தேவனே தனித்துவமானவர் II

தேவனுடைய நீதிக்குரிய மனநிலை

தேவனுடைய அதிகாரத்தைக் குறித்த முந்தைய செய்தியை இப்போது நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், அந்த விஷயம் குறித்த பல நல்வார்த்தைகளால் நீங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களால் இதை எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியும், கிரகித்துக்கொள்ள முடியும், மற்றும் புரிந்துக்கொள்ள முடியும் போன்றவைகள் அனைத்தும் நீங்கள் அதற்கு எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் என்பதை பொறுத்திருக்கிறது. இந்த விஷயத்தை நீங்கள் ஆர்வத்தோடு அணுகக் கூடும் என்பது என்னுடைய நம்பிக்கையாகும்; இதில் நீங்கள் எந்த விதத்திலும் அரை மனதாக ஈடுபடக் கூடாது! இப்போது, தேவனுடைய அதிகாரத்தை அறிவது தேவனுடைய பரிபூரணத்தை அறிவதற்கு சமமானதா? தேவனுடைய அதிகாரத்தை அறிவது தனித்துவமான தேவனையே அறிவதன் ஆரம்பம் என்று ஒருவர் சொல்லலாம். மேலும் தேவனுடைய அதிகாரத்தை அறிவது என்பது தனித்துவமான தேவனுடைய சாராம்சத்தைக் குறித்து அறிவதன் வாசலுக்குள் ஏற்கனவே ஒருவன் அடியெடுத்து வைத்துவிட்டான் என்று ஒருவர் சொல்லலாம். இந்தப் புரிதலானது தேவனை அறிவதன் ஒரு பகுதியாகும். எனவே, இதன் மற்றப் பகுதி என்ன? தேவனுடைய நீதியான மனநிலை—இதையே இன்றைக்கான செய்தியின் தலைப்பாக வைத்துக்கொள்ள நான் விரும்புகிறேன்.

இன்றைய செய்தியின் தலைப்பாக வேதத்திலிருந்து நான் இரண்டு பகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன்: முதலாவது தேவன் சோதோமை அழிப்பதைப் பற்றியது, இதை ஆதியாகமம் 19:1-11 மற்றும் ஆதியாகமம் 19:24-25 ஆகிய வசனங்களில் காணலாம்; இரண்டாவது நினிவேயை தேவன் விடுவிப்பதைப் பற்றியது, இதை யோனா 1:1-2 ஆகிய வசனங்களிலும், இதனுடன் கூட யோனாவின் புத்தகம் மூன்றாம் மற்றும் நான்காம் அதிகாரங்களிலும் காணலாம். இந்த இரண்டு வசனப் பகுதிகளைக் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும் என்பதைக் கேட்க நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் சொல்வது என்னவென்றால், இயற்கையாகவே தேவனை அறிந்துகொள்ளுதல் மற்றும் அவருடைய சாராம்சத்தை அறிந்துகொள்ளுதல் ஆகிய எல்லைக்கு அப்பால் வழி விலகிச் சென்றுவிட முடியாது, ஆனால் இன்றைய செய்தியின் மையக் கருத்து எதுவாக இருக்கும்? உங்களில் யாருக்காவது தெரியுமா? என்னுடைய செய்தியில் தேவனுடைய அதிகாரத்தைக் குறித்த எந்தப் பகுதிகள் உங்கள் கவனத்தை ஈர்த்தன? அத்தகைய அதிகாரத்தையும் வல்லமையையும் உடையவர் தேவன் ஒருவர் மட்டுமே என்று நான் ஏன் சொன்னேன்? அப்படி சொல்வதனால் நான் எதைத் தெளிவுபடுத்த விரும்பினேன்? அதிலிருந்து நீங்கள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்பினேன்? தேவனுடைய அதிகாரமும் வல்லமையும் அவருடைய சாராம்சமும் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதன் ஓர் அம்சமாக உள்ளனவா? அவை அவருடைய சாராம்சத்தின் ஒரு பகுதியா, அவருடைய அடையாளத்தையும், அந்தஸ்தையும் நிரூபிக்கிற ஒரு பகுதியாக இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளிலிருந்து நீங்கள் நிதானித்து, நான் என்ன சொல்லப் போகிறேன் என்று உங்களால் கூற முடியுமா? நீங்கள் எதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன்? இதைப் பற்றிக் கவனமாகச் சிந்தியுங்கள்.

தேவனைப் பிடிவாதமாக எதிர்ப்பதால், மனிதன் தேவனுடைய கோபத்தால் அழிக்கப்படுகிறான்

முதலாவதாக, தேவன் சோதோமை அழிப்பதைக் குறித்து விவரிக்கிற பல வசனப்பகுதிகளைத் தற்போது பார்ப்போம்.

ஆதி. 19:1-11 அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து: ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள். அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள். அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி, தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.

ஆதி. 19:24-25 அப்பொழுது யேகோவா, சோதோம் மீதும் கொமோராவின் மீதும் வானத்திலிருந்த யேகோவாவிடமிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியப்பண்ணி; அந்த நகரங்களையும், சகல சமவெளிகளையும், அந்நகரங்களின் சகல குடிகளையும், பூமியில் வளர்ந்தவற்றையும் அழித்துப்போட்டார்.

இந்த வசனப்பகுதியிலிருந்து, சோதோமின் துன்மார்க்கமும், சீர்கேடும், மனிதன் மற்றும் தேவன் ஆகிய இருவருக்கும் அருவருப்பாக இருக்கிற அளவை ஏற்கனவே அடைந்துள்ளன, அதனால் தேவனுடைய கண்களில் இந்தப் பட்டணம் அழிக்கப்படுகிறத் தகுதியைப் பெற்றது என்பதைப் பார்ப்பது கடினமானதல்ல. ஆனால் பட்டணம் அழிக்கப்படுவதற்கு முன் அதற்குள்ளே என்ன நடந்தது? இந்தச் சம்பவங்களின் மூலம் ஜனங்கள் என்ன உத்வேகத்தைப் பெற முடியும்? இந்தச் சம்பவங்கள் குறித்த தேவனுடைய அணுகுமுறையானது மக்களுக்கு அவருடைய மனநிலையைப் பற்றிக் காட்டுவது என்ன? இந்த முழு சம்பவத்தையும் புரிந்துக்கொள்ளுவதற்கு, வசனங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளதைக் கவனமாக படிப்போமாக …

சோதோமின் சீர்கேடு: மனிதனுக்கு எரிச்சல், தேவனுக்குக் கோபம்

அந்த இராத்திரியில், தேவனிடமிருந்து வந்த இரண்டு தூதர்களை லோத்து வரவேற்று, அவர்களுக்கு ஒரு விருந்தை ஆயத்தம் செய்தான். இரவு உணவு முடிந்து, அவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், அந்தப் பட்டணத்தைச் சுற்றியிருந்த எல்லா ஜனங்களும் லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு, அவனை வெளியே அழைத்தார்கள். அவர்கள் இப்படிச் சொன்னதாக வசனம் பதிவு செய்கிறது, “இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா.” இந்த வார்த்தைகளை யார் சொன்னது? இவைகள் யாருக்கு சொல்லப்பட்டன? இந்த வார்த்தைகள் லோத்து கேட்கும்படியாக லோத்தின் வீட்டிற்கு வெளியே கத்திக்கொண்டிருந்த சோதாம் மக்களுடையவை. இந்த வார்த்தைகள் கேட்பதற்கு எப்படி உணரப்படுகின்றன? நீ மிகுந்த கோபமாக உணர்கிறாயா? இந்த வார்த்தைகள் உன்னை வேதனைப்படுத்துகிறதா? நீ கோபத்தால் கொதிக்கிறாயா? இந்த வார்த்தைகள் சாத்தானுடைய துர் நாற்றமல்லவா? இவற்றின் மூலம் நீ அந்தப் பட்டணத்திலுள்ள தீமையையும், இருளையும் உணர முடிகிறதா? இந்த ஜனங்களுடைய மிருகத்தனமான, காட்டுமிராண்டித்தனமான நடத்தையை அவர்களுடைய வார்த்தைகளின் மூலம் உணர முடிகிறதா? அவர்களுடைய இந்த நடத்தையின் மூலம் அவர்களுடைய சீர்கேட்டின் ஆழத்தை உன்னால் உணர முடிகிறதா? அவர்களுடைய பேச்சின் உள்ளடக்கத்தில், அவர்களுடைய துன்மார்க்கமான இயல்பும், காட்டுமிராண்டித்தனமான மனநிலையும் அவர்களுடைய சொந்தக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலையை எட்டியிருந்ததை காண்பது கடினமானது அல்ல. லோத்தைத் தவிர, இந்தப் பட்டணத்திலுள்ள ஒவ்வொரு கடைசி மனிதனும் சாத்தானை விட மாறுப்பட்டவன் அல்ல; மற்ற மனிதனுடைய வெறும் பார்வையே இந்த மக்களைத் தீங்கு செய்யவும் பட்சிக்கவும் விரும்ப வைத்தது…. இந்தக் காரியங்கள் இந்தப் பட்டணத்தின் கொடூரமான உணர்வையும் மற்றும் அச்சுறுத்தும் இயல்பின் உணர்வையும் ஒருவருக்குத் தருவது மட்டுமல்லாமல், அதனைச் சுற்றியுள்ள மரணத்தின் பிரகாசத்தையும் தருகிறது, ஆனால் அவைகள் அதனுடைய துன்மார்க்கத்தனம் மற்றும் இரத்த வெறியின் உணர்வை ஒருவருக்குக் கொடுக்கின்றன.

அவன் மனிதாபிமானமற்ற அக்கிரமக்காரர்கள் கும்பலுடனும், மனித ஆத்துமாக்களைப் பட்சிக்கும் காட்டுத்தனமான ஆசை நிறைந்துள்ள ஜனங்களுடனும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது, லோத்து எவ்வாறு பதிலளித்தான்? வசனம் கூறுகிறது: “இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம்.” லோத்து இந்த வார்த்தைகளால் எதைப் பொருள்படுத்தினான் என்றால்: தூதர்களைப் பாதுக்காக்க அவன் தன்னுடைய இரு குமராத்திகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தான். நியாயப்படி பார்த்தால், இந்த ஜனங்கள் லோத்தினுடைய நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டு, இந்த இரு தூதர்களையும் தனியே விட்டு விட்டிருக்க வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தூதர்கள் அவர்களுக்கு முற்றிலும் அந்நியர்கள், அவர்களோடு எவ்வகையிலும் முமுமையான தொடர்பும் இல்லாதவர்கள் மற்றும் அவர்களின் ஆர்வங்களுக்கு ஒருபோதும் தீங்கு செய்யாத ஜனங்கள். ஆனாலும், தங்கள் துன்மார்க்க இயல்புகளால் உந்தப்பட்டவர்களாக, அவர்கள் இந்த விஷயத்தை அத்தோடு விட்டுவிடவில்லை, மாறாக அவர்கள் தங்கள் முயற்சியைத் தீவிரப்படுத்தினார்கள். இங்கே, சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களின் பேச்சுக்களில் மற்றொன்று இந்த மனிதர்களின் உண்மையான மற்றும் தீய இயல்பைப் பற்றிய அறிவை ஜனங்களுக்கு மேலும் அளிக்கிறது, அதே நேரத்தில் இந்தப் பட்டணத்தை அழிக்க தேவன் சித்தங்கொண்டதற்கான காரணத்தை ஜனங்கள் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

ஆகவே அவர்கள் அடுத்தப்படியாக என்ன சொன்னார்கள்? வேதம் கூறுகிறது: “அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.” அவர்கள் லோத்தின் கதவுகளை எதற்கு உடைக்க விரும்பினார்கள்? இதற்கு காரணமென்னவென்றால் இந்த இரண்டு தூதர்களின் மீதும் அவர்கள் தீங்கு விளைவிக்க ஆர்வமாக இருந்தார்கள். இந்தத் தூதர்களை சோதோமிற்கு கொண்டு வந்தது எது? இங்கு வருதற்கான அவர்களுடைய காரணமானது லோத்தையும் அவனுடைய குடும்பத்தையும் காப்பாற்றுவதாகும், ஆனால் அந்தப் பட்டணத்து ஜனங்கள் அவர்கள் அதிகாரப் பூர்வப் பதவிகளை ஏற்க வந்ததாகத் தவறாக நினைத்துக்கொண்டனர். தூதர்களின் காரணத்தைக் கேட்காமல், பட்டணத்து ஜனங்கள் இந்த இரண்டு தூதர்களுக்கும் மிருகத்தனமாகத் தீங்கு செய்ய யூகத்தின் அடிப்படையில் விருப்பங்கொண்டனர். அவர்களோடு எவ்விதத்திலும் தொடர்பில்லாத இரண்டு ஜனங்களுக்கு அவர்கள் தீங்கு செய்ய விரும்பினார்கள். இந்தப் பட்டணத்து ஜனங்கள் தங்கள் மனிதத்தன்மையையும், பகுத்தறிவையும் முற்றிலுமாக இழந்துவிட்டனர் என்பது தெளிவாகிறது. அவர்களுடைய பைத்தியக்காரத்தனம் மற்றும் காட்டுத்தனத்தின் அளவானது ஏற்கனவே மனிதர்களுக்குத் தீங்கு செய்து அவர்களைப் பட்சிக்கும் சாத்தானுடைய தீய இயல்புகளுக்கு எவ்விதத்திலும் வேறுபட்டதாக இருக்கவில்லை.

இந்தத் தூதர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அவர்கள் லோத்திடம் கோரியபோது, லோத்து என்ன செய்தான்? லோத்து அவர்களை ஒப்படைக்கவில்லை என்று வசனத்திலிருந்து நாம் அறிகிறோம். லோத்து இந்த இரண்டு தேவ தூதர்களையும் அறிந்திருந்தானா? நிச்சயமாக இல்லை! இருந்தாலும் இந்த இருவரையும் ஏன் அவனால் காப்பாற்ற முடிந்தது? அவர்கள் என்ன செய்ய வந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியுமா? அவர்கள் வந்ததன் காரணத்தைக் குறித்து அவனுக்குத் தெரியாவிட்டாலும், அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று அவன் அறிந்திருந்தான், மேலும் அவர்களை அவன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். அவன் இந்த ஊழியக்காரர்களை “ஆண்டவன்மார்களே” என்ற அடைமொழியோடு அழைப்பதானது, சோதோமின் மற்ற ஜனங்களைப் போன்றல்லாமல், லோத்து தேவனை வழக்கமாக பின்பற்றுகிறவன் என்பதைக் காட்டுகிறது. ஆகையால், தேவனுடைய தூதர்கள் அவனிடம் வந்தப்போது, அந்த இரண்டு ஊழியர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவன் தன்னுடைய உயிரை பணயம் வைத்தான்; மேலும் இந்த இரண்டு ஊழியர்களைப் பாதுக்காக்கும் விதமாக தன்னுடைய இரண்டு குமாரத்திகளையும் அவன் ஈடாகக் கொடுத்தான். இது லோத்தினுடைய நீதியான செயல்; இது லோத்தினுடைய உறுதியான இயல்பு மற்றும் சாராம்சத்தின் வெளிப்பாடு, மேலும் லோத்தை இரட்சிக்கும்படிக்கு தேவன் தம்முடைய தூதர்களை அனுப்பினதன் காரணமும் இது தான். ஆபத்தைச் சந்திக்கையில், லோத்து வேறு எதையும் பொருட்படுத்தாமல் இந்த இரண்டு ஊழியர்களையும் பாதுகாத்தான்; இந்த ஊழியர்களின் பாதுக்காப்பிற்கு ஈடாக தன் இரு குமாரத்திகளையும் வணிகப் பரிமாற்றம் செய்ய முயற்சிசெய்தான். லோத்தைத் தவிர, இந்தப் பட்டணத்திற்குள்ளிருக்கிற வேறு யாராவது இப்படிச் செய்திருக்க முடியுமா? நடந்த நிகழ்வுகளின்படி யாருமில்லை, எவரும் கிடையாது! ஆகையால், லோத்தைத் தவிர, சோதோமிலுள்ள ஒவ்வொருவரும் அழிவின் இலக்கு, அவர்கள் இதற்குப் பாத்திரவான்கள் என்பது சரியானது என்று சொல்லாமல் சொல்லுகிறது.

தேவனுடைய கோபத்தை அவமதித்ததற்காக சோதோம் முற்றிலும் நீர்மூலமாக்கப்பட்டது

இந்த இரண்டு ஊழியர்களை சோதோம் ஜனங்கள் பார்த்தப்போது, அவர்களுடைய வருகையின் காரணத்தைப் பற்றி அவர்கள் கேட்கவுமில்லை, தேவனுடைய சித்தத்தைப் பரப்ப வந்திருக்கிறார்களா என்று எவரும் கேட்கவுமில்லை. இதற்கு மாறாக அவர்கள் ஒரு கலகக்காரர் கூட்டத்தை உருவாக்கினார்கள், விளக்கத்திற்கு காத்திராமல், காட்டு நாய்களைப் போல அல்லது கொடூரமான ஓநாய்களைப் போல இந்த இரண்டு ஊழியர்களையும் பிடித்துக்கொண்டார்கள். இந்த காரியங்கள் நடக்கும்போது தேவன் இவைகளை பார்த்தாரா? மனிதனுடைய இந்த வகையான நடத்தையை, இந்த விதமான நிகழ்வைப் பார்த்து தேவன் தம்முடைய இருதயத்தில் என்ன சிந்தித்துக்கொண்டிருந்தார்? இந்தப் பட்டணத்தை அழிக்க தேவன் தம்முடைய மனதை அமைத்துக்கொண்டார்; அவரால் தவிர்க்கவோ அல்லது காத்திருக்கவோ அல்லது இன்னமும் பொறுமையைக் காட்டவோ முடியவில்லை. அவருடைய நாள் வந்துவிட்டது, மேலும் அவர் சித்தங்கொண்டதைச் செய்ய ஆயத்தமானார். ஆதியாகமம் 19:24-25 இவ்வாறு கூறுகிறது: “அப்பொழுது யேகோவா, சோதோம் மீதும் கொமோராவின் மீதும் வானத்திலிருந்த யேகோவாவிடமிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியப்பண்ணி; அந்த நகரங்களையும், சகல சமவெளிகளையும், அந்நகரங்களின் சகல குடிகளையும், பூமியில் வளர்ந்தவற்றையும் அழித்துப்போட்டார்.” இந்த இரண்டு வசனங்களும் தேவன் இந்தப் பட்டணத்தை அழித்த முறையைப் பற்றியும் தேவன் அழித்த காரியங்களைப் பற்றியும் கூறுகின்றன. முதலாவதாக, தேவன் இந்தப் பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்ததாக வேதம் விவரிக்கிறது, மற்றும் இந்த அக்கினியின் அளவானது ஜனங்கள் அனைவரையும், பூயின் மீது வளர்ந்த அனைத்தையும் அழிக்கப் போதுமானதாக இருந்தது. அதாவது, வானத்திலிருந்த விழுந்த அக்கினியானது, பட்டணத்தை மட்டுமல்லாது, அதனுள் இருந்த ஜனங்கள் மற்றும் மிருக ஜீவன்கள் அனைத்தையும் ஒரு சுவடு கூட இல்லாமல் அழித்துப்போட்டது. அந்தப் பட்டணம் அழிக்கப்பட்டப் பிறகு இந்த நிலமானது உயிர் வாழ் இனங்களை இழந்துவிட்டது; அங்கே இனியும் உயிர்களே கிடையாது, உயிர்கள் இருப்பதற்கான அடையாளங்களும் கிடையாது. பட்டணமானது பாழ் நிலமாகவும், மரண அமைதி நிரம்பிய வெற்றிடமாகவும் மாறிப் போனது. அந்த இடத்தில் தேவனுக்கு விரோதமான தீய செயல்கள் இனியும் இருக்காது, இனியும் படுகொலை இருக்காது அல்லது இரத்தஞ்சிந்துதல் இருக்காது.

இந்தப் பட்டணத்தை இவ்வளவு முற்றிலுமாக அழிக்க தேவன் ஏன் சித்தங்கொண்டார்? நீங்கள் இங்கே என்ன பார்க்க முடிகிறது? மனிதகுலமும் மற்றும் இயற்கையும் அவருடைய சொந்த சிருஷ்ப்புகளும், இப்படி அழிக்கப்படுவதை உண்மையாகவே தேவனால் தாங்கிக்கொள்ள முடிகிறதா? வானத்திலிருந்து கீழே போடப்பட்ட அக்கினியிலிருந்து யேகோவாவின் கோபத்தை உங்களால் பகுத்தறியக் கூடுமானால், அவரது கடுங்கோபமானது எவ்வளவு பெரியது என்பதையும், அவருடைய அழிவின் இலக்குகளை நிதானிப்பதையும், மற்றும் இந்தப் பட்டணம் நிர்மூலமாக்கப்பட்டதன் அளவையும் பார்ப்பது கடினமாக இருக்காது. தேவன் ஒரு பட்டணத்தை வெறுக்கும்போது, அவர் தம்முடைய தண்டனையை அதன் மீது வரப்பண்ணுகிறார். தேவன் ஒரு பட்டணத்தின் மீது அருவருப்படையும்போது, அவர் தம்முடைய கோபத்தை ஜனங்களுக்கு அறிவிக்கும்படிக்கு மீண்டும் மீண்டுமாக எச்சரிக்கையை வெளியிடுவார். ஆனாலும், தேவன் ஒரு பட்டணத்தை முடிவிற்குக் கொண்டுவந்து அதை அழிக்க தீர்மானிக்கையில்—அதாவது அவருடைய கோபம் மற்றும் அவருடைய மகத்துமானது அவமதிக்கப்படும்போது—அவர் இனியும் தண்டனைகளையோ அல்லது எச்சரிக்கைகளையோ அளிக்கமாட்டார். மாறாக, அவர் நேரடியாக அதை அழிப்பார். அவர் அதை முற்றிலும் காணப்படாமல் போகச் செய்துவிடுவார். இதுவே தேவனுடைய நீதியான மனநிலை.

தேவனுக்கு விரோதமான சோதோமின் தொடர்ச்சியான எதிர்ப்பு மற்றும் விரோதப்போக்கிற்குப் பின்னர் தேவன் அதை முற்றிலும் அழிக்கிறார்

இப்போது நமக்கு தேவனுடைய நீதியான மனநிலையைக் குறித்து ஒரு பொதுவான புரிதல் உள்ளது, நாம் நம்முடைய கவனத்தை சோதோம் பட்டணத்தின் மீது—அதாவது பாவத்தின் பட்டணமாக தேவன் பார்த்த பட்டணத்தின் மீது திருப்பலாம். இந்தப் பட்டணத்தின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வதின் மூலம், தேவன் அதை ஏன் அழிக்க விரும்பினார், அதை ஏன் முற்றிலும் அழிக்க விரும்பினார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும். இதிலிருந்து, நாம் தேவனுடைய நீதியான மனநிலையை அறிந்துகொள்ளலாம்.

ஒரு மனிதக் கண்ணோட்டதிலிருந்து பார்க்கையில், சோதோம் பட்டணமானது மனிதனுடைய விருப்பத்தையும், மனிதனுடைய தீமையையும் முற்றிலும் திருப்திப்படுத்துகிற ஒரு பட்டணமாகும். இசையோடும் மற்றும் ஒவ்வொரு இரவிலும் நடனத்தோடும் நயங்காட்டி, மயக்குகிற அதன் செழிப்பு ஆண்களை மோகத்திற்கும் பைத்தியக்காரத்தனத்துக்கும் தூண்டியது. அதனுடைய தீமை ஜனங்களுடைய இருதயத்தைச் சிதைத்து அவர்களை சீரழிவிற்குள் மயக்கியது. இந்தப் பட்டணம் அசுத்தமும் மற்றும் அசுத்த ஆவிகளாலும் கட்டுக்கடங்காமல் இருந்தது; இது பாவம் மற்றும் கொலை ஆகியவற்றால் சூழப்பட்டு மற்றும் அதன் காற்று இரத்தக்களரியாகவும் துர்நாற்றத்துடனும் தடிமனாக இருந்தது. இது ஜனங்களுடைய இரத்தத்தைக் குளிரச் செய்த ஒரு பட்டணம், இந்தப் பட்டணத்திலிருக்கிற ஒருவர் திகிலுடன் ஒடுங்குகிற ஒரு பட்டணம் இது. இந்தப் பட்டணத்திலிருக்கிற எந்தவொரு மனிதனோ அல்லது மனுஷியோ, இளைஞனோ அல்லது முதியோரோ—மெய் வழியைத் தேடவில்லை; ஒருவரும் வெளிச்சத்திற்காக வாஞ்சிக்கவில்லை அல்லது பாவத்தை விட்டு விலகி நடக்கும் ஏக்கம் கொள்ளவில்லை. அவர்கள் சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள்ளும், சாத்தானுடைய சீர்கேடு மற்றும் வஞ்சகத்தின் கீழேயும் வாழ்ந்தனர், அவர்கள் தங்கள் மனிதத்தன்மையை இழந்திருந்தார்கள், அவர்கள் தங்கள் உணர்வை இழந்திருந்தார்கள், மற்றும் அவர்கள் மனிதனுடைய உண்மையான இலக்கை இழந்திருந்தார்கள். அவர்கள் தேவனுக்கெதிராக எண்ணற்ற பொல்லாத கிரியைகளை செய்திருந்தார்கள்; அவர்கள் அவருடைய வழிநடத்துதலை மறுத்தார்கள் மற்றும் அவருடையச் சித்தத்தை எதிர்த்தார்கள். இந்த ஜனங்களையும், பட்டணத்தையும் மற்றும் அதிலுள்ள ஒவ்வொரு உயிரினங்களையும் அவர்களுடைய பொல்லாத கிரியைகளே அவர்களை அழிவின் பாதைக்குள் படிப்படியாகக் கொண்டுச் சென்றன.

இந்த இரு வசனப்பகுதிகளும் சோதோம் பட்டணத்துச் சீர்கேட்டைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பதிவு செய்யவில்லையென்றாலும், அவர்களுடைய பட்டணத்திற்குள் பிற்பாடு வந்த இந்த தேவனுடைய இரண்டு ஊழியர்களுடனான அவர்களுடைய நடத்தையைப் பதிவு செய்கிறது, சோதோம் ஜனங்கள் எந்த அளவிற்குச் சீர்கேடடைந்திருந்தார்கள், தீயவர்களாயிருந்தார்கள் மற்றும் தேவனை எதிர்த்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஓர் எளிய உண்மை ஒன்று உள்ளது. இதன் மூலம், அந்தப் பட்டணத்து ஜனங்களுடைய உண்மையான முகமும் சாராம்சமும் வெளிப்பட்டது. இந்த ஜனங்கள் தேவனுடைய எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததுமல்லாமல், அவருடைய தண்டனைக்கும் பயப்படவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் தேவனுடைய கோபத்தை இகழ்ந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக தேவனை எதிர்த்தனர். அவர் என்ன செய்தார் அல்லது அவர் எப்படிச் செய்தார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்களுடைய பொல்லாத இயல்பு தீவிரமடைந்து, அவர்கள் தேவனை மீண்டும் மீண்டுமாக எதிர்த்தனர். சோதோமுடைய ஜனங்கள் தேவன் இருக்கிறார் என்பதற்கும், அவருடைய வருகைக்கும், அவருடைய தண்டனைக்கும், மற்றும் மற்ற பலவற்றிற்கும், அவருடைய எச்சரிக்கைகளுக்கும் விரோதமாக இருந்தனர். அவர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்களாக இருந்தனர். அவர்கள் எவர்களை எல்லாம் பட்சிக்க முடியுமோ மற்றும் எவர்களுக்கெல்லாம் தீமை செய்ய முடியுமோ அந்த எல்லா ஜனங்களையும் பட்சித்து, தீமை செய்தனர், மேலும் அவர்கள் தேவனுடைய ஊழியர்களை வேறுவிதமாக நடத்தவில்லை. சோதோம் ஜனங்களால் செய்யப்பட்ட பொல்லாத செயல்களில், தேவனுடைய ஊழியர்களுக்குப் பொல்லாப்புச் செய்வது ஒரு பனிப்பாறையின் நுனியளவு மட்டுமேயாகும், மற்றும் இவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட அவர்களுடைய பொல்லாத இயல்பின் அளவானது உண்மையில் ஒரு பரந்த சமுத்திரத்தின் ஒரு துளிக்கு மேல் இல்லை. ஆகையால் தேவன் அக்கினியால் அவர்களை அழிக்க முடிவு செய்தார். தேவன் ஒரு ஜலப்பிரளயத்தைப் பயன்படுத்தவில்லை, பட்டணத்தை அழிக்க ஒரு சூறாவளி, பூகம்பம், சுனாமி அல்லது வேறு எந்த முறையையும் தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அக்கினியைப் பயன்படுத்தி இந்தப் பட்டணத்தை அழிப்பது எதைக் குறிக்கிறது? இது ஒட்டுமொத்தப் பட்டணத்தின் அழிவைப் பொருள்படுத்துகிறது; இந்தப் பட்டணம் பூமியின் மீதும் மற்றும் ஒரு பட்டணமாக இருப்பதிலிருந்தும் முற்றிலுமாக மறைந்துப்போனதைப் பொருள்படுத்துகிறது. இங்கே “அழிவு” என்பது பட்டணத்தின் வடிவம் மற்றும் அமைப்பு அல்லது வெளிப்புறத் தோற்றம் ஆகியவைகள் மறைந்துப்போவதை மட்டுமே குறிப்பிடுவதில்லை; அந்த பட்டணத்திலுள்ள ஆத்துமாக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதால் அவைகள் இல்லாமல் போய்விட்டதை, முற்றிலும் அழிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. எளிமையாகக் கூறுவதென்றால் பட்டணத்துடன் தொடர்புடைய எல்லா ஜனங்களும், நிகழ்வுகளும், மற்றும் காரியங்களும் அழிக்கப்பட்டன. அங்கே அடுத்த வாழ்க்கையோ அல்லது மறு ஜென்மமோ இருக்காது; தேவன் அவர்களை அவருடைய சிருஷ்டிப்பிலிருந்து மனிதகுலத்தை முழு நித்திய காலத்திற்கும் அழித்துப்போட்டார். அக்கினியைப் பயன்படுத்துவது இந்த இடத்தில் பாவத்தின் முடிவையும் மற்றும் பாவம் அங்கே கட்டுப்படுத்தப்பட்டதையும் குறிக்கிறது; இந்தப் பாவமானது இல்லாமல் போய், பரவுவது நிறுத்தப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், சாத்தானுடைய தீமையானது அதனை வளர்க்கும் மண்ணையும், அது தங்குவதற்கும், வாழ்வதற்கும் தரப்பட்ட கல்லறையையும் இழந்துவிட்டது. தேவனுக்கும் சாத்தானுக்குமிடையேயான யுத்தத்தில், தேவன் அவருடைய வெற்றியின் முத்திரையாக அக்கினியை பயன்படுத்துகிறார், சாத்தானும் அதைக் கொண்டுதான் அடையாளப்படுத்தப்படுகிறான். மனிதர்களைச் சீர்கெடுத்துப் பட்சிப்பதின் மூலம் தேவனை எதிர்ப்பதற்கான இலட்சியத்தில் சோதோமின் அழிவானது சாத்தானுக்கு ஒரு மிகப்பெரிய மோசமான வீழ்ச்சியாகும், மேலும் மனிதன் தேவனுடைய வழிகாட்டுதலை நிராகரித்துத் தன்னைத் தானே கைவிடும்போது, மனிதகுல வளர்ச்சியில் காலத்தின் ஓர் அவமான அடையாளமாக இருக்கிறது. மேலும், இது தேவனுடைய நீதியான மனநிலையின் உண்மையான வெளிப்பாட்டைக் குறித்த ஒரு பதிவாகும்.

வானத்திலிருந்து தேவனால் அனுப்பப்பட்ட அக்கினியானது, சோதோமை வெறும் சாம்பலாக விட்டுச் சென்றது. அதாவது “சோதோம்” என்ற பெயரிடப்பட்ட பட்டணமும் அதிலுள்ள யாவும் இனியும் இல்லாமல் போனது. தேவனுடைய கோபத்தினால் அது அழிக்கப்பட்டு, தேவனுடைய கோபம் மற்றும் மகத்துவத்திற்குள் மறைந்துப்போனது. தேவனுடைய நீதியான மனநிலையின் காரணத்தினால், சோதோம் தன்னுடைய நீதியான தண்டனையையும் அதனுடைய சரியான முடிவையும் பெற்றது. சோதோமினுடைய இருப்பின் முடிவிற்கு அதன் பாவமும், இந்தப் பட்டணத்தையோ அல்லது அதில் வாழ்ந்த ஜனங்களையோ அல்லது அந்தப் பட்டணத்தில் வாழ்ந்த எந்த ஒரு ஜீவனையோ மீண்டும் பார்க்கக்கூடாது என்ற தேவனுடைய விருப்பமும் காரணமாக இருந்தது. “இந்தப் பட்டணத்தை ஒருபோதும் மறுபடியும் பார்க்கக் கூடாது என்ற தேவனுடைய விருப்பமானது” அவருடைய கோபமும் மற்றும் அவருடைய மகத்துவமுமாகும். இந்தப் பட்டணத்தின் துன்மார்க்கமும், பாவமும் அவரைக் கோபப்பட வைத்தப்படியாலும், அதின் மீது வெறுப்பையும் மற்றும் அருவருப்பையும் ஏற்படுத்தினப்படியாலும், தேவன் அதை எரித்துப்போட்டார், மேலும் அதையும் அல்லது அதன் ஜனங்களில் எவரையும் அல்லது அதிலுள்ள உயிரினங்களையும் ஒருபோதும் அவர் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. வெறும் சாம்பலை மட்டும் மீதம் வைத்துவிட்டு, அந்தப் பட்டணம் எரிந்து முடிந்தவுடன், அது தேவனுடைய கண்களிலிருந்து உண்மையாகவே இல்லாமல் போனது; அவருடைய நினைவிலிருந்தும் அது அற்றுப்போனது, அழிக்கப்பட்டது. அதாவது இதன் பொருள் என்னவென்றால் வானத்திலிருந்து அனுப்பப்பட்ட அக்கினியானது சோதோம் பட்டணத்தை அழித்தது மட்டுமல்லாமல், பாவத்தினால் நிறைந்த அந்தப் பட்டணத்திலுள்ள ஜனங்களை அழித்தது மட்டுமல்லாமல், பாவத்தினால் கறைப்பட்ட அந்தப் பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் அழித்தது மட்டுமல்லாமல்; இந்தக் காரியங்களுக்கு அப்பால், மனிதனின் தீமையான நினைவையும் மற்றும் தேவனுக்கு விரோதமான எதிர்ப்பையும் அக்கினியானது அழித்துப்போட்டது. பட்டணத்தை எரிப்பதின் தேவனுடைய நோக்கம் இது தான்.

இந்த மனிதத்தன்மையானது சீர்கேட்டின் உச்சநிலைக்கு மாறிப்போயிருந்தது. இந்த ஜனங்கள் தேவன் யாரென்றும், தாங்கள் எங்கிருந்து வந்தவர்களென்றும் அறியவில்லை. நீங்கள் ஒருவேளை அவர்களுக்கு தேவனைப் பற்றி எடுத்துக்கூறினால் அவர்கள் உங்களை தாக்கக்கூடும், அவதூறு செய்யக் கூடும், மற்றும் தூஷிக்கக் கூடும். தேவனுடைய ஊழியர்கள் அவருடைய எச்சரிக்கையைப் பரப்ப வந்தப்போதும் கூட, இந்தச் சீர்கெட்ட ஜனங்கள் மனந்திரும்புதலின் எந்த அறிகுறியையும் காட்டினதுமில்லை, தங்கள் பொல்லாத நடத்தையைக் கைவிடவுமில்லை, ஆனால் அதற்கு மாறாக, தேவனுடைய ஊழியர்களுக்கு வெட்கமில்லாமல் தீங்கு செய்தனர். அவர்கள் அவர்களுடைய இயல்பையும் மற்றும் தேவனுக்கு எதிரான அபரீதமான விரோதத்தின் சாராம்சத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்தச் சீர்கெட்ட ஜனங்களுடைய தேவனுக்கு விரோதமான எதிர்ப்பானது, அவர்களுடைய சீர்கெட்ட மனநிலையின் வெளிப்பாட்டை விட அதிகமாக இருந்ததை நாம் பார்க்கலாம். இது சத்தியத்தைப் புரிந்துக்கொள்வதின் குறைப்பாட்டிலிருந்து வந்த அவதூறு செய்தல் அல்லது கேலி செய்தல் போன்ற நிழ்வுகளின் சான்றாகும். அவர்களுடைய துன்மார்க்கமான நடத்தைக்கு முட்டாள்தனமோ, அல்லது அறியாமையோ காரணமாகவில்லை; இந்த விதத்தில் அவர்கள் செயல்பட்டது, வஞ்சிக்கப்பட்டதின் காரணத்தால் அல்ல, மற்றும் நிச்சயமாக அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாலும் அல்ல. அவர்களுடைய நடத்தையானது அப்பட்டமான வெட்கக்கேடான விரோத நிலை, எதிர்ப்பு மற்றும் தேவனுக்கு எதிராகக் கூச்சலிடும் நிலையை அடைந்தது. இவ்வகையான மனித நடத்தையானது தேவனைக் கோபப்படுத்தும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை, மேலும் இது அவருடைய மனநிலையைக் கோபப்படுத்தும்—இந்த மனநிலையானது கண்டிப்பாக புண்படுத்தப்படக்கூடாத ஒன்று. ஆகையால் தேவன் தம்முடைய கோபத்தையும், தம்முடைய மகத்துவத்தையும் நேரடியாக மற்றும் வெளிப்படையாகக் கட்டவிழ்த்துவிட்டார்; இது அவருடைய நீதியான மனநிலையின் உண்மையான வெளிப்பாடாகும். பாவத்தினால் நிரம்பி வழிகின்ற ஒரு பட்டணத்தை எதிர்கொண்ட தேவன், அதை விரைவான முறையில் அழிக்கவும் அதினுள்ளிருக்கும் ஜனங்களையும் ஒழிக்கும்படிக்கும், மற்றும் அவர்களுடைய பாவத்தின் முழுமையை ஒரு முழுமையான வழியில் ஒழிக்கவும், இந்தப் பட்டணத்து ஜனங்கள் இல்லாது போகும்படிக்கும் மற்றும் அந்த இடத்திலிருந்து பாவம் பெருகாதபடி தடுக்கவும் விரும்பினார். இதை அவ்வாறு செய்வதற்கான விரைவான மற்றும் முழுமையான வழியானது அதை அக்கினியால் அழித்துவிடுவதாகும். சோதோம் ஜனங்களைப் பற்றிய அவருடைய அணுகுமறையானது கைவிடுவதற்கோ அல்லது புறக்கணிப்பதற்கோ அல்ல. மாறாக அவர் தம்முடைய கோபத்தையும், மகத்துவத்தையும் மற்றும் அதிகாரத்தையும் தண்டிப்பதற்குப் பயன்படுத்தினார், அடித்து கீழே தள்ளி மற்றும் இந்த ஜனங்களை முற்றிலுமாக அழிக்கவும் பயன்படுத்தினார். அவர்கள் மீதான அவருடைய அணுகுமுறையானது வெறும் சரீர அழிவாக மட்டுமல்லாமல், அவர்களுடைய ஆத்தும அழிவாகவும், மற்றும் நித்திய அழிவாகவும் இருந்தது. “இல்லாது போதல்” என்ற வார்த்தைகளால் தேவன் குறிப்பிடும் உண்மையான அர்த்தம் இது தான்.

தேவனுடைய கோபம் மனிதனுக்கு மறைவாகவும் அறியப்படாததாகவும் இருந்தாலும், அது எந்த அவமதிப்பையும் சகித்துக் கொள்வதில்லை

புத்தியீனமும், அறிவற்றதுமாக இருக்கும் மனுக்குலம் முழுவதையும் தேவன் நடத்தும் விதமானது இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை முதன்மையாகச் சார்ந்துள்ளது. மறுபுறத்தில் அவருடைய கோபம் பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான சம்பவங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அது மனிதனுக்குத் தெரியாமல் இருக்கிறது. இதன் விளைவாக, தேவனுடைய கோபத்தின் வெளிப்பாட்டைப் பார்ப்பதும், அவருடைய கோபத்தைப் புரிந்து கொள்வதும் மனிதனுக்குக் கடினமாகிறது. இதனால் மனிதன் தேவனுடைய கோபத்தை முக்கியமானதாகக் கருதுவதில்லை. மனிதனுக்கான தேவனுடைய கடைசி கிரியையும் சகிப்புத்தன்மையின் படியையும் மற்றும் மன்னிப்பின் நடவடிக்கையையும் மனிதன் காணும்போது, அதாவது தேவனுடைய இரக்கத்தின் கடைசி நிகழ்வு மற்றும் அவருடைய கடைசி எச்சரிப்பு மனுக்குலம் மேல் வரும்போது, இன்னும் ஜனங்கள் தேவனை எதிர்க்கும் அதே முறைமைகளைப் பயன்படுத்தி மனந்திரும்புவதற்கும், தங்கள் வழிகளைச் சீரமைப்பதற்கும், அவருடைய இரக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தால், தேவன் தன்னுடைய சகிப்புத்தன்மையையும் அவருடைய பொறுமையையும் இனிமேல் ஜனங்களுக்கு அளிக்க மாட்டார். மாறாக, இந்த நேரத்தில் தேவன் தன்னுடைய இரக்கத்தைத் திரும்பப் பெற்று விடுவார். இதைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய கோபத்தை மட்டுமே அனுப்புவார். எப்படி அவரால் ஜனங்களைத் தண்டிக்கவும், அவர்களை அழிக்கவும் வெவ்வேறான வழிமுறைகளைப் பயன்படுத்த முடியுமோ, அப்படியே அவரால் தன்னுடைய கோபத்தையும் பல வழிகளில் வெளிப்படுத்த முடியும்.

சோதோம் பட்டணத்தை அழிக்க தேவன் அக்கினியைப் பயன்படுத்தினார். இது ஒரு மனித இனத்தையோ அல்லது வேறொன்றையோ முற்றிலுமாக அழிக்கப் பயன்படுத்தும் அவரின் விரைவான வழிமுறையாகும். சோதோமின் ஜனங்களை எரிப்பது அவர்களுடைய மாம்ச சரீரத்தை அழித்ததை விட, அவர்களுடைய ஆவிகளின் முழுமையையும், அவர்களுடைய ஆத்துமாக்களையும், அவர்களுடைய சரீரங்களையும் அழித்துப்போட்டது. மேலும் இது பட்டணத்திற்குள்ளிருந்த ஜனங்கள் பொருள் உலகம் மற்றும் மனிதன் காணக்கூடாத உலகம் இரண்டிலும் வாழ்வதை நிறுத்துவார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது தேவன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும், தெரிவிக்கும் ஒரு வழிமுறையாகும். இவ்வகை வெளிப்படுத்துதலும், தெரிவித்தலும், தேவனுடைய கோபத்தின் சாராம்சத்தின் ஓர் அம்சமாகும். மேலும் இது இயல்பாகவே தேவனுடைய நீதியான மனநிலையின் சாராம்சத்தின் வெளிப்பாடுமாகும். தேவன் தன்னுடைய கோபத்தை அனுப்பும்போது, அவர் எந்த ஓர் இரக்கத்தையோ அல்லது கிருபையையோ வெளிப்படுத்துவதை நிறுத்திவிடுகிறார். மேலும் அவர் தன்னுடைய சகிப்புத்தன்மையையோ அல்லது பொறுமையையோ இனி ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. தொடர்ந்து பொறுமையாக இருக்கவும், அவருடைய இரக்கத்தை மீண்டும் வழங்கவும், அவருடைய சகிப்புத்தன்மையை மீண்டும் ஒருமுறை அளிக்கவும் அவரை வற்புறுத்தக்கூடிய ஒரு நபரோ, காரியமோ அல்லது காரணமோ இல்லை. இந்தக் காரியங்களுக்குப் பதிலாக, தேவன் ஒரு நொடி தாமதமின்றி தம்முடைய கோபத்தையும் மகத்துவத்தையும் அனுப்பித் தான் விரும்புவதைச் செய்கிறார். அவர் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப இந்தக் காரியங்களை மிக விரைவான, தெளிவான வகையில் செய்வார். இதுதான் தேவன் தனது கோபத்தையும் மகத்துவத்தையும் அனுப்பும் வழிமுறையாகும், மனிதன் இதை அவமதிக்கக் கூடாது. மேலும் இது அவருடைய நீதியான மனநிலையின் ஓர் அம்சத்தின் வெளிப்பாடாகும். தேவன் மனிதனிடம் அக்கறையையும் அன்பையும் காட்டுவதை ஜனங்கள் காணும்போது, அவர்களால் அவருடைய கோபத்தைக் கண்டறியவோ, அவருடைய மகத்துவத்தைக் காணவோ அல்லது அவமதிப்பைக் குறித்த அவரது சகிப்புத்தன்மையின்மையை உணரவோ முடிவதில்லை. இந்தக் காரியங்கள் தேவனின் நீதியான மனநிலையானது இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் அன்பு ஆகியவற்றால் மட்டுமே ஆனது என்று மக்கள் நம்புவதற்கு எப்போதும் வழிவகுத்துள்ளன. ஆயினும், தேவன் ஒரு நகரத்தை அழிப்பதையோ அல்லது மனிதகுலத்தை வெறுப்பதையோ ஒருவர் காணும்போது, மனிதனை அழிப்பதில் அவரின் கடுங்கோபமும், அவரின் மகத்துவமும் அவருடைய நீதியான மனநிலையின் மறுபக்கத்தைக் கணப்பொழுது பார்க்க மக்களை அனுமதிக்கின்றன. இது அவமதிப்பைக் குறித்த தேவனுடைய சகிப்புத்தன்மை இன்மை ஆகும். எந்தவொரு அவமதிப்பையும் சகித்துக்கொள்ளாத தேவனின் மனநிலை, எந்தவொரு சிருஷ்டிப்பின் கற்பனையையும் மிஞ்சுகிறது, மற்றும் சிருஷ்டிக்கப்படாதவைகளின் நடுவே, ஒன்று கூட அதில் குறுக்கிடவோ அல்லது அதைப் பாதிக்கவோ இயலாது; இன்னும் அதை ஆள் மாறாட்டம் செய்யவோ அல்லது அதைப் போல பாசாங்கு செய்யவோ முடியாது. ஆகவே, தேவனின் மனநிலையின் இந்த அம்சம் மனிதகுலம் மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். தேவனிடத்தில் மட்டுமே இவ்வகையான தன்மை உள்ளது, மேலும் தேவன் மட்டுமே இவ்வகையான மனநிலையைக் கொண்டிருக்கிறார். தேவன் இந்த வகையான நீதியுள்ள தன்மையைக் கொண்டிருக்கிறார், ஏனென்றால் அவர் துன்மார்க்கம், இருள், கலகத்தன்மை ஆகியவற்றையும் மற்றும் மனிதகுலத்தைக் கெடுத்து, பட்சிக்கும் சாத்தானின் பொல்லாத செயல்களையும் அறவே வெறுக்கிறார். ஏனென்றால், அவருக்கு எதிரான எல்லாப் பாவச்செயல்களையும் அவர் வெறுப்பதாலும், மேலும் அவருடைய பரிசுத்த மற்றும் கறையில்லாத சாராம்சத்தினாலுமே ஆகும். இதன் காரணமாகவே, சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்த ஒன்றும் அவரை வெளிப்படையாக எதிர்ப்பதை அல்லது விரோதிப்பதை, அவர் பொறுத்துக் கொள்ள மாட்டார். ஒரு முறை தனது இரக்கத்தைக் காண்பித்த ஒரு நபரோ அல்லது அவர் தெரிந்து கொண்ட ஒருவரோ கூட, அவருடைய மனநிலைக்கு எரிச்சலுண்டாக்கி, அவருடைய பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையின் கோட்பாடுகளை மீறினால், தேவன் ஒரு துளி இரக்கமும் தயக்கமும் இல்லாமல், அவமதிப்பைத் தாங்கிக் கொள்ளாத தன்னுடைய நீதியான மனநிலையைக் கட்டவிழ்த்து, அதை வெளிப்படுத்துவார்.

எல்லா நீதியான வல்லமைகளுக்கும், எல்லா நேர்மறையான காரியங்களுக்கும் தேவனுடைய கோபம் ஒரு பாதுகாப்பாகும்

தேவனின் பேச்சு, எண்ணங்கள் மற்றும் கிரியைகளின் இந்த எடுத்துக்காட்டுகளைப் புரிந்துகொள்வதினால், மனிதனால் அவமதிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ளாத தேவனின் நீதியான மனநிலையை உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? சுருக்கமாகக் கூறினால், மனிதனால் அதை எவ்வளவு புரிந்துகொள்ள முடியும் என்பது ஒரு பொருட்டே அல்ல, இது தேவனுக்கே உரிய மனநிலையின் ஓர் அம்சமாகும், இது அவருக்கு தனித்துவமானதாகும். அவமதிப்பைக் குறித்த தேவனின் சகிப்பின்மையானது அவரது தனித்துவமான சாராம்சமாகும்; தேவனின் கோபம் அவருடைய தனித்துவமான மனநிலை ஆகும்; தேவனின் மகத்துவம் அவருடைய தனித்துவமான சாராம்சமாகும். தேவனுடைய கோபத்தின் பின்னால் இருக்கும் கோட்பாடானது, அவர் மட்டுமே கொண்டிருக்கும் அவருடைய அடையாளம் மற்றும் அவருடைய தகுநிலையின் சான்றாகும். இந்தக் கோட்பாடானது தனித்துவமான தேவனுடைய சாராம்சத்தின் அடையாளமுமாகும் என்பது தெளிவாகிறது. தேவனுடைய மனநிலையானது அவருடைய இயல்பான சாராம்சமாகும், இது காலப்போக்கில் ஒருபோதும் மாறாது, புவியியல் இருப்பிடத்தின் மாற்றங்களால் மாற்றமுமடையாது. அவருடைய இயல்பான மனநிலையே அவரின் உண்மையான சாராம்சமாகும். அவர் யார் மீது தன்னுடைய கிரியையையை நடப்பிக்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய சாராம்சமானது மாறாது, அவருடைய நீதியான மனநிலையும் மாறாது. ஒருவர் தேவனைக் கோபப்படுத்தும்போது, தேவன் தன்னுடைய இயல்பான மனநிலையை வெளிப்படுத்துகிறார்; இந்த நேரத்தில் அவருடைய கோபத்தின் பின்னால் இருக்கும் கோட்பாடானது மாறுவதில்லை, அவருடைய தனித்துவமான அடையாளமும், நிலைப்பாடும் கூட மாறுவதில்லை. அவர் தனது சாராம்சத்தின் மாறுதலின் காரணமாகவோ அல்லது அவரது மனநிலையிலிருந்து வேறுபட்ட காரியங்கள் எழுவதாலோ அவர் கோபப்படுவதில்லை, ஆனால் தனக்கு எதிரான மனிதனின் எதிர்ப்பு அவருடைய மனநிலையைப் புண்படுத்துகிறது. மனிதன் தேவனைப் படு மோசமாகக் கோபமூட்டுவது, தேவனுடைய சொந்தமான அடையாளத்திற்கும், நிலைப்பாட்டுக்கும் கடுமையான சவாலாகும். தேவனின் பார்வையில், மனிதன் அவருக்குச் சவால் விடும்போது, மனிதன் அவருடன் போட்டியிட்டு, அவரது கோபத்தைச் சோதிக்கிறான். மனிதன் தேவனை எதிர்க்கும்போது, மனிதன் தேவனுடன் போட்டியிடும்போது, மனிதன் தொடர்ந்து தேவனுடைய கோபத்தைச் சோதிக்கும்போது—இப்படிப்பட்ட நேரங்களில் பாவமானது கட்டுக்கடங்காமல் போகிறது, தேவனுடைய கோபம் இயற்கையாகவே வெளிப்பட்டு, தோன்றத் தொடங்குகிறது. எனவே, தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது எல்லா பொல்லாத வல்லமைகளும் இருக்கப் போவதில்லை என்பதற்கான அடையாளமாகும். மேலும் அது எல்லா எதிரான வல்லமைகளும் அழிக்கப்படும் என்பதற்கான அடையாளமாகும். இது தேவனுடைய நீதியான மனநிலை மற்றும் தேவனுடைய கோபத்தின் தனித்தன்மையாகும். தேவனுடைய மகத்துவமும் பரிசுத்தமும் மறுக்கப்பட்டு, நீதியின் வல்லமைகள் தடை செய்யப்பட்டு, மனிதனால் பார்க்க முடியாமல் இருக்கும் போது, தேவன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவார். தேவனுடைய சாராம்சத்தினால், தேவனை விரோதிக்கிற, அவரை எதிர்க்கிற, அவருடன் வாதாடுகிற, பூமியில் இருக்கும் எல்லா வல்லமைகளும் பொல்லாதவைகளாக, கலகத்தன்மையுள்ளவைகளாக, அநீதியுள்ளவைகளாக இருக்கிறன. அவை சாத்தானிடத்திலிருந்து வருகிறதாகவும், சாத்தானுடையதாகவும் இருக்கின்றன. தேவன் நீதி உள்ளவராகவும், ஒளியானவராகவும், மாசற்ற பரிசுத்தராகவும் இருப்பதால், பொல்லாதவைகளாகக், கலகத்தன்மையுள்ளவைகளாகச், சாத்தானுக்குச் சொந்தமானதாக இருக்கிற எல்லா காரியங்களும், தேவனுடைய கோபம் கட்டவிழ்க்கப்படும் போது மறைந்து விடும்.

தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது, அவருடைய நீதியான மனநிலையின் வெளிப்பாட்டின் ஓர் அம்சம் என்றாலும், தேவனுடைய கோபம் எந்த வகையிலும் அதன் இலக்கைப் பற்றி கண்மூடித்தனமானதாகவும் இல்லை, கோட்பாடில்லாததாகவும் இல்லை. மாறாக, தேவன் சீக்கிரத்தில் கோபம் கொள்ளமாட்டார், அவருடைய கோபத்தையும் மகத்துவத்தையும் சுலபமாக வெளிப்படுத்தவுமாட்டார். மேலும், தேவனுடைய கோபம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அளவிடப்பட்டதாகவும் இருக்கிறது. மனிதன் எப்படி கோபத்தில் பற்றி எரிவானோ அல்லது கோபத்தை வெளிப்படுத்துவானோ என்பதோடு அதனை ஒப்பிடவே முடியாது. மனிதனுக்கும் தேவனுக்கும் இடையிலான பல உரையாடல்கள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிற சில தனிமனிதர்களின் வார்த்தைகள் மேலோட்டமாகவும், அறிவில்லாததாகவும், குழந்தைகளுக்குரியதாவும் இருந்தன, ஆனால் தேவன் அவர்களை அடித்துக் கீழே தள்ளவில்லை, அவர்களை ஆக்கினைக்குள்ளாக்கவும் இல்லை. குறிப்பாக, யோபுவினுடைய சோதனையின் போது, யோபுவின் மூன்று நண்பர்களும் மற்றவர்களும் அவரிடம் பேசின வார்த்தைகளைக் கேட்டபின், யேகோவா தேவன் அவர்களை எவ்வாறு கையாண்டார்? தேவன் அவர்களை ஆக்கினைக்குள்ளாக்கினாரா? அவர்களிடம் கோபப்பட்டாரா? அப்படி எதுவும் அவர் செய்யவில்லை! மாறாக, அவர் யோபுவிடம் அவர்கள் சார்பில் வேண்டுதல் செய்யவும், அவர்களுக்காக ஜெபிக்குமாறும் கூறினார். மேலும் அவர்களுடைய தவறுகளால் தேவன் தாமே பாதிக்கப்படவில்லை. இந்த எல்லா நிகழ்வுகளும் கலகத்தன்மையும், அறியாமையும் உள்ள மனுக்குலத்தைத் தேவன் கையாளும் முக்கிய மனப்பான்மையைக் குறிக்கின்றன. எனவே தேவனுடைய கோபத்தைக் கட்டவிழ்த்துவிடுவது எந்த வகையிலும் அவருடைய மனநிலையின் வெளிப்பாடும் அல்ல, அவருடைய உணர்ச்சிகளுக்கு வழி உண்டாக்கும் அவருடைய வழிமுறையும் அல்ல. மனிதனுடைய தவறான புரிதலுக்கு மாறாக, தேவனுடைய கோபமானது கடுங்கோபத்தின் முழுமையான சீற்றம் அல்ல. தேவனால் தன்னுடைய சொந்த மனநிலையைக் கட்டுப்படுத்த இயலாததாலோ அல்லது அவருடைய கோபம் கொதிநிலையை அடைந்து வெளியேற வேண்டியிருப்பதாலோ, அவர் தம் கோபத்தைக் கட்டவிழ்த்து விடுவதில்லை. மாறாக, அவருடைய கோபமானது அவருடைய நீதியான மனநிலையின் காட்சியுமாகும், உண்மையான வெளிப்பாடுமாகும். மேலும் அது அவருடைய பரிசுத்த சாராம்சத்தின் அடையாளமான வெளிப்பாடாகும். தேவன் கோபமாய் இருக்கிறார், அவர் அவமதிக்கப்படுவதைச் சகித்துக் கொள்வதில்லை, இதைச் சொல்வதினால் தேவனுடைய கோபம் காரணங்களிடையே பகுத்தறியாமல் அல்லது கோட்பாடில்லாமல் இருக்கிறது என்று அர்த்தமல்ல. சீர்கெட்ட மனித இனமே கோட்பாடில்லாத, காரணங்களுக்கு இடையே வித்தியாசப்படுத்தாதும், திடீரென வெடித்துச்சீறும் சீரற்ற கோபத்தின் மேல் பிரத்தியேகமான கோரிக்கைகளை கொண்டதாகும். ஒரு மனிதனுக்கு அந்தஸ்து கிடைத்ததும், அவனுக்குத் தன் மனநிலையைக் கட்டுப்படுத்துவது பெரும்பாலும் கடினமாகிறது, அதனால் அவன் அதிருப்தியை வெளிப்படுத்தவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், வாய்ப்புகளைத் துரிதமாய் பயன்படுத்திக் கொள்வதில் இன்பங்கொள்ளுகிறான்; அவன் தனது திறனை வெளிப்படுத்த, தெளிவான காரணமின்றி அடிக்கடி கோபத்தில் பற்றியெரிந்து, தன் அந்தஸ்தும், அடையாளமும் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவை என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவான். நிச்சயமாக, எந்தவொரு அந்தஸ்தும் இல்லாத சீர்கெட்ட ஜனங்கள் பெரும்பாலும் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு அடிக்கடி கோபம் ஏற்படுகிறது. தங்கள் சொந்த அந்தஸ்தையும் மேன்மையையும் பாதுகாப்பதற்காக, அவர்கள் அடிக்கடி தங்கள் உணர்ச்சிகளையும், அவர்களின் ஆணவத் தன்மையையும் வெளிப்படுத்துகிறார்கள். பாவத்தை அழியாமல் காக்கவும், நிலைநிறுத்தவும் மனிதன் கோபத்தில் பற்றியெரிந்து, தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவான். மேலும் இந்தச் செயல்கள் மனிதன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வழிமுறைகளாகும்; அவை அசுத்தங்களாலும், திட்டங்களாலும், சூழ்ச்சிகளாலும், மனிதனின் சீர்கேடுகளாலும் மற்றும் தீமைகளாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவை மனிதனின் காட்டுத்தனமான லட்சியங்களாலும், விருப்பங்களாலும் நிரம்பியிருக்கின்றன. நீதி துன்மார்க்கத்துடன் மோதுகையில், நீதியை அழியாமல் பாதுகாப்பதில் அல்லது அதை நிலைநிறுத்துவதில் மனிதனின் கோபம் பற்றியெரியாது; மாறாக, நீதியின் வல்லமைகள் அச்சுறுத்தப்படுகையில், துன்புறுத்தப்படுகையில், தாக்கப்படுகையில், மனிதனின் மனப்பான்மையானது, கண்டும் காணாதது போல், நழுவுகிறதாய் அல்லது விலகிச் செல்வதுமாய் இருக்கிறது. இருப்பினும், அசுத்த வல்லமைகளை எதிர்கொள்ளும்போது, மனிதனின் மனப்பான்மை இடமளிப்பதாகவும், பணிந்து போவதாகவும், கைக்கொள்வதாகவும் இருக்கிறது. ஆகையால், மனிதனின் வெளிப்படுத்தும் தன்மையானது அசுத்த வல்லமைகளுக்கு ஒரு தப்பிச் செல்லும் வழியாகும். மேலும் அது மாம்ச மனிதனின் கட்டுப்பாடற்ற, தடுக்க இயலாத, தீய நடத்தையின் வெளிப்பாடாகும். தேவன் தன்னுடைய கோபத்தை அனுப்பும்போது எப்படியாயினும் எல்லா பொல்லாத வல்லமைகளும் செயலிழக்கப்படும், மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் எல்லா பாவங்களும் கட்டுப்படுத்தப்படும், தேவனுடைய கிரியையைத் தடைசெய்யும் எல்லா எதிரான வல்லமைகளும் வெளிப்படையாக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, சபிக்கப்பட்டு, மேலும் தேவனை எதிர்க்கிற சாத்தானுடைய உடந்தையாளர்களும் தண்டிக்கப்பட்டு, வேரறுக்கப்படுவார்கள். அவர்களுடைய இடத்தில், தேவனுடைய கிரியை எந்தத் தடையுமின்றி தொடரும், தேவனுடைய நிர்வாகத் திட்டம் திட்டமிட்டபடி படிப்படியாகத் தொடர்ந்து வளர்ச்சியுறும். மேலும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் சாத்தானுடைய தொல்லைகளிலிருந்தும் வஞ்சகத்திலிருந்தும் விடுதலையாக்கப்படுவார்கள். மேலும் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் தேவனுடைய தலைமைத்துவத்தையும், ஏற்பாடுகளையும் கலக்கமற்ற, சமாதானமான சூழ்நிலைகளின் நடுவில் அனுபவிப்பார்கள். தேவனுடைய கோபமானது தீய வல்லமைகள் பெருகிக் கட்டுப்பாடற்றுப் போவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கிறது. மேலும் அது நீதியான, நேர்மறையான காரியங்களின் இருப்பையும், பெருக்கத்தையும் பாதுகாக்கும் ஒன்றாகும். மேலும் அவைகளை ஒடுக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் நித்தியமாய்ப் பாதுகாக்குகிறது.

தேவன் சோதோமை அழித்ததில் அவருடைய கோபத்தின் சாராம்சத்தை நீங்கள் பார்க்க முடிகிறதா? அவருடைய கோபத்தில் வேறு ஏதேனும் கலந்துள்ளதா? தேவனுடைய கோபம் தூய்மையானதா? மனிதனுடைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமானால், தேவனுடைய கோபம் கலப்படமில்லாததா? அவரின் கோபத்தின் பின்னால் ஏதாவது வஞ்சகம் இருக்கிறதா? ஏதாவது சதித்திட்டம் இருக்கிறதா? ஏதாவது சொல்லொணா இரகசியங்கள் இருக்கின்றனவா? என்னால் உங்களுக்கு உறுதியாகவும் வலியுறுத்தியும் சொல்ல முடியும். தேவனுடைய கோபத்தில் ஒரு பகுதி கூட ஒருவரைச் சந்தேகத்திற்கு நேராய் நடத்தாது. அவருடைய கோபம் தூய்மையானது, வேறு எந்த உள்நோக்கங்களையும், இலக்குகளையும் அது மறைத்து வைத்திராத கலப்படமில்லாத கோபமாகும். அவருடைய கோபத்திற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் தூய்மையானதும், குற்றமற்றதும் மற்றும் விமர்சனங்களுக்கு மேற்பட்டதுமாகும். அது அவரது பரிசுத்த சாராம்சத்தின் இயல்பான வெளிப்பாடும், காட்சியமைவும் ஆகும். இது எல்லா சிருஷ்டிப்புகளும் கொண்டிராத ஒன்றாகும். இது தேவனின் தனித்துவமான, நீதியான மனநிலையின் ஒரு பகுதியாகும். மேலும் இது சிருஷ்டிகர் மற்றும் அவரின் சிருஷ்டிப்புகளுக்குரிய சாராம்சங்களின் இடையே உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசமுமாகும்.

ஒரு நபர் மற்றவர்களின் பார்வைக்கு முன்னால் அல்லது அவர்கள் முதுகுக்குப் பின்னால் கோபப்படுகிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கோபத்திற்கு வெவ்வேறு உள்நோக்கமும் குறிக்கோளும் உள்ளன. ஒருவேளை அவர்கள் தனது சொந்த கவுரவத்தை நிலைநாட்டலாம், அல்லது தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கலாம், தன்னைப் பற்றின மற்றவர்களின் எண்ணங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கலாம் அல்லது தங்கள் மரியாதையைப் பேணிக் கொண்டிருக்கலாம். சிலர் தங்கள் கோபத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறார்கள், அதே சமயம் சிலர் மிகுந்த கோபமுற்று தாங்கள் விரும்பும்போதெல்லாம், துளியும் நிதானமின்றி தங்களுடைய கோபம் பற்றியெரிய இடங்கொடுக்கிறார்கள். சுருக்கமாகக் கூறுவதென்றால், மனிதனுடைய கோபம் அவனுடைய சீர்கேடான மனநிலையிலிருந்து உருவாகிறது. அதன் நோக்கம் எதுவாக இருப்பினும், அது மாம்சத்துக்குரியதும், இயல்பானதும் ஆகும். இதற்கு நீதி அல்லது அநீதியுடன் எந்த தொடர்பும் இல்லை, ஏனெனில் மனிதனின் இயல்பு மற்றும் சாராம்சம் எதுவும் சத்தியத்திற்கு ஒத்திருப்பதில்லை. எனவே, சீர்கேடான மனிதகுலத்தின் கோபமும் தேவனின் கோபமும் ஒருசேர குறிப்பிடப்படலாகாது. விதிவிலக்கில்லாமல், சாத்தானால் கெடுக்கப்பட்ட ஒரு மனிதனின் நடத்தை சீர்கேட்டைப் பாதுகாக்கும் விருப்பத்துடன் தொடங்குகிறது, மேலும் அது, உண்மையில் சீர்கேட்டை அடிப்படையாகக் கொண்டது; இதனாலேயே மனிதனுடைய கோபம் கோட்பாட்டில் எவ்வளவு சரியானதாகத் தோன்றினாலும், தேவனுடைய கோபமும் மனிதனுடைய கோபமும் ஒருசேர குறிப்பிடப்படலாகாது. தேவன் தனது கடுங்கோபத்தை அனுப்பும்போது, அசுத்த வல்லமைகள் தடுக்கப்படுகின்றன மற்றும் அசுத்த காரியங்கள் அழிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் நியாயமான மற்றும் நேர்மறையான விஷயங்கள் தேவனின் கவனிப்பைப், பாதுகாப்பை அனுபவிக்கவும், தொடரவும் அனுமதிக்கப்படுகின்றன. அநீதியான, எதிர்மறையான மற்றும் அசுத்தமான காரியங்கள் நீதியான, நேர்மறையான, காரியங்களின் இயல்பான செயல்பாடுகளைத் தடை செய்வதால், தொந்தரவு செய்வதால் அல்லது சேதப்படுத்துவதால் தேவன் தன்னுடைய கோபத்தை அனுப்புகிறார். தன்னுடைய சொந்த அந்தஸ்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பது தேவகோபத்தின் நோக்கமல்ல, மாறாக நியாயமான, நேர்மறையான, அழகான மற்றும் நல்ல விஷயங்களின் இருப்பைப் பாதுகாப்பதும், மனிதகுலத்தின் இயல்பான உயிர்வாழ்வின் சட்டங்களையும் ஒழுங்கையும் பாதுகாப்பதுமேயாகும். இதுவே தேவகோபத்தின் மூலகாரணமாகும். தேவனுடைய கோபம் மிகச் சரியானதும், இயல்பானதும், அவருடைய மனநிலையின் உண்மையான வெளிப்பாடும் ஆகும். அவருடைய கோபத்தில் எந்த ஓர் இரகசியமான நோக்கங்களும் இல்லை, எந்த ஒரு வஞ்சகமோ அல்லது சதித்திட்டமுமோ இல்லை, இன்னும் அழுத்தமான விருப்பங்கள், தந்திரங்கள், குரோதங்கள், வன்முறை, அசுத்தமான அல்லது எந்த ஒரு சீர்கேடான மனித இனத்தின் மற்ற பங்கான பண்புகளும் இல்லை. தேவன் தனது கோபத்தை அனுப்புவதற்கு முன்பு, ஒவ்வொரு விஷயத்தின் சாராம்சத்தையும் அவர் ஏற்கனவே மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் உணர்ந்தறிந்திருக்கிறார். மேலும் அவர் ஏற்கனவே துல்லியமான, தெளிவான வரையறைகளையும் முடிவுகளையும் வகுத்திருக்கிறார். இப்படி, அவர் செய்யும் எல்லாவற்றிலும், தேவனுடைய நோக்கம் அவருடைய மனப்பாங்கைப் போலவே மிகத் தெளிவானதாகும். அவர் குழப்பமானவரோ, கண்மூடித்தனமானவரோ, உணர்ச்சிவசப்படுபவரோ, அல்லது கவனக்குறைவு கொண்டவரோ அல்லர், மேலும் அவர் நிச்சயமாக கோட்பாடில்லாதவரும் அல்ல. இது தேவனுடைய கோபத்தின் நடைமுறை அம்சமாகும், மேலும் தேவனுடைய கோபத்தின் இந்த நடைமுறை அம்சத்தின் காரணமாகவே மனிதகுலம் அதன் இயல்பான இருப்பை அடைந்துள்ளது. தேவனுடைய கோபம் இல்லாவிட்டால், மனுக்குலம் அசாதாரணமான வாழ்க்கை சூழ்நிலைகளில் இறங்கியிருக்கும். மேலும் எல்லா நீதியான, அழகான, நல்ல காரியங்களும் அழிக்கப்பட்டு, இல்லாமல் போயிருக்கும். தேவனுடைய கோபம் இல்லாவிட்டால், சிருஷ்டிக்கப்பட்ட உயிர்களுக்கான இருப்புச் சட்டங்களும் ஒழுங்குகளும் உடைக்கப்பட்டு அல்லது முற்றிலுமாகக்கூட அழிக்கப்பட்டிருக்கும். மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து, மனிதகுலத்தின் இயல்பான இருப்பைப் பாதுகாக்கவும், தாங்கவும் தேவன் தொடர்ந்து தனது நீதியான மனநிலையைப் பயன்படுத்தினார். அவருடைய நீதியான மனநிலையில் கோபமும் மகத்துவமும் இருப்பதால், எல்லா பொல்லாத மனிதர்களும், விஷயங்களும், பொருட்களும், மனிதகுலத்தின் இயல்பான இருப்பைத் தொந்தரவு செய்யும் மற்றும் சேதப்படுத்தும் அனைத்து காரியங்களும், அவருடைய கோபத்தின் விளைவாக தண்டிக்கப்படுகின்றன, கட்டுப்படுத்தப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன. கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக, தேவனை எதிர்க்கும் மற்றும் மனிதகுலத்தை நிர்வகிக்கும் தேவனின் கிரியையில் சாத்தானின் கூட்டாளிகளாகவும், வேலையாட்களாகவும் செயல்படும் அனைத்து வகையான அசுத்தமான மற்றும் பொல்லாத ஆவிகளை அடித்துக் கீழே தள்ளி, அழிப்பதற்கு தேவன் தொடர்ந்து தனது நீதியான மனநிலையைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு, மனிதனுடைய இரட்சிப்புக்கான தேவனுடைய கிரியை எப்போதும் அவருடைய திட்டத்தின்படி முன்னேறியுள்ளது. அதாவது தேவனுடைய கோபம் இருப்பதால், மனிதர்களின் மிக நீதியான காரணங்கள் ஒருபோதும் அழிக்கப்படவில்லை.

தேவனுடைய கோபத்தின் சாராம்சம் பற்றி இப்போது உங்களுக்கு ஒரு புரிதல் உள்ளதால், சாத்தானின் தீமையை எவ்வாறு இனங்காணுவது என்பதைப் பற்றி நிச்சயம் நீங்கள் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்!

சாத்தான் மனிதாபிமானமுடையதாக, நியாயமானதாக, நல்லொழுக்கமுடையதாகத் தோன்றினாலும், சாத்தானின் சாராம்சம் கொடூரமானதும் பொல்லாங்கானதுமாகும்

ஜனங்களை வஞ்சிப்பதின் மூலம் சாத்தான் தன் மதிப்பை வளர்த்துக் கொள்கிறான், மேலும் பெரும்பாலும் தன்னை ஒரு முன்னணியாகவும் மற்றும் நீதியின் முன்மாதிரியாகவும் நிலைநிறுத்துகிறான். நீதியைப் பாதுகாக்கும் பொய்யான பாசாங்கில், அவன் ஜனங்களுக்குத் தீங்கு செய்கிறான், மக்களின் ஆத்துமாக்களைப் பட்சிக்கிறான், மக்களை உணர்ச்சியிழக்கவும், வஞ்சிக்கவும், தூண்டிவிடவும் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறான். மனிதனைத் தன்னுடைய தீய நடத்தையை ஏற்றுக்கொள்ளச் செய்து, தன்னுடன் இணையச் செய்து மற்றும் தன்னுடன் இணைந்து தேவனுடைய அதிகாரத்தையும் ராஜரீகத்தையும் எதிர்க்கச் செய்வதுமே அவனுடைய இலக்காகும். இருப்பினும், ஒருவர் அவனுடைய திட்டங்கள் மற்றும் சதிகளினூடாய்ப் பார்க்கும்போது, அவனுடைய மோசமான அம்சங்களினூடாய்ப் பார்க்கும்போது, ஒருவர் தொடர்ந்து மிதிக்கப்படுவதற்கும், அவனால் முட்டாளாக்கப்படுவதற்கும் அல்லது அவனால் அடிமைப்படுத்தப்படுவதற்கும், அல்லது அவனுடன் சேர்ந்து தண்டிக்கப்பட்டு, அழிக்கப்படுவதற்கு விரும்பாதபோதும், சாத்தான் தன் முந்தைய புனிதர் போன்ற அம்சங்களை மாற்றி, தன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும்படிக்கு, தன் தீய, கொடூரமான, அருவருப்பான மற்றும் காட்டுமிராண்டித்தனமான, போலியான முகமூடியைக் கிழித்துப் போடுகிறான். அவனைப் பின்பற்ற மறுக்கும் மற்றும் அவனுடைய தீய வல்லமைகளை எதிர்ப்பவர் அனைவரையும் அடியோடு அழிப்பதைத் தவிர வேறொன்றையும் அவன் விரும்ப மாட்டான். இந்தக் கட்டத்தில் சாத்தான் இனி நம்பகமான, மென்மையான தோற்றத்தைக் கொண்டவனாகப் பாவனை செய்ய முடியாது; அதற்குப் பதிலாக, அவனுடைய உண்மையான, அருவருப்பான மற்றும் பிசாசின் அம்சங்கள், ஆட்டுத்தோல் போர்த்தியிருப்பவையாக வெளிப்படுகின்றன. சாத்தானின் திட்டங்கள் வெளிச்சத்திற்கு வந்ததும், அவனின் உண்மையான அம்சங்கள் அம்பலப்படுத்தப்பட்டதும், அவன் கடுமையான கோபங்கொண்டு அவன் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்துவான். இதற்குப் பின்பு, ஜனங்களுக்குத் தீங்கு விளைவித்து, அவர்களைப் பட்சிக்கும் அவன் விருப்பம் தீவிரமடையும். ஏனென்றால், மனிதன் சத்தியத்தை உணர்ந்துகொள்ள ஆரம்பிக்கும்போது அவன் மூர்க்கமடைகிறான். மேலும் விடுதலையையும் வெளிச்சத்தையும் வாஞ்சித்து விரும்பி, அவனுடைய சிறையிலிருந்து விடுபட விரும்பும் அவர்களின் விருப்பத்தினால் மனிதர் மேல் ஒரு வலிமையான பழிவாங்கும் உணர்வை வளர்த்துக் கொள்ளுகிறான். அவனுடைய கடுங்கோபம் அவனின் தீமையைக் காக்கவும் நிலைநிறுத்தவும் நோக்கமுடையதும், மேலும் அவனின் காட்டுமிராண்டித்தனமான தன்மையின் உண்மையான வெளிப்பாடுமாகும்.

ஒவ்வொரு விஷயத்திலும், சாத்தானின் நடத்தை அவனுடைய பொல்லாத தன்மையை வெளிப்படுத்துகிறது. தன்னைப் பின்பற்றும்படி மனிதனை ஏமாற்றின சாத்தானுடைய ஆரம்பக்கால முயற்சிகளில் இருந்து அவன் மனிதனைச் சுரண்டி தன் தீய செயல்களுக்கு இழுக்கிற எல்லாப் பொல்லாத செயல்கள் வரைக்கும், மேலும் தன் உண்மையான அம்சங்கள் அம்பலப்படுத்தப்பட்டதும், மனிதன் அதை உணர்ந்து, அவனை விட்டு நீங்கின பின், மனிதனுக்கு எதிரான அவனுடைய பழிவாங்கும் தன்மை வரையிலும், இவற்றில் ஒன்று கூட சாத்தானின் பொல்லாங்கான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், அல்லது சாத்தானுக்கு நேர்மறையான விஷயங்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதையும், எல்லா பொல்லாத காரியங்களுக்கும் சாத்தான்தான் மூலக் காரணம் என்பதையும் நிரூபிக்கத் தவறவில்லை. அவனுடைய ஒவ்வொரு செயலும் அவனுடைய பொல்லாங்கைப் பாதுகாக்கிறது, அவனுடைய பொல்லாத செயல்களின் தொடர்ச்சியைப் பராமரிக்கிறது, நியாயமான மற்றும் நேர்மறையான விஷயங்களை எதிர்க்கிறது, மேலும் மனிதகுலத்தின் இயல்பான இருப்புக்கான சட்டங்களையும் ஒழுங்கையும் சீரழிக்கிறது. சாத்தானின் இந்த செயல்கள் தேவனுக்கு விரோதமானவை, அவை தேவனுடைய கோபத்தால் அழிக்கப்படும். சாத்தானுக்கு அவனுடைய சொந்த கோபம் இருந்தாலும், அவனுடைய கோபம் அவனுடைய பொல்லாங்கான இயல்பை வெளிப்படுத்தும் ஒரு வழிமுறையே ஆகும். சாத்தானுடைய சொல்லொணா திட்டங்கள் அம்பலப்படுத்தப்பட்ட காரணத்தினால் அவன் ஆத்திரமடைந்தவனாகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்கிறான். அவனுடைய சூழ்ச்சி எளிதில் தண்டனையிலிருந்து தப்பாது; அவனுடைய காட்டுத்தனமான லட்சியம் மற்றும் தேவனை மாற்றீடு செய்து, தேவனாகச் செயல்படுவதற்கான விருப்பம் ஆகியவை அடித்துக் கீழே தள்ளப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளன; மனுக்குலம் முழுவதையும் கட்டுப்படுத்தும் அவனுடைய குறிக்கோள் இப்போது முற்றிலும் தோல்வியுற்று விட்டது, அதை ஒருபோதும் அவன் அடைய முடியாது. தேவன் தன்னுடைய கோபத்தை அடிக்கடி, திரும்பத் திரும்ப அனுப்புகிறதால், சாத்தானுடைய சூழ்ச்சிகள் நிறைவேறாமல் மற்றும் சாத்தானுடைய தீமையின் பரவுதலும் மூர்க்கமும் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இக்காரணத்தினால், சாத்தான் தேவனுடைய கோபத்தை வெறுக்கவும், அதற்குப் பயப்படவும் செய்கிறான். ஒவ்வொரு முறையும் தேவனுடைய கோபம் இறங்கும்போது, அது சாத்தானின் உண்மையான, மோசமான தோற்றத்தை வேஷம் கலைப்பது மட்டுமல்லாமல், சாத்தானின் பொல்லாத ஆசைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது, மேலும் இந்தச் செயல்பாட்டில், மனிதகுலத்திற்கு எதிரான சாத்தானின் கோபத்திற்கான காரணங்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தப்படுகின்றன. சாத்தானுடைய கோபத்தின் சீற்றமானது அவனுடைய பொல்லாத சுபாவத்தின் உண்மையான வெளிப்பாடும் மற்றும் அவன் சூழ்ச்சிகளின் வெளிப்பாடுமாகும். நிச்சயமாக, சாத்தான் கோபப்படுகிற ஒவ்வொரு முறையும் பொல்லாத விஷயங்களின் அழிவும், நேர்மறையான விஷயங்களின் பாதுகாப்பும், தொடர்ச்சியும் முன்னறிவிக்கப்படுகின்றன; தேவனுடைய கோபம் அவமதிக்கப்பட முடியாதது என்ற உண்மையை இது முன்னறிவிக்கிறது.

தேவனின் நீதியான மனநிலையை அறிய ஒருவர் அனுபவத்தையும் கற்பனையையும் சார்ந்திருக்கக் கூடாது

தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சையையும் நீ எதிர்கொள்ளும்போது, தேவனின் வார்த்தை கலப்படமானது என்று நீ கூறுவாயா? தேவனுடைய கோபத்தின் பின்னால் ஒரு கதை இருப்பதாகவும், அது கலப்படமுள்ளது என்றும் நீ கூறுவாயா? தேவனுடைய மனநிலை முற்றிலும் நீதியானது அல்ல என்று கூறி அவதூறு செய்வாயா? தேவனுடைய ஒவ்வொரு செயலையும் கையாளும்போது, தேவனுடைய நீதியான மனநிலை வேறு எந்தக் காரியங்களிலிருந்தும் விடுபட்டது என்பதிலும், அது பரிசுத்தமும் குற்றமற்றதுமாகும் என்பதிலும் நீ முதலில் உறுதியாயிருக்க வேண்டும். இந்தச் செயல்களில் தேவனுடைய அடித்தல், தண்டனை மற்றும் மனிதகுலத்தை அழித்தல் ஆகியவை அடங்கும். விதிவிலக்கு இல்லாமல், தேவனின் ஒவ்வொரு செயலும் அவருடைய இயல்பான மனநிலை மற்றும் அவரது திட்டத்திற்குக் கட்டாயமாய் இணங்கிச் செய்யப்படுகிறது. மேலும் அவை மனிதகுலத்தின் அறிவு, பாரம்பரியம் மற்றும் தத்துவத்தின் எந்தப் பகுதியையும் உள்ளடக்கியதல்ல. தேவனுடைய ஒவ்வொரு செயலும் அவரது மனநிலை மற்றும் சாராம்சத்தின் வெளிப்பாடாகும். அவை சீர்கேடான மனிதகுலத்திற்குச் சொந்தமான எதனோடும் தொடர்பில்லாததாகும். தேவனுடைய அன்பு, இரக்கம் மற்றும் மனிதகுலத்தின் மீதான சகிப்புத்தன்மை ஆகியவை மட்டுமே குற்றமற்றவை, கலப்படமற்றவை மற்றும் பரிசுத்தமானவை என்ற கருத்தை மனிதகுலம் கொண்டுள்ளது, மேலும் அதைப் போலவே தேவனுடைய ஆத்திரமும் அவருடைய கோபமும் கூட கலப்படமற்றவையே என்பது யாருக்கும் தெரிவதில்லை; மேலும், தேவன் ஏன் எந்த அவமதிப்பையும் பொறுத்துக்கொள்வதில்லை அல்லது ஏன் அவருடைய கோபம் மிகப் பெரியதாயிருக்கிறது போன்ற கேள்விகளை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மாறாக, தேவனுடைய கோபம் சீர்கேடான மனுக்குலத்தின் மோசமான குணம் போன்றது என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மேலும் தேவனுடைய கோபம் சீர்கேடான மனுக்குலத்தின் கோபம் போன்றதே என்றும் தவறாக புரிந்துகொள்கிறார்கள். தேவனுடைய கோபம் மனிதகுலத்தின் சீர்கேடான மனநிலையின் இயல்பான வெளிப்பாடு போன்றதே என்றும், தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது சீர்கேடான ஜனங்கள் சில மகிழ்ச்சியற்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது கோபப்படுவதைப் போன்றது என்றும் கூட அவர்கள் தவறாகக் கருதுகிறார்கள். மேலும் தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது அவருடைய மனநிலையின் வெளிப்பாடு என்று நம்புகிறார்கள். இந்த கூடுகைக்குப் பிறகு, இனி உங்கள் ஒவ்வொருவருக்கும் தேவனுடைய நீதியான மனநிலை குறித்த தவறான எண்ணங்கள், கற்பனைகள் அல்லது ஊகங்கள் இருக்காது என்று நம்புகிறேன். என் வார்த்தைகளைக் கேட்டபின், தேவனுடைய நீதியான மனநிலையின் கோபத்தைக் குறித்து, உங்கள் இதயங்களில் உண்மையான அடையாளம் காணுதலை நீங்கள் பெற முடியும் என்றும், தேவனுடைய கோபத்தைப் பற்றிய உங்களின் முந்தைய தவறானப் புரிதல்களை நீங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு, தேவனுடைய சாராம்சத்தைப் பற்றிய உங்கள் சொந்த தவறான நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை நீங்கள் மாற்றலாம் என்றும் நம்புகிறேன். மேலும், உங்கள் இருதயங்களில் தேவனுடைய மனநிலையைப் பற்றி ஒரு துல்லியமான வரையறையைக் கொண்டிருக்க முடியும் என்றும், தேவனுடைய நீதியான மனநிலையைக் குறித்து உங்களுக்கு இனி எந்த சந்தேகங்களும் இருக்காது என்றும், தேவனுடைய உண்மையான மனநிலையின் மீது நீங்கள் எந்த மனிதக் காரணங்காணலையும் அல்லது கற்பனையையும் திணிக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன். தேவனுடைய நீதியான மனநிலை தேவனுடைய சொந்த, உண்மையான சாராம்சமாகும். அது மனிதனால் எழுதப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட ஒன்று அல்ல. அவருடைய நீதியான மனநிலை அவருடைய நீதியான மனநிலையே ஆகும், மேலும் அதற்குச் சிருஷ்டிப்புகளுடன் எந்த சம்பந்தமோ, தொடர்போ இல்லை. தேவன் தாமே தேவன். அவர் ஒருபோதும் சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக மாற மாட்டார், மேலும் அவர் சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களில் ஓர் உறுப்பினரானாலும், அவருடைய இயல்பான மனநிலையும் சாராம்சமும் மாறாது. எனவே, தேவனை அறிந்துகொள்வது என்பது ஒரு பொருளை அறிந்துகொள்வது போன்றதல்ல; தேவனை அறிவது என்பது எதையாவது ஆராய்வதல்ல, அல்லது ஒரு நபரைப் புரிந்துகொள்வது போன்றதுமல்ல. ஒரு மனிதன் ஒரு பொருளை அறிந்து கொள்வதற்கான அல்லது ஒருவரை புரிந்து கொள்வதற்கான மையக் கருத்தையும் வழிமுறையையும் பயன்படுத்தி, தேவனை அறிந்து கொண்டால், நீ ஒருபோதும் தேவனைப் பற்றிய அறிவைப் பெற முடியாது. தேவனை அறிந்து கொள்வது அனுபவம் அல்லது கற்பனையை சார்ந்து இருக்காது, எனவே நீ உன்னுடைய அனுபவத்தையும் கற்பனையையும் ஒருபோதும் தேவன் மீது திணிக்கக்கூடாது. மேலும் உன்னுடைய அனுபவமும் கற்பனையும் எவ்வளவு முனைப்பானதாக இருந்தாலும் அவை வரம்புக்குட்பட்டதேயாகும். மேலும் என்னவென்றால், உன் கற்பனை உண்மைகளுடன் ஒத்துப்போவதில்லை, மேலும் சத்தியத்துடனும் ஒத்துப்போவதில்லை, மேலும் அது தேவனின் உண்மையான மனநிலை மற்றும் சாராம்சத்துடன் பொருந்துவதில்லை. தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துகொள்வதற்கு, உன்னுடைய கற்பனையின் மேல் நீ சார்ந்திருப்பாயானால், நீ ஒருபோதும் ஜெயம் பெற மாட்டாய். தேவனிடத்திலிருந்து வரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, பின்பு படிப்படியாக அனுபவித்து, அவைகளைப் புரிந்து கொள்வதுமே ஒரே வழி ஆகும். உன் ஒத்துழைப்பினாலும், சத்தியத்திற்கான உன் பசி தாகத்தினாலும், அவரை உண்மையாக புரிந்துகொள்ளவும், அறிந்து கொள்ளவும் தேவன் உன்னைத் தெளிவுபடுத்தும் ஒரு நாள் உண்டு. இத்துடன் நம்முடைய உரையாடலின் இப்பகுதியை முடித்துக் கொள்ளலாம்.

உண்மையான மனந்திரும்புதலின் மூலம் மனித இனம் தேவனுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பெறுகிறது

தொடர்ந்து வருவது “நினிவேயின் தேவ இரட்சிப்பு” பற்றிய வேதாகம சம்பவம்.

யோனா 1:1-2 யேகோவாவின் வார்த்தை அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்கு உண்டாகி: எழுந்திரு, அந்தப் பெரிய நகரமான நினிவேக்குச் சென்று, அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய துன்மார்க்கம் எனக்கு முன்பாக வந்துவிட்டது என்றார்.

யோனா 3 யேகோவா இரண்டாவது முறையாக யோனாவிடம்: எழுந்திரு, மாநகரமான நினிவேக்குச் சென்று, நான் உனக்குச் சொல்லும் பிரசங்கத்தை அந்நகருக்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். ஆதலால், யோனா எழுந்து, யேகோவாவின் வார்த்தையின்படி நினிவேவுக்குச் சென்றான். அந்நகரின் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்குச் செல்ல மூன்று நாளாகும். நகரத்தினுள் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம் செய்து: இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று கூறினான் யோனா. ஆதலால், நினிவேவின் ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர். நினிவேயின் ராஜாவுக்கு இந்தச் செய்தி எட்டியது, அவன் சிங்காசனத்திலிருந்து எழுந்து, தன் ராஜ அங்கியை அகற்றி விட்டு இரட்டுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான். மேலும் ராஜா மற்றும் அவனது பிரபுக்களின் ஆணையினால் அவர் அதை நினிவே முழுவதும் அறிவிக்கவும் வெளியிடவும் செய்து: மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. ஆனால் மனுஷன், மிருகம் என சகலமும் கோணியாடை உடுத்தி, தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள். அப்போது ஒரு வேளை நாம் அழிந்துபோகாதபடி, தேவன் மனம்வருந்தி, தம் கடுமையான கோபத்தைவிடுத்துத் திரும்பினாலும் திரும்புவார். தேவன் அவர்கள் செய்ததைக் கண்டார், அவர்கள் தங்கள் தீய வழியிலிருந்து விலகியதைக் கண்டார்; தேவன், தாம் அவர்களுக்குச் செய்வதாய்ச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்து தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.

யோனா 4 ஆனால் அது யோனாவை மிகவும் அதிருப்திப்படுத்தியது, அவன் கடுங்கோபம் கொண்டு யேகோவாவிடம்: யேகோவாவே, நான் என் நாட்டில் இருந்தபோது இதைத்தான் சொன்னேனஅல்லவா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; ஏனென்றால் நீர் கிருபைகொண்ட, இரக்கமுள்ள தேவன் என்றும், நீடிய பொறுமையும் நிறைவான அன்பும் கொண்டவர் என்றும், தீங்கு குறித்து மனம்வருந்தும் தேவனென்றும் அறிவேன். ஆகையால் யேகோவாவே, இப்போதே என் உயிரை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும், ஏனென்றால் நான் வாழ்வதினும் மரிப்பது நன்று என்றான். அதற்கு யேகோவா, நீ கோபம்கொள்வது சரியா? என்றார். ஆகவே, யோனா நகரத்தை விட்டு வெளியேறி, நகரின் கிழக்குப் பகுதிக்குச் சென்று, அங்கே ஒரு குடிசை அமைத்து, நகரத்திற்கு சம்பவிக்கப்போகிறதை காணுமட்டும் நிழலில் உட்கார்ந்திருந்தான். யேகோவா தேவன், யோனாவின் தலைக்கு மேல் நிழலாக இருக்கும்படியும் அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கும்படியும் ஆமணக்குச் செடியொன்றை முளைக்கச் செய்தார். அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனாவும் மகிழ்ச்சியுற்றான். ஆனால் மறுநாள் கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு புழுவை அனுப்பினார், அது ஆமணக்குச் செடியை அரிக்க, அது காய்ந்துபோயிற்று. சூரியன் உதித்தபோது, கிழக்கிலிருந்து வெப்பக் காற்று வரும்படி தேவன் கட்டளையிட்டார்; உச்சிவெயில் யோனாவின் தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோனான்; தனக்குள்ளே சாவை விரும்பி: நான் வாழ்வதினும் மரிப்பது நன்று என்றான். அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்குச் செடியைக் குறித்து கோபங்கொள்வது சரியா என்றார்; அதற்கு அவன், நான் மரண பரியந்தமும் கோபமாயிருப்பது சரியே என்றான். அதற்குக் கர்த்தர்: நீ நட்டு வைக்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரே இராத்திரியிலே மடிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக நீ இப்படி பரிதாபப்படுகிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வேறுபாடு தெரியாத இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு மிகுதியான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா என்றார்.

நினிவே சம்பவத்தின் சுருக்கத் தொகுப்பு

“நினிவேயின் தேவ இரட்சிப்பு” என்ற சம்பவம் சுருக்கமாக இருந்தாலும், தேவனுடைய நீதியான மனநிலையின் மறுபக்கத்தை ஒரு கணம் பார்ப்பதற்கு அது ஒருவரை அனுமதிக்கிறது. அந்தப் பக்கம் எதைக் கொண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, நாம் வேதத்திற்குத் திரும்பி, அவருடைய கிரியையின் செயல்முறையில் அவர் செய்த செயல்களில் ஒன்றை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

இச்சம்பவத்தின் ஆரம்பத்தை முதலில் பார்ப்போம்: “யேகோவாவின் வார்த்தை அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்கு உண்டாகி: எழுந்திரு, அந்தப் பெரிய நகரமான நினிவேக்குச் சென்று, அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய துன்மார்க்கம் எனக்கு முன்பாக வந்துவிட்டது என்றார்” (யோனா 1:1-2). இந்த வேதாகம பத்தியில், யோனாவை நினிவே நகரத்திற்குச் செல்ல யேகோவா தேவன் கட்டளையிட்டார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். இந்த நகரத்திற்குச் செல்லும்படி யோனாவிற்கு அவர் ஏன் கட்டளையிட்டார்? இதைப் பற்றி வேதம் மிகத் தெளிவாகக் கூறுகிறது: இந்த நகரத்திலுள்ள மக்களின் துன்மார்க்கம் யேகோவா தேவனுக்கு முன்பாக வந்துவிட்டது, அதனால் அவர் தான் செய்யவிருக்கிறதை அவர்களுக்கு அறிவிக்க யோனாவை அனுப்பினார். யோனா யார் என்று நமக்குச் சொல்லும்படி எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், இது நிச்சயமாக தேவனை அறிவதில் தொடர்பில்லாதது, எனவே நீங்கள் இந்த மனிதரான யோனாவைப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. தேவன் யோனாவை என்ன செய்யும்படி கட்டளையிட்டார், அத்தகைய காரியத்தைச் செய்ய தேவனுடைய காரணங்கள் என்ன என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

யேகோவா தேவனின் எச்சரிக்கை நினிவே ஜனங்களை அடைகிறது

யோனாவின் புத்தகம் மூன்றாம் அதிகாரத்தில் உள்ள இரண்டாம் பத்தியைக் கவனிப்போம்: “நகரத்தினுள் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம் செய்து: இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று கூறினான் யோனா.” நினிவே ஜனங்களிடம் சொல்லும்படி தேவன் நேரடியாக யோனாவிடம் சொன்ன வார்த்தைகள் இவை, ஆகவே, இவை நிச்சயமாக நினிவே ஜனங்களிடம் யேகோவா சொல்ல விரும்பிய வார்த்தைகளே ஆகும். ஜனங்களுடைய அக்கிரமம் தேவனுடைய சமுகத்தில் வந்து எட்டினதால், அவர் அந்நகரத்து ஜனங்களை அருவருக்கவும் வெறுக்கவும் தொடங்கி விட்டார் என்பதையும் அவர் அந்தப் பட்டணத்தை அழிக்க விரும்புகிறார் என்பதையும் இவ்வார்த்தைகள் ஜனங்களுக்குச் சொல்கின்றன. ஆயினும், தேவன் நகரத்தை அழிப்பதற்கு முன்பு, அவர் நினிவே ஜனங்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டார், அதே நேரத்தில், அவர்களுடைய அக்கிரமத்தினின்று மனந்திரும்பவும், புதிதாகத் தொடங்கவும் அவர்களுக்கு ஒரு தருணத்தைக் கொடுத்தார். இந்தத் தருணம் நாற்பது நாட்கள் நீடிக்கும், அதற்கு மேல் நீடிக்காது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நகரத்திற்குள் இருந்தவர்கள் நாற்பது நாட்களுக்குள் மனந்திரும்பாமல், தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, யேகோவா தேவனுக்கு முன்பாக மண்டியிடாமல் இருப்பார்களானால், தேவன் சோதோமை அழித்தபடியே நகரத்தை அழிப்பார். இதையே யேகோவா தேவன் நினிவேயின் ஜனங்களுக்குச் சொல்ல விரும்பினார். தெளிவாக, இது சாதாரணமான அறிவிப்பு அல்ல. இது யேகோவா தேவனின் கோபத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், நினிவேயர்கள் மீதான அவருடைய மனப்பான்மையையும் வெளிப்படுத்தி, அதே நேரத்தில் நகரத்தில் வாழும் ஜனங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும் செயல்படுகிறது. இந்த எச்சரிக்கை அவர்களுடைய பொல்லாத செயல்கள் யேகோவா தேவனின் வெறுப்பைப் பெற்றன என்றும் விரைவில் அவர்களைத் தங்களுடைய நிர்மூலமாக்கப்படுதலின் விளிம்பிற்குக் கொண்டு வரும் என்றும் சொன்னது. எனவே நினிவேயின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும் உடனடி ஆபத்தில் இருந்தது.

யேகோவா தேவனின் எச்சரிக்கைக்கு நினிவேயும் சோதோமும் நடந்துகொண்ட விதத்துக்கு இடையேயான முழுமையான வேறுபாடு

கவிழ்க்கப்பட்டுப்போவது என்பதின் அர்த்தம் என்ன? பேச்சுவழக்கில், இனி இருக்கப் போவதில்லை என்று பொருள்படும். ஆனால் எந்த வழியில்? ஒரு முழு நகரத்தையும் யாரால் கவிழ்த்துப் போட முடியும்? நிச்சயமாக இதுபோன்ற செயலை மனிதனால் செய்ய இயலாது. நினிவே மக்கள் முட்டாள்கள் அல்ல; இந்தப் பிரகடனத்தைக் கேட்டவுடனேயே அவர்களுக்கு யோசனை வந்தது. இந்தப் பிரகடனம் தேவனிடமிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், தேவன் தம்முடைய கிரியையைச் செய்யப் போகிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், அவர்களுடைய துன்மார்க்கம் யேகோவா தேவனைக் கோபப்படுத்தியதையும், அவருடைய கோபத்தை அவர்கள் மேல் கொண்டு வந்ததையும், இதனால் அவர்கள் விரைவில் தங்கள் நகரத்துடனேகூட அழிக்கப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். யேகோவா தேவனின் எச்சரிக்கையைக் கேட்டபின் நகர மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? ராஜா முதல் சாமானியர்கள் வரையிலான மக்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதைக் குறித்து வேதாகமம் குறிப்பான விளக்கமளிக்கிறது. பின்வரும் வார்த்தைகள் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன: “ஆதலால், நினிவேவின் ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர். நினிவேயின் ராஜாவுக்கு இந்தச் செய்தி எட்டியது, அவன் சிங்காசனத்திலிருந்து எழுந்து, தன் ராஜ அங்கியை அகற்றி விட்டு இரட்டுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான். மேலும் ராஜா மற்றும் அவனது பிரபுக்களின் ஆணையினால் அவர் அதை நினிவே முழுவதும் அறிவிக்கவும் வெளியிடவும் செய்து: மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. ஆனால் மனுஷன், மிருகம் என சகலமும் கோணியாடை உடுத்தி, தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள்…” (யோனா 3:5-9).

யேகோவா தேவனின் பிரகடனத்தைக் கேட்டபின், நினிவேயின் ஜனங்கள் சோதோம் மக்களின் மனப்பான்மைக்கு முற்றிலும் நேர்மாறான ஒரு மனப்பான்மையை வெளிப்படுத்தினர். சோதோமின் ஜனங்களோ தேவனை வெளிப்படையாக எதிர்த்து, பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு முன்னேறினர், இந்த வார்த்தைகளைக் கேட்ட நினிவே ஜனங்களோ காரியத்தைப் புறக்கணிக்கவில்லை, எதிர்க்கவுமில்லை. மாறாக, அவர்கள் தேவனை விசுவாசித்து உபவாசத்தை அறிவித்தனர். “விசுவாசித்து” என்ற சொல்லுக்கு இங்கே என்ன அர்த்தம்? இந்த வார்த்தையே விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் குறிக்கிறது. இந்த வார்த்தையை விளக்குவதற்கு நினிவே ஜனங்களின் உண்மையான நடத்தையை நாம் பயன்படுத்துவோமானால், அவர்கள் தேவனை விசுவாசித்தார்கள் என்றும், தான் சொன்னபடியே தேவனால் செய்ய முடியும் என்றும், செய்வார் என்றும் அவர்கள் நம்பினார்கள், அவர்கள் மனந்திரும்ப ஆயத்தமாக இருந்தார்கள் என்றும் அர்த்தப்படும். நினிவே ஜனங்கள் உடனடிப் பேரழிவை எதிர்கொள்ளும்போது பயத்தை உணர்ந்தார்களா? அவர்களின் விசுவாசமே அவர்களின் இருதயங்களில் பயத்தை ஏற்படுத்தியது. எனவே, நினிவேயர்களின் விசுவாசத்தையும் பயத்தையும் நிரூபிக்க நாம் எதைப் பயன்படுத்தலாம்? வேதம் சொல்லுகிறது: “… உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர்.” அதாவது நினிவேயர்கள் உண்மையிலேயே விசுவாசித்தார்கள், இந்த விசுவாசத்திலிருந்து பயம் பிறந்து, பின்னர் அவர்கள் உபவாசிக்கவும் மற்றும் இரட்டுடுத்திக் கொள்ளவும் அவர்களை வழிநடத்தியது. இவ்வாறு தாங்கள் மனந்திரும்பத் தொடங்கியதை அவர்கள் காண்பித்தார்கள். சோதோமின் ஜனங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், நினிவே ஜனங்கள் தேவனை எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் நடத்தை மற்றும் செயல்களின் மூலம் தங்கள் மனந்திரும்புதலையும் தெளிவாகக் காண்பித்தனர். நிச்சயமாக, இது நினிவேயின் சாதாரண ஜனங்கள் மட்டுமல்ல, ராஜாவும்கூட விதிவிலக்கில்லாமல் செய்த காரியமாகும்.

நினிவே ராஜாவின் மனந்திரும்புதல் யேகோவா தேவனின் பாராட்டைப் பெற்றது

நினிவேயின் ராஜா இந்த செய்தியைக் கேட்டபோது அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். பின்னர் அவன், மனுஷரும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டை உடுத்திக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள் என்று அறிவித்தான். இந்த தொடர்ச்சியான செயல்களை ஆராயும்போது, நினிவேயின் ராஜா தனது இருதயத்தில் உண்மையான மனந்திரும்புதலைக் கொண்டிருந்தான் என்று அறியலாம். அவரது சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தனது ராஜாவின் உடுப்பைக் கழற்றிப் போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்திருந்ததான அவர் எடுத்த இந்த தொடர் நடவடிக்கைகள், நினிவேயின் ராஜா தனது ராஜ அந்தஸ்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பொது ஜனங்களுடன் இணைந்து இரட்டை உடுத்தியிருந்ததை ஜனங்களுக்குக் கூறுகிறது. யேகோவா தேவனிடமிருந்து அறிவிப்பைக் கேட்டபின், நினிவேயின் ராஜா தனது பொல்லாத வழியையோ அல்லது தன் கைகளிலுள்ள கொடுமையையோ தொடர தனது ராஜ பதவியை வகிக்கவில்லை என்று சொல்லலாம்; மாறாக, அவன் கொண்டிருந்த அதிகாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, யேகோவா தேவனுக்கு முன்பாக மனந்திரும்பினான். இந்த கணத்தில் நினிவேயின் ராஜா ஒரு ராஜாவாக மனந்திரும்பவில்லை; அவன் மனந்திரும்பி, தனது பாவங்களை அறிக்கைச் செய்ய சாதாரண குடிமகனைப் போல தேவனுக்கு முன்பாக வந்திருந்தான். மேலும், முழு நகரத்தையும் மனந்திரும்பவும், தான் செய்ததைப் போலவே அவர்கள் பாவங்களை யேகோவா தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்யவும் சொன்னார்; மேலும், வேதவசனங்களில் காணப்படுவது போல், அதை எப்படிச் செய்வது என்பதற்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தை அவர் கொண்டிருந்தார்: “மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. … தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள்.” நகரத்தின் அரசனாக, நினிவேயின் ராஜா மிக உயர்ந்த அந்தஸ்தையும் அதிகாரத்தையும் கொண்டிருந்தார், மேலும் அவர் விரும்பிய எதையும் அவரால் செய்ய முடியும். யேகோவா தேவனின் அறிவிப்பை அவர் எதிர்கொண்டபோது, அவர் இந்த விஷயத்தைப் புறக்கணித்திருக்கலாம் அல்லது மனந்திரும்பி, தனது பாவங்களை மட்டும் அறிக்கை செய்திருக்கலாம்; நகரத்தின் ஜனங்கள் மனந்திரும்ப முடிவு செய்தார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் இந்த விஷயத்தை முற்றிலுமாகப் புறக்கணித்திருக்க முடியும். இருப்பினும், நினிவேயின் ராஜா இதைச் செய்யவேயில்லை. அவர் தனது சிங்காசனத்திலிருந்து எழுந்து, இரட்டை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பி, யேகோவா தேவனுக்கு முன்பாக தனது பாவங்களை அறிக்கை பண்ணினது மட்டுமல்லாமல், நகரத்திலுள்ள எல்லா ஜனங்களையும் கால்நடைகளையும் அவ்வாறே செய்யும்படி கட்டளையிட்டார். “தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்.” அவர் ஜனங்களுக்குக் கட்டளையிட்டார். இந்தத் தொடர்ச்சியான செயல்களின் மூலம், நினிவேயின் ராஜா ஓர் ஆட்சியாளர் செய்ய வேண்டியதை உண்மையிலேயே நிறைவேற்றினார். அவரது தொடர்ச்சியான செயல்கள் மனித வரலாற்றில் எந்தவொரு ராஜாவிற்கும் சாதிக்கக் கடினமாக இருந்த ஒன்றாகும், உண்மையில், வேறு எந்த ராஜாவும் இந்த விஷயங்களைச் சாதிக்கவில்லை. இந்தச் செயல்கள் மனித வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதவை என்று அழைக்கப்படலாம், மேலும் அவை மனிதகுலத்தால் நினைவுகூரப்படுவதற்கும், பின்பற்றப்படுவதற்கும் தகுதியானவைகளாகும். மனிதன் தோன்றியது முதல், ஒவ்வொரு ராஜாவும் தேவனை எதிர்க்கவும், விரோதிக்கவுமே தனது குடிமக்களை வழிநடத்தியிருந்தார்கள். தங்களின் துன்மார்க்கத்திற்கான மீட்பைத் தேடவும், யேகோவா தேவனின் மன்னிப்பைப் பெறவும், உடனடி தண்டனையைத் தவிர்க்கவும் தேவனிடத்தில் மன்றாடும்படி, ஒருவர் கூட தங்களின் குடிமக்களை வழிநடத்தவில்லை. இருந்தபோதிலும், நினிவேயின் ராஜா தனது குடிமக்களைத் தேவனிடம் திரும்பப் பண்ணவும், அவரவருடைய பொல்லாத வழிகளை விட்டுவிட்டு, தங்கள் கைகளிலிருந்து கொடுமையைக் கைவிடப்பண்ணவும் அவர்களை வழிநடத்த முடிந்தது. மேலும், அவர் தனது சிங்காசனத்தை ஒதுக்கி வைக்க முடிந்தது, அதற்குப் பதிலீடாக யேகோவா தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார், மனஸ்தாபப்பட்டார், அவருடைய உக்கிரக்கோபத்தைத் திரும்பப் பெற்றார், நகர மக்களை உயிர்வாழ அனுமதித்தார், அவர்களை அழிவிலிருந்து காத்தார். ராஜாவின் செயல்கள், மனித வரலாற்றில் ஓர் அரிய அதிசயம் என்றே கூறப்பட வேண்டும். மேலும் சீர்கேடான மனுக்குலம் மனந்திரும்பி, தங்கள் பாவங்களைத் தேவனுக்கு முன்பாக அறிக்கைச் செய்கிறதற்கான ஒரு மாதிரி எடுத்துக்காட்டு என்று கூட சொல்லாம்.

நினிவே ஜனங்களின் இருதயங்களின் ஆழத்தில் இருந்த உண்மையான மனந்திரும்புதலை தேவன் பார்க்கிறார்

தேவனுடைய அறிவிப்பைக் கேட்டபின், நினிவேயின் ராஜாவும் அவரது குடிமக்களும் சில தொடர் செயல்களைச் செய்தனர். இந்தச் செயல்கள் மற்றும் அவர்கள் நடத்தையின் தன்மை என்ன? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் நடத்தையின் முழுமையான சாரம் என்ன? அவர்கள் செய்ததை அவர்கள் ஏன் செய்தார்கள்? அவர்கள் தேவனுடைய பார்வையில் உண்மையிலேயே மனந்திரும்பினார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனிடம் மனப்பூர்வமான மன்றாடுதல்களை ஏறெடுத்ததோடு, அவர்கள் முன் செய்த பாவங்களை அறிக்கையிட்டார்கள் என்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் பொல்லாத நடத்தையைக் கைவிட்டார்கள். அவர்கள் இந்த வழியில் செயல்பட்டதின் காரணம் என்னவென்றால் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டபின், அவர்கள் நம்பமுடியாத அளவிற்குப் பயந்து, அவர் தாம் சொன்னபடியே செய்வார் என்று நம்பினார்கள். உபவாசத்தாலும், இரட்டை உடுத்திக்கொண்டும், சாம்பலில் உட்கார்ந்தும் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்திருத்துவதற்கான, துன்மார்க்கத்தைவிட்டு விலகுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த விரும்பினர். மேலும் யேகோவா தேவனிடம் அவர் தனது கோபத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள ஜெபித்தனர், அவருடைய தீர்மானத்தையும், அவர்கள் மேல் வேகமாய் வந்து கொண்டிருக்கும் பேரழிவையும் அவர் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் மன்றாடினர். அவர்களின் நடத்தை அனைத்தையும் நாம் ஆராய்ந்தால், அவர்களுடைய முந்தைய பொல்லாத செயல்களை யேகோவா தேவனுக்கு அருவருப்பானவைகள் என்பதை அவர்கள் ஏற்கனவே புரிந்துகொண்டதைக் காணலாம். மேலும் அவர் விரைவில் அவர்களை அழிப்பதற்கான காரணத்தை, அவர்கள் புரிந்துகொண்டதையும்கூட நாம் காணலாம். இதனால்தான் அவர்கள் அனைவரும் முழுமையாக மனந்திரும்ப, தங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திரும்பி, தங்கள் கைகளிலுள்ள கொடுமையைக் கைவிட விரும்பினர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யேகோவா தேவனின் அறிவிப்பை அவர்கள் அறிந்து கொண்டவுடன், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இருதயங்களில் பயத்தை உணர்ந்தனர்; அவர்கள் தங்கள் பொல்லாத நடத்தைகளை நிறுத்திவிட்டு, யேகோவா தேவன் மிகவும் வெறுக்கும் செயல்களைப் பின்பு செய்யாமல் விட்டனர். மேலும், அவர்களின் கடந்த கால பாவங்களை மன்னிக்கவும், கடந்த காலச் செயல்களுக்கு ஏற்ப அவர்களை நடத்த வேண்டாம் என்றும் அவர்கள் யேகோவா தேவனிடம் மன்றாடினார்கள். யேகோவா தேவனை மீண்டும் ஒருபோதும் கோபப்படுத்தாமல் இருக்கக் கூடுமென்றால், அவர்கள் மீண்டும் ஒருபோதும் துன்மார்க்கத்தில் ஈடுபடாதிருக்கவும், யேகோவா தேவனின் அறிவுறுத்தல்களின்படி செயல்படவும் தயாராக இருந்தனர். அவர்களின் மனந்திரும்புதல் நேர்மையானதாக மற்றும் முழுமையானதாக இருந்தது. அது அவர்களின் இருதயங்களுக்குள்ளிருந்து வந்தது. மேலும் பாசாங்கற்றதும் மற்றும் நிலையானதுமாக இருந்தது.

நினிவேயின் ஜனங்கள் அனைவரும், ராஜா முதல் சாமானியர்கள் வரை, யேகோவா தேவன் அவர்கள்மீது கோபமாய் இருக்கிறார் என்பதை அறிந்தவுடன், அவர்கள் ஒவ்வொருவருடைய அடுத்தடுத்த செயல்களையும், அவர்களின் நடத்தை முழுவதையும், அவர்கள் எடுத்த முடிவுகள் மற்றும் தெரிவுகளையும் தேவன் தெளிவாகவும் வெளிப்படையாகவும் காண முடிந்தது. அவர்களின் நடத்தைக்கு ஏற்ப தேவனுடைய இருதயம் மாறியது. அந்த நேரத்தில் தேவனின் மனநிலை என்ன? உனக்காக அந்த கேள்விக்கு வேதாகமம் பதிலளிக்க முடியும். பின்வரும் வார்த்தைகள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன: “தேவன் அவர்கள் செய்ததைக் கண்டார், அவர்கள் தங்கள் தீய வழியிலிருந்து விலகியதைக் கண்டார்; தேவன், தாம் அவர்களுக்குச் செய்வதாய்ச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்து தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்” (யோனா 3:10). தேவன் தனது மனதை மாற்றிக்கொண்டாலும், அவருடைய மனநிலையில் குழப்பம் எதுவும் இல்லை. அவர் தெளிவாக தனது கோபத்தை வெளிப்படுத்துவதில் இருந்து மாறி தனது கோபத்தை அமைதிப்படுத்தினார், பின்னர் நினிவே நகரத்தில் பேரழிவை ஏற்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார். நினிவே ஜனங்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனுடைய முடிவு மிகத் துரிதமாய் இருந்த காரணம் என்னவென்றால், நினிவேயிலிருந்த ஒவ்வொருவரின் இருதயத்தையும் தேவன் கவனித்தார். அவர்கள் இருதயத்தின் ஆழத்தில் இருந்த அவர்களின் உண்மையான மனந்திரும்புதல் மற்றும் பாவ அறிக்கை, அவர்மீது அவர்கள் கொண்ட உள்ளார்ந்த நம்பிக்கை, அவர்களுடைய பொல்லாத செயல்கள் அவருடைய மனநிலையை எவ்வாறு கோபப்படுத்தின என்பதைப் பற்றிய ஆழமான உணர்வு, இதன் விளைவாக யேகோவா தேவனின் வரவிருக்கும் தண்டனையைப் பற்றிய பயம், ஆகியவற்றை அவர் கண்டார். அதே சமயம், யேகோவா தேவனும் இந்தப் பேரழிவைத் தவிர்க்கத்தக்கதாய், இனிமேல் தங்கள்மீது கோபப்பட வேண்டாம் என்று அவரிடம் மன்றாடின அவர்கள் இருதயங்களின் ஆழங்களிலிருந்து வந்த ஜெபங்களைக் கேட்டார். இந்த உண்மைகளைத் தேவன் உற்று நோக்கியபோது, அவருடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது. முன்பு அவருடைய கோபம் அவர்கள் மேல் எவ்வளவு பெரிதாய் இருந்தது என்பதைப் பொருட்படுத்தாமல், ஜனங்களின் இருதயங்களின் ஆழத்தில் இருந்த உண்மையான மனந்திரும்புதலை அவர் பார்த்த போது, அவருடைய இருதயம் தொடப்பட்டது. மேலும் அவரால், அவர்கள் மேல் பேரழிவைக் கொண்டு வர இயலவில்லை, அவர்களிடத்தில் கோபமாய் இருப்பதை அவர் நிறுத்திக் கொண்டார். மாறாக அவர் தன்னுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கி, அவர்களைத் தொடர்ந்து வழிநடத்தவும் போஷிக்கவும் செய்தார்.

தேவன் மீதான உங்கள் விசுவாசம் உண்மையாக இருந்தால், நீ திரும்பத் திரும்ப அவருடைய பராமரிப்பைப் பெறுவாய்

நினிவே ஜனங்களிடத்தில் தேவன் தனது நோக்கங்களை மாற்றுவதில் எந்தவித தயக்கமோ அல்லது சந்தேகமான அல்லது தெளிவற்ற எதையுமோ கொண்டிருக்கவில்லை. மாறாக, அது முழுமையான கோபத்திலிருந்து முழுமையான சகிப்புத்தன்மைக்கு மாற்றப்பட்ட ஒன்றாகும். இது தேவனுடைய சாராம்சத்தின் உண்மையான வெளிப்பாடாகும். தேவன் ஒருபோதும் திடசித்தமில்லாதவரோ அல்லது அவருடைய செயல்களில் தயங்குபவரோ அல்ல; அவருடைய கிரியைகளுக்குப் பின்னால் உள்ள கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் அனைத்தும் தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை, தூய்மையானவை மற்றும் குறைபாடற்றவை ஆகும். மேலும் அவைகளில் எந்தவொரு சட்டங்களோ அல்லது சூழ்ச்சிகளோ உள்ளாகக் கலந்திருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய சாராம்சம் எந்த இருளையோ அல்லது பொல்லாப்பையோ கொண்டிருக்கவில்லை. நினிவே ஜனங்களின் பொல்லாத செயல்கள் அவருடைய பார்வைக்கு முன் வந்ததால் தேவன் அவர்களிடம் கோபங்கொண்டார்; அந்நேரத்தில் அவருடைய கோபம் அவருடைய சாராம்சத்திலிருந்து உருவானது. இருப்பினும், தேவனுடைய கோபம் சிதறடிக்கப்பட்டு, அவர் நினிவே ஜனங்களுக்கு மீண்டும் ஒருமுறை சகிப்புத்தன்மையை அளித்தபோது, அவர் வெளிப்படுத்திய அனைத்தும் அவருடைய சொந்த சாராம்சமாகவே இருந்தன. இந்த மாற்றத்தின் முழுமையும் தேவன் மீதான மனிதனின் மனப்பான்மையில் ஏற்பட்ட மாற்றத்தினால் உண்டானதாகும். இந்த முழு காலகட்டத்திலும், தேவனின் அவமதிக்கப்பட முடியாத மனநிலை மாறவில்லை, தேவனின் சகிப்புத்தன்மையுள்ள சாராம்சம் மாறவில்லை, தேவனின் அன்பான மற்றும் இரக்கமுள்ள சாராம்சம் மாறவில்லை. ஜனங்கள் பொல்லாத செயல்களைச் செய்து தேவனை அவமதிக்கும் போது, அவர் தம்முடைய கோபத்தை அவர்கள்மீது செலுத்துகிறார். ஜனங்கள் உண்மையிலேயே மனந்திரும்பும்போது, தேவனுடைய இருதயம் மாறும், அவருடைய கோபம் முடிவுறுகிறது. ஜனங்கள் தொடர்ந்து பிடிவாதமாக தேவனை எதிர்க்கும்போது, அவருடைய கோபம் நீடிக்கும், மேலும் அவர்கள் அழிக்கப்படும் வரை அவருடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மீது வலிமையுடன் தொடர்ந்து வரும். இதுவே தேவனுடைய மனநிலையின் சாராம்சமாகும். தேவன் கோபத்தை அல்லது இரக்கத்தை அல்லது கிருபையை வெளிப்படுத்துகிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், மனிதன் தன் இருதயத்தின் ஆழத்தில் தேவனிடம் கொண்டுள்ள நடத்தை, ஒழுக்கம் மற்றும் அணுகுமுறையே தேவனுடைய மனநிலையின் வெளிப்பாட்டின் மூலம் வெளிப்படுகிறதை உத்தரவிடுகிறது. தேவன் தொடர்ந்து ஒருவரை தனது கோபத்திற்கு உட்படுத்தினால், இந்த நபரின் இருதயம் தேவனை எதிர்க்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இந்நபர் ஒருபோதும் உண்மையிலேயே மனந்திரும்பவில்லை, தேவனுக்கு முன்பாக தலை வணங்கவில்லை அல்லது தேவன் மீது உண்மையான விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை, அவர் ஒருபோதும் தேவனின் இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பெறவில்லை. யாராவது திரும்பத் திரும்ப தேவனுடைய கவனிப்பையும், அவருடைய இரக்கம் மற்றும் அவருடைய சகிப்புத்தன்மையைப் பெற்றால், சந்தேகத்திற்கு இடமின்றி இந்நபர் தன் இருதயத்தில் தேவன் மீது உண்மையான விசுவாசம் கொண்டிருக்கிறார் என்றும் அவருடைய இருதயம் தேவனை எதிர்க்கவில்லை என்பதாகும். இந்நபர் திரும்பத் திரும்ப தேவனுக்கு முன்பாக உண்மையிலேயே மனந்திரும்புகிறார்; எனவே, தேவனின் கண்டிப்பு திரும்பத் திரும்ப இந்த நபரின் மீது இறங்கினாலும், அவருடைய கோபம் வராது.

இந்தச் சுருக்கமான கணக்கு, தேவனின் இருதயத்தைப் பார்க்கவும், அவருடைய சாராம்சத்தின் யதார்த்தத்தைப் பார்க்கவும், தேவனின் கோபமும் அவருடைய இருதயத்தில் ஏற்படும் மாற்றங்களும் காரணமின்றி இல்லை என்பதைக் காண மக்களை அனுமதிக்கிறது. தேவன் கோபமாக இருந்த போதும், அவர் தனது மனதை மாற்றிக் கொண்டபோதும் அவர் வெளிப்படுத்தினதில் ஒரு முழுமையான வேறுபாடு இருந்தபோதிலும், இது ஜனங்களை, தேவனுடைய சாராம்சத்தின் கோபம் மற்றும் அவருடைய சகிப்புத்தன்மை ஆகிய இவ்விரண்டு அம்சங்களுக்கிடையே ஒரு பெரிய இணைப்பின்மை அல்லது வேறுபாடு இருப்பதாக நம்ப வைக்கிறது. மேலும் நினிவே ஜனங்களின் மனந்திரும்பின காரியத்தில் தேவனின் மனப்பான்மையான அவருடைய உண்மையான மனநிலையின் மற்றொரு பக்கத்தைக் காண ஜனங்களை மீண்டும் அனுமதிக்கிறது. இருப்பினும் தேவனுடைய மன மாற்றம் உண்மையிலேயே தேவனின் இரக்கம் மற்றும் கிருபையை மீண்டும் காணவும், தேவனுடைய சாராம்சத்தின் உண்மையான வெளிப்பாட்டைக் காணவும் மனிதகுலத்தை அனுமதிக்கிறது. தேவனின் இரக்கமும் கிருபையும் புனைகதைகளும் அல்ல, கட்டுக்கதைகளும் அல்ல என்பதை மனிதகுலம் ஒப்புக் கொள்ள வேண்டும். இது ஏனென்றால் அந்த நேரத்தில் தேவனுடைய உணர்வு உண்மையானது, தேவனுடைய மனமாற்றம் உண்மையானது, உண்மையாக தேவன் தன்னுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் மனுக்குலத்திற்கு மீண்டும் ஒருமுறை வழங்கினார்.

நினிவே ஜனங்களுடைய இருதயத்தின் உண்மையான மனந்திரும்புதல் தேவனின் இரக்கத்தை அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது மற்றும் அவர்களின் சொந்த விளைவுகளை மாற்றுகிறது

தேவனுடைய இருதய மாற்றத்திற்கும் அவருடைய கோபத்திற்கும் ஏதாவது முரண்பாடு இருந்ததா? நிச்சயமாக இல்லை! ஏனென்றால், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தேவனின் சகிப்புத்தன்மைக்குக் காரணம் இருந்தது. அது என்ன காரணமாக இருக்கும்? இது வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றாகும்: “ஒவ்வொருவரும் அவரவர் பொல்லாத வழியிலிருந்து திரும்பினார்கள்,” “தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள்.”

இந்தப் “தீய வழி” என்பது ஒரு சில பொல்லாத செயல்களைக் குறிக்காமல் பொல்லாத ஆதாரத்திலிருந்து தோன்றும் ஜனங்களின் நடத்தையைக் குறிக்கிறது. “தீய வழியை விட்டும் திரும்பக்கடவர்கள்” என்பது, இப்பொழுது பேசப்படுகிறவர்கள் மீண்டும் ஒருபோதும் இந்தச் செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்று அர்த்தமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் மீண்டும் இந்தப் பொல்லாத வழியில் நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதாகும்; அவர்களின் செய்முறை, ஆதாரம், நோக்கம், எண்ணம் மற்றும் கொள்கை அனைத்தும் மாறிவிட்டன; அவர்கள் மீண்டும் ஒருபோதும் அந்தச் செய்முறைகளையும் கொள்கைகளையும் தங்கள் இருதயங்களில் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரப் பயன்படுத்த மாட்டார்கள். “தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள்” என்பதில் உள்ள “விட்டுத் திரும்பக்கடவர்கள்” என்ற பதம், கீழே போடுதல் அல்லது ஒதுக்கித் தள்ளுதல், பழைய காரியங்களிலிருந்து முற்றிலுமாக மாறி, ஒருபோதும் திரும்பாததைக் குறிக்கிறது. நினிவேயின் ஜனங்கள் தங்கள் கைகளிலுள்ள கொடுமையைக் கைவிட்டபோது, இது அவர்களின் உண்மையான மனந்திரும்புதலை நிரூபித்தது, குறிப்பிட்டுக் காட்டியது. தேவன் ஜனங்களின் வெளிப்புறத் தோற்றங்களோடு அவர்களின் இதயங்களையும் உற்றுக் கவனிக்கிறார். எந்த ஒரு கேள்வியும் இல்லாத உண்மையான மனந்திரும்புதலை நினிவே ஜனங்களின் இருதயங்களில் தேவன் உற்றுக் கவனித்தபோது, அவர்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டுவிட்டு, தங்கள் கைகளிலுள்ள கொடுமையைக் கைவிட்டதை உற்றுக் கவனித்தபோது, அவர் தனது இருதயத்தை மாற்றிக் கொண்டார். அதாவது இந்த ஜனங்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம், பல்வேறு முறைகளில் காரியங்களைச் செய்கிற விதம், மேலும் அவர்களுடைய உண்மையான அறிக்கை மற்றும் பாவங்களிலிருந்து தங்கள் இருதயத்தில் மனந்திரும்பின காரியம் ஆகியவை தேவனை அவருடைய இருதயத்தை மாற்றிக்கொள்ளவும், அவருடைய நோக்கங்களை மாற்றிக்கொள்ளவும், அவருடைய முடிவை திரும்பப் பெற்றுக் கொள்ளவும், அவர்களை தண்டிக்காமல் அல்லது அழிக்காமல் இருக்கவும் செய்தது. இவ்வாறு, நினிவேயின் ஜனங்கள் தங்களுக்கான ஒரு வித்தியாசமான முடிவை அடைந்தனர். அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை மீட்டுக் கொண்டனர், அதே நேரத்தில் தேவனுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பெற்றனர், அந்தச் சமயத்தில் தேவனும் தனது கோபத்தைத் திரும்பப் பெற்றார்.

தேவனுடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் அரிதானவையல்ல—மனிதனுடைய உண்மையான மனந்திரும்புதலே அரிதானது

நினிவே ஜனங்கள் மீது தேவன் எவ்வளவு கோபமாக இருந்தாலும், அவர்கள் உபவாசத்தை அறிவித்து, இரட்டுடுத்திச் சாம்பலில் அமர்ந்தவுடன், அவருடைய இருதயம் கனிவாக மாறத் தொடங்கி, அவர் தம்முடைய மனதை மாற்றத் தொடங்கினார். அவர் அந்த நகரத்தை அழிப்பதாக அவர்களுக்கு அறிவித்தப்பொழுது—அவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பும் அந்த நொடிக்கு முன்பு வரை தேவன் அவர்கள் மீது கோபமாகவே இருந்தார். அவர்கள் மனந்திரும்புதலின் செயல்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தப்பொழுது, நினிவே ஜனங்கள் மீதான தேவனுடைய கோபமானது கொஞ்சம் கொஞ்சமாக இரக்கமாகவும் சகிப்புத்தன்மையாகவும் மாறினது. அதே நிகழ்வில் தேவனுடைய மனநிலையின் இந்த இரண்டு அம்சங்களின் ஒருமித்த வெளிப்பாடு குறித்து எந்த முரண்பாடும் கிடையாது. அப்படியென்றால், இந்த முரண்பாட்டின் குறைப்பாட்டை ஒருவர் எப்படி புரிந்துகொள்ள முடியும்? நினிவே ஜனங்கள் மனந்திரும்பியதற்குப் பதிலீடாக அவர்கள் தேவனுடைய யதார்த்தமான மற்றும் காயப்படுத்தாதத் தன்மையைப் பார்க்கும்படி தேவன் இந்த இரு எதிரெதிர் பண்புகளை உணர்த்தினார் மற்றும் வெளிப்படுத்தினார். கீழ்க்காண்பவற்றை ஜனங்களுக்கு கூறுவதற்காக தேவன் தமது சிந்தையைப் பயன்படுத்தினார்: தேவன் ஜனங்களைச் சகித்துக்கொள்ளாததனால் அல்ல, அல்லது அவர்களுக்கு தம்முடைய இரக்கத்தைக் காட்ட விரும்பவில்லை என்பதனாலோ அல்ல, மாறாக அவர்கள் அரிதாகவே தேவனிடம் உண்மையில் மனந்திரும்புகிறார்கள், மற்றும் ஜனங்கள் தங்கள் தீய வழிகளிலிருந்தும், தங்கள் கரங்களிலிருக்கிற பொல்லாங்கிலிருந்தும் அரிதாகவே விலகுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்; மனிதனோடு தேவன் கோபமாக இருக்கும்பொழுது, அவன் உண்மையாக மனந்திரும்புவான் என்று அவர் நம்புகிறார், மெய்யாகவே அவர் மனிதனுடைய உண்மையான மனமாற்றத்தைக் காண விரும்புகிறார், அதற்குப் பின்னர் அவர் மனிதன் மேல் தம்முடைய இரக்கத்தையும், சகிப்புத்தன்மையும் தாராளமாகப் பொழிவதைத் தொடருகிறார். அதாவது மனிதனுடைய தீய நடத்தையானது தேவனுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது, அதேசமயம் தேவனுக்குச் செவிக்கொடுத்து, உண்மையாகவே மனமாற்றமடைந்து, தங்கள் தீய வழியிலிருந்தும், தங்கள் கரங்களின் பொல்லாங்கிலிருந்தும் விலகுகிறவர்கள் மேல் தேவனுடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் பொழியப்படுகிறது. தேவனுடைய சிந்தையானது நினிவே ஜனங்களை அவர் நடத்தும் விதத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது: தேவனுடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் பெற்றுக்கொள்வதற்குக் கடினமானவைகளல்ல, மேலும் அவருக்குத் தேவையானது எல்லாம் ஒருவருடைய உண்மையான மனந்திரும்புதல் மட்டுமேயாகும். ஜனங்கள் தங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்பினால், மற்றும் தங்கள் கரங்களின் பொல்லாப்பை விட்டு விலகினால், தேவன் தம்முடைய இருதயத்தையும், அவர்கள் மீதான தமது சிந்தையையும் மாற்றுவார்.

சிருஷ்டிகருடைய நீதியான மனநிலை உண்மையானது மற்றும் தெளிவானது

நினிவே ஜனங்கள் மீது தம்முடைய இருதயத்தை தேவன் மாற்றிக்கொண்டபொழுது, அவருடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் போலியானதாக இருந்ததா? நிச்சயமாக இல்லை! அப்படியென்றால், இந்தச் சூழ்நிலையை தேவன் கையாளுகின்றப்பொழுது தேவனுடைய மனநிலையின் இந்த இரு பண்புகளுக்கிடையேயான மாற்றத்தில் என்ன வெளிக்காட்டப்பட்டது? தேவனுடைய மனநிலை பரிபூரணமானது—அதில் பிரிவினையே கிடையாது. அவர் ஜனங்களின் மீது கோபத்தையோ அல்லது இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மையையோ காட்டினாலும், இவைகளெல்லாம் அவருடைய நீதியான மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. தேவனுடைய மனநிலையானது முக்கியமானதும் தெளிவாக தெரிகிறதுமாக இருக்கிறது, மற்றும் காரியங்கள் உருவாகும் விதத்தின்படி அவர் தம்முடைய யோசனைகளையும் மற்றும் சிந்தைகளையும் மாற்றுகிறார். நினிவே ஜனங்கள் மீதான அவருடைய மனநிலையின் மாற்றமானது அவர் அவருக்கென்று சுய எண்ணங்களையும், யோசனைகளையும் கொண்டிருக்கிறார்; அவர் ஓர் இயந்திர மனிதனோ அல்லது களிமண் வடிவமோ அல்ல, மாறாக அவர் ஜீவனுள்ள தேவன் என்பதை மனுகுலத்திற்கு கூறுகிறது. நினிவே ஜனங்களுடைய சிந்தைகளின் காரணத்தினால், அவர்களுடைய கடந்தக்காலத்தை மன்னித்ததுப்போல, அவர்கள் மேல் கோபங்கொள்ளவும் அவரால் முடியும். அவர் நினிவே ஜனங்களின் மீது அழிவை தீர்மானிக்கவும், மற்றும் அவர்கள் மனந்திரும்பின காரணத்தினால் அந்தத் தீர்மானத்தை அவர் மாற்றவும் கூடும். தேவனுடைய மனநிலையை ஜனங்கள் புரிந்துகொள்ள முயற்சிசெய்ய சூத்திரங்களைப் பயன்படுத்த விரும்புவதுபோல, சட்டத்திட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவும், அதைப்போன்ற சட்டத்திட்டங்களைப் பயன்படுத்தி தேவனுக்கு எல்லையை வரையறுக்கவும், அவரை விவரிக்கவும் விரும்புகிறார்கள். ஆகவே, மனிதனுடைய எண்ணங்களின் களத்தைப் பொறுத்தவரை தேவன் யோசிப்பதுமில்லை, அவரிடம் உண்மையான சிந்தனைகளுமில்லை. ஆனால் உண்மையில், தேவனுடைய எண்ணங்கள், காரியங்கள் மற்றும் சூழ்நிலைகளின் மாற்றத்திற்கு ஏற்றார்போல் எப்பொழுதும் மாறக்கூடியதாக இருக்கிறது. இந்த யோசனைகள் மாறக்கூடியதாக இருக்கையில், தேவனுடைய சாராம்சத்தின் வெவ்வெறு பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த மாற்றங்களின் செயல்முறையின்போது, தேவன் ஒரு மாற்றமான இருதயத்தைக் கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுதில், அவர் மனிதகுலத்திற்குத் தாம் உண்மையாகவே ஜீவனுடையவராய் இருப்பதையும், அவருடைய நீதியின் மனநிலையானது வல்லமையாய்ச் செயல்படுவதையும் காட்டுகிறார். அதே நேரத்தில், அவருடைய கோபம், அவருடைய இரக்கம், அவருடைய தயவிரக்கம், மற்றும் அவருடைய சகிப்புத்தன்மை போன்றவற்றை நிரூபிக்க தேவன் தம்முடைய சொந்த உண்மையான வெளிப்பாடுகளைப் பயன்படுத்துகிறார். காரியங்கள் உருவாவதற்கு ஏற்றாற்போன்று, அவருடைய சாராம்சம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வெளிப்படுத்தப்படும். அவர் சிங்கத்தின் கோபத்தையும் மற்றும் ஒரு தாயின் இரக்கத்தையும், சகிப்புத்தன்மையையும் உடையவராக இருக்கிறார். அவருடைய நீதியான மனநிலையானது எவ்விதமான கேள்விக் கேட்பதையும், மீறுதலையும், மாற்றத்தையும் அல்லது எந்த மனிதனும் விலகிப்போவதையும் அனுமதிப்பதில்லை. தேவனுடைய நீதியான மனநிலை—அதாவது தேவனுடைய கோபம் மற்றும் தேவனுடைய இரக்கம் ஆகியவற்றை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வெளிப்படுத்தலாம். அவர் இந்த இயல்புகளுக்கு சிருஷ்டிப்பின் எல்லா மூலைகளிலும் தெளிவான வெளிப்பாட்டை கொடுக்கிறார். கடந்துபோகும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அவற்றை அவர் உயிர்துடிப்புடன் நடைமுறைப்படுத்துகிறார். தேவனுடைய நீதியான மனநிலையானது நேரத்தாலோ அல்லது இடத்தாலோ கட்டுப்படுத்தக்கூடியதல்ல; வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் தேவனுடைய நீதியான மனநிலையானது காலம் அல்லது இடத்தின் கட்டுப்பாடுகளினால் இயந்திரத்தனமாக உணர்த்தப்படுவதோ அல்லது வெளிப்படுத்தப்படுவதோ கிடையாது, மாறாக எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் மிகவும் எளிமையாகக் கிடைக்கப்பெறுகிறது. தேவன் ஒரு மாற்றமடைந்த இருதயத்தை உடையவராய், கோபத்தை வெளிப்படுத்துவதை நிறுத்தி, நினிவே பட்டணத்தாரை அழிவிலிருந்து விலக்குவதை நீ பார்க்கும்பொழுது, தேவன் இரக்கமுள்ளவர் மற்றும் அன்புள்ளவர் என்று உன்னால் கூற முடியுமா? தேவனுடைய கோபமானது வெறும் வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கிறதென்று உன்னால் கூற முடியுமா? தேவன் கடுங்கோபம் கொண்டு, தம்முடைய இரக்கத்திலிருந்து பின்வாங்கும்போது, அவர் மனிதகுலத்தின் மீது உண்மையான அன்பை வெளிப்படுத்தவில்லை என்று உன்னால் கூற முடியுமா? இந்தக் கடுங்கோபமானது மக்களுடைய பொல்லாத செய்கைகளுக்குப் பதிலாக தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது; அவருடைய கோபம் குறைப்பாடுள்ளதல்ல. மக்களுடைய மனமாற்றத்திற்குப் பதிலாக தேவனுடைய இருதயமானது அசைக்கப்படுகிறது, இந்த மனமாற்றமே அவருடைய இருதயத்தில் மாற்றத்தை உண்டுப்பண்ணுகிறது. அவர் அசைக்கப்பட்டதை உணரும்போது, அவர் மாற்றப்பட்ட இருதயத்தைக் கொண்டிருக்கும்போது, மற்றும் மனிதனிடம் அவர் தம்முடைய இரக்கத்தையும், சகிப்புதன்மையையும் காட்டும்போது, அவையெல்லாம் முற்றிலும் குறைபாடற்றவையாக இருக்கின்றன; அவை பரிசுத்தமானவை, சுத்தமானவை, குற்றஞ்சாட்டப்படாதவை மற்றும் கலப்படமற்றவை. தேவனுடைய கசகிப்புத்தன்மையை மிகச் சரியாகக் கூற வேண்டுமென்றால் சகிப்புத்தன்மை என்பது அவருடைய இரக்கமே, இரக்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை. மனிதனுடைய மனந்திரும்புதல் மற்றும் மனிதனுடைய நடத்தையின் மாறுபாடுகள் ஆகியவற்றிற்கு ஏற்ப அவருடைய மனநிலையானது கோபம் அல்லது இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அவர் எதை வெளிப்படுத்துகிறார் என்பது ஒரு பொருட்டல்ல, ஆனால் அவை யாவும் சுத்தமானதாகவும் மற்றும் நேரடியானதாகவும் இருக்கின்றன; அதனுடைய சாராம்சமானது வேறு எந்தச் சிருஷ்டிப்பைக் காட்டிலும் தனித்துவமானது. தேவன் தம்முடைய கிரியைகளின் அடிப்படைச் சட்டத்திட்டங்களை வெளிப்படுத்துகையில், அவை எவ்விதமான குறைப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவையாகும். அவருடைய எண்ணங்களும், அவருடைய யோசனைகளும், அவர் எடுக்கிற ஒவ்வொரு தீர்மானங்களும், அவர் செய்கிற ஒவ்வொரு செயல்களும் அதைப்போன்றே குறைப்பாடுகளற்றவையாகும். தேவன் அப்படித் தீர்மானித்தப்படியால் மற்றும் அவர் அப்படிக் கிரியை செய்கிறப்படியால், தம்முடைய பணிகளை நிறைவு செய்கிறார். அவருடைய பணிகள் சரியானதாகவும், குறைவற்றதாகவும் இருக்கின்றன, ஏனெனில் அவற்றின் ஆதாரம் குறைவற்றதும், குறைபாடற்றதுமாக இருக்கிறது. தேவனுடைய கோபம் குறைபாடற்றது. அதே போன்று, எந்தவொரு சிருஷ்டிப்பிடமும் இல்லாத அவருடைய இரக்கமும், சகிப்புத்தன்மையும் பரிசுத்தமானவையாகவும் மற்றும் குறைவற்றவையாகவும் இருக்கின்றன, மேலும் சிந்தனைமிக்க ஆழ்ந்து ஆராய்தலையும், அனுபவத்தையும் எதிர்கொள்ளக்கூடியவையாகவும் உள்ளன.

நினிவே சம்பவத்தில் உங்களுடைய புரிந்துகொள்ளுதலின் மூலம் தேவனுடைய நீதியான மனநிலையினுடைய சாராம்சத்தின் மறுபக்கத்தை உங்களால் தற்போது பார்க்க முடிகிறதா? தேவனுடைய நீதியான மனநிலையின் தனித்துவத்தின் மறுபக்கத்தை உங்களால் பார்க்க முடிகிறதா? மனிதகுலத்தில் யாராகிலும் இவ்விதமான இயல்பை உடையவர்களாக இருக்கிறார்களா? தேவனுடைய கோபத்தைப் போன்றதொரு கோபத்தை யாராகிலும் உடையவர்களாக இருக்கிறார்களா? தேவனிடம் இருக்கிறதைப்போல இரக்கமும் சகிப்புத்தன்மையையும் உடையவர்களாக யாராகிலும் இருக்கிறார்களா? சிருஷ்டிப்புகளிலே யார் இப்படிப்பட்ட கடுங்கோபத்தையும், அழிப்பதற்கான தீர்மானத்தையும் அல்லது மனிதகுலத்தின் மேல் அழிவையும் வரவழைக்கக் கூடும்? மனிதன் மீது சகிப்புத்தன்மை மற்றும் மன்னிப்பை அளிக்கும்படி இரக்கத்தை காட்டவும், மற்றும் மனிதனை அழிக்க முன்பு தீர்மானித்ததை மாற்றவும் யார் தகுதியுடையவர்? சிருஷ்டித்தவர் தம்முடைய நீதியான மனநிலையை தம்முடைய சொந்த வழியில் தனித்துவமான முறையிலும் மற்றும் நியமங்களிலும் வெளிப்படுத்துகிறார், மேலும் ஜனங்களாலும், சம்பவங்களாலும் மற்றும் பொருட்களாலும் அவர் கட்டுப்படுத்தப்பட அல்லது வரையறுக்கப்படக் கூடியவர் அல்ல. அவருடைய தனித்துவமான மனநிலையைக் கொண்டு, அவருடைய எண்ணங்களையும் யோசனைகளையும் எவரும் மாற்றவோ அல்லது அவரை வலியுறுத்தவோ மற்றும் அவருடைய தீர்மானங்களை மாற்றவோ முடியாது. அனைத்துச் சிருஷ்டிப்புகளில் இருக்கும் நடத்தை மற்றும் எண்ணங்களின் முழுமை அவருடைய நீதியான மனநிலையின் நியாயத்தீர்ப்பிற்குட்பட்டதாக இருக்கிறது. அவர் கோபத்தை உபயோகிக்கிறாரா அல்லது இரக்கத்தை உபயோகிக்கிறாரா என்பதில் எவரும் அவரை கட்டுப்படுத்த முடியாது; சிருஷ்டிகரின் சாராம்சம் மட்டுமே அதாவது வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் சிருஷ்டிகரின் நீதியான மனநிலை மட்டுமே இதைத் தீர்மானிக்க முடியும். இதுவே சிருஷ்டிகரின் நீதியான மனநிலையின் தனித்துவமான இயல்பாகும்!

நினிவே ஜனங்களின் மீதான தேவனுடைய சிந்தையின் மாற்றத்தை ஆராய்ந்து பார்ப்பது மற்றும் புரிந்துக்கொள்வதின் மூலம் “தனித்துவம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தேவனுடைய நீதியான மனநிலையில் காணப்படுகிற இரக்கத்தை உங்களால் விவரிக்க முடியுமா? தேவனுடைய கோபமானது அவருடைய தனித்துவமான நீதியான மனநிலையின் சாராம்சத்தின் ஒரு பண்பு என்று நாங்கள் எற்கனவே கூறினோம். இப்போது தேவனுடைய கோபம் மற்றும் தேவனுடைய இரக்கம் என்ற இரு பண்புகளை அவருடைய நீதியான மனநிலையாக விவரிக்கிறேன். தேவனுடைய நீதியான மனநிலையானது பரிசுத்தமானது; இது அவமதிக்கப்படுவதையோ அல்லது கேள்விக்கேட்கப்படுவதையோ சகித்துக்கொள்வதில்லை; இது சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாதவைகளில் எதிலும் இல்லாத ஒன்றை பெற்றிருப்பதாகும். இது தேவனுக்கு தனித்துவமானது மற்றும் பிரத்தியேகமானது ஆகும். தேவனுடைய கோபமானது பரிசுத்தமும் புண்படுத்தாததுமானது என்று இதனை சொல்லக் கூடும். அதைப்போன்றே தேவனுடைய நீதியான மனநிலையின் மற்ற பண்பான தேவனுடைய இரக்கமும் பரிசுத்தமும் குற்றப்படுத்தப்படாதாக இருக்கிறது. எந்த ஒரு சிருஷ்டிக்கப்பட்டவைகளோ அல்லது சிருஷ்டிக்கப்படாத ஜீவிகளோ தேவனுடைய செயல்களுக்கு மாற்றாகவோ அல்லது அவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது, அவர் சோதோமை அழிக்கும்பொழுதும், நினிவேயை இரட்சிக்கும்பொழுதும் அவருக்கு மாற்றாகவோ அல்லது அவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. இது தேவனுடைய தனித்துவமான நீதியான மனநிலையின் உண்மையான வெளிப்பாடாகும்.

மனிதகுலத்தின் மீதான சிருஷ்டிகரின் உண்மையான உணர்வுகள்

தேவனைப் பற்றி அறிந்துகொள்வது எளிதானது அல்ல என்று மக்கள் அடிக்கடி கூறுவதுண்டு. எப்படியாயினும், நான் கூறுகிறேன், தேவனைப் பற்றி அறிந்துகொள்வது ஒரு கடினமான விஷயமேயல்ல. ஏனெனில் மனிதன் தம்முடைய கிரியைகளைப் பார்க்கும்படிக்கு தேவன் அதை அடிக்கடி காட்சிப்படுத்துகிறார். மனிதகுலத்தோடு உரையாடுவதையும் தேவன் ஒருபோதும் நிறுத்திவிடவும் இல்லை, தம்மை மறைத்துக்கொள்ளவும் இல்லை. அவருடைய எண்ணங்கள், அவருடைய யோசனைகள், அவருடைய வார்த்தைகள் மற்றும் அவருடைய கிரியைகள் யாவும் மனித குலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே மனிதன் தேவனை அறிய விரும்புகிற வரை எல்லாவித வழிகளிலும் மற்றும் முறைகளிலும் அவரை புரிந்துகொள்ளவும் மற்றும் அறிந்துகொள்ளவும் முடியும். தேவன் தம்மைக் குறித்து அறியப்படுவதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார், தேவன் வேண்டுமென்றே தம்மை மனிதகுலத்திற்கு மறைத்திருக்கிறார், தம்மை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் மனிதனை அனுமதிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை, என்று மனிதன் கண்மூடித்தனமாகக் கூறுவதின் காரணமென்னவென்றால், மனிதன் தேவன் யாரென்று அறியவுமில்லை, தேவனைப் புரிந்துக்கொள்ள விரும்பவுமில்லை. அதற்கும் மேலாக சிருஷ்டிகருடைய எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது கிரியைகளின் மீது அவன் அக்கறை கொள்ளவுமில்லை…. உண்மையைக் கூறுவதென்றால், ஒரு மனிதன் தன்னுடைய மீதியான நேரத்தைச் சிருஷ்டிகரின் வார்த்தைகளை அல்லது கிரியைகளை அறிந்துகொள்ள பயன்படுத்தினால், சிருஷ்டிகரின் எண்ணங்களை மற்றும் அவருடைய இருதயத்தின் சத்தத்தைக் கேட்கச் சிறிது கவனத்தைச் செலுத்தினால், அந்த மனிதனுக்குச் சிருஷ்டிகருடைய எண்ணங்களும், வார்த்தைகளும் மற்றும் கிரியைகளும் காணக்கூடியதாகவும், வெளியரங்கமாயும் இருக்கும் என்பதை அந்த நபர் அறிந்துகொள்ளக் கடினமாக இருக்காது. அதேப்போன்று மனிதருக்குள்ளே சிருஷ்டிகர் எல்லா காலங்களிலும் இருக்கிறார், அவர் மனிதனோடும் மற்றும் ஒட்டுமொத்த சிருஷ்டிகளோடும் எப்போதும் உரையாடலில் இருக்கிறார், மேலும் அவர் ஒவ்வொரு நாளும் புதிய கிரியைகளை நடப்பித்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள மனிதனுக்கு ஒரு சிறிய முயற்சியே போதுமானது. அவருடைய இயல்பும் மனநிலையும் மனிதனுடனான அவருடைய உரையாடலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவருடைய எண்ணங்கள் மற்றும் யோசனைகள் எல்லாம் அவருடைய கிரியைகளில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர் மனிதகுலத்தோடு எல்லாக் காலத்திலும் உடன் இருந்து, கவனித்துக் கொண்டு இருக்கிறார். “நான் பரலோகத்திலிருக்கிறேன், நான் என் சிருஷ்டிகளுக்குள் இருக்கிறேன், நான் அவற்றைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறேன்; நான் காத்துக்கொண்டிருக்கிறேன்; நான் உங்கள் பக்கமிருக்கிறேன்….” என்ற வார்த்தைகளால் மனிதகுலத்தோடும், அனைத்து சிருஷ்டிகளோடும் அவர் அமைதியாய் பேசுகிறார். அவருடைய கரங்கள் இதமாயும், உறுதியாயும் இருக்கிறது; அவருடைய அடிச்சுவடுகள் இலகுவானவை; அவருடைய சத்தம் மென்மையானது மற்றும் கிருபையுள்ளது; அவருடைய வடிவம் மனிதகுலத்தைத் தழுவி கடந்துப்போய் மறுபடியும் திரும்புகிறது; அவருடைய முகத்தோற்றம் அழகானது மற்றும் மென்மையானது. அவர் ஒருபொழுதும் விட்டு விலகுவதில்லை, ஒருபொழுதும் மறைந்து போவதில்லை; மனித குலத்தை விட்டு விலகாமல் இரவும் பகலும் அவர் அவர்களோடு இருக்கிறார். மனித குலத்தின் மீதான அவருடைய அர்ப்பணிப்பான பராமரிப்பும், விசேஷமான பாசமும், மற்றும் மனிதன் மீதான அவருடைய அக்கறையும், அன்பும் அவர் நினிவே பட்டணத்தை இரட்சிக்கும் சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தப்பட்டது. குறிப்பாக யேகோவா தேவனுக்கும் யோனாவிற்கும் இடையேயான வார்த்தைப் பரிமாற்றங்கள் அவர் தாம் படைத்த மனிதன் மீது சிருஷ்டிகருடைய பரிவை வெளிப்படுத்துகிறது. அந்த வார்த்தைகளின் மூலம் நீங்கள் தேவனுடைய உண்மையான உணர்வைக் குறித்து ஓர்ஆழ்ந்த புரிதலைப் பெற முடியும் …

கீழ்க்காணும் வசனப்பகுதியானது யோனாவின் புத்தகம் 4:10-11 உள்ள வசனங்களில் பதிவிடப்பட்டுள்ளது. “அதற்குக் கர்த்தர்: நீ நட்டு வைக்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரே இராத்திரியிலே மடிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக நீ இப்படி பரிதாபப்படுகிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வேறுபாடு தெரியாத இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு மிகுதியான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா என்றார்.” என்றார். இவை தேவனுக்கும் யோனாவுக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலில் பதிவிடப்பட்டுள்ள யேகோவா தேவனுடைய உண்மையான வார்த்தைகள். இந்த வார்த்தைப் பரிமாற்றங்கள் சுருக்கமாக இருந்தாலும், இது மனிதகுலத்தின் மீதான சிருஷ்டிகருடைய அக்கறையையும், மனிதகுலத்தைக் கைவிட அவர் தயங்குவதையும் காட்டுகிறது. இந்த வார்த்தைகள் சிருஷ்டிகள் மீது தேவன் தம்முடைய இருதயத்தில் கொண்டிருக்கும் அவருடைய உண்மையான மனப்பான்மையையும் மற்றும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. மனிதனால் அரிதாகக் கேட்கக்கூடிய இந்தத் தெளிவான மற்றும் துல்லியமான வார்த்தைகளின் மூலம் தேவன் மனிதகுலத்திற்கான தம்முடைய உண்மையான நோக்கத்தை அறிவிக்கிறார். இந்த வார்த்தைப் பரிமாற்றமானது தேவன் நினிவே மக்கள் மீது கொண்ட மனப்பான்மையைக் குறிப்பிடுகிறது—ஆனால் இது எவ்வகையான மனப்பான்மை? இந்த மனப்பான்மையானது நினிவே மக்கள் மனந்திரும்புவதற்கு முன்னும் அதற்குப் பின்னுமானதும் மற்றும் அவர் மனித குலத்தை நடத்தும் மனப்பான்மையாகும். இந்த வார்த்தைகளுக்குள்ளே அவருடைய எண்ணங்களும் இயல்புகளும் அடங்கியிருக்கின்றன.

இந்த வார்த்தைகளில் தேவனுடைய எந்த எண்ணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன? நீங்கள் வாசிக்கும்போது அந்த விவரங்கள் மேல் கவனம் செலுத்துவீர்களென்றால், “பரிதாபம்” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துகிறதை நீங்கள் கவனிப்பது கடினமாக இருக்காது; இந்த வார்த்தையின் பயன்பாடானது மனித குலத்தை நோக்கி தேவனுடைய உண்மையான மனப்பான்மையைக் காட்டுகிறது.

உண்மையான அர்த்தத்தின்படி, “பரிதாபம்” என்ற வார்த்தையை மக்கள் பல விதங்களில் மொழிபெயர்க்கக் கூடும். முதலாவதாக, இதன் அர்த்தமானது “அன்புக்கூருவது மற்றும் பாதுக்காப்பது, ஒன்றின் மீது பரிவாக உணர்வது;” இரண்டவதாக இதன் அர்த்தமானது “பிரியமுடன் நேசிப்பது” என்பவையாகும்; மற்றும் இறுதியாக இதன் அர்த்தமானது “ஒன்றை அவமானப்படுத்த விருப்பமில்லாமலிருப்பது மற்றும் அப்படிச் செய்வதற்கு இயலாமல் இருப்பது”. சுருக்கமாகக் கூறுவதென்றால், இந்த வார்த்தையானது மென்மையான பாசத்தையும் மற்றும் அன்பையும் அத்துடன் யாரோ ஒருவரை அல்லது ஒன்றை விட்டுவிட விருப்பமில்லாமலிருப்பதையும் குறிப்பிடுகிறது; இந்த வார்த்தையானது மனிதக் குலத்தை நோக்கிய தேவனுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது. மனிதர்கள் சாதாரணமாகப் பேசும் இந்த வார்த்தையை தேவன் பயன்படுத்தினார், மேலும் இது தேவனுடைய இருதயத்தின் சத்தத்தையும் மற்றும் மனிதகுலத்தை நோக்கிய அவருடைய மனப்பான்மையையும் வெட்ட வெளிச்சமாக்கக் கூடியதாக இருக்கிறது.

சோதோம் மக்களைப் போல சீர்கேடான, துன்மார்க்கமான மற்றும் வன்முறையான மக்களால் நினிவே நகரமானது நிரம்பி இருந்தாலும், அவர்களுடைய மனமாற்றமானது தேவனுடைய இருதயத்தை மாற்றுகிறதாகவும் மற்றும் அவர்களை அழிக்காதப்படி தீர்மானிக்கவும் செய்தது. தேவனுடைய வார்த்தைகளையும், கட்டளைகளையும் அவர்கள் நடத்திய விதம், சோதோமிய குடிகளின் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறுப்பட்ட அணுகுமுறை, தேவனுக்கு அவர்களுடைய நேர்மையான சமர்ப்பணம், மற்றும் பாவத்திலிருந்து அவர்களுடைய நேர்மையான மனந்திரும்புதல் அத்துடன் அவர்களுடைய உண்மையான மற்றும் எல்லா வித காரியங்களிலும் இருதயத்தில் உணர்ந்த நடத்தை ஆகியவற்றின் காரணத்தினால் தேவன் மீண்டுமொருமுறை தம்முடைய சொந்த இருதயத்திலிருந்து உணரப்பட்ட பரிதாபத்தை வெளிப்படுத்தி, அதை அவர்கள் மீது பொழிந்தருளினார். தேவன் மனிதகுலத்தின்மேல் அருளுகிறவற்றையும், மனித குலத்தை நோக்கிய அவருடைய பரிதாபத்தையும் அவர் தருவதைப்போன்று எவரும் தர முடியாது, மற்றும் தேவனுடைய இரக்கத்தையும், அவருடைய சகிப்புத்தன்மையையும், அல்லது மனித குலத்தின் மேல் அவர் கொண்டிருக்கிற உண்மையான உணர்வை கொண்டிருப்பதும் எந்த மனிதனுக்கும் சாத்தியமில்லாதது. மனிதகுலத்தின் மீது அல்லது சிருஷ்டிப்புகளின் மீது இப்படிப்பட்ட அறிக்கையைத் தரும் பெரிய மனிதராக அல்லது மனுஷியாக அல்லது தங்கள் உயர் நிலையிலிருந்து பேசும் இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதராக, ஒரு பெரும் மனிதராக, மனுஷியாக நீ கருதுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? தங்கள் உள்ளங்கையை அறிந்திருப்பது போல மனித வாழ்வை அறியக்கூடியவர் இந்த மனிதகுலத்தின் மத்தியில் யாராவது ஒருவர் உண்டா? மனிதகுலத்திலிருக்கிற பாரங்களை சுமக்கவும், பொறுப்பாளியாக இருக்கவும் தக்கவர் யார்? ஒரு நகரத்தின் அழிவை அறிவிக்கும் தகுதியுடையவர் யார்? மற்றும் ஒரு பட்டணத்தை மன்னிக்கத்தக்கவர் யார்? தனது சொந்த படைப்புகள் மீது பரிதாபப்படுவதாக யார் கூறக்கூடும்? சிருஷ்டிகர் மட்டுமே இப்படி கூற முடியும்! இந்த மனித குலத்தின் மீது பரிவைக் காட்ட சிருஷ்டிகரால் மட்டுமே முடியும். சிருஷ்டிகர் மட்டுமே மனிதக் குலத்தின் மீது மனதுருக்கத்தையும் மற்றும் பாசத்தையும் காட்ட முடியும். இந்த மனிதக் குலத்திற்கு சிருஷ்டிகர் மட்டுமே உண்மையான, தகர்த்தெறிய முடியாத பாசத்தையும் உடையவர். அதே போல சிருஷ்டிகர் மட்டுமே மனிதகுலத்தின் மீது இரக்கத்தையும், மற்றும் தம்முடைய சிருஷ்டிகளின் மீது பரிதாபத்தையும் பொழியக்கூடியவர். ஒவ்வொரு மனிதனுடைய செயல்களுக்காகவும் அவருடைய இருதயம் துடிக்கிறது மற்றும் வேதனைப்படுகிறது: அவர் கோபப்படுகிறார், துன்பப்படுகிறார், மனிதனுடைய பொல்லாப்பிற்கும் சீர்கேட்டிற்கும் துக்கப்படுகிறார்; மனிதனுடைய மனமாற்றத்திற்காகவும் மற்றும் விசுவாசத்திற்காகவும் அவர் பிரியப்படுகிறார், சந்தோஷப்படுகிறார், மன்னிக்கிறவராக இருக்கிறார் மற்றும் வெற்றி உவகைக் கொள்கிறார்; அவருடைய ஒவ்வொரு எண்ணங்களும் யோசனைகளும் மனிதகுலத்திற்காகவே மற்றும் அதை சுற்றியே சுழல்கிறது; அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன வைத்துக்கொண்டிருக்கிறார் என்பவைகள் முழுவதும் மனிதருக்காகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன; அவருடைய உணர்வின் பூரணமானது மனிதகுலத்தின் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. மனிதகுலத்திற்காகவே அவர் பயணிக்கிறார் மற்றும் விரைந்து செயல்படுகிறார்; அவர் தம்முடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அமைதியாக தருகிறார்; அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் விநாடியையும் அர்ப்பணிக்கிறார்…. தம்முடைய வாழ்வை எவ்வாறு நேசிப்பது என்று அவர் ஒருபொழுதும் அறியார், இருப்பினும் தாம் உண்டாக்கின மனிதகுலத்தின் மீது எப்பொழுதும் பரிதாபப்படுகிறார்…. தம்மிடமுள்ள யாவற்றையும் அவர் மனித குலத்திற்காகத் தருகிறார்…. அவர் தம்முடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் நிபந்தனையில்லாமலும், கைமாறு எதிர்பார்க்காமலும் அருளுகிறார். அவருடைய கண்களுக்கு முன்பாக மனித குலமானது தொடர்ந்து ஜீவிக்கும்படியாகவும், வாழ்விற்கான அவருடைய போஷிப்பை பெறும்படியாகவும் அவர் இப்படிச் செய்கிறார். மனித குலம் அவருக்குக் கீழ்படிந்து அவர் மட்டுமே மனிதனுடைய ஜீவிதத்தை வளமாக்குகிறவர், எல்லா சிருஷ்டிகளின் வாழ்விற்குத் தேவையானவற்றை வழங்குகிறவர் என்று ஒரு நாள் அவரை அறிந்துகொள்வார்கள் என்பதற்காக மட்டுமே அவர் இப்படிச் செய்கிறார்.

சிருஷ்டிகர் மனித குலத்திற்காக தன்னுடைய உண்மையான உணர்வை வெளிப்படுத்துகிறார்

யேகோவா தேவனுக்கும் மற்றும் யோனாவிற்கும் இடையே நடந்த இந்த உரையாடலானது மனிதகுலத்தின் மீதான சிருஷ்டிகருடைய உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடு என்பதில் சந்கேமில்லை. ஒரு புறத்தில் யேகோவா தேவன் சொன்னது போல, “வலதுகைக்கும் இடதுகைக்கும் வேறுபாடு தெரியாத இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு மிகுதியான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா?” என்று கூறுவதில் தம்முடைய ராஜரீகத்தின் கீழ் எல்லா சிருஷ்டிகளைக் குறித்த சிருஷ்டிகருடைய புரிதலை இது அறிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் நினிவேயைக் குறித்த தேவனுடைய புரிதலானது மேம்போக்கான ஒன்றல்ல. அந்த நகரத்திலுள்ள உயிரினங்களின் (மக்கள் மற்றும் மிருக ஜீவன்கள்) எண்ணிக்கையை அவர் அறிந்தது மட்டுமன்றி, எத்தனைப்பேர் வலது கரத்திற்கும் இடது கரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அதாவது எத்தனை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். மனித இனத்தைக் குறித்த தேவனுடைய பரந்தப் புரிதலுக்கு உறுதியான ஓர் ஆதாரமிது. இந்த உரையாடலானது மக்கள் மீதான சிருஷ்டிகருடைய மனப்பான்மையை அறிவிக்கிறது, அதாவது சிருஷ்டிகருடைய இருதயத்தில் மனிதகுலத்தைக் குறித்த பாரம் என்று இதைச் சொல்லாம். இது யேகோவா தேவன் “நீ நட்டு வைக்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரே இராத்திரியிலே மடிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக நீ இப்படி பரிதாபப்படுகிறாயே. நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா…?” என்று கூறினது போன்றதாகும். இவைகள் யோனாவை நோக்கிக் கடிந்துக்கொண்ட தேவனுடைய வார்த்தைகள், ஆனால் அவைகள் எல்லாம் உண்மையானவைகள்.

நினிவே மக்களுக்கு யேகோவா தேவனுடைய வார்த்தையை அறிவிக்கும் பொறுப்பு யோனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவன் யேகோவா தேவனுடைய நோக்கத்தைப் புரிந்துக்கொள்ளவில்லை, அந்த நகர மக்களுக்கான அவருடைய கவலையையும் மற்றும் எதிர்ப்பார்ப்பையும் அவன் புரிந்துக்கொள்ளவில்லை. இந்தக் கண்டிப்பில், மனிதகுலமானது தேவனுடைய கரங்களின் கிரியை என்பதை அவனுக்கு அவர் எடுத்துச்சொல்ல விரும்பினார், ஒவ்வொரு தனிநபரும் தேவனுடைய எதிர்ப்பார்ப்பைத் தங்கள் தோள்களின் மீது சுமந்துச் செல்லும்படிக்கும் மற்றும் ஒவ்வொரு தனி நபரும் தங்களுடைய வாழ்விற்கு தேவன் அளித்தவற்றை அனுபவிக்கும்படிக்கும் அவர் ஒவ்வொரு தனிநபர் மீதும் தம்முடைய கடின முயற்சியைப் பயன்படுத்தியிருக்கிறார், ஏனெனில் ஒவ்வொருவருக்காகவும் கடின முயற்சி என்ற விலையைக் கொடுத்து இருக்கிறார். இந்தக் கடிந்துக்கொள்ளுதலானது யோனா ஆமணக்குச் செடி மீது பரிதாபப்பட்டதுபோல தேவன் தம்முடைய சொந்தக் கரங்களின் கிரியைகளாகிய மனித குலத்திற்காகப் பரிதாபப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. அந்த நகரத்தில் பல குழந்தைகள் மற்றும் ஒன்றுமறியாத மிருக ஜீவன்கள் இருக்கிற காரணத்தினால் மனித குலத்தை தேவன் அவ்வளவு எளிதில் அல்லது சாத்தியமாகும் கணப்பொழுதுவரை எவ்விதத்திலும் அழிக்கமாட்டார். வலது கரத்திற்கும் இடது கரத்திற்கும் வித்தியாசம் தெரியாத தேவனுடைய கிரியைகளான இளைஞர்களோடு இடைபடும்போது தேவன் அவர்களுடைய வாழ்வை முடிப்பது மற்றும் அவர்களுடைய முடிவை அவசரகதியில் தீர்மானிப்பது சிறியதாகக் கருதப்பட்டது. அவர்கள் வளருவதைப் பார்க்க தேவன் விரும்பினார், அவர்கள் அவர்களுடைய முன்னோர்கள் சென்ற பாதையில் செல்ல மாட்டார்கள், அவர்கள் யேகோவா தேவனின் எச்சரிக்கையை மறுபடியும் கேட்கக் கூடாது என நம்பினார், அவர்கள் நினிவேயின் கடந்த காலத்திற்கு அத்தாட்சியாக இருப்பார்கள் என அவர் நம்பினார். சற்றுக் கூடுதலாக சொல்வதென்றால் தேவன் நினிவே நகரத்தை அது மனந்திரும்பின பிறகு பார்க்க விரும்பினார், மனந்திரும்புதலைப் பின்தொடர்ந்து அதன் எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினார், மிக முக்கியமாக நினிவே நகரம் தேவனுடைய இரக்கத்தின் கீழ் மறுபடியும் வாழ்வதை விரும்பினார். ஆகையால் தேவனுடைய கண்களில் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத அந்தச் சிருஷ்டிகள் நினிவேயின் எதிர்காலமாக இருந்தனர். அவர்கள் யேகோவா தேவனின் வழிகாட்டுதலின் கீழ் நினிவேயின் கடந்த காலம் மற்றும் அதனுடைய எதிர்காலம் ஆகிய இரண்டிற்கும் சாட்சியாக இருக்கும் முக்கியமான வேலையைச் சுமப்பது போன்று, நினிவேயின் அருவருக்கத்தக்கக் கடந்தகாலத்திற்கும் சாட்சியைச் சுமப்பார்கள். அவருடைய உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த அறிவிப்பில், யேகோவா தேவன் மனிதகுலத்திற்குச் சிருஷ்டிகரின் இரக்கத்தை அதனுடைய நிறைவான அளவில் அளித்தார். “சிருஷ்டிகரின் இரக்கம்” என்பது வெறும் சொற்றொடருமல்ல, வெற்று வாக்குத்தத்தமுமல்ல; அது உறுதியான கோட்பாட்டையும், முறைகளையும், நோக்கங்களையும் கொண்டது. தேவன் உண்மையுள்ளவராகவும், மெய்யானவராகவும் இருக்கிறார், அவர் பொய்யானவற்றைப் பயன்படுத்துவதில்லை அல்லது வேஷம் மாறுவதில்லை, இதைப்போன்று மனிதகுலத்தின் மீது அவருடைய இரக்கம் எல்லா நேரத்திலும் எல்லாக் காலங்களிலும் முடிவில்லாமல் பொழியப்பட்டிருக்கிறது. எப்படியாயினும், அவர் மனிதகுலத்திற்கு ஏன் இரக்கம் காட்டுகிறார் மனித குலத்திற்கு அவர் எவ்வாறு இரக்கம் காட்டுகிறார் மனித குலத்தின் மேல் எவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார் மற்றும் மனித குலத்திற்கான அவருடைய உண்மையான உணர்வுகள் எவை என்பதற்கு யோனாவுடன் பரிமாறப்பட்ட அறிக்கை ஒன்றே இன்று வரை பிரத்தியேக வாய்மொழி அறிக்கையாக இருக்கிறது. யேகோவா தேவனுடைய சுருக்கமான வார்த்தைகள் இந்த உரையாடலில் மனித குலத்துடனான அவருடைய எண்ணங்களை ஒருங்கிணைத்து முழுமையாக வெளிப்படுத்துகிறது; அவைகள் மனித குலத்துடனான அவருடைய இருதயத்தினுடைய அணுகுமுறையின் உண்மையான ஒரு வெளிப்பாடு, மேலும் அவைகள் மனித குலத்தின் மீது அவர் பொழிந்த இரக்கத்திற்கான உறுதியான ஆதாரம். அவருடைய இரக்கமானது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எப்பெழுதும் பொழியப்படுவதுப்போன்று, மனிதகுலத்தின் மூத்தவர்கள் மீது மட்டுமில்லாமல், மனிதகுலத்தின் இளைய உறுப்பினர்கள் மீதும் பொழியப்பட்டது. தேவனுடைய கோபமானது மனிதகுலத்தின் ஒரு சில மூலைகளில் மற்றும் ஒரு சில காலங்களில் அவ்வப்போது கீழிறங்கி வந்தாலும், தேவனுடைய இரக்கமானது ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. அவருடைய சிருஷ்டிகளை ஒரு தலைமுறைக்குப் பிறகு மற்றுமொரு தலைமுறைக்கு வழிநடத்துகிறார் மற்றும் வழிவகுக்குகிறார் ஒரு தலைமுறைக்குப் பின்னர் அடுத்த தலைமுறையை நேசிக்கிறார், ஏனெனில் யேகோவா தேவன் “நான் பரிதாபப்பட மாட்டேனா…?” என்று கூறினது போன்று மனிதகுலத்தை நோக்கிய அவருடைய உண்மையான உணர்வுகள் ஒருபோதும் மாறாதவை. அவர் தம்முடைய சொந்தச் சிருஷ்டிப்புகளுக்காக எப்பொழுதும் பரிதாபப்படுகிறார். இந்த இரக்கமானது சிருஷ்டிகருடைய நீதியின் இயல்பாகவும் மற்றும் சிருஷ்டிகருடைய முழுத் தனித்துவமாகவும் இருக்கிறது!

ஐந்து வகையான ஜனங்கள்

தேவனுடைய நீதியான மனநிலையைக் குறித்த நம்முடைய விவாதத்தை விட்டு தற்போதைக்கு நான் வெளியே வருகிறேன். அப்படியே சற்றுக் கடந்துச் சென்று, நீங்கள் இருக்கிற உங்களுடைய இப்போதைய நிலையையும், இப்போதைய அந்தஸ்தையும் நீங்கள் அறியும்படிக்கு, தேவனைப் பின்பற்றுகிறவர்களை, தேவனைப் பற்றிய அவர்களுடைய புரிந்துக்கொள்ளளுதலுக்கேற்றவாறும், அவருடைய நீதியான மனநிலையைக் குறித்த அனுபவத்தின்படியும் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்போகிறேன். தேவனைப் பற்றிய மக்களின் அறிவு மற்றும் தேவனுடைய நீதியான மனநிலையைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றைக் குறித்து மக்கள் பெற்றிருக்கிற வெவ்வேறு நிலைகள் மற்றும் உயரங்கள் அல்லது அந்தஸ்துகள் ஆகியவை பொதுவாக ஐந்து வகையாகப் பிரிக்கலாம். இந்தத் தலைப்பானது தனித்துவமான தேவனை அறிதல் மற்றும் அவருடைய நீதியான மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்தப் பின்வரும் உள்ளடக்கத்தை நீங்கள் படிக்க்கும் போது, தேவனுடைய தனித்துவத்தைப் பற்றியும், அவருடைய நீதியான மனநிலையைப் பற்றியும் உங்களுக்கு எவ்வளவு புரிதல் மற்றும் அறிவு இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டுப்பிடிக்கக் கவனமாய் முயற்சி செய்யுங்கள், அதன் பின்னர் அதன் முடிவைப் பயன்படுத்தி நீங்கள் எந்த நிலையைச் சார்ந்திருக்கிறீர்கள், உங்களுடைய உண்மையான உயரம் எவ்வளவாக இருக்கிறது, நீங்கள் உண்மையாகவே எவ்வகையான மனிதர் என்பதை நிதானியுங்கள்.

முதலாம் வகை: துணிகளில் சுற்றப்பட்ட குழந்தையின் நிலை

“துணிகளில் சுற்றப்பட்ட குழந்தையின் நிலை” என்பதின் பொருள் என்ன? துணிகளில் சுற்றப்பட்ட ஒரு குழந்தையின் நிலையானது, புதிதாகப் பிறந்த, தற்போதுதான் உலகத்தில் வந்த ஒரு குழந்தையைப் போன்றது. இது ஜனங்களின் மிகவும் முதிர்ச்சியற்ற நிலையாகும்.

இந்த நிலையிலுள்ள ஜனங்கள் தேவனில் கொண்டிருக்கும் விசுவாசத்தைப் பற்றிய காரியங்களில் விழிப்புணர்வையோ அல்லது உணர்வையோ கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் எல்லாவற்றையும் குறித்துக் குழப்பமாகவும், அறியாமையிலும் இருக்கிறார்கள். இந்த ஜனங்கள் நீண்ட நாளாகவோ அல்லது ஒருவேளை மிக நீண்ட நாட்களாக இல்லாமலோ தேவன் பேரில் விசுவாசம் கொண்டிருக்கலாம், ஆனால் அவர்களுடைய குழப்பமும், அறியாமையின் நிலையும் மற்றும் அவர்களுடைய உண்மையான உயரமும் அவர்களை துணிகளில் சுற்றப்பட்ட குழந்தை நிலையில் கொண்டு வந்து வைத்து விடுகிறது. துணிகளில் சுற்றப்பட்ட நிலையிலுள்ள ஒருவனுடைய நிலையைக் குறித்தத் துல்லியமான விளக்கம் என்னவென்றால்: இவ்வகையான மனிதன் எவ்வளவு நாள் தேவன் பேரில் விசுவாசமாக இருந்தாலும், அவர்கள் எப்பொழுதும் மனக்குழப்பமும், கலக்கமும் மற்றும் எளிய எண்ணமுடையவர்களாகவும் இருப்பார்கள்; அவர்கள் தாங்கள் தேவன் பேரில் எதற்கு விசுவாசம் கொண்டிருக்கிறோம் என்றோ அல்லது தேவன் எப்படிப்பட்டவர் அல்லது தேவன் யார் என்றோ அறியாதவர்கள். அவர்கள் தேவனைப் பின்பற்றினாலும், அவர்களுடைய இருதயத்தில் தேவனைக் குறித்தான தெளிவான விளக்கம் கிடையாது. அவர்கள் உண்மையிலேயே தேவனை மட்டுமே விசுவாசித்து பின்பற்றவது ஒருபுறமிருந்தாலும், தாங்கள் தேவனைத்தான் பின்பற்றுகிறோமா என்று அவர்களால் தீர்மானிக்க முடியாது. இந்த வகையிலுள்ள மனிதனின் உண்மையான நிலை இதுதான். இந்த ஜனங்களின் எண்ணங்கள் தெளிவற்றவை, எளிமையானவை, அவர்களுடைய விசுவாசமானது குழப்பம் நிறைந்தது. அவர்கள் எப்பொழுதும் குழப்பம் மற்றும் வெறுமை நிலையிலேயே இருக்கிறார்கள்; “மனக்குழப்பம்” “கலக்கம்” மற்றும் “எளிமையான எண்ணங்கள்” ஆகியவை இவர்களுடைய நிலையைக் குறித்துச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றன. அவர்கள் தேவனை ஜீவிக்கிறவராகப் பார்ப்பதுமில்லை, உணர்வதுமில்லை, எனவே தேவனை அறிவதைப் பற்றி அவர்களிடம் பேசுவது பழங்கால எழுத்து முறையில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைப் படிக்க வைப்பது போன்றதாகும்—அவர்கள் ஒருபொழுதும் அதைப் புரிந்துக்கொள்ளவும் மாட்டார்கள், ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை தேவனைப் பற்றி அறிந்துகொள்வது என்பது ஓர் அருமையான கதையைக் கேட்பது போன்றதாகும். அவர்களுடைய எண்ணங்கள் தெளிவில்லாமல் இருக்கும்போது, தேவனைப் பற்றி அறிந்துகொள்வது முற்றிலும் நேர விரயம் மற்றும் வீண் முயற்சி என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதுதான் முதலாம் வகை மனிதன்: துணிகளில் சுற்றப்பட்ட குழந்தை.

இரண்டாம் வகை: பால் குடிக்கும் கைக்குழந்தை

துணிகளில் சுற்றப்பட்ட குழந்தையோடு ஒப்பிடுகையில், இந்த வகை மனிதன் சற்று முன்னேற்றத்தை உண்டாக்கி இருக்கிறான். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களுக்கு தேவனைப் பற்றி இன்னும் எந்தப் புரிதலும் இல்லை. தேவனைக் குறித்த தெளிவான புரிதலிலும், தேவனைப் பற்றிய நுண்ணறிவிலும் அவர்கள் இன்னமும் குறைபாடுள்ளவர்களாக இருக்கிறார்கள், தேவனை எதற்கு விசுவாசிக்க வேண்டும் என்பதைக் குறித்த தெளிவுமிக்கவர்களாக அவர்கள் இல்லை, ஆனாலும் அவர்களுடைய இருதயங்களில் அவர்களுடைய சொந்த நோக்கங்களையும், தெளிவான சிந்தனைகளையும் உடையவர்களாக இருக்கிறார்கள். தேவன் பேரில் விசுவாசம் கொள்வது சரியானதா என்பதைக் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. தேவன் பேரில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் அவர்கள் தேடும் காரணமும் நோக்கமும் என்னவென்றால் அவருடைய கிருபையை அனுபவிப்பதும், சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்வதும், வசதியான வாழ்க்கை வாழ்வதும், தேவனுடைய அரவணைப்பையும், பாதுகாப்பையும் அனுபவிப்பதும் மற்றும் தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் வாழ்வதுமேயாகும். அவர்கள் தேவனைக் குறித்த அறிவின் அளவைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை; தேவனைக் குறித்த புரிதலைத் தேட அவர்களுக்கு எந்த வாஞ்சையுமில்லை, தேவன் என்ன செய்கிறார், அவர் என்ன செய்யச் சித்தம் கொள்கிறார் என்பதைக் குறித்த எந்த அக்கறையுமில்லை. அவர்கள் அவருடைய கிருபையை அனுபவிப்பதற்கும் அவருடைய ஆசீர்வாதங்களை அதிகமாகப் பெறுவதற்காக மட்டுமே கண்மூடித்தனமாக அவரைத் தேடுகிறார்கள்; அவர்கள் தற்காலத்திலும், எதிர் வரப் போகிற நித்திய காலத்திலும் நூறத்தனையாய் நன்மைகளைப் பெறுவதற்காக அவரைத் தேடுகிறார்கள். அவர்களுடைய யோசனைகளும், அவர்கள் தங்களை எவ்வளவு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும், அவர்களுடைய அர்ப்பணிப்பும் மற்றும் பாடுகளும் ஆகிய அனைத்தும் தேவனுடைய கிருபையையும், ஆசீர்வாதங்களையும் பெறும் நோக்கத்தையே பகிர்ந்துக்கொள்கின்றன. மற்ற எதைக் குறித்தும் அவர்களுக்கு அக்கறையில்லை. தேவன் ஜனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும், அவருடைய கிருபையை அவர்கள் மீது பொழியப்பண்ணுவார் என்பதில் மட்டுமே இவ்வகையான மனிதன் உறுதியாக இருக்கிறான். மனிதனை தேவன் ஏன் இரட்சிக்க விரும்புகிறார் என்பதிலோ, தேவன் தம்முடைய வார்த்தைகள் மற்றும் கிரியையின் விளைவைப் பெற விரும்புகிறார் என்பதைக் குறித்த எந்த ஆர்வமோ அல்லது அதைக் குறித்த எந்தத் தெளிவோ அவர்களுக்கு இல்லையென ஒருவர் சொல்லக் கூடும். அவர்கள் தேவனுடைய சாராம்சத்தையும் நீதியான மனநிலையையும் அறிந்துகொள்ள எந்த முயற்சியையும் எடுக்கவில்லை, அப்படிச் செய்ய அவர்கள் ஆர்வங்கொள்ளவுமில்லை. தேவனுடைய கிரியைகளைப் பற்றிக் கேட்க அவர்கள் விரும்பவில்லை, இந்தக் காரியங்களின் மீது கவனம் செலுத்த அவர்கள் ஆர்வக் குறைவாகவும், அவற்றை அறிய விரும்பாமலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனுடைய கிரியைகளைப் பற்றியும், மனிதன் தேவனுக்குச் செய்ய வேண்டியதைப் பற்றியும், தேவனுடைய சித்தம், அல்லது தேவனைச் சார்ந்தவைகள் எதைப் பற்றியும் கேட்க விருப்பமில்லை, மேலும் இவைகளைப் பற்றிக் கேட்க அவர்களுக்கு ஆர்வக் குறைபாடும் உள்ளது. இந்தக் காரியங்கள் யாவும் அவர்கள் அனுபவிக்கிற தேவனுடைய கிருபைக்குத் தொடர்பில்லாதவைகள் என்று அவர்கள் நம்புகிற காரணத்தினால் இப்படி நடக்கிறது, மேலும் அவர்களுடைய சொந்த ஆர்வத்தோடு நேரடியான தொடர்புடைய மற்றும் மனிதன் மீது கிருபையைப் பொழிகிற ஒரு ஜீவிக்கிற தேவனோடு மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், அவர்களுக்கு வேறு எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வமில்லை, எனவே அவர்கள் எத்தனை வருடங்கள் தேவனை விசுவாசித்திருந்தாலும், சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் அவர்களால் பிரவேசிக்க முடியாது. யாராவது அவர்களுக்கு அடிக்கடி தண்ணீர் கொடுக்காமல் அல்லது அவர்களைப் போஷிக்காமல் இருந்தால் தேவனை விசுவாசிக்கும் பாதையில் அவர்கள் தொடருவது கடினம். தங்களுடைய முந்தைய சந்தோஷத்தையும், தேவனுடைய கிருபையையும் அனுபவிக்காமல் போனால், அவர்கள் எளிதில் விலகிச் சென்றுவிடுவார்கள். இது இரண்டாம் வகையான மனிதன்: இந்த மனிதன் பால் குடிக்கும் கைக்குழந்தையின் நிலையில் இருக்கிறான்.

மூன்றாம் வகை: பால் மறக்கும் குழந்தை நிலை, அல்லது இளம் குழந்தை நிலை

இந்த வகை ஜனங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தெளிவான விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறார்கள். தேவனுடைய கிருபையை அனுபவிப்பது மட்டுமே உண்மையான அனுபவத்தைப் பெற்றிருப்பதாக அர்த்தமல்ல என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் மற்றும் கிருபையையும் தேடுவதில் ஒருபோதும் சோர்வடையாவிட்டாலும், அல்லது தேவனுடைய கிருபையின் அனுபவத்தைச் சாட்சியாகப் பகிர்ந்துகொள்ள முடிந்தாலும், அல்லது அவர்கள் மீது பொழியப்பட்ட ஆசீர்வாதங்களுக்காக தேவனை துதித்தாலும், இந்தக் காரியங்கள் அவர்கள் ஜீவனைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையோ அவர்கள் சத்தியத்தின் உண்மையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையோ அர்த்தப்படுத்தாது என்ற விழிப்புணர்வை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியிலிருந்து தொடங்கி, தேவனுடைய கிருபையோடு மட்டுமே இணைந்திருக்க வேண்டுமென்ற பொருந்தாத நம்பிக்கைகளை நிறுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் தேவனுடைய கிருபையை அனுபவித்துக்கொண்டிருக்கும், அதே நேரத்தில் தேவனுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்கள் தேவனுடன் ஒரளவு இணைந்து செயல்பட தங்கள் கடமையைச் செய்யவும், சிறிது கஷ்டத்தையும், சோர்வையும் சகிக்கவும் விரும்புகிறார்கள், எப்படியாயினும், தேவனைத் தொடரும் அவர்களின் விசுவாசம் அதிகக் கலப்படமாக இருக்கிற காரணத்தினாலும், தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் விருப்பங்கள் மிகவும் வலிமையானவைகளாக இருக்கிறப்படியாலும், அவர்களுடைய மனநிலை மிகவும் கர்வமாக இருக்கிறப்படியினாலும், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவது அல்லது தேவனுக்கு உண்மையாக இருப்பது அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாகும். எனவே அவர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பத்தை அடிக்கடி உணர முடிவதில்லை அல்லது தேவனுக்கு அவர்கள் செய்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடிவதில்லை. அவர்கள் தங்களை அடிக்கடி குழப்ப நிலையில் இருப்பவர்களாகவே காண்கிறார்கள்: பெருமளவில் தேவனைத் திருப்திப்படுத்த விரும்புகிறார்கள், இருந்தாலும் அவர்கள் அவரை எதிர்க்கத் தங்கள் முழுப் பலத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் அடிக்கடி தேவனுக்கு பொருத்தனை செய்கிறார்கள், ஆனால் தங்கள் பொருத்தனையைச் சீக்கிரத்திலேயே முறித்துக்கொள்கிறார்கள். மேலும் அவர்கள் தங்களை முரண்பாடுள்ள நிலையிலேயே காண்கிறார்கள்: அவர்கள் தேவனை உண்மையாக விசுவாசிக்கிறார்கள், ஆனால் அவரையும் அவரிடத்திலிருந்து வருகிற எல்லாவற்றையும் மறுதலிக்கிறார்கள்; அவர்கள் தேவன் அவர்களைப் பிரகாசிக்கச் செய்வார், வழி நடத்துவார், போஷிப்பார் மற்றும் உதவிச்செய்வார் என்று ஆவலாய் நம்புகிறார்கள், ஆனாலும் வெளியே வருவதற்கான தங்கள் சொந்த வழியை இன்னமும் தேடுகிறார்கள். அவர்கள் தேவனைப் புரிந்துகொள்ளவும், அறியவும் விரும்புகிறார்கள், ஆனால் அவரிடம் கிட்டிச் சேர விரும்புவதில்லை. மாறாக அவர்கள் எப்பொழுதும் தேவனைத் தவிர்க்கிறார்கள். அவர்களுடைய இருதயமானது அவருக்கு மூடப்பட்டிருக்கின்றன. தேவனுடைய வார்த்தைகள் மற்றும் சத்தியத்தைக் குறித்த அசாதாரணப் புரிதலையும், எழுத்துப்பூர்வமான அர்த்தத்தையும், மற்றும் தேவனைக் குறித்தும், சத்தியத்தைக் குறித்தும் அசாதாரண கருத்தையும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் ஆழ்மனதில் தேவன் உண்மையானவரா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது இன்னமும் தீர்மானிக்கவோ அல்லது தேவன் உண்மையாக நீதியுள்ளவரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவோ அவர்களால் முடிவதில்லை. அவர்களால் தேவன் ஜீவிக்கிறவராக இருக்கிறார் என்பதைத் தவிர அவருடைய மனநிலையையும் மற்றும் சாராம்சத்தையும் கூட தீர்மானிக்க முடிவதில்லை. தேவன் பேரில் அவர்கள் கொண்டுள்ள விசுவாசமானது சந்தேகத்தையும், தவறான புரிதலையும் உடையதாகவும், அது கற்பனைகளையும் மற்றும் தெளிவற்ற கருத்துக்களையும் கொண்டுள்ளதாகவும் இருக்கிறது. அவர்கள் தேவனுடைய கிருபையை அனுபவிக்கும் போது, தேவன் பேரில் கொண்டுள்ள தங்கள் விசுவாசத்தின் அனுபவத்தை விஸ்தரிக்கும்படியாகவும், தேவன் பேரில் கொண்டுள்ள விசுவாசத்தின் புரிந்துகொள்ளுதலை சரிப்பார்த்துக்கொள்ளவும், மற்றும் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட வாழ்வின் பாதையில் நடந்து தங்கள் மாயையைத் திருப்திப்படுத்திக்கொள்ளவும் மற்றும் மனுகுலத்திற்கு ஒரு நீதியை நிலைநிறுத்தவும், முயற்சியை நிறைவேற்றவும் தங்கள் விசுவாசத்தை வளப்படுத்திக்கொள்ள சாத்தியமாகக் கருதுகிறவற்றைத் தயக்கத்துடன் அனுபவிக்கிறார்கள் அல்லது சில சத்தியங்களைக் கடைபிடிக்கிறார்கள். அதே சமயம், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தங்கள் சொந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் இந்தச் செயல்களை எல்லாம் செய்கிறார்கள். இது மனித குலத்திற்கு அதிகமான ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பந்தயம் கட்டுவதில் ஒரு பகுதியாக இருக்கிறது. அவர்கள் தங்கள் இலட்சிய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும், மற்றும் வாழ்நாள் ஆசையை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வரை ஓயமாட்டார்கள். இந்த ஜனங்கள் தேவனுடைய பிரகாசிப்பித்தலை பெறுவது அரிதாக இருக்கிறது, ஏனெனில் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான அவர்களுடைய ஆசை மற்றும் நோக்கம் மட்டுமே அவர்களுக்கு மிகவும் முக்கியமானவைகள். இந்த ஆசையையும் நோக்கத்தையும் விட்டுவிடுவதற்கான எந்த விருப்பமும் அவர்களிடம் இல்லை, உண்மையில் இப்படிச் செய்வதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆசீர்வாதங்களைப் பெறும் ஆசையும், தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வரை ஓயாத ஒரு நீண்ட கால விருப்பமும் இல்லாமல் போனால் தேவனை விசுவாசிக்கும் நோக்கத்தையே இழந்துப்போய்விடுவோமென்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. எனவே அவர்கள் யதார்த்தத்தைச் சந்திக்க விரும்புவதில்லை. அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அல்லது தேவனுடைய கிரியைகளைச் சந்திக்க விரும்புவதில்லை, அவர்கள் தேவனுடைய மனநிலையையும் அல்லது சாராம்சத்தையும் சந்திக்க விரும்பாமல் தேவனை அறிதல் என்ற பாடத்தை மட்டும் அறிய விரும்புகிறார்கள். ஏனெனில் தேவனும், அவருடைய சாராம்சமும், மற்றும் அவருடைய நீதியான மனநிலையும் அவர்களுடைய கற்பனைகளை மாற்றிப்போட்டு விடும், அவர்களுடைய கற்பனைகள் புகையில் மறைந்துப் போய்விடும், மற்றும் இதுவரை சுத்தமான விசுவாசம் மற்றும் பல ஆண்டுகளாகக் கடின வேலையினால் சேர்த்துவைக்கப்பட்ட “தகுதிகள் அல்லது நற்பெயர்” ஆகியவைகள் ஒன்றுமில்லாமல் போய்விடும். அதேபோன்று அவர்கள் வியர்வையினாலும் இரத்தத்தினாலும் பல ஆண்டுகளாகச் சம்பாதித்த அவர்களுடைய “எல்லை” சரிவைச் சந்திக்கும். இவைகள் எல்லாம் அவர்களுடைய பல வருடக் கடின உழைப்பும், முயற்சியும் பயனற்றவை என்பதைச் சுட்டிக்காட்டி, அதன் பின்னர் அவர்கள் மறுபடியும் ஒன்றுமில்லாததிலிருந்து தொடங்க வேண்டியதாயிருக்கும். இது அவர்கள் இருதயத்தில் தாங்குவதற்கு மிக கடினமான வலியாக இருக்கிறது, மேலும் அவர்கள் இதைப் போன்றவற்றைக் குறைவாக பார்க்க விரும்புவதின் விளைவே இது. எனவேதான் அவர்கள் மீண்டும் திரும்பி வர மறுத்து, ஒருவிதமான மந்த நிலையில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவே மூன்றாம் நிலை மனிதன்: பால் மறக்கும் கைக்குழந்தையின் நிலையிலிருக்கிற மனிதன்.

மேற்குறிப்பிடப்படுள்ள மூன்று வகையான ஜனங்கள்—இந்த மூன்று நிலைகளிலிருக்கும் ஜனங்கள்—தேவனுடைய அடையாளத்திலும் மற்றும் நிலையிலும் அல்லது அவருடைய நீதியான மனநிலையிலும் எந்த ஒரு விசுவாசத்தையும் உடையவர்களாக இல்லை என்பதைப் பொருள்படுத்துகிறது, மற்றும் அவர்கள் தெளிவான, துல்லியமான எந்த அங்கீகாரத்தையோ அல்லது இந்தக் காரியங்களைக் குறித்த உறுதிப்பாட்டையோ உடையவர்களாக இல்லை. ஆகவே இந்த வகை ஜனங்கள் சத்தியத்தின் யாதார்த்தத்திற்குள் பிரவேசிப்பது மிகவும் கடினம், தேவனுடைய கிருபை, பிரகாசிப்பிக்கப்படுதல் அல்லது ஞானவொளி ஆகியவற்றைப் பெறுவதும் கடினம், ஏனெனில் தேவன் பேரில் அவர்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தின் நடத்தை மற்றும் தேவன் மீது அவர்கள் கொண்டிருக்கும் தவறான சிந்தை, ஆகியவைகள் அவர்களுடைய இருதயத்தில் அவரைக் கிரியை செய்ய இயலாமல் ஆக்கிவிடுகின்றன. அவர்களுடைய சந்தேகம், தவறான கருத்துக்கள் மற்றும் தேவனைப் பற்றிய கற்பனை ஆகியவை அவர்களுடைய விசுவாசம் மற்றும் தேவனுடைய அறிவு ஆகியவற்றை மீறிச் சென்றுவிடுகின்றன. மிகவும் சிக்கலான நிலையிலிருக்கும் மூன்று வகையான ஜனங்கள் இவர்களே, அந்த மூன்று நிலைகளும் மிகவும் ஆபத்தான நிலைகள். ஒருவன் தேவன் மீதும், தேவனுடைய சாராம்சத்தின் மீதும், தேவனுடைய அடையாளத்தின் மீதும், தேவன் சத்தியமானவர் என்ற விஷயத்தின் மீதும் மற்றும் அவர் ஜீவிப்பதின் உண்மைத்தன்மையின் மீதும் சந்தேகச் சிந்தையை பேணும்போது, இந்தக் காரியங்கள் மீது நிச்சயமில்லாதப்போது, தேவனிடமிருந்து வருகிற எல்லாவிதமான காரியங்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தேவனே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தேவனுடைய சிட்சையையும், நியாயத்தீர்ப்பையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இவ்வகையான மனிதன் தேவனுடைய உண்மையான வழிநடத்துதலையும், போஷிப்பையும் எப்படி பெற முடியும்? இந்த மூன்று நிலைகளிலுள்ள ஜனங்கள் தேவனை எதிர்க்கக் கூடியவர்கள், தேவன் மீது நியாயத்தீர்ப்பை அளிக்கக்கூடியவர்கள், தேவனைத் தூஷிக்கக் கூடியவர்கள், அல்லது எந்த நேரத்திலும் தேவனை மறுதலிக்கக்கூடியவர்கள். அவர்கள் உண்மையான வழியையும் தேவனையும் எந்த நேரத்திலும் கைவிடக் கூடியவர்கள். இந்த மூன்று நிலைகளிலுள்ள ஜனங்கள் சிக்கலான காலத்தில் இருக்கிறார்கள் என்று ஒருவர் சொல்லக் கூடும், ஏனெனில் அவர்கள் தேவனை விசுவாசிக்கும் சரியான பாதையில் பிரவேசிக்கவில்லை.

நான்காம் வகை: முதிர்ச்சியடைகின்ற குழந்தை அல்லது குழந்தைப் பருவம்

ஒரு மனிதன் பால் மறந்த பின்பு—அதாவது அவர்கள் போதுமான அளவு கிருபையை அனுபவித்தப் பின்பு—தேவனை விசுவாசிப்பதின் அர்த்தமென்ன என்பதை அவர்கள் ஆராய்ந்து பார்க்கத் தொடங்குகிறார்கள். மனிதன் ஏன் வாழ்கிறான், மனிதன் எப்படி வாழ வேண்டும், மற்றும் தேவன் தம்முடைய கிரியைகளை மனிதன் மேல் ஏன் செய்கிறார் என்பது போன்ற பலவிதமான கேள்விகளை அவர்கள் புரிந்துக்கொள்வதற்கு ஆவல் கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்த தெளிவற்ற எண்ணங்கள், மற்றும் குழப்பமான எண்ணங்களின் வடிவங்கள் அவர்களுக்குள் வெளிப்படுகின்றபோது மற்றும் அவர்களுக்குள் இருக்கும்போது, அவர்கள் தொடர்ச்சியாக நீர்ப்பாய்ச்சலைப் பெறுகிறார்கள், அவர்கள் தங்கள் கடமையையும் செய்ய முடிகிறது. இந்தக் காலக்கட்டத்தில், தேவன் இருக்கிறார் என்பது பற்றிய சத்தியத்தில் எந்த விதமான சந்தேகமும் அவர்களிடம் இல்லை, மேலும் தேவன் பேரில் விசுவாசம் கொள்வதின் அர்த்தத்தைத் துல்லியமான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் அவர்கள் தேவனைப் பற்றிய அறிவைப் படிப்படியாகப் பெறுகிறார்கள், மேலும் தேவனுடைய மனநிலையைக் குறித்தும், சாராம்சத்தைக் குறித்தும், அவர்களுடைய தெளிவற்ற எண்ணங்கள் மற்றும் குழப்பமான எண்ண வடிவங்களைக் குறித்த பதில்களையும் படிப்படியாகப் பெறுகிறார்கள். அவர்களுடைய மனநிலை மற்றும் தேவனைப் பற்றிய அறிவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக, இந்த நிலையிலுள்ள மக்கள் சரியான பாதையில் செல்லத் தொடங்குகிறார்கள், மேலும் அவர்கள் ஒரு மாற்றத்தின் காலத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். இந்த நிலையில்தான் ஜனங்கள் ஜீவனைப் பெறத் தொடங்குகிறார்கள். ஜனங்கள் தங்கள் இருதயங்களில் கொண்டிருக்கும் தவறான புரிதல், கற்பனைகள் செய்தல், கருத்துக்கள், மற்றும் தேவனைப் பற்றிய தெளிவற்ற விளக்கங்கள் போன்ற தேவனைப் பற்றி அறிவதைக் குறித்த கேள்விகளுக்கு படிப்படியாக தீர்வு காண்பதே ஜீவனைப் பெறுவதற்கான தெளிவான அறிகுறிகளாகும். மேலும் அவர்கள் உண்மையாகவே விசுவாசத்திற்குள் வருவது மட்டுமல்லாமல், தேவனுடைய ஜீவிக்கிற தன்மையின் யதார்த்தத்தை அறிந்துகொள்வது மட்டுமல்லாமல் தங்கள் இருதயத்தில் தேவனுக்குரிய துல்லியமான வரையறையும், தங்கள் இருதயத்தில் தேவனுக்குரிய சரியான இடத்தையும் வைத்திருக்கிறார்கள்; தேவனை உண்மையாகப் பின்பற்றுதலானது அவர்களுடைய தெளிவற்ற விசுவாசத்தை மாற்றுகிறது. இந்த நிலையின்போது, ஜனங்கள் தேவனைக் குறித்த தங்கள் தவறான எண்ணங்களையும், தவறான பின்தொடரல்களையும், விசுவாச வழிகளையும் படிப்படியாக அறிந்துக்கொள்கிறார்கள். அவர்கள் சத்தியத்தை வாஞ்சிக்கவும், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சையையும், மற்றும் ஒழுக்கத்தையும் அனுபவிப்பதை வாஞ்சிக்கவும், மற்றும் தங்கள் மனநிலையில் ஒரு மாற்றத்தையும் வாஞ்சிக்கவும் தொடங்குகிறார்கள். இந்த நிலையின்போது தேவனைக் குறித்த தங்கள் கருத்துக்களையும் கற்பனைகளையும் படிப்படியாகப் பின்னால் விட்டுவிடுகிறார்கள், அதே நேரத்தில் தேவனைப் பற்றிய தங்கள் தவறான அறிவை மாற்றி, மற்றும் அதைச் சரிப்படுத்தி, தேவனைப் பற்றிய சில சரியான அடிப்படை அறிவைப் பெறுகிறார்கள். இந்த நிலையிலுள்ள ஜனங்கள் பெற்றிருக்கிற அறிவின் ஒரு பகுதியானது குறிப்பிடும்படியானதாகவோ அல்லது துல்லியமானதாகவோ இல்லாவிட்டாலும், கடைசியில் அவர்கள் தங்கள் கருத்துக்களையும், தவறான புரிந்துகொள்ளுதலையும் மற்றும் தேவனைப் பற்றிய கற்பனைகளையும் படிப்படியாக கைவிடுகிறார்கள்; அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களையும், தேவனைப் பற்றிய கற்பனைகளையும் இனியும் தொடர்ந்து செயல்படுத்துவதில்லை. தங்கள் சொந்த கருத்துக்கள், அறிவிலுள்ள காரியங்கள், மற்றும் சாத்தானிடமிருந்து வரும் காரியங்கள் போன்றவைகளைக் கைவிட கற்றுக்கொள்கிறார்கள்; அவர்கள் சரியானவைகளுக்கும் மற்றும் நேர்மறையானவைகளுக்கும், தேவனுடைய வார்த்தைகளிலிருந்து வருகின்ற காரியங்களுக்கும் மற்றும் சத்தியத்திற்கு இணங்கி கீழ்ப்படிவதற்கும் ஆயத்தமாகத் தொடங்குகிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கும், அவருடைய வார்த்தைகளைத் தனிப்பட்ட விதமாக அறிவதற்கும், நிறைவேற்றுவதற்கும், அவருடைய வார்த்தைகளைத் தங்கள் செயல்களின் சட்டத்திட்டங்களாக ஏற்றுக்கொள்வதற்கும், மற்றும் தங்கள் மனநிலையின் மாற்றத்திற்கான அடிப்படையாகக் கொள்வதற்கும் முயற்சி செய்யத் தொடங்குகிறார்கள். இக்காலக்கட்டத்தில், ஜனங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சிப்பையும் தங்களையும் அறியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள், மேலும் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் வாழ்க்கையாகத் தங்களையும் அறியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சிப்பையும், மற்றும் அவருடைய வார்த்தைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள் விழிப்புணர்வில் பெருகவும், அவர்கள் தங்கள் இருதயத்திற்குள் விசுவாசிக்கிற தேவன் உண்மையாகவே இருக்கிறார் என்பதை உணரவும் முடிகிறது. தேவனுடைய வார்த்தைகளிலும், அவர்களின் அனுபவங்களிலும், மற்றும் அவர்களின் வாழ்க்கையிலும், மனிதனின் தலைவிதியின் மீது தேவன் எப்போதும் ஆளுகை செய்கிறார், எப்போதும் மனிதனை வழிநடத்தி போஷிக்கிறார் என்று மென்மேலும் உணர்கிறார்கள். தேவனுடனான இந்த ஐக்கியத்தின் மூலம், அவர்கள் தேவனை ஜீவிக்கிறவராகப் படிப்படியாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆகையால் அவர்கள் இதை உணர்ந்துக்கொள்வதற்கு முன், அவர்கள் தங்கள் ஆழ் மனதில் ஏற்கனவே அங்கீகரித்து, தேவனுடைய கிரியைகளை உறுதியாக விசுவாசிக்கத் தொடங்கியுள்ளனர், மேலும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அங்கீகரித்துள்ளனர். ஜனங்கள் தேவனுடைய கிரியையை மற்றும் தேவனுடைய வார்த்தைகளை அங்கீகரித்தவுடன், அவர்கள் இடைவிடாமல் தங்களை வெறுக்கிறார்கள், தங்கள் சொந்தக் கருத்துக்களை வெறுக்கிறார்கள், மற்றும் தங்கள் சொந்த அறிவை வெறுக்கிறார்கள், அவர்கள் தங்கள் சொந்தக் கற்பனைகளை வெறுக்கிறார்கள், அதே நேரத்தில் சத்தியத்தையும், மற்றும் தேவனுடைய சித்தத்தையும் இடைவிடாமல் தேடுகிறார்கள். இந்த வளர்ச்சியின் காலத்தில் தேவனைப் பற்றிய மக்களுடைய அறிவானது சற்று மேலோட்டமானது—இந்த அறிவை வார்த்தைகளால் கூட தெளிவாக விவரிக்கவோ அல்லது குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் விவரிக்கவோ அவர்களால் இயலாது—மேலும் அவர்கள் ஒரு கருத்தின் அடிப்படையிலான புரிதலை மட்டுமே கொண்டிருப்பார்கள்; எப்படியாயினும், முந்தைய மூன்று நிலைகளுடன் இணைந்திருக்கும்போது, இந்தக் காலத்தின் மக்களுடைய முதிர்ச்சியற்ற வாழ்க்கையானது ஏற்கனவே நீர்ப்பாய்ச்சலையும் தேவனுடைய வார்த்தைகளையும் பெறப்பட்டதாக இருக்கும். ஆகவே அவர்கள் ஏற்கனவே முளை விட தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய வாழ்வானது நிலத்தில் புதையுண்ட ஒரு விதையைப் போன்றிருக்கிறது; ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெற்ற பின்னர், அது மண்ணைப் பிளக்கும், மற்றும் அதன் முளை ஒரு புதிய ஜீவனின் பிறப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இந்த பிறப்பானது ஒருவனை வாழ்க்கையின் கண்ணோட்டத்தைக் காண அனுமதிக்கும். ஜனங்களுக்கு ஜீவன் இருக்கையில், அவர்கள் வளருகிறார்கள். எனவே, அந்த அஸ்திபாரங்களின் மேல்—படிப்படியாக தேவனை விசுவாசிக்கிறதும், தங்கள் சொந்தக் கருத்துக்களைக் கைவிடுகிறதும், மற்றும் தேவனுடைய வழிகாட்டுதலை பெறுகின்றதுமான சரியான பாதைக்குள் செல்கிறார்கள்—ஜனங்களுடைய வாழ்க்கையானது தவிர்க்க முடியாதபடிக்கு கொஞ்சங்கொஞ்சமாக வளரும். இந்த வளர்ச்சியானது எந்த அளவின் அடிப்படையில் அளக்கப்படுகிறது? தேவனின் வார்த்தையினுடனான மனிதனுடைய அனுபவத்தோடும், தேவனுடைய நீதியான மனநிலையின் உண்மையான புரிந்துகொள்ளுதலோடும் இது அளவிடப்படுகிறது. இந்த வளர்ச்சியின் காலக்கட்டத்தில் தேவனுடைய அறிவைக் குறித்தும், அவருடைய சாராம்சத்தைக் குறித்தும் தங்களுடைய சொந்த வார்த்தைகளால் துல்லியமாக விவரிப்பது அவர்களுக்கு கடினமாக காணப்பட்டாலும், இந்த வகை ஜனங்கள் தேவனுடைய கிருபையை அனுபவிப்பதின் மூலம் அவர்களுடைய மகிழ்ச்சியை தொடர்கிற அல்லது தங்கள் சொந்த நோக்கத்தைப் பின்தொடரும்படி தேவனுடைய கிருபையைப் பெற்று, தேவனை விசுவாசிக்கிற மனநிலையில் இல்லை. அதற்கு மாறாக, தேவனுடைய வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையைப் பின்தொடர விரும்புகிறவர்களாகவும், தேவனுடைய இரட்சிப்பிற்கு உட்பட்டவர்களாக மாறுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். எப்படியாயினும், அவர்கள் நம்பிக்கையுடனும், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சிப்பையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகவும் உள்ளனர். இது வளர்ச்சியின் நிலையிலுள்ள ஒரு மனிதனுடைய அடையாளமாகும்.

இந்த நிலையிலுள்ள ஜனங்கள் தேவனுடைய நீதியான மனநிலையைக் குறித்துச் சிறிது அறிவுடையவர்களாக இருந்தாலும், இந்த அறிவானது மிகவும் மங்கலானதும் தெளிவற்றதுமாகும். அவர்களால் இந்த காரியங்களைக் குறித்து தெளிவாக விவரிக்க முடியாவிட்டாலும், அவர்கள் தேவனைப் பற்றிய அறிவையும், சிட்சிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றின் மூலம் தேவனுடைய நீதியான மனநிலையைப் பற்றிய புரிதலையும் சிறிதளவு பெற்றிருக்கிறப்படியால், தாங்கள் ஏதோ சிலவற்றை ஏற்கனவே உள்ளுக்குள் அடைந்திருப்பதாக உணர்கிறார்கள். எப்படியாயினும் அவைகளனைத்தும் மேலோட்டமானதாகவும், இன்னமும் ஆரம்ப நிலையிலும் உள்ளவைகளாகும். இந்த வகையான ஜனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் உள்ளது, அந்தக் கண்ணோட்டத்துடன் அவர்கள் தேவனுடைய கிருபையை கண்ணோக்குகிறார்கள், இது அவர்கள் பின்பற்றும் குறிக்கோள்களின் மாற்றங்களிலும், அவற்றைப் பின்தொடர்கின்ற வழிகளிலும் வெளிப்படுத்தப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே தேவனுடைய வார்த்தைகளிலும் மற்றும் கிரியைகளிலும், மனிதனுடைய தேவனுக்கான கடமைகளிலும் மற்றும் மனிதனுக்கான தேவனுடைய வெளிப்பாடுகளிலும் கண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் சத்தியத்தைப் பின்தொடரவில்லை என்றால், முழுமையான யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவில்லை என்றால், அவர்கள் தேவனுடைய வாரத்தைகளை அனுபவிப்பது போல, அவரைத் திருப்திப்படுத்தவும், அறியவும் முயற்சிக்கவில்லை என்றால், தேவனை விசுவாசிப்பதின் அர்த்தத்தை இழந்துப்போவார்கள். அவர்கள் தேவனுடைய கிருபையை எவ்வளவு அனுபவித்தாலும், அவர்களால் தங்கள் மனநிலையை மாற்ற முடியாது, தேவனை திருப்திப்படுத்தவோ அல்லது தேவனை அறிந்துகொள்ளவோ முடியாது. ஜனங்கள் தேவனுடைய கிருபையில் தொடர்ந்து வாழ விரும்பினால், அவர்களால் ஒருபோதும் வளர்ச்சியையும், ஜீவனையும் அல்லது இரட்சிப்பையும் பெற்றுக்கொள்ள முடியாது. சுருக்கமாகக் கூறுவதென்றால், ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தைகளை உண்மையாக அனுபவிக்க முடியவில்லை என்றால், அவருடைய வார்த்தைகளின் மூலம் தேவனை அறிய முடியவில்லை என்றால், அவன் குழந்தை நிலையிலேயே நித்தியமாக தங்கிவிடுவான், மேலும் அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கான முன்னேற்றத்தில் ஒரு படியையும் அவர்களால் ஒருபோதும் எடுக்க முடியாது. ஒருவேளை நீ குழந்தை நிலையிலேயே எப்பொழுதும் இருந்துவிட்டால், தேவனுடைய வார்த்தையின் யதார்த்தத்திற்குள் ஒருபோதும் பிரவேசிக்காவிட்டால், உன்னுடைய வாழ்வில் தேவனுடைய வார்த்தை இல்லாவிட்டால், உண்மையான விசுவாசம் மற்றும் தேவனைப் பற்றிய அறிவை ஒருபோதும் கொண்டிராவிட்டால், நீ தேவனால் பரிபூரணப்படுவதற்கு உனக்கு சாத்தியக்கூறு ஏதாகிலும் உண்டா? ஆகையால் தேவனுடைய வார்த்தையின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கிற எவரும், தேவனுடைய வார்த்தையை தன் வாழ்க்கையாக ஏற்றுக்கொள்ளும் எவரும், தேவனுடைய தண்டனையையும் சிட்சிப்பையும் ஏற்கத் தொடங்கும் எவரும், சீர்கேடான மனநிலை மாறத் தொடங்குகிற எவரும், சத்தியத்தை வாஞ்சிக்கிற இருதயமுடைய எவரும், தேவனை அறியும் விருப்பமும், தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் விருப்பமும் உள்ள எவரும், உண்மையான ஜீவனைப் பெற்றுள்ள ஜனங்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையான நான்காம் வகை மனிதன், முதிர்ச்சியடையும் குழந்தை, குழந்தைப் பருவத்திலுள்ள மனிதன்.

ஐந்தாம் வகை: வாழ்வின் முதிர்ச்சி நிலை, அல்லது பெரியவரான நிலை

குழந்தை நிலையின் மூலம் அனுபவித்து, குறுநடை போட்டு, மேடுகளும், பள்ளங்களும் அடிக்கடி வருகிற ஒரு வளர்ச்சி நிறைந்த நிலையை அடைந்த பிறகு, ஜனங்களின் வாழ்வு நிலைப்படுத்தப்படுகிறது, அவர்களின் வேகம் இனியும் தடைப்படாது, மேலும் அவர்களை எவரும் தடை செய்யவும் முடியாது. அவர்கள் முன் இருக்கும் பாதையானது இன்னமும் கடினமானதாகவும், முரடானதாகவும் இருந்தாலும், அவர்கள் இனியும் பலவீனமானவர்களாகவும், பயப்படக் கூடியவர்களாகவும் இருக்க மாட்டார்கள், மற்றும் அவர்கள் இனியும் தடுமாற மாட்டார்கள் அல்லது தங்கள் முக்கியத்துவத்தை இழக்கிறவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுடைய அஸ்திபாரங்கள் தேவனுடைய வார்த்தையின் உண்மையான அனுபவத்தில் ஆழமாக வேரூன்றப்பட்டவைகள், மேலும் அவர்களுடைய இருதயங்களானவை தேவனுடைய கணத்தாலும் மகத்துவத்தாலும் இழுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேவனுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றவும், தேவனுடைய சாராம்சத்தை அறியவும், தேவனைப் பற்றி எல்லாவற்றையும் அறியவும் வாஞ்சிக்கிறார்கள்.

இந்த நிலையிலுள்ள ஜனங்களுக்கு தாங்கள் யாரை விசுவாசிக்கிறோமென்று ஏற்கனவே தெளிவாகத் தெரியும், மேலும் தேவனை ஏன் விசுவாசிக்க வேண்டும், தங்கள் சொந்த வாழ்வின் அர்த்தம், மற்றும் தேவன் வெளிப்படுத்துகிற அனைத்தும் சத்தியம் என்று அவர்களுக்குத் தெளிவாக தெரியும். அவர்களுடைய பல வருட அனுபவத்தில், தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை இல்லாமல் ஒரு மனிதன் ஒருக்காலும் திருப்தியடையவோ அல்லது தேவனை அறியவோ முடியாது, மற்றும் தேவனுக்கு முன் ஒருக்காலும் மெய்யாகவே வர முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். சோதிக்கப்படும்போது தேவனுடைய நீதியான மனநிலையைக் காணும்படியாகவும், சுத்தமான அன்பைப் பெறும்படியாகவும், அதே நேரத்தில் தேவனை இன்னும் அதிகமாக, உண்மையாக புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும், இந்த ஜனங்களுடைய இருதயத்தில் தேவனால் சோதிக்கப்பட வேண்டும் என்ற வலுவான ஆசை இருக்கிறது. இந்த நிலையிலுள்ள ஜனங்கள் ஏற்கனவே குழந்தைப் பருவத்திற்கும், தேவனுடைய கிருபையை அனுபவிக்கும் நிலைக்கும், மற்றும் தங்கள் அப்பத்தைத் தின்று நிரப்புதலுக்கும் முற்றிலும் பிரியாவிடை கொடுத்துள்ளனர். தேவன் தங்களைச் சகித்துக்கொண்டு, தங்கள் மேல் கிருபையைக் காட்ட வேண்டும் என்ற பொறுப்பில்லாத நம்பிக்கையை இனியும் வைக்க மாட்டார்கள்; மாறாக தேவனுடைய இடைவிடாத சிட்சையையும், நியாயத்தீர்ப்பையும் பெறுவதில் அவர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர், இதனால் சீர்கேடான மனநிலையிலிருந்து தங்களைப் பிரித்து தேவனைத் திருப்திப்படுத்துகிறார்கள். தேவனைப் பற்றிய அவர்களுடைய அறிவு, அவர்களுடைய பின்தொடரல்கள், அல்லது அவர்களுடைய பின்தொடரல்களின் இறுதி இலக்குகள் போன்றவைகள் அனைத்தும் அவர்களுடைய இருதயத்தில் மிகவும் தெளிவாக உள்ளது. ஆகையால், முதிர்ச்சிப் பருவத்திலுள்ள ஜனங்கள் ஏற்கனவே தெளிவற்ற விசுவாசத்தின் நிலைக்கும், அவர்கள் இரட்சிப்பிற்குக் கிருபையை சார்ந்திருக்கும் நிலைக்கும், சோதனைகளைத் தாங்க இயலாத முதிர்ச்சியற்ற வாழ்வின் நிலைக்கும், மயக்கமான நிலைக்கும், தடுமாறும் நிலைக்கும், அடிக்கடி நடப்பதற்குப் பாதையற்ற நிலைக்கும், அனலுக்கும் குளிருக்கும் இடையே மாற்றாக உள்ள நிலையற்ற நிலைக்கும், மற்றும் கண்ணை மூடிக்கொண்டு தேவனைப் பின்பற்றுகிற நிலைக்கும் முற்றிலும் பிரியாவிடைக் கொடுத்துள்ளனர். இந்த வகையான ஜனங்கள் தேவனுடைய அறிவொளியையும், ஞான வெளிச்சத்தையும் அடிக்கடி பெறுகிறார்கள், மேலும் தேவனுடன் உண்மையான ஐக்கியம் மற்றும் தொடர்பில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் வாழுகின்ற ஜனங்கள் தேவனுடைய சித்தத்தின் ஒரு பகுதியை ஏற்கனவே புரிந்துகொண்டுள்ளனர் என்றும், அவர்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் வாழ்விற்கான சத்தியத்தின் சட்டத்திட்டங்களை அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறது என்றும், தேவனுடைய சித்தத்தை எப்படி நிறைவேற்றுவது என்றும் அவர்களுக்குத் தெரியும் என்று ஒருவர் சொல்லக்கூடும். மேலும், அவர்கள் தேவனை அறிவதற்கான வழியைக் கண்டுப்பிடித்து, தேவனைப் பற்றிய அவர்களுடைய அறிவிற்குச் சாட்சி பகர தொடங்கியுள்ளனர். இந்தப் படிப்படியான வளர்ச்சியின் செயல்முறையின்போது, அவர்கள் படிப்படியான புரிந்துகொள்ளுதலையும், மனித குலத்தை உருவாக்குகின்ற தேவனுடைய சித்தத்தையும், மனித குலத்தை நிர்வகிக்கின்ற தேவனுடைய சித்தத்தின் அறிவையும் பெறுகின்றனர். அவர்கள் படிப்படியாகப் புரிந்துகொள்ளுதலையும், தேவனுடைய நீதியான மனநிலையை அதனுடைய சாராம்சத்தின் அடிப்படையில் அறிவையும் பெறுகின்றனர். மனிதனின் எந்த கருத்தோ அல்லது கற்பனையோ இந்த அறிவை மாற்றாது. ஐந்தாம் வகை மனிதனின் வாழ்வானது முற்றிலும் முதிர்ச்சிடைந்த வாழ்வென்றோ அல்லது இந்த மனிதன் நீதிமான் அல்லது பூரணமானவன் என்றோ கூற முடியாவிட்டாலும், இந்த வகையான மனிதன் வாழ்வின் முதிர்ச்சிக்கான நிலையை நோக்கி ஓர் அடியை எடுத்து வைத்துள்ளான், அவன் ஏற்கனவே தேவனுக்கு முன்பாக வரவும், தேவனுடைய வார்த்தையுடனும், தேவனுடனும் முக முகமாய் நிற்கவும் முடிகிறது. இவ்வகையான மனிதன் தேவனுடைய வார்த்தையை அதிகப்படியாக அனுபவித்திருக்கிறான், எண்ணற்ற சோதனைகளையும் அனுபவித்திருக்கிறான், மற்றும் எண்ணற்ற ஒழுக்க நிகழ்வுகளையும், நியாயத்தீர்ப்புகளையும் மற்றும் சிட்சிப்புகளையும் தேவனிடமிருந்து அனுபவித்திருக்கிறான், அவர்கள் தேவனுக்கு கீழ்படிவது ஓர் உறவாக இல்லாமல் முழுமையானதாக இருக்கிறது. தேவனைப் பற்றிய அவர்களுடைய அறிவானது அவர்களுடைய ஆழ் மனதைச் சுத்தமானதாகவும், துல்லியமான அறிவை மேலோட்டத்திலிருந்து ஆழத்திற்கும் மாற்றுகிறது, தடுமாற்றமான மற்றும் மங்கலான நிலையிலிருந்து துல்லிமான மற்றும் உறுதியான நிலைக்கு மாற்றுகிறது. அவர்கள் கடினமான தடுமாற்றம் மற்றும் செயலற்ற அறிவைத் தேடும் முயற்சியிலிருந்து முயற்சியற்ற அறிவிற்கும் செயலூக்கமான சாட்சிகளை நோக்கியும் நகர்ந்துள்ளனர். இந்த வகையிலிருக்கும் ஜனங்கள் தேவனுடைய வார்த்தையின் யதார்த்தத்தைப் பெற்று, பேதுரு நடந்ததுப்போல பரிபூரணத்தை நோக்கிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லக் கூடும். இதுவே முதிர்ச்சியின் நிலையிலுள்ள, அதாவது வாலிபப் பருவ ஐந்தாம் வகை மனிதன்.

டிசம்பர் 14, 2013

முந்தைய: தேவனே தனித்துவமானவர் I

அடுத்த: தேவனே தனித்துவமானவர் III

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக