XII. ராஜ்யத்தின் காலத்தின் அரசியலமைப்பு, நிர்வாக ஆணைகள் மற்றும் கட்டளைகள் குறித்த வார்த்தைகள்

595. எனது திட்டமிடப்பட்ட கிரியை ஒரு கணம் கூட இயங்குவதில் நிறுத்தம் இன்றி முன்னோக்கி விரைகிறது. ராஜ்யத்தின் காலத்திற்கு நகர்ந்து, என் ஜனங்களாக உங்களை என் ராஜ்யத்திற்குள் கொண்டு சென்றபின், நீங்கள் செய்யவேண்டிய எனது மற்ற கோரிக்கைகள் உள்ளன; அதாவது, இந்த யுகத்தை நான் ஆளுகை செய்வதற்கான சட்டதிட்டங்களின் சாசனத்தை உங்கள் முன் பிரகடனப்படுத்துவேன்:

நீங்கள் என் ஜனங்கள் என்று அழைக்கப்படுவதால், உங்களால் என் நாமத்தை மகிமைப்படுத்த முடியும்; அதாவது, சோதனையின் மத்தியில் சாட்சியம் அளிக்க முடியும். யாராவது என்னை இனிய சொற்களால் ஏமாற்றி, என்னிடமிருந்து உண்மையை மறைக்க முயன்றால், அல்லது என் முதுகுக்குப் பின்னால் அவமானகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அத்தகையவர்கள் எந்த விதிவிலக்கும் இல்லாமல், நான் அவர்களைக் கையாள்வதற்காகக் காத்திருக்கும் படிக்கு, துரத்தப்பட்டு என் வீட்டிலிருந்து அகற்றப்படுவார்கள். கடந்த காலங்களில் என்னிடம் விசுவாசமற்றவர்களாகவும், வாரிசுரிமைக்கு ஒவ்வாதவர்களாகவும் இருந்தவர்கள், வெளிப்படையாக என்னை நியாயந்தீர்க்க இன்று மீண்டும் எழுந்தவர்கள்—அவர்களும் என் வீட்டை விட்டு விரட்டப்படுவார்கள். என் ஜனங்களாக இருப்பவர்கள் தொடர்ந்து என் பாரங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும், அதே போல் என் வார்த்தைகளை அறியவும் நாட வேண்டும். இதுபோன்றவர்களுக்கு மட்டுமே நான் பிரகாசத்தைத் தருவேன், அவர்கள் நிச்சயமாக என் வழிகாட்டுதலிலும் பிரகாசத்தின் கீழும் வாழ்வார்கள், ஒருபோதும் சிட்சையை எதிர்கொள்வதில்லை. என் பாரங்களைக் கருத்தில் கொள்ளத் தவறியவர்கள், தங்கள் சொந்த எதிர்காலங்களைத் திட்டமிடுவதில் கவனம் செலுத்துகிறவர்கள்—அதாவது, என் இருதயத்தைத் திருப்திப்படுத்துவதை தங்கள் செயல்களின் நோக்கமாகக் கொள்ளாதவர்கள், அதற்கு மாறாக இலவச சலுகைகளைத் தேடுவோர்-இந்த பிச்சைக்காரர் போன்ற ஜீவன்களைப் பயன்படுத்துவதற்கு நான் முற்றிலும் மறுக்கிறேன், ஏனென்றால் அவர்கள் பிறந்த காலத்திலிருந்தே, என் பாரங்களை கருத்தில் கொள்வதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் இயல்பான அறிவு இல்லாதவர்கள்; அத்தகைய ஜனங்கள் மூளையின் “ஊட்டச்சத்துக் குறைபாட்டால்” பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சில “ஊட்டச்சத்துக்காக” வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியமாயிருக்கிறது. அத்தகையவர்களால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை. என் ஜனங்கள் மத்தியில், எல்லோரும் என்னை அறிவது ஒரு கட்டாயக் கடமையாகக் கருதப்படுவது முடிவு வரைக்கும் பார்க்கப்படவேண்டும், அதாவது புசிப்பது, உடுத்துவது, மற்றும் தூங்குவது போன்றவை, எப்படி ஒரு கணம் கூட மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறதோ அதுபோல, அதனால் இறுதியில் என்னை அறிவது சாப்பிடுவதைப் போலவே பழக்கமாகிவிடும்—நீங்கள் சிரமமின்றி, நடைமுறையில் கைமுறைப் பழக்கத்தில் அதைச் செய்வீர்கள். நான் பேசும் சொற்களைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றும் மிகுந்த விசுவாசத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டு முழுமையாக தன்மயமாக்கப்பட வேண்டும்; அதில் எந்தவொரு ஏனோதானோவென்ற அரை நடவடிக்கைகளும் இருக்க முடியாது. என் வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்தாத எவரும் என்னை நேரடியாக எதிர்ப்பதாகக் கருதப்படுவார்கள்; என் வார்த்தைகளை புசிக்காத, அல்லது அவற்றை அறிய முற்படாத எவரும் என்மீது கவனம் செலுத்தவில்லை என்று கருதப்படுவார்கள், மேலும் நேரடியாக என் வீட்டின் கதவுக்கு அப்பால் துடைத்தெறியப் படுவார்கள். இது ஏனென்றால், கடந்த காலத்தில் நான் கூறியுள்ளது போல், நான் விரும்புவது ஏராளமான ஜனங்களை அல்ல, ஆனால் சிறப்பானவர்களையே. ஒரு நூறு பேரில், ஒரே ஒருவர் மட்டுமே என் வார்த்தைகளின் மூலம் என்னை அறிந்து கொள்ள முடிந்தால், அந்த ஒருவருக்குப் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அளிப்பதில் கவனம் செலுத்தும்படிக்கு. மற்ற அனைவரையும் நான் விருப்பத்துடன் தூக்கி எறிந்துவிடுவேன். இதிலிருந்து, அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மட்டுமே என்னை வெளிப்படுத்தி எனக்காய் வாழ முடியும் என்பது உண்மையல்ல என்பதை நீங்கள் காணலாம். நான் விரும்புவது கோதுமையே (விதைகள் முழுமையாக இல்லாவிட்டாலும்) களைகளை அல்ல (விதைகள் போற்றத்தக்க அளவுக்கு முழுமையாக இருந்தாலும்கூட). தேடுவதைப் பொருட்படுத்தாமல், மாறாக மந்தமான முறையில் நடந்துகொள்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் விருப்பப்படி வெளியேற வேண்டும்; அவர்கள் தொடர்ந்து என் நாமத்திற்கு அவமானத்தைத் கொண்டுவரக்கூடாது என்பதற்காக நான் அவர்களை இனி பார்க்க விரும்பவில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 5” என்பதிலிருந்து

598. இப்போது நான் உங்களுக்காக எனது நிர்வாக ஆணைகளை அறிவிக்கிறேன் (அவை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வருகிறது, வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு சிட்சைகள் வழங்கப்படுகின்றன):

நான் எனது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறேன், மேலும் அனைத்தும் எனது கையில் தான் இருக்கின்றன: எவன் சந்தேகிக்கிறானோ அவன் நிச்சயமாகக் கொல்லப்படுவான். எந்தவொரு பரிசீலனைக்கும் இடமில்லை; அவர்கள் உடனடியாக அழிக்கப்படுவார்கள், இதன்மூலம் எனது இருதயத்தில் இருந்து வெறுப்பானது அகற்றப்படும். (இப்போது முதல் கொல்லப்படுபவர்கள் எனது ராஜ்யத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது, சாத்தானின் சந்ததியினராகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.)

முதற்பேறான குமாரர்களான நீங்கள் உங்களுக்கான நிலைகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும், மேலும் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் உங்கள் சொந்த கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எனது நிர்வாகத் திட்டத்திற்காக நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும், நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும், நீங்கள் எனக்கு நல்ல சாட்சிக் கொடுத்து, எனது நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். வெட்கக்கேடான செயல்களைச் செய்யாதீர்கள்; எனது குமாரர்களுக்கும் எனது ஜனங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இருங்கள். ஒரு கணம் கூட ஒழுக்கம் தவறாதீர்கள்: நீங்கள் எப்போதும் முதற்பேறான குமாரர்களின் அடையாளத்தை ஏந்திக் கொண்டு அனைவருக்கும் முன்பாக தோன்ற வேண்டும், அடிமைத்தனமாக இருக்கக்கூடாது; மாறாக, நீங்கள் நிமிர்ந்த தலைகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். எனது நாமத்தை இழிவுபடுத்தாமல் மகிமைப்படுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்கிறேன். முதற்பேறான குமாரர்களாக இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென்று தனிப்பட்ட செயல்பாடு இருக்கிறது, யாராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. இதுதான் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பாகும், அதைக் தட்டிக்கழிக்கக்கூடாது. நான் உங்களிடம் ஒப்படைத்ததை நிறைவேற்றுவதற்காக, உங்கள் முழு மனதுடனும், உங்கள் முழு பெலத்துடனும், உங்களை முழு இருதயத்துடன் நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும்.

இந்த நாளிலிருந்து, பிரபஞ்ச உலகம் முழுவதிலும், எனது குமாரர்களையும் எனது ஜனங்கள் அனைவரையும் வழிநடத்துவதற்கான கடமையை நிறைவேற்றும் காரியம் எனது முதற்பேறான குமாரர்களிடம் ஒப்படைக்கப்படும், மேலும் அதை நிறைவேற்ற தங்கள் முழு இருதயத்தையும் மனதையும் அர்ப்பணிக்க முடியாத எவரையும் நான் தண்டிப்பேன். இதுவே எனது நீதியாகும். எனது முதற்பேறான குமாரர்களைக் கூட நான் விட்டுவிடவோ அல்லது தப்பிக்கவோ விட மாட்டேன்.

எனது முதற்பேறான குமாரர்களில் ஒருவரை ஏளனம் செய்து அவமதிப்பவர்கள் யாராவது எனது குமாரர்களிடையேயோ எனது ஜனங்களிடையேயோ இருந்தால், நான் அவர்களைக் கடுமையாக தண்டிப்பேன், ஏனென்றால் எனது முதற்பேறான குமாரர்கள் என்னை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்; யார் அவர்களுக்கு என்ன செய்தாலும், அவர்கள் அதனை எனக்கும் செய்கிறார்கள். எனது நிர்வாக ஆணைகளில் இதுவே மிகவும் கடுமையானதாகும். இந்த ஆணையை மீறும் எனது குமாரர்களுக்கும் எனது ஜனங்களுக்கும் எதிராக எனது நீதியை எனது முதற்பேறான குமாரர்களின் விருப்பப்படி அவர்களை நிர்வகிக்க அனுமதிப்பேன்.

என்னை அற்பமாகக் கருதுகிறவர்களையும், எனது போஜனம், ஆடை, நித்திரை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறவர்களையும், எனது வெளி விவகாரங்களில் மட்டுமே கலந்துகொள்கிறவர்களையும், எனது பாரத்தை கருத்தில் கொள்ளாதவர்களையும், தங்களின் சொந்த செயல்பாடுகளை சரியாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாதவர்களையும் நான் படிப்படியாகக் கைவிடுவேன். காதுள்ள அனைவருக்கும் இது சொல்லப்படுகிறது.

எனக்காக ஊழியத்தை நிறைவேற்றுகிற யாவரும் சச்சரவு இல்லாமல் கீழ்ப்படிதலுடன் சென்றுவிட வேண்டும். கவனமாக இரு, இல்லையெனில் நான் உன்னை தண்டிப்பேன். (இது ஒரு கூடுதலான ஆணை.)

எனது முதற்பேறான குமாரர்கள் இப்போதிருந்து இரும்புக் கோலை எடுத்துக்கொண்டு, எல்லா தேசங்களையும் ஜனங்களையும் ஆளவும், எல்லா தேசங்களிடையேயும் ஜனங்களிடையேயும் நடந்து செல்லவும், எல்லா தேசங்களிடையேயும் ஜனங்களிடையேயும் எனது நியாயத்தீர்ப்பையும், நீதியையும், மகத்துவத்தையும் நிறைவேற்றுவதற்கும் எனது அதிகாரத்தை செயல்படுத்தத் தொடங்குவார்கள். எனது குமாரர்களும் எனது ஜனங்களும் இடைவிடாமல் எனக்குப் பயப்படுவார்கள், என்னைத் துதிப்பார்கள், என்னை உற்சாகப்படுத்துவார்கள், என்னை மகிமைப்படுத்துவார்கள், ஏனென்றால் எனது நிர்வாகத் திட்டம் நிறைவேறியிருக்கிறது, எனது முதற்பேறான குமாரர்கள் என்னுடன் ஆட்சி செய்ய முடியும்.

இது எனது நிர்வாக ஆணைகளின் ஒரு பகுதியாகும்; இதற்குப் பிறகு, கிரியையானது முன்னேறிச் செல்லும்போது நான் அவற்றை உங்களுக்குச் சொல்வேன். மேலே உள்ள நிர்வாக ஆணைகளிலிருந்து, நான் எனது கிரியையைச் செய்யும் வேகத்தையும், எனது கிரியை எந்த கட்டத்தை எட்டியுள்ளது என்பதையும் நீங்கள் காண்பீர்கள். இது ஒரு உறுதிப்படுத்தலாக இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 88” என்பதிலிருந்து

599. ராஜ்யத்தின் காலத்தில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் கீழ்ப்படிய வேண்டிய பத்து நிர்வாகக் கட்டளைகள்

(தேவனுடைய வார்த்தையின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரம்)

1) மனிதன் தன்னைத்தானே மகிமைப்படுத்தவோ, தன்னைத்தானே பெருமைப்படுத்தவோ கூடாது. அவன் தேவனையே தொழுதுகொண்டு அவரையே உயர்த்தவேண்டும்.

2) தேவனின் கிரியைக்கு நன்மையாக இருக்கும் எல்லாவற்றையும் செய்வாயாக மற்றும் தேவனுடைய கிரியையின் நலன்களுக்குப் பாதகமான எதையும் செய்யாதே. தேவனுடைய நாமம், தேவனின் சாட்சி, மற்றும் தேவனின் கிரியை ஆகியவற்றைப் பாதுகாப்பாயாக.

3) பணம், பொருட்கள், மற்றும் தேவனின் வீட்டில் இருக்கும் அனைத்துச் சொத்துக்களும் மனிதனால் கொடுக்கப்பட வேண்டிய காணிக்கைகள் ஆகும். மனிதனின் காணிக்கைகள் தேவன் அனுபவிப்பதற்கானவை, ஆதலால் இந்தக் காணிக்கைகளை ஆசாரியன் மற்றும் தேவன் மட்டுமே அனுபவிக்கலாம். தேவனே இந்தக் காணிக்கைகளை ஆசாரியனுக்குப் பகிர்ந்தளிக்கிறார்; அவற்றில் எந்த ஒரு பகுதியையும் அனுபவிக்க வேறு யாரும் தகுதியுள்ளவர்களோ அல்லது உரிமையுள்ளவர்களோ அல்ல. மனிதனின் எல்லா காணிக்கைகளும் (பணம் மற்றும் அனுபவிக்கக் கூடிய பொருட்கள்) தேவனுக்கு அளிக்கப்படுகின்றன, மனிதனுக்கு அல்ல, ஆகவே இந்த பொருட்களை மனிதன் அனுபவிக்கக் கூடாது; மனிதன் அவற்றை அனுபவித்தால், அது காணிக்கையைத் திருடுவது என்பதாகும். இதைச் செய்கிற எவன் ஒருவனும் யூதாஸே, ஏனெனில், யூதாஸ் ஒரு துரோகி மட்டுமல்லாமல், பணப் பையில் போட்டவற்றை தனக்காகவும் பயன்படுத்திக்கொண்டான்.

4) மனிதன் ஒரு சீர்கெட்ட மனநிலையைக் கொண்டவன் மற்றும் உணர்ச்சிகளால் ஆட்டிப்படைக்கப்படுகிறவன். இவ்வாறிருக்க, தேவனை சேவிக்கும் வேளையில் உடன் யாரும் இல்லாதபோது ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக வேலை பார்க்கக்கூடாது. அவ்வாறு செய்வதாகக் கண்டுபிடிக்கப்படும் யார் ஒருவரும் விதிவிலக்கின்றி வெளியேற்றப்படுவார்.

5) தேவனைக் குறித்து நியாயந்தீர்க்கவோ அல்லது தேவன் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் குறித்து சாதாரணமாக விவாதிக்கவோ கூடாது. மனிதன் செய்யவேண்டியது போல் செய்யுங்கள், மேலும் மனிதன் பேசவேண்டியது போல் பேசுங்கள், மற்றும் வரம்புகளை மீறவோ எல்லைகளைக் கடக்கவோ வேண்டாம். தேவனின் மனநிலையைப் புண்படுத்தும் எதையும் தவிர்க்க உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள் மற்றும் எங்கு அடியெடுத்து வைக்கும்போதும் கவனமாக இருங்கள்.

6) மனிதனால் செய்யப்பட வேண்டியவற்றைச் செய், உன் கடமைகளை நிறைவேற்று, உன் பொறுப்புகளை நிறைவேற்று, மற்றும் கடமையைக் கடைபிடி. நீ தேவனை விசுவாசிக்கிறபடியால் நீ தேவனின் கிரியைக்கு உன் பங்களிப்பை வழங்க வேண்டும்; இல்லையென்றால், தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும், பானம் பண்ணவும் உனக்குத் தகுதி இல்லை, மேலும் தேவனுடைய வீட்டில் வாழ்வும் தகுதியற்றவன்.

7) சபையின் கிரியை மற்றும் காரியங்களில், தேவனுக்குக் கீழ்ப்படிவதோடல்லாமல், ஒவ்வொன்றிலும் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படும் மனிதனின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். இலேசான மீறுதல் கூட ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ஆகும். கீழ்ப்படிதலில் முழுமையுள்ளவர்களாக இருங்கள், மேலும் சரியா தவறா என்று பகுத்தாரய வேண்டாம்; எது சரி அல்லது தவறு என்பது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது. நீங்கள் முழுமையான கீழ்படிதலிலேயே அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

8) தேவனை விசுவாசிக்கிறவர்கள் தேவனுக்குக் கீழ்படிந்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்; யாரொருவரையும் பெருமைப்படுத்தாதே அல்லது நோக்கிப்பார்க்காதே; தேவனை முதலாவதாகவும், நீ நோக்கிப்பார்ப்பவரை இரண்டாவதாகவும், உன்னை மூன்றாவதாகவும் வைக்காதே. உன் இருதயத்தில் யாரொருவரும் இடம்பெறக் கூடாது, மற்றும் நீ ஆட்களை தேவனோடு வைத்தோ அலலது அவருக்கு இணையாகவோ—குறிப்பாக நீ போற்றுபவர்களை—கருதக் கூடாது. இது தேவனால் பொறுத்துக்கொள்ள முடியாதது ஆகும்.

9) சபையின் கிரியையில் உன் சிந்தனைகளை வை. உன் சொந்த மாம்சத்தின் கண்ணோட்டங்களை ஒதுக்கி வை, குடும்ப விஷயங்கள் குறித்துத் தீர்க்கமாக இரு, தேவனின் கிரியைகளுக்கு முழு இருதயத்தோடு உன்னை அர்ப்பணி, தேவனின் கிரியைக்கு முதலிடம் கொடுத்து உன் சொந்த வாழ்க்கையை இரண்டாம் பட்சமாக வை. இதுவே ஒரு பரிசுத்தவானுக்குரிய கண்ணியமாகும்.

10) விசுவாசத்தில் இல்லாத உறவுகளை (உன் குழந்தைகள், உன் கணவன் அல்லது மனைவி, உன் சகோதரிகள் அல்லது உன் பெற்றோர்கள், போன்றோர்) கட்டாயப்படுத்தி சபைக்குள் கொண்டுவரக் கூடாது. தேவனின் வீட்டில் உறுப்பினர்களுக்குப் பஞ்சமில்லை, மேலும் பயனற்ற மக்களால் அதன் எண்ணிக்கையை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. சந்தோஷமாக விசுவாசிக்காத எவரையும் சபைக்குள் வழிநடத்தக்கூடாது. இந்தக் கட்டளை எல்லா மக்களுக்குமானது. நீங்கள் சரிபார்த்து, கண்காணித்து, இந்த விஷயம் குறித்து ஒருவருக்கொருவர் நினைவூட்ட வேண்டும்; யாரும் இதை மீறக்கூடாது. விசுவாசத்தில் இல்லாத உறவினர் யாரும் தயக்கத்தோடு சபைக்குள் வந்தாலும், அவர்களுக்குப் புத்தகங்களோ அல்லது ஒரு புதுப் பெயரோ கொடுக்கக் கூடாது; இத்தகையவர்கள் தேவனின் வீட்டார் இல்லை, மேலும் தேவைப்படும் எந்த வழியிலும் அவர்கள் சபைக்குள் நுழைவது தடுக்கப்பட வேண்டும். பிசாசுகளின் ஆக்கிரமிப்பால் சபைக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நீதான் வெளியேற்றப்படுவாய் அல்லது உன் மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மொத்தத்தில், இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு, நீ பொறுப்பற்றும் நடந்துகொள்ளக் கூடாது அல்லது அதை பயன்படுத்தித் தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக்கொள்ளவும் கூடாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும் என்பதிலிருந்து

600. ஜனங்கள் செய்ய வேண்டிய பல கடமைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதைத்தான் ஜனங்கள் கடைப்பிடிக்க வேண்டும், இதைத்தான் அவர்கள் முன்னெடுக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் செய்ய வேண்டியதைப் பரிசுத்த ஆவியானவரே செய்ய விட்டுவிடுங்கள்; மனிதன் அதில் எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாது. மனிதனால் செய்யப்பட வேண்டியதை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும், அதில் பரிசுத்த ஆவியானவருக்கு எந்த தொடர்புமில்லை. இது மனிதனால் செய்யப்பட வேண்டியதைத் தவிர வேறொன்றுமில்லை, பழைய ஏற்பாட்டில் நியாயப் பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதைப் போலவே இவை கட்டளைகளாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இப்போது நியாயப் பிரமாணத்தின் யுகமாக இல்லாது இருந்தாலும், நியாயப் பிரமாணத்தின் யுகத்தில் உரைக்கப்பட்ட வார்த்தைகளைப் போலவே பல வார்த்தைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியின் தொடுதலை நம்பியதால் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, மாறாக, அவை மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. உதாரணமாக: நடைமுறைத் தேவனின் கிரியை குறித்து நீங்கள் தீர்ப்பு வழங்கக்கூடாது. தேவனால் சாட்சியமளிக்கப்படும் மனிதனை நீங்கள் எதிர்க்கக்கூடாது. தேவனுக்கு முன்பாக, நீங்கள் உங்கள் இடத்தைப் பற்றிக்கொண்டு, நெறி தவறாமல் இருக்கவேண்டும். நீங்கள் பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும், உங்கள் வார்த்தைகளும் செயல்களும் தேவனால் சாட்சியமளிக்கப்பட்ட மனிதனின் ஆயத்தங்களைப் பின்பற்ற வேண்டும். தேவனின் சாட்சியத்தை நீங்கள் மகிமைப்படுத்த வேண்டும். தேவனின் கிரியையும் அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளையும் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. தேவனுடைய உபதேசங்களின் தொனியையும் நோக்கங்களையும் நீங்கள் பாவனை செய்யக்கூடாது. வெளிப்படையாக, தேவனால் சாட்சியமளிக்கப்படும் மனிதனைப் பகிரங்கமாக எதிர்க்கும் எதையும் நீங்கள் செய்யக்கூடாது. இதுபோல மேலும் பல. இவை ஒவ்வொரு மனிதரும் கடைப்பிடிக்க வேண்டியவை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “புதிய காலத்திற்கான கட்டளைகள்” என்பதிலிருந்து

601. இன்று, பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதை விட மனிதனுக்கு மிக முக்கியமானது எதுவுமில்லை: உங்கள் கண்களுக்கு முன்பாக நிற்கும் தேவனை இனிய வார்த்தைகளால் ஏமாற்றவோ, அவரிடமிருந்து எதையும் மறைக்கவோ நீங்கள் கட்டாயமாக முயற்சிக்கக்கூடாது. உங்கள் முன் உள்ள தேவனுக்கு முன்பாக இழிவான அல்லது அகங்காரமான வார்த்தையைச் சொல்லக்கூடாது. தேவனின் நம்பிக்கையைப் பெறுவதற்காகத் தேன் போன்ற இனிமையான வார்த்தைகளாலும் நியாயமான பேச்சுகளாலும், உங்கள் கண்களுக்கு முன்பாக தேவனை வஞ்சிக்கக்கூடாது. நீங்கள் தேவனுக்கு முன்பாக பயபக்தியின்றி செயல்படக்கூடாது. தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் அனைத்திற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அவருடைய வார்த்தைகளைத் தடுக்கவோ, எதிர்க்கவோ, வாதிடவோ கூடாது. தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் வார்த்தைகளை உங்களுக்குத் தகுந்தமாதிரி, நீங்கள் மொழி பெயர்க்கக்கூடாது. துன்மார்க்கரின் அக்கிரமத் தந்திரங்களுக்கு நீங்கள் இரையாகிவிடாமல் இருக்க, உங்கள் நாவினைக் காக்க வேண்டும். தேவனால் உங்களுக்காக அமைக்கப்பட்ட எல்லைகளை மீறுவதைத் தவிர்க்க உங்கள் அடிச்சுவடுகளைப் பாதுகாக்க வேண்டும். நீ மீறினால், இது உன்னைத் தேவனின் நிலையில் நின்று, இறுமாப்பாகவும் பகட்டாகவும் பேசும் வார்த்தைகளை உருவாக்கக் காரணமாகிறது, இதனால் நீ தேவனால் வெறுக்கப்படுவாய். தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் வார்த்தைகளை நீ கவனக் குறைவாகப் பரப்பக்கூடாது அவ்வாறு செய்தால் பிறர் உன்னைப் பரியாசம் பண்ணுவார்கள், பிசாசுகள் உன்னை மூடராக்கும். இன்றைய தேவனின் அனைத்து கிரியைகளையும் நீ கடைப்பிடிக்க வேண்டும். நீ அதைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், நீ அது குறித்து தீர்ப்பளிக்கக்கூடாது; நீங்கள் செய்ய வேண்டியது, தேடிச்சென்று ஐக்கியம் கொள்வதாகும். எந்தவொரு மனிதனும் தேவனை ஆரம்பநிலையிலே மீறக்கூடாது. மனிதனின் நிலையில் இருந்து இன்றைய தேவனைச் சேவிப்பதைத் தவிர வேறு எதுவும் நீ செய்ய முடியாது. மனிதனின் நிலையிலிருந்து இன்றைய தேவனுக்கு நீ உபதேசிக்க முடியாது—அவ்வாறு செய்வது தவறான வழிகாட்டலாகும். தேவனால் சாட்சியமளிக்கப்பட்ட மனிதனின் இடத்தில் யாரும் நிற்கக்கூடாது; உன் வார்த்தைகள், செயல்கள் மற்றும் உள்ளார்ந்த எண்ணங்களில், நீ மனிதனின் நிலையில் நிற்கிறாய். இதை மனிதனின் பொறுப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும், அதை யாரும் மாற்றக்கூடாது; அவ்வாறு முயற்சிப்பது நிர்வாகம் சார்ந்த ஆணைகளை மீறுவதாகும். இது அனைவராலும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “புதிய காலத்திற்கான கட்டளைகள்” என்பதிலிருந்து

603. எனது நியாயத்தீர்ப்பு அனைவருக்கும் வருகிறது, எனது நிர்வாக ஆணைகள் அனைவரையும் தொடுகிறது, எனது வார்த்தைகளும் எனது ஆள்தத்துவமும் அனைவருக்கும் வெளிப்படுத்தப்படுகின்றன. எனது ஆவியானவரின் மகத்தான கிரியைக்கான நேரம் இது (இந்த நேரத்தில், ஆசீர்வதிக்கப்பட இருப்பவர்களும், துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் வேறுபடுத்தப்படுகிறார்கள்). எனது வார்த்தைகள் வெளிவந்தவுடன், ஆசீர்வதிக்கப்பட இருப்பவர்களையும், துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க இருப்பவர்களையும் நான் வேறுபடுத்தியிருப்பேன். இவையனைத்தும் தெளிவாக இருக்கின்றன, மேலும் இதையெல்லாம் என்னால் ஒரே பார்வையில் பார்க்க முடிகிறது. (எனது மனுஷத்தன்மையைப் பொறுத்து நான் இதைச் சொல்கிறேன்; ஆகவே, இந்த வார்த்தைகள் எனது முன்னறிவிப்புக்கும் நான் தேர்ந்தெடுப்பதற்கும் முரணாக இருப்பதில்லை.) நான் மலைகள், ஆறுகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மத்தியிலும் சுற்றித் திரிகிறேன், பிரபஞ்சத்தின் இடைவெளிகளில் ஒவ்வொரு இடத்தையும் உற்று நோக்கி சுத்தப்படுத்துகிறேன், இதனால் அந்த அசுத்தமான இடங்களும் அந்த ஒழுங்கற்ற தேசங்களும் என அனைத்தும் இல்லாமல்போய், எனது வார்த்தைகளின் விளைவாக ஒன்றுமில்லாமல் எரிக்கப்படும். என்னைப் பொறுத்தவரை எல்லாம் எளிதானதுதான். உலகின் அழிவுக்கு நான் முன்குறித்த நேரமானது இதுதான் என்றிருந்தால், ஒரு வார்த்தையின் உச்சரிப்பில் உலகை என்னால் விழுங்க முடியும். எனினும், இப்போது அதற்கான நேரம் இல்லை. எனது திட்டமானது தொந்தரவு இல்லாமலும், எனது நிர்வாகமானது தடைபடாமலும் இருக்க நான் இந்த கிரியையைச் செய்வதற்கு முன்பு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். இதை நியாயமாக எப்படி செய்வது என்று எனக்குத் தெரியும்: நான் எனது ஞானத்தைக் கொண்டிருக்கிறேன், மேலும் நான் என்னுடைய சொந்த ஏற்பாடுகளையும் கொண்டிருக்கிறேன். ஜனங்கள் ஒரு விரலைக்கூட அசைக்கக் கூடாது; எனது கையால் கொலையுண்டு போகாமல் கவனமாக இருங்கள். இது ஏற்கனவே எனது நிர்வாக ஆணைகளுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. இதிலிருந்து எனது நிர்வாக ஆணைகளின் கடுமையையும், அவற்றின் பின்னால் உள்ள கொள்கைகளையும் என இதன் இரண்டு பக்கங்களையும் உங்களால் பார்க்க முடிகிறது: ஒருபுறம், எனது சித்தத்திற்கு இணங்காத மற்றும் எனது நிர்வாக ஆணைகளை மீறும் அனைவரையும் நான் கொல்கிறேன்; மறுபுறம், எனது நிர்வாக ஆணைகளை மீறும் அனைவரையும் எனது கடுங்கோபத்தால் சபிக்கிறேன். இந்த இரண்டு அம்சங்களும் இன்றியமையாதவையாகும், மேலும் இவையே எனது நிர்வாக ஆணைகளுக்குப் பின்னால் இருக்கும் நிர்வாகக் கொள்கைகளாகவும் இருக்கின்றன. ஒருவன் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், இந்த இரண்டு கொள்கைகளின்படி எல்லோரும் உணர்ச்சியற்ற நிலையில் கையாளப்படுகிறார்கள். எனது நீதியையும், எனது மகத்துவத்தையும், எனது கோபாக்கினையையும் காட்ட இதுவே போதுமானது, இது எல்லா பூமிக்குரிய விஷயங்களையும், எல்லா உலக விஷயங்களையும், எனது சித்தத்திற்கு இணங்காத எல்லாவற்றையும் எரித்துப்போடும். எனது வார்த்தைகளில் இரகசியங்கள் மறைந்திருக்கின்றன, எனது வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களும் இருக்கின்றன. இவ்வாறு, மனுஷ கருத்துக்களின்படி, மற்றும் மனுஷ மனதில், எனது வார்த்தைகள் என்றென்றும் புரிந்துகொள்ள முடியாதவையாக இருக்கின்றன, எனது இருதயமும் என்றென்றும் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அதாவது, நான் மனுஷரை அவர்களின் கருத்துக்களிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் வெளியேற்ற வேண்டும். இது எனது நிர்வாகத் திட்டத்தின் மிக முக்கியமான விஷயமாகும். எனது முதற்பேறான குமாரர்களை ஆதாயப்படுத்துவதற்கும் நான் செய்ய விரும்பும் காரியங்களைச் செய்வதற்கும் நான் இதைச் செய்தாக வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 103” என்பதிலிருந்து

604. பழைய உலகம் தொடர்ந்து இருக்கும் வரை, நான் அதன் தேசங்களின் மீது என் கோபத்தை வெளிப்படுத்துவேன், பிரபஞ்சம் முழுவதும் எனது நிர்வாக ஆணைகளை வெளிப்படையாக பிரகடனம் பண்ணுவேன், அவற்றை மீறுபவர் எவராக இருந்தாலும் அவர் தண்டனை பெறுகிறாரா என்று பார்ப்பேன்:

நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக் கேட்கிறார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்க்கிறார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனித காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றை புதியதாக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்குமாய் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லாத் தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது பிரவாகத்துக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்த சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26” என்பதிலிருந்து

முந்தைய: D. தேவனே சகல காரியங்களுக்கும் ஜீவனின் ஆதாரமாக இருக்கிறார் என்பது குறித்து

அடுத்த: XIII. தேவனுடைய தேவைகள், அறிவுரைகள், ஆறுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக