தன்னிச்சையாக செயல்பட்டது எனக்குத் தீங்கு விளைவித்தது

செப்டம்பர் 28, 2023

2012 கடைசில, நான் திருச்சபைத் தலைவியா ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். திருச்சபையில எல்லா திட்டங்களும் மெதுவா முன்னேற்றமடஞ்சிகிட்டு வந்ததையும், ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே தங்களோட கடமைய சிறப்பா செய்ய முடிஞ்சதுங்கறதயும் நான் கவனிச்சேன். நான் கொஞ்ச காலமாதான் ஒரு விசுவாசியா இருந்து வந்தேன்ங்கறதயும், ஊழியர்கள எப்படித் தேர்ந்தெடுப்பதுங்கறதுல எனக்கு நல்ல புரிதல் இல்லங்கறதயும் அறிஞ்சு, நான் அடிக்கடி என்னோட கஷ்டங்கள ஜெபத்துல தேவனிடத்துல முன்வச்சு, தொடர்புடைய கொள்கைகள நாடினேன். எனக்கு ஏதாவது புரியலேனா, நான் என்னோட சக ஊழியர்களோட சேர்ந்து தேடி, ஐக்கியங்கொள்வேன். படிப்படியா, ஜனங்களயும் சூழ்நிலைகளயும் பத்திய என்னோட மதிப்பீடு மேம்படத் தொடங்குச்சு, ஜனங்களுக்கு அவங்களோட பலத்தின் அடிப்படையில கடமைகள என்னால நியமிக்க முடிஞ்சுச்சு, அதோடு நாங்க திருச்சபையோட பணியில ஓரளவு முன்னேற்றங்களப் பாக்க ஆரம்பிச்சோம்.

ஒருதடவ வேலையப் பத்தி கலந்து பேசுறப்ப, சகோதரி லி ஷி என்பவங்கள ஒரு குழுத் தலைவியா பண்படுத்த நான் பரிந்துரை செஞ்சேன், ஆனா சக ஊழியர்கள் நிறைய பேர் என்னோட கருத்த ஏத்துக்கல, லி ஷி தன்னோட குடும்பத்தினரால கட்டுப்படுத்தப்பட்டதாவும், தன்னோட கடமையில அவங்க பொறுப்பை ஏத்துக்கலன்னும் சொல்லி வாக்குவாதம் செஞ்சாங்க. அவங்க புதுசா வந்தவங்களுக்கு சரியான நேரத்துல தண்ணீர் பாய்ச்சல, அதோடு பல தடவ ஐக்கியங்கொண்ட பிறகும், அவர் இன்னும் முன்னேறியிருக்கல. தன்னோட கடமையப் பத்திய அவங்களோட மனப்பான்மைய நினைக்கும்போது, ஒரு குழுத் தலைவியா பணியாற்றுறதுக்கு அவர் பொருத்தமானவரா இருக்கல. நான் எனக்குள்ள: “லி ஷி அவங்க விசுவாசத்துக்குப் புதியவங்க, அதோடு அவங்களோட குடும்பத்தாரால அவங்க கட்டுப்படுத்தப்படுறது ஒரு தற்காலிக பலவீனம். ஒரு தற்காலிக சூழ்நிலையின் அடிப்படையில அவர் பண்படுத்தப்படுறதுக்குத் தகுதியற்றவர்ன்னு சொல்லி நாம அவங்கள மட்டுப்படுத்தக்கூடாது, நாம அவங்கள ஆதரிக்கணும், அன்போடு உதவணும்” அப்படின்னு நெனச்சுக்கிட்டேன். அதுக்கப்புறமா, நான் அடிக்கடி லி ஷி அவங்களுக்கு ஆதரவளிச்சு, தேவனோட நோக்கங்களயும் ஒருத்தர் தன்னோட கடமையச் செய்யறதுக்குப் பின்னால உள்ள அர்த்தத்தயும் அவங்களோட ஐக்கியங்கொள்றதுண்டு. படிப்படியா, லி ஷி அவங்களோட நிலை மேம்படத் தொடங்குச்சு—அவங்க தன்னோட குடும்பத்தினரால கட்டுப்படுத்தப்படுவத நிறுத்தி, தன்னோட கடமையத் தவறாம நிறைவேத்த ஆரம்பிச்சாங்க. நல்ல திறமை கொண்டவராவும், சத்தியத்த தெளிவாவும் சுலபமா புரிஞ்சுக்கக் கூடிய வகையிலயும் ஐக்கியங்கொள்ளுறவராவும், அதோடு தன்னோட கடமைய நிறைவேற்றுறதுல பொறுப்பாவும் இருந்த ஒரு சகோதரர் கூட இருந்தாரு, அதனால, தண்ணீர் பாய்ச்சுவத மேற்பார்வையிட அவருக்குப் பயிற்சி கொடுக்கச்சொல்லி நான் பரிந்துரை செஞ்சேன். ஆனா என்னோடு சக ஊழியரா இருந்த சகோதரிக்கு சந்தேகம் இருந்துச்சு. அவரோட அகந்தையான மனநிலை மத்தவங்களக் கட்டுப்படுத்தும்னும், அதனால அவர் அப்போதைக்குப் பயிற்சி பெறத் தகுதியற்றவரா இருந்தாருன்னும் அவங்க நெனச்சாங்க. கொள்கைகள்ல சொல்லப்பட்டிருந்த ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வந்துச்சு: “அகந்தையுள்ள மனநிலைய உடையவங்களா இருந்தும், அவங்க சத்தியத்த ஏத்துக்கக் கூடியவங்களாவும், அதுக்கும் மேலா, நல்ல திறனுள்ளவங்களாவும் வரம்பெற்றவங்களாவும் இருக்குறவங்க பதவி உயர்வு பெறப்பட்டு பண்படுத்தப்படணும். அவங்கள நிச்சயமா விலக்கிவைக்கக் கூடாது” (சத்தியத்தைக் கடைபிடிப்பதற்கான 170 கோட்பாடுகள், “135. பல்வேறு அகந்தையான மனநிலைகளைக் கொண்ட ஜனங்களை நடத்துவதற்கான கொள்கைகள்”). அந்த சகோதரர் அகந்தையான மனநிலையக் கொண்டவர்தான், ஆனா அவர் சத்தியத்த ஏத்துக்கிட்டாரு, மத்தவங்க அவரோட பிரச்சனைகள சுட்டிக்காட்டியபோது, அவர் குறைகள ஏத்துக்கிட்டு மாற்றங்கள ஏற்படுத்திக்கிட்டாரு. அதனால, ஒட்டுமொத்தமா, அவர் பதவி உயர்வு பெறுவதுக்கும் பண்படுத்தப்படுவதுக்குமான கொள்கைகள நிறைவேத்தினாரு. இந்தக் கொள்கைகளக் கொண்டு என்னோட நியாயத்த எடுத்துச் சொன்னேன், சக ஊழியர்கள் நிறைய பேர் நான் சொன்னதக் கேட்டதுக்கப்புறமா என்னோடு உடன்பட்டாங்க. அந்த சகோதரர் தண்ணீர் பாய்ச்சும் பணிக்குப் பொறுப்பேற்றதுக்கப்புறமா, அவர் தன்னோட கடமையில சிறந்த பலன்கள வெளிப்படுத்தினாரு, அதோடு தன்னுடைய வேலையில அவர் ரொம்பத் திறமையானவர்ங்கறத நிரூபிச்சாரு. பிறகு கொஞ்ச நாள்லயே, அவர் பதவி உயர்வு பெற்றாரு. அதுக்கப்புறம், நான் என்னைய நெனச்சு ரொம்ப சந்தோஷப்பட்டு: “நான் விசுவாசத்துக்குப் புதியவளா இருக்கலாம், ஆனா நான் நல்ல திறனைப் பெற்றிருக்கேன், அதோடு மத்த சக ஊழியர்கள விட ஜனங்களயும் சூழ்நிலைகளயும் கணிக்கறதுல சிறந்தவளா இருக்குறேன். திருச்சபையில என்னைப் போல ஒரு பெரிய அறிவாளி இல்லேன்னா, இந்தப் புதிய திறமைசாலிகள யார் அடையாளம் கண்டு பண்படுத்துவாங்க?” அப்படின்னு நினைச்சுகிட்டேன். ஒவ்வொரு திருச்சபைத் திட்டத்துக்கும், நான் புத்திசாலித்தனமா உறுப்பினர்கள நியமிச்சேன், அவங்களோட வேலைகளுக்குப் பொருத்தமா இல்லாத உறுப்பினர்கள மாற்றியமச்சேன், சீக்கிரத்துல, திருச்சபையோட பணி வளரத் தொடங்குச்சு. சகோதர சகோதரிகளுக்கு பிரச்சனைகள் இருந்தப்போ, அவங்க எல்லாருமே ஐக்கியத்துக்காக என்கிட்ட வந்து என்னோட கருத்தக் கேட்பாங்க. சிலர் என்னைய நேரடியா பாராட்டி: “இதுக்கு முன்னாடி இருந்த திருச்சபைத் தலைவர்கள் ரொம்ப காலமா விசுவாசிகளாக இருந்தாங்க, ஆனா அவங்களால திருச்சபையோட பணிகள சிறப்பா செய்ய முடியல. நீங்க கொஞ்ச காலமாத்தான் விசுவாசியா இருக்குறீங்க, ஆனாலும் நீங்க வந்தவுடனே வேலை வளர ஆரம்பிச்சிருச்சு. நீங்க நல்ல திறன் வாய்ந்த ஒரு திறமையான தலைவராகத்தான் இருக்கணும்” அப்படின்னு சொன்னாங்க. அதக் கேட்டதும் என்னைய நெனச்சு நான் இன்னும் சந்தோஷப்பட்டு, உண்மையிலயே நான் திருச்சபையில ஒரு அரிய திறமைசாலியா இருப்பதா நெனச்சுக்கிட்டேன்.

அதுக்கப்புறம், வேற சில திருச்சபைகளோட பணிகளுக்கு நான் தலைமை தாங்கினேன். சில சமயங்கள்ல மேலிடத் தலைவர்கள் ஆட்களக் தேர்ந்தெடுக்குறப்போ, என்கிட்ட ஆலோசனை கேட்பாங்க. ஒரு தலைவரா இருப்பதுக்கு என்ன தேவையோ அது என்கிட்ட இருந்ததா நான் இன்னும் உறுதியா நம்புனேன்: எனக்கு நல்ல திறமை இருந்துச்சு, திறமையானவங்களத் தேர்ந்தெடுப்பதுல சிறந்தவளா இருந்தேன், கொள்கைப்படி என்னால பிரச்சனைகளத் தீர்க்க முடிஞ்சுச்சு. நான் என்மேல அதிகமதிகமா நம்பிக்கை வச்சேன். அதுக்கப்புறமா, நான் ஒரு சூழ்நிலையத் துல்லியமா மதிப்பிடுவேன்னு நெனச்ச போதெல்லாம், மத்த சக ஊழியர்களோட கலந்து ஆலோசனை செய்யாம நானாகவே ஒரு முடிவை எடுத்துவிடுவேன். நான் அவங்கள விட கொள்கைகள நல்லாப் புரிஞ்சுக்கிட்டதாவும், நல்ல நுண்ணறிவு எனக்கு இருந்ததாவும் நான் நெனச்சேன். நான் அவங்களோட கலந்து ஆலோசனை செஞ்சாலும், நாங்க நிச்சயமா என்னோட திட்டத்தின்படிதான் செயல்படுவோம், அதனால கலந்து ஆலோசனை செய்வதுல பயன் இல்ல. சக ஊழியர்கள் ஆலோசனைகள முன்வச்சப்போ, அவை என்னோட கருத்துக்களப் போல சிறப்பா இல்லன்னு நான் நினைப்பேன், அவைகள நேரடியா நிராகரிச்சிட்டு, என்னோட சொந்தத் திட்டத்த செயல்படுத்துவேன்.

ஒரு தடவ, எங்களோட புத்தகங்கள வச்சிருக்கத் திருச்சபைக்கு ஒரு உறுப்பினர் தேவைப்பட்டப்போ, ஜெங் யே அப்படிங்கறவரு நல்ல மனிதத்தன்மை கொண்டவரா இருந்தாருங்கறது எனக்குத் தெரிஞ்சதால, புதுசா வந்த அவரை நியமிக்க பரிந்துரை செஞ்சேன். ஒரு சக ஊழியர்: “ஜெங் யே விசுவாசத்துக்குப் புதியவரா இருக்காரு, அவரோட மனைவி அவிசுவாசியா இருக்குறாங்க. திடீர்னு, எதிர்பாராத சூழ்நிலை ஏதாவது ஏற்பட்டுச்சுனா, அவரால புத்தகங்களப் பாதுகாக்க முடியுமான்னு எனக்குத் தெரியல” அப்படின்னு எனக்கு ஞாபகப்படுத்தினாரு. அந்த நேரத்துல, என்னோட பரிந்துரை நிராகரிக்கப்பட்டத நெனச்சு, நான் கொஞ்சம் சங்கடமா உணர்ந்தேன். நான் நினைச்சேன்: “நான் ஒரு தலைவியா இருக்குறேன்—புத்தகங்கள வச்சிருக்கிறதுக்கு ஒருத்தர உண்மையிலயே என்னால கண்டுபிடிக்க முடியாதா? எல்லாத்துக்கும் மேலா, நாம ஒரு தலைவரத் தேர்ந்தெடுக்கல, அப்படியிருக்குறப்போ ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள அமைச்சுக்கணும்?” நான் சக ஊழியரோட ஆலோசனையக் கேட்கல, புத்தகங்கள வச்சிருக்க ஜெங் யே அவர்களயே நியமிச்சேன். சகோதரிகள்ல ஒருத்தர் இதக் கண்டுபிடிச்சதும், அவர் என்கிட்ட, “எந்தக் கொள்கையின் அடிப்படையில நீங்க ஜெங் யே அவர்கள நியமிச்சிங்க? புத்தகங்கள வைக்கறதுக்குப் பாதுகாப்பான வீட்டக் கண்டுபிடிக்கணும். ஜெங் யே விசுவாசத்துக்குப் புதியவரா இருக்காரு, அவருக்கு அதிக அடித்தளம் இல்ல, அவரோட மனைவி அவரோட விசுவாசத்த எதிர்த்தாங்க. ஏதாவது நடந்தா, அது திருச்சபையோட பணிக்குத் தீங்கு விளைவிக்காதா?” அப்படின்னு சொல்லி என்னைக் கையாண்டாங்க. நான் ஒத்துக்காம: “கொள்கையின் அடிப்படையில, ஜெங் யே பொருத்தமானவரா இல்லாம இருக்கலாம், ஆனா அவருக்கு நல்ல மனிதத்தன்மை இருக்குது, இந்தக் கடமையச் செய்யத் தயாரா இருக்காரு. நீங்க கொஞ்சம் அதிகமா யோசிக்கறதா இல்லையா? அது உண்மையில அவ்வளவு தீவிரமானதா?” அப்படின்னு நெனச்சேன். அதனால: “நான் ஏற்கனவே அவரோட ஐக்கியங்கொண்டிருக்கேன். உங்களால இன்னும் பொருத்தமான ஒருத்தரக் கண்டுபிடிக்க முடிஞ்சா, நாம உங்க விருப்பத்தின்படியே செய்யலாம்” அப்படின்னு நான் சொன்னேன். அவங்க யோசனைய நான் கொஞ்சம் கூட ஏத்துக்காததப் பாத்து அவங்க வேற எதுவும் பேசல. அதுக்கப்புறம் கொஞ்ச நாள்லயே, ஜெங் யே தன்னோட மனைவியோட சண்ட போட்டாரு, அவங்க எல்லாப் புத்தகங்களயும் வெளிய தூக்கி எறிஞ்சிட்டாங்க, அதோடு சில புத்தகங்கள் சேதமடஞ்சுச்சு. புத்தகங்கள வேற இடத்துக்கு மாத்தறதுக்காக நாங்க ராத்திரி ரொம்ப நேரம் விழிச்சிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. அதுக்கப்புறம், கொள்கையின்படி செயல்படாததுக்காகவும், என்னோட சொந்த நம்பிக்கைகளின்படி நடந்து, அதன் விளைவா புத்தகங்கள் சேதமடஞ்சதுக்காகவும் என்னோட சக பணியாளர்கள் என்னையக் கையாண்டாங்க. என்ன நடந்துச்சுங்கறதப் பத்தி நான் அதிக நேரம் எடுத்து கடினமா சிந்திக்கணும்னு அவங்க என்கிட்ட சொன்னாங்க. நான் மனசில்லாம ஒத்துக்கிட்டேன், ஆனா என்னோட இருதயத்துல, “இது சாதாரண ஒரு தவறுதான். அந்த நேரத்துல திருச்சபையோட உண்மையான சூழ்நிலையின் அடிப்படையில நான் அவரை நியமிச்சேன். இப்படி ஒரு சம்பவம் நடக்கும்ன்னு யாருக்குத் தெரியும்” அப்படின்னு நான் நெனச்சேன். அதுக்கப்புறம், நான் என்னோட கடமையில தொடர்ந்து என்னோட இஷ்டப்படி நடந்துக்கிட்டேன். எங்களோட வேலையப் பத்தி விவாதிக்குறப்போ, என்னோட சக ஊழியர்களின் ஆலோசனைய நான் நேரடியா நிராகரிப்பேன், எனக்கு சரின்னு தோன்றுனபடி விஷயங்களக் கையாண்டேன். படிப்படியா என்னோட சக ஊழியர்கள் என்னால கட்டுப்படுத்தப்பட்டாங்க, நான் ஏற்கனவே முடிவு செஞ்சிருந்த எந்த விஷயத்துலயும் அவங்க கருத்துக்கள சொல்லத் துணியல.

ஒரு தடவ, ஜாங் ஃபேன் அப்படிங்கற தலைவரப் பணிநீக்கம் செய்ய நான் இன்னொரு திருச்சபைக்குப் போயிருந்தேன். அவங்கள பணிநீக்கம் செய்றதுக்கு முன்னாடி, அவங்களோட கடமையில அவங்களோட ஒட்டுமொத்த செயல்திறனையும் பத்தி நான் ஐக்கியங்கொண்டிருந்திருக்கணும், பகுத்து அறிஞ்சிந்திருக்கணும், அதுக்கப்புறம் அவரை பணிநீக்கம் செய்திருக்கணும். ஆனா, இதுக்கு முன்னாடி நான் அவங்களோட செயல்திறனப் பத்தி அவங்களோட ஐக்கியங்கொண்டபோது, நான் சொன்னத அவங்க ஏத்துக்காம, காரியங்கள எப்படிப் புரட்டிப் பேசினாங்கங்கறத நான் நெனச்சுப் பாத்தேன். அதனால அவங்களோட ஐக்கியங்கொள்ளுவதுல எந்தப் பயனும் இல்லன்னும், நான் அவங்கள நேரடியா பணிநீக்கம் செய்யணும்னும் நான் நெனச்சேன். அதுக்கப்புறமா, நான் ஜாங் ஃபேன் அவங்களயும் மத்த உதவிப் போதகர்கள் சிலரையும் ஒரு கூடுகைக்கு வரவழைச்சேன், அவங்க ஏன் பணிநீக்கம் செய்யப்படணும் அப்படிங்கறதுக்கான சுருக்கமான விளக்கத்தயும் கொடுத்தேன். ஆனா ஜாங் ஃபேன் அவங்க இசைஞ்சு கொடுக்கல. என்கிட்ட தொடர்ந்து வாக்குவாதம் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க: “எனக்குத் தெளிவாக சொல்லுங்க—எந்தக் கொள்கையின் அடிப்படையில என்னைய நீங்க பணிநீக்கம் செஞ்சீங்க?” அப்படின்னு என்கிட்ட கேள்வியும் கேட்டாங்க. நான் எனக்குள்ள: “உங்க செயல்பாட்டுல இருக்குற சிக்கல்கள நான் முன்னாடியே விளக்கிச் சொன்னேன், ஆனா நீங்க தொடர்ந்து நச்சரிச்சு, தகராறு செய்யுறீங்க, அதோடு என் மேல தப்புக் கண்டுபிடிக்க முயற்சி செய்றீங்க. உங்களுக்கே உங்களப் பத்தி எதுவும் தெரியாது, நான் உங்களோட ஐக்கியம் கொள்ளணும்னு அவசியம் இல்ல” அப்படின்னு நினைச்சுக்கிட்டேன். அதனால நான் அவரைப் புறக்கணிச்சேன். சகோதரி வாங் சென் அவங்க: “ஜாங் ஃபேன் ரொம்ப குறை கண்டுபிடிக்கிறவங்களா இருக்கலாம்—நீங்க அவங்களோட இன்னும் கொள்கைகளப் பத்தி ஐக்கியங்கொண்டு அவங்க ஏன் பணிநீக்கம் செய்யப்பட்டாங்கங்கறத அவங்களுக்கு தெளிவுபடுத்தணும்” அப்படின்னு எனக்கு ஞாபகப்படுத்தினாங்க. வாங் சென் அவங்க சொல்லுறது சரின்னு எனக்குத் தெரிஞ்சாலும், ஜாங் ஃபேன் ஒரு திருச்சபைத் தலைவரா இருந்ததால, இந்தக் கொள்கைகளப் பத்தி அவங்களுக்கு நல்லாத் தெரியும்ன்னும், அதனால அவங்களோடு நேரத்த வீணடிக்க வேண்டிய அவசியமில்லன்னும் நான் நெனச்சேன். அதனால, தலைவர்களோட வேலைய எப்படி செய்யறதுங்கறதப் பத்தி தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் வாசிச்சேன், ஆனா நான் அத வாசிச்சப்ப, எனக்கு ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டுச்சு. நான் அவங்கள அடக்க தேவனோட வார்த்தைகளப் பயன்படுத்தினேன், அவரோட பிரச்சனைய நான் தீர்க்கல—அது சரியில்ல. ஆனா நான் அதை வாசிக்கலேன்னா, என்னால அவங்கள கட்டுக்குள்ள வச்சிருக்க முடியாதுன்னு நெனச்சேன். அந்தப் பத்திய வாசிச்சு முடிச்ச பிறகு, அறை முழுவதும் அமைதியா இருந்துச்சு ஜாங் ஃபேன் அமைதியா அங்கேயே உக்காந்து, கோபத்துல குமுறிக்கிட்டிருந்தாங்க. காரியம் முடிஞ்சுதுன்னு நான் நெனைச்சேன், ஆனா நான் அதிர்ச்சியடையும் விதமா, ஒரு கூடுகையின்போது, சில தலைவர்களும் ஊழியர்களும் கொள்கையப் பின்பற்றுவதில்லன்னும் அது மத்த தலைவர்களயும் ஊழியர்களயும் கட்டுப்படுத்தப்பட்டவங்களா உணர வைக்குதுன்னும், திருச்சபையோட பணிய சீர்குலைக்குதுன்னும் ஜாங் ஃபேன் சொன்னாங்க. எனக்குக் கொஞ்சம் பயம் வந்துச்சு. இது எல்லாமே நான் தன்னிச்சையா செயல்பட்டதன் விளைவாவும் கொள்கையப் பின்பற்றாம இருந்ததோட விளைவாவும்தான் இருந்துது, ஆனா விஷயத்தப் பத்தி தீவிரமா சிந்திச்சுப் பாக்காம இது தப்புங்கறத நான் ஒத்துக்கிட்டேன்.

அதுக்கப்புறம், வேற ஒரு தலைவரப் பணிநீக்கம் செய்யுறப்போ, நான் மறுபடியும், பணிநீக்கத்துக்கான சரியான காரணங்கள சகோதர சகோதரிகளிடத்துல சொல்லல. சகோதர சகோதரிகள் சிலருக்கு இந்தத் தலைவரப் பத்திய பகுத்தறிவு இல்லாம இருந்துச்சு தலைவரப் பணிநீக்கம் செய்வதுல நான் கொள்கையப் பின்பற்றலன்னு கூடுகைகளின்போது அடிக்கடி வாக்குவாதம் செய்வாங்க. இதனால திருச்சபையில ரொம்ப குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுச்சு. நிலைமையத் தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறமா, ஒரு சகோதரி இப்படிச் சொல்லி எனக்கு ஞாபகப்படுத்தினாங்க: “நீங்க சீக்கிரமாப்போயி அவங்களோடு ஐக்கியங்கொள்றது நல்லது, இல்லேன்னா, திருச்சபையில நிலைமை இன்னும் அதிகமா குழப்பமாயிரும்.” நான் அவங்க சொன்னதுக்கு ஒத்துப்போகாம: “கள்ளத் தலைவர்கள் பணிநீக்கம் செய்யப்படணும், நான் யாரையும் தண்டிக்க முயற்சி செய்யல, அப்படியிருக்க, இந்த விஷயத்த நீங்க ஏன் ரொம்ப பெரிசு படுத்துறீங்க?” அப்படின்னு நெனச்சுக்கிட்டேன். நான் கொள்கையின்படி செயல்படாததாலயும், என்னையப் பத்தி சிந்திச்சுப் பாக்காமலும் என்னைய அறிஞ்சுக்காமலும் இருந்ததாலும், நான் படிப்படியா என்னோட கடமைய அதிக பாரமா உணர்ந்தேன். அதுக்கப்புறமா நான் தேவனிடத்துலருந்து பிரகாசத்தையும் வழிநடத்துதலையும் பெறல, திருச்சபையோட பணிகள செய்யும்போது, நான் அடிக்கடி குழப்பமடைவேன். என்னோட தினசரி ஜெபத்துல தேவனிடத்துல என்ன சொல்வதுன்னு எனக்குத் தெரியல, நான் பொறுப்பேற்றிருந்த திருச்சபைகள் தங்களோட பணியில் நல்ல பலன்களப் பெறல. ஒருவேளை இதுக்கப்புறம் என்னால இந்தக் கடமையச் செய்ய முடியாதுங்கறத நான் உணர ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நாள்லயே, சில சகோதர சகோதரிகள் என்னையப் பத்தி ஒரு கடிதம் எழுதி, நான் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாகவும், சத்தியத்த ஏத்துக்கவே இல்லன்னும் குற்றம் சாட்டி புகாரளிச்சாங்க. ஒரு மேலிடத் தலைவர் என்னோட நிலைமையத் தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறமா, அவர் என்னைய அம்பலப்படுத்தி கையாண்டு: “ஒரு திருச்சபைத் தலைவரா, நபர்களத் தேர்ந்தெடுக்கறது, பணிநீக்கம் செய்றது மாதிரியான முக்கியமான ஒரு விஷயத்த கையாளுறப்போ, நீங்க சக ஊழியர்களோடு கலந்து ஆலோசனை செய்யாமலும், கொள்கைகள நாடாமலும் இருந்து, அதுக்குப் பதிலா, உங்க சொந்த திட்டத்தப் பின்பற்றித் தன்னிச்சையா செயல்பட்டிருக்கீங்க, சகோதர சகோதரிகள் உங்களுக்கு நினைவூட்டின போதும், நீங்க இணங்கல. நீங்க ரொம்ப அகந்தையானவரும் சுய நீதியுள்ளவருமா இருக்கீங்க. நீங்க தோல்வியடஞ்சு அம்பலப்படுத்தப்பட்டப்போ, உங்களப் பத்தி சிந்திச்சுப் பாக்காம, உங்க இஷ்டப்படி தொடர்ந்து செஞ்சீங்க. உங்க தன்னிச்சையான நடத்த திருச்சபை வாழ்க்கையக் குழப்பத்துல வீழ்த்திருச்சு, சகோதர சகோதரிகளோட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்குது. உங்க செயல்திறனைக் கருத்துல கொண்டு, இதுக்கப்புறமா நீங்க ஒரு தலைவியா பணியாற்றத் தகுதியானவர் அல்ல. இந்த நிலையில உங்கள வச்சுப் பாத்தப்போ லாபத்த விட இழப்புகள் அதிகமாக இருக்குது” அப்படின்னு சொன்னாங்க. தலைவர் என்னைய எப்படி அம்பலப்படுத்திக் கையாண்டாருங்கறதக் கேட்டப்போ, நான் ரொம்ப உடைஞ்சுபோயி மோசமா உணர்ந்தேன், நான் கண்ணீருல மூழ்கினேன். “திருச்சபையோட பணிய என்னால எப்படி இவ்வளவு மோசமாக மாத்த முடிஞ்சுச்சு?” அப்படின்னு என்னைய நானே கேட்டுக்கிட்டேன். நான் ஒரு தலைவியா என்னோட கடமைகளச் செய்யத் தவறினது மட்டுமல்லாம, திருச்சபையோட பணிகளயும் நான் சீர்குலைச்சிருந்தேன். நான் எங்கயாவது போயி மறஞ்சுக்க ஒரு இடத்தக் கண்டுபிடிக்க விரும்புனேன். வீட்டுக்குத் திரும்பிப் போகுற வழியில, நான் ரொம்ப குழப்பத்துல இருந்தேன். நான் என்னோட கடமையில தன்னிச்சையா செயல்பட்டிருந்ததாலயும், அலட்சியமா நடந்துக்கிட்டு, திருச்சபையோட பணிகளுக்கு இடையூறு விளைவிச்சதாலயும், தேவன் நிச்சயமா என்னை வெறுத்துவிடுவாருன்னு நெனச்சேன். என்னையப் போன்ற ஒருத்தர தேவன் இரட்சிப்பாரா? நான் எவ்வளவு அதிகமாக சிந்திச்சேனோ, அவ்வளவு அதிகமா நான் மோசமா உணர்ந்தேன், நான் எப்படி வீடு போய் சேர்ந்தேன்னு கூட எனக்குத் தெரியல. நான் என்னோட படுக்கையில முழங்கால்படியிட்டு “அன்புள்ள தேவனே! நான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன்னு எனக்குத் தெரியல. என்னையப் பத்திய சரியான அறிவு எனக்கு இல்ல. ஓ தேவனே! பணிநீக்கம் செய்யப்பட்டதன் மூலமா கத்துக்க வேண்டிய பாடங்கள் இருக்குதுன்னு எனக்குத் தெரியும், ஆனா நான் ரொம்ப உணர்ச்சியில்லாதவளா இருக்குறேன். தயவு செஞ்சு என்னைய அறிஞ்சுக்கவும், உமது நோக்கங்களப் புரிஞ்சுக்கவும் என்னைப் பிரகாசிப்பித்து வழிநடத்துவீராக” அப்படின்னு தேவனிடத்துல ஜெபிச்சேன்.

என்னோட வேத தியானங்களின்போது, நான் அடிக்கடி பாடும் தேவனோட வார்த்தைகளின் ஒரு பாட்டை நெனச்சுப் பாத்தேன்: “நீங்கள் பெறுவதெல்லாம் சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற முறையில் கடுமையாகக் கடிந்துகொள்ளுதலும் ஆகும், ஆனால் இதை அறியுங்கள்: இந்த இரக்கமற்ற கடிந்துகொள்ளுதல் என்பது சிறு அளவில் கூடத் தண்டனை அல்ல. என்னுடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி, ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு முற்றிலும் இரக்கமற்றதாக தோன்றுவதைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு நேரிடாது, மேலும் நான் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் மேல் என்ன பொழியும் என்றால் போதனையின் அமர்ந்த வார்த்தைகளே, மேலும் நான் உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது உங்களைக் கொன்றுவிடவோ எண்ணவில்லை. இது எல்லாம் உண்மை அல்லவா?

நீதியான நியாயத்தீர்ப்பு மனிதனை சுத்திகரிப்பதற்குக் கொண்டுவரப்படுகிறது, மற்றும் இரக்கமற்ற புடமிடல் அவர்களைச் சுத்தமாக்கச் செய்யப்படுகிறது; கடுமையான வார்த்தைகள் அல்லது சிட்சை ஆகிய இரண்டும் சுத்திகரிப்பதற்காகச் செய்யப்படுகின்றன, மேலும் அவை எல்லாம் இரட்சிப்புக்காகவே செய்யப்படுகின்றன. இத்தகைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ளும்போது உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது? ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை நீங்கள் எப்போதும் இரட்சிப்பை அனுபவிக்கவில்லையா? நீங்கள் மாம்சமாகிய தேவனை கண்டிருக்கிறீர்கள் மற்றும் அவருடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் உணர்ந்திருக்கிறீர்கள்; மேலும் தொடர்ந்து கடுமையான கடிந்துகொள்ளுதலையும் சிட்சித்தலையும் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். இருப்பினும், நீங்கள் மேலான கிருபையையும் பெறவில்லையா?(ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள், “தேவனுடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் மனிதனை இரட்சிப்பதற்கே”). தேவனோட வார்த்தைகள் என்னைய ரொம்பவே தொட்டுச்சு. சரிதான். கடைசி நாட்கள்ல தேவனோட கிரியையானது நியாயந்தீர்ப்பதும் சிட்சிப்பதுமா இருக்கு. அது சிட்சித்தலா இருந்தாலும் சரி, தண்டித்துத் திருத்துதலா இருந்தாலும் சரி, கையாளுதலா இருந்தாலும் சரி அல்லது அம்பலப்படுத்துதலா இருந்தாலும் சரி மனிதகுலத்தை சுத்திகரிக்கறதுக்காகவும் இரட்சிக்கறதுக்காகவும்தான் அவர் இதயெல்லாம் செய்யுறாரு. பணிநீக்கம் செய்யப்பட்டதுக்கப்புறமா நான் ரொம்ப மோசமா உணர்ந்திருக்கலாம், ஆனா என்னையப் பத்தி சிந்திக்கவும் என்னைய அறிஞ்சுக்கவும் இதுதான் சரியான வாய்ப்பா இருந்துச்சு. இதுதான் தேவனோட அன்பும் இரட்சிப்புமா இருந்துச்சு. தேவனோட நோக்கத்த என்னால தவறா புரிஞ்சுக்க முடியல. இதயெல்லாம் உணர்ந்துக்கிட்ட பிறகு எனக்குக் கொஞ்சம் அதிகமா நிம்மதி கிடச்சுச்சு. நான் சத்தியத்தத் தேடவும், சிந்திச்சுப் பாத்து என்னைய அறிஞ்சுக்கவும், முடிந்தவரை சீக்கிரமா மனந்திரும்பவும் மட்டுமே விரும்புனேன்.

தன்னிச்சையாவும் பொறுப்பற்றவளாவும் நடந்துக்கிட்டதால தலைவர் எப்படி என்னைய அம்பலப்படுத்திக் கையாண்டாருங்கறத நெனச்சுப் பாத்து, புசித்துப் பானம்பண்ணவும் சிந்திச்சுப் பாக்கவும் தேவனோட வார்த்தைகளின் பொருத்தமான பத்திகள நான் தேடினேன். தேவனோட வார்த்தைகள் சிலத நான் பாத்தேன், அது சொல்லுது: “சிலர், யாரிடமும் விஷயங்களைக் கலந்து பேசாமலும், யாரிடமும் சொல்லாமலும் காரியங்களைத் தனியாகச் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்கு வரும் காரியங்களை வெறுமனே செய்கிறார்கள், இருப்பினும் மற்றவர்கள் அவற்றைப் பார்க்கக் கூடும். ‘நான் தலைவர், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், ஆகவே, நான் செய்வதை நீங்கள் பின்பற்ற வேண்டும். நான் சொல்வதை அப்படியே செய்யுங்கள்—அப்படித்தான் அது செய்யப்பட வேண்டும்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் செயல்படும்போது மற்றவர்களுக்கு அறிவிப்பதில்லை; அவர்களின் செயல்களில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. அவர்கள் எப்பொழுதும் தனிப்பட்ட முறையில் ஏதோவொன்றிற்காகப் பாடுபடுகிறார்கள் மற்றும் இரகசியமாகச் செயல்படுகிறார்கள். அதிகாரத்தில் ஒற்றைக் கட்சி ஏகாதிபத்தியத்தை பேணும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைப் போலவே, அவர்கள் முக்கியமற்றவர்களாகவும் தகுதியில்லாதவர்களாகவும்பார்ப்பவர்களை, அவர்கள் எப்பொழுதும் ஏமாற்றவும் கட்டுப்படுத்தவும் விரும்புகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுடன் விவாதிக்காமல் அல்லது தொடர்புகொள்ளாமல், விஷயங்களில் இறுதி முடிவெடுக்க விரும்புகிறார்கள், அவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் கருத்துகளைக் கேட்க மாட்டார்கள். இந்த அணுகுமுறையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அது இயல்பான மனிதத்தன்மையை உடையதா? (இல்லை.) இது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சுபாவம் அல்லவா? சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சர்வாதிகாரமுள்ளதும் தன்னிச்சையானதுமாய் இருக்கிறது. இவ்வகையான சீர்கெட்ட மனநிலையை உடையவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினராய் இருக்கிறார்கள் அல்லவா?(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “இணக்கமான ஒத்துழைப்பு”). “உன் கடமையை ஏற்றுக்கொள்ளப்படத்தக்க வகையில் செய்ய, நீ எத்தனை வருஷங்களாக தேவனை விசுவாசிக்கிறாய் என்பதோ, உன் கடமையில் நீ எவ்வளவு செய்திருக்கிறாய் என்பதோ முக்கியமல்ல, அல்லது தேவனுடைய வீட்டிற்கு நீ எவ்வளவு பங்களிப்புகளைச் செய்திருக்கிறாய் என்பதும் முக்கியமல்ல, உன் கடமையில் நீ எவ்வளவு அனுபவம் வாய்ந்தவனாய் இருக்கிறாய் என்பதும் முக்கியமல்ல. ஒரு நபர் செல்லும் பாதைதான் தேவன் பார்க்கும் முக்கிய விஷயமாய் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சத்தியம் மற்றும் கொள்கைகள் பற்றிய ஒருவரின் அணுகுமுறையையும் ஒருவரின் செயல்களுக்குப் பின்னால் உள்ள போக்கு, தோற்றம் மற்றும் உந்துதல் ஆகியவற்றையும் அவர் பார்க்கிறார். தேவன் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்; அவைதான் நீ நடக்கும் பாதையைத் தீர்மானிக்கின்றன. நீ உன் கடமையை நிறைவேற்றும் செயல்பாட்டில், இந்த நேர்மறையான விஷயங்களை உன்னில் ஒருபோதும் பார்க்க முடியாவிட்டால், மேலும் உன் செயலின் கொள்கைகள், பாதை மற்றும் அடிப்படை ஆகியவை உன் சொந்த எண்ணங்கள், குறிக்கோள்கள் மற்றும் திட்டங்களாய் இருந்தால்; உன் உந்துதல் உன் சொந்த நலன்களைப் பாதுகாப்பதாகவும் உன் நற்பெயரையும் பதவியையும் பாதுகாப்பதாகவும் இருந்தால், ஒருபோதும் மற்றவர்களுடன் விஷயங்களைப் பற்றிக் கலந்து பேசாமல் அல்லது இணக்கமாக ஒத்துழைக்காமல், மற்றும் நீ ஒரு தவறு செய்துவிட்டபோது ஒருபோதும் ஆலோசனையைக் கேட்காமல், சத்தியத்தைத் தேடாமல், நீ வேலை செய்யும் வழியானது, தீர்மானங்களை எடுப்பது மற்றும் தனியாகச் செயல்பட்டு இறுதி முடிவை எடுப்பதாய் இருந்தால், அப்போது தேவன் உன்னை எப்படிப் பார்ப்பார்? நீ உன் கடமையை அவ்வாறு செய்தால், நீ இன்னும் தரநிலையை எட்டவில்லை; நீ சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான பாதையில் அடியெடுத்து வைக்கவில்லை, ஏனென்றால், நீ உன் வேலையைச் செய்யும்போது, நீ சத்தியத்தின் கொள்கையைத் தேடுவதில்லை, மேலும் எப்போதும் உன் விருப்பப்படி செயல்படுகிறாய், நீ விரும்பியதைச் செய்துகொண்டிருக்கிறாய். பெரும்பாலான ஜனங்கள் தங்கள் கடமைகளைத் திருப்திகரமாக செய்யாததற்கு இதுவே காரணம்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “கடமைக்கான அடிப்படை செயல்திறன் என்ன?”). இந்தப் பத்திகள நான் சிந்திச்சுப் பாத்தப்போ தேவனோட வார்த்தைகள் உண்மையிலே என்னைய கடுமையா தாக்கிச்சு. அகந்தையும், அகங்காரமுமா இருப்பதும், தன்னிச்சையா செயல்படுவதும் எப்படி சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தோட சுபாவமா இருக்குதுங்கறத அது அம்பலப்படுத்துச்சு. அப்படிப்பட்டவங்களோட பின்தொடர்தல் பத்திய கருத்தும் அவங்க நடக்குற எல்லா பாதைகளும் தேவனுக்கு முரணானதா இருக்குது. தலைவியா ஊழியம் செய்யறதுக்கான ஒரு வாய்ப்ப திருச்சபை எனக்குக் கொடுத்திருந்துச்சு, ஒரு அதிகாரியா செயல்பட அல்ல. அவங்க எனக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்திருந்தாங்க தேவனோட சித்தத்துக்கு நான் செவிசாய்க்கணும்னும், திருச்சபையோட பணிகளச் சிறப்பா செய்ய மத்தவங்களோடு இணக்கமா வேலை செய்யணும்னும், என்னோட கடமைய நிறைவேத்தணும்னும் விரும்புனாங்க. ஆனா, அதுக்குப் பதிலா, நான் திருச்சபையோட பணிய என்னோட சொந்தத் தொழிலா எடுத்துக்கிட்டேன். என்னோட வேலையில ஓரளவு பலன்களப் பெறத் தொடங்கி, திறமையானவங்களத் தேர்ந்தெடுப்பதுல கொஞ்சம் அனுபவத்தப் பெற்றப்போ, எனக்கு நல்ல திறமையும், யாருக்கும் இல்லாத விசேஷித்த வேலைத் திறன்களும் இருந்ததாவும், சூழ்நிலைகளயும் ஜனங்களயும் பத்தி நல்லா மதிப்பிடக்கூடியவளாவும் இருந்தேன்னும் நான் நெனச்சேன். குறிப்பா, சகோதர சகோதரிகள் தங்களோட கேள்விகளோடு என்கிட்ட வர ஆரம்பிச்சதுக்கப்புறமா, நான் என்னைய ஒரு உச்சத்துல ஏத்தி நிறுத்திக்கிட்டேன், அவங்கள விட நான் சத்தியத்த நல்லா புரிஞ்சுக்கிட்டதா நம்புனேன். என்னோட உயர்ந்த எண்ணத்துலருந்து என்னால இறங்கிவர முடியல, அதோடு, திருச்சபைப் பணியில ஏற்படுற முன்னேற்றம் எல்லாமே என்னோட செயல்ன்னும், எல்லா சகோதரர்களும் சகோதரிகளும் எனக்குக் கீழானவங்கன்னும் கருத்துகளத் தெரிவிக்க அவங்களுக்கு உரிமை இல்லன்னும் நான் நம்புனேன். கலந்து பேச வேண்டிய எந்த வேலைக்கும் என்னோட கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படணும். அதனால நான் எப்படி என்னோட வேலையில வழிதவறினேன்ங்கறத சகோதர சகோதரிகள் சுட்டிக்காட்டியப்போ, நான் அவங்க சொல்றதக் கேட்காம, என்னோட இஷ்டப்படி காரியங்கள செஞ்சேன். சில நேரங்கள்ல அவங்க வேற வேற கருத்துக்கள சொல்லுறப்ப, முதல்ல நான் அதக் கண்டுக்காம நிராகரிச்சிருவேன். என்னோட திட்டத்த அவங்க பின்பற்றணும்னு வலியுறுத்தினேன், சில நேரங்கள்ல நான் முதல்ல சக ஊழியர்களோடு கலந்து பேசாமலேயே திட்டங்கள செய்யத் தொடங்கிருவேன். ஏன்னா, புத்தகங்கள வச்சிருக்க கொள்கைக்கு ஒத்துப்போகாத ஒருத்தரத் தேர்ந்தெடுக்கணும்னு நான் வலியுறுத்தினேன், என்னோட சக ஊழியர்கள் எனக்கு ஞாபகப்படுத்தி அப்படி செய்யறதுக்கு எதிரா என்னைய எச்சரிச்சபோதும் நான் கேட்கல, புத்தகங்கள் சேதமடைஞ்சுச்சு. அப்படி இருந்தபோதிலும், நான் இன்னும் என்னையப் பத்தி சிந்திக்கல. நான் ஜாங் ஃபேனோட பிரச்சனைகள சுட்டிக்காட்டாமலும் ஐக்கியங்கொள்ளாமலும் அவங்கள பணிநீக்கம் செஞ்சேன், இது அவங்களுக்கு மனக்கசப்பயும், இணக்கமற்றதன்மையயும் உண்டாக்கி, தவறுகளைக் கண்டறியக் காரணமா அமைஞ்சிச்சு. இது பெரும் குழப்பத்த ஏற்படுத்தி திருச்சபை வாழ்க்கையில குழப்பத்துக்கு வழி வகுத்துச்சு. என்னோட கடமைகள்ல, நான் சத்தியத்தத் தேடுறதுக்கு முன்னுரிமை கொடுக்கல, சத்தியத்தின் யதார்த்தத்துக்குள்ள பிரவேசிக்க மத்தவங்களுக்கு வழிகாட்டல. அதுக்கு பதிலா, நான் கொள்கைகள மீறி நடந்துக்கிட்டு, என்னோட கட்டளைகளப் பின்பற்றும்படி எல்லாரையும் கட்டாயப்படுத்தினேன், வேற வேற கருத்துக்கள சொல்லுறதுக்கு அவங்கள அனுமதிக்கல, எல்லாத்துலயும் நானே முடிவெடுக்க விரும்பினேன். நான் ஒரு சர்வாதிகாரியப்போல நடந்துக்கலயா? நாம கொள்கைகளின்படி செயல்படணும்ங்கறத ஒரு திருச்சபைத் தலைவியா நான் தெளிவாப் புரிஞ்சுகிட்டேன், ஆனா நான் அவங்கள புறக்கணிச்சு, என்னோட சொந்த இஷ்டப்படி நடந்துக்கிட்டு, எப்பவுமே கடைசி முடிவ நான்தான் எடுக்கணும்னு விரும்புனேன். நான் தேவனுக்கு எதிரா என்னைய நிறுத்தலயா? என்னோட ஒவ்வொரு செயலும் அந்திக்கிறிஸ்துவோட மனநிலை எனக்கு இருந்தக் காட்டிக் கொடுத்துச்சு. நான் எப்படி நடந்துக்கிட்டேன்ங்கறத சிந்திச்சுப் பார்த்தப்ப, என்னோட நடத்தைகள் எல்லாமே தேவனுக்கு வெறுப்பூட்டுவதா இருந்ததப் பார்த்தேன். நான் மனந்திரும்பி, என்னோட நடத்தைய சீர்படுத்திக்கலேன்னா, அந்திக்கிறிஸ்துகள் சந்திச்ச அதே விளைவ நானும் சந்திக்க மாட்டேனா?

அதுக்கப்புறம், தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் பாத்தேன், அது சொல்லுது: “சத்தியம் இல்லாமல், பொல்லாப்பு செய்வது எளிது, நீ விரும்பாமல் கூட அதைச் செய்வாய். உதாரணமாக நீ அகந்தையும் இறுமாப்புமான மனநிலையைக் கொண்டிருந்தால், அப்போது தேவனை எதிர்க்க வேண்டாம் என்று கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, உன்னால் தடுக்க முடியாது, அது உன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. நீ அதை வேண்டுமென்றே செய்ய மாட்டாய்; நீ உன் அகந்தையான, இறுமாப்பான சுபாவத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் அதைச் செய்வாய். அகந்தையும் இறுமாப்பும் உன்னை தேவனை இழிவாகப் பார்க்கச் செய்து, முக்கியமற்றவராக பார்க்க வைக்கும்; அவை உன்னை நீயே உயர்த்த வைக்கும், தொடர்ந்து உன்னை வெளிக்காட்டிக் கொள்ளச் செய்யும், அவை உன்னை மற்றவர்களை இழிவுபடுத்த வைக்கும், உன்னைத் தவிர வேறு யாரையும் அவை உன் இருதயத்தில் விட்டு வைக்காது; அவை உன் இருதயத்தில் உள்ள தேவனுடைய இடத்தைப் பறித்துக் கொள்ளும், இறுதியில் உன்னை தேவனுடைய இடத்தில் உட்காரச் செய்து, ஜனங்கள் உனக்கு அடிபணிய வேண்டும் என்று கோர வைக்கும், மேலும் உன் சொந்த எண்ணங்கள், யோசனைகள் மற்றும் கருத்துகளை சத்தியமென்று வணங்கச் செய்யும். அகந்தையும் இறுமாப்புமான சுபாவத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிற ஜனங்களால் எத்தனையோ பொல்லாப்புகள் செய்யப்படுகின்றன!(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைப் பின்தொடர்வதன் மூலம் மட்டுமே ஒருவர் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியும்”). தேவனோட வார்த்தைகள் மூலமா, நான் என்னோட சொந்தத் திட்டப்படி நடந்து தன்னிச்சையா செயல்பட்டதுக்கு அடிப்படைக் காரணம் என்னோட சுபாவம் ரொம்ப அகந்தையானதா இருந்துச்சுங்கறத நான் உணர்ந்தேன். நான் மத்தவங்கள விட சிறந்தவளா இருந்தேன்னும், ஜனங்களயும் சூழ்நிலைகளயும் பத்தி நிதானிப்பதுல சிறந்தவள்ன்னும் நினைச்சுக்கிட்டு, நான் என்னையப் பத்தி ரொம்ப உயர்வா நெனச்சேன். யாரையும் நான் மதிச்சது இல்ல. சக ஊழியர்களோடு வேலையப் பத்திக் கலந்து பேசுறப்ப, எப்பவுமே நான் சொல்றது சரின்னு நெனச்சேன், என்னோடு யார் ஒத்துப்போகலேன்னாலும், நான் ஒருபோதும் அவங்க சொன்னத கண்டுக்கல. என்னோட அகந்தையாலும், சுயநீதியினாலும் நான் திருச்சபையில இடையூறுகளயும் குழப்பமான சூழ்நிலைகளயும் ஏற்படுத்தியப்ப கூட, இது ஒரு தடவ நடந்த தவறுதான்னு நம்பிக்கிட்டு, நான் அப்பவும் தாழ்மையா இருக்க என்னைய அனுமதிக்கல. ஒரு சகோதரி எனக்குக் காரியங்கள ஞாபகப்படுத்தியபோதும், ஒன்னுமில்லாத விஷயத்த மத்தவங்க பெருசு படுத்தறாங்கன்னு சொல்லி நினைச்சுக்கிட்டு நான் சிந்திச்சுப் பாக்கவும் என்னைய அறிஞ்சுக்கவும் தவறிட்டேன். நான் உண்மையிலயே அகந்தையுள்ளவளா இருந்தேன்ங்கறத உணர்ந்தேன். என்னோட பகுத்தறிவு எங்க போச்சு? வேலையில எனக்குக் கிடைச்ச பலன்களும் நான் தேர்ந்தெடுத்திருந்த நல்ல தேர்வுகளும் தேவனோட வழிநடத்துதலின் பலனும் அவரோட வார்த்தைகள் எனக்குள்ள ஏற்படுத்திய விளைவுமா இருந்துச்சு. எனக்கு தேவனோட வெளிச்சமும் வழிகாட்டுதலும், தேவனோட வீட்டின் கொள்கைகளும் இல்லேன்னா, நான் எதுக்கும் உதவுபவளா இருந்திருக்க மாட்டேன். ஆனாலும் எல்லா மதிப்பையும் நான் எடுத்துக்கிட்டு, இந்த பலன்கள என்னோட அகந்தைக்கும் சுயநீதிக்கும் மூலதனமா பயன்படுத்தினேன். நான் கொஞ்சம் கூட வெக்கமில்லாம இருந்தேன். என்னோட தலைவர் என்னையக் கடுமையா அம்பலப்படுத்தி பணிநீக்கம் செய்யாம இருந்திருந்தா, நான் என்னையப் பத்தி ஒருபோதும் சிந்திச்சுப் பாத்திருக்க மாட்டேன். அம்பலப்படுத்தப்பட்டதும் பணி நீக்கம் செய்யப்பட்டதும்தான் என்னையப் பாதுகாக்குறதுக்கான தேவனோட வழியா இருந்துதுங்கறத அப்பத்தான் நான் உணர்ந்துக்கிட்டேன். மத்தபடி, என்னோட அகந்தையான மனநிலையால வேற என்ன பொல்லாப்பு செஞ்சிருப்பேன்னு யாருக்குத் தெரியும்? இதயெல்லாம் உணர்ந்தப்ப எனக்கு உண்மையிலயே பயமாவும் வெட்கமாவும் இருந்துச்சு, நான் தேவனிடத்துல: “அன்பான தேவனே! நான் இதுக்கப்புறமும் என்னோட அகந்தையான மனநிலையில வாழ விரும்பல, நான் தன்னிச்சையாவும் பொறுப்பற்ற முறையிலயும் செயல்படவும் விரும்பல. நடப்பதுக்கான பாதையக் கண்டுபிடிக்க தயவுசெஞ்சு எனக்கு வழிகாட்டுங்க” அப்படின்னு ஜெபிச்சேன்.

அதுக்கப்புறம், என்னோட பிரச்சனையோடு தொடர்புடையத நான் தேடி, தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்தியக் கண்டுபிடிச்சேன்: “பின் எப்படி நீ உன்னுடைய தான்தோன்றித்தனத்தையும் கண்மூடித்தனத்தையும் தீர்ப்பாய்? உதாரணத்துக்கு வைத்துக் கொள்ளுவோம், உனக்கு ஏதோ ஒன்று நடக்கிறது, மேலும் உனக்கு உன் சொந்த எண்ணங்களும் திட்டங்களும் இருக்கின்றன; என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முன், நீ சத்தியத்தைத் தேடி, குறைந்த பட்சம் இதைப்பற்றி நீ நினைப்பதையும் நம்புவதையும் எல்லோரிடமும் ஐக்கியப்பட்டு, உன்னுடைய எண்ணங்களும் திட்டங்களும் சரிதானா, சத்தியத்துக்கு ஏற்ப இருக்கின்றனவா என்று சொல்லும்படி எல்லாரிடமும் கேட்க வேண்டும், ஒவ்வொருவரும் உனக்காக இறுதியாகச் சரிபார்க்கும்படி கேட்க வேண்டும். இதுதான் தான்தோன்றித்தனத்தையும் கண்மூடித்தனத்தையும் தீர்க்கும் சிறந்த முறை. முதலில், உன்னுடைய கருத்தைப் புரியவைத்துவிட்டு சத்தியத்தைத் தேடலாம். தான்தோன்றித்தனத்தையும் கண்மூடித்தனத்தையும் தீர்க்க இதுதான் எடுக்க வேண்டிய முதல் படிநிலையாகும். மற்றவர்கள் மாறான கருத்துகளைத் தெரிவிக்கும்போது இரண்டாவது படிநிலை நிகழ்கிறது—தன்னிச்சையாகவும் கண்மூடித்தனமாகவும் நடந்து கொள்ளுவதைத் தவிர்க்க எந்த நடவடிக்கைகளை நீ கடைப்பிடிக்கலாம்? உனக்கு முதலில் தாழ்மையான மனப்பாங்கு இருக்க வேண்டும், நீ சரியென நினைப்பதை ஒதுக்கி வைக்க வேண்டும், மேலும் எல்லோரும் ஐக்கியப்பட அனுமதிக்க வேண்டும். நீ உன்னுடைய வழிதான் சரி என்று நினைத்தாலும், அதை நீ தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க கூடாது. அது முன்னோக்கிச் செல்லும் ஒரு படிநிலை; அது சத்தியத்தை நாடுகிற, உன்னை நீயே மறுதலிக்கிற, தேவனுடைய சித்தத்தைத் திருப்திப்படுத்துகிற ஒரு மனப்பாங்கைக் காட்டுகிறது. இந்த மனப்பாங்கை நீ பெற்றவுடன், அதே சமயத்தில் நீ உன்னுடைய சொந்த கருத்துகளையே பற்றிப்பிடிக்காமல் இருக்கும் போது, நீ ஜெபிக்க வேண்டும், தேவனிடம் இருந்து சத்தியத்தைத் தேட வேண்டும், மேலும் அதன் பின் தேவனுடைய வார்த்தைகளில் இருந்து ஓர் அடிப்படையைத் தேட வேண்டும்—தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இதுவே மிகவும் பொருத்தமானதும் துல்லியமானதுமான நடைமுறை ஆகும். மக்கள் சத்தியத்தைத் தேடும்போதும், ஒரு பிரச்சனையை முன்வைத்து அனைவரும் ஒன்றுசேர்ந்து ஐக்கியப்பட்டு அதற்கான பதிலைத் தேடும்போதும், பரிசுத்த ஆவியானவர் எப்போதும் பிரகாசத்தை வழங்குகிறார். தேவன் கொள்கையின்படி மக்களைப் பிரகாசிப்பிக்கிறார், அவர் உன் மனப்பாங்கை ஆய்ந்தறிகிறார். உன் பார்வை சரியா தவறா என்பதைப் பொருட்படுத்தாமல் நீ உன் கருத்தைப் பிடிவாதமாகப் பற்றிக்கொண்டால், தேவன் தம்முடைய முகத்தை உன்னிடமிருந்து மறைத்து உன்னை புறக்கணிப்பார்; அவர் உன்னைச் செய்வதறியாமல் திகைத்து நிறக வைப்பார், அவர் உன்னை அம்பலப்படுத்துவார் மற்றும் உனது அலங்கோலமான நிலையை வெளிப்படுத்துவார். இன்னொருபுறம், உன் சொந்த வழியில் பிடிவாதமாகவோ, அல்லது சுயநீதியுடனோ, அல்லது தன்னிச்சையாகவோ மற்றும் கண்மூடித்தனமாகவோ இல்லாமல் உன் அணுகுமுறை சரியானதாக இருந்து, சத்தியத்தைத் தேடும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன், நீ இதை அனைவருடனும் ஐக்கியப்பட்டால், பரிசுத்த ஆவியானவர் உங்களிடையே கிரியை செய்யத் தொடங்குவார், மேலும் ஒருவரின் வார்த்தைகளின் மூலம் அவர் உன்னைப் புரிதலுக்குள் வழிநடத்துவார். சில வேளைகளில், பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிப்பிக்கும்போது, ஒரு சில வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் மூலம் அல்லது உனக்கு ஓர் உணர்வை வழங்குவதன் மூலம், ஒரு விஷயத்தின் மையத்தை புரிந்துகொள்ள அவர் உன்னை வழிநடத்துகிறார். நீ எதைப் பிடிவாதமாகப் பற்றிக் கொண்டிருந்தாயோ அது தவறானது என்பதை உணர்ந்து கொள்கிறாய், மேலும் அதே நொடியில் செயல்படுவதற்கான மிகப் பொருத்தமான முறையைப் புரிந்துகொள்ளுகிறாய். அத்தகைய நிலையை அடைந்த நீ, தீமை செய்வதையும், ஒரு தவறின் விளைவுகளைத் தாங்கிக் கொள்வதைவதையும் வெற்றிகரமாகத் தவிர்த்துவிட்டாயா? அத்தகைய விஷயம் எவ்வாறு அடையப்படுகிறது? தேவனுக்குப் பயப்படும் இருதயம் உனக்கு இருக்கும் போதும், கீழ்ப்படிகிற இருதயத்துடன் சத்தியத்தைத் தேடும்போதும் மட்டுமே இது அடையப்படுகிறது. நீ பரிசுத்த ஆவியின் பிரகாசத்தைப்பெற்று, பயிற்சிக்கான கொள்கைகளைத் தீர்மானித்தவுடன், உன் பயிற்சி சத்தியத்துக்கு ஏற்ப இருக்கும், மேலும் நீ தேவனுடைய சித்தத்தைத் திருப்திப்படுத்த முடியும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள் நடப்பதுக்கான பாதைய அமைச்சுக் கொடுத்துச்சு. ஒருத்தரோட ஆணவத்தயும், சுயநீதியயும் பொறுப்பற்ற தன்மையயும் சரி செய்யறதுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, தேவ பயமுள்ள இருதயமும், சத்தியத்தத் தேடும் மனப்பான்மையும், அதோடு மத்தவங்களோடு இணக்கமா ஒத்துழைக்கணும்ங்கற விருப்பமும் கொண்டிருக்கறதுதான். பிரச்சனைகள எதிர்கொள்ளும் போது, மத்தவங்களோடு கலந்துபேசி, அதை செய்யத் தொடங்குறதுக்கு முன்னாடி ஒரு உடன்பாட்டுக்கு வரணும். மத்தவங்க மாறுபட்ட கருத்துக்களச் சொன்னா, ஒருத்தர் தன்னைத் தாழ்த்திக்கொள்ள கத்துக்கணும், அதோடு மத்தவங்களோடு சேர்ந்து சத்தியத்தயும் கொள்கைகளயும் தேடணும். யாருமே பரிபூரணமானவங்க இல்ல—திருச்சபையோட திட்டங்கள் எதையும் ஒரே ஒருத்தரால மட்டும் செஞ்சு முடிச்சுற முடியாது, சரியா செஞ்சு முடிக்க அவங்க எல்லாத்துக்கும் ஒத்துழைப்பும் கலந்து பேசுதலும் தேவைப்படுது. ஒருவர் தன்னோட கடமையில சத்தியத்தத் தேடுறதும் கொள்கைப்படி வேலை செய்யறதும் எவ்வளவு முக்கியமானதுங்கறத சரியா உணர்றதுக்கு இந்தத் தோல்வி எனக்கு உதவுச்சு. இப்படி வேலை செய்யறது இடையூறு மற்றும் சீர்குலைவு ஏற்படுத்துறதத் தவிர்க்க எனக்கு உதவும். ஒருத்தர் அகந்தையுள்ளவராவும், சுயநீதியுள்ளவராவும், தன்னிச்சையா செயல்படுபவராவும், பொறுப்பற்றவராவும் இருந்தா, ஒருத்தர் எவ்வளவு புத்திசாலியா இருந்தாலும், அவங்களால நல்ல பலன்கள அடைய முடியாது, அதோடு திருச்சபையோட பணிகளுக்கு இடையூறுகளயும் சீர்குலைவுகளயும் மட்டுமே ஏற்படுத்துவாங்க. கொஞ்ச நாள் கழிச்சு, நான் மனந்திரும்பி, என்னோட கடமையச் செய்யும்போது கொஞ்சம் மாறியிருந்தத சகோதர சகோதரிகள் பாத்தப்போ, அவங்க என்னைய மறுபடியும் சபைத் தலைவியாத் தேர்ந்தெடுத்தாங்க. எப்படி என்னோட கடமையில எப்பவுமே நான்தான் முடிவெடுக்கணும்னு விரும்பினேன்ங்கறதயும், இது மத்தவங்களுக்கு அதிகமா தீங்கு விளைவிச்சுது, அதோடு எனக்கு நிறைய வருத்தங்கள ஏற்படுத்துச்சுங்கறதயும் நான் நெனச்சப்போ, நான் தேவனிடத்துல வாக்குப் பண்ணி: நான் தன்னிச்சையா செயல்பட மாட்டேன், எனக்குக் கீழ்ப்படியும்படி மத்தவங்கள கட்டாயப்படுத்த மாட்டேன், அதோடு நான் மத்தவங்களோடு இணக்கமா ஒத்துழைப்பேன்னு சொன்னேன்.

ஒரு தடவ, ஒரு குறிப்பிட்ட திருச்சபையில தண்ணீர் பாய்ச்சும் வேலையப் பத்தி சக ஊழியர்களோடு கலந்துபேசுறப்போ, வாங் சென் அவங்க தன்னோட கடமையில பொறுப்பானவராவும், திறமையானவராவும் இருந்தார்ன்னும், தண்ணீர் பாய்ச்சும் உதவி போதகரா அவரைப் பண்படுத்தணும்னும் நான் உணர்ந்தேன். ஆனா ரெண்டு சக ஊழியர்கள் ஒத்துக்கல: வாங் சென் அவங்க ரொம்ப பொறுப்பானவராவும் திறமையான ஊழியராவும் இருந்தபோதிலும், அவங்களுக்கு வாழ்க்கையப் பத்திய அனுபவம் அதிகம் இல்லன்னும், பிரச்சனைகள எதிர்கொள்ளுறப்போ சத்தியத்தின் கொள்கைகளத் தேடுறதுக்கு முன்னுரிமை கொடுக்கலன்னும், அதனால, தண்ணீர் பாய்ச்சும் வேலைய மேற்பார்வையிட அவர் ரொம்பப் பொருத்தமானவர் இல்லன்னும் அவங்க நெனச்சாங்க. இதக் கேட்டதும் எனக்குள்ள ஆத்திரம் பொங்கி வருவத உணர முடிஞ்சிச்சு. “இங்க நான் தலைவரா இருக்கேன்—நீங்க என்னைய விட ஜனங்கள சிறப்பா கணிக்கக் கூடியவங்கன்னு நினைக்குறீங்களா?” நான் மறுபடியும் என்னோட கருத்த சொல்ல இருந்தப்ப, நான் மறுபடியும் என்னோட அகந்தையான மனநிலைய வெளிப்படுத்திக்கிட்டு இருந்ததையும் தன்னிச்சையாக செயல்பட விரும்புறதயும் உடனே உணர்ந்துக்கிட்டேன். என்னோட முந்தைய தோல்விய ஞாபகப்படுத்திக்கிட்டு, நான் தேவனிடத்துல ஜெபிச்சேன், என்னைத் தாழ்த்திக்கிட்டு கொள்கையின்படி நடக்க எனக்கு உதவி செய்யும்படி தேவனிடத்துல மன்றாடினேன். ஜெபிச்சதுக்கு அப்புறமா, தண்ணீர் பாய்ச்சுறதுக்கு தவறான நபரை நாங்க தேர்ந்தெடுத்துட்டா, அது சகோதர சகோதரிகளோட ஜீவ பிரவேசத்துக்கு நிறைய தீங்கு விளைவிக்கும், அதனால, நான் கவனமா செயல்படணும்ங்கறத உணர்ந்தேன். அதுக்கப்புறம், மத்தவங்களோடு சேர்ந்து ஜனங்கள உற்சாகப்படுத்தி பயிற்சி அளிப்பதுக்கான கொள்கைகள நான் தேடினேன், கூடுகைக்குப் பிறகும் வாங் சென்னோடு ஐக்கியங்கொண்ட பிறகும், அவர் உண்மையிலயே வாழ்க்கை அனுபவத்துல குறைவுபட்டிருப்பதயும், பிரச்சனைகள சந்திக்குறப்ப தன்னைப் பத்தி சிந்திக்காமலும் தன்னைய அறிஞ்சுக்காமலும் இருந்ததையும், அந்தப் பிரச்சனைகள சரிசெய்ய சத்தியத்தத் தேடலங்கறதயும், தண்ணீர் பாய்ச்சும் பணிக்கு ஏற்றவரா இல்லங்கறதயும் நான் பாத்தேன். கடைசியில, மத்தவங்களோட கருத்துக்கள நான் ஏத்துக்கிட்டேன். இப்படிப் பயிற்சி செஞ்ச பிறகு நான் ரொம்ப இலகுவா உணர்ந்தேன். என்னோட அனுபவத்தத் திரும்பிப் பாக்குறப்ப, தன்னிச்சையா செயல்படுறதால ஏற்படுற விளைவுகள அனுபவிக்கிறது எனக்கு மனதளவுல நிறைய வலியயும், வருத்தத்தயும், வெறுப்பயும் தந்துச்சு. இது என்னோட சொந்த அகந்தையான மனநிலைய அடையாளம் காணவும், என்னோட கடமையில என்னோட சொந்த எண்ணங்கள மட்டுமே அடிப்படையா கொண்டு செயல்படக் கூடாதுங்கறதயும், நான் தேவனோட நோக்கங்கள அதிகமா நாடணும், கொள்கையின்படி வேலை செய்யணும், எல்லாத்துக்கும் மேலா தேவனை உயர்த்தணும் அப்படிங்கறத உணரவும் எனக்கு உதவுச்சு. அப்படி செஞ்சாத்தான் நான் தேவனோட வழிநடத்துதலப் பெறுவேன், அதோடு வழிதவறிப்போகாம இருப்பேன். தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கள்ளக்கிறிஸ்துகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருந்ததிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்

நான் ஒரு வீட்டுத் திருச்சபையில சக ஊழியரா இருந்தேன். 2000 ல ஒரு நாள், மேல்மட்டத் தலைவர்கள் ஒரு சக ஊழியர் கூட்டத்தக் கூட்டினாங்க. அவங்க,...

சுவிசேஷத்தை நன்றாகப் பிரசங்கிப்பதற்கு பொறுப்பு முக்கியமானது

நான் எப்பவும் என் கடமைகள பெருசா எடுத்துக்காம அதிக முயற்சி செய்யாம இருந்தேன். நான் அடிக்கடி விஷயங்கள கவனமில்லாம செஞ்சேன். சுவிசேஷத்த...

சுகபோகத்திற்கான பேராசை உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்

கடந்த ஜூலை மாதத்துல, என்னை காணொளிப் பணிக்குப் பொறுப்பாளியாக ஏற்படுத்தினாங்க. ஆரம்பத்துல, நான் அடிக்கடி என் சகோதர சகோதரிகளின் பணியை...

சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் எனக்கு சிரமங்கள் இருந்த சமயத்தில்

2020 ஆம் வருஷத்துல, நான் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியைய ஏத்துக்கிட்டேன். கர்த்தருடைய வருகைய வரவேற்க முடிஞ்சது என்னோட...