B. மனுஷனுக்கான தேவனுடைய அறிவுரைகள் மற்றும் ஆறுதல்கள்

623. இன்று தேவன் உங்களை நியாயந்தீர்க்கிறார், உங்களை சிட்சிக்கிறார், மற்றும் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், ஆனால் உன் ஆக்கினைத் தீர்ப்பின் நோக்கத்தை அறிய வேண்டியது நீதான் என்பதை நீ அறியவேண்டும். நீ உன்னை அறிந்து கொள்ள முடிவதற்கும், உன் மனநிலை மாறக் கூடுவதற்கும், இன்னும், நீ உன் மதிப்பை அறிந்துகொள்ளக் கூடுவதற்கும், தேவனுடைய செயல்கள் எல்லாம் நீதியானவையும், அவரது மனநிலைக்கும் அவரது கிரியையின் தேவைக்கும் ஏற்றவையும், அவர் மனிதனுடைய இரட்சிப்பின் திட்டத்துக்கு இணங்க கிரியை செய்கிறார் மற்றும் அவரே மனிதனை நேசிக்கின்ற, இரட்சிக்கின்ற, நியாயந்தீர்க்கின்ற மற்றும் சிட்சிக்கின்ற நீதியுள்ள தேவன் என்று உணர்வதற்கும் அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், சபிக்கிறார், நியாயந்தீர்க்கிறார், மற்றும் சிட்சிக்கிறார். நீ மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ளவன், நீ சீர்கேடடைந்தவன் மற்றும் கீழ்ப்படியாதவன் என்று மட்டும் நீ அறிந்து, ஆனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம் இன்று உன்னில் அவர் செய்யும் அவரது இரட்சிப்பைத் தெளிவாக விளக்க விரும்புகிறார் என்று அறியாவிட்டால், அதன்பின் அனுபவத்தை அடைய உனக்கு வேறு வழியில்லை, அதைவிட தொடர்ந்து முன்னேற உனக்குத் திறனும் இருக்காது. தேவன் நியாயந்தீர்க்கவும், சபிக்கவும், சிட்சிக்கவும், இரட்சிக்கவும் வந்திருக்கிறாரே ஒழிய கொல்வதற்காகவோ அல்லது அழிப்பதற்காகவோ அல்ல. அவரது 6000-ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் ஒரு முடிவுக்கு வரும் வரை—ஒவ்வொரு மனித வகையினரின் முடிவையும் அவர் வெளிப்படுத்தும் முன்—பூமியில் தேவனின் கிரியை இரட்சிப்புக்காகவே இருக்கும்; அவரை நேசிப்பவர்களை பரிபூரணப்படுத்துவதும், இவ்வாறு முற்றிலும் அவரது ஆளுகையின் கீழ் அடங்கியிருக்க அவர்களைக் கொண்டுவருவது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது. தேவன் ஜனங்களை எவ்வாறு இரட்சித்தாலும், அவர்களது பழைய சாத்தானின் சுபாவத்தில் இருந்து உடைத்து வெளியேறும்படி செய்வதன் மூலம் இவையெல்லாம் செய்யப்படுகின்றன; அதாவது, அவர்களை ஜீவனைத் தேடும்படி செய்து அவர் இரட்சிக்கிறார். அவர்கள் அவ்விதம் செய்யவில்லை என்றால், பின்னர் தேவனின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு ஒரு வழியும் இருக்காது. இரட்சிப்பு என்பது தேவன் தாமே செய்யும் கிரியையாகும், மேலும் ஜீவனைத் தேடுவது என்பது இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளுவதற்காக மனிதன் செய்யவேண்டிய ஒரு விஷயமாகும். மனிதனின் பார்வையில், இரட்சிப்பு என்பது தேவனின் அன்பாகும், மற்றும் தேவனின் அன்பானது சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் சாபங்களாக இருக்க முடியாது; இரட்சிப்பு என்பது அன்பு, மனதுருக்கம் மற்றும், அதற்குமேல் ஆறுதலின் வார்த்தைகளோடு தேவனால் வழங்கப்பட்ட வரம்பற்ற ஆசீர்வாதங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். தேவன் மனிதனை இரட்சிக்கும் போது, அவர்கள் தங்கள் இருதயங்களைத் தேவனுக்குக் கொடுக்கும்படியாக அவர்களைத் தமது ஆசீர்வாதங்கள் மற்றும் கிருபையைக் கொண்டு மனதை இளகச்செய்தே அவ்வாறு செய்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். அதாவது, மனிதனை அவர் தொடுவதே அவர்களை அவர் இரட்சிப்பதாகும். இது போன்ற இரட்சிப்பு ஓர் ஒப்பந்தத்தை செய்வதன் மூலமே செய்யப்படுகிறது. தேவன் நூறத்தனையாய் அளிக்கும்போதே மனிதன் தேவ நாமத்துக்கு முன்னால் கீழ்ப்படிய வருகிறான் மற்றும் அவருக்கு ஏற்புடையதை செய்ய முயன்று அவருக்கு மகிமையைக் கொண்டுவருகிறான். தேவன் மனுக்குலத்துக்கான நோக்கமாகக் கொண்டிருப்பது இதையல்ல. சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்கவே தேவன் பூமியில் கிரியை செய்ய வந்திருக்கிறார்; இதில் எந்தப் பொய்யும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர் தாமே இந்தக் கிரியையை செய்ய நிச்சயமாக வந்திருக்க மாட்டார். கடந்த காலத்தில், அளவிலா அன்பையும் மனதுருக்கத்தையும் காட்டுவது அவரது இரட்சிப்பின் வழிமுறையில் அடங்கி இருந்ததனாலேயே அவர் தமது எல்லாவற்றையும் முழு மனுக்குலத்திற்கும் ஈடாக சாத்தனுக்குக் கொடுத்தார். நிகழ்காலம் கடந்தகாலத்தைப் போல் இல்லை: இன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரட்சிப்பு கடைசி நாட்களின் காலத்தில், வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப் படும்போது நிகழ்கிறது; உங்களது இரட்சிப்பின் வழிமுறை அன்போ அல்லது மனதுருக்கமோ அல்ல, ஆனால் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும், இதனால் மனிதன் மிகவும் முழுமையாக இரட்சிக்கப்படலாம். இவ்வாறு, நீங்கள் பெறுவதெல்லாம் சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற முறையில் கடுமையாகக் கடிந்துகொள்ளுதலும் ஆகும், ஆனால் இதை அறியுங்கள்: இந்த இரக்கமற்ற கடிந்துகொள்ளுதல் என்பது சிறு அளவில் கூடத் தண்டனை அல்ல. என்னுடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி, ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு முற்றிலும் இரக்கமற்றதாக தோன்றுவதைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு நேரிடாது, மேலும் நான் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் மேல் என்ன பொழியும் என்றால் போதனையின் அமர்ந்த வார்த்தைகளே, மேலும் நான் உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது உங்களைக் கொன்றுவிடவோ எண்ணவில்லை. இது எல்லாம் உண்மை அல்லவா? இப்போதெல்லாம், அது நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் அல்லது இரக்கமற்ற புடமிடுதல் மற்றும் சிட்சையாக இருந்தாலும், யாவும் இரட்சிப்புக்கானவையே. இன்று ஒவ்வொன்றும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது மனிதர்களின் பிரிவுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்துத் தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியைகளின் நோக்கமும் தேவனை உண்மையிலேயே நேசிப்பவர்களை இரட்சிப்பதாகவே இருக்கிறது. நீதியான நியாயத்தீர்ப்பு மனிதனை சுத்திகரிப்பதற்குக் கொண்டுவரப்படுகிறது, மற்றும் இரக்கமற்ற புடமிடல் அவர்களைச் சுத்தமாக்கச் செய்யப்படுகிறது; கடுமையான வார்த்தைகள் அல்லது சிட்சை ஆகிய இரண்டும் சுத்திகரிப்பதற்காகச் செய்யப்படுகின்றன, மேலும் அவை எல்லாம் இரட்சிப்புக்காகவே செய்யப்படுகின்றன. இவ்வாறு, இன்றைய இரட்சிப்பின் முறை கடந்தகாலத்தைப் போன்றதல்ல. இன்று, நீங்கள் இரட்சிப்பிற்குள் நீதியான நியாயத்தீர்ப்பு மூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறீர்கள், மற்றும் இது உங்கள் ஒவ்வொருவரையும் வகையின் படி வகைப்படுத்த ஒரு நல்ல கருவியாகும். மேலும், இரக்கமற்ற சிட்சை உங்களது மாபெரும் இரட்சிப்புக்கு உதவுகிறது—மற்றும் இத்தகைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ளும்போது உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது? ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை நீங்கள் எப்போதும் இரட்சிப்பை அனுபவிக்கவில்லையா? நீங்கள் மாம்சமாகிய தேவனை கண்டிருக்கிறீர்கள் மற்றும் அவருடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் உணர்ந்திருக்கிறீர்கள்; மேலும் தொடர்ந்து கடுமையான கடிந்துகொள்ளுதலையும் சிட்சித்தலையும் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். இருப்பினும், நீங்கள் மேலான கிருபையையும் பெறவில்லையா? வேறு யாரையும் விட உங்கள் ஆசீர்வாதங்கள் பெரிதானவை அல்லவா? உங்கள் கிருபைகள் சாலொமோன் அனுபவித்த மகிமை மற்றும் செல்வங்களை விடவும் ஏராளமானவை! அதைப் பற்றிச் சிந்தியுங்கள்: என் வருகையின் நோக்கம் உங்களை இரட்சிப்பதற்காக அல்லாமல் மாறாக உங்களை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்ப்பதும் தண்டிப்பதுமாக இருந்தால், உங்கள் நாட்கள் இவ்வளவு நீண்டதாக நீடித்திருக்குமா? மாம்சமும் இரத்தமுமான பாவம் நிறைந்த மனிதர்களாகிய நீங்கள் இன்றுவரை உயிர்பிழைத்து வாழ்ந்திருக்க முடியுமா? உங்களைத் தண்டிப்பது மட்டுமே என் இலக்காக இருந்திருந்தால், பின் ஏன் நான் மாம்சமாகி இத்தகைய மாபெரும் காரியத்தில் இறங்க வேண்டும்? வெறும் மனிதர்களாகிய உங்களைத் தண்டிப்பதை ஒரு ஒற்றை வார்த்தையைக் கூறியே செய்திருக்கலாமே? நோக்கத்தோடு ஆக்கினைக்குள்ளாக உங்களைத் தீர்த்த பின்னர் உங்களை இன்னும் நான் அழிப்பது தேவையா? நீங்கள் என்னுடைய இந்த வார்த்தைகளை இன்னும் விசுவாசிக்கவில்லையா? நான் மனிதனை வெறும் அன்பாலும் மனதுருக்கத்தாலும் இரட்சிக்க முடியுமா? அல்லது மனிதனை இரட்சிக்க சிலுவையில் அறைதலை மட்டுமே என்னால் பயன்படுத்த முடியுமா? மனிதனை முற்றிலும் கீழ்ப்படிதலுள்ளவனாக மாற்ற என்னுடைய நீதியான மனநிலை இன்னும் அதிக அளவில் உகந்ததாக இல்லையா? மனிதனை முற்றிலுமாக இரட்சிக்க அது இன்னும் அதிகத் திறனுடையதாக இல்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

624. நீங்கள் அனைவரும் பாவம் மிக்க மற்றும் ஒழுக்கக்கேடான தேசத்தில் ஜீவிக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் ஒழுக்கக்கேடானவர்கள் மற்றும் பாவம் மிக்கவர்கள். இன்று உங்களால் தேவனைப் பார்க்க முடிவது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, நீங்கள் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் பெற்றிருக்கிறீர்கள், நீங்கள் உண்மையிலேயே ஆழ்ந்த இரட்சிப்பைப் பெற்றிருக்கிறீர்கள், அதாவது தேவனின் மிகப்பெரிய அன்பைப் பெற்றிருக்கிறீர்கள். தேவன் செய்யும் எல்லாவற்றிலும், அவர் உங்களை உண்மையாக நேசிக்கிறார். அவருக்கு தவறான எண்ணம் இல்லை. உங்கள் பாவங்களால் தான் அவர் உங்களை நியாயந்தீர்க்கிறார், எனவே நீங்கள் உங்களை ஆராய்ந்து இந்த மகத்தான இரட்சிப்பைப் பெறுகிறீர்கள். இவை அனைத்தும் மனுஷனை பரிபூரணமாக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுகின்றன. ஆதி முதல் அந்தம் வரை, மனுஷனை இரட்சிக்க தேவன் தம்மால் முடிந்ததைச் செய்து வருகிறார், மேலும் அவர் தம்முடைய கைகளால் சிருஷ்டித்த மனுஷரை முற்றிலுமாக அழிக்க விரும்பவில்லை. இன்று, அவர் உங்களிடையே கிரியை செய்ய வந்திருக்கிறார், அத்தகைய இரட்சிப்பு இன்னும் பெரியதல்லவா? அவர் உங்களை வெறுத்திருந்தால், உங்களை தனிப்பட்ட முறையில் வழிநடத்த அவர் இன்னும் இவ்வளவு பெரிய கிரியையைச் செய்வாரா? அவர் ஏன் அவ்வாறு கஷ்டப்பட வேண்டும்? தேவன் உங்களை வெறுக்கவில்லை அல்லது உங்களைப் பற்றிய எந்தவிதமான தவறான நோக்கங்களும் அவருக்கு இல்லை. தேவனின் அன்பு உண்மையான அன்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஜனங்கள் கீழ்ப்படியாததால் தான் அவர் நியாயத்தீர்ப்பின் மூலம் அவர்களை இரட்சிக்க வேண்டியதாக இருக்கிறது; இதற்காக இல்லையென்றால், அவர்களை இரட்சிப்பது சாத்தியமற்றதாகிவிடும். ஏனென்றால், உங்களுக்கு எப்படி ஜீவிக்க வேண்டும் என்று தெரியவில்லை, எப்படி ஜீவிக்க வேண்டும் என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை, மேலும் நீங்கள் இந்த ஒழுக்கக்கேடான மற்றும் பாவம் மிக்க தேசத்தில் ஜீவிக்கிறீர்கள், மேலும் நீங்களே ஒழுக்கக்கேடான மற்றும் இழிவான பிசாசுகளாக இருப்பதால், உங்களை இன்னும் மோசமாகிப்போக அவர் அனுமதிக்க மாட்டார், நீங்கள் இப்போது சாத்தானின் விருப்பப்படி ஜீவித்திருக்கும் இந்த இழிவான தேசத்தில் நீங்கள் ஜீவிப்பதைப் பார்க்க அவர் அனுமதிக்க மாட்டார், மேலும் நீங்கள் பாதாளத்தினுள் வீழ்த்தப்படுவதையும் அவர் அனுமதிக்க மாட்டார். அவர் இந்த நபர்களை ஆதாயப்படுத்த விரும்புகிறார் மற்றும் உங்களை முழுமையாக இரட்சிக்கவும் விரும்புகிறார். உங்களை ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்வதற்கான முக்கிய நோக்கம் இதுதான்—இது இரட்சிப்புக்காக மட்டுமே. உன்னிடம் செய்யப்படும் அனைத்தும் அன்பும் இரட்சிப்பும் தான் என்பதை உன்னால் பார்க்க முடியாவிட்டால், அது வெறுமனே ஒரு முறை மட்டுமே, மனுஷனைத் துன்புறுத்துவதற்கான ஒரு வழி, நம்பத்தகாத ஒன்று என்று நீ நினைத்தால், நீ வேதனையையும் கஷ்டத்தையும் அனுபவிக்க மீண்டும் உனது உலகத்திற்கே திரும்பிச் செல்லக்கூடும்! இந்த பிரவாகத்தில் நிலைத்திருக்க நீ தயாராக இருந்தால், இந்த நியாயத்தீர்ப்பையும் இந்த மகத்தான இரட்சிப்பையும் அனுபவிக்க நீ தயாராக இருந்தால், மனுஷ உலகில் எங்கும் காண முடியாத இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அனுபவிக்க நீ தயாராக இருந்தால், இந்த அன்பை அனுபவிக்க நீ தயாராக இருந்தால், நீ நல்லவனாக இரு: ஜெயங்கொள்ளும் கிரியையை ஏற்க இந்த பிரவாகத்திலேயே இரு, இதன்மூலம் நீ பரிபூரணமாக்கப்படுவாய். இன்று, தேவனின் நியாயத்தீர்ப்பின் காரணமாக நீ சிறிய வலியையும் சுத்திகரிப்பையும் சந்திக்க நேரிடும், ஆனால் இந்த வலியை அனுபவிப்பதற்கு மதிப்பும் அர்த்தமும் இருக்கிறது. தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பினால் ஜனங்கள் சுத்திகரிக்கப்பட்டு இரக்கமின்றி அம்பலப்படுத்தப்பட்டாலும்—அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பதும், அவர்களின் மாம்சத்தைத் தண்டிப்பதுமே இதன் நோக்கமாக இருக்கிறது—இந்த கிரியைகளில் எதுவுமே அவர்களின் மாம்சம் அழிவதற்கு கண்டனம் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. வார்த்தையின் கடுமையான வெளிப்பாடுகள் அனைத்தும் உன்னை சரியான பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்திற்காகவே இருக்கின்றன. நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்த கிரியையை அதிகம் அனுபவித்திருக்கிறீர்கள், தெளிவாக, இது உங்களை ஒரு தீய பாதையில் அழைத்திச் செல்லவில்லை! உன்னை சாதாரண மனுஷத்தன்மையோடு ஜீவிக்க வைப்பதற்காகவே இவை அனைத்தும் உள்ளன, இவை அனைத்தும் உனது சாதாரண மனுஷத்தன்மையால் அடையக்கூடியவை. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு அடியும் உனது தேவைகளின் அடிப்படையில், உனது பலவீனங்களின்படி, மற்றும் உனது உண்மையான சரீரவளர்ச்சியின் படி தான் இருக்கிறது, தாங்க முடியாத சுமை உன் மீது வைக்கப்படுவதில்லை. இது இன்று உனக்கு தெளிவாகத் தெரியவில்லை, நான் உன்னிடம் கடுமையாக இருப்பதைப் போல நீ உணர்கிறாய், மேலும் ஒவ்வொரு நாளும் நான் உன்னை சிட்சிப்பதற்கும், நியாயத்தீர்ப்பளிப்பதற்கும், நிந்திப்பதற்கும் காரணம் நான் உன்னை வெறுப்பது தான் என்று நீ எப்போதும் விசுவாசிக்கிறாய். ஆனால் நீ சிட்சை, நியாயத்தீர்ப்பினால் துன்புறுகிறாய் என்றாலும், இது உண்மையில் உனக்கான அன்பு மட்டும் தான், அதுவே மிகப்பெரிய பாதுகாப்பு. இந்த கிரியையின் ஆழமான அர்த்தத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், நீ தொடர்ந்து அனுபவிப்பது சாத்தியமில்லாமல் போய்விடும். இந்த இரட்சிப்பு உனக்கு ஆறுதலளிக்கும். நீ உன் சுயநினைவுக்கு வர மறுக்காதே. இவ்வளவு தூரம் வந்திருப்பதால், ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கியத்துவம் உனக்குத் தெளிவாக இருக்க வேண்டும், மேலும் இதைப் பற்றி நீ எவ்வழியிலும் கருத்துக்களைக் கொண்டிருக்க கூடாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (4)” என்பதிலிருந்து

626. தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு, சிட்சை, அடி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை உன்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது, மேலும், தேவனுடைய ஆணைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. நீ சிட்சிக்கப்படும்போது மிகவும் துன்பப்படக்கூடாது என்பதற்காக யுகங்களுக்கு முன்பே தேவனால் இது முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. உங்களில் செய்யப்பட்டுள்ள கிரியையையும், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் யாராலும் பறிக்க முடியாது. உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்தையும் எவரும் பறிக்க முடியாது. மத ஜனங்களுக்கும் உங்களுக்கும் எந்த ஒப்பீடும் இல்லை. நீங்கள் வேதாகமத்தில் பெரிய நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல, மதக் கோட்பாட்டில் வல்லவர்கள் அல்ல, ஆனால் தேவன் உங்களுக்குள் கிரியை செய்ததால் யுகங்கள் முழுவதிலும் உள்ள அனைவரையும்விட நீங்கள் அதிகமாக அடைந்திருக்கிறீர்கள்—ஆகவே இது உங்களுக்கான மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. இதன் காரணமாக, நீங்கள் தேவனிடம் இன்னும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தேவனிடம் இன்னும் விசுவாசத்துடன் இருக்க வேண்டும். தேவன் உன்னை எழுப்புவதால், நீ உன் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய ஆணைகளை ஏற்றுக்கொள்ள உன் நிலையை ஆயத்தம் செய்ய வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த இடத்தில் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராக மாற வேண்டும், ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனால் பெறப்பட வேண்டும் மற்றும் இறுதியில் தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாற வேண்டும். இந்தத் தீர்மானங்கள் உன்னிடம் இருக்கின்றனவா? அத்தகையத் தீர்மானங்கள் உன்னிடம் இருந்தால், இறுதியில் நீ தேவனால் நிச்சயமாக அடையப்படுவாய் மற்றும் தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாறுவாய். பிரதானமான ஆணையானது தேவனால் பெறப்பட்டு தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாறி வருகிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இது தேவனுடைய சித்தமாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து

628. இன்று, நீ எவ்வாறு ஜெயம்பெற்றாய் என்பதில் மட்டுமே நீ திருப்தியடைய முடியாது, ஆனால் எதிர்காலத்தில் நீ நடந்து செல்ல வேண்டிய பாதையையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீ ஆர்வங்களையும், பரிபூரணமாக்கப்படுவதற்கான தைரியத்தையும் கொண்டிருக்க வேண்டும், எப்போதும் உன்னை இயலாதவன் என்று நினைக்கக்கூடாது. சத்தியத்திற்குப் பிடித்தவை இருக்கின்றதா? சத்தியம் ஜனங்களை வேண்டுமென்றே எதிர்க்க முடியுமா? நீ சத்தியத்தைத் தொடர்ந்தால், அது உன்னை மூழ்கச் செய்ய முடியுமா? நீ உறுதியுடன் நீதிக்காக நின்றால், அது உன்னை கீழே அடித்து தள்ளிவிடுமா? ஜீவனைத் தொடர்வது உண்மையிலேயே உன் ஆர்வமாக இருந்தால், ஜீவனால் உன்னைத் தவிர்க்க முடியுமா? நீ சத்தியம் இல்லாமல் இருந்தால், அது சத்தியம் உன்னை புறக்கணிப்பதால் அல்ல, மாறாக நீ சத்தியத்திலிருந்து விலகி இருப்பதால். நீதிக்காக உறுதியாக நிற்க உன்னால் முடியாவிட்டால், அது நீதியில் ஏதோ தவறு இருப்பதால் அல்ல, மாறாக அது யதார்த்தம்களுக்கு முரணானது என்று நீ விசுவாசிப்பதாலாகும். அநேக ஆண்டுகளாக பின்தொடர்ந்த பிறகும் நீ ஜீவனை ஆதாயப்படுத்தியிருக்கவில்லை என்றால், ஜீவனுக்கு உன்னைக் குறித்து மனசாட்சி இல்லாததால் அல்ல, மாறாக உனக்கு ஜீவனைக் குறித்த மனசாட்சி இல்லாததாலும், ஜீவனை விரட்டியடித்ததாலுமாகும். நீ ஒளியினிடத்தில் வாழ்ந்து, ஒளியைப் பெற இயலாமல் இருந்திருந்தால், அது ஒளியால் உன்னை ஒளிரச் செய்ய இயலாது என்பதனால் அல்ல, மாறாக நீ ஒளி இருப்பதைப் பற்றி எந்த கவனமும் செலுத்தவில்லை என்பதாலாகும், அதனால் ஒளி சத்தமின்றி உன்னிடமிருந்து விலகியிருக்கிறது. நீ பின்தொடரவில்லை என்றால், நீ மதிப்பற்ற குப்பை, vக் குறித்த தைரியம் உனக்கு இல்லை, இருளின் வல்லமைகளை எதிர்க்கும் ஆவி இல்லை என்று மட்டுமே சொல்லப்பட முடியும். நீ மிகவும் பலவீனமானவன்! உன்னை முற்றுகையிடும் சாத்தானின் வல்லமைகளிடமிருந்து உன்னால் தப்ப முடியாது, மேலும் இந்த வகையான பாதுகாப்பான மற்றும் உறுதியான வாழ்க்கையை நடத்துவதற்கும் அறியாமையில் மரிப்பதற்கும் மட்டுமே தயாராக இருக்கிறாய். நீ ஜெயம் கொள்வதற்காகத் தொடர்வதே நீ அடைந்திட வேண்டியதாகும். இது உன் கடமைப்பட்ட வேலை. நீ ஜெயம் கொள்ள வேண்டுமென கருத்தாக இருந்தால், ஒளி இருப்பதை நீ விரட்டுகின்றாய். நீ சத்தியத்திற்காக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக உன்னையே கொடுக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக அவமானத்தை தாங்கிக் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்தை அதிகமாக ஆதாயம் செய்ய நீங்கள் அதிக துன்பங்களுக்குள்ளாக செல்ல வேண்டும். இதையே நீ செய்ய வேண்டும். அமைதியான குடும்ப ஜீவியத்தின் பொருட்டு நீ யதார்த்தத்தைத் தூக்கி எறியக்கூடாது, மேலும் உன் வாழ்க்கையின் கண்ணியத்தையும் நேர்மையையும் சிற்றின்பத்திற்காக இழந்துவிடக்கூடாது. நீ அழகானவை மற்றும் நன்மையானவை அனைத்தையும் பின்தொடர வேண்டும், மேலும் வாழ்க்கையில் ஒரு அர்த்தமுள்ள பாதையை நீ பின்தொடர வேண்டும். நீ அத்தகைய இழிவான ஜீவனம் நடத்தினால் மற்றும் எந்த நோக்கங்களையும் பின்பற்றவில்லை என்றால், நீ உன் ஜீவனை வீணாக்குகிறாயல்லவா? அத்தகைய ஜீவனிலிருந்து நீ என்ன ஆதாயம் செய்ய முடியும்? நீ ஒரு சத்தியத்திற்காக மாம்சத்தின் அனைத்து இன்பங்களையும் கைவிட வேண்டும், மேலும் ஒரு சிறிய இன்பத்திற்காக எல்லா சத்தியங்களையும் தூக்கி எறிந்துவிடக்கூடாது. இது போன்றவர்களுக்கு நேர்மையோ அல்லது கண்ணியமோ இருப்பதில்லை. அவர்கள் இருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

629. தேவனைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதானது என்று நீ கருதாதே. அவரை நீ அறிய வேண்டும், நீ அவரது கிரியையை அறிய வேண்டும், அவர் நிமித்தம் நீ கஷ்டங்களை சகித்துக்கொள்ளும், அவருக்காக உன் வாழ்க்கையை தியாகம் செய்யும் விருப்பமும், அவரால் நீ பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பமும் கொண்டிருப்பதுதான் முக்கியமானது ஆகும். உனக்கு இருக்க வேண்டிய தரிசனம் இதுதான். எப்போதும் கிருபையை அனுபவிக்க வேண்டும் என்று உன் சிந்தனைகள் லயித்திருந்தால் அது நடக்காது. ஜனங்களின் மகிழ்ச்சிக்காக அல்லது அவர்கள் மேல் கிருபையைப் பொழியவே தேவன் இங்கு இருக்கிறார் என்று எண்ணாதே. உன் எண்ணம் தவறாகப் போய்விடும்! ஒருவன் அவரைப் பின்பற்ற தனது ஜீவனைப் பணயம் வைக்காவிட்டால், ஒருவன் அவரைப் பின்பற்றுவதற்காக உலக உடைமைகள் ஒவ்வொன்றையும் விட்டுவிடாவிட்டால், பின் அவர்களால் கடைசிவரை அவரைப் பின்தொடர்ந்து வரமுடியாது. நீ தரிசனங்களை உன் அஸ்திபாரமாகக் கொள்ள வேண்டும். ஒரு நாள் துரதிர்ஷ்டம் உன் மேல் விழும்போது, உன்னால் என்ன செய்ய முடியும்? இன்னும் உன்னால் அவரைப் பின் தொடர முடியுமா? உன்னால் அவரைக் கடைசிவரை பின்பற்ற முடியும் என்று சாதாரணமாகக் கூறாதே. உன் கண்களை அகலத் திறந்து இப்போது என்ன காலம் என்று பார்ப்பது நல்லது. ஆலயத்தின் தூண்களைப் போல் இப்போது நீங்கள் இருந்தாலும், ஒரு காலம் வரும் அப்போது இத்தகைய எல்லா தூண்களையும் புழுக்கள் கடித்துத் துண்டாக்கி ஆலயத்தை நிலைகுலையச் செய்யும், ஏனெனில் தற்போது பல்வேறு தரிசனங்கள் இல்லாமலேயே நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய சொந்த சிறிய உலகங்களிலேயே கவனம் செலுத்துகிறீர்கள், மேலும் உங்களுக்கு மிகவும் நம்பகமான மற்றும் பொருத்தமான தேடும் வழி என்னவென்று தெரியவில்லை, இன்றைய கிரியையின் தரிசனத்தைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, மட்டுமல்லாது நீங்கள் இந்த விஷயங்களை உங்கள் இருதயங்களிலும் வைப்பதில்லை. ஒருநாள் உங்கள் தேவன் உங்களை மிகவும் பழக்கமில்லாத ஒரு இடத்தில் வைப்பார் என்று நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லையா? ஒரு நாள் உங்களிடம் இருந்து நான் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டால் உங்களுக்கு என்னவாகும் என்று உங்களால் கற்பனை செய்யமுடியுமா? உங்கள் ஆற்றல் இப்போது இருப்பது போலவே இருக்குமா? உங்கள் விசுவாசம் மறுபடியும் தோன்றுமா? தேவனைப் பின்பற்றுவதில் “தேவன்” தான் இந்த மாபெரும் தரிசனம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்: இதுவே மிக முக்கியமான விஷயம்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும்—குழப்பத்தோடு பின்பற்றாதீர்கள்!” என்பதிலிருந்து

630. ஒருவர் தேவனை விசுவாசிப்பதின் மூலம் அவரை அறிந்து கொள்ள முடியும்: இதுவே இறுதி இலக்கு மனிதனின் நாட்டத்தின் குறிக்கோள். தேவனுடைய வார்த்தைகளைச் செயல்படுத்துவதற்கு நீ முயற்சி செய்ய வேண்டும், இதனால் அவை உனக்கு நடைமுறையில் பலனளிக்கும். உன்னிடம் கோட்பாட்டு அறிவு மட்டுமே இருந்தால், தேவன் மீதான உன் விசுவாசம் வீணாகிவிடும். நீ அவருடைய வார்த்தையை கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே, உன் விசுவாசம் முழுமையானதாகவும், தேவனின் விருப்பத்திற்கு இணங்கவும் இருக்கமுடியும். இந்த வழியில், மக்கள் அதிகமாக அறிவு சார்ந்ததைப் பற்றி பேசலாம், ஆனால் அவர்கள் இறக்கும் போது, அவர்களின் கண்கள் கண்ணீரால் சூழ்ந்துக் கொள்கின்றன, மேலும் அவர்கள் வாழ்நாளை வீணடித்ததற்காக தங்களை வெறுக்கிறார்கள், முதிர் வயதில் வீணாக வாழ்ந்தார்கள். அவர்கள் வெறுமனே கோட்பாடுகளைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் உண்மையை நடைமுறைக்குக் கொண்டுவரவோ அல்லது தேவனுக்கு சாட்சி கொடுக்கவோ முடியாது; அதற்கு பதிலாக, அவர்கள் வெறுமனே அங்கும் இங்கும் ஓடுகிறார்கள், ஒரு தேனீ போல சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், மரணத்தின் விளிம்பில் மட்டுமே அவர்கள் உண்மையான சாட்சியம் இல்லாததையும் அவர்கள் தேவனை அறியவில்லை என்பதையும் காண்கிறார்கள். இது மிகவும் தாமதமானதாக இல்லையா? நீ ஏன் இன்றைய நாளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி நீ விரும்பும் சத்தியத்தைத் தொடரக்கூடாது? நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாழ்க்கையில் நீ சத்தியத்திற்காகக் கஷ்டப்படாவிட்டால் அல்லது அதைப் பெற முயற்சிக்கவில்லை என்றால், நீங்கள் மரிக்கும் நேரத்தில் நீ வருத்தப்பட விரும்புகிறாயா? அப்படியானால், ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்? உண்மையாக, மக்கள், சிறிதளவு முயற்சி செய்தால், சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால், அதன் மூலம் தேவனை திருப்திப்படுத்தக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. மக்களின் இருதயங்கள் எப்போதுமே சாத்தானால் பிடிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் தேவனுக்காக செயல்பட முடியாமல் போகிறது, மேலும் அவர்களின் மாம்சத்திற்காக தொடர்ந்து விரைந்து செய்லபடுகின்றனர், இறுதியில் அதைக்காட்ட எதுவும் இல்லை. இந்தக் காரணத்திற்காக, மக்கள் தொடர்ந்து தொல்லைகள் மற்றும் சிரமங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை சாத்தானின் உபத்திரவம் அல்லவா? இது மாம்சத்தின் கெடுதல் அல்லவா? நீ உதட்டளவில் பேசி தேவனை முட்டாளாக்க முயற்சிக்கக்கூடாது. மாறாக, நீ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உன்னையே நீ ஏமாற்ற வேண்டாம், அதன் பயன் என்ன? உன் மாம்சத்திற்காக வாழ்வதன் மூலமும், லாபத்துக்காகவும் புகழுக்காகவும் போராடுவதன் மூலம் நீ என்ன பெற முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்” என்பதிலிருந்து

632. இன்று, விசுவாசமே உன்னை ஜெயங்கொள்ள அனுமதிக்கிறது, மேலும் அது ஜெயங்கொள்ளப்படுவது யேகோவாவின் ஒவ்வொரு கிரியையையும் விசுவாசிக்க அனுமதிக்கிறது. விசுவாசத்தினால்தான் நீ இத்தகைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் பெறுகிறாய். இந்த ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், நீ ஜெயங்கொள்ளப்பட்டு பரிபூரணமடைகிறாய். இன்று நீ பெறும் ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், உனது விசுவாசம் வீணாகிவிடும், ஏனென்றால் நீ தேவனை அறிய மாட்டாய்; நீ அவரை எவ்வளவு விசுவாசித்தாலும், உன் விசுவாசம் நிலைத்திருக்கும், ஆனால் அது உண்மையில் வெற்று வெளிப்பாடாகத் தான் இருக்கும். இந்த ஜெயங்கொள்வதன் கிரியையை நீ பெற்ற பின்னரே, உன்னை முழுமையாக கீழ்ப்படியச் செய்யும் கிரியையை, உன் விசுவாசம் உண்மையாகவும், நம்பகமானதாகவும் மாறும், மேலும் உனது இருதயம் தேவனை நோக்கித் திரும்பும். “விசுவாசம்” என்ற இந்த வார்த்தையின் காரணமாக நீ மிகுந்த நியாயத்தீர்ப்பையும் சாபத்தையும் அனுபவித்தாலும், நீ உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருக்கிறாய், மேலும் நீ சத்தியமான, மிகவும் உண்மையான, மிகவும் அருமையான விஷயத்தைப் பெறுகிறாய். ஏனென்றால், நியாயத்தீர்ப்பின் போக்கில் மட்டுமே தேவனின் சிருஷ்டிப்புகள் இறுதியாக போய்சேரும் இடத்தை நீ காண்கிறாய்; இந்த நியாயத்தீர்ப்பில்தான் சிருஷ்டிகர் நேசிக்கப்பட வேண்டும் என்பதை நீ காண்கிறாய்; இத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ தேவனின் கரத்தைக் காண்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷ ஜீவிதத்தை முழுமையாக புரிந்து கொள்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையைப் பெற்று, “மனுஷன்” என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறாய்; இந்த ஜெயத்தில் மட்டுமே நீ சர்வவல்லவரின் நேர்மையான மனநிலையையும் அவருடைய அழகான, மகிமையான முகத்தையும் காண்கிறாய்; இந்த ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ மனுஷனின் தோற்றத்தைப் பற்றி அறிந்துகொண்டு, மனுஷகுலத்தின் “அழியாத வரலாற்றை” புரிந்துகொள்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷகுலத்தின் மூதாதையர்களையும் மனுஷகுலத்தின் சீர்கேட்டின் தோற்றத்தையும் புரிந்து கொள்கிறாய்; இந்த ஜெயத்தில்தான் நீ மகிழ்ச்சியையும் ஆறுதலையும் பெறுகிறாய், அத்துடன் முடிவில்லாத சிட்சை, ஒழுக்கம் மற்றும் சிருஷ்டிகரிடமிருந்து அவர் சிருஷ்டித்த மனுஷகுலத்திற்கு கடிந்துகொள்ளுதல் வார்த்தைகளைப் பெறுகிறாய்; இந்த ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ ஆசீர்வாதங்களைப் பெறுகிறாய், அதே போல் மனுஷனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் பெறுகிறாய்…. இது உனது சிறிய விசுவாசத்தின் காரணமாகத்தான் அல்லவா? இவற்றைப் பெற்ற பிறகு உனது விசுவாசம் வளரவில்லையா? நீ மிகப்பெரிய அளவிற்குப் பெறவில்லையா? நீ தேவனின் வார்த்தையைக் கேட்டிருக்கிறாய், தேவனின் ஞானத்தையும் கண்டிருக்கிறாய் என்பது மட்டுமல்லாமல், அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் நீ தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறாய். உனக்கு விசுவாசம் இல்லையென்றால், நீ இந்த வகையான ஆக்கினைத்தீர்ப்பையோ அல்லது இந்த வகையான நியாயத்தீர்ப்பையோ அனுபவித்திருக்க மாட்டாய் என்றுகூட நீ கூறலாம். ஆனால் விசுவாசம் இல்லாமல், நீ இந்த வகையான ஆக்கினைத்தீர்ப்பையோ அல்லது சர்வவல்லவரிடமிருந்து இந்த வகையான கவனிப்பையோ பெற முடியாது என்பது மட்டுமல்லாமல், சிருஷ்டிகரைச் சந்திக்கும் வாய்ப்பையும் நீ என்றென்றும் இழக்க நேரிடும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். நீ மனுஷகுலத்தின் தோற்றத்தை ஒருபோதும் அறிய மாட்டாய், மனுஷ ஜீவிதத்தின் முக்கியத்துவத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டாய். உன் சரீரம் மரித்துப்போய், உனது ஆத்துமா புறப்பட்டாலும், சிருஷ்டிகரின் எல்லா கிரியைகளையும் நீ புரிந்து கொள்ள மாட்டாய், மேலும் சிருஷ்டிகர் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபின் பூமியில் இவ்வளவு பெரிய கிரியைகளைச் செய்தார் என்பதையும் நீ அறிய மாட்டாய். அவர் சிருஷ்டித்த இந்த மனுஷகுலத்தின் உறுப்பினராக, நீ அறியாமலே இவ்வாறாக இருளில் விழுந்து, நித்திய தண்டனையை அனுபவிக்க விரும்புகிறாயா? இன்றைய ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து நீ உன்னை விலக்கிக் கொண்டால், நீ எதைத்தான் சந்திப்பாய்? தற்போதைய நியாயத்தீர்ப்பிலிருந்து நீ விலகியவுடன், இந்த கடினமான ஜீவிதத்திலிருந்து உன்னால் தப்பிக்க முடியும் என்று நினைக்கிறாயா? நீ “இந்த இடத்தை” விட்டு வெளியேறினால், நீ சந்திப்பது வலிமிகுந்த துயரம் அல்லது பிசாசால் செய்யப்பட்ட கொடூரமான துஷ்பிரயோகம் என்பது உண்மையாகிவிடாதா? உன்னால் தீர்க்கமுடியாத பகல் மற்றும் இரவுகளை சந்திக்க முடியுமா? இந்த நியாயத்தீர்ப்பிலிருந்து நீ தப்பித்ததால், எதிர்கால சித்திரவதைகளை நீ என்றென்றும் தவிர்க்கலாம் என்று நினைக்கிறாயா? உனது பாதையின் குறுக்கே என்ன வரும்? அது உண்மையிலேயே நீ நம்பும் ஷாங்க்ரி-லாவாக இருக்குமோ? நீ இப்போது செய்வது போல யதார்த்தத்திலிருந்து தப்பிச்செல்வதன் மூலம் எதிர்கால நித்திய ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? இன்றைய நாளுக்குப் பிறகு, இந்த வகையான வாய்ப்பையும் இந்த வகையான ஆசீர்வாதத்தையும் மீண்டும் உன்னால் கண்டுபிடிக்க முடியுமா? உனக்குப் பேரழிவு நேரும்போது உன்னால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? மனுஷகுலம் மொத்தமும் ஓய்வெடுக்கச் செல்லும்போது உன்னால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? உனது தற்போதைய மகிழ்ச்சியான ஜீவிதமும், உனது இணக்கமான சிறிய குடும்பமும்—அவை உனது எதிர்காலத்தில் போய்ச்சேரும் நித்திய இடத்திற்கு மாற்றாக இருக்க முடியுமா? நீ உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருந்தால், உனது விசுவாசத்தின் காரணமாக நீ பெருமளவில் பெற்றால், அப்போது அவற்றையெல்லாம் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனான நீ பெற வேண்டும், மேலும் அவற்றை நீ ஆரம்பத்திலேயே பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஜெயத்தை விட உனது விசுவாசத்திற்கும் ஜீவிதத்திற்கும் வேறு எதுவும் பயனளிக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து

633. மோசே கன்மலையை அடித்தபோது, அவனது விசுவாசத்தினால் யேகோவா அருளிய தண்ணீர் வெளியே பாய்ந்தோடிற்று. தாவீது யேகோவாவாகிய என்னைப் புகழ்ந்து பாடலை இசைத்தபோது—அவனது விசுவாசத்தினால்—அவனது இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பிற்று. யோபு, மலைகளை நிரப்பின அவரது கால்நடைகளையும் மற்றும் சொல்லப்படாத அளவு ஏராளமான செல்வங்களையும் இழந்தபோது, மற்றும் அவனது உடலை எரிகிற கொப்புளங்கள் மூடியபோது, அது அவனுடைய விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. யேகோவாவாகிய என் குரலை அவன் கேட்க முடிந்து மற்றும் எனது மகிமையைக் காணமுடிந்தபோது, அது அவனது விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. பேதுரு தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிந்தது. அவனது விசுவாசத்தினிமித்தமாகவே, எனக்காக அவன் சிலுவையில் அறையப்படவும் மகிமையான சாட்சியம் தரவும் முடிந்தது. யோவான் தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே மனுஷகுமாரனின் மகிமையான உருவத்தைக் கண்டான். கடைசி நாட்களின் தரிசனத்தை அவன் கண்டபோது, அவனுடைய விசுவாசத்தினாலேயே அது அதிகமாயிற்று. புறஜாதி ஜனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களில் திரளானவர்கள் தங்கள் விசுவாசத்தின் நிமித்தமாகவே என் வெளிப்பாட்டைப் பெற்றனர், மற்றும் மனிதனுக்கு மத்தியில் என் ஊழியத்தைச் செய்வதற்காக நான் மாம்சத்தில் திரும்ப வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் அறியவந்திருப்பதற்கான காரணமும், அவர்கள் விசுவாசம்தான். என் கடுமையான வார்த்தைகளால் பாதிக்கப்பட்டும் இன்னும் அவற்றினால் ஆறுதலுக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றினால் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள்—அவர்கள் தங்களின் விசுவாசத்தின் காரணமாக இதைச் செய்யாதிருக்கிறார்களா? என்னில் விசுவாசம் கொண்டிருந்தும் இன்னும் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இந்த உலகத்தாலும் புறக்கணிக்கப் பட்டிருக்கவில்லையா? என் வார்த்தைக்குப் புறம்பே வாழ்பவர்கள், சோதனையின் துன்பத்திலிருந்து தப்பி ஓடுகிறார்கள், அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் அதன்போக்கில் இழுக்கப்பட்டுச் செல்வதில்லையா? அவர்கள் இங்கும் அங்கும் பறக்கடிக்கப்படும் இலையுதிர்கால இலைகளைப்போல், இளைப்பாற இடமின்றி, ஆறுதல் அளிக்கும் என் வார்த்தைகளை மிகக்குறைவாகவே பெற்றவர்களாய் உள்ளனர். என் சிட்சையும் புடமிடுதலும் அவர்களைப் பின்தொடரவில்லை என்றாலும், அவர்கள் இடத்திலிருந்து இடம் இழுபட்டுச் செல்கிற பிச்சைக்காரர்கள்போல் பரலோக ராஜ்யத்திற்குப் புறம்பே வீதிகளில் அலைந்து திரிவதில்லையா? உலகம் உண்மையில் உனக்கு இளைப்பாறும் இடமாக உள்ளதா? என் சிட்சையைத் தவிர்ப்பதனால், உன்னால் உண்மையிலேயே, உலகத்திலிருந்து மனநிறைவின் மயக்கமான புன்னகையைப் பெற்றுக்கொள்ள முடியுமா? உன் இருதயத்தில் உள்ள மறைக்க முடியாத வெறுமையை மூட, விரைந்தோடி வரும் உனது சந்தோஷத்தை நீ உண்மையிலேயே பயன்படுத்த முடியுமா? உன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நீ முட்டாளாக்கலாம், ஆனால் உன்னால் என்னை முட்டாளாக்க ஒருக்காலும் முடியாது. உன் நம்பிக்கை மிகவும் அற்பமானது என்பதால், நீ இந்தநாள் வரையிலும், வாழ்க்கை தருகிற அகமகிழ்வு எதையும் கண்டறிய வல்லமையற்று இருக்கிறாய். நான் உன்னைக் கேட்டுக்கொள்வது: உன் முழுவாழ்வையும், மாம்சத்திற்காக இரண்டாந்தரமாக சுறுசுறுப்பாக செலவிடுவதைக் காட்டிலும், உன் வாழ்நாளில் பாதியை எனக்காக உண்மையுடன் செலவிட்டு, ஒரு மனிதன் அரிதாகவே சுமக்கக்கூடிய பாடுகளைச் சகித்திருத்தல் மேன்மையானது. இவ்வளவு அதிகமாய் உங்களைப் பாதுகாத்து எனது சிட்சையில் இருந்து விலகி ஒடுதல் என்ன நோக்கத்திற்குப் பயன்படுகிறது? சங்கடமான நித்தியத்தை, சிட்சிக்கும் நித்தியத்தை மாத்திரமே அறுவடை செய்ய எனது கணநேரச் சிட்சிப்பிலிருந்து உன்னை ஒளித்துக்கொள்வது என்ன நோக்கத்திற்குப் பயன்படுகிறது? உண்மையில், நான் என் சித்தத்திற்கு யாரையும் வளைக்கவில்லை. எனது எல்லா திட்டங்களுக்கும் யாராவது உண்மையிலேயே அடிபணிய விரும்பினால், நான் அவர்களை மோசமாக நடத்த மாட்டேன். ஆனால், யேகோவாவாகிய என்னை, யோபு விசுவாசித்தது போலவே எல்லா ஜனங்களும் விசுவாசிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் விசுவாசம் தோமாவின் விசுவாசத்தை விட அதிகமாக இருந்தால், உங்கள் விசுவாசம் எனது பாராட்டைப்பெறும், உங்கள் பற்றுறுதியில் நீங்கள் என் ஆனந்தத்தைக் காண்பீர்கள், மற்றும் உங்கள் நாட்களில் நீங்கள் நிச்சயமாக என் மகிமையைக் காண்பீர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன” என்பதிலிருந்து

634. இப்போது நான் உங்கள் முன் கொஞ்சம் பணத்தை வைத்து, அதை தேர்வு செய்யும் சுதந்திரத்தையும் கொடுத்து, நீங்கள் தேர்வு செய்வதை நான் கடிந்துகொள்ளவில்லை என்றால், உங்களில் பலர் பணத்தை தேர்வு செய்து சத்தியத்தை விட்டுவிடுவீர்கள். உங்களில் சிறந்தவர்கள் பணத்தை விட்டுவிட்டு, தயக்கத்துடன் சத்தியத்தைத் தேர்வு செய்வார்கள், அதே நேரத்தில் சிலர் பணத்தை ஒரு கையிலும் சத்தியத்தை ஒரு கையிலும் எடுப்பார்கள். இதன்மூலம் உங்கள் உண்மையான நிறங்கள் தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் சத்தியத்தையும் மற்றும் நீங்கள் விசுவாசமாக இருக்கும் எதையேனும் தேர்வு செய்யும்போது, நீங்கள் அனைவரும் இதையே தேர்வு செய்கிறீர்கள், உங்கள் நடத்தை மாறாமல் அப்படியே இருக்கும். அது அப்படியல்லவா? சரியானதற்கும் தவறுக்கும் இடையில் ஊசலாடும் பலர் உங்கள் மத்தியில் இல்லையா? நேர்மறை மற்றும் எதிர்மறை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிகளில், குடும்பம் மற்றும் தேவன், குழந்தைகள் மற்றும் தேவன், அமைதி மற்றும் சஞ்சலம், செல்வம் மற்றும் வறுமை, அந்தஸ்து மற்றும் எளிமை, ஆதரிக்கப்படுதல் மற்றும் ஒதுக்கி வைக்கப்படுதல் மற்றும் பலவற்றுக்கு இடையிலான விருப்பத்தேர்வுகளைப் பற்றி நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். ஒரு அமைதியான குடும்பத்திற்கும் உடைந்த குடும்பத்திற்கும் இடையில், நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள், நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்; செல்வத்திற்கும் கடமைக்கும் இடையில், நீங்கள் மீண்டும் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள், கரைக்குத் திரும்ப விருப்பமில்லாமல் இருக்கிறீர்கள்;[அ] ஆடம்பரத்திற்கும் வறுமைக்கும் இடையில், நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள்; உங்கள் மகன்கள், மகள்கள், மனைவிமார்கள் மற்றும் கணவன்மார்களுக்கும் எனக்கும் இடையில் யாரை தேர்வு செய்வது என்று வரும்போது, நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள்; கருத்துக்கும் சத்தியத்திற்கும் இடையில், நீங்கள் மீண்டும் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள். அனைத்து விதமான உங்கள் தீய செயல்களையும் பார்த்த நான் உங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டேன். உங்கள் இருதயங்கள் மென்மையாக இருக்க பெரிதும் மறுக்கின்றன என்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. பல வருட அர்ப்பணிப்பும் முயற்சியும் உங்களுடைய கைவிடுதலையும் அவநம்பிக்கையையும் தவிர வேறொன்றையும் எனக்குத் தரவில்லை, ஆனால் உங்களுக்கான என் நம்பிக்கைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன, ஏனென்றால் எனது நாளானது அனைவருக்கும் முன்பாக முற்றிலும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீங்கள் இருளான மற்றும் தீய காரியங்களை நாடுவதிலேயே தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள், அவற்றின் மீதான உங்கள் பிடியைத் தளர்த்த மறுக்கிறீர்கள். அப்படியானால், உங்கள் பின்விளைவு என்னவாக இருக்கும்? நீங்கள் இதை எப்போதாவது கவனமாக சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? மீண்டும் தேர்வு செய்யுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டால், உங்கள் கருத்து என்னவாக இருக்கும்? இன்னும் முந்தையதாகவே இருக்குமா? நீங்கள் இன்னும் எனக்கு ஏமாற்றத்தையும் தாங்க முடியாத துக்கத்தையுமே கொண்டு வருவீர்களா? உங்கள் இருதயங்கள் இன்னும் சிறிதளவு சௌகரியத்திலேயே இருக்குமா? என் இருதயத்தை ஆறுதல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா? இந்த நேரத்தில், நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்? நீங்கள் என் வார்த்தைகளுக்கு ஒப்புக்கொடுப்பீர்களா அல்லது அவற்றில் சோர்வடைவீர்களா? எனது நாள் உங்கள் கண்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் எதிர்கொள்வது ஒரு புதிய வாழ்க்கை மற்றும் ஒரு புதிய தொடக்கப் புள்ளியாகும். இருப்பினும், இந்த தொடக்கப் புள்ளி கடந்த புதிய வேலையின் ஆரம்பம் அல்ல, ஆனால் பழைய வேலையின் முடிவு என்பதை நான் உங்களுக்கு சொல்லியாக வேண்டும். அதாவது, இதுதான் இறுதி செயல். இந்த தொடக்க புள்ளி பற்றிய அசாதாரணமானது எது என்பதை உங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இருப்பினும், விரைவில் ஒரு நாளில், இந்த தொடக்க புள்ளியின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், எனவே நாம் அதை ஒன்றாகக் கடந்து சென்று, வரவிருக்கும் முடிவை வரவேற்போம்! ஆனாலும், உங்களைப் பற்றிய எனது தொடர்ச்சியான கவலை என்னவென்றால், அநீதியையும் நீதியையும் எதிர்கொள்ளும்போது, நீங்கள் எப்போதும் முந்தையதையேத் தேர்வு செய்கிறீர்கள். இருப்பினும், இவை எல்லாம் உங்கள் கடந்த காலத்தில் நடந்தவை. இதைச் செய்வது மிகவும் கடினம் என்றாலும், நான் உங்களுடைய கடந்த கால செயல்கள் அனைத்தையும் மறந்துவிடுவேன் என்று நம்புகிறேன். ஆனாலும், அதைச் செய்வதற்கான மிகவும் சிறந்த வழிமுறை என்னிடம் உள்ளது: எதிர்காலம் கடந்த காலத்தை மாற்றட்டும், உங்களுடைய இன்றைய உண்மையான சுயத்தைக் கொடுத்து உங்கள் கடந்த காலத்தின் நிழல்களைப் போக்க விடுங்கள். எனவே ஒரு முறைக்கூட தேர்வு செய்ய நான் உங்களைத் தொந்தரவு செய்துதான் ஆகவேண்டும்: நீங்கள் உண்மையில் யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?” என்பதிலிருந்து

637. நீங்கள் சென்றடையும் இடமும் உங்கள் தலைவிதியும் உங்களுக்கு மிகவும் முக்கியமானவை—அவற்றிற்கு மிகுந்த அக்கறை உண்டு. நீங்கள் மிகுந்த கவனத்துடன் காரியங்களைச் செய்யாவிட்டால், நீங்கள் சென்றடையும் ஒரு இடத்தை தேடுவதை நிறுத்திவிட்டீர்கள் என்றும், உங்கள் சொந்த தலைவிதியை நீங்களே அழித்துவிட்டீர்கள் என்றும் அர்த்தமாவதாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஆனால், தங்களது சென்றடையும் இடத்திற்காக மட்டுமே முயற்சி செய்யும் ஜனங்கள் வீணாக உழைக்கிறார்கள் என்று உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அத்தகைய முயற்சிகள் உண்மையானவை இல்லை—அவை போலியானவை, வஞ்சகம் மிக்கவை. அப்படியானால், தங்களது சென்றடையும் இடத்தின் பொருட்டு மட்டுமே கிரியை செய்பவர்கள் தங்கள் இறுதி வீழ்ச்சியின் வாசலில் இருக்கிறார்கள், ஏனென்றால் தேவன் மீது ஒருவனின் விசுவாசத்தில் தோல்வி என்பது வஞ்சகத்தினால் ஏற்படுகிறது. நான் முகஸ்துதி செய்யப்படுவதையோ அல்லது கஷ்டப்படுவதையோ அல்லது உற்சாகத்துடன் நடத்தப்படுவதையோ விரும்புவதில்லை என்பதை நான் முன்பு கூறியிருக்கிறேன். எமது சத்தியத்தையும் எமது எதிர்பார்ப்புகளையும் நேர்மையானவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும், ஜனங்கள் எமது இருதயத்தின் மீது மிகுந்த அக்கறையையும் எண்ணத்தையும் காட்டும்போதும், எம்பொருட்டு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கும்போதும் நான் அதை விரும்புகிறேன். இவ்வாறாக மட்டுமே எமது இருதயத்தால் ஆறுதலடைய முடியும். இப்போது, உங்களைப் பற்றி நான் விரும்பாத விஷயங்கள் எத்தனை இருக்கின்றன? உங்களைப் பற்றி நான் விரும்பும் விஷயங்கள் எத்தனை இருக்கின்றன? உங்கள் சென்றடையும் இடத்தின் பொருட்டு நீங்கள் முன்வைத்த அசிங்கத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகள் அனைத்தையும் நீங்கள் யாரும் உணரவில்லை என்பதாக இருக்குமா?

எமது இருதயத்தில், நேர்மறையான மற்றும் மேலே செல்ல விரும்பும் எந்தவொரு இருதயத்தையும் புண்படுத்த நான் விரும்புவதில்லை, மேலும் விசுவாசத்துடன் தனது கடமையைச் செய்கிற எவருடைய ஆற்றலையும் குறைக்கவும் எமது இருதயத்தில் நான் விரும்புவதில்லை. ஆயினும்கூட, உங்கள் குறைபாடுகள் மற்றும் உங்கள் இருதயங்களின் ஆழமான இடைவெளிகளில் இருக்கும் இழிந்த ஆத்துமாவை நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. எமது வார்த்தைகளை நேருக்கு நேர் சந்திப்பதில் உங்களால் உங்களது உண்மையான இருதயத்தை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் அவ்வாறு செய்கிறேன், ஏனென்றால் எமக்கு எதிரான ஜனங்களின் வஞ்சகத்தை நான் மிகவும் வெறுக்கிறேன். எமது கிரியையின் கடைசி கட்டத்தில், உங்களால் மிகச்சிறந்த செயல்திறனை வழங்க முடியும் என்றும், நீங்கள் முழு மனதுடன் உங்களை நியமிப்பீர்கள் என்றும், இனி அரை மனதுடன் இருக்க மாட்டீர்கள் என்றும் மட்டுமே நம்புகிறேன். நிச்சயமாக, உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல சென்றடையும் இடம் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆயினும்கூட, எமக்கான தேவை எமக்கு இன்னும் இருக்கிறது, அதாவது உங்கள் ஒரே மற்றும் இறுதி பக்தியை எமக்கு வழங்குவதில் நீங்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும். ஒருவனுக்கு அந்த ஒரே பக்தி இல்லையென்றால், அவன் நிச்சயமாக சாத்தானின் பொக்கிஷமான உடைமையாக இருக்கிறான், நான் இனியும் அவனைப் பயன்படுத்த மாட்டேன், ஆனால் அவனது பெற்றோரால் கவனிக்கப்படுவதற்காக அவனை அவனது வீட்டிற்கு அனுப்புவேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சென்றடையும் இடம்” என்பதிலிருந்து

638. எதிர்காலத்தில், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பீர்களா அல்லது சபிக்கப்பட்டவர்களாக இருப்பீர்களா என்பது இன்றைய உங்களுடைய செயல்கள் மற்றும் நடத்தை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தேவனால் நீங்கள் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்றால், அது இப்போதே இந்த சகாப்தத்திலேயே நடக்க வேண்டும்; எதிர்காலத்தில் மற்றொரு வாய்ப்பு இருக்காது. தேவன் உண்மையிலேயே உங்களை இப்போது பரிபூரணப்படுத்த விரும்புகிறார், இது வெறும் பேச்சுக்காக இல்லை. எதிர்காலத்தில், உங்களுக்கு என்ன சோதனைகள் ஏற்படவிருந்தாலும், என்ன நிகழ்வுகள் நடக்கவிருந்தாலும், அல்லது நீங்கள் என்ன பேரழிவுகளை எதிர்கொள்ளவிருந்தாலும், தேவன் உங்களை பரிபூரணப்படுத்த விரும்புகிறார்; இது ஒரு திட்டவட்டமான மற்றும் மறுக்க முடியாத உண்மை. இதை எங்கே காண முடியும்? தேவனுடைய வார்த்தை, யுகங்கள் மற்றும் தலைமுறைகள் கடந்து, இன்று இருப்பதைப் போல முன்பு ஒரு பெரிய உயரத்தை எட்டியிருக்கவில்லை என்ற உண்மையில் காணலாம். இது மிக உயர்ந்த சாம்ராஜ்யத்திற்குள் நுழைந்துள்ளது, மனிதகுலம் அனைத்திலும் இன்றளவில் இருக்கும் பரிசுத்த ஆவியின் செயல்பாடு இதற்கு முன் நடக்காதவையாக இருக்கிறது. கடந்த தலைமுறைகளைச் சேர்ந்த எவருக்கும் இதுபோன்ற அனுபவம் இல்லை; இயேசுவின் காலத்தில் கூட இன்றைய வெளிப்பாடுகள் இருக்கவில்லை. உங்களிடத்தில் பேசப்பட்ட வார்த்தைகள், அவற்றிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டது மற்றும் உங்கள் அனுபவம் என அனைத்தும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளன. சோதனைகள் மற்றும் சிட்சைகளுக்கு மத்தியிலும் கூட நீங்கள் வெளியேறுவதில்லை. இதுவே தேவனுடைய செயலானது முன்னெப்போதும் இல்லாத ஒரு பிரகாசத்தை அடைந்துள்ளது என்பதற்குப் போதுமான சான்று. இது மனிதனால் செய்யக்கூடிய ஒன்று அல்ல, மனிதன் பராமரிக்கப்படும் ஒன்றும் அல்ல; மாறாக, இது தேவனுடைய வேலையாயிருக்கிறது. ஆகவே, தேவனுடைய கிரியையின் பல யதார்த்தங்களிலிருந்து, அவர் மனிதனை பரிபூரணப்படுத்த விரும்புகிறார் என்பதைக் காணலாம், மேலும் அவர் உங்களை நிச்சயமாக முழுமையாக்குவார். நீங்கள் இந்த நுண்ணறிவைக் கொண்டு, இந்தப் புதிய கண்டுபிடிப்பைச் செய்தால், இயேசுவின் இரண்டாவது வருகைக்காக நீங்கள் காத்திருக்க மாட்டீர்கள்; அதற்குப் பதிலாக, தற்போதைய யுகத்திலேயே உங்களை முழுமையாக்க தேவனை அனுமதிப்பீர்கள். ஆகையால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், நீங்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்படலாம்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஒவ்வொருவரும் அவர்களுடைய செயல்பாட்டைச் செயல்படுத்துதல் மேல்” என்பதிலிருந்து

639. ஒவ்வொரு மனிதனும் பரிபூரணமாக்கப்பட வேண்டும், இறுதியில் அவரால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும், அவரால் பரிபூரணமாகச் சுத்திகரிக்கப்பட வேண்டும், அவருக்குப் பிரியமான மக்களாக மாற வேண்டும் என்பதே தேவனின் விருப்பம். நான் உங்களுக்குச் சொல்வது பின்தங்கியதா அல்லது மோசமான திறமை வாய்ந்ததா என்பதெல்லாம் முக்கியமல்ல—இது எல்லாம் உண்மை. இதை நான் சொல்வதென்பது, நான் உங்களைக் கைவிட உத்தேசிக்கிறேன், நான் உங்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டேன், அதைக்காட்டிலும் உங்களை இரட்சிக்க நான் விரும்பவில்லை என்பதையெல்லாம் நிரூபிக்கவில்லை. இன்று நான் உங்கள் இரட்சிப்பின் கிரியையைச் செய்ய வந்திருக்கிறேன், அதாவது நான் செய்யும் கிரியை இரட்சிப்பின் கிரியையின் தொடர்ச்சியாகும். ஒவ்வொரு நபருக்கும் பரிபூரணமாக்கப் படுவதற்கு வாய்ப்பு உள்ளது: ஆனால் நீ அதற்குத் தயாராக இருக்க வேண்டும், நீ பின்பற்ற வேண்டும், இறுதியில் நீ இந்த முடிவை அடைய முடியும், உங்களில் ஒருவர் கூடக் கைவிடப்பட மாட்டார்கள். நீ மோசமான திறமை வாய்ந்தவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் மோசமான திறனுக்கேற்ப இருக்கும்; நீ அதிகத் திறன் கொண்டவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் உயர் திறனுக்கேற்ப இருக்கும்; நீ அறியாதவனாகவும், கல்வியறிவற்றவனாகவும் இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் கல்வியறிவின்மைக்கு ஏற்ப இருக்கும்; நீ கல்வியறிவு பெற்றவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் நீ கல்வியறிவு பெற்றவனாக இருப்பதற்கு ஏற்ப இருக்கும்; நீ வயதானவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் வயதுக்கு ஏற்ப இருக்கும்; நீ விருந்தோம்பல் வழங்க வல்லவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் இந்தத் திறனுக்கு ஏற்ப இருக்கும்; நீ விருந்தோம்பல் வழங்க முடியாது, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை மட்டுமே செய்ய முடியும் என்று நீ சொன்னால், அது ஒரு நற்செய்தியைப் பரப்புவதா, அல்லது தேவாலயத்தைக் கவனித்துக்கொள்வதா, அல்லது பிற பொது விவகாரங்களில் கலந்துகொள்வதா என்பதில் உன்னைப் பற்றிய எனது பரிபூரணமாக்கும் செயல் நீ செய்யும் செயல்பாட்டிற்கு ஏற்ப இருக்கும். விசுவாசமாக இருப்பது, கடைசிவரை கீழ்ப்படிதல், தேவன்மீது மிகுந்த அன்பு செலுத்த முற்படுவது—இதைத்தான் நீ நிறைவேற்ற வேண்டும், இந்த மூன்று விஷயங்களை விடச் சிறந்த நடைமுறைகள் எதுவும் இல்லை. இறுதியில், இந்த மூன்று விஷயங்களை மனிதன் அடைய வேண்டிய தேவையுள்ளது, அவனால் அவற்றை அடைய முடிந்தால், அவன் பரிபூரணமாகிவிடுவான். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, நீ உண்மையிலேயே பின்பற்ற வேண்டும், இந்த விஷயத்தில் நீ முன் நோக்கியும் மேல்நோக்கியும் தீவிரமான உந்துதல் செய்ய வேண்டும், அந்த விஷயத்தில் செயலற்றவனாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு நபருக்கும் பரிபூரமாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், பரிபூரமாக்கப்பட்டவராக ஆகும் திறன் உள்ளது என்றும் நான் சொல்லியிருக்கிறேன், இது உண்மைதான், ஆனால் நீ உன் பின்பற்றும் செயலில் சிறப்பாக இருக்க முயற்சிக்க வேண்டாம். இந்த மூன்று அளவுகோல்களை நீங்கள் அடையவில்லை என்றால், இறுதியில் நீ அவசியம் நீக்கப்படுவாய். எல்லோரும் இதைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எல்லோருக்கும் கிரியையும் பரிசுத்த ஆவியின் பிரகாசமும் இருக்க வேண்டும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிய இயல வேண்டும், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை இதுதான். நீங்கள் அனைவரும் உங்கள் கடமையைச் செய்தவுடன், நீங்கள் அனைவரும் பரிபூரணப்படுத்தப்பட்டிருப்பீர்கள், உங்களிடம் பலத்த சாட்சியம் இருக்கும். சாட்சியம் அளிப்பவர்கள் அனைவரும் சாத்தானை வென்றவர்களாகவும், தேவனின் வாக்குத்தத்தைப் பெற்றவர்களாகவும் உள்ளனர், மேலும் அவர்கள் அற்புதமான சென்றடையும் இடத்திலேயே வாழ்வார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து

640. சர்வவல்லவர் வழங்கிய ஜீவனைவிட்டு விலகிய மனுக்குலம் ஜீவனின் நோக்கத்தைக் குறித்து அறியாமல், மரணத்தைக்குறித்து அஞ்சுகிறது. அவர்கள் உதவியோ, ஆதரவோ இல்லாமல் தவிக்கின்றார்கள். ஆனாலும் தங்கள் கண்களை மூடத் தயங்குகிறார்கள். மேலும் தங்கள் சொந்த ஆத்துமாக்களைக் குறித்து உணர்வில்லாதவர்களாய், நடைபிணங்களாய், இந்த உலகத்தில் இழிவான வாழ்க்கையை வாழ, தங்களையே வருத்திக்கொள்கின்றனர். நோக்கமில்லாமல் வாழ்கின்ற மற்றவர்களைப் போலவே நீயும், நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றாய். ஆதிமுதல் இருக்கும் பரிசுத்தர் மட்டுமே தங்கள் துன்பங்களின் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கும், அவருடைய வருகைக்காக அதிக எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கும் ஜனங்களை இரட்சிக்க முடியும். உணர்வில்லாமல் இருப்பவர்களிடம் அப்படிப்பட்ட நம்பிக்கை இதுவரை காணப்படவில்லை. ஆனாலும் ஜனங்கள் அதற்காக அவ்வளவாய் ஏங்குகின்றனர். பெருந்துன்பத்திற்குள்ளான இந்த ஜனங்களின்மேல் சர்வவல்லவர் இரக்கமுள்ளவராய் இருக்கின்றார். அதே நேரத்தில், வெகுகாலமாய் மனிதகுலத்திடமிருந்து பதில் வர நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதிருந்ததினால், உணர்வில்லாமல் இருக்கும் இந்த ஜனங்களின்மேல் அவர் சலிப்படைந்திருக்கின்றார். நீ இனிமேலும் பசியோடும், தாகத்தோடும் இருக்காதபடி, உன்னை உணர்வடையச்செய்ய, உனக்குத் தண்ணீரையும், ஆகாரத்தையும் கொண்டுவர, உன் இருதயத்தையும், உன் ஆவியையும் தேட அவர் விரும்புகின்றார். நீ தளர்வடைந்திருக்கும்போது, இந்த உலகத்தின் நம்பிக்கையின்மையை நீ உணர ஆரம்பிக்கும்போது, நீ நம்பிக்கையை இழக்கவோ அழவோ வேண்டாம். கண்காணிப்பாளரான சர்வவல்லவர் நீ வரும்போது உன்னை அணைத்துக்கொள்வார். அவர் உன் பக்கத்திலேயே இருந்து உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார், நீ அவரிடம் திரும்புவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றார். உன் நினைவு திரும்பும் நாளுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். நீ அவரிடமிருந்து உருவானவன் என்று நீ உணர்ந்திட, என்றோ ஒரு நாள் நீ திசை தவறிப் போனாய் என்றும், என்றோ ஒருநாள் நீ உன் உணர்வை இழந்தாய் என்றும், ஒரு நாள் உன் தகப்பனைக் கண்டடைந்தாய் என்றும் நீ அறிந்திட, சர்வவல்லவர் உனக்காக, நீ அவரிடம் திரும்பும் நாளுக்காக வெகுகாலமாய்க் காத்துக்கொண்டிருக்கின்றார். உருக்கமான ஏக்கத்தோடு அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார், உன்னுடைய பதிலுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். அவருடைய நீடிய பொறுமை விலைமதிக்கமுடியாதது. மனிதனின் இருதயத்திற்காகவும் ஆவிக்காகவுமே அவர் காத்திருக்கின்றார். ஒருவேளை அவர் முடிவில்லாமல் காத்திருக்கலாம், அல்லது அவர் சீக்கிரத்தில் காத்திருப்பை முடித்துக் கொள்ளலாம். ஆனால், உன் இருதயமும், ஆவியும் இப்பொழுது எங்குள்ளன என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள்ளவேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சர்வவல்லவரின் பெருமூச்சு” என்பதிலிருந்து

641. தேவனுடைய அன்பும் இரக்கமும் அவருடைய நிர்வகித்தலின் ஒவ்வொரு விவரத்தையும் ஊடுருவிச் செல்கின்றன, மேலும் தேவனுடைய நல்ல நோக்கங்களை மக்கள் புரிந்து கொள்ள முடியுமா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் நிறைவேற்றுவதற்காக அவர் மேற்கொண்ட கிரியையை இன்னும் அயராது செய்கிறார். தேவனுடைய நிர்வகித்தலைப் பற்றி ஜனங்கள் எவ்வளவு புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய கிரியையால் மனிதனுக்கு கிடைக்கும் உதவி மற்றும் நன்மைகள் ஒவ்வொருவராலும் பாராட்டப்படலாம். ஒருவேளை, இந்த நாளில், நீ தேவன் வழங்கிய எந்த அன்பையும் வாழ்க்கையையும் உணரவில்லை, ஆனால் நீ தேவனைக் கைவிடாத வரை, சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான உன் உறுதியைக் கைவிடாதவரை, தேவனுடைய புன்னகையை உனக்கு வெளிப்படுத்தும் ஒரு நாள் வரும். தேவனுடைய நிர்வாகக் கிரியையின் நோக்கம் சாத்தானின் ஆதிக்க வரம்பில் உள்ளவர்களை மீட்பதே ஆகும், மற்றபடி சாத்தானால் சீர்கெட்டுப்போய் தேவனை எதிர்க்கும் ஜனங்களை கைவிட்டு விடுவது அல்ல.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்” என்பதிலிருந்து

642. தேவனுடைய இரட்சிப்பின் கிரியை செய்யப்படும் போது, முடிந்த வரையில் இரட்சிக்கப்படக் கூடிய ஒவ்வொரு தனி நபரும் இரட்சிக்கப்படுவார்கள், மற்றும் ஒருவரும் நிராகரிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் மனிதனை இரட்சிப்பதே தேவனுடைய கிரியையின் நோக்கமாகும். மனிதனைத் தேவன் இரட்சிக்கும் சமயத்தில், தங்கள் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியாத அனைவரும்—அது மட்டும் அல்லாமல் முற்றிலுமாக தேவனுக்குக் கீழ்ப்படிய முடியாதவர்களும்—தண்டனைக்குரிய பொருளாவார்கள். வார்த்தைகளின் கிரியை எனப்படும் இந்தக் கட்ட கிரியையானது ஜனங்கள் புரிந்துகொள்ளாத எல்லா வழிமுறைகளையும் இரகசியங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தும், அதனால் அவர்கள் தேவ சித்தத்தையும் மற்றும் அவர்களிடம் இருந்து தேவனுக்குத் தேவையானவற்றையும் புரிந்துகொள்ள முடியும், அதனால் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் படி நடக்கவும் தங்கள் மனநிலைகளில் மாற்றத்தை அடையவும் தேவையான முன்னிபந்தனைகளைக் கொண்டிருக்கவும் முடியும். தம்முடைய கிரியையைச் செய்ய தேவன் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறார் மேலும் சிறிதளவு மாறுபாட்டுடன் இருப்பதற்காக ஜனங்களைத் தண்டிப்பதில்லை; இது ஏனென்றால் இப்போதுதான் இரட்சிப்பின் கிரியைக்கான சமயம் ஆகும். மாறுபாட்டுடன் நடந்து கொள்ளுகிற எவரேனும் ஒருவர் தண்டிக்கப்பட்டால், பின்னர் இரட்சிக்கப்படுவதற்கு ஒருவருக்கும் வாய்ப்பு கிடைக்காது; எல்லோரும் தண்டிக்கப்பட்டு பாதாளத்தில் விழுவார்கள். மனிதனை நியாயந்தீர்க்கும் வார்த்தைகளின் நோக்கம் அவர்கள் தங்களை அறிவதற்கும் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும் அவர்களை அனுமதிப்பதுதான்; அத்தகைய நியாயத்தீர்ப்பைக் கொண்டு அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல. வார்த்தைகளின் கிரியையின் காலத்தில், பல ஜனங்கள் மாம்சமாகிய தேவனிடத்தில் தங்கள் மாறுபாட்டையும் விரோதத்தையும், அது மட்டும் அல்லாமல் தங்கள் கீழ்ப்படியாமையையும் வெளிப்படுத்துவார்கள். இருந்த போதிலும், அதன் விளைவாக அவர் இந்த எல்லா மக்களையும் தண்டிக்க மாட்டார், ஆனால் அதற்குப் பதில் முற்றிலுமாக சீர்கெட்டுப் போனவர்களையும் இரட்சிக்கப்படக் கூடாதவர்களையும் மட்டுமே புறம்பே தள்ளிவிடுகிறார். அவர் அவர்களுடைய மாம்சத்தை சாத்தானிடம் கொடுப்பார், மேலும், சில நேர்வுகளில், அவர்களுடைய மாம்சத்துக்கு முடிவுகட்டுவார். மீந்திருப்பவர்கள் தொடர்ந்து பின்தொடர்வார்கள் மேலும் அடக்கியாளப்பட்டுத் திருத்தப்படும் அனுபவத்தைப் பெறுவார்கள். பின்தொடரும் போது, இந்த ஜனங்களால் அடக்கியாளப்பட்டுத் திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மேலும் மேலும் சீரழிந்தால், பின்னர் அவர்கள் இரட்சிப்புக்கான தங்கள் கடைசி வாய்ப்பையும் இழந்து போவார்கள். வார்த்தைகளால் ஜெயங்கொள்ளப்பட்டு கீழ்ப்படியும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்புக்கான ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்; இந்த ஜனங்கள் ஒவ்வொருவருக்குமான தேவனின் இரட்சிப்பு அவரது மிகுந்த இரக்கத்தைக் காட்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்களிடத்தில் மிகவும் பொறுமை காட்டப்படும். ஜனங்கள் தங்கள் தவறான பாதைகளில் இருந்து திரும்பினால், மேலும் அவர்கள் மனந்திரும்ப முடியுமானால், அவரது இரட்சிப்பைப் பெற தேவன் அவர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பார். மனிதர்கள் தேவனுக்கு விரோதமாய் முதன்முதலில் கலகம் செய்யும்போது, அவர்களைக் கொன்றுபோட அவருக்கு விருப்பம் இல்லாதிருக்கிறது; மாறாக அவர்களை இரட்சிக்க அவரால் முடிந்ததை எல்லாம் அவர் செய்கிறார். யாருக்காவது இரட்சிப்புக்கான இடம் இல்லாத போது, தேவன் அவர்களைப் புறம்பே தள்ளிவிடுகிறார். சில ஜனங்களைத் தண்டிப்பதில் தேவன் நெடிய சாந்தமுள்ளவராக இருப்பதற்கான காரணம் அவர் இரட்சிக்கப்படக்கூடிய எல்லோரையும் இரட்சிக்க விரும்புவதே ஆகும். வார்த்தைகளை மட்டும் கொண்டு அவர் ஜனங்களை நியாயந்தீர்க்கிறார், அவர்களுக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கிறார், மற்றும் வார்த்தைகள் மூலம் வழிகாட்டுகிறார் மேலும் அவர் ஒரு கோலை பயன்படுத்தி அவர்களைக் கொல்வதில்லை. வார்த்தைகளைப் பயன்படுத்தி மனிதர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வருவதே இறுதிக் கட்ட கிரியையின் நோக்கமும் முக்கியத்துவமும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

643. இந்த பரந்த உலகில், எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. பெருங்கடல்கள் வயல்களுக்குள் பாய்ந்தன. வயல்கள் பெருங்கடல்களின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இது போல மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. பிரபஞ்சத்தின் சர்வத்தையும் ஆளக்கூடியவரைத் தவிர இந்த மனித இனத்தை வேறு எவராலும் வழிநடத்த முடியாது. தேவனையன்றி இந்த மனித இனத்திற்காக கிரியை செய்ய ஏற்பாடுகளைச் செய்ய வலிமைமிக்க ஒருவர் இல்லை. இந்த மனித இனத்தை ஒளியினிடம் வழிநடத்த பூமிக்குரிய அநீதிகளிலிருந்து விடுவிக்க வேறு எவரும் இல்லை. மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் குறித்து தேவன் புலம்புகிறார்; மனிதகுலத்தின் வீழ்ச்சியைக் கண்டு துக்கப்படுகிறார் மற்றும் மனிதகுலம் படிப்படியாகச் சிதைவை நோக்கி அணிவகுத்து வருவதாலும், திரும்பி வராத பாதையில் செல்வதாலும் வேதனைப்படுகிறார். தேவனுடைய இருதயத்தை உடைத்து, பொல்லாங்கனைத் தேட, இந்த மனிதகுலம் அவரைத் துறந்தது. அத்தகைய மனிதகுலம் எந்த திசையில் செல்லக்கூடும் என்று யாராவது சிந்தித்ததுண்டா? இதனால் தான் என்னவோ தேவனுடைய கோபத்தை யாரும் உணரவில்லை. தேவனைப் பிரியப்படுத்த ஒரு வழியைத் தேடவில்லை. அவரிடம் நெருங்கிச் செல்ல முயற்சிக்கவில்லை. வருத்தத்தையும் வேதனையையும் யாரும் புரிந்து கொள்ள முற்படுவதில்லை. அவர் சத்தத்தைக் கேட்ட பிறகும், மனிதன் தனது சொந்த பாதையில் தொடர்கிறான்; அவரிடமிருந்து விலகிச் செல்கிறான்; அவருடைய கிருபையையும் அக்கறையையும் தவிர்த்து விடுகிறான்; அவருடைய சத்தியத்தைத் தவிர்க்கிறான்; தேவனின் எதிரியான சாத்தானுக்குத் தன்னை விற்க விரும்புகிறான். தேவனை நிராகரித்து பின் அதைக் குறித்து சிந்திக்காத இந்த மனிதகுலத்தை நோக்கி தேவன் எவ்வாறு செயல்படுவார் என்பது பற்றியும் மனிதன் தனது பிடிவாதத்தைத் தொடர்வது பற்றியும் எவரேனும் எதையேனும் சிந்தித்ததுண்டா? தேவனுடைய தொடர்ச்சியான நினைவூட்டல்களுக்கும் அறிவுரைகளுக்கும் காரணம், அவர் இதுவரை இல்லாத அளவில் மனிதனின் மாம்சமும் ஆத்துமாவும் தாங்க முடியாத ஒரு பேரழிவைத் தன் கைகளில் தயார் செய்து வைத்திருப்பதே என்று யாருக்கும் தெரிவதில்லை. இந்த பேரழிவு மாம்சத்தின் தண்டனை மட்டுமல்ல, ஆத்துமாவின் தண்டனையும் கூட. தேவனுடைய சித்தம் நிறைவேறும்போது, அவருடைய நினைவூட்டல்களுக்கும் அறிவுரைகளுக்கும் எந்த பதிலும் இல்லையேல், எத்தகு ஆத்திரத்தை அவர் கட்டவிழ்த்துவிடுவார் என்பதை நீ அறிந்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினமும் இதுவரை அனுபவித்திராத அல்லது கேட்டிராத ஒன்று போல அது இருக்கும். எனவே நான் சொல்கிறேன், இந்த பேரழிவானது முன்னுதாரணங்கள் இல்லாமல் இருக்கிறது. அது ஒருபோதும் மீண்டும் நிகழாது. தேவனுடைய திட்டம் மனிதகுலத்தை ஒரு முறை மட்டுமே உருவாக்குவதும் ஒரு முறை மட்டுமே காப்பாற்றுவதும் ஆகும். இதற்கு, இதுவே முதலும் கடைசியுமாகும். எனவே, இம்முறை தேவன் மனிதனை இரட்சிக்க எடுத்துக்கொண்டுள்ள கடினமான நோக்கங்களையும் தீவிரமான எதிர்பார்ப்பையும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. கரைக்குத் திரும்புதல்: இது ஒரு சீன வழக்குச் சொல், இதற்கு “தீய வழிகளில் இருந்து திரும்புதல்” என்று அர்த்தம்.

முந்தைய: A. மனுஷனுக்கான தேவனுடைய தேவைகள்

அடுத்த: C. மனுஷனுக்கான தேவனுடைய எச்சரிக்கைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக