சுகபோகத்திற்கான பேராசை உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்

ஜனவரி 7, 2023

கடந்த ஜூலை மாதத்துல, என்னை காணொளிப் பணிக்குப் பொறுப்பாளியாக ஏற்படுத்தினாங்க. ஆரம்பத்துல, நான் அடிக்கடி என் சகோதர சகோதரிகளின் பணியை கண்காணித்தேன். அவங்களோட பிரச்சனைகளைப் பத்தியும் அவங்களோட கடமைகளைச் செய்வதில் உள்ள சிரமங்களைப் பத்தியும் நான் தெரிஞ்சுக்கிட்டேன், அதுக்கப்புறம், சத்தியத்தைத் தேடவும் தீர்வுகளைக் கண்டறியவும் குழுத் தலைவருடன் சேர்ந்து பணி செஞ்சேன். தேவனுடைய வழிநடத்துதலால, கொஞ்ச காலத்துக்கு அப்புறம், பணியின் பலன்கள்ல வெளிப்படையான முன்னேற்றம் ஏற்பட்டிருந்துச்சு. நான், “இப்போது அந்த பணி சீராக மேம்பட்டு வருவதால, பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்க முடியாது. பிரச்சனை ஏற்பட்டாலும் கூட, அது நம்மளோட பணியின் பலன்களைப் பாதிக்காது, அதோட, அதை சரிசெய்யவும் நமக்கு நேரம் கிடைக்கும். ஒவ்வொருவரும் தங்களோட கடமைகள்ல உற்சாகமா இருக்காங்க, அப்புறம் அவங்களால ஒரு விலைக்கிரயமும் கொடுக்க முடியுது, அதனால, நான் அதிகமா கவலைப்படத் தேவையில்ல. இந்தக் காலகட்டத்துல, எல்லாத்தையும் கண்காணிப்பது பெரும்பாலும் கூடுதல் நேரம் பணி செய்வதா இருக்கு, அதோட, சில நேரங்கள்ல நான் சரியான நேரத்துக்குச் சாப்பிட முடியாத அளவுக்கு அலுவலா இருக்கேன். நான் நல்ல ஆரோக்கியத்தோடு இல்லை, அதனால நான் விஷயங்களை எளிதாக எடுத்துக்கணும்” அப்படின்னு நெனச்சேன். அதுக்கப்புறம், நான் பணியைப் பத்திக் கவலைப்படாம இருக்க ஆரம்பிச்சேன், அதைக் கண்காணிப்பதுல நான் அவ்வளவு கருத்தாய் இருக்கல. சில சமயங்கள்ல, நான் அக்கறையில்லாமதான் கேட்டேன், என்னோட சகோதர சகோதரிகளோட கடமைகளின் விவரங்கள நான் எப்போதாவதுதான் ஆராய்ந்தேன், எங்களோட பணியின் பலன்களை மேலும் மேம்படுத்துவது எப்படின்னு நான் சிந்திக்கல.

கொஞ்ச நாட்கள்லயே, நாங்க தயாரிச்ச பல காணொளிகள்ல பிரச்சனைகள் இருந்ததால் மறுபடியும் செய்ய வேண்டியிருந்துச்சு, இது பணியின் முன்னேற்றத்தை நேரடியாக பாதிச்சுச்சு. இந்த நிலையைப் பார்த்ததும், நான் ரொம்ப கவலைப்பட்டேன். இது தற்செயலாக நடக்கலங்கறதையும், கத்துக்க வேண்டிய பாடங்கள் எனக்கு இருந்துச்சுங்கறதையும் கூட நான் உணர்ந்தேன். அதனால நான், தேவனோட சித்தத்தைப் புரிஞ்சுக்கறதுக்கு என்னை வழிநடத்தும்படி அவரிடத்துல மன்றாடி ஜெபிச்சேன். நான் ஜெபிச்ச பிறகு, நமக்கு ஏன் இந்தப் பிரச்சனைகள் வந்திருக்குதுன்னு குழுத் தலைவரிடம் கேட்டேன். குழுத் தலைவர், “சில சகோதர சகோதரிகள் சீக்கிரத்தில் வெற்றியடையும்படி முயற்சித்து, கொள்கைகள் இல்லாமல் தங்களோட கடமைகளைச் செய்யுறாங்க. அவங்க முன்னேற்றத்துல மட்டுமே கவனம் செலுத்துறாங்க, தரத்தில் அல்ல. இன்னொரு காரணம் என்னன்னா, நான் பணியை கண்காணிக்கல, அதோட, சரியான நேரத்துல பிரச்சனைகளக் கண்டறியல” அப்படின்னு சொன்னார். இது என்னை கோபமாக சிந்திக்க வச்சுச்சு, “இந்தப் பிரச்சனைகளப் பத்தி நான் எத்தனை தடவ உங்ககிட்ட சொல்லியிருக்கேன்? அப்புறம் ஏன் அவை இன்னும் நடக்கின்றன?” நான் குழுத் தலைவரைக் கடிந்துகொள்ள விரும்புனேன், ஆனா அதுக்கப்புறம் நான் நெனச்சேன், “குழுத் தலைவருக்கு இருந்த அதே பிரச்சனை எனக்கும் இல்லையா? நானும் கூட தொடர்ந்து கண்காணிக்கல.” அதனால, நான் என்னோட வார்த்தைகள மென்றுவிழுங்கினேன். அதுக்கப்புறம், இந்தக் காலகட்டத்துல ஒவ்வொருவரும் செஞ்ச காணொளிகளை சீக்கிரமா சரிபார்த்தேன். சிலர் தங்களோட கடமைகள்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலங்கறதயும், சிலர் பின்தங்கியிப்பதையும் பார்த்தேன். இவை வெளிப்படையான பிரச்சனைகளாய் இருந்தன, ஆனா நான் அவற்றைக் கண்டுபிடித்திருந்ததில்ல. நான் நடைமுறைப் பணிகளைச் செய்யாததே இதற்குக் காரணம்ங்கறத நானே தெளிவாக உணர்ந்தேன். நான் மிகவும் வருத்தமடைந்தேன், அதனால் நான் தேவனிடத்தில் ஜெபித்து, என்னை நானே ஆராய்ந்து பார்க்கவும் அறிஞ்சுக்கவும் என்னை வழிநடத்தும்படி அவரிடம் மன்றாடினேன்.

அடுத்த நாள், என்னோட தியானத்தின்போது, தேவனுடைய வார்த்தையின் ஒரு பகுதியை வாசிச்சேன்.

தேவனுடைய வார்த்தையை சிந்திச்ச பிறகு, சமீபத்தில் என்னோட கடமையில நான் சில பலன்களை அடைந்தேன்ங்கறத உணர்ந்தேன், அதனால நான் சுய திருப்தியை உணர ஆரம்பிச்சேன், என் மாம்சத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ரொம்ப காலமா அலுவலாக இருந்த பின்பு, நான் சோர்வாக இருந்தேன், அதனால என் சரீரத்துக்கு நான் இதமாக இருந்திருக்கணும்னு நெனச்சேன். அதனால நான் ஒய்வெடுக்கவும் என் கடமையை அசதியாக செய்யவும் ஆரம்பிச்சேன். நான் நழுவும் அணுகுமுறையைக் கையாண்டேன், மத்தவங்க தங்களோட கடமைகளை எப்படிச் செய்யுறாங்கங்கறதத் தொடர்ந்து கண்காணித்துத் தெரிந்துகொள்ளத் தவறிட்டேன். எங்களோட பணியில இன்னும் சில பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்தன என்பது எனக்குத் தெரிஞ்சாலும் கூட, நான் எந்த அவசரத்தையும் உணரல. எங்களோட தற்போதைய பலன்களை அது பாதிக்காத வரை, அது பரவாயில்லை என்று நெனச்சேன். இதன் விளைவாக வரும் காணொளிகள்ல பல பிரச்சனைகள் இருந்தன, மேலும் அவை திரும்பச் செய்யப்பட வேண்டியதாய் இருந்தது. அதற்கு மேலாக, ஒவ்வொருவரும் சமாளிக்கும் சுபாவத்தைக் கொண்டிருக்காங்க, மேலும் தங்களோட கடமைகள்ல அசதியாய் இருக்க முற்படுறாங்க. ஆனாலும் கூட, நான் தொடர்ந்து கண்காணிக்கல. நான் என் கடமையை சமாளிச்சுக்கிட்டிருந்தேன், நான் கவனக்குறைவானவளாகவும் பொறுப்பற்றவளாகவும் இருந்தேன். பணியில் எப்படி பிரச்சனைகள் வராம இருக்க முடியும்? என் கடமையில, என்னால கவனத்தோடும், பொறுப்போடும், மனசாட்சியோடும் இருக்க முடியும் என்ற நம்பிக்கையில், தேவன் என்னை ஒரு மேற்பார்வையாளராக உயர்த்தி, பயிற்சி செய்வதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் சரி, நான் என்னோட கடமைகள்ல எந்த முயற்சியையும் விட்டுவைக்காமல், என்னோட பொறுப்புகளை நிறைவேற்றணும். முன்னேற்றத்தை ஏற்படுத்த ஒரே வழி இதுவேயாகும். ஆனால் நானோ, எனது கடமையை ஒரு பணி என்பதப் போலவும், நான் வேறொருவருக்காக பணி செய்யுறேன் என்பதாவும் நெனச்சேன். கவலைப்படாம இருப்பதுக்கும் குறைவான பங்கை அளிப்பதற்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நான் பயன்படுத்திக்கிட்டேன். நான் கவலையையோ அவசரத்தையோ உணரவே இல்ல. காரியங்கள எப்படி சிறப்பாகச் செய்வதுன்னோ அல்லது சிறந்த பலன்களை அடைவது எப்படின்னோ நான் ஒருபோதும் யோசிக்கவே இல்லை. என்னோட மாம்சம் எப்படி பாதிப்படையாமலும் சோர்வடையாமலும் இருக்க முடியும்னு மட்டுமே நான் நெனச்சேன். நான் தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொள்ளல. என்னோட கடமையைச் செய்வதுல என்னோட அணுகுமுறை தவறானதுங்கறத அப்பத்தான் நான் உணர்ந்தேன். நான் தேவனிடமிருந்து என்னோட இருதயத்தை மறச்சுக்கிட்டிருந்தேன், அற்பமான சாதுரியத்தக் கொண்டிருந்தேன்.

ஒரு கூடுகையின் போது, தவறான தலைவர்களை வெளிப்படுத்தும் தேவனுடைய வார்த்தையின் ஒரு பத்தியைப் பார்த்தேன், அது என்னை ஆழமாக பாதிச்சுது. தேவனின் வார்த்தை கூறுகிறது:

தேவனுடைய வார்த்தைகளை வாசிச்சதுக்கப்புறமா, நான் ரொம்பவே குற்ற உணர்ச்சி அடைஞ்சேன். என்னோட நடத்தை ஒரு பொய்யான தலைவனைப் போல இல்லையா? ஏன்னா நான் சோம்பேறியாகவும், என் மாம்சத்தில கவனம் செலுத்துறவளாகவும் இருந்தேன். நான் பணியை கண்காணிக்கவோ அல்லது கண்காணிக்கவோ இல்ல, இது எங்களோட பணியின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் பலன்களையும் கடுமையாகப் பாதிச்சுச்சு. அந்தப் பணி நன்றாகத்தான் கையாளப்பட்டதுன்னும் நிறைய பிரச்சனைகள் இல்லைன்னும், என்னோட மனசு சொல்லுச்சு. ஆனா, உண்மையில, சரிசெய்ய வேண்டிய பிரச்சனைகள் இன்னும் நிறைய இருந்துச்சு. ஏன்னா, நான் ஒரு பாரத்தைக் கொண்டிருக்கல, அதோட, பொறுப்பற்றவளாகவும் இருந்தேன். எங்களோட எல்லாப் பிரச்சனைகளுக்கும் என்னோட கண்கள நான் மூடிக்கிட்டேன். ஆராய்ந்து பார்த்ததன் மூலமா, நான் ஒரு தவறான பார்வையை வச்சிருந்தேன்ங்கறத நான் உணர்ந்தேன். என்னோட சகோதர சகோதரிகள் தங்களோட கடமைகள்ல சுறுசுறுப்பா இருப்பதையும் முன்னேறுவதையும் நான் பார்த்தபோது, எல்லோருமே தங்களோட கடமைகள்ல ரொம்பவே உற்சாகமுள்ளவங்களா இருப்பதாவும், கண்காணிக்க வேண்டிய அவசியமில்லைனும் நான் நெனச்சுக்கிட்டேன். ஜனங்கள் செயலற்றவர்களாவும் ஆழமாக வேரூன்றிய சீர்கெட்ட மனநிலைகளையுடையவர்களாவும் இருக்குறாங்கங்கறத தேவனோட வார்த்தை ரொம்ப காலத்திற்கு முன்பே வெளிப்படுத்தியிருக்குது. ஜனங்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பும், அவங்களோட மனநிலைகள் மாறுவதுக்கு முன்பும், அவங்க எப்பொழுதும் மாம்சத்தை திருப்திப்படுத்துறாங்க, சௌகரியத்துக்காகப் பேராசைப்படுறாங்க, அவங்க தங்களோட கடமைகள சமாளிச்சு தந்திரத்தையும் யுக்திகளயும் பயன்படுத்துறாங்க, மேலும் அவங்க தங்களோட சொந்த யோசனைப்படி செயல்படுறாங்க, அதோட, கொள்கைகளின்படி நடக்கிறதில்ல. நானும் விதிவிலக்கல்ல. தேவனுடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் இல்லாமலும், நம்மளோட சகோதர சகோதரிகளின் நினைவூட்டல்களும் மேற்பார்வையும் இல்லாமலும், என்னால சுலபமா மந்தமடைய முடியும், அதோட, என்னோட கடமைகள்ல பிரச்சனைகள் தோன்ற வாய்ப்பு இருக்குது. அதனால, பணி சீராக நடைபெறும்படி, நான் பணியை ஆராய்ந்து கண்காணிக்கணும், அதோடு கூட, நமது கடமைகள்ல உள்ள பிரச்சனைகளையும் மாறுபாடுகளையும் சீக்கிரமா கண்டறிஞ்சு சரிசெய்யணும். ஆனா, விஷயங்களப் பத்திய என்னோட பார்வை முட்டாள்தனமானதா இருந்துச்சு. நான் ஜனங்களோட சீர்கெட்ட சுபாவத்தைப் புரிஞ்சுக்கவோ அல்லது தேவனுடைய வார்த்தையின்படி ஜனங்களையும் காரியங்களையும் பார்க்கவோ இல்லை. நான் என்னோட சொந்தக் கற்பனையை மட்டுமே நம்பிக்கிட்டு, பணியைச் சரிபார்க்கவோ அல்லது கண்காணிக்கவோ இல்லை, சரியான நேரத்துல பிரச்சனைகளை சரிசெய்யவும் இல்ல, ஆனாலும், நல்ல பலன்களைப் பெற விரும்பினேன். இது நடைமுறைப் பணிகளைச் செய்யாத ஒரு தவறான தலைவரின் வெளிப்பாடாக இருந்தது. நான் வெளிப்படையான பொல்லாப்பு எதுவும் செய்யலேன்னாலும், எனது பொறுப்பின்மை பணியின் செயல்திறனைக் குறைத்துவிட்டது, அதோட, இழப்பும் ஈடுசெய்ய முடியாததாக இருக்குது. அதுக்கப்புறமா, நான் என் நிலையைப் பத்தி என் சகோதர சகோதரிகளுடன் வெளிப்படையாப் பேசி ஐக்கியப்பட்டேன். ஒவ்வொருவரும் தங்களோட கடமைகளை ரொம்ப இலகுவா எடுத்துக்கிட்டதையும் அதோட, அவங்களோட கடமைகள்ல முன்னேற்றத்தைத் தேடத் தவறியதையும் நான் சுட்டிக்காட்டினேன், அதோட, நாங்கள் ஒன்றாக சேர்ந்து தீர்வுகளைத் தேடினோம். அதுக்கப்புறமா, என்னோட கடமையில கொஞ்சம் அதிகமாக தீவிரமா இருந்தேன். நான் பணியை செஞ்சு முடிக்கும்போதெல்லாம், முன்னேற்றத்துக்கான ஏதாவது இடமிருக்குதான்னு சிந்திச்சேன். நான் அடிக்கடி என் சகோதர சகோதரிகளின் பணியை கண்காணித்தேன், எங்களோட பலன்கள்ல கொஞ்சம் முன்னேற்றம் இருந்துச்சு.

அதுக்கப்புறம் கொஞ்ச நாட்கள்லயே, காணொளிகளை உருவாக்குவதில் நாங்க பிரச்சனைகளை எதிர்கொண்டோம், ஏதேனும் நல்ல வழிமுறைகளோ அல்லது ஆலோசனைகளோ இருக்குதான்னு குழுத் தலைவர் என்கிட்ட கேட்டார். எனக்கு எப்படி பதில் சொல்வதுன்னு தெரியல, அதனால, “நான் இன்னும் ஒரு நல்ல தீர்வுக்கான முடிவுக்கு வரல, அதனால அதைப் பத்தி நாம தொடர்ந்து சிந்திப்போம்” அப்படின்னு நான் சொன்னேன். அதுக்கப்புறம், இந்தப் பிரச்சனைய தீர்ப்பதுங்கறது ஒரு சில வார்த்தைகளை மட்டுமே சுலபமாகப் பேசித் தீர்த்துவிடக்கூடிய ஒரு விஷயம் அல்ல என்பதை நான் உணர்ந்துக்கிட்டேன். நான் தகவலைக் கவனித்திருக்கணும், ஆராய்ந்திருக்கணும், நடைமுறைப்படுத்துவதற்கான பாதையைக் கண்டுபிடித்திருக்கணும். இதற்கு நிறைய நேரமும் முயற்சியும் தேவைப்படும், நான் தொடர்ந்து காரியங்களச் செய்ய முயற்சித்து முடிவுகளை மதிப்பீடு செய்ய வேண்டியிருந்துச்சு. கடைசியா, நான் வெற்றி பெறுவேனா இல்லையான்னு சொல்வது கடினமானதா இருக்கு. அது வாய்க்கலேனா, என்னோட முயற்சியெல்லாம் வீணாகிவிடாதா? எவ்வளவு அதிகமா நான் அதைப் பத்தி யோசிச்சேனோ, அவ்வளவு அதிகமா அதை சலிப்பான வேலையாக உணர்ந்தேன். “அதை மறந்துவிடு, ஏற்கனவே காரியங்கள் நன்றாகத்தான் இருக்குது. நம்மளோட பணியின் பலன்கள் இப்போதைக்கு நல்லா இருக்குது, அதனால இதைச் சரிசெய்ய அவசரம் தேவையில்ல” அப்படின்னு நான் நெனச்சேன். அதுக்கப்புறம், நான் பிரச்சனைய ஒரமா ஒதுக்கி வச்சுட்டேன். அந்த நேரத்துல, நான் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தேன். அதைச் சரிசெய்ய என்கிட்ட வழி இல்லங்கறதால அல்ல. நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம் இன்னும் கொஞ்சம் அதிகமா விலைக்கிரயம் கொடுத்திருக்கணும் என்பதுதான். அதுக்கப்புறம், குழுத் தலைவர் என்கிட்ட, “சகோதர சகோதரிகள் பிரச்சனைகளோடு இருக்காங்க, நாம அதைத் தீர்த்துவைக்கணும்” அப்படின்னு மறுபடியும் சொன்னாரு குழுத் தலைவரின் நினைவூட்டல், “கண்காணிப்பாளராக, பிரச்சனைகளைக் கையாள்வதுலயும், ஜனங்களோட பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதுலயும் நீ முன்னோடியா இருக்க வேண்டாமா? ஆனா, நான் பிரச்சனைகளைப் பார்க்கும்போது, நான் அவற்றைத் தவிர்த்துவிடுறேன், எனக்கு எந்த ஒரு பொறுப்புணர்ச்சியும் இல்லையே” அப்படின்னு என்னைய சிந்திக்க வச்சுச்சு. நான் குற்ற உணர்வடைந்தேன், அதனால நான் தேவனிடத்துல, “தேவனே, நான் பணியில் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, நான் ஒருபோதும் கடினமாக உழைக்க விரும்புவதில்ல, எப்போதுமே என்னோட மாம்ச விருப்பங்கள்ல அக்கறை காட்டுறேன். இது உம்முடைய சித்தத்துக்கு ஏற்றது அல்ல என்பது எனக்குத் தெரியும். என்னையப் பத்தி ஆராயவும் என்னோட தவறான நிலையை மாத்திக்கவும் தயவுசெஞ்சு எனக்கு வழிகாட்டுவீராக” அப்படின்னு ஜெபிச்சேன்.

என் வேத தியானங்களின்போது, “நான் ஏன் எப்பொழுதுமே என் கடமையில் என் மாம்சத்தின் மீது அக்கறை காட்டுறேன்? நடைமுறைப் பணியைச் செய்ய என்னால் ஏன் விலைக்கிரயம் கொடுக்க முடியல?” அப்படின்னு நான் சிந்திச்சுப் பார்த்தேன். ஒரு நாள், தேவனுடைய வார்த்தைகளின் இரண்டு பத்திகளைப் பார்த்தேன், அது எனக்குப் புரியவச்சுது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்:

தேவனுடைய வார்த்தைகளை வாசிச்சதுக்கப்புறமா, என்னோட நிலை எவ்வளவு ஆபத்தானதா இருந்துச்சுங்கறத நான் பார்த்தேன்! “ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து, துரதிர்ஷ்டசாலிகளை அவரவர் தலைவிதிக்கு விட்டுவிடட்டும்” அப்படிங்கற சாத்தானிய தத்துவத்தின்படி நான் வாழ்ந்துக்கிட்டிருந்தேன். குறிப்பா, நான் ஒரு சுயநலவாதியா இருந்தேன், என்ன நடந்தாலும், நான் எப்பவுமே என்னோட சொந்த மாம்ச விருப்பங்களை முதன்மையாகக் கருதினேன். என்னோட கடமையில சரிசெய்யப்பட வேண்டிய ஒரு பிரச்சனைய நான் சந்திச்சபோது, தேவனுடைய வீட்டின் பணிக்கு எப்படிப் பலன் கிடைக்க வைக்கலாம் என்று நான் யோசிச்சதே இல்லை. நான் எப்போதுமே என் மாம்சத்தைக் குறித்தே கவலைப்பட்டேன், அதோட, எப்போதுமே குறைவாக கஷ்டப்படவும் மற்றும் குறைந்த விலைக்கிரயத்த செலுத்தவும் விரும்பினேன். உண்மையிலயே, சில பிரச்சனைகளப் பொறுத்தவரை, நான் விலைக்கிரயத்தச் செலுத்தி, அதை ஆராயவும் கண்டுபிடிக்கவும் நேரம் எடுத்துக்ககொண்டாலே, என்னால் அதைச் சரிசெய்ய முடியும், ஆனா, நான் என்னோட மாம்சத்துல அக்கறை செலுத்தியதாலும், துன்பப்பட விரும்பாததாலும், நிர்வாக ரீதியான ஆராய்ச்சி அதிக மன அழுத்தத்தைத் தரும் என்பத நான் உணர்ந்தேன். இதன் விளைவா, பிரச்சினை ஒருபோதும் தீர்க்கப்படல, பணியும் ஒருபோதும் முன்னேற்றத்தை அடையல. ஜனங்களோட மாம்சமானது அடிப்படையில சாத்தானுக்குச் சொந்தமானதுங்கறதையும், மாம்சமானது எப்பவுமே பல ஆசைகளையும் கோரிக்கைகளையும் கொண்டிருக்குதுங்கறதையும் தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்துது. நாம அதை எவ்வளவு அதிகமா திருப்திப்படுத்துகிறோமோ, அதன் ஆசையும் அவ்வளவு அதிகமாக இருக்குது, நம்மளோட மாம்ச விருப்பங்களுக்கும் நம்மளோட கடமைகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்படும்போது, ஜனங்கள் சுகபோகத்தின் மீது பேராசைகொண்டால், அவங்க மாம்சத்தைப் பின்பற்றி, தேவனுடைய வீட்டின் பணியை ஒதுக்கி வச்சுருவாங்க. இது மாம்சத்தைத் திருப்திப்படுத்துது, ஆனா, தேவனுடைய வீட்டின் பணிக்குத் தீங்கு விளைவிக்குது, இறுதியில, அது தேவனுடைய மனநிலையப் புண்படுத்துது, அதனால தேவன் நம்மள வெறுத்து நம்மள வெளியேற்றுறாரு. மாம்சத்தைத் திருப்திப்படுத்துவதற்கும், சுகபோகத்தின் மீது பேராசைப்படுவதற்குமான விளைவுகள் மோசமானவைகள். மாம்சத்தின் சாராம்சத்தை என்னால பார்க்க முடியல, நான் எப்பவுமே சுகபோகத்தின் மீது பேராசைப்பட்டேன். மாம்ச இன்பத்தை எல்லாத்தையும் விட முக்கியமானதாக நெனச்சேன். என்னோட நாட்டங்களும் பார்வைகளும் அவிசுவாசிகளினுடையதைப் போலவே இல்லையா? “உனக்கு நீ தயவு பாராட்டு” அப்படின்னு அவிசுவாசிகள் அடிக்கடி சொல்லுறாங்க, அதாவது, உன்னோட மாம்சத்தைக் கஷ்டப்படவிடாதே, அதோட, மாம்சத்தின் எல்லா ஆசைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றுன்னு சொல்றாங்க. அவங்க மாம்சத்துக்காக மட்டுமே வாழுறாங்க, அவங்க மனித வாழ்க்கையின் மதிப்பையும் அர்த்தத்தையும் புரிஞ்சுக்கறதே இல்லை. அதோட, அவங்க வாழ்க்கையில ஒரு சரியான திசையையும் நோக்கத்தையும் கொண்டிருப்பதில்ல. அவங்க தங்களோட இருதயங்கள்ல எந்த ஆறுதலையும் உணருவதில்ல, அதோட, அவங்க தங்களோட வாழ்க்கைய வெறுமையில கழிக்குறாங்க, முழுவதுமாக வீணாக வாழ்ந்துகொண்டிருக்காங்க. திருச்சபையில இருக்கிற சிலர் எப்பொழுதும் மாம்ச இன்பத்தின் மீது பேராசைப்படுறாங்க, சத்தியத்தை நாடுவதில்ல, தங்களோட கடமைகளப் புறக்கணிக்குறாங்க, சூழ்ச்சிகளைக் கையாளுறாங்க, மந்தமாக இருக்காங்க, இது தேவனுடைய வீட்டின் பணியை கடுமையா பாதிக்குது, கடைசியில, அவங்க கடமைகளின் பொறுப்பிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுறாங்க அல்லது தகுதியற்றவர்களாகுறாங்க, அதோட, அவங்களோட இரட்சிப்பின் வாய்ப்பை முற்றிலுமா இழந்துபோறாங்க. இதைப் பத்தி நெனச்சுப்பாக்கறதுக்கே பயமாக இருக்குது! அதுக்கப்புறம், நான் என்னையப் பத்தி நெனச்சுப்பார்த்தேன். நான் பல ஆண்டுகளா தேவனை விசுவாச்சிருந்தேன், ஆனா, என்னோட கருத்துக்கள் மாறியிருந்ததில்லை. நான் சத்தியத்தை விட என் மாம்சத்தின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தேன். நான் சுகபோகத்தின் மீது மட்டுமே பேராசைப்பட்டேன், அதோட என்னோட கடமையை சமாளிக்கறதுக்காக நான் அதன் போக்குலயே போனேன். இது தொடர்ந்தால், நானும் தேவனால் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவேன் அல்லவா? இதை உணர்ந்தபோது, நான் ரொம்பவே பயந்துட்டேன். இனியும் என்னால மாம்சத்தின் மீது அக்கறை காட்ட முடியாது. நான் என் கடமைய மனப்பூர்வமாச் செய்ய விரும்பினேன், அதோட, என் பொறுப்புகளை நிறைவேற்ற விரும்பினேன்.

ஒரு நாள், நான் தேவனுடைய வார்த்தைகளை வாசிச்சு, அதைக் கைக்கொள்வதற்கான பாதையைக் கண்டுபிடிச்சேன். தேவனின் வார்த்தை கூறுகிறது:

என் கடமையைச் சிறப்பாகச் செய்யறதுக்கு, தேவனுடைய வார்த்தையின்படி நான் கடினமாக உழைக்கணும்ங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். என்னால வெளிப்புறமாக மட்டும் கடினமா உழைச்சு விலைக்கிரயம் கொடுக்க முடியல. ரொம்ப முக்கியமானது என்னன்னா, இந்த பாரத்தை என்னோட இருதயத்துல சுமப்பதும், எல்லாத்துக்கும் மேலாக தேவனுடைய வீட்டின் பணியை வைப்பதும், என்னால முடிந்த அளவுக்கு நன்றாகச் செய்வதும், நான் நிறைவேற்ற வேண்டியவற்றை நிறைவேற்றுவதும்தான். இப்படிச் செய்வதால மட்டுமே, தேவன் என் மீது எடுத்த கடினமான முயற்சிக்கு நான் தகுதியானவளாக இருக்க முடியும். அதோட, என்னால உண்மையிலேயே மனுஷர்களைப் போல வாழ முடியும் காணொளிப் பணிக்கான பொறுப்புல இருப்பது தேவன் என்னை உயர்த்துவதுங்கறத நான் உணர்ந்தேன். சுவிசேஷத்தை அறிவிப்பதற்குக் குறி வைக்கப்பட்ட அநேகர் தேவனுடைய வீட்டின் காணொளிகளைப் பார்த்து மெய்யான வழியை ஆராயுறாங்க. நல்ல காணொளிகள் மூலமாக தேவனுக்கு சாட்சியளிப்பது சுவிசேஷத்தைப் பரப்புவதில் ரொம்ப முக்கியமான பகுதியாகும்! நான் தேவனைச் சார்ந்திருந்து எனது கடமையை சிறப்பாகச் செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்யணும். என்னோட கடமையில பல்வேறு சிரமங்களும் பிரச்சனைகளும் இருந்தாலும் கூட, இந்த சிரமங்கள் மத்தியிலயும், சுகபோகத்தின் மீது பேராசைப்படுவதும் முன்னேற்றத்தை அலட்சியப்படுத்துவதுமான என்னோட சீர்கெட்ட நிலையை நான் தெளிவாகப் பார்த்தேன். பின்தொடர்தல் பத்திய என்னோட தவறான கருத்துக்களை நான் உணர்ந்துக்கிட்டேன், அதனால என்னால மனந்திரும்பவும் மாற்றிக்கொள்ளவும் முடிந்தது. நான் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கும், என் சீர்கெட்ட மனநிலைகளைக் கைவிடுவதற்கும் அவை எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்குது. அதே நேரத்துல, அவை என்னோட வேலைக் குறைபாடுகளையும் பார்க்க வச்சுச்சு. எங்களோட கடமைகள்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த, எங்களோட வேலைத் திறன்களை மேம்படுத்தணும். தேவனுடைய சித்தத்தைப் புரிஞ்சுக்கிட்ட பிறகு, நான் உற்சாகத்தை உணர்ந்தேன். அதுக்கப்புறமா, எங்களோட பிரச்சனைகளையும் சிரமங்களையும் குறித்து நான் தேவனிடத்தில் ஜெபித்து, தேவனுடைய வழிநடத்துதலைத் தேடினேன், அதோட, என்னோட சகோதர சகோதரிகளோடு தீர்வுகளைப் பத்தி விவாதிச்சேன். என்னோட இருதயத்தின் ஆழத்திலிருந்து, நான் சோம்பேறியாகவோ அல்லது நழுவிச் செல்பவளாகவோ இருக்க விரும்பவில்லை, அதோடு கூட, வேலைத் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் கடினமாக உழச்சேன். நான் தடையை உணர்ந்து, கைவிட நினைத்தபோது, தேவனிடத்தில் நான் ஜெபித்து, மாம்சத்தைக் கீழ்ப்படுத்தி, என் கடமைக்காக என்னையே அர்ப்பணிச்சேன். கொஞ்ச காலத்திற்கு அப்புறம், கடைசியா, நான் ஒரு திருப்புமுனையப் பார்த்தேன், பிரச்சனை சீக்கிரத்திலேயே தீர்க்கப்பட்டுவிட்டது, முந்தையதை ஒப்பிடும்போது, எங்களோட பலன்கள், அதை விட கொஞ்சம் மேம்பட்டு இருக்கின்றன. இப்படி என்னோட கடமையச் செய்வதை, நான் மிகவும் பாதுகாப்பானதாக உணர்ந்தேன். உண்மையிலயே, பிரச்சனைகளைத் தீர்ப்பதும் நடைமுறை பணிகளைச் செய்வதும் அவ்வளவு கடினமானது அல்ல. அதோட, நானும் ரொம்ப கஷ்டப்பட்டதில்லை. தேவனுடைய வழிநடத்துதலையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு என்னோட கடமையில நான் அதிக மனசாட்சியோடு இருக்க வேண்டும். என்னோட பிரவேசம் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது, அதனால எதிர்காலத்துல, என்னோட கடமையில என்னோட சீர்கெட்ட மனநிலைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவேன், அதோடு, தேவனைத் திருப்திப்படுத்த முழு மனதோடு என்னோட கடமையைச் செய்வேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மனம்திறந்து பேசப் பயப்படுவதற்குப் பின்னால் இருப்பது என்ன

2020 ஆம் வருஷம் மார்ச் மாதம் நான் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டு, சீக்கிரமா ஒரு கடமயச் செஞ்சேன். கொஞ்ச...

தன்னிச்சையாக செயல்பட்டது எனக்குத் தீங்கு விளைவித்தது

2012 கடைசில, நான் திருச்சபைத் தலைவியா ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். திருச்சபையில எல்லா திட்டங்களும் மெதுவா முன்னேற்றமடஞ்சிகிட்டு வந்ததையும்,...

புதிதாக வந்தவர்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது நான் வெளிப்படுத்தப்பட்டேன்

சுவிசேஷம் பரவுறப்போ, கடைசி நாட்கள்ல அதிகமான ஜனங்கள் தேவனோட கிரியைய ஆராயுறாங்க. அதனால அதிகமான ஜனங்கள் சுவிசேஷத்தப் பிரசங்கிச்சு புதுசா...

Leave a Reply