தோல்விகள் மற்றும் பின்னடைவுகள் மூலமாக வளர்வது

செப்டம்பர் 28, 2023

நான் 2020 டிசம்பர் மாசத்தில கடைசி நாட்களின் சர்வ வல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டேன். கொஞ்ச மாசங்களுக்கப்புறம் நான் திருச்சபைத் தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டேன். திருச்சபையில செய்ய வேண்டிய வேலைகளும் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளும் நெறைய இருந்துது. நான் ஆர்வத்தோட அதுல ஈடுபட்டேன். கொஞ்ச நாளைக்கப்புறம், திருச்சபையோட வேலையில நான் கொஞ்சம் அதிகமா பழக்கப்பட்டேன், ஆனா அப்பவும் நெறைய பிரச்சனைகள்ல சிக்கிட்டிருந்தேன். புதுசா வர்றவங்க நெறைய பேரு கூட்டங்கள்ல வழக்கமா கலந்துக்கல. கொஞ்ச பேரு ஆன்லைன் வதந்திகளால பாதிக்கப்பட்டிருந்தாங்க, கொஞ்ச பேரு தரிசனங்களோட சத்தியங்கள புரிஞ்சுக்காம இருந்தாங்க அதோட தீர்க்கப்படாத மதக் கருத்துகள் அவங்களுக்கு இருந்துது, அதோட கொஞ்சம் பேரு வேலையில ரொம்பத் தீவிரமா இருந்ததால கூட்டங்கள்ல தவறாம கலந்து கொள்ளா முடியாம இருந்தாங்க. இந்தப் பிரச்சினைகள சந்திச்சு, அவங்க போராட்டங்கள சந்திக்கிறதுல அவங்களுக்கு உதவறதுக்கு நான் தேவனோட சித்தத்தப் பத்தி அவங்களோட ஐக்கியப்பட கடுமையா உழச்சேன், ஆனாலும் அவங்க பிரச்சினைகள் அப்பவும் தீர்க்கப்படாமதான் இருந்துது. நான் உண்மைல விரக்தியடஞ்சேன். ஏன் என்னோட கடின உழைப்பு இன்னும் பலனளிக்கல ஏன் தேவன் எங்கத் திருச்சபைய ஆசிர்வதிக்காம இருந்தாருன்னு என்னைய நானே கேட்டுக்கிட்டே இருந்தேன். சகோதர சகோதரிகளுக்கு நெறைய பிரச்சினைகள் இருந்துது, அவங்க கூட நான் செஞ்ச பல ஐக்கியங்கள் தோல்வியடஞ்சுது. ஒருவேள நான் தலைமைப் பதவிக்கு ஏற்றவளா இல்லாம இருந்தனோ? என்னை நானே கடிஞ்சிக்கிட்டேன்: நான் தான் இதுக்கெல்லாம் காரணமா இருந்தேன். நான் பொறுப்ப ஏத்துக்கிட்டு ராஜினாமா செஞ்சா, வேற யாராவது தலைவரா இருப்பாங்க, அதுக்கப்புறம் வேலை ரொம்ப வெற்றிகரமா இருக்கும். நான் மனச்சோர்வடைய ஆரம்பிச்சேன் என் கடமையில செயலற்ற நிலையில இருந்தேன், பணி நீக்கம் செய்யட்டும்னு காத்துட்டிருந்தேன். என்னை அம்பலப்படுத்தவும் தோல்வியடையப் பண்ணவும் தேவன் இந்தச் சிரமங்கள ஏற்படுத்துறாரு அதோட அவரு என்னை ஏற்கெனவே கைவிட்டிருந்தாருன்னு கூட நான் நினைச்சேன். அந்த எண்ணம் என்னை பயமுறுத்துச்சு. தேவன் என்னைக் கைவிட்டிருந்தாரா? நான் ஜெபம் பண்ணி தேடுனேன், ஆனா அப்பவும் என்னால தேவனோட சித்தத்தப் புரிஞ்சுக்க முடியல. தேவன் என்னைக் கைவிட்டிருந்தாருங்கற எண்ணம் அப்பப்போ மேல எழும்புச்சு. நான் எப்பவும் மனந்தளர்ந்தும், சோர்வாவும், பலவீனமாவும் உணர்ந்தேன். நான் உண்மைல பயந்தேன், அதுக்கு மேல என்கிட்ட பரிசுத்த ஆவியானவரோட கிரியை இல்லைன்னு நெனச்சேன்.

திருச்சபையில அப்போ குழுத்தலைவர்கள் குறைவா இருந்தாங்க, அதனால மேற்பார்வையாளர் கொஞ்சம் புதியவர்கள பரிந்துரச்சாங்க. நான் காரியங்கள அதிகமா கவனிக்காம அவங்கள அப்படியே நேரடியா நியமிச்சுட்டேன். முதல்ல அவங்க எல்லாரும் கடமைய ஏத்துக்க விரும்பறதா சொன்னாங்க, ஆனா அவங்க அதிகாரப்பூர்வமா வேலசெய்யத் தொடங்குனப்போ, ஒருத்தரு அவர் வேல செய்தாகணும்னும் அதோடநேரமில்லாததால, பணிய ஏத்துக்க விரும்பலைன்னு சொன்னாரு, இன்னொருத்தரு குடும்ப விஷயங்களால கூடுகைகளுக்குத் தாமதமா வருவாரு, அதோட பணி செய்யவும் முடியாம இருப்பாரு. அப்போதைக்கு அவங்க குழுத் தலைவர்களா வளக்கப்படுறதுக்கு ஏத்தவங்க இல்லன்னு நான் கடைசில தீர்மானிச்சேன். வேலையில நான் சந்திக்கிற இந்தச் சிரமங்களத் தீர்க்க நான் கடுமையா உழைச்சேன், ஆனா கொஞ்சக் காலத்துக்கு எந்தப் பலன்களும் கிடைக்கல. அப்பவே இந்தத் தோல்விகள எல்லாம் என்னால தாங்கிக்க முடியாம இருந்துது. நான் ரொம்ப எதிர்மறையா இருந்தேன், அதோட ஒவ்வொரு புதிய நாளயும் சந்திக்கக் கூட நான் பயந்தேன். நான் அதுக்கு மேல திருச்சபைப் பணிகள செய்ய விரும்பல ஏன்னா நான் நெறைய பணி செஞ்சேன், ஆனா எதயும் சாதிக்கல. திறமையில்லாதவள்னு தேவன் என்னை அம்பலப்படுத்த விரும்பியதால இந்தச் சூழ்நிலைய நான் சந்திச்சேன்னு நான் நினைச்சேன், ஆனா அந்த மாதிரியான நிலைக்குள்ள நான் மூழ்கிப்போறதுக்கு என்னை அனுமதிக்க நான் விரும்பல. என் கடமையில பலன்கள் கிடைக்காததால நான் அம்பலப்படுத்தப்படறதையும் புறம்பாக்கப்படுறதையும் நான் விரும்பல.

ஒருமுற என்னோட தியானங்கள்ல, “பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும் ராஜினாமா செய்வதற்குமான கோட்பாடுகள்” அப்படிங்கறத ஏதேச்சையா படிச்சேன்: “சத்தியத்த ஏத்துக்காத, நடைமுற பணிகள செய்ய முடியாத பொய்யான தலைவர் அல்லது ஊழியர், அதோட கொஞ்ச காலமா பரிசுத்த ஆவியானவரோட கிரியைய இழந்தவர், பொறுப்ப ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்யணும்” (சத்தியத்தைக் கடைபிடிப்பதற்கான 170 கோட்பாடுகள்). இதப் படிச்சது என்னை இன்னும் எதிர்மறயா உணர வெச்சுது. நான் என்ன செய்யணும்? திருச்சபையோட எந்தப் பிரச்சினைகளயும் நான் தீர்க்கல, அதனால நான் ஒரு தவறான தலைவரா இருந்தேன். ஒரு திறமையான நபர் தலைவரா வர்றதுக்காக நான் பொறுப்ப ஏத்துக்கிட்டு ராஜினாமா செய்யணுமா? நான் ஏற்கெனவே மூணு மாசமா திருச்சபையில பணி செஞ்சுட்டு வந்தேன், ஆனா திருச்சபைக்குள்ள இருந்த பிரச்சனைகள நான் அப்பவும் தீர்க்காம இருந்தேன். அதோட அந்தச் சூழ்நிலையில, நான் அப்பவும் தேவனோட சித்தத்தப் புரிஞ்சுக்கல, அதோட எந்த முன்னேற்றத்தயும் அடையல. நான் தேவன தவறாக் கூட புரிஞ்சுட்டேன். நான் ரொம்ப எதிர்மறையானவள்னு மத்தவங்க நெனப்பாங்கன்னு நான் கவலைப்பட்டேன், அதோட ராஜினாமா செய்ய நினைச்சதுக்காக அவங்க என்னைக் கண்டிப்பாங்கன்னு நான் பயந்தேன்.

ஒருமுற ஒரு கூட்டத்துல நான் இத தேவனோட வார்த்தைகள்ல படிச்சேன்: “நீ ஒரு சாதாரண நபர். பல தோல்விகள், திகைப்பூட்டும் பல காலகட்டங்கள், பல தவறான மதிப்பிடல்ல்கள், மற்றும் பல திசைமாற்றங்களை நீ எதிர்கொள்ள வேண்டும். இது உன் சீர்கேடான மனநிலையை, உன் பலவீனங்களையும் குறைபாடுகளையும், உன் அறியாமையையும் மடமையையும் முழுவதுமாக அம்பலப்படுத்தி, உன்னை நீயே மறுபரிசீலனை செய்து அறிந்துகொள்ளவும், தேவனுடைய சர்வவல்லமை மற்றும் முழுமையான ஞானம், அவருடைய மனநிலை ஆகியவற்றைப் பற்றிய அறிவை அடையவும் உதவும். அவரிடம் இருந்து நீ நேர்மறையான விஷயங்களைப் பெறுவாய், மேலும் சத்தியத்தைப் புரிந்து எதார்த்தத்துக்குள் பிரவேசிப்பாய். உன்னுடைய அனுபவங்களுக்கு மத்தியில் நீ விரும்பும்படி நிகழாதவை பல இருக்கும், அவற்றிற்கு எதிராக பலமற்றவனாய் உணர்வாய். இதைக் கொண்டு, நீ தேடி காத்திருக்க வேண்டும்; ஒவ்வொரு விஷயத்துக்குமான பதிலை தேவனிடம் இருந்து பெற வேண்டும், மற்றும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அடிப்படையாக இருக்கும் சாராம்சத்தையும் ஒவ்வொரு வகையான நபரின் சாராம்சத்தையும் அவருடைய வார்த்தைகளில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சாதாரண, இயல்பான நபர் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவனுடைய வார்த்தைகளை மனதில் வைத்திருப்பதே தேவனை விசுவாசிப்பதின் அடித்தளமாகும்”). தேவன் நம்ப முடியாத அளவுக்கு ஞானமுள்ளவர். தேவன் எப்படி செயல்படுகிறாருங்கறதப் பத்திய புதிய புரிதல நான் பெற்றேன். ஒவ்வொருவரும் தங்களோட கடமையில சில தோல்விகளயும் பின்னடைவுகளயும் சந்திச்சாகணுங்கறத நான் பாத்தேன், இது எல்லாத்து மூலமாவும் நான் என்னோட சீர்கேட்ட தீக்கறதுக்கு சத்தியத்தத் தேடணுங்கறதுதான் தேவனோட சித்தமா இருந்துது. நான் என்னோட கடமையில கொஞ்சக் கஷ்டங்கள சந்திச்சேன், கொஞ்சம் தோல்விகள அனுபவிச்சேன், ஆனா நான் சத்தியத்தையோ தேவனோட சித்தத்தையோ தேடல. நான் எப்பவும் ராஜினாமா செய்றத பத்திதான் நெனச்சேன் ஏன்னா என் கடமையில நான் எந்த வெற்றியயும் பெறல அல்லது ஒரு தலைவர் செய்ய வேண்டியத நான் செய்யலங்கற மாதிரி நினைச்சேன். என்னோட உண்மையான நிலையப் பத்தி மத்தவங்க கிட்ட சொல்லக் கூட நான் துணியல. நான் உண்மையில அறிவில்லாதவளா இருந்தேன். தேவனோட சித்தத்த அல்லது அந்த மாதிரியான காரியம் எனக்கு நடக்க தேவன் ஏன் அனுமதிக்கணும்னு நான் புரிஞ்சுக்கல. தேவனோட வார்த்தைகள்ல இருந்து நான் வெறுமனே ஒரு சாதாரண நபராத்தான் இருந்தேன், அதனால என் கடமையில் கொஞ்சம் சிரமங்களயும் தோல்விகளயும் சந்திச்சது சகஜந்தாங்கறத நான் பாத்தேன். தேவனோட சித்தம் அதுக்குள்ள இருந்துது. அதனால, நான் என்னோட சமீபத்திய நிலைய சகோதர சகோதரிககிட்ட மனந்திறந்து பேசி அவங்களோட உதவிய நாடுனேன். பொறுப்ப ஏத்துக்கிட்டு ராஜினாமா செய்யணுங்குற எண்ணம் எனக்கு இருப்பதாவும் அவங்க கிட்ட சொன்னேன். அவங்க என்ன தாழ்வாப் பாக்கல, ஆனா எனக்கு உதவி செஞ்சு ஊக்குவிச்சாங்க, அதோட தேவனோட வார்த்தைகளப் பத்தி ஐக்கியப்பட்டாங்க. நான் உண்மைல நெகிழ்ந்து போனேன்.

அவங்க சர்வ வல்லமையுள்ள தேவனோட சில வார்த்தைகள எனக்கு வாசிச்சாங்க. தேவன் சொல்லுகிறார்: “தேவனுடைய கிரியையை அனுபவிக்கும் காலத்தில், நீ எத்தனை முறை தோல்வியடைந்திருந்தாலும், கீழே விழுந்திருந்தாலும், கிளைநறுக்கப்பட்டிருந்தாலும், கையாளப்பட்டிருந்தாலும் அல்லது அம்பலப்படுத்தப்பட்டிருந்தாலும், இவை மோசமான விஷயங்கள் அல்ல. நீ எப்படிக் கிளை நறுக்கப்பட்டிருந்தாலும் அல்லது கையாளப்பட்டிருந்தாலும், அல்லது அது தலைவர்கள் மூலமாகவோ, ஊழியர்கள் மூலமாகவோ அல்லது உன் சகோதர சகோதரிகள் மூலமாகவோ இருந்தாலும், இவை அனைத்தும் நல்ல விஷயங்களாகும். இதை நீ நினைவில் கொள்ள வேண்டும்: நீ எவ்வளவு பாடுபட்டாலும் பரவாயில்லை, நீ உண்மையிலேயே பயனடைந்துகொண்டிருக்கிறாய். அனுபவம் உள்ள எவராலும் இதை உறுதிப்படுத்த முடியும். எது எப்படியோ, கிளைநறுக்கப்படுவது, கையாளப்படுவது அல்லது அம்பலப்படுத்தப்படுவது என்பது எப்போதுமே ஒரு நல்ல விஷயமாகும். இது கண்டனம் செய்வது அல்ல. இது தேவனுடைய இரட்சிப்பும், உன்னையே நீ அறிந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்புமாகும். இது உன் வாழ்க்கை அனுபவத்தை மாற்றியமைக்கும். இது இல்லாமல், உன்னுடைய சீர்கேட்டைப் பற்றிய உண்மையைக் குறித்த புரிதலை அடைவதற்கான வாய்ப்போ, நிலைமையோ அல்லது சூழலோ உனக்கு இருக்காது. நீ உண்மையாகவே சத்தியத்தைப் புரிந்துகொண்டு, உன்னுடைய இருதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் சீர்கேடான காரியங்களை வெளிக்கொணர முடிந்தால், உன்னால் அவற்றைத் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க முடிந்தால், அப்போது இது நல்லது, இது ஜீவனுக்குள் பிரவேசிப்பதில் உள்ள ஒரு பெரிய பிரச்சனையைத் தீர்த்துள்ளது, மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு பெரும் பயனளிக்கிறது. உன்னை உண்மையாக அறிந்துகொள்ள இயலுவது உன் வழிகளைச் சரிசெய்து புதிய நபராக மாறுவதற்கு உனக்கான சிறந்த வாய்ப்பாகும்; புதிய ஜீவனைப் பெற இது உனக்கு சிறந்த வாய்ப்பாகும். உன்னையே நீ உண்மையிலேயே அறிந்தவுடன், சத்தியம் ஒருவருடைய ஜீவனாக மாறும்போது, அது உண்மையிலேயே விலையேறப்பெற்ற ஒரு காரியம் என்பதை உன்னால் பார்க்க முடியும், மேலும் நீ சத்தியத்தின் மீது தாகம்கொள்வாய், சத்தியத்தைக் கைக்கொள்ளுவாய், மற்றும் அதன் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பாய். இது ஒரு மிகப் பெரிய விஷயம்! நீ இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உன்னைக் குறித்து வாஞ்சையோடு ஆராய்ந்து பார்த்து, நீ தோல்வியடையும் போதெல்லாம் அல்லது கீழே விழும்போதெல்லாம் உன்னைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற முடிந்தால், அப்போது எதிர்மறையானவை மற்றும் பலவீனத்தின் மத்தியில், உன்னால் மறுபடியும் எழும்பி நிற்க முடியும். இந்த ஆரம்பக் கட்டத்தை நீ கடந்துவிட்டால், பிறகு உன்னால் ஒரு பெரிய அடியை முன்னோக்கி எடுத்து வைக்கவும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவும் முடியும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைப் பெற, ஒருவர் அருகில் உள்ள ஜனங்கள், காரியங்கள் மற்றும் விஷயங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்”). “மனிதகுலத்தின் தேவனுடைய இரட்சிப்பு சத்தியத்தை நேசிப்பவர்களின் இரட்சிப்பாகும், விருப்பமும் உறுதியும் கொண்ட அவர்களுடைய ஒரு பகுதியின் இரட்சிப்பும், மற்றும் அவர்களின் இருதயத்தில் சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் ஏங்குகிற ஒரு பகுதியின் இரட்சிப்புமாகும். ஒரு நபரின் தீர்மானம் அவர்களின் இருதயங்களில் உள்ள, நீதி, நன்மை மற்றும் சத்தியத்திற்காக ஏங்குகிற, மற்றும் மனசாட்சியைக் கொண்ட பகுதியாகும். தேவன் மக்களின் இந்தப் பகுதியை இரட்சிக்கிறார், அதன் மூலம், அவர் அவர்களின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுகிறார், அதனால் அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் இயலும், அதனால் அவர்களின் சீர்கேடு சுத்திகரிக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை மனநிலை மறுரூபப்படும். உனக்குள் இந்த காரியங்கள் இல்லை என்றால், நீ இரட்சிக்கப்பட முடியாது. … பேதுரு ஒரு கனி என்று ஏன் கூறப்படுகிறது? ஏனென்றால் அவனிடத்தில் மதிப்புமிக்க விஷயங்கள் உள்ளன, பரிபூரணப்படுத்தத் தகுதியான விஷயங்கள் உள்ளன. அவன் எல்லாவற்றிலும் சத்தியத்தைத் தேடினான், உறுதியுடன் இருந்தான், சித்தத்தில் உறுதியாக இருந்தான்; அவனுக்குப் பகுத்தறிவு இருந்தது, துன்பங்களை அனுபவிக்கத் தயாராக இருந்தான், தன்னுடைய இருதயத்தில் சத்தியத்தை நேசித்தான்; அவன் நடந்ததை அப்படியே விட்டுவிடவில்லை, அவனால் எல்லாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. இவை அனைத்தும் வலுவான கருத்துகள். உன்னிடம் இந்த வலுவான கருத்துகள் எதுவும் இல்லை என்றால், அது சிக்கலைக் குறிக்கிறது. நீ சத்தியத்தைப் பெறுவதும் இரட்சிக்கப்படுவதும் உனக்கு எளிதானதாக இருக்காது. உனக்கு எப்படி அனுபவிப்பது என்று தெரியாவிட்டால் அல்லது அனுபவம் இல்லை என்றால், மற்றவர்களின் கஷ்டங்களை உன்னால் தீர்க்க முடியாது. ஏனென்றால், நீ தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளவும் அனுபவிக்கவும் திறனற்றவனாய் இருக்கிறாய், மேலும் உனக்கு ஏதாவது நேரிடும்போது என்ன செய்வது என்று தெரிவதில்லை, நீ பிரச்சனைகளை சந்திக்கும் போது வருத்தப்படுகிறாய்-சத்தமிட்டு அழுகிறாய், நீ சில சிறிய பின்னடைவுகளை சந்திக்கும்போது எதிர்மறையாகி ஓடிவிடும்போது, மேலும் சரியான வழியில் எப்போதுமே எதிர்வினையாற்ற இயலாமல் இருக்கிறாய்—இவை எல்லாவற்றின் நிமித்தமாக, ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு சாத்தியமில்லை(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). இதப் படிச்சதுக்கப்புறம், ஒரு சகோதரி என்கிட்ட இப்படியா ஐக்கியப்பட்டாங்க: “நாம எப்படிப்பட்ட பின்னடைவுகளயும் தோல்விகளயும் சந்திச்சாலும், நமது ஜெபிச்சு தேவனோட சித்தத்தத் தேடணும், சத்தியத்தயும் நம்மோட கடமையயும் விட்டுடக்கூடாது. கடமைய விட்டுடறது பிரச்சினைய தீர்க்கதறதுக்கான வழி கெடயாது. நாம நம்மளோட கடமைகள்ல சந்திக்கிற சிரமங்கள் மற்றும் சிக்கல்கள் மூலமா மட்டுந்தான் நம்மோட சீர்கேடும் குறைபாடுகளும் வெளிப்படுத்தப்பட்டு, நம்மள நாமே உண்மையா தெரிஞ்சுக்க முடியும். அந்த அனுபவங்கள் இல்லாம, நாம நம்மோட சீர்கேட்டையும் நம்ம கிட்ட இருக்குற குறயயும் பாக்கவே முடியாது. அப்புறம் எப்படி நாம மாற முடியும்? அப்படின்னா, தோல்வியயும் தடுமாற்றத்தயும் அனுபவிக்கிறது ஒரு மோசமான காரியம் இல்ல. அப்பத்தான் நாம சத்தியத்தத் தேடி பாடத்தக் கத்துக்கணும், நாம தேவன தவறா புரிஞ்சுக்க முடியாது. நாம வெறுமனே ராஜினாமா செஞ்சா, சிரமங்க ஏற்படுறப்போ கடமைய விட்டுட்டா, நாம எப்படி தேவனோட கிரியைய அனுபவிக்கறது அதோட இரட்சிப்ப பின்தொடர்றது? நமக்கு என்ன சாட்சி இருக்கும்? தேவன் நம்மகிட்ட அதிகமா கேக்குறதில்ல. பிரச்சினைகளயும் கஷ்டங்களயும் எதிர்கொள்றப்போ நம்மகிட்ட மன உறுதி இருந்தா, அதோட உண்மையா ஜெபிச்சு சத்தியத்த தேடுனா, அப்போ தேவன் நமக்கு வழிகாட்டி உதவுவாரு.” இந்தச் சகோதரியோட ஐக்கியத்தக் கேட்டது எனக்கு உண்மையிலயே பிரகாசிப்பிக்கிறதா இருந்துது. தோல்விகளயும் தடுமாற்றங்களயும் அனுபவிக்கிறது தேவனோட அன்புங்கறதயும் அது சத்தியத்த தேடுறதுக்கும் பாடத்தக் கத்துக்கறதுக்கும் எனக்கு ஒரு நல்ல வாய்ப்புங்கிறதயும் உணர்ந்தேன். பேதுரு அவனோட வாழ்க்கை முழுவதுலயும் எப்படிப் பல சோதனைகள, சுத்திகரிப்புகள, பின்னடைவுகள, தோல்விகள அனுபவிச்சான்னு நான் நெனச்சேன். சில நேரங்கள்ல அவன் சரீர பலவீனத்த அனுபவிச்சான், ஆனா அவன் தேவன் மேலிருந்த விசுவாசத்த இழக்கல. அவன் தொடர்ந்து சத்தியத்த பின்தொடர்ந்து, தேவனோட சித்தத்தத் தேடுனான், தங்கிட்ட இல்லாதத ஈடு செஞ்சான். கடைசில, அவன் சத்தியத்தப் புரிஞ்சுட்டு தேவன தெரிஞ்சுட்டான், அதோட தேவனுக்கான கீழ்ப்படிதலயும் அன்பயும் அடஞ்சான். நான் பேதுரு மாதிரியே உறுதியாவும் தீர்மானமாவும் இருக்கணும், நான் பின்னடைவுகளயும் தோல்விகளயும் சந்திக்கிறப்போ ஜெபத்துல தேவனுக்கு முன்னாடி வந்து அவரோட சித்தத்தத் தேடணும், தேவனத் தப்பா புரிஞ்சுட்டு குற்றஞ்சாட்டுறதுக்குப் பதிலா என்கிட்ட என்ன குறைங்கறத சிந்திக்கணும்.

ஒரு தடவ என்னோட தியானங்கள்ல தேவனோட சித்தத்த கொஞ்சம் புரிஞ்சுக்க எனக்கு உதவுன தேவனோட வார்த்தைகள்ல ஒரு பகுதிய நான் படிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவனுடைய வார்த்தைகளைக் கவனித்துக் கேட்டு அவருடைய இருதயத்தைப் புரிந்துகொள்ள ஜனங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தேவனைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. உண்மையில், பல சந்தர்ப்பங்களில், ஜனங்களுடைய கவலை அவர்களின் சொந்த நலன்களில் இருந்தே கிளைக்கின்றன. பொதுவாகப் பேசும்போது, அவர்களுக்குப் பலன்கள் கிடைக்காது என்ற அச்சமே அது. அவர்கள் எப்போதும், ‘தேவன் என்னை அம்பலப்படுத்தி, புறம்பாக்கி, நிராகரித்தால் என்ன செய்வது?’ என்று தங்களுக்குள் நினைக்கிறார்கள். இது தேவனைப் பற்றிய உன் தவறான புரிதலே; இவை உன்னுடைய சிந்தனைகள் மட்டுமே. தேவனுடைய எண்ணம் என்னவென்று நீ கண்டுபிடிக்க வேண்டும். அவர் மக்களை அம்பலப்படுத்துவது அவர்களைப் புறம்பாக்குவதற்காக அல்ல. மக்களுடைய குறைகளை, தவறுகளை, அவர்களுடைய சுபாவவங்களின் தன்மைகளை வெளிப்படுத்தவும், அவர்களை தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளவும், உண்மையாகவே மனந்திரும்பக் கூடியவர்களாகச் செய்யவுமே; இப்படி, ஜனங்களின் வாழ்க்கை வளரவே அவர்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள். ஒரு தூய்மையான புரிதல் இல்லாவிட்டால், மக்கள் தேவனைத் தவறாகப் புரிந்துகொண்டு எதிர்மறையாகவும் பலவீனமாகவும் மாறும் வாய்ப்புண்டு. அவர்கள் வேதனையிலும்கூட மூழ்குவார்கள். உண்மையில், தேவனால் அம்பலப்படுத்தப்படுவதனால் மக்கள் புறம்பாக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் சொந்த சீர்கேட்டை அறிந்துகொள்ள உதவவும் உங்களை மனந்திரும்ப வைக்கவுமே அது. பல வேளைகளில் மக்கள் கலகக்காரர்களாக இருப்பதாலும் அவர்களிடம் இருந்து சீர்கேடுகள் நிறைந்து வழியும்போது ஒரு தீர்வை கண்டறிய சத்தியத்தைத் தேடாததாலும், தேவன் தண்டித்துத் திருத்துதலை பயன்படுத்த வேண்டும். அதனால் மேலும் சிலவேளைகளில் அவர் ஜனங்களை அம்பலப்படுத்துகிறார், அவர்களுடைய அவலட்சணத்தையும் பரிதாபத்துக்குரிய நிலையையும் அம்பலப்படுத்தி, அவர்கள் தங்களைத் தாங்களே அறிந்துகொள்ள அனுமதிக்கிறார், இது அவர்கள் வாழ்க்கை வளர உதவுகிறது. மக்களை அம்பலப்படுத்துவதனால் இரு விளைவுகள் ஏற்படுகின்றன: துன்மார்க்கரைப் பொறுத்தவரை, அம்பலப்படுத்தப்படுதல் என்பது அவர்கள் புறம்பாக்கப்படுவார்கள் என்று அர்த்தம். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு, அது ஒரு நினைவூட்டலும் எச்சரிக்கையுமாகும்; அவர்கள் தங்களைப் பற்றிச் சிந்திக்கவும், தங்கள் உண்மை நிலையைப் பார்க்கவும், இனிமேலும் வழிவிலகி பொறுப்பற்றவர்களாய் இல்லாமலும் இருக்கப் பண்ணப்படுகிறார்கள், ஏனெனில் இப்படியே தொடர்வது ஆபத்தாகமுடியும். மக்களுக்கு நினைவூட்டவே இப்படி அம்பலப்படுத்தப்படுகிறார்கள், இதனால் அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது, சிரத்தையற்றும், அக்கறை இல்லாமலும், கவனம் இல்லாமலும் இருப்பதை விட்டு, கொஞ்சம் பலன் கிட்டினாலும் திருப்தி அடைந்துவிடாமல் இருக்கவும், ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்துக்கு தங்கள் கடமையைச் செய்துவிட்டதாகக் கருதாமல்—உண்மையில், தேவன் எதிர்பார்க்கும் அளவீடுகளினால் அளக்கப்பட்டு, அதில் அவர்கள் மிகவும் குறைவுபட்டும், ஆனால் இன்னும் திருப்தி அடைந்து தாங்கள் செய்வது சரி என்று எண்ணாமல் இருக்கவும் நினைவூட்டவே அம்பலப்படுத்தப்படுகிறார்கள். இத்தகையச் சூழ்நிலைகளில், தேவன் மக்களை தண்டித்துத் திருத்தி, எச்சரித்து, நினைவூட்டுவார். சில வேளைகளில், அவர்களுடைய அவலட்சணத்தை தேவன் அம்பலப்படுத்துவார்—அது அப்பட்டமாக ஒரு நினைவூட்டலாக சேவை செய்யும். அப்படிப்பட்ட நேரங்களில் உன்னைப் பற்றி நீயே சிந்தித்துப் பார்க்கவேண்டும்: உன்னுடைய கடமையை இப்படிச் செய்வது போதுமானதல்ல, கலகத்தன்மை அதில் அடங்கியுள்ளது, மிகவும் எதிர்மறையான விஷயம் உள்ளடங்கியுள்ளது, இது முழுவதும் செயலற்றதாக உள்ளது, மேலும் நீ மனந்திரும்பாவிட்டால், தண்டிக்கப்படுவாய். தேவன் உன்னைக் தண்டித்துத் திருத்தும்போதும், உன்னை அம்பலப்படுத்தும்போதும், நீ புறம்பாக்கப்படுவாய் என்று அர்த்தம் அல்ல. இந்த விஷயத்தைச் சரியாக அணுக வேண்டும். நீ புறம்பாக்கப்பட்டாலும், அதை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியவேண்டும், மேலும் துரிதமாகச் சிந்தித்து மனந்திரும்ப வேண்டும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைக் கைக்கொள்வதன் மூலமும் தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் மட்டுமே ஒருவரால் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியும்”). ஜனங்கள அம்பலப்படுத்துறதுல தேவனோட நோக்கம், அவங்கள புறம்பாக்கறது இல்ல ஆனா அவங்களோட சீர்கேட்டையும் குறைபாடுகளையும் அவங்கள அடையாளங்காண வெக்கவும், அதனால அவங்க தங்களோட பிரச்சினைகள தீர்க்கவும் வாழ்க்கையில வேகமா முன்னேறவும் சத்தியத்தப் பின்தொடர முடியுங்கறத தேவனோட வார்த்தைகள் எனக்குக் காட்டுச்சு. நான் என்னைப் பத்திச் சிந்திக்க ஆரம்பிச்சேன். பலதரப்பட்ட சிரமங்களயும் சிக்கல்களயும் எதிர்கொண்ட நான், உண்மையா சிந்திச்சு தேவனோட சித்தத்த நாடல அல்லது என்னோட சொந்தப் பிரச்சினைகள பத்தித் தெரிஞ்சுக்க சுயமா சிந்திக்கவுமில்ல. தேவன் என்னை அம்பலப்படுத்தவும் புறம்பாக்கவும் இந்தச் சூழ்நிலைகளப் பயன்படுத்தினாருன்னும் நான் தலைவரா இருக்கப் பொருத்தமானவள் இல்ல நான் விலகணும்னு வெறுமனே நினைச்சேன். நான் தேவன தப்பா புரிஞ்சுட்டிருந்தேன். நான் முழு மனசோட கடமையில ஈடுபடாததனாலதான் முக்கியமா வேலைல பல சிக்கல்கள் தீர்க்கப்படாம இருந்துதுங்கறத நான் அதுக்கப்புறமா உணர்ந்துட்டேன். நான் செய்யறதுக்குப் நெறைய விஷயங்கள் இருந்ததா எப்பவும் நெனச்சேன், ஆனா நான் வேல செஞ்சுட்டிருந்தப்போ எனக்கு எந்த வழிமுறைகளோ இலக்குகளோ இல்லாம இருந்துது. நான் எந்தப் பலன்களயும் தேடாம மனசுல பட்டத அப்படியே செஞ்சிட்டிருந்தேன் சில பேரு வதந்திகளால தவறா வழிநடத்தப்பட்டாங்க அதோட அவங்க அந்த வதந்திகள பகுத்தறிஞ்சு மெய்யான வழியில உறுதியா நிக்கறதுக்கு அவங்களோட கருத்துகளை தீர்க்க நான் எந்தச் சத்தியத்தோட அம்சத்துல ஐக்கியப்படணும்னு தேடல ஜனங்களப் பண்படுத்துறதுல அதுக்கான கொள்கைகள நான் நாடல அல்லது அவங்களோட உண்மையான சூழ்நிலைகள பத்தின தெளிவான புரிதலையும் பெறல, ஆனா நான் அத அப்படியே கண்மூடித்தனமா செஞ்சேன். அதனால, அந்த அம்சத்துலயும் நான் எதயும் சாதிக்கல. புதுசா வர்றவங்களுக்கு நீர்ப்பாய்ச்சுறதுல, அவங்களோட பிரச்சினைகள தீர்க்க சத்தியத்தோட எந்த அம்சங்கள்ல நான் ஐக்கியப்படலாங்கறத நான் முன்னாடியே யோசிக்கல, அதனால எனக்கு அதுல உண்மையான பலன்கள் எதுவும் கெடைக்கல. மேலோட்டமா பார்த்தா, நான் கடினமா உழைக்குற மாதிரி தெரிஞ்சாக்கூட, நான் கவனத்தோட இருக்கல அதோட எங்க வேலையில இருந்த சிக்கல்கள சரியான நேரத்தில சுருக்கமா சொல்லல, அதாவது எதுவுமே நிறைவேத்தப்படல. அதோட என்னைப் பத்திச் சிந்திக்கவும் புரிஞ்சுக்கவும் நான் தவறுனது மட்டுமில்லாம நான் பிரவேசிக்க வேண்டிய சத்தியங்கள தேடுறதுக்கும் தவறுனேன். அவர் வேணும்னே என்னை அம்பலப்படுத்துறாரு என்னை மோசமா தெரிய வெக்கிறாரு அப்படின்னு யூகிச்சுட்டு, பொறுப்ப தேவன் மேல தள்ளுறதுதான் என்னோட முதல் எதிர்வினையா இருந்துது. நான் எப்பவும் முணுமுணுத்துட்டே இருந்தேன், நான் தோல்விகளயும் பின்னடைவுகளயும் சந்திக்க விரும்பல, ஆனா எப்பவுமே காரியங்க சுலபமா இருக்கணும்னு விரும்புனேன், எல்லாமே சீரா போகணும்னு விரும்புனேன். நான் கொஞ்சக் கஷ்டத்திலயும் தேவன தவறாப் புரிஞ்சுட்டு குற்றஞ்சாட்டுனேன். தேவனோட கிரியைய நான் எப்படி அனுபவிச்சறிஞ்சு என்னோட கடமைய சிறப்பாச் செய்யறது? நான் ரொம்பவும் நியாயமற்றவளா இருந்தேன். ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினம் அப்படி நடந்துக்கக் கூடாது. இத உணர்ந்து, நான் ரொம்பவும் வருத்தப்பட்டேன், அதோட தேவன்கிட்ட, “தேவனே, எனக்குப் பயிற்சி கொடுக்கறதுக்காக, வாழ்க்கைல என்னை வளர அனுமதிக்கிறதுக்காக நீர் இத அமச்சீங்க, ஆனா நான் உம்மோட சித்தத்தப் புரிஞ்சுக்கல, நான் உம்மத் தவறாப் புரிஞ்சுட்டேன். நான் ரொம்ப கலகக்காரி. தயவு செஞ்சு எனக்கு வழிகாட்டி என்னோட சொந்த சீர்கெட்ட புரிஞ்சுக்க எனக்கு உதவி செய்யும்” அப்படின்னு ஜெபிச்சேன். அதுக்கப்புறம், நான் என்னைப் புரிஞ்சிக்க உதவுன சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பகுதியப் படிச்சேன். தேவன் சொல்லுகிறார்: “மற்றவர்களை சந்தேகிக்காதவர்களிடத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், மற்றும் சத்தியத்தை உடனடியாக ஏற்றுக்கொள்பவர்களே எனக்கு வேண்டும். இந்த இரண்டு விதமான ஜனங்களை நோக்கி நான் மிகுந்த அக்கறை காட்டுகிறேன், ஏனென்றால் என் பார்வையில் அவர்கள் நேர்மையான ஜனங்கள். நீ வஞ்சகனாக இருந்தால், நீ எல்லா மக்களிடமும் காரியங்களிடமும் எச்சரிக்கையாக இருப்பாய், சந்தேகப்படுவாய், இதனால் என் மீது உன் விசுவாசம் சந்தேகம் என்னும் அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும். அத்தகைய விசுவாசத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையான விசுவாசத்தின் குறைபாட்டால், நீ உண்மையான அன்பிலிருந்து இன்னும் அதிகமாக விலகிவிட்டாய். தேவனைச் சந்தேகிக்கவும், அவரைப் பற்றி விருப்பப்படி ஊகிக்கவும் நீ ஆளாகிறாய் என்றால், நீ சந்தேகமின்றி, எல்லா ஜனங்களைக் காட்டிலும் மிகவும் வஞ்சகனாக இருக்கிறாய். மன்னிக்க முடியாத பாவம், அற்பமான குணம், நியாயமும் பகுத்தறிவும் இல்லாமை, நீதி உணர்வு இல்லாமை, பொல்லாத தந்திரங்களைக் கொண்டிருத்தல், துரோகம் மற்றும் கபடம், தீமை மற்றும் இருள் ஆகியவற்றால் மகிழ்தல், மற்றும் பலவற்றால் தேவன் மனிதனைப் போல இருக்க முடியுமா என்று நீ ஊகிக்கிறாய். ஜனங்களுக்கு இத்தகைய எண்ணங்கள் இருப்பதற்கு தேவனைக் குறித்த சிறிதளவு அறிவும் இல்லாததே காரணம் இல்லையா? இத்தகைய விசுவாசம் பாவத்திற்குக் குறைவானதல்ல! என்னைப் பிரியப்படுத்துபவர்கள் துல்லியமாக முகஸ்துதி செய்து தன் காரியத்திற்காகக் கெஞ்சுபவர்கள் என்றும், அத்தகைய திறமைகள் இல்லாதவர்கள் தேவனின் வீட்டில் வரவேற்கப்படாதவர்களாக இருப்பார்கள் என்றும், அங்கே தங்கள் இடத்தை இழக்க நேரிடும் என்றும் சிலர் நம்புகிறார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நீங்கள் பெற்ற அறிவு இது மட்டும் தானா? இதைத்தான் நீங்கள் பெற்றுள்ளீர்களா? என்னைக் குறித்த உங்கள் அறிவு இந்தத் தவறான புரிதல்களோடு நிற்காது. தேவனின் ஆவியானவருக்கு எதிரான உங்கள் தூஷணமும் பரலோகத்தை இழிவுபடுத்துவதும் இன்னும் மோசமானது. இதனால்தான், உங்களுடையதைப் போன்ற விசுவாசம் உங்களை என்னிடமிருந்து மேலும் விலகக் காரணமாகி, எனக்கு எதிராக அதிக எதிர்ப்பாக இருக்கும் என்று நான் சொல்கிறேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி”). தேவனோட வார்த்தைகள் வெளிப்படுத்துறத எதிர்கொண்டப்போ நான் உண்மையிலயே என்னைக் குறிச்சே வெக்கப்பட்டேன். நான் தேவன் மேல சந்தேகப்பட்டேன் அதோட தோல்விகளயும் பின்னடைவுகளயும் சந்திச்சப்போ அவரத் தப்பாப் புரிஞ்சிட்டேன், அவர் ஜனங்களப் போலவே முரட்டுத்தனமானவராவும் இதயமில்லாதவராவும் இருக்கிறவரா அவரப் பத்தி நெனச்சேன். தேவன் ஒருத்தரப் பயன்படுத்த விரும்புனா அவரோட கிருபைய அனுபவிக்க அவங்கள அனுமதிப்பாரு இல்லைன்னா அவர் அவங்கள புறம்பாக்கி, ஓரமா எறிஞ்சு, அவங்கள புறக்கணிச்சுருவாரு அப்படின்னு நான் நெனச்சேன். நான் அநீதியானவங்களோட உளவியல் அடிப்படையில தேவன மதிப்பீடு பண்ணி சந்தேகப்பட்டேன். நான் ரொம்பத் தந்திரமானவளா இருந்தேன்! நான் நீண்ட காலமா விசுவாசியா இல்ல,நான் புரிஞ்சிட்ட சத்தியங்கள் குறைவாத்தான் இருந்துது அதோட என்கிட்ட நிறைய குறைபாடுகள் இருந்துது ஆனா அப்போ சகோதர சகோதரிகள் என்னை ஒரு தலைவராத் தேர்ந்தெடுத்து பயிற்சி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பக் கொடுத்தாங்க அதனால நான் சத்தியத்த சீக்கிரமாக் கத்துக்கிட்டு சத்தியத்தோட யதார்த்தத்துக்குள்ள பிரவேசிக்க முடியும். சில நேரங்கள்ல என் கடமையில வேண்டிய கவனமில்லாம இருந்தது சாதனைகள் இல்லாம போனதுக்கு வழிவகுத்தப்பவும்கூட, திருச்சபை என்னைப் பணி நீக்கம் பண்ணாம இருந்துது. அப்பவும் மத்தவங்க எல்லாம் எனக்கு உதவுனாங்க ஊக்கமளிச்சாங்க, தேவனோட வார்த்தைகளப் பத்தி என்கிட்ட ஐக்கியப்பட்டாங்க, தேவனோட சித்தத்தப் புரிஞ்சிக்கவும் என்னோட சீர்கேட்டையும் குறைபாடுகளயும் தெரிஞ்சுக்கவும் என்னை வழிநடத்துனாங்க. தேவன் எனக்காக செஞ்சிட்டிருந்த எல்லாமே என்னை உண்மையாப் பண்படுத்தி இரட்சிச்சது. அவர் ரொம்ப அன்பானவர் அதோட இனிமையானவர்! ஆனா நான் தேவனுக்கு எதிரா என்னைப் பாதுகாத்துட்டு இருந்தேன், அவரச் சந்தேகப்பட்டேன். அது எப்படி தேவன உண்மையா விசுவாசிக்கறதா இருந்துது? நான் சாத்தானால ரொம்ப ஆழமா விஷமாக்கப்பட்டிருந்தேன், நான் எப்பவும், “யாரயும் நம்பாத, ஏன்னா உன்னோட நிழல் கூட உன்ன இருட்டுல விட்டுட்டுப் போயிரும்” அதோட “நீ தீங்கிழைக்க முடியாது, ஆனா நீ எப்பவும் உன்னைப் பாதுகாத்துக்கணும்” போன்ற சாத்தானோட பொய்களப் பின்பற்றுனேன். நா எல்லாத்துகிட்ட இருந்தும், தேவன் கிட்ட இருந்து கூட என்னைப் பாதுகாத்துட்டு இருந்தேன். என்னோட தந்திரமான மனநில உண்மையில ரொம்பத் தீவிரமா இருந்ததுங்கறத இது எனக்குக் காட்டுச்சு, அங்கதான் முழுசா தேவனப் பத்தின என்னோட சந்தேகங்களும் தவறான புரிதல்களும் வந்துது. சிரமங்கள எதிர்கொண்டப்போ, நான் தேவனை மதிப்பீடு செஞ்சு தவறாப் புரிஞ்சுட்டேன், ஆனா அப்பவும் சத்தியத்தப் புரிஞ்சுக்க, என் சொந்தப் பிரச்சினைகள என்னைப் பாக்க வெச்சு தேவன் என்னை வழிநடத்தினாரு. என்னால தேவனோட அன்பயும் எனக்கான அவரோட இரட்சிப்பும் எவ்ளோ உண்மையானதுங்கறதையும் உணர முடிஞ்சது நான் அவர்கிட்ட மனந்திரும்பத் தயாரா தேவனுக்கு முன்னாடி வந்து ஜெபம்பண்ணேன் அதோட தேவன சந்தேகப்பட்டு தவறாப் புரிஞ்சிட்டு, என்னோட தந்திரமான மனநிலைப்படி வாழ்றத நிறுத்தினேன்.

அதுக்கப்புறம் தேவனோட வார்த்தைகள்ல இருந்து இந்தப் பகுதிய நான் படிச்சேன்: “இப்போது நீ உன் கடமையை விருப்பத்தோடு செய்தாலும், தியாகங்களைச் செய்து உன்னை விருப்பத்துடன் ஒப்புக்கொடுத்தாலும், இன்னும் உனக்கு தேவனைப் பொறுத்தவரையில் தவறான புரிதலும், யூகங்களும், சந்தேகங்களும் அல்லது அவரைக் குறித்த குறைகளும், அவருக்கு எதிராகக் கலகத் தன்மையும் எதிர்ப்பும் கூட இருந்தால், அல்லது அவரை எதிர்க்க பல்வேறு முறைகளையும் உத்திகளையும் நீ பயன்படுத்தி உன்மேல் அவருக்கு இருக்கும் ராஜரீகத்தை நிராகரித்தால்—இந்த விஷயங்களை நீ தீர்க்காவிட்டால்—உன் ஆளுமையைச் சத்தியம் ஆட்கொள்ளுவது கிட்டத்தட்ட சாத்தியமில்லாததாகும், மேலும் உன் வாழ்க்கை சோர்வடையச் செய்வதாக இருக்கும். உண்மைகள் மற்றும் பொய்மைகள், சரி மற்றும் தவறுகள் ஆகியவற்றின் மத்தியில் எப்போதும் வாழும் ஜனங்கள், அடிக்கடி புதைகுழிக்குள் புதைந்தது போல் போராட்டத்துக்குள்ளாகி துன்பப்படுகிறார்கள். சத்தியத்தை எவ்வாறு கண்டுபிடித்து அவர்களால் புரிந்துகொள்ள முடியும்? சத்தியத்தைத் தேட, ஒருவன் முதலில் கீழ்ப்படிய வேண்டும். பின்னர், ஒரு காலகட்ட அனுபவத்துக்குப் பின், அவர்களால் கொஞ்சம் பிரகாசிப்பித்தலை அடைய முடியும், அந்தக் கட்டத்தில் சத்தியத்தைப் புரிந்துகொள்ளுவது எளிது. ஒருவன் எப்போதும் எது சரி, எது தவறு என்று அறிய முயற்சி செய்துகொண்டிருந்து எது உண்மை எது தவறு என்பதில் சிக்கிக் கொண்டால், அவர்களுக்கு சத்தியத்தைக் கண்டுபிடித்து புரிந்துகொள்ள ஒரு வழியும் இல்லை. ஒருவனால் ஒருபோதும் சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் என்னவாகும்? சத்தியத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால் தேவனைப்பற்றிய கருத்துகளும் தவறான புரிதல்களும் ஏற்படுகின்றன; தவறான புரிதல்கள் இருக்கும்போது, கோப உணர்வு ஏற்படுகிறது; மனக்குறைகள் பொங்கி வரும்போது அவர்கள் எதிரிடையாகிறார்கள்; தேவனை விரோதிப்பது அவருக்கு எதிரான எதிர்ப்பாகும், மேலும் தீவிர மீறுதல் ஆகும்; பல மீறல்கள் பலமடங்கு தீமையாக மாறும், மற்றும் அதன் பின் ஒருவர் தண்டிக்கப்பட வேண்டும். காலங்காலமாய்ச் சத்தியத்தைப் புரிந்துகொள்ளாமல் இருந்தால் வருவது இப்படிப்பட்ட விஷயம்தான்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைப் பின்தொடர்வதன் மூலம் மட்டுமே ஒருவரால் தேவனைப் பற்றிய தனது எண்ணங்களையும் தவறான புரிதல்களையும் சரிசெய்ய முடியும்”). இதப் படிச்சதும் என்ன நடந்துதுங்கற பயம் எனக்கு வந்துது. நான் எதிர்மறையான நிலையில தொடர்ந்து வாழ்ந்து, சத்தியத்த தேடாம சகோதர சகோதரிககிட்ட மனந்திறந்து பேசாம இருந்திருந்தா, நான் தேவன தவறா புரிஞ்சுகிட்டு, என்னோட தந்திரமான மனநிலையின்படி தான் தொடர்ந்து வாழ்ந்திருப்பேன். அதுக்கப்புறம் நான் சுலபமா தேவன குற கூறி அவர எதிர்க்க முடியும், அது ஒரு மீறுதலா இருக்கும். நான் பொல்லாப்பு செஞ்சு தேவனுக்கு எதிரா கூட போகக்கூடும். அது ஆபத்தானது! அந்த நேரத்துல நான் தேவனப் பத்தி தவறா புரிஞ்சுட்டு விமர்சனம் பண்ணிட்டு இருந்தேன், என்னோட எதிர்மறையான நிலை என்னைக் கிட்டத்தட்டக் கட்டுப்படுத்துச்சு. நான் அம்பலப்படுத்தப்படுறதயும் புறம்பாக்கப்படுறதயும் பத்தி எப்பவும் கவலப்பட்டேன். எனக்கு விடுதலையான உணர்வே இல்லாம இருந்துது, அது ரொம்ப சோர்வா இருந்தது. என் கடமையில நான் வெறுமனே முயற்சிய செலவழிச்சு வேலைகள முடிச்சுட்டிருந்தேன். பிரச்சனைகள் தோன்றியவுடனே, என்னால தேவன தவறாப் புரிஞ்சுக்காம இருக்க முடியல அதோட நான் விட்டுட விரும்புனேன். மத்தவங்க கிட்ட மனந்திறந்து பேசுறதுக்கு எனக்கு வழிகாட்டியதும் சத்தியத்தத் தேடவும் என்னோட சீர்கேடான மனநிலையப் பத்தி தெரிஞ்சுக்கவும் என்னை வழிநடத்துனது தேவனோட வார்த்தைகளா இருந்துது. இல்லைனா, நான் தொடர்ந்து தேவன தப்பாப் புரிஞ்சுகிட்டிருந்திருப்பேன் அதோட என் கடமைய விட்டுட முடிவு செஞ்சிருப்பேன். அதோட விளைவுகள் பயமுறுத்துறதா இருந்திருக்கும்.

நான் அதுக்கப்புறம் தேவனோட வார்த்தைகள்ல இன்னொரு பகுதிய படிச்சேன் அது திருச்சபை வேலைகள்ல நான் பிரச்சனைகளச் சந்திக்கிறப்போ பயிற்சிக்கான பாதைய எனக்குக் கொடுத்துது. தேவன் சொல்லுகிறார்: “திருச்சபையில் எழுகிற பிரச்சினைகள் குறித்து, இது போன்ற கடுமையான சந்தேகங்களால் நிறைந்திருக்க வேண்டாம். திருச்சபையைக் கட்டியெழுப்பும்போது தவறுகள் தவிர்க்க முடியாதவையாகும், ஆனால் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்கும்போது பீதியடைய வேண்டாம். மாறாக, அமைதியாகவும் உணர்ச்சிக் கட்டுப்பாட்டுடனும் இருங்கள். நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லவில்லையா? அடிக்கடி என் முன் வந்து ஜெபம்பண்ணு, என் நோக்கங்களை நான் உனக்குத் தெளிவாகக் காண்பிப்பேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 41”). தேவனோட வார்த்தைகள்ல இருந்து திருச்சபை வேலைகள்ல பலவிதமான சிரமங்கள எதிர்கொள்றது தவிர்க்க முடியாததுன்னு நான் கத்துக்கிட்டேன். இது முற்றிலும் இயல்பானது அதோட தேவன் இத நடக்க அனுமதிக்கிறாரு. நாம கஷ்டங்கள சந்திக்குறப்போ, நாம உண்மையா ஜெபிச்சு தேவன சார்ந்திருக்கிற வரைக்கும், அவரு நம்மள முன்னோக்கி வழிநடத்துவாரு. கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏத்துக்கிட்ட கொஞ்சப் புதிய விசுவாசிக தரிசனங்களோட சத்தியங்கள முழுமையா புரிஞ்சுக்கல அதோட இப்பவும் வதந்திகளால தவறா வழிநடத்தப்படலாம். சாத்தானோட தந்திரங்கள அம்பலப்படுத்துறதுக்கு நான் தேவன அதிகமாச் சார்ந்திருக்கவும் அதோட அவரோட வார்த்தைகள பயன்படுத்தவும் மெய்யான வழியில நிலைப்படுறதுக்கு புதிய விசுவாசிகளுக்கு உதவி செய்யவும் வேண்டியிருந்துச்சு. தேவனோட சித்தத்தப் புரிஞ்சுகிட்டதுக்கப்புறம், அதுக்கப்புறம் திருச்சபை பணிக்குத் திரும்பி, எங்களோட முந்தைய பணியில இருந்த தவறுகளயும் சிக்கல்களயும் சுருக்கமாக சொன்னேன் அதோட புதிய விசுவாசிகள் சந்திச்சிட்டிருந்த பிரச்சனைகளோடத் தொடர்புடைய சத்தியங்களால என்னை நானே தயார் படுத்திக்கிட்டேன், அதுக்கப்புறம் ஐக்கியத்தின் மூலமா பிரச்சினைகளத் தீர்க்க உதவுனேன். ஜனங்களப் பண்படுத்தறதப் பொறுத்த வரைக்கும், முதல்ல நான் அந்தக் கொள்கைகளத் தேடி முழு மனசோட ஜெபம் பண்ணேன், அதுக்கப்புறம் கூட்டங்கள்ல பண்படுத்துறதுக்கான கொள்கைகளுக்கு யார் பொருந்துறாங்கன்னு கவனிச்சுப் பார்க்குறதுல கவனம் செலுத்தினேன். அந்த வகையில ஆட்களத் தேர்ந்தெடுக்கறது கொஞ்சம் துல்லியமாவே இருந்துது, சில நேரங்கள்ல என்னோட கடமையில கொஞ்சம் தோல்விகளயும் சிரமங்களயும் சந்திக்க நேரும், ஆனா நான் இப்போ இந்தப் பிரச்சனைகள வேற கண்ணோட்டத்தில பாக்குறேன். இந்தச் சூழ்நிலையில இருந்து நான் என்ன பாடத்தக் கத்துக்கணும்னு தேவன் விரும்பறாரு அப்படின்னு என்னையே நான் கேட்டுக்குறேன். ஜெபம் பண்றதயும், தேவனோட வார்த்தைகள படிக்கறதயும், பயிற்சிக்கான பாதைய தேடுறதயும் நான் கண்டிப்பா செய்றேன் அதோட மத்த சகோதர சகோதரிககிட்ட இருந்து எப்படி உதவி பெறதுங்கறத நான் கத்துக்கிட்டேன். மத்தவங்க என் வேலையில இருக்கிற பிரச்சினைகள சுட்டிக் காட்டுறாங்க, என்னால என் சொந்தத் தப்புகளயும் குறைபாடுகளயும் பாக்க முடியுது. நான் மோசமா தெரியணும்னு தேவன் முயற்சி பண்றாருன்னு நான் இதுக்கு மேலயும் நம்பல. அதுக்குப் பதிலா, சுயமா யோசிக்கவும், என்னையவே தெரிஞ்சுக்கவும், வாழ்க்கையில வளர்ச்சிய பின்தொடரவும் இது ஒரு வாய்ப்பா இருக்கறதா நான் உணர்றேன். ஒரு தடவ ஒரு சகோதரி, “புதிய விசுவாசிகளுக்கு நீர்ப்பாய்ச்சுறப்போ நீங்க ரொம்பப் பொறுமையா இருக்கிறத நான் கவனிச்சேன், அதோட நீங்க பிரச்சினைகள சந்திக்கிறப்போ, முன்னாடி விட தேவனோட சித்தத்தத் தேடுறதில சிறந்திருக்கீங்க” அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க. இதக் கேட்டு நான் ரொம்ப நெகிழ்ந்து போயிட்டேன். என் பங்குல இது ஒரு சின்ன மாற்றமா இருந்தாக்கூட, மனக்குலத்திற்கான தேவனோட அன்பும் இரட்சிப்பும் தூய்மையானதுன்னும் உண்மையானதுன்னும் எனக்கு ஒரு உண்மையான தனிப்பட்ட அனுபவம் இருந்துச்சு. தேவன் என்னை எப்பவும் வழிகாட்டுறாரு வழிநடத்துறாரு, அவர் எப்பவும் என் பக்கத்துல இருக்காரு. என் கடமைய செஞ்சு தேவனத் திருப்திப்படுத்த எனக்கு அதிக மனஉறுதி இருக்கு.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

பூமியதிர்ச்சிக்குப் பின்

நான் 2019 இல் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டேன். அப்புறமா பின்னால நான் சர்வவல்லமையுள்ள தேவனின் பல வார்த்தைகள...