சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் மூலம் பரிபூரணமாக்கப்பட்ட விசுவாசம்

மார்ச் 17, 2022

ஷு சாங், தென் கொரியா

1993 ஆம் ஆண்டு எனது அம்மாவிற்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டது, அதன் விளைவாக எனது முழுக் குடும்பமும் கர்த்தராகிய இயேசுவின் மீது விசுவாசம் வைத்தனர். அதன் பிறகு, அவர் ஒரு அற்புதமான குணமடைதலை அனுபவித்தார், அது முதற்கொண்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவருடன் நான் சபைக்குச் சென்றேன். பின்னர், 2000 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், கர்த்தர் திரும்பி வந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி எங்கள் வீட்டை அடைந்தது. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளை வாசிப்பதன் மூலம், அவர் கர்த்தராகிய இயேசு என்று நாங்கள் உறுதியாக நம்பினோம், மேலும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசி நாட்களின் கிரியையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளை நாங்கள் ஒவ்வொரு நாளும் வாசிக்க ஆரம்பித்தோம், அவை வழங்கும் நீர்ப்பாய்ச்சுதலை மற்றும் ஆகாரத்தை அனுபவித்து மகிழ்ந்தோம். இது உண்மையில் என்னை ஆவிக்குரியரீதியில் போஷித்தது. கர்த்தருடைய வருகைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் எத்தனை பேர் இன்னும் தேவனுடைய குரலைக் கேட்கவில்லை அல்லது கர்த்தரின் வருகையை வரவேற்கவில்லை என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில், நான் தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுடன் ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் அறிந்தேன். நான் விரைவில் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் எனது கடமையைச் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அதிர்ச்சியூட்டும் விதமாக, நான் சிசிபியால் கைது செய்யப்பட்டேன்.

2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நான் வேறு ஆறு சகோதர சகோதரிகளுடன் ஒரு கூடுகையில் இருந்தபோது, திடீரென இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளே புகுந்தனர். இருவர் முன்னால் விரைந்து வந்து, கையில் துப்பாக்கிகளுடன், எங்களை நோக்கி, “அசையாதீர்கள்! நீங்கள் சூழப்பட்டிருக்கிறீர்கள்” என்று கத்தினார். மற்ற இருவர் மின்சார தடியடிகளுடன், “கைகளை உயர்த்தி, சுவரைப் பாருங்கள்!” என்று கத்தினார்கள். துப்பாக்கி ஏந்திய அதிகாரிகளில் ஒருவர், “இரண்டு வாரங்களாக நாங்கள் உங்களைப் பின்தொடர்கிறோம். உன் பெயர் சியாவோசியாவோ” என்று கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு ஒரு பயத்தைக் கொடுத்தது. எனது மாற்றுப்பெயர் அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? இரண்டு வாரங்களாக அவர்கள் என்னைப் பின்தொடர்கிறார்கள் என்று அவர் கூறினார், எனவே நான் சமீபத்தில் சென்ற எல்லா இடங்களும் அவர்களுக்குத் தெரியுமா? அந்த சகோதர சகோதரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டார்களா? மேலும் யோசிக்க என்னால் முடியவில்லை. நான் அமைதியாக மற்றவர்களுக்காக ஜெபித்தேன். காவல்துறை ஏற்பாடுகளைச் செய்திருந்ததால், அவர்கள் என்னை எளிதில் போக விடமாட்டார்கள் என்று எனக்குத் தெரிந்தது. கவலையுடன், நான் தேவனை அழைத்தேன். அப்போது தேவனின் இந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன: “இதற்கும் அதற்கும் நீ பயப்படக்கூடாது; நீ எத்தனை சிரமங்களையும் ஆபத்துக்களையும் சந்தித்தாலும், எனது சித்தம் தடையின்றி செயல்படுத்தப்படும்படி, நீ எனக்கு முன்னால் நிலையாக இருக்க முடியும், எந்த ஒரு இடையூறாலும் தடைசெய்யப்படாமல் இருக்க முடியும். இது உன்னுடைய கடமையாகும். … பயப்படாதே; எனது ஆதரவுடன், யார் இந்தப் பாதையைத் தடை செய்ய முடியும்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 10”). தேவனின் வார்த்தைகள் எனக்கு சமாதான உணர்வைத் தந்தன. அந்தக் காவல்துறையினர் உட்பட எல்லா விஷயங்களும் அவரது கரங்களில்தான் உள்ளன என்று எனக்குத் தெரியும். தேவன் எனது பக்கப்பலமாக இருந்தார், அதனால் நான் அவரிடம் ஜெபித்து அவரைச் சார்ந்து இருக்க வேண்டியதிருந்தது. திருச்சபையில் இவ்வளவு பெரிய பிரச்சனையை வரவழைத்து, என்னை அறியாமலேயே அந்த நேரமெல்லாம் நான் காவல்துறையினரால் பின்தொடரப்பட்டதை உணர்ந்து, நான் மிகவும் அறியாமல், மெதுவாகப் புரிந்துகொண்டதற்காக என்னை நானே வெறுத்தேன். அந்த நேரத்தில் என்னால் செய்ய முடிந்ததெல்லாம் எனது சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்ததுதான். நான் தீர்மானத்தை எடுத்துக் கொண்டு, “காவல்துறையினர் என்னை எப்படி சித்திரவதை செய்தாலும், நான் என் சகோதர சகோதரிகளை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன்” என்ற இந்த ஜெபத்தைச் சொன்னேன். நான் யூதாஸ் ஆக இருந்து தேவனைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். அந்த ஜெபத்திற்குப் பிறகு நான் பயப்படவில்லை. நான் விசுவாசத்தினாலும் பெலத்தினாலும் நிரப்பப்பட்டேன்.

காவல்துறையினர் கொள்ளைக்காரர்கள் போல் செயல்பட்டு வீடு முழுவதையும் தலைகீழாக மாற்றினர். எங்களின் செல்போன்கள், எட்டு வீடியோ பிளேயர்கள், நான்கு டேப்லெட்டுகள், டஜன் கணக்கான சுவிசேஷப் புத்தகங்கள் மற்றும் 10,000 யுவான் பணத்தை பறிமுதல் செய்தனர். என்னையும் மற்ற இரண்டு சகோதரிகளையும் அமர்வுக்கூடத்திற்கு அழைத்துச் சென்று தரையில் குந்தும்படி வற்புறுத்தினார்கள். அப்போதுதான் படுக்கையறைகளில் ஒன்றில் இருந்து காவல்துறையினர் சகோதரர்களை இடைவிடாது அடிக்கும் சத்தம் கேட்கத் தொடங்கியது. கோபமடைந்த நான், “நாங்கள் தேவனைத்தானே விசுவாசிக்கிறோம், நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லையே. எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்?” என்று அழுத்தமாகச் சொன்னேன். அதிகாரிகளில் ஒருவர் வெறுப்புடன், “விசுவாசம் வைத்திருப்பது சட்டத்தை மீறுவதாகும், அது ஒரு குற்றம். நீங்கள் ஒரு சட்டத்தை மீறுகிறீர்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி சொன்னால், நீங்கள் ஒரு சட்டத்தை மீறுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். தேவன் மீதான விசுவாசத்தை கட்சி அனுமதிப்பதில்லை, ஆனால் நீங்கள் இன்னும் அவர்கள் பிரதேசத்தில் அதைச் செய்யத் துணிகிறீர்கள். இது கட்சிக்கு எதிராக உங்களுக்கு நீங்களே குழிபறிக்கிறீர்கள். உங்களுக்கு மரண ஆசை இருக்கிறது!” என்று சொன்னார். நான் சொன்னேன், “விசுவாசத்தின் மீதுள்ள சுதந்திரத்திற்கு சட்டப்பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்படவில்லையா?” சிரித்துக்கொண்டே, எரிச்சலுடன் “உனக்கு ஒன்றும் தெரியாது! விசுவாசத்தின் மீதுள்ள சுதந்திரம் என்பது வெறும் காட்சிக்காக, வெளிநாட்டினர் பார்ப்பதற்காக மட்டுமே, ஆனால் விசுவாசிகளான நீங்கள் பெறுவது இதுதான்!” என்று கூறினார். இதைச் சொல்லும் போது அவர் எனது முகத்தில் அறைந்தார், மேலும் ஒரு பெண் அதிகாரி வந்து, என்னைக் கையில் உதைத்தார். நான் கோபமடைந்தேன், மேலும் தேவனின் இந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன: “மதச் சுதந்திரம்? குடிமக்களின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்கள்? இவையெல்லாம் பாவத்தை மறைப்பதற்கான தந்திரங்கள்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (8)”). கம்யூனிஸ்ட் கட்சியை பொறுப்பில் வைத்திருப்பது உண்மையில் சாத்தானை பொறுப்பில் வைத்திருப்பதாகும். அவர்களின் சட்டங்கள் அனைத்தும் ஏமாற்றுவதற்காகவே உள்ளன. விசுவாசிப்பதற்கு சுதந்திரம் இருப்பதாக வெளியாட்களுக்குச் சொல்கிறார்கள், ஆனால் யதார்த்தம் என்னவென்றால், தேவனை விசுவாசிப்பதற்கும் மற்றும் சரியான பாதையில் செல்வதற்கும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் நேர்மறையான எதையும் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் மிகப்பெரிய அளவில் கிறிஸ்தவர்களைக் கைது செய்து துன்புறுத்துகிறார்கள். அந்தக் காவல்துறையினர் வெறும் கொள்ளைக்காரர்கள் மற்றும் சீருடையில் இருந்த அயோக்கியர்கள். அவர்களுடன் தர்க்கம் செய்ய முயற்சிப்பது எனக்கு முட்டாள்தனமானது! அவர்கள் என்னைக் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது, எங்களைச் சுற்றி பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் இருப்பதைக் கண்டேன்.

மாவட்டத்தின் தேசிய பாதுகாப்புப் படைக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டவுடன், ஒரு அதிகாரி என்னிடம், “நாங்கள் உன்னை சுற்றிவளைத்துப் பிடித்திருக்கிறோம். உன்னைப் பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும். கடந்த இரண்டு வாரங்களில் நீ சென்ற ஒவ்வொரு நகரத்தையும், ஒவ்வொரு மாவட்டத்தையும் நாங்கள் அறிவோம். நீ ஒரு திருச்சபைத் தலைவராக இருந்திருக்க வேண்டும், இல்லையெனில் உன்னைப் பிடிப்பதற்கு இவ்வளவு பெரிய படையை நாங்கள் திரட்டியிருக்க மாட்டோம். நாங்கள் உன்னை இங்கு விசாரிக்க மாட்டோம். அதற்கான ஒரு ‘நல்ல இடம்’ எங்களுக்கு கிடைத்துள்ளது. அது உன்னை உணர்ச்சியில் ஆழ்த்திவிடுமோ என்று நான் சற்று பயப்படுகிறேன்!” என்று கூறினார். அப்போதுதான் அவர்கள் என்னை திருச்சபையின் தலைவர் என்று தவறாக நினைத்துக்கொண்டார்கள் என்பதை உணர்ந்தேன். உண்மையான தலைவர்கள் சற்று பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அறிந்த நான் அப்போது கொஞ்சம் நிம்மதியடைந்தேன். ஆனால் நான் இன்னும் கவலைப்பட்டேன். அவர்கள் என்னை ஒரு திருச்சபைத் தலைவர் என்று நினைத்ததால், அவர்கள் என்னை எளிதில் விடமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் என்னை எப்படி துன்புறுத்துவார்கள் என்று தெரியவில்லை. நான் சாட்சியாக நிற்க எனக்கு உதவுவதற்கு, விசுவாசம் மற்றும் பெலத்திற்காக தேவனிடம் ஜெபித்தேன். அன்று இரவு11 மணிக்குப் பிறகு, அந்த “நல்ல இடத்திற்கு” என்னை அழைத்துச் செல்ல அவர்கள் என்னை ஒரு காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். காரில் இருந்த ஒரு போலீஸ்காரர், “சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பவர்களை எப்படி கையாள்வது என்று உங்களுக்குத் தெரியாது. அவர்களிடமிருந்து ஏதேனும் பெற நீங்கள் உண்மையில் மிகவும் கடுமையாக கையாள வேண்டும். எது வேலைக்காகுமோ அதை நாம் செய்யவேண்டும், இல்லையெனில் அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார். மற்ற அதிகாரி, “ஆம், நிச்சயமாக. உண்மையில் அந்த விசுவாசிகளுக்கான அடிப்படையான சூழ்ச்சியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதற்காகத் தான் உங்களை எங்களுடன் வைத்திருக்கிறோம்” என்று கூறினார். இதைக் கேட்டதும் என்ன மாதிரியான சித்திரவதையை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அமைதியாக தேவனிடம் ஜெபித்தேன், கர்த்தராகிய இயேசுவின் இந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன: “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்(மத்தேயு 10:28). “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்(மத்தேயு 16:25). தேவனின் வார்த்தைகள் எனது விசுவாசத்தில் எனக்கு பெலத்தை அளித்தன. எனது வாழ்க்கை தேவனின் கரங்களில் இருப்பதையும், மேலும் எனது ஆத்துமா அவருடைய கரங்களில் இருப்பதையும் நான் அறிந்தேன். நான் தேவனின் திட்டமிடலுக்கு அடிபணிய வேண்டும் என்று தீர்மானித்தேன், மேலும் அது எனது மரணத்தை குறிக்கிறது என்றாலும் அவரை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன்!

அவர்கள் என்னை மாவட்டத்தின் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், மேலும் நாங்கள் விசாரணை அறைக்குள் நுழைந்த கணமே, ஒரு சகோதரர் கடுமையாக அழும் சத்தத்தை நான் கேட்டேன். ஒரு அதிகாரி கண்காணிப்பு உபகரணங்களை அணைக்க உத்தரவிட்டார், பின்னர் மற்ற இருவர் வந்து எனக்கு கைவிலங்கிட்டனர், எனது வலது கையை எனது தோளுக்குப் பின்னால் முறுக்கி, மேலும் எனது இடது கையை எனது முதுகுக்குப் பின்னால் கீழே இருந்து மேலே இழுத்தார். அவர்கள் கைவிலங்குகளை மேலும் கீழும் இழுத்தார்கள், மேலும் எனது கைகள் முறிவது போல் உணர்ந்தேன். அதன் பிறகு, சித்திரவதை நாற்காலியின் ஒரு கையை எனது கைகளுக்கும் மற்றும் எனது முதுகுக்கும் இடையில் தள்ளினார்கள். எனது கைகள் துண்டிக்கப்படுவது போல் உணர்ந்தேன். எனது முகத்தில் வியர்வை வழிந்து கொண்டிருக்கும் அளவிற்கு மிகவும் வலித்தது. ஒரு அதிகாரி கைவிலங்குகளை இழுத்துக்கொண்டு, “ரொம்ப வலிக்குதா? அந்த உணர்ச்சி எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். இன்னொருவர் சிரித்துக்கொண்டே, “ஏன் நீ மெய்க்காவலராக வேலை செய்யக் கூடாது? அப்போது நாங்கள் உன்னைக் கைது செய்ய மாட்டோம்” என்று சொன்னார். அதைக்கேட்டு மற்ற அனைவரும் குபீரென சிரித்தனர். அவர்களின் மொத்த வெட்கமின்மையால் எனக்குக் குமட்டல் எடுத்தது. காவல்துறை அதிகாரிகளின் வாயிலிருந்து மிகவும் அருவருப்பான எதோ ஒன்று வெளிவரும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்து பார்த்ததில்லை. அவர்கள் மிருகங்களை விட தாழ்ந்தவர்கள்! பின்னர் அவர்களில் ஒருவர், “இந்த விசாரணையை நாம் அவசரப்படுத்த வேண்டாம். முடிவில் அவளுக்கு என்ன தெரிந்ததோ அதை நம்மிடம் சொல்லத் துடிப்பாள். இப்போது முதல், அவளை சாப்பிடவோ, தூங்கவோ, குளியலறையைப் பயன்படுத்தவோ அனுமதிக்காதீர்கள். அவள் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கிறாள் என்று பார்ப்போம்!” என்று கூறினார். பின்னர் அவர் எனது கைகளை கடினமாக இழுத்தார், இடுப்பு உயர உலோகக் கம்பியில் இணைக்கப்பட்டிருந்ததால் அவற்றை இன்னும் முறுக்கினார். என்னால் மண்டியிடவோ அல்லது நிற்கவோ முடியவில்லை, மேலும் எனது முதுகு மற்றும் கால்கள் சீக்கிரம் வலிக்க ஆரம்பித்தன. அவர்கள் என்னைத் தூங்கவோ அல்லது கண்களை மூடவோ கூட அனுமதிக்கவில்லை. எனது கண்கள் சோர்வடையத் தொடங்கிய தருணத்தில், காவல்துறையினர் மேசையை அடிப்பார்கள், ஸ்டூலை உதைப்பார்கள் அல்லது உலோகக் கம்பிக் கைப்பிடியில் பலமாக மோதியடிப்பார்கள். இல்லையெனில், அவர்கள் நேராக எனது காதுக்குள் கத்துவார்கள் அல்லது என்னை பயமுறுத்துவதற்காக எல்லாவிதமான வித்தியாசமான சத்தங்களையும் எழுப்புவார்கள். இது என்னை மிகுந்த விழிப்பூட்டப்பட்ட நிலையில் விட்டது, மேலும் என்னால் ஒரு கணம் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. நான் அமைதியாக ஜெபித்து, இடைவிடாது தேவனை அழைத்தேன், பின்னர் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளில் உள்ள இதைப் பற்றி நினைத்தேன்: “நீ சத்தியத்திற்காகக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக உன்னையே கொடுக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக அவமானத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்தை அதிகமாக ஆதாயம் செய்ய நீ அதிகத் துன்பங்களுக்குள்ளாக செல்ல வேண்டும். இதையே நீ செய்ய வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு”). தேவனின் வார்த்தைகள் எனக்கு விசுவாசத்தை அளித்தன. சத்தியத்தைப் பெறுவதற்கு எந்த துன்பத்தையும் அனுபவிப்பது மதிப்புக்குரியது, மேலும் நான் எவ்வளவு துன்பப்பட்டாலும் அதைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. நான் சாட்சியாக நின்று மேலும் சாத்தானை அவமானப்படுத்த தீர்மானித்தேன்.

மறுநாள் காலையில், ஆறு அல்லது ஏழு அதிகாரிகள் திருச்சபையின் நிதி இருக்குமிடம் மற்றும் மேலமட்டத் தலைவர்கள் யார் என்று என்னிடம் விசாரிக்க வந்தனர். நான் அவர்களிடம் எதுவும் சொல்லாதபோது அவர்கள் என்னைக் கடுமையாகத் தாக்கினர். அவர்கள் சென்ற உடனேயே, இன்னும் சிலர் என்னிடம் அதே கேள்விகளைக் கேட்க வந்தனர். 24 மணி நேரமும் இடைவிடாமல் என்னை விசாரித்தார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு, எனது உடல் முழுவதும் வீங்கி, மேலும் எனது கால்களின் பின்பகுதி மிகவும் வீங்கி, அவை எனது தொடைகள் போல் தடிமனாக இருந்தன. நான் பட்டினியாக இருந்தேன் மேலும் களைத்துப் போயிருந்தேன். ஒரு பெண் அதிகாரி நான் தலையசைப்பதைப் பார்த்து, தன்னால் முடிந்தவரை என்னைக் காலால் உதைத்தார். எனது உடலின் கீழ்ப்பாதி முழுவதிலும் உணர்வை இழந்திருந்தேன், மேலும் எனது முதுகு முறிந்தது போல் தாங்க முடியாத வலியில் இருந்தது. எனது கண்கள் வீங்கி மேலும் பயங்கரமாக சுரீரென குத்தின. எந்த நேரத்திலும் எனது கண் விழிகள் வெளியே வந்துவிடும் போல் உணர்ந்தன. இது நம்பமுடியாத வேதனையாக இருந்தது. ஒரு கணம் கூட எனது கண்களை மூடுவது அல்லது எனது கால்கள் ஓய்வெடுப்பது என்பது ஒரு உண்மையான சொகுசு போல தோன்றியது. இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் என்னை சித்திரவதை செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. என்னால் இன்னும் அதிக நேரம் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு, எனது உடல் ஏற்கனவே அதன் வரம்பை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன். நான் எனது இருதயத்தில் நம்பமுடியாத அளவிற்கு பலவீனமாக உணர்ந்தேன். தேவனிடம் விசுவாசம் மற்றும் பெலத்தைக் கேட்டு நான் ஜெபித்தேன். பின்னர் நான் தேவனின் வார்த்தைகளின் இந்த பாடல்களைப் பற்றி நினைத்தேன்: “உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களை நீங்கள் எப்போதாவது ஏற்றுக்கொண்டதுண்டா? உங்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நீங்கள் எப்போதாவது தேடியிருக்கிறீர்களா? நீங்கள் நிச்சயமாக, என் வெளிச்சத்தின் வழிகாட்டுதலின் கீழ் இருளினுடைய ஆதிக்கங்களின் கழுத்தை நெரிப்பீர்கள். இருளின் நடுவே, உங்களுக்கு வழிகாட்டும் வெளிச்சத்தை நீங்கள் நிச்சயமாக இழக்க மாட்டீர்கள். நீங்கள் நிச்சயமாக எல்லா சிருஷ்டிகளுக்கும் எஜமானராக இருப்பீர்கள். நீங்கள் நிச்சயமாக சாத்தானின் முன்னே ஜெயிப்பவராக இருப்பீர்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ராஜ்யத்தின் வீழ்ச்சியில், என் வெற்றிக்கு சாட்சியம் அளிக்க, எண்ணற்ற கூட்டங்களுக்கு மத்தியில் நீங்கள் நிச்சயமாக எழுந்து நிற்பீர்கள். நீங்கள் நிச்சயமாக சீனீம் தேசத்தில் உறுதியாகவும் அசையாமலும் நிற்பீர்கள். நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களின் மூலம், நீங்கள் என் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள், நிச்சயமாக என் மகிமையை முழு பிரபஞ்சத்திலும் பரப்புவீர்கள்(“ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்”). “கடந்த காலத்தில், பேதுரு தேவனுக்காக தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டான்; ஆனால் நீ இறுதியில் தேவனைத் திருப்திப்படுத்த வேண்டும், மேலும் உன் முழு ஆற்றலையும் அவருக்காக செலவழிக்க வேண்டும். சிருஷ்டிக்கப்பட்ட ஒரு உயிரினத்தால் தேவனுடைய சார்பில் என்ன செய்ய முடியும்?(“ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்”). தேவனின் வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்தின மற்றும் எனது பெலத்தைப் பலப்படுத்தின. நான் கொடூரமான சித்திரவதைக்கு ஆளானேன், ஆனால் தேவன் எனக்கு ஆதரவாக இருந்தார், மற்றும் அவர் தமது வார்த்தைகளால் என்னை வழிநடத்தினார். தேவனால் எனது விசுவாசத்தை பரிபூரணப்படுத்த முடியும் என்பதற்காக நான் இந்த வகையான வேதனையை அனுபவித்து வருகிறேன் என்பதையும், மேலும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு முன் நான் வெற்றிகரமான சாட்சியைக் கொடுக்க வேண்டும் என்பதையும் நான் அறிந்தேன். நான் மாம்சமான துன்பத்துக்குப் பயந்து தேவனைக் காட்டிக்கொடுத்தால், எனது வாழ்க்கை அர்த்தமில்லாமல் போய்விடும். அது பெரும் அவமானமாக இருக்கும். காலங்காலமாக இருந்த அந்த அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் அனைவரையும் பற்றி நான் நினைத்தேன்—அவர்கள் துன்புறுத்தப்பட்டனர், மரணத்தை எதிர்கொண்டார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் தேவன் மீது விசுவாசம் வைத்து, அவருக்காக உறுதியான சாட்சிபகர்ந்தனர். தேவனின் அனுமதியுடன் நான் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு, அழிக்கப்பட்டேன். எனது வளர்ச்சி சிறியதாக இருந்தது, மேலும் காலங்காலமாக வாழ்ந்த பரிசுத்தவான்களுடன் என்னால் அறவே ஒப்பிட முடியவில்லை, ஆனால் தேவனுக்காக அந்த சாட்சியைப் பகர்வதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு நான் மிகவும் பாக்கியசாலி. தேவனுக்குச் சாட்சியாக நிற்க, தேவனின் இருதயத்திற்குச் சிறிது ஆறுதல் அளிக்க, எனது வாழ்வை ஒப்புக்கொடுக்க நான் விருப்பமாக இருந்தேன். தேவனின் வார்த்தைகளை நினைத்துப் பார்க்கையில் எனது உடல் வலியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிப்பதாகத் தோன்றியது. நான் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, அதிகாரி எனது தலைமுடியைப் பிடித்து, எனது தலையை முன்னும் பின்னுமாக அசைத்து, தலையிலும் மார்பிலும் அவருடைய முட்டியால் குத்தினார். குறிப்பிட்ட நேரம் வரை என்னால் செல்ல முடியாது என்று கூறி, அவர்கள் என்னை கழிப்பறையைப் பயன்படுத்தவும் அனுமதிக்கவில்லை. நான் கழிப்பறைக்குச் சென்றபோது, சில ஆண் அதிகாரிகள் கழிப்பறைக்கு அருகில் நின்று எல்லா வகையான இழிவான விஷயங்களைச் சொன்னார்கள். நான் மிகவும் அவமானப்பட்டேன். நான் இறக்க வேண்டும் என்பது போல் உணர்ந்தேன். பின்னர் நான் தேவனின் இந்த வார்த்தைகளை நினைத்தேன்: “உங்களுக்கு ஒருவேளை ‘அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.’ என்ற வசனம் நினைவுக்கு வரலாம். நீங்கள் அனைவரும் இந்த வார்த்தைகளை இதற்கு முன்பு கேட்டிருப்பீர்கள், ஆனால் நீங்கள் எவருமே அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இன்று உங்களுக்கு அதன் உண்மையான முக்கியத்துவத்தைக் குறித்து ஆழமான ஒரு தெளிவு உள்ளது. இந்த வார்த்தைகள் தேவனால் இறுதி நாட்களில் நிறைவேற்றப்படும், குறிப்பாகக் கிறிஸ்துவுக்காக அந்த சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் அது இருக்கும் தேசத்தில் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டவர்களிடம் அது நிறைவேறும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் தேவனைத் துன்புறுத்துகின்றது, அது தேவனின் எதிரியாக இருக்கின்றது, எனவே இந்தத் தேசத்தில் தேவனை விசுவாசிக்கின்றவர்கள் யாவரும் அவமானத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்படுவார்கள், இதன் மூலம் இந்த வார்த்தைகள் இந்த ஜனக்கூட்டமாகிய உங்களிடத்தில் நிறைவேறுகின்றது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?”). எனது விசுவாசத்திற்காக அவமானப்படுத்தப்படுவதும் மற்றும் சித்திரவதை செய்யப்படுவதும் நீதியின் பொருட்டு துன்பப்படுவதாகும் என்று தேவனுடைய வார்த்தைகளில் இருந்த பிரகாசம் எனக்குக் காட்டியது. சாட்சி சொல்ல அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தது தேவனின் கிருபை; அது எனக்கு ஒரு பெருமையாகும். ஆனால் நான் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தபோது அல்லது ஒரு சிறிய உடல் வேதனையை அனுபவித்தபோது, தேவன் மீதான விசுவாசத்தை இழந்தேன், மேலும் மரணத்தைப் பற்றி கூட நினைத்தேன். தனிப்பட்ட முறையில் பெருமை அல்லது அவமானத்தை அடைவதில் நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். அது எப்படி எந்த வகையான சாட்சி? அது எனது மரணத்தை குறிப்பிட்டாலும், நான் தேவனுக்கு சாட்சியாக நிற்பேன் என்று நான் தீர்மானித்திருந்தேன், ஆனால் ஒரு சிறிய மாம்சமான வேதனையின் காரணமாக அதையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவர நினைக்கிறேன். சாத்தானின் தந்திரங்களில் ஒன்றில் நான் இடரி விழவில்லையா? சாத்தான் என்னை தேவனைக் காட்டிக்கொடுக்க வைக்க முயற்சிக்கவில்லையா? என்னால் பின்வாங்கி சாத்தானின் கேலிப் பொருளாக மாற முடியவில்லை. நான் தொடர்ந்து ஜீவிக்க வேண்டும், தேவனுக்கு சாட்சியாக நிற்க வேண்டும், மேலும் சாத்தானுக்கு அவமானத்தைக் கொண்டுவர வேண்டும்! தேவனின் சித்தத்தை நான் புரிந்துகொண்டவுடன், நான் இந்த ஜெபத்தைச் சொன்னேன்: “தேவனே, நான் உமது கைகளில் என்னை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறேன். சாத்தான் என்னை எப்படி சித்திரவதை செய்தாலும், நான் உமக்காக சாட்சியாக நிற்பேன், மேலும் உம்மை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டேன். நான் எல்லா விஷயங்களிலும் உமது திட்டங்களையும் ஏற்பாடுகளையும் பின்பற்றுவேன்!” எனது ஜெபத்திற்குப் பிறகு நான் பெலனடைந்ததாக உணர்ந்தேன்.

மீண்டும் விசாரணை அறையில், காவல்துறையினர் ஒரு கணினியை இயக்கி அங்கு அவர்கள் என்னிடம் அடையாளம் காட்டுவதற்காக சில சகோதரிகளின் புகைப்படங்களைக் கொண்டு வந்தனர். ஜனவரி 24 அன்று, மதியம் இரண்டு மணி அளவில் அவர்கள் சகோதர சகோதரிகளை வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர் என்றும் கூறினர். இது ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு. எனக்கு மிகவும் கோபமாக இருந்தது. நான் பதில் சொல்லமாட்டேன் என்பதைக் கண்டு, அவர்கள் இருவரும் என்னை மிரட்டி, மேலும் நயமாக, “உங்கள் எல்லோரையும் பற்றி எங்களுக்கு ஏற்கனவே தெரியும். சண்டை போட்டு எந்த பயனும் இல்லை. எல்லோரும் பேசிவிட்டார்கள், அதனால் நீ அவர்களுக்கா நீடித்திருப்பதில் என்ன லாபம்? நாங்கள் இப்போது உன்னை விடுவிக்க அனுமதித்தாலும், உங்கள் திருச்சபை உங்களை மீண்டும் உள்ளே அனுமதிக்காது. புத்திசாலித்தனமாக—மேல்மட்டத் தலைவர்கள் யார், மேலும் திருச்சபையின் நிதி எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பதை எங்களிடம் கூறிவிடு. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சரியான நேரத்தில் உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வோம்” என்று சொன்னார். நான் இன்னும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை, அதனால் அவர்கள் என்னிடத்தில், “திருச்சபையின் பணம் எங்கே என்று நீ எங்களிடம் கூறாவிட்டால், நாங்கள் உன் ஆடைகளை உரிந்து, கூரையில் கட்டித் தொங்கவிட்டு, மிக மோசமாக அடிப்போம். அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவிப்போம்” என்று கத்தினார்கள். இதைக் கேட்டதும் எனக்குப் பயமாக இருந்தது. அந்தப் பிசாசுகள் எதையும் செய்யக்கூடியவையாக இருப்பதை நான் பார்த்தேன், மேலும் என்னால் அதை ஏற்க முடியுமா என்று தெரியவில்லை. நான் உண்மையில் துன்பத்தின் விளிம்பில் இருந்தேன், மேலும் அன்று இரவு அவர்கள் என்னை என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பயம் மற்றும் சோகத்தின் அலை அடுத்தடுத்து எழ, நான் நம்பமுடியாத அளவிற்கு உதவியற்றவளாக உணர்ந்தேன். நான் தேவனிடம் ஜெபிக்க விரைந்தேன், மேலும் அவருடைய பாதுகாப்பைக் கேட்டேன். எனது ஜெபத்திற்குப் பிறகு தேவனின் இந்த வார்த்தைகளை நான் நினைத்தேன்: “ஜனங்கள் தங்கள் ஜீவன்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும்போது, எல்லாம் அற்பமாகிவிடுகின்றன, அவர்களை விட சிறப்பாக யாராலும் ஆக முடியாது. ஜீவனை விட மிகவும் முக்கியமானது எதுவாக இருக்க முடியும்? இப்படி, ஜனங்களுக்குள் மேலும் எதுவும் சாத்தானால் செய்யமுடியாமல் போகிறது, மனிதனைக் கொண்டு அதனால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. இருப்பினும், ‘மாம்சம்’ என்பதன் விளக்கத்தில், மாம்சம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஜனங்கள் உண்மையாகவே தங்களை ஒப்புக்கொடுத்தால், மற்றும் அவர்கள் சாத்தானால் இயக்கப்படாமல் இருந்தால், அவர்களைத் தோற்கடிக்க யாராலும் முடியாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகளின் மறைபொருட்களைப் பற்றிய விளக்கங்கள், அத்தியாயம் 36”). தேவனின் வார்த்தைகளின் பிரகாசத்தின் மூலம் நான் அவமானப்படுவதற்கும் மேலும் இறப்பதற்கும் மிகவும் பயப்படுகிறேன் என்பதை புரிந்துகொண்டேன். தேவனைக் காட்டிக்கொடுக்கும்படி சாத்தான் என்னுடைய பெலவீனங்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். அதுதான் அதன் தந்திரம். நான் எனக்கு நானே தீங்கிழைக்க முடிந்தால், என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்ன இருக்கிறது அங்கே? அவர்கள் என்னை அப்படி நடத்துவது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் காவல்துறை தீயவர்களாகவும் மற்றும் இழிவாகவும் இருப்பதையும் நான் கண்டேன். எனது மாம்சம் எதற்கும் மதிப்பற்றது. தேவனுக்காக சாட்சி கொடுக்கவும் மேலும் சாத்தானை அவமானப்படுத்தவும் எனது உயிரைத் தியாகம் செய்ய நான் தயாராகிவிட்டேன். நான் வீணாக ஜீவித்திருக்க மாட்டேன் என்று தேவனுக்கு சாட்சி கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த எண்ணத்தில், நான் அதற்குமேல் பயப்படவில்லை. நான் பெலத்தினாலும் விசுவாசத்தினால் நிறைந்திருந்தேன்.

அன்று மதியம் ஒரு மணியளவில், எனது இருதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது, மேலும் எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனது கால்கள் பெலவீனமாக இருந்தன, மேலும் நான் தரையில் சரிந்தேன். என்னை அப்படிப் பார்த்ததும், “நீ சாகப் போற மாதிரி நடித்து தொந்தரவு பண்ணாதே. நாங்கள் இன்னும் உன்னை விடமாட்டோம். ஒரு விசுவாசியை அடித்துக் கொன்றாலும் பரவாயில்லை என்று மத்தியக் குழு கூறுகிறது. இன்னும் ஒரு மரணம் என்றால் ஒரு விசுவாசி குறையும்! நாங்கள் ஒரு குழி தோண்டி, உன்னுடைய உடலை அதன் உள்ளே வீசலாம். யாருக்கும் தெரியாது” என்று கூறினர். பின்னர் அவர்கள் நான் உண்மையில் நலமாக இல்லை என்பதைப் பார்த்தனர், மேலும் நான் இறந்துவிடுவேன் என்றும், அவர்கள் தங்கள் பதவியை இழந்துவிடுவார்கள் என்று, அவர்கள் என்னை ஒரு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனது வலிமை குறைந்து, மேலும் அதுவே இருதயப் பிரச்சனையை ஏற்படுத்தியதாக மருத்துவர் கூறினார். நான் கொஞ்சம் உணவு உட்கொண்டு, ஓய்வெடுக்க வேண்டும் என்றார். ஆனால் நான் வாழ்ந்தாலும் அல்லது இறந்தாலும் அவர்கள் கவலைப்படவில்லை. மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்து அரை மணி நேரம் கழித்து, அவர்கள் என்னை மீண்டும் உலோகக் கம்பியில் கைவிலங்கிட்டனர். அவர்கள் தங்கள் கடுமையான அணுகுமுறையால் எதுவும் பெற இயலவில்லை என்பதைக் கண்டு, அவர்கள் மென்மையான அணுகுமுறைக்கு மாறினர். அதிகாரிகளில் ஒருவர் என்னிடம் போலியான மென்மையான குரலில், தான் தேவன் மீதுள்ள விசுவாசத்திற்கு எதிரானவர் அல்ல என்றும், அவருடைய பாட்டி ஒரு கிறிஸ்தவர் என்றும் கூறினார். தனக்கு காதலி இல்லை என்றும், மேலும் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்பதைப் பார்த்து, என்னைப் போன்ற ஒரு காதலியைக் கண்டுபிடிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். அப்போது மற்றொரு அதிகாரி, “உன்னை நீ நினைக்காவிட்டாலும் உனது பெற்றோரை நினைத்துக்கொள். இது சீனப் புத்தாண்டு நெருங்கும் சமயம், மற்ற எல்லோரும் தங்கள் குடும்பங்களுடன் இருக்கிறார்கள். ஆனால் நீ இங்கே வேதனைப்படுகிறாய். உன்னுடைய பெற்றோர் அறிந்தால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள்.” மற்றொரு அதிகாரி, “எனக்கு உன் வயதில் ஒரு பிள்ளை உள்ளது, மேலும் நீ இந்த வழியில் வேதனைப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை. உனக்கு என்ன தேவை என்பதைச் சொல்—நான் இங்கே இறுதியான முடிவு எடுக்க வேண்டும். நான் உனக்கு வேலை தேடவும் உதவ முடியும். உனக்குத் தெரிந்ததை அப்படியே என்னிடம் மட்டும் சொல்லலாம்” என்றார். அவர்களின் இந்த அதிகப்படியான நடத்தையைப் பார்த்து எனக்கு குமட்டலாக இருந்தது, மேலும் நான் தேவனின் வார்த்தைகளை நினைத்தேன்: “நீங்கள் எப்போதுமே விழித்திருக்க வேண்டும், காத்திருக்க வேண்டும் மற்றும் நீங்கள் எனக்கு முன்பாக ஜெபிக்க வேண்டும். சாத்தானுடைய பல்வேறு சதிகளையும் தந்திரமான திட்டங்களையும் நீங்கள் கண்டறிய வேண்டும், ஆவிகளை அடையாளம் காண வேண்டும், ஜனங்களை அறிய வேண்டும் மற்றும் எல்லா வகையான ஜனங்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும் அறிந்துக்கொள்ளும் திறனுடனும் இருக்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 17”). என்னை விலைக்கு வாங்கவும், தேவனைக் காட்டிக்கொடுக்க என்னைத் தூண்டவும் சாத்தான் எனது உணர்ச்சிகளையும் மற்றும் சில சிறிய உதவிகளையும் பயன்படுத்த முயன்றான். இது வெட்கமற்றது மற்றும் இழிவானது! சாத்தானின் தந்திரங்களுக்கு நான் இடரி விழ மாட்டேன் என்று எனக்குத் தெரியும். அதன்பிறகு, அவர்கள் என்னை எப்படி மிரட்டினாலும், அல்லது என்னை ஏமாற்றினாலும், நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் ஒரே நேரத்தில் ஆறு அல்லது ஏழு குழுக்களாக வருவார்கள், மேலும் எட்டு இரவும் பகலும் என்னிடம் மாறி மாறி விசாரித்தார்கள். என்னிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற அவர்கள் மிரட்டல், அச்சுறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளைப் பயன்படுத்தினர், ஆனால் என்னிடம் இருந்து எந்தத் தகவலையும் பெறவில்லை. இறுதியாக, அதிகாரிகளில் ஒருவர், “உன்னிடம் நம்பமுடியாத மனவுறுதி உள்ளது, உன் தேவன் சிறந்தவர்” என்று கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது—சாத்தான் வெட்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டதை நான் பார்த்தேன்.

அதன் பிறகு என்னைத் தடுப்புகாவல் மையத்திற்கு அழைத்துச் சென்றனர். நான் அங்கு சென்றதும், ஒரு பெண் அதிகாரி, கண்காணிப்புடன் என்னை ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தினார். நான் அறைக்கு வந்ததும், மற்ற கைதிகள் அனைவரும் என்னை வன்மத்துடன் பார்த்தார்கள், மேலும் சிறைக் காவலர்கள் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் “இவள் மற்றொரு விசுவாசி. அவளை ‘நன்றாக கவனித்துக்கொள்வதை’ உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார். நான் எனது உடைமைகளைப் பெறுவதற்கு முன்பே, ஒரு கைதி என்னை குளிரில் குளிக்கும்படி கட்டளையிட்டார், மேலும் குளிர்ந்த நீரை குவளை குவளையாக எனது உடலில் ஊற்றியதால் நான் நடுங்கினேன். மற்ற கைதிகள் சிரித்துக் கொண்டே ஒதுங்கி இருந்தனர். குளியலறையை சுத்தம் செய்வதற்கும், பெருக்கி தூய்மைப்படுத்துவதற்கும் நான் ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான வாளிகளில் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது, மேலும் உணவு நேரங்களில் அவர்கள் வேண்டுமென்றே எனக்குக் குறைவான உணவைக் கொடுத்தார்கள். என்னால் ஒருபோதும் வயிறு நிறைய சாப்பிட முடியவில்லை. இரவில், அவர்கள் எனது படுக்கை இடத்தை உண்மையில் மிகவும் கடினமாக உதைப்பார்கள், அதனால் என்னால் தூங்க முடியவில்லை. அது என்னை பயமுறுத்தியது மற்றும் எனது இருதயத்தைப் படப்படக்க வைத்தது. கவலைக்குரியதாக இருந்தது. பின்னர் அவர்கள் என்னை குளிர்ந்த கான்கிரீட் தரையில் தனியாக தூங்க வைத்தார்கள். அதுமட்டுமல்லாமல், காவலர்கள் தலைமைக் கைதியையும் மற்றும் சில கொலைகாரர்களையும் என்னைத் துன்புறுத்தத் தூண்டினார்கள், மேலும் போலீசார் எப்போதும் என்னிடம் விசாரித்து, என்னை மிரட்டி, “நீ ஒரு அரசியல் குற்றவாளி. நீ இறந்தால் யாரும் கவலைப்பட மாட்டார்கள். நீ பேசவில்லை என்றால், நாங்கள் உன்னை காலவரையின்றி இங்கேயே வைத்திருப்போம். இங்கிருந்து என்றாவது வெளியேறிவிடலாம் என்று எண்ணாதே!” என்று கூறினர். அதைக் கேட்டதும் எனக்குக் கவலையாக இருந்தது. அந்த நான்கு மாதங்களில் ஒவ்வொரு நாளும் சித்திரவதையாக இருந்தது, மேலும் என்னால் அதை அதற்குமேல் தாங்க முடியவில்லை. இது எல்லாம் எப்போது முடிவடையும் என்று எனக்குத் தெரியவில்லை. தொடர்ந்து தாங்கிக்கொள்ள எனக்குப் பெலன் இல்லை என்று உணர்ந்தேன். நான் மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். வலியிலிருந்து தப்பிக்க மரணத்தையே விரும்பினேன். நான் எனது வேதனையில் தேவனிடம் ஜெபித்தேன், நான் ஜெபிக்கும்போது மனங்கசந்து அழுதேன். சத்தியத்தை வெளிப்படுத்தவும் மனிதகுலத்தை இரட்சிக்கவும் பூமிக்கு வந்த தேவன் எப்படி மாம்சமானார், என்று நான் நினைத்தேன். நான் தேவனின் வார்த்தைகளின் நீர்ப்பாசனம் மற்றும் ஆகாரத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன், ஆனால் நான் தேவனின் அன்பை திருப்பிச் செலுத்துவதற்கு முன்பு இந்த உலகத்தை விட்டு செல்ல விரும்பினேன். நான் குற்ற உணர்வும் மற்றும் வருத்தமும் நிறைந்திருந்தேன்; எனது இருதயத்தில் அடிபட்டது போல் நான் பயங்கரமாக உணர்ந்தேன். பின்னர் நான் தேவனின் இந்த வார்த்தைகளை நினைத்தேன்: “எனவே, இந்தக் கடைசிக் காலத்தில் நீ தேவனுக்கு சாட்சி கொடுக்க வேண்டும். உனது துன்பம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீ இறுதி வரை நடக்க வேண்டும், உனது கடைசி மூச்சிலும் கூட, நீ தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மேலும் தேவனின் திட்டமிடலுக்குக் கீழ்படிந்திருக்க வேண்டும்; இதுதான் உண்மையிலேயே தேவனை நேசிப்பதாகும், இது மட்டுமே வலுவான மற்றும் உறுதியான சாட்சியம் ஆகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்”). “நீ ஒரு மனுஷன் என்பதால், நீ தேவனுக்காக உன்னையே பயன்படுத்தி எல்லா துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும்! இன்றைய நாளில் நீ உட்படுத்தப்பட்ட சிறிய துன்பங்களை மகிழ்ச்சியுடனும் உறுதியாகவும் ஏற்றுக் கொண்டு, யோபு மற்றும் பேதுருவைப் போல அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும். … நீங்கள் சரியான பாதையைப் பின்பற்றுபவர்கள், முன்னேற்றத்தை நாடுபவர்கள். நீங்கள் பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் தேசத்தில் எழும்பினவர்கள், நீதியுள்ளவர்கள் என்று தேவனால் அழைக்கப்படுபவர்கள். இதுவே மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கை அல்லவா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பயிற்சி (2)”). தேவனின் இந்த வார்த்தைகளை எதிர்கொள்வதில் நான் மிகவும் வெட்கப்பட்டேன். தேவன் மாம்சமாகி மேலும் பூமிக்கு வந்து நமது வாழ்வாதாரத்திற்காக பல சத்தியங்களை வெளிப்படுத்தினார், மேலும் அவருக்கு இப்போது சாட்சி கொடுக்க ஆட்கள் தேவைப்பட்டனர், ஆனால் நான் அந்த சூழ்நிலையிலிருந்து மரணத்தின் மூலம் தப்பிக்க விரும்பினேன், ஏனென்றால் நான் ஒரு சிறிய அவமானத்தை அனுபவித்தேன், ஏனென்றால்நான் உடல் ரீதியாக வேதனைப்பட்டேன். அது உண்மையான கீழ்ப்படிதல் இல்லை. அது தேவனுக்கு எதிரான கலகம் இல்லையா? யோபு எப்படி தனது உடமைகளையும் மற்றும் தனது பிள்ளைகளையும் இழந்தான், மேலும் உடல் நலமின்மையால் வேதனையை அனுபவித்தான், ஆனால் அவன் தேவனை ஒருபோதும் குறை சொல்லவே இல்லை என்பதைப்பற்றி நான் நினைத்தேன். அவன் தேவனின் நாமத்தைப் புகழ்ந்துகொண்டே இருந்தான் மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். அவன் தேவனுக்கு உறுதியான சாட்சியாக இருந்தான். காலங்காலமாக, சீஷர்களும் மற்றும் தீர்க்கதரிசிகளும் தங்கள் ஜீவனைக் கொடுத்து, தேவனுக்காக தங்கள் இரத்தத்தைச் சிந்தினார்கள். நான் தேவனிடமிருந்து மிகவும் அதிகம் அனுபவித்திருந்தேன், ஆனால் நான் அவருக்காக என்ன தியாகம் செய்தேன்? நான் மிகவும் சுயநலமாகவும் மற்றும் இழிவாகவும் இருந்தேன், தேவன் எனக்காகச் செலுத்திய விலைக்கிரயத்திற்கு ஏற்ப நான் வாழவில்லை. நான் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு கூட தகுதியற்றவன்! நான் மனந்திரும்புதலிலும், ஜெபத்திலும் தேவனுக்கு முன்பாக வந்து, “தேவனே, நான் தவறு செய்துவிட்டேன். நான் மரணத்தைப் பற்றி நினைக்கக் கூடாது. நான் யோபுவைப் போலவும், பேதுருவைப் போலவும் இருக்க விரும்புகிறேன், மேலும் நான் எதை எதிர்கொண்டாலும், உமக்காக சாட்சியாக நிற்க விரும்புகிறேன்” என்று கூறினேன். அடுத்து என்ன வந்தாலும் அதை எதிர்கொள்ளும் பெலனை ஜெபம் எனக்கு அளித்தது. விரைவில், தலைமைக் கைதி தனது தண்டனையை நிறைவேற்றுவதற்காக சிறைக்கு மாற்றப்பட்டார், மேலும் சில கைதிகள் மாற்றப்பட்டனர், அவர்கள் என்னைக் கவனித்துக்கொள்ளத் தொடங்கினர். அவர்கள் என்னுடன் சில அன்றாடத் தேவைகளைப் பகிர்ந்து கொண்டார்கள் மற்றும் பருவநிலைக்கு அணிய ஆடைகளைக் கொடுத்தார்கள். இது தேவனின் திட்டமிடல் மற்றும் ஏற்பாடு என்று எனக்குத் தெரியும். அது தேவனின் வார்த்தைகளில் சொல்வது போல்: “ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப எல்லா காரியங்களும் மாறும், மாற்றம் பெரும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இதுவே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் முறையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”).

பின்னர், தடுப்புகாவல் மையத்தில் ஒரு சகோதரியை சந்தித்தேன். அது எனக்கு உண்மையிலேயே மனதுக்கு இதமாக இருந்தது. ஒருவரையொருவர் ஊக்குவிப்பதற்கும் மேலும் ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கும் தேவனின் சில வார்த்தைகளை இரகசியமாக பகிர்ந்தோம். எனது இருதயம் நிறைவாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பிறகு செப்டம்பரில் ஒரு நாள் காவல்துறையினர் என்னை மீண்டும் விசாரிக்க வந்தனர். நான் விசாரணை அறைக்குள் நுழைந்தவுடன் அவர்கள் எனது புகைப்படத்தை எடுத்தார்கள், மேலும் அவர்கள் அதை ஆன்லைனில் செயல்படுத்தி எனது அடையாளத்தைக் கண்டறிய பயன்படுத்துவதாகச் சொன்னார்கள். “உன்னுடைய வழக்கு இப்போதுதான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளியேற ஒருபோதும் நினைக்கவே வேண்டாம்! கிறிஸ்தவர்களுக்கான கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை ஓராண்டு தண்டனையை மூன்றாண்டு தண்டனையாகவும், மற்றும் மூன்றாண்டு தண்டனையை ஏழாண்டு தண்டனையாகவும் மாற்றுவதுதான். அவர்கள் விருப்பப்படி அவர்களை அடித்துக் கொல்லலாம், அதற்கு யாரும் பொறுப்பாக மாட்டார்கள். நீ எவ்வளவு காலம் சமாளித்துக்கொண்டிருப்பாய் என்பதை நாங்கள் பார்க்கிறோம்” என்று கூறி அவர்கள் என்னை மிரட்டினார்கள். சிசிபி எவ்வளவு பொல்லாதது மற்றும் இழிவானது என்பதைப் பார்க்கும்போது, பிசாசாகிய சாத்தானை இன்னும் அதிகமாக வெறுக்கிறேன். நான் ஒருபோதும் கீழ்ப்பணிந்து தேவனைக் காட்டிக்கொடுக்க மாட்டேன். நான் அவர்களிடம் தீவிரமாக, “நீங்கள் அதைப் பற்றி மறந்துவிடலாம். வெளியேறும் திட்டம் என்னிடம் இல்லை. எனது வாழ்நாளில் நான் தேவனை அறிந்து, சிருஷ்டிகருக்கு சாட்சியாக நிற்கும் வரை, நான் இங்கே இறந்தாலும் அது மதிப்புக்குரியதாக இருக்கும்!” என்று சொன்னேன். இதையடுத்து காவல்துறையினர் ஆத்திரத்துடன் அங்கிருந்து வெளியேறினர்.

அதிகாரிகளால் சட்டவிரோதமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நான் விடுவிக்கப்பட்டேன். கம்யூனிஸ்ட் கட்சியால் கைது செய்யப்பட்ட அனுபவத்தில் உடல்ரீதியாக நான் துன்பப்பட்டாலும், தேவனுடைய வார்த்தைகள் என்னை முழு நேரமும் பிரகாசமாக்கி, சாத்தானின் சோதனைகளைக் கடந்து வெற்றிபெறவும் மேலும் சாட்சியாக நிற்கவும் என்னை வழிநடத்தின. தேவனுடைய வார்த்தைகளின் வல்லமையையும் அதிகாரத்தையும் நான் உண்மையிலேயே அனுபவித்தேன், மேலும் தேவன் மீதான எனது விசுவாசம் வளர்ந்தது. தேவனை வெறுப்பது மற்றும் அவரது எதிரியாக இருப்பது போன்ற சிசிபியின் பிசாசுத்தனமான சாராம்சத்தையும் நான் தெளிவாகக் கண்டேன். நான் அதை முற்றிலும் புறக்கணித்து, அதை நிராகரித்தேன், மேலும் தேவனைப் பின்பற்றுவதற்கான எனது தீர்மானத்தை பலப்படுத்தினேன். சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சிறைச்சாலையின் துன்பம்

எழுதியவர் ஷியாவ் ஃபேன், சீனா 2004 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஒரு நாள், நான் சில சகோதர சகோதரிகளுடன் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தபோது,...

Leave a Reply