பெருந்தொற்றின் போது நோய்வாய்ப்பட்ட பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

செப்டம்பர் 28, 2023

கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட சுவிசேத்த ஏத்துகிட்ட உடனயே, தேவனோட வார்த்தைகள்ல இருந்து, தேவன் கடைசி நாட்கள்ல தம்மோட கிரியைய முடிக்கறப்போ, நல்லவங்களுக்கு வெகுமதி கொடுக்கவும், பொல்லாதவங்களுக்கு தண்டன கொடுக்கவும் நம்ம மேல பெரிய பேரழிவுகள் வரும்னு நான் தெரிஞ்சுகிட்டேன். பொல்லாதத செஞ்சு தேவன எதுத்தவங்க பேரழிவுகள்ல அழிக்கப்படுவாங்க, அதே சமயம், தேவனோட வார்த்தைகளின் நியாயத்தீர்ப்ப ஏத்துகிட்டு சுத்திகரிக்கப்பட்டவங்க பாதுகாக்கப்பட்டு, பேரழிவுகள் மத்தியில தேவனால காக்கப்பட்டு நித்திய ஆசீர்வாதங்கள அனுபவிக்கறதுக்காக அவரோட ராஜ்யத்துக்குள்ள கொண்டுவரப்படுவாங்க. அந்த நேரத்துல நான் ராஜ்யத்துக்குள்ள பிரவேசிச்சு, நித்திய ஜீவன பெறுறது ஒரு பெரிய ஆசீர்வாதமா இருக்கும்னும், தேவனோட கிரியை முடியறப்போ, நான் நிலைச்சிருக்க தகுதியுள்ளவளா இருக்க வாழ்க்கைல ஒரு முறை கெடைக்குற இந்த வாய்ப்ப நான் பொக்கிஷமா கருதி, என்னோட கடமைய சிறப்பா செய்யணும்னும், தேவனுக்காக கடுமையா பணியாற்றணும்னும் நினைச்சேன். அதனால, நான் என்னோட வேலைய விட்டுட்டு, சுவிசேஷத்த பரப்பத் தொடங்குனேன். அந்தப் பேரழிவுகள் அதிகரிச்சுகிட்டே இருக்குறத பாத்து, இப்படி ஒரு முக்கியமான நேரத்துல, நிறைய நற்கிரியைகள தயார் செய்யவும் ராஜ்யத்தின் சுவிசேஷத்த பரப்புறதுல பங்களிப்பத் தர அதிகமான ஜனங்க கிட்ட கடைசி நாட்களின் தேவனோட சுவிசேஷத்த பகிர்ந்துக்கவும் நான் விரும்புனேன். அதனால, சுவிசேஷத்த பரப்புறதுலையே என் முழு ஆற்றலையும் பயன்படுத்துனேன், தினமும் காலையில இருந்து ராத்திரி வரைக்கும் வேலை செஞ்சுகிட்டே இருந்தேன். என்னோட மாவட்டத்துல அதிகமான ஜனங்கள் கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏத்துகிட்டாங்க, திருச்சபை ஒன்னு பின்னாடி ஒண்ணா ஆரம்பிக்கப்பட்டுச்சு. இந்த முடிவுகள பாத்ததும் என்னைப் பத்தி நானே சந்தோஷப்பட்டுகிட்டேன். சுவிசேஷ பணிக்கான என்னோட பங்களிப்புகள் கவனிக்கப்படாம போகாதுனு நான் நினைச்சேன். உலகத்த அழிச்சுகிட்டிருந்த பெருந்தொற்று பரவலையும், தொற்றுகளோட எண்ணிக்கை அதிகரிக்கறதையும் பாத்து, நான் முழுசா அமைதியா உணர்ந்தேன். என்னோட கடமையில தேவனுக்காக நான் கடுமையா வேலை செஞ்சதால, அது எவ்ளோ அதிகமா பரவி இருந்தாலும் சரி, அது என்னை பாதிக்காதுனு நான் நினைச்சேன். ஆனா, பெருந்தொற்று வைரஸால எனக்கு ஏற்பட்ட ஒரு எதிர்பாராத தொற்று என்னோட எண்ணங்களையும் கற்பனைகளையும் சிதைச்சிருச்சு. கடந்த வருஷங்கள்ல என்னோட விசுவாசத்துல இருந்த நோக்கங்களயும் கலப்படங்களயும் பத்தி நான் சிந்திக்க வேண்டியிருந்துது.

2021 மே மாசத்தில ஒரு நாள், நான் திடீர்னு இரும ஆரம்பிச்சேன், அப்புறம் காய்ச்சல் வந்து, நான் முழுசா பெலவீனமா உணர்ந்தேன். முதல்ல எனக்கு வெறும் சளி தான் பிடிச்சிருக்குனு நினைச்சு, நான் ரொம்ப கவலப்படல, ஆனா அந்த அறிகுறிகள் ஒரு வாரத்துக்குப் போகாம இருந்துது. என்னோட அறிகுறிகள் கொரோனா வைரஸ் அறிகுறிகளோட ரொம்பவும் ஒத்துப் போறத ஒரு சகோதரி கவனிச்சாங்க, எனக்கு தொற்று ஏற்பட்டுருச்சுன்னு கவலப்பட்டாங்க, அதனால நான் மருத்துவமனைக்குப் போய் பரிசோதனை செஞ்சுக்கணும்னு அறிவுறுத்துனாங்க. நான் அதப் பெருசா கண்டுக்கல. நான் தினமும் ரொம்ப நேரம் உழைச்சு, கஷ்டப்பட்டு, என்னோட கடமைக்கான விலைக்கிரயத்த செலுத்துனேன்னு நினைச்சேன், கூடவே எனக்கு அதுல ரொம்ப நல்ல பலன்களும் கிடைச்சுது. அதோட, நான் பொல்லாதத செஞ்சதில்ல, திருச்சபையோட பணிக்கு இடையூறு செஞ்சது இல்ல, அப்புறம் எப்படி எனக்கு வைரஸ் பாதிப்பு வரலாம்? ஆனா பரிசோதன முடிவுகள் முழுசா நான் எதிர்பாத்ததுக்கு மாறா இருந்துச்சு. எனக்கு வைரஸ் தொற்று உறுதியாச்சு. நான் அதிர்ச்சியோட வீட்டுக்கு போனேன், எனக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டுச்சுனு எனக்கு சுத்தமா புரியவே இல்ல. நான் பல வருஷமா கடமைய செஞ்சுகிட்டு வரேன், தேவன் ஏன் என்னைப் பாதுகாக்கல? என்னோட சகோதர சகோதரிகளுக்குத் தெரிஞ்சா அவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க? நான் தேவனுக்கு இடறலா எதையோ செஞ்சதால தண்டிக்கப்பட்டிருக்கேன்னு அவங்க நினைப்பாங்களா? ஆனா நான் பொல்லாதத செஞ்சு திருச்சபையோட பணிக்கு இடையூறு செஞ்சிருந்தத நினைக்கல. போன வருஷம் பெருந்தொற்று பரவல் ஆரம்பிச்சதுல இருந்து உலகம் முழுக்க லட்சக்கணக்கானவங்க ஏற்கனவே இறந்துட்டாங்க. இப்போ எனக்கும் தொற்று ஏற்பட்டிருக்கறதால, நான் சாகப் போறனா? தேவனோட கிரியை முடிவடையுற நேரத்துல, நான் செத்துப் போய்ட்டேன்னா அப்புறம், என்னோட இத்தன வருஷ உழைப்பு ஒன்னும் இல்லாம போகும் இல்லையா? அப்புறம் எதிர்கால ராஜ்யத்துல எந்தவொரு ஆசீர்வாதத்துலயும் எனக்கு பங்கு இருக்காது. அதப் பத்தி நான் எந்த அளவுக்கு அதிகமா யோசிச்சேனோ, அந்த அளவுக்கு அதிகமா நான் வருத்தப்பட்டேன், இந்தச் சூழ்நிலைய எப்படிக் கடந்து வருறதுனு எனக்குத் தெரியல. நான் தேவன கூக்குரலிட்டு அழைச்சு, “தேவனே, எனக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட நீங்க அனுமதிச்சீங்க—இது உம்முடைய சித்தமா இருக்கணும். நீங்க தவறு செய்ய வாய்ப்பில்ல, அதனால நான் எந்த வகையிலாவது உங்களுக்கு எதிரா கலகம் செஞ்சு உங்கள எதிர்த்திருக்கணும். ஆனா உங்களோட மனநிலைய நான் எப்படி புண்படுத்துனேன்னு எனக்குத் தெரியல. நான் எப்படி தவறு செஞ்சேன்னு தெரிஞ்சுக்க தயவு செஞ்சு என்னை பிரகாசமாக்குங்க. நான் மனந்திரும்ப தயாரா இருக்கேன்” அப்படினு ஜெபம் செஞ்சேன். அதுக்கப்புறம், தேவனோட வார்த்தைகளோட ஒரு பத்திய நான் நினைச்சு பாத்தேன். “நோயின் ஆரம்பத்தை எவ்வாறு அனுபவிக்க வேண்டும்? நீங்கள் ஜெபிக்கவும், அவரது சித்தத்தைப் புரிந்துகொள்ளவும் தேவனுக்கு முன்பாக வர வேண்டும், மேலும் நீங்கள் என்ன தவறு செய்தீர்கள், இன்னும் தீர்க்கப்படவேண்டிய என்ன சீர்கேடுகள் உங்களுக்குள் உள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உங்கள் சீர்கெட்ட மனநிலைகளை வேதனையில்லாமல் தீர்க்க இயலாது. ஜனங்கள் வேதனையால் உறுதியடைய வேண்டும்; அப்போதுதான் அவர்கள் ஒழுக்கக்கேட்டை நிறுத்திவிட்டு எப்போதும் தேவனுக்கு முன்பாக ஜீவிப்பார்கள். துன்பத்தை எதிர்கொள்ளும்போது, ஜனங்கள் எப்போதும் ஜெபம் செய்வார்கள். உணவு, உடை அல்லது இன்பம் பற்றி எந்த எண்ணமும் இருக்காது; எப்போதும் அவர்கள் இருதயத்தில் ஜெபிப்பார்கள் மற்றும் இந்த நேரத்தில் அவர்கள் ஏதாவது தவறு செய்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்ப்பார்கள். பெரும்பாலான நேரங்களில், நீங்கள் கடுமையான நோய் அல்லது சில அசாதாரண நோய்களால் பாதிக்கப்படும்போது, அது உங்களுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது, இந்த காரியங்கள் தற்செயலாக நடப்பதில்லை; உன் உடல்நிலை சரியில்லை என்றாலும் அல்லது நீ ஆரோக்கியமாக இருந்தாலும், தேவனுடைய சித்தமே சகலத்திற்கும் பின்னால் உள்ளது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவன் மீதான விசுவாசத்தில், சத்தியத்தைப் பெறுவது மிகவும் முக்கியம்”). சரியான நேரத்துல வழங்கப்பட்ட தேவனோட வார்த்தைகளோட பிரகாசம், என்னோட தொற்று எதேச்சையானதில்லங்கறதயும், இது முழுசும் தேவனோட ஆளுகையும் ஏற்பாடுகளுமா இருந்துச்சுங்கறதயும் எனக்கு காட்டிச்சு. நான் தேவனோட சித்தத்த தேடி, என்னைப் பத்தி நானே சிந்திச்சுப் பாக்க வேண்டியிருந்துச்சு. எதுவா இருந்தாலும் சரி என்னால தேவன குறை சொல்லிட்டு அவர் மேல பழிய போட முடியாது. அடுத்த சில நாட்கள் வீட்டுல நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தப்போ, நான் வெளிப்படுத்துன என்னோட சீர்கேட்ட பத்தியும், என்னைப் பத்தி நான் தெரிஞ்சுகிட்டது பத்தியும் என்னோட சகோதர சகோதரிகள் கிட்ட வெளிப்படையா சொன்னேன், நான் தேவனோட வார்த்தைகள்ல பின்பற்றி பிரவேசிக்க வேண்டிய பாதைய கண்டுபிடிச்சேன். நான் உடல் ரீதியா எப்படி உணர்ந்தாலும் சரி, நான் இணையத்துல சுவிசேஷத்த தொடர்ந்து பகிர்ந்துகிட்டிருந்தேன். ரெண்டு நாள் கழிச்சு, நான் ரொம்ப நல்லா உணர்ந்தேன், அதுக்கப்புறம் எனக்கு இருமல் வரல, என்னோட வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துச்சு, என்னோட ஆற்றலும் பெலமும் நல்லாவே மீண்டிருக்கு. நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். தேவன் என்னோட கீழ்ப்படிதலயும், மனந்திரும்புதலயும் பாத்து, அவர் என்னை கவனிச்சுகிட்டார்னு நினைச்சேன். அந்த நினைப்புல, என்னோட மன உளச்சல் கொஞ்சம் குறைஞ்சுச்சு. ஆனா அடுத்த நாள் நான் திடீர்னு என்னோட நெஞ்சுல இறுக்கத்தயும் அசௌகரியத்தயும் உணர்ந்தேன், என்னால இருமறத நிறுத்த முடியல. அதுக்கப்புறம் எனக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு முழுசா பெலவீனமடஞ்சேன். நான் ரொம்ப பீதி அடைஞ்சேன். எனக்கு நோய் கண்டறியப்பட்டதுல இருந்து, நான் தேவன குறை சொல்லாம என்னோட கடமைய தொடர்ந்து செஞ்சுகிட்டிருந்தேன். நான் எப்படி இன்னும் அதிகமா நோய்வாய்ப்பட்டேன்? அதுக்கு சிகிச்சை தர எந்தவொரு மருந்தும் இல்ல, அதனால தேவன் என்னை காப்பாத்தலன்னா, நான் நிச்சயமா இறந்துருவேன். மரணம் பத்தின சிந்தனை எனக்கு ரொம்பவும் பயத்த ஏற்படுத்திச்சு—அத என்னால ஏத்துக்க முடியல. நான் தேவன 10 வருஷத்துக்கு மேல பின்பற்றிட்டு வந்திருந்தேன், நான் என்னோட வீட்டயும் வேலையயும் விட்டுட்டு, நாள் முழுக்க என்னோட கடமைய செஞ்சேன். நான் அதிகமா கஷ்டப்பட்டு, அதிகமா விலைக்கிரயம் செலுத்தியிருந்தேன். தேவன் அத எல்லாம் நெனச்சு பாக்கவே இல்லையா? நான் இறந்து போனா, ராஜ்யத்தின் அழக என்னால ஒருபோதும் பாக்க முடியாது அல்லது அதோட ஆசீர்வாதங்கள அனுபவிக்க முடியாது. நான் அத பத்தி எவ்ளோ அதிகமா நினைச்சேனோ அவ்ளோ அதிகமா நான் மனச்சோர்வடைஞ்சேன். நான் அப்பவும் என்னோட கடமைய செஞ்சுகிட்டிருந்தேன், ஆனா எனக்குள்ள உள்ளான ஆர்வம் எதுவும் இல்ல, நான் அதிகமா செய்யவேண்டியிருந்தப்போத ரொம்ப எரிச்சலடைஞ்சேன். எனக்குக் கொஞ்சம் ஓய்வு கெடைக்கும்ங்கறதுக்காக நான் அத செஞ்சு முடிக்க அவசரப்படுவேன். முன்னாடி எல்லாம் எப்பவும் காலையில இருந்து ராத்திரி வரைக்கும் நான் என்னோட கடமையசெய்வேன், தேவன் என்னைப் பாதுகாப்பார்னு நான் நினைச்சேன், ஆனா இப்போ தேவன் அத செய்யாததால, நான் என்னோட சொந்த நலன பத்தி சிந்திச்சு, என்னோட ஆரோக்கியத்த கவனிக்க வேண்டியிருந்துது. நான் ரொம்ப மன அழுத்தமும் சோர்வும் அடைஞ்சா, என்னோட உடல்நிலை சரி ஆகாது. கூட்டங்கள்ல, மத்த சகோதர சகோதரிகளுக்கு அதிகமா உழைக்குற சக்தி இருந்துது, அவங்களால தொடர்ந்து ஐக்கியப்பட முடிஞ்சுது. ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும், பேசுனப்போ எல்லாம் இரும தொடங்குனேன், தேவனோட வார்த்தைகள நான் வாசிச்சப்போ என்னால மூச்சு விட முடியல. நான் ரொம்ப வருத்தப்பட்டு, தேவன்கிட்ட போய்: “தேவனே, நான் பொதுவா என்னோட கடமையில ரொம்ப விடாமுயற்சியோட இருக்கேன், நான் தீவிரமாவும் பொறுப்புடனும் இருக்கேன். மத்த சிலரால அவங்களோட கடமைகள்ல என்னைப் போல இருக்க முடியல. மத்தவங்க எல்லாரும் ஆரோக்கியமா இருந்து, அவங்களோட கடமைகளச் செய்றாங்க, ஏன் எனக்கு மட்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுருக்கு? இது உங்ககிட்டயிருந்து வந்த உபத்திரவம்னா, என்னை விட அதிகமா சத்தியத்தப் பின்தொடருற மத்தவங்க திருச்சபையில இருக்காங்க, அவங்க ஏன் இத எதிர்கொள்ளல? இது உங்க தண்டனையா இருந்தா, நான் பொல்லாத எதையும் செய்திடல அல்லது திருச்சபையின் பணிக்கு இடையூறு செய்திடல, அல்லது உங்க மனநிலைய புண்படுத்தல. தேவனே, நான் இப்பவும் என்னோட கடமையச் செய்ய விரும்புறேன், நான் செய்ற கடமைய நான் விரும்புறேன். அவதை நான் போதுமான அளவு செஞ்சு முடிக்கல—நான் தொடர்ந்து ஜீவித்து கடமையச் செய்ய விரும்புறேன். தேவனே, நான் இப்போ ஒரு முக்கியமான கடமையச் செஞ்சுக்கிட்டிருக்கேன், என்னால இன்னும் உமக்கு ஊழியம் செய்ய முடியும். நான் தொடர்ந்து ஜீவித்து உமக்கு ஊழியம் செய்யும்படி தயவு செஞ்சு என்னைக் காத்தருளும்” அப்படினு நியாயம் கேக்காம இருக்க முடியல. நான் இத அப்படி யோசிச்சப்போ, தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்தி ரொம்பத் தெளிவா என் நினைவுக்கு வந்துது: “சிருஷ்டிக்கப்பட்ட உயிரினமான நீ எந்த அடிப்படையில் தேவனிடம் கோரிக்கைகளை வைக்கிறாய்? தேவனிடம் கோரிக்கைகளை வைக்க ஜனங்கள் தகுதியற்றவர்கள் ஆவர். தேவனிடம் கோரிக்கைகளை வைப்பதை விட நியாயமற்றது வேறு எதுவும் இல்லை. அவர் செய்ய வேண்டியதை அவர் செய்வார், மேலும் அவருடைய மனநிலை நீதியுள்ளதாகும். நீதியானது எந்த விதத்திலும் சரியானதாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை; இது சமத்துவ வாதமோ, அல்லது நீ எவ்வளவு வேலையை செய்து முடித்திருக்கிறாய் என்பதற்கு ஏற்ப உனக்கு தகுதியானதை உனக்கு ஒதுக்குவதோ, அல்லது நீ செய்த எந்த வேலைக்கும் உனக்கு ஊதியம் கொடுப்பதோ, அல்லது நீ எடுக்கும் எந்த முயற்சிக்கும் ஏற்ப உனக்கு கொடுப்பதோ அல்ல. இது நீதி அல்ல, இது வெறுமனே நியாயமாகவும் நேர்மையாகவும் இருப்பதாகும். வெகு சிலரே தேவனுடைய நீதியுள்ள மனநிலையை அறியும் திறன் கொண்டவர்களாவர். ஒருவேளை யோபு சாட்சி பகர்ந்த பின்னர் தேவன் யோபுவை நீக்கியிருந்திருப்பார் என்றால்: இது நீதியுள்ளதாக இருக்குமா? உண்மையில், அது நீதியுள்ளதாக இருக்கும். இது ஏன் நீதி என்று அழைக்கப்படுகிறது? ஜனங்கள் நீதியை எவ்வாறு பார்க்கிறார்கள்? ஏதாவது ஜனங்களின் கருத்துகளுக்கு ஏற்ப இருந்தால், தேவனை நீதியுள்ளவர் என்று சொல்வது அவர்களுக்கு மிகவும் எளிது; இருப்பினும், அந்த காரியம் தங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப இருப்பதை அவர்கள் காணவில்லை என்றால்—அது அவர்கள் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாக இருந்தால்—தேவன் நீதியுள்ளவர் என்று சொல்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும். அன்று தேவன் யோபுவை அழித்திருந்தால், ஜனங்கள் அவரை நீதிமான் என்று சொல்லயிருக்க மாட்டார்கள். உண்மையில், ஜனங்கள் சீர்கெட்டுப்போயிருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் ஆழமாகச் சீர்கெடுக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், தேவன் அவர்களை அழிக்கும்போது தம்மை நியாயப்படுத்த வேண்டுமா? அவர் எந்த அடிப்படையில் அவ்வாறு செய்கிறார் என்பதை ஜனங்களுக்கு அவர் விளக்க வேண்டுமா? தேவன் தாம் விதித்துள்ள விதிகளை ஜனங்களுக்குச் சொல்ல வேண்டுமா? எந்தத் தேவையும் இல்லை. தேவனுடைய பார்வையில், சீர்கெட்டு இருப்பவரும், தேவனை எதிர்க்கக் கூடியவரும் எந்த மதிப்பும் இல்லாதவராவார்; இருப்பினும் தேவன் அவர்களைக் கையாள்வது ஏற்றதாக இருக்கும், மேலும் அனைத்தும் தேவனுடைய ஏற்பாடுகளாகும். நீ தேவனுடைய பார்வைக்குப் பிடிக்கவில்லை என்றால், சாட்சியத்திற்குப் பிறகு உன்னால் எந்தப் பயனும் இல்லை, அதனால் உன்னை அழித்து விட்டதாக அவர் சொன்னால், இதுவும் கூட, அவருடைய நீதியாக இருக்குமா? அவருடைய நீதியாகவே இருக்கும். … தேவன் செய்வதெல்லாம் நீதியானதாகும். அது மனிதர்களுக்குப் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம் என்றாலும், அவர்கள் விருப்பப்படி நீயாயத்தீர்ப்புகளைச் செய்யக்கூடாது. அவர் செய்யும் ஏதேனும் மனிதர்களுக்கு நியாயமற்றதாகத் தோன்றினால், அல்லது அது குறித்து அவர்களுக்கு ஏதேனும் கருத்துகள் இருந்தால், அவர் நீதியுள்ளவர் அல்ல என்று சொல்ல அவர்களை வழிநடத்தினால், அவர்கள் மிகவும் நியாயமற்றவர்களாக இருக்கிறார்கள்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகளப் பத்தி சிந்திச்சப்போ, அவர் என்னை முகமுகமா பாத்து கண்டிச்ச மாதிரி நான் உணர்ந்தேன், ஒவ்வொரு வார்த்தையும் என்னோட இதயத்துக்குள்ள போச்சு. நியாயமில்லாமலும் நீதியில்லாமலும் இருந்ததுக்காக தேவன நான் குறை சொல்லலையா? நான் தேவன் முன்னிலையில பேரம் பேசி, சாக்குப்போக்குகள சொல்லி, நிபந்தனைகளை வைக்கலையா? பல வருஷங்களா கஷ்டப்பட்டு, என்னோட கடைமையில என்னை நானே ஒப்புக்கொடுத்து சில விஷயங்கள நிறைவேத்துனேன், அதனால பேரழிவுல நான் விழுறதுல இருந்து தேவன் என்னை பாதுகாக்கணும்னும், அதுவே அவரோட நீதியா இருக்கும்னும் நான் நினைச்சேன். ஆனா உண்மையில அது முற்றிலுமா என்னோட எண்ணங்களும் கற்பனைகளுமா இருந்துது, சத்தியத்துக்கு கொஞ்சங்கூட ஏத்ததா இல்ல. தேவனே சிருஷ்டிப்பின் கர்த்தர், நான் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன். நான் அனுபவிக்கற எல்லாமே தேவனிடமிருந்து வருது, என்னோட ஜீவனும் தேவன் தந்ததுதான். தேவன் என்னோட விதிய எப்படி எழுதி இருக்காரு, எவ்வளவு காலம் அவர் என்னை ஜீவிக்க விடுவாருங்கறது எல்லாம் அவர் கையில இருக்கு. ஒரு சிருஷ்டியா, நான் கீழ்ப்படிஞ்சு அத ஏத்துக்கணும். தேவனிடம் நியாயம் கேட்டு, நிபந்தனைகள வைக்க எனக்கு என்ன உரிமை இருக்கு? ஆனா நான் அத்தன வருஷமா விசுவாசம் வச்சிருந்தேன், தேவனிடமிருந்து சத்தியத்தோட நீர்ப்பாய்ச்சுதலையும் வாழ்வாதாரத்தையும் அதிகமா அனுபவிச்சேன், அப்பவும் எனக்கு நன்றியே இல்ல. இப்போ எனக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, மரணத்தோட அச்சுறுத்தல எதிர்கொள்ளுறப்போ, நான் தேவன் கிட்ட நியாயம் கேட்டு எதிர்த்தேன், நீதியில்லாததுக்காக அவர குறை சொன்னேன். என்னோட மனசாட்சியும் நியாயமும் எங்க இருந்துது? அத பத்தி நான் சிந்திச்சப்போ, நான் அதிகமான குற்றவுணர்ச்சியையும் வெட்கத்தையும் உணர்ந்தேன், தேவனுக்கு முன்னாடி மண்டிபோட்டு ஜெபம் செஞ்சேன். “தேவனே, நான் ரொம்பநியாயமற்றவள்! நான் உம்மாலே சிருஷ்டிக்கப்பட்டேன்; நான் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன். உம்முடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் எல்லாத்துக்கும் நான் கீழ்ப்படியணும். அதுவே சரியானது மற்றும் இயல்பானது. மரணம் ஏற்படுறதுக்கான வாய்ப்போட இந்த வைரஸால பாதிக்கப்பட என்னை நீர் அனுமதித்தீர். நான் மரிக்க விரும்பல, நான் கீழ்ப்படிய விரும்பல, அதனால நான் உம்மிடம் வாதிட்டேன், சரியா செயல்படாததுக்காக உம்மை குறை கூறினேன், என்னை ஜீவிக்க விடும்படி உம்மிடம் கேட்டேன். என்னிடம் கீழ்ப்படிதலோ, நியாயமோ முற்றிலுமா இல்லாம இருந்துது. நான் ரொம்ப கலகமிக்கவளா இருந்தேன்! தேவனே, என்னை குறிச்சு நான் சிந்திச்சுது, உம்மிடம் மனந்திரும்ப விரும்புறேன்.”

அடுத்த கொஞ்ச நாள்ல, பத்தின என்னோட குறைகூறுதல்களயும் தவறான புரிதல்களயும் பத்தி நினைச்சு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். குறிப்பா, என்னோட நிலை ரொம்ப மோசமானப்போ, எப்படி நான் தேவனை எதுத்து, அவர் கிட்ட வாக்குவாதம் செஞ்சு, எதிர்மறையாகி, தளர்ந்து போனேன், என்னோட கடமையில சிரத்தையில்லாம இருந்து, வேணும்னே மெதுவா செயல்பட்டேன்னு சிந்திச்சு, நான் இன்னும் அதிகமான குற்றவுணர்ச்சியயும் அமைதியின்மையயும் உணர்ந்தேன். நான் நோய்வாய்ப்படாம, எந்தவொரு நெருக்கடியும் இல்லாம இருந்தப்போ, நான் தேவனோட நீதியையும், சிருஷ்டிப்பின் கர்த்தரோட ஏற்பாடுகளுக்கு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள் கீழ்ப்படியணும்னும் பறைசாற்றுனேன். நான் நோய்வாய்ப்பட்டதும் ஏன் இவ்ளோ கலகத்தையும் எதிர்ப்பையும் நான் வெளிக்காட்டுனேன்? என்னோட தியான நேரங்கள்ல தேவனோட வார்த்தைகள்ல ஒன்ன படிச்சேன். “தேவனுடனான மனிதனின் உறவு வெறும் அப்பட்டமான சுயநலத்தில் ஒன்றாகும். இது ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் இடையிலான ஒரு உறவாகும். தெளிவாகச் சொல்வதானால், இது தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான உறவுக்கு ஒத்ததாகும். முதலாளி வழங்கும் வெகுமதிகளைப் பெறுவதற்கு மட்டுமே தொழிலாளி வேலை செய்கிறார். அத்தகைய உறவில் எந்த பாசமும் இல்லை, மாறாக பரிவர்த்தனை மட்டுமே உள்ளது. நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் அங்கு இல்லை, மாறாக தர்மமும் கருணையும் மட்டுமே உள்ளது. எந்தப் புரிந்துகொள்ளுதலும் இல்லை, மாறாக அடக்கிவைத்துள்ள கோபமும் வஞ்சனையுமே உள்ளது. எந்த நெருக்கமும் இல்லை, மாறாக ஒரு கடந்து செல்லமுடியாத ஒரு இடைவெளி மட்டுமே உள்ளது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்”). “அந்திக்கிறிஸ்துகளைப் பொறுத்தவரை, ஒருவனால் ஒரு கடமையைச் செய்யவும், விலைக்கிரயம் செலுத்தவும், சில கஷ்டங்களை அனுபவிக்கவும் முடியும் வரை, அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். அதனால், கொஞ்ச காலம் திருச்சபைப் பணிகளைச் செய்தபின், அவர்கள் திருச்சபைக்குச் செய்த வேலைகள், தேவனுடைய வீட்டிற்கு அவர்கள் செய்த பங்களிப்புகள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு அவர்கள் செய்தவை ஆகியவற்றைக் கணக்கிடத் தொடங்குகிறார்கள். அவர்கள் இதையெல்லாம் தங்கள் மனதில் உறுதியாக வைத்திருக்கிறார்கள், அவர்கள் செய்வது மதிப்புக்குரியதா என்பதை அவர்கள் நன்றாகத் தீர்மானிக்கும்படிக்கு, தேவனிடமிருந்து என்ன கிருபைகளையும் ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள் என்பதைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏன் இத்தகைய விஷயங்களைக்குறித்துமிகவும் சிந்திக்கிறார்கள்? அவர்கள் தங்கள் இருதயத்தின் ஆழங்களில் எதைப் பின்தொடர்கிறார்கள்? தேவன் மீது அவர்கள் விசுவாசம் வைப்பதற்கான நோக்கம் என்ன? ஆரம்பத்திலிருந்தே, தேவன் மீதான அவர்களின் விசுவாசம் ஆசீர்வாதங்களைப் பெறுவதைப் பற்றியதே. மேலும் அவர்கள் எத்தனை வருடங்களாக பிரசங்கங்களைக் கேட்டாலும், தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் எவ்வளவு புசித்துப் பானம்பண்ணினாலும், எத்தனை கோட்பாடுகளை அவர்கள் புரிந்துகொண்டாலும், தாங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் உந்துதலையும் அவர்கள் ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். கடமையை நிறைவேற்றும் சிருஷ்டியாக இருக்கவும் தேவனுடைய ஆளுகையையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று நீங்கள் அவர்களிடம் கேட்டால், ‘அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் பாடுபட வேண்டியது அதற்காக அல்ல. நான் பாடுபட வேண்டியது எதற்காகவென்றால்: நான் போராட்டத்தைப் போராடினபோது, தேவையான முயற்சிகளை மேற்கொண்டபோது, தேவையான கஷ்டங்களை அனுபவித்தபோது—தேவன் கோருகிறபடி அதை நான் செய்தவுடன்—தேவன் எனக்குப் பிரதிபலன் அளிக்க வேண்டும் மற்றும் நிலைத்திருக்கவும், மேலும் ராஜ்யத்தில் கிரீடம் தரிப்பிக்கப்படவும், தேவனுடைய ஜனங்களை விட உயர்ந்த ஒரு பதவியை வகிக்கவும் என்னை அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நகரங்களுக்கு நான் பொறுப்பாளியாக இருக்க வேண்டும்’ என்று அவர்கள் சொல்லுவார்கள். இதில்தான் அந்திக்கிறிஸ்துகள் அதிக அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். தேவனுடைய வீடு சத்தியத்தை எப்படி ஐக்கியப்படுத்தினாலும், அவர்களின் உந்துதல்களையும் விருப்பங்களையும் அகற்ற முடியாது; அவர்கள் பவுலைப் போன்றவர்களாகவே இருக்கிறார்கள். அத்தகைய வெளிப்படையான பரிவர்த்தனை ஒரு வகையான பொல்லாததும் தீயதுமான மனநிலையைக் கொண்டிருக்கவில்லையா? சில மதவாதிகள், ‘எங்கள் சந்ததி சிலுவையின் பாதையில் தேவனைப் பின்பற்றுகிறது. அது ஏனென்றால், தேவன் எங்களைத் தெரிந்துகொண்டார், ஆகவே, நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்குத் தகுதியுடையவர்கள். நாங்கள் கஷ்டப்பட்டிருக்கிறோம் மற்றும் விலைக்கிரயம் செலுத்தியிருக்கிறோம், மற்றும் கசப்பான கோப்பையிலிருந்து திராட்சை ரசத்தைக் குடித்திருக்கிறோம். எங்களில் சிலர் கைது செய்யப்பட்டும், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டும் கூட இருக்கின்றனர். இத்தனை கஷ்டங்களையும் அனுபவித்து, பல பிரசங்கங்களைக் கேட்டு, வேதாகமத்தைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொண்ட பிறகு, ஒரு நாள் நாங்கள் ஆசீர்வதிக்கப்படாவிட்டால், மூன்றாம் வானத்திற்குச் சென்று தேவனிடத்தில் நியாயத்தைக் கேட்டு வாதாடுவோம்’ என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட எதையாவது நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? அவர்கள் தேவனிடத்தில் நியாயம் கேட்டு வாதாட மூன்றாவது வானத்திற்குப் போவதாகச் சொல்கிறார்கள்—அது எவ்வளவு தைரியமானது? அதைக் கேட்பதே உங்களுக்குப் பயத்தை உண்டாக்கவில்லையா? தேவனை சோதிக்கவும் அவரிடம் நியாயங்கேட்டு வாதாடவும் யார் துணிகிறார்? … அப்படிப்பட்டவர்கள் பிரதானதூதர்கள் அல்லவா? அவர்கள் சாத்தான் இல்லையா? விரும்பும் யாருடனும் நீ வாக்குவாதம்பண்ணலாம், ஆனால் தேவனோடு வாக்குவாதம் பண்ணக் கூடாது. நீ அப்படிச் செய்யக்கூடாது, அப்படிப்பட்ட எண்ணங்களை நீ நினைக்கக் கூடாது. ஆசீர்வாதங்கள் தேவனிடமிருந்து வருகின்றன, அவர் யாருக்கு அவற்றைக் கொடுக்க விரும்புகிறாரோ, அவர்களுக்கு அவற்றைக் கொடுக்க முடியும். ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான கோரிக்கைகளை நீ நிறைவேற்றினாலும், தேவன் அவற்றை உனக்கு வழங்கவில்லை என்றால், நீ அவருடன் வாக்குவாதம் செய்ய முயற்சிக்கக் கூடாது. முழு பிரபஞ்சமும் முழு மனித இனமும் தேவனுடைய கரங்களில் உள்ளன, தேவன் இறுதி முடிவைக் கொண்டிருக்கிறார், நீ முக்கியத்துவமற்ற ஒரு சிறிய மனுஷனாய் இருக்கிறாய்—ஆனாலும், நீ இன்னும் தேவனுடன் வாக்குவாதம் செய்யத் துணிகிறாய். உன்னால் எப்படி இவ்வளவு கர்வமாக இருக்க முடிகிறது? நீ யார் என்று கண்ணாடியில் பார்ப்பது நல்லது. சிருஷ்டிகருக்கு எதிராகக் கூக்குரலிடவும், போராடவும் நீ துணிந்தால், நீயே உன் சொந்த மரணத்தைத் தேடிக்கொள்ளவில்லையா? ‘ஒரு நாள் நாங்கள் ஆசீர்வதிக்கப்படாவிட்டால், மூன்றாம் வானத்திற்குச் சென்று தேவனிடத்தில் நியாயத்தைக் கேட்டு வாதாடுவோம்.’ இந்த வார்த்தைகளால், நீ வெளிப்படையாக தேவனுக்கு எதிராகக் கூக்குரலிடுகிறாய். மூன்றாம் வானம் என்பது எப்படிப்பட்ட ஸ்தலம்? அது தேவன் தாபரிக்கும் ஸ்தலமாக இருக்கிறது. மூன்றாம் வானத்திற்குச் சென்று தேவனிடத்தில் நியாம் கேட்டு வாதாடத் துணிவது அரண்மனையைத் தாக்குவதற்கு ஒப்பானது. அது அப்படித்தானே? சிலர், ‘இதற்கும் அந்திக்கிறிஸ்துகளுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று சொல்லுகிறார்கள். இதற்கு மிகவும் சம்பந்தம் இருக்கிறது, ஏனென்றால் தேவனுடன் நியாயம் கேட்டு வாதாட மூன்றாம் வானத்திற்குச் செல்ல விரும்புகிறவர்கள் அந்திக்கிறிஸ்துகளாய் இருக்கிறார்கள்; அந்திக்கிறிஸ்துகள் மட்டுமே இத்தகைய வார்த்தைகளை உச்சரிப்பார்கள், இத்தகைய வார்த்தைகள் அந்திக்கிறிஸ்துகளின் இருதயத்தின் ஆழங்களில் ஒலிப்பவையாய் இருக்கின்றன, மேலும் இது அந்திக்கிறிஸ்துகளின் அக்கிரமமாகும்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஏழு (பகுதி இரண்டு)”). தேவனோட வெளிப்படுத்தலால நான் வெட்கப்பட்டேன், இத்தன வருஷமா நான் பட்ட கஷ்டமும் என்னோட கடமையில செலுத்துன விலைக்கிரயமும் கொஞ்சங்கூட தேவனோட சித்தத்த கருத்தில கொண்டு, தேவனோட அன்ப ஈடு செய்யுறதுக்காக ஒரு சிருஷ்டியோட கடமைய நான் செய்யறதுக்காக இருக்கலங்கறத நான் பாத்தேன். அத நான் தேவனோட ஆசீர்வாதங்கள பெற்று, ராஜ்யத்துக்குள்ள பிரவேசிச்சு நித்திய ஆசீர்வாதங்கள அனுபவிக்கறதுக்காக செஞ்சதா இருந்துது. நான் கடமைய செய்யுறத பேரழிவுல இருந்து தப்பிச்சு தேவனால ஆசீர்வதிக்கப்படுறதுக்கான ஒரு வழியாவும், தேவன் கிட்ட பரிவர்த்தன செய்யுறதுக்கான துருப்பு சீட்டாவும் மூலதனமாவும் நினைச்சேன். அதுனால தான் நான் எவ்வளவு செஞ்சிருந்தேன்னு, எத்தன பேர்த்த மனமாற்றம் செஞ்சிருந்தேன், நான் எப்படி கஷ்டப்பட்டிருந்தேன், நான் என்ன விலைக்கிரயம் செலுத்தியிருந்தேன் அப்படினு, உள்ளுக்குள்ளேயே கணக்கு போட்டுகிட்டிருந்தேன். நான் எவ்வளவு அதிகமா எண்ணுனேனோ, அவ்வளவு அதிகமா மெச்சத்தக்க ஊழியத்த நான் பங்களித்ததாவும், பேரழிவுல இருந்து தேவனால பாதுகாக்கப்பட்டு நிலச்சிருக்கிற தகுதி எனக்கு இருந்துதுன்னும் நினைச்சேன் எனக்கு திடீர்னு வைரஸ் பாதிப்பு ஏற்படும்னு நான் நினைக்கவேயில்ல. நான் தேவன குறை சொல்லி, தப்பா நினைச்சேன், என்னோட நோய்ல தேவனுக்கு எப்படிக் கீழ்ப்படியணும்ங்கறத நான் தேடல. அதுக்குப் பதிலா, தேவனோட அங்கீகாரத்த பெறுறதுக்கு நான் என்ன செய்யலாம்ங்கறதப் பத்தி யோசிச்சுகிட்டிருந்தேன் அதனால தேவன் என்னைப் பாதுகாப்பாரு, நான் சீக்கிரமா குணமாவேன்னு நினைச்சேன். அதனால அதுக்குப் பதிலாஎன்னோட நிலை மோசமானத நான் பாத்தப்போ, நான் தேவனிடம் ஊக்கமிழந்து போனேன். என்னைப் பாதுகாக்காததுக்காகவும், எனக்கு அநியாயம் செஞ்சதுக்காகவும் நான் அவர் மேல குற்றம் சாட்டினேன். என்னோட விசுவாசமும், என்னோட கடமையும் வெறும் ஆசீர்வதிக்கப்படுவதுக்காக மட்டுந்தான் இருந்துதுங்கறதயும், நான் தேவன்கிட்ட உண்மையா இல்லங்கறதயும் நடந்த காரியங்க காட்டிச்சு. ஆசீர்வாதங்கள பெறும் என்னோட சொந்த இலக்க அடையுறதுக்காக நான் வெறுமனே அவர பயன்படுத்திகிட்டு, ஒப்பந்தம் போட்டுகிட்டும் தேவன ஏமாத்திகிட்டும் இருந்தேன். நான் ரொம்ப சுயநலவாதியாவும் தந்திரமானவளாவும் இருந்தேன்! கிருபையின் காலத்துல பவுல் ஐரோப்பா முழுக்க போய்கர்த்தரோட சுவிசேஷத்த பரப்புனான், அதிகமா கஷ்டப்பட்டு, பெரிய விலைக்கிரயம் செலுத்துனான், ஆனா அவன் கொடுத்ததெல்லாம் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிச்சு வெகுமதிய பெறுறதுக்காகத்தான் இருந்துச்சு. அவன், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” அப்படின்னு சொன்னான். (2 தீமோத்தேயு 4:7-8). தேவன் அவனுக்குக் கிரீடத்த தரலைனா, தேவன் நீதியில்லாதவரா இருந்தாருங்கறதுதான் அதோட உண்மையான அர்த்தம். மதம் சார்ந்த உலகத்துல இருக்கற ஜனங்க பவுலோட இந்த வார்த்தைகளால ஆழமா பாதிக்கப்பட்டிருக்காங்க. கர்த்தரோட நாமத்தால வேலை செஞ்சு கஷ்டப்படுறவங்க எல்லாரும் பரலோகத்துக்கு போறதுக்காகவும் ஆசீர்வதிக்கப்படுறதுக்காகவும்தான் அத செய்யுறாங்க. அவங்க ஆசீர்வதிக்கப்படலைனா தேவன்கிட்ட அவங்க வாக்குவாதம் செய்றாங்க. நானும் அவங்கள மாதிரி தான் இருந்தேன், இல்லையா? அப்போ எனக்கு பயம் வந்துச்சு. நான் அத்தகைய மனநிலைய வெளிப்படுத்துவேன்னு ஒருபோதும் நினைச்சு பாக்கல. அந்தச் சூழ்நில என்னை வெளிப்படுத்தாம இருந்திருந்தா. என்கிட்ட அவ்ளோ தீவிரமான அந்திக்கிறிஸ்து மனநிலை இருந்தத நான் இன்னும் பாத்திருக்க மாட்டேன். தேவனோட சில வார்த்தைகள பத்தி நான் சிந்திச்சேன்: “நான் மனிதனை முற்றிலும் ஒரு கண்டிப்பான நெறிமுறைக்குள் வைத்துள்ளேன். உங்களுடைய விசுவாசம் உள்நோக்கத்துடனும் நிபந்தனைகளுடனும் வருமானால், நான் அதற்கு மாறாக உங்களுடைய பெயரளவிலான விசுவாசத்தைத் தவிர்த்துவிடுவேன், ஏனென்றால் தங்கள் உள்நோக்கத்தினால் என்னை வஞ்சித்து நிபந்தனைகளினால் என்னை மிரட்டி பணியவைப்பவர்களை நான் வெறுக்கிறேன். மனிதன் எனக்கு முற்றிலும் உண்மையாய் இருப்பதையும், விசுவாசம் என்னும் ஒரே வார்த்தையின் பொருட்டு அந்த விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அனைத்து காரியங்களையும் செய்வதையுமே விரும்புகிறேன். நான் உங்களை எப்போதும் நேர்மையுடன் நடத்தியிருப்பதனால், என்னை மகிழ்விக்கும் நோக்கில் முகஸ்துதிகளைப் பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன், அதனால் நீங்களும் என்னிடம் மெய்யான விசுவாசத்துடனே செயல்பட வேண்டுமென்று விரும்புகிறேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?”). தேவனோட மனநிலை நீதியுள்ளது, பரிசுத்தமானது, எந்தவொரு குற்றத்தயும் பொறுத்துக்கொள்ளாததுனு தேவனோட வார்த்தைகள்ல இருந்து என்னால உணர முடிஞ்சுது. மனுக்குலத்த இரட்சிக்கறதுக்காக தேவன் கிரியைகள செய்யுறாரு, மனுஷனோட நோர்மையையும் பக்தியையும்தான் அவர் விரும்புறாரு. ஜனங்களோட முயற்சிகள்ல நோக்கங்கள், கலப்படங்கள், பேரம் பேசுறது, அல்லது ஏமாத்துறது இருந்தா, தேவன் அவங்கள அங்கீகரிக்காததோட மட்டுமல்லாம, அவங்க தேவனுக்கு குமட்டலயும் வெறுப்பயும் ஏற்படுத்துறாங்க, அவர் அவங்கள கண்டிக்கிறாரு. பவுல் மாதிரியே, கடைசியில தேவனால ஆசீர்வதிக்கப்படாததோட மட்டுமல்லாம, நரகத்துல தண்டனை கொடுக்கப்படவும் அனுப்பப்பட்டான். என்னோட கடமையில பரிவர்த்தனையோட கலப்படம் இருந்தது தேவனுக்கு வெறுப்பயும் குமட்டலயும் ஏற்படுத்தியிருக்கும். நான் நோய்வாய்ப்பட்டது தேவனோட நீதியையும் பரிசுத்த மனநிலையையும் முழுமையா வெளிப்படுத்திச்சு. அதோட, அந்த நோய நான் முழுசா ஏத்துக்கிட்டு உண்மையா அடங்கியிருந்தேன்.

அதுக்கப்புறம் தேவனோட வார்த்தைகளோட இன்னொரு பத்திய நான் வாசிச்சேன்: “ஒரு சிருஷ்டியாக, நீ சிருஷ்டிகரின் முன் வரும்போது, உன் கடமையை நீ செய்ய வேண்டும். இதுவே செய்ய வேண்டிய சரியான காரியமும், உன் தோள்களின் மேலுள்ள பொறுப்புமாக இருக்கிறது. சிருஷ்டிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் அடிப்படையில், சிருஷ்டிகர் மனுக்குலத்தில் மகத்தான கிரியைகளைச் செய்திருக்கிறார். அவர் மனுக்குலத்தில் அடுத்த கட்ட கிரியையை நிறைவேற்றியிருக்கிறார். அது என்ன கிரியை? அவர் மனுக்குலத்திற்கு சத்தியத்தை வழங்குகிறார், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது அவரிடமிருந்து சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளவும், அதன் மூலம் தங்களின் சீர்கெட்ட மனநிலைகளைக் களைந்து சுத்திகரிக்கப்படவும் உதவுகிறார். இவ்வாறு, அவர்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றவும், வாழ்க்கையில் சரியான பாதையில் செல்லவும் தொடங்குகிறார்கள், இறுதியில், அவர்களால் தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகவும், முழுமையான இரட்சிப்பை அடையவும், மேலும் சாத்தானின் துன்பங்களுக்கு உள்ளாகாமல் இருக்கவும் முடிகிறது. தங்கள் கடமையை நிறைவேற்றுவதன் மூலம், இறுதியில் தேவன் மனிதகுலத்தை அடையச் செய்யும் பலன் இதுவேயாகும். ஆகவே, உன் கடமையைச் செய்யும் செயல்பாட்டின்போது, தேவன் உன்னை ஒரு விஷயத்தை தெளிவாகப் பார்க்கவும், குறைவாகவே சத்தியத்தைப் புரிந்துகொள்ளவும் மட்டும் செய்வதில்லை, அல்லது ஒரு சிருஷ்டியாக உன் கடமையை நிறைவேற்றுவதன் மூலம், நீ பெறும் கிருபையையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க வெறுமனே அவர் உனக்கு உதவுவதும் இல்லை. மாறாக, நீ சுத்திகரிக்கப்படவும் இரட்சிக்கப்படவும், இறுதியில், சிருஷ்டிகரின் முகத்தின் வெளிச்சத்தில் வாழ வந்தடையவும் அவர் உதவுகிறார்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஒன்பது (பகுதி ஏழு)”). தேவனோட வார்த்தைங்க உண்மையிலே எனக்குள்ள தாக்கத்த ஏற்படுத்திச்சு. கடமைய செய்யுறதுங்கறது ஒரு சிருஷ்டி தவிர்க்க முடியாத ஒரு பொறுப்பும் கடமையுமா இருக்கு, அது குறிப்பா சத்தியத்த பெற்று மனநிலை மாற்றத்த அடையுறதுக்கான ஒரு பாதையா இருக்கு. நம்ம கடமைகள்ல, ஜனங்களோட சீர்கெட்ட மனநிலைகள வெளிப்படுத்துறதுக்காக தேவன் எல்லா விதமான சூழ்நிலைகளயும் உருவாக்குறாரு, அதுக்கப்புறம் அவரோட வார்த்தைகளோட நியாயத்தீர்ப்பு மற்றும் வெளிப்படுத்தல்கள் மூலமாவும் அவரோட தண்டித்து திருத்துதல் மூலமாவும், நாம நம்ம சீர்கேட்ட புரிஞ்சுகிட்டு மாறி, இனி, சாத்தானால சீர்கெடுக்கப்படாமலும் தீங்கிழைக்கப்படாமலும் இருக்க அவர் நம்மள அனுமதிக்கிறாரு. இது தேவனோட நல்லெண்ணமா இருக்கு. என்னோட கடமைய செஞ்ச இத்தன வருஷங்கள்ல, தேவன் உருவாக்குன சூழ்நிலைகள் மூலமா நான் நிறைய சீர்கேட்ட காட்டியிருக்கேன். நான் என்னோட சீர்கெட்ட மனநிலைகள பத்தின கொஞ்சம் புரிதல பெற்றிருந்தேன், அப்புறம் என்னை நானே வெறுத்து, மனந்திரும்பி, மாறவும், கொஞ்சம் மனுஷ சாயல கொண்டிருக்கவும் ஆரம்பிச்சேன். என்னோட கடமையால எனக்கு நிறையா கிடைச்சுது, ஆனா நான் அப்பவும் நன்றியோட இல்ல. அதுக்குப் பதிலா, பேரழிவுகள்ல இருந்து தப்பிக்கறதுக்காக, ஆசீர்வாதங்கள பெற பேரம் பேசுறதுக்கான ஒரு துருப்பு சீட்டாதான் நான் என்னோட கடமைய பயன்படுத்துனேன், நான் தேவன ஏமாத்தி, அவர பயன்படுத்தலாம்ங்கற மாதிரி அவர நடத்துனேன். நான் இழிவானவளா இருந்தேன்! தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு, ஆனா அவற்ற நான் பொக்கிஷமா கருதல, எப்படி ஆசீர்வதிக்கப்படுறது, பேரழிவுல இருந்து தப்பிக்கறது, ராஜ்யத்துக்குள்ள பிரவேசிச்சு வெகுமதிய பெறுறதுங்கறது பத்தி மட்டும் யோசிச்சுகிட்டிருந்தேன். நான் ரொம்ப பொல்லாதவளா இருந்தேன். நான் ஆசீர்வதிக்கப்படுறதுக்காக என்னோட கடமைய செய்யுறத நிறுத்துவேன், ஆனா தேவனோட அன்ப திருப்பி தருறதுக்காக, என்னோட கடமையில சத்தியத்த பின்தொடர்வேன்னும் தேவனிடம் நான் ஜெபம் செஞ்சு சத்தியம் செஞ்சேன். தேவனோட வார்த்தைகளின் இன்னொரு பத்திய நான் வாசிச்சேன், அது நான் பின்பற்ற வேண்டிய பாதைய எனக்கு தந்துச்சு. “தேவன் மீதான உன் விசுவாசத்திலும் சத்தியத்தைப் பின்தொடர்தலிலும்: ‘தேவன் எந்த வியாதியையோ அல்லது விரும்பத்தகாத நிகழ்வையோ எனக்கு நேரிட அனுமதித்தாலும்—தேவன் என்ன செய்தாலும்—நான் கீழ்ப்படிய வேண்டும், ஒரு சிருஷ்டியாக என் ஸ்தானத்தில் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் முன்பாக, கீழ்ப்படிதல் என்ற சத்தியத்தின் இந்த அம்சத்தை நான் கடைப்பிடிக்க வேண்டும், நான் அதைச் செயல்படுத்த வேண்டும், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதன் யதார்த்தத்தை வாழ்ந்து காட்ட வேண்டும். மேலும், தேவன் எனக்குக் கட்டளையிட்டதையும் நான் செய்ய வேண்டிய கடமையையும் நான் ஒதுக்கி வைக்கக்கூடாது. என் கடைசி மூச்சிலும் கூட, என் கடமையில் நான் நிலைத்திருக்க வேண்டும்’ என்று உன்னால் சொல்ல முடியுமானால், இது சாட்சி பகருவதல்லவா? நீ இப்படிப்பட்ட மனவுறுதியையும், இப்படிப்பட்ட நிலையையும் பெற்றிருக்கும்போது, உன்னால் இன்னும் தேவனைப் பற்றிக் குறை சொல்ல முடியுமா? முடியாது, உன்னால் முடியாது. அப்படிப்பட்ட நேரத்தில், ‘தேவன் எனக்கு இந்த மூச்சைக் கொடுக்கிறார், இத்தனை ஆண்டுகளாக அவர் எனக்குக் கொடுத்து வருகிறார் மற்றும் பாதுகாத்து வருகிறார், அவர் என்னிடமிருந்து நிறைய வேதனைகளை எடுத்துப்போட்டிருக்கிறார், எனக்கு அதிக கிருபையையும், நிறைய சத்தியங்களையும் கொடுத்திருக்கிறார். பல தலைமுறைகளாக ஜனங்கள் புரிந்துகொண்டிராத சத்தியங்களையும் இரகசியங்களையும் நான் புரிந்துகொண்டேன். நான் தேவனிடமிருந்து நிறைய பெற்றிருக்கிறேன், அதனால் நான் தேவனுக்குத் திருப்பிச்செலுத்த வேண்டும்! முன்பு, என் வளர்ச்சி மிகவும் குறைவாக இருந்தது, எனக்கு எதுவும் புரியவில்லை, நான் செய்த அனைத்தும் தேவனைக் காயப்படுத்துவதாக இருந்தது. எதிர்காலத்தில் தேவனுக்குத் திருப்பிச்செலுத்த எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். நான் வாழ்வதற்கு எவ்வளவு காலம் மீதியிருந்தாலும், என்னிடமுள்ள கொஞ்ச பலத்தை நான் கொடுக்க வேண்டும், மற்றும் தேவனுக்காக என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும், அதனால் எனக்குக் கொடுத்த இத்தனை வருடங்களும் வீணாய் போயிருக்கவில்லை என்பதையும், மாறாக பலனளித்திருக்கின்றன என்பதையும் தேவனால் பார்க்க முடியும். நான் தேவனுக்கு ஆறுதலைக் கொண்டுவரட்டும், மேலும் அவரை இனிமேலும் காயப்படுத்தாமல் அல்லது ஏமாற்றாமல் இருக்க வேண்டும்’ என்று உனக்குள் நினைப்பாய். இப்படி யோசிப்பது எப்படி இருக்கும்? ‘இந்த நோய் எப்போது குணமாகும்? இது குணமாகும் போது, நான் என் கடமையைச் செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் மற்றும் அர்ப்பணிப்புடன் இருப்பேன். நான் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது என்னால் எப்படி அர்ப்பணிப்புடன் இருக்க முடியும்? சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுடைய கடமையை என்னால் எப்படி நிறைவேற்ற முடியும்?’ என்று நினைத்துக்கொண்டு, உன்னை நீயே எப்படிக் காப்பாற்றுவது அல்லது தப்பித்துக்கொள்வது என்பது பற்றி யோசிக்காதே. கடைசி மூச்சு இருக்கும் வரை, உன் கடமையை நிறைவேற்றக் கூடியவனாய் நீ இருப்பதில்லையா? உனக்குக் கடைசி மூச்சு இருக்கும் வரை, உன்னால் தேவனுக்கு அவமானத்தைக் கொண்டுவராமல் இருக்க முடியுமா? உனக்குக் கடைசி மூச்சு இருக்கும் வரை, உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னால் தேவனைப் பற்றி குறை சொல்லாமல் இருக்க முடியுமா? (ஆம்.) இப்போது ‘முடியும்’ என்று சொல்வது மிகவும் எளிது, ஆனால் இது உனக்கு உண்மையிலேயே நேரிடும்போது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆகவே, நீ சத்தியத்தைப் பின்தொடர வேண்டும், அடிக்கடி சத்தியத்திற்காகக் கடினமாய் உழைக்க வேண்டும், மேலும் ‘தேவனுடைய சித்தத்தை என்னால் எப்படி நிறைவேற்ற முடியும்? தேவனுடைய அன்பை என்னால் எப்படித் திருப்பிச்செலுத்த முடியும்? ஒரு சிருஷ்டியின் கடமையை என்னால் எப்படிச் செய்ய முடியும்?’ என்று சிந்திக்க அதிக நேரத்தை செலவிட வேண்டும். சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் என்றால் என்ன? தேவனுடைய வார்த்தைகளைக் கேட்பது மட்டுமே சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுடைய பொறுப்பா? இல்லை—தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்ந்து காட்ட வேண்டும். தேவன் உனக்கு இவ்வளவு சத்தியத்தையும், இவ்வளவு வழியையும், இவ்வளவு ஜீவனையும் கொடுத்திருக்கிறார், இதன் மூலம், உன்னால் இவற்றின்படி வாழவும், அவருக்குச் சாட்சி பகரவும் முடியும். இதுவே ஒரு சிருஷ்டியால் செய்யப்பட வேண்டியது, இது உன் பொறுப்பும் மற்றும் கடமையுமாய் இருக்கிறது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவனுடைய வார்த்தைகளை அடிக்கடி வாசிப்பது மற்றும் சத்தியத்தைப் பற்றிச் சிந்திப்பதன் மூலம் மட்டுமே முன்னேறிச் செல்வதற்கான ஒரு வழி இருக்கிறது”). தேவனோட வார்த்தைங்க என்னில் தாக்கத்த ஏற்படுத்துது. தேவனே சிருஷ்டி கர்த்தர், நான் ஒரு சிருஷ்டி, அதனால என்னோட தலைவிதி அவரோட கைகள்ல இருக்கு. அந்த நோய் எனக்கு வர அவர் அனுமதிச்சாரு, அதனால நான் ஜீவனோட இருந்தாலும் மரித்தாலும், நான் தேவனோட ஆளுகைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியணும். அது தான் ஒரு சிருஷ்டி கொண்டிருக்க வேண்டிய அடிப்படை பகுத்தறிவு. கடமைங்கறது ஒரு சிருஷ்டி செய்ய வேண்டிய ஒன்னு. எந்த நேரத்துலையும், என்ன நடந்தாலும் சரி, என்னோட கடைசி மூச்சு இருக்கற வரைக்கும், நான் என்னோட கடமைய செய்யணும். பல வருஷங்களா தேவனோட அன்ப நான் நிறைய அனுபவிச்சிருந்தேன், ஆனா நான் சத்தியத்த பின்தொடரல, நான் எப்பவும் அவருக்கு எதிரா கலகம் செஞ்சு, அவர புண்படுத்துனேன்—நான் தேவனுக்கு ரொம்ப கடமைப்பட்டிருந்தேன். இப்போ நான் ஜீவனோட இருக்குற வரைக்கும், தேவனோட அன்ப திருப்பிச் செலுத்துறதுக்காக நான் என்னோட கடமைய செய்யணும். அதுக்கப்புறம் வந்த நாட்கள்ல, தேவனைத் திருப்திப்படுத்துறதுக்காக என்னோட கடமைய எப்படிச் சிறப்பா செய்யுறதுங்கறத பத்தி நான் தினமும் யோசிச்சேன். என் கூட இருந்த சகோதரி கடமைக்குப் புதுசா இருந்தாங்க, சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கறதப் பத்தின நிறைய கொள்கைகள் அவங்களுக்குத் தெரியல, அதனால நிறைய பிரச்சன ஏற்பட்டுச்சு. நான் ஆன்லைன்ல அவங்களுக்கு உதவி செஞ்சு வழிநடத்திகிட்டிருந்தேன். நான் அடிக்கடி தேவனோட வார்த்தைகள அமைதியா வாசிச்சுகிட்டும், தேவன துதிச்சு பாடல்கள பாடிட்டும் இருந்தேன். நான் இருமிகிட்டே இருந்தேன், காச்சலும் அடிச்சுது, ஆனா நான் அதுக்கு மேல நோய்னால பின்வாங்கல, நான் இறந்துருவேனோனு யோசிக்கறத நான் நிறுத்திட்டேன். தேவனோட கரங்கள்ல என்னோட தலைவிதி இருந்துதுன்னு எனக்குத் தெரியும், நான் எவ்வளவு காலம் ஜீவனோட இருப்பேன்னு தேவனோட ஆளுகையால தீர்மானிக்கப்பட்டுது. தேவன் என்னை எவ்வளவு காலம் ஜீவனோட வச்சிருக்காரோ அது வரைக்கும் நான் என்னோட கடமைய சிறப்பா செஞ்சு தேவனோட அன்ப திருப்பி செலுத்த முயற்சி செய்வேன், நான் கீழ்ப்படிவேன், நான் எப்போ இறக்கணும்னு அவர் முடிவு செய்யுற நாள் வரைக்கும் நான் திரும்ப ஒருபோதும் குறை சொல்ல மாட்டேன்.

ஒரு நாள் சாயங்காலம் என்னால இருமறத நிறுத்த முடியல, என்னோட தொண்டை முழுக்க சளியா இருந்துது, எனக்குக் காய்ச்சல் அதிகமா இருந்துது, என்னோட உடல் முழுக்க வலிச்சுது. நான் படுக்கையில படுத்திருந்தேன், ரொம்ப அசௌகரியமா இருந்துச்சு, நான் தூங்க முடியாம புரண்டு புரண்டு படுத்தேன். “நான் சாக போறேனா? நான் தூங்குனதுக்கு அப்புறம், திரும்ப எழுந்திருப்பனா?” அப்படினு நினைச்சேன். மரணத்த பத்தின என்னோட யோசன என்னை ரொம்ப வருத்தப்பட வச்சுது, எதிர்காலத்துல இனி என்னால தேவனோட வார்த்தைகள வாசிக்க முடியாதோங்கற யோசனயால நான் இடைவிடாம அழுதேன். நான் எந்திரிச்சு, என்னோட கணினிய ஆன் செஞ்சு, தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்திய வாசிச்சேன்: “ஒவ்வொருவரின் ஆயுட்காலமும் தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவக் கண்ணோட்டத்தில் ஒரு நோய் கடைசி கட்ட நிலையில் தோன்றலாம், ஆனால் தேவனுடைய பார்வையில், உன் வாழ்க்கை இன்னும் தொடர வேண்டும் மற்றும் உன் நேரம் இன்னும் வரவில்லை என்றால், நீ விரும்பினாலும் கூட உன்னால் மரிக்க முடியாது. தேவன் உனக்கு ஒரு கட்டளையைக் கொடுத்திருந்தால், உன் பணி முடிவடையவில்லை என்றால், உயிரைப் பறித்துவிடும் வியாதியால் கூட நீ மரிக்க மாட்டாய்—தேவன் உன்னை அப்போதும் எடுத்துக்கொள்ள மாட்டார். நீ ஜெபித்து சத்தியத்தைத் தேடாவிட்டாலும் கூட, அல்லது உன் நோய்க்கு சிகிச்சை அளிக்க கவனம் செலுத்தாவிட்டாலும் கூட, அல்லது உன் சிகிச்சையை நீ தள்ளி வைத்தாலும் கூட, நீ மரிக்க மாட்டாய். குறிப்பாக, தேவனிடமிருந்து ஒரு கட்டளையைப் பெற்றவர்களுக்கு இது உண்மையாயிருக்கிறது: அவர்களின் பணி இன்னும் முடிவடையாத நிலையில், அவர்களுக்கு எந்த வியாதி வந்தாலும், அவர்கள் உடனடியாக மரிக்கக்கூடாது; ஊழியம் முடிவடையும் கடைசி தருணம் வரை அவர்கள் வாழ வேண்டும். நீ இதை விசுவாசிக்கிறாயா? … உண்மை என்னவென்றால், உன்னுடைய பேரம் பேசுதல் உன் வியாதியைக் குணப்படுத்தி, மரிப்பதிலிருந்து உன்னைக் காக்க வேண்டும் என்பதோ அல்லது அதில் உனக்கு வேறு ஏதேனும் உள்நோக்கமோ அல்லது குறிக்கோளோ இருக்கிறதா என்பதோ முக்கியமல்ல, தேவனுடைய பார்வையில், உன் கடமையை உன்னால் நிறைவேற்ற முடியுமானால் மற்றும் இன்னும் பயன்படுத்தப்பட முடியுமானால், நீ பயன்படுத்தப்பட இருக்கிறாய் என்று தேவன் முடிவு செய்திருப்பாரானால், அப்போது நீ மரிக்க மாட்டாய். நீ விரும்பினாலும் கூட உன்னால் மரிக்க முடியாது. ஆனால், நீ பிரச்சனையை உண்டாக்கி, எல்லாவிதமான பொல்லாத செயல்களையும் செய்து, தேவனுடைய மனநிலையைப் புண்படுத்தினால், நீ துரிதமாய் மரித்துவிடுவாய்; உன் வாழ்க்கை குறைக்கப்படும். ஒவ்வொருவரின் ஆயுட்காலமும் உலகம் உண்டாவதற்கு முன்பே தேவனால் தீர்மானிக்கப்பட்டதாய் இருக்கிறது. அவர்களால் தேவனுடைய ஏற்பாடுகளுக்கும் திட்டங்களுக்கும் கீழ்ப்படிய முடிந்தால், அவர்கள் வியாதியால் அவதிப்பட்டாலும் சரி, அவதிப்படாவிட்டாலும் சரி, அல்லது அவர்கள் நலமாக இருந்தாலும் சரி, உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் சரி, அவர்கள் தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வருஷங்களின் எண்ணிக்கையில் வாழ்வார்கள். நீ இதை விசுவாசிக்கிறாயா?(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள படிச்சதும், அவரோட அன்பையும் இரக்கத்தையும் என்னால உணர முடிஞ்சுது, அது மனசுக்கு ரொம்ப இதமா இருந்துது. நான் தேவனோட சித்தத்த இன்னும் கொஞ்சம் அதிகமாபுரிஞ்சுகிட்டேன். நான் கடைசி நாட்கள்ல பிறந்து, தேவன விசுவாசிச்சு, கடமைய செய்யணும்ங்கறது தேவனால தீர்மானிக்கப்பட்டுது, இது தேவன் எனக்குத் தந்த பணியும் கூட. என்னோட பணி நிறைவடைஞ்சா, நான் நோய்வாய்ப்படலைனாலும் இறக்க வேண்டி வரும். இல்லைனா, என்னை கொல்லக்கூடிய நோய் எனக்கு வந்தாலும் நான் இறக்க மாட்டேன். எனக்காக என்ன காத்திருந்துதுன்னு எனக்குத் தெரியல, ஆனா நான் என்னோட ஜீவன தேவனோட கரங்கள்ல வச்சு அவரோட ஏற்பாடுகள பின்பற்றணும்னு எனக்குத் தெரியும். நான் எந்த நேரத்துலையும் இறக்கலாம்ங்கறத நினைச்சு, நான் திரும்பவும் தேவன்கிட்ட என் மனசுல இருந்து பேசணும்னு ரொம்பவும் விரும்புனேன். நான் மண்டியிட்டு தேவனிடம் ஜெபிச்சேன், “தேவனே! உம்மோட வீட்டுக்கு வர்றதுக்கும், உம்மோட சத்தத்த நான் கேக்கறதுக்கும் என்னைத் தெரிஞ்சு கொண்டதுக்காக நன்றி. உம்மோட நிறைய வார்த்தைகளோட நீர்ப்பாய்ச்சுதலயும் ஜீவ ஆதாரத்தயும் பெற்றது பல சத்திங்கள கத்துக்கவும், ஒரு மனிதனா இருப்பதுக்கான கொள்கைளயும் அறிஞ்சுக்கவும் எனக்கு உதவிச்சு. என்னோட வாழ்க்கை வீண் இல்லன்னு நான் உணர்றேன். நான் தான் ரொம்ப ஆழமாச் சீர்கெட்டுப்போய், எப்ப்பவும் உமக்கு எதிரா கலகம் செஞ்சு, உம்மை புண்படுத்துறேன். நான் சத்தியத்த நல்லாப் பின்தொடரல அல்லது உம்மோட அன்ப திருப்பி செலுத்த என்னோட கடமைய உண்மையா செய்யல. நான் ஒருபோதும் உமக்கு சிறிதளவு சௌகரியத்த கூட தரல. நான் உமக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். உம்மோட அன்ப திருப்பி செலுத்த எனக்கு இன்னும் அதிகமா வாய்ப்புகள் இருக்கான்னு எனக்குத் தெரியல. நான் ஜீவனுடன் இருந்தா, நான் சத்தியத்தப் பின்தொடரவும், உம்மைத் திருப்திப்படுத்த என்னோட கடமையச் செய்யவும் விரும்புறேன்…”

அன்னைக்கு ராத்திரி, நான் சீக்கிரமாவே தூங்கிட்டேன். அடுத்த நாள் நான் எந்திரிச்சதும், நான் நோய்வாய்க்கூடப்படாத மாதிரி, முற்றிலும் நிம்மதியா உணர்ந்தேன். அதிகமான சளி இல்லாம என்னோட தொண்டை சரி ஆயிருச்சு. நான் என்னோட வெப்பநிலைய பாக்க சீக்கிரமா போனேன், அது இயல்பு நிலைக்கு திரும்பியிருந்துது. நான் ரொம்ப நெகிழ்ச்சியடைஞ்சேன், இது எனக்கான தேவனோட இரக்கமும் பாதுகாப்புமா இருந்துதுன்னு எனக்குத் தெரியும். எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டப்போ நான் அதிகமா கலகம் செஞ்சு எதிர்த்தாலும், தேவன் என்னை என்னோட மீறுதல்கள்படி நடத்தாம, என்னை அப்பவும் கவனிச்சுகிட்டாரு. என்னால என்னோட அழுகைய கட்டுப்படுத்த முடியல, நான் தேவனுக்கு என்னோட நன்றியையும் துதியயும் செலுத்துனேன்.

ரெண்டு மாசம் கடந்துருச்சு, அந்த நாட்கள்ல எல்லாம் என்னோட வெப்பநிலை இயல்பாவே இருந்துச்சு. வைரஸ் திரும்பி வரல, சீக்கிரமாவே நான் முழுமையா குணமடைஞ்சுட்டேன். இந்த பெருந்தொற்றுல ஜனங்க பலர் இறந்துட்டாங்க, என் மீதான தேவனோட அற்புதமான அக்கறை மற்றும் இரட்சிப்பின் நிமித்தமா தான் நான் முழுமையா உயிர் பிழைச்சேன். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்னோட விசுவாசத்துலயும் கடமையிலயும் இருக்கற நோக்கங்களயும் கலப்படங்களயும் வெளிப்படுத்துச்சு, ஆசீர்வாதங்களுக்காக தேவன்கிட்ட ஒப்பந்தம் செஞ்சுக்கறதுக்கான என்னோட மோசமான நோக்கத்த பாக்க அது எனக்கு உதவிச்சு, என்னைப் பத்தின கொஞ்சம் புரிதலும் வெறுப்பும் எனக்கு கிடைச்சுது. அதோட, தேவனோட பரிசுத்தமான, நீதியான மனநிலை பத்தின கொஞ்சம் நடைமுறை அனுபவமும் புரிதலும் எனக்குக் கிடைச்சுது, அப்புறம் தேவனோட ஆளுகைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிதல் இருந்துது. இந்தச் சூழ்நிலை மூலமா நான் கொஞ்சம் புடமிடுதலையும் வலியையும் அனுபவிச்சேன், ஆனா சௌகரியமான சூழ்நிலையில என்னால பெற முடியாத பல விஷயங்கள் எனக்குக் கிடைச்சுது. இந்த அனுபவம் மூலமா நான் அறுவடை செஞ்சது என்னனு நான் யோசிக்கறப்போ எல்லாம், நான் தேவனுக்கான நன்றியாலும் துதியாலும் நிறைஞ்சிருக்குறேன். தேவனோட அன்புக்காகவும் இரட்சிப்புக்காகவும் நான் அவருக்கு நன்றி சொல்லுறேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

பிறர் காண்பதற்காகக் கடமையைச் செய்வதனால் உண்டாகும் பின்விளைவுகள்

2021 ஆம் ஆண்டு, நான் பல திருச்சபைகளின் பணிக்குப் பொறுப்பாக இருந்தேன். அவை சமீபத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டிருந்தன, அவற்றின் பணிகள் அனைத்தும்...

நீங்கள் வாதிடுவதற்குப் பின்னால் என்ன மனநிலை இருக்கிறது?

தேவன விசுவாசிச்சு பல வருஷங்கள் கழிச்சு, சத்தியத்த ஏத்துக்குறவங்கள தேவன் விரும்புறாருன்னு நான் கொள்க அளவுல தெரிஞ்சிட்டேன். ஜனங்க சத்தியத்த...

எனது தெரிந்தெடுப்பு

மார்ச் 2012 இல், என் அம்மா கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் சுவிசேஷத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் ஒவ்வொரு நாளும் தேவனுடைய...