B. தேவனுடைய நீதியுள்ள மனநிலை குறித்து

554. யுகத்தை முடித்துவைக்கும் அவரது இறுதிக் கிரியையில், தேவனின் மனநிலை ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு இவற்றில் ஒன்றாக இருக்கிறது, அதில் எல்லா ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்க்கவும், அவரை நேர்மையான இருதயத்துடன் நேசிப்பவர்களைப் பரிபூரணமாக்கவும் அவர் அநீதியான அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். இது போன்ற ஒரு மனநிலையால் மட்டுமே யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். கடைசிக் காலம் ஏற்கனவே வந்துவிட்டது. சிருஷ்டிப்பில் உள்ள சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். மனுஷரின் விளைவுகளையும் அவர்களின் இலக்கையும் தேவன் வெளிப்படுத்தும் தருணம் இது. ஜனங்கள் ஆக்கினைத்தீர்ப்பிற்கும் நியாயத்தீர்ப்பிற்கும் உட்படுத்தப்படாவிட்டால், அவர்களின் கீழ்ப்படியாமையையும் அநீதியையும் அம்பலப்படுத்த எந்த வழியும் இருக்காது. ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே அனைத்து சிருஷ்டிப்புகளின் விளைவுகளையும் வெளிப்படுத்த முடியும். மனுஷன் சிட்சிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பளிக்கப்படும்போது மட்டுமே அவனுடைய உண்மையான நிறங்களைக் காட்டுகிறான். தீமை தீமையுடனும், நன்மை நன்மையுடனும் வைக்கப்படுகின்றன, மனுஷர் அனைவரும் அவர்களது வகையின்படி பிரிக்கப்படுவர். ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், எல்லா சிருஷ்டிப்புகளின் விளைவுகளும் வெளிப்படும், இதனால் தீமை தண்டிக்கப்பட்டு, நன்மைக்கு வெகுமதி கிடைக்கப்பெறும், மேலும் எல்லா ஜனங்களும் தேவனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். இந்தக் கிரியைகள் அனைத்தும் நீதியான ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அடையப்பட வேண்டும். ஏனெனில் மனுஷனின் சீர்கேடு உச்சத்தை எட்டியிருக்கிறது மற்றும் அவனது கீழ்ப்படியாமை மிகவும் கடுமையானதாகிவிட்டது, முக்கியமாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் தேவனின் நீதியான மனநிலையால் மட்டுமே மனுஷனை முழுமையாக மாற்றி, அவனை பரிபூரணப்படுத்த முடியும். இந்த மனநிலையால் மட்டுமே தீமையை அம்பலப்படுத்த முடியும், இதனால் அநீதியான அனைவரையும் கடுமையாகத் தண்டிக்கவும் முடியும். ஆகையால், இது போன்ற ஒரு மனநிலையானது யுகத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் ஒவ்வொரு புதிய யுகத்தின் கிரியையின் பொருட்டு அவரது மனநிலையின் வெளிப்பாடு மற்றும் காண்பிக்கப்படுவது வெளிப்படும்படி செய்யப்படுகிறது. தேவன் தன்னுடைய மனநிலையைத் தன்னிச்சையாகவும் முக்கியத்துவமும் இல்லாமலும் வெளிப்படுத்துகிறார் என அர்த்தமாகாது. கடைசிக் காலத்தில் மனுஷனின் விளைவுகளை வெளிப்படுத்துவதில், தேவன் இன்னும் மனுஷனுக்கு எல்லையற்ற இரக்கத்தையும் அன்பையும் அளித்து, அவனிடம் தொடர்ந்து அன்பாக இருந்து, மனுஷனை நீதியான நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தாமல், அதற்குப் பதிலாகச் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைக் காட்டி, மனுஷன் எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்திருந்தாலும், சிறிதளவும் நியாயமான நியாயத்தீர்ப்பு இல்லாமல் அவனை மன்னிப்பார் என்று வைத்துக்கொண்டால்: தேவனின் ஆளுகை அனைத்தும் எப்போது முடிவிற்குக் கொண்டுவரப்படும்? இதுபோன்ற ஒரு மனநிலை மனுஷகுலத்திற்கான பொருத்தமான இலக்கிற்கு ஜனங்களை எப்போது வழிநடத்த முடியும்? உதாரணமாக, எப்போதும் அன்பாக இருக்கும் ஒரு நீதிபதி, கனிவான முகத்தையும், மென்மையான இருதயத்தையும் கொண்ட ஒரு நீதிபதியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஜனங்கள் செய்த குற்றங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களை நேசிக்கிறார், மேலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் அவர் அன்பு பாராட்டுகிறார். அவ்வாறான நிலையில், எப்போது அவரால் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க முடியும்? கடைசிக் காலத்தில், நீதியான நியாயத்தீர்ப்பால் மட்டுமே மனுஷனை அவர்களின் வகைக்கு ஏற்ப பிரித்து, மனுஷனை ஒரு புதிய ராஜ்யத்திற்குக் கொண்டு வர முடியும். இவ்வாறாக, தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பு மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் மூலம் முழு யுகமும் முடிவுக்கு வருகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

556. தேவனுடைய நீதியுள்ள மனநிலையைப் புரிந்துக்கொள்ள, ஒருவர் முதலில் தேவனுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள வேண்டும்: அவர் எதை வெறுக்கிறார், எதை அருவருக்கிறார், எதை நேசிக்கிறார், யாரிடம் அவர் சகிப்புத்தன்மையுடனும் தயவுடனும் இருக்கிறார் மற்றும் எந்த வகையான மனிதருக்கு அவர் அந்த தயவை வழங்குகிறார் என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். இது ஒரு முக்கியமான விஷயம் ஆகும். தேவன் எவ்வளவு அன்பானவராக இருந்தாலும், அவர் ஜனங்கள் மீது எவ்வளவு தயவு மற்றும் அன்பு வைத்திருந்தாலும், தேவன் தனது அந்தஸ்தையும் நிலையையும் புண்படுத்தும் எவரையும் சகித்துக்கொள்வதில்லை. அவருடைய கௌரவத்தை புண்படுத்தும் எவரையும் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதையும் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டும். தேவன் ஜனங்களை நேசிக்கிறார் என்றாலும், அவர் அவர்களைப் பற்றிக்கொள்வதில்லை. தம் ஜனங்களுக்கு அவருடைய அன்பையும், தயவையும், சகிப்புத்தன்மையையும் தருகிறார். ஆனால் அவர் அவர்களை ஒருபோதும் அதிகப்படியாக பாதுகப்பதில்லை. தேவனுக்கென கொள்கைகளும் வரம்புகளும் உள்ளன. தேவனுடைய அன்பை நீ எவ்வளவு உணர்ந்திருந்தாலும், அந்த அன்பு எவ்வளவு ஆழமாக இருந்தாலும், நீ மற்றவரை நடத்துவது போல தேவனை ஒருபோதும் நடத்தக்கூடாது. தேவன் ஜனங்களை மிகவும் நெருக்கமானவர்களாக நடத்துகிறார் என்பது உண்மைதான் என்றாலும், ஒரு மனிதர் தேவனை இன்னொரு மனிதராகக் கருதினால், அவரை மற்றொரு சிருஷ்டியைப் போல, ஒரு நண்பர் அல்லது வழிபாட்டுப் பொருளைப் போலக் கருதினால், தேவன் தம் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்து அவர்களைக் கைவிடுவார். இது அவருடைய மனநிலையாகும். ஜனங்கள் இந்த சிக்கலை மறக்கக்கூடாது. ஆகவே, தேவனுடைய மனநிலையைப் பற்றி தேவன் பேசியது போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி காண்கிறோம்: நீ எத்தனைப் பாதைகளில் பயணித்தாய், எவ்வளவு கிரியை செய்தாய் அல்லது எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாய் என்பது முக்கியமல்ல, தேவனுடைய மனநிலையை நீ புண்படுத்தியவுடன், நீ செய்ததை அடிப்படையாகக் கொண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் அவர் பதில் செய்வார். இதன் அர்த்தம் என்னவென்றால், தேவன் ஜனங்களை மிகவும் நெருக்கமானவர்களாக நடத்துகிறார். ஆனால் ஜனங்களோ தேவனை ஒரு நண்பராகவோ அல்லது உறவினராகவோ கருதக்கூடாது. தேவனை உங்கள் “நண்பன்” என்று அழைக்காதிருங்கள். அவரிடமிருந்து நீ எவ்வளவு அன்பைப் பெற்றிருந்தாலும், அவர் உனக்கு எவ்வளவு சகிப்புத்தன்மையைக் கொடுத்தாலும், நீ ஒருபோதும் தேவனை உன் நண்பராகக் கருதக்கூடாது. இது தேவனுடைய நீதியுள்ள மனநிலையாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VII” என்பதிலிருந்து

557. அவமதிப்பைக் குறித்த தேவனின் சகிப்பின்மையானது அவரது தனித்துவமான சாராம்சமாகும்; தேவனின் கோபம் அவருடைய தனித்துவமான மனநிலை ஆகும்; தேவனின் மகத்துவம் அவருடைய தனித்துவமான சாராம்சமாகும். தேவனுடைய கோபத்தின் பின்னால் இருக்கும் கோட்பாடானது, அவர் மட்டுமே கொண்டிருக்கும் அவருடைய அடையாளம் மற்றும் அவருடைய தகுநிலையின் சான்றாகும். இந்த கோட்பாடானது தனித்துவமான தேவனுடைய சாராம்சத்தின் அடையாளமுமாகும் என்பது தெளிவாகிறது. தேவனுடைய மனநிலையானது அவருடைய இயல்பான சாராம்சமாகும், இது காலப்போக்கில் ஒருபோதும் மாறாது, புவியியல் இருப்பிடத்தின் மாற்றங்களால் மாற்றமுமடையாது. அவருடைய இயல்பான மனநிலையே அவரின் உண்மையான சாராம்சமாகும். அவர் யார் மீது தன்னுடைய கிரியையையை நடப்பிக்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய சாராம்சமானது மாறாது, அவருடைய நீதியான மனநிலையும் மாறாது. ஒருவர் தேவனைக் கோபப்படுத்தும்போது, தேவன் தன்னுடைய இயல்பான மனநிலையை வெளிப்படுத்துகிறார்; இந்த நேரத்தில் அவருடைய கோபத்தின் பின்னால் இருக்கும் கோட்பாடானது மாறுவதில்லை, அவருடைய தனித்துவமான அடையாளமும், நிலைப்பாடும் கூட மாறுவதில்லை. அவர் தனது சாராம்சத்தின் மாறுதலின் காரணமாகவோ அல்லது அவரது மனநிலையிலிருந்து வேறுபட்ட காரியங்கள் எழுவதாலோ அவர் கோபப்படுவதில்லை, ஆனால் தனக்கு எதிரான மனிதனின் எதிர்ப்பு அவருடைய மனநிலையை கிறது. மனிதன் தேவனை படு மோசமாகக் கோபமூட்டுவது, தேவனுடைய சொந்தமான அடையாளத்திற்கும், நிலைப்பாட்டுக்கும் கடுமையான சவாலாகும். தேவனின் பார்வையில், மனிதன் அவருக்கு சவால் விடும்போது, மனிதன் அவருடன் போட்டியிட்டு, அவரது கோபத்தை சோதிக்கிறான். மனிதன் தேவனை எதிர்க்கும்போது, மனிதன் தேவனுடன் போட்டியிடும்போது, மனிதன் தொடர்ந்து தேவனுடைய கோபத்தைச் சோதிக்கும்போது—இப்படிப்பட்ட நேரங்களில் பாவமானது கட்டுக்கடங்காமல் போகிறது, தேவனுடைய கோபம் இயற்கையாகவே வெளிப்பட்டு, தோன்றத் தொடங்குகிறது. எனவே, தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது எல்லா பொல்லாத வல்லமைகளும் இருக்கப் போவதில்லை என்பதற்கான அடையாளமாகும். மேலும் அது எல்லா எதிரான வல்லமைகளும் அழிக்கப்படும் என்பதற்கான அடையாளமாகும். இது தேவனுடைய நீதியான மனநிலை மற்றும் தேவனுடைய கோபத்தின் தனித்தன்மையாகும். தேவனுடைய மகத்துவமும் பரிசுத்தமும் மறுக்கப்பட்டு, நீதியின் வல்லமைகள் தடை செய்யப்பட்டு, மனிதனால் பார்க்க முடியாமல் இருக்கும் போது, தேவன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவார். தேவனுடைய சாராம்சத்தினால், தேவனை விரோதிக்கிற, அவரை எதிர்க்கிற, அவருடன் வாதாடுகிற, பூமியில் இருக்கும் எல்லா வல்லமைகளும் பொல்லாதவைகளாக, கலகத்தன்மையுள்ளவைகளாக, அநீதியுள்ளவைகளாக இருக்கிறன. அவை சாத்தானிடத்திலிருந்து வருகிறதாகவும், சாத்தானுடையதாகவும் இருக்கின்றன. தேவன் நீதி உள்ளவராகவும், ஒளியானவராகவும், மாசற்ற பரிசுத்தராகவும் இருப்பதால், பொல்லாதவைகளாக, கலகத்தன்மையுள்ளவைகளாக, சாத்தானுக்குச் சொந்தமானதாக இருக்கிற எல்லா காரியங்களும், தேவனுடைய கோபம் கட்டவிழ்க்கப்படும் போது மறைந்து விடும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

558. தேவன் தனது கடுங்கோபத்தை அனுப்பும்போது, அசுத்த வல்லமைகள் தடுக்கப்படுகின்றன மற்றும் அசுத்த காரியங்கள் அழிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் நியாயமான மற்றும் நேர்மறையான விஷயங்கள் தேவனின் கவனிப்பை, பாதுகாப்பை அனுபவிக்கவும், தொடரவும் அனுமதிக்கப்படுகின்றன. அநீதியான, எதிர்மறையான மற்றும் அசுத்தமான காரியங்கள் நீதியான, நேர்மறையான, காரியங்களின் இயல்பான செயல்பாடுகளைத் தடை செய்வதால், தொந்தரவு செய்வதால் அல்லது சேதப்படுத்துவதால் தேவன் தன்னுடைய கோபத்தை அனுப்புகிறார். தன்னுடைய சொந்த அந்தஸ்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பது தேவகோபத்தின் நோக்கமல்ல, மாறாக நியாயமான, நேர்மறையான, அழகான மற்றும் நல்ல விஷயங்களின் இருப்பைப் பாதுகாப்பதும், மனிதகுலத்தின் இயல்பான உயிர்வாழ்வின் சட்டங்களையும் ஒழுங்கையும் பாதுகாப்பதுமேயாகும். இதுவே தேவகோபத்தின் மூலகாரணமாகும். தேவனுடைய கோபம் மிகச் சரியானதும், இயல்பானதும், அவருடைய மனநிலையின் உண்மையான வெளிப்பாடும் ஆகும். அவருடைய கோபத்தில் எந்த ஒரு இரகசியமான நோக்கங்களும் இல்லை, எந்த ஒரு வஞ்சகமோ அல்லது சதித்திட்டமுமோ இல்லை, இன்னும் அழுத்தமான விருப்பங்கள், தந்திரங்கள், குரோதங்கள், வன்முறை, அசுத்தமான அல்லது எந்த ஒரு சீர்கேடான மனித இனத்தின் மற்ற பங்கான பண்புகளும் இல்லை. தேவன் தனது கோபத்தை அனுப்புவதற்கு முன்பு, ஒவ்வொரு விஷயத்தின் சாராம்சத்தையும் அவர் ஏற்கனவே மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் உணர்ந்தறிந்திருக்கிறார். மேலும் அவர் ஏற்கனவே துல்லியமான, தெளிவான வரையறைகளையும் முடிவுகளையும் வகுத்திருக்கிறார். இப்படி, அவர் செய்யும் எல்லாவற்றிலும், தேவனுடைய நோக்கம் அவருடைய மனப்பாங்கைப் போலவே மிகத் தெளிவானதாகும். அவர் குழப்பமானவரோ, கண்மூடித்தனமானவரோ, உணர்ச்சிவசப்படுபவரோ, அல்லது கவனக்குறைவு கொண்டவரோ அல்லர், மேலும் அவர் நிச்சயமாக கோட்பாடில்லாதவரும் அல்ல. இது தேவனுடைய கோபத்தின் நடைமுறை அம்சமாகும், மேலும் தேவனுடைய கோபத்தின் இந்த நடைமுறை அம்சத்தின் காரணமாகவே மனிதகுலம் அதன் இயல்பான இருப்பை அடைந்துள்ளது. தேவனுடைய கோபம் இல்லாவிட்டால், மனுக்குலம் அசாதாரணமான வாழ்க்கை சூழ்நிலைகளில் இறங்கியிருக்கும். மேலும் எல்லா நீதியான, அழகான, நல்ல காரியங்களும் அழிக்கப்பட்டு, இல்லாமல் போயிருக்கும். தேவனுடைய கோபம் இல்லாவிட்டால், சிருஷ்டிக்கப்பட்ட உயிர்களுக்கான இருப்புச் சட்டங்களும் ஒழுங்குகளும் உடைக்கப்பட்டு அல்லது முற்றிலுமாகக்கூட அழிக்கப்பட்டிருக்கும். மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து, மனிதகுலத்தின் இயல்பான இருப்பைப் பாதுகாக்கவும், தாங்கவும் தேவன் தொடர்ந்து தனது நீதியான மனநிலையைப் பயன்படுத்தினார். அவருடைய நீதியான மனநிலையில் கோபமும் மகத்துவமும் இருப்பதால், எல்லா பொல்லாத மனிதர்களும், விஷயங்களும், பொருட்களும், மனிதகுலத்தின் இயல்பான இருப்பைத் தொந்தரவு செய்யும் மற்றும் சேதப்படுத்தும் அனைத்து காரியங்களும், அவருடைய கோபத்தின் விளைவாக தண்டிக்கப்படுகின்றன, கட்டுப்படுத்தப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன. கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக, தேவனை எதிர்க்கும் மற்றும் மனிதகுலத்தை நிர்வகிக்கும் தேவனின் கிரியையில் சாத்தானின் கூட்டாளிகளாகவும், வேலையாட்களாகவும் செயல்படும் அனைத்து வகையான அசுத்தமான மற்றும் பொல்லாத ஆவிகளைத் அடித்து கீழே தள்ளி, அழிப்பதற்கு தேவன் தொடர்ந்து தனது நீதியான மனநிலையைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு, மனிதனுடைய இரட்சிப்புக்கான தேவனுடைய கிரியை எப்போதும் அவருடைய திட்டத்தின்படி முன்னேறியுள்ளது. அதாவது தேவனுடைய கோபம் இருப்பதால், மனிதர்களின் மிக நீதியான காரணங்கள் ஒருபோதும் அழிக்கப்படவில்லை.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

559. புத்தியீனமும், அறிவற்றதுமாக இருக்கும் மனுக்குலம் முழுவதையும் தேவன் நடத்தும் விதமானது இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை முதன்மையாகச் சார்ந்துள்ளது‌. மறுபுறத்தில் அவருடைய கோபம் பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான சம்பவங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அது மனிதனுக்குத் தெரியாமல் இருக்கிறது. இதன் விளைவாக, தேவனுடைய கோபத்தின் வெளிப்பாட்டைப் பார்ப்பதும், அவருடைய கோபத்தைப் புரிந்து கொள்வதும் மனிதனுக்குக் கடினமாகிறது. இதனால் மனிதன் தேவனுடைய கோபத்தை முக்கியமானதாகக் கருதுவதில்லை. மனிதனுக்கான தேவனுடைய கடைசி கிரியையும் சகிப்புத்தன்மையின் படியையும் மற்றும் மன்னிப்பின் நடவடிக்கையையும் மனிதன் காணும்போது, அதாவது தேவனுடைய இரக்கத்தின் கடைசி நிகழ்வு மற்றும் அவருடைய கடைசி எச்சரிப்பு மனுக்குலம் மேல் வரும்போது, இன்னும் ஜனங்கள் தேவனை எதிர்க்கும் அதே முறைமைகளைப் பயன்படுத்தி மனந்திரும்புவதற்கும், தங்கள் வழிகளை சீரமைப்பதற்கும், அவருடைய இரக்கத்தை பெற்றுக் கொள்வதற்கும் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தால், தேவன் தன்னுடைய சகிப்புத்தன்மையையும் அவருடைய பொறுமையையும் இனிமேல் ஜனங்களுக்கு அளிக்க மாட்டார். மாறாக, இந்த நேரத்தில் தேவன் தன்னுடைய இரக்கத்தைத் திரும்பப் பெற்று விடுவார். இதைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய கோபத்தை மட்டுமே அனுப்புவார். எப்படி அவரால் ஜனங்களைத் தண்டிக்கவும், அவர்களை அழிக்கவும் வெவ்வேறான வழிமுறைகளைப் பயன்படுத்த முடியுமோ, அப்படியே அவரால் தன்னுடைய கோபத்தையும் பல வழிகளில் வெளிப்படுத்த முடியும்.

சோதோம் பட்டணத்தை அழிக்க தேவன் அக்கினியைப் பயன்படுத்தினார். இது ஒரு மனித இனத்தையோ அல்லது வேறொன்றையோ முற்றிலுமாக அழிக்கப் பயன்படுத்தும் அவரின் விரைவான வழிமுறையாகும். சோதோமின் ஜனங்களை எரிப்பது அவர்களுடைய மாம்ச சரீரத்தை அழித்ததை விட, அவர்களுடைய ஆவிகளின் முழுமையையும், அவர்களுடைய ஆத்துமாக்களையும், அவர்களுடைய சரீரங்களையும் அழித்துப்போட்டது. மேலும் இது பட்டணத்திற்குள்ளிருந்த ஜனங்கள் பொருள் உலகம் மற்றும் மனிதன் காணக்கூடாத உலகம் இரண்டிலும் வாழ்வதை நிறுத்துவார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது தேவன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும், தெரிவிக்கும் ஒரு வழிமுறையாகும். இவ்வகை வெளிப்படுத்துதலும், தெரிவித்தலும், தேவனுடைய கோபத்தின் சாராம்சத்தின் ஒரு அம்சமாகும். மேலும் இது இயல்பாகவே தேவனுடைய நீதியான மனநிலையின் சாராம்சத்தின் வெளிப்பாடுமாகும். தேவன் தன்னுடைய கோபத்தை அனுப்பும்போது, அவர் எந்த ஒரு இரக்கத்தையோ அல்லது கிருபையையோ வெளிப்படுத்துவதை நிறுத்திவிடுகிறார். மேலும் அவர் தன்னுடைய சகிப்புத்தன்மையையோ அல்லது பொறுமையையோ இனி ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. தொடர்ந்து பொறுமையாக இருக்கவும், அவருடைய இரக்கத்தை மீண்டும் வழங்கவும், அவருடைய சகிப்புத்தன்மையை மீண்டும் ஒருமுறை அளிக்கவும் அவரை வற்புறுத்தக்கூடிய ஒரு நபரோ, காரியமோ அல்லது காரணமோ இல்லை. இந்தக் காரியங்களுக்குப் பதிலாக, தேவன் ஒரு நொடி தாமதமின்றி தம்முடைய கோபத்தையும் மகத்துவத்தையும் அனுப்பி, தான் விரும்புவதைச் செய்கிறார். அவர் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப இந்தக் காரியங்களை மிக விரைவான, தெளிவான வகையில் செய்வார். இதுதான் தேவன் தனது கோபத்தையும் மகத்துவத்தையும் அனுப்பும் வழிமுறையாகும், மனிதன் இதை அவமதிக்கக் கூடாது. மேலும் இது அவருடைய நீதியான மனநிலையின் ஒரு அம்சத்தின் வெளிப்பாடாகும். தேவன் மனிதனிடம் அக்கறையையும் அன்பையும் காட்டுவதை ஜனங்கள் காணும்போது, அவர்களால் அவருடைய கோபத்தைக் கண்டறியவோ, அவருடைய மகத்துவத்தைக் காணவோ அல்லது அவமதிப்பைக் குறித்த அவரது சகிப்புத்தன்மையின்மையை உணரவோ முடிவதில்லை. இந்த காரியங்கள் தேவனின் நீதியான மனநிலையானது இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் அன்பு ஆகியவற்றால் மட்டுமே ஆனது என்று மக்கள் நம்புவதற்கு எப்போதும் வழிவகுத்துள்ளன. ஆயினும், தேவன் ஒரு நகரத்தை அழிப்பதையோ அல்லது மனிதகுலத்தை வெறுப்பதையோ ஒருவர் காணும்போது, மனிதனை அழிப்பதில் அவரின் கடுங்கோபமும், அவரின் மகத்துவமும் அவருடைய நீதியான மனநிலையின் மறுபக்கத்தை கணப்பொழுது பார்க்க மக்களை அனுமதிக்கின்றன. இது அவமதிப்பைக் குறித்த தேவனுடைய சகிப்புத்தன்மை இன்மை ஆகும். எந்தவொரு அவமதிப்பையும் சகித்துக்கொள்ளாத தேவனின் மனநிலை, எந்தவொரு சிருஷ்டிப்பின் கற்பனையையும் மிஞ்சுகிறது, மற்றும் சிருஷ்டிக்கப்படாதவைகளின் நடுவே, ஒன்று கூட அதில் குறுக்கிடவோ அல்லது அதை பாதிக்கவோ இயலாது; இன்னும் அதை ஆள் மாறாட்டம் செய்யவோ அல்லது அதைப் போல பாசாங்கு செய்யவோ முடியாது. ஆகவே, தேவனின் மனநிலையின் இந்த அம்சம் மனிதகுலம் மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். தேவனிடத்தில் மட்டுமே இவ்வகையான தன்மை உள்ளது, மேலும் தேவன் மட்டுமே இவ்வகையான மனநிலையைக் கொண்டிருக்கிறார். தேவன் இந்த வகையான நீதியுள்ள தன்மையைக் கொண்டிருக்கிறார், ஏனென்றால் அவர் துன்மார்க்கம், இருள், கலகத்தன்மை ஆகியவற்றையும் மற்றும் மனிதகுலத்தைக் கெடுத்து, பட்சிக்கும் சாத்தானின் பொல்லாத செயல்களையும் அறவே வெறுக்கிறார். ஏனென்றால், அவருக்கு எதிரான எல்லா பாவச்செயல்களையும் அவர் வெறுப்பதாலும், மேலும் அவருடைய பரிசுத்த மற்றும் கறையில்லாத சாராம்சத்தினாலுமே ஆகும். இதன் காரணமாகவே, சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்த ஒன்றும் அவரை வெளிப்படையாக எதிர்ப்பதை அல்லது விரோதிப்பதை, அவர் பொறுத்துக் கொள்ள மாட்டார். ஒரு முறை தனது இரக்கத்தைக் காண்பித்த ஒரு நபரோ அல்லது அவர் தெரிந்து கொண்ட ஒருவரோ கூட, அவருடைய மனநிலைக்கு எரிச்சலுண்டாக்கி, அவருடைய பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையின் கோட்பாடுகளை மீறினால், தேவன் ஒரு துளி இரக்கமும் தயக்கமும் இல்லாமல், அவமதிப்பை தாங்கிக் கொள்ளாத தன்னுடைய நீதியான மனநிலையை கட்டவிழ்த்து, அதை வெளிப்படுத்துவார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

560. தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது, அவருடைய நீதியான மனநிலையின் வெளிப்பாட்டின் ஒரு அம்சம் என்றாலும், தேவனுடைய கோபம் எந்த வகையிலும் அதன் இலக்கைப் பற்றி கண்மூடித்தனமானதாகவும் இல்லை, கோட்பாடில்லாததாகவும் இல்லை. மாறாக, தேவன் சீக்கிரத்தில் கோபம் கொள்ளமாட்டார், அவருடைய கோபத்தையும் மகத்துவத்தையும் சுலபமாக வெளிப்படுத்தவுமாட்டார். மேலும், தேவனுடைய கோபம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அளவிடப்பட்டதாகவும் இருக்கிறது. மனிதன் எப்படி கோபத்தில் பற்றி எரிவானோ அல்லது கோபத்தை வெளிப்படுத்துவானோ என்பதோடு அதனை ஒப்பிடவே முடியாது. மனிதனுக்கும் தேவனுக்கும் இடையிலான பல உரையாடல்கள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிற சில தனிமனிதர்களின் வார்த்தைகள் மேலோட்டமாகவும், அறிவில்லாததாகவும், குழந்தைகளுக்குரியதாவும் இருந்தன, ஆனால் தேவன் அவர்களை அடித்துக் கீழே தள்ளவில்லை, அவர்களை ஆக்கினைக்குள்ளாக்கவும் இல்லை. குறிப்பாக, யோபுவினுடைய சோதனையின் போது, யோபுவின் மூன்று நண்பர்களும் மற்றவர்களும் அவரிடம் பேசின வார்த்தைகளைக் கேட்டபின், யேகோவா தேவன் அவர்களை எவ்வாறு கையாண்டார்? தேவன் அவர்களை ஆக்கினைக்குள்ளாக்கினாரா? அவர்களிடம் கோபப்பட்டாரா? அப்படி எதுவும் அவர் செய்யவில்லை! மாறாக, அவர் யோபுவிடம் அவர்கள் சார்பில் வேண்டுதல் செய்யவும், அவர்களுக்காக ஜெபிக்குமாறும் கூறினார். மேலும் அவர்களுடைய தவறுகளால் தேவன் தாமே பாதிக்கப்படவில்லை. இந்த எல்லா நிகழ்வுகளும் கலகத்தன்மையும், அறியாமையும் உள்ள மனுக்குலத்தைத் தேவன் கையாளும் முக்கிய மனப்பான்மையைக் குறிக்கின்றன. எனவே தேவனுடைய கோபத்தை கட்டவிழ்த்துவிடுவது எந்த வகையிலும் அவருடைய மனநிலையின் வெளிப்பாடும் அல்ல, அவருடைய உணர்ச்சிகளுக்கு வழி உண்டாக்கும் அவருடைய வழிமுறையும் அல்ல. மனிதனுடைய தவறான புரிதலுக்கு மாறாக, தேவனுடைய கோபமானது கடுங்கோபத்தின் முழுமையான சீற்றம் அல்ல. தேவனால் தன்னுடைய சொந்த மனநிலையைக் கட்டுப்படுத்த இயலாததாலோ அல்லது அவருடைய கோபம் கொதிநிலையை அடைந்து வெளியேற வேண்டியிருப்பதாலோ, அவர் தம் கோபத்தை கட்டவிழ்த்து விடுவதில்லை. மாறாக, அவருடைய கோபமானது அவருடைய நீதியான மனநிலையின் காட்சியுமாகும், உண்மையான வெளிப்பாடுமாகும். மேலும் அது அவருடைய பரிசுத்த சாராம்சத்தின் அடையாளமான வெளிப்பாடாகும். தேவன் கோபமாய் இருக்கிறார், அவர் அவமதிக்கப்படுவதைச் சகித்துக் கொள்வதில்லை, இதைச் சொல்வதினால் தேவனுடைய கோபம் காரணங்களிடையே பகுத்தறியாமல் அல்லது கோட்பாடில்லாமல் இருக்கிறது என்று அர்த்தமல்ல. சீர்கெட்ட மனித இனமே கோட்பாடில்லாத, காரணங்களுக்கு இடையே வித்தியாசப்படுத்தாதும், திடீரென வெடித்துச்சீறும் சீரற்ற கோபத்தின் மேல் பிரத்தியேகமான கோரிக்கைகளை கொண்டதாகும். ஒரு மனிதனுக்கு அந்தஸ்து கிடைத்ததும், அவனுக்குத் தன் மனநிலையைக் கட்டுப்படுத்துவது பெரும்பாலும் கடினமாகிறது, அதனால் அவன் அதிருப்தியை வெளிப்படுத்தவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், வாய்ப்புகளைத் துரிதமாய் பயன்படுத்திக் கொள்வதில் இன்பங்கொள்ளுகிறான்; அவன் தனது திறனை வெளிப்படுத்த, தெளிவான காரணமின்றி அடிக்கடி கோபத்தில் பற்றியெரிந்து, தன் அந்தஸ்தும், அடையாளமும் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவை என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவான். நிச்சயமாக, எந்தவொரு அந்தஸ்தும் இல்லாத சீர்கெட்ட ஜனங்கள் பெரும்பாலும் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு அடிக்கடி கோபம் ஏற்படுகிறது. தங்கள் சொந்த அந்தஸ்தையும் மேன்மையையும் பாதுகாப்பதற்காக, சீர்கெட்ட மனுக்குலம் அடிக்கடி தங்கள் உணர்ச்சிகளையும், அவர்களின் ஆணவத் தன்மையையும் வெளிப்படுத்துகிறார்கள். பாவத்தை அழியாமல் காக்கவும், நிலைநிறுத்தவும் மனிதன் கோபத்தில் பற்றியெரிந்து, தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவான். மேலும் இந்த செயல்கள் மனிதன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வழிமுறைகளாகும்; அவை அசுத்தங்களாலும், திட்டங்களாலும், சூழ்ச்சிகளாலும், மனிதனின் சீர்கேடுகளாலும் மற்றும் தீமைகளாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவை மனிதனின் காட்டுத்தனமான லட்சியங்களாலும், விருப்பங்களாலும் நிரம்பியிருக்கின்றன. நீதி துன்மார்க்கத்துடன் மோதுகையில், நீதியை அழியாமல் பாதுகாப்பதில் அல்லது அதை நிலைநிறுத்துவதில் மனிதனின் கோபம் பற்றியெரியாது; மாறாக, நீதியின் வல்லமைகள் அச்சுறுத்தப்படுகையில், துன்புறுத்தப்படுகையில், தாக்கப்படுகையில், மனிதனின் மனப்பான்மையானது, கண்டும் காணாதது போல், நழுவுகிறதாய் அல்லது விலகிச் செல்வதுமாய் இருக்கிறது. இருப்பினும், அசுத்த வல்லமைகளை எதிர்கொள்ளும்போது, மனிதனின் மனப்பான்மை இடமளிப்பதாகவும், பணிந்து போவதாகவும், கைக்கொள்வதாகவும் இருக்கிறது. ஆகையால், மனிதனின் வெளிப்படுத்தும் தன்மையானது அசுத்த வல்லமைகளுக்கு ஒரு தப்பிச் செல்லும் வழியாகும். மேலும் அது மாம்ச மனிதனின் கட்டுப்பாடற்ற, தடுக்க இயலாத, தீய நடத்தையின் வெளிப்பாடாகும். தேவன் தன்னுடைய கோபத்தை அனுப்பும்போது எப்படியாயினும் எல்லா பொல்லாத வல்லமைகளும் செயலிழக்கப்படும், மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் எல்லா பாவங்களும் கட்டுப்படுத்தப்படும், தேவனுடைய கிரியையைத் தடைசெய்யும் எல்லா எதிரான வல்லமைகளும் வெளிப்படையாக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, சபிக்கப்பட்டு, மேலும் தேவனை எதிர்க்கிற சாத்தானுடைய உடந்தையாளர்களும் தண்டிக்கப்பட்டு, வேரறுக்கப்படுவார்கள்‌. அவர்களுடைய இடத்தில், தேவனுடைய கிரியை எந்தத் தடையுமின்றி தொடரும், தேவனுடைய நிர்வாகத் திட்டம் திட்டமிட்டபடி படிப்படியாக தொடர்ந்து வளர்ச்சியுறும். மேலும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் சாத்தானுடைய தொல்லைகளிலிருந்தும் வஞ்சகத்திலிருந்தும் விடுதலையாக்கப்படுவார்கள். மேலும் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் தேவனுடைய தலைமைத்துவத்தையும், ஏற்பாடுகளையும் கலக்கமற்ற, சமாதானமான சூழ்நிலைகளின் நடுவில் அனுபவிப்பார்கள். தேவனுடைய கோபமானது தீய வல்லமைகள் பெருகி, கட்டுப்பாடற்றுப் போவதைத் தடுத்து, பாதுகாக்கிறது. மேலும் அது நீதியான, நேர்மறையான காரியங்களின் இருப்பையும், பெருக்கத்தையும் பாதுகாக்கும் ஒன்றாகும். மேலும் அவைகளை ஒடுக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் நித்தியமாய் பாதுகாக்குகிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

561. தேவனுடைய ஒவ்வொரு செயலையும் கையாளும்போது, தேவனுடைய நீதியான மனநிலை வேறு எந்த காரியங்களிலிருந்தும் விடுபட்டது என்பதிலும், அது பரிசுத்தமும் குற்றமற்றதுமாகும் என்பதிலும் நீ முதலில் உறுதியாயிருக்க வேண்டும். இந்த செயல்களில் தேவனுடைய அடித்தல், தண்டனை மற்றும் மனிதகுலத்தை அழித்தல் ஆகியவை அடங்கும். விதிவிலக்கு இல்லாமல், தேவனின் ஒவ்வொரு செயலும் அவருடைய இயல்பான மனநிலை மற்றும் அவரது திட்டத்திற்கு கட்டாயமாய் இணங்கிச் செய்யப்படுகிறது. மேலும் அவை மனிதகுலத்தின் அறிவு, பாரம்பரியம் மற்றும் தத்துவத்தின் எந்த பகுதியையும் உள்ளடக்கியதல்ல. தேவனுடைய ஒவ்வொரு செயலும் அவரது மனநிலை மற்றும் சாராம்சத்தின் வெளிப்பாடாகும். அவை சீர்கேடான மனிதகுலத்திற்குச் சொந்தமான எதனோடும் தொடர்பில்லாததாகும். தேவனுடைய அன்பு, இரக்கம் மற்றும் மனிதகுலத்தின் மீதான சகிப்புத்தன்மை ஆகியவை மட்டுமே குற்றமற்றவை, கலப்படமற்றவை மற்றும் பரிசுத்தமானவை என்ற கருத்தை மனிதகுலம் கொண்டுள்ளது, மேலும் அதைப் போலவே தேவனுடைய ஆத்திரமும் அவருடைய கோபமும் கூட கலப்படமற்றவையே என்பது யாருக்கும் தெரிவதில்லை; மேலும், தேவன் ஏன் எந்த அவமதிப்பையும் பொறுத்துக்கொள்வதில்லை அல்லது ஏன் அவருடைய கோபம் மிகப் பெரியதாயிருக்கிறது போன்ற கேள்விகளை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மாறாக, தேவனுடைய கோபம் சீர்கேடான மனுக்குலத்தின் மோசமான குணம் போன்றது என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மேலும் தேவனுடைய கோபம் சீர்கேடான மனுக்குலத்தின் கோபம் போன்றதே என்றும் தவறாக புரிந்துகொள்கிறார்கள். தேவனுடைய கோபம் மனிதகுலத்தின் சீர்கேடான மனநிலையின் இயல்பான வெளிப்பாடு போன்றதே என்றும், தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது சீர்கேடான ஜனங்கள் சில மகிழ்ச்சியற்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது கோபப்படுவதைப் போன்றது என்றும் கூட அவர்கள் தவறாகக் கருதுகிறார்கள். மேலும் தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது அவருடைய மனநிலையின் வெளிப்பாடு என்று நம்புகிறார்கள். இந்த கூடுகைக்குப் பிறகு, இனி உங்கள் ஒவ்வொருவருக்கும் தேவனுடைய நீதியான மனநிலை குறித்த தவறான எண்ணங்கள், கற்பனைகள் அல்லது ஊகங்கள் இருக்காது என்று நம்புகிறேன். என் வார்த்தைகளைக் கேட்டபின், தேவனுடைய நீதியான மனநிலையின் கோபத்தைக் குறித்து, உங்கள் இதயங்களில் உண்மையான அடையாளம் காணுதலை நீங்கள் பெற முடியும் என்றும், தேவனுடைய கோபத்தைப் பற்றிய உங்களின் முந்தைய தவறானப் புரிதல்களை நீங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு, தேவனுடைய சாராம்சத்தைப் பற்றிய உங்கள் சொந்த தவறான நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை நீங்கள் மாற்றலாம் என்றும் நம்புகிறேன். மேலும், உங்கள் இருதயங்களில் தேவனுடைய மனநிலையைப் பற்றி ஒரு துல்லியமான வரையறையைக் கொண்டிருக்க முடியும் என்றும், தேவனுடைய நீதியான மனநிலையைக் குறித்து உங்களுக்கு இனி எந்த சந்தேகங்களும் இருக்காது என்றும், தேவனுடைய உண்மையான மனநிலையின் மீது நீங்கள் எந்த மனித காரணங்காணலையும் அல்லது கற்பனையையும் திணிக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன். தேவனுடைய நீதியான மனநிலை தேவனுடைய சொந்த, உண்மையான சாராம்சமாகும். அது மனிதனால் எழுதப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட ஒன்று அல்ல. அவருடைய நீதியான மனநிலை அவருடைய நீதியான மனநிலையே ஆகும், மேலும் அதற்கு சிருஷ்டிப்புகளுடன் எந்த சம்பந்தமோ, தொடர்போ இல்லை. தேவன் தாமே தேவன். அவர் ஒருபோதும் சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக மாற மாட்டார், மேலும் அவர் சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களில் ஓர் உறுப்பினரானாலும், அவருடைய இயல்பான மனநிலையும் சாராம்சமும் மாறாது. எனவே, தேவனை அறிந்துகொள்வது என்பது ஒரு பொருளை அறிந்துகொள்வது போன்றதல்ல; தேவனை அறிவது என்பது எதையாவது ஆராய்வதல்ல, அல்லது ஒரு நபரைப் புரிந்துகொள்வது போன்றதுமல்ல. ஒரு மனிதன் ஒரு பொருளை அறிந்து கொள்வதற்கான அல்லது ஒருவரை புரிந்து கொள்வதற்கான மையக் கருத்தையும் வழிமுறையையும் பயன்படுத்தி, தேவனை அறிந்து கொண்டால், நீ ஒருபோதும் தேவனைப் பற்றிய அறிவைப் பெற முடியாது. தேவனை அறிந்து கொள்வது அனுபவம் அல்லது கற்பனையை சார்ந்து இருக்காது, எனவே நீ உன்னுடைய அனுபவத்தையும் கற்பனையையும் ஒருபோதும் தேவன் மீது திணிக்கக்கூடாது. மேலும் உன்னுடைய அனுபவமும் கற்பனையும் எவ்வளவு முனைப்பானதாக இருந்தாலும் அவை வரம்புக்குட்பட்டதேயாகும். மேலும் என்னவென்றால், உன் கற்பனை உண்மைகளுடன் ஒத்துப்போவதில்லை, மேலும் சத்தியத்துடனும் ஒத்துப்போவதில்லை, மேலும் அது தேவனின் உண்மையான மனநிலை மற்றும் சாராம்சத்துடன் பொருந்துவதில்லை. தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துகொள்வதற்கு, உன்னுடைய கற்பனையின் மேல் நீ சார்ந்திருப்பாயானால், நீ ஒருபோதும் ஜெயம் பெற மாட்டாய். தேவனிடத்திலிருந்து வரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, பின்பு படிப்படியாக அனுபவித்து, அவைகளைப் புரிந்து கொள்வதுமே ஒரே வழி ஆகும். உன் ஒத்துழைப்பினாலும், சத்தியத்திற்கான உன் பசி தாகத்தினாலும், அவரை உண்மையாக புரிந்துகொள்ளவும், அறிந்து கொள்ளவும் தேவன் உன்னைத் தெளிவுபடுத்தும் ஒரு நாள் உண்டு.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

562. தேவன் ஒருபோதும் திடசித்தமில்லாதவரோ அல்லது அவருடைய செயல்களில் தயங்குபவரோ அல்ல; அவருடைய கிரியைகளுக்குப் பின்னால் உள்ள கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் அனைத்தும் தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை, தூய்மையானவை மற்றும் குறைபாடற்றவை ஆகும். மேலும் அவைகளில் எந்தவொரு சட்டங்களோ அல்லது சூழ்ச்சிகளோ உள்ளாகக் கலந்திருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய சாராம்சம் எந்த இருளையோ அல்லது பொல்லாப்பையோ கொண்டிருக்கவில்லை. நினிவே ஜனங்களின் பொல்லாத செயல்கள் அவருடைய பார்வைக்கு முன் வந்ததால் தேவன் அவர்களிடம் கோபங்கொண்டார்; அந்நேரத்தில் அவருடைய கோபம் அவருடைய சாராம்சத்திலிருந்து உருவானது. இருப்பினும், தேவனுடைய கோபம் சிதறடிக்கப்பட்டு, அவர் நினிவே ஜனங்களுக்கு மீண்டும் ஒருமுறை சகிப்புத்தன்மையை அளித்தபோது, அவர் வெளிப்படுத்திய அனைத்தும் அவருடைய சொந்த சாராம்சமாகவே இருந்தன. இந்த மாற்றத்தின் முழுமையும் தேவன் மீதான மனிதனின் மனப்பான்மையில் ஏற்பட்ட மாற்றத்தினால் உண்டானதாகும். இந்த முழு காலகட்டத்திலும், தேவனின் அவமதிக்கப்பட முடியாத மனநிலை மாறவில்லை, தேவனின் சகிப்புத்தன்மையுள்ள சாராம்சம் மாறவில்லை, தேவனின் அன்பான மற்றும் இரக்கமுள்ள சாராம்சம் மாறவில்லை. ஜனங்கள் பொல்லாத செயல்களைச் செய்து தேவனை அவமதிக்கும் போது, அவர் தம்முடைய கோபத்தை அவர்கள்மீது செலுத்துகிறார். ஜனங்கள் உண்மையிலேயே மனந்திரும்பும்போது, தேவனுடைய இருதயம் மாறும், அவருடைய கோபம் முடிவுறுகிறது. ஜனங்கள் தொடர்ந்து பிடிவாதமாக தேவனை எதிர்க்கும்போது, அவருடைய கோபம் நீடிக்கும், மேலும் அவர்கள் அழிக்கப்படும் வரை அவருடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மீது வலிமையுடன் தொடர்ந்து வரும். இதுவே தேவனுடைய மனநிலையின் சாராம்சமாகும். தேவன் கோபத்தை அல்லது இரக்கத்தை அல்லது கிருபையை வெளிப்படுத்துகிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், மனிதன் தன் இருதயத்தின் ஆழத்தில் தேவனிடம் கொண்டுள்ள நடத்தை, ஒழுக்கம் மற்றும் அணுகுமுறையே தேவனுடைய மனநிலையின் வெளிப்பாட்டின் மூலம் வெளிப்படுகிறதை உத்தரவிடுகிறது. தேவன் தொடர்ந்து ஒருவரை தனது கோபத்திற்கு உட்படுத்தினால், இந்த நபரின் இருதயம் தேவனை எதிர்க்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இந்நபர் ஒருபோதும் உண்மையிலேயே மனந்திரும்பவில்லை, தேவனுக்கு முன்பாக தலை வணங்கவில்லை அல்லது தேவன் மீது உண்மையான விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை, அவர் ஒருபோதும் தேவனின் இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பெறவில்லை. யாராவது திரும்பத் திரும்ப தேவனுடைய கவனிப்பையும், அவருடைய இரக்கம் மற்றும் அவருடைய சகிப்புத்தன்மையைப் பெற்றால், சந்தேகத்திற்கு இடமின்றி இந்நபர் தன் இருதயத்தில் தேவன் மீது உண்மையான விசுவாசம் கொண்டிருக்கிறார் என்றும் அவருடைய இருதயம் தேவனை எதிர்க்கவில்லை‌ என்பதாகும். இந்நபர் திரும்பத் திரும்ப தேவனுக்கு முன்பாக உண்மையிலேயே மனந்திரும்புகிறார்; எனவே, தேவனின் கண்டிப்பு திரும்பத் திரும்ப இந்த நபரின் மீது இறங்கினாலும், அவருடைய கோபம் வராது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

563. நினிவே ஜனங்கள் மீது தேவன் எவ்வளவு கோபமாக இருந்தாலும், அவர்கள் உபவாசத்தை அறிவித்து, இரட்டுடுத்தி, சாம்பலில் அமர்ந்தவுடன், அவருடைய இருதயம் கனிவாக மாறத் தொடங்கி, அவர் தம்முடைய மனதை மாற்றத் தொடங்கினார். அவர் அந்த நகரத்தை அழிப்பதாக அவர்களுக்கு அறிவித்தப்பொழுது—அவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பும் அந்த நொடிக்கு முன்பு வரை தேவன் அவர்கள் மீது கோபமாகவே இருந்தார். அவர்கள் மனந்திரும்புதலின் செயல்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தப்பொழுது, நினிவே ஜனங்கள் மீதான தேவனுடைய கோபமானது கொஞ்சம் கொஞ்சமாக இரக்கமாகவும் சகிப்புத்தன்மையாகவும் மாறினது. அதே நிகழ்வில் தேவனுடைய மனநிலையின் இந்த இரண்டு அம்சங்களின் ஒருமித்த வெளிப்பாடு குறித்து எந்த முரண்பாடும் கிடையாது. அப்படியென்றால், இந்த முரண்பாட்டின் குறைப்பாட்டை ஒருவர் எப்படி புரிந்துகொள்ள முடியும்? நினிவே ஜனங்கள் மனந்திரும்பியதற்கு பதிலீடாக அவர்கள் தேவனுடைய யதார்த்தமான மற்றும் காயப்படுத்தாத தன்மையை பார்க்கும்படி தேவன் இந்த இரு எதிரெதிர் பண்புகளை உணர்த்தினார் மற்றும் வெளிப்படுத்தினார். கீழ்காண்பவற்றை ஜனங்களுக்கு கூறுவதற்காக தேவன் தமது சிந்தையை பயன்படுத்தினார்: தேவன் ஜனங்களை சகித்துக்கொள்ளாததனால் அல்ல, அல்லது அவர்களுக்கு தம்முடைய இரக்கத்தை காட்ட விரும்பவில்லை என்பதனாலோ அல்ல, மாறாக அவர்கள் அரிதாகவே தேவனிடம் உண்மையில் மனந்திரும்புகிறார்கள், மற்றும் ஜனங்கள் தங்கள் தீய வழிகளிலிருந்தும், தங்கள் கரங்களிலிருக்கிற பொல்லாங்கிலிருந்தும் அரிதாகவே விலகுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்; மனிதனோடு தேவன் கோபமாக இருக்கும்பொழுது, அவன் உண்மையாக மனந்திரும்புவான் என்று அவர் நம்புகிறார், மெய்யாகவே அவர் மனிதனுடைய உண்மையான மனமாற்றத்தை காண விரும்புகிறார், அதற்குப் பின்னர் அவர் மனிதன் மேல் தம்முடைய இரக்கத்தையும், சகிப்புத்தன்மையும் தாராளமாக பொழிவதை தொடருகிறார். அதாவது மனிதனுடைய தீய நடத்தையானது தேவனுக்கு கோபத்தை உண்டாக்குகிறது, அதேசமயம் தேவனுக்கு செவிக்கொடுத்து, உண்மையாகவே மனமாற்றமடைந்து, தங்கள் தீய வழியிலிருந்தும், தங்கள் கரங்களின் பொல்லாங்கிலிருந்தும் விலகுகிறவர்கள் மேல் தேவனுடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் பொழியப்படுகிறது. தேவனுடைய சிந்தையானது நினிவே ஜனங்களை அவர் நடத்தும் விதத்தில் மிக தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது: தேவனுடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் பெற்றுக்கொள்வதற்கு கடினமானவைகளல்ல, மேலும் அவருக்கு தேவையானது எல்லாம் ஒருவருடைய உண்மையான மனந்திரும்புதல் மட்டுமேயாகும். ஜனங்கள் தங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்பினால், மற்றும் தங்கள் கரங்களின் பொல்லாப்பை விட்டு விலகினால், தேவன் தம்முடைய இருதயத்தையும், அவர்கள் மீதான தமது சிந்தையையும் மாற்றுவார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

564. நினிவே ஜனங்கள் மீது தம்முடைய இருதயத்தை தேவன் மாற்றிக்கொண்டபொழுது, அவருடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் போலியானதாக இருந்ததா? நிச்சயமாக இல்லை! அப்படியென்றால், இந்த சூழ்நிலையை தேவன் கையாளுகின்றப்பொழுது தேவனுடைய மனநிலையின் இந்த இரு பண்புகளுக்கிடையேயான மாற்றத்தில் என்ன வெளிக்காட்டப்பட்டது? தேவனுடைய மனநிலை பரிபூரணமானது—அதில் பிரிவினையே கிடையாது. அவர் ஜனங்களின் மீது கோபத்தையோ அல்லது இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மையையோ காட்டினாலும், இவைகளெல்லாம் அவருடைய நீதியான மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. தேவனுடைய மனநிலையானது முக்கியமானதும் தெளிவாக தெரிகிறதுமாக இருக்கிறது, மற்றும் காரியங்கள் உருவாகும் விதத்தின்படி அவர் தம்முடைய யோசனைகளையும் மற்றும் சிந்தைகளையும் மாற்றுகிறார். நினிவே ஜனங்கள் மீதான அவருடைய மனநிலையின் மாற்றமானது அவர் அவருக்கென்று சுய எண்ணங்களையும், யோசனைகளையும் கொண்டிருக்கிறார்; அவர் ஒரு இயந்திர மனிதனோ அல்லது களிமண் வடிவமோ அல்ல, மாறாக அவர் ஜீவனுள்ள தேவன் என்பதை மனுகுலத்திற்கு கூறுகிறது. நினிவே ஜனங்களுடைய சிந்தைகளின் காரணத்தினால், அவர்களுடைய கடந்தக்காலத்தை மன்னித்ததுப்போல, அவர்கள் மேல் கோபங்கொள்ளவும் அவரால் முடியும். அவர் நினிவே ஜனங்களின் மீது அழிவை தீர்மானிக்கவும், மற்றும் அவர்கள் மனந்திரும்பினதின் காரணத்தினால் அந்த தீர்மானத்தை அவர் மாற்றவும் கூடும். தேவனுடைய மனநிலையை ஜனங்கள் புரிந்துக்கொள்ள முயற்சிக்க சூத்திரங்களை பயன்படுத்த விரும்புவதுபோல, சட்டத்திட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தவும், அதைப்போன்ற சட்டத்திட்டங்களை பயன்படுத்தி தேவனுக்கு எல்லையை வரையறுக்கவும், அவரை விவரிக்கவும் விரும்புகிறார்கள். ஆகவே, மனிதனுடைய எண்ணங்களின் களத்தை பொருத்தவரை தேவன் யோசிப்பதுமில்லை, அவரிடம் உண்மையான சிந்தனைகளுமில்லை. ஆனால் உண்மையில், தேவனுடைய எண்ணங்கள், காரியங்கள் மற்றும் சூழ்நிலைகளின் மாற்றத்திற்கு ஏற்றார்போல் எப்பொழுதும் மாறக்கூடியதாக இருக்கிறது. இந்த யோசனைகள் மாறக்கூடியதாக இருக்கையில், தேவனுடைய சாராம்சத்தின் வெவ்வெறு பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த மாற்றங்களின் செயல்முறையின்போது, தேவன் ஒரு மாற்றமான இருதயத்தைக் கொண்டிருக்கும் அந்த கணப்பொழுதில், அவர் மனிதகுலத்திற்கு தாம் உண்மையாகவே ஜீவனுடையவராய் இருப்பதையும், அவருடைய நீதியின் மனநிலையானது வல்லமையாய் செயல்படுவதையும் காட்டுகிறார். அதே நேரத்தில், அவருடைய கோபம், அவருடைய இரக்கம், அவருடைய தயவிரக்கம், மற்றும் அவருடைய சகிப்புத்தன்மை போன்றவற்றை நிரூபிக்க தேவன் தம்முடைய சொந்த உண்மையான வெளிப்பாடுகளை பயன்படுத்துகிறார். காரியங்கள் உருவாவதற்கு ஏற்றாற்போன்று, அவருடைய சாராம்சம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வெளிப்படுத்தப்படும். அவர் சிங்கத்தின் கோபத்தையும் மற்றும் ஒரு தாயின் இரக்கத்தையும், சகிப்புத்தன்மையையும் உடையவராக இருக்கிறார். அவருடைய நீதியான மனநிலையானது எவ்விதமான கேள்விக் கேட்பதையும், மீறுதலையும், மாற்றத்தையும் அல்லது எந்த மனிதனும் விலகிப்போவதையும் அனுமதிப்பதில்லை. தேவனுடைய நீதியான மனநிலை—அதாவது தேவனுடைய கோபம் மற்றும் தேவனுடைய இரக்கம் ஆகியவற்றை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வெளிப்படுத்தலாம். அவர் இந்த இயல்புகளுக்கு சிருஷ்டிப்பின் எல்லா மூலைகளிலும் தெளிவான வெளிப்பாட்டை கொடுக்கிறார். கடந்துபோகும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அவற்றை அவர் உயிர்துடிப்புடன் நடைமுறைப்படுத்துகிறார். தேவனுடைய நீதியான மனநிலையானது நேரத்தாலோ அல்லது இடத்தாலோ கட்டுப்படுத்தக்கூடியதல்ல; வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் தேவனுடைய நீதியான மனநிலையானது காலம் அல்லது இடத்தின் கட்டுப்பாடுகளினால் இயந்திரத்தனமாக உணர்த்தப்படுவதோ அல்லது வெளிப்படுத்தப்படுவதோ கிடையாது, மாறாக எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் மிகவும் எளிமையாக கிடைக்கப்பெறுகிறது. தேவன் ஒரு மாற்றமடைந்த இருதயத்தை உடையவராய், கோபத்தை வெளிப்படுத்துவதை நிறுத்தி, நினிவே பட்டணத்தாரை அழிவிலிருந்து விலக்குவதை நீ பார்க்கும்பொழுது, தேவன் இரக்கமுள்ளவர் மற்றும் அன்புள்ளவர் என்று உன்னால் கூற முடியுமா? தேவனுடைய கோபாமானது வெறும் வார்த்தைகளை கொண்டதாக இருக்கிறதென்று உன்னால் கூற முடியுமா? தேவன் கடுங்கோபம் கொண்டு, தம்முடைய இரக்கத்திலிருந்து பின்வாங்கும்போது, அவர் மனிதகுலத்தின் மீது உண்மையான அன்பை வெளிப்படுத்தவில்லை என்று உன்னால் கூற முடியுமா? இந்த கடுங்கோபமானது மக்களுடைய பொல்லாத செய்கைகளுக்கு பதிலாக தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது; அவருடைய கோபம் குறைப்பாடுள்ளதல்ல. மக்களுடைய மனமாற்றத்திற்கு பதிலாக தேவனுடைய இருதயமானது அசைக்கப்படுகிறது, இந்த மனமாற்றமே அவருடைய இருதயத்தில் மாற்றத்தை உண்டுப்பண்ணுகிறது. அவர் அசைக்கப்பட்டதை உணரும்போது, அவர் மாற்றப்பட்ட இருதயத்தை கொண்டிருக்கும்போது, மற்றும் மனிதனிடம் அவர் தம்முடைய இரக்கத்தையும், சகிப்புதன்மையையும் காட்டும்போது, அவையெல்லாம் முற்றிலும் குறைபாடற்றவையாக இருக்கின்றன; அவை பரிசுத்தமானவை, சுத்தமானவை, குற்றஞ்சாட்டப்படாதவை மற்றும் கலப்படமற்றவை. தேவனுடைய கசகிப்புத்தன்மையை மிகச் சரியாக கூற வேண்டுமென்றால் சகிப்புத்தன்மை என்பது அவருடைய இரக்கமே, இரக்கத்தை தவிர வேறொன்றுமில்லை. மனிதனுடைய மனந்திரும்புதல் மற்றும் மனிதனுடைய நடத்தையின் மாறுபாடுகள் ஆகியவற்றிற்கு ஏற்ப அவருடைய மனநிலையானது கோபம் அல்லது இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அவர் எதை வெளிப்படுத்துகிறார் என்பது ஒரு பொருட்டல்ல, ஆனால் அவை யாவும் சுத்தமானதாகவும் மற்றும் நேரடியானதாகவும் இருக்கின்றன; அதனுடைய சாராம்சமானது வேறு எந்த சிருஷ்டிப்பைக் காட்டிலும் தனித்துவமானது. தேவன் தம்முடைய கிரியைகளின் அடிப்படை சட்டத்திட்டங்களை வெளிப்படுத்துகையில், அவை எவ்விதமான குறைப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவையாகும். அவருடைய எண்ணங்களும், அவருடைய யோசனைகளும், அவர் எடுக்கிற ஒவ்வொரு தீர்மானங்களும், அவர் செய்கிற ஒவ்வொரு செயல்களும் அதைப்போன்றே குறைப்பாடுகளற்றவையாகும். தேவன் அப்படி தீர்மானித்தப்படியால் மற்றும் அவர் அப்படி கிரியைச் செய்கிறப்படியால், தம்முடைய பணிகளை நிறைவு செய்கிறார். அவருடைய பணிகள் சரியானதாகவும், குறைவற்றதாகவும் இருக்கின்றன, ஏனெனில் அவற்றின் ஆதாரம் குறைவற்றதும், குறைபாடற்றதுமாக இருக்கிறது. தேவனுடைய கோபம் குறைபாடற்றது. அதேப்போன்று, எந்தவொரு சிருஷ்டிப்பிடமும் இல்லாத அவருடைய இரக்கமும், சகிப்புத்தன்மையும் பரிசுத்தமானவையாகவும் மற்றும் குறைவற்றவையாகவும் இருக்கின்றன, மேலும் சிந்தனைமிக்க ஆழ்ந்து ஆராய்தலையும், அனுபவத்தையும் எதிர்கொள்ளக்கூடியவையாகவும் உள்ளன.

நினிவே சம்பவத்தில் உங்களுடைய புரிந்துக்கொள்ளுதலின் மூலம் தேவனுடைய நீதியான மனநிலையினுடைய சாராம்சத்தின் மறுபக்கத்தை உங்களால் தற்போது பார்க்க முடிகிறதா? தேவனுடைய நீதியான மனநிலையின் தனித்துவத்தின் மறுபக்கத்தை உங்களால் பார்க்க முடிகிறதா? மனிதகுலத்தில் யாராகிலும் இவ்விதமான இயல்பை உடையவர்களாக இருக்கிறார்களா? தேவனுடைய கோபத்தை போன்றதொரு கோபத்தை யாராகிலும் உடையவர்களாக இருக்கிறார்களா? தேவனிடம் இருக்கிறதைப்போல இரக்கமும் சகிப்புத்தன்மையையும் உடையவர்களாக யாராகிலும் இருக்கிறார்களா? சிருஷ்டிப்புகளிலே யார் இப்படிப்பட்ட கடுங்கோபத்தையும், அழிப்பதற்கான தீர்மானத்தையும் அல்லது மனிதகுலத்தின் மேல் அழிவையும் வரவழைக்கக் கூடும்? மனிதன் மீது சகிப்புத்தன்மை மற்றும் மன்னிப்பை அளிக்கும்படி இரக்கத்தை காட்டவும், மற்றும் மனிதனை அழிக்க முன்பு தீர்மானித்ததை மாற்றவும் யார் தகுதியுடையவர்? சிருஷ்டித்தவர் தம்முடைய நீதியான மனநிலையை தம்முடைய சொந்த வழியில் தனித்துவமான முறையிலும் மற்றும் நியமங்களிலும் வெளிப்படுத்துகிறார், மேலும் ஜனங்களாலும், சம்பவங்களாலும் மற்றும் பொருட்களாலும் அவர் கட்டுப்படுத்தப்பட அல்லது வரையறுக்கப்படக் கூடியவர் அல்ல. அவருடைய தனித்துவமான மனநிலையைக் கொண்டு, அவருடைய எண்ணங்களையும் யோசனைகளையும் எவரும் மாற்றவோ அல்லது அவரை வலியுறுத்தவோ மற்றும் அவருடைய தீர்மானங்களை மாற்றவோ முடியாது. அனைத்து சிருஷ்டிப்புகளில் இருக்கும் நடத்தை மற்றும் எண்ணங்களின் பரிபூரணம் அவருடைய நீதியான மனநிலையின் நியாயத்தீர்ப்பிற்குட்பட்டதாக இருக்கிறது. அவர் கோபத்தை உபயோகிக்கிறாரா அல்லது இரக்கத்தை உபயோகிக்கிறாரா என்பதில் எவரும் அவரை கட்டுப்படுத்த முடியாது; சிருஷ்டிகரின் சாராம்சம் மட்டுமே அதாவது வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் சிருஷ்டிகரின் நீதியான மனநிலை மட்டுமே இதை தீர்மானிக்க முடியும். இதுவே சிருஷ்டிகரின் நீதியான மனநிலையின் தனித்துவமான இயல்பாகும்!

நினிவே ஜனங்களின் மீதான தேவனுடைய சிந்தையின் மாற்றத்தை ஆராய்ந்து பார்ப்பது மற்றும் புரிந்துக்கொள்வதின் மூலம் “தனித்துவம்” என்ற வார்த்தையை பயன்படுத்தி தேவனுடைய நீதியான மனநிலையில் காணப்படுகிற இரக்கத்தை உங்களால் விவரிக்க முடியுமா? தேவனுடைய கோபமானது அவருடைய தனித்துவமான நீதியான மனநிலையின் சாராம்சத்தின் ஒரு பண்பு என்று நாங்கள் எற்கனவே கூறினோம். இப்போது தேவனுடைய கோபம் மற்றும் தேவனுடைய இரக்கம் என்ற இரு பண்புகளை அவருடைய நீதியான மனநிலையாக விவரிக்கிறேன். தேவனுடைய நீதியான மனநிலையானது பரிசுத்தமானது; இது அவமதிக்கப்படுவதையோ அல்லது கேள்விக்கேட்கப்படுவதையோ சகித்துக்கொள்வதில்லை; இது சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாதவைகளில் எதிலும் இல்லாத ஒன்றை பெற்றிருப்பதாகும். இது தேவனுக்கு தனித்துவமானது மற்றும் பிரத்தியேகமானது ஆகும். தேவனுடைய கோபமானது பரிசுத்தமும் புண்படுத்தாததுமானது என்று இதனை சொல்லக் கூடும். அதைப்போன்றே தேவனுடைய நீதியான மனநிலையின் மற்ற பண்பான தேவனுடைய இரக்கமும் பரிசுத்தமும் காயப்படுத்தாததுமானதாக இருக்கிறது. எந்த ஒரு சிருஷ்டிக்கப்பட்டவைகளோ அல்லது சிருஷ்டிக்கப்படாத ஜீவிகளோ தேவனுடைய செயல்களுக்கு மாற்றாகவோ அல்லது அவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது, அவர் சோதோமை அழிக்கும்பொழுதும், நினிவேயை இரட்சிக்கும்பொழுதும் அவருக்கு மாற்றாகவோ அல்லது அவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. இது தேவனுடைய தனித்துவமான நீதியான மனநிலையாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

565. சோதோம் மக்களைப் போல துன்மார்க்கமான மக்களால் நினிவே நகரமானது நிரம்பி இருந்தாலும், அவர்களுடைய மனமாற்றமானது தேவனுடைய இருதயத்தை மாற்றுகிறதாகவும் மற்றும் அவர்களை அழிக்காதப்படி தீர்மானிக்கவும் செய்தது. தேவனுடைய வார்த்தைகளையும், கட்டளைகளையும் அவர்கள் நடத்திய விதம், சோதோமிய குடிகளின் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறுப்பட்ட அணுகுமுறை, தேவனுக்கு அவர்களுடைய நேர்மையான சமர்ப்பணம், மற்றும் பாவத்திலிருந்து அவர்களுடைய நேர்மையான மனந்திரும்புதல் அத்துடன் அவர்களுடைய உண்மையான மற்றும் எல்லா வித காரியங்களிலும் இருதயத்தில் உணர்ந்த நடத்தை ஆகியவற்றின் காரணத்தினால் தேவன் மீண்டுமொருமுறை தம்முடைய சொந்த இருதயத்திலிருந்து உணரப்பட்ட பரிதாபத்தை வெளிப்படுத்தி, அதை அவர்கள் மீது பொழிந்தருளினார். தேவன் மனிதகுலத்தின்மேல் அருளுகிறவற்றையும், மனித குலத்தை நோக்கிய அவருடைய பரிதாபத்தையும் அவர் தருவதைப்போன்று எவரும் தர முடியாது, மற்றும் தேவனுடைய இரக்கத்தையும், அவருடைய சகிப்புத்தன்மையையும், அல்லது மனித குலத்தின் மேல் அவர் கொண்டிருக்கிற உண்மையான உணர்வை கொண்டிருப்பதும் எந்த மனிதனுக்கும் சாத்தியமில்லாதது. மனிதகுலத்தின் மீது அல்லது சிருஷ்டிப்புகளின் மீது இப்படிப்பட்ட அறிக்கையை தரும் பெரிய மனிதராக அல்லது மனுஷியாக அல்லது தங்கள் உயர் நிலையிலிருந்து பேசும் இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதராக, ஒரு பெரும் மனிதராக, மனுஷியாக நீ கருதுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? தங்கள் உள்ளங்கையை அறிந்திருப்பது போல மனித வாழ்வை அறியக்கூடியவர் இந்த மனிதகுலத்தின் மத்தியில் யாராவது ஒருவர் உண்டா? மனிதகுலத்திலிருக்கிற பாரங்களை சுமக்கவும், பொறுப்பாளியாக இருக்கவும் தக்கவர் யார்? ஒரு நகரத்தின் அழிவை அறிவிக்கும் தகுதியுடையவர் யார்? மற்றும் ஒரு பட்டணத்தை மன்னிக்கத்தக்கவர் யார்? தனது சொந்த படைப்புகளை நேசிக்கிறேன் என்று யார் கூறக்கூடும்? சிருஷ்டிகர் மட்டுமே இப்படி கூற முடியும்! இந்த மனித குலத்தின் மீது பரிவை காட்ட சிருஷ்டிகரால் மட்டுமே முடியும். சிருஷ்டிகர் மட்டுமே மனித குலத்தின் மீது மனதுருக்கத்தையும் மற்றும் பாசத்தையும் காட்ட முடியும். இந்த மனித குலத்திற்கு சிருஷ்டிகர் மட்டுமே உண்மையான, தகர்த்தெறிய முடியாத பாசத்தையும் உடையவர். அதே போல சிருஷ்டிகர் மட்டுமே மனிதகுலத்தின் மீது இரக்கத்தையும், மற்றும் தம்முடைய சிருஷ்டிகளின் மீது நேசத்தையும் பொழியக்கூடியவர். ஒவ்வொரு மனிதனுடைய செயல்களுக்காகவும் அவருடைய இருதயம் துடிக்கிறது மற்றும் வேதனைப்படுகிறது: அவர் கோபப்படுகிறார், துன்பப்படுகிறார், மனிதனுடைய பொல்லாப்பிற்கும் சீர்கேட்டிற்கும் துக்கப்படுகிறார்; மனிதனுடைய மனமாற்றத்திற்காகவும் மற்றும் விசுவாசத்திற்காகவும் அவர் பிரியப்படுகிறார், சந்தோஷப்படுகிறார், மன்னிக்கிறவராக இருக்கிறார் மற்றும் வெற்றி உவகைக் கொள்கிறார்; அவருடைய ஒவ்வொரு எண்ணங்களும் யோசனைகளும் மனிதகுலத்திற்காகவே மற்றும் அதை சுற்றியே சுழல்கிறது; அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன வைத்துக்கொண்டிருக்கிறார் என்பவைகள் முழுவதும் மனிதருக்காகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன; அவருடைய உணர்வின் பூரணமானது மனிதகுலத்தின் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. மனிதகுலத்திற்காகவே அவர் பயணிக்கிறார் மற்றும் விரைந்து செயல்படுகிறார்; அவர் தம்முடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அமைதியாக தருகிறார்; அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் விநாடியையும் அர்ப்பணிக்கிறார்… தம்முடைய வாழ்வின் மீது எவ்வாறு பரிதாபம் கொள்ளவது என்று அவர் ஒருபொழுதும் அறியார், இருப்பினும் தாம் உண்டாக்கின மனிதகுலத்தை எப்பொழுதும் நேசிக்கிறார்… தம்மிடமுள்ள யாவற்றையும் அவர் மனித குலத்திற்காக தருகிறார்…. அவர் தம்முடைய இரக்கத்தையும் கசிப்புத்தன்மையையும் நிபந்தனையில்லாமலும், கைமாறு எதிர்பார்க்காமலும் அருளுகிறார். அவருடைய கண்களுக்கு முன்பாக மனித குலமானது தொடர்ந்து ஜீவிக்கும்படியாகவும், வாழ்விற்கான அவருடைய போஷிப்பை பெறும்படியாகவும் அவர் இப்படி செய்கிறார். மனித குலம் அவருக்கு கீழ்படிந்து அவர் மட்டுமே மனிதனுடைய ஜீவிதத்தை வளமாக்குகிறவர், எல்லா சிருஷ்டிகளின் வாழ்விற்கு தேவையானவற்றை வழங்குகிறவர் என்று ஒரு நாள் அவரை அறிந்துகொள்வார்கள் என்பதற்காக மட்டுமே அவர் இப்படி செய்கிறார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

566. தேவனுடைய தயவும் சகிப்புத்தன்மையும் உண்மையில் உள்ளன. ஆனால் தேவனுடைய பரிசுத்தமும் நீதியும் அவர் கோபத்தை கட்டவிழ்த்துவிடும்போது, மனிதன் எந்தக் குற்றத்தையும் செய்யாத தேவனுடைய பக்கத்தைப் பார்க்கிறான். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மனிதன் பூரணமாக வல்லமை பெற்றவனாகவும், தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படும் போதும், மனிதனிடம் தேவன் காட்டிய தயவில் தேவன் அளவில்லாதவராக இருக்கிறார். மனிதன் அவருக்கு எதிராக கேடு, வெறுப்பு மற்றும் பகை ஆகியவற்றால் நிறைந்திருக்கும்போது, தேவன் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அவர் எந்த அளவுக்கு மிகுந்த கோபத்தில் இருக்கிறார்? மனிதனுடைய எதிர்ப்பையும் தீய கிரியைகளையும் தேவன் இனி பார்க்காத வரையில், அவருடைய கண்களுக்கு முன்பாக அவை இல்லாத வரையில், அவருடைய கோபம் நீடிக்கும். அப்போது தான் தேவனுடைய கோபம் மறைந்து போகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த மனிதர் யார் என்பது முக்கியமல்ல, அவர்களின் இருதயம் தேவனிடமிருந்து தூரம் சென்று, தேவனிடமிருந்து விலகிவிட்டால், ஒருபோதும் திரும்பி வராத வண்ணம் இருந்தால், அவர்களுடைய எல்லா தோற்றங்கள் அல்லது அவர்களின் தனிப்பட்ட ஆசைகள் எவ்வாறாக இருந்தாலும், அவர்கள் தேவனை வணங்க விரும்பினாலும், அவர்களுடைய உடலிலோ சிந்தனையிலோ தேவனைப் பின்பற்றும் மற்றும் கீழ்ப்படியும் சிந்தை இருந்தாலும், தேவனுடைய கோபம் நிறுத்தப்படாமல் கட்டவிழ்த்து விடப்படும். இது மனிதனுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கிய பின்னர், தேவன் தனது கோபத்தை ஆழமாக கட்டவிழ்த்துவிடுவது போல இருக்கும். அதை ஒருமுறை கட்டவிழ்த்துவிட்டால், அதை திரும்பப் பெற எந்த வழியும் இருக்காது. அத்தகைய மனிதகுலத்திடம் அவர் ஒருபோதும் இரக்கமுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருக்க மாட்டார். எந்தவொரு குற்றத்தையும் பொறுத்துக்கொள்ளாத தேவனுடைய மனநிலையின் ஒரு பக்கம் இது. … அவர் அன்பான, அழகான மற்றும் நல்ல காரியங்களுடன் சகிப்புத்தன்மையுடனும் தயவுடனும் இருக்கிறார். தீய, பாவமான, பொல்லாத காரியங்களிடம் அவர் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார். அவர் தம்முடைய கோபத்தில் இடைவிடாமல் இருக்கிறார். தேவனுடைய மனநிலையின் இரண்டு முக்கிய மற்றும் மிக முக்கியமான அம்சங்கள் இவை. ஏராளமான தயவு மற்றும் மிகுந்த கோபம் ஆகியவை தொடக்கம் முதல் இறுதி வரை தேவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

567. தேவன் ஒரு நீதியுள்ள தேவன் என்று ஜனங்கள் சொல்கிறார்கள், மனிதன் கடைசிவரை அவனைப் பின்தொடரும் வரை, அவர் நிச்சயமாக மனிதனிடம் நடுநிலையானவராக இருப்பார். ஏனென்றால் அவர் மிகவும் நீதியுள்ளவர். மனிதன் கடைசிவரை அவரைப் பின்தொடர்ந்தால், மனிதனை ஒதுக்கி வைக்க அவரால் முடியுமா? நான் எல்லா மனிதர்களிடமும் நடுநிலையானவராக இருக்கிறேன், எல்லா மனிதர்களையும் என் நீதியுள்ள மனநிலையோடு நியாயந்தீர்க்கிறேன், ஆனாலும் நான் மனிதனிடமிருந்து உருவாக்கும் தேவைகளுக்கு பொருத்தமான நிபந்தனைகள் உள்ளன, மேலும் அவர்கள் யார் என்றாலும் எல்லா மனிதர்களாலும் என் தேவைகளானவை நிறைவேற்றப்பட வேண்டும். உன் தகுதிகள் எப்படி இருக்கின்றன, அல்லது அவற்றை நீ எவ்வளவு காலம் வைத்திருக்கிறாய் என்பதில் எனக்கு அக்கறை இல்லை. நீ என் வழியில் நடக்கிறாயா, சத்தியத்திற்காக தாகமாயிருக்கிறாயா இல்லையா என்பதை மட்டுமே நான் கவனிக்கிறேன். நீ சத்தியம் இல்லாதிருந்தால், அதற்கு பதிலாக என் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தி, என் வழியின்படி கிரியை செய்யாவிட்டால், அக்கறையோ கவனிப்போ இல்லாமல் பின்பற்றினால், அந்த நேரத்தில் உன் தீமைக்காக நான் உன்னை அடித்துத் தள்ளி தண்டிப்பேன், நீ என்ன சொல்ல வேண்டும்? தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று நீ சொல்ல முடியுமா? இன்று, நான் பேசிய வார்த்தைகளுக்கு நீ இணங்கியிருந்தால், நான் அங்கிகரிக்கும் நபர் நீ தான். தேவனைப் பின்தொடரும் போது நீ எப்போதும் கஷ்டப்பட்டிருந்தும், இடைஞ்சல்களுக்கு இடையேயும் அவரைப் பின்தொடர்ந்தாய் என்றும், நல்ல நேரங்களையும் கெட்டதையும் அவருடன் பகிர்ந்து கொண்டாய் என்றும் நீ சொல்கிறாய், ஆனால் நீ தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளின்படி வாழவில்லை. நீ தேவனுக்காக ஓடவும், ஒவ்வொரு நாளும் தேவனுக்காக உன்னை விருத்தியாக்கவும் மட்டுமே விரும்புகிறாய், உண்மையுள்ள வாழ்க்கையை வாழ நினைத்ததில்லை. நீ, “எப்படியிருந்தாலும், தேவன் நீதியுள்ளவர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அவருக்காக கஷ்டப்பட்டேன், அவருக்காக ஓடினேன், அவருக்காக என்னை அர்ப்பணித்தேன், எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றாலும் நான் கடுமையாக உழைத்தேன்; அவர் என்னை நினைவில் வைத்திருப்பது உறுதி”, என்று கூறுகிராய். தேவன் நீதியுள்ளவர் என்பது உண்மைதான், ஆனாலும் இந்த நீதியானது எந்த அசுத்தங்களாலும் அறியப்படவில்லை. அதில் எந்த மனிதனின் சித்தமும் இல்லை, அது மாம்சத்தினால் அல்லது மனித பரிவர்த்தனைகளால் களங்கப்படுத்தப்படவில்லை. கலகக்காரர்களாகவும், எதிரானவர்களாவும் உள்ள அனைவரும், அவருடைய வழிக்கு இணங்காத அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். யாரும் மன்னிக்கப்படுவதில்லை, யாரும் காப்பாற்றப்படுவதில்லை! சில ஜனங்கள், “இன்று நான் உமக்காக ஓடுகிறேன்; முடிவு வரும்போது, நீர் எனக்கு ஒரு சிறிய ஆசீர்வாதம் தர முடியுமா?” என்று கேட்கிறார்கள். எனவே நான் உன்னிடம், “நீ என் வார்த்தைகளுக்கு இணங்கினாயா?” என்று கேட்கிறேன். நீ பேசும் நீதியானது ஒரு பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டது. நான் எல்லா மனிதர்களிடமும் நீதியுள்ளவராகவும், நடுநிலைத் தவறாதவனாகவும் இருக்கிறேன் என்றும், கடைசிவரை என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும் என் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்றும் மட்டுமே நீ நினைக்கிறாய். “என்னை கடைசிவரை பின்பற்றுபவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவது உறுதி” என்ற எனது வார்த்தைகளுக்கு உள்ளார்ந்த சாராம்சம் உள்ளது: என்னை கடைசிவரை பின்பற்றுபவர்கள் தான் என்னால் முழுமையாக ஆதாயப்படுத்தப்படுவார்கள், அவர்கள் தான் என்னால் ஜெயம் கொள்ளப்பட்டு, சத்தியத்தைத் தேடி, பரிபூரணமாக்கப்படுகிறார்கள். நீ என்ன நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளாய்? நீ என்னைப் பின்தொடர்வது வரை மட்டுமே சாதித்திருக்கிறதில்லாமல் வேறு என்ன? நீ என் வார்த்தைகளுக்கு இணங்கியிருக்கிறாயா? எனது ஐந்து தேவைகளில் ஒன்றை நீ நிறைவேற்றியுள்ளாய், ஆனால் மீதமுள்ள நான்கை நிறைவேற்ற உனக்கு எந்த நோக்கமும் இல்லை. நீ சிக்கலற்ற, எளிதான பாதையைக் கண்டுபிடித்து, அதிர்ஷத்தைப் பெறும் நம்பிக்கையுள்ள மனப்பான்மையுடன்அதைப் பின்தொடர்ந்தாய். உன்னைப் போன்ற ஒரு நபருக்கு என் நீதியான மனப்பான்மை தண்டனையும் தீர்ப்பும் ஆகும், இது நீதியான தண்டனையாகும், மேலும் இது எல்லா பொல்லாதவர்களுக்கும் நீதியான தண்டனையாகும்; என் வழியில் நடக்காத அனைவருக்கும் அவர்கள் கடைசிவரை பின்பற்றினாலும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இது தேவனின் நீதியாகும். மனிதனின் தண்டனையில் இந்த நீதியான மனப்பான்மை வெளிப்படுத்தப்படும்போது, மனிதன் பேச்சில்லாதவன் போலாவான், மேலும் தேவனைப் பின்தொடரும் போதும், அவன் தன் வழியில் நடக்கவில்லை என்று வருத்தப்படுவான். “அந்த நேரத்தில், நான் தேவனைப் பின்தொடரும் போது கொஞ்சம் கஷ்டம் மட்டுமே அடைந்தேன், ஆனால் தேவனின் வழியில் நடக்கவில்லை. என்ன சாக்குப்போக்குகள் உள்ளன? தண்டிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை!” ஆனாலும் அவனது மனதில், “எப்படியிருந்தாலும், நான் கடைசிவரை பின்பற்றினேன், எனவே நீர் என்னைத் தண்டித்தாலும், அது மிகவும் கடுமையான தண்டனையாக இருக்க முடியாது, மேலும் இந்த தண்டனையைச் செய்தபின் நீர் என்னை விரும்புகிறீர். நீர் நீதியுள்ளவர் என்று எனக்குத் தெரியும், என்னை என்றென்றும் அவ்வாறு நடத்தமாட்டீர். எல்லாவற்றிற்கும் மேலாக, அழிக்கப்படுபவர்களைப் போல நான் இருக்கவில்லை; அழிக்கப்பட வேண்டியவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும், அதேசமயம் என் தண்டனை இலகுவாக இருக்கும்” என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான். நீ சொல்வது போல் நீதியான மனநிலை இல்லை. தங்கள் பாவங்களை அறிக்கைசெய்வதில் நல்லவர்கள் மென்மையுடன் கையாளப்படுகிறார்கள் என்பது வழக்கு அல்ல. நீதியே புனிதத்தன்மை, இது மனிதனின் குற்றத்தை சகிக்கமுடியாத தன்மையுள்ள ஒரு மனநிலையாகும், மேலும் அசுத்தமான மற்றும் மாறாத எல்லாம் தேவனின் வெறுக்கத்தக்க இலக்காகும். தேவனின் நீதியான மனப்பான்மை சட்டம் அல்ல, ஆனால் நிர்வாகக் கட்டளையாக இருக்கிறது. இது ராஜ்யத்திற்குள்ளான நிர்வாகக் கட்டளையாகும், மேலும் இந்த நிர்வாக கட்டளை என்பது சத்தியத்தை வைத்திருக்காத மற்றும் மாறாத எவருக்கும் நீதியான தண்டனையாகும், மேலும் இரட்சிப்பிற்கு வாய்ப்பில்லை. ஒவ்வொரு மனிதனும் வகையின்படி வகைப்படுத்தப்படும்போது, நன்மைக்கு பலன் கிடைக்கும், தீமைக்கு தண்டனை கிடைக்கும். மனிதனின் இலக்கு எப்போது தெளிவுபடுத்தப்படும் போது இது இருக்கும். இரட்சிப்பின் கிரியை முடிவுக்கு வரும் காலம் இது, அதன் பிறகு, மனிதனை இரட்சிக்கும் கிரியை இனி செய்யப்படாது, தீமை செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்படும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

568. தன்னைத்தான் வெறுத்து என்னை நேசிப்பவர்களை நோக்கி என் இரக்கம் செல்லுகிறது, இதற்கிடையில், துன்மார்க்கர் மீது விதிக்கப்படும் தண்டனையானது என்னுடைய நீதியான மனநிலைக்கு துல்லியமான ஆதாரமாகவும், அதற்கும் மேலே என் உக்கிரத்திற்குச் சாட்சியமாகவும் இருக்கிறது. பேரழிவு வரும்போது எனக்கு விரோதமாக இருப்பவர்கள் பஞ்சத்திற்கும், கொள்ளை நோய்க்கும் இலக்காகிப் புலம்புவார்கள். பலவருடங்களாக என்னைப் பின்தொடர்ந்து வந்திருந்தும் எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் செய்தவர்களும் தங்கள் பாவத்தின் பலன்களிலிருந்து தப்ப முடியாது; அவர்களும் கூடப் பேரழிவில் விழுவார்கள், இதைப் போன்ற ஒன்றை ஆயிரம் வருடங்களில் சில தடவைகள் காணமுடிந்திருக்கிறது, அவர்கள் தொடர்ந்து பயத்திலும், பீதியிலும் வாழ்வார்கள். எனக்கு உண்மையும் உத்தமுமாக இருந்தவர்கள் என்னுடைய வல்லமையை மெச்சிக் களிகூறுவார்கள். அவர்கள் சொல்லவொண்ணா திருப்தியை அனுபவித்து நான் ஒருபோதும் மனிதகுலத்திற்கு தந்திடாததுமான மகிழ்ச்சியின் மத்தியில் வாழ்வார்கள். ஏனெனில் நான் மனிதர்களின் நற்கிரியைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து துர்க்கிரியைகளை அருவருக்கின்றேன். நான் முதன் முதலில் மனுகுலத்தை வழிநடத்த தொடங்கியதிலிருந்து என்னைப் போன்ற ஒத்த மனதுள்ள ஒரு கூட்ட ஜனங்களை ஆதாயப்படுத்தும்படி வாஞ்சையுடன் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில், என்னைப் போன்ற ஒத்த மனது இல்லாத ஜனங்களை நான் மறப்பதில்லை. என் இருதயத்தில் நான் அவர்களை எப்போதும் வெறுக்கிறேன். அவர்களை ஆக்கினைக்கு உள்ளாக்கித் தீர்ப்பதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன், அதனைக் கண்டு நான் நிச்சயமாகவே மகிழுவேன். இப்பொழுதோ என்னுடைய நாள் வந்துவிட்டது, நான் இதற்குமேல் காத்திருக்க வேண்டியதில்லை!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து

முந்தைய: A. தேவனுடைய அதிகாரம் குறித்து

அடுத்த: C. தேவனுடைய பரிசுத்தத்தைக் குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக