தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II

நமது கடைசி அமர்வின் போது நாம் ஒரு மிக முக்கியமான தலைப்பைப் பற்றி பேசினோம். அது என்னவென்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை மீண்டும் சொல்கிறேன். நமது கடைசி அமர்வின் தலைப்பு: தேவனுடைய கிரியை, தேவனுடைய மனநிலை மற்றும் தேவனை பற்றியதாகும். இந்த தலைப்பு உங்களுக்கு முக்கியமானதா? அதன் எந்த பகுதி உங்களுக்கு மிகவும் முக்கியமானது? தேவனுடைய கிரியையா, தேவனுடைய மனநிலையா அல்லது தேவனை பற்றியா? எது உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது? எந்தப் பகுதியைப் பற்றி அதிகம் கேட்க விரும்புகிறீர்கள்? அந்த கேள்விக்கு நீங்கள் பதிலளிப்பது கடினம் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், தேவனுடைய மனநிலையை அவருடைய கிரியையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம். மேலும், அவருடைய மனநிலையானது அவருடைய கிரியையில் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது மற்றும் தேவனைக் குறிக்கிறது. தேவனுடைய ஒட்டுமொத்த ஆளுகைத் திட்டத்தில், தேவனுடைய கிரியை, தேவனுடைய மனநிலை மற்றும் தேவனே என அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாமால் இருக்கிறது.

தேவனுடைய கிரியையைப் பற்றிய நமது கடைசி அமர்வின் உள்ளடக்கமானது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகளைப் பற்றிய வேதாகமத்திலிருந்து வரும் விவரங்களைக் கொண்டிருந்தது. அவை அனைத்தும் மனிதனையும் தேவனையும் பற்றிய கதைகளாக இருந்தன. அவை மனிதனுக்கு நடந்த விஷயங்களைப் பற்றியும், தேவனுடைய பங்கேற்பு மற்றும் வெளிப்பாட்டையும் உள்ளடக்கியது. எனவே, இந்த கதைகள் தேவனை அறிவதற்கு குறிப்பிட்ட மதிப்பையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன. தேவன் மனிதகுலத்தைப் படைத்த பின்னரே, மனிதனுடன் பழகவும் பேசவும் தொடங்கினார். அவருடைய மனநிலை மனிதனுக்கு வெளிப்படத் தொடங்கியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மனிதகுலத்துடன் முதன்முதலாக ஈடுபட்டதிலிருந்து, குறுக்கீடு இல்லாமல், தம்முடைய சாராம்சத்தையும், தன்னையும், தன்னிடம் இருகின்றவற்றையும் மனிதனுக்கு வெளிப்படையாக காண்பிக்கத் தொடங்கினார். முந்தைய மனிதர்களாலோ அல்லது இன்றைய ஜனங்களாலோ அதைப் பார்க்கவோ புரிந்துக்கொள்ளவோ முடியுமா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவன் மனிதனிடம் பேசுகிறார், மனிதர்களிடையே செயல்படுகிறார், அவருடைய மனநிலையை வெளிப்படுத்துகிறார் மற்றும் அவருடைய சாராம்சத்தை வெளிப்படுத்துகிறார்—இது ஒரு உண்மை மற்றும் எந்தவொரு மனிதரும் மறுக்க முடியாத ஒன்றாகும். தேவன் மனிதனுடன் இணைந்து செயல்படுகையில் தேவனுடைய குணம், தேவனுடைய சாராம்சம், மற்றும் தேவனும், அவரிடம் உள்ளவையும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன என்பதையும் இது உணர்த்தும். அவர் ஒருபோதும் மனிதனிடமிருந்து எதையும் ஒளிக்கவோ மறைக்கவோ இல்லை. மாறாக தனது மனநிலையை வெளிப்படையாகக் காட்டி எதையும் மறைக்காமல் தனது சொந்த மனநிலையை வெளியிடுகிறார். இவ்வாறு, மனிதனானவன் தன்னை அறிந்துக்கொள்ள முடியும் என்றும், அவனது மனநிலையையும் சாராம்சத்தையும் புரிந்துக்கொள்ள முடியும் என்றும் தேவன் நம்புகிறார். தன் மனநிலையையும் சாராம்சத்தையும் என்றும் உள்ள மர்மங்களாக மனிதன் கருதுவதை அவர் விரும்பவில்லை. மனிதகுலம் தேவனை ஒருபோதும் தீர்க்க முடியாத ஒரு புதிராக கருதுவதை அவர் விரும்பவில்லை. மனிதகுலம் தேவனை அறிந்தால் மட்டுமே மனிதன் முன்னோக்கி செல்லும் வழியை அறிந்து தேவனுடைய வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள முடியும். இது போன்ற மனிதகுலத்தால் மட்டுமே தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் உண்மையிலேயே ஜீவிக்க முடியும். தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு மத்தியிலான வெளிச்சத்தில் ஜீவிக்க முடியும்.

தேவனால் வெளியிடப்பட்ட மற்றும் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளும் மனநிலையும் அவருடைய சித்தத்தை பிரதிபலிக்கின்றன. அவை அவருடைய சாராம்சத்தைக் குறிக்கின்றன. தேவன் மனிதனுடன் கிரியை செய்யும் போது, அவர் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அல்லது அவர் எந்த மனநிலையை வெளிப்படுத்தினாலும், தேவனுடைய சாராம்சத்தில் மனிதன் அவரிடம் என்ன இருக்கிறது, அவர் என்னவாக இருக்கிறார் என எதைப் பார்த்தாலும், இவை அனைத்தும் மனிதனுக்கான தேவனுடைய சித்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மனிதனால் எவ்வளவு உணர்ந்துக்கொள்ள, அறிந்துக்கொள்ள அல்லது புரிந்துக்கொள்ள முடிந்தாலும், இவை அனைத்தும் தேவனுடைய சித்தத்தை பிரதிபலிக்கின்றன, அதாவது மனிதனுக்கான தேவனுடைய சித்தத்தை பிரதிபலிக்கின்றன. இது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது! மனிதகுலத்திற்கான தேவனுடைய சித்தம் என்னவென்றால், மனிதர்கள் எவ்வாறு இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்படி ஜீவிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதாகும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் அவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதுமாகும். இவை தேவனுடைய சாராம்சத்திலிருந்து பிரிக்க முடியாதவையா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் தனது மனநிலையையும், தன்னையும், தன்னிடம் உள்ள அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். அதே நேரத்தில், அவர் மனிதனுடைய எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறார். எந்த பொய்யும் இல்லை, பாசாங்கும் இல்லை, மறைவானதும் இல்லை மற்றும் அலங்காரமும் இல்லை. ஆயினும்கூட, மனிதனால் ஏன் தெரிந்துக்கொள்ள மற்றும் தேவனுடைய மனநிலையை தெளிவாக உணர முடியவில்லை? தேவனுடைய சித்தத்தை மனிதன் ஏன் உணரவில்லை? தேவனால் வெளிப்படுத்தப்பட்டு வெளியிடப்படுவது தேவனும், தேவனிடம் உள்ளவையும் ஆகும். அது அவருடைய உண்மையான மனநிலையின் ஒவ்வொரு சிறு பகுதியும் அம்சமும் ஆகும்—எனவே மனிதனால் ஏன் அதைப் பார்க்க முடியாது? பூரணமான அறிவை மனிதனால் ஏன் பெற இயலாது? இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இந்நிலையில், அந்த காரணம் என்ன? சிருஷ்டிப்பின் காலம் முதல், மனிதன் தேவனை ஒருபோதும் தேவனாக கருதியதில்லை. ஆதி காலங்களில், மனிதனைப் பொறுத்தவரையில் தேவன் என்ன செய்தாலும், மனிதன்—அப்போது சிருஷ்டிக்கப்பட்டிருந்த மனிதன்—தேவனை ஒரு தோழராக மட்டுமே கருதினான், தான் நம்பும் ஒருவாராகக் கருதினான். மனிதனுக்கு தேவனைப் பற்றிய அறிவோ புரிதலோ இல்லை. அதாவது, தேவனால் வெளிப்படுத்தபட்டவை மனிதனுக்குத் தெரியாது—அவன் நம்பியிருந்த மற்றும் தனது தோழராகக் காணப்பட்டவர் தேவனுடைய சாராம்சம் என்று அவன் அறிந்திருக்கவில்லை அல்லது அனைவரையும் ஆளக்கூடியவர் இவர்தான் என்று அவன் அறிந்திருக்கவில்லை. எளிமையாகச் சொன்னால், அக்கால ஜனங்கள் தேவனை ஒருபோதும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. வானங்களும், பூமியும், எல்லா படைப்புகளும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர் எங்கிருந்து வந்தார் என்பதையும், அவர் யார் என்பதையும் அவர்கள் அறியாதவர்களாக இருந்தார்கள். நிச்சயமாக, மனிதன் தேவனைத் தெரிந்துக்கொள்ளவோ புரிந்துக்கொள்ளவோ அல்லது அவர் செய்த அனைத்தையும் புரிந்துக்கொள்ளவோ அல்லது அவருடைய சித்தத்தைப் பற்றி அறிந்திருக்கவோ வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், இவை மனிதகுலத்தின் சிருஷ்டிப்பின் காலத்தைத் தொடர்ந்து வந்த ஆதி காலங்கள் ஆகும். தேவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் கிரியைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியபோது, தேவன் மனிதனிடம் சில காரியங்களைச் செய்தார். மனிதனிடம் சில எதிர்பார்ப்புகளையும் செய்யத் தொடங்கினார். தேவனுக்கு எவ்வாறு பலியிட வேண்டும், வணங்க வேண்டும் என்று மனிதனுக்குச் சொன்னார். அப்போது தான் மனிதன் தேவனைப் பற்றிய சில எளிய யோசனைகளைப் பெற்றான். அப்போது தான் மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள வித்தியாசத்தை அவன் அறிந்திருந்தான். மனிதனைப் படைத்தவன் தேவன். தேவன் தான் தேவன் என்றும் மனிதன் தான் மனிதன் என்றும் மனிதன் அறிந்தபோது, அவனுக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தது. ஆனாலும் மனிதனுக்கு அவனைப் பற்றி ஒரு பெரிய அறிவு அல்லது ஆழமான புரிதல் இருக்க வேண்டுமென தேவன் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு, தேவன் தனது கிரியையின் நிலைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனிதனிடமிருந்து வெவ்வேறு காரியங்களை எதிர்பார்க்கிறார். இதில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? தேவன் உண்மையானவரா? மனிதனிடமான தேவனுடைய எதிர்பார்ப்பு பொருத்தமானவையா? தேவனுடைய மனிதகுலத்தின் சிருஷ்டிப்பைத் தொடர்ந்து வந்த ஆதி காலங்களில், மனிதனை ஜெயிக்கும் மற்றும் பூரணமாக்கும் கிரியையை தேவன் இன்னும் செய்யவில்லை. அவனிடம் பல வார்த்தைகளைப் பேசவில்லை. அவர் மனிதனிடம் குறைவாகத்தான் எதிர்பார்த்தார். மனிதன் என்ன செய்தான், எப்படி நடந்துக்கொண்டான் என்பதைப் பொருட்படுத்தாமல்—தேவனை புண்படுத்தும் சில காரியங்களைச் செய்தாலும்—தேவன் மன்னித்து அனைத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தார். ஏனென்றால், மனிதனுக்கு எதைக் கொடுத்தார், மனிதனுக்குள் என்ன இருக்கிறது என்பதை தேவன் அறிந்திருந்தார். ஆகவே, அவர் மனிதனிடம் எதிர்பார்க்கும் தேவைகளின் தரத்தை அவர் அறிந்திருந்தார். அந்த நேரத்தில் அவருடைய தேவைகளின் தரம் மிகக் குறைவாக இருந்தபோதிலும், அதற்கு அவருடைய மனநிலை பெரிதாக இல்லை என்றோ அவருடைய ஞானமும் சர்வ வல்லமையும் வெற்று வார்த்தைகள் மட்டுமே என்றோ அர்த்தமாகாது. மனிதனைப் பொறுத்தவரையில், தேவனுடைய மனநிலையையும் தேவனையும் அறிந்துக்கொள்ள ஒரே ஒரு வழி தான் இருக்கிறது: தேவனுடைய ஆளுகை மற்றும் மனிதகுலத்தின் இரட்சிப்பின் கிரியைகளின் படிகளைப் பின்பற்றுவதன் மூலமும், தேவன் மனிதர்களிடம் பேசும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும் அறிந்துக்கொள்ள முடியும். தேவனும் தேவனிடம் உள்ளதும் என்ன என்பதை மனிதன் அறிந்த பிறகும், தேவனுடைய மனநிலையை அறிந்த பிறகும், தனது உண்மையான இயல்பைக் காட்டும்படி மனிதன் தேவனிடம் கேட்பானா? இல்லை, மனிதன் கேட்கமாட்டான், கேட்கக்கூடத் துணியமாட்டான். ஏனென்றால், தேவனுடைய மனநிலையையும், தேவனையும் அவரிடம் உள்ளது என்ன என்பதையும் புரிந்துக்கொண்டதால், மனிதன் ஏற்கனவே உண்மையான தேவனையும், அவரது உண்மையான இயல்பையும் பார்த்திருப்பான். இது தவிர்க்க முடியாத விளைவாகும்.

தேவனுடைய கிரியையும் திட்டமும் இடைவிடாமல் முன்னேறியதும், வெள்ளத்தைப் பயன்படுத்தி உலகை மீண்டும் ஒருபோதும் அழிக்க மாட்டார் என்பதற்கான அடையாளமாக தேவன் மனிதனுடன் வானவில் உடன்படிக்கையை நிறுவியதும், தன்னுடன் ஒரே மனநிலையோடு இருக்கக் கூடியவர்களைப் பெற தேவனுக்கு அதிகமாக அழுத்தம் இருந்தது. ஆகவே, பூமியில் தம்முடைய சித்தத்தைச் செய்ய முடிந்தவர்களைப் பெறவும், இருளின் வல்லமைகளிலிருந்து விடுபடவும், சாத்தானால் கட்டுப்படாமல் இருக்கவும் கூடிய ஒரு கூட்டத்தைப் பெறவும், பூமியில் அவருக்கு சாட்சி அளிக்கக்கூடிய ஒரு கூட்டத்தைப் பெறவும் அவருக்கு அவசர சித்தம் இருந்ததா? அத்தகைய ஒரு கூட்டத்தைப் பெறுவது தேவனுடைய நீண்டகால சித்தமாக இருந்தது, சிருஷ்டிப்பு காலத்திலிருந்தே அவர் எப்போதும் காத்திருந்தார். ஆகவே, உலகை அழிக்க தேவன் பயன்படுத்திய வெள்ளம் அல்லது மனிதனுடனான உடன்படிக்கை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய சித்தம், மனதின் கட்டமைப்பு, திட்டம் மற்றும் நம்பிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அவர் செய்ய விரும்பியது என்னவென்றால், சிருஷ்டிப்பு காலத்திற்கு முன்பே அவர் ஏங்கிக்கொண்டிருந்த விஷயம், மனிதர்களிடையே அவர் பெற விரும்பிய மனிதர்களைப் பெறுவது—அவருடைய மனநிலையைப் புரிந்துக்கொள்ளவும் அறிந்துக்கொள்ளவும், அவருடைய சித்தத்தை புரிந்துக்கொள்ளவும் கூடிய ஒரு கூட்டத்தைப் பெறுவது, அவரை வணங்கக்கூடிய ஒரு கூட்டத்தைப் பெறுவது ஆகியனவாகும். அத்தகைய ஜனங்கள் கூட்டம் உண்மையிலேயே அவருக்கு சாட்சியளிக்க முடியும். மேலும், அவர்கள் அவருடைய நம்பிக்கைக்குரியவர்கள் என்றும் கூறலாம்.

இன்று, தேவனுடைய அடிச்சுவடுகளைத் திரும்பவும் தேடி நாடுவதும், அவருடைய கிரியையின் படிகளைப் பின்பற்றுவதும், இதனால் தேவனுடைய எண்ணங்களையும் யோசனைகளையும், தேவனுடன் செய்ய வேண்டிய பல்வேறு விவரங்களையும் நாம் வெளிக்கொணரலாம். இவை அனைத்தும் மிக நீண்ட காலமாக “முத்திரைப் போடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது”. இந்த விஷயங்களின் மூலம் நாம் தேவனுடைய குணத்தை அறிந்துக் கொள்வோம். தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துக்கொள்வோம். தேவனை நம் இருதயங்களில் அனுமதிப்போம். நாம் ஒவ்வொருவரும் மெதுவாக தேவனிடம் நெருங்கி வருவோம். தேவனிடமிருந்து நம் தூரத்தை குறைப்போம்.

கடந்த முறை நாம் பேசியவற்றின் ஒரு பகுதி, தேவன் ஏன் மனிதனுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார் என்பதாகும். இப்போது, கீழே உள்ள வேதாகமத்தின் பத்திகளைப் பற்றி நாம் பேசுவோம். நாம் வேதாகமத்தில் வாசிப்பதிலிருந்து தொடங்குவோம்.

அ. ஆபிரகாம்

1. ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைக் கொடுப்பதாக தேவன் வாக்குத்தத்தம் அளிக்கிறார்

ஆதி. 17:15-17 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு.

ஆதி. 17:21-22 வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.

2. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடுகிறார்

ஆதி. 22:2-3 அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆபிரகாம்அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

ஆதி. 22:9-10 தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம்ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம்தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.

தேவன் தீர்மானம் செய்த கிரியையை யாராலும் தடுக்க முடியாது

எனவே, நீங்கள் அனைவரும் ஆபிரகாமின் கதையை இப்போது தான் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். வெள்ளம் உலகை அழித்தபின் அவர் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய நாமம் ஆபிரகாம். அவர் நூறு வயதானவராகவும் அவரது மனைவி சாரா தொண்ணூறு வயதானவராகவும் இருந்தபோது, தேவனுடைய வாக்குத்தத்தம் அவருக்கு வந்தது. தேவன் அவருக்கு என்ன வாக்குத்தத்தம் அளித்தார்? வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல தேவன் வாக்குத்தத்தம் அளித்தார்: “நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்.” அவருக்கு ஒரு மகனைக் கொடுப்பதாக தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின் பின்னணி என்ன? வேதவாக்கியங்கள் பின்வரும் விவரத்தை அளிக்கின்றன: “அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ?” என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு இருந்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த வயதான தம்பதியினர் குழந்தைகளை கர்ப்பத்தில் தாங்க முடியாத அளவுக்கு வயதானவர்கள். தேவன் அவருக்கு வாக்களித்தப் பிறகு ஆபிரகாம் என்ன செய்தார்? அவர் சிரித்தபடி முகங்குப்புற விழுந்து, “நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ?” என்று தன்னைக் குறித்து தனக்குள்ளே நினைத்துக் கொண்டார். ஆபிரகாம் அது சாத்தியமற்றது என்று நம்பினார்—அதாவது தேவன் தனக்கு அளித்த வாக்குத்தத்தத்தை நகைச்சுவை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அவர் நம்பினார். மனிதனுடைய பார்வையில், இது மனிதனால் அடைய முடியாத ஒன்று, அதைப் போலவே தேவனால் செய்ய முடியாத ஒன்று மற்றும் இது தேவனுக்கு சாத்தியமற்றது. ஆபிரகாமுக்கு இது சிரிப்புக்குரியதாக இருந்தது: தேவன் மனிதனைப் படைத்தார், எனினும் இவ்வளவு வயதான ஒருவர் குழந்தைகளைப் பெற்றெடுக்க இயலாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க அவர் என்னை அனுமதிக்க முடியும் என்று தேவன் நினைக்கிறார். அவர் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பார் என்று கூறுகிறார்—நிச்சயமாக அது சாத்தியமற்றது! ஆகவே, ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்துக் கொண்டார். தன்னைப் பற்றி தனக்குள் சிந்தித்துக் கொண்டார்: சாத்தியமற்றது—தேவன் என்னிடம் கேலி செய்கிறார். இது உண்மையாக இருக்க முடியாது! அவர் தேவனுடைய வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், தேவனுடைய பார்வையில், ஆபிரகாம் எப்படிப்பட்ட மனிதர்? (நீதிமான்.) அவர் ஒரு நீதியுள்ள மனிதர் என்று எங்கே கூறப்பட்டது? தேவன் அழைக்கும் அனைவரும் நீதிமான்கள், பரிபூரணர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்கள் அனைவரும் தேவனோடு நடப்பவர்கள். நீங்கள் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கிறீர்கள்! தேவன் ஒருவரை வரையறுக்கும்போது, அவர் தன்னிச்சையாக அவ்வாறு செய்வதில்லை என்பதை நீங்கள் தெளிவாகக் காண வேண்டும். இங்கே, ஆபிரகாம் நீதியுள்ளவர் என்று தேவன் சொல்லவில்லை. அவருடைய இருதயத்தில், ஒவ்வொரு நபரையும் அளவிடுவதற்கான தரநிலைகளை தேவன் வைத்திருக்கிறார். ஆபிரகாம் எந்த வகையான மனிதர் என்று தேவன் சொல்லவில்லை என்றாலும், அவருடைய நடத்தை அடிப்படையில், ஆபிரகாம் தேவன் மீது எத்தகைய விசுவாசத்தை வைத்திருந்தார்? அது பலனற்றதாக இருந்ததா? அல்லது அவர் மிகுந்த விசுவாசத்துடன் இருந்தாரா? இல்லை, அவர் மிகுந்த விசுவாசத்துடன் இருக்கவில்லை! அவரது சிரிப்பும் எண்ணங்களும் அவர் யார் என்பதைக் காட்டியது. எனவே, அவர் நீதியுள்ளவர் என்ற உங்களுடைய நம்பிக்கையானது ஒரு கற்பனையின் உருவம் மட்டுமே. இது கோட்பாட்டின் கண்மூடித்தனமான பயன்பாடு ஆகும். அது பொறுப்பற்ற மதிப்பீடாகும். தேவன், ஆபிரகாமின் நகைப்பையும் அவரது சிறிய வெளிப்பாடுகளையும் பார்த்தாரா? அவர் அவற்றை அறிந்திருந்தாரா? தேவன் அறிந்திருந்தார். ஆனால், தேவன் செய்யத் தீர்மானித்ததை மாற்றுவாரா? இல்லை! இந்த மனிதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேவன் திட்டமிட்டு தீர்மானித்தபோது, அது நிறைவேறியது. மனிதனுடைய எண்ணங்களோ அல்லது அவனது நடத்தையோ சிறிதளவு செல்வாக்கு செலுத்தவோ அல்லது தேவனுடைய காரியத்தில் தலையிடவோ முடியாது. தேவன் தன்னுடைய திட்டத்தை தன்னிச்சையாக மாற்றமாட்டார். மனிதனுடைய நடத்தை, அறியாமை போன்ற நடத்தைகள் காரணமாக அவர் தனது திட்டத்தை திடீரென மாற்றவோ வருத்தப்படவோ மாட்டார். அப்படியானால், ஆதியாகமம் 17:21–22 இல் என்ன எழுதப்பட்டுள்ளது? “வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.” ஆபிரகாம் என்ன நினைத்தார் அல்லது சொன்னார் என்பதில் தேவன் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. அவர் புறக்கணிக்க காரணம் என்ன? ஏனென்றால், அந்த நேரத்தில், மனிதன் மிகுந்த விசுவாசமுள்ளவனாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிபார்க்கவில்லை. அவன் தேவனைப் பற்றி மிகுந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்றோ தேவனால் செய்யப்பட்ட, சொல்லப்பட்ட காரியங்களை அவன் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றோ எதிபார்க்கவில்லை. இவ்வாறு, அந்த மனிதன் தான் செய்யத் தீர்மானித்ததை அல்லது தேவன் தேர்வு செய்யத் தீர்மானித்த ஜனங்களை அல்லது அவருடைய செயல்களின் கொள்கைகளை பூரணமாகப் புரிந்துக் கொள்ளும்படி அவர் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அதற்கு மனிதனுடைய நிலை மட்டும் போதுமானதாக இல்லை. அந்த நேரத்தில், ஆபிரகாம் செய்ததை, அவன் தன்னை சாதாரணமாக நடத்தியதை தேவன் கருதினார். அவர் கண்டிக்கவில்லை அல்லது தண்டிக்கவில்லை. ஆனால்: “வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்கு ஈசாக்கைப் பெற்றெடுப்பாள்.” என்று மட்டும் சொன்னார். அவர் இந்த வார்த்தைகளை அறிவித்த பிறகு, தேவனுக்கு, இந்த விஷயம் படிப்படியாக நிறைவேறியது. தேவனுடைய பார்வையில், அவருடைய திட்டத்தால் நிறைவேற்றப்பட வேண்டியது ஏற்கனவே அடையப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முடித்த பின்னர், தேவன் புறப்பட்டார். மனிதன் என்ன செய்கிறான் அல்லது என்ன நினைக்கிறான், மனிதன் என்ன புரிந்துக்கொள்கிறான், மனிதனுடைய திட்டங்கள், என இவை எதுவுமே தேவனுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. எல்லாமே தேவனுடைய திட்டத்தின்படி, தேவன் நிர்ணயித்த நேரங்களுக்கும் நிலைகளுக்கும் ஏற்ப தொடர்கிறது. தேவனுடைய கிரியையின் கொள்கை இதுதான். மனிதன் அவரை நம்புவதில்லை அல்லது புரிந்துக் கொள்ளவில்லை என்றாலும், மனிதன் எதை நினைக்கிறானோ, எதை அறிந்திருக்கிறானோ அவற்றில் தேவன் தலையிடுவதில்லை, அவர் தன் திட்டத்தை கைவிடுவதில்லை அல்லது அவருடைய கிரியையைக் கைவிடுவதில்லை. தேவனுடைய திட்டம் மற்றும் எண்ணங்களின்படி உண்மைகள் இவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன. இதுவே வேதாகமத்தில் நாம் காண்கிறதாகும்: தேவன் ஈசாக்கை அவர் நிர்ணயித்த நேரத்தில் பிறக்கச் செய்தார். மனிதனுடைய குணமும் நடத்தையும் தேவனுடைய கிரியைக்குத் தடையாக இருந்தன என்பதை இந்த உண்மைகள் நிரூபிக்கிறதா? அவை தேவனுடைய கிரியைக்குத் தடையாக இருக்கவில்லை! தேவன் மீதான மனிதனுடைய சிறிய நம்பிக்கையும், தேவனைப் பற்றிய அவனது கருத்துக்களும் கற்பனைகளும் தேவனுடைய கிரியையை பாதித்ததா? இல்லை, அவை பாதிக்கவில்லை! கொஞ்சம் கூட பாதிக்கவில்லை! தேவனுடைய ஆளுகைத் திட்டத்தை எந்த மனிதனும், விஷயமும், சூழலும் பாதிக்காது. அவர் செய்யத் தீர்மானிக்கும் அனைத்தும் சரியான நேரத்தில் மற்றும் அவருடைய திட்டத்தின்படி நிறைவு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அவருடைய கிரியையில் எந்த மனிதனும் தலையிட முடியாது. மனிதனுடைய முட்டாள்தனம் மற்றும் அறியாமை ஆகியவற்றின் சில அம்சங்களையும், மனிதனுடைய எதிர்ப்பின் சில அம்சங்களையும், அவரை நோக்கிய கருத்துகளையும் தேவன் புறக்கணிக்கிறார். தாம் பொருட்படுத்தாமல் செய்ய வேண்டிய கிரியையை அவர் அவ்வாறு செய்கிறார். அது தேவனுடைய மனநிலையாகும். அது அவருடைய சர்வ வல்லமையின் பிரதிபலிப்பாகும்.

தேவனுடைய ஆளுகை மற்றும் மனிதகுலத்திற்கான இரட்சிப்பின் கிரியையானது ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட்டதில் தொடங்குகிறது

ஆபிரகாமுக்கு ஒரு மகனைக் கொடுத்த பிறகு, தேவன் ஆபிரகாமுடன் பேசிய வார்த்தைகள் நிறைவேறின. தேவனுடைய திட்டம் இங்கே நிறுத்தப்பட்டது என்று அர்த்தமல்ல. மாறாக, மனிதகுலத்தை நிர்வகிப்பதற்கும் இரட்சிப்பதற்கும் தேவனுடைய அருமையான திட்டம் தொடங்கிவிட்டது என்று அர்த்தமாகும். ஆபிரகாமுக்கு ஒரு மகனை அவர் ஆசீர்வாதமாக கொடுத்தது அவருடைய ஒட்டுமொத்த ஆளுகைத் திட்டத்திற்கு ஒரு முன்னோடியாகும். அந்த நேரத்தில், ஆபிரகாம் ஈசாக்கை ஒப்புக்கொடுத்த தருணத்தில், சாத்தானுடனான தேவனுடைய யுத்தம் அமைதியாகத் தொடங்கியது என்பதை யார் அறிவார்கள்?

மனிதன் முட்டாள்தனமாக இருந்தால் தேவன் கவலைப்படுவதில்லை—மனிதன் உண்மையாக இருக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறார்

அடுத்ததாக, தேவன் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்று பார்ப்போம். ஆதியாகமம் 22:2ல் தேவன் ஆபிரகாமுக்கு பின்வரும் கட்டளையை வழங்கினார்: “உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.” தேவனுடைய அர்த்தம் தெளிவாக இருந்தது: ஆபிரகாமிடம் அவர் நேசித்த அவரது ஒரே மகனான ஈசாக்கை அக்கினியில் பலியாகக் கொடுக்கச் சொன்னார். இன்று அதைப் பார்க்கும்போது, தேவனுடைய கட்டளை மனிதனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறதா? ஆம்! அந்த நேரத்தில் தேவன் செய்ததெல்லாம் மனிதனுடைய கருத்துக்களுக்கு முற்றிலும் முரணானது. அது மனிதனுக்கு புரியவில்லை. அவர்களின் கருத்துக்களில், ஜனங்கள் பின்வருவனவற்றை நம்புகிறார்கள்: ஒரு மனிதன் நம்பாதபோது, அது சாத்தியமற்றது என்று நினைத்தபோது, தேவன் அவனுக்கு ஒரு மகனைக் கொடுத்தார். அவன் ஒரு மகனைப் பெற்ற பிறகு, தேவன் அவனுடைய மகனை பலியிடச் சொன்னார். இது முற்றிலும் நம்பமுடியாததல்லவா! தேவன் உண்மையில் என்ன செய்ய விரும்பினார்? தேவனுடைய உண்மையான நோக்கம் என்ன? அவர் நிபந்தனையின்றி ஆபிரகாமுக்கு ஒரு மகனைக் கொடுத்தார், ஆனாலும் ஈசாக்கை நிபந்தனையற்ற பலி செய்யும்படி ஆபிரகாமிடம் கேட்டார். இது அதிகப்படியாக இருந்ததா? மூன்றாம் தரப்பினரின் பார்வையில், இது அதிகப்படியானது மட்டுமல்ல, “எந்த காரணமும் இல்லாமல் பிரச்சனையை ஏற்படுத்தும்” ஒரு விஷயமுமாகும். ஆனால் ஆபிரகாமோ தேவன் அதிகப்படியாக கேட்கிறார் என்று நம்பவில்லை. அவர் அதைப் பற்றி சிறு சிறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், அவர் தேவனைக் கொஞ்சம் சந்தேகப்பட்டாலும், பலி செய்ய அவர் தயாராகத்தான் இருந்தார். இந்த கட்டத்தில், ஆபிரகாம் தனது மகனை வழங்க தயாராக இருந்தார் என்பதை நிரூபிக்க நீ எதைப் பார்க்கிறாய்? இந்த வாக்கியங்களில் என்ன கூறப்படுகிறது? மூலமுதலான வசனம் பின்வரும் விவரங்களை வழங்குகிறது: “ஆபிரகாம்அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்” (ஆதி. 22:3). “தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம்ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம்தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்” (ஆதி. 22:9-10). ஆபிரகாம் தன் கரத்தை நீட்டி, தன் மகனைக் கொல்ல கத்தியை எடுத்தபோது, அவன் செய்த செயல்கள் தேவனால் காணப்பட்டதா? அவை காணப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே, ஆபிரகாம் ஈசாக்கை பலியிட வேண்டும் என்று தேவன் கேட்டபோது, ஆபிரகாம் தன் மகனைக் கொல்ல கத்தியை உயர்த்தியபோது, ஆபிரகாமின் இருதயம் தேவனுக்கு முன்பாக இருந்த்து. அவருடைய முந்தைய முட்டாள்தனம், அறியாமை மற்றும் தேவனுடைய தவறான புரிதல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அந்த நேரத்தில் தேவனுக்காக ஆபிரகாமின் இருதயம் உண்மையாக, நேர்மையாக இருந்தது. அவர் உண்மையிலேயே தேவனால் கொடுக்கப்பட்ட மகன் ஈசாக்கை தேவனிடம் திருப்பித் தர முயற்சி செய்தார். அவரிடத்தில், தேவன் கீழ்ப்படிதலைக் கண்டார். தேவன் தான் விரும்பிய கீழ்ப்படிதலைக் கண்டார்.

மனிதனைப் பொறுத்தவரையில், தேவன் புரிந்துக்கொள்ள முடியாத மற்றும் நம்பமுடியாத பலவற்றைச் செய்கிறார். தேவன் ஒருவரை இயக்க விரும்பினால், இந்த திட்டம் பெரும்பாலும் மனிதனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது மற்றும் மனிதனால் புரிந்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் இந்த முரண்பாடு மற்றும் புரிந்துக்கொள்ள முடியாத தன்மைதான் துல்லியமாக தேவனுடைய சோதனை மற்றும் மனிதனுடைய சோதனையாக இருக்கிறது. இதற்கிடையில், தேவனுக்கான கீழ்ப்படிதலை ஆபிரகாம் தனக்குள்ளேயே நிரூபிக்க முடிந்தது. இது தேவனுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடிந்ததன் மிக அடிப்படையான நிபந்தனையாகும். அப்பொழுது தான், ஆபிரகாமால் தேவனுடைய எதிர்பார்ப்புக்குக் கீழ்ப்படிய முடிந்தபோது தான், ஈசாக்கை ஒப்புக்கொடுத்தபோது தான், தேவன் உண்மையிலேயே மனிதகுலத்திடம் உறுதியையும் ஒப்புதலையும் உணர்ந்தார்—தான் தேர்ந்தெடுத்த ஆபிரகாமிடம் உணர்ந்தார். அப்போது தான், தாம் தேர்ந்தெடுத்த இந்த மனிதர் தமது வாக்குத்தத்தையும் தம்முடைய அடுத்தடுத்த ஆளுகைத் திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடிய ஒரு தவிர்க்க முடியாத தலைவராக இருப்பார் என்பதில் தேவன் உறுதியாக இருந்தார். இது ஒரு சோதனை மற்றும் ஒரு தேர்வு என்றாலும், தேவன் மனநிறைவு அடைந்தார். மனிதன் தம்மீது வைத்திருக்கும் அன்பை உணர்ந்தார். மனிதனால் ஆறுதலடைந்தார். ஈசாக்கைக் கொல்ல ஆபிரகாம் கத்தியை உயர்த்திய தருணத்தில், தேவன் அவரைத் தடுத்தாரா? ஆபிரகாம் ஈசாக்கை பலியிடுவதற்கு தேவன் அனுமதிக்கவில்லை. ஏனென்றால், ஈசாக்கின் உயிரைப் பறிக்கும் எண்ணம் தேவனுக்கு இல்லை. ஆகவே, தேவன் ஆபிரகாமை சரியான நேரத்தில் நிறுத்தினார். தேவனைப் பொறுத்தவரையில், ஆபிரகாமின் கீழ்ப்படிதல் ஏற்கனவே சோதனையில் தேர்ச்சி பெற்றது. ஆபிரகாம் செய்தது போதுமானதாகும். மேலும், அவர் செய்ய நினைத்தவற்றின் விளைவுகளை தேவன் ஏற்கனவே கண்டிருந்தார். இந்த முடிவு தேவனுக்கு திருப்திகரமாக இருந்ததா? இந்த விளைவு தேவனுக்கு திருப்திகரமாக இருந்தது என்றும், அது தேவன் விரும்பியது என்றும், தேவன் பார்க்க ஏங்கினார் என்றும் சொல்லலாம். இது உண்மையா? வெவ்வேறு சூழல்களில், தேவன் ஒவ்வொரு நபரையும் சோதிக்க வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறார். ஆபிரகாமில் தேவன் தான் விரும்பியதைக் கண்டார், ஆபிரகாமின் இருதயம் உண்மை என்றும், அவருடைய கீழ்ப்படிதல் நிபந்தனையற்றது என்றும் அவர் கண்டார். தேவன் துல்லியமாக விரும்பியது இந்த “நிபந்தனையற்ற” ஒன்று தான். ஜனங்கள் அடிக்கடி கூறுகிறார்கள், “நான் அதை ஏற்கனவே வழங்கியுள்ளேன். நான் ஏற்கனவே அதை மன்னித்துவிட்டேன்—தேவன் ஏன் என்னை இன்னும் திருப்திப்படுத்தவில்லை? அவர் ஏன் என்னை சோதனைகளுக்கு உட்படுத்துகிறார்? அவர் ஏன் என்னை சோதித்துக்கொண்டிருக்கிறார்?” இது ஒரு உண்மையை நிரூபிக்கிறது: தேவன் உன் இருதயத்தைக் காணவில்லை. உன் இருதயத்தைப் பெறவில்லை. அதாவது, ஆபிரகாம் தன் மகனை தன் கரத்தால் கொன்று, தேவனுக்கு வழங்குவதற்காக கத்தியை உயர்த்த முடிந்தபோது பார்த்த நேர்மையை, அவர் காணவில்லை. உன் நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை அவர் காணவில்லை. உன்னால் ஆறுதலடையவில்லை. அப்படியானால், தேவன் உன்னிடம் தொடர்ந்து முயற்சி செய்வது இயல்பானதாகும். இது உண்மையல்லவா? இந்த தலைப்பைப் பொறுத்தவரையில், நாம் அதை இங்கே விட்டுவிடுவோம். அடுத்ததாக, “ஆபிரகாமுக்கான தேவனுடைய வாக்குத்தத்தத்தை” வாசிப்போம்.

3. ஆபிரகாமுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம்

ஆதியாகமம் 22:16-18 உன் ஒரே புத்திரனாகிய உன் மகன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தை நீ செய்ததால், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன், உன் சந்ததியை வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள் போலவும், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும் பெருகப்பண்ணுவேன்; உன் சந்ததியினர் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தமையால் உன்னுடைய சந்ததியினால் பூமியிலுள்ள சகல நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று என்மீது ஆணையிட்டிருக்கிறேன் என்று யேகோவா சொல்கிறார் என்றார்.

இது ஆபிரகாமுக்கு தேவன் அளித்த ஆசீர்வாதத்தின் தடையற்ற விவரம் ஆகும். சுருக்கமாக இருந்தாலும், அதன் உள்ளடக்கம் வளமிக்கதாகும்: ஆபிரகாமுக்கு தேவன் அளித்த ஈவுக்கான காரணமும், பின்னணியும், ஆபிரகாமுக்கு அவர் கொடுத்தது என்ன என்பதும் இதில் அடங்கும். தேவன் இந்த வார்த்தைகளை உச்சரித்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும், அதைப் போலவே அவருடைய வார்த்தைகளைக் கேட்கக்கூடியவர்களை அவர் பெற வேண்டும் என்பதற்கான அவருடைய ஏக்கத்தின் அவசரத்தையும் இது உள்ளடக்கியுள்ளது. இதில், தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுபவர்களிடம் தேவனுடைய மரியாதை மற்றும் மென்மையைக் காண்கிறோம். ஆகவே, ஜனங்களைப் பெறுவதற்கு அவர் செலுத்தும் விலைக்கிரையத்தையும், அவர்களைப் பெறுவதில் அவர் செலுத்தும் அக்கறையையும் சிந்தனையையும் நாம் காண்கிறோம். மேலும், “என்பேரில் ஆணையிட்டேன்,” என்ற வார்த்தைகளைக் கொண்ட இந்த பத்தியில், அவருடைய ஆளுகைத் திட்டத்தின் இந்த கிரியையின் திரைக்குப் பின்னால் தேவன் மட்டுமே இருக்கிறார் என்ற உணர்வையும், தேவன் அனுபவிக்கும் கசப்பு மற்றும் வேதனையின் வல்லமைவாய்ந்த உணர்வையும், நமக்குத் தருகிறது. இது ஒரு சிந்தனையைத் தூண்டும் பத்தியாகும். பின்னர் வந்தவர்களுக்கு விஷேசமான முக்கியத்துவத்தைக் கொடுத்தது. மேலும், அவர்கள் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியது.

மனிதன் தன்னுடைய நேர்மை மற்றும் கீழ்ப்படிதல் காரணமாக தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறான்

இங்கே நாம் படித்தது ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதமா? அது எவ்வளவு பெரியது? இங்கே ஒரு முக்கிய வாக்கியம் உள்ளது: “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” இந்த வாக்கியம் ஆபிரகாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்கள் ஆபிரகாமுக்கு முன்னும் பின்னும் வந்த எவருக்கும் வழங்கப்படாத ஆசீர்வாதங்களாகும் என்பதைக் காட்டுகிறது. தேவன் கேட்டபடி, ஆபிரகாம் தனது ஒரே மகனை—தன் அன்புக்குரிய ஒரே மகனை—தேவனிடம் திருப்பி அனுப்ப தேவன் கேட்ட போது (குறிப்பு: இங்கே “பலி” என்ற வார்த்தையை நாம் பயன்படுத்த முடியாது. அவர் தனது மகனை தேவனிடம் திருப்பி அனுப்பினார் என்று நாம் கூற வேண்டும்), ஆபிரகாம் ஈசாக்கை வழங்க தேவன் அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர் அவரை ஆசீர்வதித்தார். எந்த வாக்குத்தத்தத்தால் அவர் ஆபிரகாமை ஆசீர்வதித்தார்? தேவன் ஆபிரகாமின் சந்ததியைப் பெருக்குவதாக வாக்களித்து அவரை ஆசீர்வதித்தார். அவர்கள் எத்தனை பேராக பெருக்கம் பெறப்போகிறார்கள்? வேதவாக்கியங்கள் பின்வரும் பதிவை வழங்குகின்றன: “… வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” இந்த வார்த்தைகளை தேவன் உச்சரித்த சூழல் என்ன? அதாவது, ஆபிரகாம் தேவனுடைய ஆசீர்வாதங்களை எவ்வாறு பெற்றார்? தேவன் வேதவசனங்களில் சொல்வதைப் போலவே அவர் அவற்றைப் பெற்றார்: “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால்.” அதாவது, ஆபிரகாம் தேவனுடைய கட்டளையைப் பின்பற்றியதால், தேவன் சொன்ன, கேட்ட மற்றும் கட்டளையிட்ட எல்லாவற்றையும் சிறிதளவிலும் காரணம் சொல்லாமல் செய்ததால், தேவன் அவருக்கு அத்தகைய வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தத்தில் ஒரு முக்கியமான வாக்கியம் உள்ளது. அது அந்த நேரத்தில் தேவனுடைய எண்ணங்களை பிரதிபலிக்கிறது. நீங்கள் அதைக் கண்டீர்களா? “என்பேரில் ஆணையிட்டேன்.” என்ற தேவனுடைய வார்த்தைகளுக்கு நீங்கள் அதிக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். அவை சொல்வது என்னவென்றால், தேவன் இந்த வார்த்தைகளை உச்சரித்தபோது, அவர் தன் மீதே சத்தியம் செய்தார் என்பதாகும். ஜனங்கள் சத்தியம் செய்யும்போது என்ன சத்தியம் செய்கிறார்கள்? அவர்கள் பரலோகத்தின் மீது சத்தியம் செய்கிறார்கள். அதாவது, அவர்கள் தேவனுக்கு சத்தியம் செய்கிறார்கள். தேவனால் சத்தியம் செய்கிறார்கள். தேவன் தன் மீதே சத்தியம் செய்த நிகழ்வு ஜனங்களுக்கு அதிகம் புரிவதில்லை. ஆனால் நான் உங்களுக்கு சரியான விளக்கத்தை அளிக்கும்போது நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும். அவருடைய வார்த்தைகளை மட்டுமே கேட்க முடியும், ஆனால், அவருடைய இருதயத்தை புரிந்துக்கொள்ள முடியாத ஒரு மனிதனை எதிர்கொண்டதால், தேவன் மீண்டும் தனிமையாகவும் இழப்பாகவும் உணர்ந்தார். விரக்தியில்—ஆழ்மனதிலிருந்து-தேவன் மிகவும் இயல்பான ஒன்றைச் செய்தார் என்று சொல்லலாம்: தேவன் தம்முடைய இருதயத்தின் மீது கை வைத்து, ஆபிரகாமுக்கு இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுக்கும் போது தனக்குத்தானே உரையாற்றிக் கொண்டார். இந்த மனிதரிடம் கேட்டதிலிருந்து தேவன் “என்பேரில் ஆணையிட்டேன்.” என்று சொன்னார். தேவனுடைய செயல்களின் மூலம், உன்னைப் பற்றியும் நீ நினைக்கலாம். உன் இருதயத்தில் கை வைத்து உன்னுடன் பேசும்போது, நீ என்ன சொல்கிறாய் என்பது பற்றிய தெளிவான யோசனை உனக்கு இருக்கிறதா? உன் அணுகுமுறை உண்மையானதா? உன் இருதயத்துடன் நேர்மையாக பேசுகிறாயா? இவ்வாறு, தேவன் ஆபிரகாமுடன் பேசியபோது, அவர் மிகுந்த அக்கறையுடனும் நேர்மையுடனும் இருந்தார் என்பதை இங்கே காண்கிறோம். ஆபிரகாமுடன் பேசி ஆசீர்வதிக்கும் அதே நேரத்தில், தேவன் தனக்குள்ளாகவே பேசிக் கொண்டிருந்தார். அவர் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டிருந்தார். நான் ஆபிரகாமை ஆசீர்வதிப்பேன், அவருடைய சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடல் கரையின் மணலைப் போலவும் ஏராளமாக பெருகப்பண்ணுவேன். ஏனென்றால், அவர் என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தார். அவரைத் தான் நான் தேர்ந்தெடுப்பேன். “என்பேரில் ஆணையிட்டேன்,” என்று தேவன் சொன்னபோது, ஆபிரகாமில் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை உருவாக்கப்போவதாக தேவன் தீர்மானித்தார். அதன்பிறகு அவர் இந்த ஜனங்களை தனது கிரியையால் விரைவாக வழிநடத்தினார். அதாவது, தேவனுடைய ஆளுகையின் கிரியையையும், தேவனுடைய கிரியையையும், தேவனால் வெளிப்படுத்தப்பட்ட கிரியையும் ஆபிரகாமின் சந்ததியினரை தேவன் ஏற்றுக்கொள்ளச் செய்வார். அது ஆபிரகாமில் தொடங்கி ஆபிரகாமின் சந்ததியினரில் தொடரும், இதன் மூலமாக, தேவன் மனிதனை இரட்சிக்க விரும்புகிறார் என்பதை அவர்கள் உணர்ந்துக் கொள்வார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள், இது ஒரு பாக்கியம் அல்லவா? மனிதனைப் பொறுத்தவரையில் இதைவிட பெரிய ஆசீர்வாதம் எதுவுமில்லை. இது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட விஷயம் என்று கூறலாம். ஆபிரகாம் பெற்ற ஆசீர்வாதம் அவருடைய சந்ததியினரின் பெருக்கமல்ல, ஆனால் அவருடைய ஆளுகை, அவருடைய கட்டளை மற்றும் ஆபிரகாமின் சந்ததியினரில் அவர் செய்த கிரியைகள் ஆகியவற்றின் தேவனுடைய சாதனையாகும். இதன் அர்த்தம் ஆபிரகாம் பெற்ற ஆசீர்வாதங்கள் தற்காலிகமானவை அல்ல, ஆனால் தேவனுடைய ஆளுகைத் திட்டம் முன்னேறும்போது தொடர்வதாகும். தேவன் பேசியபோது, தேவன் தன் மீதே சத்தியம் செய்தபோது, அவர் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தார். அந்த தீர்மானத்தின் செயல்முறை உண்மையா? அது உண்மையானதா? அந்தக் காலத்திலிருந்தே, அவருடைய முயற்சிகள், அவர் செலுத்திய விலைக்கிரையம், தேவனும் தேவனிடம் உள்ளவையும், அவருடைய அனைத்தும், அவருடைய ஜீவிதமும் ஆபிரகாமுக்கும் ஆபிரகாமின் சந்ததியினருக்கும் வழங்கப்படும் என்று தேவன் தீர்மானித்தார். இந்த கூட்டத்திடமிருந்து தொடங்கி, அவர் தனது கிரியைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் மனிதன் தம்முடைய ஞானத்தையும், அதிகாரத்தையும், வல்லமையையும் காண அனுமதிக்க வேண்டும் என்பதையும் தேவன் தீர்மானித்தார்.

தேவனை அறிந்தவர்களையும் மற்றும் அவருக்கு சாட்சியளிக்க வல்லவர்களையும் ஆதாயப்படுத்துவதே தேவனுடைய மாறாத விருப்பமாய் இருக்கிறது

தனக்குள் பேசும் அதே நேரத்தில், தேவன் ஆபிரகாமுடனும் பேசினார். ஆனால் அந்த நேரத்தில், தேவன் அவருக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களைக் காதால் கேட்பதைத் தவிர, அவருடைய எல்லா வார்த்தைகளிலும் தேவனுடைய உண்மையான விருப்பங்களை ஆபிரகாம் புரிந்துகொள்ள முடிந்ததா? அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை! எனவே, அந்த நேரத்தில், தேவன் தனக்குள்ளே சத்தியம் செய்தபோது, அவருடைய இருதயம் இன்னும் தனிமையாகவும் துக்கமாகவும் இருந்தது. அவர் நினைத்ததையும் திட்டமிட்டதையும் புரிந்துகொள்ளவோ உணர்ந்துகொள்ளவோ கூடிய ஒரு மனிதர் இன்னும் இல்லை. அந்த நேரத்தில், ஆபிரகாம் உட்பட எவரும் அவருடன் தன்னம்பிக்கையுடன் பேச முடியவில்லை. அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வதில் எவரும் அவருடன் ஒத்துழைக்க முடியவில்லை. மேலோட்டமாக பார்க்கையில், தேவன் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியக்கூடிய ஒருவரான ஆபிரகாமை ஆதாயம் செய்தார். ஆனால் உண்மையில், தேவனைப் பற்றி இந்த மனிதருக்கு அறிவு எதுவும் இல்லை. தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்திருந்தாலும், இன்னும் தேவனுடைய இருதயம் திருப்தி அடையவில்லை. தேவன் திருப்தி அடையவில்லை என்றால் அதன் அர்த்தம் என்ன? அவருடைய ஆளுகை இப்போதே தொடங்கிவிட்டது என்பதே இதன் அர்த்தமாகும். அவர் ஆதாயப்படுத்த விரும்பிய ஜனங்கள், அவர் பார்க்க விரும்பிய ஜனங்கள், அவர் நேசித்த ஜனங்கள் அவரிடமிருந்து இன்னும் தொலைவில் இருந்தனர். அவருக்கு நேரம் தேவைப்பட்டது. அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. அவர் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், அவருடைய தேவை என்ன அல்லது அவர் எதைப் பெற விரும்புகிறார் அல்லது அவர் எதற்காக ஏங்குகிறார் என்பதைத் தேவனைத் தவிர, எவரும் அறியவில்லை. எனவே, தேவன் மிகவும் உற்சாகமாக உணர்ந்த அதே நேரத்தில், இருதயம் கனமாக இருப்பதாகவும் உணர்ந்தார். ஆயினும், அவர் தனது முயற்சிகளை நிறுத்தவில்லை. தாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அடுத்த கட்டத்தை அவர் தொடர்ந்து திட்டமிட்டார்.

ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்ததால், தேவன் ஆபிரகாமுக்கு பெரும் ஆசீர்வாதங்களை வழங்கினார். மேலோட்டமாக பார்க்கையில், இது சாதாரணமான மற்றும் இயல்பான ஒரு விஷயமாகத் தோன்றினாலும், அதில் நாம் தேவனுடைய இருதயத்தைக் காண்கிறோம்: தேவன் குறிப்பாக மனிதனுடைய கீழ்ப்படிதலை பொக்கிஷமாகக் கருதுகிறார். மேலும், தேவனைப் பற்றிய மனிதனுடைய புரிதலையும், அவர் மீதான அவனுடைய நேர்மையையும் மதிக்கிறார். இந்த நேர்மையை தேவன் எவ்வளவாக மதிக்கிறார்? அவர் அதை எவ்வளவு மதிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். எவரும் அதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். தேவன் ஆபிரகாமுக்கு ஒரு மகனைக் கொடுத்தார். அந்த மகன் வளர்ந்ததும், தேவன் அந்த மகனை தனக்கு வழங்கும்படி ஆபிரகாமிடம் கேட்டார். ஆபிரகாம் தேவனுடைய கட்டளையில் சிறிதும் குறைவில்லாமல் பின்பற்றினார். அவர் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார். அவருடைய நேர்மையானது தேவனை அசைத்தது. மேலும் அது தேவனால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது. தேவன் அதை எவ்வளவாக பத்திரப்படுத்தி வைத்தார்? அவர் ஏன் அதை பத்திரப்படுத்தினார்? தேவனுடைய வார்த்தைகளை யாரும் புரிந்துகொள்ளாத அல்லது அவருடைய இருதயத்தைப் புரிந்துகொள்ளாத ஒரு நேரத்தில், ஆபிரகாம் வானத்தை உலுக்கி பூமியை நடுங்க வைக்கும் ஒரு காரியத்தைச் செய்தார். மேலும், தேவனுக்கு அதற்கு முன்பு இல்லாத வகையில் அது திருப்தி உணர்வை ஏற்படுத்தியது. அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியக்கூடிய ஒருவரை ஆதாயம் செய்வதில் உள்ள மகிழ்ச்சியை தேவனுக்குக் கொடுத்தது. இந்த திருப்தியும் மகிழ்ச்சியும் தேவனுடைய கரத்தால் படைக்கப்பட்ட ஒரு உயிரினத்திலிருந்து வந்தது. மனிதன் தேவனுக்கு வழங்கிய முதல் “பலி” இது தான். மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து, தேவனால் மிகவும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த பலிக்காக காத்திருப்பது தேவனுக்கு சிரமமானதாக இருந்தது. தான் படைத்த மனிதரிடமிருந்து பெறும் மிக முக்கியமான பரிசாக இதைக் கருதினார். இது தேவனுடைய முயற்சிகளின் முதல் பலனையும் அவர் செலுத்திய விலைக்கிரயத்தையும் காட்டியது. மனிதகுலத்தின் விசுவாசத்தை தேவன் பார்க்க அது அனுமதித்தது. அதன்பிறகு, அத்தகைய மனிதர்களில் ஒரு கூட்டம் அவருடன் இணையவும், அவரை நேர்மையுடன் நடத்தவும், அவரை உண்மையாக கவனிக்கவும் தேவனிடம் இன்னும் பெரிய ஆவல் இருந்தது. ஆபிரகாம் ஜீவிப்பார் என்று தேவன் நம்பினார். ஏனென்றால், ஆபிரகாமைப் போன்ற ஒரு இருதயம் அவருடன் இருக்க வேண்டும் என்றும் தனது தொடர்ச்சியான ஆளுகையில் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். தேவன் விரும்பினாலும், அது ஒரு ஆசை மற்றும் யோசனை மட்டுமே—ஏனெனில் ஆபிரகாம் வெறுமனே அவருக்குக் கீழ்ப்படியக்கூடிய ஒரு மனிதராக, தேவனைப் பற்றிய சிறிதளவு புரிதலோ அறிவோ இல்லாமல் இருந்தார். மனிதனிடம் தேவன் எதிர்பார்க்கும் தரத்தை விட மிகக் குறைவானவர் ஆபிரகாம். அதாவது: தேவனை அறிவது, தேவனுக்கு சாட்சி அளிப்பது, மற்றும் தேவனுடன் ஒருமனதாக இருப்பது ஆகியவையாகும். எனவே, ஆபிரகாமால் தேவனுடன் நடக்க முடியவில்லை. ஆபிரகாம் ஈசாக்கை பலி கொடுக்கையில் ஆபிரகாமின் நேர்மையையும் கீழ்ப்படிதலையும் தேவன் கண்டார். மேலும், ஆபிரகாம் மீதான தேவனுடைய சோதனையில் அவர் உறுதியாய் நிலைத்து நின்றிருந்தததைக் கண்டார். தேவன் அவருடைய நேர்மையையும் கீழ்ப்படிதலையும் ஏற்றுக்கொண்ட போதிலும், அவர் தேவனுடைய நம்பிக்கைக்குரியவராகவும், தேவனை அறிந்த மற்றும் புரிந்துகொண்ட ஒருவராகவும், தேவனுடைய மனநிலையைப் பற்றி அறிந்த ஒருவராகவும் மாற தகுதியற்றவராக இருந்தார். அவர் தேவனுடன் ஒரே மனநிலையில் இருப்பதிலிருந்தும் தேவனுடைய சித்தத்தைச் செய்வதிலிருந்தும் வெகு தொலைவில் இருந்தார். எனவே, தம்முடைய இருதயத்தில், தேவன் இன்னும் தனிமையாகவும் கவலையுடனும் இருந்தார். எவ்வளவு தனிமையான மற்றும் ஆர்வமுள்ள தேவனாக மாறினாரோ, அவ்வளவு சீக்கிரமாக அவர் தனது ஆளுகையைத் தொடர வேண்டியிருந்தது. அவருடைய ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றவும், விரைவில் அவருடைய சித்தத்தை அடையவும் ஒரு கூட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இது தேவனுடைய ஆசை. இது ஆதி காலம் முதல் இன்று வரை மாறாமல் உள்ளது. ஆதியில் அவர் மனிதனைப் படைத்ததிலிருந்து, தேவன் ஜெயம் கொள்கிறவர்களுக்காக ஏங்குகிறார். அவருடன் நடக்கும், அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ளும், அறிந்துகொள்ளும் மற்றும் உணர்ந்துகொள்ளும் மனிதருக்காக ஏங்குகிறார். தேவனுடைய இந்த ஆசை ஒருபோதும் மாறவில்லை. அவர் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதைப் பொருட்படுத்தாமல், முன்னோக்கிச் செல்லும் பாதை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அது எவ்வளவு தூரமாக இருந்தாலும், தேவன் ஒருபோதும் மனிதனுக்கான எதிர்பார்ப்புகளை மாற்றவோ கைவிடவோ இல்லை. இப்போதும் இதை நான் சொல்லியிருக்கிறேன். தேவனுடைய சித்தத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் உணர்ந்தவை மிகவும் ஆழமானவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைப் படிப்படியாக புரிந்துகொள்ள முடியும்!

ஆபிரகாம் வாழ்ந்த அதே காலகட்டத்தில், தேவன் ஒரு நகரத்தையும் அழித்தார். இந்த நகரம் சோதோம் என்று அழைக்கப்பட்டது. சோதோம் கதையை பலர் அறிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நகரத்தை அழிப்பதற்கான பின்னணியை உருவாக்கிய தேவனுடைய எண்ணங்களை யாரும் அறிந்திருக்கவில்லை.

ஆகவே, இன்று, கீழேயுள்ள ஆபிரகாமுடனான தேவனுடைய கருத்து பரிமாற்றங்கள் மூலம், அந்த நேரத்தில் அவருக்கு இருந்த அவருடைய எண்ணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம். அதே நேரத்தில் அவருடைய மனநிலையையும் கற்றுக்கொள்வோம். அடுத்ததாக, வேதாகமத்தின் பின்வரும் பத்திகளைப் படிப்போம்.

ஆ. தேவன் சோதோமை அழிக்க வேண்டும்

ஆதி. 18:26 அப்பொழுது யேகோவா, சோதோமில் நான் ஐம்பது நீதிமான்களை நகரத்துக்குள் கண்டால், அவர்கள் நிமித்தம் நான் எல்லா ஸ்தலங்களையும் இரட்சிப்பேன் என்றார்.

ஆதி. 18:29 அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி. 18:30 அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி. 18:31 அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி. 18:32 அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

இவை நான் வேதாகமத்திலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள் ஆகும். அவை பூரணமான, அசல் பதிப்புகள் அல்ல. நீங்கள் அவற்றைக் காண விரும்பினால், அவற்றை வேதாகமத்தில் பார்க்கலாம். நேரத்தைச் சேமிக்க, அசல் உள்ளடக்கத்தின் ஒரு பகுதியை நான் தவிர்த்துவிட்டேன். இங்கே நான் பல முக்கிய பத்திகளையும் வாக்கியங்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன். இன்று நமது அமர்வுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத பல வாக்கியங்களை விட்டுவிட்டேன். நாம் பேசும் அனைத்து பத்திகளின் உள்ளடக்கத்திலும், கதைகளின் விவரங்கள் மற்றும் கதைகளில் மனிதனுடைய நடத்தை ஆகியவற்றை நமது கவனம் தவிர்க்கிறது. அதற்கு பதிலாக, அந்த நேரத்தில் தேவனுடைய எண்ணங்களும் யோசனைகளும் என்ன என்பதைப் பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம். தேவனுடைய எண்ணங்களிலும் யோசனைகளிலும், தேவனுடைய மனநிலையைப் பார்ப்போம். தேவன் செய்த எல்லாவற்றிலிருந்தும், உண்மையான தேவனையே நாம் காண்போம். இதில், நம்முடைய நோக்கத்தை அடைவோம்.

தேவன் தனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுபவர்களிடம் மட்டுமே அக்கறைக் காட்டுகிறார்

மேலே உள்ள பத்திகளில் பல குறிப்பு வார்த்தைகள், அதாவது எண்கள் உள்ளன. முதலாவதாக, யேகோவா நகரத்திற்குள் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர் எல்லா இடங்களையும் விட்டுவிடுவதாக சொன்னார். அதாவது அவர் நகரத்தை அழிக்க மாட்டார். உண்மையில், சோதோமுக்குள் ஐம்பது நீதிமான்கள் இருந்தார்களா? இல்லை. உடனே, ஆபிரகாம் தேவனிடம் என்ன சொன்னார்? அவர், ஒருவேளை அங்கு நாற்பது நீதிமான்கள் இருந்தால் என்று கேட்டார். நான் அதை அழிக்கமாட்டேன் என்று தேவன் சொன்னார். அடுத்ததாக, ஆபிரகாம், அங்கே முப்பது பேர் காணப்பட்டால் என்று கேட்டார். நான் அதை அழிக்கமாட்டேன் என்று தேவன் சொன்னார். அவர், இருபது பேர் காணப்பட்டால், என்று கேட்டார். நான் அதை அழிக்கமாட்டேன் என்று தேவன் சொன்னார். அவர், பத்து என்று கேட்டார். நான் அதை அழிக்கமாட்டேன் என்று தேவன் சொன்னார். உண்மையில், நகரத்திற்குள் பத்து நீதிமான்கள் இருந்தார்களா? பத்து பேர்கூட இல்லை—ஆனால் ஒருவர் இருந்தார். அவர் யார்? அவர்தான் லோத்து. அந்த நேரத்தில், சோதோமில் ஒரே ஒரு நீதியுள்ள மனிதர் மட்டுமே இருந்தார். ஆனால் இந்த எண்ணிக்கையில் தேவன் மிகவும் கடுமையானவரா அல்லது வற்புறுத்தினாரா? இல்லை! ஆகவே, “நாற்பது பேர் காணப்பட்டால்?” “முப்பது பேர் காணப்பட்டால்?” “பத்து பேர் காணப்பட்டால்?” என்று மனிதன் கேட்டுக்கொண்டே இருந்தபோது, தேவன், “பத்து பேர் இருந்தாலும்கூட நான் நகரத்தை அழிக்க மாட்டேன். நான் அதை விட்டுவிடுவேன். இந்த பத்து பேருடன் மற்றவர்களையும் மன்னிப்பேன்.” பத்து பேர் மட்டுமே இருந்திருந்தால், அது இரக்கம் பெற்றிருக்கும். ஆனால் உண்மையில், சோதோமில் அந்த எண்ணிக்கையிலான நீதிமான்கள் கூட இல்லை என்பது தெரிந்தது. அப்படியானால், அந்த நகரத்து ஜனங்களின் பாவம் மற்றும் தீமையின் நிமித்தமாக அதை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக தேவனுடைய பார்வையில் அது இருந்தது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஐம்பது நீதிமான்கள் இருந்தால் நகரத்தை அழிக்க மாட்டேன் என்று சொன்னபோது தேவன் எதைக் குறிப்பிட்டார்? இந்த எண்கள் தேவனுக்கு முக்கியமல்ல. முக்கியமானது என்னவென்றால், அவர் விரும்பிய நீதிமான்கள் அந்த நகரத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பதுதான். நகரத்தில் ஒரு நீதியுள்ள மனிதர் இருந்தால், தேவன் நகரத்தை அழிப்பதன் மூலமாக அவர்களைத் தீங்குக்குள்ளாக்க அவர் அனுமதிக்க மாட்டார். இதன் அர்த்தம் என்னவென்றால், தேவன் நகரத்தை அழிக்கப் போகிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அதற்குள் எத்தனை நீதிமான்கள் இருக்கிறார்கள், தேவன் இந்த பாவமான நகரத்தை சபித்து மரணதண்டனை கொடுக்க வேண்டும், அழிக்க வேண்டும், கண்களின் முன்னிருந்து மறைக்க வேண்டும் என்பவற்றைப் பொருட்படுத்தாமல் தேவனுக்கு நீதிமான்கள் இருக்க வேண்டும். யுகத்தைப் பொருட்படுத்தாமல், மனிதகுலத்தின் வளர்ச்சியின் கட்டத்தைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய மனப்பான்மை மாறுவதில்லை: அவர் தீமையை வெறுக்கிறார், அவர் தமது பார்வையில் நீதியுள்ளவர்கள் மீது அக்கறைக் காட்டுகிறார். தேவனுடைய இந்த தெளிவான மனப்பான்மை தேவனுடைய சாராம்சத்தின் உண்மையான வெளிப்பாடாகும். நகரத்திற்குள் ஒரு நீதியுள்ள மனிதர் மட்டுமே இருந்ததால், தேவன் தயங்கவில்லை. இறுதி முடிவாக சோதோம் தவிர்க்க முடியாமல் அழிக்கப்பட வேண்டியிருந்தது. இதில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? அந்த யுகத்தில், ஒரு நகரத்திற்குள் ஐம்பது நீதிமான்கள் இருந்தால் தேவன் அழிக்க மாட்டார், அல்லது பத்து பேர் இருந்தாலும் அழிக்க மாட்டார். அதாவது தேவனை வணங்கி ஆராதிக்க முடிந்த ஒரு சில ஜனங்கள் நிமித்தமாக தேவன் மன்னிப்பதற்கும் மனிதகுலத்திற்கு சகிப்புத்தன்மையுடன் முடிவு செய்வதற்கும், அல்லது வழிகாட்டுதலின் கிரியையைச் செய்வதற்கும் முடிவு செய்கிறார். தேவன் மனிதனுடைய நீதியுள்ள கிரியைகளில் பெரும் பங்கை வைக்கிறார். அவரை வணங்கக்கூடிய மனிதர்களிடத்தில் அவர் பெரும் பங்கை வைக்கிறார். மேலும், அவருக்கு முன்பாக நல்ல கிரியைகளைச் செய்யக்கூடியவர்களிடத்தில் அவர் பெரும் பங்கை வைக்கிறார்.

ஆதி காலம் முதல் இன்று வரை, வேதாகமத்தில் தேவனுடைய சத்தியத்தைச் சொல்வதை, அல்லது தேவனுடைய வழியைப் பற்றி பேசுவதைப் பற்றி படித்திருக்கிறீர்களா? ஒருபோதும் இல்லை. மனிதன் என்ன செய்ய வேண்டும் என்று ஜனங்களுக்கு சொல்லும் மனிதனுக்கான தேவனுடைய வார்த்தைகளை மட்டுமே நாம் வாசித்துள்ளோம். சிலர் சென்று அதைச் செய்தார்கள், சிலர் செய்யாதிருந்தார்கள். சிலர் நம்பினர், சிலர் நம்பாதிருந்தார்கள். அது அவ்வளவு தான். ஆகவே, அந்த யுகத்தின் நீதிமான்கள்—தேவனுடைய பார்வையில் நீதிமான்களாக காணப்பட்டவர்கள்—தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை மனிதர்களிடையே நிறைவேற்றிய ஊழியர்களாக இருந்தார்கள். அத்தகையவர்களை, தேவனை அறிந்தவர்கள் என்று அழைக்கலாமா? தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட ஜனங்கள் என்று அவர்களை அழைக்க முடியுமா? இல்லை, அவர்களை அழைக்க முடியாது. ஆகவே, அவர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய பார்வையில் இந்த நீதிமான்கள் தேவனுடைய நம்பிக்கைக்குரியவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானவர்களா? அவர்களை தேவனுடைய சாட்சிகள் என்று அழைக்க முடியுமா? நிச்சயமாக இல்லை! அவர்கள் தேவனுடைய நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் சாட்சிகள் என்று அழைக்கப்படுவதற்கு நிச்சயமாக தகுதியற்றவர்கள். இந்நிலையில், தேவன் அத்தகையவர்களை எவ்வாறு அழைத்தார்? வேதாகமத்தில், நாம் இப்போது வாசித்த வேதாகமத்தின் பகுதிகள் வரை, தேவன் அவர்களை “என் ஊழியக்காரன்” என்று அழைத்த பல சம்பவங்கள் உள்ளன. அதாவது, அந்த நேரத்தில், தேவனுடைய பார்வையில் இந்த நீதிமான்கள் தேவனுடைய ஊழியர்களாக இருந்தார்கள். அவர்கள் பூமியில் தேவனுக்கு ஊழியம் செய்தவர்கள். இந்த முறையை தேவன் எப்படி நினைத்தார்? அவர் ஏன் அவர்களை அப்படி அழைத்தார்? தேவன் ஜனங்களை அழைக்கும் முறைக்கு அவருடைய இருதயத்தில் தரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? நிச்சயமாக இருக்கின்றன. தேவன் ஜனங்களை நீதிமான்கள், பரிபூரணர், நேர்மையானவர் அல்லது ஊழியர்கள் என்று அழைத்தாலும், அவரிடம் தரநிலைகள் உள்ளன. அவர் ஒருவரை தனது ஊழியக்காரன் என்று அழைக்கும்போது, அந்த மனிதர் தேவனுடைய தூதர்களைப் பெற முடியும், அவருடைய கட்டளைகளைப் பின்பற்ற முடியும், தூதர்களால் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்ற முடியும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அந்த மனிதர் எதைச் செய்கிறார்? தேவன் மனிதனுக்குக் கட்டளையிட்டதை பூமியில் செய்கிறார். அந்த நேரத்தில், தேவன் மனிதனை பூமியில் செய்யும்படியாகச் சொன்னதை தேவனுடைய வழி என்று அழைக்க முடியுமா? இல்லை, அழைக்க முடியாது. அந்த நேரத்தில், மனிதன் சில எளிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே தேவன் கேட்டார். அவர் ஒரு சில எளிய கட்டளைகளை சொன்னார். மனிதனிடம் அதைச் செய்யும்படி சொன்னார். அதற்கு மேலாக எதுவும் கேட்கவில்லை. தேவன் தனது திட்டத்தின்படி செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஏனென்றால், அந்த நேரத்தில், பல நிபந்தனைகள் இன்னும் இல்லை, நேரம் இன்னும் வரவில்லை, மனிதர்களுக்கு தேவனுடைய வழி கடினமாக இருப்பதால் அவருடைய வழி அவருடைய இருதயத்திலிருந்து இன்னும் வெளிவரத் தொடங்கவில்லை. தாம் பேசிய நீதியுள்ள ஜனங்களை தேவன் கண்டார். அவர்கள் முப்பது அல்லது இருபது பேராக இருந்தாலும் அவர்களை அவருடைய ஊழியர்களாக நாம் இங்கே பார்க்கிறோம். தேவனுடைய தூதர்கள் இந்த அடியார்கள் மீது வந்தபோது, அவர்களை ஆதாயம் செய்யவும், அவர்களுடைய கட்டளைகளைப் பின்பற்றவும், அவர்களின் வார்த்தைகளின்படி செயல்படவும் முடிந்தது. தேவனுடைய பார்வையில் ஊழியர்களாக இருந்தவர்களால் செய்யப்பட வேண்டிய மற்றும் அடையப்பட வேண்டிய ஒன்று துல்லியமாக இதுவே. தேவன் ஜனங்களுக்காக வேண்டுகோள் விடுப்பதில் நியாயமானவராக இருக்கிறார். அவர்கள் இப்போது நீங்கள் இருப்பதைப் போலவே இருந்ததாலோ, அவர்கள் அதிகமாக பிரசங்கத்தைக் கேட்டு, தேவன் என்ன செய்வார் என்று அறிந்திருந்து, தேவனுடைய சித்தத்தை அதிகம் புரிந்துகொண்டு, அவருடைய நிர்வாகத் திட்டத்தைப் புரிந்துகொண்டதாலோ அல்ல, மாறாக அவர்கள் தங்கள் மனிதத்தன்மையில் நேர்மையானவர்களாக இருந்ததாலும் அவர்களால் தேவனுடைய வார்த்தைகளுக்கு இணங்க முடிந்தாலுமே அவர் அவர்களை தமது ஊழியர்கள் என்று அழைத்தார் தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டபோது, தாங்கள் செய்வதை ஒதுக்கி வைத்துவிட்டு, தேவன் கட்டளையிட்டதை நிறைவேற்ற முடிந்தது. ஆகவே, தேவனைப் பொறுத்தவரையில், ஊழியக்காரன் என்ற புனைப்பெயரில் உள்ள மற்றொரு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் பூமியில் அவருடைய கிரியைக்கு ஒத்துழைத்தார்கள், அவர்கள் தேவனுடைய தூதர்களாக இல்லாவிட்டாலும், அவர்கள் பூமியில் தேவனுடைய வார்த்தைகளை நிறைவேற்றுபவர்களாகவும் செயல்படுத்துபவர்களாகவும் இருந்தார்கள் என்பதாகும். இந்நிலையில், இந்த ஊழியர்கள் அல்லது நீதிமான்கள் தேவனுடைய இருதயத்தில் அதிக இடத்தைக் கொண்டிருந்ததை நீங்கள் காண்கிறீர்கள். தேவன் பூமியில் இறக்கவிருந்த கிரியையானது ஜனங்கள் இல்லாமல் அவருடன் ஒத்துழைக்க முடியாது. தேவனுடைய ஊழியர்களின் பங்கை தேவனுடைய தூதர்களால் ஈடுசெய்ய முடியாது. இந்த ஊழியர்களுக்கு தேவன் கட்டளையிட்ட ஒவ்வொரு கிரியையும் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, அவரால் அவர்களை இழக்க முடியவில்லை. தேவனுடனான இந்த ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், மனிதர்களிடையே அவர் செய்த கிரியைகள் ஸ்தம்பித்திருக்கும். இதன் விளைவாக தேவனுடைய ஆளுகைத் திட்டமும் தேவனுடைய நம்பிக்கையும் வீணாகியிருக்கும்.

தேவன், தான் அக்கறை கொண்டவர்களிடம் மிகுந்த இரக்கமுள்ளவராகவும், தாம் வெறுத்து ஒதுக்குகிறவர்கள் மீது மிகுந்த கோபம் கொண்டவராகவும் இருக்கிறார்

வேதாகமத்தின் விவரங்களின்படி, சோதோமில் தேவனுக்கான பத்து ஊழியர்கள் இருந்தார்களா? இல்லை, இல்லை! நகரம் தேவனால் இரட்சிக்கப்படுவதற்கு தகுதியானதாக இருந்ததா? நகரத்தில் ஒரு மனிதர் மட்டுமே—லோத்து மட்டுமே—தேவனுடைய தூதர்களைப் பெற்றார். இதன் உட்பொருள் என்னவென்றால், அந்த நகரத்தில் தேவனுடைய ஊழியக்காரராக ஒருவர் மட்டுமே இருந்தார். ஆகவே, லோத்தை காப்பாற்றி பின் சோதோம் நகரத்தை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லாதிருந்தது. மேலே மேற்கோள் காட்டிய ஆபிரகாமுக்கும் தேவனுக்கும் இடையிலான உரையாடல்கள் சாதாரணமானதாகத் தோன்றலாம், ஆனால் அவை மிகவும் ஆழமான ஒன்றை விளக்குகின்றன: தேவனுடைய செயல்களுக்கு கொள்கைகள் உள்ளன, ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் நீண்ட நேரம் கண்காணிக்கவும் சிந்திக்கவும் செய்வார். அவர் சரியான நேரத்திற்கு முன்பதாக எந்த முடிவுகளையும் எடுக்கமாட்டார் அல்லது எந்த முடிவுகளுக்கும் செல்லமாட்டார். சோதோமை அழிக்க தேவன் எடுத்த முடிவு சிறிதும் தவறில்லை என்பதாக ஆபிரகாமுக்கும் தேவனுக்கும் இடையிலான உரையாடல்கள் காட்டுகின்றன. ஏனென்றால், நகரத்தில் நாற்பது நீதிமான்களோ, முப்பது நீதிமான்களோ, இருபது நீதிமான்களோ இல்லை என்று தேவன் ஏற்கனவே அறிந்திருந்தார். பத்து பேர் கூட இல்லை. நகரத்தில் நீதியுள்ள மனிதராக ஒரே ஒரு லோத்து மட்டுமே இருந்தார். சோதோமில் நடந்தவை மற்றும் அதன் சூழ்நிலைகள் அனைத்தும் தேவனால் கவனிக்கப்பட்டன. தேவனுக்கு அவை நன்றாக தெரிந்திருந்தன. இதனால், அவருடைய முடிவு தவறாக இருக்க முடியாது. இதற்கு நேர்மாறாக, தேவனுடைய சர்வவல்லமையுடன் ஒப்பிடும்போது, மனிதன் மிகவும் உணர்ச்சியற்றவனாகவும், முட்டாள்தனமாகவும், அறிவற்றவனாகவும், குறுகிய பார்வை கொண்டவனாகவும் இருக்கிறான். ஆபிரகாமுக்கும் தேவனுக்கும் இடையிலான உரையாடல்களில் இதைத்தான் நாம் காண்கிறோம். தேவன் ஆதி காலம் முதல் இன்று வரை தனது மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார். இங்கே, அதைப் போலவே, நாம் காண வேண்டிய தேவனுடைய மனநிலையும் உள்ளது. எண்கள் எளிமையானவை—அவை எதையும் விவரிக்கவில்லை—ஆனால் இங்கே தேவனுடைய மனநிலையின் மிக முக்கியமான வெளிப்பாடு உள்ளது. ஐம்பது நீதிமான்களால் தேவன் நகரத்தை அழிக்க மாட்டார். இது தேவனுடைய தயவால் ஏற்பட்டதா? அவருடைய அன்பும் சகிப்புத்தன்மையும் காரணமாகுமா? தேவனுடைய மனநிலையின் இந்த பக்கத்தை நீங்கள் பார்த்தீர்களா? நீதியுள்ள பத்து பேர் மட்டுமே இருந்தாலும்கூட, இந்த பத்து நீதிமான்களால் தேவன் நகரத்தை அழித்திருக்க மாட்டார். இது தேவனுடைய சகிப்புத்தன்மையும் அன்பும் அல்லவா? தேவனுடைய தயவு, சகிப்புத்தன்மை மற்றும் அந்த நீதியுள்ள ஜனங்கள் மீதான அக்கறை காரணமாக, அவர் நகரத்தை அழித்திருக்க மாட்டார். இது தேவனுடைய சகிப்புத்தன்மை. இறுதியில், நாம் என்ன விளைவைக் காண்கிறோம்? ஆபிரகாம், “பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ,” என்று சொன்னபோது தேவன், “அதை அழிப்பதில்லை.” என்றார். அதற்கு மேலாக ஆபிரகாம் கேட்கவில்லை—ஏனென்றால் சோதோமுக்குள் அவர் குறிப்பிட்ட பத்து நீதிமான்கள் இல்லை. மேலும், அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. சோதோமை அழிக்க தேவன் ஏன் தீர்மானித்தார் என்பதை அப்போது அவர் புரிந்துகொண்டார். இதில், தேவனுடைய எந்த மனநிலையை நீங்கள் காண்கிறீர்கள்? தேவன் எத்தகைய தீர்மானத்தை எடுத்தார்? இந்த நகரத்தில் பத்து நீதிமான்கள் இல்லையென்றால், அந்த நகரம் இருப்பதை அவர் அனுமதிக்கப்போவதில்லை என்றும், அதை நிச்சயமாகவே அழிக்கப்போவதாகவும் தேவன் தீர்மானித்தார். இது தேவனுடைய கோபம் அல்லவா? இந்த கோபம் தேவனுடைய மனநிலையைக் குறிக்கிறதா? இந்த மனநிலை தேவனுடைய பரிசுத்தமான சாராம்சத்தின் வெளிப்பாடா? இது மனிதன் இடறலடையக்கூடாத தேவனுடைய நீதியின் சாராம்சத்தின் வெளிப்பாடா? சோதோமில் பத்து நீதிமான்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர், தேவன் அந்த நகரத்தை அழிப்பதில் உறுதியாக இருந்தார். அவர்கள் தேவனை எதிர்த்தார்கள் என்பதாலும் மிகவும் இழிவானவர்களாகவும் கேடானவர்களாகவும் இருந்தார்கள் என்பதாலும் அந்த நகரத்திற்குள் இருந்த ஜனங்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தேவன் உறுதியாக இருந்தார்.

இந்த பத்திகளை நாம் ஏன் இவ்வாறு ஆராய்ந்து பார்த்திருக்கிறோம்? ஏனென்றால், இந்த சில எளிய வாக்கியங்கள் தேவனுடைய ஏராளமான தயவு மற்றும் மிகுந்த கோபத்திற்கு முழு வெளிப்பாட்டைக் கொடுக்கின்றன. அதே நேரத்தில் நீதிமான்களைப் பொக்கிஷமாகக் கருதுவதும், அவர்களுக்கு தயவு காட்டுவதும், சகித்துக்கொள்வதும், அக்கறை காட்டுவதும் தேவனுடைய இருதயத்தில் இருந்தது. சோதோமில் சீர்கேடடைந்த அனைவரின் மீதும் ஆழ்ந்த வெறுப்பு இருந்தது. இது ஏராளமான தயவும் மிகுந்த கோபமும் இல்லையா? தேவன் எவ்வாறு நகரத்தை அழித்தார்? நெருப்பால். அவர் அதை ஏன் நெருப்பைப் பயன்படுத்தி அழித்தார்? எதையாவது நெருப்பால் எரிப்பதை நீ காணும்போது அல்லது நீ எதையாவது எரிக்கப் போகிறபோது, அதைப் பற்றிய உன் உணர்வுகள் என்ன? அதை ஏன் எரிக்க விரும்புகிறாய்? உனக்கு இனி அது தேவையில்லை, இனி அதைப் பார்க்க விரும்பவில்லை என்று நினைக்கிறாயா? அதை கைவிட விரும்புகிறாயா? தேவனுடைய நெருப்பைப் பயன்படுத்துவது என்பதற்கு கைவிடுதல் மற்றும் வெறுப்பு என்று அர்த்தமாகும். அவர் இனி சோதோமைக் காண விரும்பவில்லை என்று அர்த்தமாகும். இந்த உணர்ச்சி தான் சோதோமை நெருப்பால் அழிக்க தேவனைத் தூண்டியது. நெருப்பின் பயன்பாடானது தேவன் எவ்வளவு கோபமாக இருந்தார் என்பதைக் குறிக்கிறது. தேவனுடைய தயவும் சகிப்புத்தன்மையும் உண்மையில் உள்ளன. ஆனால் தேவனுடைய பரிசுத்தமும் நீதியும் அவர் கோபத்தை கட்டவிழ்த்துவிடும்போது, மனிதன் எந்தக் குற்றத்தையும் செய்யாத தேவனுடைய பக்கத்தைப் பார்க்கிறான். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மனிதன் பூரணமாக வல்லமை பெற்றவனாகவும், தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படும் போதும், மனிதனிடம் தேவன் காட்டிய தயவில் தேவன் அளவில்லாதவராக இருக்கிறார். மனிதன் அவருக்கு எதிராக கேடு, வெறுப்பு மற்றும் பகை ஆகியவற்றால் நிறைந்திருக்கும்போது, தேவன் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அவர் எந்த அளவுக்கு மிகுந்த கோபத்தில் இருக்கிறார்? மனிதனுடைய எதிர்ப்பையும் தீய கிரியைகளையும் தேவன் இனி பார்க்காத வரையில், அவருடைய கண்களுக்கு முன்பாக அவை இல்லாத வரையில், அவருடைய கோபம் நீடிக்கும். அப்போது தான் தேவனுடைய கோபம் மறைந்து போகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த மனிதர் யார் என்பது முக்கியமல்ல, அவர்களின் இருதயம் தேவனிடமிருந்து தூரம் சென்று, தேவனிடமிருந்து விலகிவிட்டால், ஒருபோதும் திரும்பி வராத வண்ணம் இருந்தால், அவர்களுடைய எல்லா தோற்றங்கள் அல்லது அவர்களின் தனிப்பட்ட ஆசைகள் எவ்வாறாக இருந்தாலும், அவர்கள் தேவனை வணங்க விரும்பினாலும், அவர்களுடைய உடலிலோ சிந்தனையிலோ தேவனைப் பின்பற்றும் மற்றும் கீழ்ப்படியும் சிந்தை இருந்தாலும், தேவனுடைய கோபம் நிறுத்தப்படாமல் கட்டவிழ்த்து விடப்படும். இது மனிதனுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கிய பின்னர், தேவன் தனது கோபத்தை ஆழமாக கட்டவிழ்த்துவிடுவது போல இருக்கும். அதை ஒருமுறை கட்டவிழ்த்துவிட்டால், அதை திரும்பப் பெற எந்த வழியும் இருக்காது. அத்தகைய மனிதகுலத்திடம் அவர் ஒருபோதும் இரக்கமுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருக்க மாட்டார். எந்தவொரு குற்றத்தையும் பொறுத்துக்கொள்ளாத தேவனுடைய மனநிலையின் ஒரு பக்கம் இது. இங்கே, தேவன் ஒரு நகரத்தை அழிப்பார் என்பது ஜனங்களுக்கு சாதாரணமாகத் தோன்றுகிறது. ஏனென்றால், தேவனுடைய பார்வையில், பாவம் நிறைந்த ஒரு நகரம் இருக்க முடியாது, தொடர்ந்து இருக்க முடியாது. அது தேவனால் அழிக்கப்பட வேண்டும் என்பது பகுத்தறிவு. ஆயினும், சோதோம் அழிக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் நடந்தவற்றில், தேவனுடைய மனநிலையை நாம் காண்கிறோம். அவர் அன்பான, அழகான மற்றும் நல்ல காரியங்களுடன் சகிப்புத்தன்மையுடனும் தயவுடனும் இருக்கிறார். தீய, பாவமான, பொல்லாத காரியங்களிடம் அவர் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார். அவர் தம்முடைய கோபத்தில் இடைவிடாமல் இருக்கிறார். தேவனுடைய மனநிலையின் இரண்டு முக்கிய மற்றும் மிக முக்கியமான அம்சங்கள் இவை. ஏராளமான தயவு மற்றும் மிகுந்த கோபம் ஆகியவை தொடக்கம் முதல் இறுதி வரை தேவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உங்களில் பெரும்பாலானோர் தேவனுடைய தயவை அனுபவித்திருக்கிறீர்கள். ஆனால் உங்களில் மிகச் சிலரே தேவனுடைய கோபத்தைப் அனுபவித்துள்ளீர்கள், ஆனால் வெகு சிலரே தேவனுடைய கோபத்தை பாராட்டியுள்ளீர்கள். தேவனுடைய தயவையும் அன்பையும் ஒவ்வொரு நபரிடமும் காணலாம். அதாவது, தேவன் ஒவ்வொரு நபரிடமும் மிகுந்த இரக்கமுள்ளவர். ஆயினும்கூட, மிக அரிதாகவே—அல்லது, ஒருபோதும்—தேவன் உங்களுக்கு மத்தியிலான எந்தவொரு தனிமனிதரிடமோ அல்லது எந்தவொரு கூட்டத்திடமோ மிகுந்த கோபம் கொள்ளவில்லை. ஓய்வெடுங்கள்! உடனடியாகவோ அல்லது பின்னரோ, தேவனுடைய கோபம் ஒவ்வொரு மனிதராலும் காணப்பட்டு அனுபவிக்கப்படும். ஆனால் இப்போது அந்த நேரம் வரவில்லை. இது ஏன்? ஏனென்றால், தேவன் ஒருவரிடம் தொடர்ந்து கோபப்படுகையில், அதாவது, அவர் தம்முடைய மிகுந்த கோபத்தை அவர்கள்மீது கட்டவிழ்த்து விடும்போது, இதன் அர்த்தம், அவர் இந்த நபரை வெறுக்கிறார், நிராகரித்தார், அவர்கள் இருப்பதை அவர் வெறுக்கிறார், அவர்கள் இருப்பதை அவரால் தாங்க முடியாது என்பதாகும். அவருடைய கோபம் அவர்கள் மீது வந்தவுடன் அவை மறைந்துவிடும். இன்று, தேவனுடைய கிரியை அந்த நிலையை இன்னும் எட்டவில்லை. தேவன் மிகுந்த கோபமடைந்தவுடன் உங்களில் எவராலும் அதைத் தாங்க முடியாது. அப்படியானால், இந்த நேரத்தில் தேவன் உங்கள் அனைவரிடமும் மிகுந்த இரக்கமுள்ளவர் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அவருடைய மிகுந்த கோபத்தை நீங்கள் இன்னும் காணவில்லை. நம்பாதவர்களாக இருந்தால், தேவனுடைய கோபம் உங்கள் மீது வரும்படி நீங்கள் கேட்கலாம். இதனால் தேவனுடைய கோபமும், மனிதனால் கெடுக்க முடியாத அவருடைய மனநிலையும் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் அனுபவித்து அறியலாம். உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

கடைசி நாட்களின் ஜனங்கள் தேவனுடைய கோபத்தை அவருடைய வார்த்தைகளில் மட்டுமே பார்க்கிறார்கள். உண்மையில் தேவனுடைய கோபத்தை அனுபவிக்கவில்லை

வேதாகமத்தின் இந்த பத்திகளில் காணப்படும் தேவனுடைய இரு குணங்களும் ஐக்கியம் கொள்ள தகுதி பெற்றுள்ளனவா? இந்தக் கதையைக் கேட்ட பிறகு, தேவனைப் பற்றிய புதிய புரிதல் உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு எத்தகைய புரிதல் இருக்கிறது? இந்த இறுதிக் காலக் கூட்டத்தைப் போல சிருஷ்டிப்புக் காலம் முதல் இன்று வரை எந்தக் கூட்டமும் தேவனுடைய இரக்கம் அல்லது தயவு மற்றும் கிருபை அனுபவித்ததில்லை என்று கூறலாம். இறுதிக் கட்டத்தில், தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் கிரியையைச் செய்திருந்தாலும், மாட்சிமையோடும் கோபத்தோடும் தனது கிரியையைச் செய்திருந்தாலும், பெரும்பாலான சமயங்களில் தேவன் தம்முடைய கிரியையைச் செய்ய வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறார். அவர் கற்பித்து தாகம் தீர்ப்பதற்கும், கொடுத்து பசியாற்றுவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதற்கிடையில், தேவனுடைய கோபம், எப்போதும் மறைக்கப்பட்டு வருகிறது. மேலும், தேவனுடைய கோபமான மனநிலையை அவருடைய வார்த்தைகளில் அனுபவிப்பதைத் தவிர, மிகச் சிலரே அவருடைய கோபத்தை நேரில் அனுபவித்திருக்கிறார்கள். இது தேவனுடைய நியாத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் போது, தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படும் கோபமானது தேவனுடைய மாட்சிமையையும், குற்றத்தின் சகிப்புத்தன்மையையும் அனுபவிக்க ஜனங்களை அனுமதிக்கிறது என்றாலும், இந்த கோபம் அவருடைய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதனைக் திருத்துவதற்கும், மனிதனை வெளிப்படுத்துவதற்கும், மனிதனை நியாயந்தீர்ப்பதற்கும், மனிதனைத் தண்டிப்பதற்கும், மனிதனைக் கண்டிப்பதற்கும் தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்—எனினும், தேவன் இன்னும் மனிதன் மீது மிகுந்த கோபம் கொள்ளவில்லை. அவருடைய வார்த்தைகளைத் தவிர, மனிதன் மீது எந்த கோபத்தையும் கட்டவிழ்த்துவிடவில்லை. ஆகவே, இந்த யுகத்தில் மனிதன் அனுபவித்த தேவனுடைய தயவும் அன்பும் தேவனுடைய உண்மையான மனநிலையின் வெளிப்பாடாகும். அதே சமயம் மனிதன் அனுபவிக்கும் தேவனுடைய கோபம் வெறுமனே அவரது வார்த்தைகளுடைய தொனி மற்றும் உணர்வின் விளைவகும். தேவனுடைய கோபத்தைப் பற்றிய உண்மையான அனுபவமாகவும் உண்மையான அறிவாகவும் இந்த விளைவை பலர் தவறாக கருதுகிறார்கள். இதன் விளைவாக, தேவனுடைய தயவு மற்றும் கிருபையை அவருடைய வார்த்தைகளில் பார்த்ததாக பெரும்பாலான ஜனங்கள் நம்புகிறார்கள். மனிதனுடைய குற்றத்தில் தேவனுடைய சகிப்புத்தன்மையையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தேவனுடைய தயவையும் மனிதனிடம் சகிப்புத்தன்மையையும் புரிந்துகொள்ள வந்திருக்கிறார்கள். ஆனால் மனிதனுடைய நடத்தை எவ்வளவு மோசமானதாக இருந்திருந்தாலும், அல்லது அவனது மனநிலை எவ்வளவு கெட்டதாக இருந்திருந்தாதாலும், தேவன் அதை எப்போதும் சகித்துக்கொண்டிருக்கிறார். சகித்துக்கொள்வதில், அவர் நோக்கம் என்னவென்றால், அவர் ஆதாயம் செய்ய விரும்பும் மனிதர்களில் ஒரு பலனைப் பெற அவர் பேசிய வார்த்தைகள், அவர் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அவர் செலுத்திய விலைக்கிரயம் ஆகியவற்றிற்காக காத்திருப்பதாகும். இது போன்ற ஒரு முடிவுக்காகக் காத்திருப்பது நேரம் எடுக்கும். இதற்காக மனிதனுக்கு வெவ்வேறு சூழல்களை உருவாக்க வேண்டும். அதைப் போலவே ஜனங்கள் பிறந்தவுடன் பெரியவர்களாக மாற மாட்டார்கள். இதற்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். சிலர் உண்மையான முதிர்ச்சியடைந்தவராக மாறுவதற்கு இருபது அல்லது முப்பது ஆண்டுகள் கூட தேவைப்படும். இந்த செயல்முறையை முடிக்க தேவன் காத்திருக்கிறார். அத்தகைய நேரம் வருவதற்காக அவர் காத்திருக்கிறார். இந்த முடிவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அவர் காத்திருக்கும் காலம் முழுவதும், தேவன் மிகுந்த இரக்கமுள்ளவராக இருக்கிறார். எவ்வாறாயினும், தேவனுடைய கிரியையின் போது, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஜனங்கள் தாக்கப்படுகிறார்கள். சிலர் தேவனுக்கு எதிரான அவர்களுடைய கடுமையான எதிர்ப்பால் தண்டிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற எடுத்துக்காட்டுகள் மனிதனுடைய குற்றத்தைத் ஏற்காத தேவனுடைய மனநிலைக்கு இன்னும் பெரிய சான்றாகும். அவை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தேவனுடைய சகிப்புத்தன்மையையும் சகிப்புத்தன்மை உண்மையில் இருப்பதையும் பூரணமாக உறுதிப்படுத்துகின்றன. இந்தப் பொதுவான எடுத்துக்காட்டுகளில், இந்த ஜனங்களில் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதி வெளிப்படுவது என்பது தேவனுடைய ஒட்டுமொத்த ஆளுகைத் திட்டத்தை நிச்சயமாக பாதிக்காது. உண்மையில், தேவனுடைய கிரியையின் இந்த இறுதிக் கட்டத்தில், தேவன் காத்திருக்கும் காலம் முழுவதும் சகித்துக்கொண்டார். மேலும், அவரைப் பின்பற்றுபவர்களின் இரட்சிப்பிற்காக அவர் தனது சகிப்புத்தன்மையையும் ஜீவனையும் பரிமாறிக்கொண்டார். இதைப் பார்க்கிறீர்களா? தேவன் தனது திட்டத்தை காரணமின்றி மாற்றுவதில்லை. அவர் தனது கோபத்தை கட்டவிழ்த்துவிட முடியும். அவர் இரக்கமுள்ளவராகவும் இருக்க முடியும். இது தேவனுடைய மனநிலையின் இரண்டு முக்கிய பகுதிகளின் வெளிப்பாடு ஆகும். இது மிகவும் தெளிவானதாக இருக்கிறதா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனிடம் சரியானது, தவறானது, நியாயமானது மற்றும் நியாயமற்றது, நேர்மறை மற்றும் எதிர்மறை—இவை அனைத்தும் மனிதனுக்கு தெளிவாகக் காட்டப்படுகின்றன. அவர் என்ன செய்வார், எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார்—இவை அனைத்தும் அவருடைய மனநிலையில் நேரடியாக பிரதிபலிக்க முடியும். இதுபோன்ற விஷயங்களை தேவனுடைய கிரியையில் மிகவும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் காணலாம். அவை தெளிவற்றவை அல்லது பொதுவானவை அல்ல. மாறாக, எல்லா ஜனங்களும் தேவனுடைய மனநிலையையும், அவரிடம் உள்ளதையும், குறிப்பாக உறுதியான, உண்மையான மற்றும் நடைமுறையான முறையிலும் காண அவை அனுமதிக்கின்றன. இவரே உண்மையான தேவன் ஆவார்.

தேவனுடைய மனநிலை ஒருபோதும் மனிதனிடமிருந்து மறைக்கப்படுவதில்லை—மனிதனுடைய இருதயம் தேவனிடமிருந்து விலகிவிட்டது

இவற்றைப் பற்றி நான் பேசாவிட்டால், வேதாகமத்தின் கதைகளில் காணப்படும் தேவனுடைய உண்மையான மனநிலையை நீங்கள் யாரும் பார்க்க முடியாது. இது உண்மை. ஏனென்றால், இந்த வேதாகமக் கதைகள் தேவன் செய்த சில விஷயங்களை பதிவு செய்திருந்தாலும், தேவன் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசியுள்ளார். அவருடைய மனநிலையை நேரடியாக அறிமுகப்படுத்தவோ அல்லது மனிதனுக்கு அவருடைய சித்தத்தை வெளிப்படையாக வெளியிடவோ இல்லை. பிற்கால தலைமுறையினர் இந்த பதிவுகளைக் கதைகள் அன்றி வேறொன்றுமில்லை என்று கருதுகின்றனர். ஆகவே, தேவன் தன்னை மனிதனிடமிருந்து மறைக்கிறார் என்று தோன்றுகிறது. இது மனிதனிடமிருந்து மறைக்கப்பட்ட தேவனுடைய ஆள்தத்துவம் அல்ல, மாறாக அவருடைய மனநிலையும் சித்தமும் ஆகும். இன்று எனது பேச்சுக்குப் பிறகு, தேவன் மனிதனிடமிருந்து பூரணமாக மறைக்கப்பட்டிருப்பதை நீங்கள் இன்னும் உணர்கிறீர்களா? தேவனுடைய மனநிலை மனிதனிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் இன்னும் நம்புகிறீர்களா?

படைப்பின் காலத்திலிருந்தே, தேவனுடைய மனநிலை அவருடைய கிரியையுடன் உள்ளது. இது ஒருபோதும் மனிதனிடமிருந்து மறைக்கப்படவில்லை. ஆனால் பூரணமாக வெளிப்படுத்தப்பட்டு மனிதனுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆயினும்கூட, காலப்போக்கில், மனிதனுடைய இருதயம் தேவனிடமிருந்து இன்னும் தூரமாகியுள்ளது. மனிதனுடைய கேடு ஆழமாகிவிட்டதால், மனிதனும் தேவனும் மேலும் மேலும் பிரிந்துவிட்டார்கள். மெதுவாக ஆனால் நிச்சயமாக, மனிதன் தேவனுடைய பார்வையில் இருந்து மறைந்துவிட்டான். மனிதனால் தேவனைப் “பார்க்க” முடியவில்லை. இது அவனை தேவனைப் பற்றிய எந்த “செய்தியும்” இல்லாதவனாக மாற்றிவிட்டது. ஆகவே, தேவன் இருக்கிறாரா என்பது அவனுக்குத் தெரியாமல் போனது. தேவன் இருப்பதை முற்றிலுமாக மறுக்கும் அளவிற்கு கூட அது செல்கிறது. இதன் விளைவாக, தேவனுடைய மனநிலையையையும், தேவனையும், தேவனிடம் உள்ளவற்றையும் மனிதன் புரிந்துகொள்ளவில்லை. மனிதனிடமிருந்து மறைந்திருப்பதால் அல்ல, மாறாக அவனுடைய இருதயம் தேவனிடமிருந்து விலகிவிட்டதால் மனிதன் புரிந்துகொள்ளவில்லை. மனிதன் தேவனை நம்புகிறான் என்றாலும், மனிதனுடைய இருதயம் தேவன் இல்லாமல் இருக்கிறது. தேவனை எப்படி நேசிக்க வேண்டும் என்று அவன் அறியாமலிருக்கிறான். அவன் தேவனை நேசிக்க விரும்பவில்லை. ஏனென்றால், அவனுடைய இருதயம் ஒருபோதும் தேவனிடம் நெருங்கி வந்ததில்லை. அவன் எப்போதும் தேவனைத் தவிர்க்கிறான். இதன் விளைவாக, மனிதனுடைய இருதயம் தேவனிடமிருந்து தூரமாக இருக்கிறது. அப்படியானால், அவனது இருதயம் எங்கே இருக்கிறது? உண்மையில், மனிதனுடைய இருதயம் எங்கும் செல்லவில்லை: அதை தேவனுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக அல்லது அதை தேவன் பார்க்கத்தக்கதாக வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவன் அதை தனக்காக வைத்திருக்கிறான். சிலர் அடிக்கடி தேவனிடம், “தேவனே, என் இருதயத்தைப் பாரும்—நான் நினைப்பதை நீர் அறிவீர்” என்று ஜெபிப்பார்கள். சிலர் அவர்களை தேவன் பார்க்க அனுமதித்து, தாங்கள் செய்த சத்தியத்தை மீறினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தேவனிடம் சத்தியம் செய்கிறார்கள். தேவனை தன் இருதயத்திற்குள் பார்க்க மனிதன் அனுமதித்தாலும், மனிதன் தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய வல்லவன் என்பதையும், அவன் விதி, வாய்ப்புகள் மற்றும் அனைத்தையும் தேவனுடைய கட்டுப்பாட்டில் விட்டுவிட்டான் என்பதையும் இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆகவே, நீ தேவனிடம் செய்த சத்தியங்கள் அல்லது நீ அவரிடம் உறுதியளித்தவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய பார்வையில் உன் இருதயம் இன்னும் அவருக்கு பூட்டப்பட்டுள்ளது. ஏனென்றால், உன் இருதயத்தை தேவனை பார்க்க மட்டுமே அனுமதிக்கிறாய். ஆனால் அதைக் கட்டுப்படுத்த அவரை அனுமதிக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீ உன் இருதயத்தை தேவனிடம் கொடுக்கவில்லை. மேலும், தேவன் கேட்க இனிமையான வார்த்தைகளை மட்டுமே பேசுகிறாய். இதற்கிடையில், உன் கபடங்கள், சூழ்ச்சி மற்றும் திட்டங்களுடன் சேர்ந்து உன் பல்வேறு வஞ்சக நோக்கங்களை தேவனிடமிருந்து மறைக்கிறாய். உன் வாய்ப்புகளையும் விதியையும் உன் கரங்களில் பிடித்து வைக்கிறீர்கள். அவை தேவனால் பறிக்கப்படும் என்று மிகவும் பயப்படுகிறாய். ஆகவே, தேவன் தன் மீதான மனிதனுடைய நேர்மையை ஒருபோதும் காண்பதில்லை. மனிதனுடைய இருதயத்தின் ஆழத்தை தேவன் கவனித்தாலும், மனிதன் என்ன நினைக்கிறான், தன் இருதயத்தில் என்ன செய்ய விரும்புகிறான் என்பதைக் காண முடியும் என்றாலும், அவனது இருதயத்திற்குள் என்னென்ன விஷயங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதைக் காண முடியும் என்றாலும், மனிதனுடைய இருதயம் தேவனுக்கு சொந்தமாக இல்லை. அவன் அதை தேவனுடைய கட்டுப்பாட்டுக்குக் கொடுக்கவில்லை. அதாவது தேவனுக்கு உரிமை இருந்தும், அவரைக் கட்டுப்படுத்த அனுமதிக்கவில்லை. மனதளவில், மனிதன் தேவனுடைய ஏற்பாடுகளுக்கு தன்னைக் கொடுக்க அவனுக்கு வாஞ்சை அல்லது விருப்பம் இல்லை. மனிதன் தன்னை தேவனிடமிருந்து பூட்டிவிட்டது மட்டுமல்லாமல், மென்மையான பேச்சு மற்றும் புகழ்ச்சியைப் பயன்படுத்தி ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கி, தேவனுடைய நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் உண்மையான முகத்தை தேவனுடைய பார்வைக்கு மறைத்து, தங்கள் இருதயங்களை பூட்டி வைப்பதற்கான வழிகளைப் பற்றி யோசிக்கிறார்கள். தேவன் தங்களைப் பார்க்க அனுமதிக்காததன் அவர்களின் நோக்கம் என்னவென்றால் அவர்கள் உண்மையில் எதைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதேயாகும். அவர்கள் தங்களது இருதயங்களை தேவனுக்குக் கொடுக்க விரும்பவில்லை. மாறாக அவற்றை தங்களுக்காகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். இதன் உட்பொருள் என்னவென்றால், மனிதன் எதைச் செய்கிறான், எதை விரும்புகிறான் என்பது அனைத்தும் திட்டமிடப்பட்டு, கணக்கிடப்பட்டு, மனிதனால் தீர்மானிக்கப்படுகிறது. அவனுக்கு தேவனுடைய பங்கேற்பு அல்லது தலையீடு தேவையில்லை. தேவனுடைய திட்டங்களும் மற்றும் ஏற்பாடுகளும் அவனுக்குத் தேவையில்லை. ஆகவே, தேவனுடைய கட்டளைகள், அவருடைய ஆணை, அல்லது மனிதனிடம் உள்ள எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், மனிதனுடைய முடிவுகள் அவனது சொந்த நோக்கங்களையும் மற்றும் நலன்களையும், அந்த நேரத்தில் அவனது சொந்த நிலையையும் மற்றும் சூழ்நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை ஆகும். மனிதன் எப்போதுமே தனக்குத் தெரிந்த அறிவு மற்றும் உட்கருத்துக்களையும், அவனது சொந்த அறிவையும், தான் எடுக்க வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் பயன்படுத்துகிறான். மேலும், தேவனுடைய குறுக்கீட்டையோ கட்டுப்பாட்டையோ அனுமதிப்பதில்லை. இதுவே தேவன் பார்க்கும் மனிதனுடைய இருதயம் ஆகும்.

ஆதி காலம் முதல் இன்று வரை மனிதன் மட்டுமே தேவனுடன் உரையாட வல்லவனாக இருக்கிறான். அதாவது, தேவனுடைய எல்லா உயிரினங்களுக்கும் படைப்புகளுக்கும் மத்தியில், மனிதனைத் தவிர வேறு எவரும் தேவனுடன் உரையாட முடியவில்லை. மனிதனுக்கு கேட்கக்கூடிய காதுகளும், பார்க்க அனுமதிக்கும் கண்களும் உள்ளன. அவனுக்கான மொழி, சொந்த யோசனைகள் மற்றும் சுதந்திரம் உள்ளன. தேவன் பேசுவதைக் கேட்பதற்கும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதற்கும், தேவனுடைய கட்டளையை ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான அனைத்தையும் அவன் பெற்றிருக்கிறான். ஆகவே, தேவன் தம்முடைய எல்லா விருப்பங்களையும் மனிதனுக்கு அளிக்கிறார். மனிதனை அவருடன் ஒரே மனநிலையுள்ளவனாகவும், அவருடன் நடக்கக் கூடியவனாகவும் இருக்கச் செய்கிறார். அவர் ஆளுகை செய்யத் தொடங்கியதிலிருந்து, மனிதன் தன் இருதயத்தை அவருக்குக் கொடுப்பதற்காகவும், தேவன் அதைச் சுத்திகரிக்கவும், சித்தப்படுத்தவும், தேவனை திருப்திப்படுத்தக் கூடியதாகவும், தேவனால் நேசிக்கக் கூடியதாகவும் செய்ய தேவன் காத்திருக்கிறார். மனிதனை தேவன் மீது பயபக்தியுள்ளவனாகவும், தீமைகளைத் தவிர்ப்பவனாகவும் உருவாக்க தேவன் காத்திருக்கிறார். இந்த முடிவை தேவன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். வேதாகமத்தின் பதிவுகளில் இதுபோன்றவர்கள் யாராவது இருக்கிறார்களா? அதாவது, தங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுக்கக்கூடிய யாரேனும் வேதாகமத்தில் உள்ளனரா? இந்த யுகத்திற்கு முன்பதாக ஏதாவது முன்மாதிரி உள்ளதா? இன்று, வேதாகமத்தின் விவரங்களைத் தொடர்ந்து படிப்போம், இன்று நாம் பேசும் “உங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுங்கள்” என்ற தலைப்பில், யோபுவுக்கும் இந்த கிரியைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதைப் பார்ப்போம். யோபு தேவனுக்கு திருப்திகரமாக இருந்தாரா, தேவனால் நேசிக்கப்பட்டாரா என்பதைப் பார்ப்போம்.

யோபுவைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன? மூலமுதலான வேதாகமத்தை மேற்கோள் காட்டி, யோபு “தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.” என்று சிலர் சொல்கிறார்கள். “தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்”: வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்ட யோபுவின் அசல் மதிப்பீடு இதுதான். நீங்கள் உங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால், யோபுவை எவ்வாறு பின்னுக்குத் தள்ளுவீர்கள்? சிலர் யோபு ஒரு நல்ல மற்றும் நியாயமான மனிதர் என்று கூறுகிறார்கள். அவர் தேவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருந்தார் என்று சிலர் சொல்கிறார்கள். சிலர், யோபு நீதியுள்ள, மனிதாபிமானமுள்ள மனிதர் என்று கூறுகிறார்கள். யோபுவின் விசுவாசத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அதாவது, உங்கள் இருதயங்களில் நீங்கள் மிகுந்த முக்கியத்துவத்தை செலுத்துகிறீர்கள். யோபுவின் விசுவாசத்திற்கு பொறாமைப்படுகிறீர்கள். ஆகவே, இன்று, தேவன் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு யோபுவிடம் இருந்தது என்ன என்று பார்ப்போம். அடுத்ததாக, கீழே உள்ள வசனங்களை வாசிப்போம்.

இ. யோபு

1. யோபுவைப் பற்றிய தேவனுடைய மற்றும் வேதாகமத்தில் உள்ள மதிப்பீடுகள்

யோபு 1:1 ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.

யோபு 1:5 விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.

யோபு 1:8 அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியக்காரனாகிய யோபுவைப் போல பூமியில் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார்.

இந்த பத்திகளில் நீங்கள் காணும் முக்கிய கருத்து என்ன? வேதாகமத்தின் இந்த மூன்று சுருக்கமான பகுதிகள் அனைத்தும் யோபுடன் தொடர்புடையவை ஆகும். குறுகியதாக இருந்தாலும், அவர் எந்த வகையான மனிதர் என்பதை அவை தெளிவாகக் கூறுகின்றன. யோபுவின் அன்றாட நடத்தை மற்றும் அவரது குணத்தைப் பற்றிய அவற்றின் விளக்கத்தின் மூலம், ஆதாரமற்றவர்களாக இருப்பதற்குப் பதிலாக, யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீடு நன்கு நிறுவப்பட்டுள்ளது என்பதை அந்த வார்த்தைகள் எல்லோரிடமும் கூறுகின்றன. யோபுவைப் பற்றிய மனிதனுடைய மதிப்பீடாக இருந்தாலும் (யோபு 1:1), அல்லது அவரைப் பற்றிய தேவனுடைய மதிப்பீடாக இருந்தாலும் (யோபு 1:8), இவை இரண்டும் தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக யோபுவின் செயல்களின் விளைவாகும் என்று அவை நமக்கு சொல்கின்றன (யோபு 1:5).

முதலில், முதல் பத்தியைப் படிப்போம்: “ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.” இது வேதாகமத்தில் யோபுவைப் பற்றிய முதல் மதிப்பீடாகும். மேலும், இந்த வாக்கியம் யோபுவைப் பற்றிய ஆசிரியரின் மதிப்பீடாகும். இயற்கையாகவே, இது யோபுவைப் பற்றிய மனிதனுடைய மதிப்பீட்டையும் குறிக்கிறது. அதாவது “அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.” அடுத்ததாக, யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீட்டைப் பற்றி வாசிப்போம்: “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை” (யோபு 1:8). அந்த இரண்டில், ஒன்று மனிதனிடமிருந்து வந்தது, ஒன்று தேவனிடமிருந்து தோன்றியதாகும். அவை ஒரே உள்ளடக்கத்துடன் இருக்கும் இரண்டு மதிப்பீடுகள். ஆகவே, யோபுவின் நடத்தையும் குணமும் மனிதனுக்குத் தெரிந்திருந்தன மற்றும் அவை தேவனால் புகழப்பட்டதையும் காண முடிகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதனுக்கு முன்பாகவும் தேவனுக்கு முன்பாகவும் இருந்த யோபுவின் நடத்தை ஒரே மாதிரியானவை. தான் தேவனால் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் எல்லா நேரங்களிலும் தனது நடத்தை மற்றும் உந்துதலை தேவனுக்கு முன்பாக வைத்தார். மேலும், அவர் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்த்தவர். இவ்வாறு, தேவனுடைய பார்வையில், பூமியிலுள்ள ஜனங்களுள் யோபு மட்டுமே பரிபூரணராகவும் நேர்மையாகவும் இருந்தார். தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்த்தார்.

யோபுவிடமிருந்த தெய்வ பயம் மற்றும் அவரது அன்றாட ஜீவிதத்தில் தீமையைத் தவிர்த்தது பற்றிய விஷேசித்த வெளிப்பாடுகள்

அடுத்ததாக, யோபுவின் தெய்வ பயம் மற்றும் தீமையைத் தவிர்ப்பது குறித்த விஷேசித்த வெளிப்பாடுகளைப் பார்ப்போம். இதற்கு முந்தைய மற்றும் பின்பற்றும் பத்திகளைத் தவிர, யோபு 1:5 ஐயும் படிப்போம். தெய்வ பயம் மற்றும் தீமையைத் தவிர்ப்பதும் யோபுவின் விஷேசித்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும். அவர் எவ்வாறு தேவனுக்கு அஞ்சினார் மற்றும் அவரது அன்றாட ஜீவிதத்தில் எவ்வாறு தீமையைத் தவிர்த்தார் என்பதற்கு அது தொடர்புடையதாகும். மிக முக்கியமாக, அவர் தனது சொந்த தெய்வ பயத்துக்காகவும், தீமையைத் தவிர்ப்பதற்காகவும் செய்யவேண்டியதைச் செய்தது மட்டுமல்லாமல், தம்முடைய மகன்களின் சார்பாக தேவனுக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார். விருந்து வைக்கும் போது அவர்கள் பெரும்பாலும் “பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள்” என்று அவர் பயந்தார். இந்த பயம் யோபுவில் எவ்வாறு வெளிப்பட்டது? அசல் உரை பின்வரும் விவரத்தை அளிக்கிறது: “விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்.” யோபுவின் நடத்தையானது, அவருடைய வெளிப்புற நடத்தையில் வெளிப்படாதபடிக்கு, தெய்வ பயம் அவருடைய இருதயத்திலிருந்தே வந்தது என்பதையும், தெய்வ பயம் அவருடைய அன்றாட ஜீவிதத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், எல்லா நேரங்களிலும் காணப்படலாம் என்பதையும் காட்டுகிறது. ஏனென்றால், அவர் தீமையைத் தவிர்த்தது மட்டுமல்லாமல் பெரும்பாலும் அவருடைய மகன்களின் சார்பாக சர்வாங்க தகனபலிகளை பலியிட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோபு தேவனுக்கு எதிராக பாவம் செய்வதையும், தேவனை தன் இருதயத்தில் கைவிடுவதையும் பற்றி மிகுந்த பயம் கொண்டதோடு மட்டுமல்லாமல், தன் மகன்கள் தேவனுக்கு எதிராக பாவம் செய்து அவரை இருதயத்தில் கைவிடக்கூடும் என்றும் கவலைப்பட்டார். இதிலிருந்து யோபுவின் தெய்வ பயத்தின் உண்மை ஆராய்ச்சிக்கு முன்பாக நிலையாக நிற்கிறது. இது எந்த மனிதனுடைய சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டு இருப்பதைக் காணலாம். அவர் அவ்வாறு அவ்வப்போது செய்தாரா, அல்லது அடிக்கடி செய்தாரா? உரையின் இறுதி வாக்கியம் “இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.” இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்றால், யோபு எப்போதாவது அல்லது அவருக்குப் பிரியமானபோது சென்று பார்க்கவில்லை, ஜெபத்தின் மூலமாக தேவனிடம் ஒப்புவிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் தனது மகன்களை சுத்தமாக்கும்படி தவறாமல் அவர்களுக்காக சர்வாங்க தகனபலிகளை பலியிட்டு அனுப்பினார். இங்கே “அந்நாட்களிலெல்லாம்” என்ற வார்த்தையானது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அல்லது ஒரு கணம் அவர் அவ்வாறு செய்ததாக அர்த்தம் அளிக்கவில்லை. யோபுவின் தெய்வ பயத்தின் வெளிப்பாடு தற்காலிகமானது அல்ல. அவர்களைப் பற்றிய அறிவில் அல்லது பேசும் வார்த்தைகளில் அவன் நிறுத்திக்கொள்ளவில்லை என்று அது கூறுகிறது. அதற்கு பதிலாக, தேவனுக்கு பயந்து, தீமையைத் தவிர்க்கும் முறை அவருடைய இருதயத்தை வழிநடத்தியது. அது அவருடைய நடத்தையை ஆட்சி செய்தது. அதுவே அவர் இருப்பதற்கான ஆதாரம் என்று கருதுகிறார். அவர் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து விடுவாரோ என்று அஞ்சுவதாகவும், அவருடைய மகன்களும் மகள்களும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வார்கள் என்றும் அஞ்சுவதாகவும், அவர் அவ்வாறு தொடர்ந்து செய்வது காட்டுகிறது. தேவனுக்குப் பயப்படுவதற்கும், தீமையைத் தவிர்ப்பதற்கும் அவரது இருதயத்திற்குள் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை இது குறிக்கிறது. அவர் தொடர்ந்து இவ்வாறு செய்தார். ஏனென்றால், அவர் இருதயத்தில் பயந்து—தீமை செய்வதற்கும், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதற்கும், அவர் தேவனுடைய வழியிலிருந்து விலகி, தேவனை திருப்திப்படுத்த முடியாமல் போவதற்கும் பயந்தார். அதே சமயம், தனது மகன்களும் மகள்களும் தேவனைப் புண்படுத்தியிருப்பார்களோ என்ற பயத்தில் அவர் கவலைப்பட்டார். யோபுவின் அன்றாட ஜீவிதத்தில் அவரது இயல்பான நடத்தை இதுதான். துல்லியமாக இதுவே அந்த இயல்பான நடத்தை ஆகும். யோபுவின் தெய்வ பயம் மற்றும் தீமையைத் தவிர்ப்பது வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை இது நிரூபிக்கிறது. யோபு உண்மையிலேயே அத்தகைய யதார்த்தத்தை ஜீவித்தார். “இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்”: இந்த வார்த்தைகள் தேவனுக்கு முன்பாக யோபுவின் அன்றாட கிரியைகளைக் கூறுகின்றன. அவர் தொடர்ந்து அவ்வாறு செய்தபோது, அவருடைய நடத்தையும் இருதயமும் தேவனுக்கு முன்பாக வந்ததா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் பெரும்பாலும் யோபுவின்இருதயத்துக்காகவும் நடத்தைக்காகவும் மகிழ்ச்சியடைந்தாரா? பின்னர், எந்த நிலையில், எந்த சூழலில், யோபு தொடர்ந்து இவ்வாறு செய்தார்? தேவன் யோபுவுக்கு அடிக்கடி தோன்றியதால் தான் அவர் அவ்வாறு செயல்பட்டார் என்று சிலர் சொல்கிறார்கள். தீமையைத் தவிர்ப்பதற்கான விருப்பம் இருந்ததால் அவர் தொடர்ந்து அவ்வாறு செய்தார் என்று சிலர் கூறுகிறார்கள். மேலும், அவருடைய செல்வம் எளிதில் வரவில்லை என்று அவர் நினைத்திருக்கலாம், அது தேவனால் அவருக்கு வழங்கப்பட்டதாக அவர் அறிந்திருக்கலாம், ஆகவே, தேவனுக்கு எதிராக பாவம் செய்ததாலோ அல்லது புண்படுத்தியதாலோ தனது சொத்தை இழக்க நேரிடும் என்று அவர் மிகுந்த பயத்தில் இருந்தார் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த கூற்றுக்களுள் ஏதேனும் ஒன்று உண்மையாக இருக்குமா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால், தேவனுடைய பார்வையில், தேவன் யோபுவை அதிகமாக ஏற்றுக்கொண்டார், நேசித்தார். இதற்கு அவர் தொடர்ந்து இவ்வாறு செய்தார் என்பது மட்டும் காரணமல்ல. அதற்கும் மேலாக, இது தேவன், மனிதன், சாத்தான் ஆகியோருக்கு முன்பாக யோபு சாத்தானிடம் ஒப்படைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது நடந்த நடத்தை ஆகும். கீழேயுள்ள பகுதிகள் மிகவும் உறுதியான ஆதாரங்களை வழங்குகின்றன. இது யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீட்டின் உண்மையை நமக்குக் காட்டுகிறது. அடுத்ததாக, வேதாகமத்தின் பின்வரும் பத்திகளைப் படிப்போம்.

2. சாத்தான் முதன்முறையாக யோபுவைத் சோதிக்கிறான் (அவனுடைய கால்நடைகள் திருடப்பட்டு அவனது பிள்ளைகளுக்கு பேரழிவு ஏற்படுகிறது)

அ. தேவன் பேசிய வார்த்தைகள்

யோபு 1:8 அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியக்காரனாகிய யோபுவைப் போல பூமியில் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார்.

யோபு 1:12 யோகோவா சாத்தானிடம், இதோ, அவனுடையது எல்லாம் உன் கையில் இருக்கிறது; அவன் மீது மாத்திரம் உன் கையை வைக்காதே என்றார். ஆகவே சாத்தான் யோகாவாவின் சந்நிதியில் இருந்து புறப்பட்டுச் சென்றான்.

ஆ. சாத்தானுடைய பதில்

யோபு 1:9-11 அப்பொழுது சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்? அவனைச் சுற்றியும், அவன் வீட்டைச் சுற்றியும், அனைத்துப் பக்கத்திலும் அவன் கொண்டிருக்கும் எல்லாவற்றைச் சுற்றியும் நீர் வேலி அமைக்கவில்லையா? அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று. ஆனால் இப்பொழுது நீர் உம் கையை நீட்டி, அவனிடம் உள்ள சகலத்தையும் தொட்டீரானால், அப்பொழுது அவன் உம் முகத்திற்கு முன்பாக உம்மைத் தூஷிப்பான் என்றான்.

யோபுவின் நம்பிக்கை முழுமையடைய வேண்டும் என்பதற்காக யோபுவைச் சோதிப்பதற்கு தேவன் சாத்தானை அனுமதிக்கிறார்.

யேகோவா தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான பரிமாற்றத்தைப் பற்றி வேதாகமத்தில் நாம் காணும் முதல் பதிவு யோபு 1:8 ஆகும். இந்நிலையில், தேவன் என்ன சொன்னார்? மூலமுதலான வேதாகம வசனங்கள் பின்வரும் விவரத்தை வழங்குகிறது: “அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியக்காரனாகிய யோபுவைப் போல பூமியில் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார்.” இது சாத்தானுக்கு முன் யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீடாகும். அவர் ஒரு பரிபூரண மற்றும் நேர்மையான மனிதர் என்று தேவன் சொன்னார். அவர் தேவனுக்கு அஞ்சி, தீமையைத் தவிர்த்தார். தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இந்த வார்த்தைகளுக்கு முன்பு, யோபுவை சோதிக்க சாத்தானைப் பயன்படுத்த வேண்டும்—யோபுவை சாத்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேவன் தீர்மானித்திருந்தார். ஒரு வகையில், யோபுவைப் பற்றிய தேவனுடைய அவதானிப்பும் மதிப்பீடும் துல்லியமானவை மற்றும் பிழையில்லாமல் இருந்தன என்பதை இது நிரூபிக்கும் மற்றும் யோபுவின்சாட்சியின் மூலம் சாத்தானை வெட்கப்பட வைக்கும். மற்றொரு வகையில், இது தேவன் மீதான யோபுவின்நம்பிக்கையையும் தெய்வ பயத்தையும் பூரணப்படுத்தும். இவ்வாறு, சாத்தான் தேவனுக்கு முன்பாக வந்தபோது, தேவன் இரு பொருள்படப் பேசவில்லை. அவர் நேராக காரியத்தைச் சாத்தானிடம் கேட்டார்: “என் ஊழியக்காரனாகிய யோபுவைப் போல பூமியில் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா?” தேவனுடைய கேள்வியில் பின்வரும் அர்த்தம் உள்ளது: சாத்தான் எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்தான் என்றும், தேவனுடைய ஊழியனாக இருந்த யோபுவை அடிக்கடி உளவு பார்த்தான் என்றும் தேவன் அறிந்திருந்தார். சாத்தான் பெரும்பாலும் யோபுவை சோதித்து தாக்கியது. தேவன் மீதுள்ள நம்பிக்கையும், தெய்வ பயமும் உறுதியாக இருக்க முடியாது என்பதை நிரூபிப்பதற்காக அவர் மீது அழிவைக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயன்றது. யோபு தேவனைக் கைவிடுவதற்கும், தேவனுடைய கைகளிலிருந்து அவரைச் சாத்தான் கைப்பற்றுவதற்கும் சாத்தான் உடனடியாக யோபுவை அழிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடினது. ஆயினும், தேவன் யோபுவின்இருதயத்திற்குள் பார்த்தார். அவர் பரிபூரணர், நேர்மையானவர் என்பதையும், அவர் தேவனுக்கு அஞ்சுவதையும் தீமையைத் தவிர்ப்பதையும் கண்டார். யோபு ஒருபோதும் தேவனைக் கைவிட்டு சாத்தானைப் பின்பற்ற மாட்டார் என்றும் யோபு ஒரு பரிபூரண மற்றும் நேர்மையான மனிதர் என்றும் தேவன் சாத்தானிடம் சொன்னார். யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீட்டைக் கேட்டதும், சாத்தானுள் அவமானத்தால் ஒரு ஆத்திரம் உருவானது. சாத்தான் யோபுவைப் பறிக்க மிகவும் கோபமாகவும் பொறுமையற்றும் இருந்தான், ஏனென்றால், பரிபூரணராகவும் நேர்மையாகவும் எவரும் இருக்க முடியாது அல்லது அவர்கள் தேவனுக்கும் பயப்பட, தீமையைத் தவிர்க்க முடியாது என்று சாத்தான் எப்போதும் நம்பினது. அதே சமயம், சாத்தான் மனிதனிலுள்ள பரிபூரணத்தையும் நேர்மையையும் வெறுத்தான். தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கக்கூடிய ஜனங்களை வெறுத்தான். எனவே, யோபு 1:9–11-இல் அது எழுதப்பட்டுள்ளது, “அப்பொழுது சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்? அவனைச் சுற்றியும், அவன் வீட்டைச் சுற்றியும், அனைத்துப் பக்கத்திலும் அவன் கொண்டிருக்கும் எல்லாவற்றைச் சுற்றியும் நீர் வேலி அமைக்கவில்லையா? அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று. ஆனால் இப்பொழுது நீர் உம் கையை நீட்டி, அவனிடம் உள்ள சகலத்தையும் தொட்டீரானால், அப்பொழுது அவன் உம் முகத்திற்கு முன்பாக உம்மைத் தூஷிப்பான் என்றான்.” தேவன் சாத்தானுடைய தீங்கிழைக்கும் குணத்தை நன்கு அறிந்திருந்தார். யோபின் மீது அழிவை ஏற்படுத்த சாத்தான் நீண்ட காலமாகத் திட்டமிட்டிருந்தான் என்பதை நன்கு அறிந்திருந்தார், ஆகவே, யோபு பரிபூரணமானவராகவும் நேர்மையானவராகவும், அவர் தேவனுக்கு அஞ்சுகிறார், தீமையைத் தவிர்த்துவிட்டார் என்றும் சாத்தானிடம் மீண்டும் சொல்வதன் மூலம் சாத்தானை தன் வழிக்கு கொண்டுவந்து, சாத்தான் அதன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தவும், யோபுவைத் தாக்கி சோதிக்கவும் வேண்டும் என தேவன் விரும்பினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோபு பரிபூரணமானவர், நேர்மையானவர் என்றும், அவர் தேவனுக்கு அஞ்சினார், தீமையைத் தவிர்த்தார் என்றும் தேவன் வேண்டுமென்றே வலியுறுத்தினார். இதன் மூலம், சாத்தான் தன்னுடைய வெறுப்பின் காரணமாகவும், யோபு ஒரு பரிபூரண மனிதனாகவும், தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கும் நேர்மையான மனிதராகவும் இருந்ததை நோக்கி கோபப்படுவதாலும், சாத்தான் யோபுவைத் தாக்கும்படியாக தேவன் செய்தார். இதன் விளைவாக, யோபு ஒரு பரிபூரண மற்றும் நேர்மையான மனிதர், தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பவர் என்பதால், தேவன் சாத்தானுக்கு அவமானத்தைத் தருவார். இதன் மூலம் சாத்தான் முற்றிலும் அவமானப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்படும். அதன்பிறகு, யோபுவின்பரிபூரணம், நேர்மை, தெய்வ பயம் அல்லது தீமையைத் தவிர்த்தல் என இவற்றைப் பற்றி சாத்தான் இனி சந்தேகிக்கவோ அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவோ மாட்டான். இவ்வாறு, தேவனுடைய சோதனை மற்றும் சாத்தானுடைய சோதனையானது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகின. தேவனுடைய சோதனையையும் சாத்தானுடைய சோதனையையும் தாங்கக்கூடிய ஒரே ஒருவர் யோபு ஆவார். இந்த பரிமாற்றத்தைத் தொடர்ந்து, யோபுவைச் சோதிப்பதற்கு சாத்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு சாத்தானுடைய முதல் சுற்று தாக்குதல்கள் தொடங்கியது. இந்த தாக்குதல்களின் இலக்கு யோபுவின்சொத்து. ஏனெனில், சாத்தான் யோபுவுக்கு எதிராக பின்வரும் குற்றச்சாட்டை முன்வைத்தான்: “யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்? … அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று.” இதன் விளைவாக, யோபுவிடம் இருந்த அனைத்தையும் எடுத்துக்கொள்ள தேவன் சாத்தானை அனுமதித்தார். தேவன் சாத்தானுடன் பேசியதன் நோக்கம் இதுதான். ஆயினும்கூட, தேவன் சாத்தானிடம் ஒரு எதிர்பார்ப்பை முன்வைத்தார்: “அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்” (யோபு 1:12). யோபுவை சோதிக்க சாத்தானை அனுமதித்து, யோபுவை சாத்தானுடைய கரங்களில் வைத்தபின் தேவன் செய்த நிபந்தனை இதுதான். இது சாத்தானுக்கு அவர் விதித்த வரம்பாகும்: யோபுவுக்கு தீங்கு விளைவிக்காதபடி சாத்தானுக்கு கட்டளையிட்டார். ஏனென்றால், யோபு பரிபூரணமானவர், நேர்மையானவர் என்பதை தேவன் உணர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் யோபுவின்பரிபூரணமும் நேர்மையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருந்தன. சோதனைக்கு உட்படுத்தப்படுவதை அவரால் தாங்க முடியும். ஆகவே, தேவன் யோபுவை சோதிக்க சாத்தானை அனுமதித்தார். ஆனால் சாத்தானுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்தார்: யோபுவின்எல்லா சொத்துகளையும் எடுத்துக்கொள்ள சாத்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அது அவன் மீது விரல் வைக்கக்கூடாது. இதன் அர்த்தம் என்ன? அந்த நேரத்தில் தேவன் யோபுவை சாத்தானுக்கு பூரணமாக கொடுக்கவில்லை என்று அர்த்தம். சாத்தான் யோபுவை விரும்பிய எந்த வகையிலும் சோதிக்க முடியும், ஆனால் அது யோபுவை காயப்படுத்த முடியாது—தலையில் ஒரு முடியைக் கூட காயப்படுத்த முடியாது—ஏனென்றால் மனிதனுடைய அனைத்தும் தேவனால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஏனென்றால் மனிதன் ஜீவீக்கிறானா அல்லது மரிக்கிறானா என்பது தேவனால் தீர்மானிக்கப்படுகிறது. சாத்தானுக்கு இந்த உரிமை இல்லை. தேவன் இந்த வார்த்தைகளைச் சாத்தானிடம் சொன்ன பிறகு, சாத்தானால் அதைத் தொடங்க காத்திருக்க முடியவில்லை. அது யோபுவைச் சோதிப்பதற்கு எல்லா வழிகளையும் பயன்படுத்தியது. விரைவில் யோபு, மிகவும் அதிக மதிப்பிலான செம்மறி ஆடுகளையும் எருதுகளையும், தேவனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்…. இவ்வாறு தேவனுடைய சோதனைகள் அவருக்கு வந்தன.

யோபுவின்சோதனையின் தோற்றம் பற்றி வேதாகமம் சொல்கிறது என்றாலும், இந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட யோபு, என்ன நடக்கிறது என்பதை அறிந்தாரா? யோபு ஒரு மனிதர். அவரைச் சுற்றியுள்ள கதை எதுவும் அவருக்குத் தெரியாது. ஆயினும்கூட, அவருடைய தேவனைப் பற்றிய பயமும், அவருடைய பரிபூரணமும் நேர்மையும் தேவனுடைய சோதனைகள் அவர்மீது வந்துவிட்டன என்பதை உணரவைத்தது. ஆவிக்குரிய உலகில் என்ன நடந்தது என்பதையும், இந்த சோதனைகளுக்குப் பின்னால் தேவனுடைய நோக்கங்கள் என்ன என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தாலும், அவர் தனது பரிபூரணத்தையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும், தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கும் அவர் கட்டுப்பட வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். இந்த விஷயங்களில் யோபுவின்அணுகுமுறையும் எதிர்வினையும் தேவனால் தெளிவாகக் காணப்பட்டன. தேவன் எதைப் பார்த்தார்? அவர் யோபுவின்தேவனுக்குப் பயந்த இருதயத்தைக் கண்டார். ஏனென்றால், தொடக்கத்தில் இருந்தே யோபுவை சோதிக்கும் வரை, யோபுவின்இருதயம் தேவனுக்குத் திறந்தே இருந்தது. அது தேவனுக்கு முன்பாக வைக்கப்பட்டது. யோபு தனது பரிபூரணத்தையோ நேர்மையையோ கைவிடவில்லை. அவர் தேவனைத் தூக்கி எறியவில்லை அல்லது தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியிலிருந்து திரும்பவில்லை. இதைவிடப் பெரிதாக தேவனுக்கு மகிழ்ச்சி அளிக்கும் எதுவும் இல்லை. அடுத்ததாக, யோபு என்ன சோதனையைச் சந்தித்தார், இந்த சோதனைகளை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதைப் பார்ப்போம். வேத வசனங்களிலிருந்து வாசிப்போம்.

இ. யோபுவின்எதிர்வினை

யோபு 1:20–21 அப்பொழுது யோபு எழுந்து, தன் போர்வையைக் கிழித்து, தலை முடியை சிரைத்து, தரையில் விழுந்து வணங்கினான். அப்பொழுது: நான் நிர்வாணமாக என் தாயின் கருவிலிருந்து வந்தேன், நிர்வாணமாக நான் அங்கேயே திரும்புவேன், யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.

தன்னுடைய தெய்வ பயத்தின் நிமித்தமாக யோபு தன்னுடைய அனைத்தையும் தேவனிடம் திரும்பக் கொடுக்க பொறுப்பேற்றுக்கொண்டார்

தேவன் சாத்தானை நோக்கி, “அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்,” என்றார். சாத்தான் புறப்பட்டான், அதன்பிறகு யோபு கடுமையான திடீர் தாக்குதல்களுக்கு ஆளானார். முதலாவதாக, அவனுடைய எருதுகளும் கழுதைகளும் கொள்ளையடிக்கப்பட்டன, அவனுடைய ஊழியர்கள் சிலர் கொல்லப்பட்டனர். அடுத்ததாக, அவருடைய ஆடுகளும் இன்னும் சில ஊழியர்களும் நெருப்பில் கொல்லப்பட்டனர். அதன்பிறகு, அவருடைய ஒட்டகங்கள் எடுத்துச் செல்லப்பட்டன, இன்னும் அதிகமான ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இறுதியாக, அவரது மகன்கள் மற்றும் மகள்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. முதல் சோதனையின்போதுளே யோபு அனுபவித்த வேதனையாகும். தேவனால் கட்டளையிடப்பட்டபடி, இந்த தாக்குதல்களின் போது சாத்தான் யோபுவின்சொத்துக்களையும் அவனது பிள்ளைகளையும் மட்டுமே குறிவைத்தான். யோபுவுக்குத் தீங்கு செய்யவில்லை. ஆயினும்கூட, யோபு உடனடியாக பெரும் செல்வம் கொண்ட ஒரு பணக்காரனிடமிருந்து எதுவும் இல்லாத ஒருவருக்கு மாற்றப்பட்டார். வியக்கத்தக்க விசித்திரமான இந்த அடியை யாரும் தாங்கிக் கொள்ளவோ அல்லது அதற்கு சரியாக பதிலளிக்கவோ முடியாது. ஆனாலும் யோபு தனது அசாதாரண பக்கத்தை நிரூபித்தார். வேதவாக்கியங்கள் பின்வரும் விவரத்தை வழங்குகின்றன: “அப்பொழுது யோபு எழுந்து, தன் போர்வையைக் கிழித்து, தலை முடியை சிரைத்து, தரையில் விழுந்து வணங்கினான்.” யோபு தனது குழந்தைகளையும் சொத்துக்களையும் இழந்துவிட்டார் என்று கேள்விப்பட்டபின் யோபுவிடம் வெளிப்பட்ட முதல் எதிர்வினை இதுவாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஆச்சரியமாகவோ, பீதியுடனோ தோன்றவில்லை. அவர் கோபத்தை அல்லது வெறுப்பை வெளிப்படுத்தவில்லை. அப்படியானால், இந்த பேரழிவுகள் ஒரு விபத்து அல்ல, அல்லது மனிதனுடைய கையிலிருந்து பிறந்தவை அல்ல, அவை பழிவாங்கல் அல்லது தண்டனையின் வருகையும் இல்லை. மாறாக, யேகோவாவின் சோதனைகள் அவர்மீது வந்தன, யேகோவா தான் தன் சொத்தையும் குழந்தைகளையும் எடுத்துக் கொள்ள விரும்பினார் என்பதை அவர் ஏற்கனவே உணர்ந்திருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். யோபு அப்போது மிகவும் அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தார். அவரது பரிபூரண மற்றும் நேர்மையான மனிதம் அவருக்கு ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து பகுத்தறிவுடனும் இயற்கையாகவும் துல்லியமான தீர்ப்புகளையும் முடிவுகளையும் எடுக்க உதவியது. இதன் விளைவாக அவர் அசாதாரண அமைதியுடன் நடந்து கொண்டார். “அப்பொழுது யோபு எழுந்து, தன் போர்வையைக் கிழித்து, தலை முடியை சிரைத்து, தரையில் விழுந்து வணங்கினான்.” “தன் போர்வையைக் கிழித்து” என்பதற்கு அவர் ஆடை அணியவில்லை, அவரிடம் எதுவும் இல்லை என்று அர்த்தமாகிறது. “தலை முடியை சிரைத்து” என்பதற்கு அவர் புதிதாகப் பிறந்த குழந்தையாக தேவனுக்கு முன்பாக திரும்பிவிட்டார் என்று அர்த்தமாகிறது. “தரையில் விழுந்து வணங்கினான்” என்பதற்கு அவர் நிர்வாணமாக உலகிற்கு வந்துவிட்டார், இன்றும் எதுவும் இல்லாமல், அவர் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல தேவனிடம் திரும்பினார் என்று அர்த்தமாகிறது. தனக்கு நேர்ந்த எல்லாவற்றையும் பற்றிய யோபுவின்அணுகுமுறையை தேவனுடைய எந்த உயிரினத்தினாலும் பெற முடியாது. யேகோவா மீதான அவருடைய விசுவாசமானது விசுவாசத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது ஆகும். இதுவே அவரது தெய்வ பயம், தேவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியனவாகும். தனக்கு தேவன் கொடுத்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துவது மட்டுமல்லாமல், அவரிடமிருந்து எடுத்ததற்கும் அவரால் நன்றி செலுத்த முடிந்தது. மேலும், அவர் தன்னுடைய ஜீவிதம் உட்பட, தனக்குச் சொந்தமான அனைத்தையும் தேவனிடம் திருப்ப அவரால் பொறுப்பை எடுத்துக் கொள்ள முடிந்தது.

யோபுவின்பயமும் தேவனுக்கான கீழ்ப்படிதலும் மனிதகுலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அவருடைய பரிபூரணமும் நேர்மையும் மனிதனிடம் இருக்க வேண்டிய மனிதகுலத்திற்கான உச்சமாக இருந்தது. அவர் தேவனைக் காணவில்லை என்றாலும், தேவன் உண்மையிலேயே இருப்பதை அவர் உணர்ந்தார். இந்த உணர்தலால் அவர் தேவனுக்கு அஞ்சினார். தெய்வ பயம் காரணமாக அவர் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்தது. அவர் தன்னிடம் உள்ளதை எடுத்துக்கொள்ள தேவனுக்கு விடுதலையான கட்டுப்பாட்டைக் கொடுத்தார். ஆனாலும் அவர் குறை கூறவில்லை. தேவனுக்கு முன்பாக பணிந்து, இந்த தருணத்தில், தேவன் தம்முடைய மாம்சத்தை எடுத்துக் கொண்டாலும், அவர் குறை கூறாமல் மகிழ்ச்சியுடன் தேவனை அவ்வாறு செய்ய அனுமதிப்பது போல இருந்தார். அவரது முழு நடத்தை அவரது பூரணமான மற்றும் நேர்மையான மனிதத்தின் விளைவாக இருந்தது. அதாவது, தனது அப்பாவித்தனம், நேர்மை மற்றும் தயவின் விளைவாக, யோபு தேவன் இருப்பதை உணர்ந்துக்கொள்வதிலும் அனுபவத்திலும் உறுதியாக இருந்தார். இந்த அஸ்திவாரத்தின் மீது அவர் தன்னைத்தானே வைத்து, எல்லாவற்றிலும், தேவனுடைய வழிகாட்டுதலுக்கும், அவர் கண்ட தேவனுடைய செயல்களுக்கும் ஏற்ப தேவன் முன்பாக தனது சிந்தனை, நடத்தை, குணம் மற்றும் செயல்களின் கொள்கைகளை தரநிலைப்படுத்தினார். காலப்போக்கில், அவருடைய அனுபவங்கள் அவருக்கு ஒரு மெய்யான மற்றும் உண்மையான பயத்தை ஏற்படுத்தி அவரைத் தீமையிலிருந்து விலகச் செய்தன. யோபு உறுதியாக வைத்திருந்த ஒருமைப்பாட்டின் ஆதாரம் இதுதான். யோபு ஒரு நேர்மையான, தூய்மையான மற்றும் கனிவான மனிதத்தைக் கொண்டிருந்தார். அவர் தேவனுக்குப் பயந்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான உண்மையான அனுபவத்தையும், “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்.” என்பதையும் அறிந்திருந்தார். இவற்றின் காரணமாக மட்டுமே சாத்தானுடைய இத்தகைய கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில் அவர் தனது சாட்சியில் உறுதியாக நிற்க முடிந்தது, மேலும் அவற்றின் காரணமாகவே அவர் தேவனை ஏமாற்றாமல் இருக்கவும், தேவனுடைய சோதனைகள் அவர் மீது வரும்போது தேவனுக்கு திருப்திகரமான பதிலை அளிக்கவும் முடிந்தது. முதல் சோதனையின்போது யோபுவின்நடத்தை மிகவும் நேர்மையானது என்றாலும், ஜீவகால முழுதும் முயற்சித்தப் பிறகும் இதுபோன்ற நேர்மையை அடைவதற்கான உறுதி பிற்கால தலைமுறையினரிடம் இல்லை மற்றும் மேலே விவரிக்கப்பட்ட யோபுவின்நடத்தையை அவர்கள் கொண்டிருக்க மாட்டார்கள். இன்று, யோபுவின்நேர்மையான நடத்தையை பார்க்கையில், இதை, தேவனை நம்புவதாகவும் தேவனைப் பின்பற்றுவதாகவும் கூறுபவர்களால் தேவனிடம் காட்டப்படும் “மரணபரியந்தம் உள்ள பூரணமான கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசத்தின்” ஒலி மற்றும் தீர்மானத்துடன் ஒப்பிடுகையில், நீங்கள் மிகவும் வெட்கமாக உணர்கிறீர்களா இல்லையா?

யோபுவும் அவருடைய குடும்பத்தினரும் அனுபவித்த எல்லாவற்றையும் வேதாகமத்தில் படிக்கும்போது, உன் எதிர்வினை என்னவாக இருக்கிறது? உங்கள் எண்ணங்களில் நீங்கள் தொலைந்து போகிறீர்களா? நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? யோபுவுக்கு ஏற்பட்ட சோதனைகளை “திகிலூட்டுகிறது” என்று விவரிக்க முடியுமா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேத வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி யோபுவின்சோதனைகளைப் படிக்கையில் நிஜ ஜீவிதத்தில் அவை எப்படி இருந்திருக்கும் என்று பயமுறுத்துகிறது. அப்படியானால், யோபுவுக்கு நேர்ந்தது ஒரு “பயிற்சி” அல்ல, உண்மையான “துப்பாக்கிகள்” மற்றும் “தோட்டாக்கள்” இடம்பெறும் ஒரு உண்மையான “யுத்தம்” என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் இந்த சோதனைகளுக்குள் அவர் யாருடைய கரத்தால் உட்படுத்தப்பட்டார்? அவை நிச்சயமாக சாத்தானுடைய கிரியையாக இருந்தன. சாத்தான் தன் கரங்களால் இவற்றைச் செய்தது. இருந்தபோதிலும், இந்த விஷயங்கள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேவன் சாத்தானிடம் யோபுவைச் சோதிக்க சொன்னாரா? அவர் அவ்வாறு செய்யவில்லை. சாத்தான் கடைபிடிக்க வேண்டிய ஒரு நிபந்தனையை மட்டுமே தேவன் சொன்னார். அதன் பிறகு யோபுவின் மீது சோதனை வந்தது. யோபுவின் மீது சோதனை வந்தபோது, அது சாத்தானுடைய தீமை மற்றும் அசிங்கத்தையும், மனிதனுக்கான தீங்கிழைப்பையும், வெறுப்பையும், தேவனுக்கு எதிரான விரோதத்தையும் உணர்த்தியது. இந்த சோதனையானது எவ்வளவு கொடூரமானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதை இதில் காண்கிறோம். மனிதனை துஷ்பிரயோகம் செய்த சாத்தானுடைய தீங்கிழைக்கும் தன்மையும், அதன் அசிங்கமான முகமும் இந்த தருணத்தில் பூரணமாக வெளிப்பட்டன என்று கூறலாம். தேவனுடைய அனுமதியுடன் கிடைத்த இந்த வாய்ப்பை சாத்தான் பயன்படுத்தி, யோபுவை வெறிகொண்ட மற்றும் இரக்கமில்லாத துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த, சாத்தான் பயன்படுத்திய கொடுமையான முறை மற்றும் நிலை இன்றைய ஜனங்களுக்கு கற்பனை செய்ய முடியாதது மற்றும் முற்றிலும் சகிக்க முடியாதது ஆகும். யோபு சாத்தானால் சோதிக்கப்பட்டார் என்றும், இந்த சோதனையின்போது அவர் அளித்த சாட்சியில் அவர் உறுதியாக நின்றார் என்றும் சொல்வதற்குப் பதிலாக, தேவன் அவருக்காக முன்வைத்த சோதனைகளில், யோபு தன் நேர்மையையும் பூரணத்தையும் பாதுகாக்க மற்றும் தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பாதுகாக்க சாத்தானுடன் ஒரு போட்டியைத் தொடங்கினார் என்று சொல்வது நன்றாக இருக்கும். இந்த போட்டியில், யோபு மிகவும் அதிக மதிப்பிலான ஆடுகளையும் கால்நடைகளையும் இழந்தார். அவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார். அவர் தனது மகன்களையும் மகள்களையும் இழந்தார். இருப்பினும், அவர் தனது பரிபூரணத்தையோ, நேர்மையையோ, தெய்வ பயத்தையோ கைவிடவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தானுடனான இந்த போட்டியில், யோபு தனது பரிபூரணத்தையும், நேர்மையையும், தேவனுக்குப் பயப்படுவதையும் இழப்பதை விட, அவருடைய சொத்து மற்றும் பிள்ளைகளை இழக்க விரும்பினார். ஒரு மனிதனாக இருப்பதன் அர்த்தத்தின் மூலத்தை பிடித்துக் கொள்ள அவர் விரும்பினார். யோபு தனது சொத்துக்களை இழந்த முழு செயல்முறையின் சுருக்கமான விவரத்தை வேதவாக்கியங்கள் வழங்குகின்றன. யோபுவின் நடத்தை மற்றும் அணுகுமுறையை அவை ஆவணப்படுத்துகின்றன. இந்த சோதனையை எதிர்கொள்வதில் யோபு ஏறக்குறைய நிதானமாக இருந்தார் என்ற உணர்வை இந்த கடுமையான, சுருக்கமான விவரங்கள் தருகின்றன. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்றால்—சாத்தானுடைய தீங்கிழைக்கும் குணத்தையும் கருத்தில் கொள்கையில்—இந்த வாக்கியங்களில் விவரித்தபடி விஷயங்கள் சாதாரணமாகவோ அல்லது எளிதாகவோ இருக்காது. உண்மை மிகவும் மோசமானதாக இருந்தது. மனிதகுலத்தின் மீதும், தேவன் அங்கீகரிக்கும் அனைவரின் மீதும் சாத்தான் நடத்தும் பேரழிவு மற்றும் வெறுப்பின் நிலை இதுதான். சாத்தான் யோபுவுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று தேவன் கேட்கவில்லை என்றால், சாத்தான் சந்தேகத்திற்கு இடமின்றி அவனைக் கொன்றிருப்பான். யாரும் தேவனை வணங்குவதை சாத்தான் விரும்பவில்லை. தேவனுடைய பார்வையில் நீதிமான்களும், பரிபூரணரும் நேர்மையானவர்களும் தொடர்ந்து தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்ப்பதை சாத்தான் விரும்புவதில்லை. ஜனங்கள் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கு, அவர்கள் சாத்தானைத் தவிர்ப்பது மற்றும் கைவிடுவது என்று அர்த்தமாகும். ஆகவே, தன் கோபத்தை எல்லாம் சேர்த்து, தயவு இல்லாமல் யோபுவை வெறுக்க தேவனுடைய அனுமதியை சாத்தான் பயன்படுத்திக் கொண்டான். அப்படியானால், யோபு மனதில் இருந்து மாம்சம் வரை, உள்ளிருந்து வெளியே வரை எவ்வளவாக வேதனை அனுபவித்தார் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். இன்று, அந்த நேரத்தில் அது எப்படி இருந்தது என்பதை நாம் காணவில்லை. யோபு வேதனைக்குள்ளான அந்த நேரத்தில் அவரிடமிருந்த அவருடைய உணர்ச்சிகளின் சுருக்கமான பார்வையை வேதாகமத்தின் விவரங்களிலிருந்து மட்டுமே பெற முடியும்.

யோபுவின் அசைக்க முடியாத நேர்மை சாத்தானுக்கு வெட்கத்தைத் தந்து, அதை பீதியில் ஓடச் செய்கிறது

ஆகவே, யோபு இந்த வேதனைக்கு ஆளானபோது தேவன் என்ன செய்தார்? தேவன் பார்த்தார், கவனித்தார், அதன் விளைவுக்காக காத்திருந்தார். தேவன் கவனித்து பார்த்தபோது, அவர் எப்படி உணர்ந்தார்? அவர் நிச்சயமாக வருத்தத்தை உணர்ந்தார். ஆனால், யோபுவை சோதித்துப் பார்க்க சாத்தானை அனுமதித்ததற்கு தேவன் வருத்தப்பட்டிருக்க முடியுமா? பதில், இல்லை. அவர் அத்தகைய வருத்தத்தை உணர்ந்திருக்க முடியாது. ஏனென்றால், யோபு பரிபூரணர், நேர்மையானவர் என்று அவர் உறுதியாக நம்பினார். யோபு தேவனுக்கு அஞ்சினார், தீமையைத் தவிர்த்தார். தேவனுக்கு முன்பாக யோபுவின் நீதியைச் சரிபார்க்கவும், சாத்தானுடைய சொந்த துன்மார்க்கத்தையும் அவமதிப்பையும் வெளிப்படுத்தவும் தேவன் சாத்தானுக்கு வாய்ப்பளித்திருந்தார். மேலும், உலக ஜனங்களுக்கும் சாத்தானுக்கும், தேவனைப் பின்பற்றுபவர்களுக்கும் முன்பாக உள்ள யோபுவின் நீதியை, தெய்வ பயத்தை, தீமையைத் தவிர்த்தலை சோதிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாகும். யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீடு சரியானது மற்றும் பிழையில்லாமல் இருந்தது என்பதை இறுதி முடிவு நிரூபித்ததா? யோபு உண்மையில் சாத்தானை வென்றாரா? யோபுவால் பேசப்பட்ட பழமையான சொற்களைப் பற்றி, அதாவது அவர் சாத்தானை ஜெயித்தார் என்பதற்கான சான்றுகளைப் பற்றி இங்கே படித்தோம். அவர் சொன்னார்: “நான் நிர்வாணமாக என் தாயின் கருவிலிருந்து வந்தேன், நிர்வாணமாக நான் அங்கேயே திரும்புவேன்.” இது தேவனுக்கான கீழ்ப்படிதலைப் பற்றிய யோபுவின்அணுகுமுறை ஆகும். அடுத்ததாக அவர் சொன்னார்: “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்.” யோபுவால் பேசப்பட்ட இந்த வார்த்தைகள், மனிதனுடைய இருதயத்தின் ஆழத்தை தேவன் கவனிக்கிறார் என்பதையும், மனிதனுடைய மனதை அவரால் கவனிக்க முடிகிறது என்பதையும் நிரூபிக்கின்றன. யோபுவுக்கு அவர் அளித்த ஒப்புதல் பிழையில்லாமல் இருக்கிறது என்பதையும், தேவனால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மனிதர் நீதியுள்ளவர் என்பதையும் நிரூபிக்கின்றன. “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்.” இந்த வார்த்தைகள் தேவனுக்கான யோபுவின் சாட்சி ஆகும். இந்த சாதாரண வார்த்தைகள் தான் சாத்தானைப் பயமுறுத்தியது. அதன் மீது அவமானத்தைக் கொண்டு வந்து பீதியில் ஓடச் செய்த்து. மேலும், சாத்தானைக் கட்டி, வளங்கள் இல்லாத வகையில் விட்டுவிட்டது. ஆகவே, இந்த வார்த்தைகள் யேகோவா தேவனுடைய செயல்களின் அதிசயத்தையும் வல்லமையையும் சாத்தானுக்கு உணர்த்தின. தேவனால் ஆளப்படும் இருதயம் கொண்ட ஒருவரின் அசாதாரண கிருபையை உணர அனுமதித்தது. மேலும் அவை, தேவனுக்குப் பயப்படுவதற்கும் தீமையைத் தவிர்ப்பதற்கும் ஒரு சிறிய மற்றும் அற்பமான மனிதர் காட்டிய வல்லமை வாய்ந்த ஜீவித பெலனைச் சாத்தானுக்கு விளக்கிக் காட்டின. இவ்வாறு முதல் போட்டியில் சாத்தான் தோற்கடிக்கப்பட்டான். “இதிலிருந்து கற்றுக்கொண்ட” போதிலும், சாத்தானுக்கு யோபுவை விடுவிக்கும் எண்ணம் இல்லை. அதன் தீங்கிழைக்கும் தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. சாத்தான் யோபுவைத் தாக்க முயன்றான். ஆகவே மீண்டும் ஒரு முறை தேவனுக்கு முன்பாக வந்தான் …

அடுத்ததாக, யோபு சோதிக்கப்பட்ட இரண்டாவது முறையை வேத வசனங்களிலிருந்து வாசிப்போம்.

3. சாத்தான் மீண்டும் ஒரு முறை யோபுவைத் தூண்டுகிறான் (யோபுவின் சரீரமெங்கும் கொடிய பருக்கள் உதிர்கிறது)

அ. தேவன் பேசிய வார்த்தைகள்

யோபு 2:3 அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். முகாந்திரமில்லாமல் அவனை அழிக்க நீ என்னை ஏவின போதும், அவன் இன்னும் தன் நேர்மையில் உறுதியாக இருக்கிறான் என்றார்.

யோபு 2:6 அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையில் இருக்கிறான்; ஆனாலும் அவன் உயிரை மட்டும் விட்டுவிடு என்றார்.

ஆ. சாத்தான் பேசிய வார்த்தைகள்

யோபு 2:4-5 அதற்கு சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாக தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாக சகலத்தையும் கொடுப்பான் மனுஷன். ஆனால் இப்போது நீர் உமது கையை நீட்டி, அவன் எலும்பையும் மாம்சத்தையும் தொடும், அவன் உமது முகத்துக்கு முன்பாக உம்மை தூஷிப்பான் என்றான்.

இ. யோபு எவ்வாறு சோதனையை மேற்கொண்டார்

யோபு 2:9-10 அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.

யோபு 3:3 நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக.

தேவனுடைய வழியின் மீதான யோபுவின்அன்பு மற்ற அனைத்தையும் கடந்து உள்ளது

தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் பேசப்பட்ட வார்த்தைகளை வேதம் பின்வருமாறு ஆவணப்படுத்துகிறது: “அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். முகாந்திரமில்லாமல் அவனை அழிக்க நீ என்னை ஏவின போதும், அவன் இன்னும் தன் நேர்மையில் உறுதியாக இருக்கிறான் என்றார்” (யோபு 2:3). இந்த பரிமாற்றத்தில், தேவன் அதே கேள்வியை சாத்தானிடம் மீண்டும் கூறுகிறார். இது ஒரு கேள்வியாகும், இது முதல் சோதனையின்போது யோபுவால் நிரூபிக்கப்பட்ட மற்றும் ஜீவித்துக் கட்டியதைப் பற்றிய யேகோவா தேவனுடைய உறுதிப்படுத்தும் மதிப்பீட்டைக் காட்டுகிறது. இது சாத்தானுடைய சோதனைக்கு முன்னான யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீட்டிற்கு வேறுபட்டதல்ல. அதாவது, சோதனையானது யோபுவின் மீது வருவதற்கு முன்பு, தேவனுடைய பார்வையில் யோபு பரிபூரணராக இருந்தார். இதனால் தேவன் அவரையும் அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்து, அவரை ஆசீர்வதித்தார். அவர் தேவனுடைய பார்வையில் ஆசீர்வதிக்கப்படுவதற்கு தகுதியானவர். சோதனையின் பின்னர், யோபு தன் சொத்துக்களையும் பிள்ளைகளையும் இழந்ததால் உதடுகளால் பாவம் செய்யவில்லை. மாறாக யேகோவாவின் நாமத்தைத் தொடர்ந்து புகழ்ந்தார். அவரது உண்மையான நடத்தையானது தேவன் அவரைப் பாராட்ட வைத்தது. அதன் காரணமாக தேவன் அவருக்கு முழு மதிப்பெண்களையும் கொடுத்தார். ஏனென்றால், யோபுவின் பார்வையில், அவர் தேவனைத் துறக்க அவருடைய சந்ததியோ, சொத்துக்களோ போதுமானதாக இல்லை. வேறுவிதமாகக் கூறினால், அவருடைய இருதயத்தில் உள்ள தேவனுக்கான இடத்தை, அவருடைய பிள்ளைகளாலோ, எந்தவொரு சொத்தாலோ மாற்ற முடியாது. அவர் தேவன் மீது வைத்திருக்கும் அன்பும், தேவனுக்குப் பயப்படுவதற்கும் தீமையைத் தவிர்ப்பதற்கும் அவர் கொண்டிருந்த அன்பும் எல்லாவற்றையும் விட அதிகமாக இருப்பதாக தம்முடைய முதல் சோதனையின்போது காட்டினார். யேகோவா தேவனிடமிருந்து வெகுமதியைப் பெறும் அனுபவத்தையும், சொத்துகளையும் குழந்தைகளையும் தேவனிடம் இழக்கும் அனுபவத்தையும் யோபுவுக்கு இந்த சோதனைத் தந்தது.

யோபுவைப் பொறுத்தவரையில், இது அவருடைய ஆத்துமாவை சுத்தமாக அதைக் கழுவிய ஒரு உண்மையான அனுபவம் ஆகும். இது அவருடைய ஞானஸ்நானம். அவர் இருப்பதின் நோக்கத்தை நிறைவேற்றியதாகும். மேலும், இது அவருடைய கீழ்ப்படிதலையும், தெய்வ பயத்தையும் சோதித்த ஒரு ஆடம்பரமான பந்தியாகும். இந்த சோதனையானது, யோபுவை ஐசுவரியவான் என்னும் நிலையிலிருந்து ஒன்றுமில்லாதவனாக மாற்றியது. சாத்தான் மனிதகுலத்தை துஷ்பிரயோகம் செய்வதை அனுபவிக்கவும் இது அனுமதித்தது. அவனுடைய வறுமையானது சாத்தானை வெறுக்கச் செய்யவில்லை. மாறாக, அவர் சாத்தானுடைய கேவலமான கிரியைகளில் சாத்தானுடைய அசுத்தத்தையும் அவமதிப்பையும், சாத்தானுடைய பகை மற்றும் தேவனுக்கு எதிரான கிளர்ச்சியையும் கண்டார். மேலும், தேவனுக்கு பயப்படுவதற்கும் தீமையைத் தவிர்ப்பதற்கும் எப்போதும் உறுதியுடன் இருக்க அது அவரை ஊக்குவித்தது. சொத்து, குழந்தைகள் அல்லது உறவினர்கள் போன்ற வெளிப்புற காரணிகளால் தான் ஒருபோதும் தேவனை கைவிடமாட்டேன், தேவனுடைய வழியில் பின்வாங்க மாட்டேன் என்று அவர் சத்தியம் செய்தார். அவர் ஒருபோதும் சாத்தானுக்கோ, சொத்துக்களுக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ அடிமையாக இருக்க மாட்டார் என்றும் யேகோவா தேவனைத் தவிர, யாரும் அவருடைய இறைவனாகவோ அல்லது தேவனாகவோ இருக்க முடியாது என்றும் அவர் சத்தியம் செய்தார். யோபுவின் நோக்கம் அத்தகையவை. மறுபுறம், யோபுவும் இந்த சோதனையிலிருந்து சிலவற்றைப் பெற்றுக் கொண்டார்: தேவன் அவருக்குக் கொடுத்த சோதனைகளுக்கு மத்தியில் அவர் பெரும் செல்வத்தைப் பெற்றார்.

முந்தைய பல தசாப்தங்களாக யோபுவின் ஜீவிதத்தில், அவர் யேகோவாவின் கிரியைகளைக் கண்டார், யேகோவா தேவனுடைய ஆசீர்வாதங்களைத் தனக்கெனப் பெற்றுக்கொண்டார். அந்த ஆசீர்வாதங்களால் கவலையாகவும் கடன்பட்டதாகவும் உணர்ந்தார். ஏனென்றால், அவர் தேவனுக்காக எதுவும் செய்யவில்லை என்று நம்பினார். ஆனாலும் இதுபோன்ற பெரிய ஆசீர்வாதங்களைப் பெற்றார். இவ்வளவு பெரிய கிருபையை அனுபவித்தார். இந்த காரணத்திற்காக, அவர் அடிக்கடி மனதில் ஜெபித்து தேவனை திருப்பிச் செய்ய முடியும் என்று நம்பினார். தேவனுடைய செயல்களுக்கும் மகத்துவத்திற்கும் சாட்சி அளிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினார். தேவன் தனது கீழ்ப்படிதலைச் சோதனைக்கு உட்படுத்துவார் என்று நம்பினார். மேலும், அவருடைய கீழ்ப்படிதலும் விசுவாசமும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறும் வரை அவருடைய விசுவாசம் சுத்திகரிக்கப்படும் என்றும் நம்பினார். பின்னர், யோபுவின் மீது சோதனை வந்தபோது, தேவன் தம்முடைய ஜெபங்களைக் கேட்டதாக அவர் நம்பினார். யோபு இந்த வாய்ப்பை எல்லாவற்றையும் விட அதிகமாக நேசித்தார். இதனால் அவர் அதை லேசாக நடத்தத் துணியவில்லை. ஏனென்றால், அவருடைய ஜீவ காலம் முழுவதுக்குமான ஆசை நிறைவேற்றப்பட்டது. இந்த வாய்ப்பின் வருகையானது, அவருடைய கீழ்ப்படிதலும், தெய்வ பயமும் சோதிக்கப்படலாம், தூய்மையாக்கப்படலாம் என்பதைக் குறித்தது. மேலும், தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற யோபுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக அவர் தேவனிடம் நெருங்கி வரச் செய்தது. சோதனையின் போது, அத்தகைய நம்பிக்கையும் நாட்டமும் அவரை மிகவும் பரிபூரணமாக்கவும், தேவனுடைய சித்தத்தைப் பற்றி அதிக புரிதலைப் பெறவும் அனுமதித்தது. தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கும் கிருபைகளுக்கும் யோபு மிகவும் நன்றியுள்ளவனாக இருந்தார். தன் இருதயத்தில் தேவனுடைய செயல்களுக்கு அதிகப் புகழ்ச்சியை ஊற்றினார். அவர் தேவனுக்கு மிகவும் பயந்தவராகவும் பயபக்தியுடனும் இருந்தார். தேவனுடைய அன்பு, மகத்துவம் மற்றும் பரிசுத்ததிற்காக அதிகம் ஏங்கினார். இந்த நேரத்தில், யோபு இன்னும் தேவனுக்குப் பயந்து, தேவனுடைய பார்வையில் தீமையைத் தவிர்த்தார் என்றாலும், அவருடைய அனுபவங்களைப் பொறுத்தவரையில், யோபுவின் நம்பிக்கையும் அறிவும் விரைவாக முன்னேறியது: அவருடைய விசுவாசம் அதிகரித்தது, அவருடைய கீழ்ப்படிதல் கால் ஊன்ற ஒரு இடத்தைப் பெற்றது. தெய்வ பயம் இன்னும் ஆழமாகிவிட்டது. இந்த சோதனை யோபுவின்ஆவியையும் ஜீவிதத்தையும் மாற்றியிருந்தாலும், அத்தகைய மாற்றம் யோபுவை திருப்திப்படுத்தவுமில்லை, அவரது முன்னேற்றத்தை மெதுவாக்கவுமில்லை. இந்த சோதனையிலிருந்து அவர் பெற்றதைக் கணக்கிட்டு, தனது சொந்த குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, அமைதியாக ஜெபம் செய்தார். அடுத்த சோதனை அவர் மீது வரும் வரை காத்திருந்தார். ஏனென்றால், தேவனுடைய அடுத்த சோதனையின் போது தனது விசுவாசம், கீழ்ப்படிதல் மற்றும் தெய்வ பயம் ஆகியவை உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் ஏங்கினார்.

மனிதனுடைய உள்ளார்ந்த எண்ணங்களையும், மனிதன் சொல்லும் கிரியைகளையும் தேவன் கவனிக்கிறார். யோபுவின் எண்ணங்கள் யேகோவா தேவனுடைய காதுகளை எட்டின. தேவன் அவருடைய ஜெபங்களைக் கேட்டார். இவ்வாறு யோபுவிற்கான தேவனுடைய அடுத்த சோதனை எதிர்பார்த்தபடி வந்தது.

தீவிரமான துன்பங்களுக்கு மத்தியில், யோபு மனிதகுலத்திற்கான தேவனுடைய கவனிப்பை மெய்யாகவே உணர்கிறார்

சாத்தானிடம் கேட்கப்பட்ட யேகோவா தேவனுடைய கேள்விகளினால், ரகசியமாக சாத்தான் மகிழ்ச்சியாக இருந்த்துன். ஏனென்றால், தேவனுடைய பார்வையில் பரிபூரணமான மனிதனைத் தாக்க, அது மீண்டும் ஒரு முறை அனுமதிக்கப்படும் என்று சாத்தான் அறிந்திருந்தது—சாத்தானைப் பொறுத்தவரையில், அது ஒரு அரிய வாய்ப்பாகும். யோபுவின்நம்பிக்கை முற்றிலுமாக மதிப்பு குறையச் செய்யவும், தேவன்மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யவும், இதனால் தேவனுக்கு பயப்படவோ அல்லது யேகோவாவின் நாமத்தை ஸ்தோத்தரிக்கவோ கூடாது என்பதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்த சாத்தான் விரும்பியது. இது சாத்தானுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும்: இடம் அல்லது நேரம் எதுவாக இருந்தாலும், அது யோபுவை அதன் கட்டளைக்கு ஏற்ப ஒரு விளையாட்டுப் பொருளாக மாற்ற முடியும். சாத்தான் அதன் பொல்லாத நோக்கங்களை தடயமின்றி மறைத்து. ஆனால் தன் தீய குணத்தைக் அதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. வேதவசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, யேகோவா தேவனுடைய வார்த்தைகளுக்கான பதிலில் இந்த உண்மை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது: “அதற்கு சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாக தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாக சகலத்தையும் கொடுப்பான் மனுஷன். ஆனால் இப்போது நீர் உமது கையை நீட்டி, அவன் எலும்பையும் மாம்சத்தையும் தொடும், அவன் உமது முகத்துக்கு முன்பாக உம்மை தூஷிப்பான் என்றான்” (யோபு 2:4-5). தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இந்த பரிமாற்றத்திலிருந்து சாத்தானுடைய தீங்கிழைக்கும் தன்மை பற்றிய கணிசமான அறிவையும் உணர்வையும் பெறாமல் இருப்பதற்கு சாத்தியமில்லை. சாத்தானுடைய இந்த பொய்யைக் கேட்டபின், சத்தியத்தை நேசிப்பவர்களும் தீமையை வெறுப்பவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி சாத்தானுடைய அறியாமை மற்றும் வெட்கக்கேடான குணத்தை வெறுப்பார்கள். சாத்தானுடைய தவறுகளால் திகைத்து வெறுப்படைவார்கள். அதே சமயம், யோபுவுக்கு ஆழ்ந்த பிரார்த்தனைகளையும், ஆழ்ந்த விருப்பங்களையும் அளிப்பார்கள். நேர்மையான இந்த மனிதர் பரிபூரணத்தை அடைய முடியும் என்று பிரார்த்தனை செய்வார்கள். தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்க்கும் இந்த மனிதன் சாத்தானுடைய சோதனையை என்றென்றுமாக ஜெயித்து தேவனுடைய வழிகாட்டுதலுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் இடையில் வெளிச்சத்தில் ஜீவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆகவே, யோபுவின் நீதியுள்ள செயல்கள் என்றென்றும் தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைத் தொடரும் அனைவரையும், தூண்டி ஊக்குவிக்க வேண்டும் என்று அத்தகைய ஜனங்கள் விரும்புவார்கள். இந்த பிரகடனத்தில் சாத்தானுடைய தீங்கிழைக்கும் நோக்கத்தைக் காண முடியும் என்றாலும், சாத்தானுடைய “வேண்டுகோளுக்கு” தேவன் விரைவாக சம்மதித்தார்—ஆனால் அவர் ஒரு நிபந்தனையையும் செய்தார்: “அவன் உன் கையில் இருக்கிறான்; ஆனாலும் அவன் உயிரை மட்டும் விட்டுவிடு” (யோபு 2:6). ஏனெனில், இந்த நேரத்தில், யோபுவின்மாம்சத்திற்கும் எலும்புகளுக்கும் தீங்கு விளைவிப்பதற்காக சாத்தான் தன் கரத்தை நீட்டும்படி கேட்டான். “ஆனாலும் அவன் உயிரை மட்டும் விட்டுவிடு.” என்று தேவன் சொன்னார். இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்றால், அவர் யோபுவின் மாம்சத்தை சாத்தானுக்குக் கொடுத்தார். ஆனால் யோபுவின் ஜீவன் பாதுகாக்கப்பட, அது தேவனுடையதாகும். சாத்தானால் யோபுவின் உயிரை எடுக்க முடியவில்லை. ஆனால் இதைத் தவிர சாத்தான் யோபுவுக்கு எதிராக எந்த வழியையும் முறையையும் பயன்படுத்த முடியும்.

தேவனுடைய அனுமதியைப் பெற்ற பிறகு, சாத்தான் யோபுவிடம் விரைந்து சென்று அவன் தோலைத் துன்புறுத்துவதற்காக கரத்தை நீட்டினது. அவன் உடலெங்கும் கொடிய பருக்கள் தோன்றியது. யோபுவின் தோலில் வலி ஏற்பட்டது. யேகோவா தேவனுடைய அதிசயத்தையும் பரிசுத்தத்தையும் யோபு புகழ்ந்தார். இது சாத்தானை அதன் துணிச்சலில் இன்னும் அப்பட்டமாக்கியது. மனிதனைத் துன்புறுத்துவதன் மகிழ்ச்சியை அது உணர்ந்ததால், சாத்தான் தன் கரத்தை நீட்டி, யோபுவின் மாமிசத்தை வாதித்தது. இதனால் அவனுடைய கொடிய பருக்கள் தோன்றியது. ஒத்துழைக்காத தனது மாம்சத்தின் நிமித்தம் யோபு உடனடியாக ஒரு வலியையும் வேதனையையும் உணர்ந்தார். தனது ஆவிக்கு ஏற்பட்ட அடியிலிருந்து விடுபட தன் சரீர வலி உதவும் என்பது போல தலை முதல் கால் வரையில் தன் கரங்களால் பிசைந்துக் கொண்டார். அவரால் அதைத் தடுக்க முடியவில்லை. தேவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். “நீ மனிதனுடைய இருதயத்திற்குள் பார்க்கிறாய். அவனுடைய துயரத்தை நீ கவனிக்கிறாய். அவனுடைய பலவீனம் உனக்கு ஏன் கவலை அளிக்கிறது? யேகோவா தேவனுடைய நாமம் புகழப்படும்.” யோபுவின் தாங்க முடியாத வேதனையை சாத்தான் கண்டான், ஆனால் யோபு யேகோவா தேவனுடைய நாமத்தைக் கைவிடுவதை அது காணவில்லை. இவ்வாறு அது அவசரமாக யோபுவின் எலும்புகளைத் துன்புறுத்துவதற்காக கரத்தை நீட்டியது, அவனை அவயவத்திலிருந்து கைகால்களைக் கிழிக்க ஆசைப்பட்டது. அவர் மீண்டும் தரையில் மண்டியிட்டு, கூறினார்: “நீங்கள் மனிதனுடைய இருதயத்திற்குள் இருக்கிறீர்கள், அவருடைய துயரத்தை நீங்கள் கவனிக்கிறீர்கள்; அவருடைய பலவீனம் உங்களுக்கு ஏன் கவலை அளிக்கிறது? யேகோவா தேவனுடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்.” யோபுவின் தாங்க முடியாத வேதனையை சாத்தான் கண்டது. ஆனால் யோபு யேகோவா தேவனுடைய நாமத்தைக் கைவிடுவதாக அது காணவில்லை. இவ்வாறு அது அவசரமாக யோபுவின் எலும்புகளைத் துன்புறுத்துவதற்காக கரத்தை நீட்டியது. அவனுடைய அவயவத்திலிருந்து கைகால்களைக் கிழிக்க ஆசைப்பட்டது. ஒரு நொடியில், யோபு அதற்கு முன் உணர்ந்திராத வேதனையை உணர்ந்தார். அவரது சதை எலும்புகளிலிருந்து கிழிக்கப்பட்டது போல இருந்தது. அவரது எலும்புகள் துண்டு துண்டாக அடித்து நொறுக்கப்பட்டதைப் போல இருந்தது. வேதனையளிக்கும் இந்த வலியானது, மரிப்பது நல்லது என்று அவரை நினைக்க வைத்தது…. இந்த வலியைத் தாங்கும் அவரது திறன் அதன் வரம்பை எட்டியது…. அவர் கூக்குரலிட விரும்பினார். வலியைக் குறைக்கும் முயற்சியில் அவர் தனது சரீரத்தில் தோலைக் கிழிக்க விரும்பினார்—ஆனாலும் அவர் தனது அலறல்களைத் தடுத்து நிறுத்தினார். தன் சரீரத்தில் உள்ள தோலை அவர் கிழிக்கவில்லை. ஏனெனில், அவரது பலவீனத்தைக் காண சாத்தானை அவர் அனுமதிக்க விரும்பவில்லை. ஆகவே, யோபு மீண்டும் ஒரு முறை மண்டியிட்டார். ஆனால் இந்த நேரத்தில் அவர் யேகோவா தேவன் இருப்பதை உணரவில்லை. யேகோவா தேவன் தனக்கு முன்னும், பின்னும், அவருக்கு இருபுறமும் இருப்பதை அவர் அறிந்திருந்தார். ஆயினும், அவருடைய வேதனையின் போது, தேவன் ஒருபோதும் அவரைப் பார்க்கவில்லை. அவர் தனது முகத்தை மூடி மறைத்து வைத்திருந்தார். ஏனென்றால், அவர் மனிதனைப் படைத்ததன் அர்த்தம் மனிதனுக்கு துன்பத்தை ஏற்படுத்துவதல்ல. இந்த நேரத்தில், யோபு அழுது கொண்டிருந்தார். இந்த சரீரம் வேதனையைச் சகித்துக்கொள்ள தன்னால் முடிந்ததைச் செய்தார். ஆனாலும் தான் தேவனுக்கு நன்றி செலுத்துவதைத் தடுக்க முடியவில்லை. “மனிதன் முதல் அடியில் விழுகிறான், அவன் பலவீனமானவனாகவும் வல்லமையற்றவனாகவும் இருக்கிறான், அவன் இளமையாகவும் அறியாமையில் இருப்பவனாகவும் இருக்கிறான்—அவனிடம் இவ்வளவு அக்கறையுடனும் மென்மையாகவும் இருக்க நீர் ஏன் விரும்புகிறீர்? நீர் என்னைத் தாக்குகிறீர். ஆனாலும் அவ்வாறு செய்வது உம்மைத் துன்புறுத்துகிறது. உன் கவனிப்பு மற்றும் அக்கறைக்கு தகுதியுள்ளவனாக இருக்க மனிதனிடம் இருப்பது என்ன?” யோபுவின் ஜெபங்கள் தேவனுடைய காதுகளை எட்டின. தேவன் அமைதியாக இருந்தார், எந்த சத்தமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்…. தன்னுடைய எந்த தந்திரமும் பயனற்று இருப்பதால் சாத்தான் அமைதியாகப் புறப்பட்டது. ஆனால் இது யோபுவிற்கான தேவனுடைய சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. யோபுவிடம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வல்லமை பகிரங்கப்படுத்தப்படாததால், யோபுவின்கதை சாத்தானுடைய பின்வாங்கலுடன் முடிவடையவில்லை. மற்ற கதாபாத்திரங்கள் நுழைந்ததால், இன்னும் அற்புதமான காட்சிகள் இனி வரவிருக்கிறது.

எல்லாவற்றிலும் தேவனுடைய நாமத்தை யோபு புகழ்ந்து பேசுவது, யோபுவின் தெய்வ பயம் மற்றும் தீமையைத் தவிர்த்தலின் மற்றொரு வெளிப்பாடாகும்

யோபு சாத்தானுடைய அழிவைச் அனுபவித்தார், ஆனாலும் அவர் யேகோவா தேவனுடைய நாமத்தைக் கைவிடவில்லை. அவரது மனைவி தான் முதலில் விலகினார். மனிதனுடைய கண்களுக்குத் தெரியும் ஒரு வடிவத்தில் அவரது மனைவி சாத்தானுடைய பாத்திரமாக செயல்பட்டு, யோபுவைத் தாக்கினார். மூலமுதலான வேதாகமம் இதை விவரிக்கிறது: “அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்” (யோபு 2:9). மனிதனுடைய போர்வையில் சாத்தான் பேசிய வார்த்தைகள் இவை. அவை ஒரு தாக்குதல் மற்றும் ஒரு குற்றச்சாட்டுஆகும். அவை ஒரு மயக்கம், சோதனை மற்றும் அவதூறு ஆகும். யோபுவின்மாம்சத்தைத் தாக்குவதில் தோல்வியுற்றதால், சாத்தான் நேரடியாக யோபுவின் உண்மையைத் தாக்கியது. யோபு தனது உண்மையைக் கைவிடவும், தேவனைத் துறக்கவும், இனி ஜீவிக்கக் கூடாது என்பதற்காகவும் இதைப் பயன்படுத்த விரும்பினது. ஆகவே, யோபுவைச் சோதிப்பதற்கு சாத்தான் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பியது: யோபு யேகோவாவின் நாமத்தைக் கைவிட்டால், அவர் அத்தகைய வேதனையைத் தாங்க வேண்டியதில்லை. அவர் மாம்சத்தின் வேதனையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். தனது மனைவியின் ஆலோசனையை எதிர்கொண்ட யோபு, “நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்” (யோபு 2:10). யோபு இந்த வார்த்தைகளை நீண்ட காலமாக அறிந்திருந்தார். ஆனால் இந்த நேரத்தில் யோபுவின் அறிவின் சத்தியம் நிரூபிக்கப்பட்டது.

தேவனைச் சபித்து மரிக்கும்படி அவருடைய மனைவி அவருக்கு அறிவுரை கூறியபோது, அவளுடைய அர்த்தம்: “உம் தேவன் உம்மை இவ்வாறு நடத்துகிறார், ஆகவே அவரை ஏன் சபிக்கக்கூடாது? நீர் இன்னும் என்ன செய்கிறீர்? உம் தேவன் உமக்கு மிகவும் நியாயமற்றவர், ஆனாலும் நீர் ‘யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்.’ என்று சொல்கிறீர். நீர் அவருடைய நாமத்தை துதிக்கும்போது அவர் எப்படி உம் மீது பேரழிவை ஏற்படுத்த முடியும்? சீக்கிரம் தேவனுடைய நாமத்தைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றுவதை விடுவிடும். பிறகு, உம் கஷ்டங்கள் முடிந்துவிடும்.” இந்த நேரத்தில், தேவன் யோபுவிடம் பார்க்க விரும்பிய சாட்சி உருவானது. எந்தவொரு சாதாரண மனிதனும் அத்தகைய சாட்சிகளைத் தாங்க முடியாது. வேதாகமத்தின் எந்தக் கதைகளிலும் அதைப் படித்ததில்லை—ஆனால் யோபு இந்த வார்த்தைகளைப் பேசுவதற்கு முன்பே தேவன் அதைக் கண்டார். தேவன் சரியானவர் என்பதை நிரூபிக்க யோபுவை அனுமதித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்த தேவன் விரும்பினார். மனைவியின் ஆலோசனையை கேட்ட யோபு தனது நேர்மையை விட்டுவிடவில்லை அல்லது தேவனை கைவிடவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர் தனது மனைவியிடம் கூறினார்: “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” இந்த வார்த்தைகள் அதிக சாரத்தைக் கொண்டிருக்கின்றனவா? இங்கே, இந்த வார்த்தைகளின் சாரத்தை நிரூபிக்க ஒரு உண்மை மட்டுமே உள்ளது. இந்த வார்த்தைகளின் சாரம் என்னவென்றால், அவை தேவனால் அவருடைய இருதயத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அவை தேவனால் விரும்பப்பட்டவை, அவை தேவன் கேட்க விரும்பியவை மற்றும் அவை தேவன் பார்க்க விரும்பிய விளைவு என்பதாகும். இந்த வார்த்தைகள் யோபுவின் சாட்சியின் சாராம்சமாகும். இதில், யோபுவின் பரிபூரணம், நேர்மை, தெய்வ பயம், தீமையைத் தவிர்த்தல் ஆகியவை நிரூபிக்கப்பட்டன. யோபுவின் விலைமதிப்பற்ற தன்மை, அவர் எப்படி சோதிக்கப்பட்டார் மற்றும் அவரது சரீரம் முழுவதும் கொடிய பருக்களால் மூடப்பட்டிருந்தாலும், அவர் மிகுந்த வேதனையைச் சகித்தபோதும், அவருடைய மனைவியும் உறவினர்களும் அவருக்கு அறிவுரை கூறியபோதும், அவர் இன்னும் அத்தகைய வார்த்தைகளை உச்சரித்தார். இதை வேறு விதமாகச் சொல்வதென்றால், என்ன சோதனைகள் இருந்தாலும், அல்லது எவ்வளவு துன்பங்கள் அல்லது வேதனைகள் இருந்தாலும், மரணமே வந்தாலும், அவர் தேவனைத் துறக்கமாட்டார் அல்லது தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதை விட்டு விடமட்டார் என்று தன் இருதயத்தில் அவர் நம்பினார். அப்படியானால், தேவன் அவருடைய இருதயத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தார் என்பதையும், அவருடைய இருதயத்தில் தேவன் மட்டுமே இருந்தார் என்பதையும் நீங்கள் காண்கிறீர்கள். இதன் காரணமாகவே அவரைப் பற்றிய விளக்கங்களை வேதவசனங்களில் நாம் வாசிக்கிறோம்: இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை. அவர் உதடுகளால் பாவம் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இருதயத்தில் அவர் தேவனைப் பற்றி குறை கூறவில்லை. அவர் தேவனைப் பற்றி புண்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லவில்லை. தேவனுக்கு எதிராக பாவம் செய்யவில்லை. அவருடைய வாய் தேவனுடைய நாமத்தை துதித்தது மட்டுமல்லாமல், அவருடைய இருதயத்திலும் தேவனுடைய நாமத்தைத் துதித்தார். அவருடைய வாயும் இருதயமும் ஒன்றுதான். இது தேவனால் காணப்பட்ட உண்மையான யோபு ஆகும். தேவன் யோபுவை பொக்கிஷமாகக் கருதியதற்கு இதுவே காரணம்.

யோபுவை பற்றி ஜனங்களின் பல தவறான புரிதல்கள்

யோபு அனுபவித்த கஷ்டங்கள் தேவனால் அனுப்பப்பட்ட தூதர்களின் கிரியை அல்ல. அது தேவனுடைய கரத்தால் ஏற்படவில்லை. மாறாக, அது தனிப்பட்ட முறையில் தேவனுடைய எதிரியான சாத்தானால் ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, யோபு அனுபவித்த கஷ்டங்களின் அளவு ஆழமானது. ஆயினும்கூட, இந்த நேரத்தில் யோபு தனது இருதயத்தில் தேவனைப் பற்றிய அன்றாட அறிவையும், அன்றாட செயல்களின் கொள்கைகளையும், தேவன்மீது அவர் கொண்ட அணுகுமுறையையும் நிரூபித்தார். இதுதான் உண்மை. யோபு சோதிக்கப்படாவிட்டால், தேவன் யோபுவின் மீது சோதனைகளைச் செய்யவில்லை என்றால், யோபு, “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்,” என்று சொன்னபோது, யோபு ஒரு கபடவாதி, தேவன் அவருக்கு பல சொத்துக்களைக் கொடுத்தார், எனவே, அவர் யேகோவாவின் நாமத்தை துதித்தார் என்று நீ கூறியிருப்பாய். சோதனைகளுக்கு ஆட்படுவதற்கு முன்பு, யோபு, “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” என்று கூறியிருந்தால் யோபு மிகைப்படுத்தப்பட்டவர் என்றும், தேவனுடைய கரத்தால் அவர் அடிக்கடி ஆசீர்வதிக்கப்பட்டதால் அவர் தேவனுடைய நாமத்தைக் கைவிட மாட்டார் என்றும் நீ கூறியிருப்பாய். தேவன் அவர் மீது பேரழிவை ஏற்படுத்தியிருந்தால், அவர் நிச்சயமாக தேவனுடைய நாமத்தை கைவிட்டிருப்பார் என்று நீங்கள் கூறியிருப்பீர்கள். ஆயினும், யாரும் விரும்பாத அல்லது பார்க்க விரும்பாத சூழ்நிலைகளில், யாரும் அவர்களுக்கு ஏற்பட விரும்பாத சூழ்நிலைகளில், அவர்களுக்கு நேரிடும் என்று அவர்கள் அஞ்சும் சூழ்நிலைகளில், தேவன் கூட தாங்க முடியாத சூழ்நிலைகளில், யோபு தன்னைக் கண்டபோதும் கூட, யோபு தம்முடைய உண்மையைப் பற்றிக்கொண்டார்: “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்,” மற்றும் “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” இந்த நேரத்தில் யோபுவின் நடத்தையை பார்க்கையில், ஆடம்பரமான வார்த்தைகளையும் எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் பேச விரும்புபவர்கள் அனைவரும் பேச்சில்லாமல் இருக்கிறார்கள். தேவனுடைய நாமத்தைப் பேச்சில் மட்டுமே புகழ்ந்து பேசுபவர்கள், ஆனால் ஒருபோதும் தேவனுடைய சோதனைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள், யோபு உறுதியாக வைத்திருந்த நேர்மையால் கண்டிக்கப்படுகிறார்கள். மனிதன் தேவனுடைய வழியில் உறுதியாக இருக்க முடியும் என்று ஒருபோதும் நம்பாதவர்கள் யோபுவின் சாட்சியால் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். இந்த சோதனைகளின் போது யோபுவின்நடத்தை மற்றும் அவர் பேசிய வார்த்தைகளைப் பார்த்தால், சிலர் குழப்பமடைவார்கள், சிலர் பொறாமைப்படுவார்கள், சிலர் சந்தேகப்படுவார்கள், சிலர் ஆர்வமற்றவர்களாகத் தோன்றுவார்கள். யோபுவின் சாட்சியை ஏற்கமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் சோதனையின்போது யோபுவுக்கு ஏற்பட்ட வேதனையை அவர்கள் காண்பது மட்டுமல்லாமல், யோபு பேசிய வார்த்தைகளைப் படித்ததோடு மட்டுமல்லாமல், சோதனைகள் வந்தபோது யோபுவால் காட்டிக் கொடுக்கப்பட்ட மனித “பலவீனத்தையும்” அவர்கள் காண்கிறார்கள். இந்த “பலவீனம்” யோபுவின் பரிபூரணத்தில் பூரணமற்றதாக, தேவனுடைய பார்வையில் பரிபூரணமாக இருந்த ஒருவன் மனிதனுடைய பார்வையில் கறை உள்ளவனாகக் கருதப்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். பரிபூரணமானவர்கள் குறைபாடற்றவர்கள், கறை அற்றவர்கள் அல்லது மோசமானவர்கள் அல்ல, அவர்களுக்கு பலவீனங்கள் இல்லை, வலி பற்றிய அறிவு இல்லை, அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியற்றவர்களாகவோ மனச்சோர்வடைந்தவர்களாகவோ அவர்களால் உணரமுடியாது, வெறுப்பு அற்றவர்கள் அல்லது வெளிப்புறமாக தீவிரமான நடத்தை இல்லாதவர்கள் என்றும் நம்பப்படுகிறது. இதன் விளைவாக, யோபு உண்மையிலேயே பரிபூரணர் என்று பெரும்பான்மையான ஜனங்கள் நம்பவில்லை. அவரது சோதனைகளின் போது அவரது நடத்தையை ஜனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, யோபு தனது சொத்தையும் குழந்தைகளையும் இழந்தபோது, ஜனங்கள் கற்பனை செய்தபடி, அவர் கண்ணீர் சிந்தவில்லை. அவரது “அலங்காரமின்மை” அவர் கடுமையாக இருப்பதாக ஜனங்களை நினைக்க வைக்கிறது. ஏனென்றால் அவர் தனது குடும்பத்தினரிடம் கண்ணீரோ பாசமோ இல்லாமல் இருந்தார். ஜனங்களுக்கு யோபுவின் ஆரம்ப மோசமான எண்ணம் இதுதான். அதன்பிறகு அவரது நடத்தை இன்னும் குழப்பமானதாக அவர்கள் காண்கிறார்கள்: “தன் போர்வையைக் கிழித்து” என்பது தேவனுக்கு அவமரியாதை என்று ஜனங்கள் விளக்குகின்றனர். “தலை முடியை சிரைத்து” என்பது யோபுவின் அவதூறு மற்றும் தேவனுக்கு எதிரான எதிர்ப்பைக் குறிக்கும் ஒன்று என்று தவறாக நம்புகின்றனர். “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்,” யோபுவின்வார்த்தைகளைக் கண்டுகொள்ளாமல், தேவனால் புகழப்பட்ட யோபில் ஜனங்கள் யாரும் நீதியை உணராமல் இருக்கிறார்கள். ஆகவே அவர்களில் பெரும்பான்மையினரால் செய்யப்பட்ட யோபுவைப் பற்றிய மதிப்பீடானது தவறான அறிவு, தவறான புரிதல், சந்தேகம், கண்டனம் மற்றும் கோட்பாடு சார்ந்த ஒப்புதல் ஆகியவற்றைத் தவிர வேறில்லை. யோபு ஒரு பரிபூரண மற்றும் நேர்மையான மனிதர், தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பவர் என்ற யேகோவா தேவனுடைய வார்த்தைகளை அவர்களில் எவராலும் உண்மையிலேயே புரிந்துகொள்ளவும் உணரவும் முடியாது.

மேலே சொல்லப்பட்ட யோபுவைப் பற்றிய அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில், ஜனங்கள் அவருடைய நீதியைப் பற்றி மேலும் சந்தேகிக்கிறார்கள். ஏனென்றால் யோபுவின் செயல்களும், வேதவசனங்களில் பதிவுசெய்யப்பட்ட அவரது நடத்தையும், ஜனங்கள் கற்பனை செய்ததைப் போல பயங்கரமாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அவர் எந்தவொரு பெரிய சாதனைகளையும் செய்யவில்லை என்பது மட்டுமல்லாமல், சாம்பலுக்கு இடையில் உட்கார்ந்திருக்கும்போது தன்னைச் சுரண்ட ஒரு ஓட்டையும் எடுத்துக் கொண்டார். இந்த செயல் ஜனங்களை ஆச்சரியப்படுத்துகிறது. அவர்களை சந்தேகிக்க வைக்கிறது—மறுக்கவும் வைக்கிறது. தன்னைத் தானே துடைத்துக் கொள்ளும் போது யோபு ஜெபிக்கவில்லை அல்லது தேவனுக்கு சத்தியம் பண்ணவில்லை. இதுவே யோபுவின் நீதியாகும். மேலும், அவர் வலியின் கண்ணீரை சிந்துவதாகக் காணப்படவில்லை. இந்த நேரத்தில், ஜனங்கள் யோபுவின் பலவீனத்தை மட்டுமே பார்க்கிறார்கள். இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகவே, யோபு சொல்வதைக் கேட்கும்போது கூட “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” அவர்கள் மாறாமல் இருக்கிறார்கள், அல்லது தீர்மானம் செய்யாமல் இருக்கிறார்கள். யோபுவின் நீதியை அவருடைய வார்த்தைகளிலிருந்து இன்னும் அறியாமல் இருக்கிறார்கள். யோபு தனது சோதனைகளின் வேதனையின் போது ஜனங்களுக்கு அளிக்கும் அடிப்படை எண்ணம் என்னவென்றால், அவர் திணறவில்லை அல்லது திமிர்பிடித்தவராக இல்லை என்பது தான். அவரது நடத்தைக்குப் பின்னால் உள்ள கதையை அவரது இருதயத்தின் ஆழத்தில் ஜனங்கள் காணவில்லை. அவருடைய இருதயத்திற்குள்ளான தெய்வ பயத்தையோ அல்லது தீமையைத் தவிர்ப்பதையோ, அல்லது தீமையைத் தவிர்க்கும் வழிமுறையின் கொள்கையை அவர் பின்பற்றுவதையோ அவர்கள் காணவில்லை. அவருடைய சாந்தமானது, அவருடைய பரிபூரணமும் நேர்மையும் வெற்று வார்த்தைகள் என்றும், அவரது தேவனைப் பற்றிய பயம் வதந்தி மட்டுமே என்றும் ஜனங்களை நினைக்க வைக்கிறது. இதற்கிடையில், அவர் வெளிப்புறமாக வெளிப்படுத்திய “பலவீனம்” அவர்களிடம் ஒரு ஆழமான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு ஒரு “புதிய பார்வையையும்,” தேவன் பூரணாமானவர் மற்றும் நேர்மையானவர் என்று வரையறுக்கும் மனிதனுக்கு ஒரு “புதிய புரிதலையும்” அளிக்கிறது. யோபு வாய் திறந்து அவர் பிறந்த நாளை சபித்தபோது அத்தகைய “புதிய பார்வை” மற்றும் “புதிய புரிதல்” நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் அனுபவித்த வேதனையின் அளவு எந்த மனிதனுக்கும் கற்பனை செய்யமுடியாதது மற்றும் புரிந்துக்கொள்ள முடியாதது என்றாலும், அவர் தேவ தூஷணம் செய்யவில்லை. ஆனால் தனது சரீரத்தின் வலியை தனது சொந்த வழிமுறைகளால் குறைத்தார். வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அவர் கூறினார்: “நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக” (யோபு 3:3). ஒருவேளை, இந்த வார்த்தைகளை இதுவரை யாரும் கருத்தில் கொள்ளாமல் இருந்திருக்கலாம், ஒருவேளை அவற்றில் கவனம் செலுத்தியவர்களும் இருக்கலாம். உங்கள் பார்வையில், யோபு தேவனை எதிர்த்தார் என்று அர்த்தமா? அவை தேவனுக்கு எதிரான புகாரா? யோபு பேசும் இந்த வார்த்தைகளைப் பற்றி உங்களில் பலருக்கு சில யோசனைகள் இருப்பதை நான் அறிவேன். யோபு பரிபூரணமாகவும் நேர்மையாகவும் இருந்திருந்தால், அவர் எந்த பலவீனத்தையும் வருத்தத்தையும் காட்டியிருக்கக் கூடாது. அதற்கு பதிலாக சாத்தானிடமிருந்து எந்தவொரு தாக்குதலையும் நேர்மறையாக எதிர்கொண்டிருக்க வேண்டும். சாத்தானுடைய சோதனையின் முன் சிரிப்பைக் காட்டியிருக்க வேண்டும். சாத்தானால் தன் மாம்சத்தின் மீது கொண்டுவரப்பட்ட எந்தவொரு வேதனைக்கும் அவர் சிறிதளவிலும் எதிர்வினை ஆற்றியிருக்கக் கூடாது. அவருடைய இருதயத்திற்குள் இருக்கும் எந்த உணர்ச்சிகளையும் அவர் வெளியே காட்டிக் கொடுத்திருக்கக் கூடாது. இந்த சோதனைகளை தேவன் இன்னும் கடினமாக்க வேண்டும் என்று அவர் கேட்டிருக்க வேண்டும். உண்மையிலேயே தேவனுக்கு பயந்து, தீமையைத் தவிர்க்கும், அசைக்க முடியாத மனிதரால் இது நிரூபிக்கப்பட வேண்டும். இந்த கடுமையான வேதனையின் மத்தியில், யோபு தனது பிறந்த நாளை சபித்தார். அவர் தேவனைப் பற்றி புகார் செய்யவில்லை, தேவனை எதிர்க்கும் எண்ணமும் இல்லை. இதைச் சொல்வது, செய்து காட்டுவதை விட எளிதானது ஆகும். ஏனென்றால், ஆதி காலம் முதல் இன்று வரை, இதுபோன்ற சோதனையை யாரும் அனுபவித்ததில்லை அல்லது யோபுவுக்கு நேர்ந்ததை அனுபவித்ததில்லை. ஆகவே, யோபுவைப் போன்ற அத்தகைய சோதனையில் ஏன் இதுவரை யாரும் உட்படுத்தப்படவில்லை? ஏனென்றால், தேவன் அதைப் பார்க்கும்போது, அத்தகைய பொறுப்பை அல்லது ஆணையை யாராலும் தாங்க முடியாது, யோபு செய்ததைப் போல யாராலும் செய்ய முடியாது. மேலும், அத்தகைய வேதனையை யோபு சந்தித்தபோது செய்ததைப் போல, தன் பிறந்த நாளை மட்டுமே சபித்து, தேவனுடைய நாமம் மற்றும் யேகோவா தேவனுடைய நாமத்தைத் தொடர்ந்து துதிக்க வேறு எவராலும் முடியாது. இதை யாராவது செய்ய முடியுமா? யோபுவைப் பற்றி நாம் இதைச் சொல்லும்போது, அவருடைய நடத்தையைப் பாராட்டுகிறோமா? அவர் ஒரு நீதியுள்ள மனிதர். தேவனுக்காக இத்தகைய சாட்சிகளைத் தாங்கும் ஒருவர். சாத்தான் தன் முகத்தை மூடிக் கொண்டு தப்பி ஓடச் செய்ய வல்லவர் அவர். அதனால் தேவன் மீது குற்றம் சாட்டுவதற்கு சாத்தான் ஒருபோதும் திரும்ப வரவில்லை—எனவே அவரைப் பாராட்டுவதில் என்ன தவறு? நீங்கள் தேவனை விட உயர்ந்த தரநிலைகளைக் கொண்டிருக்கலாமா? சோதனைகள் உங்கள் மீது வரும்போது நீங்கள் யோபுவை விட சிறப்பாக செயல்படுவீர்களா? யோபு தேவனால் புகழப்பட்டார்—உங்களுக்கு என்ன ஆட்சேபனைகள் இருக்க முடியும்?

யோபு தன் பிறந்த நாளை சபிக்கிறார், ஏனென்றால் அவனால் தேவன் வேதனைப்படுவதை அவர் விரும்பவில்லை

தேவன் ஜனங்களின் இருதயங்களுக்குள் இருக்கிறார் என்று நான் அடிக்கடி சொல்கிறேன். அதே நேரத்தில் ஜனங்கள் வெளிப்புறங்களைப் பார்க்கிறார்கள். தேவன் ஜனங்களின் இருதயங்களுக்குள் இருப்பதால், அவற்றின் சாராம்சத்தை அவர் புரிந்துக்கொள்கிறார். அதேசமயம் ஜனங்கள் மற்றவர்களின் சாராம்சத்தை அவர்களின் வெளிப்புறத்தின் அடிப்படையில் வரையறுக்கிறார்கள். யோபு வாய் திறந்து, பிறந்த நாளை சபித்தபோது, இந்த செயல் யோபுவின் மூன்று நண்பர்கள் உட்பட அனைத்து ஆவிக்குரிய பிரமுகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. மனிதன் தேவனிடமிருந்து வந்தான், ஜீவனுக்கும் மாம்சத்திற்கும் நன்றி சொல்ல வேண்டும், அதைப் போலவே அவன் பிறந்த நாளும், தேவனால் அவனுக்கு வழங்கப்பட்டது. அவன் அவற்றை சபிக்கக்கூடாது. இது சாதாரண ஜனங்களும் புரிந்துக்கொள்ளக்கூடிய மற்றும் உணரக்கூடிய ஒன்று. தேவனைப் பின்பற்றும் எவருக்கும், இந்த புரிதல் பரிசுத்தமானது மற்றும் மீறமுடியாதது. இது ஒருபோதும் மாற்ற முடியாத உண்மை. மறுபுறம், யோபு கட்டளைகளை மீறிவிட்டார்: அவர் பிறந்த நாளை சபித்தார். தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவது போன்றது இது என்று சாதாரண ஜனங்கள் கருதுகின்றனர். யோபு ஜனங்களின் புரிதலுக்கும் அனுதாபத்திற்கும் மட்டுமல்லாமல், தேவனுடைய மன்னிப்புக்கும் தகுதி உடையவராக இல்லை. அதே சமயம், இன்னும் அதிகமான ஜனங்கள் யோபுவின் நீதியைச் சந்தேகிக்கிறார்கள். ஏனென்றால், யோபுவிடம் தேவன் காட்டிய தயவால் யோபு சுய மகிழ்ச்சி அடைந்ததாகத் தோன்றியது. அது அவரை மிகவும் தைரியமாகவும் பொறுப்பற்றதாகவும் ஆக்கியது, தேவன் அவரை ஆசீர்வதித்ததற்கும், ஜீவ நாட்கள் முழுவதும் அவரை கவனித்துக்கொண்டதற்கும் அவர் தேவனுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தான் பிறந்த நாளையும் சபித்தார். இது தேவனுக்கு எதிரானதல்ல என்றால், இது என்ன? இத்தகைய மேலோட்டங்கள் யோபுவின்இந்த செயலைக் கண்டிப்பதற்கான ஆதாரத்தை ஜனங்களுக்கு வழங்குகின்றன. ஆனால் அந்த நேரத்தில் யோபு உண்மையிலேயே என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை யார் அறிய முடியும்? யோபு அப்படி நடந்து கொண்டதற்கான காரணத்தை யாரால் அறிய முடியும்? தேவனுக்கும் யோபுக்கும் மட்டுமே இங்குள்ள கதையும் காரணங்களும் தெரியும்.

யோபுவின் எலும்புகளைத் துன்புறுத்துவதற்காக சாத்தான் தன் கரத்தை நீட்டியபோது, தப்பிப்பதற்கான வழிமுறையோ அல்லது எதிர்ப்பதற்கான வல்லமையோ இல்லாமல் யோபு அதன் பிடியில் இருந்தார். அவரது சரீரமும் ஆத்துமாவும் மிகுந்த வேதனையை அனுபவித்தன. இந்த வலி மாம்சத்தில் ஜீவிக்கும் மனிதனுடைய அற்பமான தன்மை, பலவீனம் மற்றும் வல்லமையற்ற தன்மை ஆகியவற்றை அவர் ஆழமாக அறியச் செய்தது. அதே சமயம், மனிதகுலத்தை பாதுகாக்கும் கவனித்துக்கொள்ளும் மனதை தேவன் ஏன் கொண்டிருக்கிறார் என்பதற்கான ஆழமான உணர்வையும் புரிதலையும் அவர் பெற்றார். அவர் முழங்கால்படியிட்டு தேவனிடம் ஜெபம் செய்தபோது, தேவன் தம் முகத்தை மூடி மறைத்து வைத்திருப்பதைப் போல உணர்ந்தார். ஏனென்றால், தேவன் அவரை சாத்தானுடைய கரங்களில் பூரணமாக வைத்திருந்தார். அதே சமயம், தேவனும் அவருக்காக அழுதார். அவருக்காக வேதனைப்பட்டார். தேவன் அவரது வலியால் வேதனைப்பட்டார் மற்றும் அவரது காயத்தால் தேவன் காயப்பட்டார்…. தேவனுடைய வலியை யோபு உணர்ந்தார். அதைப் போலவே தேவனுக்கு அது எவ்வளவு தாங்கமுடியாதத ஆகும்…. தேவன் மீது மேலும் வருத்தத்தை கொண்டுவர யோபு விரும்பவில்லை. தேவன் அவருக்காக அழுவதை அவர் விரும்பவில்லை, தேவன் அவனால் வேதனைப்படுவதைக் காணவும் அவர் விரும்பவில்லை. இந்த தருணத்தில், தன் மாம்சத்தால் தனக்கு ஏற்பட்ட வேதனையை இனி தான் சகித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக யோபு தனது மாம்சத்திலிருந்து தன்னை விலக்க மட்டுமே விரும்பினார். ஏனென்றால், தேவன் தனது வலியால் துன்பப்படுவதைத் தடுக்க விரும்பினார்—ஆனாலும் அது அவரால் முடியவில்லை. மாம்சத்தின் வலியை அவர் சகித்துக்கொள்வதோடு, தேவனை கவலையடையச் செய்யும் வேதனையையும் அவர் சகிக்க வேண்டியிருந்தது. அந்த இரண்டு வலிகள்—மாம்சத்திலிருந்து வந்தவை, ஆவியிலிருந்து வந்தவை—யோபுவின் மன வருத்தத்தையும் மிகுந்த வெறுப்பையும் தரும் வலியை யோபுவுக்குத் தந்தன. மாம்சமும் இரத்தமும் கொண்ட மனிதனுடைய வரம்புகள் எவ்வாறு ஒருவருக்கு விரக்தியையும் உதவியற்ற குணத்தையும் ஏற்படுத்தும் என்பதை அவருக்கு உணர்த்தின. இந்த சூழ்நிலைகளில், தேவனைப் பற்றிய அவரது ஏக்கம் கடுமையாக இருந்தது. சாத்தான் மீதான வெறுப்பு மேலும் தீவிரமடைந்தது. இந்த நேரத்தில், யோபு மனித உலகில் பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்று எதிர்பார்த்திருப்பார். தேவன் யோபுவுக்காக கண்ணீர் வடிப்பதை விட அல்லது யோபுவுக்காக அவர் வேதனையை உணருவதை விட தான் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று எதிர்பார்த்திருப்பார். அவர் தனது மாம்சத்தை ஆழமாக வெறுக்கத் தொடங்கினார். அவர் நோய்வாய்ப்பட்டு, தன்னைப் பற்றியும், தன் பிறந்த நாள் பற்றியும், தனக்குத் தொடர்புடைய அனைத்தையும் குறித்து சோர்வடைந்தார். தன் பிறந்த நாள் அல்லது அதற்கு தொடர்புடைய எதுவும் அதற்குப் பின் இருக்கக் கூடாது என்று விரும்பினார். எனவே, அவர் வாயைத் திறந்து தன் பிறந்த நாளைச் சபித்தார்: “நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக. அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்” (யோபு 3:3-4). யோபுவின் வார்த்தைகள், “நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக,” தனக்குள்ளான வெறுப்பைத் தாங்குகின்றது. தேவனுக்கு வேதனையை ஏற்படுத்தியதற்காக அவர் தன்னைப் பழித்தார். தான் கடன்பட்டிருப்பதையும் உணர்ந்தார். “அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்.” இருக்க விரும்பினார். இந்த இரண்டு பத்திகளும் யோபு அப்போது எப்படி உணர்ந்தார் என்பதற்கான இறுதி வெளிப்பாடாகும். அவை, அவருடைய பரிபூரணத்தையும் நேர்மையையும் அனைவருக்கும் பூரணமாக வெளிப்படுத்துகின்றன. அதே சமயம், அவருடைய விசுவாசமும் தேவனுக்கான கீழ்ப்படிதலும், தெய்வ பயமும் யோபு விரும்பியபடி உண்மையிலேயே உயர்ந்தன. நிச்சயமாக, இந்த உயர்வானது தேவன் எதிர்பார்த்த துல்லியமான விளைவாகும்.

யோபு சாத்தானைத் தோற்கடித்து, தேவனுடைய கண்களில் உண்மையான மனிதனாகிறார்

யோபு முதன்முதலில் அவருடைய சோதனைகளுக்கு ஆளானபோது, அவருடைய சொத்துக்கள் மற்றும் அவனுடைய எல்லா குழந்தைகளும் பறிக்கப்பட்டனர். ஆனால் அவர் கீழே விழுந்துவிடவில்லை அல்லது அதன் விளைவாக தேவனுக்கு எதிரான பாவமாக எதையும் சொல்லவில்லை. அவர் சாத்தானுடைய சோதனையை ஜெயித்தார். மேலும், அவர் தனது பொருள் சொத்துக்கள், சந்ததியினர் மற்றும் அவரது உலக உடைமைகள் அனைத்தையும் இழந்துவிட்டார். அதாவது தேவன் அவரிடமிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் நிலையிலும், அவரால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்தது. தேவன் செய்த காரியங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்தவும் துதிக்கவும் முடிந்தது. இதுவே சாத்தானுடைய முதல் சோதனையில் யோபுவின் நடத்தையாகும். இதுவே தேவனுடைய முதல் சோதனையில் யோபுவின் சாட்சியாகும். இரண்டாவது சோதனையில், யோபுவைத் துன்புறுத்துவதற்காக சாத்தான் தன் கரத்தை நீட்டினான். யோபு முன்பு அனுபவித்ததை விட அதிகமான வலியை அனுபவித்த போதிலும், அவரது சாட்சி ஜனங்களை பிரமிக்கச் செய்ய போதுமானதாக இருந்தது. சாத்தானை மீண்டும் தோற்கடிக்க அவர் தனது துணிச்சலையும், நம்பிக்கையையும், தேவனுக்கான கீழ்ப்படிதலையும், தெய்வ பயத்தையும் பயன்படுத்தினார். அவருடைய நடத்தை மற்றும் அவரது சாட்சி மீண்டும் தேவனால் அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது, மாம்சத்தின் வலி தேவனுக்கான விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் மாற்றவோ அல்லது தேவன் மீதான பக்தியையும் தெய்வ பயத்தையும் பறிக்கவோ முடியாது என்று சாத்தானிடம் அறிவிக்க யோபு தனது உண்மையான நடத்தையைப் பயன்படுத்தினார். அவர் மரணத்தை எதிர்கொள்கிறார் என்பதற்காக அவர் தேவனை கைவிடவில்லை அல்லது தனது பூரணத்தையும் நேர்மையையும் விட்டுவிடவில்லை. யோபுவின் உறுதியானது சாத்தானிடம் ஒரு கோழைத்தனத்தை உருவாக்கியது. அவருடைய விசுவாசம் சாத்தானை கோழையாகவும், நடுங்கவும் செய்தது. ஜீவினுக்கும் மரணத்துக்குமான யுத்தத்தில் சாத்தானுக்கு எதிராக யோபு செய்த தீவிரமான போராட்டம் சாத்தானில் ஆழ்ந்த வெறுப்பையும் ஆத்திரத்தையும் வளர்த்தது. அவருடைய பரிபூரணமும் நேர்மையும் சாத்தானை வேறு ஒன்றும் செய்யமுடியாத ஒன்றாக மாற்றியது. அதாவது சாத்தான் அவர் மீதான தாக்குதல்களை கைவிட்டு, யேகோவா தேவனுக்கு முன்பாக யோபுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைச் சொல்வதை விட்டுவிட்டது. இதன் அர்த்தம் யோபு உலகை ஜெயித்தார், மாம்சத்தை ஜெயித்தார், சாத்தானை ஜெயித்தார் மற்றும் மரணத்தை ஜெயித்தார். அவர் முற்றிலுமாக மற்றும் நிச்சயமாக தேவனுக்கு சொந்தமான ஒரு மனிதராகினார். இந்த இரண்டு சோதனைகளின் போது, யோபு தனது சாட்சியில் உறுதியாக நின்றார். உண்மையில், அவருடைய பரிபூரணத்தையும் நேர்மையையும் வெளிப்படுத்தினார். மேலும், தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான அவரது ஜீவிதக் கொள்கைகளின் நோக்கத்தை விரிவுபடுத்தினார். இந்த இரண்டு சோதனைகளுக்கும் ஆளாகியதால், யோபுவிடம் ஒரு சிறப்பான அனுபவம் பிறந்தது. இந்த அனுபவம் அவரை மிகவும் முதிர்ச்சியடைந்தவராகவும், அனுபவமுள்ளவராகவும் ஆக்கியது. அது அவரை வல்லமை உடையவராகவும், அதிக நம்பிக்கை உடையவராகவும் ஆக்கியது. அது, அவர் உறுதியாக பெற்றிருக்க வேண்டிய ஒருமைப்பாட்டின் பூரணமான தன்மை மற்றும் தகுதியைப் பற்றி அவருக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. யோபுவிற்கான யேகோவா தேவனுடைய சோதனைகள் அவருக்கு மனிதனுக்கான தேவனுடைய அக்கறை பற்றிய ஆழமான புரிதலையும் உணர்வையும் அளித்தன. தேவனுடைய அன்பின் விலைமதிப்பற்ற குணத்தை உணர அவரை அனுமதித்தன. அந்தக் கட்டத்தில் இருந்து தேவனைப் பற்றிய அக்கறையும் அன்பும் தெய்வ பயத்தில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டன. யேகோவா தேவனுடைய சோதனைகள் யோபுவை அவரிடமிருந்து அந்நியப்படுத்தின, ஆனால் அவருடைய இருதயத்தை தேவனிடம் நெருக்கமாக கொண்டு வந்தன. யோபு தாங்கிய மாம்ச வலியானது அதன் உச்சத்தை எட்டியபோது, யேகோவா தேவனிடமிருந்து அவர் உணர்ந்த அக்கறையின் நிமித்தமாக அவருக்கு பிறந்த நாளைச் சபிப்பதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய இயலவில்லை. இத்தகைய நடத்தையானது நீண்டகாலமாக திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் தேவனைப் பற்றிய, அவரது அன்பைப் பற்றிய, யோபுவினுடைய இருதயத்திலிருந்து வரும் இயல்பான வெளிப்பாடாகும். அது தேவன் மீதான அக்கறை மற்றும் அன்பிலிருந்து வந்த ஒரு இயல்பான வெளிப்பாடு ஆகும். ஏனென்றால், யோபு தன்னை வெறுத்தார். அவரால் தேவனைத் துன்புறுத்த முடியவில்லை, அதை விரும்பவுமில்லை. இதனால் அவருடைய கருத்தும் அன்பும் தன்னலமற்ற நிலையை அடைந்தது. இந்த நேரத்தில், யோபு தனது நீண்டகால ஆராதனையையும், தேவனுக்கான ஏக்கத்தையும், தேவன் கருத்தில் கொள்ளும் நிலையில் இருக்கும் அவருடைய பக்தியையும், அன்பையும் யோபு உயர்த்தினார். தேவனுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய அவர் தன்னை அனுமதிக்கவில்லை. தேவனைப் புண்படுத்தும் எந்தவொரு நடத்தையையும் அவர் அனுமதிக்கவில்லை. மேலும், தனது சொந்த காரணங்களுக்காக தேவன் மீது எந்த துக்கத்தையும், வருத்தத்தையும், மகிழ்ச்சியையும் கூட கொண்டு வர அனுமதிக்கவில்லை. தேவனுடைய பார்வையில், யோபு முன்பு இருந்த அதே யோபாக இருந்தபோதிலும், யோபுவின்நம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் தெய்வ பயம் ஆகியவை தேவனுக்கு பூரணமான திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்தன. இந்த நேரத்தில், யோபு அடைய வேண்டும் என்று தேவன் எதிர்பார்த்த பரிபூரணத்தை அடைந்தார். அவர் தேவனுடைய பார்வையில் “பரிபூரணமானவர் மற்றும் நேர்மையானவர்” என்று அழைக்கப்படுவதற்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராகிவிட்டார். அவருடைய நீதியான செயல்கள் சாத்தானை ஜெயிக்கவும், தேவனுக்கு அளித்த சாட்சியில் உறுதியாக நிற்கவும் அவரை அனுமதித்தன. ஆகவே, அவருடைய நீதியுள்ள செயல்கள் அவரை பரிபூரணமாக்கியதுடன், முன்னெப்போதும் இருந்ததை விட அவருடைய ஜீவிதத்தின் மதிப்பை உயர்த்தவும், சாத்தானை மீறவும் அனுமதித்தது. சாத்தானால் இனிமேல் தாக்கப்பட்டு சோதிக்கப்படாத முதல் மனிதராகவும் அவரை மாற்றியது. யோபு நீதியுள்ளவர் என்பதால், அவர் சாத்தானால் குற்றம் சாட்டப்பட்டு சோதிக்கப்பட்டார். யோபு நீதியுள்ளவர் என்பதால், அவர் சாத்தானிடம் ஒப்படைக்கப்பட்டார். யோபு நீதியுள்ளவர் என்பதால், அவர் சாத்தானை ஜெயித்து தோற்கடித்தார். அவருடைய சாட்சியில் உறுதியாக நின்றார். இனிமேல் யோபு மீண்டும் ஒருபோதும் சாத்தானிடம் ஒப்படைக்கப்படாத முதல் மனிதனாக ஆனார். அவர் உண்மையிலேயே தேவனுடைய சிங்காசனத்தின் முன் வந்து சாத்தானுடைய உளவு அல்லது அழிவு இல்லாமல், வெளிச்சத்தில், தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் ஜீவித்தார்…. அவர் தேவனுடைய பார்வையில் ஒரு உண்மையான மனிதராகிவிட்டார். அவர் விடுவிக்கப்பட்டார் …

யோபுவைப் பற்றி

யோபு எவ்வாறு சோதனைகளைச் சந்தித்தார் என்பதை அறிந்த பிறகு, உங்களில் பெரும்பாலானோர் யோபுவைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விரும்புவீர்கள். குறிப்பாக அவர் தேவனுடைய புகழ்ச்சியைப் பெற்ற ரகசியத்தைப் பற்றி அறிய விரும்புவீர்கள். எனவே இன்று, யோபுவைப் பற்றி பேசலாம்!

யோபுவின் அன்றாட ஜீவிதத்தில், அவருடைய பரிபூரணத்தையும், நேர்மையையும், தெய்வ பயத்தையும், தீமையைத் தவிர்த்தலையும் காண்கிறோம்

நாம் யோபுவைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், தேவனுடைய சொந்த வாயிலிருந்து சொல்லப்பட்ட யோபுவைப் பற்றிய மதிப்பீட்டை ஆராய்வதன் மூலம் நாம் தொடங்க வேண்டும்: “என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை.”

முதலில் யோபுவின் பரிபூரணம் மற்றும் நேர்மையைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.

“பரிபூரணமான” மற்றும் “நேர்மையான” ஆகிய வார்த்தைகளைப் பற்றிய உங்கள் புரிதல் என்ன? யோபு நிந்தனை இல்லாமல் இருந்தார், அவர் கௌரவமானவர் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நிச்சயமாக, அதுவே, “பரிபூரணமானது” மற்றும் “நேர்மையானது” என்ற வார்த்தைகளின் நேரடி விளக்கமும் புரிதலும் ஆகும். ஆனால் நிஜ ஜீவிதத்தின் சூழலானது யோபுவைப் பற்றிய உண்மையான புரிதலுடன் ஒருங்கிணைந்ததாகும்—வார்த்தைகள், புத்தகங்கள் மற்றும் கோட்பாடு மட்டும் எந்த பதில்களையும் வழங்காது. யோபுவின் குடும்ப ஜீவிதத்தைப் பார்ப்பதன் மூலம், அவருடைய ஜீவிதத்தில் அவரது இயல்பான நடத்தை எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம். இது, ஜீவிதத்தில் அவரது கொள்கைகள் மற்றும் குறிக்கோள்கள் பற்றியும், அதைப் போலவே அவரது ஆளுமை மற்றும் நாட்டம் பற்றியும் சொல்லும். இப்போது, யோபு 1:3 இன் இறுதி வார்த்தைகளைப் படிப்போம்: “அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.” இந்த வார்த்தைகள் என்ன சொல்கின்றன என்றால், யோபுவின் அந்தஸ்தும் நிலைப்பாடும் மிக உயர்ந்ததாக இருந்தது. ஆனால் அவர் கிழக்கின் எல்லா மனிதர்களிலும் மிகப் பெரியவராக இருப்பதற்கான காரணம் அவருடைய ஏராளமான சொத்துக்களா அல்லது அவர் பரிபூரணமாகவும் நேர்மையானவராகவும் இருந்தாரா என்பதோ, அல்லது தீமையைத் தவிர்த்து தேவனுக்கு அஞ்சினார் என்பதோ என்று சொல்லப்படவில்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக, யோபுவின் நிலையும் நிலைப்பாடும் மிகவும் மதிப்புமிக்கவை என்பதை நாம் அறிவோம். வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, யோபுவின்முதல் பதிவுகள் யோபு பரிபூரணமானவர், அவர் தேவனுக்கு அஞ்சினார், தீமையைத் தவிர்த்தார், அவருக்கு பெரும் செல்வமும் மதிப்புமிக்க அந்தஸ்தும் இருந்தது என்பவையே. அத்தகைய சூழலில், அத்தகைய நிலைமைகளின் கீழ், ஜீவிக்கும் ஒரு சாதாரண மனிதனாகப் பார்த்தால், யோபுவின் உணவு, ஜீவிதத் தரம் மற்றும் அவரது தனிப்பட்ட ஜீவிதத்தின் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பெரும்பாலான ஜனங்களின் கவனத்தின் மையமாக இருக்கும். ஆகவே நாம் தொடர்ந்து வசனங்களைப் படிக்க வேண்டும்: “அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள். விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்” (யோபு 1:4-5). இந்த பத்தி இரண்டு விஷயங்களை நமக்குக் கூறுகின்றன: முதலாவது, யோபுவின் மகன்களும் மகள்களும் தவறாமல் விருந்து புசிக்கிறார்கள், அதிகம் புசித்துக் குடிக்கிறார்கள்; இரண்டாவதாக, யோபு அடிக்கடி தன் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும் கவலைப்படுவதால், அவர்கள் பாவம் செய்கிறார்களோ என்று பயந்து, அவர்கள் இருதயங்களில் தேவனைக் கைவிட்டார்களோ என்று பயந்து, தகன பலிகளை அடிக்கடி செலுத்தினார். இதில் இரண்டு வெவ்வேறு வகையான ஜனங்களின் ஜீவிதம் விவரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, யோபுவின்மகன்களும் மகள்களும் தங்கள் செல்வத்தின் காரணமாக அடிக்கடி விருந்து வைத்தனர். ஆடம்பரமாக வாழ்ந்தனர். அவர்களின் இருதயத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப புசித்துக் குடித்தனர். பொருள் செல்வத்தால் கொண்டுவரப்பட்ட உயர்தர ஜீவிதத்தை அனுபவித்தனர். அத்தகைய ஜீவிதத்தை வாழ்வதால், அவர்கள் பெரும்பாலும் பாவம் செய்து தேவனைப் புண்படுத்துவது தவிர்க்க முடியாத்தாகிவிட்ட்து—ஆனாலும் அவர்கள் தங்களை பரிசுத்தப்படுத்தவோ அல்லது தகன பலிகளை செலுத்தவோ இல்லை. அப்படியானால், அவர்களுடைய இருதயங்களில் தேவனுக்கு இடமில்லை. தேவனுடைய கிருபையைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. தேவனைப் புண்படுத்த அஞ்சவில்லை என்பதை நீங்கள் காண்கிறீர்கள். நிச்சயமாக, நமது கவனம் யோபுவின் குழந்தைகள் மீது அல்ல, ஆனால் இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்ளும்போது யோபு என்ன செய்தார் என்பதில் தான் இருக்கிறது. பத்தியில் விவரிக்கப்பட்டுள்ள மற்ற விஷயம் இதுதான். இது யோபுவின் அன்றாட ஜீவிதத்தையும் அவரது மனிதகுலத்தின் சாராம்சத்தையும் உள்ளடக்கியது. யோபுவின் மகன்கள் மற்றும் மகள்களின் விருந்தை வேதாகமம் விவரிக்கும் இடத்தில், யோபுவைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவரது மகன்களும் மகள்களும் பெரும்பாலும் ஒன்றாக சாப்பிட்டு குடித்தார்கள் என்று மட்டுமே கூறப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோபு பண்டிகைகளை நடத்தவில்லை, தனது மகன்களும் மகள்களும் ஆடம்பரமாக சாப்பிடுவதில் யோபு பங்கேற்கவில்லை. ஐசுவரியவானாக இருந்தபோதிலும், பல சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தபோதிலும், யோபுவின் ஜீவிதம் ஆடம்பரமான ஒன்றாக இல்லை. அவர் தனது மிக உயர்ந்த ஜீவிதச் சூழலால் ஏமாற்றப்படவில்லை. அவர் தனது செல்வத்தின் காரணமாக, மாம்சத்தின் இன்பங்களைப் பற்றிக் கொள்ளவில்லை அல்லது தகன பலிகளை செலுத்த மறந்துவிடவில்லை. தேவனுடைய இருதயத்தில் படிப்படியாக விலகிச் செல்லவும் அது காரணமாகவில்லை. அப்படியானால், யோபு தனது ஜீவிதமுறையில் ஒழுக்கமாக இருந்திருக்கிறார். தேவன் அவருக்கு அளித்த ஆசீர்வாதங்களின் விளைவாக பேராசை உள்ளவராக அல்லது வெறித்தனமானவராக இருக்கவில்லை. அவர் ஒரு ஜீவிதத் தரத்தை நிர்ணயிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் தாழ்மையானவராக, அடக்கமானவராக இருந்தார். அவர் ஆடம்பரத்திற்கு இடம் கொடுக்கவில்லை. அவர் தேவனுக்கு முன்பாக எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருந்தார். அவர் பெரும்பாலும் தேவனுடைய கிருபையையும் ஆசீர்வாதங்களையும் சிந்தித்துப் பார்த்தார். தொடர்ந்து தேவனுக்கு அஞ்சினார். தனது அன்றாட ஜீவிதத்தில், யோபு தனது மகன்களுக்கும் மகள்களுக்கும் சர்வாங்க தகனபலிகளை வழங்க அதிகாலையில் எழுந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோபு தேவனுக்கு அஞ்சினார் என்பது மட்டுமல்லாமல், அவருடைய பிள்ளைகளும் தேவனுக்கு அஞ்சுவார்கள், தேவனுக்கு எதிராக பாவம் செய்ய மாட்டார்கள் என்றும் அவர் நம்பினார். யோபுவின் பொருள் செல்வம் அவரது இருதயத்திற்குள் எந்த இடத்தையும் கொண்டிருக்கவில்லை. அது தேவனுடைய நிலைப்பாட்டை மாற்றவில்லை. அவரது சொந்த நலனுக்காகவோ அல்லது அவரது குழந்தைகளுக்காகவோ என யோபுவின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்ப்பதுடன் இணைக்கப்பட்டன. யேகோவா தேவனைப் பற்றிய அவரது பயம் அவரது வாயுடன் நிற்கவில்லை, ஆனால் அவர் கிரியையில் மற்றும் அவரது அன்றாட ஜீவிதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பிரதிபலித்தது. யோபுவின் இந்த உண்மையான நடத்தை, அவர் நேர்மையானவர் என்பதைக் காட்டுகிறது. நீதியை நேசிக்கும் ஒரு சாராம்சத்தையும் நேர்மறையான விஷயங்களையும் கொண்டிருந்தார். யோபு அடிக்கடி தனது மகன்களையும் மகள்களையும் அனுப்பி பரிசுத்தப்படுத்தினார் என்றால், தனது குழந்தைகளின் நடத்தையை அவர் அனுமதிக்கவில்லை அல்லது அங்கீகரிக்கவில்லை என்று அர்த்தமாகும். மாறாக, அவர்களுடைய நடத்தையில் அவர் விரக்தியடைந்தார். அவர்களைக் கண்டித்தார். தனது மகன்கள் மற்றும் மகள்களின் நடத்தை யேகோவா தேவனுக்குப் பிரியமானதல்ல என்று அவர் முடிவு செய்திருந்தார். ஆகவே, யேகோவா தேவனுக்கு முன்பாகச் சென்று அவர்களுடைய பாவங்களை ஒப்புக்கொள்ளும்படி அவர் அடிக்கடி அவர்களை அழைத்தார். யோபுவின் செயல்கள் அவருடைய மனிதத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகின்றன. அதில் அவர் அடிக்கடி பாவம் செய்து தேவனைப் புண்படுத்தியவர்களுடன் ஒருபோதும் நடக்கவில்லை. மாறாக அவர்களை விட்டு விலகி அவர்களைத் தவிர்த்தார். இந்த ஜனங்கள் அவருடைய மகன்களாகவும், மகள்களாகவும் இருந்தபோதிலும், அவர்கள் தனது சொந்த உறவினர்களாக இருந்தபோதிலும், அவர் தனது சொந்த நடத்தையின் கொள்கைகளைக் கைவிடவில்லை. அவர் தனது சொந்த உணர்வுகளுக்காக அவர்களுடன் பாவங்களைச் செய்யவில்லை. மாறாக, பாவத்தை ஒப்புக்கொண்டு யேகோவா தேவனுடைய சகிப்புத்தன்மையை பெறும்படி யோபு அவர்களை வற்புறுத்தினார். அவர்களுடைய பேராசை இன்பத்திற்காக தேவனைக் கைவிட வேண்டாம் என்று அவர் எச்சரித்தார். யோபு மற்றவர்களை எவ்வாறு நடத்தினார் என்பதற்கான கோட்பாடுகள், அவருடைய தெய்வ பயம் மற்றும் தீமையைத் தவிர்ப்பதற்கான கொள்கைகளிலிருந்து பிரிக்க முடியாதவையாக இருந்தது. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுபவற்றை அவர் நேசித்தார். தேவனால் விரட்டப்படுவதை அவர் வெறுத்தார். தங்கள் இருதயங்களில் தேவனுக்குப் பயந்தவர்களை அவர் நேசித்தார். மேலும், தீமை செய்தவர்கள் அல்லது தேவனுக்கு எதிராக பாவம் செய்தவர்களை வெறுத்தார். இத்தகைய அன்பும் வெறுப்பும் அவருடைய அன்றாட ஜீவிதத்தில் நிரூபிக்கப்பட்டன. இது தேவனுடைய கண்களால் காணப்பட்ட யோபுவின் நேர்மையாகும். இயற்கையாகவே, இது யோபுவின் அன்றாட ஜீவிதத்தில், மற்றவர்களுடனான உறவுகளில் காணப்படும் யோபுவின் உண்மையான மனிதத்தின் வெளிப்பாடு மற்றும் கிரியை ஆகும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

யோபுவின் சோதனைகளின் போது இருந்த அவருடைய மனிதத்தின் வெளிப்பாடுகள் (யோபுவின் பரிபூரணத்தைப், நேர்மையை, தெய்வ பயத்தை மற்றும் அவரது சோதனைகளின் போது தீமையைத் தவிர்த்ததைப் புரிந்துக்கொள்ளுதல்)

நாம் மேலே பகிர்ந்தவை, யோபுவின் சோதனைகளுக்கு முன்னர் அவரது அன்றாட ஜீவிதத்தில் காட்சிப்படுத்தப்பட்ட யோபுவின்மனிதத்தின் பல்வேறு அம்சங்கள் ஆகும். சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த பல்வேறு வெளிப்பாடுகள் யோபுவின் நேர்மையை, தெய்வ பயத்தை மற்றும் தீமையைத் தவிர்த்தலைப் பற்றிய ஆரம்ப அறிமுகத்தையும் புரிதலையும் தருகின்றன. இயற்கையாகவே ஒரு ஆரம்ப உறுதிமொழியை வழங்குகின்றன. “ஆரம்ப” என்று நான் சொல்வதற்கான காரணம் என்னவென்றால், யோபுவின்ஆளுமை பற்றியும், தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும் பயப்படுவதற்கும் அவர் எந்த அளவிற்குப் முயற்சித்தார் என்பது பற்றியும் உண்மையான புரிதல் பெரும்பாலானவர்களுக்கு இன்னும் இல்லை. அதாவது, யோபுவைப் பற்றிய பெரும்பாலான ஜனங்களின் புரிதல், வேதாகமத்தில் இரண்டு பத்திகளில் மட்டுமே கூறப்பட்டுள்ள “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்” மற்றும் “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” என்னும் அவரைப் பற்றிய சற்றே சாதகமான எண்ணத்தைத் தவிர்த்து ஆழமாக வேரெதுவும் இல்லை. ஆகவே, தேவனுடைய சோதனைகளைப் பெற்றபோது, யோபு தனது மனிதத்தை எவ்வாறு ஜீவித்தார் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு, யோபுவின் உண்மையான மனிதம் அனைவருக்கும் பூரணமாகக் காட்டப்படுகிறது.

யோபு தனது சொத்து திருடப்பட்டதாகவும், அவருடைய மகன்களும் மகள்களும் தங்கள் உயிர்களை இழந்ததாகவும், அவருடைய ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும் கேள்விப்பட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “அப்பொழுது யோபு எழுந்து, தன் போர்வையைக் கிழித்து, தலை முடியை சிரைத்து, தரையில் விழுந்து வணங்கினான்” (யோபு 1:20). இந்த வார்த்தைகள் நமக்கு ஒரு உண்மையைச் சொல்கின்றன: இந்தச் செய்தியைக் கேட்டபின், யோபு பீதியடையவில்லை. தனக்கு செய்தி கொடுத்த ஊழியர்களிடம் அவர் கத்தவோ, குறை கூறவோ இல்லை. அவர் குற்றங்களை ஆராய்ந்து விவரங்களை சரிபார்க்க, உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய, முயற்சி செய்யவில்லை. அவர் தனது உடமைகளை இழந்ததில் எந்த வேதனையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. தனது பிள்ளைகளையும் அவரது அன்புக்குரியவர்களையும் இழந்ததால் அவர் கண்ணீரைச் சிந்தவில்லை. மாறாக, அவர் தனது சால்வையைக் கிழித்து, தலையை மொட்டையடித்து, தரையில் விழுந்து வணங்கினார். யோபுவின் நடவடிக்கைகள் எந்த சாதாரண மனிதனுடைய கிரியைகளையும் போன்றது அல்ல. அவை பலரைக் குழப்புகிறது. அவை, யோபுவின் “கொடூரம்” காரணமாக அவர்கள் அவரைத் தங்கள் இருதயத்தில் கண்டிக்கச் செய்கிறது. திடீரென்று தங்கள் உடமைகளை இழக்கும்போது, சாதாரண ஜனங்கள் மனம் உடைந்தவர்களாக அல்லது விரக்தியடைந்தவர்களாகத் தோன்றுவார்கள்—அல்லது, சிலரின் விஷயத்தில், அவர்கள் ஆழ்ந்த மன அழுத்தத்தில் கூட இருக்கக்கூடும். ஏனென்றால், அவர்களின் இருதயங்களில், ஜனங்களின் சொத்து ஜீவ காலம் முழுமைக்குமான முயற்சியைக் குறிக்கிறது—அவர்களின் ஜீவிதம் இதையே நம்பியிருக்கிறது. இதுவே அவர்களை ஜீவிக்க வைக்கும் நம்பிக்கை ஆகும். அவர்களின் சொத்து இழப்பு என்பது அவர்களின் முயற்சிகள் வீணாகிவிட்ட்து என்பதாகும். அவர்கள் நம்பிக்கையில்லை, அவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதாகும். இது சொத்து குறித்த எந்தவொரு சாதாரண மனிதருடைய அணுகுமுறையாகும். சொத்துடனான அவர்களின் நெருங்கிய உறவும் ஆகும். மேலும், இது ஜனங்களின் பார்வையில் சொத்தின் முக்கியத்துவமும் ஆகும். எனவே, பெரும்பான்மையான ஜனங்கள் சொத்து இழப்பு குறித்த யோபுவின்அலட்சிய மனநிலையால் குழப்பமடைகிறார்கள். இன்று, நாம் யோபுவின் இருதயத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை விளக்கி இந்த ஜனங்கள் உணர்ந்த குழப்பத்தை நீக்கப் போகிறோம்.

தேவனால் இத்தகைய ஏராளமான சொத்துக்கள் வழங்கப்பட்டதால், இந்த சொத்துக்களை இழந்ததால் யோபு தேவனுக்கு முன்பாக வெட்கப்பட வேண்டும் என்று பொது அறிவு கட்டளையிடுகிறது. ஏனென்றால், அவர் அவற்றைக் கவனிக்கவில்லை அல்லது கவனித்துக் கொள்ளவில்லை, தேவன் அவருக்குக் கொடுத்த சொத்துக்களை அவர் வைத்திருக்கவில்லை என்பதே காரணமாகும். இவ்வாறு, அவரது சொத்து திருடப்பட்டதாகக் கேள்விப்பட்டபோது, அவரது முதல் எதிர்வினையானது குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று இழந்த அனைத்தைப் பற்றிய விவரங்களை எடுத்துக்கொள்வதும், பின்னர் மீண்டும் தேவனிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக தேவனிடம் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆயினும், யோபு இதைச் செய்யவில்லை. அவ்வாறு செய்யாததற்கு இயல்பாகவே அவருக்கு சொந்த காரணங்கள் இருந்தன. தன்னிடம் இருந்த அனைத்தும் தேவனால் வழங்கப்பட்டவை என்றும், அது அவருடைய சொந்த உழைப்பின் விளைவாக இல்லை என்றும் யோபு தன் இருதயத்தில் ஆழமாக நம்பினார். ஆகவே, இந்த ஆசீர்வாதங்கள் மூலதனமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று என்று அவர் பார்க்கவில்லை. மாறாக, தனது முழு வல்லமையுடனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழியில் தனது ஜீவித கொள்கைகளை தொகுத்து வழங்கினார். அவர் தேவனுடைய ஆசீர்வாதங்களை நேசித்தார். அவற்றுக்காக நன்றி தெரிவித்தார். ஆனால் அவர் ஆசீர்வாதங்களால் ஈர்க்கப்படவில்லை. மேலும், அவற்றைவிட அதிகமானவற்றை அவர் தேடவில்லை. சொத்து மீதான அவரது அணுகுமுறை இதுதான். ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக அவர் எதையும் செய்யவில்லை. தேவனுடைய ஆசீர்வாதங்களின் பற்றாக்குறை அல்லது இழப்பால் கவலைப்படவில்லை அல்லது வேதனைப்படவில்லை. தேவனுடைய ஆசீர்வாதங்களால் அவர் பெருமளவில் மகிழ்ச்சியடையவில்லை. அவர் அடிக்கடி அனுபவித்த ஆசீர்வாதங்களின் காரணமாக தேவனுடைய வழியைப் புறக்கணிக்கவில்லை அல்லது தேவனுடைய கிருபையை மறந்துவிடவில்லை. யோபுவின் சொத்து மீதான அணுகுமுறை அவரது உண்மையான மனிதத்தை ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறது: முதலாவதாக, யோபு ஒரு பேராசை கொண்ட மனிதர் அல்ல. அவர் பொருள்மயமான ஜீவிதத்தை எதிர்பார்க்கவில்லை. இரண்டாவதாக, தேவன் தன்னிடம் இருந்த அனைத்தையும் எடுத்துக்கொள்வார் என்று யோபு ஒருபோதும் கவலைப்படவில்லை அல்லது அஞ்சவில்லை. இது தேவனுக்கு கீழ்ப்படியும் மனநிலையாக இருந்தது. அதாவது, தேவன் அவரிடமிருந்து எப்போது எடுப்பார் அல்லது எடுப்பாரா இல்லையா என்பது குறித்து அவருக்கு எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் புகார்களும் இல்லை. அதற்கான காரணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தேவனுடைய ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிய மட்டுமே முயன்றார். மூன்றாவதாக, அவருடைய சொத்துக்கள் தனது சொந்த உழைப்பிலிருந்து வந்தவை என்று அவர் ஒருபோதும் நம்பவில்லை. ஆனால் அவை தேவனால் அவருக்கு வழங்கப்பட்டன என்று நம்பினார். இதுவே தேவன் மீதான யோபுவின் நம்பிக்கையாக இருந்தது. இது அவருடைய நம்பிக்கையின் அடையாளமாகும். அவரைப் பற்றிய இந்த மூன்று அம்ச சாராம்சத்தில் யோபுவின் மனிதமும் அவரது உண்மையான அன்றாட தேடலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனவா? சொத்து இழப்பை எதிர்கொள்ளும் போது யோபுவிடம் இருந்த மனிதமும் தேடலும் அவரது சாந்தமான நட்த்தையுடன் ஒருங்கிணைந்தவை ஆகும். யோபுவின் அன்றாட தேடலின் காரணமாகவே தேவனுடைய சோதனையின் போது துல்லியமாக இதைச் சொன்னார், “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்,” இந்த வார்த்தைகள் ஒரே இரவில் பெறப்படவில்லை, அல்லது அவை யோபுவின்தலையில் தோன்றவில்லை. அவை, ஜீவிதத்தை அனுபவித்த பல ஆண்டுகளில் அவர் கண்டதும் பெற்றதும் ஆகும். தேவனுடைய ஆசீர்வாதங்களை மட்டுமே தேடி, தேவன் அவர்களிடமிருந்து எடுப்பார் என்று அஞ்சுகிறவர்கள் மற்றும் அதை வெறுத்து அதைப் பற்றி புகார் கூறுபவர்கள் அனைவருடனும் ஒப்பிடும்போது, யோபுவின்கீழ்ப்படிதல் மிகவும் உண்மையானதல்லவா? ஒரு தேவன் இருக்கிறார் என்று நம்புகிற, ஆனால் தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்று ஒருபோதும் நம்பாத அனைவருடனும் ஒப்பிடும்போது, யோபுவிடம் பெரிய நேர்மையும் உண்மையும் இருந்ததல்லவா?

யோபுவின் பகுத்தறிவு

யோபுவின் உண்மையான அனுபவங்கள் மற்றும் அவரது உண்மையான மற்றும் நேர்மையான மனிதமானது அவர் தனது சொத்துக்களையும் குழந்தைகளையும் இழந்தபோது மிகவும் பகுத்தறிவுள்ள தீர்ப்பையும் தேர்வுகளையும் செய்தார் என்பதைக் குறிக்கிறது. இத்தகைய பகுத்தறிவுத் தேர்வுகள் அவரது அன்றாட முயற்சிகளிலிருந்தும், அவருடைய அன்றாட ஜீவிதத்தில் அவர் அறிந்த தேவனுடைய செயல்களிலிருந்தும் பிரிக்க முடியாதவை. யேகோவாவின் கை எல்லாவற்றையும் ஆளுகிறது என்பதை யோபுவின் உண்மை அவரை நம்பச் செய்தது. எல்லாவற்றிலும் யேகோவா தேவனுடைய இறையாண்மையின் உண்மையை அறிய அவருடைய நம்பிக்கை அவரை அனுமதித்தது. அவருடைய அறிவு யேகோவா தேவனுடைய இறையாண்மையையும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிய விருப்பத்தையும் திறமையையும் ஏற்படுத்தியது. அவருடைய கீழ்ப்படிதல், யேகோவா தேவனைப் பற்றிய பயத்தில் மேலும் மேலும் உண்மையாக இருக்க அவருக்கு உதவியது. தீமையைத் தவிர்ப்பதைப் பற்றிய அவரது பயம் அவரை மேலும் மேலும் உண்மையுள்ளவராக மாற்றியது. இறுதியில், யோபு தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்த்ததால் பரிபூரணமானார். அவருடைய பரிபூரணம் அவரை ஞானவானாக்கியது. அவருக்கு மிக உயர்ந்த பகுத்தறிவைக் கொடுத்தது.

“பகுத்தறிவு” என்ற இந்த வார்த்தையை நாம் எவ்வாறு புரிந்துக்கொள்ள வேண்டும்? நேரடியான விளக்கம் என்னவென்றால், ஒருவரின் சிந்தனையில் நல்ல உணர்வுடனும், காரணத்துடனும் மற்றும் விவேகத்துடனும் இருப்பதும், நன்றாக பேசுவதும், செயல்படுவதும் முடிவெடுப்பதும், மற்றும் நன்மையான மற்றும் வழக்கமான தார்மீக தரநிலைகளைக் கொண்டிருப்பதும் ஆகும். ஆயினும், யோபுவின் பகுத்தறிவு அவ்வளவு எளிதில் விளக்கப்படவில்லை. யோபுவுக்கு மிக உயர்ந்த பகுத்தறிவு இருந்தது என்று இங்கே கூறப்படும் போது, இது அவருடைய மனிதம் மற்றும் தேவன் முன் அவர் நடத்திய நடத்தை தொடர்பாக கூறப்படுகிறது. யோபு நேர்மையானவர் என்பதால், அவர் தேவனுடைய இறையாண்மையை நம்பவும் கீழ்ப்படியவும் முடிந்தது. இது, மற்றவர்களால் அடைய முடியாத ஒரு அறிவை அவருக்கு கொடுத்தது. இந்த அறிவு அவருக்கு நேர்ந்ததை இன்னும் துல்லியமாக அறிந்துக்கொள்ளவும், தீர்ப்பளிக்கவும், வரையறுக்கவும் செய்தது. என்ன செய்ய வேண்டும், எதை உறுதியாக வைத்திருக்க வேண்டும் என்பதை இன்னும் துல்லியமாகவும் தெளிவாகவும் தேர்வு செய்ய அவருக்கு உதவியது. இது, அவரது வார்த்தைகள், நடத்தை, அவரது செயல்களுக்குப் பின்னால் உள்ள கொள்கைகள் மற்றும் அவர் செயல்பட்ட முறை ஆகியவை வழக்கமானவை, தெளிவானவை, விஷேசமானவை ஆகும். அவை குருட்டுத்தனமானவை, மனக்கிளர்ச்சி அல்லது உணர்ச்சிவசப்பட்டவை அல்ல என்பதாகும். தனக்கு நேர்ந்ததை எவ்வாறு எதிர்கொள்வது என்பது அவருக்குத் தெரியும். சிக்கலான நிகழ்வுகளுக்கிடையேயான உறவுகளை எவ்வாறு சமநிலைப்படுத்துவது மற்றும் கையாளுவது என்பது அவருக்குத் தெரியும். உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டிய வழியை எப்படிப் பிடித்துக் கொள்வது என்பது அவருக்குத் தெரியும். மேலும், யேகோவா தேவன் கொடுப்பதையும் எடுத்துக்கொள்வதையும் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். இது யோபுவின் பகுத்தறிவின் உச்சமாகும். துல்லியமாக யோபு அத்தகைய பகுத்தறிவைக் கொண்டிருந்ததால், அவர் தனது சொத்துக்களையும் மகன்களையும் மகள்களையும் இழந்தபோது, “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்,” என்றார்.

யோபு, சரீரத்தின் மிகுந்த வேதனையையும், அவரது உறவினர்களையும் நண்பர்களையும் மறுபரிசீலனை செய்தபோது, அவர் மரணத்தை எதிர்கொண்டபோது, அவருடைய உண்மையான நடத்தையானது மீண்டும் அவரது உண்மையான முகத்தை எல்லா ஜனங்களுக்கும் காட்டியது.

யோபுவின் உண்மையான முகம்: சத்தியம், பரிசுத்தமானது மற்றும் பொய்யற்றது

யோபு 2:7-8 ஐ நாம் படிப்போம்: “ஆகவே சாத்தான் யேகோவாவின் சந்நிதியில் இருந்து புறப்பட்டுச் சென்று, யோபுவின் உச்சி முதல் பாதம் வரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.” இது, அவரது சரீரத்தில் கொடிய பருக்கள் தோன்றியபோது யோபுவின் நடத்தை பற்றிய விளக்கம் ஆகும். இந்த நேரத்தில், யோபு வலியைத் தாங்கிக் கொண்டே சாம்பலில் அமர்ந்தார். யாரும் அவருக்கு சிகிச்சையளிக்கவில்லை. அவரது சரீரத்தின் வலியைக் குறைக்க யாரும் அவருக்கு உதவவில்லை. அதற்கு பதிலாக, கொடிய பருக்களின் மேற்பரப்பைத் துடைக்க அவர் ஒரு ஓட்டை பயன்படுத்தினார். மேலோட்டமாக, இது யோபுவின் வேதனையின் ஒரு கட்டம் மட்டுமே. அவருடைய மனிதம் மற்றும் தெய்வ பயம் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை. ஏனென்றால், இந்த நேரத்தில் யோபு தனது மனநிலையையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த எந்த வார்த்தைகளையும் பேசவில்லை. ஆயினும்கூட யோபுவின் செயல்களும் அவரது நடத்தையும் அவருடைய மனிதத்தின் உண்மையான வெளிப்பாடாகும். முந்தைய அத்தியாயத்தின் பதிவில், கிழக்கின் எல்லா மனிதர்களிலும் யோபு மிகப் பெரியவர் என்று படித்தோம். இரண்டாவது அத்தியாயத்தின் இந்த பத்தியில், இதற்கிடையில், கிழக்கின் இந்த பெரிய மனிதர் உண்மையில் சாம்பலுக்கிடையில் உட்கார்ந்திருக்கும்போது தன்னைத் துடைக்க ஒரு ஓட்டை எடுத்துக் கொண்டார் என்பதைக் காட்டுகிறது. இந்த இரண்டு விளக்கங்களுக்கும் வெளிப்படையான வேறுபாடு இல்லையா? இது யோபுவின் உண்மையான சுயத்தை நமக்குக் காட்டும் ஒரு மாறுபாடுள்ள் கருத்துகளாகும்: அவரிடம் மதிப்புமிக்க நிலைப்பாடு மற்றும் அந்தஸ்து இருந்தபோதிலும், அவர் ஒருபோதும் இந்த விஷயங்களை நேசிக்கவில்லை அல்லது இவற்றில் கவனம் செலுத்தவில்லை. அவரது நிலைப்பாட்டை மற்றவர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதையும் அவர் கவனிக்கவில்லை. அவருடைய செயல்கள் அல்லது நடத்தை அவரது நிலைப்பாட்டில் ஏதேனும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துமா என்பது குறித்து அவர் கவலைப்படவில்லை. அவர் தன் அந்தஸ்தின் ஆசீர்வாதங்களில் கவனம் செலுத்தவில்லை. அந்தஸ்து மற்றும் நிலைப்பாடுகளில் வந்த மகிமையை அவர் அனுபவிக்கவில்லை. அவர் தனது மதிப்பு மற்றும் யேகோவா தேவனுடைய பார்வையில் அவர் ஜீவித்ததன் முக்கியத்துவத்தைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டினார். யோபுவின் உண்மையான சுயமே அவரின் சாராம்சம்: அவர் புகழ் மற்றும் செல்வத்தை நேசிக்கவில்லை. புகழ் மற்றும் செல்வத்துக்காக ஜீவிக்கவில்லை. அவர் உண்மையுள்ளவர், தூய்மையானவர் மற்றும் பொய்யற்றவர்.

யோபுவின் அன்பின் பிரிவு மற்றும் வெறுப்பு

அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான இந்த பரிமாற்றத்தில் யோபுவின்மனிதத்தின் மற்றொரு பக்கம் நிரூபிக்கப்பட்டுள்ளது: “அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்” (யோபு 2:9-10). அவர் அனுபவிக்கும் வேதனையைப் பார்த்து, யோபுவின் மனைவி யோபு தம்முடைய வேதனையிலிருந்து தப்பிக்க அவருக்கு அறிவுரை வழங்க முயன்றாள். ஆனால் அவளுடைய “நல்ல நோக்கங்கள்” யோபுவின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. அதற்கு பதிலாக, அவை அவருடைய கோபத்தைத் தூண்டியது. ஏனென்றால், அவள் அவருடைய நம்பிக்கையையும் யேகோவா தேவனுக்கான கீழ்ப்படிதலையும் மறுத்தாள். மேலும், யேகோவா தேவன் இருப்பதை மறுத்தாள். இது யோபுவுக்கு சகிக்கமுடியாததாக இருந்தது. ஏனென்றால், தேவனை எதிர்க்கும் அல்லது புண்படுத்தும் எதையும் செய்ய அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. மற்றவர்களைப் பற்றியும் எதையும் பேச அனுமதிக்கவில்லை. தேவனை அவமதித்த மற்றும் அவமதிக்கும் வார்த்தைகளை மற்றவர்கள் பேசுவதைக் கண்ட அவர் எப்படி அலட்சியமாக இருக்க முடியும்? இவ்வாறு அவர் தனது மனைவியை “முட்டாள் பெண்” என்று அழைத்தார். தனது மனைவியிடம் யோபுவின் அணுகுமுறையானது கோபம் மற்றும் வெறுப்பு ஆகும். அத்துடன் நிந்தை மற்றும் கண்டிப்பு ஆகியவையும் ஆகும். இது யோபுவின் மனிதத்தின் இயல்பான வெளிப்பாடாகும்—அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையில் வேறுபடுகிறது—இது அவருடைய நேர்மையான மனிதத்தின் உண்மையான பிரதிநிதித்துவமாகும். யோபுவுக்கு நீதி உணர்வு இருந்தது—அது அவரை துன்மார்க்கத்தின் காற்றையும் அலைகளையும் வெறுக்கச் செய்தது மற்றும் அபத்தமான தேவ தூஷணத்துக்கு எதிரான கொள்கையாகவும், அபத்தமான வாதங்கள் மற்றும் நகைச்சுவையான கூற்றுக்களை வெறுக்கவும், கண்டிக்கவும், நிராகரிக்கவும் செய்தது. அவரது சொந்த, பூரணமான கொள்கைகளை உண்மையாக வைத்திருக்க அனுமதித்தது. அவர் ஜனங்களால் நிராகரிக்கப்பட்டு, அவருக்கு நெருக்கமானவர்களால் கைவிடப்பட்டபோது இதுவே அவர் எடுத்த நிலைப்பாடாகும்.

யோபுவின் கனிவான இருதயம் மற்றும் நேர்மை

யோபுவின் நடத்தையிலிருந்து, அவருடைய மனிதகுலத்தின் பல்வேறு அம்சங்களின் வெளிப்பாட்டை நாம் காண முடிகிறது என்பதால், அவர் தான் பிறந்த நாளை சபிக்க வாய் திறந்தபோது யோபுவின் மனிதம் என்னவாக இருந்த்து? இதுவே நாம் கீழே பேசவிருக்கும் தலைப்பு ஆகும்.

மேலே, யோபு தன் பிறந்த நாளைச் சபித்ததன் தோற்றம் பற்றி நான் பேசினேன். இதில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? யோபு கடின மனதுடனும் அன்பு இல்லாமலும் இருந்திருந்தால், அவர் சாந்தமாகவும் உணர்ச்சியற்றவராகவும் மனிதத்தை இழந்தவராகவும் இருந்திருந்தால், தேவனுடைய இருதயத்தின் விருப்பத்தை அவர் கவனித்திருக்க முடியுமா? அவர் தேவனுடைய இருதயத்தை கவனித்துக்கொண்டதால் அவர் தனது சொந்த பிறந்த நாளை இகழ்ந்திருக்க முடியுமா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோபு கடின மனதுடன், மனிதத்தை இழந்திருந்தால், தேவனுடைய வலியால் அவர் துன்பப்பட்டிருக்க முடியுமா? தேவன் அவரால் வேதனை அடைந்ததால், தன் பிறந்த நாளை அவர் சபித்திருக்க முடியுமா? பதில், நிச்சயமாக இல்லை! யோபு கனிவானவர் என்பதால், தேவனுடைய இருதயத்தை அவர் கவனித்தார். யோபு தேவனுடைய இருதயத்தை கவனித்ததால், தேவனுடைய வலியை உணர்ந்தார். யோபு கனிவானவர் என்பதால், தேவனுடைய வலியை உணர்ந்ததன் விளைவாக அவர் அதிக வேதனையை அனுபவித்தார். தேவனுடைய வலியை அவர் உணர்ந்ததால், தன் பிறந்த நாளை வெறுக்கத் தொடங்கினார். எனவே, அவர் பிறந்த நாளை சபித்தார். அந்நியர்களுக்கு, யோபுவின் சோதனைகளின் போது அவரிடமிருந்த அவரது முழு நடத்தையும் முன்மாதிரியாக இருக்கிறது. தன் பிறந்த நாளை அவர் சபிப்பது மட்டுமே அவரது பரிபூரணத்திற்கும் நேர்மைக்கும் முன்னாக ஒரு கேள்விக்குறியை வரைகிறது, அல்லது வேறொரு மதிப்பீட்டை வழங்குகிறது. உண்மையில், இது யோபுவின் மனிதத்தின் சாராம்சத்தின் உண்மையான வெளிப்பாடாகும். அவரது மனிதத்தின் சாராம்சம் மறைக்கப்படவில்லை அல்லது தொகுக்கப்படவில்லை, அல்லது வேறு யாராலும் திருத்தப்படவில்லை. தன் பிறந்த நாளை அவர் சபித்தபோது, அவர் இருதயத்திற்குள் ஆழ்ந்த கனிவையும் நேர்மையையும் வெளிப்படுத்தினார். அவர் ஒரு நீரூற்று போன்றவர். அதன் நீர் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறது.

யோபுவைப் பற்றி இதையெல்லாம் கற்றுக்கொண்டதால், பெரும்பாலான ஜனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி யோபுவின் மனிதத்தின் சாராம்சத்தைப் பற்றி மிகவும் துல்லியமான மற்றும் எந்தவொரு சார்பும் இல்லாத மதிப்பீட்டைக் கொண்டிருப்பார்கள். தேவனால் பேசப்பட்டபடி யோபுவின் பரிபூரணத்தையும் நேர்மையையும் பற்றி அவர்கள் ஆழமான, நடைமுறைக்கேற்ற மற்றும் மேம்பட்ட புரிதலும் பாராட்டும் கொண்டிருக்க வேண்டும். இந்த புரிதலும் உணர்வும் தேவனுக்குப் பயப்படவும் தீமைகளைத் தவிர்க்கவும் ஜனங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.

சாத்தானிடம் யோபுவை தேவன் வழங்குவதற்கும் தேவனுடைய கிரியையின் நோக்கங்களுக்கும் இடையிலான உறவு

யோபு பரிபூரணர், நேர்மையானவர் என்பதையும், அவர் தேவனுக்கு அஞ்சினார், தீமையைத் தவிர்த்தார் என்பதையும் பெரும்பாலான ஜனங்கள் இப்போது உணர்ந்தாலும், இந்த அங்கீகாரம் அவர்களுக்கு தேவனுடைய நோக்கத்தைப் பற்றி அதிக புரிதலைத் தரவில்லை. யோபுவின் மனிதத்தையும் நோக்கத்தையும் பார்த்து பொறாமைப்படும் அதே நேரத்தில், அவர்கள் தேவனைப் பற்றிய பின்வரும் கேள்வியைக் கேட்கிறார்கள்: யோபு மிகவும் பரிபூரணமாகவும் நேர்மையாகவும் இருந்தார், ஜனங்கள் அவரை பெரிதும் போற்றுகிறார்கள். இந்நிலையில், தேவன் அவரை சாத்தானிடம் ஒப்படைத்து இவ்வளவு வேதனைகளுக்கு ஆளாக்கியது ஏன்? இத்தகைய கேள்விகள் பலரின் இருதயங்களில் உள்ளன—அல்லது இந்த சந்தேகம் பலரின் இருதயங்களில் உள்ள கேள்வியாகும். இது பலரைக் குழப்பிவிட்டதால், இந்த கேள்வியை நாம் ஆராய்ந்து சரியாக விளக்க வேண்டும்.

தேவன் செய்யும் அனைத்தும் அவசியமானவை மற்றும் அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், அவர் மனிதனில் செய்கிற அனைத்தும் அவருடைய ஆளுகையையும் மனிதகுலத்தின் இரட்சிப்பையும் பற்றியது. இயற்கையாகவே, தேவனுடைய பார்வையில் யோபு பரிபூரணமாகவும் நேர்மையாகவும் இருந்தபோதிலும், யோபுவில் தேவன் செய்த கிரியையும் வேறுபட்டதல்ல. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் என்ன செய்கிறார் அல்லது அவர் அதைச் செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், விளைவைப் பொருட்படுத்தாமல், அவருடைய குறிக்கோளைப் பொருட்படுத்தாமல், அவருடைய செயல்களின் நோக்கம் மாறாது. அவருடைய நோக்கம் தேவனுடைய வார்த்தைகளை, தேவனுடைய எதிர்பார்ப்புகளை மற்றும் மனிதனுக்கான சித்தத்தை மனிதனிடம் செயல்படுத்துவது ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தனது படிகளுக்கு ஏற்ப நேர்மறையானது என்று தேவன் நம்புகிற அனைத்தையும் மனிதனுக்குள் செயல்படுத்துவதும், தேவனுடைய இருதயத்தைப் புரிந்துக்கொள்வதற்கும் தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துக்கொள்வதற்கும் மனிதனுக்கு உதவுவதும், தேவனுடைய இறையாண்மைக்கும் ஏற்பாடுகளுக்கும் மனிதன் கீழ்ப்படிய அனுமதிப்பதும், இதனால் மனிதன் தெய்வ பயத்தை அடைய அனுமதிப்பதும் தீமையைத் தவிர்க்கச் செய்வதும் ஆகும்—இவை அனைத்தும் தேவன் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய நோக்கத்தின் ஒரு அம்சமாகும். மற்ற அம்சம் என்னவென்றால், தேவனுடைய கிரியையில் சாத்தான் ஒரு தடை மற்றும் இலக்கு என்பதால், மனிதன் பெரும்பாலும் சாத்தானுக்கு வழங்கப்படுகிறான். சாத்தானுடைய சோதனையில் ஜனங்களைக் காண தேவன் அனுமதிப்பதற்கும், சாத்தானுடைய துன்மார்க்கம், அசிங்கம் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றைத் தாக்குவதற்கும், இது தேவன் பயன்படுத்தும் வழிமுறையாகும். இதனால் ஜனங்கள் சாத்தானை வெறுக்கிறார்கள். எதிர்மறையானதை அறிந்துக்கொள்கிறார்கள். இந்த செயல்முறை சாத்தானுடைய கட்டுப்பாடு மற்றும் குற்றச்சாட்டுகள், குறுக்கீடு மற்றும் தாக்குதல்களிலிருந்து அவர்கள் படிப்படியாக தங்களை விடுவிக்க அனுமதிக்கிறது—தேவனுடைய வார்த்தைகள், தேவனுடைய அறிவு மற்றும் கீழ்ப்படிதல், தேவன் மீதுள்ள நம்பிக்கை மற்றும் அவரைப் பற்றிய பயம் ஆகியவற்றிற்கு நன்றி செலுத்தும் வரை, அவர்கள் சாத்தானுடைய தாக்குதல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளில் ஜெயம் பெறுகிறார்கள். அப்போது தான் அவர்கள் சாத்தானுடைய கட்டுப்பாட்டிலிருந்து பூரணமாக விடுவிக்கப்படுவார்கள். ஜனங்களின் விடுதலை என்பது சாத்தான் தோற்கடிக்கப்பட்டது, அதாவது அவர்கள் இனி சாத்தானுடைய வாயில் உள்ள உணவாக இருக்க மாட்டார்கள், அவர்களை விழுங்குவதற்கு பதிலாக, சாத்தான் அவர்களை கைவிட்டுவிட்டது என்பதாகும். ஏனென்றால், அத்தகையவர்கள் நேர்மையானவர்கள். ஏனென்றால், அவர்கள் தேவன் மீது நம்பிக்கை, கீழ்ப்படிதல், பயம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் சாத்தானுடன் முற்றிலுமாக உறவை முறித்துக் கொள்கிறார்கள். அவர்கள் சாத்தானுக்கு அவமானத்தைத் தருகிறார்கள். அவர்கள் சாத்தானை கோழையாக்குகிறார்கள். அவர்கள் சாத்தானை முற்றிலுமாக தோற்கடிக்கிறார்கள். தேவனைப் பின்பற்றுவதில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், கீழ்ப்படிதலும், தேவனுக்குப் பயப்படுவதும் சாத்தானைத் தோற்கடித்து, சாத்தான் அவர்களை முற்றிலுமாக விட்டுவிடச் செய்கிறது. இது போன்றவர்கள் மட்டுமே தேவனால் உண்மையிலேயே ஆதாயம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதான் மனிதனைக் காப்பாற்றுவதற்கான தேவனுடைய இறுதி நோக்கம் ஆகும். அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும், தேவனால் பூரணமாகப் ஆதாயம் செய்யப்படவும் விரும்பினால், தேவனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் சோதனையைச் சந்தித்து, சாத்தானிடமிருந்து வரும் பெரியவற்றையும் சிறியவற்றையும் தாக்க வேண்டும். இந்த சோதனைகள் மற்றும் தாக்குதல்களிலிருந்து வெளிவந்து சாத்தானை பூரணமாக தோற்கடிக்க முடிந்தவர்கள் தேவனால் இரட்சிக்கப்பட்டவர்கள். அதாவது, தேவனுக்குள்ளாக இரட்சிக்கப்பட்டவர்கள் தேவனுடைய சோதனைகளுக்கு ஆளானவர்களும் சாத்தானால் எண்ணற்ற முறை சோதிக்கப்பட்டு தாக்கப்பட்டவர்களும் ஆவர். தேவனுக்குள்ளாக இரட்சிக்கப்பட்டவர்கள் தேவனுடைய சித்தத்தையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துக்கொள்கிறார்கள். தேவனுடைய இறையாண்மையையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் தேவனுக்குப் பயப்படுவதையும் சாத்தானுடைய சோதனையின் மத்தியில் தீமையைத் தவிர்ப்பதையும் கைவிட மாட்டார்கள். தேவனுக்குள்ளாக இரட்சிக்கப்படுபவர்களுக்கு நேர்மை இருக்கிறது. அவர்கள் கனிவானவர்கள். அன்புக்கும் வெறுப்புக்கும் இடையில் வேறுபடுகிறார்கள். அவர்களுக்கு நீதியின் உணர்வு இருக்கிறது. பகுத்தறிவு இருக்கிறது. அவர்கள் தேவனைக் கவனித்து, தேவனுடையதை பொக்கிஷமாகக் காக்கிறார்கள். அத்தகையவர்கள் சாத்தானால் பிணைக்கப்படுவதில்லை, உளவு பார்க்கப்படுவதில்லை, குற்றம் சாட்டப்படுவதில்லை அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதில்லை. அவர்கள் முற்றிலும் விடுதலையாக இருக்கிறார்கள். அவர்கள் முற்றிலும் விடுவிக்கப்பட்டு விடுதலையாக இருக்கிறார்கள். யோபு அத்தகைய சுதந்திர மனிதர். தேவன் ஏன் அவரை சாத்தானிடம் ஒப்படைத்தார் என்பதன் துல்லியமான முக்கியத்துவம் இதுதான்.

யோபு சாத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். ஆனால் அவர் நித்திய சுதந்திரத்தையும் விடுதலையையும் பெற்றார். மேலும், சாத்தானுடைய கேடு, துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மீண்டும் ஒருபோதும் உட்படுத்தப்படாமல் இருப்பதற்கான உரிமையைப் பெற்றார். அதற்கு பதிலாக தேவனுடைய முகத்தின் வெளிச்சத்தில், தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் சுதந்திரமாகவும் கணக்கிடப்படாமலும் ஜீவிக்கும் உரிமையைப் பெற்றார். இந்த உரிமையை யாரும் பறிக்கவோ, அழிக்கவோ, கைப்பற்றவோ முடியவில்லை. யோபுவின் விசுவாசம், உறுதிப்பாடு, கீழ்ப்படிதல் மற்றும் தெய்வ பயத்துக்கு பலனாக இது அவருக்கு வழங்கப்பட்டது. பூமியில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஜெயிப்பதற்கும், பரலோகத்தால் நியமிக்கப்பட்டதும், பூமியால் ஒப்புக் கொள்ளப்பட்டதுமான, பூமியில் இருக்கும் தேவனுடைய உண்மையான உயிரினமாக, குறுக்கிடாமல் சிருஷ்டிப்பாளரை வணங்குவதற்கும், உரிமையையும் தகுதியையும் பெறுவதற்கு யோபு தனது ஜீவிதம் என்னும் விலைக்கிரையத்தை செலுத்தினார். இதுவே யோபுவால் தாங்கப்பட்ட சோதனையின் மிகப்பெரிய பலன் ஆகும்.

ஜனங்கள் இன்னும் இரட்சிக்கப்படாதபோது, அவர்களின் ஜீவிதம் பெரும்பாலும் சாத்தானால் தலையிடப்படுகிறது, சாத்தானால் கட்டுப்படுத்தவும் முடிகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இரட்சிக்கப்படாத ஜனங்கள் சாத்தானுக்கு கைதிகள். அவர்களுக்கு சுதந்திரம் இல்லை. அவர்கள் சாத்தானால் விடப்படவில்லை. அவர்கள் தேவனை வணங்குவதற்கு திறமையற்றவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் அல்ல. அவர்கள் சாத்தானால் நெருக்கமாகப் பின்தொடரப்படுகிறார்கள். கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். அத்தகையவர்களிடம் பேசுவதற்கு மகிழ்ச்சி இல்லை. சாதாரண இருப்பைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. பேச அவர்களுக்கு கண்ணியம் இல்லை. நீ எழுந்து நின்று சாத்தானுடன் யுத்தம் செய்தால், தேவன் மீதான உன் நம்பிக்கையையும் கீழ்ப்படிதலையும் பயன்படுத்தி, சாத்தானுடன் ஜீவனுக்கும் மரணத்துக்குமான யுத்தத்தை நடத்துவதற்கான ஆயுதங்களாக தெய்வ பயத்தை பயன்படுத்தினால், நீ சாத்தானை பூரணமாக தோற்கடித்து, அது உன்னைப் பார்க்கும்போதெல்லாம் தன் வாலைத் திரும்பி கோழைத்தனமாக ஒடச் செய்ய முடிகிறது. இதனால் அது உனக்கு எதிரான தாக்குதல்களையும் குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக கைவிடுகிறது—அப்போது தான் நீ இரட்சிக்கப்பட்டு சுதந்திரமடைகிறாய். நீ சாத்தானுடன் பூரணமாக உறவை முறித்துக் கொள்ள உறுதியாக இருந்தால், ஆனால் சாத்தானைத் தோற்கடிக்க உதவும் ஆயுதங்கள் உன்னிடம் இல்லை என்றால், நீ இன்னும் ஆபத்தில் இருப்பாய். நேரம் செல்லச் செல்ல, சாத்தானால் நீ சித்திரவதை செய்யப்படும்போது, சிறிதளவிலும் வல்லமை உன்னிடம் இல்லாதபோது, நீ இன்னும் சாட்சியளிக்க முடியவில்லை என்றால், சாத்தானுடைய குற்றச்சாட்டுகள் மற்றும் உனக்கு எதிரான தாக்குதல்களில் இருந்து உன்னை பூரணமாக விடுவிக்க இயலாதபோது, உனக்கு இரட்சிப்பின் நம்பிக்கை கொஞ்சமாகத்தான் இருக்கும். முடிவில், தேவனுடைய கிரியையின் முடிவு பிரகடனப்படுத்தப்படும்போது, உன்னை விடுவிக்க முடியாமல் நீ இன்னும் சாத்தானுடைய பிடியில் இருப்பாய். இதனால் உனக்கு ஒருபோதும் வாய்ப்போ நம்பிக்கையோ இருக்காது. அப்படியானால், அத்தகையவர்கள் முற்றிலும் சாத்தானுடைய சிறையில் இருப்பார்கள் என்பதே இதன் உட்பொருள் ஆகும்.

தேவனுடைய சோதனைகளை ஏற்றுக்கொண்டு, சாத்தானுடைய சோதனையை மேற்கொண்டு, உங்கள் முழு ஜீவிதத்தையும் தேவன் பெற அனுமதியுங்கள்

தேவனுடைய நிலையான ஏற்பாடு மற்றும் மனிதனுடைய ஆதரவின் கிரியையின் போது, தேவன் தனது சித்தத்தையும் தேவைகளையும் மனிதனிடம் பூரணமாய் சொல்கிறார். அவருடைய செயல்கள், மனநிலை மற்றும் தன்னையும் தன்னிடம் உள்ளவற்றையும் மனிதனுக்கு காட்டுகிறார். மனிதனை அந்தஸ்துடன் சித்தப்படுத்துவதும், மனிதன் தேவனைப் பின்பற்றும் போது தேவனிடமிருந்து பல்வேறு உண்மைகளைப் பெற அனுமதிப்பதும் இதன் நோக்கம் ஆகும்—சாத்தானை எதிர்த்துப் போராடுவதற்காக தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் சத்தியங்களாகும். இவ்வாறு சித்தப்படுத்தப்பட்ட மனிதன் தேவனுடைய சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும். மனிதனைச் சோதிக்க தேவனுக்கு பல முறைகள் மற்றும் வழிகள் உள்ளன. ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் தேவனுடைய எதிரியின் “ஒத்துழைப்பு” தேவைப்படுகிறது: சாத்தான். அதாவது, சாத்தானுடன் போரிடுவதற்கான ஆயுதங்களை மனிதனுக்குக் கொடுத்துவிட்டு, தேவன் மனிதனை சாத்தானிடம் ஒப்படைத்து, மனிதனுடைய நிலைப்பாட்டை “சோதிக்க” சாத்தானை அனுமதிக்கிறார். சாத்தானுடைய யுத்தத்தின் அமைப்புகளிலிருந்து மனிதன் வெளியேற முடியுமானால், சாத்தானுடைய முற்றுகையிலிருந்து தப்பித்து இன்னும் ஜீவிக்க முடியுமானால், மனிதன் சோதனையில் தேர்ச்சி பெற்றிருப்பான். ஆனால் மனிதன் சாத்தானுடைய யுத்தத்தின் அமைப்புகளை விட்டு வெளியேறி, சாத்தானுக்கு அடிபணிந்தால், அவன் சோதனையில் தேர்ச்சி பெற்றிருக்க மாட்டான். மனிதனுடைய எந்த அம்சத்தை தேவன் ஆராய்ந்தாலும், சாத்தானால் தாக்கப்படும்போது மனிதன் தன் சாட்சியில் உறுதியாக நிற்கிறானா இல்லையா என்பதும், அவன் தேவனைக் கைவிட்டு, சரணடைந்து சாத்தானுக்கு அடிபணிந்து சாத்தானிடம் சமர்ப்பித்திருக்கிறானா என்பதும் அவனது பரிசோதனைக்கான அளவுகோல்கள் ஆகும். மனிதனை இரட்சிக்க முடியுமா இல்லையா என்பது, அவன் சாத்தானை மேற்கொண்டு அதை தோற்கடிக்க முடியுமா முடியாதா என்பதைப் பொறுத்தது ஆகும். மேலும், அவன் சுதந்திரத்தைப் பெற முடியுமா இல்லையா என்பது, சாத்தானுடைய அடிமைத்தனத்தை ஜெயிக்க தேவனால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களை அவன் தானாகவே உயர்த்தி சாத்தானுடைய நம்பிக்கையை முற்றிலுமாக அழித்து அதைத் தனியாக விட்டுவிட முடியுமா என்பதைப் பொறுத்தது ஆகும். சாத்தான் நம்பிக்கையை கைவிட்டு, ஒருவரை விட்டுவிட்டால், சாத்தான் மீண்டும் அந்த நபரை தேவனிடமிருந்து எடுக்க முயற்சிக்க மாட்டான். அந்த நபரை மீண்டும் ஒருபோதும் குற்றம் சாட்ட மாட்டான். அவரிடம் தலையிட மாட்டான். அவரை ஒருபோதும் சித்திரவதை செய்யவோ அல்லது தாக்கவோ மாட்டான். இது போன்ற ஒருவர் மட்டுமே தேவனால் உண்மையிலேயே ஆதாயம் செய்யப்பட்டிருப்பார். தேவன் ஜனங்களைப் பெறும் முழு செயல்முறையும் இதுதான்.

யோபுவின் சாட்சியால் பிற்கால தலைமுறையினருக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை மற்றும் வெளிச்சம்

தேவன் ஒருவரை முழுவதுமாகப் பெறும் செயல்முறையைப் புரிந்துக்கொள்ளும் அதே நேரத்தில், தேவன் யோபுவை சாத்தானுக்கு ஒப்படைப்பதன் நோக்கங்களையும் முக்கியத்துவத்தையும் ஜனங்கள் புரிந்துக்கொள்வார்கள். யோபுவின் வேதனையால் ஜனங்கள் இனி தொந்தரவு செய்யப்படுவதில்லை. அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு புதிய புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் யோபுவைப் போலவே அதே சோதனையிலும் பாதிக்கப்படுவார்களா என்பது பற்றி அவர்கள் இனி கவலைப்படுவதில்லை. தேவனுடைய சோதனைகள் வருவதை எதிர்க்கவோ நிராகரிக்கவோ மாட்டார்கள். யோபுவின் நம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் சாத்தானை ஜெயிப்பதற்காக அவர் அளித்த சாட்சிகள் ஜனங்களுக்கு பெரும் உதவியையும் ஊக்கத்தையும் அளித்தன. யோபில், அவர்கள் தங்கள் சொந்த இரட்சிப்பின் நம்பிக்கையைப் பார்க்கிறார்கள். விசுவாசத்தினாலும், கீழ்ப்படிதலினாலும், தேவனுக்குப் பயந்ததாலும், சாத்தானை தோற்கடிப்பதும், சாத்தானை ஜெயிப்பதும் முற்றிலும் சாத்தியம் என்பதைக் காண்கிறார்கள். தேவனுடைய இறையாண்மையையும் ஏற்பாடுகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரை, எல்லாவற்றையும் இழந்தபின் தேவனைக் கைவிடக்கூடாது என்ற உறுதியையும் நம்பிக்கையையும் அவர்கள் வைத்திருக்கும் வரை, அவர்கள் சாத்தான் மீது அவமானத்தையும் தோல்வியையும் கொண்டு வர முடியும். தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்பதற்கான உறுதியையும் விடாமுயற்சியையும் மட்டுமே அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர்கள் காண்கிறார்கள்—அதாவது, தங்கள் உயிரை இழந்தாலும் கூட—சாத்தானுக்குப் பயந்து, அவசரமாக பின்வாங்க கூடாது என்பதைக் காண்கிறார்கள். யோபுவின் சாட்சி பிற்கால தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கையாகும். மேலும், அவர்கள் சாத்தானைத் தோற்கடிக்காவிட்டால், அவர்கள் ஒருபோதும் சாத்தானுடைய குற்றச்சாட்டுகளிலிருந்தும் தலையீட்டிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள முடியாது என்றும் துஷ்பிரயோகத்திலிருந்தும் சாத்தானுடைய தாக்குதல்களிலிருந்தும் தப்பிக்க முடியாது என்றும் இந்த எச்சரிக்கை அவர்களுக்குச் சொல்கிறது. யோபுவின் சாட்சி பிற்கால தலைமுறையினருக்கு வெளிச்சம் அளித்துள்ளது. இந்த வெளிச்சம் ஜனங்களுக்கு அவர்கள் பரிபூரணமாகவும் நேர்மையாகவும் இருந்தால் மட்டுமே அவர்கள் தேவனுக்கு அஞ்சவும் தீமையைத் தவிர்க்கவும் முடியும் என்று கற்பிக்கிறது. அவர்கள் தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்த்துவிட்டால் மட்டுமே அவர்கள் தேவனுக்கு வலுவான மற்றும் உறுதியான சாட்சிகளாக இருக்க முடியும் என்று அது அவர்களுக்குக் கற்பிக்கிறது. அவர்கள் தேவனுக்கு வலுவான மற்றும் உறுதியான சாட்சி அளித்தால் மட்டுமே அவர்கள் ஒருபோதும் சாத்தானால் கட்டுப்படுத்தப்பட முடியாது என்றும் தேவனுடைய வழிகாட்டுதலிலும் பாதுகாப்பிலும் ஜீவிக்க முடியும்—அப்போது தான் அவர்கள் உண்மையிலேயே இரட்சிக்கப்படுவார்கள் என்றும் கற்பிக்கிறது. இரட்சிப்பைப் பின்பற்றும் அனைவருமே யோபுவின் ஆளுமையையும் அவரது ஜீவிதத் தேடலையும் பின்பற்ற வேண்டும். அவர் தனது முழு ஜீவிதத்திலும், சோதனையின்போது தேவனுக்குப் பயந்து நடந்துக்கொண்டது, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைத் தொடரும் அனைவருக்கும் ஒரு அருமையான பொக்கிஷம் ஆகும்.

யோபுவின் சாட்சி தேவனுக்கு ஆறுதல் தருகிறது

யோபு ஒரு அழகான மனிதர் என்று நான் இப்போது உங்களுக்குச் சொன்னால், இந்த வார்த்தைகளுக்குள் இருக்கும் பொருளை நீங்கள் உணர முடியாமல் போகலாம். இந்த விஷயங்களைப் பற்றி நான் ஏன் பேசினேன் என்பதன் பின்னணியில் உள்ள உணர்வைப் புரிந்துக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், யோபுவைப் போலவே அல்லது அதற்கு ஒத்த சோதனைகளை நீயும் அனுபவிக்கும் நாள் வரும் வரை காத்திரு. நீ துன்பங்களை அனுபவிக்கும்போது, தேவனால் தனிப்பட்ட முறையில் உனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சோதனைகளை நீ அனுபவிக்கும்போது, உன்னுடைய அனைத்தையும் கொடுக்கும்போது, சாத்தானை ஜெயிப்பதற்காகவும், சோதனைகளுக்கு மத்தியில் தேவனுக்கு சாட்சி அளிப்பதற்காகவும் அவமானத்தையும் கஷ்டத்தையும் சகித்துக்கொள்—பின்னர் நான் பேசும் இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை நீ உணர முடியும். அந்த நேரத்தில், நீ யோபுவை விட மிகவும் தாழ்ந்தவர் என்பதை நீ உணருவாய். யோபு எவ்வளவு அழகானவர் என்பதை நீ உணருவாய். அவர் பின்பற்றுவதற்கு தகுதியானவர் என்பதை நீ உணருவாய். அந்த நேரம் வரும்போது, யோபு பேசும் உன்னதமான வார்த்தைகள் கெட்டுப்போனவர்களுக்கும், இந்த காலங்களில் ஜீவிப்பவர்களுக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை நீ புரிந்துக்கொள்வாய். இன்றைய ஜனங்கள் யோபுவால் அடையப்பட்டதை அடைவது எவ்வளவு கடினம் என்பதை நீ புரிந்துக்கொள்வாய். இது கடினம் என்று நீ உணரும்போது, தேவனுடைய இருதயம் எவ்வளவு கவலையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது என்பதை நீ புரிந்துக்கொள்வாய். அத்தகையவர்களைப் பெறுவதற்கு தேவன் செலுத்திய விலைக்கிரையம் எவ்வளவு உயர்ந்தது என்பதை நீ புரிந்துக்கொள்வாய். தேவன் மனிதகுலத்திற்காகச் செய்கிற மற்றும் செலவழிக்கும் விலைக்கிரையம் எவ்வளவு விலைமதிப்புள்ளது என்பதை நீ புரிந்துக்கொள்வாய். இப்போதும் நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு யோபுவைப் பற்றிய துல்லியமான புரிதலும் சரியான மதிப்பீடும் இருக்கிறதா? உங்கள் பார்வையில், யோபு உண்மையிலேயே பரிபூரணமான, நேர்மையான மனிதராக இருந்தாரா? பெரும்பாலான ஜனங்கள் நிச்சயமாக ஆம் என்று சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், யோபு செயல்பட்டதும் வெளிப்படுத்தியதும் எந்த மனிதனும் அல்லது சாத்தானும் மறுக்க முடியாதவை ஆகும். இவை, சாத்தான் மீதான யோபுவின்ஜெயத்தின் மிக வல்லமைவாய்ந்த சான்றாகும். இந்த ஆதாரம் யோபுவில் தயாரிக்கப்பட்டது. இது தேவனால் பெறப்பட்ட முதல் சாட்சியமாகும். இவ்வாறு, யோபு சாத்தானுடைய சோதனையில் ஜெயம் பெற்று தேவனுக்கு சாட்சி அளித்தபோது, தேவன் யோபில் நம்பிக்கையைக் கண்டார். அவருடைய இருதயம் யோபுவால் ஆறுதலடைந்தது. சிருஷ்டிப்பின் காலம் முதல் யோபுவின் காலம் வரை, ஆறுதல் என்றால் என்ன என்பதையும், மனிதனால் ஆறுதலளிக்கப்படுவதையும் தேவன் உண்மையாக அனுபவித்த முதல் முறை இதுவாகும். அவருக்காகப் பெற்ற உண்மையான சாட்சியை அவர் கண்டதும் பெற்றதும் இதுவே முதல் முறை ஆகும்.

யோபுவின் சாட்சிகள் மற்றும் யோபுவின்பல்வேறு அம்சங்களைப் பற்றிய விவரங்களைப் பற்றி கேள்விப்பட்டால், பெரும்பான்மையான ஜனங்கள் அவர்களுக்கு முன் தங்கள் பாதைக்கான திட்டங்களைக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். எனவே, குழப்பமும் பயமும் நிறைந்த பெரும்பாலான ஜனங்கள் சரீரம் மற்றும் மனதில் மெதுவாக ஓய்வெடுக்கத் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்குவார்கள் என்றும் நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குவார்கள் என்றும் நான் நம்புகிறேன்…

கீழேயுள்ள பத்திகளும் யோபு பற்றிய விவரங்கள் ஆகும். நாம் தொடர்ந்து படிப்போம்.

4. யோபு காதால் தேவனுடைய குரலைக் கேட்கிறார்

யோபு 9:11 இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியேன்.

யோபு 23:8-9 இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.

யோபு 42:2-6 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

தேவன் தன்னை யோபுவுக்கு வெளிப்படுத்தவில்லை என்றாலும், யோபு தேவனுடைய இறையாண்மையை நம்புகிறார்

இந்த வார்த்தைகளின் உந்துதல் என்ன? இங்கே ஒரு உண்மை இருக்கிறது என்பதை உங்களில் யாராவது உணர்ந்திருக்கிறீர்களா? முதலில், ஒரு தேவன் இருப்பதாக யோபுவுக்கு எப்படித் தெரியும்? அப்படியானால், வானம், பூமி மற்றும் அனைத்தும் தேவனால் ஆளப்படுகின்றன என்பதை அவர் எப்படி அறிந்திருந்தார்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்கும் பத்தி ஒன்று உள்ளது: “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்” (யோபு 42:5-6). தேவனைத் தன் கண்களால் பார்ப்பதை விட, யோபு தேவனைப் பற்றி புராணக்கதைகளிலிருந்து கற்றுக்கொண்டார் என்பதை இந்த வார்த்தைகளிலிருந்து நாம் அறிகிறோம். இந்த சூழ்நிலையில்தான் அவர் தேவனைப் பின்பற்றும் பாதையில் நடக்கத் தொடங்கினார். அதன் பிறகு அவர் தனது ஜீவிதத்திலும் எல்லாவற்றிலும் தேவன் இருப்பதை உறுதிப்படுத்தினார். இங்கே மறுக்க முடியாத உண்மை உள்ளது—அந்த உண்மை என்ன? தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்ற முடிந்த போதிலும், யோபு தேவனைப் பார்த்ததில்லை. இதில், அவர் இன்றைய ஜனங்களைப் போலவே இல்லையா? யோபு ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை, இதன் அர்த்தம் என்னவென்றால், அவர் தேவனைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், தேவன் எங்கே இருக்கிறார், அல்லது தேவன் எப்படிப்பட்டவர், அல்லது தேவன் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியாது. இவை அனைத்தும் அகநிலை காரணிகள் ஆகும். புறநிலையாகக் காரணத்துடன் பேசினால், அவர் தேவனைப் பின்பற்றினாலும், தேவன் அவருக்கு ஒருபோதும் தோன்றவில்லை அல்லது அவருடன் பேசவில்லை. இது உண்மையல்லவா? தேவன் யோபுவிடம் பேசவில்லை அல்லது அவருக்கு எந்தக் கட்டளைகளையும் கொடுக்கவில்லை என்றாலும், யோபு தேவன் இருப்பதைக் கண்டார். எல்லாவற்றிலும் அவருடைய இறையாண்மையைக் கண்டார். புராணங்களின் மூலம் யோபு காதுகளால் தேவனைக் கேள்விப்பட்டார். அதன் பிறகு அவர் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கும் ஜீவிதத்தைத் தொடங்கினார். யோபு தேவனைப் பின்பற்றிய தோற்றம் மற்றும் செயல்முறை அத்தகையவை ஆகும். ஆனால் அவர் எவ்வாறு தேவனுக்கு அஞ்சினார், தீமையைத் தவிர்த்தார் என்பது முக்கியமல்ல. அவர் தனது நேர்மையை எப்படி உறுதியாகக் கருதினாலும், தேவன் அவருக்கு ஒருபோதும் தோன்றவில்லை. இந்த பத்தியைப் படிப்போம். அவர் சொன்னார்: “இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியேன்” (யோபு 9:11). இந்த வார்த்தைகள் என்னவென்றால், யோபு தன்னைச் சுற்றியுள்ள தேவனை உணர்ந்திருக்கலாம் அல்லது அவர் உணராமல் இருந்திருக்கலாம்—ஆனால் அவரால் ஒருபோதும் தேவனைப் பார்க்க முடியவில்லை. தேவன் தனக்கு முன்னால் செல்வதை, அல்லது செயல்படுவதை, அல்லது மனிதனை வழிநடத்துவதை அவர் கற்பனை செய்த நேரங்கள் இருந்தன. ஆனால் அவர் ஒருபோதும் அவற்றை அவற்றை அறிந்திருக்கவில்லை. மனிதன் எதிர்பார்க்காதபோது தேவன் அவன் மீது வருகிறார். தேவன் எப்போது வருவார், அல்லது அவர் எங்கு வருகிறார் என்று மனிதனுக்குத் தெரியாது. ஏனென்றால், மனிதனால் தேவனைப் பார்க்க முடியாது. இதனால் தேவன் மனிதனிடமிருந்து மறைக்கப்படுகிறார்.

தேவன் யோபுவிடமிருந்து மறைக்கப்படுகிறார் என்ற உண்மையால் தேவன் மீதான யோபுவின் நம்பிக்கை அசையவில்லை

வேதாகமத்தின் பின்வரும் பத்தியில், யோபு பின்வருமாறு கூறுகிறார், “இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்” (யோபு 23:8-9). இந்த விவரத்தில், யோபுவின் அனுபவங்களிலெல்லாம், தேவன் அவரிடம் மறைந்திருந்தார் என்பதை அறிகிறோம். தேவன் அவருக்கு வெளிப்படையாகத் தோன்றவில்லை, வெளிப்படையாக அவரிடம் எந்த வார்த்தையும் பேசவில்லை. ஆனாலும் அவருடைய இருதயத்தில், யோபு தேவன் இருப்பதைப் பற்றி நம்பிக்கை கொண்டிருந்தார். தேவன் தனக்கு முன்பாக நடந்துக்கொண்டிருக்கலாம் அல்லது அவருடைய பக்கத்திலேயே செயல்படக்கூடும் என்றும், தேவனைக் காண முடியாவிட்டாலும், தேவன் அவருக்கு அடுத்தபடியாக இருந்தார், அவரைப் பற்றிய எல்லாவற்றையும் ஆளுகிறார் என்றும் அவர் எப்போதும் நம்பியிருந்தார். யோபு ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. ஆனால் அவருடைய விசுவாசத்திற்கு அவரால் உண்மையாக இருக்க முடிந்தது. அதை வேறு எந்த மனிதராலும் செய்ய முடியவில்லை. மற்றவர்கள் ஏன் அதை செய்ய முடியவில்லை? ஏனென்றால், தேவன் யோபுவிடம் பேசவில்லை அல்லது அவருக்குத் தோன்றவில்லை. அவர் உண்மையிலேயே தேவனை நம்பவில்லை என்றால், அவரால் தொடர்ந்து சென்றிருக்க முடியாது. தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான வழியை அவர் உறுதியாகப் பிடித்திருக்க முடியாது. இது உண்மையல்லவா? யோபு இந்த வார்த்தைகளைச் சொன்னதைப் படிக்கும்போது நீ எப்படி உணர்கிறாய்? யோபுவின் பரிபூரணமும் நேர்மையும், தேவனுக்கு முன்பாக இருந்த அவர் நீதியும் உண்மைதான் என்றும், தேவனுடைய தரப்பில் மிகைப்படுத்தல் இல்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? தேவன் யோபுவை மற்றவர்களைப் போலவே நடத்தினாலும், அவரிடம் தோன்றவில்லை, பேசவில்லை என்றாலும், யோபு இன்னும் தனது உண்மையை உறுதியாகக் பற்றிக் கொண்டிருந்தார். இன்னும் தேவனுடைய இறையாண்மையை நம்பினார். அவர் அடிக்கடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார். தேவனைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக தேவனுக்கு முன்பாக ஜெபம் செய்தார். தேவனைப் பார்க்காமல் தேவனுக்கு அஞ்சும் யோபுவின் குணத்தில், அவர் நேர்மறையான விஷயங்களை எவ்வளவு நேசித்தார் என்பதையும், அவருடைய நம்பிக்கை எவ்வளவு உறுதியானது, உண்மையானது என்பதையும் காண்கிறோம். தேவன் அவரிடமிருந்து மறைந்திருந்தாலும் அவர் தேவன் இருப்பதை மறுக்கவில்லை. தேவனை ஒருபோதும் பார்த்ததில்லை என்றாலும் அவர் நம்பிக்கையை இழந்து தேவனை விட்டுவிடவில்லை. அதற்கு பதிலாக, எல்லாவற்றையும் ஆளும் தேவனுடைய மறைக்கப்பட்ட கிரியைக்கு மத்தியில் தேவன் இருப்பதை அவர் உணர்ந்தார். தேவனுடைய இறையாண்மையையும் வல்லமையையும் உணர்ந்தார். தேவன் மறைந்திருப்பதால் நேர்மையாக இருப்பதை அவர் விட்டுவிடவில்லை. தேவன் அவருக்கு ஒருபோதும் தோன்றவில்லை என்பதற்காக தேவனுக்கு பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியை அவர் கைவிடவில்லை. எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மையை அவர் ஏற்கனவே பார்த்திருந்ததால், தேவன் தாம் இருப்பதை நிரூபிக்க வெளிப்படையாகத் தோன்றும்படி யோபு ஒருபோதும் கேட்டதில்லை. மற்றவர்கள் பெறாத ஆசீர்வாதங்களையும் கிருபைகளையும் அவர் பெற்றார் என்று அவர் நம்பினார். தேவன் அவருக்கு மறைந்திருந்தாலும், தேவன் மீதான யோபுவின் நம்பிக்கை ஒருபோதும் அசைக்கப்படவில்லை. ஆகவே, வேறு யாரிடமும் இல்லாத தேவனுடைய ஒப்புதல் மற்றும் தேவனுடைய ஆசீர்வாதத்தை அவர் அறுவடை செய்தார்.

ஆசீர்வாதம் அல்லது பேரழிவைப் பற்றி சிந்திக்காமல் யோபு தேவனுடைய நாமத்தை துதிக்கிறார்

வேதாகமத்தின் யோபுவின் கதைகளில் ஒருபோதும் குறிப்பிடப்படாத ஒரு உண்மை இருக்கிறது. இந்த உண்மையே இன்று நம் தலைப்பாக இருக்கும். யோபு ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளை தன் காதுகளால் கேட்டதில்லை என்றாலும், யோபுவின் இருதயத்தில் தேவனுக்கு ஒரு இடம் இருந்தது. தேவனைப் பற்றிய யோபுவின்அணுகுமுறை என்ன? இது முன்னர் குறிப்பிட்டது போல், “யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்.” தேவனுடைய நாமத்தை அவர் துதிப்பது நிபந்தனையற்றது, சூழலைப் பொருட்படுத்தாதது மற்றும் எந்த காரணத்திற்கும் கட்டுப்படாதது ஆகும். யோபு தன் இருதயத்தை தேவனுக்குக் கொடுத்தார். அதை தேவன் கட்டுப்படுத்த அனுமதித்தார். அவர் நினைத்தவை, அவர் தீர்மானித்தவை மற்றும் அவர் இருதயத்தில் திட்டமிட்டவை அனைத்தும் தேவனுக்கு முன்பாகத் திறக்கப்பட்டன. அவை தேவனிடமிருந்து மறைக்கப்படவில்லை. அவருடைய இருதயம் தேவனை எதிர்த்து நிற்கவில்லை. தனக்காக எதையாகிலும் செய்யவோ அல்லது தனக்கு எதையாகிலும் கொடுக்கவோ அவர் ஒருபோதும் தேவனிடம் கேட்டதில்லை. மேலும், அவர் தேவனை வணங்குவதன் மூலம் எதையும் பெற முடியும் என்ற ஆடம்பரமான ஆசைகளை அவர் கொண்டிருக்கவில்லை. யோபு தேவனோடு வர்த்தகம் பேசவில்லை. தேவனிடம் தேவைகள் அல்லது எதிர்பார்ப்புகள் எதையும் அவர் முன் வைக்கவில்லை. தேவனுடைய நாமத்தை அவர் புகழ்வதற்கு எல்லாவற்றையும் ஆளும் தேவனுடைய பெரும் வல்லமையும் அதிகாரமும் காரணமாக இருந்தது. அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றாரா அல்லது பேரழிவால் பாதிக்கப்பட்டாரா என்பதைப் பொறுத்து அந்த புகழ்ச்சி இல்லை. தேவன் ஜனங்களை ஆசீர்வதித்தாலும் அல்லது அவர்கள் மீது பேரழிவை ஏற்படுத்தினாலும், தேவனுடைய வல்லமையும் அதிகாரமும் மாறாது என்றும், இதனால், ஒரு மனிதருடைய சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய நாமம் புகழப்பட வேண்டும் என்றும் அவர் நம்பினார். அந்த மனிதன் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவது தேவனுடைய இறையாண்மையின் காரணமாக நிகழ்கிறது என்றும், மனிதனுக்கு பேரழிவு ஏற்படும்போதும், அதுவும் தேவனுடைய இறையாண்மையின் காரணமாக நிகழ்கிறது என்றும் அவர் நம்பினார். தேவனுடைய வல்லமையும் அதிகாரமும் மனிதனுடைய அனைத்தையும் ஆளுகின்றன. மனிதனுடைய அதிர்ஷ்டத்தின் மாறுபாடுகள் தேவனுடைய வல்லமை மற்றும் அதிகாரத்தின் வெளிப்பாடாகும். மேலும், ஒருவரின் பார்வையைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய நாமம் புகழப்பட வேண்டும். இதைத்தான் யோபு அனுபவித்தார். அவருடைய ஜீவிதத்தின் ஆண்டுகளில் அறிந்து கொண்டார். யோபுவின் எண்ணங்களும் செயல்கள் அனைத்தும் தேவனுடைய காதுகளை அடைந்து தேவனுக்கு முன்பாக வந்தன. அவை தேவனால் முக்கியமானவையாகக் காணப்பட்டன. தேவன் யோபுவின் இந்த அறிவைப் போற்றினார். அத்தகைய இருதயத்தைக் கொண்டிருப்பதற்காக யோபுவைப் பொக்கிஷமாகக் கருதினார். இந்த இருதயம் எப்பொழுதும், எல்லா இடங்களிலும் தேவனுடைய கட்டளைக்காகக் காத்திருந்தது. நேரம் அல்லது இடம் எதுவாக இருந்தாலும் தனக்கு நேர்ந்ததை வரவேற்றது. யோபு தேவனிடம் எந்தக் எதிர்பார்ப்புயும் வைக்கவில்லை. தேவனிடமிருந்து வந்த எல்லா ஏற்பாடுகளுக்காகக் காத்திருந்து, ஏற்றுக்கொள்வது, எதிர்கொள்வது, கீழ்ப்படிவது என்பதே அவர் தனக்குத்தானே எதிர்பார்த்த்தாகும். யோபு இது தனது கடமை என்று நம்பினார். அது துல்லியமாக தேவனால் விரும்பப்பட்டது. யோபு ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. தேவனுடைய பேசிய எந்த வார்த்தைகளையும், வெளியிட்ட எந்தக் கட்டளைகளையும், கொடுத்த எந்த போதனைகளையும், அவருக்கு அறிவுறுத்திய எதையும் கேட்டதில்லை. இன்றைய வார்த்தைகளில், சத்தியத்தைப் பற்றி தேவன் அவருக்கு எந்த அறிவையும், வழிகாட்டுதலையும், ஏற்பாட்டையும் வழங்காதபோது, தேவன்மீது அத்தகைய அறிவையும் அணுகுமுறையையும் அவரால் பெற்றிருக்க முடிந்தது—இது விலைமதிப்பற்றது ஆகும். இதுபோன்ற விஷயங்களை அவர் நிரூபிக்க வேண்டும் என்பது தேவனுக்கு போதுமானதாகும், அவருடைய சாட்சி தேவனால் பாராட்டப்பட்டது, போற்றப்பட்டது. யோபு ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை அல்லது தேவன் தனக்கு எந்த போதனைகளையும் தனிப்பட்ட முறையில் சொல்வதைக் கேட்டதில்லை, ஆனால் தேவனுக்கு முன்பாக, ஆழ்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் மட்டுமே பேச முடிந்த, பெருமை பேச முடிந்த, பலிகளைச் செலுத்துவதைப் பற்றி பேச முடிந்த, ஆனால் ஒருபோதும் தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றிராத மற்றும் ஒருபோதும் தேவனுக்கு அஞ்சாத மனிதர்களை விட யோபுவின் இருதயமும், யோபுவு ம் மிகவும் விலைமதிப்புடையவர்கள் ஆவர். ஏனென்றால், யோபுவின்இருதயம் பரிசுத்தமானது, தேவனிடமிருந்து மறைக்கப்படவில்லை, அவருடைய மனிதம் நேர்மையானது, கனிவானது மற்றும் அவர் நீதியை நேசித்தார். அது நேர்மறையானதாகும். இதுபோன்ற இருதயமும் மனிதமும் பெற்று, தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்க்க வல்லவருமான ஒரு மனிதர் மட்டுமே தேவனுடைய வழியைப் பின்பற்ற முடியும். அத்தகைய மனிதர் மட்டுமே தேவனுடைய இறையாண்மையைக் காண முடியும். அவருடைய அதிகாரத்தையும் வல்லமையையும் காண முடியும். அவருடைய இறையாண்மைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய முடியும். இது போன்ற ஒரு மனிதரால் மட்டுமே தேவனுடைய நாமத்தை உண்மையிலேயே துதிக்க முடியும். ஏனென்றால், தேவன் அவரை ஆசீர்வதிப்பாரா அல்லது அவர் மீது பேரழிவை ஏற்படுத்துவாரா என்று அவர் பார்க்கவில்லை. ஏனென்றால் எல்லாமே தேவனுடைய கரத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதையும், மனிதன் கவலைப்படுவது முட்டாள்தனம், அறியாமை மற்றும் பகுத்தறிவின்மை மற்றும் எல்லாவற்றின் மீதான தேவனுடைய இறையாண்மையின் உண்மையை சந்தேகிப்பது மற்றும் தேவனுக்கு பயப்படாமல் இருப்பது ஆகியவற்றின் அடையாளமாகும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். யோபுவின் அறிவு துல்லியமாக தேவன் விரும்பியதில் இருந்தது. ஆகவே, யோபுவுக்கு உங்களைவிட தேவனைப் பற்றிய பெரிய தத்துவார்த்த அறிவு இருந்ததா? அந்த நேரத்தில் தேவனுடைய கிரியையும் வார்த்தைகளும் குறைவாக இருந்ததால், தேவனைப் பற்றிய அறிவை அடைவது எளிதான விஷயம் அல்ல. யோபுவின்அத்தகைய சாதனை சதாரண சாதனையல்ல. அவர் தேவனுடைய கிரியையை அனுபவித்ததில்லை. தேவன் பேசுவதைக் கேட்டதில்லை. தேவனுடைய முகத்தைப் பார்த்ததில்லை. எனினும், தேவன்மீது அத்தகைய அணுகுமுறையை அவர் கொண்டிருக்க முடிந்தது. அது இன்றைய மனிதர்களிடம் காணாப்படும் மனிதம் மற்றும் தனிப்பட்ட தேடல் அவரிடம் இருந்தது என்பதற்கான விளைவு ஆகும். ஆகவே, அந்த யுகத்தில், “உத்தமனும் சன்மார்க்கனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை.” என்று தேவன் சொன்னார். அந்த யுகத்தில், தேவன் அவரைப் பற்றி ஏற்கனவே ஒரு மதிப்பீட்டைச் செய்திருந்தார். அதன் விளைவாக அத்தகைய முடிவுக்கு வந்திருந்தார். இன்று அது எவ்வளவு உண்மையானதாக இருந்திருக்கும்?

தேவன் மனிதனிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தாலும், எல்லாவற்றிலும் இருக்கும் அவருடைய கிரியைகள் மனிதன் அவரை அறிந்துக்கொள்ள போதுமானவையாக இருக்கின்றன

யோபு தேவனுடைய முகத்தைப் பார்த்ததில்லை அல்லது தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளைக் கேட்டதில்லை மற்றும் தேவனுடைய கிரியையை அவர் தனிப்பட்ட முறையில் அனுபவித்ததும் இல்லை. ஆனாலும் அவருடைய தெய்வ பயமும் அவருடைய சோதனைகளின் போது அவர் அளித்த சாட்சிகளும் அனைவருக்கும் சாட்சியாக இருக்கின்றன. அவை தேவனால் நேசிக்கப்படுகிறது, அவற்றில் மகிழ்ச்சியைத் தருகிறது, தேவனால் பாராட்டப்படுகிறது. அவற்றைப் பார்த்து ஜனங்கள் பொறாமைப்படுகிறார்கள், அவற்றைப் போற்றுகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்களின் புகழைப் பாடுகிறார்கள். அவரது ஜீவிதத்தைப் பற்றி பெரிய அல்லது அசாதாரணமான எதுவும் இருக்கவில்லை: எந்தவொரு சாதாரண மனிதனையும் போலவே, அவர் ஒரு குறிப்பிடத்தக்க ஜீவிதத்தை ஜீவித்தார். சூரிய உதயத்தில் வேலைக்குச் சென்று சூரிய அஸ்தமனத்தில் ஓய்வெடுக்க வீடு திரும்பினார். வித்தியாசம் என்னவென்றால், அவரது ஜீவிதத்தின் குறிப்பிடத்தக்க பல தசாப்தங்களில், அவர் தேவனுடைய வழியைப் பற்றிய ஒரு நுண்ணறிவைப் பெற்றார் என்பதே. தேவனுடைய மகத்தான வல்லமையையும் இறையாண்மையையும் பற்றி வேறு எந்த மனிதரும் புரிந்துக்கொள்ளாத அளவுக்கு உணர்ந்து புரிந்து கொண்டார். அவர் எந்தவொரு சாதாரண மனிதனையும் விட புத்திசாலியாக இருக்கவில்லை. குறிப்பாக அவரது ஜீவிதம் உறுதியானதல்ல. கண்ணுக்கு தெரியாத சிறப்புத் திறன்கள் அவரிடம் இருந்தன. உண்மையான, கனிவான மற்றும் நேர்மையான ஒரு ஆளுமை அவரிடம் இருப்பினும், நேர்மை, நீதியை மற்றும் நேர்மறையான விஷயங்களை நேசித்த ஒரு ஆளுமையை அவர் பெற்றிருந்தார்—இந்த விஷயங்கள் எதுவும் பெரும்பான்மையான சாதாரண ஜனங்களிடம் இல்லை. அவர் அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையில் வேறுபாடு காட்டினார். நீதியின் உணர்வைக் கொண்டிருந்தார். விட்டுக்கொடுக்காதவராகவும், விடாமுயற்சியுடனும் இருந்தார். தனது சிந்தனையில் கவனமாக விரிவாகக் கவனம் செலுத்தினார். இவ்வாறு, பூமியில் முக்கியத்துவம் பெறாத காலத்தில் தேவன் செய்த அசாதாரணமான காரியங்கள் அனைத்தையும் அவர் கண்டார். தேவனுடைய மகத்துவம், பரிசுத்தம் மற்றும் நீதியைக் கண்டார். தேவனுடைய அக்கறை, தயவு மற்றும் மனிதனுக்கான பாதுகாப்பு ஆகியவற்றைக் கண்டார். தேவனுடைய கௌரவத்தையும் உயர்ந்த தேவனுடைய அதிகாரத்தையும் அவர் கண்டார். எந்தவொரு சாதாரண மனிதனுக்கும் அப்பாற்பட்ட இந்த விஷயங்களை யோபு பெற முடிந்தது. இதற்கு முதல் காரணம், அவருக்கு தூய்மையான இருதயம் இருந்ததும், அவருடைய இருதயம் தேவனுக்கு சொந்தமானது என்பதும், சிருஷ்டிப்பாளரால் வழிநடத்தப்பட்டதும் ஆகும். இரண்டாவது காரணம் அவரது தேடல்: பாவமில்லாமல் பரிபூரணராக இருப்பதற்கான அவரது தேடலும், மற்றும் பரலோகத்தின் சித்தத்திற்கு இணங்க, தேவனால் நேசிக்கப்பட வேண்டும், தீமையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான தேடலும் ஆகும். தேவனைக் காணவோ அல்லது தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கவோ முடியாத யோபு இவற்றைக் கொண்டிருந்தார். அவர் தேவனைப் பார்த்ததில்லை என்றாலும், தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்பதை அவர் அறிந்து கொண்டார். அவ்வாறு செய்யும் தேவ ஞானத்தை அவர் புரிந்துக்கொண்டார். தேவன் பேசிய வார்த்தைகளை அவர் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை என்றாலும், மனிதனுக்கு வெகுமதி அளிப்பது, மனிதனிடமிருந்து எடுப்பது போன்ற செயல்கள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை யோபு அறிந்திருந்தார். அவரது ஜீவிதத்தின் ஆண்டுகள் எந்தவொரு சாதாரண மனிதரிடமிருந்தும் வேறுபட்டவை அல்ல என்றாலும், எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய தனது அறிவைப் பாதிக்கவோ அல்லது தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்றுவதை பாதிக்கவோ அவர் தனது ஜீவிதத்தின் குறிப்பிடத்தக்க குணத்தை அனுமதிக்கவில்லை. அவருடைய பார்வையில், எல்லாவற்றின் சட்டங்களும் தேவனுடைய கிரியைகளால் நிறைந்திருந்தன, தேவனுடைய இறையாண்மையை ஒரு மனிதனுடைய ஜீவிதத்தின் எந்தப் பகுதியிலும் காணலாம். அவர் தேவனைக் காணவில்லை, ஆனால் தேவனுடைய செயல்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்பதை அவரால் உணர முடிந்தது. பூமியில் முக்கியத்துவம் பெறாத அவருடைய காலத்தில், அவரது ஜீவிதத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேவனுடைய அசாதாரண மற்றும் அதிசயமான கிரியைகளை அவரால் காணவும் உணரவும் முடிந்தது. தேவனுடைய அற்புதமான ஏற்பாடுகளைக் காணவும் முடிந்தது. தேவனுடைய மறைவான தன்மையும் மௌனமும் தேவனுடைய கிரியைகளை யோபு உணர்ந்துக் கொள்வதற்குத் தடையாக இருக்கவில்லை. எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய அவரது அறிவை அவை பாதிக்கவில்லை. எல்லாவற்றிலும் மறைந்திருக்கும் தேவனுடைய இறையாண்மை மற்றும் ஏற்பாடுகளை உணர்ந்துக்கொள்வது என்பது அவரது அன்றாட ஜீவிதத்தில் உணரப்பட்டது. எல்லாவற்றிலும் அமைதியாக இருப்பதன் மூலமும், எல்லாவற்றின் சட்டங்களையும் நிர்வகிப்பதன் மூலமும் தம் இருதயத்தின் குரலையும் தம் வார்த்தைகளையும் வெளிப்படுத்தும் தேவனுடைய இருதயத்தின் குரலையும், தேவனுடைய வார்த்தைகளையும் தனது அன்றாட ஜீவிதத்தில், யோபு கேட்டார், புரிந்து கொண்டார். அப்படியானால், யோபுவைப் போலவே மனிதர்களுக்கும் மனிதம் மற்றும் தேடல் இருந்தால், அவர்கள் யோபுவைப் போலவே அதே உணர்தலையும் அறிவையும் பெற முடியும். யோபுவைப் போல எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய அதே புரிதலையும் அறிவையும் பெற முடியும். தேவன் யோபுவுக்குத் தோன்றவில்லை அல்லது அவருடன் பேசவில்லை என்றாலும் யோபுவால் பரிபூரணராக மற்றும் நேர்மையாக இருக்கவும், தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்க்கவும் முடிந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மனிதனுக்குத் தோன்றாமலோ அல்லது பேசாமலோ இருந்தாலும் கூட தேவனுடைய இருப்பு, வல்லமை மற்றும் அதிகாரம் குறித்து மனிதன் அறிந்துக்கொள்ள எல்லாவற்றிலும் இருக்கும் தேவனுடைய செயல்களும் எல்லாவற்றின் மீதான அவருடைய இறையாண்மையும் போதுமானது ஆகும். மனிதன் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்ற, தேவனுடைய வல்லமையும் அதிகாரமும் போதுமானது ஆகும். யோபைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் தேவனுக்குப் பயப்படுவதையும் தீமையைத் தவிர்ப்பதையும் அடைய முடிந்ததால், தேவனைப் பின்தொடரும் ஒவ்வொரு சாதாரண மனிதனாலும் அது முடியும். இந்த வார்த்தைகள் தர்க்கரீதியான அனுமானம் போல் தோன்றினாலும், இது விஷயங்களின் கட்டளைகளுக்கு முரணாக இல்லை. ஆயினும் உண்மைகள் எதிர்பார்ப்புகளுடன் பொருந்தவில்லை: தேவனுக்குப் பயப்படுவதும் தீமையைத் தவிர்ப்பதும் யோபுவைப் பாதுகாப்பதும், யோபுவை மட்டுமே பாதுகாப்பதுமாகும். “தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பது” என்ற குறிப்பில், யோபுவால் மட்டுமே இதனைச் செய்ய முடியும் என தெய்வ பயத்துக்கும், தீமையைத் தவிர்ப்பதற்கும் வழி யோபுவின் பெயருடன் முத்திரை குத்தப்பட்டு உள்ளது போன்றும், மற்றவர்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்றும் மக்கள் நினைக்கிறார்கள். இதற்கான காரணம் தெளிவாக உள்ளது: ஏனென்றால், யோபுவுக்கு மட்டுமே உண்மையான, கனிவான மற்றும் நேர்மையான ஒரு ஆளுமை இருந்தது. நேர்மையையும், நீதியையும் நேர்மறை விஷயங்களையும் நேசித்தவர் அவர். ஆகவே, யோபுவால் மட்டுமே தேவனுக்கு பயந்து தீமைக்கு விலகுவதற்கான வழியைப் பின்பற்ற முடியும். உண்மையான, கனிவான, நேர்மையான, நேர்மையையும் நீதியையும் நேசிக்கும் நேர்மறையான ஒரு மனிதத்தை எவரும் கொண்டிருக்கவில்லை என்பதால், இங்குள்ள உட்குறிப்பை நீங்கள் அனைவரும் புரிந்துக்கொண்டிருக்க வேண்டும். இதனால் ஜனங்கள் ஒருபோதும் தேவனுடைய மகிழ்ச்சியைப் பெறவோ அல்லது சோதனைகளுக்கு மத்தியில் உறுதியாக நிற்கவோ முடியாது. யோபுவைத் தவிர, எல்லா ஜனங்களும் இன்னும் சாத்தானால் பிணைக்கப்பட்டு சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் குற்றம் சாட்டப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்பதையும் அது குறிக்கிறது. அவர்களைத் தான் சாத்தான் விழுங்க முயற்சிக்கிறது. அவர்கள் அனைவரும் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளாகின்றனர்.

மனிதனுடைய இருதயம் தேவனுக்கு விரோதமாக இருந்தால், மனிதன் எவ்வாறு தேவனுக்கு அஞ்சி, தீமையைத் தவிர்ப்பான்?

இன்றைய ஜனங்கள் யோபுவைப் போன்ற மனிதத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால், அவர்களின் இயல்பின் சாராம்சம் மற்றும் தேவன்மீது அவர்கள் கொண்ட அணுகுமுறை என்னவாக இருந்த்து? அவர்கள் தேவனுக்கு அஞ்சுகிறார்களா? அவர்கள் தீமையைத் தவிர்க்கிறார்களா? தேவனுக்கு அஞ்சாதவர்கள் அல்லது தீமையைத் தவிர்ப்பவர்களை “தேவனுக்கு எதிராக இருப்பவர்கள்” என்ற மூன்று வார்த்தைகளால் மட்டுமே சுருக்கமாகக் கூற முடியும். இந்த மூன்று வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள், ஆனால் அவற்றின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. “தேவனுக்கு எதிராக இருப்பவர்கள்” என்ற வார்த்தைகளுக்கு சாராம்சம் உண்டு: தேவன் மனிதனை எதிரியாக பார்க்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால் அந்த மனிதன் தேவனை எதிரியாக பார்க்கிறான். முதலாவதாக, ஜனங்கள் தேவனை நம்பத் தொடங்கும் போது, அவர்களில் எவரிடம் சொந்த நோக்கங்கள், உந்துதல்கள் மற்றும் லட்சியங்கள் இல்லை? அவர்களில் ஒரு பகுதியினர் தேவன் இருப்பதை நம்பினாலும், தேவன் இருப்பதைக் கண்டிருந்தாலும், தேவன்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இன்னும் அந்த உந்துதல்களைக் கொண்டுள்ளது மற்றும் தேவனை நம்புவதில் அவர்களின் இறுதி நோக்கம் அவருடைய ஆசீர்வாதங்களையும் அவர்கள் விரும்பும் விஷயங்களையும் பெறுவதாகவும் உள்ளது. ஜனங்களின் ஜீவித அனுபவங்களில், அவர்கள் பெரும்பாலும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். நான் எனது குடும்பத்தையும் ஜீவிதத்தையும் தேவனுக்காக விட்டுவிட்டேன், அவர் எனக்கு என்ன கொடுத்தார்? நான் அதைச் சேர்க்க வேண்டும், அதை உறுதிப்படுத்த வேண்டும்—சமீபத்தில் எனக்கு ஏதேனும் ஆசீர்வாதம் கிடைத்ததா? இந்த நேரத்தில் நான் நிறைய கொடுத்திருக்கிறேன், நான் ஓடினேன் ஓடினேன். மிகவும் கஷ்டப்பட்டேன்—அதற்கு பதிலாக தேவன் எனக்கு ஏதாவது வாக்குத்தத்தங்களை அளித்துள்ளாரா? அவர் என் நல்ல கிரியைகளை நினைவில் வைத்திருக்கிறாரா? என் முடிவு என்னவாக இருக்கும்? தேவனுடைய ஆசீர்வாதங்களை என்னால் பெற முடியுமா? … ஒவ்வொரு மனிதரும் தொடர்ந்து இத்தகைய கணக்கீடுகளை தங்கள் இருதயத்திற்குள் செய்கிறார்கள். அவர்கள் தேவனிடம் தங்களின் உந்துதல்கள், லட்சியங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளை வைக்கிறார்கள். ஒரு பரிவர்த்தனை மனநிலையைத் கொண்டிருகிறார்கள். அதாவது, தன் இருதயத்தில் மனிதன் தொடர்ந்து தேவனைச் சோதித்து வருகிறான். தொடர்ந்து தேவனைப் பற்றிய திட்டங்களைத் தீட்டுகிறான். தனது சுய முடிவுக்காக தேவனோடு தொடர்ந்து வழக்கை வாதாடுகிறான். தேவனிடமிருந்து ஒரு அறிக்கையைப் பிரித்தெடுக்க முயற்சிக்கிறான். அவனது தேவைகளுள் தேவனால் அவனுக்கு எதைக் கொடுக்க முடியும், எதைக் கொடுக்க முடியாது என்பதைப் பார்க்கிறான். தேவனைப் பின்பற்றும் அதே நேரத்தில், மனிதன் தேவனை தேவனாக கருதுவதில்லை. மனிதன் எப்போதுமே தேவனுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றான். அவன் இடைவிடாமல் எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறான். ஒவ்வொரு அடியிலும் அவரை அழுத்துகிறான். ஒரு அங்குலம் வழங்கப்பட்ட பிறகு ஒரு மைல் தூரம் பெற முயற்சிக்கிறான். தேவனுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் அதே நேரத்தில், மனிதன் அவருடன் வாதாடுகிறான். அவர்களுக்கு சோதனைகள் ஏற்படும் போது அல்லது அவர்கள் சில சூழ்நிலைகளில் தங்களைக் கண்டறிந்தால், பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், செயலற்றவர்களாகவும், தங்கள் கிரியையில் மந்தமானவர்களாகவும், தேவனை பற்றி குறை கூறுபவர்களாக மட்டுமே இருப்பார்கள். மனிதன் முதன்முதலில் தேவனை நம்பத் தொடங்கிய காலத்திலிருந்து, அவன் தேவனை ஒரு அமுதசுரபி என்றும் சுவிஸ் இராணுவ கத்தி என்றும் கருதினான். தேவன் மிகப் பெரிய அளவில் தனக்குக் கடன் பட்டுள்ளதாக அவன் கருதினான். தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் பெற முயற்சிப்பது அவனது உள்ளார்ந்த பூரணம் மற்றும் கடமை என்று கருதினான். தேவனுடைய பொறுப்பு மனிதனைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும், அவனுக்காக வழங்குவதும் ஆகும் என்று கருதினான். தேவனை நம்புகிற அனைவருக்கும் “தெய்வ நம்பிக்கை” பற்றிய அடிப்படை புரிதல் இதுதான். தெய்வ நம்பிக்கை பற்றிய அவர்களின் ஆழமான புரிதல் இதுதான். மனிதனுடைய இயல்பின் சாராம்சம் முதல் அவரது அகநிலை தேடல் வரை, தெய்வ பயத்துடன் தொடர்புடைய எதுவும் இல்லை. தேவனை நம்புவதில் உள்ள மனிதனுடைய நோக்கத்துக்கும் தேவனை வழிபடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, தேவனை நம்புவது என்பது தேவனுக்கு பயந்து அவரை வணங்க வேண்டும் என்று மனிதன் ஒருபோதும் கருதவில்லை அல்லது புரிந்துக்கொள்ளவில்லை. இத்தகைய நிலைமைகளின் வெளிச்சத்தில், மனிதனுடைய சாராம்சம் வெளிப்படையானது. இதன் சாராம்சம் என்ன? மனிதனுடைய இருதயம் தீங்கிழைக்கும், துரோகத்தையும் வஞ்சகத்தையும் கொண்டுள்ளது. நேர்மறையான, நேர்மை மற்றும் நீதியை அது நேசிப்பதில்லை. அதனிடம் அவமதிப்பு மற்றும் பேராசை உள்ளது. மனிதனுடைய இருதயம் தேவனிடம் நெருக்கமாக முடியவில்லை. மனிதன் அதை தேவனுக்குக் கொடுக்கவில்லை. தேவன் ஒருபோதும் மனிதனுடைய உண்மையான இருதயத்தைப் பார்த்ததில்லை. அவ்ர் மனிதனால் வணங்கப்படவில்லை. தேவன் எவ்வளவு பெரிய விலைக்கிரையம் கொடுத்தாலும், அவர் எவ்வளவு கிரியை செய்தாலும், அல்லது அவர் மனிதனுக்கு எவ்வளவு வழங்கினாலும், மனிதன் குருடனாகவும், எல்லாவற்றிலும் முற்றிலும் அலட்சியமாகவும் இருக்கிறான். மனிதன் ஒருபோதும் தன் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கவில்லை. அவன் தன் இருதயத்தை தனக்காக வைத்துக்கொள்ள விரும்புகிறான். தன் சொந்த முடிவுகளை எடுக்க விரும்புகிறான்—இதன் உட்பொருள் என்னவென்றால், தேவனுக்குப் பயப்படுவதற்கும் தீமைகளைத் தவிர்ப்பதற்கும் அல்லது இறையாண்மைக்கும் தேவனுடைய ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய மனிதன் விரும்பவில்லை என்பதாகும். தேவனை தேவனாக வணங்கவும் அவர் விரும்பவில்லை. இன்றைய மனிதனுடைய நிலை இதுதான். இப்போது மீண்டும் யோபுவைப் பார்ப்போம். முதலில், அவர் தேவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்தாரா? தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியை உறுதியாகப் பிடிப்பதில் அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருந்ததா? அந்த நேரத்தில், தேவன் வரவிருக்கும் முடிவைப்பற்றி எவருடனும் பேசினாரா? அந்த நேரத்தில், தேவன் முடிவைப் பற்றி யாருக்கும் வாக்குத்தத்தங்களை அளிக்கவில்லை. இந்த பின்னணியில்தான் யோபுவால் தேவனுக்கு அஞ்சவும் தீமையைத் தவிர்க்கவும் முடிந்தது. இன்றைய ஜனங்கள் யோபுவுடன் ஒப்பிடுகையில் நிமிர்ந்து நிற்கிறார்களா? ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ளது. அவை வெவ்வேறு உடன்பாடுகளில் உள்ளன. யோபுவுக்கு தேவனைப் பற்றி அதிக அறிவு இல்லை என்றாலும், அவர் தனது இருதயத்தை தேவனுக்குக் கொடுத்தார். அது தேவனுக்குச் சொந்தமானது. அவர் ஒருபோதும் தேவனோடு ஒரு ஒப்பந்தம் செய்யவில்லை. தேவனிடம் எந்தவிதமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் வைக்கவில்லை. அதற்கு பதிலாக, “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்.” என்று அவர் நம்பினார். பல வருட ஜீவிதத்தில் தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியை உண்மையாகப் பிடித்ததில் இருந்து அவர் கண்டதும் பெற்றதும் இதுதான். அதைப் போலவே, அவர் வார்த்தைகளில் குறிப்பிடப்பட்ட விளைவுகளையும் பெற்றார்: “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” இந்த இரண்டு வாக்கியங்களும் அவருடைய ஜீவித அனுபவங்களின் போது தேவனுக்குக் கீழ்ப்படிந்த மனநிலையின் விளைவாக அவர் கண்டதும் தெரிந்து கொண்டதும் ஆகும். அவை சாத்தானுடைய சோதனையின்போது அவர் ஜெயித்த மிக வல்லமைவாய்ந்த ஆயுதங்களும் ஆகும். தேவனுக்கு சாட்சியாக அவர் உறுதியாக நிற்க அவை அவருடைய அடித்தளமாக இருந்தன. இந்த கட்டத்தில், நீங்கள் ஒரு அழகான மனிதராக யோபுவை கற்பனை செய்கிறீர்களா? அத்தகைய மனிதராக நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் சாத்தானுடைய சோதனைகளுக்கு ஆளாக நேரிடும் என்று பயப்படுகிறீர்களா? யோபு உட்படுத்தப்பட்ட அதே சோதனைகளுக்குள் உங்களை உட்படுத்தும்படி தேவனிடம் ஜெபிக்க நீங்கள் தீர்மானிக்கிறீர்களா? சந்தேகத்திற்கு இடமின்றி, பெரும்பாலான ஜனங்கள் இதுபோன்ற காரியங்களுக்காக ஜெபிக்கத் துணிய மாட்டார்கள். அப்படியானால், உங்கள் நம்பிக்கை பரிதாபகரமாந நிலையில் சிறியதாக இருக்கின்றது என்பது தெளிவாகிறது. யோபுவுடன் ஒப்பிடும்போது, உங்கள் நம்பிக்கை குறிப்பிடத் தகுதியற்றது. நீங்கள் தேவனுடைய எதிரிகள். நீங்கள் தேவனுக்கு அஞ்சாதவர்கள். தேவனுக்கு நீங்கள் அளித்த சாட்சியில் உறுதியாக நிற்க இயலாதவர்கள். சாத்தானுடைய தாக்குதல்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றில் நீங்கள் ஜெயிக்க முடியாதவர்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பெற உங்களைத் தகுதியாக்குவது எது? யோபுவின்கதையைக் கேட்டு, மனிதனைக் இரட்சிப்பதில் தேவனுடைய நோக்கத்தையும் மனிதனுடைய இரட்சிப்பின் அர்த்தத்தையும் புரிந்துக்கொண்ட உங்களுக்கு, யோபுவின் அதே சோதனைகளை ஏற்றுக்கொள்வதற்கான நம்பிக்கை இப்போது இருக்கிறதா? தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்ற உங்களை நீங்கள் அனுமதிக்க கொஞ்சம் உறுதியுடன் இருக்க வேண்டாமா?

தேவனுடைய சோதனைகள் பற்றி எந்தவிதமான சந்தேகங்களும் இல்லாதிருக்க வேண்டும்

சோதனைகள் முடிந்ததைத் தொடர்ந்து யோபுவிடமிருந்து சாட்சி பெற்றபின், யோபுவைப் போன்றவர்களில் ஒரு கூட்டத்தை அல்லது ஒரு கூட்டத்தை விட அதிகமாக ஆதாயம் செய்ய வேண்டும் என தேவன் தீர்மானித்தார். ஆனாலும் சாத்தானை மீண்டும் ஒருபோதும் வேறு மனிதர்களைத் தாக்கவோ துஷ்பிரயோகம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தீர்மானித்தார். அது தேவனோடு பந்தயம் கட்டியதன் மூலம் யோபுவை சோதித்து, தாக்கி, துஷ்பிரயோகம் செய்தது. பலவீனமான, முட்டாள்தனமான, அறிவற்ற மனிதனிடம் இதுபோன்ற கிரியைகளை மீண்டும் செய்ய தேவன் சாத்தானை அனுமதிக்கவில்லை—சாத்தான் யோபுவை சோதித்ததே போதும்! சாத்தான் வேண்டினாலும் ஜனங்களை துஷ்பிரயோகம் செய்ய சாத்தானை அனுமதிக்காமல் இருப்பதே தேவனுடைய தயவு ஆகும். தேவனைப் பொறுத்தவரையில், யோபு சாத்தானுடைய சோதனையையும் துஷ்பிரயோகத்தையும் அனுபவித்ததே போதும். சாத்தானை மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற கிரியைகளைச் செய்ய தேவன் அனுமதிக்கவில்லை. ஏனென்றால், தேவனைப் பின்பற்றும் ஜனங்களின் ஜீவிதமும், அனைத்தும் தேவனால் ஆளப்படுகின்றன, திட்டமிடப்படுகின்றன. தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தனது விருப்பப்படி கையாள சாத்தானுக்கு உரிமை இல்லை—இந்த விஷயத்தில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்! தேவன் மனிதனுடைய பலவீனத்தைப் பற்றி அக்கறை காட்டுகிறார். மேலும் அவனது முட்டாள்தனத்தையும் அறியாமையையும் புரிந்துக்கொள்கிறார். மனிதனை முழுவதுமாக இரட்சிக்க வேண்டும் என்பதற்காக, தேவன் அவனை சாத்தானிடம் ஒப்படைக்க வேண்டும். மனிதன் முட்டாள்தனமாக விளையாடப்படுவதையும் சாத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் தேவன் பார்க்க விரும்பவில்லை. மனிதன் துன்பப்படுவதை அவர் ஒருபோதும் பார்க்க விரும்பவில்லை. மனிதன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டான். மனிதனுடைய அனைத்தையும் தேவன் ஆளுகிறார், ஏற்பாடு செய்கிறார் என்பது முற்றிலும் நியாயமானது ஆகும். இது தேவனுடைய பொறுப்பகும். இது, தேவன் எல்லாவற்றையும் ஆளுகின்ற அதிகாரம் ஆகும்! மனிதனை விருப்பப்படி துஷ்பிரயோகம் செய்வதற்கும், தவறாக நடத்துவதற்கும் தேவன் சாத்தானை அனுமதிக்கவில்லை. மனிதனை வழிதவறச் செய்வதற்காக சாத்தான் பல்வேறு வழிகளைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. மேலும், மனிதனுக்கான தேவனுடைய இறையாண்மையில் தலையிட சாத்தானை அவர் அனுமதிக்கவில்லை. மனிதகுலத்தை நிர்வகிக்கும் மற்றும் காப்பாற்றும் தேவனுடைய மகத்தான கிரியையைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாவற்றையும் ஆளுகின்ற தேவனுடைய சட்டங்களை மிதித்து அழிக்க சாத்தானை அனுமதிக்கவில்லை! தாம் இரட்சிக்க விரும்புவோர், தமக்கு சாட்சி அளிக்கக் கூடியவர்கள் என இவர்களே தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தின் கிரியையின் அடிப்படை மற்றும் படிகமயமாக்கல் ஆகும். அத்துடன் அவரது ஆறாயிரம் ஆண்டுகளின் கிரியையில் அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விலைக்கிரையம் ஆகும். தேவன் இந்த ஜனங்களை சாத்தானிடம் எப்படிக் கொடுக்க முடியும்?

ஜனங்கள் பெரும்பாலும் தேவனுடைய சோதனைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் மற்றும் பயப்படுகிறார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள் சாத்தானுடைய வலையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சாத்தானால் தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயகரமான பிரதேசத்தில் ஜீவிக்கிறார்கள்—ஆனாலும் அவர்கள் பயப்படுவதில்லை மட்டும் துன்பப்படுத்தப்படுவதில்லை. என்ன நடந்துக் கொண்டிருக்கிறது? தேவன் மீது மனிதனுடைய நம்பிக்கையானது மனிதன் காணக்கூடிய விஷயங்களில் மட்டுமே உள்ளது. தேவனுடைய அன்பு மற்றும் மனிதனைப் பற்றிய அக்கறை, அல்லது மனிதனுக்கான மென்மை மற்றும் கவனம் ஆகியவற்றைப் பற்றி அவனுக்கு சிறிதும் உணர்வு இல்லை. ஆனால் தேவனுடைய சோதனைகள், தீர்ப்பு மற்றும் தண்டனை, மாட்சிமை மற்றும் கோபம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு சிறிய நடுக்கம் மற்றும் பயம் கூட அவனுக்கு இல்லை. தேவனுடைய நல்ல நோக்கங்களைப் பற்றி மனிதனுக்கு சிறிதளவு புரிதலும் இல்லை. சோதனைகளைப் பற்றி பேசுகையில், தேவனுக்கு வெளிப்புற நோக்கங்கள் இருப்பதாக ஜனங்கள் உணர்கிறார்கள். தேவன் தீய வடிவமைப்புகளை வைத்திருப்பதாக சிலர் நம்புகிறார்கள். தேவன் உண்மையில் அவர்களுக்கு என்ன செய்வார் என்று அறியாமல் இருக்கிறார்கள். ஆகவே, தேவனுடைய இறையாண்மைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியும் அதே நேரத்தில், மனிதன் மீதான தேவனுடைய இறையாண்மையை மற்றும் மனிதனுக்கான ஏற்பாடுகளை தவிர்ப்பதற்கும் எதிர்ப்பதற்கும் அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் கவனமாக இல்லாவிட்டால் அவர்கள் தேவனால் தவறாக வழிநடத்தப்படுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த விதியைப் பற்றி ஒரு பிடியை வைத்திருக்காவிட்டால், அவர்களிடம் உள்ள அனைத்தையும் தேவனால் எடுக்க முடியும் என்றும் அவர்களின் ஜீவிதம் கூட முடிவுக்கு வரக்கூடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். மனிதன் சாத்தானுடைய பிடியில் இருக்கிறான். ஆனால் சாத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பற்றி அவன் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. அவன் சாத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறான். ஆனால் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவான் என்பதைக் குறித்து ஒருபோதும் அஞ்சமாட்டான். அவன் தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்வதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான், ஆனால் ஒருபோதும் தேவனை நம்புவதில்லை அல்லது சாத்தானுடைய பிடியிலிருந்து தேவன் மனிதனை உண்மையிலேயேக் காப்பாற்றுவார் என்று அவன் நம்புவதில்லை. யோபுவைப் போலவே, மனிதனும் தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் அடிபணிந்து, தனது முழு இருப்பையும் தேவனுடைய கைகளுக்குள் கொடுக்க முடிந்தால், யோபுவைப் போலவே தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறும் வகையில் மனிதனுடைய முடிவு மாறுபடுமா? தேவனுடைய ஆட்சியை மனிதன் ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிய முடிந்தால், இழக்க என்ன இருக்கிறது? ஆகவே, உங்கள் கிரியைகளில் நீங்கள் கவனமாக இருக்கவும், உங்கள் மீது வரவிருக்கும் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நான் பரிந்துரைக்கிறேன். உங்கள் சூடான இரத்தம் அல்லது உங்கள் இயல்பைப் பொறுத்து அல்லது உங்கள் கற்பனைகள் மற்றும் கருத்துக்களுக்கு ஏற்ப தேவன் ஏற்பாடு செய்திருக்கும் பொருட்களிடமும், தேவனிடமும், ஜன்ங்களிடமும், விஷயங்களிடமும் கண்மூடித்தனமாக அல்லது உணர்ச்சி வசப்பட்டு நடக்க வேண்டாம். உங்கள் கிரியைகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவனுடைய கோபத்தைத் சோதிப்பதைத் தவிர்க்க ஜெபிக்கவும் தேடவும் வேண்டும். இதை நினைவில் கொள்ளுங்கள்!

அடுத்ததாக, யோபுவின் சோதனைகளுக்குப் பிறகு அவர் எப்படி இருந்தார் என்பதைப் பார்ப்போம்.

5. அவரது சோதனைகளுக்குப் பிறகு யோபு

யோபு 42:7-9 அதன் பின்னர், யேகோவா இந்த வார்த்தைகளை யோபுவிடம் பேசினபின், யேகோவா தேமானியனான எலிபாஸிடம்: என் கோபம் உனக்கும், உன் இரு சிநேகிதர்களுக்கும் விரோதமாயிருக்கிறது; ஏனெனில் நீங்கள் என் ஊழியக்காரனாகிய யோபு பேசினது போல் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. ஆதலால், இப்போது ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் உங்களோடு எடுத்துக் கொண்டு, என் ஊழியக்காரனாகிய யோபுவிடம் சென்று, ஒரு சர்வாங்க தகனபலியை உங்களுக்காகக் கொடுங்கள்; என் ஊழியக்காரன் யோபு உங்களுக்காக ஜெபிப்பான்; அவனுக்காக நான் ஏற்றுக்கொள்வேன், உங்கள் முட்டாள்தனத்திற்கு ஏற்றவாறு உங்களை நடத்தாதிருப்பேன், நீங்கள் என் ஊழியக்காரனாகிய யோபு பேசினது போல் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. ஆதலால், தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் சென்று, யேகோவா அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்; யேகோவா யோபுவையும் ஏற்றுக்கொண்டார்.

யோபு 42:10 யோபு தன் சிநேகிதர்களுக்காக ஜெபித்தபோது, யேகோவா அவனது சிறைப்பட்ட நிலையை மாற்றினார்; யோபுவிடம் முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாகத் தந்தருளினார் யேகோவா.

யோபு 42:12 ஆதலால், யோபுவின் முன்னிலைமையைக் காட்டிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார் யேகோவா: அவனிடம் பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் நுகம்பூட்டியகாளைகளும், ஆயிரம் பெண் கழுதைகளும் இருந்தன.

யோபு 42:17 யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.

தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பவர்கள் தேவனால் மதிக்கப்படுகிறார்கள், முட்டாள்தனமானவர்கள் தேவனால் தாழ்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள்

யோபு 42:7–9 ல், யோபுவைத் தன் ஊழியக்காரன் என்று தேவன் கூறுகிறார். யோபுவைக் குறிக்க “ஊழியக்காரன்” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியது அவருடைய இருதயத்தில் யோபுவுக்கு இருந்த முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது. தேவன் யோபுவை மிகவும் மதிப்பிற்குரியவராக அழைக்கவில்லை என்றாலும், இந்த நாமம் தேவனுடைய இருதயத்திற்குள் யோபுவின்முக்கியத்துவத்தை பாதிக்கவில்லை. இங்கே “ஊழியக்காரன்” என்பது யோபுவிற்கான தேவனுடைய புனைப்பெயர் ஆகும். “என் ஊழியக்காரனாகிய யோபு” என்பதைப் பற்றிய தேவனுடைய பல குறிப்புகள், அவர் யோபுவிடம் எவ்வாறு மகிழ்ச்சி அடைந்தார் என்பதைக் காட்டுகிறது. “ஊழியக்காரன்” என்ற வார்த்தையின் பின்னணியில் உள்ள அர்த்தத்தை தேவன் பேசவில்லை என்றாலும் “ஊழியக்காரன்” என்ற வார்த்தையின் தேவனுடைய வரையறையை இந்த வசனத்தில் உள்ள அவரது வார்த்தைகளிலிருந்து காணலாம். தேவன் முதன்முதலில் தெமானியரான எலிபாஸிடம் சொன்னார்: “என் கோபம் உனக்கும், உன் இரு சிநேகிதர்களுக்கும் விரோதமாயிருக்கிறது; ஏனெனில் நீங்கள் என் ஊழியக்காரனாகிய யோபு பேசினது போல் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.” தேவனுடைய சோதனைகளுக்குப் பிறகு யோபுவால் சொல்லப்பட்ட மற்றும் செய்யப்பட்ட அனைத்தையும் அவர் ஏற்றுக்கொண்டதாக தேவன் வெளிப்படையாக ஜனங்களுக்குச் சொன்னார். இது, யோபு செய்த எல்லாவற்றின் துல்லியத்தையும் பூரணமான தன்மையையும் அவர் வெளிப்படையாக உறுதிப்படுத்திய முதல் தடவையாகும். எலிபாஸ் மற்றும் பிறரின் தவறான, அபத்தமான பேச்சின் காரணமாக தேவன் கோபமடைந்தார். ஏனென்றால், யோபுவைப் போலவே அவர்களால் தேவனுடைய தோற்றத்தைக் காணவோ அல்லது தங்கள் ஜீவிதத்தில் தேவன் பேசிய வார்த்தைகளைக் கேட்கவோ முடியவில்லை. ஆனால் யோபுவிடமோ தேவனைப் பற்றிய துல்லியமான அறிவு இருந்தது. அதேசமயம் அவர்களோ தேவனைப் பற்றி கண்மூடித்தனமாக யூகித்து, தேவனுடைய சித்தத்தை மீறி, தாங்கள் செய்த எல்லாவற்றிலும் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள். இதன் விளைவாக, யோபுவால் செய்யப்பட்ட மற்றும் சொல்லப்பட்ட அனைத்தையும் ஏற்றுக்கொண்ட தேவன், அதே நேரத்தில், மற்றவர்களிடம் கோபமடைந்தார். ஏனென்றால், அவர்களில் தேவனுக்குப் பயப்படுவதற்கான எந்தவொரு யதார்த்தத்தையும் தேவன் காண முடியவில்லை என்பது மட்டுமல்லாமல் அவர்கள் சொன்னதில் தெய்வ பயத்தைப் பற்றி எதையும் கேட்கவுமில்லை. எனவே, தேவன் அவர்களிடம் பின்வரும் எதிர்பார்ப்புகளை முன்வைத்தார்: “ஆதலால், இப்போது ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் உங்களோடு எடுத்துக் கொண்டு, என் ஊழியக்காரனாகிய யோபுவிடம் சென்று, ஒரு சர்வாங்க தகனபலியை உங்களுக்காகக் கொடுங்கள்; என் ஊழியக்காரன் யோபு உங்களுக்காக ஜெபிப்பான்; அவனுக்காக நான் ஏற்றுக்கொள்வேன், உங்கள் முட்டாள்தனத்திற்கு ஏற்றவாறு உங்களை நடத்தாதிருப்பேன், நீங்கள் என் ஊழியக்காரனாகிய யோபு பேசினது போல் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.” இந்த பத்தியில் தேவன் எலிபாஸுக்கும் மற்றவர்களுக்கும் தங்கள் பாவங்களை சுத்திகரிப்பதற்கு ஏதையேனும் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஏனென்றால், அவர்களின் முட்டாள்தனம் யேகோவா தேவனுக்கு எதிரான பாவமாகும். இதனால் தாங்கள் செய்த தவறுகளுக்கு தீர்வு காண அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்த வேண்டியிருந்தது. சர்வாங்க தகனபலிகள் பெரும்பாலும் தேவனுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த சர்வாங்க தகனபலிகளில் அசாதாரணமானது என்னவென்றால், அவை யோபுவுக்கு வழங்கப்பட்டன என்பதே. யோபு தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஏனென்றால் அவர் சோதனையின்போது தேவனுக்கு சாட்சி அளித்தார். இதற்கிடையில், யோபுவின் இந்த நண்பர்கள் அவருடைய சோதனைகளின் போது அம்பலப்படுத்தப்பட்டனர். அவர்களின் முட்டாள்தனத்தின் காரணமாக அவர்கள் தேவனால் கண்டனம் செய்யப்பட்டார்கள். அவர்கள் தேவனுடைய கோபத்தைத் தூண்டினார்கள். எனவே, அவர்கள் தேவனால் தண்டிக்கப்பட வேண்டும்—யோபுவுக்கு முன் சர்வாங்க தகனபலிகளைச் செய்வதன் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்—தேவனுடைய தண்டனையையும் அவர்கள் மீதான தேவனுடைய கோபத்தையும் அகற்ற யோபு அவர்களுக்காக ஜெபித்தார். தேவனுடைய நோக்கம் அவர்கள் மீது அவமானத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பவர்கள் அல்ல. அவர்கள் யோபுவின்நேர்மையை கண்டனம் செய்தார்கள். ஒரு விஷயத்தில், தேவன் அவர்களுடைய கிரியைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் யோபுவின் கிரியையையோ பெரிதும் ஏற்றுக்கொண்டு யோபில் மகிழ்ச்சி அடைந்தார். மற்றொன்றில், தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது தேவனுக்கு முன்பாக மனிதனை உயர்த்துவது என்றும், மனிதன் தனது முட்டாள்தனத்தால் தேவனால் வெறுக்கப்படுகிறான் என்றும், அதன் காரணமாக தேவனை புண்படுத்துகிறான் என்றும், தேவனுடைய பார்வையில் தாழ்ந்தவனாகவும் மோசமானவனாகவும் இருக்கிறான் என்றும் தேவன் அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். இவை, இந்த இரண்டு வகையான மனிதர்களுக்கு தேவன் அளித்த வரையறைகள் ஆகும். இவை, இந்த இரண்டு வகையான மனிதர்களுக்கான தேவனுடைய அணுகுமுறைகள் ஆகும். இவை, இந்த இரண்டு வகையான ஜனங்களின் மதிப்பு மற்றும் நிலைப்பாடு பற்றிய தேவனுடைய வெளிப்பாடு ஆகும். தேவன் யோபுவை தனது ஊழியக்காரன் என்று அழைத்த போதிலும், தேவனுடைய பார்வையில் இந்த ஊழியக்காரன் பிரியமானவனாக இருந்தான். மற்றவர்களுக்காக ஜெபிக்கவும், அவர்களுடைய தவறுகளை மன்னிக்கவும் அதிகாரம் பெற்றான். இந்த ஊழியக்காரன் தேவனிடம் நேரடியாகப் பேசவும், தேவனுக்கு முன்பாக நேரடியாக வரவும் முடிந்தது. அவனுடைய அந்தஸ்து மற்றவர்களை விட உயர்ந்ததாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது. தேவன் சொல்லும் “ஊழியக்காரன்” என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் இதுதான். தேவனுக்குப் பயந்ததாலும், தீமையைத் தவிர்த்ததாலும் யோபுவுக்கு இந்த சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. மற்றவர்கள் தேவனால் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்படாததற்குக் காரணம், அவர்கள் தேவனுக்கு அஞ்சாதது மற்றும் தீமையைத் தவிர்க்காதது ஆகும். தேவனுடைய இந்த இரு வேறுபட்ட மனநிலைகள் இரண்டு வகையான மனிதர்களுக்கான அவருடைய அணுகுமுறைகளாகும்: தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். அவருடைய பார்வையில் விலை உயர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். அதே சமயம் முட்டாள்கள் தேவனுக்கு அஞ்சாதவர்கள், தீமையைத் தவிர்ப்பதற்கு இயலாதவர்கள், தேவனுடைய தயவைப் பெறமாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் தேவனால் வெறுக்கப்படுகிறார்கள், கண்டிக்கப்படுகிறார்கள் மற்றும் தேவனுடைய பார்வையில் தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

தேவன் யோபுவுக்கு அதிகாரம் அளிக்கிறார்

யோபு தன் நண்பர்களுக்காக ஜெபம் செய்தார், அதன் பிறகு, யோபுவின் ஜெபங்களின் காரணமாக, தேவன் அவர்களின் முட்டாள்தனத்திற்கு ஏற்றவாறு அவர்களைக் கையாளவில்லை—அவர் அவர்களை தண்டிக்கவில்லை அல்லது அவர்கள் மீது எந்த தண்டனையும் கொடுக்கவில்லை. அது ஏன்? தேவனுடைய ஊழியரான யோபு அவர்களுக்காக செய்த ஜெபங்கள் அவருடைய காதுகளை எட்டியதால் தான். யோபுவின் ஜெபங்களை தேவன் ஏற்றுக்கொண்டதால் அவர் அவர்களை மன்னித்தார். எனவே, இதில் நாம் எதைப் பார்க்கிறோம்? தேவன் ஒருவரை ஆசீர்வதிக்கும்போது, அவர் அவர்களுக்கு வெகுமதிகளை அளிக்கிறார். பொருள் மட்டுமல்ல: தேவன் அவர்களுக்கு அதிகாரத்தையும் அளிக்கிறார். மற்றவர்களுக்காக ஜெபிக்க அவர்களுக்கு உரிமை அளிக்கிறார். அந்த ஜெபங்களைக் கேட்பதால் அந்த ஜனங்களின் மீறுதல்களை தேவன் மறந்து கவனித்துக் கொள்கிறார். தேவன் யோபுவுக்கு அளித்த அதிகாரம் இதுதான். அவர்களுடைய கண்டனத்தைத் தடுக்க யோபுவின் ஜெபங்களின் மூலம், அந்த முட்டாள்தனமான ஜனங்கள் மீது யேகோவா தேவன் அவமானத்தைக் கொண்டுவந்தார்—இது எலிபாஸுக்கும் மற்றவர்களுக்கும் அவர் கொடுத்த விஷேசித்த தண்டனையாகும்.

யோபு மீண்டும் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார், சாத்தானால் மீண்டும் ஒருபோதும் குற்றம் சாட்டப்படுவதில்லை

யேகோவா தேவனுடைய வார்த்தைகளில், “நீங்கள் என் ஊழியக்காரனாகிய யோபு பேசினது போல் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.” என்ற வார்த்தைகள் உள்ளன. யோபு என்ன சொன்னார்? நாம் முன்பு பேசியதைப் போலவே யோபு புத்தகத்தில் இருக்கும் பல பக்கங்களில் உள்ள வார்த்தைகள் யோபு பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளின் பல பக்கங்களில், தேவனைப் பற்றி யோபுவுக்கு எந்தவிதமான புகார்களும் சந்தேகங்களும் ஒருபோதும் வரவில்லை. அவர் முடிவுக்காக மட்டுமே காத்திருக்கிறார். இந்த காத்திருப்புதான் கீழ்ப்படிதலுக்கான அவரது அணுகுமுறை ஆகும். இதன் விளைவாக, அவர் தேவனிடம் சொன்ன வார்த்தைகளின் விளைவாக, யோபு தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவர் சோதனைகளைச் சகித்து, கஷ்டங்களை அனுபவித்தபோது, தேவன் அவருடன் இருந்தார். தேவனுடைய பிரசன்னத்தால் அவருடைய கஷ்டங்கள் குறையவில்லை என்றாலும், தேவன் தாம் பார்க்க விரும்புவதைக் கண்டார். மேலும் அவர் கேட்க விரும்பியதைக் கேட்டார். யோபுவின்ஒவ்வொரு செயலும் வார்த்தைகளும் தேவனுடைய கண்களையும் காதுகளையும் அடைந்தன. தேவன் கேட்டார், அவர் கண்டார்—இது உண்மையாகும். தேவனைப் பற்றிய யோபுவின்அறிவும், அந்தக் காலகட்டத்தில், சோதனையின் போது, தேவனைப் பற்றிய அவரது எண்ணங்களும், உண்மையில் இன்றைய ஜனங்களைப் போலவே குறிப்பிட்டவை அல்ல, ஆனால் அந்தக் காலத்தின் சூழலில், யோபு சொன்ன எல்லாவற்றையும் தேவன் அங்கீகரித்தார். ஏனெனில், அத்துடன் அவர் வெளிப்படுத்திய மற்றும் வெளிக்காட்டிய அவருடைய நடத்தை மற்றும் அவரது இருதயத்தில் உள்ள எண்ணங்கள் ஆகியவை தேவனுடைய தேவைகளுக்கு போதுமானவையாக இருந்தன. யோபு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில், அவர் மனதில் நினைத்ததும் செய்யத் தீர்மானித்ததும் தேவனுக்கு ஒரு முடிவைக் காட்டியது. இது தேவனுக்கு திருப்திகரமாக இருந்தது. அதன் பிறகு தேவன் யோபுவின் சோதனைகளை எடுத்துக் கொண்டார். யோபு தனது கஷ்டங்களிலிருந்து வெளியே வந்தார். மீண்டும் அவருக்கு நேராத வண்ணம் சோதனைகள் அவரை விட்டுப் போய்விட்டன. ஏனென்றால், யோபு ஏற்கனவே சோதனைகளுக்கு ஆளானார். இந்த சோதனைகளின் போது உறுதியாக நின்று, சாத்தானை பூரணமாக ஜெயித்ததால், தேவன் அவருக்கு தகுதியான ஆசீர்வாதங்களை வழங்கினார். யோபு 42:10, 12-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, யோபு மீண்டும் ஒரு முறை ஆசீர்வதிக்கப்பட்டார். அவர் முதன்முதலில் இருந்ததைவிட அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டார். இந்த நேரத்தில் சாத்தான் விலகிவிட்டான். அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை. எதுவும் செய்யவில்லை. அதுமுதல் சாத்தான் யோபுவிடம் தலையிடவோ அவரைத் தாக்கவோ இல்லை. யோபுவிற்கான தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு எதிராக சாத்தான் அதன் பின் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை.

தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் யோபு தனது ஜீவிதத்தின் பிற்பகுதியை செலவிடுகிறார்

அக்காலத்தில் அவருடைய ஆசீர்வாதம் செம்மறி ஆடுகள், கால்நடைகள், ஒட்டகங்கள், பொருள் சொத்துக்கள் மற்றும் பல என இவற்றுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், யோபுக்கு கொடுக்க தம் இருதயத்தில் தேவன் விரும்பிய ஆசீர்வாதங்கள் இதைவிட மிக அதிகம். அந்த நேரத்தில், யோபுவுக்கு தேவன் எத்தகைய நித்திய வாக்குத்தத்தங்களை வழங்க விரும்பினார்? யோபுவின்ஆசீர்வாதங்களில், தேவன் அவரது முடிவைக் குறிப்பிடவில்லை அல்லது அதைத் தொடவில்லை. தேவனுடைய இருதயத்திற்குள் யோபு எத்தகைய முக்கியத்துவத்தை அல்லது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், மொத்தத்தில் தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை நிதானமாக வழங்கினார். யோபுவின் முடிவை தேவன் அறிவிக்கவில்லை. இதன் அர்த்தம் என்ன? அந்த நேரத்தில், தேவனுடைய திட்டம் மனிதனுடைய முடிவை அறிவிக்கும் கட்டத்தை இன்னும் எட்டாத நிலையில், அந்தத் திட்டம் அவருடைய கிரியையின் இறுதிக் கட்டத்தில் இன்னும் நுழையவில்லை என்பதால், தேவன் முடிவைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மனிதனுக்கு பொருள் ஆசீர்வாதங்களை மட்டுமே வழங்கினார். இதன் அர்த்தம் என்னவென்றால், யோபுவின்ஜீவிதத்தின் பிற்பகுதி தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடந்துவிட்டது என்பதாகும். இதுவே அவரை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தியது—ஆனால் அவர்களைப் போலவே அவர் வயதாகிவிட்டார். எந்த சாதாரண மனிதரையும் போலவே அவர் உலகை விட்டு விடைபெறும் நாள் வந்தது. இவ்வாறு அது பதிவு செய்யப்பட்டுள்ளது “யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்” (யோபு 42:17). இங்கே “பூரணவயதுள்ளவராய் மரித்தார்” என்பதன் அர்த்தம் என்ன? தேவன் ஜனங்களின் முடிவை அறிவிப்பதற்கு முந்தைய யுகத்தில், தேவன் யோபுவின் ஆயுட்காலத்தை நிர்ணயித்திருந்தார். அந்த வயதை எட்டியபோது, இயற்கையாகவே இந்த உலகத்திலிருந்து யோபு வெளியேற அவர் அனுமதித்தார். யோபுவின்இரண்டாவது ஆசீர்வாதம் முதல் அவர் இறக்கும் வரையில், தேவன் அதன் பின் கஷ்டங்களைக் கொடுக்கவில்லை. தேவனைப் பொறுத்தவரையில், யோபுவின்மரணம் இயற்கையானது மற்றும் அவசியமானது ஆகும். இது மிகவும் சாதாரணமான ஒன்று. இது தீர்ப்போ கண்டனமோ அல்ல. அவர் உயிருடன் இருந்தபோது, யோபு தேவனை வணங்கி அவருக்கு அஞ்சினார். அவர் இறந்ததைத் தொடர்ந்து அவர் எந்த வகையான முடிவைப் பெற்றார் என்பது குறித்து, தேவன் எதுவும் கூறவில்லை. அதைப் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தேவன் என்ன சொல்கிறார் மற்றும் செய்கிறார் என்பதில் தகுதியின் வலுவான உணர்வு உள்ளது. அவருடைய வார்த்தைகள் மற்றும் செயல்களின் உள்ளடக்கம் மற்றும் கோட்பாடுகள் அவருடைய கிரியையின் நிலை மற்றும் அவர் கிரியை செய்யும் காலத்திற்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. தேவனைப் போன்ற ஒருவருக்கு யோபுவைப் போன்ற ஒருவரைப் பற்றி என்ன முடிவு இருந்தது? தேவன் தனது இருதயத்தில் ஏதேனும் ஒரு முடிவை வைத்திருந்தாரா? நிச்சயமாக தேவன் முடிவை வைத்திருந்தார்! இது மனிதனால் அறியப்படவில்லை, தேவன் மனிதனிடம் சொல்ல விரும்பவில்லை, மனிதனிடம் சொல்லும் எண்ணம் அவருக்கு இல்லை என்பது மட்டுமே ஆகும். இவ்வாறு, மேலோட்டமாகப் பார்த்தால், யோபு பூரணவயதுள்ளவராய் மரித்தார், யோபுவின்ஜீவிதமும் அப்படியானது தான்.

அவரது ஜீவ காலத்தில் யோபு வழங்கிய விலைக்கிரையம்

யோபு மதிப்புமிக்க ஜீவிதத்தை ஜீவித்தாரா? அந்த மதிப்பு எங்கே? அவர் மதிப்புமிக்க ஜீவிதம் ஜீவித்தார் என்று ஏன் கூறப்படுகிறது? மனிதனுக்கு, அவரைப் பற்றிய மதிப்பு என்ன? மனிதனுடைய பார்வையில், சாத்தானுக்கும் உலக ஜனங்களுக்கும் முன்பாக, தேவனுக்கு ஒரு மகத்தான சாட்சி அளிப்பதில், தேவன் இரட்சிக்க விரும்பும் மனிதகுலத்தை யோபு பிரதிநிதித்துவப்படுத்தினார். தேவனுடைய ஒரு ஜீவனால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையை அவர் நிறைவேற்றினார். தேவன் இரட்சிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக செயல்பட்டு, தேவனை நம்புவதன் மூலம் சாத்தானை ஜெயிப்பது முற்றிலும் சாத்தியம் என்பதை ஜனங்கள் காண அனுமதித்தார். தேவன் அவருக்கு கொடுத்த மதிப்பு என்ன? தேவனைப் பொறுத்தவரையில், யோபுவின் ஜீவிதத்தின் மதிப்பு தேவனுக்கு பயப்படுவதற்கும், தேவனை வணங்குவதற்கும், தேவனுடைய செயல்களுக்கு சாட்சி அளிப்பதற்கும், தேவனுடைய கிரியைகளைப் புகழ்ந்து பேசுவதற்கும், தேவனுக்கு ஆறுதலையும், அனுபவிக்கக்கூடிய ஒன்றை கொண்டுவருவதற்குமான யோபுவின்திறனில் உள்ளது. தேவனைப் பொறுத்தவரையில், யோபுவின் ஜீவிதத்தின் மதிப்பானது, யோபு மரிப்பதற்கு முன்பாக எவ்வாறு சோதனைகளை அனுபவித்தார், சாத்தானை ஜெயித்தார், மேலும் சாத்தானுக்கும் உலக ஜனங்களுக்கும் முன்பாக தேவனுக்கு சாட்சி அளித்து, மனிதர்களிடையே தேவனை மகிமைப்படுத்தினார், தேவனுடைய இருதயத்தை ஆறுதல்படுத்தினார், தேவனுடைய ஆர்வமுள்ள இருதயத்தை ஒரு முடிவைக் காணவும் நம்பிக்கையைப் பார்க்கவும் அனுமதித்தார் என்பதில் உள்ளது. தேவனுடைய சாட்சியில் உறுதியாக நிற்பதற்கும், மனிதகுலத்தை நிர்வகிக்கும் தேவனுடைய கிரியையில், தேவனுடைய சார்பாக சாத்தானை வெட்கப்படுத்துவதற்கும் யோபுவின் சாட்சி ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. இது யோபுவின்ஜீவிதத்தின் மதிப்பு அல்லவா? யோபு தேவனுடைய இருதயத்திற்கு ஆறுதலளித்தார். மகிமைப்படுத்தப்பட்டதன் மகிழ்ச்சியை தேவனுக்கு முன்னறிவித்தார். தேவனுடைய ஆளுகைத் திட்டத்திற்கு ஒரு அற்புதமான தொடக்கத்தை வழங்கினார். இந்த கட்டத்தில் இருந்து, யோபுவின் நாமம் தேவனை மகிமைப்படுத்துவதற்கான அடையாளமாகவும், சாத்தான் மீதான மனிதகுலத்தின் வெற்றியின் அடையாளமாகவும் மாறியது. யோபு தனது ஜீவித காலத்தில் அனுபவித்த விஷயங்களும், சாத்தான் மீது அவர் பெற்ற குறிப்பிடத்தக்க ஜெயமும், தேவனால் எப்போதும் போற்றப்படும். அவருடைய பரிபூரணம், நேர்மை மற்றும் தெய்வ பயம் ஆகியவை அடுத்த தலைமுறையினரால் வணங்கப்படும். அவர் எப்போதும் ஒரு குறைபாடற்ற, ஒளிரும் முத்து போல தேவனால் போற்றப்படுவார். அதைப் போலவே அவர் மனிதனாலும் பொக்கிஷமாக மதிப்பிடப்படுவார்!

அடுத்ததாக, நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் போது நிகழும் தேவனுடைய கிரியையைப் பார்ப்போம்.

ஈ. நியாயப்பிரமான யுகத்தின் கட்டளைகள்

பத்து கட்டளைகள்

பலிபீடங்களை கட்டுவதற்கான கட்டளைகள்

ஊழியர்களை நடத்துவதற்கான கட்டளைகள்

களவு மற்றும் இழப்பீட்டுக்கான கட்டளைகள்

ஓய்வின் வருஷம் மற்றும் மூன்று பண்டிகைகளை ஆசரித்தல்

ஓய்வு நாளுக்கான கட்டளைகள்

பலிகளுக்கான கட்டளைகள்

தகன பலிகள்

போஜன பலிகள்

சமாதான பலிகள்

பாவ நிவாரண பலிகள்

குற்ற நிவாரண பலிகள்

ஆசாரியர்கள் செலுத்தும் பலிகளுக்கான கட்டளைகள் (ஆரோன் மற்றும் அவரது மகன்கள் செலுத்த உத்தரவிடப்படுகிறார்கள்)

ஆசாரியர்கள் செலுத்தும் தகன பலிகள்

ஆசாரியர்கள் செலுத்தும் போஜன பலிகள்

ஆசாரியர்கள் செலுத்தும் பாவ நிவாரண பலிகள்

ஆசாரியர்கள் செலுத்தும் குற்ற நிவாரண பலிகள்

ஆசாரியர்கள் செலுத்தும் சமாதான பலிகள்

ஆசாரியர்கள் பலியைப் புசிப்பதற்கான கட்டளைகள்

சுத்தமான மற்றும் அசுத்தமான விலங்குகள் (புசிக்கக் கூடிய மற்றும் புசிக்கக் கூடாத விலங்குகள்)

பிரசவத்துக்குப் பின் பெண்களை சுத்திகரிப்பதற்கான கட்டளைகள்

குஷ்டரோகத்தின் சோதனைக்கான தரநிலைகள்

குஷ்டரோகத்திலிருந்து குணமடைந்தவர்களுக்கான கட்டளைகள்

தீட்டுப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கான கட்டளைகள்

அசாதாரண வெளியேற்றங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கான கட்டளைகள்

வருடத்திற்கு ஒரு முறை ஆசரிக்கப்பட வேண்டிய பாவ நிவிர்த்தி செய்யும் நாள்

கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகளை அறுப்பதற்கான கட்டளைகள்

புறஜாதியினரின் அருவறுப்பான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான தடை (உடலுறவு கொள்ளாதது மற்றும் பல)

ஜனங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைகள் (“நீங்கள் பரிசுத்தமாக இருங்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய யோகோவா நானும் பரிசுத்தமாக இருக்கிறேன்.”)

தங்கள் குழந்தைகளை மோளேக்கிற்கு பலியிடுபவர்களுக்கான மரணதண்டனை

விபச்சார குற்றத்தின் தண்டனைக்கான கட்டளைகள்

ஆசாரியர்கள் கவனிக்க வேண்டிய கட்டளைகள் (அவர்களின் அன்றாட நடத்தைக்கான கட்டளைகள், பரிசுத்த விஷயங்களை உட்கொள்வதற்கான கட்டளைகள், பலியிடுவதற்கான கட்டளைகள் மற்றும் பல)

கவனிக்க வேண்டிய விருந்துகள் (ஓய்வு நாள், பஸ்கா, பெந்தெகொஸ்தே நாள், பாவநிவிர்த்தி நாள், மற்றும் பல)

பிற கட்டளைகள் (விளக்குகளை ஏற்றுதல், யூபிலி வருஷம், நிலத்தின் மீட்பு, சத்தியம் பண்ணுதல், தசமபாகம் வழங்குதல் மற்றும் பல)

நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்கான கட்டளைகள் அனைத்தும் மனிதகுலத்தின் தேவனுடைய வழிநடத்துதலின் உண்மையான சான்றாக இருக்கிறது

எனவே, நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்கான இந்த கட்டளைகளையும் கொள்கைகளையும் நீங்கள் படித்திருக்கிறீர்களா? கட்டளைகள் ஒரு பரந்த அளவை உள்ளடக்கியதா? முதலாவதாக, அவை பத்து கட்டளைகளை உள்ளடக்குகின்றன. அதன் பிறகு பலிபீடங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான கட்டளைகள் மற்றும் பல உள்ளன. ஓய்வு நாளை ஆசரிப்பதற்கும் மூன்று பண்டிகைகளை ஆசரிப்பதற்கும் கட்டளைகளைப் பின்பற்றுகின்றன. அதன் பிறகு பலிகளுக்கான கட்டளைகள் உள்ளன. எத்தனை வகையான பலிகள் உள்ளன என்று பார்த்தீர்களா? சர்வாங்க தகன பலிகள், போஜனப் பலிகள், சமாதானப் பலிகள், பாவ நிவாரண பலிகள் போன்றவை உள்ளன. அவற்றைத் தொடர்ந்து, ஆசாரியர்களின் பலி, தகன பலிகள் மற்றும் ஆசாரியர்களின் போஜனப் பலிகள் மற்றும் பிற வகையான பலிகள் உள்ளிட்ட கட்டளைகள் உள்ளன. எட்டாவதாக ஆசாரியர்களுக்கான பலியைப் புசிக்கும் கட்டளைகள் உள்ளன. அதன் பிறகு, ஜனங்களின் ஜீவிதத்தில் எதைக் கவனிக்க வேண்டும் என்பதற்கான கட்டளைகள் உள்ளன. ஜனங்களின் ஜீவிதத்தின் பல அம்சங்களுக்கான நிபந்தனைகள் உள்ளன. அதாவது அவர்கள் எதைப் புசிக்கலாம் அல்லது புசிக்கக்கூடாது என்பதற்கான கட்டளைகள், பிரசவத்தைத் தொடர்ந்து பெண்களைச் சுத்திகரிப்பது மற்றும் தொழுநோயால் குணமடைந்தவர்களைச் சுத்திகரிப்பதற்கான கட்டளைகள் உள்ளன. இந்த கட்டளைகளில், தேவன் நோயைப் பற்றி பேசும் அளவிற்கு செல்கிறார். ஆடுகளையும் கால்நடைகளையும் மற்றும் பிற ஜீவங்களை அறுப்பதற்கான கட்டளைகள் கூட உள்ளன. ஆடுகளும் கால்நடைகளும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவை. தேவன் உனக்குச் சொன்னது போல அவற்றை நீ அறுக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளுக்கு சந்தேகம் இல்லாமல், தேவனால் கட்டளையிடப்பட்டபடி செயல்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி சரியானது ஆகும். நிச்சயமாக ஜனங்களுக்கு அது நன்மை பயக்கும்! ஓய்வு நாள், பஸ்கா மற்றும் அதைப் போன்ற பல பண்டிகைகளும் கட்டளைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும்—இவை அனைத்தையும் தேவன் சொன்னார். இறுதியானவற்றைப் பார்ப்போம்: பிற கட்டளைகள்—விளக்குகளை ஏற்றுதல், யூபிலி வருஷம், நிலத்தை மீட்பது, சத்தியம் செய்வது, தசமபாகம் செலுத்துவது போன்றவை. இவை பரந்த கருத்துக்களை உள்ளடக்கியதா? முதலில் பேசப்பட வேண்டியது ஜனங்களின் பலிகளின் பிரச்சனை ஆகும். பின்னர் களவு மற்றும் இழப்பீடு வழங்குவதற்கான கட்டளைகளைப் பற்றி மற்றும் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது பற்றி பேச வேண்டும்… ஜீவிதத்தின் ஒவ்வொரு விவரங்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. தேவன் தனது ஆளுகைத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ கிரியையைத் தொடங்கியபோது, மனிதன் பின்பற்ற வேண்டிய பல கட்டளைகளை அவர் வகுத்தார். இந்த கட்டளைகள் மனிதனை பூமியில் மனிதனுடைய இயல்பான ஜீவிதத்தை நடத்த அனுமதிக்கும் பொருட்டு இருந்தன. இது தேவனிடமிருந்து பிரிக்க முடியாத மனிதனுடைய இயல்பான ஜீவிதம் மற்றும் அவரது வழிகாட்டுதல் ஆகும். பலிபீடங்களை எவ்வாறு உருவாக்குவது, பலிபீடங்களை எவ்வாறு அமைப்பது என்று தேவன் முதலில் மனிதனிடம் சொன்னார். அதன்பிறகு, அவர் எவ்வாறு பலி செய்ய வேண்டும் என்று மனிதனிடம் சொன்னார். மனிதன் எப்படி ஜீவிக்க வேண்டும் என்பதை வகுத்தார்—ஜீவிதத்தில் அவர் எதில் கவனம் செலுத்த வேண்டும், அவர் எதைக் கடைபிடிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை வகுத்தார். தேவன் மனிதனுக்காக அமைத்த அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தன. இந்த பழக்கவழக்கங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டளைகளுடன் அவர் ஜனங்களின் நடத்தையை தரப்படுத்தினார். அவர்களின் ஜீவிதத்தை வழிநடத்தினார். தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றத் தொடங்க அவர்களை வழிநடத்தினார். தேவனுடைய பலிபீடத்தின் முன் வர அவர்களுக்கு வழிகாட்டினார். ஒழுக்கம், ஒழுங்குமுறை மற்றும் அமைதி கொண்ட மனிதனுக்காக தேவன் உருவாக்கிய எல்லாவற்றின் மத்தியிலும் ஒரு ஜீவிதத்தை ஜீவிக்க அவர்களுக்கு வழிகாட்டினார். மனிதனுக்கு வரம்புகளை நிர்ணயிக்க தேவன் முதலில் இந்த எளிய கட்டளைகளையும் கொள்கைகளையும் பயன்படுத்தினார். இதனால் பூமியில் தேவனை வணங்கும் ஒரு சாதாரண ஜீவிதம் மனிதனுக்கு இருக்கும். ஒரு இயல்பான ஜீவிதம் மனிதனிடம் இருக்கும். அவரது ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தின் தொடக்கத்தின் குறிப்பிட்ட உள்ளடக்கம் இதுதான். கட்டளைகள் மற்றும் கற்பனைகள் மிகவும் பரந்த உள்ளடக்கத்தைக் கொண்டது. அவை நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் போது மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட தேவனுடைய வழிகாட்டுதலின் பிரத்தியேகங்கள் ஆகும். அவை நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்கு முன்னர் வந்த ஜனங்களால் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது. அவை நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தேவனால் செய்யப்பட்ட கிரியையின் பதிவு ஆகும். அவை தேவனுடைய தலைமைத்துவத்திற்கும் எல்லா மனிதர்களுக்குமான அவருடைய வழிகாட்டுதலுக்கும் உண்மையான சான்றாகும்.

தேவனுடைய போதனைகள் மற்றும் ஏற்பாடுகளிலிருந்து மனிதகுலம் எப்போதும் பிரிக்க முடியாத ஒன்றாகும்

இந்த கட்டளைகளில், தேவனுடைய கிரியையின் மீதும், தேவனுடைய ஆளுகையின் மீதும், மனிதகுலத்தின் மீதும் உள்ள தேவனுடைய அணுகுமுறையானது தீவிரமானது, மனசாட்சியுள்ளது, கடுமையானது மற்றும் பொறுப்பானது என்பதைக் காண்கிறோம். அவர் மனிதர்களிடையே செய்யவேண்டிய கிரியையை தனது படிகளின்படி, சிறிதும் வேறுபாடின்றி செய்கிறார். தம் வார்த்தைகளை, மனிதகுலத்திடம் சிறிதளவு பிழையோ, விலக்கலோ இல்லாமல் பேசுகிறார். தேவனுடைய தலைமையிலிருந்து அவர் பிரிக்கமுடியாதவர் என்பதை மனிதன் காண அனுமதிக்கிறார். தேவன் செய்வதும் சொல்வதும் மனிதகுலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறார். அடுத்த யுகத்தில் மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், ஆதியில்—நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் போது—தேவன் இந்த எளிய காரியங்களைச் செய்தார். தேவனைப் பொறுத்தவரையில், அந்த யுகத்தில் தேவன், உலகம் மற்றும் மனிதகுலம் பற்றிய ஜனங்களின் கருத்துக்கள் சுருக்கமாகவும், தெளிவற்றதாகவும் இருந்தன. அவற்றில் சில யோசனைகளும் நோக்கங்களும் நிறைவேறிய போதிலும், அவை அனைத்தும் தெளிவற்றவை மற்றும் தவறானவை ஆகும். இதனால் மனிதகுலம் தேவனுடைய போதனைகள் மற்றும் அவர்களுக்கான ஏற்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதது ஆகும். ஆதிகால மனிதகுலத்திற்கு இது எதுவும் தெரியாது. ஆகவே மனிதன் ஜீவிப்பதற்கான மிக மேலோட்டமான மற்றும் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து, ஜீவிதக்குத் தேவையான கட்டளைகளை மனிதனுக்கு தேவன் கற்பிக்கத் தொடங்க வேண்டியிருந்தது. இந்த விஷயங்களை மனிதனுடைய இருதயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி, படிப்படியாக தேவனை புரிந்துக்கொள்ள, தேவனுடைய தலைமையைப் படிப்படியாகப் உணர்ந்துக்கொள்ள புரிந்துக்கொள்ள, வார்த்தைகளாக இருந்த கட்டளைகள் மூலமாகவும், கற்பனைகள் மூலமாகவும் தேவன் செய்தார். இந்த விளைவை அடைந்த பிறகு தான், தேவன் பின்னர் செய்யவேண்டிய கிரியையை சிறிது சிறிதாக செய்ய முடிந்தது. ஆகவே இந்த கட்டளைகளும், நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் போது தேவன் செய்த கிரியையும் மனிதகுலத்தை காப்பாற்றுவதற்கான அவரது கிரியையின் அடித்தளம், மற்றும் தேவனுடைய ஆளுகைத் திட்டத்திற்கான கிரியையின் முதல் கட்டம் ஆகும். நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் கிரியைக்கு முன்னர், தேவன் ஆதாம், ஏவாள் மற்றும் அவர்களின் சந்ததியினருடன் பேசியிருந்தாலும், அந்த கட்டளைகளும் போதனைகளும் மனிதனுக்கு ஒவ்வொன்றாக வழங்கப்படும் அளவுக்கு முறையானவை அல்லது குறிப்பிட்டவை அல்ல. அவை எழுதப்படவில்லை, அவை கட்டளைகளாக மாறவில்லை. ஏனென்றால், அந்த நேரத்தில், தேவனுடைய திட்டம் அவ்வளவு தூரம் செல்லவில்லை. தேவன் மனிதனை இந்த நடவடிக்கைக்கு இட்டுச் சென்றபோதுதான், அவர் நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் இந்த கட்டளைகளைப் பேச ஆரம்பித்தார். அவற்றை மனிதனிடம் செயல்படுத்தத் தொடங்கினார். இது ஒரு அவசியமான செயல் மற்றும் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். இந்த எளிய பழக்கவழக்கங்கள் மற்றும் கட்டளைகள் மனிதனுக்கான தேவனுடைய நிர்வாகக் கிரியைகளின் படிகளையும், அவருடைய ஆளுகைத் திட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய ஞானத்தையும் காட்டுகிறது. தொடங்குவதற்கு என்ன உள்ளடக்கம் மற்றும் வழியை பயன்படுத்துவது என்றும், தொடர எதைப் பயன்படுத்துவது என்றும், நிறைவு செய்ய எதைப் பயன்படுத்துவது என்றும், அதற்கு சாட்சி அளிக்கும் ஒரு கூட்டத்தை அவர் பெற முடியும் என்பதையும், அவரைப் போன்ற மனநிலையோடு இருக்கும் ஒரு கூட்டத்தைப் பெற முடியும் என்பதையும் தேவன் அறிவார். மனிதனுக்குள் இருப்பதை அவர் அறிவார். மனிதனிடம் இல்லாததை அவர் அறிவார். அவர் என்ன வழங்க வேண்டும் என்பதையும், மனிதனை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதையும் அவர் அறிவார். மேலும் மனிதன் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதையும் அவர் அறிவார். மனிதன் ஒரு கைப்பாவை போன்றவன்: தேவனுடைய சித்தத்தைப் பற்றி அவனுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை என்றாலும், இன்று வரை தேவனுடைய நிர்வாகக் கிரியைகளால் வழிநடத்தப்படுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவர் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தேவனுடைய இருதயத்தில் எந்தவிதமான கவலையும் இல்லை. அவருடைய இருதயத்தில் மிகத் தெளிவான மற்றும் தெளிவான திட்டம் இருந்தது. தனது படிகளுக்கும் தனது திட்டத்திற்கும் ஏற்ப தான் செய்ய விரும்பிய கிரியையைச் செய்தார். மேலோட்டமானவையிலிருந்து ஆழ்ந்த நிலைக்கு முன்னேறினார். பின்னர் செய்ய வேண்டிய கிரியையை அவர் சுட்டிக்காட்டவில்லை என்றாலும், அவருடைய அடுத்தடுத்த கிரியைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவருடைய திட்டத்தின்படி நிச்சயமாக முன்னேறுகின்றன. இது தேவன் வைத்திருப்பதற்கும் தேவன் இருப்பதற்குமான ஒரு வெளிப்பாடாகும். இது தேவனுடைய அதிகாரமாகும். அவரது ஆளுகைத் திட்டத்தின் எந்த கட்டத்தில் அவர் கிரியைச் செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய மனநிலையும் அவரது சாராம்சமும் அவரை மட்டுமே குறிக்கின்றன. இது முற்றிலும் உண்மை. யுகத்தைப் பொருட்படுத்தாமல், அல்லது கிரியையின் நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒருபோதும் மாறாத விஷயங்கள் உள்ளன: தேவன் எந்த வகையான ஜனங்களை நேசிக்கிறார், அவர் எந்த வகையான ஜனங்களை வெறுக்கிறார், அவருடைய மனநிலை மற்றும் அவரிடம் உள்ள அனைத்தும், அவரும் இருபோதும் மாறாது. நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்கான கிரியையின் போது, தேவன் நிறுவிய இந்த கட்டளைகளும் கோட்பாடுகளும், இன்று ஜனங்களுக்கு மிகவும் எளிமையானவை மற்றும் மேலோட்டமானவை என்று தோன்றினாலும், அவற்றைப் புரிந்துக்கொள்வதும் சாதிப்பதும் எளிதானது என்றாலும், அவற்றில் இன்னும் தேவனுடைய ஞானமும் தேவனுடைய மனநிலையும், தேவனும், அவரிடம் உள்ளதும் இருக்கின்றது. இந்த எளிய கட்டளைகளுக்குள் தேவனுடைய பொறுப்பும் மனிதகுலத்தின் அக்கறையும் வெளிப்படுத்தப்படுகின்றன. அத்துடன் அவருடைய எண்ணங்களின் நேர்த்தியான பொருளையும், இதனால் தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார், எல்லாவற்றையும் அவருடைய கரத்தால் கட்டுப்படுத்துகிறார் என்ற உண்மையை மனிதன் உண்மையாக உணர அனுமதிக்கிறது. மனிதகுல எஜமானர்களுக்கு எவ்வளவு அறிவு இருந்தாலும், அல்லது எத்தனை கோட்பாடுகள் அல்லது மர்மங்களை அவர்கள் புரிந்துக்கொண்டாலும், தேவனைப் பொருத்தவரையில், இவற்றில் எதுவுமே அவருடைய ஏற்பாட்டையும், மனிதகுலத்தின் தலைமைத்துவத்தையும் மாற்றும் திறன் கொண்டவை அல்ல. தேவனுடைய வழிகாட்டுதலிலிருந்தும் தேவனுடைய தனிப்பட்ட கிரியையிலிருந்தும் மனிதகுலம் எப்போதும் பிரிக்க முடியாததாக இருக்கும். மனிதனுக்கும் தேவனுக்கும் இடையிலான பிரிக்க முடியாத உறவு இதுதான். தேவன் உனக்கு ஒரு கட்டளையை அளிக்கிறாரா, அல்லது ஒரு ஒழுங்குமுறையை அளிக்கிறாரா அல்லது அவருடைய சித்தத்தைப் புரிந்துக்கொள்ள உனக்கு உண்மையை அளிக்கிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் என்ன செய்தாலும், தேவனுடைய நோக்கம் மனிதனை ஒரு அழகான அடுத்த நாளுக்குள் வழிநடத்துவதாகும். தேவன் சொன்ன வார்த்தைகள் மற்றும் அவர் செய்யும் கிரியை ஆகிய இரண்டும் அவருடைய பொருளின் ஒரு அம்சத்தின் வெளிப்பாடு, மற்றும் அவரது மனநிலையின் ஒரு அம்சத்தின் வெளிப்பாடு மற்றும் அவருடைய ஞானம் ஆகும். அவை அவருடைய ஆளுகைத் திட்டத்தின் இன்றியமையாத படியாகும். இதை கவனிக்கக்கூடாது! தேவனுடைய சித்தமானது அவர் செய்வதில் இருக்கிறது. தவறான கருத்துக்களுக்கு தேவன் அஞ்சமாட்டார். அவரைப் பற்றிய எந்த மனிதனுடைய கருத்துக்களுக்கும் அல்லது எண்ணங்களுக்கும் அவர் பயப்படுவதில்லை. அவர் தனது கிரியையை மட்டுமே செய்கிறார் மற்றும் எந்தவொரு மனிதராலும், விஷயத்தாலும், பொருளாலும் கட்டுப்படுத்தப்படாத, அவருடைய ஆளுகைத் திட்டத்தின்படி தனது ஆளுகையைத் தொடர்கிறார்.

நல்லது. இன்றைக்கு இது போதுமானதாகும். அடுத்தமுறை சந்திப்போம்!

நவம்பர் 9, 2013

முந்தைய: தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I

அடுத்த: தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது

தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் முடிவுக்கு வருகிறது, அவர் தோன்றுதலைத் தேடுகிறவர்கள் அனைவருக்கும் ராஜ்யத்தின் கதவு ஏற்கனவே...

நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்

எல்லா மக்களிடமும் இருக்கின்ற பொதுவான பிரச்சனை என்னவென்றால், அவர்கள் சத்தியத்தை புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அதை கைக்கொள்ளத்...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக