தேவனே தனித்துவமானவர் V

தேவனுடைய பரிசுத்தம் (II)

சகோதர சகோதரிகளே, இன்று ஒரு பாமாலையைப் பாடுவோம். நீங்கள் விரும்பும், வழக்கமாகப் பாடும் ஒரு பாமாலையைத் தேர்ந்தெடுங்கள். (தேவனுடைய வார்த்தையின் 760-தாவது பாமாலையைப் நாம் பாடலாம்: “களங்கமில்லாத பரிசுத்தமான அன்பு.”)

1 “அன்பு” என்பது தூய்மையான மற்றும் களங்கமில்லாத ஓர் உணர்ச்சியைக் குறிக்கிறது, இங்கு நீங்களோ உங்கள் மனதை நேசிக்கவும், உணரவும், சிந்தனைமிக்கதாய் இருக்கவும் பயன்படுத்துகிறீர்கள். அன்பில் எந்த நிபந்தனைகளும் இல்லை, தடைகளும் இல்லை, இடைவெளியும் இல்லை. அன்பில் எந்த சந்தேகமும் இல்லை, வஞ்சகமும் இல்லை, தந்திரமும் இல்லை. அன்பில் வர்த்தகம் இல்லை மற்றும் தூய்மையற்றது எதுவும் இல்லை. நீ நேசித்தால், நீ ஏமாற்றவோ, குறைகூறவோ, துரோகம் செய்யவோ, கலகம் செய்யவோ, பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கவோ, எதையாவது பெற்றிடவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறவோ முயலமாட்டாய்.

2 “அன்பு” என்பது தூய்மையான மற்றும் களங்கமில்லாத ஓர் உணர்ச்சியைக் குறிக்கிறது, இங்கு நீங்களோ உங்கள் மனதை நேசிக்கவும், உணரவும், சிந்தனைமிக்கதாய் இருக்கவும் பயன்படுத்துகிறீர்கள். அன்பில் எந்த நிபந்தனைகளும் இல்லை, தடைகளும் இல்லை, இடைவெளியும் இல்லை. அன்பில் எந்த சந்தேகமும் இல்லை, வஞ்சகமும் இல்லை, தந்திரமும் இல்லை. அன்பில் வர்த்தகம் இல்லை மற்றும் தூய்மையற்றது எதுவும் இல்லை. நீ நேசித்தால், நீ மகிழ்ச்சியுடன் உன்னை அர்ப்பணிப்பாய், மகிழ்ச்சியுடன் கஷ்டங்களை அனுபவிப்பாய். நீ என்னுடன் ஒத்துப்போவாய், எனக்காக உன்னிடம் உள்ள அனைத்தையும் கைவிடுவாய், உன் குடும்பம், உன் எதிர்காலம், உன் இளமை மற்றும் உன் திருமணம் என அனைத்தையும் கைவிடுவாய். இல்லையென்றால், உன் அன்பு அன்பாகவே இருக்காது, வஞ்சகமும் துரோகமுமாய் இருக்கும்!

ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள் என்பதிலிருந்து

இந்தப் பாமாலை ஒரு நல்ல தேர்வாக இருந்தது. இதைப் பாடும் போது நீங்கள் அனைவரும் அனுபவித்து மகிழ்கிறீர்களா? இதைப் பாடிய பிறகு நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்? உங்களுக்குள்ளே இத்தகைய அன்பை நீங்கள் உணர முடிகிறதா? (இதுவரை இல்லை.) அதனுடைய எந்த வார்த்தைகளை நீங்கள் மிகவும் ஆழமாக உணர்கின்றீர்கள்? (அன்பில் எந்த நிபந்தனைகளும் இல்லை, தடைகளும் இல்லை, இடைவெளியும் இல்லை. அன்பில் எந்த சந்தேகமும் இல்லை, வஞ்சகமும் இல்லை, தந்திரமும் இல்லை. அன்பில் வர்த்தகம் இல்லை மற்றும் தூய்மையற்றது எதுவும் இல்லை. ஆனால் எனக்குள் இன்னும் பல அசுத்தங்களைக் காண்கிறேன். தேவனைச் சமாளிக்க முயற்சிக்கும் பல பகுதிகளை என்னில் காண்கிறேன். மெய்யாகவே நான் தூய மற்றும் களங்கமில்லாத, ஒரு வகையான அன்பைப் பெற்றிருக்கவில்லை.) நீங்கள் ஒரு தூய, களங்கமில்லாத அன்பை அடையவில்லை என்றால், உங்கள் அன்பின் அளவு என்ன? (நான் தேட விரும்பும் கட்டத்திலும், பெற்றுக் கொள்ளும் இடத்திலும் தான் இருக்கிறேன்.) உங்களது சொந்த அந்தஸ்தின் அடிப்படையிலும், உங்களின் சொந்த அனுபவத்திலிருந்து பேசுவதன் மூலமும், நீங்கள் பெற்றுள்ள அன்பின் அளவு என்ன? உங்களிடம் வஞ்சகம் இருக்கிறதா? உங்களிடம் குறைகூறுதல்கள் இருக்கின்றனவா? உங்கள் இருதயத்திற்குள் எதிர்பார்ப்புகள் உள்ளனவா? தேவனிடமிருந்து நீங்கள் பெற விரும்பும் மற்றும் ஆசைப்படும் விஷயங்கள் உள்ளனவா? (ஆமாம், என்னிடம் இந்த அசுத்தமான விஷயங்கள் உள்ளன.) அவை எந்த சூழ்நிலைகளில் வெளிவருகின்றன? (தேவன் எனக்கு ஏற்பாடு செய்துள்ள சூழ்நிலை எனது எண்ணங்களுடன் பொருந்தாத போது, அல்லது எனது ஆசைகள் பூர்த்தி செய்யப்படாத போது: இது போன்ற தருணங்களில், இத்தகைய கேடான மனப்பான்மையை நான் வெளிப்படுத்துகிறேன்.) தைவானில் இருந்து வரும் சகோதர சகோதரிகளே, நீங்களும் அடிக்கடி இந்தப் பாமாலையைப் பாடுகின்றீர்களா? “களங்கமில்லாத பரிசுத்தமான அன்பு” நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றீர்கள் என்பதைப் பற்றி கொஞ்சம் பேச முடியுமா? தேவன் ஏன் அன்பை இவ்வாறாக வரையறுக்கிறார்? (இந்தப் பாமாலை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால், இந்த அன்பு ஒரு முழுமையான அன்பு என இந்த பாமாலையின் மூலம் என்னால் உணர முடிகிறது. இருப்பினும், அந்த அன்பின் தரத்தை அடைய எனக்கு இன்னும் பல வழிகள் உள்ளன. நான் இன்னும் உண்மையான அன்பை அடைவதற்கு வெகு தூரத்தில் இருக்கிறேன். அவருடைய வார்த்தைகள் எனக்குக் கொடுக்கும் பலத்தின் மூலமாகவும், ஜெபத்தின் மூலமாகவும் நான் முன்னேறவும் ஒத்துழைக்கவும் எனக்குத் திராணியுள்ள சில விஷயங்கள் உள்ளன. இருப்பினும், சில சோதனைகள் அல்லது வெளிப்பாடுகளை எதிர்கொள்ளும் போது, எனக்கு ஒரு எதிர்காலம் அல்லது தலைவிதி இல்லை என்பதாக உணர்கிறேன், எனக்கு ஒரு விதி இல்லை என்றும் நினைக்கிறேன். இதுபோன்ற தருணங்களில், நான் மிகவும் பலவீனமாக உணர்கிறேன். இந்தப் பிரச்சனை பெரும்பாலும் என்னைத் தொந்தரவு செய்கிறது.) “எதிர்காலம் மற்றும் தலைவிதி” என்று நீ கூறும்போது இறுதியாக நீ எதைக் குறிப்பிடுகிறாய்? நீ விஷேசமாக குறிப்பிடும் ஏதாவது ஒன்று இருக்கிறதா? இது ஒரு படமா அல்லது நீ கற்பனை செய்ததில் ஏதேனும் ஒன்றா, அல்லது உனது எதிர்காலமும் தலைவிதியும் உண்மையில் நீ காணக்கூடிய ஒரு விஷயமா? இது மெய்யான பொருளா? நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என விரும்புகிறேன்: உங்கள் எதிர்காலம் மற்றும் உங்கள் தலைவிதி குறித்து நீங்கள் கொண்டுள்ள அக்கறை என்ன? (என்னால் இரட்சிக்கப்பட முடியும் என்பதால் என்னால் ஜீவிக்க முடியும்.) மற்ற சகோதர சகோதரிகளே, நீங்களும் “களங்கமில்லாத பரிசுத்தமான அன்பு” பற்றிய உங்கள் புரிதலைப் பற்றி கொஞ்சம் பேசுங்கள். (ஒரு நபரிடம் அது இருக்கும்போது, அவருடைய தனிப்பட்ட சுயத்திலிருந்து எந்த அசுத்தமும் வருவதில்லை மற்றும் அவர்களின் எதிர்காலம் மற்றும் தலைவிதியால் அவை கட்டுப்படுத்தப்படுவதும் இல்லை. தேவன் அவர்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்களால் தேவனுடைய கிரியைகளுக்கும் அவருடைய திட்டங்களுக்கும் முழுமையாகக் கீழ்ப்படிய முடிகிறது. கடைசி வரை அவரைப் பின்பற்ற முடிகிறது. தேவனுக்கு இத்தகைய அன்பு மட்டுமே தூய மற்றும் களங்கமில்லாத அன்பு ஆகும். அதனைக் கொண்டு என்னை ஆராய்ந்ததில் நான் அறிந்தது என்னவென்றால், தேவனை நம்பியதால் கடந்த சில ஆண்டுகளில் என்னை நானே பயன்படுத்தியதாகவோ அல்லது சில விஷயங்களை ஒதுக்கித் தள்ளியதாகவோத் தோன்றினாலும், என் இருதயத்தை உண்மையிலேயே அவருக்குக் கொடுக்க முடியவில்லை. தேவன் என்னை வெளிப்படுத்தும்போது, என்னால் இரட்சிக்கப்பட முடியாது என்றும், நான் எதிர்மறையான நிலையில் வாழ்கிறேன் என்றும் நினைக்கிறேன். என் கடமையை நான் செய்வதாக என்னைக் காண்கிறேன். ஆனால் அதே நேரத்தில் நான் தேவனைச் சமாளிக்க முயற்சிக்கிறேன். என்னால் தேவனை முழு மனதுடன் நேசிக்க முடியவில்லை. மேலும், என்னுடைய மனமானது எனது விதி, எனது எதிர்காலம் மற்றும் எனது தலைவிதி ஆகியவற்றால் எப்போதும் நிறைந்திருக்கிறது.) இந்தப் பாமாலையைப் பற்றி நீங்கள் சில புரிதல்களைப் பெற்றுள்ளீர்கள், அதற்கும் உங்கள் உண்மையான அனுபவத்திற்கும் இடையில் சில தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்பதாகத் தெரிகிறது. இருப்பினும், “களங்கமில்லாத பரிசுத்தமான அன்பு” என்ற பாமாலையில் உள்ள ஒவ்வொரு சொற்றொடர்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்வதில் வெவ்வேறு அளவுகளைக் கொண்டுள்ளீர்கள். சிலர் இது விருப்பத்தைப் பற்றியது என்று நினைக்கிறார்கள். சிலர் தங்கள் எதிர்காலத்தை ஒதுக்கி வைக்க முற்படுகிறார்கள். சிலர் தங்கள் குடும்பங்களை விட்டு வெளியேற முற்படுகிறார்கள். சிலர் எதையும் பெற முற்படுவதில்லை. இன்னும் சிலர், எந்த வஞ்சகமும், குறைகூறுதல்களும் இருக்கக்கூடாது, தேவனுக்கு எதிராகக் கலகமும் செய்யக்கூடாது என்று அவர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்கிறார்கள். தேவன் ஏன் இத்தகைய அன்பை பரிந்துரைக்க விரும்புகிறார்? எதற்காக ஜனங்கள் அவரை இவ்வாறு நேசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்? இது ஜனங்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வகையான அன்பாக இருக்கிறதா? அதாவது, ஜனங்கள் இவ்வாறு நேசிக்க முடியுமா? இத்தகைய அன்பைப் பற்றிய எந்த குறிப்பையும் ஜனங்கள் கொண்டிருக்கவில்லை என்பதால், இது அவர்களால் முடியாது என்று அவர்கள் நினைக்கலாம். ஜனங்களிடம் அத்தகைய அன்பு இல்லாதபோது, அடிப்படையில் அன்பைப் பற்றி அவர்கள் அறியாதபோது, தேவன் இந்த வார்த்தைகளைப் பேசுகையில், அவர்களுக்கு இந்த வார்த்தைகள் அறிமுகமில்லாமல் இருக்கின்றன. ஜனங்கள் இந்த உலகத்திலும், கேடான மனநிலையிலும் ஜீவிக்கிறார்கள் என்பதால், ஜனங்களுக்கு இத்தகைய அன்பு இருந்திருந்தால் அல்லது ஒரு நபர் இந்த வகை அன்பைக் கொண்டிருக்க முடியுமென்றால், எந்த வேண்டுதலும் கோரிக்கையும் இல்லாத அன்பைக் கொண்டிருக்க முடியுமென்றால், தங்களைத் தாங்களே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் அன்பைக் கொண்டிருக்க முடியுமென்றால், துன்பத்தைத் தாங்கிக் கொண்டு, தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் விட்டுவிடும் அன்பைக் கொண்டிருக்க முடியுமென்றால், இத்தகைய அன்பைக் கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? அத்தகைய நபர் பூரணமானவராக இருக்க மாட்டாரா? (ஆம்.) அது போன்ற ஒரு பரிபூரணமான நபர் இந்த உலகில் இருக்கின்றாரா? அத்தகைய நபர் இந்த உலகில் ஜீவிக்கவே முடியாது. இது முழுமையானது. எனவே, சிலர் தங்களது அனுபவங்களின் மூலம், இந்த வார்த்தைகளைக் கொண்டு தங்களை மதிப்பிட பெரும் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே கையாள்கிறார்கள், தங்களைத் தாங்களே கட்டுப்படுத்துகிறார்கள் மற்றும் தங்களைத் தாங்களே தொடர்ந்து கைவிடவும் செய்கிறார்கள்: அவர்கள் துன்பத்தை சகித்துக் கொள்கிறார்கள், மேலும் தங்களது கருத்துக்களை விட்டு விடுகிறார்கள். அவர்கள் தங்களது கலகத்தையும், தங்களது சொந்த ஆசைகளையும் விருப்பங்களையும் விட்டு விடுகிறார்கள். ஆனால் இறுதியில், இன்னும் அவர்களால் அளவிட முடியவில்லை. ஏன் அவ்வாறு நடக்கின்றது? ஜனங்கள் பின்பற்றுவதற்கான ஒரு தரத்தை, அவர்களுக்கு வழங்குவதற்காக தேவன் இந்த விஷயங்களைச் சொல்கிறார். எனவே, தேவன் ஜனங்களிடம் எதிர்பார்க்கும் தரத்தை அவர்கள் அறிந்து கொள்வார்கள். ஆனால் ஜனங்கள் அதை இப்போதே அடைய வேண்டும் என்று தேவன் இந்த வார்த்தைகளை எப்போதாவது சொல்கின்றாரா? அதை அடைய ஜனங்களுக்கு எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்று தேவன் எப்போதாவது சொல்கின்றாரா? (இல்லை.) ஜனங்கள் தேவனை இவ்வாறு நேசிக்க வேண்டும் என்று அவர் எப்போதாவது சொல்கின்றாரா? உரையின் இந்தப் பத்தி அதனைச் சொல்கிறதா? இல்லை, இது கூறவில்லை. தேவன் தான் குறிப்பிடும் அன்பைப் பற்றி மட்டுமே ஜனங்களுக்குச் சொல்கிறார். ஜனங்கள் தேவனை இவ்வாறு நேசிக்கவும், இவ்வாறு நடத்தவும் முடியுமா என்பதைப் பொறுத்தவரையில், தேவன் மனிதர்களிடம் எதனைக் கேட்கிறார்? ஜனங்கள் அவற்றை உடனடியாக அடைய வேண்டும் என்ற அவசியமில்லை, ஏனெனில் அது ஜனங்களின் திறன்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இவ்வாறு நேசிக்க ஜனங்கள் எத்தகைய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? இந்த வார்த்தைகளை ஜனங்கள் அடிக்கடிப் படித்தால் அவர்களுக்குப் படிப்படியாக இந்த அன்பு கிடைக்குமா? (இல்லை.) அப்படியானால் என்ன நிபந்தனைகள்? முதலாவதாக, தேவனைப் பற்றிய சந்தேகங்களிலிருந்து ஜனங்கள் எவ்வாறு விடுபட முடியும்? (உண்மையுள்ளவர்களால் மட்டுமே விடுபட முடியும்.) வஞ்சகத்திலிருந்து எவ்வாறு விடுபட முடியும்? (அதற்கும் உண்மையுள்ள மனிதர்களாக இருக்க வேண்டும்.) ஒருவர் தேவனைச் சமாளிப்பதிலிருந்து எவ்வாறு விடுபட முடியும்? அதுவும் உண்மையுள்ள நபராக இருப்பதன் ஒரு பகுதியாகும். தந்திரமில்லாமல் இருப்பதெப்படி? அன்பில், வேறு வழியில்லை என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இந்த விஷயங்கள் அனைத்தும், ஒருவர் உண்மையுள்ளவராக இருக்க வேண்டும் என்பதையே மீண்டும் சொல்கிறதா? இங்கே நிறைய விவரங்கள் உள்ளன. இத்தகைய அன்பைப் பற்றி தேவனால் பேசவும் வரையறுக்கவும் முடியும் என்பது எதனை நிரூபிக்கின்றது? தேவன் இத்தகைய அன்புடையவராக இருக்கிறார் என்று நாம் சொல்ல முடியுமா? (ஆம்.) இதை நீங்கள் எங்கே பார்க்கின்றீர்கள்? (தேவன் மனிதனுக்காக வைத்திருக்கும் அன்பில்.) மனிதனுக்கான தேவனுடைய அன்பு நிபந்தனைக்குட்பட்டதா? தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே தடைகள் அல்லது இடைவெளி உள்ளதா? தேவனுக்கு மனிதனைப் பற்றிய சந்தேகம் இருக்கின்றதா? (இல்லை.) தேவன் மனிதனைக் கவனித்து, அவனைப் புரிந்து கொள்கிறார். அவர் உண்மையிலேயே மனிதனைப் புரிந்து கொள்கிறார். தேவன் மனிதனை ஏமாற்றுகின்றாரா? (இல்லை.) தேவன் இந்த அன்பைப் பற்றி மிகச் சரியாகப் பேசுவதால், அவருடைய இருதயமோ அல்லது அவருடைய சாராம்சமோ இவ்வளவு பரிபூரணமாக இருக்க முடியுமா? (ஆம்.) நிச்சயமாக, அவைகள் இருக்க முடியும்; ஜனங்களின் அனுபவம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்திருக்கும் போது, அவர்களால் இதை உணர முடியும். அன்பை ஜனங்கள் எப்போதாவது இவ்வாறு வரையறுத்துள்ளார்களா? எந்த சூழ்நிலையில் மனிதன் அன்பை வரையறுத்துள்ளான்? மனிதன் அன்பைப் பற்றி எப்படிப் பேசுகிறான்? கொடுப்பது அல்லது பலியிடுவதன் மூலம் வெளிப்படுத்தும் அன்பைப் பற்றி மனிதன் பேசவில்லையா? (ஆம்.) அன்பின் இந்த வரையறை எளிமையானது. அதில் சாராம்சம் இல்லை.

தேவனுடைய அன்பின் வரையறையும், அன்பைப் பற்றி தேவன் பேசும் விதமும் அவருடைய சாராம்சத்தின் ஒரு அம்சத்துடன் இணைந்துள்ளன. ஆனால் அது எந்த அம்சம்? கடைசியாக மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டோம். அது, இதற்கு முன்னர் ஜனங்கள் அடிக்கடி விவாதித்த ஒரு தலைப்பாகும். இந்த தலைப்பானது தேவனைப் பற்றிய நம்பிக்கையில் அடிக்கடிப் பேசப்படும் ஒரு வார்த்தையைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த வார்த்தை அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றாகவும் மற்றும் பரிச்சயமில்லாத ஒன்றாகவும் உணர்கின்றனர். நான் ஏன் இதனைக் குறிப்பிடுகின்றேன்? இது மனிதனுடைய மொழிகளில் இருந்து வரும் ஒரு வார்த்தையாகும்; இருப்பினும், மனிதனிடையே அதனுடைய வரையறை வேறுபட்டது மற்றும் தெளிவற்றது. இந்த வார்த்தை என்ன? (பரிசுத்தம்.) பரிசுத்தம்: கடைசியாக நாம் பேசிய நம்முடைய தலைப்பு இது தான். இந்த தலைப்பின் ஒரு பகுதியைப் பற்றி நாங்கள் பேசினோம். நம்முடைய கடைசி ஐக்கியத்தின் மூலம், தேவனுடைய பரிசுத்தத்தின் சாராம்சம் பற்றி எல்லோரும் புதிய புரிதலைப் பெற்றீர்களா? இந்தப் புரிதலின் எந்த அம்சங்கள் முற்றிலும் புதியவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? அதாவது, இந்தப் புரிதலுக்குள் உள்ள சாராம்சம் என்ன? அல்லது தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய உங்கள் புரிதல் நான் சொல்லிய தேவனுடைய பரிசுத்தத்திலிருந்து வித்தியாசமாக அல்லது வேறுபட்டு இருப்பதை நீங்கள் உணரக் காரணமான அந்த வார்த்தைகளுக்குள் உள்ள சாராம்சம் என்ன? இதைப் பற்றி உங்களிடம் ஏதேனும் கருத்துக்கள் இருக்கின்றதா? (தேவன் தன் இருதயத்தில் என்ன உணர்கிறாரோ அதைச் சொல்கிறார்; அவருடைய வார்த்தைகள் களங்கமில்லாதவை. இது பரிசுத்தத்துடைய ஒரு அம்சத்தின் வெளிப்பாடாகும்.) (மனிதன் மீது தேவன் கோபமாக இருக்கும் போது அதில் பரிசுத்தம் இருக்கிறது; அவருடைய கோபம் களங்கமில்லாதது.) (தேவனுடைய பரிசுத்தத்தைப் பொறுத்தவரையில், அவருடைய நீதியுள்ள மனநிலையினுள் அவருடைய கோபமும், இரக்கமும் இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இது மிகவும் வலுவான தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. நம்முடைய கடைசி ஐக்கியத்தில், தேவனுடைய நீதியுள்ள மனநிலையானது தனித்துவமானது என்றும் சொல்லப்பட்டது. இதை நான் கடந்த காலத்தில் புரிந்து கொள்ளவில்லை. தேவன் சொல்லியதைக் கேட்ட பிறகு தான் தேவனுடைய கோபமானது மனித கோபத்திலிருந்து வேறுபட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன். தேவனுடைய கோபம் ஒரு நேர்மறையான விஷயம் ஆகும், அது கொள்கை ரீதியானது. அது தேவனுடைய உள்ளார்ந்த சாராம்சத்தின் காரணமாக அனுப்பப்படுகிறது. தேவன் எதிர்மறையான ஒன்றைக் காண்கிறார். எனவே, அவர் தனது கோபத்தை அனுப்புகிறார். இது எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனிடமும் இல்லாத ஒன்றாகும்.) இன்று நமது தலைப்பு தேவனுடைய பரிசுத்தம். தேவனுடைய நீதியான மனநிலையைப் பற்றி ஜனங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறார்கள் மற்றும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும், பலர் தேவனுடைய பரிசுத்தம் மற்றும் தேவனுடைய நீதியான குணம் பற்றி விடாமல் பேசுகிறார்கள்; தேவனுடைய நீதியான மனநிலை பரிசுத்தமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். “பரிசுத்தம்” என்ற வார்த்தை நிச்சயமாக யாருக்கும் அறிமுகமில்லாத ஒன்று அல்ல—இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். ஆனால், அந்த வார்த்தையில் உள்ள அர்த்தங்களைப் பொறுத்த வரையில், தேவனுடைய பரிசுத்தத்தின் எந்த வெளிப்பாடுகளை ஜனங்கள் காண முடிகிறது? ஜனங்கள் அறிந்துகொள்ளும் வகையில் தேவன் எதனை வெளிப்படுத்தியுள்ளார்? இது யாருக்கும் தெரியாத ஒன்றோ என்று நான் பயப்படுகிறேன். தேவனுடைய மனநிலையானது நீதியுள்ளது. ஆனால், நீ தேவனுடைய நீதியுள்ள மனநிலையை எடுத்துக்கொண்டு, அது பரிசுத்தமானது என்று சொன்னால், அது கொஞ்சம் தெளிவற்றதாகவும், கொஞ்சம் குழப்பமானதாகவும் தெரியும். அது ஏன்? தேவனுடைய மனநிலையானது நீதியுள்ளது என்று நீ சொல்கிறாய், அல்லது அவருடைய நீதியுள்ள மனநிலையானது பரிசுத்தமுள்ளது என்று நீ சொல்கிறாய். எனவே உங்களுடைய இருதயங்களில் தேவனுடைய பரிசுத்தத்தை எவ்வாறு வகைப்படுத்துகின்றீர்கள், அதை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றீர்கள்? அதாவது, தேவன் வெளிப்படுத்தியதைப் பரிசுத்தம் என்றோ அல்லது அவர் பரிசுத்தமானவர் என்றோ, அவரிடம் உள்ளது பரிசுத்தம் என்றோ ஜனங்கள் அறிந்துகொள்வார்களா? இதைப் பற்றி நீங்கள் முன்பு சிந்தித்திருக்கின்றீர்களா? நான் பார்த்தது என்னவென்றால், பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்களையே ஜனங்கள் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள் அல்லது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் சொற்றொடர்களையே பயன்படுத்துகிறார்கள். எனினும், தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் இன்னதென்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள். எல்லோரும் இவ்வாறு தான் அதைச் சொல்கிறார்கள். அதை ஒரு வழக்கம் போல அவர்கள் சொல்கிறார்கள். எனவே, அவர்கள் வகுத்துக்கொண்ட ஒரு குறிப்பிட்ட பழக்கமாக இது மாறுகிறது. இருப்பினும், அவர்கள் விவரங்களை ஆராய்ந்து உண்மையிலேயே ஆய்வு செய்தால், உண்மையான சாராம்சம் என்ன அல்லது அது எதனைக் குறிக்கிறது என்பதைத் தாங்கள் அறியவில்லை என்று அவர்கள் தெரிந்துக் கொள்வார்கள். “பரிசுத்தம்” என்ற வார்த்தையைப் போலவே, பரிசுத்தத்தைப் பற்றி பேசுகையில் தேவனுடைய சாராம்சத்தின் எந்த அம்சத்தை அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. மேலும் “பரிசுத்தம்” என்ற வார்த்தையை எவ்வாறு தேவனுக்கு இணங்கப் பயன்படுத்துவது என்பதும் யாருக்கும் தெரியாது. ஜனங்கள் தங்களது இருதயத்தில் குழப்பமடைந்துள்ளனர், மேலும், தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய அவர்களுடைய புரிதல் விசித்திரமானது மற்றும் தெளிவற்றது. தேவன் எவ்வாறு பரிசுத்தராக இருக்கிறார் என்பதைப் பொறுத்தவரையில், யாரும் தெளிவாக இல்லை. “பரிசுத்தம்” என்ற வார்த்தையை தேவனோடு இணங்கப் பயன்படுத்துவதற்காக இன்று நாம் இந்த தலைப்பில் பேசுவோம். இதன் மூலம், தேவனின் பரிசுத்தத்தினுடைய சாராம்சத்தின் உண்மையான உள்ளடக்கத்தை ஜனங்கள் கண்டு கொள்ள முடியும். சிலர் வழக்கமாகவும் கவனக் குறைவாகவும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதை, இது தடுக்கும். மேலும், என்ன அர்த்தம் என்று தெரியாமல் அல்லது அவை பரிபூரணமானவை மற்றும் துல்லியமானவை என்பதை அறியாமல் அவர்கள் தோராயமாக விஷயங்களைச் சொல்வதை, அது தடுக்கும். ஜனங்கள் எப்போதும் இவ்வாறு பேசியிருக்கின்றார்கள்; நீ பேசியிருக்கிறாய், அவர் பேசியிருக்கிறார். எனவே, அது ஒரு பழக்கமாகிவிட்டது. இந்தப் பழக்கமானது கவனக் குறைவாக அத்தகைய வார்த்தையைக் கெடுக்கும்.

மேலோட்டமாக, “பரிசுத்தம்” என்ற வார்த்தையைப் புரிந்து கொள்வது மிகவும் எளிதானது என்று தோன்றுகிறது, இல்லையா? “பரிசுத்தமான” என்ற வார்த்தைக்கு சுத்தமான, பழுதற்ற, புனிதமான மற்றும் தூய்மையான என்னும் அர்த்தங்கள் உள்ளன என்று ஜனங்கள் நம்புகிறார்கள். இப்போது நாம் பாடிய “களங்கமில்லாத பரிசுத்தமான அன்பு” என்ற பாமாலையில் “பரிசுத்தத்தை” “அன்புடன்” இணைப்பவர்களும் உள்ளனர். இது சரியானதாகும்; இது அதன் ஒரு பகுதியாகும். தேவனுடைய அன்பு அவருடைய சாராம்சத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், இது அதனுடைய முழுமையல்ல. இருப்பினும், ஜனங்களுடைய பார்வையில், அவர்கள் இந்த வார்த்தையைப் பார்க்கும்போது, தாங்களாகவே பரிசுத்தமானதாகவும் சுத்தமாகவும் கருதும் விஷயங்களுடன் அல்லது பழுதற்றதாகவோ, களங்கமற்றதாகவோ தனிப்பட்ட முறையில் அவர்கள் கருதுகிற விஷயங்களுடன் அந்த வர்த்தையை இணைக்க முற்படுகின்றனர். உதாரணமாக, தாமரை மலர் சுத்தமாக இருப்பதாகவும், அழுக்கு சேற்றில் இருந்து கறைபடாமல் பூக்கும் என்றும் சிலர் சொன்னார்கள். எனவே, ஜனங்கள் தாமரை மலருக்கு “பரிசுத்தமானது” என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினர். சிலர் புனையப்பட்ட காதல் கதைகளை பரிசுத்தமாகவே பார்க்கின்றனர் அல்லது சில கற்பனையான, பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்களைச் சிலர் பரிசுத்தமாகப் பார்க்கக்கூடும். மேலும், சிலர் வேதாகமத்திலிருந்து வந்தவர்களை அல்லது ஆவிக்குரிய புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட மற்றவர்களை பரிசுத்தர்கள், அப்போஸ்தலர்கள் என்று கருதுகின்றனர் அல்லது ஒரு காலத்தில் தேவன் கிரியை செய்தபோது அவரைப் பின்பற்றிய சிலரை பரிசுத்தமான ஆவிக்குரிய அனுபவங்களைக் கொண்டவர்கள் என்று கருதுகின்றனர். இவை அனைத்தும் ஜனங்களால் உருவாக்கப்பட்டவை; இவை ஜனங்கள் தங்களிடம் வைத்திருக்கும் கருத்துக்கள். ஜனங்கள் ஏன் இது போன்ற கருத்துக்களை வைத்திருக்கிறார்கள்? காரணம் மிகவும் எளிதானது: ஏனென்றால், ஜனங்கள் கேடான மனப்பான்மைக்கு மத்தியில் ஜீவிக்கிறார்கள், தீமையான மற்றும் அசுத்தமான உலகில் ஜீவிக்கிறார்கள். அவர்கள் பார்க்கும் அனைத்தும், அவர்கள் தொடும் அனைத்தும், அவர்கள் அனுபவிக்கும் அனைத்தும் சாத்தானுடைய தீமையாகவும், கேடாகவும் மற்றும் சாத்தானுடைய உந்துதலால் ஜனங்கள் மத்தியில் நிகழும் சூழ்ச்சி, சச்சரவு மற்றும் யுத்தமாகவும் உள்ளது. ஆகையால், தேவன் தம்முடைய கிரியையை ஜனங்களிடையே செய்யும் போதும், அவர் அவர்களிடம் பேசும்போதும், அவருடைய மனநிலையையும் சாராம்சத்தைம் வெளிப்படுத்தும்போதும், தேவனுடைய பரிசுத்தத்தையும் அவருடைய சாராம்சத்தையும் அவர்களால் பார்க்கவோ அறிந்து கொள்ளவோ முடியவில்லை. தேவன் பரிசுத்தர் என்று ஜனங்கள் பெரும்பாலும் சொல்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு உண்மையான புரிதல் இல்லை. அவர்கள் வெற்று வார்த்தைகளைத் தான் சொல்கிறார்கள். ஏனென்றால், ஜனங்கள் அசுத்தத்திற்கும் கேட்டுக்கும் மத்தியில் ஜீவிக்கிறார்கள். சாத்தானுடைய களத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஒளியைக் காணவில்லை. நேர்மறையான விஷயங்களைப் பற்றி எதுவும் அறியவில்லை. மேலும், சத்தியத்தை அறியவில்லை. “பரிசுத்தம்” என்றால் என்ன என்று யாருக்கும் தெரிவதில்லை. எனவே, இந்த கேடு நிறைந்த மனிதகுலத்தில் பரிசுத்த விஷயங்கள் அல்லது பரிசுத்த ஜனங்கள் யாரேனும் இருக்கின்றார்களா? நாம் உறுதியாகக் கூறலாம்: இல்லை, இல்லை, ஏனென்றால் தேவனுடைய சாராம்சம் மட்டுமே பரிசுத்தமானது.

கடந்த முறை, தேவனுடைய சாராம்சம் எவ்வாறு பரிசுத்தமுள்ளதாக உள்ளது என்பதற்கான ஒரு அம்சத்தைப் பற்றி நாம் பேசினோம். தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள இது ஜனங்களுக்கு சில உத்வேகத்தை அளித்தது. ஆனால் அது போதாது. தேவனுடைய பரிசுத்தத்தை முழுமையாக அறிந்து கொள்ள இது ஜனங்களுக்குப் போதுமானதாக இருக்க முடியாது. மேலும், தேவனுடைய பரிசுத்தமானது தனித்துவமுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இது போதுமானதாக இருக்க முடியாது. மேலும், தேவனில் முழுமையாகப் பொதிந்துள்ள பரிசுத்தத்தின் உண்மையான அர்த்தத்தை ஜனங்கள் புரிந்துகொள்ள இது போதுமானதாக இருக்க முடியாது. எனவே, இந்த விஷயத்தில் நம்முடைய கலந்துரையாடல் தொடர வேண்டியது அவசியமாகும். கடந்த முறை, நாம் மூன்று தலைப்புகளில் கலந்துரையாடினோம். எனவே, இப்போது நான்காவது தலைப்பைப் பற்றி கலந்துரையாட வேண்டும். வேத வசனங்களை வாசிப்பதிலிருந்து தொடங்குவோம்.

சாத்தானுடைய சோதனை

மத். 4:1-4 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

கர்த்தராகிய இயேசுவைச் சோதிக்க பிசாசு முதலில் பயன்படுத்திய வார்த்தைகள் இவை. பிசாசு சொன்னவற்றின் உள்ளடக்கம் என்ன? (“நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்.”) பிசாசு பேசிய இந்த வார்த்தைகள் மிகவும் எளிமையானவை, ஆனால் அவற்றின் சாரத்தில் பிரச்சனை உள்ளதா? பிசாசு, “நீர் தேவனுடைய குமாரனேயானால்,” என்று சொன்னது, ஆனால் அதனுடைய இருதயத்தில், இயேசு தேவனுடைய குமாரன் என்று தெரியுமா, தெரியாதா? அவர் கிறிஸ்து என்று தெரியுமா, தெரியாதா? (அதற்குத் தெரியும்.) பிறகு அது “நீரேயானால்” என்று ஏன் சொன்னது? (அது தேவனைச் சோதிக்க முயற்சித்தது.) ஆனால் அவ்வாறு செய்வதில் அதனுடைய நோக்கம் என்ன? அது, “நீர் தேவனுடைய குமாரனேயானால்.” என்று சொன்னது. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதைத் தன் இருதயத்தில் அது அறிந்திருந்தது. அதனுடைய இருதயத்தில் இந்த விஷயம் மிகவும் தெளிவாக இருந்தது. ஆனால் இதை அறிந்திருந்தாலும், அது அவருக்கு அடிபணிந்து அவரை வணங்கியதா? (இல்லை.) அது என்ன செய்ய விரும்பியது? கர்த்தராகிய இயேசுவைக் கோபப்படுத்தி, பின்னர் அதனுடைய நோக்கங்களுக்கு ஏற்ப அவரைச் செயல்படச் செய்து அவரை முட்டாளாக்க, இந்த முறையையும், இந்த வார்த்தைகளையும் பயன்படுத்த விரும்பியது. இது பிசாசின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த அர்த்தமல்லவா? சாத்தான் தன் இருதயத்தில், இவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதை தெளிவாக அறிந்திருந்தது. ஆனால் அது இந்த வார்த்தைகளைச் சொன்னது. இது சாத்தானுடைய குணம் அல்லவா? சாத்தானுடைய குணம் என்ன? (நயவஞ்சகமாகவும், தீமையாகவும், தேவன் மீது பயபக்தி இன்றியும் இருப்பதாகும்.) தேவன் மீது பயபக்தி இல்லாததால் ஏற்படும் விளைவுகள் என்ன? அது தேவனைத் தாக்க விரும்பியது அல்லவா? அது தேவனைத் தாக்க இந்த முறையைப் பயன்படுத்த விரும்பியது. எனவே, அது கூறியது: “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்;” இது சாத்தானுடைய தீய நோக்கம் அல்லவா? அது உண்மையில் என்ன செய்ய முயற்சித்தது? அதனுடைய நோக்கம் மிகவும் வெளிப்படையானது: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நிலைப்பாட்டையும் அவருடைய அடையாளத்தையும் மறுக்க இந்த முறையைப் பயன்படுத்த முயற்சித்தது. அந்த வார்த்தைகளால் சாத்தான் சொன்னது என்னவென்றால், “நீர் தேவனுடைய குமாரன் என்றால், இந்தக் கற்களை அப்பமாக மாற்றவும். உம்மால் இதைச் செய்ய முடியாவிட்டால், நீர் தேவனுடைய குமாரன் அல்ல, ஆகையால் நீர் இனி உம் கிரியையைச் செய்யக்கூடாது.” இது அப்படிப்பட்டது அல்லவா? அது தேவனைத் தாக்க இந்த முறையைப் பயன்படுத்த விரும்பியது. தேவனுடைய கிரியையை அகற்றவும் அழிக்கவும் விரும்பியது. இது சாத்தானுடைய தீமையாகும். அதனுடைய தீமை அதனுடைய குணத்தினுடைய இயல்பான வெளிப்பாடு ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும், தேவனுடைய அவதாரம் என்றும் அறிந்திருந்தாலும், இத்தகைய காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க இயலாமல், தேவனுக்குப் பின்னால் நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அவரைத் தொடர்ந்து தாக்குவதற்கும், தேவனுடைய கிரியையை சீர்குலைப்பதற்கும், நாசப்படுத்துவதற்கும் அதிக முயற்சிகளைச் செய்தது.

இப்போது, சாத்தான் பேசிய இந்தச் சொற்றொடரை ஆராய்வோம்: “இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்.” கற்களை அப்பங்களாக மாற்றுவது என்பது எதையேனும் குறிக்கின்றதா? ஆகாரம் இருந்தால், அதை ஏன் சாப்பிடக்கூடாது? கற்களை ஆகாரமாக மாற்றுவது ஏன் அவசியமாகிறது? இங்கே எந்த அர்த்தமும் இல்லை என்று சொல்ல முடியுமா? அந்நேரத்தில் அவர் உபவாசத்தில் இருந்தபோதிலும், நிச்சயமாகவே கர்த்தராகிய இயேசுவிடம் சாப்பிட ஆகாரம் இருந்ததா? (அவரிடம் இருந்தது.) ஆகவே, சாத்தானுடைய வார்த்தைகளின் போலித்தனத்தை இங்கே காணலாம். சாத்தானுடைய துரோகம், தீமை அனைத்துக்கும் மேலாக, அதனுடைய மோசடி மற்றும் அபத்தத்தை நாம் இன்னும் அதிகமாகக் காணலாம். சாத்தான், தன்னுடைய தீங்கிழைக்கும் குணத்தைக் காட்டக் கூடிய பல விஷயங்களைச் செய்கிறது. அது தேவனுடைய கிரியையை நாசப்படுத்தும் செயல்களைச் செய்வதை நீ காணலாம். அதை நீ பார்க்கும்போது, அதனை வெறுக்கத்தக்கதாகவும் மற்றும் அது எரிச்சலூட்டுவதாகவும் இருப்பதாக உணர்கிறாய். ஆனால், மறுபுறம், அதனுடைய சொற்களுக்கும் செயல்களுக்கும் பின்னால் ஒரு குழந்தைத்தனமான, அபத்தமான குணத்தை நீ காணவில்லையா? அது சாத்தானுடைய குணத்தைப் பற்றிய வெளிப்பாடு ஆகும். அது இத்தகைய இயல்பைக் கொண்டிருப்பதால், அது இத்தகைய காரியத்தைச் செய்யும். இன்றைய ஜனங்களுக்கு, சாத்தானுடைய இந்த வார்த்தைகள் போலித்தனமானவையாகவும் நகைப்புக்குரியவையாகவும் இருக்கின்றன. ஆனால் சாத்தான் உண்மையில் இத்தகைய வார்த்தைகளைச் சொல்வதில் வல்லவன். இது அறியாமை மற்றும் விசித்திரமானது என்று நாம் கூற முடியுமா? சாத்தானுடைய தீமை எல்லா இடங்களிலும் உள்ளது, அது தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. கர்த்தராகிய இயேசு அதற்கு எவ்வாறு பதிலளித்தார்? (“மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”) இந்த வார்த்தைகளுக்கு ஏதேனும் வல்லமை இருக்கிறதா? (அவற்றுக்கு இருக்கிறது.) அவற்றுக்கு வல்லமை இருக்கிறது என்று நாம் ஏன் சொல்கிறோம்? இந்த வார்த்தைகள் சத்தியம் என்பதால் தான். இப்போது, மனிதன் அப்பத்தால் மட்டுமே வாழ்கிறானா? கர்த்தராகிய இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார். அவர் மரிக்கத்தக்கதாக பட்டினி கிடந்தாரா? அவர் பட்டினி கிடக்கவில்லை. எனவே, சாத்தான் அவரை அணுகி, கற்களை ஆகாரமாக மாற்றும்படி அவரைத் தூண்டியது: “நீ கற்களை ஆகாரமாக மாற்றினால், நீ அதைச் சாப்பிட வேண்டும் அல்லவா? நீ உபவாசம் இருக்க வேண்டாம், பசியுடன் இருக்க வேண்டாம் அல்லவா?” ஆனால் கர்த்தராகிய இயேசு, “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல,” என்று சொன்னார். அதாவது, மனிதன் ஒரு உடலில் ஜீவித்தாலும், அவனது உடலை ஜீவிக்கவும் சுவாசிக்கவும் அனுமதிப்பது ஆகாரம் அல்ல. மாறாக, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் அனுமதிக்கிறது. ஒரு புறம், இந்த வார்த்தைகள் சத்தியமாக இருக்கின்றன; அவை ஜனங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன, அவை தேவனைச் சார்ந்து இருக்க முடியும் என்றும் அவரே சத்தியம் என்றும் உணர வைக்கின்றன. மறுபுறம், இந்த வார்த்தைகளுக்கு ஏதேனும் நடைமுறை அம்சம் உள்ளதா? நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசமிருந்த பிறகும் கர்த்தராகிய இயேசு உயிரோடு இருக்கல்லையா? இது ஒரு உண்மையான உதாரணம் அல்லவா? அவர் நாற்பது பகல் மற்றும் இரவுகளில் எந்த உணவையும் சாப்பிடவில்லை. எனினும், அவர் உயிருடன் இருந்தார். இது அவருடைய வார்த்தைகளின் சத்தியத்தை உறுதிப்படுத்தும் வல்லமை வாய்ந்த சான்றாகும். இந்த வார்த்தைகள் எளிமையானவை. ஆனால் கர்த்தராகிய இயேசுவைப் பொறுத்த வரையில், சாத்தான் அவரைச் சோதித்த போது தான் அவர் அவற்றைப் பேசினாரா, அல்லது அவை ஏற்கனவே இயல்பாகவே அவரின் ஒரு பகுதியாக இருந்ததா? இதை வேறு விதமாகக் கூறினால், தேவனே சத்தியமும், தேவனே ஜீவனுமாயிருக்கிறார், ஆனால் தேவனுடைய சத்தியமும் ஜீவனும் தேவைக்கு ஏற்பக் கூடுதலாக அவருக்குள் இருந்ததா? அவை பிற்கால அனுபவத்தால் பிறந்தவையா? இல்லை—அவை தேவனில் இயல்பானவை. அதாவது, சத்தியமும் ஜீவனும் தேவனுடைய சாராம்சமாகும். அவருக்கு என்ன நேர்ந்தாலும், அவர் வெளிப்படுத்துவதெல்லாம் சத்தியம் தான். இந்த சத்தியத்தால், இந்த வார்த்தைகளால் அவருடைய பேச்சின் உள்ளடக்கம் நீண்டதாகவும் அல்லது குறுகியதாகவும் என எவ்வாறு இருந்தாலும் மனிதனை ஜீவிக்க வைக்கவும் மனிதனுக்கு உயிரைக் கொடுக்கவும் முடியும். மனித ஜீவிதத்தின் பாதையைப் பற்றிய சத்தியத்தையும் தெளிவையும் பெற ஜனங்களுக்கு அவை உதவ முடியும். மேலும், தேவன் மீது நம்பிக்கை வைக்க அவர்களுக்கு உதவ முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த வார்த்தைகளை தேவன் பயன்படுத்துவதற்கான ஆதாரம் நேர்மறையானது. எனவே இந்த நேர்மறையான விஷயம் பரிசுத்தமானது என்று நாம் கூற முடியுமா? (ஆம்.) சாத்தானுடைய அந்த வார்த்தைகள் சாத்தானுடைய குணத்திலிருந்து வந்தவையாகும். சாத்தான் அதனுடைய தீய மற்றும் தீங்கிழைக்கும் குணத்தை எல்லா இடங்களிலும், தொடர்ந்து வெளிப்படுத்துகிறான். இப்போதும், இயற்கையாகவே சாத்தான் இந்த வெளிப்பாடுகளைச் செய்கிறதா? இதனைச் செய்ய யாராவது அதை இயக்குகிறார்களா? அதற்கு யாராவது உதவுகிறார்களா? யாராவது அதை கட்டாயப்படுத்துகிறார்களா? இல்லை. இந்த வெளிப்பாடுகள் அனைத்தையும், அது தனது சொந்த விருப்பப்படி செய்கிறது. இது சாத்தானுடைய தீய குணமாகும். தேவன் எதைச் செய்தாலும், எவ்வாறு அதைச் செய்தாலும், சாத்தான் அவரைப் பின்தொடர்ந்து செயல்படுகிறான். சாத்தான் சொல்லும் மற்றும் செய்யும் இந்த விஷயங்களின் சாராம்சம் மற்றும் உண்மையான தன்மையானது சாத்தானுடைய சாராம்சம் ஆகும்—தீய மற்றும் தீங்கிழைக்கும் ஒரு சாராம்சம் ஆகும். இப்போதும், நாம் தொடர்ந்து வாசிக்கையில், சாத்தான் வேறு என்ன சொல்கிறது? நாம் வாசிப்போம்.

மத். 4:5-7 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி, நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

முதலில் சாத்தான் பேசிய வார்த்தைகளைப் பார்ப்போம். சாத்தான், “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்,” என்று கூறி, பின்பு அது வேதவசனங்களிலிருந்து மேற்கோள் காட்டியது: “தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.” சாத்தானுடைய வார்த்தைகளைக் கேட்கும்போது நீ எப்படி உணருகிறாய்? அவை மிகவும் குழந்தைத்தனமானவை அல்லவா? அவை குழந்தைத்தனமானவை, மோசமானவை, மற்றும் அருவருப்பானவை. ஏன் இதை நான் சொல்கிறேன்? சாத்தான் பெரும்பாலும் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறது, அது தன்னை மிகவும் புத்திசாலி என்று நம்புகிறது. அது பெரும்பாலும் வேத வசனங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறது—தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளைக்கூட மேற்கோள் காட்டுகிறது—தேவனைத் தாக்குவதற்கும், தேவனுடைய கிரியைத் திட்டத்தை நாசப்படுத்தும் அதனுடைய நோக்கத்தை அடைவதற்கான முயற்சியில் அவரைச் சோதிப்பதற்கும் இந்த வார்த்தைகளை தேவனுக்கு எதிராகத் திருப்ப முயற்சிக்கின்றது. சாத்தான் பேசும் இந்த வார்த்தைகளில் எதையேனும் நீங்கள் காண முடிகின்றதா? (சாத்தான் தீய நோக்கங்களைக் கொண்டிருக்கிறது.) சாத்தான் செய்யும் எல்லாவற்றிலும், அது எப்போதும் மனிதகுலத்தைச் சோதிக்க முயற்சிக்கின்றது. சாத்தான் நேராக பேசுவதில்லை. ஆனால் சோதனை, வஞ்சகம், மற்றும் மயக்கத்தைப் பயன்படுத்தி சுற்றி வளைத்து பேசுகிறது. சாத்தான் தேவனை ஒரு சாதாரண மனிதனாகக் கருதுகிறது. தேவனும் அறியாதவர், முட்டாள்தனமானவர், மற்றும் மனிதனைப் போலவே விஷயங்களின் உண்மையான உருவத்தை தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க முடியாதவர் என்று நம்புகிறது. தேவனும் மனிதனைப் போலவே சாத்தானுடைய சாராம்சம் மற்றும் அதனுடைய வஞ்சகம் மற்றும் கெட்ட நோக்கத்தினை பார்க்க இயலாதவர் என்று சாத்தான் நினைக்கிறது. இது சாத்தானுடைய முட்டாள்தனம் அல்லவா? மேலும், சாத்தான் வேதவசனங்களிலிருந்து வெளிப்படையாக மேற்கோள் காட்டுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் நம்பகத்தன்மையை அளிக்கிறது என்றும், அதனுடைய வார்த்தைகளில் ஏதேனும் குறைபாடுகளை உன்னால் கண்டுபிடிக்கவோ அல்லது முட்டாளாக்கப்படுவதைத் தவிர்க்கவோ முடியாது என்றும் நம்புகிறது. இது சாத்தானுடைய அபத்தமும் குழந்தைத்தனமும் அல்லவா? இது, ஜனங்கள் சுவிசேஷத்தைப் பரப்பி தேவனுக்குச் சாட்சி கூறுவது போன்று இருக்கின்றது: தேவனும் மனிதனும் ஒரே மாதிரியானவர்கள் என்று சாத்தான் நினைக்கிறது. அவிசுவாசிகள் சில சமயங்களில் சாத்தான் சொன்னதைப் போலவே ஏதாவது சொல்வார்கள் அல்லவா? இது போன்ற ஒன்றை ஜனங்கள் சொல்லி நீங்கள் கேட்டுள்ளீர்களா? இது போன்ற விஷயங்களை நீ கேட்கும்போது நீ எவ்வாறு உணருகிறாய்? நீ வெறுப்பாக உணருகிறாயா? (ஆம்.) நீ வெறுப்பாக உணர்ந்தால், நீ அருவருப்பையும் பகைமையையும் உணருகிறாயா? இந்த உணர்வுகள் உன்னிடம் இருக்கும்போது, சாத்தானும், மனிதனுக்குள் சாத்தான் உருவாக்கும் கேடான மனப்பான்மையும் பொல்லாதவை என்பதை உன்னால் அறிந்துகொள்ள முடிகின்றதா? உன்னுடைய இருதயங்களில், இந்த உணர்தல் எப்போதாவது இருந்திருக்கிறதா: “சாத்தான் பேசும்போது, இது போன்ற ஒரு தாக்குதலையும், சோதனையையும் தருகிறது. சாத்தானுடைய வார்த்தைகள் அபத்தமானவை, நகைப்புக்கு உரியவை, குழந்தைத்தனமானவை மற்றும் அருவருப்பானவை. இருப்பினும், தேவன் ஒருபோதும் அப்படி பேசவோ செயல்படவோ மாட்டார். உண்மையில் அவர் அவ்வாறு செய்யவில்லை”? நிச்சயமாக, இந்தச் சூழ்நிலையில் ஜனங்கள் அதைத் தெளிவற்ற நிலையில் மட்டுமே உணர முடிகிறது. மேலும், தேவனுடைய பரிசுத்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் உங்களது தற்போதைய அந்தஸ்துடன் மட்டுமே இதை உணர்கின்றீர்கள்: “தேவன் சொல்வது அனைத்தும் சத்தியம். அவை நமக்கு நன்மை பயக்கும். நாம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” இதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய வார்த்தை சத்தியம் என்றும் தேவன் சத்தியமாக இருக்கிறார் என்றும் நீங்கள் விதிவிலக்கு இல்லாமல் சொல்கின்றீர்கள். ஆனாலும் சத்தியமானது பரிசுத்தமுள்ளது என்றும், தேவன் பரிசுத்தர் என்றும் உங்களுக்குத் தெரிவதில்லை.

அப்படியானால், சாத்தானுடைய இந்த வார்த்தைகளுக்கு இயேசுவின் பதில் என்ன? இயேசு அதை நோக்கி: “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே.” என்றார். இயேசு சொன்ன இந்த வார்த்தைகளில் சத்தியம் இருக்கிறதா? நிச்சயமாகவே அவற்றில் சத்தியம் இருக்கிறது. மேலோட்டமாக, இந்த வார்த்தைகள் ஜனங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளையாகும். இது ஒரு எளிய சொற்றொடர். எனினும், மனிதனும் சாத்தானும் பெரும்பாலும் இந்த வார்த்தைகளை அவமதித்திருக்கிறார்கள். ஆகவே, கர்த்தராகிய இயேசு சாத்தானை நோக்கி, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக,” என்று சொன்னார். ஏனென்றால், இதைத் தான் சாத்தான் கடினமாக முயற்சித்து அடிக்கடி செய்தது. சாத்தான் இதை வெட்கமின்றி, அவமானமின்றி செய்தது என்று கூறலாம். தேவனுக்குப் பயப்படாமல் இருப்பதும் தன் இருதயத்தில் தேவனுக்கான மரியாதையை வைத்திராமல் இருப்பதும் சாத்தானுடைய சுபாவமும் சாராம்சமுமாகும். சாத்தான் தேவனுடைய அருகில் நின்று அவரைக் காண முடிந்தபோதும், தேவனைச் சோதிப்பதைச் சாத்தானால் தவிர்க்க முடியவில்லை. ஆகையால், கர்த்தராகிய இயேசு சாத்தானை நோக்கி, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக,” என்றார். தேவன் பெரும்பாலும் சாத்தானிடம் சொன்ன வார்த்தைகள் இவை. எனவே, இந்த சொற்றொடர் இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்படுவது பொருத்தமானதா? (ஆமாம், நாமும் அடிக்கடி தேவனைச் சோதிக்கின்றோம்.) ஜனங்கள் ஏன் பெரும்பாலும் தேவனைச் சோதிக்கிறார்கள்? ஜனங்கள், கேடு நிறைந்த சாத்தானிய மனநிலையால் நிறைந்துள்ளது அதற்குக் காரணமா? (ஆம்.) அப்படியானால், ஜனங்கள் அடிக்கடி சொல்லும் விஷயங்களுக்கு மேலாக சாத்தானுடைய வார்த்தைகள் உள்ளனவா? எந்தச் சூழ்நிலைகளில் ஜனங்கள் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்கள்? நேரம் மற்றும் இடத்தைப் பொருட்படுத்தாமல் ஜனங்கள் இது போன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள் என்று ஒருவர் கூறலாம். ஜனங்களின் மனநிலையானது சாத்தானுடைய கேடான மனநிலையிலிருந்து வேறுபட்டதல்ல என்பதை இது நிரூபிக்கிறது. கர்த்தராகிய இயேசு, ஜனங்களுக்குத் தேவையான, சத்தியத்தைக் குறிக்கும், சில எளிய வார்த்தைகளைச் சொன்னார். இருப்பினும், இந்த சூழ்நிலையில், கர்த்தராகிய இயேசு சாத்தானுடன் வாக்குவாதம் செய்கின்றாரா? அவர் சாத்தானிடம் சொன்னதில் ஏதேனும் மோதல் இருந்ததா? (இல்லை.) கர்த்தராகிய இயேசு தன் இருதயத்தில் சாத்தானுடைய சோதனையைப் பற்றி எப்படி உணர்ந்தார்? அவர் வெறுப்படைந்து விரட்டியடித்தாரா? கர்த்தராகிய இயேசு விரக்தியடைந்தார், வெறுப்படைந்தார், ஆனாலும் அவர் சாத்தானுடன் வாக்குவாதம் செய்யவில்லை, எந்தவொரு பெரிய கொள்கைகளையும் பேசவில்லை. அது ஏன்? (ஏனெனில் சாத்தான் எப்போதுமே இப்படி இருக்கும்; அதை ஒருபோதும் மாற்ற முடியாது.) சாத்தான் நியாயத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியுமா? (ஆம்.) தேவன் சத்தியமானவர் என்பதை சாத்தானால் அடையாளம் காண முடியுமா? தேவன் சத்தியமானவர் என்பதைச் சாத்தான் ஒருபோதும் அடையாளம் கண்டு கொள்ளாது, தேவனே சத்தியம் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது; இது அதனுடைய குணம். சாத்தானுடைய குணத்தின் மற்றொரு அம்சம் வெறுக்கத்தக்கது. அது என்ன? கர்த்தராகிய இயேசுவைச் சோதிப்பதற்கான அதனுடைய முயற்சிகளில் தோல்வியுற்றாலும், மீண்டும் அதைச் செய்ய முயற்சிக்க வேண்டும் என சாத்தான் நினைத்ததாகும். அது தண்டிக்கப்படும் என்றாலும், எப்படியும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்தது. அவ்வாறு செய்வதால் எந்த நன்மையும் கிடைக்காது என்றாலும், அது முயற்சிக்கும், அதனுடைய முயற்சிகளில் தொடர்ந்து நிலைத்திருக்கும் மற்றும் கடைசி வரை தேவனுக்கு எதிராக நிற்கும். இது எத்தகைய குணம்? இது தீமை அல்லவா? தேவனைப் பற்றிப் பேசுகையில் ஒரு மனிதன் கோபமடைந்து ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தால், அவர் தேவனைக் கண்டுள்ளாரா? அவருக்கு தேவன் யார் என்று தெரியுமா? தேவன் யார் என்று அவருக்குத் தெரியாது. அவர் தேவனை நம்பவில்லை. தேவன் அவருடன் பேசவில்லை. தேவன் அவரை ஒருபோதும் தொந்தரவு செய்யவில்லை. இந்நிலையில் அவர் ஏன் கோபப்பட வேண்டும்? இந்த நபர் தீயவர் என்று நாம் கூற முடியுமா? உலகப் போக்கின் வழக்கத்தில் இருப்பதும், புசிப்பதும், குடிப்பதும், சிற்றின்பம் தேடுவதும், பிரபலங்களைப் பின்பற்றுவதும் என இவை எதுவும் அத்தகைய மனிதனைப் பாதிக்காது. இருப்பினும், “தேவன்” என்ற வார்த்தையை அல்லது தேவனுடைய வார்த்தைகளின் சத்தியத்தைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கிறார். ஒரு தீய குணத்தை அவர் பெற்றிருப்பதை இது குறிப்பிடவில்லையா? இந்த குணத்தை மனிதனுடைய தீய குணம் என்று நிரூபிக்க இது போதுமானதாகும். இப்போது நீங்களே யோசித்துப் பாருங்கள், சத்தியம் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில், மனிதகுலத்திற்கான தேவனுடைய சோதனைகள் அல்லது மனிதனுக்கு எதிரான தேவனுடைய நியாயத்தீர்ப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில், நீங்கள் ஒரு வெறுப்பை உணர்கின்றீர்கள்; நீங்கள் துரத்தப்படுவதாக உணர்கின்றீர்கள். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் கேட்க விரும்புவதில்லையா? உங்கள் இருதயம் இவ்வாறு நினைக்கலாம்: “தேவனே சத்தியம் என்று ஜனங்கள் அனைவரும் சொல்வதில்லையா? இவற்றுள் சில வார்த்தைகளில் சத்தியம் இல்லை! அவை தெளிவாகவே மனிதனுக்கான தேவனுடைய அறிவுரைகள் ஆகும்!” சிலர் தங்கள் இருதயத்தில் ஒரு வலுவான வெறுப்பை உணர்ந்து கொண்டு, சிந்திக்கலாம்: “அவருடைய சோதனைகளும், அவருடைய நியாயத்தீர்ப்பும் ஒவ்வொரு நாளும் பேசப்படுகிறது, அது எப்போது முடிவடையும்? எப்போது அந்த நல்ல தலைவிதியைப் பெறுவோம்?” இந்த நியாயமற்ற கோபம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. இது எத்தகைய குணம்? (தீய குணம்.) இது சாத்தானுடைய தீய குணத்தால் இயக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. தேவனுடைய பார்வையில், சாத்தானுடைய தீய குணம் மற்றும் மனிதனுடைய கேடான மனநிலை குறித்து, அவர் ஒருபோதும் ஜனங்களுக்கு எதிராக வாதிடுவதில்லை அல்லது கோபப்படுவதும் இல்லை, ஜனங்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்ளும்போது, அவர் ஒருபோதும் கண்டுகொள்வதும் இல்லை. தேவன் மனிதர்களிடம் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருப்பதை நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள். மேலும், விஷயங்களைக் கையாள தேவன், மனிதகுலத்தின் கண்ணோட்டங்கள், அறிவு, அறிவியல், தத்துவம் அல்லது கற்பனை ஆகியவற்றைப் பயன்படுத்துவதை நீங்கள் காண மாட்டீர்கள். மாறாக, தேவன் செய்யும் அனைத்தும், அவர் வெளிப்படுத்தும் அனைத்தும் சத்தியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் சத்தியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சத்தியம் சில ஆதாரமற்ற கற்பனையின் விளைவாக இல்லை. இந்த சத்தியமும் இந்த வார்த்தைகளும் அவரது சாராம்சம் மற்றும் அவரது ஜீவனால் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த வார்த்தைகளும், தேவன் செய்த எல்லாவற்றின் சாராம்சமும், சத்தியம் என்பதால், தேவனுடைய சாராம்சம் பரிசுத்தமானது என்று நாம் கூறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் சொல்வது மற்றும் செய்வது அனைத்தும் ஜனங்களுக்கு ஆற்றலையும் வெளிச்சத்தையும் தருகின்றன. நேர்மறையான விஷயங்களையும் அந்த நேர்மறையான விஷயங்களின் யதார்த்தத்தையும் காண ஜனங்களுக்கு உதவுகின்றன. மேலும், அவர்கள் பரிபூரணமான பாதையில் செல்ல மனிதகுலத்திற்கான வழியை சுட்டிக்காட்டுகின்றன. இந்த விஷயங்கள் அனைத்தும் தேவனுடைய சாராம்சம் மற்றும் அவருடைய பரிசுத்தத்தின் சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. இதை நீங்கள் இப்போது பார்க்கின்றீர்கள், இல்லையா? இப்போது, வேதவசனங்களிலிருந்து இன்னொரு பகுதியை தொடர்ந்து வாசிப்போம்.

மத். 4:8-11 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.

பிசாசான சாத்தான், அதனுடைய முந்தைய இரண்டு சூழ்ச்சிகளில் தோல்வியுற்றதால், இன்னொன்றை முயற்சித்தது: அது உலகில் உள்ள எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் கர்த்தராகிய இயேசுவிடம் காட்டி, அதை வணங்கும்படி அவரிடம் கேட்டது. இந்தச் சூழ்நிலையிலிருந்து பிசாசின் உண்மையான அம்சங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள முடிந்ததென்ன? பிசாசான சாத்தான் முற்றிலும் வெட்கமில்லாததா? (ஆம்.) அது வெட்கமற்றதாக இருப்பது எப்படி? எல்லாமே தேவனால் படைக்கப்பட்டவை, ஆனாலும் சாத்தான் திரும்பி எல்லாவற்றையும் தேவனுக்குக் காட்டி, “இந்த ராஜ்யங்கள் அனைத்தின் செல்வத்தையும் மகிமையையும் பாரும். நீர் என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குக் கொடுப்பேன்” என்றது. இது முற்றிலும் தலைகீழான காரியம் அல்லவா? சாத்தானுக்கு வெட்கமில்லையா? தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், ஆனால் எல்லாவற்றையும் அவர் தனது சொந்த இன்பத்திற்காக செய்தாரா? தேவன் எல்லாவற்றையும் மனிதகுலத்திற்குக் கொடுத்தார். ஆனால் சாத்தான் அதையெல்லாம் கைப்பற்ற விரும்பியது. அனைத்தையும் கைப்பற்றியதால், அது தேவனிடம், “என்னை வணங்கும்! என்னை வணங்கும், இதையெல்லாம் நான் உமக்குக் கொடுப்பேன்” என்றது. இது சாத்தானுடைய அசிங்கமான முகம். அது முற்றிலும் வெட்கமற்றது! “அவமானம்” என்ற வார்த்தையின் அர்த்தம் கூட சாத்தானுக்குத் தெரியாது. இது, அதனுடைய தீமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். அவமானம் என்றால் என்ன என்று கூட அதற்குத் தெரியாது. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பதையும், அவர் எல்லாவற்றையும் ஆளுகிறார், எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதையும் சாத்தான் தெளிவாக அறிந்திருந்தது. எல்லாம் மனிதனுடையது அல்ல, சாத்தானுடையதும் அல்ல. மாறாக தேவனுக்குச் சொந்தமானது. ஆனாலும் பிசாசான சாத்தான் எல்லாவற்றையும் தேவனுக்குக் கொடுக்கும் என்று வெட்கமின்றி சொன்னது. சாத்தான் மீண்டும் அபத்தமாகவும் வெட்கமின்றியும் நடந்து கொண்டதற்கு இது மற்றொரு உதாரணம் அல்லவா? இந்த செயல், தேவன், சாத்தானை இன்னும் அதிகமாக வெறுக்க வைக்கிறது, இல்லையா? ஆயினும், சாத்தான் என்ன முயற்சி செய்தாலும், கர்த்தராகிய இயேசு முட்டாளாக்கப்பட்டாரா? கர்த்தராகிய இயேசு என்ன சொன்னார்? (“உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.”) இந்த வார்த்தைகளுக்கு நடைமுறை அர்த்தம் உள்ளதா? (ஆம்.) எத்தகைய நடைமுறை அர்த்தம்? சாத்தானுடைய தீமையான மற்றும் வெட்கமற்ற குணத்தை அதனுடைய பேச்சில் காண்கிறோம். எனவே, மனிதன் சாத்தானை வணங்கினால், அதனுடைய விளைவு என்னவாக இருக்கும்? எல்லா ராஜ்யங்களின் செல்வத்தையும் மகிமையையும் அவர்கள் பெறுவார்களா? (இல்லை.) அவர்கள் எதைப் பெறுவார்கள்? மனிதகுலம் சாத்தானைப் போலவே வெட்கமில்லாமலும் நகைப்புக்கு உரியதாகவும் மாறுமா? (ஆம்.) அப்போது அவர்கள் சாத்தானிடமிருந்து வேறுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். ஆகையால், கர்த்தராகிய இயேசு ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.” இதன் அர்த்தம் என்னவென்றால், தேவனைத் தவிர, நீ வேறொருவருக்கு சேவை செய்திருந்தால், நீ சாத்தானை வணங்கினால், நீ சாத்தானைப் போலவே அசுத்தமாக இருப்பாய். நீ சாத்தானுடைய வெட்கமற்ற குணத்தையும் அதனுடைய தீமையையும் பகிர்ந்து கொள்வாய். சாத்தானைப் போலவே நீ தேவனைச் சோதித்து தேவனைத் தாக்குவாய். அதனுடைய விளைவு உனக்கு என்னவாக இருக்கும்? நீ தேவனால் வெறுக்கப்படுவாய். தேவனால் தாக்கப்பட்டு, தேவனால் அழிக்கப்படுவாய். கர்த்தராகிய இயேசுவை சாத்தான் வெற்றியின்றி பல முறை சோதித்தபின், அது மீண்டும் முயற்சித்ததா? சாத்தான் மீண்டும் முயற்சிக்கவில்லை. பின்னர் அது வெளியேறியது. இது எதனை நிரூபிக்கின்றது? சாத்தானுடைய தீய குணம், அதனுடைய தீமை மற்றும் அதனுடைய அபத்தம் மற்றும் முட்டாள்தனம் ஆகியவை தேவனுடைய முகத்தில் குறிப்பிடக்கூட தகுதியற்றவை என்பதை இது நிரூபிக்கின்றது. கர்த்தராகிய இயேசு சாத்தானை மூன்று வாக்கியங்களால் மட்டுமே தோற்கடித்தார். அதற்குப் பிறகு அவமானத்துடன், முகத்தைக்கூட காட்ட முடியாத வகையில் வெட்கத்துடன் விலகிச் சென்றது. அதன் பின் அது ஒருபோதும் கர்த்தராகிய இயேசுவைச் சோதிக்கவில்லை. கர்த்தராகிய இயேசு சாத்தானுடைய இந்தச் சோதனையைத் தோற்கடித்ததால், இப்போது அவர் செய்ய வேண்டிய கிரியையையும், அவர் முன் இருந்த பணிகளையும் எளிதில் தொடர முடிந்தது. இந்த சூழ்நிலையில் கர்த்தராகிய இயேசு செய்த மற்றும் சொன்ன அனைத்தும், இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் நடைமுறை அர்த்தத்தை கூறுகின்றதா? (ஆம்.) எத்தகைய நடைமுறை அர்த்தம்? சாத்தானைத் தோற்கடிப்பது எளிதான காரியமா? சாத்தானுடைய தீய குணத்தைப் பற்றி ஜனங்களுக்கு தெளிவானப் புரிதல் இருக்க வேண்டுமா? சாத்தானுடைய சோதனையைப் பற்றி ஜனங்களுக்குத் துல்லியமான புரிதல் இருக்க வேண்டுமா? (ஆம்.) உனது சொந்த ஜீவிதத்தில் சாத்தானுடைய சோதனையை நீ அனுபவிக்கும் போது, சாத்தானுடைய தீய குணத்தை நீ காண முடிந்தால், அதை நீ தோற்கடிக்க முடியாதிருக்குமா? சாத்தானுடைய அபத்தங்கள் மற்றும் போலித்தனத்தைப் பற்றி நீ அறிந்திருந்தால், நீ இன்னும் சாத்தானுடைய பக்கத்தில் நின்று தேவனைத் தாக்குவாயா? சாத்தானுடைய தீமை மற்றும் வெட்கமற்ற குணம் உன் மூலம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை நீ புரிந்து கொண்டால்—இந்த விஷயங்களை நீ தெளிவாக அறிந்து புரிந்து கொண்டால்—நீ இன்னும் தேவனை இவ்வாறு தாக்கிச் சோதிப்பாயா? (இல்லை, நாம் சோதிக்கமாட்டோம்.) நீங்கள் என்ன செய்வீர்கள்? (நாம் சாத்தானுக்கு எதிராகக் கலகம் செய்து அதை ஒதுக்கி வைப்போம்.) இது எளிதான காரியமா? இது எளிதானது அல்ல. இதைச் செய்ய, ஜனங்கள் அடிக்கடி ஜெபிக்க வேண்டும், அவர்கள் பெரும்பாலும் தங்களை தேவனுக்கு முன்பாக வைத்து தங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்கள் தேவனுடைய சிட்சிப்பையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும் கடிந்து கொள்ளுதலையும் தங்கள் மீது அனுமதிக்க வேண்டும். இது மட்டுமே ஜனங்கள் படிப்படியாக தங்களை சாத்தானுடைய வஞ்சகம் மற்றும் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளும் வழியாகும்.

இப்போது, சாத்தான் பேசும் இந்த வார்த்தைகள் அனைத்தையும் பார்ப்பதன் மூலம், சாத்தானுடைய சாராம்சத்தை உருவாக்கும் விஷயங்களைச் சுருக்கமாக நாம் கூறுவோம். முதலாவதாக, தேவனுடைய பரிசுத்தத்திற்கு எதிராக சாத்தானுடைய சாராம்சமாக இருப்பது, பொதுவாக தீமை என்று கூறலாம். சாத்தானுடைய சாராம்சம் தீமையானது என்று நான் ஏன் சொல்ல வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, சாத்தான் ஜனங்களுக்குச் செய்பவற்றின் விளைவை ஆராய வேண்டும். சாத்தான் மனிதனைச் சீர்கெடுத்துக் கட்டுப்படுத்துகிறது. மனிதன் சாத்தானுடைய கேடான மனநிலையின் கீழ் செயல்படுகிறான். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட ஜனங்கள் உலகில் ஜீவிக்கின்றனர். மனிதகுலம், அறியாமலேயே சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டு, சாத்தானால் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆகவே, மனிதனுக்கு சாத்தானுடைய கேடான குணம் உள்ளது. இது சாத்தானுடைய குணம். சாத்தான் சொன்ன மற்றும் செய்த எல்லாவற்றிலிருந்தும் அதனுடைய ஆணவத்தை நீங்கள் பார்த்தீர்களா? அதனுடைய வஞ்சகத்தையும் தீமையையும் பார்த்தீர்களா? சாத்தானுடைய ஆணவம் முதன்மையானதாக எவ்வாறு காட்டப்படுகிறது? தேவனுடைய இடத்தை ஆக்கிரமிப்பதற்கான விருப்பத்தைச் சாத்தான் எப்போதும் கொண்டுள்ளதா? சாத்தான் எப்பொழுதும் தேவனுடைய கிரியையையும், தேவனுடைய இடத்தையும் கிழித்தெறிந்து அதை தானே எடுத்துக் கொள்ள விரும்புகிறது. இதன் காரணமாக ஜனங்கள் சாத்தானைப் பின்பற்றுவார்கள், ஆதரிப்பார்கள், வணங்குவார்கள். இது சாத்தானுடைய திமிர்பிடித்த குணம். சாத்தான் ஜனங்களைக் கெடுக்கும்போது, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அது நேரடியாகச் சொல்கிறதா? சாத்தான் தேவனைச் சோதிக்கும் போது, அது வெளியே வந்து, “நான் உம்மை சோதிக்கிறேன், நான் உம்மைத் தாக்கப் போகிறேன்” என்று கூறுகிறதா? நிச்சயமாக இல்லை. இந்நிலையில், சாத்தான் எந்த முறையைப் பயன்படுத்துகிறது? அது மயக்கும், தூண்டும், தாக்கும், பொறிகளை அமைக்கும் மற்றும் வேத வசனங்களிலிருந்து மேற்கோள் காட்டும். தன்னுடைய தீய நோக்கங்களை அடைவதற்கும் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் சாத்தான் பல்வேறு வழிகளில் பேசுகிறது, செயல்படுகிறது. சாத்தான் இதைச் செய்தபின், மனிதனுடைய வெளிப்பாடாக எதனைக் காணலாம்? ஜனங்களும் ஆணவம் கொள்வதில்லையா? மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானுடைய கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளான். ஆகவே, மனிதன் திமிர்பிடித்தவனாகவும், வஞ்சகனாகவும், தீங்கிழைக்கிறவனாகவும், பகுத்தறிவில்லாதவனாகவும் மாறிவிட்டான். இந்த விஷயங்கள் அனைத்தும் சாத்தானுடைய குணத்தால் விளைகின்றன. சாத்தானுடைய குணம் தீமையானது என்பதால், மனிதனுக்கு இந்தத் தீய குணத்தைக் கொடுத்து, மனிதனிடம் இந்தத் தீய, கேடான மனநிலையை விளையச் செய்கிறது. ஆகையால், மனிதன் கேடு நிறைந்த சாத்தானிய மனநிலையின் கீழ் ஜீவிக்கிறான். சாத்தானைப் போலவே, தேவனை எதிர்க்கிறான், தேவனைத் தாக்குகிறான், அவரைச் சோதிக்கிறான். அதாவது அவரை வணங்கும் இருதயம் இன்றி, மனிதன் தேவனை வணங்க இயலாமல் இருக்கிறான்.

சாத்தான் மனிதனைச் சீர்கெடுக்கும் ஐந்து வழிகள்

தேவனுடைய பரிசுத்தத்தைப் பொறுத்தவரையில், அது ஒரு பரிச்சயமான தலைப்பாக இருந்தாலும், அது பேசப்படும்போது, சிலருக்குப் பலனளிக்காத ஒன்றாக மாறக் கூடும், சிலருக்கு மேலானதாகவும், தங்கள் எல்லைக்கு உட்படாததாகவும் இருக்கும். ஆனால் கவலைப்படத் தேவையில்லை. தேவனுடைய பரிசுத்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள நான் உங்களுக்கு உதவுவேன். ஒருவர் எத்தகைய நபர் என்பதைப் புரிந்து கொள்ள, அவர்கள் என்ன செய்கிறார்கள் மற்றும் அவர்களின் செயல்களின் விளைவுகள் என்ன என்பதைப் பாருங்கள். பின்னர், அந்த நபரின் சாராம்சத்தை நீங்கள் காண முடியும். இதனை இவ்வாறு சொல்ல முடியுமா? (ஆம்.) பின்னர், முதலாவதாக இந்த கண்ணோட்டத்தில் தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிப் பேசுவோம். சாத்தானுடைய சாராம்சம் தீமையானது என்று கூறலாம். எனவே, மனிதனை நோக்கிய சாத்தானுடைய கிரியைகள், மனிதனை இடைவிடாமல் கெடுப்பதாக இருக்கிறது. சாத்தான் தீமையுள்ளதாகும். ஆகவே, சாத்தனால் சீர்கெடுக்கப்பட்ட ஜனங்கள் நிச்சயமாக தீயவர்களாக இருக்கின்றனர். “சாத்தான் தீமையுள்ளதாகும், ஆனால் ஒருவேளை, சாத்தான் கெடுத்த ஒருவரைப் பரிசுத்தர்” என்று யாரேனும் சொல்வார்களா? அது ஒரு நகைச்சுவையாக இருக்கும், இல்லையா? அப்படிப்பட்ட விஷயம் சாத்தியமானதா? (இல்லை.) சாத்தான் தீமையுள்ளதாகும், அதனுடைய தீமைக்குள் இன்றியமையாத பக்கம் மற்றும் நடைமுறை பக்கம் என்ற இரண்டும் உள்ளன. இது வெற்றுப் பேச்சு மட்டுமல்ல. நாம் சாத்தானைப் பழிவாங்க முயற்சிக்கவில்லை; நாம் சத்தியம் மற்றும் யதார்த்தத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். இந்த தலைப்பின் யதார்த்தத்தைப் பற்றி பேசுவது சில நபர்களை அல்லது குறிப்பிட்ட நபர்களைப் பாதிக்கலாம். ஆனால் நமக்கு தீங்கிழைக்கும் நோக்கம் இல்லை. ஒருவேளை நீங்கள் இன்று இதைக் கேட்டு சற்று வருத்தமடைவீர்கள். ஆனால், விரைவில் ஒரு நாள் நீங்கள் அதை உணர முடிந்தால், உங்களை நீங்களே இழிவுப்படுத்துவீர்கள். இன்று நான் பேசுவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மிகவும் மதிப்புமிக்கதாகவும் இருப்பதாக நீங்கள் உணருவீர்கள். சாத்தானுடைய சாராம்சம் தீமையானது. எனவே, சாத்தானுடைய செயல்களின் முடிவுகள் தவிர்க்க முடியாத தீமையாகும் என்று சொல்ல முடியுமா, அல்லது குறைந்தபட்சம் அவை அதனுடைய தீமைக்கு உட்பட்டது என்று சொல்ல முடியுமா? (ஆம்.) அப்படியானால் சாத்தான் மனிதனைக் கெடுப்பதை எவ்வாறு தொடங்குகிறது? உலகத்திலும் மனிதகுலத்தின் மத்தியிலும் சாத்தான் செய்யும் தீமைகளில், எந்தக் குறிப்பிட்ட அம்சங்கள் ஜனங்களுக்குத் தெரிகின்றது மற்றும் புலப்படுகின்றது? இதைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? நீங்கள் இதை அதிகம் சிந்தித்திருக்க மாட்டீர்கள். எனவே, பல முக்கியமான விஷயங்களை நான் சொல்ல விழைகிறேன். சாத்தான் முன்வைக்கும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் பற்றி அனைவருக்கும் தெரியுமல்லவா? இது மனிதனுடைய கல்வி அறிவின் ஒரு பகுதியல்லவா? (ஆம்.) ஆகவே, சாத்தான் முதலில் மனிதனைக் கெடுக்க அறிவைப் பயன்படுத்துகிறது. அவர்களுக்கு அறிவை வழங்கத் தன்னுடைய சொந்த சாத்தானிய முறைகளைப் பயன்படுத்துகிறது. பின்னர் அது மனிதனைச் சீர்கெடுக்க அறிவியலைப் பயன்படுத்துகிறது. அறிவு, அறிவியல், மர்மமான விஷயங்கள் அல்லது ஜனங்கள் ஆராய விரும்பும் விஷயங்களில் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. மனிதனைக் கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் அடுத்த விஷயங்கள் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மூடநம்பிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து சமூகப் போக்கு ஆகியனவாகும். இவை அனைத்தும் ஜனங்கள் அன்றாட ஜீவிதத்தில் சந்திக்கும் விஷயங்களாகும். இவை அனைத்தும் ஜனங்களுக்கு மிக அருகில் இருக்கின்றன. அவர்கள் பார்க்கும், கேட்கும், தொடும் மற்றும் அனுபவிக்கும் விஷயங்களுடன் அவை அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பினாலும் தப்பிக்கவோ அல்லது தன்னை விடுவிக்கவோ முடியாமல், இந்த விஷயங்களால் சூழப்பட்ட ஜீவிதத்தை ஜீவிக்கிறான் என்று சொல்லலாம். இவற்றின் முன், மனிதகுலம் உதவியற்றதாக உள்ளது. மனிதனால் செய்ய முடிந்ததெல்லாம் அவற்றால் ஆதிக்கம் செய்யப்படுவதும், பாதிக்கப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதும் மற்றும் கட்டுக்குள் இருப்பதும் மட்டுமேயாகும். அவற்றிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மனிதன் வல்லமையற்றவனாக இருக்கிறான்.

a. மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறது

முதலில், அறிவைப் பற்றி பேசுவோம். அறிவு என்பது, எல்லோரும் எண்ணுவது போல, ஒரு நேர்மறையான விஷயமா? குறைந்தபட்சம், “அறிவு” என்ற வார்த்தையின் அர்த்தம் எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக இருப்பதாக ஜனங்கள் கருதுகின்றார்கள். இந்நிலையில், மனிதனைக் கெடுக்க சாத்தான் அறிவைப் பயன்படுத்துகிறான் என்பதை இங்கே ஏன் குறிப்பிடுகின்றோம்? பரிணாம வளர்ச்சிக் கொள்கை அறிவின் ஒரு அம்சமல்லவா? நியூட்டனின் அறிவியல் சட்டங்கள் அறிவின் ஒரு பகுதியாக இல்லையா? பூமியின் ஈர்ப்பு விசையும் அறிவின் ஒரு பகுதியாகும், அல்லவா? (ஆம்.) ஆகவே, மனிதகுலத்தை கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் விஷயங்களில் அறிவு ஏன் பட்டியலிடப்பட்டுள்ளது? இது குறித்து உங்கள் பார்வை என்ன? சத்தியத்தின் ஒரு சிறு பகுதியாகிலும் அறிவில் இருக்கின்றதா? (இல்லை.) பின்னர் அறிவின் சாராம்சம் என்ன? மனிதன் பெறும் அறிவு அனைத்தும் எதன் அடிப்படையில் கற்றுக்கொள்ளப்பட்டது? இது பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததா? ஆய்வு மற்றும் சாராம்சத்தின் மூலம் மனிதன் பெற்ற அறிவு நாத்திகத்தை அடிப்படையாகக் கொண்டதல்லவா? இந்த அறிவுக்கு, தேவனுடன் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? தேவனை வணங்குவதோடு இது தொடர்புடையதாக இருக்கிறதா? இது சத்தியத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா? (இல்லை.) அப்படியானால் மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறான்? இந்த அறிவு எதுவும் தேவனை வணங்குவதுடனும் அல்லது சத்தியத்துடனும் தொடர்புடையதல்ல என்று நான் சொன்னேன். சிலர் இதைப் பற்றி இவ்வாறு நினைக்கிறார்கள்: “அறிவுக்கு சத்தியத்துடன் எந்த தொடர்பும் இல்லை, எனினும், அது ஜனங்களை கெடுக்காது.” இது குறித்து உங்கள் பார்வை என்ன? ஒரு நபரின் மகிழ்ச்சி அவர்களின் இரு கைகளாலும் உருவாக்கப்பட வேண்டும் என்ற அறிவால் நீ போதிக்கப்பபட்டாயா? மனிதனுடைய தலைவிதி அவன் கைகளில் இருப்பதாக அறிவு உனக்குக் கற்பித்ததா? (ஆம்.) இது எத்தகையப் பேச்சு? (இது பேய்த்தனமான பேச்சு.) முற்றிலும் சரி! இது பேய்த்தனமான பேச்சு! அறிவு என்பது விவாதிக்க ஒரு சிக்கலான தலைப்பு ஆகும். அறிவுப் புலம் என்பது அறிவைத் தவிர வேறில்லை என்று நீங்கள் வெறுமனே கூறலாம். இது தேவனை வணங்காததன் அடிப்படையிலும், தேவனே எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பதைப் புரிந்து கொள்ளாததன் அடிப்படையிலும் கற்றுக் கொள்ளப்பட்ட அறிவுப் புலமாகும். ஜனங்கள் இத்தகைய அறிவைப் படிக்கும்போது, தேவன் எல்லாவற்றின் மீதும் ராஜரீகம் கொண்டிருப்பதை அவர்கள் பார்ப்பதில்லை. தேவன் எல்லாவற்றின் மீதும் பொறுப்பு ஏற்பதை அல்லது ஆளுகை செய்வதை அவர்கள் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் செய்வதெல்லாம் முடிவில்லாமல் ஆராய்ச்சி செய்து அறிவின் குறிப்பிட்ட பகுதியை ஆராய்ந்து, அறிவின் அடிப்படையில் பதில்களைத் கண்டுபிடிப்பது தான். இருப்பினும், ஜனங்கள் தேவனை நம்புவதற்குப் பதிலாக ஆராய்ச்சியை பின்பற்றினால், அவர்கள் ஒருபோதும் உண்மையான பதில்களைக் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்பது உண்மையல்லவா? அந்த அறிவானது உனக்கு வழங்கக்கூடியது ஒரு வாழ்வாதாரம், வேலை, மற்றும் வருமானம் மட்டுமே. இது நீ பசியின்றி இருப்பதற்கு மட்டுமே. ஆனால் அது ஒருபோதும் தேவனை வணங்கச் செய்யாது. அது உன்னை ஒருபோதும் தீமையிலிருந்து விலக்கி வைக்காது. ஜனங்கள் அறிவை எவ்வளவு அதிகமாகப் படிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை எதிர்த்துக் கலகம் செய்யவும், தேவனைத் தங்களது படிப்புகளுக்குள் உட்படுத்தவும், தேவனைச் சோதிக்கவும், தேவனை எதிர்க்கவும் விரும்புவார்கள். எனவே, அறிவு ஜனங்களுக்கு எதனைக் கற்பிப்பதாக நாம் இப்போது பார்க்கிறோம்? இது அனைத்தும் சாத்தானுடைய தத்துவமாகும். கேடு நிறைந்த மனிதர்களிடையே சாத்தான் பரப்பிய இந்தத் தத்துவங்கள் மற்றும் ஜீவிக்க தேவையான விதிகளுக்கு சத்தியத்துடன் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? அவற்றுக்கு சத்தியத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையில், அவை சத்தியத்திற்கு நேர்மாறானவை. “ஜீவிதம் என்பது இயக்கம்” மற்றும் “மனிதன் என்பவன் இரும்பாக இருக்கிறான், அரிசி என்பது எஃகு ஆகும், ஒரு நேர உணவைத் தவிர்த்தாலும் மனிதன் பசியாக உணர்கிறான்” என்று ஜனங்கள் அடிக்கடி கூறுகிறார்கள்; இந்தக் கூற்றுகள் என்ன? அவை தவறானவை, அவற்றைக் கேட்பது வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. பெரிதாகப் பேசப்படும் மனிதனுடைய அறிவில், சாத்தான் ஜீவிதத்துக்கான தத்துவத்தையும் தன்னுடைய சிந்தனையையும் கொஞ்சம் கொஞ்சமாகத் திணித்துள்ளது. சாத்தான் இதைச் செய்யும்போது, மனிதன் அதனுடைய சிந்தனை, தத்துவம் மற்றும் கண்ணோட்டங்களை பின்பற்ற அனுமதிக்கிறது. இதனால் மனிதன், தேவன் இருக்கிறார் என்பதை மறுக்கக் கூடும், எல்லாவற்றின் மீதும், மனிதனுடைய தலைவிதி மீதுமுள்ள தேவனுடைய ஆதிக்கத்தை மறுக்கக் கூடும். எனவே, மனிதனுடைய ஆய்வுகள் முன்னேறும்போது, அவன் அதிக அறிவைப் பெறும்போது, தேவன் இருக்கிறார் என்பது தெளிவின்றி இருப்பதாக அவன் உணர்கிறான். மேலும், தேவன் இருக்கிறார் என்று அவனால் அதற்குப் பின் உணர முடிவதில்லை. மனிதனுக்குள் சாத்தான் சில எண்ணங்களையும், கண்ணோட்டங்களையும், கருத்துகளையும் புகுத்தியுள்ளதால், மனிதனுக்குள் இந்த விஷத்தை சாத்தான் புகுத்தியதும், மனிதன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டும் சீர்கெடுக்கப்பட்டும் இருக்க மாட்டானா? ஆகையால் இன்று வாழும் ஜனங்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? சாத்தானால் புகுத்தப்பட்ட அறிவு மற்றும் எண்ணங்களில் அவர்கள் வாழமாட்டார்களா? மேலும் இந்த அறிவு மற்றும் எண்ணங்களுக்குள் மறைந்திருக்கும் காரியங்கள் சாத்தானின் தத்துவங்களாகவும் விஷமாகவும் இல்லையா? மனிதன் சாத்தானின் தத்துவங்களிலும் விஷங்களிலும் வாழ்கிறான். மனிதனுக்கான சாத்தானின் சீர்கேட்டின் மையத்தில் உள்ளது என்ன? சாத்தான் தான் செய்வது போலவே மனிதனையும் தேவனை மறுதலிக்கவும், எதிர்க்கவும் மற்றும் விரோதமாக நிற்கவும் வைக்க விரும்புகிறான்; இதுவே மனிதனை சீர்கெடுப்பதில் சாத்தானின் இலக்காகும், மேலும் சாத்தான் மனிதனைக் கெடுக்கும் வழிமுறையாகும்.

அறிவின் மிக மேலோட்டமான அம்சத்தைக் குறித்து பேசுவதிலிருந்து தொடங்குவோம். மொழிகளில் உள்ள இலக்கணமும் சொற்களும் ஜனங்களைச் சீர்கெடுக்க முடியுமா? வார்த்தைகளால் ஜனங்களைச் சீர்கெடுக்க முடியுமா? வார்த்தைகள் ஜனங்களைச் சீர்கெடுக்காது. வார்த்தைகளானது ஜனங்கள் பேசப் பயன்படுத்தும் ஒரு கருவியாகும். மேலும், ஜனங்கள் தேவனுடன் தொடர்புகொள்வதற்கான கருவியாகும். தற்போது, மொழியையும் சொற்களையும் கொண்டு தேவன் ஜனங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றார் என்பதைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அவை கருவிகளாகும். அவை ஒரு இன்றியமையாதத் தேவையாகும். ஒன்றோடு ஒன்றை கூட்டினால் ஒன்று இரண்டாகும். இரண்டையும் இரண்டையும் பெருக்கினால் நான்காகும். இது அறிவு இல்லையா? ஆனால் இந்த அறிவினால் உங்களைச் சீர்கெடுக்க முடியுமா? இது பொதுவான அறிவு—இது ஒரு நிலையான முறை—எனவே இது ஜனங்களைச் சீர்கெடுக்க முடியாது. எனவே, ஜனங்களை எத்தகைய அறிவு கெடுக்கின்றது? கெடுக்கும் அறிவு என்பது சாத்தானுடைய கண்ணோட்டங்களுடனும் எண்ணங்களுடனும் ஒன்றிணைந்த அறிவாகும். அறிவின் ஊடகம் மூலம் மனிதகுலத்திற்குள் இந்த கண்ணோட்டங்களையும் எண்ணங்களையும் உட்புகுத்த சாத்தான் முயல்கின்றது. உதாரணமாக, ஒரு கட்டுரையில் எழுதப்பட்ட சொற்களில் தவறில்லை. தவறானது, கட்டுரை எழுதியபோது ஆசிரியரின் பார்வைகளிலும், நோக்கங்களிலும், அவருடைய எண்ணங்களின் உள்ளடக்கத்திலும் உள்ளது. இவை ஆவியின் காரியங்களாகும். இவை ஜனங்களைச் சீர்கெடுக்கப்பதற்கான வல்லமை உடையவை. எடுத்துக்காட்டாக, நீ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கிறாய் என்றால், அதில் எத்தகைய விஷயங்கள் ஜனங்களின் பார்வையை மாற்றக்கூடும்? நடிப்பவர்கள் சொல்வதா, வார்த்தைகளால் ஜனங்களைச் சீர்கெடுக்க முடியுமா? (இல்லை.) எத்தகைய விஷயங்கள் ஜனங்களைக் கெடுக்கும்? அது நிகழ்ச்சியின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கமாக இருக்கும். இது அந்த நிகழ்ச்சியின் இயக்குநருடைய பார்வைகளைக் குறிக்கும். இந்த பார்வைகளில் கொண்டு செல்லப்பட்ட தகவல்கள் ஜனங்களின் இருதயங்களையும் மனதையும் திசை திருப்பக் கூடும். அது அப்படித்தானே அல்லவா? சாத்தானைப் பற்றிய எனது கலந்துரையாடலில் நான் குறிப்பிடுவதை இப்போது நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள், இல்லையா? எனவே, அடுத்த முறை நீ ஒரு நாவலை அல்லது ஒரு கட்டுரையைப் படிக்கும்போது, எழுதப்பட்ட சொற்களில் வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் மனிதகுலத்தைச் சீர்கெடுக்கிறதா இல்லையா என்பதை உன்னால் மதிப்பீடு செய்ய முடியுமா? (ஆமாம், ஒரு சிறிய அளவிற்கு.) அது மெதுவான வேகத்தில் படித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. அது இப்போதே எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. எடுத்துக்காட்டாக, அறிவின் ஒரு பகுதியை ஆராய்ச்சி செய்யும்போது அல்லது படிக்கும்போது, அந்த அறிவின் சில நேர்மறையான அம்சங்கள் அந்தக் களத்தைப் பற்றிய சில பொதுவான அறிவைப் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவக்கூடும். அதே நேரத்தில் ஜனங்கள் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறியவும் உங்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, “மின்சாரத்தை” எடுத்துக் கொள்ளுங்கள்—இது ஒரு அறிவின் புலம், இல்லையா? மின்சாரம் ஜனங்களை அதிர்ச்சியடையச் செய்யும், காயப்படுத்தும் என்று உனக்குத் தெரியாவிட்டால் நீ அறிவற்றவனாக இருக்க மாட்டாயா? ஆனால் இந்த அறிவுப் புலத்தை நீ புரிந்து கொண்டவுடன், மின்சாரமுள்ள பொருட்களைத் தொடுவதில் நீ கவனக்குறைவாக இருக்க மாட்டாய். மேலும், மின்சாரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நீ அறிந்து கொள்வாய். இவை இரண்டும் நேர்மறையான விஷயங்கள். அறிவு ஜனங்களை எவ்வாறு கெடுக்கிறது என்பதன் அடிப்படையில் நாம் விவாதித்து வருவது குறித்து இப்போது தெளிவாக இருக்கிறாயா? உலகில் பல வகையான அறிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு நீங்கள் உங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.

b. மனிதனைக் கெடுக்க சாத்தான் எவ்வாறு அறிவியலைப் பயன்படுத்துகிறது

அறிவியல் என்றால் என்ன? ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் அறிவியல் உயர்ந்த கவுரவமான இடத்தில் வைக்கப்பட்டு ஆழமானதாகக் கருதப்படவில்லையா? அறிவியல் குறிப்பிடப்படும்போது, ஜனங்கள் இதை உணர்வதில்லையா: “இது சாதாரண ஜனங்களுக்கு எட்டாத ஒன்று. இது விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் அல்லது நிபுணர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் தலைப்பாகும். இது நம்மைப் போன்ற சாதாரண ஜனங்களுக்கானது இல்லை அல்லவா”? இதற்கும் சாதாரண ஜனங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? (ஆம்.) ஜனங்களைச் சீர்கெடுக்கச் சாத்தான் எவ்வாறு அறிவியலைப் பயன்படுத்துகிறான்? இங்கே நம் விவாதத்தில், ஜனங்கள் தங்கள் ஜீவிதத்தில் அடிக்கடி சந்திக்கும் விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவோம். மற்ற விஷயங்களைப் புறக்கணிப்போம். “மரபணுக்கள்” என்ற வார்த்தை ஒன்று உள்ளது. அதைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இந்த வார்த்தையை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கின்றீர்கள். அறிவியலின் மூலமாக மரபணுக்கள் கண்டுபிடிக்கப்படவில்லையா? மரபணுக்களுக்கும் ஜனங்களுக்கும் சரியாக என்ன தொடர்பு உள்ளது? உடல் ஒரு மர்மமான விஷயம் என்று ஜனங்களுக்கு அவை உணர்த்தவில்லையா? இந்தத் தலைப்பானது ஜனங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் போது, சிலர், குறிப்பாக ஆர்வமுள்ளவர்கள் மேலும் தெரிந்து கொள்ள, மேலும் விவரங்களை பெற்றுக் கொள்ள விரும்பும் சிலர் இருக்க மாட்டார்களா? இந்த ஆர்வமுள்ள நபர்கள் இந்த விஷயத்தில் தங்கள் ஆற்றலைச் செலுத்துவர். அவர்களுக்கு வேறு விஷயங்கள் இல்லாத போது, அதைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய புத்தகங்களிலும் இணையத்திலும் தகவல்களைத் தேடுவார்கள். அறிவியல் என்றால் என்ன? தெளிவாகச் சொல்வதானால், அறிவியல் என்பது மனிதன் அறியாத, ஆர்வமாக இருக்கும் விஷயங்களாகும். தேவனால் சொல்லப்படாத விஷயங்களைப் பற்றிய எண்ணங்களும் கோட்பாடுகளும் ஆகும். அறிவியல் என்பது மனிதன் ஆராய விரும்பும் மர்மங்களைப் பற்றிய எண்ணங்களும் கோட்பாடுகளும் ஆகும். அறிவியலின் நோக்கம் என்ன? இது மிகவும் விரிவானது என்று நீங்கள் கூறலாம். மனிதன் ஆர்வமுள்ள எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து படிக்கிறான். அறிவியல் இந்த விஷயங்களின் விவரங்களையும் சட்டங்களையும் ஆராய்ந்து பின்னர் அனைவரையும் சிந்திக்க வைக்கும் நம்பத்தகுந்த கோட்பாடுகளை முன்வைக்கிறது: “இந்த விஞ்ஞானிகள் உண்மையில் பயங்கரமானவர்கள்! இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள போதுமானதை அவர்கள் அறிந்துள்ளார்கள்!” அவர்களுக்கு விஞ்ஞானிகள் மீது அதீத அபிமானம் இருக்கிறது, அல்லவா? அறிவியலை ஆராய்ச்சி செய்யும் நபர்கள் எத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளனர்? அவர்கள் ஆர்வமுள்ள பகுதியில் உள்ள மர்மமான விஷயங்களை ஆராய்ச்சி செய்வதற்காக அவர்கள் உலகத்தை ஆராய்ச்சி செய்ய விரும்புவதில்லையா? அதன் இறுதியான பலன் என்ன? சில விஞ்ஞானங்களில், ஜனங்கள் தங்கள் முடிவுகளை அனுமானத்தால் வரைகிறார்கள். மற்றவற்றில் அவர்கள் முடிவுகளை எடுக்க மனித அனுபவத்தை நம்புகிறார்கள். விஞ்ஞானத்தின் பிற துறைகளில், ஜனங்கள் வரலாற்று மற்றும் பின்னணி கண்காணிப்புகளின் அடிப்படையில் தங்கள் முடிவுகளுக்கு வருகிறார்கள். அது அப்படித்தானே அல்லவா? எனவே அறிவியல் ஜனங்களுக்கு என்ன செய்கிறது? அறிவியல் செய்வது என்னவென்றால், உலகில் உள்ள பொருட்களைப் பார்க்க ஜனங்களை அனுமதிப்பதும், மனிதனுடைய ஆர்வத்தை பூர்த்தி செய்வதுமாகும். ஆனால் எல்லாவற்றின் மீதும் தேவன் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேவையான விதிகளை அறிவியலால் மனிதனுக்குக் காட்ட முடியாது. மனிதன் விஞ்ஞானத்தில் பதில்களைக் கண்டுபிடிப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் அந்தப் பதில்கள் குழப்பமானவை. தற்காலிகத் திருப்தியை மட்டுமே தருகின்றன. இந்தத் திருப்தியானது மனிதனுடைய இருதயத்தை பொருள்மயமான உலகிற்குள் கட்டுப்படுத்த உதவுகிறது. விஞ்ஞானத்திலிருந்து பதில்களைப் பெற்றதாக மனிதன் உணர்கிறான். எனவே எந்தப் பிரச்சினை எழுந்தாலும், அந்த சிக்கலை நிரூபிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தங்கள் விஞ்ஞானக் கருத்துக்களை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். தேவனை அறிந்து கொள்ள, தேவனை வணங்க, மற்றும் எல்லாமே தேவனிடமிருந்து வந்தவை என்றும், மனிதன் பதில்களுக்காக அவரை நோக்க வேண்டும் என்றும், நம்புவதற்கான மனம் மனிதனுக்கு இல்லாமல் போகும் அளவிற்கு மனிதனுடைய இருதயம் அறிவியலால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது மற்றும் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. அது அப்படித்தானே அல்லவா? ஒரு நபர் அறிவியலை எவ்வளவு அதிகமாக நம்புகிறாரோ, அவ்வளவாக அபத்தமாகி, எல்லாவற்றிற்கும் ஒரு விஞ்ஞானத் தீர்வு இருப்பதாக நம்புகிறார். ஆராய்ச்சி எதையும் தீர்க்க முடியும் என்று நம்புகிறார். அவர்கள் தேவனைத் தேடுவதில்லை. அவர் இருக்கிறார் என்று அவர்கள் நம்புவதில்லை. நீண்ட காலமாக தேவனை விசுவாசிக்கிற பலர், ஏதேனும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போது, விஷயங்களை ஆராயவும் பதில்களைத் தேடவும் கணினியைப் பயன்படுத்துவார்கள்; அவர்கள் அறிவியல் அறிவை மட்டுமே நம்புகிறார்கள். தேவனுடைய வார்த்தைகள்தான் சத்தியம் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை, தேவனுடைய வார்த்தைகள் மனிதகுலத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை, அவர்கள் மனிதகுலத்தின் எண்ணற்ற பிரச்சினைகளை சத்தியத்தின் கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. அவர்கள் எந்த பிரச்சனையை எதிர்கொண்டாலும், அவர்கள் ஒருபோதும் தேவனிடத்தில் ஜெபிப்பதில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளில் சத்தியத்தைத் தேடுவதன் மூலம் தீர்வைத் தேடுவதில்லை. பல விஷயங்களில், அறிவு பிரச்சினையைத் தீர்க்கும் என்று அவர்கள் விசுவாசிக்க விரும்புகிறார்கள்; அவர்களுக்கு, அறிவியலே இறுதியான பதிலாக இருக்கிறது. அத்தகையவர்களின் இருதயங்களில் தேவன் முற்றிலும் இல்லை. அவர்கள் அவிசுவாசிகள், மேலும் தேவன் மீதான விசுவாசம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி தேவனை ஆராய முயலும் பல புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடமிருந்து வேறுபட்டவை அல்ல. உதாரணமாக, பேழை அமர்வதற்கு வந்த மலைக்குச் சென்ற பல மத வல்லுநர்கள் உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் பேழை இருக்கின்றது என்பதனை நிரூபித்தனர். ஆனாலும் தேவன் இருக்கிறார் என்பதனைப் பேழையின் வழியாகப் பார்க்கவில்லை. அவர்கள் கதைகளிலும் வரலாற்றிலும் மட்டுமே நம்பிக்கை வைக்கிறார்கள். அது அவர்களின் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் பொருள்மயமான உலக ஆய்வின் விளைவாகும். நுண்ணுயிரியல், வானியல் அல்லது புவியியல் என நீ பொருள் விஷயங்களை ஆராய்ச்சி செய்தால், தேவன் இருக்கிறார் அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ராஜரீகம் உடையவராக இருக்கிறார் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முடிவை நீ ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டாய். எனவே அறிவியல் மனிதனுக்கு என்ன செய்கிறது? இது மனிதனை தேவனிடமிருந்து தூரமாக்கவில்லையா? ஜனங்கள் தேவனை ஆய்வுக்குள்ளாக உட்படுத்துவதற்கு இது காரணமாகவில்லையா? இது தேவன் இருக்கிறார் என்பதையும் ராஜரீகத்தையும் பற்றி ஜனங்கள் இன்னும் அதிகமாக சந்தேகம் அடையவும், அதன் மூலம் தேவனை மறுதலிக்கவும் காட்டிக்கொடுக்கவும் செய்கின்றதல்லவா? இதுதான் பின்விளைவாகும். அப்படியானால் மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும்போது, சாத்தான் எதை அடைய முயற்சிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது? ஜனங்களை ஏமாற்றுவதற்கும் அவர்களை உணர்வற்றவர்களாக்குவதற்கும் விஞ்ஞான முடிவுகளைப் பயன்படுத்த அது விரும்புகிறது, மேலும் தேவன் இருக்கிறார் என்பதை ஜனங்கள் தேட அல்லது நம்பக் கூடாது என்பதற்காக ஜனங்களின் இருதயங்களைப் பிடித்துக் கொள்ள அது தெளிவற்ற பதில்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, சாத்தான் ஜனங்களைக் கெடுக்கும் வழிகளில் ஒன்று அறிவியல் என்று நான் சொல்கிறேன்.

c. மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பாரம்பரிய கலாச்சாரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது

பாரம்பரிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் விஷயங்கள் பல இருக்கின்றனவா இல்லையா? (இருக்கின்றன.) இந்தப் “பாரம்பரிய கலாச்சாரம்” என்றால் என்ன? சிலர் இது முன்னோர்களிடமிருந்து கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்—இந்தக் கூற்று ஒரு அம்சமாகும். குடும்பங்களிலும், இனக்குழுக்களிலும், முழு மனித இனத்திலும் கூட, ஆதி காலம் முதல், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், பழமொழிகள் மற்றும் விதிகள் இயற்றப்பட்டன. மேலும், அவை ஜனங்களின் எண்ணங்களில் ஊடுருவியுள்ளன. ஜனங்கள் அவற்றை தங்கள் ஜீவிதத்தின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக கருதுகின்றனர். மேலும், அவற்றை விதிகளாக கருதுகின்றனர். அவற்றைத் தங்களது வாழ்க்கையாகவே கருதுகின்றனர். உண்மையில், அவர்கள் ஒருபோதும் இந்த விஷயங்களை மாற்றவோ கைவிடவோ விரும்பவில்லை, ஏனென்றால் அவை மூதாதையர்களிடமிருந்து கொடுக்கப்பட்டவை ஆகும். கன்ஃபூசியஸ் மற்றும் மென்சியஸிடமிருந்து கொடுக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் சீன தாவோயிசம் மற்றும் கன்பூசியனிசத்தால் ஜனங்களுக்கு கற்பிக்கப்பட்ட விஷயங்கள், என இவற்றைப் போன்ற பாரம்பரியக் கலாச்சாரத்தின் பிற அம்சங்களும் ஜனங்களின் எலும்புகளில் பதிந்திருக்கின்றன. அது அப்படித் தானே அல்லவா? பாரம்பரிய கலாச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ள விஷயங்கள் யாவை? ஜனங்கள் கொண்டாடும் விடுமுறைகள் இதில் உள்ளனவா? வசந்த கால விழா, விளக்கு விழா, கல்லறை துடைக்கும் நாள், டிராகன் படகு விழா, அத்துடன் ஆவி விழா மற்றும் இலையுதிர் கால விழா ஆகியவை உதாரணங்களாகும். சில குடும்பங்கள், தங்கள் மூத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் நாட்களை அல்லது குழந்தைகள் ஒரு மாதம் அல்லது நூறு நாட்களை எட்டும் நாட்களைக் கூடக் கொண்டாடுகிறார்கள். இன்னும் இதுபோன்று பல உள்ளன. இவை அனைத்தும் பாரம்பரிய விடுமுறைகள். இந்த விடுமுறை நாட்களில் பாரம்பரிய கலாச்சாரம் இல்லையா? பாரம்பரிய கலாச்சாரத்தின் அடிப்படை என்ன? தேவனை வணங்குவதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? சத்தியத்தைக் கடைப்பிடிக்குமாறு ஜனங்களிடம் சொல்வதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? தேவனுக்குப் பலியிடுவதற்கும், தேவனுடைய பலிபீடத்திற்குச் சென்று அவருடைய போதனைகளைப் பெறுவதற்கும் ஜனங்களுக்கு ஏதேனும் விடுமுறைகள் உள்ளனவா? இது போன்ற விடுமுறைகள் ஏதேனும் உள்ளனவா? (இல்லை.) இந்த விடுமுறை நாட்களில் ஜனங்கள் என்ன செய்கிறார்கள்? நவீன காலங்களில் அவை சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், கேளிக்கை செய்வதற்கும் உரிய சந்தர்ப்பங்களாகக் கருதப்படுகின்றன. பாரம்பரிய கலாச்சாரத்தின் கீழுள்ள ஆதாரம் என்ன? பாரம்பரிய கலாச்சாரம் யாரிடமிருந்து வருகிறது? அது சாத்தானிடமிருந்து வருகிறது. இந்த பாரம்பரிய விடுமுறை நாட்களின் திரைக்குப் பின்னால், சாத்தான் மனிதனில் சில விஷயங்களை புகுத்துகிறது. அவை யாவை? ஜனங்கள் தங்கள் மூதாதையர்களை நினைவில் வைத்திருப்பதை உறுதிசெய்யும் விழா அவற்றுள் ஒன்றல்லவா? உதாரணமாக, கல்லறை துடைக்கும் நாளில், ஜனங்கள் தங்கள் மூதாதையர்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காக, கல்லறைகளைச் சுத்தம் செய்து, தங்கள் மூதாதையர்களுக்குப் பலியிடுகிறார்கள். மேலும், ஜனங்கள் தேசபக்தி கொண்டவர்கள் என்பதை நினைவில் கொள்வதை சாத்தான் உறுதிசெய்கிறது. அதற்கு ஒரு உதாரணம் டிராகன் படகு விழா. மத்திய இலையுதிர் திருவிழா என்றால் என்ன? (குடும்ப மறு இணைப்புகள்.) குடும்ப மறு இணைப்புகளின் பின்னணி என்ன? அதற்குக் காரணம் என்ன? உணர்ச்சிவசப்பட்டு தொடர்பு கொள்வதும் இணைந்து கொள்வதும் ஆகும். நிச்சயமாக, இது சந்திர புத்தாண்டுக் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி அல்லது விளக்கு விழாவாக இருந்தாலும் சரி, இந்தக் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை விவரிக்க பல வழிகள் உள்ளன. இருப்பினும் அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றும் சாத்தானுடைய தத்துவத்தையும் அதனுடைய சிந்தனையையும் ஜனங்களிடையே புகுத்தும் வழி என்று ஒருவர் விவரிக்கலாம். இதனால் அவர்கள் தேவனிடமிருந்து விலகி, தேவன் இருக்கிறார் என்று தெரியாமல், தங்கள் மூதாதையர்களுக்கோ அல்லது சாத்தானுக்கோ பலியிடுவார்கள், அல்லது புசித்து, குடிப்பார்கள் மற்றும் மாம்சத்தின் ஆசைகளுக்காகக் கேளிக்கைச் செய்வார்கள். இந்த விடுமுறைகள் ஒவ்வொன்றும் கொண்டாடப்படுவதால், சாத்தானுடைய எண்ணங்களும் பார்வைகளும் ஜனங்கள் அறியாத வண்ணம் அவர்களின் மனதிற்குள் ஆழமாக நடப்படுகின்றன. ஜனங்கள் தங்களது நாற்பது, ஐம்பது வயதுகளை அல்லது முதிர் வயதை எட்டும்போது, சாத்தானுடைய இந்த எண்ணங்களும் கண்ணோட்டங்களும் ஏற்கனவே அவர்களின் இருதயங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும். மேலும், இந்த யோசனைகள் சரியா, தவறா என்பதல்லாமல், அடுத்த தலைமுறைக்கு, இதனைக் கண்மூடித்தனமாகவும் எதையும் விட்டுவிடாமல் அவர்களுக்குக் கொடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். அது அப்படித்தானே அல்லவா? (ஆம்.) பாரம்பரிய கலாச்சாரமும் இந்த விடுமுறைகளும் ஜனங்களை எவ்வாறு கெடுக்கின்றன? உங்களுக்குத் தெரியுமா? (ஜனங்கள் தேவனைத் தேடுவதற்கு நேரமோ ஆற்றலோ இல்லாத வகையில் இந்த மரபுகளின் விதிகளுக்குள் சிறைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.) இது ஒரு அம்சமாகும். உதாரணமாக, சந்திர புத்தாண்டின் போது எல்லோரும் கொண்டாடுகிறார்கள்—நீ அதைக் கொண்டாடவில்லை என்றால், நீ வருத்தப்பட மாட்டாயா? உன் இருதயத்தில் ஏதேனும் மூடநம்பிக்கைகளை வைத்திருக்கிறாயா? “நான் புத்தாண்டைக் கொண்டாடவில்லை. சந்திர புத்தாண்டு நாள் ஒரு மோசமான நாள் என்பதால், ஆண்டின் பிற்பகுதி முழுவதும் மோசமாக இருக்காதா?” என்று நீங்கள் நினைக்கலாமா? உங்களுக்கு மன உளைச்சலாகவும், கொஞ்சம் பயமாகவும் இருக்காதா? சில ஆண்டுகளாக தங்களது மூதாதையர்களுக்குப் பலி செலுத்தாததால், திடீரென்று இறந்த ஒருவர் அவர்களிடம் பணம் கேட்பது போல கனவு கண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன உணருவார்கள்? “மரித்த இந்த நபர் செலவழிக்க பணம் கேட்டு வேண்டுவது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது! நான் அவர்களுக்காகச் சில காகிதப் பணத்தை எரிப்பேன். நான் முடியாது என்றால், அது சரியாக இருக்காது. இது உயிருள்ள ஜனங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்—துரதிர்ஷ்டம் எப்போது ஏற்படும் என்று யார் சொல்ல முடியும்?” எப்போதுமே ஒரு சிறு பயம் மற்றும் மனக்கவலை அவர்களுக்கு இருக்கும். இந்தக் கவலையை அவர்களுக்குக் கொடுப்பது யார்? இந்தக் கவலையின் ஆதாரமே சாத்தான் தான். சாத்தான் மனிதனைக் கெடுக்கும் வழிகளில் இது ஒன்றல்லவா? அது உன்னைக் கட்டுப்படுத்தவும், உன்னை அச்சுறுத்தவும், கட்டிப் போடவும் வெவ்வேறு வழிகளையும் சாக்குப்போக்குகளையும் பயன்படுத்துகிறது. இதனால் நீ ஒரு பீதியில் விழுந்து அதற்கு அடிபணிவாய். சாத்தான் மனிதனை இவ்வாறு கெடுக்கிறது. பெரும்பாலும் ஜனங்கள் பலவீனமாக இருக்கும்போது அல்லது நிலைமையை அவர்கள் முழுமையாக அறியாதபோது, அவர்கள் கவனக் குறைவாக குழப்பமாக ஏதாவது செய்யக் கூடும். அதாவது, அவர்கள் கவனக் குறைவாக சாத்தானுடைய பிடியில் சிக்கி, அறியாமல் செயல்படக் கூடும். தாங்கள் செய்வது என்ன என்று அறியாமல் காரியங்களைச் செய்யலாம். சாத்தான் மனிதனைக் கெடுக்கும் வழி இதுதான். நன்கு வேரூன்றிய பாரம்பரிய கலாச்சாரத்தை விட்டுப் பிரிந்து செல்லத் தயங்கும் ஒரு சில ஜனங்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களால் அதை விட்டுவிட முடியாது. குறிப்பாக அவர்கள் பலவீனமாகவும், செயலற்றவர்களாகவும் இருக்கும் போது, அவர்கள் இத்தகைய விடுமுறை நாட்களைக் கொண்டாட விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் சாத்தானைச் சந்தித்து மீண்டும் சாத்தானைத் திருப்திப்படுத்த விரும்புகிறார்கள். தங்களின் இருதயங்களுக்கு ஆறுதல் அளிக்க விரும்புகிறார்கள். பாரம்பரிய கலாச்சாரத்தின் பின்னணி என்ன? திரைக்குப் பின்னிருந்து சாத்தானுடைய கறுப்புக் கை இயக்குகின்றதா? சாத்தானுடைய தீய குணம் இயக்குகின்றதா மற்றும் கட்டுப்படுத்துகின்றதா? இவை அனைத்திலும் சாத்தான் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறதா? (ஆம்.) ஜனங்கள் ஒரு பாரம்பரிய கலாச்சாரத்தில் ஜீவிக்கையில், இந்த வகையான பாரம்பரிய விடுமுறைகளைக் கொண்டாடும்போது, இந்தச் சூழலானது, சாத்தானால் முட்டாளாக்கப்பட்டுச் சீர்கெடுக்கப்படுகின்ற ஒரு சூழல் என்றும், அவர்கள் சாத்தானால் முட்டாளாக்கப்பட்டுச் சீர்கெடுக்கப்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் சொல்ல முடியுமா? (ஆம்.) இது நீங்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒன்றாகும். இது உங்களுக்குத் தெரிந்த ஒன்றாகும்.

d. மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் மூடநம்பிக்கையை எவ்வாறு பயன்படுத்துகிறது

“மூடநம்பிக்கை” என்ற வார்த்தையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், ஆமாம் தானே? மூடநம்பிக்கைக்கும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் சில தொடர்புகள் உள்ளன. ஆனால், இன்று நாம் அவற்றைப் பற்றி பேச மாட்டோம். மாறாக, பொதுவாக நான் சந்திக்கும் மூடநம்பிக்கையின் வகைகளைப் பற்றி நான் விவாதிப்பேன்: அஞ்சனம் பார்ப்பது, குறி-சொல்வது, தூபம் காட்டுவது மற்றும் புத்தரை வழிபடுவது ஆகியனவாகும். சிலர் அஞ்சனம் பார்க்கிறார்கள், மற்றவர்கள் புத்தரை வணங்குகிறார்கள், தூபம் காட்டுகிறார்கள், மற்றவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தைப் படிக்கிறார்கள் அல்லது யாரைக் கொண்டாவது தங்கள் முக அம்சங்களைப் படித்து இவ்வாறு தங்கள் அதிர்ஷ்டத்தைச் சொல்கிறார்கள். உங்களில் எத்தனை பேருக்கு உங்கள் அதிர்ஷ்டம் சொல்லப்பட்டிருக்கின்றது அல்லது முக சோதிடம் செய்யப்பட்டுள்ளது? இது, பெரும்பாலான ஜனங்கள் ஆர்வமாக உள்ள ஒன்று, இல்லையா? (ஆம்.) ஏன்? குறி-சொல்வது மற்றும் அஞ்சனம் பார்ப்பது ஆகியவற்றின் மூலம் ஜனங்கள் எத்தகைய நன்மைகளைப் பெறுகிறார்கள்? அதிலிருந்து அவர்கள் எத்தகைய திருப்தியைப் பெறுகிறார்கள்? (ஆர்வம்.) இது வெறும் ஆர்வமா? நான் அதைப் பார்க்கும்போது வெறும் ஆர்வமாக தோன்றவில்லை. அஞ்சனம் பார்ப்பது மற்றும் குறி சொல்வதின் குறிக்கோள் என்ன? அது ஏன் செய்யப்படுகிறது? எதிர்காலத்தைப் பார்ப்பதற்காக அல்லவா? சிலர் எதிர்காலத்தை கணிக்க தங்களது முகத்தைப் படிக்க அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் தங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்குமா இல்லையா என்பதைப் பார்க்க அதைச் செய்கிறார்கள். சிலர் தங்கள் திருமணம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க இதைச் செய்கிறார்கள். இன்னும் சிலர் வருடம் என்ன அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதைப் பார்க்க இதைச் செய்கிறார்கள். சிலர் தங்கள் வாய்ப்புகள் என்ன என்பதைப் பார்க்க மற்றும் அவர்களது மகன்கள் அல்லது மகள்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதைப் பார்க்க தங்கள் முகத்தைப் படிக்க அனுமதிக்கிறார்கள். மேலும், சில வணிகர்கள் அவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிப்பார்கள் என்பதைப் பார்க்க அதைச் செய்கிறார்கள். அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை அறிய குறி சொல்பவரின் வழிகாட்டுதலைத் தேடுகிறார்கள். எனவே, ஆர்வத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே இது செய்யப்படுகிறதா? ஜனங்கள் தங்களது முகத்திலிருந்து இத்தகைய விஷயங்களைப் படிக்கும் போது அல்லது செய்யும் போது, அது அவர்களின் எதிர்காலத் தனிப்பட்ட நலனுக்காக மட்டுமே செய்யப்படுகிறது. இவை அனைத்தும் தங்கள் சொந்த தலைவிதியுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இதில் ஏதேனும் பயனுள்ளதா? (இல்லை.) இது ஏன் பயனுள்ளதாக இல்லை? இவற்றின் மூலம் கொஞ்சம் அறிவைப் பெறுவது நல்லதல்லவா? சிக்கல் எப்போது ஏற்படக்கூடும் என்பதை அறிய இந்த நடைமுறைகள் உங்களுக்கு உதவக் கூடும் அல்லவா? மேலும் அவை நிகழும் முன் இந்தச் சிக்கல்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அவற்றைத் தவிர்க்க முடியும் அல்லவா? உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்குச் சொல்லப்பட்டால், வியூகத்துக்கு வெளியே பூரணமான பாதையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இது காண்பிக்கும். இதன் மூலம் நீ வருடத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவித்து உனது வணிகத்தின் மூலம் பெரும் செல்வத்தை அடையலாம். எனவே, அது பயனுள்ளதாக இருக்கும் அல்லவா? இது பயனுள்ளதா இருக்குமா இல்லையா என்பதற்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. இன்று நம் கலந்துரையாடலில் இந்தத் தலைப்பு உள்ளடங்காது. மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் மூடநம்பிக்கையை எவ்வாறு பயன்படுத்துகிறான்? ஜனங்கள் அனைவரும் தங்கள் தலைவிதியை அறிய விரும்புகிறார்கள். எனவே, அவர்களைக் கவர்ந்திழுக்க சாத்தான் அவர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொள்கிறான். எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன நேரிடும், எத்தகைய பாதை முன்னால் உள்ளது என்பதை ஜனங்கள் அறிய அஞ்சனம் பார்த்தல், குறி சொல்லுதல் மற்றும் முகசோதிடத்தில் ஈடுபடுகிறார்கள். இறுதியில், ஜனங்கள் அக்கறை கொள்ளும் தலைவிதியும் வாய்ப்புகளும் யாருடைய கரங்களில் இருக்கின்றன? (தேவனுடைய கரங்களில்.) இந்த விஷயங்கள் அனைத்தும் தேவனுடைய கரங்களில் இருக்கின்றன. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதில், ஜனங்கள் எதை அறிந்து கொள்ள வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறது? முகசோதிடம் மற்றும் அதிர்ஷ்டத்தைச் சொல்வதை சாத்தான் பயன்படுத்த விரும்புகிறது. அது அவர்களின் எதிர்கால அதிர்ஷ்டத்தை அறிந்திருப்பதாகவும், அது இந்த விஷயங்களை அறிந்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவும் வெளிப்படுத்த விரும்புகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும், ஜனங்களைக் கட்டுப்படுத்த இந்த முறைகளைப் பயன்படுத்தவும் சாத்தான் விரும்புகிறது. அதாவது ஜனங்கள் அதில் மூடநம்பிக்கை வைத்து அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் கடைப்பிடிக்கிறார்கள். உதாரணமாக, நீ ஒரு முகசோதிடம் பார்த்திருந்தால், அதிர்ஷ்டம் சொல்பவர் கண்களை மூடிக்கொண்டு, கடந்த சில தசாப்தங்களாக உனக்கு நடந்த அனைத்தையும் பூரணமானத் தெளிவுடன் உனக்குச் சொன்னால், நீ எப்படி உனக்குள் உணருவாய்? “அவர் மிகவும் துல்லியமானவர்! நான் இதற்கு முன்பு யாரிடமும் சொல்லாததைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்? இந்தக் குறிசொல்பவரை நான் உண்மையாகவே வியந்து பார்க்கிறேன்!” என்று நீ உடனடியாக உணருவாய். சாத்தானைப் பொறுத்த வரையில், உனது கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் எளிதானதல்லவா? இன்று நீ இருக்கும் இடத்திற்கு தேவன் உன்னை வழிநடத்தியுள்ளார். எல்லா நேரங்களிலும் சாத்தான் ஜனங்களைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது, உன்னையும் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. உனது ஜீவிதத்தின் பல தசாப்தங்கள் சாத்தானுக்கு சாதாரண ஒன்றாகும். இந்த விஷயங்களை அறிந்து கொள்வது சாத்தானுக்கு கடினம் அல்ல. சாத்தான் சொல்வதெல்லாம் துல்லியமானது என்பதை நீ அறியும்போது, உனது இருதயத்தை அதற்கு நீ கொடுக்கின்றாய் அல்லவா? உனது எதிர்காலத்தையும் உனது அதிர்ஷ்டத்தையும் கட்டுப்படுத்த நீ அதைச் சார்ந்திருக்கின்றாய் அல்லவா? ஒரே நொடியில், உனது இருதயம் அதற்கான கொஞ்சம் மரியாதை அல்லது பயபக்தியை உணரும். மேலும் சிலருக்கு, இந்த நேரத்தில் அவர்களின் ஆத்துமாக்கள் ஏற்கனவே பறிக்கப்பட்டு விடலாம். நீ உடனடியாகக் குறிசொல்பவரைக் கேட்பாய்: “நான் அடுத்து என்ன செய்ய வேண்டும்? வரும் ஆண்டில் நான் எதைத் தவிர்க்க வேண்டும்? நான் என்ன செய்யக்கூடாது?” பின்னர், அவர் கூறுவார், “நீ அங்கு செல்லக்கூடாது, நீ இதைச் செய்யக்கூடாது, ஒரு குறிப்பிட்ட நிற ஆடைகளை அணியக்கூடாது, நீ சில இடங்களுக்கு குறைவாகச் செல்ல வேண்டும், சில விஷயங்களை அதிகமாகச் செய்ய வேண்டும்….” அவர் சொல்லும் அனைத்தையும் நீ உடனடியாக இருதயத்திற்கு எடுத்துக் கொள்ள மாட்டாயா? தேவனுடைய வார்த்தைகளை விட வேகமாக அவருடைய வார்த்தைகளை நீ மனப்பாடம் செய்வாய். அவற்றை ஏன் விரைவாக மனப்பாடம் செய்கிறாய்? ஏனென்றால் நீ நல்ல அதிர்ஷ்டத்திற்காக சாத்தானை நம்ப விரும்புகின்றாய். அது உனது இருதயத்தைக் கைப்பற்றும் போது இது நடக்கின்றது அல்லவா? அதனுடைய கணிப்புகள் நிறைவேறும் போது, ஒன்றன் பின் ஒன்றாக, அடுத்த ஆண்டு என்ன அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதைக் கண்டுபிடிக்க நீ அதனிடம் திரும்பிச் செல்ல விரும்பவில்லையா? (ஆம்.) சாத்தான் என்ன செய்யச் சொல்கிறதோ அதையே நீ செய்வாய், அது தவிர்க்கச் சொல்லும் விஷயங்களை நீ தவிர்ப்பாய். இவ்வாறு, அது சொல்லும் அனைத்தையும் நீ கடைப்பிடிக்கவில்லையா? மிக விரைவாக, நீ அதனுடைய அரவணைப்பில் விழுந்து, ஏமாற்றப்படுவாய். அதனுடைய கட்டுப்பாட்டின் கீழ் வருவாய். நடப்பது சத்தியம் என்று நீ நம்புவதாலும், உனது கடந்தகால ஜீவிதத்தைப் பற்றியும், உனது தற்போதைய ஜீவிதத்தைப் பற்றியும், எதிர்காலம் என்ன கொண்டு வரும் என்பதையும் அது அறிந்திருப்பதாக நீ நம்புவதாலும் இது நிகழ்கிறது. ஜனங்களைக் கட்டுப்படுத்த சாத்தான் பயன்படுத்தும் முறை இதுதான். ஆனால் உண்மையில், யார் மெய்யாக கட்டுப்படுத்துகின்றார்? தேவன் தாமே கட்டுப்படுத்துகிறார், சாத்தான் அல்ல. அறியாதவர்களை ஏமாற்றுவதற்கும், பொருள்மயமான உலகத்தை மட்டுமே பார்க்கும் ஜனங்களை ஏமாற்றுவதற்கும், தன்னை நம்புவதற்கும், சார்ந்து கொள்வதற்கும் சாத்தான் இந்த விஷயத்தில் தனது புத்திசாலித்தனமான சூழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறது. பின்னர், அவர்கள் சாத்தானுடைய பிடியில் விழுந்து அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் பின்பற்றுகிறார்கள். ஆனால் ஜனங்கள் தேவனை நம்பவும் பின்பற்றவும் விரும்பும் போது சாத்தான் அதனுடைய பிடியை எப்போதாவது தளர்த்துகின்றதா? சாத்தான் அவ்வாறு செய்வதில்லை. இந்த சூழ்நிலையில், ஜனங்கள் உண்மையில் சாத்தானுடைய பிடியில் சிக்கியிருக்கிறார்களா? (ஆம்.) இந்த விஷயத்தில் சாத்தானுடைய நடத்தையானது வெட்கமற்றது என்று நாம் கூற முடியுமா? (ஆம்.) நாம் ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனெனில் இவை மோசடி மற்றும் வஞ்சகத் தந்திரங்கள் ஆகும். சாத்தான் வெட்கமில்லாதது. அது ஜனங்களைச் சார்ந்த எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது என்றும் அது அவர்களின் தலைவிதியைக் கட்டுப்படுத்துகிறது என்றும் ஜனங்களைத் தவறாக நினைக்கச் செய்து வழிநடத்துகிறது. இது அறியாமையில் உள்ள ஜனங்கள் அதற்கு முழுமையாகக் கீழ்ப்படியக் காரணமாகிறது. அவர்கள் ஒரு சில வார்த்தைகளால் முட்டாளாக்கப்படுகிறார்கள். தங்களின் திகைப்பில், ஜனங்கள் அதற்கு முன் தலைவணங்குகிறார்கள். எனவே, சாத்தான் எத்தகைய முறைகளைப் பயன்படுத்துகிறது? அதனை நீ நம்புவதற்கு என்ன சொல்கிறது? உதாரணமாக, உனது குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நீ சாத்தானிடம் சொல்லியிருக்க மாட்டாய். ஆனால் எத்தனை பேர் இருக்கிறார்கள், உனது பெற்றோர் மற்றும் குழந்தைகளின் வயது ஆகியவற்றையும் உன்னிடம் அது சொல்லக் கூடும். இதற்கு முன்னர் சாத்தானைப் பற்றி உனக்கு சந்தேகங்களும் ஐயங்களும் இருந்திருக்கலாம். எனினும், இதைச் சொல்வதைக் கேட்டபின், அதை இன்னும் கொஞ்சம் நம்பக்கூடியதாக நீ உணர மாட்டாயா? அண்மையில் எவ்வளவு கடினமான வேலை உனக்கு இருந்தது, உனது மேலதிகாரிகள் உனக்குத் தகுதியான அங்கீகாரத்தை உனக்கு வழங்குவதில்லை, எப்போதும் உனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள், என்று பல காரியங்களைச் சாத்தான் சொல்லக்கூடும். அதைக் கேட்ட பிறகு, “அது சரியாக இருக்கிறது! வேலையில் விஷயங்கள் சீராக நடக்கவில்லை” என்று நீ எண்ணுவாய். எனவே, நீ சாத்தானை இன்னும் கொஞ்சம் அதிகமாக நம்புவாய். அது உன்னை ஏமாற்ற வேறு ஏதாவது சொல்லி, அதையும் நம்பும்படி செய்கிறது. சிறிது சிறிதாக, இனி நீ அதை எதிர்க்கவோ அல்லது சந்தேகப்படவோ முடியாமல் போகும். சாத்தான் ஒரு சில அற்ப தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, சிறிய சாதாரணத் தந்திரங்களைக் கூட பயன்படுத்துகிறது. இவ்வாறு உன்னைக் குழப்புகிறது. நீ குழப்பமடையும் போது, உனது சரியான நிலையைக் கண்டறிய முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாமல் நீ நஷ்டத்தில் இருப்பாய், சாத்தான் சொல்வதை நீ பின்பற்றத் தொடங்குவாய். மனிதனைக் கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் “புத்திசாலித்தனமான” முறை இதுதான். இதனால், நீ அறியாமலே சத்தானுடைய வலையில் விழுகிறாய், சத்தானால் மயக்கப்படுகின்றாய். ஜனங்கள் நல்லது என்று கற்பனை செய்யும் சில விஷயங்களை சாத்தான் உனக்குச் சொல்கிறது. பின்னர், என்ன செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று அது சொல்கிறது. இவ்வாறு தான் நீ அறியாமலே ஏமாற்றப்படுகிறாய். நீ அதில் ஒருமுறை விழுந்துவிட்டால், விஷயங்கள் உன்னுடன் ஒட்டிக் கொள்ளும். சாத்தான் சொன்னதையும், அது செய்யச் சொன்னதையும் பற்றி நீ தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பாய். நீ அறியாமலேயே அதனால் ஆட்கொள்ளப்படுவாய். இது ஏன்? ஏனென்றால், மனிதகுலத்திடம் சத்தியம் இல்லாததால், மனிதகுலத்தால் உறுதியாக நிற்கவும், சாத்தானுடைய மயக்கத்தையும் சோதனையையும் எதிர்க்கவும் முடியவில்லை. சாத்தானுடைய தீமை மற்றும் அதனுடைய வஞ்சகம், துரோகம் மற்றும் தீமையை எதிர்கொள்ளும் மனிதகுலம் பெரிதளவில் அறியாமையுடனும், முதிர்ச்சியற்றும், பலவீனமாகவும் இருக்கின்றது, அல்லவா? சாத்தான் மனிதனைக் கெடுக்கும் வழிகளில் இது ஒன்றல்லவா? (ஆம்.) சாத்தானுடைய பல்வேறு வழிமுறைகளால் மனிதன் அறியாமலேயே மயக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறான். ஏனென்றால், நேர்மறை மற்றும் எதிர்மறைகளை வேறுபடுத்தும் திறன் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இந்த வளர்ச்சியும், சாத்தானை வெல்லும் திறனும் இல்லை.

e. மனிதனைக் கெடுக்க சாத்தான் சமூகப் போக்குகளை எவ்வாறு பயன்படுத்துகிறது

சமூகப் போக்குகள் எப்போது தோன்றின? அவை இந்தக் காலக்கட்டதில் மட்டுமே நடைமுறைக்கு வந்தனவா? சாத்தான் ஜனங்களைச் சீர்கெடுக்கத் தொடங்கிய போது சமூகப் போக்குகள் வந்தன என்று ஒருவர் கூறலாம். சமூகப் போக்குகள் என்பவை எதை உள்ளடக்குகின்றன? (ஆடை மற்றும் ஒப்பனையின் பாங்குகள்.) இவை ஜனங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் விஷயங்கள். ஆடை, நடப்பு வழக்கு மற்றும் போக்குகளின் பாங்குகள்—இந்த விஷயங்கள் ஒரு சிறிய அம்சத்தை உள்ளடக்குகின்றன. வேறு ஏதேனும் இருக்கின்றதா? ஜனங்கள் அடிக்கடி சொல்லும் பிரபலமான சொற்றொடர்களும் இதனுள் அடங்குமா? ஜனங்கள் விரும்பும் ஜீவித முறைகள் இதனுள் அடங்குமா? ஜனங்கள் விரும்பும் இசை நட்சத்திரங்கள், பிரபலங்கள், பத்திரிகைகள் மற்றும் நாவல்கள் இதனுள் அடங்குமா? (ஆம்.) உங்கள் மனதில், சமூகப் போக்குகளின் எந்த அம்சம் மனிதனைச் சீர்கெடுக்க முடியும்? இந்தப் போக்குகளில் எது உங்களை மிகவும் ஈர்க்கக்கூடியது? சிலர், “நாங்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியுள்ளோம், நாங்கள் எங்கள் ஐம்பதுகள் அல்லது அறுபதுகளில், எங்கள் எழுபதுகளில் அல்லது எண்பதுகளில் இருக்கிறோம். மேலும், இந்த போக்குகளுடன் எங்களால் பொருந்த முடியாது, அவை உண்மையில் எங்கள் கவனத்தை ஈர்க்காது,” என்று சொல்கிறார்கள். இது சரியா? மற்றவர்கள், “நாங்கள் பிரபலங்களைப் பின்தொடர்வதில்லை, அது இருபதுகளில் உள்ள இளைஞர்கள் செய்யும் ஒன்று. நாங்கள் நவநாகரீக ஆடைகளையும் அணிய மாட்டோம், இது உருவ உணர்வுள்ளவர்கள் செய்யும் ஒன்று,” என்று கூறுகிறார்கள். எனவே, இவற்றில் எது உங்களைக் கெடுக்க முடியும்? (பிரபலமான பழமொழிகள்.) இந்தப் பழமொழிகள் ஜனங்களைக் கெடுக்க முடியுமா? நான் ஒரு உதாரணம் சொல்கிறேன், அது ஜனங்களைக் கெடுக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் காணலாம். “பணம் உலகைச் சுற்ற வைக்கிறது.” இது ஒரு போக்கா? நீங்கள் குறிப்பிட்ட நவநாகரீக மற்றும் ஆடம்பர உணவுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் மோசமானதல்லவா? “பணம் உலகைச் சுற்ற வைக்கிறது” என்பது சாத்தானுடைய ஒரு தத்துவமாகும். இது ஒவ்வொரு மனித சமுதாயத்திலும் ஒட்டு மொத்த மனிதகுலத்திலும் நிலவுகிறது. இது ஒரு போக்கு என்று நீங்கள் கூறலாம். ஏனெனில் இது ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் புகுத்தப்பட்டுள்ளது, முதலில் இவர்கள் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் அதன் பின் மெய்யான ஜீவிதத்துடன் தொடர்பு கொள்ளும்போது அதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும், உண்மையில் இந்த வார்த்தைகள் சத்தியம் என்று உணரத் தொடங்கினர். இது சாத்தான் மனிதனைக் கெடுக்கும் செயல் அல்லவா? ஒருவேளை இந்த சொல்லை ஜனங்கள் ஒரே அளவில் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் மற்றும் அவர்களின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த சொல்லுக்கு வெவ்வேறு அளவில் விளக்கங்கள் மற்றும் ஒப்புதல்களைக் கொண்டுள்ளனர். அது அப்படித் தானே அல்லவா? இந்தச் சொல்லுடன் ஒருவர் எவ்வளவு அனுபவத்தைப் பெற்றிருந்தாலும், அது அவரின் இருதயத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை விளைவு என்ன? நீங்கள் ஒவ்வொருவரும் உட்பட, இந்த உலகில் உள்ள ஜனங்களின் மனித மனநிலையின் வழியாக ஏதோ ஒன்று வெளிப்படுகிறது. அது என்ன? அது பண வழிபாடாகும். ஒருவரின் இருதயத்திலிருந்து அதை அகற்றுவது கடினமா? அது மிகவும் கடினம்! சாத்தானுடைய மனித கேடானது உண்மையில் ஆழமானதாகத் தெரிகிறது! ஜனங்களைச் சோதிக்க சாத்தான் பணத்தைப் பயன்படுத்துகிறான், மேலும் பணத்தைத் தொழுதுகொள்ளவும், பொருள்சார்ந்த காரியங்களை வணங்கவும் செய்யும் அளவிற்கு அவர்களை சீர்கெடுக்கிறான். இந்தப் பணத்தைத் தொழுதுகொள்ளுதல் ஜனங்களிடம் எவ்வாறு வெளிப்படுகிறது? பணம் இல்லாமல் ஒரு நாள் கூட சாத்தியமில்லை என்றும், நீங்கள் பணம் இல்லாமல் இந்த உலகில் ஜீவிக்க முடியாது என்றும் நினைக்கின்றீர்களா? ஜனங்களின் நிலையானது அவர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அவர்களுடைய மரியாதையும் அதனைப் போன்றது. ஏழைகளின் முதுகு அவமானத்தால் வளைந்திருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் உயர்ந்து பெருமையாக நிற்கிறார்கள், சத்தமாகப் பேசுகிறார்கள், மற்றும் ஆணவத்துடன் ஜீவிக்கிறார்கள். இந்த வார்த்தை மற்றும் போக்கு ஜனங்களுக்கு எதைத் தருகிறது? பணத்தைத் தேடுவதில் பலர் எந்த தியாகத்தையும் செய்கிறார்கள் என்பது உண்மையல்லவா? அதிகமான பணம் தேடுவதில் பலர் தங்கள் கண்ணியத்தையும் நேர்மையையும் இழக்கவில்லையா? பணத்திற்காக தங்கள் கடமையைச் செய்வதற்கும் தேவனைப் பின்பற்றுவதற்குமான வாய்ப்பைப் பலரும் இழக்கவில்லையா? சத்தியத்தைப் பெற்று இரட்சிக்கப்படும் வாய்ப்பை இழப்பது ஜனங்களுக்கு இழப்புகளிலேயே மிகப்பெரிய இழப்பு அல்லவா? இந்த முறையையும் இந்தப் பழமொழியையும் பயன்படுத்தி மனிதனை இவ்வளவாகக் கெடுக்கும் சாத்தான் வஞ்சனையானதல்லவா? அது தீங்கிழைக்கும் தந்திரம் அல்லவா? இந்தப் பிரபலமான பழமொழியை எதிர்த்து இறுதியாக அதைச் சத்தியமாக ஏற்றுக் கொள்வதற்கு நீ முன்னேறும்போது, உனது இருதயம் முற்றிலும் சாத்தானுடைய பிடியில் விழுகிறது. எனவே, நீ கவனக்குறைவாக அந்தப் பழமொழியைப் போலவே ஜீவிக்க விழைகின்றாய். இந்தப் பழமொழி உன்னை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது? நீ உண்மையான வழியை அறிந்திருக்கலாம், நீ சத்தியத்தை அறிந்திருக்கலாம், ஆனால் அதைத் தொடர நீ வல்லமையற்றவனாக இருக்கின்றாய். தேவனுடைய வார்த்தைகள் சத்தியமுள்ளவை என்பதை நீ தெளிவாக அறிந்திருக்கலாம். ஆனால், சத்தியத்தைப் பெறுவதற்காக நீ விலைக்கிரயம் செலுத்தவோ துன்பப்படவோ விரும்பவில்லை. மாறாக, தேவனை இறுதிவரை எதிர்ப்பதற்காக உனது சொந்த எதிர்காலத்தையும் தலைவிதியையும் தியாகம் செய்வாய். தேவன் என்ன சொன்னாலும், தேவன் என்ன செய்தாலும், தேவ அன்பு உன்னிடம் எவ்வளவு ஆழமாக, எவ்வளவு பெரியதாக இருக்கின்றது என்பதை நீ புரிந்து கொண்டாலும், உனது சொந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்று பிடிவாதமாக வற்புறுத்துவாய். மேலும், இந்தப் பழமொழிக்கு உரிய விலையைச் செலுத்துவாய். அதாவது, இந்தப் பழமொழி ஏற்கனவே உனது எண்ணங்களை வஞ்சித்துள்ளது மற்றும் கட்டுப்படுத்தியுள்ளது, அது ஏற்கனவே உனது நடத்தையை ஆளுகை செய்துள்ளது, மேலும் ஐசுவரியத்தின் மீதான உனது நாட்டத்தை ஒதுக்கி வைப்பதைக் காட்டிலும் உனது தலைவிதியை அது ஆளுகை செய்வதற்கு அனுமதிப்பாய். அதனால் ஜனங்கள் இவ்வாறு செயல்படலாம், அதனால் சாத்தானின் வார்த்தைகளால் அவர்கள் கட்டுப்படுத்தப்படலாம் மற்றும் கையாளப்படலாம், சாத்தானால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதானே இதன் அர்த்தம்? சாத்தானுடைய தத்துவமும் மனப்போக்கும் மற்றும் சாத்தானின் மனநிலையும் உனது இருதயத்தில் வேரூன்றியிருக்கிறதல்லவா? நீ கண்மூடித்தனமாக ஐசுவரியத்தை நாடி, சத்தியத்தைப் பின்பற்றுவதைக் கைவிடும்போது, சாத்தான் உன்னை வஞ்சிக்கும் அதனுடைய இலக்கை அடைந்திருக்கிறதல்லவா? மிகச் சரியாக இந்த நிலைதான் காணப்படுகிறது. அப்படியானால் நீ சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு சீர்கெடுக்கப்படும்போது, உன்னால் அதை உணர முடிகிறதா? உன்னால் முடியாது. சாத்தான் உன் முன்னால் இருப்பதையே உன்னால் பார்க்க முடியவில்லை என்றால் அல்லது மறைமுகமாக சாத்தான் செயல்படுகிறான் என்பதை உணரவில்லை என்றால், சாத்தானுடைய பொல்லாப்பை உன்னால் பார்க்க முடியுமா? சாத்தான் மனிதனை எவ்வாறு சீர்கெடுக்கிறான் என்பதை உன்னால் அறிந்துகொள்ள முடியுமா? எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் சாத்தான் மனிதனைக் கெடுக்கிறது. இந்த கேட்டுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மனிதனைச் சாத்தியமற்றவனாக, அதற்கு எதிரில் மனிதனை உதவியற்றவனாக சாத்தான் ஆக்குகின்றது. நீ அறியாத சூழ்நிலைகளிலும், உனக்கு என்ன நடக்கிறது என்பதை நீ புரிந்து கொள்ளாத சூழ்நிலையிலும், தன்னுடைய எண்ணங்களையும், தன்னுடைய கண்ணோட்டங்களையும், அவற்றிலிருந்து வரும் தீய விஷயங்களையும் சாத்தான் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. ஜனங்கள் இந்த விஷயங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அதற்கு விதிவிலக்கல்ல. அவற்றை ஒரு பொக்கிஷத்தைப் போல அவர்கள் நேசித்துப் பிடித்துக் கொள்கிறார்கள். அவை தங்களைக் கையாளவும், இயக்கவும் அனுமதிக்கிறார்கள். இவ்வாறு தான் ஜனங்கள் சாத்தானுடைய வல்லமையின் கீழ் வாழ்கின்றனர், தங்களை அறியாமலேயே சாத்தானுக்குக் கீழ்ப்படிகின்றனர் மற்றும் சாத்தானுடைய மனிதச் சீர்கேடானது எப்போதுமே ஆழமாக வளர்கிறது.

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் இந்தப் பல வழிமுறைகளைப் பயன்படுத்துகிறான். மனிதனுக்கு விஞ்ஞானக் கொள்கைகளைப் பற்றிய அறிவும் சில புரிதலும் உண்டு. மனிதன் பாரம்பரிய கலாச்சாரத்தின் உந்துதலின் கீழ் ஜீவிக்கிறான். ஒவ்வொரு மனிதனும் பாரம்பரிய கலாச்சாரத்தின் வாரிசாகவும், பரிமாற்றம் செய்பவனாகவும் இருக்கிறான். சாத்தானால் தனக்கு வழங்கப்பட்ட பாரம்பரிய கலாச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் மனிதன் இருக்கிறான். மேலும், மனிதகுலத்துக்கு சாத்தான் வழங்கும் சமூக போக்குகளுடனும் மனிதன் ஒத்துப்போகிறான். மனிதன் சாத்தானிடமிருந்து பிரிக்க முடியாதவனாக இருக்கிறான். எல்லா நேரங்களிலும் சாத்தான் செய்கிற எல்லாவற்றையும் ஒத்துக்கொள்கிறான். அதனுடைய தீமை, வஞ்சகம், வன்மம் மற்றும் ஆணவத்தை ஏற்றுக்கொள்கிறான். சாத்தானுடைய இந்த மனநிலைகளை மனிதன் பெற்றவுடன், இந்தச் சீர்கேடு நிறைந்த மனிதகுலத்தின் மத்தியில் அவன் மகிழ்ச்சியாக ஜீவித்தானா அல்லது துக்கமாக ஜீவித்தானா? (துக்கமாக ஜீவித்தான்.) ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்? (இந்தக் கேடான காரியங்களால் மனிதன் கட்டப்பட்டு, கட்டுப்படுத்தப்படுவதால், அவன் பாவத்தில் ஜீவிக்கிறான், கடினமான போராட்டத்தில் மூழ்கிவிடுகிறான்.) சிலர் கண்ணாடியை அணிந்துகொள்கிறார்கள். மிகவும் அறிவார்ந்தவர்களாகத் தோன்றுகிறார்கள். அவர்கள் மிகவும் மரியாதையுடனும், சரளமாகவும், காரணத்துடனும் பேசக்கூடும். மேலும், அவர்கள் பல விஷயங்களைக் கடந்து வந்ததால், அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களாகவும், உலகத்துக்கேற்ப நடப்பவர்களாகவும் இருக்கலாம். பெரிய விஷயங்களைப் பற்றியும் சிறிய விஷயங்களைப் பற்றியும் அவர்களால் விரிவாகப் பேச முடியும். அவர்களால் விஷயங்களின் நம்பகத் தன்மையையும் காரணத்தையும் மதிப்பிட முடியும். சிலர் இந்த நபர்களின் நடத்தை மற்றும் தோற்றத்தையும், அவர்களின் குணம், மனிதநேயம், நடத்தை மற்றும் பலவற்றையும் பார்த்து, அவர்களிடம் எந்தத் தவறும் இல்லை என்று எண்ணலாம். இத்தகைய நபர்களால் குறிப்பாக தற்போதைய சமூகப் போக்குகளுக்கு ஏற்ப மாற முடிகிறது. இந்த நபர்கள் வயதானவர்களாக இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் காலத்தின் போக்குகளுக்கு தூரமாக மாட்டார்கள், எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பார்கள். மேலோட்டமாக, அத்தகைய நபரிடம் யாரும் தவறு கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் அவர்களுடைய உள் சாராம்சத்தில் அவர்கள் சாத்தானால் முற்றிலுமாக முழுவதுமாக கெடுத்துக் கொள்கிறார்கள். இந்த நபர்களிடம் எந்த வெளிப்புறத் தவறுகளையும் காணமுடியாது என்றாலும், மேலோட்டமாக அவர்கள் மென்மையாகவும், சுத்திகரிக்கப்பட்டவர்களாகவும், அறிவையும் ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கு நேர்மை இருக்கிறது மற்றும் அறிவின் அடிப்படையில் அவர்கள் எந்த வகையிலும் இளைஞர்களை விடத் தாழ்ந்தவர்கள் அல்ல என்றாலும், அவர்களின் குணம் மற்றும் சாராம்சத்தைப் பொறுத்தவரையில், அத்தகையவர்கள் சாத்தானுடைய முழுமையான மற்றும் ஜீவிக்கும் மாதிரியாவார்கள். அவர்கள் சாத்தானுடைய துல்லியமான சாயலாகவே இருக்கிறீர்கள். இது சாத்தானுடைய மனிதக் கேட்டின் “பலன்” ஆகும். நான் கூறியது உங்களைப் புண்படுத்தக்கூடும். ஆனால் அது அனைத்தும் உண்மைதான். சமூகப் போக்குகளுடன் பொருந்துவதற்காக மனிதன் கற்கும் அறிவு, அவன் புரிந்து கொள்ளும் அறிவியல் மற்றும் அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள், சாத்தானுடைய மனிதக் கேட்டுக்கு விதிவிலக்கு இல்லாமல் இருக்கின்றன. இது முற்றிலும் உண்மை. ஆகையால், சாத்தானால் முற்றிலுமாகச் சீர்கெடுக்கப்பட்ட ஒரு மனநிலையில் மனிதன் ஜீவிக்கிறான். தேவனுடைய பரிசுத்தம் என்ன அல்லது தேவனுடைய சாராம்சம் என்ன என்பதை அறிந்துகொள்ள மனிதனுக்கு வழி இல்லை. ஏனென்றால், மேலோட்டமாக, சாத்தான் மனிதனைச் சீர்கெடுக்கும் வழிகளில் ஒருவர் தவறு காண முடியாது. ஒருவரின் நடத்தையிலிருந்து எதேனும் ஒன்று தவறாக இருப்பதாக ஒருவர் சொல்ல முடியாது. எல்லோரும் சாதாரணமாக வேலைக்குச் சென்று சாதாரண ஜீவிதத்தை ஜீவிக்கிறார்கள். அவர்கள் பொதுவாக புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் படிக்கிறார்கள். அவர்கள் சாதாரணமாகப் படிக்கிறார்கள், பேசுகிறார்கள். சிலர் ஒரு சில நெறிமுறைகளைக் கற்றுள்ளார்கள். சிலர் பேசுவதில் சிறந்தவர்களாகவும், புரிந்துகொள்ளும் மற்றும் நட்புக்கொள்ளும் நபராகவும், உதவி மற்றும் தொண்டு செய்பவராகவும், சண்டைகளைத் தவிர்ப்பவராகவும் அல்லது ஜனங்களைக் கொண்டு லாபம் பார்க்காதவராகவும் இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் கேடு நிறைந்த சாத்தானிய மனப்பான்மை அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது. மேலும், மற்றவர்களின் முயற்சியை நம்புவதன் மூலம் இந்த சாராம்சத்தை மாற்ற முடியாது. இந்தச் சாராம்சத்தின் காரணமாக, மனிதனால் தேவனுடைய பரிசுத்தத்தை அறிய முடியவில்லை. மேலும், தேவனுடைய பரிசுத்தத்தின் சாராம்சம் மனிதனுக்கு வெளிப்படுத்தப்பட்ட போதிலும், மனிதன் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஏனென்றால், மனிதனுடைய உணர்வுகள், கருத்துக்கள், கண்ணோட்டங்கள் மற்றும் எண்ணங்களை சாத்தான் பல்வேறு வழிகளில் ஏற்கனவே தன்னிடம் வைத்திருக்கிறான். இந்த உடமை மற்றும் கெடுதல் தற்காலிகமானதோ அல்லது அவ்வப்போது நிகழ்வதோ அன்று. மாறாக எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருப்பதாகும். இவ்வாறு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக, அல்லது ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக தேவனை நம்பியிருக்கும் ஏராளமான ஜனங்கள், சாத்தான் அவர்களுக்குள் பொக்கிஷங்களாகப் புகுத்தியுள்ள இந்தத் தீய எண்ணங்கள், காட்சிகள், தர்க்கங்கள் மற்றும் தத்துவங்களை, ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களால் அதனை இன்னும் விடமுடியவில்லை. சாத்தானுடைய இயல்பிலிருந்து வரும் தீய, திமிர்பிடித்த மற்றும் தீங்கிழைக்கும் விஷயங்களை மனிதன் ஏற்றுக் கொண்டுள்ளதால், ஒருவருக்கொருவர் இடையே இருக்கும் மனிதனுடைய உறவுகளில் பெரும்பாலும், தவிர்க்க முடியாமல் மோதல்கள், வாதங்கள் மற்றும் பொருந்தாத தன்மை ஆகியவை உருவாகின்றன. அவை சாத்தானுடைய ஆணவ குணத்தின் விளைவாக வருகின்றன. சாத்தான் மனிதகுலத்திற்கு நேர்மறையான விஷயங்களை வழங்கியிருந்தால்—உதாரணமாக, மனிதன் ஏற்றுக்கொண்ட பாரம்பரிய கலாச்சாரத்தின் கன்பூசியனிசமும் தாவோயிசமும் நல்ல விஷயங்களாக இருந்தால்—அந்த விஷயங்களை ஏற்றுக்கொண்ட பிறகு இத்தகைய ஜனங்கள் ஒருவருக்கொருவர் அன்பாகப் பழக முடியும். இந்நிலையில், அந்த விஷயங்களை ஏற்றுக்கொண்ட ஜனங்களிடையே ஏன் இவ்வளவு பெரிய பிளவு இருக்கிறது? அது ஏன்? ஏனென்றால் அவை சாத்தானிடமிருந்து வந்தவையாகும். சாத்தான் ஜனங்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது. சாத்தானிடமிருந்து வரும் விஷயங்கள், அவை மேலோட்டமாக எவ்வளவு கண்ணியமாகவோ பெரியதாகவோத் தோன்றினாலும், அவை மனிதனிடம் வரும்போது மனிதனுடைய ஜீவிதத்தில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. இது சாத்தானுடைய தீய குணத்தின் ஏமாற்றமே அன்றி வேறொன்றுமில்லை. அது அப்படித்தானே அல்லவா? வேடமிட்டு ஜீவிக்க திறன் கொண்டவரும், அறிவுச் செல்வத்தைக் கொண்ட அல்லது நல்ல வளர்ப்பைக் கொண்ட ஒருவரும் தங்களது கேடு நிறைந்த சாத்தானிய மனநிலையை மறைக்க இன்னும் கடினமாகப் போராடுவார். அதாவது, இந்த நபர் தன்னைத் தானே மூடிமறைத்துக் கொண்டாலும், அவர்களை ஒரு துறவி என்று நீ நினைத்திருந்தாலும், அல்லது அவர்கள் பரிபூரணமானவர்கள் என்று நீ நினைத்திருந்தாலும், அல்லது அவர்கள் ஒரு தேவ தூதர் என்று நீ நினைத்தாலும், அவர்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்கள் என்று நீ நினைத்தாலும், திரைக்குப் பின்னால் அவர்களின் உண்மையான ஜீவிதம் எவ்வாறு இருக்கும்? அவர்களுடைய மனநிலையின் வெளிப்பாட்டில் நீ காணும் சாராம்சம் என்ன? துளியும் சந்தேகம் இல்லாமல் நீ சாத்தானுடைய தீய குணத்தைக் காண்பாய். அவ்வாறு சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? (ஆம்.) எடுத்துக்காட்டாக, நீங்கள் அறிந்த, உங்களுக்கு நெருக்கமான, நல்ல மனிதராக நினைக்கும், ஒருவேளை நீ ரசிக்கும் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உனது தற்போதைய நிலையில், நீ அவரைப் பற்றி என்ன நினைக்கிறாய்? முதலாவதாக, இந்த வகை நபருக்கு மனிதநேயம் இருக்கிறதா இல்லையா, அவர்கள் நேர்மையானவர்களா, ஜனங்கள் மீது உண்மையான அன்பு வைத்துள்ளார்களா, அவர்களின் சொற்களும் செயல்களும் பயனுள்ளவையா, மற்றவர்களுக்கு உதவுகின்றனவா என்பதை மதிப்பிடுங்கள். (அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்.) இந்த ஜனங்கள் வெளிப்படுத்தும் கருணை, அன்பு அல்லது நன்மை என அழைக்கப்படுபவை எவை? இது எல்லாம் தவறானது. இது ஒரு மாயத் தோற்றமாகும். இந்த மாயத் தோற்றத்துக்கு பின்னால் ஒரு தீய நோக்கம் உள்ளது: அந்த நபரை வணங்கச் செய்வதும் விக்கிரகமாக்குவதும் ஆகும். இதை நீங்கள் தெளிவாகப் பார்க்கின்றீர்களா? (ஆம்.)

ஜனங்களைச் சீர்கெடுக்கச் சாத்தான் பயன்படுத்தும் முறைகளில் மனிதகுலத்திற்கு கொண்டு வந்தவை யாவை? அவை நேர்மறையான எதையேனும் கொண்டு வருகின்றனவா? முதலாவதாக, மனிதனால் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ள முடியுமா? இந்த உலகில், எதையேனும் நன்மை அல்லது தீமை, சரியானது அல்லது தவறானது, என்று துல்லியமாகத் தீர்மானிக்க, ஒரு பிரபலமான அல்லது சிறந்த நபரையோ, அல்லது பத்திரிகைகள் அல்லது பிற வெளியீடுகளையோ தரநிலைகளாகப் பயன்படுத்துவார்கள் என்று நீ கூறுவாயா? நிகழ்வுகள் மற்றும் ஜனங்கள் பற்றிய அவர்களின் மதிப்பீடுகள் நியாயமானதா? அவற்றில் சத்தியம் இருக்கிறதா? இந்த உலகமும், இந்த மனிதநேயமும், சத்தியத்தின் தரத்தின் அடிப்படையில் நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை மதிப்பிடுகிறதா? (இல்லை.) ஜனங்களுக்கு ஏன் அந்த திறன் இல்லை? ஜனங்கள் இவ்வளவு அறிவைக் கற்றிருக்கிறார்கள், அறிவியலைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் சிறந்த திறன்களைக் கொண்டுள்ளனர், இல்லையா? அவர்களால் ஏன் நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை வேறுபடுத்த இயலாது? இது ஏன்? (ஏனென்றால் ஜனங்களிடம் சத்தியம் இல்லை. அறிவியலும் அறிவும் சத்தியம் ஆகாது.) சாத்தான் மனிதகுலத்திற்கு கொண்டு வரும் அனைத்தும் தீயவை, கேடு நிறைந்தவை மற்றும் வழியும் சத்தியமும் ஜீவனும் இல்லாதவை. சாத்தான் மனிதனிடம் கொண்டு வரும் தீமை மற்றும் கேட்டால், சாத்தானிடம் அன்பு இருக்கிறது என்று உன்னால் சொல்ல முடியுமா? மனிதனிடம் அன்பு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? சிலர் இவ்வாறு கூறலாம்: “நீ சொல்வது தவறு; உலகெங்கிலும் ஏழைகள் அல்லது வீடற்றவர்களுக்கு உதவி செய்யும் பலர் உள்ளனர். அந்த மனிதர்கள் நல்லவர்கள் இல்லையா? நல்ல கிரியையைச் செய்யும் தொண்டு நிறுவனங்களும் உள்ளன; அவர்களுடைய கிரியை நல்லதல்லவா?” அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பல வழிகளையும் கோட்பாடுகளையும் பயன்படுத்துகிறது. மனிதனுடைய இந்தக் கேடானது தெளிவற்ற கருத்தாகுமா? இல்லை, அது தெளிவற்றதல்ல. சாத்தான் சில நடைமுறை விஷயங்களையும் செய்கிறது. மேலும், அது இந்த உலகத்திலும் சமூகத்திலும் ஒரு பார்வை அல்லது ஒரு கோட்பாட்டை புகுத்துகிறது. ஒவ்வொரு ராஜாங்கத்திலும் ஒவ்வொரு சகாப்தத்திலும் இது ஒரு கோட்பாட்டை புகுத்துகிறது மற்றும் மனிதனுடைய மனதில் எண்ணங்களை புகுத்துகிறது. இந்த எண்ணங்களும் கோட்பாடுகளும் படிப்படியாக ஜனங்களின் இருதயங்களில் வேரூன்றி, பின்னர் அவற்றால் அவர்கள் ஜீவிக்கத் தொடங்குகின்றனர். இந்த விஷயங்களால் அவர்கள் ஜீவிக்கத் தொடங்கியவுடன், அவர்கள் அறியாமலே சாத்தானாக மாறவில்லையா? ஜனங்கள் சாத்தானுடன் ஒன்றாகவில்லையா? ஜனங்கள் சாத்தானுடன் ஒன்றாகிவிட்டால், இறுதியில் தேவனைப் பற்றிய அவர்களின் மனப்பான்மை என்னவாக இருக்கும்? இது, தேவனிடம் சாத்தான் வைத்திருக்கும் அதே மனப்பான்மை இல்லையா? இதை ஒப்புக்கொள்ள யாரும் துணிவதில்லை, அல்லவா? எவ்வளவு பயங்கரமானது இது! சாத்தானுடைய குணம் தீமையானது என்று நான் ஏன் சொல்கிறேன்? இதை நான் ஆதாரமின்றி சொல்லவில்லை. மாறாக, சாத்தானுடைய குணம் அது செய்த மற்றும் வெளிப்படுத்திய விஷயங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது மற்றும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாத்தான் தீமையானது என்று நான் சொன்னால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? “நிச்சயமாக சாத்தான் தீமையானது” என்று நீங்கள் நினைப்பீர்கள். எனவே, நான் உன்னிடம் கேட்கிறேன்: “சாத்தானுடைய எந்த அம்சங்கள் தீயவை?” “தேவனுக்கு எதிரான சாத்தானுடைய எதிர்ப்பு தீமையானது” என்று நீ சொன்னால், நீ இன்னும் தெளிவுடன் பேசவில்லை. இப்போதும் நான் இவ்வாறு குறிப்பிட்ட காரியங்களைப் பற்றி பேசியுள்ளேன். சாத்தானுடைய தீமையின் சாராம்சத்தின் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைப் பற்றி உங்களுக்குப் புரிதல் இருக்கிறதா? (ஆம்.) சாத்தானுடைய தீய குணத்தை நீங்கள் தெளிவாகக் காண முடிந்தால் உங்கள் சொந்த நிலைமைகளையும் காண்பீர்கள். இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? இது உங்களுக்கு உதவுமா, உதவாதா? (உதவும்.) தேவனுடைய பரிசுத்தத்தின் சாராம்சத்தைப் பற்றி நான் பேசும்போது, சாத்தானுடைய தீய சாராம்சத்தைப் பற்றி நான் பேசுவது அவசியமாகின்றதா? இது குறித்து உங்கள் கருத்து என்ன? (ஆம், அது அவசியமாகும்.) ஏன்? (சாத்தானுடைய தீமையானது தேவனுடைய பரிசுத்தத்தை விலக்கி வைக்கிறது.) அது எப்படி நடக்கின்றது? இது ஓரளவு சரியானது. இல்லை என்றால், தேவன் பரிசுத்தர் என்பதை ஜனங்கள் அறிய மாட்டார்கள். இதைச் சொல்வது சரியாக இருக்கும். இருப்பினும், சாத்தானுடைய தீமைக்கு முரணாக இருப்பதால் மட்டுமே தேவனுடைய பரிசுத்தம், இருக்கின்றது என்று நீ சொன்னால், அது சரியாக இருக்குமா? இந்த எதிர்மறையான சிந்தனை முறை தவறானது. தேவனுடைய பரிசுத்தமானது தேவனுடைய உள்ளார்ந்த சாராம்சம் ஆகும். தேவன் தனது செயல்களின் மூலம் அதை வெளிப்படுத்தும்போது கூட, அது இன்னும் தேவனுடைய சாராம்சத்தின் இயல்பான வெளிப்பாடாகத்தான் இருக்கும். அது இன்னும் தேவனுடைய உள்ளார்ந்த சாராம்சமாகும். அது எப்போதும் இருக்கின்ற ஒன்றாகும். மேலும், அது தேவனுக்கு உள்ளார்ந்ததாகவும், இயல்பாகவும் இருக்கின்றது. இருப்பினும் மனிதனால் அதைப் பார்க்க முடியாது. ஏனென்றால், மனிதன் சாத்தானுடைய கேடான மனப்பான்மைக்கும் சாத்தானுடைய உந்துதலுக்குக் கீழும் ஜீவிக்கிறான். மேலும், அவன் பரிசுத்தத்தையும், தேவனுடைய பரிசுத்தத்தின் குறிப்பிட்ட உள்ளடக்கத்தையும், அறியாதிருக்கிறான். எனவே, முதலாவதாக, சாத்தானுடைய தீய சாராம்சத்தைப் பற்றி நாம் பேசுவது அவசியமாகின்றதா? (ஆம், அது அவசியமாகின்றது.) சிலர் சில சந்தேகங்களை வெளிப்படுத்தக்கூடும்: “நீ தேவனைப் பற்றி பேசுகின்றாய், இந்நிலையில் சாத்தான் ஜனங்களை எவ்வாறு கெடுக்கிறான், சாத்தானுடைய குணம் எவ்வாறு தீமையானது என்பதைப் பற்றி ஏன் எப்போதும் பேசுகின்றீர்கள்?” இப்போது இந்த சந்தேகங்களை நீங்கள் தீர்த்துக் கொண்டீர்கள், அல்லவா? சாத்தானுடைய தீமையைப் பற்றி ஜனங்கள் புரிந்துக்கொள்ளும்போது, அதற்கு ஒரு துல்லியமான வரையறை இருக்கும்போது, தீமையின் குறிப்பிட்ட உள்ளடக்கத்தையும் வெளிப்பாட்டையும், தீமையின் மூலக் காரணத்தையும் சாராம்சத்தையும் ஜனங்கள் தெளிவாகக் காணும்போது தான், தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய விவாதத்தின் மூலமாக, தேவனுடைய பரிசுத்தம் என்றால் என்ன என்பதையும், பரிசுத்தம் என்றால் என்ன என்பதையும் ஜனங்கள் தெளிவாக உணர அல்லது அடையாளம் காண முடியும். நான் சாத்தானுடைய தீமையைப் பற்றி விவாதிக்கவில்லை என்றால், சமுதாயத்திலும் ஜனங்களிடையேயும், ஜனங்கள் செய்யும் சில விஷயங்கள் அல்லது இந்த உலகில் இருக்கும் சில விஷயங்கள், பரிசுத்தத்துடன் தொடர்பில் இருக்கும் என்று சிலர் தவறாக நம்புவார்கள். இது தவறான பார்வை அல்லவா? (ஆம், தவறான பார்வைதான்.)

இப்போது நான் இந்த வழியில் சாத்தானுடைய சாராம்சத்தைப் பற்றி பேசியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளில், தேவனுடைய வார்த்தையைப் படித்ததிலிருந்தும், அவருடைய கிரியையை அனுபவித்ததிலிருந்தும் உங்கள் அனுபவங்களின் மூலம் தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய எத்தகைய புரிதலை நீங்கள் பெற்றுள்ளீர்கள்? அதைப் பற்றி பேசுங்கள். நீ காதுக்கு இன்பம் தரும் சொற்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை, ஆனால் உனது சொந்த அனுபவங்களிலிருந்து பேசு. தேவனுடைய பரிசுத்தமானது அவருடைய அன்பினால் மட்டுமே உள்ளதா? பரிசுத்தம் என்று நாம் விவரிப்பது தேவனுடைய அன்புதானா? அதுவும் ஒருதலைப்பட்சமாக இருக்கும் அல்லவா? தேவனுடைய அன்பைத் தவிர, தேவனுடைய சாராம்சத்தில் வேறு அம்சங்கள் உள்ளனவா? நீங்கள் அவற்றைப் பார்த்ததுண்டா? (ஆம். பண்டிகைகள் மற்றும் விடுமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை தேவன் வெறுக்கிறார். இதுவும் தேவனுடைய பரிசுத்தமாகும்.) தேவன் பரிசுத்தர். எனவே, அவர் விஷயங்களை வெறுக்கிறார். நீங்கள் அதனையா குறிப்பிடுகின்றீர்கள்? அதன் அடிப்படையில், தேவனுடைய பரிசுத்தம் என்றால் என்ன? தேவனுடைய பரிசுத்தத்தில் கணிசமான உள்ளடக்கமும் இல்லை, வெறுப்பு மட்டுமே இருக்கின்றதல்லவா? “தேவன் இந்த தீய விஷயங்களை வெறுக்கிறார். எனவே, தேவன் பரிசுத்தர் என்று ஒருவர் சொல்ல முடியும்” என்று உங்கள் மனதில் நினைக்கின்றீர்களா? இது இங்கே யூகம் அல்லவா? இது ஒரு வகை வெளிப்பாடு மற்றும் கணிப்பு அல்லவா? தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துக்கொள்ளும்போது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய மிகவும் தவறான முயற்சி என்ன? (நாம் யதார்த்தத்தை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக கோட்பாடுகளைப் பற்றி பேசுவது தான்.) இது மிகவும் தவறான செயல் ஆகும். வேறு ஏதேனும் உள்ளதா? (யூகம் மற்றும் கற்பனை.) இவை மிகவும் தீவிரமான தவறான செயல் ஆகும். யூகமும் கற்பனையும் ஏன் பயனுள்ளதாக இல்லை? நீ யூகிக்கும் விஷயங்கள் மற்றும் நீ கற்பனை செய்கின்ற விஷயங்கள் உண்மையிலேயே பார்க்கக்கூடிய விஷயங்கள் ஆகுமா? அவை தேவனுடைய உண்மையான சாராம்சம் ஆகுமா? (இல்லை.) வேறு எதைத் தவிர்க்க வேண்டும்? தேவனுடைய சாராம்சத்தை விவரிக்க இனிமையான சொற்களைக் கோர்வையாக ஓதுவது தவறான ஒன்றாகுமா? (ஆம்.) இது பிரமாண்டமான மற்றும் முட்டாள்தனமானதல்லவா? கணிப்பும் யூகங்களும் முட்டாள்தனமானவை, அதேபோல் இனிமையான சொற்களைத் தேர்ந்தெடுக்கும் செயலும் முட்டாள்தனமானது. வெற்றுப் புகழும் முட்டாள்தனமானது, அல்லவா? இத்தகைய முட்டாள்தனங்களை ஜனங்கள் கேட்பதை தேவன் விரும்புகின்றாரா? (இல்லை, அவர் விரும்பவில்லை.) அவர் அதைக் கேட்கும்போது அவருக்குச் சங்கடமாக இருக்கிறது! தேவன் ஒரு ஜனக்கூட்டத்தை வழிநடத்திக் காப்பாற்றும்போது, இந்த ஜனங்கள் அவருடைய வார்த்தைகளைக் கேட்டபின், அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். யாராவது கேட்கலாம்: “தேவன் நல்லவரா?” அவர்கள், “ஆம்!” என்று பதிலளிப்பார்கள். “எவ்வளவு நல்லவர்?” “மிகவும் நல்லவர்!” “தேவன் மனிதனை நேசிக்கிறாரா?” “ஆம்!” “எவ்வளவு? அதை விவரிக்க முடியுமா?” “மிகவும் அதிகமாக! தேவனுடைய அன்பு கடலை விட ஆழமானது, வானத்தை விட உயர்ந்தது!” இந்த வார்த்தைகள் முட்டாள்தனமானவை அல்லவா? இந்த முட்டாள்தனம் நீங்கள் சொன்னதற்கு ஒத்த முட்டாள்தனம் அல்ல: “தேவன் சாத்தானுடைய கேடான மனநிலையை வெறுக்கிறார். எனவே தேவன் பரிசுத்தர்” அல்லவா? (ஆம்.) நீங்கள் இப்போது சொன்னது முட்டாள்தனமல்லவா? சொல்லப்படும் பெரும்பாலான முட்டாள்தனமான விஷயங்கள் எங்கிருந்து வருகின்றன? முதன்மையாக கூறப்படும் முட்டாள்தனமான விஷயங்கள் ஜனங்களின் பொறுப்பற்ற குணம் மற்றும் தேவனுக்கான அவமரியாதையிலிருந்து வருகிறது. நாம் அதைச் சொல்ல முடியுமா? உனக்கு எந்தப் புரிதலும் இல்லை, நீ இன்னும் முட்டாள்தனமாகவே பேசுகிறாய். அது பொறுப்பற்றது அல்லவா? அது தேவனுக்கு அவமரியாதை அல்லவா? நீ சில அறிவைக் கற்றுக்கொண்டிருக்கிறாய், சில பகுத்தறிவையும் தர்க்கத்தையும் புரிந்துகொண்டிருக்கிறாய், நீ இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறாய் மற்றும் தேவனைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாக இதைச் செய்திருக்கிறாய். நீ அப்படி பேசுவதைக் கேட்கும்போது தேவன் வருத்தப்படுவார் என்று நினைக்கிறாயா? இந்த முறைகளைப் பயன்படுத்தி தேவனை எவ்வாறு அறிய முயற்சி செய்யலாம்? நீ அப்படிப் பேசும்போது, அது மோசமாகத் தெரியவில்லையா? எனவே, தேவனைப் பற்றிய அறிவைப் பெறும்போது, ஒருவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீ தேவனை அறிந்த அளவிற்கு மட்டுமே பேசு. நேர்மையாகவும் நடைமுறையிலும் பேசு. உன் வார்த்தைகளை சாதுவான புகழ்ச்சிகளால் அலங்கரிக்காதே. முகஸ்துதியை பயன்படுத்த வேண்டாம். தேவனுக்கு அது தேவையில்லை. இத்தகைய விஷயம் சாத்தானிடமிருந்து வருகிறது. சாத்தானுடைய மனநிலை ஆணவமானது. சாத்தான் முகஸ்துதி செய்வதற்கும் நல்ல வார்த்தைகளைக் கேட்பதற்கும் விரும்புகிறான். ஜனங்கள் தாங்கள் கற்றுக்கொண்ட அனைத்து இனிமையான வார்த்தைகளையும் ஓதி சாத்தானுக்குப் பயன்படுத்தினால் சாத்தான் மகிழ்ச்சியடைவான், சந்தோஷமாக இருப்பான். ஆனால் தேவனுக்கு அது தேவையில்லை. தேவனுக்கு வணக்கம் அல்லது முகஸ்துதி தேவையில்லை. ஜனங்கள் முட்டாள்தனமாகப் பேசுவதும் அவரைக் கண்மூடித்தனமாகப் புகழ்வதும் அவருக்குத் தேவையில்லை. தேவன் அதை வெறுக்கிறார், யதார்த்தத்துடன் ஒத்துப்போகாத புகழையும் புகழ்ச்சியையும் கேட்கக் கூட மாட்டார். எனவே, சிலர் தேவனை நேர்மையற்ற முறையில் புகழ்ந்து, கண்மூடித்தனமாகச் சபதம் செய்து, அவரிடம் ஜெபிக்கும்போது, தேவன் சிறிதும் செவிசாய்ப்பதில்லை. நீ சொல்லும் வார்த்தைகளுக்கு நீ பொறுப்பேற்க வேண்டும். உனக்கு ஏதேனும் தெரியாவிட்டால், அப்படிச் சொல். உனக்கு ஏதாவது தெரிந்தால், அதை நடைமுறையில் வெளிப்படுத்து. எனவே, தேவனுடைய பரிசுத்தம் குறிப்பாக மற்றும் உண்மையில் எதைக் குறிக்கிறது என்பதைப் பொறுத்தவரையில், அதைப் பற்றி உங்களுக்கு உண்மையான புரிதல் இருக்கிறதா? (நான் கலகம் செய்தபோது, நான் மீறுதல்களைச் செய்தபோது, தேவனுடைய நியாத்தீர்ப்பையும் சிட்சையையும் பெற்றேன், அதில் தேவனுடைய பரிசுத்தத்தைக் கண்டேன். எனது எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத சூழல்களை நான் சந்தித்தபோது, நான் இந்த விஷயங்களைப் பற்றி ஜெபித்தேன், தேவனுடைய நோக்கங்களை நான் தேடினேன், தேவன் எனக்கு வெளிப்பாடுகளைக் கொடுத்து, அவருடைய வார்த்தைகளால் என்னை வழிநடத்தியபோது, தேவனுடைய பரிசுத்தத்தைக் கண்டேன்.) இது உங்கள் சொந்த அனுபவத்திலிருந்து நீங்கள் கூறியதாகும். (தேவன் இதைப் பற்றி கூறியதிலிருந்து, சாத்தானால் மனிதன் கெடுக்கப்பட்டு, காயப்பட்டபின் என்ன ஆனான் என்பதை நான் கண்டேன். ஆயினும், தேவன் நம்மைக் இரட்சிக்க எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். இதிலிருந்து தேவனுடைய பரிசுத்தத்தை நான் காண்கிறேன்.) இது ஒரு யதார்த்தமாக பேசுகின்ற முறை ஆகும். அது உண்மையான அறிவு. இதைப் புரிந்துகொள்ள வேறு வழிகள் உள்ளனவா? (ஏவாளை பாவத்திற்குள்ளாக்குவதற்கும், கர்த்தராகிய இயேசுவைச் சோதனை செய்வதற்கும் சாத்தான் பேசிய வார்த்தைகளிலிருந்து சாத்தானுடைய தீமையை நான் காண்கிறேன். தாங்கள் எதைச் சாப்பிடலாம் மற்றும் எதைச் சாப்பிடக் கூடாது என்று ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் சொன்ன வார்த்தைகளிலிருந்து, தேவன் நேராகவும், தெளிவாகவும், நம்பகத் தன்மையுடனும் பேசுவதை நான் காண்கிறேன். இதிலிருந்து நான் தேவனுடைய பரிசுத்தத்தைக் காண்கிறேன்.) மேற்கண்ட கருத்துக்களைக் கேட்டபின், யாருடைய வார்த்தைகள் உங்களை “ஆமென்” என்று சொல்லத் தூண்டுகின்றன? இன்று நம் கலந்துரையாடலின் தலைப்புக்கு யாருடைய பேச்சு மிகவும் நெருக்கமாக இருந்தது? யாருடைய வார்த்தைகள் மிகவும் யதார்த்தமானவை? கடைசி சகோதரியின் ஐக்கியம் எப்படி இருந்தது? (நன்றாக இருந்தது.) அவர் சொன்னதற்கு “ஆமென்” என்று சொல்கின்றீர்கள். சரியான இலக்கு என்று அவர் எதைச் சொன்னார்? (இப்போது இந்தச் சகோதரி பேசிய வார்த்தைகளில், தேவனின் வார்த்தை நேரடியானது மற்றும் மிகவும் தெளிவானது என்றும், அது சாத்தானுடைய மறைமுகப் பேச்சு போன்றதல்ல என்றும் நான் கேட்டுள்ளேன். இதில் தேவனுடைய பரிசுத்தத்தை நான் கண்டேன்.) இது ஒரு பகுதியாகும். இது சரியாக இருந்ததா? (ஆம்.) மிகவும் நன்று. கடந்த இரண்டு கலந்துரையாடல்களில் நீங்கள் சில கருத்துக்களைப் பெற்றுள்ளீர்கள் என்று நான் காண்கிறேன். ஆனால், நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய காரணம் என்னவென்றால், தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துகொள்வது மிகவும் ஆழமான படிப்பினை ஆகும். இது ஒரே இரவில் ஒருவர் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று அல்ல, அல்லது ஒரு சில சொற்களால் தெளிவாக வெளிப்படுத்தக்கூடியவை அல்ல.

ஜனங்களுடைய கேடு நிறைந்த சாத்தானிய மனநிலை, அறிவு, தத்துவம், ஜனங்களின் கருத்துக்கள் மற்றும் கண்ணோட்டங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் சில தனிப்பட்ட அம்சங்கள் என இவை தேவனுடைய சாராம்சத்தை அறிந்து கொள்வதிலிருந்து ஒருவரைப் பெரிதளவில் தடுக்கின்றன. எனவே, இந்தத் தலைப்புகளை நீ கேட்கும்போது, அவற்றில் சில உங்கள் வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். சில உங்களுக்குப் புரியாமல் போகலாம். சிலவற்றை நீங்கள் அடிப்படையில் யதார்த்தத்துடன் பொருத்த முடியாமல் போகலாம். எனினும், தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய உங்கள் புரிதலைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி நான் சொன்னதையும் பேசியதையும் உங்கள் இருதயங்களில் நீங்கள் ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டீர்கள் என்பதை நான் அறிவேன். தேவனுடைய பரிசுத்தத்தின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள உங்கள் விருப்பம் துளிர்விடத் தொடங்குகிறது என்பதை நான் அறிவேன். ஆனால், என்னை இன்னும் மகிழ்ச்சியடையச் செய்வது என்னவென்றால், தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய உங்கள் அறிவை விவரிக்க உங்களில் சிலர் ஏற்கனவே எளிய சொற்களைப் பயன்படுத்த முடிந்தது தான். இது ஒரு எளிமையான விஷயம் என்றாலும், இதை நான் முன்பே சொல்லியிருந்தாலும், உங்களில் பெரும்பாலானோரின் இருதயங்களில், நீங்கள் இன்னும் இந்த வார்த்தைகளை ஏற்கவில்லை. உண்மையில் அவை உங்கள் மனதில் எந்த எண்ணத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆயினும்கூட, உங்களில் சிலர் இந்த வார்த்தைகளை நினைவாற்றலுக்கு உட்படுத்தியுள்ளீர்கள். இது மிகவும் நல்லது மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய தொடக்கமாகும். ஆழமானதாக நீங்கள் கருதும் தலைப்புகள் அல்லது உங்கள் எல்லைக்கு அப்பாற்பட்ட தலைப்புகள் குறித்து நீங்கள் மேலும் மேலும் சிந்தித்துப் பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் புரிந்துகொள்ள, அடைய முடியாத காரியங்களுக்கு, உங்களுக்கு கூடுதல் வழிகாட்டுதல்களை வழங்க யாராவது இருப்பார்கள். இப்போதும் நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய பகுதிகள் குறித்து நீங்கள் அதிகமாகக் கலந்துரையாடினால், பரிசுத்த ஆவியானவர் அவருடைய கிரியையைச் செய்வார். மேலும், நீங்கள் அதிகப் புரிதலுக்கு வருவீர்கள். தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்து கொள்வதும், தேவனுடைய சாராம்சத்தை அறிந்து கொள்வதும் ஜனங்கள் ஜீவனுக்குள் நுழைவதற்கு மிக முக்கியமானதாகும். தேவனை அறிந்து கொள்வது மனிதனுடைய நம்பிக்கையின் அடித்தளமாகவும், மனிதன் சத்தியத்தைத் தொடரவும், இரட்சிப்பை அடையவும் முக்கியமாகும் என்பதால், இதை நீங்கள் புறக்கணிக்கவோ அல்லது ஒரு விளையாட்டாகவோ பார்க்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஜனங்கள் தேவனை நம்பியும், அவரை இன்னும் அறியவில்லை என்றால், அவர்கள் வார்த்தைகளிலும் கோட்பாடுகளிலும் மட்டுமே நம்பிக்கை வைத்து ஜீவித்தால், அவர்கள் உண்மையின் மேலோட்டமான அர்த்தத்திற்கு ஏற்ப செயல்பட்டு ஜீவித்தாலும், அவர்கள் ஒருபோதும் இரட்சிப்பை அடைய முடியாது. அதாவது, நீங்கள் தேவனை நம்புகிறாய், ஆனால் அவரை அறியவில்லை என்றால், உனது விசுவாசம் அனைத்தும் பயனற்றது. அதில் உண்மையான எதுவும் இல்லை. உங்களுக்குப் புரிகின்றது, அல்லவா? (ஆம், நாங்கள் புரிந்து கொள்கிறோம்.) நம்முடைய கலந்துரையாடல் இன்று இங்கே முடிவடையும்.

ஜனவரி 4, 2014

முந்தைய: தேவனே தனித்துவமானவர் IV

அடுத்த: தேவனே தனித்துவமானவர் VI

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக