L. தேவனுக்கு ஊழியம் செய்து அவருக்கு சாட்சி பகர்வது எப்படி என்பது குறித்து
469. பிரபஞ்சம் முழுவதிலும் தன் கிரியையின் தொடக்கத்திலிருந்தே, தேவன் அனைத்துத் தரப்பிலான ஜனங்கள் உட்பட, பல ஜனங்களைத் தனக்கு ஊழியம் செய்வதற்காக முன்குறித்திருக்கிறார். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதும், அவருடைய கிரியையை பூமியில் சுமூகமாக நிறைவேற்றுவதுமே அவருடைய நோக்கமாகும். இதுவே ஊழியம் செய்வதற்காக ஜனங்களைத் தெரிந்துகொள்வதில் தேவனுடைய நோக்கமாகும். தேவனுக்கு ஊழியம் செய்கிற ஒவ்வொருவரும் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய இந்த கிரியை தேவனுடைய ஞானத்தையும், சர்வவல்லமையையும், பூமியில் அவருடைய கிரியையின் கோட்பாடுகளையும், ஜனங்களுக்கு மேலும் தெளிவாக்குகிறது. தேவன் அவருடைய கிரியையைச் செய்வதற்கும், ஜனங்களோடு ஈடுபட்டு, அதினால் அவருடைய செயல்களை அவர்கள் இன்னும் தெளிவாக அறிந்து கொள்வதற்குமே உண்மையில் இந்த பூமிக்கு வந்திருக்கிறார். இன்றைக்கு, இந்த ஜனக்கூட்டமாகிய நீங்கள் நடைமுறை தேவனுக்கு ஊழியம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் தேவனால் எழுப்பப்பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு கணக்கிட முடியாத ஆசீர்வாதமாகும். தனக்கு ஊழியம் செய்ய ஒரு நபரை தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய சொந்த கோட்பாடுகள் தேவனுக்கு எப்பொழுதும் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது, ஜனங்கள் கற்பனை செய்வதுபோல், எவ்வகையிலும் வெறுமனே ஒரு உற்சாகமான விஷயம் அல்ல. இன்றைக்குத் தேவனுக்கு முன் ஊழியம் செய்பவர்கள் எல்லாரும் தேவனுடைய வழிநடத்துதல் மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியை தங்களிடத்தில் இருப்பதாலும், சத்தியத்தைப் பின்தொடரும் ஜனங்களாக அவர்கள் இருப்பதாலும் அப்படிச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். தேவனுக்கு ஊழியம் செய்கிற அனைவருக்கும் இவை குறைந்தபட்ச நிபந்தனைகளாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்” என்பதிலிருந்து
470. தேவனுக்கு ஊழியஞ்செய்பவர்கள் அவருக்கு நெருங்கியவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் தேவனுக்கு பிரியமானவர்களாகவும், தேவனுக்கு மிகுந்த உண்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தனிமையில் செயல்பட்டாலும் அல்லது வெளிப்படையாக செயல்பட்டாலும், நீங்கள் தேவனுக்கு முன்பாக தேவனுடைய சந்தோஷத்தைப் பெற முடியும், தேவனுக்கு முன்பாக உறுதியுடன் நிற்க முடியும், மற்ற ஜனங்கள் உன்னை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், எப்போதும் நீ நடக்க வேண்டிய பாதையில் நடந்து, தேவனுடைய பாரத்தை கருத்தில் கொள். இப்படிப்பட்டவர்கள் மட்டுமே தேவனுக்கு நெருங்கியவர்கள் ஆவர். அந்த தேவனுக்கு நெருங்கியவர்களால், அவருக்கு நேரடியாக சேவை செய்ய முடிகிறது, ஏனென்றால் அவர்களுக்கு தேவனின் பெரிதான கட்டளையும் தேவனுடைய பாரமும் கொடுக்கப்பட்டுள்ளன, அவர்களால் தேவனுடைய இருதயத்தைத் தங்களுடையதாகவும், தேவனுடைய பாரத்தைத் தங்களுடைய சொந்த பாரமாகவும் எடுத்துக்கொள்ள முடியும், மேலும் அவர்கள் தங்களின் எதிர்கால ஆதாயங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை: அவர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லையென்றாலும், எதையும் பெறுவதற்கு அவர்கள் நிற்கவில்லை என்றாலும், அவர்கள் அன்பான இதயத்தோடு தேவனை எப்பொழுதும் விசுவாசிப்பார்கள். எனவே, இவ்வகையான நபர் தேவனுக்கு நெருக்கமானவர். தேவனுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களும் கூட; தேவனுடைய நம்பிக்கைக்குரியவர்கள் மட்டுமே அவருடைய கவலைகளையும், அவருடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும், அவர்களின் மாம்சம் வேதனை மிகுந்ததாகவும், பலவீனமாகவும் இருப்பினும் அவர்களால் வேதனையைத் தாங்கவும், தேவனைத் திருப்திப்படுத்த தாங்கள் நேசிக்கிறதை விட்டுவிடவும் முடியும். தேவன் இத்தகைய ஜனங்களுக்கு அதிக பாரங்களைக் கொடுக்கிறார். மேலும் இத்தகைய ஜனங்களின் சாட்சி தேவன் செய்ய விரும்புகிறவைகளைத் தாங்கியிருக்கும். இவ்வாறு இந்த ஜனங்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள், இவர்கள் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற தேவ ஊழியர்கள், மேலும் இப்படிப்பட்ட ஜனங்கள் மாத்திரமே தேவனோடுகூட ஆளுகை செய்ய முடியும். நீ உண்மையிலேயே தேவனுக்கு நெருங்கியவராகும்போது தான் நீ சரியாக தேவனோடு கூட ஆளுகை செய்வாய்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி” என்பதிலிருந்து
471. உண்மையாக தேவனை சேவிப்பவர்கள், தேவனின் இருதயத்திற்கு ஏற்றவர்களாகவும், தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு தகுதியானவர்களாகவும் மற்றும் தங்கள் சமயம் சார்ந்த நம்பிக்கையை விட்டுவிடக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். செயல்திறம் மிக்கவர்களாக இருப்பதற்கு தேவனுடைய வார்த்தைகளை புசித்து குடிக்க விரும்பினீர்களானால், நீங்கள் சமயம் சார்ந்த நம்பிக்கையை விட்டுவிட வேண்டும். நீங்கள் தேவனை சேவிக்க விரும்பினால், சமயம் சார்ந்த நம்பிக்கையை முதலாவது விட்டுவிடுவதும், எல்லாவற்றிலும் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதும் அவசியம். தேவனை சேவிப்பவரிடம் இது காணப்படவேண்டும். இந்த அறிவு உன்னிடம் இல்லையென்றால், நீங்கள் சேவிக்க ஆரம்பித்ததுமே இடையூறையும் தொல்லையையும் உண்டாக்குவாய்; உங்கள் கருத்துகளை பற்றிக்கொண்டிருந்தால், அப்போது தேவன் உன்னை வீழ்த்த வேண்டியது தவிர்க்கமுடியாததாகிவிடும். பின்னர் உன்னால் ஒருபோதும் எழுந்திருக்கமுடியாது. உதாரணமாக தற்காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்: இன்றைய உரைகளும் செயல்பாடுகளும் வேதாகமத்தோடும் முன்பு தேவனால் செய்யப்பட்ட கிரியைகளோடும் பொருந்துவதாக காணப்படவில்லை. உனக்குக் கீழ்ப்படிய மனதில்லாதிருந்தால், நீ எந்நேரத்திலும் விழுந்துபோகக்கூடும். தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றபடி சேவிக்கவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், முதலாவது சமயம் சார்ந்த நம்பிக்கையை விட்டுவிடுவதோடு உங்கள் சொந்த பார்வையை சரி செய்யவேண்டும். கூறப்பட இருக்கின்றவற்றில் பெரும்பகுதி கடந்தகாலத்தில் சொல்லப்பட்டவற்றுக்கு இணக்கமாக காணப்படாது; கீழ்ப்படிவதற்கான விருப்பம் இல்லையென்றால், உனக்கு முன்னே காணப்படும் பாதையில் உன்னால் நடப்பதற்கு இயலாது. தேவன் கிரியை செய்யும் வழிமுறைகளில் ஒன்று உனக்குள் வேர் கொண்டால் நீ அதை ஒருபோதும் விட்டுவிடாதிருப்பாய்; இந்த வழிமுறையே உனது சமயம் சார்ந்த நம்பிக்கையாக மாறும். தேவன் உனக்குள் வேர்கொண்டிருந்தால், நீ சத்தியத்தைப் பெற்றிருக்கிறாய். தேவனின் சத்தியமும் வார்த்தையும் உனது வாழ்க்கையானால், தேவனைக் குறித்து எந்தக் கருத்தும் உனக்கு இருக்காது. தேவனைக் குறித்து உண்மையான அறிவை கொண்டுள்ள எவரும் எந்த கருத்தையும் கொண்டிருக்கமாட்டார்; எந்த சித்தாந்தத்திலும் நிலைகொண்டிருக்கமாட்டார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்” என்பதிலிருந்து
472. தேவனுக்கு ஊழியம் செய்வது எளிதான வேலை கிடையாது. நேர்மையற்ற மனநிலை மாறாமல் இருக்கிறவர்கள் ஒருபோதும் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. உன்னுடைய மனநிலை தேவனுடைய வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாமலும், தண்டிக்கப்படாமலும் இருந்தால், உன் மனநிலை இன்னும் சாத்தானையே பிரதிபலிக்கிறது. உன்னுடைய சொந்த, நல்ல நோக்கங்களைக் கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்கிறாய் என்றும், உன்னுடைய ஊழியம் உன்னிலுள்ள சாத்தானிய தன்மையைச் சார்ந்திருக்கிறது என்பதையும் இது நிரூபிக்கிறது. உன்னுடைய இயல்பான குணத்தைக் கொண்டும், உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களின்படியும் நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாய். மேலும் என்னவென்றால், நீ செய்ய விரும்புகிற காரியங்கள் தேவனுக்கு மகிழ்ச்சியளிப்பவை என்றும், நீ செய்ய விரும்பாத காரியங்கள் தேவனுக்கு வெறுப்பூட்டுபவை என்றும் நீ எப்போதும் நினைக்கிறாய். முழுவதும் உன்னுடைய சொந்த விருப்பங்களின்படி நீ வேலை செய்கிறாய். தேவனுக்கு ஊழியம் செய்வது என்று இதை அழைக்க முடியுமா? முடிவில் உன்னுடைய வாழ்க்கை நிலையில் சிறிதளவு மாற்றமும் இருக்காது. அதற்குப் பதிலாக, உன்னுடைய ஊழியம் உன்னை இன்னும் அதிக பிடிவாதமாக மாற்றும், இப்படி உன்னுடைய நேர்மையற்ற மனநிலை இன்னும் ஆழமாக வேரூன்றும். அதன் காரணமாக தேவனுக்கு ஊழியம் செய்வதைப் பற்றிய விதிகள் உனக்குள் உருவாகும். அவைகள் உன்னுடைய சொந்த குணத்தையும், உன்னுடைய சொந்த மனநிலையின்படி செய்யப்படும் உன்னுடைய ஊழியத்தில் இருந்து பெற்ற அனுபவங்களையும் முதன்மையாகச் சார்ந்திருக்கும். இவை மனிதனுடைய அனுபவங்களும் பாடங்களுமாகும். இது உலகில் வாழும் மனிதனுடைய தத்துவமாகும். இப்படிப்பட்ட ஜனங்களைப் பரிசேயர்கள் எனவும் மதத்தலைவர்கள் எனவும் வகைப்படுத்தலாம். அவர்கள் விழித்துக்கொண்டு மனந்திரும்பாவிட்டால், அவர்கள் நிச்சயமாக கள்ள கிறிஸ்துக்களாகவும், கடைசி நாட்களில் ஜனங்களை வஞ்சிக்கும் அந்திக்கிறிஸ்துக்களாகவும் மாறிவிடுவார்கள். சொல்லப்பட்ட கள்ளக்கிறிஸ்துக்களும், அந்திக்கிறிஸ்துக்களும் இப்படிப்பட்ட ஜனத்தின் நடுவிலிருந்து எழும்புவார்கள். தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் அவர்களுடைய சொந்த குணத்தைப் பின்பற்றி, அவர்களுடைய சொந்த சித்தத்தின்படி செயல்பட்டால், அவர்கள் எந்த நேரத்திலும் துரத்திவிடப்படும் அபாயத்தை வருவித்துக் கொள்கிறார்கள். தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக தாங்கள் பெற்றுக்கொண்ட பல வருட அனுபவத்தை மற்றவர்களின் இதயங்களை வெல்வதற்காக, அவர்களுக்குப் பிரசங்கம் செய்ய, அவர்களைக் கட்டுப்படுத்த, மேலும் உயர்ந்த நிலையில் நிற்க, ஜனங்கள் உபயோகிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களும், மேலும் மனந்திரும்பாதவர்களும் தங்களின் பாவங்களை அறிக்கையிடாதவர்களும், பதவியின் பலன்களை விட்டுக்கொடுக்காதவருமாகிய ஜனங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாக விழுந்து போவார்கள். அவர்கள் பவுலைப் போன்று, தங்களுடைய மூத்தநிலையைக் குறித்து மிதமிஞ்சி எண்ணி, தங்கள் தகுதிகளைப் பறைசாற்றுகிறார்கள். இதுபோன்ற ஜனங்களைத் தேவன் பரிபூரணத்திற்குக் கொண்டுவர மாட்டார். இதுபோன்ற ஊழியம் தேவனுடைய கிரியையில் தலையிடுகிறது. ஜனங்கள் பழையவற்றைப் பற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் கடந்த நாட்களின் கருத்துக்களைப் பற்றிக்கொள்கிறார்கள். இது அவர்களின் ஊழியத்திற்கு மிகப்பெரிய தடையாகும். உன்னால் அவைகளைத் தூக்கியெறிய முடியாவிட்டால், உன்னுடைய முழு வாழ்க்கையையும் அவைகள் திக்குமுக்காட வைத்து விடும். ஓடுவதால் உன் கால்களை அல்லது உழைப்பினால் உன் முதுகை நீ உடைத்துக்கொண்டாலும்கூட, தேவனுடைய ஊழியத்தில் நீ இரத்தசாட்சியாய் மரித்தாலும்கூட, தேவன் உன்னைச் சிறிதளவுகூட மெச்சிக்கொள்ள மாட்டார். அதற்கு நேர்எதிராக 'நீ ஒரு பாவி' என்று அவர் சொல்வார்.
இன்று முதல், எந்த மதம் சார்ந்தக் கருத்துக்களும் இல்லாத, தங்களுடைய பழைய சுயத்தை ஒதுக்கி வைக்கத் தயாராக உள்ள, மற்றும் எளிய மனதுடன் கூடிய வகையில் தேவனுக்குக் கீழ்ப்படிபவர்களை தேவன் பரிபூரணப்படுத்துவார். தேவனுடைய வார்த்தைகளுக்காக வாஞ்சையாயிருப்பவர்களை அவர் பரிபூரணப்படுத்துவார். இந்த ஜனங்கள் எழும்பி தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும். முடிவில்லா பரிபூரணமும், எல்லையற்ற ஞானமும் தேவனில் இருக்கிறது. இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஜனங்களால் அனுபவிக்கப்படும்படி அவருடைய அற்புதமான கிரியையும் விலைமதிப்பற்ற வார்த்தைகளும் காத்திருக்கின்றன. இந்த நிலையில், மதவாத கருத்துக்கள் உள்ள, மூத்தநிலையை கருத்தில் கொள்கிற, தங்களை விட்டுக்கொடுக்க இயலாதவர்களுக்கு இந்த புதிய காரியங்களை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாய் இருக்கும். இந்த ஜனங்களைப் பரிபூரணப்படுத்த ஆவியானவருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. ஒருவன் கீழ்ப்படியத் தீர்மானிக்காமல், தேவனுடைய வார்த்தைகளுக்காக தாகம் கொள்ளாமல் இருந்தால் அவனால் இந்தப் புதிய காரியங்களை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வெறுமனே, மேலும் மேலும் கலகக்காரர்களாகவும், வஞ்சகர்களாகவும் மாறி, தவறான பாதையில் சென்று விடுவார்கள். இப்பொழுது தன்னுடைய கிரியையை செய்துகொண்டிருக்கும் தேவன், தன்னை நேசிக்கிற மற்றும் புதிய ஒளியை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனேக ஜனங்களை எழுப்புவார், மேலும் அவர், தங்களுடைய மூத்தநிலையை கருத்தில் கொள்ளுகிற மதத்தலைவர்களை முழுவதுமாக வெட்டிச் சாய்த்து விடுவார். மாற்றத்தைப் பிடிவாதமாக எதிர்ப்பவர்கள் ஒருவரையும் அவர் விரும்புவதில்லை. இந்த ஜனங்களில் ஒருவராக இருக்க நீ விரும்புகிறாயா? நீ உன்னுடைய ஊழியத்தை உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களின்படி செய்கிறாயா அல்லது தேவனுக்கு வேண்டியபடி செய்கிறாயா? இது உனக்கே தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. நீ ஒரு மதத்தலைவனா அல்லது தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட புதிதாய்ப் பிறந்த குழந்தையா? உன்னுடைய ஊழியம் எந்த அளவு பரிசுத்த ஆவியால் மெச்சிக்கொள்ளப்படுகிறது? அதில் எந்த அளவு தேவன் நினைவில்கூட வைத்துக்கொள்வதில்லை? உன்னுடைய அனைத்து வருட ஊழியத்தின் விளைவாக உன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் உண்டாயிருக்கிறது? இவை அனைத்தையும் பற்றி நீ தெளிவாய் இருக்கிறாயா? நீ உண்மையாகவே விசுவாசத்துடன் இருந்தால், முன்பிலிருந்து உன்னுடைய பழைய மதம் சார்ந்த கருத்துக்களை ஒதுக்கித்தள்ளி, புதிய வழியில் சிறப்பாக தேவனுக்கு ஊழியம் செய்வாய். இப்போதும் எழும்பி நிற்கத் தாமதமாகி விடல்லை. பழைய மதம் சார்ந்தக் கருத்துக்கள் ஒரு நபரின் முழு வாழ்க்கையையும் பறித்துக் கொள்ளக்கூடும். ஒரு நபர் பெற்றுக்கொள்ளும் அனுபவம், அவர் தேவனிடமிருந்து விலகி, காரியங்களைத் தன் சொந்த வழியில் செய்விக்கக் காரணமாகக் கூடும். நீ இத்தகைய காரியங்களை ஒதுக்கி வைக்காவிட்டால், பின் இவைகள் உன் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் மாறிப்போகும். தேவன் தனக்கு ஊழியம் செய்பவர்களை எப்பொழுதும் பரிபூரணப்படுத்துகிறார். அவர்களைச் சுலபமாக அவர் தூக்கியெறிவதில்லை. தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும், சிட்சிப்பையும் நீ உண்மையாக ஏற்றுக்கொள்வாயானால், உன்னுடைய பழைய மதம் சார்ந்த நடைமுறைகளையும் விதிகளையும் உன்னால் ஒதுக்கி வைக்க முடியுமானால், மேலும் உன்னுடைய பழைய மதசார்ந்த கருத்துக்களை இன்றைய தேவனுடைய வார்த்தைகளின் அளவுகோலாக உபயோகிப்பதை நிறுத்துவாயானால், அப்பொழுது மட்டுமே உனக்கு எதிர்காலம் இருக்கும். நீ பழைய காரியங்களைப் பற்றிக்கொண்டு, அவற்றை இன்னும் உயர்வாக மதிப்பாயானால், நீ இரட்சிக்கப்படுவதற்கு ஒரு வழியும் இல்லை. தேவன் அத்தகைய ஜனங்களைக் கவனத்தில் கொள்வதில்லை. நீ உண்மையாகவே பரிபூரணப்பட விரும்பினால், முதலிலிருந்து எல்லாவற்றையும், முழுவதுமாக விட்டுவிட நீ தீர்மானிக்க வேண்டும். முன்பு செய்யப்பட்டவைச் சரியாக இருந்திருந்தாலும், அது தேவனுடைய கிரியையாக இருந்திருந்தாலும், அப்போதும் அதை ஒதுக்கித் தள்ளி, அதை பற்றிக்கொள்வதை நிறுத்துவதற்கு உன்னால் இயல வேண்டும். அது தெளிவாய்ப் பரிசுத்த ஆவியின் கிரியையாய் இருந்திருந்தாலும், பரிசுத்த ஆவியினால் நேரடியாக செய்யப்பட்டிருந்தாலும், இன்றைக்கு அதை நீ ஒதுக்கி வைக்க வேண்டும். அதை நீ பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இதுவே தேவனுக்குத் தேவையானது. சகலமும் புதுப்பிக்கப்பட வேண்டும். தேவனுடைய கிரியையிலும் தேவனுடைய வார்த்தையிலும், முடிந்துபோன பழைய காரியங்களைப் பற்றி அவர் குறிப்பிடுவதில்லை, பழைய பஞ்சாங்கத்தை அவர் தோண்டுவதும் இல்லை. தேவன் எப்பொழுதுமே புதியவர், அவர் ஒருபோதும் பழையவரல்ல, அவர் ஆதியிலிருந்த தன்னுடைய சொந்த வார்த்தைகளைக் கூட பற்றிக்கொள்வதில்லை—இது தேவன் எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை என்பதைக் காண்பிக்கிறது. எனவே, தேவன் தன்னுடைய பழைய வழிமுறைகளைக் கொண்டு இனி ஒருபோதும் கிரியை செய்யாதபோது, நீ ஒரு மனிதனாக, எப்பொழுதும் கடந்த காலத்துக்குரிய காரியங்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை விட்டுவிட மறுத்து, அவைகளை சூத்திர முறையில் உறுதியாக உபயோகப்படுத்தினால், உன்னுடைய வார்த்தைகளும் செயல்களும் இடைஞ்சலாக இருக்கிறதல்லவா? நீ தேவனுக்குப் பகைஞனாய் மாறி விட்டாய் அல்லவா? இந்த பழைய காரியங்கள் உன்னுடைய முழு வாழ்க்கையையும் நாசமாக்க, அழிக்க நீ இடங்கொடுக்க விரும்புகிறாயா? இந்த பழைய காரியங்கள் உன்னைத் தேவனுடைய கிரியையைத் தடுக்கும் நபராக மாற்றிவிடும்—நீ அப்படிப்பட்ட நபராகவா இருக்க விரும்புகிறாய்? உண்மையாகவே நீ அதை விரும்பவில்லை என்றால், சீக்கிரமாக நீ செய்துகொண்டிருப்பதை நிறுத்தி, திரும்பி, எல்லாவற்றையும் மீண்டும் தொடங்கு. தேவன் உன்னுடைய கடந்த கால ஊழியத்தை நினைவில்கொள்ள மாட்டார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்” என்பதிலிருந்து
473. தேவனுக்கு ஊழியஞ்செய்ய தீர்மானித்த ஒவ்வொருவரும் ஊழியம் செய்ய முடியும்—ஆனால் ஒவ்வொரு காரியத்தையும் தேவனின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, தேவனுடைய சித்தத்தை புரிந்துகொள்பவர்கள் மட்டுமே தேவனுக்கு ஊழியஞ்செய்ய தகுதியுடையவர்களும், உரிமையுடையவர்களுமாவார்கள். அநேக ஜனங்களும் தாங்கள் ஆர்வத்துடன் தேவனுக்காக சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும் வரையிலும், தேவனுக்காகப் பயணித்து, தங்களையே பயன்படுத்தி, தேவனுக்காக காரியங்களை விட்டுவிடுவது, மற்றும் பலவும், தேவனுக்கு ஊழியஞ்செய்வது என்று நம்புகிறதை நான் உங்களிடையே கண்டுபிடித்தேன். மிகுந்த பக்தியுள்ள பல ஜனங்கள் கூட, தங்கள் கைகளில் ஒரு வேதாகமத்தை வைத்துக்கொண்டு பரபரப்பாய்ச் சுற்றுவதும், பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்புவதும், மற்றும் ஜனங்களை மனந்திரும்பவும் அறிக்கையிடவும் செய்து அவர்களை இரட்சிப்படையச் செய்வதும் தேவனுக்கு ஊழியஞ்செய்வது என்று நம்புகிறார்கள். இறையியல் கல்லூரிகளில் மேற்படிப்பையும் பயிற்சியையும் தொடர்ந்து, தேவாலயங்களில் பிரசங்கிப்பதும், வேதவாக்கியங்களை வாசிப்பதின் வாயிலாக ஜனங்களுக்குப் போதிப்பதும் தேவனுக்கு ஊழியம் செய்வதில் அடங்கும் என்று பல மத அதிகாரிகள் நினைக்கின்றனர். மேலும், தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது வியாதியஸ்தர்களை சுகப்படுத்துவதும், தங்கள் சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் இருந்து பிசாசுகளை விரட்டுவதும் அல்லது அவர்களுக்காக ஜெபிப்பதும் அல்லது அவர்களுக்கு சேவை செய்வதும் என்று நம்பும் ஜனங்கள் ஏழ்மையான பகுதிகளில் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது தேவனுடைய வார்த்தைகளை உண்பது குடிப்பது, ஒவ்வொரு நாளும் தேவனிடம் ஜெபிப்பது, அத்துடன் எவ்விடத்திலுமுள்ள சபைகளுக்குச் சென்று அங்கு வேலை செய்வது என்று நம்பும் பலர் உங்கள் மத்தியில் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அல்லது ஒரு குடும்பத்தைக் கட்டுவது மற்றும் தங்களின் முழுமையையும் தேவனுக்கு அர்ப்பணிப்பது என்று நம்புகிற மற்ற சகோதர சகோதரிகளும் உள்ளனர். இருப்பினும், தேவனுக்கு ஊழியஞ்செய்வதின் உண்மையான அர்த்தம் ஒரு சில ஜனங்களுக்குத் தெரியும். வானத்து நட்சத்திரங்கள் பல இருப்பதைப்போல தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் அநேகர் இருந்தாலும், நேரடியாக ஊழியம் செய்யக்கூடிய மற்றும் தேவனுடைய சித்தத்திற்கிணங்க ஊழியம் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? “தேவனுக்குச் செய்யும் ஊழியம்” என்கிற சொற்றொடரின் கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளாததினாலும், தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்வது எப்படி என்பதைக் குறித்து நீங்கள் மிகக்குறைவாக புரிந்திருப்பதாலும் நான் இதைச் சொல்கிறேன். எவ்வகையான ஊழியம் தேவனுடைய சித்தத்திற்கு இணங்கி இருக்கும் என்பதை மிகச்சரியாக புரிந்து கொள்ள வேண்டிய அவசரத் தேவை ஜனங்களுக்கு உள்ளது.
நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்ய விரும்பினால், எவ்வகையான ஜனங்கள் தேவனுக்குப் பிரியம், எவ்வகையான ஜனங்களைத் தேவன் வெறுக்கிறார், எவ்வகையான ஜனங்கள் தேவனால் பூரணமாக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் எவ்வகையான ஜனங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதியானவர்கள் என்பதை நீங்கள் முதலில் புரிந்துவைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த அறிவை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். மேலும், தேவனுடைய கிரியையின் நோக்கங்களையும், அவர் இப்பொழுது இங்கே செய்யவிருக்கும் கிரியையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதைப் புரிந்து கொண்ட பிறகு, தேவவார்த்தையின் வழிநடத்துதலின் மூலம், முதலில் அனுமதியையும் தேவனுடைய கட்டளையையும் பெற்றிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்தை நீங்கள் பெற்று, தேவனுடைய கிரியையை நீங்கள் உண்மையாக அறிந்தவுடன், நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதியடைவீர்கள். நீங்கள் அவருக்கு ஊழியஞ்செய்யும் போதுதான், தேவன் உங்களின் ஆவிக்குரிய கண்களைத் திறந்து, அவருடைய கிரியையைப் பற்றிய அதிக புரிதலைப் பெறவும், அதை இன்னும் தெளிவாகக் காணவும் உங்களை அனுமதிக்கிறார். நீ இந்த உண்மை நிலைக்குள் நுழையும்போது, உன் அனுபவங்கள் மிகவும் ஆழமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கும், மேலும் உங்களில் இப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற்ற அனைவரும் சபைகள் மத்தியில் கடந்து போகவும், சகோதர சகோதரிகளுக்குத் தேவைகளை வழங்கவும், இதன் மூலம் நீங்கள் உங்கள் சொந்தக் குறைபாடுகளை ஈடுகட்ட ஒருவர் இன்னொருவரின் பெலனைப் பெற்றுக்கொள்ளவும், மேலும் உங்கள் ஆவிகளில் வளமான அறிவைப் பெறவும் முடியும். இந்த விளைவை அடைந்த பின்னரே உங்களால் தேவசித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்யவும், உங்கள் ஊழியத்தின் பாதையில் தேவனால் பூரணமாக்கப்படவும் இயலும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி” என்பதிலிருந்து
474. திருச்சபைகளை வழிநடத்தி, ஜனங்களுக்கு ஜீவனை வழங்குகிறவர்களாகவும், ஜனங்களுக்கு அப்போஸ்தலர்களாகவும் இருக்கக்கூடியவர்களுக்கு உண்மையான அனுபவம் இருக்க வேண்டும்; அவர்களுக்கு ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய சரியான புரிதலும், சத்தியத்தைப் பற்றிய சரியான அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும். அத்தகையவர்கள் மட்டுமே திருச்சபைகளை வழிநடத்தும் ஊழியக்காரர்களாக அல்லது அப்போஸ்தலர்களாக இருக்க தகுதியுடையவர்கள். இல்லையெனில், அவர்கள் மிகத் தாழ்ந்தவர்களாக இருந்து பின்பற்ற மட்டுமே முடியும், வழிநடத்த முடியாது, மேலும் ஜனங்களுக்கு ஜீவனை வழங்கக்கூடிய அப்போஸ்தலர்களாகவும் இருக்க முடியாது. ஏனென்றால், அப்போஸ்தலர்களின் செயல்பாடு விரைவாக செயல்படுவதோ அல்லது போராடுவதோ அல்ல; ஜீவனுக்கு ஊழியம் செய்யும் கிரியையை செய்வதற்கும் மற்றவர்களை அவர்களின் மனநிலையை மாற்றுவதற்கு வழிவகுக்கும் கிரியையைச் செய்வதும் தான் அப்போஸ்தலர்களின் செயல்பாடாக இருக்கிறது. இந்தச் செயல்பாட்டைச் செய்பவர்கள் ஒரு கனமான பொறுப்பை ஏற்க நியமிக்கப்படுகிறார்கள், இந்தப் பொறுப்பானாது யாராலும் தோள்களில் சுமக்க முடியாததாக இருக்கிறது. இந்த வகையான கிரியையை ஜீவனை அறிந்தவர்கள், அதாவது சத்திய அனுபவமுள்ளவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். வெறுமனே கைவிடக்கூடிய, விரைந்து செயல்படக்கூடிய, அல்லது தங்களையே செலவழிக்க விரும்பும் எவராலும் இதை மேற்கொள்ள முடியாது; சத்திய அனுபவம் இல்லாதவர்கள், கிளைநறுக்கப்படாதவர்கள் அல்லது நியாயந்தீர்க்கப்படாதவர்கள் ஆகியோரால் இந்த வகை கிரியைகளைச் செய்ய இயலாது. எந்த அனுபவமும் இல்லாத ஜனங்களால், யதார்த்தம் இல்லாத ஜனங்களால் யதார்த்தத்தை தெளிவாகக் காண முடிவதில்லை, ஏனென்றால் அவர்களும் இந்த வகையானவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள். எனவே, இந்த வகையான நபரால் தலைமைதாங்கும் கிரியைகளைச் செய்ய இயலாது என்பது மட்டுமல்லாமல், அவர்கள் நீண்ட காலம் சத்தியம் இல்லாமல் இருந்தால், அவர்கள் அகற்றப்பட வேண்டிய பொருளாக மாறுவார்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து
475. கிரியையைப் பொறுத்தவரை, கிரியை என்பது தேவனுக்காக சுற்றித்திரிவது, எல்லா இடங்களிலும் பிரசங்கிப்பது மற்றும் அவருக்காக செலவு செய்வது என்பது தான் என்று மனுஷன் விசுவாசிக்கிறான். இந்த விசுவாசம் சரியானது தான் என்றாலும், இது மிகவும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது; தேவன் மனுஷனிடம் கேட்பது தமக்காக சுற்றித்திரிய வேண்டும் என்பது மட்டுமல்ல; இதையும் தாண்டி, இந்த கிரியையானது ஊழியம் செய்வது மற்றும் ஆவிக்குள் தேவையானவற்றை வழங்குவது ஆகியவற்றைப் பற்றியும் அக்கறை கொண்டுள்ளதாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகால அனுபவங்களுக்குப் பிறகும், பல சகோதர சகோதரிகள் தேவனுக்காக கிரியை செய்வதைப் பற்றி ஒருபோதும் சிந்தித்துப் பார்த்ததில்லை, ஏனென்றால் மனுஷனால் சிந்திக்கப்படும் கிரியையானது தேவன் கேட்டுக்கொள்வதற்கு முரணானக இருக்கிறது. ஆகையால், கிரியை விஷயத்தில் மனுஷனுக்கு எந்த ஆர்வமும் இல்லை, மேலும் மனுஷனின் பிரவேசமும் ஒருதலைப்பட்சமாக இருப்பதற்கு இதுவே சரியான காரணமாகவும் இருக்கிறது. நீங்கள் அனைவரும் தேவனுக்காக கிரியை செய்வதன் மூலம் உங்கள் பிரவேசத்தைத் தொடங்க வேண்டும், இதன்மூலம் நீங்கள் அனுபவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இதில் தான் நீங்கள் பிரவேசிக்க வேண்டும். கிரியை என்பது தேவனுக்காக சுற்றித்திரிவதைக் குறிக்காது, ஆனால் மனுஷனின் ஜீவனும் மனுஷன் ஜீவிக்கிறதும் தேவனுக்கு இன்பத்தை அளிக்க முடியுமா என்பதைக் குறிக்கிறது. தேவனைப் பற்றி சாட்சிக் கொடுப்பதற்கும், மனுஷனுக்கு ஊழியம் செய்வதற்கும் ஜனங்கள் தேவன் மீதுள்ள பக்தியையும், தேவனைப் பற்றிய அறிவையும் பயன்படுத்துவதைத்தான் கிரியை குறிக்கிறது. இதுவே மனுஷனின் பொறுப்பு, எல்லா மனுஷரும் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். உங்கள் பிரவேசம் தான் உங்கள் கிரியை என்றும், தேவனுக்காக கிரியை செய்யும் போது நீங்கள் பிரவேசிக்க முற்படுகிறீர்கள் என்றும் நீங்கள் கூறலாம். தேவனின் கிரியையை அனுபவிப்பது என்பது அவருடைய வார்த்தையைப் புசித்துக் குடிக்க உங்களுக்குத் தெரியும் என்று அர்த்தமல்ல; மிக முக்கியமாக, தேவனைப் பற்றி எவ்வாறு சாட்சிக் கொடுக்க வேண்டும் என்பதையும், தேவனுக்கு சேவை செய்வதையும், மனுஷனுக்கு ஊழியம் செய்வதையும் மற்றும் வழங்குவதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது தான் அதன் அர்த்தம். இது கிரியை மட்டுமல்ல, இது உங்கள் பிரவேசமுமாக இருக்கிறது; ஒவ்வொருவரும் இதைத்தான் செய்துமுடிக்க வேண்டும். தேவனுக்காக சுற்றித்திரிவதிலும், எல்லா இடங்களிலும் பிரசங்கிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள் அநேகர் இருக்கின்றனர், ஆனால் அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தை கவனிக்காமல், ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிப்பதை அவர்கள் புறக்கணிக்கின்றனர். இதுதான் தேவனுக்கு சேவை செய்பவர்களை தேவனை எதிர்ப்பவர்களாக மாற வழிவகுத்திருக்கிறது. …
தேவனின் சித்தத்தை நிறைவேற்றவும், தேவனின் இருதயத்தைப் பின்தொடரும் அனைவரையும் அவர் முன் கொண்டுவருவதற்கும், மனுஷனை தேவனிடம் கொண்டுவருவதற்கும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் தேவனின் வழிகாட்டுதலையும் மனுஷனுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அதன் மூலம் தேவனுடைய கிரியையின் பலனை நிறைவேற்றுவதற்கும் நீங்கள் கிரியை செய்கிறீர்கள். ஆகையால், நீங்கள் கிரியையின் சாராம்சம் குறித்து முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். தேவனால் பயன்படுத்தப்படுபவனாக, ஒவ்வொரு மனுஷனும் தேவனுக்காக கிரியை செய்ய தகுதியானவன் தான், அதாவது அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், நீங்கள் உணர வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது: தேவனால் நியமிக்கப்பட்ட கிரியையை மனுஷன் செய்யும்போது, தேவனால் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் மனுஷனால் சொல்லப்படுவதும் அறியப்படுவதும் முற்றிலும் மனுஷனின் வளர்ச்சியாக இருப்பதில்லை. நீங்கள் உங்கள் கிரியையின் போது உங்கள் சொந்தக் குறைபாடுகளை நன்கு அறிந்துகொள்வதோடு, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அதிக தெளிவைப் பெறுவதும் நீங்கள் செய்யவேண்டிய விஷயங்கள் ஆகும். இவ்வாறாக, உங்கள் கிரியையின் போது சிறந்த பிரவேசித்தலைப் பெற நீங்கள் செயல்படுத்தப்படுவீர்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (2)” என்பதிலிருந்து
476. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளிலிருந்து விலகிச் செல்லும் ஊழியம் என்பது மாம்சமும் கருத்துகளும் கொண்ட ஊழியமாகும் மற்றும் அது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இருப்பதற்கு சாத்தியமில்லை. ஜனங்கள் மதக் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவித்தால், அவர்களால் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற எதையும் செய்ய இயலாது மற்றும் அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்தாலும், அவர்கள் கற்பனைகளுக்கும் கருத்துக்களுக்கும் நடுவே ஊழியம் செய்கிறார்கள் மற்றும் அவர் சித்தத்திற்கு ஏற்ப ஊழியம் செய்ய அவர்களால் ஒருபோதும் இயலாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்ற முடியாதவர்களுக்கு தேவனுடைய சித்தம் புரிவதில்லை. தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால் தேவனைச் சேவிக்க முடியாது. தேவன் தனது சொந்த இருதயத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கும் ஊழியத்தை விரும்புகிறார். கருத்துக்கள் மற்றும் மாம்சங்களைக் கொண்ட ஊழியத்தை அவர் விரும்புவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் படிகளைப் பின்பற்ற ஜனங்களால் இயலாது என்றால், அவர்கள் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவிக்கிறார்கள். அத்தகையவர்களின் ஊழியம் குறுக்கிட்டு, தொந்தரவு செய்கிறது. அத்தகைய ஊழியம் தேவனுக்கு முரணானது. இவ்வாறு தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்களால் தேவனைச் சேவிக்க இயலாது. தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்கள் நிச்சயமாக தேவனை எதிர்க்கிறார்கள் மற்றும் அவர்களால் தேவனுடன் ஒத்துப்போக இயலாது. இன்றைய தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதும், தேவனுடைய தற்போதைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட திறனுடன் இருப்பதும், இன்றைய தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்ற திறனுடன் இருப்பதும், தேவனுடைய புதிய வார்த்தைகளுக்கு ஏற்ப பிரவேசிப்பதும் என இவை “பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுதல்” என்பதற்கு அர்த்தமாகின்றன. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றி பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருப்பவன் இவன் தான். அத்தகையவர்கள் தேவனுடைய புகழ்ச்சியைப் பெறுவது, தேவனைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அவர்களால் தேவனுடைய சமீபத்திய கிரியைகளிலிருந்து தேவனுடைய மனநிலையையும் அறிந்து கொள்ள முடியும் மற்றும் மனிதனுடைய கருத்துக்கள் மற்றும் கீழ்ப்படியாமை மற்றும் மனிதனுடைய இயல்பு மற்றும் சாராம்சம் ஆகியவற்றை அவருடைய சமீபத்திய கிரியையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும், அவர்கள் தங்கள் ஊழியத்தின் போது படிப்படியாக அவர்களுடைய மனநிலையில் மாற்றங்களை அடைய முடியும். இது போன்றவர்கள் மட்டுமே தேவனை அடையக்கூடியவர்கள் மற்றும் உண்மையான வழியை உண்மையாகக் கண்டுபிடித்தவர்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து
477. இன்றைய தேவனை சேவிக்கும்போது, கடந்த காலத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஞானத்தினால் வெளிப்படுத்தப்பட்ட காரியங்களை நீங்கள் பற்றிக்கொண்டால் அது இடையூறு விளைவிக்கக்கூடியதாகவும், உங்கள் நடைமுறைகள் பழமையாகிப் போனதாகவும் வெற்று சமய சடங்காச்சாரமாகவும் மட்டுமே இருக்கும். தேவனை சேவிப்பவர்கள் ஏனைய தராதரங்களோடு வெளிப்புறமாக தாழ்மையாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் என்று நீ நம்பினால், அவ்வகையான அறிவை இக்காலத்தில் நடைமுறைப்படுத்தினால், அவ்வறிவு சமய நோக்கம் கொண்டதாகும்; அச்செயல்பாடு மாய்மாலமாகிவிடும். “சமயம் சார்ந்த நம்பிக்கை” என்னும் பதம் (முன்பு தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தைகளின் புரிதல் மற்றும் பரிசுத்த ஆவியானவரால் நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சம் உள்பட) பழமையாகிப்போன மற்றும் வழக்கத்தில் இல்லாத காரியங்களைக் குறிக்கும். இக்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்தினால் அவை தேவனின் செயல்பாட்டுக்கு இடையூறாக அமையும்; மனுஷனுக்கு ஒரு நன்மையையும் கொண்டு வராது. சமயம் சார்ந்த நம்பிக்கைகளை மக்கள் தம்மிடமிருந்து அகற்றாவிட்டால், அது அவர்கள் தேவனை சேவிப்பதற்கு பெரிய தடையாக மாறும். சமயம் சார்ந்த நம்பிக்கையுள்ள மக்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையுடன் முன்னேறிச் செல்ல எந்த வழியும் இல்லை; அவர்கள் ஒன்று, இரண்டு என அடி சறுக்குவார்கள். ஏனென்றால் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் மனுஷனை அசாதாரண சுயநீதி கொண்டவனாகவும் அகந்தை கொண்டவனாகவும் மாற்றுகின்றன. தேவன் தாம் முன்பு கூறியவற்றை, செய்தவற்றை குறித்த பழைய நினைவுகளில் திளைப்பவரல்லர்; மாறாக, ஏதாவது ஒன்று பழையதாகிவிட்டால் அதை அவர் நீக்கிப்போடுகிறார். உண்மையில் நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட முடியவில்லையா? தேவன் முற்காலத்தில் கூறிய வார்த்தைகளைப் பற்றிக்கொண்டிருந்தால், இது நீ தேவனின் கிரியைகளை அறிந்திருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறதா? இன்று பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தை உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், கடந்த கால வெளிச்சத்தை பற்றிக் கொண்டிருப்பதால், நீ தேவனின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாய் என்று நிரூபிக்க இயலுமா? இன்னும்கூட சமயம் சார்ந்த நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட இயலவில்லையா? அப்படியாயின் நீ தேவனை எதிர்க்கும் ஒருவனாக மாறுவாய்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்” என்பதிலிருந்து
478. பலர் தங்கள் ஆர்வத்தினுடைய பலத்தின் பேரில் தேவனுக்குச் சேவைச் செய்கிறார்கள், ஆனால் தேவனுடைய நிர்வாக ஆணைகளைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை, அவருடைய வார்த்தைகளின் தாக்கங்களைப் பொறுத்தமட்டில் இன்னும் குறைவாகவேக் கருதுகின்றனர். ஆகவே, அவர்களின் நல்ல நோக்கங்களுடன், தேவனின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விஷயங்களை அவர்கள் அடிக்கடி செய்கிறார்கள். கடுமையானச் சந்தர்ப்பங்களில், அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், தேவனைப் பின் தொடர்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இழக்கிறார்கள், மேலும் முடிவில் தேவனுடைய வீட்டிலே இணைந்திருக்கும் காரியத்தில் விடுபட்டு அவர்கள் நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். இந்த மக்கள் தங்களுடைய அறியாமை நல்ல நோக்கங்களின் பலத்தின் அடிப்படையில் தேவனுடைய வீட்டில் வேலை செய்கிறார்கள், பிறகு தேவனுடைய மனதைக் கோபப்படுத்துவதிலே முடிவடைகிறார்கள். மக்கள் தங்கள் அதிகாரிகளுக்கும் பிரபுக்களுக்கும் சேவை செய்யும் வழிமுறைகளைத் தேவனுடைய வீட்டிற்கும் கொண்டு வந்து எந்த ஒரு சிரமுமில்லாமல் எளிதில் காரியங்களை அடைய அவர்களைக் கொண்டு முயற்சிக்கலாம் என விருதாவாக நினைக்கிறார்கள். தேவனுக்கு ஆட்டுக்குட்டியின் மனநிலை இல்லை, ஆனால் ஒரு சிங்கத்தின் மனநிலை இருக்கிறது என்று அவர்கள் ஒருபோதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆகவே, முதன் முறையாக தேவனோடு இணைந்தவர்கள் அவருடன் தொடர்புக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் தேவனுடைய இருதயம் மனிதனைப் போலல்லாது இருக்கிறது. நீ பல உண்மைகளைப் புரிந்துக் கொண்ட பின்னரே நீ தொடர்ந்து தேவனை அறிந்துக் கொள்ள முடியும். இந்த அறிவு வெறுமனே சொற்களாலும் கோட்பாடுகளாலும் ஆனது அல்ல, மாறாக நீ தேவனோடு நெருங்கிய நம்பிக்கையில் நுழைவதன் மூலமாகவும், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகிறார் என்பதற்கான சான்றாகவும் நீ இதை ஒரு பொக்கிஷமாகப் பயன்படுத்தலாம். நீ இந்த அறிவின் யதார்த்தத்தைக் கொண்டிருக்காமல் மற்றும் சத்தியத்துடன பொருந்தவில்லை என்றால், உன் உணர்ச்சிவசப்பட்ட சேவையானது தேவனுக்கு வெறுப்பையும் விருப்பமற்றதையும் மட்டுமே உ மீது கொண்டு வர முடியும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மூன்று புத்திமதிகள்” என்பதிலிருந்து
479. மதத்தில், அநேகர் தங்கள் ஜீவிதங்கள் முழுவதும் பெரும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்: அவர்கள் தங்கள் சரீரங்களை அடக்கி, தங்கள் சிலுவையைச் சுமக்கிறார்கள், மேலும் அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கும்போதும் அவர்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள், சகித்துக்கொள்கிறார்கள்! சிலர் தங்கள் மரித்துப்போன காலை நேரத்தில் இன்னும் உபவாசம் இருக்கிறார்கள். அவர்கள் ஜீவித்திருக்கும் வரை அவர்கள் நல்ல உணவைப் புசிக்காமலிருந்து, ஆடைகளை அணியவும் மறுத்து, துன்பப்படுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அவர்களால் சரீரத்தை அடக்கி, மாம்சத்தைக் கைவிட முடிகிறது. துன்பங்களைத் தாங்குவதற்கான அவர்களின் மனநிலை பாராட்டத்தக்கது. ஆனால் அவர்களின் சிந்தனை, அவர்களின் கருத்துக்கள், அவர்களின் மனப்பான்மை மற்றும் நிச்சயமாக அவர்களின் பழைய சுபாவம் ஆகியவை சிறிதளவும் கையாளப்படவில்லை. அவர்கள் தங்களைப் பற்றிய உண்மையான அறிவைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தங்களது மனதில் கொண்டுள்ள தேவனின் உருவமானது பாரம்பரியமானதாக, சிறியதாக மற்றும் தெளிவற்றதாக இருக்கிறது. தேவனுக்காகத் துன்பப்படுவதற்கான அவர்களின் தீர்மானம் அவர்களின் வைராக்கியத்திலிருந்தும், அவர்களின் நேர்மறையான இயல்புகளிலிருந்தும் வருகிறது. அவர்கள் தேவனை விசுவாசித்தாலும், அவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவோ, அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ளவோ இல்லை. அவர்கள் வெறுமனே கிரியை செய்து, தேவனுக்காகக் கண்மூடித்தனமாக துன்பப்படுகிறார்கள். அவர்கள் விவேகத்துடன் செயல்படுவதில் எந்த மதிப்பும் இல்லை, அவர்களின் ஊழியம் உண்மையில் தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை, மேலும் தேவனின் அறிவை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் அவர்கள் அறியவில்லை. அவர்கள் ஊழியம் செய்யும் தேவன் அவருடைய அசல் உருவத்தில் இருக்கும் உண்மையான தேவன் அல்ல, ஆனால் புராணக்கதைகளில் வரும் தேவனாக, அவர்களின் சொந்தக் கற்பனையின் விளைவாக, அவர்கள் மட்டுமே கேள்விப்பட்ட, அல்லது எழுத்துக்களில் காணப்படும் தேவனாக இருக்கிறார். பின்னர் அவர்கள் தங்கள் வளமான கற்பனைகளையும் பக்தியையும் தேவனுக்காகக் கஷ்டப்படுவதற்கும், தேவன் செய்ய விரும்பும் தேவனின் கிரியையை மேற்கொள்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஊழியம் மிகவும் துல்லியமற்றதாக இருக்கிறது, அதாவது நடைமுறையில் அவர்களில் எவரும் தேவனின் சித்தத்திற்கு ஏற்ப உண்மையிலேயே ஊழியம் செய்ய முடிவதில்லை. அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் கஷ்டப்பட்டாலும், ஊழியம் பற்றிய அவர்களின் உண்மையான கண்ணோட்டமும், தேவன் என்று அவர்கள் மனதில் கொண்டுள்ள உருவமும் மாறாமல் இருக்கின்றன, ஏனென்றால் அவர்கள் தேவனின் நியாயத்தீர்ப்பு, சிட்சை, சுத்திகரிப்பு மற்றும் பரிபூரணத்தை அனுபவிக்கவில்லை, மேலும் சத்தியத்தைப் பயன்படுத்தி யாரும் அவர்களை வழிநடத்தவும் இல்லை. இரட்சகராகிய இயேசுவை அவர்கள் விசுவாசித்தாலும், அவர்களில் யாரும் இரட்சகரைப் பார்த்ததில்லை. புராணக்கதை மற்றும் செவிவழியாக மட்டுமே அவர்கள் அவரை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, ஒரு குருட்டு மனுஷன் தனது சொந்த தந்தைக்கு ஊழியம் செய்வது போல, கண்களை மூடிக்கொண்டு தோராயமாக ஊழியம் செய்வதைப் போல இது இருக்கிறது. அத்தகைய ஊழியத்தால் இறுதியில் எதை அடைய முடியும்? அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்? ஆதி முதல் அந்தம் வரை, அவர்களின் ஊழியம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது; அவர்கள் மனுஷனால் உருவாக்கப்பட்ட பாடங்களை மட்டுமே பெறுகிறார்கள், மேலும் அவர்களின் ஊழியமானது அவர்களின் இயல்பான தன்மை மற்றும் அவர்களின் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கிறது. இது என்ன வெகுமதியைக் கொடுக்க முடியும்? இயேசுவைக் கண்ட பேதுருவுக்கு கூட, தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்வது எப்படி என்று தெரியவில்லை; அவன் தனது வயதான காலத்தில் மட்டுமே இதை அறிந்துகொண்டான். இது சிறிதளவு கூட கையாளப்படுவதை அல்லது கத்தரிக்கப்படுவதை அனுபவிக்காத, மற்றும் தங்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லாத அந்தக் குருடர்களைப் பற்றி இது என்ன கூறுகிறது? உங்களில் பலர் இன்று செய்யும் ஊழியம் இந்த குருடர்களின் ஊழியத்தை போன்றிருக்கிறது அல்லவா? நியாயத்தீர்ப்பைப் பெறாதவர்கள், கத்தரித்தல் மற்றும் கையாளுதலை பெறாதவர்கள், மாறாதவர்கள்—அவர்கள் அனைவரும் அரைகுறையாக ஜெயங்கொள்ளப்படவில்லையா? அத்தகையவர்களால் என்ன பயன்? உனது சிந்தனை, உனது ஜீவித அறிவு, மற்றும் தேவனைப் பற்றிய உனது அறிவு ஆகியவை புதிய மாற்றங்களைக் காட்டவில்லை என்றால், நீ உண்மையிலேயே எதையும் பெறவில்லை என்றால், நீ உனது ஊழியத்தில் குறிப்பிடத்தக்க எதையும் அடைய மாட்டாய்!
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (3)” என்பதிலிருந்து
480. இயேசுவால் தேவனுடைய கட்டளையான முழு மனுக்குலத்தின் மீட்பின் வேலையை நிறைவேற்ற முடிந்தது. ஏனென்றால் அவர் தனக்காக எந்த திட்டங்களையும் ஏற்பாடுகளையும் செய்யாமல் ஒவ்வொரு காரியத்தையும் தேவனுடைய சித்தத்திற்குக் ஒப்புக்கொடுத்தார். அதனால் உங்களுக்கு எல்லாம் நன்றாக புரிந்துள்ளபடி தேவனான அவரே தேவனுக்கு நெருக்கமானவராக இருந்தார். (உண்மையில், அவரே தேவன், தேவனால் தேவன் என்று சாட்சி பகிரப்பட்டவர். விஷயத்தினை விளக்க இயேசு பற்றிய உண்மையை இங்கு கூறுகிறேன்.) அவரால் எப்போதும் தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை மையப்படுத்த முடிந்தது, மேலும் அவர் எப்போதும் பரலோக பிதாவினிடத்தில் ஜெபித்தார், பரலோக பிதாவினுடைய சித்தத்தை நாடினார். அவர்: “பிதாவாகிய தேவனே! உம்முடைய சித்தத்தை நிறைவேற்றும், என்னுடைய சித்தத்தின்படி அல்ல, உம்முடைய திட்டத்தின்படி செயல்படும். மனிதன் பலவீனமாக இருக்கலாம், ஆனால் நீர் ஏன் அவனுக்காகக் கரிசனப்படுகிறீர்? எறும்பைப்போல் உம்முடைய கரத்தில் இருக்கும் மனிதன் உம்முடைய அக்கறைக்கு எப்படி பாத்திரவானாக முடியும்? உம்முடைய சித்தத்தை நிறைவேற்றவும், உம்முடைய விருப்பத்தின்படி என்னில் நீர் எதைச் செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்யும்படிக்கு நான் இருக்கிறேன்” என்று ஜெபித்தார். இயேசு எருசலேமுக்கு போகும் வழியில் மிகுந்த வேதனையில் இருந்தார், அவருடைய இருதயத்தில் ஒரு கத்தி திருகுவது போன்ற வேதனை இருந்தாலும், தன் வார்த்தையைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு சிறிய எண்ணம் கூட அவரிடத்தில் இல்லை; எப்பொழுதும் ஆற்றல் மிக்க ஒரு வல்லமை, அவர் சிலுவையில் அறையப்பட வேண்டிய இடத்திற்கு முன்னேற அவரை வலியுறுத்திக் கொண்டே இருந்தது. இறுதியாக, அவர் சிலுவையில் அறையப்பட்டு, பாவாம்சத்தின் சாயலாகி, மனுக்குலத்தை மீட்கும் வேலையை செய்து முடித்தார். பாதாளம் மற்றும் மரணத்தின் கட்டுக்களை உடைத்தார். அவருக்கு முன்பாக மரணம், நரகம் மற்றும் பாதாளம் ஆகியவைகள் தங்களின் வல்லமையை இழந்து, அவரால் முறியடிக்கப்பட்டன. அவர் வாழ்ந்த முப்பத்து மூன்று வருடங்களிலும், தேவனுடைய கிரியையின்படி அவருடைய சித்தத்தை நிறைவேற்ற தன்னால் இயன்றததைச் செய்து, அவருடைய தனிப்பட்ட ஆதாயத்தையோ இழப்பையோ ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், எப்போதும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தையே எண்ணிக்கொண்டிருந்தார். இவ்வாறு, அவர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” என்று தேவன் சொன்னார். தேவனுக்கு முன்பாக இருந்த அவருடைய ஊழியம் தேவனுடைய சித்தத்திற்கு இணங்க இருந்ததால், முழு மனுக்குலத்தை மீட்கும் பெரிய பாரத்தை தேவன் அவர் தோள்களின்மேல் வைத்து, அவர் அதை நிறைவேற்றச் செய்தார். மேலும் இந்த முக்கியமான வேலையைச் செய்து முடிக்கத் தகுதியாகி உரிமையும் பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் அளவிடமுடியாத வேதனையைத் தேவனுக்காக தாங்கினார், எண்ணற்ற முறை சாத்தானால் சோதிக்கப்பட்டார், ஆனால் ஒருபோதும் அவர் சோர்வடையவில்லை. தேவன் அவரை நம்பியதால், அவரை நேசித்ததால், அவருக்கு இவ்வளவு பெரிய வேலையைக் கொடுத்தார். இதனால் “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” என்று தேவன் தாமே சொன்னார். அந்நேரத்தில் இயேசுவால் மட்டுமே இந்தக் கட்டளையை நிறைவேற்ற முடிந்தது, கிருபையின் காலத்தில் மனுக்குலம் முழுவதையும் மீட்கும்படியான தேவனுடைய கிரியையை அவர் செய்து முடித்ததின் ஒரு நடைமுறை அம்சம் இது.
இயேசுவைப் போல், தேவனுடைய பாரத்தை உங்களால் மிகுதியாய்க் கருத்தில் கொள்ள முடிந்தால், உங்கள் மாம்சத்திற்கு முதுகைக் காண்பிப்பீர்கள் என்றால், தேவன் அவருடைய முக்கிய வேலைகளை உங்களிடத்தில் ஒப்படைப்பார்; இதனால் தேவனுக்கு ஊழியம் செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். இத்தகைய சூழ்நிலைகளில் மட்டுமே நீங்கள் தேவனுடைய சித்தத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் அவருடைய கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் உங்களால் துணிந்து சொல்ல முடியும். அப்போதுதான் தேவனுக்கு நீங்கள் உண்மையாக ஊழியம் செய்கிறீர்கள் என்றும் உங்களால் துணிந்து சொல்ல முடியும். இயேசுவின் உதாரணத்துடன் ஒப்பிடும்போது, நீ தேவனுக்கு நெருக்கமான நபர் என்று சொல்லத் துணிகிறாயா? நீ தேவனுடைய சித்தத்தைச் செய்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லத் துணிகிறாயா? நீ உண்மையாக தேவனுக்கு ஊழியம் செய்வதாகச் சொல்லத் துணிகிறாயா? இன்று, தேவனுக்கு ஊழியம் செய்வது எப்படி என்று புரிந்து கொள்ளாமல், நீ தேவனுக்கு நெருக்கமான நபர் என்று சொல்லத் துணிகிறாயா? நீ தேவனுக்கு ஊழியம் செய்வதாகச் சொன்னால், நீ தேவனுக்கு விரோதமாய் தூஷணம் சொல்கிறாய் அல்லவா? இதைக்குறித்து யோசிக்கவும்: நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாயா அல்லது உனக்கே ஊழியம் செய்கிறாயா? நீ சாத்தானைச் சேவிக்கிறாய், ஆனாலும் நீ தேவனுக்கு ஊழியம் செய்வதாகப் பிடிவாதமாய்க் கூறுகிறாய்—இதில் நீ தேவனுக்கு விரோதமாக தூஷணம் சொல்லவில்லையா? என் முதுகுக்குப் பின்னால் உள்ள பல ஜனங்கள் பதவியின் ஆசீர்வாதத்தை இச்சித்து, பெருந்தீனி உண்டு, தூக்கத்தை விரும்பி, மாம்சத்திற்கு எல்லா வகையான கவனிப்பும் செய்து, மாம்சத்திற்கு வேறு வழியில்லை என்பது குறித்தே எப்போதும் கவலைப்படுகிறார்கள். அவர்கள் தேவாலயங்களில் தங்களுக்குரிய சரியான கடமைகளைச் செய்யாமல் வெட்டியாக தேவாலயத்தை நிரப்பிக்கொண்டு அல்லது அவர்களின் சகோதர சகோதரிகளை என்னுடைய வார்த்தைகளைக்கொண்டு கடிந்து கொண்டு, தங்கள் அதிகார பதவிகளிலிருந்து கொண்டு மற்றவர்களின்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த ஜனங்கள் தாங்கள் தேவனுடைய சித்தத்தை செய்து கொண்டிருப்பதாக தொடர்ந்து சொல்லிக்கொண்டு, தாங்கள் தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று எப்போதும் சொல்கிறார்கள். இது அபத்தமில்லையா? உனக்குச் சரியான நோக்கங்கள் இருந்தும், தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்ய முடியவில்லை என்றால், நீ மதிகேடனாயிருக்கிறாய்; ஆனால் உன்னுடைய நோக்கங்கள் சரியானதாக இல்லாமலிருந்தும், நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாய் என்று சொல்வாயானால், நீ தேவனை எதிர்க்கிற ஒரு நபராய், தேவனால் தண்டிக்கப்பட வேண்டிய நபராய் இருக்கிறாய்! அத்தகைய ஜனங்களுக்காக நான் பரிதாபப்படுவதில்லை! அவர்கள் தேவனுடைய வீட்டை வெட்டியாக நிரப்பிக்கொண்டு, மாம்சத்திற்கான வசதிகளை இச்சித்துக்கொண்டு, தேவனுடைய விருப்பங்களைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்களுக்கான நலன்களையே நாடி, தேவனுடைய சித்தத்திற்கு செவிசாய்ப்பதில்லை. அவர்கள் செய்யும் எந்த காரியத்திலும் தேவ ஆவியினுடைய கண்காணிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் எப்போதும் சூழ்ச்சி செய்து தங்கள் சகோதர சகோதரிகளை வஞ்சித்து, இருமுகங்கள் உடையவர்களாய், திராட்சைத்தோட்டத்தில் உள்ள நரியைப் போல எப்போதும் திராட்சைப்பழங்களைத் திருடி, திராட்சைத்தோட்டத்தை மிதிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்க முடியுமா? நீ தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள உகந்த நபரா? உன் வாழ்க்கைக்காக, தேவாலயத்துக்காக எந்த ஒரு பாரத்தையும் நீ எடுத்துக் கொள்வதில்லை, நீ தேவனுடைய கட்டளையை பெற்றுக்கொள்ளத் தகுதியான நபரா? உன்னைப் போன்ற ஒருவரை யார் நம்பத் துணிவார்கள்? நீ இப்படி ஊழியம் செய்தால், தேவன் உன்னை தைரியமாய் நம்பிப் பெரிதான வேலையை ஒப்படைப்பாரா? இது கிரியைக்கு தாமதங்களை ஏற்படுத்துமல்லவா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி” என்பதிலிருந்து
481. நீங்கள் அனுபவித்ததும் பார்த்ததும் எல்லா காலங்களிலும் இருந்த பரிசுத்தவான்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை விடவும் மிதமிஞ்சியதாக காணப்படுகிறது, ஆனாலும் கடந்த காலத்தின் இந்தப் பரிசுத்தவான்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை விட பெரிய சாட்சியை உங்களால் அளிக்க முடியுமா? இப்போது நான் உங்களுக்கு வழங்குவது மோசேயை மிஞ்சுவதாகவும், தாவீதை ஒளிமங்கச் செய்வதாகவும் உள்ளது, ஆகவே அதுபோல உங்கள் சாட்சியும் மோசேயை மிஞ்சுவதாகவும் உங்கள் வார்த்தைகள் தாவீதுடையதை விடப் பெரியனவாகவும் இருக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். நான் உங்களுக்கு நூறு மடங்காக அளிக்கிறேன்—ஆகவே அதுபோன்றே அவ்வகையிலேயே நீங்கள் எனக்குத் திருப்பியளிக்க வேண்டும் என்று கேட்கிறேன். மனுக்குலத்திற்கு ஜீவனை அருளுவது நான் ஒருவனே என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் நீங்கள்தான் என்னிடம் இருந்து ஜீவனைப் பெறுகிறீர்கள் மற்றும் நீங்கள்தான் எனக்கு சாட்சிகொடுக்க வேண்டும். இது நான் உங்களிடத்தில் அனுப்பும் உங்கள் கடமையாகும், இதை நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டும். நான் உங்களுக்கு என் சகல மகிமையையும் வழங்கியிருக்கிறேன், தெரிந்துகொள்ளப்பட்ட மக்களான இஸ்ரவேலர்கள் ஒருபோதும் பெறாத ஜீவனை உங்களுக்கு நான் வழங்கியிருக்கிறேன். அந்த உரிமையின் படி, நீங்கள் எனக்கு சாட்சிகொடுக்க வேண்டும் மற்றும் உங்கள் இளமையை எனக்கு சமர்ப்பணம் செய்து உங்கள் ஜீவனை அர்ப்பணிக்க வேண்டும். யாருக்கெல்லாம் நான் என் மகிமையை வழங்குகிறேனோ அவர்கள் எனக்காக சாட்சிகளாக இருந்து தங்கள் ஜீவனை அர்ப்பணிக்க வேண்டும். இது வெகுகாலத்திற்கு முன்னரே என்னால் முன்குறிக்கப்பட்டுள்ளது. நான் உங்களுக்கு என் மகிமையை வழங்குவது என்பது உங்கள் நல் அதிர்ஷ்டமாகும், மேலும் என் மகிமைக்கு சாட்சியாக இருப்பது உங்கள் கடமையாகும். ஆசிர்வாதங்களைப் பெறுவதற்காக மட்டுமே என்னை நீங்கள் விசுவாசித்தால், என் கிரியையின் முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கும், மற்றும் நீங்கள் உங்கள் கடமையை நிறைவு செய்யாதவர்களாக இருப்பீர்கள். இஸ்ரவேலர்கள் என் இரக்கம், அன்பு மற்றும் மகத்துவத்தை மட்டுமே பார்த்தார்கள், மற்றும் யூதர்கள் என் பொறுமை மற்றும் மீட்புக்கு மட்டுமே சாட்சியம் அளித்தார்கள். அவர்கள் தங்களால் புரிந்துகொள்ளத்தக்க அளவுக்கே என் ஆவியின் கிரியைகளின் மிக மிக குறைந்ததையே, ஆனால் நீங்கள் கேட்டு அறிந்தவைகளில் பத்தாயிரத்தில் ஒரு பகுதியையே கண்டார்கள். நீங்கள் கண்டிருப்பவை அவர்கள் நடுவில் இருந்த பிரதான ஆசாரியர்களை விடவும் கூட மிஞ்சுகின்றன. இன்று நீங்கள் புரிந்துகொள்ளும் சத்தியங்கள் அவர்களுடையவற்றை விட அதிகம்; இன்று நீங்கள் கண்டவை, நியாயப்பிரமாணத்தின் காலத்தையும், கிருபையின் காலத்தையும் விடக் கூடுதலானவை, மேலும் நீங்கள் அனுபவித்திருப்பவை மோசேயையும் எலியாவையும் கூட மிஞ்சுகின்றன. ஏனெனில், இஸ்ரவேலர்கள் புரிந்துகொண்டவை யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை மட்டுமே, மேலும் அவர்கள் கண்டது யேகோவாவின் பின்புறத்தை மட்டுமே; யூதர்கள் புரிந்துகொண்டது இயேசுவின் மீட்பை மட்டுமே, அவர்கள் பெற்றுக்கொண்டது இயேசுவால் அருளப்பட்ட கிருபையை மட்டுமே, மேலும் அவர்கள் கண்டது யூதர்களின் வீட்டுக்குள் இயேசுவின் சாயலை மட்டுமே. இன்று நீங்கள் காண்பது யேகோவாவின் மகிமையை, இயேசுவின் மீட்பை, மற்றும் இந்நாளின் என்னுடைய அனைத்துக் கிரியைகளையும் ஆகும். அவ்வாறே, என் ஆவியின் வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், என்னுடைய ஞானத்தை அறிந்து போற்றியிருக்கிறீர்கள், எனது அதிசயங்களை அறிந்து கொண்டிருக்கிறீர்கள், மற்றும் என் மனநிலையை கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நான் என் ஆளுகைத் திட்டங்கள் எல்லாவற்றையும் உங்களிடம் கூறியிருக்கிறேன். நீங்கள் கண்டிருப்பது வெறும் ஓர் அன்பான மற்றும் இரக்கமுள்ள தேவனை மட்டுமல்ல, நீதியால் நிரம்பிய ஒரு தேவனையுமே. நீங்கள் என் அற்புதக் கிரியைகளை கண்டிருக்கிறீர்கள் மேலும் நான் மகத்துவத்தாலும் உக்கிரத்தாலும் நிரம்பித் ததும்புவதையும் அறிந்திருக்கிறீர்கள். மேலும், ஒருமுறை இஸ்ரவேலரின் வீட்டுக்குள் என் கடுங்கோபத்தைக் கொண்டு வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், மற்றும் அந்த இந்நாள், அது உங்கள் மேல் வந்துவிட்டது. ஏசாயாவையும் யோவானையும் விட அதிகமாகப் பரலோகத்தில் என் இரகசியங்களை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்கள்; என் சௌந்தரியத்தையும் வணங்கத்தக்கத் தன்மையையும் பற்றி கடந்த காலங்களின் பரிசுத்தவான்களை விடவும் நீங்கள் அதிகமாக அறிவீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்டது வெறும் என் சத்தியத்தையும், என் வழியையும், என் ஜீவனையும், மட்டுமல்லாமல் யோவானின் தரிசனத்தை விடவும் பெரிய ஒரு தரிசனத்தையும் ஒரு வெளிப்பாட்டையும் ஆகும். நீங்கள் இன்னும் பல இரகசியங்களைப் புரிந்துகொள்ளுகிறீர்கள், மற்றும் என் உண்மையான முகத்தோற்றத்தையும் நோக்கிப் பார்த்திருக்கிறீர்கள்; நீங்கள் அதிகமான என் நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் மேலும் என்னுடைய நீதியான மனநிலையைப் பற்றி அதிகமாக அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் கடைசி நாட்களில் பிறந்திருந்தாலும், உங்கள் புரிந்துகொள்ளுதல் முந்தியதையும் கடந்தகாலத்தைப் பற்றியதும் ஆகும், மேலும் இன்றைய நாளின் விஷயங்களையும் அனுபவித்திருக்கிறீர்கள், மற்றும் இவை எல்லாம் என்னால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டவை. நான் உங்களிடம் கேட்பது மிகையானது அல்ல, ஏனெனில் நான் உங்களுக்கு அதிகமாக அளித்திருக்கிறேன், மேலும் நீங்கள் என்னில் அதிகமாகக் கண்டிருக்கிறீர்கள். இவ்வாறு, கடந்த காலத்தின் பரிசுத்தவான்களுக்கு எனது சாட்சியாக இருக்கும்படியாக நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன், மற்றும் இதுவே என் இருதயத்தின் ஒரே விருப்பமாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்பதிலிருந்து
482. இப்போது உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும், இப்போது உன் அன்பையும் சாட்சியையும் நான் விரும்புகிறேன். இந்தக் கணத்தில் சாட்சி என்றால் என்ன அல்லது அன்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியாவிட்டாலும், நீ உனக்கிருக்கும் எல்லாவற்றையும் என்னிடம் கொண்டுவர வேண்டும், மேலும் உன்னிடம் இருக்கும் ஒரே பொக்கிஷமான உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும் என்னிடம் அளிக்க வேண்டும். மனிதனை நான் முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலின் சாட்சியைப் போலவே, சாத்தானை நான் தோற்கடிப்பதின் சாட்சியும் மனிதனின் உண்மை மற்றும் கீழ்ப்படிதலுக்குள்தான் அடங்கியுள்ளது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என்னில் நீ வைக்கும் விசுவாசத்தின் கடமை என்னவென்றால் எனக்கு நீ சாட்சி கொடுப்பதும், எனக்கு உண்மையாய் இருப்பதும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிதலுடன் இருப்பதும் தவிர வேறில்லை. என் கிரியையின் அடுத்த படியை நான் தொடங்கும் முன் எனக்கு நீ எவ்வாறு சாட்சிகொடுப்பாய்? எவ்வாறு நீ எனக்கு உண்மையும் கீழ்ப்படிதலும் உள்ளவனாய் இருப்பாய்? நீ உன் முழு உத்தமத்தையும் உனது பணிக்கு அர்ப்பணிப்பாயா, அல்லது விட்டுவிடுவாயா? எனது ஒவ்வொரு ஏற்பாட்டுக்கும் (மரணமாக அல்லது அழிவாக இருந்தாலும்) ஒப்புக்கொடுப்பாயா அல்லது எனது சிட்சைக்கு விலகி நடுவழியில் ஓடிவிடுவாயா? நீ எனக்கு சாட்சியாக விளங்க வேண்டும் என்றும், எனக்கு உன்மையையோடும் கீழ்ப்படிதலோடும் இருக்க வேண்டும் என்றே நான் உன்னை சிட்சிக்கிறேன். மேலதிகமாக, தற்போதைய சிட்சை என் கிரியையின் அடுத்த படியை அவிழ்க்கவும் கிரியை தடைபடாது நடக்கவுமே ஆகும். எனவே, ஞானம் உள்ளவனாக இருந்து உன்னுடைய ஜீவனையும் வாழ்வின் முக்கியத்துவத்தையும் அற்பமான மணலைப் போன்றது என எண்ணி நடந்துகொள்ளாதே என நான் உனக்குப் புத்தி சொல்லுகிறேன். வரவிருக்கும் என் கிரியை சரியாக என்னவாக இருக்கும் என்று உன்னால் சரியாக அறிய முடியுமா? வரவிருக்கும் நாட்களில் நான் எவ்வாறு கிரியை செய்வேன் என்பதும் எவ்வாறு என் கிரியை கட்டவிழும் என்பதும் உனக்குத் தெரியுமா? என் கிரியையில் உனக்குள்ள அனுபவத்தின் முக்கியத்துவத்தையும் மேலதிகமாக, என்னில் இருக்கும் உன் விசுவாசத்தின் முக்கியத்துவத்தையும் நீ அறிய வேண்டும். நான் மிக அதிகமாக செய்துவிட்டேன்; நீ கற்பனை செய்வதுபோல என்னால் எப்படி பாதியில் விட்டுவிட முடியும்? நான் அப்படிப்பட்ட விசாலமான கிரியையைச் செய்திருக்கிறேன். நான் அதை எவ்வாறு அழிக்க முடியும்? உண்மையில், இந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவே நான் வந்திருக்கிறேன். இது உண்மையே, ஆனால் மேலும் நான் ஒரு புதிய யுகத்தை, புதிய கிரியையைத் தொடங்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்ப வேண்டும் என்பதையும் நீ அறிந்துகொள்ள வேண்டும். தற்போதைய கிரியை ஒரு யுகத்தைத் தொடங்கவும் இனிவரும் காலத்தில் சுவிசேஷத்தைப் பரப்ப ஓர் அடித்தளத்தை அமைக்கவும், எதிர்காலத்தில் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் மட்டுமே என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என் கிரியை நீ நினைப்பது போல் மிக எளிதானதும் அல்ல, நீ நம்புவது போல மதிப்பற்றதும் அல்லது அர்த்தமற்றதும் அல்ல. ஆகவே, நான் இன்னும் உன்னிடம் கூறவேண்டியது: நீ உன் ஜீவனை என் கிரியைக்கு அளிக்க வேண்டும், மேலும், நீ என் மகிமைக்கு உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீண்ட காலமாக நீ எனக்கு சாட்சி கொடுக்க வேண்டும் என நான் ஆவலாய் இருந்தேன், மேலும் இன்னும் அதிகமாக நான் நீ என் சுவிஷேஷத்தைப் பரப்ப வேண்டும் என்று ஏங்கினேன். என் இருதயத்தில் என்ன இருக்கிறது என்று நீ புரிந்துகொள்ள வேண்டும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்பதிலிருந்து
483. ஒவ்வொரு யுகத்திலும் அந்த யுகத்தின் முக்கியத்துவத்தைப் பொருத்தமான முறையில் தெரிவிக்கும் மொழியின் மூலம், தேவன் வெளிப்படுத்திய மனநிலையை ஒரு உறுதியான முறையில் உன்னால் தெரிவிக்க இயலுமா? கடைசி நாட்களில் தேவனின் கிரியையை அனுபவிக்கும் உன்னால், தேவனின் நீதிக்குரிய மனநிலையை விரிவாக விவரிக்க முடியுமா? தேவனின் மனநிலையைப் பற்றி உன்னால் தெளிவாகவும் துல்லியமாகவும் சாட்சிக் கொடுக்க முடியுமா? நீதிக்கான பசியும் தாகமும் கொண்டிருந்து, உன்னால் மேய்க்கப்பட வேண்டும் என்று காத்திருக்கும் பரிதாபகரமான, ஏழ்மையான, பக்தியுள்ள மத விசுவாசிகளுக்கு நீ கண்ட மற்றும் அனுபவித்த விஷயங்களை எவ்வாறு தெரிவிப்பாய்? உன்னால் மேய்க்கப்பட வேண்டும் என்று எந்த வகையான ஜனங்கள் காத்திருக்கிறார்கள்? உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? உன் தோள்களின் மீதுள்ள சுமை, உனக்களிக்கப்பட்ட கட்டளை மற்றும் உன் பொறுப்பு குறித்து நீ அறிவாயா? வரலாற்றுப் பணிக்கான உன் உணர்வு எங்கே? அடுத்த யுகத்தில் ஒரு எஜமானராக நீ எவ்வாறு போதுமான அளவிற்கு பணியாற்றுவாய்? உனக்கு எஜமானராக இருக்கவேண்டிய நிலை குறித்த வலுவான உணர்வு இருக்கிறதா? எல்லாவற்றிற்குமான எஜமானருக்கு நீ எவ்வாறு விளக்குவாய்? அது உண்மையில் எல்லா ஜீவஜந்துக்களுக்கும், உலகில் சரீரம் கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் எஜமானரா? அடுத்தக் கட்டப் பணிகளின் முன்னேற்றத்திற்கு நீ என்ன திட்டங்களை வைத்திருக்கிறாய்? தங்களின் மேய்ப்பராக நீ வேண்டும் என எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? உன் பணி கனமானதா? அவர்கள் ஏழைகள், பரிதாபகரமானவர்கள், குருடர்கள், மேலும் நஷ்டத்தால் அந்தகாரத்தில் அழுகிறார்கள்—எங்கிருக்கிறது வழி? பல ஆண்டுகளாக மனுஷனை ஒடுக்கிய அந்தகாரத்தின் படைகளை, திடீரென இறங்கி சிதறடிக்கும் ஒரு வால்நட்சத்திரத்தைப் போன்ற வெளிச்சத்திற்காக அவர்கள் எப்படி ஏங்குகிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் நம்புகிறார்கள், இதற்காக அவர்கள் இரவும் பகலும் எப்படி ஏங்குகிறார்கள் என்பதை யார் அறிய முடியும்? ஒளி வீசும் நாளில் கூட, ஆழ்ந்து துன்பப்படும் இந்த ஜனங்கள் விடுதலைக்கான நம்பிக்கையின்றி அந்தகார நிலவறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; எப்போது அவர்கள் இனியும் அழுகாமல் இருப்பர்? ஒருபோதும் ஓய்வு வழங்கப்படாத இந்த பலவீனமான ஆவிகள் பயங்கர துரதிர்ஷ்டவசமானவை, மேலும் இதே நிலையில் அவை இரக்கமற்ற அடிமைகளாகவும் மற்றும் உறைந்த வரலாற்றைக் கொண்டவைகளாகவும் நீண்ட காலமாக கட்டப்பட்டுள்ளனர். அந்த ஜனங்கள் அழும் சத்தத்தை யார் கேட்டிருக்கிறார்கள்? அவர்களின் பரிதாப நிலையை யார் கவனித்திருக்கிறார்கள்? தேவனின் இருதயம் எவ்வளவு வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறது என்று உனக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படிப்பட்ட வேதனையை, தன் சொந்த கைகளால் சிருஷ்டிக்கப்பட்ட அப்பாவி மனுஷகுலம் அனுபவிப்பதை அவரால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷர் விஷம் கொடுக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மனுஷன் இன்றுவரை உயிர் பிழைத்திருந்தாலும், மனுஷகுலத்திற்கு நீண்ட காலமாக தீயவனால் விஷம் கொடுக்கப்பட்டு வருவதை யார் அறிந்திருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்பதை நீ மறந்துவிட்டாயா? தேவன் மீதான உனது அன்பின் காரணமாக, இந்த உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற நீ பாடுபடத் தயாராக இல்லையா? தம்முடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் போல மனுஷகுலத்தை நேசிக்கும் தேவனுக்குத் திருப்பிச் செலுத்த உங்கள் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இல்லையா? எல்லாவற்றையும் சொல்லி முடித்தவுடன், உன் அசாதாரண வாழ்க்கையை வாழ நீ தேவனால் பயன்படுத்தப்படுவதை எவ்வாறு விளக்குவாய்? ஒரு பக்தியுள்ள, தேவனைச் சேவிக்கும் நபரின் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான உறுதியும் நம்பிக்கையும் உனக்கு உண்மையாகவே இருக்கிறதா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?” என்பதிலிருந்து
486. தேவனுடைய கிரியைக்கு சாட்சி கொடுக்க, உன் அனுபவம், அறிவு மற்றும் நீ செலுத்திய விலை ஆகியவற்றை நீ நம்ப வேண்டும். இவ்வாறு மட்டுமே நீ அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும். நீ தேவனுடைய கிரியைக்கு சாட்சி கொடுக்கிற ஒருவனாக இருக்கிறாயா? உன்னிடம் இந்த விருப்பம் இருக்கிறதா? அவருடைய பெயருக்கு உன்னால் சாட்சி அளிக்க முடிந்தால், இன்னும் அதிகமாக, அவருடைய கிரியைக்கு, அவருடைய ஜனங்களிடமிருந்து அவர் எதிர்பார்க்கும் அடையாளத்தில் உன்னால் ஜீவிக்க முடிந்தால், நீ தேவனுக்கு ஒரு சாட்சியாக இருக்கிறாய். தேவனுக்கு நீ எவ்வாறு உண்மையாக சாட்சி கொடுப்பாய்? தேவனுடைய வார்த்தையை நாடுவதன் மூலமும், உன் வார்த்தைகளால் சாட்சி அளிப்பதன் மூலமும், அவருடைய கிரியையை அறிந்துகொள்ளவும், அவருடைய கிரியைகளைக் காணவும் ஜனங்களை அனுமதிப்பதன் மூலமும் நீ இதைச் செய்கிறாய். இவை அனைத்தையும் நீ உண்மையாகவே நாடினால், தேவன் உன்னை பரிபூரணமாக்குவார். நீ தேடுவது அனைத்தும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்டு, இறுதியில் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தால், தேவன்மீது நீ வைத்திருக்கும் இந்த விசுவாசத்தின் கண்ணோட்டம் தூய்மையானதல்ல. நிஜ ஜீவிதத்தில் தேவனுடைய கிரியைகளை எவ்வாறு காண்பது, அவர் தம்முடைய சித்தத்தை உனக்கு வெளிப்படுத்தும்போது அவரை எவ்வாறு திருப்திப்படுத்துவது, அவருடைய அதிசயத்திற்கும் ஞானத்திற்கும் நீ எவ்வாறு சாட்சி அளிக்க வேண்டும் என்பதையும், அவர் எவ்வாறு உன்னை ஒழுங்குபடுத்துகிறார், சரிப்படுத்துகிறார் என்பதற்கு நீ எவ்வாறு சாட்சி கொடுக்க வேண்டும் என்பதையும் நீ தேட வேண்டும். இவை அனைத்தும் இப்போது நீ சிந்திக்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. தேவன் மீது நீ வைத்திருக்கும் அன்பானது அவர் உன்னை பரிபூரணமாக்கிய பிறகு தேவனுடைய மகிமையில் பகிர்ந்துகொள்ளக்கூடியதாக மட்டுமே இருந்தால், அது இன்னும் போதுமானதாக இல்லை மற்றும் தேவனுடைய எதிர்பார்ப்புகளை அதனால் பூர்த்தி செய்ய முடியாது. தேவனுடைய கிரியைக்கு உன்னால் சாட்சி கொடுக்கவும், அவருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவும், அவர் ஜனங்கள் மீது செய்த கிரியையை ஒரு நடைமுறை வழியில் அனுபவிக்கவும் முடியும். வலி, கண்ணீர், சோகம் எதுவாக இருந்தாலும், இவை அனைத்தையும் நடைமுறையில் நீ அனுபவிக்க வேண்டும். தேவனுக்கு சாட்சி கொடுக்கின்ற உன்னைப் பரிபூரணமாக்குவதற்காகவே அவை உள்ளன.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து
487. உங்கள் விசுவாசம் மிகவும் உண்மையானது என்றாலும், உங்களில் எவராலும் என்னைப் பற்றிய ஒரு முழுமையான விவரத்தையும் கொடுக்க முடியாது, நீங்கள் காணும் அனைத்து உண்மைகளுக்கும் எவராலும் முழு சாட்சியம் அளிக்க முடியாது. இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: இன்று, உங்களில் பெரும்பாலோர் உங்கள் கடமைகளைக் கைவிடுவது, அதற்கு பதிலாக மாம்சத்தைப் பின்தொடர்வது, மாம்சத்தைத் திருப்திப்படுத்துவது, பேராசையுடன் மாம்சத்தை அனுபவிப்பது என்று இருக்கிறீர்கள். உங்களிடம் கொஞ்சம் சத்தியம் உள்ளது. அப்படியானால், நீங்கள் கண்ட எல்லாவற்றிற்கும் நீங்கள் எவ்வாறு சாட்சியமளிக்க முடியும்? நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்க முடியும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? இன்று நீ கண்ட எல்லாவற்றிற்கும் உன்னால் சாட்சியமளிக்க முடியாத ஒரு நாள் வந்தால், நீ சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் செயல்பாட்டை இழந்திருப்பாய், மேலும் நீ இதுவரை ஜீவிப்பதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. நீ மனிதனாக இருக்க தகுதியற்றவனாய் இருப்பாய். நீ மனிதனாக இருக்க மாட்டாய் என்று கூட சொல்லலாம்! நான் உங்களிடம் அளவிட முடியாத கிரியையைச் செய்துள்ளேன், ஆனால் நீ தற்போது எதையும் கற்றுக்கொள்ளாமல், எதிலும் விழிப்புணர்வில்லாமல், உன் உழைப்பை வீணாக்கியிருப்பதால், எனது கிரியையை விஸ்தரிக்க வேண்டிய நேரம் வரும் பொழுது, நீ புரிந்துகொள்ளும் தன்மை இல்லாமல் வெறித்து, வாயடைத்து, முற்றிலும் உபயோகமற்று இருப்பாய். அது உன்னை எல்லா நேரத்திலும் பாவியாக உருவாக்காது? அந்த நேரம் வரும் பொழுது, நீ ஆழமாக மனஸ்தாபப்படவில்லையா? நீ மனவருத்தத்தில் மூழ்க மாட்டாயா? இன்று எனது கிரியைகள் அனைத்தும் சோம்பாலாகவும் மற்றும் சலிப்பாகவும் செய்யப்படவில்லை, ஆனால் எனது வருங்கால கிரியைக்கு ஒரு அடித்தளத்தை அமைப்பதாகும். நான் ஒரு முட்டுக்கட்டைக்குள்ளாகி விட்டேன் என்பதல்ல, மேலும் புதியவற்றைக் கொண்டு வர வேண்டும் என்பதாகும். நான் செய்யும் கிரியையை நீ புரிந்துகொள்ள வேண்டும்; இது தெருவில் விளையாடும் ஒரு குழந்தையால் செய்யப்பட்ட ஒன்று அல்ல, ஆனால் இது என் தந்தையின் பிரதிநிதித்துவத்தில் செய்யப்படும் கிரியை ஆகும். இதையெல்லாம் நானே செய்யவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்; மாறாக, நான் என் தந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இதற்கிடையில், உங்கள் வேலை உறுதியாக பின்பற்றுவதும், கீழ்ப்படிவதும், மாறுவதும், மற்றும் சாட்சியளிப்பதும் ஆகும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், என்னில் நீங்கள் ஏன் விசுவாசம் கொள்ள வேண்டும்; இது நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி ஆகும். என் பிதா அவருடைய மகிமையின் நிமித்தமாக உலகைச் சிருஷ்டித்த தருணத்திலிருந்து உங்கள் அனைவரையும் எனக்காக முன்குறித்தார். எனது கிரியையின் நிமித்தம், அவருடைய மகிமையின் நிமித்தம், அவர் உங்களை முன்குறித்தார். என் பிதாவினால்தான் நீங்கள் என்னில் விசுவாசம் கொள்கிறீர்கள்; என் பிதாவின் தீர்க்கதரிசனத்தின் காரணமாகவே நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள். இவை எதுவும் உங்கள் சொந்த விருப்பப்படி இல்லை. அதைவிட முக்கியமானது என்னவென்றால், எனக்கு சாட்சியமளிக்கும் நோக்கத்திற்காக, என் பிதா எனக்கு வழங்கியவர் நீங்கள்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அவர் எனக்கு உங்களைக் கொடுத்ததால், நான் உங்களுக்கு வழங்கிய வழிகளையும் அதேபோல் நான் உங்களுக்குப் போதிக்கும் வழிகளையும் மற்றும் வார்த்தைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும், ஏனென்றால் என் வழிகளைக் கடைப்பிடிப்பது உங்கள் கடமையாகும். என் மீதான உங்கள் விசுவாசத்தின் மூல நோக்கம் இதுதான். ஆகையால், நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: நீங்கள் என் வழிகளைக் கடைப்பிடிக்க என் பிதா எனக்குக் வழங்கிய ஒரே ஜனங்களாக இருக்கிறீர்கள். எனினும், நீங்கள் என்னில் மட்டுமே விசுவாசம் கொள்கிறீர்கள்; நீங்கள் என்னுடையவர்கள் அல்ல, ஏனென்றால் நீங்கள் இஸ்ரவேல் குடும்பத்தார் அல்ல, அதற்குப் பதிலாக பழைய சர்ப்பத்தைப் போன்றவர்கள். நான் உங்களிடம் கேட்பதெல்லாம் எனக்காக சாட்சியம் அளியுங்கள் என்பதுதான், ஆனால் இன்று நீங்கள் என்னுடைய வழிகளில் கட்டாயமாக நடக்க வேண்டும். இவை அனைத்தும் எதிர்கால சாட்சியங்களின் நிமித்தமாக இருக்கிறது. நீங்கள் என் வழிகளைக் கேட்கும் மனிதராக மட்டுமே செயலாற்றினால், நீங்கள் பெறுமதி இல்லாமல் இருப்பீர்கள், என் பிதா உங்களை எனக்கு வழங்கியதன் முக்கியத்துவம் இழக்கப்படும். உங்களிடம் நான் வலியுறுத்திச் சொல்வது இதுதான்: நீங்கள் என் வழிகளில் நடக்க வேண்டும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?” என்பதிலிருந்து