E. ஒரு நேர்மையான நபராக இருப்பது எப்படி என்பது குறித்து

384. நேர்மையானவர்களைத் தேவன் விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். பொருள் அடிப்படையில், தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார், எனவே அவருடைய வார்த்தைகளை எப்போதும் நம்பலாம்; அதுபோலவே அவருடைய செயல்கள் குற்றமற்றவை மற்றும் நிச்சயமானவைகளாக இருக்கின்றன, அதனால் தான் தம்முடன் முற்றிலும் நேர்மையானவர்களாக இருக்கிறவர்களைத் தேவன் விரும்புகிறார். நேர்மை என்பது உங்களுடைய இருதயத்தைத் தேவனுக்குக் கொடுப்பது, எல்லாவற்றிலும் தேவனுடன் உண்மையாக இருப்பது, எல்லாவற்றிலும் அவருடன் வெளிப்படையாக இருப்பது, உண்மைகளை ஒருபோதும் மறைக்காமல் இருப்பது, உங்களுக்கு மேலாக மற்றும் கீழாக உள்ளவர்களை ஏமாற்ற முயற்சிக்காமல் இருப்பது, மற்றும் தேவனிடத்தில் தயவைப் பெறுவதற்காக மட்டுமே காரியங்களைச் செய்யாமல் இருப்பதுமாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நேர்மையாக இருப்பது என்பது உங்களுடைய செயல்களிலும் வார்த்தைகளிலும் தூய்மையாக இருப்பது, மற்றும் தேவனையும் மனிதனையும் ஏமாற்றாமல் இருப்பதுமாகும். நான் என்ன சொல்கிறேன் என்பது மிகவும் எளிமையானது, ஆனால் உங்களுக்கு இது இரு மடங்கு கடினமானதாக இருக்கிறது. பலர் நேர்மையாகப் பேசுவதையும் செயல்படுவதையும் விட நரகத்திற்கு தண்டிக்கப்படுவதே மேலானதாக இருக்கும். நேர்மையற்றவர்களுக்காக நான் வேறு வழிமுறை வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமில்லை. நீங்கள் நேர்மையாக இருப்பது உங்களுக்கு எவ்வளவு கடினம் என்பதை மெய்யாகவே நான் நன்கு அறிவேன். ஏனெனில் நீங்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், உங்கள் சொந்த சிறிய அளவுகோல் கொண்டு மக்களை அளவிடுவதில் மிகவும் சிறந்தவர்கள், இது எனது வேலையை மிகவும் எளிமையாக்குகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இரகசியங்களை உங்கள் மார்போடு கட்டியணைத்துக் கொள்வதால், என் வார்த்தைகளில் உங்கள் நம்பிக்கையின்படியே நான் உங்களை ஒவ்வொருவராக பேரழிவின் அக்கினிக்குள் அனுப்புவேன், அதன்பிறகு நீங்கள் மரித்தவர்களாகலாம். இறுதியில், “தேவன் உண்மையுள்ள தேவன்” என்கிற வார்த்தைகளை உங்கள் வாயிலிருந்து நான் வர கைப்பற்றுவேன், அதன்பின் நீங்கள் உங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு, “மனிதனின் இதயம் வஞ்சகமானது!” என்று புலம்புவீர்கள். இந்த நேரத்தில் உங்களது மனநிலை என்னவாக இருக்கும்? நீங்கள் இப்போது இருப்பதைப்போல வெற்றிகரமாக இருக்கமாட்டீர்கள் என்று நான் கற்பனைசெய்துப் பார்க்கிறேன். நீங்கள் இப்போது இருப்பதைப் போலவே “ஆழ்ந்த நிலையிலும் மற்றும் எளிதில் புரிந்துக்கொள்ளமுடியாத” நபராகவும் இருப்பீர்கள். தேவனுடைய சமூகத்தில், சிலர் அனைத்திலும் முதன்மையானவர்கள் மற்றும் சரியானவர்கள், அவர்கள் “நன்னடத்தையுடன்” இருப்பதற்கு வலிகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் தங்களுடைய திறந்த நச்சுப்பற்களால், ஆவியானவரின் சமூகத்தில் தங்கள் நகங்களால் நாலாபுறமும் கீறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களை நீங்கள் நேர்மையானவர்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுவீர்களா? நீ ஒரு மாயக்காரனாக இருந்தால், “தனிப்பட்டவர்களுக்கிடையேயான உறவுகளில்” நீ திறமையான ஒருவராக இருந்தால், நிச்சயமாக நீ தேவனுடன் அற்பமான முயற்சியை செய்கிறாய் என்று நான் சொல்கிறேன். உன்னுடைய வார்த்தைகள் சாக்குபோக்குகள் மற்றும் பயனற்ற நியாயங்களுடன் புதிராக இருந்தால், நீ சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் வெறுக்கத்தக்க ஒரு நபர் என்று நான் சொல்கிறேன். நீ வெளிப்படையாக பகிர்ந்துக்கொள்ளத் தயங்குகிற பல இரகசியங்கள் உனக்கு இருக்குமானால், உன் இரகசியங்களையும் உன் சிரமங்களையும் மற்றவர்கள் வெளிச்சத்தின் வழியைத் தேடுவதற்கு முன்பாக நீ மிகவும் தயங்கி வெறுக்கிறாய் என்றால், நீ இரட்சிப்பை எளிதில் அடைய முடியாதபடிக்கு, இருளிலிருந்து எளிதில் வெளியே வராத ஒருவராகவே இருக்கிறாய். சத்தியத்தின் வழியைத்தேடும் காரியம் உன்னை மிகவும் மகிழ்விக்கிறது என்றால், நீ எப்போதும் வெளிச்சத்தில் வசிக்கும் ஒருவராக இருக்கிறாய். தேவனுடைய வீட்டில் ஒரு சேவை செய்பவராக இருப்பதில் நீ மிகவும் மகிழ்ச்சியடைகிறாய், மேலும் தெளிவற்ற நிலையிலும் விடாமுயற்சியுடன், மனசாட்சியுடன் பணிபுரிந்து, எப்போதும் கொடுப்பவராக ஒருபோதும் எடுத்துக்கொள்ளாதவராகவும் இருக்கிறாய் என்றால், நீ ஒரு விசுவாசமுள்ள பரிசுத்தவான் என்று நான் சொல்கிறேன், ஏனென்றால் நீ எந்த பிரதிபலனையும் தேடாமல், வெறுமனே ஒரு நேர்மையான நபராக மட்டுமே இருக்கிறாய். நீ கபடற்றவராக இருக்க விரும்பினால், உன்னுடைய அனைத்தையும் நீ செலவழிக்கத் தயாராக இருந்தால், தேவனுக்காக உன் உயிரையும் தியாகம் செய்து, அவருக்கு சாட்சியாக உறுதியாக உன்னால் நிற்க முடியுமானால், உன்னுடைய காரியங்கள் ஒன்றையும் கருத்தில் கொள்ளாமல் மற்றும் எதையும் எடுத்துக்கொள்ளாமல், தேவனைத் திருப்திப்படுத்துவது ஒன்று மட்டுமே உனக்குத் தெரிந்தக் காரியம் என்றால், அப்படிப்பட்டவர்கள் தான் வெளிச்சத்தில் வளர்க்கப்படுபவர்கள், மற்றும் இராஜ்யத்தில் என்றென்றும் வாழ்வார்கள் என்று நான் சொல்கிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மூன்று புத்திமதிகள்” என்பதிலிருந்து

385. மற்றவர்களை சந்தேகிக்காதவர்களிடத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், மற்றும் சத்தியத்தை உடனடியாக ஏற்றுக்கொள்பவர்களை நான் விரும்புகிறேன். இந்த இரண்டு விதமான ஜனங்களை நோக்கி நான் மிகுந்த அக்கறை காட்டுகிறேன், ஏனென்றால் என் பார்வையில் அவர்கள் நேர்மையான ஜனங்கள். நீ வஞ்சகனாக இருந்தால், நீ எல்லா மக்களிடமும் காரியங்களிடமும் பாதுகாக்கப்பட்டிருப்பாய், சந்தேகப்படுவாய், இதனால் என் மீது உன் விசுவாசம் சந்தேகத்தின் அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய விசுவாசத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையான விசுவாசத்தின் குறைபாட்டால், நீ உண்மையான அன்பிலிருந்து இன்னும் அதிகமாக விலகிவிட்டாய். தேவனை சந்தேகிக்கவும், அவரைப் பற்றி விருப்பப்படி ஊகிக்கவும் நீ பொறுப்பேற்கிறாய் என்றால், நீ சந்தேகமின்றி, எல்லா ஜனங்களிலும் மிகவும் வஞ்சிக்கிறவன். சிறு குணங்களின் மன்னிக்க முடியாத பாவம், நியாயமும் காரணமும் இல்லாமை, நீதி உணர்வு இல்லாமை, பொல்லாத தந்திரங்களுக்கு கொடுக்கப்படுதல், துரோகம் மற்றும் கபடம், தீமை மற்றும் இருள் ஆகியவற்றால் மகிழ்தல், மற்றும் பலவற்றால் தேவன் மனிதனைப் போல இருக்க முடியுமா என்று நீ ஊகிக்கிறாய். ஜனங்களுக்கு இத்தகைய எண்ணங்கள் இருப்பதற்கு தேவனைப் குறித்த சிறிதளவு அறிவும் இல்லாததே காரணம் இல்லையா? இத்தகைய விசுவாசம் பாவத்திற்குக் குறைவானதில்லை! என்னைப் பிரியப்படுத்துபவர்கள் துல்லியமாக முகஸ்துதி செய்து தன் காரியத்திற்காகக் கெஞ்சுபவர்கள் என்றும், அத்தகைய திறமைகள் இல்லாதவர்கள் தேவனின் வீட்டில் வரவேற்கப்படாதவர்களாக இருப்பார்கள் என்றும், அங்கே தங்கள் இடத்தை இழக்க நேரிடும் என்றும் சிலர் விசுவாசிக்கிறார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நீங்கள் பெற்ற அறிவு இது மட்டும் தானா? இதைத்தான் நீங்கள் பெற்றுள்ளீர்களா? என்னைப் குறித்த உங்கள் அறிவு இந்த தவறான புரிதல்களோடு நிற்காது. தேவனின் ஆவியானவருக்கு எதிரான உங்கள் நிந்தனையும் பரலோகத்தை இழிவுபடுத்துவதும் இன்னும் மோசமானது. இதனால்தான், உங்களுடையதைப் போன்ற விசுவாசம் உங்களை என்னிடமிருந்து மேலும் விலக்கக் காரணமாகி, எனக்கு எதிராக அதிக எதிர்ப்பாக இருக்கும் என்று நான் சொல்கிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

386. இன்று, பெரும்பாலான ஜனங்கள் தங்களது செயல்களை தேவனின் முன் கொண்டுவர மிகவும் பயப்படுகிறார்கள்; நீ அவருடைய மாம்சத்தை ஏமாற்றும்போது, அவருடைய ஆவியானவரை நீ ஏமாற்ற முடியாது. தேவனின் பரிசோதனையைத் தாங்க முடியாத எந்தவொரு விஷயமும் சத்தியத்துடன் முரண்படுகின்றன. அவை ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்; இல்லையெனில் அது தேவனுக்கு எதிராக பாவம் செய்வதாகும். ஆகவே, நீ ஜெபிக்கும்போதும், பேசும்போதும், உன் சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படும்போதும், உன் கடமையைச் செய்யும்போதும், உன் தொழிலை கவனிக்கும்போதும், எல்லா நேரங்களிலும் உன் இருதயத்தை தேவனுக்கு முன்பாக வைக்க வேண்டும். உன் செயல்பாட்டை நீ நிறைவேற்றும்போது, தேவன் உன்னுடன் இருக்கிறார், உனது நோக்கம் சரியானது மற்றும் தேவனின் வீட்டின் பணிக்காக நீ இருக்கும் வரை, நீ செய்யும் அனைத்தையும் அவர் ஏற்றுக்கொள்வார்; உனது செயல்பாட்டை நிறைவேற்ற நீ உண்மையிலேயே உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீ ஜெபிக்கும்போது, உன் இருதயத்தில் தேவன்மீது அன்பு வைத்திருந்தால், தேவனின் கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் பரிசோதனையை நாடினால், இவை உனது நோக்கமாக இருந்தால், உனது ஜெபங்கள் பலனளிக்கும். உதாரணமாக, நீ கூட்டங்களில் ஜெபிக்கும்போது, உனது இருதயத்தைத் திறந்து தேவனிடம் ஜெபம் செய்து, பொய்யைப் பேசாமல் உனது இருதயத்தில் இருப்பதை அவரிடம் கூறினால், உனது ஜெபங்கள் நிச்சயமாக பலனளிக்கும். …

தேவனை விசுவாசிப்பவனாக இருப்பதன் அர்த்தம், நீ செய்யும் அனைத்தும் அவர் முன் கொண்டுவரப்பட்டு அவருடைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீ செய்வதை தேவனின் ஆவியானவரின் முன் கொண்டுவர முடியும். ஆனால், தேவனின் மாம்சத்திற்கு முன் அல்ல. இது அவருடைய ஆவியானவரால் நீ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. தேவனுடைய ஆவியானவர் யார்? தேவன் சாட்சி கூறும் மனிதர் யார்? அவர்கள் இருவரும் ஒருவரே அல்லவா? பெரும்பாலான ஜனங்கள் அவர்கள் இரு வெவ்வேறானவர்களாக காண்கிறார்கள். தேவனின் ஆவியானவரை நம்புவதே தேவனின் ஆவியானவர் என்றும், தேவன் சாட்சியம் அளிப்பவர் வெறுமனே ஒரு மனிதரே என்றும் காண்கிறார்கள். ஆனால் நீ தவறாக நினைக்கவில்லையா? இந்த மனிதர் யாருடைய சார்பாக செயல்படுகிறார்? தேவனின் மாம்சத்தை அறியாதவர்களுக்கு ஆவிக்குரிய புரிதல் இருப்பதில்லை. தேவனின் ஆவியானவரும் அவருடைய மாம்சமும் ஒன்றே ஆகும். ஏனென்றால், தேவனின் ஆவியானவர் மாம்சத்தில் உருவானார். இந்த மனிதர் உனக்கு இரக்கமற்றவராக இருந்தால், தேவனின் ஆவியானவர் தயவு காட்டுவாரா? நீ குழப்பமடையவில்லையா? இன்று, தேவனின் பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாத அனைவருமே அவருடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது, மேலும் தேவனின் மாம்சத்தை அறியாதவர்கள் பரிபூரணப்படுத்தப்பட முடியாது. நீ செய்யும் எல்லாவற்றையும் பார், அதை தேவனின் முன் கொண்டுவர முடியுமா என்று பார். நீ செய்யும் எல்லாவற்றையும் தேவனின் முன் கொண்டு வர முடியாவிட்டால், நீ ஒரு பொல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. பொல்லாதவர்கள் பரிபூரணப்படுத்தப்பட முடியுமா? நீ செய்யும் அனைத்தும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு நோக்கமும், ஒவ்வொரு எதிர்வினையும் தேவனின் முன்பாகக் கொண்டுவரப்பட வேண்டும். உன் அன்றாட ஆவிக்குரிய ஜீவிதம்—உன் ஜெபங்கள், தேவனுடனான உனது நெருக்கம், தேவனுடைய வார்த்தைகளை நீ எப்படி புசித்துக் குடிக்கிறாய், உனது சகோதர சகோதரிகளுடனான உனது ஐக்கியம், திருச்சபைக்குள் உனது ஜீவிதம்—மற்றும் உனது ஊழியத்துக்கான பங்காளித்துவம் ஆகியவை தேவனுக்கு முன்பாக அவருடைய பரிசோதனைக்காக கொண்டு வரப்படலாம். இதுபோன்ற நடைமுறையே ஜீவிதத்தில் வளர்ச்சியை அடைய உதவும். தேவனின் பரிசோதனையை ஏற்றுக்கொள்வதற்கான செயல்முறை சுத்திகரிப்பு செயல்முறையாகும். தேவனின் பரிசோதனையை நீ எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்ள முடியுமோ, அவ்வளவு அதிகமாக நீ சுத்திகரிக்கப்படுகிறாய், தேவனின் விருப்பத்திற்கு இணங்க நீ அதிகமாக இருக்கிறாய், இதனால் நீ துஷ்பிரயோகத்திற்கு ஆளாக மாட்டாய். உனது இருதயம் அவருடைய சமூகத்தில் ஜீவிக்கும். அவருடைய பரிசோதனையை நீ எவ்வளவு அதிகமாக ஏற்றுக்கொள்கிறாயோ, அந்த அளவிற்கு சாத்தானின் அவமானப்படுத்தும் திறனும் மாம்சத்தை கைவிடுவதற்கான உன் திறனும் அதிகம். எனவே, தேவனின் பரிசோதனையை ஏற்றுக்கொள்வது ஜனங்கள் பின்பற்ற வேண்டிய கைக்கொள்ளுதலின் பாதையாகும். நீ என்ன செய்தாலும், உன் சகோதர சகோதரிகளுடன் உரையாடும்போது கூட, நீ உன் செயல்களை தேவனின் முன்பாகக் கொண்டு வந்து அவருடைய பரிசோதனையை நாடலாம், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நோக்கமாகக் கொள்ளலாம்; இது நீ கடைப்பிடிப்பதை மிகவும் சரியானதாக மாற்றும். நீ செய்யும் அனைத்தையும் தேவனின் முன்பாகக் கொண்டு வந்து தேவனின் பரிசோதனையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நீ தேவனின் சமூகத்தில் ஜீவிக்கும் ஒருவராக இருக்க முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களைப் பரிபூரணமாக்குகிறார்” என்பதிலிருந்து

388. நீங்கள் சென்றடையும் இடமும் உங்கள் தலைவிதியும் உங்களுக்கு மிகவும் முக்கியமானவை—அவற்றிற்கு மிகுந்த அக்கறை உண்டு. நீங்கள் மிகுந்த கவனத்துடன் காரியங்களைச் செய்யாவிட்டால், நீங்கள் சென்றடையும் ஒரு இடத்தை தேடுவதை நிறுத்திவிட்டீர்கள் என்றும், உங்கள் சொந்த தலைவிதியை நீங்களே அழித்துவிட்டீர்கள் என்றும் அர்த்தமாவதாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஆனால், தங்களது சென்றடையும் இடத்திற்காக மட்டுமே முயற்சி செய்யும் ஜனங்கள் வீணாக உழைக்கிறார்கள் என்று உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அத்தகைய முயற்சிகள் உண்மையானவை இல்லை—அவை போலியானவை, வஞ்சகம் மிக்கவை. அப்படியானால், தங்களது சென்றடையும் இடத்தின் பொருட்டு மட்டுமே கிரியை செய்பவர்கள் தங்கள் இறுதி வீழ்ச்சியின் வாசலில் இருக்கிறார்கள், ஏனென்றால் தேவன் மீது ஒருவனின் விசுவாசத்தில் தோல்வி என்பது வஞ்சகத்தினால் ஏற்படுகிறது. நான் முகஸ்துதி செய்யப்படுவதையோ அல்லது கஷ்டப்படுவதையோ அல்லது உற்சாகத்துடன் நடத்தப்படுவதையோ விரும்புவதில்லை என்பதை நான் முன்பு கூறியிருக்கிறேன். எமது சத்தியத்தையும் எமது எதிர்பார்ப்புகளையும் நேர்மையானவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும், ஜனங்கள் எமது இருதயத்தின் மீது மிகுந்த அக்கறையையும் எண்ணத்தையும் காட்டும்போதும், எம்பொருட்டு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கும்போதும் நான் அதை விரும்புகிறேன். இவ்வாறாக மட்டுமே எமது இருதயத்தால் ஆறுதலடைய முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சென்றடையும் இடம்” என்பதிலிருந்து

390. உனக்குள்ளாக உண்மையான நம்பிக்கையும் உண்மையான விசுவாசமும் இருக்கிறதா என்றும், தேவனுக்காக நீ பாடுகளை அனுபவித்ததற்கான பதிவு உன்னிளிடம் இருக்கிறதா என்றும், மற்றும் நீ தேவனுக்கு உன்னை முழுமையாகச் சமர்ப்பித்திருக்கிறாயா என்பதையும் நீ அறிந்துக்கொள்ள வேண்டும். இவை உன்னிடம் இல்லாவிட்டால், பிறகு உன்னிடம் கீழ்ப்படியாமை, வஞ்சகம், பேராசை மற்றும் முறையீடு ஆகியவையே உள்ளன. உன்னுடைய இருதயம் நேர்மையிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால் தான், நீ ஒருபோதும் தேவனிடமிருந்து நேர்மறையான அங்கீகாரத்தைப் பெறவில்லை, மேலும் நீ ஒருபோதும் வெளிச்சத்தில் வாழ்ந்ததுமில்லை. இவ்வாறாக, ஒருவருக்கு நேர்மையான மற்றும் சிவப்பு-இரத்த இருதயம் இருக்கிறதா, அவர்களுக்கு பரிசுத்தமான ஆத்துமா இருக்கிறதா என்பதைப் பொறுத்து ஒருவரின் தலைவிதி செயல்படும். நீ மிகவும் நேர்மையற்ற ஒருவராக இருக்கிறீர்கள் என்றால், தீங்கிழைக்கும் இருதயம் கொண்ட, அசுத்தமான ஆத்மாகொண்ட ஒருவர் என்றால், உன் தலைவிதியின் பதிவில் எழுதப்பட்டுள்ளபடியே, மனிதன் தண்டிக்கப்படும் இடத்தில் நீயும் சென்றடைவது உறுதி. நீ மிகவும் நேர்மையானவராக இருக்கிறாய் என்றுக் கூறுவாயானால், அதேநேரத்தில் ஒரு போதும் சத்தியத்திற்கு ஏற்பச் செயல்படவோ அல்லது சத்தியவார்த்தையைப் பேசவோ நீ ஒரு போதும் முற்படவில்லை என்றால், தேவன் உனக்கு வெகுமதி அளிப்பதற்காக நீ இன்னுமா காத்திருக்கிறாய்? தேவன் உன்னை அவருடைய கண்ணின் மணிபோலப் பாதுகாத்துக் கொள்வார் என்று நீ இன்னும் நம்புகிறாயா? இத்தகைய உன்னுடைய சிந்தனை போலித்தனமானதல்லவா? நீ எல்லாவற்றிலும் தேவனை ஏமாற்றுகிறாய்; அசுத்தமானகைகளைக் கொண்டுள்ள உன்னைப் போன்ற ஒருவருக்கு தேவனுடைய வீடு எப்படி இடமளிக்கும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மூன்று புத்திமதிகள்” என்பதிலிருந்து

முந்தைய: D. நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, மற்றும் சோதனைகள் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கு எவ்வாறு உட்படுவது என்பது குறித்து

அடுத்த: F. தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது மற்றும் கீழ்ப்படிவது என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக