D. நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, மற்றும் சோதனைகள் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கு எவ்வாறு உட்படுவது என்பது குறித்து

366. யுகத்தை முடித்துவைக்கும் அவரது இறுதிக் கிரியையில், தேவனின் மனநிலை ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு இவற்றில் ஒன்றாக இருக்கிறது, அதில் எல்லா ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்க்கவும், அவரை நேர்மையான இருதயத்துடன் நேசிப்பவர்களைப் பரிபூரணமாக்கவும் அவர் அநீதியான அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். இது போன்ற ஒரு மனநிலையால் மட்டுமே யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். கடைசிக் காலம் ஏற்கனவே வந்துவிட்டது. சிருஷ்டிப்பில் உள்ள சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். மனுஷரின் விளைவுகளையும் அவர்களின் இலக்கையும் தேவன் வெளிப்படுத்தும் தருணம் இது. ஜனங்கள் ஆக்கினைத்தீர்ப்பிற்கும் நியாயத்தீர்ப்பிற்கும் உட்படுத்தப்படாவிட்டால், அவர்களின் கீழ்ப்படியாமையையும் அநீதியையும் அம்பலப்படுத்த எந்த வழியும் இருக்காது. ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே அனைத்து சிருஷ்டிப்புகளின் விளைவுகளையும் வெளிப்படுத்த முடியும். மனுஷன் சிட்சிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பளிக்கப்படும்போது மட்டுமே அவனுடைய உண்மையான நிறங்களைக் காட்டுகிறான். தீமை தீமையுடனும், நன்மை நன்மையுடனும் வைக்கப்படுகின்றன, மனுஷர் அனைவரும் அவர்களது வகையின்படி பிரிக்கப்படுவர். ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், எல்லா சிருஷ்டிப்புகளின் விளைவுகளும் வெளிப்படும், இதனால் தீமை தண்டிக்கப்பட்டு, நன்மைக்கு வெகுமதி கிடைக்கப்பெறும், மேலும் எல்லா ஜனங்களும் தேவனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். இந்தக் கிரியைகள் அனைத்தும் நீதியான ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அடையப்பட வேண்டும். ஏனெனில் மனுஷனின் சீர்கேடு உச்சத்தை எட்டியிருக்கிறது மற்றும் அவனது கீழ்ப்படியாமை மிகவும் கடுமையானதாகிவிட்டது, முக்கியமாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் தேவனின் நீதியான மனநிலையால் மட்டுமே மனுஷனை முழுமையாக மாற்றி, அவனை பரிபூரணப்படுத்த முடியும். இந்த மனநிலையால் மட்டுமே தீமையை அம்பலப்படுத்த முடியும், இதனால் அநீதியான அனைவரையும் கடுமையாகத் தண்டிக்கவும் முடியும். ஆகையால், இது போன்ற ஒரு மனநிலையானது யுகத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் ஒவ்வொரு புதிய யுகத்தின் கிரியையின் பொருட்டு அவரது மனநிலையின் வெளிப்பாடு மற்றும் காண்பிக்கப்படுவது வெளிப்படும்படி செய்யப்படுகிறது. தேவன் தன்னுடைய மனநிலையைத் தன்னிச்சையாகவும் முக்கியத்துவமும் இல்லாமலும் வெளிப்படுத்துகிறார் என அர்த்தமாகாது. கடைசிக் காலத்தில் மனுஷனின் விளைவுகளை வெளிப்படுத்துவதில், தேவன் இன்னும் மனுஷனுக்கு எல்லையற்ற இரக்கத்தையும் அன்பையும் அளித்து, அவனிடம் தொடர்ந்து அன்பாக இருந்து, மனுஷனை நீதியான நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தாமல், அதற்குப் பதிலாகச் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைக் காட்டி, மனுஷன் எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்திருந்தாலும், சிறிதளவும் நியாயமான நியாயத்தீர்ப்பு இல்லாமல் அவனை மன்னிப்பார் என்று வைத்துக்கொண்டால்: தேவனின் ஆளுகை அனைத்தும் எப்போது முடிவிற்குக் கொண்டுவரப்படும்? இதுபோன்ற ஒரு மனநிலை மனுஷகுலத்திற்கான பொருத்தமான இலக்கிற்கு ஜனங்களை எப்போது வழிநடத்த முடியும்? உதாரணமாக, எப்போதும் அன்பாக இருக்கும் ஒரு நீதிபதி, கனிவான முகத்தையும், மென்மையான இருதயத்தையும் கொண்ட ஒரு நீதிபதியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஜனங்கள் செய்த குற்றங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களை நேசிக்கிறார், மேலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் அவர் அன்பு பாராட்டுகிறார். அவ்வாறான நிலையில், எப்போது அவரால் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க முடியும்? கடைசிக் காலத்தில், நீதியான நியாயத்தீர்ப்பால் மட்டுமே மனுஷனை அவர்களின் வகைக்கு ஏற்ப பிரித்து, மனுஷனை ஒரு புதிய ராஜ்யத்திற்குக் கொண்டு வர முடியும். இவ்வாறாக, தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பு மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் மூலம் முழு யுகமும் முடிவுக்கு வருகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

367. மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷதன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாகிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மையில், இந்தக் கட்டம் ஜெயங்கொள்ளுதல் மற்றும் இரட்சிப்பின் கிரியையின் இரண்டாம் கட்டமாகும். வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம்தான் மனுஷன் தேவனால் ஆதாயப்படுத்தப்படுகிறான், மேலும் மனுஷனின் இருதயத்திற்குள் இருக்கும் அசுத்தங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவல்கள் அனைத்தையும் சுத்திகரிக்கவும், நீயாயந்தீர்க்கவும், வெளிப்படுத்தவும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமே வெளிப்படுத்தப்படுகின்றன. மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. உதாரணமாக, தாங்கள் மோவாபிலிருந்து வந்தவர்கள் என்பதை ஜனங்கள் உணர்ந்தபோது, அவர்கள் குறைசொல்லும் வார்த்தைகளைக் கொண்டு வந்தார்கள், ஜீவிதத்தைத் தொடரவில்லை, முற்றிலும் எதிர்மறையாகிப் போனார்கள். தேவனின் ஆளுகையின் கீழ் மனுஷகுலத்தால் இன்னும் முழுமையாக அடிபணிய முடியவில்லை என்பதை இது காட்டவில்லையா? இது துல்லியமாக அவர்களின் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை அல்லவா? நீ சிட்சைக்கு உட்படுத்தப்படாதபோது, உன் கைகள் மற்றவர்களை விட, இயேசுவின் கைகளை விட, உயரமாக செல்கின்றன. பின்னர் நீ உரத்த குரலில்: “தேவனுடைய அன்பான குமாரனாக இரு! தேவனுடன் நெருக்கமாக இரு! சாத்தானுக்கு வணங்குவதை விட நாம் மரித்துப்போவதே மேல்! பழைய சாத்தானுக்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வல்லமையை இழந்துப் பரிதாபமாக விழட்டும்! தேவன் நம்மை பூரணப்படுத்துவார்!” என்று கூக்குரலிட்டாய். உனது அழுகை மற்ற அனைவரையும் விட சத்தமாக இருந்தது. ஆனால் பின்னர் சிட்சிக்கும் காலம் வந்தது, மீண்டும், மனுஷகுலத்தின் சீர்கெட்ட மனநிலை வெளிப்பட்டது. பின்னர், அவர்களின் அழுகை நின்றுவிட்டது, அவர்களின் தீர்மானம் தோல்வியடைந்தது. இதுவே மனுஷனின் சீர்கேடு; பாவத்தை விட ஆழமாக செல்கிறது, இது சாத்தானால் பயிரிடப்பட்டு மனுஷனுக்குள் ஆழமாக வேரூன்றிய ஒன்று. மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

368. இன்று தேவன் உங்களை நியாயந்தீர்க்கிறார், உங்களை சிட்சிக்கிறார், மற்றும் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், ஆனால் உன் ஆக்கினைத் தீர்ப்பின் நோக்கத்தை அறிய வேண்டியது நீதான் என்பதை நீ அறியவேண்டும். நீ உன்னை அறிந்து கொள்ள முடிவதற்கும், உன் மனநிலை மாறக் கூடுவதற்கும், இன்னும், நீ உன் மதிப்பை அறிந்துகொள்ளக் கூடுவதற்கும், தேவனுடைய செயல்கள் எல்லாம் நீதியானவையும், அவரது மனநிலைக்கும் அவரது கிரியையின் தேவைக்கும் ஏற்றவையும், அவர் மனிதனுடைய இரட்சிப்பின் திட்டத்துக்கு இணங்க கிரியை செய்கிறார் மற்றும் அவரே மனிதனை நேசிக்கின்ற, இரட்சிக்கின்ற, நியாயந்தீர்க்கின்ற மற்றும் சிட்சிக்கின்ற நீதியுள்ள தேவன் என்று உணர்வதற்கும் அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், சபிக்கிறார், நியாயந்தீர்க்கிறார், மற்றும் சிட்சிக்கிறார். நீ மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ளவன், நீ சீர்கேடடைந்தவன் மற்றும் கீழ்ப்படியாதவன் என்று மட்டும் நீ அறிந்து, ஆனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம் இன்று உன்னில் அவர் செய்யும் அவரது இரட்சிப்பைத் தெளிவாக விளக்க விரும்புகிறார் என்று அறியாவிட்டால், அதன்பின் அனுபவத்தை அடைய உனக்கு வேறு வழியில்லை, அதைவிட தொடர்ந்து முன்னேற உனக்குத் திறனும் இருக்காது. தேவன் நியாயந்தீர்க்கவும், சபிக்கவும், சிட்சிக்கவும், இரட்சிக்கவும் வந்திருக்கிறாரே ஒழிய கொல்வதற்காகவோ அல்லது அழிப்பதற்காகவோ அல்ல. அவரது 6000-ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் ஒரு முடிவுக்கு வரும் வரை—ஒவ்வொரு மனித வகையினரின் முடிவையும் அவர் வெளிப்படுத்தும் முன்—பூமியில் தேவனின் கிரியை இரட்சிப்புக்காகவே இருக்கும்; அவரை நேசிப்பவர்களை பரிபூரணப்படுத்துவதும், இவ்வாறு முற்றிலும் அவரது ஆளுகையின் கீழ் அடங்கியிருக்க அவர்களைக் கொண்டுவருவது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது. தேவன் ஜனங்களை எவ்வாறு இரட்சித்தாலும், அவர்களது பழைய சாத்தானின் சுபாவத்தில் இருந்து உடைத்து வெளியேறும்படி செய்வதன் மூலம் இவையெல்லாம் செய்யப்படுகின்றன; அதாவது, அவர்களை ஜீவனைத் தேடும்படி செய்து அவர் இரட்சிக்கிறார். அவர்கள் அவ்விதம் செய்யவில்லை என்றால், பின்னர் தேவனின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு ஒரு வழியும் இருக்காது. இரட்சிப்பு என்பது தேவன் தாமே செய்யும் கிரியையாகும், மேலும் ஜீவனைத் தேடுவது என்பது இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளுவதற்காக மனிதன் செய்யவேண்டிய ஒரு விஷயமாகும். மனிதனின் பார்வையில், இரட்சிப்பு என்பது தேவனின் அன்பாகும், மற்றும் தேவனின் அன்பானது சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் சாபங்களாக இருக்க முடியாது; இரட்சிப்பு என்பது அன்பு, மனதுருக்கம் மற்றும், அதற்குமேல் ஆறுதலின் வார்த்தைகளோடு தேவனால் வழங்கப்பட்ட வரம்பற்ற ஆசீர்வாதங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். தேவன் மனிதனை இரட்சிக்கும் போது, அவர்கள் தங்கள் இருதயங்களைத் தேவனுக்குக் கொடுக்கும்படியாக அவர்களைத் தமது ஆசீர்வாதங்கள் மற்றும் கிருபையைக் கொண்டு மனதை இளகச்செய்தே அவ்வாறு செய்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். அதாவது, மனிதனை அவர் தொடுவதே அவர்களை அவர் இரட்சிப்பதாகும். இது போன்ற இரட்சிப்பு ஓர் ஒப்பந்தத்தை செய்வதன் மூலமே செய்யப்படுகிறது. தேவன் நூறத்தனையாய் அளிக்கும்போதே மனிதன் தேவ நாமத்துக்கு முன்னால் கீழ்ப்படிய வருகிறான் மற்றும் அவருக்கு ஏற்புடையதை செய்ய முயன்று அவருக்கு மகிமையைக் கொண்டுவருகிறான். தேவன் மனுக்குலத்துக்கான நோக்கமாகக் கொண்டிருப்பது இதையல்ல. சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்கவே தேவன் பூமியில் கிரியை செய்ய வந்திருக்கிறார்; இதில் எந்தப் பொய்யும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர் தாமே இந்தக் கிரியையை செய்ய நிச்சயமாக வந்திருக்க மாட்டார். கடந்த காலத்தில், அளவிலா அன்பையும் மனதுருக்கத்தையும் காட்டுவது அவரது இரட்சிப்பின் வழிமுறையில் அடங்கி இருந்ததனாலேயே அவர் தமது எல்லாவற்றையும் முழு மனுக்குலத்திற்கும் ஈடாக சாத்தனுக்குக் கொடுத்தார். நிகழ்காலம் கடந்தகாலத்தைப் போல் இல்லை: இன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரட்சிப்பு கடைசி நாட்களின் காலத்தில், வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப் படும்போது நிகழ்கிறது; உங்களது இரட்சிப்பின் வழிமுறை அன்போ அல்லது மனதுருக்கமோ அல்ல, ஆனால் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும், இதனால் மனிதன் மிகவும் முழுமையாக இரட்சிக்கப்படலாம். இவ்வாறு, நீங்கள் பெறுவதெல்லாம் சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற முறையில் கடுமையாகக் கடிந்துகொள்ளுதலும் ஆகும், ஆனால் இதை அறியுங்கள்: இந்த இரக்கமற்ற கடிந்துகொள்ளுதல் என்பது சிறு அளவில் கூடத் தண்டனை அல்ல. என்னுடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி, ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு முற்றிலும் இரக்கமற்றதாக தோன்றுவதைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு நேரிடாது, மேலும் நான் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் மேல் என்ன பொழியும் என்றால் போதனையின் அமர்ந்த வார்த்தைகளே, மேலும் நான் உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது உங்களைக் கொன்றுவிடவோ எண்ணவில்லை. இது எல்லாம் உண்மை அல்லவா? இப்போதெல்லாம், அது நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் அல்லது இரக்கமற்ற புடமிடுதல் மற்றும் சிட்சையாக இருந்தாலும், யாவும் இரட்சிப்புக்கானவையே. இன்று ஒவ்வொன்றும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது மனிதர்களின் பிரிவுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்துத் தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியைகளின் நோக்கமும் தேவனை உண்மையிலேயே நேசிப்பவர்களை இரட்சிப்பதாகவே இருக்கிறது. நீதியான நியாயத்தீர்ப்பு மனிதனை சுத்திகரிப்பதற்குக் கொண்டுவரப்படுகிறது, மற்றும் இரக்கமற்ற புடமிடல் அவர்களைச் சுத்தமாக்கச் செய்யப்படுகிறது; கடுமையான வார்த்தைகள் அல்லது சிட்சை ஆகிய இரண்டும் சுத்திகரிப்பதற்காகச் செய்யப்படுகின்றன, மேலும் அவை எல்லாம் இரட்சிப்புக்காகவே செய்யப்படுகின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

374. சோதனைகளுக்கு உள்ளாகும்போது, ஜனங்கள் பலவீனமாக இருப்பது அல்லது அவர்களுக்குள் எதிர்மறையான எண்ணம் இருப்பது அல்லது தேவனுடைய சித்தம் அல்லது நடப்பதற்கான அவர்களுடைய பாதை குறித்து தெளிவு இல்லாதிருப்பது ஆகியவை இயல்பானவை. எப்படியிருந்தாலும், நீ தேவனுடைய கிரியையில் விசுவாசம் வைத்திருக்க வேண்டும். யோபுவைப் போலவே தேவனை மறுக்கக்கூடாது. யோபு பலவீனமாக இருந்தபோதும், தன் பிறந்த நாளையே சபித்தாலும், மனித ஜீவிதத்தின் அனைத்தும் யேகோவாவால் வழங்கப்பட்டது என்பதையும், அவை அனைத்தையும் எடுத்துச் செல்லும் ஒருவராக இருப்பதும் யேகோவா என்பதையும் அவன் மறுக்கவில்லை. அவன் எவ்வாறு சோதிக்கப்பட்டாலும், அவன் இந்த நம்பிக்கையை நிலைநாட்டினான். உன் அனுபவத்தில், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் நீ எந்தச் சுத்திகரிப்புக்கு உட்பட்டாலும், மனிதகுலத்திடம் தேவன் விரும்புவது என்னவென்றால், சுருக்கமாகச் சொல்வதானால், அவர்களுடைய விசுவாசமும், அவர்மீதுள்ள அன்புமாக இருக்கின்றன. இவ்வாறு கிரியை செய்வதன் மூலம் அவர் ஜனங்களின் விசுவாசம், அன்பு மற்றும் விருப்பங்களைப் பரிபூரணப்படுத்துகிறார். தேவன் ஜனங்கள் மீது பரிபூரணத்தின் கிரியையைச் செய்கிறார், அவர்களால் அதைப் பார்க்க முடியாது மற்றும் உணர முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில், உன் விசுவாசம் தேவைப்படுகிறது. எதையாகிலும் மனிதக் கண்ணால் பார்க்க முடியாதபோது ஜனங்களின் விசுவாசம் தேவைப்படுகிறது மற்றும் உன் சொந்த கருத்துக்களை விட்டுவிட முடியாதபோது உன் விசுவாசம் தேவைப்படுகிறது. தேவனுடைய கிரியையைப் பற்றி உனக்கு தெளிவு இல்லாதபோது, உன்னிடம் எதிர்பார்க்கப்படுவது விசுவாசம் மற்றும் நீ உறுதியான நிலைப்பாட்டை எடுத்து சாட்சியாக இருப்பதும் ஆகும். யோபு இந்த நிலையை அடைந்தபோது, தேவன் அவனுக்குத் தோன்றி அவனிடம் பேசினார். அதாவது, உன் விசுவாசத்திலிருந்தே நீ தேவனைக் காண முடியும் மற்றும் உனக்கு விசுவாசம் இருக்கும்போது தேவன் உன்னை பரிபூரணமாக்குவார். விசுவாசம் இல்லாமல், தேவனால் இதைச் செய்ய முடியாது. நீ எதை எதிர்பார்க்கிறாயோ அதை தேவன் உனக்கு வழங்குவார். உனக்கு விசுவாசம் இல்லையென்றால், நீ பரிபூரணமாக்கப்பட முடியாது மற்றும் தேவனுடைய கிரியைகளை உன்னால் காண முடியாது, அவருடைய சர்வ வல்லமையையும் உன்னால் காண முடியாது. உன் நடைமுறை அனுபவத்தில் அவருடைய கிரியைகளை நீ காண்பாய் என்று உனக்கு விசுவாசம் இருக்கும்போது, தேவன் உனக்குத் தோன்றுவார் மற்றும் அவர் உனக்கு அறிவொளியைத் தருவார் மற்றும் உனக்குள்ளிருந்து உன்னை வழிநடத்துவார். அந்த விசுவாசம் இல்லாமல், தேவனால் அதைச் செய்ய முடியாது. நீ தேவன் மீதான நம்பிக்கையை இழந்திருந்தால், அவருடைய கிரியையை உன்னால் எவ்வாறு அனுபவிக்க முடியும்? ஆகையால், நீ விசுவாசம் வைத்திருக்கும்போது, நீ தேவன் மீது சந்தேகம் கொள்ளாமலும் இருக்கும்போது மற்றும் அவர் என்ன செய்தாலும் அவர் மீது உண்மையான விசுவாசம் இருக்கும்போது மட்டுமே, அவர் உன் அனுபவங்களின் மூலம் உனக்கு அறிவொளிவூட்டி உன்னை பிரகாசிக்கச் செய்வார். அப்போதுதான் உன்னால் அவருடைய கிரியைகளைக் காண முடியும். இந்த விஷயங்கள் அனைத்தும் விசுவாசத்தின் மூலம் அடையப்படுகின்றன. விசுவாசமானது சுத்திகரிப்பால் மட்டுமே வருகிறது மற்றும் சுத்திகரிப்பு இல்லாத நிலையில், விசுவாசம் வளர முடியாது. “விசுவாசம்” என்ற இந்த வார்த்தை எதைக் குறிக்கிறது? விசுவாசம் என்பது எதையாகிலும் பார்க்கவோ, தொடவோ முடியாதபோது, தேவனுடைய கிரியை மனித கருத்துக்களுடன் ஒத்துப்போகாதிருக்கும்போது, அது மனிதனுக்கு எட்டாத நிலையில் இருக்கும்போது, மனிதர் கொண்டிருக்க வேண்டிய உண்மையான நம்பிக்கை மற்றும் உண்மையான இருதயமாக இருக்கிறது. இதுதான் நான் பேசும் விசுவாசமாக இருக்கிறது. கஷ்டங்கள் மற்றும் சுத்திகரிப்பின் காலங்களில் ஜனங்களுக்கு விசுவாசம் தேவைப்படுகிறது மற்றும் விசுவாசம் என்பது சுத்திகரிப்புக்குப் பின்பு வரும் ஒன்றாக இருக்கிறது. சுத்திகரிப்பு மற்றும் விசுவாசத்தைப் பிரிக்க முடியாது. தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பது முக்கியமல்ல, உன் சூழலைப் பொருட்படுத்தாமல், உன்னால் ஜீவிதத்தைத் தொடரவும், சத்தியத்தைத் தேடவும், தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவைப் பெறவும், அவருடைய கிரியைகளைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது மற்றும் உன்னால் சத்தியத்தின்படி செயல்படவும் முடிகிறது. அவ்வாறு செய்வதுதான் உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருப்பதாக இருக்கிறது. அவ்வாறு செய்வது நீ தேவன்மீது விசுவாசத்தை இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. நீ தேவனை உண்மையாக நேசிக்க முடிந்தால், அவரைப் பற்றி சந்தேகங்களை வளர்த்துக் கொள்ளாதிருந்தால், நீ சுத்திகரிப்பு மூலம் சத்தியத்தைப் பின்தொடர முடிந்தால் மற்றும் உண்மையாகவே உன்னால் தேவனை நேசிக்க முடிந்தால், அவரைப் பற்றி சந்தேகங்களை வளர்த்துக் கொள்ளாதிருக்க முடிந்தால், அவர் என்ன செய்தாலும் நீ அவரை திருப்திப்படுத்த சத்தியத்தை கடைப்பிடிக்கிறாய் என்றால் மற்றும் அவருடைய சித்தத்திற்காக ஆழமாகத் தேடவும், அவருடைய சித்தத்தைக் குறித்து அக்கறையுடன் இருக்கவும் முடிந்தால் மட்டுமே உன்னால் தேவன் மீதான உண்மையான விசுவாசத்தைப் பெற முடியும். கடந்த காலத்தில், நீ ஒரு ராஜாவாக ஆட்சி செய்வாய் என்று தேவன் சொன்னபோது, நீ அவரை நேசித்தாய், அவர் உன்னை வெளிப்படையாகக் காட்டியபோது, நீ அவரைப் பின்தொடர்ந்தாய். ஆனால் இப்போது தேவன் மறைந்திருக்கிறார், உன்னால் அவரைக் காண முடியவில்லை மற்றும் உனக்கு தொல்லைகள் வந்துவிட்டன. இப்போதும், நீ தேவன் மீதான நம்பிக்கையை இழக்கிறாயா? எனவே, நீ எப்போதுமே ஜீவிதத்தைத் தொடர வேண்டும் மற்றும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முற்பட வேண்டும். இதுதான் உண்மையான விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது மிகவும் உண்மையான மற்றும் மிகவும் அழகான அன்பாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து

375. சுத்திகரிப்பு கிரியையின் நோக்கம் முக்கியமாக ஜனங்களின் விசுவாசத்தை பரிபூரணமாக்குவதாகும். இறுதியில் அடையப்படுவது என்னவென்றால், நீ வெளியேற விரும்புகிறாய், ஆனால் அதே நேரத்தில், உன்னால் வெளியேற முடிவதில்லை; மிகச் சிறிய அளவிலான நம்பிக்கை இல்லாதபோதும்கூட சிலரால் விசுவாசிக்க முடிகிறது; மேலும், ஜனங்கள் தங்களது எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி இனி நம்பிக்கை கொண்டிருக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் மட்டுமே தேவனுடைய சுத்திகரிப்பு நிறைவடையும். மனிதன் இன்னும் ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் நிலையற்ற நிலையினை அடைந்திருக்கவில்லை, அவர்கள் மரணத்தை ருசிக்கவில்லை. ஆதலால், சுத்திகரிப்பு செயல்முறை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. ஊழியம் செய்பவர்களின் நிலையில் இருந்தவர்கள்கூட மிகச் சிறப்பாக சுத்திகரிக்கப்படவில்லை. யோபு தீவிர சுத்திகரிப்புக்கு உட்பட்டான், அவன் சார்ந்து இருப்பதற்கு அவனுக்கு எதுவும் இருக்கவில்லை. ஜனங்களுக்கு, தாங்கள் நம்பி இருக்க எதுவுமில்லை, சார்ந்து இருப்பதற்கு எதுவும் இல்லை என்ற அளவிற்கு அவர்கள் சுத்திகரிப்புகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்—இது மட்டுமே உண்மையான சுத்திகரிப்பாகும். ஊழியம் செய்பவர்களாக இருக்கும் நேரத்தில், உன் இருதயம் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருந்திருந்தால், அவர் என்ன செய்திருந்தாலும், உனக்காக அவருடைய விருப்பம் எதுவாக இருந்திருந்தாலும், நீ எப்போதும் அவருடைய ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிந்தால், இறுதியில் நீ தேவன் செய்த எல்லாவற்றையும் புரிந்துகொள்வாய். நீ யோபுவின் சோதனைகளுக்கு உட்படுகிறாய், அதே சமயம் பேதுருவின் சோதனைகளுக்கும் நீ உட்படுகிறாய். யோபு சோதிக்கப்பட்டபோது, அவன் சாட்சியாக நின்றான். இறுதியில், யேகோவா அவனுக்கு வெளிப்பட்டார். அவன் சாட்சியாக நின்ற பின்னரே தேவனுடைய முகத்தைப் பார்க்க தகுதியானவனாக அவன் இருந்தான். “நான் தீட்டான தேசத்திலிருந்து மறைந்துகொள்கிறேன், ஆனால் என்னை பரிசுத்த ராஜ்யத்திற்குக் காட்டுகிறேன்” என்று ஏன் கூறப்படுகிறது? அதாவது, நீ பரிசுத்தனாவும், சாட்சியாகவும் நிற்கும் போது மட்டுமே தேவனுடைய முகத்தைக் காணும் மேன்மையை நீ பெற முடியும். அவருக்காக நீ சாட்சியாக நிற்க முடியாவிட்டால், அவருடைய முகத்தைக் காண்பதற்கான மேன்மையை நீ பெற்றிருக்கமாட்டாய். நீ சுத்திகரிப்புகளை சந்திப்பதால் பின்வாங்கினால் அல்லது தேவனுக்கு எதிராக குறை கூறினால், அவருக்கு சாட்சியாக நிற்கத் தவறிவிட்டு, சாத்தானின் கேலிக்குரியவனாக மாறினால், நீ தேவன் தோன்றுவதை ஆதாயம் செய்ய மாட்டாய். சோதனைகளுக்கு மத்தியில் தன் மாம்சத்தை சபித்து, தேவனுக்கு எதிராக குறை கூறாமல், தனது வார்த்தைகள் மூலம் குறை கூறாமல் அல்லது பாவம் செய்யாமல் தன் மாம்சத்தை வெறுக்க முடிந்த யோபுவைப் போல நீ இருந்தால், நீ சாட்சியாக நிற்பாய். நீ ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சுத்திகரிப்புகளுக்கு உட்பட்டால், தேவனுக்கு முன்பாக முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரிடம் நீ பிற கோரிக்கைகளையோ, உனது சொந்த கருத்துக்களையோ முன்வைக்காமல், தேவனுக்கு முன்பாக முற்றிலும் கீழ்ப்படிந்து, நீயும் யோபுவைப் போல் இருக்க முடிந்தால், தேவனும் உனக்குத் தோன்றுவார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து

376. தோல்வி, பலவீனம், நீ எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்த காலங்கள் போன்ற பல்வேறு அனுபவங்கள் அனைத்தும் தேவனுடைய சோதனைகள் என்று கூறலாம். ஏனென்றால், சகலமுமே தேவனிடமிருந்து வருகின்றன, எல்லா விஷயங்களும் நிகழ்வுகளும் அவருடைய கரங்களில் உள்ளன. நீ தோல்வியுற்றாலும் சரி, நீ பலவீனமாக இருந்து தள்ளாடினாலும் சரி, இவை அனைத்தும் தேவனிடம் உள்ளன, அவருடைய பிடியில் உள்ளன. தேவனுடைய பார்வையில், இது உனக்கான சோதனையாகும், அதை நீ அடையாளம் காண முடியாவிட்டால், அது சோதனையாக மாறும். ஜனங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய இரண்டு வகையான நிலைகள் உள்ளன: ஒன்று பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகிறது, மற்றொன்று பெரும்பாலும் சாத்தானிடமிருந்து வருவதாக இருக்கலாம். ஒன்று, பரிசுத்த ஆவியானவர் உன்னை ஒளிரச் செய்து, உன்னை நீ அறிந்து கொள்ளவும், உன்னை நீ வெறுக்கவும், உன்னைப் பற்றி நீ வருந்தவும், தேவன் மீது உண்மையான அன்பு கொள்ளவும், அவரை திருப்திப்படுத்தும்படி உனது இருதயத்தை அமைக்கவும் உன்னை அனுமதிக்கும் ஒரு நிலை. மற்றொன்று உன்னை நீயே அறிந்திருக்கிற ஒரு நிலை, ஆனால் நீ எதிர்மறையான எண்ணத்தை கொண்டிருப்பவன் மற்றும் பலவீனமானவன். இந்த நிலை தேவனுடைய சுத்திகரிப்பு என்றும் அது சாத்தானின் சோதனை என்றும் கூறலாம். இது உனக்கான தேவனுடைய இரட்சிப்பு என்பதை நீ உணர்ந்தால், நீ இப்போது அவருக்கு கடன்பட்டிருப்பதாக பெரிதும் உணர்ந்தால், இப்போதிலிருந்து நீ அவருக்கு அதனை திரும்பச் செலுத்த முயற்சி செய்தால், இனிமேல் நீ அத்தகைய ஒழுக்கக்கேடான நிலைக்கு ஆளாக மாட்டாய் என்றால், நீ அவருடைய வார்த்தைகளை புசித்துக் குடிப்பதில் உனது முயற்சியை மேற்கொண்டால், நீ எப்போதுமே உன்னைக் குறைவாகக் கருதுகிற, ஏங்குகிற இருதயத்தை நீ கொண்டிருந்தால், இதுதான் தேவனுடைய சோதனையாகும். துன்பப்படுதல் முடிந்ததும், நீ மீண்டும் முன்னேறினாலும், தேவன் உன்னை வழிநடத்துவார், ஒளிரச் செய்வார், அறிவொளியூட்டுவார் மற்றும் உன்னைப் போஷிப்பார். ஆனால் நீ அதை அடையாளம் காணாமல் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டிருந்து, வெறுமனே, உன்னை நீயே நம்பிக்கையற்ற நிலையில் கைவிட்டுவிட்டது போன்று நீ நினைத்தால், சாத்தானின் சோதனையானது உன் மீது வந்திருக்கும். யோபு சோதனைகளுக்கு உட்பட்டபோது, தேவனும் சாத்தானும் ஒருவருக்கொருவர் பந்தயம் கட்டிக்கொண்டிருந்தார்கள், யோபுவை துன்புறுத்த தேவன் சாத்தானை அனுமதித்தார். தேவன் யோபுவைச் சோதித்தாலும், உண்மையில் சாத்தான் தான் யோபுமீது வந்தான். சாத்தானைப் பொறுத்தவரை, அதுதான் யோபுவை சோதித்தது, ஆனால் யோபு தேவனுடைய பக்கமாக இருந்தார். அப்படி இல்லாதிருந்தால், யோபு சோதனையில் விழுந்திருப்பார். ஜனங்கள் சோதனையில் விழுந்தவுடன், அவர்கள் ஆபத்தில் விழுகிறார்கள். சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவது தேவனிடமிருந்து வந்த சோதனை என்று கூறலாம், ஆனால் நீ ஒரு நல்ல நிலையில் இல்லை என்றால், அது சாத்தானிடமிருந்து வரும் சோதனை என்றும் கூறலாம். நீ தரிசனத்தைப் பற்றிய தெளிவை கொண்டிருக்கவில்லை என்றால், சாத்தான் உன் மீது குற்றம் சாட்டும், மேலும் தரிசனத்தைக் குறித்த அம்சத்தில் உன்னை தெளிவற்றதாகச் செய்யும். நீ அதை அறிவதற்கு முன்பு, நீ சோதனையில் விழுவாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து

378. ராஜ்யத்தின் காலத்தில் மனிதன் முற்றிலும் முழுமையாக்கப்படுவான். ஜெயங்கொள்ளுதல் கிரியைக்குப்பின்பு, மனுஷன் சுத்திகரிப்பு மற்றும் உபத்திரவத்திற்கு உட்படுத்தப்படுவான். இந்த உபத்திரவத்தின்போது சாட்சியங்களை வென்று நிற்கக் கூடியவர்கள்தான் இறுதியில் முழுமையடைவார்கள்; அவர்களே ஜெயித்தவர்களாக இருக்கிறார்கள். இந்த உபத்திரவத்தின்போது, மனுஷன் இந்தச் சுத்திகரிப்பை ஏற்கவேண்டும், மேலும் இந்தச்சுத்திகரிப்பு தேவனுடைய கிரியையின் கடைசிநிகழ்வாக உள்ளது. தேவனுடைய நிர்வாகக் கிரியைகள் அனைத்தும் முடிவடைவதற்கு முன்னர் மனுஷன் சுத்திகரிக்கப்படுவதற்கான கடைசிநேரமாக இது உள்ளது, மேலும் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் அனைவரும் இந்த இறுதிச் சோதனையை ஏற்கவேண்டும், மேலும் அவர்கள் இந்தக் கடைசிச் சுத்திகரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். உபத்திரவத்தால் குழப்பம் விளைவிக்கப் பட்டவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் தேவனுடைய வழிகாட்டுதலும் இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால் உண்மையிலேயே ஜெயங்கொள்ளப்பட்டவர்களும், தேவனை உண்மையாக நாடுபவர்களும் இறுதியில் உறுதியாக நிற்பவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் மனிதத்தன்மை கொண்டவர்களாய் இருக்கிறார்கள், மற்றும் தேவனை உண்மையாய் அன்புகூருகிறார்கள். தேவன் என்ன செய்தாலும், ஜெயங்கொண்ட இவர்கள் தரிசனங்களை இழக்கமாட்டார்கள், மற்றும் அவர்களின் சாட்சியத்தில் தவறாமல் சத்தியத்தை இன்னும் கடைப்பிடிப்பார்கள். இவர்கள்தான் பெரும் உபத்திரவத்திலிருந்து இறுதியாகவெளியே வருவார்கள். குழம்பிய குட்டையில் அவர்கள் மீன்பிடிப்பவர்களால் இன்னமும் இன்றைய நாட்களை சார்ந்திருக்க முடியும் என்றாலும், கடைசி உபத்திரவத்திற்கு எவரொருவரும் தப்பிக்க இயலாது, மற்றும் எவரொருவரும் இறுதிச் சோதனைக்குத் தப்பிக்க இயலாது. ஜெயிப்பவர்களுக்கு, இத்தகைய உபத்திரவம் மிகப்பெரியதொரு சுத்திகரிப்பாக உள்ளது; ஆனால் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களுக்கு, இதுமுழுமையாக நீக்கப்படுதலுக்கான கிரியையாக இருக்கிறது. தேவனை இருதயத்தில் வைத்திருப்பவர்கள் எப்படிச் சோதிக்கப்பட்டாலும், அவர்களின் பற்றுறுதி மாறாமல் இருக்கும்; ஆனால், இருதயத்தில் தேவனைக் கொண்டிராதவர்களுக்கு, தேவனுடைய கிரியை அவர்களின் மாம்சத்திற்குச் சாதகமாக இல்லாதிருந்தால், அவர்கள் தேவனைப்பற்றிய தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்கிறார்கள், மற்றும் தேவனை விட்டு விலகிக்கூடப் போகிறார்கள். முடிவு பரியந்தம் உறுதியாய் நிலை நிற்காதவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள், இவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை மட்டுமே நாடுகிறார்கள், மற்றும் இவர்கள் தேவனுக்காகத் தங்களைச் செலவுபண்ணுவதற்கும் மற்றும் தங்களையே அவருக்கு அர்ப்பணிப்பதற்கும் விருப்பம் எதுவும் கொண்டிருப்பதில்லை. தேவனுடைய கிரியை ஒரு முடிவுக்கு வருகின்றபோது, இப்படிப்பட்ட கீழ்த்தரமான ஜனங்கள் புறம்பே தள்ளப்படுவார்கள், மற்றும் இவர்கள் எந்த அனுதாபத்திற்கும் தகுதியற்றவர்களாய் இருக்கிறார்கள். மனிதப்பண்பு இல்லாத அவர்கள் உண்மையிலேயே தேவனை அன்புகூர முடியாதவர்களாக இருக்கிறார்கள். சூழல் பாதுகாப்பாக மற்றும் பாதுகாக்கபட்டதாக இருக்கும்போது அல்லது லாபம் ஈட்டப்படும்போது, அவர்கள் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிதலுடன் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் விரும்பும் விஷயங்கள் சமரசம் செய்யப்பட்டால் அல்லது இறுதியாக மறுக்கப்பட்டால், அவர்கள் உடனடியாகக் கலகம் செய்கிறார்கள். ஒரே ஒரு இரவின் இடைவெளியில்கூட, அவர்கள் புன்னகைக்கும், “கனிவான” நபராக இருப்பதில் இருந்து ஒரு அசிங்கமான தோற்றமுடைய மற்றும் கொடூரமான கொலையாளி நிலைக்குச் செல்லக்கூடும், அவர்கள் அர்த்தமின்றி அல்லது காரணமின்றி தங்களது நேற்றைய உபகாரியை திடீரென்று தங்கள் ஜென்ம விரோதியாக, நடத்துகிறார்கள். இந்தப் பேய்களை, கண்சிமிட்டாமல் கொல்லும் இந்தபேய்களை வெளியேற்றாவிட்டால், அவை மறைந்திருக்கும் ஆபத்தாக மாறாதா? ஜெயங்கொள்ளும் கிரியை முடிந்ததைத் தொடர்ந்து மனுஷனை இரட்சிக்கும் கிரியை அடையப்படவில்லை. ஜெயங்கொள்ளுதலுக்கான கிரியை முடிவுக்கு வந்தாலும், மனுஷனைச் சுத்திகரிக்கும் கிரியை முடிவுக்கு வரவில்லை; இப்படிப்பட்ட கிரியையானது, மனுஷன் முற்றிலுமாகச் சுத்திகரிக்கப்பட்டதும், தேவனுக்கு உண்மையாக அடிபணிந்தவர்கள் முழுமையாக்கப்பட்டதும், தங்கள் இருதயத்தில் தேவனற்று இருப்பவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டதும், மற்றும் தேவனற்றவர்களாக இருக்கிற அந்த வெளிவேடக்காரர்களின் இருதயம் சுத்திகரிக்கப்பட்டதும் ஆகியவை நிறைவேறிய பின்புமட்டுமே முடிவடையும். அவருடைய கிரியையின் இறுதிக்கட்டத்தில் தேவனைத் திருப்திப்படுத்தாதவர்கள் முற்றிலுமாக நீக்கப்படுவார்கள், மற்றும் நீக்கப்படுபவர்கள் பிசாசினுடையவர்களாக உள்ளனர். அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்த இயலாது என்பதால், அவர்கள் தேவனுக்கு எதிரான கலகக்காரர்களாக இருக்கிறார்கள், மற்றும் இந்த ஜனங்கள் இன்று தேவனைப் பின்பற்றினாலும், அவர்கள் முடிவு பரியந்தம் நிலைநிற்பார்கள் என்பதை இது நிரூபிக்கிறதில்லை. “முடிவு பரியந்தம் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்” என்ற வார்த்தைகளில், “பின்பற்றுதல்” என்ற வார்த்தை உபத்திரவத்தின் மத்தியில் உறுதியாக நிலைநிற்குதல் என்று அர்த்தம் கொண்டுள்ளது. இன்றைய நாட்களில், தேவனைப் பின்பற்றுதல் எளிதானதாக உள்ளது என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் தேவனுடைய கிரியை முடிவடைய இருக்கும்போது, “பின்பற்றுதல்” என்பதன் உண்மையான அர்த்தத்தை நீ அறிவாய். வெற்றிபெற்ற பின்னரும் நீ இன்னும் தேவனைப் பின்பற்றக் கூடியவனாக இருக்கிறாய் என்பதால், பரிபூரணமாக்கப் படுபவர்களில் நீயும் ஒருவன் என்பதை இது நிரூபிக்கிறதில்லை. சோதனைகளைச் சகித்துக்கொள்ள இயலாதவர்கள் எவர்களோ அவர்கள், உபத்திரவங்களுக்கு மத்தியில் ஜெயங்கொள்ள இயலாதவர்கள் எவர்களோ அவர்கள் இறுதியில் உறுதியாய் நிலைநிற்கக் கூடாதவர்களாக இருப்பார்கள் மற்றும் இறுதிவரைத் தேவனைப்பின்பற்ற இயலாதவர்களாக இருப்பார்கள். தேவனை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் கிரியையின் சோதனையைத் தாங்கிக்கொள்ள முடிகிறவர்களாக இருக்கிறார்கள், அதேசமயம் தேவனை உண்மையாகப் பின்பற்றாதவர்கள் தேவனின் எந்தவொரு சோதனையையும் தாங்கி நிற்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ புறம்பே தள்ளப்படுவார்கள், அதே நேரத்தில் ஜெயங்கொண்டவர்கள் ராஜ்யத்திற்குள் நிலைத்திருப்பார்கள். மனிதன் உண்மையிலேயே தேவனை நாடுகிறானா இல்லையா என்பது அவனது கிரியையின் சோதனையால், அதாவது தேவனின் சோதனைகளால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் மனிதன் தானே மேற்கொள்ளும் முடிவோடு இது எந்தத் தொடர்பும் கொண்டிருப்பது இல்லை. தேவன் எந்தவொரு நபரையும் ஒருகாரணமில்லாமல் நிராகரிக்கிறதில்லை; அவர் செய்கிற அனைத்தும் மனிதனை முற்றிலும் இணங்கப் பண்ணக்கூடும். மனிதனுக்குக் கண்ணால் காணமுடியாத எந்த விஷயத்தையும், அல்லது மனிதனை நம்பியிணங்கவைக்க முடியாத எந்தக் கிரியையையும் அவர் செய்கிறதில்லை. மனிதனின் நம்பிக்கை உண்மையா இல்லையா என்பது உண்மைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது, மற்றும் இது மனிதனால் தீர்மானிக்கப்பட முடியாது. “கோதுமையைக் களைகளாகமாற்றமுடியாது, மற்றும்களைகளைக் கோதுமையாகமாற்றமுடியாது” என்பது சந்தேகமற்றதாக உள்ளது. தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் அனைவரும் நிறைவாக ராஜ்யத்தில் நிலைத்திருப்பார்கள், தேவன் தம்மை உண்மையாக நேசிக்கும் எவரையும் தவறாக நடத்த மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

379. அவர் தேவனால் தண்டிக்கப்பட்டபோது, “தேவனே! என் மாம்சம் கீழ்ப்படியாததாக இருக்கிறது, நீர் என்னைத் தண்டித்து என்னை நியாயந்தீர்க்கிறீர். உம்முடைய தண்டனையிலும் நியாயத்தீர்ப்பிலும் நான் களிகூருகிறேன், நீர் என்னை விரும்பாவிட்டாலும், உம்முடைய பரிசுத்த மற்றும் நீதியான மனநிலையை உம்முடைய நியாயத்தீர்ப்பில் நான் காண்கிறேன். நீர் என்னை நியாயந்தீர்க்கும்போது, உமது நியாயத்தீர்ப்பில் உமது நீதியுள்ள தன்மையை மற்றவர்கள் காணும்படி, நான் உட்கருத்தை உணர்கிறேன். அது உமது மனநிலையை வெளிப்படுத்தவும், உமது நீதியான மனநிலையை எல்லா சிருஷ்டிகளும் காணும்படியாக அனுமதிக்கவும், அது உமது மீதான என் அன்பை மேலும் தூய்மையாக்க முடியுமானால், நீதியுள்ள ஒருவரின் சாயலை நான் அடைந்திட முடியும், பின்னர் உம் நியாயத்தீர்ப்பு நல்லதாக இருக்கிறது, உம்முடைய இரக்கத்தின் சித்தமும் அதேபோல் இருக்கிறது. என்னுள் இன்னும் கலகத்தனம் அதிகமாக இருக்கிறது என்பதையும், நான் உம் முன் வருவதற்கு இன்னும் தகுதியற்றவன் என்பதையும், நான் அறிந்திருக்கிறேன். ஒரு விரோதமான சூழல் மூலமாகவோ அல்லது பெரும் இடுக்கண்களின் மூலமாகவோ நீர் என்னை இன்னும் அதிகமாக நியாயத்தீர்க்க விரும்புகிறேன். நீர் என்ன செய்தாலும், அது எனக்கு விலையேறப்பெற்றது. உமது நேசம் மிகவும் ஆழமானது, சிறிதும் புகார் இல்லாமல் உம் இரக்கத்தில் என்னை ஐக்கியப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்” என்று பேதுரு ஜெபித்தார். இது தேவனின் கிரியையை அனுபவித்த பின்பான பேதுருவின் அறிவாகும், இது தேவன் மீதான அவருடைய நேசத்திற்கு ஒரு சாட்சியாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

380. மனிதன் மாம்சத்தின் மத்தியில் வாழ்கிறான், அதாவது அவன் ஒரு மனித நரகத்தில் வாழ்கிறான், தேவனின் நியாயத்தீர்ப்பும் தண்டனையும் இல்லாமல் மனிதன் சாத்தானைப் போல பாழானவனாவான். மனிதன் எப்படி பரிசுத்தமாக இருக்க முடியும்? தேவனின் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் மனிதனின் சிறந்த பாதுகாப்பும் மிகப் பெரிய கிருபையும் என்று பேதுரு நம்பினார். தேவனின் தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே மனிதன் விளித்தெழும்பி மாம்சத்தை வெறுக்க முடியும், சாத்தானை வெறுக்க முடியும். தேவனின் கண்டிப்பான ஒழுக்கம் மனிதனை சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கிறது, அவனது அவனுக்கு சொந்தமான சிறிய உலகத்திலிருந்து அவனை விடுவிக்கிறது, மேலும் தேவனின் பிரசன்னத்தின் வெளிச்சத்தில் அவனை வாழ அனுமதிக்கிறது. தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் விட சிறந்த இரட்சிப்பு எதுவுமில்லை! “ஓ தேவனே! நீர் என்னைத் தண்டித்து நியாயத்தீர்க்கும் வரை, நீர் என்னை விட்டு விலகவில்லை என்பதை நான் அறிவேன். நீ எனக்கு மகிழ்ச்சியையோ சமாதானத்தையோ கொடுக்காமல், என்னை துன்பத்தில் வாழவைத்து, எண்ணற்ற தண்டனைகளை என்மீது சுமத்தினாலும், நீர் என்னை விட்டு விலகாதவரை, என் இருதயம் அமைதியாக இருக்கும். இன்று, உம்முடைய தண்டனையும் நியாயத்தீர்ப்பும் எனது சிறந்த பாதுகாப்பாகவும், எனது மிகப்பெரிய ஆசீர்வாதமாகவும் மாறிவிட்டன. நீர் எனக்குக் கொடுக்கும் இரக்கம் என்னைப் பாதுகாக்கிறது. இன்று நீர் எனக்கு அளித்த கிருபை உமது நீதியுள்ள மனநிலையின் வெளிப்பாடாகும், மற்றும் இது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் ஆகும். மேலும், இது ஒரு சோதனை, அதை விட, இது துன்பத்தினாலான ஜீவனாகும்”, என்று பேதுரு ஜெபித்தார். தேவனின் தண்டனையிலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் இவ்வளவு கிருபையைப் பெற்றிருந்ததால், மாம்சத்தின் இன்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆழ்ந்த அன்பையும் அதிக பாதுகாப்பையும் தேடுவதற்கு பேதுருவுக்கு முடிந்தது. தனது வாழ்க்கையில், மனிதன் சுத்திகரிக்கப்பட்டு, அவனது மனநிலையில் மாற்றங்களை அடைந்திட விரும்பினால், உண்மையுள்ள வாழ்க்கையை வாழவும், ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றவும் விரும்பினால், அவன் தேவனின் தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், சாத்தானின் கையாளுதலிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தன்னை விடுவித்து, தேவனின் வெளிச்சத்தில் வாழும்படி, அவரிடமிருந்து விலகிச் செல்வதற்காக, தேவனின் ஒழுக்கப்படுத்துதலும் தேவன் அடிப்பதாலும் அவரிடமிருந்து விலகிட அனுமதிக்கக்கூடாது. தேவனின் தண்டனையும் நியாயத்தீர்ப்புமே ஒளி மற்றும் மனிதனின் இரட்சிப்பின் ஒளி என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், மேலும் மனிதனுக்கு இதைவிட சிறந்த ஆசீர்வாதம், கிருபை அல்லது பாதுகாப்பு எதுவும் இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

381. மனிதன் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறான், மாம்சத்தில் இருக்கிறான். அவர் சுத்திகரிக்கப்படாமல், தேவனின் பாதுகாப்பைப் பெறாவிட்டால், மனிதன் இன்னும் பாழானவனாகிவிடுவான். அவர் தேவனை நேசிக்க விரும்பினால், அவர் சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்பட வேண்டும். “தேவனே, நீர் என்னைத் தயவாக நடத்தும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆறுதலை உணர்கிறேன். நீர் என்னைத் தண்டிக்கும்போது, நான் இன்னும் பெரிய ஆறுதலையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன். நான் பலவீனமாக இருந்தாலும், சொல்லப்படாத துன்பங்களை சகித்துக்கொண்டாலும், கண்ணீரும் சோகமும் இருந்தாலும், இந்த துக்கம் என் கீழ்ப்படியாமையின் காரணமாகவும், என் பலவீனம் காரணமாகவும் இருப்பதை நீர் அறிந்திருக்கிறீர். உமது ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடியாததால் நான் அழுகிறேன், உமது தேவைகளுக்கு நான் போதுமானவனாக இல்லாததால் கவலையும் வருத்தமும் அடைகிறேன், ஆனால் நான் இந்த சாம்ராஜ்யத்தை அடைந்திட தயாராக இருக்கிறேன், உம்மைத் திருப்திப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உம் தண்டனை எனக்கு பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது, மேலும் எனக்கு சிறந்த இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது. உம் நியாயத்தீர்ப்பு, உம் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் மேலோங்கச் செய்கிறது. உமது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், உமது இரக்கத்தையும் அன்பான கிருபையையும் நான் அனுபவிக்க மாட்டேன். இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக உம் அன்பு வானங்களைத் தாண்டி மற்ற எல்லாவற்றின் மேலும் சிறந்து விளங்குகிறது என்பதை நான் காண்கிறேன். உன் அன்பு இரக்கம் மற்றும் அன்பான கிருபை மட்டுமல்ல. அதை விட, அது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் ஆகும். உம் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் எனக்கு அதிகமாக கொடுத்திருக்கின்றன. உன் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், ஒருவர் கூட சுத்திகரிக்கப்பட மாட்டார்கள், மேலும் ஒரு மனிதனாலும் கூட சிருஷ்டிகரின் அன்பை அனுபவிக்க முடியாது. நான் நூற்றுக்கணக்கான சோதனைகளையும் இன்னல்களையும் தாங்கிக் கொண்டாலும், மரணத்திற்கு அருகில் வந்திருந்தாலும், உம்மை உண்மையாக அறிந்து கொள்ளவும், உயர்ந்த இரட்சிப்பைப் பெறவும் அவைகள் என்னை அனுமதித்திருக்கின்றன. உமது தண்டனை, நியாயத்தீர்ப்பு மற்றும் ஒழுக்கம் என்னிடமிருந்து விலகிவிட்டால், நான் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் இருளில் வாழ வேண்டும். மனிதனின் மாம்சத்திற்கு என்ன நன்மைகள் உள்ளன? உம்முடைய தண்டனையும் நியாயத்தீர்ப்பும் என்னை விட்டு விலகினால், நீர் இனி என்னுடன் இல்லை என்பது போல, உம்முடைய ஆவி என்னைக் கைவிட்டிருப்பதைப் போல இருக்கும். அப்படியானால், எப்படி நான் ஜீவிக்க முடியும்? நீர் எனக்கு சுகவீனத்தைக் கொடுத்து, என் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டாலும், நான் தொடர்ந்து ஜீவிக்க முடியும், ஆனால் உம்முடைய தண்டனையும் நியாயத்தீர்ப்பும் எப்போதாவது என்னை விட்டு விலகினால், எனக்கு வாழ்வதற்கான வழி இருக்காது. உமது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல் நான் இருந்திருந்தால், உமது அன்பை நான் இழந்திருப்பேன், இது என்னால் விவரிக்க முடியாத ஆழமான அன்பாக இருக்கிறது. உமது அன்பு இல்லாமல், நான் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ் வேண்டியதாயிருக்கிறது மற்றும் உம்முடைய மகிமையான முகத்தைக் காண முடியாது. நான் எப்படி தொடர்ந்து வாழ்ந்திட முடியும்? அத்தகைய இருளை, அத்தகைய ஜீவியத்தை என்னால் தாங்க முடியவில்லை. உம்மை என்னுடன் வைத்திருப்பது உம்மைப் பார்ப்பதைப் போன்றதாகும், எனவே நான் உம்மை எப்படி விட்டுவிடுவேன்? உறுதியளிக்கும் ஒரு சில வார்த்தைகளாக இருந்தாலும், என் மிகப் பெரிய ஆறுதலை என்னிடமிருந்து எடுத்திட வேண்டாம் என்று நான் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன், நான் உம்மிடம் கெஞ்சுகிறேன். உமது அன்பை நான் அனுபவித்திருக்கிறேன், இன்று என்னால் உம்மிடமிருந்து விலகி இருக்க முடியாது. என்னால் உம்மை எப்படி நேசிக்க முடியவில்லை? உமது அன்பின் காரணமாக நான் அநேக துக்கத்தின் கண்ணீரை சிந்தியிருக்கிறேன், ஆனாலும் இது போன்ற ஒரு வாழ்க்கை மிகவும் உண்மையுள்ளதாகவும், என்னை வளப்படுத்தக்கூடியதாகவும், என்னை மாற்றக்கூடியதாகவும், அதிகமாக என்னை சிருஷ்டிகள் பெற்றிருக்க வேண்டிய சத்தியத்தை அடைந்திட அனுமதிப்பதுமாக இருக்கிறது என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்”, என்று பேதுரு ஜெபித்தார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

382. நீ பரிபூரணராக இருப்பதைத் தொடர்பவனாக இருந்தால், நீ சாட்சி பகிர்வாய், மேலும், “தேவனின் இந்தப் படிப்படியான கிரியையில், தேவனின் தண்டனைக்கான மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையை நான் ஏற்றுக்கொண்டேன், நான் மிகுந்த துன்பங்களைத் தாங்கினாலும், தேவன் மனிதனை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன், தேவனால் செய்யப்பட்ட கிரியையை நான் பெற்றுள்ளேன், தேவனின் நீதியைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கிறேன், அவருடைய தண்டனை என்னைக் காப்பாற்றியிருக்கிறது. அவருடைய நீதியான மனநிலை என்மேல் வந்து ஆசீர்வாதங்களையும் கிருபையையும் கொண்டு வந்திருக்கிறது. அவருடைய நியாயத்தீர்ப்பும் தண்டனையும் தான் என்னைப் பாதுகாத்து தூய்மைப்படுத்தியது. நான் தேவனால் தண்டிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்பட்டிருக்காவிட்டால், தேவனின் கடுமையான வார்த்தைகள் என்மீது வரவில்லை என்றால், நான் தேவனை அறிந்திருக்க முடியாது, நான் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. சிருஷ்டிகரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் ஒருவர் அனுபவிப்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, எல்லா சிருஷ்டிகளும் தேவனின் நீதியான மனநிலையையும் அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க வேண்டும், ஏனென்றால் தேவனின் மனநிலை மனிதனின் இன்பத்திற்கு தகுதியானது என்பதை ஒரு சிருஷ்டியாக இன்று நான் காண்கிறேன். சாத்தானால் பாழாக்கப்பட்டிருக்கிற ஒரு சிருஷ்டியாக, ஒருவர் தேவனின் நீதியான மனநிலையை அனுபவிக்க வேண்டும். அவருடைய நீதியான மனநிலையில் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இருக்கிறது, மற்றும் அதற்குமேலாக, அங்கே மிகுந்த அன்பும் இருக்கிறது. இன்று தேவனின் அன்பை முழுமையாக ஆதாயம் செய்ய எனக்கு இயலாதவனாய் இருக்கிறேன் என்றாலும், அதைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்திருக்கிறது, இதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்”, என்றும் நீ கூறுவாய். பரிபூரணமாக்கப்படுவதை அனுபவிப்பவர்கள் நடந்துவந்த பாதை இதுதான், மற்றும் இது அவர்கள் பேசுவதின் அறிவாகும். அத்தகையவர்கள் பேதுருவைப் போன்றவர்கள். அவர்களுக்கும் பேதுருவைப் போன்ற அனுபவங்கள் உள்ளன. அத்தகையவர்களும் ஜீவனைப் பெற்றவர்கள், சத்தியத்தைக் கொண்டவர்கள். அவர்கள் கடைசி வரை அனுபவிக்கும் போது, தேவனின் நியாயத்தீர்ப்பின் போது அவர்கள் நிச்சயமாக சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தங்களை முற்றிலுமாக விடுவித்து, தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

383. பல வருடங்கள் கடந்தபின், சுத்திகரிப்பு மற்றும் சிட்சிப்பு ஆகியவற்றின் கஷ்டங்களை அனுபவித்த மனிதன் வானிலை-தாக்கத்திற்கு ஆளானான். கடந்த காலங்களில் மனிதன் “மகிமை” மற்றும் “மாட்சிமை” ஆகியவற்றை இழந்திருந்தாலும், அவன் அதை அறியாமல், மனித நடத்தை கொள்கைகளைப் புரிந்துகொண்டு, மனிதகுலத்தைக் இரட்சிப்பதற்கான தேவனுடைய பல ஆண்டுகால பக்தியைப் பாராட்டினான். மனிதன் மெதுவாக தன் காட்டுமிராண்டித்தனத்தை வெறுக்கத் தொடங்குகிறான். அவன் எவ்வளவு கொடூரமானவன், தேவனைப் பற்றிய தவறான புரிதல்கள் மற்றும் அவரிடமிருந்து அவன் செய்த நியாயமற்ற கோரிக்கைகள் அனைத்தையும் அவன் வெறுக்கத் தொடங்குகிறான். கடிகாரத்தைத் திருப்ப முடியாது. கடந்த கால நிகழ்வுகள் மனிதனின் வருந்தத்தக்க நினைவுகளாக மாறுகின்றன, மேலும் தேவனுடைய வார்த்தைகளும் அன்பும் மனிதனின் புதிய வாழ்க்கையில் உந்து சக்தியாகின்றன. மனிதனுடைய காயங்கள் நாளுக்கு நாள் குணமடைகின்றன, அவனது வலிமை திரும்புகிறது, அவன் எழுந்து நின்று சர்வவல்லவரின் முகத்தைப் பார்க்கிறான்… அவர் எப்போதும் என் பக்கத்தில் இருந்தார் என்பதையும், அவருடைய புன்னகையும் அவருடைய அழகான முகமும் இன்னும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே அப்படிச் செய்கிறான். அவர் சிருஷ்டித்த மனிதகுலத்தின் மீது அவருடைய இருதயம் இன்னும் அக்கறை கொண்டுள்ளது, ஆரம்பத்தில் இருந்ததைப் போலவே அவருடைய கைகள் இன்னும் சூடானவையாவும் சக்திவாய்ந்தவையாககவும் இருக்கின்றன. மனிதன் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்புவது போல இருக்கிறது, ஆனால் இந்த நேரத்தில் மனிதன் இனி சர்ப்பத்தின் மயக்கும் வார்த்தைகளை செவிகொடுத்துக் கேட்பதில்லை, இனி யேகோவாவின் முகத்திலிருந்து விலகுவதில்லை. மனிதன் தேவனுக்கு முன்பாக மண்டியிட்டு, தேவனுடைய புன்னகை முகத்தைப் பார்த்து, அவரது மிகவும் விலையேறப்பெற்ற பலியை அளிக்கிறான்—ஓ! என் கர்த்தாவே, என் தேவனே!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்” என்பதிலிருந்து

முந்தைய: C. தன்னை அறிந்துகொள்வது மற்றும் மெய்யான மனந்திரும்புதலை அடைவது எப்படி என்பது குறித்து

அடுத்த: E. ஒரு நேர்மையான நபராக இருப்பது எப்படி என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக