பொய்களைச் சொல்வதன் வலி

ஜனவரி 7, 2023

2019 ஆம் வருஷம் அக்டோபர் மாசத்துல, நான் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டேன். கூடுகைகள்ல சகோதர சகோதரிகளால தங்களோட அனுபவங்களயும் புரிதலையும் பத்தி ஐக்கியங்கொள்ள முடிஞ்சதை நான் பார்த்தேன். தங்களோட சீர்கேடுகள் குறைபாடுகள் எல்லாத்தயும் எந்த தயக்கமும் இல்லாம அவங்களால வெளிப்படுத்த முடிஞ்சுச்சு, நான் ரொம்பவே பொறாமைப்பட்டேன். நானும் ஒரு நேர்மையான நபரா இருக்க விரும்புனேன், அவங்க செஞ்சதப்போல் எளிமையா மனம் திறந்து பேச விரும்புனேன். ஆனா, அது உண்மையாக அப்படியொரு சூழ்நிலை வந்தப்ப, என்னால நேர்மையா பேச முடியல. ஒரு முறை என்னோட சகோதர சகோதரிகள் என்கிட்ட, “நீ இளைஞனா இருக்குற, நீ இன்னும் மாணவனா இருக்குறாயா?” அப்படின்னு கேட்டாங்க. உண்மை என்னன்னா, நான் கொஞ்ச நாட்களா மாணவனா இருக்கல, நான் ஒரு உணவகத்துல சமையல் செஞ்சு சுத்தம் செஞ்சேன், ஆனா மத்தவங்க இதத் தெரிஞ்சுக்கிட்டா, என்னை இழிவாப் பார்ப்பாங்கன்னு நான் பயந்தேன், அதனால நான் இன்னும் ஒரு மாணவனாகத்தான் இருக்குறேன்னு அவங்ககிட்ட சொன்னேன். நான் அதைச் சொன்னதுக்கப்புறமா அதப் பத்தி ரொம்ப யோசிக்கல, நான் அங்கிருந்து போய்ட்டேன். ஒரு நாள், ஒரு சாட்சிக் காணொளியில தேவனோட வார்த்தையின் பத்தியப் பார்த்தேன், அது என்னைப் பத்தி சிந்திக்க வச்சுச்சு. “நேர்மையானவர்களை தேவன் விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே, தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார், எனவே அவருடைய வார்த்தைகளை எப்போதும் நம்பலாம்; மேலும், அவருடைய செயல்கள் குற்றமற்றவை மற்றும் நிச்சயமானவைகளாக இருக்கின்றன, அதனால்தான் தம்மிடம் முற்றிலும் நேர்மையானவர்களாக இருக்கிறவர்களைத் தேவன் விரும்புகிறார். நேர்மை என்பது உங்களுடைய இருதயத்தை தேவனுக்குக் கொடுப்பதும், எல்லாவற்றிலும் தேவனுடன் உண்மையாக இருப்பதும், எல்லாவற்றிலும் அவருடன் வெளிப்படையாக இருப்பதும், உண்மைகளை ஒருபோதும் மறைக்காமல் இருப்பதும், உங்களுக்கு மேலே மற்றும் கீழே உள்ளவர்களை ஏமாற்ற முயற்சிக்காமல் இருப்பதும், மற்றும் தேவனிடத்தில் தயவைப் பெறுவதற்காக மட்டுமே காரியங்களைச் செய்யாமல் இருப்பதுமாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நேர்மையாக இருப்பது என்பது உங்களுடைய செயல்களிலும் வார்த்தைகளிலும் தூய்மையாக இருப்பதும், மற்றும் தேவனையும் மனிதனையும் ஏமாற்றாமல் இருப்பதுமாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மூன்று புத்திமதிகள்”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறமா, எனக்குப் புரிந்தது தேவன் நேர்மையானவர்கள விரும்புறாரு, நேர்மையான ஜனங்களால தேவனிடத்துல எளிமையாக மனதை வெளிப்படுத்த முடியும், அவங்க செய்யுற சொல்லுற விஷயங்கள்ல அவங்க தெளிவா இருக்காங்க, அதோடு, அவங்க தேவனையோ அல்லது மத்தவங்களயோ ஏமாத்த முயற்சிப்பதில்ல. ஆனா என்னைப் பொறுத்தவரையில, “நீ இன்னும் ஒரு மாணவனா இருக்கியா?” அப்படின்னு மத்தவங்க என்கிட்ட கேட்டப்ப, என்னால உண்மையக் கூட சொல்ல முடியல. இழிவா பார்க்கப்படுவோமோங்கற பயத்தினால, தேவனுக்கு முன்பா நேர்மையான நபரா இருக்க முடியல. நான் நேர்மையா இருக்கல. அதனால நான் மத்தவங்ககிட்ட நேர்மையா இருக்க விரும்புனேன், ஆனா, அவங்க என்னையக் கேலி செய்வாங்கன்னு நான் பயந்தேன். இன்னும், அதே நேரத்துல, வெளிப்படையா பேசாதது என்னை ரொம்ப கவலையடைய செஞ்சுச்சு. அதனால, உண்மையச் சொல்லவும் நேர்மையான நபராக இருக்கவும் பயிற்சி செய்ய எனக்கு உதவுமாறு தேவனிடத்துல வேண்டிக்கிட்டேன். அதுக்கு அப்புறம் நடந்த கூடுகையில, நான் என்னோட சீர்கேட்டைப் பத்தி வெளிப்படையா பேசி என்னோட பொய்களயும் ஏமாற்றுதல்களயும் அம்பலப்படுத்தினேன். மத்தவங்க என்னைக் கேவலமா பார்க்கலங்கறது மட்டுமல்லாம, என்னோட அனுபவம் நல்லா இருந்துச்சுன்னு எனக்கு செய்தியும் அனுப்புனாங்க. இது ஒரு நேர்மையான நபராக இருப்பதுக்கான அதிக நம்பிக்கைய எனக்குக் கொடுத்துச்சு. நேர்மையான நபரா இருந்து, இந்த சந்தர்ப்பத்துல உண்மையச் சொல்லப் பழகியிருந்தாலும் கூட, என்னோட சாத்தானிய மனநிலையப் பத்தி நான் இன்னும் விழிப்புணர்வப் பெற்றிருந்ததில்ல, அதோட, என்னோட நற்பெயர், நலன்கள் தொடர்பான விஷயங்கள்ன்னு பார்க்கும்போது, என்னை மறச்சு வச்சுக்கற என்னோட வஞ்சக மனநிலைய என்னால இன்னும் வெளிப்படுத்தாம இருக்க முடியல.

அதுக்கப்புறமா, நான் ஒரு பிரசங்கியாரா தேர்ந்தெடுக்கப்பட்டு, மூணு திருச்சபைகளின் பணிக்கு பொறுப்பேற்றுக்கிட்டேன். சக பணியாளர் கூடுகை ஒன்றின் போது, ஒவ்வொரு திருச்சபையிலயும் புதிதாக வந்தவங்களுக்கு எப்படி தண்ணீர் பாய்ச்சப்படுதுங்கற விவரத்தையும், புதிதாய் வந்தவங்க சிலர் ஏன் சரியா ஆதரிக்கப்படலங்கற விவரத்தையும் ஒரு தலைவர் தெரிஞ்சுக்க விரும்புனாரு. ஒரு திருச்சபையில விஷயங்கள் எப்படி நடக்குதுங்கறத மட்டுந்தான் நான் தெரிஞ்சுவச்சிருந்தேன், மத்த ரெண்டப் பத்தியும் தெரியாதுங்கறதால, நான் கொஞ்சம் கலங்க ஆரம்பிச்சேன். அதனால நான் என்ன சொல்வது? நான் உண்மையச் சொன்னால், எல்லோருமே என்னையப் பத்தி என்ன நினைப்பாங்க? இதைக்கூட என்னால சரியா தெரிஞ்சுவச்சுக்க முடியலேன்னா, நான் ஒரு பிரசங்கியாரா இருக்க முடியுமான்னு அவங்க அதிர்ச்சியடைவாங்களோ? இல்லேன்னா, நான் உண்மையா வேலை செய்யலன்னும் இந்தக் கடமையச் செய்ய இயலாதவன்னும் சொல்லுவாங்களோ? நான் இடமாற்றம் செய்யப்பட்டாலோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அது ரொம்பவே சங்கடமா இருக்கும். நான் அப்படியே ஓடிப்போக விரும்புனேன், ஆனா நான் சீக்கிரமா அங்க இருந்து போய்ட்டா, நான் உண்மையான வேலையைச் செய்யலங்கறத அவங்க கண்டுபிடுச்சுருவாங்கன்னு நான் பயப்படுறேன்ங்கறத எல்லாரும் புரிஞ்சுக்குவாங்க. அதனால, மத்த பிரசங்கியார்கள் அவங்க பொறுப்பேற்றிருந்த வேலையப் பத்தி பேசுனதப்போல நான் அங்கயே இருந்து கவனிக்கறதத் தவிர வேறு வழியில்ல. சூடான தகரக் கூரை மேல இருந்த ஒரு பூனையப் போல நான் இருந்தேன், என்ன செய்றதுன்னு தெரியல. தலைவர் என்னோட பெயரைச் சொல்லி கூப்பிட்டபோது, நான் ரொம்ப பதட்டமா இருந்தேன், அவர் கூப்பிட்டது எனக்குக் கேட்கலங்கறதப்போல “என்ன சொன்னீங்க?” அப்படின்னு நடிச்சேன். தலைவர், “நாங்க புதிதாய் வந்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது பத்திதான் பேசிக்கிட்டிருந்தோம். உங்களோட புதிதாய் வந்தவங்களப் பத்தி நீங்க எங்ககிட்ட சொல்ல விரும்புறீங்களா?” அப்படின்னு சொன்னாரு. நெஞ்சுக்குள்ள இருந்து என்னோட இருதயமே வெடிப்பதப்போல இருந்துச்சு. முதல்ல எனக்குத் தெரிஞ்ச திருச்சபையப் பத்தி பேசுவதத் தவிர வேறு வழியில்ல. ஆனா மத்த ரெண்டையும் பத்தி நான் பேச விரும்பல. ஆனாலும், நான் தொடர்ந்து கவனிக்கும் வேலையச் செய்யலன்னு எல்லாருக்கும் தெரியுமேன்னு நான் பயந்தேன். அதனால, நான் பல்லக் கடிச்சுக்கிட்டு, “இரண்டாவது திருச்சபையில புதிதா வந்த பலர் சரியா ஆதரிக்கப்படல, அதோட, தொற்றுநோய் காரணமா, நாங்க அவங்கள சந்திக்க முடியல. மூன்றாவது திருச்சபையின் நிலைமை பத்தி எனக்கு உறுதியா தெரியல, ஏன்னா, நான் இந்தக் காலகட்டம் முழுதும் மத்த ரெண்டு திருச்சபைகளின் வேலையத்தான் தொடர்ந்து கவனிச்சிக்கிட்டு வந்திருக்கேன்” அப்படின்னு பொய் சொன்னேன். இதைச் சொன்னது எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு, என்னோட பொய்ய எல்லோரும் கண்டுபிடிச்சுருவாங்கன்னும், அது இன்னும் அவமானகரமானதாக இருக்கும்னும் நான் பயந்தேன். கூடுகை முழுவதும் நான் பதட்டமாக இருந்தேன், அது முடிஞ்சதுக்கப்புறம்தான், என்னால நிம்மதிப் பெருமூச்சு விட முடிஞ்சுது. எனக்கு அதிர்ச்சியளிக்கும் விதமா, தலைவர் என்னையக் கூப்பிட்டு, “தொற்றுநோய் காரணமா சரியா ஆதரிக்கப்படாத அந்தப் புதிதாய் வந்தவங்கள ஆதரிக்க, தண்ணீர் பாய்ச்சும் ஊழியர்கள அவங்களோடு தொலைபேசியில பேசி கவனிச்சுக்கச் சொன்னீங்களா?” அப்படின்னு கேட்டாரு. தலைவரோட கேள்வியினால நான் திகச்சுப் போனேன். நிலைமையப் பத்திய விவரங்கள் எனக்குத் தெரியாது. நான் உண்மையச் சொல்லிட்டா, நான் பொய் சொன்னேன்ங்கறத தலைவர் கண்டுபிடிச்சர மாட்டாரா? எனக்குத் தெரியாதுன்னும் சொல்ல முடியல. அதனால நான் தொடர்ந்து பொய் சொல்லிக்கிட்டே இருந்தேன். “நான் அதப் பத்தி அவங்ககிட்ட பேசினேன், ஆனா புதிதா வந்தசிலர் அவங்களோட தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கல” அப்படின்னு சொன்னேன். அப்போது தலைவர், “எந்தப் புதியவங்க?” அப்படின்னு கேட்டாரு. “நான் பொய் சொன்னேன்ங்கறத தலைவர் கண்டுபிடிச்சிட்டதால என்னைத் தொடர்ந்து அவர் கேள்வி கேட்குறாரா?” அப்படின்னு நான் எனக்குள்ள நெனச்சேன். “தேவனோட கிரியைய இப்போ ஏத்துக்கிட்டவங்கள்ல சிலர்ன்னு நினைக்குறேன்” அப்படின்னு நான் சீக்கிரமா பதில் சொன்னேன். என்னால தெளிவா விளக்கிச் சொல்ல முடியாததப் பார்த்த தலைவர் “சரி, நீங்க கண்டுபிடிச்சவுடன், எனக்குத் தெரியப்படுத்துங்க” அப்படின்னு சொன்னாரு. நான் தொலைபேசியில பேசி முடித்ததும், ஆழ்ந்த குற்ற உணர்வடஞ்சேன். நான் மறுபடியும் ஒரு தடவ பொய் சொல்லி ஏமாத்துனேன். மத்த பொய்களை மறைக்க பொய்கள பயன்படுத்துவது எவ்வளவு சிரமம். கூடுகைய நெனச்சுப் பார்க்கும்போது, ஒரு பிரசங்கியார் தான் பொறுப்பேற்றிருந்த மூன்று திருச்சபைகள்ல ஒன்றைக் கவனிக்கலன்னு சொல்லியிருந்தாரு. அவர் உண்மையப் பேசக்கூடியவரா இருந்தாரு, அப்படியிருக்க, என்னால ஏன் ஒரு நேர்மையான வார்த்தையச் சொல்ல முடியல? பொய் சொல்லி, ஏமாத்தி, இதுபோல பொய்யான தோற்றத்த ஏற்படுத்துறதால உண்மைய மறைக்க முடியாது. தேவன் எல்லாத்தையும் ஆராயுறாரு, இப்பவோ பிறகோ நான் அம்பலப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படுவேன், அதனால நான் தேவனிடத்துல, “தேவனே, இன்னைக்குக் கூடுகையில தலைவர் வேலையப் பத்தி விசாரிச்சபோது, நான் உண்மையச் சொல்லாம பொய் சொன்னேன். நான் சரியான வேலையச் செய்யலன்னு தெரிஞ்சா எல்லாரும் என்னைய இழிவா பார்ப்பாங்கன்னு பயந்தேன். தேவனே, என்னை அறிஞ்சுக்கவும், என்னோட சீர்கெட்ட மனநிலையப் புறம்பாக்கவும் எனக்கு வழிகாட்டுவீராக” அப்படின்னு ஜெபிச்சேன்.

அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தையின் ஒரு பத்திய நான் வாசிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஜனங்கள் தங்கள் அன்றாட வாழ்வில், அர்த்தமற்றவை, பொய்யானவை, அறியாதவை, முட்டாள்தனமானவை மற்றும் நியாயப்படுத்துபவை என அநேக விஷயங்களைச் சொல்கிறார்கள். அடிப்படையாக, அவர்கள் தங்கள் சொந்த பெருமைக்காக, தங்கள் சொந்த வீணான விருப்பங்களைத் திருப்திப்படுத்துவதற்காக இவற்றைச் சொல்கிறார்கள். இந்தப் பொய்களை அவர்கள் உரைப்பது அவர்களின் சீர்கெட்ட மனநிலைகளின் வெளிப்பாடாகும். இந்தச் சீர்கேட்டை சரிசெய்வது உன்னுடைய இருதயத்தைச் சுத்தப்படுத்தும், இவ்வாறு எப்போதும் உன்னைத் தூய்மையானவனாகவும், நேர்மையானவனாகவும் எப்போதும் ஆக்கும். உண்மையில், அவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பது எல்லா ஜனங்களுக்கும் தெரியும்: அது அவர்களின் நலன்கள், மதிப்பு, வீண் பெருமை, அந்தஸ்து என்பதற்காகவே. மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்கள் தங்கள் திராணிக்கு மிஞ்சி செயல்படுகிறார்கள். இதன் விளைவாக, அவர்களுடைய பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டு அவற்றின் உண்மையான இயல்பு மற்றவர்களால் கண்டறியப்படுகின்றன, இதனால் மதிப்பை இழக்கின்றனர், குணத்தை இழக்கின்றனர் மற்றும் கண்ணியத்தை இழக்கின்றனர். இது பல பொய்களினால் உணடாகும் விளைவாகும். நீ அதிகமாகப் பொய் சொல்லும்போது, நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அசுத்தமானதாக இருக்கிறது. அவை அனைத்தும் பொய்யானவை, அதில் எதுவுமே உண்மையானதாகவோ அல்லது உண்மை சார்ந்ததாகவோ இருக்க முடியாது. நீ பொய் சொல்லும்போது உன் அந்தஸ்தை இழக்காமல் இருக்கலாம் என்றாலும், நீ ஏற்கெனவே உள்ளுக்குள் இழிவாக உணர்கிறாய். நீ உன் மனசாட்சியால் குற்றப்படுத்தப்படுவாய், மேலும் உன்னை நீயே வெறுப்பாய் மற்றும் இழிவாகப் பார்ப்பாய். ‘நான் ஏன் இவ்வளவு பரிதாபமாக வாழ்கிறேன்? ஒரு நேர்மையான விஷயத்தைச் சொல்வது உண்மையிலேயே இவ்வளவு கடினமானதா? மதிப்புக்காக மட்டுமே இந்தப் பொய்களை நான் சொல்ல வேண்டுமா? இவ்விதமாக வாழ்வது ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறது?’ உன்னால் சோர்வடையாத விதத்தில் வாழ முடியும். நீ ஒரு நேர்மையான நபராக இருக்கப் பயிற்சி செய்தால், உன்னால் எளிதாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியும், ஆனால் மதிப்பையும் வீண் பெருமையையும் பாதுகாக்க நீ பொய் சொல்வதைத் தேர்ந்தெடுக்கும்போது, உன் வாழ்க்கை மிகவும் சோர்வாகவும் வேதனையாகவும் இருக்கிறது, அதாவது இது சுயமாக ஏற்படுத்தப்பட்ட வேதனையாகும். பொய்களைச் சொல்வதால் உனக்கு என்ன மரியாதை கிடைக்கும்? அது வெறுமையானதும், முற்றிலும் பயனற்றதுமாய் இருக்கிறது. நீ பொய் சொல்லும்போது, உன் சொந்த நேர்மையையும் கண்ணியத்தையும் காட்டிக்கொடுக்கிறாய். இந்தப் பொய்கள் ஜனங்களின் கண்ணியத்தை இழக்கச் செய்கின்றன, அவர்கள் தங்கள் குணத்தை இழக்கிறார்கள், தேவன் அவர்களை விரும்பத்தகாதவர்களாகவும் வெறுக்கத்தக்கவர்களாகவும் பார்க்கிறார். அவர்கள் மதிப்புள்ளவர்களா? இல்லவே இல்லை. இது சரியான பாதையா? இல்லை. அடிக்கடி பொய் சொல்கிறவர்கள் வெளிச்சத்திலோ அல்லது தேவனுக்கு முன்பாகவோ இல்லாமல், தங்கள் சாத்தானிய மனநிலைகளிலும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழுமே சிக்குண்டு வாழ்கின்றனர். பொய்யை எப்படிச் சொல்வது என்று நீ அடிக்கடி சிந்திக்க வேண்டும், நீ பொய் சொன்ன பிறகு, அதை எப்படி மூடி மறைக்க வேண்டும் என்று நீ சிந்திக்க வேண்டும், மேலும் நீ அதை நன்றாக மூடி மறைக்கவில்லை என்றால், பொய் வெளியே வரும், ஆகையால் அதை மூடி மறைப்பதற்காக நீ உன் மூளையைக் கசக்கிப் பிழிய வேண்டும். இது வாழ்வதற்கான ஒரு சோர்வான வழி அல்லவா? இது மிகவும் சோர்வாக இருக்கிறது. இது மதிப்புடையதா? இல்லவே இல்லை. வெறும் வீண் பெருமைக்காகவும், அந்தஸ்துக்காகவும், பொய் சொல்லி, அதை மூடி மறைப்பதற்காக உன் மூளையைக் கசக்கிப் பிழிவதனால் என்ன பிரயோஜனம்? கடைசியில், நீ அதைப் பற்றி யோசித்து, ‘நான் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? பொய் சொல்லி அதை மூடி மறைக்க மிகவும் சோர்வாக இருக்கிறது. இவ்வாறு செய்வதில் பயனில்லை. நேர்மையான நபராக இருப்பது எளிது’ என்று உனக்குள்ளேயே சொல்லிக்கொள்வாய். நீ நேர்மையான நபராக இருக்க விரும்புகிறாய், ஆனால் உன்னால் உன் மதிப்பு, வீண் பெருமை மற்றும் நலன்களை விட்டுவிட முடியவில்லை. இந்தக் காரியங்களைத் தற்காத்துக்கொள்ள உன்னால் பொய் சொல்லவும் பொய்களைப் பயன்படுத்தவும் மட்டுமே முடியும். … பொய்களைப் பயன்படுத்துவது நீ விரும்பிய நற்பெயர், அந்தஸ்து மற்றும் வீண் பெருமை ஆகியவற்றைப் பாதுகாக்கும் என்று நீ நினைக்கலாம், ஆனால் இது ஒரு பெரிய தவறாகும். பொய்கள் உன் வீண் பெருமையையும் தனிப்பட்ட கண்ணியத்தையும் பாதுகாக்கத் தவறுவது மட்டுமின்றி, இன்னும் தீவிரமாக, சத்தியத்தைக் கடைபிடிப்பதற்கும் நேர்மையான நபராக இருப்பதற்குமான வாய்ப்புகளை நீ இழந்துபோகும்படி செய்கின்றன. அந்த நேரத்தில் நீ உன் நற்பெயரையும் வீண் பெருமையையும் தற்காத்துக் கொண்டாலும், சத்தியத்தை நீ இழக்கிறாய், நீ தேவனைக் காட்டிக் கொடுக்கிறாய், அதாவது நீ தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்கான மற்றும் பரிபூரணமாக்கப்படுவதற்கான வாய்ப்பை முற்றிலும் இழக்கிறாய். இது மிகப்பெரிய இழப்பும் நித்தியமான வருத்தமுமாகும். வஞ்சகமுள்ள ஜனங்கள் இதை ஒருபோதும் தெளிவாகப் பார்ப்பதில்லை(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “நேர்மையாக இருப்பதன் மூலம் மட்டுமே ஒருவரால் உண்மையான மனுஷனாக வாழ முடியும்”). தேவனோட வார்த்தை என்னோட நிலைய வெளிப்படுத்துச்சு. ஒவ்வொரு திருச்சபையிலயும் தண்ணீர் பாய்ச்சும் சூழ்நிலையப் பத்தி தலைவர் தெரிஞ்சுக்க விரும்புனாரு, இது ஒரு சாதாரண விஷயம், உண்மையச் சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும். ஆனா எனக்கு எதுவுமே கடினமா இருந்திருக்க முடியாது. நான் தயக்கத்தால நிரம்பியிருந்தேன், தலைவரும் மத்த பிரசங்கியார்களும் உண்மையக் கண்டுபிடிச்சதுக்கப்புறமா, நான் சரியான வேலைய செய்யலன்னும், இந்தச் சிறிய விஷயத்தக் கூட புரிஞ்சுக்க முடியலன்னும் அவங்க என்னைய இழிவா பார்ப்பாங்கன்னு பயந்தேன். நான் பணி இடைநீக்கம் செய்யப்பட்டால், அது அவமானகரமானதா இருக்கும். என்னோட நற்பெயரையும், அந்தஸ்தயும் மத்தவங்க என் மேல கொண்டிருந்த நல்ல அபிப்ராயத்தையும் பாதுகாக்க, ஒன்றைப் பத்தி மட்டுமே நான் தெளிவா புரிஞ்சு வச்சிருந்தபோதும், ரெண்டு திருச்சபைகள கவனிச்சுக்கிட்டதா நான் பொய் சொன்னேன். நான் இரண்டாவது திருச்சபையப் பத்தி விரிவா பேசி, தொற்றுநோய் காரணமா அங்கு உள்ள புதிதாய் வந்தவங்க ஆதரிக்கப்படலன்னு சொன்னேன். இது வெறும் அப்பட்டமான பொய் இல்லயா? புதிதாய் வந்தவங்களத் தொலைபேசியில அழைக்கச் சொல்லி தண்ணீர் பாய்ச்சுறவங்ககிட்ட சொன்னீங்களான்னு தலைவர் என்கிட்ட கேட்டப்போ, நான் சொன்ன பொய்யை தலைவர் கண்டுபிடுச்சுருவாரோன்னு பயந்தேன், அதனால், முதல் பொய்யை மறைக்க நான் இரண்டாவது பொய்யை உருவாக்கினேன், அவரை ஏமாத்த சாக்குப்போக்குகள உருவாக்குனேன். என்னோட பெயரயும் அந்தஸ்தயும் பாதுகாக்க, ஒரு பொய்ய மறைக்க இன்னொரு பொய்ய சொன்னேன். நான் உண்மையிலயே வஞ்சகம் நெறஞ்சவனா இருந்தேன்! வேதாகமத்துல பதிவு செய்யப்பட்டிருக்குறதான், தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான உரையாடலப் பத்தி நான் சிந்திச்சுப் பார்த்தேன். அது எங்கிருந்து வந்துச்சுன்னு தேவன் சாத்தானிடம் கேட்டதுக்கு, சாத்தான், “பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன்” (யோபு 1:7) அப்படின்னு சொன்னான். சாத்தான் ரொம்பவே தந்திரமானவனா இருக்குறான். அது தேவனோட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லாம, சுத்தி வளச்சுப் பேசுச்சு. சாத்தான் எங்கிருந்து வந்தான்னு சொல்வது கடினமானது. அதன் வாய் பொய்களால மட்டுமே நெறஞ்சிருக்குது, அது ஒருபோதும் நேர்மையாகப் பேசாது, அதோட, அது எப்பொழுதும் குழப்பிவிடுவதாகவும் தெளிவற்றதாகவும் மட்டுமே பேசுது. என்னோட பொய்யினாலயும் வஞ்சகத்தாலயும், நான் பிசாசாகிய சாத்தானைப் போலவே இருக்குறேன் இல்லையா? தலைவர் தெரிஞ்சுக்க விரும்புன வேலையப் பத்தி நான் பதில் சொன்னாலும், அது எல்லாமே பொய்யும் வஞ்சகமுமா இருந்துச்சு. என்னோட பதிலக் கேட்டதும், நான் பொறுப்பேற்றிருந்த தண்ணீர் பாய்ச்சும் பணியோட சரியான நிலையப் பத்தி தலைவருக்கு இன்னும் தெளிவா தெரியல, நான் சரியா பின்தொடர்ந்திருந்தேனா இல்லையாங்கறத அவரால தீர்மானிக்க முடியல. உண்மையில, நான் இப்படி பொய் சொல்வதும் ஏமாத்துவதும் என்னோட நற்பெயரயும் அந்தஸ்தயும் தற்காலிகமா காப்பாத்துச்சு. ஆனா நான் உண்மையிலயே இழந்ததுபோனது என்னன்னா என்னோட குணநலனயும், கண்ணியத்தயும் மத்தவங்களோட நம்பிக்கையையும்தான். நான் தொடர்ந்து இப்படியே செஞ்சுகிட்டு இருந்தா, இப்பவோ பிறகோ, நான் ஒரு நேர்மையான நபர் இல்லைங்கறதயும் நம்பத்தகாத நபர்ங்கறதயும் எல்லாரும் பார்த்துவிடுவாங்க. யாரும் என்னைய நம்ப மாட்டாங்க, அதோடு, தேவன் என்னை நம்பமாட்டார். அப்போ நான் குணநலன்களயும் கண்ணியத்தயும் முழுவதுமாக இழந்துவிடமாட்டேனா? இது என்னோட முட்டாள்தனமா இருக்காதா?

அதுக்கப்புறமா, நான் தேவனோட வார்த்தையின் ஒரு பத்திய வாசிச்சேன்: “ஜனங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தேவன் கேட்டுக்கொள்வது, அவர் வஞ்சகமுள்ளவர்களை உண்மையிலேயே வெறுக்கிறார் என்பதையும், அவருக்கு வஞ்சகமுள்ள ஜனங்களைப் பிடிக்காது என்பதையும் நிரூபிக்கிறது. வஞ்சகமுள்ள ஜனங்கள் மீதான தேவனுடைய வெறுப்பு என்பது அவர்கள் காரியங்களைச் செய்யும் முறை, அவர்களுடைய மனநிலைகள், அவர்களுடைய நோக்கங்கள் மற்றும் அவர்களுடைய வஞ்சக முறைகள் ஆகியவற்றின் மீதான ஒரு வெறுப்பாகும்; தேவன் இந்தக் காரியங்கள் அனைத்தையும் வெறுக்கிறார். வஞ்சகமுள்ள ஜனங்களால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும், தங்களுடைய வஞ்சக மனநிலைகளை உணர்ந்துகொள்ளவும் முடிந்து, தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால், அவர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது, ஏனென்றால் தேவன் எல்லா ஜனங்களையும் சமமாக நடத்துகிறார், மேலும் சத்தியமும் எல்லா ஜனங்களையும் சமமாக நடத்துகிறது. ஆகையால், நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாக மாற விரும்பினால், நாம் செய்ய வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால் நமது ஜீவிதத்தின் கொள்கைகளை நாம் மாற்ற வேண்டும்: நம்மால் இனிமேலும் சாத்தானுடைய தத்துவங்களின்படி வாழ முடியாது, நம்மால் இனிமேல் பொய்களிலும் வஞ்சகத்திலும் வாழ முடியாது, நாம் எல்லா பொய்களையும் விட்டுவிட்டு நேர்மையாக இருக்க வேண்டும், இவ்விதமாக நம்மைப் பற்றிய தேவனுடைய பார்வை மாறும். முன்னதாக, ஜனங்கள் மத்தியில் வாழ்வதற்கு ஜனங்கள் பொய்களையும், பாசாங்குகளையும், தந்திரங்களையுமே எப்பொழுதும் நம்பியிருந்தனர், மேலும் சாத்தானிய தத்துவங்களையே இருப்பின் அடிப்படையாகவும், வாழ்வாகவும், அஸ்திபாரமாகவும் பயன்படுத்தினர், இவற்றைக்கொண்டே தங்களை நடத்தினர் இது தேவன் வெறுத்த ஒன்றாக இருந்தது. அவிசுவாசிகளுக்கு மத்தியில், நீ வெளிப்படையாகப் பேசினால், உண்மையைச் சொன்னால், நேர்மையான நபராக இருந்தால், நீ அவதூறு செய்யப்படுவாய், நியாயந்தீர்க்கப்படுவாய் மற்றும் புறக்கணிக்கப்படுவாய், ஆகையால் நீ உலகப் போக்குகளைப் பின்பற்றுகிறாய், சாத்தானிய தத்துவங்களின்படி வாழ்கிறாய், பொய் சொல்வதில் மேலும் மேலும் திறமையானவனாகவும், மேலும் மேலும் வஞ்சகமானவனாகவும் மாறுகிறாய். உன் இலக்குகளை அடையவும் உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் நயவஞ்சகமான வழிமுறைகளைப் பயன்படுத்தவும் நீ கற்றுக்கொள்கிறாய். சாத்தானின் உலகில் நீ மேலும் மேலும் செழிப்பானவனாக மாறுகிறாய், இதன் விளைவாக, உன்னை நீயே விடுவிக்க முடியாத அளவிற்கு பாவத்தில் மிகவும் ஆழமாக மூழ்கிவிடுகிறாய். தேவனுடைய வீட்டில் காரியங்கள் முற்றிலும் எதிரிடையாக உள்ளன. நீ எவ்வளவு அதிகமாகப் பொய் சொல்கிறாயோ மற்றும் தந்திரங்களை உபயோகிக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் உன்னைக் குறித்து சோர்வடைந்து உன்னைப் புறக்கணிப்பார்கள். நீ மனந்திரும்ப மறுத்து, இன்னும் சாத்தானிய தத்துவங்கள் மற்றும் தர்க்கங்ளை இறுகப் பிடித்துக்கொண்டு, உன்னை மறைத்து வேடமிட்டுக் கொள்வதற்கு சதித்திட்டங்களையும் விரிவான திட்டங்களையும் பயன்படுத்தினால், நீ அம்பலப்படுத்தப்பட்டு புறம்பாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், தேவன் வஞ்சகமுள்ள ஜனங்களை வெறுக்கிறார், தேவனுடைய வீட்டில் நேர்மையான ஜனங்களால் மட்டுமே செழிப்படைய முடியும், மேலும் வஞ்சகமுள்ள ஜனங்கள் இறுதியில் புறக்கணிக்கப்பட்டு புறம்பாக்கப்படுவார்கள். இவை அனைத்தும் தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையாகும். நேர்மையானவர்கள் மட்டுமே பரலோக ராஜ்யத்தில் பங்கு பெற முடியும், எனவே நீ நேர்மையான நபராக இருக்க முயற்சிக்கவில்லை என்றால், நீ சத்தியத்தைப் பின்தொடரும் திசையில் பயிற்சி செய்யாவிட்டால், நீ உன் சொந்த அசிங்கத்தை அம்பலப்படுத்தாவிட்டால், உன் உண்மையான முகத்தைக் காட்டாவிட்டால், அப்போது உன்னால் ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்று தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒரு நேர்மையான நபராக இருப்பதற்கான மிக அடிப்படையான பயிற்சி”). தேவனோட வார்த்தைகள சிந்திச்சுப் பார்க்கையில, வஞ்சகர்கள தேவன் விரும்புவதில்ல, அவங்கள இரட்சிப்பதில்லங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். ஏன்னா, அவங்க சாத்தானுக்கு சொந்தமானவங்களா இருக்காங்க. வஞ்சகர்கள் தாங்கள் செய்யுற எல்லா காரியங்கள்லயும் துரோகத்தயும் தந்திரங்களயும் பயன்படுத்துறாங்க, தங்களோட நற்பெயரயும் அந்தஸ்தயும் நலன்களயும் பாதுகாக்க அவங்க நேர்மை இல்லாம பேசுகிறாங்க. இந்த ஜனங்கள் கொண்டிருக்குற நோக்கங்களும் அவங்க பயன்படுத்தும் முறைகளும் தேவனுக்கு விநோதமானதாகவும் அருவருப்பானவையுமாய் இருக்குது. நான் தேவனை விசுவாசிச்சாலும் கூட, நான் எந்த சத்தியத்தயும் பெற்றிருக்கல, “ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து” மற்றும் “மரம் தன் பட்டைக்காக வாழ்வது போல, மனுஷன் தன் முகத்திற்காக வாழ்கிறான்” என்பன போன்ற சாத்தானிய தத்துவங்களால வாழ்ந்துக்கிட்டிருந்தேன். இந்த சாத்தானிய தத்துவங்கள் ஏற்கனவே என்னோட இருதயத்துக்குள்ள தானாகவே வேரூன்றியிருந்து, என்னைத் தவறாக வழிநடத்திக்கிட்டும், சீர்கெடுத்துக்கிட்டும், நற்பெயரயும் அந்தஸ்தயும் பின்தொடர்வதுக்கான பாதையில என்னை நடக்க வச்சுக்கிட்டும் இருந்துச்சு. ஜனங்கள் தங்களுக்காக வாழணும்னும், மத்தவங்களவிட சிறந்தவங்களா உயர்ந்துநிற்கணும்னும், புகழையும் லாபத்தையும் பெறணும்னும், அப்பத்தான் ஒரு நபர் இழிவா பார்க்கப்பட மாட்டார்னும் நான் நெனச்சேன். ஒரு நபர் உண்மைய மட்டுமே சொன்னா, ஒருபோதும் பொய் சொல்லலேன்னா, அந்த நபர் ஒரு முட்டாள்னும் எதற்கும் உதவாதவன்னும் நான் நெனச்சேன். இதனாலதான், நான் எப்பவுமே ஏமாத்திக்கிட்டும், என்னோட சொந்த நலன்களுக்காக பொய்களால என்னைய மூடிமறச்சுக்கிட்டும் இன்னும் அதிக வஞ்சகமாகவும், போலியாகவும், சாதாரண மனுஷ சாயல் இல்லாதவனாகவும் மாறிக்கிட்டிருந்தேன். நான் உண்மைய விட நற்பெயரயும் அந்தஸ்தயும் முக்கியமானதா நெனச்சேன், அதோடு, என்னோட நற்பெயரயும் அந்தஸ்தயும் பாதுகாக்க பொய் சொல்லவும் சத்தியத்துக்கு எதிரா செயல்படவும் தயாராக இருந்தேன். சாத்தான் ஒரு பொய்யன், நான் இப்படி பொய் சொல்லி ஏமாத்தும் போது நானும் அவனைப்போலவே இருக்கலயா? இந்தப் பொல்லாத உலகத்துல, நேர்மையான, வெளிப்படையான நபராக இருப்பதுக்கு மதிப்பு இல்ல. ஆனா தேவனோட வீட்டில் இது முற்றிலும் நேர்மாறானது. தேவனோட வீட்ல, நீதியும் சத்தியமும் மேலோங்கி ஆளுகை செய்யுது. ஒரு நபர் எவ்வளவு அதிகமா ஏமாத்துறாரோ, அவ்வளவு அதிகமா அவர் விழுந்து போகக் கூடும், கடைசியா, எல்லா வஞ்சகர்களும் தேவனால அம்பலப்படுத்தப்பட்டு புறம்பாக்கப்படுறாங்க. தேவன் சொல்லுகிறார்: “ஜனங்கள் இரட்சிக்கப்பட விரும்பினால், அவர்கள் நேர்மையாக இருக்கத் தொடங்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “வாழ்க்கையின் வளர்ச்சிக்கான ஆறு குறிகாட்டிகள்”). “நேர்மையானவர்கள் மட்டுமே பரலோக ராஜ்யத்தில் பங்கு பெற முடியும்…(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒரு நேர்மையான நபராக இருப்பதற்கான மிக அடிப்படையான பயிற்சி”). தேவன் பரிசுத்தமானவராய் இருக்காரு, அசுத்தமான ஜனங்கள் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதில்ல. இதை நான் உணர்ந்தப்போ, தேவனுடைய பரிசுத்தமும் நீதியுமுள்ள மனநிலை குற்றத்தைப் பொறுத்துக்காதுன்னு நான் உணர்ந்தேன், என்னோட சகோதர சகோதரிகள்கிட்ட பொய் சொன்னதுக்காக நான் உண்மையிலயே வருத்தப்பட்டேன். நான் உண்மையிலயே என்னை வெறுத்தேன், அதுக்கப்புறமா, நான் மறுபடியும் பொய் சொல்லவோ ஏமாத்தவோ விரும்பல. சத்தியத்தக் கைக்கொள்ளவும், நேர்மையான நபரா இருக்கவும், எல்லார்கிட்டயும் நேர்மையா பேசவும் விரும்புனேன். என்னோட வாயில இருந்து பொய்களயும், என்னோட இருதயத்துல இருந்து வஞ்சகத்தயும் எடுத்துப்போடவும், அதன் மூலமா, தேவனோட அங்கீகாரத்துக்கும் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிப்பதுக்கும் தகுதியுடையவனா இருக்கவும் விரும்புனேன்.

என்னோட ஒரு வேத தியானத்தின்போது, நான் தேவனோட வார்த்தையின் ஒரு பத்திய வாசிச்சேன்: “நேர்மையைக் கடைப்பிடிப்பது பல அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நேர்மையாக இருப்பதற்கான தரநிலையானது ஒரு காரியத்தின் மூலமாக மட்டுமே அடையப்படுவதில்லை; நீ நேர்மையாக இருப்பதற்கு முன் பல காரியங்களில் நீ தரநிலையின்படி இருக்க வேண்டும். சிலர் நேர்மையாக இருக்கப் பொய் சொல்லாமல் மட்டுமே இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைக்கின்றனர். இந்தக் கருத்து சரியானதா? நேர்மையாக இருப்பது என்பது பொய் சொல்லாமல் இருப்பதுடன் மட்டுமே தொடர்புடையதா? இல்லை—இது வேறு பல அம்சங்களுடனும் தொடர்புடையது. முதலாவதாக, நீ எதை எதிர்கொண்டாலும், அது உன் சொந்த கண்களால் பார்த்த ஏதாவதாகவோ அல்லது வேறு யாராவது உன்னிடம் சொன்னதாகவோ இருந்தாலும், அது ஜனங்களுடன் தொடர்புகொள்வதாகவோ அல்லது ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதாகவோ இருந்தாலும், அது நீ செய்ய வேண்டிய கடமையாகவோ அல்லது தேவன் உன்னிடம் ஒப்படைத்த ஒன்றாகவோ இருந்தாலும், நீ எப்பொழுதும் அதை நேர்மையான இருதயத்துடன் அணுக வேண்டும். நேர்மையான இருதயத்துடன் காரியங்களை அணுகுவதை ஒருவர் எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும்? நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள், மேலும் நேர்மையாகப் பேசுங்கள்; வெற்று வார்த்தைகளையோ, அலுவல் மொழிகளையோ அல்லது இனிமையாக தொனிக்கும் வார்த்தைகளையோ பேச வேண்டாம், முகஸ்துதி அல்லது பாசாங்குத்தனமான பொய்யான விஷயங்களைச் சொல்ல வேண்டாம், ஆனால் உங்கள் இருதயத்தில் உள்ள வார்த்தைகளைப் பேசுங்கள். இதுவே நேர்மையான ஒருவராக இருப்பதாகும். உங்கள் இருதயத்தில் இருக்கும் உண்மையான எண்ணங்கள் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்துதல்—நேர்மையான ஜனங்கள் இதைத்தான் செய்ய வேண்டும். நீங்கள் நினைப்பதை நீங்கள் ஒருபோதும் சொல்லவில்லை என்றால், வார்த்தைகள் உங்கள் இருதயத்தில் தேங்கி, நீங்கள் சொல்வது எப்பொழுதும் நீங்கள் நினைப்பதற்கு முரணாகவே இருந்தால், அது நேர்மையான ஒருவர் செய்கிற காரியமல்ல(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “நேர்மையாக இருப்பதன் மூலம் மட்டுமே ஒருவரால் உண்மையான மனுஷனாக வாழ முடியும்”). தேவனோட வார்த்தை எனக்கு பயிற்சிக்கான பாதையக் கொடுத்துச்சு. மத்தவங்களோடு பழகுவதா இருந்தாலும் சரி என்னோட கடமையக் கையாள்வதா இருந்தாலும் சரி, என்னோட அணுகுமுறையில எனக்கு நேர்மையான இருதயம் இருக்கணும். நான் பின்தொடரும் வேலையச் செய்யாம இருந்ததால, நான் அதுல நேர்மையா இருக்கணும். என்னோட நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுருமோன்னு நான் நினைக்கக் கூடாது. நேர்மையான நபரா இருப்பதுக்கு பயிற்சி செய்வது முக்கியம்.

அடுத்த சக ஊழியர் கூடுகையில, நான் முன்முயற்சி எடுத்து என்னோட சீர்கேட்ட வெளிப்படுத்த விரும்புனேன், ஆனா, எல்லாரும் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு நான் கவலைப்பட்டேன். நான் மறுபடியும் என்னோட நற்பெயரயும் அந்தஸ்தயும் பாதுகாக்க விரும்புறேன்ங்கறத உணர்ந்தேன். அதனால, நான் தேவனிடத்துல மௌனமா, என்னை வழிநடத்தி, எனக்கு பெலன் தரும்படியும், என்னோட சீர்கேட்டை வெளிப்படுத்த தைரியத்தக் கொடுக்கும்படியும் கேட்டு ஒரு ஜெபம் செஞ்சேன். நான் முன்பு வாசிச்ச தேவனோட வார்த்தையின் ஒரு பத்தி எனக்கு நினைவுக்கு வந்துச்சு: “நீ தேவனுடைய வார்த்தைகளின்படி நடக்காமல், உன் ரகசியங்களையும் உன் சவால்களையும் ஒருபோதும் ஆராய்ந்து பார்க்காமல், மற்றவர்களுடனான ஐக்கியத்தில் உன்னைப் பற்றி ஒருபோதும் மனந்திறந்து பேசாமல், உன்னுடைய சீர்கேட்டையும் ஆபத்தான குறைபாடுகளையும் அவர்களுடன் ஐக்கியங்கொள்ளவோ அல்லது பகுப்பாய்வு செய்யவோ அல்லது வெளிச்சத்திற்குக் கொண்டு வரவோ இல்லை என்றால், நீ இரட்சிக்கப்பட முடியாது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒரு நேர்மையான நபராக இருப்பதற்கான மிக அடிப்படையான பயிற்சி”). நான் ஒரு நேர்மையான நபரா இல்லாம, என்னோட சீர்கேட்டையும் குறைகளயும் மறச்சுக்கிட்டே இருந்து, நான் மனம் திறந்து பேசாமலோ, என்னை வெளிப்படுத்தாமலோ, அல்லது பகுத்து ஆராயாமலோ இருந்தால், அப்போது, நான் என்னோட சீர்கெட்ட மனநிலையை ஒருபோதும் விட்டுவிடாம இருந்து, ஒருபோதும் இரட்சிக்கப்படமாட்டேன்ங்கறத உணர்ந்தேன். நான் தேவனிடத்துல, “தேவனே! நான் வெளிப்படையாகவும் நேர்மையான நபராவும் இருக்கும்படி, தயவு செஞ்சு எனக்கு பெலன் தாருங்க” அப்படின்னு இன்னொரு ஜெபத்த ஏறெடுத்தேன். என்னோட ஜெபத்துக்குப் பிறகு, மத்தவங்ககிட்ட நேர்மையானவனா இருக்க நான் முன்முயற்சி எடுத்து: “கடைசி கூடுகையில புதிதாய் வந்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது பத்தி தலைவர் கேட்டபோது நான் பொய் சொன்னேன். உண்மை என்னன்னா, நான் ஒரு திருச்சபையப் பத்தி மட்டுமே தெரிஞ்சுவச்சிருந்தேன், மத்த ரெண்டயும் பத்தியும் தெரிஞ்சுவச்சிருக்கல. நான் உண்மையச் சொன்னா நீங்க என்னை இழிவா பார்ப்பீங்கன்னு பயந்தேன். அதனால, ரெண்டு திருச்சபைகளப் பத்தியும் எனக்குத் தெரியும்ன்னு நான் பொய் சொன்னேன். நான் உங்க எல்லாரையும் ஏமாத்திட்டேன்” அப்படின்னு சொன்னேன். இதைச் சொன்னதும், மத்தவங்க என்னைக் கண்டிக்கல, இழிவாகப் பார்க்கல. அதுக்குப் பதிலா, நான் எளிமையா மனம் திறந்து பேசவும் நேர்மையான நபராக இருக்கவும் முடிஞ்சது நல்ல விஷயம்ன்னு சொன்னாங்க. இப்படிப் பயிற்சி செய்ததால், நான் ரொம்ப அமைதியாவும், நிம்மதியாவும் உணர்ந்தேன். நான் தொடர்ந்து என்னைய மூடிமறச்சுக்கிட்டே இருந்திருந்தா, நான் இந்த உணர்தலையும் பலன்களையும் அடைஞ்சிருக்க மாட்டேன்.

கொஞ்ச நாட்கள்லயே, ஒரு மேலிடத் தலைவர் என்கிட்ட, “திருச்சபைத் தலைவர்களின் நிலைகளப் பத்தி இப்போ உங்களுக்குப் புரிதல் இருக்குதா?” அப்படின்னு கேட்டாரு. இந்தக் கேள்வியில நான் கொஞ்சம் தடுமாற்றத்த உணர்ந்தேன், ஒரு திருச்சபைத் தலைவரோட நிலை மட்டுந்தான் எனக்குத் தெரியும். ஆனா, மத்த ரெண்டு பேரோட நிலையும் எனக்குத் தெரியாது. நான், “நான் உண்மையச் சொன்னா, நான் சரியான வேலையச் செய்யலன்னு தலைவர் சொல்வாரோ?” அப்படின்னு எனக்குள்ள நெனச்சுக்கிட்டேன். அதனால, நான் புரிஞ்சு வச்சிருக்கேன்னு சொல்ல விரும்புனேன். மறுபடியும் பொய் சொல்ல விரும்புறேன்ங்கறத நான் உடனே உணர்ந்தேன், அதனால, நான் தேவனிடத்துல ஜெபிச்சு, “ஒரு திருச்சபைத் தலைவரின் நிலை மட்டுமே எனக்குத் தெரியும். மத்த ரெண்டு பேரோட நிலையும் எனக்குத் தெரியாது” அப்படின்னு உண்மையச் சொன்னேன். அப்ப, தலைவர் என்னைக் குறை சொல்லல, அதுக்குப் பதிலா, திருச்சபைத் தலைவர்களின் நிலைகளப் பத்தித் தெரிஞ்சுக்க நான் அடிக்கடி அவங்களக் கூப்பிடணும்னும், அவங்களோட சிரமங்கள உடனடியா தீர்க்க உதவுங்கன்னும் சொல்லி சில ஆலோசனைகள வழங்குனாரு. அதோடு, அவர் பின்பற்றுவதுக்கான சில பாதைகளயும் எனக்குக் கொடுத்தாரு. நான் எவ்வளவு அதிகமா உண்மையப் பேசினேனோ, நேர்மையானவனா இருந்தேனோ, என்னோட சீர்கேட்டையும் குறைகளயும் வெளிப்படுத்தத் துணிந்தேனோ, அவ்வளவு அதிகமா என்னோட சகோதர சகோதரிகளால எனக்கு உதவ முடிஞ்சுச்சுங்கறதயும், அதோடு பலன்களப் பெற முடிஞ்சுச்சுங்கறதயும் தெரிஞ்சுக்கிட்டேன். முன்பு, நான் என்னோட நற்பெயரயும் அந்தஸ்தயும் பாதுகாக்கப் பொய் சொல்லி ஏமாத்துனேன். ஆனா, நான் ஒவ்வொரு பொய்யையும் சொன்னதுக்கப்புறமா, என்னோட இருதயம் பாரமாக இருந்துச்சு, என்னோட மனசாட்சியில குற்ற உணர்வடஞ்சேன். ரொம்ப முக்கியமா, நான் என்னோட குணநலனையும் கண்ணியத்தயும் இழந்துபோனேன். இந்த அனுபவத்தின் மூலமா, தேவனுக்கும் மனுஷருக்கும் நேர்மையானவர்களத்தான் பிடிக்கும்ங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். நீங்க எவ்வளவு நேர்மையா இருக்கீங்களோ, மத்தவங்களோடு உங்க உறவு அவ்வளவு இணக்கமா இருக்கும், அதோட, நீங்க அவ்வளவு அமைதியாவும் சமாதானத்தோடும் இருப்பீங்க. மத்தவங்க உங்கள இழிவா பார்க்க மாட்டாங்கங்கறது மட்டுமல்லாம, உங்களோட சகோதர சகோதரிகள் மூலமா உங்களுக்கு உதவி கிடைக்கும். நேர்மையான நபரா இருப்பதுங்கறது உண்மையிலயே பெரிய விஷயம். நேர்மையான மனுஷர்களா இருப்பதன் மூலம் மட்டுமே நம்மால தேவனோட ஆசீர்வாதத்தயும் இரட்சிப்பயும் பெற்று பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சுவிசேஷத்தைப் பகிர்வதில் சிரமங்களை எதிர்கொள்வது எப்படி

என்னோட முழு குடும்பமும் கத்தோலிக்கர்களாயிருந்தாங்க, அங்கிருந்த மற்ற கிராமவாசிகள்ல பெரும்பாலானோரும் அப்படித்தான் இருந்தாங்க. ஆனா, எங்களோட...

பெருந்தொற்றின் போது நோய்வாய்ப்பட்ட பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட சுவிசேத்த ஏத்துகிட்ட உடனயே, தேவனோட வார்த்தைகள்ல இருந்து, தேவன் கடைசி நாட்கள்ல தம்மோட கிரியைய...

சாலையில் ஒரு முட்கரண்டி

நான் கிராமப்புறத்துல பிறந்து ஏழ்மையான குடும்பத்துல வளர்ந்தேன். என்னோட பெற்றோர் பாமர விவசாயிகளா இருந்தாங்க, அவங்க ரொம்ப கொடுமைய...

சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் எனக்கு சிரமங்கள் இருந்த சமயத்தில்

2020 ஆம் வருஷத்துல, நான் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியைய ஏத்துக்கிட்டேன். கர்த்தருடைய வருகைய வரவேற்க முடிஞ்சது என்னோட...