D. தேவனே சகல காரியங்களுக்கும் ஜீவனின் ஆதாரமாக இருக்கிறார் என்பது குறித்து
583. ஜீவனுக்கான வழி என்பது யாரும் வைத்திருக்கக்கூடிய ஏதோ ஒன்றல்ல, யாரும் எளிதில் அடையக்கூடிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், ஜீவனானது தேவனிடமிருந்து மாத்திரமே வர இயலும். அதாவது, ஜீவன் என்ற சாராம்சத்தை தேவன் மாத்திரமே வைத்திருக்கிறார். தேவனிடம் மாத்திரமே ஜீவனுக்கான வழி உள்ளது. ஆகையால், தேவன் மாத்திரமே ஜீவனின் பிறப்பிடமாகவும், ஜீவன் என்னும் ஜீவத்தண்ணீர் எப்போதும் பாய்ந்தோடும் ஊற்றாகவும் விளங்குகிறார். தேவன் உலகை சிருஷ்டித்தது முதலே, ஜீவனின் ஜீவ ஆற்றல் தொடர்பான பல கிரியைகளைச் செய்துள்ளார், மனுஷனுக்கு ஜீவனைக் கொண்டுவரும் பல கிரியைகளைச் செய்துள்ளார், மேலும் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு பெரிய விலைகிரயத்தைச் செலுத்தியுள்ளார். ஏனென்றால், தேவனே நித்திய ஜீவனாக இருக்கிறார், மேலும் தேவனே மனிதன் உயிர்த்தெழுவதற்கான வழியாகவும் திகழ்கிறார். தேவன் ஒருபோதும் மனிதனுடைய இருதயத்திலிருந்து விலகி இருப்தில்லை. அவர் எப்பொழுதும் மனுஷர்கள் மத்தியிலேயே வாசம்பண்ணுகிறார். அவர் மனுஷனுடைய ஜீவனின் உந்துசக்தியாகவும், மனித ஜீவியத்தின் வேராகவும், பிறப்புக்குப் பிறகு மனுஷனுடைய ஜீவியத்தின் வளமான ஆதாரமாகவும் விளங்கி வருகிறார். அவர் மனுஷனை மறுபடியும் பிறக்கச் செய்கிறார், மேலும் அவனது ஒவ்வொரு பாத்திரத்தையும் உறுதியுடன் வாழ அவனுக்கு உதவுகிறார். அவரது வல்லமைக்கும் அவரது அழிக்கமுடியாத ஜீவ ஆற்றலுக்கும் நன்றி. மனுஷன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறான், இது முழுவதும் தேவனுடைய ஜீவனின் வல்லமையானது மனுஷனுடைய ஜீவியத்தின் முக்கிய ஆதாரமாக திகழ்ந்து வருகிறது, அதற்காக எந்த சாதாரண மனுஷனும் செலுத்தாத விலைக்கிரயத்தை தேவன் செலுத்தியுள்ளார். தேவனுடைய ஜீவ வல்லமையால் எந்த வல்லமையையும் மேற்கொள்ள இயலும்; மேலும், இது எந்த வல்லமையையும் விஞ்சியிருக்க இயலும். அவரது ஜீவன் நித்தியமானது, அவருடைய வல்லமை இயற்கைக்கு அப்பாற்பட்டது. அவரது ஜீவ ஆற்றலை எந்தவொரு சிருஷ்டியாலும் அல்லது எதிரி சக்தியாலும் அடக்கி ஆட்கொள்ள முடியாது. காலம் அல்லது இடத்தைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய ஜீவ வல்லமையானது ஜீவிக்கிறது மற்றும் அதன் அற்புதமான பிரகாசத்தை பிரகாசிக்கிறது. வானமும் பூமியும் மாபெரும் மாற்றங்களுக்கு உட்படலாம், ஆனால் தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் மாறாததாக இருக்கிறது. சகல காரியங்களும் கடந்து போகலாம், தேவனே சகல காரியங்களும் இருப்பதற்கான ஆதாரமாகவும், அவை இருப்பதற்கான வேராகவும் இருப்பதனால், தேவனுடைய ஜீவன் இன்னும் நிலைத்திருக்கும். மனுஷனுடைய ஜீவன் தேவனிடமிருந்து பிறக்கிறது. வானம் இருப்பதற்கு தேவனே காரணம், பூமி இருப்பது தேவனுடைய ஜீவனின் வல்லமையிலிருந்து உருவாகிறது. ஜீவனுள்ள எந்தவொரு பொருளும் தேவனுடைய வல்லமையை விஞ்சியிருக்க இயலாது, மேலும் ஜீவனுள்ள எதுவும் தேவனுடைய அதிகாரத்தின் ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியாது. இவ்விதமாக, ஒவ்வொருவரும் தாங்கள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வேண்டும். ஒவ்வொருவரும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ் வாழ வேண்டும். அவருடைய கரங்களிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து
584. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்ததிலிருந்தே, அவை ஒழுங்காகவும், அவர் பரிந்துரைத்த விதிகளின்படியும் செயல்பட்டு வருகின்றன. அவருடைய பார்வையின் கீழ், அவருடைய ஆட்சியின் கீழ், மனிதகுலம் தப்பிப்பிழைத்திருக்கிறது, எல்லா நேரங்களிலும் ஒரு ஒழுங்கான வழியில் வளர்ந்து வருகிறது. இந்த விதிகளை மாற்றவோ அழிக்கவோ எதுவும் இல்லை. தேவனுடைய ஆட்சியின் காரணமாகவே எல்லா ஜீவன்களும் பெருக முடியும் மற்றும் அவருடைய ஆட்சி மற்றும் நிர்வாகத்தினால் தான் எல்லா ஜீவன்களும் ஜீவிக்க முடியும். அதாவது தேவனுடைய ஆட்சியின் கீழ் அனைத்து ஜீவன்களும் உருவாகின்றன, செழிக்கின்றன, மறைகின்றன மற்றும் ஒழுங்கான முறையில் மறுஜீவன் எடுக்கின்றன. வசந்த காலம் வரும்போது, தூறல் மழை புதிய பருவத்தின் உணர்வைக் கொண்டு வந்து பூமியை ஈரமாக்குகிறது. தரை ஈரமாகத் தொடங்குகிறது. புல் மண்ணின் வழியே மேலேறி, முளைக்கத் தொடங்குகிறது. அதே நேரத்தில் மரங்கள் படிப்படியாக பச்சை நிறமாக மாறுகின்றன. இந்த ஜீவன்கள் அனைத்தும் பூமிக்கு புதிய வல்லமையை கொண்டு வருகின்றன. எல்லா ஜீவன்களும் உருவாகி வளருவதைப் பார்க்கும்போது அதுதான் தெரிகிறது. வசந்தத்தின் அரவணைப்பை உணரவும், புதிய ஆண்டைத் தொடங்கவும் அனைத்து வகையான மிருகங்களும் தங்கள் வளைகளிலிருந்து இருந்து வெளியே வருகின்றன. அனைத்து ஜீவன்களும் கோடைக்காலத்தில் வெப்பத்தில் மூழ்கி, பருவத்தால் கொண்டு வரப்படும் அரவணைப்பை அனுபவிக்கின்றன. அவை வேகமாக வளருகின்றன. மரங்கள், புல் மற்றும் அனைத்து வகையான தாவரங்களும் இறுதியாக பூத்து, கனிகளைத் தரும் வரை மிக வேகமாக வளருகின்றன. மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவன்களும் கோடையில் பரபரப்பாக இருக்கின்றன. இலையுதிர் காலத்தில், மழையானது இலையுதிர் காலத்தின் குளிர்ச்சியைக் கொண்டுவருகிறது மற்றும் அனைத்து வகையான ஜீவன்களும் அறுவடை காலத்தின் வருகையை உணரத் தொடங்குகின்றன. எல்லா ஜீவன்களும் கனிகளைத் தாங்குகின்றன மற்றும் குளிர்காலத்திற்கான ஆயத்தத்தில் ஆகாரத்தைப் பெறுவதற்காக மனிதர்கள் இத்தகைய பழங்களை அறுவடை செய்யத் தொடங்குகிறார்கள். குளிர்காலத்தில், அனைத்து ஜீவன்களும் படிப்படியாக அமைதியாக, குளிர்ந்த காலநிலை அமைந்தவுடன் ஓய்வெடுக்க தொடங்குகின்றன மற்றும் இந்த பருவத்தில் ஜனங்களும் ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள். தேவனால் நிறுவப்பட்ட விதிகளின்படி ஒவ்வொரு பருவமாக, வசந்த காலத்தில் இருந்து கோடைகாலமாக, இலையுதிர் காலமாக, குளிர் காலமாக மாறும் மாற்றம் நிகழ்கின்றன. அவர் இந்த விதிகளைப் பயன்படுத்தி எல்லாவற்றையும், மனிதகுலத்தையும் வழிநடத்துகிறார் மற்றும் மனிதகுலத்திற்காக ஒரு வளமான மற்றும் வண்ணமயமான ஜீவித முறையை வகுத்துள்ளார். மாறுபட்ட வெப்பநிலை மற்றும் பருவங்களைக் கொண்ட பிழைப்பதற்கான சூழலை ஆயத்தம் செய்கிறார். எனவே, பிழைப்பதற்கான இத்தகைய ஒழுங்கான சூழலுக்குள், மனிதர்கள் ஒரு ஒழுங்கான வழியில் ஜீவிக்கவும் பெருகவும் முடியும். மனிதர்களால் இந்த விதிகளை மாற்ற முடியாது, எந்தவொரு மனிதராலும் அல்லது ஜீவனாலும் அவற்றை உடைக்க முடியாது. கடல்கள் நிலங்களாக மாறியுள்ளன, அதே சமயம் நிலங்கள் கடல்களாக மாறிவிட்டன. இவ்வாறு எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இந்த விதிகள் தொடர்ந்து இருக்கின்றன. தேவன் இருப்பதால், அவருடைய ஆட்சி மற்றும் அவரது நிர்வாகத்தின் காரணமாக அவை இருக்கின்றன. இத்தகைய ஒழுங்கான, பெரிய அளவிலான சூழலுடன், ஜனங்களின் ஜீவிதமானது இந்த கட்டளைகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டதாக இருக்கிறது. இந்த விதிகளின் கீழ் தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் வளர்க்கப்பட்டனர் மற்றும் அடுத்தடுத்து ஒவ்வொரு தலைமுறையாக அவற்றின் கீழ் பிழைத்துள்ளனர். பிழைப்பதற்கான இந்த ஒழுங்கான சூழலையும், தலைமுறை தலைமுறையாக தேவன் உருவாக்கிய பல விஷயங்களையும் ஜனங்கள் அனுபவித்துள்ளனர். இத்தகைய விதிகள் இயல்பானவை என்று ஜனங்கள் உணர்ந்தாலும், அவமதிப்புடன் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டாலும், இந்த விதிகளை தேவன் திட்டமிடுகிறார், இந்த விதிகளை ஆளுகிறார் என்று அவர்கள் உணர முடியாவிட்டாலும், இவ்வாறு எதுவாக இருந்தாலும், தேவன் எப்போதும் இந்த மாறாத கிரியையில் ஈடுபடுகிறார். மனிதகுலம் ஜீவிக்க வேண்டும், எனவே மாறாத இந்த கிரியையில் அவரது நோக்கம் மனிதகுலத்தின் பிழைப்பாக இருக்கிறது.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IX” என்பதிலிருந்து
585. எல்லாவற்றின் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் விதிகளை தேவன் கட்டளையிடுகிறார். எல்லாவற்றின் உயிர்வாழ்வையும் நிர்வகிக்கும் விதிகளை அவர் கட்டளையிடுகிறார். அவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார். அவை இரண்டையும் வலுப்படுத்துவதற்கும் ஒருவருக்கொருவர் சார்ந்து இருப்பதற்கும் ஏற்ப அமைக்கிறார். இதனால் அவை அழிந்து போகாமல் அல்லது மறைந்து விடாமல் இருக்கிறது. இவ்வாறு மட்டுமே மனிதகுலம் ஜீவிக்க முடியும். அத்தகைய சூழலில் அவர்கள் தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் ஜீவிக்க முடியும். இந்த செயல்பாட்டு விதிகளில் தேவன் எஜமானர், அதில் யாரும் தலையிட முடியாது மற்றும் யாராலும் அவற்றை மாற்றவும் முடியாது. இந்த விதிகளை தேவன் மட்டுமே அறிவார். தேவன் மட்டுமே அவற்றை நிர்வகிக்கிறார். தேவன் படைத்தபோது, மரங்கள் எப்போது முளைக்கும், எப்போது மழை பெய்யும், தாவரங்களுக்கு பூமி எவ்வளவு தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொடுக்கும், எந்த பருவத்தில் இலைகள் விழும், எந்த பருவத்தில் மரங்கள் பலனளிக்கும், மரங்களுக்கு சூரிய ஒளி எவ்வளவு ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும், சூரிய ஒளியால் உணவளித்தபின் மரங்கள் எதை வெளியேற்றும் என இவை அனைத்தையும்யாரும் மாற்ற முடியாத விதிகளாக தேவன் முன்னரே தீர்மானித்தார். தேவன் படைத்த விஷயங்கள், உயிருள்ளவையாக இருந்தாலும், மனிதனுடைய பார்வையில், உயிரற்றவையாக இருந்தாலும், அவைன் தேவனுடைய கரத்தில் இருக்கிறது, அவர் அவற்றைக் அங்கே கட்டுப்படுத்தி அவற்றை ஆளுகிறார். இந்த விதிகளை யாரும் மாற்றவோ உடைக்கவோ முடியாது. தேவன் எல்லாவற்றையும் படைத்தபோது, பூமி இல்லாமல், மரம் வேர்களை அமைக்கவும், முளைத்து வளரவும் முடியாது என்றும், மரங்கள் இல்லையென்றால் பூமி வறண்டுவிடும் என்றும், மரம் பறவைகளின் வீடாகவும், அவை காற்றிலிருந்து விலகி தஞ்சமடையக்கூடிய இடமாகவும் மாற வேண்டும் என்றும் அவர் முன்னரே தீர்மானித்தார். ஒரு மரம் சூரிய ஒளி இல்லாமல் ஜீவிக்க முடியுமா? (இல்லை) அது பூமியுடன் மட்டுமே ஜீவிக்க முடியாது. இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதகுலத்திற்கானவை, அவை மனிதகுலத்தின் பிழைப்புக்குரியவை. மரத்திலிருந்து, மனிதன் புதிய காற்றைப் பெறுகிறான். மனிதன் பூமியில் ஜீவிக்கிறான். மரத்தால் அது பாதுகாக்கப்படுகிறது. மனிதன் சூரிய ஒளி அல்லது பல்வேறு உயிரினங்கள் இல்லாமல் ஜீவிக்க முடியாது. இந்த உறவுகள் சிக்கலானவை என்றாலும், ஒன்றையொன்று பலப்படுத்துவதற்காக, ஒன்றையொன்று சார்ந்து ஒன்றாக இருப்பதற்காக எல்லாவற்றையும் நிர்வகிக்கும் விதிகளை தேவன் படைத்தார் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் உருவாக்கிய ஒவ்வொரு பொருளுக்கும் மதிப்பு மற்றும் முக்கியத்துவம் உள்ளது. தேவன் முக்கியத்துவம் இல்லாமல் எதையாவது படைத்திருந்தால், அது மறைந்துவிடும். எல்லாவற்றிற்கும் வழங்க தேவன் பயன்படுத்தும் முறைகளில் இதுவும் ஒன்றாகும்.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VII” என்பதிலிருந்து
586. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, அவற்றை சமநிலைப்படுத்தவும், மலைகள் மற்றும் ஏரிகள், தாவரங்கள் மற்றும் அனைத்து வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் ஜீவித நிலைமைகளை சமப்படுத்தவும் எல்லா வகையான முறைகளையும் வழிகளையும் பயன்படுத்தினார். அவர் நிறுவிய கட்டளைகளின் கீழ் அனைத்து வகையான ஜீவன்களையும் ஜீவிக்கவும் பெருகவும் அனுமதிப்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. சிருஷ்டிப்பின் எந்தவொரு விஷயமும் இந்த கட்டளைகளுக்கு வெளியே செல்ல முடியாது மற்றும் கட்டளைகளை உடைக்க முடியாது. இத்தகைய அடிப்படை சூழலுக்குள் மட்டுமே மனிதர்கள் பாதுகாப்பாக தலைமுறை தலைமுறையாக ஜீவிக்கவும் பெருகவும் முடியும். எந்தவொரு ஜீவனும் தேவனால் நிறுவப்பட்ட அளவு அல்லது நோக்கத்திற்கு அப்பால் சென்றால் அல்லது அது அவர் கட்டளையிட்ட வளர்ச்சி விகிதம், இனப்பெருக்க வேகம் அல்லது எண்ணிக்கையை மீறினால், மனிதகுலத்தின் பிழைப்பதற்கான சூழல் பல்வேறு அளவிலான அழிவை சந்திக்கும். அதே நேரத்தில், மனிதகுலத்தின் பிழைப்பு அச்சுறுத்தப்படும். ஒரு வகை ஜீவன்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தால், அது ஜனங்களின் ஆகாரத்தை கொள்ளையடிக்கும், ஜனங்களின் நீர் ஆதாரங்களை அழிக்கும் மற்றும் அவர்களுடைய தாயகங்களை அழிக்கும். அந்த வகையில், மனிதகுலத்தின் இனப்பெருக்கம் அல்லது ஜீவிக்கும் நிலை உடனடியாக பாதிக்கப்படும். … ஒரு வகை அல்லது பல வகையான ஜீவன்கள் அவற்றின் பொருத்தமான எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், காற்று, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் மனிதகுலத்தின் பிழைப்பதற்கான இடத்திற்குள் காற்றின் கலவை கூட விஷமாகும் மற்றும் பல்வேறு அளவுகளுக்கு அழிக்கப்படும். இந்த சூழ்நிலைகளில், மனிதர்களின் பிழைப்பும், விதியும், இந்த சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்படும். எனவே, இந்த சமநிலைகளை இழந்தால், ஜனங்கள் சுவாசிக்கும் காற்று பாழாகிவிடும், அவர்கள் குடிக்கும் நீர் மாசுபடும், அவர்களுக்குத் தேவையான வெப்பநிலையும் மாறும் மற்றும் மாறுபட்ட அளவுகளில் பாதிக்கப்படும். அது நடந்தால், இயல்பாகவே மனிதகுலத்திற்கு சொந்தமான பிழைப்பதற்கான சூழல்கள் மகத்தான தாக்கங்களுக்கும் சவால்களுக்கும் உட்படும். மனிதர்களின் பிழைப்பதற்கான அடிப்படை சூழல்கள் அழிக்கப்பட்டுள்ள இத்தகைய சூழ்நிலையில், மனிதகுலத்தின் தலைவிதி மற்றும் வாய்ப்புகள் என்னவாக இருக்கும்? அது மிகவும் கடுமையான பிரச்சினை! ஏனென்றால், சிருஷ்டிப்பின் ஒவ்வொரு விஷயமும் மனிதகுலத்திற்கு எந்த காரணத்திற்காக இருக்கிறது என்பதை தேவன் அறிவார். அவர் உருவாக்கிய ஒவ்வொரு வகை பொருட்களின் பங்கு என்ன, ஒவ்வொரு விஷயமும் மனிதகுலத்திற்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அது மனிதகுலத்திற்கு எந்த அளவிற்கு பயனளிக்கிறது என்பதை தேவன் அறிவார். ஏனென்றால், தேவனுடைய இருதயத்தில் இவை அனைத்திற்கும் ஒரு திட்டம் உள்ளது மற்றும் அவர் சிருஷ்டித்த எல்லாவற்றின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் நிர்வகிக்கிறார், அதனால்தான் அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானதாகும். எனவே இனிமேல், தேவனுடைய சிருஷ்டிப்பின் விஷயங்களில் சில சுற்றுச்சூழல் நிகழ்வுகளை நீ கவனிக்கும்போதோ அல்லது தேவனுடைய சிருஷ்டிப்பு விஷயங்களுக்கிடையில் இயற்கையான சில கட்டளைகளை நீ கவனிக்கும்போதோ, தேவனால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விஷயத்தின் அவசியத்தையும் நீ இனி சந்தேகிக்க மாட்டாய். எல்லாவற்றிர்க்குமான தேவனுடைய ஏற்பாடுகள் மற்றும் மனிதகுலத்திற்கு வழங்குவதற்கான பல்வேறு வழிகள் குறித்து தன்னிச்சையான தீர்ப்புகளை வழங்க நீ இனி அறியாமை சொற்களைப் பயன்படுத்த மாட்டாய். தேவனுடைய சிருஷ்டிப்புகளின் எல்லா விஷயங்களுக்கும் நீ தன்னிச்சையான முடிவுகளுக்கு வரமாட்டாய்.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IX” என்பதிலிருந்து
587. சிருஷ்டிப்பின் எல்லா விஷயங்களும் அவற்றின் சொந்த கட்டளைகளை இழந்தால், அவை இனி இல்லாமல் போகும். எல்லாவற்றின் கட்டளைகளும் தொலைந்துவிட்டால், எல்லாவற்றிற்கும் மத்தியில் ஜீவிக்கும் ஜீவன்கள் ஜீவிக்க முடியாது. மனிதகுலம் பிழைப்புக்காக சார்ந்திருக்கும் சூழல்களையும் இழக்கும். மனிதகுலம் அதையெல்லாம் இழந்துவிட்டால், தலைமுறை தலைமுறையாக அது செய்து கொண்டிருப்பதைப் போல, செழித்து வளர்வதை அது தொடர முடியாது. இப்போது வரை மனிதர்கள் பிழைத்ததற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் வளர்வதற்கும், மனிதகுலம் வெவ்வேறு வழிகளில் வளர்வதற்கும் தேவன் சிருஷ்டிப்பு எல்லாவற்றையும் அவர்களுக்கு வழங்கியுள்ளார். தேவன் மனிதகுலத்தை வெவ்வேறு வழிகளில் வளர்த்து வருவதால் தான், இன்று வரை, மனிதகுலம் பிழைத்து வருகிறது. பிழைப்பதற்கு சாதகமான ஒரு நிலையான சூழல் மற்றும் இயற்கை கட்டளைகளுக்கு சிறப்பான சூழல் இருப்பதால், பூமியின் அனைத்து வகையான ஜனங்களும், அனைத்து வெவ்வேறு இனங்களும் தங்களது சொந்த குறிப்பிட்ட பகுதிகளுக்குள் ஜீவிக்க முடியும். இந்த பகுதிகளையோ அல்லது அவற்றுக்கிடையேயான எல்லைகளையோ தாண்டி யாரும் செல்ல முடியாது, ஏனென்றால் அவற்றை தேவன் வகுத்துள்ளார்.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IX” என்பதிலிருந்து
588. ஆவிக்குரிய உலகம் என்பது ஒரு முக்கியமான இடமாகும். பொருள் மயமான உலகத்திலிருந்து வேறுபட்டதாகும். அது முக்கியமானது என்று நான் ஏன் சொல்கிறேன்? இதைப் பற்றி விரிவாக விவாதிக்க உள்ளோம். ஆவிக்குரிய உலகின் இருப்பு மனிதகுலத்தின் பொருள் மயமான உலகத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய ஆதிக்கத்தில் மனிதனுடைய ஜீவன் மற்றும் மரணம் என்னும் சுழற்சியில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவே அதன் பங்காகும். அதன் இருப்பு முக்கியமானது என்பதும் காரணங்களில் ஒன்றாகும். அது ஐந்து புலன்களுக்கும் புரியாத ஒரு இடம் என்பதால், ஆவிக்குரிய உலகம் இருக்கிறதா இல்லையா என்பதை யாராலும் துல்லியமாக தீர்மானிக்க முடியாது. அதன் பல்வேறு செயல்பாடுகள் மனிதன் ஜீவிப்பதுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மனிதகுலத்தின் ஜீவித முறையும் ஆவிக்குரிய உலகத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அது தேவனுடைய ஆளுகையை உள்ளடக்கியது அல்லவா? அது உள்ளடக்குகிறது. நான் இதைச் சொல்லும்போது, நான் ஏன் இந்த தலைப்பைப் பற்றி விவாதிக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்கிறீர்கள்: ஏனென்றால் அது தேவனுடைய ஆளுகையையும் அவருடைய நிர்வாகத்தையும் பற்றியதாகும். அது போன்ற உலகில்—ஜனங்களுடைய கண்ணுக்குத் தெரியாத உலகில்—அதன் ஒவ்வொரு பரலோக அரசாணை, கட்டளை மற்றும் நிர்வாக அமைப்பு ஆகியவை பொருள் மயமான உலகின் எந்தவொரு தேசத்தின் கட்டளைகளுக்கும் அமைப்புகளுக்கும் மேலாக உள்ளன. இந்த உலகில் ஜீவிக்கும் எவரும் அவற்றை மீறத் துணிய மாட்டார்கள் அல்லது அவற்றை மீறமாட்டார்கள். தேவனுடைய ஆளுகை மற்றும் நிர்வாகத்துடன் அது தொடர்புடையதா? ஆவிக்குரிய உலகில், தெளிவான நிர்வாக ஆணைகள், தெளிவான பரலோக பிரமாணங்கள் மற்றும் தெளிவான கட்டளைகள் உள்ளன. வெவ்வேறு நிலைகளிலும், பல்வேறு பகுதிகளிலும், உதவியாளர்கள் தங்கள் கடமைகளை கண்டிப்பாக கடைப்பிடித்து, விதிகளையும் முறைமகளையும் கடைபிடிக்கின்றனர். ஏனென்றால் பரலோக கட்டளையை மீறுவதன் விளைவு என்ன என்பதை அவர்கள் அறிவார்கள். தேவன் தீமையை எவ்வாறு தண்டிக்கிறார், நன்மைக்கு எவ்வாறு பலன் அளிக்கிறார் என்பதையும், எல்லாவற்றையும் அவர் எவ்வாறு நிர்வகிக்கிறார், ஆட்சி செய்கிறார் என்பதையும் அவர்கள் தெளிவாக அறிவார்கள். மேலும், அவர் தனது பரலோக பிரமாணங்களையும் கட்டளைகளையும் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதை அவர்கள் தெளிவாகக் காண்கிறார்கள். மனிதகுலம் வசிக்கும் பொருள் மயமான உலகத்திலிருந்து இவை வேறுபட்டவையா? அவை உண்மையில் மிகவும் வேறுபட்டவையாகும். ஆவிக்குரிய உலகம் என்பது பொருள் மயமான உலகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகமாகும். பரலோக பிரமாணங்கள் மற்றும் கட்டளைகள் இருப்பதால், அது தேவனுடைய ஆளுகை, நிர்வாகம், மேலும், அவருடைய மனநிலை, அத்துடன் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் தேவனிடம் என்ன இருக்கிறது ஆகியவற்றை இது குறிக்கிறது.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் X” என்பதிலிருந்து
589. அவர் ஆவிக்குரிய உலகில் பல்வேறு பரலோக பிரமாணங்கள், ஆணைகள் மற்றும் அமைப்புகளை நிறுவியுள்ளார். இவை அறிவிக்கப்பட்டவுடன், அவை தேவனால் நிர்ணயிக்கப்பட்டபடி, ஆவிக்குரிய உலகில் பல்வேறு உத்தியோகப்பூர்வ பதவிகளில் உள்ள மனிதர்களால் மிகவும் கண்டிப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. ஒருவரும் அவற்றை மீறத் துணிய மாட்டார். எனவே, மனித உலகில் மனிதகுலத்தின் ஜீவ மரண சுழற்சியில், யாராவது ஒரு மிருகமாகவோ அல்லது மனிதனாகவோ மறுபிறவி எடுத்தாலும், இருவருக்கும் கட்டளைகள் உள்ளன. இந்த கட்டளைகள் தேவனிடமிருந்து வந்ததால், அவற்றை உடைக்க யாரும் துணிவதில்லை. அவற்றை உடைக்க யாராலும் முடியாது. தேவனுடைய இந்த ஆளுகையால் மற்றும் அத்தகைய கட்டளைகள் இருப்பதால் மட்டுமே, ஜனங்கள் பார்க்கும் பொருள் மயமான உலகம் நேர்த்தியானதாகவும் ஒழுங்காகவும் இருக்கிறது. தேவனுடைய இந்த ஆளுகையின் காரணமாகவே, மனிதர்கள் தங்களுக்கு முற்றிலும் கண்ணுக்குத் தெரியாத மற்ற உலகத்துடன் சமாதானமாக ஜீவிக்க முடிகிறது மற்றும் அதனுடன் இணக்கமாக ஜீவிக்க முடிகிறது—இவை அனைத்தும் தேவனுடைய ஆளுகை யிலிருந்து பிரிக்க முடியாதவையாகும். ஒரு மனிதனின் மாம்ச ஜீவிதம் முடிந்த பிறகும் ஆத்துமாவுக்கு உயிர் இருக்கிறது. எனவே, அது தேவனுடைய நிர்வாகத்தின் கீழ் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? ஆத்துமா எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து, எல்லா இடங்களிலும் ஊடுருவி, மனித உலகில் உள்ள ஜீவன்களுக்கும் தீங்கு விளைவிக்கும். இத்தகைய தீங்கு மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் செய்யப்படலாம்—இருப்பினும், முதலில் தீங்கடைவது ஜனங்கள் தான். அது நிகழ்ந்திருந்தால்—அத்தகைய ஆத்துமாவானது நிர்வாகம் இல்லாமல் இருந்திருந்தால், ஜனங்களுக்கு உண்மையிலேயே தீங்கு விளைவித்திருந்தால், உண்மையில் தீய காரியங்களைச் செய்திருந்தால்—இந்த ஆத்துமாவும் ஆவிக்குரிய உலகில் சரியாகக் கையாளப்படும்: விஷயங்கள் தீவிரமாக இருந்தால், ஆத்துமா விரைவில் இல்லாமல் போகும் மற்றும் அழிக்கப்படும். முடிந்தால், அது எங்காவது வைக்கப்பட்டு பின்னர் மறுபிறவி எடுக்கும். அதாவது, பல்வேறு ஆத்துமாக்களின் ஆவிக்குரிய உலகின் நிர்வாகம் கட்டளையிடப்பட்டுள்ளது மற்றும் அது படிகள் மற்றும் விதிகளின்படி மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய நிர்வாகத்தின் காரணமாகவே, மனிதனின் பொருள் மயமான உலகம் குழப்பத்தில் சிக்காமல் இருக்கிறார்கள். பொருள் மயமான உலகின் மனிதர்கள் ஒரு சாதாரண மனநிலையையும், ஒரு சாதாரண பகுத்தறிவையும், கட்டளையிடப்பட்ட மாம்ச ஜீவிதத்தையும் கொண்டிருக்கிறார்கள். மனிதகுலத்திற்கு இதுபோன்ற இயல்பான ஜீவிதம் கிடைத்த பின்னரே, மாம்சத்தில் ஜீவிப்பவர்கள் தலைமுறை தலைமுறைகளாக தொடர்ந்து செழித்து வளர முடிகிறது.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் X” என்பதிலிருந்து
590. ஒரு ஜீவனின் மரணம்—ஒரு உலக ஜீவிதத்தின் முடிவு—என்பது அந்த ஜீவன் பொருள் மயமான உலகத்திலிருந்து ஆவிக்குரிய உலகிற்குச் சென்றுவிட்டது என்பதைக் குறிக்கிறது. அதேசமயம் ஒரு புதிய மனித ஜீவிதத்தின் பிறப்பு ஆவிக்குரிய உலகத்திலிருந்து ஒரு ஜீவன் வந்துள்ளது என்பதையும் பொருள் மயமான உலகம் மற்றும் அதன் பங்கை ஏற்றுக்கொள்ள மற்றும் தன் பங்கை செய்யத் தொடங்கியது என்பதையும் குறிக்கிறது. அது ஒரு ஜீவனின் புறப்பாடாக அல்லது வருகையாக இருந்தாலும், இரண்டுமே ஆவிக்குரிய உலகின் கிரியையிலிருந்து பிரிக்க முடியாதவையாகும். ஒருவர் பொருள் மயமான உலகிற்குள் வரும்போது, அந்த மனிதர் எந்த குடும்பத்திற்குச் செல்வார், அவர்கள் வர வேண்டிய சகாப்தம், அவர்கள் வர வேண்டிய மணிநேரம், ஆவிக்குரிய உலகில் அவர்களுக்கு பொருத்தமான ஏற்பாடுகள் மற்றும் வரையறைகள் மற்றும் அவர்கள் வகிக்கும் பங்கு ஏற்கனவே தேவனால் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த மனிதரின் முழு ஜீவிதமும்—அவர்கள் செய்யும் காரியங்களும், அவர்கள் எடுக்கும் பாதைகளும்—ஆவிக்குரிய உலகில் செய்யப்பட்ட ஏற்பாடுகளின்படி, சிறிதளவு விலகலும் இல்லாமல் தொடரும். மேலும், ஒரு சரீர ஜீவிதம் முடிவடையும் நேரம் மற்றும் அது முடிவடையும் விதம் மற்றும் இடமானது ஆவிக்குரிய உலகிற்கு தெளிவாகவும் புரிந்துக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். தேவன் பொருள் மயமான உலகை ஆளுகிறார் மற்றும் அவர் ஆவிக்குரிய உலகையும் ஆளுகிறார். அவர் ஒரு ஆத்துமாவின் இயல்பான ஜீவ மரண சுழற்சியை தாமதப்படுத்த மாட்டார் மற்றும் அந்த சுழற்சியின் ஏற்பாடுகளில் அவரால் எந்த பிழையும் செய்ய முடியாது. ஆவிக்குரிய உலகின் உத்தியோகப்பூர்வ பதவிகளில் கிரியை செய்யும் ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட கிரியைகளைச் செய்கிறார்கள் மற்றும் அவர்கள் செய்ய வேண்டியதை தேவனுடைய அறிவுறுத்தல்களுக்கும் விதிகளுக்கும் ஏற்ப செய்கிறார்கள். இவ்வாறு, மனிதகுலத்தின் உலகில், மனிதனால் காணப்பட்ட ஒவ்வொரு பொருள் மயமான நிகழ்வும் ஒழுங்காக உள்ளன மற்றும் குழப்பங்கள் எதுவும் இல்லாமல் இருக்கின்றன. இவை அனைத்தும் தேவன் எல்லாவற்றையும் ஒழுங்காக ஆட்சி செய்வதாலும், அவருடைய அதிகாரம் எல்லாவற்றையும் ஆளுகிறது என்பதாலும் நிகழ்கிறது. அவரது ஆதிக்கத்திற்குள் மனிதன் ஜீவிக்கும் பொருள் மயமான உலகமும், மேலும், மனிதகுலத்தின் பின்னால் கண்ணுக்கு தெரியாத ஆவிக்குரிய உலகமும் அடங்கும். ஆகையால், மனிதர்கள் ஒரு நல்ல ஜீவிதத்தை ஜீவிக்க விரும்பினால், நல்ல சூழலில் ஜீவிக்க விரும்பினால், முழுமையான கண்ணுக்குத் தெரியும் பொருள் மயமான உலகம் வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு யாரும் பார்க்க முடியாத மற்றும் மனிதகுலத்தின் சார்பாக ஜீவிக்கும் ஒவ்வொன்றையும் நிர்வகிக்கும் ஆவிக்குரிய உலகமும் வழங்கப்பட வேண்டும். அது ஒழுங்கானதாகும்.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் X” என்பதிலிருந்து
591. இந்த உலகில் நீ அழுதுக் கொண்டே பிறந்த கணம் முதல் உனது கடமையை நிறைவேற்ற தொடங்குகிறாய். தேவனுடைய சித்தத்தை அவருடைய வழிகாட்டுதலின்படி செய்வதில் உன்னுடைய ஜீவிதப் பயணத்தைத் நீ தொடங்குகின்றாய். உனது பின்னணி எதுவாக இருந்தாலும், உனக்கு முன் எத்தகைய பயணம் இருந்தாலும், யாராலும் பரலோகத்தின் சித்தத்திலிருந்தும் ஏற்பாடுகளிலிருந்தும் தப்ப முடியாது. யாரும் தங்கள் விதியைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால், சர்வத்தையும் ஆளக்கூடியவராகிய தேவனால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். மனிதன் தோன்றிய காலம் முதல், தேவன் எப்பொழுதும் இவ்வாறு செயலாற்றி, பிரபஞ்சத்தை நிர்வகித்து, எல்லாவற்றிற்கும் மாற்ற விதிகளையும் அவற்றின் இயக்கத்தின் பாதையையும் இயக்குகின்றார். எல்லாவற்றையும் போலவே, மனிதன் அமைதியாகவும் அறியாமலும் தேவனிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்படுகிறான்; எல்லாவற்றையும் போலவே தேவனுடைய கரத்தின் வழிநடத்துதலில் ஜீவிக்கிறான். மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனுடைய கரத்தில் வைக்கப்பட்டுள்ளன. மனித ஜீவிதத்தின் அனைத்தும் தேவனுடைய பார்வையில் உள்ளன. நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதை விட ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், எல்லா காரியங்களும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப மாறும், மாற்றம் பெரும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இவ்வாறு தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கிறார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து
592. தேவன் இந்த உலகை சிருஷ்டித்து, அதில் மனிதனைக் கொண்டுவந்து, அவனுக்கு ஜீவனைக் கொடுத்தார். பின்பு, மனிதனுக்கு பெற்றோரும் உறவினர்களும் வந்தார்கள். அதன் பின், அவன் தனிமையாக இருக்கவில்லை. மனிதனுடைய கண்கள் இந்த பொருள் உலகத்தை முதன்முதலில் கவனித்ததிலிருந்தே, அவன் தேவனுடைய நியமனத்திற்குள் இருக்க விதிக்கப்பட்டான். தேவனுடைய சுவாசம் அனைத்து ஜீவன்களுடைய முதிர்ச்சியின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. இந்த கிரியையின் போது, மனிதர்கள் தேவனுடைய பராமரிப்பில் வளர்ந்து வருவதை ஒருவரும் உணர்வதில்லை; மாறாக, தம் பெற்றோரின் அன்பான பராமரிப்பும் தம் ஜீவித உள்ளுணர்வும்தான் தம் வளர்ச்சியை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், மனிதனுக்கு அவனுடைய ஜீவிதத்தை வழங்கியது யார் என்றும் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரிவதில்லை. ஜீவிதத்தின் உள்ளுணர்வு எவ்வாறு அற்புதங்களை உருவாக்குகிறது என்பதும் தெரிவதில்லை. மனிதன் அறிந்ததெல்லாம்: அவனது ஜீவன் தொடர அடிப்படையாக இருக்கும் உணவும், அவனது இருப்புக்கான ஆதாரமான விடாமுயற்சியும், அவனது பிழைப்புக்கு மூலதனமான அவனது மனதில் உள்ள நம்பிக்கைகளுமே. மனிதன் தேவனுடைய கிருபையையும் ஏற்பாட்டையும் முற்றிலுமாக மறந்துவிட்டான். அவனுக்கு தேவன் கொடுத்த ஜீவிதத்தை சுக்குநூறாக உடைக்கின்றான்…. இந்த மனிதகுலத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும் தேவனை வழிபட ஒருவர் கூட தங்களைத் தாங்களே ஈடுபடுத்துவதில்லை. தேவன் தாம் திட்டமிட்டபடி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து மனிதனுக்காக மட்டுமே கிரியை செய்கிறார். ஒரு நாள், மனிதன் தன் சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்து, வாழ்க்கையின் மதிப்பையும் அர்த்தத்தையும், மனிதனுக்காக தேவன் கிரயம் செலுத்தி பெற்றுக் கொடுத்த எல்லாவற்றிற்கும், மனிதன் தன்னிடம் திரும்புவான் என்று காத்திருக்கும் அக்கறையையும் உணர்ந்து அவரிடம் திரும்புவான் என்று தேவன் நம்புகிறார். …
இந்த உலகத்திற்கு வருகின்ற அனைவரும் வாழ்க்கையையும் மரணத்தையும் கட்டாயம் கடந்து செல்ல வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் மரணம் மற்றும் மறுபிறப்பு சுழற்சியைக் கடந்து சென்றிருக்கிறார்கள். வாழ்பவர்கள் விரைவில் மரித்துபோவார்கள். மரித்தவர்கள் விரைவில் உயிர்த்தெழுவார்கள். இவை அனைத்தும் ஒவ்வொரு ஜீவனுக்கும் தேவன் ஏற்பாடு செய்துள்ள வாழ்க்கைமுறை ஆகும். எனினும், இந்த போக்கையும் இந்த சுழற்சியையும் மனிதன் கவனமாக பார்க்க வேண்டும் என்பதே தேவன் விரும்பும் சத்தியமாகும். தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஜீவன் வரம்பற்றது. உடல், நேரம், இடம் என்னும் தடைகளற்றது. தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஜீவனின் மர்மமும், ஜீவனானது அவரிடமிருந்து வந்தது என்பதற்கான சான்றும் இதுவே. ஜீவனானது தேவனிடமிருந்து வந்தது என்பதை பலர் விசுவாசிக்கவில்லை என்றாலும், தேவனிடமிருந்து வரும் அனைத்தையும் மனிதன் தவிர்க்க இயலாமல் அவற்றை அனுபவிக்கிறான். ஒரு நாள் திடீரென்று மனம்மாறி, உலகில் உள்ள அனைத்தையும் மீட்டெடுக்கவும், தேவன் தாம் கொடுத்த ஜீவனைத் திரும்பப் பெறவும் விரும்பினால், ஒன்றும் மீந்திராது. தேவன் தம்முடைய ஜீவனைக்கொண்டு உயிருள்ள ஜீவன்களுக்கும் உயிரற்ற பொருட்களுக்கும் அனைத்தையும் வழங்குகிறார். தம் வல்லமையினாலும் அதிகாரத்தினாலும் அனைத்தையும் ஒழுங்குபடுத்துகிறார். இந்த சத்தியமானது, எவரும் தம் மனதில் எண்ணங்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாத சத்தியமாகும். இந்த புரிந்துகொள்ள முடியாத சத்தியங்கள் தேவனுடைய ஜீவ வல்லமையின் வெளிப்பாடாகவும் சான்றாகவும் இருக்கின்றன. இப்போது உனக்கு ஒரு ரகசியத்தை நான் சொல்கிறேன்: தேவனுடைய ஜீவனின் மகத்துவத்தையும் அவரது ஜீவனின் வல்லமையையும் புரிந்துகொள்வது என்பது அவர் படைத்த எந்த ஜீவனுக்கும் முடியாத காரியமாகும். கடந்த காலத்தைப் போலவே இது இப்போது உள்ளது, வரவிருக்கும் காலத்திலும் அப்படியே இருக்கும். நான் சொல்லும் இரண்டாவது ரகசியம் இதுதான்: படைக்கப்பட்ட எல்லா ஜீவன்களுக்கும் வடிவமும் உருவமும் எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும் வாழ்க்கையின் மூலமானது தேவனிடமிருந்து மட்டுமே வருகிறது. எப்படிப்பட்ட ஜீவனாக நீ இருந்தாலும் தேவன் நிர்ணயித்த ஜீவிதப் பாதைக்கு எதிராக நீ திரும்ப முடியாது. எப்படியாயினும், மனிதன் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவனுடைய கவனிப்பும் பாதுகாப்பும் ஏற்பாடும் இல்லாமல், மனிதன் எவ்வளவு விடாமுயற்சியுடன் செயல்பட்டாலும் கடினமாக போராடினாலும் அவன் பெற வேண்டிய அனைத்தையும் பெற முடியாது. தேவனிடமிருந்து ஜீவன் வழங்கப்படாமல், வாழ்க்கையினை வாழ்வதில் உள்ள மதிப்பையும் அர்த்தத்தையும் மனிதன் இழக்கிறான். தனது ஜீவனின் மதிப்பை அற்பமாக வீணடிக்கும் மனிதனை, இவ்வளவு கவலையற்றவனாக இருக்க தேவன் அனுமதிப்பது எப்படி? நான் முன்பு கூறியது போல: தேவன் உன்னுடைய ஜீவிதத்தின் ஆதாரமாக இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து
593. தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் மற்றும் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார். அவர் இருப்பதை எல்லாம் படைத்தார், இருப்பதை எல்லாம் அவர் நிர்வகிக்கிறார், இருப்பதை எல்லாம் அவர் ஆளுகிறார், இருக்கும் அனைத்திற்கும் அவர் வழங்குகிறார். அது தேவனுடைய நிலையாகும். அது அவருடைய அடையாளமாகும். எல்லாவற்றிற்கும் மற்றும் இருக்கும் அனைத்திற்கும், தேவனுடைய உண்மையான அடையாளம் சிருஷ்டிகரும், சிருஷ்டிகளின் அதிபதியுமாகும். தேவன் வைத்திருக்கும் அடையாளம் இதுதான். அவர் எல்லாவற்றிலும் தனித்துவமானவர். தேவனுடைய எந்த சிருஷ்டியாலும்—அவை மனிதர்களின் மத்தியில் இருந்தாலும் அல்லது ஆவிக்குரிய உலகில் இருந்தாலும்—தேவனுடைய அடையாளத்தையும் அந்தஸ்தையும் ஆள்மாறாட்டம் செய்யவோ மாற்றவோ எந்தவொரு வழியையும் அல்லது காரணத்தையும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அடையாளம், வல்லமை, அதிகாரம் மற்றும் சிருஷ்டியை ஆளக்கூடிய திறனான நம்முடைய தனித்துவமான தேவன் இருக்கிறார். அவர் எல்லாவற்றின் மத்தியிலும் ஜீவிக்கிறார் மற்றும் இடைபடுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவரால் மிக உயர்ந்த இடத்திற்கு உயர முடியும். அவர் மனிதனாக மாறுவதன் மூலமும், மாம்சத்திலும் இரத்தத்திலும் ஒருவராக மாறுவதன் மூலமும், ஜனங்களுடன் நேருக்கு நேர் வருவதன் மூலமும், அவர்களுடன் களைப்பையும் துயரத்தையும் பகிர்ந்துக்கொள்வதன் மூலமும் அவரால் தன்னைத் தாழ்த்திக் கொள்ள முடியும். அதே நேரத்தில், அங்குள்ள அனைத்தையும் அவர் கட்டளையிடுகிறார், மற்றும் எல்லாவற்றின் விதியை மற்றும் அது இயங்க வேண்டிய திசை ஆகியவற்றையும் தீர்மானிக்கிறார். மேலும், அவர் எல்லா மனிதர்களின் தலைவிதியையும் வழிநடத்துகிறார் மற்றும் மனிதகுலத்தின் திசையையும் வழிநடத்துகிறார். அது போன்ற ஒரு தேவனை எல்லா ஜீவன்களும் வணங்க வேண்டும், அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் மற்றும் அவரை அறிய வேண்டும். ஆகவே, நீ மனிதகுலத்தில் எந்தக் கூட்டம் அல்லது எந்த வகையைச் சேர்ந்தவன் என்பதைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு மனிதனுக்கும் ஜீவனுக்கும், தேவனை நம்புதல், தேவனைப் பின்பற்றுதல், தேவனை வணங்குதல், அவருடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உன் தலைவிதிக்கான அவருடைய ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய அனைத்தும் ஒரே இன்றியமையாத தேர்வாகும். தேவனுடைய தனித்துவத்தில், அவருடைய அதிகாரம், அவருடைய நீதியுள்ள மனநிலை, அவருடைய சாராம்சம் மற்றும் எல்லாவற்றிற்கும் அவர் வழங்கும் வழிமுறைகள் என அனைத்தும் முற்றிலும் தனித்துவமானவை என்பதை ஜனங்கள் காண்கிறார்கள். இந்த தனித்துவமானது தேவனுடைய உண்மையான அடையாளத்தை தீர்மானிக்கிறது மற்றும் அது அவருடைய நிலையை தீர்மானிக்கிறது. ஆகையால், எல்லா ஜீவன்களிடையேயும், ஆவிக்குரிய உலகிலும் அல்லது மனிதர்களிடையேயும் எந்தவொரு உயிரினமும் தேவனுக்குப் பதிலாக நிற்க விரும்பினால், ஜெயம் என்பது சாத்தியமற்றதாகும். தேவனைப் போல ஆள்மாறாட்டம் செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் சாத்தியமற்றதாகும். அதுவே உண்மையாகும்.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் X” என்பதிலிருந்து
594. என்னுடைய இறுதிக் கிரியையானது மனிதனைத் தண்டிப்பது மாத்திரம் இல்லை, ஆனால் மனிதனுக்கான இலக்கை ஆயத்தம் செய்வதும்தான். மேலும் இதனால் ஜனங்கள் என்னுடைய நியமங்களையும், செயல்களையும் ஒப்புக்கொள்ளக்கூடும். ஒவ்வொரு மனிதனும் நான் செய்தவை எல்லாம் சரி என்றும், நான் செய்தவை எல்லாம் என் மனநிலையின் வெளிப்பாடுகள் என்றும் காண நான் விரும்புகின்றேன். இது மனிதனின் செயல் அல்ல, மனிதக்குலத்தை வெளிக்கொண்டுவந்த இயற்கையுடையதும் அல்ல, ஆனால் படைப்பில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் போஷிக்கும் என் செயலே. நான் இல்லையென்றால் மனிதகுலம் அழிவதோடு பேரழிவு என்னும் சாட்டையடியால் பாடுபடும். எந்த மனிதனும் சந்திர, சூரியனின் அழகையோ அல்லது பசுமையான உலகத்தையோ மீண்டும் காண முடியாது. மனிதகுலம் குளிர்ந்த இரவுகளையும், இரக்கமில்லாத மரண இருளின் பள்ளத்தாக்கையும் மாத்திரமே எதிர்கொள்ளும். நானே மனுக்குலத்தின் ஒரே இரட்சிப்பு. நானே மனுக்குலத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறேன், அதற்கும் மேலே மனிதகுலத்தின் மொத்த ஜீவிப்பும் என்னையே சார்ந்திருக்கிறது. நானின்றி ஒட்டுமொத்த மனுக்குலமும் உடனடியாக ஓர் அசைவற்ற நிலைக்கு வந்துவிடும். நானின்றி மனிதகுலம் பெரும் அழிவில் அவதியுறும், எல்லாவகையான பிசாசுகளாலும் கால்களின் கீழ் மிதிக்கப்படும், ஆனாலும் ஒருவரும் என்மீது கவனம் செலுத்துவதில்லை. நான் வேறு ஒருவரும் செய்யமுடியாத கிரியையைச் செய்திருக்கின்றேன், இதனை மனிதன் சில நற்கிரியைகள் மூலம் எனக்கு ஈடு செய்வான் என்று நம்பியிருக்கின்றேன். ஒரு சிலரால் மாத்திரமே எனக்கு ஈடு செய்ய முடிகிறது என்றாலும், நான் மனிதனின் உலகத்தில் என் பயணத்தை முடித்து என் விரிவாக்கக் கிரியையின் அடுத்த கட்டத்தைத் தொடங்குவேன். ஏனெனில் மனிதரின் மத்தியில் இத்தனை வருடமாக என் போக்குவரத்தின் வேகம் எல்லாம் பலனுள்ளதாக இருந்திருக்கிறது, நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு மக்களின் எண்ணிக்கை முக்கியமில்லை மாறாக அவர்களது நற்கிரியைகளே முக்கியம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் உங்கள் இலக்கிற்காக போதுமான நற்கிரியைகளை ஆயத்தப்படுத்தியிருப்பீர்கள் என நம்புகிறேன். அப்போது நான் திருப்தியாவேன், அப்படியில்லாவிட்டால், உங்களில் ஒருவனும் உங்கள்மீது விழப்போகும் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாது. அந்தப் பேரழிவு என்னிலிருந்தே ஆரம்பிக்கப்படும், மேலும் அது நிச்சயமாகவே என்னாலே திட்டமிடப்படும். என் கண்களில் நீங்கள் செம்மையாய் காணப்படவில்லை என்றால், உங்களால் அந்தப் பேரழிவில் பாடுபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து