J. அன்பான தேவனை பின்தொடர்வது எப்படி என்பது குறித்து

436. தேவனின் பொருள் மனிதன் நம்புவதற்காக மட்டுமல்ல, இன்னும், அது மனிதனால் நேசிக்கப்பட வேண்டும். ஆனால் தேவனை விசுவாசிக்கிறவர்களில் பலரால் இந்த “ரகசியத்தை” கண்டுபிடிக்க முடியாது. ஜனங்கள் தேவனை நேசிக்கத் துணிவதும் இல்லை, அவரை நேசிக்க முயற்சிப்பதும் இல்லை. தேவனைக் குறித்து அன்புகூற அதிகம் உண்டு என்று அவர்கள் ஒருபோதும் கண்டுபிடித்திருக்கவில்லை. தேவன் மனிதனை நேசிக்கும் தேவன் என்றும், மனிதனால் நேசிக்கப்பட வேண்டிய தேவன் என்றும் அவர்கள் ஒருபோதும் கண்டுபிடித்திருக்கவில்லை. தேவனின் அருமை அவருடைய கிரியையில் வெளிப்படுத்தப்படுகிறது. ஜனங்கள் அவருடைய கிரியையை அனுபவிக்கும் போது மட்டுமே அவர்களால் அவருடைய அமையைக் கண்டறிய முடியும். அவர்களின் உண்மையான அனுபவங்களில் மட்டுமே தேவனின் அருமையை அவர்களால் பாராட்ட முடியும். நிஜ வாழ்க்கையில் அதைக் கடைபிடிக்காமல், தேவனின் அருமையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. தேவனைப் பற்றி நேசிக்க அநேகம் இருக்கிறது, ஆனால் உண்மையில் அவருடன் ஐக்கியப்படாமல் ஜனங்களால் அதைக் கண்டுபிடிக்க இயலாது. அதாவது, தேவன் மாம்சமாக மாறவில்லை என்றால், ஜனங்களால் அவருடன் உண்மையாக ஐக்கியப்பட இயலாது, அவர்களால் உண்மையில் அவருடன் ஐக்கியப்பட முடியாவிட்டால், அவர்களால் அவருடைய கிரியையை அனுபவிக்கவும் முடியாது. எனவே அவர்களின் தேவன் மீதான அன்பு மிகவும் பொய் மற்றும் கற்பனையால் கறைபடுத்தப்படுகிறது. பரலோகத்தில் உள்ள தேவன் மீதான அன்பு பூமியிலுள்ள தேவன் மீதான அன்பைப் போல உண்மையானதல்ல, ஏனென்றால் ஜனங்கள் தங்களின் கண்களால் பார்த்ததையும் அவர்கள் தனிப்பட்ட முறையில் அனுபவித்ததையும் விட, பரலோகத்தில் தேவனைப் பற்றிய அறிவு அவர்களின் கற்பனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேவன் பூமிக்கு வரும்போது, அவருடைய உண்மையான கிரியைகளையும் அவருடைய அருமையையும் ஜனங்களால் காண முடிகிறது, மேலும் அவருடைய நடைமுறை மற்றும் இயல்பான தன்மையை அவர்கள் அனைவராலும் காண முடிகிறது, இவை அனைத்தும் பரலோகத்தில் உள்ள தேவனைக்குறித்த அறிவை விட ஆயிரக்கணக்கான மடங்கு உண்மையானவை. பரலோகத்தில் ஜனங்கள் தேவனை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த அன்பைக் குறித்து உண்மையானது எதுவுமில்லை, அது மனிதனின் கருத்துக்களால் நிறைந்துள்ளது. பூமியில் அவர்கள் தேவன்மீது எவ்வளவு குறைவாக அன்பு வைத்திருந்தாலும், இந்த அன்பு உண்மையானது. அதில் கொஞ்சம் மட்டுமே இருந்தாலும், அது இன்னும் உண்மையானது. தேவன் உண்மையான கிரியையின் மூலம் ஜனங்கள் அவரை அறிந்துகொள்ளச் செய்கிறார், இந்த அறிவின் மூலம் அவர் அவர்களின் அன்பைப் பெறுகிறார். இது பேதுருவைப் போன்றது, அவர் இயேசுவோடு வாழ்ந்திருக்காவிட்டால், இயேசுவை வணங்குவது அவருக்கு சாத்தியமில்லை. ஆகவே, இயேசுவுடனான ஐக்கியத்தின் அடிப்படையில் இயேசுவிடம் அவர் கொண்டிருந்த விசுவாசமும் கட்டப்பட்டது. மனிதனை அவனையே நேசிக்க வைப்பதற்காக, தேவன் மனிதர்களிடையே வந்திருந்து மனிதனுடன் சேர்ந்து வாழ்கிறார், மேலும் அவர், தேவனின் யதார்தத்தையே மனிதன் பார்க்கவும் அனுபவமாகவும் செய்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து

437. “அன்பு” என்று அழைக்கப்படுவது, தூய்மையான மற்றும் களங்கமில்லாத ஒரு உணர்ச்சியைக் குறிக்கிறது. அங்கு நீங்களோ உங்கள் மனதை நேசிக்கவும், உணரவும், சிந்தனைமிக்கதாய் பயன்படுத்துகிறீர்கள். அன்பில் எந்த நிபந்தனைகளும் இல்லை, தடைகளும் இல்லை, தூரமும் இல்லை. அன்பில் எந்த சந்தேகமும் இல்லை, வஞ்சகமும் இல்லை, தந்திரமும் இல்லை. அன்பில் வர்த்தகம் இல்லை தூய்மையற்றதாக எதுவும் இல்லை. நீ நேசிக்கிறீரானால், நீ ஏமாற்றவோ, புகார் செய்யவோ, துரோகம் செய்யவோ, கலகம் செய்யவோ, எதிர்பார்க்கவோ, எதையாவது பெற்றிடவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறவோ முயலமாட்டாய். நீ நேசிக்கிறீரானால், நீமகிழ்ச்சியுடன் உன்னை அர்ப்பணிப்பாய், மகிழ்ச்சியுடன் கஷ்டங்களை அனுபவிப்பாய். நீ என்னுடன் ஒத்துப்போவாய். எனக்காக உன்னிம் உள்ள அனைத்தையும் கைவிடுவாய். உன் குடும்பம், உன் எதிர்காலம், உன் இளமை மற்றும் உன் திருமணம் என அனைத்தையும் கைவிடுவாய். இல்லையென்றால், உன் அன்பு அன்பாக இருக்காது, வஞ்சகமும் துரோகமுமாய் இருக்கும்! எத்தகையது உன்னுடைய அன்பு? உன் அன்பு உண்மையானதா பொய்யானதா? இந்த அன்புக்காக நீ எவ்வளவு கைவிட்டாய்? நீ எவ்வளவு வழங்கியுள்ளாய்? உன்னிடமிருந்து நான் எவ்வளவு அன்பைப் பெற்றுள்ளேன்? உனக்குத் தெரியுமா? உங்கள் இருதயங்கள் தீமையினாலும், துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறு இருப்பதால், உங்கள் அன்பு எவ்வளவு தூய்மையற்றது? நீங்கள் ஏற்கனவே எனக்காக போதுமானதை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள். என் மீதான உங்கள் அன்பு ஏற்கனவே போதுமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்கள் வார்த்தைகளும் செயல்களும் ஏன் எப்போதும் கலகத்தனமாகவும் வஞ்சகமாகவும் இருக்கின்றன? நீங்கள் என்னைப் பின்தொடர்கிறீர்கள், ஆனால் நீங்கள் என் வார்த்தையை ஏற்கவில்லை. இது அன்பாக கருதப்படுகிறதா? நீங்கள் என்னைப் பின்தொடர்கிறீர்கள், ஆனால் நீங்கள் என்னை விலக்கிவைக்கிறீர்கள். இது அன்பாக கருதப்படுகிறதா? நீங்கள் என்னைப் பின்தொடர்கிறீர்கள், ஆனால் நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை. இது அன்பாக கருதப்படுகிறதா? நீங்கள் என்னைப் பின்தொடர்கிறீர்கள், ஆனால் நீங்கள் என் இருப்பை ஏற்கவில்லை. இது அன்பாக கருதப்படுகிறதா? நீங்கள் என்னைப் பின்தொடர்கிறீர்கள், ஆனாலும் நான் யார் என்பதற்கேற்ப என்னை நடத்துவதில்லை; ஒவ்வொரு திருப்பத்திலும் நீங்கள் எனக்கு காரியங்களை கடினமாக்குகிறீர்கள். இது அன்பாக கருதப்படுகிறதா? நீங்கள் என்னைப் பின்தொடர்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் என்னை முட்டாளாக்கி ஒவ்வொரு காரியத்திலும் என்னை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். இது அன்பாக கருதப்படுகிறதா? நீங்கள் எனக்கு ஊழியம் செய்கிறீர்கள், ஆனால் நீங்கள் எனக்கு பயப்படுவதில்லை. இது அன்பாக கருதப்படுகிறதா? நீங்கள் எல்லாவற்றிலும் எல்லா வகையிலும் என்னை எதிர்க்கிறீர்கள். இதெல்லாம் அன்பாக கருதப்படுகிறதா? நீங்கள் அதிகம் அர்ப்பணித்திருக்கிறீர்கள், அது உண்மைதான், ஆனாலும் நான் உங்களிடம் கேட்டதை நீங்கள் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. இதை அன்பாக கருத முடியுமா? நீங்கள் கவனமாக கணக்கிட்டு செயல்படுவது உங்களுக்குள் அன்பிற்கான சிறிதளவு குறிப்பும் எனக்காக இல்லை என்பதைக் காட்டுகிறது. பல ஆண்டுகளாக உங்களுக்காக நான் செயல்பட்ட பிறகும், நான் வழங்கிய சத்தியங்களுக்குப் பிறகும், நீங்கள் உண்மையில் பெற்றுகொண்டதென்ன? கவனமாக திரும்பிப் பார்ப்பதற்கு இது தகுதியற்றதா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” என்பதிலிருந்து

438. தேவனை நேசிப்பதைக் காட்டிலும் ஆழமான பாடம் எதுவும் இல்லை. தேவனை நேசிப்பது எப்படி என்ற பாடத்தை ஜனங்கள் வாழ்நாள் முழுவதுமான நம்பிக்கையில் கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறலாம். நீ தேவனில் விசுவாசம் வைத்தாயானால் அவரை நேசித்தே ஆக வேண்டும். நீ தேவனில் விசுவாசம் மட்டும் வைத்து அவரில் அன்புகூரவில்லையென்றால், தேவனைப் பற்றிய அறிவை அடையவில்லையென்றால், இருதயத்திலிருந்து வரும் உண்மையான அன்பினால் அவரை ஒருபோதும் நேசிக்கவில்லையென்றால் நீ தேவன்மேல் வைக்கும் விசுவாசம் வீண்; தேவனில் விசுவாசம் வைத்தும் அவரை நேசிக்கவில்லையென்றால் நீவீணாய் உன் வாழ்க்கையை வாழ்கிறாய், உன்னுடைய முழு வாழ்க்கையுமே மற்ற எல்லாருடைய வாழ்வைக் காட்டிலும் மிகவும் தாழ்ந்ததாகும். உன்னுடைய வாழ்க்கை முழுவதுமே நீ ஒருபோதும் தேவனை நேசிக்கவில்லையென்றால் அல்லது அவரை திருப்திபடுத்தவில்லையென்றால், பிறகு நீ வாழ்கிறதன் அர்த்தம் என்ன? தேவன்மேல் வைக்கும் உன்னுடைய விசுவாசத்தின் அர்த்தம் என்ன? அது ஒரு வீணான முயற்சியாகாதா? அது ஜனங்கள் தேவனில் நம்பிக்கை வைத்து அவரை நேசிக்க வேண்டுமானால் அவர்கள் ஒரு கிரயத்தை செலுத்தவேண்டும் என்று கூறுவதாகும். ஒரு குறிப்பிட்ட வெளிப்புறமான நிலையில் அவர்கள் முயற்சிப்பதற்கு பதிலாக, தங்கள் இருதயத்தின் ஆழத்தில் உண்மையான நுண்ணறிவினை அவர்கள் தேட வேண்டும். பாடுவதிலும் நடனமாடுவதிலும் நீங்கள் உற்சாகமாக இருந்தாலும் சத்தியத்தை நடைமுறைப்படுத்த இயலாவிட்டால், நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள் என்று கூற இயலுமா? தேவனை நேசிப்பதற்கு எல்லா காரியங்களிலும் தேவனுடைய சித்தத்தை நாடுவது அவசியம். உனக்கு ஏதாவது நேரிடும்போது, தேவனுடைய சித்தத்தை தெரிந்து கொள்ளவும், அந்த விஷயத்தில் தேவனுடைய சித்தம் என்ன என்பதை காணவும் முயற்சிப்பதோடு, அவர் உன்னை எதை அடையும்படிக்கு கேட்டுக்கொள்கிறார் என்பதையும், மற்றும் அவரது சித்தத்தின்மேல் எப்படி நினைவாயிருக்கவேண்டுமென்றும் கூறுகிறார் என்பது குறித்தும் ஆழமாக நோக்குவதாகும். உதாரணமாக, ஏதோ சம்பவித்ததில் நீ தீங்கநுபவிக்க நேர்ந்தால், அந்த நேரத்தில் தேவனுடைய சித்தம் என்ன என்பதையும் மற்றும் அவரது சித்தத்தின்மேல் நீ எவ்வாறு நினைவாயிருக்கவேண்டும் என்பதையும் நீ புரிந்துகொள்ள வேண்டும். நீ உன்னையே திருப்திசெய்து கொள்ளக்கூடாது: முதலில் உன்னை ஒரு பக்கம் வைக்க வேண்டும். மாம்சத்தைக் காட்டிலும் இழிவானது எதுவுமில்லை. தேவனை திருப்திப்படுத்துவதையே நீ நோக்கவேண்டும்; மற்றும் உனது கடமையை நீ நிறைவேற்றியாக வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனைகளில் இவ்விஷயத்தில் தேவன் விசேஷித்த அறிவொளியை உனக்குக் கொண்டு வருவார், மேலும் உன்னுடைய இருதயமும் ஆறுதல் அடையும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்” என்பதிலிருந்து

439. இன்றைக்கு, மனிதன் தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது அவனது ஆத்துமாவின் இரட்சிப்பிற்காகவும், அவனது உடல் நன்றாக இருப்பதற்காகவும், அல்லது தேவனை நேசிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையினைச் செழிப்பாக்கிக் கொள்வான் என்பதற்காகவும் அல்ல என இப்படி அநேகமானவற்றை நீங்கள் யாவரும் அறிந்து இருக்கிறீர்கள். இப்படியாக இருக்கும் வேளையில், நீ உன்னுடைய உடல் சார்ந்தவை நன்றாக இருப்பதற்காக அல்லது தற்காலிகச் சுகத்திற்காகத் தேவனை நேசிக்கிறேன் என்றும், இதற்கு மேல் நான் எதனையும் கேட்க மாட்டேன் என்கிற அளவிற்கு தேவனிடத்தில் கொண்டிருக்கும் உன் அன்பு அதனின் உச்சத்தைத் தொட்டு விட்டதாக இருந்தாலும், நீ தேடும் அந்த அன்பு அவ்வேளையிலும் கலப்படமான அன்பாக, தேவனுக்குப் பிரியமில்லாத ஒன்றாகவே காணப்படும். அவர்களது மந்தமான வாழ்க்கை அல்லது அவர்கள் இருதயத்தில் இருக்கின்ற வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தேவனுக்காகத் தாங்கள் கொண்டிருக்கின்ற அன்பைப் பயன்படுத்துபவராகக் காணப்படுபவர்கள், எளிதான வாழ்க்கை வாழ பேராசைக் கொண்டவர்களாகவும், தேவனிடத்தில் மெய்யான அன்புக்கூரும்படி தேவனை உண்மையாகத் தேடாத ஜனக் கூட்டத்தாரில் ஒருவராகவும் காணப்படுவார்கள். இந்தவித அன்பு கட்டாயத்தின் பேரில் உண்டாவது, இது மனதின் நிறைவிற்காகத் தேடிப் பின் செல்வது, மற்றும் தேவனுக்கு இப்படிப்பட்ட அன்பு தேவையில்லை. அப்படியென்றால், உன்னுடைய அன்பு எப்படிப்பட்டது? எதற்காக தேவனைத் தேடுகிறாய்? தேவனுக்காக மெய்யான அன்பை எவ்வளவு தற்பொழுது உனக்குள் கொண்டிருக்கிறாய்? உங்களில் அநேகமானவரின் அன்பு மேற்சொல்லிய அன்பைப் போன்றே காணப்படுகின்றது. இந்த விதமான அன்பினால் முன்பிருந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் அவ்வளவே; அது மாற்ற முடியாத நிலையை அடைய முடியாது அல்லது மனிதனுக்குள் ஆழமாக வேர்க் கொள்ள முடியாது. இந்த விதமான அன்பு எப்படி இருக்கின்றது என்றால், மலரும் பூ ஒன்று மலர்ந்து கனி கொடுக்காமல் உதிர்ந்து விடுவதைப் போல் இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனை நேசிக்கின்றதாக இருந்து ஒருவர் உன்னை வழி நடத்தும்படியாக இல்லாதிருக்கும் போது, நீ மனம் உடைந்து போவாய். தேவனை நேசிக்கும் போது மட்டும் நீ தேவனை நேசிக்கின்றதாக காணப்படுமானால், அதற்குப் பின் உன் இயற்கையான குணம் மாற்றம் பெறாமல் இருக்கின்றது என்றால், நீன் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் மூடுதலில் இருந்து தப்பிக்க முடியாமல், சாத்தானின் கட்டு மற்றும் மோசடியில் இருந்து விடுபட முடியாதவராக அப்படியே நின்று விடுவாய். இது போன்ற எவரையும் தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்திக் கொள்ள முடியாது; இறுதியில், அவர்களின் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் இன்னும் சாத்தானுக்கு சொந்தமானதாகவே இருக்கும். இது குறித்து எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. தேவனால் முழுமையாக இப்படிபட்டவர்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியாமல், ஆரம்பத்தில் இருந்த இடத்திற்கு, அதாவது, அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்கு நேராக, தேவனிடத்தில் இருந்து வருகிற அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்கள் ஆழமாகச் சென்று விடுவார்கள். சாத்தானை உதறி தள்ளி விட்டு அவனது ஆளுகையில் இருந்து தப்பி வருபவர்களே தேவனால் சொந்தமாக்கிக் கொள்ளப்படுபவர்கள். அவர்கள் அதிகாரப் பூர்வமாக இராஜ்யத்தின் மக்கள் மத்தியில் எண்ணப்பட்டிருக்கிறார்கள். இராஜ்யத்தின் மக்கள் இப்படித்தான் வருகிறார்கள். இந்த வகையான மனிதராக நீயும் மாற விரும்புகிறாயா? நீயும் தேவனால் சொந்தமாக்கப்பட விரும்புகிறாயா? நீயும் சாத்தானின் ஆளுகை வரம்பில் இருந்து தப்பித்து தேவனிடம் திரும்ப விரும்புகிறாயா? இப்பொழுது நீ சாத்தானுக்குரியவரா அல்லது இராஜ்யத்தின் ஜனங்களில் எண்ணப்பட்டவர்களில் ஒருவராக இருக்கின்றாயா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்பதிலிருந்து

440. மனிதன் காலம் காலமாக இருளின் அதிகாரத்தின் மறைவில், சாத்தானின் அதிகாரம் எனும் அடிமைத்ததிற்குள் அடைபட்டு, அதிலிருந்து தப்பிக்க முடியாமல் வாழ்ந்து வந்துள்ளான், மேலும் சாத்தானால் பீடிக்கப்பட்ட அவனது மனநிலையும் மிகவும் சீர்கெட்டுப் போகிறது. மனிதன் எப்போதுமே தனது சீர்கேடான சாத்தானின் மனநிலைக்கு நடுவில்தான் வாழ்கிறான், மேலும் அவனால் தேவனை உண்மையாக நேசிக்க முடிவதில்லை என்று சொல்லலாம். இது இப்படியிருக்க, மனிதன் தேவனை நேசிக்க விரும்பினால், அவனது சுய-நீதி, சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், ஆணவம், தற்பெருமை, மற்றும் சாத்தானின் மனநிலையிலுள்ள அனைத்தும்ம் அவனிடமிருந்து அகற்றப்பட வேண்டும். இல்லை என்றால், அவனது அன்பு தூய்மையற்ற அன்பாக, சாத்தானின் அன்பாக, தேவனின் அங்கீகாரத்தை முற்றிலும் பெற முடியாததாகவே இருக்கும். பரிசுத்த ஆவியினால் நேரடியாக பரிபூரணப்படுத்தப்படாமல், சரிகட்டப்படாமல், நொறுக்கப்படாமல், திருத்தப்படாமல், ஒழுங்குபடுத்தப்படாமல், சிட்சிக்கப்படாமல் மற்றும் சுத்திகரிக்கப்படாமல், ஒருவராலும் தேவனை உண்மையாக அன்பு செய்ய முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கேடான மனிதன் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியில்லாதவன்” என்பதிலிருந்து

442. தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு அடியும் வெளிப் பார்வைக்கு ஜனங்களுக்கிடையேயான செயல்பாடுகளாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால், மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால், ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் சாத்தானுக்கும் தேவனுக்கும் நடக்கும் யுத்தம் இருக்கும்; ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டும். உதாரணமாக, யோபு சோதிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் சாத்தான் தேவனோடு பந்தயமிடுகிறான். யோபுவுக்கு நேரிட்டவை அனைத்தும் மனுஷரின் கிரியையினால், மனுஷர் தலையிட்டதினால் நிகழ்ந்தவை. தேவன் உங்களில் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் சாத்தானுக்கும் தேவனுக்குமான யுத்தம் இருக்கும். உதாரணமாக, உன் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் குறித்து நீ பட்சபாதம் கொண்டிருந்தால், நீ அவர்களிடம் கூற விரும்புகிற வார்த்தைகளையே கொண்டிருப்பாய்—அந்த வார்த்தைகள் தேவனுக்கு பிரியமில்லாதவையாக இருக்கக்கூடும்—ஆனால் அவற்றை கூறாமற்ப்போனால் உன் உள்ளுக்குள் திருப்தி இருக்காது, அந்தப் பொழுதில், “நான் பேசுவதா, வேண்டாமா?” என்கிற யுத்தம் உனக்குள் நடக்கும். இப்படி நீ எதிர்கொள்ளும் ஒவ்வொன்றிலும் ஒரு யுத்தம் இருக்கும். உனக்குள் யுத்தம் ஏற்படும்போது தேவன் உனக்குள் செயல்படுகிறார். ஆகவே, உன் உண்மையான ஒத்துழைப்பு, உண்மையான பாடுகள் பாராட்டத்தக்கவை. முடிவாக, நீ உனக்குள் இந்த விஷயத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ள முடியும். கோபம் இயல்பாகவே வடிந்துவிடும். இது தேவனுடனான உன் ஒத்துழைப்பின் பயன். ஜனங்கள் தங்கள் முயற்சிகளிலெல்லாம் குறிப்பிட்ட கிரயத்தை செலுத்தவேண்டும். உண்மையான உபத்திரவம் இல்லாமல் அவர்கள் தேவனை திருப்திப்படுத்த இயலாது; அவர்கள் தேவனை திருப்திப்படுத்தும் இடத்தை நெருங்கக்கூட இயலாது. வெற்றுக் கூச்சல்களை எழுப்பிக்கொண்டிருப்பார்கள்! இந்த வெற்றுக் கூச்சல்களால் தேவனை திருப்தியாக்க இயலுமா? தேவனும் சாத்தானும் ஆவிக்குரிய மண்டலத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது நீ எப்படி தேவனை திருப்திபடுத்த வேண்டும்; எப்படி அவருக்கு உறுதியான சாட்சியாக நிற்க வேண்டும்? உனக்கு நேரிடும் ஒவ்வொன்றும் ஒரு பெரிய சோதனை என்றும் நீ சாட்சியாக நிற்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்றும் நீ அறிந்திட வேண்டும். வெளிப்பார்வைக்கு இவை முக்கியத்துவம் இல்லாதவையாக தோன்றினாலும் இந்த காரியங்கள் நீ தேவனை நேசிக்கிறாயா இல்லையா என்பதை காண்பித்துவிடும். நீ செய்தால், தேவனுக்கான உன் சாட்சியில் உறுதியாக நிற்க இயலும். அவர் மீதான அன்பை நீ நடைமுறையில் வெளிப்படுத்தவில்லையென்றால், நீ சத்தியத்தை நடைமுறையில் வெளிப்படுத்தாதவர் என்றும், சத்தியம் இல்லாததால் ஜீவன் இல்லாதவர் என்றும் அதனால் பதர் போன்றவர் என்பதையும் காட்டும். ஜனங்கள் தேவனுக்கு உறுதியான சாட்சியாக நிற்கவேண்டிய தேவை எழும்போதுதான் இவையெல்லாம் மக்களுக்கு நேரிடுகிறது. அந்த குறிப்பிட்ட பொழுதில் உனக்கு பெரிதாக எதுவும் நடக்காவிட்டாலும், உனக்கு பெரிய சாட்சி இல்லையென்றாலும், உன் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு காரியமுமே தேவனுக்கான சாட்சியாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர், சுற்றியிருக்கும் அனைவருடைய பாராட்டுதலை பெற உனக்கு கூடுமானால், ஒருநாள் அவிசுவாசிகளும் வந்து நீ செய்த எல்லாவற்றையும் பாராட்டினால், தேவன் செய்பவை அனைத்தும் ஆச்சரியமானவை என்று கண்டால், உனக்கு சாட்சி இருக்கிறது. உனக்கு நுண்ணிய அறிவு இல்லையானாலும், நீ குறைந்த திறன் கொண்டவராக இருந்தாலும் தேவன் உன்னை பரிபூரணமாக்கியதன் மூலம் அவரை திருப்திப்படுத்தவும் அவரது சித்தம் குறித்து நினைவாயிருக்கவும், குறைந்த திறன் கொண்ட ஜனங்களில் அவரது மகத்தான கிரியையை மற்றவர்களுக்கு காட்டவும் முடியும். ஜனங்கள் தேவனை அறிந்து, சாத்தானுக்கு முன்பாக ஜெயம்பெற்று, சிறப்பான அளவில் தேவனுக்கு விசுவாசமாக இருப்பதே பெரிய சாட்சியாகும். இதுபோன்ற ஜனங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. மகத்தான காரியத்தை செய்ய உன்னால் இயலாவிட்டாலும் தேவனை திருப்திப்படுத்த முடியும். மற்றவர்களால் தங்கள் கருத்துகளை ஒதுக்க இயலாது; உன்னால் கூடும். தங்கள் உண்மையான அனுபவங்களின்போது மற்றவர்களால் தேவனுக்கு சாட்சியாக விளங்க இயலாது, ஆனால் நீ உன் உண்மையான வளர்ச்சி மற்றும் செயல்களை தேவனின் அன்புக்கு பிரதிபலன் செய்ய பயன்படுத்துவதோடு அவருக்கு சாட்சியாக ஒலிக்க இயலும். உண்மையில் இது தேவனை நேசிப்பதாக எண்ணப்படும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்” என்பதிலிருந்து

443. நீங்கள் எவ்வளவு உண்மையை நடைமுறைக்குக் கொண்டுவருகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் சத்தியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையை எவ்வளவு அதிகமாக நடைமுறைப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தேவனின் அன்பையும் நீங்கள் பெற்றிருப்பீர்கள். மேலும் நீங்கள் உண்மையை எவ்வளவு அதிகமாக நடைமுறைப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். நீ எப்பொழுதும் இந்த வழியில் பயிற்சி செய்தால், உன்னைக்குறித்த தேவனின் அன்பு படிப்படியாக பேதுரு தேவனை அறிந்தது கொண்டதைப் போலவே உன்னை பார்க்கும்படியாக செய்யும். பேதுரு, தேவனிடம் வானத்தையும் பூமியையும் மற்றும் எல்லாவற்றையும் உண்டாக்கும் ஞானம் மட்டுமல்ல, ஆனால், மேலும், மக்களில் உண்மையான கிரியையைச் செய்வதற்கான ஞானமும் அவரிடம் உள்ளது என்று சொன்னார். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கியதன் காரணமாக மட்டுமல்லாமல், மேலும் மனிதனை படைப்பதற்கும், மனிதனைக் இரட்சிப்பதற்கும், மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், அவனுடைய அன்பைப் பெறுவதற்குமான அவருடைய திறனின் காரணமாக அவர் ஜனங்களின் அன்பிற்கு தகுதியானவர் என்று பேதுரு கூறினார். ஆகவே, மனிதனின் அன்பிற்கு தகுதியானவை அவரிடத்தில் அதிகம் இருப்பதாக பேதுரு சொல்லத்தான் செய்தார். பேதுரு இயேசுவை நோக்கி, “வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கியதே ஜனங்களின் அன்பிற்கு நீர் தகுதியானவராக ஒரே காரணமா? உம்மில் உள்ள அநேகக் காரியங்கள் அன்புக்குறியவை. நீர் நிஜ வாழ்க்கையில் செயல்படுகிறீர், நகர்கிறீர், உம் ஆவி என்னை உள்ளே தொடுகிறது, நீர் என்னை ஒழுங்குபடுத்துகிறீர், நீர் என்னை நிந்திக்கிறீர்—இந்த விஷயங்கள் ஜனங்களின் அன்பிற்கு இன்னும் தகுதியானவை.” நீ தேவனின் அன்பைக் காணவும் அனுபவிக்கவும் விரும்பினால், நீ நிஜ வாழ்க்கையில் ஆராய்ந்து தேட வேண்டும், மேலும் உன் சொந்த மாம்சத்தை ஒதுக்கி வைக்க தயாராக இருக்க வேண்டும். இந்த தீர்மானத்தை நீ செய்ய வேண்டும். சோம்பேறியாகவோ அல்லது மாம்சத்தின் இன்பங்களை விரும்பாமலோ, மாம்சத்திற்காக வாழாமல் தேவனுக்காக வாழ்வனாகவும் இருந்து, எல்லாவற்றிலும் தேவனை திருப்திப்படுத்தக்கூடிய உறுதியான ஒருவராக நீ இருக்க வேண்டும். நீ தேவனை திருப்திப்படுத்தாத சமயங்கள் இருக்கலாம். ஏனென்றால், நீ தேவனின் விருப்பத்தை புரிந்து கொள்ளவில்லை. அடுத்த முறை, அதிக முயற்சி தேவை என்றாலும், நீ அவரை திருப்திப்படுத்த வேண்டும் மற்றும் மாம்சத்தை திருப்திப்படுத்தக்கூடாது. இந்த வழியில் நீ அனுபவம் பெறும்போது, நீ தேவனை அறிந்து கொண்டிருப்பாய். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் தேவனால் உண்டாக்க முடியும் என்பதையும், அவர் மாம்சமாகிவிட்டார் என்பதையும், அதனால் ஜனங்கள் உண்மையில் அவரைப் பார்க்கவும், அவருடன் உண்மையில் ஐக்கியப்படவும் முடியும் என்பதை நீ கண்டுகொள்வாய். அவர் மனிதர்களிடையே நடக்க முடிகிறது என்பதையும், அவருடைய ஆவியால் நிஜ வாழ்க்கையில் ஜனங்களை பரிபூரணமாக்க முடியும் என்பதையும், அவருடைய அருமையைக் காணவும், அவருடைய ஒழுக்கத்தையும், தண்டனையையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கவும் அவர்களை அனுமதிக்கிறது என்பதையும் நீ கண்டுகொள்வாய். நீ எப்போதுமே இந்த வழியில் அனுபவித்தால், நிஜ வாழ்க்கையில் நீ தேவனிடமிருந்து பிரிக்கமுடியாதவனாக இருப்பாய், ஒரு நாள் தேவனுடனான உன் உறவு சாதாரணமாகிவிட்டால், உன்னால் நிந்தனைக்கு ஆளாகி வருத்தத்தை உணர முடியும். நீ தேவனுடன் ஒரு சாதாரண உறவைக் கொண்டிருக்கும்போது, நீ ஒருபோதும் தேவனை விட்டு விலக விரும்பமாட்டாய், ஒரு நாள் தேவன் உன்னைத் தாம் கைவிட்டு விடுவதாக சொன்னால், நீ பயப்படுவாய், மேலும் நீ தேவனால் கைவிடப்படுவதை விட இறந்துவிடுவது மேல் என்று கூறுவாய். இந்த உணர்ச்சிகளை நீ பெற்றவுடன், உன்னால் தேவனை விட்டு விலக இயலாது என்று நீ உணர்ந்து கொள்வாய், இந்த வழியில், நீ ஒரு அடித்தளத்தை வைத்திருப்பாய், மேலும் தேவனின் அன்பை உண்மையிலேயே அனுபவிப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து

444. தேவனை இன்று நீ எவ்வளவு நேசிக்கிறாய்? தேவன் உன்னிடத்தில் செய்த எல்லாவற்றைப் பற்றியும் நீ எவ்வளவு அறிந்திருக்கிறாய்? இவையெல்லாம் தான் நீ கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களாகும். தேவன் பூமிக்கு வரும்போது, அவர் மனுஷனில் செய்த விஷயங்கள் மற்றும் மனுஷனைப் பார்க்க அனுமதித்த விஷயங்கள் அனைத்தும் மனுஷன் அவரை நேசிப்பான், அவரை உண்மையாக அறிந்துகொள்வான் என்பதற்காகவே செய்யப்பட்டன. மனுஷன் தேவனுக்காக துன்பப்பட்டு, அவனால் இதுவரை வர முடிந்திருக்கிறது என்பதற்கு, ஒரு வகையில், தேவனின் அன்பு காரணமாகவும், மற்றொரு வகையில் தேவனின் இரட்சிப்பு காரணமாகவும் இருக்கின்றன; மேலும், இதற்கு நியாயத்தீர்ப்பு மற்றும் தேவன் மனுஷனில் மேற்கொண்ட சிட்சைக்கான கிரியை ஆகியவையும் காரணங்களாக இருக்கின்றன. நீங்கள் தேவனின் நியாயத்தீர்ப்பு, சிட்சை மற்றும் உபத்திரவங்கள் ஆகியவற்றை சந்திக்காமல் இருந்திருந்தால், தேவன் உங்களை துன்பப்படுத்தியிருக்கவில்லை என்றால், நீங்கள் உண்மையிலேயே தேவனை நேசிப்பதில்லை என்பது தான் உண்மையாக இருக்கும். மனுஷனில் தேவனின் கிரியை எவ்வளவு அதிகமாக உள்ளதோ மற்றும் மனுஷன் துன்பப்படுவது எவ்வளவு அதிகமாக உள்ளதோ, தேவனின் கிரியை எவ்வளவு அர்த்தமுள்ளது என்பதும் அவ்வளவு தெளிவாகத் தெரிகிறது, மேலும் மனுஷனின் இருதயத்தால் தேவனை அவ்வளவு அதிகமாக உண்மையாக நேசிக்கவும் முடிகிறது. தேவனை நேசிப்பது எப்படி என்பதை நீ எவ்வாறு கற்றுக்கொள்கிறாய்? தேவன் மனுஷனுக்கு அளித்தவை அனைத்தும் கிருபை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவையாக இருந்து, கடும்வேதனை மற்றும் சுத்திகரிப்பு ஆகியவையும், வேதனைமிகுந்த உபத்திரவங்களும் இல்லாமல் இருந்தால், தேவனை உண்மையாக நேசிக்கும் ஒரு நிலையை உன்னால் அடைய முடியுமா? ஒருபுறம், தேவன் தரும் சோதனைகளின் போது மனுஷன் அவனது குறைபாடுகளை அறிந்துகொள்வதோடு, அவன் அற்பமானவனாகவும், இழிவானவனாகவும், தாழ்ந்தவனாகவும் இருப்பதைக் காண்கிறான், தன்னிடம் எதுவுமே இல்லை, தான் ஒன்றுமேயில்லை என்பதையும் உணர்கிறான்; மறுபுறம், அவனது உபத்திரவங்களின் போது தேவன் மனுஷனுக்கு வெவ்வேறு சூழல்களை உருவாக்குகிறார், அவை தேவனின் சௌந்தரியத்தை மனுஷனை அதிகமாக அனுபவிக்க வைக்கிறது. வேதனையானது மிகப் பெரிதாகவும், சில சமயங்களில் தீர்க்கமுடியாததாகவும் இருந்தாலும், அதை அனுபவித்ததனால் அது கடுமையான துக்க நிலையை எட்டினாலும், தன்னுள் தேவன் எவ்வளவு அழகாக கிரியை செய்கிறார் என்பதை மனுஷன் காண்கிறான், இந்த அஸ்திபாரத்தில்தான் மனுஷனுக்கு தேவன்மீது உண்மையான அன்பு பிறக்கிறது. தேவனின் கிருபையுடனும், அன்புடனும், இரக்கத்துடனும் மட்டுமே, தன்னை உண்மையாக அறிந்துகொள்ள முடியாது என்பதை மனுஷன் காண்கிறான், மேலும் மனுஷனின் சாராம்சத்தையும் அவனால் அறிந்துகொள்ள முடியாது. தேவனின் சுத்திகரிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகிய இரண்டின் மூலமாகவும், மேலும் சுத்திகரிப்பு செயல்பாட்டின் போதும் மட்டுமே, மனுஷன் தனது குறைபாடுகளை அறிந்துகொள்ளவும், மேலும் தன்னிடம் எதுவும் இல்லை என்பதையும் அறிந்துகொள்ள முடியும். ஆகவே, தேவன் மீதான மனுஷனின் அன்பானது தேவனின் சுத்திகரிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு என்னும் அஸ்திபாரத்தின் மீது கட்டப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்” என்பதிலிருந்து

445. இன்று, பெரும்பாலான ஜனங்களுக்கு அந்த அறிவு இருப்பதில்லை. துன்பப்படுவதற்கு மதிப்பில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள், அவர்கள் உலகத்தால் கைவிடப்படுகிறார்கள், அவர்களின் குடும்ப வாழ்க்கை கலக்கமடைகிறது, அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்களாக இருப்பதில்லை, அவர்களின் வாய்ப்புகள் இருண்டவையாக இருக்கின்றன. சிலரின் துன்பம் ஒரு தீவிரத்தை அடைகிறது, அவர்களின் எண்ணங்கள் மரணமாக மாறுகின்றன. இது தேவன் மீதான உண்மையான அன்பு அல்ல; அத்தகையவர்கள் கோழைகள், அவர்களுக்கு விடாமுயற்சி இருப்பதில்லை, அவர்கள் பலவீனமானவர்கள், சக்தியற்றவர்கள்! மனுஷன் தன்னை நேசிக்க வேண்டுமென தேவன் ஆவலாக உள்ளார், ஆனால் மனுஷன் எவ்வளவு அதிகமாக தேவனை நேசிக்கிறானோ, அந்தளவிற்கு அவன் துன்பப்படுகிறான், மனுஷன் எவ்வளவு அதிகமாக தேவனை நேசிக்கிறானோ, அந்தவிற்கு அவனுக்கு உபத்திரவங்கள் இருக்கின்றன. நீ அவரை நேசிக்கிறாய் என்றால், ஒவ்வொரு விதமான துன்பமும் உனக்கு ஏற்படும்—நீ அவரை நேசிக்காவிட்டால், உனக்கு எல்லாமே சுமுகமாக நடக்கும், உன்னைச் சுற்றி அனைத்தும் அமைதியாக இருக்கும். நீ தேவனை நேசிக்கும்போது, உன்னைச் சுற்றியுள்ளவை ஈடுசெய்ய முடியாதவை என்பதை நீ உணருவாய், மேலும் உனது வளர்ச்சி மிகச் சிறியதாக இருப்பதால் நீ சுத்திகரிக்கப்படுவாய்; மேலும், உன்னால் தேவனை திருப்திப்படுத்த இயலாது, மேலும் தேவனின் சித்தம் மிக உயர்ந்தது, அதை மனுஷனால் எட்ட முடியாது என்பதை நீ எப்போதும் உணருவாய். இவை அனைத்தின் காரணமாகவும் நீ சுத்திகரிக்கப்படுவாய்—உனக்குள் அதிக பலவீனம் இருப்பதாலும், மேலும் தேவனுடைய சித்தத்தை உன்னால் நிறைவேற்ற முடியாது என்பதாலும், நீ உனக்குள் சுத்திகரிக்கப்படுவாய். ஆயினும் சுத்திகரிப்பு மூலம் மட்டுமே தூய்மையானது அடையப்படுகிறது என்பதை நீ தெளிவாகக் காண வேண்டும். எனவே, இந்த கடைசிக் காலத்தில் நீ தேவனுக்கு சாட்சிக் கொடுக்க வேண்டும். உனது துன்பம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீ இறுதி வரை நடக்க வேண்டும், உனது கடைசி மூச்சிலும் கூட, நீ தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மேலும் தேவனின் திட்டமிடலுக்குக் கீழ்படிந்திருக்க வேண்டும்; இதுதான் உண்மையிலேயே தேவனை நேசிப்பதாகும், இது மட்டுமே வலுவான மற்றும் உறுதியான சாட்சியம் ஆகும். நீ சாத்தானால் சோதிக்கப்படும்போது, நீ, “என் இருதயம் தேவனுக்கு சொந்தமானது, தேவன் ஏற்கனவே என்னை ஆதாயப்படுத்தியிருக்கிறார். என்னால் உன்னை திருப்திப்படுத்த முடியாது—தேவனை திருப்திப்படுத்துவதற்காக நான் என்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்,” என்று கூற வேண்டும். நீ எவ்வளவு அதிகமாக தேவனை திருப்திப்படுத்துகிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், மேலும் தேவன் மீதான உனது அன்பின் வலிமையும் அதிகமாகும்; ஆகவே, நீ விசுவாசத்தையும் மனவலிமையையும் பெறுவாய், மேலும் தேவனை நேசிப்பதால் கழிந்த ஜீவிதத்தை விட வேறு எதுவும் தகுதியானதாகவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ இல்லை என்று உணருவாய். மனுஷன் தேவனை நேசிக்கும் வரை, அவன் துக்கம் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறலாம். உனது மாம்சம் பலவீனமடைந்து, பல உண்மையான கஷ்டங்களில் நீ சிக்கித் தவிக்கும் காலநேரங்கள் இருந்தாலும், இப்படிப்பட்ட காலங்களில் நீ உண்மையிலேயே தேவனை நம்பியிருப்பாய், உனது ஆவிக்குள் நீ ஆறுதலடைவாய், மேலும் நீ சார்ந்திருக்க ஏதோ இருக்கிறதென்று உறுதியாக உணருவாய். இவ்வாறாக, உன்னால் பல சூழல்களை வெல்ல முடியும், எனவே நீ அனுபவிக்கும் வேதனையின் காரணமாக நீ தேவனைப் பற்றி குறைகூற மாட்டாய். அதற்குப் பதிலாக, நீ பாடுவதற்கும், நடனமாடுவதற்கும், ஜெபிப்பதற்கும், ஒன்றுகூடுவதற்கும், தொடர்புகொள்வதற்கும், தேவனைப் பற்றி சிந்தனை செய்யவும் விரும்புவாய், மேலும் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உன்னைச் சுற்றியுள்ள எல்லா ஜனங்களும், காரியங்களும், விஷயங்களும் பொருத்தமானவை என்பதை நீ உணருவாய். நீ தேவனை நேசிக்காவிட்டால், நீ பார்க்கும் அனைத்தும் உனக்குத் தொந்தரவாக இருக்கும், மேலும் உனது கண்களுக்கு எதுவுமே மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்காது; உனது ஆவியில் நீ விடுதலையோடு இருக்க மாட்டாய் அதற்குப்பதிலாக ஒடுக்கப்படுவாய், உனது இருதயம் எப்போதும் தேவனைப் பற்றி குறைசொல்லும், மேலும் நீ இவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாய், அது மிகவும் அநியாயமானது என்பதை நீ எப்போதும் உணருவாய். நீ மகிழ்ச்சிக்காகக் கடைப்பிடிக்காமல் தேவனை திருப்திப்படுத்தவும், சாத்தானால் குற்றம் சாட்டப்படாமலும் இருக்க வேண்டும் என்பதற்காகக் கடைப்பிடித்தால், அத்தகையக் கடைப்பிடித்தலானது தேவனை நேசிக்க உனக்கு பெரும் பலத்தைத் தரும். தேவனால் பேசப்படும் அனைத்தையும் மனுஷனால் செயல்படுத்த முடிகிறது, மேலும் அவன் செய்யும் அனைத்து விஷயங்களாலும் தேவனை திருப்திப்படுத்த முடிகிறது—இதுதான் யதார்த்தத்தை வைத்திருப்பதன் அர்த்தமாக இருக்கிறது. தேவனின் திருப்தியைக் கடைப்பிடிப்பது என்றால் தேவன் மீதான உனது அன்பைப் பயன்படுத்தி அவருடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும்; நேரத்தைப் பொருட்படுத்தாமல்—மற்றவர்கள் பலமில்லாமல் இருக்கும்போதும் கூட—உனக்குள்ளே தேவனை நேசிக்கும் ஒரு இருதயம் இன்னும் இருக்கிறது, அந்த இருதயமானது தேவனுக்காக ஆழமாக ஏங்குகிறது மற்றும் தவிக்கிறது. இதுவே உண்மையான வளர்ச்சியாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்” என்பதிலிருந்து

448. தேவன் மனிதனைத் தண்டிக்கிறார் மற்றும் நியாயந்தீர்க்கிறார், ஏனென்றால் அது அவருடைய கிரியையால் தேவையானதாக இருக்கிறது, மேலும், அது மனிதனுக்குத் தேவைப்படுகிறது. மனிதன் தண்டிக்கப்பட வேண்டும், நியாயந்தீர்க்கப்பட வேண்டும், அப்போதுதான் அவனால் தேவனின் அன்பை அடைந்திட முடியும். இன்று, நீங்கள் முற்றிலும் நம்பபப்டுத்தப்பட்டு இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் சிறிய பின்னடைவை சந்திக்கும்போது, நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள். உங்கள் அந்தஸ்து இன்னும் மிகவும் சிறியது, மேலும் ஒரு ஆழமான அறிவைப் பெறுவதற்கு இதுபோன்ற அநேக தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் நீங்கள் இன்னும் அனுபவிக்க வேண்டும். இன்று, நீங்கள் தேவனிடம் கொஞ்சம் பயபக்தியைக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிறீர்கள், அவர் மெய்யான தேவன் என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் அவருக்காக மிகுந்த அன்பு நீங்கள் பெற்றிருக்கவில்லை, நீங்கள் தூய்மையான அன்பை மிகக் குறைவாகவே அடைந்துள்ளீர்கள். உங்கள் அறிவு மிகவும் மேலோட்டமானது, உங்கள் அந்தஸ்து இன்னும் போதுமானதாக இல்லை. நீங்கள் உண்மையிலேயே ஒரு நிலைமையை எதிர்கொள்ளும்போது, நீங்கள் இன்னும் சாட்சி பகிரவில்லை, உங்கள் பிரவேசத்தில் மிகக் குறைவானதே ஆற்றல்மிக்கது, மேலும் எவ்வாறு பயிற்சி செய்வது என்று உங்களுக்கு யோசனை இருக்காது. பெரும்பாலான ஜனங்கள் மந்தமானவர்கள் மற்றும் செயலற்றவர்கள். அவர்கள் தங்கள் இருதயங்களில் தேவனை ரகசியமாக மட்டுமே நேசிக்கிறார்கள், ஆனால் நடைமுறைக்குரிய எந்த வழியும் இல்லை, அவர்களின் இலக்குகள் என்ன என்பது பற்றியும் தெளிவாக இல்லை. பரிபூரணமாக்கப்பட்டவர்கள் யாவரும் சாதாரண மனிதநேயத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மனசாட்சியின் நடவடிக்கைகளை தாண்டியதும், மனசாட்சியின் தரங்களை விட உயர்ந்ததுமான சத்தியங்களைக் கொண்டவர்கள். அவர்கள் தேவனின் அன்பைத் திருப்பிச் செலுத்துவதற்கு தங்கள் மனசாட்சியைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தேவனை அறிந்தும் இருக்கிறார்கள், மேலும் தேவன் அழகானவர், மனிதனின் அன்பிற்கு தகுதியானவர் என்பதையும், தேவனை நேசிப்பதற்கானவை நிறைய இருக்கிறது என்பதையும் கண்டிருக்கிறார்கள். மனிதனால் உதவ முடியாது, ஆனால் அவரை நேசிக்க முடியும்! பரிபூரணமாக்கப்பட்டவர்களிடம் தேவன் மீதான அன்பு அவர்களின் சொந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே. அவர்களுடையது ஒரு இயல்பாகத் தோன்றுகிற அன்பு, திரும்ப எதுவும் கேட்காத ஒரு அன்பு, இது ஒரு பரிவர்த்தனை அல்ல. தேவனைக் குறித்த அறிவைத் தவிர வேறொன்றையும் குறித்தி அவர்கள் தேவனை நேசிக்கிறதில்லை. தேவன் தங்கள் மீது கிருபை புரிந்தாரா என்பதைக் குறித்து அக்கறைக் கொள்வதுமில்லை மேலும் தேவனை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறொன்றையும் கருத்தில் கொள்பவர்களாகவும் அத்தகையவர்கள் இல்லை. அவர்கள் தேவனோடு பேரம் பேசுவதில்லை, தேவனின் அன்பை மனசாட்சியால் அளவிடுகிறதில்லை: “நீர் எனக்குக் கொடுத்திருக்கிறீர், இதனால் நான் உம்மை நேசிக்கிறேன். நீர் எனக்குக் கொடுக்கவில்லை என்றால், உமக்குப் பதில் செய்ய என்னிடம் எதுவும் இல்லை”. “ஓ தேவனே சிருஷ்டிகர், அவர் தம்முடைய கிரியையை நம்மீது நடப்பிக்கிறார். இந்த வாய்ப்பு, நிலை மற்றும் தகுதி பரிபூரணமாக்கப்படுவதற்கு எனக்கு இருப்பதால், எனது நாட்டம் உண்மையுள்ள ஜீவியத்தை வாழ்வதாக இருக்க வேண்டும், நான் அவரை திருப்திப்படுத்த வேண்டும்” என்பதை பரிபூரணமாக்கப்பட்டவர்கள் எப்போதும் விசுவாசிக்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

450. அவர் பரிபூரணமாக்கப்பட்ட பிறகு, அவருடைய வாழ்க்கையின் முடிவில், பேதுரு, “தேவனே! நான் இன்னும் சில வருடங்கள் வாழ்ந்தால், உம்முடைய தூய்மையானதும் ஆழமானதுமான அன்பை அடைந்திட விரும்புகிறேன்”, என்று சொன்னார். அவர் சிலுவையில் அறையப்படும் தருணத்தில், “தேவனே! உம் நேரம் இப்போது வந்திருக்கிறது. எனக்காக நீர் ஏற்பாடு செய்த நேரம் வந்துவிட்டது. நான் உமக்காக சிலுவையில் அறையப்பட வேண்டும், இந்த சாட்சியை நான் உமக்காக பகிர வேண்டும், மேலும் என் அன்பு உம் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்றும், அது மேலும் தூய்மையானதாக மாற முடியும் என்றும் விசுவாசிக்கிறேன். இன்று, உமக்காக மரித்து, உமக்காக சிலுவையில் அறையப்பட்டிருப்பது எனக்கு ஆறுதலளிக்கிறது, உறுதியளிக்கிறது, ஏனென்றால் உமக்காக சிலுவையில் அறையப்படுவதையும் உமது சித்தங்களை நிறைவேற்றுவதையும் விட வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்காது, என் ஜீவனை உமக்கு அர்பணிப்பதற்காக, என்னையே உமக்குக் கொடுக்க முடியும். ஓ தேவனே! நீர் மிகவும் அழகானவர்! நீர் என்னை வாழ அனுமதிப்பதாக இருந்தால், நான் உம்மை இன்னும் அதிகமாக நேசிக்கத் தயாராக இருப்பேன். என் ஜீவனுள்ள வரை, நான் உம்மை நேசிப்பேன். உம்மை இன்னும் ஆழமாக நேசிக்க விரும்புகிறேன். நான் பாவம் செய்ததாலும் நான் நீதிமானாக இல்லாததாலும் நீர் என்னை நியாயந்தீர்க்கவும், என்னைத் தண்டிக்கவும் செய்து எனக்கு வாய்ப்பளியுங்கள். உமது நீதியான மனநிலை எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இது எனக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறது, ஏனென்றால் என்னால் உம்மை இன்னும் ஆழமாக நேசிக்க முடிகிறது, மேலும் நீர் என்னை நேசிக்காவிட்டாலும் இந்த வழியில் உம்மை நேசிக்க நான் தயாராக இருக்கிறேன். உனது நீதியான மனநிலையைப் பார்க்க நான் தயாராக இருக்கிறேன், ஏனென்றால் இது சாராம்சமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு எனக்கு அதிகமாக உதவுகிறது. நான் இப்போதைய என் வாழ்க்கையை மிகவும் சாராம்சமுள்ளதாக உணர்கிறேன், ஏனென்றால் நான் உமக்காக சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன், உமக்காக மரிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆனாலும் நான் திருப்தி அடைந்ததாக உணரவில்லை, ஏனென்றால் உம்மைக்குறித்து நான் மிகவும் குறைவாகவே அறிவேன், உம்முடைய சித்தங்களை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியாது என்பதையும், உமக்கு மிகக் குறைவாக திருப்பிச் செலுத்தியதையும் நான் அறிந்திருக்கிறேன். என் வாழ்க்கையில், என்னை முழுமையாக உம்மிடம் திருப்பித் தர என்னால் இயலாவில்லை. நான் அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன். இந்த தருணத்தை நான் திரும்பிப் பார்க்கும்போது, நான் உம்மிடம் மிகவும் கடன்பட்டிருப்பதாக உணர்கிறேன், என் எல்லா குற்றங்களையும், நான் உமக்குத் திருப்பிச் செலுத்தாத எல்லா அன்பையும் ஈடுசெய்ய இந்த தருணத்தைத் தவிர எனக்கு வேறென்ன இருக்கிறது”, என்று அவர் தன் இருதயத்தில் ஜெபித்தார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

451. மனிதன் உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்கு தொடர வேண்டும், அவனுடைய தற்போதைய சூழ்நிலைகளில் திருப்தி அடைந்திருக்கக்கூடாது. பேதுருவின் சாயலில் வாழ்ந்திட, அவன் பேதுருவின் அறிவையும் அனுபவங்களையும் பெற்றிருக்க வேண்டும். மனிதன் உயர்ந்ததும் ஆழமானதுமான காரியங்களைத் தொடர வேண்டும். அவர் தேவனுக்கான ஆழமான, தூய்மையான அன்பையும், மதிப்பும் அர்த்தமும் கொண்ட வாழ்க்கையையும் தொடர வேண்டும். இது மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது. அப்போதுதான் மனிதன் பேதுருவைப் போலவே இருப்பான். நேர்மறையான பக்கத்தில் உன் பிரவேசத்தை நோக்கி செயலில் ஈடுபடுவதில் நீ கவனம் செலுத்த வேண்டும், மேலும் ஆழ்ந்த, மிகவும் குறிப்பிட்ட மற்றும் மிகவும் நடைமுறை உண்மைகளைப் புறக்கணிக்கும்போது, தற்காலிக சுலபத்திற்காக உன்னைப் பின்வாங்க அனுமதிக்கக்கூடாது. உன் அன்பு நடைமுறையானதாக இருக்க வேண்டும், மேலும் மிருகத்தின் வித்தியாசமில்லாத இந்த மோசமான, கவலையற்ற வாழ்க்கையிலிருந்து உன்னை விடுவிப்பதற்கான வழிகளை நீ கண்டுபிடிக்க வேண்டும். நீ உண்மையுள்ள ஒரு வாழ்க்கையை, மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ வேண்டும், மேலும் உன்னை நீயே முட்டாளாக்கவோ அல்லது உன் ஜீவனை விளையாடுவதற்கான ஒரு பொம்மையைப் போல நடத்தவோ கூடாது. தேவனை நேசிக்க விரும்பும் அனைவருக்கும், அடைந்திட முடியாத சத்தியங்களும் இல்லை, அவர்களால் உறுதியாக நிற்க முடியாத நீதியும் இல்லை. உன் வாழ்க்கையை நீ எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு நீ தேவனை நேசிக்க வேண்டும் மற்றும் அவருடைய சித்தத்தை பூர்த்தி செய்ய இந்த அன்பைப் பயன்படுத்த வேண்டும்? உன் வாழ்க்கையில் இதைவிட பெரிய காரியம் எதுவுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ அத்தகைய ஆசைகளையும் விடாமுயற்சியையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் முதுகெலும்பு இல்லாதவர்களைப் போலவும், பலவீனமானவர்களைப் போலவும் இருக்கக்கூடாது. ஒரு உண்மையுள்ள வாழ்க்கையையும் உண்மையுள்ள யதார்த்தம்களையும் எவ்வாறு அனுபவிப்பது என்பதை நீ கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் உங்களை அந்த வகையில் அக்கறையில்லாமல் நடத்தக்கூடாது. நீ அதை உணர்வதற்குள், உங்கள் வாழ்க்கை உன்னைக் கடந்து சென்றுவிடும். அதன் பிறகு, தேவனை நேசிக்க உனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா? மனிதன் மரித்த பிறகு தேவனை நேசிக்க முடியுமா? நீ பேதுருவைப் போல அதே ஆர்வங்களையும் மனசாட்சியையும் பெற்றிருக்க வேண்டும். உன்னுடைய வாழ்க்கை உண்மையுள்ளதாக இருக்க வேண்டும், நீயே உன் வாழ்க்கையில் விளையாடக் கூடாது. ஒரு மனிதனாக, தேவனைப் பின்தொடரும் ஒருவனாக, நீ உன் வாழ்க்கையை எவ்வாறாக நடத்த வேண்டும், தேவனுக்கு உன்னை எவ்வாறாக அர்பணிக்க வேண்டும், தேவன் மீது உனக்கு உண்மையுள்ள விசுவாசம் எவ்வாறாக இருக்க வேண்டும், நீ தேவனை நேசிப்பதால், எப்படி அவரை மிகவும் தூய்மையான, அழகான மற்றும் நன்மையான முறையில் நேசிக்க வேண்டும் என்பதை உன்னால் கவனமாக பரிசீலிக்க முடிய வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

452. ஜனங்கள் தேவனை நேசிக்க விரும்பினால், அவர்கள் தேவனின் அருமையை ருசித்து தேவனின் அருமையைக் காண வேண்டும். அப்போதுதான் தேவனை நேசிக்கும் ஒரு இருதயமும், தேவனுக்காக விசுவாசமாக தங்களைத் தாங்களே கொடுக்க ஜனங்களைத் தூண்டும் ஒரு இருதயமும் அவர்களில் எழுப்பப்பட்டிருக்க முடியும். தேவன் ஜனங்களை வார்த்தைகளாலும் வெளிப்பாடுகளாலும் அல்லது அவர்களின் கற்பனையினாலும் அவரை நேசிக்க வைப்பதில்லை, மேலும் தன்னை நேசிக்கும்படி ஜனங்களை அவர் கட்டாயப்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக, அவர் தங்களுடைய விருப்பப்படி அவரை நேசிக்க அனுமதிக்கிறார், மேலும் அவருடைய கிரியையிலும் சொற்களிலும் அவருடைய அருமையைக் காண அவர் அவர்களை அனுமதிக்கிறார், அதன் பிறகு அவர்களில் தேவன் மீதான் அன்பு இருக்கிறது. இந்த வழியில் மட்டுமே ஜனங்கள் உண்மையிலேயே தேவனுக்கு சாட்சி அளிக்க முடியும். மற்றவர்களால் அவ்வாறு செய்யும்படி அவர்கள் வற்புறுத்தப்படுவதால், ஜனங்கள் தேவனை நேசிப்பதில்லை, அல்லது இது ஒரு தருணத்தின் உணர்ச்சி தூண்டுதலும் அல்ல. அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள், ஏனென்றால் அவருடைய அருமையைக் கண்டிருக்கிறார்கள், ஜனங்கள் அன்பிற்கு தகுதியானவை அநேகம் அவரிடத்தில் இருப்பதைக் கண்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனின் இரட்சிப்பு, ஞானம் மற்றும் அதிசயமான செயல்களைக் கண்டிருக்கிறார்கள்—இதன் விளைவாக அவர்கள் உண்மையிலேயே தேவனைப் புகழ்கிறார்கள் உண்மையிலேயே அவருக்காக ஏங்குகிறார்கள், தேவனைப் பெறாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது என்ற ஒரு உணர்வு அவர்களில் எழுந்திருக்கிறது. தேவனுக்கு உண்மையாக சாட்சியளிப்பவர்கள் அவருக்கு ஒரு பெரும் சாட்சி அளிக்கக் காரணம், அவர்களுடைய சாட்சி உண்மையான அறிவின் அஸ்திபாரத்திலும் மற்றும் தேவனைக்குறித்த உண்மையான ஏக்கத்திலும் உள்ளது. இத்தகைய சாட்சி ஒரு உணர்ச்சித் தூண்டுதலின் படி வழங்கப்படாமல் அவர்களுடைய தேவனைப் பற்றிய அறிவு மற்றும் அவருடைய மனநிலையின் படி வழங்கப்படுகிறது. அவர்கள் தேவனை அறிந்திருப்பதால், அவர்கள் நிச்சயமாக தேவனுக்கு சாட்சி அளிக்க வேண்டும் என்றும், தேவனுக்காக ஏங்குகிற அனைவரும் தேவனை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தேவனின் அருமை மற்றும் அவருடைய யதார்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஜனங்களுக்கு தேவன் மீதுள்ள அன்பைப் போலவே, அவர்களின் சாட்சியும் தன்னிச்சையானது. இது உண்மையானது மற்றும் உண்மையான முக்கியத்துவத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளது. இது செயலற்ற அல்லது வெற்று மற்றும் அர்த்தமற்றது அல்ல. தேவனை உண்மையாக நேசிப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் அதிக மதிப்பும் அர்த்தமும் இருக்கிற காரணமும், அவர்கள் தேவனை உண்மையாக நம்புவதற்கான காரணமும் என்னவென்றால், இந்த ஜனங்கள் தேவனின் வெளிச்சத்தில் வாழ முடிகிறது, மேலும் தேவனின் கிரியை மற்றும் நிர்வகித்தலுக்காக வாழ முடிகிறது. அவர்கள் இருளில் வாழாமல், வெளிச்சத்தில் வாழ்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம். அவர்கள் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழவில்லை, ஆனால் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழுகிறார்கள். தேவனை நேசிப்பவர்கள் மட்டுமே தேவனுக்கு சாட்சியளிக்க முடியும், அவர்கள் மட்டுமே தேவனின் சாட்சிகள், அவர்கள் மட்டுமே தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள், அவர்களால் மட்டுமே தேவனுடைய வாக்குறுதிகளைப் பெற முடியும். தேவனை நேசிப்பவர்கள் தேவனுக்கு நெருங்கியவர்கள். அவர்கள் தேவன் பிரியமாயிருக்கிற ஜனங்கள், அவர்கள் தேவனோடு சேர்ந்து ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும். இது போன்றவர்கள் மட்டுமே நித்தியமாக வாழ்வார்கள், அவர்கள் மட்டுமே தேவனின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் எப்போதும் வாழ்வார்கள். ஜனங்களால் நேசிக்கப்படவே தேவன் இருக்கிறார், அவர் எல்லா ஜனங்களின் அன்பிற்கும் தகுதியானவர், ஆனால் எல்லா ஜனங்களும் தேவனை நேசிக்க வல்லவர்கள் அல்ல, எல்லா ஜனங்களும் தேவனுக்கு சாட்சியளிக்கவும் தேவனுடன் அதிகாரத்தை வைத்திருக்கவும் முடியாது. அவர்கள் தேவனைப் பற்றி சாட்சியளிக்கவும், தேவனின் பணிக்காக தங்கள் எல்லா முயற்சிகளையும் அர்ப்பணிக்கவும் முடிந்ததால், தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் யாராலும் துணிந்து எதிர்க்கப்படாமல் வானத்தின் கீழ் எங்கும் நடக்க முடியும், மேலும் அவர்கள் பூமியில் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் தேவனின் எல்லா ஜனங்களையும் ஆட்சி செய்யலாம். இந்த ஜனங்கள் உலகம் முழுவதும் இருந்து ஒன்றாக வந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள் மற்றும் வெவ்வேறு தோல் வண்ணங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் இருப்பதற்கு ஒரே அர்த்தம் உண்டு. அவர்கள் அனைவருக்கும் தேவனை நேசிக்கும் ஒரு இருதயம் இருக்கிறது, அவர்கள் அனைவரும் ஒரே சாட்சியை அளிக்கிறார்கள், ஒரே தீர்மானமும் ஒரே விருப்பமும் கொண்டவர்கள். தேவனை நேசிப்பவர்கள் உலகம் முழுவதும் சுதந்திரமாக நடக்க முடியும், மேலும் தேவனுக்கு சாட்சி அளிப்பவர்கள் பிரபஞ்சத்தின் குறுக்கே பயணிக்க முடியும். இந்த ஜனங்கள் தேவனால் நேசிக்கப்படுகிறார்கள், அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து

முந்தைய: I. விசுவாசத்தில் ஒருவருடைய பாதையை தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து

அடுத்த: K. தேவனைப் பற்றிய அறிவை அடைவது எப்படி என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக