் கிரியைகள், அவரது நிலை என இவை அனைத்தையும் தங்களிடம் அப்பியாசப்படுத்துகிறார்கள். இவை அனைத்துமே தேவன் மீதுள்ள நம்பிக்கையின் போக்கில் அவர்கள் முழுமையாக வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4) சிலர் தேவனை ஒரு ராஜாவாகப் பார்க்கிறார்கள், அவர் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறார் என்றும் யாரும் அவரைப் புண்படுத்தத் துணிவதில்லை என்றும் எண்ணுகிறார்கள்—யாராவது அவ்வாறு செய்தால், அந்த மனிதருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எண்ணுகிறார்கள். ராஜாக்கள் தங்கள் இருதயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடிப்பதால் அவர்கள் அத்தகைய ராஜாவை ஆராதிக்கிறார்கள். அவர்களுடைய எண்ணங்கள், கிரியை, அதிகாரம் மற்றும் தன்மை, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தனிப்பட்ட ஜீவிதம் என இவை அனைத்தையும் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த ஜனங்கள் நினைக்கிறார்கள். அவற்றுக்குச் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விஷயங்களாக அவர்கள் மாறுகின்றனர். இதன் விளைவாக, அவர்கள் தேவனை ஒரு ராஜாவாக வணங்குகிறார்கள். அத்தகைய நம்பிக்கை வடிவம் கேலிக்குரியது ஆகும்.

5) சிலருக்கு தேவன் இருப்பதில் குறிப்பிட்ட விசுவாசம் உள்ளது மற்றும் இந்த விசுவாசம் ஆழமானது மற்றும் உறுதியானதாகும். தேவனைப் பற்றிய அவர்களுடைய அறிவு மிகவும் மேலோட்டமாக இருப்பதால், அவருடைய வார்த்தைகளில் அவர்களுக்கு அதிக அனுபவம் இல்லாததால், அவர்கள் அவரை ஒரு சொரூபமாக ஆராதிக்கிறார்கள். இந்தச் சொரூபம் அவர்களுடைய இருதயங்களில் இருக்கும் தேவன் ஆகிறது. அதற்கு அவர்கள் பயப்பட வேண்டும், தலைவணங்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதை அவர்கள் பின்பற்றி அதன்படி செயல்பட வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள். தங்கள் ஜீவகாலம் முழுவதிலும் அவர்கள் பின்பற்ற வேண்டிய தேவனாகச் சொரூபத்தைப் பார்க்கிறார்கள். தேவன் பேசும் தொனியைப் போலவே அவர்கள் பேசுகிறார்கள். வெளிப்புறமாக, தேவன் விரும்புபவர்களைப் போல அவர்கள் நடிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் அப்பாவித்தனமாகவும், தூய்மையாகவும், நேர்மையாகவும் தோன்றும் விஷயங்களைச் செய்கிறார்கள். அவர்களால் ஒருபோதும் விட்டுவிட முடியாத இந்த விக்கிரகத்தை ஒரு துணையாக அல்லது தோழர் போலப் பின்பற்றுகிறார்கள். அது அவர்களுடைய நம்பிக்கையின் வடிவமாகும்.

6) இன்னொரு வகை ஜனங்கள் இருக்கிறார்கள். தேவனுடைய பல வார்த்தைகளைப் படித்திருந்தாலும், அதிகப் பிரசங்கத்தைக் கேட்டிருந்தாலும், தேவனைப் பற்றிய அவர்களுடைய நடத்தைக்குப் பின்னால் உள்ள ஒரே கொள்கை, அவர்கள் எப்பொழுதும் பணிந்து ஆராதிக்க வேண்டும் அல்லது நம்பத்தகாத வகையில் அவர்கள் தேவனைத் துதிக்க மற்றும் அவரைப் புகழ வேண்டும் என்பதே. அவர்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் தேவனே தேவன் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும், அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், எந்த நேரத்திலும் அவர்கள் அவருடைய கோபத்தைத் தூண்டலாம் அல்லது அவருக்கு எதிராகப் பாவத்தில் தடுமாறக் கூடும் என்றும், இந்தப் பாவத்தின் விளைவாக, தேவன் அவர்களைச் சிட்சிப்பார் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய தேவனே அவர்கள் இருதயங்களில் இருக்கிறார்.

7) பின்னர் தேவனில் ஆவிக்குரிய ஜீவிதத்தின் ஆதாரத்தைக் காணும் பெரும்பான்மையான ஜனங்கள் உள்ளனர். ஏனென்றால், அவர்கள் இந்த உலகில் ஜீவிக்கிறார்கள். அவர்கள் அமைதி அல்லது மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள், எங்கும் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. அவர்கள் தேவனைக் கண்டவுடன், அவருடைய வார்த்தைகளைக் கண்டதும் கேட்டதும், அவர்கள் இருதயங்களில் இரகசிய மகிழ்ச்சியையும் எழுச்சியையும் அடையத் தொடங்குகிறார்கள். ஏனென்றால், இறுதியாக தங்கள் ஆவிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு இடத்தைக் அவர்கள் கண்டுபிடித்தார்கள் என்றும், அவர்களுக்கு ஆவிக்குரிய ஜீவிதத்தைக் கொடுக்கும் ஒரு தேவனைக் கண்டுபிடித்தார்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் தேவனை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றத் தொடங்கிய பிறகு, அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அவர்களுடைய ஜீவிதம் நிறைவு அடைகிறது. அவர்கள் இனி அவிசுவாசிகளைப் போலச் செயல்பட மாட்டார்கள். அவர்கள் விலங்குகளைப் போல ஜீவிதத்தில் தூங்கிக் கொண்டு ஜீவிக்க மாட்டார்கள் மற்றும் ஜீவிதத்தில் எதிர்நோக்குவதற்கு ஏதேனும் இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே, இந்த தேவன் தங்களின் ஆவிக்குரிய எதிர்பார்ப்புகளை மிகுந்த அளவில் பூர்த்திசெய்து மனதிலும் ஆவியிலும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதை உணராமல், அவர்களுக்கு இதுபோன்ற ஆவிக்குரிய ஜீவிதத்தின் ஆதாரத்தையும், அவர்களுடைய ஆவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அளிக்கும் இந்தத் தேவனை அவர்களால் விட்டுவிட முடியாமல் போகிறது. தேவன் மீதான நம்பிக்கை ஆவிக்குரிய ஜீவிதத்தின் ஆதாரத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டுவர வேண்டியதில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள்.

மேற்கூறிய தேவனிடமான பல்வேறு மனநிலைகளை உங்களில் யாராவது கொண்டிருக்கிறீர்களா? (ஆம்.) தேவன் மீதான நம்பிக்கையில், ஒரு மனிதரின் இருதயம் அந்த மனநிலைகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருந்தால், அவர்கள் உண்மையிலேயே தேவனுக்கு முன்பாக வரமுடியுமா? ஒருவருடைய இருதயத்தில் இந்த மனநிலை ஏதேனும் இருந்தால், அவர்கள் தேவனை நம்புகிறார்களா? அத்தகைய மனிதர் தனித்துவமான தேவனை நம்புகிறாரா? (இல்லை.) நீ தனித்துவமான தேவனை நம்பவில்லை என்பதால், நீ யாரை நம்புகிறாய்? நீ நம்புவது தனித்துவமான தேவன் அல்ல என்றால், அது, நீ ஒரு விக்கிரகத்தை அல்லது ஒரு பெரிய மனிதரை அல்லது ஒரு போதிசத்வாவை நம்பக்கூடியதாக இருக்கும் அல்லது உன் இருதயத்தில் இருக்கும் புத்தரை வணங்கக் கூடியதாக இருக்கும். மேலும், நீ ஒரு சாதாரண மனிதனை நம்புவது சாத்தியமாகும். சுருக்கமாகச் சொன்னால், ஜனங்கள் தேவன் மீதான பல்வேறு வகையான நம்பிக்கை மற்றும் மனநிலைகளின் காரணமாக, அவர்கள் தங்கள் சொந்த அறிவாற்றல்களின் தேவனை தங்கள் இருதயங்களில் வைக்கிறார்கள். தேவன் மீது தங்கள் கற்பனையைத் திணிக்கிறார்கள். தேவனைப் பற்றிய அவர்களுடைய மனநிலைகளையும் கற்பனைகளையும் தனித்துவமான தேவன் அருகிலேயே வைக்கிறார்கள். பின்னர், தங்களைப் பரிசுத்தப்படுத்த உறுதியாகப் பிடித்துக் கொள்கிறார்கள். தேவன் மீது ஜனங்கள் இத்தகைய முறையற்ற மனநிலையைக் கொண்டிருக்கும்போது அதன் அர்த்தம் என்னவாக இருக்கிறது? அவர்கள் உண்மையான தேவனை நிராகரித்தார்கள், பொய்யான தேவனை ஆராதிக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது. தேவனை நம்பும்போது, அவர்கள் அவரை நிராகரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள், உண்மையான தேவனுடைய இருப்பை மறுக்கிறார்கள் என்பதையும் அது குறிக்கிறது. இதுபோன்ற நம்பிக்கையின் வடிவங்களை ஜனங்கள் தொடர்ந்து வைத்திருந்தால், அவர்கள் என்ன விளைவுகளைச் சந்திப்பார்கள்? இத்தகைய நம்பிக்கையின் வடிவங்களால், தேவனுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கு அவர்களால் இன்னும் நெருக்கமாக வர முடியுமா? (இல்லை, அவர்களால் வர முடியாது.) மாறாக, அவர்களுடைய கருத்துக்கள் மற்றும் கற்பனைகள் காரணமாக, அவர்கள் தேவனுடைய வழியிலிருந்து எப்போதும் விலகிச் செல்வார்கள். ஏனென்றால், அவர்கள் தேடும் திசையானது தேவன் அவர்களிடம் எதிர்பார்க்கும் திசைக்கு நேர்மாறானதாகும். “தேரை வடக்கு நோக்கி ஓட்டுவதன் மூலம் தெற்கே செல்வது” என்ற கதையை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தேரை வடக்கு நோக்கி ஓட்டுவதன் மூலம் தெற்கே செல்வது போன்ற விஷயமாக அது இருக்கலாம். இதுபோன்ற நகைச்சுவையான பாணியில் ஜனங்கள் தேவனை நம்பினால், நீ எவ்வளவு கடினமாக முயற்சி செய்கிறாயோ, அவ்வளவாக நீ தேவனிடமிருந்து தூரமாவாய். எனவே, நான் உனக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறேன்: நீ செல்வதற்கு முன், நீ உண்மையில் சரியான திசையில் செல்கிறாயா என்பதை முதலில் உணர வேண்டும். உன் முயற்சிகளை வீணாக்க வேண்டாம். உன்னை நீயே கேட்க வேண்டும், “நான் நம்புகிற தேவன் எல்லாவற்றையும் ஆளும் தேவனா? நான் நம்புகிற தேவன் எனக்கு ஆவிக்குரிய ஜீவிதத்தின் ஆதாரத்தை அளிக்கிறாரா? அவர் வெறுமனே என் விக்கிரகமாக இருக்கிறாரா? நான் நம்பும் இந்த தேவன் என்னிடம் எதை எதிர்பார்ப்பர்? நான் செய்யும் எல்லாவற்றையும் தேவன் ஏற்றுக் கொள்கிறாரா? எனது கிரியைகள் மற்றும் நாட்டங்கள் அனைத்தும் தேவனை அறிய முற்படுவதைப் போன்றதா? என்னைப் பற்றிய அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு அவை இணங்குகிறதா? நான் நடந்து செல்லும் பாதை தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? அவர் என் விசுவாசத்தில் திருப்தியடைகிறாரா?” நீ அவ்வப்போது இந்தக் கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும். நீ தேவனைப் பற்றிய அறிவைப் பெற விரும்பினால், அவரைத் திருப்திப்படுத்துவதில் நீ ஜெயம் பெறுவதற்கு முன்பதாகவே தெளிவான உணர்வையும் தெளிவான குறிக்கோள்களையும் கொண்டிருக்க வேண்டும்.

அவருடைய சகிப்புத்தன்மையின் விளைவாக, நான் இப்போது பேசிய இந்த முறையற்ற மனநிலையை தேவன் முரட்டுத்தனமாக ஏற்றுக் கொள்ள முடியுமா? இந்த ஜனங்களின் மனநிலையை தேவன் பாராட்ட முடியுமா? (இல்லை.) மனிதர்களிடமும் தேவனைப் பின்பற்றுபவர்களிடமும் தேவனுடைய எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கின்றன? ஜனங்கள் எத்தகைய மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்? இவற்றைப் பற்றி உங்களுக்குத் தெளிவான சிந்தனை இருக்கிறதா? இந்தக் கட்டத்தில், நான் பல காரியங்களைச் சொன்னேன். தேவனைப் பற்றிய தலைப்பிலும், அவருடைய கிரியைகளைப் பற்றியும், அவரிடம் இருப்பதைப் பற்றியும் நான் அதிகம் பேசினேன். தேவன் ஜனங்களிடமிருந்து எதைப் பெற விரும்புகிறார் என்பது இப்போது உங்களுக்குத் தெரிகிறதா? அவர் உன்னிடம் எதை விரும்புகிறார் என்று உனக்குத் தெரியுமா? பேசுங்கள். உங்கள் அறிவானது அனுபவங்கள் மற்றும் நடைமுறையிலிருந்து இன்னும் குறைவானதாக அல்லது இன்னும் மேலோட்டமாக இருந்தால், இந்த வார்த்தைகளைப் பற்றிய உங்கள் அறிவைப் பற்றி நீங்கள் ஏதாவது சொல்லலாம். உங்களிடம் அதன் சாராமசத்தின் அறிவு இருக்கிறதா? தேவன் மனிதனிடம் என்ன கேட்கிறார்? (இந்தப் பல கலந்துரையாடல்களின் போது, நாம் அவரை அறிந்து கொள்ள வேண்டும், அவருடைய கிரியைகளை அறிந்து கொள்ள வேண்டும், எல்லாவற்றிற்கும் அவர் ஜீவிதத்தின் மூலமாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும், அவருடைய அந்தஸ்தையும் அடையாளத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் ஒரு எதிர்பார்ப்பை வைத்துள்ளார்.) மேலும், ஜனங்கள் அவரை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் கேட்கும்போது, அதன் இறுதி விளைவு என்னவாக இருக்கிறது? (தேவன் தான் சிருஷ்டிகர் என்பதையும், மனிதர்கள் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்கள் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.) ஜனங்கள் அத்தகைய அறிவைப் பெறும்போது, தேவனைப் பற்றிய அவர்களுடைய மனநிலையிலும், கடமையின் செயல்பாட்டிலும் அல்லது அவர்களுடைய ஜீவித மனநிலையிலும் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? இதைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? தேவனை அறிந்து, அவரைப் புரிந்து கொண்டால், அவர்கள் நல்ல மனிதர்களாக மாறுகிறார்கள் என்று சொல்ல முடியுமா? (தேவனை விசுவாசிப்பது என்பது ஒரு நல்ல நபராக இருப்பதற்கு முயற்சிப்பதோடு தொடர்புடையது அல்ல. மாறாக, நல்லவராக இருக்கும் தேவனுடைய சிருஷ்டியாக மாறுவதை மற்றும் ஒரு நேர்மையான நபராக இருப்பதை நாடுவதாகும்.) வேறு ஏதாவது இருக்கிறதா? (தேவனை உண்மையாகவும் சரியாகவும் அறிந்த பிறகு, நாம் அவரை தேவனாகவே கருத முடிகிறது. தேவன் எப்போதும் தேவனாக இருக்கிறார், நாம் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்கள், நாம் தேவனை ஆராதிக்க வேண்டும், நம்முடைய சரியான இடங்களில் தங்க வேண்டும் என்று நாம் அறிய முடிகிறது.) மிகவும் நன்று! வேறு சிலரிடமிருந்து கேட்போம். (நாம் தேவனை அறிந்து, இறுதியில் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவனைப் போற்றி, தீமையைத் தவிர்ப்பவர்களாக இருக்க முடிகிறது.) அது சரியானதாகும்!

c. மனிதகுலத்திடம் இருக்க வேண்டுமென தேவன் எதிர்பார்க்கும் தேவனைப் பற்றியமனநிலை

உண்மையில், தேவன் மனிதகுலத்திடம் அதிகமாகக் கேட்பதில்லை அல்லது, குறைந்தபட்சம், ஜனங்கள் கற்பனை செய்வது போல் அவர் ஏதிர்பார்ப்பதில்லை. தேவன் எந்த வார்த்தைகளையும் சொல்லவில்லை என்றால், அவர் தனது மனநிலையையோ கிரியைகளையோ வெளிப்படுத்தாவிட்டால், தேவனை அறிந்து கொள்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால் ஜனங்கள் அவருடைய நோக்கத்தையும் விருப்பத்தையும் யூகிக்க வேண்டியிருக்கும். இதைச் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், அவருடைய கிரியையின் இறுதிக் கட்டத்தில், தேவன் பல வார்த்தைகளைப் பேசியுள்ளார். ஒரு பெரிய அளவிலான கிரியையைச் செய்திருக்கிறார். மனிதனின் பல எதிர்பார்ப்புகளைச் செய்துள்ளார். அவருடைய வார்த்தைகளிலும், அவருடைய பெரிய அளவிலான கிரியைகளிலும், அவர் விரும்புவதை, அவர் வெறுப்பதை, அவர்கள் எத்தகைய மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதை ஜனங்களுக்கு அறிவித்துள்ளார். இவற்றைப் புரிந்து கொண்ட பிறகு, தேவனுடைய எதிர்பார்ப்புகள் குறித்து ஜனங்கள் தங்கள் இருதயங்களில் ஒரு துல்லியமான வரையறையை வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தேவனை தெளிவற்ற முறையில் நம்புவதில்லை மற்றும் தெளிவற்ற தேவனை நம்புவதில்லை. தெளிவற்ற மனநிலை அல்லது ஒன்றுமில்லாத நிலையில் அவர்களுக்கு தேவன் மீது விசுவாசம் இல்லை. மாறாக, அவர்கள் அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவருடைய ஏதிர்பார்ப்புகளின் தரங்களைப் புரிந்து கொள்ளவும், அவற்றை அடையவும் முடிகிறது. அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் சொல்ல மனிதகுலத்தின் மொழியை தேவன் பயன்படுத்துகிறார். இன்று, தேவன் என்றால் என்ன, ஜனங்களிடமிருந்து அவர் எதை எதிர்பார்க்கிறார் என்பது ஜனங்களுக்கு இன்னும் தெரியா விட்டால், ஒருவர் ஏன் தேவனை நம்ப வேண்டும், அவரை எப்படி நம்ப வேண்டும் அல்லது அவரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாவிட்டால், இதில் ஒரு பிரச்சனை உள்ளது. இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டப் பகுதியைப் பற்றி பேசினீர்கள். இந்த விஷயங்கள் குறிப்பிட்டவையா அல்லது பொதுவானவையா என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இருப்பினும், தேவன் மனிதகுலத்திடம் எதிர்பார்க்கும் சரியான, முழுமையான மற்றும் குறிப்பிட்ட எதிர்பார்ப்புகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவை ஒரு சில வார்த்தைகளாகும். அவை மிகவும் எளிமையானவை. நீங்கள் ஏற்கனவே அவற்றை அறிந்திருக்கலாம். மனிதகுலத்திடம் மற்றும் தேவனைப் பின்பற்றுபவர்களிடம் தேவன் எதிர்பார்க்கும் சரியான எதிர்பார்ப்புகள் பின்வருமாறு உள்ளன. அவரைப் பின்பற்றுபவர்களில் ஐந்து விஷயங்கள் அவருக்குத் தேவை: உண்மையான நம்பிக்கை, விசுவாசமான பின்பற்றுதல், முழுமையானச் சமர்ப்பணம், உண்மையான அறிவு மற்றும் மனப்பூர்வமான பயபக்தி ஆகியனவாகும்.

இந்த ஐந்து விஷயங்களில், ஜனங்கள் இனிமேல் அவரைக் கேள்வி கேட்கவோ அவர்களுடைய கற்பனைகள் அல்லது தெளிவற்ற மற்றும் சுருக்கமான கண்ணோட்டங்களைப் பயன்படுத்தி அவரைப் பின்பற்றவோ தேவன் எதிர்பார்க்கிறார். அவர்கள் எந்தக் கற்பனைகளையும் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு தேவனைப் பின்பற்றக் கூடாது. அவரைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் உண்மையாகப் பின்பற்ற வேண்டும், அரை மனதுடன் அல்லது அர்ப்பணிப்பு இல்லாமல் பின்பற்றக் கூடாது. தேவன் உன்னிடம் எதையேனும் எதிர்பார்க்கும் போது, உன்னைச் சோதித்துப் பார்க்கும் போது, உன்னை நியாயந்தீர்க்கும் போது, உன்னைக் கையாளும் போது, திருத்தும் போது அல்லது ஒழுங்குபடுத்தும் போது மற்றும் உன்னைத் துன்புறுத்தும் போது நீ அவரிடம் முற்றிலுமாகக் கீழ்ப்படிய வேண்டும். நீ காரணத்தைக் கேட்கவோ நிபந்தனைகளை உருவாக்கவோ கூடாது, காரணங்களைப் பற்றி நீ பேசவும் கூடாது. உன் கீழ்ப்படிதல் முழுமையானதாக இருக்க வேண்டும். ஜனங்களிடம் அதிகமாக இல்லாத பகுதி தேவனைப் பற்றிய அறிவாகும். பெரும்பாலும் தேவனுடைய வார்த்தைகள், வெளிப்பாடுகள் மற்றும் அவருடன் தொடர்பில்லாத வார்த்தைகள் மீது அவர்களிடம் திணிக்கப்படுகின்றன. இதுபோன்ற வார்த்தைகள் தேவனுடைய அறிவின் மிகத் துல்லியமான வரையறை என்று அவர்கள் நம்புகிறார்கள். மனிதனின் கற்பனை, அவர்களின் சொந்தப் பகுத்தறிவு மற்றும் அவர்களுடைய சொந்த அறிவிலிருந்து வரும் இந்தக் கூற்றுகளுக்கும் தேவனுடைய சாராம்சத்துக்கும் சிறிதளவு தொடர்பும் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகவே, ஜனங்கள் பெற வேண்டும் என தேவன் விரும்பும் அறிவைப் பொறுத்தவரையில், நீ அவரையும் அவருடைய வார்த்தைகளையும் அங்கீகரிக்க வேண்டும் என்று மட்டும் அவர் கேட்கவில்லை, அவரைப் பற்றிய உன் அறிவு சரியாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் கேட்கிறார் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீ ஒரு வாக்கியத்தை மட்டுமே சொல்ல முடிந்தாலும் அல்லது ஒரு சிறியப் பகுதியை மட்டுமே அறிந்திருந்தாலும், இந்தச் சிறிய அறிவு சரியானது மற்றும் உண்மையானது மற்றும் தேவனுடைய சாராம்சத்துடன் ஒத்துப் போகிறதாக இருக்கிறது. ஏனென்றால், நம்பத்தகாத அல்லது தவறாகக் கருதப்படும் தேவனைத் துதித்து புகழ்வதை தேவன் வெறுக்கிறார். அதற்கும் மேலாக, ஜனங்கள் அவரை காற்றைப் போல நடத்தும்போது அவர் அதை வெறுக்கிறார். தேவனைப் பற்றிய தலைப்புகளைப் பற்றி விவாதிக்கும் போது, ஜனங்கள் உண்மைகளைப் பொருட்படுத்தாமல் பேசுகிறார்கள், விருப்பத்துடன் பேசுகிறார்கள், தயங்காமல் பேசுகிறார்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு பொருத்தமாகக் காணப்பட்டாலும் அவர் அவர்களை வெறுக்கிறார். மேலும், தேவனை அறிந்துள்ளதாக நம்பி, அவரைப் பற்றிய தங்கள் அறிவைப் பற்றி பெருமையாகப் பேசுகிற, அவருடன் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி வரையறை இல்லாமல் மற்றும் தடையில்லாமல் விவாதிப்பவர்களை அவர் வெறுக்கிறார். மேற்கூறிய ஐந்து எதிர்பார்ப்புகளில் கடைசியாக இருப்பது மனப்பூர்வமான பயபக்தியாகும்: தேவனைப் பின்பற்றும் அனைவருக்கும் அது தேவனுடைய இறுதித் தேவையாகும். தேவனைப் பற்றிய சரியான மற்றும் உண்மையான அறிவை ஒருவர் கொண்டிருக்கும்போது, அவர்கள் தேவனை உண்மையாகப் போற்றி தீமையைத் தவிர்க்க முடியும். இந்தப் பயபக்தி அவர்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து வருகிறது. இந்த பயபக்தி விருப்பத்துடன் கொடுக்கப்படுகிறது, தவிர தேவனுடைய அழுத்தத்தின் விளைவாக கொடுக்கப்படுவதில்லை. எந்தவொரு நல்ல மனநிலையை, நடத்தையை அல்லது வெளிப்புற நடத்தையை தேவனுக்கு நீ பரிசளிக்கும்படி தேவன் கேட்கவில்லை. மாறாக, நீ அவரைப் போற்றி, உன் இருதயத்தின் ஆழத்தில் அவருக்குப் பயப்படும்படி அவர் கேட்கிறார். உன் ஜீவித மனநிலையின் மாற்றங்கள், தேவனைப் பற்றிய அறிவைப் பெறுதல் மற்றும் தேவனுடைய கிரியைகளைப் புரிந்து கொள்ளுதல், தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் நீ தேவனுடைய படைப்புகளில் ஒருவர் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுதல் ஆகியவற்றின் விளைவாக இத்தகைய பயபக்தி அடையப்படுகிறது. ஆகவே, இங்கே பயபக்தியை வரையறுக்க “மனப்பூர்வமான” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் எனது நோக்கம், தேவனைப் பற்றிய பயபக்தி அவர்களுடைய இருதயங்களின் அடிப்பகுதியில் இருந்து வர வேண்டும் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாக இருக்கிறது.

இப்போது அந்த ஐந்து எதிர்பார்ப்புகளையும் கவனியுங்கள்: உங்களில் எவரேனும் முதல் மூன்றை அடைய முடியுமா? இதில், நான் உண்மையான நம்பிக்கை, விசுவாசமானப் பின்பற்றுதல் மற்றும் முழுமையானச் சமர்ப்பணம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறேன். உங்களில் யாராவது இந்த விஷயங்களுக்குத் தகுதியுள்ளவர்களா? ஐந்தையும் நான் சொன்னால், உங்களில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நான் அந்த எண்ணிக்கையை மூன்றாகக் குறைத்துள்ளேன். இவற்றை நீங்கள் அடைந்துவிட்டீர்களா இல்லையா என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். “உண்மையான நம்பிக்கை” அடைய எளிதானதா? (இல்லை அது எளிதானதல்ல.) அது எளிதானது அல்ல. ஏனென்றால் ஜனங்கள் பெரும்பாலும் தேவனைக் கேள்வி கேட்கிறார்கள். “விசுவாசமானப் பின்பற்றுதல்” அடைய எளிதானதா? இந்த “விசுவாசம்” எதைக் குறிக்கிறது? (அரை மனதுடன் இல்லாமல் முழு மனதுடன் இருப்பது.) அரை மனதுடன் இல்லாமல் முழு மனதுடன் இருப்பதாகும். நீங்கள் துல்லியமாகச் சொன்னீர்கள்! எனவே, இந்த எதிர்பார்ப்பை நீங்கள் அடைய முடியுமா? நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும், அல்லவா? இந்த நேரத்தில், நீங்கள் இன்னும் இந்த எதிர்பார்ப்பில் ஜெயம் பெறவில்லை. “முழுமையானச் சமர்ப்பணம்” அடைய எளிதானதா? நீங்கள் அதை அடைந்துவிட்டீர்களா? (இல்லை.) நீங்கள் அதை அடையவில்லை. நீங்கள் அடிக்கடிக் கீழ்ப்படியாதவராக மற்றும் கலகக்காரராக இருக்கிறீர்கள். நீங்கள் அடிக்கடி கவனிக்க மாட்டீர்கள், கீழ்ப்படிய விரும்ப மாட்டீர்கள், மற்றும் கேட்க விரும்ப மாட்டீர்கள். ஜீவிதத்தில் பிரவேசித்த பிறகு ஜனங்கள் பூர்த்தி செய்யும் மூன்று மிக அடிப்படை எதிர்பார்ப்புகள் இவை. ஆனால் நீங்கள் இன்னும் அவற்றை அடையவில்லை. இந்நிலையில், இந்த நேரத்தில் உங்களுக்குப் பெலன் பெரியதாக இருக்கிறதா? இன்று, இந்த வார்த்தைகளை நான் சொல்வதைக் கேட்டு, நீங்கள் கவலைப்படுகிறீர்களா? (ஆம்.) நீங்கள் கவலைப்படுவது சரியானதாகும். கவலைப்படுவதைத் தவிர்க்க முயற்சிக்காதீர்கள். உங்கள் நடத்தைகளுக்காக நானும் கவலைப்படுகிறேன். மற்ற இரண்டு எதிர்பார்ப்புகளைப் பற்றி நான் செல்ல மாட்டேன். இங்கே யாரும் அவற்றை அடைய முடியாது என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் கவலைப்படுகிறீர்கள். எனவே, உங்கள் நோக்கங்களை நீங்கள் தீர்மானித்தீர்களா? எந்த நோக்கங்களுடன், எந்தத் திசையில், உங்கள் முயற்சிகளைத் தொடர வேண்டும் மற்றும் அர்ப்பணிக்க வேண்டும்? உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கிறதா? நான் தெளிவாகப் பேசுகிறேன்: இந்த ஐந்து எதிர்பார்ப்புகளையும் நீங்கள் அடைந்தவுடன், நீங்கள் தேவனைத் திருப்திப்படுத்துவீர்கள். அவை ஒவ்வொன்றும் ஒரு மனிதரின் ஜீவிதத்தில் பிரவேசிப்பதற்கான முதிர்ச்சியின் ஒரு குறிகாட்டியாகவும், இறுதி நோக்கமாகவும் உள்ளன. விரிவாகப் பேச இந்த எதிர்பார்ப்புகளில் ஒன்றை மட்டுமே நான் தெரிந்து கொண்டாலும், அதை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் அதை அடைவது எளிதல்ல. நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு கஷ்டங்களைத் தாங்கி ஒரு குறிப்பிட்ட அளவு முயற்சியில் ஈடுபட வேண்டும். உங்களுக்கு என்ன மாதிரியான மனநிலை இருக்க வேண்டும்? அது ஒரு புற்றுநோய் நோயாளி சிகிச்சை அறைக்குச் செல்லக் காத்திருப்பதைப் போலவே இருக்க வேண்டும். இதை ஏன் நான் சொல்கிறேன்? நீ தேவனை நம்ப விரும்பினால், நீ தேவனைப் பெற்று அவருடைய திருப்தியைப் பெற விரும்பினால், நீ ஒரு குறிப்பிட்ட அளவிலான வலியைத் தாங்கி ஒரு குறிப்பிட்ட அளவு முயற்சியில் ஈடுபடாவிட்டால், நீ இந்த விஷயங்களை அடைய முடியாது. நீங்கள் பல பிரசங்கத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் அதைக் கேட்பதனால் அந்தப் பிரசங்கம் உன்னுடையது என்று அர்த்தமாகிவிடாது. நீ அதை உள்வாங்கி அதை உனக்குச் சொந்தமான ஒன்றாக மாற்ற வேண்டும். நீ அதை உன் ஜீவிதத்தில் இணைத்து உன் இருப்புக்குள் கொண்டு வர வேண்டும். நீ ஜீவிக்கும் வழியை வழிநடத்தவும், நீ இருப்பதன் மதிப்பையும் அர்த்தத்தையும் உன் ஜீவிதத்தில் கொண்டு வரவும் இந்த வார்த்தைகளையும் பிரசங்கத்தையும் அனுமதிக்க வேண்டும். அது நிகழும்போது, இந்த வார்த்தைகளை நீ கேட்பது மதிப்புக்குரியதாக இருக்கும். நான் பேசும் வார்த்தைகள் உன் ஜீவிதத்தில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை அல்லது உன் இருப்புக்கு எந்த மதிப்பையும் சேர்க்கவில்லை என்றால், நீ அவற்றைக் கேட்பதில் அர்த்தமில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், அல்லவா? அதை நீங்கள் புரிந்து கொண்ட பிறகு, என்ன நடக்கிறது என்பது உங்களுடையதாகும். நீங்கள் கிரியை செய்ய வேண்டும்! நீங்கள் எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும்! குழப்பத்தில் இருக்க வேண்டாம். காலம் செல்லாது! உங்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தேவனை நம்பியுள்ளீர்கள். கடந்த பத்து ஆண்டுகளைத் திரும்பிப் பாருங்கள்: நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள்? இந்தப் பிறவியில் ஜீவிக்க இன்னும் எத்தனை தசாப்தங்கள் மீதம் உள்ளன? உங்களுக்கு நீண்ட காலம் இல்லை. தேவனுடைய கிரியை உனக்குக் காத்திருக்கிறதா, அவர் உனக்கு ஒரு வாய்ப்பை விட்டுவிட்டாரா அல்லது அவர் மீண்டும் அதே கிரியையைச் செய்வாரா என்பதை மறந்துவிடு—இந்த விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். உன் ஜீவிதத்தின் கடந்த பத்து ஆண்டுகளின் போக்கை மாற்றியமைக்க முடியுமா? கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், நீ வைக்கும் ஒவ்வொரு அடியிலும், உனக்கு ஒரு நாள் குறைவாக உள்ளது. நேரம் யாருக்கும் காத்திருக்காது! உன் ஜீவிதத்தின் மிகப் பெரிய காரியமாக, ஆகாரம், வஸ்திரங்கள் அல்லது வேறு எதையும் விட முக்கியமானதாக விசுவாசத்தை நீ அணுகினால் மட்டுமே நீ தேவன் மீதுள்ள விசுவாசத்திலிருந்து ஆதாயம் பெறுவாய். உனக்கு நேரம் இருக்கும்போது மட்டுமே நீ நம்பினால், உன் முழு கவனத்தையும் உன் விசுவாசத்திற்கு அர்ப்பணிக்க இயலாமல் நீ எப்போதும் குழப்பத்தில் மூழ்கியிருந்தால், நீ ஒன்றும் பெற மாட்டாய். இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், அல்லவா? இன்று நாம் இங்கே நிறுத்துவோம். மீண்டும் சந்திப்போம்!

பிப்ரவரி 15, 2014

முந்தைய: தேவனே தனித்துவமானவர் IX

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக