C. தேவனுடைய பரிசுத்தத்தைக் குறித்து

571. தேவனுடைய ஆவியானவர் அணிந்திருக்கும் மாம்சமானது தேவனின் சொந்த மாம்சமாகும். தேவனுடைய ஆவியானவர் உயர்ந்தவராக இருக்கிறார்; அவர் சர்வ வல்லவராக, பரிசுத்தராக, நீதியுள்ளவராக இருக்கிறார். அதேபோல், அவருடைய மாம்சமும் உயர்ந்ததாக, சர்வ வல்லமை மிக்கதாக, பரிசுத்தமானதாக, நீதியுள்ளதாக இருக்கிறது. அத்தகைய மாம்சத்தால் மட்டுமே மனுக்குலத்திற்கு நீதியும் நன்மையும் வழங்க முடியும், அதுவே பரிசுத்தமானதாக, மகிமை கொண்டதாக, வல்லமை பொருந்தியதாக இருக்கிறது; சத்தியத்தை மீறும், ஒழுக்கத்தையும் நீதியையும் மீறும் எதையும் அவரால் செய்ய இயலாது, மேலும் தேவனுடைய ஆவியானவருக்கு துரோகம் செய்யும் எதையும் அவரால் செய்ய முடியாது. தேவனுடைய ஆவியானவர் பரிசுத்தமானவர், ஆகவே அவருடைய மாம்சமானது சாத்தானால் சீர்கெட்டுப்போகாது; அவருடைய மாம்சமானது மனுஷனின் மாம்சத்தை விட வித்தியாசமான சாராம்சத்தைக் கொண்டது. ஏனென்றால் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டுப் போனது மனுஷன் தான், தேவன் இல்லை; தேவனின் மாம்சத்தை சாத்தானால் சீர்கெட்டுப்போகவைக்க முடியாது. ஆகவே, மனுஷனும் கிறிஸ்துவும் ஒரே இடத்திலேயே ஜீவிக்கிறார்கள் என்ற போதிலும், மனுஷன் தான் சாத்தானால் உடைமையாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு சிக்கவைக்கப்படுகிறான். இதற்கு நேர்மாறாக, கிறிஸ்து சாத்தானின் சீர்கேட்டிற்கு நித்தியமாக ஊக்கமளிப்பதில்லை, ஏனென்றால் சாத்தான் ஒருபோதும் மிக உன்னதமான இடத்தில் ஏறுவதற்கான திறம் மிக்கவனாக இருக்க மாட்டான், மேலும் அவனால் ஒருபோதும் தேவனிடம் நெருங்கவே முடியாது. இன்று எமக்கு துரோகம் செய்வது, சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கும் மனுக்குலம் மட்டும் தான் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். துரோகம் என்பது ஒருபோதும் கிறிஸ்துவை உள்ளடக்கிய ஒரு பிரச்சினையாக இருக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)” என்பதிலிருந்து

572. கீழ்ப்படியாமையின் எந்த அம்சங்களையும் தேவன்தாமே தம்மில் கொண்டிருக்கவில்லை; அவரது சாராம்சம் நன்மையானதாக இருக்கிறது. அவர் தாமே சகல அழகு மற்றும் நன்மைகளின் வெளிப்பாடாக இருக்கிறார், அதேபோல் அவர் சகல அன்புள்ளவராகவும் இருக்கிறார். மாம்சத்தில் கூட, பிதாவாகிய தேவனுக்குக் கீழ்ப்படியாத செயல் எதையும் தேவன் செய்வதில்லை. தமது ஜீவனைப் பலியாகக் கொடுக்கும் விஷயத்தில் கூட, அவர் வேறு எதையும் தேர்ந்தெடுக்காமல், அவர் முழு மனதுடன் அவ்வாறே செய்யத் தயாராக இருந்தார். தேவன் சுய-நீதி அல்லது சுய-முக்கியத்துவமாகிய எந்த அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை, அல்லது வீண் பெருமை மற்றும் அகந்தை ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை; சீர்கேடான எந்த அம்சங்களையும் அவர் கொண்டிருக்கவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படியாத அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன; சகல அவலட்சணத்திற்கும் துன்மார்க்கத்திற்கும் சாத்தான்தான் ஆதாரம். மனிதன் சாத்தானால் சீர்கெட்டு அவனால் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதுதான், சாத்தானுக்கு இருக்கின்ற குணங்களைப் போன்று மனிதனுடைய குணங்களும் இருப்பதற்கான காரணமாகும். கிறிஸ்துவானவர் சாத்தானால் சீர்கெட்டுப்போகவில்லை, எனவே அவர் சாத்தானின் குணங்கள் எதுவும் கொண்டிராமல் தேவனுடைய குணங்களை மட்டுமே கொண்டிருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து

573. “தேவனுடைய பரிசுத்தம்” என்றால் தேவனுடைய சாராம்சம் குறைபாடற்றது, தேவனுடைய அன்பு தன்னலமற்றது, தேவன் மனிதனுக்கு அளிக்கும் அனைத்தும் தன்னலமற்றவை, மற்றும் தேவனுடைய பரிசுத்தமானது கறைபடாததும் குற்றமற்றதுமாகும். தேவனுடைய சாராம்சத்தின் இந்த அம்சங்கள் அவர் தனது நிலையை வெளிப்படுத்த அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் மட்டுமல்லாமல் மாறாக ஒவ்வொரு மனிதனையும் மிகவும் நேர்மையுடன் நடத்துவதற்கு தேவன் தனது சாராம்சத்தை பயன்படுத்துகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய சாராம்சம் வெறுமையாக இல்லை. அது தத்துவார்த்தமாகவோ அல்லது கோட்பாடாகவோ இல்லை. அது நிச்சயமாக ஒரு வகையான அறிவும் அல்ல. அது மனிதனுக்கு ஒரு வகையான கல்வியும் அல்ல. அதற்குப் பதிலாக அது தேவனுடைய சொந்த செயல்களின் உண்மையான வெளிப்பாடு மற்றும் தேவன், தேவனிடம் இருப்பதன் வெளிப்படையான சாராம்சம் ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

574. நான் பேசும் தேவனுடைய பரிசுத்தமானது எதைக் குறிக்கிறது? ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். தேவனுடைய பரிசுத்தமே அவருடைய சத்தியமாகுமா? தேவனுடைய பரிசுத்தமே அவருடைய உண்மையாகுமா? தேவனுடைய பரிசுத்தமானது அவருடைய தன்னலமற்ற நிலையா? அது அவருடைய பணிவாகுமா? மனிதனுக்கான அவருடைய அன்பாகுமா? தேவன் மனிதனுக்கு சத்தியத்தையும் ஜீவனையும் இலவசமாக அளிக்கிறார்—இது அவருடைய பரிசுத்தமாகுமா? (ஆம்.) தேவன் வெளிப்படுத்தும் அனைத்தும் தனித்துவமானது மற்றும் அவை கேடு நிறைந்த மனிதகுலத்திற்குள் இல்லை. அதை மனிதகுலத்திலும் காண முடியாது. மனிதனுக்கான சாத்தானுடைய கேடான செயல்பாட்டின் போது, சாத்தானுடைய கேடான மனநிலையிலோ அல்லது சாத்தானுடைய சாராம்சத்திலோ அல்லது தன்மையிலோ, அதனுடைய ஒரு சிறிய தடயத்தையும் காண முடியாது. தேவனும் தேவனிடம் இருப்பது அனைத்தும் தனித்துவமானது ஆகும். தேவன் மட்டுமே இத்தகைய சாராம்சமாக இருக்கிறார் மற்றும் இத்தகைய சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார். … பரிசுத்தத்தின் சாராம்சமானது உண்மையான அன்பு ஆகும். ஆனால் அதைக்காடிலும், இது உண்மை, நீதி மற்றும் வெளிச்சம் ஆகியவற்றின் சாராம்சமாகும். “பரிசுத்தம்” என்ற சொல் தேவனுக்குப் பொருந்தும்போது மட்டுமே பொருத்தமாக இருக்கிறது; சிருஷ்டியில் எதுவும் “பரிசுத்தம்” என்று அழைக்கப்படுவதற்கு தகுதியுடையது அல்ல. இதை மனிதன் புரிந்துகொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

577. தேவன் மனிதர்களிடம் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருப்பதை நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள். மேலும், விஷயங்களைக் கையாள தேவன், மனிதகுலத்தின் கண்ணோட்டங்கள், அறிவு, அறிவியல், தத்துவம் அல்லது கற்பனை ஆகியவற்றைப் பயன்படுத்துவதை நீங்கள் காண மாட்டீர்கள். மாறாக, தேவன் செய்யும் அனைத்தும், அவர் வெளிப்படுத்தும் அனைத்தும் சத்தியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் சத்தியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த சத்தியம் சில ஆதாரமற்ற கற்பனையின் விளைவாக இல்லை. இந்த சத்தியமும் இந்த வார்த்தைகளும் அவரது சாராம்சம் மற்றும் அவரது ஜீவனால் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த வார்த்தைகளும், தேவன் செய்த எல்லாவற்றின் சாராம்சமும், சத்தியம் என்பதால், தேவனுடைய சாராம்சம் பரிசுத்தமானது என்று நாம் கூறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் சொல்வது மற்றும் செய்வது அனைத்தும் ஜனங்களுக்கு ஆற்றலையும் வெளிச்சத்தையும் தருகின்றன. நேர்மறையான விஷயங்களையும் அந்த நேர்மறையான விஷயங்களின் யதார்த்தத்தையும் காண ஜனங்களுக்கு உதவுகின்றன. மேலும், அவர்கள் பரிபூரணமான பாதையில் செல்ல மனிதகுலத்திற்கான வழியை சுட்டிக்காட்டுகின்றன. இந்த விஷயங்கள் அனைத்தும் தேவனுடைய சாராம்சம் மற்றும் அவருடைய பரிசுத்தத்தின் சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

578. தேவனுடைய பரிசுத்தத்தை நீ புரிந்துகொள்ளும்போது, உன்னால் உண்மையிலேயே தேவனை நம்ப முடியும். தேவனுடைய பரிசுத்தத்தை நீ புரிந்துகொள்ளும்போது, “தேவனே, தனித்துவமானவர்” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை உன்னால் உண்மையில் உணர முடியும். நீ இனிமேல் கற்பனை செய்ய மாட்டாய். இதைத் தவிர வேறு பாதைகள் உள்ளன என்று நினைத்து நீ நடக்கத் தேர்வு செய்ய மற்றும் தேவன் உனக்காக ஏற்பாடு செய்துள்ள அனைத்தையும் காட்டிக் கொடுக்க நீ இனி ஆயத்தமாக இருக்க மாட்டாய். தேவனுடைய சாராம்சம் பரிசுத்தமானது என்பதால், இதன் அர்த்தம் என்னவென்றால், தேவன் மூலமாகத் தான் ஜீவிதத்தில் நீ வெளிச்சத்தின் நீதியான பாதையில் நடக்க முடியும் என்பதாகும். தேவன் மூலமாகத் தான் நீ ஜீவிதத்தின் அர்த்தத்தை அறிய முடியும். தேவன் மூலமாகத் தான் நீ உண்மையான மனிதத்தன்மையுடன் ஜீவிக்க முடியும். இருவரும் சத்தியத்தை வைத்திருக்கிறார்கள். அதை அறிவார்கள். தேவன் மூலமாகத் தான் நீ சத்தியத்திலிருந்து ஜீவனைப் பெற முடியும். தீமையைத் தவிர்ப்பதற்கும், சாத்தானுடைய தீங்கு மற்றும் கட்டுப்பாட்டிலிருந்து உன்னை விடுவிப்பதற்கும் தேவனால் மட்டுமே உனக்கு உதவ முடியும். நீ இனி துன்பப்படக்கூடாது என்பதற்காக உன்னைத் துன்பக் கடலில் இருந்து தேவனைத் தவிர யாரும் இரட்சிக்க முடியாது. இது தேவனுடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது. தேவன் மட்டுமே உன்னை மிகவும் தன்னலமின்றி இரட்சிக்கிறார். உன் எதிர்காலத்திற்கும், உன் விதிக்கும், உன் ஜீவிதக்கும் தேவன் மட்டுமே பொறுப்பாகிறார். அவர் உனக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்கிறார். இது சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எதுவும் சாதிக்க கூடிய ஒன்றல்ல. சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எதுவும் தேவனுடைய சாராம்சத்தைப் போன்ற ஒரு சாராம்சத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால், எந்தவொரு மனிதன் அல்லது பொருளாலும் உன்னை இரட்சிக்கவோ உன்னை வழிநடத்தவோ முடியாது. மனிதனுக்கான தேவனுடைய சாராம்சத்தின் முக்கியத்துவம் இதுதான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

579. நான் மனிதனை முற்றிலும் ஒரு கண்டிப்பான நெறிமுறைக்குள் வைத்துள்ளேன். உங்களுடைய விசுவாசம் உள்நோக்கத்துடனும் நிபந்தனைகளுடனும் வருமானால், நான் அதற்கு மாறாக உங்களுடைய பெயரளவிலான விசுவாசத்தை தவிர்த்துவிடுவேன், ஏனென்றால் தங்கள் உள்நோக்கத்தினால் என்னை வஞ்சித்து நிபந்தனைகளினால் என்னை மிரட்டி பணியவைப்பவர்களை நான் வெறுக்கிறேன். மனிதன் எனக்கு முற்றிலும் உண்மையாய் இருப்பதையும், விசுவாசம் என்னும் ஒரே வார்த்தையின் பொருட்டு அந்த விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அனைத்து காரியங்களையும் செய்வதையுமே விரும்புகிறேன். நான் உங்களை எப்போதும் நேர்மையுடன் நடத்தியிருப்பதனால், என்னை மகிழ்விக்கும் நோக்கில் முகத்துதிகளை பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?” என்பதிலிருந்து

580. நான் எத்தகைய ஜனங்களை விரும்புகிறேன் என்பதை நீ அறிந்துக்கொள்ள வேண்டும். அசுத்தமானவர்கள் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அசுத்தமானவர்கள் பரிசுத்தமான பூமியை அசுத்தப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. நீ பல கிரியைகளைச் செய்திருந்தாலும், பல ஆண்டுகளாக கிரியை செய்திருந்தாலும், இறுதியில் நீ இன்னும் வருந்தத்தக்க அழுக்காய் இருந்தால், நீ என் ராஜ்யத்தில் பிரவேசிக்க விரும்புவதை பரலோக பிரமாணத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது! நீ ஜீவனை நாட வேண்டும். இன்று, பரிபூரணமாக்கப்படுபவர்களும் பேதுருவைப் போன்றவர்கள்: அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றங்களைத் தேடுபவர்கள், தேவனுக்கு சாட்சி அளிக்கவும், தேவனுடைய சிருஷ்டியாக தங்கள் கடமையைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இது போன்றவர்கள் மட்டுமே சரியானவர்களாக மாற்றப்படுவார்கள். நீ வெகுமதிகளை மட்டுமே பார்த்தால், உன் சொந்த ஜீவித மனநிலையை மாற்ற முற்படவில்லை என்றால், உன் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்—இது மாற்ற முடியாத சத்தியமாகும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

581. தேவன் தேவன் தான், அவரிடம் உள்ளவற்றையே அவர் பெற்றிருக்கிறார். அவர் வெளிப்படுத்துவதும் மற்றும் தெரியப்படுத்துவதும் எல்லாம் அவருடைய சாராம்சமாகும் மற்றும் அவரது தனித்துவத்தை உருவகப்படுத்துபவையாகும். அவர் என்னவாக இருக்கிறார், அவரிடம் உள்ளவை எவை, அத்துடன் அவருடைய சாராம்சம் மற்றும் தனித்துவத்துவம் ஆகியவை எந்தவொரு மனிதனாலும் மாற்ற முடியாத காரியங்களாகும். அவரது மனநிலையானது மனிதகுலத்தின் மீதான அவரது அன்பு, மனிதகுலத்தின் மீதான ஆறுதல், மனிதகுலத்தின் மீதான வெறுப்பு மற்றும் இன்னும் அதிகமாக, மனிதகுலத்தைப் பற்றிய முழுமையான புரிந்து கொள்ளுதலை உள்ளடக்கியுள்ளது. இருப்பினும், மனிதனின் குணாதிசயம் நம்பிக்கையுடனும், சுறுசுறுப்பானதாகவும், உணர்ச்சியற்றதாகவும் இருக்கலாம். தேவனின் மனநிலை என்பது எல்லாவற்றையும் எல்லா ஜீவன்களையும் ஆள்பவருக்கும், எல்லா சிருஷ்டிப்புகளின் கர்த்தருக்கும் உரியது. அவரது மனநிலையானது கணம், வல்லமை, பெருந்தன்மை, மகத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மேலாதிக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அவருடைய மனநிலையானது அதிகாரத்தின் அடையாளமாகும், நீதியான அனைத்திற்குமான அடையாளமாகும், அழகான மற்றும் நன்மையான அனைத்திற்குமான அடையாளமாகும். அதற்கும் மேலாக, இது இருளினாலும் மற்றும் எந்தவொரு எதிரியின் வல்லமையினாலும் ஆட்கொள்ளப்படவோ அல்லது கைப்பற்றப்படவோ முடியாத[அ] ஒரு அடையாளமாகும், அதேபோல் எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாலும் புண்படுத்தப்பட முடியாத அவரின் அடையாளமாகவும் உள்ளது (புண்படுத்தப்படுவதை அவர் சகித்துக் கொள்ள மாட்டார்)[ஆ]. அவரது மனநிலை மிக உயர்ந்த வல்லமையின் அடையாளமாகும். அவருடைய கிரியையையோ அல்லது அவரது மனநிலையையோ எந்தவொரு நபராலும் அல்லது நபர்களாலும் தொந்தரவு செய்ய முடியாது அல்லது தொந்தரவு செய்யலாகாது. ஆனால் மனிதனின் குணாதிசயம் என்பது மிருகத்தின் மீதான மனிதனின் சிறிய மேன்மையின் வெறும் அடையாளத்திற்கு மேலானதல்ல. மனிதனுக்கு அவனுக்குள்ளும், அவனைப் பற்றியும், எந்த அதிகாரமும் இல்லை, சுய உரிமையும் இல்லை, சுயத்தை மீறும் திறனும் இல்லை, ஆனால் அவனது சாராம்சத்தில் ஜனங்களின் எல்லா வகையான நடத்தைகளின், நிகழ்வுகளின் மற்றும் காரியங்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழானவனாக முடங்கிப்போகிறான். இருள் மற்றும் தீமைகள் அழிக்கப்படும் காரணத்தால் நீதியும் வெளிச்சமும் இருப்பதும் மற்றும் வெளிப்படுவதும் தேவனின் சந்தோஷம் ஆகும். மனிதகுலத்திற்கு வெளிச்சத்தையும் நல்வாழ்வையும் கொண்டுவருவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவரது மகிழ்ச்சி ஒரு நீதியான மகிழ்ச்சி, நேர்மறையானவை அனைத்தும் இருப்பதற்கான அடையாளமாகவும், அதைவிட, ஜெயத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. தீமை மற்றும் இருள் இருப்பதாலும், சத்தியத்தை விரட்டும் காரியங்கள் இருப்பதாலும், இன்னும் அதிகமாக, நன்மையான மற்றும் அழகாக இருப்பதை எதிர்க்கும் காரியங்கள் இருப்பதாலும், அநீதியின் நிகழ்வும் மற்றும் குறுக்கீடும் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தீங்கே தேவனின் கோபத்திற்கு காரணமாகும். அவருடைய கோபமானது எதிர்மறையானவை எல்லாம் இனி இருக்காது என்பதற்கான அடையாளமாகும், அதற்கும் மேலாக, அது அவருடைய பரிசுத்தத்தின் அடையாளமாகும். அவருடைய துக்கம் மனிதகுலத்தினால் ஏற்படுகிறது, அவனுக்காக அவர் நம்பிக்கை வைத்துள்ளார், ஆனால் அவன் இருளில் விழுந்திருக்கிறவன், ஏனென்றால் அவர் மனிதனில் செய்யும் கிரியை அவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்காது, மேலும் அதனால் அவர் நேசிக்கும் மனிதகுலத்தவர் அனைவருமே வெளிச்சத்தில் வாழ முடியாது. குற்றமற்ற மனிதகுலத்துக்காகவும், நேர்மையான ஆனால் ஏதுமறியாத மனிதனுக்காகவும், நல்லவனாக இருந்தும் தன் சொந்தக் கருத்துக்கள் இல்லாதவனுக்காகவும் அவர் துக்கப்படுகிறார். அவரது துக்கமானது அவருடைய நற்குணம் மற்றும் அவரது இரக்கத்தின் அடையாளமாகும், இது அழகு மற்றும் தயவின் அடையாளமாகும். அவருடைய மகிழ்ச்சி, நிச்சயமாக, அவருடைய எதிரிகளை தோற்கடித்து, மனிதனின் நேர்மையான எண்ணங்களை ஆதாயமாக்குகிறது. இதை விட, இது எதிரியின் அனைத்து வல்லமைகளையும் வெளியேற்றுவதிலிருந்தும் அழிப்பதிலிருந்தும் எழுகிறது, ஏனென்றால் மனிதகுலம் ஒரு நல்ல அமைதியான வாழ்க்கையை பெறுகிறது. தேவனின் மகிழ்ச்சி மனிதனின் மகிழ்ச்சியைப் போன்றதல்ல. மாறாக, இது நல்ல பழங்களை களஞ்சியத்தில் சேர்ப்பது போன்ற உணர்வாகும், இது மகிழ்ச்சியை விட பெரிய உணர்வாகும். இவரது மகிழ்ச்சி, இந்த நேரத்திலிருந்து மனிதகுலம் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான அடையாளமாகும், மேலும் மனிதகுலம் வெளிச்சத்தின் உலகத்தில் நுழைவதின் அடையாளமாகும். மறுபுறம் மனிதகுலத்தின் உணர்ச்சிகள் எல்லாம், நீதிக்காகவோ, வெளிச்சத்திற்காகவோ அல்லது அழகானதற்காகவோ, எல்லாவற்றிற்கும் மேலாக பரலோகத்தால் வழங்கப்பட்ட கிருபைக்காகவோ அல்ல, அவனது சொந்த நலன்களுக்காகவே தோன்றுகின்றன. மனிதகுலத்தின் உணர்ச்சிகள் சுயநலமானவை மற்றும் இருளின் உலகத்தைச் சேர்ந்தவை. அவை தேவனுடைய சித்தத்தின் பொருட்டும் இல்லை, தேவனின் திட்டத்தின் பொருட்டும் இல்லை, எனவே மனிதனையும் தேவனையும் ஒருசேர்ந்தாற் போல பேச முடியாது. தேவன் என்றென்றும் உயர்ந்தவர், எப்போதும் மேன்மையுள்ளவர், அதே சமயம் மனிதன் என்றென்றும் இழிவானவன், என்றென்றும் பயனற்றவன். இது ஏனென்றால், தேவன் என்றென்றும் தியாகங்களைச் செய்கிறார், மனிதகுலத்திற்காக தன்னை அர்ப்பணிக்கிறார். இருப்பினும், மனிதன் என்றென்றும் தனக்காக மட்டுமே மேற்கொண்டு முயலுகிறான். மனிதகுலம் உயிர்வாழ்வதற்காக தேவன் என்றென்றும் வேதனையை மேற்கொள்ளுகிறார், ஆனால் மனிதன் ஒருபோதும் வெளிச்சத்தின் பொருட்டோ அல்லது நீதிக்காகவோ எதையும் பங்களிப்பதில்லை. மனிதன் ஒரு காலத்திற்கு முயற்சி செய்தாலும், அது ஒரு அடியைக் கூட தாங்க முடியாத அளவுக்கு பலவீனமாக இருக்கிறது, ஏனென்றால் மனிதனின் முயற்சி எப்போதும் மற்றவர்களுக்காக இல்லாமல் தன் சொந்த நலனுக்காகவே உள்ளது. மனிதன் எப்போதும் சுயநலவாதி, அதே சமயம் தேவன் எப்போதும் சுயநலமற்றவர். தேவன் நீதியானதும், நல்லதும், அழகானதுமான எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறார், அதே நேரத்தில் மனிதன் எல்லா அருவருப்புகளையும் தீமையையும் வெளிப்படுத்துவதில் வெற்றியடைகிறான். தேவன் ஒருபோதும் தனது நீதியின் மற்றும் அழகின் சாராம்சத்தை மாற்றமாட்டார், ஆனாலும் மனிதன் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதிக்கு துரோகம் செய்யவும் தேவனிடமிருந்து விலகிச் செல்வதற்கும் மிகவும் திறனுள்ளவனாக இருக்கிறான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது” என்பதிலிருந்து

582. அவமதிப்பைக் குறித்த தேவனின் சகிப்பின்மையானது அவரது தனித்துவமான சாராம்சமாகும்; தேவனின் கோபம் அவருடைய தனித்துவமான மனநிலை ஆகும்; தேவனின் மகத்துவம் அவருடைய தனித்துவமான சாராம்சமாகும். தேவனுடைய கோபத்தின் பின்னால் இருக்கும் கோட்பாடானது, அவர் மட்டுமே கொண்டிருக்கும் அவருடைய அடையாளம் மற்றும் அவருடைய தகுநிலையின் சான்றாகும். இந்த கோட்பாடானது தனித்துவமான தேவனுடைய சாராம்சத்தின் அடையாளமுமாகும் என்பது தெளிவாகிறது. தேவனுடைய மனநிலையானது அவருடைய இயல்பான சாராம்சமாகும், இது காலப்போக்கில் ஒருபோதும் மாறாது, புவியியல் இருப்பிடத்தின் மாற்றங்களால் மாற்றமுமடையாது. அவருடைய இயல்பான மனநிலையே அவரின் உண்மையான சாராம்சமாகும். அவர் யார் மீது தன்னுடைய கிரியையையை நடப்பிக்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய சாராம்சமானது மாறாது, அவருடைய நீதியான மனநிலையும் மாறாது. ஒருவர் தேவனைக் கோபப்படுத்தும்போது, தேவன் தன்னுடைய இயல்பான மனநிலையை வெளிப்படுத்துகிறார்; இந்த நேரத்தில் அவருடைய கோபத்தின் பின்னால் இருக்கும் கோட்பாடானது மாறுவதில்லை, அவருடைய தனித்துவமான அடையாளமும், நிலைப்பாடும் கூட மாறுவதில்லை. அவர் தனது சாராம்சத்தின் மாறுதலின் காரணமாகவோ அல்லது அவரது மனநிலையிலிருந்து வேறுபட்ட காரியங்கள் எழுவதாலோ அவர் கோபப்படுவதில்லை, ஆனால் தனக்கு எதிரான மனிதனின் எதிர்ப்பு அவருடைய மனநிலையை கிறது. மனிதன் தேவனை படு மோசமாகக் கோபமூட்டுவது, தேவனுடைய சொந்தமான அடையாளத்திற்கும், நிலைப்பாட்டுக்கும் கடுமையான சவாலாகும். தேவனின் பார்வையில், மனிதன் அவருக்கு சவால் விடும்போது, மனிதன் அவருடன் போட்டியிட்டு, அவரது கோபத்தை சோதிக்கிறான். மனிதன் தேவனை எதிர்க்கும்போது, மனிதன் தேவனுடன் போட்டியிடும்போது, மனிதன் தொடர்ந்து தேவனுடைய கோபத்தைச் சோதிக்கும்போது—இப்படிப்பட்ட நேரங்களில் பாவமானது கட்டுக்கடங்காமல் போகிறது, தேவனுடைய கோபம் இயற்கையாகவே வெளிப்பட்டு, தோன்றத் தொடங்குகிறது. எனவே, தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது எல்லா பொல்லாத வல்லமைகளும் இருக்கப் போவதில்லை என்பதற்கான அடையாளமாகும். மேலும் அது எல்லா எதிரான வல்லமைகளும் அழிக்கப்படும் என்பதற்கான அடையாளமாகும். இது தேவனுடைய நீதியான மனநிலை மற்றும் தேவனுடைய கோபத்தின் தனித்தன்மையாகும். தேவனுடைய மகத்துவமும் பரிசுத்தமும் மறுக்கப்பட்டு, நீதியின் வல்லமைகள் தடை செய்யப்பட்டு, மனிதனால் பார்க்க முடியாமல் இருக்கும் போது, தேவன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவார். தேவனுடைய சாராம்சத்தினால், தேவனை விரோதிக்கிற, அவரை எதிர்க்கிற, அவருடன் வாதாடுகிற, பூமியில் இருக்கும் எல்லா வல்லமைகளும் பொல்லாதவைகளாக, கலகத்தன்மையுள்ளவைகளாக, அநீதியுள்ளவைகளாக இருக்கிறன. அவை சாத்தானிடத்திலிருந்து வருகிறதாகவும், சாத்தானுடையதாகவும் இருக்கின்றன. தேவன் நீதி உள்ளவராகவும், ஒளியானவராகவும், மாசற்ற பரிசுத்தராகவும் இருப்பதால், பொல்லாதவைகளாக, கலகத்தன்மையுள்ளவைகளாக, சாத்தானுக்குச் சொந்தமானதாக இருக்கிற எல்லா காரியங்களும், தேவனுடைய கோபம் கட்டவிழ்க்கப்படும் போது மறைந்து விடும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

அடிக்குறிப்புகள்:

அ. மூல உரை “இது இருக்க முடியாததாக இருப்பதின் ஒரு அடையாளமாகும்” என்று கூறுகிறது.

ஆ. மூல உரை “அத்துடன் புண்படுத்தப்பட முடியாததாக (புண்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ளாமல்)” இருப்பதின் ஒரு அடையாளம் என்றும் கூறுகிறது.

முந்தைய: B. தேவனுடைய நீதியுள்ள மனநிலை குறித்து

அடுத்த: D. தேவனே சகல காரியங்களுக்கும் ஜீவனின் ஆதாரமாக இருக்கிறார் என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக