பின்னடைவு மூலமாக நான் கற்றுக்கொண்டது

செப்டம்பர் 28, 2023

2014 ல, நான் திருச்சபைக்கான வீடியோ தயாரிப்பாளரா பயிற்சி பெற்றேன். அந்த நேரத்தில, ஒரு புதிய வீடியோவோட தயாரிப்புத் தொடங்கப்பட்டுது. ஆயத்த நேரத்தில, எனக்கு அப்பவும் நல்லாத் தெரியாத சில பணிகளும் நுட்பங்களும் இருந்துது. சிரமங்கள் ஏற்பட்டப்போ நான் கொள்கைகள் குறிச்சு மத்தவங்களோட ஐக்கியங்கொண்டு, தீர்வுகளத் தேடுனேன். கொஞ்ச காலத்துக்கப்புறமா, நான் படிப்படியா இந்த நுட்பங்கள நன்கு அறிஞ்சி, அவற்றில திறமையுள்ளவனானேன். மத்தவங்க சிரமங்கள சந்திக்கறப்போ, அவங்க எல்லாரும் என்கிட்ட வந்து கலந்தாலோசிப்பாங்க. அதுக்கப்புறமா, நான் குழுத் தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டேன், என்னால குழுவோட சில பிரச்சினைகளத் தீர்க்க முடிஞ்சுது. நான் என்னோட வேலையில ரொம்ப நல்லா இருந்ததா நெனச்சேன்; இல்லைன்னா, நான் ஏன் குழுத் தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கணும்? வேலையப் பத்தி குழு விவாதிக்கறப்போ, நான் எப்பவுமே ஒரு முக்கிய பங்கு வகிச்சேன். விவாத நேரத்தில கருத்து வேறுபாடு ஏற்பட்டப்போ, என்னோட முந்தைய பணி அனுபவத்த குழுவோட பகிர்ந்துகிடுவேன், அதனால என்னோட பார்வைக்கு ஆதரவு இருந்தது எல்லாருக்கும் தெரியும், கடைசில, நாங்க எப்பவுமே என்னோட வழியிலயே காரியங்களச் செஞ்சோம்.

அதுக்கப்புறமா, திருச்சபை ரெண்டு புதிய மேற்பார்வையாளர்களத் தேர்ந்தெடுத்துது. சகோதரிகள் கிளாரி மற்றும் லில்லி, அவங்க முன்னாடி என்னோட சக ஊழியர்களா இருந்தாங்கங்கறத நான் பாத்தேன். நான் அதிர்ச்சியடைஞ்சேன், “ரெண்டுபேரோட திறமைகளும் சராசரியானவை, அவங்களுக்கு அதிக அனுபவம் கிடையாது. அவங்களால மேற்பார்வையாளரோட வேலைய கையாள முடியுமா? என்னோட திறமைகள் அவங்கள விட ரொம்ப சிறந்தவை. யாரோட வேலைய யாருநடத்துறது?” தொடர்ந்து செஞ்சப்போ, மேற்பார்வையாளர்கள் எங்க வேலையப் பின்தொடந்தப்போ, நான் அத அலட்சியமாப் பாத்தேன். ஒருமுற, கிளாரி அவங்க என்னோட பேச வந்தாங்க, நான் பொறுப்பேற்றிருந்த குழுவோட வீடியோக்கள்ல சில பிரச்சினைகள் இருந்ததாச் சொன்னாங்க, அவங்க சில மாற்றங்களப் பரிந்துரைச்சாங்க. இதக் கேட்டு நான் கொஞ்சம்அவமானமடைஞ்சேன், பொறுமையில்லாம, “நீங்க பரிந்துரைச்ச மாற்றங்கள் வேலைக்காகாது. உங்க பரிந்துரைய நாம செஞ்சா, தொடக்கமும் முடிவும் பொருந்தாது. பிரச்சினைகள எழுப்புறப்போ, இந்த ஒரு பகுதிய மட்டும் பாக்காம, யோசனைகளோட ஒட்டுமொத்த செயல்பாட்டயும் முதல்ல நீங்க பாக்கணும். நீங்க இந்த வேலையப் பத்தி இன்னும் கத்துக்கணும், அடிக்கடி அதிகமா படிக்கணும்” அப்படின்னு சொன்னேன். அப்போ சகோதரியோட முகம் சிவந்து, பேச முடியாத அளவுக்கு ரொம்ப வெட்கிப்போனது. வேற ரெண்டு சகோதரர்கள் என்னோட கருத்தை ஆமோதிச்சாங்க. எல்லாரும் என்னோடே உடன்படுறதப் பாத்து எனக்கு ரொம்பத் திருப்தியா இருந்துது, “பாருங்க, முன்னாடி உள்ள எங்களோட சிந்தனை செயல்முறை உங்கள விட சிறப்பா இருந்துது. வீடியோ தயாரிப்புன்னு வர்றப்போ, என்னோட திறமைகள் உங்க ரெண்டுபேரயும் விட நிச்சயமா சிறந்தவை!” அதுக்கப்புறமா, நான் தயாரித்த வீடியோக்களப் பத்தி அவங்க ஆலோசனைகளக் கொடுத்தப்போ, நான் அவற்ற ஏத்துக்கறதுக்கு இன்னும் குறைவாவே விரும்புனேன், அவங்கள இழிவாப் பாத்தேன், “உங்க திறமைகள் என்னோடத விட கீழானதுதான். உங்க பரிந்துரைகளக் கொண்டு என்னைக் குழப்பாம இருக்கறது நல்லது” அப்படின்னு நெனச்சேன். ரெண்டு மேற்பார்வையாளரும் என்னால கட்டுப்படுத்தப்பட்டாங்க. ஒருமுற, ஒரு மேற்பார்வையாளரு என்னோட ஐக்கியங்கொள்ள வந்து, “உங்களோட சேந்து பணி செய்யுறப்போ நாங்க உங்களால ரொம்பக் கட்டுப்படுத்தப்படுறோம். நாங்க எங்ளோட வேலத் திறன்ல குறைவுபட்டிருக்கறது எங்களுக்குத் தெரியும், அதனால நீங்க எங்களோட குறைய பாக்கறப்போ, தயவு செஞ்சு அதச் சுட்டிக்காட்டி உதவுங்க. அப்போ, நம்மால இசைவா சேந்து பணியாற்ற முடியும். அதோட, நீங்க எப்பவுமே உங்களோட சொந்த கருத்துகளப் பிடிச்சிக்கிட்டிருக்க மாட்டீங்கன்னு நம்புறேன். வெவ்வேறு கருத்துகள எதிர்கொள்றப்போ உங்களால இன்னும் அதிகமா தேட முடிஞ்சா, நம்மால சேந்து கொள்கைகளப் பத்தி ஐக்கியங்கொள்ளவும், ஒருத்தொருக்கொருத்தர் பலவீனங்கள சரிசெய்யவும், வீடியோக்கள்ல நல்ல முறையில வேலைய செய்யவும் முடியும்” அப்படின்னு சொன்னாங்க. இதக் கேட்டதும், மேலோட்டமா நான் ஒரு அகந்தயான மனநிலய வெளிப்படுத்தினேங்கறத ஒத்துக்கிட்டேன், ஆனா உள்ளுக்குள்ள நான் அத ஏத்துக்கல. “உங்கள விட அதிகமான கொள்கைகள் எனக்குப் புரியும், ஆதனால நீங்க தவறு செய்றப்போ, நான் உங்களத் திருத்தணும். ஆமா, நான் கொஞ்சம் அகந்தயான மனநிலய வெளிப்படுத்துனேன், ஆனா அத வேலைக்காகத்தான் செஞ்சேன். நீங்க ரொம்ப விருதாவா இருக்கறதனால நீங்க கட்டுப்படுத்தப்பட்டதா உணந்திருக்கீங்க” அப்படின்னு நான் நெனச்சுக்கிட்டேன். இந்த விஷயத்தில, நான் என்னைப் பத்தி சிந்திக்கல, அதுக்குப் பதிலா இன்னும் மோசமானேன்.

ஒருநாள் மாலை வேளைல, குழு ஒரு வீடியோவுக்கான தயாரிப்பு யோசனைகளப் பத்தி விவாதிச்சுது. வீடியோயோசனைகள் ரொம்ப சிக்கலாவும் கடினமாவும் இருந்ததால, பல மணி நேர விவாதத்துக்கப்புறமாவும் எதுவுமே முடிவு செய்யப்படல. நான் பொறுமையிழக்க ஆரம்பிச்சு, “மேற்பார்வையாளர்களே உங்களுக்கு என்ன ஆச்சு? எங்களோட தொழில்முறை வேலைய உங்களால நிர்வகிக்க முடியலன்னா, பரவாயில்ல, ஆனா கொள்கைகளின்படி ஒரு திட்டத்தக் கூட உங்களால முடிவு எடுக்க முடியல?” அப்படின்னு நெனச்சேன். அதனால, நான் மேற்பார்வையாளர்கள்கிட்ட, “உங்களுக்கு என்ன பிரச்சின? மணிக்கணக்கா இழுத்தடிக்கிறீங்க, உங்களால எப்படி ஒரு யோசனையக்கூட உறுதியா எடுக்க முடியல? மேற்பார்வையாளர்களான நீங்க புரயோஜனமில்லாதவங்க!” அப்படின்னு சொன்னேன். என்னோட புகாரக் கேட்டு, பலரும் அதப் பின்தொடந்து, “ஆமா, நாங்க எல்லாரும் காத்திருக்கோம். இங்க சும்மா உக்காந்து நேரத்த வீணடிக்காதீங்க” அப்படின்னு சொன்னாங்க. மத்தவங்க, “சீக்கிரமா ஒரு முடிவ எடுங்க. ஏற்கனவே நேரமாயிடுச்சு” அப்படின்னு சொன்னாங்க. எங்களோட புகார்கள் மேற்பார்வையாளர்கள மேலும் பதட்டமடையச் செஞ்சு, அவங்களோட பேச்சக் குறைச்சுது.

அதுக்கப்புறமா, திருச்சபைத் தலைவர் என்னோட நடத்தைய அறிஞ்சிக்கிட்டு, என்னைக் கையாண்டு, “உங்களோட மனநில ரொம்ப அகந்தயா இருக்கு, நீங்க மத்தவங்களக் கட்டுப்படுத்த விரும்புறீங்க. உங்களால மத்தவங்களோட இயல்பா ஒத்துழைக்க முடில. நீங்க ஒரு குழுத் தலைவர், ஆனா நீங்க திருச்சபையோட பணியப் பாதுகாக்கல. அதுக்குப் பதிலா, மத்தவங்கள குறை கூறுவதுலயும் விமர்சனம் பண்றதுலயும், குழுவுக்குள்ள பிரிவினைய விதைக்கிறதுலயும், மேற்பார்வையாளர்கள தங்களோட வேலையச் செய்ய விடாம தடுக்கறதுலயும், வீடியோ தயாரிப்பில தாமதம் ஏற்படுத்துறதுலயும் முத ஆளா இருக்கீங்க. உங்களோட செயல்கள் திருச்சபையோட பணிய சீர்குலைச்சு இடையூறு செய்யுது” அப்படின்னு சொன்னாரு. தலைவர் என்னக் கையாண்டதுக்கப்புறமா, நான் ரொம்ப அதிர்ச்சியடைஞ்சிட்டேன். “என்னது? நான் வேலைக்கு இடையூறு செஞ்சு தொந்தரவு செய்றேனா? தெளிவா மேற்பார்வையாளர்களோட திறமைகள் தான் போதுமான அளவுக்கு நல்லால, அவங்கதான் உண்மையான வேலையச் செய்ய முடியாதவங்க. என்னோட வேலைத் திறன்கள் அவங்களோடத விடச் சிறந்தவை, என்னால அதிகக் கொள்கைகளக் கையாள முடியும். அவங்க காரியங்களத் தவறா செய்றத நான் கவனிச்சேன், அதனால நான் அவங்களத் திருத்துனேன். இது இடையூறு செய்யறதும் தொந்தரவு செய்யுறதுமா இருக்கா?” அப்படின்னு நான் நெனச்சேன். நான் இணக்கமில்லாதவனாவும், எதிர்ப்பானவனாவும் இருந்தத தலைவர் பாத்தார், அதனால அவரு தேவனோட வார்த்தைகளின் பல பகுதிகள எனக்கு வாசிச்சுக் காண்பிச்சாரு. தேவன் சொல்லுகிறார்: “உன் இருதயத்தில் நீ உண்மையாக சத்தியத்தைப் புரிந்து கொண்டால், அப்போது சத்தியத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது மற்றும் தேவனுக்குக் கீழ்படிவது என்பதை நீ அறிவாய், மேலும் இயல்பாகவே சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான பாதையில் நடக்கத் தொடங்குவாய். நீ நடக்கும் பாதை சரியானதாகவும், தேவனுடைய சித்தத்திற்கு ஏற்பவும் இருந்தால், அப்போது பரிசுத்த ஆவியானவரின் கிரியை உன்னை விட்டு விலகாது, இந்த விஷயத்தில் நீ தேவனைக் காட்டிக் கொடுக்கும் வாய்ப்பானது மிகக் குறைவாக இருக்கும். சத்தியம் இல்லாமல், பொல்லாப்பு செய்வது எளிது, நீ விரும்பாமல் கூட அதைச் செய்வாய். உதாரணமாக நீ அகந்தையும் இறுமாப்புமான மனநிலையைக் கொண்டிருந்தால், அப்போது தேவனை எதிர்க்க வேண்டாம் என்று கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, உன்னால் தடுக்க முடியாது, அது உன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. நீ அதை வேண்டுமென்றே செய்ய மாட்டாய்; நீ உன் அகந்தையான, இறுமாப்பான சுபாவத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் அதைச் செய்வாய். அகந்தையும் இறுமாப்பும் உன்னை தேவனை இழிவாகப் பார்க்கச் செய்து, முக்கியமற்றவராக பார்க்க வைக்கும்; அவை உன்னை நீயே உயர்த்த வைக்கும், தொடர்ந்து உன்னை வெளிக்காட்டிக் கொள்ளச் செய்யும், அவை உன்னை மற்றவர்களை இழிவுபடுத்த வைக்கும், உன்னைத் தவிர வேறு யாரையும் அவை உன் இருதயத்தில் விட்டு வைக்காது; அவை உன் இருதயத்தில் உள்ள தேவனுடைய இடத்தைப் பறித்துக் கொள்ளும், இறுதியில் உன்னை தேவனுடைய இடத்தில் உட்காரச் செய்து, ஜனங்கள் உனக்கு அடிபணிய வேண்டும் என்று கோர வைக்கும், மேலும் உன் சொந்த எண்ணங்கள், யோசனைகள் மற்றும் கருத்துகளை சத்தியமென்று வணங்கச் செய்யும். அகந்தையும் இறுமாப்புமான சுபாவத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிற ஜனங்களால் எத்தனையோ பொல்லாப்புகள் செய்யப்படுகின்றன!(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைப் பின்தொடர்வதன் மூலம் மட்டுமே ஒருவர் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியும்”).

சாத்தானின் மனநிலைக்குள் பல வகையான சீர்கெட்ட மனநிலைகள் உள்ளன, ஆனால் மிகவும் வெளிப்படையானதும் மிகவும் தலைதூக்கி நிற்பதுமான ஒன்று அகந்தையான மனநிலையாகும். அகந்தையே மனிதனின் சீர்கெட்ட மனநிலையின் வேராகும். ஜனங்கள் எவ்வளவு அதிகமாக அகந்தையுள்ளவர்களாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாகப் பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு அதிகமாகப் பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை எதிர்க்கும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனை எவ்வளவு தீவிரமானது? அகந்தையான மனநிலைகளைக் கொண்டவர்கள், அனைவரும் தங்களுக்குக் கீழே இருப்பதாகக் கருதுவது மட்டுமல்லாமல், எல்லாவற்றையும் விட மோசமாக, அவர்கள் தேவனை விட உயர்ந்தவர்கள் என்பதாகவும் நடந்து கொள்கிறார்கள், மேலும் அவர்களுடைய இருதயங்களுக்குள் தேவனைக் குறித்த பயம் இல்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதாகவும் அவரைப் பின்பற்றுவதாகவும் தோன்றினாலும், அவர்கள் அவரைத் தேவனாகக் கருதுவதே இல்லை. அவர்கள் எப்போதும் தாங்கள் சத்தியத்தைக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள் மற்றும் தங்களைக் குறித்த உலகத்தை நினைக்கிறார்கள். இதுவே அகந்தையான மனநிலையின் சாராம்சமும் வேருமாக இருக்கிறது, மேலும் இது சாத்தானிடமிருந்து வருகிறது. எனவே அகந்தை என்னும் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகளக் கேட்டது என்னோட இதயத்தக் கலக்குச்சு. சாத்தானிய சுபாவமுள்ள ஒருத்தர் தற்செயலா ஒரு சீர்கேடான மனநிலைக்கு ஏற்ப காரியங்களச் செய்வார்னும், அவரால திருச்சபையோட பணிகள சீர்குலைக்கவும் இடையூறு செய்யவும் கூட முடியுங்கறத நான் உணந்தேன். என்னோட அகந்தயான மனநில ரொம்பத் தீவிரமா இருந்துது. நான் வீடியோ தயாரிப்பில அனுபவமுள்ளவன்னும் கொள்கைகளப் புரிஞ்சிக்கிட்டேன்னும் நெனச்சேன், அதனால நான் என் மேல பெரிய நம்பிக்கை வச்சிருந்தேன். எல்லாத்திலயும் என்னோட முடிவே இறுதியா இருக்கணும்னும், மத்தவங்க நான் சொல்றதக் கேக்கணும்னும் நான் நெனச்சேன். நான் மேற்பார்வையாளர்களோட சேந்து பணியாற்றியப்போ, நான் ஒருபோதும் அவங்கள ஒரு பொருட்டாவே எடுத்துக்கல, எல்லா வகையிலயும் அவங்கள விட நான் சிறந்தவன்னு நெனச்சேன். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டப்பவெல்லாம், நான் முதல்ல செய்யறது, “உங்களுக்குப் புரியல எனக்குப் புரியுது” அல்லது “உங்களுக்குத் தகுதியில்ல” இப்படிச் சிந்திக்கறதாவும், அவங்களோட பரிந்துரைகள கேலி செய்றதாவும்தான் இருந்துது. சில நேரங்கள்ல நான் முதல்ல யோசிக்காமலயும், தேடி ஏத்துக்கறதுக்கான மனப்பான்ம கொஞ்சங்கூட இல்லாமலும் சட்டுன்னு பதிலளிப்பேன், இது மேற்பார்வையாளர்கள என்னால கட்டுப்படுத்தப்படுவதா உணர வெக்கவும், எனக்கு ஆலோசனைகள வழங்க பயப்படவும் வச்சுது. மத்தவங்க மேற்பார்வையாளர்களப் எதிர்மறையா பாத்து என்னைப் பின்தொடந்தாங்க, இது குழுவோட வேலையப் பின்தொடர்வத அவங்களுக்குக் கடினமாக்குகிச்சு. இது எப்படி திருச்சபையோட பணிய இடையூறு செய்யாம இருக்க முடியும்? மேற்பார்வையாளர்களும் நானும் ஒண்ணா சேந்து பணியாற்றியப்போ, அவங்க என்ன பரிந்துரைச்சாலும், கொள்கைகளுக்கு இணங்க அதச் செய்றதுக்கான வழிய நான் ஒருபோதும் தேடல. நான் என்னோட சொந்தக் கண்ணோட்டத்தயே பிடிச்சுக்கிட்டிருந்தேன். என்னோட கண்ணோட்டம் எப்படி எப்பவுமே சரியா இருந்திருக்க முடியும்? நான் சரின்னு நெனச்ச விஷயங்கள் எல்லாமே சத்தியத்தோட கொள்கைகளுக்கு இணக்கமா இருக்க முடியுமா? உண்மையில, நான் என்னோட வரங்கள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே விஷயங்களப் பாத்துக்கிட்டிருந்தேன். என்னோட பெரும்பாலான கருத்துகள் கொள்கைகளுக்கு இணக்கமா இருக்கல. இந்தக் காரியங்களுக்கு ஏற்ப நான் எவ்வளவு அதிகமா வாழ்ந்தனோ, அவ்வளவு அதிகமா எனக்கு மதிப்பு இருப்பதாவும், நான்தான் சரின்னும் நெனச்சேன். நான் ஜனங்களோட சேந்து பணியாற்றியப்போ, நான் தொடந்து அவர்கள குறச்சு மதிப்பிட்டுக்கிட்டிருந்து என்னைப் பகட்டா காட்டிட்டிருந்தேன். பகுத்தறிவு எல்லாத்தயும் இழக்குற அளவுக்கு நான் அகந்தயா இருந்தேன்! என்னோட கடமையச் செஞ்சப்போ நான் எப்பவுமே என்னோட வழியிலயே காரியங்களச் செஞ்சேன். நான் என்னோட சொந்தக் கருத்துகளயும் புரிதலையுமே சத்தியங்குற மாதிரி பிடிச்சிக்கிட்டிருந்தேன், மத்தவங்களோட பரிந்துரைகள ஏத்துக்கல, அல்லது நான் சத்தியத்தில தேறினவன் போல, அவங்களோட யோசனைகள் என்னுடையத மிஞ்ச அனுமதிக்கல. இது எந்த வகையில தேவன விசுவாசிப்பதா இருந்துது? தெளிவா என்னை நானே விசுவாசிச்சிக்கிட்டிருந்தேன். நான் இத உணந்தப்போ, நான் பயந்து, வருத்தத்தால நிறைஞ்சிருந்தேன். என்னோட சுபாவம் ரொம்ப அகந்தயா இருந்ததால, என்னை அறியாமலயே தேவனை எதிர்க்குற இந்தப் பொல்லாத காரியங்களச் செஞ்சேன். அகந்தயான மனநிலயோட என் கடமையச் செஞ்சது எனக்கு ரொம்ப ஆபத்தா இருந்துதுங்கறத நான் பாத்தேன்.

கொஞ்ச காலத்துக்கப்புறமா, வீடியோ தயாரிப்பு முடிஞ்சுது, ஆனா என்னால மத்தவங்களோட ஒத்துழைக்க முடியாம இருந்ததால, ஜனங்களக் கட்டுப்படுத்தி, அதோட வீடியோ பணிக்கும் இடையூறு ஏற்படுத்துனதுனால, நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன். அதுக்கப்புறமா, இன்னொரு தொகுதி வீடியோக்கள் தயாரிக்கப்பட வேண்டியிருந்துது, ஆனா நான் அதில ஒரு பகுதியா இருக்கல. நான் திரும்பவும் எதிர்ப்ப உணர ஆரம்பிச்சேன், அதோட, “என்னோட போன அனுபவத்திலிருந்து என்னோட அகந்தயான சுபாவத்தப் பத்தி எனக்குக் கொஞ்சம் புரிதல் இருக்கு. அவங்க ஏன் என்னைப் பங்கேற்க விடல?” அப்படின்னு நெனச்சேன். இன்னும் அதிக எதிர்பாராத விதமா நான் இன்னொரு வீடியோயோவோட தயாரிப்பாளர்களிலயும் ஒருவனா இருக்கல. இத ஏத்துக்கிடறதுக்கு எனக்கு ரொம்பக் கடினமா இருந்துது. இப்படியே காரியங்க நடந்தா, திருச்சபைக்கு என்னால எந்தப் புரயோஜனமும் இருக்காது இல்லையா? தேவனோட வார்த்தயின் ஒரு பகுதி திடீர்னு என்னோட ஞாபகத்துக்கு வந்துது. “நீ நல்ல திறமை உடையவனாய் இருந்தும், எப்பொழுதும் அகந்தையும், கர்வமும் கொண்டவனாய் இருந்தால், நீ எதைச் சொன்னாலும் அதுவே சரி, மற்றவர்கள் என்ன சொன்னாலும் அது தவறு என்று நினைத்துக்கொண்டும், மற்றவர்கள் முன்வைக்கும் எந்தப் பரிந்துரைகளையும் மறுத்துக்கொண்டும், சத்தியத்தைக் கூட ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பாயானால், அதைப் பற்றி எப்படி ஐக்கியப்பட்டாலும், எப்பொழுதும் அதை எதிர்த்துக்கொண்டிருப்பாயானால், அப்போது உன்னைப் போன்ற ஒரு நபரால் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற முடியுமா? பரிசுத்த ஆவியானவர் உன்னைப் போன்ற ஒரு நபரிடம் கிரியை செய்வாரா? அவர் கிரியை செய்ய மாட்டார். நீ ஒரு மோசமான மனநிலையை உடையவன் என்றும் அவருடைய பிரகாசத்தைப் பெறுவதற்குத் தகுதியற்றவன் என்றும் தேவன் சொல்லுவார், மேலும் நீ மனந்திரும்பவில்லை என்றால், ஒரு காலத்தில் உன்னிடம் இருந்ததைக் கூட அவர் எடுத்துவிடுவார். அம்பலப்படுத்தப்படுவது என்பது இதுதான்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). நான் ரொம்ப படபடப்பா உணந்தேன். தேவனோட வார்த்தைகள் என்னாட நிலையக் குறிச்சு நேரடியா பேசிச்சு. நான் தேவன விசுவாசிச்ச இத்தன வருஷங்களா, நான் எப்பவுமே என்னோட கடமைய ஒரு அகந்தயான மனநிலையோட செஞ்சேன். அந்த நேரத்தில, நான் பல தடவ கிளைநறுக்கப்பட்டு கையாளப்பட்டேன். ஆனா நான் ஒருபோதும் சத்தியத்தத் தேடியதில்ல. என்னோட மனநில மாறல. இப்போ, நான் திருச்சபையோட பணிய தொந்தரவு செஞ்சி, கடுமையான மீறுதலச் செஞ்சிருந்தேன். நான் தேவனால அம்பலப்படுத்தப்பட்டு புறம்பாக்கப்பட்டிருந்திருக்கணுமா? நான் என்னோட நடத்தைய நெனச்சுப் பாத்தப்போ, நான் எங்க போனாலும், நான் எப்பவுமே தனித்து நிக்க விரும்புனேன். நான் மத்தவங்கள விட திறமையானவனா இருந்தா, நான் சுய திருப்தி அடைஞ்சு, என்னோட சகோதர சகோதரிகள இழிவாப் பேசுவேன். மத்தவங்க என்னை விட திறமையானவங்களா இருந்தா, அவங்கள எப்படி தோற்கடிக்கறதுன்னே நான் எப்போதும் நெனைப்பேன். என்னோட பரிந்துரைகள் பயன்படுத்தப்படாட்டா, என்னால அத ஏத்துக்க முடியாம, எதிர் வாதங்களப் எழுப்ப என்னோட மூளைய கசக்குவேன், அதனால எல்லாருமே என்னோட பரிந்துரைகளப் பயன்படுத்துவாங்க. மத்தவங்க என்னோட குறைகள சுட்டிக்காட்டுறப்போ, நான் எதுவுமே சொல்லமாட்டேன், ஆனா உள்ளுக்குள்ள நான் எதிர்ப்ப உணர்வேன். நான்தான் எல்லாமே, அவங்களால ஒரு புரயோஜமும் இல்ல, அவர்களுக்கு எந்தத் தகுதியுமில்லன்னு நான் நெனைப்பேன். இதப் பத்தி நான் எவ்வளவு அதிகமா சிந்திச்சேனோ, அவ்வளவு அதிகமா நான் பயந்தேன். அத்தன வருஷமா நான் என்னோட கடமைய ஒரு அகந்தயான மனநிலயோட செஞ்சிருந்தேன். நான் சத்தியத்த ஏத்துக்கல, நான் என்னைப் பத்தி சிந்திச்சிருக்கவோ அறிஞ்சிருக்கவோ இல்லை, இது என்னோட சீர்கேடான மனநிலய மேலும் மேலும் மோசமாக்கிச்சு. பணி நீக்கம் செய்யப்பட்டது தேவனோட நீதியின் வெளிப்பாடா இருந்துது! என்னோட வேதனையில, நான் தேவனிடம், “ஓ, தேவனே! உம்ம விசுவாசிச்ச இத்த வருஷமா நான் சத்தியத்தத் தேடலன்னு எனக்குத் தெரியும். நான் கிளைநறுக்கப்பட்டு கையாளப்பட்டப்போ, நான் என்னைப் பத்தி சிந்திக்கவோ புரிஞ்சுக்கவோ இல்ல. இதன் விளைவா, நான் திருச்சபையோட பணிய தொந்தரவு செஞ்ச பொல்லாப்ப செஞ்சேன். தேவனே, என்னோட சீர்கேட்டப் புரிஞ்சிக்கவும், சத்தியத்தத் தேடுற பாதையில நடக்கவும், என்னோட மீறுதல்களுக்கும் கடன்களுக்கும் பரிகாரம் செய்யவும் என்னை வழிநடத்துங்க” அப்படின்னு ஜெபம் செஞ்சேன்.

என்னோட தியானங்கள் ஒண்ணுல, தேவனோட வார்த்தைகளின் ஒரு பகுதியக் கண்டேன். “ஜனங்களுக்கு தங்களைப் பற்றிய அறிவு மிகவும் ஆழமற்றதாக இருந்தால், அவர்களுக்குப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமற்றதாகத் தெரியும், அவர்களின் ஜீவிதத்தின் மனநிலைகள் அவ்வளவு எளிதில் மாறாது. ஓர் ஆழ்ந்த அளவில் தன்னை அறிந்து கொள்வது அவசியம், அதாவது ஒருவரின் சொந்தச் சுபாவத்தை அறிவது: அந்த சுபாவத்தில் என்ன காரியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இந்த விஷயங்கள் எவ்வாறு தோன்றின, அவை எங்கிருந்து வந்தன போன்றவை. மேலும், நீ உண்மையில் இந்த விஷயங்களை வெறுக்க முடியுமா? உன் சொந்த அருவருப்பான ஆத்துமாவையும் உன் தீய சுபாவத்தையும் நீ பார்த்திருக்கிறாயா? உன்னைப் பற்றிய உண்மையை நீ உண்மையிலேயே காண முடிந்தால், நீ உன்னையே வெறுப்பாய். நீ உன்னையே வெறுத்து, பின்னர் தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கும்போது, நீ சரீரத்தைக் கீழ்ப்படுத்தி, சத்தியத்தை நிறைவேற்றுவது கடினம் என்று நம்பாமல் அதை நிறைவேற்றும் வலிமை பெறுவாய். ஏன் பலர் தங்கள் மாம்ச விருப்பங்களைப் பின்பற்றுகிறார்கள்? ஏனென்றால், அவர்கள் தங்களை மிகவும் நல்லவர்கள் என்று கருதுகிறார்கள், தங்கள் செயல்கள் சரியானவை, நியாயமானவை என்று உணர்கிறார்கள், தங்களிடம் எந்தக் குறைபாடுகளும் இல்லை, அவை முற்றிலும் சரியாகவே உள்ளன என்று கூட உணர்கிறார்கள், ஆகவே நீதி தங்கள் பக்கம் இருக்கிறது என்ற அனுமானத்துடன் செயல்பட சாமர்த்தியமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஒருவரின் உண்மையான சுபாவம் என்ன, அது எவ்வளவு அருவருப்பானது, எவ்வளவு இழிவானது, எவ்வளவு பரிதாபகரமானது என்பதை ஒருவர் அடையாளம் காணும்போது, அவர் தன்னைப் பற்றி அதிகம் பெருமைப்படுவதில்லை, மிகவும் பண்பற்ற அகந்தை கொள்வதில்லை, முன்பு போலவே தன்னைப் பற்றி மகிழ்ச்சியடைவதில்லை. அத்தகைய நபர், ‘தேவனுடைய சில வார்த்தைகளைக் கடைப்பிடிக்க நான் உளப்பூர்வமாகவும் என்னை நானே தரைமட்டும் தாழ்த்துகிறவனாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால், நான் மனிதனாக இருப்பதற்கான தரத்தின் அளவுக்குத் தக்கதாக இருக்க மாட்டேன், தேவனின் சமூகத்தில் வாழ வெட்கப்படுவேன்.’ என்று உணர்கிறார். பின்னர் அவர் தன்னை அற்பமானவராகவும், உண்மையிலேயே தனிச்சிறப்பற்றவராகவும் பார்க்கிறார். இந்த நேரத்தில், அந்த நபருக்குச் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது எளிதாகி விடும், மேலும் அந்த நபர் ஒரு மனிதன் ஓரளவுக்கு எப்படி இருக்க வேண்டுமோ அது போலத்தோன்றுவார். ஜனங்கள் உண்மையிலேயே தங்களைத் தாங்களே வெறுக்கும்போது மட்டுமே அவர்களால் சரீரத்தைக் கீழ்ப்படுத்த முடியும். அவர்கள் தங்களை வெறுக்காவிட்டால், அவர்களால் சரீரத்தைக் கீழ்ப்படுத்த முடியாது. உண்மையில் ஒருவன் தன்னைத்தானே வெறுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவற்றில் காணவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. முதலில், ஒருவர் தன் சொந்த சுபாவத்தை அறிவது; இரண்டாவதாக, தன்னைத் தேவையுள்ளவராகவும் பரிதாபகரமாகவும் பார்ப்பது, தன்னை மிக அற்பமானவராகவும், தனிச் சிறப்பற்றவராகவும் கருதுவது, ஒருவர் தன் பரிதாபகரமான மற்றும் அழுக்கான ஆத்துமாவைப் பார்ப்பது. ஒருவர் உண்மையிலேயே என்னவாக இருக்கிறார் என்பதை அவர் முழுமையாகப் பார்க்கும்போது, இந்த முடிவு அடையப்படும்போது, ஒருவர் உண்மையிலேயே தன்னைப் பற்றிய அறிவைப் பெறுகிறார், மேலும் ஒருவர் தன்னை முழுமையாக அறிந்துகொண்டார் என்று கூறலாம். ஒருவர் தன்னைத் தானே உண்மையிலேயே வெறுக்க முடியும்போது, தன்னைத் தானே சபிக்கும் அளவிற்குச் செல்லும்போதுதான், ஒரு மனிதரைக் கூட ஒத்திருக்காத வகையில் சாத்தானால் அவர் ஆழமாக சீர்கெட்டிருப்பதாக உண்மையிலேயே உணர முடியும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகளப் படிச்சதுக்கப்புறமா, நான் வெக்கப்பட்டேன். உன்னோட சொந்த சுபாவத்த உணர்வதன் மூலமாவும், நீ எப்படி கெட்டுப்போயிருக்கங்கறதயும், உன்னோட பாழான நிலையயும் பரிதாபத்தயும் தெளிவாப் பாக்கறதன் மூலமாவும் மட்டுமே, உன்னால உன் மேல வெறுப்படஞ்சு, உன்னையே வெறுத்து தேவனிடம் மனந்திரும்ப முடியும்னு தேவன் சொன்னார். அதனால நான் ஏன் ரொம்ப அகந்தயா இருந்தேன்னு சிந்திச்சுப் பாக்க ஆரம்பிச்சேன். நான் வீடியோ குழுவில சேந்ததுக்கப்புறமா, எப்படிப் பல முக்கியமான வீடியோக்கள தயாரிச்சேன், எல்லார்கிட்ட இருந்தும் மரியாதயயும் பாராட்டயும் பெற்றேன் அப்படிங்கறத நெனச்சுப் பாத்தேன், எனக்கு அனுபவமும் பல கொள்கைகள்ல கையாள்தலும் இருக்கறதா நெனச்சேன். எனக்கு நல்ல திறமை இருந்ததுன்னும், நான் சீக்கிரமாவே கத்துக்கிட்டேன்னும், நான் திருச்சபையில ஒரு அரிய தாலந்துள்ளவன்னும் நெனச்சேன். இது என்னோட அகந்தயான மனநிலைய மேலும் மேலும் மோசமாக்குச்சு. நான் முதன்முதலா வீடியோ தயாரிப்ப ஆரம்பிச்சப்போ எனக்கு எவ்வளவு குறைவா தெரிஞ்சிருந்ததுன்னும், என்னோட சகோதர சகோதரிகள் என்னை எப்படிக் கையப்பிடிச்சு காட்டினாங்கன்னும் நெனெச்சேன். சில நேரங்கள்ல அவங்க தெளிவா விவரங்கள விளக்கினாலும் என்னால அதச் சரியாச் செய்ய முடியல, நான் சரியா தயாரிக்கறதுக்கு முன்னாடி எனக்குத் திரும்பத் திரும்ப வழிகாட்டுதல் தேவப்பட்டுது. இதன் மூலமா, நான் புத்திசாலியாவோ ரொம்பப் பெரிய திறனுள்ளவனாவோஇருந்ததால இல்ல, எனக்குப் பயிற்சி செய்ய பல வாய்ப்புகள்இருந்துது, கொஞ்சம் அனுபவத்த அடஞ்சிருந்தேன்ங்கறது தான் விஷயம்னு பாத்தேன். ஆனா நான் அத மூலதனமாப் பாத்தேன், என்னோட கடமைய உறுதியா நின்னுச் செய்யல. குறிப்பா நான் என்னோட கடமையில ஓரளவு செயல்திறனுள்ளவனா இருந்தப்போ, என்னோட விஷயங்கள் எனக்கு உண்மையிலே தெரியும்னு நெனப்பேன், அதனால நான் மத்தவங்கள அகந்தயோட இழிவாப் பாப்பேன், அவங்களோட ஒத்துழைக்க விரும்பமாட்டேன். என்னோட மனிதத்தன்மயும் பகுத்தறிவும் எங்க இருந்துது? நான் சேந்து பணியாற்றிய ரெண்டு மேற்பார்வையாளர்கள நெனச்சேன், நான் எப்பவுமே அவங்கள இழிவாப் பாத்தேன். உண்மையில, அவங்களுடனான என்னோட தொடர்புகளின் மூலமா, அவங்களுக்குப் பல வலிமைகள் இருக்கறதக் கண்டேன். அவங்க வீடியோ தயாரிப்பு திறன்லயும் அனுபவத்திலயும் ஓரளவு குறைவுபட்டிருந்தாலும், அவங்களோட இதயங்கள் சரியான இடத்தில் இருந்துது, அவங்க சிரமங்களக் கடக்கறதுல முனைப்புடன் இருந்தாங்க. அவங்க கூர்மையான மனதையும் கொண்டிருந்தாங்க, விதிமுறைகள் கூடயே ஒட்டிக்கிட்டிருக்கல. அவங்க புதுமைகள செய்யத் துணிஞ்சாங்க, புதிய விஷயங்களக் கத்துக்கத் தயாரா இருந்தாங்க. சிரமங்கள அல்லது பிரச்சினைகள எதிர்கொண்டப்போ, அவங்களால தங்களையே ஒதுக்கி வைக்கவும், மத்தவங்ககிட்ட ஆலோசனை கேக்கவும் முடிஞ்சது. ஆனா என்னோட மனநில ரொம்ப அகந்தையா இருந்தது, யாரும் என்னைப் போல இல்ல. மத்தவங்களோட வலிமைகள பத்தி நான் தெரியாம இருந்தேன். பவுல் எப்படி ரொம்ப அகந்தயானவனா இருந்தான்ங்கறதப் பத்தி நான் நெனச்சுப் பாத்தேன். அவன் தன்கிட்ட திறமையும், வரங்களும் இருப்பதா நெனச்சான், அவனோட இதயம் யாருக்காகவும் வளைஞ்சி கொடுக்கல. அவன் மத்த சீஷர்கள விட உயர்ந்தவன்னு எப்பவுமே சாட்சி சொன்னான், அவன் கிறிஸ்து எனக்கு ஜீவன்னு அருவருப்பான வார்த்தைகளக் கூடச் சொன்னான். பகுத்தறிவே இல்லாத அளவுக்கு அவன் அகந்தயா இருந்தான். என்னோட சுபாவம் பவுலுடையதப் போலவே இருந்தத சிந்திச்சேன். நான் எப்பவுமே மேற்பார்வையாளர்கள இழிவாப் பாத்தேன், எப்பவும் நான் சொன்னபடியே மத்தவங்கள எல்லா காரியத்தயும் செய்ய வச்சேன். நான் பவுலோட வழியப் பின்பற்றுனேன். நான் இத உணந்தப்போ, எனக்கு எல்லையில்லா வருத்த உணர்வு ஏற்பட்டுது. நான் தேவனிடம், “தேவனே! இப்போதான் எனக்கு என்னோட சுபாவத்தயும் சாராம்சத்தயும் குறிச்ச கொஞ்சம் புரிதல் இருக்கு. தேவன விசுவாசிச்ச இத்தன வருஷங்கள்ல, தேவனோட வீடு எப்பவுமே எனக்கு நீர்ப்பாய்ச்சி சத்தியத்தால போஷிச்சிருக்கு. ஆனா நான் சத்தியத்தத் தேடாம, அந்திக்கிறிஸ்துவோட பாதையில நடந்தேன், உம்மோட கருத்துள்ள அக்கறய புறக்கணிச்சேன். நீங்க எனக்கு நினைவூட்டுறதுக்காக பல நபர்களயும், நிகழ்வுகளயும், காரியங்களயும் ஏற்படுத்திக் கொடுத்தீங்க, ஆனா நான் என்னோட கழுத்த கடினப்படுத்துனேன், மனந்திரும்பத் தெரியாம இருந்தேன். நான் தவறான பாதையில என்னோட அகந்தயான சுபாவத்தப் பின்பற்றி, உம்மை என்னை வெறுக்க வச்சேன். தேவனே, நான் மனந்திரும்ப தயாரா இருக்கேன். இதுக்கப்புறமா திருச்சபை என்ன ஏற்பாடு செஞ்சாலும், நான் கீழ்ப்படிவேன்” அப்படின்னு ஜெபம் செஞ்சேன்.

நான் இத உணந்தப்போ, அடுத்த நாள் நான் ஆச்சரியப்படும் விதமா, ஒரு சகோதரி எனக்கு செய்தியக் கொண்டு வந்தாங்க, சில புதிய குழு உறுப்பினர்களோட பணி சரியா இல்லன்னும், நான் அவங்களுக்குப் பயிற்சி அளிப்பேன்னு அவங்க நம்புவதாவும் சொன்னாங்க. எனக்கு விருப்பமான்னு அவங்க கேட்டாங்க. என்னோட இதயம் தேவனுக்கு ரொம்ப நன்றியோட இருந்துது. நான் மனந்திரும்ப விரும்பின உடனே, என்னோட கடமையச் செய்ய திருச்சபை எனக்கு ஒரு வாய்ப்பளிச்சுது. இந்த முறை நான் அதை மதிக்கணும், அதனால நான் சந்தோஷத்தோட ஏத்துக்கிட்டேன். இன்னும் அதிகமா எதிர்பாராதது என்னன்னா ஒரு சில நாளுக்கப்புறமா, ஒரு புதிய வீடியோ தயாரிப்பில பங்கேற்க தலைவர் என்னை ஏற்பாடு செய்திருந்தாரு. நான் தேவனுக்கு உண்மையில நன்றியுள்ளவனா இருந்தேன்!

நான் எப்படி மத்தவங்களோட சீக்கிரமா சேந்து பணியற்றுறதுங்கறத நெனச்சி, மத்தவங்களோட ஒத்துழைக்க நான் ஒரு பாதையத் தேடுனேன். தேவனோட வார்த்தை சொல்றத நான் பாத்தேன், “உங்கள் கடமைகளை நிறைவேற்ற நீங்கள் மற்றவர்களுடன் ஒத்துழைக்கும் போது, மாறுபட்ட கருத்துகளை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? உங்களால் மற்றவர்களைப் பேச அனுமதிக்க முடிகிறதா? (கொஞ்சமாக என்னால் முடிகிறது. முன்பு, நிறைய நேரங்களில் சகோதர சகோதரிகளின் ஆலோசனைகளை நான் கேட்காமல் என் சொந்த வழியில் விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவேன். பிறகுதான், நான் தவறு செய்தேன் என்று உண்மைகள் நிரூபித்த போது, அவர்களின் பெரும்பாலான பரிந்துரைகள் சரியாக இருந்தன என்பதையும், எல்லோரும் விவாதித்த முடிவுதான் உண்மையில் பொருத்தமானது, என்னுடைய சொந்தக் கருத்துகள் தவறானவையாகவும் குறைபாடு உள்ளவையாகவும் இருந்தன என்பதையும் பார்த்தேன். இதை அனுபவித்த பிறகு, இணக்கமான ஒத்துழைப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன்.) இதிலிருந்து நாம் என்ன பார்க்க முடியும்? இதை அனுபவித்த பிறகு, உங்களுக்கு ஏதாவது பலன் கிடைத்ததா மற்றும் சத்தியத்தைப் புரிந்து கொண்டீர்களா? யாராவது பூரணமானவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஜனங்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் அல்லது எவ்வளவு திறனுள்ளவர்களாக மற்றும் திறமையுள்ளவர்களாக இருந்தாலும், அவர்கள் இன்னும் பூரணமானவர்களாக இல்லை. ஜனங்கள் இதை உணர்ந்தறிய வேண்டும், இது உண்மையாகும். ஜனங்கள் தங்கள் சொந்தத் தகுதிகள் மற்றும் பெலன்கள் அல்லது தவறுகள் ஆகியவற்றைக் குறித்து கொண்டிருக்க வேண்டிய அணுகுமுறையும் இதுவேயாகும்; இதுதான் ஜனங்களிடம் இருக்க வேண்டிய பகுத்தறிவாகும். இத்தகைய பகுத்தறிவுடன், நீ உன் சொந்தப் பெலன்கள் மற்றும் பலவீனங்களையும், அதோடு மற்றவர்களின் பெலன்கள் மற்றும் பலவீனங்களையும் கூடச் சரியாகச் சமாளிக்க முடியும், மேலும் இது அவர்களுடன் நீ இணக்கமாக வேலை செய்ய உனக்கு உதவும். நீ சத்தியத்தின் இந்த அம்சத்தைப் புரிந்து கொண்டு சத்தியத்தின் யதார்த்தத்தின் இந்த அம்சத்தில் பிரவேசிக்க முடிந்தால், அப்போது உன்னால் உன் சகோதர சகோதரிகளுடன் இணக்கமாகப் பழக முடியும், உன்னிடம் உள்ள எந்த பலவீனங்களையும் ஈடு செய்ய ஒருவருக்கொருவர் இருக்கிற பெலனான காரியங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வழியில், நீ எந்தக் கடமையைச் செய்தாலும் அல்லது நீ என்ன செய்து கொண்டிருந்தாலும், நீ அதை எப்போதும் சிறப்பாகச் செய்து தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவாய்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). யாரும் பரிபூரணமானவங்க இல்லங்கறத தேவனோட வார்த்தைகள் எனக்குப் புரியவெச்சுது. எல்லோருக்கும் குறைகளும் பற்றாக்குறைகளும் இருக்கு. ஒரு நபரோட வரங்களா இருந்தாலும் அல்லது அனுபவமா இருந்தாலும், இந்த விஷயங்கள் அவங்ககிட்ட சத்தியம் இருக்குதுன்னோ, அல்லது அவங்களோட செயல்கள் எப்பவுமே சத்தியத்தோட ஒத்துப்போகுதுன்னோ அர்த்தப்படுத்தாது. எல்லாருமே இணக்கமா ஒத்துழைச்சு ஒருத்தொருக்கொருத்தர் பலவீனங்கள தாங்கணும். குறிப்பா கருத்து வேறுபாடுகள் இருக்கறப்போ, உங்க ஆணவத்த புறந்தள்ளிட்டு, தேடுற மனப்பான்மையோட பிரச்சினைய குறிச்சு ஐக்கியங்கொள்ளவும் ஆராயவும் செய்யணும். இதுதான் மனிதத்தன்மையயும் பகுத்தறிவயும் கொண்டிருப்பதுக்கும், பரிசுத்த ஆவியானவரோட கிரியையப் பெறுவதுக்கும், உங்க கடமையில தப்புகள குறைக்கறதுக்கும், கடைசில உங்கக் கடமையச் சிறப்பாச் செய்றதுக்கும் ஒரே வழி. நாம சத்தியத்தப் புரிஞ்சிக்கறதில்ல. அதனால நாம் சேந்து பணியாற்றி ஒருத்தருக்கொருத்தர் பலவீனங்கள ஈடு செஞ்சுக்கணும். நியாயமா நடந்துக்கறதுக்கு ஒரே வழி இதுதான். இதப் புரிஞ்சுக்கிட்ட நான், இந்தப் பாதையப் பயிற்சி செய்றதன் மூலமா தொடர்வேன். மத்தவங்களோட ஆராயறப்போ திரும்பவும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டா, மத்தவங்களோட கருத்துகளக் கேட்கறதுக்கு ஆதரவா என்னோட கண்ணோட்டத்த நான் உணர்வுபூர்வமா மறுப்பேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டா, எல்லாருக்கும் பொருந்தக்கூடிய கொள்கைகளப் பத்தி நான் ஐக்கியங்கொண்டு, கடைசில கொள்கைகளக் கடைப்பிடிக்கும் வழியில பயிற்சி செய்வேன். கொஞ்ச நாளைக்கப்புறமா, மத்தவங்களுடனான என்னோட உறவு கணிசமா மேம்பட்டுது, என்னோட அகந்தைய ஒதுக்கி வச்சுட்டு இணக்கமா ஒத்துழைக்கறதன் மூலமா மட்டுந்தான் பரிசுத்த ஆவியானவரோட கிரியையயும் வழிகாட்டுதலயும் என்னால எளிதாப் பெற முடியுங்கறதயும், என்னோட கடமையச் செய்யுறப்போ திறம்பட இருக்க முடியுங்கறதயும் நான் புரிஞ்சுகிட்டேன்.

இந்தச் சூழ்நிலைகள அனுபவிச்சது மூலமா, என்னோட அகந்தயான மனநிலைய நான் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டு சில மாற்றங்களச் செஞ்சேன். இந்த முடிவுக்கொல்லாம் தேவனோட வார்த்தைய புசித்துப் பானம்பண்ணுனதுதான் காரணம்! நான் தேவனுக்கு ரொம்ப நன்றியுள்ளவனா இருக்கேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

ஆசீர்வாதங்களைப் பின்தொடர்வது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றதா?

2018 ஆம் வருஷத்துல, சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைச்சுச்சு. கர்த்தரோட வருகைய வரவேற்கக்...

Leave a Reply