VIII. தேவனுடைய கிரியையை அறிந்துகொள்வது குறித்த வார்த்தைகள்

284. தேவன் மனிதர்களைப் படைத்து பூமியில் வைத்தார், மற்றும் அவர் அதுமுதற்கொண்டு அவர்களை வழிநடத்தினார், அவர் அவர்களை இரட்சித்து மனுக்குலத்திற்கு ஒரு பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தார். முடிவில், அவர் இன்னும் மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், மனுக்குலம் முழுவதையும் இரட்சிக்கவும், மற்றும் அவர்களை ஆதி நிலைக்கு மீட்டுக்கொள்ளவும் வேண்டியுள்ளது. ஆதியில் இருந்து அவர் இந்தக் கிரியையில்தான் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்—மனுக்குலத்தை அதன் ஆதி சாயலாகவும் ரூபமாகவும் மீட்டெடுத்தல். தேவன் தமது ராஜ்யத்தை அமைத்து மனிதர்களின் ஆதி சாயலை மீட்டெடுப்பார், அதாவது தேவன் தமது அதிகாரத்தை பூமியிலும் மற்றும் எல்லா சிருஷ்டிகள் மத்தியிலும் நிறுவுவார். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னர் மனுக்குலம் தங்கள் தேவனுக்குப் பயப்படும் இருதயத்தையும் தேவனுடைய சிருஷ்டிகள் ஆற்றவேண்டிய கடமையையும் இழந்து போனது, அதனால் தேவனுக்குக் கீழ்ப்படியாத விரோதியாக அவர்கள் மாறினர். பின்னர் மனுக்குலம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றியது; இவ்வாறு, தேவன் தமது சிருஷ்டிகளுக்கு நடுவில் கிரியை செய்ய வழி இல்லாமல் போனது, மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரால் அவர்களது பயம் நிறைந்த பக்தியைப் பெற முடியாமல் போய்விட்டது. மனிதர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும், ஆனால் உண்மையில் அவர்கள் அவரை நோக்கித் தங்கள் முதுகைத் திருப்பிக்கொண்டனர், மேலும் அதற்குப் பதிலாக சாத்தானை வணங்கினர். அவர்களது இருதயத்தில் சாத்தான் விக்கிரமாக மாறினான். இவ்வாறு, தேவன் அவர்களது இருதயத்தில் தம் இடத்தை இழந்தார், அதை வேறு வகையில் கூறினால் அவர் தாம் மனுக்குலத்தை படைத்ததன் அர்த்தத்தை இழந்துபோனார். ஆகவே, தாம் மனுக்குலத்தைப் படைத்ததன் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை மீட்டெடுக்க, அவர் அவர்களுடைய ஆதி சாயலை மீட்டெடுத்து மனுக்குலத்தின் சீர்கெட்ட மனநிலையைப் போக்க வேண்டும். சாத்தானிடம் இருந்து மனிதர்களை மறுபடியும் மீட்க, அவர் அவர்களைப் பாவத்தில் இருந்து இரட்சிக்க வேண்டும். இந்த வகையில் மட்டுமே தேவனால் அவர்களது ஆதி சாயலையும் செயல்பாட்டையும் படிப்படியாக மீட்டெடுத்து, முடிவாகத் தமது ராஜ்யத்தை மீட்க முடியும். மனிதர்கள் சிறந்த முறையில் தேவனை ஆராதிக்கவும் சிறந்த முறையில் பூமியின் மீது வாழவும் அனுமதிக்க கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை இறுதியாக அழிப்பதும் மேற்கொள்ளப்படும். தேவனே மனிதர்களை சிருஷ்டித்ததால், அவர் அவர்களை அவரை ஆராதிக்க வைப்பார்; ஏனெனில் அவர் மனுக்குலத்தின் ஆதி செயல்பாட்டை மீட்க விரும்புகிறார், அவர் அதை முற்றிலுமாக மற்றும் எந்த மாசுமருவின்றி மீட்பார். அவராது அதிகாரத்தை மீட்பது என்றால் மனிதர்களை அவரை ஆராதிக்க வைத்து அவருக்கு கீழ்ப்படிய வைப்பது என்று அர்த்தமாகும்; தேவன் மனிதர்களை அவரால் வாழவைப்பார் மற்றும் அவரது விரோதிகளை தமது அதிகாரத்தின் விளைவாக அழியவைப்பார். எவரிடம் இருந்தும் எதிர்ப்பின்றி தம்மைப் பற்றிய எல்லாவற்றையும் தேவன் நிலைநிற்கச் செய்வார். தேவனுடைய ராஜ்யம் அவரது சொந்த ராஜ்யத்தை நிறுவ விரும்புகிறது. அவரை ஆராதிக்கும், முற்றிலுமாக அவருக்கு கீழ்ப்படியும் மற்றும் அவரது மகிமையை வெளிப்படுத்தும் மனுக்குலமே அவர் விரும்பும் மனுக்குலமாகும். தேவன் சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்காவிட்டால், பின்னர் அவர் மனுக்குலத்தைப் படைத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போகும்; அவருக்கு மனுக்குலத்திடம் அதிகாரம் ஒன்றும் இல்லாமல் போகும், பூமியில் அவரது ராஜ்யம் இனிமேலும் நிலைநிற்க முடியாமல் போய்விடும். அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் எதிரிகளை அழிக்காமல் போனால் அவர் தமது மகிமையை முற்றிலுமாகப் பெறமுடியாமல் போகும், அல்லது பூமியில் அவர் தமது ராஜ்யத்தை நிறுவ முடியாமல் போகும். மனுக்குலத்துக்குள் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்களை முற்றிலுமாக அழித்தல், மற்றும் பரிபூரணமாக்கப்பட்டவர்களை இளைப்பாறுதலுக்குள் கொண்டுவருதல் இவையே அவர் தமது கிரியைகளை முடித்ததற்கான மற்றும் அவரது மாபெரும் கிரியை நிறைவேறுதலுக்கான அடையாளமாகும். மனிதர்கள் தங்கள் ஆதி சாயலில் மீட்கப்பட்ட பின், அவர்கள் தங்களுக்குரிய கடமைகளை முறையே நிறைவேற்ற முடிகின்றபோது, தங்களுக்கே உரிய முறையான இடங்களில் இருந்து மற்றும் தேவனின் விதிமுறைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும் போது, பூமியில் தம்மை ஆராதிக்கும் ஒரு கூட்ட மக்களை தேவன் ஆதாயப்படுத்தியிருந்திருப்பார், மற்றும் தம்மை ஆராதிக்கும் ஒரு ராஜ்யத்தை அவர் நிறுவி இருப்பார். பூமியின் மேல் அவர் நித்திய வெற்றியைப் பெறுவார், மற்றும் அவரை எதிர்த்த அனைவரும் நித்தியாமாய் அழிந்துபோவார்கள். இது மனுக்குலத்தை அவர் படைத்ததன் ஆதி நோக்கத்தை மீட்டெடுக்கும்; எல்லாவற்றையும் படைத்த அவர் நோக்கத்தை மீட்டமைக்கும், மற்றும் அது பூமியின் மேல், எல்லாவற்றின் மத்தியிலும், அவரது விரோதிகளின் மத்தியிலும் அவரது அதிகாரத்தை மீட்டெடுக்கும். இவை அவரது முழு வெற்றியின் சின்னங்களாய் இருக்கும். அதில் இருந்து, மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும், மற்றும் சரியான பாதையில் ஒரு வாழ்க்கையைத் தொடங்கும். மனுக்குலத்துடன் தேவனும் நித்திய இளைபாறுதலுக்குள் பிரவேசிப்பர், அவரும் மனுக்குலமும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நித்திய வாழ்வு தொடங்கும். அருவருப்பும் கீழ்ப்படியாமையும் பூமியில் இருந்து மறைந்து போயிருக்கும், மற்றும் புலம்பல் யாவும் காணாமற் போயிருக்கும், தேவனுக்கு எதிராக உலகில் இருந்த எல்லாம் இல்லாமல் போயிருக்கும். தேவனும் அவர் இரட்சிப்புக்குள் கொண்டுவந்த மக்கள் மட்டுமே இருப்பர்; அவரது சிருஷ்டிப்பு மட்டுமே மீந்திருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

285. எனது முழு மேலாண்மைத் திட்டமான ஆறாயிரம் ஆண்டு மேலாண்மைத்திட்டம் மூன்று நிலைகளை அல்லது மூன்று காலங்களைக் கொண்டுள்ளது: ஆதி காலத்தினுடைய நியாயப்பிரமாணத்தின் காலம்; கிருபையின் யுகம் (இது மீட்பின் யுகமும் ஆகும்); மற்றும் கடைசி நாட்களினுடைய ராஜ்யத்தின் யுகம். இந்த மூன்று காலங்களிலும் எனது கிரியை ஒவ்வொரு காலத்தின் தன்மைக்கு ஏற்ப உள்ளடக்கத்தில் வேறுபடுகிறது. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கிரியை மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், சத்தானுக்கு எதிராக நான் செய்யும் யுத்தத்தில் சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்களுக்கு ஏற்ப செய்யப்படுகிறது. என் கிரியையின் நோக்கம் சாத்தானை மடங்கடிப்பதும், என் ஞானத்தையும் சர்வ வல்லமையையும் வெளிப்படுத்துவதும், சாத்தானின் தந்திரங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தி, அதன் மூலம் சாத்தானின் ஆளுகையின் கீழ் வாழும் முழு மனித இனத்தையும் இரட்சிப்பதுமே ஆகும். இது என் ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிக்காட்டுவதும், சாத்தானின் தாங்கமுடியாத வெறுப்பை வெளிப்படுத்துவதும் ஆகும். அதற்கும் மேலாக, படைக்கப்பட்ட மனிதர்களை நன்மைக்கும் தீமைக்கும் இடையிலுள்ள பாகுபாட்டைக் கண்டறிய அனுமதிப்பதும், எல்லாவற்றிற்கும் நான் அதிபதி என்பதை அறிந்துகொள்ளச் செய்வதும், சாத்தான் மனிதகுலத்தின் எதிரி என்றும், மனிதகுலத்தை சீரழித்தவன், தீயவன் என்பதையும் தெளிவாகக் காண்பிப்பதும், மேலும் நன்மை மற்றும் தீமையை, உண்மை மற்றும் பொய்யை, பரிசுத்தம் மற்றும் அசுத்தத்தை, மற்றும் எது பெரியது, எது மரியாதை அற்றது என இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை, அவர்கள் உறுதியாகச் சொல்ல அனுமதிப்பதும் ஆகும். இவ்வாறு, நான் மனிதகுலத்தை சிதைக்கவில்லை, சிருஷ்டிகராகிய நான் மட்டுமே மனிதகுலத்தை இரட்சிக்க முடியும், மக்களுக்கு அவர்கள் அனுபவிக்கக்கூடிய காரியங்களை வழங்க முடியும், நான் எல்லாவற்றிற்கும் அதிபதி என்பதையும், நான் சிருஷ்டித்தவைகளில் ஒருவன் சாத்தான் என்பதையும், பின்னர் எனக்கு எதிராகத் திரும்பினான் என்பதையும் அறியாமையில் உள்ள மனிதகுலம் அறிந்து எனக்கு சாட்சி கொடுக்க முடியும். எனது ஆறாயிரம் ஆண்டு மேலாண்மைத் திட்டம் மூன்று காலகட்டங்களாக பிரிந்துள்ளது. மேலும் படைக்கப்பட்ட மனிதர்கள் எனக்கு சாட்சி கொடுத்தல், என் சித்தத்தை புரிந்துகொள்ளுதல், மேலும் நானே சத்தியம் என்பதை அறிந்து கொள்ளுதல், என இந்த பலன்களை அடைய, நான் இவ்வாறு செயல்படுகிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து

286. தேவனின் 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று கட்ட கிரியைகள் அனைத்தும் மனிதக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டு, அதாவது சாத்தானால் கடுமையாகச் சீர்கெட்டுவிட்ட மனிதகுலத்தின் இரட்சிப்புக்காகவேயாகும். ஆயினும், அதே சமயம், அவை மேலும் தேவன் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்குமானவையாகும். இவ்வாறு, இரட்சிப்பின் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுவது போல, சாத்தானுடனான யுத்தமும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. சாத்தானுடனான போர் உண்மையில் மனிதகுலத்தின் இரட்சிப்பின் பொருட்டானது ஆகும், மனிதகுலத்தின் இரட்சிப்பின் கிரியை ஒரே கட்டத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்பதால், சாத்தானுடனான யுத்தமும் கட்டங்கள் மற்றும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மனிதனின் தேவைகளுக்கேற்பவும், சாத்தான் அவனுக்குச் செய்துள்ள சீர்கேட்டின் அளவுக்கு ஏற்பவும் யுத்தம் நடத்தப்படுகிறது. ஒருவேளை, மனிதனின் கற்பனையில், இரண்டு படைகளும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதுபோல், இந்த யுத்தத்தில் தேவன் சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பார் என்று அவன் நம்புகிறான். மனிதனின் அறிவாற்றல் இப்படித்தான் கற்பனை செய்யும் திறன் கொண்டது; இது அதீதத் தெளிவற்ற மற்றும் நம்பத்தகாத யோசனை, ஆனாலும் மனிதன் இதைத்தான் நம்புகிறான். மனிதனுடைய இரட்சிப்பின் வழி சாத்தானுடனான யுத்தத்தின் மூலம் என்று நான் இங்கே சொல்வதால், யுத்தம் இப்படித்தான் நடத்தப்படுகிறது என்று மனிதன் கற்பனை செய்கிறான். மனிதனுடைய இரட்சிப்பின் கிரியைக்கு மூன்று கட்டங்கள் உள்ளன, அதாவது சாத்தானை முழுவதுமாக தோற்கடிப்பதற்காகச் சாத்தானுடனான யுத்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாத்தானுடனான யுத்தத்தின் முழு கிரியையின் உள்ளார்ந்த சத்தியம் என்னவென்றால், அதன் விளைவுகள் பல படிநிலைகளிலான கிரியை மூலம் அடையப்படுகின்றன: அவை மனிதனுக்கு கிருபையை கொடுப்பது, மனிதனின் பாவநிவாரணப்பலியாக மாறுதல், மனிதனின் பாவங்களை மன்னித்தல், மனிதனை ஜெயிப்பது, மனிதனைப் பரிபூரணமாக்குவது. உண்மையில், சாத்தானுடனான யுத்தம் என்பது சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பது அல்ல, மாறாக மனிதனின் இரட்சிப்பு, மனிதனின் ஜீவிதம் பற்றிய கிரியை, தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்படி மனிதனின் மனநிலையை மாற்றுவது ஆகியவையாகும். இப்படித்தான் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதன் மூலம் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கும்போது, அதாவது மனிதன் முற்றிலுமாக இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, பின்னர் அவமானப்படுத்தப்பட்ட சாத்தான் முற்றிலுமாக கட்டப்படுவான், இந்த வழியில் மனிதன் பரிபூரணமாக இரட்சிக்கப்பட்டிருப்பான். இவ்வாறு, மனிதனின் இரட்சிப்பின் சாராம்சமானது சாத்தானுக்கு எதிரான யுத்தமாகும், இந்த யுத்தம் முதன்மையாக மனிதனின் இரட்சிப்பில் பிரதிபலிக்கிறது. மனிதனை ஜெயங்கொள்ளும் கடைசி நாட்களின் கட்டம், சாத்தானுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டமாகும், மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முழுமையான இரட்சிப்பின் கிரியையாகும். மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தம், அவன் ஜெயங்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சாத்தானின் பண்புருவத்தை—சாத்தானால் சீர்கெட்ட மனிதனை—சிருஷ்டிகரிடம் திருப்பித் தருவதேயாகும், இதன் மூலம் அவன் சாத்தானைக் கைவிட்டு முழுமையாகத் தேவனிடம் திரும்புவான். இந்த வழியில், மனிதன் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருப்பான். எனவே, ஜெயங்கொள்ளும் கிரியை என்பது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிக் கிரியை மற்றும் சாத்தானின் தோல்வியின் பொருட்டு தேவனின் நிர்வாகத்தின் இறுதிக் கட்டமாகும். இந்தக் கிரியை இல்லாமல், மனிதனின் முழு இரட்சிப்பும் இறுதியில் சாத்தியமற்றதாகும், சாத்தானின் முழுதளவான தோல்வியும்கூட சாத்தியமற்றதாகும், மனுக்குலம் ஒருபோதும் அற்புதமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாது. இதன் விளைவாக, சாத்தானுடனான யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் மனிதனின் இரட்சிப்பின் கிரியையை முடிக்க முடியாது, ஏனென்றால் தேவனின் நிர்வாகக் கிரியையின் உட்கருத்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்கானதாகும். ஆரம்பக்கால மனுக்குலம் தேவனின் கைகளில் இருந்தது, ஆனால் சாத்தானின் சோதனை மற்றும் சீர்கேட்டின் காரணமாக, மனிதன் சாத்தானால் கட்டப்பட்டு தீயவனின் கைகளில் விழுந்தான். இவ்வாறு, சாத்தான், தேவனின் நிர்வாகக் கிரியையில் தோற்கடிக்கப்பட வேண்டிய பொருளாக ஆனான். ஏனென்றால், சாத்தான் மனிதனை தன்னிடம் எடுத்துக்கொண்டான், மனிதன் எல்லா நிர்வாகத்தையும் நிறைவேற்றத் தேவன் பயன்படுத்தும் மூலதனம் என்பதால், மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் சாத்தானின் கைகளிலிருந்து பறிக்கப்பட வேண்டும், அதாவது சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்ட பின்னர் மனிதன் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆகவே, மனிதனின் பழைய மனநிலையின் மாற்றங்கள், மனிதனின் அசலான ஆராயும் உணர்வை மீட்டெடுக்கும் மாற்றங்கள் மூலம் சாத்தானைத் தோற்கடிக்க வேண்டும். இந்த வழியில், சிறைபிடிக்கப்பட்ட மனிதனைச் சாத்தானின் கைகளிலிருந்து மீண்டும் பறிக்க முடியும். மனிதன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டால், சாத்தான் வெட்கப்படுவான், மனிதன் இறுதியில் திரும்பப் பெறப்படுவான், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். மனிதன் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், மனிதன் இந்த முழு யுத்தத்திலும் கொள்ளைப் பொருளாக மாறுவான், யுத்தம் முடிந்தவுடன் தண்டிக்கப்பட வேண்டிய பொருளாகச் சாத்தான் மாறுவான், அதன் பிறகு மனிதகுலத்தின் இரட்சிப்பின் முழுக்கிரியையும் முடிந்துவிடும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து

287. தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்; அவரே தமது கிரியையை செயல்பாட்டில் அமைத்துக்கொள்வதால், அவர் தான் முந்தைய யுகத்தை முடித்துவைக்க வேண்டும். சாத்தானை அவர் தோற்கடித்ததற்கும், உலகை அவர் ஜெயங்கொண்டதற்கும் அதுவே சான்று. ஒவ்வொரு முறையும் அவர் மனுஷரிடையே கிரியை செய்யும்போது, அது ஒரு புதிய யுத்தத்தின் தொடக்கமாக இருக்கிறது. புதிய கிரியையின் ஆரம்பம் இல்லாவிட்டால், இயற்கையாகவே பழைய கிரியைக்கு முடிவு எதுவும் இருக்காது. பழைய கிரியைக்கு முடிவு எதுவும் இல்லாதபோது, சாத்தானுடனான யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது. தேவன் அவராகவே வந்து மனுஷரிடையே புதிய கிரியைகளைச் செய்தால் மட்டுமே, மனுஷனால் சாத்தானின் ராஜ்யத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு ஒரு புதிய ஜீவிதத்தையும் புதிய தொடக்கத்தையும் பெற முடியும். இல்லையெனில், மனுஷன் என்றென்றும் முதுமையிலேயே ஜீவித்திருப்பான், என்றென்றும் சாத்தானின் பழைய அதிகாரத்தின் கீழ் தான் ஜீவித்திருப்பான். தேவன் வழிநடத்தும் ஒவ்வொரு யுகத்திலும், மனுஷனின் ஒரு பகுதி விடுவிக்கப்படுகிறது, இதனால் மனுஷன் தேவனின் கிரியையுடன் புதிய யுகத்தை நோக்கி முன்னேறுகிறான். தேவனின் ஜெயம் என்பது அவரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைத்த ஜெயம் என்று பொருள். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷகுலத்தின் இனமானது யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்டால், அது மனுஷனின் அல்லது சாத்தானின் கண்ணோட்டத்தில், தேவனை எதிர்ப்பது அல்லது காட்டிக்கொடுப்பது போலாகும், தேவனுக்குக் கீழ்ப்படிவதாக இருக்காது, மேலும் மனுஷனின் கிரியை சாத்தானுக்கு ஒரு கருவியாக மாறும். தேவனால் தொடங்கப்பட்ட ஒரு யுகத்தில் மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றினால் மட்டுமே சாத்தான் முழுமையாக நம்புவான், ஏனென்றால் அதுவே ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் கடமையாகும். ஆகையால், நீங்கள் பின்பற்றவும் கீழ்ப்படியவும் வேண்டும் என்று நான் சொல்கிறேன், உங்களிடம் இருந்து அதற்குமேல் எதுவும் தேவையில்லை. இதுதான் ஒவ்வொருவரும் தனது கடமையைச் செய்வது மற்றும் ஒவ்வொருவரும் அந்தந்த செயல்பாட்டைச் செய்வது என்பதன் அர்த்தமாகும். தேவன் தனது சொந்தக் கிரியையைச் செய்கிறார், அதற்குப் பதிலாக மனுஷன் அதைச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை, சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரின் கிரியையில் அவர் பங்கேற்பதும் இல்லை. மனுஷன் தன் கடமையைச் செய்கிறான், தேவனின் கிரியையில் அவன் பங்கேற்பதில்லை. இதுவே கீழ்ப்படிதல், மற்றும் சாத்தானின் தோல்விக்கான சான்று. தேவன் புதிய யுகத்தைத் தொடங்கியபின், அவர் இனி மனுஷகுலத்தின் மத்தியில் கிரியை செய்ய வரப்போவதில்லை. அப்போதுதான், மனுஷன் தனது கடமையைச் செய்வதற்கும், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனுக்கான தனதுக் கிரியையைச் செய்வதற்கும் அதிகாரப்பூர்வமாக புதிய யுகத்திற்குள் நுழைகிறான். தேவன் கிரியை செய்யும் கொள்கைகள் இவைதான், இவற்றை யாரும் மீறக்கூடாது. இவ்வாறாக கிரியை செய்வது மட்டுமே விவேகமானதும், நியாயமானதும் ஆகும். தேவனின் கிரியை தேவனால் தான் செய்யப்பட வேண்டும். அவர்தான் தமது கிரியையை செயல்பாட்டில் அமைக்கிறார், அவரே அவருடைய கிரியையை நிறைவு செய்கிறார். அவர்தான் கிரியையைத் திட்டமிடுகிறார், அதை நிர்வகிப்பவரும் அவரே, அதற்கும் மேலாக, அவர் தான் கிரியையை பலனடையவும் வைக்கிறார். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, “நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்; விதைப்பவனும் நானே, அறுவடை செய்பவனும் நானே.” தேவனுடைய ஆளுகையின் கிரியைகள் அனைத்தும் தேவனாலே செய்யப்படுகின்றன. ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் ராஜா அவர்; அவருக்குப் பதிலாக எவராலும் அவருடைய கிரியையைச் செய்ய முடியாது, அவருடைய கிரியையை யாராலும் முடிவிற்குக் கொண்டுவரவும் முடியாது, ஏனென்றால் எல்லாவற்றையும் தம் கையில் வைத்திருப்பவர் அவரே. உலகை சிருஷ்டித்த அவர், உலகம் முழுவதையும் அவருடைய வெளிச்சத்தில் ஜீவித்திருக்க வழிநடத்துவார், மேலும் அவர் முழு யுகத்தை நிறைவும் செய்வார், இதன் மூலம் அவருடைய முழு திட்டமும் பலனைக் கொண்டுவரும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து

288. தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் கிரியை முழுவதும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகிறது. முதல் கட்டம்—உலகத்தைச் சிருஷ்டித்தல்—இது தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது, அது அவ்வாறு இல்லாதிருந்தால், மனிதகுலத்தை சிருஷ்டிக்கும் வல்லமை வேறு யாருக்கும் இருந்திருக்காது; இரண்டாவது கட்டம் அனைத்து மனிதகுலத்தையும் மீட்பது ஆகும், இதுவும்கூட தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது; மூன்றாவது கட்டம் பற்றிச் சொல்லாமலே அது விளங்கும்: அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் தேவனின் கிரியைகள் எல்லாமும் தேவனால் தாமே செய்யப்பட வேண்டும் என்பதற்கு இன்னும் பெரிய தேவை உள்ளது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மீட்பது, ஜெயங்கொள்வது, ஆதாயப்படுத்துவது, மனித குலம் முழுவதையும் பரிபூரணப்படுத்துவது ஆகிய அனைத்தும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகின்றன. அவர் தனிப்பட்ட முறையில் இந்த கிரியையைச் செய்யவில்லை என்றால், அவருடைய அடையாளத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவோ அல்லது அவரது கிரியையை அறிந்துகொள்ளவோ மனிதனால் முடியாது. சாத்தானைத் தோற்கடிப்பதற்காக, மனிதகுலத்தை ஆதாயப்படுத்த, மனிதனுக்கு பூமியில் ஒரு இயல்பான ஜீவிதத்தைத் தருவதற்காக, அவருடைய முழு நிர்வாகத் திட்டத்துக்காகவும், அவருடைய எல்லா கிரியைகளுக்காகவும், அவர் தனிப்பட்ட முறையில் மனிதனை வழிநடத்துகிறார், தனிப்பட்ட முறையில் மனிதர்களிடையே கிரியை செய்கிறார், அவர் தனிப்பட்ட முறையில் இந்த கிரியையை அவசியம் செய்ய வேண்டும். மனிதன் அவரைக் காணும் படிக்கு, மனிதன் சந்தோஷப்படுவதற்காக தேவன் வந்தார் என்று மட்டுமே மனிதன் நம்பினால், அத்தகைய நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை. மனிதன் விளங்கிக் கொள்வது மிகவும் மேலோட்டமானது! இந்த கிரியையைத் தானே நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே தேவன் இந்தக் கிரியையைப் பரிபூரணமாகவும் முழுமையாகவும் செய்ய முடியும். தேவன் சார்பாக மனிதனால் அதைச் செய்ய இயலாது. தேவனின் அடையாளமோ அல்லது அவருடைய சாராம்சமோ அவனுக்கு இல்லாததால், அவனால் தேவனின் கிரியையைச் செய்ய இயலாது, மனிதன் இந்தக் கிரியையைச் செய்தாலும், அதற்கு எந்த விளைவும் இருக்காது. மீட்புக்காகவும், எல்லா மனிதர்களையும் பாவத்திலிருந்து மீட்பதற்கும், மனிதன் தூய்மைப்படுத்தப்படுவதற்கு ஏற்றவன் ஆவதற்கும், அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்படுவதற்கும் தேவன் முதன்முதலில் மாம்சமாக ஆனார். மேலும் மனிதர்களிடையே ஜெயங்கொள்ளும் கிரியையும் தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகிறது. இந்தக் கட்டத்தில், தேவன் தீர்க்கதரிசனத்தை மட்டுமே பேசினால், ஒரு தீர்க்கதரிசி அல்லது அத்தகைய திறமை பெற்ற ஒருவர் அவருடைய இடத்தைப் பிடிக்க முடியும்; தீர்க்கதரிசனம் பற்றி மட்டுமே பேசப்பட்டால், மனிதன் தேவனுக்குப் பதிலீடாக இருக்க முடியும். மனிதன் தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்யும் கிரியையைச் செய்ய முயன்றால், மேலும் மனிதனின் ஜீவித காரியத்தைச் செய்ய முயன்றால், அவனால் அந்த கிரியையைச் செய்ய இயலாது. இது தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும்: இந்தக் கிரியையைச் செய்யத் தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டும். வார்த்தையின் காலத்தில், தீர்க்கதரிசனம் மட்டுமே பேசப்பட்டால், ஏசாயா அல்லது எலியா தீர்க்கதரிசி இந்த கிரியையைச் செய்ய முடியும், மேலும் அதை தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்ய வேண்டியதில்லை. இந்தக் கட்டத்தில் செய்யப்படும் கிரியைகள் வெறுமனே தீர்க்கதரிசனத்தைப் பேசுவதல்ல, மேலும் மனிதனை ஜெயங்கொள்ளவும் சாத்தானைத் தோற்கடிக்கவும் வார்த்தைகளின் கிரியை பயன்படுத்தப்படுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இந்தக் கிரியையை மனிதனால் செய்ய முடியாது, தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்ய வேண்டும். நியாயப்பிரமாணத்தின் காலத்தில் யேகோவா தம்முடைய கிரியையின் ஒரு பகுதியைச் செய்தார், அதன் பிறகு அவர் சில வார்த்தைகளைப் பேசினார், தீர்க்கதரிசிகள் மூலம் சில கிரியைகளைச் செய்தார். இது ஏனென்றால், மனிதன் யேகோவாவை அவரது கிரியையில் பதிலீடு செய்ய முடியும், மேலும் தீர்க்கதரிசிகள் விஷயங்களை முன்னறிவிக்கவும், அவர் சார்பாக சில கனவுகளை விளக்கவும் முடியும். ஆரம்பத்தில் செய்யப்பட்ட கிரியை மனிதனின் மனநிலையை நேரடியாக மாற்றும் கிரியை அல்ல, அது மனிதனின் பாவத்துடன் தொடர்பில்லாதது, மேலும் மனிதன் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட வேண்டிய தேவை இருந்தது. ஆகவே, யேகோவா மாம்சமாகி, தன்னை மனிதனுக்கு வெளிப்படுத்தவில்லை; அதற்குப் பதிலாக அவர் மோசேயுடனும் மற்றவர்களுடனும் நேரடியாகப் பேசினார், அவர்களை அவர் சார்பாகப் பேசவும் கிரியை செய்யவும் அனுமதித்தார், மேலும் அவர்கள் நேரடியாக மனிதர்களிடையே கிரியை செய்யும்படி செய்தார். தேவனுடைய முதல் கட்ட கிரியை மனிதனின் தலைமையாக இருந்தது. இது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் தொடக்கமாக இருந்தது, ஆனால் இந்த யுத்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை. சாத்தானுக்கு எதிரான அதிகாரப்பூர்வ யுத்தம் தேவன் முதலில் மாம்ச உருவம் எடுத்தபோது தொடங்கியது, அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேவன் மாம்ச உருவம் எடுத்து சிலுவையில் அறையப்பட்டதுதான் இந்த யுத்தத்தின் முதல் சண்டை. மனித உருவம் எடுத்த தேவன் சிலுவையில் அறையப்பட்டது சாத்தானைத் தோற்கடித்தது, அதுதான் யுத்தத்தின் முதல் வெற்றிகரமான கட்டமாகும். மனித உருவம் எடுத்த தேவன் மனிதனின் ஜீவிதத்தில் நேரடியாக கிரியை செய்யத் தொடங்கியபோது, அதுதான் மனிதனை மீட்டெடுக்கும் கிரியையின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகும், மேலும் இது மனிதனின் பழைய மனநிலையை மாற்றும் கிரியை என்பதால், இது சாத்தானுடன் போரிடுவதற்கான கிரியை ஆகும். ஆரம்பத்தில் யேகோவா செய்த கிரியையின் கட்டமானது பூமியில் மனிதனின் ஜீவிதத்தின் தலைமைத்துவம் மட்டுமேயாகும். இது தேவனின் கிரியையின் தொடக்கமாக இருந்தது, அது இன்னும் எந்தவொரு யுத்தத்திலும் அல்லது எந்தவொரு பெரிய கிரியையிலும் ஈடுபடவில்லை என்றாலும், அது வரவிருக்கும் யுத்தத்தின் கிரியைக்கு அடித்தளத்தை அமைத்தது. பின்னர், கிருபையின் காலத்தின் இரண்டாம் கட்டக் கிரியை மனிதனின் பழைய மனநிலையை மாற்றுவதை உள்ளடக்கியது, அதாவது மனிதனின் ஜீவிதத்தைத் தேவன் தாமே வார்த்தெடுத்தார். இதனைத் தேவன் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியிருந்தது: இதற்குத் தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டியிருந்தது. அவர் மாம்சமாக மாறாமல் இருந்திருந்தால், இந்த கிரியையின் கட்டத்தில் வேறு யாரும் அவருக்கு பதிலீடு செய்திருக்க முடியாது, ஏனென்றால் அது சாத்தானுக்கு எதிராக நேரடியாகப் போரிடும் கிரியையை பிரதிநிதித்துவம் செய்கிறது. மனிதன் இந்த வேலையைத் தேவனின் சார்பாக செய்திருந்தால், மனிதன் சாத்தானுக்கு முன் நின்றபோது, சாத்தான் கீழ்ப்படிந்திருக்க மாட்டான், அவனைத் தோற்கடிப்பது சாத்தியம் இல்லாது போகும். அதைத் தோற்கடிக்க வந்தது மனித உருவம் எடுத்த தேவனாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் மனித உருவம் எடுத்த தேவன் சாராம்சத்தில் இன்னும் தேவன்தான், அவர் இன்னும் மனிதனின் ஜீவிதம்தான், அவர் இன்னும் சிருஷ்டிகராகவே இருக்கிறார்; என்ன நடந்தாலும், அவருடைய அடையாளமும் சாராம்சமும் மாறாது. எனவே, அவர் மாம்ச உருவத்தைப் எடுத்துக்கொண்டார் மற்றும் சாத்தானின் பரிபூரணமான கீழ்ப்படிதலை ஏற்படுத்தும் கிரியையைச் செய்தார். கடைசிக் காலத்தின் கிரியையின் போது, மனிதனை இந்தக் கிரியையைச் செய்து, வார்த்தைகளை நேரடியாகப் பேசும்படி செய்திருந்தால், அவனால் அவற்றைப் பேசமுடிந்திருக்காது, தீர்க்கதரிசி பேசியிருந்தால், இந்த தீர்க்கதரிசியால் மனிதனை ஜெயங்கொள்ள இயலாது. மாம்ச உருவத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், தேவன் சாத்தானை தோற்கடித்து அதன் முற்றிலுமான அடிபணிதலை ஏற்படுத்தினார். அவர் சாத்தானை முற்றிலுமாக தோற்கடித்து, மனிதனைப் பரிபூரணமாக ஜெயங்கொண்டு, மனிதனை முழுவதுமாக ஜெயங்கொள்ளும் போது, இந்தக் கட்டக் கிரியை முடிவடைந்து ஜெயம் கிடைக்கும். தேவனின் நிர்வாகத்தில், மனிதன் தேவனுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. குறிப்பாக, காலத்தை வழிநடத்துவதற்கு மற்றும் புதிய கிரியையைத் தொடங்குவதற்குத் தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் கிரியைகள் செய்யப்பட வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. மனிதனுக்கு வெளிப்பாட்டைக் கொடுப்பதும், தீர்க்கதரிசனத்தை வழங்குவதும் மனிதனால் செய்யப்படலாம், ஆனால் அது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டிய கிரியை என்றால், அது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் கிரியை என்றால், பின்பு இந்தக் கிரியையை மனிதனால் செய்ய முடியாது. முதல் கட்டக் கிரியையின் போது, சாத்தானுடன் போர் இல்லாதபோது, தீர்க்கதரிசிகள் பேசிய தீர்க்கதரிசனத்தைப் பயன்படுத்தி யேகோவா தனிப்பட்ட முறையில் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார். பின்னர், இரண்டாம் கட்ட கிரியையானது சாத்தானுடனான யுத்தம், மற்றும் தேவன் தாமே தனிப்பட்ட முறையில் மாம்சமாகி, இந்தக் கிரியையைச் செய்ய மாம்சத்திற்குள் வந்தார். சாத்தானுக்கு எதிரான யுத்தத்தில் சம்பந்தப்பட்ட எதுவும் மனித உருவம் எடுத்த தேவனையும் உள்ளடக்கியது, அதாவது இந்த யுத்தத்தை மனிதனால் தொடங்க முடியாது. மனிதன் யுத்தம் செய்தால், அவன் சாத்தானை தோற்கடிக்க சக்தியில்லாதவன். அதன் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமை அவனுக்கு எப்படி இருக்க முடியும்? மனிதன் இவற்றுக்கு இடையில் இருக்கிறான்: நீ சாத்தானை நோக்கிச் சாய்ந்தால், நீ சாத்தானுக்கு சொந்தம், ஆனால் நீ தேவனைத் திருப்திப்படுத்தினால், நீ தேவனுக்கு சொந்தமானவன். இந்த யுத்தத்தின் கிரியையில் மனிதன் முயற்சித்து தேவனுக்கு மாற்றீடு ஆகலாமா, அவனால் முடியுமா? அவன் அவ்வாறு செய்திருந்தால், அவன் வெகு காலத்திற்கு முன்பே அழிந்து போயிருக்க மாட்டானா? அவன் நீண்ட காலத்திற்கு முன்பே பாதாள உலகுக்குள் நுழைந்திருப்பான் அல்லவா? ஆகவே, மனிதன் தேவனை அவரது கிரியையில் மாற்றீடு செய்ய முடியாது, அதாவது மனிதனுக்கு தேவனின் சாராம்சம் இல்லை, அதாவது நீ சாத்தானுடன் போரிட்டால் அதை உன்னால் தோற்கடிக்க இயலாது. மனிதனால் சில வேலைகளை மட்டுமே செய்ய முடியும்; அவன் சிலரை ஜெயிக்க முடியும், ஆனால் தேவன் தாமே செய்யும் கிரியையில் அவன் தேவனுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. மனிதன் எப்படிச் சாத்தானுடன் யுத்தம் செய்ய முடியும்? நீ தொடங்குவதற்கு முன்பே சாத்தான் உன்னைச் சிறைபிடிப்பான். தேவன் தாமே சாத்தானுடன் போரிடுகிறார், இந்த அடிப்படையில் மனிதன் தேவனைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிறான், அதனால் மனிதன் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு சாத்தானின் கட்டுகளிலிருந்து தப்பிக்க முடியும். மனிதன் தனது சொந்த ஞானத்தினாலும் திறன்களாலும் அடையக்கூடிய விஷயங்கள் மிகவும் குறைவு; அவனால் மனிதர்களை முழுமையாக்குவதற்கும், அவர்களை வழிநடத்துவதற்கும், மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, சாத்தானைத் தோற்கடிப்பதற்கும் இயலாது. மனிதனின் புத்திசாலித்தனமும் ஞானமும் சாத்தானின் திட்டங்களை முறியடிக்காது, ஆகவே மனிதன் அதை எவ்வாறு எதிர்த்து யுத்தம் செய்ய முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து

289. ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட கிரியைகளின் முழுமையானது வெவ்வேறு சகாப்தங்கள் வந்து போனதால் படிப்படியாக மாறியிருக்கிறது. இந்தக் கிரியையின் மாற்றங்கள் உலகின் ஒட்டுமொத்த சூழ்நிலை மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன; நிர்வாகத்திற்கான கிரியை அதற்கேற்ப படிப்படியாக மாறியிருக்கிறது. இவை அனைத்தும் சிருஷ்டிப்பின் தொடக்கத்திலிருந்து திட்டமிடப்படவில்லை. உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பு, அல்லது சிருஷ்டிக்கப்பட்ட உடனேயே, கிரியையின் முதற்கட்டமான நியாயப்பிரமாணத்தையோ; கிரியையின் இரண்டாம் கட்டமான கிருபையையோ; அல்லது மூன்றாம் கட்டமான ஜெயத்தையோ யேகோவா திட்டமிடவில்லை. முதலில் மோவாபின் சந்ததியினரிடமிருந்து தொடங்கி, அதன் மூலம் முழு பிரபஞ்சத்தையும் கைப்பற்றுவதே அவரது கிரியையாக இருக்கிறது. உலகை சிருஷ்டித்தபின், அவர் ஒருபோதும் இந்த வார்த்தைகளைப் பேசவில்லை, மோவாபிற்குப் பிறகும் அவர் ஒருபோதும் பேசவில்லை; உண்மையில், லோத்துக்கு முன்புவரை, அவர் அவற்றை ஒருபோதும் உச்சரிக்கவேயில்லை. தேவனின் கிரியைகள் அனைத்தும் தன்னிச்சையாக செய்யப்படுகின்றன. இவ்வாறே அவரது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத்தின் கிரியைகள் முழுவதும் வளர்ந்தன; உலகை சிருஷ்டிப்பதற்கு முன்பு, அத்தகைய திட்டத்தை “மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான சுருக்க விளக்கப்படம்,” என்ற வடிவத்தில் அவர் எழுதியிருக்கவில்லை. தேவனின் கிரியையில் இருப்பதை அவர் நேரடியாக வெளிப்படுத்துகிறார்; ஒரு திட்டத்தை வகுக்க அவர் தனது மூளையை கசக்குவதில்லை. நிச்சயமாக, சில தீர்க்கதரிசிகள் ஏராளமான தீர்க்கதரிசனங்களைக் கூறியிருக்கிறார்கள், ஆனால் தேவனின் கிரியை எப்போதுமே துல்லியமான திட்டமிடலில் ஒன்றாகும் என்று சொல்லிவிட முடியாது; அந்த தீர்க்கதரிசனங்கள் அந்த நேரத்தில் தேவனின் கிரியைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன. அவர் செய்யும் அனைத்து கிரியைகளும் மிகவும் உண்மையான கிரியைகளே. ஒவ்வொரு யுகத்தின் வளர்ச்சிக்கும் ஏற்ப அதை அவர் செயல்படுத்துகிறார், மேலும் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, கிரியை செய்வது என்பது ஒரு நோய்க்கு சிகிச்சையளிக்க மருந்தை வழங்குவதற்கு ஒத்ததாகும்; அவர் தன் கிரியையைச் செய்யும்போது, அவர் அவதானிக்கிறார், அவருடைய அவதானிப்புகளின்படி அவருடைய கிரியையைத் தொடர்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவன் தம்முடைய ஏராளமான ஞானத்தையும் திறனையும் வெளிப்படுத்த வல்லவர்; எந்தவொரு குறிப்பிட்ட யுகத்தின் கிரியைக்கு ஏற்பவும் அவர் தனது ஏராளமான ஞானத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகிறார், மேலும் அந்த யுகத்தில் அவரால் திரும்பக் கொண்டுவரப்பட்ட ஜனங்கள் அனைவரையும் தன் முழு மனநிலையைக் காண அனுமதிக்கிறார். ஒவ்வொரு யுகத்திலும் செய்ய வேண்டிய கிரியைக்கு ஏற்ப, செய்ய வேண்டிய எந்தக் கிரியையையும் செய்து, அவர் ஜனங்களுக்கான தேவைகளை வழங்குகிறார். சாத்தான் எந்த அளவிற்கு அவர்களை சீரழித்தான் என்பதன் அடிப்படையில் ஜனங்களுக்குத் தேவையானதை அவர் வழங்குகிறார். … உலகம் சிருஷ்டிக்கப்படும் போதே மனிதகுலத்தின் மத்தியில் எவ்வித கிரியையும் தேவனால் ஆயத்தப்படுத்தப்படவில்லை; மாறாக, மனிதகுலத்தின் மத்தியில் படிப்படியாக, மிகவும் யதார்த்தமாக, நடைமுறைரீதியாக தேவன் தனது கிரியையைச் செய்ய அனுமதித்த விஷயங்களின் வளர்ச்சியே இது. உதாரணமாக, யேகோவா தேவன் அந்த ஸ்திரீயைத் தூண்டுவதற்காக சர்ப்பத்தைப் படைக்கவில்லை; அது அவருடைய குறிப்பிட்ட திட்டமாக இருக்கவில்லை, அதை அவர் வேண்டுமென்றே முன்னரே தீர்மானிக்கவும் இல்லை. இது ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றும் கூறலாம். ஆகவே, இதன் காரணமாகவே யேகோவா ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, மீண்டும் ஒருபோதும் மனுஷனை உருவாக்க மாட்டேன் என்று ஆணையிட்டார். இருப்பினும், இந்த அஸ்திபாரத்தின் மீது மட்டுமே ஜனங்கள் தேவனின் ஞானத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். நான் முன்பு கூறியது போலவே: “சாத்தானின் சதிகளை அடிப்படையாகக் கொண்டு நான் என் ஞானத்தைப் பயன்படுத்துகிறேன்.” சீர்கெட்ட மனிதகுலம் எப்படியாக வளர்ந்தாலும் அல்லது சர்ப்பம் அவர்களை எப்படித் தூண்டினாலும், யேகோவாவிடம் அவருடைய ஞானம் எப்போதும் இருக்கிறது; அவர் உலகை சிருஷ்டித்ததிலிருந்தே புதிய கிரியைகளில் ஈடுபட்டுவருகிறார், இந்தக் கிரியையின் படிகள் எதுவும் திரும்பச் செய்யப்படுவதில்லை. சாத்தான் தொடர்ச்சியாக சதிகளை செயல்படுத்தி வருகிறான், மனிதகுலம் தொடர்ந்து சாத்தானால் சீர்கெட்டுப்போகிறது, மேலும் யேகோவா தேவன் தம்முடைய ஞானமான கிரியையை இடைவிடாமல் செய்துவருகிறார். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து அவர் ஒருபோதும் தோல்வியடையவும் இல்லை, கிரியை செய்வதையும் நிறுத்தவில்லை. மனுஷர் சாத்தானால் சீர்கெட்டப் பிறகு, அவர்களுடைய சீர்கேட்டுக்கு ஆதாரமாய் இருக்கும் எதிரியை தோற்கடிக்க அவர் அவர்களிடையே தொடர்ந்து கிரியை செய்து வருகிறார். இந்த யுத்தம் ஆரம்பத்தில் இருந்தே உக்கிரமாக இருந்துவருகிறது, இது உலகின் இறுதி வரை தொடரும். இந்தக் கிரியையைச் செய்வதில், யேகோவா தேவன் சாத்தானால் சீர்கெட்ட மனுஷர்களை அவரது பெரிய இரட்சிப்பைப் பெற அனுமதிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஞானத்தையும், சர்வ வல்லமையையும், அதிகாரத்தையும் காண அனுமதிக்கிறார். மேலும், இறுதியில், அவர் துன்மார்க்கரைத் தண்டிப்பதும் நல்லவர்களுக்கு வெகுமதி அளிப்பதும் ஆகிய தம்முடைய நீதியுள்ள மனநிலையை பார்க்க அனுமதிப்பார். அவர் இன்றுவரை சாத்தானுடன் போரிட்டு வருகிறார், ஒருபோதும் தோற்கடிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் ஒரு ஞானமுள்ள தேவன், மேலும் சாத்தானின் சதிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்துகிறார். ஆகையால், தேவன் பரலோகத்தில் உள்ள அனைத்தையும் தம்முடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியச் செய்வது மட்டுமல்லாமல், பூமியிலுள்ள அனைத்தையும் அவருடைய பாதபடிக்குக் கீழே வைத்திருக்கிறார், மேலும், மனிதகுலத்தை ஆக்கிரமித்து துன்புறுத்தும் துன்மார்க்கரை அவர் சிட்சைக்குள்ளாக்குகிறார். அவருடைய—ஞானத்தின் காரணமாகவே இந்தக் கிரியைகளின் முடிவுகள் அனைத்தும் கொண்டு வரப்படுகின்றன. மனிதகுலத்தின் இருப்புக்கு முன்னர் அவர் ஒருபோதும் தனது ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை, ஏனென்றால் அவருக்கு பரலோகத்திலோ, பூமியிலோ, அல்லது முழு பிரபஞ்சத்திலோ எங்கும் எதிரிகள் இல்லை, மேலும் இயற்கையின் இடையே எதையும் ஆக்கிரமிக்கும் அந்தகாரச் சக்திகள் இல்லை. பிரதான தூதன் அவருக்குத் துரோகம் செய்த பிறகு, அவர் பூமியில் மனிதகுலத்தை படைத்தார், மனிதகுலத்தினால்தான் அவர் பிரதான தூதனாகிய சாத்தானுடனான தனது ஆயிரம் ஆண்டுகால நீண்ட யுத்தத்தை முறையாகத் தொடங்கினார், இந்தப் போர் ஒவ்வொரு தொடர்ச்சியான கட்டத்திலும் உக்கிரமடைகிறது. இந்தக் கட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய சர்வவல்லமையும் ஞானமும் இருக்கிறது. அப்போதுதான் பரலோகத்திலும் பூமியிலும் உள்ள சகலமும் தேவனின் ஞானம், சர்வவல்லமை மற்றும் குறிப்பாக தேவனின் மெய்மை ஆகியவற்றைக் கண்டன. அவர் இன்றுவரை தனது கிரியையை இதே யதார்த்தமான முறையில் செய்துவருகிறார்; கூடுதலாக, அவர் தனது கிரியையைச் செயல்படுத்தும்போது, அவர் தனது ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு கட்ட கிரியையின் ஆழ்ந்த உண்மையைப் பார்க்கவும், தேவனின் சர்வவல்லமையை எவ்வாறு விளக்குவது என்பதைக் காணவும், மேலும், தேவனின் மெய்மையைப் பற்றிய உறுதியான விளக்கத்தைக் காணவும் அவர் உங்களை அனுமதிக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

290. பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுகிறது; அவரால் எந்த நேரத்திலும் தனது கிரியையைத் திட்டமிட முடியும், எந்த நேரத்திலும் அதைச் செயல்படுத்தவும் முடியும். பரிசுத்த ஆவியானவரின் பணி மெய்மையானது என்றும், அது எப்போதும் புதியது என்றும், ஒருபோதும் பழையது அல்ல என்றும், எப்போதும் மிக உயர்ந்த அளவிற்கு புதியது என்றும் நான் ஏன் எப்போதும் சொல்கிறேன்? உலகம் சிருஷ்டிக்கப்பட்டபோது அவருடைய கிரியை முன்பே திட்டமிடப்படவில்லை; நடந்தது அதுவல்ல! கிரியையின் ஒவ்வொரு படியும் அந்தந்த நேரத்திற்கு அதன் சரியான முடிவை அடைகிறது, மேலும் அந்தப் படிகள் ஒன்றோடொன்று தலையிடுவதும் இல்லை. அநேக நேரங்களில், நீ மனதில் வைத்திருக்கக்கூடிய திட்டங்கள் பரிசுத்த ஆவியானவரின் சமீபத்திய கிரியைகளுக்கு ஒப்பாகாது. அவரது கிரியை மனுஷனின் பகுத்தறிவு போன்று எளிமையானதும் அல்ல, மனுஷக் கற்பனையைப் போன்று சிக்கலானதும் அல்ல—இது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஜனங்களுக்கு அவர்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதை உள்ளடக்கியது. அவரை விட மனுஷனின் சாரத்தைப் பற்றி யாரும் தெளிவாக அறிந்திருக்கவில்லை, மேலும் சரியாக இந்தக் காரணத்திற்காகவே ஜனங்களின் யதார்த்தமான தேவைகளுக்கும், அவருடைய கிரியைகளுக்கும் வேறேதும் பொருந்துவதில்லை. எனவே, மனுஷனின் கண்ணோட்டத்தில், அவருடைய கிரியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. அவர் இப்போது உங்களிடையே கிரியை செய்கையில், நீங்கள் இருக்கும் நிலைகளை அவர் கவனித்துக் கொண்டே கிரியை செய்யும்போதும் மற்றும் பேசும் போதும்—ஒவ்வொரு விதமான நிலையையும் எதிர்கொண்டு பேச அவரிடம் சரியான வார்த்தைகள் உள்ளன—ஜனங்களுக்குத் தேவையானதை மட்டுமே பேசுகிறார். அவருடைய கிரியையின் முதல் படியை எடுத்துக் கொள்ளுங்கள்: சிட்சிக்கும் நேரம். அதன் பிறகு, ஜனங்கள் எல்லா விதமான நடத்தைகளையும் வெளிப்படுத்தினர், மேலும் சில வழிகளில் கலகத்தனமாகவும் நடந்து கொண்டனர்; சில எதிர்மறை நிலைகளைப் போலவே பல்வேறு நேர்மறை நிலைகளும் தோன்றின. அவர்கள் எதிர்மறையின் ஒரு கட்டத்தை அடைந்தனர், மேலும் தங்களையே வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் கீழ்த்தரமான விஷயங்களையும் செய்தனர். இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டே தேவன் தம்முடைய கிரியையை நடத்தியுள்ளார், இதனால் அவருடைய கிரியை மூலம் மிகச் சிறந்த முடிவை அடைய அவர்களைக் கைப்பற்றுகிறார். அதாவது, எந்த நேரத்திலும் அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர் ஜனங்களிடையே நிலையான கிரியையைச் செய்கிறார்; ஜனங்களின் உண்மையான நிலைகளுக்கு ஏற்ப அவர் தனது கிரியையின் ஒவ்வொரு படியையும் செயல்படுத்துகிறார். சிருஷ்டிப்புக்கள் அனைத்தும் அவருடைய கைகளில் உள்ளன; அவர் அவர்களை எப்படி அறியாமல் போவார்? ஜனங்களின் நிலைகளுக்கு ஏற்ப, எந்த நேரத்திலும், எங்கும் செய்யப்பட வேண்டிய அடுத்தக் கட்ட கிரியைகளை தேவன் செய்கிறார். எந்த வகையிலும் இந்தக் கிரியை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்படவில்லை; அது மனுஷனின் கருத்து! அவர் தனது கிரியையின் முடிவுகளை அவதானித்துக் கொண்டே கிரியை செய்கிறார், மேலும் அவருடைய கிரியை தொடர்ந்து ஆழமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது; ஒவ்வொரு முறையும், அவருடைய கிரியையின் முடிவுகளை அவதானித்தபின், அவர் தனது கிரியையின் அடுத்தப் படியை செயல்படுத்துகிறார். அவர் படிப்படியாக மாறுவதற்கும் காலப்போக்கில் தனது புதிய படைப்பை ஜனங்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் சகலத்தையும் பயன்படுத்துகிறார். இந்த விதமான கிரியையால் ஜனங்களுக்கான தேவைகளை வழங்க முடியும், ஏனென்றால் தேவன் ஜனங்களை நன்கு அறிவார். இப்படியாகவே அவர் தனது கிரியையை பரலோகத்திலிருந்து செயல்படுத்துகிறார். அதேபோல், தேவனின் மனுஷ அவதாரமும் அவருடைய கிரியையை அதே வழியில் செய்கிறது, உண்மையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏற்பாடுகளைச் செய்து ஜனங்களிடையே கிரியை செய்கிறது. உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் அவருடைய சிருஷ்டிப்புகள் எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை, முன்பே திட்டமிடப்படவும் இல்லை. உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின், மனுஷகுலம் மிகவும் சீர்கெட்டு இருப்பதை யெகோவா கண்டார், அதனால் அவர் ஏசாயா தீர்க்கதரிசியின் வாயைப் பயன்படுத்தி, நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிந்தபின், கிருபையின் யுகத்தில் மனுஷகுலத்தை மீட்பதற்கான தனது கிரியையைச் செய்வார் என்று யெகோவா முன்னறிவித்தார். இது யெகோவாவின் திட்டமாகும், ஆனால் அந்த நேரத்தில் அவர் அவதானித்த சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது; ஆதாமை சிருஷ்டித்த உடனேயே அவர் நிச்சயமாக அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஏசாயா வெறுமனே ஒரு தீர்க்கதரிசனத்திற்கு குரல் கொடுத்தார், ஆனால் யெகோவா நியாயப்பிரமாண யுகத்தில் இந்தக் கிரியைக்கு முன்கூட்டியே தயாராக இருக்கவில்லை; மாறாக, கிருபையின் யுகத்தின் ஆரம்பத்தில் அவர் அதை செயல்படுத்தினார்; யோசேப்பின் கனவில் தூதர் தோன்றி, தேவன் மாம்சமாகுவார் என்ற செய்தியை அவருக்கு தெளிவூட்டினார், அப்போதுதான் அவருடைய மனுஷ அவதார கிரியை தொடங்கியது. ஜனங்கள் கற்பனை செய்தபடி, உலகத்தை சிருஷ்டித்த உடனேயே மனுஷ அவதாரம் எடுப்பதற்கு தேவன் தயாராக இருக்கவில்லை; மனுஷகுலம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது மற்றும் சாத்தானுக்கு எதிரான அவரது போரின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இது தீர்மானிக்கப்பட்டது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

291. தேவனுடைய முழு ஆளுகையும் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு நிலையிலும், பொருத்தமான கோரிக்கைகள் மனிதனுக்கு வைக்கப்படுகின்றன. மேலும், யுகங்கள் கடந்துசென்று வளருகையில், மனிதகுலம் யாவருக்குமான தேவனுடைய கோரிக்கைகள் எப்போதும் மிகவும் உயர்ந்தவை ஆகின்றன. இவ்விதமாக, மனுஷன் “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்ற உண்மையைப் பற்றிக்கொள்கிற வரையில், தேவனுடைய நிர்வாகக் கிரியை, படிப்படியாகத் தனது உச்சத்தை அடைகின்றது, இந்த வழியில் மனுஷன் சாட்சியம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைப் போன்றே, அவனிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் இன்னும் அதிகமாகின்றன. மனுஷன் தேவனுடன் உண்மையிலேயே எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கக் கூடுமோ, அவ்வளவு அதிகமாக அவன் தேவனை மகிமைப் படுத்துகிறான். மனிதனின் ஒத்துழைப்பு என்பது அவன் கொடுக்க வேண்டிய சாட்சியாக உள்ளது, மற்றும் அவன் கொடுக்கிற சாட்சியம் மனிதனின் நடைமுறையாக உள்ளது. ஆகையால், தேவனுடைய கிரியை சரியான விளைவை ஏற்படுத்துமா இல்லையா, மற்றும் உண்மையான சாட்சியம் இருக்க முடியுமா இல்லையா என்பது பிரிக்க இயலாத வகையில் மனுஷனின் ஒத்துழைப்பு மற்றும் மனுஷனின் சாட்சியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிரியை முடிக்கப்படுகின்றபோது, அதாவது, தேவனுடைய நிர்வகித்தல் அனைத்தும் அதன் முடிவை எட்டுகின்றபோது, மனுஷன் உயர்ந்த சாட்சியம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவான், மேலும் தேவனுடைய கிரியை முடிவடையும்போது, மனுஷனின் நடைமுறையும் பிரவேசமும் அவற்றின் உச்சத்தை அடையும். கடந்தகாலங்களில், மனுஷன் நியாயப் பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் இணங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான், மற்றும் அவன் பொறுமையுடனும் தாழ்மையுடனும் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டான். இன்று, மனுஷன் தேவனுடைய எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவேண்டும் மற்றும் அவன் தேவனுடைய மிக உயர்வான அன்பைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் அவன் உபத்திரவங்களுக்கு மத்தியில் இன்னமும் தேவனை அன்புகூர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறான். இந்தமூன்று கட்டங்களும் தேவன் தம்முடைய முழு நிர்வகித்தலிலும் படிப்படியாக மனுஷனிடம் வைக்கும் கோரிக்கைகளாக இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முந்தையதை விட ஆழமாகச் செல்கின்றது, மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் மனுஷனின் தேவைகள் முந்தையதை விட மிகவும் ஆழ்ந்தவைகளாக உள்ளன, மேலும் இந்த வழியில், தேவனுடைய முழு ஆளுகையும் படிப்படியாக வடிவம் பெறுகிறது. மனுஷனின் தேவைகள் எப்போதுமே அதிகமாக இருப்பதால், மனுஷனின் மனநிலை தேவனால் கோரப்படும் தரங்களுக்கு எப்போதைக் காட்டிலும் மிகநெருக்கமாக வந்துள்ளது என்பது மிகத்துல்லியமானதாக இருக்கிறது, மற்றும் அதன்பிறகுதான் முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத் திலிருந்து படிப்படியாக விலகத் தொடங்குகிறது, தேவனுடைய கிரியை ஒரு முழுமையான முடிவுக்கு வருகிறபோது, முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கும். அந்த நேரம் வருகிறபோது, தேவனுடைய கிரியை அதன் முடிவை எட்டியிருக்கும், மேலும் மனுஷனின் மனநிலையின் மாற்றங்களை அடைவதற்குத் தேவனுடனான மனுஷனுடைய ஒத்துழைப்பு இனி இருக்காது, மற்றும் மனிதகுலம் முழுவதும் தேவனுடைய வெளிச்சத்தில் வாழ்வார்கள், மற்றும் அப்போதில் இருந்து, தேவனுக்கு எதிரானகலகமோ எதிர்ப்போ இருக்காது. மனுஷனிடம் தேவன் எந்தக்கோரிக்கைகளையும் வைக்க மாட்டார், மற்றும் மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையில் இன்னும் அதிகமாக இணக்கமான ஒத்துழைப்பு இருக்கும், இது மனுஷனும் தேவனும் ஒன்றாக இருக்கும் ஒரு வாழ்வாகும், தேவனுடைய நிர்வகித்தல் முடிந்த பின்பு மற்றும் மனுஷன் சாத்தானின் பிடியிலிருந்து தேவனால் முழுமையாக மீட்கப்பட்ட பிறகு வரும் வாழ்வாகும். தேவனுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்ற முடியாதவர்கள் இத்தகைய வாழ்க்கையை அடைய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களை இருளில் தாழ்த்திக் கொண்டிருப்பார்கள், அங்கே அவர்கள் அழுதுகொண்டும் பற்களைக் கடித்துக்கொண்டும் இருப்பார்கள்; அவர்கள் தேவனை நம்புகிறவர்கள், ஆனால் அவரைப் பின்பற்றாதவர்கள், அவர்கள் தேவனை நம்புகிறவர்கள், ஆனால் அவருடைய எல்லாகிரியைக்கும் கீழ்ப்படியாதவர்கள். மனிதன் தேவனை நம்புகிறான் என்பதால், அவன் படிப்படியாக, தேவனுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகபின்பற்றவேண்டும்; அவன் “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்ற” வேண்டும். இவர்கள் மட்டுமே உண்மையான வழியை நாடுகிற ஜனங்களாக இருக்கிறார்கள், இவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றை அடிமைத்தன இயல்புடன் பின்பற்றுகிறவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் நீக்கிப்போடப் பட்டிருப்பவர்களாய் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், தேவன் புதிய கிரியையைத் தொடங்குவார், ஒவ்வொரு காலகட்டத்திலும், மனுஷர்களிடையே ஒரு புதிய தொடக்கம் இருக்கும். அந்தந்த யுகங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சத்தியங்களான “யேகோவாவே தேவனாக இருக்கின்றார்” மற்றும் “இயேசுவே கிறிஸ்துவாக இருக்கின்றார்” என்ற சத்தியங்களில் மாத்திரம் மனுஷன் நிலைத்திருந்தால், மனுஷன் ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தொடரமாட்டான், மற்றும் அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஆதாயப்படுத்திக் கொள்ள இயலாதவனாகவே இருப்பான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

292. தேவனே யுகத்தைத் தொடங்க வருகிறார், மேலும் தேவனே யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். யுகத்தைத் தொடங்குவதற்கும், முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மனுஷனால் இயலாது. இயேசு வந்தபின் அவர் யேகோவாவின் கிரியையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கவில்லை என்றால், அவர் வெறுமனே ஒரு மனுஷன் மட்டுமே, அவரால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதற்கு இதுவே சான்றாக இருந்திருக்கும். இயேசு வந்து யேகோவாவின் கிரியையை முடித்ததாலும், யேகோவாவின் கிரியையைத் தொடர்ந்ததாலும், மேலும், அவருடைய சொந்தக் கிரியையை, ஒரு புதிய கிரியையைச் செய்ததாலும், இது ஒரு புதிய யுகம் என் நிரூபிக்கப்படுகிறது, மேலும் இயேசுதான் தேவன் என்பதையும் நிரூபிக்கிறது. அவர்கள் கிரியையின் இரண்டு வெவ்வேறு கட்டங்களைச் செய்தார்கள். ஒரு கட்டம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஆலயத்திற்க்கு வெளியே நடத்தப்பட்டது. ஒரு கட்டம் விதிகளின்படி மனுஷனின் ஜீவிதத்தை வழிநடத்துவதும், மற்றொன்று பாவநிவாரணபலியை வழங்குவதுமாக இருந்தன. கிரியையின் இந்த இரண்டு கட்டங்களும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதாக இருந்தன; இது புதிய யுகத்தை பழையதிலிருந்து பிரிக்கிறது, மேலும் அவை இரண்டும் வெவ்வேறு யுகங்கள் என்று சொல்வது முற்றிலும் சரியானதாக இருக்கிறது. அவர்களது கிரியைகளின் இருப்பிடம் வேறுபட்டதாக இருந்தன, அவர்களது கிரியைகளின் உள்ளடக்கம் வேறுபட்டதாக இருந்தன, மற்றும் அவர்களது கிரியைகளின் நோக்கமும் வேறுபட்டதாக இருந்தன. எனவே, அவற்றை இரண்டு யுகங்களாகப் பிரிக்கலாம்: புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள், அதாவது புதிய மற்றும் பழைய யுகங்கள். இயேசு வந்தபோது அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, இது யேகோவாவின் யுகம் முடிந்துவிட்டது என்பதை நிரூபித்தது. ஆலயத்தில் யேகோவாவின் கிரியை முடிந்துவிட்டதால் அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, அதை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை. மீண்டும் அதைச் செய்வது, செய்தக் கிரியையை மீண்டும் செய்வதாக ஆகிவிடும். ஆலயத்தை விட்டு வெளியேறி, ஒரு புதியக் கிரியையைத் தொடங்கி, ஆலயத்திற்கு வெளியே ஒரு புதிய பாதையைத் தொடங்கியதன் மூலம் மட்டுமே, தேவனின் கிரியையை அதன் உச்சத்திற்குக் கொண்டு வர அவரால் முடிந்தது. அவர் தனது கிரியையைச் செய்ய ஆலயத்திற்கு வெளியே சென்றிருக்காவிட்டால், தேவனின் கிரியை ஆலயத்தின் அஸ்திவாரங்களில் தேக்கமடைந்து, புதிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் போயிருக்கும். ஆகவே, இயேசு வந்தபோது, அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, ஆலயத்தில் அவருடைய கிரியைகளைச் செய்யவில்லை. அவர் ஆலயத்திற்கு வெளியே தனது கிரியைகளைச் செய்தார், சீஷர்களை வழிநடத்தி, அவருடைய கிரியைகளை சுதந்திரமாகச் செய்தார். தேவன் தனது கிரியையைச் செய்ய ஆலையத்திலிருந்து புறப்படுவது, தேவன் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அவரது கிரியை ஆலயத்திற்கு வெளியே நடத்தப்படவிருந்தது, அது செயல்படுத்தப்படும் விதத்தில் கட்டுப்படுத்தப்படாத புதிய கிரியையாக இருந்திருக்க வேண்டும். இயேசு வந்திறங்கியவுடனேயே, பழைய ஏற்பாட்டினுடைய யுகத்தில் யேகோவாவின் கிரியையை முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர்கள் இரண்டு வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், அதே ஆவியானவர்தான் கிரியையின் இரு கட்டங்களையும் நிறைவேற்றியது, மேலும், செயல்படுத்தப்பட்ட கிரியை தொடர்ச்சியானதாக இருந்தது. நாமமும் கிரியையின் உள்ளடக்கமும் வேறுபட்டதாக இருந்ததால், யுகமும் வேறுபட்டதாக இருந்தது. யேகோவா வந்தபோது, அது யேகோவாவின் யுகம்; இயேசு வந்தபோது, அது இயேசுவின் யுகம். எனவே, ஒவ்வொரு வருகையிலும், தேவன் ஒரு நாமத்தால் அழைக்கப்படுகிறார், அவர் ஒரு யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மேலும் அவர் ஒரு புதிய பாதையைத் தொடங்குகிறார்; ஒவ்வொரு புதிய பாதையிலும், அவர் ஒரு புதிய நாமத்தைச் சூட்டிக்கொள்கிறார், இது தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பதையும், அவருடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதையும் காட்டுகிறது. வரலாறு எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, அதேபோல் தேவனின் கிரியையும் எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது. அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டம் அதன் முடிவை எட்டுவதற்கு, அது ஒரு முன்னோக்கிய திசையில் முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும்; அவர் புதிய பாதைகளைத் தொடங்க வேண்டும், புதிய யுகங்களைத் தொடங்க வேண்டும், புதிய மற்றும் பெரிய கிரியைகளைத் தொடங்க வேண்டும், இவற்றுடன் புதிய நாமங்களையும் புதிய கிரியைகளையும் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு கணத்திலும், தேவனின் ஆவியானவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒருபோதும் பழைய வழிகளையோ விதிகளையோ பற்றிக்கொள்வதில்லை. அவருடைய கிரியை இதுவரை நிறுத்தப்படவில்லை, ஆனால் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அது நிறைவேறுகிறது. … யேகோவாவின் கிரியை முதல் இயேசுவின் கிரியை வரை மற்றும் இயேசுவின் கிரியை முதல் இந்த தற்போதையக் கட்டம் வரை, என இந்த மூன்றுக் கட்டங்களும் தொடர்ச்சியான நூலில் தேவனின் ஆளுகையின் முழு வரம்பையும் உள்ளடக்குகிறது, இவை அனைத்தும் ஒரே ஆவியானவரின் கிரியை தான். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து, தேவன் எப்போதும் மனுஷகுலத்தை நிர்வகிக்கும் கிரியையை செய்துவருகிறார். அவரே ஆதியும் அந்தமும் ஆவார், அவரே முதலும் கடைசியும் ஆவார், மேலும், ஒரு யுகத்தைத் தொடங்குவதும் முடித்து வைப்பதும் அவரே. கிரியையின் மூன்றுக் கட்டங்கள், வெவ்வேறு யுகங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில், ஒரே ஆவியானவரின் கிரியை என்பதில் சந்தேகமில்லை. இந்த மூன்றுக் கட்டங்களையும் பிரிப்பவர்கள் அனைவரும் தேவனுக்கு எதிராக நிற்பவர்கள் தான். இப்போது, முதல் கட்டத்திலிருந்து இன்று வரை அனைத்துக் கிரியைகளும் ஒரே தேவனின் கிரியை, ஒரே ஆவியானவரின் கிரியை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

293. கர்த்தராகிய இயேசு வந்தபோது, தேவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தை விட்டு புறப்பட்டுவிட்டார் என்றும், புதிய கிரியையைத் தொடங்கி விட்டார் என்றும், இந்தப் புதிய கிரியைக்கு ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது அவசியம் இல்லை என்றும் தனது நடைமுறை செயல்பாடுகளைப் பயன்படுத்தி ஜனங்களுக்குச் சொன்னார். தேவன் ஓய்வுநாளின் கட்டுப்பாடுகளிலிருந்து வெளியே வருவது அவருடைய புதிய கிரியையின் ஒரு அறிகுறி தானேயொழிய, உண்மையான மற்றும் பெரிதான கிரியை இன்னும் நிகழவில்லை. கர்த்தராகிய இயேசு தம்முடைய கிரியையைத் தொடங்கினபோது, அவர் ஏற்கனவே நியாயப்பிரமாண காலத்தின் “கட்டுகளை” விட்டுவிலகி, அந்த காலத்தின் விதிமுறைகளையும் கொள்கைகளையும் கடந்து வந்திருந்தார். நியாயப்பிரமாணம் தொடர்பான சுவடு கூட அவரில் இருக்கவில்லை. அவர் அதை முற்றிலுமாக ஒதுக்கி விட்டிருந்தார், அவர் அதை முன்போல இனி ஆசரிக்கவில்லை, இனி மனிதகுலமும் அதை ஆசரிக்க வேண்டுமென்பது அவருக்கு இல்லை. ஆகவே, இங்கே கர்த்தராகிய இயேசு ஓய்வுநாளில் பயிர்களின் வழியாகச் சென்றதையும், அவர் ஓய்ந்திருக்கவில்லை என்பதையும் நீ பார்க்கிறாய். அவர் ஓய்ந்திராமல், வெளியே கிரியை செய்துகொண்டிருந்தார். அவருடைய இந்தச் செயலானது ஜனங்களின் கருத்துக்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது, மேலும் அது, அவர் இனிமேல் நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழவில்லை என்பதையும், அவர் ஓய்வுநாளின் கட்டுப்பாடுகளை விட்டுவிலகி, மனுக்குலத்திற்கு முன்பாகவும், அவர்கள் மத்தியிலும் கிரியை செய்யும் புதிய நடைமுறையில், புதிய சாயலில் தோன்றியிருக்கிறார் என்பதையும் அவர்களுக்குத் தெரிவித்தது. அவருடைய இந்தச் செயலானது, நியாயப்பிரமாணத்தின்கீழ் இருந்ததிலிருந்து வெளியேறி, ஓய்வுநாளை விட்டு விலகுவதில் இருந்து தொடங்கும் புதிய கிரியையைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்பதை ஜனங்களுக்குச் சொன்னது. தேவன் தம்முடைய புதிய கிரியையை நிறைவேற்றின போது, அவர் அதற்குப் பிறகு கடந்த காலத்தை பிடித்துக் கொண்டிருக்கவில்லை, நியாயப்பிரமாண காலத்தின் விதிமுறைகளைப் பற்றி அவர் அதற்கு மேல் கவலைப்படவில்லை. முந்தைய காலத்தில் அவர் செய்த கிரியையினால் அவர் பாதிக்கப்படவில்லை, ஆனால் மாறாக, அவர் மற்ற ஒவ்வொரு நாளும் செய்ததைப் போலவே ஓய்வுநாளிலும் வேலை செய்தார், அவருடைய சீஷர்கள் ஓய்வுநாளில் பசியாய் இருந்தபோது, அவர்கள் பயிர்களைக் கொய்து சாப்பிட்டனர். தேவனுடைய பார்வையில் இவையெல்லாம் மிகவும் சாதாரணமாகவே இருந்தது. தேவனைப் பொறுத்தவரை, அவர் செய்ய விரும்பும் மிகுதியான புதிய கிரியைக்கும், அவர் சொல்ல விரும்பும் புதிய வார்த்தைகளுக்கும், ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருப்பது ஏற்புடையதே. அவர் புதியதாக ஒன்றைத் தொடங்கும்போது, அவர் தனது முந்தைய கிரியையைக் குறிப்பிடுவதுமில்லை, செய்து முடிக்கும்படி அதைத் தொடர்வதுமில்லை. ஏனென்றால் தேவனுக்கு அவருடைய கிரியையில் அவருடைய கொள்கைகள் இருக்கிறது. அவர் எப்போது மனுக்குலத்தை அவருடைய கிரியையின் புதிய கட்டத்திற்குள் கொண்டுவர விரும்புகிறாரோ, எப்போது அவருடைய கிரியை ஒரு உயர்ந்த கட்டத்திற்குள் நுழையுமோ, அப்போது அவர் தன்னுடைய புதிய கிரியையைத் தொடங்க விரும்புகிறார். ஜனங்கள் பழைய பழமொழிகளின்படி அல்லது விதிமுறைகளின்படி தொடர்ந்து செயல்பட்டால் அல்லது அவற்றைத் தொடர்ந்து பிடித்துக்கொண்டால், அவர் அதை நினைவில் கொள்ளவோ, அங்கீகரிக்கவோ மாட்டார். ஏனென்றால் அவர் ஏற்கனவே புதிய கிரியைகளைக் கொண்டுவந்திருக்கிறார், மேலும் அவர் தன்னுடைய கிரியையின் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் புதிய கிரியையைத் தொடங்கும்போது, முற்றிலும் புதிய சாயலில், முற்றிலும் புதிய கோணத்திலிருந்து, முற்றிலும் புதிய வழியில் ஜனங்களுக்குத் தோன்றுகிறார். இதனால் ஜனங்கள் அவருடைய மனநிலையின் வெவ்வேறு அம்சங்களையும், அவரிடம் உள்ளதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் காணலாம். இது அவருடைய புதிய கிரியையில் அவரது குறிக்கோள்களில் ஒன்றாகும். தேவன் பழைய காரியங்களுடன் ஒட்டிக்கொள்வதில்லை அல்லது பலரும் பயன்படுத்தின பாதையில் நடப்பதில்லை. அவர் கிரியை செய்யும்போதும், பேசும்போதும், ஜனங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு கட்டுப்பாடாய் இருப்பதில்லை. தேவனில், அனைத்தும் சுதந்திரமானவை, விடுவிக்கப்பட்டவை, அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை, தடைகளும் இல்லை, அவர் மனுக்குலத்திற்கு அளிப்பது சுதந்திரமும் விடுதலையும் ஆகும். அவர் ஒரு ஜீவனுள்ள தேவன், அவர் உண்மையாகவே, மெய்யாகவே இருக்கிற தேவன். அவர் ஒரு கைப்பொம்மையோ, களிமண் உருவமோ அல்ல, ஜனங்கள் புனிதமெனப் பாதுகாக்கும், ஆராதிக்கும் விக்கிரகங்களிலிருந்து அவர் முற்றிலும் வேறுபட்டவர். அவர் ஜீவனுள்ளவர், உயிர்த்துடிப்பு உள்ளவர். மேலும் அவருடைய வார்த்தைகளும், கிரியையும் மனுக்குலத்திற்கு ஜீவனையும் வெளிச்சத்தையும், எல்லா சுதந்திரத்தையும், விடுதலையையும் கொண்டுவரும், ஏனென்றால் அவர் சத்தியத்தையும், ஜீவனையும், வழியையும் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய எந்த கிரியையிலும், எந்த காரியத்தாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஜனங்கள் என்ன சொன்னாலும், அவருடைய புதிய கிரியையை அவர்கள் எப்படிப் பார்த்தாலும் அல்லது மதிப்பிட்டாலும், அவர் எந்த ஒரு தடுமாற்றமுமின்றி தனது கிரியையைச் செய்து முடிப்பார். அவருடைய கிரியை மற்றும் வார்த்தைகளைப் பொறுத்தவரை, யாருடைய கருத்துகளைப் பற்றியோ, குறைகூறுதலைப் பற்றியோ, அல்லது அவருடைய புதிய கிரியைக்கு எதிரான அவர்களுடைய கடுமையான எதிர்ப்பையோ தடைகளையோ பற்றிக்கூட அவர் கவலைப்பட மாட்டார். தேவன் செய்கிறதை அளவிடவோ அல்லது வரையறுக்கவோ, அவருடைய கிரியையை இழிவுபடுத்தவோ, தடுத்து நிறுத்தவோ, அல்லது நாசப்படுத்தவோ, அனைத்து சிருஷ்டிகளிலும் எந்த ஒருவராலும் மனிதனுடைய பகுத்தறிவையோ அல்லது மனிதனுடைய கற்பனையையோ, அறிவையோ அல்லது அறநெறியையோ பயன்படுத்த முடியாது. அவருடைய கிரியையிலும், அவர் செய்வதிலும் எந்த தடையும் இல்லை. அது எந்த ஒரு மனிதனாலும், நிகழ்வினாலும், காரியத்தினாலும், கட்டுப்படுத்தப்படவுமாட்டாது, எந்தவொரு விரோதமான வல்லமைகளாலும் தடுத்து நிறுத்தப்படவுமாட்டாது. அவருடைய புதிய கிரியையைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் ஜெயம்பெறும் ராஜா, எந்த ஒரு விரோதமான வல்லமைகளும், மனுக்குலத்தின் அனைத்து மாறுபட்ட மதக்கருத்துக்களும், மூடநம்பிக்கைகளும் அவருடைய பாதபடியின்கீழ் நசுக்கப்படுகின்றன. அவருடைய எந்த புதிய கட்ட கிரியையை அவர் செய்கிறார் என்பது முக்கியமல்ல, அது நிச்சயமாக மனுக்குலத்தின் மத்தியில் வளர்ச்சியுற்று, விரிவாக்கப்படும், மேலும் அவருடைய பெரிதான கிரியை நிறைவடையும் வரையிலும், அது நிச்சயமாக முழு பிரபஞ்சத்திலும் தடையின்றி செய்யப்படும். இது தேவனுடைய சர்வவல்லமையும் ஞானமும், அவருடைய அதிகாரமும் வல்லமையும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

294. வெவ்வேறு காலங்களுக்கு ஏற்றபடி தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுகிறார், அவருடைய கிரியையைச் செய்கிறார், வெவ்வேறு காலங்களில் அவர் வெவ்வேறு வார்த்தைகளைப் பேசுகிறார். தேவன் விதிகளுக்கு கட்டுப்படுவதில்லை, அல்லது அதே கிரியையை மீண்டும் செய்வதில்லை, அல்லது கடந்த கால விஷயங்களுக்காக ஏக்கம் கொள்வதில்லை. அவரே தேவன், அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் இல்லை, அவர் ஒவ்வொரு நாளும் புதிய வார்த்தைகளைப் பேசுகிறார். நீ இன்று பின்பற்ற வேண்டியதை பின்பற்ற வேண்டும். இதுவே மனிதனின் பொறுப்பும் கடமையும் ஆகும். இன்றைய தினத்தில் நடைமுறையானது தேவனின் வெளிச்சம் மற்றும் வார்த்தைகளை மையமாகக் கொண்டு இருப்பது முக்கியமானதாகும். தேவன் விதிகளுக்குக் கட்டுப்படுவர் இல்லை, மேலும் அவருடைய ஞானத்தையும் சர்வ வல்லமையையும் தெளிவுபடுத்துவதற்காக பல்வேறு கண்ணோட்டங்களைக் குறித்து அவரால் பேச முடிகிறது. அவர் ஆவியினுடைய அல்லது மனிதனினுடைய, அல்லது மூன்றாவது நபரினுடைய கண்ணோட்டத்தில் பேசுகிறாரா என்பது முக்கியமல்ல—தேவன் எப்போதுமே தேவன் தான், மனிதனின் கண்ணோட்டத்திலிருந்து அவர் பேசுவதால் நீ அவரைத் தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. வெவ்வேறு கண்ணோட்டங்கள் தேவன் பேசுவதன் விளைவாக சில நபர்களிடையே கருத்துக்கள் உருவாகியுள்ளன. அத்தகையோருக்கு தேவனைப் பற்றிய அறிவும் இல்லை, அவருடைய கிரியையைப் பற்றிய அறிவும் இல்லை. தேவன் எப்போதும் ஒரே கண்ணோட்டத்தில் பேசியிருந்தால், தேவனைப் பற்றிய விதிகளை மனிதன் வகுக்க மாட்டானா? அப்படிச் செயல்படுவதற்கு மனிதனை தேவன் அனுமதிக்க முடியுமா? எந்த கண்ணோட்டத்தில் தேவன் பேசுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவ்வாறு செய்ய அவருக்கு நோக்கங்கள் உள்ளன. தேவன் எப்போதும் ஆவியின் கண்ணோட்டத்திலேயே பேசுவதாக இருந்தால், உன்னால் அவருடன் ஐக்கியப்பட முடியுமா? இவ்வாறு, சில நேரங்களில் அவர் மூன்றாவது நபரைப் போல் பேசி தனது வார்த்தைகளை உனக்கு கொடுக்கவும், உன்னை யதார்த்தத்திற்கு வழியாக நடத்தவும் செய்கிறார். தேவன் செய்யும் அனைத்துமே பொருத்தமானதாக இருக்கும். சுருக்கமாக, இவை அனைத்தும் தேவனால் செய்யப்படுகின்றன, இதை நீ சந்தேகிக்கக்கூடாது. அவர் தேவன், ஆகவே அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசினாலும் அவர் எப்போதும் தேவனாகவே இருப்பார். இது ஒரு மாற்ற முடியாத உண்மை. இருப்பினும் அவர் கிரியை செய்கிறார், அவர் இன்னும் தேவன் தான், அவருடைய சாரம் மாறாது! பேதுரு தேவனை மிகவும் நேசித்தார், தேவனின் சொந்த இருதயத்திற்குப் பின் செல்லும் ஒரு மனிதனாக இருந்தார், ஆனால் தேவன் அவனைக் கர்த்தராகவோ அல்லது கிறிஸ்துவாகவோ சாட்சி அளிக்கவில்லை, ஏனென்றால் ஒரு மனிதனின் சாராம்சம் என்னவோ அது தான், அது ஒருபோதும் மாற முடியாது. ஆனால் அவருடைய கிரியையை பயனுள்ளதாகச் செய்யவும், அவரைக் குறித்த மனிதனின் அறிவை ஆழப்படுத்துவதற்கும் வெவ்வேறு முறைகளைப் பிரயோகிக்கிறார். அவருடைய கிரியை செய்யும் ஒவ்வொரு முறையும் மனிதன் அவரை அறிந்து கொள்ள உதவுகிறது, மேலும் மனிதனை பரிபூரணமாக்குவதற்காகவே உள்ளது. அவர் கிரியை செய்வதற்காக எந்த முறையைப் பிரயோகித்தாலும், ஒவ்வொன்றும் மனிதனைக் கட்டியெழுப்பவும், மனிதனை பூரணப்படுத்தவுமே செய்கிறது. அவர் கிரியை செய்யும் முறைகளில் ஒன்றானது மிக நீண்ட காலமாக நீடித்திருந்தாலும், இது தேவன் மீதுள்ள மனிதனின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும். இதனால், உங்கள் இருதயத்தில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. இவை அனைத்தும் தேவனின் கிரியையின் படிநிலைகள், நீங்கள் அவற்றிற்கு கீழ்ப்படியத் தான் வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

295. கடைசி நாட்களில் மாம்சமான தேவன், அவருடைய வார்த்தைகளைப் பேசுவதற்கும், மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விளக்குவதற்கும், மனிதன் பிரவேசிக்க வேண்டியதை சுட்டிக்காட்டுவதற்கும், தேவனுடைய செயல்களை மனிதனுக்குக் காண்பிப்பதற்கும், மனிதனுக்குத் தேவனுடைய ஞானம், சர்வவல்லமை மற்றும் அற்புதத்தன்மையை ஆகியவற்றை காண்பிப்பதற்காகவும் முக்கியமாக வந்திருக்கிறார். தேவன் பேசுகிற பல வழிகளில், மனிதன் தேவனுடைய மேன்மையையும், தேவனுடைய மகத்துவத்தையும், மேலும், தேவனுடைய தாழ்மையையும் மறைவான தன்மையையும் காண்கிறான். தேவன் உயர்ந்தவராக இருக்கிறார் என்பதை மனிதன் காண்கிறான், ஆனால் அவர் தாழ்மையுள்ளவராகவும் மறைக்கப்பட்டவராகவும் இருக்கிறார், மற்றும் எல்லாரிலும் சிறியவராக மாறக்கூடியவராகவும் இருக்கிறார். அவருடைய சில வார்த்தைகள் ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து நேரடியாகவும், சில வார்த்தைகள் நேரடியாக மனிதனின் கண்ணோட்டத்திலிருந்தும், சில வார்த்தைகள் மூன்றாம் நபரின் கண்ணோட்டத்திலிருந்தும் பேசப்படுகின்றன. இதில், தேவனுடைய கிரியையின் முறையானது பெரிதும் மாறுபடுகிறது என்பதைக் காணலாம், மேலும் இதை வார்த்தைகள் மூலமாகத்தான் மனிதனைப் பார்க்கும் படிக்கு அவர் அனுமதிக்கிறார். கடைசி நாட்களின் போதுள்ள தேவனுடைய கிரியை இயல்பானது மற்றும் உண்மையானது, ஆகவே கடைசி நாட்களில் உள்ள ஜனக்கூட்டம் அனைத்து மாபெரும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். தேவனுடைய இயல்பு நிலை மற்றும் யதார்த்தத்தின் காரணமாக, எல்லா ஜனங்களும் இத்தகைய சோதனைகளுக்கு மத்தியில் பிரவேசித்திருக்கிறார்கள்; மனிதன் தேவனுடைய சோதனைகளில் இறங்கியிருப்பதற்கான காரணம் தேவனுடைய இயல்பு மற்றும் யதார்த்தமே ஆகும். இயேசுவின் யுகத்தில், எந்தவிதமான கருத்துக்களும் அல்லது சோதனைகளும் இல்லை. ஏனென்றால் இயேசு செய்த பெரும்பாலான கிரியைகள் மனிதனின் கருத்துக்களோடு ஒத்துப்போனதால், ஜனங்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள், அவர்களுக்கு அவரைப் பற்றி எந்தக் கருத்துக்களும் இல்லை. மனிதன் எதிர்கொள்கிற இன்றைய சோதனைகள் மிகப் பெரியது, இந்த ஜனங்கள் பெரும் உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படும் போது, குறிப்பிடப்படும் உபத்திரவம் இதுதான். இன்று, தேவன் இந்த ஜனங்களில் உண்டான விசுவாசம், அன்பு, துன்பத்தை ஏற்றுக்கொள்வது, மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றைப் பேசுகிறார். கடைசி நாட்களில் மாம்சத்தில் வந்த தேவனால் பேசப்பட்ட வார்த்தைகள் மனிதனின் இயல்பின் சாராம்சம், மனிதனின் நடத்தை மற்றும் இன்று மனிதன் பிரவேசிக்க வேண்டியவை ஆகியவற்றுக்கு ஏற்ப பேசப்படுகின்றன. அவரது வார்த்தைகள் உண்மையானவை மற்றும் இயல்பானவை: அவர் நாளைய தினத்தைப் பற்றி பேசுவதுமில்லை, நேற்றைய தினத்தைத் திரும்பிப் பார்ப்பதுமில்லை; இன்று பிரவேசிக்க வேண்டிய, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய, மற்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவற்றை மட்டுமே அவர் பேசுகிறார். இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் முன்னமே செய்த கிரியையை மீண்டும் செய்வதில்லை. இயேசுவின் கிரியையின் கட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவன் மீண்டும் ஒருபோதும் அந்தக் கிரியையின் கட்டத்தை மேற்கொள்ள மாட்டார். தேவனுடைய கிரியை மனிதனின் கருத்துக்களுடன் முரண்பட்டவையாகும்; எடுத்துக்காட்டாக, பழைய ஏற்பாடு ஒரு மேசியாவின் வருகையை முன்னறிவித்தது, இந்த தீர்க்கதரிசனத்தின் விளைவாக இயேசுவின் வருகை இருந்தது. இது ஏற்கனவே நடந்தேறியதால், வேறொரு மேசியா மீண்டும் வருவது என்பது தவறாக இருந்திருக்கும். இயேசு ஏற்கனவே ஒரு முறை வந்துவிட்டார், இந்த முறை இயேசு மீண்டும் வருகிறாரானால் அது தவறாக இருந்திருக்கும். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உள்ளது, மேலும் ஒவ்வொரு பெயரிலும் அந்த யுகத்தின் குணாதிசயம் உள்ளது. மனிதனின் கருத்துக்களில், தேவன் எப்போதும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க வேண்டும், எப்போதும் பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்த வேண்டும், எப்போதும் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும். இருப்பினும் இந்தக் காலத்தில், தேவன் அப்படி இல்லவே இல்லை. கடைசி நாட்களின் போது, தேவன் இன்னும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணப்படுத்தினார் என்றால்—அதாவது அவர் இயேசுவைப் போலவே செய்திருந்தால்—தேவன் அவர் முன்னமே செய்த அதே கிரியையை மீண்டும் செய்கிறவராக இருப்பார், அப்படி அவர் செய்வாரானால், இயேசு முன்னமே செய்து முடித்த கிரியையில் முக்கியத்துவம் அல்லது மதிப்பு இருக்காது. இவ்வாறு, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு கட்ட கிரியையை செய்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்ததும், அது வெகு விரைவில் அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது, மேலும் சாத்தான் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியதும், தேவன் வேறு முறைக்கு மாறுகிறார். தேவன் தனது வேலையின் ஒரு கட்டத்தை முடித்தவுடன், அது அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றிய விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இன்று தேவனுடைய கிரியையானது இயேசுவின் கிரியையிலிருந்து ஏன் வேறுபட்டதாய் இருக்கிறது? இன்று தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணமாக்காதது ஏன்? இயேசுவின் கிரியை நியாயப்பிரமாண யுகத்தின் போது செய்யப்பட்ட கிரியையை போலவே இருந்திருந்தால், அவர் கிருபையின் யுகத்தின் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடியுமா? அவர் சிலுவையில் அறையப்பட்ட கிரியையைச் செய்து முடித்திருக்க முடியுமா? நியாயப்பிரமாண யுகத்தைப் போலவே, இயேசு தேவாலயத்திற்குள் பிரவேசித்து ஓய்வுநாளைக் கடைப்பிடித்திருந்தால், அவர் யாராலும் துன்புறுத்தப்படாமல் அனைவராலும் அரவணைக்கப்பட்டிருப்பார். அப்படியானால், அவர் சிலுவையில் அறையப்பட்டிருக்க முடியுமா? அவர் மீட்பின் கிரியையை முடித்திருக்க முடியுமா? கடைசி நாட்களில் மாம்சமாக வந்த தேவன் இயேசுவைப் போலவே அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிப்பாரானால் என்ன பயன்? கடைசி நாட்களில் தேவன் தனது கிரியையின் மற்றொரு பகுதியைச் செய்தால் மட்டுமே, அவருடைய நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராலேயே தேவனைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற முடியும், அப்போதுதான் தேவனுடைய ஆளுகையின் திட்டம் செய்து முடிக்கப்பட முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து

296. கடைசி நாட்களில், மனிதனை பரிபூரணமாக்க தேவன் இந்த வார்த்தையை முக்கியமாக பயன்படுத்துகிறார். அவர் மனிதனை ஒடுக்க, அல்லது மனிதனை சமாதானப்படுத்த அடையாளங்களையும் அதிசயங்களையும் பயன்படுத்துவதில்லை. இது தேவனின் வல்லமையைத் தெளிவுபடுத்த முடியாது. தேவன் அறிகுறிகளையும் அதிசயங்களையும் மட்டுமே காட்டியிருந்தால், தேவனின் யதார்த்தத்தை தெளிவுபடுத்துவது சாத்தியமில்லை, இதனால் மனிதனை பரிபூரணமாக்குவது சாத்தியமில்லை. தேவன் மனிதனை அடையாளங்களாலும், அதிசயங்களாலும் பரிபூரணமாக்குவதில்லை, ஆனால் இந்த வார்த்தையை மனிதனை நீர்ப் பாய்ச்சி மேய்த்திடப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு மனிதனின் முழுமையான கீழ்ப்படிதலும், தேவனைப் பற்றிய மனிதனின் அறிவும் அடையப்படுகிறது. அவர் செய்யும் கிரியையின் மற்றும் அவர் பேசும் வார்த்தைகளின் நோக்கம் இதுதான். மனிதனை பரிபூரணமாக்குவதற்கு அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கும் முறையை தேவன் பயன்படுத்துவதில்லை. அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் மனிதனை பரிபூரணமாக்க கிரியையின் பலவிதமான முறைகளைப் பயன்படுத்துகிறார். இது வார்த்தைகளைச் செம்மைப்படுத்துதல், கையாளுதல், சீரமைத்தல் அல்லது வழங்குதல் என இருந்தாலும், மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், தேவனின் கிரியை, ஞானம் மற்றும் அதிசயத்தைப் பற்றியும் மனிதனுக்கு அதிக அறிவைத் தருவதற்கும் தேவன் பல்வேறு கண்ணோட்டங்களில் பேசுகிறார். கடைசி நாட்களில் தேவன் காலத்தை முடிக்கும் நேரத்தில் மனிதன் முழுமையாக்கப்படுகையில், அறிகுறிகளையும் அதிசயங்களையும் பார்க்க அவன் தகுதி பெறுவான். நீ தேவனை அறிந்துகொண்டு, அவர் என்ன செய்தாலும் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்தால், நீ அறிகுறிகளையும் அதிசயங்களையும் காணும்போது அவரைப் பற்றி உனக்கு இனி எந்த கருத்துக்களும் இருக்காது. இந்த நேரத்தில், நீ சீர்கேடு நிறைந்தவனும் தேவனுக்கு முழுமையான கீழ்ப்படிய இயலாதவனுமாய் இருக்கும் இந்த நிலையில் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காண நீ தகுதியுடையவன் என்று நினைக்கிறாயா? காலம் மாறும்போதும், மேலும், காலம் முடிவடையும் போதும், தேவன் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காண்பிக்கும் போது, அது தேவன் மனிதனைத் தண்டிப்பது ஆகும். தேவனின் கிரியை சாதாரணமாக மேற்கொள்ளப்படும்போது, அவர் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்டுவதில்லை. அறிகுறிகளையும் அதிசயங்களையும் காண்பிப்பது அவருக்கு மிகவும் எளிது, ஆனால் அது தேவனின் கிரியையின் கொள்கை அல்ல, மனிதனை நிர்வகிப்பதன் தேவனுடைய நோக்கமும் அல்ல. மனிதன் அடையாளங்களையும் அதிசயங்களையும் கண்டிருந்தால், தேவனின் ஆவிக்குரிய சரீரம் மனிதனுக்குத் தோன்றினால், எல்லா மக்களும் தேவனை நம்பமாட்டார்களா? கிழக்கிலிருந்து மீண்டவர்களில் ஒரு குழுவினர் ஆதாயப்படுத்தப்பட்டார்கள் என்று நான் முன்பு கூறியுள்ளேன், மீண்டவர்கள் பெரும் உபத்திரவங்களுக்கு மத்தியில் இருந்து வந்தவர்கள். இந்த வார்த்தைகளின் பொருள் என்ன? தீர்ப்பு மற்றும் தண்டனை, மற்றும் கையாளுதல் மற்றும் பராமரிப்பு, மற்றும் அனைத்து வகையான சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கும் பின்னர் மட்டுமே இந்த ஜனங்கள் உண்மையிலேயே கீழ்ப்படிந்ததால் மீட்டுக் கொள்ளப்பட்டார்கள் என்று அவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள். இந்த ஜனங்களின் விசுவாசம் தெளிவற்றது மற்றும் சுருக்கமானது, ஆனால் உண்மையானது. அவர்கள் எந்த அறிகுறிகளையும் அதிசயங்களையும், எந்த அற்புதங்களையும் பார்த்ததில்லை. அவர்கள் சுருக்கமான வார்த்தைகள் மற்றும் கோட்பாடுகள் அல்லது ஆழமான நுண்ணறிவுகளைப் பற்றி பேசுவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் யதார்த்தத்தையும், தேவனின் வார்த்தைகளையும், தேவனின் யதார்த்தத்தைப் பற்றிய உண்மையான அறிவையும் கொண்டுள்ளனர். அத்தகைய குழு தேவனின் வல்லமையைத் தெளிவுபடுத்துவதில் அதிக திறன் கொண்டதல்லவா? கடைசி நாட்களில் தேவனின் கிரியை உண்மையான கிரியையாகும். இயேசுவின் காலத்தில், அவர் மனிதனை பரிபூரணமாக்க வரவில்லை, ஆனால் மனிதனை மீட்பதற்காக வந்தார், ஆகவே, ஜனங்கள் தம்மைப் பின்பற்றும்படி சில அற்புதங்களை அவர் காட்டினார். அவர் முக்கியமாக சிலுவையில் அறையப்படும் கிரியையை செய்து முடிக்க வந்தார், அறிகுறிகளைக் காண்பிப்பது அவருடைய ஊழியத்தின் ஒரு பகுதியாக இல்லை. இத்தகைய அறிகுறிகளும் அதிசயங்களும் அவருடைய கிரியையைச் சிறப்பாகச் செய்வதற்காக செய்யப்பட்ட கிரியையாகும், அவை கூடுதல் கிரியை ஆகும், மற்றும் எல்லா காலத்தின் கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. பழைய ஏற்பாட்டு காலத்தின் போது, தேவன் சில அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்டினார். ஆனால் இன்று தேவன் செய்யும் கிரியை உண்மையான கிரியை, அவர் நிச்சயமாக இப்போது அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்ட மாட்டார். அவர் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்டினால், அவருடைய உண்மையான கிரியை சீர்குலைந்து போகும், மேலும் அவரால் மேலும் எந்த கிரியையும் செய்ய முடியாது. மனிதனை பரிபூரணமாக்குவதற்கு தேவன் வார்த்தையைச் சொல்லியிருந்தார், ஆனால் அறிகுறிகளையும் அதிசயங்களையும் கூடக் காட்டினார் என்றால், மனிதன் உண்மையிலேயே அவரை விசுவாசிக்கிறானா இல்லையா என்பதை தெளிவுபடுத்த முடியுமா? இவ்வாறு, அத்தகைய செயல்களைத் தேவன் செய்வதில்லை. மனிதனுக்குள் மதம் அதிகமாக இருக்கிறது. மனிதனுக்குள் இருக்கும் அனைத்து மதக் கருத்துகளையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் வெளியேற்றவும், தேவனின் யதார்த்தத்தை மனிதனுக்கு தெரியப்படுத்தவும் தேவன் கடைசி நாட்களில் வந்துள்ளார். அவர் சுருக்கமாகவும், கற்பனையாகவும் இருக்கும் ஒரு தேவனின் உருவத்தை அகற்ற வந்திருக்கிறார். வேறுவிதமாகக் கூறினால், அது இல்லாத ஒரு தேவனின் உருவம் ஆகும். எனவே, இப்போது உனக்கு யதார்த்தத்தைப் பற்றிய அறிவு இருப்பது மட்டுமே விலைமதிப்பற்றது! உண்மை எல்லாவற்றையும் புறக்கணிக்கிறது. இன்று நீ எவ்வளவு உண்மையுள்ளவனாய் இருக்கிறாய்? அவை அனைத்தும் தேவனின் அடையாளங்கள் மற்றும் அதிசயங்களைக் காண்பிக்கின்றனவா? பொல்லாத ஆவிகளும் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்டலாம். அவைகள் அனைத்தும் தேவனா? தேவன் மீது அவர் வைத்திருக்கும் விசுவாசத்தில், மனிதன் தேடுவது உண்மையையே, அறிகுறிகளையும் அதிசயங்களையும் விட, அவன் பின்பற்றுவது வாழ்க்கையே. இதுவே தேவனை விசுவாசிக்கிற அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

297. உலகத்தைப் படைப்பது யேகோவாவின் கிரியையாக இருந்தது, அது ஆதியாக இருந்தது; கிரியையின் இந்தக் கட்டமானது கிரியையின் முடிவாகவும், இதுவே இறுதியானதாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில், தேவனின் கிரியை இஸ்ரவேலின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்டது, மேலும் அது எல்லா இடங்களிலும் மிகவும் பரிசுத்தமான ஒரு புதிய யுகத்தின் விடியலாக இருந்தது. உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கும், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்துத் தேசங்களிலும் மிகவும் தூய்மையற்ற நிலையில் கடைசிக் கட்டக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டத்தில், தேவனின் கிரியைகள் எல்லா இடங்களிலும் பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டன, கடைசிக் கட்டத்தில் எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமான இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் இந்த அந்தகாரம் வெளியேற்றப்படும், வெளிச்சம் உள்ளே கொண்டுவரப்படும், ஜனங்கள் அனைவரும் ஜெயங்கொள்ளப்படுவர். எல்லா இடங்களைக் காட்டிலும் மிகவும் தூய்மையற்ற மற்றும் அந்தகார இடத்தைச் சேர்ந்த இந்த ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்டதும், மெய்த்தேவன் என்று ஒரு தேவன் இருக்கிறார் என்பதை ஜனங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டதும், ஒவ்வொருவரும் முற்றிலும் நம்பியதும், ஜெயங்கொள்ளுவதற்கான கிரியையை பிரபஞ்சம் முழுவதும் செயல்படுத்த இந்த உண்மை பயன்படுத்தப்படும். கிரியையின் இந்தக் கட்டம் ஒரு அடையாளமாகும்: இந்த யுகத்தின் கிரியைகள் முடிந்ததும், ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகையின் கிரியை முழுமையாக நிறைவுபெறும். எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமாக இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டவுடன், அது மற்ற எல்லா இடங்களிலும் இருக்கும் என்று சொல்லாமல் போகிறது. எனவே, ஜெயங்கொள்ளப்படுவதற்கான கிரியை சீனாவில் மட்டுமே அர்த்தமுள்ள அடையாளத்தைக் கொண்டுள்ளது. சீனா அந்தகாரத்தின் அனைத்து வல்லமைகளையும் உள்ளடக்குகிறது, மேலும் சீன ஜனங்கள் சாத்தானின் மாம்சமும் இரத்தமுமாக இருக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் மிகவும் சீர்கெட்டுப்போன சீன ஜனங்கள்தான், தேவனுக்கு எதிரான வலுவான எதிர்ப்பைக் கொண்டுள்ளனர், அவர்களின் மனுஷத்தன்மை மிகவும் கீழ்த்தரமானது மற்றும் தூய்மையற்றது, எனவே அவர்கள் தான் சீர்கெட்டுப்போன முழு மனுஷகுலத்தில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இதனால் மற்ற தேசங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்ல முடியாது; மனுஷனின் கருத்துக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை, இந்தத் தேசங்களின் ஜனங்கள் நல்ல திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தேவனை அறியாவிட்டால், அவர்கள் அவரை எதிர்ப்பதாகவே இருக்கக் கூடும். யூதர்களும் எதற்காக தேவனை எதிர்த்தார்கள், எதற்காக அவரை மீறினார்கள்? பரிசேயர்களும் ஏன் அவரை எதிர்த்தார்கள்? யூதாஸ் ஏன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்? அந்த நேரத்தில், சீஷர்களில் பலருக்கு இயேசுவை தெரியாது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த பின்பும் ஜனங்கள் ஏன் அவரை நம்பவில்லை? மனுஷனின் கீழ்ப்படியாமை அனைத்தும் ஒன்றுபோல் இல்லையா? சீன ஜனங்கள் எடுத்துக்காட்டுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அவர்கள் ஜெயங்கொள்ளப்படும்போது, மாதிரிகளாகவும் விளக்கமாதிரிகளாகவும் மாறுகிறார்கள், மேலும் மற்றவர்களுக்கான சான்றாதாரங்களாக இருப்பார்கள். எனது ஆளுகைத் திட்டத்திற்கு நீங்கள் ஒரு துணைப்பொருள் என்று நான் ஏன் எப்போதும் கூறிவந்தேன்? சீர்கேடு, தூய்மையற்ற தன்மை, அநீதி, எதிர்ப்பு, கலகம் ஆகியவை சீன ஜனங்களில் தான் முழுமையாக வெளிக்காட்டப்பட்டு அவற்றின் அனைத்து மாறுபட்ட வடிவங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருபுறம், அவர்கள் மோசமான திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர், மறுபுறம், அவர்களின் ஜீவிதங்களும் மனநிலையும் பின்தங்கியவையாக இருக்கின்றன, மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள், சமூகச் சூழல், பிறந்த குடும்பம் அனைத்துமே மோசமாக மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. அவர்களின் அந்தஸ்தும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த இடத்திலுள்ள கிரியை அடையாளமாக இருக்கிறது, மேலும் இந்த சோதனைக் கிரியை முழுவதுமாக மேற்கொள்ளப்பட்ட பின்னர், தேவனின் அடுத்தடுத்தக் கிரியைகள் மிகச் சிறப்பாகச் செயல்படும். கிரியையின் இந்தக் கட்டம் நிறைவடைந்தால், அடுத்தடுத்தக் கிரியைகள் சிறப்பாகச் செயல்படும். கிரியையின் இந்தக் கட்டம் முடிந்தவுடன், மகத்தான ஜெயம் முழுமையாக கிடைக்கும், மேலும் பிரபஞ்சம் முழுவதிலும் ஜெயங்கொள்வதற்கான கிரியை முழுமையான முடிவுக்கு வந்திருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)” என்பதிலிருந்து

298. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் தேவன் செய்கின்ற அவரது ஊழியத்தின் தனித்த கவனமாக இந்த ஜனக்கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அவர் தனது இதயத்தின் இரத்தம் முழுவதையும் உங்களுக்காகப் பலியாகச் செலுத்தியுள்ளார், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஆவியானவர் செய்த எல்லாக் கிரியையையும் மீட்டு உங்களிடம் கொடுத்துள்ளார். அதனாலேயே நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்று நான் சொல்லுகின்றேன். மேலும் அவர் தனது மகிமையை அவர் தேர்ந்தெடுத்த ஜனமான இஸ்ரவேல் மக்களிடமிருந்து எடுத்து உங்களிடம் கொடுத்துள்ளார். அவர் தனது திட்டத்தின் நோக்கத்தை முழுமையாக இந்த ஜனக்கூட்டத்தின் மூலமாகவே வெளிப்படுத்துவார். எனவே தேவனின் சுதந்தரத்தைப் பெறப்போகின்றவர்கள் நீங்களே, அது மாத்திரமல்ல தேவனின் மகிமைக்கான வாரிசுகளும் நீங்களே. உங்களுக்கு ஒருவேளை “அதி சீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.” என்ற வசனம் நினைவுக்கு வரலாம். நீங்கள் அனைவரும் இந்த வார்த்தைகளை இதற்கு முன்பு கேட்டிருப்பீர்கள், ஆனால் நீங்கள் எவருமே அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இன்று உங்களுக்கு அதன் உண்மையான முக்கியத்துவத்தை குறித்து ஆழமான ஒரு தெளிவு உள்ளது. இந்த வார்த்தைகள் தேவனால் இறுதி நாட்களில் நிறைவேற்றப்படும், குறிப்பாக கிறிஸ்துவுக்காக அந்த சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் அது இருக்கும் தேசத்தில் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டவர்களிடம் அது நிறைவேறும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் தேவனைத் துன்புறுத்துகின்றது, அது தேவனின் எதிரியாக இருக்கின்றது, எனவே இந்தத் தேசத்தில் தேவனை விசுவாசிக்கின்றவர்கள் யாவரும் அவமானத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்படுவார்கள், இதன் மூலம் இந்த வார்த்தைகள் இந்த ஜனக்கூட்டமாகிய உங்களிடத்தில் நிறைவேறுகின்றது. ஏனென்றால் அது தேவனை எதிர்க்கின்ற ஒரு தேசத்திலேயே அலைந்து திரிகின்றது. தேவனின் அனைத்து கிரியைகளும் மிகப்பெரிய இடையூறுகளைச் சந்திக்கின்ற காரணத்தால் அவரின் வார்த்தைகளை நிறைவேற்ற அதிகக் காலம் எடுத்துக்கொள்கிறது, அந்தப்படியே மக்கள் தேவ வார்த்தையின் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றார்கள், இதுவும் பாடுகள் அனுபவிப்பதன் ஒரு பங்காகும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் இருக்கின்ற தேசத்தில் தனது கிரியையை நடப்பிப்பது தேவனுக்கு மிகக் கடினமாகும், ஆனால் இந்தக் கடினத்தினூடாகவே தனது ஒரு கட்ட கிரியையைத் தேவன் செய்கின்றார், அது அவரது ஞானத்தையும் அதிசயமான கிரியைகளையும் வெளிப்படுத்துவதோடு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த மக்கள் கூட்டத்தை முழுமையாக்குவதுமாகும். மக்களின் பாடுகளினூடாகவும், அவர்களின் திறமையினூடாகவும் அனைத்து சாத்தானுக்கேதுவான மனநிலைக்கு ஊடாகவுமே தேவன் தனது தூய்மைப்படுத்துதல் மற்றும் ஆதாயப்படுத்துதல் பணியைச் செய்கிறார். இதன் மூலம் அவர் மகிமையடைந்து அவரது செயல்களுக்கு சாட்சி பகர்கின்ற ஜனங்களை அவர் ஆதாயப்படுத்திக்கொள்வார். தேவன் இந்த மக்கள் கூட்டத்திற்கு செய்த அனைத்து தியாகங்களின் முழுமையான முக்கியத்துவம் என்னவெனில் தேவன் தனது ஆதாயப்படுத்தல் கிரியையை அவரை எதிர்க்கின்றவர்களினூடாகாவே செய்கின்றார், அதனூடாகவே தேவனின் மகத்தான வல்லமை வெளிப்படும். இதை வேறுவிதமாய் சொன்னால், தூய்மை இல்லாத தேசத்தில் வாழ்கின்ற மக்கள் மாத்திரமே தேவனின் கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ள பாத்திரராய் இருக்கின்றார்கள், மேலும் இது மாத்திரமே தேவனின் மகத்தான வல்லமையை முன்னிலைப்படுத்திக் காட்டக்கூடியது. அதனாலேயே இது தூய்மையற்ற தேசத்திலிருந்து வந்தது என்று கூறுகின்றேன், இவ்வாறான ஒரு தேசத்தில் வாழ்கின்ற மக்களிடமிருந்தே தேவனின் மகிமை பெறப்படுகின்றது. இதுவே தேவனின் சித்தம். இயேசுவும் இவ்வாறான ஒரு கட்டத்திலேயே கிரியை செய்தார்: அவரை துன்புறுத்திய பரிசேயர் முன்னாலேயே அவர் மகிமைப்படுத்தப்பட முடியும். பரிசேயரின் துன்புறுத்தலோ யூதாசின் காட்டிக்கொடுத்தலோ இல்லாமல் போய் இருந்தால், இயேசு ஏளனத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகியிருக்கமாட்டார், அதைவிட அவர் மிக நிச்சயமாகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கமாட்டார், அதனாலே அவர் மகிமையடைந்திருக்கமாட்டார். எங்கே தேவன் ஒவ்வொரு காலத்திலும் கிரியை செய்கின்றாரோ, அவர் எங்கே தனது கிரியையை மாம்சத்தில் செய்கின்றாரோ, அங்கேயே அவர் தனது மகிமையையும் அவர் ஆதாயப்படுத்த எண்ணுகின்றவர்களையும் பெறுகின்றார். தேவனின் கிரியைக்கான திட்டமும் அதற்கான அவரின் வழிமுறையும் இதுவே.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?” என்பதிலிருந்து

299. பல்லாயிர வருட தேவனுடைய திட்டத்தில், இரு பகுதி கிரியைகள் மாம்சத்தில் செய்யப்படுகின்றன: முதலாவது கிரியை சிலுவையில் அறையப்படுதல், அதற்காக அவர் மகிமைப்படுகிறார், அடுத்தது கடைசி நாட்களின் ஆதாயப்படுத்துதல் மற்றும் பரிபூரணப்படுத்துதல் கிரியையாகும், அதற்காகவும் அவர் மகிமைப்படுகிறார். இதுவே தேவனின் திட்டம். எனவே உங்களுக்கு கொடுக்கப்பட்ட தேவனின் கிரியையையோ அவரது கட்டளையையோ எளிதான விஷயமாகக் கருத வேண்டாம். அதைப்பார்க்கிலும் நீங்கள் எல்லோரும் தேவனால் விசேஷமாக அபிஷேகம் பண்ணப்பட்ட பிரகாரம் அவரது மகத்தான கிருபைக்கான சுதந்திரவாளியாக உள்ளீர்கள். அவரது மகிமையின் இரு பகுதிகளில் ஒன்று உங்களில் வெளிப்படுகின்றது, தேவனுடைய கிருபையின் ஒரு பங்கு முழுமையும் உங்களுக்கு உங்கள் சுதந்திரமாகும் பொருட்டு வழங்கப்பட்டது. தேவன் உங்களை உயர்த்துகின்ற இந்தத் திட்டத்தை அவர் பல காலத்திற்கு முன்பே முன்குறித்ததொன்றாகும். அந்த சிவப்பான பெரிய வலுசர்ப்பம் இருக்கின்ற தேசத்தில் தேவன் செய்த கிரியைகளின் மகத்துவத்தைப் பார்த்தால், அந்தச் செயல்கள் வேறு எங்கேயும் செய்யப்பட்டிருந்தால் அது எப்பொழுதோ மிகுந்த கனி கொடுத்து மக்களால் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். மேலுமாக இயேசுவின் கிரியை ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றபடியால் இந்தக் கிரியையானது மேற்கில் இருக்கின்ற தேவனை விசுவசிக்கின்ற குருமாருக்கு ஏற்றுக்கொள்ள மிக மிக இலகுவாக இருக்கும். இதனாலேயே தேவனால் மகிமையடைதல் கிரியையின் இந்தக்கட்டத்தை வேறெங்கும் அடைய முடியாதுள்ளது. மக்களின் முழு ஆதரவைப்பெற்று தேசங்களால் அங்கீகரிக்கப்படும் போது, அது நிலைத்து நிற்காது. இந்த நிலத்தில் இந்தக் கட்ட கிரியை நடைபெற வேண்டியதற்கான மாபெரும் முக்கியத்துவம் இதுவே. உங்களில் ஒருவராகிலும் நியாயப்பிரமாணத்தால் இரட்சிப்பைப் பெறப்போவதில்லை, மாறாக நீங்கள் நியாயப்பிரமாணத்தால் தண்டிக்கப்படுகிறீர்கள். இன்னும் கடினமான காரியம் என்னவென்றால் ஜனங்கள் உங்களைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்: அது உங்கள் உறவினரோ, பெற்றோரோ, உங்கள் நண்பர்களோ உங்களுடன் வேலையாட்களோ, யாராக இருந்தாலும் அவர்கள் உங்களைப் புரிந்துகொள்ளப்போவதில்லை. நீங்கள் தேவனால் “கைவிடப்படும்” போது உங்களால் பூமியில் தொடர்ந்து வாழ இயலாது, இருப்பினும் மக்களால் தேவனைவிட்டு விலகி இருப்பதை நினைத்துப் பார்க்க முடியாது, இதுவே தேவன் மக்களை ஆதாயாப்படுத்துவதன் முக்கியத்துவமும் தேவனின் மகிமையுமாகும். நீங்கள் இன்று சுதந்தரித்த காரியங்கள் யுகம் முழுவதும் வாழ்ந்த அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், ஏன் மோசே மற்றும் பேதுருவை பார்க்கிலும் மகத்தானது. ஆசீர்வாதங்களை உங்களால் ஓரிரு நாட்களில் பெற முடியாது, அதைப் பெரிய தியாகத்தின் ஊடாக சம்பாதிக்க வேண்டும். இன்னும் விரிவாகச் சொன்னால், சுத்திகரிக்கப்பட்ட அன்பையும், ஆழமான விசுவாசத்தையும், தேவன் நாம் அடைய வேண்டுமென்று வேண்டுகின்ற பல சத்தியங்களையும், நீதிக்காக பயமின்றி போராடுகின்ற மனதையும், தேவன் மீது இடைவிடாத மற்றும் ஆழமான அன்பையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் உறுதி இருக்க வேண்டும், உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும், உங்கள் குறைகள் நிறைவாக்கப்பட வேண்டும். எந்த குறைகூறுதலும் இல்லாமல் தேவனின் எல்லா வழிநடத்துதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அத்துடன் மரண பரியந்தம் வரைக்கும் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அடைய வேண்டியது இதுவே, இதுவே தேவனின் கிரியையின் இறுதி நோக்கம். இதையே தேவன் இந்த மக்கள் கூட்டத்திடம் எதிர்பார்க்கின்றார். அவர் உங்களுக்கு கொடுக்கின்றபடியால், அவர் நிச்சயம் உங்களிடம் எதிர்பார்ப்பதோடு உங்களுக்குக் கொடுத்ததன் பிரகாரம் அவர் கேட்பார். எனவே தேவன் செய்கின்ற அனைத்து கிரியைகளுக்கும் காரணமுண்டு, இது ஏன் தேவன் மீண்டும் மீண்டும் கடுமையான சாவல் மிக்க கிரியைகளைச் செய்கின்றார் என்பதைக் காண்பிக்கின்றது. இந்த காரணத்தினாலேயே நீங்கள் தேவன் மேல் கொண்டுள்ள விசுவாசத்தால் நிரம்பியிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லுவதென்றால், தேவனுடைய எல்லாக் கிரியைகளும் நீங்கள் அவரின் சுதந்தரிப்பைப் பெற்றுக்கொள்ள பாத்திராராய் இருக்கும்பொருட்டு உங்கள் நிமித்தமே செய்யப்படுகின்றது. இந்தக் காரியம் குறிப்பாகத் தேவனின் சுய மகிமைக்காக செய்யப்படுவதில்லை, ஆனால் இது உங்களின் இரட்சிப்பிற்காகவும் இந்தத் தூய்மையற்ற தேசத்தில் பயங்கரமாகத் துன்புறுத்தப்பட்ட மக்கள் கூட்டத்தைப் பூரணப்படுத்தவும் செய்யப்படுகின்றது. நீங்கள் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இதைக் குறித்து எந்தவொரு விழிப்புணர்வற்ற ஜனங்களுக்குச் சொல்லுகின்ற ஒரு புத்திமதி என்னவென்றால் தேவனைச் சோதிக்கவோ அவரை இனியும் எதிர்க்கவோ வேண்டாம். எந்த மனிதனுமே அனுபவிக்காத பாடுகளை தேவன் அனுபவித்துள்ளார், அத்தோடு மனிதனுக்குப் பதில் அவர் பெரிதான அவமானத்தையும் அனுபவித்துவிட்டார். உங்களால் வேறு எதை விட முடியவில்லை? தேவனின் சித்தத்தைவிட முக்கியமான காரியம் எதுவாக இருக்கும்? தேவனின் அன்பை பார்க்கிலும் எது உயர்ந்ததாக இருக்கும்? தேவன் தனது கிரியையை இந்த அசுத்தமான தேசத்தில் செய்வது ஏற்கனவே கடினமான ஒன்றாக இருக்கும் போது; மனிதன் தெரிந்துகொண்டே வேண்டுமென்று நெறிதவறி நடக்கும் போது, தேவனின் பணியில் தாமதம் ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், இது யாருக்கும் நல்லதல்ல, இது யாருக்கும் நன்மை பயக்காது. தேவன் நேரத்தின் வரையறைக்குள் இருப்பவரல்ல; அவரது செயலும் அவரது மகிமையுமே முதலிடம் பெறுகின்றது. எனவே அவர் தனது செயலுக்காக, அது எவ்வளவு காலம் எடுத்தாலும், அதற்கான எந்தக் கிரயத்தையும் அவர் செலுத்துவார். தேவனின் குணாதிசயம் இதுவே. அவர் தனது பணி முடியும் வரைக்கும் அவர் ஓய்வதில்லை. அவர் தனது மகிமையின் இரண்டாம் பகுதியை பெற்ற பின்னரே அவரது பணி முடிவிற்கு வரும். இந்த முழு பிரபஞ்சத்திலேயும் தேவன் தனது மகிமைடைதலின் இரண்டாம் பகுதியை முடிக்காவிட்டால், அவரது நாள் ஒரு போதும் வராது, அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களிடமிருந்து அவரது கரம் ஒரு நாளும் விலகாது, அவரது மகிமை ஒரு போதும் இஸ்ரவேல் மேல் இறங்கி வராது, அத்துடன் அவரது திட்டம் ஒரு காலமும் நிறைவேறாது. நீங்கள் தேவனின் சித்தத்தை காணக்கூடியவர்களாக இருக்க வேண்டும், அத்தோடு தேவனின் கிரியையானது வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டித்தது போல எளிமையான காரியமல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற கிரியை கறைபட்டவர்களை, உச்ச நிலையில் உணர்வற்றவர்களை உருமாற்றம் செய்வதாகும், அதாவது தேவனால் படைக்கப்பட்ட ஆனால் சாத்தானால் அசுத்தமக்கப்பட்டவர்களை தூய்மையாக்குதலாகும். இந்த கிரியை ஆதாம் அல்லது ஏவாளை சிருஷ்டிப்பது அல்ல, இன்னும் கூறினால் இது வெளிச்சத்தின் அல்லது அனைத்து செடிகொடிகள் மற்றும் விலங்குகளை சிருஷ்டிப்பதற்கும் சற்றும் குறைந்ததல்ல. சாத்தானால் அழுக்காக்கப்பட்ட விஷயங்களை தேவன் சுத்தப்படுத்தி அவற்றைப் புதிதாக்குகின்றார்; அவை அவருக்கு சொந்தமாகின்றது, அவை அவரின் மகிமையாய் மாறுகின்றது. இது மனிதன் கற்பனை செய்வதைப் போன்ற ஒரு காரியமல்ல, இது வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டிப்பது போன்றோ, சாத்தானை அடியில்லாக் குழிக்குள் தள்ளுவதைப் போன்றோ எளிமையான காரியமல்ல. மாறாக இது மனிதனை மாற்றுகின்ற ஒரு செயல், எதிர்மறையான காரியங்களையும் அவனுக்கு சொந்தமில்லாத காரியங்களையும் நேர்மறையாகவும் அவருக்குச் சொந்தமாகவும் மாற்றுவதாகும். தேவனின் கிரியையின் இந்தக் கட்டத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை இதுவே. நீங்கள் இதைப் புரிந்துகொண்டு காரியங்களை எளிமையாக்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். தேவனின் கிரியையானது மற்ற சாதாராண வேலைகளை போன்றதல்ல. அதன் விந்தையும் ஞானமும் மனிதனின் சிந்தைக்கு எட்டாதவை. தேவன் எல்லா காரியங்களையும் கிரியையின் இந்த கட்டத்தில் படைக்கவில்லை, அதேபோலே அவர் அவற்றை அழிப்பதுமில்லை. மாறாக அவர் படைத்த சாத்தானால் களங்கப்படுத்தப்பட்ட காரியங்களை உருமாற்றி தூய்மையாக்குகின்றார். இவ்விதமாக தேவன் ஒரு பெரிய கிரியையைச் செய்வதற்குப் புறப்படுகின்றார், இதுவே தேவனின் கிரியையின் முக்கிய அம்சமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?” என்பதிலிருந்து

300. தேவன், சாத்தானை தோற்கடிக்க மனுஷ நிர்வகித்தலைப் பயன்படுத்துகிறார். ஜனங்களை சீரழிப்பதன் மூலம், சாத்தான் அவர்களின் தலைவிதியை நெருக்கி, தேவனின் கிரியையை சீர்குலைக்கிறான். மறுபுறம், மனிதகுலத்தை இரட்சிப்பதே தேவனின் கிரியையாக இருக்கிறது. தேவன் செய்யும் கிரியையின் எந்தக் கட்டம் மனிதகுலத்தை இரட்சிப்பதற்காக இல்லை? எந்த நடவடிக்கை ஜனங்களை தூய்மைப்படுத்துவதற்கும், அவர்கள் நீதியுடன் நடந்துகொள்வதற்கும், நேசிக்கக்கூடியவர்களின் உருவத்தை வெளிப்படுத்துவதற்கும் இல்லை? இருப்பினும், சாத்தான் இதைச் செய்வதில்லை. அவன் மனிதகுலத்தை சீரழிக்கிறான்; அவன் தொடர்ந்து பிரபஞ்சம் முழுவதும் மனிதகுலத்தை சீரழிக்கும் கிரியையை மேற்கொள்கிறான். நிச்சயமாக, தேவன் சாத்தானுக்கு கவனம் செலுத்தாமல் தனது சொந்த கிரியையைச் செய்கிறார். சாத்தானுக்கு எவ்வளவு அதிகாரம் இருந்தாலும், அந்த அதிகாரம் தேவனால் வழங்கப்பட்டதே; தேவன் அவருடைய எல்லா அதிகாரத்தையும் மொத்தமாகக் கொடுக்கவில்லை, எனவே சாத்தான் என்ன செய்தாலும், அவனால் ஒருபோதும் தேவனை மிஞ்ச முடியாது, எப்போதும் தேவனின் பிடியில் தான் இருக்கமுடியும். தேவன் பரலோகத்தில் இருந்தபோது அவருடைய எந்தக் கிரியைகளையும் வெளிப்படுத்தவில்லை. அவர் வெறுமனே சாத்தானுக்கு அதிகாரத்தின் ஒரு சிறிய பகுதியைக் கொடுத்து, மற்ற தேவதூதர்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவர அவர் அனுமதித்தார். ஆகையால், சாத்தான் என்ன செய்தாலும், அவனால் தேவனின் அதிகாரத்தை மிஞ்ச முடியாது, ஏனென்றால் தேவன் முதலில் வழங்கிய அதிகாரம் மிகக் குறைவானது தான். தேவன் கிரியை செய்கையில், சாத்தான் இடையூறு செய்கிறான். கடைசி நாட்களில், அவனது இடையூறுகள் முடிவடையும்; அதேபோல், தேவனின் கிரியையும் முடிவடையும், மேலும் தேவன் பரிபூரணப்படுத்த விரும்பும் மனுஷர், பரிபூரணப்படுத்தப்படுவர். தேவன், ஜனங்களை நேர்மறையாக வழிநடத்துகிறார்; அவரது வாழ்க்கை ஜீவத்தண்ணீர்போன்றது, அளவிட முடியாதது மற்றும் எல்லையற்றது. சாத்தான் மனுஷனை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சீரழித்துவிட்டான்; முடிவில், ஜீவத்தண்ணீர்மனுஷனை பரிபூரணப்படுத்தும், சாத்தானால் தலையிட்டு அவனது கிரியையைச் செய்ய இயலாது. இதன்மூலம், தேவனால் இந்த ஜனங்களை முழுமையாகத் திரும்பப் பெற முடியும். இப்போது கூட, சாத்தான் இதை ஏற்க மறுக்கிறான்; அவன் தொடர்ந்து தேவனுக்கு எதிராகத் தன்னைத் தூண்டுகிறான், ஆனால் அவர் அதைக் கவனிப்பதே இல்லை. “சாத்தானின் அந்தகாரப் படைகள் அனைத்தையும், சகல அந்தகாரச் செல்வாக்குகளையும் நான் வெற்றி கொள்வேன்,” என்று தேவன் கூறியுள்ளார். இது இப்போது மாம்சத்தில் செய்யப்பட வேண்டிய கிரியை, மேலும் இதுவே தேவன் மாம்சமாக மாறுவதையும் முக்கியமாக்குகிறது: அதாவது, கடைசி நாட்களில் சாத்தானை தோற்கடிக்கும் கிரியையின் கட்டத்தை நிறைவு செய்வதற்கும், சாத்தானுக்கு சொந்தமான அனைத்தையும் துடைத்தெறிவதற்கும் இந்தக் கிரியை செயல்படுத்தப்படும். உண்மையில், சாத்தான் ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்பே தோல்வியடைந்து விட்டான். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசம் முழுவதும் சுவிசேஷம் பரவத் தொடங்கியபோது—அதாவது, தேவனின் மனுஷ அவதரிப்பு அவருடைய கிரியையைத் தொடங்கியதும், இந்தக் கிரியை செயல்பாட்டிற்கு வந்தது—சாத்தான் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டான், ஏனென்றால் மனுஷ அவதரிப்பின் நோக்கம் சாத்தானை வெல்வதே ஆகும். தேவன் மீண்டும் மாம்சமாகி, எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாத தன் கிரியையை துவங்கிவிட்டார் என்பதை சாத்தான் கண்டவுடனேயே, இந்தக் கிரியையைக் கண்டு அவன் திகைத்துப்போனான், மேலும் எந்தக் குறும்புகளையும் செய்யத் துணியவில்லை. முதலில் சாத்தான், தாமும் ஏராளமான ஞானத்தைக் கொண்டிருப்பதாக நினைத்து, தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவித்தான்; எவ்வாறாயினும், தேவன் மீண்டும் மாம்சமாக மாறுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை, அல்லது அவருடைய கிரியையில், மனுஷரை வென்று சாத்தானை தோற்கடிக்க தேவன் சாத்தானின் கலகத்தனத்தை மனிதகுலத்திற்கான வெளிப்பாடாகவும் நியாயத்தீர்ப்பாகவும் பயன்படுத்துவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தேவன் சாத்தானை விட புத்திசாலி, அவருடைய கிரியைகள் அதை விட புத்திசாலித்தனமானவை. ஆகையால், நான் முன்பு கூறியது போல், “நான் செய்யும் கிரியை சாத்தானின் தந்திரங்களுக்குப் பிரதியுத்தரமாக மேற்கொள்ளப்படுகிறது; இறுதியில், நான் என் சர்வவல்லமையையும், சாத்தானின் வல்லமையற்ற தன்மையையும் வெளிப்படுத்துவேன்.” தேவன் தனது கிரியையை முன்னணியில் மேற்கொள்வார், அதே நேரத்தில் சாத்தான் பின்னால் மேற்கொள்வான், இறுதியில், அவன் அழிக்கப்படுவான்—தன்னை எது அடித்தது என்று கூட அவனுக்குத் தெரியாது! அடித்து நொறுக்கப்பட்ட பின்னரே அவன் உண்மையை உணருவான், அதற்குள் அவன் ஏற்கனவே அக்கினிக்கடலில் எரிக்கப்பட்டிருப்பான். இப்போது அவன் முழுமையாக சமாதானமடைந்திருப்பான் இல்லையா? ஏனென்றால், சாத்தானுக்குக் கிரியை செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இருக்காது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

301. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில், மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு கட்ட கிரியையை நான் செய்து, அவர்களைக் காற்றிலே தூற்றியுள்ளேன். அதன் பிறகு வீசும் காற்றில் பலர் அமைதியாக பறக்கடிக்கப்படுகிறார்கள். உண்மையிலேயே, இது நான் அகற்ற பயன்படுத்தவிருக்கும் “போரடிக்கும் களம்” ஆகும்; இதற்காகத்தான் நான் வாஞ்சித்து காத்திருக்கிறேன், இதுதான் எனது திட்டமும் ஆகும். நான் கிரியை செய்யும்போது பொல்லாதவர்கள் பலர் உள்ளே நுழைந்திருக்கிறார்கள், ஆனால் நான் அவர்களைத் துரத்த அவசரப்படவில்லை. மாறாக, சரியான நேரத்தில் நான் அவர்களைச் சிதறடிப்பேன். அதற்குப் பிறகு மட்டுமே நான் ஜீவஊற்றாக இருப்பேன். என்னை உண்மையாக நேசிப்பவர்கள் அத்தி மரத்தின் கனிகளையும் லீலிபுஷ்பத்தின் வாசனையையும் என்னிடமிருந்து பெற அனுமதிப்பேன். புழுதியின் நிலமான சாத்தான் தங்கியிருக்கும் தேசத்தில், பசும்பொன் இல்லை, மணல் மட்டுமே உள்ளது. எனவே, இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொண்டு, நான் அத்தகைய ஒரு கட்ட கிரியையைச் செய்கிறேன். நான் ஆதாயம் செய்வது சுத்திகரிக்கப்பட்ட பசும்பொன் ஆகும், மணல் அல்ல என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். துன்மார்க்கன் என் வீட்டில் எப்படி இருக்க முடியும்? என் பரலோகத்தில், நரிகளை ஒட்டுண்ணிகளாக இருக்க நான் எப்படி அனுமதிக்க முடியும்? இந்த விஷயங்களைத் துரத்த நான் ஒவ்வொரு சாத்தியமான முறையையும் பயன்படுத்துகிறேன். என் சித்தம் வெளிப்படுவதற்கு முன்பு, நான் என்ன செய்யப் போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நான் அந்த பொல்லாதவர்களைத் துரத்துகிறேன், அவர்கள் என் சமூகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள். துன்மார்க்கருக்கு நான் இதைத் தான் செய்கிறேன். எனினும், அவர்கள் எனக்கு சேவை செய்ய, இன்னும் ஒரு நாள் அவர்களுக்காக இருக்கும். ஆசீர்வாதங்களுக்கான மனிதர்களின் விருப்பம் மிகவும் வலுவானது; எனவே, நான் என் சரீரத்தைத் திருப்பி, எனது மகிமையான முகத்தை புறஜாதியினருக்குக் காண்பிப்பேன், இதனால் மனிதர்கள் அனைவரும் தங்கள் சொந்த உலகில் ஜீவித்து தங்களைத் தாங்களே நியாயந்தீர்ப்பார்கள். நான் சொல்ல வேண்டிய வார்த்தைகளைச் சொல்லும்போதே, மனிதர்களுக்குத் தேவையானதை அவர்களுக்கு வழங்குகிறேன். மனிதர்களுக்கு புத்தி தெளியும் போது, நான் ஏற்கெனவே நீண்ட காலமாக என் கிரியையைப் பரவச் செய்திருப்பேன். நான் என் சித்தத்தை மனிதர்களிடம் வெளிப்படுத்துவேன், மனிதர்களிடம் என் கிரியையின் இரண்டாம் பகுதியைத் தொடங்குவேன். என் கிரியையுடன் எல்லா மனிதர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், அவர்கள் என்னை நெருக்கமாகப் பின்பற்ற அனுமதிப்பேன். நான் செய்ய வேண்டிய என் கிரியையை மனிதர்கள் என்னுடன் இணைந்து செய்ய, மனிதர்களால் செய்ய முடிந்த அனைத்தையும் அவர்களைச் செய்ய அனுமதிப்பேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’” என்பதிலிருந்து

302. எனது திட்டத்தின் ஒவ்வொரு படியிலும் சாத்தான் பின்னால் வந்து கொண்டிருக்கிறான், என் ஞானத்தின் மென்படலம் போல, எனது அசல் திட்டத்தை சீர்குலைப்பதற்கான வழிகளையும் மற்றும் முகாந்தரங்களையும் கண்டுபிடிக்க எப்போதும் முயற்சித்து வருகிறான். ஆயினும் அதன் மோசடித் திட்டங்களுக்கு நான் கீழடங்க முடியுமா? வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் என்னைச் சேவிக்கின்றன; சாத்தானின் வஞ்சகத் திட்டங்கள் வேறு எதுவாகவும் இருக்க முடியுமா? எனது ஞானம் துல்லியமாக ஊடறுக்கும் இடம் இதுதான்; இது துல்லியமாக எனது செயல்களைப் பற்றி ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கிறது, மேலும் இது எனது முழு இரட்சிப்புத் திட்டத்தின் செயல்பாட்டிற்கான கொள்கையாகும். ராஜ்யத்தைக் கட்டியெழுப்பும் சகாப்தத்தில், நான் இன்னும் சாத்தானின் வஞ்சகத் திட்டங்களைத் தவிர்க்கவில்லை, ஆனால் நான் செய்ய வேண்டிய கிரியையைத் தொடர்ந்து செய்கிறேன். பிரபஞ்சம் மற்றும் எல்லாவற்றின் மத்தியில், நான் சாத்தானின் செயல்களை என் மென்படலமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இது என் ஞானத்தின் வெளிப்பாடு இல்லையா? இது எனது கிரியையைப் பற்றித் துல்லியமாக ஆச்சரியப்படத்தக்கதாக இல்லையா? ராஜ்யத்தினுடைய யுகத்திற்குள் நுழையும் சந்தர்ப்பத்தில், பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் முற்றிலும் மறுரூபமாக்கப்பட்டு, அவை கொண்டாடி மகிழ்கின்றன. நீங்கள் வேறுபட்டவரா? யாருடைய இதயத்தில் தேனின் மதுரம் இல்லை? மகிழ்ச்சியில் புரண்டோடாதவர் யார்? மகிழ்ச்சியுடன் நடனமாடாதவர் யார்? துதியின் வார்த்தைகளைப் பேசாதவர் யார்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 8” என்பதிலிருந்து

304. நான் ராஜ்யத்தில் ஆட்சி செய்கிறேன், மேலும், முழு பிரபஞ்சத்திலும் நான் ஆட்சி செய்கிறேன்; நான் ராஜ்யத்தின் ராஜாவாகவும் மற்றும் பிரபஞ்சத்தின் தலைவராகவும் இருக்கிறேன். இந்த தருணத்திலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லாத அனைவரையும் நான் ஒன்று சேர்த்து, புறஜாதியினரிடையே எனது கிரியையைத் தொடங்குகிறேன், மேலும் எனது நிர்வாக ஆணைகளை முழு பிரபஞ்சத்திற்கும் அறிவிக்கிறேன், இதன்மூலம் எனது கிரியையின் அடுத்த கட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளுவேன். என் கிரியையை புறஜாதியினரிடையே பரப்ப நான் சிட்சையைப் பயன்படுத்துவேன், அதாவது புறஜாதியார் அனைவருக்கும் எதிராக நான் பெலத்தைப் பயன்படுத்துவேன். இயற்கையாகவே, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே எனது கிரியை செயல்படும் அதே நேரத்தில் இந்தக் கிரியை மேற்கொள்ளப்படும். என் ஜனங்கள் பூமியில் ஆட்சி செய்து அதிகாரம் செலுத்தும்போது, அந்த நாள், பூமியிலுள்ள ஜனங்கள் அனைவரையும் வென்ற நாளாகவும் இருக்கும், மேலும், அது நான் இளைப்பாறும் நேரமாகவும் இருக்கும்—அப்போதுதான் ஜெயங்கொள்ளப்பட்ட அனைவரின் முன்பாகவும் நான் தோன்றுவேன். நான் பரிசுத்த ராஜ்யத்திற்கு முன்பாகத் தோன்றுகிறேன், அதேசமயம் என்னை அசுத்த தேசத்திலிருந்து நானே மறைக்கிறேன். எனக்கு முன்பாக ஜெயங்கொண்டு கீழ்ப்படியும் அனைவராலுமே என் முகத்தை அவர்கள் கண்களால் பார்க்க முடிகிறது, மேலும் என் சத்தத்தை அவர்கள் காதுகளால் கேட்கவும் முடிகிறது. கடைசி நாட்களில் பிறந்தவர்களின் ஆசீர்வாதம் இதுதான், இது என்னால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஆசீர்வாதம், இதனை எந்த மனுஷனாலும் மாற்ற முடியாது. இன்று, எதிர்கால கிரியைக்காக நான் இவ்வழியில் கிரியை செய்கிறேன். எனது எல்லா கிரியைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, அவை அனைத்திலும், ஒரு அழைப்பும் ஒரு பதிலும் உள்ளது: ஒருபோதும் எந்த நடவடிக்கையும் திடீரென நிறுத்தப்படுவதில்லை, வேறு எந்த நடவடிக்கையும் சுயாதீனமாக மேற்கொள்ளப்படுவதும் இல்லை. இது அப்படியாக இல்லையா? கடந்த காலத்தின் கிரியை இன்றைய கிரியைக்கு அஸ்திபாரம் இல்லையா? கடந்த காலத்தின் வார்த்தைகள் இன்றைய வார்த்தைகளுக்கு முன்னோடியாக இல்லையா? கடந்த காலத்தின் படிநிலைகள் இன்றைய படிநிலைகளின் தோற்றம் இல்லையா? நான் சுருளை முறையாகத் திறப்பது தான், அதாவது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் சிட்சிக்கப்படுகையில், உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகையில், அதுவே எனது கிரியையின் உச்சக்கட்டமாக இருக்கிறது; எல்லா ஜனங்களும் வெளிச்சம் இல்லாத தேசத்தில் வாழ்கிறார்கள், எல்லா ஜனங்களும் தங்கள் சூழலால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிருஷ்டிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை மனுஷன் அனுபவிக்காத வாழ்க்கை இது, யுகங்கள் முழுவதும் யாரும் இந்த வகையான வாழ்க்கையை “அனுபவித்ததில்லை”, எனவே இதற்கு முன் செய்திடாத கிரியையை நான் இப்போது செய்திருக்கிறேன் என்று நான் கூறுகிறேன். இதுவே விவகாரங்களின் உண்மையான நிலை, இதுவே அதன் கருப்பொருள். ஏனென்றால், எனது நாள் எல்லா மனுஷரிடமும் நெருங்கி வருகிறது, ஏனென்றால் அது தொலைவில் தோன்றாமல் மனுஷனின் கண்களுக்கு முன்பாகவே தோன்றுகிறது, இதன் விளைவாக யார் பயப்படாமல் இருக்க முடியும்? இதில் யார் மகிழ்ச்சியாக இருக்க முடியாது? அருவருப்பான நகரமான பாபிலோன் கடைசியில் முடிவுக்கு வந்துவிட்டது; மனுஷன் மீண்டும் ஒரு புதிய உலகத்தை சந்திக்கிறான், வானமும் பூமியும் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 29” என்பதிலிருந்து

307. அனைத்து ஜனங்களும் பூமியில் எனது கிரியையின் நோக்கங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது, இறுதியில் நான் எதை அடைய விரும்புகிறேன், இந்தக் கிரியை முடிக்கப்படுவதற்கு முன்பு நான் இதில் எந்த நிலையை அடைய வேண்டும். இன்றுவரை என்னுடன் இருந்த பிறகும் எனது கிரியை எதைப் பற்றியது என்று ஜனங்களுக்குப் புரியவில்லை என்றால், அவர்கள் என்னுடன் இருந்தது வீணாகிவிடவில்லையா? ஜனங்கள் என்னைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அவர்களுக்கு எனது சித்தம் தெரிந்திருக்க வேண்டும். நான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூமியில் கிரியைகளை நடப்பித்து வருகிறேன், மற்றும் இதனால் இன்றுவரை நான் தொடர்ந்து எனது கிரியையை இப்படியே மேற்கொண்டு வருகிறேன். எனது கிரியைப் பல செயற்திட்டங்களைக் கொண்டிருந்தாலும், அதன் நோக்கம் என்றும் மாறுவதில்லை; மனிதனுக்கான நியாந்தீர்த்தலும் தண்டனையும் என்னுள் நிறைந்திருந்தாலும், உதாரணமாக, நான் என்ன செய்தாலும் அவனைக் காப்பாற்றுவதற்காகவும், மற்றும் எனது நற்செய்தியை சிறந்த முறையில் பரப்புவதற்காகவும், மனிதன் முழுமையாக்கப்பட்டதும் எனது கிரியையை அனைத்து புறஜாதியார் தேசங்களின் மத்தியிலும் மேலும் விரிவுபடுத்துவதற்காகவும் செய்கிறேன். ஆகவே இன்று, அநேக ஜனங்கள் ஆழ்ந்த கலக்கத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில், நான் இப்போதும் எனது கிரியையைத் தொடர்கிறேன், நான் மனிதனுக்கு நியாயந்தீர்த்தலையும் தண்டனையையும் வழங்க மேற்கொள்ள வேண்டிய கிரியையைத் தொடர்கிறேன். நான் கூறுவதைக் கேட்டு மனிதன் சோர்ந்து போயிருப்பது உண்மை என்றாலும், எனது கிரியையில் தன்னைப் பற்றிக் கவலைப்பட அவனுக்கு விருப்பமில்லை என்ற போதிலும், எனது கிரியையின் நோக்கம் மாறாமல் இருக்கவும், எனது அசல் திட்டம் முறியாமல் இருக்கவும் நான் இன்னும் எனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன். மனிதன் எனக்குக் கீழ்ப்படிவதற்கு உதவுவது எனது நியாயந்தீர்ப்பின் செயல்பாடாகும், மனிதனை மிகவும் செயல்திறத்துடன் மாற செய்வது எனது தண்டனையின் செயல்பாடாகும். நான் என்ன செய்தாலும் அதனை எனது மேலாண்மையின் பொருட்டே செய்கிறேன் என்றாலும், நான் ஒருபோதும் மனிதனுக்குப் பலனளிக்காத எதையும் செய்ததில்லை, இஸ்ரவேலுக்கு வெளியே உள்ள தேசங்களில் நான் காலடி வைத்திருக்கக்கூடும் என்றாலும், இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட அனைத்து நாடுகளையும் இஸ்ரவேலர்களைப் போலவே கீழ்ப்படிபவர்களாக உருவாக்கவும், அவர்களை நிஜமான மனித இனமாக உருவாக்கவும் நான் விரும்புகிறேன். இது எனது மேலாண்மை இது புறஜாதி தேசங்களிடையே நான் செய்து வரும் கிரியையாகும். இப்போதும்கூட, பலருக்கு எனது மேலாண்மை புரிவதில்லை, ஏனென்றால் இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை, மேலும் அவர்களின் சொந்த எதிர்காலங்களிலும் இலக்குகளிலும் மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள். நான் என்ன சொன்னாலும், நான் செய்யும் கிரியை குறித்து அவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள், அதற்குப் பதிலாக நாளைய அவர்களின் இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். எல்லாமும் இந்த வழியில் நடந்தால், எனது கிரியை எவ்வாறு விரிவடையும்? உலகம் முழுவதும் எனது நற்செய்தி எவ்வாறு பரவ முடியும்? என் கிரியை பரவும்போது, இஸ்ரவேலின் கோத்திரத்தார் ஒவ்வொருவரையும் யெகோவா வீழ்த்தியது போல நான் உங்களைச் சிதறடிப்பேன், மற்றும் வீழ்த்துவேன். இவை அனைத்தும் செய்யப்படும், அப்போதுதான் எனது நற்செய்தி பூமியெங்கும் பரவும், எனவே இது புறஜாதியார் தேசங்களைச் சென்றடையக்கூடும், இதனால் எனது பெயர் பெரியவர்களாலும் குழந்தைகளாலும் ஒரே மாதிரியாகப் மகிமைப்படுத்தப்படக்கூடும், எனது பரிசுத்தப் பெயர் எல்லாக் கோத்திரம் மற்றும் தேசங்களைச் சேர்ந்த மக்களின் வாய்களிலும் ஒரேவிதமாக புகழப்படும். எனவே, இந்த இறுதி சகாப்தத்தில், எனது நாமம் புறஜாதியாரிடையே மகிமைப்படுத்தப்படக்கூடும், இதனால் எனது செயல்கள் புறஜாதியாரால் காணப்படக்கூடும், மேலும் அவர்கள் எனது செயல்களின் காரணமாக என்னை சர்வ வல்லவர் என்று அழைப்பார்கள், எனவே எனது வார்த்தைகள் விரைவில் நடக்கும். நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் சபித்தவர்கள் உட்பட புறஜாதியாரின் எல்லா தேசங்களின் தேவன் நான். நான் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தின் தேவன் என்பதை ஜனங்களைப் பார்க்க வைப்பேன். இது எனது மிகச் சிறந்த கிரியை, கடைசி நாட்களுக்கான எனது கிரியைத் திட்டத்தின் நோக்கம் மற்றும் கடைசி நாட்களில் முடிக்கப்பட வேண்டிய ஒரே கிரியை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது” என்பதிலிருந்து

308. இந்த ஜனக்கூட்டத்தின் மத்தியில் தேவன் செய்யப்போகும் கிரியை என்னவென்று பார்த்திருக்கிறீர்களா? தேவன், ஆயிரம் வருட அரசாட்சியிலும் கூட ஜனங்கள் அவருடைய வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஒருமுறை சொன்னார். எதிர்காலத்தில், நல்ல கானான் தேசத்திலுள்ள மனிதனுடைய ஜீவிதத்தை, தேவனுடைய வார்த்தைகள் நேரடியாக வழிநடத்தும். மோசே வனாந்தரத்தில் இருந்தபோது, தேவன் அவனிடம் நேரடியாக அறிவுறுத்தினார், பேசினார். தேவன் ஜனங்கள் மகிழ்ச்சியடைய, அவர்கள் புசிப்பதற்கு ஆகாரம், தண்ணீர் மற்றும் மன்னாவை பரலோகத்திலிருந்து அனுப்பினார், இன்றும் அவ்வாறு: ஜனங்கள் மகிழ்ச்சியடைய, அவர்கள் புசிக்கவும் குடிக்கவும் வேண்டியவற்றை தேவன் தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளார். ஜனங்களை சிட்சிப்பதற்காக அவர் தனிப்பட்ட முறையில் சாபங்களை அனுப்பியுள்ளார். எனவே, அவருடைய கிரியையின் ஒவ்வொரு படியும் தனிப்பட்ட முறையில் தேவனால் செய்யப்படுகிறது. இன்று, ஜனங்கள் உண்மைகளின் நிகழ்வைத் தேடுகிறார்கள், அவர்கள் அடையாளங்களையும் அதிசயங்களையும் நாடுகிறார்கள் மற்றும் இதுபோன்றவர்கள் அனைவரும் தூக்கி எறியப்படுவதற்கான சாத்தியம் உள்ளது ஏனென்றால், தேவனுடைய கிரியையானது அதிகமாக நடைமுறைக்கு மாறி வருகிறது. தேவன் பரலோகத்திலிருந்து இறங்கியிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. தேவன் ஆகாரத்தையும் ரசத்தையும் வானத்திலிருந்து அனுப்பியிருக்கிறார் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், தேவன் உண்மையில் இருக்கிறார், ஜனங்கள் கற்பனை செய்யும் ஆயிரம் வருட அரசாட்சி எழும்பும் காட்சிகளும் தேவனுடைய தனிப்பட்ட வெளிப்பாடுகளாக இருக்கின்றன. இது உண்மையாகும் மற்றும் இது தான் தேவனோடு பூமியில் ஆட்சி செய்வது என்று அழைக்கப்படுகிறது. தேவனோடு பூமியில் ஆட்சி செய்வது மாம்சத்தைக் குறிக்கிறது. மாம்சமாக இல்லாதவை பூமியில் இல்லை. இதனால் மூன்றாம் பரலோகத்திற்குச் செல்வதில் கவனம் செலுத்துபவர்கள் அனைவரும் வீணாக கவனம் செலுத்துகிறார்கள். ஒரு நாள், முழு உலகமும் தேவனிடம் திரும்பும் போது, உலகம் முழுவதுமான அவருடைய கிரியையின் மையம் அவருடைய வார்த்தைகளைப் பின்பற்றும். மற்ற இடங்களில், சிலர் தொலைபேசியைப் பயன்படுத்துவார்கள், சிலர் விமானத்தில் செல்வார்கள், சிலர் படகில் கடல் கடந்து செல்வார்கள் மற்றும் சிலர் தேவனுடைய வார்த்தைகளைப் பெற ஒளிக்கதிர்களைப் பயன்படுத்துவார்கள். எல்லோரும் வணங்குவார்கள், மற்றும் ஆவலுடன் இருப்பார்கள், அவர்கள் அனைவரும் தேவனிடம் நெருங்கி வருவார்கள், தேவனை நோக்கி கூடிவருவார்கள். அனைவரும் தேவனை வணங்குவார்கள். இவை அனைத்தும் தேவனுடைய செயல்களாக இருக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் நிச்சயமாக வேறு எங்கும் தொடங்க மாட்டார். தேவன் இந்த உண்மையை நிறைவேற்றுவார்: உலகம் முழுவதிலும் உள்ள எல்லா ஜனங்களையும் தனக்கு முன்பாக வரச் செய்து, பூமியில் தன்னை வணங்கச் செய்வார், மற்றும் மற்ற இடங்களில் அவருடைய கிரியை நிறுத்தப்படும், மற்றும் ஜனங்கள் உண்மையான வழியை நாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். அது யோசேப்பைப் போலவே இருக்கும்: எல்லோரும் ஆகாரத்துக்காக அவனிடம் வந்து, அவனை வணங்கினார்கள் ஏனென்றால், அவர்களுக்கு வேண்டிய ஆகாரம் அவனிடம் இருந்தது. பஞ்சத்தைத் தவிர்ப்பதற்காக, ஜனங்கள் உண்மையான வழியைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த மத சமூகமும் கடுமையான பஞ்சத்தை அனுபவிக்கும். இன்றைய தேவன் மட்டுமே ஜீவத்தண்ணீரின் ஊற்றாவார், தேவன் மட்டுமே மனிதனுடைய இன்பத்திற்காக எப்போதும் சுரக்கும் ஊற்றைக் கொண்டவர். ஜனங்கள் வந்து அவரைச் சார்ந்து இருப்பார்கள். தேவனுடைய செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு, தேவன் மகிமைப்படுத்தப்படும் காலமாக அது இருக்கும்: உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜனங்களும் இந்த குறிப்பிட்டு சொல்ல முடியாத “மனிதனை” வணங்குவார்கள். அது தேவனுடைய மகிமையின் நாளாக இருக்காதா? ஒரு நாள், பழைய மேய்ப்பர்கள் ஜீவத்தண்ணீரின் ஊற்றிலிருந்து தண்ணீரைத் தேடி தந்திகளை அனுப்புவார்கள். அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனாலும் தாங்கள் இகழ்ந்த அந்த நபரை வணங்க அவர்கள் வருவார்கள். அவர்கள் தங்கள் வாயால் அவரை ஒப்புக்கொள்வார்கள், மனதால் அவரை நம்புவார்கள்—இது ஒரு அடையாளமும் ஆச்சரியமும் அல்லவா? முழு ராஜ்யமும் சந்தோஷப்படும் நாள் தேவனுடைய மகிமையின் நாளாக இருக்கும். உங்களிடம் வந்து தேவனுடைய நற்செய்தியைப் பெறுபவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார். அவ்வாறு செய்யும் நாடுகளும் ஜனங்களும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு பராமரிக்கப்படுவார்கள். எதிர்காலத்தின் பாதை இவ்வாறு இருக்கும்: தேவனுடைய வாயிலிருந்து வார்த்தைகளைப் பெறுபவர்களுக்கு பூமியில் நடக்க ஒரு பாதை இருக்கும் மற்றும்அவர்கள் வணிகர்களாக அல்லது விஞ்ஞானிகளாக, அல்லது கல்வியாளர்களாக அல்லது தொழிலதிபர்களாக இருப்பார்கள், தேவனுடைய வார்த்தைகளைப் பெறாதவர்களுக்கு ஒரு அடி கூட எடுத்து வைப்பது கடினமானதாக இருக்கும் மற்றும் அவர்கள் உண்மையான வழியை நாட கட்டாயப்படுத்தப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், “சத்தியத்தால் நீங்கள் உலகம் முழுவதும் நடப்பீர்கள்; சத்தியம் இல்லாமல், நீங்கள் எங்கும் செல்ல முடியாது.” உண்மைகள் பின்வருமாறு உள்ளது: தேவன் முழு பிரபஞ்சத்திற்கும் கட்டளையிட மற்றும் மனிதகுலத்தை ஆள, ஜெயம்கொள்ள இந்த வழியைப் (அதாவது அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் குறிக்கிறது) பயன்படுத்துவார். தேவன் செயல்படும் வழிமுறைகளில் ஒரு பெரிய மாற்றம் உண்டாக ஜனங்கள் எப்போதும் எதிர்பார்க்கிறார்கள். தெளிவாக சொல்வதானால், தேவன் ஜனங்களைக் கட்டுப்படுத்துவது வார்த்தைகளின் மூலம் தான். நீ விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் அவர் சொல்வதை நீ செய்ய வேண்டும். இது ஒரு புறநிலையான உண்மையாகும். எல்லோராலும் கீழ்ப்படியப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, இது தவிர்க்கமுடியாததும், எல்லோருக்கும் தெரிந்ததும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதிலிருந்து

309. தேவனுடைய வார்த்தைகள் எண்ணற்ற வீடுகளில் பரவுகின்றன. அனைவரும் அவற்றை அறிந்திருப்பார்கள் மற்றும்அப்போது தான் அவருடைய கிரியை உலகம் முழுவதும் பரவும். அதாவது, தேவனுடைய கிரியை முழு உலகத்திலும் பரவ வேண்டும் என்றால், அவருடைய வார்த்தைகள் பரப்பப்பட வேண்டும். தேவனுடைய மகிமையின் நாளில், தேவனுடைய வார்த்தைகள் அவற்றின் வல்லமையையும் அதிகாரத்தையும் காண்பிக்கும். ஆதிகாலம் முதல் இன்று வரை சொல்லப்பட்ட அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும், அது நடக்கும். இவ்வாறு, பூமியில் தேவனுக்கு மகிமை இருக்கும்—அதாவது, அவருடைய வார்த்தைகள் பூமியில் ஆட்சி செய்யும். தேவனுடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் துன்மார்க்கர் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள், நீதிமான்கள் அனைவரும் அவருடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், அவருடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் அனைவரும் ஸ்தாபிக்கப்பட்டு முழுமையடைவார்கள். அவர் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்த மாட்டார். அவருடைய வார்த்தைகளால் அனைத்தும் நிறைவேறும். அவருடைய வார்த்தைகள் உண்மைகளைத் தரும். பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தைகளை கொண்டாடுவார்கள். அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும், ஆண், பெண், வயதானவர்கள் அல்லது இளைஞர்கள் என யாராக இருந்தாலும் தேவனுடைய வார்த்தைகளின் கீழ் அனைவரும் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள். தேவனுடைய வார்த்தைகளானது மாம்சத்தில் வெளிப்படும், பூமியிலுள்ள ஜனங்கள் வாழ்நாள் முழுவதும் அதைத் தெளிவாகப் பார்க்க அனுமதிக்கிறது. இதுவே வார்த்தை மாம்சமாக மாறுவதன் பொருள் ஆகும். “வார்த்தை மாம்சமாக மாறுகிறது” என்ற உண்மையை நிறைவேற்றுவதற்காக தேவன் முதன்மையாக பூமிக்கு வந்துள்ளார். அதாவது, அவருடைய வார்த்தைகள் மாம்சத்திலிருந்து வெளிவரும்படி அவர் வந்திருக்கிறார் (பழைய ஏற்பாட்டில் மோசேயின் காலத்தைப் போல அல்ல, தேவனுடைய சத்தம் வானத்திலிருந்து நேரடியாக வெளியிடப்படாது). அதன்பிறகு, அவருடைய வார்த்தைகள் அனைத்தும் ஆயிர வருட அரசாட்சியின் யுகத்தில் நிறைவேறும். அவை மனிதனுடைய கண்களுக்கு முன்பாகத் தெரியும் உண்மைகளாக மாறும். ஜனங்கள் தங்கள் கண்களைப் பயன்படுத்தி சிறிதளவும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அதனைப் பார்ப்பார்கள். இது தேவனுடைய அவதாரத்தின் மிக உயர்ந்த அர்த்தமாகும். அதாவது, ஆவியின் கிரியை மாம்சத்தின் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் செய்யப்படுகிறது. இதுதான் “வார்த்தை மாம்சமாக மாறும்” மற்றும் “மாம்சத்தில் வார்த்தையின் தோற்றம்” என்பதன் உண்மையான அர்த்தமாகும். தேவனால் மட்டுமே ஆவியின் சித்தத்தை பேச முடியும். மாம்சத்தில் உள்ள தேவன் மட்டுமே ஆவியின் சார்பாக பேச முடியும். தேவனுடைய வார்த்தைகள் தேவனில் அவதரித்தன. மற்ற அனைவருமே அவற்றால் வழிநடத்தப்படுகிறார்கள். யாருக்கும் விலக்கு இல்லை. அவை அனைத்தும் இந்த எல்லைக்குள் உள்ளன. இந்த வார்த்தைகளிலிருந்து மட்டுமே ஜனங்கள் விழிப்புணர்வு பெற முடியும். இவ்வாறு விழிப்புணர்வு பெறாதவர்கள் பரலோகத்திலிருந்து வார்த்தைகளைப் பெற முடியும் என்று நினைத்தால் அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என்பதாகும். தேவனுடைய மாம்ச அவதாரத்தில் நிரூபிக்கப்பட்ட அதிகாரம் இது தான், அனைவரையும் முழு நம்பிக்கையுடன் விசுவாசிக்க வைக்கிறது. மிகவும் மதிப்பிற்குரிய வல்லுநர்கள் மற்றும் மத மேய்ப்பர்கள் கூட இந்த வார்த்தைகளை பேச முடியாது. அவர்கள் அனைவரும் அவற்றின் கீழ் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் மற்றும் அவர்கள் யாரும் மற்றொன்றை தொடங்க முடியாது. தேவன் பிரபஞ்சத்தை ஜெயிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவார். அவருடைய மாம்ச ரூபத்தினால் அல்ல. ஆனால், தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் முழு பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜனங்களையும் ஜெயிக்க அவர் மாம்சமாக மாறுவார். இந்த வார்த்தை மாம்சமாக மாறும். இது மாம்சத்திலுள்ள வார்த்தையின் தோற்றம் மட்டுமே. ஒருவேளை, மனிதர்களுக்கு, தேவன் அதிக கிரியை செய்யவில்லை என்பது போலத் தோன்றுகிறது. ஆனால் தேவன் அவருடைய வார்த்தைகளை உச்சரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் முழுமையாக அவரை நம்புவார்கள், அவருக்கு பயப்படுவார்கள். உண்மைகள் இல்லாமல், ஜனங்கள் கூச்சலிடுகிறார்கள், கத்துகிறார்கள்; தேவனுடைய வார்த்தைகளால் அவர்கள் அமைதியாகிறார்கள். தேவன் நிச்சயமாக இந்த உண்மையை நிறைவேற்றுவார். ஏனென்றால் இது, நீண்ட காலமாக தேவனால் நிறுவப்பட்ட திட்டம் ஆகும்: பூமியிலுள்ள வார்த்தையுடைய வருகையின் உண்மையை நிறைவேற்றுவதாகும். உண்மையில், நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆயிர வருட அரசாட்சியின் வருகையானது பூமியில் தேவனுடைய வார்த்தைகளின் வருகையாகும். பரலோகத்திலிருந்து வந்த புதிய எருசலேமானது, மனிதர்களிடையே ஜீவிக்கவும், மனிதனுடைய ஒவ்வொரு செயலுடனும், அவனது உள்ளார்ந்த எண்ணங்களுடன் ஜீவிக்கவும் வந்த தேவனுடைய வார்த்தைகளின் வருகையாகும். இது தேவன் நிறைவேற்றும் ஒரு உண்மை ஆகும். இதுவே ஆயிர வருட அரசாட்சியின் அழகு ஆகும். இது தேவன் வகுத்த திட்டம் ஆகும்: அவருடைய வார்த்தைகள் ஆயிரம் ஆண்டுகளாக பூமியில் தோன்றும். அவை அவருடைய செயல்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதோடு, பூமியில் அவர் செய்த எல்லா கிரியைகளையும் நிறைவு செய்யும். அதன் பிறகு மனிதகுலத்தின் இந்த நிலை முடிவுக்கு வரும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதிலிருந்து

முந்தைய: VII. தேவனுடைய மனநிலை மற்றும் அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் என்பது குறித்த வார்த்தைகள்

அடுத்த: IX. தேவனுடைய கிரியைக்கும் மனுஷனுடைய கிரியைக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்துதல் குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக