A. தேவன் மீது விசுவாசம் வைத்திருப்பது என்றால் என்ன என்பதை வெளிப்படுத்துதல் குறித்து

331. அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்றாலும், தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல் என்றால் என்ன மற்றும் தேவனின் சித்தத்திற்கு இணங்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பவற்றை சிலர் மட்டுமே புரிந்துக்கொள்கிறார்கள். ஏனென்றால், “தேவன்” என்ற வார்த்தையையும் “தேவனின் கிரியை” போன்ற சொற்றொடர்களையும் ஜனங்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் தேவனை அறிந்திருக்கவில்லை, அதற்கு மேலாக அவருடைய கிரியையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்படியானால், தேவனை அறியாதவர்கள் அனைவரும் அவரை விசுவாசிப்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, இதற்குக் காரணம் தேவனை விசுவாசிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் அறிமுகமில்லாததாகவும், மிகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. இவ்வாறாக, அவர்கள் தேவனின் கோரிக்கைகளை முழுமையாக நிவர்த்தி செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனங்கள் தேவனை அறியாவிட்டால், அவருடைய கிரியையை அறியாவிட்டால், அவர்கள் தேவன் பயன்படுத்துவற்கு தகுதியற்றவர்களாகிறார்கள், மேலும் அவர்களால் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடிவதில்லை. “தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்” என்பது தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது ஆகும்; இதுவே தேவனை விசுவாசிப்பது குறித்த மிகவும் எளிமையான கருத்தாகும். மேலும், தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது, உண்மையாக தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதற்குச் சமமானதல்ல; மாறாக, இது வலுவான மத மேலோட்டங்களைக் கொண்ட ஒரு வகையான எளிய விசுவாசம் ஆகும். தேவனிடத்தில் உண்மையான விசுவாசம் வைத்தல் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கிறது: தேவன் எல்லாவற்றிற்கும் மேலான சர்வவல்லமையைக் கொண்டிருக்கிறார் என்ற விசுவாசத்தின் அடிப்படையில், ஒருவன் தேவனின் வார்த்தைகளையும் அவருடைய கிரியைகளையும் அனுபவிக்கிறான், ஒருவனின் சீர்கெட்ட மனநிலையைத் தூய்மைப்படுத்துகிறான், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறான், மேலும் தேவனை அறிந்துகொள்கிறான். இந்த வகையான ஒரு பிரயாணத்தை மட்டுமே “தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்” என்று அழைக்கலாம். ஆயினும், ஜனங்கள் பெரும்பாலும் தேவனிடத்திலான விசுவாசத்தை ஒரு எளிமையான மற்றும் அற்பமான விஷயமாகவே பார்க்கிறார்கள். இவ்வழியில் தேவனை விசுவாசிப்பவர்கள் தேவனை விசுவாசிப்பதன் அர்த்தத்தை இழந்துவிட்டிருக்கிறார்கள், கடைசி வரை அவர்கள் தொடர்ந்து விசுவாசித்தாலும், அவர்கள் ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெறப்போவதில்லை, ஏனென்றால் அவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். எழுத்துக்களின் படியும், வெற்றுக் கோட்பாட்டிலும் தேவனை விசுவாசிப்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். தேவனிடத்திலான விசுவாசத்தின் சாராம்சம் அவர்களிடம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது, மேலும் அவர்களால் தேவனின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. அப்படியிருப்பினும் அவர்கள் இரட்சிப்பிற்கான ஆசீர்வாதங்களுக்காகவும், போதுமான கிருபைக்காகவும் தேவனிடம் ஜெபிக்கிறார்கள். நாம் நிதானித்து, நம் இருதயங்களை அமைதிப்படுத்திக் கொண்டு, நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்: தேவனை விசுவாசிப்பது என்பது உண்மையில் பூமியில் எளிதான விஷயமாக இருக்க முடியுமா? தேவனை விசுவாசிப்பது என்பது தேவனிடமிருந்து அதிக கிருபையைப் பெறுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்று இருக்க முடியுமா? தேவனை அறியாமலேயே அவரை விசுவாசிப்பவர்களும் அல்லது தேவனை நம்புகிறவர்களும் அவரை எதிர்த்தால், அவர்களால் உண்மையில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியுமா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

332. இன்று தேவன் மீதான உண்மையான விசுவாசம் என்பது என்ன? தேவனின் வார்த்தையை உன் வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதும், அவரைப் பற்றிய உண்மையான அன்பை அடைவதற்காக தேவனை அவருடைய வார்த்தையின் மூலமாய் அறிந்து கொள்வதும் ஆகும். தெளிவாக இருக்க, தேவன் மிதான விசுவாசம் என்பது நீ தேவனுக்குக் கீழ்ப்படிவதும், தேவனை நேசிப்பதும், தேவனின் ஒரு சிருஷ்டிப்பால் செய்யப்பட வேண்டிய கடமையைச் செய்யவதும் என்று கூறலாம். இது தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் ஆகும். தேவனின் அருமையைப் பற்றிய அறிவை நீ அடைய வேண்டும், தேவன் பயபக்திக்கு எவ்வளவு தகுதியானவராக இருக்கிறார், அவருடைய சிருஷ்டிப்புகளில், தேவன் எவ்வாறு இரட்சிப்பின் கிரியையைச் செய்கிறார், அவற்றை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார். இவை தேவன் மீதான உன் விசுவாசத்தின் அத்தியாவசியமானவை. தேவன் மீதான விசுவாசம் என்பது முக்கியமாக மாம்சத்திற்குரிய வாழ்க்கையிலிருந்து தேவனை நேசிக்கும் வாழ்க்கைக்கு மாறுவது ஆகும். அது சீர்கெட்ட வாழ்க்கையிலிருந்து தேவனின் வார்த்தைகளுக்குள் வாழ்வது வரை ஆகும். அது சாத்தானின் களத்தில் இருந்து வெளிவந்து தேவனின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்வது ஆகும். அது தேவனுக்குக் கீழ்ப்படிதலையும் மாம்சத்திற்கு கீழ்ப்படியாமையையும் அடைய முடிவது ஆகும். இது உன் முழு இருதயத்தையும் பெற தேவனை அனுமதிப்பது, உன்னை பரிபூரணமாக்க தேவனை அனுமதிப்பது, மேலும் சீர்கேடு நிறைந்த சாத்தானின் மனப்பான்மையிலிருந்து உன்னை விடுவிப்பதும் ஆகும். தேவனின் விசுவாசம் முக்கியமாக இருப்பதால், தேவனின் வல்லமையும் மகிமையும் உன்னிடத்தில் வெளிப்படும், இதனால் நீ தேவனுடைய சித்தத்தைச் செய்யவும், தேவனின் திட்டத்தை நிறைவேற்றவும், சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கு சாட்சி அளிக்கவும் முடியும். தேவன் மீதான விசுவாசம் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காணும் விருப்பத்தைச் சுற்றி இருக்கக்கூடாது, அது உன் சுய மாம்சத்திற்காகவும் இருக்கக்கூடாது. இது தேவனை அறிந்துகொள்வதையும், பேதுருவைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிவதையும், ஒருவர் இறக்கும் வரை தேவனுக்குக் கீழ்ப்படிவதையும் பற்றியதாக இருக்க வேண்டும். தேவனை விசுவாசிப்பதற்கான முக்கிய நோக்கங்கள் இவை. தேவனை அறிந்து அவரை திருப்திப்படுத்துவதற்காக ஒருவர் தேவனுடைய வார்த்தையைப் புசித்துக் குடிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் புசிப்பதும் குடிப்பதும் உனக்கு தேவனைப் பற்றிய அதிக அறிவைத் தருகிறது, அதன்பின்தான் நீ அவருக்குக் கீழ்ப்படிய முடியும். தேவனைப் பற்றிய அறிவால் மட்டுமே நீ அவரை நேசிக்க முடியுமா? மேலும் தேவன் மீதுள்ள விசுவாசத்தில் மனிதன் கொண்டிருக்க வேண்டிய குறிக்கோள் இதுதான். தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ எப்போதும் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காண முயற்சிக்கிறாய் என்றால், தேவன் மீதான இந்த விசுவாசத்தின் கண்ணோட்டம் தவறானது. தேவன் மீதான விசுவாசம் என்பது தேவனின் வார்த்தையை வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதாகும். தேவனின் வார்த்தைகளை அவருடைய வாயிலிருந்து நடைமுறைக்குக் கொண்டு வந்து அவற்றை உனக்குள் நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே தேவனின் நோக்கமானது அடையப்படுகிறது. தேவனை விசுவாசிப்பதில், மனிதன் தேவனால் பரிபூரணமாகவும், தேவனுக்கு அர்ப்பணிக்கவும், தேவனுக்கு முழுமையாக கீழ்ப்படியவும் பாடுபட வேண்டும். நீ புகார் செய்யாமல் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்து, தேவனின் விருப்பங்களை கவனத்தில் கொண்டிருந்தால், பேதுருவின் அந்தஸ்தை அடையலாம், தேவனால் பேசப்படும் பேதுருவின் பாணியைக் கொண்டிருக்கிறாய் என்றால், நீ தேவன் மீதான விசுவாசத்தில் வெற்றியை அடைந்த்தையும், அதுதான் நீ தேவனால் பெறப்பட்டிருக்கிறாய் என்பதைக் குறிக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

333. நீ தேவனை நம்புவதால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும் அருந்தவும், அவருடைய வார்த்தைகளை அனுபவிக்க வேண்டும், அவருடைய வார்த்தைகளின்படி வாழ வேண்டும். இதை மட்டுமே தேவ நம்பிக்கை என்று அழைக்க முடியும்! நீ உனது வாயால் தேவனை நம்புகிறாய் என்று கூறினால், அவருடைய வார்த்தைகளில் எதையும் கடைபிடிக்கவோ அல்லது எந்த யதார்த்தத்தையும் உருவாக்கவோ முடியவில்லை என்றால், அது தேவனை நம்புவது என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, “பசியினைப் போக்க போஜனத்தைத் தேடுவதைப் போன்றது.” சிறிதளவு உண்மைநிலையைக்கூட சுதந்தரிக்காமல் அற்பமான சாட்சியங்கள், பயனற்ற விஷயங்கள், மற்றும் மேலோட்டமான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவது: இவை தேவன் மேலுள்ள நம்பிக்கையை உள்ளடக்கவில்லை. மேலும் தேவன் மேல் நம்பிக்கை வைப்பதற்கானச் சரியான வழியைப் புரிந்துக்கொள்ளவில்லை. ஏன் நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை முடிந்தவரைப் புசிக்கவும் அருந்தவும் வேண்டும்? நீங்கள் அவருடைய வார்த்தைகளைப் புசிக்காமலும், அருந்தாமலும் வெறும் பரலோகத்தை மட்டும் தேடுவது, தேவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையாகுமா? தேவனை நம்புகிறவர் எடுக்கவேண்டிய முதற்படி என்ன தெரியுமா? எந்தப் பாதையின் மூலம் தேவன் மனுஷனைப் பூரணப்படுத்துகிறார் தெரியுமா? தேவனுடைய வார்த்தையைப் புசிக்காமல், அருந்தாமல் நீங்கள் பூரணமாக இருக்க முடியுமா? தேவனுடைய வார்த்தைகள் உங்களின் யதார்த்தமாக சேவை செய்யாமல் அவருடைய ராஜ்யத்தின் நபராகக் கருத முடியுமா? தேவனை நம்புவதன் அர்த்தம் என்ன? தேவனை விசுவாசிப்பவர்கள் வெளிப்புறத்திலாவது சாட்சியுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொண்டவர்களாய் இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அவருடைய வார்த்தைகளிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலகிச் செல்ல முடியாது. தேவனை அறிவது, அவரது உள்நோக்கங்களை நிறைவேற்றுவது என அனைத்தும் அவர் வார்த்தைகளின் மூலம் அடையப்படுகின்றன. இனிவரும் நாட்களில் ஒவ்வொரு தேசமும், இனமும், மதமும், துறையும் தேவனுடைய வார்த்தையினால் சுதந்தரிக்கப்படும். தேவன் நேரிடையாகப் பேசுவார், எல்லா ஜனங்களும் தேவனின் வார்த்தைகளைத் தங்கள் கரங்களில் கொண்டிருப்பர். இதன் மூலம் மனுக்குலம் பரிபூரணமாகும். உள்ளேயும், வெளியேயும் தேவனுடைய வார்த்தைகள் முழுவதுமாய் பரவும்: மனுக்குலத்தார் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் வாயால் பேசுவர், தேவனின் வார்த்தைகளின்படி நடப்பர், அவர்கள் உள்ளே தேவனின் வார்த்தைகளை வைத்திருப்பார்கள், மீதமிருப்போர் உள்ளேயும் வெளியேயும் தேவ வார்த்தைகளுக்குள் மூழ்கியிருப்பார்கள். இவ்விதமாய் மனுக்குலத்தார் பரிபூரணப்படுத்தப்படுவர். தேவனின் உள்நோக்கங்களை நிறைவேற்ற விரும்புவோர் மற்றும் அவருக்கு சாட்சியாக இருக்க்கூடியவர்கள், தேவனின் வார்த்தைகளை அவர்களின் யதார்த்தமாகக் கொண்டவர்கள் ஆவர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

334. இன்று, நடைமுறைக்குரிய தேவனை விசுவாசிக்க, நீ சரியான பாதையில் கால்பதிக்க வேண்டும். நீ தேவனை விசுவாசித்தால், நீ ஆசீர்வாதங்களைத் தேடுவது மட்டுமல்லாமல், தேவனை நேசிக்கவும், தேவனை அறிந்து கொள்ளவும் வேண்டும். அவருடைய பிரகாசத்தின் மூலமும், உன் தனிப்பட்ட தேடலின் மூலமும், நீ அவருடைய வார்த்தையைச் ருசிக்கலாம், குடிக்கலாம், தேவனைப் பற்றிய உண்மையான புரிதலை வளர்த்துக் கொள்ளலாம், மேலும் உன் உள்ளான மனதிலிருந்து வரும் தேவனின் உண்மையான அன்பைப் பெறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மீதான உன் அன்பு மிகவும் உண்மையானது என்றால், மேலும், அவர்மீது நீ வைத்திருக்கும் அன்பின் வழியில், எவரும் உன்னை அழிக்கவோ, எதிராக நிற்கவோ முடியாது, இந்த நேரத்தில் நீ தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தில் சரியான பாதையில் செல்கிறாய். இது, நீ தேவனைச் சார்ந்தவன் என்பதை நிரூபிக்கிறது, ஏனென்றால் உன் இதயம் ஏற்கனவே தேவனின் வசம் உள்ளது, வேறு எதுவும் உன்னைக் கைப்பற்ற முடியாது. உன் அனுபவத்தின் மூலமும், நீ கொடுத்த விலையின் மூலமாகவும், தேவனின் வேலையின் மூலமாகவும், தேவன் மீது தடையில்லாத அன்பை வளர்த்துக் கொள்ள முடியும்—நீ அவ்வாறு செய்யும்போது, நீ சாத்தானின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, தேவனின் வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ்ந்து வருவாய். இருளின் தாக்கத்திலிருந்து நீ விடுபட்டுவிட்டால்தான் நீ தேவனைக் கொண்டிருக்கிறாய் என்று கூற முடியும். தேவன் மீதான உன் நம்பிக்கையில், நீ இந்த இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். இது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். நீங்கள் யாரும் தற்போதைய விவகாரத்தின் நிலைமைகளில் திருப்தி அடையக்கூடாது. தேவனின் கிரியையைக் குறித்து உங்களுக்கு இரண்டு மனங்கள் இருக்க முடியாது, அதை நீங்கள் லேசானதாகக் கருதவும் முடியாது. நீங்கள் எல்லா வகையிலும், எல்லா நேரங்களிலும் தேவனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், எல்லாவற்றையும் அவர் பொருட்டுச் செய்ய வேண்டும். நீங்கள் பேசும்போதும் அல்லது செயல்படும்போதும், முதலில் தேவனுடைய வீட்டின் நலன்களை முன்னிறுத்த வேண்டும். இதன் மூலம் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவராக நீங்கள் இருக்க முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்” என்பதிலிருந்து

335. தேவனை விசுவாசிப்பது துன்பத்தை அனுபவிப்பதைப் பற்றியது அல்லது அவருக்காக எல்லா விதமான காரியங்களையும் செய்வது என்று நீ நினைக்கலாம்; தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் உனது மாம்சம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்லது உனது ஜீவிதத்தில் எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும் என்பதற்காக அல்லது நீ வசதியாகவும் எல்லாவற்றிலும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக என்று நீ நினைக்கலாம். இருப்பினும், இவை எதுவும் தேவன் மீதுள்ள விசுவாசத்துடன் ஜனங்கள் பிணைக்க வேண்டிய நோக்கங்கள் அல்ல. இந்த நோக்கங்களுக்காக நீ விசுவாசித்தால், உனது கண்ணோட்டம் தவறானது. மேலும், நீ பரிபூரணப்படுத்தப்படுவதற்கு சாத்தியமில்லை. தேவனுடைய கிரியை, தேவனுடைய நீதியுள்ள மனநிலை, அவருடைய ஞானம், அவருடைய வார்த்தைகள் மற்றும் அவரது அதிசயமான மற்றும் புரிந்துகொள்ள முடியாத தன்மை ஆகியவை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாகும். இந்த புரிதலைக் கொண்டிருப்பதால், தனிப்பட்ட கோரிக்கைகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் அனைத்தையும் உனது இருதயத்திலிருந்து அகற்றுவதற்கு நீ இதைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை அகற்றுவதன் மூலம் மட்டுமே நீ தேவன் கோரிய நிபந்தனைகளை நிறைவேற்ற முடியும், இதைச் செய்வதன் மூலம்தான் நீ ஜீவனைப் பெற்று தேவனை திருப்திப்படுத்த முடியும். தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் அவரை திருப்திப்படுத்துவதும், அவர் விரும்பும் மனநிலையில் வாழ்வதும் ஆகும். இதனால் அவருடைய கிரியைகளும் மகிமையும் இந்த தகுதியற்ற ஜனக்கூட்டத்தின் மூலம் வெளிப்படும். தேவனை விசுவாசிப்பதற்கான சரியான கண்ணோட்டம் இதுதான். மேலும், நீ நாட வேண்டிய இலக்கு இதுவே ஆகும். தேவனை விசுவாசிப்பது குறித்து உனக்கு சரியான கண்ணோட்டம் இருக்க வேண்டும். மேலும், நீ தேவனுடைய வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிக்க வேண்டும், நீ சத்தியத்தின்படி ஜீவிக்க வேண்டும், குறிப்பாக அவருடைய நடைமுறை கிரியைகளையும், பிரபஞ்சம் முழுவதிலும் அவர் செய்கிற அதிசயிக்கத்தக்க கிரியைகளையும், அத்துடன் மாம்சத்தில் அவர் செய்கிற நடைமுறை கிரியைகளையும் உன்னால் காண முடியும். ஜனங்கள் தங்களது நடைமுறை அனுபவங்களின் மூலம், தேவன் தம்முடைய கிரியையை எவ்வாறு செய்கிறார் என்பதையும், அவரது சித்தம் அவர்களை நோக்கி என்ன செய்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இவை அனைத்தின் நோக்கமும் ஜனங்களின் கேடு நிறைந்த சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றுவதாகும். உனக்குள் இருக்கும் அசுத்தத்தையும் அநீதியையும் வெளியேற்றிவிட்டு, உனது தவறான நோக்கங்களைத் தள்ளிவிட்டு, தேவன் மீதான உண்மையான விசுவாசத்தை வளர்த்துக் கொண்டால் மட்டுமே—உண்மையான விசுவாசத்தினால் மட்டுமே நீ தேவனை உண்மையாக நேசிக்க முடியும். தேவன்மீது நீ வைத்திருக்கும் விசுவாசத்தின் அஸ்திபாரத்தில் மட்டுமே நீ தேவனை உண்மையாக நேசிக்க முடியும். தேவனை விசுவாசியாமல் அவரை நேசிக்க முடியுமா? நீ தேவனை விசுவாசிப்பதால், அதைப் பற்றி நீ குழப்பமடைய முடியாது. தேவன் மீதான விசுவாசம் அவர்களுக்கு ஆசீர்வாதத்தைத் தரும் என்பதைக் கண்டவுடன் சிலர் பெலன் நிறைந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சுத்திகரிப்புகளை அனுபவிக்க வேண்டியிருப்பதைக் கண்டவுடன் அவர்களது முழு பெலனையும் இழந்துவிடுகிறார்கள். அதுதான் தேவனை விசுவாசிப்பது என்பதா? இறுதியில், உனது விசுவாசத்தில் நீ தேவனுக்கு முன்பாக முழுமையான மற்றும் முற்றிலுமான கீழ்ப்படிதலை அடைய வேண்டும். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆனால் உனக்கு இன்னும் அவரிடம் முன்வைப்பதற்கு கோரிக்கைகள் உள்ளன. நீ கைவிட முடியாத பல மதக் கருத்துக்களை கொண்டுள்ளாய், உனது தனிப்பட்ட ஆர்வங்களை உன்னால் கைவிட முடியவில்லை, இருப்பினும் நீ மாம்சத்தின் ஆசீர்வாதங்களைத் தேடுகிறாய், தேவன் உனது மாம்சத்தை மீட்க வேண்டும் என விரும்புகிறாய், உனது ஆத்துமாவை அவர் இரட்சிக்க வேண்டும் என விரும்புகிறாய்—இவையே தவறான கண்ணோட்டம் கொண்ட ஜனங்களின் நடத்தைகள் ஆகும். மத நம்பிக்கையுள்ளவர்கள் தேவன்மீது விசுவாசம் வைத்திருந்தாலும், அவர்கள் தங்களது மனநிலையினை மாற்றிக்கொள்ள முற்படுவதில்லை, தேவனைப் பற்றிய அறிவைப் பின்தொடர்வதில்லை. மாறாக, தங்களது மாம்சத்தின் ஆர்வங்களை மட்டுமே தேடுகிறார்கள். உங்களில் பலருக்கு பல்வேறு வகைகளைச் சேர்ந்த மத நம்பிக்கைகள் உள்ளன; இது தேவன் மீதான உண்மையான விசுவாசம் அல்ல. தேவனை விசுவாசிப்பதற்கு, ஜனங்கள் அவருக்காக துன்பப்படத் தயாராக இருக்கும் ஒரு இருதயத்தையும் தங்களைத் தாங்களே அர்ப்பணிக்கும் விருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஜனங்கள் நிறைவேற்றாவிட்டால், தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் தவறானது, மேலும் அவர்களுடைய மனநிலையில் மாற்றத்தை அடைய முடியாது. சத்தியத்தை உண்மையாகப் பின்தொடர்ந்து தேவனைப் பற்றிய அறிவைத் தேடி, ஜீவிதத்தைத் தொடரும் மனிதர்கள் மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிக்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து

336. பல வருடங்களுக்குப் பிறகு, தேவனை நம்பும் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய நம்பிக்கையில் உள்ள தேவனை அவர்களுடைய மனதில் மாற்றியது எது? சிலர் தேவனை வெறுமையான காற்றின் கலவை என்று நம்புகிறார்கள். தேவனுடைய இருப்பைப் பற்றிய கேள்விகளுக்கு இந்த ஜனங்களுக்கு எந்த பதிலும் இல்லை. ஏனென்றால் அவருடைய இருப்பை அல்லது அவர் இல்லாததை அவர்களால் உணரவோ அறியவோ முடியாது, அதை தெளிவாகப் பார்க்கவோ புரிந்துக்கொள்ளவோ அவர்களால் கூடாது. ஆழ்மனதில், இந்த ஜனங்கள் தேவன் இல்லை என்று நினைக்கிறார்கள். மற்றவர்கள் தேவனை ஒரு மனிதனாக நம்புகிறார்கள். அவர்களால் செய்ய முடியாத எல்லாவற்றையும் அவரால் செய்ய முடியாது என்றும், அவர்கள் நினைப்பது போல அவர் சிந்திக்க வேண்டும் என்றும் இந்த ஜனங்கள் நினைக்கிறார்கள். தேவனைப் பற்றிய அவர்களுடைய வரையறை “கண்ணுக்குத் தெரியாத மற்றும் தீண்டத்தகாத மனிதர்” என்பதாகும். தேவனை ஒரு கைப்பாவை போல நம்புகிற ஒரு கூட்டமும் இருக்கிறது. தேவனுக்கு உணர்ச்சிகள் இல்லை என்று இந்த ஜனங்கள் நம்புகிறார்கள். தேவன் ஒரு களிமண் சொரூபம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, தேவனுக்கு எந்த மனநிலையும், கண்ணோட்டமும், யோசனைகளும் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர் மனிதகுலத்தின் தாக்கத்தில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். ஜனங்கள் தங்கள் விருப்பம் போல நம்புகிறார்கள். அவர்கள் அவரைப் பெரியவராக மாற்றினால், அவர் பெரியவர். அவர்கள் அவரை சிறியதாக மாற்றினால், அவர் சிறியவர். ஜனங்கள் பாவம் செய்யும்போது, தேவனுடைய இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் அன்பு தேவைப்படும்போது, தேவன் அவருடைய இரக்கத்தை பெரிதாக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த ஜனங்கள் தங்கள் மனதில் ஒரு “தேவனை” கண்டுபிடித்து, பின்னர் இந்த “தேவன்” தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், அவர்களுடைய எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்யவும் செய்கிறார்கள். எப்போது என்றாலும் அல்லது எங்கு இருந்தாலும், அத்தகையவர்கள் என்ன செய்தாலும், அவர்கள் தேவனை நடத்துவதிலும், விசுவாசத்திலும் இந்த ஆடம்பரத்தை ஏற்றுக்கொள்வார்கள். தேவனுடைய மனநிலையை மோசமாக்கி, அவர்களைக் காப்பாற்ற முடியும் என்று இன்னும் நம்புபவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் தேவனுடைய அன்பு எல்லையற்றது என்றும் அவருடைய மனநிலை நீதியானது என்றும் ஒருவர் தேவனை எவ்வளவு புண்படுத்தினாலும், அவர் அதில் எதையும் நினைவில் கொள்ள மாட்டார் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். மனித தவறுகள், மனித மீறுதல்கள் மற்றும் மனித ஒத்துழையாமை ஆகியவை ஒரு மனிதனுடைய மனநிலையின் உடனடி வெளிப்பாடுகள் என்பதால், தேவன் ஜனங்களுக்கு வாய்ப்புகளைத் தருவார், அவர்களுடன் சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் இருப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். முன்பு போலவே தேவன் இன்னும் அவர்களை நேசிப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு, அவர்கள் இரட்சிப்பை அடைவதற்கான அதிக நம்பிக்கையைப் பேணுகிறார்கள். உண்மையில், ஜனங்கள் தேவனை எப்படி நம்பினாலும், அவர்கள் சத்தியத்தை பின்பற்றாதவரை, அவர் அவர்களை நோக்கி எதிர்மறையான மனநிலையை வைத்திருப்பார். ஏனென்றால், தேவனிடமான உன் விசுவாச ஜீவிதத்தில், நீ தேவனுடைய வார்த்தைகளின் புஸ்தகத்தை ஒரு புதையலாகப் பார்த்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் அதைப் படித்தாலும் வாசித்தாலும், உண்மையான தேவனை நீ ஒதுக்கி வைத்தாய். நீங்கள் அவரை வெறும் வெறுமையான காற்றாக அல்லது ஒரு மனிதராக மட்டுமே கருதுகிறீர்கள்—உங்களில் சிலர், அவரை ஒரு கைப்பாவையாக கருதுகிறீர்கள். நான் ஏன் இதை இவ்வாறு கூறுகிறேன்? நான் அவ்வாறு கூறுகிறேன், ஏனென்றால் நான் அதை அவ்வாறு பார்க்கிறேன். நீங்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டாலும் அல்லது சில சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், உன் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களுக்கும், உனக்குள்ளாக நீ உருவாக்கும் விஷயங்களுக்கும், ஒருபோதும் தேவனுடைய வார்த்தைகளுடனோ சத்தியத்தை பின்தொடர்வதுடனோ எந்த தொடர்பும் இல்லை. நீ என்ன நினைக்கிறாய், உன் சொந்த பார்வை என்ன என்பது உனக்கு மட்டுமே தெரியும். பின்னர் உன் சொந்த எண்ணங்களையும் கருத்துக்களையும் தேவன் மீது கட்டாயப்படுத்துகிறாய். உன் மனதில் அவை தேவனுடைய கண்ணோட்டங்களாக மாறுகின்றன. நீ இந்த கண்ணோட்டங்களின் தரங்களை உறுதியற்ற முறையில் ஆதரிக்கிறாய். காலப்போக்கில், அதுபோன்று தொடர்வது உன்னை தேவனிடமிருந்து வெகுதூரம் அழைத்துச் செல்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

337. நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியால் பெரும்பாலான மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நடைமுறையிலான தேவன் மற்றும் பரலோகத்திலுள்ள தேவனைப் பற்றி அவர்கள் எப்போதுமே முற்றிலும் மாறுபட்ட இரு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர், இது தேவனுக்குக் கீழ்ப்படிவதற்காக அல்ல, ஆனால் சில நன்மைகளைப் பெறுவதற்காக அல்லது பேரழிவு ஏற்படுத்தும் துன்பங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது; அப்போதுதான் அவர்கள் ஓரளவு கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களின் கீழ்ப்படிதல் நிபந்தனையுள்ளதாகும்; அது அவர்களின் சொந்த வாய்ப்புகளுக்காகவும் அவர்கள் மீது திணிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. எனவே, நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இது உங்கள் வாய்ப்புகளுக்காகவும் மற்றும் உங்கள் தலைவிதிக்காகவும் மட்டுமே இருந்தால், நீங்கள் முற்றிலும் விசுவாசிக்காமலிருப்பதே நல்லது. இவ்வாறான விசுவாசமானது சுய-வஞ்சகம், சுய-நம்பிக்கை, மற்றும் சுய-போற்றுதல் சார்ந்ததாகும். உங்கள் விசுவாசமானது தேவனுக்குக் கீழ்படிதலின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை எனில், அவரை எதிர்த்ததற்காக நீங்கள் இறுதியில் தண்டிக்கப்படுவீர்கள். தங்கள் விசுவாசத்தில் தேவனுக்குக் கீழ்படிதலைத் தேடாதவர்கள் அனைவரும் அவரை எதிர்க்கின்றனர். மக்கள் சத்தியத்தைத் தேடவும், அவருடைய வார்த்தைகளுக்காக தாகம் கொள்ளவும், அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும், அருந்தவும், மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு அவற்றை கடைபிடிக்குமாறும் தேவன் கேட்டுக்கொள்கிறார். இவை உங்களுடைய உண்மையான நோக்கங்களாக இருந்தால், தேவன் நிச்சயமாக உங்களை உயர்த்துவார் மற்றும் உங்களிடம் கிருபையுள்ளவராக இருப்பார். இது சந்தேகிக்க இயலாத மற்றும் மாற்ற முடியாத ஒன்றாகும். உங்கள் நோக்கம் தேவனுக்குக் கீழ்படியாததாக இருந்தால் மற்றும் உங்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்குமானால், நீங்கள் சொல்வது மற்றும் செய்வது அனைத்தும், அதாவது தேவனுக்கு முன்பாக ஏறெடுக்கும் உங்கள் ஜெபங்களும் மற்றும் உங்களுடைய அனைத்துச் செயல்களும் அவருக்கு எதிரானதாக இருக்கும். நீங்கள் மென்மையாக பேசுபவராகவும் கனிவான நடத்தையுள்ளவராகவும் இருக்கலாம், உங்களுடைய ஒவ்வொரு செயலும் சொல்லும் சரியானதாக தோன்றலாம் மற்றும் நீங்கள் கீழ்படியும் ஒருவராக தோன்றலாம், ஆனால் உங்கள் நோக்கங்களுக்கும், தேவன் மீதான விசுவாசத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கும் வரும்போது, நீங்கள் செய்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதும், நீங்கள் செய்யும் அனைத்தும் தீமையானதுமாகும். ஆடுகளைப் போல கீழ்ப் படிந்தவர்களாகத் தோன்றினாலும், இதயத்தில் தீய நோக்கங்கள் கொண்டவர்கள், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களாவர். அவர்கள் நேரடியாக தேவனை புண்படுத்துகிறார்கள், மேலும் அவர்களில் ஒருவரையும் தேவன் விடமாட்டார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி வெளிப்படுத்துவார், நயவஞ்சகர்கள் அனைவருமே, நிச்சயமாக, பரிசுத்த ஆவியினால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள் என்பதை அனைவருக்கும் காண்பிப்பார். கவலைப்பட வேண்டாம். தேவன் அவர்களில் கடைசியில் உள்ளவர் வரை அனைவரையும் சரிக்கட்டி அப்புறப்படுத்துவார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்பதிலிருந்து

338. மக்களின் மிகப்பெரிய தவறு என்னவென்றால், தேவன் மீதுள்ள விசுவாசத்தில், அவர்கள் தேவனுடைய வார்த்தையை மட்டுமே விசுவாசிக்கிறார்கள் தேவன் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். எல்லா மக்களும், தேவன் ஜீவித்திருப்பதை நம்புகிறார்கள், ஆனால் தேவன் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை. மக்களின் வாய்கள் தேவனிடம் அநேக ஜெபங்களை ஏறெடுக்கிறது, ஆனால் தேவனுக்கு அவர்களின் இதயங்களில் இடமில்லை, எனவே தேவன் அவர்களிடம் இடம்பெற மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார். ஏனெனில் மக்கள் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள், இதனால் அவர்கள் வெட்கப்படவும் இந்த சோதனைகளுக்கு மத்தியில், தங்களை அறிந்து கொள்ளவும் செய்வதைத் தவிர தேவனுக்கு வேறு வழியில்லை. இல்லையென்றால், மானுடம் பிரதான தூதரின் சந்ததியினராக மாறும், அல்லாமல் மிகவும் தீமை நிறைந்ததாக மாறும். தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் செயல்பாட்டில், ஒவ்வொரு நபரும் தேவனின் இடைவிடாத சுத்திகரிப்பின் கீழ் தங்களின் பல தனிப்பட்ட நோக்கங்களையும், குறிக்கோள்களையும் விலக்குகிறார்கள். இல்லையென்றால், தேவன் யாரையும் பயன்படுத்துவதற்கான வழி இருக்காது, மேலும் அவர் செய்ய வேண்டிய வேலையை மக்களிடையே செய்ய முடியாது. தேவன் முதலில் மக்களை சுத்தப்படுத்துகிறார், இந்த செயல்முறையின் மூலம், தேவன் அவர்களை மாற்றக்கூடும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளலாம். அப்போதுதான் தேவன் தம்முடைய வாழ்க்கையை அவர்களுக்குள் செயல்படுத்துகிறார், இதனால் மட்டுமே அவர்களின் இருதயங்கள் முழுமையாக தேவனிடம் திரும்ப முடியும். எனவே நான் சொல்கிறேன், தேவனை நம்புவது மக்கள் சொல்வது போல் எளிதானது அல்ல. தேவன் அதைப் பார்க்கிறார், உனக்கு அறிவு மட்டுமே உண்டாயிருந்து, ஆனால் அவருடைய வார்த்தையை ஜீவனாக கொண்டிருக்கவில்லை என்றால், மேலும் நீ உன் சொந்த அறிவுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், சத்தியத்தை கடைப்பிடிக்கவோ அல்லது தேவனுடைய வார்த்தைப்படி வாழவோ முடியாவிட்டால், தேவனை நேசிக்கும் இதயம் உன்னிடம் இல்லை என்பதற்கு இதுவே சான்றாகும், உன் இதயம் தேவனுக்கு உரியதல்ல என்பதை இது காட்டுகிறது. ஒருவர் தேவனை விசுவாசிப்பதின் மூலம் அவரை அறிந்து கொள்ள முடியும்: இதுவே இறுதி இலக்கு மனிதனின் நாட்டத்தின் குறிக்கோள். தேவனுடைய வார்த்தைகளைச் செயல்படுத்துவதற்கு நீ முயற்சி செய்ய வேண்டும், இதனால் அவை உனக்கு நடைமுறையில் பலனளிக்கும். உன்னிடம் கோட்பாட்டு அறிவு மட்டுமே இருந்தால், தேவன் மீதான உன் விசுவாசம் வீணாகிவிடும். நீ அவருடைய வார்த்தையை கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே, உன் விசுவாசம் முழுமையானதாகவும், தேவனின் விருப்பத்திற்கு இணங்கவும் இருக்கமுடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்” என்பதிலிருந்து

339. நீ தேவனை நம்புகிறாய், தேவனைப் பின்பற்றுகிறாய் மற்றும் உன் இருதயத்தில் நீ தேவனை நேசிக்கிறாய். உன் கேடான மனநிலையை நீ ஒதுக்கி வைக்க வேண்டும். தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீ முயல வேண்டும் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை நீ செய்ய வேண்டும். நீ தேவனை நம்புகிறாய், பின்பற்றுகிறாய் என்பதால், நீ எல்லாவற்றையும் அவருக்கு வழங்க வேண்டும், தனிப்பட்ட தேர்வுகள் அல்லது கோரிக்கைகளை வைக்கக்கூடாது மற்றும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். நீ சிருஷ்டிக்கப்பட்டதால், உன்னைப் படைத்த தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏனென்றால், நீ இயல்பாகவே உன் மீது ஆதிக்கம் இல்லாமல் இருக்கிறாய். உன் சொந்த விதியைக் கட்டுப்படுத்தும் திறன் உன்னிடம் இல்லை. நீ தேவனை நம்புகிற ஒரு மனிதன் என்பதால், நீ பரிசுத்தத்தையும் மாற்றத்தையும் நாட வேண்டும். நீ தேவனுடைய சிருஷ்டி என்பதால், நீ உன் கடமையைக் கடைப்பிடிக்க வேண்டும். உனக்கு தகுதியான இடத்தில் இருக்க வேண்டும். உன் கடமையை நீ மீறக்கூடாது. இது உன்னைக் கட்டுப்படுத்துவதோ அல்லது உபதேசத்தின் மூலம் உன்னை அடக்குவதோ அல்ல. மாறாக உன் கடமையை நீ செய்யம் பாதையாகும் மற்றும் அதை நீதியைச் செய்கிற அனைவராலும் அடைய முடியும்—அடைய வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

340. தேவன் மீதான மனிதனின் நம்பிக்கையின் மிக அடிப்படையான தேவை என்னவென்றால், அவனுக்கு நேர்மையான இருதயம் இருக்கிறது, அவன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறான் மற்றும் உண்மையிலேயே கீழ்ப்படிகிறான் என்பதாகும். மனிதனுக்கு கடினமான விஷயம் என்னவென்றால், அவன் முழு சத்தியத்தையும் பெற முடியும் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்ற முடியும் என்பதற்காக உண்மையான நம்பிக்கைக்கு ஈடாக தனது முழு ஜீவனையும் வழங்குவதாகும். தோல்வியுற்றவர்களுக்கு இது அடைய முடியாதது ஆகும். கிறிஸ்துவைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் அதை அடைவதற்கு இது இன்னும் கடினமானதாகும். ஏனென்றால், மனிதன் தன்னை முழுமையாக தேவனுக்காக அர்ப்பணிப்பதில் நல்லவன் அல்ல. ஏனென்றால், மனிதன் சிருஷ்டிகருக்கு தன் கடமையைச் செய்யத் தயாராக இல்லை. ஏனென்றால், மனிதன் சத்தியத்தைக் கண்டான், ஆனால் அதைத் தவிர்த்து, தன் சொந்த பாதையில் நடக்கிறான். ஏனென்றால், மனிதன் எப்பொழுதும் தோல்வியுற்றவர்களின் வழியைப் பின்பற்றுவதையே முயற்சிக்கிறான். ஏனென்றால், மனிதன் எப்போதும் பரலோகத்தை மீறுகிறான். ஆகவே, மனிதன் எப்பொழுதும் தோல்வியடைகிறான், எப்போதும் சாத்தானின் தந்திரத்துக்குள் இழுக்கப்படுகிறான் மற்றும் அவனுடைய வலையில் சிக்கிக் கொள்கிறான். ஏனென்றால், மனிதன் கிறிஸ்துவை அறியமாட்டான். ஏனென்றால், மனிதன் சத்தியத்தைப் புரிந்துகொள்வதிலும் அனுபவிப்பதிலும் திறமையானவன் அல்ல. ஏனென்றால், மனிதன் பவுலை அதிகமாக ஆராதிக்கிறான் மற்றும் பரலோகத்தை மிகவும் விரும்புகிறான். ஏனென்றால் கிறிஸ்து அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் தேவனுக்கே கட்டளையிட வேண்டும் என்றும் மனிதன் எப்போதும் எதிர்பார்க்கிறான். ஆகவே அந்த பெரிய மனிதர்கள் மற்றும் உலகத்தின் வித்தியாசங்களை அனுபவித்தவர்கள் இன்னும் ஜீவனுடன் இருக்கிறார்கள் மற்றும் தேவனுடைய சிட்சையின் மத்தியில் மரிக்கின்றனர். அத்தகையவர்களைப் பற்றி நான் சொல்லக்கூடியது என்னவென்றால், அவர்கள் ஒரு துன்பகரமான மரணத்தை அடைகிறார்கள். அவர்களுக்கான விளைவானது—அவர்களுடைய மரணமானது—நியாயப்படுத்தப்படாமல் இல்லை. இன்னும் அவர்களுடைய தோல்வியானது பரலோகப் பிரமாணத்தால் சகிக்க முடியாதது அல்லவா? சத்தியமானது மனிதனின் உலகத்திலிருந்து வருகிறது, ஆனாலும் மனிதர்களிடையே உள்ள சத்தியம் கிறிஸ்துவால் அனுப்பப்படுகிறது. இது கிறிஸ்துவினிடமிருந்து உருவாகிறது, அதாவது தேவனிடமிருந்தே உருவாகிறது. இது மனிதனால் இயலாத ஒன்று அல்ல. ஆனாலும் கிறிஸ்து சத்தியத்தை மட்டுமே தருகிறார்; சத்தியத்தைத் தேடுவதில் மனிதன் வெற்றி பெறுவானா என்பதை தீர்மானிக்க அவர் வரவில்லை. ஆகவே, சத்தியத்தில் வெற்றி அல்லது தோல்வி அனைத்தும் மனிதனின் பின்பற்றுதலுக்குக் கீழானது என்பதை இது பின்வருமாறு கூறுகிறது. சத்தியத்தில் மனிதன் பெறும் ஜெயம் அல்லது தோல்வியானது ஒருபோதும் கிறிஸ்துவுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. மாறாக அது அவனுடைய பின்பற்றுதலின் விளைவாகத் தீர்மானிக்கப்படுகிறது. மனிதனின் இலக்கு மற்றும் அவனது ஜெயம் அல்லது தோல்வி ஆகிவற்றை தேவனே தாங்கும்படியாக இருக்கிறார் என்பதாக அவற்றை அவருடைய பொறுப்பில் வைக்க முடியாது. ஏனென்றால், தேவனுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆனால் தேவனுடைய சிருஷ்டிகள் செய்ய வேண்டிய கடமையுடன் அதற்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது. பவுல் மற்றும் பேதுருவின் நாட்டம் மற்றும் இலக்கு பற்றி பெரும்பாலானவர்களுக்கு கொஞ்சமாக அறிவு இருக்கிறது. ஆனாலும் பேதுரு மற்றும் பவுலின் விளைவுகளைத் தவிர வேறு எதுவும் ஜனங்களுக்குத் தெரியாது. பேதுருவின் ஜெயத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் அல்லது பவுலின் தோல்விக்கு வழிவகுத்த குறைபாடுகள் பற்றி அவர்களுக்கு அறிவு இல்லை. இந்நிலையில், அவர்களுடைய பின்பற்றுதலின் சாராம்சத்தை நீங்கள் முழுமையாகப் பார்க்க இயலாது என்றால், உங்களில் பெரும்பாலானோரின் பின்பற்றுதல் இன்னும் தோல்வியடையும். உங்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் ஜெயத்துடன் இருந்தாலும், அவர்கள் பேதுருவுக்கு சமமாக இருக்க மாட்டார்கள். உன் பின்பற்றுதலின் பாதை சரியானது என்றால், உனக்கு ஜெயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சத்தியத்தைத் தேடுவதில் நீ செல்லும் பாதை தவறானது என்றால், நீ என்றென்றும் ஜெயம்பெற இயலாமல் இருப்பாய். பவுலின் அதே முடிவை நீயும் சந்திப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

341. நீ தேவனை விசுவாசித்தால், நீ தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் உன் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மேலும், நீ அனுபவிக்க வேண்டிய விஷயங்களை நீ புரிந்துகொள்ள வேண்டும். உன்னால் தேவனை அனுபவிக்க முடிந்தாலும், தேவன் உன்னை சிட்சிக்கும்போது அல்லது தேவன் உன்னோடு செயல்படும் போது உன்னால் உணர முடியாமல் இருந்தால், தேவன் உன்னோடு செயல்படுவதையும், உன்னை சிட்சிப்பதையும், நியாயந்தீர்ப்பதையும் மட்டுமே அனுபவித்தால்—இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். இந்த சுத்திகரிப்பின் நிகழ்வில், உன்னால் உறுதியாக நிற்க முடியும், ஆனாலும் இன்னும் போதுமானதாக இது இல்லை. நீ இன்னும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். தேவனை நேசிப்பதன் பாடம் ஒருபோதும் நின்றுவிடாது மற்றும் அதற்கு முடிவும் இல்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பது மிகவும் எளிமையான ஒன்று என்று பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் சில நடைமுறை அனுபவங்களைப் பெற்றவுடன், தேவனை விசுவாசிப்பது என்பது ஜனங்கள் கற்பனை செய்வது போல் எளிதல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். மனிதனைச் சுத்திகரிக்க தேவன் கிரியை செய்யும்போது, மனிதன் துன்பமடைகிறான். ஒரு மனிதனுடைய சுத்திகரிப்பு எவ்வளவு அதிகமாக இருக்குமோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை நேசிப்பார்கள் மற்றும் தேவனுடைய வல்லமை அவர்களில் வெளிப்படும். மாறாக, மனிதர் எவ்வளவு குறைவான சுத்திகரிப்பினைப் பெறுகிறாரோ, தேவன் மீதான அவர்களுடைய அன்பும் அவ்வளவு குறைவாகவே இருக்கும் மற்றும் தேவனுடைய வல்லமை அவ்வளவு குறைவாகவே அவர்களில் வெளிப்படும். அத்தகைய ஒரு மனிதன் எவ்வளவு அதிகமான சுத்திகரிப்பு மற்றும் வலியை மற்றும் எவ்வளவு அதிகமான வேதனையை அனுபவிக்கிறானோ, அவனிடம் தேவன் மீது அவ்வளவு ஆழமான அன்பு வளரும், தேவன்மீது அவன் கொண்டுள்ள விசுவாசம் அவ்வளவு உண்மையானதாகவும் தேவனைப் பற்றிய அவனுடைய அறிவு அவ்வளவு ஆழமானதாகவும் இருக்கும். உன் அனுபவங்களில், சுத்திகரிக்கப்பட்டதற்கு அதிகமாக துன்பப்படுபவர்களை, கையாளப்படுபவர்களை, ஒழுங்குபடுத்தப்படுபவர்களைக் காண்பாய் மற்றும் தேவன்மீது ஆழ்ந்த அன்பும், தேவனைப் பற்றிய ஆழமான மற்றும் கூர்மையான அறிவும் கொண்டவர்களை நீ காண்பாய். கையாளப்படுவதை அனுபவிக்காதவர்களுக்கு மேலோட்டமான அறிவு இருக்கிறது, ஆனால், “தேவன் மிகவும் நல்லவர், ஜனங்கள் அவரை அனுபவிக்கும்படிக்கு அவர் அவர்களுக்கு கிருபையை அளிக்கிறார்,” என்று மட்டுமே அவர்களால் சொல்ல முடியும். ஜனங்கள் கையாளப்படுவதையும் ஒழுங்குபடுத்தப்படுவதையும் அனுபவித்திருந்தால், தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பற்றி அவர்களால் பேச முடியும். ஆகவே, மனிதனில் தேவனுடைய கிரியை எவ்வளவு அதிசயமானதாக இருக்கிறதோ அவ்வளவாக அது மதிப்புமிக்கதாக மற்றும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. உனக்கு இது எவ்வளவு அசாத்தியமானதாக இருக்கிறதோ மற்றும் உன் கருத்துக்களுடன் எவ்வளவாக பொருந்தாமல் இருக்கிறதோ, அவ்வளவாக தேவனுடைய கிரியையால் உன்னை ஜெயங்கொள்ளவும், உன்னை ஆதாயப்படுத்தவும், உன்னை பரிபூரணமாக்கவும் முடியும். தேவனுடைய கிரியையின் முக்கியத்துவம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது! தேவன் மனிதனை இவ்வாறு சுத்திகரிக்கவில்லை என்றால், அவர் இந்த முறையின்படி கிரியை செய்யவில்லை என்றால், அவருடைய கிரியை பயனற்றதாக மற்றும் முக்கியத்துவம் இல்லாததாக இருந்திருக்கும். தேவன் இந்த கூட்டத்தைத் தேர்ந்தெடுத்து ஆதாயம் செய்வார் என்றும், கடைசி நாட்களில் அவர்களை பரிபூரணமாக்குவார் என்றும் கடந்த காலத்தில் கூறப்பட்டது. இதில், அசாதாரண முக்கியத்துவம் உள்ளது. அவர் உங்களுக்குள் எவ்வளவு பெரிய கிரியையைச் செய்கிறாரோ, அவ்வளவாக தேவன் மீதான உங்கள் அன்பு ஆழமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. தேவனுடைய கிரியை எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அவ்வளவாக மனிதனால் அவருடைய ஞானத்திலிருந்து ஏதேனும் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது மற்றும் அவரைப் பற்றிய மனிதனுடைய அறிவும் அவ்வளவு ஆழமானதாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து

343. மோசே கன்மலையை அடித்தபோது, அவனது விசுவாசத்தினால் யேகோவா அருளிய தண்ணீர் வெளியே பாய்ந்தோடிற்று. தாவீது யேகோவாவாகிய என்னைப் புகழ்ந்து பாடலை இசைத்தபோது—அவனது விசுவாசத்தினால்—அவனது இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பிற்று. யோபு, மலைகளை நிரப்பின அவரது கால்நடைகளையும் மற்றும் சொல்லப்படாத அளவு ஏராளமான செல்வங்களையும் இழந்தபோது, மற்றும் அவனது உடலை எரிகிற கொப்புளங்கள் மூடியபோது, அது அவனுடைய விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. யேகோவாவாகிய என் குரலை அவன் கேட்க முடிந்து மற்றும் எனது மகிமையைக் காணமுடிந்தபோது, அது அவனது விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. பேதுரு தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிந்தது. அவனது விசுவாசத்தினிமித்தமாகவே, எனக்காக அவன் சிலுவையில் அறையப்படவும் மகிமையான சாட்சியம் தரவும் முடிந்தது. யோவான் தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே மனுஷகுமாரனின் மகிமையான உருவத்தைக் கண்டான். கடைசி நாட்களின் தரிசனத்தை அவன் கண்டபோது, அவனுடைய விசுவாசத்தினாலேயே அது அதிகமாயிற்று. புறஜாதி ஜனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களில் திரளானவர்கள் தங்கள் விசுவாசத்தின் நிமித்தமாகவே என் வெளிப்பாட்டைப் பெற்றனர், மற்றும் மனிதனுக்கு மத்தியில் என் ஊழியத்தைச் செய்வதற்காக நான் மாம்சத்தில் திரும்ப வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் அறியவந்திருப்பதற்கான காரணமும், அவர்கள் விசுவாசம்தான். என் கடுமையான வார்த்தைகளால் பாதிக்கப்பட்டும் இன்னும் அவற்றினால் ஆறுதலுக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றினால் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள்—அவர்கள் தங்களின் விசுவாசத்தின் காரணமாக இதைச் செய்யாதிருக்கிறார்களா? ஜனங்கள் தங்கள் விசுவாசத்தினால் நிறைய பெற்றிருக்கிறார்கள், அது எப்போதும் ஒரு ஆசீர்வாதம் அல்ல. தாவீது உணர்ந்த மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அவர்கள் பெறாமலிருக்கலாம், அல்லது மோசே செய்ததைப் போல யேகோவாவால் தண்ணீர் வழங்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, யோபுவின் விசுவாசத்தினால் அவன் யேகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டான், ஆனால் அவனும் பேரழிவைச் சந்தித்தான். நீ ஆசீர்வதிக்கப்பட்டாலும் அல்லது பேரழிவை அனுபவித்தாலும், இரண்டும் ஆசீர்வதிக்கப்பட்ட நிகழ்வுகள் தான். விசுவாசம் இல்லாமல், இத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியையை உன்னால் பெற முடியாது, மேலும் இன்று உன் கண்களுக்கு முன்பாக காண்பிக்கப்படும் யேகோவாவின் கிரியைகளை உன்னால் காண இயலாது. உன்னால் பார்க்கவும் இயலாது, பெறவும் இயலாது. இந்த துன்பங்கள், இந்தப் பேரழிவுகள் மற்றும் அனைத்து நியாயத்தீர்ப்புகள்—இவை உனக்கு ஏற்படவில்லை என்றால், உன்னால் இன்று யேகோவாவின் கிரியைகளைக் காண முடியுமா? இன்று, விசுவாசமே உன்னை ஜெயங்கொள்ள அனுமதிக்கிறது, மேலும் அது ஜெயங்கொள்ளப்படுவது யேகோவாவின் ஒவ்வொரு கிரியையையும் விசுவாசிக்க அனுமதிக்கிறது. விசுவாசத்தினால்தான் நீ இத்தகைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் பெறுகிறாய். இந்த ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், நீ ஜெயங்கொள்ளப்பட்டு பரிபூரணமடைகிறாய். இன்று நீ பெறும் ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், உனது விசுவாசம் வீணாகிவிடும், ஏனென்றால் நீ தேவனை அறிய மாட்டாய்; நீ அவரை எவ்வளவு விசுவாசித்தாலும், உன் விசுவாசம் நிலைத்திருக்கும், ஆனால் அது உண்மையில் வெற்று வெளிப்பாடாகத் தான் இருக்கும். இந்த ஜெயங்கொள்வதன் கிரியையை நீ பெற்ற பின்னரே, உன்னை முழுமையாக கீழ்ப்படியச் செய்யும் கிரியையை, உன் விசுவாசம் உண்மையாகவும், நம்பகமானதாகவும் மாறும், மேலும் உனது இருதயம் தேவனை நோக்கித் திரும்பும். “விசுவாசம்” என்ற இந்த வார்த்தையின் காரணமாக நீ மிகுந்த நியாயத்தீர்ப்பையும் சாபத்தையும் அனுபவித்தாலும், நீ உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருக்கிறாய், மேலும் நீ சத்தியமான, மிகவும் உண்மையான, மிகவும் அருமையான விஷயத்தைப் பெறுகிறாய். ஏனென்றால், நியாயத்தீர்ப்பின் போக்கில் மட்டுமே தேவனின் சிருஷ்டிப்புகள் இறுதியாக போய்சேரும் இடத்தை நீ காண்கிறாய்; இந்த நியாயத்தீர்ப்பில்தான் சிருஷ்டிகர் நேசிக்கப்பட வேண்டும் என்பதை நீ காண்கிறாய்; இத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ தேவனின் கரத்தைக் காண்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷ ஜீவிதத்தை முழுமையாக புரிந்து கொள்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையைப் பெற்று, “மனுஷன்” என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறாய்; இந்த ஜெயத்தில் மட்டுமே நீ சர்வவல்லவரின் நேர்மையான மனநிலையையும் அவருடைய அழகான, மகிமையான முகத்தையும் காண்கிறாய்; இந்த ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ மனுஷனின் தோற்றத்தைப் பற்றி அறிந்துகொண்டு, மனுஷகுலத்தின் “அழியாத வரலாற்றை” புரிந்துகொள்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷகுலத்தின் மூதாதையர்களையும் மனுஷகுலத்தின் சீர்கேட்டின் தோற்றத்தையும் புரிந்து கொள்கிறாய்; இந்த ஜெயத்தில்தான் நீ மகிழ்ச்சியையும் ஆறுதலையும் பெறுகிறாய், அத்துடன் முடிவில்லாத சிட்சை, ஒழுக்கம் மற்றும் சிருஷ்டிகரிடமிருந்து அவர் சிருஷ்டித்த மனுஷகுலத்திற்கு கடிந்துகொள்ளுதல் வார்த்தைகளைப் பெறுகிறாய்; இந்த ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ ஆசீர்வாதங்களைப் பெறுகிறாய், அதே போல் மனுஷனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் பெறுகிறாய்…. இது உனது சிறிய விசுவாசத்தின் காரணமாகத்தான் அல்லவா? இவற்றைப் பெற்ற பிறகு உனது விசுவாசம் வளரவில்லையா? நீ மிகப்பெரிய அளவிற்குப் பெறவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து

முந்தைய: X. தேவன் மீதான ஒருவருடைய விசுவாசத்தில் சத்தியத்தின் யதார்தத்திற்குள் எவ்வாறு பிரவேசிப்பது என்பது குறித்த வார்த்தைகள்

அடுத்த: B. சத்தியத்தைக் கடைப்பிடித்து, சத்தியத்தைப் புரிந்துகொண்டு, யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பது எப்படி என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக