VII. தேவனுடைய மனநிலை மற்றும் அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் என்பது குறித்த வார்த்தைகள்

255. தேவன் தேவன் தான், அவரிடம் உள்ளவற்றையே அவர் பெற்றிருக்கிறார். அவர் வெளிப்படுத்துவதும் மற்றும் தெரியப்படுத்துவதும் எல்லாம் அவருடைய சாராம்சமாகும் மற்றும் அவரது தனித்துவத்தை உருவகப்படுத்துபவையாகும். அவர் என்னவாக இருக்கிறார், அவரிடம் உள்ளவை எவை, அத்துடன் அவருடைய சாராம்சம் மற்றும் தனித்துவத்துவம் ஆகியவை எந்தவொரு மனிதனாலும் மாற்ற முடியாத காரியங்களாகும். அவரது மனநிலையானது மனிதகுலத்தின் மீதான அவரது அன்பு, மனிதகுலத்தின் மீதான ஆறுதல், மனிதகுலத்தின் மீதான வெறுப்பு மற்றும் இன்னும் அதிகமாக, மனிதகுலத்தைப் பற்றிய முழுமையான புரிந்து கொள்ளுதலை உள்ளடக்கியுள்ளது. இருப்பினும், மனிதனின் குணாதிசயம் நம்பிக்கையுடனும், சுறுசுறுப்பானதாகவும், உணர்ச்சியற்றதாகவும் இருக்கலாம். தேவனின் மனநிலை என்பது எல்லாவற்றையும் எல்லா ஜீவன்களையும் ஆள்பவருக்கும், எல்லா சிருஷ்டிப்புகளின் கர்த்தருக்கும் உரியது. அவரது மனநிலையானது கணம், வல்லமை, பெருந்தன்மை, மகத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மேலாதிக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அவருடைய மனநிலையானது அதிகாரத்தின் அடையாளமாகும், நீதியான அனைத்திற்குமான அடையாளமாகும், அழகான மற்றும் நன்மையான அனைத்திற்குமான அடையாளமாகும். அதற்கும் மேலாக, இது இருளினாலும் மற்றும் எந்தவொரு எதிரியின் வல்லமையினாலும் ஆட்கொள்ளப்படவோ அல்லது கைப்பற்றப்படவோ முடியாத[அ] ஒரு அடையாளமாகும், அதேபோல் எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாலும் புண்படுத்தப்பட முடியாத அவரின் அடையாளமாகவும் உள்ளது (புண்படுத்தப்படுவதை அவர் சகித்துக் கொள்ள மாட்டார்)[ஆ]. அவரது மனநிலை மிக உயர்ந்த வல்லமையின் அடையாளமாகும். அவருடைய கிரியையையோ அல்லது அவரது மனநிலையையோ எந்தவொரு நபராலும் அல்லது நபர்களாலும் தொந்தரவு செய்ய முடியாது அல்லது தொந்தரவு செய்யலாகாது. ஆனால் மனிதனின் குணாதிசயம் என்பது மிருகத்தின் மீதான மனிதனின் சிறிய மேன்மையின் வெறும் அடையாளத்திற்கு மேலானதல்ல. மனிதனுக்கு அவனுக்குள்ளும், அவனைப் பற்றியும், எந்த அதிகாரமும் இல்லை, சுய உரிமையும் இல்லை, சுயத்தை மீறும் திறனும் இல்லை, ஆனால் அவனது சாராம்சத்தில் ஜனங்களின் எல்லா வகையான நடத்தைகளின், நிகழ்வுகளின் மற்றும் காரியங்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழானவனாக முடங்கிப்போகிறான். இருள் மற்றும் தீமைகள் அழிக்கப்படும் காரணத்தால் நீதியும் வெளிச்சமும் இருப்பதும் மற்றும் வெளிப்படுவதும் தேவனின் சந்தோஷம் ஆகும். மனிதகுலத்திற்கு வெளிச்சத்தையும் நல்வாழ்வையும் கொண்டுவருவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவரது மகிழ்ச்சி ஒரு நீதியான மகிழ்ச்சி, நேர்மறையானவை அனைத்தும் இருப்பதற்கான அடையாளமாகவும், அதைவிட, ஜெயத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. தீமை மற்றும் இருள் இருப்பதாலும், சத்தியத்தை விரட்டும் காரியங்கள் இருப்பதாலும், இன்னும் அதிகமாக, நன்மையான மற்றும் அழகாக இருப்பதை எதிர்க்கும் காரியங்கள் இருப்பதாலும், அநீதியின் நிகழ்வும் மற்றும் குறுக்கீடும் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தீங்கே தேவனின் கோபத்திற்கு காரணமாகும். அவருடைய கோபமானது எதிர்மறையானவை எல்லாம் இனி இருக்காது என்பதற்கான அடையாளமாகும், அதற்கும் மேலாக, அது அவருடைய பரிசுத்தத்தின் அடையாளமாகும். அவருடைய துக்கம் மனிதகுலத்தினால் ஏற்படுகிறது, அவனுக்காக அவர் நம்பிக்கை வைத்துள்ளார், ஆனால் அவன் இருளில் விழுந்திருக்கிறவன், ஏனென்றால் அவர் மனிதனில் செய்யும் கிரியை அவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்காது, மேலும் அதனால் அவர் நேசிக்கும் மனிதகுலத்தவர் அனைவருமே வெளிச்சத்தில் வாழ முடியாது. குற்றமற்ற மனிதகுலத்துக்காகவும், நேர்மையான ஆனால் ஏதுமறியாத மனிதனுக்காகவும், நல்லவனாக இருந்தும் தன் சொந்தக் கருத்துக்கள் இல்லாதவனுக்காகவும் அவர் துக்கப்படுகிறார். அவரது துக்கமானது அவருடைய நற்குணம் மற்றும் அவரது இரக்கத்தின் அடையாளமாகும், இது அழகு மற்றும் தயவின் அடையாளமாகும். அவருடைய மகிழ்ச்சி, நிச்சயமாக, அவருடைய எதிரிகளை தோற்கடித்து, மனிதனின் நேர்மையான எண்ணங்களை ஆதாயமாக்குகிறது. இதை விட, இது எதிரியின் அனைத்து வல்லமைகளையும் வெளியேற்றுவதிலிருந்தும் அழிப்பதிலிருந்தும் எழுகிறது, ஏனென்றால் மனிதகுலம் ஒரு நல்ல அமைதியான வாழ்க்கையை பெறுகிறது. தேவனின் மகிழ்ச்சி மனிதனின் மகிழ்ச்சியைப் போன்றதல்ல. மாறாக, இது நல்ல பழங்களை களஞ்சியத்தில் சேர்ப்பது போன்ற உணர்வாகும், இது மகிழ்ச்சியை விட பெரிய உணர்வாகும். இவரது மகிழ்ச்சி, இந்த நேரத்திலிருந்து மனிதகுலம் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான அடையாளமாகும், மேலும் மனிதகுலம் வெளிச்சத்தின் உலகத்தில் நுழைவதின் அடையாளமாகும். மறுபுறம் மனிதகுலத்தின் உணர்ச்சிகள் எல்லாம், நீதிக்காகவோ, வெளிச்சத்திற்காகவோ அல்லது அழகானதற்காகவோ, எல்லாவற்றிற்கும் மேலாக பரலோகத்தால் வழங்கப்பட்ட கிருபைக்காகவோ அல்ல, அவனது சொந்த நலன்களுக்காகவே தோன்றுகின்றன. மனிதகுலத்தின் உணர்ச்சிகள் சுயநலமானவை மற்றும் இருளின் உலகத்தைச் சேர்ந்தவை. அவை தேவனுடைய சித்தத்தின் பொருட்டும் இல்லை, தேவனின் திட்டத்தின் பொருட்டும் இல்லை, எனவே மனிதனையும் தேவனையும் ஒருசேர்ந்தாற் போல பேச முடியாது. தேவன் என்றென்றும் உயர்ந்தவர், எப்போதும் மேன்மையுள்ளவர், அதே சமயம் மனிதன் என்றென்றும் இழிவானவன், என்றென்றும் பயனற்றவன். இது ஏனென்றால், தேவன் என்றென்றும் தியாகங்களைச் செய்கிறார், மனிதகுலத்திற்காக தன்னை அர்ப்பணிக்கிறார். இருப்பினும், மனிதன் என்றென்றும் தனக்காக மட்டுமே மேற்கொண்டு முயலுகிறான். மனிதகுலம் உயிர்வாழ்வதற்காக தேவன் என்றென்றும் வேதனையை மேற்கொள்ளுகிறார், ஆனால் மனிதன் ஒருபோதும் வெளிச்சத்தின் பொருட்டோ அல்லது நீதிக்காகவோ எதையும் பங்களிப்பதில்லை. மனிதன் ஒரு காலத்திற்கு முயற்சி செய்தாலும், அது ஒரு அடியைக் கூட தாங்க முடியாத அளவுக்கு பலவீனமாக இருக்கிறது, ஏனென்றால் மனிதனின் முயற்சி எப்போதும் மற்றவர்களுக்காக இல்லாமல் தன் சொந்த நலனுக்காகவே உள்ளது. மனிதன் எப்போதும் சுயநலவாதி, அதே சமயம் தேவன் எப்போதும் சுயநலமற்றவர். தேவன் நீதியானதும், நல்லதும், அழகானதுமான எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறார், அதே நேரத்தில் மனிதன் எல்லா அருவருப்புகளையும் தீமையையும் வெளிப்படுத்துவதில் வெற்றியடைகிறான். தேவன் ஒருபோதும் தனது நீதியின் மற்றும் அழகின் சாராம்சத்தை மாற்றமாட்டார், ஆனாலும் மனிதன் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதிக்கு துரோகம் செய்யவும் தேவனிடமிருந்து விலகிச் செல்வதற்கும் மிகவும் திறனுள்ளவனாக இருக்கிறான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது” என்பதிலிருந்து

257. நான் ஆதியும் அந்தமுமானவர். நான் உயிர்த்தெழுந்த உண்மையான தேவன். நான் என் வார்த்தைகளை உங்களுக்கு முன் பேசுகிறேன், நான் சொல்வதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நான் சொல்வதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது. இதை நினைவில் கொள்ளுங்கள்! இதை நினைவுகூருங்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 53” என்பதிலிருந்து

258. பிரபஞ்சமும் சகலமும் எனது கரங்களுக்குள் இருக்கின்றன. நான்ஒன்றைச் சொன்னால், அது அப்படியே நடக்கும். நான் ஒன்றை நியமித்தால், அது அப்படியாகவே இருக்கும். சாத்தான் எனது பாதத்திற்குக் கீழே இருக்கிறான்; அவன் பாதாளத்தில் இருக்கிறான்! எனது குரல் வெளிப்படும் போது, வானமும் பூமியும் ஒழிந்து, ஒன்றுமில்லாமற்போகும்! அனைத்தும் புதுப்பிக்கப்படும்; இது முற்றிலும் சரியான மாற்றமுடியாத உண்மையாக இருக்கிறது. நான் உலகத்தையும், பொல்லாத அனைத்தையும் ஜெயங்கொண்டிருக்கிறேன். நான் இங்கே உட்கார்ந்து உங்களுடன் பேசுகிறேன், காதுள்ளவர்கள் அனைவருமே இதைக் கேட்க வேண்டும், ஜீவிக்கும் அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 15” என்பதிலிருந்து

259. நான் சொன்னபடி செயல்படுத்துகிறேன், நான் செயல்படுத்துவதை எப்போதும் நிறைவேற்றுகிறேன், இதை யாராலும் மாற்ற முடியாது—இதுவே முழுமையானது. அவை நான் கடந்த காலத்தில் கூறிய வார்த்தைகளாக இருந்தாலும் சரி அல்லது எதிர்காலத்தில் நான் சொல்லப்போகும் வார்த்தைகளாக இருந்தாலும் சரி, அவை அனைத்தையும் நான் ஒவ்வொன்றாக மெய்யாக்குவேன், மேலும் அவை அனைத்தும் மெய்யாக இருப்பதைக் காண மனுஷகுலம் முழுவதையும் அனுமதிப்பேன். இதுவே எனது வார்த்தைகளுக்கும் கிரியைக்கும் பின்னால் உள்ள கொள்கை ஆகும். … பிரபஞ்சத்தில் நிகழும் எல்லாவற்றிலும், இறுதிச் சொல் என என்னிடம் எதுவும் இல்லை. என் கையில் இல்லாதது என்று ஏதேனும் இருக்கிறதா? நான் என்ன சொன்னாலும் அது நடத்திக்காட்டப்படுகிறது, மனுஷரிடையே யாரால் என் மனதை மாற்ற முடியும்? நான் பூமியில் செய்த உடன்படிக்கையால் என் மனதை மாற்ற முடியுமா? எனது திட்டம் முன்னோக்கிச் செல்வதை எதுவாலும் தடுக்க முடியாது; எனதுக் கிரியையிலும் எனது ஆளுகைத் திட்டத்திலும் நான் எப்போதும் நிலையாக இருக்கிறேன். மனுஷரில் யாரால் இதில் மூக்கை நுழைக்க முடியும்? இந்த ஏற்பாடுகளை நான் அல்லவா தனிப்பட்ட முறையில் செய்திருக்கிறேன்? இன்று இந்த ராஜ்யத்தில் நுழைவது என்பது எனது திட்டத்திற்கு வெளியேயோ அல்லது நான் முன்னறிவித்ததையோ தவறாக வழிநடத்தவில்லை; இது எல்லாம் நீண்ட காலத்திற்கு முன்பே என்னால் தீர்மானிக்கப்பட்டது. எனது திட்டத்தின் இந்த நடவடிக்கையை உங்களில் யாரால் புரிந்துகொள்ள முடியும்? என் ஜனங்கள் நிச்சயமாக என் குரலைக் கேட்பார்கள், என்னை உண்மையாக நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வருவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 1” என்பதிலிருந்து

261. நான் எல்லாவற்றையும் விழுங்கும் நெருப்பு, குற்றத்தை நான் பொறுத்துக்கொள்ளவே மாட்டேன். மனுஷர் அனைவரும் எம்மால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதால், நான் என்ன சொன்னாலும் செய்தாலும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும், அவர்கள் கலகம் செய்யக்கூடாது. எனது கிரியையில் தலையிட ஜனங்களுக்கு உரிமை இல்லை, எனது கிரியையிலும் எனது வார்த்தைகளிலும் எது சரி எது தவறு என்பதை ஆராய அவர்கள் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். நான் தான் சிருஷ்டிப்பின் கர்த்தர், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷர் எனக்குத் தேவையான அனைத்தையும் பயபக்தியுடனான இருதயத்துடன் அடைய வேண்டும்; அவர்கள் என்னுடன் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடாது, குறிப்பாக, அவர்கள் எதிர்க்கக்கூடாது. எனது அதிகாரத்தினால் நான் எனது ஜனங்களை ஆளுகிறேன், எனது சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அனைவரும் எனது அதிகாரத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். இன்று நீங்கள் எனக்கு முன்பாக தைரியமாகவும், அகந்தையோடும் இருந்தாலும், நான் உங்களுக்குப் போதிக்கும் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவில்லை என்றாலும், உங்களிடம் எந்த பயமும் இல்லை என்றாலும், நான் உங்களது கலகத்தன்மையை சகிப்புத்தன்மையுடன் மட்டுமே எதிர்கொள்கிறேன்; சிறிய, அற்பமான புழுக்கள் குப்பையில் உள்ள அசுத்தத்தைக் கிளறிவிட்டிருந்தாலும், நான் கோபப்பட்டு எனது கிரியையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டேன். நான் வெறுக்கிற எல்லாவற்றின் இருப்பையும் நான் தாங்கிக்கொள்கிறேன், எனது பிதாவின் சித்தத்திற்காக நான் வெறுக்கிற எல்லாவற்றையும் நான் பொறுத்துக்கொள்கிறேன், எனது வெளிப்பாடுகள் நிறைவடையும் வரை, எனது கடைசி தருணம் வரை நான் இதைச் செய்வேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்துத் தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்” என்பதிலிருந்து

267. நியாயத்தீர்ப்பும் கோபாக்கினையும் தான் எனது குரலாக இருக்கிறது; நான் யாரையும் மென்மையாக நடத்துவதில்லை, யாருக்கும் இரக்கம் காட்டுவதில்லை, ஏனென்றால் நான் நீதியுள்ள தேவன், நான் கோபாக்கினையைக் கொண்டிருக்கிறேன்; நான் புடமிடுதலையும், சுத்திகரிப்பையும் மற்றும் அழிவையும் கொண்டிருக்கிறேன். என்னில் எதுவும் மறைக்கப்பட்டிருக்கவில்லை அல்லது எதுவும் உணர்ச்சியை சார்ந்ததாகவும் இல்லை, மாறாக, எல்லாமே வெளிப்படையாக, நீதியுள்ளவையாக மற்றும் பாரபட்சமற்றவையாக இருக்கின்றன. ஏனென்றால், எனது முதற்பேறான குமாரர்கள் ஏற்கனவே என்னுடன் சிங்காசனத்தில் அமர்ந்து, எல்லா தேசங்களையும் எல்லா ஜனங்களையும் ஆளுகிறார்கள், அநியாயமும் அநீதியுமாக இருக்கும் அந்த விஷயங்களும் ஜனங்களும் இப்போது நியாயந்தீர்க்கப்படப்போகிறார்கள். நான் அவர்களை ஒவ்வொருவராக விசாரிப்பேன், யாரையும் விடமாட்டேன், அவர்களை முழுமையாக வெளிப்படுத்துவேன். எனது நியாயத்தீர்ப்பானது முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு முழுமையாக வெளியரங்கமாக்கப்பட்டுள்ளது, நான் எதையும் மறைத்து வைக்கவில்லை; எனது சித்தத்திற்கு இணங்காத அனைத்தையும் நான் தூக்கி எறிவேன், அது பாதாளத்தில் நித்தியத்திற்கும் அழிந்து போகட்டும். அங்கே நான் அதனை என்றென்றும் எரிய அனுமதிப்பேன். இதுவே எனது நீதியும், எனது நேர்மையுமாகும். இதை யாரும் மாற்ற முடியாது, அனைவரும் எனது கட்டளைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 103” என்பதிலிருந்து

269. அனைத்தும் என் வார்த்தைகளால் நிறைவேறும்; எந்த மனுஷனும் பங்கேற்க முடியாது, மேலும் நான் செய்யவேண்டிய கிரியையை எந்த மனுஷனாலும் செய்ய முடியாது. எல்லா நிலங்களின் காற்றையும் சுத்தமாகத் துடைத்து, பூமியில் உள்ள பிசாசுகளின் அனைத்து தடயங்களையும் அழிப்பேன். நான் ஏற்கனவே தொடங்கிவிட்டேன், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வசிப்பிடத்தில் எனது சிட்சிக்கும் கிரியையின் முதல் கட்டத்தை தொடங்குவேன். இவ்வாறு என் சிட்சி முழு பிரபஞ்சத்திற்கும் ஏற்பட்டுள்ளது என்பதையும், நான் எல்லா நிலங்களையும் பார்ப்பதால், சிவப்பான பெரிய வலுசர்ப்பமும் மற்றும் அனைத்து வகையான அசுத்த ஆவிகளும் என் தண்டனையிலிருந்து தப்பிக்க பெலனற்றவையாக இருப்பதையும் காணமுடிகிறது. பூமியில் எனது கிரியை முடிந்ததும், அதாவது, நியாயத்தீர்ப்பின் சகாப்தம் முடிவுக்கு வரும்போது, நான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை முறையாக சிட்சிப்பேன். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கான எனது நீதிக்குரிய சிட்சையை என் ஜனங்கள் நிச்சயமாகக் காண்பார்கள், நிச்சயமாக என் நீதியின் காரணமாக புகழைத் தூண்டுவார்கள், மேலும் என் நீதியின் காரணமாக என் பரிசுத்த நாமத்தை என்றென்றும் புகழ்வார்கள். ஆகவே, நீங்கள் உங்கள் கடமையை முறையாகச் செய்வீர்கள், மேலும் நிலங்கள் முழுவதற்க்கும், என்றென்றும் எப்போதும் என்னைப் புகழ்வீர்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 28” என்பதிலிருந்து

270. ஒவ்வொரு மனிதனின் முடிவையும் நான் தீர்மானிக்கும் நேரமாக இருக்கிறது. இது நான் மனிதனிடத்தில் கிரியையைத் தொடங்கும் காலம் இல்லை. நான் என் பதிவு புத்தகத்தில் ஒவ்வொரு நபருடைய வார்த்தைகளையும், செயல்களையும் என்னைப் பின் தொடர்ந்து வந்த பாதைகளையும், அவர்களுடைய உள்ளார்ந்த சுபாவங்களையும், அவர்கள் எப்படி முடிவில் தங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டார்கள் என்பதையும் ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இவ்விதமாக அவர்கள் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், ஒருவரும் என் கையிலிருந்து தப்புவதில்லை, அனைவரும் நான் ஒதுக்கும் தங்கள் வகையுடன் சேர்க்கப்படுவார்கள். நான் ஒவ்வொருவருடைய சேருமிடத்தையும் தீர்மானிக்க அவர்களுடைய வயது, அனுபவம், அவர்கள் பட்ட பாடுகளின் அளவு மற்றும் இவை எல்லாவற்றிலும் குறைவாக அவர்கள் பெற்றுக்கொண்ட இரக்கத்தின் அளவு போன்றவற்றை நான் அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்கள் சத்தியத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களா என்பதை அடிப்படையாகக் கொள்கிறேன். இது தவிர நீங்கள் வேறு எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. தேவனுடைய சித்தத்தின் வழி நடக்காதவர்களும் கூடத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டாயம் உணர்ந்துகொள்ள வேண்டும். இது மாற்றப்படமுடியாத உண்மை. எனவே, தண்டிக்கப்படுகிறவர்கள் எல்லாம் தேவனுடைய நீதியின் நிமித்தமும் மற்றும் தங்கள் பொல்லாத கிரியைகளின் தகுந்த பிரதிபலனாகவும் தண்டிக்கப்படுகிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து

271. நீ அநேக ஆண்டுகளாக விசுவாசமாக இருந்திருந்தால், என்னுடன் நீண்ட காலமாக இணைந்திருந்தும், என்னிடமிருந்து தொலைவில் இருந்தால், நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் நீ அடிக்கடி தேவனின் மனநிலையை புண்படுத்துகிறாய், உன் முடிவு கணக்கிட மிகவும் கடினமாக இருக்கும். என்னுடன் அநேக ஆண்டுகளாக இணைந்திருப்பது உன்னை மனிதத்தன்மையையும் சத்தியத்தையும் கொண்ட ஒரு நபராக மாற்றத் தவறியது மட்டுமல்லாமல், மேலும், உங்கள் பொல்லாத வழிகளை உங்கள் இயல்புக்குள் பதித்திருந்தால், உங்களுக்கு முன்பு போல இரு மடங்கான அகந்தை மட்டுமல்லாமல், என்னைக் குறித்த உங்கள் தவறான புரிதல்களும் பெருகிவிட்டன, அதாவது நீ என்னை உன் சிறிய சேவகனாகக் கருதுகிறாய், பிறகு நான் சொல்கிறேன், உன் துன்பம் இனி தோல் ஆழம் மட்டும் இல்லை, ஆனால் உன் எலும்புகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. உன் இறுதி யாத்திரைக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக நீ காத்திருக்க வேண்டும். நீ உன் தேவனாக இருக்கும்படி என்னை மன்றாட வேண்டியதில்லை, ஏனென்றால் நீ மரணத்திற்கு தகுதியான பாவத்தை, மன்னிக்க முடியாத பாவத்தை செய்துள்ளாய். நான் உன்னிடம் கருணை காட்ட முடிந்தாலும், பரலோகத்தில் உள்ள தேவன் உன் ஜீவனை எடுக்கும்படி வலியுறுத்துவார், ஏனென்றால் தேவனின் மனநிலைக்கு எதிரான உன் குற்றம் சாதாரண பிரச்சினை அல்ல, ஆனால் மிகவும் கடுமையான இயல்புடையது. நேரம் வரும்போது, உன்னிடம் முன்பே சொல்லாததற்காக என்னைக் குறை கூற வேண்டாம். நீ பூமியிலுள்ள தேவனான கிறிஸ்துவுடன் ஒரு சாதாரண மனிதனாக இணைந்திருக்கும்போது, அதாவது, இந்த தேவன் ஒரு நபரைத் தவிர வேறில்லை என்று நீ விசுவாசிக்கும்போது, இது அனைத்தும் இதற்கே மீண்டும் வருகிறது, அப்போதுதான் நீ அழிந்துவிடுவாய். இது உங்கள் அனைவருக்குமான எனது ஒரே அறிவுரை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

272. தன்னைத்தான் வெறுத்து என்னை நேசிப்பவர்களை நோக்கி என் இரக்கம் செல்லுகிறது, இதற்கிடையில், துன்மார்க்கர் மீது விதிக்கப்படும் தண்டனையானது என்னுடைய நீதியான மனநிலைக்கு துல்லியமான ஆதாரமாகவும், அதற்கும் மேலே என் உக்கிரத்திற்குச் சாட்சியமாகவும் இருக்கிறது. பேரழிவு வரும்போது எனக்கு விரோதமாக இருப்பவர்கள் பஞ்சத்திற்கும், கொள்ளை நோய்க்கும் இலக்காகிப் புலம்புவார்கள். பலவருடங்களாக என்னைப் பின்தொடர்ந்து வந்திருந்தும் எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் செய்தவர்களும் தங்கள் பாவத்தின் பலன்களிலிருந்து தப்ப முடியாது; அவர்களும் கூடப் பேரழிவில் விழுவார்கள், இதைப் போன்ற ஒன்றை ஆயிரம் வருடங்களில் சில தடவைகள் காணமுடிந்திருக்கிறது, அவர்கள் தொடர்ந்து பயத்திலும், பீதியிலும் வாழ்வார்கள். எனக்கு உண்மையும் உத்தமுமாக இருந்தவர்கள் என்னுடைய வல்லமையை மெச்சிக் களிகூறுவார்கள். அவர்கள் சொல்லவொண்ணா திருப்தியை அனுபவித்து நான் ஒருபோதும் மனிதகுலத்திற்கு தந்திடாததுமான மகிழ்ச்சியின் மத்தியில் வாழ்வார்கள். ஏனெனில் நான் மனிதர்களின் நற்கிரியைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து துர்க்கிரியைகளை அருவருக்கின்றேன். நான் முதன் முதலில் மனுகுலத்தை வழிநடத்த தொடங்கியதிலிருந்து என்னைப் போன்ற ஒத்த மனதுள்ள ஒரு கூட்ட ஜனங்களை ஆதாயப்படுத்தும்படி வாஞ்சையுடன் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில், என்னைப் போன்ற ஒத்த மனது இல்லாத ஜனங்களை நான் மறப்பதில்லை. என் இருதயத்தில் நான் அவர்களை எப்போதும் வெறுக்கிறேன். அவர்களை ஆக்கினைக்கு உள்ளாக்கித் தீர்ப்பதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன், அதனைக் கண்டு நான் நிச்சயமாகவே மகிழுவேன். இப்பொழுதோ என்னுடைய நாள் வந்துவிட்டது, நான் இதற்குமேல் காத்திருக்க வேண்டியதில்லை!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து

273. மனித உலகின் அநீதிகளை நான் சரிசெய்வேன். சாத்தான் என் மக்களுக்கு மீண்டும் தீங்கு விளைவிப்பதையும் சத்துருக்கள் மீண்டும் அவர்கள் விரும்புவதைச் செய்வதையும் தடுத்து, உலகம் முழுவதிலும் என் சொந்தக் கைகளால் என் கிரியையைச் செய்வேன். நான் பூமியில் ராஜாவாகி, என் சிங்காசனத்தை அங்கே நகர்த்துவேன், என் சத்துருக்கள் அனைவரும் தரையில் விழுந்து, தங்கள் குற்றங்களை என் சமூகத்தின் முன்பாக ஒப்புக்கொள்வார்கள். என் சோகத்தில், கோபம் கலந்துள்ளது, நான் யாரையும் விட்டு வைக்காமல் முழு பிரபஞ்சத்தையும் தட்டையாக மிதித்துப் போடுவேன், என் சத்துருக்களின் இதயங்களில் அச்சத்தை உண்டுபண்ணுவேன். இனிமேல் அவர்கள் மனிதனை சீரழிக்கக்கூடாது என்பதற்காக நான் முழு பூமியையும் இடிபாடுகளாகச் சிதைத்து, என் சத்துருக்களை இடிபாடுகளுக்குள் தள்ளுவேன். எனது திட்டம் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது, வேறு யாரும், அவர்கள் யாராக இருந்தாலும் அதை மாற்றக்கூடாது. நான் பிரபஞ்சத்திற்கு மேலே கம்பீரமான ஆடம்பரத்துடன் சஞ்சரிப்பதால், மனிதர்கள் அனைவரும் புதியவர்களாக மாறுவார்கள், எல்லாமே புத்துயிர் பெறும். மனிதன் இனிமேல் அழமாட்டான், இனிமேல் என்னிடம் உதவிக்காக அழமாட்டான். அப்பொழுது என் இதயம் மகிழ்ச்சி அடையும், மக்கள் என்னிடம் கொண்டாட்டத்துடன் திரும்புவார்கள். பிரபஞ்சம் முழுவதும், மேலிருந்து கீழ்வரை, மகிழ்ச்சியில் குதூகலிக்கும்…

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 27” என்பதிலிருந்து

275. தேவன் மனிதகுலத்தைச் சிருஷ்டித்தார். அவர்கள் சீர்கெட்டிருக்கிறார்களா அல்லது அவரைப் பின்பற்றுகிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவன் மனிதர்களை தனது மிகவும் நேசத்துக்குரிய அன்புக்குரியவர்களாகக் கருதுகிறார் அல்லது மனிதர்கள் சொல்வது போல், ஜனங்கள் அவருக்குப் பிரியமானவர்கள் மற்றும் அவர்கள் அவருடைய விளையாட்டு பொருட்கள் அல்ல. தம்மை சிருஷ்டிகர் என்றும், மனிதன் தம்முடைய சிருஷ்டிப்பு என்றும் தேவன் சொன்னாலும், அந்தஸ்தில் சிறிதளவு வித்தியாசம் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால், மனிதகுலத்திற்காக தேவன் செய்த அனைத்தும் இந்த இயற்கையின் உறவை மீறுகின்றன. தேவன் மனிதகுலத்தை நேசிக்கிறார், மனிதகுலத்தை கவனித்துக்கொள்கிறார், மனிதகுலத்தின் மீது அக்கறை காட்டுகிறார், அதே போல் மனிதகுலத்திற்கு தொடர்ந்து மற்றும் இடைவிடாமல் வழங்குகிறார். அது கூடுதல் கிரியை அல்லது பல நன்மதிப்பு பெற வேண்டிய ஒன்று என்று அவர் ஒருபோதும் தனது இருதயத்தில் உணர்ந்ததில்லை. மனிதகுலத்தை இரட்சிப்பதும், அவர்களுக்கு வழங்குவதும், அவர்களுக்கு எல்லாவற்றையும் தருவதும் மனிதகுலத்திற்கு பெரும் பங்களிப்பை அளிப்பதாக அவர் உணரவில்லை. அவர் வெறுமனே மனிதகுலத்திற்கு அமைதியாகவும் சத்தமில்லாமலும், தனது சொந்த வழியிலும், தனது சொந்த சாராம்சத்தினாலும், அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதாலும் வழங்குகிறார். அவரிடமிருந்து மனிதகுலம் எவ்வளவு காரியங்களை மற்றும் எவ்வளவு உதவிகளைப் பெற்றாலும், தேவன் ஒருபோதும் அதைப் பற்றி சிந்திப்பதில்லை அல்லது அதற்கு நன்மதிப்பு பெற முயற்சிப்பதில்லை. அது தேவனுடைய சாரம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அது துல்லியமாக தேவனுடைய மனநிலையின் உண்மையான வெளிப்பாடாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

280. தேவன் அவரின் மனுக்குல நிர்வாகத்தினுடைய, மனுக்குலத்தின் இரட்சிப்பினுடைய இந்த நிகழ்வை, எல்லாவற்றையும் விட முக்கியமானதாகக் கருதுகிறார். அவர் இந்த காரியங்களைத் தனது சிந்தையால், தன்னுடைய வார்த்தைகளால் மட்டும் செய்யாமல், நிச்சயமாக ஒரு சாதாரண மனப்பான்மையுடனும் செய்யாமல், அவை அனைத்தையும் அவர் ஒரு திட்டத்துடனும், ஒரு குறிக்கோளுடனும், தரங்களுடனும், தன் சித்தத்துடனும் செய்கிறார். மனுக்குலத்தை இரட்சிக்கும் இந்தக் கிரியை, தேவனுக்கும் மனிதனுக்குமான பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. கிரியை எவ்வளவு கடினமாக இருந்தாலும், தடைகள் எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், மனிதர்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அல்லது மனுக்குலத்தின் கலகத்தன்மை எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், இதில் எதுவுமே தேவனுக்குக் கடினமானதல்ல. தேவன் அவருடைய கடும் முயற்சியைப் பயன்படுத்தி, அவர் தாமே செய்துமுடிக்க விரும்பும் கிரியையை நிர்வகித்து, தன்னைத்தானே மும்முரமாக வைத்துக்கொள்கிறார். அவர் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தவும் செய்து, அவர் கிரியை செய்யவிருக்கும் ஜனங்கள் மீதும், அவர் செய்து முடிக்க விரும்பும் அனைத்து கிரியைகளின் மீதும் தனது இறையாண்மையைப் பயன்படுத்துகிறார்-இது எதுவுமே இதற்கு முன் செய்யப்படவில்லை. மனுக்குலத்தை நிர்வகிக்கும், இரட்சிக்கும் இந்த பெரிய திட்டத்திற்கு தேவன் இந்த முறைகளைப் பயன்படுத்துவதும், இவ்வளவு பெரிய விலைக்கிரயம் செலுத்துவதும் இதுவே முதல் முறை ஆகும். தேவன் இந்த கிரியையைச் செய்துகொண்டிருக்கும்போது, தன்னுடைய கடும் முயற்சியையும், தன்னிடம் இருக்கிறதையும், தான் யாராய் இருக்கிறார் என்பதையும், தன்னுடைய ஞானத்தையும் சர்வ வல்லமையையும், தன்னுடைய மனநிலையின் ஒவ்வொரு அம்சத்தையும் தயக்கமின்றி, மனுக்குலத்திற்கு சிறிது சிறிதாக தெரியப்படுத்துகிறார், வெளிப்படுத்துகிறார். அவர் இதற்கு முன் இவ்விஷயங்களைச் செய்யாததினால், அவர் அவைகளைத் தெரியப்படுத்தி, வெளிப்படுத்துகிறார். ஆகவே, முழு பிரபஞ்சத்திலும், தேவன் நிர்வகிக்கவும் இரட்சிக்கவும் நோக்கம் கொண்ட ஜனங்களைத் தவிர, தேவனுடன் இப்படிப்பட்ட நெருக்கமான உறவைக் கொண்டிருந்த வேறெந்த உயிரினங்களும் அவருடன் இவ்வளவு நெருக்கமாய் இருந்ததில்லை. அவருடைய இருதயத்தில், அவர் நிர்வகிக்கவும் இரட்சிக்கவும் விரும்பும் மனுக்குலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; அவர் இந்த மனுக்குலத்தை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்வாய்க் கருதுகிறார்; அவர் அவர்களுக்காக ஒரு பெரிய கிரயத்தைச் செலுத்தியுள்ளபோதும், அவர்கள் தொடர்ந்து அவரை வேதனைப்படுத்தி, கீழ்ப்படியாமல் இருந்தபோதிலும், அவர் அவர்களிடத்தில் நம்பிக்கை இழக்காமல், எந்தவிதமான முறையீடும், வருத்தமும் இல்லாமல், தனது கிரியை அயராது தொடர்ந்து செய்கிறார். ஏனென்றால், சீக்கிரத்தில் ஜனங்கள் அவருடைய அழைப்பைக் கவனித்து, அவருடைய வார்த்தைகளால் தொடப்பட்டு, அவர் சிருஷ்டிப்பின் கர்த்தர் என்பதை உணர்ந்து, அவர் பக்கம் திரும்புவார்கள் என்பதை அவர் அறிவார் …

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

281. மனுக்குலத்தின் மீதான தேவனுடைய எண்ணங்களையும், அவருடைய மனப்பான்மையையும் உன்னால் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடிந்தால், சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினத்தின் மீதான தேவனுடைய உணர்ச்சியையும், அக்கறையையும் நீ உண்மையிலேயே புரிந்து கொள்ளும்போது, சிருஷ்டிகரால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் ஒவ்வொருவரின் மேலும் பாவித்த ஈடுபாட்டையும், அன்பையும் உன்னால் புரிந்துகொள்ள முடியும். இது நிகழும் போது, தேவனுடைய அன்பை விவரிக்க நீ இரண்டு சொற்களைப் பயன்படுத்துவாய். அந்த இரண்டு சொற்கள் என்ன? சிலர் “தன்னலமற்றது” என்பார்கள் சிலர் “கொடைப்பண்புள்ளது” என்பார்கள். இந்த இரண்டில் “கொடைப்பண்புள்ளது” என்பது தேவனுடைய அன்பை விவரிக்க மிகக் குறைந்தபட்சமே பொருத்தமானதாகும். இது மகத்தான அல்லது பரந்த எண்ணம் கொண்ட ஒருவரை விவரிக்க ஜனங்கள் பயன்படுத்தும் சொல்லாகும். இந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன், ஏனென்றால் இது சீரற்ற முறையில், கண்மூடித்தனமாக, கொள்கையைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் தர்மத்தைக் குறிக்கிறது. இது மூடத்தனமான மற்றும் குழப்பமான ஜனங்களிடம் பரவலாகக் காணப்படுகிறதைப் போல அதிக உணர்ச்சிவசமிக்க மனப்போக்காகும். தேவனுடைய அன்பை விவரிக்க இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படும்போது, தவிர்க்க முடியாமல் அதில் ஒரு தூஷண உள்ளர்த்தம் உள்ளது. தேவனுடைய அன்பை இன்னும் பொருத்தமாக விவரிக்கும் இரண்டு வார்த்தைகள் இங்கே என்னிடம் உள்ளன. அவை யாவை? முதலாவது “அளவற்ற” என்ற வார்த்தை. இந்த வார்த்தை உணர்ச்சியை மிகவும் தூண்டக்கூடியதாய் இருக்கிறதல்லவா? இரண்டாவது “பரந்த” என்ற வார்த்தை. தேவனுடைய அன்பை விவரிக்க நான் பயன்படுத்தும் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உண்மையான அர்த்தம் உள்ளது. எழுத்தின் பிரகாரமாக, “அளவற்ற” என்பது ஒரு பொருளின் அளவு அல்லது திறனை விவரிக்கிறது, ஆனால் அந்தப் பொருள் எவ்வளவு பெரியது என்பதைப் பொருட்படுத்தாமல், அது ஜனங்கள் தொடக்கூடியதும் காணக்கூடியதுமாய் இருக்கிறது. ஏனென்றால் அது மெய்யானனதாக இருக்கிறது, அது ஒரு சுருக்கமான பொருள் அல்ல, ஆனால் ஜனங்களுக்குப் பெரிதும் துல்லியமாகவும், நடைமுறை வழியிலும் யோசனைகளை வழங்கக் கூடிய ஒன்றாகும். நீங்கள் அதை இருபரிமாண அல்லது முப்பரிமாண கண்ணோட்டத்தில் பார்த்தாலும், அதன் இருப்பை நீங்கள் கற்பனை செய்யத் தேவையில்லை, ஏனென்றால் அது உண்மையில் மெய்யாகவே இருக்கிற ஒன்றாகும். தேவனுடைய அன்பை விவரிக்க, “அளவற்ற”, என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது, அவருடைய அன்பை அளவிடுவதற்கான ஒரு முயற்சியாக உணரப்பட்டாலும், அவருடைய அன்பு அளவிட முடியாதது என்ற உணர்வையும் அது தருகிறது. தேவனுடைய அன்பை அளவிட முடியும் என்று நான் சொல்லுகிறேன், ஏனென்றால் அவருடைய அன்பு வெறுமையானதாக இல்லை, மேலும் அது ஒரு புராணக்கதையும் அல்ல. மாறாக, அது தேவனுடைய ஆளுகையின் கீழுள்ள அனைத்துக் காரியங்களாலும் பகிர்ந்து கொள்ளப்படும் ஒன்றாகும், எல்லா உயிரினங்களாலும் வெவ்வேறு அளவுகளிலும், வெவ்வேறு கண்ணோட்டங்களிலும் அனுபவிக்கப்படும் ஒன்றாகும். ஜனங்களால் அதைப் பார்க்கவும் தொடவும் முடியாது என்றாலும், இந்த அன்பு கொஞ்சம் கொஞ்சமாக, அவர்கள் உயிரோடிருக்கையில் வெளிப்படுத்தப்படும்போது, எல்லாக் காரியங்களுக்கும் வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறது மற்றும் உயிரூட்டுகிறது. மேலும் அவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் அனுபவிக்கும் தேவனுடைய அன்பை எண்ணி, சாட்சி கூறுகிறார்கள். தேவனுடைய அன்பு அளவிட முடியாதது என்று நான் சொல்கிறேன், ஏனென்றால் எல்லாக் காரியங்களுக்கும் கொடுக்கும், பராமரிக்கும் தேவனுடைய இரகசியத்தைப் புரிந்து கொள்வது மனிதர்களுக்குக் கடினமானதாகும், அப்படியே எல்லாக் காரியங்களுக்குமான, குறிப்பாக மனுக்குலத்திற்கான தேவனுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்வதும் கடினமே. அதாவது, சிருஷ்டிகர் மனுக்குலத்திற்காகச் சிந்திய இரத்தமும் கண்ணீரும் யாருக்கும் தெரியாது. எவராலும் புரிந்து கொள்ள முடியாது, எவராலும் தன் சொந்தக் கைகளால் சிருஷ்டித்த மனுக்குலத்தின் மீது சிருஷ்டிகர் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தையோ அல்லது மதிப்பையோ புரிந்து கொள்ள முடியாது. தேவனுடைய அன்பை அளவற்றது என விவரிப்பது, அதன் அகலத்தையும், அதன் உண்மை இருப்பையும் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஜனங்களுக்கு உதவுவதற்கேயாகும். “சிருஷ்டிகர்” என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை ஜனங்கள் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளவும், மேலும் “சிருஷ்டிப்பு” என்ற பெயரின் உண்மையான அர்த்தத்தை ஜனங்கள் ஆழமாகப் புரிந்து கொள்ளவும் உதவுவதற்கே ஆகும். “பரந்த” என்ற வார்த்தைப் பொதுவாக எதை விவரிக்கிறது? அது பொதுவாக சமுத்திரம் அல்லது பிரபஞ்சத்தை விவரிக்கப் பயன்படுகிறது, எடுத்துக்காட்டாக: “பரந்த பிரபஞ்சம்” அல்லது “பரந்த சமுத்திரம்”. பிரபஞ்சத்தின் விஸ்தாரமும், சந்தடியற்ற ஆழமும் மனிதப்புரிதலுக்கு அப்பாற்பட்டவையாகும். அது மனிதனுடைய கற்பனையைக் கவரும் ஒன்று, அவர்கள் அதை அதிகமாய் விரும்புகிறார்கள். அதனுடைய இரகசியமும், ஆழமும் பார்க்கும்படி உள்ளன, ஆனால் அடைய முடியாதவையாக இருக்கின்றன. நீ சமுத்திரத்தைப் பற்றி நினைக்கும் போது, நீ அதன் அகலத்தை நினைக்கிறாய், அது எல்லையற்றதாகத் தோன்றுகிறது, மேலும் நீ அதன் மர்மத்தையும், காரியங்களைக் கொண்டிருக்கும் பெரிதான கொள்ளளவையும் உணர முடியும். இதனால்தான் தேவனுடைய அன்பை விவரிக்கவும், அது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை உணரவும், அவருடைய அன்பின் ஆழமான அழகையும், தேவனுடைய அன்பின் வல்லமை எல்லையற்றது மற்றும் பரந்த அளவிலானது என்பதையும் உணர்ந்துகொள்ள ஜனங்களுக்கு உதவவே நான் “பரந்த” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அவருடைய அன்பின் பரிசுத்தத்தன்மையையும், அவருடைய அன்பின் மூலம் வெளிப்படும் தேவனுடைய பெருமதிப்பையும், அவமதிக்க முடியாத தன்மையையும் உணரும்படி ஜனங்களுக்கு உதவ நான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

282. தேவனுடைய சாராம்சத்திலும் மனநிலையிலும் கவனிக்க அவசியமில்லாத அளவில் எளிமையான ஒன்று இருக்கிறது. அதனை தேவன் மட்டுமே கொண்டுள்ளார் மற்றும் பெரிய மனிதர்கள், நல்ல மனிதர்கள் அல்லது அவர்களுடைய கற்பனையின் தேவன் உட்பட எந்தவொரு நபரும் அதனைக் கொண்டிருக்கவில்லை என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். இந்த விஷயம் என்னவாக இருக்கிறது? அது தேவனுடைய தன்னலமற்ற தன்மை. தன்னலமற்ற தன்மையைப் பற்றி பேசும்போது, உன்னையும் மிகவும் தன்னலமற்றவன் என்று நீ நினைக்கலாம். ஏனென்றால் உன் பிள்ளைகள் என்று வரும்போது, நீ அவர்களுடன் ஒருபோதும் பேரம் பேசவோ, சண்டையிடவோ மாட்டாய் அல்லது உன் பெற்றோர் என்று வரும்போது, உன்னையும் மிகவும் தன்னலமற்றவன் என்று நீ நினைக்கிறாய். நீ என்ன நினைக்கிறாய் என்பது முக்கியமல்ல, குறைந்தபட்சம் உன்னிடம் “தன்னலமற்ற” என்ற வார்த்தையின் ஒரு கருத்து இருக்கிறது என்றும் அதை ஒரு நேர்மறையான வார்த்தையாகவும் நீ கருதுகிறாய் மற்றும் தன்னலமற்ற மனிதனாக இருப்பது மிகவும் உன்னதமானது என்றும் நீ கருதுகிறாய். நீ தன்னலமற்றவனாக இருக்கும்போது, நீ உன்னை மிகவும் உயர்வாக மதிக்கிறாய். ஆனால் ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் மற்றும் அவருடைய கிரியை என இவற்றில் உள்ள எல்லாவற்றிலும் தேவனுடைய தன்னலமற்ற தன்மையைக் காணக்கூடியவர்கள் எவரும் இல்லை. ஏன் அது அவ்வாறு இருக்கிறது? ஏனென்றால் மனிதன் மிகப்பெரிய சுயநலவாதி! நான் ஏன் அவ்வாறு சொல்கிறேன்? மனிதகுலம் ஒரு பொருள் மயமான உலகில் ஜீவிக்கிறது. நீ தேவனைப் பின்பற்றலாம், ஆனால் தேவன் உனக்கு எவ்வாறு வழங்குகிறார், உன்னை எவ்வாறு நேசிக்கிறார் மற்றும் எவ்வாறு உனக்காக அக்கறை காட்டுகிறார் என்பதை நீ ஒருபோதும் பார்க்கவில்லை அல்லது கிரகிக்கவில்லை. எனவே, நீ எதைப் பார்க்கிறாய்? உன்னை நேசிக்கும் அல்லது உன்னிடம் அதீத அன்பு கொண்டிருக்கும் உன் இரத்த உறவினர்களை நீ காண்கிறாய். உன் மாம்சத்திற்கு நன்மை பயக்கும் விஷயங்களை நீ காண்கிறாய். ஜனங்களைப் பற்றியும் நீ விரும்பும் விஷயங்களைப் பற்றியும் கவலைப்படுகிறாய். அது மனிதனுடைய தன்னலமற்ற தன்மை என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், அத்தகைய "தன்னலமற்ற" ஜனங்கள், தங்களுக்கு உயிரைக் கொடுக்கும் தேவனைப் பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. தேவனுக்கு எதிர்மாறாக, மனிதனுடைய தன்னலமற்ற தன்மை சுயநலமாகவும் வெறுக்கத்தக்கதாகவும் மாறுகிறது. மனிதன் நம்புகிற தன்னலமற்ற தன்மை, வெறுமையானது மற்றும் நம்பத்தகாதது, கலப்படம் செய்யப்பட்டது, தேவனுடன் பொருந்தாதது மற்றும் தேவனுடன் தொடர்பில்லாதது ஆகும். மனிதனுடைய தன்னலமற்ற தன்மை தனக்கெனவே இருக்கிறது. அதே நேரத்தில் தேவனுடைய தன்னலமற்ற தன்மை அவருடைய சாராம்சத்தின் உண்மையான வெளிப்பாடாகும். தேவனுடைய தன்னலமற்ற தன்மையால் தான் மனிதனுக்கு அவரிடமிருந்து தொடர்ந்து வழங்கப்படுகிறது. நான் இன்று பேசும் இந்த தலைப்பால் நீங்கள் பெரிதும் பாதிக்கப்படாமல் இருக்கலாம், வெறுமனே ஒப்புதலுடன் தலையசைக்கலாம், ஆனால் தேவனுடைய இருதயத்தை உன் இருதயத்தில் கிரகிக்க முயற்சிக்கும்போது, நீ அறியாமல் இதைக் கண்டுபிடிப்பாய்: இந்த உலகில் எல்லா ஜனங்களிடையேயும், விஷயங்களிலும், காரியங்களிலும், தேவனுடைய தன்னலமற்ற தன்மை மட்டுமே உண்மையானது மற்றும் உறுதியானது என்பதை நீ உணர முடியும். ஏனென்றால் உன்னிடமான தேவனுடைய அன்பு மட்டுமே நிபந்தனையற்றது மற்றும் களங்கமற்றது. தேவனைத் தவிர, வேறு எவருடைய தன்னலமற்ற தன்மை என அழைக்கப்படுகிறதும், மேலோட்டமானது மற்றும் நம்பத்தகாதது ஆகும். அது ஒரு நோக்கத்தை, சில காரணங்களைக் கொண்டுள்ளது, ஒரு பரிமாற்றத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதனை சோதனைக்கு உட்படுத்த முடியாது. அது இழிவானது என்றும் வெறுக்கத்தக்கது என்றும் நீங்கள் கூறலாம்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

283. மனிதன் அவருக்கு விரோதமாக இருந்ததால் தேவன் மனிதனை வெறுத்தார். ஆனால் அவருடைய இருதயத்தில், அவருடைய அக்கறை, கவனம், மனிதகுலத்திற்கான தயவு ஆகியவை மாறாமல் இருந்தன. அவர் மனிதகுலத்தை அழித்தபோதும், அவருடைய இருதயம் மாறாமல் இருந்தது. மனிதகுலம் சீர்கேடு நிறைந்ததாகவும், தேவனிடம் கீழ்ப்படியாமலும் கடுமையாகவும் இருந்தபோது, தேவன் தம்முடைய மனநிலையினாலும், சாராம்சத்தினாலும், அவருடைய கொள்கைகளின்படி இந்த மனிதகுலத்தை அழிக்க வேண்டியிருந்தது. ஆனால் தேவனுடைய சாராம்சத்தின் காரணமாக, அவர்கள் தொடர்ந்து ஜீவிக்க முடியும் என்பதற்காக, பின்பும் அவர் மனிதகுலத்திடம் பரிதாபப்பட்டார் மற்றும் மனிதகுலத்தை மீட்பதற்கு பல்வேறு வழிகளைப் பயன்படுத்த விரும்பினார். இருப்பினும், மனிதன் தேவனை எதிர்த்தான், தொடர்ந்து தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தான், தேவனுடைய இரட்சிப்பை ஏற்க மறுத்துவிட்டான். அதாவது, அவருடைய நல்ல நோக்கங்களை ஏற்க மறுத்துவிட்டான். தேவன் எவ்வாறு அவர்களை அழைத்தார், அவர்களுக்கு நினைவூட்டினார், வழங்கினார், அவர்களுக்கு உதவினார் அல்லது சகித்துக்கொண்டார் என்றாலும், மனிதன் அதைப் புரிந்து கொள்ளவில்லை, கிரகிக்கவில்லை, அதனிடம் கவனம் செலுத்தவில்லை. தமது வேதனையில், மனிதன் அவனுடைய போக்கை மாற்றியமைக்கக் காத்திருந்து தேவன் மனிதனுக்கு தமது அதிகபட்ச சகிப்புத்தன்மையை வழங்க மறக்கவில்லை. அவர் தனது வரம்பை அடைந்த பிறகு, தாம் செய்ய வேண்டியதை எந்த தயக்கமும் இல்லாமல் செய்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதகுலத்தை அழிக்க தேவன் திட்டமிட்டிருந்த தருணத்திலிருந்து மனிதகுலத்தை அழிப்பதில் அவருடைய கிரியையின் ஆரம்பம் வரையில் ஒரு குறிப்பிட்ட காலமும் செயல்முறையும் இருந்தது. இந்த செயல்முறை மனிதனை தலைகீழாக மாற்றுவதற்கான நோக்கத்திற்காக இருந்தது. அது தேவன் மனிதனுக்கு அளித்த கடைசி வாய்ப்பு ஆகும். மனிதகுலத்தை அழிப்பதற்கு முன்பு இந்த காலகட்டத்தில் தேவன் என்ன செய்தார்? தேவன் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் நினைவூட்டல் மற்றும் அறிவுறுத்தும் கிரியையைச் செய்தார். தேவனுடைய இருதயம் எவ்வளவு வேதனையையும் துக்கத்தையும் கொண்டிருந்தாலும், அவர் தொடர்ந்து தனது கவனிப்பு, அக்கறை மற்றும் மனிதகுலத்தில் ஏராளமான தயவு ஆகியவற்றைக் கொண்டிருந்தார். இதிலிருந்து நாம் எதனைப் பார்க்கிறோம்? சந்தேகத்திற்கு இடமின்றி, மனிதகுலத்தின் மீதான தேவனுடைய அன்பு உண்மையானது, அவர் உதட்டளவில் மட்டும் சேவையை செய்வதில்லை. அது உண்மையானது, உறுதியானது மற்றும் கிரகிக்கத்தக்கது. அது கற்பனை செய்யப்படவில்லை, கலப்படமாக இல்லை, வஞ்சகமாக அல்லது பாசாங்குத்தனமாக இல்லை. தேவன் ஒருபோதும் எந்த வஞ்சகத்தையும் பயன்படுத்துவதில்லை அல்லது பொய்யான உருவங்களை உருவாக்குவதில்லை. ஜனங்கள் அவருடைய அழகைக் காண அனுமதிக்க அல்லது அவருடைய அன்பையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்த அவர் ஒருபோதும் தவறான சாட்சிகளைப் பயன்படுத்துவதில்லை. தேவனுடைய மனநிலையின் இந்த அம்சங்கள் மனிதனுடைய அன்பிற்கு தகுதியானவை அல்லவா? அவை வணங்குவதற்கு தகுதியானவை அல்லவா? அவை மதிப்புக்குரியவை அல்லவா? இந்த கட்டத்தில், நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்: இந்த வார்த்தைகளைக் கேட்டபின், தேவனுடைய மகத்துவம் வெறும் காகிதத் தாளில் இருக்கும் வெறுமையான வார்த்தைகள் என்று நினைக்கிறீர்களா? தேவனுடைய அன்பு வெறும் வெறுமையான வார்த்தையா? இல்லை! நிச்சயமாக இல்லை! தேவனுடைய உன்னதம், மகத்துவம், பரிசுத்தம், சகிப்புத்தன்மை, அன்பு மற்றும் பல என தேவனுடைய மனநிலை மற்றும் சாராம்சத்தின் பல்வேறு அம்சங்களில் ஒவ்வொன்றின் ஒவ்வொரு விவரமும் அவர் தனது கிரியையைச் செய்யும் ஒவ்வொரு முறையும் நடைமுறை வெளிப்பாட்டைக் காண்கின்றன. அவை மனிதனைப் பற்றிய அவருடைய சித்தத்தில் பொதிந்துள்ளன மற்றும் அவை ஒவ்வொரு நபரிடமும் பூர்த்தி செய்யப்பட்டு பிரதிபலிக்கின்றன. நீ முன்பு உணர்ந்திருக்கிறாயா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மனிதனின் இருதயத்தையும் அனல் மூட்டவும், ஒவ்வொரு மனிதனின் ஆவியையும் எழுப்பவும் தேவன் தனது நேர்மையான இருதயம், ஞானம் மற்றும் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு விதத்திலும் கவனித்து வருகிறார். அது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

அடிக்குறிப்புகள்:

அ. மூல உரை “இது இருக்க முடியாததாக இருப்பதின் ஒரு அடையாளமாகும்” என்று கூறுகிறது.

ஆ. மூல உரை “அத்துடன் புண்படுத்தப்பட முடியாததாக (புண்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ளாமல்)” இருப்பதின் ஒரு அடையாளம் என்றும் கூறுகிறது.

முந்தைய: VI. வேதாகமம் குறித்த வார்த்தைகள்

அடுத்த: VIII. தேவனுடைய கிரியையை அறிந்துகொள்வது குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக