C. தன்னை அறிந்துகொள்வது மற்றும் மெய்யான மனந்திரும்புதலை அடைவது எப்படி என்பது குறித்து

358. பல்லாயிரம் ஆண்டுகள் சீர்கேட்டுக்குப் பிறகு, மனிதன் உணர்வற்றவனாக, மந்த அறிவுள்ளவனாக இருக்கிறான்; தேவனைப் பற்றின மனிதனுடைய கலகத்தன்மை சரித்திர புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அளவிற்கு, தேவனை எதிர்க்கும் ஒரு பிசாசாய் அவன் மாறிவிட்டான். மனிதனே கூட தனது கலகத்தனமான நடத்தைப் பற்றிய முழு கணக்கை ஒப்புவிக்க இயலாது—ஏனென்றால் மனிதன் சாத்தானால் ஆழமாய்க் கெடுக்கப்பட்டிருக்கிறான், எங்கே திரும்புவது என்று அவனுக்குத் தெரியாத அளவிற்கு சாத்தானால் திசைமாறி நடத்தப்பட்டிருக்கிறான். இன்றும் கூட மனிதன் இன்னமும் தேவனுக்குத் துரோகம் செய்கிறான். மனிதன் தேவனைப் பார்க்கும்போது, அவருக்குத் துரோகம் செய்கிறான். அவன் தேவனைப் பார்க்க முடியாமல் போனால், அப்படியே அவன் அவருக்குத் துரோகம் செய்கிறான். இவர்கள் தேவனுடைய சாபங்களையும் தேவனுடைய கோபத்தையும் பார்த்தவர்களாய் இருந்தாலும்கூட, அவருக்கு இன்னும் துரோகம் செய்கிறார்கள். அதனால் மனிதனுடைய அறிவு அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் மனிதனுடைய மனசாட்சியும் அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் நான் கூறுகிறேன். நான் நோக்கிப் பார்க்கும் மனிதன், மனித உடையில் இருக்கும் ஒரு மிருகம், அவன் ஒரு விஷப்பாம்பு, மேலும் அவன் எவ்வளவு பரிதாபமாய் என் கண்கள் முன் தென்பட முயற்சித்தாலும், அவனிடத்தில் ஒருபோதும் நான் இரக்கம் காட்ட மாட்டேன். ஏனென்றால் மனிதனுக்கு, கருப்பு வெள்ளைக்கும், சத்தியத்திற்கும் சத்தியமல்லாததற்கும் இடையேயான வித்தியாசத்தைக் குறித்த புரிதல் இல்லை. மனிதனுடைய உணர்வு மிகவும் மரத்துப்போய்விட்டது, என்றாலும் இன்னமும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறான்; அவனுடைய மனிதத்தன்மை மிகவும் இழிவானதாக இருக்கிறது, அப்படியிருந்தும் அவன் ஒரு ராஜாவின் ஆளும் அதிகாரத்தைக் கொண்டிருக்க விரும்புகிறான். அப்படிப்பட்ட உணர்வைக் கொண்டிருக்கும் அவன் யாருக்கு ராஜாவாக முடியும்? அப்படிப்பட்ட மனிதத்தன்மையுடைய அவன் எப்படி சிங்காசனத்தின் மேல் அமர முடியும்? உண்மையாகவே மனிதனுக்கு வெட்கமே இல்லை. அவன் ஒரு அகந்தையுள்ள துன்மார்க்கன்! ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் உங்களிடம் ஒரு யோசனை கூறுகிறேன். முதலாவது நீங்கள் ஒரு கண்ணாடியைக் கண்டுபிடித்து, உங்களின் சொந்த அருவருப்பான பிம்பத்தைப் பார்க்கும்படி அறிவுறுத்துகிறேன்—ஒரு ராஜாவாக இருப்பதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது? ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரின் முகம் உனக்கு இருக்கிறதா? உன்னுடைய மனநிலையில் சிறிதளவேனும் மாற்றமில்லை, எந்த ஒரு சத்தியத்தையும் நீ கைக்கொள்ளவும் இல்லை, அப்படியிருந்தும் அற்புதமான நாளைக்காக நீ ஆசைப்படுகிறாய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்! இத்தகைய அசுத்தமான நிலத்தில் பிறந்த மனிதன், சமுதாயத்தால் மோசமாகக் கெடுக்கப்பட்டிருக்கிறான், நிலப்பிரபுத்துவ நெறிமுறைகளால் அவன் தாக்கப்பட்டிருக்கிறான். மேலும் அவன் “உயர் கல்வி நிறுவனங்களில்” கற்பிக்கப்பட்டிருக்கிறான். பின்னோக்கிய சிந்தனை, அசுத்தமான அறநெறி, வாழ்க்கைப் பற்றிய குறுகிய பார்வை, வாழ்க்கைக்கான இழிவான தத்துவம், முழுவதும் உபயோகமற்ற வாழ்க்கை, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்—இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதனின் இதயத்தில் தீவிரமாய் ஊடுருவி, அவனுடைய மனசாட்சியைக் கடுமையாக வலுவிழக்கச் செய்து தாக்கியுள்ளன. இதன் விளைவாக, மனிதன் எப்பொழுதும் தேவனிடமிருந்து தூரத்தில் இருக்கிறான், எப்பொழுதும் அவரை எதிர்க்கிறான். மனிதனுடைய மனநிலை நாளுக்கு நாள் அதிகக் கொடூரமாகிறது. தேவனுக்காக எதையும் விருப்பத்துடன் விட்டுவிட, விருப்பத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிய, மேலும், விருப்பத்துடன் தேவனுடைய பிரசன்னத்தைத் தேட ஒருவர் கூட இல்லை. அதற்குப் பதிலாக, சாத்தானின் இராஜ்யத்தின்கீழ், சேற்று நிலத்தில் மாம்ச கேட்டிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, இன்பத்தைத் பின்தொடர்வதைத் தவிர மனிதன் வேறொன்றும் செய்வதில்லை. சத்தியத்தைக் கேட்டாலும்கூட, இருளில் வாழ்கிற அவர்கள் அதை கைக்கொள்ள யோசிப்பதுமில்லை, அவர் பிரசன்னமாவதைப் பார்த்திருந்தாலும்கூட தேவனைத் தேடுவதற்கு அவர்கள் நாட்டங்கொள்வதுமில்லை. இவ்வளவு ஒழுக்கம் கெட்ட மனிதகுலத்திற்கு இரட்சிப்பின் வாய்ப்பு எப்படி இருக்கும்? இவ்வளவு சீர்கெட்ட ஒரு மனிதகுலம் எவ்வாறு வெளிச்சத்தில் வாழ முடியும்?

மனிதனின் மனநிலையை மாற்றுவது அவனது சாராம்சத்தைப் பற்றிய அறிவு, அடிப்படை மாற்றங்களான அவனது சிந்தனை, சுபாவம் மற்றும் மனதின் கண்ணோட்டம் ஆகியவற்றில் உண்டாகும் மாற்றத்தில் ஆரம்பிக்கிறது. இவ்வழியில் மட்டுமே மனிதனின் மனநிலையில் உண்மையான மாற்றங்கள் அடையப்படும். மனிதனின் அசுத்தமான மனநிலையானது அவனுடைய வாழ்வு சாத்தானால் நஞ்சூட்டப்பட்டு, நசுக்கப்பட்டதிலிருந்தும், அவனுடைய சிந்தனை, அறநெறி, உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் மேல் சாத்தான் விளைவித்த மோசமான தீங்கிலிருந்தும் தோன்றுகிறது. அதனுடைய மிகச்சரியான காரணம் என்னவென்றால் மனிதனின் அடிப்படைக் காரியங்கள் சாத்தானால் கெடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் அவைகளை உண்மையாக எப்படிப் படைத்தாரோ அதைப்போல முற்றிலும் இல்லாமல் இருக்கிறது. மனிதன் தேவனை எதிர்த்து, சத்தியத்தைப் புரிந்து கொள்ளாமல் போகிறான். இப்படி, மனிதனுடைய மனநிலையின் மாற்றங்கள், தேவனைப் பற்றிய புரிதலையும், சத்தியத்தைப் பற்றிய புரிதலையும் மாற்றக்கூடிய அவனுடைய சிந்தனை, உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றில் உண்டாகும் மாற்றத்திலிருந்து தொடங்க வேண்டும். மிக ஆழமாகக் கெடுக்கப்பட்டிருக்கிற இடங்களில் பிறந்தவர்கள், தேவன் யார் அல்லது தேவனை நம்புவது என்றால் என்ன என்று இன்னும் அறியாமலேயே இருக்கின்றனர். எவ்வளவு அதிகமாக ஜனங்கள் கெடுக்கப்படுகிறார்களோ, அவ்வளவு குறைவாக அவர்கள் தேவன் இருப்பதை அறிந்திருப்பார்கள், மேலும் அவர்களுடைய பகுத்தறிவும் உள்ளுணர்வும் அவ்வளவு மோசமானதாக இருக்கும். தேவனுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் கலகத்தன்மையின் மூலக்காரணம் மனிதன் சாத்தனால் கெடுக்கப்பட்டிருப்பதாகும். சாத்தானுடைய கெடுதலினால் மனிதனுடைய மனசாட்சி மரத்துப் போய்விட்டது. அவன் நெறிகெட்டு இருக்கிறான், அவனுடைய நினைவுகள் சீர்கெட்டதாக இருக்கின்றன, அவனுக்கு பின்னோக்கிய மனக்கண்ணோட்டம் இருக்கிறது. சாத்தானால் கெடுக்கப்படுவதற்கு முன்பாக, மனிதன் இயல்பாகவே தேவனைப் பின்பற்றினான், அவருடைய வார்த்தைகளைக் கேட்டு கீழ்ப்படிந்தான். அவன் இயற்கையாகவே நல்ல பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் இயல்பான மனிதத்தன்மையுடன் இருந்தான். சாத்தானால் கெடுக்கப்பட்டப் பிறகு, மனிதனின் உண்மையான பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் மனிதத்தன்மை மந்தமாகி, சாத்தானால் பலவீனமடைந்தது. இவ்வாறு, தேவனிடத்திலான கீழ்ப்படிதலையும் அன்பையும் அவன் இழந்துபோனான். அவனுடைய அறிவு ஒழுக்கம் தவறிப்போனது. அவன் மனநிலை மிருகத்தின் மனநிலையைப் போலவே மாறிவிட்டது. தேவனைப் பற்றின அவனுடைய கலகத்தன்மை ஏராளமானதாகவும் வருந்தத்தக்கதாகவும் மாறிவிட்டது. ஆயினும், மனிதன் இதை அறிந்திருக்கவுமில்லை, அங்கீகரிக்கவுமில்லை, வெறுமனே எதிர்க்கிறான், கண்மூடித்தனமாக கலகம் செய்கிறான். மனிதனுடைய பகுத்தறிவு, உணர்வு மற்றும் மனசாட்சியின் வெளிப்பாடுகளில் அவனுடைய மனநிலை வெளிப்படுகிறது. ஏனென்றால் அவனுடைய பகுத்தறிவும், உள்ளுணர்வும் சீர்கெட்ட நிலையில் உள்ளது. அவனுடைய மனசாட்சி மிகப்பெரிய அளவில் மழுங்கிப் போயிற்று. இவ்வாறு அவனுடைய மனநிலை தேவனுக்கு விரோதமாக கலகம் செய்கிறதாய் இருக்கிறது. மனிதனுடைய அறிவும், உள்ளுணர்வும் மாற முடியாவிட்டால், அவனுடைய மனநிலையில் மாற்றங்கள் என்பது தேவனுடைய சித்தத்திற்கு இணங்க நடக்காத ஒன்றாகவே இருக்கும். மனிதனுடைய உணர்வு சீர்கெட்டதாக இருந்தால், அவனால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது, தேவனால் பயன்படுத்தப்பட தகுதியற்றவனாவான். “இயல்பான உணர்வு” என்பது தேவனுக்குக் கீழ்ப்படிவது, அவருக்கு உண்மையாக இருப்பது, தேவனுக்காக வாஞ்சையாக இருப்பது, தேவனிடத்தில் முழுமையுடன் இருப்பது மற்றும் தேவனைக் குறித்த மனசாட்சியைக் கொண்டிருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. அது ஒரு மனதோடு, ஒரு சிந்தையோடு தேவனிடத்தில் இருப்பதையும், வேண்டுமென்றே தேவனை எதிர்க்காமல் இருப்பதையும் குறிக்கிறது. ஒழுக்கம் தவறிப்போன உணர்வைக் கொண்டிருப்பது இது போன்றதல்ல. மனிதன் சாத்தானால் கெடுக்கப்பட்டதிலிருந்து, அவன் தேவனைக் குறித்த கருத்துக்களை எழுப்புகிறான், அவனுக்கு தேவனிடத்தில் விசுவாசமோ அவரிடத்தில் வாஞ்சையோ இருந்ததில்லை, தேவனிடத்திலான உணர்வைக் குறித்துச் சொல்வதற்கு அவனுக்கு ஒன்றுமில்லை‌. மனிதன் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறான். அவர் மீது நியாயத்தீர்ப்புகளை வழங்குகிறான். மேலும் அவருடைய முதுகுக்குப் பின்னாக வசைமொழிகளை வீசியெறிகிறான். அவர் தேவன் என்ற தெளிவான புரிதலோடு, மனிதன் தேவனுடைய முதுகுக்குப் பின்பாக நியாயத்தீர்ப்பை வழங்குகிறான்; தேவனுக்குக் கீழ்ப்படிகிற எண்ணம் மனிதனுக்கு இல்லை. அவன் வெறுமனே கண்மூடித்தனமான கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் அவரிடத்தில் வைக்கிறான். ஒழுக்கம் தவறிப்போன உணர்வைக் கொண்ட இத்தகைய ஜனங்களால் தங்கள் சொந்த இழிவான நடத்தையை அறிந்துகொள்ளவோ அல்லது அவர்களுடைய கலகத்தன்மைக்காக வருத்தப்படவோ இயலாது. ஜனங்களால் தங்களையே அறிந்துகொள்ள முடிந்தால், அவர்கள் தங்கள் உணர்வை சிறிதளவு திரும்பப் பெற்றிருப்பார்கள். இன்னும் தங்களைக் குறித்து அறிய முடியாத ஜனங்கள் தேவனை எத்தனை அதிகமாக எதிர்க்கிறார்களோ, அவர்களின் உணர்வு அத்தனைக் குறைவுடன் இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்” என்பதிலிருந்து

363. ஒருபுறம், தேவன் தரும் சோதனைகளின் போது மனுஷன் அவனது குறைபாடுகளை அறிந்துகொள்வதோடு, அவன் அற்பமானவனாகவும், இழிவானவனாகவும், தாழ்ந்தவனாகவும் இருப்பதைக் காண்கிறான், தன்னிடம் எதுவுமே இல்லை, தான் ஒன்றுமேயில்லை என்பதையும் உணர்கிறான்; மறுபுறம், அவனது உபத்திரவங்களின் போது தேவன் மனுஷனுக்கு வெவ்வேறு சூழல்களை உருவாக்குகிறார், அவை தேவனின் சௌந்தரியத்தை மனுஷனை அதிகமாக அனுபவிக்க வைக்கிறது. வேதனையானது மிகப் பெரிதாகவும், சில சமயங்களில் தீர்க்கமுடியாததாகவும் இருந்தாலும், அதை அனுபவித்ததனால் அது கடுமையான துக்க நிலையை எட்டினாலும், தன்னுள் தேவன் எவ்வளவு அழகாக கிரியை செய்கிறார் என்பதை மனுஷன் காண்கிறான், இந்த அஸ்திபாரத்தில்தான் மனுஷனுக்கு தேவன்மீது உண்மையான அன்பு பிறக்கிறது. தேவனின் கிருபையுடனும், அன்புடனும், இரக்கத்துடனும் மட்டுமே, தன்னை உண்மையாக அறிந்துகொள்ள முடியாது என்பதை மனுஷன் காண்கிறான், மேலும் மனுஷனின் சாராம்சத்தையும் அவனால் அறிந்துகொள்ள முடியாது. தேவனின் சுத்திகரிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகிய இரண்டின் மூலமாகவும், மேலும் சுத்திகரிப்பு செயல்பாட்டின் போதும் மட்டுமே, மனுஷன் தனது குறைபாடுகளை அறிந்துகொள்ளவும், மேலும் தன்னிடம் எதுவும் இல்லை என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்” என்பதிலிருந்து

முந்தைய: B. சத்தியத்தைக் கடைப்பிடித்து, சத்தியத்தைப் புரிந்துகொண்டு, யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பது எப்படி என்பது குறித்து

அடுத்த: D. நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, மற்றும் சோதனைகள் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கு எவ்வாறு உட்படுவது என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக