B. சீர்கெட்ட மனுக்குலத்தின் சாத்தானிய மனநிலையையும் அவற்றின் இயல்பான சாரத்தையும் வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

81. தேவனுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் கலகத்தன்மையின் மூலக்காரணம் மனிதன் சாத்தனால் கெடுக்கப்பட்டிருப்பதாகும். சாத்தானுடைய கெடுதலினால் மனிதனுடைய மனசாட்சி மரத்துப் போய்விட்டது. அவன் நெறிகெட்டு இருக்கிறான், அவனுடைய நினைவுகள் சீர்கெட்டதாக இருக்கின்றன, அவனுக்கு பின்னோக்கிய மனக்கண்ணோட்டம் இருக்கிறது. சாத்தானால் கெடுக்கப்படுவதற்கு முன்பாக, மனிதன் இயல்பாகவே தேவனைப் பின்பற்றினான், அவருடைய வார்த்தைகளைக் கேட்டு கீழ்ப்படிந்தான். அவன் இயற்கையாகவே நல்ல பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் இயல்பான மனிதத்தன்மையுடன் இருந்தான். சாத்தானால் கெடுக்கப்பட்டப் பிறகு, மனிதனின் உண்மையான பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் மனிதத்தன்மை மந்தமாகி, சாத்தானால் பலவீனமடைந்தது. இவ்வாறு, தேவனிடத்திலான கீழ்ப்படிதலையும் அன்பையும் அவன் இழந்துபோனான். அவனுடைய அறிவு ஒழுக்கம் தவறிப்போனது. அவன் மனநிலை மிருகத்தின் மனநிலையைப் போலவே மாறிவிட்டது. தேவனைப் பற்றின அவனுடைய கலகத்தன்மை ஏராளமானதாகவும் வருந்தத்தக்கதாகவும் மாறிவிட்டது. ஆயினும், மனிதன் இதை அறிந்திருக்கவுமில்லை, அங்கீகரிக்கவுமில்லை, வெறுமனே எதிர்க்கிறான், கண்மூடித்தனமாக கலகம் செய்கிறான். மனிதனுடைய பகுத்தறிவு, உணர்வு மற்றும் மனசாட்சியின் வெளிப்பாடுகளில் அவனுடைய மனநிலை வெளிப்படுகிறது. ஏனென்றால் அவனுடைய பகுத்தறிவும், உள்ளுணர்வும் சீர்கெட்ட நிலையில் உள்ளது. அவனுடைய மனசாட்சி மிகப்பெரிய அளவில் மழுங்கிப் போயிற்று. இவ்வாறு அவனுடைய மனநிலை தேவனுக்கு விரோதமாக கலகம் செய்கிறதாய் இருக்கிறது. மனிதனுடைய அறிவும், உள்ளுணர்வும் மாற முடியாவிட்டால், அவனுடைய மனநிலையில் மாற்றங்கள் என்பது தேவனுடைய சித்தத்திற்கு இணங்க நடக்காத ஒன்றாகவே இருக்கும். மனிதனுடைய உணர்வு சீர்கெட்டதாக இருந்தால், அவனால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது, தேவனால் பயன்படுத்தப்பட தகுதியற்றவனாவான். “இயல்பான உணர்வு” என்பது தேவனுக்குக் கீழ்ப்படிவது, அவருக்கு உண்மையாக இருப்பது, தேவனுக்காக வாஞ்சையாக இருப்பது, தேவனிடத்தில் முழுமையுடன் இருப்பது மற்றும் தேவனைக் குறித்த மனசாட்சியைக் கொண்டிருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. அது ஒரு மனதோடு, ஒரு சிந்தையோடு தேவனிடத்தில் இருப்பதையும், வேண்டுமென்றே தேவனை எதிர்க்காமல் இருப்பதையும் குறிக்கிறது. ஒழுக்கம் தவறிப்போன உணர்வைக் கொண்டிருப்பது இது போன்றதல்ல. மனிதன் சாத்தானால் கெடுக்கப்பட்டதிலிருந்து, அவன் தேவனைக் குறித்த கருத்துக்களை எழுப்புகிறான், அவனுக்கு தேவனிடத்தில் விசுவாசமோ அவரிடத்தில் வாஞ்சையோ இருந்ததில்லை, தேவனிடத்திலான உணர்வைக் குறித்துச் சொல்வதற்கு அவனுக்கு ஒன்றுமில்லை‌. மனிதன் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறான். அவர் மீது நியாயத்தீர்ப்புகளை வழங்குகிறான். மேலும் அவருடைய முதுகுக்குப் பின்னாக வசைமொழிகளை வீசியெறிகிறான். அவர் தேவன் என்ற தெளிவான புரிதலோடு, மனிதன் தேவனுடைய முதுகுக்குப் பின்பாக நியாயத்தீர்ப்பை வழங்குகிறான்; தேவனுக்குக் கீழ்ப்படிகிற எண்ணம் மனிதனுக்கு இல்லை. அவன் வெறுமனே கண்மூடித்தனமான கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் அவரிடத்தில் வைக்கிறான். ஒழுக்கம் தவறிப்போன உணர்வைக் கொண்ட இத்தகைய ஜனங்களால் தங்கள் சொந்த இழிவான நடத்தையை அறிந்துகொள்ளவோ அல்லது அவர்களுடைய கலகத்தன்மைக்காக வருத்தப்படவோ இயலாது. ஜனங்களால் தங்களையே அறிந்துகொள்ள முடிந்தால், அவர்கள் தங்கள் உணர்வை சிறிதளவு திரும்பப் பெற்றிருப்பார்கள். இன்னும் தங்களைக் குறித்து அறிய முடியாத ஜனங்கள் தேவனை எத்தனை அதிகமாக எதிர்க்கிறார்களோ, அவர்களின் உணர்வு அத்தனைக் குறைவுடன் இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து

82. பல்லாயிரம் ஆண்டுகள் சீர்கேட்டுக்குப் பிறகு, மனிதன் உணர்வற்றவனாக, மந்த அறிவுள்ளவனாக இருக்கிறான்; தேவனைப் பற்றின மனிதனுடைய கலகத்தன்மை சரித்திர புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அளவிற்கு, தேவனை எதிர்க்கும் ஒரு பிசாசாய் அவன் மாறிவிட்டான். மனிதனே கூட தனது கலகத்தனமான நடத்தைப் பற்றிய முழு கணக்கை ஒப்புவிக்க இயலாது—ஏனென்றால் மனிதன் சாத்தானால் ஆழமாய்க் கெடுக்கப்பட்டிருக்கிறான், எங்கே திரும்புவது என்று அவனுக்குத் தெரியாத அளவிற்கு சாத்தானால் திசைமாறி நடத்தப்பட்டிருக்கிறான். இன்றும் கூட மனிதன் இன்னமும் தேவனுக்குத் துரோகம் செய்கிறான். மனிதன் தேவனைப் பார்க்கும்போது, அவருக்குத் துரோகம் செய்கிறான். அவன் தேவனைப் பார்க்க முடியாமல் போனால், அப்படியே அவன் அவருக்குத் துரோகம் செய்கிறான். இவர்கள் தேவனுடைய சாபங்களையும் தேவனுடைய கோபத்தையும் பார்த்தவர்களாய் இருந்தாலும்கூட, அவருக்கு இன்னும் துரோகம் செய்கிறார்கள். அதனால் மனிதனுடைய அறிவு அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் மனிதனுடைய மனசாட்சியும் அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் நான் கூறுகிறேன். நான் நோக்கிப் பார்க்கும் மனிதன், மனித உடையில் இருக்கும் ஒரு மிருகம், அவன் ஒரு விஷப்பாம்பு, மேலும் அவன் எவ்வளவு பரிதாபமாய் என் கண்கள் முன் தென்பட முயற்சித்தாலும், அவனிடத்தில் ஒருபோதும் நான் இரக்கம் காட்ட மாட்டேன். ஏனென்றால் மனிதனுக்கு, கருப்பு வெள்ளைக்கும், சத்தியத்திற்கும் சத்தியமல்லாததற்கும் இடையேயான வித்தியாசத்தைக் குறித்த புரிதல் இல்லை. மனிதனுடைய உணர்வு மிகவும் மரத்துப்போய்விட்டது, என்றாலும் இன்னமும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறான்; அவனுடைய மனிதத்தன்மை மிகவும் இழிவானதாக இருக்கிறது, அப்படியிருந்தும் அவன் ஒரு ராஜாவின் ஆளும் அதிகாரத்தைக் கொண்டிருக்க விரும்புகிறான். அப்படிப்பட்ட உணர்வைக் கொண்டிருக்கும் அவன் யாருக்கு ராஜாவாக முடியும்? அப்படிப்பட்ட மனிதத்தன்மையுடைய அவன் எப்படி சிங்காசனத்தின் மேல் அமர முடியும்? உண்மையாகவே மனிதனுக்கு வெட்கமே இல்லை. அவன் ஒரு அகந்தையுள்ள துன்மார்க்கன்! ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் உங்களிடம் ஒரு யோசனை கூறுகிறேன். முதலாவது நீங்கள் ஒரு கண்ணாடியைக் கண்டுபிடித்து, உங்களின் சொந்த அருவருப்பான பிம்பத்தைப் பார்க்கும்படி அறிவுறுத்துகிறேன்—ஒரு ராஜாவாக இருப்பதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது? ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரின் முகம் உனக்கு இருக்கிறதா? உன்னுடைய மனநிலையில் சிறிதளவேனும் மாற்றமில்லை, எந்த ஒரு சத்தியத்தையும் நீ கைக்கொள்ளவும் இல்லை, அப்படியிருந்தும் அற்புதமான நாளைக்காக நீ ஆசைப்படுகிறாய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்! இத்தகைய அசுத்தமான நிலத்தில் பிறந்த மனிதன், சமுதாயத்தால் மோசமாகக் கெடுக்கப்பட்டிருக்கிறான், நிலப்பிரபுத்துவ நெறிமுறைகளால் அவன் தாக்கப்பட்டிருக்கிறான். மேலும் அவன் “உயர் கல்வி நிறுவனங்களில்” கற்பிக்கப்பட்டிருக்கிறான். பின்னோக்கிய சிந்தனை, அசுத்தமான அறநெறி, வாழ்க்கைப் பற்றிய குறுகிய பார்வை, வாழ்க்கைக்கான இழிவான தத்துவம், முழுவதும் உபயோகமற்ற வாழ்க்கை, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்—இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதனின் இதயத்தில் தீவிரமாய் ஊடுருவி, அவனுடைய மனசாட்சியைக் கடுமையாக வலுவிழக்கச் செய்து தாக்கியுள்ளன. இதன் விளைவாக, மனிதன் எப்பொழுதும் தேவனிடமிருந்து தூரத்தில் இருக்கிறான், எப்பொழுதும் அவரை எதிர்க்கிறான். மனிதனுடைய மனநிலை நாளுக்கு நாள் அதிகக் கொடூரமாகிறது. தேவனுக்காக எதையும் விருப்பத்துடன் விட்டுவிட, விருப்பத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிய, மேலும், விருப்பத்துடன் தேவனுடைய பிரசன்னத்தைத் தேட ஒருவர் கூட இல்லை. அதற்குப் பதிலாக, சாத்தானின் இராஜ்யத்தின்கீழ், சேற்று நிலத்தில் மாம்ச கேட்டிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, இன்பத்தைத் பின்தொடர்வதைத் தவிர மனிதன் வேறொன்றும் செய்வதில்லை. சத்தியத்தைக் கேட்டாலும்கூட, இருளில் வாழ்கிற அவர்கள் அதை கைக்கொள்ள யோசிப்பதுமில்லை, அவர் பிரசன்னமாவதைப் பார்த்திருந்தாலும்கூட தேவனைத் தேடுவதற்கு அவர்கள் நாட்டங்கொள்வதுமில்லை. இவ்வளவு ஒழுக்கம் கெட்ட மனிதகுலத்திற்கு இரட்சிப்பின் வாய்ப்பு எப்படி இருக்கும்? இவ்வளவு சீர்கெட்ட ஒரு மனிதகுலம் எவ்வாறு வெளிச்சத்தில் வாழ முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து

83. மனிதனின் சீர்கெட்ட மனநிலையின் வெளிப்பாடானது அவனுடைய மனசாட்சி, அவனுடைய தீங்கிழைக்கும் சுபாவம் மற்றும் அவனுடைய ஆரோக்கியமற்ற உணர்வு ஆகியவற்றைத் தவிர வேறொன்றிலும் உருவாகிறதில்லை. மனிதனுடைய மனசாட்சியும் உணர்வும் மீண்டும் இயல்பானதாக மாற முடியுமானால், அவன் தேவனுக்கு முன்பாகப் பயனுள்ள மனிதனாக மாற முடியும். ஏனென்றால் மனிதனின் மனசாட்சி எப்பொழுதும் உணர்ச்சியற்றதாக இருப்பதாலும், ஒருபோதும் நேர்மையாக இல்லாத மனிதனுடைய உணர்வு இன்னும் மந்தமாகி விட்டதாலும், மனிதன் தேவனிடத்தில் மேலும் மேலும் கலகம் செய்கிறவனாக இருப்பதாலுமேயன்றி வேறில்லை. அவன் இயேசுவையே சிலுவையில் அறைந்து, தன் வீட்டிற்குள் கடைசிக் கால தேவனுடைய மனுஷ அவதரிப்பை மறுத்து, தேவனுடைய மாம்சத்தை நிந்தித்து, அதைக் கீழ்த்தரமாய்ப் பார்க்கிறான். மனிதனுக்குச் சிறிதளவேனும் மனிதத்தன்மை இருந்திருந்தால், அவன் மனிதனாக அவதரித்த தேவனுடைய மாம்சத்தைக் கையாளும் முறையில் இவ்வளவு கொடூரமாக இருந்திருக்க மாட்டான். அவனுக்குச் சிறிதளவேனும் உணர்வு இருந்திருந்தால், அவன் மனிதனாக அவதரித்த தேவனுடைய மாம்சத்தைக் கையாளும் முறையில் இவ்வளவு இரக்கமற்றவனாக இருந்திருக்க மாட்டான். அவனுக்குச் சிறிதளவேனும் மனசாட்சி இருந்திருந்தால், அவன் தேவனின் மனுஷ அவதரிப்புக்கு இவ்வகையில் “நன்றி செலுத்தியிருந்திருக்க” மாட்டான். தேவன் மாம்சமாக வந்த இந்த காலக்கட்டத்தில் மனிதன் வாழ்கிறான். ஆயினும் இப்படிப்பட்ட நல்ல வாய்ப்பைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்த முடியாமல் இருக்கிறான். மாறாக அவன் தேவனுடைய வருகையைச் சபித்து அல்லது தேவனுடைய மனுஷ அவதரிப்பின் உண்மையை முற்றிலும் புறக்கணித்து, வெளிப்படையாய் அதற்கு எதிராகவும், அதைக்குறித்து சோர்வடைந்தும் போகிறான். தேவனுடைய வருகையை மனிதன் எப்படிக் கையாள்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், சுருங்கச் சொன்னால், மனிதன் தேவனிடத்தில் கண்மூடித்தனமாக விண்ணப்பங்களை ஏறெடுத்து, அவரைச் சிறிதளவாகிலும் வரவேற்கவில்லை என்றாலும், தேவன் எப்போதும் அவருடைய கிரியையைப் பொறுமையாக நடத்திக் கொண்டுவந்திருக்கிறார். மனிதனின் மனநிலை மிகக் கொடூரமானதாக மாறிவிட்டது, அவனுடைய உணர்வு மிகவும் மந்தமாகி விட்டது, அவன் மனசாட்சி தீயவனால் முழுவதுமாக நசுக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு முன்பாகவே மனிதனுடைய உண்மையான மனசாட்சியாக இருப்பதை நிறுத்திக்கொண்டுள்ளது. மனிதகுலத்திற்கு இவ்வளவு அதிக ஜீவனையும் கிருபையையும் ஈந்ததற்காக மனித உருவான தேவனுக்கு மனிதன் நன்றி கெட்டவனாக இருப்பது மட்டுமல்ல, அவனுக்கு சத்தியத்தைத் தந்ததற்காக தேவனிடம் மிகவும் மனங்கசந்தும் கொள்கிறான்; மனிதனுக்கு சத்தியத்தின் மீது சிறிதளவும் விருப்பம் இல்லாததால் தான் அவன் தேவன் மீது மனக்கசப்படைகிறான். மனிதனாக அவதரித்த தேவனுக்காக மனிதனால் தன் ஜீவனைக் கொடுக்க முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், அவன் அவரிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறான். மனிதன் தேவனுக்காகக் கொடுத்ததை விட டஜன் கணக்கு அதிகமான வட்டியைக் கோருகிறான். அத்தகைய மனசாட்சியையும் உணர்வையும் உடைய ஜனங்கள் இது ஒரு பெரிய விஷயமல்ல என்று நினைக்கின்றனர். அவர்கள் தேவனுக்காகத் தங்களையே அதிகம் செலவு செய்திருக்கிறார்கள் என்றும், தேவன் தங்களுக்கு மிகக்குறைவாகவே கொடுத்திருக்கிறார் என்றும் இன்னும் நம்புகின்றனர். ஒரு கிண்ணம் தண்ணீரை எனக்குக் கொடுத்து விட்டு, என்னிடத்தில் தங்கள் கரங்களை நீட்டி, இரண்டு கிண்ணம் பாலுக்கான பணத்தை அவர்களுக்கு நான் செலுத்தும்படி கோருகிறார்கள் அல்லது எனக்கு ஒரு இரவுக்கு ஒரு அறையைக் கொடுத்து விட்டு, பல இரவுகளுக்கான வாடகையை நான் செலுத்தும்படி கோருகிறார்கள். இத்தகைய மனிதத்தன்மையும் மனசாட்சியும் கொண்ட நீங்கள் எப்படி இன்னும் ஜீவனை அடைய விரும்புகிறீர்கள்? எத்தனை வெறுக்கத்தக்க பாவிகள் நீங்கள்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து

84. உங்களுடைய இருதயங்களின் ஆழங்களில் உள்ள அருவருப்பை நான் எடுத்து கூறவில்லையென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு எல்லா மகிமையையும் நீங்களே எடுத்துக் கொள்வீர்கள் என்று சொல்வது நியாயமானதாக இருக்கும். உங்களுடைய ஆணவம், இறுமாப்பான சுபாவங்களினால் உந்தப்பட்டு உங்களுடைய சொந்த மனசாட்சியை மறுதலித்து, கிறிஸ்துவுக்கு விரோதமாக கலகம் செய்து, அவரை எதிர்த்து, உங்கள் அவல நிலையை வெளிப்படுத்துகிறீர்கள், இதன் மூலம் உங்கள் உள்நோக்கங்கள், எண்ணங்கள், களியாட்ட வாஞ்சைகள், பேராசை மயக்கம் ஆகியவை வெளிச்சத்திற்கு வருகின்றன. இன்னமும் கிறிஸ்துவின் கிரியையைக் குறித்த உங்கள் நீண்ட கால உணர்வுகளைப் பற்றியே பிதற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்; மேலும் கிறிஸ்து நீண்ட காலங்களுக்கு முன்பு பேசிய சத்தியங்களையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். இதுதான் பரிசுத்தமில்லாத உங்கள் விசுவாசம். நான் மனிதனை முற்றிலும் ஒரு கண்டிப்பான நெறிமுறைக்குள் வைத்துள்ளேன். உங்களுடைய விசுவாசம் உள்நோக்கத்துடனும் நிபந்தனைகளுடனும் வருமானால், நான் அதற்கு மாறாக உங்களுடைய பெயரளவிலான விசுவாசத்தை தவிர்த்துவிடுவேன், ஏனென்றால் தங்கள் உள்நோக்கத்தினால் என்னை வஞ்சித்து நிபந்தனைகளினால் என்னை மிரட்டி பணியவைப்பவர்களை நான் வெறுக்கிறேன். மனிதன் எனக்கு முற்றிலும் உண்மையாய் இருப்பதையும், விசுவாசம் என்னும் ஒரே வார்த்தையின் பொருட்டு அந்த விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அனைத்து காரியங்களையும் செய்வதையுமே விரும்புகிறேன். நான் உங்களை எப்போதும் நேர்மையுடன் நடத்தியிருப்பதனால், என்னை மகிழ்விக்கும் நோக்கில் முகத்துதிகளை பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன். விசுவாசம் என்று வரும்போது அநேகர் தங்களுக்கு விசுவாசம் இருப்பதால் தாங்கள் தேவனை பின்பற்றுகிறோம் என்று எண்ணுகிறார்கள், மற்றபடி இதுபோன்ற துன்பங்களை சகித்துக்கொள்ள மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் தேவன் உண்டென்று நம்புவீர்களானால் ஏன் அவரை தொழுதுகொள்ளுகிறது இல்லை? ஏன் அவரைப் பற்றி சிறிதளவு பயம் உங்கள் இருதயத்தில் இருப்பதில்லை? நீங்கள் கிறிஸ்துவை மனித அவதாரம் எடுத்த தேவன் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும்போது ஏன் அவரை அவமதிக்கிறீர்கள்? நீகள் ஏன் அவரிடம் அவபக்த்தியுடன் நடந்துகொள்ளுகிறீர்கள்? நீங்கள் ஏன் வெளிப்படையாக அவரை நியாயம் தீர்க்கிறீர்கள்? நீங்கள் ஏன் அவருடைய ஒவ்வொரு அசைவையும் உளவு பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? ஏன் அவருடைய திட்டங்களுக்கு ஒப்புக்கொடுப்பதில்லை? ஏன் அவருடைய வார்த்தைகளின்படி செயல்படுவதில்லை? ஏன் அவருடைய காணிக்கைகளை கொள்ளையடித்து பறித்துக்கொள்ள எண்ணுகிறீர்கள்? ஏன் கிறிஸ்துவின் ஸ்தானத்திலிருந்து பேச வேண்டுமென்று எண்ணுகிறீர்கள்? அவருடைய கிரியைகளும் வார்த்தைகளும் சரியானதுதானா என்று ஏன் நியாயம் தீர்க்கப் பார்க்கிறீர்கள்? அவருக்கு பின்னால் ஏன் தைரியமாக தூஷண வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்? இவைகளும் இன்னும் மற்றவைகளும்தான் உங்களுடைய விசுவாசத்தை கட்டி எழுப்புகின்றனவா? என்ற கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?” என்பதிலிருந்து

85. தேவன் அசையாத களிமண் சிலையாக இருக்கிறார் என்பது போல அவரை மதிப்பிடவும் வரையறுக்கவும் உங்கள் சொந்தக் கருத்துகளைப் பயன்படுத்தினால், நீங்கள் வேதாகமத்தின் எல்லைக்குள் தேவனை முழுவதுமாக வரையறுத்து, ஒரு குறிப்பிட்ட வேலை வரம்பிற்குள் அவரை அடக்கி வைத்தால், நீங்கள் தேவனை நிந்திக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. ஏனென்றால், பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்த யூதர்கள், தேவனை அவர்கள் தங்கள் இருதயங்களில் வைத்திருக்கும் ஓர் உருமாறாத சிலையாக வைத்திருந்தார்கள், தேவனை மேசியா என்று மட்டுமே அழைக்க முடியும், மேசியா என்று அழைக்கப்படுபவர் மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்றும், தேவனை ஒரு (உயிரற்ற) களிமண் சிலை போல கருதி அவருக்கு மனிதகுலம் ஊழியம் செய்து வணங்கியதால், அவர்கள் அந்தக் காலத்தில் வந்த இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள், அவருக்கு மரண தண்டனை அளித்தார்கள். குற்றமற்ற இயேசு இவ்வாறு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எந்தவொரு குற்றத்திற்கும் தேவன் பாத்திரமற்றவர், ஆனாலும் மனுஷன் அவரைக் காப்பாற்ற மறுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி வற்புறுத்தினான், அதனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். தேவன் எப்போதும் மாறாதவர் என்று மனுஷன் எப்போதும் விசுவாசிக்கிறான், வேதாகமம் என்ற ஒரே ஒரு புத்தகத்தின் அடிப்படையில் அவரை வரையறுக்கிறான், தேவனின் ஆளுகையைப் பற்றி மனுஷனுக்கு ஒரு முழுமையான புரிதல் இருப்பதைப் போலவும், தேவன் செய்யும் எல்லாவற்றையும் மனுஷன் தன் உள்ளங்கையில் வைத்திருப்பதைப் போலவும் விசுவாசிக்கிறான். ஜனங்கள் மிகவும் புத்தியீனமானவர்கள், மிகவும் ஆணவக்காரர்கள், அவர்கள் அனைவருக்கும் மிகைப்படுத்திக் கூறும் ஒரு இயல்பான திறமை உள்ளது. தேவனைப் பற்றிய உங்கள் அறிவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீங்கள் தேவனை அறியவில்லை என்றும், நீங்கள் தேவனை மிகவும் எதிர்க்கும் ஒருவர் என்றும், தேவனை நிந்திக்கிறீர்கள் என்றும் நான் இன்னும் சொல்கிறேன், ஏனென்றால் நீங்கள் தேவனின் செயலுக்குக் கீழ்ப்படிந்து, தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட பாதையில் நடக்கவும் முற்றிலும் திரணியில்லாதவர்கள். மனுஷனின் செயல்களில் தேவன் ஏன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை? ஏனென்றால், மனுஷனுக்கு தேவனைத் தெரியாது, ஏனென்றால் அவனுக்குப் பல கருத்துகள் உள்ளன, மேலும் தேவனைப் பற்றிய அவனுடைய அறிவு எந்த வகையிலும் யதார்த்தத்துடன் உடன்படவில்லை, மாறாக, ஒரே கருத்தை ஒரே மாதிரியாக மாறுபாடின்றி மீண்டும் மீண்டும் சொல்கிறான், மேலும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரே அணுகுமுறையைப் பயன்படுத்துகிறான். எனவே, தேவன் இன்று பூமிக்கு வந்தால், மீண்டுமொருமுறை மனிதனால் சிலுவையில் அறையப்படுவார். என்ன ஒரு கொடூரமான மனிதகுலம்! சதிக்கு உடந்தையாயிருத்தல் மற்றும் சூழ்ச்சி, ஒருவரிடமிருந்து ஒருவர் அபகரித்துக்கொள்ளுதல் மற்றும் பிடுங்குதல், புகழ் மற்றும் அதிர்ஷ்டத்திற்கான போராட்டம், பரஸ்பரப் படுகொலை ஆகியவை எப்போது முடிவுக்கு வரும்? தேவன் பேசிய நூறாயிரக்கணக்கான வார்த்தைகள் இருந்தபோதிலும், யாரும் அவர்களின் உணர்வுக்கு வரவில்லை. ஜனங்கள் தங்கள் குடும்பங்கள், மகன்கள் மற்றும் மகள்களுக்காக, தங்கள் தொழில், எதிர்கால வாய்ப்புகள், பதவி, வீண்புகழ்ச்சி மற்றும் பணம் ஆகியவற்றிற்காகவும், உணவு, உடை மற்றும் மாம்சம் ஆகியவற்றிற்காகவும் செயல்படுகிறார்கள். ஆனால், தேவனுக்காக உண்மையிலேயே எவருடைய செயல்களும் உள்ளனவா? தேவனுக்காக செயல்படுபவர்களில் கூட, தேவனை அறிந்தவர்கள் மிகக் குறைவு. எத்தனை பேர் தங்கள் சொந்த நலன்களுக்காகச் செயல்படவில்லை? தங்கள் சொந்த அந்தஸ்தைப் பாதுகாப்பதற்காக எத்தனை பேர் மற்றவர்களை ஒடுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ இல்லை? ஆகவே, எண்ணத்தகாத முறையில் தேவன் பலவந்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார், எண்ணற்ற காட்டுமிராண்டித்தனமான நீதிபதிகள் தேவனை குற்றப்படுத்தி அவரை மீண்டும் சிலுவையில் அறைந்தார்கள். தேவன் நிமித்தம் உண்மையிலேயே செயல்படுவதால் எத்தனை பேர் நீதிமான்கள் என்று அழைக்கப்படுவார்கள்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்” என்பதிலிருந்து

86. பலர் தேவனுடைய பலதரப்பட்ட மற்றும் மாறுபட்ட கிரியையை அறியாததனால் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அளவிடும் சிறிதளவு அறிவு மற்றும் உபதேசத்தைக் கொண்டிருப்பதனால், அவர்கள் தேவனை எதிர்க்கவில்லையா மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கவில்லையா? இதுபோன்றவர்களின் அனுபவங்கள் மேலோட்டமானவை என்றாலும், அவர்கள் இயல்பாகவே அகந்தையுள்ளவர்களாகவும், கட்டுப்பாடற்றவர்களாவும் இருக்கின்றனர், மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அலட்சியமாக கருதுகின்றனர், பரிசுத்த ஆவியானவரின் ஒழுக்கங்களைப் புறக்கணிக்கின்றனர், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை “உறுதிப்படுத்த” தங்கள் பழைய அற்பமான வாக்குவாதங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஒரு செயலைச் செய்கின்றனர், மேலும் தங்கள் சொந்த கல்வி மற்றும் புலமையை முழுமையாக நம்புகின்றனர், மேலும் அவர்களால் உலகம் முழுவதும் பயணிக்க முடியும் என்று நம்புகின்றனர். இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்லவா, புதிய யுகத்தால் அவர்கள் அகற்றப்படமாட்டார்களா? தேவனுக்கு முன்பாக வந்து அவரை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் அறியாதவர்களாகவும், விவரமறியாத அற்பமானவர்களாக இல்லையா, அவர்கள் எவ்வளவு புத்திசாலித்தனமானவர்கள் என்பதைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்கள் அல்லவா? வேதாகமத்தைக் குறித்த மிகக் குறைவான அறிவைக் கொண்டு, அவர்கள் உலகின் “கல்வியாளர்களை” தடுமாறச் செய்ய முயற்சி செய்கிறார்கள்; ஜனங்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு மேலோட்டமான உபதேசத்தைக் கொண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை தலைகீழாக மாற்ற முயற்சி செய்கிறார்கள், மேலும் அது தங்களின் சொந்த சிந்தனை முறையைச் சுற்றியே சுழல முயற்சி செய்கிறார்கள். அவர்கள் குறுகிய பார்வையுடைவர்களாக இருப்பதனால், 6,000 ஆண்டுகால தேவனுடைய கிரியையை ஒரே பார்வையில் பார்க்க முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கென்று குறிப்பிடத் தகுந்த எந்த அறிவும் கிடையாது! உண்மையில், தேவனைப் பற்றிய அறிவை ஜனங்கள் எந்த அளவுக்கு அதிகமாக கொண்டிருக்கிறார்களோ, அந்த அளவுக்கு மெதுவாக அவருடைய கிரியையை நியாயந்தீர்க்கிறார்கள். மேலும், அவர்கள் தேவனுடைய இன்றைய கிரியையைப் பற்றிய அறிவைக் குறித்து சிறிதளவு பேசுகின்றனர், ஆனால் அவர்கள் தங்கள் நியாயத்தீர்ப்புகளில் கண்முடித்தனமாக இருப்பதில்லை. ஜனங்கள் தேவனை எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுந்த இறுமாப்புள்ளவர்களாகவும், அளவுக்குமீறிய தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர், அந்த அளவுக்கு அவர்கள் தேவன் இருப்பதை தேவையில்லாமல் பறைசாற்றுகின்றனர், ஆனாலும் அவர்கள் கோட்பாட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள், உண்மையான ஆதாரங்கள் எதையும் கொடுப்பதில்லை. இதுபோன்றவர்கள் எந்த மதிப்பும் இல்லாதவர்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒரு விளையாட்டாகப் பார்ப்பவர்கள் அற்பமானவர்களே! பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை எதிர்கொள்ளும்போது எச்சரிக்கையாக இல்லாதவர்கள், தங்கள் வாயால் அலம்புகிறார்கள், விரைவாக நியாந்தீர்க்கிறார்கள், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சரித்தன்மையை மறுக்க தங்கள் இயல்பான உள்ளுணர்வுக்கு அளவுக்குமீறிய சுதந்திரம் கொடுக்கிறார்கள் மற்றும் அதை அவமதிக்கிறவர்களாகவும் தூஷிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள், இதுபோன்ற மரியாதையில்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அலட்சியம் செய்யவில்லையா? மேலும், அவர்கள் மிகுந்த இறுமாப்புள்ளவர்களாவும், இயல்பாகவே பெருமை கொண்டவர்களாகவும், கட்டுப்பாடில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் அல்லவா? இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாள் வந்தாலும், தேவன் அவர்களை சகித்துக்கொள்ள மாட்டார். தேவனுக்காக கிரியை செய்பவர்களை அவர்கள் குறைத்துப் பார்ப்பது மட்டுமல்லாமல், தேவனுக்கு எதிராக தேவதூஷணம் செய்கிறார்கள். இதுபோன்ற முட்டாள்தனமானவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள், இந்த யுகத்திலோ அல்லது வரவிருக்கும் யுகத்திலோ, அவர்கள் என்றென்றும் நரகத்தில் அழிந்து போவார்கள்! இதுபோன்ற மரியாதையில்லாதவர்கள், கட்டுப்பாடில்லாதவர்கள் தேவனை விசுவாசிப்பதாக பாசாங்கு செய்கின்றனர். ஜனங்கள் எவ்வளவு அதிகமாக இப்படி இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு தேவனுடைய நிர்வாக ஆணைகளுக்கு இடறலுண்டாக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே கட்டுப்பாடில்லாத, ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படியாத இறுமாப்புள்ளவர்கள் அனைவரும் இந்தப் பாதையில் நடக்கவில்லையா? எப்போதும் புதியவரும், ஒருபோதும் முதுமையடையாதவருமான தேவனை அவர்கள் நாளுக்கு நாள் எதிர்க்கவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

87. நீங்கள் தேவனுடைய கிரியையின் கொள்கைகளை அறியாததினாலும் மற்றும் நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை போதுமான அளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததினாலும், நீங்கள் தேவனுடைய கிரியையை எதிர்க்கிறீர்கள் அல்லது இன்றைய கிரியையை அளவிட உங்கள் சொந்த கருத்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் தேவனை எதிர்ப்பது மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு இடையூறு ஏற்படுத்துவது உங்கள் கருத்துக்களாலும் உள்ளார்ந்த இறுமாப்பினாலும் ஏற்படுகின்றன. இது தேவனுடைய கிரியை தவறானது என்பதால் அல்ல, ஆனால் நீங்கள் இயல்பாகவே மிகவும் கீழ்ப்படியாதவர்கள் என்பதனால் ஆகும். தேவன் மீதான தங்கள் விசுவாசத்தைக் கண்டறிந்த பிறகு, மனுஷன் எங்கிருந்து வந்தான் என்று சிலரால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை, ஆனாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் சரியானவற்றையும் தவறானவற்றையும் மதிப்பிடும் பொது சொற்பொழிவுகளை ஆற்ற அவர்கள் தைரியம் கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை கொண்டுள்ள அப்போஸ்தலர்களுக்கும் அவர்கள் விரிவுரை வழங்குகின்றார்கள், கருத்துரை கூறுகிறார்கள், அளவுக்கதிகமாகப் பேசுகிறார்கள்; அவர்களின் மனிதத்தன்மை மிகவும் குறைவாக உள்ளது அவர்களுக்கு சிறிதளவும் அறிவு இல்லை. இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் புறக்கணிக்கப்பட்டு, நரகத்தின் அக்கினியினால் எரிக்கப்படும் நாள் வரவில்லையா? அவர்கள் தேவனுடைய கிரியையை அறியவில்லை, மாறாக அவருடைய கிரியையைப் பரியாசம் செய்கிறார்கள், மேலும் எவ்வாறு கிரியை செய்ய வேண்டும் என்று தேவனுக்கு அறிவுறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற அநீதியானவர்களால் தேவனை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? தேடும் மற்றும் அனுபவிக்கும் செயல்முறையின்போது தான் மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான். பரிசுத்த ஆவியானவரின் அறிவொளி மூலமே மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான் என்று விரும்பியபடி விமர்சிப்பதன் மூலம் அல்ல. தேவனைப் பற்றிய ஜனங்களின் அறிவு எவ்வளவு துல்லியமானதாகிறதோ, அந்த அளவு குறைவாகவே அவர்கள் அவரை எதிர்க்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, தேவனைப் பற்றி ஜனங்கள் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அவரை எதிர்க்க வாய்ப்புள்ளது. உனது கருத்துக்கள், உனது பழைய சுபாவம் மற்றும் உனது மனிதத்தன்மை, குணம் மற்றும் நீதிநெறி ஆகியவையே நீ தேவனை எதிர்க்கும் “மூலதனம்” ஆகும். நீ எவ்வளவு அதிகமாகச் சீர்கேடானவனாகவும், தரங்கெட்டவனாகவும், இழிவானவனாகவும் மாறுகிறாயோ, அவ்வளவு அதிகமாக நீ தேவனுக்கு சத்துருவாக இருக்கிறாய். வலுவான கருத்துக்களை கொண்டவர்களும் சுய நீதி மனநிலையைக் கொண்டவர்களும் மாம்சமாகிய தேவனுடன் இன்னும் அதிகமான பகையுடன் உள்ளனர். இதுபோன்றவர்கள்தான் அந்திக்கிறிஸ்துகள். உனது கருத்துக்கள் சரிசெய்யப்படாவிட்டால், அவை எப்போதும் தேவனுக்கு எதிராகவே இருக்கும். நீ ஒருபோதும் தேவனுடன் இணக்கமாக இருக்கமாட்டாய், எப்போதும் அவரிடமிருந்து விலகியே இருப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

88. தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத எவரும் அவரை எதிர்ப்பவர் ஆவர், தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொண்டாலும், இன்னும் தேவனை திருப்திப்படுத்த நாடிச் செல்லாதவர் தேவனின் எதிராளி என்றும் கருதப்படுகிறார். பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்கு சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் “நல்ல அமைப்பாகத்” தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துகளே தவிர வேறு யாருமல்ல என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? தேவனின் முன்னிலையில் தங்களை உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பவர்கள் மனுஷனில் மிகவும் கீழ்த்தரமானவர்கள், அதே சமயம் தங்களைத் தாழ்த்திக் கொண்டவர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள். மேலும், தேவனின் கிரியைத் தனக்குத் தெரியும் என்று நினைப்பவர்கள், மேலும், அவர்கள் அவரை நேரடியாகப் பார்த்தாலும்கூட மிகுந்த ஆரவாரத்துடன் மற்றவர்களுக்கு தேவனின் கிரியையை அறிவிக்க வல்லவர்கள், இவர்கள் மனுஷர்களிலே மிகவும் அறியாமையிலுள்ளவர்கள். அத்தகையவர்கள் தேவனின் சாட்சியம் இல்லாமல், திமிர்பிடித்தவர்களாகவும், அகங்காரம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனைப் பற்றிய உண்மையான அனுபவம் மற்றும் நடைமுறை அறிவு இருந்தபோதிலும், தேவனைப் பற்றி தனக்கு மிகக் குறைந்த அறிவு இருப்பதாக நம்புவோர், அவரால் மிகவும் நேசிக்கப்படுபவர்கள். அத்தகையவர்கள் மட்டுமே உண்மையிலேயே சாட்சியமளிக்கிறார்கள், அவர்களே தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வல்லவர்கள். தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள்; தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொண்ட போதிலும், சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள்; தேவனுடைய வார்த்தைகளைப் புசித்து, அருந்தினாலும், தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சத்திற்கு எதிராகச் செல்வோர் தேவனை எதிர்ப்பவர்கள்; மனுஷரூபமெடுத்த தேவனைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டவர்கள், மேலும் கிளர்ச்சியில் ஈடுபட மனம் கொண்டவர்கள், தேவனை எதிர்ப்பவர்கள்; தேவன் குறித்து நியாயந்தீர்ப்பவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள்; மற்றும் தேவனை அறியவோ அல்லது அவருக்கு சாட்சியாக இருக்கவோ முடியாதவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள். எனவே நான் உங்களிடம் வலியுறுத்துகிறேன்: இந்தப் பாதையில் உங்களால் நடக்க முடியும் என்று உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால், அதைப் பின்பற்றுங்கள். ஆனால் உங்களால் தேவனை எதிர்ப்பதைத் தவிர்க்க முடியாவிட்டால், மிகவும் தாமதமாகிவிடுவதற்கு முன்பே நீங்கள் விலகிச் சென்றுவிடுவது நல்லது. இல்லையெனில், விஷயங்கள் உங்களுக்கு எதிராக மோசமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன, ஏனென்றால் உங்கள் இயல்பு மிகவும் சீர்கெட்டுள்ளது. விசுவாசம் அல்லது கீழ்ப்படிதல், அல்லது நீதிக்காகவும் சத்தியத்துக்காகவும் தாகம் கொண்ட, அல்லது தேவனை நேசிக்கும் ஒரு இருதயம், உங்களுக்கு கொஞ்சம்கூட இல்லை. தேவனுக்கு முன்பாக உங்கள் சூழ்நிலை முற்றிலும் குழப்பமானதாக இருக்கிறது என்று கூறப்படலாம். நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியதை உங்களால் கடைப்பிடிக்க முடியாது, மேலும் சொல்ல வேண்டியதைச் சொல்லவும் முடியாது. நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை, நீங்கள் கடைப்பிடிக்க தவறிவிட்டீர்கள்; நீங்கள் நிறைவேற்ற வேண்டிய செயல்பாட்டை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. உங்களுக்கு இருக்கவேண்டிய விசுவாசம், மனசாட்சி, கீழ்ப்படிதல் அல்லது மன உறுதி உங்களிடம் இல்லை. சகித்துக்கொள்ள வேண்டிய துன்பத்தை நீங்கள் சகித்துக்கொள்ளவில்லை, உங்களுக்கு இருக்கவேண்டிய விசுவாசம் உங்களிடம் இல்லை. மிகவும் எளிமையாகக் கூறினால், நீங்கள் எந்தவொரு தகுதியையும் பூரணமாகப் பெறவில்லை: நீங்கள் இப்படியே வாழ்வதற்கு வெட்கப்படவில்லையா? நித்திய ஓய்வில் உங்கள் கண்களை மூடுவதே நல்லது என்று நான் உங்களைச் சம்மதிக்க வைக்கிறேன், இதன் மூலம் உங்களுக்காகக் கவலைப்படுவதிலிருந்தும், உங்கள் நிமித்தம் துன்பப்படுவதிலிருந்தும் தேவனுக்கு ஓய்வுகொடுங்கள். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள், ஆனால் இன்னும் அவருடைய சித்தத்தை அறியவில்லை; நீங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கிறீர்கள் மற்றும் அருந்துகிறீர்கள், ஆனால் இன்னும் தேவன் மனுஷனிடம் கேட்பதை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. நீங்கள் தேவனை நம்புகிறீர்கள், ஆனால் இன்னும் அவரை அறியாமல் இருக்கிறீர்கள், மற்றும் முயற்சிப்பதற்கான குறிக்கோள் இல்லாமல், எந்தவொரு மதிப்பும் இல்லாமல், எந்த அர்த்தமும் இல்லாமல் நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள். நீங்கள் ஒரு மனுஷனாக வாழ்கிறீர்கள், ஆயினும் மனசாட்சி, ஒருமைப்பாடு அல்லது நம்பகத்தன்மை சிறிதளவும் இல்லை—நீங்கள் உங்களை இன்னும் மனுஷர்கள் என்று அழைக்க முடியுமா? நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள், ஆனால் அவரை ஏமாற்றுகிறீர்கள்; மேலும் என்னவென்றால், நீங்கள் தேவனின் பணத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், அவருக்கு வழங்கப்படும் காணிக்கைகளைப் புசிக்கிறீர்கள். ஆயினும்கூட, முடிவில், தேவனுடைய உணர்வுகள் அல்லது அவரை நோக்கிய மங்கலான மனசாட்சியைக் கருத்தில் கொள்ள நீங்கள் இன்னும் தவறிவிட்டீர்கள். தேவனின் கோரிக்கைகளில் மிகவும் அற்பமானவற்றைக்கூட உங்களால் பூர்த்தி செய்ய முடியாது. உங்களால் உங்களை இன்னும் மனுஷர்கள் என்று கூறிக்கொள்ள முடியுமா? தேவன் உங்களுக்கு வழங்கும் போஜனத்தைச் சாப்பிட்டுக் கொண்டு, அவர் உங்களுக்குக் கொடுக்கும் பிராணவாயுவை சுவாசித்துக் கொண்டு, அவருடைய கிருபையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், இறுதியில், தேவனைப் பற்றிய சிறிதளவு அறிவும் உங்களுக்கு இல்லை. மாறாக, நீங்கள் தேவனை எதிர்க்கும் எதற்கும் உதவாதவர்களாக மாறிவிட்டீர்கள். அது உங்களை ஒரு நாயை விடக் கேவலமான மிருகமாக மாற்றவில்லையா? விலங்குகளில், உங்களை விட தீங்கிழைக்கக்கூடியது ஏதேனும் உள்ளதா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்” என்பதிலிருந்து

89. மனிதனுடனான மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவனால் காணவோ தொடவோ முடியாத காரியங்களை மட்டுமே நேசிக்கின்றான், காரியங்கள் மிகவும் மர்மமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது, மேலும் இவை மனிதனால் கற்பனைச்செய்ய முடியாத மற்றும் வெறுமையான மனுஷர்களால் அடைய முடியாததாக உள்ளது. இந்தகாரியங்கள் எந்தளவுக்கு நம்பத்தகாததாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அவை ஜனங்களால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன, மேலும் ஜனங்கள் எல்லாவற்றையும் கவனிக்காமல் அவற்றைப் பின்தொடர்கிறார்கள், அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு அவை நம்பத்தகாதவைகளாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு நெருக்கமாக ஜனங்கள் அவற்றை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்கிறார்கள், வெகுதொலைவிற்கு சென்றாலும் அவர்களைப் பற்றிய தங்களுடைய முழுமையான கருத்துக்களை உருவாக்குகிறார்கள். மாறாக, எந்த அளவிற்கு நம்பத்தகுந்த காரியங்கள் உள்ளனவோ, அந்த அளவிற்கு புறக்கணிக்கப்பட்ட ஜனங்கள் அவைகள் பக்கமாக உள்ளார்கள்; அவர்களிடத்தில் வெறுமனே தங்கள் முகத்தைச் சுருக்கி ஏளனமாகப் பார்க்கிறார்கள், மேலும் அவர்களை இழிவுபடுத்துகிறார்கள். இன்று நான் செய்யும் நம்பத்தகுந்த கிரியையைப் பற்றிய உங்கள் துல்லியமான அணுகுமுறை இது இல்லையா? இது போன்ற காரியங்கள் மிகவும் நம்பத்தகுந்தவை, நீங்கள் அவர்களுக்கு எதிராக எவ்வளவு பாரபட்சம் காட்டுகிறீர்கள். அவைகளை ஆராய நீங்கள் எந்த நேரத்தையும் செலவிடவில்லை, ஆனால் அவைகளைப் புறக்கணிக்கிறீர்கள்; இந்த நம்பத்தகுந்த, குறைந்ததரத் தேவைகளுக்கு நீங்கள் முகத்தைச் சுருக்கி தாழ்வாக பார்க்கிறீர்கள், மேலும் இந்த உண்மையான தேவனைப்பற்றிய எண்ணற்ற கருத்துக்களைக்கூட வைத்திருக்கிறீர்கள், அவருடைய பொருளையும் இயல்பையும் ஏற்றுக்கொள்ள இயலாது இருக்கிறீர்கள். இந்த வழியில், நீங்கள் தெளிவற்ற விசுவாசத்தைப் பிடித்திருக்கவில்லையா? கடந்த காலத்தின் தெளிவற்ற தேவன் மீது நீங்கள் அசைக்க முடியாத விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள், மேலும் இன்றைய உண்மையான தேவன் மீது உங்களுக்கு ஆர்வம் இல்லை. நேற்றைய தேவனும் இன்றைய தேவனும் இரு வேறு யுகங்களிலிருந்து வந்தவர்கள் அல்லவா? நேற்றைய தேவன் பரலோகத்தில் உன்னத தேவனாக இருக்கிறார், அதேசமயம் இன்றைய தேவன் பூமியில் ஒரு சிறிய மனிதர் அல்லவா? மேலும், மனிதனால் ஆராதிக்கப்படும் தேவன் அவருடைய கருத்துக்களால் உருவாக்கப்பட்டவராக இருக்கிறார், அதே சமயம் இன்றைய தேவன் உண்மையான மாம்சத்தால், பூமியில் உருவாக்கப்படுகிறார் அல்லவா? எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும்போது, இன்றைய தேவன் மிகவும் உண்மையானவர் என்பதால் மனிதன் அவரைப் பின்தொடரவில்லை அல்லவா? இன்றைய தேவன் ஜனங்களிடம் துல்லியமாகக் கேட்பது ஜனங்கள் மிகவும் செய்ய விரும்பாததும், அவர்கள் வெட்கி நாணமடையக்கூடியதும் ஆகும். இது ஜனங்களுக்கு காரியங்களைக் கடினமாக்கவில்லையா? இது வெறுமையான ஜனங்களுக்கு வடுக்களை ஏற்படுத்தவில்லையா? இந்த வழியில், யதார்த்தத்தைப் பின்பற்றாதவர்களில் அநேகர் மாம்சத்தில் வந்த தேவனின் சத்துருக்களாகி, அந்திக்கிறிஸ்துகளாக மாறுகிறார்கள். இது தெளிவான உண்மை அல்லவா? கடந்தகாலத்தில், தேவன் இன்னும் மாம்சமாக மாறியிராதபோது, நீ ஒரு மதபிரமுகராகவோ அல்லது பக்தியுள்ள விசுவாசியாகவோ இருந்திருக்கலாம். தேவன் மாம்சமாக மாறிய பிறகு, இது போன்ற அநேக பக்தியுள்ள விசுவாசிகள் அறியாமலேயே அந்திக்கிறிஸ்துகளாக மாறினார்கள். இங்கே என்ன நடக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ யதார்த்தத்தில் கவனம் செலுத்தவில்லை அல்லது சத்தியத்தைத் பின்தொடரவில்லை, மாறாக பொய்யானவைகள் மீது மூர்க்கவெறி கொண்டீர்கள்—இது மாம்சத்தில் வந்த தேவனுக்கு உன் பகைமையின் தெளிவான ஆதாரமல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து

90. கிறிஸ்துவுடனான தொடர்புக்கு முன்னர், நீ உனது மனநிலை முழுமையாக மாற்றப்பட்டிருப்பதாக, நீ கிறிஸ்துவை விசுவாசத்துடன் பின்பற்றுபவனாக, உன்னைவிட கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களைப் பெறும் தகுதி யாருக்கும் இல்லை என்று நம்பியிருக்கலாம்—மேலும், பல சாலைகளில் பயணித்து, அதிக வேலைகளைச் செய்து, அதிக பலன்களைக் கொண்டுவந்த நீ, இறுதியில் கிரீடத்தைப் பெறுபவர்களில் ஒருவனாக நிச்சயமாக இருப்பாய். ஆயினும், நீ அறியாத ஒரு உண்மை உள்ளது: மனுஷனின் சீர்கெட்ட மனப்பான்மையும், அவனுடைய கலகமும் எதிர்ப்பும் அவன் கிறிஸ்துவைப் பார்க்கும்போது அம்பலப்படுத்தப்படுகிறது, மேலும் இந்த நேரத்தில் வெளிப்படும் கலகமும் எதிர்ப்பும் வேறு எதையும் விட முற்றிலும் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்து சாதாரண மனுஷத்தன்மையைக் கொண்ட மனுஷகுமாரன் என்பதே இதற்கு காரணம்—எனவே மனுஷன் அவரை மதிப்பதோ மரியாதை கொடுப்பதோ இல்லை. தேவன் மாம்சத்தில் வாழ்கிறார் என்பதால்தான் மனுஷனின் கலகம் மிகவும் முழுமையாகவும் தெளிவான விவரங்களுடனும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. ஆகவே, கிறிஸ்துவின் வருகை மனுஷகுலத்தின் அனைத்து கலகத்தையும் கண்டுபிடித்து, மனுஷகுலத்தின் தன்மையை வெளிப்படையாக்கியுள்ளது என்று நான் சொல்கிறேன். இது “ஒரு புலியை மலையிலிருந்து கவர்ந்திழுப்பது” மற்றும் “ஒரு ஓநாயை அதன் குகையிலிருந்து கவர்ந்திழுப்பது” எனப்படுகிறது. நீ தேவனுக்கு விசுவாசமுள்ளவன் என்று சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா? நீ தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிதலைக் காட்டுகிறேன் என்று சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா? நீ கலகம் பண்ணுவதில்லை என்று சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா? சிலர் கூறுவார்கள்: “தேவன் எப்போதெல்லாம் என்னை ஒரு புதிய சூழலில் வைக்கிறாரோ, அப்போதெல்லாம் நான் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் கீழ்ப்படிகிறேன், மேலும் நான் தேவனைப் பற்றிய எந்தக் கருத்துக்களையும் உத்தேசிப்பதில்லை.” சிலர் இவ்வாறு கூறுவார்கள்: “தேவன் எனக்கு என்ன வேலையைக் கொடுத்தாலும், நான் எனது திறனுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறேன், ஒருபோதும் நான் கவனக்குறைவாக இருந்ததில்லை.” அவ்வாறான நிலையில், நான் உங்களிடம் இதனைக் கேட்கிறேன்: நீங்கள் கிறிஸ்துவுடன் வாழும்போது அவருடன் இணக்கமாக இருக்க முடியுமா? நீங்கள் எவ்வளவு காலம் அவருடன் இணக்கமாக இருப்பீர்கள்? ஒரு நாள்? இரண்டு நாட்கள்? ஒரு மணி நேரம்? இரண்டு மணி நேரம்? உங்கள் விசுவாசம் பாராட்டத்தக்கதாக இருக்கலாம், ஆனால் நீங்கள் வைராக்கியமான வழியில் அதிக விசுவாசத்தைக் கொண்டிருக்க மாட்டீர்கள். நீ உண்மையிலேயே கிறிஸ்துவோடு வாழ்ந்தவுடன், உன் சுயநீதியும் சுய முக்கியத்துவமும் உன் சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும், மேலும் அதே போல் உன் இருமாப்பு ஆசைகளும், உன் கீழ்ப்படியாத மனநிலையும் அதிருப்தியும் இயல்பாகவே வெளிப்படும். இறுதியாக, நீ அக்கினியையும் ஜலத்தையும் போலவே கிறிஸ்துவுக்கு அதிகமாக முரண்பட்டு இருக்கும் வரையிலும் உனது அகந்தை இன்னும் அதிகமாகிவிடும், பின்னர் உனது இயல்பு முற்றிலும் வெளிப்படும். அந்த நேரத்தில், உனது கருத்துக்களை இனி மூடிமறைக்க முடியாது, உனது புகார்களும் இயல்பாகவே வெளிவரும், மேலும் உனது மோசமான மனுஷத்தன்மை முழுமையாக வெளிப்படும். ஆயினும்கூட, நீ உனக்கு சொந்தமாக கலக மனப்பான்மை இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய், அதற்குப் பதிலாக இது போன்ற ஒரு கிறிஸ்துவை மனுஷன் ஏற்றுக்கொள்வது எளிதானது அல்ல, அவர் மனுஷனை மிகவும் வற்புறுத்துகிறார், மற்றும் அவர் இரக்கமுள்ள கிறிஸ்துவாக இருந்தால் நீ முழுமையாகக் கீழ்ப்படிவாய் என்று நம்புகிறாய், உங்கள் கலகக் குணம் நியாயமானது என்றும், அவர் உங்களை அதிக தூரம் தள்ளும்போது மட்டுமே நீங்கள் அவருக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்கள் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவை தேவனாகப் பார்க்க வேண்டுமென்றும், அவருக்கு கீழ்ப்படியும் எண்ணம் உங்களுக்கு இல்லை என்றும் நீங்கள் ஒருபோதும் கருதவில்லை. மாறாக, உனது சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப கிறிஸ்து செயல்பட வேண்டும் என்று நீ பிடிவாதமாக வலியுறுத்துகிறாய், உனது சொந்த சிந்தனைகளுக்கு முரணான ஒற்றைக் காரியத்தை அவர் செய்தவுடன், அவர் தேவன் அல்ல மனுஷன் என்று நீ நம்புகிறாய். இந்த வழியில் அவருடன் வழக்காடிய பலர் உங்களிடையே இல்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் யாரை விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் எந்த வழியில் தேடுகிறீர்கள்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்” என்பதிலிருந்து

91. நீங்கள் எப்போதுமே கிறிஸ்துவைக் காண விரும்புகிறீர்கள், ஆனால் உங்களை இவ்வளவு உயர்ந்த மதிப்பில் வைத்திருக்க வேண்டாம் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்; யாரும் கிறிஸ்துவைக் காணலாம், ஆனால் கிறிஸ்துவைக் காணும் தகுதி யாருக்கு இல்லை என்று நான் சொல்கிறேன். ஏனென்றால், மனுஷனின் இயல்பு தீமை, அகம்பாவம் மற்றும் கலகத்தால் சூழப்பட்டிருக்கிறது, நீ கிறிஸ்துவைக் காணும் தருணத்தில், உனது இயல்பு உன்னை அழித்து, உனக்கு மரண தண்டனையைக் கொடுக்கும். ஒரு சகோதரர் (அல்லது ஒரு சகோதரி) உடனான உனது ஐக்கியம் உன்னைப் பற்றி அதிகமாகக் காட்டாமல் போகலாம், ஆனால் நீ கிறிஸ்துவோடு உன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும்போது அது அவ்வளவு எளிதல்ல. எந்த நேரத்திலும், உனது கருத்துகள் வேரூன்றக்கூடும், உனது ஆணவம் முளைக்கத் தொடங்கும், மேலும் உனது கலகம் பலன்களைக் கொடுக்காது. அத்தகைய மனுஷத்தன்மையுடன் நீ கிறிஸ்துவுடன் ஐக்கியப்படுவதற்கு எவ்வாறு தகுதியுடையவனாக இருப்பாய்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உன்னால் அவரை தேவனாகக் கருத முடியுமா? தேவனுக்கு நிஜமாக உன்னால் ஒப்புக்கொடுக்க முடியுமா? காணக்கூடிய கிறிஸ்துவை ஒரு மனுஷனாகக் கருதி, உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் உயர்ந்த தேவனை யேகோவாவாக தொழுகிறீர்கள். உங்கள் உணர்வு மிகவும் தாழ்ச்சியானது மற்றும் உங்களின் மனுஷத்தன்மை மிகவும் தாழ்ந்தது! கிறிஸ்துவை எப்போதும் தேவனாகப் பார்க்க உங்களால் இயலவில்லை; எப்போதாவது, நீங்கள் விரும்பினால், நீங்கள் அவரைப் பற்றிக்கொண்டு தேவனாக வணங்குவீர்கள். இதனால்தான் நீங்கள் தேவனின் விசுவாசிகள் அல்ல, கிறிஸ்துவுக்கு எதிராகப் போராடும் குற்றத்திற்குத் துணைப்போகும் கூட்டாளிகள் என்று நான் சொல்கிறேன். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டும் மனுஷர்களுக்குக்கூட கைம்மாறு அளிக்கப்படுகிறது, ஆனாலும் உங்களிடையே இதுபோன்ற கிரியைகளைப் புரிந்த கிறிஸ்து, மனுஷனின் அன்பையோ, அவனுடைய கைம்மாறையோ கீழ்ப்படிதலையோ பெறவில்லை. இது மிகுந்த கவலையளிக்கும் ஒன்றல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்” என்பதிலிருந்து

92. தேவன் மீது நீ விசுவாசம் கொண்டிருந்த எல்லா ஆண்டுகளிலும், நீ ஒருபோதும் யாரையும் சபிக்கவில்லை அல்லது ஒரு கெட்ட செயலைச் செய்யவில்லை, ஆனால் கிறிஸ்துவுடனான உனது தொடர்பில், உன்னால் சத்தியத்தைப் பேசவோ, நேர்மையாகச் செயல்படவோ, அல்லது கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படியவோ முடியவில்லை; அவ்வாறான நிலையில், நீ தான் உலகிலேயே மிகவும் கொடியவன் மற்றும் வஞ்சகமானவன் என்று நான் சொல்கிறேன். நீ உனது உறவினர்கள், நண்பர்கள், மனைவி (அல்லது கணவன்), மகன்கள் மற்றும் மகள்கள் மற்றும் பெற்றோர்களிடம் மிகவும் நட்புள்ளவனாகவும், அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்கலாம், மற்றவர்களை ஒருபோதும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாதவனாகவும் இருக்கலாம், ஆனால் உன்னால் கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இருக்க இயலவில்லையென்றால், உன்னால் அவருடன் இணக்கமாகச் செயல்பட முடியாவிட்டால், நீ உனது அண்டைவீட்டாருக்கு உனது பணம் அனைத்தையும் செலவிட்டாலும் அல்லது உனது தந்தை, தாய், மற்றும் உனது குடும்ப உறுப்பினர்களை மிகக் கவனமாக கவனித்துக் கொண்டாலும்கூட, நீ இன்னும் பொல்லாதவன் என்றும், மேலும் தந்திரங்கள் நிறைந்தவன் என்றும் நான் கூறுவேன். நீ மற்றவர்களுடன் பழகுவதாலோ அல்லது சில நல்ல செயல்களைச் செய்வதாலோ நீ கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இருக்கிறாய் என்று நினைக்க வேண்டாம். உனது தொண்டு செய்யும் நோக்கம் பரலோகத்தின் ஆசீர்வாதங்களைத் தந்திரமாகப் பெற்றுத்தரும் என்று நீ நினைக்கிறாயா? ஒரு சில நல்ல செயல்களைச் செய்வது உனது கீழ்ப்படிதலுக்கு மாற்றாக இருக்கும் என்று நீ நினைக்கிறாயா? உங்களில் ஒருவரால் கூட கையாளப்படுவதையும் கிளைநறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் நீங்கள் அனைவரும் கிறிஸ்துவின் சாதாரண மனிஷத்தன்மையைத் தழுவுவதற்கு சிரமப்படுகிறீர்கள், இருந்தபோதிலும் நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதைப் பற்றி தொடர்ந்து எக்காளமிடுகிறீர்கள். உங்களுக்கு இருப்பதைப் போன்ற விசுவாசம் பொருத்தமான பதிலடியைக் குறைக்கும். பகட்டான மாயைகளில் ஈடுபட்டு கிறிஸ்துவைக் காண விரும்புவதை நிறுத்துங்கள், ஏனென்றால் நீங்கள் மிகவும் சிறியவர்கள், எந்த அளவுக்கு என்றால் நீங்கள் அவரைப் பார்க்க கூட தகுதியற்றவர்கள். நீ உனது கலகத்தன்மையைப் பரிபூரணமாக நிவர்த்தி செய்தால், மற்றும் உன்னால் கிறிஸ்துவோடு இணக்கமாக இருக்க முடிந்தால், அந்தத் தருணத்தில் தேவன் இயல்பாகவே உனக்குத் தோன்றுவார். நீ கிளைநறுக்குதலுக்கோ அல்லது நியாந்தீர்ப்பளித்தலுக்கோ உள்ளாவதற்கு முன் தேவனைக் காணச் சென்றால், நீ நிச்சயமாக தேவனின் எதிராளியாவாய் மற்றும் உனக்கு அழிவு விதிக்கப்படும். மனுஷனின் இயல்பு தேவனுக்கு இயல்பாகவே விரோதமானது, ஏனென்றால் எல்லா மனுஷர்களும் சாத்தானின் மிக ஆழமான அழிவிற்கு ஆளாகியுள்ளனர். மனுஷன் தனது சொந்த அழிவின் மத்தியில் இருந்து தேவனுடன் ஐக்கியப்பட முயன்றால், இதனால் எந்த நல்லதும் நடக்காது என்பது உறுதி; அவருடைய செயல்களும் வார்த்தைகளும் நிச்சயமாக ஒவ்வொரு முறையும் அவனது அழிவை அம்பலப்படுத்தும், மேலும் தேவனுடன் ஐக்கியப்படுவதில் அவனுடைய கலகத்தன்மை அதன் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படும். தன்னை அறியாமல், மனுஷன் கிறிஸ்துவை எதிர்ப்பதற்கும், கிறிஸ்துவை ஏமாற்றுவதற்கும், கிறிஸ்துவை கைவிடுவதற்கும் வருகிறான்; இது நிகழும்போது, மனுஷன் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பான், இது தொடர்ந்தால், அவன் தண்டனைக்குரிய பொருளாக மாறுவான்.

தேவனுடன் ஐக்கியப்படுவது மிகவும் ஆபத்தானது என்றால், தேவனை தூரத்தில் வைத்திருப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம் என்று சிலர் நம்பலாம். இது போன்ற ஜனங்கள் எதைப் பெறக்கூடும்? அவர்களால் தேவனுக்கு விசுவாசமாக இருக்க முடியுமா? நிச்சயமாக, தேவனோடு ஐக்கியமாவது மிகவும் கடினமானதுதான்—ஆனால் அதற்கு காரணம் மனுஷன் சீர்கெட்டுவிட்டான் என்பதே தவிர தேவனால் அவனுடன் ஐக்கியப்பட முடியவில்லை என்பதால் அல்ல. சுயத்தை அறிந்து கொள்வதற்கான உண்மைக்கு அதிக முயற்சியை அர்ப்பணிப்பது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் ஏன் தேவனின் நன்மைகளைப் பெறவில்லை? உங்கள் மனநிலை ஏன் அவருக்கு அருவருப்பானது? உங்கள் பேச்சு ஏன் அவருடைய வெறுப்பைத் தூண்டுகிறது? நீங்கள் கொஞ்சம் விசுவாசத்தை வெளிக்காட்டியவுடன், நீங்கள் உங்கள் சொந்தப் புகழைப் பாடுகிறீர்கள், மேலும் ஒரு சிறிய பங்களிப்புக்கு வெகுமதியைக் கோருகிறீர்கள்; நீங்கள் கொஞ்சம் கீழ்ப்படிதலைக் காட்டும்போது மற்றவர்களைக் குறைத்துப் பார்க்கிறீர்கள், ஏதோ சிறிய பணியைச் செய்து முடித்தபின் தேவனை அவமதிக்கிறீர்கள். தேவனை உபசரிக்க, நீங்கள் பணம், பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைக் கேட்கிறீர்கள். இது ஒன்று அல்லது இரண்டு நாணயங்களைக் காணிக்கையாகக் கொடுப்பதற்கு உங்கள் மனதை வலிக்கச் செய்கிறது; நீங்கள் பத்து கொடுக்கும்போது, நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறவும், மேலும் மேன்மையாக நடத்தப்பட வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். உங்களுக்கு இருப்பதைப் போன்ற ஒரு மனுஷத்தன்மையைப் பற்றி பேசுவதோ கேட்பதோ நிச்சயமாகத் தீங்குவிளைவிக்கும். உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் பாராட்டத்தக்கதாக ஏதாவது இருக்கிறதா? தங்கள் கடமையைச் செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள்; வழிநடத்துபவர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள்; தேவனை வரவேற்பவர்கள் மற்றும் வரவேற்காதவர்கள்; காணிக்கை அளிப்பவர்கள் மற்றும் அளிக்காதவர்கள்; பிரசங்கிப்பவர்கள், வார்த்தையைப் பெறுபவர்கள், மேலும் பலர்: அத்தகைய மனுஷர்கள் அனைவரும் தங்களைப் புகழ்ந்துக் கொள்கிறார்கள். இது நகைப்புக்குரியதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? நீங்கள் தேவனை நம்புகிறீர்கள் என்பதை முழுவதுமாக அறிந்திருந்தாலும், உங்களால் தேவனுக்கு இணக்கமாய் இருக்க முடியவில்லை. நீங்கள் முற்றிலும் தகுதியற்றவர்கள் என்பதை நன்கு அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் ஒரே மாதிரியாக பெருமை பேசுகிறீர்கள். உங்களிடம் இனி சுய கட்டுப்பாடு இல்லை என்ற அளவுக்கு உங்கள் உணர்வு மோசமடைந்துள்ளதாக நீங்கள் உணரவில்லையா? இது போன்ற உணர்வோடு, தேவனுடன் ஐக்கியப்படும் தகுதி உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த நேரத்தில் நீங்கள் உங்களுக்காக பயப்படவில்லையா? உங்கள் மனநிலை ஏற்கனவே நீங்கள் தேவனுடன் இணைந்து இருக்க முடியாத அளவிற்கு மோசமாகிவிட்டது. இது அவ்வாறு இருக்கையில், உங்கள் விசுவாசம் நகைப்புக்கு உரியதாய் இருக்காதா? உங்கள் விசுவாசம் போலித்தனமானது இல்லையா? உன் எதிர்காலத்தை நீ எவ்வாறு அணுகப் போகிறாய்? எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை நீ எவ்வாறு தேர்வு செய்யப் போகிறாய்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்” என்பதிலிருந்து

93. ஒருசில மக்கள் சத்தியத்தைக் குறித்தோ, நியாயத்தீர்ப்பைக்குறித்தோ சிறிதளவேனும் மகிழ்ச்சியடைவதில்லை. அதற்கு மாறாக அதிகாரத்திலும் ஐசுவரியத்திலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதுபோன்ற மக்கள் அதிகாரத்தை நாடித் தேடுபவர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் உலகத்தில் உள்ள செல்வாக்கான சபைகளையே தேடிக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் வேதாகமக் கல்லூரிகளிலிருந்து வரும் போதகர்களையும் ஆசிரியர்களையும் மட்டுமே தேடி அலைந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் சத்தியத்தின் வழியை ஏற்றுக்கொண்டிருந்தாலும், பாதியளவு விசுவாசம் உடையவர்களாவர். அவர்கள் தங்கள் மனதையும் இருதயத்தையும் முழுவதுமாக கொடுப்பதற்கு முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வாய் தேவனுக்கென்று பயன்படுத்தப்படும் என்று கூறும், ஆனால் அவர்கள் பிரபலமான போதகர்களையும் ஆசிரியர்களையும் கவனித்துக்கொண்டு இருப்பார்கள், மேலும் அவர்கள் கிறிஸ்துவை இரண்டாம் ஸ்தானத்திலும் வைப்பதில்லை. அவர்களின் இருதயம் புகழ்ச்சியின்மீதும் சந்தர்பங்களின்மீதும் மேன்மையின்மீதும் நிலைத்து இருக்கும். இதுபோன்ற அற்பமான மனிதனால் அநேக மக்களை மேற்கொள்ள சாத்தியமில்லை என்றும், ஆர்வமில்லாத நபரால் மனிதனை பரிபூரணமாக்க சாத்தியமில்லை என்றும் எண்ணுகிறார்கள். புழுதியின்மீதும் குப்பைமீதும் இருக்கும் அற்பமான மனிதர்கள் தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களாக இருக்க சாத்தியமில்லை என்று எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் தேவனுடைய இரட்சிப்பின் இலக்குகளாக இருந்தார்களானால், வானமும் பூமியும் தலைகீழாகிவிடும் என்றும், எல்லா மனிதர்களும் இத்தகையோரைப் பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இந்த ஒன்றுமில்லாதவர்களை தேவன் பரிபூரணப்படுத்த தெரிந்துகொண்டார் என்றால், இந்த சிறந்த மனிதர்கள் தேவனாகவே மாறிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். இவர்களுடைய கண்ணோட்டங்கள் அவிசுவாசத்தினால் கறைபடிந்து விட்டது. அவிசுவாசத்திற்கு அப்பால் இவர்கள் ஒரு மதிகெட்ட மிருகங்கள் ஆவார்கள். அவர்கள் தகுதி, அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். அவர்கள் பெரிய கூட்டங்களையும் சபை பிரிவுகளையும் மட்டுமே மதிக்கிறார்கள். கிறிஸ்துவினால் வழி நடத்தப்படுபவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கிறிஸ்துவுக்கும், சத்தியத்திற்கும், ஜீவனுக்கும் தங்கள் புறமுதுகைக் காட்டுகிற துரோகிகளாகவே இருக்கிறார்கள்.

நீங்கள் போற்றுவது கிறிஸ்துவின் தாழ்மையை அல்ல, மாறாக முக்கிய நிலையில் காணப்படும் அந்த கள்ள போதகர்களையே போற்றுகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் அன்பையோ அல்லது ஞானத்தையோ ஆராதிக்கவில்லை. ஆனால் இவுலகின் அழுக்கில் புரண்டுக்கொண்டு இருக்கும் தன்னிச்சை பிரியர்களையே ஆராதிக்கிறீர்கள். நீங்கள் தலை சாய்க்க இடமில்லாத கிறிஸ்துவின் வேதனையைப் பார்த்து நகைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அந்த காணிக்கைகளை வஞ்சிக்க தேடி அலைந்து ஒழுக்கக் கேட்டில் வாழும் பிணங்களைப் போற்றுறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து துன்பம் அனுபவிப்பதை விரும்பவில்லை; ஆனால் அந்திக்கிறிஸ்துக்கள் உங்களுக்கு மாம்சத்தையும், வார்த்தைகளையும், கட்டுப்பாட்டையும் மட்டுமே கொடுத்தாலும், நீங்கள் சந்தோஷமாக அந்த பொறுப்பற்ற அந்திகிறிஸ்துவின் கரங்களிலேயே உங்களை ஒப்புக்கொடுக்கின்றீர்கள். இப்போதும்கூட உங்கள் இருதயம் இன்னும் அவர்களுக்கு நேராகவும் அவர்களுடைய பெயர்புகழ், அந்தஸ்து, செல்வாக்கு ஆகியவைகளின் பக்கமாகவும் திரும்புகிறது. இருந்தாலும் நீங்கள் கிறிஸ்துவின் கிரியையை ஏற்றுக்கொள்வது கடினமானது என்றும், இதைச் செய்ய விருப்பம் இல்லை என்ற ஒரு எண்ணத்தையும் உடையவராக இருக்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விசுவாசத்தில் குறைவுள்ளவர்களாக இருக்கின்றீர்கள் என்று கூறுகிறேன். இந்த நாட்களில் உங்களுக்கு வேறு வழி இல்லை என்பதால் நீங்கள் அவரை பின்பற்றுகிறீர்கள். மிகவும் பிரபலமானவர்களின் உருவங்கள் உங்கள் இருதயத்தில் குவிந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள் அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும், கிரியைகளையும் அல்லது அவர்களது செல்வாக்கான வார்த்தைகளையும், கரங்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவர்கள் உங்களுடைய இருதயத்தில் எக்காலத்திலும் உயர்வானவர்களாகவும், கதாநாயகர்களாகவும் இருந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைய கிறிஸ்துவுக்கு அவ்வாறு இடமளிக்கப்படவில்லை. அவர் உங்களுடைய இருதயத்தில் முக்கியமற்றவராக ஆராதிக்க தகுதியற்றவராக இருக்கிறார். அவர் உங்களுக்கு மிகவும் சாதாரணமானவராகவும், குறைந்த செல்வாக்கு உள்ளவராகவும், உயர்வற்றவராகவும் இருக்கின்றார்.

எந்த நிலையிலும் சத்தியத்தை மதிக்காதவர்கள் சத்தியத்திற்கு அவிசுவாசிகளாகவும் துரோகிகளாகவும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்கள் கிறிஸ்துவின் அங்கீகாரத்தை பெறமுடியாது. இப்போது உங்களுக்குள் எந்த அளவிற்கு அவிசுவாசமும், கிறிஸ்துவை மறுதலித்தலும் இருக்கிறது என்று காண முடிகிறதா? நீங்கள் சத்தியத்தின் வழியைத் தெரிந்துகொண்டு இருப்பதால், நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் சேவிக்க வேண்டும்; தெளிவற்றவர்களாகவும், அரை மனதுள்ளவர்களாகவும் இருக்கவேண்டாம் என்று நான் உங்களை அறிவுறுத்துகிறேன். தேவன் இந்த உலகத்திற்கோ அல்லது ஒரு தனிநபருக்கோ உரியவர் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் யாரெல்லாம் உண்மையாக அவரை விசுவாசிக்கிறார்களோ, அவரைத் தொழுது கொள்ளுகிறார்களோ,பக்தியுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கே உரியவர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?” என்பதிலிருந்து

94. தேவனைப் பின்பற்றுபவர்களில் பலர் ஆசீர்வாதங்களைப் பெறுவது அல்லது பேராபத்துக்களைத் தடுப்பது குறித்து மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். தேவனுடைய கிரியை மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடப்பட்டவுடன், அவர்கள் அமைதியாகி அனைத்து ஆர்வத்தையும் இழக்கிறார்கள். இத்தகைய கடினமான சிக்கல்களைப் புரிந்துகொள்வது அவர்களுடைய வாழ்க்கை வளருவதற்கு அல்லது எந்த நன்மையையும் அளிப்பதற்கு உதவாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதன் விளைவாக, தேவனுடைய நிர்வகித்தலைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்தாலும், அதற்கு அவர்கள் கொஞ்சம் கவனத்தை மட்டுமே கொடுக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள வேண்டிய விலைமதிப்பற்ற ஒன்றாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை, மேலும் அவர்கள் அதை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பெறுகிறதுமில்லை. அத்தகையவர்களுக்கு தேவனைப் பின்பற்றுவதில் ஒரே ஒரு எளிய நோக்கம் மட்டுமே உள்ளது, அந்த நோக்கம் என்னவெனில் ஆசீர்வாதங்களைப் பெறுவது ஒன்றேயாகும். இந்த நபர்கள் இந்த நோக்கத்துடன் நேரடியாக சம்பந்தப்படாத வேறு எதிலும் கவனம் செலுத்த கவலைக் கொள்ள முடிவவதில்லை. ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக தேவனை நம்புவதை விட வேறே நியாயமான குறிக்கோள் எதுவும் அவர்களுக்கு இல்லை—அதுதான் அவர்களுடைய விசுவாசத்தின் மதிப்பு. இந்த நோக்கத்திற்கு ஏதேனும் பங்களிப்பு செய்யாவிட்டால், அவர்கள் அதில் முழுவதுமாக அசைவற்று இருப்பார்கள். இன்று தேவனை நம்புகிற பெரும்பாலானோரின் நிலை இதுதான். அவர்களின் நோக்கமும் விருப்பமும் நியாயமானதாகத் தோன்றுகிறது, ஏனென்றால் அவர்கள் தேவனை நம்புவதால், அவர்கள் தேவனுக்காக செலவு செய்கிறார்கள், தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்கிறார்கள், மற்றும் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் இளமையை துறக்கிறார்கள், குடும்பத்தையும் வாழ்க்கையையும் கைவிடுகிறார்கள், வீட்டிலிருந்து தொலைவில் பல வருடங்கள் தங்களைத் தாங்களே மும்முரமாக அலுவல் உள்ளவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுடைய இறுதி இலக்கின் பொருட்டு, அவர்கள் தங்கள் சொந்த நலன்களையும், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தையும், அவர்கள் தேடும் திசையையும் கூட மாற்றுகிறார்கள்; ஆயினும் அவர்கள் தேவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் நோக்கத்தை மாற்ற முடியாது. அவர்கள் தங்கள் சொந்த கருத்துக்களை நிர்வகிப்பதற்காக ஓடுகிறார்கள்; சாலை எவ்வளவு தூரம் இருந்தாலும், வழியில் எத்தனை கஷ்டங்கள் மற்றும் தடைகள் இருந்தாலும், அவர்கள் விடாமுயற்சியுடன் மரணத்திற்கும் பயப்படாமல் இருக்கின்றனர். இந்த வழியில் தங்களைத் தொடர்ந்து அர்ப்பணிக்க என்ன வல்லமை அவர்களைத் தூண்டுகிறது? அது அவர்களின் மனசாட்சியா? இது அவர்களின் சிறந்த மற்றும் உன்னதமான தன்மையா? இது தீய சக்திகளை இறுதிவரை எதிர்த்துப் போராடுவதில் அவர்களுக்கு இருக்கும் உறுதியா? இது வெகுமதியைத் தேடாமல் தேவனுக்குச் சாட்சி கொடுக்கும் அவர்களின் நம்பிக்கையா? இது தேவனுடைய விருப்பத்தை அடைய எல்லாவற்றையும் விட்டுவிட தயாராக இருக்கும் அவர்களின் விசுவாசமா? அல்லது இது ஆடம்பரமான தனிப்பட்ட கோரிக்கைகளை எப்போதும் கைவிடுகின்ற அவர்களின் பக்தியின் ஆவியா? தேவனுடைய நிர்வாகக் கிரியையை ஒருபோதும் புரிந்துகொள்ளாத ஒருவருக்கு இன்னும் அதிகமாக கொடுப்பது என்பது ஒரு அதிசயம்! இப்போதைக்கு, இந்த மக்கள் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பது பற்றி விவாதிக்க வேண்டாம். எவ்வாறாயினும், அவர்களின் நடத்தை நம்முடைய பகுப்பாய்விற்கு மிகவும் தகுதியானதாக இருக்கிறது. அவர்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய நன்மைகளைத் தவிர, தேவனைப் புரிந்துகொள்ளாத ஜனங்கள் அவருக்காக இவ்வளவு கொடுப்பதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்க முடியுமா? இதில், முன்பே அடையாளம் காணப்படாத ஒரு பிரச்சனையை நாம் கண்டுபிடிக்கிறோம்: தேவனுடனான மனிதனின் உறவு வெறும் அப்பட்டமான சுயநலத்தில் ஒன்றாகும். இது ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் இடையிலான ஒரு உறவாகும். தெளிவாகச் சொல்வதானால், இது தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான உறவுக்கு ஒத்ததாகும். முதலாளி வழங்கும் வெகுமதிகளைப் பெறுவதற்கு மட்டுமே தொழிலாளி வேலை செய்கிறார். அத்தகைய உறவில் எந்த பாசமும் இல்லை, மாறாக பரிவர்த்தனை மட்டுமே உள்ளது. நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் அங்கு இல்லை, மாறாக தர்மமும் கருணையும் மட்டுமே உள்ளது. எந்த புரிந்துகொள்ளுதலும் இல்லை, மாறாக அடக்கிவைத்துள்ள கோபமும் வஞ்சனையுமே உள்ளது. எந்த நெருக்கமும் இல்லை, மாறாக ஒரு கடந்து செல்லமுடியாத ஒரு இடைவெளி மட்டுமே உள்ளது. இப்போது காரியங்கள் இந்த நிலைக்கு வந்துவிட்டதால், அத்தகைய போக்கை மாற்றகூடியவர் யார்? இந்த உறவு எவ்வளவு மோசமாகியிருக்கிறது என்பதை உண்மையிலேயே புரிந்துகொள்ள எத்தனை பேர் உள்ளனர்? ஆசீர்வதிக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஜனங்கள் மூழ்கும்போது, தேவனுடனான இத்தகைய உறவு எவ்வளவு சங்கடமானதாகவும், கூர்ந்துபார்க்க வேண்டியதாகவும் இருக்கிறது என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நான் நம்புகிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்” என்பதிலிருந்து

95. தேவன் மீதான மனிதகுலத்தினுடைய நம்பிக்கையின் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், மனிதன் தேவனுடைய நிர்வகித்தலுக்கு செவிசாய்க்காமல், தேவனுடைய கிரியைக்கு இடையில் தன்னுடைய சொந்த நிர்வகித்தலைக் கொண்டிருக்கிறான் என்பதே ஆகும். தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரை ஆராதிக்க முற்படும் அதே வேளையில், மனிதன் தனது சொந்த இலட்சியத்தின் இலக்கைக் கட்டமைத்து, அதனால் மிகப் பெரிய ஆசீர்வாதத்தையும் சிறந்த இடத்தையும் எவ்வாறு பெறுவது என்று சதி செய்கிற இந்த செயலில்தான் மனிதனின் மிகப்பெரிய தோல்வி அடங்கியிருக்கிறது. அவர்கள் எவ்வளவு பரிதாபத்திற்குரிய, வெறுக்கத்தக்க, பரிதாபகரமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஒருவர் புரிந்துகொண்டாலும், எத்தனை பேர் தங்கள் கொள்கைகளையும் நம்பிக்கையையும் உடனடியாக கைவிட முடியும்? தங்கள் சொந்த நடவடிக்கைகளை நிறுத்தி, தங்களை மட்டுமே நினைப்பதை நிறுத்தக்கூடியவர்கள் யார்? தேவனுடைய நிர்வகித்தலை பூர்த்தி செய்யும்படிக்கு அவருடன் நெருக்கமாக ஒத்துழைப்பவர்கள் தேவனுக்கு தேவைப்படுகின்றனர். தங்களுடைய முழு மனதையும் சரீரத்தையும் தேவனுடைய நிர்வாகக் கிரியைக்கு அர்ப்பணிப்பதன் மூலம் அவருக்குக் கீழ்ப்படிவோர் அவருக்குத் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து பிச்சை எடுக்க கைகளைப் பிடித்துக் கொள்ளும் நபர்கள் அவருக்குத் தேவையில்லை, இன்னும் குறைவாக, கொஞ்சம் கொடுத்து பின்னர் வெகுமதி பெறக் காத்திருப்பவர்கள் அவருக்குத் தேவையில்லை. அற்பமான பங்களிப்பைச் செய்து பின்னர் அவர்களின் வெற்றிகளில் ஓய்வெடுப்பவர்களை தேவன் வெறுக்கிறார். அவருடைய நிர்வாகக் கிரியையை எதிர்க்கும் மற்றும் பரலோகத்திற்குச் செல்வதையும் ஆசீர்வாதங்களைப் பெறுவதையும் பற்றி மட்டுமே பேச விரும்பும் அந்த கொடூரமான ஜனங்களை அவர் வெறுக்கிறார். மனிதகுலத்தை இரட்சிப்பதில் அவர் செய்யும் கிரியையால் வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோர் மீது அவர் இன்னும் அதிக வெறுப்பைக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், தேவன் தமது நிர்வாகக் கிரியை மூலம் எதை அடைய மற்றும் பெற விரும்புகிறார் என்பதைப் பற்றி இந்த ஜனங்கள் ஒருபோதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. தேவனுடைய கிரியையால் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதில் மட்டுமே அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள் தேவனுடைய இருதயத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, தங்கள் சொந்த வாய்ப்புகள் மற்றும் தலைவிதி ஆகியவற்றின் மீதே முழுமையாக அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய நிர்வாகக் கிரியையை எதிர்க்கிறவர்கள் மற்றும் தேவன் மனிதகுலத்தை எவ்வாறு இரட்சிக்கிறார் என்பதில் சிறிது கூட ஆர்வம் இல்லாதவர்கள் மற்றும் அவருடைய விருப்பம் தேவனுடைய நிர்வாகக் கிரியையிலிருந்து பிரிக்கப்பட்ட வழியில் தங்களை மகிழ்விக்கும் விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள். அவர்களின் நடத்தை தேவனால் நினைவில் வைக்கப்படவுமில்லை அங்கீகரிக்கப்படவுமில்லை—இது தேவனால் சாதகமாகப் பார்க்கப்படுவதுமில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்” என்பதிலிருந்து

96. என்னுடைய கிரியைகள் கடற்கரை மணலத்தனையாய் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன, என்னுடைய ஞானம் சாலோமனின் குமாரர்கள் எல்லோரையும் விட மிஞ்சியிருக்கிறது, எனினும் மக்கள் என்னை ஒரு சாதாரண வைத்தியர் என்றும் அறியப்படாத மக்களின் போதகர் என்றும் மட்டுமே நினைக்கிறார்கள். நான் அவர்களைக் குணப்படுத்தக் கூடும் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள். தங்கள் உடல்களில் இருந்து அசுத்த ஆவிகளை விரட்ட நான் என் வல்லமையை பயன்படுத்துவேன் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள், மேலும் என்னிடம் இருந்து தாங்கள் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றே மிகப் பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பெரும் பொருட் செல்வங்களை என்னிடம் இருந்து நாடிப் பெறவே பலரும் என்னை விசுவாசிக்கிறார்கள். இந்த வாழ்க்கையை சமாதானத்துடன் கழிக்கவும் இனிவரும் உலகில் பாதுகாப்பாகவும் நல்லவிதமாக இருக்கவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். நரகத்தின் வேதனைகளைத் தவிர்க்கவும் பரலோகத்தின் ஆசிர்வாதங்களைப் பெறவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பலரும் தற்காலிகமான ஆறுதலுக்காகவே என்னை விசுவாசிக்கிறார்களே தவிர இனி வரும் உலகத்தில் எதையும் நாடிப்பெறத் தேடவில்லை. நான் என் கோபத்தை மனிதன் மேல் காட்டி அவன் முன்னர் பெற்றிருந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துக்கொண்ட போது, மனிதன் சந்தேகம் கொண்டவனானான். நரகத்தின் வேதனைகளை அளித்து பரலோகத்தின் ஆசிர்வாதங்களைத் திரும்ப எடுத்துக்கொண்ட போது, மனிதனின் வெட்கம் கோபமாக மாறியது. மனிதன் தன்னைக் குணப்படுத்தும்படி என்னைக் கேட்டபோது, நான் அவனுக்குச் செவிகொடுக்காததோடு அவனிடத்தில் வெறுப்புடையவனானேன்; பதிலாக மனிதன் என்னைவிட்டு விலகி தீய மருந்துகள் மற்றும் சூனிய வழிகளைத் தேடினான். என்னிடத்தில் இருந்து மனிதன் கோரிய அனைத்தையுமே நான் எடுத்துக்கொண்ட போது, ஒரு தடயமும் இன்றி ஒவ்வொருவரும் மறைந்து போயினர். இவ்வாறு, நான் அதிக அளவில் கிருபையை அளிப்பதால் மனிதனுக்கு என்னிடம் விசுவாசம் இருக்கிறது, மேலும் பெற வேண்டியதோ இன்னும் அதிகமாக உள்ளது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்பதிலிருந்து

97. தேவன் மீதான உங்கள் விசுவாசம் எந்த சவால்களையும் இன்னல்களையும் அல்லது சிறிதளவு கஷ்டங்களையும் ஏற்படுத்தாது என்று நீங்கள் விசுவாசிக்கிறாய். நீ எப்போதும் பயனற்றக் காரியங்களையே பின்தொடர்கிறாய், மேலும் நீ ஜீவனுடன் எந்த மதிப்பையும் சேர்க்கவில்லை, அதற்கு பதிலாக உன்னுடைய சொந்த ஆடம்பரமான எண்ணங்களை சத்தியத்தின் முன் வைக்கிறாய். நீ மிகவும் பயனற்றவனாய் இருக்கிறாய்! நீ ஒரு பன்றியைப் போல வாழ்கிறாய். உனக்கும் பன்றிகளுக்கும் மற்றும் நாய்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? சத்தியத்தைத் தொடராதவர்களும், அதற்கு பதிலாக மாம்சத்தை நேசிப்பவர்களும், எல்லாரும் மிருகங்கள் அல்லவா? ஆவிகள் இல்லாத இறந்தவர்கள் அனைவரும் நடைப்பிணங்கள் அல்லவா? எத்தனை வார்த்தைகள் உங்கள் மத்தியில் பேசப்பட்டிருக்கின்றன? உங்களிடையே ஒரு சிறிய கிரியை மட்டுமா செய்யப்பட்டிருக்கிறது? உங்கள் மத்தியில் நான் எவ்வளவு கொடுத்துள்ளேன்? நீங்கள் ஏன் அதை ஆதாயம் செய்யவில்லை? நீ எதைப் பற்றி புகார் செய்ய வேண்டும்? நீ மாம்சத்தை மிகவும் நேசிப்பதால் நீ எதையும் பெறவில்லை என்பதுதான் இல்லையா? உன் எண்ணங்கள் மிகவும் ஆடம்பரமாக இருப்பதால் அல்லவா? நீ மிகவும் முட்டாளாக இருப்பதால் அல்லவா? இந்த ஆசீர்வாதங்களைப் ஆதாயம் செய்ய உன்னால் இயலாது என்றால், உன்னைக் காப்பாற்றாததற்காக தேவனைக் குறை கூற முடியுமா? உன் பிள்ளைகள் நோயிலிருந்து விடுபடவும், உன் கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும், உன் மகன் ஒரு நல்ல மனைவியைக் கண்டுபிடிக்கவும், உன் மகள் ஒரு நல்ல புருஷனைக் கண்டுபிடிக்கவும், உன் எருதுகள் மற்றும் குதிரைகள் நிலத்தை நன்றாக உழுதிடவும், உன் பயிர்களுக்கு ஒரு வருடம் நல்ல வானிலை கிடைக்கவும், தேவனை விசுவாசத்தபின் அமைதியை ஆதாயம் செய்ய இயன்றவனாய் இருப்பதே நீ தொடர்வதாகும். இதைத்தான் நீ நாடுகிறாய். உன் குடும்பத்திற்கு எந்தவிதமான விபத்துகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், காற்று உங்களை கடந்து செல்வதற்காகவும், உன் முகம் கட்டத்தால் தீண்டப்படாமல் இருப்பதற்காகவும், உன் குடும்பத்தின் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்காமல் இருப்பதற்காகவும், நீ எந்தவொரு பேரழிவிலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், தேவனின் அரவணைப்பில் வாழவும், வசதியான வீட்டில் வாழவும், உன் நாட்டம் ஆறுதலோடு வாழ்வதற்கு மட்டுமே இருக்கிறது. உன்னைப் போன்ற ஒரு கோழை, எப்போதும் மாம்சத்தைப் பின்தொடர்கிறான் உனக்கு இருதயம் இருக்கிறதா, உனக்கு ஆவி இருக்கிறதா? நீ ஒரு மிருகம் அல்லவா? பதிலுக்கு எதையும் கேட்காமல் நான் உனக்கு உண்மையான வழியைக் கொடுக்கிறேன், ஆனாலும் நீ தொடரவில்லை. தேவனை விசுவாசிக்கிறவர்களில் நீயும் ஒருவனா? உண்மையான மனித வாழ்க்கையை நான் உன்மேல் பொழிகிறேன், ஆனாலும் நீ தொடரவில்லை. நீ ஒரு பன்றி அல்லது நாயிலிருந்து வேறுபட்டவனா? பன்றிகள் மனிதனின் வாழ்க்கையைத் தொடர்வதில்லை, அவை சுத்திகரிக்கப்படுவதைத் தொடர்வதில்லை, வாழ்க்கை என்னவென்று அவைகளுக்குப் புரியவில்லை. ஒவ்வொரு நாளும், அவைகள் நிரம்ப சாப்பிட்ட பிறகு, அவைகள் வெறுமனே தூங்குகின்றன. நான் உனக்கு உண்மையான வழியைக் கொடுத்தேன், ஆனாலும் நீ அதை ஆதாயப் படுத்தவில்லை. நீ வெறுங்கையனாய் இருக்கிறாய். இந்த ஜீவியத்தில் பன்றியின் ஜீவியத்தைத் தொடர நீ விரும்புகிறாயா? அத்தகையவர்கள் உயிருடன் இருப்பதன் முக்கியத்துவம் என்ன? உன் வாழ்க்கை வெறுக்கத்தக்கது மற்றும் இழிவானது, நீ அசுத்தத்திற்கும் ஒழிக்கக்கேடிற்கும் மத்தியில் வாழ்கிறாய் மற்றும் நீ எந்த இலக்குகளையும் பின்பற்றுகிறதில்லை. எல்லாவற்றிலும் உன் வாழ்க்கை மிகவும் இழிவானது அல்லவா? தேவனை நோக்கிப் பார்க்க உனக்குத் தைரியம் இருக்கிறதா? இந்த வழியில் நீ தொடர்ந்து அனுபவித்தால், நீ எதையும் ஆதாயம் செய்ய மாட்டாய்? உண்மையான வழி உனக்கு கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் நீ கடைசியில் அதை ஆதாயம் செய்ய முடியுமா இல்லையா என்பது உன் சொந்த முயற்சியைப் பொறுத்து இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

98. ஜனங்களின் ஜீவித அனுபவங்களில், அவர்கள் பெரும்பாலும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். நான் எனது குடும்பத்தையும் ஜீவிதத்தையும் தேவனுக்காக விட்டுவிட்டேன், அவர் எனக்கு என்ன கொடுத்தார்? நான் அதைச் சேர்க்க வேண்டும், அதை உறுதிப்படுத்த வேண்டும்—சமீபத்தில் எனக்கு ஏதேனும் ஆசீர்வாதம் கிடைத்ததா? இந்த நேரத்தில் நான் நிறைய கொடுத்திருக்கிறேன், நான் ஓடினேன் ஓடினேன். மிகவும் கஷ்டப்பட்டேன்—அதற்கு பதிலாக தேவன் எனக்கு ஏதாவது வாக்குத்தத்தங்களை அளித்துள்ளாரா? அவர் என் நல்ல கிரியைகளை நினைவில் வைத்திருக்கிறாரா? என் முடிவு என்னவாக இருக்கும்? தேவனுடைய ஆசீர்வாதங்களை என்னால் பெற முடியுமா? … ஒவ்வொரு மனிதரும் தொடர்ந்து இத்தகைய கணக்கீடுகளை தங்கள் இருதயத்திற்குள் செய்கிறார்கள். அவர்கள் தேவனிடம் தங்களின் உந்துதல்கள், லட்சியங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளை வைக்கிறார்கள். ஒரு பரிவர்த்தனை மனநிலையைத் கொண்டிருகிறார்கள். அதாவது, தன் இருதயத்தில் மனிதன் தொடர்ந்து தேவனைச் சோதித்து வருகிறான். தொடர்ந்து தேவனைப் பற்றிய திட்டங்களைத் தீட்டுகிறான். தனது சுய முடிவுக்காக தேவனோடு தொடர்ந்து வழக்கை வாதாடுகிறான். தேவனிடமிருந்து ஒரு அறிக்கையைப் பிரித்தெடுக்க முயற்சிக்கிறான். அவனது தேவைகளுள் தேவனால் அவனுக்கு எதைக் கொடுக்க முடியும், எதைக் கொடுக்க முடியாது என்பதைப் பார்க்கிறான். தேவனைப் பின்பற்றும் அதே நேரத்தில், மனிதன் தேவனை தேவனாக கருதுவதில்லை. மனிதன் எப்போதுமே தேவனுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றான். அவன் இடைவிடாமல் எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறான். ஒவ்வொரு அடியிலும் அவரை அழுத்துகிறான். ஒரு அங்குலம் வழங்கப்பட்ட பிறகு ஒரு மைல் தூரம் பெற முயற்சிக்கிறான். தேவனுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் அதே நேரத்தில், மனிதன் அவருடன் வாதாடுகிறான். அவர்களுக்கு சோதனைகள் ஏற்படும் போது அல்லது அவர்கள் சில சூழ்நிலைகளில் தங்களைக் கண்டறிந்தால், பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், செயலற்றவர்களாகவும், தங்கள் கிரியையில் மந்தமானவர்களாகவும், தேவனை பற்றி குறை கூறுபவர்களாக மட்டுமே இருப்பார்கள். மனிதன் முதன்முதலில் தேவனை நம்பத் தொடங்கிய காலத்திலிருந்து, அவன் தேவனை ஒரு அமுதசுரபி என்றும் சுவிஸ் இராணுவ கத்தி என்றும் கருதினான். தேவன் மிகப் பெரிய அளவில் தனக்குக் கடன் பட்டுள்ளதாக அவன் கருதினான். தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் பெற முயற்சிப்பது அவனது உள்ளார்ந்த பூரணம் மற்றும் கடமை என்று கருதினான். தேவனுடைய பொறுப்பு மனிதனைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும், அவனுக்காக வழங்குவதும் ஆகும் என்று கருதினான். தேவனை நம்புகிற அனைவருக்கும் “தெய்வ நம்பிக்கை” பற்றிய அடிப்படை புரிதல் இதுதான். தெய்வ நம்பிக்கை பற்றிய அவர்களின் ஆழமான புரிதல் இதுதான். மனிதனுடைய இயல்பின் சாராம்சம் முதல் அவரது அகநிலை தேடல் வரை, தெய்வ பயத்துடன் தொடர்புடைய எதுவும் இல்லை. தேவனை நம்புவதில் உள்ள மனிதனுடைய நோக்கத்துக்கும் தேவனை வழிபடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, தேவனை நம்புவது என்பது தேவனுக்கு பயந்து அவரை வணங்க வேண்டும் என்று மனிதன் ஒருபோதும் கருதவில்லை அல்லது புரிந்துக்கொள்ளவில்லை. இத்தகைய நிலைமைகளின் வெளிச்சத்தில், மனிதனுடைய சாராம்சம் வெளிப்படையானது. இதன் சாராம்சம் என்ன? மனிதனுடைய இருதயம் தீங்கிழைக்கும், துரோகத்தையும் வஞ்சகத்தையும் கொண்டுள்ளது. நேர்மறையான, நேர்மை மற்றும் நீதியை அது நேசிப்பதில்லை. அதனிடம் அவமதிப்பு மற்றும் பேராசை உள்ளது. மனிதனுடைய இருதயம் தேவனிடம் நெருக்கமாக முடியவில்லை. மனிதன் அதை தேவனுக்குக் கொடுக்கவில்லை. தேவன் ஒருபோதும் மனிதனுடைய உண்மையான இருதயத்தைப் பார்த்ததில்லை. அவ்ர் மனிதனால் வணங்கப்படவில்லை. தேவன் எவ்வளவு பெரிய விலைக்கிரையம் கொடுத்தாலும், அவர் எவ்வளவு கிரியை செய்தாலும், அல்லது அவர் மனிதனுக்கு எவ்வளவு வழங்கினாலும், மனிதன் குருடனாகவும், எல்லாவற்றிலும் முற்றிலும் அலட்சியமாகவும் இருக்கிறான். மனிதன் ஒருபோதும் தன் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கவில்லை. அவன் தன் இருதயத்தை தனக்காக வைத்துக்கொள்ள விரும்புகிறான். தன் சொந்த முடிவுகளை எடுக்க விரும்புகிறான்—இதன் உட்பொருள் என்னவென்றால், தேவனுக்குப் பயப்படுவதற்கும் தீமைகளைத் தவிர்ப்பதற்கும் அல்லது இறையாண்மைக்கும் தேவனுடைய ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய மனிதன் விரும்பவில்லை என்பதாகும். தேவனை தேவனாக வணங்கவும் அவர் விரும்பவில்லை. இன்றைய மனிதனுடைய நிலை இதுதான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

99. சென்றடையும் இடமானது குறிப்பிடப்படும்போதெல்லாம், நீங்கள் இதை சிறப்பு கவனத்துடன் நடத்துகிறீர்கள்; மேலும், இது நீங்கள் அனைவரும் குறிப்பாக உணர்ச்சிவசப்படக்கூடிய விஷயமாகவும் இருக்கிறது. சிலர் நல்லவிதமான சென்றடையும் இடத்தைப் பெறுவதற்காக தேவனுக்கு முன்பாகத் தங்கள் தலைகளை தரை வரை தாழ்த்தவும் தரையில் முட்டிக்கொள்ளவும் காத்திருக்க முடிவதில்லை. உங்கள் ஆர்வத்தைக் கண்டு எம்மால் அடையாளம் காண முடியும், இதனை வார்த்தைகளில் வெளிப்படுத்தத் தேவையில்லை. இது உங்கள் மாம்சமானது பேரழிவிற்குள் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்பதோடு, எதிர்காலத்தில் நித்திய தண்டனையில் இறங்கவும் நீங்கள் விரும்புவதில்லை என்பதாகும். நீங்கள் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக, இன்னும் கொஞ்சம் எளிதாக ஜீவிக்க நீங்களே உங்களை அனுமதிக்க வேண்டும் என்று நம்புகிறீர்கள். எனவே, சென்றடையும் இடமானது குறிப்பிடப்படும்போதெல்லாம் நீங்கள் குறிப்பாக கலக்கமடைகிறீர்கள், நீங்கள் போதுமான கவனத்துடன் இல்லாவிட்டால், நீங்கள் தேவனைப் புண்படுத்தக்கூடும், இதனால் நீங்கள் தகுதியுள்ள பழிவாங்கலுக்கு ஆளாக நேரிடும் என்று ஆழ்ந்த பயம் கொள்கிறீர்கள். உங்கள் சென்றடையும் இடத்திற்காக நீங்கள் சமரசம் செய்ய தயக்கம் கொள்ளவில்லை, ஒரு காலத்தில் வஞ்சகராவும் மரியாதையற்றவராகவும் இருந்த உங்களில் பலரும் திடீரென்று குறிப்பாக மென்மையாகவும் நேர்மையாகவும் மாறியிருக்கிறீர்கள்; உங்கள் நேர்மையின் தோற்றமானது ஜனங்களின் மஜ்ஜைகளைச் சில்லிட வைக்கிறது. ஆயினும்கூட, உங்கள் அனைவருக்கும் “நேர்மையான” இருதயங்கள் இருக்கின்றன, மேலும் நீங்கள் உங்கள் இருதயங்களில் இருக்கும் ரகசியங்களை தொடர்ந்து எமக்குத் திறந்துகாட்டுகிறீர்கள், அது குறையாகவோ, வஞ்சமாகவோ அல்லது பக்தியாகவோ என எதுவாக இருந்தாலும் எமக்குத் திறந்துகாட்டுகிறீர்கள். மொத்தத்தில், உங்கள் தன்மையின் ஆழமான இடைவெளிகளில் இருக்கும் உண்மையான விஷயங்களை நீங்கள் மிகவும் நேர்மையாக “ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்”. நிச்சயமாக, நான் ஒருபோதும் இதுபோன்ற விஷயங்களைச் சுற்றி வந்ததில்லை, ஏனென்றால் அவை அனைத்தும் எமக்கு மிகவும் பரிச்சயமாகிவிட்டன. தேவனின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக ஒரு முடியை இழப்பதை விட, நீங்கள் சென்றடையும் இடத்திற்காக நீங்கள் அக்கினிக் கடலுக்குள்ளும் நுழைவீர்கள். இது நான் உங்களுடன் மிகவும் பிடிவாதமாக இருக்கிறேன் என்பதற்கான அர்த்தம் இல்லை; நான் செய்யும் எல்லாவற்றையும் நேருக்கு நேர் பார்க்க நீங்கள் பக்தியின் இருதயத்தில் பெரும்பாலானவற்றை கொண்டிருக்கவில்லை என்பது தான் அர்த்தம். நான் இப்போது கூறியதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், எனவே நான் உங்களுக்கு ஒரு எளிய விளக்கத்தை அளிக்கிறேன்: உங்களுக்கு தேவைப்படுவது சத்தியமும் ஜீவனும் இல்லை, உங்களை எப்படி நடத்துவது என்பதற்கான கொள்கைகளும் இல்லை, மேலும் எமது மிகக் கடினமான கிரியையும் இல்லை. மாறாக, நீங்கள் மாம்சத்தில் கொண்டிருக்கும் எல்லாம் தான் உங்களுக்கு தேவைப்படுகிறது—செல்வம், அந்தஸ்து, குடும்பம், திருமணம் மற்றும் பல. நீங்கள் எமது வார்த்தைகளையும் கிரியைகளையும் முற்றிலுமாக நிராகரிக்கிறீர்கள், எனவே உங்கள் விசுவாசத்தை ஒரே வார்த்தையில் என்னால் தொகுக்க முடியும், “அக்கறையில்லாமை” என்பது தான் அந்த வார்த்தை. நீங்கள் உங்களை முற்றிலும் நியமிக்கும் விஷயங்களை அடைய நீங்கள் எந்த எல்லைக்கும் செல்வீர்கள், ஆனால் தேவன் மீதான உங்கள் விசுவாசத்தைப் பற்றிய விஷயங்களுக்காக நீங்கள் அதே விஷயத்தைச் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன். மாறாக, நீங்கள் ஒப்பீட்டளவில் அர்ப்பணிப்புள்ளவராகவும், ஒப்பீட்டளவில் ஆர்வமுள்ளவராகவும் இருக்கிறீர்கள். அதனால்தான் மிகவும் நேர்மையான இருதயம் இல்லாதவர்கள் தேவனை விசுவாசிப்பதில் தோல்வி கண்டவர்கள் என்று நான் சொல்கிறேன். கவனமாக சிந்தியுங்கள்—உங்களிடையே தோல்வி கண்டவர்கள் பலர் இருக்கின்றனரா?

தேவனை விசுவாசிப்பதில் வெற்றி என்பது ஜனங்களின் சொந்த செயல்களின் விளைவாக அடையப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; ஜனங்கள் வெற்றிபெறாமல் தோல்வியுற்றால், அதுவும் அவர்களின் சொந்த செயல்களால் தான் ஏற்படுகிறது, வேறு எந்த காரணிகளாலும் எந்தப் பாத்திரமும் வகிக்கப்படுவதில்லை. தேவனை விசுவாசிப்பதை விட மிகவும் கடினமான மற்றும் அதிக துன்பத்தை அனுபவிக்கும் எதையும் நீங்கள் செய்வீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன், மேலும் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் நீங்கள் அதைப் பொறுத்துக்கொள்ள விரும்பாத அளவிற்கு மிகவும் தீவிரமாக அதனை நடத்துவீர்கள்; இவை அனைத்தும் நீங்கள் உங்கள் சொந்த ஜீவிதத்தில் செலுத்தும் இடைவிடாத முயற்சிகள் ஆகும். உங்கள் சொந்த குடும்பத்தின் எந்த உறுப்பினரையும் நீங்கள் ஏமாற்றாத சூழ்நிலைகளின் கீழ் நீங்கள் எமது மாம்சத்தை ஏமாற்றும் திறன் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். இதுதான் உங்களது நிலையான நடத்தையாக இருக்கிறது, மேலும் நீங்கள் ஜீவிக்கும் கொள்கையும் இதுதான். நீங்கள் சென்றடையும் இடமானது மிகவும் அழகாகவும், நீங்கள் விரும்பும் அனைத்தும் இருக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக எம்மை ஏமாற்ற நீங்கள் இன்னும் ஒரு தவறான முகப்பை முன்வைப்பதில்லையா? உங்களது நேர்மையைப் போலவே, உங்களது பக்தியும் தற்காலிகமானது தான் என்பதை நான் அறிவேன். நீங்கள் தீர்மானமாக இல்லையா, மேலும் நீங்கள் செலுத்தும் விலைக்கிரயமானது தற்போதைய தருணத்தின் பொருட்டு மட்டும்தானா, எதிர்காலத்திற்காக இல்லையா? வர்த்தகத்தை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன், ஒரு அழகான சென்றடையும் இடத்தைப் பெற முயலும் இறுதி முயற்சியை மட்டுமே நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். சத்தியத்திற்குக் கடன்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், நான் செலுத்திய விலைக்கிரயத்திற்கு எமக்கு திருப்பிச் செலுத்துவதற்காகவும் நீங்கள் இந்த முயற்சியை மேற்கொள்வதில்லை. சுருக்கமாக, நீங்கள் விரும்புவதைப் பெறுவதற்கு புத்திசாலித்தனமான உத்திகளைப் பயன்படுத்த மட்டுமே நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், ஆனால் அதற்காக வெளிப்படையான யுத்தம் செய்ய நீங்கள் தயாராக இருப்பதில்லை. இது உங்கள் இதயப்பூர்வமான விருப்பமல்லவா? நீங்கள் வேஷம்மாறக்கூடாது, மேலும் உங்களால் புசிக்கவோ அல்லது நித்திரை கொள்ளவோ முடியாத அளவுக்கு உங்கள் சென்றடையும் இடத்தைப் பற்றி யோசிப்பதில் உங்கள் மூளையைக் கசக்கக்கூடாது. உங்கள் விளைவானது ஏற்கனவே இறுதியில் தீர்மானிக்கப்பட்டிருக்கும் என்பது உண்மையல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சென்றடையும் இடம்” என்பதிலிருந்து

100. இத்தனை வருடங்கள் நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் என் மீது சிறிதளவு கூட விசுவாசத்தைக் காண்பிக்கவில்லை. மாறாக, நீங்கள் நேசிக்கும் நபர்களையும் உங்களை சந்தோஷப்படுத்தும் காரியங்களையும் சுற்றியே பெரிதும் வலம் வந்திருக்கிறீர்கள், அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் எல்லா நேரங்களிலும், அவற்றை உங்கள் இருதயங்களுக்கு நெருக்கமாக வைத்திருக்கிறீர்கள், அவற்றை ஒருபோதும் கைவிடவில்லை. நீங்கள் நேசிக்கிற எந்தவொரு காரியத்தைப் பற்றியும் நீங்கள் ஆர்வமாக அல்லது ஆவலாக இருக்கும்போதெல்லாம், நீங்கள் என்னைப் பின்பற்றும் போது அல்லது என் வார்த்தைகளைக் கேட்கும்போதுகூட இதுதான் நடக்கிறது. ஆகையால், நான் உங்களிடம் கேட்கும் விசுவாசத்தை, நீங்கள் விரும்பும் உங்களது “விருப்பமானவைகளுக்கு” பயன்படுத்தி எனக்குப் பதிலாக அவைகளுக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்று நான் சொல்லுகிறேன். நீங்கள் எனக்காக ஒன்று அல்லது இரண்டு காரியங்களை தியாகம் செய்தாலும், அது உங்களுக்குரிய அனைத்தையும் குறிப்பிடாது, மேலும் நீங்கள் உண்மையிலேயே எனக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அது காண்பிக்காது. உங்களுக்கு ஆர்வமுள்ள காரியங்களிலேயே நீங்கள் ஈடுபாட்டுடன் காணப்படுகிறீர்கள்: சிலர் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், மற்றவர்கள் கணவன்மார்கள், மனைவிமார்கள், செல்வம், வேலை, மேலதிகாரிகள், அந்தஸ்து அல்லது பெண்கள் ஆகியோருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். நீங்கள் விசுவாசமாக இருக்கும் காரியங்களைப் பற்றி நீங்கள் ஒருபோதும் சோர்வாகவோ அல்லது எரிச்சலாகவோ உணர மாட்டீர்கள்; மாறாக, இந்த காரியங்களை அதிக அளவிலும் உயர் தரத்திலும் வைத்திருக்க நீங்கள் இன்னும் ஆர்வம் கொள்வீர்கள், நீங்கள் ஒருபோதும் அவற்றை விட்டுவிட மாட்டீர்கள். நானும் எனது வார்த்தைகளும் நீங்கள் ஆர்வமாக இருக்கிறபொருட்களுக்குப் பின்னாலேயே தள்ளப்படுகிறோம். அவற்றை கடைசியாக வரிசைப்படுத்துவதற்கு உங்களுக்கு வேறு வழியில்லை. தாங்கள் விசுவாசமாக இருக்கிற காரியங்களை கடைசி இடத்தில் வைக்கிறவர்களை கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது. அவர்களுடைய இருதயங்களில் என்னைப் பற்றிய ஒரு சிறிய தடயம்கூட இருப்பதில்லை. நான் உங்களிடம் அதிகம் கேட்பதாக அல்லது உங்கள் மீது தவறாக குற்றஞ்சாட்டுவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடும்போது, நீங்கள் ஒருபோதும் எனக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்ற உண்மையை எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இது போன்ற நேரங்களில், இது உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? உங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும்போதும், உங்கள் உழைப்புகளுக்காக நீங்கள் வெகுமதி பெறும்போதும், போதுமான சத்தியத்தினால் நீங்கள் நிரப்பப்படவில்லை என்று நீங்கள் சோகமாக உணரவில்லையா? எனது அங்கீகாரத்தைப் பெறாததற்காக நீங்கள் எப்போது அழுதீர்கள்? உங்கள் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும் உங்கள் மூளையை கசக்கிப் பிழிந்து மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் திருப்தியடையவில்லை; அவர்கள் சார்பாக நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்படவில்லை என்றும், அவர்களுக்காக உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்யவில்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். இருப்பினும், என்னைப் பற்றி நீங்கள் எப்போதும் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் இருக்கிறீர்கள்; நான் உங்கள் நினைவுகளில் மட்டுமே இருக்கிறேன், ஆனால் நான் உங்கள் இருதயங்களில் வசிக்கவில்லை. எனது அர்ப்பணிப்பையும் முயற்சிகளையும் நீங்கள் ஒருபோதும் உணர்வதில்லை, நீங்கள் அவற்றை ஒருபோதும் பாராட்டியதில்லை. நீங்கள் சுருக்கமான பிரதிபலிப்பில் மட்டுமே ஈடுபடுகிறீர்கள், இது போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறீர்கள். நான் நீண்ட காலமாக ஏங்கிய “விசுவாசம்” இது அல்ல, ஆனால் நான் இதை நீண்ட காலமாக வெறுக்கிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?” என்பதிலிருந்து

101. இப்போது நான் உங்கள் முன் கொஞ்சம் பணத்தை வைத்து, அதை தேர்வு செய்யும் சுதந்திரத்தையும் கொடுத்து, நீங்கள் தேர்வு செய்வதை நான் கடிந்துகொள்ளவில்லை என்றால், உங்களில் பலர் பணத்தை தேர்வு செய்து சத்தியத்தை விட்டுவிடுவீர்கள். உங்களில் சிறந்தவர்கள் பணத்தை விட்டுவிட்டு, தயக்கத்துடன் சத்தியத்தைத் தேர்வு செய்வார்கள், அதே நேரத்தில் சிலர் பணத்தை ஒரு கையிலும் சத்தியத்தை ஒரு கையிலும் எடுப்பார்கள். இதன்மூலம் உங்கள் உண்மையான நிறங்கள் தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் சத்தியத்தையும் மற்றும் நீங்கள் விசுவாசமாக இருக்கும் எதையேனும் தேர்வு செய்யும்போது, நீங்கள் அனைவரும் இதையே தேர்வு செய்கிறீர்கள், உங்கள் நடத்தை மாறாமல் அப்படியே இருக்கும். அது அப்படியல்லவா? சரியானதற்கும் தவறுக்கும் இடையில் ஊசலாடும் பலர் உங்கள் மத்தியில் இல்லையா? நேர்மறை மற்றும் எதிர்மறை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிகளில், குடும்பம் மற்றும் தேவன், குழந்தைகள் மற்றும் தேவன், அமைதி மற்றும் சஞ்சலம், செல்வம் மற்றும் வறுமை, அந்தஸ்து மற்றும் எளிமை, ஆதரிக்கப்படுதல் மற்றும் ஒதுக்கி வைக்கப்படுதல் மற்றும் பலவற்றுக்கு இடையிலான விருப்பத்தேர்வுகளைப் பற்றி நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். ஒரு அமைதியான குடும்பத்திற்கும் உடைந்த குடும்பத்திற்கும் இடையில், நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள், நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்; செல்வத்திற்கும் கடமைக்கும் இடையில், நீங்கள் மீண்டும் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள், கரைக்குத் திரும்ப விருப்பமில்லாமல் இருக்கிறீர்கள்;[அ] ஆடம்பரத்திற்கும் வறுமைக்கும் இடையில், நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள்; உங்கள் மகன்கள், மகள்கள், மனைவிமார்கள் மற்றும் கணவன்மார்களுக்கும் எனக்கும் இடையில் யாரை தேர்வு செய்வது என்று வரும்போது, நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள்; கருத்துக்கும் சத்தியத்திற்கும் இடையில், நீங்கள் மீண்டும் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள். அனைத்து விதமான உங்கள் தீய செயல்களையும் பார்த்த நான் உங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டேன். உங்கள் இருதயங்கள் மென்மையாக இருக்க பெரிதும் மறுக்கின்றன என்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. பல வருட அர்ப்பணிப்பும் முயற்சியும் உங்களுடைய கைவிடுதலையும் அவநம்பிக்கையையும் தவிர வேறொன்றையும் எனக்குத் தரவில்லை, ஆனால் உங்களுக்கான என் நம்பிக்கைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன, ஏனென்றால் எனது நாளானது அனைவருக்கும் முன்பாக முற்றிலும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீங்கள் இருளான மற்றும் தீய காரியங்களை நாடுவதிலேயே தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள், அவற்றின் மீதான உங்கள் பிடியைத் தளர்த்த மறுக்கிறீர்கள். அப்படியானால், உங்கள் பின்விளைவு என்னவாக இருக்கும்? நீங்கள் இதை எப்போதாவது கவனமாக சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? மீண்டும் தேர்வு செய்யுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டால், உங்கள் கருத்து என்னவாக இருக்கும்? இன்னும் முந்தையதாகவே இருக்குமா? நீங்கள் இன்னும் எனக்கு ஏமாற்றத்தையும் தாங்க முடியாத துக்கத்தையுமே கொண்டு வருவீர்களா? உங்கள் இருதயங்கள் இன்னும் சிறிதளவு சௌகரியத்திலேயே இருக்குமா? என் இருதயத்தை ஆறுதல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?” என்பதிலிருந்து

102. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரது செயல்களும் எண்ணங்களும் ஒருவரானவரின் கண்களுக்கு முன்பாக இருப்பதுடன், அதே நேரத்தில், அவர்களின் நாளைய தினத்திற்காக ஆயத்த நிலையிலும் இருக்கின்றன. இதுவே ஜீவனுள்ள அனைவரும் செல்ல வேண்டிய பாதையாகும்; இதுவே நான் அனைவருக்காகவும் முன்கூட்டியே தேர்ந்தெடுத்துள்ள பாதையாகும் என்பதுடன் எவரும் இதிலிருந்து தப்பிச் செல்லவோ இதிலிருந்து விலக்களிக்கப்படவோ முடியாது. நான் கூறியுள்ள வார்த்தைகள் எண்ணிலடங்காதவை, மேலும், நான் செய்துள்ள கிரியைகள் அளவிடப்பட முடியாதவை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் தங்களின் உள்ளார்ந்த இயல்பு மற்றும் அவர்களின் இயல்பின் நிகழ்வுகளும் செய்ய வேண்டியவற்றை இயல்பாகவே மேற்கொள்ளும்போது நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஏற்கனவே பலர், தங்களை அறியாமலேயே, வெவ்வேறு வகையான ஜனங்களுக்கு தெளிவாக்கும் நிமித்தம் நான் வகுத்துள்ள “சரியான பாதையில்” பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வெவ்வேறு வகையான ஜனங்களை நான் முன்னரே வெவ்வேறு சூழ்நிலைகளில் வைத்துள்ளதுடன், உரிய இடங்களிலிருந்து, ஒவ்வொருவரும் தங்களின் இயல்பான குணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களைப் பிணைப்பதற்கு யாருமில்லை, அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டுவதற்கு யாருமில்லை. தங்களின் முழுமையில் அவர்கள் சுதந்திரர்களாக இருப்பதுடன் அவர்கள் வெளிப்படுத்துபவை இயல்பாகவே வருகின்றன. ஒரே ஒரு விஷயம் மாத்திரமே அவர்களைக் கட்டுப்பாடுடன் வைத்திருக்கின்றது: எனது வார்த்தைகள். இதனால், சிலர் எனது வார்த்தைகளை எப்போதும் பிரயோகிக்காது, மனவெறுப்புடன் வாசிக்கின்றனர், ஒருபோதும் அவற்றை வழக்கமாக்கி கொள்ளவில்லை, இவ்வாறு செய்வது மரணத்தைத் தவிர்ப்பதற்கு மாத்திரமே; ஏனையோர், அதே வேளையில், அவர்களுக்கு அளிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் எனது வார்த்தைகளின்றி நாட்களை பொறுத்துக் கொள்வதற்குக் கஷ்டப்படுகின்றனர், எனவே இயல்பாகவே எல்லா நேரங்களிலும் எனது வார்த்தைகளைப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றனர். காலப்போக்கில், மனித வாழ்வின் இரகசியத்தையும், மனிதகுலத்தின் இலக்கையும் மனிதனாக இருப்பதன் மதிப்பையும் அவர்கள் கண்டறிகின்றனர். என் வார்த்தைகளின் பிரசன்னத்தில், மனித குலம் இவ்வாறே உள்ளது என்பதுடன் நான் வெறுமனே காரியங்களை அவற்றின் போக்கில் இடம் பெறுவதற்கு அனுமதிக்கிறேன். என் வார்த்தைகளை தங்கள் ஜீவிதத்தின் அஸ்திவாரமாக ஆக்குமாறு மக்களை நிர்ப்பந்திக்கும் எந்த கிரியையையும் நான் செய்வதில்லை. எனவே எப்போதும் மனசாட்சியுடன் இல்லாதோர், மற்றும் அவர்களின் ஜீவிதத்திற்கு எப்போதுமே ஏதேனும் மதிப்பு கொண்டிராதோர், என் வார்த்தைகளைத் துணிச்சலுடன் ஒதுக்கி வைத்து, விஷயங்கள் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை அமைதியாக கவனித்த பின்னர் அவர்கள் விரும்பியவாறு செய்கின்றனர். சத்தியத்தைக் குறித்தும் என்னிடமிருந்து வரும் எல்லாவற்றைக் குறித்தும் அவர்கள் வெறுப்படைய ஆரம்பிக்கின்றனர். மேலும், எனது வீட்டில் தங்கியிருப்பதைக் குறித்தும் அவர்கள் வெறுப்படைய ஆரம்பிக்கின்றனர். இந்த ஜனங்கள் ஊழியம் செய்தாலும், அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்காகவும், தண்டனையிலிருந்து தப்புவதற்காகவும் எனது வீட்டினுள் சிலகாலம் தங்கியிருக்கின்றனர். ஆயினும், அவர்களின் நோக்கங்களும் செயல்களும் எப்போதும் மாறுவதில்லை. ஆசீர்வதங்களுக்கான அவர்களின் நாட்டத்தை இது அதிகரிப்பதுடன் ராஜ்யத்தினுள் ஒரு தடவை பிரவேசித்து—நித்திய பரலோகத்தினுள் பிரவேசிப்பதற்கும் கூட, அதன் பின்னர் அங்கேயே தங்குவதற்கான நாட்டத்தையும் அதிகரிக்கின்றது. எனது நாள் விரைவில் வரவேண்டுமென அவர்கள் அதிகம் ஏங்கும்போது, சத்தியம் ஒரு தடையாகவும் தங்களின் பாதையில் ஒரு தடைக்கல்லாக இருப்பதாகவும் அவர்கள் அதிகம் உணர்கின்றனர். பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை எப்போதும் அனுபவிப்பதற்காக—சத்தியத்தைப் பின்பற்ற வேண்டிய அல்லது நியாத்தீர்ப்பு மற்றும் தண்டனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமின்றி, எல்லாவற்றிற்கும் மேலாக, என் வீட்டினுள் பணிந்திருந்து நான் கட்டளையிடும்படி செய்ய வேண்டிய அவசியமின்றி—ராஜ்யத்தினுள் காலடியெடுத்து வைப்பதற்கு அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த ஜனங்கள் சத்தியத்தைக் கண்டடைவதற்கான தங்களின் ஆர்வத்தை திருப்தி செய்வதற்காகவோ, எனது ஆளுகைக்கு ஒத்துழைப்பதற்காகவோ எனது வீட்டினுள் பிரவேசிப்பதில்லை: வரப்போகும் காலத்தில் அழிக்கப்படாதோர் மத்தியில் இருப்பது மாத்திரமே அவர்களின் இலக்கு. இதனால், அவர்களின் இருதயங்கள் சத்தியத்தையோ, சத்தியத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்பதையோ எப்போதும் அறிந்திருக்கவில்லை. அத்தகைய ஜனங்கள் எப்போதும் சத்தியத்தைப் கடைபிடிக்காமைக்கும் தங்களின் சீர்கேட்டின் ஆழத்தை உணராதிருந்தமைக்கும், ஆயினும், முழுவதுமாக எனது வீட்டில் “ஊழியக்காரர்களாக” தங்கியிருந்தமைக்குமான காரணம் இதுவே. அவர்கள் எனது நாளின் வருகைக்காகப் “பொறுமையுடன்” காத்திருப்பதுடன் எனது கிரியையின் விதத்தினால் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டும் சோர்வின்றிக் காணப்படுகின்றனர். அவர்களின் முயற்சி எவ்வளவு பெரியதாக இருப்பினும் அல்லது என்ன விலையை அவர்கள் கொடுப்பினும், யாரும் சத்தியத்திற்காக துன்பப்பட்டதையோ எனது நிமித்தம் எதையேனும் அளித்ததையோ எவரும் எப்போதும் கண்டதில்லை. தங்கள் இருதயங்களில், முதிர்வயதிற்கு நான் முடிவுகட்டும் நாளைப் பார்ப்பதற்கு அவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுடன், மேலும், எனது வல்லமையும் அதிகாரமும் எத்துணை சிறந்தது என்பதைக் கண்டறிவதற்கு ஆவலாக உள்ளனர். இவர்கள் விரைந்து செயற்படாத விஷயம் அவர்களை மாற்றிக் கொள்வதும் சத்தியத்தைப் பின்தொடர்வதுமே. நான் வெறுப்பதை அவர்கள் நேசிக்கின்றனர், நான் நேசிப்பவற்றில் அவர்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர். நான் வெறுப்பவற்றிற்காக அவர்கள் ஏங்குகின்றனர், ஆனால் நான் அருவருப்பவற்றை இழப்பது குறித்து பயப்படுகின்றனர். இவர்கள் இந்த வஞ்சக உலகில், அதனை எப்போதும் வெறுக்காது, வாழ்கின்றனர், ஆயினும், நான் இதனை அழித்துவிடுவேன் என மிகுந்த அச்சமுடையவர்களாக உள்ளனர். அவர்களின் முரண்பாடான நோக்கங்களுக்கு மத்தியில், நான் அருவருக்கும் இவ்வுலகத்தை அவர்கள் நேசிக்கின்றனர், ஆனால் அழிவின் வேதனையிலிருந்து அவர்கள் தப்புவிக்கப்பட்டு அடுத்த சகாப்தத்தின் பிரபுக்களாக மாற்றப்படும்படி, சத்தியத்தின் வழியிலிருந்து அவர்கள் வழிதப்பிச் செல்வதற்கு முன்னர் நான் இவ்வுலகை அழிக்க வேண்டுமெனவும் அவர்கள் ஏங்குகின்றனர். ஏனெனில் இவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை என்பதுடன் என்னிடமிருந்து வரும் எல்லாவற்றைக் குறித்தும் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் ஆசீர்வாதங்களை இழக்காதிருக்க வேண்டும் என்பதன் நிமித்தம் குறுகிய காலமொன்றிற்கு “கீழ்ப்படியும் ஜனங்களாக” ஆகலாம், ஆனால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் ஆர்வமும் அழிவடைந்து எரியும் அக்கினிக் குளத்தில் பிரவேசிப்பதன் மீதான பயமும் ஒருபோதும் மூடி மறைக்கப்பட முடியாது. எனது நாள் நெருங்கும்போது, அவர்களின் பெருவிருப்பு மேலும் வலுவாக வளர்கின்றது. பேரழிவு அதிகமாகும்போது, என்னை மகிழ்விப்பதற்கும் அவர்கள் நீண்டகாலமாக ஏங்கியுள்ள ஆசீர்வாதங்களை இழப்பதைத் தவிர்ப்பதற்குமாக எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை அறியாமல் அவர்களை அது மேலும் நிராதரவாக்குகின்றது. எனது கையானது பணியை ஆரம்பிக்கும்போதே முன்னணிப் படையாக சேவிப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இத்தகைய மக்கள் ஆவலாக உள்ளனர். நான் அவர்களைப் பார்க்க மாட்டேன் என மிகவும் பயந்து, படைகளின் முன்வரிசைக்கு சென்றுவிட வேண்டும் என்பதை மாத்திரமே அவர்கள் சிந்திக்கின்றனர். அவர்கள் செய்யும் கிரியைகள், சத்தியத்திற்கு எப்போதுமே உரியதாக இருக்கவில்லை எனவும், அவர்களின் செயல்கள் என் திட்டதைக் குழப்பி இடையூறு விளைவிக்கின்றன எனவும் அறியாது, அவர்கள் சரியானது என எண்ணுபவற்றை செய்கின்றனர் மற்றும் கூறுகின்றனர். அவர்கள் பெரியளவில் முயற்சி செய்திருக்கலாம், அத்துடன் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் சித்தத்திலும் நோக்கிலும் அவர்கள் உண்மையாயிருக்கலாம், ஆனால் அவர்கள் செய்யும் எவையும் என்னுடன் தொடர்புடையவை அல்ல, ஏனெனில் அவர்களின் கிரியைகள் நல்ல நோக்கங்களிலிருந்து வருவதை நான் எப்போதும் கண்டதில்லை, எனது பீடத்தின் மீது எதனையும் அவர்கள் வைத்ததையும் கண்டதுமில்லை. இத்தகைய கிரியைகளையே அவர்கள் எனக்கு முன்னர் இத்தனை வருடங்களாக செய்திருக்கின்றார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்பதிலிருந்து

103. பல ஜனங்கள், தேவனுடைய வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் படிக்க வைத்திருக்கிறார்கள். அதில் உள்ள அனைத்து உன்னதமான பத்திகளையும் மிகவும் மதிப்புமிக்க உடைமையாக நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கூட வைத்திருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் தேவனுடைய வார்த்தைகளை பிரசங்கிக்கிறார்கள். மற்றவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை வழங்கி உதவுகிறார்கள். இதைச் செய்வது தேவனுக்கு சாட்சி கொடுப்பது என்றும் அவருடைய வார்த்தைகளுக்கு சாட்சி கொடுப்பது என்றும் தேவனுடைய வழியைப் பின்பற்றுவது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இதைச் செய்வது தேவனுடைய வார்த்தைகளின்படி ஜீவிப்பதேயாகும் என்றும் அவருடைய வார்த்தைகளை அவர்களின் உண்மையான ஜீவிதத்தில் கொண்டு வருவதேயாகும் என்றும் தேவனுடைய புரிந்துகொள்ளுதலைப் பெறவும், இரட்சிக்கப்பட்டு முழுமையடையவும் உதவும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும்போதும், அவர்கள் ஒருபோதும் தேவனுடைய வார்த்தைகளை நடைமுறையில் பின்பற்றுவதில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவற்றுடன் தங்களைத் தாங்களே கொண்டுவர முயற்சிப்பதில்லை. மாறாக, தந்திரத்தின் மூலம் மற்றவர்களின் வணக்கத்தையும் நம்பிக்கையையும் பெறவும், சொந்தமாக ஆளுகையில் பிரவேசிக்கவும், தேவனுடைய மகிமையை ஏமாற்றவும் திருடவும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் பரப்புவதன் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதை அவர்கள் வீணாக நம்புகிறார்கள். இதனால் தேவனுடைய கிரியை மற்றும் அவரது பாராட்டு வழங்கப்படும் என்றும் நம்புகிறார்கள். எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன, எனினும் இந்த ஜனங்களால் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் கிரியையில் தேவனுடைய பாராட்டைப் பெற இயலாமல் இருப்பது மட்டுமல்லாமல், தேவனுடைய சாட்சி அளிக்கும் செயல்பாட்டில் அவர்கள் பின்பற்ற வேண்டிய வழியைக் கண்டறியவும் அவர்கள் இயலாமல் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளை மற்றவர்களுக்கு வழங்கி உதவுகையில் அவர்கள் தங்களுக்கு வழங்கி உதவுவதில்லை. எல்லாவற்றையும் செய்வதற்கான இந்த செயல்பாட்டில் அவர்கள் தேவனை அறியவோ அல்லது தேவனிடம் உண்மையான பயபக்தியை எழுப்பவோ இயலாது இருக்கிறார்கள். மாறாக, தேவனைப் பற்றிய அவர்களின் தவறான புரிதல்கள் இன்னும் ஆழமாக வளர்கின்றன. அவரைப் பற்றிய அவநம்பிக்கை எப்போதும் கடுமையாக இருக்கிறது. அவரைப் பற்றிய அவர்களின் கற்பனைகள் இன்னும் மிகைப்படுத்தப்படுகின்றன. தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய அவர்களின் கோட்பாடுகளால் வழங்கப்பட்ட மற்றும் வழிநடத்தப்பட்ட வார்த்தைகள், அவற்றின் அம்சங்களில் முழுமையாக இருப்பது போலவும், தங்கள் திறமைகளை சிரமமின்றி எளிதில் செலுத்துவது போலவும், ஜீவிதத்தில் தங்கள் நோக்கத்தையும் தங்களின் கிரியையையும் கண்டறிந்ததைப் போலவும், புதிய ஜீவனைப் பெற்று இரட்சிக்கப்பட்டது போலவும், தேவனுடைய வார்த்தைகள் நாவில் சரளமாக வருகையில், அவை உண்மையைப் பெற்றிருப்பது போலவும், தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொண்டது போலவும், தேவனை அறிவதற்கான பாதையை கண்டுபிடித்துக் கொடுப்பது போலவும், தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் கிரியையில், அவை பெரும்பாலும் தேவனுடன் நேருக்கு நேர் வந்திருப்பது போலவும் காணப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் அழுகைக்கு “நகர்த்தப்படுகிறார்கள்”. பெரும்பாலும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளில் “தேவனால்” வழிநடத்தப்படுவது போலவும், அவர்கள் அவருடைய உற்சாகமான தனிமை மற்றும் கனிவான நோக்கத்தை இடைவிடாமல் புரிந்துகொள்வதாகவும், அதே நேரத்தில் மனிதன் தேவனுடைய இரட்சிப்பைப் புரிந்துகொள்வதாகவும், அவருடைய ஆளுகையைப் புரிந்துகொள்வதாகவும், அவருடைய சாராம்சத்தை அறிந்துகொள்வதாகவும், அவருடைய நீதியான மனநிலையைப் புரிந்துகொள்வதாகவும் காணப்படுகிறது. இந்த அஸ்திவாரத்தின் அடிப்படையில், அவர்கள் தேவன் இருக்கிறார் என்பதை இன்னும் உறுதியாக நம்புகிறார்கள். அவருடைய உயர்ந்த நிலையை நன்கு அறிந்திருக்கிறார்கள். அவருடைய மாட்சிமையையும் உன்னதத்தையும் இன்னும் ஆழமாக உணர்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய மேலோட்டமான அறிவில் மூழ்கி, அவர்களின் நம்பிக்கை வளர்ந்துள்ளது. துன்பத்தைத் தாங்குவதற்கான அவர்களின் மன உறுதி பலமடைந்துள்ளது. தேவனைப் பற்றிய அவர்களின் அறிவு ஆழமடைந்துள்ளது. தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் உண்மையில் அனுபவிக்கும் வரை, தேவனைப் பற்றிய அவர்களின் எல்லா அறிவும், அவரைப் பற்றிய அவர்களின் கருத்துக்களும் தங்கள் விருப்பமான கற்பனைகள் மற்றும் அனுமானங்களிலிருந்து வெளிவருகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுடைய விசுவாசம் தேவனுடைய எந்தவிதமான சோதனையின் கீழும் இருக்காது, அவர்களின் ஆவிக்குரிய ஜீவிதம் மற்றும் அந்தஸ்து என்று அழைக்கப்படுவது வெறுமனே தேவனுடைய சோதனை அல்லது பரிசோதனையின் கீழ் நிலைநிறுத்தப்படாது. அவர்களுடைய மன உறுதி மணல் மீது கட்டப்பட்ட ஒரு அரண்மனையாக இருக்கிறது, மேலும் தேவனைப் பற்றிய அவர்களுடைய பெயரளவிலான அறிவு அவர்களின் கற்பனையின் ஒரு உருவமே தவிர வேறில்லை. உண்மையில், தேவனுடைய வார்த்தைகளில் நிறைய முயற்சி செய்த இந்த ஜனங்கள், உண்மையான நம்பிக்கை எது, உண்மையான கீழ்ப்படிதல் என்ன, உண்மையான அக்கறை என்ன அல்லது தேவனைப் பற்றிய உண்மையான அறிவு என்ன என்பதை ஒருபோதும் உணரவில்லை. அவர்கள் கோட்பாடு, கற்பனை, அறிவு, பரிசு, பாரம்பரியம், மூடநம்பிக்கை மற்றும் மனிதகுலத்தின் நீதிநெறிக் கோட்பாடுகளை எடுத்துக்கொண்டு, தேவனை நம்புவதற்கும் அவரைப் பின்பற்றுவதற்கும் அவற்றை “மூலதனம்” மற்றும் “ஆயுதங்களாக” ஆக்குகிறார்கள். அவர்களின் நம்பிக்கை மற்றும் அவரைப் பின்பற்றுவதின் அஸ்திவாரங்களாகவும் ஆக்குகிறார்கள். அதே சமயம், அவர்கள் இந்த மூலதனத்தையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தேவனுடைய ஆய்வுகள், சோதனைகள், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்வதற்கும் கையாள்வதற்கும் அவர்கள் தேவனை அறிவதற்கான மாய தாயத்துக்களாக அவற்றை மாற்றுகிறார்கள். முடிவில், அவர்கள் பெறுவது தேவனைப் பற்றிய முடிவுகளைத் தவிர வேறொன்றும் இல்லை. அவை மத அர்த்தத்தில், நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கைகளில் மற்றும் கற்பனையான, கோரமான மற்றும் புதிரான எல்லாவற்றிலும் மூழ்கியுள்ளன. தேவனை அறிந்துகொள்வதற்கும் வரையறுப்பதற்குமான அவர்களின் வழி ஒரே மாதிரியான அச்சில் முத்திரையிடப்பட்டுள்ளது. மேலே உள்ள பரலோகத்தை அல்லது வானத்தில் உள்ள பழைய மனிதரை மட்டுமே நம்பும் மனிதர்கள், அதே சமயத்தில் தேவனுடைய யதார்த்தம், அவருடைய சாராம்சம், அவரது தன்மை, அவருடைய உடைமைகள் மற்றும் உண்மையான தேவனோடு தொடர்புடைய அனைத்துமே அவர்களின் அறிவு புரிந்துகொள்ளத் தவறிய விஷயங்கள், அவற்றில் இருந்து அவர்களின் அறிவு வடக்கு மற்றும் தென் துருவங்கள் வரையிலாக முற்றிலுமாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இந்த ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளின் ஏற்பாடு மற்றும் ஊட்டச்சத்தின் கீழ் வாழ்கிறார்கள் என்றாலும், தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான பாதையை அவர்கள் உண்மையிலேயே அடைய முடியவில்லை. இதற்கு உண்மையான காரணம் என்னவென்றால், அவர்கள் ஒருபோதும் தேவனுடன் பழகவில்லை, அவருடன் உண்மையான தொடர்பு அல்லது ஐக்கியம் இருந்ததில்லை. எனவே, அவர்கள் தேவனுடன் பரஸ்பர புரிந்துணர்வை அடைவது சாத்தியமில்லை அல்லது தங்களுக்குள் உண்மையான நம்பிக்கையை எழுப்பபுவது, தேவனைப் பின்பற்றுவது அல்லது வணங்குவது சாத்தியமற்றதாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் இவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தேவனை இவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும்—இந்த பார்வை மற்றும் மனநிலை அவர்களின் முயற்சிகளிலிருந்து வெறுங்கையுடன் திரும்புவதற்கு அவர்களை உட்படுத்திவிட்டது, தேவனுக்குப் பயந்து, தீமைக்கு விலகிச்செல்லும் பாதையை நித்திய காலமாக அவர்கள் ஒருபோதும் மிதித்து விடமுடியாத நிலைக்கு அவர்களை உட்படுத்திவிட்டது. அவர்களுடைய நோக்கம் மற்றும் அவர்கள் செல்லும் திசையானது, அவர்கள் நித்தியத்துக்கும் தேவனுடைய எதிரிகள் என்பதையும், அவர்களால் ஒருபோதும் இரட்சிப்பைப் பெற முடியாது என்பதையும் குறிக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

104. பல ஆண்டுகளாக நான் செய்த செயல்களினால், மனிதர்கள் அதிக நன்மை அடைந்துள்ளனர். அதிகமாக என்னை விட்டு பின்வாங்கியும் உள்ளனர். இன்னும் அவர்கள் என்னை உண்மையாக விசுவாசிக்கவில்லை என்று நான் சொல்கிறேன். ஏனென்றால், தங்கள் வாயால் என்னை தேவன் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கூறிய சத்தியங்களுடன் அவர்கள் உடன்படவில்லை. அதுமட்டுமின்றி சத்தியத்தை கடைபிடிக்கக் கோரி அவர்களிடம் நான் கேட்டதுபோல் அவர்கள் சத்தியத்தை கடைபிடிக்கவில்லை. அதாவது, மனிதர்கள் தேவனுடைய இருப்பை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்கள், அவருடைய சத்தியத்தை அல்ல. மனிதர்கள் தேவனுடைய இருப்பை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்கள், அவருடைய ஜீவனை அல்ல. மனிதர்கள் தேவனுடைய பெயரை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்கள், அவருடைய சாராம்சத்தை அல்ல. அவர்களின் வைராக்கியத்திற்காக நான் அவர்களை வெறுக்கிறேன். ஏனென்றால் அவர்கள் என்னை ஏமாற்றுவதற்காக மட்டுமே இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களில் யாரும் என்னை உண்மையாக ஆராதிப்பதில்லை. உங்கள் வார்த்தைகளில் சர்ப்பத்தின் சோதனைகள் உள்ளன. மேலும், அவைகள் தீவிரமானவைகளாக இருக்கின்றன. மெய்யாகவே இந்த வார்த்தைகள் தள்ளப்பட்டவனான பிரதான தூதனால் அறிவிக்கப்பட்டவையாகும். மேலும் என்னவென்றால், உங்கள் செயல்கள் சிதைக்கப்பட்டு அவமானகரமான அளவிற்கு கிழிந்திருக்கின்றன. உங்கள் அளவற்ற ஆசைகளும் பேராசை நோக்கங்களும் கேட்பதற்கே அருவருப்பாக இருக்கின்றன. நீங்கள் அனைவரும் என் வீட்டில் அந்துப்பூச்சிகளாகிவிட்டீர்கள், அப்புறப்படுத்தப்பட வேண்டிய வெறுக்கத்தக்க பொருட்களாகிவிட்டீர்கள். உங்களில் யாரும் சத்தியத்தை நேசிப்பதில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட விரும்புகிறீர்கள். பரலோகத்திற்கு ஏறிப்போக வேண்டும் என்றும் கிறிஸ்துவின் அற்புதமான தரிசனம் பூமியில் பயன்படும் முறையை காணவேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். ஆனால் உங்களைப் போன்ற, மிகவும் கேடான, தேவன் யார் என்று தெரியாத ஒருவர், தேவனைப் பின்பற்றுவதற்கு தகுதியானவரா என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் எப்படி பரலோகத்திற்கு ஏறிப்போக முடியும்? எந்தவொரு முன்னுதாரணமும் இல்லாத அத்தகைய அற்புதமான காட்சிகளைப் பார்க்க நீங்கள் எவ்வாறு தகுதியுடையவராக இருக்க முடியும்? உங்கள் வாயில் வஞ்சனையும் அசுத்தமுமான வார்த்தைகளும், துரோகமும் ஆணவமும் நிறைந்த வார்த்தைகளும் உள்ளன. என் வார்த்தையை அனுபவித்தப் பின்னும் நீங்கள் ஒருபோதும் என்னிடம் உண்மையான வார்த்தைகளைப் பேசவில்லை. உங்களிடம் தூய வார்த்தைகளும் இல்லை, எனக்குக் கீழ்ப்படியும் வார்த்தைகளும் இல்லை. இறுதியில், உங்கள் நம்பிக்கை தான் என்ன? உங்கள் உள்ளங்களில் ஆசை மற்றும் பணம் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. உங்கள் மனதில் பொருள் காரியங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும், என்னிடமிருந்து எதையாவது பெறுவது எப்படி என கணக்கிடுகிறீர்கள். ஒவ்வொரு நாளும், நீங்கள் என்னிடமிருந்து எவ்வளவு செல்வம் பெற்றீர்கள் என்றும் எத்தனைப் பொருட்களைப் பெற்றீர்கள் என்றும் எண்ணுகிறீர்கள். ஒவ்வொரு நாளும், இன்னும் அதிகமான ஆசீர்வாதங்கள் உங்கள் மீது இறங்க காத்திருக்கிறீர்கள். இதனால் நீங்கள் இன்னும் அதிகமாகவும், உயர்ந்த தரத்திலும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள். ஒவ்வொரு கணத்திலும் உங்கள் எண்ணங்களில் இருப்பது நானும் இல்லை, என்னிடமிருந்து வரும் சத்தியமும் இல்லை. மாறாக உங்கள் கணவன் அல்லது மனைவி, உங்கள் மகன்கள், மகள்கள், நீங்கள் புசிக்கும் ஆகாரங்கள், நகைகள்என இவைகளே உள்ளன. நீங்கள் எப்போதுமே மிகப் பெரிய, உயர்ந்த இன்பத்தை எவ்வாறு பெற முடியும் என்றே நினைக்கிறீர்கள். ஆனால் இவ்வாறு இன்பங்களால் உங்கள் வயிற்றை நிரப்பி வெடிக்கச் செய்த பின்னும், நீங்கள் இன்னும் ஒரு சடலம் இல்லை என்று தான் எண்ணுகிறீர்களா? வெளிப்புறமாக, நீங்கள் அழகான ஆடைகளில் உங்களை அலங்கரிக்கும் போது கூட, நீங்கள் இன்னும் ஜீவனற்ற ஒரு நடை சடலம் என்று உணரவில்லையா? உங்கள் தலைமயிர் நரைத்திருக்கும் வரை, உங்கள் வயிற்றின் பொருட்டு நீங்கள் உழைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் யாரும் என் வேலைக்காக ஒரு தலைமயிரையும் தியாகம் செய்வதில்லை. நீங்கள் தொடர்ந்து பயணத்தில் இருக்கிறீர்கள். உங்கள் சொந்த மாம்சத்திற்காகவும், உங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்காகவும் உங்கள் உடலுக்கு வரி விதித்து, உங்கள் மூளையை கசக்கிறீகள். ஆனால் இன்னும் உங்களில் ஒருவர் கூட என் விருப்பத்திற்கு எந்த கவலையும் அக்கறையும் காட்டவில்லை. என்னிடமிருந்து நீங்கள் இன்னும் எதைப் பெறுவீர்கள் என்று நம்புகிறீர்கள்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” என்பதிலிருந்து

105. நான் பல வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளேன், மேலும் எனது சித்தத்தையும் மனநிலையையும் வெளிப்படுத்தியுள்ளேன், ஆனாலும்கூட, ஜனங்களால் என்னை அறிந்து கொள்ளவும் என்னை விசுவாசிக்கவும் இயலவில்லை. அல்லது, ஜனங்களால் இன்னும் எனக்குக் கீழ்ப்படிய இயலவில்லை என்று கூறலாம். வேதாகமத்திற்குள் வாழ்பவர்கள், நியாயப்பிரமாணத்திற்குள் வாழ்பவர்கள், சிலுவையில் வாழ்பவர்கள், கோட்பாட்டின்படி வாழ்பவர்கள், இன்று நான் புரியும் கிரியையின் மத்தியில் வாழ்பவர்கள் ஆகியோரில் யார் எனக்கு இணக்கமாய் இருக்கிறார்கள்? நீங்கள் ஆசீர்வாதங்களையும் வெகுமதிகளையும் பெறுவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்கள், ஆனால் உண்மையில் என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க வேண்டும், அல்லது எனக்கு எதிராக இருப்பதிலிருந்து உங்களை நீங்களே எப்படி தற்காத்துக் கொள்வது என்று சிந்தித்ததே இல்லை. நான் உங்களில் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன், ஏனென்றால் நான் உங்களுக்கு மிக அதிகமாகக் கொடுத்திருக்கிறேன், ஆனாலும் நான் உங்களிடமிருந்து மிகக் குறைவாகவே பெற்றிருக்கிறேன். உங்கள் மோசடி, உங்கள் ஆணவம், உங்கள் பேராசை, உங்கள் களியாட்ட ஆசைகள், உங்கள் துரோகம், உங்கள் கீழ்ப்படியாமை ஆகியவற்றில் எது எனது கவனத்திலிருந்து தப்பிக்க முடியும்? நீங்கள் என்னுடன் கவனக்குறைவாக இருக்கிறீர்கள், நீங்கள் என்னை முட்டாளாக்குகிறீர்கள், நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள், நீங்கள் என்னை நயமாக ஏமாற்றுகிறீர்கள், நீங்கள் பலிகளைக் கொடுத்து நிர்ப்பந்திக்கிறீர்கள் மற்றும் என்னை மிரட்டுகிறீர்கள்—இதுபோன்ற தீமையால் நான் அளிக்கும் தண்டனையை எவ்வாறு தவிர்க்க முடியும்? இந்த தீமைகள் அனைத்தும் எனக்கு எதிரான உங்கள் பகைமைக்குச் சான்றாகும், மேலும் என்னுடன் நீங்கள் இணக்கமாய் இராத தன்மைக்குச் சான்றாகும். நீங்கள் ஒவ்வொருவரும் என்னுடன் மிகவும் இணக்கமாய் இருப்பதாக விசுவாசிக்கிறீர்கள், ஆனால் அப்படி இருந்தால், அத்தகைய மறுக்கமுடியாத சான்றுகள் யாருக்கு பொருந்தும்? நீங்கள் என் மீது மிகுந்த நேர்மையையும் விசுவாசத்தையும் வைத்திருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் மிகவும் கனிவானவர்கள், மிகவும் இரக்கமுள்ளவர்கள், எனக்காக இவ்வளவு அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எனக்கு போதுமானதை விட அதிகமாக செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் செயல்களுக்கு எதிரானதாக இதனை எப்போதாவது வைத்திருக்கிறீர்களா? நீங்கள் மிகவும் திமிர்பிடித்தவர்கள், ஏராளமாகப் பேராசை கொண்டவர்கள், ஏராளமாக அக்கறையற்றவர்கள் என்று நான் சொல்கிறேன்; நீங்கள் என்னை முட்டாளாக்கும் தந்திரங்கள் ஏராளமாக புத்திசாலித்தனமானவை, மேலும் உங்களிடம் ஏராளமான அற்பமான நோக்கங்களும் அற்பமான முறைகளும் உள்ளன. உங்கள் விசுவாசம் மிகக் குறைவு, உங்கள் உற்சாகம் மிகவும் அற்பமானது, உங்கள் மனசாட்சி இன்னும் குறைவு. உங்கள் இதயங்களில் அதிகப்படியான தீங்கிழைக்கும் தன்மை உள்ளது, மேலும் உங்கள் தீமையிலிருந்து யாரும் விடுபடவில்லை, நான்கூட இல்லை. உங்கள் பிள்ளைகளுக்காக, அல்லது உங்கள் கணவருக்காக அல்லது உங்கள் சுய பாதுகாப்பிற்காக நீங்கள் என்னை வெளியேற்றுகிறீர்கள். என் மீது அக்கறை காட்டுவதற்குப் பதிலாக, உங்கள் குடும்பம், உங்கள் குழந்தைகள், உங்கள் அந்தஸ்து, உங்கள் எதிர்காலம் மற்றும் உங்கள் சொந்த மனநிறைவைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் பேசியதைப் போல் அல்லது செயல்பட்டதைப் போல் என்னை நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கடுங்குளிர் நாட்களில், உங்கள் சிந்தனை உங்கள் குழந்தைகள், உங்கள் கணவன், உங்கள் மனைவி அல்லது உங்கள் பெற்றோரிடம் திரும்பும். கடும்வெயில் நாட்களில், உங்கள் சிந்தனையில் எனக்கு இடமில்லை. நீ உன் கடமையைச் செய்யும்போது, நீ உன் சொந்த நலன்களைப் பற்றியும், உன் சொந்த பாதுகாப்பைப் பற்றியும், உன் குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் சிந்திக்கிறாய். எனக்காக நீ இதுவரை என்ன செய்திருக்கிறாய்? நீ எப்போது என்னைப் பற்றி சிந்தித்திருக்கிறாய்? என்ன நடந்தாலும் எப்போது நீ என்னிடமும் எனது கிரியையிடமும் உன்னை அர்ப்பணித்திருக்கிறாய்? என்னுடன் நீ இணக்கமாய் இருப்பதற்கான சான்று எங்கே? நீ எனக்கு விசுவாசமாக இருப்பதன் நிதர்சனம் எங்கே? நீ எனக்கு கீழ்ப்படிவதன் நிதர்சனம் எங்கே? உன் நோக்கங்கள் எனது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக என்று எப்போது இல்லாமல் இருந்தது? நீங்கள் என்னை முட்டாளாக்கி, ஏமாற்றுகிறீர்கள், நீங்கள் சத்தியத்துடன் விளையாடுகிறீர்கள், சத்தியத்தின் இருப்பை மறைக்கிறீர்கள், சத்தியத்தின் சாராம்சத்தைக் காட்டிக் கொடுக்கிறீர்கள். இந்த வழியில் எனக்கு எதிராகச் செல்வதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு என்ன காத்திருக்கிறது? நீங்கள் வெறுமனே குழப்பமான தேவனுடன் இணக்கமாய் இருக்க நாடுகிறீர்கள், குழப்பமான நம்பிக்கையை நாடுகிறீர்கள், ஆயினும் நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இல்லை. துன்மார்க்கனுக்கு கிடைக்க வேண்டிய அதே பதிலடியை உங்கள் குறைபாடு பெறவில்லையா? அந்த நேரத்தில், கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராத எவரும் கோபாக்கினை நாளிலிருந்து தப்ப முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், மேலும் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் மீது என்ன வகையான பழிவாங்கல் உருவாக்கப்படும் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்” என்பதிலிருந்து

107. மனுஷன் வெளிச்சத்தின் மத்தியில் வாழ்கிறான், ஆனாலும் வெளிச்சத்தின் விலைமதிப்பற்ற தன்மையை அவன் அறியவில்லை. வெளிச்சத்தின் பொருள் பற்றியும், அதன் மூலத்தைப் பற்றியும், மேலும், அது யாருடையது என்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை. நான் மனுஷனிடையே வெளிச்சத்தை வழங்கும்போது, மனுஷனிடையேயான நிலைமைகளை உடனடியாக ஆராய்கிறேன்: வெளிச்சத்தின் காரணமாக, எல்லா ஜனங்களும் மாறிக்கொண்டேயும் வளர்ந்தும், இருளை விட்டு நீங்கியும் விட்டார்கள். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் நான் பார்க்கிறேன், மலைகள் மூடுபனியில் மூழ்கியுள்ளன என்பதையும், தண்ணீர் குளிரில் உறைந்திருப்பதையும் பார்க்கிறேன், வெளிச்சம் வருவதால் ஏதோ விலைமதிப்பற்ற ஒன்றை கண்டுபிடிக்கப்போகிறோம் என்றெண்ணி ஜனங்கள் கிழக்கு நோக்கிப் பார்க்கிறார்கள்—ஆனாலும் மனுஷன் மூடுபனிக்குள் ஒரு தெளிவான திசையை அறிய இயலாமல் இருக்கிறான். முழு உலகமும் மூடுபனி என்ற போர்வையால் மூடியிருப்பதால், மேகங்களின் ஊடே நான் பார்க்கும்போது, என் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஒரு மனுஷனைக் கூட நான் பார்ப்பதில்லை. மனுஷன் பூமியில் எதையோ தேடுகிறான்; அவன் வேதனைப்படுகிறான்; அவன் என் வருகைக்காக காத்திருக்க விரும்புகிறான், ஆனால் அவனுக்கு எனது நாள் பற்றி தெரியவில்லை, மேலும் கிழக்கில் தெரியும் வெளிச்சத்தின் மங்கிய ஒளியை மட்டுமே அடிக்கடி பார்க்க முடிகிறது. எல்லா ஜனங்களிடையேயும், என் சொந்த இருதயத்தோடு உண்மையாக ஒத்துப்போகிறவர்களை நான் தேடுகிறேன். நான் எல்லா ஜனங்களிடையேயும் நடக்கிறேன், எல்லா ஜனங்களிடையேயும் வாழ்கிறேன், ஆனால் பூமியில் மனுஷன் பாதுகாப்பாக இருக்கிறான், ஆகவே, என் சொந்த இருதயத்தோடு உண்மையாக ஒத்துப்போகிறவன் யாரும் இல்லை. என் சித்தத்தை எவ்வாறு கவனிப்பது என்று ஜனங்களுக்குத் தெரியவில்லை, அவர்களால் என் செயல்களைப் பார்க்க முடியாது, மேலும் அவர்களால் வெளிச்சத்திற்குள் செல்ல முடியாது, வெளிச்சத்தால் பிரகாசிக்க முடியாது. மனுஷன் என் வார்த்தைகளை எப்போதும் பொக்கிஷமாகக் கருதினாலும், சாத்தானின் வஞ்சகத் திட்டங்களை அவனால் பார்க்க இயலாது; மனுஷனின் சரீரவளச்சி மிகச் சிறியதாக இருப்பதால், அவனது இருதயம் விரும்பியபடி அவனால் செயல்பட முடியாது. மனுஷன் என்னை ஒருபோதும் நேர்மையாக நேசித்ததில்லை. நான் அவனை உயர்த்தும்போது, அவன் தன்னை தகுதியற்றவன் என்று உணர்கிறான், ஆனால் இது என்னை திருப்திப்படுத்த முயற்சிக்காது. நான் அவனுக்குக் கொடுத்த “நிலையை” அவன் கையில் வைத்துக் கொண்டு அதை ஆராய்ந்து பார்க்கிறான்; என் அருமையை அவனால் உணரமுடியவில்லை, அதற்கு பதிலாக தனது நிலையத்தின் ஆசீர்வாதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இது மனுஷனின் குறைபாடு அல்லவா? மலைகள் நகரும்போது, உன் நிலைக்காக ஒரு மாற்றுப்பாதையை அவர்களால் உருவாக்க முடியுமா? தண்ணீர் பாயும் போது, அவை மனுஷனின் நிலைக்கு முன் நிற்க முடியுமா? மனுஷனின் நிலையால் வானங்களையும் பூமியையும் மாற்றியமைக்க முடியுமா? ஒருகாலத்தில் நான் மனுஷனிடம் இரக்கமுள்ளவனாக இருந்தேன், அநேக முறை—ஆனால் அதை யாரும் மதிக்கவில்லை, பொக்கிஷமாகப் பார்க்கவில்லை. அவர்கள் அதை ஒரு கதையாகக் கேட்டார்கள், அல்லது அதை ஒரு புதினமாகப் படித்தார்கள். என் வார்த்தைகள் உண்மையில் மனுஷனின் இருதயத்தைத் தொடவில்லையா? எனது சொற்கள் உண்மையில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லையா? என் இருப்பை யாரும் நம்பவில்லை என்பதாக இருக்குமா? மனுஷன் தன்னை நேசிப்பதில்லை; அதற்கு பதிலாக, அவன் என்னைத் தாக்க சாத்தானுடன் ஒன்றுபடுகிறான், மேலும் எனக்கு சேவை செய்ய சாத்தானை ஒரு “சொத்தாக” பயன்படுத்துகிறான். நான் சாத்தானின் எல்லா வஞ்சகத் திட்டங்களிலும் ஊடுருவி, பூமியின் ஜனங்கள் சாத்தானின் வஞ்சனைகளை ஏற்றுக்கொள்வதைத் தடுப்பேன், அதனால் அதன் இருப்பால் அவர்கள் என்னை எதிர்க்காமல் இருப்பர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 22” என்பதிலிருந்து

108. என் முதுகுக்குப் பின்னால் உள்ள பல ஜனங்கள் பதவியின் ஆசீர்வாதத்தை இச்சித்து, பெருந்தீனி உண்டு, தூக்கத்தை விரும்பி, மாம்சத்திற்கு எல்லா வகையான கவனிப்பும் செய்து, மாம்சத்திற்கு வேறு வழியில்லை என்பது குறித்தே எப்போதும் கவலைப்படுகிறார்கள். அவர்கள் தேவாலயங்களில் தங்களுக்குரிய சரியான கடமைகளைச் செய்யாமல் வெட்டியாக தேவாலயத்தை நிரப்பிக்கொண்டு அல்லது அவர்களின் சகோதர சகோதரிகளை என்னுடைய வார்த்தைகளைக்கொண்டு கடிந்து கொண்டு, தங்கள் அதிகார பதவிகளிலிருந்து கொண்டு மற்றவர்களின்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த ஜனங்கள் தாங்கள் தேவனுடைய சித்தத்தை செய்து கொண்டிருப்பதாக தொடர்ந்து சொல்லிக்கொண்டு, தாங்கள் தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று எப்போதும் சொல்கிறார்கள். இது அபத்தமில்லையா? உனக்குச் சரியான நோக்கங்கள் இருந்தும், தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்ய முடியவில்லை என்றால், நீ மதிகேடனாயிருக்கிறாய்; ஆனால் உன்னுடைய நோக்கங்கள் சரியானதாக இல்லாமலிருந்தும், நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாய் என்று சொல்வாயானால், நீ தேவனை எதிர்க்கிற ஒரு நபராய், தேவனால் தண்டிக்கப்பட வேண்டிய நபராய் இருக்கிறாய்! அத்தகைய ஜனங்களுக்காக நான் பரிதாபப்படுவதில்லை! அவர்கள் தேவனுடைய வீட்டை வெட்டியாக நிரப்பிக்கொண்டு, மாம்சத்திற்கான வசதிகளை இச்சித்துக்கொண்டு, தேவனுடைய விருப்பங்களைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்களுக்கான நலன்களையே நாடி, தேவனுடைய சித்தத்திற்கு செவிசாய்ப்பதில்லை. அவர்கள் செய்யும் எந்த காரியத்திலும் தேவ ஆவியினுடைய கண்காணிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் எப்போதும் சூழ்ச்சி செய்து தங்கள் சகோதர சகோதரிகளை வஞ்சித்து, இருமுகங்கள் உடையவர்களாய், திராட்சைத்தோட்டத்தில் உள்ள நரியைப் போல எப்போதும் திராட்சைப்பழங்களைத் திருடி, திராட்சைத்தோட்டத்தை மிதிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்க முடியுமா? நீ தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள உகந்த நபரா? உன் வாழ்க்கைக்காக, தேவாலயத்துக்காக எந்த ஒரு பாரத்தையும் நீ எடுத்துக் கொள்வதில்லை, நீ தேவனுடைய கட்டளையை பெற்றுக்கொள்ளத் தகுதியான நபரா? உன்னைப் போன்ற ஒருவரை யார் நம்பத் துணிவார்கள்? நீ இப்படி ஊழியம் செய்தால், தேவன் உன்னை தைரியமாய் நம்பிப் பெரிதான வேலையை ஒப்படைப்பாரா? இது கிரியைக்கு தாமதங்களை ஏற்படுத்துமல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி” என்பதிலிருந்து

109. பெரும்பாலான ஜனங்கள் தேவனுக்குச் செய்கிற ஊழியத்தில் நிபந்தனைகளைப் பற்றிக் கூட பேசுகிறார்கள். அவர் தேவனா அல்லது மனிதனா என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் அவர்களுடைய சொந்த நிபந்தனைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்களுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றவே நாடுகிறார்கள். நீங்கள் எனக்காக உணவு சமைத்தால், சேவைக் கட்டணத்தை கோருகிறீர்கள், நீங்கள் எனக்காக ஓடினால், ஓடும் கட்டணத்தைக் கேட்கிறீர்கள், நீங்கள் எனக்காக வேலை செய்தால், வேலைக்கான கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் என்னுடைய வஸ்திரங்களைத் துவைத்தால், சலவைக் கட்டணத்தை கோருகிறீர்கள், நீங்கள் சபைக்காக எதையாகிலும் கொடுத்தால், மீட்புச் செலவைக் கோருகிறீர்கள், நீங்கள் பிரசங்கம் பண்ணினால் பிரசங்கியாருக்கான கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் புத்தகங்களை விநியோகித்தால், விநியோகக் கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் எழுதினால், எழுத்துக் கட்டணத்தைக் கோருகிறீர்கள். நான் கையாண்ட நபர்கள் கூட என்னிடத்தில் இழப்பீட்டைக் கோருகிறார்கள், வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்களோ அவர்கள் பெயருக்கு வந்த பாதிப்புக்காக இழப்பீட்டைக் கோருகிறார்கள். விவாகமாகாதவர்கள் வரதட்சணையை கோருகிறார்கள், அல்லது தங்களின் இழக்கப்பட்ட வாலிபத்திற்காக இழப்பீட்டுத் தொகையைக் கோருகிறார்கள். ஒரு கோழியைக் கொல்லுகிறவர்கள் கசாப்புக்காரரின் கட்டணத்தைக் கோருகிறார்கள், உணவை வறுக்கிறவர்கள் வறுப்பதற்கான கட்டணத்தைக் கோருகிறார்கள், சூப் தயாரிப்பவர்கள் அதற்கும்கூட கட்டணத்தைக் கோருகிறார்கள். இது உங்களுடைய இறுமாப்பான, வலுவான மனிதத்தன்மை ஆகும். இவைகள் உங்களுடைய வெதுவெதுப்பான மனசாட்சி கட்டளையிடும் செயல்களாகும். உங்கள் அறிவு எங்கே? உங்கள் மனிதத்தன்மை எங்கே? நான் உங்களுக்குச் சொல்கிறேன்! இப்படியே நீங்கள் தொடர்ந்தால், நான் உங்களிடையே கிரியை செய்வதை நிறுத்தி விடுவேன். மனித உடையில் இருக்கும் மிருகக்கூட்டங்களிடையே நான் கிரியை செய்ய மாட்டேன், கொடிய இருதயங்களை மறைத்துக் கொண்டிருக்கும் அழகான முகங்கள் கொண்ட ஜனக்கூட்டத்திற்காக நான் இப்படி பாடுபட மாட்டேன், சிறிதளவேனும் இரட்சிப்புக்கு சாத்தியமில்லா இந்த மிருகக் கூட்டங்களை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். நான் உங்களைக் கைவிடும் அந்த நாள் நீங்கள் மரிக்கும் நாளாகும், அந்த நாள் இருள் உங்கள் மேல் வருகிற நாளாகும், ஒளியினால் நீங்கள் கைவிடப்படும் நாளாகும். நான் உங்களுக்குச் சொல்கிறேன்! மிருகங்களை விடவும் கீழ்நிலையில் இருக்கும் உங்களுடைய கூட்டத்தைப் போல் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு நான் ஒருபோதும் நன்மைசெய்கிறவராக இருக்க மாட்டேன். என்னுடைய வார்த்தைகளுக்கும் கிரியைகளுக்கும் வரம்புகள் உண்டு. உங்களிடத்தில் இருக்கும் உங்களுடைய மனிதத்தன்மையும் மனசாட்சியும் அப்படியே மாறாமல் இருக்கும்போது, அவற்றை வைத்துக்கொண்டு நான் இனிமேல் எந்த கிரியையும் செய்ய மாட்டேன். ஏனென்றால் நீங்கள் உங்கள் மனசாட்சியில் மிகக் குறைவுள்ளவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கி விட்டீர்கள். உங்களின் இழிவான சுபாவம் என்னை மிகவும் வெறுப்பூட்டுகிறது. மனிதத்தன்மையிலும் மனசாட்சியிலும் மிகவும் குறைவுள்ளவர்களாக இருக்கும் ஜனங்கள் இரட்சிப்புக்குரிய வாய்ப்பை ஒருபோதும் பெற மாட்டார்கள். இதுபோன்ற இதயமற்ற, நன்றியுணர்வில்லாத ஜனங்களை நான் ஒரு போதும் இரட்சிக்க மாட்டேன். என்னுடைய நாள் வரும்போது, ஒரு சமயம் என்னுடைய கடுங்கோபத்தைத் தூண்டின கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் மேல் நித்திய காலமாய் என்னுடைய கொளுத்தும் அக்கினியை பொழியப்பண்ணுவேன். ஒரு சமயம் என்மேல் கடுஞ்சொற்களை வீசியெறிந்து, என்னை நிராகரித்த அந்த மிருகங்கள் மேல் என்னுடைய நித்திய தண்டனையைச் சுமத்துவேன். ஒருசமயம் என்னோடு உண்டு, என்னோடுகூட ஒன்றாக வாழ்ந்து, ஆனால் என்னை விசுவாசிக்காமல், என்னை அவமதித்து, எனக்குத் துரோகம்பண்ணின இந்த கீழ்ப்படியாமையின் புத்திரர்களுக்காக நான் எப்போதும் என் கோபத்தின் அக்கினியிலே பற்றியெரிவேன். என்னுடைய கோபத்தைத் தூண்டின அனைவரையும் என்னுடைய தண்டனைக்கு உட்படுத்துவேன். ஒரு சமயம் எனக்குச் சமமானவர்கள் போல என் அருகில் நின்றபோதும் என்னை ஆராதிக்காமல், எனக்குக் கீழ்ப்படியாமல் இருந்த அந்த மிருகங்கள் மேல் என்னுடைய கோபம் முழுவதையும் பொழியப்பண்ணுவேன். முன்பு என் பராமரிப்பை அனுபவித்த, முன்பு நான் பேசின மறைப்பொருள்களால் மகிழ்ச்சியுற்ற, முன்பு என்னிடத்திலிருந்து பொருள் இன்பங்களை எடுக்க முயற்சித்த அந்த மிருகங்கள் மேல் நான் மனிதனை அடிக்கின்ற கோல் விழும். என்னுடைய இடத்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் ஒருவரைக்கூட நான் மன்னிப்பதில்லை. என்னிடத்திலிருந்து உணவையும், உடைகளையும் பறித்துக்கொள்ள முயற்சித்த ஒருவனைக் கூட நான் தப்பவிடமாட்டேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து

110. இன்று நீங்கள் பார்ப்பது எனது வாயின் கூர்மையான பட்டயத்தை மட்டுமே. எனது கரத்தில் உள்ள தடியையோ அல்லது நான் மனிதனை எரிக்கும் ஜுவாலையையோ நீங்கள் பார்த்ததில்லை, அதனால்தான் நீங்கள் இன்னும் பெருமிதம் கொள்கிறீர்கள், எனது முன்னிலையில் விரோதமாயும் மட்டுமீறியும் இருக்கிறீர்கள். அதனால்தான், நீங்கள் இன்னும் எனது வீட்டில் என்னுடன் சண்டையிடுகிறீர்கள், நான் எனது வாயால் பேசியதை உங்கள் மனித நாவால் மறுக்கிறீர்கள். மனிதன் எனக்கு அஞ்சமாட்டான், அவன் இன்றும் என்னிடம் தொடர்ந்து பகைமையைக் காட்டுகிறான் என்றாலும், அவன் எந்த பயமும் இல்லாமல் இருக்கிறான். உங்கள் வாய்களில் அநியாயக்காரர்களின் நாவும் பற்களும் உள்ளன. உங்கள் சொற்களும் செயல்களும் ஏவாளை பாவத்திற்கு தூண்டிய சர்ப்பத்தைப் போன்றவை. நீங்கள் ஒருவருக்கொருவர் கண்ணுக்கு கண் மற்றும் பல்லுக்குப் பல்லைக் கேட்கிறீர்கள், அந்தஸ்து, புகழ் மற்றும் லாபத்தை நீங்களே கைப்பற்றுவதற்காக என் முன்னிலையில் நீங்கள் போராடுகிறீர்கள், ஆனாலும் நான் உங்கள் சொற்களையும் கிரியைகளையும் இரகசியமாகப் பார்க்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் எனது முன்னிலையில் வருவதற்கு முன்பே, உங்கள் இதயங்களின் அடியில் நான் ஒலித்தேன். மனிதன் எப்போதுமே எனது கரத்தின் பிடியில் இருந்து தப்பித்து என்னால் கவனிக்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகிறான், ஆனால் நான் ஒருபோதும் அவனுடைய வார்த்தைகளிலிருந்தோ கிரியைகளிலிருந்தோ விலகிச் செல்லவில்லை. அதற்கு பதிலாக, அந்த வார்த்தைகளையும் செயல்களையும் எனது கண்களுக்குள் நுழைய நான் வேண்டுமென்றே அனுமதிக்கிறேன், நான் மனிதனின் அநீதியை தண்டிக்கக்கூடும், அவனுடைய இரண்டகம் பண்ணுதலின் மீது தீர்ப்பை வழங்கக்கூடும். ஆகவே, மனிதனின் வார்த்தைகளும் கிரியைகளும் இரகசியமாக எனது தீர்ப்பு இருக்கைக்கு முன் உள்ளன, எனது தீர்ப்பு மனிதனை ஒருபோதும் விட்டுவிடவில்லை, ஏனென்றால் அவன் மிகவும் அதிகமாக இரண்டகம் பண்ணுகிறான். எனது ஆன்மாவின் முன்னிலையில் மனிதனால் சொல்லப்பட்ட அனைத்து வார்த்தைகளையும் மற்றும் செய்யப்பட்ட செயல்களையும் எரித்து சுத்திகரிப்பது எனது வேலை. இந்த வழியில்,[ஆ] நான் பூமியை விட்டுச் செல்லும்போது, மக்கள் இன்னும் என்னிடம் விசுவாசத்தைக் கடைபிடிப்பார்கள், மற்றும் எனது பரிசுத்த வேலைக்காரர்கள் எனது கிரியையில் செய்வது போலவே எனக்கு சேவை செய்வார்கள், பூமியில் எனது கிரியை முடியும் நாள் வரை எனது கிரியையைத் தொடர அனுமதிப்பார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது” என்பதிலிருந்து

111. மற்றவர்களை சந்தேகிக்காதவர்களிடத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், மற்றும் சத்தியத்தை உடனடியாக ஏற்றுக்கொள்பவர்களை நான் விரும்புகிறேன். இந்த இரண்டு விதமான ஜனங்களை நோக்கி நான் மிகுந்த அக்கறை காட்டுகிறேன், ஏனென்றால் என் பார்வையில் அவர்கள் நேர்மையான ஜனங்கள். நீ வஞ்சகனாக இருந்தால், நீ எல்லா மக்களிடமும் காரியங்களிடமும் பாதுகாக்கப்பட்டிருப்பாய், சந்தேகப்படுவாய், இதனால் என் மீது உன் விசுவாசம் சந்தேகத்தின் அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய விசுவாசத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையான விசுவாசத்தின் குறைபாட்டால், நீ உண்மையான அன்பிலிருந்து இன்னும் அதிகமாக விலகிவிட்டாய். தேவனை சந்தேகிக்கவும், அவரைப் பற்றி விருப்பப்படி ஊகிக்கவும் நீ பொறுப்பேற்கிறாய் என்றால், நீ சந்தேகமின்றி, எல்லா ஜனங்களிலும் மிகவும் வஞ்சிக்கிறவன். சிறு குணங்களின் மன்னிக்க முடியாத பாவம், நியாயமும் காரணமும் இல்லாமை, நீதி உணர்வு இல்லாமை, பொல்லாத தந்திரங்களுக்கு கொடுக்கப்படுதல், துரோகம் மற்றும் கபடம், தீமை மற்றும் இருள் ஆகியவற்றால் மகிழ்தல், மற்றும் பலவற்றால் தேவன் மனிதனைப் போல இருக்க முடியுமா என்று நீ ஊகிக்கிறாய். ஜனங்களுக்கு இத்தகைய எண்ணங்கள் இருப்பதற்கு தேவனைப் குறித்த சிறிதளவு அறிவும் இல்லாததே காரணம் இல்லையா? இத்தகைய விசுவாசம் பாவத்திற்குக் குறைவானதில்லை! என்னைப் பிரியப்படுத்துபவர்கள் துல்லியமாக முகஸ்துதி செய்து தன் காரியத்திற்காகக் கெஞ்சுபவர்கள் என்றும், அத்தகைய திறமைகள் இல்லாதவர்கள் தேவனின் வீட்டில் வரவேற்கப்படாதவர்களாக இருப்பார்கள் என்றும், அங்கே தங்கள் இடத்தை இழக்க நேரிடும் என்றும் சிலர் விசுவாசிக்கிறார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நீங்கள் பெற்ற அறிவு இது மட்டும் தானா? இதைத்தான் நீங்கள் பெற்றுள்ளீர்களா? என்னைப் குறித்த உங்கள் அறிவு இந்த தவறான புரிதல்களோடு நிற்காது. தேவனின் ஆவியானவருக்கு எதிரான உங்கள் நிந்தனையும் பரலோகத்தை இழிவுபடுத்துவதும் இன்னும் மோசமானது. இதனால்தான், உங்களுடையதைப் போன்ற விசுவாசம் உங்களை என்னிடமிருந்து மேலும் விலக்கக் காரணமாகி, எனக்கு எதிராக அதிக எதிர்ப்பாக இருக்கும் என்று நான் சொல்கிறேன். அநேக வருடங்களின் கிரியை முழுவதுமாக, நீங்கள் அநேக சத்தியங்களைக் கண்டிருக்கிறீர்கள், ஆனால் என் காதுகள் கேட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் சத்தியத்தை ஏற்க தயாராக இருக்கிறார்கள்? நீங்கள் சத்தியத்திற்கான விலையை செலுத்த தயாராக உள்ளீர்கள் என்று நீங்கள் அனைவரும் விசுவாசிக்கிறீர்கள், ஆனால் உங்களில் எத்தனை பேர் சத்தியத்திற்காக உண்மையிலேயே துன்பப்பட்டீர்கள்? உங்கள் இருதயங்களில் அநீதியைத் தவிர வேறொன்றுமில்லை, இது எல்லோரும், அவர்கள் யாராக இருந்தாலும் சமமாக வஞ்சகர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், தேவன் அவதாரம் எடுப்பது ஒரு சாதாரண மனிதனைப் போலவே கனிவான இருதயம் அல்லது கருணைமிக்க அன்பு இல்லாமல் இருக்க முடியும் என்ற அளவிற்குக் கூட நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அதற்கும் மேலாக, ஒரு உன்னத குணமும், இரக்கமுள்ள, கருணைமிக்க இயல்பும் பரலோகத்தில் உள்ள தேவனுக்குள் மட்டுமே இருப்பதாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அத்தகைய ஒரு பரிசுத்தவான் இல்லை, பூமியில் இருளும் தீமையும் மட்டுமே ஆட்சி செய்கின்றன, அதே சமயம் ஜனங்கள் நன்மைக்கும் அழகுக்குமான ஏக்கத்தை ஒப்படைப்பதே தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். உங்கள் மனதில், பரலோகத்தில் உள்ள தேவன் மிகவும் உயர்ந்தவர், நீதியுள்ளவர், பெரியவர், தொழுதுகொள்வதற்கும் போற்றுதலுக்கும் தகுதியானவராக இருக்கிறார். இதற்கிடையில், பூமியிலுள்ள இந்த தேவன், பரலோகத்தில் உள்ள தேவனுக்கு மாற்றாகவும் கருவியாகவும் இருக்கிறார். இந்த தேவன் பரலோகத்தின் தேவனுக்கு சமமாக இருக்க முடியாது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அவரைப் போலவே அதே சுவாசத்தில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. தேவனின் மகத்துவம் மற்றும் மரியாதை என்று வரும்போது, அவை பரலோகத்திலுள்ள தேவனின் மகிமைக்கு உரியவை, ஆனால் அது இயல்பு மற்றும் மனிதனின் சீர்கேடு என்று வரும்போது, அவை பூமியில் உள்ள தேவனுக்கு ஒரு பங்கைக் கொண்டிருக்கும் பண்புகளாகும். பரலோகத்தில் உள்ள தேவன் நித்தியமாக உயர்ந்தவர், பூமியில் உள்ள தேவன் என்றென்றும் முக்கியமற்றவர், பலவீனமானவர், திறமையற்றவர். பரலோகத்தில் உள்ள தேவன் உணர்ச்சிக்காக அல்லாமல் நீதிக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறார், அதே நேரத்தில் பூமியில் உள்ள தேவன் சுயநலமான நோக்கங்களை மட்டுமே கொண்டிருக்கிறார், எந்த நியாயமும் காரணமும் இல்லாமல் இருக்கிறார். பரலோகத்தில் உள்ள தேவனுக்கு சிறிதளவும் வக்கிரம் இல்லை, என்றென்றும் உண்மையுள்ளவர், பூமியில் உள்ள தேவன் எப்போதும் நேர்மையற்ற பகுதியைக் கொண்டிருக்கிறார். பரலோகத்தில் உள்ள தேவன் மனிதனை மிகவும் நேசிக்கிறார், பூமியில் உள்ள தேவன் மனிதனுக்கு போதிய அக்கறை காட்டவில்லை, அவனை முற்றிலுமாக புறக்கணிக்கவும் செய்கிறார். இந்த தவறான அறிவு நீண்ட காலமாக உங்கள் இருதயங்களுக்குள் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இது எதிர்காலத்திலும் நிலைத்திருக்கக்கூடும். நீங்கள் கிறிஸ்துவின் அனைத்து கிரியைகளையும் அநியாயக்காரர்களின் நிலைப்பாட்டில் இருந்து கருதுகிறீர்கள், மேலும் அவருடைய எல்லா கிரியைகளையும், அவருடைய அடையாளத்தையும் சாரத்தையும் துன்மார்க்கரின் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு முன் வருபவர்களால் செய்யப்படாத ஒரு கடுமையான தவறைச் செய்துள்ளீர்கள். அதாவது, நீங்கள் பரலோகத்தில் உயர்ந்த தேவனுக்கு மட்டுமே தலையில் கிரீடம் வைத்து சேவை செய்கிறீர்கள், மேலும் முக்கியமற்றவராக நீங்கள் கருதும் உங்களால் அதரிசனமான தேவனை நீங்கள் எப்போதும் கவனிப்பதில்லை. இது உங்களுடைய பாவம் அல்லவா? தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் மீறுதலுக்கு இது ஒரு சிறந்த உதாரணம் அல்லவா? நீங்கள் பரலோகத்திலுள்ள தேவனை ஆராதிக்கின்றீர்கள். நீங்கள் உயர்ந்த சொரூபங்களை வணங்குகிறீர்கள், அவர்களின் சொல் ஆற்றலுக்காக புகழ்பெற்றவர்களை மதிக்கிறீர்கள். உன் கைகளை செல்வங்களால் நிரப்புகிற தேவனால் நீ மகிழ்ச்சியுடன் கட்டளையிடப்படுகிறாய், மேலும் உன் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றக்கூடிய தேவனுக்காக ஏங்குகிறாய். இந்த உயர்ந்தவர் அல்லாதவரே நீ வணங்காத ஒரே தேவன் ஆவார். நீங்கள் வெறுக்கிற ஒரே காரியம், இந்த தேவனொடு இணைந்திருப்பதுதான். நீ செய்ய விரும்பாத ஒரே காரியம், உனக்கு ஒருபோதும் ஒரு காசும் கொடுக்காத இந்த தேவனை சேவிப்பதே ஆகும், மேலும் உன்னை அவருக்காக ஏங்க வைக்க முடியாத ஒரே ஒருவர் இந்த அன்பற்ற தேவன் ஆவார். இந்த வகையான தேவனால் உன் எல்லைகளை விரிவுபடுத்தவும், நீ ஒரு புதையலைக் கண்டுபிடித்ததைப் போல உணரவும், நீ விரும்புவதை நிறைவேற்றவும் முடியாது. அப்படியானால், நீ அவரை ஏன் பின்பற்றுகிறாய்? இது போன்ற கேள்விகளுக்கு உன் சிந்தனையை அளித்துள்ளாயா? நீ செய்வது இந்த கிறிஸ்துவை புண்படுத்தாது. மிக முக்கியமாக, அது பரலோகத்தில் உள்ள தேவனை புண்படுத்துகிறது. இது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் நோக்கம் அல்ல என்று நான் நினைக்கிறேன்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

112. பலர் நேர்மையாகப் பேசுவதையும் செயல்படுவதையும் விட நரகத்திற்கு தண்டிக்கப்படுவதே மேலானதாக இருக்கும். நேர்மையற்றவர்களுக்காக நான் வேறு வழிமுறை வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமில்லை. நீங்கள் நேர்மையாக இருப்பது உங்களுக்கு எவ்வளவு கடினம் என்பதை மெய்யாகவே நான் நன்கு அறிவேன். ஏனெனில் நீங்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், உங்கள் சொந்த சிறிய அளவுகோல் கொண்டு மக்களை அளவிடுவதில் மிகவும் சிறந்தவர்கள், இது எனது வேலையை மிகவும் எளிமையாக்குகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இரகசியங்களை உங்கள் மார்போடு கட்டியணைத்துக் கொள்வதால், என் வார்த்தைகளில் உங்கள் நம்பிக்கையின்படியே நான் உங்களை ஒவ்வொருவராக பேரழிவின் அக்கினிக்குள் அனுப்புவேன், அதன்பிறகு நீங்கள் மரித்தவர்களாகலாம். இறுதியில், “தேவன் உண்மையுள்ள தேவன்” என்கிற வார்த்தைகளை உங்கள் வாயிலிருந்து நான் வர கைப்பற்றுவேன், அதன்பின் நீங்கள் உங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு, “மனிதனின் இதயம் வஞ்சகமானது!” என்று புலம்புவீர்கள். இந்த நேரத்தில் உங்களது மனநிலை என்னவாக இருக்கும்? நீங்கள் இப்போது இருப்பதைப்போல வெற்றிகரமாக இருக்கமாட்டீர்கள் என்று நான் கற்பனைசெய்துப் பார்க்கிறேன். நீங்கள் இப்போது இருப்பதைப் போலவே “ஆழ்ந்த நிலையிலும் மற்றும் எளிதில் புரிந்துக்கொள்ளமுடியாத” நபராகவும் இருப்பீர்கள். தேவனுடைய சமூகத்தில், சிலர் அனைத்திலும் முதன்மையானவர்கள் மற்றும் சரியானவர்கள், அவர்கள் “நன்னடத்தையுடன்” இருப்பதற்கு வலிகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் தங்களுடைய திறந்த நச்சுப்பற்களால், ஆவியானவரின் சமூகத்தில் தங்கள் நகங்களால் நாலாபுறமும் கீறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களை நீங்கள் நேர்மையானவர்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுவீர்களா? நீ ஒரு மாயக்காரனாக இருந்தால், “தனிப்பட்டவர்களுக்கிடையேயான உறவுகளில்” நீ திறமையான ஒருவராக இருந்தால், நிச்சயமாக நீ தேவனுடன் அற்பமான முயற்சியை செய்கிறாய் என்று நான் சொல்கிறேன். உன்னுடைய வார்த்தைகள் சாக்குபோக்குகள் மற்றும் பயனற்ற நியாயங்களுடன் புதிராக இருந்தால், நீ சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் வெறுக்கத்தக்க ஒரு நபர் என்று நான் சொல்கிறேன். நீ வெளிப்படையாக பகிர்ந்துக்கொள்ளத் தயங்குகிற பல இரகசியங்கள் உனக்கு இருக்குமானால், உன் இரகசியங்களையும் உன் சிரமங்களையும் மற்றவர்கள் வெளிச்சத்தின் வழியைத் தேடுவதற்கு முன்பாக நீ மிகவும் தயங்கி வெறுக்கிறாய் என்றால், நீ இரட்சிப்பை எளிதில் அடைய முடியாதபடிக்கு, இருளிலிருந்து எளிதில் வெளியே வராத ஒருவராகவே இருக்கிறாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மூன்று புத்திமதிகள்” என்பதிலிருந்து

114. மனிதன் தேவனை நம்புகிறான் என்றாலும், மனிதனுடைய இருதயம் தேவன் இல்லாமல் இருக்கிறது. தேவனை எப்படி நேசிக்க வேண்டும் என்று அவன் அறியாமலிருக்கிறான். அவன் தேவனை நேசிக்க விரும்பவில்லை. ஏனென்றால், அவனுடைய இருதயம் ஒருபோதும் தேவனிடம் நெருங்கி வந்ததில்லை. அவன் எப்போதும் தேவனைத் தவிர்க்கிறான். இதன் விளைவாக, மனிதனுடைய இருதயம் தேவனிடமிருந்து தூரமாக இருக்கிறது. அப்படியானால், அவனது இருதயம் எங்கே இருக்கிறது? உண்மையில், மனிதனுடைய இருதயம் எங்கும் செல்லவில்லை: அதை தேவனுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக அல்லது அதை தேவன் பார்க்கத்தக்கதாக வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவன் அதை தனக்காக வைத்திருக்கிறான். சிலர் அடிக்கடி தேவனிடம், “தேவனே, என் இருதயத்தைப் பாரும்—நான் நினைப்பதை நீர் அறிவீர்” என்று ஜெபிப்பார்கள். சிலர் அவர்களை தேவன் பார்க்க அனுமதித்து, தாங்கள் செய்த சத்தியத்தை மீறினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தேவனிடம் சத்தியம் செய்கிறார்கள். தேவனை தன் இருதயத்திற்குள் பார்க்க மனிதன் அனுமதித்தாலும், மனிதன் தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய வல்லவன் என்பதையும், அவன் விதி, வாய்ப்புகள் மற்றும் அனைத்தையும் தேவனுடைய கட்டுப்பாட்டில் விட்டுவிட்டான் என்பதையும் இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆகவே, நீ தேவனிடம் செய்த சத்தியங்கள் அல்லது நீ அவரிடம் உறுதியளித்தவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய பார்வையில் உன் இருதயம் இன்னும் அவருக்கு பூட்டப்பட்டுள்ளது. ஏனென்றால், உன் இருதயத்தை தேவனை பார்க்க மட்டுமே அனுமதிக்கிறாய். ஆனால் அதைக் கட்டுப்படுத்த அவரை அனுமதிக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீ உன் இருதயத்தை தேவனிடம் கொடுக்கவில்லை. மேலும், தேவன் கேட்க இனிமையான வார்த்தைகளை மட்டுமே பேசுகிறாய். இதற்கிடையில், உன் கபடங்கள், சூழ்ச்சி மற்றும் திட்டங்களுடன் சேர்ந்து உன் பல்வேறு வஞ்சக நோக்கங்களை தேவனிடமிருந்து மறைக்கிறாய். உன் வாய்ப்புகளையும் விதியையும் உன் கரங்களில் பிடித்து வைக்கிறீர்கள். அவை தேவனால் பறிக்கப்படும் என்று மிகவும் பயப்படுகிறாய். ஆகவே, தேவன் தன் மீதான மனிதனுடைய நேர்மையை ஒருபோதும் காண்பதில்லை. மனிதனுடைய இருதயத்தின் ஆழத்தை தேவன் கவனித்தாலும், மனிதன் என்ன நினைக்கிறான், தன் இருதயத்தில் என்ன செய்ய விரும்புகிறான் என்பதைக் காண முடியும் என்றாலும், அவனது இருதயத்திற்குள் என்னென்ன விஷயங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதைக் காண முடியும் என்றாலும், மனிதனுடைய இருதயம் தேவனுக்கு சொந்தமாக இல்லை. அவன் அதை தேவனுடைய கட்டுப்பாட்டுக்குக் கொடுக்கவில்லை. அதாவது தேவனுக்கு உரிமை இருந்தும், அவரைக் கட்டுப்படுத்த அனுமதிக்கவில்லை. மனதளவில், மனிதன் தேவனுடைய ஏற்பாடுகளுக்கு தன்னைக் கொடுக்க அவனுக்கு வாஞ்சை அல்லது விருப்பம் இல்லை. மனிதன் தன்னை தேவனிடமிருந்து பூட்டிவிட்டது மட்டுமல்லாமல், மென்மையான பேச்சு மற்றும் புகழ்ச்சியைப் பயன்படுத்தி ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கி, தேவனுடைய நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் உண்மையான முகத்தை தேவனுடைய பார்வைக்கு மறைத்து, தங்கள் இருதயங்களை பூட்டி வைப்பதற்கான வழிகளைப் பற்றி யோசிக்கிறார்கள். தேவன் தங்களைப் பார்க்க அனுமதிக்காததன் அவர்களின் நோக்கம் என்னவென்றால் அவர்கள் உண்மையில் எதைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதேயாகும். அவர்கள் தங்களது இருதயங்களை தேவனுக்குக் கொடுக்க விரும்பவில்லை. மாறாக அவற்றை தங்களுக்காகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். இதன் உட்பொருள் என்னவென்றால், மனிதன் எதைச் செய்கிறான், எதை விரும்புகிறான் என்பது அனைத்தும் திட்டமிடப்பட்டு, கணக்கிடப்பட்டு, மனிதனால் தீர்மானிக்கப்படுகிறது. அவனுக்கு தேவனுடைய பங்கேற்பு அல்லது தலையீடு தேவையில்லை. தேவனுடைய திட்டங்களும் மற்றும் ஏற்பாடுகளும் அவனுக்குத் தேவையில்லை. ஆகவே, தேவனுடைய கட்டளைகள், அவருடைய ஆணை, அல்லது மனிதனிடம் உள்ள எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், மனிதனுடைய முடிவுகள் அவனது சொந்த நோக்கங்களையும் மற்றும் நலன்களையும், அந்த நேரத்தில் அவனது சொந்த நிலையையும் மற்றும் சூழ்நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை ஆகும். மனிதன் எப்போதுமே தனக்குத் தெரிந்த அறிவு மற்றும் உட்கருத்துக்களையும், அவனது சொந்த அறிவையும், தான் எடுக்க வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் பயன்படுத்துகிறான். மேலும், தேவனுடைய குறுக்கீட்டையோ கட்டுப்பாட்டையோ அனுமதிப்பதில்லை. இதுவே தேவன் பார்க்கும் மனிதனுடைய இருதயம் ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

115. அநேக ஜனங்கள் என்னை உண்மையாக நேசிக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுடைய இருதயங்கள் அவர்களுடையதாக இல்லை என்பதால், அவர்கள் மீதே அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை; நான் கொடுத்த சோதனைகளை அனுபவிக்கும் போது அநேகர் என்னை உண்மையாக நேசிக்கிறார்கள், ஆனாலும் நான் உண்மையிலேயே இருக்கிறேன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை, வெறுமனே என்னை வெறுமையாய் நேசிக்கிறார்கள், என் உண்மையான இருப்பு காரணமாக அல்ல; அநேகர் தங்கள் இருதயங்களை எனக்கு முன்பாக வைக்கின்றனர், பின்னர் தங்கள் இருதயங்களில் கவனம் செலுத்த மறுக்கின்றனர், இதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களுடைய இருதயங்கள் சாத்தானால் பறிக்கப்படுகின்றன, பின்னர் அவர்கள் என்னை விட்டு விலகுகிறார்கள்; நான் என் வார்த்தைகளை வழங்கும்போது பலர் என்னை உண்மையாக நேசிக்கிறார்கள், ஆனாலும் என் வார்த்தைகளை அவர்களின் ஆவிகளில் சிந்தையில் வைக்க மறுக்கின்றனர், அதற்கு பதிலாக சாதாரணமாக அவற்றை பொது சொத்து போல பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் விரும்பும் போதெல்லாம் அவை எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பத் தூக்கி எறிகிறார்கள். மனுஷன் வேதனையின் மத்தியில் என்னைத் தேடுகிறான், சோதனையின்போது என்னைக் காண்கிறான். சமாதான காலங்களில் அவன் என்னை ரசிக்கிறான், ஆபத்து நேரத்தில் என்னை மறுக்கிறான், அலுவலாக இருக்கும்போது என்னை மறந்துவிடுகிறான், அவன் தனியே இருக்கும்போது என் இயக்கங்களை கடந்து செல்கிறான்—ஆனாலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் யாரும் என்னை நேசித்ததில்லை. மனுஷன் எனக்கு முன்பாக அக்கறையுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: அவன் எனக்கு எதையும் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை, ஆனால் எல்லா ஜனங்களும் என்னை தீவிரமாக எடுத்துக்கொள்வதால் மட்டுமே, என்னை வாக்குவசீகரம் செய்வதற்கு பதிலாக, மனுஷனின் நேர்மையை மீண்டும் கொண்டு வர அவர்கள் என்னை அனுமதிக்கிறார்கள். எனது பிரகாசம், ஒளியூட்டல் மற்றும் எனது முயற்சிகளுக்கான செலவு அனைத்து ஜனங்களையும் வியாபிக்கின்றன, ஆனால் மனுஷனின் ஒவ்வொரு செயலின் உண்மையும் எல்லா ஜனங்களையும் வியாபிக்கிறது, அதேபோல் அவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள். இது மனுஷனின் ஏமாற்றுவதற்கான பொருட்கள் கருவறையிலிருந்து அவனுடன் இருப்பதைப் போலவும், பிறந்ததிலிருந்தே இந்த சிறப்புத் தந்திரங்களை அவர் பெற்றிருப்பதைப் போலவும் இருக்கிறது. மேலும், அவன் ஒருபோதும் ஆட்டத்தை விட்டுக் கொடுக்கவில்லை; இந்த வஞ்சகமான திறன்களின் பிறப்பிடத்தை யாரும் இதுவரை பார்த்ததில்லை. இதன் விளைவாக, மனுஷன் அதை உணராமல் ஏமாற்றத்தின் மத்தியில் வாழ்கிறான், அது அவன் தன்னையே மன்னிப்பதைப் போலவும், என்னை வேண்டுமென்றே ஏமாற்றுவது என்பதை விட தேவனுடைய ஏற்பாடுகள் போலவும் இருக்கிறது. மனுஷன் என்னை ஏமாற்றுவதற்கான ஆதாரம் இதுவல்லவா? இது அவனது தந்திரமான திட்டம் அல்லவா? மனுஷனின் தணிவான மற்றும் வஞ்சகமான பேச்சுக்களால் நான் ஒருபோதும் குழப்பமடையவில்லை, ஏனென்றால் அவனுடைய சாரத்தை நான் நீண்ட காலத்திற்கு முன்பே கண்டுபிடித்துவிட்டேன். அவனது இரத்தம் எவ்வளவு தூய்மையற்றதாக இருக்கிறது, அவனது மஜ்ஜையில் சாத்தானின் விஷம் எவ்வளவு உள்ளது என்பது யாருக்குத் தெரியும்? கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் மனுஷன் அதற்குப் பழக்கமாகி விடுகிறான், அதாவது சாத்தானால் செய்யப்பட்ட தீங்கை அவன் உணர்வதில்லை, இதனால் “ஆரோக்கியமான இருப்புக்கான கலையை” கண்டுபிடிப்பதில் அக்கறை அவனுக்கு இருப்பதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 21” என்பதிலிருந்து

116. மனிதர்கள் அனைவரும் சுய அறிவு இல்லாத ஜீவன்கள், அவர்களால் தங்களைத் தாங்களே அறிய முடியவில்லை. இருந்தபோதிலும், தங்கள் புறங்கைகளை அறிந்திருப்பது போல, மற்றவர்கள் செய்தது, சொன்னது ஆகியவை எல்லாம், அவை செய்யப்படுவதற்கு முன்பு முதலில் அவர்களுக்கு முன்னால் அவர்களால் “பரிசோதிக்கப்பட்டன”, மேலும் அவர்களின் ஒப்புதலைப் பெற்றன என்பது போல மற்றவர்கள் எல்லோரையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் மற்ற எல்லோரையும் அவர்களின் உளவியல் நிலைகள்வரை முழு அளவில் எடுத்துக்கொண்டது போலத் தோன்றுகிறது. மனிதர்கள் எல்லாம் இப்படிப்பட்டவர்கள். அவர்கள் இன்று ராஜ்யத்தின் காலத்திற்குள் நுழைந்தாலும்கூட, அவர்களின் சுபாவம் மாறாமல் உள்ளது. இப்போதும், அவர்கள் எனக்கு முன்னால் நான் என்ன செய்கிறேனோ அதைச் செய்கிறார்கள், அதேசமயம் எனக்குப் பின்னால் அவர்கள் தங்களுக்கே சொந்தமான தனித்துவமான “தொழிலை” செய்யத் தொடங்குகிறார்கள். எனினும், பின்னர், அவர்கள் எனக்கு முன்பாக வரும்போது, வெளிப்படையாக அமைதியாகவும், அச்சமின்றியும், தணிவான முகத்தோற்றத்துடனும் ஒரு நிலையான நாடித்துடிப்புடனும், அவர்கள் முற்றிலும் மாறுபட்ட மனிதர்களைப் போல இருக்கிறார்கள். இது துல்லியமாக மனிதர்களை மிகவும் வெறுக்கத்தக்கவர்களாக்குகிறது அல்லவா? அநேகர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு முகங்களை அணிந்துகொள்கிறார்கள்—ஒன்று எனக்கு முன்னால் இருக்கும்போது, மற்றொன்று என் பின்னால் இருக்கும்போது. அவர்களில் அநேகர் எனக்கு முன்பாக இருக்கும்போது பிறந்த ஆட்டுக்குட்டிகளைப் போலச் செயல்படுகிறார்கள், ஆனால் எனக்குப் பின்னால் இருக்கும்போது, அவர்கள் கொடூரமான புலிகளாக மாறி, பின்னர் மலைகளைச் சுற்றி மகிழ்ச்சியுடன் சிறகடிக்கும் சிறிய பறவைகள்போல நடிக்கிறார்கள். அநேகர் என் முகத்தின் முன்னே, நோக்கத்தையும் தீர்மானத்தையும் காட்டுகிறார்கள். அநேகர் தாகத்துடனும் ஏக்கத்துடனும் என் வார்த்தைகளைத் தேடுவதற்கு எனக்கு முன்பாக வருகிறார்கள், ஆனால் என் முதுகுக்குப் பின்னால், என் வார்த்தைகள் வில்லங்கமானது என்பதுபோல் அவற்றின்மீது சலிப்படைந்து அவற்றை அவர்கள் கைவிடுகிறார்கள். அநேகந்தரம், என் எதிரியால் மனித இனம் சீர்கெடுவதைக் கண்டதும், மனிதர்களிடம் என் நம்பிக்கையை வைப்பதை நான் விட்டுவிட்டேன். அநேகந்தரம், அவர்கள் எனக்கு முன்பாக, கண்ணீருடன் மன்னிப்பு கோருவதற்கு வருவதைக் காண்கிறேன், இருந்தபோதிலும், அவர்களுடைய சுய மரியாதையின்மை மற்றும் பிடிவாதமான திருத்த முடியாத தன்மை காரணமாக, அவர்களின் இருதயங்கள் உண்மையானவை மற்றும் அவர்களின் நோக்கங்கள் நேர்மையானவை என்றாலும் கூட, கோபத்தில் அவர்கள் செய்யும் செயல்களுக்கு என் கண்களை மூடிக்கொண்டேன். அநேகந்தரம், என்னுடன் ஒத்துழைக்கும் அளவுக்கு ஜனங்கள் நம்பிக்கையுடன் இருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன், அவர்கள் எனக்கு முன்பாக, என் அரவணைப்பின் கனிவை சுவைப்பதுபோலத் தெரிகிறது. அநேகந்தரம், நான் தேர்ந்தெடுத்த ஜனங்களின் அப்பாவித்தனம், ஜீவிதத்தன்மை மற்றும் அபிமானத்தைக் கண்டிருக்கிறேன், இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு நான் எப்படி மிகுந்த மகிழ்ச்சியைப் பெறாமல் இருக்க முடியும்? மனிதர்களுக்கு, தங்களின் முன்குறித்த ஆசீர்வாதங்களை என் கைகளில் எப்படி அனுபவிப்பது என்று தெரியவில்லை, ஏனென்றால் “ஆசீர்வாதங்கள்” மற்றும் “துன்பம்” ஆகிய இரண்டின் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இந்தக் காரணத்தினால், மனிதர்கள் என்னைத் தேடுவதில் நேர்மைக்கு மிக அப்பால் இருக்கிறார்கள். நாளை என்பதில்லையென்றால், எனக்கு முன்பாக நிற்கும் உங்களில் யார் முற்றிலும் கால் பதிக்காத பனிபோலவும் களங்கமற்ற மாணிக்கமாகவும் இருப்பீர்கள்? ஒரு சுவையான உணவு, ஒரு உன்னதமான ஆடை, அல்லது அருமையான ஊதியம் கொண்ட ஒரு உயர் அலுவலகப் பணி ஆகியவற்றிற்குப் பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒன்றாக என்மீதான உங்கள் அன்பு இருக்க முடியுமா? மற்றவர்கள் உன்மீது வைத்திருக்கும் அன்பிற்காக இதைப் பரிமாறிக்கொள்ள முடியுமா? சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது, ஜனங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பைக் கைவிடத் தூண்டுமா? துன்பங்களும் இன்னல்களும் எனது ஏற்பாடுகள் குறித்து அவர்கள்குறைக்கூறும்படிச் செய்ததா? என் வாயில் இருக்கும் கருக்குள்ள பட்டயத்தை யாரும் உண்மையிலேயே பாராட்டவில்லை: அது என்ன என்பதை உண்மையிலேயே புரிந்து கொள்ளாமல் அதன் மேலோட்டமான பொருளை மட்டுமே அவர்கள் அறிவார்கள். என் பட்டயத்தின் கருக்கை மனிதர்களால் உண்மையாகக் காண முடிந்தால், அவர்கள் எலிகள் தங்கள் வளைகளுக்குள் ஒடுவதுபோல தலைதெறிக்க ஓடுவார்கள். அவர்களின் உணர்வின்மை காரணமாக, மனிதர்கள் என் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை, ஆகவே எனது வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதையோ அல்லது அவை மனித சுபாவங்களை எவ்வளவு வெளிப்படுத்துகின்றன என்பதையும், அந்த வார்த்தைகளால் அவர்களுடைய சொந்த சீர்கேடுகள் எவ்வளவு மதிப்பிடப்பட்டன என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்தக் காரணத்திற்காக, நான் சொல்வதைப் பற்றிய அவர்களின் அரைவேக்காட்டுக் கருத்துக்களின் விளைவாக, பெரும்பாலான ஜனங்கள் வெதுவெதுப்பான அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளனர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 15” என்பதிலிருந்து

117. காலங்கள் முழுவதும், அநேகர் இந்த உலகத்திலிருந்து ஏமாற்றத்தோடும், தயக்கத்தோடும் புறப்பட்டுவிட்டார்கள், அநேகர் நம்பிக்கையோடும் உண்மையோடும் பூமிக்கு வந்துள்ளனர். அநேகர் வர நான் ஏற்பாடு செய்திருக்கிறேன், பலரை அனுப்பிருக்கிறேன். எண்ணற்ற ஜனங்கள் என் கைகளை கடந்துபோயிருக்கிறார்கள். அநேக ஆவிகள் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன, அநேக ஆவிகள் மாம்சத்தில் வாழ்ந்திருக்கின்றன, அநேக ஆவிகள் மரித்து பூமியில் மறுபிறப்பை எடுத்திருக்கின்றன. ஆயினும்கூட அவற்றில் எதற்கும் இன்று ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் மனுஷனுக்கு நிறைய கொடுத்திருக்கிறேன், ஆனாலும் அவன் கொஞ்சமாக தான் அடைந்திருக்கிறான், ஏனென்றால் சாத்தானின் படைகளின் தாக்குதலால் அவனுக்கு என் செல்வங்கள் அனைத்தையும் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. அவன் அவற்றைப் பார்க்கும் அதிர்ஷ்டத்தை மட்டுமே பெற்றிருக்கிறான், ஆனால் அவற்றை ஒருபோதும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. வானத்தின் செல்வத்தைப் பெற மனுஷன் தனது உடலில் உள்ள புதையலை ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை, அதனால் நான் அவனுக்கு அளித்த ஆசீர்வாதங்களை அவன் இழந்துவிட்டான். மனுஷனின் ஆவிக்கு அவனை என் ஆவியுடன் இணைக்கும் திறனில்லையா? மனுஷன் ஏன் என்னை ஒருபோதும் தன் ஆவியுடன் ஈடுபடுத்தவில்லை? மனுஷன் ஆவியால் என்னை நெருங்க இயலாதபோது மாம்சத்தில் என்னை ஏன் நெருங்குகிறான்? என் உண்மையான முகம் மாம்சத்தின் முகமா? என் பொருளை மனுஷன் ஏன் அறியவில்லை? மனுஷனின் ஆவியில் என்னைப் பற்றிய எந்த தடயமும் இல்லையா? மனுஷனின் ஆவியிலிருந்து நான் முற்றிலும் மறைந்துவிட்டேனா? மனுஷன் ஆவிக்குரிய ராஜ்யத்திற்குள் நுழையவில்லை என்றால், அவன் என் நோக்கங்களை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? மனுஷனின் பார்வையில், ஆவிக்குரிய ராஜ்யத்தில் நேரடியாக ஊடுருவக்கூடியது ஏதேனும் இருக்கிறதா? என் ஆவியின் மூலம் நான் மனுஷனை பல முறை அழைத்துள்ளேன், ஆனால் மனுஷனை நான் வேறொரு உலகத்திற்கு இட்டுச் செல்வேன் என்ற பயத்தில், ஏதோ நான் அவனை முட்களால் குத்தியது போல, தூரத்திலிருந்தே என்னைப் பார்க்கிறான். மனுஷனின் ஆவியை நான் பலமுறை விசாரித்திருக்கிறேன், ஆனாலும் அவன் முற்றிலும் மறந்துவிட்டான், நான் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவனுடைய உடைமைகள் அனைத்தையும் பறிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன் என்று ஆழ்ந்த பயம் கொண்டிருக்கிறான். இவ்வாறு, அவன் என்னை வெளியே தள்ளிவிட்டு, குளிர்ந்த, இறுக்கமாக மூடிய கதவைத் தவிர வேறு எதையும் பார்க்க விடாமல் செய்கிறான். மனுஷன் பலமுறை வீழ்ந்திருக்கிறான், நான் அவனைப் பலமுறை காப்பாற்றியிருக்கிறேன், ஆனால் எழுந்தபின் அவன் உடனடியாக என்னை விட்டு வெளியேறுகிறான், என் அன்பால் தீண்டப்படாமல், ஒரு பாதுகாப்பான பார்வையால் என்னைப் பார்க்கிறான்; நான் ஒருபோதும் மனுஷனின் இதயத்தை கதகதப்பாக்கவில்லை. மனுஷன் உணர்ச்சியற்ற, குளிர்ந்த இரத்தமுள்ள ஒரு மிருகம். என் அரவணைப்பால் அவன் கதகதப்பாக இருந்தாலும், அவன் ஒருபோதும் அதனால் தூண்டப்படவில்லை. மனுஷன் ஒரு மலைவாழ் காட்டுமிராண்டி போன்றவன். மனுஷர் மீதான என் நேசத்தை அவன் ஒருபோதும் பொக்கிஷமாகக் கருதவில்லை. அவன் என்னை அணுக விரும்பவில்லை, மலைகளுக்கு மத்தியில் வசிக்க விரும்புகிறான், அங்கு அவன் மிருகங்களின் அச்சுறுத்தலைத் தாங்குகிறான்—ஆனாலும் அவன் எனக்குள் அடைக்கலமாக விரும்பவில்லை. நான் எந்த மனுஷனையும் கட்டாயப்படுத்தவில்லை: நான் என் கிரியையை மட்டுமே செய்கிறேன். வலிமைமிக்க கடலுக்கு மத்தியில் இருந்து மனுஷன் என் பக்கம் நீந்துகிற நாள் வரும், அப்போது தான் கடலால் விழுங்கப்படும் அபாயத்தை விடுத்து, பூமியிலுள்ள எல்லா செல்வங்களையும் அனுபவிப்பான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 20” என்பதிலிருந்து

121. இங்கு உங்களுக்கு புரியாத பல வழிகள் உள்ளன, அவற்றில் நீங்கள் அறியாத பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் மிகவும் அறியாதவர்கள்; உங்கள் ஸ்தானமும் உங்கள் குறைகளும் எனக்கு முற்றிலும் நன்றாகத் தெரியும். ஆகையால், நீங்கள் புரிந்துகொள்ள இயலாத அநேக வார்த்தைகள் இருந்தாலும், நீங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத இந்த சத்தியங்களை நான் உங்களுக்கு சொல்ல இன்னும் ஆயத்தமாக இருக்கிறேன், ஏனென்றால் உங்கள் தற்போதைய ஸ்தானத்தில், நீங்கள் எனக்கு அளித்த சாட்சியத்தில் நீங்கள் உறுதியாக நிற்க முடியுமா என நான் கவலைப்படுகிறேன். இதை உங்களில் நான் சிறிதளவும் எண்ணவில்லை; நீங்கள் அனைவரும் எனது வழக்கமான பயிற்சிக்கு உட்படுத்தப்படாத மிருகங்கள், மேலும் உங்களுக்குள் எவ்வளவு மகிமை இருக்கிறது என்பதை என்னால் முற்றிலும் காண இயலாது. நான் உங்களிடம் அதிக ஆற்றலை செலவிட்டிருந்தாலும், உங்களில் உள்ள நேர்மறையான அம்சங்கள் வழக்கத்தில் இல்லை என்று தோன்றுகிறது, மேலும் எதிர்மறை அம்சங்களை ஒருவரின் விரல்களால் எண்ணி விடலாம், மற்றும் சாத்தானுக்கு வெட்கத்தைக் கொண்டுவரும் சாட்சியங்களாக மட்டுமே ஊழியம் செய்யுங்கள். உங்களில் உள்ள எல்லாவற்றிலும் சாத்தானின் விஷம் இருக்கிறது. நீங்கள் இரட்சிப்பிற்க்கு அப்பாற்பட்டவர் போல நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். விஷயங்களைப் பொருத்து, நான் உங்களின் பல்வேறு உணர்வுகளையும் மற்றும் நடத்தைகளையும் பார்க்கிறேன், இறுதியாக, உங்கள் உண்மையான ஸ்தானத்தை நான் அறிவேன். இதனால்தான் நான் எப்போதும் உங்கள் மீது வருத்தம் கொள்கிறேன்: தங்கள் சொந்த வாழ்க்கையை ஜீவிக்க விடப்பட்ட மனிதர்கள், அவர்கள் இன்று இருப்பதைக் காட்டிலும் உண்மையில் நல்லவர்களாக இருப்பார்களா அல்லது ஒப்பிடத்தக்கவர்களாக இருப்பார்களா? உங்களின் குழந்தைத்தனமான ஸ்தானம் உங்களைக் கவலையடையச் செய்யவில்லையா? தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களைப் போல நீங்கள் உண்மையிலேயே எல்லா நேரங்களிலும், என்னில் மட்டுமே விசுவாசம் கொண்டவர்களாக இருக்க முடியுமா? உங்களிடமிருந்து வெளிப்படுவது தங்கள் பெற்றோரிடமிருந்து விலகிச் சென்ற பிள்ளைகளின் குறும்புத்தனம் அல்ல, ஆனால் அது எஜமானர்களின் சவுக்குகளை அடைய முடியாத விலங்குகளிடமிருந்து வெளிப்படும் மிருகத்தன்மையாக இருக்கிறது. நீங்கள் உங்களின் இயல்பை அறிந்துகொள்ள வேண்டும், இதுவும் நீங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் பலவீனமாக உள்ளது; இது உங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு வியாதியாக உள்ளது. ஆகவே, இன்று நான் உங்களுக்கு அளிக்கும் ஒரே புத்திமதி என்னவென்றால், எனக்கு நீங்கள் அளித்த சாட்சியத்தில் உறுதியாக நிற்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், பழைய வியாதியை மீண்டும் வெளி வர அனுமதிக்க வேண்டாம். சாட்சியத்தை ஏற்பது மிக முக்கியமானதாக உள்ளது—இது எனது கிரியையின் இருதயமாகும். ஒரு சொப்பனத்தில் தனக்கு வந்த யேகோவாவின் வெளிப்பாட்டை மரியாள் ஏற்றுக்கொண்டது போல நீங்களும் எனது வார்த்தைகளை விசுவாசிப்பதன் மூலமும் மற்றும் கீழ்ப்படிதலினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது மட்டுமே பரிச்சுத்தமானது என்ற தகுதியைப் பெறுகிறது. என் வார்த்தைகளை அதிகம் கேட்கும் நீங்கள் என்னால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். என் விலையேறப்பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன், எல்லாவற்றையும் நான் உங்களுக்கு வழங்கியுள்ளேன், ஆனால் நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து மிகவும் வேறுபட்ட நிலையில் உள்ளீர்கள்; நீங்கள் சாதாரணமாகவே ஒருவருக்கொருவர் வேறுபட்டு உள்ளீர்கள். ஆனால் அவர்களுடன் ஒப்பிடும்போது, நீங்கள் அளவுக்கு அதிகமாகப் பெற்றுள்ளீர்கள்; அவர்கள் என் பிரசன்னத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும்போது, நீங்கள் என்னுடன் இனிமையான நாட்களைக் கழித்து, என் நன்மையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, என்னோடு கத்தி வீண்சண்டையிடுவதற்கும், என் சொத்துக்ககளில் உங்கள் பங்கைக் கோருவதற்கும் உங்களுக்கு எது உரிமை கொடுக்கிறது? நீங்கள் அதிகம் பெற்றுக்கொள்ளவில்லையா? நான் உங்களுக்கு அளவுக்கு அதிகமாகத் தருகிறேன், ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு மனதை உருக்கும் துக்கத்தையும் மற்றும் சஞ்சலத்தையும், அடக்கமுடியாத கோபத்தையும் மற்றும் அதிருப்தியையும் கொடுக்கிறீர்கள். நீங்கள் மிகவும் முரண்பட்டவர்கள்—ஆனாலும் நீங்களும் பரிதாபகரமானவர்கள், அதனால் எனது அதிருப்தியை உட்கிரகித்துக்கொண்டு, என்னுடைய எதிர்ப்புகளை உங்களிடம் திரும்பத் திரும்ப சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகால கிரியைகளில், நான் ஒருபோதும் மனிதகுலத்திற்கு எதிராக நிற்கவில்லை, ஏனென்றால் மனிதகுலத்தின் வளர்ச்சியையே முழுவதும் கண்டறியப் பெற்றேன், பழங்காலத்தின் புகழ்பெற்ற மூதாதையர்களால் உங்களுக்கு எஞ்சியிருக்கும் விலைமதிப்பற்ற பரம்பரைச் சொத்துக்களைப் போல, உங்களிடையே உள்ள “புரளிகள்” மட்டுமே மிகவும் புகழ்பெற்றவையாக மாறிப்போயுள்ளன. அந்த மனிதநேயமற்ற பன்றிகளையும் நாய்களையும் எப்படி நான் வெறுக்கிறேன். உங்கள் மனசாட்சியில் அதிக குறைபாடு உள்ளது! நீங்கள் ஒரு பழமைவாதி! உங்கள் இருதயங்கள் மிகவும் கடுமையானவை! நான் இத்தகைய வார்த்தைகளை எடுத்து இஸ்ரவேல் புத்திரரிடம் கிரியைப் புரிந்திருந்தால், நான் வெகு காலத்திற்கு முன்பே மகிமை அடைந்திருப்பேன். ஆனால் உங்கள் நடுவில் இதனை அடைய முடியாததாக இருக்கிறது; உங்கள் நடுவில், தயவற்ற அலட்சியமும், உங்கள் புறக்கணிப்பும் மற்றும் உங்கள் சாக்குபோக்குகளும் மட்டுமே உள்ளன. நீங்கள் மிகவும் உணர்ச்சியற்றவராக, முற்றிலும் மதிப்பற்றவராக இருக்கிறீர்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?” என்பதிலிருந்து

122. கடந்த காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்: எப்போது உங்களை நோக்கி என் பார்வை கோபமாகவும், என் குரல் கண்டிப்பாகவும் இருந்தது? அற்ப விஷயங்களை பற்றிய பிரச்சினைகளை உங்களிடம் நான் எழுப்பி இருக்கிறேனா? காரணமின்றி எப்போது நான் உங்களைக் கண்டித்துள்ளேன்? முகமுகமாக எப்போது நான் உங்களைக் கண்டித்திருக்கிறேன்? ஒவ்வொரு சோதனைகளில் இருந்தும் உங்களை விலக்கிக் காக்க என் கிரியையின் நிமித்தமாக அல்லவா நான் என் பிதாவைக் கூப்பிட்டேன்? நீங்கள் ஏன் என்னை இவ்வாறு நடத்துகிறீர்கள்? நான் உங்கள் மாம்சத்தை வீழ்த்த எப்போதாவது என் அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கிறேனா? நீங்கள் எனக்கு ஏன் இவ்வாறு திருப்பி அளிக்கிறீர்கள்? என்னைப் பொறுத்த வரையில் சில சமயம் அனலாகவும் சிலசமயம் குளிராகவும் உங்களைக் காட்டிக்கொண்டாலும் நீங்கள் அனலும் இல்லை குளிரும் இல்லாத நிலையில் இருந்து இனிமையாகப் பேசி என்னிடம் இருந்து விஷயங்களை மறைக்கிறீர்கள், மேலும் உங்கள் வாய்நிறைய அநீதியின் எச்சிலே நிறைந்துள்ளது. உங்கள் நாவுகளால் என் ஆவியை ஏமாற்ற முடியும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் நாவுகள் என் கோபாக்கினையில் இருந்து தப்ப முடியும் என்று எண்ணுகிறீர்களா? யேகோவாவான என் கிரியைகளின் மேல் உங்கள் நாவுகள் அவைகள் விரும்புகிற படியெல்லாம் நியாயந்தீர்க்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? மனிதன் நியாயந்தீர்க்கும் தேவனாக நான் இருக்கிறேனா? இவ்வாறு என்னை தேவதூஷணம் கூற ஒரு சிறு முட்டைப்புழுவை என்னால் அனுமதிக்க முடியுமா? என் நித்திய ஆசீர்வாதங்களின் மத்தியில் இத்தகையக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை எவ்வாறு நான் வைக்க முடியும்? உங்கள் வார்த்தைகளும் செயல்பாடுகளும் வெகுகாலத்திற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டு கண்டிக்கப்பட்டவை. நான் வானங்களை விரித்து எல்லாவற்றையும் படைத்தபோது, நான் எந்த சிருஷ்டியையும் அவைகள் விரும்பியபடி பங்கேற்க அனுமதிக்கவில்லை, அதுமட்டுமல்லாமல் எதுவும் அதன் இஷ்டப்படி என் கிரியைக்கும் நிர்வாகத்துக்கும் இடையூறு செய்ய அனுமதிக்கவுமில்லை. ஒரு மனிதனை அல்லது பொருளை நான் சகித்துக்கொள்ளவில்லை; என்னிடம் கொடூரமாகவும் மனிதத்தன்மையற்றும் நடந்தவர்களை நான் எப்படி விட்டுவைப்பேன்? என் வார்த்தைகளுக்கு எதிராகக் கலகம் செய்பவர்களை என்னால் எவ்வாறு மன்னிக்க முடியும்? எனக்குக் கீழ்ப்படியாதவர்களை எவ்வாறு நான் தப்பவிட முடியும்? மனிதனின் முடிவு சர்வவல்லவரான என் கையில் இல்லையா? உனது அநீதியையும் கீழ்ப்படியாமையையும் பரிசுத்தமானது என்று நான் எவ்வாறு கருத முடியும்? உன் பாவங்கள் என் பரிசுத்தத்தை எவ்வாறு தீட்டுப்படுத்த முடியும்? அநியாயக்காரனின் அசுத்தத்தால் நான் தீட்டுப்படுவதில்லை, அல்லது அநியாயக்காரனின் காணிக்கைளில் நான் பிரியப்படுவதும் இல்லை. யேகோவாவான என்னிடம் நீ உண்மையுள்ளவனாக இருந்தால் என் பலிபீடத்தில் இருக்கும் பலிகளை உனக்காக எப்படி உன்னால் எடுத்துக்கொள்ள முடியும்? என் பரிசுத்த நாமத்தை தூஷிக்க உன் விஷம்நிறைந்த நாவைப் பயன்படுத்த முடியுமா? இந்த வகையில் என் வார்த்தைகளுக்கு எதிராக உன்னால் கலகம் செய்ய முடியுமா? என் மகிமையையும் பரிசுத்த நாமத்தையும் ஒரு கருவியாகக் கொண்டு தீயவனான சாத்தானுக்கு சேவைசெய்ய முடியுமா? பரிசுத்தவான்களின் மகிழ்வுக்காக என் ஜீவன் வழங்கப்பட்டிருக்கிறது. நீ விரும்பும்படி எல்லாம் என் ஜீவனை வைத்து விளையாடவும், அதை உங்கள் நடுவில் சண்டைக்கான கருவியாக பயன்படுத்தவும் நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்னைப் பொறுத்தவற்றில் நீங்கள் எவ்வாறு மிகவும் இதயமற்றவர்களாகவும், நன்மையின் வழியில் மிகவும் குறைபாடு கொண்டவர்களாகவும் இருக்கமுடியும்? இந்த ஜீவ வார்த்தைகளில் உங்கள் தீய செயல்களை நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன் என்பதை நீங்கள் அறியவில்லையா? நான் எகிப்தை தண்டிக்கும் கோபாக்கினையின் நாளின் போது நீங்கள் எவ்வாறு தப்பிக்க முடியும்? காலங்காலமாக இந்த விதமாக என்னை நீங்கள் எதிர்த்து மீறுவதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அந்த நாள் வரும்போது உங்கள் தண்டனை எகிப்தில் நடந்ததை விட சகிக்கமுடியாததாக இருக்கும் என்று நான் உங்களுக்கு வெளிப்படையாகக் கூறுகிறேன். என் கோபாக்கினை நாளில் இருந்து உங்களால் எவ்வாறு தப்பிக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது” என்பதிலிருந்து

123. தேவனுக்கு உணர்ச்சி இருப்பதாலும் அல்லது தன்னை மனிதன் ஆதாயமாக்கிக் கொள்வதற்கு விருப்பமற்றவராய் தேவன் இருப்பதாலும் அல்ல, மாறாக மனிதன் தேவன் தன்னை ஆதாயமாக்கிக் கொள்ள விரும்பாததால், அவரை உடனடியாகத் தேட விரும்பாததால், அவன் அவரை ஆதாயமாக்கிக் கொள்ளத் தவறுகிறான். தேவனை உண்மையாய்த் தேடுகிறவர்களில் ஒருவர் எப்படி தேவனால் சபிக்கப்பட முடியும்? நல்ல உணர்வும், உணர்வுள்ள மனசாட்சியும் கொண்ட ஒருவர் எப்படி தேவனால் சபிக்கப்பட முடியும்? தேவனை உண்மையாய் ஆராதித்து, அவருக்கு ஊழியம் செய்கிற ஒருவர் எப்படி அவருடைய கோபத்தின் அக்கினியினால் விழுங்கப்பட முடியும்? தேவனுக்கு மகிழ்ச்சியாய்க் கீழ்ப்படியும் ஒருவர் எப்படி தேவனுடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்பட முடியும்? தேவனை அதிகமாக நேசிக்கும் ஒருவர் எப்படி தேவனுடைய தண்டனையில் வாழ முடியும்? தேவனுக்காக எல்லாவற்றையும் மகிழ்ச்சியாய் விட்டுவிடுகிற ஒருவர் எப்படி ஒன்றுமில்லாமல் விடப்படுவார்? மனிதன் தேவனைப் பின்பற்ற விரும்புவதில்லை, தன்னுடைய உடைமைகளைத் தேவனுக்காக செலவழிக்க விரும்புவதில்லை, வாழ்நாளின் பிரயாசத்தைத் தேவனுக்காக அர்ப்பணிக்க விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, தேவனைப் பற்றின அதிகக் காரியங்கள் மனிதனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறதாயிருக்கும்படி, தேவன் மிக தூரம் போய்விட்டார் என்று அவன் சொல்லுகிறான். இப்படிப்பட்ட மனிதத்தன்மையுடன், நீங்கள் உங்கள் பிரயாசங்களில் தாராளமாக இருந்தாலும் கூட, தேவனுடைய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள உங்களால் முடியாமல் போகும். நீங்கள் தேவனைத் தேடவில்லை என்ற உண்மையைக் குறித்து உங்களால் ஒன்றும் சொல்ல முடியாது. நீங்கள் மனித இனத்தின் குறைபாடுள்ள சரக்குகள் என்று உங்களுக்குத் தெரியாதா? உங்களைவிட கீழான மனிதத்தன்மை வேறில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? உங்களை கனப்படுத்த மற்றவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் உங்களை ஓநாயின் தகப்பன், ஓநாயின் தாய், ஓநாயின் மகன் மற்றும் ஓநாயின் பேரன் என்று அழைக்கிறார்கள். நீங்கள் ஓநாயின் சந்ததிகள், ஓநாயின் ஜனங்கள் ஆவீர்கள். உங்களின் சொந்த அடையாளம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதை நீங்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது. நீங்கள் உங்களை ஏதோ மேலான பிரபலம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் மனுக்குலத்தின் நடுவில் மிகக் கொடூரமான மனிதரல்லாத கூட்டம். இதில் எதுவுமே உங்களுக்குத் தெரியாதா? உங்களிடத்தில் கிரியை செய்கிறதால் நான் எத்தனை பெரிய இடர்நேரும் நிலையை எதிர்கொண்டேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய உணர்வு மீண்டும் இயல்பானதாக மாற முடியாவிட்டால், உங்களுடைய மனசாட்சி இயல்பானதாக இயங்க முடியாவிட்டால், நீங்கள் “ஓநாய்” என்ற பெயரை ஒருபோதும் தள்ளிவிட முடியாது. நீங்கள் ஒருபோதும் சாபத்தின் நாளிலிருந்தும், உங்கள் தண்டனையில் நாளிலிருந்தும் தப்ப முடியாது. நீங்கள் தாழ்ந்தவர்களாக, எந்த மதிப்பும் இல்லாத ஒரு காரியமாய்ப் பிறந்தீர்கள். நீங்கள் சுபாவப்படி பசியாயிருக்கும் ஓநாய்க் கூட்டம், குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களின் குவியல், நான் உங்களைப் போலல்லாமல் உங்களிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக உங்களிடம் கிரியை செய்யாமல், மாறாக என்னுடைய கிரியைத் தேவைப்படுவதால் அப்படிச் செய்கிறேன். நீங்கள் இப்படியே தொடர்ந்து கலகத்தன்மை உள்ளவர்களாக இருந்தால், நான் என்னுடைய கிரியையை நிறுத்திவிடுவேன். மீண்டும் ஒருபோதும் உங்களிடத்தில் கிரியை செய்ய மாட்டேன். மாறாக நான் என்னுடைய கிரியையை என்னைப் பிரியமான மற்றொரு கூட்டத்திற்கு கைமாற்றி விடுவேன். இவ்வகையில் நான் உங்களை என்றென்றும் விட்டு விலகுவேன். ஏனென்றால் என்னை விரோதிக்கிறவர்களை நோக்கிப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அப்படியானால், நீங்கள் என்னுடன் ஒத்துப்போக விரும்புகிறீர்களா அல்லது என்னை விரோதிக்க விரும்புகிறீர்களா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து

129. மனுஷனின் சுபாவமானது எமது சாராம்சத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது, ஏனென்றால் மனுஷனின் சீர்கெட்ட சுபாவமானது முற்றிலும் சாத்தானிடமிருந்து தான் உருவாகிறது; மனுஷனின் சாராம்சமானது சாத்தானால் நடைமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சீர்கெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மனுஷன் சாத்தானின் பொல்லாப்பு மற்றும் அசிங்கத்தினுடைய செல்வாக்கின் கீழ் ஜீவிக்கிறான். மனுஷன் சத்தியத்தின் உலகிலோ அல்லது பரிசுத்தமான சூழலிலோ வளருவதில்லை, மேலும் அவன் வெளிச்சத்திலும் ஜீவிப்பதில்லை. ஆகையால், பிறந்த தருணத்திலிருந்தே யாரும் தங்கள் சுபாவத்தினுள் சத்தியத்தை வைத்திருப்பது சாத்தியமில்லை, மேலும் தேவனுக்கு அஞ்சும் மற்றும் கீழ்ப்படியும் ஒரு சாராம்சத்துடன் யாரும் பிறக்க முடியாது. மாறாக, தேவனை எதிர்க்கும், தேவனுக்குக் கீழ்ப்படியாத, சத்தியத்தின் மீது அன்பு இல்லாத ஒரு சுபாவத்தை ஜனங்கள் கொண்டிருக்கிறார்கள். துரோகம் எனும் இந்த சுபாவம் தான் நான் விவாதிக்க விரும்பும் பிரச்சினை ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)” என்பதிலிருந்து

130. துரோகம் என்பது எமக்கு முற்றிலும் கீழ்ப்படிய முடியாத நடத்தையாக இருக்கிறது. துரோகம் என்பது எமக்கு விசுவாசமாக இருக்க முடியாத நடத்தையாக இருக்கிறது. எம்மை ஏமாற்றுவதும், எம்மை ஏமாற்ற பொய்களைப் பயன்படுத்துவதும் துரோகம் தான். பல கருத்துக்களை வளர்ப்பதும் அவற்றை எல்லா இடங்களுக்கும் பரப்புவதும் துரோகம் தான். எமது சாட்சியங்களையும் விருப்பங்களையும் நிலைநிறுத்த முடியாமல் இருப்பதும் துரோகம் தான். இருதயத்தில் எம்மிடமிருந்து தொலைவில் இருக்கும்போது பொய்யாகப் புன்னகைப்பதும் துரோகம் தான். இவை அனைத்துமே உங்களால் எப்போதும் திறமையாக செய்யக்கூடிய துரோகச் செயல்கள், மேலும் இவை உங்களிடையே பொதுவானவையாக இருக்கின்றன. உங்களில் யாரும் இதை ஒரு பிரச்சினையாக நினைக்காமல் போகலாம், ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. நீ எனக்கு துரோகம் செய்வதை ஒரு அற்பமான விஷயமாக எம்மால் கருத முடியாது, நிச்சயமாக எம்மால் அதை புறக்கணிக்கவும் முடியாது. இப்போது, நான் உங்களிடையே கிரியை செய்யும் போது, நீங்கள் இவ்வாறாக நடந்து கொள்கிறீர்கள்—உங்களைக் கவனிக்க யாரும் இல்லாத நாள் ஒன்று வந்தால், தங்களை ராஜாக்கள் என்று அறிவிக்கும் கொள்ளைக்காரர்களாக நீங்கள் இருக்க மாட்டீர்களா? அவ்வாறு நிகழும்போது நீங்கள் ஒரு பேரழிவை ஏற்படுத்தினால், அவற்றை யார் சுத்தம் செய்ய யார் இருப்பார்கள்? துரோகத்தின் சில செயல்களானது வெறுமனே அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் தான் என்றும் அவை உங்கள் தொடர்ச்சியான நடத்தை இல்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள், மேலும் உங்கள் பெருமையை புண்படுத்தும் வகையில், இதுபோன்ற தீவிரத்தோடு அந்த விஷயம் விவாதிக்கப்படத் தேவையில்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே அவ்வாறு நினைத்தால், உங்களுக்கு புத்தி இல்லை என்று அர்த்தம். அவ்வாறு நினைப்பது கலகத்தின் ஒரு மாதிரியாகவும், முன்மாதிரியாகவும் இருக்கிறது. மனுஷனின் சுபாவமானது அவனது ஜீவிதமாக இருக்கிறது; அது அவன் ஜீவிக்க சார்ந்திருக்கும் ஒரு கொள்கையாக இருக்கிறது, அதை அவனால் மாற்ற முடியாது. துரோகத்தின் சுபாவமானது ஒன்று தான்—உன்னால் உனது உறவினர் அல்லது நண்பனுக்கு துரோகம் செய்ய முடிந்தால், அது உனது ஜீவிதத்தின் ஒரு பகுதி தான் என்பதையும், நீ பிறக்கும்போதே உன்னுடன் பிறந்த உனது சுபாவம் தான் என்பதையும் அது நிரூபிக்கிறது. இது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (1)” என்பதிலிருந்து

131. எவரும் தங்கள் உண்மையான முகத்தை பிரதிநிதித்துவப்படுத்த தங்கள் சொந்த வார்த்தைகளையும் செயல்களையும் பயன்படுத்தலாம். இந்த உண்மையான முகம் என்பது நிச்சயமாக அவர்களின் சுபாவத்தைத்தான் குறிக்கிறது. நீ கொடூரமான முறையில் பேசும் ஒருவன் என்றால், நீ ஒரு கொடூரமான சுபாவத்தைக் கொண்டிருக்கிறாய். உனது சுபாவம் தந்திரமானதாக இருந்தால், நீ ஒரு நயவஞ்சகமான முறையில் செயல்பட்டு, மற்றவர்கள் உன்னால் ஏமாறுவதை நீ மிகவும் எளிதாக்குகிறாய். உனது சுபாவம் கெட்டதாக இருந்தால், உனது வார்த்தைகள் கேட்க இனிமையாக இருந்தாலும் உனது செயல்களால் உனது கெட்ட தந்திரங்களை உன்னால் மறைக்க முடியாது. உனது சுபாவம் சோம்பேறித்தனமானதாக இருந்தால், நீ சொல்வது அனைத்தும் உனது செயலற்ற தன்மை மற்றும் சோம்பேறித்தனத்திற்கான பொறுப்பைக் கைவிடுவதாக இருக்கும், மேலும் உனது நடவடிக்கைகள் மெதுவாகவும், செயலற்றதாகவும், உண்மையை மறைப்பதில் மிகவும் திறமையானதாகவும் இருக்கும். உனது சுபாவம் அனுதாபம் மிக்கதாக இருந்தால், உனது வார்த்தைகள் நியாயமானதாக இருக்கும், மேலும் உங்கள் செயல்களும் சத்தியத்துடன் நன்கு ஒத்துப்போகும். உனது சுபாவம் விசுவாசமானதாக இருந்தால், உனது வார்த்தைகள் நிச்சயமாக நேர்மையானதாக இருக்கும், மேலும் நீ செயல்படும் விதம் பண்புள்ளதாகவும் உனது எஜமானனை கவலையடையச் செய்யாததாகவும் இருக்கும். உனது சுபாவமானது சிற்றின்ப வேட்கையோ அல்லது பணத்தாசை கொண்டதாகவோ இருந்தால், உனது இருதயம் பெரும்பாலும் இவற்றால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும், மேலும் நீ அறியாமலே ஜனங்கள் எளிதாக மறக்க முடியாத, ஜனங்களை வெறுக்க வைக்கும் மாறுபட்ட, ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்வாய். நான் சொன்னது போலவே, நீ துரோகத்தின் தன்மையைக் கொண்டிருந்தால், உன்னால் அதிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்ள முடியாது. நீ மற்றவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை என்றால், உனக்கு துரோகத்தின் சுபாவம் இல்லை என்று நம்ப வேண்டாம். நீ அப்படி நினைத்தால், உண்மையிலேயே, நீ கலகம் செய்கிறாய் என்று அர்த்தம். ஒவ்வொரு முறையும் நான் பேசும்போது எமது எல்லா வார்த்தைகளும் ஒரு நபரை அல்லது ஒரு வகையான நபரை மட்டுமல்ல, எல்லா ஜனங்களையும் குறிவைத்து பேசப்படுகின்றன. ஒரு விஷயத்தில் நீ எனக்குத் துரோகம் செய்யவில்லை என்பதால், மற்றொரு விஷயத்தில் நீ எனக்குத் துரோகம் செய்ய மாட்டாய் என்பது நிச்சயமல்ல. சத்தியத்தைத் தேடுவதில், சிலர் தங்கள் திருமணத்தில் ஏற்படும் பின்னடைவுகளின் போது விசுவாசத்தை இழக்கிறார்கள். சிலர் குடும்பப் பிரச்சனைகளின் போது எம்மிடம் விசுவாசமாக இருக்க வேண்டிய கடமையை கைவிடுகிறார்கள். சிலர் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தேடுகையில் எம்மைக் கைவிடுகிறார்கள். சிலர் வெளிச்சத்தில் ஜீவித்து பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் மகிழ்ச்சியைப் பெறுவதை விட இருண்ட பள்ளத்தாக்கிலும் விழத் தயாராக இருக்கிறார்கள். சிலர் செல்வத்தின் மீதான சிற்றின்ப வேட்கையை திருப்திப்படுத்துவதற்காக நண்பர்களின் ஆலோசனையை புறக்கணிக்கிறார்கள், இப்போது கூட தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டு தங்கள் போக்கை அவர்கள் மாற்றுவதில்லை. சிலர் எமது பாதுகாப்பைப் பெறுவதற்காக தற்காலிகமாக மட்டுமே எமது நாமத்தில் ஜீவிக்கிறார்கள், மற்றவர்கள் எம்மிடம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுமே தங்களை நியமிக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஜீவிதத்தில் ஒட்டிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சுபவர்களாக இருக்கிறார்கள். இந்த ஒழுக்கக்கேடான மற்றும் பிற ஒழுக்கக்கேடான இழிவான செயல்களானது, ஜனங்கள் நீண்ட காலமாக எமக்கு தங்கள் இருதயங்களில் ஆழமாக செய்த துரோக நடத்தைகள் அல்லவா? நிச்சயமாக, ஜனங்கள் எமக்கு துரோகம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுவதில்லை என்பது எமக்குத் தெரியும்; அவர்களின் துரோகமானது அவர்களது சுபாவத்தின் இயல்பான வெளிப்பாடாக இருக்கிறது. யாரும் எமக்கு துரோகம் செய்ய விரும்புவதில்லை, எமக்கு துரோகம் செய்யும்படிக்கு அவர்கள் ஏதேனும் செய்திருந்தாலும் அவர்கள் அதை எண்ணி மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மாறாக, அவர்கள் பயத்தால் நடுங்குகிறார்கள், இல்லையா? எனவே, இந்த துரோகங்களை எவ்வாறு மீட்பது, மேலும் தற்போதைய நிலைமையை எவ்வாறு மாற்றுவது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (1)” என்பதிலிருந்து

133. மனிதகுலம் வேறு யாருமல்ல என் சத்துரு. மனிதகுலம் என்னை எதிர்க்கிற மற்றும் கீழ்ப்படியாததாக கீழ்ப்படியாதிருக்கிற பொல்லாத ஒன்றாக இருக்கிறது. மனிதகுலம் வேறு யாருமல்ல, என்னால் சபிக்கப்பட்ட பொல்லாங்கின் சந்ததி தான் அது. மனிதகுலம் வேறு யாருமல்ல, என்னைக் காட்டிக் கொடுத்த பிரதான தூதனின் வழித்தோன்றல் தான் அது. மனிதகுலம் வேறு எதுவுமல்ல, நீண்ட காலத்திற்கு முன்பு என்னால் முறியடிக்கப்பட்டவனும், அன்றிலிருந்து சரிசெய்யப்பட இயலாத எனது விரோதியாக இன்றும் இருக்கிற பிசாசின் மரபுவழி வந்ததே அது. மனிதகுலம் யாவற்றிற்கும் மேலாக உள்ள வானம் கொந்தளிப்பாகவும் இருட்டாகவும் இருக்கிறது, தெளிவின் அறிகுறி சிறிதும் இல்லாமல், மனித உலகம் கார் இருளில் மூழ்கியுள்ளது, இதனால் அதில் வாழும் ஒருவன் தனது தலையை உயர்த்தும்போது, முகத்திற்கு முன்னாக வெளிநீட்டப்பட்ட கையையோ அல்லது சூரியனையோ கூடக் காணக் கூடாதவராக இருக்கிறார். அவனது பாதங்களுக்குக் கீழே உள்ள சாலை, சேறும் சகதியுமாகக் குழிகளுடன், கோணல்மாணலான வளைவுகள் கொண்டுள்ளது; முழு நிலமும் பிரேதங்களால் குப்பையாக்கப் பட்டுள்ளது. இருண்ட மூலைகள் மரித்தவர்களின் எச்சங்களால் நிரப்பப்பட்டுள்ளன, அத்துடன் குளிர்ந்த மற்றும் நிழலான மூலைகளை பிசாசுகளின் கூட்டங்கள் வாசம்பண்ணும் இடங்களாக்கிக் கொண்டன. மனிதர்களுடைய உலகின் எல்லா இடங்களிலும் பிசாசுகள் சேனைகளாக வந்து போகின்றன. அசுத்தத்தால் மூடப்பட்ட எல்லா வகையான மிருகங்களின் சந்ததியும், விழப்பப்பட்ட யுத்தத்தில் பூட்டப்பட்டுள்ளன, அதன் இரைச்சலானது இருதயத்தைப் பயங்கரமாகத் தாக்குகிறது. இப்படிப்பட்ட வேளைகளில், இத்தகையதொரு உலகில், இப்படிப்பட்டதொரு “பூமிக்குரிய பரதீசில்” வாழ்வின் சந்தோஷங்களைத் தேட ஒருவன் எங்கே செல்வான்? அவனுடைய வாழ்வின் இலக்கைக் கண்டறிய ஒருவன் எங்கே செல்ல முடியும்? நெடுங்காலத்திற்கு முன் சாத்தானின் கால்களின்கீழ் மிதிக்கப்பட்ட நாளில் இருந்தே, மனிதகுலம், சாத்தானின் வடிவத்தைப் பூண்டிருக்கும் ஒரு நடிகன்போலவே முதலாவது இருந்துள்ளது—இதற்கும் மேலாக, மனிதகுலமானது சாத்தானின் உருவகமாகவே ஆகி, சாத்தானுக்கு உரத்த குரலில் தெளிவாகச் சாட்சியளிக்கும் ஆதாரமாகவே பணியாற்றுகிறது. இத்தகையதொரு மனிதகுலம், இப்படிச் சீரழிந்த கறைபடிந்த ஒரு கும்பல், இவ்வாறு கேடுபாடு நிறைந்த மனித குடும்பத்தின் சந்ததி, தேவனுக்குஎப்படி சாட்சியளிக்கக் கூடும்? என் மகிமை எங்கிருந்து வரும்? எங்கிருந்து என் சாட்சியைப் பற்றி ஒருவர் பேசத் தொடங்குவார்? மனிதகுலத்தை மோசம்போக்கி எனக்கு எதிராக நிற்கும் விரோதியானவன், ஏற்கனவே மனித குலத்தை எடுத்துக்கொண்டு—அதாவது நீண்டகாலத்திற்கு முன்பே நான் சிருஷ்டித்ததும் எனது மகிமையாலும் எனது ஜீவனாலும் நிரப்பட்டதுமாக இருக்கிற மனிதகுலத்தைக்—கறைப்படுத்தினான். இது என் மகிமையைப் பறித்துவிட்டது, மற்றும் இவையெல்லாம் மனிதனைச் சாத்தானின் அழகின்மையுடன் பெரிதும் இணைக்கப்பட்ட விஷத்தினாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் பழத்திலிருந்து பெற்ற சாறினாலும் மனிதனை ஊக்குவித்துள்ளது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன” என்பதிலிருந்து

134. எனக்கு முன்பாக உங்களின் பல ஆண்டுகால நடத்தை முன்னெப்போதும் பெற்றிராத பதிலொன்றை எனக்கு வழங்கியுள்ளதுடன் இந்தப் பதிலுக்கான கேள்வி: “சத்தியம் மற்றும் சத்தியமானவராயுள்ள தேவன் முன் மனிதனின் சிந்தை என்ன?” நான் மனிதனுக்கு அர்ப்பணித்த முயற்சிகள், மனிதன் மீதான என் அன்பின் சாராம்சத்தை நிரூபிக்கின்றது, மற்றும் எனக்கு முன்பாக மனிதனின் ஒவ்வொரு செயலும் சத்தியத்தை நோக்கிய அருவருப்பினையும் என் மீதான எதிர்ப்பினையும் காட்டுகிறது. எல்லா நேரங்களிலும், என்னைப் பின்பற்றும் எல்லோரையும் குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன், ஆயினும், எந்தவொரு நேரத்திலும் என்னைப் பின்பற்றுவோர் எனது வார்த்தைகளை பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதில்லை; அவர்களால் எனது ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதற்குக் கூட முடியாதுள்ளனர். இதுவே எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. எனது சிந்தை நேர்மையானதாகவும், எனது வார்த்தைகள் மென்மையானவையாகவும் இருக்கின்றபோதும், என்னை எவராலும் எப்போதும் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் என்னை எவராலும் எப்போதும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் சொந்த யோசனைகளுக்கு ஏற்ப நான் அவர்களுக்கு கையளித்த வேலையை செய்ய முயற்சி செய்கிறார்கள்; அவர்கள் என் நோக்கங்களை நாடுவதில்லை, நான் அவர்களிடம் என்ன வேண்டுகின்றேன் எனவும் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் எனக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் வேளையில், இன்னும் எனக்கு விசுவாசமாக சேவிப்பதாக அவர்கள் உரிமை கோருகின்றனர். அநேகர், அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது அவர்கள் கடைப்பிடிக்க முடியாத சத்தியங்கள், சத்தியங்களே அல்ல என விசுவாசிக்கின்றார்கள். அத்தகைய ஜனங்களிடம், என் சத்தியங்கள் மறுக்கப்பட்டு, ஒதுக்கிவிடப்படுபவையாக ஆகின்றன. அதே நேரத்தில், ஜனங்கள் வார்த்தையில் என்னை தேவனாக அங்கீகரிக்கின்றனர், ஆயினும் என்னை சத்தியம், வழி அல்லது ஜீவனாக காணப்படாத வெளியாள் ஒருவர் எனவும் நம்புகின்றனர். இந்த சத்தியத்தை எவரும் அறிந்ததில்லை: என் வார்த்தைகள் எப்போதும் மாறாத சத்தியம். நானே மனிதனுக்கு ஜீவனை அளிப்பதுடன் மனிதகுலத்தின் ஒரே வழிகாட்டியாகவும் இருக்கிறேன். எனது வார்த்தைகளின் மதிப்பும் அர்த்தமும் மனிதகுலத்தினால் அவை அங்கீகரிக்கப்படுகின்றனவா அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா என்பதனால் அல்ல, ஆனால் வார்த்தைகளின் சாராம்சத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வுலகிலுள்ள ஒரு மனிதர் கூட எனது வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட, எனது வார்த்தைகளின் மதிப்பும் மனிதகுலத்திற்கு அவற்றின் உதவியும் எந்த மனிதனாலும் மதிப்பிடப்பட முடியாதது. ஆகவே, என் வார்த்தைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும், மறுதலிக்கும், அல்லது முற்றிலும் வெறுக்கும் அநேக ஜனங்களை எதிர்கொள்ளும் போது, என் நிலைப்பாடு இது மாத்திரமே: காலமும் உண்மைகளும் எனது சாட்சிகளாகி எனது வார்த்தைகளே சத்தியம், வழி மற்றும் ஜீவன் எனக் காட்டட்டும். நான் கூறியவை எல்லாம் சரி எனவும், இதுவே மனிதனுக்குத் தரப்பட வேண்டும் எனவும், மேலும், மனிதன் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவை காட்டட்டும். என்னைப் பின்பற்றும் அனைவருக்கும் இந்த உண்மையை நான் தெரியப்படுத்துவேன்: எனது வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளை கடைபிடிக்க முடியாதோர், எனது வார்த்தைகளினால் இலக்கைக் கண்டறிய முடியாதோர் மற்றும் எனது வார்த்தைகளின் நிமித்தமான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளினால் கண்டிக்கப்பட்டோர், மேலும், எனது இரட்சிப்பை இழந்தோர் ஆகிய இவர்களிடமிருந்து எனது கோல் என்றும் விலகிச் செல்லாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்பதிலிருந்து

அடிக்குறிப்புகள்:

அ. கரைக்குத் திரும்புதல்: இது ஒரு சீன வழக்குச் சொல், இதற்கு “தீய வழிகளில் இருந்து திரும்புதல்” என்று அர்த்தம்.

ஆ. அசல் உரையில் “இந்த வழியில்” என்ற சொற்றொடர் இல்லை.

முந்தைய: A. சாத்தான் மனுக்குலத்தை எவ்வாறு சீர்கெட்டுப்போகச் செய்கிறான் என்பதை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

அடுத்த: C. சீர்கெட்ட மனுக்குலத்தின் மதக் கருத்துக்கள், மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் பொய்யான கருத்துக்களை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக