நான் ஏன் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மறுத்துக்கொண்டிருந்தேன்?

செப்டம்பர் 28, 2023

ஒரு நாள் சுவிசேஷப் பணிக்காக ஒருவரத் தேர்ந்தெடுக்க திருச்சபைத் தேர்தல் நடந்துச்சு. எனக்கு ஆச்சரியமா, முடிவுகள் அறிவிக்கப்பட்டப்போ, சகோதர சகோதரிகள் என்னையத் தேர்ந்தெடுத்திருந்ததப் பாத்தேன். நான் ஒருவித உற்சாகமா இருந்தேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கறதுக்கான அர்த்தம், எனக்குச் சிறந்த திறமையும் மத்தவங்கள விட அதிக சாமர்த்தியமும் இருப்பதுதான்னு நான் நெனச்சேன். எனக்குக் கொஞ்சம் பதட்டமாவும் இருந்துச்சு, நான் நல்லா வேலை செய்யலேன்னா, எல்லோருக்கும் என் மேல் இருக்குற நம்பிக்கையக் குறைய செஞ்சுடுவேனோ, பிறகு நான் மேற்பார்வை செய்யறதுக்குத் தகுதியானவள் இல்லன்னு அவங்க நினைப்பாங்களோ அப்படின்னு பயந்தேன். சகோதர சகோதரிகள நான் ஏமாத்த விரும்பல. அவங்க என்னையத் தேர்ந்தெடுத்ததால, எனக்கு நல்ல திறமை இருந்துச்சுங்கறததயும் சாமர்த்தியமுள்ளவளாய் இருந்தேன்ங்கறததயும், எங்களோட சுவிசேஷ வேலைய என்னால தட்டி எழுப்ப முடியும்ங்கறதயும் நிரூபிக்க விரும்புனேன். அதுக்கப்புறமா, நான் வேலையில முழுசா இறங்குனேன். அந்த நேரத்துல, கொரினா என்பவர் என்னோட வேலைய மேற்பார்வை பண்ணிக்கிட்டிருந்தாங்க. ஆனா நான் அவங்ககிட்ட அதப் பத்தி கலந்து பேசிக்கவே இல்ல. நான் என்ன செய்யத் திட்டமிட்டுக்கிட்டு இருந்தேன்னு அவங்ககிட்ட சொல்லல, ஆனா நான் எப்பவுமே என்னோட சொந்த இஷ்டப்படி செஞ்சேன். சில சமயங்கள்ல அவர் விஷயங்களப் பத்தி என்கிட்ட கலந்து பேச விரும்பியப்போ, அவங்களால என்னையத் தொடர்புகொள்ள முடியல. நான் எங்கே இருந்தேன்னு அவங்க என்கிட்ட கேட்டப்போ, நான் செஞ்சிருந்த வேலையின் விவரங்கள அவங்ககிட்ட சொல்லாம அவங்கள துரத்திவிட எல்லா வழிகளையும் நான் கண்டுபிடிச்சேன். என்னோட கடமையில கொஞ்சம் வெற்றிகளப் பெற்றவுடனே அவரிடத்துல சொல்லுவேன்னும், அதன் மூலமா, மத்தவங்களோட உதவி இல்லாமலயே என்னால நல்லா வேலை செய்ய முடியும்ன்னு அவர் என்னோட சாமர்த்தியத்தயும் திறனையும் புகழ்வாரு. என்னையத் தேர்ந்தெடுத்தது சரியான முடிவுன்னும், அந்த வேலைய என்னால செய்ய முடியும்ன்னும் சகோதர சகோதரிகள் நினைப்பாங்க அப்படின்னு நான் நெனச்சுக்கிட்டிருந்தேன். அந்த நேரத்துல, எங்களோட குழு உறுப்பினர் ஜெர்ரி என்பவர் தன்னோட கடமையில ரொம்பவே ஆர்வமா இருந்தாரு, அதோடு, அவர் தன்னோட சுவிசேஷப் பணியில என்னைய விட திறம்பட செயல்பட்டாரு. அவர் தன்னோட கடமையச் சிறப்பா செஞ்சதுக்காக கொரினா அவங்க அவரப் பாராட்டினதக் கேட்டப்போ, நான் நிம்மதியில்லாம இருந்தேன். நான் மேற்பார்வையாளரா இருந்தேன் அவர் ஒரு சாதாரண சுவிசேஷப் பணியாளரா மட்டுந்தான் இருந்தாரு. அவர் தன்னோட கடமையில ரொம்ப உற்சாகமா இருப்பதால, அவர் என்கிட்ட தன்னை உயர்வா காட்டப் போறாரா? மத்தவங்க அவர மேற்பார்வையாளரா தேர்ந்தெடுப்பாங்களோ? அது எனக்கு ஒரு பெரிய அவமானமா இருக்கும். உண்மையிலயே என்னால அத ஏத்துக்க முடியல.

ஒருதடவ, கொரினா அவங்க ஜெர்ரியயும் என்னையும் ஒரு வேலைய சேர்ந்து கவனிச்சுக்குமாறு சொன்னாங்க. நான் அவரோட சேர்ந்து செய்ய விரும்பல, அதுக்குப் பதிலா, அத தானாவே செய்ய விரும்பினேன். இதுக்கு முன்னாடி, அவரோட கடமையில அவர் உற்சாகமா இருந்ததுக்காக மத்தவங்க அவரப் பாராட்டினாங்க, அவர் என்னோடு சேர்ந்து செயல்பட்டா, எங்களோட சாதனைகள்ல பாதி அவருடையதா இருக்கும், அப்புறம், சகோதர சகோதரிகள் அவர இன்னும் உயர்வா பாக்கக்கூடும். அத மனசுல வச்சுக்கிட்டு, நான் போய் அதைத் தானாவே செஞ்சேன். என்னோட சாதனைகள உடனடியா அதிகரிச்சுக்க விரும்புனேன், நான் நல்லா வேலை செஞ்சுக்கிட்டு இருந்த வரையில, எல்லாரும் என்னையப் பாராட்டுவதும் புகழுவதும் உறுதின்னு நெனச்சேன். அதுக்கப்புறமா, நான் கடமையில முழு மூச்சா இறங்குனேன். ஆனா நான் எவ்ளோ கடினமா உழச்சாலும், எவ்ளோ ஆற்றல நான் செலவழிச்சாலும் அது பலனற்றதா இருந்துச்சு. தேவனுக்கு எதிரா நான் குறை சொன்னேன்—நான் எவ்ளோ கடினமா உழச்சாலும், அவர் ஏன் என்னைய ஆசீர்வதிக்க மாட்டாரு? நான் ரொம்ப மோசமான நிலையில இருந்தேன், அதுக்கப்புறமும், நான் அந்தக் கடமைய செய்ய விரும்பல. என்ன நடந்துக்கிட்டு இருந்துச்சுங்கறத கொரினா தெரிஞ்சுக்கிட்டதும், “உங்களோட கடமையில நீங்க நல்ல பலன்களப் பெறல. உங்க பணி முறையில ஏதாவது பிரச்சனை இருக்குதா? என்ன நடக்குதுங்கறத நீங்க தொகுத்துப் பாத்து முன்னேற்றத்த ஏற்படுத்தணும். நீங்க எப்பவுமே தன்னிச்சயா வேலை செய்ய விரும்புறீங்க—நீங்க விஷயங்களச் செய்ய வேண்டிய விதம் அது இல்ல. நீங்க மத்தவங்களோடு இணஞ்சு செயல்படணும்” அப்படின்னு அவங்க என்னோடு ஐக்கியப்பட்டார். என்னோட பிரச்சனைய அவங்க சுட்டிக்காட்டுறத நான் எதிர்த்தேன். என்னோட பணிமுறையில பிரச்சனை இருக்குதா? நான் முன்னாடியும் அப்படித்தான் வேலை செஞ்சிருந்தேன், நான் நல்லாத்தான் செஞ்சிருந்தேன். என்னோட அணுகுமுறை சரியானதுதான்—அதுல தவறு எதுவும் இல்ல அப்படின்னுதான் அதுக்கு அர்த்தம்! அதுக்கப்புறமும் அதே வேலைப் பாணியத் தொடர்ந்து பயன்படுத்துனேன். அந்த நேரத்துல, ஒரு நல்ல பயிற்சிக்கான பாதைய மத்தவங்க என்னோடு எப்படி ஐக்கியங்கொண்டாலும், நான் அதக் கேட்கவும் விரும்பல, ஏத்துக்கவும் விரும்பல. அவங்க சொன்னபடி நான் விஷயங்கள செஞ்சா, எனக்கு சில பலன்கள் கெடச்சவுடனே, அவங்களோட அறிவுரைய நான் பின்பற்றியிருந்ததாலதான் எனக்கு சாதனைகள் கெடச்சுச்சு அப்படின்னு அவங்க சொல்லலாம். அப்போ எல்லாப் புகழயும் அவங்க பெற்றுக்குவாங்க—என்னைய யாரு புகழுவாங்க? அப்படின்னு நான் நெனச்சேன். நான் ரொம்ப பிடிவாதமா இருந்து தன்னிச்சயா செயல்பட விரும்புனேன். கண் இமைக்கும் நேரத்துல ரெண்டு வாரங்கள் கடந்து போயிருச்சு, நான் இன்னும் எதையும் சாதிச்சிருக்கல. நான் உண்மையிலயே பரிதாபமா இருந்தேன். ஒவ்வொரு நாளும் நான் ஓய்வெடுக்காம வேலை செஞ்சேன், அப்படியிருக்க, எனக்கு ஏன் எந்தப் பலனும் கிடைக்கல? பிரச்சனைக்கான மூலக்காரணம் என்னன்னு எனக்குத் தெரியல, ஆனா நான் இன்னும் சுயமா சிந்திக்கல. ரெண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒரு சகோதரர், “நீங்க மேற்பார்வையாளரா இருக்கீங்க ஆனா மத்தவங்களோட சேர்ந்து வேலை செய்யறதில்ல—நீங்க எப்பவுமே தனியா செயல்படுறீங்க. அந்த மாதிரி எப்படி உங்களால எதையாவது சாதிக்க முடியும்? இது காரியங்களத் தடை செய்யுறது இல்லயா?” அப்படின்னு என்னையக் கண்டிச்சுக் கேட்டாரு. அவர் சொன்னதக் கேட்டு நான் வருத்தப்பட்டேன், ஆனா அதுக்கப்புறம், அவர் சொன்னது சரிதான்னும், அதுதான் உண்மைன்னும் உணர்ந்தேன். நான் மத்தவங்களோடு சேர்ந்து வேலை செய்யணும்னு சகோதர சகோதரிகள் திரும்பத்திரும்ப எனக்கு நினைவுபடுத்துனாங்க, ஆனா நான் தன்னிச்சயா காரியங்கள செஞ்சுக்கிட்டே இருந்தேன், அதாவது வேலை பலனளிக்கல அதோட அது தாமதமாயிட்டு இருந்துச்சு. நான் அத உணர்ந்தப்போ, நான் குற்ற உணர்வடஞ்சேன், அதோடு ஒரு மாற்றத்த செய்ய விரும்புனேன்.

அதுக்கப்புறம், என்னோட பிரச்சனையத் தலைவரிடத்துல வெளிப்படையா சொன்னேன். தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய அவங்க எனக்கு அனுப்பி வச்சாங்க: “தேவனுடைய வீட்டில், மக்கள் தங்கள் உலகத் தத்துவங்களின்படி வாழ்ந்தால், தங்கள் சொந்தக் கருத்துகள், சார்புகள், ஆசைகள், சுயநல நோக்கங்கள், தங்கள் சொந்த வரங்கள் மற்றும் ஒருவரோடு ஒருவர் பழகுவதில் புத்திசாலித்தனம் ஆகியவற்றைச் சார்ந்திருந்தால், இது தேவனுக்கு முன்பாக வாழும் வழியே அல்ல, மேலும் அவர்களால் ஒற்றுமையை அடைய முடியாது. இது ஏன்? இது ஏனென்றால் மக்கள் சாத்தானிய மனநிலையின்படி வாழும்போது, அவர்களால் ஒற்றுமையை அடைய முடியாது. அப்படியானால், இதன் இறுதியான விளைவுதான் என்ன? தேவன் அவர்களிடத்தில் கிரியை செய்யமாட்டார். தேவனுடைய கிரியை இல்லாமல், மக்கள் தங்கள் சொந்த சொற்ப திறமைகளையும் புத்திசாலித்தனத்தையும், தங்களுடைய கொஞ்சநஞ்ச நிபுணத்துவத்தையும், அவர்கள் அடைந்திருக்கும் கொஞ்ச அறிவையும் திறனையும் சார்ந்ந்திருந்தால், தேவனுடைய வீட்டில் அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவது என்பது அவர்களுக்குக் கடினமான காலமாக இருப்பதோடு அவருடைய சித்தத்துக்கு ஏற்ப செயல்படுவதும் அவர்களுக்குக் கடினமானதாக இருக்கும். தேவனுடைய கிரியை இல்லாமல், உன்னால் தேவனுடைய சித்தத்தை, தேவனுடைய தேவைகளை, அல்லது நடைமுறைப்படுத்துதலின் கொள்கையை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. உன்னுடைய கடமைகளைச் செய்யும் பாதையையும் கொள்கைகளையும் நீ அறிய மாட்டாய், மேலும் தேவனுடைய சித்தத்துக்கு ஏற்ப எப்படிச் செயல்படுவது அல்லது எந்தச் செயல்கள் சத்தியத்தின் கொள்கைகளை மீறி தேவனை எதிர்க்கின்றன என்பதை ஒருபோதும் அறிய மாட்டாய். இந்த விஷயங்கள் எதுவும் உனக்குத் தெளிவாகத் தெரியாவிட்டால், நீ வெறுமனே விதிகளைக் குருட்டாம்போக்கில் கடைப்பிடித்துப் பின்பற்றுவாய். உன்னுடைய கடமைகளை இத்தகையக் குழப்பத்தோடு செய்தால், நீ நிச்சயமாகத் தோல்வி அடைவாய். நீ தேவனுடைய ஒப்புதலை ஒருபோதும் பெற மாட்டாய், மேலும் நிச்சயமாக தேவன் உன்னை வெறுத்து நிராகரிக்கும்படிச் செய்வாய், மேலும் நீ அகற்றப்படுவாய்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “இணக்கமான ஒத்துழைப்பு”). தேவனோட வார்த்தைகள்ல இருந்து, என்னோட சொந்த திறமைகளயும் புத்திசாலித்தனமான சின்னச் சின்ன தந்திரங்களயும் சார்ந்துக்கிட்டு என்னோட கடமைய சுயநலமா செய்ய முடியாது, என்னோட சொந்த ஆசைகளப் பின்பற்ற முடியாது. நான் சகோதர சகோதரிகளோடு இணைஞ்சு செயல்படணும், விஷயங்களப் பத்திக் கலந்து பேசி, எல்லாரோடயும் ஒத்துப் போகணும். இல்லேன்னா, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யமாட்டாரு, என்னோட கடமை தேவனால ஆசீர்வதிக்கப்படாது அப்படிங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். ஆனா என்னையப் பொறுத்தவரை, நான் மேற்பார்வையாளரா தேர்ந்தெடுக்கப்பட்டதுல இருந்து, அது என்னைய ஒரு சிறந்தவளா ஆக்குச்சுங்கறதப் போலவும், அதோடு, எனக்கு சில பலம் இருந்துச்சுங்கறதுதான் அதோட அர்த்தம்ன்னும் நான் நெனச்சேன். நான் தனித்து நின்னு மத்தவங்களோட பாராட்டயும் அங்கீகாரத்தயும் பெறும்படிக்கு சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஒத்துழைக்காம தனிக் காட்டு ராஜாவா செயல்பட்டேன். என்னோட பணி குறிச்சு என்னோட மேற்பார்வையாளர்கிட்ட அதிகமா நான் கலந்து பேசக்கல அதோடு, அவரிடத்துல சொல்லாமலே திட்டங்களினுடைய வேலைய செய்ய வெளிய போனேன். அவங்க என்னோட திறமைக்காகவும் சாமர்த்தியத்துக்காகவும் என்னையப் புகழும்படிக்கும் நான் மேற்பார்வையாளரா என்னோட பதவிக்கு ஏத்த மாதிரி வாழ்ந்தேன்னு நினைக்கும்படிக்கும் நான் எதையாவது சாதிச்ச பிறகுதான் அவங்ககிட்ட சொல்ல விரும்புனேன். ஆனா நான் கொள்கைகள நாடாததாலும், எனக்குப் பகுத்தறிவில்லாமகூட இருந்ததாலும், தேவனோடு வாக்குவாதம் செஞ்சுக்கிட்டு, என்னைய ஆசீர்வதிக்காததுக்காக அவரைக் குற்றம் சாட்டிக்கிட்டு இருந்ததாலும் என்னோட கடமை பயனளிக்காம இருந்துச்சு. நான் என்னோட கடமையவிட்டுடக்கூட விரும்புனேன். நான் உண்மையிலயே அறிவில்லாம இருந்தேன்! கடைசியா நான், என்னோட சுயநல ஆசைகள நிறைவேத்திக்க கடமையில தனியா செயல்படுறது, கொள்கைகளைத் தேடாம அல்லது மத்தவங்களோடு சேந்து வேலை செய்யாம இருப்பதுக்கான அர்த்தம் கடமைய ஒருபோதும் சரியா செய்ய முடியாதுங்கறதுதான் அப்படிங்கறத உணர்ந்துக்கிட்டேன். என்னோட நடத்தயும் கூட தேவனுக்கு அருவருப்பா இருந்துச்சு. நான் சரியான நேரத்துல மாறலேன்னா அவர் என்னையக் கைவிட்டுருவாரு. இதையெல்லாம் உணர்ந்தப்போ, நான் உடனடியா: “தேவனே, நான் மத்தவங்களோட சேர்ந்து செயல்படாம தனியா வேலை செய்யுறது உமக்குப் பிடிக்காத ஒண்ணுங்கறத என்னால இப்ப பாக்க முடியுது. தயவு செஞ்சு, சரியான நேரத்துல மனந்திரும்பவும், மத்தவங்களோடு இணஞ்சு வேலை செய்யவும் எனக்கு வழிகாட்டி உதவுவீராக” அப்படின்னு ஒரு ஜெபத்தை ஏறெடுத்தேன்.

தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்திய நான் வாசிச்சேன்: “‘இணக்கமான ஒத்துழைப்பு’ என்ற வார்த்தைகளை எழுத்துப்படி புரிந்துகொள்வது எளிதானது, ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பது கடினம். இந்த வார்த்தைகளின் நடைமுறைப் பகுதியை வாழ்ந்து காட்டுவது எளிதான விஷயம் அல்ல. அது ஏன் எளிதானது அல்ல? (மக்கள் சீர்கேடான மனநிலைகளைக்கொண்டுள்ளனர்.) அது சரிதான். அகந்தை, தீமை, பிடிவாதம் போன்ற பல சீர்கேடான மனநிலைகள் மனிதனுக்கு இருக்கின்றன, மேலும் இவை அவர்களைச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவிடாமல் தடுக்கின்றன. நீ பிறரோடு ஒத்துழைக்கும்போது, நீ எல்லா விதமான சீர்கேடான மனநிலைகளையும் வெளிப்படுத்துகிறாய். உதாரணமாக: ‘நீங்கள் என்னை அந்த நபரோடு ஒத்துழைக்க வைப்பீர்கள், ஆனால் அவர்கள் அதற்குத் தகுந்தவர்களா? செயல்திறன் இல்லாத ஒருவரோடு நான் ஒத்துழைத்தால் மக்கள் என்னைத்தாழ்வாகப் பார்க்கமாட்டார்களா?’ என்று நீ நினைக்கிறாய். மேலும் சில வேளைகளில், ‘அந்த நபர் மிகவும் முட்டாள், நான் சொல்வதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது!’ அல்லது ‘நான் சொல்ல வேண்டியது சிந்தனைக்குரியது நுண்ணறிவுமிக்கது, நான் அவர்களிடம் கூறி அவர்கள் அதைத் தங்களுக்கு என்று எடுத்துக்கொள்ளச்செய்தால், நான் தனித்துவம் கொண்டவனாக நிற்க முடியுமா? என்னுடைய முன்மொழிவுதான் சிறந்தது. நான் அதைச் சொல்லி அவர்கள் அதைப் பயன்படுத்த விட்டுவிட்டால், அது என்னுடைய பங்களிப்பு என்று யாருக்குத் தெரியும்?’ என்று கூட நீ நினைக்கலாம். இத்தகைய சிந்தனைகளும் கருத்துகளும்—இத்தகைய பிசாசின் வார்த்தைகளும்—பொதுவாகவே கேட்கப்படுவதும் பார்க்கப்படுவதுமாய் இருக்கின்றன. உனக்கு அப்படிப்பட்ட சிந்தனைகளும் கருத்துகளும் இருந்தால், நீ பிறரோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறாயா? உன்னால் இணக்கமான ஒத்துழைப்பை அடைய முடியுமா? அது எளிதல்ல; அதற்கு ஏராளமான அளவில் சவால்கள் உள்ளன! ‘இணக்கமான ஒத்துழைப்பு’ என்ற வார்த்தைகளை எளிதாகச் சொல்லிவிடலாம்—உன் வாயைத் திறந்தால் அது உடனடியாக வெளிவரும். ஆனால் அதைக் கடைப்பிடிக்கும் நேரம் வரும்போது, உனக்குள் இருக்கும் தடைகள் பெரிதாய்த் தோன்றுகின்றன. உன் எண்ணங்கள் இங்கும் அங்கும் செல்கின்றன. சிலவேளைகளில், நீ ஒரு நல்ல உளநிலையில் இருக்கும்போது, பிறரோடு உன்னால் கொஞ்சம் ஐக்கியம்கொள்ள முடியலாம், ஆனால் உன் உளநிலை மோசமாக இருந்தால் மற்றும் சீர்கேடான மனநிலையால் நீ தடுக்கப்பட்டால், உன்னால் அதைக் கடைப்பிடிக்கவே முடியாது. தலைவர்களாக, சிலரால் யாருடனும் ஒத்துழைக்க முடியாது. அவர்கள் எப்போதும் மற்றவர்களைக் கீழானவர்களாகவே பார்க்கிறார்கள், தேர்ந்தெடுத்தே மற்றவர்களோடு பழகுவார்கள், மற்றவர்களுடைய குறைகளைப் பார்க்கும் போது, அவர்கள் அவர்களை மதிப்பிடவும் தாக்கவும் செய்கிறார்கள். இது அந்தத் தலைவர்களை விரும்பத்தகாதவர்களாக மாற்றுகிறது, அவர்கள் மாற்றப்படுகிறார்கள். ‘இணக்கமான ஒத்துழைப்பு’ என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று அவர்களுக்குப் புரியவில்லையா? உண்மையில், அவர்கள் அவற்றை நன்றாகவே புரிந்துகொள்ளுகிறார்கள், ஆனால் அவர்களால் அவற்றைக் கடைப்பிடிக்கத்தான் முடிவதில்லை. அவர்களால் அவற்றை ஏன் கடைப்பிடிக்க முடியாது? ஏனெனில் அவர்கள் அந்தஸ்தை மிக அதிகமாக நேசித்துப் பேணுகிறார்கள், மேலும் அவர்களுடய மனநிலை மிகவும் அகந்தையானது, அவர்கள் தங்களைப் பகட்டாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் அந்தஸ்தைத் தூக்கிப் பிடித்துக்கொள்ளும்போது, அது அடுத்தவர்களுக்குப் போய்விடும், தங்களுக்கு உண்மையான அதிகாரம் இல்லாமல் போய்விடும் என்ற பயத்தில் அவர்கள் அதை விட்டு விட மட்டார்கள். அவர்கள் மற்றவர்களால் ஒதுக்கி விடப்படுவார்கள் என்றும் மதிப்போடு எண்ணப்பட மாட்டார்கள் என்றும் பயப்படுகிறார்கள், தங்கள் வார்த்தைகளுக்கு வல்லமை அல்லது அதிகாரம் இல்லாமல் போய்விடும் என்று பயப்படுகிறார்கள். அதற்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்களுடைய அகந்தை எதுவரை செல்கிறது? அவர்கள் தங்கள் அறிவை இழந்து தன்னிச்சையான கண்மூடித்தனமான நடவடிக்கையை எடுக்கிறார்கள். அதனால் என்ன நேருகிறது? அவர்கள் தங்கள் கடமையை மோசமாகச் செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய செயல்களும் இடையூறையும் உபத்திரவத்தையும் ஏற்படுத்துகிறது, மேலும் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு மாற்றப்படுகிறார்கள். என்னிடம் சொல், எங்காவது, இத்தகைய மனநிலை கொண்ட ஒரு நபர் ஒரு கடமையைச் செய்யத் தகுதி உள்ளவனாக இருக்கிறானா? அவர்கள் எங்கே அமர்த்தப்பட்டாலும், அவர்களால் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யமுடியாது என்று அஞ்சுகிறேன். அவர்களால் மற்றவர்களோடு ஒத்துழைக்க முடியாது—நல்லது, அப்படியானால் அவர்களால் ஒரு கடமையைத் தாங்களாகவே சரியாகச் செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது. அவர்கள் தாங்களாகவே ஒரு கடமையைச் செய்தால், அவர்களுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கும், இன்னும் அதிகத் தன்னிச்சையாக, கண்மூடித்தனமாகச் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். உனது கடமையை நீ நன்றாகச் செய்ய முடியுமா என்பது உன் இயல்பான ஆற்றல்கள், உன் செயல் திறனின் மகத்துவம், உன் மனிதத்தன்மை, உன் திறமைகள், அல்லது உன் திறன்களைப் பொறுத்தல்ல; நீ சத்தியத்தை ஏற்றுக்கொள்ளுகிறவனா, உன்னால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே இருக்கிறது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “கடமையைச் சரியாக நிறைவேற்றுவதற்கு இணக்கமான ஒத்துழைப்பு தேவை”). ஒரு கடமையில மத்தவங்களோடு சேர்ந்து செயல்படாம இருப்பது அகந்தையான மனநிலையில இருந்து வருதுன்னு தேவனோட வார்த்தைகள் சொல்லுது. நாம ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செஞ்சு, நம்மளோட பலவீனங்கள சரிசெய்ய மத்தவங்கள அனுமதிக்க, நாம இணக்கமா செயல்படணும்னும் தேவன் விரும்புறாரு. அது நம்மளோட சொந்த சீர்கேட்டை கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்க உதவுது. அது நமக்கும், நம்மளோட வேலைக்கும் நன்மையா இருக்கும். ஆனா நான் ரொம்ப பெருமையானவளா இருந்தேன். நான் யாரோடும் இணைஞ்சு செயல்படத் தேவையில்ல, சொந்தமாவே என்னால நல்லா வேலை செய்ய முடியும்ன்னு நெனச்சேன். என்னோட சாமர்த்தியம் வெளிப்படுறதுக்கு நான் தனியா வேலை செய்யணுங்கறதுதான் என்னோட பார்வையா இருந்துச்சு, அதனால நான் மத்தவங்களோடு சேர்ந்து வேலைய செய்யவோ அல்லது எந்த ஆலோசனைகளயும் ஏத்துக்கவோ விரும்பல. நான் தனியா பிரகாசிக்க விரும்புனேன். என்னோட கடமையில எனக்கு வழிகாட்டுதல் இல்லாம இருந்துச்சு, ஆனா அத சரிசெய்வதுக்கான வழிகள நான் அப்பவும் தேடல. என்னோட வேல ஏன் பலனளிக்கலன்னும், என்னோட அணுகுமுறை எப்படி இருக்கணும்னும் கொரினா என்கிட்ட சொன்னப்போ, அவங்க சொன்னது சரிதான்னு எனக்குத் தெரியும், ஆனா நான் அவங்களோட பேச்சக் கேக்க விரும்பல. நான் அத செஞ்சு, சிறப்பா செய்யத் தொடங்கிட்டா, வேறு யாராவது பாராட்டப் பெற்றுவிடுவாங்களோ, யாரும் என்னையப் பாராட்ட மாட்டாங்களோ அப்படின்னு நான் பயந்தேன். என்னோடு வேலை செய்ய கொரினா அவங்க ஜெர்ரிய நியமிச்சப்போ, அவர் எனக்கு முன்னாடி சிறப்பா செஞ்சு பாராட்டப் பெற்றுக்குவாரு அதுக்கப்புறமா, நாம எதயாவது சாதிக்கும்போது மத்தவங்க அவர உயர்வா பார்ப்பாங்க, நான் ஒரு திறமையற்ற மேற்பார்வையாளரா இருந்து, ஒரு சாதாரண குழு உறுப்பினரப்போல கூட நான் நல்லா செயல்படலங்கறதப் போல அவங்க நினைப்பாங்கன்னு பயந்தேன். என்னோட பெயரையும் அந்தஸ்தயும் தக்க வச்சுக்க, நான் மத்தவங்களோடு வேலை செய்ய விரும்பல, தன்னிச்சயா வேலை செய்ய விரும்பினேன். நான் என்னோட கடமையச் செய்வதா காட்டிக்கிட்டு இருந்தேன், ஆனா நான் உண்மையில அந்தஸ்தப் பின்தொடர்ந்துக்கிட்டிருந்தேன், என்னை உயர்வா காட்ட மட்டுமே விரும்புனேன். அது ஒரு அகந்தையான மனநிலையக் காட்டுவதா இருந்துச்சு.

அதுக்கப்புறம் நான் தேவனோட வார்த்தைகளின் வேற ஒரு பத்திய வாசிச்சேன்: “ஒரு தலைவனாகவோ அல்லது ஊழியனாகவோ, நீ எப்போதும் உன்னை மற்றவர்களுக்கு மேலானவனாக எண்ணி, ஓர் அரசு அதிகாரியைப் போல் உன்னுடைய கடமையில் மகிழ்ந்து, எப்போதும் உன் நிலையின் பகட்டுகளில் ஈடுபட்டு, எப்போதும் உன்னுடைய சொந்தத் திட்டங்களை தீட்டி, எப்போதும் உன்னுடைய சொந்தப் புகழையும் அந்தஸ்தையும் மட்டுமே கருதி மகிழ்ந்து, எப்போதும் உன்னுடைய சொந்த செயல்பாடுகளையே செய்து, மேலும் எப்போதும் உயர் அந்தஸ்தை அடையவும், அதிக மக்களை நிர்வகித்து கட்டுப்படுத்தவும், உன்னுடைய அதிகாரத்தின் நோக்கெல்லையை விரிவுபடுத்தவும் தேடித் கொண்டிருந்தால், இது பிரச்சினையானதாகும். நீ ஓர் அரசாங்க அதிகாரியைப் போல, ஒரு முக்கியமான கடமையை அனுபவிக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுவது ஆபத்தானது. எப்போதும் இப்படியே நீ செயல்பட்டால், பிறரோடு பணியாற்ற விரும்பாமல், உன்னுடைய அதிகாரத்தைப் பலங்குறையச்செய்து வேறு யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பாமல், வேறு யாரும் மேல் நிலையை அடைந்து கவனத்தைப் பெறுவதற்கு நீ விரும்பாமல், நீ மட்டுமே அதிகாரத்தை உனக்குச் சொந்தமானதாக அனுபவிக்க விரும்பினால், நீ ஓர் அந்திக்கிறிஸ்து(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் எட்டு (பகுதி ஒன்று)”). தேவனோட வார்த்தைகள் என்னோட சரியான நிலைய வெளிப்படுத்துச்சு. என்னோட கடமைய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பதவியாவே நான் நெனச்சேன். எனக்கு மேற்பார்வப் பொறுப்பு கிடச்சவுடனேயே, என்னோட நிலையின் பெருமிதத்த நான் அனுபவிக்க விரும்புனேன். மத்தவங்களோட பாராட்டயும் அங்கீகாரத்தயும் அனுபவிக்கும்படிக்கும், என்னிடத்துல திறமை இருக்குதுன்னும், வேலையில நான் சாமர்த்தியமுள்ளவள்ன்னு அவங்க சொல்லும்படிக்கும் நான் யாரோடும் இணைஞ்சு செயல்பட விரும்பல. அவங்க என்னோட மகிமையத் திருடி என்னோட பெருமிதத்த பறிச்சுக்குவாங்களோன்னு பயந்து, நானே எல்லாத்தயும் செய்ய விரும்புனேன், அதன் மூலமா, எதாவது சாதிக்கப்பட்டப்போ எல்லாப் புகழயும் நான் பெற்றுக்குவேன் எல்லாரோட பார்வையும் என் மேல இருக்கும். என்னோட பெயரையும் அந்தஸ்தயும் பாதுகாக்குறேங்கற நம்பிக்கையில, எங்களோட ஒட்டுமொத்த பணி முடிவுகள நான் கருத்துல கொள்ளவோ அல்லது மத்தவங்களோட உதவிய ஏத்துக்கவோ இல்ல. நான் ரொம்ப அகந்தையுள்ளவளா இருந்தேன்! நான் ஒரு சீர்கெட்ட நபர், அதனால என்னோட வேலையில நிறைய மாறுபாடுகளும் சிக்கல்களும் நான் கருத்துல கொள்ளாத பல அம்சங்களும் இருக்க வாய்ப்பு இருக்குது. ஆனா நான் அகந்தையுள்ளவளாவும், எல்லாரக் காட்டிலும் உயர்ந்தவளப் போலவும் நடந்துக்கிட்டேன், என் மேல எந்தத் தவறும் இல்லைன்னு நெனச்சுக்கிட்டு, நான் வேற யாரோடும் இணைஞ்சு செயல்பட விரும்பல. அது அப்படியே போய்க்கிட்டு இருந்திருந்தா, அது திருச்சபையோட பணியத் தடுத்திருந்திருக்கும், நான் தொடர்ந்து மனந்திரும்ப மறுத்திருந்தா, நான் ஒரு அந்திக்கிறிஸ்துவா ஆகியிருப்பேன். இத உணர்ந்தப்ப எனக்கு பயமா இருந்திச்சி. நான் உண்மையிலயே மாற விரும்புனேன், அந்தஸ்து மீதான என்னோட ஆசைய விட்டுட்டு, என்னோட கடமைய நல்லா செய்ய விரும்புனேன்.

அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் வாசிச்சேன். “உன் சொந்த நலனுக்காகவே எப்போதும் காரியங்களைச் செய்யாதே மற்றும் உன் சொந்த நலன்களை மட்டுமே எப்போதும் கருத்தில் கொள்ளாதே; மனிதனுடைய நலன்களைக் கருத்தில் கொள்ளாதே, மேலும் உன் சொந்தப் பெருமை, புகழ் அல்லது அந்தஸ்து பற்றி சிந்திக்க வேண்டாம். நீ முதலில் தேவனுடைய வீட்டின் நலன்களைப் பற்றி சிந்திக்க வேண்டும், மேலும் அவற்றை உன்னுடைய முதல் முன்னுரிமையாக நிறுத்த வேண்டும். நீ தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொண்டு, உன் கடமையை நிறைவேற்றுவதில் தூய்மையற்றவனாக இருந்திருக்கிறாயா இல்லையா, விசுவாசமாக இருந்திருக்கிறாயா, உனது பொறுப்புகளை நிறைவேற்றி இருக்கிறாயா, உனக்குரிய அனைத்தையும் கொடுத்திருக்கிறாயா என்பதையும், அதோடு கூட, நீ முழு மனதுடன் உனது கடமை மற்றும் திருச்சபையின் பணியைப் பற்றி சிந்தித்திருக்கிறாயா இல்லையா என்பதையும் சிந்தித்துப் பார்க்கத் தொடங்க வேண்டும். இந்த விஷயங்களில் நீ கவனம் செலுத்த வேண்டும். அவற்றைப் பற்றி அடிக்கடி சிந்தித்துப் பார்த்து அவற்றைத் தீர்மானித்தால், உன் கடமையைச் சிறப்பாகச் செய்வது உனக்கு எளிதாக இருக்கும். நீ திறமையில் குறைவுற்றவனாக இருந்தால், உன் அனுபவம் ஆழமற்றதாக இருந்தால் அல்லது உன் தொழிலில் நீ கைதேர்ந்தவனாக இல்லை என்றால், அப்போது, உன் வேலையில் சில தவறுகள் அல்லது குறைபாடுகள் இருக்கக் கூடும், மேலும் முடிவுகள் சிறந்ததாக இல்லாமல் போகலாம்—ஆனால் நீ உன் சிறந்த முயற்சியை முன்னெடுத்திருப்பாய். நீ செய்யும் எல்லாவற்றிலும், உன் சொந்த சுயநலமான ஆசைகளை அல்லது முன்னுரிமைகளைத் திருப்தி செய்யாதே. அதற்குப் பதிலாக, திருச்சபைப் பணிகளிலும் தேவனுடைய வீட்டின் நலன்களிலும் தொடர்ந்து அக்கறை செலுத்து. உன் கடமைகளை நன்றாகச் செய்ய முடியாவிட்டாலும், உன் இருதயம் திருத்தப்பட்டுள்ளது; இதற்கு மேலாக உன் கடமைகளில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க சத்தியத்தைத் தேடினால், அதன் பின் உன் கடமை தரமானதாக இருக்கும், மேலும் நீ சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கக் கூடியவனாக இருப்பாய். இதுவே சாட்சி பகருதல்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒருவருடைய சீர்கேடான மனநிலையை விட்டொழிப்பதன் மூலம் மட்டுமே சுதந்திரத்தையும் விடுதலையையும் அடைய முடியும்”). தேவனோட வார்த்தைகள் ஒரு கடமைங்கறது தனிப்பட்ட ஒரு தொழில் அல்ல, உங்களோட தனிப்பட்ட நலன்களயோ அல்லது பெயர், அந்தஸ்துக்கான உங்க விருப்பத்தயோ திருப்திப்படுத்த அத செய்யக்கூடாது, ஆனா, நீங்க உங்களோட முழு கவனத்தயும் அதுல வைக்கணும், எல்லாத்துலயும் தேவனோட வீட்டின் நலன்களப் பத்தி சிந்திச்சு, தனிப்பட்ட நோக்கங்களால அதக் கறைபடுத்திக்கக் கூடாதுன்னு அதத் தெளிவா விளக்குச்சு. ஆனா நான் என்னோட பெயரையும் பதவியையும் மட்டுந்தான் கருத்துல வெச்சுட்டு, என்னோட அந்தஸ்துக்காக உழச்சுக்கிட்டு இருந்தேன், அதாவது, நான் ரொம்பவே குறஞ்ச செயல்திறன் கொண்டவளா மாறி, சுவிசேஷப் பணிய தாமதப்படுத்திக்கிட்டு இருந்தேன். என்னோட பெயருக்காகவும் அந்தஸ்துக்காகவும் நான் வேலை செய்யுறத நிறுத்தணும்னும், எல்லாத்துலயும் திருச்சபையின் நலன்களப் பத்தி சிந்திக்கணும்னும் எனக்குத் தெரியும். அதுக்கப்புறமா, என்னோட நற்பெயரையும் அந்தஸ்தயும் ஒதுக்கி வச்சிட்டு, மத்தவங்களோடு சேர்ந்து நல்லா வேலை செய்யவும் ஒரு முயற்சி செஞ்சேன், அதோட எப்படி நல்ல வேலை செஞ்சு என்னோட பொறுப்புக்கள நிறைவேத்தணும்னு முழுமனதோடு கவனம் செலுத்துனேன். அத நடைமுறைப்படுத்தின பிறகு நான் ரொம்பவே சமாதானத்த உணர்ந்தேன்.

ஒரு தடவ, நான் வேற ரெண்டு சகோதரிகளோடு, சுவிசேஷத்தப் பகிர்ந்துக்க வெளிய போனேன், சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடியவங்களா இருந்தவங்க உண்மையில தேடுறதுக்கு ஆர்வமா இருந்தாங்க. நான் நெனச்சேன் நான் தனியா போயிருந்தா, சகோதர சகோதரிகள் என்னோட ஐக்கியங்கொள்ளுற திறன்களப் பாராட்டியிருப்பாங்க. அந்தச் சகோதரிகளோடு சேந்து வந்ததுக்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். இது எனக்கு நடந்தப்போ, அதப் பத்தி அப்படி நினைக்கறது சரியானது இல்லன்னு எனக்குத் தெரியும். நான் மறுபடியும் என்னோட தனிப்பட்ட பெயரையும் அந்தஸ்தயும் கருத்துல வச்சேன், சொந்தமா செயல்பட விரும்புனேன். அதனால, நான் தேவனிடத்துல மௌனமா ஒரு ஜெபத்த ஏறெடுத்து, என்னோட சொந்த நலன்களைக் கருத்துல கொள்வத நிறுத்திக்கத் தயாரானேன். என்னோட உணர்வுகள் படிப்படியா அமைதியாச்சு அதோடு, நான் எப்படி ஐக்கியங்கொள்றது எப்படி தேவனுக்கு சாட்சி பகருவதுங்கறதுல என்னோட கவனத்த செலுத்தினேன். தேவனோட வழிநடத்துதலால, ஏழு அல்லது எட்டு பேர் தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டாங்க. நான் உண்மையிலயே நெகிழ்ந்துபோயிட்டேன், கர்த்தராகிய இயேசு சொன்னத நெனச்சுப் பார்த்தேன், “அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்(மத்தேயு 18:19-20). அந்த நேரத்துல, யாரும் சரியானவங்க இல்ல, எல்லாருக்கும் பலங்களும் இருக்குது பலவீனங்களும் இருக்குது. நாம இணக்கமாக ஒத்துழைக்கணும், வேலையில நம்மளோட தவறுகள படிப்படியா குறச்சு, நம்மளோட கடமைகள்ல அதிகமா சாதிக்கறதுக்கு சகோதர சகோதரிகளோடு சேர்ந்து விஷயங்களக் கலந்து பேசணும், ஒருத்தர்க்கு ஒருத்தர் பலவீனங்கள ஈடுகட்டணும் அப்படிங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். இப்போ, நான் மத்தவங்களோட சேந்து என்னோட கடமையச் செய்யறப்போ, அவங்க தங்களோட வேலையில ரொம்ப விவரம் சார்ந்தவங்களா இருப்பத என்னால பாக்க முடியுது, அதோட, அவங்க சுவிசேஷத்த ஏத்துக்கறவங்ககிட்ட உண்மையிலயே கவனமா இருக்காங்க. இது என்கிட்ட இல்லாத பலங்கள். அவங்ககிட்ட இருந்து நான் நெறய கத்துக்கிட்டேன். என்னோட கடமையில எனக்கு வழிகாட்டுதல் இல்லாதப்போ, நான் அவங்களோடு கூட சேர்ந்து தேடி, நான் என்ன செய்யணும்ங்கறத அவங்களோடு கலந்து பேசுறேன் அதோட, என்னோட வேலையில சிறந்த பலன்களப் பெறுறேன். தேவனுக்கு நன்றி! ஒரு கடமையில மத்தவங்களோடு இணஞ்சு செயல்படுறது ரொம்ப முக்கியம்ங்கறத நான் தனிப்பட்ட முறையில அனுபவிச்சறிஞ்சேன்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மேற்பார்வையை ஏதிர்த்த பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

2021 இல், நான் திருச்சபையில் நீர்ப்பாய்ச்சும் பணிக்குப் பொறுப்பாளராக இருந்தேன். அந்த நேரத்தில், மேற்பார்வையிடவும் எங்கள் வேலையைப் பற்றிய...

எப்படி நான் ஒரு அந்திக்கிறிஸ்துவைப் புகாரளித்தேன்

சில வருஷங்களுக்கு முன்னாடி, என்னோட கடமையச் செய்ய வெளியூர்ல இருந்து என்னோட உள்ளூர் திருச்சபைக்குத் திரும்பி வந்தேன். தண்ணீர் பாய்ச்சும்...

Leave a Reply