தேவனே தனித்துவமானவர் VI

தேவனுடைய பரிசுத்தம் (III)

கடைசியாக நாம் கலந்துரையாடிய தலைப்பு தேவனுடைய பரிசுத்தம் ஆகும். தேவனுடைய பரிசுத்தமானது தேவனுடைய எந்த அம்சத்தைப் பற்றியது? அது தேவனுடைய சாராம்சத்தைப் பற்றியதா? (ஆம்.) அப்படியானால், நம்முடைய கலந்துரையாடலில் நாம் பேசிய தேவனுடைய சாராம்சத்தின் முக்கிய அம்சம் என்ன? அது தேவனுடைய பரிசுத்தமா? தேவனுடைய பரிசுத்தமானது தேவனுடைய தனித்துவமான சாராம்சமாகும். கடந்த முறை நம்முடைய கலந்துரையாடலின் முக்கிய உள்ளடக்கம் என்ன? (சாத்தானுடைய தீமையின் விவேகம். அதாவது, அறிவு, விஞ்ஞானம், பாரம்பரிய கலாச்சாரம், மூடநம்பிக்கை மற்றும் சமூக போக்குகளைப் பயன்படுத்தி சாத்தான் மனிதகுலத்தை எவ்வாறு கெடுக்கிறது என்பதாகும்.) இதுதான் கடந்த முறை நாம் விவாதித்த முக்கிய தலைப்பு ஆகும். மனிதனைக் கெடுக்க சாத்தான் அறிவு, அறிவியல், மூடநம்பிக்கை, பாரம்பரிய கலாச்சாராம் மற்றும் சமூக போக்குகளைப் பயன்படுத்துகிறது. சாத்தான் மனிதனை கெடுக்கும் வழிகள் மொத்தம் ஐந்து உள்ளன. மனிதனைக் கெடுக்க சாத்தான் இவற்றில் எதை அதிகம் பயன்படுத்துகிறது என்று நினைக்கிறீர்கள்? ஜனங்களை மிகவும் ஆழமாகக் கெடுக்கப் பயன்படுவது எது? (பாரம்பரிய கலாச்சாரம். கன்பூசியஸ் மற்றும் மென்சியஸ் போன்றவர்களின் கோட்பாடுகளைப் போன்ற சாத்தானிய தத்துவங்கள் நம் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பது தான் காரணம்.) எனவே, சில சகோதர சகோதரிகள் “பாரம்பரிய கலாச்சாரம்” என்பதுதான் பதில் என்று நினைக்கிறார்கள். யாருக்காவது வேறு பதில் இருக்கிறதா? (அறிவு. அறிவு ஒருபோதும் தேவனை வணங்க விடாது. இது தேவன் இருக்கிறார் என்பதை மறுக்கிறது. தேவனுடைய ஆட்சியை மறுக்கிறது. அதாவது, சிறு வயதிலிருந்தே படிப்பைத் தொடங்கும்படி சாத்தான் சொல்கிறது. படிப்பதன் மூலமும் அறிவைப் பெறுவதன் மூலமும் நம் எதிர்காலத்திற்கான பிரகாசமான வாய்ப்புகளும் மகிழ்ச்சியான தலைவிதியும் கிடைக்கும் என்றும் சொல்கிறது.) உன் எதிர்காலத்தையும் தலைவிதியையும் கட்டுப்படுத்த சாத்தான் அறிவைப் பயன்படுத்துகிறது. பின்னர், அது உன்னை முற்றிலுமாக கட்டுப்படுத்துகிறது. சாத்தான் மனிதனை மிகவும் ஆழமாகச் சீர்கெடுக்கிறது என்று நீ நினைக்கிறாய். ஆகவே, மனிதனை மிகவும் ஆழமாகச் சீர்கெடுக்கச் சாத்தான் பயன்படுத்துவது அறிவு என்று உங்களில் பெரும்பாலானோர் நினைக்கிறீர்கள். வேறு யாருக்கும் வேறு கருத்து இருக்கிறதா? உதாரணமாக அறிவியல் அல்லது சமூகப் போக்குகள் பற்றி ஏதேனும் கருத்து உள்ளதா? யாரேனும் இவற்றை விடையாக அடையாளம் காண்பார்களா? (ஆம்.) இன்று, சாத்தான் மனிதனைக் கெடுக்கும் ஐந்து வழிகளைப் பற்றி நான் மீண்டும் கலந்துரையாடுவேன். நான் முடித்ததும், உங்களிடம் இன்னும் சில கேள்விகளைக் கேட்பேன். இதன் மூலம் மனிதனை மிகவும் ஆழமாகக் கெடுக்க சாத்தான் பயன்படுத்துகிற விஷயங்களை நாம் சரியாகக் காண முடியும்.

சாத்தான் மனிதனைச் சீர்கெடுக்கும் ஐந்து வழிகள்

a. மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவைப் பயன்படுத்துகிறது, அவரைக் கட்டுப்படுத்த புகழையும் ஆதாயத்தையும் பயன்படுத்துகிறது

சாத்தான் மனிதனைக் கெடுக்கும் ஐந்து வழிகளில், நான் முதலில் குறிப்பிட்டது அறிவு. எனவே, அமர்வுக்கான முதல் தலைப்பாக அறிவை எடுத்துக்கொள்வோம். சாத்தான் அறிவை தூண்டில் இரையாகப் பயன்படுத்துகிறது. உன்னிப்பாகக் கவனியுங்கள்: அறிவு என்பது ஒரு வகையான தூண்டில் இரையாகும். கடினமாகப் படித்து நாளுக்கு நாள் தங்களை மேம்படுத்துவதற்கும், அறிவை ஆயுதமாகுவதற்கும், தங்கள் மீது அந்த ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, பின்னர், விஞ்ஞானத்தின் வாசலைத் திறக்க ஜனங்கள் அறிவைப் பயன்படுத்துகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீ எவ்வளவு அதிகமாக அறிவைப் பெறுகிறாயோ, அவ்வளவு அதிகாமப் புரிந்துகொள்வாய். சாத்தான் இதையெல்லாம் ஜனங்களுக்குச் சொல்கிறது. ஜனங்கள் அறிவைக் கற்றுக் கொண்டிருப்பதால் உயர்ந்த இலட்சியங்களை வளர்க்கும்படி ஜனங்களுக்குச் சொல்கிறது. லட்சியங்களையும் நோக்கங்களையும் ஜனங்கள் கட்டமைக்க அது அவர்களுக்கு அறிவுறுத்துகிறது. மனிதனுக்குத் தெரியாமல், சாத்தான் இது போன்ற பல செய்திகளை அளிக்கிறது. இதனால் இவை சரியானவை அல்லது நன்மை பயக்கும் என்று ஜனங்கள் சுயநினைவின்றி நம்புகிறார்கள். அறியாமலேயே, ஜனங்கள் இந்தப் பாதையில் கால் பதிக்கிறார்கள். அறியாமலேயே, தங்கள் சொந்த இலட்சியங்கள் மற்றும் நோக்கங்களால் வழிநடத்தப்படுகிறார்கள். படிப்படியாக, சாத்தான் கொடுத்த அறிவிலிருந்து பெரியவர்கள் அல்லது பிரபலமானவர்கள் சிந்திக்கும் வழிகளை அவர்கள் அறியாமல் கற்றுக்கொள்கிறார்கள். தலைவர்கள் என்று கருதப்படும் ஜனங்களுடைய செயல்களிலிருந்தும் அவர்கள் சில விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மனிதனுக்காக இந்தத் தலைவர்களின் செயல்களில் சாத்தான் எதை வாதாடுகிறது? அது, மனிதனுக்குள் எதை உட்புகுத்த விரும்புகிறது? மனிதன் தேசபக்தனாக, தேசிய ஒருமைப்பாட்டைக் கொண்டவனாக, மற்றும் ஆவியில் சிறந்தவனாக இருக்க வேண்டும். வரலாற்றுக் கதைகள் அல்லது தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து மனிதன் எதைக் கற்றுக்கொள்கிறான்? தனிப்பட்ட விசுவாசத்தை உணர, ஒருவர் தன் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்காக எதையும் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். சாத்தானுடைய இந்த அறிவுக்குள், மனிதன் அறியாமலேயே நேர்மறையாக இல்லாத பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறான். சாத்தானால் தயார் செய்யப்பட்ட விதைகள், மனிதனுடைய அறியாமையின் மத்தியில், ஜனங்களுடைய முதிர்ச்சியற்ற மனதில் நடப்படுகின்றன. இந்த விதைகள் அவர்கள் பெரிய மனிதர்களாக இருக்க வேண்டும், பிரபலமாக இருக்க வேண்டும், தலைவர்களாக இருக்க வேண்டும், தேசபக்தராக இருக்க வேண்டும், தங்கள் குடும்பத்தை நேசிக்கும் மனிதர்களாக இருக்க வேண்டும், ஒரு நண்பருக்காக எதையும் செய்பவராக இருக்க வேண்டும், தனிப்பட்ட முறையில் விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உணர்த்துகின்றன. சாத்தானால் மயக்கமடைந்து, சாத்தான் தங்களுக்கு ஆயத்தம் செய்த பாதையில் அவர்கள் அறியாமல் நடக்கிறார்கள். அவர்கள் இந்த பாதையில் செல்லும்போது, சாத்தானுடைய வாழ்வதற்கான விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். முற்றிலும் அறியாமலேயே அவர்கள், தாங்கள் ஜீவிக்க சொந்த விதிமுறைகளை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் இவை சாத்தானுடைய விதிமுறைகளே தவிர வேறொன்றுமில்லை. அவர்களுக்குள் இதை சாத்தான் பலவந்தமாக திணித்துள்ளது. கற்றல் செயல்பாட்டின் போது, சாத்தான் அவற்றை உருவாக்குகிறது, சொந்தக் குறிக்கோள்களை வளர்க்கச் செய்கிறது. அவர்களுடைய சொந்த ஜீவித இலக்குகள், ஜீவிக்கத் தேவையான விதிமுறைகள் மற்றும் ஜீவிதத்தின் நோக்கத்தைத் தீர்மானிக்கிறது. எல்லா நேரங்களிலும் சாத்தானுடைய விஷயங்களை அவர்களுக்குள் புகுத்தி, கதைகள், சுயசரிதைகள் மற்றும் பிற எல்லா வழிகளையும் பயன்படுத்தி, அவர்கள் தூண்டிலில் சிக்கும் வரையில், ஜனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்திழுக்கிறது. இவ்வாறு, தங்களது கற்றலின் போது, சிலர் இலக்கியம், சிலர் பொருளாதாரம், மற்றவர்கள் வானியல் அல்லது புவியியல் ஆகியவற்றை விரும்புகிறார்கள். பின்னர், அரசியலுக்கு வர விரும்புவதாக சிலரும், இயற்பியலை விரும்புவதாக சிலரும், சிலர் வேதியியலையும், இன்னும் சிலர் இறையியலையும் விரும்புகிறார்கள். இவை அனைத்தும் முழுமையான உயரிய அறிவின் பகுதிகளாகும். இந்த விஷயங்கள் உண்மையில் என்னவென்று இருதயங்களில், உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். நீங்கள் ஒவ்வொருவரும் முன்பு அவற்றுடன் தொடர்பில் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அறிவின் கிளைகளில் ஒன்றைப் பற்றியோ மற்றொன்றைப் பற்றியோ முடிவில்லாமல் பேசும் திறன் கொண்டவர்கள். இந்நிலையில், இந்த அறிவு மனிதர்களின் மனதில் எவ்வளவு ஆழமாக நுழைந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஜனங்கள் மனதில் இந்த அறிவு ஆக்கிரமித்திருக்கிற இடம் மற்றும் அது அவர்களுக்கு எவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்பது எளிது. அறிவின் ஒரு அம்சத்தின் மீது ஒருவர் பாசத்தை வளர்த்துக் கொண்டால், ஒரு மனிதர் அதை ஆழமாக நேசிக்கும்போது, அவர்கள் அறியாமலேயே லட்சியங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்: சிலர் எழுத்தாளர்களாக இருக்க விரும்புகிறார்கள், சிலர் இலக்கிய எழுத்தாளர்களாக இருக்க விரும்புகிறார்கள், சிலர் அரசியலில் ஒரு எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறார்கள், மற்றும் சிலர் பொருளாதாரத்தில் ஈடுபட விரும்புகிறார்கள் மற்றும் வணிகர்களாக மாற விரும்புகிறார்கள். தலைவர்களாக, பெரியவர்களாக அல்லது பிரபலமாக விரும்பும் ஜனங்களுடைய பகுதி ஒன்று இருக்கிறது. ஒருவர் எத்தகைய நபராக இருக்க விரும்புகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த அறிவைக் கற்கும் முறையை எடுத்து அதைத் தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதும், அவர்களுடைய சொந்த ஆசைகளை, தங்கள் சொந்த லட்சியங்களை உணர்ந்துக்கொள்ள பயன்படுத்துவதும் அவர்களுடைய குறிக்கோள் ஆகும். அவை எவ்வளவு நன்றாக இருந்தாலும்—அவர்கள் கனவுகளை அடைய விரும்பினாலும், தங்கள் ஜீவிதத்தை வீணாக்கக் கூடாது என விரும்பினாலும் அல்லது ஒரு குறிப்பிட்டத் தொழிலைப் பெற வேண்டும் என விரும்பினாலும்—அவர்கள் இந்த உயர்ந்த இலட்சியங்களையும் குறிக்கோள்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள், ஆனால், இவை அனைத்தின் முக்கியத்துவமும் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை நீங்கள் எப்போதாவது பரிசீலித்திருக்கிறீர்களா? சாத்தான் ஏன் இவ்வாறு செயல்படுகிறது? இந்த விஷயங்களை மனிதனுக்குள் புகுத்துவதில் சாத்தானுடைய நோக்கம் என்ன? இந்தக் கேள்வியில் உங்கள் இருதயங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி இப்போது பேசுவோம். முதலாவதாக, இந்த விஷயங்களைப் பற்றி நமக்கு தெளிவானப் புரிதல் இருக்க வேண்டும்: அறிவால், சாத்தான் மனிதனுக்கு என்ன கொடுக்க விரும்புகிறது? மனிதனை எத்தகைய பாதையில் வழிநடத்த விரும்புகிறது? (தேவனை எதிர்ப்பதற்கான பாதையாகும்.) ஆம், நிச்சயமாகவே அத்தகையப் பாதையாகும்—தேவனை எதிர்ப்பதாகும். அவர்கள் தேவனை எதிர்க்கத் தொடங்குகிறார்கள் என்பதே ஜனங்கள் அறிவைப் பெறுவதன் விளைவு என்பதை நீ காணலாம். அப்படியானால், சாத்தானுடைய கெட்ட நோக்கங்கள் யாவை? இது குறித்து உங்களுக்கு தெளிவாக தெரியவில்லை, இல்லையா? மனிதன் அறிவைக் கற்றுக்கொள்ளும் செயல்பாட்டின் போது, மனிதர்களுக்குக் கதைகளைச் சொல்வது, அவர்களுக்கு சில தனிப்பட்ட அறிவைக் கொடுப்பது அல்லது அவர்களுடைய ஆசைகள் அல்லது நோக்கங்களைப் பூர்த்தி செய்ய அனுமதிப்பது என சாத்தான் எல்லா விதமான முறைகளையும் பயன்படுத்துகிறது. சாத்தான் உன்னை எந்தப் பாதையில் கொண்டு செல்ல விரும்புகிறது? அறிவைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். அது முற்றிலும் இயற்கையான உணர்வாகும். அதைக் கவர்ந்திழுக்கும் வகையில், உயர்ந்த இலட்சியங்களை வளர்க்கும் வகையில் அல்லது லட்சியங்களைக் கொண்டிருக்கும் வகையில் உந்துதலைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே ஜீவிதத்தில் சரியான பாதையாக இருக்க முடியும். ஜனங்கள் தங்கள் சொந்த இலட்சியங்களை உணர முடிந்தால், அல்லது வெற்றிகரமாக ஒரு தொழிலை நிலைநாட்ட முடிந்தால், ஜனங்கள் ஜீவிப்பது மிகவும் புகழ்பெற்ற வழி அல்லவா? இந்த விஷயங்களைச் செய்வதன் மூலம், ஒருவரின் மூதாதையர்களை மதிக்க மட்டுமல்லாமல், வரலாற்றில் ஒருவரின் அடையாளத்தை விட்டுச்செல்லவும் வாய்ப்பு உள்ளது—இது ஒரு நல்ல விஷயம் அல்லவா? உலக ஜனங்களுடைய பார்வையில் இது ஒரு நல்ல விஷயம். அவர்களுக்கு இதுவே சரியானதாகவும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், சாத்தான் அதன் மோசமான நோக்கங்களுடன், ஜனங்களை இத்தகைய பாதையில் அழைத்துச் செல்வதற்கு தேவையான அனைத்தும் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. உண்மையில், மனிதனுடைய இலட்சியங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், மனிதனுடைய ஆசைகள் எவ்வளவு யதார்த்தமானவை அல்லது அவை எவ்வளவு சரியானதாக இருந்தாலும், மனிதன் அடைய விரும்பும் அனைத்தும், மனிதன் தேடும் அனைத்தும், இரண்டு வார்த்தைகளுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு சொற்களும் ஒவ்வொரு மனிதரின் ஜீவிதத்திலும் மிக முக்கியமானவையாகும். அவை மனிதனுக்குள் சாத்தான் புகுத்த விரும்பும் விஷயங்களாகும். அந்த இரண்டு சொற்கள் யாவை? அவை “புகழ்” மற்றும் “ஆதாயம்” ஆகும். சாத்தான் மிகவும் நுட்பமான ஒரு முறையைப் பயன்படுத்துகிறது. அது ஜனங்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போகின்ற ஒரு முறையாகும். அது தீவிரமானதல்ல. இவ்வாறு சத்தானுடைய ஜீவித முறையையும், அதன் விதிமுறைகளைப் பின்பற்றுவதையும், சாத்தான் உருவாக்கும் ஜீவித இலக்குகளையும் நோக்கங்களையும், ஜனங்கள் அறியாமையில் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. அவ்வாறு செய்யும்போது அவர்கள் அறியாமலேயே ஜீவிதத்தில் லட்சியங்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜீவித நோக்கங்கள் எவ்வளவு பெரியதாகத் தோன்றினாலும், அவை “புகழ்” மற்றும் “ஆதாயம்” ஆகியவற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு பெரிய அல்லது பிரபலமான மனிதரும்—உண்மையில் எல்லா ஜனங்களும்—பின்பற்றும் அனைத்தும் “புகழ்” மற்றும் “ஆதாயம்” என்ற இந்த இரண்டு சொற்களுடன் மட்டுமே தொடர்புடையவை ஆகும். புகழ் மற்றும் ஆதாயம் கிடைத்தவுடன், அதைப் பயன்படுத்தி தங்களால் உயர் அந்தஸ்தையும் பெரும் செல்வத்தையும் அனுபவிக்கவும், ஜீவிதத்தை அனுபவிக்கவும் முடியும் என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயம் என்பது ஜனங்கள் சிற்றின்பத்தையும் மாம்சம் விரும்பும் இன்பத்தையும் பெற்றுக்கொள்ளும் ஜீவிதத்தைப் பெற பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலதனம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மனிதகுலம் அதிகமாக விரும்பும் இந்த புகழ் மற்றும் ஆதாயத்திற்காக, ஜனங்கள் விருப்பமின்றி, அறியாமலேயே, தங்கள் சரீரங்களையும், மனங்களையும், அவர்களிடம் உள்ள அனைத்தையும், அவர்களுடைய எதிர்காலங்களையும், தலைவிதிகளையும் சாத்தானிடம் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் ஒரு கணம் கூட தயங்காமல் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் ஒப்படைத்த அனைத்தையும் மீட்டெடுப்பதன் அவசியத்தை ஒருபோதும் அறியாமல் இருக்கிறார்கள். இவ்வாறு சாத்தானில் தஞ்சமடைந்து, அதற்கு விசுவாசமாகி விட்டால், ஜனங்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டில் எதையாவது தக்க வைத்துக் கொள்ள முடியுமா? நிச்சயமாக இல்லை. அவை சாத்தானால் முழுமையாகவும் நிச்சயமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர்கள் முற்றிலுமாக மற்றும் நிச்சயமாக ஒரு புதைகுழியில் மூழ்கிவிட்டனர். அவர்களால் தங்களை விடுவிக்க முடியவில்லை. ஒருவர் புகழ் மற்றும் ஆதாயத்தில் மூழ்கியவுடன், பிரகாசமானதை, நீதியுள்ளதை அல்லது அழகானதையும் நலமானதையும் அவர்கள் இனி தேட மாட்டார்கள். ஏனென்றால், ஜனங்கள் மீது புகழ் மற்றும் ஆதாயம் வைத்திருக்கும் கவர்ச்சியின் வல்லமை மிக அதிகம். அவை, ஜனங்களை தங்கள் ஜீவகாலம் முழுவதும் பின்பற்றவும், முடிவில்லாமல் நித்தியமாக பின்பற்றவும் செய்கின்றன. இது உண்மையல்லவா? அறிவைக் கற்றுக்கொள்வது புத்தகங்களைப் படிப்பது அல்லது தங்களுக்கு முன்பே தெரியாத சில விஷயங்களைக் கற்றுக்கொள்வது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று சிலர் கூறுவார்கள். எனவே, காலத்தால் பின்தங்கி இருக்கக்கூடாது அல்லது உலகத்தால் பின்னால் விடப்படக் கூடாது என்பார்கள். அறிவு வெறுமனே கற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, அவர்கள் தேவையானவற்றையும், தங்கள் எதிர்காலத்திற்காக அல்லது அடிப்படை தேவைகளையும் வழங்க முடியும். உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, அடிப்படைத் தேவைகளுக்காக ஒரு தசாப்த காலமாகக் கடின படிப்பைத் தொடரும் யாராவது இருக்கிறார்களா? இல்லை, இதுபோன்று யாரும் இல்லை. ஒரு மனிதர் இந்த ஆண்டுகளில் ஏன் இந்தக் கஷ்டங்களை அனுபவிக்கிறார்? இது புகழ் மற்றும் ஆதாயத்திற்கானது. புகழ் மற்றும் ஆதாயம் தூரத்தில் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. அவர்களை அழைக்கின்றன. மேலும், அவர்கள் தங்கள் சொந்த விடாமுயற்சி, கஷ்டங்கள் மற்றும் போராட்டங்களின் மூலமாக மட்டுமே புகழ் மற்றும் ஆதாயத்தை அடைய வழிவகுக்கும் பாதையைப் பின்பற்ற முடியும் என்று நம்புகிறார்கள். அத்தகைய மனிதர்கள் தங்கள் எதிர்கால பாதைக்காகவும், அவர்களுடைய எதிர்கால இன்பத்துக்காகவும், சிறந்த ஜீவிதத்தைப் பெறவும், இந்தக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும். இவை எத்தகைய அறிவு என்று என்னிடம் நீங்கள் சொல்ல முடியுமா? இது, “கட்சியை நேசி, நாட்டை நேசி, உன் மதத்தை நேசி” மற்றும் “புத்தியுள்ள மனிதன் சூழ்நிலைகளுக்கு அடிபணிகிறான்” என்பன போன்ற சாத்தான் மனிதனுக்குள் புகுத்தும் வாழ்க்கை விதிமுறைகள் மற்றும் தத்துவங்கள் அல்லவா? சாத்தானால் மனிதனுக்குள் புகுத்தப்பட்ட ஜீவிதத்தின் “உயர்ந்த இலட்சியங்கள்” அல்லவா? உதாரணமாக, பெரிய மனிதர்களின் யோசனைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பிரபலமானவர்களின் ஒருமைப்பாடு அல்லது தலைவர்களின் துணிச்சலான உத்வேகம், அல்லது தற்காப்புக் கலையை எடுத்துக் கொள்ளுங்கள், புதினங்களில் கதாநாயகர்கள் மற்றும் வாள் வீரர்களின் வீரம் மற்றும் தயவை எடுத்துக் கொள்ளுங்கள்—இவை அனைத்தின் வழியாக சாத்தான் இந்த இலட்சியங்களை உட்புகுத்துகிறது அல்லவா? இந்தக் கருத்துக்கள் ஒரு தலைமுறையை ஒன்றன்பின் ஒன்றாகப் பாதிக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையினரும் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகின்றனர். அவர்கள் “மேட்டிமையான கருத்துக்களைப்” பின்தொடர்வதில் தொடர்ந்து போராடுகின்றனர், அவர்கள் அதற்காகத் தங்கள் ஜீவனையும் கூட தியாகம் செய்வார்கள். இதுதான் ஜனங்களைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவைப் பயன்படுத்துகிற வழிமுறையும், அணுகுமுறையும் ஆகும். ஆகவே, சாத்தான் ஜனங்களை இந்தப் பாதைக்கு அழைத்துச் சென்றபின், அவர்களால் தேவனுக்குக் கீழ்ப்படியவும் அவரைத் தொழுதுகொள்ளவும் முடியுமா? மேலும் அவர்களால் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, சத்தியத்தைப் பின்பற்ற முடியுமா? நிச்சயமாக முடியாது—ஏனென்றால் அவர்கள் சாத்தானால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். சாத்தானால் ஜனங்களுக்குள் புகுத்தப்பட்ட அறிவு, எண்ணங்கள் மற்றும் கருத்துக்களைப் பற்றி நாம் மீண்டும் பார்ப்போம். இந்த காரியங்களில் தேவனுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் தேவனைத் தொழுதுகொள்ளுதல் குறித்த சத்தியங்கள் இருக்கின்றனவா? தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கும் சத்தியங்கள் இருக்கின்றனவா? தேவனுடைய வார்த்தைகள் ஏதேனும் இருக்கின்றனவா. சத்தியம் தொடர்பான ஏதேனும் அவற்றில் இருக்கின்றனவா. உங்களுக்குத் துணிவில்லை—ஆனாலும் பரவாயில்லை. சாத்தானால் ஜனங்களுக்குள் புகுத்தப்படும் காரியங்களில் எந்த சத்தியமும் இல்லை என்பதில் உங்களால் உறுதியாக இருக்க முடியுமா? எதுவாயிருந்தாலும் நீங்கள் துணிவதில்லை. “புகழ்” மற்றும் “ஆதாயம்” என்பது தீமையின் பாதையில் ஜனங்களைக் கவர்ந்திழுக்க சாத்தான் பயன்படுத்தும் இரண்டு முக்கிய சொற்கள் என்பதை நீ அறிந்துகொண்டால் அதுவே போதுமானதாகும்.

இதுவரை நாம் விவாதித்தவற்றைச் சுருக்கமாக திருப்பிப் பார்ப்போம்: மனிதனை தன் கட்டுப்பாட்டில் உறுதியாக வைத்திருக்க சாத்தான் எதைப் பயன்படுத்துகிறது? (புகழ் மற்றும் ஆதாயம்.) ஆகவே, எல்லா ஜனங்களும் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பற்றி நினைக்கும் வரையில், மனிதனுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்த சாத்தான் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பயன்படுத்துகிறது. அவர்கள் புகழ் மற்றும் ஆதாயத்திற்காகப் போராடுகிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காகக் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவமானத்தைச் சகித்துக் கொள்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவர்கள் எந்தத் தீர்மானத்தையும் முடிவையும் எடுப்பார்கள். இவ்வாறு, சாத்தான் ஜனங்களைக் கண்ணுக்குத் தெரியாத கைவிலங்குகளால் கட்டிப் போட்டிருக்கிறது. அவற்றைத் தூக்கி எறியும் வல்லமையும் தைரியமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அறியாமலேயே இந்தக் கைவிலங்குகளை சுமந்து கொண்டு, மிகுந்த சிரமத்துடன் எப்போதும் முன்னேறுகிறார்கள். இந்தப் புகழ் மற்றும் ஆதாயத்திற்காக, மனிதகுலம் தேவனைத் தவிர்த்து, அவரைக் காட்டிக் கொடுத்து, பொல்லாதவர்களாக மாறுகிறது. எனவே, இவ்வாறு, சாத்தானுடைய புகழ் மற்றும் ஆதாயத்தின் மத்தியில் அடுத்தடுத்து ஒவ்வொரு தலைமுறையும் அழிக்கப்படுகிறது. இப்போதும் சாத்தானுடைய கிரியைகளைப் பார்க்கும்போது, அதன் மோசமான நோக்கங்கள் முற்றிலும் வெறுக்கத் தக்கவையாக இருக்கின்றன அல்லவா? புகழ் மற்றும் ஆதாயமின்றி ஒருவர் ஜீவிக்க முடியாது என்று நீங்கள் நினைப்பதால், இன்றும் நீங்கள் சாத்தானுடைய மோசமான நோக்கங்களைக் காண முடியவில்லை. ஜனங்கள் புகழ் மற்றும் ஆதாயத்தை விட்டுவிட்டால், அவர்களால் இனி முன்னோக்கிச் செல்லும் வழியைக் காண முடியாது, இனி அவர்களால் அவர்களுடைய குறிக்கோள்களைக் காண முடியாது, அவர்களுடைய எதிர்காலம் இருண்டதாகவும், மங்கலானதாகவும் மற்றும் தெளிவற்றதாகவும் மாறிப்போகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், மனிதனைக் கட்டிப்போட புகழும் ஆதாயமும் சாத்தான் பயன்படுத்தும் கொடூரமான கைவிலங்குகள் என்பதை நீங்கள் மெதுவாக ஒரு நாள் உணர்ந்து கொள்வீர்கள். அந்த நாள் வரும்போது, நீ சாத்தானுடைய கட்டுப்பாட்டை முற்றிலுமாக எதிர்ப்பாய். உன்னைக் கட்டிப்போட சாத்தான் பயன்படுத்தும் கைவிலங்குகளை முழுமையாக எதிர்ப்பாய். சாத்தான் உன்னில் உட்புகுத்திய எல்லாவற்றையும் தூக்கி எறிய விரும்பும் நேரம் வரும்போது, நீ சாத்தானுடன் ஒரு முழுமையான முறிவைக் கடைபிடிப்பாய். சாத்தான் உன்னிடம் கொண்டு வந்த அனைத்தையும் நீ உண்மையிலேயே வெறுப்பாய். அப்போது தான் மனிதகுலத்திற்கு தேவன் மீது உண்மையான அன்பும் ஏக்கமும் இருக்கும்.

b. மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவியலைப் பயன்படுத்துகிறது

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி இப்போது தான் பேசினோம். ஆகவே, மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவியலை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றி பேசுவோம். முதலாவதாக, மனிதனுடைய ஆர்வத்தை பூர்த்தி செய்ய சாத்தான் விஞ்ஞானத்தின் பெயரை, அறிவியலை ஆராய்ந்து மர்மங்களை ஆராய மனிதனுடைய விருப்பத்தைப் பயன்படுத்துகிறது. விஞ்ஞானத்தின் பெயரில், மனிதனுடைய பொருள் தேவைகளையும், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான மனிதனுடைய கோரிக்கையையும் சாத்தான் பூர்த்தி செய்கிறது. இவ்வாறு, இந்தச் சாக்குப்போக்குடன் தான் மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவியலைப் பயன்படுத்துகிறது. இவ்வாறு அறிவியலைப் பயன்படுத்தி சாத்தான் மனிதனுடைய சிந்தனையை மட்டும் கெடுக்கிறதா அல்லது மனிதனுடைய மனதையும் கெடுக்கிறதா? நம் சூழலில் உள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களில் நாம் காணக்கூடிய மற்றும் நாம் தொடர்பு கொள்ளும் விஞ்ஞானத்துடன், சாத்தான் வேறு எதைக் கெடுக்கிறது? (இயற்கையான சுற்றுச்சூழல்.) சரியானது. இதன் மூலம் நீங்கள் ஆழ்ந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளீர்கள் என்றும் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் தெரிகிறது. மேலும், மனிதனை ஏமாற்ற விஞ்ஞானத்தின் பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் முடிவுகளைச் சாத்தான் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கைச் சூழலை விரும்பத்தகாத அழிவு மற்றும் சுரண்டலுக்கு உட்படுத்தும் ஒரு வழியாகவும் சாத்தான் அறிவியலைப் பயன்படுத்துகிறது. மனிதன் விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொண்டால், மனிதனுடைய வாழ்க்கைச் சூழலும் வாழ்க்கைத் தரமும் தொடர்ந்து மேம்படும் என்ற சாக்குப்போக்கின் கீழ் இதைச் செய்கிறது. மேலும் விஞ்ஞான வளர்ச்சியின் நோக்கம் அதிகரித்து வரும் ஜனங்களுடைய அன்றாட பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், தொடர்ந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுமாகும். இது சாத்தானுடைய அறிவியல் வளர்ச்சியின் தத்துவார்த்த அடிப்படையாகும். இருப்பினும், அறிவியல் மனிதகுலத்திற்கு எதைக் கொண்டு வந்துள்ளது? நமது வாழ்க்கைச் சூழல் மற்றும் எல்லா மனிதர்களுடைய வாழும் சூழல் மாசுபடுத்தப்படவில்லையா? மனிதன் சுவாசிக்கும் காற்று மாசுபடுத்தப்படவில்லையா? நாம் குடிக்கும் நீர் மாசுபடுத்தப்படவில்லையா? நாம் உட்கொள்ளும் உணவு இன்னும் இயற்கையானதாக இருக்கிறதா? பெரும்பாலான தானியங்களும் காய்கறிகளும் மரபணு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அவை ரசாயன உரத்தைப் பயன்படுத்தி வளர்க்கப்படுகின்றன மற்றும் சில விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வகைகளாக இருக்கின்றன. நாம் உண்ணும் காய்கறிகளும் பழங்களும் கூட இனி இயற்கையானவை அல்ல. இயற்கையான முட்டைகளைக் கூட இனி காண்பது எளிதானது அல்ல. சாத்தானுடைய விஞ்ஞானம் என்று அழைக்கப்படுபவற்றால் ஏற்கனவே செயலாக்கப்பட்ட நிலையில், முட்டைகள் இனி முன்பு இருந்தது போல இனி சுவைக்காது. விரிவாகப் பார்த்தால், முழு வளிமண்டலமும் அழிக்கப்பட்டு மாசுபட்டுள்ளது. மலைகள், ஏரிகள், காடுகள், ஆறுகள், பெருங்கடல்கள் மற்றும் தரைக்கு மேலேயும் கீழேயும் உள்ள அனைத்தும் அறிவியல் சாதனைகள் என்று அழைக்கப்படுபவையால் அழிக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால், முழு இயற்கைச் சூழலும், தேவனால் மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட வாழ்க்கைச் சூழலும் அறிவியல் என்று அழைக்கப்படும் ஒன்றால் அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. தாங்கள் தேடும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் தங்கள் ஆசைகள் மற்றும் மாம்சம் இரண்டையும் திருப்திப்படுத்தும் தாங்கள் எப்போதும் எதிர்பார்த்ததைப் பலர் பெற்றுக்கொண்டாலும், மனிதன் வாழும் சுற்றுச்சூழலலானது விஞ்ஞானத்தின் வெவ்வேறு “சாதனைகளால்” அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டு வருகிறது. இப்போதும், சுத்தமான காற்றின் ஒரு சுவாசத்தை சுவாசிக்க இனி நமக்கு உரிமை இல்லை. இது மனிதகுலத்தின் துக்கம் அல்லவா? மனிதன் இத்தகைய இடத்தில் ஜீவிக்க வேண்டியிருக்கும் போது, பேசுவதற்கு ஏதேனும் மகிழ்ச்சி அவர்களுக்கு இருக்கிறதா? மனிதன் வாழும் இந்த இடமும் வாழ்க்கைச் சூழலும் ஆரம்பத்தில் இருந்தே மனிதனுக்காக தேவனால் உருவாக்கப்பட்டன. ஜனங்கள் குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, ஜனங்கள் உண்ணும் பல்வேறு வகையான உணவுகள், அத்தோடுகூட தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள், மலைகள், ஏரிகள் மற்றும் பெருங்கடல்கள்—இந்த வாழ்க்கைச் சூழலின் ஒவ்வொரு பகுதியும் மனிதனுக்கு தேவனால் வழங்கப்பட்டது. இது இயற்கையானதாகும். தேவன் விதித்த இயற்கை விதிப்படி செயல்படுகிறது. விஞ்ஞானம் இல்லாதிருந்தால், ஜனங்கள் தேவனால் தங்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளையே இன்னும் பின்பற்றியிருந்திருப்பார்கள், அவர்களால் ஆதியிலுள்ள, இயற்கையான அனைத்தையும் அனுபவித்திருக்க முடியும், மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். ஆயினும், இப்போது இவை அனைத்தும் சாத்தானால் அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டு விட்டன. மனிதனுடைய அடிப்படையான வாழ்விடம் இனி ஆதியிலுள்ளது போல் இருப்பதில்லை. ஆனால் இது எதனால் ஏற்பட்டது அல்லது இது எப்படி ஏற்பட்டது என்பதை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. மேலும் பலர் அறிவியலை அணுகி சாத்தானால் தங்களுக்குள் உட்புகுத்தப்பட்ட கருத்துக்கள் மூலம் அதைப் புரிந்து கொள்கிறார்கள். இது முற்றிலும் வெறுக்கத்தக்கது மற்றும் பரிதாபகரமானது அல்லவா? சாத்தான் இப்போது ஜனங்கள் இருக்கும் இடத்தையும், அவர்களுடைய வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்கொண்டு, அவர்களை இந்த நிலைக்குக் கெடுத்து, மனிதகுலம் தொடர்ந்து இவ்வாறு வளர்ச்சியடைந்து வருவதால், இந்த ஜனங்களை அழிக்க தேவனுக்கு தனிப்பட்ட முறையில் காரணம் இருக்கிறதா? ஜனங்கள் தொடர்ந்து இவ்வாறு வளர்ந்தால், அவர்கள் எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பார்கள்? (அவர்கள் அழிக்கப்படுவார்கள்.) அவர்கள் எவ்வாறு அழிக்கப்படுவார்கள்? புகழ் மற்றும் ஆதாயத்திற்கான ஜனங்களுடைய பேராசையான தேடல் தவிர, அவர்கள் தொடர்ந்து விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு ஆராய்ச்சியில் ஆழமாக மூழ்கி, பின்னர் தங்களது சொந்தப் பொருள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இடைவிடாமல் செயல்படுகின்றனர், இதனால் மனிதனுக்கு ஏற்படும் பின்விளைவுகள் என்ன? முதலாவதாக, சுற்றுச்சூழல் சமநிலை உடைந்து, இது நிகழும்போது, ஜனங்களுடைய சரீரங்கள், அவற்றின் உள் உறுப்புகள், இந்த சமநிலையற்ற சூழலால் கறைபட்டு சேதமடைகின்றன. மேலும், பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் வாதைகள் உலகம் முழுவதும் பரவுகின்றன. இது இப்போது மனிதனுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத சூழ்நிலையாக உள்ளது என்பது உண்மையல்லவா? இப்போது இது உங்களுக்குப் புரிகிறது. மனிதகுலம் தேவனைப் பின்பற்றாமல், எப்போதும் சாத்தானை இவ்வாறு பின்பற்றி தொடர்ந்து தங்களை வளப்படுத்த அறிவைப் பயன்படுத்தினால், மனித ஜீவிதத்தின் எதிர்காலத்தை இடைவிடாமல் ஆராய விஞ்ஞானத்தைப் பயன்படுத்தினால், தொடர்ந்து ஜீவிப்பதற்கு இந்த மாதிரியான முறையைப் பயன்படுத்தினால், இது மனிதகுலத்திற்கு எப்படிப்பட்ட முடிவைத் தரும் என்பதை நீங்கள் அடையாளம் காண முடியுமா? மனிதகுலம் இயற்கையாகவே அழிந்துவிடும்: படிப்படியாக, மனிதகுலம் அழிவை நோக்கி முன்னேறுகிறது, தங்களது சொந்த அழிவை நோக்கிச் செல்கிறது! இது தங்களின் மீது தாங்களே அழிவைக் கொண்டுவருவதில்லையா? மேலும் இது அறிவியல் முன்னேற்றத்தின் விளைவு அல்லவா? விஞ்ஞானம் என்பது மனிதனுக்காக சாத்தான் தயார் செய்த ஒரு வகையான மாய விஷம் என்று இப்போது தோன்றுகிறது. எனவே நீங்கள் விஷயங்களை ஒரு பனி மூட்டத்தில் காண முயற்சிக்கும்போது, நீங்கள் எவ்வளவு கடினமாகப் பார்த்தாலும், விஷயங்களை தெளிவாகக் காண முடியாது. நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. எவ்வாறாயினும், சாத்தான் விஞ்ஞானத்தின் பெயரைப் பயன்படுத்தி உன் பசியைத் தூண்டி உன்னைக் கட்டுப்படுத்தி ஒவ்வொரு அடியாக படுகுழியை மற்றும் மரணத்தை நோக்கி உன்னை வழிநடத்துகிறது. இந்த நிலையில், உண்மையில், மனுஷனுடைய அழிவு சாத்தானின் கையால் கொண்டுவரப்படுகிறது—சாத்தானே கலகத் தலைவன் என்பதை ஜனங்கள் தெளிவாகக் காண்பார்கள். இது அப்படியல்லவா? (ஆம், அப்படித்தான்.) இதுவே மனிதகுலத்தைச் சீர்கெடுக்கும் சாத்தானுடைய இரண்டாவது வழியாகும்.

c. மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பயன்படுத்துகிறது

சாத்தான் மனிதனைச் சீர்கெடுக்கும் மூன்றாவது வழி பாரம்பரிய கலாச்சாராம் ஆகும். பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் வித்தியாசம் என்னவென்றால், பாரம்பரிய கலாச்சாரத்தில் சில கதைகள், குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள் உள்ளன. வரலாற்றுப் புத்தகங்களில் காணப்படும் பல நாட்டுப்புறக் கதைகள் அல்லது கதைகளை சாத்தான் புனைந்து, பாரம்பரிய கலாச்சார அல்லது மூடநம்பிக்கையை மனிதர்களிடம் ஆழ்ந்த பதிவுகளாகப் பதித்துள்ளது. இதற்கு உதாரணமாக, “கடலைக் கடக்கும் எட்டு அழியாதவர்கள்,” “மேற்கை நோக்கிய பயணம்,” ஜேட் பேரரசர், “நேஷா டிராகன் ராஜாவை வென்றது,” மற்றும் “தேவர்களுடைய முதலீடு” ஆகியவை சீனாவில் உள்ளன. இவை மனிதனுடைய மனதில் ஆழமாக வேரூன்றவில்லையா? உங்களில் சிலருக்கு எல்லா விவரங்களும் தெரியாவிட்டாலும், பொதுவான கதைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் பொதுவான உள்ளடக்கம் தான் உன் இருதயத்திலும் உன் மனதிலும் ஒட்டிக்கொள்கிறது. எனவே அவற்றை நீ மறக்க முடியாது. இவை, நீண்ட காலத்திற்கு முன்பே மனிதனுக்காக சாத்தான் ஆயத்தம் செய்த பல்வேறு கருத்துக்கள் அல்லது புனைவுகள் ஆகும். அவை வெவ்வேறு காலங்களில் பரப்பப்படுகின்றன. இந்த விஷயங்கள் நேரடியாக ஜனங்களுடைய ஆத்துமாவுக்கு தீங்கு விளைவித்து ஆத்துமாவை அரித்து, ஜனங்களைத் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன. அதாவது, இதுபோன்ற பாரம்பரிய கலாச்சாரம், கதைகள் அல்லது மூடநம்பிக்கைகளை நீ ஏற்றுக் கொண்டவுடன், அவை உன் மனதில் நிலைபெற்றதும், அவை உன் இருதயத்தில் சிக்கியதும், நீ மந்திரத்தால் கட்டுப்படுத்தப்பட்டது போல இருப்பாய்—இந்தக் கலாச்சாரப் பொறிகள், யோசனைகள் மற்றும் பாரம்பரிய கதைகள் ஆகியவற்றால் நீ ஈர்க்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறாய். அவை உன் ஜீவிதத்தையும், ஜீவிதத்தைப் பற்றிய உன் கண்ணோட்டத்தையும், விஷயங்களைப் பற்றிய உன் கணிப்பையும் பாதிக்கின்றன. இன்னும் அதிகமாக, அவை உண்மையான ஜீவிதப் பாதைக்கான உன் நாட்டத்தைப் பாதிக்கின்றன: இது உண்மையில் ஒரு பொல்லாத மந்திரமாகும். உன்னால் முடிந்தவரை முயற்சி செய். உன்னால் அவற்றை அசைக்க முடியாது. நீ அவற்றை வெட்ட முயற்சிக்கிறாய். ஆனால் அவற்றை வெட்ட முடியாது. நீ அவர்களைத் தாக்குகிறாய், ஆனால் நீ அவர்களை ஜெயிக்க முடியாது. மேலும், ஜனங்கள் அறியாமலேயே இத்தகைய மந்திரத்துக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் அறியாமல் சாத்தானை வணங்கத் தொடங்குகிறார்கள். சாத்தானுடைய உருவத்தைத் தங்கள் இருதயங்களில் வளர்க்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் சாத்தானைத் தங்கள் விக்கிரகமாக, அவர்கள் வணங்குவதற்கும் ஏறெடுத்துப் பார்ப்பதற்கும் ஏற்ற பொருளாக நிலைநிறுத்துகிறார்கள். அதை தேவனாகக் கருதும் அளவிற்கு கூடச் செல்கிறார்கள். இந்த விஷயங்கள் ஜனங்களுடைய இருதயங்களில் அறியாமலேயே இருக்கின்றன. அவர்களின் சொற்களையும் கிரியைகளையும் கட்டுப்படுத்துகின்றன. மேலும், நீ முதலில் இந்த கதைகளையும் புனைவுகளையும் பொய் என்று கருதுகிறாய், ஆனால் நீ அறியாமல் அவை இருப்பதாய் ஒப்புக்கொள்கிறாய். அவற்றை உண்மையான ஜீவனாக உருவாக்கி அவற்றை உண்மையாக்கி, உண்மையாக இருக்கும் பொருள்களாக மாற்றுகிறாய். உன் அறியாமையில், இந்த யோசனைகளையும் இந்த விஷயங்கள் இருப்பதையும் நீ ஆழ்மனதில் பெறுகிறாய். பிசாசுகள், சாத்தான் மற்றும் விக்கிரகங்களை உன் சொந்த வீட்டிலும் உன் சொந்த இருதயத்திலும் ஆழ்மனதில் நீ பெறுகிறாய்—உண்மையில் இது ஒரு மந்திரமாகும். இந்த வார்த்தைகள் உங்களுடன் பேசுகிறதா? (ஆம்.) உங்களில் யாரேனும் தூபத்தை எரித்து புத்தரை வணங்கியதுண்டா? (ஆம்.) அப்படியென்றால் தூபம் எரிக்கும், புத்தரை வணங்கும் உங்கள் நோக்கம் என்ன? (சமாதானத்திற்காக ஜெபித்தல் ஆகும்.) இப்போது அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால், சமாதானத்திற்காக சாத்தானிடம் ஜெபிப்பது அபத்தமல்லவா? சாத்தான் சமாதானத்தைத் தருகிறதா? (இல்லை.) அப்போது, நீங்கள் எவ்வளவு அறியாமையில் இருந்தீர்கள் என்று தெரிகிறதா? இத்தகைய நடத்தை அபத்தமானது, அறியாமை மற்றும் சிறுபிள்ளைத்தனம் அல்லவா? உன்னை எவ்வாறு சீர்கெடுப்பது என்பதில் மட்டுமே சாத்தான் அக்கறையாக இருக்கிறது. சாத்தானால் உனக்குச் சமாதானத்தை அளிக்க முடியாது. ஒரு தற்காலிக ஓய்வு மட்டுமே தர முடியும். ஆனால் இந்த ஓய்வு பெற நீ ஒரு பொருத்தனை வேண்டும். உன் வாக்குறுதியையோ அல்லது சாத்தானுக்கு நீ செய்த பொருத்தனையையோ மீறினால், அது உன்னை எவ்வாறு வேதனைப்படுத்தும் என்பதை நீ காண்பாய். நீ ஒரு பொருத்தனை செய்யும்போது, அது உண்மையில் உன்னை கட்டுப்படுத்த விரும்புகிறது. நீங்கள் அமைதிக்காக ஜெபித்தபோது, நீங்கள் அமைதியைப் பெற்றீர்களா? (இல்லை.) நீங்கள் அமைதியைப் பெறவில்லை. மாறாக, உங்கள் முயற்சிகள் துரதிர்ஷ்டத்தையும் முடிவில்லாத பேரழிவுகளையும் கொண்டு வந்தன—உண்மையிலேயே எல்லையற்ற கசப்பு கடலாக இருந்தன. அமைதி என்பது சாத்தானுடைய களத்திற்குள் இல்லை. இதுதான் உண்மை. இதுவே நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கையும் பாரம்பரிய கலாச்சாரமும் மனிதகுலத்திற்கு கொண்டு வந்த பின்விளைவாகும்.

d. மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் சமூகப் போக்குகளைப் பயன்படுத்துகிறது

சாத்தான் மனிதனைக் கெடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் கடைசி வழி சமூக போக்குகள் என்னும் வழியாகும். சமூகப் போக்குகள் என்பவை பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளன, இவற்றில் புகழ்பெற்ற மற்றும் சிறந்த மனிதர்கள் மற்றும் சினிமா மற்றும் இசைக் கலைஞர் ஆகியோரை வணங்குதல் மற்றும் பிரபலங்களை வணங்குதல், இணைய விளையாட்டுகள் போன்றவை அடங்கும், இவை அனைத்தும் சமூகப் போக்குகளின் அங்கமாகும், மேலும் இதை விரிவாகப் பார்க்க வேண்டியதில்லை. சமூகப் போக்குகள் ஜனங்களிடையே கொண்டு வரும் கருத்துக்களை, உலகில் அவை ஜனங்களை நடத்தும் விதத்தை மற்றும் அவை ஜனங்களில் கொண்டு வரும் வாழ்க்கை இலக்குகளை மற்றும் கண்ணோட்டத்தைப் பற்றி மட்டுமே நாம் பேசுவோம். இவை மிக முக்கியமானவை ஆகும். இவை ஜனங்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் கட்டுப்படுத்தலாம் மற்றும் பாதிக்கலாம். இந்தப் போக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுகின்றன. அவை அனைத்தும் மனிதத்தன்மையை தொடர்ந்து இழிவுபடுத்தும் ஒரு தீய செல்வாக்கைக் கொண்டுள்ளன. இதனால் பெரும்பான்மையான ஜனங்களுக்கு இப்போது நேர்மை இல்லை, மனிதத்தன்மை இல்லை, அவர்களுக்கு எந்த மனசாட்சியும் இல்லை, எந்தவொரு பகுத்தறிவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஜனங்கள் மனசாட்சி, மனிதத்தன்மை மற்றும் பகுத்தறிவை இழக்க நேரிடுகிறது, மேலும், அவர்களுடைய ஒழுக்கத்தையும், அவர்களுடைய குணாதிசயத்தையும் அது இன்னும் பலவீனப்படுத்துகிறது. எனவே, எத்தகைய சமூகப் போக்குகள் இவை? இவை உன்னால் மனிதக் கண்ணால் பார்க்க முடியாத போக்குகள் ஆகும். ஒரு புதிய போக்கு உலகெங்கும் பரவும்போது, ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஜனங்கள் மட்டுமே வெட்டு விளிம்பில் அந்த போக்கின் தொடக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் சில புதிய காரியங்களைச் செய்யத் தொடங்குகிறார்கள். பின்னர் ஒருவித கருத்தை அல்லது ஒருவித கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். எவ்வாறாயினும், பெரும்பான்மையான ஜனங்கள் அறியாமலும், விருப்பமின்றியும் அதை ஏற்றுக்கொண்டு, அதில் மூழ்கி, அதைக் கட்டுப்படுத்தும் வரை, அவர்கள் அனைவரும் தங்கள் அறியாமையில் இந்தப் போக்கால் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள், ஈர்க்கப்படுவார்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்படுவார்கள். ஒன்றன் பின் ஒன்றாக, இத்தகைய போக்குகள் நல்ல உடலும் மனமும் இல்லாத, உண்மை என்னவென்று தெரியாத, நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாத ஜனங்களை மகிழ்ச்சியுடன் அவற்றையும், சாத்தானிடமிருந்து வரும் வாழ்க்கைக் கண்ணோட்டங்கள் மற்றும் மதிப்புகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன. ஜீவிதத்தை எவ்வாறு அணுகுவது என்பது பற்றியும், சாத்தான் அவர்களுக்கு “அளிக்கும்” ஜீவிப்பதற்கான வழி பற்றியும் சாத்தான் சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், அவர்களுக்கு எதிர்ப்பதற்கான வல்லமையும், திறனும், விழிப்புணர்வும் இல்லை. எனவே, இது போன்ற போக்குகளை அடையாளம் காண்பது எப்படி? நீங்கள் படிப்படியாக புரிந்து கொள்ளக் கூடிய ஒரு எளிய உதாரணத்தை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். உதாரணமாக, யாரும் ஏமாற்றப்படாத விதத்தில் கடந்த காலத்தில் ஜனங்கள் யாரும் தங்கள் தொழிலை நடத்தவில்லை. யார் வாங்குகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரே விலையில் பொருட்களை விற்றார்கள். நல்ல மனசாட்சி மற்றும் மனிதத்தன்மையின் சில கூறுகள் இங்கே தெரிவிக்கப்படவில்லையா? ஜனங்கள் தங்கள் வியாபாரத்தை இவ்வாறு நல்ல நம்பிக்கையுடன் நடத்தியபோது, அந்த நேரத்தில் அவர்களுக்கு இன்னும் சில மனசாட்சி மற்றும் கொஞ்சம் மனிதத்தன்மை இருந்ததைக் காணலாம். ஆனால் மனிதனுடைய பணத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜனங்கள் அறியாமலேயே பணத்தை, ஆதாயத்தை மற்றும் இன்பத்தை நேசிக்கிறார்கள். ஜனங்கள் பணத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கவில்லையா? ஜனங்கள் பணத்தை மிக முக்கியமானதாக பார்க்கும்போது, அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய மரியாதை, புகழ், நற்பெயர் மற்றும் நேர்மைக்கு குறைந்த முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தொடங்குகிறார்கள், இல்லையா? நீ வியாபாரத்தில் ஈடுபடும்போது, மற்றவர்கள் ஜனங்களை ஏமாற்றி ஐசுவரியவான்களாவதை நீ காண்கிறாய். சம்பாதித்தப் பணத்தை மோசமான வழியில் சம்பாதித்தாலும், அவர்கள் மேலும் மேலும் ஐசுவரியவான்களாக மாறுகிறார்கள். அவர்களுடைய குடும்பம் அனுபவிப்பதையெல்லாம் பார்ப்பது உன்னை விசனப்படுத்துகிறது: “நாங்கள் இருவருமே வியாபாரம்தான் செய்கிறோம், ஆனால் அவர்கள் ஐசுவரியவான்களாகிறார்கள். என்னால் ஏன் நிறைய பணம் சம்பாதிக்க முடியவில்லை? என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை—அதிக பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியை நான் கண்டறிய வேண்டும்” என்கிறாய். அதன்பிறகு, உன் செல்வத்தை எப்படி சம்பாதிப்பது என்பது பற்றியே நீ சிந்திக்கிறாய். “யாரையும் ஏமாற்றாமல் மனசாட்சிப்படி பணத்தை சம்பாதிக்க வேண்டும்” என்ற நம்பிக்கையை நீ கைவிட்டிருக்கும்போது, உன் செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்ள கோட்பாடுகள் மாறுவதுபோல உன் சொந்த நலன்களால் நீ தூண்டப்பட்டு உன் சிந்தனை முறை படிப்படியாக மாறுகிறது. நீ ஒருவரை முதல்முறையாக ஏமாற்றும்போது, உன் மனசாட்சியின் கடிந்துகொள்ளுதலை நீ உணருகிறாய், மேலும் உன் இருதயம் உன்னிடம் சொல்கிறது, “இது முடிந்ததும், நான் ஒருவரை ஏமாற்றுவது இதுதான் கடைசிமுறையாக இருக்கும். ஐனங்களை எப்போதுமே ஏமாற்றுவது தகுந்த தண்டனையைத் தந்துவிடும்!” இது மனிதனுடைய மனசாட்சியின் செயல்பாடாகும்—உன்னைத் துன்புறுத்துவதற்கும் உன்னை நிந்திப்பதற்குமாகும், அதனால் நீ ஒருவரை ஏமாற்றும்போது இயற்கைக்கு மாறானதாக உன் இருதயம் உணர்கிறது. ஆனால் நீ ஒருவரை வெற்றிகரமாக ஏமாற்றிய பிறகு, நீ முன்பு செய்ததை விட இப்போது உன்னிடம் அதிகப் பணம் இருப்பதை நீ காண்கிறாய். இந்த செயல்முறை உனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய். உன் இருதயத்தில் லேசான வலி இருந்தபோதிலும், உன் ஜெயத்துக்கு உன்னை வாழ்த்துவது போல் நீ இன்னும் உணர்கிறாய். நீ உன்னைப் பற்றி ஓரளவு மகிழ்ச்சியடைகிறாய். முதல் முறையாக, உன் சொந்த நடத்தை, உன் சொந்த ஏமாற்றும் வழிகளுக்கு நீ ஒப்புதலளிக்கிறாய். இந்த மோசடியால் மனிதன் மாசுபட்டவுடன், அது சூதாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஒரு சூதாட்டக்காரனாக மாறுவது போல இருக்கிறது. உன் அறியாமையில், உன் சொந்த மோசடி நடத்தைக்கு நீ ஒப்புதல் அளித்து அதை ஏற்றுக் கொள்கிறாய். அறியாமலேயே, நீ ஏமாற்றுவதை ஒரு முறையான வணிக நடத்தை மற்றும் உன் பிழைப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுள்ள வழிமுறையாக எடுத்துக்கொள்கிறாய். இதைச் செய்வதன் மூலம் நீ விரைவாக செல்வத்தைச் சம்பாதிக்க முடியும் என்று நீ நினைக்கிறாய். இது ஒரு செயல்முறை: ஆரம்பத்தில், ஜனங்களால் இத்தகைய நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்கள் இந்த நடத்தை மற்றும் நடைமுறையை குறைத்துப் பார்க்கிறார்கள். பின்னர் இந்த நடத்தையை அவர்களே பரிசோதிக்கத் தொடங்குகிறார்கள். அதை தங்கள் சொந்த வழியில் முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய இருதயங்கள் படிப்படியாக மாறத் தொடங்குகின்றன. இது எத்தகைய மாற்றம்? சமூகப் போக்கால் உனக்குள் உட்புகுத்தப்பட்ட இந்த கருத்தின், போக்கின் ஒப்புதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதை உணராமல், அவர்களுடன் வியாபாரம் செய்யும் போது நீ ஜனங்களை ஏமாற்றவில்லை என்றால், நீ மோசமாக இருப்பதாக உணர்கிறாய். நீ ஜனங்களை ஏமாற்றவில்லை என்றால், நீ எதையாவது இழந்துவிட்டதாக உணர்கிறாய். நீ அறியாத வண்ணம், இந்த மோசடி உன் ஆத்துமாவாகவும், உன் முதுகெலும்பாகவும், உன் ஜீவிதத்தில் ஒரு கொள்கையாகவும், ஒரு தவிர்க்க முடியாத நடத்தையாகவும் மாறும். இந்த நடத்தை மற்றும் இந்தச் சிந்தனையை மனிதன் ஏற்றுக்கொண்ட பிறகு, இது அவர்களுடைய இருதயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லையா? உன் இருதயம் மாறிவிட்டதால் உன் நேர்மையும் மாறிவிட்டதா? உன் மனிதத்தன்மை மாறிவிட்டதா? உன் மனசாட்சி மாறிவிட்டதா? உன் இருதயம் முதல் உன் எண்ணங்கள் வரை, உட்புறம் முதல் வெளிப்புறம் வரை, நீ முழுமையாக மாறியிருக்கிறாய், இது ஒரு தரமான மாற்றமாகும். இந்த மாற்றம் உன்னை மேலும் மேலும், தேவனிடமிருந்து விலக்குகிறது. நீ சாத்தானுடன் மேலும் மேலும் நெருக்கமாக இருக்கிறாய். நீ மேலும் மேலும் சாத்தானைப் போலவே மாறுகிறாய், இதன் விளைவாக சாத்தானுடைய சீர்கேடானது உன்னைப் பிசாசாக்குகிறது.

இந்தச் சமூக போக்குகளைப் பார்க்கும்போது, அவை ஜனங்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறுவீர்களா? அவை ஜனங்கள் மீது ஆழமான தீங்கு விளைவிக்கிறதா? அவை ஜனங்கள் மீது மிகவும் ஆழமான தீங்கை விளைவிக்கின்றன. சீர்கெடுப்பதற்கு இந்தப் போக்குகள் ஒவ்வொன்றிலும் மனிதனின் எந்த அம்சங்களை சாத்தான் பயன்படுத்துகிறான்? சாத்தான் முக்கியமாக மனசாட்சி, அறிவு, மனிதத்தன்மை, ஒழுக்கம் மற்றும் கண்ணோட்டங்களை சீர்கெடுக்கிறான். இந்த சமூகப் போக்குகள் படிப்படியாக ஜனங்களை சீர்குலைத்து, சீர்கெடுப்பதில்லையா? சாத்தான் இந்த சமூகப் போக்குகளைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒரு படி அதிகமாக ஜனங்களைப் பிசாசுகளின் கூட்டிற்குள் இழுக்கிறது. இதனால் சமூகப் போக்குகளில் சிக்கிய ஜனங்கள் அறியாமலேயே பணம் மற்றும் பொருள் ஆசைகள், துன்மார்க்கம் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆதரிக்கிறார்கள். இவை மனிதனுடைய இருதயத்தில் நுழைந்தவுடன், மனிதன் என்னவாகிறான்? மனிதன் பிசாசாகிறான், சாத்தானாகிறான்! ஏன்? ஏனெனில், மனிதனுடைய இருதயத்தில் என்ன மன விருப்பம் இருக்கிறது? மனிதன் எதை மதிக்கிறான்? மனிதன் துன்மார்க்கத்திலும் வன்முறையிலும் இன்பம் கொள்ளத் தொடங்குகிறான். அழகு, நன்மை அல்லது அமைதி மீது எந்த அன்பையும் காட்டவில்லை. சாதாரண மனிதத்தன்மையின் எளிமையான ஜீவிதத்தை ஜீவிக்க ஜனங்கள் ஆயத்தமாக இல்லை. மாறாக, உயர்ந்த அந்தஸ்தையும், பெரும் செல்வத்தையும் அனுபவிக்க விரும்புகிறார்கள். மாம்சத்தின் இன்பங்களில் மகிழ்ச்சி அடைகிறார்கள். தங்கள் மாம்சத்தைத் திருப்திப்படுத்த எந்த முயற்சியும் செய்வதில்லை. அவர்களைக் கட்டுப்படுத்த எந்தவிதமான கட்டுப்பாடுகளும், பிடிப்புகளும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் விரும்பியதைச் செய்கிறார்கள். ஆகவே, மனிதன் இத்தகைய போக்குகளில் மூழ்கியிருக்கும்போது, நீ கற்றுக்கொண்ட அறிவால் உன்னை விடுவிக்க உனக்கு உதவ முடியுமா? பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மூடநம்பிக்கைகளைப் பற்றிய உன் புரிதல் இந்த மோசமான இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க உனக்கு உதவ முடியுமா? மனிதனுக்குத் தெரிந்த பாரம்பரிய ஒழுக்கங்களும் சடங்குகளும், ஜனங்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஜனங்களுக்கு உதவ முடியுமா? உதாரணமாக, தத்துவத் தொகுப்புகள் மற்றும் தாவோ தே சிங்கைஎடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் போக்குகளின் புதைகுழியில் இருந்து ஜனங்கள் தங்கள் கால்களை வெளியேற்ற அதனால் உதவ முடியுமா? நிச்சயமாக முடியாது. இவ்வாறு, மனிதன் மேலும் மேலும் தீயவனாகவும், ஆணவம் உள்ளவனாகவும், கீழ்த்தரமானவனாகவும், சுயநலவாதியாகவும், தீங்கிழைக்கிறவனாகவும் மாறுகிறான். இனி ஜனங்களிடையே எந்தப் பாசமும் இல்லை. இனி குடும்ப உறுப்பினர்களிடையே எந்த அன்பும் இல்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எந்தப் புரிதலும் இல்லை. மனித உறவுகள் வன்முறையால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனிதரும் சக மனிதர்கள் மத்தியில் ஜீவிக்க வன்முறை வழிமுறைகளைப் பயன்படுத்த முற்படுகிறார்கள். அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தி தங்கள் அன்றாட உணவைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தி தங்கள் பதவிகளை ஜெயித்து, தங்கள் லாபத்தைப் பெறுகிறார்கள். மேலும், அவர்கள் விரும்பும் எதையும் செய்ய வன்முறை மற்றும் தீய வழிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மனிதகுலம் பயங்கரமானதல்லவா? இது உண்மையிலேயே அப்படித்தான்: அவர்கள் தேவனை சிலுவையில் அறைந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்பற்றும் எல்லாரையும் கொன்றுபோடுவார்கள்—ஏனென்றால், மனுஷன் மிகவும் துன்மார்க்கனாய் இருக்கிறான். நான் இப்போது பேசிய எல்லாவற்றையும் கேட்டபின், இந்த சூழலிலும், இந்த உலகத்திலும், இத்தகைய ஜனங்களிடையேயும் ஜீவிப்பது பயமுறுத்துவதாக நீங்கள் நினைத்தீர்கள், அல்லவா? (ஆம்.) எனவே, நீங்கள் எப்போதாவது பரிதாபப்படுவதாக உணர்ந்திருக்கிறீர்களா? இந்தத் தருணத்தில் நீங்கள் அதைக் கொஞ்சம் உணர வேண்டும், அல்லவா? (நான் செய்கிறேன்.) உங்கள் தொனியைக் கேட்டால், நீங்கள் இவ்வாறு நினைப்பது போல் தெரிகிறது, “சாத்தானுக்கு மனிதனைச் சீர்கெடுப்பதற்கு பல வழிகள் உள்ளன. அது நாம் திரும்பும் எல்லா இடங்களிலும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறது. இன்னும் மனிதனை இரட்சிக்க முடியுமா?” இனியும் மனிதனை இரட்சிக்க முடியுமா? மனிதரால் தங்களை இரட்சிக்க முடியுமா? (இல்லை.) ஜேட் பேரரசரால் மனிதனை இரட்சிக்க முடியுமா? கன்பூசியஸால் மனிதனை இரட்சிக்க முடியுமா? குவானின் போதிசத்வா என்பவரால் மனிதனை இரட்சிக்க முடியுமா? (இல்லை.) எனவே மனிதனை யார் இரட்சிக்க முடியும்? (தேவன்.) இருப்பினும், சிலர் தங்கள் இருதயங்களில் இது போன்ற கேள்விகளை எழுப்புவார்கள்: “சாத்தான் மிகவும் கொடூரமாக, இவ்வளவு மோசமான வெறியில் நம்மைக் காயப்படுத்துகையில், நமக்கு ஜீவிதத்தை ஜீவிக்க நம்பிக்கையோ, ஜீவிதத்தை ஜீவிப்பதற்கான தன்னம்பிக்கையோ இல்லை. நாம் அனைவரும் கேட்டின் மத்தியில் ஜீவிக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் எப்படியாயினும் தேவனை எதிர்க்கிறார்கள். இப்போது நம் இருதயங்கள் எவ்வளவு ஆழமாக செல்ல முடியுமோ அவ்வளவு ஆழமாக மூழ்கிவிட்டன. சாத்தான் நம்மைச் சீர்கெடுக்கும்போது தேவன் எங்கே? தேவன் என்ன செய்கிறார்? தேவன் நமக்காக என்ன செய்கிறாரோ அதை நாம் ஒருபோதும் உணர மாட்டோம்!” சிலர் தவிர்க்க முடியாமல் மனச்சோர்வடைந்து சற்றே சோகமாக உணர்கிறார்கள். உங்களுக்கு, இந்த உணர்வு மிகவும் ஆழமாக இருக்கிறது. ஏனென்றால் நான் சொல்லிக் கொண்டிருப்பது ஜனங்கள் மெதுவாகப் புரிந்து கொள்ள அனுமதிப்பதற்கும், அவர்கள் நம்பிக்கையில்லாமல் இருப்பதை மேலும் மேலும் உணரவும், அவர்கள் தேவனால் கைவிடப்பட்டதாக மேலும் மேலும் உணரவும், ஆனால் வருத்தப்படாமல் இருப்பதற்கும் ஆகும். ஆனால் கவலைப்படாதீர். இன்றைய நமது அமர்வின், “சாத்தானுடைய தீமை” என்னும் நம்முடைய தலைப்பு உண்மையான கருப்பொருள் அல்ல. தேவனுடைய பரிசுத்தத்தின் சாராம்சத்தைப் பற்றி பேசுவதற்கு, மனிதன் இப்போது எந்த மாதிரியான நிலையில் இருக்கிறான் என்பதை ஜனங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, சாத்தான் மனிதனை எவ்வாறு சீர்கெடுக்கிறான் என்பதையும் சாத்தானுடைய தீமையையும் முதலில் விவாதிக்க வேண்டும். இதைப் பற்றி பேசுவதற்கான ஒரு நோக்கம் சாத்தானுடைய தீமையை ஜனங்கள் அறிந்துகொள்ள அனுமதிப்பது ஆகும். மற்றொரு நோக்கம் உண்மையான பரிசுத்தம் என்ன என்பதை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஜனங்களை அனுமதிப்பது ஆகும்.

கடந்த முறையுடன் ஒப்பிடும்போது நாம் இப்போது விவாதித்த இந்த விஷயங்களைப் பற்றி நான் இன்னும் விரிவாகப் பேசவில்லை அல்லவா? உங்கள் புரிதல் இப்போது கொஞ்சம் ஆழமாக இருக்கிறதா? (ஆம்.) தேவனுடைய பரிசுத்தம் என்னவென்று சொல்ல நிறைய பேர் இப்போது என்னை எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி நான் பேசும்போது, தேவன் செய்யும் கிரியைகளைப் பற்றி முதலில் பேசுவேன். நீங்கள் அனைவரும் கவனத்துடன் கேட்க வேண்டும். பின்னர், தேவனுடைய பரிசுத்தம் என்ன என்று நான் உங்களிடம் கேட்பேன். நான் உங்களுக்கு நேரடியாகச் சொல்ல மாட்டேன், மாறாக அதை நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்க, அதைக் கண்டுபிடிக்க நான் உங்களுக்கு இடம் தருவேன். இந்த முறையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (இது நன்றாக இருக்கிறது.) அப்படியானால் நான் சொல்லும்போது கவனமாகக் கேளுங்கள்.

தேவன் மனிதனுக்கு என்ன செய்கிறார் என்பதன் மூலம் அவருடைய பரிசுத்தத்தைப் புரிந்துகொள்ளுதல்

சாத்தான் மனிதனைச் சீர்கெடுக்கும்போதோ அல்லது மனிதனுக்குத் தடையற்ற தீங்கு விளைவிக்கும் போதோ, தேவன் சும்மா நிற்கவும் மாட்டார், அவர் ஒதுக்கித் தள்ளவும் மாட்டார் அல்லது அவர் தெரிந்துகொண்டவர்களிடம் கண்மூடித்தனமாக இருக்கவும் மாட்டார். சாத்தான் செய்யும் எல்லாவற்றையும் தேவன் பூரணமான தெளிவுடன் புரிந்து கொள்கிறார். சாத்தான் என்ன செய்தாலும், என்ன போக்கை அது ஏற்படுத்தினாலும், சாத்தான் செய்ய முயற்சிக்கும் அனைத்தையும் தேவன் அறிவார். தேவன் தான் தெரிந்துகொண்டவர்களை விட்டு விடுவதில்லை. அதற்குப் பதிலாக, எந்தக் கவனத்தையும் ஈர்க்காமல்—ரகசியமாக, அமைதியாக—தேவன் தேவையான அனைத்தையும் செய்கிறார். தேவன் ஒருவரிடம் கிரியை செய்யத் தொடங்கும் போது, அவர் ஒருவரைத் தெரிந்துகொள்ளும்போது, அவர் இந்தச் செய்தியை யாரிடமும் அறிவிப்பதில்லை, அதைச் சாத்தானிடமும் அறிவிப்பதில்லை, அதற்கான அடையாளங்களையும் காட்டுவதில்லை. அவர் மிகவும் அமைதியாக, மிகவும் இயல்பாக, தேவையானதைச் செய்கிறார். முதலில், அவர் உனக்காக ஒரு குடும்பத்தைத் தெரிந்துகொள்கிறார். உன் குடும்பப் பின்னணி, உன் பெற்றோர், உன் மூதாதையர்கள்—இவை அனைத்தையும் தேவன் முன்கூட்டியே தீர்மானிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் இந்த முடிவுகளை ஒரு விருப்பப்படி எடுப்பதில்லை. மாறாக, அவர் இந்தக் கிரியையை நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கினார். தேவன் உனக்காக ஒரு குடும்பத்தைத் தெரிந்து கொண்டவுடன், நீ பிறக்கும் தேதியை அவர் தேர்வு செய்கிறார். பின்னர், நீ பிறக்கும் போது, உலகத்திற்கு அழுது கொண்டே வரும் போது தேவன் கவனிக்கிறார். அவர் உன் பிறப்பைக் கவனிக்கிறார். உன் முதல் சொற்களை நீ உச்சரிக்கும்போது கவனிக்கிறார். நீ எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளும்போது உன் முதல் அடியெடுத்து வைப்பதில் தடுமாறி நடப்பதைக் கவனிக்கிறார். முதலில் நீ ஒரு அடி எடுத்து வைத்து, பின்னர் இன்னொரு அடி எடுத்து வைக்கிறாய், இப்போது நீ ஓடலாம், குதிக்கலாம், பேசலாம், உன் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். … ஜனங்கள் வளரும்போது, ஒரு புலி அதன் இரையை நோக்குவது போல, ஒவ்வொருவரின் மீதும் சாத்தானுடைய பார்வை நிலைபெறுகிறது. ஆனால், அவருடைய கிரியையைச் செய்வதில், ஜனங்கள், நிகழ்வுகள் அல்லது விஷயங்களிலிருந்தும், இடம் அல்லது நேரத்திலிருந்தும் எழும் எந்தவொரு வரம்புகளுக்குள்ளும் தேவன் ஒருபோதும் உட்பட்டதில்லை. எது தேவையோ எது அவசியமோ அதை அவர் செய்கிறார். வளர்ந்து வருகையில், நோய் மற்றும் விரக்தி போன்ற உன் விருப்பத்திற்கு மாறான பல விஷயங்களை நீ சந்திக்க நேரிடும். ஆனால் நீ இந்தப் பாதையில் செல்லும்போது, உன் ஜீவிதமும் எதிர்காலமும் கண்டிப்பாக தேவனுடைய பராமரிப்பில் இருக்கின்றன. உன் ஜீவகாலம் முழுவதும் நீடிப்பதற்கு தேவன் உனக்கு ஒரு உண்மையான உத்தரவாதத்தை அளிக்கிறார். ஏனென்றால் அவர் உனக்கு அருகிலேயே இருக்கிறார். உன்னைக் காத்து உன்னைக் கவனித்து வருகிறார். இதை நீ அறியாமல் வளர்கிறாய். நீ புதிய விஷயங்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கி, இந்த உலகத்தையும் இந்த மனிதகுலத்தையும் அறிந்து கொள்ளத் தொடங்குகிறாய். எல்லாம் உனக்கு வாடாததும், புதியதுமாகும். நீ செய்து மகிழும் சில விஷயங்கள் உன்னிடம் உள்ளன. நீ உன் சொந்த மனிதத்தன்மையில் ஜீவிக்கிறாய். நீ உன் சொந்த இடத்திலேயே ஜீவிக்கிறாய். தேவன் இருப்பதைப் பற்றிய எண்ணம் உனக்குச் சிறிதும் இல்லை. ஆனால் நீ வளரும்போது ஒவ்வொரு அடியிலும் தேவன் உன்னைப் பார்க்கிறார். நீ ஒவ்வொரு முன்னேற்றத்திலும் முன்னேறும்போது அவர் உன்னைப் பார்க்கிறார். நீ அறிவைக் கற்றுக் கொள்ளும்போது அல்லது அறிவியலைப் படிக்கும்போது கூட, தேவன் ஒருபோதும் உன் பக்கத்தை விட்டு ஒரு அடி கூட விலகியதில்லை. நீ மற்றவர்களைப் போலவே இருக்கிறாய். உலகைப் பற்றி அறிந்து கொண்டு, அதில் ஈடுபடும் நேரத்தில், நீ உன் சொந்தக் கொள்கைகளை, உன்னுடைய சொந்த பொழுதுபோக்குகளை, உன் சொந்த நலன்களை நிறுவியிருக்கிறாய். நீ உயர்ந்த லட்சியங்களையும் வைத்திருக்கிறாய். நீ அடிக்கடி உன் சொந்த எதிர்காலத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கிறாய். பெரும்பாலும் உன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வெளிப்புறத்தை வரைகிறாய். வழியில் எது மாறினாலும், அது தெளிவாக நடப்பதை தேவன் காண்கிறார். ஒருவேளை நீ உன் சொந்தக் கடந்த காலத்தை மறந்திருக்கலாம். ஆனால் தேவனைப் பொறுத்தவரையில், உன்னை நன்கு புரிந்து கொள்ள அவரை விட யாரும் இல்லை. நீ தேவனுடைய பார்வையின் கீழ் ஜீவிக்கிறாய், வளர்ந்து, முதிர்ச்சியடைகிறாய். இந்தக் காலகட்டத்தில், தேவனுடைய மிக முக்கியமான பணி என்பது யாரும் உணராத ஒன்றாகும். அது யாருக்கும் தெரியாத ஒன்றாகும். தேவன் நிச்சயமாக இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எனவே இந்த மிகவும் முக்கியமான விஷயம் என்ன? தேவன் ஒரு மனிதரை இரட்சிப்பார் என்பதற்கு இது உத்தரவாதம் என்று கூறலாம். இதன் பொருள் தேவன் இந்த மனிதரை இரட்சிக்க விரும்பினால், அவர் இதைச் செய்ய வேண்டும். இந்த பணி மனிதனுக்கும் தேவனுக்கும் மிக முக்கியமானது ஆகும். அது என்ன தெரியுமா? இதைப் பற்றி உங்களுக்கு எந்த உணர்வும் இல்லை, அல்லது எந்தவொரு கருத்தும் இல்லை என்று தெரிகிறது. எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீ பிறந்த காலம் முதல் இப்போது வரை, தேவன் உன்னிடம் நிறைய கிரியைகளைச் செய்துள்ளார். ஆனால் அவர் செய்த எல்லாவற்றையும் பற்றிய முழுமையான விவரத்தை அவர் உனக்குத் தரவில்லை. இதை நீ அறிய தேவன் அனுமதிக்கவும் இல்லை, அவர் உன்னிடம் சொல்லவும் இல்லை. இருப்பினும், மனிதகுலத்தைப் பொறுத்தவரையில், அவர் செய்யும் அனைத்தும் முக்கியமாகும். தேவனைப் பொறுத்தவரையில், அது, அவர் செய்ய வேண்டிய ஒன்றாகும். இவை அனைத்தையும் விட அதிகமாக அவர் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று அவருடைய இருதயத்தில் உள்ளது. அதாவது, ஒரு மனிதர் பிறந்தது முதல் இன்று வரை, அவர்களுடைய பாதுகாப்பிற்கு தேவன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளாதது போல் உணரலாம். “இது மிகவும் முக்கியமா?” என்று நீங்கள் கேட்கலாம். சரி, “பாதுகாப்பு” என்பதன் அர்த்தம் என்ன? அமைதியைக் குறிக்கும் வார்த்தையாக அல்லது எந்தவொரு பேரிடரையும் அல்லது பேரழிவையும் ஒருபோதும் அனுபவிக்காத நிலையைக் குறிக்கும் வார்த்தையாக, நன்றாக ஜீவிக்க வேண்டும், சாதாரண ஜீவிதம் ஜீவிக்க வேண்டும் என்பவற்றைக் குறிக்கும் வார்த்தையாக நீங்கள் இதற்கு அர்த்தம் கொண்டிருக்கலாம். ஆனால் உங்கள் இருதயங்களில், அது அவ்வளவு எளிதல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே, நான் பேசிக் கொண்டிருக்கும் விஷயம் என்னவென்றால், தேவன் செய்ய வேண்டியது என்ன? தேவனுக்கு பாதுகாப்பு என்றால் என்ன? இது உண்மையில் “பாதுகாப்பு” என்பதன் சாதாரண அர்த்தத்திற்கு உத்தரவாதம் கொடுக்குமா? இல்லை. எனவே தேவன் என்ன செய்கிறார்? இந்த “பாதுகாப்பு” என்பது நீ சாத்தானால் விழுங்கப்பட மாட்டாய் என்பதாகும். இது முக்கியமாகுமா? சாத்தானால் விழுங்கப்படாமல் இருப்பது—இது உன் பாதுகாப்பைப் பற்றியதா இல்லையா? ஆம், இது உன் தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றியது. இதைவிட முக்கியமாக எதுவும் இருக்க முடியாது. நீ சாத்தானால் விழுங்கப்பட்டவுடன், உன் ஆத்துமாவும் மாம்சமும் இனி தேவனுக்கு சொந்தமில்லாததாக மாறும். தேவன் இனி உன்னை இரட்சிக்க மாட்டார். தேவன் சாத்தானால் விழுங்கப்பட்ட ஆத்துமாக்களையும் ஜனங்களையும் கைவிடுகிறார். ஆகவே, தேவன் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், உன்னுடைய இந்தப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதும், நீ சாத்தானால் விழுங்கப்பட மாட்டாய் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதும் ஆகும். இது மிகவும் முக்கியமானது, அல்லவா? எனவே உங்களால் ஏன் பதிலளிக்க முடியவில்லை? தேவனுடைய பெரிய தயவை உங்களால் உணர முடியவில்லை என்பதாகத் தெரிகிறது!

ஜனங்களுடைய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது, அவர்கள் சாத்தானால் பட்சித்துப் போடப்பட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிப்பது தவிர இன்னும் அதிகமானவற்றை தேவன் செய்கிறார். ஒருவரைத் தெரிந்துகொண்டு இரட்சிப்பதற்கு முன்பு அவர் ஒரு பெரிய ஆயத்தப் பணியைச் செய்கிறார். முதலாவதாக, நீ எத்தகைய கதாபாத்திரத்தில் இருப்பாய், நீ எத்தகைய குடும்பத்தில் பிறப்பாய், உன் பெற்றோர் யார், உனக்கு எத்தனை சகோதர சகோதரிகள் இருப்பார்கள், உன் நிலைமை, பொருளாதார நிலை மற்றும் சூழ்நிலைகள் என்ன என்பது குறித்து தேவன் கவனமான ஆயத்தங்களை நீ பிறந்த குடும்பத்தில் இருக்கும்படியாகச் செய்கிறார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களில் பெரும்பாலானோர் எத்தகைய குடும்பத்தில் பிறந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்களின் குடும்பங்கள் உயரிய குடும்பங்களா? உயரிய குடும்பங்களில் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்று நாம் உறுதியாக சொல்ல முடியாது. சில இருக்கலாம், ஆனால் அவை மிகவும் குறைவு. அவர்கள் அதிகமான செல்வம் பெற்ற குடும்பங்களில், கோடீஸ்வரர்களின் குடும்பங்களில் அல்லது கோடிக்கணக்கானக் கோடிகளை உடைய குடும்பங்களில் பிறந்தவர்களா? இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட இத்தகைய குடும்பத்தில் பிறக்கவே இல்லை. இந்த ஜனங்களில் பெரும்பாலானோருக்கு தேவன் எத்தகைய குடும்பத்தை ஏற்பாடு செய்கிறார்? (சாதாரண குடும்பங்கள்.) எனவே எந்தக் குடும்பங்களைச் “சாதாரண குடும்பங்கள்” என்று கருதலாம்? அவற்றில் உழைக்கும் குடும்பங்களும் அடங்கும்—அதாவது, அன்றாடம் ஜீவிப்பதற்கான ஊதியத்தை சார்ந்து இயங்கும், அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்கக்கூடிய, மற்றும் அதிகப்படியான ஆரோக்கியம் இல்லாத குடும்பங்கள் ஆகும். அவற்றில் விவசாய குடும்பங்களும் அடங்கும். பசியாலோ குளிராலோ வாடாத மற்றும் தங்கள் உணவுக்காக பயிர்களை நடவு செய்தும், சாப்பிட தானியங்களையும், அணிய வேண்டிய ஆடைகளையும் சார்ந்து விவசாயிகள் உள்ளனர். பின்னர் சிறு தொழில்களை நடத்தும் சில குடும்பங்கள் உள்ளன. சில பெற்றோர்கள் புத்திஜீவிகளாக இருக்கிறார்கள், இவர்களையும் சாதாரணக் குடும்பங்களாக எண்ணலாம். அலுவலக ஊழியர்களாகவோ அல்லது சிறு அரசு அதிகாரிகளாகவோ இருக்கும் சில பெற்றோர்களும் உள்ளனர். அவர்களையும் முக்கியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகக் கணக்கிட முடியாது. பெரும்பாலானவர்கள் சாதாரணக் குடும்பங்களில் பிறந்தவர்கள். இவை அனைத்தும் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டவை. அதாவது, முதலில், நீ வாழும் இந்தச் சூழல் ஜனங்கள் கற்பனை செய்யக் கூடிய கணிசமான வழிமுறைகளின் குடும்பம் அல்ல. இது தேவனால் உனக்காகத் தீர்மானிக்கப்பட்ட குடும்பம் ஆகும். பெரும்பான்மையான ஜனங்கள் இத்தகைய குடும்ப எல்லைக்குள் ஜீவிப்பார்கள். எனவே சமூக அந்தஸ்தைப் பற்றிய உன் கருத்து என்ன? பெரும்பான்மையான பெற்றோரின் பொருளாதார நிலைமைகள் சராசரியானவை. அவர்களுக்கு உயர்ந்த சமூக அந்தஸ்து இல்லை—அவர்களுக்கு ஒரு வேலை கிடைப்பது நன்மையானது ஆகும். இதில் ஆளுநர்கள் உள்ளடங்குவார்களா? அல்லது நாட்டின் ஜனாதிபதிகள் உள்ளடங்குவார்களா? இல்லை, சரியா? பெரும்பாலும் அவர்கள் சிறு வணிக மேலாளர்களாக அல்லது சிறு வணிகங்களின் உரிமையாளர்களாக இருப்பவர்கள். அவர்களுடைய சமூக அந்தஸ்து நடுநிலையானது. அவர்களுடையப் பொருளாதார நிலைமைகள் சராசரியாக இருக்கின்றன. மற்றொரு காரணி குடும்பத்தின் வாழ்க்கைச் சூழல் ஆகும். முதலாவதாக, இந்தக் குடும்பங்களில், தங்கள் குழந்தைகளை அஞ்சனம் மற்றும் குறி சொல்லும் பாதையில் நடக்கச் செய்யும் பெற்றோர்கள் யாரும் இல்லை. இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுபவர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் மிகவும் சாதாரணமானவர்கள். தேவன் ஜனங்களைத் தெரிந்துகொள்ளும் அதே நேரத்தில், அவர்களுக்காக இத்தகையச் சூழலை அவர் அமைக்கிறார். இது ஜனங்களை இரட்சிக்கும் அவரது பணிக்கு பெரிதும் பயனளிக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், தேவன் குறிப்பாக மனிதனுக்கு அதிர்ச்சிகரமாக எதுவும் செய்யவில்லை என்று தெரிகிறது. அவர் தாழ்மையாகவும் மௌனமாகவும் செய்யும் எல்லாவற்றையும் அமைதியாகவும் ரகசியமாகவும் மட்டுமே செய்யத் தொடங்குகிறார். ஆனால் உண்மையில், தேவன் செய்யும் எல்லாவற்றுக்கும் காரணம் உன் இரட்சிப்புக்கு ஒரு அடித்தளத்தை அமைப்பதும், முன்னோக்கி செல்லும் பாதையைத் ஆயத்தப்படுத்துவதும், உன் இரட்சிப்புக்கு தேவையான அனைத்து நிபந்தனைகளையும் அவர் செய்வதும் ஆகும். அடுத்ததாக, தேவன் ஒவ்வொரு மனிதரையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனக்கு முன்பாகக் கொண்டு வருகிறார்: தேவனுடைய குரலை நீ கேட்கிறாய். நீ அவருக்கு முன்பாக வருகிறாய். இது நிகழும் நேரத்தில், சிலர் ஏற்கனவே பெற்றோர்களாகி விட்டனர், மற்றவர்கள் இன்னும் ஒருவரின் குழந்தையாக இருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிலர் திருமணமாகி குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள், சிலர் இன்னும் தங்கள் சொந்தக் குடும்பங்களைத் தொடங்காமல் தனிமையில் இருக்கிறார்கள். ஆனால் ஒருவரின் நிலைமையைப் பொருட்படுத்தாமல், நீ எப்போது தெரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதையும், அவருடைய நற்செய்தியும் வார்த்தைகளும் உன்னை எட்டும் நேரங்களையும் தேவன் ஏற்கனவே அமைத்துள்ளார். தேவன் சூழ்நிலைகளை நிர்ணயித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மனிதரை அல்லது ஒரு குறிப்பிட்ட சூழலைத் தீர்மானித்துள்ளார். இதன் மூலம் நீ தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கத்தக்கதாக சுவிசேஷம் உனக்கு அனுப்பப்படும். தேவையான அனைத்து நிபந்தனைகளையும் தேவன் உனக்காக ஏற்கனவே ஆயத்தம் செய்துள்ளார். இவ்வாறு அது நடக்கிறது என்று மனிதனுக்குத் தெரியாது என்றாலும், மனிதன் தேவனுக்கு முன்பாக வந்து தேவனுடைய குடும்பத்திடம் திரும்புகிறான். மனிதனும் அறியாமல் தேவனைப் பின்பற்றுகிறான். தேவன் மனிதனுக்காக ஆயத்தம் செய்த அவருடைய கிரியையின் ஒவ்வொரு அடியிலும் பிரவேசிக்கிறான். இந்த நேரத்தில் மனிதனுக்காக காரியங்களைச் செய்யும்போது தேவன் என்ன வழிகளைப் பயன்படுத்துகிறார்? முதலாவதாக, குறைந்தபட்சம் மனிதன் அனுபவிக்கும் கவனிப்பும் பாதுகாப்பும் ஆகும். இதைத் தவிர, தேவன் பல்வேறு மனிதர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும் வெளிப்படுத்துகிறார். இதன் மூலம் மனிதன், தேவன் இருப்பதையும் தேவனுடைய கிரியைகளையும் காண முடியும். உதாரணமாக, தங்கள் குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதால், தேவனை நம்புகிற சிலர் இருக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, அவர்கள் தேவனை நம்பத் தொடங்குகிறார்கள். தேவன் மீதான இந்த நம்பிக்கை சூழ்நிலையின் காரணமாக வருகிறது. இந்தச் சூழ்நிலையை ஏற்பாடு செய்தவர் யார்? (தேவன்.) இந்த நோயின் காரணமாக, குடும்பத்தில் உள்ள எல்லோரும் விசுவாசியாக இருக்கும் சில குடும்பங்கள் உள்ளன. மற்ற குடும்பத்தில் ஒரு சிலர் மட்டுமே நம்புகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால், உன் குடும்பத்தில் ஒருவருக்கு நோய் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அது உனக்கு வழங்கப்பட்ட ஒரு நிபந்தனையாக இருக்கலாம். இதனால் நீ தேவனுக்கு முன்பாக வரலாம்—இது தேவனுடைய கிருபை ஆகும். ஏனென்றால், குடும்ப ஜீவிதம் சிலருக்குக் கடினமானது, அவர்களுக்கு அமைதி கிடைக்காது. ஒருவேளை ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்—யாரோ ஒருவர், “கர்த்தராகிய இயேசுவை நம்புங்கள், உங்களுக்கு சமாதானம் கிடைக்கும்” என்று நற்செய்தியைச் சொல்லக் கூடும். இதனால், அறியாமலேயே, அவர்கள் மிகவும் இயற்கையான சூழ்நிலையில் தேவனை நம்புகிறார்கள். எனவே இது ஒரு வகையான நிலை அல்லவா? அவர்களுடைய குடும்பம் சமாதானமாக இல்லை என்பது, தேவன் அவர்களுக்கு வழங்கிய கிருபையாகுமா? வேறு காரணங்களுக்காக தேவனை நம்புகிறவர்களும் உண்டு. நம்பிக்கையின் வெவ்வேறு காரணங்களும் வெவ்வேறு வழிகளும் இருக்கின்றன. ஆனால் அவரை நம்புவதற்கு எந்த காரணம் உன்னை அழைத்திருந்தாலும், அவை அனைத்தும், உண்மையில் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டு வழிநடத்தப்படுகின்றன என்பதாகும். முதலில், தேவன் உன்னைத் தெரிந்துகொள்வதற்கும் உன்னை அவருடைய குடும்பத்திற்குள் கொண்டு வருவதற்கும் பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறார். இது, ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் அளிக்கும் கிருபையாகும்.

கடைசி நாட்களில், தேவனுடைய தற்போதைய கிரியையின் கட்டத்தில், அவர் முன்பு செய்ததைப் போலவே இனிமேல் மனிதனுக்கு கிருபையையும் ஆசீர்வாதங்களையும் வழங்குவதுமில்லை, மனிதனை மயக்கி முன்னோக்கி நகர்த்துவதுமில்லை. இந்தக் கிரியையின் போது, மனிதன் தான் அனுபவித்திருக்கிற தேவனுடைய கிரியையின் அனைத்து அம்சங்களிலிருந்தும் எதைக் கண்டான்? தேவனுடைய அன்பையும் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் மனிதன் கண்டான். இந்த காலகட்டத்தில், தேவன் மனிதனுக்கு வழங்கி ஆதரிக்கிறார், அறிவூட்டுகிறார் மற்றும் வழிநடத்துகிறார். இதனால் மனிதன் படிப்படியாக அவரது நோக்கங்களையும், அவர் பேசும் வார்த்தைகளையும் மனிதனுக்கு அளிக்கும் சத்தியத்தையும் அறிந்து கொள்கிறான். மனிதன் பலவீனமாக இருக்கும்போது, அவர்கள் சிதறடிக்கப்படும்போது, அவர்கள் திரும்ப எங்கும் இடம் இல்லாதபோது, மனிதனை ஆறுதல்படுத்தவும், அறிவுறுத்தவும், ஊக்குவிக்கவும் தேவன் தனது வார்த்தைகளைப் பயன்படுத்துவார். இதனால் மனிதனுடைய சிறிய அந்தஸ்து படிப்படியாக பெலத்தில் வளரவும், நேர்மறையில் உயரவும், தேவனுடன் ஒத்துழைக்க ஆயத்தமாக இருக்கவும் முடியும். ஆனால் மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படியாதபோது அல்லது அவரை எதிர்க்கும்போது, அல்லது மனிதன் அவர்களுடைய கேட்டை வெளிப்படுத்தும்போது, மனிதனை சிட்சிப்பதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் தேவன் தயவைக் காட்ட மாட்டார். இருப்பினும், மனிதனுடைய முட்டாள்தனம், அறியாமை, பலவீனம் மற்றும் முதிர்ச்சியற்ற தன்மை ஆகியவற்றிற்கு தேவன் சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் காண்பிப்பார். இவ்வாறு, தேவன் மனிதனுக்காகச் செய்யும் எல்லாக் கிரியைகளிலும், மனிதன் படிப்படியாக முதிர்ச்சியடைந்து, வளர்ந்து, தேவனுடைய நோக்கங்களை அறிந்து கொள்கிறான். சில உண்மைகளை அறிந்து கொள்கிறான். என்னென்ன விஷயங்கள் நேர்மறையானவை மற்றும் எதிர்மறையானவை என்பதை அறிந்து கொள்கிறான். எது தீமை மற்றும் இருள் என்பதை அறிந்து கொள்கிறான். மனிதனை எப்பொழுதும் சிட்சிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் ஒரே அணுகுமுறையை தேவன் எடுப்பதுமில்லை, அவர் எப்போதும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் காட்டிக் கொண்டிருப்பதுமில்லை. மாறாக, ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு நிலைகளில் மற்றும் அவர்களுடைய வெவ்வேறு நிலைகளில் மற்றும் திறனுக்கேற்ப அவர் வெவ்வேறு வழிகளில் வழங்குகிறார். அவர் மனிதனுக்காகப் பெரும் செலவில் பலவற்றைச் செய்கிறார். மனிதன் இந்த விஷயங்கள் அல்லது விலை என எதையும் உணரவில்லை. ஆனால் அவர் செய்யும் அனைத்தும் உண்மையிலேயே நடைமுறையில் ஒவ்வொரு மனிதரிடமும் செயல்படுத்தப்படுகின்றன. தேவனுடைய அன்பு நடைமுறைக்குரியது: தேவனுடைய கிருபையின் மூலம், மனிதன் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பேரழிவையும் தவிர்க்கிறான். எல்லா நேரங்களிலும் தேவன் சகிப்புத் தன்மையினை மனிதனுடைய பலவீனங்களுக்காக மீண்டும் மீண்டும் காட்டுகிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் மனிதகுலத்தின் கேடு மற்றும் சாத்தானிய சாராம்சத்தைப் படிப்படியாக அறிந்து கொள்ள ஜனங்களை அனுமதிக்கிறது. தேவன் அளிக்கும் விஷயங்கள், மனிதனைப் பற்றிய அவரது வெளிச்சம் மற்றும் அவரது வழிகாட்டுதல் அனைத்தும் மனிதகுலத்தை சத்தியத்தின் சாராம்சத்தை மேலும் மேலும் அறிய அனுமதிக்கிறது. ஜனங்களுக்கு என்ன தேவை, எந்தப் பாதையில் செல்ல வேண்டும், அவர்கள் எதற்காக ஜீவிக்கிறார்கள், அவர்களின் மதிப்பு மற்றும் ஜீவிதத்தின் அர்த்தம், மற்றும் முன்னோக்கி பாதையில் எப்படி நடப்பது என்பவற்றை அறிய அனுமதிக்கிறது. தேவன் செய்யும் இந்த விஷயங்கள் அனைத்தும் அவருடைய ஒரு உண்மையான நோக்கத்திலிருந்து பிரிக்க முடியாதவை. அப்படியானால், இந்த நோக்கம் என்ன? மனிதனைப் பற்றிய தனது கிரியையைச் செய்ய தேவன் ஏன் இந்த முறைகளைப் பயன்படுத்துகிறார்? அவர் என்ன முடிவை அடைய விரும்புகிறார்? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் மனிதனில் எதைப் பார்க்க விரும்புகிறார்? மனிதனிடமிருந்து அவர் எதைப் பெற விரும்புகிறார்? தேவன் பார்க்க விரும்புவது என்னவென்றால், மனிதனுடைய இருதயம் புத்துயிர் பெற முடியும் என்பதே. மனிதன் மீது கிரியை செய்ய அவர் பயன்படுத்தும் இந்த முறைகள், மனிதனுடைய இருதயத்தை எழுப்பவும், மனிதனுடைய ஆவியை எழுப்பவும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், யார் வழிகாட்டுகிறார், ஆதரிக்கிறார், அவர்களுக்கு வழங்குகிறார், மனிதனை இன்று வரை ஜீவிக்க அனுமதித்தார் என்பதைப் புரிந்து கொள்ளவும் செய்கிறது. சிருஷ்கர் யார், அவர்கள் யாரை வணங்க வேண்டும், அவர்கள் எந்த மாதிரியான பாதையில் நடக்க வேண்டும், எந்த விதத்தில் மனிதன் தேவனுக்கு முன்பாக வர வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள மனிதனுக்கு உதவும் ஒரு வழிமுறையாகும். அவை மனிதனுடைய இருதயத்தைப் படிப்படியாக புதுப்பிப்பதற்கான ஒரு வழியாகும். இதனால் மனிதன் தேவனுடைய இருதயத்தை அறிந்து கொள்கிறான். தேவனுடைய இருதயத்தைப் புரிந்து கொள்கிறான். மனிதனை இரட்சிக்க அவர் செய்த கிரியையின் பின்னணியில் உள்ள மிகுந்த அக்கறையையும் சிந்தனையையும் புரிந்து கொள்கிறான். மனிதனுடைய இருதயம் புத்துயிர் பெறும்போது, மனிதன் இனி ஒரு சீரழிந்த, கேடு நிறைந்த மனநிலையுடன் ஜீவிக்க விரும்புவதில்லை. மாறாக தேவனைத் திருப்திப்படுத்துவதற்காக சத்தியத்தைப் பின்தொடர விரும்புகிறான். மனிதனுடைய இருதயம் விழித்துக் கொள்ளும்போது, மனிதர் தங்களை சாத்தானிடமிருந்து முழுமையாகக் கிழிக்க முடியும். இனி அவர்கள் சாத்தானால் பாதிக்கப்படமாட்டார்கள். இனி சாத்தானால் கட்டுப்படுத்தப்பட அல்லது ஏமாற்றப்பட மாட்டான். அதற்கு பதிலாக, தேவனுடைய இருதயத்தைத் திருப்திப்படுத்த தேவனுடைய கிரியையிலும் அவருடைய வார்த்தைகளிலும் மனிதன் முன்கூட்டியே ஒத்துழைக்க முடியும். இதனால் தேவ பயம் கொண்டு தீமையைத் தவிர்க்கலாம். இது தேவனுடைய கிரியையின் மூலமுதலான நோக்கமாகும்.

சாத்தானுடைய தீமையைப் பற்றி நாம் இப்போது நடத்திய கலந்துரையாடலானது, மனிதன் மிகுந்த அதிருப்திக்கு மத்தியில் ஜீவிப்பது போலவும், மனிதனுடைய ஜீவிதம் துரதிர்ஷ்டத்தால் சூழப்பட்டதாகவும் உணரச் செய்கிறது. ஆனால் இப்போது நான் தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றியும் அவர் மனிதனுக்குச் செய்யும் கிரியையைப் பற்றியும் பேசும்போது, அது உங்களை எப்படி உணரச் செய்கிறது? (மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.) தேவன் செய்கிற அனைத்தும், மனிதனுக்காக அவர் சிரமமின்றி ஏற்பாடு செய்தவை அனைத்தும், மாசற்றவை என்பதை இப்போது நாம் காணலாம். தேவன் செய்யும் அனைத்தும் பிழையில்லாமல் இருக்கின்றன. அதாவது அது தவறற்றது. அதை யாரும் சரி செய்யவோ, அறிவுறுத்தவோ அல்லது அதில் எந்த மாற்றமும் செய்யவோ தேவையில்லை. ஒவ்வொரு மனிதருக்காகவும் தேவன் செய்கிறதெல்லாம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. அவர் அனைவரையும் கரம்பிடித்து வழிநடத்துகிறார். கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் உன்னைப் பார்த்துக் கொள்கிறார். ஒருபோதும் உன் பக்கத்தை விட்டு விலகவில்லை. இத்தகைய சூழலிலும், இத்தகைய பின்னணியிலும் ஜனங்கள் வளரும்போது, ஜனங்கள் உண்மையில் தேவனுடைய உள்ளங்கையில் வளர்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? (ஆம்.) எனவே இப்போது நீங்கள் இன்னும் இழப்பின் உணர்வை உணர்கிறீர்களா? யாரேனும் இன்னும் சிதறடிக்கப்படுகிறார்களா? தேவன் மனிதகுலத்தைக் கைவிட்டுவிட்டார் என்று யாரேனும் நினைக்கிறார்களா? (இல்லை.) அப்படியானால் தேவன் சரியாக என்ன செய்திருக்கிறார்? (அவர் மனிதகுலத்தைக் கண்காணித்து வருகிறார்.) தேவன் செய்யும் எல்லாவற்றிலும் அவர் வைக்கும் பெரிய சிந்தனையும் அக்கறையும் கேள்விக்கு அப்பாற்பட்டது ஆகும். மேலும் என்னவென்றால், அவருடைய கிரியையைச் செய்யும்போது, அவர் எப்போதும் நிபந்தனையின்றி செய்திருக்கிறார். அவர் உனக்காகச் செலுத்தும் விலையை உங்களில் எவராகிலும் அறிந்திருக்க வேண்டும் என்றும் அதனால் நீ அவருக்கு ஆழ்ந்த நன்றியை உணர வேண்டும் என்றும் அவர் ஒருபோதும் எதிபார்க்கவில்லை. தேவன் உங்களிடம் இதை எப்போதாவது எதிபார்த்த்துண்டா? (இல்லை.) மனித ஜீவிதத்தின் நீண்ட போக்கில், கிட்டத்தட்ட ஒவ்வொரு மனிதரும் பல ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டனர் மற்றும் பல சோதனையை எதிர்கொண்டனர். ஏனென்றால், சாத்தான் உனக்கு அருகில் நிற்கிறது. அதன் கண்கள் தொடர்ந்து உன் மீது நிலைபெறுகின்றன. பேரழிவு உன்னைத் தாக்கும்போது, சாத்தான் இதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறது. உனக்குப் பேரழிவுகள் ஏற்படும்போது, உனக்கு எதுவுமே சரியாக நடக்காதபோது, நீ சாத்தானுடைய வலையில் சிக்கிக் கொள்ளும்போது, சாத்தான் இவற்றிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுகிறது. தேவன் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்தவரையில், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் உன்னைப் பாதுகாக்கிறார். ஒவ்வொரு துரதிர்ஷ்டத்திலிருந்தும், ஒவ்வொரு பேரழிவிலிருந்தும் உன்னை வழிநடத்துகிறார். இதனால் தான் மனிதனுக்கு இருக்கும் அனைத்தும்—சமாதானம், மகிழ்ச்சி, ஆசீர்வாதம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு—உண்மையில் அனைத்தும் தேவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்று நான் சொல்கிறேன். ஒவ்வொரு மனிதரின் தலைவிதியையும் அவர் வழிநடத்துகிறார், தீர்மானிக்கிறார். ஆனால் சிலர் சொல்வது போல், தேவன் தனது நிலைப்பாட்டைப் பற்றி ஒரு நியாயமற்ற கருத்தை கொண்டிருக்கிறாரா? “நான் எல்லாவற்றிலும் பெரியவன். நான் தான் உனக்குப் பொறுப்பேற்கிறேன். இரக்கத்துக்காக நீங்கள் என்னிடம் கெஞ்ச வேண்டும், கீழ்ப்படியாமை மரண தண்டனைக்குரியது,” என்று தேவன் உன்னிடம் அறிவிக்கிறாரா? தேவன் எப்போதாவது இவ்வாறு மனிதகுலத்தை அச்சுறுத்தியுள்ளாரா? (இல்லை.) அவர் எப்போதாவது, “மனிதகுலம் சீர்கேடு நிறைந்ததாக இருக்கிறது. எனவே, நான் அவர்களை எப்படி நடத்துகிறேன் என்பது முக்கியமல்ல, அவர்கள் எந்த வகையிலும் நடத்தப்படலாம். அவர்களுக்காக நான் நல்ல ஏற்பாடுகளைச் செய்யத் தேவையில்லை,” என்று சொல்லியிருக்கிறாரா? தேவன் இவ்வாறு நினைக்கிறாரா? தேவன் இவ்வாறு செயல்பட்டாரா? (இல்லை.) மாறாக, ஒவ்வொரு மனிதரிடமும் தேவன் நடந்து கொள்வது மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புடனும் உள்ளது. நீ அவரிடம் நடந்து கொள்வதை விட அவர் உன்னை மிகவும் பொறுப்புடன் நடத்துகிறார். இது அப்படியல்லவா? தேவன் வெறுமனே இவ்வறு பேசமாட்டார். அவர் தனது உயர்ந்த நிலையை வெளிப்படுத்துவதில்லை அல்லது ஜனங்களை ஏமாற்றுவதில்லை. அதற்குப் பதிலாக அவர் நேர்மையாகவும் அமைதியாகவும் செய்ய வேண்டியதைச் செய்கிறார். இந்த விஷயங்கள் மனிதனுக்கு ஆசீர்வாதங்களையும், சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்றன. அவை மனிதனை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தேவனுடைய பார்வைக்குள்ளும் அவருடைய குடும்பத்திற்குள்ளும் கொண்டு வருகின்றன. பின்னர் அவர்கள் தேவனுக்கு முன்பாக ஜீவிக்கிறார்கள். தேவனுடைய இரட்சிப்பை சாதாரணக் காரணத்துடனும் சிந்தனையுடனும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆகவே, தேவன் தனது கிரியையில் மனிதனுடன் எப்போதாவது போலித்தனமாக இருந்திருக்கிறாரா? முதலில் மனிதனை ஒரு சில இனிப்புகளுடன் முட்டாளாக்கி, பின் அவர் எப்போதாவது ஒரு தவறான தயவைக் காட்டி, ஏமாற்றியிருக்கிறார? (இல்லை.) தேவன் எப்போதாவது ஒரு விஷயத்தைச் சொல்லி வேறு விஷயத்தைச் செய்திருக்கிறாரா? தேவன் எப்போதாவது வெற்று வாக்குறுதிகளை அளித்து பெருமிதம் கொண்டிருக்கிறாரா? ஜனங்களுக்கு இதைச் செய்ய முடியும் அல்லது அவர்களுக்காக அதைச் செய்ய உதவ முடியும் என்று ஜனங்களுக்குச் சொல்லியிருக்கிறாரா? (இல்லை.) தேவனில் எந்த வஞ்சகமும் இல்லை, பொய்யும் இல்லை. தேவன் உண்மையுள்ளவர். அவர் செய்யும் எல்லாவற்றிலும் அவர் உண்மையுள்ளவர். அவரை மட்டுமே ஜனங்கள் நம்ப முடியும். ஜனங்கள் தங்கள் ஜீவிதத்தையும் அவர்களிடம் உள்ள அனைத்தையும் ஒப்படைக்கக்கூடிய தேவன் அவர் மட்டுமே. தேவனில் எந்த வஞ்சகமும் இல்லை என்பதால், தேவன் மிகவும் நேர்மையானவர் என்று சொல்ல முடியுமா? (ஆம்.) நிச்சயமாக நம்மால் முடியும்! “நேர்மையானவர்” என்ற வார்த்தை மிகவும் பலவீனமானது, தேவனுக்குப் பொருந்தும்போது மிகவும் மனிதத்தன்மையில் இருக்கும் என்றாலும், வேறு எந்த வார்த்தையை நாம் பயன்படுத்த முடியும்? மனித மொழியின் வரம்புகள் அத்தகையவை. தேவனை “நேர்மையானவர்” என்று அழைப்பது ஓரளவுக்குத் தகுதியற்றது என்றாலும், இந்த வார்த்தையை இப்போதைக்குப் பயன்படுத்துவோம். தேவன் உண்மையுள்ளவர், நேர்மையானவர். எனவே இந்த அம்சங்களைப் பற்றிப் பேசும்போது, நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் நாம் குறிப்பிடுகிறோமா? ஆம், நாம் அதைச் சொல்லலாம். ஏனென்றால், தேவனில் சாத்தானுடைய சீர்கேடான மனநிலையின் ஒரு தடயத்தையும் மனிதனால் பார்க்க முடியாது. இதை நான் சரியாகச் சொல்கின்றேனா? ஆமென்? (ஆமென்!) சாத்தானுடைய தீமையான மனநிலை எதுவும் தேவனில் வெளிப்படுத்தப்படவில்லை. தேவன் செய்கிற மற்றும் வெளிப்படுத்தும் அனைத்தும் முற்றிலுமாக நன்மை பயக்கின்றன மற்றும் மனிதனுக்கு உதவுகின்றன. மனிதனுக்கு வழங்குவதற்காக அவை முழுமையாக செய்யப்படுகின்றன, அவை ஜீவனால் நிறைந்திருக்கின்றன. மனிதனுக்குப் பின்பற்ற ஒரு பாதையையும், எடுக்க வேண்டிய திசையையும் அவை தருகின்றன. தேவன் சீர்கேடு நிறைந்தவர் அல்ல. இப்போதும் தேவன் செய்யும் எல்லாவற்றையும் பார்த்து, தேவன் பரிசுத்தர் என்று சொல்ல முடியுமா? தேவனுக்கு மனிதகுலத்தின் சீர்கேடான மனநிலை அல்லது சீர்கேடான சாத்தானிய சாராம்சத்துக்கு ஒத்த எதுவும் இல்லை என்பதால், இந்தப் பார்வையில் தேவனைப் பரிசுத்தர் என்று நாம் முற்றிலுமாகக் கூறலாம். தேவன் எந்தக் கேட்டையும் காட்டவில்லை, அதேநேரத்தில் தேவன் கிரியை செய்யும்போது, தேவன்தம்முடைய சொந்த சாராம்சத்தை வெளிப்படுத்துகிறார், இது தேவன் தாமே பரிசுத்தர் என்பதை முற்றிலுமாக உறுதிப்படுத்துகிறது. இதைப் பார்க்கிறீர்களா? தேவனுடைய பரிசுத்தமான சாராம்சத்தை அறிய, இப்போதைக்கு இந்த இரண்டு அம்சங்களையும் பார்ப்போம்: 1) முதலாவது தேவனில் கேடான மனநிலைக்கான தடயம் இல்லை; 2) இரண்டாவதாக மனிதனைப் பற்றிய தேவனுடைய கிரியையின் சாராம்சம் தேவனுடைய சொந்த சாராம்சத்தைக் காண மனிதனை அனுமதிக்கிறது, மேலும் இந்தச் சாராம்சம் முற்றிலும் நேர்மறையானது. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு பகுதியும், மனிதனுக்குக் கொண்டு வரும் விஷயங்கள் அனைத்தும் நேர்மறையானவை. முதலில், மனிதன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார்—இது ஒரு நேர்மறையான விஷயம் அல்லவா? தேவன் மனிதனுக்கு ஞானத்தை அளிக்கிறார்—இது நேர்மறையானதல்லவா? தேவன் மனிதனை நன்மைக்கும் தீமைக்கும் இடையில் புரிந்துகொள்ளச் செய்கிறார்—இது நேர்மறையானதல்லவா? மனிதர்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களின் சாராம்சத்தை சத்தியத்திற்கு ஏற்பப் பார்க்க மனிதனை அவர் அனுமதிக்கிறார்—இது நேர்மறையானதல்லவா? நேர்மறையானது தான். இவற்றின் விளைவு என்னவென்றால், மனிதன் இனி சாத்தானால் ஏமாற்றப்படுவதில்லை, இனி சாத்தானால் பாதிக்கப்படவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ மாட்டான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தானுடைய கேட்டிலிருந்து தங்களை முற்றிலுமாக விடுவிக்க இந்த விஷயங்கள் அனுமதிக்கின்றன. எனவே, படிப்படியாக தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான பாதையில் நடக்க அனுமதிக்கின்றன. இந்தப் பாதையில் இப்போது நீங்கள் எவ்வளவு தூரம் நடந்து வந்துள்ளீர்கள்? அது சொல்வதற்குக் கடினம், அல்லவா? ஆனால் சாத்தான் மனிதனை எவ்வாறு கெடுக்கிறது, அவற்றில் எது தீயது, எந்த விஷயங்கள் எதிர்மறையானவை என்பது பற்றிய குறைந்தபட்சமாவது ஆரம்பப் புரிதல் இப்போது உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் இப்போது குறைந்தபட்சமாவது வாழ்க்கையில் சரியான பாதையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். இதைச் சொல்வது பாதுகாப்பானதாகுமா? முற்றிலும் பாதுகாப்பானதுதான்.

தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி ஐக்கியங்கொள்வதற்கு ஏதோ உள்ளது. நீங்கள் கேட்ட மற்றும் பெற்ற அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, தேவனுடைய பரிசுத்தம் என்றால் என்ன என்று உங்களில் யார் சொல்ல முடியும்? நான் பேசும் தேவனுடைய பரிசுத்தமானது எதைக் குறிக்கிறது? ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். தேவனுடைய பரிசுத்தமே அவருடைய சத்தியமாகுமா? தேவனுடைய பரிசுத்தமே அவருடைய உண்மையாகுமா? தேவனுடைய பரிசுத்தமானது அவருடைய தன்னலமற்ற நிலையா? அது அவருடைய பணிவாகுமா? மனிதனுக்கான அவருடைய அன்பாகுமா? தேவன் மனிதனுக்கு சத்தியத்தையும் ஜீவனையும் இலவசமாக அளிக்கிறார்—இது அவருடைய பரிசுத்தமாகுமா? அவை எல்லாம் பரிசுத்தம்தான். தேவன் வெளிப்படுத்தும் அனைத்தும் தனித்துவமானது மற்றும் அவை சீர்கேடு நிறைந்த மனிதகுலத்திற்குள் இல்லை. அதை மனிதகுலத்திலும் காண முடியாது. மனிதனுக்கான சாத்தானுடைய சீர்கேடான செயல்பாட்டின் போது, சாத்தானுடைய சீர்கேடான மனநிலையிலோ அல்லது சாத்தானுடைய சாராம்சத்திலோ அல்லது தன்மையிலோ, அதனுடைய ஒரு சிறிய தடயத்தையும் காண முடியாது. தேவனும் தேவனிடம் இருப்பது அனைத்தும் தனித்துவமானது ஆகும். தேவன் மட்டுமே இத்தகைய சாராம்சமாக இருக்கிறார் மற்றும் இத்தகைய சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார். நம்முடைய கலந்துரையாடலின் இந்தக் கட்டத்தில், நான் விவரித்ததைப் போல உங்களில் யாரேனும் மனிதர்களிடையே இத்தகைய பரிசுத்தத்தைக் கண்டிருக்கிறீர்களா? (இல்லை.) ஆகவே, நீங்கள் வணங்கும் விக்கிரகங்கள், புகழ்பெற்ற அல்லது சிறந்த மனிதர்களில் இத்தகைய பரிசுத்தர் யாரேனும் இருக்கிறார்களா? (இல்லை.) ஆகவே, தேவனுடைய பரிசுத்தம் தனித்துவமானது என்று நாம் கூறும்போது, இது மிகையாகுமா? உண்மையில் அது மிகை இல்லை. மேலும், தேவனுடைய பரிசுத்தம் தனித்துவத்தையும், ஒரு நடைமுறை பக்கத்தையும் கொண்டுள்ளது. இப்போது நான் பேசும் பரிசுத்தத்திற்கும் நீங்கள் முன்பு நினைத்த மற்றும் கற்பனை செய்த பரிசுத்தத்திற்கும் ஏதாவது முரண்பாடு உள்ளதா? (ஆம்.) மிகப் பெரிய முரண்பாடு உள்ளது. பரிசுத்தத்தைப் பற்றி பேசும்போது ஜனங்கள் பெரும்பாலும் எந்த அர்த்தத்தைப் பெறுகின்றனர்? (சில வெளிப்புற நடத்தைகளின் அர்த்தத்தைப் பெறுகின்றனர்.) ஒரு நடத்தை அல்லது வேறு ஏதாவது பொருட்களை தூய்மையானதாகவோ அல்லது புலன்களுக்கு இனிமையானதாகவோ பார்க்கப்பதால் மட்டுமே, அதைப் பரிசுத்தம் என்று ஜனங்கள் கூறுகிறார்கள். இருப்பினும், இந்த விஷயங்களில் பரிசுத்தத்தின் உண்மையான சாராம்சம் இல்லை—இது கோட்பாட்டின் அம்சமாகும். இது ஒருபுறம் இருக்க, ஜனங்கள் தங்கள் மனதில் கருதும் பரிசுத்தத்தின் நடைமுறை அம்சம் என்று எது குறிப்பிடப்படுகிறது? இது பெரும்பாலும் அவர்கள் செய்யும் கற்பனையா அல்லது அவர்கள் செய்யும் தீர்மானமா? உதாரணமாக, சில புத்த மதத்தவர்கள், பயிற்சி செய்யும் போது காலமாகின்றனர், அங்கே தூக்க நிலையில் உட்காருகையில் அவர்கள் விடை பெறுகிறார்கள். அவர்கள் பரிசுத்தர்களாகி பரலோகத்திற்கு பறந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். இது கற்பனையின் ஒரு விளைவு ஆகும். பரலோகத்திலிருந்து கீழே வந்து மிதக்கும் தேவதையானது பரிசுத்தமுள்ளது என்று நினைக்கும் மற்றவர்களும் இருக்கிறார்கள். உண்மையில், “பரிசுத்தம்” என்ற வார்த்தை பற்றிய ஜனங்களுடைய கருத்து எப்போதுமே ஒரு வகையான வெற்றுக் கற்பனை மற்றும் கோட்பாடாக இருக்கிறது. அடிப்படையில் அந்தக் கருத்துக்கு உண்மையான சாராம்சம் எதுவுமில்லை மற்றும் பரிசுத்தத்தின் சாராம்சத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. பரிசுத்தத்தின் சாராம்சமானது உண்மையான அன்பு ஆகும். ஆனால் அதைக் காடிலும், இது உண்மை, நீதி மற்றும் வெளிச்சம் ஆகியவற்றின் சாராம்சமாகும். “பரிசுத்தம்” என்ற சொல் தேவனுக்குப் பொருந்தும்போது மட்டுமே பொருத்தமாக இருக்கிறது; சிருஷ்டியில் எதுவும் “பரிசுத்தம்” என்று அழைக்கப்படுவதற்கு தகுதியுடையது அல்ல. இதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். இனிமேல், நாம் “பரிசுத்தம்” என்ற வார்த்தையை தேவனுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். இது பொருத்தமானதாகுமா? (ஆம், அது பொருத்தமானது தான்.)

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்கள்

இப்போதும், மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் எத்தகைய முறையைப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி பேச திரும்புவோம். தேவன் மனிதனிடம் பல்வேறு வழிகளில் செயல்படுவதைப் பற்றி நாம் பேசினோம். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் அதை அனுபவிக்க முடியும். எனவே நான் அதிகம் விரிவாகப் பேச மாட்டேன். ஆனால் உங்கள் இருதயங்களில், சீர்கேடு நிறைந்த மனிதனாக்க சாத்தான் என்ன தந்திரங்களையும் உத்திகளையும் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை அல்லது குறைந்தபட்சம் அவற்றைப் பற்றி உங்களுக்கு ஒரு குறிப்பிட்டப் புரிதல் இல்லை எனலாம். இதைப் பற்றி மீண்டும் பேசுவது எனக்கு நன்மை பயக்குமா? இதைப் பற்றி நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? ஒருவேளை உங்களில் சிலர் கேட்பார்கள்: “ஏன் சாத்தானைப் பற்றி மீண்டும் பேச வேண்டும்? சாத்தானைப் பற்றி குறிப்பிடப்படும் தருணத்தில், நாம் கோபப்படுகிறோம், அதன் பெயரைக் கேட்கும்போது நாம் கவலைப்படுகிறோம்.” இது உங்களுக்கு எவ்வளவு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், நீங்கள் உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த விஷயங்களைத் தெளிவாகக் கூற வேண்டும் மற்றும் மனிதனுடைய புரிதலின் நன்மைக்காக தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் மனிதன் உண்மையில் சாத்தானுடைய பிடியிலிருந்து விலக முடியாது.

மனிதனைச் சீர்கெடுக்கும் சாத்தானுடைய ஐந்து வழிகளை நாம் முன்பு விவாதித்தோம். இதில் சாத்தானுடைய தந்திரங்கள் உள்ளடங்கும். சாத்தான் மனிதனைச் சீர்கெடுக்கும் வழிகள் வெறும் மேல் அடுக்கு மட்டுமே. இந்த மேல் அடுக்கின் கீழ் மறைந்திருக்கும் தந்திரங்கள் சாத்தானை அதன் குறிக்கோள்களை அடையச் செய்கின்றன. இந்தத் தந்திரங்கள் யாவை? அவற்றைச் சுருக்கமாகக் கூறுங்கள். (அது ஏமாற்றுகிறது, கவர்ந்திழுக்கிறது மற்றும் கட்டாயப்படுத்துகிறது.) நீங்கள் எவ்வளவு அதிகமாக இந்தத் தந்திரங்களைப் பட்டியலிடுகிறீர்களோ, நீங்கள் அவ்வளவு அதிகமாகப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் சாத்தானால் ஆழ்ந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், இந்த விஷயத்தில் வலுவான உணர்வைக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. (அது பல சொல்லாட்சிகளைப் பயன்படுத்துகிறது. அது ஜனங்களைப் பாதிக்கிறது மற்றும் பலவந்தமாக ஆக்கிரமிக்கிறது.) கட்டாய ஆக்கிரமிப்பு—குறிப்பாக அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாத்தானுடைய பலவந்தமான ஆக்கிரமிப்புக்கு ஜனங்கள் பயப்படுகிறார்கள். வேறு ஏதேனும் தந்திரங்கள் உள்ளனவா? (இது ஜனங்களைக் கடுமையாகப் பாதிக்கிறது, அச்சுறுத்துகிறது, கவர்ச்சிகரமான சலுகைகளை அளிக்கிறது மற்றும் பொய் சொல்கிறது.) பொய்கள் சொல்வது என்பது அது செய்யும் காரியங்களில் ஒன்றாகும். உங்களை ஏமாற்றும் வகையில் சாத்தான் பொய் சொல்கிறது. பொய்யின் தன்மை என்ன? பொய் சொல்வது மோசடிக்குச் சமமானதல்லவா? பொய்களைச் சொல்வதன் குறிக்கோள் உண்மையில் உங்களை ஏமாற்றுவதாகும். வேறு ஏதேனும் தந்திரங்கள் உள்ளனவா? உங்களுக்குத் தெரிந்த சாத்தானுடைய தந்திரங்கள் அனைத்தையும் என்னிடம் சொல்லுங்கள். (அது சோதிக்கிறது, பாதிக்கிறது, குருடாக்குகிறது மற்றும் ஏமாற்றுகிறது.) உங்களில் பெரும்பாலானோர் இந்த ஏமாற்றத்தைப் பற்றி இதைப் போலவே உணர்கிறார்கள். வேறென்ன? (அது மனிதனைக் கட்டுப்படுத்துகிறது, மனிதனைப் பிடிக்கிறது, மனிதனைப் பயமுறுத்துகிறது, தேவனை விசுவாசிப்பதைத் தடுக்கிறது.) நீங்கள் என்னிடம் சொல்லும் விஷயங்களின் ஒட்டுமொத்த அர்த்தம் எனக்குத் தெரியும். இது நன்மையானதாகும். நீங்கள் அனைவரும் இதைப் பற்றி சிலவற்றை அறிந்திருக்கிறீர்கள், எனவே இப்போது இந்தத் தந்திரங்கள் பற்றிய சுருக்கத்தை உருவாக்குவோம்.

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் ஆறு முதன்மையான தந்திரங்கள்

முதலாவது கட்டுப்பாடு மற்றும் வற்புறுத்தல் ஆகும். அதாவது, உன் இருதயத்தைக் கட்டுப்படுத்த சாத்தான் எல்லாவற்றையும் செய்வான். “வற்புறுத்தல்” என்றால் என்ன? இதன் அர்த்தம், உன்னை அதற்குக் கீழ்ப்படியச் செய்ய அச்சுறுத்துதல் மற்றும் பலமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்துதலும், நீ கீழ்ப்படியாவிட்டால் அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க வைப்பதும் ஆகும். அதற்கு நீ பயப்படுகிறாய். அதை மீறத் துணிவதில்லை. எனவே, அதற்கு அடிபணிந்து விட்டாய்.

இரண்டாவது வஞ்சித்தல் மற்றும் தந்திரம் ஆகும். “வஞ்சித்தல் மற்றும் தந்திரம்” என்றால் என்ன? சாத்தான் சில கதைகளையும் பொய்களையும் உருவாக்கி, அவற்றை நம்புவதற்கு உன்னை ஏமாற்றுகிறது. மனிதன் தேவனால் படைக்கப்பட்டான் என்று அது ஒருபோதும் உனக்குச் சொல்லவதில்லை. ஆனால் நீ தேவனால் படைக்கப்படவில்லை என்று நேரடியாகச் சொல்வதுமில்லை. அது “தேவன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. மாறாக உன்னை ஏமாற்றுவதற்காக வேறு எதையாவது மாற்றாக பயன்படுத்துகிறது. இந்த விஷயத்தைப் பயன்படுத்தி நீ தேவன் இருப்பதைப் பற்றி எதுவும் அறியாமல் இருக்கச் செய்கிறது. நிச்சயமாக, இது மட்டுமல்லாமல் இந்த “தந்திரம்” பல அம்சங்களை உள்ளடக்குகிறது.

மூன்றாவது பலவந்தமான போதனை ஆகும். ஜனங்கள் எதைக் கொண்டு வற்புறுத்தப்படுகிறார்கள்? மனிதனுடைய சொந்த விருப்பப்படி பலவந்தமான போதனை செய்யப்படுகிறதா? இது மனிதனுடைய சம்மதத்துடன் செய்யப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை. நீ சம்மதிக்கவில்லை என்றாலும், அதைத் தடுக்க நீ எதுவும் செய்ய முடியாது. சாத்தான், உன் அறியாமையில் உன்னைப் பயிற்றுவித்து, தன் சிந்தனை, தன் ஜீவித விதிமுறைகள் மற்றும் தன் சாராம்சத்தை உனக்குத் தருகிறது.

நான்காவது மிரட்டல் மற்றும் மோசடி ஆகும். அதாவது, நீ அதை ஏற்றுக்கொள்வதற்கும், அதைப் பின்பற்றுவதற்கும், அதன் பணியில் பணியாற்றுவதற்கும் சாத்தான் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறது. அதன் இலக்குகளை அடைய அது எதையும் செய்யும். அது சில நேரங்களில் உனக்கு சிறிய உதவிகளை அளிக்கிறது. எல்லா நேரங்களிலும் உன்னைப் பாவம் செய்ய தூண்டுகிறது. நீ அதைப் பின்பற்றாவிட்டால், அது உன்னை கஷ்டப்படுத்தி, தண்டிக்கும், உன்னைத் தாக்கி, உனக்கு எதிராக சதி செய்ய பல்வேறு வழிகளைப் பயன்படுத்தும்.

ஐந்தாவது வஞ்சகம் மற்றும் முடக்கம் ஆகும். “வஞ்சகம் மற்றும் முடக்கம்” கணப்படும் இடமாவது, ஜனங்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போகும் மற்றும் நம்பத்தகுந்தாற்போல் தோன்றும் சில இனிமையான சொற்களையும் யோசனைகளையும் சாத்தான் அவர்களுக்குள் புகுத்தும் போது, அது ஜனங்களுடைய மாம்ச நிலைமை, அவர்களுடைய ஜீவிதம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. உண்மையில் அதன் ஒரே குறிக்கோள் உன்னை முட்டாளாக்குவதாகும். எது சரியானது, எது தவறு என்று உனக்குத் தெரியாதபடி அது உன்னை முடக்குகிறது. இதனால் நீ அறியாமல் ஏமாற்றப்பட்டு அதன் மூலம் அதன் கட்டுப்பாட்டிற்குள் வருகிறாய்.

ஆறாவது உடல் மற்றும் மனதை அழிப்பதாகும். மனிதனுடைய எந்த பகுதியை சாத்தான் அழிக்கிறது? சாத்தான் உன் மனதை அழித்து, உன்னை எதிர்க்க வல்லமையற்றவனாக ஆக்குகிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக, உன்னை மீறி உன் இருதயம் சாத்தானை நோக்கித் திரும்புகிறது. ஒவ்வொரு நாளும், இந்த யோசனைகளையும் கலாச்சாரங்களையும் பயன்படுத்தி உன்னைக் கட்டுப்படுத்தி, உருவாக்கி, உன் நம்பிக்கையை சிறிது சிறிதாக குறைவான மதிப்பிற்கு உட்படுத்துகிறது. இதனால் இறுதியில் நீ இனி ஒரு நல்ல மனிதராக மாற ஆசைப்படுவதில்லை. இதனால் நீ இனி “நீதி” என்று அழக்கப்படுபவற்றுக்காக நிற்க விரும்புவதில்லை. நீரோட்டத்திற்கு எதிராக நீந்துவதற்கான மன உறுதி உங்களிடம் இல்லை என்பதை அறியாமல், அதனுடன் சேர்ந்து ஓடுவீர்கள். சாத்தான் ஜனங்களை மிகவும் துன்புறுத்துகிறதும் அவர்கள் இனி மனிதர்களாக இல்லாமல் தங்கள் நிழல்களாக மாறுகிறதும் “அழிவு” ஆகும். சாத்தான் தாக்கும்போது, அவர்களைக் கைப்பற்றி விழுங்கும்போது, இது நிகழும்.

மனிதனைக் கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் இந்தத் தந்திரங்கள் ஒவ்வொன்றும் மனிதன் சாத்தானை எதிர்க்க வல்லமையற்றவனாக ஆக்குகின்றது. அவற்றில் ஏதேனும் ஒன்று மனிதனுக்கு ஆபத்தானதாக இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தான் செய்யும் எதுவும், அது பயன்படுத்தும் எந்தத் தந்திரங்களும் உன்னை சீரழியச் செய்யலாம். உன்னைச் சாத்தானுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடும். தீமை மற்றும் பாவத்தின் புதைகுழியில் உன்னை மூழ்கடிக்கக் கூடும். மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்கள் அத்தகையவை ஆகும்.

சாத்தான் தீயது என்று நாம் கூறலாம், ஆனால் அதை உறுதிப்படுத்த, மனிதனுக்கான சாத்தானுடைய கேட்டின் பின்விளைவுகள் என்ன என்பதையும், அது மனிதனுக்கு எந்த மனநிலையையும் சாராம்சங்களையும் தருகிறது என்பதையும் நாம் இன்னும் பார்க்க வேண்டும். நீங்கள் அனைவரும் இதைப் பற்றி சிறிதளவு அறிந்திருக்கிறீர்கள். எனவே பேசுங்கள். ஜனங்களுக்கான சாத்தானுடைய கேட்டின் விளைவுகள் என்ன? எந்தக் கேடான மனநிலையை அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள் மற்றும் வெளிப்படுத்துகிறார்கள்? (ஆணவம், அகந்தை, சுயநலம் மற்றும் வெறுப்பு, வக்கிரம் மற்றும் வஞ்சகம், நயவஞ்சகம் மற்றும் தீமை மற்றும் மனிதத்தன்மையின் மொத்தப் பற்றாக்குறை ஆகும்.) மொத்தத்தில், அவர்களுக்கு மனிதத்தன்மை இல்லை என்று நாம் கூறலாம். இப்போது, மற்ற சகோதர சகோதரிகள் பேசட்டும். (ஒருமுறை மனிதன் சாத்தான் மூலம் சீர்கெடுக்கப்பட்டால், அவர்கள் பொதுவாக மிகவும் திமிர்பிடித்த மற்றும் சுய-நீதியுள்ள, சுய-முக்கியமான மற்றும் சுய-இறுமாப்புடைய, பேராசை மற்றும் சுயநலமுடையவர்களாக இருக்கிறார்கள். இவை மிகவும் தீவிரமான பிரச்சினைகள் என்று நான் நினைக்கிறேன்.) (ஜனங்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பிறகு, அவர்கள் பொருள் மற்றும் செல்வத்தைப் பெறுவதற்கு எதையும் செய்ய மறுக்கிறார்கள். மேலும் அவர்கள் தேவனுக்கு விரோதமாகி, தேவனை எதிர்த்து, தேவனுக்குக் கீழ்ப்படியாமல், மனிதன் வைத்திருக்க வேண்டிய மனசாட்சியையும் காரணத்தையும் இழக்கிறார்கள்.) சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் கூறியவை அனைத்தும் அடிப்படையில் ஒரே மாதிரிதான். உங்களில் சிலர் சிறிய விவரங்களைச் சேர்த்துள்ளீர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், கெட்டுப்போன மனித இனம் அதிகம் பேசக்கூடியவை திமிர், வஞ்சகம், காழ்ப்பு, சுயநலம் ஆகியனவாகும். ஆனால், நீங்கள் அனைவரும் ஒரே விஷயத்தைப் பற்றி கவலை கொண்டிருக்கிறீர்கள். ஜனங்களுக்கு மனசாட்சி இல்லை, அவர்கள் தங்கள் பகுத்தறிவை இழந்து விட்டனர் மற்றும் அவர்களிடம் மனிதத்தன்மை இல்லை—ஆனால் நீங்கள் குறிப்பிடாத மற்றொரு மிக முக்கியமான விஷயம் உள்ளது. அது “துரோகம்” என்பதாகும். சாத்தான் மூலம் சீர்கெட்டுப்போன பிறகு, எந்த ஒரு மனிதனுக்கும் இருக்கும் இந்த மனநிலையின் இறுதி பின்விளைவு அவர்கள் தேவனுக்கு செய்யும் துரோகம் ஆகும். தேவன் ஜனங்களுக்கு என்ன சொன்னாலும் அல்லது அவர் அவர்களுக்கு எந்தக் கிரியையைச் செய்தாலும் சரி, சத்தியமாகத் தெரிகிறதை அவர்கள் கவனிப்பதில்லை. அதாவது, அவர்கள் இனி தேவனை ஒப்புக் கொள்ளாமல், அவர்கள் அவரைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்பதாகும். அது மனிதனுக்கான சாத்தானுடைய கேட்டின் பின்விளைவு ஆகும். மனிதனுடைய அனைத்து கேடான மனநிலைகளுக்கும் இது ஒன்றே விளைவு ஆகும். மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் வழிகளில்—ஜனங்கள் கற்றுக்கொள்ளும் அறிவு, அவர்களுக்குத் தெரிந்த அறிவியல், மூடநம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலாச்சாரங்கள் பற்றிய புரிதல், அத்துடன் சமூக போக்குகள் என இவற்றில்—நீதியானதும், அநீதியானதும் எது என்பதைக் கூற மனிதன் பயன்படுத்தக்கூடிய ஏதாவதொன்று இருக்கிறதா? பரிசுத்தமானது எது, தீமை எது என்பதை அறிய மனிதனுக்கு ஏதாவது உதவ முடியுமா? இவற்றை அளவிட எதேனும் தரம் உள்ளதா? (இல்லை.) மனிதனுக்கு உதவக் கூடிய தரங்களும் அடிப்படைகளும் இல்லை. “பரிசுத்தம்” என்ற வார்த்தையை ஜனங்கள் அறிந்திருந்தாலும், பரிசுத்தமானது என்னவென்று உண்மையில் அறிந்தவர்கள் யாரும் இல்லை. ஆகவே, சாத்தான் மனிதனிடம் கொண்டு வரும் இந்த விஷயங்கள் அவர்களுக்கு உண்மையை அறிய உதவ முடியுமா? மனிதன் அதிக மனிதத்தன்மையுடன் ஜீவிக்க அவர்களுக்கு இவை உதவ முடியுமா? தேவனை அதிகமாக ஆராதிக்கக் கூடிய வகையில் மனிதன் ஜீவிக்க அவர்களுக்கு இவை உதவ முடியுமா? (இல்லை.) தேவனை ஆராதிக்கவோ அல்லது சத்தியத்தைப் புரிந்து கொள்ளவோ மனிதனுக்கு அவற்றால் உதவ முடியாது என்பது வெளிப்படையானதாகும். அவற்றால் பரிசுத்தமும் தீமையும் என்ன என்பதை மனிதனுக்குத் தெரியப்படுத்தவும் முடியாது. மாறாக, மனிதன் மேலும் மேலும் சீரழிந்து, தேவனிடமிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறான். சாத்தான் தீயவன் என்று நாம் சொல்வதற்கு இதுவே காரணம். சாத்தானுடைய பல தீய சாராம்சங்களைப் பிரித்துப் பார்க்கையில், சாத்தானில் பரிசுத்தத்தின் எந்தவொரு கூறுகளையும், அதன் சாராம்சத்திலோ அல்லது அதன் சாராம்சத்தைப் பற்றிய உங்கள் புரிதலிலோ பார்த்திருக்கிறீர்களா? (இல்லை.) அது நிச்சயமானது தான். தேவனுடன் ஏதேனும் ஒற்றுமையைப் பகிர்ந்துக்கொள்ளும் சாத்தானுடைய சாராம்சத்தின் எந்த அம்சத்தையாகிலும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (இல்லை.) சாத்தானுடைய எந்தவொரு வெளிப்பாடாகிலும் தேவனுடன் ஏதேனும் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கிறதா? (இல்லை.) எனவே இப்போது நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்: உங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்திச் சொல்லுங்கள், தேவனுடைய பரிசுத்தம் என்றால் என்ன? முதலாவதாக, “தேவனுடைய பரிசுத்தம்” என்ற வார்த்தைகள் எதனுடன் தொடர்பில் இருக்கின்றன? தேவனுடைய சாராம்சத்துடன் அவை தொடர்பில் இருக்கின்றனவா? அல்லது அவருடைய மனநிலையின் சில அம்சங்களுடன் அவை தொடர்பில் இருக்கின்றனவா? (அவை தேவனுடைய சாராம்சத்துடன் தொடர்பில் இருக்கின்றன.) நாம் விரும்பிய தலைப்பை அணுகுவதற்கான ஒரு இடத்தை நாம் தெளிவாக அடையாளம் காண வேண்டும். இந்த வார்த்தைகள் தேவனுடைய சாராம்சத்துடன் தொடர்பில் இருக்கின்றன. முதலாவதாக, சாத்தானுடைய தீமையை நாம் தேவனுடைய சாராம்சத்திற்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாகப் பயன்படுத்தினோம். எனவே, தேவனில் சாத்தானுடைய சாராம்சத்தை நீ பார்த்ததுண்டா? மனிதகுலத்தின் சாராம்சத்தைப் பார்த்ததுண்டா? (இல்லை, நாங்கள் பார்த்ததில்லை. தேவன் திமிர்பிடித்தவர் அல்ல, சுயநலவாதி அல்ல, துரோகம் செய்ததில்லை. இதிலிருந்து தேவனுடைய பரிசுத்த சாராம்சம் வெளிப்படுவதைக் காண்கிறோம்.) வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமா? (சாத்தானுடைய சீர்கேடான மனநிலை குறித்தான எந்தத் தடயமும் தேவனிடம் இல்லை. சாத்தானிடம் இருப்பது முற்றிலும் எதிர்மறையானது ஆகும். அதே நேரத்தில் தேவனிடம் இருப்பது நேர்மறையானது ஆகும். நாம் எப்போதுமே, சிறியவர்களாக இருந்த காலத்திலிருந்தே, நம் ஜீவகாலம் முழுவதும் மற்றும் இன்று வரை, குறிப்பாக நாம் குழப்பமடைந்து, நம் வழியை இழந்தபோது, தேவன் எப்போதும் நம் பக்கம் இருந்திருக்கிறார். நம்மைக் கவனித்து, நம்மைக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறோம். தேவனில் எந்த வஞ்சகமும் இல்லை, ஏமாற்றுதலும் இல்லை. அவர் தெளிவாகவும் நேராகவும் பேசுகிறார். இதுவும் தேவனுடைய உண்மையான சாராம்சம் ஆகும்.) மிகவும் நன்று! (தேவனில் சாத்தானுடைய கேடான மனநிலை, போலித்தனம், பெருமை, வெற்று வாக்குறுதிகள் மற்றும் வஞ்சகம் என எதையும் நாம் காண முடியாது. மனிதனால் தேவனை மட்டுமே நம்ப முடியும். தேவன் உண்மையுள்ளவர், நேர்மையானவர். தேவனுடைய கிரியையிலிருந்து பார்த்தால், தேவன் தம் கிரியையின் மூலமாக ஜனங்களை நேர்மையாக இருக்கச் சொல்கிறார். அவர்களுக்கு ஞானத்தை அளிக்கிறார். தீமையிலிருந்து நன்மையானதைச் சொல்லச் செய்கிறார். பல்வேறு மனிதர்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களைப் பற்றிய விவேகத்தைக் கொண்டிருக்கச் செய்கிறார். இதில் நாம் தேவனுடைய பரிசுத்தத்தைக் காணலாம்.) நீங்கள் முடித்து விட்டீர்களா? நீங்கள் சொன்னதில் திருப்தி அடைகிறீர்களா? தேவனைப் பற்றிய புரிதல் உண்மையில் உங்கள் இருதயங்களில் எவ்வளவாக இருக்கிறது? தேவனுடைய பரிசுத்தத்தை நீங்கள் எவ்வளவாக புரிந்து கொள்கிறீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தில் ஒருவித புலன் உணர்வு புரிதலைக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால், ஒவ்வொரு மனிதரும் அவர்கள் மீதான தேவனுடைய கிரியையை உணர முடியும். அவர்கள் தேவனிடமிருந்து பல்வேறு அளவுகளில், தயவு மற்றும் ஆசீர்வாதங்கள், வெளிச்சம் மற்றும் ஒளி மற்றும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை போன்ற பல விஷயங்களைப் பெறுகிறார்கள் மற்றும் இந்த விஷயங்களால், மனிதன் தேவனுடைய சாராம்சத்தைப் பற்றிய சில எளிய புரிதலையும் பெறுகிறான்.

இன்று நாம் விவாதிக்கும் தேவனுடைய பரிசுத்தம் பெரும்பாலான ஜனங்களுக்கு விசித்திரமாகத் தோன்றினாலும், இதைப் பொருட்படுத்தாமல், நாம் இப்போது இந்த தலைப்பைத் தொடங்கியிருக்கிறோம். மேலும் நீங்கள் முன்னோக்கிச் செல்லும் பாதையில் செல்லும்போது ஆழமான புரிதலைப் பெறுவீர்கள். உங்கள் சொந்த அனுபவத்தின் போது படிப்படியாக உணரவும் புரிந்து கொள்ளவும் இது தேவைப்படுகிறது. இப்போதைக்கு, தேவனுடைய சாராம்சத்தைப் பற்றிய உங்கள் புலனுணர்வு அடிப்படையிலான புரிதலைக் கடந்து இன்னும் கற்றுக்கொள்ளவும், உறுதிப்படுத்தவும், உணரவும், அனுபவிக்கவும் நீண்ட காலம் தேவைப்படுகிறது. ஒரு நாள் உங்கள் இருதயத்தின் மையத்திலிருந்து, “தேவனுடைய பரிசுத்தம்” என்றால் தேவனுடைய சாராம்சம் குறைபாடற்றது, தேவனுடைய அன்பு தன்னலமற்றது, தேவன் மனிதனுக்கு அளிக்கும் அனைத்தும் தன்னலமற்றவை, தேவனுடைய பரிசுத்தமானது கறைபடாதது மற்றும் மறுக்க முடியாதது என்பதாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். தேவனுடைய சாராம்சத்தின் இந்த அம்சங்கள் அவர் தனது நிலையை வெளிப்படுத்த அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் மட்டுமல்லாமல் மாறாக ஒவ்வொரு மனிதனையும் மிகவும் நேர்மையுடன் நடத்துவதற்கு தேவன் தனது சாராம்சத்தைப் பயன்படுத்துகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய சாராம்சம் வெறுமையாக இல்லை. அது தத்துவார்த்தமாகவோ அல்லது கோட்பாடாகவோ இல்லை. அது நிச்சயமாக ஒரு வகையான அறிவும் அல்ல. அது மனிதனுக்கு ஒரு வகையான கல்வியும் அல்ல. அதற்குப் பதிலாக அது தேவனுடைய சொந்தச் செயல்களின் உண்மையான வெளிப்பாடு மற்றும் தேவன், தேவனிடம் இருப்பதன் வெளிப்படையான சாராம்சம் ஆகும். மனிதன் இந்தச் சாராம்சத்தை அறிந்து அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தேவன் செய்யும் ஒவ்வொன்றும் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகுந்த மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தேவனுடைய பரிசுத்தத்தை நீ புரிந்து கொள்ளும் போது, உன்னால் உண்மையிலேயே தேவனை நம்ப முடியும். தேவனுடைய பரிசுத்தத்தை நீ புரிந்து கொள்ளும் போது, “தேவனே தனித்துவமானவர்” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை உன்னால் உண்மையில் உணர முடியும். நீ இனிமேல் கற்பனை செய்ய மாட்டாய். இதைத் தவிர வேறு பாதைகள் உள்ளன என்று நினைத்து நீ நடக்கத் தேர்வு செய்ய மற்றும் தேவன் உனக்காக ஏற்பாடு செய்துள்ள அனைத்தையும் காட்டிக் கொடுக்க நீ இனி ஆயத்தமாக இருக்க மாட்டாய். தேவனுடைய சாராம்சம் பரிசுத்தமானது என்பதால், இதன் அர்த்தம் என்னவென்றால், தேவன் மூலமாகத் தான் ஜீவிதத்தில் நீ வெளிச்சத்தின் நீதியான பாதையில் நடக்க முடியும் என்பதாகும். தேவன் மூலமாகத் தான் நீ ஜீவிதத்தின் அர்த்தத்தை அறிய முடியும். தேவன் மூலமாகத் தான் நீ உண்மையான மனிதத்தன்மையுடன் ஜீவிக்க முடியும். இருவரும் சத்தியத்தை வைத்திருக்கிறார்கள். அதை அறிவார்கள். தேவன் மூலமாகத் தான் நீ சத்தியத்திலிருந்து ஜீவனைப் பெற முடியும். தீமையைத் தவிர்ப்பதற்கும், சாத்தானுடைய தீங்கு மற்றும் கட்டுப்பாட்டிலிருந்து உன்னை விடுவிப்பதற்கும் தேவனால் மட்டுமே உனக்கு உதவ முடியும். நீ இனி துன்பப்படக்கூடாது என்பதற்காக உன்னைத் துன்பக் கடலில் இருந்து தேவனைத் தவிர யாரும் இரட்சிக்க முடியாது. இது தேவனுடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது. தேவன் மட்டுமே உன்னை மிகவும் தன்னலமின்றி இரட்சிக்கிறார். உன் எதிர்காலத்திற்கும், உன் விதிக்கும், உன் ஜீவிதக்கும் தேவன் மட்டுமே பொறுப்பாகிறார். அவர் உனக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்கிறார். இது சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எதுவும் சாதிக்க கூடிய ஒன்றல்ல. சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எதுவும் தேவனுடைய சாராம்சத்தைப் போன்ற ஒரு சாராம்சத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால், எந்தவொரு மனிதன் அல்லது பொருளாலும் உன்னை இரட்சிக்கவோ உன்னை வழிநடத்தவோ முடியாது. மனிதனுக்கான தேவனுடைய சாராம்சத்தின் முக்கியத்துவம் இதுதான். நான் சொன்ன இந்த வார்த்தைகள் கொள்கை ரீதியாக கொஞ்சம் உதவக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீ சத்தியத்தைத் தொடர்ந்தால், நீ சத்தியத்தை நேசித்தால், இந்த வார்த்தைகள் உன் விதியை எவ்வாறு மாற்றும் என்பதை நீ அனுபவிப்பாய். ஆனால் அதையும் கடந்து அவை உன்னை மனித ஜீவிதத்தின் சரியான பாதையில் கொண்டு வரும். இதை நீ புரிந்து கொள்கிறாய், அல்லவா? தேவனுடைய சாராம்சத்தை அறிந்து கொள்வதில் உங்களுக்கு இப்போது கொஞ்சம் ஆர்வம் இருக்கிறதா? (ஆம்.) நீங்கள் ஆர்வமாக இருப்பதை அறிவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்று, தேவனுடைய பரிசுத்தத்தை அறிந்து கொள்வதற்கான நம்முடைய அமர்வின் தலைப்பை இங்கே முடிப்போம்.

***

இன்று நம்முடைய கூட்டத்தின் ஆரம்பத்தில் நீங்கள் செய்த, என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு காரியத்தைப் பற்றி நான் உங்களுடன் பேச விரும்புகிறேன். உங்களில் சிலர் நன்றியுணர்வை வளர்த்துக் கொண்டிருந்திருக்கலாம், ஒருவேளை நீங்கள் நன்றியுள்ளவர்களாக உணர்ந்திருக்கலாம், எனவே உங்கள் உணர்ச்சி அதனுடன் தொடர்புடைய செயலைக் கொண்டு வந்திருக்கிறது. நீங்கள் செய்தது கண்டனத்துக்கு உட்படும் ஒன்று அல்ல. அது சரியோ தவறோ அல்ல. ஆனால் நீங்கள் சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்? முதலில், நீங்கள் இப்போது என்ன செய்தீர்கள் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினீர்களா அல்லது ஆராதிப்பதற்கு முழங்கால்படியிட்டீர்களா? யாரேனும் என்னிடம் சொல்ல முடியுமா? (அது சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவது என்று நாங்கள் நம்புகிறோம்.) அது சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவது என்று நீங்கள் நம்புகிறீர்கள். எனவே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதன் அர்த்தம் என்ன? (ஆராதனை.) அப்படியானால், ஆராதிப்பதற்கு முழங்கால்படியிடுதல் என்றால் என்ன? இதைப் பற்றி நான் இதற்கு முன்பு உங்களுடன் கலந்துரையாடியதில்லை. ஆனால் இன்று அவ்வாறு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். உங்கள் வழக்கமான கூட்டங்களில் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதைச் செய்கிறீர்களா? (இல்லை.) உங்கள் ஜெபங்களைச் சொல்லும்போது நீங்கள் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதைச் செய்கிறீர்களா? (ஆம்.) ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜெபிக்கும்போது, சூழ்நிலை அனுமதிக்கும் போதெல்லாம் நீங்கள் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதைச் செய்கிறீர்களா? (ஆம்.) அது நல்லது. ஆனால் இன்று நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றால், தேவன் இரண்டு வகையான மனிதர்களின் மண்டியிடுதலை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். எந்தவொரு ஆவிக்குரிய மனிதர்களின் கிரியைகளையும் நடத்தைகளையும் நாம் ஆலோசிக்க வேதாகமமோ அல்லது கிரியைகளையோ தேவையில்லை. அதற்குப் பதிலாக, இங்கே, இப்போது, நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். முதலாவதாக, சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதும் முழங்கால்படியிடுவதும் ஒன்றல்ல. தங்களை சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதைச் செய்வோரின் முழங்கால்படியிடுதலை தேவன் ஏன் ஏற்றுக்கொள்கிறார்? ஏனென்றால், தேவன் ஒருவனை தன்னிடம் அழைத்து, தேவனுடைய ஆணையை ஏற்க இந்த மனிதனை வரவழைக்கிறார். ஆகவே, தேவன் தனக்கு முன்பாக சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதைச் செய்ய அனுமதிப்பார். இது முதல் வகை மனிதன். இரண்டாவது வகை, தேவனுக்கு பயந்து, தீமையைத் தவிர்க்கும் ஒருவன் தேவனை வணங்குவதற்காக முழங்கால்படியிடுதல் ஆகும். இந்த இரண்டு வகையான ஜனங்கள் மட்டுமே உள்ளனர். எனவே நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்? உங்களால் சொல்ல முடியுமா? இது உங்கள் உணர்வுகளைக் கொஞ்சம் புண்படுத்தக்கூடும் என்றாலும், இதுதான் உண்மை. ஜெபிக்கும் போது ஜனங்களுடைய முழங்கால்படியிடுதல்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது—இது சரியானது ஆகும் மற்றும் அவ்வாறு இருக்க வேண்டும். ஏனென்றால் ஜனங்கள் ஜெபிக்கும் போது பெரும்பாலும் ஏதேனும் ஒன்றுக்காக ஜெபிப்பார்கள், தேவனுக்கு தங்கள் இருதயங்களைத் திறப்பார்கள் மற்றும் அவருடன் நேருக்கு நேர் வருவார்கள். இது தேவனுடனான, இருதயத்திற்கு இருதயமாகச் செய்யும், தொடர்பு மற்றும் பரிமாற்றம் ஆகும். உங்கள் முழங்கால்களில் வழிபடுவது வெறும் சம்பிரதாயமாக இருக்கக்கூடாது. இன்று நீங்கள் செய்ததற்காக உங்களை கண்டிப்பதாக இதை நான் அர்த்தப்படுத்தவில்லை. இந்தக் கொள்கையை நீங்கள் புரிந்து கொள்வதற்காக நான் உங்களுக்கு இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்—இது உங்களுக்குத் தெரியும், அல்லவா? (ஆம், எங்களுக்குத் தெரியும்.) இது மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எனவே, தேவனுடைய முகத்துக்கு முன்பாக சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கவும் முழங்கால்படியிடவும் ஜனங்களுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இந்த வாய்ப்பு ஒருபோதும் இருக்காது என்பதல்ல. விரைவில் அல்லது பிற்பாடு அதற்கான நாள் வரும். ஆனால் இப்போது அந்த நேரம் வரவில்லை. நீங்கள் உணர்கின்றீர்களா? இது உங்களை வருத்தப்பட வைக்கிறதா? (இல்லை.) அது நல்லது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தற்போதைய இக்கட்டான நிலை மற்றும் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இப்போது எத்தகைய உறவு உள்ளது என்பதை உங்கள் இருதயங்களில் அறிந்து கொள்ள இந்த வார்த்தைகள் உங்களை ஊக்குவிக்கும் அல்லது உந்துதல் தரும். நாம் சமீபத்தில் சிலவற்றைப் பேசி பரிமாறிக் கொண்டிருந்தாலும், தேவனைப் பற்றிய மனிதனுடைய புரிதல் இன்னும் போதுமானதாக இல்லை. தேவனைப் புரிந்து கொள்ள முற்படும் இந்தப் பாதையில் செல்ல மனிதனுக்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. இதனை, உங்களை அவசர அவசரமாகச் செய்ய வைப்பது அல்லது இத்தகைய நோக்கங்களை அல்லது உணர்வுகளை வெளிப்படுத்த விரைந்து செல்வது எனது நோக்கம் அல்ல. இன்று நீங்கள் செய்தது உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிக்காட்டலாம் மற்றும் வெளிப்படுத்தலாம். நான் அவற்றை உணர்ந்தேன். எனவே, நீங்கள் அதைச் செய்யும்போது, நான் எழுந்து நின்று எனது நல்வாழ்த்துக்களைத் தர விரும்பினேன். ஏனென்றால் நீங்கள் அனைவரும் நலமாக இருக்க விரும்புகிறேன். எனவே, எனது ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு செயலிலும், உங்களுக்கு உதவவும், உங்களுக்கு வழிகாட்டவும், எல்லாவற்றையும் பற்றிய சரியான புரிதலையும் சரியான பார்வையையும் நீங்கள் பெறவும் என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்கிறேன். இதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், அல்லவா? (ஆம்.) அது நல்லது. தேவனுடைய பல்வேறு மனநிலைகள், தேவன் மற்றும் தேவனிடம் இருப்பதைப் பற்றிய அம்சங்கள் மற்றும் தேவன் செய்யும் கிரியைப் பற்றி ஜனங்களுக்கு சில புரிதல்கள் இருந்தாலும், இந்தப் புரிதலின் பெரும்பகுதி ஒரு பக்கத்தில் உள்ள சொற்களைப் படிப்பதை விடவும், கொள்கையளவில் அவற்றைப் புரிந்து கொள்வதற்கும் அல்லது அவற்றைப் பற்றி சிந்திப்பதற்கும் மேலானது ஆகும். உண்மையான அனுபவத்திலிருந்து வரும் உண்மையான புரிதலும் நுண்ணறிவும் ஜனங்களிடம் அதிகமாக இல்லை. ஜனங்களுடைய இருதயங்களை எழுப்ப தேவன் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தினாலும், இதைச் செய்வதற்கு முன்பாக இன்னும் நீண்ட பாதையில் மனிதன் நடக்க வேண்டியிருக்கும். தேவன் அவர்களைப் புறக்கணித்து விட்டார், தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டார் அல்லது அவர்களுக்குத் தன் முதுகைக் காட்டிவிட்டார் என்று யாரும் உணர நான் விரும்பவில்லை. நான் பார்க்க விரும்புவது எல்லாம் சத்தியத்தைத் தொடர்வதும், தேவனைப் புரிந்து கொள்ளவதும், எந்தவிதமான சந்தேகங்களோ அல்லது சுமைகளோ இன்றி, நிலையான உறுதியுடன் தைரியமாக முன்னேறுவதும் ஆகும். நீ என்ன தவறுகளைச் செய்திருந்தாலும், நீ எவ்வளவு தூரம் தவறானவனாக இருந்தாலும் அல்லது எவ்வளவு தீவிரமாக மீறியிருந்தாலும், தேவனைப் புரிந்து கொள்வதற்கான உன் முயற்சியில் நீ சுமக்க வேண்டிய சுமைகளாகவோ அல்லது அதிகப்படியான சாமான்களாகவோ இவற்றை மாற்ற வேண்டாம். தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். எல்லா நேரங்களிலும், தேவன் மனிதனுடைய இரட்சிப்பை தனது இருதயத்தில் வைத்திருக்கிறார். அது ஒருபோதும் மாறாது. அது தேவனுடைய சாராம்சத்தின் மிக விலையேறப்பெற்ற பகுதி ஆகும். நீங்கள் இப்போது கொஞ்சம் நன்றாக உணருகின்றீர்களா? (ஆம்.) எல்லா விஷயங்களுக்கும், நான் பேசிய வார்த்தைகளுக்கும் நீங்கள் சரியான அணுகுமுறையை எடுக்க முடியும் என்று நம்புகிறேன். இந்த அமர்வை இங்கே முடிப்போம். மீண்டும் சந்திப்போம்!

ஜனவரி 11, 2014

முந்தைய: தேவனே தனித்துவமானவர் V

அடுத்த: தேவனே தனித்துவமானவர் VII

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக