A. மனுஷனுக்கான தேவனுடைய தேவைகள்

605. இப்போது, நீங்கள் தேவனுடைய ஜனங்களாக மாறுவதை நாட வேண்டும் மற்றும் முழு பிரவேசத்தையும் சரியான பாதையில் தொடங்க வேண்டும். தேவனுடைய ஜனங்களாக இருப்பதற்கு, ராஜ்யத்தின் யுகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்பது பொருளாகிறது. இன்று, நீங்கள் அதிகாரப்பூர்வமாக ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்கத் தொடங்குகிறீர்கள். உங்கள் எதிர்கால ஜீவிதம் முன்பு இருந்ததைப் போலவே மந்தமானதாகவும், ஒழுங்கற்றதாகவும் இருக்கும். அவ்வாறு ஜீவிப்பதால், தேவனால் எதிர்பார்க்கப்படும் தரங்களை அடைவது சாத்தியமற்றதாக இருக்கிறது. எந்த அவசரத்தையும் நீ உணரவில்லை என்றால், அது உன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான விருப்பம் உனக்கு இல்லை என்பதையும், உன் பின்பற்றுதல் குழப்பமானதாகவும் புரியாததாகவும் இருப்பதையும், தேவனுடைய சித்தத்தை உன்னால் நிறைவேற்ற முடியாது என்பதையும் காட்டுகிறது. ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது என்பது தேவனுடைய ஜனங்களின் ஜீவிதத்தைத் தொடங்குவதாகும்—இதுபோன்ற பயிற்சியை ஏற்க நீ தயாராக இருக்கிறாயா? முக்கியமானவற்றை உணர நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய ஒழுக்கத்தின் கீழ் ஜீவிக்க நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய சிட்சையின் கீழ் ஜீவிக்க நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகள் உன்னிடம் வந்து உன்னை சோதிக்கும்போது, நீ எவ்வாறு செயல்படுவாய்? எல்லா விதமான உண்மைகளையும் எதிர்கொள்ளும்போது நீ என்ன செய்வாய்? கடந்த காலத்தில், உங்கள் கவனம் ஜீவிதத்தில் இல்லை. இன்று, நீங்கள் ஜீவிதத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் மற்றும் உங்கள் ஜீவித மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும். இதைத்தான் ராஜ்யத்தின் ஜனங்கள் அடைய வேண்டும். தேவனுடைய ஜனங்களாகிய அனைவரும் ஜீவனைக் கொண்டிருக்க வேண்டும், அவர்கள் ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுடைய ஜீவித மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும். ராஜ்யத்தின் ஜனங்களிடம் தேவன் எதிர்பார்ப்பது இதுதான்.

ராஜ்யத்தின் ஜனங்களிடமான தேவனுடைய எதிர்பார்ப்புகள் பின்வருமாறு இருக்கின்றன:

1) அவர்கள் தேவனுடைய ஆணைகளை ஏற்க வேண்டும். அதாவது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையில் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2) அவர்கள் ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்க வேண்டும்.

3) தங்கள் இருதயங்கள் தேவன் தொடும்படியாக அவர்கள் பின்பற்ற வேண்டும். உன் இருதயம் முழுவதுமாக தேவனிடமாய் திரும்பி, உனக்கு ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவிதம் இருக்கும்போது, நீ சுதந்திரத்தின் உலகில் ஜீவிப்பாய், அதாவது தேவனுடைய அன்பின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் நீ ஜீவிப்பாய். நீ தேவனுடைய கவனிப்பிலும் பாதுகாப்பிலும் ஜீவிக்கும்போது தான் நீ தேவனுக்கு சொந்தமானவனாக இருப்பாய்.

4) அவர்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும்.

5) அவர்கள் பூமியில் தேவனுடைய மகிமையின் ஒரு வெளிப்பாடாக மாற வேண்டும்.

இந்த ஐந்து காரியங்களும் உங்களுக்கான எனது ஆணைகளாக இருக்கின்றன. என் வார்த்தைகள் தேவனுடைய ஜனங்களிடம் பேசப்படுகின்றன. இந்த ஆணைகளை நீ ஏற்க விரும்பவில்லை என்றால், நான் உன்னை நிர்ப்பந்திக்க மாட்டேன்—ஆனால் நீ அவற்றை உண்மையாக ஏற்றுக்கொண்டால், உன்னால் தேவனுடைய சித்தத்தைச் செய்ய முடியும். இன்று, நீங்கள் தேவனுடைய ஆணைகளை ஏற்கத் தொடங்குகிறீர்கள் மற்றும் ராஜ்யத்தின் ஜனங்களாக மாறி, ராஜ்யத்தின் ஜனங்களாக இருக்கத் தேவையான தரங்களை அடைகின்றீர்கள். இது பிரவேசத்தின் முதல் படியாக இருக்கிறது. தேவனுடைய சித்தத்தை நீங்கள் முழுமையாக செய்ய விரும்பினால், இந்த ஐந்து ஆணைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை உன்னால் அடைய முடிந்தால், நீ தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருப்பாய் மற்றும் நிச்சயமாக தேவன் உன்னைப் பெரிதளவில் பயன்படுத்துவார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து

606. நீங்கள் இன்று சுதந்தரித்த காரியங்கள் யுகம் முழுவதும் வாழ்ந்த அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், ஏன் மோசே மற்றும் பேதுருவை பார்க்கிலும் மகத்தானது. ஆசீர்வாதங்களை உங்களால் ஓரிரு நாட்களில் பெற முடியாது, அதைப் பெரிய தியாகத்தின் ஊடாக சம்பாதிக்க வேண்டும். இன்னும் விரிவாகச் சொன்னால், சுத்திகரிக்கப்பட்ட அன்பையும், ஆழமான விசுவாசத்தையும், தேவன் நாம் அடைய வேண்டுமென்று வேண்டுகின்ற பல சத்தியங்களையும், நீதிக்காக பயமின்றி போராடுகின்ற மனதையும், தேவன் மீது இடைவிடாத மற்றும் ஆழமான அன்பையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் உறுதி இருக்க வேண்டும், உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும், உங்கள் குறைகள் நிறைவாக்கப்பட வேண்டும். எந்த குறைகூறுதலும் இல்லாமல் தேவனின் எல்லா வழிநடத்துதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அத்துடன் மரண பரியந்தம் வரைக்கும் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அடைய வேண்டியது இதுவே, இதுவே தேவனின் கிரியையின் இறுதி நோக்கம். இதையே தேவன் இந்த மக்கள் கூட்டத்திடம் எதிர்பார்க்கின்றார். அவர் உங்களுக்கு கொடுக்கின்றபடியால், அவர் நிச்சயம் உங்களிடம் எதிர்பார்ப்பதோடு உங்களுக்குக் கொடுத்ததன் பிரகாரம் அவர் கேட்பார். எனவே தேவன் செய்கின்ற அனைத்து கிரியைகளுக்கும் காரணமுண்டு, இது ஏன் தேவன் மீண்டும் மீண்டும் கடுமையான சாவல் மிக்க கிரியைகளைச் செய்கின்றார் என்பதைக் காண்பிக்கின்றது. இந்த காரணத்தினாலேயே நீங்கள் தேவன் மேல் கொண்டுள்ள விசுவாசத்தால் நிரம்பியிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லுவதென்றால், தேவனுடைய எல்லாக் கிரியைகளும் நீங்கள் அவரின் சுதந்தரிப்பைப் பெற்றுக்கொள்ள பாத்திராராய் இருக்கும்பொருட்டு உங்கள் நிமித்தமே செய்யப்படுகின்றது. இந்தக் காரியம் குறிப்பாகத் தேவனின் சுய மகிமைக்காக செய்யப்படுவதில்லை, ஆனால் இது உங்களின் இரட்சிப்பிற்காகவும் இந்தத் தூய்மையற்ற தேசத்தில் பயங்கரமாகத் துன்புறுத்தப்பட்ட மக்கள் கூட்டத்தைப் பூரணப்படுத்தவும் செய்யப்படுகின்றது. நீங்கள் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இதைக் குறித்து எந்தவொரு விழிப்புணர்வற்ற ஜனங்களுக்குச் சொல்லுகின்ற ஒரு புத்திமதி என்னவென்றால் தேவனைச் சோதிக்கவோ அவரை இனியும் எதிர்க்கவோ வேண்டாம். எந்த மனிதனுமே அனுபவிக்காத பாடுகளை தேவன் அனுபவித்துள்ளார், அத்தோடு மனிதனுக்குப் பதில் அவர் பெரிதான அவமானத்தையும் அனுபவித்துவிட்டார். உங்களால் வேறு எதை விட முடியவில்லை? தேவனின் சித்தத்தைவிட முக்கியமான காரியம் எதுவாக இருக்கும்? தேவனின் அன்பை பார்க்கிலும் எது உயர்ந்ததாக இருக்கும்? தேவன் தனது கிரியையை இந்த அசுத்தமான தேசத்தில் செய்வது ஏற்கனவே கடினமான ஒன்றாக இருக்கும் போது; மனிதன் தெரிந்துகொண்டே வேண்டுமென்று நெறிதவறி நடக்கும் போது, தேவனின் பணியில் தாமதம் ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், இது யாருக்கும் நல்லதல்ல, இது யாருக்கும் நன்மை பயக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?” என்பதிலிருந்து

607. நான் பேசுகிற வார்த்தைகள் சகல மனுஷருக்கும் நேராக பேசப்படுகிற சத்தியங்களாகும்; அவை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு வகை நபருக்கு மட்டுமே கூறப்பட்டதல்ல. ஆகையால், சத்தியத்தின் நிலைப்பாட்டில் இருந்து என் வார்த்தைகளைப் புரிந்துக்கொள்வதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், மேலும் நீங்கள் முழுமையான கவனம் மற்றும் நேர்மையான மனப்பான்மையையும் கொண்டிருக்க வேண்டும்; நான் பேசுகிற ஒரு வார்த்தையையோ அல்லது சத்தியத்தையோ புறக்கணிக்காதீர்கள், மேலும் நான் பேசுகிற சகல வார்த்தைகளையும் லேசாகவும் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் சத்தியத்திற்குப் பொருத்தமில்லாத பல காரியங்கள் செய்திருப்பதை நான் காண்கிறேன், ஆகவே துன்மார்க்கத்தினாலும் அருவருப்பினாலும் அடிமைப்படுத்தப்படாமல், மேலும், நீங்கள் சத்தியத்தை மிதித்துப்போடவோ அல்லது தேவனுடைய வீட்டின் எந்த கோணத்தையும் தீட்டுப்படுத்தவோ கூடாதபடிக்கு, நீங்கள் சத்தியத்தின் ஊழியக்காரராகும்படிக்கு நான் குறிப்பாகக் கேட்கிறேன். இது உங்களுக்கான எனது புத்திமதி.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மூன்று புத்திமதிகள்” என்பதிலிருந்து

608. நான் அனுபவித்த வேதனையை நீங்கள் வீணடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன், மேலும், நான் எடுத்துள்ள கவனமுள்ள அக்கறையை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்றும், மேலும் எமது வார்த்தைகளை நீங்கள் மனுஷராக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதன் அஸ்திபாரமாகக் கருதுவீர்கள் என்றும் நான் நம்புகிறேன். அவை நீங்கள் கேட்க விரும்பும் வார்த்தைகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறீர்களா இல்லையோ, அல்லது அவற்றை அசௌகரியத்துடன் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிகிறது என்றாலும், நீங்கள் அவற்றை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்கள் சாதாரண மற்றும் அக்கறையற்ற மனநிலைகளும் நடத்தைகளும் எம்மை தீவிரமாக வருத்தப்படுத்தும், உண்மையில் எம்மை வெறுப்பு கொள்ள வைக்கும். நீங்கள் அனைவரும் எமது வார்த்தைகளை மீண்டும் மீண்டும்—ஆயிரக்கணக்கான முறை—வாசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், மேலும் நீங்கள் அவற்றை இருதயத்தில் கூட அறிந்து கொள்வீர்கள் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறாக மட்டுமே உங்களைப் பற்றிய எமது எதிர்பார்ப்புகளை உங்களால் தோல்வியடையச் செய்ய இயலாது. இருப்பினும், நீங்கள் யாரும் இப்போது இப்படி ஜீவிப்பதில்லை. இதற்கு மாறாக, நீங்கள் அனைவரும் ஒரு மோசமான ஜீவிதத்தில் மூழ்கியிருக்கிறீர்கள், உங்கள் இருதயத்தின் உள்ளடக்கத்தை புசித்துக் குடிக்கும் ஒரு ஜீவிதத்தில் மூழ்கியிருக்கிறீர்கள், மேலும் உங்கள் இருதயத்தையும் ஆத்துமாவையும் வளப்படுத்த நீங்கள் யாரும் என் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. இந்த காரணத்திற்காக, மனுக்குலத்தின் உண்மையான முகம் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்: மனுஷனால் எந்த நேரத்திலும் எமக்குத் துரோகம் செய்ய முடியும், எமது வார்த்தைகளுக்கு ஒருவராலும் முற்றிலும் விசுவாசமாக இருக்க முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (1)” என்பதிலிருந்து

610. பரலோகத்திலுள்ள ஆசீர்வாதங்களுக்கு ஒத்திருக்கிற பூமியிலுள்ள என் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களுக்கு விருப்பமா? உங்கள் வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் அர்த்தமுள்ள விஷயங்களாக என்னைப் பற்றிய புரிதலையும், என் வார்த்தைகளின் இன்பத்தையும், என்னைப் பற்றிய அறிவையும் பொக்கிஷமாக வைத்திருக்க உங்களுக்கு விருப்பமா? உங்கள் சொந்த எதிர்பார்ப்புகளை எண்ணி சிந்திக்காமல், உங்களால் மெய்யாகவே உங்களை என்னிடம் முழுமையாக சமர்ப்பிக்க இயலுமா? ஒரு ஆடு போல என்னால் நீங்கள் வழிநடத்தப்படவும், கொல்லப்படவும் உங்களால் மெய்யாகவே உங்களை அனுமதிக்க இயலுமா? இதுபோன்ற விஷயங்களை அடையக்கூடிய திறன் கொண்டவர்கள் உங்களில் யாராவது இருக்கிறார்களா? என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, என் வாக்குதத்தங்களைப் பெறுபவர்கள் அனைவரும் என் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள் என்று இருக்குமோ? இந்த வார்த்தைகளிலிருந்து நீங்கள் எதையேனும் புரிந்துகொண்டீர்களா? நான் உங்களை சோதித்தால், நீங்கள் மெய்யாகவே உங்களை என் தேவ திட்டத்தில் ஈடுபடவைக்க இயலுமா, மேலும் இந்த சோதனைகளுக்கு மத்தியில், என் நோக்கங்களைத் தேடி, என் இருதயத்தை புரிந்துகொள்ள முடியுமா? நீ உருக்கமான பல சொற்களைப் பேசவேண்டும் என்றோ அல்லது பல உற்சாகமான கதைகளைச் சொல்லவேண்டும் என்றோ நான் விரும்பவில்லை; மாறாக, உன்னால் எனக்குச் சிறந்த சாட்சி கொடுக்க முடியும் என்றும், உன்னால் முழுமையாகவும் ஆழமாகவும் யதார்த்தத்திற்குள் நுழைய முடியும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் நேரடியாகப் பேசவில்லை என்றால், உன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் நீ கைவிட்டு, நான் உன்னைப் பயன்படுத்திக்கொள்ள நீ என்னை அனுமதிப்பாயா? எனக்குத் தேவைப்படும் உண்மை இது அல்லவா? என் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை யார் புரிந்துகொள்ள முடியும்? ஆயினும்கூட, இனியும் என் வார்த்தைகளின் தவறான புரிதலினால் நீங்கள் பாரமடையக் கூடாது என்றும், உங்கள் பிரவேசத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், என் வார்த்தைகளின் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது எனது வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்தும், என் அர்த்தம் குறித்து தெளிவாகத் தெரியாமலிருப்பதிலிருந்தும், இதனால் எனது ஆளுகைக் கட்டளைகளை மீறுவதிலிருந்தும் உங்களைத் தடுக்கும். உங்களுக்கான எனது நோக்கங்களை என் வார்த்தைகளில் இருந்து நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் சொந்த எதிர்பார்புகளைப் பற்றி மேலும் சிந்திக்காதீர்கள், எல்லாவற்றிலும் தேவனின் திட்டங்களுக்கு கீழ்படிய நீங்கள் எனக்கு முன்பாக தீர்மானித்தபடி செயல்படுங்கள். என் வீட்டுக்குள் நிற்பவர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை செய்ய வேண்டும்; பூமியில் எனது கிரியையின் கடைசி பகுதிக்கு நீ உன்னில் சிறந்ததை வழங்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை கடைபிடிக்க நீ மெய்யாகவே விரும்புகிறாயா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 4” என்பதிலிருந்து

612. நீண்ட காலமாகவே, தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் எல்லோரும் ஓர் அழகான சென்றடையும் இடத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர், மேலும் அனைத்து தேவனுடைய விசுவாசிகளும் திடீரென நல்லதிர்ஷ்டம் தங்களுக்கு வரும் என்று நம்புகிறார்கள். தாங்கள் அறியும் முன்னரே தாங்கள் பரலோகத்தில் ஓர் இடத்தில் அல்லது இன்னொன்றில் சமாதானமாக இருப்பதைக் காண்போம் என்று அவர்கள் எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால், அவர்களுடைய அழகான எண்ணங்களுடன் பரலோகத்தில் இருந்து கீழே பொழியும் இத்தகைய நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவும் அங்கே ஓர் இருக்கையில் அமரவும் கூட தகுதி பெற்றிருக்கிறார்களா இல்லையா என்பதை இந்த ஜனங்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று நான் கூறுகிறேன். தற்போது நீங்கள், உங்களைப் பற்றிய சிறந்த அறிவைக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் கடைசி நாட்களின் பேரிடர்களில் இருந்தும் துன்மார்க்கரைத் தண்டிக்கும்போது சர்வவல்லவரின் கரத்தில் இருந்தும் தப்பிக்கும் நம்பிக்கையோடேயே இன்னும் இருக்கிறீர்கள். இனிய கனவுகளைக் கொண்டிருப்பதும் தாங்கள் விருப்பத்துக்கேற்ற பொருட்களையே விரும்புவதும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட எல்லா ஜனங்களின் பொதுவான அம்சம் போல் தோன்றுகிறது, மேலும் அது எந்த ஒரு தனி நபரின் அதியற்புதமான ஆலோசனை அல்ல. அது உண்மையாக இருந்தாலும், உங்களுடைய இந்த ஆடம்பரமான ஆசைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் ஆசீர்வாதங்களை அடையும் ஆர்வத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இன்னும் நான் விரும்புகிறேன். உங்கள் மீறுதல்கள் எண்ணற்றவையாகவும், உங்கள் கலகத்தன்மை வளர்ந்துகொண்டே போவது உண்மையாகவும் இருக்க, இந்த விஷயங்கள் உங்களுடைய அழகான எதிர்கால வரைபடங்களுக்கு எவ்வாறு பொருத்தமாக இருக்க முடியும்? உன்னை எதுவும் கட்டுப்படுத்தாமல் நீ பொல்லாங்கிலேயே இருந்துகொண்டு விரும்பிய வண்ணமே தொடர விரும்பி, ஆனால் அதே வேளையில் இன்னும் நீ உன் கனவுகள் உண்மையாக வேண்டும் என்று விரும்பினால், அந்த மயக்கத்திலேயே தொடர்வாயாக மேலும் ஒருபோதும் விழிக்காதே என்று நான் உன்னை வற்புறுத்துகிறேன்—ஏனெனில் உன்னுடையது ஒரு வெற்றுக் கனவு மேலும் நீதியுள்ள தேவனின் முன்னிலையில், அவர் உனக்காக ஒரு விதிவிலக்கை அளிக்க மாட்டார். நீ உன் கனவுகள் நனவாக வேண்டும் என்று மட்டும் விரும்பினால், பின்னர் ஒரு போதும் கனவு காணாதே; மாறாக, எப்போதும் சத்தியத்தையும் உண்மைகளையும் மட்டுமே எதிர்கொள். நீ இரட்சிக்கப்பட இது மட்டுமே ஒரே வழி. உறுதியான வகையில் இந்த முறைக்கான படிகள் என்ன?

முதலில், உன்னுடைய எல்லா மீறுதல்களையும் நோக்கிப்பார், மற்றும் சத்தியத்துக்கு இணங்காத ஏதாவது நடத்தையும் சிந்தனைகளும் உன்னிடம் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்.

இந்த ஒரு விஷயத்தை நீ எளிதாகச் செய்யலாம், மேலும் எல்லா புத்தியுள்ள ஜனங்களும் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், மீறுதல் மற்றும் சத்தியம் என்றால் என்ன என்று ஒருபோதும் அறியாதவர்கள் விதிவிலக்கு, ஏனெனில் அடிப்படை நிலையில், அவர்கள் புத்தியுள்ள ஜனங்கள் அல்ல. நேர்மையான, எந்த நிர்வாக கட்டளைகளையும் கடுமையான முறையில் மீறாத, மற்றும் தங்கள் மீறுதல்களை எளிதாக அறிந்துகொள்ளக் கூடிய தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஜனங்களிடம் நான் பேசுகிறேன். இந்த ஒரு விஷயத்தை நான் உங்களிடத்தில் வேண்டுவதாக இருந்தாலும், மேலும் அது நிறைவேற்றுவதற்கு உங்களுக்கு எளிதாக இருந்தாலும், நான் உங்களிடத்தில் வேண்டுவது இந்த ஒரு விஷயத்தை மட்டுமல்ல. எதுவாக இருந்தாலும், இந்த தேவையைப் பற்றி நீங்கள் தனிமையில் சிரிக்க மாட்டீர்கள், மேலும் குறிப்பாக அதை நீங்கள் தாழ்வாகப் பார்க்கமாட்டீர்கள் அல்லது இலேசானதாகக் கருதமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதைத் தீவிரமாகக் கருதவேண்டும், மேலும் அதைப் புறந்தள்ளக் கூடாது.

இரண்டாவதாக, உன்னுடைய ஒவ்வொரு மீறுதல்களுக்கும் கீழ்ப்படியாமைகளுக்கும் தொடர்பான ஒரு சத்தியத்தை நீ தேட வேண்டும் மற்றும் அந்த சத்தியங்களைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அதன் பின்னர், உன்னுடைய மீறுதல் நடவடிக்கைகளையும் கீழ்ப்படியாத எண்ணங்களையும் செயல்களையும் சத்தியத்தைக் கடைப்பிடித்து பதிலீடு செய்.

மூன்றாவதாக, நீ ஒரு நேர்மையான நபராக இருக்க வேண்டும், எப்போதும் தந்திரமுள்ளவனாகவும் தொடர்ந்து ஏமாற்றும் ஒருவனாகவும் இருக்கக் கூடாது. (இங்கே நான் மீண்டும் உங்களை ஒரு நேர்மையான நபராக இருக்கும்படி கேட்கிறேன்.)

இந்த மூன்று காரியங்களையும் உன்னால் நிறைவேற்ற முடிந்தால், அதன்பின் நீ அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக இருக்கிறாய்—கனவுகள் நனவாகப்பெற்று நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ஒரு நபர். ஒருவேளை நீங்கள் இந்த கவனத்தைக் கவராத மூன்று தேவைகளையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளலாம், அல்லது ஒருவேளை அவற்றைப் பொறுப்பற்ற தன்மையில் கையாளலாம். எதுவாக இருந்தாலும், உங்கள் கனவுகளை நனவாக்குவதும் உங்கள் இலட்சியங்களை நடைமுறைப்படுத்துவதும் என் நோக்கமே தவிர உங்களைக் கேலி செய்வதோ அல்லது உங்களை முட்டாள் ஆக்குவதோ இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்” என்பதிலிருந்து

613. எனக்கு ஏராளமான நம்பிக்கைகள் இருக்கின்றன. நீங்கள் தகுந்த மற்றும் நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள், உங்கள் கடமைகளை உண்மையோடு நிறைவேற்றுவீர்கள், சத்தியமும் மனிதத்தன்மையும் உடையவர்களாக இருப்பீர்கள், தங்கள் ஜீவனும் உட்பட தங்களுக்குள்ள எல்லாவற்றையும் தேவனுக்காகத் தரும் ஜனங்களாக இருப்பீர்கள் என்றெல்லாம் நான் உங்களை நம்புகிறேன். இந்த நம்பிக்கைகள் எல்லாம் உங்கள் போதாமைகள் மற்றும் உங்கள் சீர்கேடு மற்றும் கீழ்ப்படியாமையில் இருந்து பிறக்கின்றன. நான் உங்களோடு நடத்திய உரையாடல்களில் ஒன்றும் உங்கள் கவனத்தைக் கவரப் போதுமானதாக இல்லை என்றால், என்னால் இப்போது செய்யக்கூடியது என்னவென்றால் இனிமேலும் சொல்லாமல் இருப்பதுதான். இருப்பினும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று உங்களுக்குப் புரிகிறது. நான் ஒருபோதும் ஓய்வு எடுப்பதில்லை, ஆகவே நான் பேசாவிட்டால், நான் ஜனங்கள் பார்க்கும் படி எதையாவது செய்வேன். யாரோ ஒருவரின் நாக்கு அழுகும் படி என்னால் செய்ய முடியும், அல்லது அவயவங்கள் துண்டிக்கப்பட்டு யாரையாவது சாகும்படி செய்யலாம், அல்லது ஜனங்களுக்கு நரம்புக் கோளாறுகளை அளிக்கலாம் மற்றும் அவர்களைப் பல வகையிலும் அருவருப்பான தோற்றமுடையவர்களாகச் செய்யலாம். பின்னர் மேலும், அவர்களுக்கென்றே குறிப்பாக நான் உருவாக்கும் வேதனைகளால் ஜனங்கள் துன்புறும்படி என்னால் செய்யமுடியும். இந்த வகையில் மகிழ்ச்சியாகவும், மிகவும் சந்தோஷமாகவும், மற்றும் அதிக நிறைவாகவும் என்னால் உணர முடியும். “நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் பலனாகக் கிடைக்கும்” என்று எப்போதும் சொல்லப்பட்டு வருகிறது, எனவே இப்போது ஏன் கூடாது? நீ என்னை எதிர்க்க விரும்பினால், மற்றும் என்னைக் குறித்து சில மதிப்பீட்டை உருவாக்கினால், பின் நான் உன் வாயை அழுகச் செய்வேன், மற்றும் அது முடிவற்ற வகையில் என்னை மகிழச் செய்யும். இது ஏன் என்றால் முடிவாக, நீ செய்துள்ளது சத்தியம் அல்ல, இன்னும் அதற்கும் ஜீவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதேசமயத்தில் நான் செய்வது எல்லாம் சத்தியம்; என்னுடைய செயல்கள் எல்லாம் எனது கிரியையின் கோட்பாடுகளுக்கும் நான் அமைத்துள்ள நிர்வாக ஆணைகளுக்கும் சம்பந்தப்பட்டவை. ஆகவே, கொஞ்சம் நற்குணங்களைத் திரட்டுங்கள், இவ்வளவு தீமைகளைச் செய்வதை நிறுத்துங்கள், மேலும் உங்கள் ஓய்வுநேரத்தில் என் கோரிக்கைகளைக் கேளுங்கள் என்று உங்கள் ஒவ்வொருவரையும் நான் வற்புறுத்துகிறேன். அப்படியானால் நான் மகிழ்ச்சியாக உணர்வேன். மாம்சத்துக்காக நீங்கள் செலவிடும் முயற்சியில் ஆயிரத்தில் ஒருபங்கை சத்தியத்திற்காக நீங்கள் வழங்கினால் (அல்லது கொடையளித்தால்) கூட, நீ அடிக்கடி மீறுதல்களைச் செய்ய மாட்டாய் மற்றும் அழுகிப்போன வாய்களைக் கொண்டிருக்க மாட்டாய். இது தெளிவாகத் தெரியவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்” என்பதிலிருந்து

614. சிருஷ்டிகளில் ஒருவனான மனிதன் தனது சொந்த நிலையில் இருக்க வேண்டும் மற்றும் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். சிருஷ்டிகரால் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கடமையாகக் காத்துக்கொள்ள வேண்டும். உன் எல்லையை மீறி செயல்படாதே அல்லது உன் திறனுக்கு அப்பாற்பட்ட அல்லது தேவன் வெறுக்கத்தக்க காரியங்களைச் செய்யாதே. பெரியவராக இருக்க முயற்சிக்காதே அல்லது ஒரு தேவ நிலையில் உள்ளவராக அல்லது மற்றவர்களுக்கு மேலாக, தேவனாக மாற முயற்சிக்காதே. இவ்வாறு மாற ஜனங்கள் ஆசைப்படக்கூடாது. பெரியவராக அல்லது தேவ நிலையில் உள்ளவராக மாற முற்படுவது அபத்தமானதாக இருக்கிறது. தேவனாக மாற முற்படுவது இன்னும் அவமானகரமானதாக இருக்கிறது. அது அருவருப்பானது மற்றும் வெறுக்கத்தக்கதாகும். எது பாராட்டத்தக்கது மற்றும் சிருஷ்டிகள் எல்லாவற்றையும் விட அதிகமாக வைத்திருக்க வேண்டியது என்னவென்றால், அது உண்மையான சிருஷ்டியாக மாறுவதாக இருக்கிறது. இதுவே எல்லா ஜனங்களும் பின்பற்ற வேண்டிய ஒரே குறிக்கோளாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

615. நீங்கள் ஒவ்வொருவரும் திறந்த மற்றும் நேர்மையான இருதயங்களுடன் உங்கள் திறனுக்கு ஏற்றவாறு உங்கள் சொந்த கடமையைச் செய்ய வேண்டும், மேலும் அதற்குத் தேவையான எந்த விலைக்கிரயத்தையும் செலுத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் கூறியுள்ளது போல, அந்த நாள் வரும்போது, தேவனுக்காக துன்பம் அனுபவித்த அல்லது விலைக்கிரயம் செலுத்திய எவரைப் பற்றிய விஷயத்திலேயும் தேவன் அஜாக்கிரதையாக இருக்க மாட்டார். இந்த வகையான நம்பிக்கையை நிலைநிறுத்துவது மதிப்புமிக்கது தான், நீங்கள் அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதும் சரிதான். இவ்வாறாக மட்டுமே உங்களைப் பற்றிய விஷயங்களில் எமது மனதை எம்மால் எளிமையாக்க முடிகிறது. இல்லையெனில், நீங்கள் என்றென்றும் எமது மனதை எளிதாக்க முடியாத நபர்களாக இருப்பீர்கள், மேலும் நீங்கள் என்றென்றும் எமது வெறுப்பின் பொருட்களாகவே இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் உங்கள் மனசாட்சியைப் பின்பற்றி, உங்கள் அனைத்தையும் எமக்காகக் கொடுக்க முடிந்தால், நீங்கள் எமது கிரியைக்கு எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால், ஜீவிக்கும் நாட்களின் சக்தியை எமது சுவிசேஷ கிரியைக்காக அர்ப்பணித்தால், எமது இருதயமானது பெரும்பாலும் உங்களுக்காக களிகூராமல் இருக்குமா? இவ்வாறாக, உங்களைப் பற்றிய விஷயங்களில் எமது மனதை முழுமையாக எளிதாக வைக்க முடியும், இல்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சென்றடையும் இடம்” என்பதிலிருந்து

616. ஒவ்வொரு யுகத்திலும் அந்த யுகத்தின் முக்கியத்துவத்தைப் பொருத்தமான முறையில் தெரிவிக்கும் மொழியின் மூலம், தேவன் வெளிப்படுத்திய மனநிலையை ஒரு உறுதியான முறையில் உன்னால் தெரிவிக்க இயலுமா? கடைசி நாட்களில் தேவனின் கிரியையை அனுபவிக்கும் உன்னால், தேவனின் நீதிக்குரிய மனநிலையை விரிவாக விவரிக்க முடியுமா? தேவனின் மனநிலையைப் பற்றி உன்னால் தெளிவாகவும் துல்லியமாகவும் சாட்சிக் கொடுக்க முடியுமா? நீதிக்கான பசியும் தாகமும் கொண்டிருந்து, உன்னால் மேய்க்கப்பட வேண்டும் என்று காத்திருக்கும் பரிதாபகரமான, ஏழ்மையான, பக்தியுள்ள மத விசுவாசிகளுக்கு நீ கண்ட மற்றும் அனுபவித்த விஷயங்களை எவ்வாறு தெரிவிப்பாய்? உன்னால் மேய்க்கப்பட வேண்டும் என்று எந்த வகையான ஜனங்கள் காத்திருக்கிறார்கள்? உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? உன் தோள்களின் மீதுள்ள சுமை, உனக்களிக்கப்பட்ட கட்டளை மற்றும் உன் பொறுப்பு குறித்து நீ அறிவாயா? வரலாற்றுப் பணிக்கான உன் உணர்வு எங்கே? அடுத்த யுகத்தில் ஒரு எஜமானராக நீ எவ்வாறு போதுமான அளவிற்கு பணியாற்றுவாய்? உனக்கு எஜமானராக இருக்கவேண்டிய நிலை குறித்த வலுவான உணர்வு இருக்கிறதா? எல்லாவற்றிற்குமான எஜமானருக்கு நீ எவ்வாறு விளக்குவாய்? அது உண்மையில் எல்லா ஜீவஜந்துக்களுக்கும், உலகில் சரீரம் கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் எஜமானரா? அடுத்தக் கட்டப் பணிகளின் முன்னேற்றத்திற்கு நீ என்ன திட்டங்களை வைத்திருக்கிறாய்? தங்களின் மேய்ப்பராக நீ வேண்டும் என எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? உன் பணி கனமானதா? அவர்கள் ஏழைகள், பரிதாபகரமானவர்கள், குருடர்கள், மேலும் நஷ்டத்தால் அந்தகாரத்தில் அழுகிறார்கள்—எங்கிருக்கிறது வழி? பல ஆண்டுகளாக மனுஷனை ஒடுக்கிய அந்தகாரத்தின் படைகளை, திடீரென இறங்கி சிதறடிக்கும் ஒரு வால்நட்சத்திரத்தைப் போன்ற வெளிச்சத்திற்காக அவர்கள் எப்படி ஏங்குகிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் நம்புகிறார்கள், இதற்காக அவர்கள் இரவும் பகலும் எப்படி ஏங்குகிறார்கள் என்பதை யார் அறிய முடியும்? ஒளி வீசும் நாளில் கூட, ஆழ்ந்து துன்பப்படும் இந்த ஜனங்கள் விடுதலைக்கான நம்பிக்கையின்றி அந்தகார நிலவறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; எப்போது அவர்கள் இனியும் அழுகாமல் இருப்பர்? ஒருபோதும் ஓய்வு வழங்கப்படாத இந்த பலவீனமான ஆவிகள் பயங்கர துரதிர்ஷ்டவசமானவை, மேலும் இதே நிலையில் அவை இரக்கமற்ற அடிமைகளாகவும் மற்றும் உறைந்த வரலாற்றைக் கொண்டவைகளாகவும் நீண்ட காலமாக கட்டப்பட்டுள்ளனர். அந்த ஜனங்கள் அழும் சத்தத்தை யார் கேட்டிருக்கிறார்கள்? அவர்களின் பரிதாப நிலையை யார் கவனித்திருக்கிறார்கள்? தேவனின் இருதயம் எவ்வளவு வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறது என்று உனக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படிப்பட்ட வேதனையை, தன் சொந்த கைகளால் சிருஷ்டிக்கப்பட்ட அப்பாவி மனுஷகுலம் அனுபவிப்பதை அவரால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷர் விஷம் கொடுக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மனுஷன் இன்றுவரை உயிர் பிழைத்திருந்தாலும், மனுஷகுலத்திற்கு நீண்ட காலமாக தீயவனால் விஷம் கொடுக்கப்பட்டு வருவதை யார் அறிந்திருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்பதை நீ மறந்துவிட்டாயா? தேவன் மீதான உனது அன்பின் காரணமாக, இந்த உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற நீ பாடுபடத் தயாராக இல்லையா? தம்முடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் போல மனுஷகுலத்தை நேசிக்கும் தேவனுக்குத் திருப்பிச் செலுத்த உங்கள் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இல்லையா? எல்லாவற்றையும் சொல்லி முடித்தவுடன், உன் அசாதாரண வாழ்க்கையை வாழ நீ தேவனால் பயன்படுத்தப்படுவதை எவ்வாறு விளக்குவாய்? ஒரு பக்தியுள்ள, தேவனைச் சேவிக்கும் நபரின் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான உறுதியும் நம்பிக்கையும் உனக்கு உண்மையாகவே இருக்கிறதா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?” என்பதிலிருந்து

619. மனிதன் உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்கு தொடர வேண்டும், அவனுடைய தற்போதைய சூழ்நிலைகளில் திருப்தி அடைந்திருக்கக்கூடாது. பேதுருவின் சாயலில் வாழ்ந்திட, அவன் பேதுருவின் அறிவையும் அனுபவங்களையும் பெற்றிருக்க வேண்டும். மனிதன் உயர்ந்ததும் ஆழமானதுமான காரியங்களைத் தொடர வேண்டும். அவர் தேவனுக்கான ஆழமான, தூய்மையான அன்பையும், மதிப்பும் அர்த்தமும் கொண்ட வாழ்க்கையையும் தொடர வேண்டும். இது மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது. அப்போதுதான் மனிதன் பேதுருவைப் போலவே இருப்பான். நேர்மறையான பக்கத்தில் உன் பிரவேசத்தை நோக்கி செயலில் ஈடுபடுவதில் நீ கவனம் செலுத்த வேண்டும், மேலும் ஆழ்ந்த, மிகவும் குறிப்பிட்ட மற்றும் மிகவும் நடைமுறை உண்மைகளைப் புறக்கணிக்கும்போது, தற்காலிக சுலபத்திற்காக உன்னைப் பின்வாங்க அனுமதிக்கக்கூடாது. உன் அன்பு நடைமுறையானதாக இருக்க வேண்டும், மேலும் மிருகத்தின் வித்தியாசமில்லாத இந்த மோசமான, கவலையற்ற வாழ்க்கையிலிருந்து உன்னை விடுவிப்பதற்கான வழிகளை நீ கண்டுபிடிக்க வேண்டும். நீ உண்மையுள்ள ஒரு வாழ்க்கையை, மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ வேண்டும், மேலும் உன்னை நீயே முட்டாளாக்கவோ அல்லது உன் ஜீவனை விளையாடுவதற்கான ஒரு பொம்மையைப் போல நடத்தவோ கூடாது. தேவனை நேசிக்க விரும்பும் அனைவருக்கும், அடைந்திட முடியாத சத்தியங்களும் இல்லை, அவர்களால் உறுதியாக நிற்க முடியாத நீதியும் இல்லை. உன் வாழ்க்கையை நீ எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு நீ தேவனை நேசிக்க வேண்டும் மற்றும் அவருடைய சித்தத்தை பூர்த்தி செய்ய இந்த அன்பைப் பயன்படுத்த வேண்டும்? உன் வாழ்க்கையில் இதைவிட பெரிய காரியம் எதுவுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ அத்தகைய ஆசைகளையும் விடாமுயற்சியையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் முதுகெலும்பு இல்லாதவர்களைப் போலவும், பலவீனமானவர்களைப் போலவும் இருக்கக்கூடாது. ஒரு உண்மையுள்ள வாழ்க்கையையும் உண்மையுள்ள யதார்த்தம்களையும் எவ்வாறு அனுபவிப்பது என்பதை நீ கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் உங்களை அந்த வகையில் அக்கறையில்லாமல் நடத்தக்கூடாது. நீ அதை உணர்வதற்குள், உங்கள் வாழ்க்கை உன்னைக் கடந்து சென்றுவிடும். அதன் பிறகு, தேவனை நேசிக்க உனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா? மனிதன் மரித்த பிறகு தேவனை நேசிக்க முடியுமா? நீ பேதுருவைப் போல அதே ஆர்வங்களையும் மனசாட்சியையும் பெற்றிருக்க வேண்டும். உன்னுடைய வாழ்க்கை உண்மையுள்ளதாக இருக்க வேண்டும், நீயே உன் வாழ்க்கையில் விளையாடக் கூடாது. ஒரு மனிதனாக, தேவனைப் பின்தொடரும் ஒருவனாக, நீ உன் வாழ்க்கையை எவ்வாறாக நடத்த வேண்டும், தேவனுக்கு உன்னை எவ்வாறாக அர்பணிக்க வேண்டும், தேவன் மீது உனக்கு உண்மையுள்ள விசுவாசம் எவ்வாறாக இருக்க வேண்டும், நீ தேவனை நேசிப்பதால், எப்படி அவரை மிகவும் தூய்மையான, அழகான மற்றும் நன்மையான முறையில் நேசிக்க வேண்டும் என்பதை உன்னால் கவனமாக பரிசீலிக்க முடிய வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

620. மனிதகுலத்திடம் மற்றும் தேவனைப் பின்பற்றுபவர்களிடம் தேவன் எதிர்பார்க்கும் சரியான எதிர்பார்ப்புகள் பின்வருமாறு உள்ளன. அவரைப் பின்பற்றுபவர்களில் ஐந்து விஷயங்கள் அவருக்குத் தேவை: உண்மையான நம்பிக்கை, விசுவாசமான பின்பற்றுதல், முழுமையான சமர்ப்பணம், உண்மையான அறிவு மற்றும் மனப்பூர்வமான பயபக்தி ஆகியனவாகும்.

இந்த ஐந்து விஷயங்களில், ஜனங்கள் இனிமேல் அவரை கேள்வி கேட்கவோ அவர்களுடைய கற்பனைகள் அல்லது தெளிவற்ற மற்றும் சுருக்கமான கண்ணோட்டங்களைப் பயன்படுத்தி அவரைப் பின்பற்றவோ தேவன் எதிர்பார்க்கிறார். அவர்கள் எந்த கற்பனைகளையும் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு தேவனைப் பின்பற்றக்கூடாது. அவரைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் உண்மையாக பின்பற்ற வேண்டும், அரை மனதுடன் அல்லது அர்ப்பணிப்பு இல்லாமல் பின்பற்றக் கூடாது. தேவன் உன்னிடம் எதையேனும் எதிர்பார்க்கும் போது, உன்னைச் சோதித்துப் பார்க்கும் போது, உன்னை நியாயந்தீர்க்கும் போது, உன்னைக் கையாளும் போது, திருத்தும் போது அல்லது ஒழுங்குபடுத்தும் போது மற்றும் உன்னைத் துன்புறுத்தும் போது நீ அவரிடம் முற்றிலுமாக கீழ்ப்படிய வேண்டும். நீ காரணத்தைக் கேட்கவோ நிபந்தனைகளை உருவாக்கவோ கூடாது, காரணங்களைப் பற்றி நீ பேசவும் கூடாது. உன் கீழ்ப்படிதல் முழுமையானதாக இருக்க வேண்டும். ஜனங்களிடம் அதிகமாக இல்லாத பகுதி தேவனைப் பற்றிய அறிவாகும். பெரும்பாலும் தேவனுடைய வார்த்தைகள், வெளிப்பாடுகள் மற்றும் அவருடன் தொடர்பில்லாத வார்த்தைகள் மீது அவர்களிடம் திணிக்கப்படுகின்றன. இதுபோன்ற வார்த்தைகள் தேவனுடைய அறிவின் மிகத் துல்லியமான வரையறை என்று அவர்கள் நம்புகிறார்கள். மனிதனின் கற்பனை, அவர்களின் சொந்த பகுத்தறிவு மற்றும் அவர்களுடைய சொந்த அறிவிலிருந்து வரும் இந்த கூற்றுகளுக்கும் தேவனுடைய சாராம்சத்துக்கும் சிறிதளவு தொடர்பும் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகவே, ஜனங்கள் பெற வேண்டும் என தேவன் விரும்பும் அறிவைப் பொருத்தவரையில், நீ அவரையும் அவருடைய வார்த்தைகளையும் அங்கீகரிக்க வேண்டும் என்று மட்டும் அவர் கேட்கவில்லை, அவரைப் பற்றிய உன் அறிவு சரியாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் கேட்கிறார் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீ ஒரு வாக்கியத்தை மட்டுமே சொல்ல முடிந்தாலும் அல்லது ஒரு சிறியப் பகுதியை மட்டுமே அறிந்திருந்தாலும், இந்த சிறிய அறிவு சரியானது மற்றும் உண்மையானது மற்றும் தேவனுடைய சாராம்சத்துடன் ஒத்துப்போகிறதாக இருக்கிறது. ஏனென்றால், நம்பத்தகாத அல்லது தவறாகக் கருதப்படும் தேவனைத் துதித்து புகழ்வதைத் தேவன் வெறுக்கிறார். அதற்கும் மேலாக, ஜனங்கள் அவரை காற்றைப் போல நடத்தும்போது அவர் அதை வெறுக்கிறார். தேவனைப் பற்றிய தலைப்புகளைப் பற்றி விவாதிக்கும் போது, ஜனங்கள் உண்மைகளைப் பொருட்படுத்தாமல் பேசுகிறார்கள், விருப்பத்துடன் பேசுகிறார்கள், தயங்காமல் பேசுகிறார்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு பொருத்தமாகக் காணப்பட்டாலும் அவர் அவர்களை வெறுக்கிறார். மேலும், தேவனை அறிந்துள்ளதாக நம்பி, அவரைப் பற்றிய தங்கள் அறிவைப் பற்றி பெருமையாகப் பேசுகிற, அவருடன் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி வரையறை இல்லாமல் மற்றும் தடையில்லாமல் விவாதிப்பவர்களை அவர் வெறுக்கிறார். மேற்கூறிய ஐந்து எதிர்பார்ப்புகளில் கடைசியாக இருப்பது மனப்பூர்வமான பயபக்தியாகும்: தேவனைப் பின்பற்றும் அனைவருக்கும் அது தேவனுடைய இறுதித் தேவையாகும். தேவனைப் பற்றிய சரியான மற்றும் உண்மையான அறிவை ஒருவர் கொண்டிருக்கும்போது, அவர்கள் தேவனை உண்மையாகப் போற்றி தீமையைத் தவிர்க்க முடியும். இந்த பயபக்தி அவர்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து வருகிறது. இந்த பயபக்தி விருப்பத்துடன் கொடுக்கப்படுகிறது, தவிர தேவனுடைய அழுத்தத்தின் விளைவாக கொடுக்கப்படுவதில்லை. எந்தவொரு நல்ல மனநிலையை, நடத்தையை அல்லது வெளிப்புற நடத்தையை தேவனுக்கு நீ பரிசளிக்கும்படி தேவன் கேட்கவில்லை. மாறாக, நீ அவரைப் போற்றி, உன் இருதயத்தின் ஆழத்தில் அவருக்குப் பயப்படும்படி அவர் கேட்கிறார். உன் ஜீவித மனநிலையின் மாற்றங்கள், தேவனைப் பற்றிய அறிவைப் பெறுதல் மற்றும் தேவனுடைய கிரியைகளைப் புரிந்துக்கொள்ளுதல், தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துக்கொள்ளுதல் மற்றும் நீ தேவனுடைய படைப்புகளில் ஒருவர் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுதல் ஆகியவற்றின் விளைவாக இத்தகைய பயபக்தி அடையப்படுகிறது. ஆகவே, இங்கே பயபக்தியை வரையறுக்க “மனப்பூர்வமான” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் எனது நோக்கம், தேவனைப் பற்றிய பயபக்தி அவர்களுடைய இருதயங்களின் அடிப்பகுதியில் இருந்து வர வேண்டும் என்பதை மனிதர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் X” என்பதிலிருந்து

621. எமக்கான துரோகங்கள் உங்களுக்குள் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க நீங்கள் இப்போது உங்களால் முடிந்தவரை விரைவாக உங்களையே உற்று நோக்குங்கள். உங்கள் பதிலுக்காக நான் பொறுமையின்றி காத்திருக்கிறேன். எம்மைக் கையாள்வதில் அக்கறையில்லாதவர்களாக இருக்காதீர்கள். நான் ஒருபோதும் ஜனங்களுடன் விளையாடுவதில்லை. நான் ஏதாவது செய்வேன் என்று சொன்னால் நான் நிச்சயமாக அதை செய்வேன். நீங்கள் ஒவ்வொருவரும் எமது வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுபவராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், மேலும் இந்த வார்த்தைகளை அறிவியல் புனைக்கதைகளாக எண்ண வேண்டாம். உங்களிடமிருந்து உறுதியான நடவடிக்கையை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன், உங்கள் கற்பனைகளை எதிர்பார்க்கவில்லை. அடுத்து, நீங்கள் எமது கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளிக்க வேண்டும்: 1. நீ உண்மையிலேயே ஒரு ஊழியனாக இருந்தால், உன்னால் எந்தவிதமான தளர்வு அல்லது எதிர்மறையின்மையும் இல்லாமல் எமக்கு விசுவாசமாக சேவையை வழங்க முடியுமா? 2. நான் உன்னை ஒருபோதும் பாராட்டுவதில்லை என்பதை நீ அறிந்துகொண்டால், உன்னால் இன்னும் இங்கேயே தங்கியிருந்து ஜீவிதம் முழுமைக்கான சேவையை எமக்கு உன்னால் வழங்க முடியுமா? 3. நீ அதிக முயற்சி செய்யும்போதும் நான் உன்னிடம் கடுமையாக நடந்துகொண்டால், உன்னால் தெளிவற்ற நிலையில் எமக்காக தொடர்ந்து பணியாற்ற முடியுமா? 4. நீ எமக்காகச் செலவினங்களைச் செய்தபின்பும், உனது சிறிய கோரிக்கைகளை நான் பூர்த்தி செய்யவில்லை என்றால், நீ அதற்காக சோகமாக ஏமாற்றத்துடன் இருப்பாயா, அல்லது கோபமடைந்து துஷ்பிரயோகம் செய்வாயா? 5. நீ எப்போதுமே மிகவும் விசுவாசமாக இருந்து, எம்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாலும், நீ நோய், வறுமை போன்ற துன்பங்களை அனுபவித்து, உனது நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் கைவிட்டு, அல்லது ஜீவிதத்தில் வேறு ஏதேனும் துரதிர்ஷ்டங்களை நீ சகித்தால், எம்மீதான உனது விசுவாசமும், அன்பும் இன்னும் தொடருமா? 6. உனது இருதயத்தில் நீ கற்பனை செய்த எதுவும் நான் செய்திருப்பதுடன் பொருந்தவில்லை என்றால், நீ உனது எதிர்கால பாதையில் எவ்வாறு நடந்துசெல்வாய்? 7. நீ பெற நினைத்த எந்தவொரு பொருளையும் நீ பெறவில்லை என்றால், உன்னால் தொடர்ந்து எம்மைப் பின்பற்றுபவனாக இருக்க முடியுமா? 8. எமது கிரியையின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் உன்னால் ஒருபோதும் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றால், தன்னிச்சையாக நியாயத்தீர்ப்புகளை வழங்காத மற்றும் முடிவுகளை எடுக்காத கீழ்ப்படிதலுள்ளவனாக உன்னால் இருக்க முடியுமா? 9. மனுக்குலத்துடன் நான் ஒன்றாக இருந்தபோது நான் சொன்ன எல்லா வார்த்தைகளையும், நான் செய்த எல்லா கிரியைகளையும் உன்னால் பொக்கிஷமாக வைத்திருக்க முடியுமா? 10. நீ எதையும் பெறாவிட்டாலும், எமது விசுவாசமுள்ள சீஷனாக, ஜீவிதம் முழுவதும் எமக்காக துன்பங்களை அனுபவிக்க நீ தயாராக இருக்கிறாயா? 11. எம்பொருட்டு, உன்னால் உனது எதிர்கால உயிர்பிழைக்கும் பாதையை கருத்தில் கொள்ளவோ, திட்டமிடவோ அல்லது தயார்படுத்தவோ முடியுமா? இந்த கேள்விகள் உங்களுக்கான எமது இறுதி தேவைகளைக் குறிக்கின்றன, மேலும் உங்கள் அனைவராலும் எமக்குப் பதில்களை வழங்க முடியும் என்று நம்புகிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)” என்பதிலிருந்து

622. இப்போது உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும், இப்போது உன் அன்பையும் சாட்சியையும் நான் விரும்புகிறேன். இந்தக் கணத்தில் சாட்சி என்றால் என்ன அல்லது அன்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியாவிட்டாலும், நீ உனக்கிருக்கும் எல்லாவற்றையும் என்னிடம் கொண்டுவர வேண்டும், மேலும் உன்னிடம் இருக்கும் ஒரே பொக்கிஷமான உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும் என்னிடம் அளிக்க வேண்டும். மனிதனை நான் முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலின் சாட்சியைப் போலவே, சாத்தானை நான் தோற்கடிப்பதின் சாட்சியும் மனிதனின் உண்மை மற்றும் கீழ்ப்படிதலுக்குள்தான் அடங்கியுள்ளது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என்னில் நீ வைக்கும் விசுவாசத்தின் கடமை என்னவென்றால் எனக்கு நீ சாட்சி கொடுப்பதும், எனக்கு உண்மையாய் இருப்பதும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிதலுடன் இருப்பதும் தவிர வேறில்லை. என் கிரியையின் அடுத்த படியை நான் தொடங்கும் முன் எனக்கு நீ எவ்வாறு சாட்சிகொடுப்பாய்? எவ்வாறு நீ எனக்கு உண்மையும் கீழ்ப்படிதலும் உள்ளவனாய் இருப்பாய்? நீ உன் முழு உத்தமத்தையும் உனது பணிக்கு அர்ப்பணிப்பாயா, அல்லது விட்டுவிடுவாயா? எனது ஒவ்வொரு ஏற்பாட்டுக்கும் (மரணமாக அல்லது அழிவாக இருந்தாலும்) ஒப்புக்கொடுப்பாயா அல்லது எனது சிட்சைக்கு விலகி நடுவழியில் ஓடிவிடுவாயா? நீ எனக்கு சாட்சியாக விளங்க வேண்டும் என்றும், எனக்கு உன்மையையோடும் கீழ்ப்படிதலோடும் இருக்க வேண்டும் என்றே நான் உன்னை சிட்சிக்கிறேன். மேலதிகமாக, தற்போதைய சிட்சை என் கிரியையின் அடுத்த படியை அவிழ்க்கவும் கிரியை தடைபடாது நடக்கவுமே ஆகும். எனவே, ஞானம் உள்ளவனாக இருந்து உன்னுடைய ஜீவனையும் வாழ்வின் முக்கியத்துவத்தையும் அற்பமான மணலைப் போன்றது என எண்ணி நடந்துகொள்ளாதே என நான் உனக்குப் புத்தி சொல்லுகிறேன். வரவிருக்கும் என் கிரியை சரியாக என்னவாக இருக்கும் என்று உன்னால் சரியாக அறிய முடியுமா? வரவிருக்கும் நாட்களில் நான் எவ்வாறு கிரியை செய்வேன் என்பதும் எவ்வாறு என் கிரியை கட்டவிழும் என்பதும் உனக்குத் தெரியுமா? என் கிரியையில் உனக்குள்ள அனுபவத்தின் முக்கியத்துவத்தையும் மேலதிகமாக, என்னில் இருக்கும் உன் விசுவாசத்தின் முக்கியத்துவத்தையும் நீ அறிய வேண்டும். நான் மிக அதிகமாக செய்துவிட்டேன்; நீ கற்பனை செய்வதுபோல என்னால் எப்படி பாதியில் விட்டுவிட முடியும்? நான் அப்படிப்பட்ட விசாலமான கிரியையைச் செய்திருக்கிறேன். நான் அதை எவ்வாறு அழிக்க முடியும்? உண்மையில், இந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவே நான் வந்திருக்கிறேன். இது உண்மையே, ஆனால் மேலும் நான் ஒரு புதிய யுகத்தை, புதிய கிரியையைத் தொடங்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்ப வேண்டும் என்பதையும் நீ அறிந்துகொள்ள வேண்டும். தற்போதைய கிரியை ஒரு யுகத்தைத் தொடங்கவும் இனிவரும் காலத்தில் சுவிசேஷத்தைப் பரப்ப ஓர் அடித்தளத்தை அமைக்கவும், எதிர்காலத்தில் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் மட்டுமே என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என் கிரியை நீ நினைப்பது போல் மிக எளிதானதும் அல்ல, நீ நம்புவது போல மதிப்பற்றதும் அல்லது அர்த்தமற்றதும் அல்ல. ஆகவே, நான் இன்னும் உன்னிடம் கூறவேண்டியது: நீ உன் ஜீவனை என் கிரியைக்கு அளிக்க வேண்டும், மேலும், நீ என் மகிமைக்கு உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீண்ட காலமாக நீ எனக்கு சாட்சி கொடுக்க வேண்டும் என நான் ஆவலாய் இருந்தேன், மேலும் இன்னும் அதிகமாக நான் நீ என் சுவிஷேஷத்தைப் பரப்ப வேண்டும் என்று ஏங்கினேன். என் இருதயத்தில் என்ன இருக்கிறது என்று நீ புரிந்துகொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்பதிலிருந்து

முந்தைய: XIII. தேவனுடைய தேவைகள், அறிவுரைகள், ஆறுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்த வார்த்தைகள்

அடுத்த: B. மனுஷனுக்கான தேவனுடைய அறிவுரைகள் மற்றும் ஆறுதல்கள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக