G. ஒருவருடைய கடமையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து

404. நமது முழுச் சரீரமும் தேவனிடமிருந்து வந்துள்ளதாலும் மற்றும் அது தேவனுடைய ஆளுகையின் காரணமாகவே ஜீவிப்பதாலும், மனித இனத்தின் அங்கத்தினர்களாகிய, பக்தியுள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே தேவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக நமது மனதையும் சரீரத்தையும் ஒப்புக்கொடுப்பது நமது பொறுப்பும் கடமையுமாகும். நமது மனதும் சரீரமும் தேவனுடைய கட்டளைக்காகவும், மனுக்குலத்தின் நீதியான காரணத்திற்காகவும் ஒப்புக்கொடுக்கப்படவில்லை என்றால், தேவனுடைய கட்டளைக்காக இரத்த சாட்சியாக மரித்தவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நமது ஆத்துமாக்கள் தகுதியற்றவையாகவும், சகலத்தையும் நமக்குத் தந்தருளிய தேவனுக்கு மிகவும் தகுதியற்றவையாகவும் இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து

406. மனுஷனின் கடமைக்கும், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனா அல்லது சபிக்கப்பட்டவனா என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடமை என்பது மனுஷன் நிறைவேற்ற வேண்டியது; அது அவனுக்குப் பரலோகம் கொடுத்த கிரியை, மேலும் அது பிரதியுபகாரம், நிபந்தனைகள் அல்லது காரணங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது. அப்போதுதான் அவன் தனது கடமையைச் செய்கிறான். ஆசீர்வதிக்கப்படுவது என்பது, யாரோ ஒருவன் பரிபூரணனாகி, நியாயத்தீர்ப்பை அனுபவித்தபின் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறான் என்பதாகும். சபிக்கப்படுவது என்பது, ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்தபின்பும் ஒருவனின் மனநிலை மாறாதபோதும், அவன் பரிபூரணமாக்கப்படுவதை அனுபவிக்காமல் தண்டிக்கப்படும்போதும் வழங்கப்படுவது என்பதாகும். ஆனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது சபிக்கப்பட்டவர்களாகவோ இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷர் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும், அவர்களால் செய்ய முடிந்ததைச் செய்ய வேண்டும்; தேவனைப் பின்தொடரும் ஒருவன் செய்ய வேண்டியக் குறைந்தபட்ச விஷயம் இது. நீ ஆசீர்வதிக்கப்படுவதற்காக மட்டுமே உன் கடமையைச் செய்யக்கூடாது, மேலும் சபிக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் நீ செயல்பட மறுக்கவும் கூடாது. இந்த ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன்: மனுஷனுடைய கடமையின் செயல்திறன் தான் அவனது கடமையின் முக்கிய விஷயமாகும், அவனால் தனது கடமையைச் செய்ய இயலாது என்றால், இதுவே அவனது கலகத்தன்மையாகும். தனது கடமையைச் செய்யும் செயல்முறையின் மூலம்தான் மனுஷன் படிப்படியாக மாற்றப்படுகிறான், மேலும் இந்த செயல்முறையின் மூலம்தான் அவன் தன் விசுவாசத்தை நிரூபிக்கிறான். எனவே, நீ எவ்வளவு அதிகமாக உன் கடமையை செய்கிறாயோ, அவ்வளவு சத்தியத்தை நீ பெறுவாய், மேலும் உன் வெளிப்பாடும் மிகவும் உண்மையானதாகிவிடும். தங்கள் கடமையைச் செய்வதில் சத்தியத்தைத் தேடாதவர்கள் இறுதியில் அகற்றப்படுவார்கள், ஏனென்றால் அத்தகையவர்கள் சத்தியத்தின் நடைமுறையில் தங்கள் கடமையைச் செய்ய மாட்டார்கள், தங்கள் கடமையை நிறைவேற்றுவதிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்கள் மாறாமல் இருப்பவர்கள், அதனால் சபிக்கப்படுவார்கள். அவர்களின் வெளிப்பாடுகள் தூய்மையற்றவை மட்டுமல்ல, அவர்கள் வெளிப்படுத்தும் அனைத்தும் பொல்லாதவையும் கூட.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து

408. தேவன் தம்மிடம் ஒப்படைத்ததை ஒரு மனிதன் ஏற்றுக் கொள்ளும்போது, அவர்களுடைய கிரியைகள் நன்மையானதா தீமையானதா என்பதையும், அந்த மனிதன் கீழ்ப்படிந்தானா இல்லையா என்பதையும், அந்த மனிதன் தேவனுடைய சித்தத்தை பூர்த்திசெய்தானா இல்லையா என்பதையும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அந்த தரத்தை பூர்த்திசெய்கிறதா இல்லையா என்பதையும் தீர்மானிப்பதற்கான ஒரு தரத்தை தேவன் கொண்டிருக்கிறார். ஒரு மனிதனின் இருதயத்தின்பால் தேவன் அக்கறை காட்டுகிறார், மேலோட்டமாக, அவர்களுடைய கிரியைகளில் அக்கறை காட்டுவதில்லை. ஒருவன் எவ்வாறு செய்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் எதையாவது செய்யும் வரை தேவன் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதாக அது இல்லை. அது தேவனைப் பற்றி ஜனங்கள் கொண்டிருக்கும் தவறான புரிதல் ஆகும். தேவன் விஷயங்களின் இறுதி முடிவை மட்டுமல்ல, ஒரு நபரின் இருதயம் எப்படி இருக்கிறது மற்றும் விஷயங்களின் வளர்ச்சியின் போது ஒரு நபரின் மனநிலை எவ்வாறாக இருக்கிறது என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் மற்றும் அவர்களுடைய இருதயத்தில் கீழ்ப்படிதல், அக்கறை மற்றும் தேவனை திருப்திப்படுத்தும் விருப்பம் உள்ளனவா என்பதை அவர் கவனிக்கிறார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

413. இன்று, நீங்கள் அடைய வேண்டியவை கூடுதலான கோரிக்கைகள் அல்ல, ஆனால் மனுஷனின் கடமையாகவும் மற்றும் அனைத்து மக்களாலும் செய்ய வேண்டியவையாகவும் இருக்கின்றன. நீங்கள் உங்கள்கடமையைச் செய்யவோ அல்லது அதை நன்றாகச் செய்யவோ இயலாதவர்களாய் இருக்கிறீர்கள் என்றால், பின்பு நீங்கள் உங்கள் மீது தொல்லையைக் கொண்டுவரவில்லையா? நீங்கள் மரணத்தோடு ஊடாடுவதில்லையா? எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் பெறுவோம் என்று நீங்கள் இன்னமும் எப்படி எதிர்பார்க்க முடியும்? தேவனுடைய கிரியை மனிதகுலத்தின் நிமித்தமாகச் செய்யப்படுகின்றது, மற்றும் மனுஷனின் ஒத்துழைப்பு தேவனின் நிர்வகித்தலின் நிமித்தமாக வழங்கப்படுகிறது. தேவன் தாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தபின், மனுஷன் தனது நடைமுறையில் விருப்பத்துடன் இருக்க வேண்டும், மற்றும் தேவனுடன் ஒத்துழைக்க வேண்டும். தேவனுடைய கிரியையில், மனுஷன் எந்த முயற்சியையும் இடையூறாக விட்டுவைக்கக் கூடாது, அவன் தனது விசுவாசத்தை அளிக்க வேண்டும், மற்றும் எண்ணற்ற கருத்துக்களில் ஈடுபடாமல், அல்லது செயலற்று அமராமல் மற்றும் மரணத்திற்குக் காத்திராமல் இருக்க வேண்டும். தேவன் தம்மையே மனுஷனுக்காகத் தியாகம் பண்ணக் கூடும், எனவே மனுஷன் தன் விசுவாசத்தைத் தேவனுக்கு ஏன் வழங்கக் கூடாது? மனுஷனை நோக்கித் தேவன் ஒரே இருதயமும் சிந்தையும் கொண்டிருக்கின்றார், எனவே மனுஷன் ஏன் ஒரு சிறிய ஒத்துழைப்பை வழங்கக் கூடாது? தேவன் மனிதகுலத்திற்காகக் கிரியை செய்கின்றார், எனவே தேவனின் நிர்வகித்தலினிமித்தம் மனிதன் தனது கடமையில் சிலவற்றை ஏன் செய்யக் கூடாது? தேவனுடைய கிரியை இவ்வளவு தூரம் வந்திருக்கின்றது, இருப்பினும் இன்னமும் நீங்கள் பார்க்கிறீர்கள், ஆனால் செயல்படுவதில்லை, நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால் நகருவதில்லை. இப்படிப்பட்ட ஜனங்கள் அழிவின் இலக்குகளாக இருப்பதில்லையா? தேவன் ஏற்கனவே தமக்குரிய எல்லாவற்றையும் மனிதனுக்காக அர்ப்பணித்துள்ளார், ஆகவே, இன்று, மனிதன் தன் கடமையை ஆர்வத்துடன் செய்ய இயலாதவனாக இருப்பது ஏன்? தேவனைப் பொறுத்த மட்டில், அவருடைய கிரியையே அவருடைய முதல் முன்னுரிமையாக இருக்கின்றது, அவருடைய நிர்வாகக் கிரியை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், பூர்த்தி செய்வதும் அவனுடைய முதல் முன்னுரிமையாக இருக்கின்றது. இதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

414. மனுஷனுடைய கடமையின் செயல்திறனானது, உண்மையில், மனுஷனுக்குள் ஆழமாக இருக்கும் அனைத்தையும், அதாவது மனுஷனுக்கு சாத்தியமானதை நிறைவேற்றுவதாகும். அப்போதுதான் அவனது கடமை நிறைவேற்றப்படுகிறது. மனுஷனின் ஊழியத்தின் போது ஏற்படும் குறைபாடுகள் படிப்படியாக முற்போக்கான அனுபவம் மற்றும் அவனது நியாயத்தீர்ப்பின் செயல்முறை மூலம் குறைக்கப்படுகின்றன; அவை மனுஷனின் கடமைக்குத் தடையாகவோ அல்லது அதை பாதிக்கவோ இல்லை. தங்கள் ஊழியத்தில் குறைபாடுகள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஊழியம் செய்வதையோ அல்லது கீழ்ப்படிவதையோ நிறுத்திவிட்டு பின்வாங்குவோர், அனைவரையும் விட மிகவும் கோழைத்தனமானவர்கள் ஆவர். ஊழியத்தின் போது வெளிப்படுத்த வேண்டியதை ஜனங்கள் வெளிப்படுத்தவோ அல்லது அவர்களுக்கு இயல்பாகவே சாத்தியமானதை அடையவோ முடியாமல், அதற்குப் பதிலாக முட்டாள்தனமாக செயல்பட்டால், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்கு இருக்க வேண்டிய செயல்பாட்டை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று அர்த்தம். அத்தகைய நபர்கள் “பிரயோஜனமில்லாதவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள்; அவர்கள் பயனற்றவர்கள் ஆவர். அத்தகையவர்களை எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள் என்று முறையாக அழைக்க முடியும்? அவர்கள் வெளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆனால் உள்ளே அழுகிப்போன சீர்கெட்ட குணம் கொண்ட ஜீவன்கள் அல்லவா? ஒரு மனுஷன் தன்னை தேவன் என்று அழைத்துக் கொண்டு, தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தவோ, தேவனின் கிரியையைச் செய்யவோ, அல்லது தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாவிட்டால், அவன் சந்தேகத்திற்கு இடமின்றி தேவனே அல்ல. ஏனென்றால் அவனிடம் தேவனின் சாராம்சம் இல்லை, மேலும் தேவனால் இயல்பாகவே அடையக்கூடியதும் அவனுக்குள் இல்லை. மனுஷன் அவன் இயல்பாக அடையக்கூடியதை இழந்தால், அவனை இனி மனுஷனாகக் கருத முடியாது, மேலும் அவன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனாக இருக்கவோ அல்லது தேவனுக்கு முன்பாக வந்து அவருக்கு ஊழியம் செய்யவோ தகுதியற்றவன் ஆகிறான். மேலும், அவன் தேவனின் கிருபையைப் பெறவோ அல்லது தேவனால் கவனிக்கப்படவோ, பாதுகாக்கப்படவோ, பரிபூரணப்படுத்தப்படவோ தகுதியற்றவன் ஆகிறான். தேவனிடத்தில் விசுவாசத்தை இழந்த பலர் தேவனின் கிருபையையும் இழக்கிறார்கள். அவர்கள் செய்த தவறான செயல்களை அவர்கள் வெறுக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தேவனின் வழி தவறானது என்ற கருத்தை அவர்கள் வெட்கமின்றி பிரசங்கிக்கிறார்கள், மேலும், கலகக்காரர்கள் தேவன் இருப்பதையே மறுக்கிறார்கள். அத்தகைய கலகத்தனத்தைக் கொண்ட அத்தகைய ஜனங்கள் எவ்வாறு தேவனின் கிருபையை அனுபவிக்கும் உரிமையைப் பெறுவார்கள்? தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் தேவனுக்கு எதிராக மிகுந்த கலகக்காரர்களாக இருக்கிறார்கள், மேலும் அவருக்குக் கடன்பட்டிருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் முகந்திரும்பி, தேவன் தவறானவர் என்று கடுமையாகத் திட்டுகிறார்கள். அத்தகைய மனுஷன் பரிபூரணராக ஆவதற்கு எப்படித் தகுதியானவர்? இது அகற்றப்பட்டு தண்டிக்கப்படுவதற்கான முன்னோடி அல்லவா? தேவனுக்கு முன்பாக தங்கள் கடமையைச் செய்யாத ஜனங்கள் ஏற்கனவே மிகக் கொடூரமான குற்றங்களுக்கான குற்றவாளிகள் ஆவர், அந்தக் குற்றங்களுக்கு மரணம் கூட போதுமான தண்டனை அல்ல, ஆனாலும் தேவனுடன் வாக்குவாதம் செய்து அவருக்கு எதிராக தங்களை ஒப்பிட்டுக் கொள்ள அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாக இருக்கின்றனர். அத்தகையவர்களை பரிபூரணமாக்குவதன் மதிப்பு தான் என்ன? ஜனங்கள் தங்கள் கடமையை நிறைவேற்றத் தவறும்போது, அவர்கள் குற்ற உணர்ச்சியையும் கடமை தவறியதையும் உணர வேண்டும்; அவர்கள் தங்கள் பலவீனம் மற்றும் பயனற்ற தன்மை, தங்கள் கலகத்தன்மை மற்றும் சீர்கெட்ட தன்மை ஆகியவற்றை வெறுக்க வேண்டும், மேலும், தங்கள் ஜீவனை தேவனுக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவனை உண்மையாக நேசிக்கும் சிருஷ்டிப்புக்களாக இருப்பார்கள், அத்தகையவர்கள் மட்டுமே தேவனின் ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் அனுபவித்து, அவரால் பரிபூரணமாக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள். உங்களில் பெரும்பாலோர் யார்? உங்களிடையே வாழும் தேவனை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்? நீங்கள் உங்கள் கடமைகளை அவருக்கு முன்பாக எவ்வாறு செய்தீர்கள்? உங்கள் சொந்த ஜீவிதத்தைப் பணயம் வைத்து கூட, நீங்கள் செய்ய அழைக்கப்பட்ட அனைத்தையும் செய்துள்ளீர்களா? நீங்கள் என்ன தியாகம் செய்தீர்கள்? நீங்கள் என்னிடமிருந்து அதிகம் பெறவில்லையா? உங்களால் பகுத்தறிய முடியுமா? நீங்கள் எனக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறீர்கள்? நீங்கள் எனக்கு எவ்வாறு ஊழியம் செய்தீர்கள்? நான் உங்களுக்கு எவ்வளவு வழங்கியுள்ளேன், உங்களுக்காக என்னவெல்லாம் செய்துள்ளேன்? அவற்றையெல்லாம் நீங்கள் அளந்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் இதை நியாயந்தீர்த்து, உங்களுக்குள் இருக்கும் சிறிய மனசாட்சியுடன் இதை ஒப்பிட்டீர்களா? உங்கள் சொற்களும் செயல்களும் யாருக்கு தகுதியானவை? உங்களுடைய இத்தகைய சிறிய தியாகம் நான் உங்களுக்கு வழங்கிய எல்லாவற்றிற்கும் ஈடானதா? எனக்கு வேறு வழியில்லாமல் முழு மனதுடன் உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன், ஆனாலும் நீங்கள் பொல்லாத நோக்கங்களைக் கொண்டிருக்கிறீர்கள், என்னை நோக்கி அரை மனதுடன் இருக்கிறீர்கள். அதுவே உங்கள் கடமையின் அளவு, உங்கள் ஒரே செயல்பாடு. அப்படித்தானே? ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் கடமையைச் செய்ய நீங்கள் முற்றிலும் தவறிவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக எப்படிக் கருதுவது? நீங்கள் எதை வெளிப்படுத்துகிறீர்கள் மற்றும் எவ்வாறு ஜீவிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டீர்கள், ஆனால் நீங்கள் தேவனின் சகிப்புத்தன்மையையும் ஏராளமான கிருபையையும் பெற முற்படுகிறீர்கள். அத்தகைய கிருபை உங்களைப் போன்ற பயனற்றவர்களுக்காகவும், கீழ்த்தரமானவர்களுக்காகவும் தயாரிக்கப்படவில்லை, ஆனால் எதையும் கேட்காதவர்களுக்காகவும் மகிழ்ச்சியுடன் தியாகம் செய்யாதவர்களுக்காகவும் தயாரிக்கப்பட்டவை. உங்களைப் போன்றவர்கள், உங்களைப்போன்ற பிரயோஜனமில்லாதவர்கள், பரலோகத்தின் கிருபையை அனுபவிக்க முற்றிலும் தகுதியற்றவர்கள். உங்கள் நாட்களில் கஷ்டங்களும் இடைவிடாத தண்டனையும் மட்டுமே இருக்கும்! உங்களால் என்னிடம் உண்மையாக இருக்க முடியாவிட்டால், உங்கள் விதி துன்பங்களில் ஒன்றாக இருக்கும். எனது வார்த்தைகளுக்கும், எனது கிரியைகளுக்கும் உங்களால் பொறுப்பேற்க முடியாவிட்டால், உங்கள் முடிவு தண்டனைகளில் ஒன்றாக இருக்கும். எல்லா கிருபை, ஆசீர்வாதங்கள் மற்றும் ராஜ்யத்தின் அற்புதமான ஜீவிதம் ஆகியவற்றிற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. இதுதான் நீங்கள் சந்திக்கத் தக்க முடிவு மற்றும் உங்கள் சொந்த செய்கையின் விளைவும் ஆகும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து

முந்தைய: F. தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது மற்றும் கீழ்ப்படிவது என்பது குறித்து

அடுத்த: H. தேவனுக்கு பயந்து, தீமையை விட்டு விலகுவது எப்படி என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக