I. விசுவாசத்தில் ஒருவருடைய பாதையை தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து

428. பெரும்பாலான ஜனங்கள் தங்கள் எதிர்கால இலக்கிற்காக அல்லது தற்காலிக இன்பத்திற்காக தேவனை நம்புகிறார்கள். எந்தவொரு கையாளுதலுக்கும் உட்படுத்தப்படாதவர்கள் வெகுமதிகளைப் பெறுவதற்காக, பரலோகத்திற்குள் பிரவேசிக்க தேவனை நம்புகிறார்கள். அவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவதற்காகவோ அல்லது தேவனுடைய சிருஷ்டியாக தங்கள் கடமையைச் செய்வதற்காகவோ அவர்கள் தேவனை நம்புவதில்லை. அதாவது, பெரும்பாலான ஜனங்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அல்லது தங்கள் கடமையை நிறைவு செய்வதற்காக தேவனை நம்பவில்லை. அர்த்தமுள்ள ஜீவிதத்தை நடத்துவதற்காக ஜனங்கள் தேவனை நம்புவது அரிது அல்லது மனிதன் உயிருடன் இருப்பதால், அவன் தேவனை நேசிக்க வேண்டும் என்று நம்புபவர்களும் இல்லை. ஏனென்றால் அது பரலோகப் பிரமாணமும் பூமியின் கொள்கையும் ஆகும். இது மனிதனின் இயல்பான தொழில். இவ்வாறு, வெவ்வேறு மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்த குறிக்கோள்களைப் பின்பற்றினாலும், அவர்களுடைய பின்பற்றுதலின் நோக்கம் மற்றும் அதன் பின்னால் உள்ள உந்துதல் அனைத்தும் ஒரே மாதிரியானவையாகும். மேலும் என்னவென்றால், அவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்களுடைய வழிபாட்டின் பொருள்கள் ஒரே மாதிரியானவை ஆகும். கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில், பல விசுவாசிகள் இறந்துவிட்டார்கள். பலர் இறந்து மீண்டும் பிறந்திருக்கிறார்கள். ஒன்று இரண்டு மனிதர்கள் மட்டுமோ அல்லது ஓராயிரம் அல்லது ஈராயிரம் மனிதர்கள் மட்டுமோ தேவனைத் தேடவில்லை. மாறாக இதுபோன்ற பெரும்பாலானோர் தங்கள் சொந்த வாய்ப்புகளுக்காகவோ எதிர்காலத்திற்கான அவர்களுடைய மகத்தான நம்பிக்கைகளுக்காகவோ தேவனைப் பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவுக்கு பக்தியுள்ளவர்கள் மிகக் குறைவானவர்கள். இன்னும் பல பக்தியுள்ள விசுவாசிகள் தங்கள் வலைகளிலேயே சிக்கி இறந்துவிட்டனர். மேலும், ஜெயம்பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். இன்றுவரை, ஜனங்களுக்கு அவர்கள் தோல்வியடைவதற்கான காரணங்கள் அல்லது அவர்களுடைய ஜெயத்தின் ரகசியங்கள் இன்னும் தெரியவில்லை. கிறிஸ்துவைத் தேடுவதில் வெறித்தனமானவர்களுக்கு இன்னும் நுண்ணறிவைப் பெறும் கணம் வரவில்லை. அவர்கள் இந்த இரகசியங்களின் அடிப்புறத்திற்கு இன்னும் வரவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை. அவர்கள் தங்கள் முயற்சியில் கடினமான முயற்சிகளை மேற்கொண்டாலும், அவர்கள் நடந்து செல்லும் பாதையானது அவர்கள் முன்னோர்கள் முன்பு நடந்து சென்ற தோல்வியின் பாதையாகும். அது ஜெயத்தின் பாதை அல்ல. இவ்வாறு, அவர்கள் எப்படித் தேடுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் இருளுக்கு வழிவகுக்கும் பாதையில் நடக்கிறார்கள் அல்லவா? அவர்கள் பெறுவது கசப்பான பழமல்லவா? கடந்த காலங்களில் ஜெயம் பெற்றவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் இறுதியில் செல்வ வளத்தைப் பெறுவார்களா அல்லது பேரழிவுக்கு வருவார்களா என்று கணிப்பது கடினமாகும். அப்படியானால், தோல்வியுற்றவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலம் தேடும் ஜனங்களின் சிக்கல்கள் எவ்வளவு மோசமானதாக இருக்கும்? தோல்வி அடைவதற்கான இன்னும் பெரிய வாய்ப்பில் அவர்கள் நிற்கவில்லையா? அவர்கள் நடந்து செல்லும் பாதைக்கான மதிப்பு என்னவாக இருக்கிறது? அவர்கள் நேரத்தை வீணடிக்கவில்லையா? ஜனங்கள் தங்கள் முயற்சியில் ஜெயம் பெறுகிறார்களா அல்லது தோல்வியடைகிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், சுருக்கமாகச் சொல்வதானால், அவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் விருப்பம் போல தேடுவதன் மூலம் அவர்களால் ஜெயம் அல்லது தோல்வியை தீர்மானிக்க முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

429. தேவன் மீதான மனிதனின் நம்பிக்கையின் மிக அடிப்படையான தேவை என்னவென்றால், அவனுக்கு நேர்மையான இருதயம் இருக்கிறது, அவன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறான் மற்றும் உண்மையிலேயே கீழ்ப்படிகிறான் என்பதாகும். மனிதனுக்கு கடினமான விஷயம் என்னவென்றால், அவன் முழு சத்தியத்தையும் பெற முடியும் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்ற முடியும் என்பதற்காக உண்மையான நம்பிக்கைக்கு ஈடாக தனது முழு ஜீவனையும் வழங்குவதாகும். தோல்வியுற்றவர்களுக்கு இது அடைய முடியாதது ஆகும். கிறிஸ்துவைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் அதை அடைவதற்கு இது இன்னும் கடினமானதாகும். ஏனென்றால், மனிதன் தன்னை முழுமையாக தேவனுக்காக அர்ப்பணிப்பதில் நல்லவன் அல்ல. ஏனென்றால், மனிதன் சிருஷ்டிகருக்கு தன் கடமையைச் செய்யத் தயாராக இல்லை. ஏனென்றால், மனிதன் சத்தியத்தைக் கண்டான், ஆனால் அதைத் தவிர்த்து, தன் சொந்த பாதையில் நடக்கிறான். ஏனென்றால், மனிதன் எப்பொழுதும் தோல்வியுற்றவர்களின் வழியைப் பின்பற்றுவதையே முயற்சிக்கிறான். ஏனென்றால், மனிதன் எப்போதும் பரலோகத்தை மீறுகிறான். ஆகவே, மனிதன் எப்பொழுதும் தோல்வியடைகிறான், எப்போதும் சாத்தானின் தந்திரத்துக்குள் இழுக்கப்படுகிறான் மற்றும் அவனுடைய வலையில் சிக்கிக் கொள்கிறான். ஏனென்றால், மனிதன் கிறிஸ்துவை அறியமாட்டான். ஏனென்றால், மனிதன் சத்தியத்தைப் புரிந்துகொள்வதிலும் அனுபவிப்பதிலும் திறமையானவன் அல்ல. ஏனென்றால், மனிதன் பவுலை அதிகமாக ஆராதிக்கிறான் மற்றும் பரலோகத்தை மிகவும் விரும்புகிறான். ஏனென்றால் கிறிஸ்து அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் தேவனுக்கே கட்டளையிட வேண்டும் என்றும் மனிதன் எப்போதும் எதிர்பார்க்கிறான். ஆகவே அந்த பெரிய மனிதர்கள் மற்றும் உலகத்தின் வித்தியாசங்களை அனுபவித்தவர்கள் இன்னும் ஜீவனுடன் இருக்கிறார்கள் மற்றும் தேவனுடைய சிட்சையின் மத்தியில் மரிக்கின்றனர். அத்தகையவர்களைப் பற்றி நான் சொல்லக்கூடியது என்னவென்றால், அவர்கள் ஒரு துன்பகரமான மரணத்தை அடைகிறார்கள். அவர்களுக்கான விளைவானது—அவர்களுடைய மரணமானது—நியாயப்படுத்தப்படாமல் இல்லை. இன்னும் அவர்களுடைய தோல்வியானது பரலோகப் பிரமாணத்தால் சகிக்க முடியாதது அல்லவா? சத்தியமானது மனிதனின் உலகத்திலிருந்து வருகிறது, ஆனாலும் மனிதர்களிடையே உள்ள சத்தியம் கிறிஸ்துவால் அனுப்பப்படுகிறது. இது கிறிஸ்துவினிடமிருந்து உருவாகிறது, அதாவது தேவனிடமிருந்தே உருவாகிறது. இது மனிதனால் இயலாத ஒன்று அல்ல. ஆனாலும் கிறிஸ்து சத்தியத்தை மட்டுமே தருகிறார்; சத்தியத்தைத் தேடுவதில் மனிதன் வெற்றி பெறுவானா என்பதை தீர்மானிக்க அவர் வரவில்லை. ஆகவே, சத்தியத்தில் வெற்றி அல்லது தோல்வி அனைத்தும் மனிதனின் பின்பற்றுதலுக்குக் கீழானது என்பதை இது பின்வருமாறு கூறுகிறது. சத்தியத்தில் மனிதன் பெறும் ஜெயம் அல்லது தோல்வியானது ஒருபோதும் கிறிஸ்துவுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. மாறாக அது அவனுடைய பின்பற்றுதலின் விளைவாகத் தீர்மானிக்கப்படுகிறது. மனிதனின் இலக்கு மற்றும் அவனது ஜெயம் அல்லது தோல்வி ஆகிவற்றை தேவனே தாங்கும்படியாக இருக்கிறார் என்பதாக அவற்றை அவருடைய பொறுப்பில் வைக்க முடியாது. ஏனென்றால், தேவனுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆனால் தேவனுடைய சிருஷ்டிகள் செய்ய வேண்டிய கடமையுடன் அதற்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது. பவுல் மற்றும் பேதுருவின் நாட்டம் மற்றும் இலக்கு பற்றி பெரும்பாலானவர்களுக்கு கொஞ்சமாக அறிவு இருக்கிறது. ஆனாலும் பேதுரு மற்றும் பவுலின் விளைவுகளைத் தவிர வேறு எதுவும் ஜனங்களுக்குத் தெரியாது. பேதுருவின் ஜெயத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் அல்லது பவுலின் தோல்விக்கு வழிவகுத்த குறைபாடுகள் பற்றி அவர்களுக்கு அறிவு இல்லை. இந்நிலையில், அவர்களுடைய பின்பற்றுதலின் சாராம்சத்தை நீங்கள் முழுமையாகப் பார்க்க இயலாது என்றால், உங்களில் பெரும்பாலானோரின் பின்பற்றுதல் இன்னும் தோல்வியடையும். உங்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் ஜெயத்துடன் இருந்தாலும், அவர்கள் பேதுருவுக்கு சமமாக இருக்க மாட்டார்கள். உன் பின்பற்றுதலின் பாதை சரியானது என்றால், உனக்கு ஜெயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சத்தியத்தைத் தேடுவதில் நீ செல்லும் பாதை தவறானது என்றால், நீ என்றென்றும் ஜெயம்பெற இயலாமல் இருப்பாய். பவுலின் அதே முடிவை நீயும் சந்திப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

430. பேதுரு ஒரு பரிபூரணப்படுத்தப்பட்ட மனிதனாக இருந்தான். சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த பின்னரே, தேவன் மீதான தூய அன்பைப் பெற்று, அவன் முழுமையாக பரிபூரணப்படுத்தப்பட்டான். அவன் நடந்த பாதை பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையாகும். அதாவது, தொடக்கத்திலிருந்தே, பேதுரு நடந்துகொண்ட பாதை சரியானது ஆகும். தேவனை நம்புவதற்கான அவனது உந்துதல் சரியானதாகும், எனவே அவன் பரிபூரணமாக்கப்பட்ட ஒருவனாக மாறினான் மற்றும் மனிதன் இதற்கு முன்பு நடந்ததிராத ஒரு புதிய பாதையில் அவன் நடந்தான். ஆயினும், தொடக்கத்திலிருந்தே பவுல் நடந்துகொண்ட பாதை கிறிஸ்துவுக்கு எதிரான பாதையாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் தான் பவுலை பயன்படுத்த விரும்பினார். தம்முடைய கிரியைகளுக்காக பவுலுடைய தாலந்துகளையும், எல்லா நன்மைகளையும் பயன்படுத்திக் கொள்ள அவர் விரும்பியதால் கிறிஸ்துவுக்காக பல தசாப்தங்களாக பவுல் கிரியை செய்தான். அவன் வெறுமனே பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன். இயேசு அவனுடைய மனிதத் தன்மையைப் பார்த்து அவனைப் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அவனுடைய தாலந்துகளைப் பார்த்து பயன்படுத்தினார். பவுல் தாக்கப்பட்டதால் அவனால் இயேசுவுக்காக கிரியை செய்ய முடிந்தது. அவ்வாறு செய்வதில் தமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று அவன் அவ்வாறு செய்யவில்லை. பரிசுத்த ஆவியானவருடைய அறிவொளி மற்றும் வழிகாட்டுதளின் காரணமாக அவனால் அத்தகைய கிரியையைச் செய்ய முடிந்தது. அவன் செய்த கிரியையானது எந்த வகையிலும் அவனது நாட்டத்தை அல்லது அவனது மனிதத் தன்மையைக் குறிக்கவில்லை. பவுலின் கிரியை ஒரு ஊழியரின் கிரியையைக் குறிக்கிறது. அதாவது அவன் ஒரு அப்போஸ்தலனின் கிரியையைச் செய்தான் என்று சொல்லலாம். பேதுருவோ வேறுபட்டவன்: அவனும் சில கிரியைகளைச் செய்தான். இது பவுலின் கிரியையைப் போல பெரியதல்ல. ஆனால் தனது சொந்த பிரவேசத்தைப் பின்பற்றும்போது அவன் கிரியை செய்தான். அவனுடைய கிரியை பவுலின் கிரியையிலிருந்து வேறுபட்டதாகும். தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையின்படி நடப்பது பேதுருவின் கிரியையாகும். அவன் ஒரு அப்போஸ்தலனின் பாத்திரத்தில் கிரியை செய்யவில்லை, ஆனால் தேவன் மீதான அன்பைப் பின்பற்றி கிரியைச் செய்தான். பவுலின் கிரியையின் போக்கில் அவனது தனிப்பட்ட பின்தொடர்தலும் இருந்தது: அவனுடைய பின்பற்றுதல் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் மற்றும் ஒரு நல்ல இலக்குக்கான அவனது விருப்பத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அவன் தனது கிரியையின் போது சுத்திகரிப்பையும் ஏற்கவில்லை, கத்தரித்து சுத்தம்பண்ணுவதையும் கையாள்வதையும் ஏற்கவில்லை. அவன் செய்த கிரியை எவ்வளவாக தேவனுடைய விருப்பத்தை பூர்த்திசெய்ததோ, அவன் செய்ததெல்லாம் தேவனுக்கு எவ்வளவு பிரியமாக இருந்ததோ, அதற்கேற்ற ஒரு வெகுமதி இறுதியில் அவனுக்கு காத்திருக்கும் என்று அவன் நம்பினான். அவனது கிரியையில் தனிப்பட்ட அனுபவங்கள் எதுவும் இல்லை—அது அனைத்தும் அதன் சொந்த நலனுக்கானவை மற்றும் மாற்றத்தைத் தேடும் பயணத்தில் மேற்கொள்ளப்பட்டவை அல்ல. அவனது கிரியையில் உள்ள அனைத்தும் ஒரு பரிவர்த்தனையாகும். அதில் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமை அல்லது சமர்ப்பிப்பு எதுவும் இல்லை. பவுலின் கிரியையின் போது, அவனது பழைய மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவனது கிரியை வெறுமனே மற்றவர்களுக்கு சேவை செய்வதாக இருந்தது மற்றும் அவனது பழைய மனநிலையில் ஏதும் மாற்றங்களைக் கொண்டு வருவதாக இல்லை. பவுல் பரிபூரணமாக்கப்படாமல் அல்லது கையாளப்படாமல் நேரடியாக தனது கிரியையைச் செய்தான். அவன் வெகுமதியால் தூண்டப்பட்டான். பேதுரு வித்தியாசமானவனாக இருந்தான்: அவன் கத்தரித்து சுத்தம்பண்ணுதல் மற்றும் கையாளுதலுக்கு உட்பட்டவன் மற்றும் சுத்திகரித்தலுக்கு உட்பட்டவன். பேதுருவின் கிரியையின் நோக்கமும் உந்துதலும் அடிப்படையில் பவுலின் நோக்கங்களுக்கு வேறுபட்டவையாகும். பேதுரு பெரிய அளவிலான கிரியையைச் செய்யவில்லை என்றாலும், அவனுடைய மனநிலை பல மாற்றங்களைச் சந்தித்தது. அவன் தேடியது சத்தியமும், உண்மையான மாற்றமும் ஆகும். அவனது கிரியை அந்த கிரியைக்காக மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. பவுல் அதிக கிரியை செய்த போதிலும், அது பரிசுத்த ஆவியானவருடைய செயலாகும். இந்த கிரியையில் பவுல் ஒத்துழைத்த போதிலும், அவன் அதை அனுபவிக்கவில்லை. பேதுரு மிகக் குறைவான கிரியையைச் செய்தான். ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் அவன் மூலமாக அவ்வளவாக கிரியையைச் செய்யவில்லை. அவர்களுடைய கிரியையின் அளவு அவை சரியானவையா என்பதைத் தீர்மானிக்கவில்லை. ஒருவருடைய பின்பற்றுதல் வெகுமதிகளைப் பெறுவதற்கானதும், தேவனுடைய ஒரு நிறைவான அன்பை அடைவதும், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றுவதும், தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு அழகான ஜீவிதத்தை ஒழுங்காக ஜீவிப்பதும் ஆகும். வெளிப்புறமாக அவை வேறுபட்டவை மற்றும் அவற்றின் சாராம்சங்களும் வேறுபட்டவையாகும். அவர்கள் எவ்வளவு கிரியை செய்தார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களில் யார் சரியானவர்கள் என்று நீ தீர்மானிக்க முடியாது. தேவனை நேசிப்பவருடைய காட்சியை வெளிப்படுத்துபவனாகவும், தேவனுக்குக் கீழ்ப்படிந்த ஒருவனாகவும், கையாளுதலையும் கத்தரித்தலையும் ஏற்றுக்கொண்ட ஒருவனாகவும், தேவனுடைய சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றிய ஒருவனாகவும் இருக்க பேதுரு முயன்றான். அவனால் தன்னை தேவனுக்காக அர்ப்பணிக்கவும், தன்னை முழுவதுமாக தேவனுடைய கைகளில் வைக்கவும், மரிக்கும் வரை அவருக்கு கீழ்ப்படியவும் முடிந்தது. அதைத்தான் அவன் செய்யத் தீர்மானித்தான் மற்றும், அதைத்தான் அவன் சாதித்தான். கடைசியாக அவனுடைய முடிவு பவுலின் முடிவுக்கு வேறுபட்டதற்கு இதுவே அடிப்படை காரணம். பேதுருவில் பரிசுத்த ஆவியானவர் செய்த கிரியை அவனை பரிபூரணமாக்குவதாகும். பரிசுத்த ஆவியானவர் பவுலில் செய்த கிரியை அவனைப் பயன்படுத்துவதாகும். ஏனென்றால், அவர்களுடைய இயல்புகளும், பின்பற்றுவதற்கான அவர்களுடைய பார்வைகளும் ஒரே மாதிரியாக இல்லை. இருவரிடமும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியை இருந்தது. பேதுரு இந்த கிரியையை தன்னிலே அப்பியாசப்படுத்திக் கொண்டான், மற்றவர்களுக்கும் அதை வழங்கினான். இதற்கிடையில், பவுல் பரிசுத்த ஆவியானவருடைய முழு கிரியையையும் மற்றவர்களுக்கு மட்டுமே வழங்கினான், அதிலிருந்து எதையும் தனக்கெனப் பெறவில்லை. இவ்வாறு, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் பல ஆண்டுகளாக அனுபவித்தபின், பவுலில் ஏற்பட்ட மாற்றங்களானது இல்லாமல் போவதற்கு நெருக்கமாக இருந்தன. அவன் இன்னும் இயல்பான நிலையில் இருந்தான். அவன் இன்னும் முந்தைய பவுலாகவே இருந்தான். பல வருட உழைப்பின் கஷ்டங்களைத் தாங்கியப் பின்னர், அவன் “கிரியை” செய்வது எப்படி என்றுக் கற்றுக்கொண்டான். அவன் சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொண்டான். ஆனால் அவனது பழைய இயல்பு—அவனது கடுமையான போட்டி மற்றும் கூலிப்படையின் இயல்பு அவனுடன் இன்னமும் இருந்தது. பல வருடங்கள் கிரியை செய்த பின், அவன் தனது கேடான மனநிலையை அறிந்திருக்கவில்லை அல்லது தனது பழைய மனநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. அது அவனுடைய கிரியையில் இன்னும் தெளிவாகத் தெரிந்தது. அவனிடம் இன்னும் அதிகமான கிரியை அனுபவம் இருந்தது. ஆனால் இதுபோன்ற சிறிய அனுபவம் மட்டுமே அவனை மாற்ற இயலாமல் மற்றும் இருப்பு அல்லது அவனது நோக்கத்தின் முக்கியத்துவம் குறித்த அவனது கருத்துக்களை மாற்ற முடியாமல் இருந்தது. அவன் கிறிஸ்துவுக்காக பல ஆண்டுகள் உழைத்தாலும், கர்த்தராகிய இயேசுவை மீண்டும் ஒருபோதும் துன்புறுத்தவில்லை என்றாலும், அவனுடைய இருதயத்தில் தேவனைப் பற்றிய அறிவில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதன் பொருள் என்னவென்றால், அவன் தன்னை தேவனுக்காக அர்ப்பணிப்பதற்காக கிரியை செய்யவில்லை, மாறாக அவன் தனது எதிர்கால இலக்குக்காக கிரியை செய்ய நிர்பந்திக்கப்பட்டான். தொடக்கத்தில், அவன் கிறிஸ்துவைத் துன்புறுத்தினான், கிறிஸ்துவுக்கு அடிபணியவில்லை. அவன் இயல்பாகவே கிறிஸ்துவை எதிர்த்த ஒரு கிளர்ச்சியாளனாகவும், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைப் பற்றி அறியாத ஒருவனாகவும் இருந்தான். அவனுடைய கிரியை ஏறக்குறைய முடிந்ததும், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் அறிந்திருக்கவில்லை. பரிசுத்த ஆவியானவருடைய விருப்பத்திற்கு சிறிதளவேனும் கவனம் செலுத்தாமல், தனது சொந்த குணாதிசயத்திற்கு ஏற்ப தனது சொந்த விருப்பப்படியே செயல்பட்டான். எனவே அவனுடைய இயல்பு கிறிஸ்துவுக்கு விரோதமாக இருந்தது. அவன் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. இது போன்ற ஒருவன், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையால் கைவிடப்பட்டவன், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அறியாதவன், கிறிஸ்துவை எதிர்த்தவன்—அத்தகைய மனிதன் எவ்வாறு இரட்சிக்கப்படுவான்? மனிதனை இரட்சிக்க முடியுமா இல்லையா என்பது அவன் எவ்வளவு கிரியை செய்கிறான், எவ்வளவு அர்ப்பணிக்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. மாறாக, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் அறிந்திருக்கிறானா இல்லையா, அவன் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவர முடியுமா இல்லையா மற்றும் பின்பற்றுவதைப் பற்றிய அவனது கருத்துக்கள் சத்தியத்துடன் ஒத்துப்போகிறதா இல்லையா என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

431. கையாளுதல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை அனுபவிப்பதன் மூலம் பேதுரு பரிபூரணமாக்கப்பட்டான். அவன், “நான் எப்போதுமே தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நான் செய்யும் எல்லாவற்றிலும் நான் தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய மட்டுமே முயல்கிறேன். நான் தண்டிக்கப்பட்டாலும், தீர்ப்பளிக்கப்பட்டாலும், அவ்வாறு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினான். பேதுரு தன்னுடைய அனைத்தையும் தேவனுக்குக் கொடுத்தான், அவனுடைய வேலை, வார்த்தைகள் மற்றும் முழு ஜீவிதத்தையும் தேவனை நேசிப்பதற்காகவே கொடுத்தான். அவன் பரிசுத்தத்தைத் தேடிய ஒருவன். அவன் எவ்வளவு அதிகமாக அனுபவித்தானோ, அவனுடைய இருதயத்திற்குள் தேவன் மீதுள்ள அன்பு அவ்வளவு அதிகமாக இருந்தது. பவுல், இதற்கிடையில், வெளிப்புற கிரியைகளை மட்டுமே செய்தான். அவன் கடினமாக உழைத்தாலும், அவனுடைய உழைப்பு அவனது கிரியையைச் சரியாகச் செய்வதற்கும், அதனால் வெகுமதியைப் பெறுவதற்கும் உரியதாகும். தனக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது என்று தெரிந்திருந்தால், அவன் தனது கிரியையை கைவிட்டிருப்பான். பேதுரு அக்கறை காட்டியது அவனுடைய இருதயத்திற்குள் இருக்கும் உண்மையான அன்பாகும். அது நடைமுறைக்குரியது மற்றும் அடையக்கூடியது ஆகும். அவன் ஒரு வெகுமதியைப் பெறுவானா என்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் அவனது மனநிலையை மாற்ற முடியுமா என்பது பற்றி கவலைப்பட்டான். பவுல் எப்போதும் கடினமாக உழைப்பதைப் பற்றி அக்கறை காட்டினான். வெளிப்புற கிரியை மற்றும் பக்தி பற்றியும், சாதாரண ஜனங்கள் அனுபவிக்காத கோட்பாடுகளைப் பற்றியும் அக்கறை காட்டினான். தனக்குள்ளான ஆழமான மாற்றங்களுக்காகவோ அல்லது தேவன் மீதான உண்மையான அன்புக்காகவோ அவன் எதையும் கவனிக்கவில்லை. உண்மையான அன்பையும் தேவனைப் பற்றிய உண்மையான அறிவையும் அடைவதற்காகவே பேதுருவின் அனுபவங்கள் இருந்தன. அவனுடைய அனுபவங்கள் தேவனோடு நெருங்கிய உறவைப் பெறுவதற்கும், நடைமுறையில் ஜீவிப்பதற்கும் உரியதாகும். பவுலின் கிரியையானது இயேசுவால் அவனிடம் ஒப்படைக்கப்பட்டதாலும், அவன் ஏங்கியவற்றைப் பெறுவதற்காகவும் அதைச் செய்தான். ஆனால் தன்னைப் பற்றியும் தேவனைப் பற்றியும் அவன் அறிந்த அறிவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவனது கிரியை சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிப்பதற்கானதாகும். பேதுரு தேடியது தூய அன்பு மற்றும் பவுல் தேடியது நீதியின் கிரீடம் ஆகும். பேதுரு பரிசுத்த ஆவியானவருடைய பல வருட கிரியைகளை அனுபவித்தான். கிறிஸ்துவைப் பற்றிய நடைமுறை அறிவையும், தன்னைப் பற்றிய ஆழமான அறிவையும் கொண்டிருந்தான். எனவே, தேவன் மீதான அவனது அன்பு தூய்மையானது. பல வருட சுத்திகரிப்பு இயேசுவையும் ஜீவனையும் பற்றிய அவனது அறிவை உயர்த்தியிருந்தது. அவனுடைய அன்பு நிபந்தனையற்ற அன்பு. அது ஒரு தன்னிச்சையான அன்பு. அதற்குப் பதிலாக அவன் எதுவும் கேட்கவில்லை. அவன் எந்த நன்மைகளையும் எதிர்பார்க்கவில்லை. பவுல் பல ஆண்டுகளாக கிரியை செய்தான், ஆனாலும் அவன் கிறிஸ்துவைப் பற்றிய பெரிய அறிவைக் கொண்டிருக்கவில்லை, தன்னைப்பற்றிய அறிவும் பரிதாபகரமாக குறைவானதாகவே இருந்தது. வெறுமனே கிறிஸ்துவின் மீது அவனுக்கு அன்பு மட்டும் இல்லை. அவனுடைய கிரியையும், அவன் ஓடிய ஓட்டமும் இறுதி விருதைப் பெறுவதற்கானவையே. அவன் தேடியது மிகச்சிறந்த கிரீடம், தூய்மையான அன்பு அல்ல. அவன் சுறுசுறுப்பாக தேடவில்லை, ஆனால் செயலற்ற முறையில் தேடினான். அவன் தனது கடமையைச் செய்யவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் அவரைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே, தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டி அவன் என்பதை அவனது நாட்டம் நிரூபிக்கவில்லை. தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டியாக இருந்த பேதுரு தான் தன்னுடைய கடமையைச் செய்தான். தேவனுக்கு பங்களிப்பு செய்பவர்கள் அனைவருக்கும் வெகுமதி கிடைக்க வேண்டும் என்று மனிதன் கருதுகிறான். அதிகமான பங்களிப்புக்கு, தேவனுடைய அதிகமான தயவைப் அவர்கள் பெற வேண்டும் என்றும் கருதப்படுகிறது. மனிதனின் பார்வையின் சாராம்சம் பரிவர்த்தனைக்குரியதாகும். அவன் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையைச் செய்ய தீவிரமாக முயலவில்லை. தேவனைப் பொறுத்தவரையில், ஜனங்கள் தேவன் மீதான உண்மையான அன்பையும் தேவனுக்கான கீழ்ப்படிதலையும் எவ்வளவு அதிகமாக நாடுகிறார்களோ, அதாவது தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தங்கள் கடமையைச் செய்ய எவ்வளவு அதிகமாக முற்படுகிறார்களோ அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற முடிகிறது. தேவனுடைய பார்வை என்னவென்றால், மனிதன் தனது மெய்யான கடமையையும் அந்தஸ்தையும் மீட்டெடுக்க வேண்டும். மனிதன் தேவனுடைய ஒரு படைப்பு. ஆகவே மனிதன் தேவனிடம் எந்தவொரு எதிர்பார்ப்பையும் முன்வைத்து தன்னை மீறி நடக்கக் கூடாது மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தன் கடமையைச் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது. பவுலின் மற்றும் பேதுருவின் இடங்கள் தேவனுடைய சிருஷ்டிகளாக தங்கள் கடமையைச் செய்ய முடியுமா என்பதைப் பொறுத்து அளவிடப்பட்டன. அவர்களின் பங்களிப்பின் அளவிற்கு ஏற்ப அளவிடப்படவில்லை. அவர்களுடைய இலக்குகள் தொடக்கத்தில் இருந்தே அவர்கள் தேடியவற்றின் படி தீர்மானிக்கப்படுகின்றன. அவர்கள் எவ்வளவு கிரியை செய்தார்கள் அல்லது மற்றவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவில்லை. எனவே, தேவனுடைய சிருஷ்டியாக ஒருவரின் கடமையை தீவிரமாக செய்ய முற்படுவது ஜெயத்துக்கான பாதையாகும். தேவன் மீதான உண்மையான அன்பின் பாதையைத் தேடுவது மிகவும் சரியான பாதையாகும். ஒருவரின் பழைய மனநிலையில் மாற்றங்களைத் தேடுவது, தேவன் மீதான தூய்மையான அன்பைத் தேடுவது ஆகியவை ஜெயத்துக்கான பாதையாகும். அத்தகைய ஜெயத்துக்கான பாதை மெய்யான கடமையை மீட்டெடுப்பதற்கான பாதை மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் மெய்யான தோற்றம் ஆகும். இது மீட்புக்கான பாதை மற்றும் இது தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தேவனுடைய எல்லா கிரியைகளின் நோக்கமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

432. பவுல் தேவனுக்காக ஒவ்வொரு நாளும் கிரியை செய்தான்: செய்ய வேண்டிய கிரியை இருக்கும் வரை, அவன் அதைச் செய்தான். இவ்வாறு தான் கிரீடத்தைப் பெற முடியும் என்றும், தேவனை திருப்திப்படுத்த முடியும் என்றும் அவன் உணர்ந்தான். ஆனாலும் அவன் தனது கிரியையின் மூலமாகத் தன்னை மாற்றிக் கொள்ள வழிகளைத் தேடவில்லை. பேதுருவின் ஜீவிதத்தில் தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்யாத எதுவுமே அவனுக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. இது தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டால், அவன் வருத்தப்படுவான் மற்றும் தேவனுடைய இருதயத்தை பூர்த்தி செய்ய அவன் முயற்சி செய்யக்கூடிய பொருத்தமான வழியைத் தேடுவான். அவனுடைய ஜீவிதத்தின் மிகச்சிறிய மற்றும் மிகவும் பொருத்தமற்ற அம்சங்களில் கூட, தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வதையே அவன் தன்னிடத்தில் எதிர்பார்த்தான். அவன் தனது பழைய மனநிலைக்கு வரும்போது தனது துல்லியத்தில் குறையவில்லை, சத்தியத்தில் ஆழமாக முன்னேற வேண்டும் என்ற தனது தேவைகளில் எப்போதும் கடுமையாக இருந்தான். பவுல் மேலோட்டமான நற்பெயரையும் அந்தஸ்தையும் மட்டுமே நாடினான். அவன் மனிதனுக்கு முன்பாக தன்னைக் காட்ட முயன்றான் மற்றும் ஜீவித பிரவேசத்தில் எந்த ஆழமான முன்னேற்றத்தையும் அடைய முயலவில்லை. அவன் அக்கறை காட்டியது உபதேசம் குறித்து மட்டுமே, யதார்த்தத்தை அல்ல. சிலர், “பவுல் தேவனுக்காக இவ்வளவு கிரியை செய்தும், அவன் ஏன் தேவனால் நினைவுகூரப்படவில்லை? பேதுரு தேவனுக்காக ஒரு சிறிய கிரியையைச் செய்தான், ஆனால் திருச்சபைகளுக்கு பெரிய பங்களிப்பைச் செய்யவில்லை, இந்நிலையில் அவன் ஏன் பரிபூரணமாக்கப்பட்டான்?” பேதுரு தேவனை, தேவன் எதிர்பார்த்த ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு நேசித்தான். இது போன்றவர்களுக்கு மட்டுமே சாட்சி உண்டு. பவுலின் நிலை என்னவாக இருந்தது? பவுல் தேவனை எந்த அளவுக்கு நேசித்தான்? உனக்குத் தெரியுமா? பவுலின் கிரியை எதற்காக செய்யப்பட்டது? பேதுருவின் கிரியை எதற்காக செய்யப்பட்டது? பேதுரு அதிக கிரியை செய்யவில்லை, ஆனால் அவனுடைய இருதயத்திற்குள் ஆழமாக இருந்தது என்னவென்று உனக்குத் தெரியுமா? பவுலின் கிரியை திருச்சபைகளுக்கு வழங்கல் மற்றும் திருச்சபைகளின் ஆதரவு ஆகியவற்றுக்கு தொடர்பானது. பேதுரு அனுபவித்தவை அவனுடைய ஜீவித மனநிலையின் மாற்றங்கள். அவன் தேவனுடைய அன்பை அனுபவித்தான். அவற்றின் சாராம்சங்களில் உள்ள வேறுபாடுகளை இப்போது நீ அறிந்திருக்கிறாய். இறுதியில், யார் தேவனை உண்மையாக நம்பினார்கள், யார் தேவனை உண்மையாக நம்பவில்லை என்பதை நீ காணலாம். அவர்களில் ஒருவன் உண்மையிலேயே தேவனை நேசித்தான். மற்றவன் உண்மையிலேயே தேவனை நேசிக்கவில்லை. ஒருவன் தனது மனநிலையில் மாற்றங்களைச் சந்தித்தான். மற்றவன் அவ்வாறு செய்யவில்லை. ஒருவன் தாழ்மையுடன் கிரியை செய்தான். ஜனங்களால் எளிதில் கவனிக்கப்படவில்லை. மற்றொருவன் ஜனங்களால் ஆராதனைச் செய்யப்பட்டான் மற்றும் பெரிய மனிதனானான். ஒருவன் பரிசுத்தத்தை நாடினான், மற்றவன் அவ்வாறு செய்யவில்லை. அவன் தூய்மையற்றவனாக இல்லாவிட்டாலும், அவன் தூய்மையான அன்பைக் கொண்டிருக்கவில்லை. ஒருவன் உண்மையான மனிதத் தன்மையைக் கொண்டிருந்தான், மற்றொருவன் அவ்வாறு இல்லை. ஒருவன் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் உணர்வைக் கொண்டிருந்தான், மற்றொருவன் அவ்வாறு இல்லை. பவுல் மற்றும் பேதுருவின் சாராம்சங்களில் உள்ள வேறுபாடுகள் அத்தகையவை. பேதுரு நடந்த பாதை ஜெயத்தின் பாதையாக இருந்தது. இது சாதாரண மனிதத் தன்மையின் மீட்சி மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை மீட்டெடுப்பதற்கான பாதையாகும். பேதுரு ஜெயங்கொள்ளுகிற அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். பவுல் நடந்த பாதை தோல்வியின் பாதையாக இருந்தது மற்றும் தங்களை மேலோட்டமாக சமர்ப்பித்து செலவழிக்கும் அனைவரையும் தேவனை உண்மையாக நேசிக்காத அனைவரையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். பவுல் சத்தியத்தைக் கொண்டிராத அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். தேவன் மீதான நம்பிக்கையில், பேதுரு எல்லாவற்றிலும் தேவனை திருப்திப்படுத்த முயன்றான் மற்றும் தேவனிடமிருந்து வந்த அனைத்திற்கும் கீழ்ப்படிய முயன்றான். சிறிதும் புகார் இல்லாமல், அவனால் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதே போல் சுத்திகரிப்பு, உபத்திரவம் மற்றும் அவனது ஜீவிதத்தில் எதுவும் இல்லாமல் போவது, என இவை எதுவுமே தேவன் மீதான அவனது அன்பை மாற்ற முடியவில்லை. இது தேவன் மீதான நிறைவான அன்பு அல்லவா? இது தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையின் நிறைவேற்றமல்லவா? சிட்சையிலோ, நியாயத்தீர்ப்பிலோ, உபத்திரவத்திலோ, நீ எப்போதுமே மரணம் வரையில் கீழ்ப்படிதலைக் காட்ட பெலனுடன் இருக்கிறாய். இதுதான் தேவனுடைய ஒரு சிருஷ்டியால் அடையப்பட வேண்டும். இது தேவன் மீதான அன்பின் தூய்மையாகும். மனிதனால் இதை அதிகம் அடைய முடிந்தால், அவனே தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டி மற்றும் சிருஷ்டிகரின் விருப்பத்தை சிறப்பாக பூர்த்தி செய்யும் வேறு எதுவும் இல்லை என்பதாகும். நீ தேவனுக்காக உழைக்க முடிகிறது, ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியவில்லை, தேவனை உண்மையாக நேசிக்க இயலவில்லை என்பதாக கற்பனை செய்துகொள். இவ்வாறு, நீ தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை நிறைவேற்றியிருக்க மாட்டாய் என்பது மட்டுமல்லாமல், நீ தேவனால் கண்டிக்கப்படுவாய். ஏனென்றால், நீ சத்தியத்தைக் கொண்டிராத, தேவனுக்குக் கீழ்ப்படிய இயலாத, தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒருவன். நீ தேவனுக்காக உழைப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறாய். சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது பற்றியோ உன்னை அறிந்து கொள்வது பற்றியோ நீ கவலைப்படுவதில்லை. நீ சிருஷ்டிகரைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. நீ சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிவதுமில்லை சிருஷ்டிகரை நேசிப்பதுமில்லை. இயல்பாகவே நீ தேவனுக்கு கீழ்ப்படியாத ஒருவன், எனவே அத்தகையவர்கள் சிருஷ்டிகரால் பிரியப்படுவதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

433. மனிதன் மற்றவர்களை அளவிடும்போது, அவர்களுடைய பங்களிப்புக்கு ஏற்ப அவ்வாறு செய்கிறான். தேவன் மனிதனை அளவிடும்போது, மனிதனின் இயல்புக்கு ஏற்ப அவர் அவ்வாறு செய்கிறார். ஜீவனைத் தேடுபவர்களில், பவுல் தனது சொந்த சாராம்சத்தை அறியாத ஒருவன். அவன் எந்த வகையிலும் தாழ்மையானவன் அல்லது கீழ்ப்படிதலுள்ளவன் அல்ல. தேவனுக்கு எதிரான அவனது சாராம்சத்தை அவன் அறிந்திருக்கவில்லை. எனவே, அவன் விரிவான அனுபவங்களுக்கு ஆளாகாத ஒருவன். சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவராத ஒருவன். பேதுருவோ வித்தியாசமானவன். தேவனுடைய ஒரு சிருஷ்டியாக அவனது குறைபாடுகள், பலவீனங்கள் மற்றும் அவனது கேடான மனநிலை ஆகியவற்றை அவன் அறிந்திருந்தார். எனவே அவன் தனது மனநிலையை மாற்றுவதற்கான ஒரு நடைமுறையைக் கொண்டிருந்தான். அவன் உபதேசம் மட்டுமே கொண்டு எந்த யதார்த்தமும் இல்லாதவர்களில் ஒருவனல்ல. மாறும் மனிதர்கள் இரட்சிக்கப்பட்ட புதிய மனிதர்கள். அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றத் தகுதியுள்ளவர்கள். மாறாதவர்கள் இயற்கையாகவே வழக்கற்றுப் போனவர்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள். அதாவது தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் எவ்வளவு பெரிய கிரியை செய்தாலும் அவர்கள் தேவனால் நினைவுகூரப்பட மாட்டார்கள். இதை நீ உன் சொந்த நோக்கத்துடன் ஒப்பிடும்போது, நீ இறுதியில் பேதுரு போன்ற அல்லது பவுல் போன்ற மனிதனாக இருக்கிறாயா என்பதைச் சுயமாக அறிய வேண்டும். நீ தேடுவதில் இன்னும் சத்தியம் இல்லை என்றால், இன்றும் நீ பவுலைப் போலவே திமிர்பிடித்தவனாகவும், இழிவானவனாகவும் இருந்தால், அவனைப் போலவே அகந்தையாகவும் பெருமையாகவும் இருந்தால், நீ தோல்வியுற்ற ஒரு சீரழிந்தவன் என்பதில் சந்தேகமில்லை. நீ பேதுருவைப் போலவே தேடுவாயானால், நீ நடைமுறைகளையும் உண்மையான மாற்றங்களையும் நாடி, திமிர் பிடித்தவனாகவோ, விருப்பமுள்ளவனாகவோ இல்லாமல், உன் கடமையைச் செய்ய முற்பட்டால், நீ ஜெயத்தை அடையக்கூடிய தேவனுடைய ஒரு சிருஷ்டியாக இருப்பாய். தனது சொந்த சாராம்சம் அல்லது கேடு என்னவென்று பவுலுக்கு தெரியாது. அவனுடைய கீழ்ப்படியாமையை அவன் அறியாதிருந்தான். அவன் ஒருபோதும் கிறிஸ்துவை இழிவுபடுத்தியதைக் குறிப்பிடவில்லை. அதற்கான அதிக வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. அவன் ஒரு சுருக்கமான விளக்கத்தை மட்டுமே வழங்கினான் மற்றும் அவனது இருதயத்தில் ஆழமாக, அவன் தேவனுக்கு முழுமையாக அடிபணியவில்லை. அவன் தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் விழுந்தாலும், அவன் தனக்குள்ளே ஆழமாகப் பார்க்கவில்லை. அவன் தொடர்ந்து கிரியை செய்வதில் திருப்தி அடைந்தான். அவன் தன்னை அறிந்துகொள்வதையும் தனது பழைய மனநிலையை மாற்றுவதையும் பிரச்சனைகளில் மிக முக்கியமானதாக கருதவில்லை. வெறுமனே சத்தியத்தை பேசுவதில் திருப்தி அடைந்தான். தனது மனசாட்சிக்கு ஒரு அடிமையைப் போல மற்றவர்களுக்காகத் தன்னை வழங்கி திருப்தி அடைந்தான் மற்றும் தன்னை ஆறுதல்படுத்தவும், கடந்த கால பாவங்களுக்காக தன்னை மன்னிக்கவும் இயேசுவின் சீஷர்களை இனி துன்புறுத்தாமல் இருப்பதில் திருப்தி அடைந்தான். அவன் பின்பற்றிய குறிக்கோளானது எதிர்கால கிரீடம் மற்றும் நிரந்தரமற்ற கிரியைகளைத் தவிர வேறொன்றுமில்லை. அவன் பின்பற்றிய குறிக்கோளானது ஏராளமான கிருபையாகும். அவன் போதுமான சத்தியத்தைத் தேடவில்லை. முன்பு புரிந்து கொள்ளாத சத்தியத்தில் ஆழமாக முன்னேற அவன் முயலவில்லை. ஆகவே, தன்னைப் பற்றிய அவனது அறிவு பொய்யானது என்று கூறலாம் மற்றும் அவன் சிட்சையையோ நியாயத்தீர்ப்பையோ ஏற்கவில்லை. அவனால் கிரியை செய்ய முடிந்தது என்பது அவன் தனது சொந்த இயல்பு அல்லது சாராம்சத்தைப் பற்றிய அறிவைக் கொண்டிருந்தான் என்பதாக அர்த்தம் பெறாது. அவனது கவனம் வெளிப்புற நடைமுறைகளில் மட்டுமே இருந்தது. மேலும் அவன் பாடுபட்டது, மாற்றத்துகானது அல்ல, அது அறிவுக்கானது. அவனுடைய கிரியையானது, முற்றிலுமாக, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் இயேசு தோன்றியதன் விளைவாகும். இது அவன் முதலில் செய்யத் தீர்மானித்த ஒன்றல்ல அல்லது அவனது பழைய மனநிலையை கத்தரித்து சுத்தம் செய்து கொண்டபின் ஏற்பட்ட கிரியையும் அல்ல. அவன் எவ்வாறு கிரியை செய்தான் என்பது முக்கியமல்ல. அவனுடைய பழைய மனநிலை மாறவில்லை. ஆகவே அவனது கிரியை அவனது கடந்தகால பாவங்களுக்கு பரிகாரம் செய்யவில்லை. ஆனால் அவனது கிரியை அக்கால திருச்சபைகளில் ஒரு குறிப்பிட்ட பங்கைக் கொண்டிருந்தது. இதுபோன்ற ஒருவனுக்கு, அவனது பழைய மனநிலை மாறவில்லை—அதாவது, இரட்சிப்பைப் பெறாத மற்றும் சத்தியம் இல்லாமல் இருந்த ஒருவனால்—கர்த்தராகிய இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக அவன் முற்றிலுமாக மாற இயலாது. அவன் இயேசு கிறிஸ்துவின் மீது அன்பும் பயபக்தியும் நிறைந்த ஒருவன் அல்ல. சத்தியத்தைத் தேடுவதில் திறமையானவன் அல்ல, அவதரிப்பின் இரகசியத்தைத் தேடிய ஒருவனும் அல்ல. அவர் ஏமாற்றும் வாதம் செய்வதில் திறமையானவன் மட்டுமே. அவர்கள் தங்களை விட உயர்ந்த அல்லது சத்தியம் பெற்ற எவருக்கும் அடிபணிய மாட்டார்கள். தனக்கு முரணான அல்லது தன்னுடன் பகைமை கொண்ட மனிதர்கள் அல்லது உண்மைகள் மீது அவன் பொறாமை கொண்டான். ஒரு சிறந்த காட்சியை முன்வைத்து ஆழ்ந்த அறிவைக் கொண்ட திறமையான மனிதர்களையே அவன் விரும்பினான். உண்மையான வழியைத் தேடும், சத்தியத்தைத் தவிர வேறொன்றையும் கவனித்துக்கொள்ளாத ஏழை ஜனங்களுடன் பழகுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு பதிலாக மத அமைப்புகளின் மூத்த மனிதர்களுடனும், உபதேசங்களை மட்டுமே பேசும், ஏராளமான அறிவைப் பெற்ற மனிதர்களுடனும் தன்னை இணைத்துக்கொண்டான். பரிசுத்த ஆவியானவருடைய புதிய கிரியையைப் பற்றி அவனுக்கு எந்த அன்பும் இல்லை. பரிசுத்த ஆவியானவருடைய புதிய கிரியையின் இயக்கத்தை அவன் கவனிக்கவில்லை. மாறாக, பொதுவான சத்தியங்களை விட உயர்ந்த அந்த விதிகளையும் உபதேசங்களையும் அவர் விரும்பினார். அவனது உள்ளார்ந்த சாராம்சத்திலும், அவன் தேடியவற்றின் முழுமையிலும், சத்தியத்தைப் பின்பற்றிய ஒரு கிறிஸ்தவன் என்றும் தேவனுடைய வீட்டில் உண்மையுள்ள ஊழியக்காரன் என்றும் அழைக்கப்படுவதற்கு அவன் தகுதியற்றவன். அவனுடைய மாயத்தனம் அதிகமாக இருந்தது, அவனுடைய கீழ்ப்படியாமை மிகப் பெரியது. அவன் கர்த்தராகிய இயேசுவின் ஊழியனாக அறியப்பட்டாலும், பரலோகராஜ்யத்தின் வாசலில் பிரவேசிப்பதற்கு அவன் ஒருபோதும் தகுதியுடையவன் அல்ல. ஏனென்றால் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அவன் செய்த செயல்களை நீதியுள்ளவை என்று சொல்ல முடியாது. அவன் மாயத்தனமாக அநீதியைச் செய்தவனாக ஆனால் கிறிஸ்துவுக்காக உழைத்தவனாக மட்டுமே காணப்படலாம். அவனை தீமை என்று அழைக்க முடியாது என்றாலும், அவனை அநீதியைச் செய்த மனிதன் என்று அழைக்கலாம். அவன் அதிக கிரியை செய்தான். ஆனாலும் அவன் செய்த கிரியையின் அளவு குறித்து தீர்மானிக்காமல் அதன் தரம் மற்றும் சாராம்சம் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு மட்டுமே இந்த விஷயத்தின் அடிப்படையை அடைய முடியும். அவன் எப்போதும் நம்பினான்: “நான் கிரியை செய்ய வல்லவன், பெரும்பாலான ஜனங்களை விட நான் சிறந்தவன். கர்த்தருடைய பாரத்தைச் சுமக்க சாதாரணமான ஒருவனாக என்னைக் கருதுகிறேன். யாரும் என்னைப் போல ஆழமாக மனந்திரும்புவதில்லை, ஏனென்றால், பெரிய ஒளி என் மீது பிரகாசித்தது. நான் பெரிய ஒளியைக் கண்டேன், எனவே என் மனந்திரும்புதல் மற்றவர்களை விட ஆழமானது.” அந்த நேரத்தில், அவன் தனது இருதயத்திற்குள் நினைத்தது இதுதான். பவுல் தனது கிரியையின் முடிவில், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். அவனது போராட்டம், கிரியை மற்றும் போக்கு முற்றிலுமாக நீதியின் கிரீடத்திற்காகவே இருந்தது மற்றும் அவன் தீவிரமாக முன்னேறவில்லை. அவன் தனது கிரியையில் முழுமையடையவில்லை என்றாலும், அவனது தவறுகளைச் சமாளிப்பதற்காகவும், அவரது மனசாட்சியின் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதற்காகவும் அவனது கிரியை வெறுமனே செய்யப்பட்டது என்று கூறலாம். அவன் தனது கிரியையை முடிப்பான், தனது போக்கை முடித்துக்கொள்வான், விரைவில் தனது போராட்டத்தைப் போராடி முடிப்பான் என்று மட்டுமே நம்பினான். இதனால் அவன் தனது நீண்டகால நீதியின் கிரீடத்தை விரைவில் பெற முடியும் என்று நம்பினான். கர்த்தராகிய இயேசுவை அவருடைய அனுபவங்களாலும் உண்மையான அறிவினாலும் சந்திகாமல், அவருடைய கிரியையை சீக்கிரம் முடிப்பதன் மூலம் கர்த்தராகிய இயேசுவை சந்திக்கும் போது, தான் செய்த கிரியையின் பலன்களை அவன் பெற வேண்டும் என்பதற்காக அவன் ஏங்கினான். அவன் தனது கிரியையை தன்னை ஆறுதல்படுத்தவும், எதிர்கால கிரீடத்திற்கு ஈடாக வைக்கவும் பயன்படுத்தினான். அவன் தேடியது சத்தியமோ தேவனோ அல்ல, கிரீடம் மட்டுமே. அத்தகைய நாட்டம் எவ்வாறு தரமானதாக இருக்கும்? அவனது உந்துதல், அவனது கிரியை, அவன் செலுத்திய விலை மற்றும் அவனது முயற்சிகள் அனைத்தையும்—அவனது அற்புதமான கற்பனைகள் அனைத்தும் மறைத்தது. அவன் தனது சொந்த ஆசைகளுக்கு ஏற்ப முற்றிலுமாக கிரியை செய்தான். அவனது முழு கிரியையிலும், அவன் செலுத்திய விலையில் சிறிதளவு விருப்பமும் இல்லை. அவன் வெறுமனே ஒரு ஒப்பந்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தான். அவனது கடமையைச் செய்வதற்காக அவனது முயற்சிகள் விருப்பத்துடன் செய்யப்படவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் நோக்கத்தை அடைவதற்காக விருப்பத்துடன் செய்யப்பட்டன. அத்தகைய முயற்சிகளுக்கு ஏதாவது மதிப்பு இருக்கிறதா? அவனது அசுத்தமான முயற்சிகளை யாரேனும் பாராட்டுவார்களா? இத்தகைய முயற்சிகளில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? அவனது கிரியை எதிர்காலத்திற்கான கனவுகள் நிறைந்ததாகவும், அற்புதமான திட்டங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. மனித மனநிலையை மாற்றுவதற்கான பாதையை அது கொண்டிருக்கவில்லை. அவனது தயவு மிகவும் பாசாங்கானதாகும். அவரது கிரியை ஜீவனை வழங்கவில்லை. ஆனால் அது ஒரு நாகரிகத்தின் மோசடியாகும். அது ஒரு ஒப்பந்தமாகும். இத்தகையக் கிரியையால் மனிதனை எவ்வாறு மெய்யான கடமையை மீட்டெடுக்கும் பாதையில் செலுத்த முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

434. பேதுரு தேடியதெல்லாம் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதுதான். அவன் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றான். துன்பங்களையும் இன்னல்களையும் பொருட்படுத்தாமல், தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற அவன் தயாராக இருந்தான். தேவனுடைய விசுவாசிகளுக்கு இதைவிட பெரிய நாட்டம் இருக்கமுடியாது. பவுல் தேடியவை அவனுடைய மாம்சத்தாலும், அவனுடைய சொந்த கருத்துக்களாலும், அவனுடைய சொந்தத் திட்டங்களாலும், யோசனைகளாலும் களங்கப்படுத்தப்பட்டது. அவன் எந்த வகையிலும் தேவனுடைய தகுதியான சிருஷ்டி அல்ல. தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றவன் அல்ல. தேவனுடைய திட்டங்களுக்கு அடிபணிய பேதுரு முயன்றான். அவன் செய்த கிரியை பெரிதாக இல்லை என்றாலும், அவனது பின்தொடரலுக்குப் பின்னால் இருந்த உந்துதலும் அவன் நடந்து வந்த பாதையும் சரியானதுதான். அவனால் பலரை ஆதாயம் செய்ய முடியவில்லை என்றாலும், அவனால் சத்தியத்தின் வழியைப் பின்பற்ற முடிந்தது. இதன் காரணமாக அவன் தேவனுடைய தகுதியான சிருஷ்டி என்று கூறலாம். இன்று, நீ ஒரு வேலையாள் இல்லையென்றாலும், தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை உன்னால் செய்ய முடியும் மற்றும் தேவனுடைய அனைத்து திட்டங்களுக்கும் நீ அடிபணிய முற்பட வேண்டும். தேவன் சொல்வதை நீ கடைப்பிடிக்க முடியும் மற்றும் எல்லா விதமான துன்பங்களையும் சுத்திகரிப்புகளையும் அனுபவிக்க முடியும். நீ பலவீனமாக இருந்தாலும், உன் இருதயத்தில் நீ இன்னும் தேவனை நேசிக்க முடியும். தங்கள் சொந்த ஜீவனுக்கு பொறுப்பேற்கிறவர்கள் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் மற்றும் அத்தகைய மனிதர்களின் பின்தொடருதல் பற்றிய கண்ணோட்டம் சரியானதாகும். தேவனுக்குத் தேவைப்படுகின்ற மனிதர்கள் இவர்கள் தான். நீ அதிக கிரியை செய்கிறாய், மற்றவர்கள் உன் போதனைகளைப் பெற்றார்கள், ஆனால் நீயோ மாறவில்லை, எந்த சாட்சியத்தையும் தாங்கவில்லை அல்லது உண்மையான அனுபவமும் இல்லை, அதாவது உன் ஜீவிதத்தின் முடிவில், நீ செய்தவற்றில் எதுவும் சாட்சியளிக்கவில்லை என்றால், நீ மாறிவிட்டாயா? நீ சத்தியத்தைப் பின்பற்றும் ஒருவனா? அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பயன்படுத்தினார். ஆனால் அவர் உன்னைப் பயன்படுத்தும்போது, உன்னுடைய ஒரு பகுதியை அவர் கிரியை செய்யப் பயன்படுத்தினார். உன்னால் பயன்படுத்த முடியாத பகுதியை அவர் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தப்படும்போது நீ மாற முற்பட்டால், நீ படிப்படியாக பூரணமடைவாய். ஆயினும், நீ இறுதியில் ஆதாயம் செய்யப்படுவாயா இல்லையா என்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. இது உன் நாட்டத்தைப் பொறுத்தது. உன் தனிப்பட்ட மனநிலையில் எந்த மாற்றங்களும் இல்லை என்றால், அதற்குக் காரணம், நாட்டம் குறித்த உன் பார்வை தவறானது என்பதே. உனக்கு எந்த வெகுமதியும் வழங்கப்படாவிட்டால், அது உன் சொந்தப் பிரச்சனையாகும். ஏனென்றால் நீ சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. தேவனுடைய விருப்பத்தை உன்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, உன் தனிப்பட்ட அனுபவங்களை விட வேறு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. உன் தனிப்பட்ட பிரவேசத்தை விட வேறு எதுவும் முக்கியமானதாக இல்லை! சிலர், “நான் உமக்காக இவ்வளவு கிரியைகளைச் செய்திருக்கிறேன், நான் எந்தவொரு புகழ்பெற்ற சாதனைகளையும் செய்யவில்லை என்றாலும், நான் இன்னும் எனது முயற்சிகளில் முனைப்புடன் இருக்கிறேன். ஜீவவிருட்ச கனியை புசிக்க என்னை பரலோகத்திற்கு உம்மால் அனுமதிக்க முடியவில்லையா?” என்று சொல்வார்கள். நான் எத்தகைய ஜனங்களை விரும்புகிறேன் என்பதை நீ அறிந்துக்கொள்ள வேண்டும். அசுத்தமானவர்கள் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அசுத்தமானவர்கள் பரிசுத்தமான பூமியை அசுத்தப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. நீ பல கிரியைகளைச் செய்திருந்தாலும், பல ஆண்டுகளாக கிரியை செய்திருந்தாலும், இறுதியில் நீ இன்னும் வருந்தத்தக்க அழுக்காய் இருந்தால், நீ என் ராஜ்யத்தில் பிரவேசிக்க விரும்புவதை பரலோக பிரமாணத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது! நீ ஜீவனை நாட வேண்டும். இன்று, பரிபூரணமாக்கப்படுபவர்களும் பேதுருவைப் போன்றவர்கள்: அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றங்களைத் தேடுபவர்கள், தேவனுக்கு சாட்சி அளிக்கவும், தேவனுடைய சிருஷ்டியாக தங்கள் கடமையைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இது போன்றவர்கள் மட்டுமே சரியானவர்களாக மாற்றப்படுவார்கள். நீ வெகுமதிகளை மட்டுமே பார்த்தால், உன் சொந்த ஜீவித மனநிலையை மாற்ற முற்படவில்லை என்றால், உன் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்—இது மாற்ற முடியாத சத்தியமாகும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

435. ஜீவித உழைப்பைப் பின்பற்றாதவர்கள் அனைவரும் வீணாக இருகிறார்கள் என்பதை பேதுரு மற்றும் பவுலின் சாராம்சங்களின் வேறுபாட்டிலிருந்து நீ புரிந்துக்கொள்ள வேண்டும்! நீ தேவனை நம்புகிறாய், தேவனைப் பின்பற்றுகிறாய் மற்றும் உன் இருதயத்தில் நீ தேவனை நேசிக்கிறாய். உன் கேடான மனநிலையை நீ ஒதுக்கி வைக்க வேண்டும். தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீ முயல வேண்டும் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை நீ செய்ய வேண்டும். நீ தேவனை நம்புகிறாய், பின்பற்றுகிறாய் என்பதால், நீ எல்லாவற்றையும் அவருக்கு வழங்க வேண்டும், தனிப்பட்ட தேர்வுகள் அல்லது கோரிக்கைகளை வைக்கக்கூடாது மற்றும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். நீ சிருஷ்டிக்கப்பட்டதால், உன்னைப் படைத்த தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏனென்றால், நீ இயல்பாகவே உன் மீது ஆதிக்கம் இல்லாமல் இருக்கிறாய். உன் சொந்த விதியைக் கட்டுப்படுத்தும் திறன் உன்னிடம் இல்லை. நீ தேவனை நம்புகிற ஒரு மனிதன் என்பதால், நீ பரிசுத்தத்தையும் மாற்றத்தையும் நாட வேண்டும். நீ தேவனுடைய சிருஷ்டி என்பதால், நீ உன் கடமையைக் கடைப்பிடிக்க வேண்டும். உனக்கு தகுதியான இடத்தில் இருக்க வேண்டும். உன் கடமையை நீ மீறக்கூடாது. இது உன்னைக் கட்டுப்படுத்துவதோ அல்லது உபதேசத்தின் மூலம் உன்னை அடக்குவதோ அல்ல. மாறாக உன் கடமையை நீ செய்யம் பாதையாகும் மற்றும் அதை நீதியைச் செய்கிற அனைவராலும் அடைய முடியும்—அடைய வேண்டும். பேதுரு மற்றும் பவுலின் சாராம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், நீ எவ்வாறு நாட வேண்டும் என்பதை நீ அறிவாய். பேதுருவும் பவுலும் நடந்த பாதைகளில் ஒன்று, பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதை, மற்றொன்று நீக்கமடைவதற்கான பாதை ஆகும். பேதுருவும் பவுலும் இரண்டு வெவ்வேறு பாதைகளைக் குறிக்கின்றனர். ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைப் பெற்றிருந்தாலும், ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவருடைய அறிவொளியையும் பிரகாசத்தையும் பெற்றிருந்தாலும், ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசுவினால் தங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டாலும், ஒவ்வொருவரிலும் பிறக்கும் பலன் ஒன்றல்ல: ஒருவன் உண்மையிலேயே கனி கொடுத்தான், மற்றொருவன் கனி கொடுக்கவில்லை. அவர்கள் செய்த கிரியை, அவர்களால் வெளிப்புறமாக வெளிப்படுத்தப்பட்டவை மற்றும் அவர்களின் இறுதி முடிவுகள் ஆகியவற்றின் சாராம்சங்களிலிருந்து, நீ எந்த பாதையில் செல்ல வேண்டும், எந்த பாதையில் நடக்க வேண்டும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தெளிவாக இரண்டு வெவ்வேறு பாதைகளில் நடந்தார்கள். பவுலும் பேதுருவும், ஒவ்வொரு பாதையின் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர். ஆகவே தொடக்கத்திலிருந்தே இந்த இரண்டு பாதைகளுக்கும் அவர்கள் முன்மாதிரியாக இருந்தார்கள். பவுலின் அனுபவங்களின் முக்கிய புள்ளிகள் என்ன, அவன் ஏன் ஜெயம் பெறவில்லை? பேதுருவின் அனுபவங்களின் முக்கிய புள்ளிகள் யாவை, அவன் எவ்வாறு பரிபூரணமாக்கப்படுதலை அனுபவித்தான்? அவர்கள் ஒவ்வொருவரும் அக்கறை காட்டியதை ஒப்பிட்டுப் பார்த்தால், தேவன் எந்த வகையான மனிதரை விரும்புகிறார், தேவனுடைய விருப்பம் என்ன, தேவனுடைய மனநிலை என்ன, எந்த வகையான மனிதர் இறுதியில் பரிபூரணமாக்கப்படுவான் மற்றும் எந்த வகையான நபர் பரிபூரணமாக்கப்படமாட்டான், பரிபூரணமாக்கப்படுபவர்களின் மனநிலை என்ன என்பதையும், பரிபூரணமாக்கப்படாதவர்களின் மனநிலை என்ன என்பதையும் நீ அறிந்து கொள்வாய். இந்த சாரம்சத்தின் பிரச்சனைகள் பேதுரு மற்றும் பவுலின் அனுபவங்களில் காணப்படுகின்றன. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், ஆகவே எல்லா சிருஷ்டிப்புகளையும் அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வந்து தம்முடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படியச் செய்கிறார். எல்லாவற்றையும் அவருடைய கைகளில் இருக்கும்படி அவர் எல்லாவற்றிக்கும் கட்டளையிடுவார். விலங்குகள், தாவரங்கள், மனிதகுலம், மலைகள் மற்றும் ஆறுகள் மற்றும் ஏரிகள் உட்பட தேவனுடைய சிருஷ்டிப்பு அனைத்தும் அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும். வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும். அவற்றுக்கு வேறு வழியில்லை. அனைத்தும் அவருடைய திட்டங்களுக்கு அடிபணிய வேண்டும். இது தேவனால் ஆணையிடப்பட்டது. இது தேவனுடைய அதிகாரம். தேவன் எல்லாவற்றிக்கும் கட்டளையிடுகிறார், எல்லாவற்றிக்கும் கட்டளையிட்டு வரிசைப்படுத்துகிறார். ஒவ்வொன்றும் வகையின்படி முறைப்படுத்தப்பட்டு, தேவனுடைய சித்தப்படி அவற்றுக்கு சொந்த நிலையை ஒதுக்குகிறார். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எந்தவொரு விஷயமும் தேவனை மிஞ்ச முடியாது. எல்லாமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்திற்கு ஊழியம் செய்கின்றன. தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருக்கவோ தேவனிடம் எந்தவொரு கோரிக்கையையும் வைக்கவோ எந்த ஒரு சிருஷ்டிப்பும் துணிவதில்லை. ஆகவே, மனிதன், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, தன் கடமையைச் செய்ய வேண்டும். மனிதன் எல்லாவற்றிற்கும் அதிபதியாக அல்லது பராமரிப்பாளனாக இருந்தாலும், எல்லாவற்றிலும் எவ்வளவு உயர்ந்ததாக அந்தஸ்து இருந்தாலும், அவன் தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் ஒரு சிறிய மனிதனாகவே இருக்கிறான். அவன் ஒரு சிறிய மனிதன் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டி என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவன் ஒருபோதும் தேவனுக்கு மேலே இருக்க மாட்டான். தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, மனிதன் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்ய முற்பட வேண்டும். மற்ற தேர்வுகளைச் செய்யாமல் தேவனை நேசிக்க முற்பட வேண்டும், ஏனென்றால் தேவன் மனிதனின் அன்பிற்கு தகுதியானவர். தேவனை நேசிக்க முற்படுபவர்கள் எந்தவொரு தனிப்பட்ட நன்மைகளையும் தேடக்கூடாது அல்லது அவர்கள் தனிப்பட்ட முறையில் ஏங்குகிறதைத் தேடக்கூடாது. இது மிகவும் சரியான வழிமுறையாகும். நீ தேடுவது சத்தியம் என்றால், நீ நடைமுறையில் வைத்திருப்பது சத்தியம் என்றால், நீ அடைவது உன் மனநிலையின் மாற்றமாக இருந்தால், நீ செல்லும் பாதை சரியானதாகும். நீ தேடுவது மாம்சத்தின் ஆசீர்வாதங்கள் என்றால், நீ நடைமுறையில் வைத்திருப்பது உன் சொந்த கருத்துக்களின் சத்தியம் என்றால் மற்றும் உன் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றால், நீ மாம்சத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்பதாகும். நீ இன்னும் தெளிவற்ற நிலையில் ஜீவிப்பதால், நீ தேடுவது நிச்சயமாக உன்னை நரகத்திற்கு அழைத்துச் செல்லும். ஏனென்றால், நீ நடந்து செல்லும் பாதை தோல்வியின் பாதையாகும். நீ பரிபூரணமாக்கப்படுவாயா அல்லது அகற்றப்படுவாயா என்பது உன் சொந்த நாட்டத்தைப் பொறுத்ததாகும். அதாவது, ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

முந்தைய: H. தேவனுக்கு பயந்து, தீமையை விட்டு விலகுவது எப்படி என்பது குறித்து

அடுத்த: J. அன்பான தேவனை பின்தொடர்வது எப்படி என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக