நான் ஏன் மிகவும் அகந்தையுள்ளவளாக இருந்தேன்

செப்டம்பர் 28, 2023

ஒரு நாளு திருச்சபை தலைவர்கள் ரெண்டு பேரு ஒரு பிரச்சனைய பத்தி என்கிட்ட சொன்னாங்க. சுவிசேஷப் பணியோட பொறுப்புல இருக்குற இசபெல்லா, அவங்களோட செயல்கள்ல கொள்கை பிடிப்பில்லாம இருக்குறதாவும், காரியங்கள பத்தி திருச்சபை தலைவர்களோட அவங்க கலந்து பேசுறதில்லைனும், ஆனா சுவிசேஷத்த பகிர்றதுக்காக ஜனங்கள கன்னாபின்னான்னு மாத்தி, சகோதர சகோதரிக அப்போ செஞ்சிட்டிருந்த பணிய பாதிச்சு, திருச்சபை பணிக்கு இடையூறு செய்யுறதாவும் அவங்க சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காம, “பணித் தேவைகள பூர்த்தி செய்யுற வகையில ஜனங்களோட கடமைகள இசபெல்லா மாத்தியிருக்கணும்”னு சொன்னேன். தலைவர்கள்ல ஒருத்தங்க, “இசபெல்லாவுக்கு திறமை இல்ல, அவங்க தன்னோட பணியில தகுதியானவங்க இல்ல. ஊழியர்கள் சரியா ஏற்பாடு செய்யப்படல, அதப் பத்தி மத்தவங்க சந்தோஷமா இல்ல. அது ஜனங்க சிலர எதிர்மறை நிலையில வெச்சு, நம்ம சுவிசேஷப் பணிய பாதிச்சுது. இந்தப் பணிய நிர்வகிக்க அவங்க தகுதியானவங்க இல்ல இல்லையா?”னு சொன்னாரு. அவங்க பணி நீக்கம் செய்யப்படப்போறாங்கங்கறத நான் கேட்டப்போ நான் ரொம்ப எரிச்சலடைஞ்சேன், அதோட நான், “என்ன? சுவிசேஷப் பணியின் பொறுப்புல இசபெல்லா இல்லைனா, உங்களால சிறப்பான யாரையாவது கண்டுபிடிக்க முடியுமா? தகுதியான யாராவது நம்ம கிட்ட இருக்காங்களா? நீங்க குறிப்பிட்ட பிரச்சனைங்க நிச்சயமா இருக்கு, ஆனா அது எதுவும் ரொம்ப இக்கட்டானது இல்ல. சுவிசேஷப் பணியில அவங்களுக்கு பலன்கள் கிடைக்குது—இந்தச் சின்ன விஷயங்களுக்காக நம்மளால அவங்கள பணி நீக்கம் செய்ய முடியாது! திருச்சபையோட பணிய நாம பாதுகாக்கணும்”னு பதிலடி கொடுத்தேன். திருச்சபை தலைவர்கள மறுக்கும்போது அவங்க சும்மா குத்தம் கண்டுபிடிக்கறதாவும், யாரும் சரியானவங்க இல்லைனும் நான் நினைச்சேன்! நாம எல்லாரும் சீர்கெட்டும் குறைபாடுகளோடையும் இருக்குறோம், அதனால ஜனங்க எல்லாத்தையும் சரியா செய்யணும்னு கேக்கறது சரியா? ஏன் அவங்க பணி முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டீங்கறாங்க? நாம அவங்கள பணி நீக்கம் செஞ்சு, அதுனால பணி சாதனைகள் குறஞ்சுதுனா என்ன செய்றது? ஒரு தவறான தலைவிய போலநடைமுறை பணிய என்னால செய்ய முடியலைங்கறது மாதிரி அது என்னைத் தோன்ற செய்யும். அப்புறம் மத்தவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க? அதோட எனக்கு மேல இருக்குற தலைவர் இத கண்டுபிடிச்சதும் என்னை பணிநீக்கம் செஞ்சுருவாரு இல்லையா? திருச்சபை தலைவர்கள் ரெண்டு பேரும் என் மறுப்பால வாயடைச்சு போய், கைகள கட்டிட்டு, “இப்போதைக்கு அவங்கள அவங்க பதவிலையே வெச்சிருப்போம்”னு சொன்னாங்க. கொஞ்ச நாள் கழிச்சு, எனக்கு மேல இருந்த தலைவர் என்னை ஆன்லைன்ல தொடர்புகொண்டு இசபெல்லா அவங்க கடமைய எப்படி செய்யுறாங்கனு என்கிட்ட கேட்டாங்க. நான் அவங்ககிட்ட, “அவங்க நல்லா வேலை செய்யுறாங்க. அவங்க தன்னோட பணியில சில விஷயங்கள சாதிக்குறாங்க, அவங்க உண்மையாவே சில காரியங்கள செஞ்சு முடிக்குறாங்க”னு சொன்னேன். அப்புறம் தலைவர் என்கிட்ட, “நீங்க சொல்ற இந்தச் சாதனைங்க என்ன? உண்மையில சுவிசேஷப் பணி மூலமா அவங்க எத்தன பேர ஆதாயப்படுத்தியிருக்காங்கனு நீங்க நிஜமாவே பாத்தீங்களா? அவங்க பொய்யான எண்ணிக்கைய தராங்கனு உங்களுக்கு தெரியுமா? அவங்க திறமை குறைவானவங்களா இருக்காங்க, மேலும் அவங்க ரொம்ப திறமையானவங்களாவும் இல்ல. அவங்களால பிரச்சனைகள தீக்க முடியல. அது உங்களுக்குத் தெரியுமா? கொள்கைகள் இல்லாத ஜனங்கள அவங்க நியமனம் செஞ்சு, சுவிசேஷப் பணிக்கு இடையூறு செய்யுறது உங்களுக்குத் தெரியுமா?” அப்படின்னு திருப்பிக் கேட்டாரு. கேள்விக்கு மேல கேள்விய எதிர்கொண்டதால, என் இருதயம் பதட்டமா இருந்துச்சு, என் மனசு வெறுமையாயிருச்சு. என்னால ஒரு கேள்விக்குக் கூட பதில் சொல்ல முடியாதத பாத்து தலைவர் தொடர்ந்து: “நீ பரிதாபமா சுய உறுதிப்பாட்டோட இருக்க! அதிகமான சுய உறுதிப்பாட்டோட இருக்கவங்க எல்லாருக்கும் சுய விழிப்புணர்வே இருக்காது. நீங்க உண்மையிலையே உங்கள பத்தி தெரிஞ்சு வச்சிருந்தா, உங்கள நீங்களே ஏன் அடக்கி வைக்கல? உங்கள நீங்களே ஏன் மறுக்கல? மத்தவங்க தெளிவா இந்தப் பிரச்சனைய எழுப்புனாங்க, ஆனா நீங்க அத ஏத்துக்கல. நீங்க எவ்ளோ அகந்தையோட இருக்கீங்க? சத்தியத்தோட எதார்த்தம் உங்ககிட்ட இருக்கா? உண்மையில சத்தியத்தோட யதார்த்தத்த கொண்டிருக்கற ஒருத்தர் தங்கள நம்பறதில்ல. மத்தவங்க சரியானத சொல்லும்போது அவங்களால கேக்க முடியுது. அவங்களால சத்தியத்த ஏத்துகிட்டு கீழ்ப்படிய முடியும். அதுதான் சாதாரண மனிதத்தன்மையோட இருக்க ஒருத்தர்” அப்படின்னு சொன்னாரு. “எப்படிப்பட்ட ஒருத்தர் நம்பமுடியாத அளவுக்கு அகந்தையுள்ளவராவும் சுய உறுதிப்பாட்டோடையும் இருப்பாரு? அவங்களால சத்தியத்த ஏத்துக்க முடியுமா? அகந்தையுள்ளவங்க சத்தியத்த ஏத்துக்க மாட்டாங்க, அதோட அவங்க சத்தியத்துக்குக் கீழ்ப்படிய மாட்டாங்க. அகந்தையுள்ள, சுய உறுதிப்பாடுள்ள ஜனங்க தங்களைத் தாங்களே தெரிஞ்சு வச்சிருக்க மாட்டாங்க, அவங்களால தங்களைத் தாங்களே கீழ்ப்படுத்த முடியாது, உண்மையில அவங்களால சத்தியத்த கடைப்பிடிக்க முடியாது அல்லது சத்தியத்தோட கொள்கைகள நிலைநாட்ட முடியாது. அவங்களால மத்தவங்களோட நல்லா பழக முடியாது. மனநிலைகள் மாறாதவங்க தான் அகந்தையுள்ளவங்க. இந்த விஷயங்கள்ல இருந்து அகந்தையுள்ளவங்க முற்றிலுமா மாறாம இருக்கற பழைய சாத்தான்கள்னு நம்மளால பாக்க முடியுது. நீங்கள் அப்படிப்பட்டவங்களானு சுய பரிசோதனை செஞ்சுக்கணும்”னு தலைவர் சொன்னாரு. நான் அந்த நேரத்துல அதிர்ச்சியடைஞ்சேன்—என்னை மின்னல் தாக்குன மாதிரி உணர்ந்தேன். நான் ஆஃப்லைன் போனதுக்கு அப்புறம் அங்கேயே உக்காந்துட்டு, அவர் சொன்னதப் பத்தி மனசுக்குள்ள திரும்ப திரும்ப யோசிச்சு பாத்துகிட்டிருந்தேன்: “சத்தியத்த ஏத்துக்க மாட்டாங்க,” “சத்தியத்துக்குக் கீழ்ப்படிய மாட்டாங்க,” “மத்தவங்களோட நல்லா பழக முடியாது,” “மனநிலைகள் மாறாதவங்க,” மற்றும் “எல்லாருமே முற்றிலுமா மாறாம இருக்கற பழைய சாத்தான்கள்.” இதப் பத்தி நான் எவ்வளவு அதிகமா யோசிச்சேனோ அவ்வளவு மோசமா நான் உணர்ந்தேன், என்னால என் கண்ணீர நிறுத்த முடியல. என் வேதனையில, “ஓ தேவனே! நான் சத்தியத்த ஏத்துக்காத ஒரு அகந்தையுள்ள, சுய உறுதிப்பாடுள்ள நபர்னு நான் ஒருபோதும் நினச்சுப் பாத்ததில்ல. நான் சுய சிந்தனை செஞ்சு, என்னை நான் அறிஞ்சுகொள்ள தயவு செஞ்சு எனக்கு வழிகாட்டும்”னு நான் கண்ணீரோட ஜெபிச்சேன்.

அப்புறம் ஒரு நாள் என் தியானங்கள்ல, தேவனோட வார்த்தைகள்ல நான் இத வாசிச்சேன்: “அகந்தையே மனிதனின் சீர்கெட்ட மனநிலையின் வேராகும். ஜனங்கள் எவ்வளவு அதிகமாக அகந்தையுள்ளவர்களாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாகப் பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு அதிகமாகப் பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை எதிர்க்கும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனை எவ்வளவு தீவிரமானது? அகந்தையான மனநிலைகளைக் கொண்டவர்கள், அனைவரும் தங்களுக்குக் கீழே இருப்பதாகக் கருதுவது மட்டுமல்லாமல், எல்லாவற்றையும் விட மோசமாக, அவர்கள் தேவனை விட உயர்ந்தவர்கள் என்பதாகவும் நடந்து கொள்கிறார்கள், மேலும் அவர்களுடைய இருதயங்களுக்குள் தேவனைக் குறித்த பயம் இல்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதாகவும் அவரைப் பின்பற்றுவதாகவும் தோன்றினாலும், அவர்கள் அவரைத் தேவனாகக் கருதுவதே இல்லை. அவர்கள் எப்போதும் தாங்கள் சத்தியத்தைக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள் மற்றும் தங்களைக் குறித்த உலகத்தை நினைக்கிறார்கள். இதுவே அகந்தையான மனநிலையின் சாராம்சமும் வேருமாக இருக்கிறது, மேலும் இது சாத்தானிடமிருந்து வருகிறது. எனவே அகந்தை என்னும் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். மற்றவர்களை விட ஒருவர் சிறந்தவர் என்ற உணர்வு ஒரு அற்பமான விஷயமாகும். முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ஒருவரின் அகந்தையான மனநிலையானது தேவனுக்கும், அவருடைய ஆளுகைக்கும் மற்றும் அவருடைய ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவிடாமல் அவரைத் தடுக்கிறது; அத்தகைய நபர் எப்போதும் மற்றவர்களின் மீதான அதிகாரத்திற்காக தேவனுடன் போட்டியிட விரும்புவதாக நினைக்கிறார். இந்த வகையான நபர் தேவனிடம் சிறிதளவேனும் பயபக்தியாக இருப்பதில்லை, சொல்லப்போனால் தேவனை நேசிப்பதோ அல்லது அவருக்குக் கீழ்படிவதோ இல்லை. அகந்தையும் கர்வமும் கொண்ட ஜனங்களால், குறிப்பாகத் தங்கள் உணர்வுகளை இழந்து விட்ட அளவிற்கு மிகவும் அகந்தையுள்ளவர்களால், தேவன் மீதான தங்கள் விசுவாசத்தில் அவருக்குக் கீழ்ப்படிய முடியாது, மேலும் தங்களை உயர்த்திக் கொண்டு தங்களுக்குத் தாங்களே சாட்சியமளிக்கவும் கூடச் செய்வார்கள். அத்தகையவர்கள் தேவனை மிகவும் எதிர்க்கிறார்கள் மற்றும் தேவன் மீதான பயம் முற்றிலும் இல்லாமல் இருக்கிறார்கள். தேவனை வணங்கும் இடத்திற்கு ஜனங்கள் செல்ல விரும்பினால், அவர்கள் முதலில் தங்கள் அகந்தையான மனநிலைகளைச் சரிசெய்ய வேண்டும். எவ்வளவு முழுமையாக உங்கள் அகந்தையான மனநிலையை நீங்கள் சரிசெய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தேவன் மீது உங்களுக்கு பயபக்தி இருக்கும், அப்போதுதான் உங்களால் அவருக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்தைப் பெறவும் அவரை அறிந்து கொள்ளவும் முடியும். சத்தியத்தைப் பெறுபவர்கள் மட்டுமே உண்மையான மனிதர்களாவர்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள் என்னை ரொம்பவும் பிரகாசிப்பிக்கிறதா இருந்துது. அது உண்மதான். அகந்தை தான் சீர்கேட்டுக்கான மூல காரணம். அகந்தையோட இருந்ததால, நான் மத்தவங்கள தாழ்வா பாத்ததோட மட்டுமில்லாமா, தேவனையே நான் தாழ்வா பாத்தேன். விஷயங்க நடந்தப்போ நான் தேவனுக்கு முன்னாடி வந்து அவரோட சித்தத்த தேடல, அல்லது சத்தியத்தோட கொள்கைகள தேடல, ஆனா நான் என் சொந்த வழியில நடந்தேன், எல்லாரும் நான் சொல்றத கேக்கணும்னு விரும்புனேன். இசபெல்லாவோட பிரச்சனைகள பத்தி திருச்சபை தலைவர்கள் என் கிட்ட சொன்ன கருத்த பத்தி நான் நினைச்சு பாத்தேன். நான் அவங்க சொன்ன எதயும் யோசிக்காம எல்லாத்தையும் மறுத்தேன். இசபெல்லாவுக்கு கொள்கைங்க இல்லைனும், திருச்சபை தலைவர்களோட பேசாம ஜனங்கள கன்னாபின்னான்னு மாத்தி, ஜனங்க என்ன கடமைய செய்யணும்னு அவங்களுக்கே தெரியாத அளவுக்கு விஷயங்கள்ல இடையூறு செஞ்சாங்கனும் அவங்க சொன்னாங்க. நான் இந்தப் பிரச்சனைய முற்றிலுமா மறுத்து, அவங்க சொல்றத கேக்கவே இல்ல. சுவிசேஷப் பணிக்கு அவசரமா ஆட்கள் தேவப்பட்டதால, அவங்க அப்படி செயல்பட்டதாவும், அது தேவப்பட்டுதுன்னும் சொல்லி இசபெல்லாவ நான் முழுசா காப்பாத்துனேன். அவங்களுக்குத் திறமை இல்லைனும், அவங்க பணியில திறமையானவங்களா இல்லைனும், எங்களோட சுவிசேஷப் பணிய நிர்வகிக்க அவங்க தகுதியானவங்க இல்லைனும் திருச்சபை தலைவர்கள் சொன்னாங்க. உண்மையான சூழ்நிலைய பத்தி நான் தெரிஞ்சுக்கல அல்லது கொள்கையின் அடிப்படையில அவங்க இடமாற்றம் செய்யப்படணுமானு நினைச்சுப் பாக்கல. அதுக்குப் பதிலா, நான் எதுக்கவும் எரிச்சலாவும் இருந்தேன். அவங்க ஏன் அந்தப் பொறுப்புல இருக்க கூடாதுனும், அவங்கள விட சிறந்த மேற்பார்வையாளர கண்டுபிடிக்க முடியுமானும் நான் கேட்டேன். நான் அவங்கள மறுத்து அடக்குனேன். இந்தப் பிரச்சனைய எழுப்புறது மூலமா, திருச்சபை தலைவர்கள் பொறுப்போட இருந்து, திருச்சபையோட பணிய நிலைநாட்டுறாங்க, ஆனா சத்தியத்த பத்தி அவங்கள விட எனக்கு நல்லா தெரியும்னும், எனக்கு அதிகமான உட்பார்வை இருந்துதுன்னும், அவங்களுக்கு சத்தியத்த பத்தின ஆழமற்ற புரிதல் இருந்ததால விஷயங்கள சரியா பாக்காம இருந்தாங்கன்னும், அதனால நான் அவங்க சொல்றத கேக்க வேண்டியதில்லைனும் எப்பவும் நினைச்சேன். நான் ரொம்ப அகந்தையோடையும் சுய உறுதிப்பாட்டோடையும் இருந்தேன்! நான் பிடிவாதத்தோட என் சொந்த வழியில நடந்து, சத்தியத்த ஏத்துக்க மறுத்தேன் மற்றும் ஒரு உண்மையான கூற்றையும் ஏத்துக்கல. அவங்க சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் நான் மறுத்தேன், அவங்க கருத்துகள வெளிப்படுத்துறத நிறுத்துற வரைக்கும் விவாதிச்சேன். நான் நியாமற்ற முறையில அகந்தையோட இருந்தேன் மற்றும் தேவன் மேல எந்தவொரு பயபக்தியும் இல்லாம இருந்தேன். நான் ஆட்கள கொள்கைகளுக்கு ஏத்த மாதிரி பயன்படுத்தல மற்றும் திருச்சபையோட பணியில ஏற்கனவே பாதிப்ப ஏற்படுத்தியிருந்தேன், மற்றும் நான் என் தப்ப எல்லாம் ஒத்துக்காம இருந்ததோட மட்டுமல்லாம, திருச்சபை தலைவர்கள் இத குறிப்பிட்டப்போ நான் அவங்க மேல பழி போட்டேன். குத்தம் கண்டுபிடிச்சு, இசபெல்லாவ நியாயம் இல்லாம நடத்துனதுக்காக நான் அவங்கள கண்டிச்சேன். நான் எந்தவொரு மனநிலை மாற்றமும் இல்லாத, முற்றிலும் மாறாத ஒரு பழைய சாத்தானா இருந்தேன் இல்லையா? அந்த வழியில எப்படி என்னால மத்தவங்க கூட பழகி இணக்கமா ஒத்துழைக்க முடியும்? இப்படி அதப் பத்தி நினைச்சப்போ நான் ரொம்ப குற்றவுணர்ச்சிய உணர்ந்தேன், நான் தேவன் கிட்ட ஜெபம் செஞ்சேன், உடனடியா மனந்திரும்பி இசபெல்லாவோட சூழ்நிலைய கையாள தயாரா இருந்தேன். உண்மையில விஷயங்கள ஆராஞ்சதுக்கப்புறம் இசபெல்லா பணிய பத்தின அவங்களோட அறிக்கைகள்ல ஏமாத்தி விஷயங்கள்ல குழப்பத்த உண்டாக்குனாங்கனும், அவங்க நீர்ப்பாய்ச்சுறவங்கள நியமிக்காம இருந்ததால அதிகமான புது விசுவாசிங்க கூட்டங்கள்ல கலந்துக்காம இருந்தாங்கனும் நான் தெரிஞ்சுகிட்டேன். இசபெல்லாவுக்கு திறம இல்ல, ஆனா அவங்க அகந்தையோடயும் சர்வாதிகாரத்தோடயும் இருந்தாங்க, யார் கூடயும் அவங்க வேலைய பத்தி கலந்துரையாடல. பிரச்சனைக வந்தப்போ, அவங்களால அத தீர்க்க முடியல, மத்தவங்களோட பரிந்துரைகளையும் ஏத்துக்கல, அதனால நீண்ட காலமா பல பிரச்சனைக சரி செய்யப்படாம இருந்துது, அது சுவிசேஷப் பணியோட முன்னேற்றத்துக்கு தடையா இருந்துது. இந்த உண்மைகள எதிர்கொண்டப்போ, நான் தப்பான நபர தேர்ந்தெடுத்தேன்னு கடைசியில ஒத்துகிட்டேன். அவங்கள மாத்த சொல்லி திருச்சபை தலைவர்கள் பரிந்துரைச்சப்போ நான் உடன்படல, நான் கண்டனம் செஞ்சு அவங்கள அடக்கவும் கூட செஞ்சேன். அத பத்தி எந்த அளவுக்கு அதிகமா நினைச்சு பாத்தேனோ அந்த அளவுக்கு மோசமா உணர்ந்தேன், மற்றும் ரொம்ப அகந்தையோடயும் சுய உறுதிப்பாட்டோடயும் இருந்ததுக்காக என்னை நானே வெறுத்தேன். நான் தேவனுக்கு முன்னாடி வந்து ஜெபம் செஞ்சு, என் பிரச்சனையோட சாராம்சத்த புரிஞ்சுக்கறதுக்காக என்னை வழிநடத்தும்படி அவர்கிட்ட கேட்டேன்.

அதுக்கப்புறம், என் அகந்தை பிரச்சனைய பத்தி எடுத்துரைச்ச தேவனோட வார்த்தைகளோட ஒரு பத்திய நான் வாசிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மக்களிடம் மிகவும் வெளிப்படையாகப் புலப்படும் சாத்தானிய மனநிலை அகந்தையும் சுயநீதியும் ஆகும், மேலும் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்கள் சுத்திகரிக்கப்பட ஒரு வழியும் இல்லை. மக்கள் அகந்தையும் சுயநீதியும் கொண்ட மனநிலைகளைக் கொண்டுள்ளனர், தாங்கள்தான் சரியானவர்கள் என்று அவர்கள் எப்போதும் நம்புகின்றனர், மேலும் அவர்கள் நினைப்பதில், சொல்வதில், கருத்துக் கொண்ட எல்லாவற்றிலும் அவர்கள் எப்போதும் தங்கள் சொந்தக் கருத்துகளும் மனப்பாங்கும்தான் சரி, யார் சொல்லும் எதுவும் தாங்கள் சொல்வதைப் போல நல்லதோ அல்லது சரியானதோ இல்லை என நம்புகிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் கருத்துகளையே பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள், வேறு யார் எதைச் சொன்னாலும் கேட்பதில்லை; மற்றவர்கள் கூறுவது சரியாக இருந்தாலும், சத்தியத்தின்படி இருந்தாலும், அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள், அவர்கள் வெறுமனே கேட்டுக்கொண்டு இருப்பதுபோல் தோன்றுவார்கள், ஆனால் அவர்கள் எதையும் உள்வாங்க மாட்டார்கள். செயல்பட வேண்டிய நேரம் வரும்போது, அவர்கள் இன்னும் தங்கள் சொந்த வழியில் செல்கிறார்கள்; அவர்கள் எப்போதும் தாங்கள் சரியானவர்கள் மற்றும் நியாயமானவர்கள் என்று நினைக்கிறார்கள். நீ சரியாக இருக்கலாம், நியாயமாக இருக்கலாம், அல்லது நீ பிரச்சனைகள் இல்லாமல், சரியானவற்றைச் செய்து கொண்டிருக்கலாம், ஆனால் நீ வெளிப்படுத்தும் மனநிலை என்ன? அது ஆணவமும் சுயநீதியும் அல்லவா? இந்த ஆணவம் மற்றும் சுயநீதியான மனநிலையை உன்னால் கைவிட முடியாவிட்டால், இது உன் கடமையின் செயல்திறனை பாதிக்குமா? சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கான உன் திறனை அது பாதிக்குமா? இந்த வகையான அகந்தையும் சுயநீதியுமான மனநிலையை உன்னால் தீர்க்க முடியாவிட்டால், எதிர்காலத்தில் நீ பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடுமா? சந்திப்பாய் என்பதில் சந்தேகமில்லை, இது தவிர்க்க முடியாதது. இந்த விஷயங்கள் மக்களில் வெளிப்படுவதை தேவனால் பார்க்க முடியுமா? அவரால் பார்க்க முடியும், மிகவும் நன்றாகப் பார்க்க முடியும்; தேவன் மனிதனின் உள்ளத்தை மதிப்பாய்வு செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் எப்போதும் கவனித்தும் கொண்டிருக்கிறார். இந்த விஷயங்கள் உன்னில் வெளிப்படுவதைக் கண்டவுடன் தேவன் என்ன சொல்வார்? தேவன், ‘நீ கடினமானவன்! நீ தவறு செய்கிறாய் என்று உனக்குத் தெரியாதபோது உன் கருத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பது புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால் நீ தவறு செய்கிறாய் என்று உனக்கு நன்றாகத் தெரிந்த பின்னும் நீ உன் கருத்திலேயே நிலையாய் நின்று, மனந்திரும்ப மறுத்தால், அப்போது நீ பிடிவாதமான வயதான முட்டாள், மேலும் நீ சிக்கலில் இருக்கிறாய். யாருடைய ஆலோசனையாக இருந்தாலும் சரி, நீ எதிர்மறையான மற்றும் விரோதமான மனப்பான்மையுடன் நடந்துகொண்டு, சத்தியத்தை ஏற்கவேயில்லை என்றால்—உன் இருதயத்தில், விரோதம், மறைவான தன்மை, மறுப்பு தவிர வேறு எதுவும் இல்லை என்றால், நீ கேலிக்குரியவன், அபத்தமான ஒரு முட்டாள்! உன்னைக் கையாளுவது மிகவும் கடினம்’ என்று சொல்வார். உன்னைப் பற்றியதில் கையாள்வதற்கு மிகவும் கடினமானது எது? உன்னைப் பற்றிய கடினமான விஷயம் என்னவென்றால், உன் நடத்தை தவறான வழியில் செயல்களைச் செய்வது அல்ல, அல்லது தவறான வகையான நடத்தை அல்ல, மாறாக அது ஒரு குறிப்பிட்ட வகையான மனநிலையை வெளிப்படுத்துகிறது. அது என்ன மாதிரியான மனநிலையை வெளிப்படுத்துகிறது? நீ சத்தியத்தைக் குறித்து சலிப்புற்று சத்தியத்தை வெறுக்கிறாய். நீ சத்தியத்தை வெறுக்கிறாய் என்று வரையறுக்கப்பட்டவுடன், தேவன் அதைப் பார்ப்பது போல், நீ சிக்கலில் இருக்கிறாய்; தேவன் உன்னைப் புறக்கணிக்கிறார், மேலும் உன்னைக் கவனிப்பதில்லை. மக்களைப் பொறுத்தவரை, நடக்கக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால், ‘இந்த நபரின் மனநிலை நல்லதல்ல—அவர்கள் பிடிவாதமானவர்கள், கடினமானவர்கள் மற்றும் துடுக்கானவர்கள்! அவர்களுடன் பழகுவது கடினம், அவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை அல்லது அதை ஏற்றுக்கொள்வதோ அல்லது கடைப்பிடிப்பதோ இல்லை.’ நடக்கக்கூடிய மோசமான விஷயம் என்னவென்றால், எல்லோரும் உனக்கு இந்த மாதிரியான மதிப்பீட்டை வழங்குவார்கள், ஆனால் அத்தகைய மதிப்பீட்டால் உன் தலைவிதியை தீர்மானிக்க முடியுமா? உனக்கு மதிப்பீட்டைக் கொடுப்பதன் மூலம் உன் தலைவிதியை மக்கள் தீர்மானிக்க முடியாது, ஆனால் நீ மறந்துவிடக் கூடாத ஒன்று உள்ளது, அதென்னவென்றால், தேவன் மனித இருதயத்தை ஆராய்கிறார், அதே நேரத்தில் ஒரு மனிதன் செய்யும், சொல்லும் அனைத்தையும் அவர் கவனிக்கவும் செய்கிறார். தேவன் உன்னைப் பற்றி இந்தத் தீர்மானத்தை எடுத்து, நீ கொஞ்சம் சீர்கெட்ட மனநிலையைக் கொண்டவன் மற்றும் கொஞ்சம் கீழ்ப்படியாதவன் என்று சொல்வதை விட, நீ சத்தியத்தை வெறுக்கிறாய் என்று சொன்னால்—இது ஒரு தீவிரமான பிரச்சனையா? (தீவிரமான பிரச்சனை தான்.) அப்படியானால், உனக்குச் சிக்கல் உண்டாகும். இந்தச் சிக்கலானது மக்கள் உன்னை எப்படிப் பார்க்கிறார்கள் அல்லது அவர்கள் உன்னை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதுடன் தொடர்புடையதல்ல, ஆனால் சத்தியத்தை வெறுக்கும் உனது இந்தச் சீர்கேடான மனநிலையை தேவன் எப்படிப் பார்க்கிறார் என்பதுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. நல்லது, தேவன் உன்னை எப்படிப் பார்ப்பார்? தேவன் உன்னை வெறுமனே சத்தியத்தை வெறுத்து, அதை நேசிக்காத ஒருவனாக மட்டுமே வகைப்படுத்துவாரா, மேலும் எப்படியும் வகைப்படுத்தமாட்டாரா? இது அவ்வளவு எளிமையானதா? சத்தியம் எங்கிருந்து வருகிறது? சத்தியம் யாரைக் குறிக்கிறது? (இது தேவனைக் குறிக்கிறது.) சரி, நீங்கள் இதைப் பற்றி ஆராய வேண்டும், யாராவது சத்தியத்தை வெறுத்தால், இது தேவனுக்கு எப்படித் தோன்றும்? (அதாவது அவர்கள் தேவனின் எதிரி என்று தோன்றும்.) இது ஒரு தீவிரமான விஷயமாக இருக்காதா? சத்தியத்தை வெறுக்கிறவன் தன் இருதயத்தில் தேவனை வெறுப்பான்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பெரும்பாலும் தேவனுக்கு முன்பாக வாழ்வதன் மூலம் மட்டுமே ஒருவரால் அவருடன் ஒரு இயல்பான உறவைப் பெற்றிருக்க முடியும்”). தேவனோட வார்த்தைகளோட வெளிப்பாடு என் மேல ஒரு பெரிய தாக்கத்த ஏற்படுத்திச்சு. என் அகந்தை மற்றும் சுய நீதியோட அசிங்கமான சீர்கேட்ட நான் பாத்தேன். நான் தேர்வு செஞ்சிருந்த ஒருத்தங்கள பத்தி சகோதரிங்க ரெண்டு பேர் சில பரிந்துரைகள செஞ்சாங்க அத நான் ஏத்துக்கல—நான்தான் சரிங்கறது மாதிரி நான் நெனச்சேன். நான் அவங்களுக்கு பேச கூட வாய்ப்பு தரல, ஆனா நான் அவங்கள திட்டிகிட்டே இருந்து, அவங்கள தடுத்து நிறுத்திட்டேயிருந்தேன். நான் பல அகந்தையுள்ள விஷயங்கள சொன்னேன், நான் வாதம் செஞ்சு அவங்கள அடக்குனேன், அதுனால அவங்க பின்வாங்குனாங்க. அது வெறும் என் அணுகுமுறையிலயும் நடத்தையிலயும் இருந்த ஒரு பிழை இல்ல, ஆனா அது சத்தியத்த குறிச்சு அலுத்துப்போய் வெறுக்குற ஒரு சாத்தானிய மனநிலை. அந்தத் தலைவர்களுக்கு எதிரா நான் பதிலடி கொடுத்தப்போ நான் எப்படிப் பேசுனேன் மற்றும் செயல்பட்டேன்னு நினைச்சு பாத்தது ஒரு புழுவ சாப்ட மாதிரி எனக்கு குமட்டல ஏற்படுத்திச்சு. நான் ஒரு கோமாளி மாதிரி ரொம்ப வெக்கப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டதா உணர்ந்தேன். தேவனோட கண்கள்ல, சத்தியத்த குறிச்சு அலுத்துப்போறதும் வெறுக்குறதும் தேவன வெறுத்து, அவரோட எதிரியா இருக்குறதுமா இருக்குது, மற்றும் தேவனோட எதிரிங்க எல்லாரும் பிசாசுங்க. நான் முழுசா மாறாத பழைய சாத்தான்னு மேல் மட்டத் தலைவர் வெளிப்படுத்துனது முற்றிலும் துல்லியமானது. அதுதான் என் சுபாவமும் சாராம்சமுமா இருந்துச்சு. பிரச்சனைகள எதிர்கொள்ளுறப்போ, நான் வெறுமனே அத எதுக்குறவளா, இணக்கமில்லாதவளா இருந்தேன், சத்தியத்த ஏத்துக்க மாட்டேன், என்னோட சீர்கெட்ட, சாத்தானிய மனநிலைப்படி என் கடமைய செஞ்சேன். என்னால எப்படி தேவன எதுக்காம, அவரோட மனநிலைய புண்படுத்தாம இருக்க முடியும்? மற்றும் என்னால எப்படி விமர்சனத்தத் தவிர்க்க முடியும்? அந்த நேரத்துல அந்த வகையில கிளை நறுக்கப்பட்டு கையாளப்படுறது தேவனோட நீதினு நான் உணர்ந்தேன். அம்பலப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டது என் கர்வத்த காயப்படுத்தி, எனக்குக் கடினமா இருந்தாலும், அது என் அகந்தையுள்ள சுபாவத்த பாக்க எனக்கு உதவிச்சு மற்றும் தேவன் மேல எனக்கு கொஞ்சம் பயபக்திய கொடுத்துச்சு.

அப்புறம், தேவனோட சில வார்த்தைகள நான் வாசிச்சேன் அது என் சொந்த நிலைய பத்தின கொஞ்சம் புரிதலையும் பகுத்தறிவையும் எனக்குத் தந்துச்சு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, அந்திக்கிறிஸ்துகள் எப்போதும் தங்கள் சொந்த இலக்குகளையும் எண்ணங்களையுமே கொண்டுள்ளனர், அவர்கள் எப்போதும் தங்கள் சொந்த திட்டத்தின்படி செயல்படுகின்றனர், மேலும் தேவனுடைய வீட்டின் ஏற்பாடுகள் மற்றும் பணிகளைப் பற்றிய அவர்களின் மனப்பான்மையானது, ‘உனக்கு ஆயிரம் திட்டங்கள் இருக்கலாம், ஆனால் எனக்கு ஒரு விதி உள்ளது’ என்பதாக இருக்கிறது; இவை அனைத்தும் அந்திக்கிறிஸ்துவின் சுபாவத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. அந்திக்கிறிஸ்துகள் அவர்களின் மனநிலையை மாற்றிக்கொண்டு சத்தியத்தின் கொள்கைகளின்படி செயல்பட முடியுமா? மேலே உள்ளவர் அவர்களைக் கட்டாயப்படுத்தினால் தவிர, அது முற்றிலும் சாத்தியமற்றது, அப்போது அவர்களால் விருப்பமில்லாமல் மற்றும் முயற்சியுடன் கொஞ்சம் செய்ய முடிகிறது. அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றால் அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு மாற்றப்படும்போதுதான் அவர்களால் ஏதாவது நடைமுறைப் பணியைச் செய்ய முடியும். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதைப் பொறுத்த வரையில் அந்திக்கிறிஸ்துகளின் மனப்பாங்கு இதுதான்: அது அவர்களுக்குப் பயனுடையதாக இருந்தால், அதற்காக எல்லோரும் அவர்களைப் புகழ்ந்து பாராட்டுவார்கள் என்றால், அவர்கள் நிச்சயமாகக் கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள், மேலும் தோற்றத்திற்காகச் சில அடையாள முயற்சிகளை எடுப்பார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பது அவர்களுக்கு நன்மை தராவிட்டால், அதை யாரும் பார்க்காவிட்டால், மேல்மட்டத் தலைவர்கள் யாரும் அங்கு இல்லை என்றால், அதன் பின் அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் பேச்சே இருக்காது. சூழலைப் பொறுத்தும், நேரத்தைப் பொறுத்தும், அது பொதுவெளியிலா அல்லது மறைமுகமாகவா செய்யப்படுகிறது, அதனால் எவ்வளவு பெரிய நன்மை கிடைக்கும் என்பதைப் பொறுத்துமே அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்; இப்படிப்பட்ட விஷயங்களில் அவர்கள் அசாதாரண அறிவும் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள், எந்த நன்மையும் இல்லை அல்லது அவர்களுக்கு பொது வெளிச்சம் கிடைக்கவில்லை என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய முயற்சிகள் அங்கீகரிக்கப்படவில்லை என்றால், அவர்கள் எவ்வளவு செய்தாலும் ஒருவரும் பார்க்கவில்லை என்றால், அவர்கள் எந்த வேலையும் செய்யமாட்டார்கள். தேவனுடைய வீட்டால் நேரடியாக அந்தப் பணி ஏற்பாடு செய்யப்பட்டால், வேறு வழியில்லாமல் அவர்கள் செய்யவேண்டி நேர்ந்தாலும் கூட, அவர்கள் அது அவர்களது அந்தஸ்துக்கும் நற்பெயருக்கும் பயன் தருமா என்பதைத்தான் கருத்தில் கொள்ளுவார்கள். அது அவர்கள் அந்தஸ்துக்கு நல்லது மற்றும் அவர்கள் பேர்புகழை மேம்படுத்துவதாக இருந்தால், அவர்கள் தங்களால் முடிந்த அளவு ஈடுபட்டு அதைச் சிறப்பாகச் செய்வார்கள்; ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதாக எண்ணுவார்கள். தங்கள் அந்தஸ்துக்கும் நற்பெயருக்கும் அது பலனளிக்கவில்லை என்றால், மேலும் அதை மோசமாகச் செய்வது அவர்களுக்குக் கெட்டபெயர் உண்டாக்கும் என்று தெரிந்தால், அதைவிட்டு வெளியேற ஒரு வழியையோ அல்லது சாக்குபோக்கையோ சிந்திப்பார்கள். அவர்கள் எந்தக் கடமையைச் செய்தாலும் சரி, அவர்கள் ஒரே கொள்கையைத்தான் கடைப்பிடிப்பார்கள்: அவர்களுக்குச் சில நன்மைகளைப் பொறுக்கி எடுக்க வேண்டும். தங்களுக்கு செலவேதும் இல்லாத, கஷ்டப்படவும், எந்த விலையும் கொடுக்கத் தேவை இல்லாத வகையிலுமான, மேலும் தங்கள் நற்பெயருக்கும் அந்தஸ்துக்கும் நன்மை அளிக்கிற வேலைகளைத்தான் அந்திக்கிறிஸ்துகள் அதிகமாக விரும்புவார்கள். மொத்தத்தில், எதைச்செய்தாலும் அந்திக்கிறிஸ்துகள் முதலாவதாக தங்கள் சொந்த நலன்களையே எண்ணுவார்கள், மேலும் இவை எல்லாவற்றையும் சிந்தித்து முடிவெடுத்த பின்னரே அவர்கள் செயல்படத் தொடங்குவார்கள்; அவர்கள் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் உண்மையாக, முழுமனதோடு மற்றும் முற்றிலுமாக சத்தியத்துக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள், ஆனால் தேர்ந்து நிபந்தனையுடனேயே அப்படிச் செய்வார்கள். இந்த நிபந்தனை என்ன? அவர்களுடைய அந்தஸ்தும் நற்பெயரும் பாதுகாக்கப்பட வேண்டும், எந்த இழப்பும் இருக்கக் கூடாது என்பதே அது. இந்த நிபந்தனை நிறைவு அடைந்தால் மட்டுமே என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து தெரிவு செய்வார்கள். அதாவது சத்தியத்தின் கொள்கைகளை, தேவனுடைய ஆணைகளை, மற்றும் தேவனுடைய வீட்டின் பணிகளை எவ்வாறு கையாளுவது அல்லது அவர்கள் எதிர்கொள்ளும் காரியங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து அந்திக்கிறிஸ்துகள் தீவிரமான கவனம் செலுத்துகின்றனர். தேவனுடைய சித்தத்தை எப்படி நிறைவேற்றுவது, தேவனுடைய வீட்டின் நன்மைகளைச் சேதப்படுத்தாமல் இருப்பது, தேவனை எப்படித் திருப்திப்படுத்துவது, அல்லது சகோதர சகோதரிகளுக்கு எவ்வாறு நன்மை உண்டாக்குவது என்பது பற்றி எல்லாம் அவர்கள் சிந்தித்துப்பார்க்க மாட்டார்கள்; இவை எல்லாம் அவர்கள் சிந்திக்கும் விஷயங்கள் அல்ல. அந்திக்கிறிஸ்துகள் எதைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்? தங்கள் சொந்த அந்தஸ்தும் புகழும் பாதிக்கப்படுமோ, மேலும் தங்கள் கௌரவம் குறைந்துபோகுமோ என்பதைத் தான். சத்தியத்தின் கொள்கைகளின்படி எதையாவது செய்வது திருச்சபைக்கும் சகோதர சகோதரிகளுக்கும் நன்மைசெய்யும், ஆனால் அவர்களின் சொந்த நற்பெயர் பாதிக்கப்பட்டு, தங்களுடைய சொந்த வளர்ச்சியும், தங்களுடைய சுபாவமும் சாராம்சமும் எத்தகையது என்று பலருக்கும் தெரியச் செய்துவிடும் என்றால், அவர்கள் நிச்சயமாகச் சத்தியத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட மாட்டார்கள். நடைமுறைப் பணியைச் செய்வது அவர்களைப் பற்றி பலரையும் உயர்வாக நினைக்கவும், அவர்களை உயர்வாகப் பார்த்து பாராட்டவும், அல்லது தங்கள் வார்த்தைகள் அதிகாரம் பெற்று பலரையும் அவர்களுக்குக் கீழ்ப்படியவும் வைக்கும் என்றால் அவர்கள் அந்த வகையிலேயே அதைச் செய்வதைத் தேர்ந்தெடுப்பார்கள்; இல்லாவிட்டால், தேவனுடைய வீட்டினுடைய அல்லது சகோதர சகோதரிகளுடைய நலன்களைக் கருத்தில் கொள்வதற்காக அவர்கள் தங்கள் சொந்த நலன்களை புறக்கணிப்பதைத் தேர்ந்துகொள்ள மாட்டார்கள். இதுவே அந்திக்கிறிஸ்துகளின் சுபாவமும் சாராம்சமும் ஆகும்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஒன்பது (பகுதி மூன்று)”). இசபெல்லாவோட பிரச்சனைகள மத்தவங்க குறிப்பிட்டப்போ எதுர்ப்பாவும் எரிச்சலாவும் இருந்ததும், அவள மாத்துறது ஒத்துக்காததும் வெறும் அகந்தை மனநிலையால மட்டுமில்லனு தேவனோட வார்த்தைகள் எனக்குக் காட்டிச்சு. அதுக்குப் பின்னாடி என்னோட சுயநலமான, கேவலமான நோக்கங்கள் மறைஞ்சிருந்துச்சு. தலைவர்களோட பரிந்துரைகள நான் ஏத்துக்க மறுத்தேன் அதனால என் புகழையும் அந்தஸ்தையும் என்னால பாதுகாக்க முடியும். இசபெல்லாவோட பிரச்சனைகள பத்தி அந்த ரெண்டு தலைவர்களும் சொன்னது சரிதான். அவங்க நிச்சயமா மேற்பார்வையாளரா இருக்க தகுதியானவங்களா இல்ல, ஏற்கனவே சுவிசேஷப் பணிய தட செஞ்சிட்டிருந்தாங்க. நான் அவங்கள உடனடியா பணி நீக்கம் செஞ்சிருக்கணும், ஆனா நான் என் பெயரையும் அந்தஸ்தையும் தக்க வைக்க அதுக்குத் தடையா நிக்க எல்லா வகையான காரணங்களையும் கண்டுபிடிச்சேன். அதோட விளைவா, காரியங்கள எப்படிச் சரியா ஏற்பாடு செய்யுறதுனு ரெண்டு திருச்சபை தலைவர்களுக்கும் தெரியாம போயிருச்சு, அதனால, இது எங்க சுவிசேஷப் பணிய நீண்ட காலம் பாதிச்சுது. என்னோட அகந்தையும், திருச்சபையோட பணிய நான் நிலைநாட்டத் தவறுனதும், என்னோட சொந்த பெயர் மற்றும் அந்தஸ்த பத்தி மட்டும் அக்கறப்பட்டதும் எங்களோட சுவிசேஷப் பணியையும், சகோதர சகோதரிகளோட ஜீவப் பிரவேசத்தையும் பாதிச்சுது. திருச்சபையோட பணிக்கு நான் இடையூறா இருந்தேன். திருச்சபையோட பணிய நிலைநாட்ட நான் உதட்டளவுள மட்டும் சேவை செஞ்சேன், ஆனா உண்மையில, நான் வெறும் என் புகழையும் அந்தஸ்தையும் நிலைநாட்டிகிட்டிருந்தேன். என் நிலைய என்னால பாதுகாக்க முடியுற வரைக்கும், என்னால தேர்ந்தெடுக்கப்பட்டவங்களுக்கு பிரச்சனைக இருந்தப்போ கூட, திருச்சபையோட பணி தடைபட்டப்போ கூட, நான் அத கண்டுக்கல. என்னால என் சொந்த அந்தஸ்த பாதுகாக்க முடிஞ்சா, திருச்சபையோட நலன்கள் பாதிக்கப்படுறத பாக்க நான் தயாரா இருந்தேன். அது அந்திக்கிறிஸ்துவோட நடத்தை இல்லையா? தேவனோட வார்த்தைகளோட நியாயத்தீர்ப்பு மற்றும் வெளிப்பாடு மூலமா தேவனுக்கு எதிரான என் சுபாவத்தையும் சாராம்சத்தையும் நான் பாத்தேன், அதோட என் இழிவான, பொல்லாத நோக்கங்களையும் தெளிவா பாத்தேன். அந்த நேரத்துல நான் ஒருவகையான பயத்த உணர்ந்தேன், தேவனிடம் மனந்திரும்பவும், பொல்லாதத செய்யுறதையும், அகந்தையால அவர எதுக்குறதையும் நிறுத்த தயாரா இருந்தேன்.

ஒரு தடவ என் தியானங்கள்ல, தேவனோட வார்த்தைகளோட ஒரு பத்திய நான் வாசிச்சேன், பயிற்சி செய்யுறதுக்கான பாதைய அது எனக்கு தந்துது. “மற்றவர்கள் மாறான கருத்துகளைத் தெரிவிக்கும்போது இரண்டாவது படிநிலை நிகழ்கிறது—தன்னிச்சையாகவும் கண்மூடித்தனமாகவும் நடந்து கொள்ளுவதைத் தவிர்க்க எந்த நடவடிக்கைகளை நீ கடைப்பிடிக்கலாம்? உனக்கு முதலில் தாழ்மையான மனப்பாங்கு இருக்க வேண்டும், நீ சரியென நினைப்பதை ஒதுக்கி வைக்க வேண்டும், மேலும் எல்லோரும் ஐக்கியப்பட அனுமதிக்க வேண்டும். நீ உன்னுடைய வழிதான் சரி என்று நினைத்தாலும், அதை நீ தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க கூடாது. அது முன்னோக்கிச் செல்லும் ஒரு படிநிலை; அது சத்தியத்தை நாடுகிற, உன்னை நீயே மறுதலிக்கிற, தேவனுடைய சித்தத்தைத் திருப்திப்படுத்துகிற ஒரு மனப்பாங்கைக் காட்டுகிறது. இந்த மனப்பாங்கை நீ பெற்றவுடன், அதே சமயத்தில் நீ உன்னுடைய சொந்த கருத்துகளையே பற்றிப்பிடிக்காமல் இருக்கும் போது, நீ ஜெபிக்க வேண்டும், தேவனிடம் இருந்து சத்தியத்தைத் தேட வேண்டும், மேலும் அதன் பின் தேவனுடைய வார்த்தைகளில் இருந்து ஓர் அடிப்படையைத் தேட வேண்டும்—தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இதுவே மிகவும் பொருத்தமானதும் துல்லியமானதுமான நடைமுறை ஆகும். மக்கள் சத்தியத்தைத் தேடும்போதும், ஒரு பிரச்சனையை முன்வைத்து அனைவரும் ஒன்றுசேர்ந்து ஐக்கியப்பட்டு அதற்கான பதிலைத் தேடும்போதும், பரிசுத்த ஆவியானவர் எப்போதும் பிரகாசத்தை வழங்குகிறார். தேவன் கொள்கையின்படி மக்களைப் பிரகாசிப்பிக்கிறார், அவர் உன் மனப்பாங்கை ஆய்ந்தறிகிறார். உன் பார்வை சரியா தவறா என்பதைப் பொருட்படுத்தாமல் நீ உன் கருத்தைப் பிடிவாதமாகப் பற்றிக்கொண்டால், தேவன் தம்முடைய முகத்தை உன்னிடமிருந்து மறைத்து உன்னை புறக்கணிப்பார்; அவர் உன்னைச் செய்வதறியாமல் திகைத்து நிறக வைப்பார், அவர் உன்னை அம்பலப்படுத்துவார் மற்றும் உனது அலங்கோலமான நிலையை வெளிப்படுத்துவார். இன்னொருபுறம், உன் சொந்த வழியில் பிடிவாதமாகவோ, அல்லது சுயநீதியுடனோ, அல்லது தன்னிச்சையாகவோ மற்றும் கண்மூடித்தனமாகவோ இல்லாமல் உன் அணுகுமுறை சரியானதாக இருந்து, சத்தியத்தைத் தேடும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன், நீ இதை அனைவருடனும் ஐக்கியப்பட்டால், பரிசுத்த ஆவியானவர் உங்களிடையே கிரியை செய்யத் தொடங்குவார், மேலும் ஒருவரின் வார்த்தைகளின் மூலம் அவர் உன்னைப் புரிதலுக்குள் வழிநடத்துவார். சில வேளைகளில், பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிப்பிக்கும்போது, ஒரு சில வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் மூலம் அல்லது உனக்கு ஓர் உணர்வை வழங்குவதன் மூலம், ஒரு விஷயத்தின் மையத்தை புரிந்துகொள்ள அவர் உன்னை வழிநடத்துகிறார். நீ எதைப் பிடிவாதமாகப் பற்றிக் கொண்டிருந்தாயோ அது தவறானது என்பதை உணர்ந்து கொள்கிறாய், மேலும் அதே நொடியில் செயல்படுவதற்கான மிகப் பொருத்தமான முறையைப் புரிந்துகொள்ளுகிறாய். அத்தகைய நிலையை அடைந்த நீ, தீமை செய்வதையும், ஒரு தவறின் விளைவுகளைத் தாங்கிக் கொள்வதைவதையும் வெற்றிகரமாகத் தவிர்த்துவிட்டாயா? அத்தகைய விஷயம் எவ்வாறு அடையப்படுகிறது? தேவனுக்குப் பயப்படும் இருதயம் உனக்கு இருக்கும் போதும், கீழ்ப்படிகிற இருதயத்துடன் சத்தியத்தைத் தேடும்போதும் மட்டுமே இது அடையப்படுகிறது. நீ பரிசுத்த ஆவியின் பிரகாசத்தைப்பெற்று, பயிற்சிக்கான கொள்கைகளைத் தீர்மானித்தவுடன், உன் பயிற்சி சத்தியத்துக்கு ஏற்ப இருக்கும், மேலும் நீ தேவனுடைய சித்தத்தைத் திருப்திப்படுத்த முடியும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள் பயிற்சிக்கான ஒரு பாதைய எனக்குத் தந்துது. என் கடமையில பொல்லாதத செய்யாம இருக்க அல்லது திருச்சபையோட பணிக்கு இடையூறு செய்யாம இருக்க, முக்கியமானது என்னனா, பிரச்சனைங்க வர்றப்போ சத்தியத்த தேடுற மனப்பான்மையும், தேவனுக்கான பயபக்தியுள்ள இருதயத்த கொண்டிருக்கறதும், மத்தவங்க கூட ஒத்துழைக்கறதும், வேற வேற கருத்துகள நான் எதிர்கொள்றப்போ முதல்ல என்னை நான் தள்ளி வெச்சு, ஜெபம் செஞ்சு தேடறதும்தான். பரிசுத்த ஆவியானவரோட கிரியையப் பெறதுக்கும், காரியங்கள சரியா செய்யுறதுக்கும், பிழைகள குறைக்கறதுக்கும் அதுதான் ஒரே வழி. இதப் புரிஞ்சுக்கறது எனக்கு பிரகாசிப்பிக்கிறதா இருந்துது, மற்றும் எப்படித் தொடரணும்னு எனக்குத் தெரிஞ்சுது. அதுக்கப்புறம் இசபெல்லாவ நான் பணிநீக்கம் செஞ்சு ஒரு புது புது மேற்பார்வையாளர தேர்வு செஞ்சேன். கொஞ்சம் காலம் கழிஞ்சு, சுவிசேஷப் பணி குறிப்பிடத்தக்க வகையில மேம்பட்டுச்சு. ஆனா இந்த முடிவுகள நான் பாத்தப்போ இன்னும் அதிகமா வருத்தத்தையும் குற்றவுணர்ச்சியையும் உணர்ந்தேன். என்னோட முந்தைய அகந்தையையும், எப்படி நான் இசபெல்லாவ வேணும்னே பதவியில வெச்சிருந்து, திருச்சபையோட பணியில இடையூறு செஞ்சு, மீறுதல செஞ்சதையும் நான் வெறுத்தேன். எல்லா காரியங்கள்லையும் சத்தியத்த தேடி, அதுக்கு மேலயும் என் சொந்த வழியில நடந்து, அகந்தையோட ஜீவிக்காம இருக்கணும்ங்குற நம்பிக்கையில, நான் ஒரு ஜெபம் செஞ்சேன்.

சீக்கிரமாவே நான் இன்னொரு சூழ்நிலைய எதிர்கொண்டேன். சில சுவிசேஷ மூப்பர்களோட ஒரு பணி கலந்துரையாடல்ல சில பரிந்துரைகள நான் செஞ்சேன், என் வாய்ல இருந்து வார்த்தைகள் வந்தவுடனேயே, அது எல்லாத்தையும் மறுக்குற மாதிரி எல்லாரும் பேசுனாங்க. நான் கொஞ்சம் அவமானமா உணர்ந்தேன் மற்றும் நான் சொன்ன எல்லாமே முற்றிலுமா பயனற்றதா? நீங்க சொல்றது எல்லாமே சரியா? என் கருத்துகள் எல்லமே நிராகரிக்கப்பட்டா, ஒரு தலைவியா, மத்தவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? நான் சத்தியத்த புரிஞ்சுக்கலைனும், எனக்கு நடைமுறைத்தன்மை இல்லைனும் அவங்க நிச்சயமா நினைப்பாங்க. இதுக்கப்புறம் அவங்க நான் சொல்றத கேப்பாங்களா? தலைவிங்கற கௌரவம் எல்லார் கண்கள்லையும் இன்னும் எனக்கு இருக்குமா? னு யோசிச்சுகிட்டிருந்தேன். இந்த யோசனையில, எனக்காகப் பேசி, திரும்பவும் மத்தவங்களோட கருத்துகள மறுக்கணும்னு நான் விரும்புனேன். அப்புறம் நான் சரியான நிலையில இல்லைனு உணர்ந்து, ரொம்ப குற்றவுணர்ச்சிய உணர்ந்தேன். என் இருதயத்துல அமைதியா தேவன்கிட்ட நான், “ஓ தேவனே, அவர்கள் சொல்றது சரிதான் என்று எனக்குத் தெரியும், ஆனா என் கௌரவம் காயப்பட்டுபட்டுருச்சு மற்றும் நான் மறுபடியும் என் புகழையும் அந்தஸ்தையும் பாதுகாக்க விரும்புனேன். தயவு செஞ்சு என்னை கவனிச்சுக்கொள்ளும், நான் அவங்களோட சரியான பரிந்துரைகள ஏத்துக்கிட்டு, சத்தியத்தோட கொள்கைகளப் பின்தொடர்ந்து, சீர்கேட்டில வாழாம இருக்க உதவும்”னு ஜெபம் செஞ்சேன். என் ஜெபத்துக்கப்புறம் தேவனிடமிருந்து இந்த வார்த்தைகள நான் வாசிச்சேன்: “ஒருவர் தான் செய்யும் அனைத்தையும் மற்றவர்களுடன் கலந்துரையாட வேண்டும். எல்லோரும் சொல்வதை முதலில் கேள். பெரும்பான்மையினரின் கருத்து சரியானதாகவும், உண்மைக்கு இணங்கவும் இருந்தால், நீ அதை ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். நீ என்ன செய்தாலும், பகட்டான பேச்சை நாட வேண்டாம். எந்தக் கூட்டத்திலும் பகட்டான பேச்சு ஒரு நல்ல விஷயம் அல்ல. … நீ மற்றவர்களுடன் அடிக்கடி ஐக்கியம் கொள்ள வேண்டும், ஆலோசனைகளை வழங்க வேண்டும் மற்றும் உன் சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்—இது உன் கடமை மற்றும் உன் சுதந்திரம். ஆனால் இறுதியில், ஒரு முடிவு எடுக்கப்படும்போது, நீ சொல்வதை அனைவரையும் செய்ய வைத்து, உன் விருப்பத்திற்கு இணங்கச் செய்து, இறுதித் தீர்ப்பை நீ மட்டுமே வழங்குகிறாய் என்றால், நீ கொள்கைகளை மீறுகிறாய். … உனக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என்றால், உனக்குக் கருத்துகள் இல்லை என்றால், கேட்கவும், கீழ்ப்படியவும், சத்தியத்தைத் தேடவும் கற்றுக்கொள். இது நீ செய்ய வேண்டிய கடமை ஆகும்; இது ஒரு நேர்மையான அணுகுமுறை ஆகும். ஒருவருக்கு சொந்தக் கருத்துகள் இல்லாதபோதும், முட்டாள்கள் போல் தோற்றமளிப்பதையும், தங்களை வேறுபடுத்திக் கொள்ள முடியாமல் அவமானப்படுத்தப்படுவதையும் பற்றி எப்போதும் பயப்பட்டால்; அவர்கள் மற்றவர்களால் பணிநீக்கம் செய்யப்படுவதையும் மற்றும் அவர்களின் இருதயங்களில் அந்தஸ்து இல்லாமல் இருப்பதைப் பற்றியும் பயப்பட்டால், அதனால் எப்போதும் தனித்து நிற்கவும் மற்றும் எப்போதும் ஆரவாரமாகப் பேசுபவர்களாய் இருக்கவும் முயற்சி செய்து, யதார்த்தத்துடன் ஒத்துப்போகாத அபத்தமான கூற்றுகளைக் கூறி, அதை மற்றவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்தால்—அந்த நபர் தங்களின் கடமையைச் செய்கிறார்களா? (இல்லை.) அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் நாசகாரமானவர்களாய் இருக்கிறார்கள்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள் பிரகாசிப்பிக்கிறதா இருந்துது. பணியில பங்கேற்கறது, கருத்துகளையும் பரிந்துரைகளையும் வெளிப்படுத்துறது என் கடமை மற்றும் பொறுப்புகளோட ஒரு பகுதியா இருந்துச்சு, ஆனா எல்லாரையும் நான் விரும்பறத செய்ய வெக்குறதும் நான் சொல்றத கேக்க வெக்குறதும் வெறும் அகந்தையா இருந்துச்சு. பணி கலந்துரையாடல்கள்ல, தங்களோட கருத்த வெளிப்படுத்த எல்லாருக்கும் உரிமை இருக்கு, நாம சத்தியத்தோட கொள்கைகளுக்கு ஏற்ப நடந்து திருச்சபையோட கிரியைக்கு நன்மைகள தரணும். அதுதான் சத்தியத்த ஏத்துக்குற மனப்பான்மை. அதுக்கப்புறம் சத்தியத்த பயிற்சி செய்யுறதுல நான் கவனம் செலுத்த தொடங்குனேன், பணி கலந்துரையாடல்ல வேற வேற கருத்துகள் வந்தப்போ, ஒருமித்த கருத்த எட்டுறதுக்காக நான் ஜனங்களோட யோசனைகள இன்னும் அதிகமா விசாரிச்சு அப்புறம் நாங்க அத நடைமுறைப்படுத்துனோம். ஒரு தடவ, சொந்தமா ஒரு விஷயத்த நான் செஞ்சு முடிச்சுட்டு, கொஞ்சம் அசௌகரியமா உணர்ந்தது எனக்கு ஞாபகமிருக்கு. ஜெபம் செய்யுறது மற்றும் சிந்திக்கறது மூலமா, ஒருமித்த கருத்த எட்டுறதுக்காக என் கூட்டாளிகளோட நான் பேசலைனும், அது சரியான அணுகுமுறை இல்லைனும் நான் உணர்ந்தேன். ஐக்கியத்துல எல்லார்கிட்டையும் நான் வெளிப்படையா பேசி, நான் அகந்தையுள்ளவ, முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி அந்த விஷயத்தப் பத்தி நான் கலந்தாலோசிக்கல, அந்த வகையில நான் நியாயமற்றவளா இருந்தேன், அதுக்கப்புறம் நான் மாறி, காரியங்கள அப்படி செய்யுறத நிறுத்துவேன்னு சொன்னேன். எல்லாரும் என்னை கண்காணிக்கணும்னும் நான் கேட்டுகிட்டேன். என்னை நான் தள்ளி வெச்சுட்டு, சத்தியத்த இந்த வழியில பயிற்சி செய்யுறது எனக்கு மன அமைதிய தர்ற மாதிரி நான் உணர்ந்தேன்.

அடுத்த சில பணி பத்தின கலந்துரையாடல்ல அத நான் பயிற்சி செஞ்சேன், எந்தவொரு பெரிய இடையூறும் இல்லாம காரியங்க சிறப்பா நடந்துச்சு. நான் தேவனுக்கு ரொம்ப நன்றியுள்ளவளா இருந்தேன். ஒரு கடமையில அகந்தை இல்லாம மத்தவங்களோட நல்லா ஒத்துழைக்கறது மூலமா, பரிசுத்த ஆவியானவரோட கிரியைய நீங்க பெறலாம், மற்றும் நீங்க காரியங்கள செஞ்சு முடிக்கறதுக்கான வாய்ப்பும் அதிகம்னு இது மூலமா நான் அனுபவிச்சறிஞ்சேன். இப்போ என் அகந்தையுள்ள, சுய நீதியுள்ள சீர்கெட்ட மனநிலை பத்தின கொஞ்சம் புரிதல் எனக்கு இருக்கு. என்னால சத்தியத்த பின்பற்ற முடியும் மற்றும் நான் கொஞ்சம் மாறியிருக்கேன். இது தேவனோட அன்பும் இரட்சிப்புமா இருக்கு. தேவனோட நியாயத்தீர்ப்பு, சிட்சை, கிளை நறுக்குதல் மற்றும் கையாளுதலால மட்டும்தான் ஜனங்கள மாத்தி சுத்தமாக்க முடியும்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

ஆவிக்குரிய போராட்டம்

யாங் ஜி, அமெரிக்கா சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஜனங்கள் தேவனில் விசுவாசம் வைக்க ஆரம்பித்ததிலிருந்து பல தவறான நோக்கங்களைக்...

நான் ஏன் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மறுத்துக்கொண்டிருந்தேன்?

ஒரு நாள் சுவிசேஷப் பணிக்காக ஒருவரத் தேர்ந்தெடுக்க திருச்சபைத் தேர்தல் நடந்துச்சு. எனக்கு ஆச்சரியமா, முடிவுகள் அறிவிக்கப்பட்டப்போ, சகோதர...