தேவனே தனித்துவமானவர் IX

தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார் (III)

இந்தக் காலகட்டத்தில், தேவனை அறிவது தொடர்பான பல விஷயங்களைப் பற்றி நாம் பேசியுள்ளோம். சமீபத்தில் இது தொடர்பான ஒரு தலைப்பைப் பற்றிப் பேசினோம். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாகும். அந்தத் தலைப்பு என்னவாக இருக்கிறது? (தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்.) நான் பேசிய முக்கியமான புள்ளிகள் மற்றும் அவற்றின் கருப்பொருள் அனைவருக்கும் தெளிவான எண்ணத்தை ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது. மனிதகுலத்திற்காக தேவன் உருவாக்கிய பிழைப்பதற்கான சூழலின் சில அம்சங்களைப் பற்றியும், மனிதர்கள் ஜீவிதம் செய்யத் தேவையான பல வகையான ஜீவாதாரங்களைப் பற்றியும் கடந்த முறை பேசினோம். உண்மையில், தேவன் செய்வது ஜனங்களின் ஜீவிதத்திற்கு ஒரு சூழலை ஆயத்தம் செய்வது அல்லது அவர்களுடைய அன்றாட ஜீவாதாரத்தை ஆயத்தம் செய்வது மட்டுமல்ல. மாறாக, ஜனங்களின் பிழைப்பிற்கும் மனிதகுலத்தின் ஜீவிதத்திற்குமான பல்வேறு நோக்கங்களையும் அம்சங்களையும் உள்ளடக்கிய ஏராளமான மர்மமான மற்றும் தேவையான கிரியைகளை அது நிறைவு செய்கிறது. இவை அனைத்தும் தேவனுடைய கிரியைகள் ஆகும். தேவனுடைய இந்தக் கிரியைகள் ஜனங்களின் பிழைப்பிற்கும் அவர்களுடைய அன்றாட ஜீவாதாரத்திற்கும் ஒரு சூழலை ஆயத்தம் செய்வதில் மட்டும் அடங்குவதில்லை. அவை அதைவிட பரந்த நோக்கங்களைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு வகையான கிரியைகளைத் தவிர, மனிதன் ஜீவிக்கத் தேவைப்படும் பல சூழல்களையும், பிழைப்பதற்கான நிலைமைகளையும் அவர் ஆயத்தம் செய்கிறார். அதுதான் இன்று நாம் விவாதிக்கப் போகும் தலைப்பாகும். அது தேவனுடைய கிரியைகளுடன் தொடர்புடையதாகும். இல்லையெனில், இங்கே அதைப் பற்றி பேசுவது அர்த்தமற்றத்தாகும். ஜனங்கள் தேவனை அறிய விரும்பினால், ஆனால் அவர்கள் “தேவனை” பெயரளவில் மட்டுமே புரிந்துக்கொண்டால் அல்லது தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் என்பதன் பல்வேறு அம்சங்களை மட்டுமே புரிந்துக்கொண்டால், அது உண்மையான புரிதலாக ஆகாது. தேவனைப் பற்றிய அறிவுக்கான பாதை என்னவாக இருக்கிறது? அவருடைய கிரியைகளின் மூலம் அவரை அறிந்துகொள்வதோடு, அவருடைய பல அம்சங்களிலும் அவரை அறிந்துகொள்வதாகும். ஆகவே, எல்லாவற்றையும் சிருஷ்டித்த நேரத்தில் தேவனுடைய கிரியைகள் என்ற விஷயத்தில் நாம் மேலும் கலந்துரையாட வேண்டும்.

தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்ததிலிருந்தே, அவை ஒழுங்காகவும், அவர் பரிந்துரைத்த விதிகளின்படியும் செயல்பட்டு வருகின்றன. அவருடைய பார்வையின் கீழ், அவருடைய ஆட்சியின் கீழ், மனிதகுலம் தப்பிப்பிழைத்திருக்கிறது, எல்லா நேரங்களிலும் ஓர் ஒழுங்கான வழியில் வளர்ந்து வருகிறது. இந்த விதிகளை மாற்றவோ அழிக்கவோ எதுவும் இல்லை. தேவனுடைய ஆட்சியின் காரணமாகவே எல்லா ஜீவன்களும் பெருக முடியும் மற்றும் அவருடைய ஆட்சி மற்றும் நிர்வாகத்தினால்தான் எல்லா ஜீவன்களும் ஜீவிக்க முடியும். அதாவது தேவனுடைய ஆட்சியின் கீழ் அனைத்து ஜீவன்களும் உருவாகின்றன, செழிக்கின்றன, மறைகின்றன மற்றும் ஒழுங்கான முறையில் மறுஜீவன் எடுக்கின்றன. வசந்த காலம் வரும்போது, தூறல் மழை புதிய பருவத்தின் உணர்வைக் கொண்டு வந்து பூமியை ஈரமாக்குகிறது. தரை ஈரமாகத் தொடங்குகிறது. புல் மண்ணின் வழியே மேலேறி, முளைக்கத் தொடங்குகிறது. அதே நேரத்தில் மரங்கள் படிப்படியாகப் பச்சை நிறமாக மாறுகின்றன. இந்த ஜீவன்கள் அனைத்தும் பூமிக்குப் புதிய வல்லமையைக் கொண்டு வருகின்றன. எல்லா ஜீவன்களும் உருவாகி வளருவதைப் பார்க்கும்போது அதுதான் தெரிகிறது. வசந்தத்தின் அரவணைப்பை உணரவும், புதிய ஆண்டைத் தொடங்கவும் அனைத்து வகையான மிருகங்களும் தங்கள் வளைகளிலிருந்து இருந்து வெளியே வருகின்றன. அனைத்து ஜீவன்களும் கோடைக்காலத்தில் வெப்பத்தில் மூழ்கி, பருவத்தால் கொண்டு வரப்படும் அரவணைப்பை அனுபவிக்கின்றன. அவை வேகமாக வளருகின்றன. மரங்கள், புல் மற்றும் அனைத்து வகையான தாவரங்களும் இறுதியாகப் பூத்துக் கனிகளைத் தரும் வரை மிக வேகமாக வளருகின்றன. மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவன்களும் கோடையில் பரபரப்பாக இருக்கின்றன. இலையுதிர் காலத்தில், மழையானது இலையுதிர் காலத்தின் குளிர்ச்சியைக் கொண்டுவருகிறது மற்றும் அனைத்து வகையான ஜீவன்களும் அறுவடை காலத்தின் வருகையை உணரத் தொடங்குகின்றன. எல்லா ஜீவன்களும் கனிகளைத் தாங்குகின்றன மற்றும் குளிர்காலத்திற்கான ஆயத்தத்தில் ஆகாரத்தைப் பெறுவதற்காக மனிதர்கள் இத்தகைய பழங்களை அறுவடை செய்யத் தொடங்குகிறார்கள். குளிர்காலத்தில், அனைத்து ஜீவன்களும் படிப்படியாக அமைதியாக, குளிர்ந்த காலநிலை அமைந்தவுடன் ஓய்வெடுக்க தொடங்குகின்றன மற்றும் இந்தப் பருவத்தில் ஜனங்களும் ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள். தேவனால் நிறுவப்பட்ட விதிகளின்படி ஒவ்வொரு பருவமாக, வசந்த காலத்தில் இருந்து கோடைகாலமாக, இலையுதிர் காலமாக, குளிர் காலமாக மாறும் மாற்றம் நிகழ்கின்றன. அவர் இந்த விதிகளைப் பயன்படுத்தி எல்லாவற்றையும், மனிதகுலத்தையும் வழிநடத்துகிறார் மற்றும் மனிதகுலத்திற்காக ஒரு வளமான மற்றும் வண்ணமயமான ஜீவித முறையை வகுத்துள்ளார். மாறுபட்ட வெப்பநிலை மற்றும் பருவங்களைக் கொண்ட பிழைப்பதற்கான சூழலை ஆயத்தம் செய்கிறார். எனவே, பிழைப்பதற்கான இத்தகைய ஒழுங்கான சூழலுக்குள், மனிதர்கள் ஓர் ஒழுங்கான வழியில் ஜீவிக்கவும் பெருகவும் முடியும். மனிதர்களால் இந்த விதிகளை மாற்ற முடியாது, எந்தவொரு மனிதராலும் அல்லது ஜீவனாலும் அவற்றை உடைக்க முடியாது. கடல்கள் நிலங்களாக மாறியுள்ளன, அதே சமயம் நிலங்கள் கடல்களாக மாறிவிட்டன. இவ்வாறு எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இந்த விதிகள் தொடர்ந்து இருக்கின்றன. தேவன் இருப்பதால், அவருடைய ஆட்சி மற்றும் அவரது நிர்வாகத்தின் காரணமாக அவை இருக்கின்றன. இத்தகைய ஒழுங்கான, பெரிய அளவிலான சூழலுடன், ஜனங்களின் ஜீவிதமானது இந்தக் கட்டளைகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டதாக இருக்கிறது. இந்த விதிகளின் கீழ்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் வளர்க்கப்பட்டனர் மற்றும் அடுத்தடுத்து ஒவ்வொரு தலைமுறையாக அவற்றின் கீழ் பிழைத்துள்ளனர். பிழைப்பதற்கான இந்த ஒழுங்கான சூழலையும், தலைமுறை தலைமுறையாக தேவன் உருவாக்கிய பல விஷயங்களையும் ஜனங்கள் அனுபவித்துள்ளனர். இத்தகைய விதிகள் இயல்பானவை என்று ஜனங்கள் உணர்ந்தாலும், அவமதிப்புடன் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டாலும், இந்த விதிகளை தேவன் திட்டமிடுகிறார், இந்த விதிகளை ஆளுகிறார் என்று அவர்கள் உணர முடியாவிட்டாலும், இவ்வாறு எதுவாக இருந்தாலும், தேவன் எப்போதும் இந்த மாறாத கிரியையில் ஈடுபடுகிறார். மனிதகுலம் ஜீவிக்க வேண்டும், எனவே மாறாத இந்த கிரியையில் அவரது நோக்கம் மனிதகுலத்தின் பிழைப்பாக இருக்கிறது.

மனிதகுலம் முழுவதையும் வளர்ப்பதற்காக தேவன் எல்லா விஷயங்களுக்கும் எல்லைகளை அமைக்கிறார்

தேவன் எல்லாவற்றிற்கும் கொண்டு வந்த இத்தகைய விதிகள் எவ்வாறு மனிதகுலத்தை வளர்க்கின்றன என்ற தலைப்பில் இன்று நான் பேசப்போகிறேன். அது ஒரு பெரிய தலைப்பாகும். எனவே நாம் அதைப் பல பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஒவ்வொரு நேரத்தில் விவாதிக்கலாம். இதனால் அவை உங்களுக்குத் தெளிவாக வரையறுக்கப்படும். இவ்வாறு நீங்கள் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். அதை நீங்கள் படிப்படியாக புரிந்துகொள்ளலாம்.

முதல் பகுதி: தேவன் ஒவ்வொரு வகையான நிலப்பரப்பிற்கும் எல்லைகளை அமைக்கிறார்

எனவே, முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கலாம். தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, மலைகள், சமவெளிகள், பாலைவனங்கள், மலைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளுக்கு எல்லைகளை வகுத்தார். பூமியில் மலைகள், சமவெளிகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் உள்ளன. அத்துடன் பல்வேறு நீர்நிலைகளும் உள்ளன. இவை வெவ்வேறு வகையான நிலப்பரப்புகளைக் கொண்டிருக்கின்றன, இல்லையா? அவற்றுக்கு இடையே, தேவன் எல்லைகளை வகுத்தார். எல்லைகளை வகுப்பதைப் பற்றி நாம் பேசும்போது, மலைகளுக்கு அதற்கான விளக்கங்கள் உள்ளன, சமவெளிகளுக்கு அதற்கான சொந்த விளக்கங்கள் உள்ளன, பாலைவனங்களுக்கு சில வரம்புகள் உள்ளன மற்றும் குன்றுகள் ஒரு நிலையான பகுதியைக் கொண்டுள்ளன. ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகளுக்கும் நிலையான அளவு உள்ளது. அதாவது, தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, எல்லாவற்றையும் மிகத் தெளிவாகப் பிரித்தார். எந்தவொரு மலையின் ஆரமும் எத்தனை கிலோமீட்டர் இருக்க வேண்டும், அதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை தேவன் ஏற்கனவே தீர்மானித்துள்ளார். எந்தவொரு சமவெளியின் ஆரமும் எத்தனை கிலோமீட்டர் இருக்க வேண்டும், அதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் தீர்மானித்துள்ளார். எல்லாவற்றையும் உருவாக்கும் போது, பாலைவனங்களின் வரம்புகளையும், மலைகளின் வரம்பையும் அவற்றின் விகிதாச்சாரத்தையும், அவை எல்லைகளையும் அவர் தீர்மானித்தார்—இவை அனைத்தும் தேவனால் தீர்மானிக்கப்பட்டவை ஆகும். ஆறுகள் மற்றும் ஏரிகளை உருவாக்கும் செயல்பாட்டின் போது அவை அனைத்திற்குமான வரம்பையும் அவர் தீர்மானித்தார்—அவை அனைத்திற்கும் எல்லைகள் உள்ளன. நாம் “எல்லைகளைப்” பற்றி பேசும்போது அர்த்தம் என்னவாக இருக்கிறது? எல்லாவற்றிற்கும் விதிகளை நிறுவுவதன் மூலம் தேவன் எல்லாவற்றையும் எவ்வாறு ஆளுகிறார் என்பதைப் பற்றி நாம் பேசினோம். அதாவது, பூமியின் சுழற்சி அல்லது காலம் கடந்து செல்வதால் மலைகளின் வரம்பு மற்றும் எல்லைகள் விரிவடையாது அல்லது குறையாது. அவை நிலையானவை, மாறாதவை மற்றும் அவற்றின் மாற்றத்தை ஆணையிடுபவர் தேவன் மட்டுமே. சமவெளிகளின் பகுதிகளைப் பொறுத்தவரையில், அவற்றின் வரம்பு என்ன, அவை எதைக் கட்டுப்படுத்துகின்றன என்பவை தேவனால் அமைக்கப்பட்டுள்ளன. அவை அவற்றின் எல்லைகளைக் கொண்டுள்ளன. ஒரு சமவெளியின் நிலத்திலிருந்து சீரற்ற முறையில் பூமியின் ஒரு மேடு உருவாகி எழுவது சாத்தியமற்றதாகும். சமவெளி திடீரென்று ஒரு மலையாக மாற முடியாது—அது சாத்தியமற்றத்தாகும். நாம் இப்போது பேசிய விதிகள் மற்றும் எல்லைகளின் அர்த்தம் அதுதான். பாலைவனங்களைப் பொறுத்தவரையில், பாலைவனங்களின் குறிப்பிட்ட செயல்பாடுகளை அல்லது வேறு எத்தகைய நிலப்பரப்பு அல்லது புவியியல் இருப்பிடத்தையும் இங்கு குறிப்பிட மாட்டோம், அவற்றின் எல்லைகள் மட்டுமே குறிப்பிடுவோம். தேவனுடைய ஆட்சியின் கீழ், பாலைவனத்தின் வரம்புகள் விரிவடையாது. ஏனென்றால், தேவன் அதற்கு அதன் விதியையும் வரம்புகளையும் கொடுத்திருக்கிறார். அதன் பரப்பளவு எவ்வளவு பெரியது, அதன் செயல்பாடு என்ன, அது எதைக் கட்டுப்படுத்துகிறது, எங்கு அமைந்துள்ளது என்பவை ஏற்கனவே தேவனால் அமைக்கப்பட்டுள்ளது. அது அதன் வரம்புகளை மீறாது அல்லது அதன் நிலையை மாற்றாது மற்றும் அதன் பகுதி தன்னிச்சையாக விரிவடையாது. ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற நீரோட்டங்கள் அனைத்தும் ஒழுங்காகவும் தொடர்ச்சியாகவும் இருந்தாலும், அவை ஒருபோதும் அவற்றின் எல்லைக்கு வெளியே அல்லது அவற்றின் எல்லைகளுக்கு அப்பால் நகராது. அவை அனைத்தும் ஒரே திசையில், பாய வேண்டிய திசையில், ஒழுங்கான முறையில் பாய்கின்றன. எனவே தேவனுடைய ஆட்சியின் கட்டளைகளின் கீழ், பூமியின் சுழற்சியின் காரணமாக அல்லது காலப்போக்கில் எந்த நதியும் ஏரியும் தன்னிச்சையாகக் காய்ந்து போகாது அல்லது தன்னிச்சையாக அதன் ஓட்டத்தின் திசையையோ அளவையோ மாற்றிக் கொள்ளாது. இவை அனைத்தும் தேவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன. அதாவது, இந்த மனிதகுலத்தின் மத்தியில் தேவன் சிருஷ்டித்த எல்லாவற்றிற்கும் அவற்றின் இடங்கள், பகுதிகள் மற்றும் வரம்புகள் உள்ளன. அதாவது, தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, அவற்றின் எல்லைகள் நிறுவப்பட்டன. அவற்றைத் தன்னிச்சையாக நகர்த்தவோ, புதுப்பிக்கவோ, மாற்றவோ முடியாது. “தன்னிச்சையாக” என்றால் என்ன? அதாவது வானிலை, வெப்பநிலை அல்லது பூமி சுழற்சியின் வேகம் காரணமாக அவை தோராயமாக மாறவோ, விரிவாகவோ அல்லது அவற்றின் மெய்யான வடிவத்தை மாற்றிக்கொள்ளாது. உதாரணமாக, ஒரு மலையானது ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் கொண்டுள்ளது, அதன் அடிப்பகுதி ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கொண்டுள்ளது, அது ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் கொண்டுள்ளது மற்றும் அது ஒரு குறிப்பிட்ட அளவு தாவரங்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் தேவனால் திட்டமிடப்பட்டு கணக்கிடப்படுகின்றன. அது தன்னிச்சையாக மாறுவதில்லை. சமவெளிகளைப் பொறுத்தவரையில், பெரும்பான்மையான மனிதர்கள் சமவெளிகளில் வசிக்கின்றனர். காலநிலையில் உள்ள எந்த மாற்றங்களும் அவற்றின் பகுதிகளையோ அல்லது அவற்றின் இருப்பின் மதிப்பையோ பாதிக்காது. தேவனால் உருவாக்கப்பட்ட இந்தப் பல்வேறு நிலப்பரப்புகளிலும் புவியியல் சூழல்களிலும் உள்ள விஷயங்கள் தன்னிச்சையாக மாறாது. உதாரணமாக, பாலைவனத்தின் கலவை, நிலத்தடி கனிம வகைகள், ஒரு பாலைவனத்தில் உள்ள மணலின் அளவு மற்றும் அதன் நிறம், பாலைவனத்தின் தடிமன்—இவை தன்னிச்சையாக மாறாது. அவை ஏன் தன்னிச்சையாக மாறாது? அதற்கு தேவனுடைய ஆட்சி மற்றும் அவரது நிர்வாகம் தான் காரணம். தேவனால் உருவாக்கப்பட்ட இந்த வெவ்வேறு நிலப்பரப்புகள் மற்றும் புவியியல் சூழல்களுக்குள், அவர் எல்லாவற்றையும் திட்டமிட்டு மற்றும் ஒழுங்கான முறையில் நிர்வகித்து வருகிறார். எனவே இந்த புவியியல் சூழல்கள் அனைத்தும் இன்னும் உள்ளன. அவை தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மற்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் அவற்றின் செயல்களைச் செய்கின்றன. எரிமலைகள் வெடிக்கும் சில காலங்களும், பூகம்பங்கள் ஏற்படும் காலங்களும், நிலத்தின் முக்கிய மாற்றங்களும் இருந்தாலும், எந்தவொரு நிலப்பரப்பும் அதன் மெய்யான செயல்பாட்டை இழக்க தேவன் அனுமதிக்க மாட்டார். தேவனால் நிர்வகிக்கப்பட்ட இந்த நிர்வாகத்தின் காரணமாகவும், இந்த விதிகளின் மீதான அவரது ஆட்சி மற்றும் கட்டுப்பாட்டினாலும் மட்டுமே, இவை அனைத்தும்—மனிதகுலத்தால் காணப்பட்டு, அனுபவிக்கப்படும் இவை அனைத்தும் பூமியில் ஓர் ஒழுங்கான வழியில் ஜீவித்திருக்க முடியும். பூமியில் இருக்கும் இந்தப் பல்வேறு நிலப்பரப்புகளை தேவன் ஏன் இவ்வாறு நிர்வகிக்கிறார்? அவரது நோக்கம் என்னவென்றால், பல்வேறு புவியியல் சூழல்களில் ஜீவிக்கும் ஜீவன்கள் அனைத்தும் ஒரு நிலையான சூழலைக் கொண்டிருக்கும் மற்றும் அவை அந்த நிலையான சூழலுக்குள் தொடர்ந்து ஜீவித்திருக்கவும் பெருகவும் முடியும். அசையக்கூடிய மற்றும் அசையாத, நாசி வழியாக சுவாசிக்கும் மற்றும் சுவாசிக்காத இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதகுலத்தின் பிழைப்புக்கு ஒரு தனித்துவமான சூழலை உருவாக்குகின்றன. இத்தகைய சூழலால் மட்டுமே அடுத்தடுத்ததாக வரும் மனிதர்களின் தலைமுறையை வளர்க்க முடிகிறது. இத்தகைய சூழல் மட்டுமே மனிதர்களைத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து அமைதியாக ஜீவித்திருக்க அனுமதிக்கிறது.

நான் இப்போது பேசியது ஒரளவுக்கு ஒரு பெரிய தலைப்பாகும். எனவே அது உங்கள் ஜீவிதங்களிலிருந்து ஓரளவு நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் நீங்கள் அனைவரும் இதைப் புரிந்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். அதாவது, எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய ஆதிக்கத்தில் உள்ள விதிகள் மிக முக்கியமானவையாகும்—உண்மையில் மிக முக்கியமானவையாகும்! இந்த விதிகளின் கீழ் அனைத்து ஜீவன்களின் வளர்ச்சிக்குமான முன்நிபந்தனை என்னவாக இருக்கிறது? அது தேவனுடைய ஆட்சியின் காரணமாகும். அவருடைய ஆட்சியின் காரணமாகவே எல்லாம் அவருடைய ஆட்சிக்குள் அவற்றின் செயல்பாடுகளைச் செய்கின்றன. உதாரணமாக, மலைகள் காடுகளை வளர்கின்றன, காடுகள் அதற்குள் ஜீவித்திருக்கும் பல்வேறு பறவைகளையும் மிருகங்களையும் வளர்த்துப் பாதுகாக்கின்றன. சமவெளிகள் மனிதர்களுக்குப் பயிர்களை நடவு செய்வதற்கும், பல்வேறு பறவைகள் மற்றும் மிருகங்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்ட ஒரு தளமாகவும் இருக்கின்றன. அவை பெரும்பான்மையான மனிதகுலத்தைச் சமதளநிலத்தில் ஜீவிக்கவும், ஜனங்களின் ஜீவிதங்களில் அவர்களுக்கு வசதியை வழங்கவும் அனுமதிக்கின்றன. சமவெளிகளில் புல்வெளிகளும் அடங்கும், அதாவது புல்வெளிகளின் பெரிய சதுப்பு நிலங்களும் அடங்கும். புல்வெளிகள் பூமியின் தளத்திற்கு தாவர உறைகளை வழங்குகின்றன. அவை மண்ணைப் பாதுகாத்து புல்வெளிகளில் ஜீவிக்கும் கால்நடைகள், செம்மறி ஆடுகள் மற்றும் குதிரைகளை வளர்க்கின்றன. பாலைவனமும் அதன் சொந்தச் செயல்பாட்டைச் செய்கிறது. அது மனிதர்கள் ஜீவிப்பதற்கான ஓர் இடம் அல்ல. ஈரப்பதமான காலநிலையை உலர வைப்பதே அதன் பங்காகும். ஆறுகள் மற்றும் ஏரிகளின் ஓட்டங்கள் ஜனங்களுக்குக் குடிநீரை வசதியான வழியில் கொண்டு வருகின்றன. அவை எங்குப் பாய்கிறதோ, அங்கு ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருக்கும். தண்ணீருக்கான அனைத்துப் பொருட்களின் தேவைகளும் வசதியாகப் பூர்த்திச் செய்யப்படும். இவையே பல்வேறு நிலப்பரப்புகளுக்கு தேவன் வகுத்த எல்லைகள் ஆகும்.

இரண்டாவது பகுதி: தேவன் ஒவ்வொரு விதமான உயிருக்கும் எல்லைகளை அமைக்கிறார்

தேவன் வகுத்த இந்த எல்லைகளின் காரணமாக, பிழைப்பதற்கு வெவ்வேறு சூழல்களைப் பல்வேறு நிலப்பரப்புகள் உருவாக்கியுள்ளன. பிழைப்பதற்கான இந்தச் சூழல்கள் பல்வேறு வகையான பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு வசதியாக இருந்தன மற்றும் அவை ஜீவித்திருக்க இடமும் அளித்துள்ளன. இதிலிருந்து பல்வேறு ஜீவன்கள் பிழைப்பதற்கான சூழல்களின் எல்லைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவே நாம் பேசப்போகும் இரண்டாவது பகுதியாகும். முதலில், பறவைகள் மற்றும் மிருகங்கள் மற்றும் பூச்சிகள் எங்கு ஜீவிக்கின்றன? அவை காடுகளிலும் தோப்புகளிலும் ஜீவிக்கின்றனவா? அவை அவைகளுடைய வீடு. எனவே, பல்வேறு புவியியல் சூழல்களுக்கு எல்லைகளை நிறுவுவதோடல்லாமல், பல்வேறு பறவைகள் மற்றும் மிருகங்கள், மீன்கள், பூச்சிகள் மற்றும் அனைத்துத் தாவரங்களுக்கும் தேவன் எல்லைகளையும் விதிகளையும் நிறுவினார். பல்வேறு புவியியல் சூழல்களுக்கு மத்தியிலான வேறுபாடுகள் இருப்பதாலும், வெவ்வேறு புவியியல் சூழல்கள் இருப்பதாலும், பல்வேறு வகையான பறவைகள் மற்றும் மிருகங்கள், மீன்கள், பூச்சிகள் மற்றும் தாவரங்கள் பிழைப்பதற்கு வெவ்வேறு சூழல்களைக் கொண்டுள்ளன. பறவைகள் மற்றும் மிருகங்கள் மற்றும் பூச்சிகள் பல்வேறு தாவரங்களுக்கு மத்தியில் ஜீவிக்கின்றன. மீன்கள் தண்ணீரில் ஜீவிக்கின்றன. தாவரங்கள் நிலத்தில் வளர்கின்றன. இந்த நிலத்தில் மலைகள், சமவெளி மற்றும் குன்றுகள் போன்ற பல்வேறு மண்டலங்கள் உள்ளன. பறவைகள் மற்றும் மிருகங்கள் தங்கள் சொந்த வீட்டை அமைத்துக் கொண்டவுடன், அவை எந்த வழியிலும் சுற்றித் திரிவதில்லை. அவற்றின் வீடுகள் காடுகள் மற்றும் மலைகள் ஆகும். ஒரு நாள், அவற்றின் வீடுகள் அழிக்கப்பட்டால், இந்த நிலை குழப்பமடையும். இந்த நிலை குழப்பமடைந்தவுடன், அதன் விளைவுகள் என்னவாக இருக்கின்றன? முதலில் காயமடைபவர்கள் யார்? அது மனிதகுலம்தான். தேவன் நிறுவிய இந்த விதிகள் மற்றும் வரம்புகளுக்குள், நீங்கள் ஏதேனும் விசித்திரமான நிகழ்வுகளைப் பார்த்தீர்களா? உதாரணமாகப், பாலைவனத்தில் நடந்து செல்லும் யானைகள். அப்படி ஏதாவது பார்த்தீர்களா? அது உண்மையிலேயே நடந்தால் அது மிகவும் விசித்திரமான நிகழ்வாக இருக்கும். ஏனென்றால் யானைகள் காட்டில் ஜீவிக்கின்றன. அதுவே பிழைப்பதற்கான சூழலாகும். அவை பிழைப்பதற்கான சொந்தச் சூழலையும், சொந்தமாக அமைக்கப்பட்ட வீட்டையும் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவை ஏன் ஓடுகின்றன? கடற்கரையில் சிங்கங்கள் அல்லது புலிகள் நடப்பதை யாராவது பார்த்திருக்கிறார்களா? இல்லை, நீங்கள் பார்த்ததில்லை. சிங்கங்கள் மற்றும் புலிகளின் வீடானது காடு மற்றும் மலைகள் ஆகும். கடலின் திமிங்கலங்கள் அல்லது சுறாக்கள் பாலைவனத்தில் நீந்துவதை யாராவது பார்த்திருக்கிறார்களா? இல்லை, நீங்கள் பார்த்ததில்லை. திமிங்கலங்களும் சுறாக்களும் கடலில் தங்கள் வீடுகளை அமைக்கின்றன. மனிதர்கள் ஜீவித்திருக்கும் சூழலில், பழுப்பு நிறக் கரடிகளுடன் ஜீவிக்கும் ஜனங்கள் இருக்கிறார்களா? தங்கள் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் மயில்களாலோ பிற பறவைகளாலோ சூழப்பட்டவர்கள் இருக்கிறார்களா? கழுகுகள் அல்லது காட்டு வாத்துகள் குரங்குகளுடன் விளையாடுவதை யாராவது பார்த்திருக்கிறார்களா? (இல்லை.) இவை அனைத்தும் விசித்திரமான நிகழ்வுகளாக இருக்கும். உங்கள் காதுகளுக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றும் இந்த விஷயங்களைப் பற்றி நான் பேசுவதற்கான காரணம் என்னவென்றால், தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றுக்கும்—ஒரே இடத்தில் இருக்கும் ஜீவனாக இருந்தாலும் அல்லது அவை நாசி வழியாக சுவாசிக்க கூடிய ஜீவனாக இருந்தாலும் சரி—பிழைப்புக்கு அவற்றுக்கென சொந்த விதிகள் உள்ளன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேவன் இந்த ஜீவன்களை உருவாக்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அவற்றுக்காக அவற்றின் சொந்த வீடுகளையும், ஜீவிப்பதற்கான சொந்தச் சூழல்களையும் அவர் ஏற்கனவே ஆயத்தம் செய்திருந்தார். இந்த ஜீவன்கள் பிழைப்பதற்கு அவற்றின் சொந்த நிலையான சூழல்களையும், அவற்றின் சொந்த ஆகாரத்தையும், தங்கள் சொந்த நிலையான வீடுகளையும் கொண்டிருந்தன மற்றும் அவற்றின் பிழைப்புக்கு ஏற்ற நிலையான இடங்களையும், அவற்றின் பிழைப்புக்கு ஏற்ற வெப்பநிலையையும் கொண்ட இடங்களைக் கொண்டிருந்தன. இவ்வாறு, அவை எந்த வகையிலும் சுற்றித் திரிவதில்லை அல்லது மனிதகுலத்தின் பிழைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதில்லை அல்லது ஜனங்களின் ஜீவிதத்தைப் பாதிப்பதில்லை. தேவன் எல்லாவற்றையும் இப்படித்தான் நிர்வகிக்கிறார். மனிதகுலத்திற்குப் பிழைப்பதற்கான சிறந்தச் சூழலை வழங்குகிறார். எல்லாவற்றிற்கும் உள்ளான ஜீவன்கள் ஒவ்வொன்றும் பிழைப்பதற்காகத் தங்கள் சொந்தச் சூழல்களுக்குள் தங்கள் சொந்த ஜீவாதார ஆகாரத்தைக் கொண்டுள்ளன. அந்த ஆகாரத்தைக் கொண்டு பிழைப்பதற்காக அவை தங்கள் சொந்தச் சூழலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில், தேவன் அவற்றுக்காக நிறுவியிருக்கும் விதிகளின்படி அவை தொடர்ந்து பிழைக்கின்றன, பெருகுகின்றன மற்றும் முன்னேறுகின்றன. இத்தகைய விதிகளின் காரணமாக, தேவனுடைய முன்னறிவிப்பு காரணமாக, எல்லாமே மனிதகுலத்துடன் இணக்கமாக ஜீவிக்கின்றன மற்றும் மனிதகுலம் எல்லாவற்றுடன் இணைந்து ஒன்றோடொன்று சார்ந்து ஜீவிக்கிறார்கள்.

மூன்றாவது பகுதி: தேவன் மனுக்குலத்தைப் போஷிக்க சுற்றுச்சூழலையும் சூழலியலையும் காக்கிறார்

தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்து அவற்றுக்காக எல்லைகளை ஏற்படுத்தினார். அவற்றில் அவர் எல்லா வகையான ஜீவன்களையும் வளர்த்தார். இதற்கிடையில், மனிதகுலம் பிழைப்பதற்கான பல்வேறு வழிகளையும் அவர் ஆயத்தம் செய்தார். எனவே ஜீவிக்க மனிதர்களுக்கு ஒரு வழி இல்லை அல்லது பிழைப்பதற்கு அவர்களுக்கு ஒரு வகையான சூழல் இல்லை என்பதை நீ காணலாம். மனிதர்களுக்காக தேவன் பல்வேறு வகையான ஆகாரம் மற்றும் நீர் ஆதாரங்களை ஆயத்தம் செய்ததைப் பற்றி நாம் முன்பே பேசினோம். மனிதகுலத்தின் மாம்ச ஜீவிதத்தைத் தொடர அனுமதிப்பதில் அது முக்கியமானதாகும். இருப்பினும், இந்த மனிதகுலத்தில், எல்லா ஜனங்களும் மறைவுகளில் தங்கியிருக்க மாட்டார்கள். புவியியல் சூழல்கள் மற்றும் நிலப்பரப்புகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக ஜனங்கள் ஜீவிக்கப் பல்வேறு வழிகளைக் கொண்டுள்ளனர். ஜீவிக்கும் இந்த வழிமுறைகள் அனைத்தும் தேவனால் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளன. எனவே எல்லா மனிதர்களும் முதன்மையாக விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. அதாவது, எல்லா ஜனங்களும் பயிர்களை வளர்ப்பதிலிருந்து தங்கள் ஆகாரத்தைப் பெறுவதில்லை. அது நாம் பேசப்போகும் மூன்றாவது பகுதியாகும்: மனிதகுலத்தின் பல்வேறு ஜீவித முறைகள் காரணமாக எல்லைகள் எழுந்துள்ளன. எனவே மனிதர்களுக்கு வேறு எத்தகைய ஜீவித முறைகள் உள்ளன? வெவ்வேறு ஆகார ஆதாரங்களைப் பொறுத்தவரையில், வேறு எத்தகைய ஜனங்கள் இருக்கிறார்கள்? பல முதன்மையான ஜனங்களின் வகைகள் உள்ளன.

முதலாவதாக வேட்டை ஜீவித முறை. அது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். வேட்டையாடி ஜீவிக்கும் ஜனங்கள் எதைப் புசிக்கிறார்கள்? (வேட்டையாடியவைகளை.) அவர்கள் பறவைகளையும் காடுகளின் மிருகங்களையும் புசிக்கிறார்கள். “விளையாட்டு” என்பது ஒரு நவீன சொல். வேட்டைக்காரர்கள் அதை விளையாட்டாக நினைக்கிறதில்லை. அவர்கள் அதை அன்றாட ஜீவாதாரமாக உணருகிறார்கள். உதாரணமாக, அவர்கள் ஒரு மானைப் பெறுகிறார்கள். அந்த மானை அவர்கள் பெறும்போது, ஒரு விவசாயி மண்ணிலிருந்து ஆகாரத்தைப் பெறுவது போலாகும். ஒரு விவசாயி மண்ணிலிருந்து ஆகாரத்தைப் பெறுகிறார். இந்த ஆகாரத்தைப் பார்க்கும்போது, அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நிம்மதியாக உணர்கிறார்கள். குடும்பம் புசிக்கப் பயிர்கள் இருக்க, அது பசியோடு இருக்காது. விவசாயியின் இருதயம் பதற்றத்திலிருந்து விடுபடும். அவர் திருப்தி அடைகிறார். ஒரு வேட்டைக்காரன் இனிமேல் ஆகாரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதால் தான் பிடித்ததைப் பார்க்கும்போது அடுத்த ஆகாரத்துக்குப் புசிக்க ஏதாவது இருக்கிறது, பசியுடன் செல்ல வேண்டிய அவசியமில்லை என நிம்மதியாகவும் திருப்தியாகவும் உணர்கிறான். இவர் ஜீவிதத்திற்காக வேட்டையாடும் ஒருவர். வேட்டையாடுவதில் பெரும்பான்மையானவர்கள் மலை, காடுகளில் ஜீவிக்கின்றனர். அவர்கள் விவசாயம் செய்வதில்லை. அங்கு விளைநிலங்களைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. எனவே அவர்கள் பல்வேறு ஜீவன்கள், பல்வேறு வகையான இரைகளின் மூலம் பிழைக்கின்றனர். சாதாரண ஜனங்களிடமிருந்து வேறுபட்டிருக்கும் முதல் ஜீவித முறை இதுவாகும்.

இரண்டாவது வகை ஒரு மேய்ப்பனின் ஜீவித முறையாகும். ஜீவிதத்திற்காக விலங்குகளை வளர்க்கும் ஜனங்கள் நிலத்தையும் வளர்க்கிறார்களா? (இல்லை.) அப்படியென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எப்படி ஜீவிக்கிறார்கள்? (பெரும்பாலும், அவர்கள் கால்நடைகளையும் ஆடுகளையும் ஜீவிதத்திற்காக வளர்த்துக் கொள்கிறார்கள். குளிர்காலத்தில் அவர்கள் தங்கள் கால்நடைகளை அறுத்துச் சாப்பிடுகிறார்கள். அவர்களின் பிரதான உணவு மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியாகும். அவர்கள் தேநீர் குடிக்கிறார்கள். மேய்ப்பர்கள் நான்கு பருவங்களிலும் பரபரப்பாக இருந்தாலும், அவர்கள் நன்றாகச் சாப்பிடுகிறார்கள். அவர்களிடம் ஏராளமான பால், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி உள்ளது.) ஜீவிதத்திற்காக விலங்குகளை வளர்க்கும் ஜனங்கள் முதன்மையாக மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைப் புசிக்கிறார்கள். ஆடுகளின் பால் மற்றும் பசுக்களின் பாலைக் குடிக்கிறார்கள். கால்நடைகளிலும் குதிரைகளிலும் சவாரி செய்கிறார்கள். நவீன ஜீவிதத்தின் அழுத்தங்களை அவர்கள் எதிர்கொள்ளவில்லை. நீல வானம் மற்றும் புல்வெளி சமவெளிகளின் பரந்த விரிவாக்கங்களை அவர்கள் நாள் முழுவதும் பார்க்கிறார்கள். மந்தைகளை வளர்க்கும் பெரும்பான்மையான ஜனங்கள் புல்வெளிகளில் ஜீவிக்கின்றனர் மற்றும் அவர்கள் நாடோடி ஜீவித முறையைப் பல தலைமுறைகளாகத் தொடர முடிந்தது. புல்வெளிகளில் ஜீவிதம் கொஞ்சம் தனிமையாக இருந்தாலும், அது மிகவும் மகிழ்ச்சியான ஜீவிதமாக இருக்கிறது. அது ஒரு மோசமான ஜீவித முறை அல்ல!

மூன்றாவது வகை மீன்பிடி ஜீவித முறையாகும். மனிதகுலத்தின் ஒரு சிறிய பகுதி கடலிலோ அல்லது சிறிய தீவுகளிலோ ஜீவிக்கிறது. அவை நீரால் சூழப்பட்டு, கடலை எதிர்கொள்கின்றன. இந்த ஜனங்கள் ஜீவிதத்திற்காக மீன் பிடிக்கிறார்கள். ஜீவிதத்திற்காக மீன் பிடிப்பவர்களுக்கு ஆகாரத்துக்கான ஆதாரம் என்னவாக இருக்கிறது? அவர்களின் ஆகார ஆதாரங்களில் அனைத்து வகையான மீன்கள், கடல் ஆகாரங்கள் மற்றும் கடலின் பிற பொருட்களும் அடங்குகின்றன. ஜீவிதத்திற்காக மீன் பிடிக்கும் ஜனங்கள் நிலத்தை விவசாயம் செய்வதில்லை. மாறாக ஒவ்வொரு நாளும் மீன்பிடிக்கச் செலவிடுகிறார்கள். அவர்களின் பிரதான ஆகாரம் பல்வேறு வகையான மீன்கள் மற்றும் கடலின் பொருட்களைக் கொண்டுள்ளது. அவர்கள் அவ்வப்போது அரிசி, மாவு மற்றும் அன்றாட தேவைகளுக்காக இந்தப் பொருட்களை வர்த்தகம் செய்கிறார்கள். இது, தண்ணீருக்கு அருகில் ஜீவிக்கும் ஜனங்களின் தலைமையிலான வித்தியாசமான ஜீவித முறையாகும். தண்ணீருக்கு அருகில் ஜீவிக்கும் அவர்கள், தங்கள் ஆகாரத்துக்காக அதை நம்பியிருக்கிறார்கள். மீன்பிடிக்கச் செல்வதிலிருந்து ஜீவிதத்தை உருவாக்குகிறார்கள். மீன்பிடித்தல் அவர்களுக்கு ஆகார ஆதாரத்தை மட்டுமல்ல, ஜீவாதாரத்திற்கான வழிமுறையையும் தருகிறது.

நிலத்தை வளர்ப்பதல்லாமல், மேலே குறிப்பிட்டுள்ள மூன்று ஜீவித முறைகளின்படி மனிதகுலத்தின் பெரும்பகுதி ஜீவிக்கிறது. இருப்பினும், பெரும்பான்மையான ஜனங்கள் ஜீவிதத்திற்காக விவசாயம் செய்கிறார்கள். விலங்குகளை வளர்ப்பது, மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுவதன் மூலம் ஒரு சில குழுக்கள் மட்டுமே ஜீவிக்கிறார்கள். விவசாயத்தால் ஜீவிக்கும் ஜனங்களுக்கு தேவை என்னவாக இருக்கிறது? அவர்களுக்குத் தேவையானது நிலம். தலைமுறைத் தலைமுறையாக அவர்கள் நிலத்தில் பயிர்களை நடவு செய்வதன் மூலம் ஜீவிக்கிறார்கள். அவர்கள் காய்கறிகள், பழங்கள் அல்லது தானியங்களைப் பயிரிட்டாலும், பூமியிலிருந்து மட்டுமே அவர்கள் ஆகாரத்தையும் அன்றாட தேவைகளையும் பெறுகிறார்கள்.

இந்த வெவ்வேறு மனித ஜீவித முறைகளை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை நிலைமைகள் யாவை? அவர்கள் ஜீவிக்கக்கூடிய சூழல்கள் ஓர் அடிப்படை மட்டத்தில் பாதுகாக்கப்படுவது முற்றிலும் அவசியமல்லவா? அதாவது, வேட்டையாடுவோர் மலைக் காடுகளையோ அல்லது பறவைகளையும் மிருகங்களையும் இழக்க நேர்ந்தால், அவர்களுடைய ஜீவாதாரத்தின் ஆதாரம் இல்லாமல் போகும். இந்த இனமும், இத்தகைய ஜனங்களும் செல்ல வேண்டிய திசை நிச்சயமற்றதாகிவிடும் மற்றும் அவை மறைந்து போகக்கூடும். தங்கள் ஜீவாதாரத்திற்காக விலங்குகளை வளர்ப்பவர்களின் நிலை என்னவாக இருக்கிறது? அவர்கள் எதை நம்பியிருக்கிறார்கள்? அவர்கள் உண்மையிலேயே சார்ந்திருப்பது அவர்களுடைய கால்நடைகளை அல்ல, ஆனால் அவர்களுடைய கால்நடைகள் ஜீவிக்கக்கூடிய சூழலை, அதாவது புல்வெளிகளை ஆகும். புல்வெளிகள் இல்லாவிட்டால், மேய்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை எங்கே மேய்ப்பார்கள்? கால்நடைகளும் ஆடுகளும் எதைப் புசிக்கும்? கால்நடைகள் இல்லாவிட்டால், இந்த நாடோடி ஜனங்களுக்கு ஜீவாதாரம் இருக்காது. அவர்களுடைய ஜீவாதாரத்திற்கான ஆதாரம் இல்லாமல், இந்த ஜனங்கள் எங்கு செல்வார்கள்? அவர்கள் தொடர்ந்து பிழைப்பது மிகவும் கடினமாகிவிடும். அவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும். நீர் ஆதாரங்கள் இல்லாதிருந்தால், ஆறுகள் மற்றும் ஏரிகள் முற்றிலுமாக வறண்டு போயிருந்தால், ஜீவினோடிருக்க தண்ணீரை நம்பியிருக்கும் அந்த மீன்கள் அனைத்தும் இன்னும் இருக்குமா? அவை இல்லாமல் போகும். ஜீவாதாரத்திற்காக தண்ணீரையும் மீனையும் நம்பியிருக்கும் இந்த ஜனங்கள் தொடர்ந்து பிழைப்பார்களா? அவர்களுக்கு ஆகாரம் இல்லாமல் போகையில், அவர்கள் ஜீவாதாரத்தின் ஆதாரம் இல்லாமல் போகையில், இந்த ஜனங்கள் தொடர்ந்து ஜீவிக்க முடியாது. அதாவது, எந்தவொரு இனமும் எப்போதாவது அவர்களுடைய ஜீவாதாரத்திலோ அவர்களின் பிழைப்பிலோ ஒரு பிரச்சனையில் சிக்கினால், அந்த இனம் இனி ஜீவிக்காது மற்றும் அவை பூமியின் முன்னிருந்து மறைந்து அழிந்து போகக்கூடும். ஜீவிதத்திற்காக விவசாயம் செய்பவர்கள் தங்கள் நிலத்தை இழந்தால், எல்லா வகையான தாவரங்களையும் பயிரிட்டு, அந்தத் தாவரங்களிலிருந்து ஆகாரத்தைப் பெற முடியாவிட்டால், அதன் விளைவு என்னவாக இருக்கும்? ஆகாரம் இல்லாமல், ஜனங்கள் பட்டினி கிடப்பார்களா? ஜனங்கள் பட்டினி கிடந்தால், மனிதர்களின் அந்த இனம் அழிந்து போகாதா? எனவே பல்வேறு வகையான சூழலைப் பராமரிப்பதில் அது தேவனுடைய நோக்கமாகும். வெவ்வேறு சூழல்களையும் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் அவற்றில் உள்ள வெவ்வேறு ஜீவன்கள் அனைத்தையும் பராமரிப்பதில் தேவனுக்கு ஒரே ஒரு நோக்கம் உள்ளது—அது அனைத்து வகையான ஜனங்களையும் வளர்ப்பதும், வெவ்வேறு புவியியல் சூழல்களில் ஜீவிக்கும் ஜனங்களை வளர்ப்பதுமாகும்.

சிருஷ்டிப்பின் எல்லா விஷயங்களும் அவற்றின் சொந்த கட்டளைகளை இழந்தால், அவை இனி இல்லாமல் போகும். எல்லாவற்றின் கட்டளைகளும் தொலைந்துவிட்டால், எல்லாவற்றிற்கும் மத்தியில் ஜீவிக்கும் ஜீவன்கள் ஜீவிக்க முடியாது. மனிதகுலம் பிழைப்புக்காக சார்ந்திருக்கும் சூழல்களையும் இழக்கும். மனிதகுலம் அதையெல்லாம் இழந்துவிட்டால், தலைமுறை தலைமுறையாக அது செய்து கொண்டிருப்பதைப் போல, செழித்து வளர்வதை அது தொடர முடியாது. இப்போது வரை மனிதர்கள் பிழைத்ததற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் வளர்வதற்கும், மனிதகுலம் வெவ்வேறு வழிகளில் வளர்வதற்கும் தேவன் சிருஷ்டிப்பு எல்லாவற்றையும் அவர்களுக்கு வழங்கியுள்ளார். தேவன் மனிதகுலத்தை வெவ்வேறு வழிகளில் வளர்த்து வருவதால்தான், இன்று வரை, மனிதகுலம் பிழைத்து வருகிறது. பிழைப்பதற்கு சாதகமான ஒரு நிலையான சூழல் மற்றும் இயற்கை கட்டளைகளுக்கு சிறப்பான சூழல் இருப்பதால், பூமியின் அனைத்து வகையான ஜனங்களும், அனைத்து வெவ்வேறு இனங்களும் தங்களது சொந்த குறிப்பிட்ட பகுதிகளுக்குள் ஜீவிக்க முடியும். இந்தப் பகுதிகளையோ அல்லது அவற்றுக்கிடையேயான எல்லைகளையோ தாண்டி யாரும் செல்ல முடியாது, ஏனென்றால் அவற்றை தேவன் வகுத்துள்ளார். தேவன் ஏன் இவ்வாறு எல்லைகளை வகுத்துள்ளார்? அது மனிதகுலம் அனைவருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும்—உண்மையிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்! தேவன் ஒவ்வொரு வகையான ஜீவன்களுக்கும் ஒரு வரம்பை வகுத்து, ஒவ்வொரு வகை மனிதர்களுக்கும் ஜீவிக்கும் வழிகளை நிர்ணயித்தார். அவர் பூமியில் உள்ள பல்வேறு வகையான மனிதர்களையும் வெவ்வேறு இனங்களையும் பிரித்து அவர்களுக்காக ஒரு வரம்பை நிறுவினார். அடுத்ததாக இதைத்தான் நாம் விவாதிப்போம்.

நான்காவது பகுதி: தேவன் வெவ்வேறு இனங்களுக்கு இடையே எல்லைகளை வரைகிறார்

நான்காவதாக, தேவன் வெவ்வேறு இனங்களுக்கு இடையில் எல்லைகளை வகுத்தார். பூமியில் வெள்ளையர்கள், கறுப்பினத்தவர்கள், பழுப்பு நிற ஜனங்கள் மற்றும் மாநிற ஜனங்கள் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு வகையான ஜனங்கள் ஆவர். இந்த வெவ்வேறு வகையான ஜனங்களின் ஜீவிதத்திற்கு தேவன் ஒரு நோக்கத்தையும் நிர்ணயித்துள்ளார். அதைப் பற்றி அறியாமல், தேவனுடைய நிர்வாகத்தின் கீழ் பிழைப்பதற்கு ஜனங்கள் தங்களின் பொருத்தமான சூழலில் ஜீவிக்கின்றனர். இதற்கு வெளியே யாரும் காலடி எடுத்து வைக்க முடியாது. உதாரணமாக, வெள்ளைக்காரர்களைக் கருத்தில் கொள்வோம். அவர்களில் பெரும்பாலானோர் ஜீவிக்கும் புவியியல் வரம்பானது என்னவாக இருக்கிறது? பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஜீவிக்கின்றனர். கறுப்பினத்தவர்கள் முதன்மையாக ஜீவிக்கும் புவியியல் வரம்பு ஆப்பிரிக்கா ஆகும். பளுப்பு நிற ஜனங்கள் முதன்மையாக தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில், தாய்லாந்து, இந்தியா, மியான்மர், வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளில் ஜீவிக்கின்றனர். மாநிற ஜனங்கள் முதன்மையாக ஆசியாவில் ஜீவிக்கின்றனர். அதாவது சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் ஜீவிக்கின்றனர். இந்த வெவ்வேறு இனங்கள் அனைத்தையும் தேவன் சரியான முறையில் பரப்பியுள்ளார். இதனால் இந்த வெவ்வேறு இனங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரம்பியுள்ளனர். உலகின் இந்த வெவ்வேறு பகுதிகளில், மனிதர்களின் வெவ்வேறான ஒவ்வொரு இனத்திற்கும் பொருத்தமான பிழைப்பின் சூழலை தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே ஆயத்தம் செய்தார். இந்த ஜீவிக்கும் சூழல்களுக்குள், மாறுபட்ட வண்ணம் மற்றும் ஒப்பனை கொண்ட மண்ணை தேவன் அவர்களுக்காக ஆயத்தம் செய்துள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெள்ளைக்காரர்களின் உடல்களை உருவாக்கும் கூறுகள் கறுப்பினத்தவர்களின் உடல்களை உருவாக்கும் கூறுகளுக்கு சமமானவை அல்ல மற்றும் அவை பிற இனங்களின் உடல்களை உருவாக்கும் கூறுகளிலிருந்தும் வேறுபடுகின்றன. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, அந்த இனத்திற்கான பிழைப்பின் சூழலை அவர் ஏற்கனவே ஆயத்தம் செய்திருந்தார். அவ்வாறு செய்வதில் அவரது நோக்கம் என்னவென்றால், அத்தகைய ஜனங்கள் பெருகத் தொடங்கியதும், எண்ணிக்கையை அதிகரிக்கும்போதும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சரி செய்யப்படலாம். தேவன் மனிதர்களை சிருஷ்டிப்பதற்கு முன்பு, அவர் ஏற்கனவே அனைத்தையும் நினைத்திருந்தார்—ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் வெள்ளையர்களுக்காக ஒதுக்கி வைத்திருந்தார். ஆகவே, தேவன் பூமியை உருவாக்கும் போது, அவருக்கு ஏற்கனவே ஒரு திட்டம் இருந்தது. அவர் அந்த நிலத்தில் வைக்க வேண்டியதை வைத்ததிலும், அந்த நிலத்தில் அவர் வளர்க்க வேண்டியதை வளர்த்ததிலும் ஒரு குறிக்கோளும் நோக்கமும் அவருக்கு இருந்தது. உதாரணமாக, எந்த மலைகள், எத்தனை சமவெளிகள், எத்தனை நீர் ஆதாரங்கள், எத்தகைய பறவைகள் மற்றும் மிருகங்கள், எந்த மீன்கள், எந்தத் தாவரங்கள் அந்த நிலத்தில் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தேவன் முன்பே ஆயத்தம் செய்திருந்தார். ஒரு குறிப்பிட்ட வகை மனிதனுக்காக, ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக, பிழைப்பின் சூழலை ஆயத்தம் செய்யும்போது, தேவன் அனைத்து வகையான கோணங்களிலிருந்தும் பல பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது: புவியியல் சூழல், மண்ணின் கலவை, பல்வேறு வகையான பறவைகள் மற்றும் மிருகங்கள், பல்வேறு வகையான மீன்களின் அளவு, மீன்களின் உடல்களை உருவாக்கும் கூறுகள், நீரின் தரத்தில் உள்ள வேறுபாடுகள், அத்துடன் அனைத்து வகையான தாவரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது…. தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே அதையெல்லாம் ஆயத்தம் செய்திருந்தார். அத்தகைய சூழல் பிழைப்பதற்கான ஒரு சூழலாகும். அது வெள்ளையர்களுக்காக தேவன் உருவாக்கிய மற்றும் ஆயத்தம் செய்யததாகும். எனவே இயல்பாகவே அது அவர்களுக்கு சொந்தமானதாகும். தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது அவர் அதில் நிறைய சிந்தனைகளை வைத்து ஒரு திட்டத்துடன் செயல்பட்டதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (ஆம், பல்வேறு வகையான மனிதர்களுக்கான தேவனுடைய கருத்தாய்வு மிகவும் சிந்தனையுள்ளதாக இருந்ததைக் கண்டோம். பல்வேறு வகையான மனிதர்களுக்காக அவர் உருவாக்கிய ஜீவிக்கும் சூழலுக்காக, எத்தகைய பறவைகள், மிருகங்கள் மற்றும் மீன்கள், எத்தனை மலைகள் மற்றும் எத்தனை சமவெளிகளை அவர் ஆயத்தம் செய்தார். அவர் மிகுந்த சிந்தனையுடனும் துல்லியத்துடனும் அதைக் கருதினார்.) உதாரணமாக வெள்ளையர்களை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளையர்கள் முதன்மையாக என்ன ஆகாரங்களை புசிக்கிறார்கள்? வெள்ளையர்கள் புசிக்கும் ஆகாரங்கள் ஆசிய ஜனங்கள் புசிக்கும் ஆகாரங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவையாகும். வெள்ளையர்கள் புசிக்கும் பிரதான ஆகாரங்கள் முக்கியமாக இறைச்சி, முட்டை, பால் மற்றும் கோழி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ரொட்டி மற்றும் அரிசி போன்ற தானியங்கள் பொதுவாக தட்டுகளின் பக்கத்தில் வைக்கப்படும் துணை ஆகாரங்கள் ஆகும். காய்கறி கலவையைப் புசிக்கும்போது கூட, அவர்கள் வறுத்த மாட்டிறைச்சி அல்லது கோழியை ஒரு சில துண்டுகளாக வைக்க முனைகிறார்கள். கோதுமை சார்ந்த ஆகாரங்களைப் புசிக்கும்போது கூட, அவர்கள் பாலாடைக் கட்டி, முட்டை அல்லது இறைச்சியைச் சேர்க்க முனைகிறார்கள். அதாவது, அவர்களின் பிரதான ஆகாரங்கள் முதன்மையாகக் கோதுமை சார்ந்த ஆகாரங்கள் அல்லது அரிசியைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் அதிக அளவு இறைச்சி மற்றும் பாலாடைக்கட்டியைப் புசிக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி குளிர்ந்த தண்ணீரைக் குடிக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் புசிக்கும் ஆகாரங்களில் சத்து அதிகமாக இருக்கிறது. எனவே, வெள்ளையர்கள் விதிவிலக்காக வலுவானவர்கள். அது அவர்களுடைய ஜீவாதாரத்தின் ஆதாரமாகவும், தேவனால் அவர்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட ஜீவிதச் சூழல்களாகவும் இருக்கிறது. அது அவர்களுக்கு இந்த ஜீவித முறையை அனுமதிக்கிறது. அது மற்ற இன ஜனங்களின் ஜீவித முறைகளிலிருந்து வேறுபட்டதாகும். இந்த ஜீவித முறையில் சரி தவறு எதுவும் இல்லை—அது இயல்பானதாகும். தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டதும் அது தேவனுடைய கட்டளைகளிலிருந்தும் அவருடைய ஏற்பாடுகளிலிருந்தும் எழுகிறதுமாகும். இந்த இனம் இந்த ஜீவித முறையைக் கொண்டுள்ளது மற்றும் அவர்களுடைய ஜீவாதாரத்திற்கான இந்த ஆதாரங்கள் அந்த இனம் காரணமாகவும், தேவனால் அவர்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட பிழைப்புக்கான சூழல் காரணமாகவும் உள்ளன. வெள்ளையர்களுக்கு தேவனால் ஆயத்தம் செய்யப்பட்ட பிழைப்பதற்கான சூழலும், அந்தச் சூழலிலிருந்து அவர்கள் பெறும் அன்றாட ஜீவாதாரமும் செழுமையாகவும் நிறைவாகவும் இருக்கிறது என்று நீங்கள் கூறலாம்.

மற்ற இனங்களின் பிழைப்புக்குத் தேவையான சூழல்களையும் தேவன் ஆயத்தம் செய்தார். கறுப்பினத்தவர்களும் உள்ளனர்—கறுப்பினத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்? முதன்மையாக அவர்கள் மத்திய மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ளனர். அத்தகைய சூழலில் தேவன் அவர்களுக்கு எதை ஆயத்தம் செய்தார்? வெப்பமண்டல மழைக்காடுகள், அனைத்து வகையான பறவைகள் மற்றும் மிருகங்கள் மற்றும் பாலைவனங்கள் மற்றும் ஜனங்களுடன் ஜீவிக்கும் அனைத்து வகையான தாவரங்களையும் ஆயத்தம் செய்தார். தண்ணீர், அவர்களுடைய ஜீவாதாரம் மற்றும் ஆகாரத்துக்கான ஆதாரங்களை அவர்கள் கொண்டுள்ளனர். தேவன் அவர்களுக்கு சார்பாக இருக்கவில்லை. அவர்கள் அதுவரை என்ன செய்தாலும், அவர்களுடைய பிழைப்பு ஒருபோதும் ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. அவர்களும் உலகின் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் ஒரு குறிப்பிட்ட பகுதியையும் ஆக்கிரமித்துள்ளனர்.

இப்போது, மாநிற ஜனங்களைப் பற்றி பேசலாம். மாநிற ஜனங்கள் முதன்மையாக பூமியின் கிழக்கில் அமைந்துள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் சூழல்களுக்கும் புவியியல் நிலைகளுக்கும் மத்தியிலான வேறுபாடுகள் என்னவாக இருக்கின்றன? கிழக்கில், பெரும்பான்மையான நிலங்கள் வளமானதாகவும், பொருட்கள் மற்றும் கனிம வளங்களால் நிறைந்ததாகவும் உள்ளன. அதாவது, எல்லா வகையான நிலம் மேலுள்ள மற்றும் நிலத்தடி வளங்களும் ஏராளமாக உள்ளன. இந்தக் குழுவினருக்காக, இந்த இனத்திற்காக, அவர்களுடன் தொடர்புடைய மண், காலநிலை மற்றும் பல்வேறு புவியியல் சூழல்களை தேவன் ஆயத்தம் செய்தார். அந்தப் புவியியல் சூழலுக்கும் மேற்கின் சுற்றுச்சூழலுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் இருந்தாலும், ஜனங்களுக்குத் தேவையான ஆகாரம், ஜீவாதாரங்கள் மற்றும் பிழைப்பதற்கான ஆதாரங்கள் தேவனால் ஆயத்தம் செய்யப்பட்டன. மேற்கில் வெள்ளையர்கள் இருப்பதை விட அது ஒரு வித்தியாசமான சூழல் ஆகும். ஆனால் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அந்த ஒரு விஷயம் என்னவாக இருக்கிறது? கிழக்கு இனத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் பெரியது. எனவே மேற்கு நாடுகளிலிருந்து வேறுபடும் பல வளங்களை தேவன் பூமியின் அந்த பகுதியில் சேர்த்துள்ளார். அங்கு, அவர் பல இயற்கை காட்சிகளையும் அனைத்து வகையான ஏராளமான பொருட்களையும் சேர்த்துள்ளார். அங்குள்ள இயற்கை வளங்கள் மிகுதியாக உள்ளன. கிழக்கத்திய இனத்தைச் சேர்ந்த ஏராளமான ஜனங்களை வளர்ப்பதற்கு இந்த நிலப்பரப்பு மாறுபட்டது மற்றும் வேறுபட்டதாகும். கிழக்கை மேற்கிலிருந்து வேறுபடுத்துவது என்னவென்றால், மேற்கு நாடுகளை விட கிழக்கில்—தெற்கிலிருந்து வடக்காக, கிழக்கிலிருந்து மேற்காக—காலநிலை சிறந்தது. நான்கு பருவங்கள் தெளிவாக வேறுபடுகின்றன. வெப்பநிலை பொருத்தமாக இருக்கின்றன. இயற்கை வளங்கள் ஏராளமாக உள்ளன மற்றும் இயற்கைக் காட்சிகள் மற்றும் நிலப்பரப்பு வகைகள் மேற்கு நாடுகளை விட மிகச் சிறந்தவையாக உள்ளன. தேவன் இதை ஏன் செய்தார்? தேவன் வெள்ளையர்களுக்கும் மாநிற ஜனங்களுக்கும் இடையே சரியான சமநிலையை உருவாக்கினார். இதன் அர்த்தம் என்னவாக இருக்கிறது? இதன் அர்த்தம் என்னவென்றால், வெள்ளையர்களின் ஆகாரத்தின் அனைத்து அம்சங்களும், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களும், அவர்களுடைய இன்பத்திற்காக வழங்கப்பட்ட பொருட்களும் மாநிற ஜனங்கள் அனுபவிக்கக்கூடியதை விட மிகச் சிறந்தவையாகும். இருப்பினும், தேவன் எந்த இனத்திற்கும் சார்பாக இல்லை. தேவன் மாநிற ஜனங்களுக்குப் பிழைப்பதற்கு மிகவும் அழகான மற்றும் சிறந்தச் சூழலைக் கொடுத்தார். இதுவே அந்தச் சமநிலை.

உலகின் எந்தப் பகுதியில் எத்தகைய ஜனங்கள் ஜீவிக்க வேண்டும் என்பதை தேவன் முன்னரே தீர்மானித்துள்ளார். இந்த வரம்புகளை மீறி மனிதர்களால் செல்ல முடியுமா? (இல்லை, அவர்களால் முடியாது.) என்ன ஓர் அதிசயமான விஷயம்! வெவ்வேறு காலங்களில் அல்லது அசாதாரண காலங்களில் யுத்தங்கள் அல்லது ஆக்கிரமிப்புகள் நடந்தாலும், இந்த யுத்தங்களும் ஆக்கிரமிப்புகளும் ஒவ்வொரு இனத்திற்கும் தேவன் முன்னரே தீர்மானித்த பிழைப்புக்கானச் சூழல்களை முற்றிலுமாக அழிக்க முடியாது. அதாவது, உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தேவன் ஒரு குறிப்பிட்ட வகை ஜனங்களை நிர்ணயித்துள்ளார். அவர்களால் அந்த வரம்புகளுக்கு அப்பால் செல்ல முடியாது. தேவனுடைய அனுமதியின்றி, ஜனங்கள் தங்கள் நிலப்பரப்பை மாற்ற அல்லது விரிவாக்க ஒருவித லட்சியத்தைக் கொண்டிருந்தாலும், அதை அடைவது மிகவும் கடினமாகும். அவர்கள் ஜெயம் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். உதாரணமாக, வெள்ளையர்கள் தங்கள் பிரதேசத்தை விரிவுபடுத்த விரும்பினர் மற்றும் அவர்கள் வேறு சில நாடுகளை குடியேறினர். ஜெர்மானியர்கள் சில நாடுகளை ஆக்கிரமித்தனர். ஆங்கிலேயர்கள் ஒரு காலத்தில் இந்தியாவை ஆக்கிரமித்தனர். விளைவு என்னவாக இருந்தது? இறுதியில், அவை தோல்வியடைந்தன. அவர்கள் தோல்வியிலிருந்து நாம் எதைப் பார்க்கிறோம்? தேவன் முன்னரே தீர்மானித்ததை அழிக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, ஆங்கிலேயரின் விரிவாக்கத்தில் நீ எவ்வளவு பெரிய வேகத்தைக் கண்டிருந்தாலும், இறுதியில் அவர்கள் பின்வாங்க வேண்டியிருந்தது. நிலம் இன்னும் இந்தியாவுக்குச் சொந்தமாக உள்ளது. அந்த நிலத்தில் வசிப்பவர்கள் இன்னும் இந்தியர்கள். அவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல. ஏனென்றால் தேவன் அதை அனுமதிக்க மாட்டார். வரலாறு அல்லது அரசியலை ஆராய்ச்சி செய்பவர்களில் சிலர் அது குறித்த ஆய்வறிக்கைகளை வழங்கியுள்ளனர். ஆங்கிலேயர்கள் ஏன் தோல்வியடைந்தனர் என்பதற்கான காரணங்களை அவர்கள் கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இனத்தை வெல்ல முடியாததால் இருக்கலாம் அல்லது அது வேறு ஏதேனும் மனிதக் காரணங்களுக்காக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்…. இவை உண்மையான காரணங்கள் அல்ல. உண்மையான காரணம் தேவன்தான்—அவர் அதை அனுமதிக்க மாட்டார்! தேவன் ஒரு இனத்தை ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஜீவிக்க அனுமதிக்கிறார். அவர்களை அங்கேயே குடியமர்த்துகிறார். அந்த நிலத்திலிருந்து அவர்களை நகர்த்த தேவன் அனுமதிக்கவில்லை என்றால், அவர்களால் ஒருபோதும் நகர முடியாது. தேவன் அவர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியை ஒதுக்கினால், அவர்கள் அந்தப் பகுதிக்குள் ஜீவிப்பார்கள். இந்த வரையறுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மனிதகுலத்தை விடுவிக்கவோ வெளியேற்றவோ முடியாது. அது நிச்சயமாகும். ஆக்கிரமிப்பாளர்களின் வல்லமைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது ஆக்கிரமிக்கப்படுபவர்களை எவ்வளவு பலவீனப்படுத்தினாலும், படையெடுப்பாளர்களின் ஜெயத்தை இறுதியில் தேவன்தான் தீர்மானிக்க வேண்டும். அது ஏற்கனவே அவரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதை யாராலும் மாற்ற முடியாது.

மேற்கூறியவை தேவன் எவ்வாறு பல்வேறு இனங்களை பரப்பியுள்ளார் என்பதைப் பற்றியதாகும். இனங்களைப் பரப்ப தேவன் என்ன கிரியை செய்துள்ளார்? முதலாவதாக, ஜனங்களுக்கு வெவ்வேறு இடங்களை ஒதுக்கி, அதன் பிறகு தலைமுறை தலைமுறையாக அந்த இடங்களில் தப்பிப்பிழைக்க அவர் பெரிய அளவிலான புவியியல் சூழலை ஆயத்தம் செய்தார். அது நிர்ணயிக்கப்படுகிறது—அவர்களுடைய பிழைப்புக்கான வரையறுக்கப்பட்ட பகுதி நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுடைய ஜீவிதம், அவர்கள் என்ன புசிக்கிறார்கள், என்ன குடிக்கிறார்கள், அவர்களுடைய ஜீவாதாரங்கள் என இதையெல்லாம் நீண்ட காலமாக தேவன் நிர்ணயித்துக் கொண்டார். தேவன் எல்லாவற்றையும் உருவாக்கும் போது, அவர் பல்வேறு வகையான ஜனங்களுக்காக வெவ்வேறு காரியங்களை ஆயத்தம் செய்தார்: வெவ்வேறு மண் கலவைகள், வெவ்வேறு காலநிலைகள், வெவ்வேறு தாவரங்கள் மற்றும் வெவ்வேறு புவியியல் சூழல்களை ஆயத்தம் செய்தார். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பறவைகள் மற்றும் மிருகங்கள் உள்ளன. வெவ்வேறு நீர்நிலைகள் அவற்றின் சொந்த வகையான மீன் மற்றும் நீர்வாழ் பொருட்களைக் கொண்டுள்ளன. பூச்சிகளின் வகைகள் கூட தேவனால் தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக, அமெரிக்க கண்டத்தில் வளரும் விஷயங்கள் அனைத்தும் மிகப் பெரியவை, மிக உயரமானவை மற்றும் மிகவும் உறுதியானவை. மலைக் காட்டில் உள்ள மரங்களின் வேர்கள் அனைத்தும் மிகவும் ஆழமற்றவை, ஆனால் அவை மிக உயரமாக வளர்கின்றன. அவை நூறு மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட உயரங்களைக் கூட அடையலாம். ஆனால் ஆசியாவில் உள்ள காடுகளில் உள்ள மரங்கள் பெரும்பாலும் அவ்வளவு உயரமாக இல்லை. உதாரணமாக கற்றாழை செடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஜப்பானில் அவை மிகவும் குறுகிய மற்றும் மிக மெல்லியதாக உள்ளவை. ஆனால் அமெரிக்காவில் கற்றாழைத் தாவரங்கள் மிகப் பெரியவை. இங்கே ஒரு வித்தியாசம் உள்ளது. அது ஒரே பெயரில் ஒரே மாதிரியான தாவரமாகும். ஆனால் அமெரிக்கக் கண்டத்தில் அது குறிப்பாகப் பெரியதாக வளர்கிறது. இந்தப் பல்வேறு அம்சங்களில் உள்ள வேறுபாடுகள் ஜனங்களால் காணப்படாமலோ அல்லது உணரப்படாமலோ இருக்கலாம். ஆனால் தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கும்போது, அவர் அவற்றை வரையறுத்து வெவ்வேறு புவியியல் சூழல்கள், வெவ்வேறு நிலப்பரப்புகள் மற்றும் வெவ்வேறு இனங்களுக்கு வெவ்வேறு ஜீவன்களை ஆயத்தம் செய்தார். ஏனென்றால், தேவன் பல்வேறு வகையான மனிதர்களைப் சிருஷ்டித்தார், அவர்களில் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை, அவர்களுடைய ஜீவித முறைகள் என்ன என்பதை அவர் அறிவார்.

தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார், எல்லோருக்கும் வழங்குகிறார், அவர் எல்லாவற்றுக்கும் தேவன்

இவற்றில் சிலவற்றைப் பற்றிப் பேசிய பிறகு, நாம் இப்போது விவாதித்த முக்கிய தலைப்பைப் பற்றி நீங்கள் ஏதாவது கற்றுக்கொண்டதாக இப்போது உணர்கிறீர்களா? நீங்கள் அதைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? பரந்தத் தலைப்பிற்குள் இந்த அம்சங்களைப் பற்றி பேச நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பது பற்றி உங்களுக்கு இப்போது ஒரு தோராயமான யோசனை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது அப்படித்தானா? நீங்கள் எவ்வளவு புரிந்துகொண்டீர்கள் என்பதைப் பற்றி கொஞ்சம் பேசலாம். (எல்லாவற்றிற்கும் தேவன் தீர்மானித்த கட்டளைகளால் மனிதகுலம் அனைத்தும் வளர்க்கப்பட்டுள்ளது. தேவன் இந்தக் கட்டளைகளை நிர்ணயிக்கும் போது, வெவ்வேறு சூழல்கள், வெவ்வேறு ஜீவித முறைகள், வெவ்வேறு ஆகாரங்கள் மற்றும் வெவ்வேறு காலநிலை மற்றும் வெப்பநிலைகளுடன் வெவ்வேறு இனங்களை வழங்கினார். மனிதகுலம் அனைத்தும் பூமியில் குடியேறி ஜீவிக்கும் வகையில் அது இருந்தது. இதிலிருந்து மனிதகுலத்தின் பிழைப்புக்கான தேவனுடைய திட்டங்கள் மிகவும் துல்லியமானவை என்பதையும், அவருடைய ஞானத்தையும் பரிபூரணத்தையும், மனிதர்களான நம்மீது அவர் கொண்டுள்ள அன்பையும் என்னால் காண முடிகிறது.) (தேவனால் நிர்ணயிக்கப்பட்ட கட்டளைகள் மற்றும் நோக்கங்களை எந்தவொரு மனிதன், நிகழ்வு அல்லது விஷயத்தால் மாற்ற முடியாது. அது அனைத்தும் அவருடைய ஆட்சியின் கீழ் உள்ளது.) எல்லாவற்றின் வளர்ச்சியையும் தேவன் தீர்மானித்த கட்டளைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, மனிதகுலம் அனைத்தும் அதன் பல்வேறு வகைகளில், தேவனால் வழங்கப்பட்டு வளர்க்கப்படுகிறது, அல்லவா? இந்தக் கட்டளைகள் அழிக்கப்பட்டிருந்தால் அல்லது தேவன் இந்தக் கட்டளைகளை மனிதகுலத்திற்காக நிறுவவில்லை என்றால், மனிதகுலத்தின் வாய்ப்புகள் என்னவாக இருந்திருக்கும்? மனிதர்கள் பிழைப்பதற்கான அடிப்படை சூழல்களை இழந்த பிறகு, அவர்களுக்கு ஏதாவது ஆகார ஆதாரம் இருந்திருக்குமா? ஆகார ஆதாரங்கள் ஒரு பிரச்சினையாக மாறும் சாத்தியம் உள்ளது. ஜனங்கள் ஆகார ஆதாரங்களை இழந்தால், அதாவது, அவர்கள் புசிக்க எதையும் பெற முடியாவிட்டால், அவர்கள் எத்தனை நாட்கள் ஜீவிக்க முடியும்? ஒருவேளை அவை ஒரு மாதம் கூட நீடிக்காது. அவர்கள் பிழைப்பது ஒரு பிரச்சினையாக மாறும். ஆகவே, ஜனங்கள் பிழைப்பதற்காக, அவர்களுடைய தொடர்ச்சியான இருப்பு, இனப்பெருக்கம் மற்றும் ஜீவாதாரத்திற்காக தேவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் மிக முக்கியமானதாகும். தேவன் தனது சிருஷ்டிப்பின் விஷயங்களில் செய்யும் ஒவ்வொரு காரியமும் மனிதகுலத்தின் பிழைப்பிலிருந்து நெருங்கிய தொடர்புடையது மற்றும் பிரிக்க முடியாதது ஆகும். மனிதகுலத்தின் பிழைப்பு ஒரு பிரச்சினையாக மாறினால், தேவனுடைய நிர்வாகம் தொடர முடியுமா? தேவனுடைய மேலாண்மை இன்னும் இருக்குமா? தேவனுடைய நிர்வாகம் அவர் வளர்க்கும் அனைத்து மனிதகுலத்தின் பிழைப்போடும் இணைந்து செயல்படுகிறது. ஆகவே, தேவன் தனது சிருஷ்டிப்பின் எல்லா விஷயங்களுக்கும், மனிதர்களுக்காக அவர் என்ன செய்கிறார் என்பதற்கும் என்ன ஆயத்தங்கள் செய்தாலும், அவை அனைத்தும் அவருக்கு அவசியமானதும், மனிதகுலத்தின் பிழைப்புக்கு முக்கியமானதுமாகும். எல்லாவற்றிற்கும் தேவன் தீர்மானித்த இந்தக் கட்டளைகள் விலகிவிட்டால், இந்தக் கட்டளைகள் உடைக்கப்பட்டால் அல்லது சீர்குலைந்தால், பின்னர் எதுவும் இருக்காது. மனிதகுலம் பிழைப்பதற்கான சூழல் தொடர்ந்து இருக்காது அல்லது அவற்றின் அன்றாட ஜீவாதாரமும், மனிதகுலமும் இல்லாமல் போகும். இந்தக் காரணத்திற்காக, மனிதகுலத்தின் இரட்சிப்பை தேவன் நிர்வகிப்பதும் இல்லாமல் போகும்.

நாம் விவாதித்த ஒவ்வொன்றும், ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மனிதரின் பிழைப்போடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. “நீர் பேசுவது மிகப் பெரியது, அது எங்களால் பார்க்கக்கூடிய ஒன்று அல்ல” என்று நீங்கள் கூறலாம் மற்றும் “நீ பேசுவதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சொல்லும் மனிதர்களும் இருக்கலாம். இருப்பினும், நீ எல்லாவற்றின் ஒரு பகுதியாக மட்டுமே ஜீவிக்கிறாய் என்பதை மறந்துவிடாதே. தேவனுடைய ஆட்சியில் சிருஷ்டிப்பின் எல்லாவற்றிலும் நீ ஒருவன். தேவனுடைய சிருஷ்டிப்பின் விஷயங்களை அவருடைய ஆட்சியில் இருந்து பிரிக்க முடியாது மற்றும் ஒரு மனிதரும் அவருடைய ஆட்சியில் இருந்து தன்னைப் பிரிக்க முடியாது. அவருடைய ஆட்சியை இழப்பதும், அவருடைய ஏற்பாட்டை இழப்பதும் என்பது ஜனங்களின் ஜீவிதம் மற்றும் ஜனங்களின் மாம்ச ஜீவிதம், மறைந்துவிடும் என்பதாகும். மனிதகுலத்தின் பிழைப்புக்கான சூழல்களை தேவன் நிறுவுவதன் முக்கியத்துவம் அதுதான். நீ எந்த இனத்தைச் சேர்ந்தவன் அல்லது நீ எந்த நிலத்தில் ஜீவிக்கிறாய் என்பது முக்கியமல்ல. அது மேற்கு அல்லது கிழக்கில் இருந்தாலும்—தேவன் மனிதகுலத்திற்காக நிறுவியிருக்கும் பிழைப்புக்கான சூழலில் இருந்து உன்னைப் பிரிக்க முடியாது மற்றும் உன்னிடமிருந்து உன்னைப் பிரிக்க முடியாது. பிழைப்பதற்கான சுற்றுச்சூழலின் வளர்ப்பு மற்றும் ஏற்பாடுகளை அவர் மனிதர்களுக்காக நிறுவியுள்ளார். உன் ஜீவாதாரம் என்ன, நீ ஜீவிக்க எதை நம்புகிறாய், உன் ஜீவிதத்தை மாம்சத்தில் நிலைநிறுத்த நீ எதை நம்பியிருந்தாலும், தேவனுடைய ஆட்சி மற்றும் அவருடைய நிர்வாகத்திலிருந்து உன்னைப் பிரிக்க முடியாது. சிலர் சொல்கிறார்கள்: “நான் ஒரு விவசாயி அல்ல. நான் ஜீவிதத்திற்காகப் பயிர்களை நடவு செய்யவில்லை. எனது ஆகாரத்துக்காக நான் வானத்தை நம்பவில்லை. எனவே தேவனால் நிறுவப்பட்ட பிழைப்புக்கான சூழலுக்குள் என் பிழைப்பு நடைபெறவில்லை. அந்த மாதிரியான சூழலில் இருந்து எனக்கு எதுவும் வழங்கப்படவில்லை.” அது சரியானதாகுமா? நீ உன் ஜீவிதத்திற்காகப் பயிர்களை நடவு செய்யவில்லை என்று சொல்கிறாய். ஆனால் நீ தானியங்களைப் புசிக்கவில்லையா? நீ இறைச்சி மற்றும் முட்டைகளைப் புசிக்கவில்லையா? மேலும் நீ காய்கறிகளையும் பழங்களையும் புசிக்கவில்லையா? நீ புசிக்கும் அனைத்தும், உனக்குத் தேவைப்படும் இவை அனைத்தும் மனிதகுலத்திற்காக தேவனால் நிறுவப்பட்ட பிழைப்புக்கான சூழலில் இருந்து பிரிக்க முடியாதவையாகும். மனிதகுலத்திற்குத் தேவைப்படும் எல்லாவற்றின் மூலத்தையும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் பிரிக்க முடியாது. அவை மொத்தத்தில் பிழைப்பதற்கான உன் சூழல்களை உருவாக்குகின்றன. நீ குடிக்கும் நீர், நீ அணியும் ஆடை மற்றும் நீ பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் என இவை அனைத்தும் தேவனுடைய சிருஷ்டிப்பின் விஷயங்களிலிருந்து பெறப்படவில்லையா? சிலர் சொல்கிறார்கள்: “தேவனுடைய சிருஷ்டிப்பின் விஷயங்களிலிருந்து பெறப்படாத சில பொருட்கள் உள்ளன. அந்தப் பொருட்களில் நெகிழி ஒன்றாகும் என்பதை நீ காண்கிறாய். அது ஒரு ரசாயன பொருளாகும். மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளாகும்.” அது சரியானதாகுமா? பிளாஸ்டிக் உண்மையில் மனிதனால் உருவாக்கப்பட்டதாகும். அது ஒரு வேதியியல் பொருளாகும். ஆனால் பிளாஸ்டிக்கின் மூலக் கூறுகள் எங்கிருந்து வந்தன? மூலக் கூறுகள் தேவனால் உருவாக்கப்பட்ட பொருட்களிலிருந்து பெறப்பட்டன. நீ காணும் மற்றும் அனுபவிக்கும் பொருட்கள் அனைத்தும், நீ பயன்படுத்தும் ஒவ்வொன்றும், தேவன் சிருஷ்டித்தவற்றிலிருந்து பெறப்படுகின்றன. அதாவது, ஒரு மனிதர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த ஜீவாதாரம் உடையவராக இருந்தாலும் அல்லது அவர் பிழைப்பதற்கான எத்தகைய சூழலில் இருந்தாலும், தேவன் வழங்கியவற்றிலிருந்து அவர் தன்னைப் பிரிக்க முடியாது. ஆகவே, இன்று நாம் விவாதித்த இந்த விஷயங்கள் “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்” என்ற தலைப்போடு தொடர்புடையதா? இன்று நாம் விவாதித்த விஷயங்கள் இந்தப் பெரிய தலைப்பின் கீழ் வருகிறதா? (ஆம்.) ஒருவேளை நான் இன்று பேசியவற்றில் சில, கொஞ்சம் புரிந்துகொள்ளக் கடினமானதாகவும் விவாதிக்கக் கடினமானதாகவும் இருக்கலாம். இருப்பினும், இப்போது அதைப் பற்றி உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கும் என்று நினைக்கிறேன்.

கடைசியாக நாம் செய்த சில கலந்துரையாடல்களில், நாம் கலந்துரையாடிய தலைப்புகளின் வரம்பு மிகவும் விரிவானதாகும். மாறாக அவற்றின் நோக்கம் விரிவானதாகும். எனவே நீங்கள் இதை எல்லாம் எடுத்துச் செல்ல சில முயற்சிகள் தேவைப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இதற்கு முன் தேவன் மீதான ஜனங்களின் நம்பிக்கையோடு இந்தத் தலைப்புகள் ஒருபோதும் இணைத்துக் கையாளப்படவில்லை. சிலர் இந்த விஷயங்களை ஒரு மர்மமாகவும், சிலர் அவற்றை ஒரு கதையாகவும் கேட்கிறார்கள்—எந்தப் பார்வை சரியானதாக இருக்கிறது? இவை அனைத்தையும் எந்தக் கண்ணோட்டத்தில் கேட்கிறீர்கள்? (தேவன் தனது சிருஷ்டிப்பின் எல்லாவற்றையும் எவ்வாறு ஒழுங்காக ஏற்பாடு செய்துள்ளார் என்பதையும், எல்லாவற்றிற்கும் கட்டளைகள் இருப்பதையும் நாம் கண்டோம். இந்த வார்த்தைகளின் மூலம் தேவனுடைய கிரியைகளையும் மனிதகுலத்தின் இரட்சிப்பிற்கான அவருடைய உத்தேச ஏற்பாடுகளையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.) கலந்துரையாடும் இந்தக் காலங்களில், எல்லாவற்றையும் தேவன் நிர்வகிப்பதற்கான நோக்கம் எவ்வளவு தூரம் நீண்டுள்ளது என்பதை நீங்கள் பார்த்தீர்களா? (எல்லா மனிதர்களுக்கும் மேலாக, எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளது.) தேவன் ஒரே இனத்தின் தேவனா? அவர் ஒரு வகை ஜனங்களின் தேவனா? அவர் மனிதகுலத்தின் ஒரு சிறிய பகுதியின் தேவனா? (இல்லை, அவர் அப்படிப்பட்டவர் இல்லை.) அப்படி இல்லை என்பதால், தேவனைப் பற்றிய உங்கள் அறிவின் படி, அவர் மனிதகுலத்தின் ஒரு சிறு பகுதியின் தேவன் மட்டுமே அல்லது அவர் உங்கள் தேவன் மட்டுமே என்றால், இந்த முன்னோக்கு சரியானதாக இருக்குமா? தேவன் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார், ஆட்சி செய்கிறார் என்பதால், ஜனங்கள் அவருடைய கிரியைகளையும், அவருடைய ஞானத்தையும், சர்வவல்லமையையும் பார்க்க வேண்டும். அது ஜனங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். தேவன் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார், எல்லாவற்றையும் ஆளுகிறார், எல்லா மனிதர்களையும் ஆளுகிறார் என்று நீ சொன்னால், ஆனால் மனிதகுலத்தின்மீது அவருடைய ஆட்சியைப் பற்றிய புரிதலோ அல்லது நுண்ணறிவோ உனக்கு இல்லையென்றால், அவர் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்பதை நீ உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியுமா? உன் இருதயத்தில் நீ நினைக்கலாம், “என்னால் முடியும், ஏனென்றால் என் ஜீவிதம் முழுக்க முழுக்க தேவனால் ஆளப்படுகிறது என்பதை நான் காண்கிறேன்.” ஆனால் தேவன் உண்மையில் சிறியவரா? இல்லை, அவர் சிறியவர் இல்லை! உனக்காகவும், உன்னிடத்தில் அவர் செய்த கிரியைகளுக்காகவும் தேவனுடைய இரட்சிப்பை மட்டுமே நீ காண்கிறாய். இந்த விஷயங்களிலிருந்தே அவருடைய ஆட்சியை நீ காண்கிறாய். அந்த நோக்கம் மிகவும் சிறியது மற்றும் அது தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுவதற்கான உன் வாய்ப்புகளில் தீங்கு விளைவிக்கும். அது எல்லாவற்றிலும் தேவனுடைய ஆட்சியைப் பற்றிய உன் உண்மையான அறிவையும் கட்டுப்படுத்துகிறது. உனக்காக தேவன் அளிக்கும் இரட்சிப்பின் வரம்பிற்கு தேவனைப் பற்றிய உன் அறிவை நீ மட்டுப்படுத்தினால், அவர் எல்லா காரியங்களையும் ஆளுகிறார் என்பதையும், எல்லாவற்றையும் அவர் ஆளுகிறார் என்பதையும், மனிதகுலம் முழுவதையும் ஆளுகிறார் என்பதையும் நீங்கள் ஒருபோதும் அடையாளம் காண முடியாது. இவை அனைத்தையும் நீ அங்கீகரிக்கத் தவறும்போது, உன் விதியை தேவன் ஆளுகிறார் என்ற உண்மையை நீ உண்மையிலேயே அடையாளம் காண முடியுமா? இல்லை உன்னால் முடியாது. உன் இருதயத்தில் நீ ஒருபோதும் அந்த அம்சத்தை அடையாளம் காண முடியாது—அதுபோன்ற உயர்ந்த புரிதலை நீ ஒருபோதும் அடைய முடியாது. நான் சொல்வது உனக்குப் புரிகிறது அல்லவா? உண்மையில், இந்தத் தலைப்புகளை, நான் பேசும் இந்த உள்ளடக்கத்தை, நீங்கள் எந்த அளவிற்கு புரிந்துகொள்ள முடிகிறது என்பது எனக்குத் தெரியும். இந்நிலையில் நான் ஏன் இதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறேன்? ஏனென்றால், இந்தத் தலைப்புகள், தேவனைப் பின்பற்றும், தேவனால் இரட்சிக்கப்பட விரும்பும் ஒவ்வொருவராலும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களாகும்—இந்தத் தலைப்புகளைப் புரிந்துக்கொள்வது அவசியமாகும். இந்த நேரத்தில் நீ அவற்றைப் புரிந்துக்கொள்ளாவிட்டாலும், ஒருநாள், உன் ஜீவனும், சத்தியத்தின் உன் அனுபவமும் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டும்போது, உன் ஜீவித மனநிலையின் மாற்றம் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டும்போது மற்றும் நீ ஒரு குறிப்பிட்ட அளவிலான அந்தஸ்தை அடையும்போது மட்டுமே கலந்துரையாடல் மூலம் நான் உன்னுடன் தொடர்புகொண்டுள்ள இந்தத் தலைப்புகள் உண்மையிலேயே தேவனைப் பற்றிய உன் அறிவைப் பின்தொடர்ந்து திருப்தி அளிக்கின்றன. ஆகவே, இந்த வார்த்தைகள் ஓர் அடித்தளத்தை அமைப்பதற்கானதும், தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்ற உன் எதிர்கால புரிதலுக்கும், தேவனைப் பற்றிய உன் புரிதலுக்கும் உன்னை ஆயத்தம் செய்வதற்கானதும் ஆகும்.

தேவனைப் பற்றி ஜனங்களின் இதயங்களில் எவ்வளவு புரிந்துக்கொள்ளுதல் இருந்தாலும், அதுவும் அவர்களின் இருதயங்களில் தேவன் வைத்திருக்கும் நிலையின் அளவு ஆகும். தேவனைப் பற்றிய அறிவின் அளவு அவர்களுடைய இதயங்களில் எவ்வளவு பெரியதாக இருகிறதோ, தேவன் அவர்களுடைய இருதயங்களில் அவ்வளவு பெரியதாக இருக்கிறார். உனக்குத் தெரிந்த தேவன் வெறுமையான மற்றும் தெளிவற்றவராக இருந்தால், நீ நம்பும் தேவனும் வெறுமையானவர் மற்றும் தெளிவற்றவர் ஆவார். உனக்குத் தெரிந்த தேவன் உன் சொந்த ஜீவிதத்தின் நோக்கத்துடன் மட்டுப்படுத்தப்பட்டவர். அதற்கும் உண்மையான தேவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு, தேவனுடைய நடைமுறைக் கிரியைகளை அறிந்துகொள்வது, தேவனுடைய யதார்த்தத்தையும் அவருடைய சர்வ வல்லமையையும் அறிந்துகொள்வது, தேவனுடைய உண்மையான அடையாளத்தை அறிந்துகொள்வது, அவரிடம் உள்ளதை அறிந்துகொள்வது, அவர் சிருஷ்டித்த எல்லாவற்றிலும் அவர் வெளிப்படுத்திய கிரியைகளை அறிந்துகொள்வது என தேவனைப் பற்றிய அறிவைப் பின்பற்றும் இவை ஒவ்வொரு மனிதருக்கும் மிகவும் முக்கியமானதாகும். சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் ஜனங்கள் பிரவேசிக்க முடியுமா என்பதில் அவர்களுக்கு நேரடித் தாக்கம் உள்ளது. தேவனைப் பற்றிய உன் புரிதலை வெறும் வார்த்தைகளாக நீ மட்டுப்படுத்தினால், அதை உன் சொந்தச் சிறிய அனுபவங்களுடனோ, தேவனுடைய கிருபையாக நீ கருதுவதற்கோ அல்லது தேவனுக்கு நீ அளித்த சிறிய சாட்சிகளுக்கோ மட்டுப்படுத்தினால், நீ நம்புகிற தேவன் முற்றிலும் உண்மையான தேவன் இல்லை என்று நான் சொல்கிறேன். அது மட்டுமல்லாமல், நீ நம்பும் தேவன் ஒரு கற்பனையான தேவன், உண்மையான தேவன் அல்ல என்றும் சொல்லலாம். ஏனென்றால், உண்மையான தேவன்தான் எல்லாவற்றையும் ஆளுகிறார். அவர் எல்லாவற்றிற்கும் மத்தியில் நடப்பவர் மற்றும் எல்லாவற்றையும் நிர்வகிப்பவர். மனிதகுலம் மற்றும் எல்லாவற்றின் தலைவிதியையும் தன் கைகளில் வைத்திருப்பவர் அவரே. நான் பேசும் தேவனுடைய கிரியையும், அவர் கிரியைகளும் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமல்ல. அதாவது, தற்போது அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவை மட்டுப்படுத்தப்படவில்லை. அவருடைய கிரியைகள் எல்லாவற்றிலும், எல்லாவற்றின் பிழைப்பிலும், எல்லாவற்றையும் மாற்றுவதற்கான கட்டளைகளிலும் வெளிப்படுகின்றன. தேவனுடைய சிருஷ்டிப்பின் எல்லாவற்றிலும் தேவனுடைய எந்தவொரு செயலையும் நீ காணவோ அங்கீகரிக்கவோ முடியாவிட்டால், அவருடைய எந்தவொரு செயலுக்கும் நீ சாட்சி கொடுக்க முடியாது. தேவனுக்காக நீ சாட்சி கொடுக்க முடியாவிட்டால், உனக்குத் தெரிந்த சிறிய “தேவன்” என்று நீ தொடர்ந்து பேசினால், உன் சொந்த யோசனைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் உன் மனதின் குறுகிய எல்லைக்குள் மட்டுமே இருக்கும் தேவனைப் பற்றி மட்டுமே நீ தொடர்ந்து பேசினால், பிறகு உன் விசுவாசத்தை தேவன் ஒருபோதும் புகழமாட்டார். நீ தேவனுக்காக சாட்சி கூறும்போது, தேவனுடைய கிருபையை நீ எவ்வாறு அனுபவிக்கிறாய், தேவனுடைய ஒழுக்கத்தையும் அவருடைய சிட்சையையும் நீ எவ்வாறு ஏற்றுக்கொள்கிறாய், அவருக்கான உன் சாட்சியில் அவருடைய ஆசீர்வாதங்களை நீ எவ்வாறு அனுபவிக்கிறாய் என்பதன் அடிப்படையில் மட்டும் நீ அவ்வாறு செய்தால், அது எங்கும் போதுமானதாக இருக்காது. அவரைத் திருப்திப்படுத்துவதற்குக் கூட நெருக்கமாக இருக்காது. உண்மையான தேவனுக்கு சாட்சி அளிக்க, தேவனுடைய சித்தத்திற்கு இணங்க நீங்கள் தேவனுக்காக சாட்சி கொடுக்க விரும்பினால், தேவன் வைத்திருப்பதை அவருடைய கிரியைகளிலிருந்து நீங்கள் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் தேவனுடைய கட்டுப்பாட்டிலிருந்து நீங்கள் காண வேண்டும் மற்றும் அவர் மனிதகுலம் அனைத்துக்கும் எவ்வாறு வழங்குகிறார் என்ற உண்மையைப் பார்க்க வேண்டும். உன் அன்றாட ஜீவாதாரமும், ஜீவிதத்தில் உன் தேவைகளும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை மட்டுமே நீ ஒப்புக்கொண்டால், ஆனால் தேவன் தம்முடைய சிருஷ்டிப்பின் எல்லாவற்றையும் மனிதகுலத்தின் அனைவருக்கும் வழங்கியுள்ளார் மற்றும் எல்லாவற்றையும் ஆளுவதன் மூலம், அவர் மனிதகுலம் அனைத்தையும் வழிநடத்துகிறார் என்ற உண்மையைப் பார்க்கத் தவறினால் நீ ஒருபோதும் தேவனுக்காகச் சாட்சி கொடுக்க முடியாது. இதையெல்லாம் சொல்வதில் எனது நோக்கம் என்னவாக இருக்கிறது? எனவே இதை நீங்கள் இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நான் பேசிய இந்தத் தலைப்புகள் உங்கள் சொந்த ஜீவிதத்தில் நுழைவதற்கு பொருத்தமற்றவை என்று நீங்கள் தவறாக நம்பாதீர்கள் மற்றும் இந்தத் தலைப்புகளை ஒரு வகை அறிவு அல்லது கோட்பாடு என்று நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த மாதிரியான அணுகுமுறையுடன் நான் சொல்வதை நீங்கள் கேட்டால், நீங்கள் ஒரு விஷயத்தையும் பெற மாட்டீர்கள். தேவனை அறிவதற்கான இந்தச் சிறந்த வாய்ப்பை நீங்கள் இழப்பீர்கள்.

இந்த விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவதில் எனது குறிக்கோள் என்னவாக இருக்கிறது? ஜனங்கள் தேவனை நடைமுறைப்படுத்துவதை புரிந்துக்கொள்வதும் தேவனை அறிவதும் எனது குறிக்கோள் ஆகும். நீ தேவனைப் புரிந்துகொண்டு, அவருடைய கிரியைகளை அறிந்தவுடன், அவரை அறியந்துக்கொள்வதற்கான வாய்ப்பு அல்லது சாத்தியக் கூறு வருகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு மனிதரைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீங்கள் அவர்களை எவ்வாறு புரிந்துக்கொள்வீர்கள்? அவர்களுடைய வெளிப்புற தோற்றத்தைப் பார்ப்பதன் மூலமா? அவர்கள் எதை அணிகிறார்கள், எப்படி ஆடை அணிகிறார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலமா? அவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம் புரிந்துகொள்வீர்களா? அவர்களுடைய அறிவின் நோக்கத்தைப் பார்ப்பதன் மூலமா? (இல்லை.) எனவே ஒரு மனிதனை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்? ஒரு மனிதரின் பேச்சு மற்றும் நடத்தை, அவர்களுடைய எண்ணங்கள் மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் மற்றும் தங்களைப் பற்றி வெளிக்காட்டும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் தீர்ப்புகளை வழங்குகிறீர்கள். ஒரு மனிதரை நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்வது, ஒரு மனிதரை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வது என்பது அதுதான். அதேபோல், நீங்கள் தேவனை அறிய விரும்பினால், அவருடைய நடைமுறைப் பக்கத்தையும், அவருடைய உண்மையான பக்கத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், அவருடைய கிரியைகளின் மூலமாகவும், அவர் செய்யும் ஒவ்வொரு நடைமுறைக் காரியத்தின் மூலமாகவும் நீங்கள் அவரை அறிந்துகொள்ள வேண்டும். அது சிறந்த வழியாகும். அது மட்டுமே வழியாகும்.

மனிதகுலம் பிழைப்பதற்கான ஒரு நிலையான சூழலை வழங்க தேவன் எல்லாவற்றிற்கும் மத்தியிலான உறவைச் சமநிலைப்படுத்துகிறார்

தேவன் தம்முடைய கிரியைகளை எல்லாவற்றிலும் வெளிப்படுத்துகிறார். எல்லாவற்றிலும் எல்லா விதிகளின் கட்டளைகளையும் தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் மற்றும் கட்டுப்படுத்துகிறார். அந்தக் கட்டளைகளின் கீழ் மனிதகுலம் அனைத்திற்கும் அவர் எவ்வாறு வழங்குகிறார், வளர்க்கிறார் என்பதைப் பற்றிப் பேசினோம். அது ஓர் அம்சமாகும். அடுத்ததாக, நாம் மற்றொரு அம்சத்தைப் பற்றிப் பேசப் போகிறோம். எல்லாவற்றையும் கட்டுப்படுத்த தேவன் அதைப் பயன்படுத்துகிறார். எல்லாவற்றையும் உருவாக்கிய பிறகு, தேவன் அவற்றுக்கு மத்தியிலான உறவுகளை எவ்வாறு சமன் செய்தார் என்பதைப் பற்றி நான் பேசுகிறேன். உங்களுக்கு அது ஒரு பெரிய தலைப்பாகும். எல்லாவற்றிற்கும் மத்தியிலான உறவை சமநிலைப்படுத்துதல் ஆகும்—அது ஜனங்கள் சாதிக்கக்கூடிய ஒன்றா? இல்லை, மனிதர்கள் அத்தகைய சாதனையைச் செய்ய இயலாது. ஜனங்கள் அழிவுக்கு மட்டுமே வல்லவர்கள். எல்லாவற்றிற்கும் மத்தியிலான உறவை அவர்களால் சமநிலைப்படுத்த முடியாது. அவர்களால் அவற்றை நிர்வகிக்க முடியாது. அத்தகைய பெரிய அதிகாரமும் வல்லமையும் மனிதகுலத்தின் கிரகிப்புக்கு அப்பாற்பட்டவை. இந்த மாதிரியான காரியங்களைச் செய்ய தேவனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால் அதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்வதில் தேவனுடைய நோக்கம் என்ன—எதற்காக அதைச் செய்கிறார்? அதுவும் மனிதகுலத்தின் பிழைப்புடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டதாகும். தேவன் செய்ய விரும்பும் ஒவ்வொரு காரியமும் அவசியமானதாகும்—அவர் செய்யக்கூடிய அல்லது செய்யக்கூடாத எதுவும் இல்லை. மனிதகுலத்தின் பிழைப்பைப் பாதுகாப்பதற்கும், பிழைப்பதற்கு ஜனங்களுக்கு சாதகமானச் சூழலைக் கொடுப்பதற்கும், அவர் செய்ய வேண்டிய சில இன்றியமையாத, முக்கியமான விஷயங்கள் உள்ளன.

“தேவன் எல்லாவற்றையும் சமன் செய்கிறார்” என்ற சொற்றொடரின் நேரடி அர்த்தத்திலிருந்து, அது மிகவும் துல்லிமற்றத் தலைப்பாகத் தெரிகிறது. முதலாவதாக, “எல்லாவற்றையும் சமநிலைப்படுத்துவது” என்பது எல்லாவற்றிக்கும் மேலான தேவனுடைய ஆளுகையைக் குறித்த கருத்தை ஜனங்களுக்கு வழங்குகிறது. “சமநிலை” என்ற இந்த வார்த்தையின் அர்த்தம் என்னவாக இருக்கிறது? முதலாவதாக, “சமநிலை” என்பது சமநிலையிலிருந்து வெளியேற அனுமதிக்காததைக் குறிக்கிறது. அது பொருட்களை எடைபோட எடைக் கற்களைப் பயன்படுத்துவதைப் போன்றது. அளவை சமநிலைப்படுத்த, ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள எடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். தேவன் பல வகையானவற்றைச் சிருஷ்டித்தார்: நகராதவை, நகருபவை, ஜீவிப்பவை, சுவாசிப்பவை, அத்துடன் சுவாசிக்காதவை ஆகியவற்றைச் சிருஷ்டித்தார். ஒன்றோடொன்று சார்ந்திருத்தல், ஒன்றோடொன்று இணைந்திருத்தல் ஆகியவற்றின் உறவை இவை அனைத்தும் அடைவது எளிதானதா? இவை அனைத்திலும் நிச்சயமாகக் கொள்கைகள் உள்ளன. ஆனால் அவை மிகவும் சிக்கலானவை, இல்லையா? அது தேவனுக்குக் கடினம் அல்ல, ஆனால் ஜனங்களுக்கு அது மிகவும் சிக்கலான விஷயமாகும். “சமநிலை” என்ற சொல் மிகவும் எளிமையான சொல்லாகும். இருப்பினும், ஜனங்கள் அதைப் படிக்க வேண்டுமென்றால், ஜனங்கள் தங்களுக்குள்ளாகவே சமநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், எல்லா வகையான கல்வியாளர்களும்—மனித உயிரியலாளர்கள், வானியலாளர்கள், இயற்பியலாளர்கள், வேதியியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் கூட—அதில் பணியாற்றினாலும் இந்த ஆராய்ச்சியின் இறுதி விளைவு என்னவாக இருக்கும்? அதன் விளைவு ஒன்றுமற்றதாக இருக்கும். ஏனென்றால், எல்லாவற்றையும் தேவன் உருவாக்கியது மிகவும் நம்பமுடியாதது மற்றும் மனிதகுலம் அதன் இரகசியங்களை ஒருபோதும் அறியாது. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, அவற்றுக்கிடையே கொள்கைகளை நிறுவினார். பரஸ்பரக் கட்டுப்பாடு, நிரப்புத்தன்மை மற்றும் ஜீவாதாரத்திற்காக பல்வேறு ஜீவிக்கும் வழிகளை நிறுவினார். இந்தப் பல்வேறு முறைகள் மிகவும் சிக்கலானவை. அவை நிச்சயமாக எளிமையானவை அல்லது ஒருதலைப்பட்சமானவை அல்ல. ஜனங்கள் தங்கள் மனதைப் பயன்படுத்தும்போது, அவர்கள் பெற்ற அறிவு மற்றும் எல்லாவற்றையும் தேவன் கட்டுப்படுத்துவதற்குப் பின்னால் உள்ள கொள்கைகளை உறுதிப்படுத்த அல்லது ஆய்வு செய்ய அவர்கள் கவனித்த நிகழ்வுகள் என்பவை இந்த விஷயங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் மற்றும் எந்தவொரு விளைவையும் அடைவது மிகவும் கடினம் என்பதாக இருக்கிறது. எந்தவொரு முடிவுகளையும் ஜனங்கள் பெறுவது மிகவும் கடினமாகும். தேவனுடைய சிருஷ்டிப்பின் எல்லாவற்றையும் நிர்வகிக்க மனித சிந்தனையையும் அறிவையும் நம்பும்போது ஜனங்கள் தங்கள் சமநிலையை நிலைநிறுத்துவது மிகவும் கடினமாகும். ஏனென்றால், எல்லாவற்றின் பிழைக்கும் கொள்கைகளும் ஜனங்களுக்குத் தெரியாவிட்டால், இத்தகைய சமநிலையை எவ்வாறு பாதுகாப்பது என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கும். எனவே, ஜனங்கள் எல்லாவற்றையும் நிர்வகித்து ஆண்டால், அவர்கள் இந்த சமநிலையை அழிக்க வாய்ப்புள்ளது. சமநிலை அழிக்கப்பட்டவுடன், பிழைப்பதற்கான மனிதகுலத்தின் சூழல்கள் அழிக்கப்படும். அது நிகழும்போது, அது மனிதகுலத்தின் பிழைப்புக்கான நெருக்கடி அதைப் பின் தொடர்ந்து வரும். அது ஒரு பேரழிவை ஏற்படுத்தும். பேரழிவுக்கு மத்தியில் மனிதகுலம் ஜீவித்தால், அவர்களுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும்? விளைவை மதிப்பிடுவது மிகவும் கடினமாகும். அதை உறுதியாகக் கணிக்க இயலாது.

எனவே, எல்லாவற்றிற்கும் மத்தியிலான உறவை தேவன் எவ்வாறு சமன் செய்கிறார்? முதலாவதாக, உலகில் ஆண்டு முழுவதும் பனி மற்றும் மூடுபனியால் மூடப்பட்ட சில இடங்கள் உள்ளன. வேறு சில இடங்களில், நான்கு பருவங்களும் வசந்த காலம் போன்றவை, குளிர்காலம் ஒருபோதும் வராது, அது போன்ற இடங்களில் நீங்கள் ஒருபோதும் இவ்வளவு பனிக்கட்டி அல்லது பல பனித் துகள்களைப் பார்க்க மாட்டீர்கள். இங்கே, நாம் பெரிய காலநிலையைப் பற்றி பேசுகிறோம். எல்லாவற்றிற்கும் மத்தியிலான உறவுகளை சமநிலைப்படுத்தும் தேவனுடைய வழிகளில் இந்த எடுத்துக்காட்டு ஒன்றாகும். இரண்டாவது வழி: பசுமையான தாவரங்களில் மலைகள் நிறைந்திருக்கின்றன. எல்லா வகையான தாவரங்களும் தரையில் விரிந்து கிடக்கின்றன மற்றும் காடுகளின் அடர்த்தியானது மிகவும் அடர்த்தியானதாகும். நீங்கள் அவற்றின் வழியாக நடக்கும்போது மேலே சூரியனைக் கூட பார்க்க முடியாது. ஆனால் மற்றொரு மலைத் தொடர்களைப் பார்க்கும்போது, வளரும் புல் ஒன்று கூட இல்லாமல், தரிசான, திருத்தப்படாத மலைகளின் வரிசை இருக்கும். வெளிப்புற தோற்றத்தில், இரண்டு வகைகளும் அடிப்படையில் மலைகளை உருவாக்குவதற்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழுக்குகளின் பெரிய குவியல்களாக இருக்கின்றன. ஆனால் ஒன்று அடர்ந்த காடால் மூடப்பட்டிருக்கும், மற்றொன்று சிறு புல் கூட இல்லாமல் வளர்ச்சியடையாமல் இருக்கும். தேவன் எல்லாவற்றிற்கும் மத்தியிலான உறவை சமநிலைப்படுத்தும் இரண்டாவது வழி அது. மூன்றாவது வழி: ஒரு வழியாகப் பார்த்தால், முடிவற்ற புல்வெளிகளைக் காணலாம். அது பச்சை நிறத்தை அசைக்கும் ஒரு நிலமாகும். வேறு வழியாகப் பார்க்கும்போது, கண்ணால் பார்க்கக்கூடிய தூரம் முழுவதும் பாலைவனத்தைக் காணலாம். தரிசாக, காற்றில் வீசும் மணலுக்கு மத்தியில் ஒரு உயிரினமும் இல்லாமல், எந்தவொரு நீர் ஆதாரமும் இல்லாமல் இருக்கலாம். நான்காவது வழி: ஒரு வழியாகப் பார்த்தால், எல்லாமே பெரிய நீர்நிலையான கடலுக்கு அடியில் மூழ்கியுள்ளன. மற்ற வழியாகப் பார்க்கும்போது, புதிதாக நீரூற்றின் ஒரு சொட்டு நீரைக் கூட கண்டுபிடிக்க நீங்கள் கடினமாக முயற்சிக்கிறீர்கள். ஐந்தாவது வழி: இங்குள்ள நிலத்தில், தூறல் மழை அடிக்கடி விழும் மற்றும் காலநிலை பனிமூட்டமாகவும் ஈரமாகவும் இருக்கும். அதே நேரத்தில் அங்குள்ள நிலத்தில், கடுமையான சூரியன் வானத்தில் அடிக்கடி வருகிறது, அங்கு மழையின் துளி ஓர் அரிய நிகழ்வாகும். ஆறாவது வழி: ஒரு பீடபூமி உள்ளது, அங்குக் காற்று மெல்லியதாக இருக்கும், மனிதனுக்கு சுவாசம் கடினமாகும். மற்றொரு இடத்தில் சதுப்பு நிலங்களும் தாழ்வான நிலங்களும் உள்ளன. அவை பல்வேறு வகையான புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விடங்களாக செயல்படுகின்றன. இவை வெவ்வேறு வகையான காலநிலைகள் அல்லது அவை வெவ்வேறு புவியியல் சூழல்களுக்கு ஒத்த காலநிலை அல்லது சூழல்கள் ஆகும். அதாவது, பெரிய அளவிலான சூழலின் அடிப்படையில், காலநிலை முதல் புவியியல் சூழல் மற்றும் மண்ணின் வெவ்வேறு கூறுகள் முதல் நீர் ஆதாரங்களின் எண்ணிக்கை வரை அனைத்திலுமே மனிதகுலம் பிழைப்பதற்கான அடிப்படைச் சூழல்களை, ஜனங்கள் ஜீவிக்கும் சூழல்களின் காற்று வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை தேவன் சமன் செய்கிறார். இந்த மாறுபட்ட புவியியல் சூழல்களால், ஜனங்களுக்கு நிலையான காற்று உள்ளது மற்றும் வெவ்வேறு பருவங்களின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலையானதாக இருக்கிறது. அது எப்பொழுதும் இருப்பதைப் போலவே ஜனங்கள் பிழைக்கும் அத்தகைய சூழலில் தொடர்ந்து ஜீவிக்க அனுமதிக்கிறது. முதலில், பெரிய அளவிலான சூழல் சீரானதாக இருக்க வேண்டும். அது வெவ்வேறு புவியியல் இருப்பிடங்கள் மற்றும் அமைப்புகளின் பயன்பாடு மற்றும் வெவ்வேறு காலநிலைகளுக்கு மத்தியிலான மாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் செய்யப்படுகிறது. அது தேவன் விரும்பும் மற்றும் மனிதகுலத்திற்குத் தேவைப்படும் சமநிலையை அடைவதற்கு ஒருவருக்கொருவர் கட்டுப்படுத்தவும் சரிபார்க்கவும் அனுமதிக்கிறது. அது பெரிய அளவிலான சூழலின் கண்ணோட்டத்தில் பேசப்படுகிறது.

இப்போது தாவரங்கள் போன்ற மிகச்சிறந்த விவரங்களைப் பற்றி பேசுவோம். அவர்களுடைய சமநிலை எவ்வாறு அடையப்படுகிறது? அதாவது, பிழைப்பதற்கான ஒரு சீரான சூழலுக்குள் தாவரங்கள் எவ்வாறு தொடர்ந்து ஜீவிக்க முடியும்? பதில், பிழைப்பதற்கான சூழலைப் பாதுகாக்க பல்வேறு வகையான தாவரங்களின் ஆயுட்காலம், வளர்ச்சி விகிதங்கள் மற்றும் இனப்பெருக்கம் விகிதங்களை நிர்வகிப்பதன் மூலமாகும். சிறிய புற்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம்—வசந்த கால தளிர்கள், கோடை காலப் பூக்கள் மற்றும் இலையுதிர் காலப் பழங்கள் உள்ளன. பழம் தரையில் விழுகிறது. அடுத்த ஆண்டு, பழத்திலிருந்து விதை முளைத்து அதே கட்டளைகளின்படி தொடர்கிறது. புல்லின் ஆயுட்காலம் மிகக் குறைவு. ஒவ்வொரு விதையும் தரையில் விழுகிறது, வேர்கள் மற்றும் முளைகள் வளர்கிறது, பூக்கிறது மற்றும் பழங்களை உற்பத்தி செய்கிறது மற்றும் மூன்று பருவங்களுக்குப் பிறகு—வசந்த காலம், கோடை காலம் மற்றும் இலையுதிர் காலம் கழித்து—அவை முற்றிலுமாக நிறைவடைகிறது. எல்லா வகையான மரங்களும் அவற்றின் சொந்த ஆயுட்காலம் மற்றும் முளைப்பதற்கும் பழம்தருவதற்கும் வெவ்வேறு காலங்களைக் கொண்டிருக்கின்றன. சில மரங்கள் 30 முதல் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இறந்துவிடுகின்றன—அது அவற்றின் ஆயுட்காலம். ஆனால் அவற்றின் பழம் தரையில் விழுகிறது. பின்னர் அது வேர்கள் மற்றும் முளைகள், பூக்கள் மற்றும் பழங்களைத் தருகிறது மற்றும் 30 முதல் 50 ஆண்டுகள் வரை ஜீவிக்கிறது. இது மீண்டும் மீண்டும் நிகழும் வீதமாகும். ஒரு பழைய மரம் இறந்து ஓர் இளம் மரம் வளர்கிறது. இதனால்தான் காட்டில் மரங்கள் வளர்வதை நீ எப்போதும் காணலாம். ஆனால் அவற்றின் இயல்பான சுழற்சி மற்றும் பிறப்பு மற்றும் இறப்புச் செயல்முறைகளும் உள்ளன. சில மரங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஜீவிக்கலாம், சில மூவாயிரம் ஆண்டுகள் கூட ஜீவிக்கலாம். அது எத்தகைய தாவரமாக இருந்தாலும் அல்லது அதன் ஆயுட்காலம் எவ்வளவு பொதுவாக இருந்தாலும், அது எவ்வளவு காலம் ஜீவிக்கிறது, இனப்பெருக்கம் செய்யும் திறன், அதன் வேகம் மற்றும் இனப்பெருக்கம் அதிர்வெண் மற்றும் அது உருவாக்கும் சந்ததிகளின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தேவன் அதன் சமநிலையை நிர்வகிக்கிறார். புல் முதல் மரங்கள் வரை தாவரங்களை ஒரு சீரான சுற்றுச்சூழலுக்குள் தொடர்ந்து செழித்து வளர அது அனுமதிக்கிறது. எனவே பூமியில் உள்ள ஒரு காட்டைப் நீ பார்க்கும்போது, அதற்குள் வளரும் அனைத்தும், புல் மற்றும் மரங்கள் இரண்டும் தொடர்ச்சியாக இனப்பெருக்கம் செய்து அவற்றின் சொந்தக் கட்டளைகளின்படி வளர்ந்து வருகின்றன. அவற்றுக்குக் கூடுதல் உழைப்பு அல்லது மனிதகுலத்தின் உதவி தேவையில்லை. அவை இத்தகைய சமநிலையைக் கொண்டிருப்பதால் மட்டுமே பிழைப்பதற்காகத் தங்கள் சொந்தச் சூழலைப் பராமரிக்க அவற்றால் முடிகிறது. பிழைப்பதற்கு ஏற்ற சூழல் இருப்பதால் மட்டுமே, உலகின் காடுகள் மற்றும் புல்வெளிகளால் பூமியில் தொடர்ந்து ஜீவிக்க முடிகிறது. அவற்றின் இருப்பு தலைமுறை தலைமுறையான ஜனங்களையும், காடுகளிலும் புல்வெளிகளிலும் வாழ்விடங்களுடன் உள்ள பறவைகள், மிருகங்கள், பூச்சிகள் மற்றும் அனைத்து வகையான நுண்ணுயிரிகளையும் அனைத்து வகையான ஜீவன்களின் தலைமுறையையும் வளர்க்கிறது.

எல்லா வகையான விலங்குகளுக்கும் மத்தியிலான சமநிலையையும் தேவன் கட்டுப்படுத்துகிறார். இந்த சமநிலையை அவர் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்? அது தாவரங்களுக்கு ஒத்ததாக இருக்கிறது—அவற்றின் சமநிலையை அவர் நிர்வகிக்கிறார் மற்றும் அவற்றின் இனப்பெருக்கத் திறன், அவற்றின் அளவு மற்றும் இனப்பெருக்க வேகம் மற்றும் விலங்குகளின் உலகில் அவை வகிக்கும் பாத்திரங்களின் அடிப்படையில் அவற்றின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறார். உதாரணமாக, சிங்கங்கள் வரிக்குதிரைகளைப் புசிக்கின்றன. எனவே சிங்கங்களின் எண்ணிக்கை வரிக்குதிரைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், வரிக்குதிரைகளின் கதி என்னவாக இருக்கும்? அவை அழிந்துவிடும். வரிக்குதிரைகள் சிங்கங்களை விட மிகக் குறைவான சந்ததிகளை உற்பத்தி செய்தால், அவற்றின் தலைவிதி என்னவாக இருக்கும்? அவை அழிந்துவிடும். எனவே, வரிக்குதிரைகளின் எண்ணிக்கை சிங்கங்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்க வேண்டும். ஏனென்றால், வரிக்குதிரைகள் தங்களுக்கு மட்டுமல்ல, அவை சிங்கங்களுக்காகவும் உள்ளன. நீங்கள் இதை இவ்வாறு வைக்கலாம்: ஒவ்வொரு வரிக்குதிரையும் முழு வரிக்குதிரைகளின் ஒரு பகுதியாகும். ஆனால் அது சிங்கங்களின் வாய்களுக்கும் ஆகாரமாகும். சிங்கங்களின் இனப்பெருக்கம் வேகம் ஒருபோதும் வரிக்குதிரைகளை விட அதிகமாக இருக்க முடியாது. எனவே அவற்றின் எண்ணிக்கை ஒருபோதும் வரிக்குதிரைகளின் எண்களை விட அதிகமாக இருக்க முடியாது. இவ்வாறு மட்டுமே சிங்கங்களின் ஆகார ஆதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும். எனவே, சிங்கங்கள் வரிக்குதிரைகளின் இயற்கையான எதிரிகளாக இருந்தாலும், இரண்டு பகுதிகளும் ஒரே பகுதியில் ஓய்வு நேரத்தில் ஓய்வெடுப்பதை ஜனங்கள் அடிக்கடி பார்க்கிறார்கள். சிங்கங்கள் வேட்டையாடுவதாலும் புசிப்பதாலும் வரிக்குதிரைகள் ஒருபோதும் எண்ணிக்கையில் குறைக்கப்படமாட்டாது அல்லது அழிந்து போகாது மற்றும் சிங்கங்கள் ஒருபோதும் “ராஜா” என்ற அந்தஸ்தின் காரணமாக அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்காது. இந்த சமநிலை தேவன் நீண்ட காலத்திற்கு முன்பு நிறுவிய ஒன்றாகும். அதாவது, எல்லா விலங்குகளுக்கும் இடையில் சமநிலை விதிகளை தேவன் நிறுவினார். இதனால் அவை இத்தகைய சமநிலையை அடைய முடியும். அது ஜனங்கள் அடிக்கடி பார்க்கும் ஒன்றாகும். வரிக்குதிரைகளின் ஒரே இயற்கை எதிரிகள் சிங்கங்களா? இல்லை. முதலைகளும் வரிக்குதிரைகளை புசிக்கின்றன. வரிக்குதிரைகள் மிகவும் உதவியற்ற விலங்கு என்று தெரிகிறது. அவற்றுக்கு சிங்கங்களின் மூர்க்கத்தனம் இல்லை. இந்த வல்லமைமிக்க எதிரியான சிங்கத்தை எதிர்கொள்ளும்போது, அவை செய்யக்கூடியது எல்லாம் ஓடுவதே. அவை எதிர்க்க கூட வல்லமையற்றவை ஆகும். அவை சிங்கத்தை மிஞ்ச முடியாதபோது, தங்களைப் புசிக்க மட்டுமே அனுமதிக்க முடியும். விலங்கு உலகில் இதை அடிக்கடி காணலாம். இந்த மாதிரியான விஷயங்களைக் காணும்போது உங்களுக்கு என்ன உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் உள்ளன? வரிக்குதிரை குறித்து நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? நீங்கள் சிங்கத்தை வெறுக்கிறீர்களா? வரிக்குதிரைகள் மிகவும் அழகாக இருக்கின்றன! ஆனால் சிங்கங்கள், எப்போதும் பேராசையுடன் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேலும் முட்டாள்தனமாக, வரிக்குதிரைகள் வெகுதூரம் ஓடுவதில்லை. அங்குள்ள சிங்கம் ஒரு மரத்தின் அடியில் குளிர்ந்த நிழலில் தங்களுக்காக காத்திருப்பதை அவை காண்கின்றன. அது எந்த நேரத்திலும் வந்து அவற்றை உண்ணலாம். இதை அவை இருதயத்தில் அறிந்தாலும் இன்னும் அவை அந்த நிலத்தை விட்டு வெளியேறுவதில்லை. அது ஓர் அதிசயமான விஷயமாகும். அது தேவனுடைய முன்னறிவிப்பையும் அவருடைய ஆட்சியையும் வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான விஷயமாகும். நீ வரிக்குதிரை குறித்து வருந்துகிறாய், ஆனால் அதை நீ சேமிக்க முடியவில்லை. நீ சிங்கத்தை வெறுக்கிறாய். ஆனால் அதை நீ அழிக்க முடியாது. வரிக்குதிரை என்பது சிங்கத்திற்கு தேவன் ஆயத்தம் செய்த ஆகாரமாகும். ஆனால் எத்தனை சிங்கங்கள் புசித்தாலும், வரிக்குதிரைகள் அழிக்கப்படாது. சிங்கங்கள் உற்பத்தி செய்யும் சந்ததிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவை மிக மெதுவாக இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே அவை எத்தனை வரிக்குதிரைகளைப் புசித்தாலும் அவற்றின் எண்ணிக்கை ஒருபோதும் வரிக்குதிரைகளை விட அதிகமாக இருக்காது. இதில், சமநிலை உள்ளது.

இத்தகைய சமநிலையை பராமரிப்பதில் தேவனுடைய குறிக்கோள் என்னவாக இருக்கிறது? அது பிழைப்பதற்கான மனிதர்களின் சூழலுடனும் மனிதகுலத்தின் பிழைப்புடனும் தொடர்புடையதாகும். வரிக்குதிரைகள் அல்லது அது போன்ற சிங்கத்தின் இரையான மான் அல்லது பிற விலங்குகள் மிக மெதுவாக இனப்பெருக்கம் செய்து சிங்கங்களின் எண்ணிக்கை கூர்மையாக அதிகரித்தால், மனிதர்கள் எத்தகைய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்? சிங்கங்கள் தங்கள் இரையை புசிப்பது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு மனிதரை சிங்கம் புசித்தால் அது ஒரு சோகம். இந்தச் சோகம் தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று அல்ல. அது அவருடைய ஆட்சியின் கீழ் நிகழும் ஒன்று அல்ல. மனிதகுலத்தின் மீது அவர் கொண்டு வந்த ஒன்றும் அல்ல. மாறாக, அது ஜனங்கள் தங்களுக்குத் தாங்களே கொண்டு வரும் ஒன்றாகும். ஆனால் தேவன் எல்லாவற்றிற்கும் மத்தியிலான சமநிலையை மனிதகுலத்தின் பிழைப்புக்கு முக்கியமானது என்று பார்க்கிறார். அது தாவரங்களாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும் எதுவுமே அதன் சரியான சமநிலையை இழக்க முடியாது. தாவரங்கள், விலங்குகள், மலைகள் மற்றும் ஏரிகள் என மனிதகுலத்திற்காக ஒரு வழக்கமான சுற்றுச் சூழலை தேவன் ஆயத்தம் செய்துள்ளார். ஜனங்களுக்கு இத்தகைய சீரான சுற்றுச்சூழல் சூழல் இருக்கும்போது அவர்களுடைய பிழைப்பு பாதுகாப்பானதாகும். மரங்கள் அல்லது புற்கள் இனப்பெருக்கம் செய்வதற்கான மோசமான திறனைக் கொண்டிருந்தால் அல்லது அவற்றின் இனப்பெருக்க வேகம் மிகவும் மெதுவாக இருந்தால், மண் அதன் ஈரப்பதத்தை இழக்கும் அல்லவா? மண் ஈரப்பதத்தை இழந்தால், அது இன்னும் ஆரோக்கியமாக இருக்குமா? மண் அதன் தாவரங்களையும் ஈரப்பதத்தையும் இழந்தால், அது மிக விரைவாக அரிக்கப்பட்டு, அதன் இடத்தில் மணல் உருவாகும். மண் மோசமடையும்போது, பிழைப்பதற்கான ஜனங்களின் சூழலும் அழிக்கப்படும். இந்த அழிவுடன் பல பேரழிவுகள் வரும். இத்தகைய சுற்றுச்சூழல் சமநிலை இல்லாமல், இத்தகைய சுற்றுச்சூழல் சூழல் இல்லாமல், ஜனங்கள் அடிக்கடி எல்லாவற்றிற்கும் மத்தியிலான ஏற்றத்தாழ்வுகளால் பேரழிவுகளால் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக, தவளைகளின் சுற்றுச் சூழலை அழிக்க வழிவகுக்கும் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வு இருக்கும்போது, அவை அனைத்தும் ஒன்று கூடுகிறது, அவற்றின் எண்ணிக்கை கூர்மையாக அதிகரிக்கிறது மற்றும் நகரங்களில் கூட தெருக்களைக் கடக்கும் ஏராளமான தவளைகளைக் ஜனங்கள் பார்க்கிறார்கள். ஏராளமான தவளைகள் பிழைப்பதற்கான ஜனங்களின் சூழலை ஆக்கிரமித்திருந்தால், அது என்ன என்று அழைக்கப்படும்? ஒரு பேரழிவாக அழைக்கப்படும். அது ஏன் ஒரு பேரழிவு என்று அழைக்கப்படும்? மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் இந்தச் சிறிய விலங்குகள் ஜனங்களுக்கு ஏற்ற இடத்தில் இருக்கும்போது அவை பயனுள்ளதாக இருக்கும். அவற்றால் பிழைப்பதற்கான ஜனங்களின் சூழலின் சமநிலையைப் பராமரிக்க முடியும். ஆனால் அவை பேரழிவாக மாறினால், அவை ஜனங்களின் ஜீவிதத்தின் ஒழுங்கைப் பாதிக்கும். தவளைகள் அவற்றின் உடலில் கொண்டு வரும் அனைத்து விஷயங்களும் அனைத்து கூறுகளும் ஜனங்களின் ஜீவிதத் தரத்தைப் பாதிக்கும். அவை ஜனங்களின் உடல் உறுப்புகளைத் தாக்கக் கூட காரணமாகின்றன—ஒரு வகையான பேரழிவுகளில் அது ஒன்றாகும். ஏராளமான வெட்டுக்கிளிகளின் தோற்றம் மற்றொரு வகையான பேரழிவாகும். அது மனிதர்கள் அடிக்கடி அனுபவித்த ஒன்றாகும். அது ஒரு பேரழிவு அல்லவா? ஆம், அது உண்மையிலேயே ஒரு பயமுறுத்தும் பேரழிவு. மனிதர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் பரவாயில்லை—ஜனங்கள் விமானங்கள், பீரங்கிகள் மற்றும் அணுகுண்டுகளை உருவாக்க முடியும்—வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் போது, மனிதகுலத்திற்கு என்ன தீர்வு இருக்கிறது? அவற்றின் மீது பீரங்கிகளைப் பயன்படுத்த முடியுமா? இயந்திர துப்பாக்கிகளால் அவற்றை சுட முடியுமா? இல்லை, அவர்களால் முடியாது. பின்னர் அவற்றை விரட்ட பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க முடியுமா? அதுவும் எளிதான காரியமல்ல. அந்தச் சிறிய வெட்டுக்கிளிகள் என்ன செய்ய வருகின்றன? அவை குறிப்பாக பயிர்கள் மற்றும் தானியங்களை புசிக்கின்றன. வெட்டுக்கிளிகள் எங்கு சென்றாலும் பயிர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. ஒரு வெட்டுக்கிளி படையெடுப்பு காலங்களில், ஒரு வருடம் முழுவதும் விவசாயிகள் நம்பியிருக்கும் அனைத்து ஆகாரங்களையும் வெட்டுக்கிளிகள் கண் சிமிட்டலில் முழுமையாக உட்கொள்ளலாம். மனிதர்களைப் பொறுத்தவரையில், வெட்டுக்கிளிகளின் வருகை ஒரு எரிச்சல் மட்டுமல்ல—அது ஒரு பேரழிவுமாகும். எனவே, அதிக எண்ணிக்கையிலான வெட்டுக்கிளிகளின் தோற்றம் ஒரு வகை பேரழிவு என்பதை நாம் அறிவோம். ஆனால் எலிகள் என்னவாக இருக்கிறது? எலிகளை இரையாக புசிக்கும் பறவைகள் இல்லை என்றால், அவை மிக விரைவாக பெருகும். நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வேகமாக பெருகும். எலிகள் தடையின்றி பரவியிருந்தால், மனிதர்கள் நல்ல ஜீவிதத்தை ஜீவிக்க முடியுமா? மனிதர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள்? (பெருவாரியாகப் பரவும் ஒரு தொற்று நோய்.) ஆனால் ஒரு தொற்றுநோய் மட்டுமே அதன் விளைவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எலிகள் எதையும் மெல்லும் மற்றும் அவை மரத்தைக்கூட கடிக்கும். ஒரு வீட்டில் இரண்டு எலிகள் இருந்தால், அவை அங்கு வசிக்கும் அனைவருக்கும் ஒரு தொல்லையாக இருக்கும். சில நேரங்களில் அவை எண்ணெயைத் திருடிப் புசிக்கும், சில சமயங்களில் அவை ரொட்டி அல்லது தானியங்களைப் புசிக்கும். அவை புசிக்காத பொருட்களை அவை மென்று பிரையோஜனம் அற்றதாக மாற்றும். அவை ஆடை, காலணிகள், தளபாடங்கள் ஆகியவற்றை மென்று புசிக்கும்—எல்லாவற்றையும் மென்று புசிக்கும். சில நேரங்களில் அவை அலமாரியில் ஏறும். எலிகள் மிதித்த பின் அந்த ஆகாரங்களைப் பயன்படுத்த முடியுமா? நீ அவற்றைக் கிருமி நீக்கம் செய்தாலும் நீ நிம்மதியாக உணர மாட்டாய். எனவே நீ அவற்றை வெளியே எறிவாய். எலிகள் ஜனங்களுக்குக் கொண்டு வரும் எரிச்சல்கள் இவை. எலிகள் சிறிய ஜீவன்கள் என்றாலும், ஜனங்களுக்கு அவற்றைக் கையாள்வதற்கான வழி இல்லை. அதற்குப் பதிலாக அவற்றின் சீரழிவுகளைத் தாங்க வேண்டும். ஒரு ஜோடி எலிகள் ஓர் இடையூறு ஏற்படுத்துவதற்குப் போதுமானதாகும். அவற்றில் ஒரு பெரிய கூட்டம் இருந்தால் அது பயங்கரமாகும். அவற்றின் எண்ணிக்கை பெருகி அவை பேரழிவாக மாறினால், அதன் விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாதவை. எறும்புகளைப் போன்ற சிறிய ஜீவன்கள் கூட ஒரு பேரழிவாக மாறும். அது நடந்தால், அவை மனிதகுலத்திற்கு செய்யும் சேதத்தையும் புறக்கணிக்க முடியாது. எறும்புகள் வீடுகளுக்கு, அவை இடிந்து விழும் அளவுக்குச் சேதத்தை ஏற்படுத்த முடியும். அவற்றின் வலிமையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. பல்வேறு வகையான பறவைகள் ஒரு பேரழிவை உருவாக்கியிருந்தால் அது பயமாக இருக்காதா? (ஆம்.) இதை வேறு விதமாகக் கூறினால், விலங்குகள் அல்லது உயிரினங்கள், அவை எந்த வகையாக இருந்தாலும், அவற்றின் சமநிலையை இழந்தால், அவை வளர்ந்து, இனப்பெருக்கம் செய்து, அசாதாரண எல்லைக்குள், ஒழுங்கற்ற நோக்கத்தில் ஜீவிக்கும். அது மனிதகுலத்திற்குக் கற்பனை செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். அது ஜனங்களின் பிழைப்பையும் ஜீவிதத்தையும் மட்டும் பாதிக்காமல், மனிதகுலத்திற்குப் பேரழிவையும் ஏற்படுத்தும். முழுமையான நிர்மூலமாக்கல் மற்றும் அழிவின் தலைவிதியை ஜனங்கள் அனுபவிக்கும் அளவிற்குக் கூட பேரழிவை ஏற்படுத்தும்.

தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, அவற்றைச் சமநிலைப்படுத்தவும், மலைகள் மற்றும் ஏரிகள், தாவரங்கள் மற்றும் அனைத்து வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் ஜீவித நிலைமைகளைச் சமப்படுத்தவும் எல்லா வகையான முறைகளையும் வழிகளையும் பயன்படுத்தினார். அவர் நிறுவிய கட்டளைகளின் கீழ் அனைத்து வகையான ஜீவன்களையும் ஜீவிக்கவும் பெருகவும் அனுமதிப்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. சிருஷ்டிப்பின் எந்தவொரு விஷயமும் இந்தக் கட்டளைகளுக்கு வெளியே செல்ல முடியாது மற்றும் கட்டளைகளை உடைக்க முடியாது. இத்தகைய அடிப்படை சூழலுக்குள் மட்டுமே மனிதர்கள் பாதுகாப்பாகத் தலைமுறை தலைமுறையாக ஜீவிக்கவும் பெருகவும் முடியும். எந்தவொரு ஜீவனும் தேவனால் நிறுவப்பட்ட அளவு அல்லது நோக்கத்திற்கு அப்பால் சென்றால் அல்லது அது அவர் கட்டளையிட்ட வளர்ச்சி விகிதம், இனப்பெருக்க வேகம் அல்லது எண்ணிக்கையை மீறினால், மனிதகுலத்தின் பிழைப்பதற்கான சூழல் பல்வேறு அளவிலான அழிவை சந்திக்கும். அதே நேரத்தில், மனிதகுலத்தின் பிழைப்பு அச்சுறுத்தப்படும். ஒரு வகை ஜீவன்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தால், அது ஜனங்களின் ஆகாரத்தை கொள்ளையடிக்கும், ஜனங்களின் நீர் ஆதாரங்களை அழிக்கும் மற்றும் அவர்களுடைய தாயகங்களை அழிக்கும். அந்த வகையில், மனிதகுலத்தின் இனப்பெருக்கம் அல்லது ஜீவிக்கும் நிலை உடனடியாகப் பாதிக்கப்படும். உதாரணமாக, எல்லாவற்றிற்கும் நீர் மிகவும் முக்கியமானதாகும். எலிகள், எறும்புகள், வெட்டுக்கிளிகள், தவளைகள் அல்லது வேறு எந்த விலங்குகளும் இருந்தால், அவை அதிக அளவு தண்ணீர் குடிக்கும். அவை குடிக்கும் நீரின் அளவு அதிகரிக்கும்போது, குடிநீர் மற்றும் நீர்நிலைகளின் நிலையான எல்லைக்குள் உள்ள ஜனங்களின் குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்கள் குறையும் மற்றும் ஜனங்கள் நீர் பற்றாக்குறையை அனுபவிபார்கள். எல்லா வகையான விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், ஜனங்களின் குடிநீர் அழிக்கப்பட்டால், மாசுபட்டால் அல்லது துண்டிக்கப்பட்டுவிட்டால், பிழைப்பதற்கான அத்தகைய கடுமையான சூழலின் கீழ், மனிதகுலத்தின் பிழைப்பு தீவிரமாக அச்சுறுத்தப்படும். ஒரு வகை அல்லது பல வகையான ஜீவன்கள் அவற்றின் பொருத்தமான எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், காற்று, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் மனிதகுலத்தின் பிழைப்பதற்கான இடத்திற்குள் காற்றின் கலவை கூட விஷமாகும் மற்றும் பல்வேறு அளவுகளுக்கு அழிக்கப்படும். இந்தச் சூழ்நிலைகளில், மனிதர்களின் பிழைப்பும், விதியும், இந்தச் சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்படும். எனவே, இந்தச் சமநிலைகளை இழந்தால், ஜனங்கள் சுவாசிக்கும் காற்று பாழாகிவிடும், அவர்கள் குடிக்கும் நீர் மாசுபடும், அவர்களுக்குத் தேவையான வெப்பநிலையும் மாறும் மற்றும் மாறுபட்ட அளவுகளில் பாதிக்கப்படும். அது நடந்தால், இயல்பாகவே மனிதகுலத்திற்குச் சொந்தமான பிழைப்பதற்கான சூழல்கள் மகத்தான தாக்கங்களுக்கும் சவால்களுக்கும் உட்படும். மனிதர்களின் பிழைப்பதற்கான அடிப்படை சூழல்கள் அழிக்கப்பட்டுள்ள இத்தகைய சூழ்நிலையில், மனிதகுலத்தின் தலைவிதி மற்றும் வாய்ப்புகள் என்னவாக இருக்கும்? அது மிகவும் கடுமையான பிரச்சினை! ஏனென்றால், சிருஷ்டிப்பின் ஒவ்வொரு விஷயமும் மனிதகுலத்திற்கு எந்த காரணத்திற்காக இருக்கிறது என்பதை தேவன் அறிவார். அவர் உருவாக்கிய ஒவ்வொரு வகை பொருட்களின் பங்கு என்ன, ஒவ்வொரு விஷயமும் மனிதகுலத்திற்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அது மனிதகுலத்திற்கு எந்த அளவிற்குப் பயனளிக்கிறது என்பதை தேவன் அறிவார். ஏனென்றால், தேவனுடைய இருதயத்தில் இவை அனைத்திற்கும் ஒரு திட்டம் உள்ளது மற்றும் அவர் சிருஷ்டித்த எல்லாவற்றின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் நிர்வகிக்கிறார், அதனால்தான் அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானதாகும். எனவே இனிமேல், தேவனுடைய சிருஷ்டிப்பின் விஷயங்களில் சில சுற்றுச்சூழல் நிகழ்வுகளை நீ கவனிக்கும்போதோ அல்லது தேவனுடைய சிருஷ்டிப்பு விஷயங்களுக்கிடையில் இயற்கையான சில கட்டளைகளை நீ கவனிக்கும்போதோ, தேவனால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விஷயத்தின் அவசியத்தையும் நீ இனி சந்தேகிக்க மாட்டாய். எல்லாவற்றிற்குமான தேவனுடைய ஏற்பாடுகள் மற்றும் மனிதகுலத்திற்கு வழங்குவதற்கான பல்வேறு வழிகள் குறித்து தன்னிச்சையான தீர்ப்புகளை வழங்க நீ இனி அறியாமை சொற்களைப் பயன்படுத்த மாட்டாய். தேவனுடைய சிருஷ்டிப்புகளின் எல்லா விஷயங்களுக்கும் நீ தன்னிச்சையான முடிவுகளுக்கு வரமாட்டாய். அது அப்படி அல்லவா?

நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இவை அனைத்தும் என்னவாக இருக்கிறது? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தேவன் தனது சொந்த நோக்கத்தை அவர் கொண்டிருக்கிறார். அவருடைய நோக்கம் மனிதர்களுக்கு விவரிக்க முடியாதது என்றாலும், அது எப்போதும் மனிதகுலத்தின் பிழைப்புடன் பிரிக்கமுடியாத மற்றும் வல்லமைவாய்ந்ததாக இருக்கிறது. அது முற்றிலும் இன்றியமையாதது. ஏனென்றால், தேவன் ஒருபோதும் பயனற்ற எதையும் செய்வதில்லை. அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னால் உள்ள கொள்கைகள் அவருடைய திட்டத்தினாலும் அவருடைய ஞானத்தினாலும் நிரப்பப்படுகின்றன. அந்தத் திட்டத்தின் பின்னால் உள்ள குறிக்கோளும் நோக்கமும் மனிதகுலத்தின் பாதுகாப்பு, மனிதகுலத்தின் பேரழிவைத் தவிர்க்க உதவுதல், பிற ஜீவன்களின் சீரழிவுகள் மற்றும் தேவனுடைய சிருஷ்டிப்பின் எந்தவொரு விஷயத்தாலும் மனிதர்களுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாமல் இருப்பது ஆகியனவாக இருகின்றன. ஆகவே, இந்தத் தலைப்பில் நாம் கண்ட தேவனுடைய கிரியைகள் மனிதகுலத்திற்கு தேவன் வழங்கும் மற்றொரு வழியாகும் என்று கூற முடியுமா? இந்தக் கிரியைகளின் மூலம் தேவன் மனிதகுலத்திற்கு ஆகாரமளித்து மேய்ப்பார் என்று சொல்ல முடியுமா? (ஆம்.) இந்தத் தலைப்புக்கும் நம்முடைய கலந்துரையாடலின் கருப்பொருளுக்கும் இடையே ஒரு வலுவான உறவு இருக்கிறதா: “தேவன் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாக இருக்கிறார்”? (ஆம்.) மிகவும் வலுவான உறவு உள்ளது. இந்தத் தலைப்பு அதன் ஓர் அம்சமாகும். இந்தத் தலைப்புகளைப் பற்றி பேசுவதற்கு முன்பு, தேவனைப் பற்றியும், தேவன் தம்மைப் பற்றியும், அவருடைய கிரியைகளைப் பற்றியும் ஜனங்களுக்குத் தெளிவற்ற கற்பனை மட்டுமே இருந்தது—அவர்களுக்கு உண்மையான புரிதல் இல்லாமல் இருந்தது. இருப்பினும், அவருடைய கிரியைகள் மற்றும் அவர் செய்த காரியங்களைப் பற்றி ஜனங்களிடம் கூறப்படும்போது, தேவன் என்ன செய்கிறார் என்பதற்கான கொள்கைகளை அவர்கள் புரிந்துகொண்டு கிரகிக்க முடியும் மற்றும் அவர்கள் அவற்றைப் புரிந்துக்கொண்டு அவற்றை அடைய முடியும். தேவனுடைய இருதயத்தில் எல்லா வகையான மிகவும் சிக்கலான கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் விதிகள் இருந்தாலும், எல்லாவற்றையும் உருவாக்குவதும், ஆட்சி செய்வதும் போன்ற எதையேனும் அவர் செய்யும்போதேல்லாம், அவை தேவனுடைய கிரியைகள் என்றும் கலந்துரையாடலில் அவற்றின் ஒரு பகுதியைப் பற்றி அறிய உங்களை அனுமதிப்பதன் மூலம் அவை உண்மையானவை என்றும் புரிந்துகொள்ள முடிகிறதில்லையா? (ஆம்.) தேவனைப் பற்றிய உங்கள் தற்போதைய புரிதல் முன்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? அதன் சாரத்தில் அது வேறுபட்டதாகும். இதற்கு முன்பு, உங்கள் புரிதல் மிகவும் வெறுமையாக, மிகவும் தெளிவற்றதாக இருந்தது. ஆனால் இப்போது உங்கள் புரிதல் தேவனுடைய கிரியைகளுடன் பொருந்துவதற்கும், தேவனிடம் இருப்பதைப் பொருத்துவதற்கும் ஏராளமான உறுதியான சான்றுகளைக் கொண்டுள்ளன. ஆகையால், நான் சொன்னதெல்லாம் தேவனைப் பற்றிய உங்கள் புரிதலுக்கான அருமையான போதனைக்குரிய பொருள் ஆகும்.

பிப்ரவரி 9, 2014

முந்தைய: தேவனே தனித்துவமானவர் VIII

அடுத்த: தேவனே தனித்துவமானவர் X

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக