K. தேவனைப் பற்றிய அறிவை அடைவது எப்படி என்பது குறித்து

453. மூன்று கட்ட கிரியைகளும் மனுக்குலத்தை இரட்சிக்கும் தேவனுடைய முழு கிரியையாகும். இரட்சிப்பின் கிரியையில் தேவனுடைய கிரியையையும் தேவனுடைய மனநிலையையும் மனுஷன் அறிந்திருக்க வேண்டும்; இந்த உண்மையில்லாமல், தேவனைப் பற்றிய உங்கள் அறிவு வெற்று வார்த்தைகளே தவிர வேறு எதுவுமில்லை, அது வெற்றுப் பேச்சே தவிர வேறு எதுவுமில்லை. இதுபோன்ற அறிவால் மனுஷனை நம்ப வைக்கவோ ஜெயங்கொள்ளவோ முடியாது; இது யதார்த்தத்துடன் முரண்படுகிறது, இது உண்மை அல்ல. இது ஏராளமானதாகவும், காதுக்கு இனிமையானதாகவும் இருக்கலாம், ஆனால் இது தேவனுடைய உள்ளார்ந்த மனநிலையுடன் முரண்பட்டால், தேவன் உன்னை மன்னிக்கமாட்டார். அவர் உனது அறிவைப் பாராட்டமாட்டார் என்பது மட்டுமின்றி, அவரை தேவதூஷணம் செய்த பாவியாக இருப்பதற்காக அவர் உன்னை பழிவாங்குவார். தேவனை அறிந்துகொள்வதற்கான வார்த்தைகள் இலகுவாக பேசப்படுவதில்லை. நீ சரளமாக பேசுகிறவனாகவும் வாக்கு வல்லமையுள்ளவனாகவும் இருந்தாலும் மற்றும் கருப்பை வெள்ளையாக இருப்பதாகவும், வெள்ளையை கருப்பாகவும் இருப்பதாகவும் வாதாடக்கூடிய அளவிற்கு உனது வார்த்தைகள் மிகவும் சாதுரியமானவனாக இருந்தாலும், தேவனுடைய அறிவைப் பற்றி பேசுதல் என்று வரும்போது, நீ இன்னும் அறிவில்லாதவனாகவே இருக்கிறாய். தேவன் என்பவர் நீ கண்மூடித்தனமாக நியாயந்தீர்க்கக்கூடிய ஒருவரோ அல்லது சாதாரணமாக புகழக்கூடிய ஒருவரோ அல்லது ஆர்வமற்று சிறுமைப்படுத்தப்படக்கூடிய ஒருவரோ அல்ல. நீ எல்லோரையும் புகழ்கிறாய், ஆனாலும் தேவனுடைய மாபெரும் வல்லமையையும் கிருபையையும் விவரிக்க சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க நீ போராடுகிறாய், இதைத்தான் தோல்வியுற்றவர் ஒவ்வொரும் உணர வேண்டும். தேவனை விவரிக்கும் திறன் கொண்ட மொழிப் புலமையாளர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் விவரிக்கும் துல்லியம் தேவனுக்குரியவர்கள் பேசும் சத்தியத்தில் நூறில் ஒரு பகுதி மட்டுமே இருக்கிறது, தேவனுக்குரியவர்கள் குறைவான சொற்களை மட்டுமே கொண்டிருந்தாலும், பயன்படுத்துவதில் வளமான அனுபவத்தைப் பெற்றுள்ளனர். இவ்வாறு, தேவனைப் பற்றிய அறிவு துல்லியத்திலும் உண்மைத்தன்மையிலும் தான் இருக்கிறது, வார்த்தைகளை சாதுரியமாக பயன்படுத்துவதிலோ வளமான சொற்களைக் கொண்டிருப்பதிலோ இல்லை என்பதைப் பார்க்கலாம். ஏனென்றால், மனுஷனுடைய அறிவும் தேவனுடைய அறிவும் முற்றிலும் வேறுபட்டவையாகும். தேவனை அறிந்துகொள்ளும் பாடமானது மனுக்குலத்தின் எந்த இயற்கை அறிவியலையும் விட உயர்ந்ததாகும். இது தேவனை அறிந்துகொள்ள முயற்சிக்கிறவர்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலானவர்களால் மட்டுமே அடையக்கூடிய ஒரு பாடமாகும், இதை திறமையுள்ள எந்தவொரு நபராலும் அடைந்துவிட முடியாது. ஆகையால், நீங்கள் தேவனை அறிந்துகொள்வதையும், சத்தியத்தைப் பின்தொடர்வதையும் வெறும் குழந்தையால் அடையக்கூடிய விஷயங்களாக பார்க்கக்கூடாது. நீ உன் குடும்ப வாழ்க்கை, அல்லது உன் தொழில், அல்லது உன் திருமணத்தில் முற்றிலும் வெற்றிபெற்றவனாக இருக்கலாம், ஆனால் சத்தியம் மற்றும் தேவனுடைய வார்த்தை என்று வரும்போது, உன்னையே காண்பிக்க உன்னிடம் எதுவுமில்லை மற்றும் நீ எதையும் அடையவுமில்லை. சத்தியத்தைக் கடைப்பிடிப்பது உனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும், தேவனை அறிந்துகொள்வது இன்னும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்றும் சொல்லலாம். இதுதான் உங்கள் சிரமமாக இருக்கிறது, இதுதான் முழு மனுக்குலமும் எதிர்கொள்ளும் சிரமமாக இருக்கிறது. தேவனை அறிந்துகொள்ளும் முறையில் சில வெற்றிகளைப் பெற்றவர்களில், தரத்தைப் பூர்த்தி செய்பவர்கள் யாருமில்லை. தேவனை அறிந்துகொள்வது என்றால் என்ன, அல்லது தேவனை அறிந்துகொள்வது ஏன் அவசியம், அல்லது தேவனை அறிந்துகொள்ள ஒருவர் எந்த அளவை அடைய வேண்டும் என்று மனுஷனுக்குத் தெரியாது. இதுதான் மனுக்குலத்திற்கு மிகவும் குழப்பமானதாக இருக்கிறது, இது மனுக்குலம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய புதிராக இருக்கிறது. இக்கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியவில்லை, இக்கேள்விக்கு பதிலளிக்கவும் யாரும் தயாராக இல்லை. ஏனென்றால், இன்றுவரை மனுக்குலத்திலுள்ள யாரும் இக்கிரியையைப் பற்றிய ஆய்வில் எந்த வெற்றியும் பெற்றதில்லை. ஒருவேளை, மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய புதிர் மனுக்குலத்திற்கு தெரியப்படுத்தப்படும்போது, தேவனை அறிந்த திறமையானவர்களைக் கொண்ட ஒரு கூட்டம் அடுத்தடுத்து தோன்றும். நிச்சயமாகவே, அதுதான் விஷயம் என்று நம்புகிறேன். மேலும், நான் இக்கிரியையைச் செய்வதற்கான செயல்முறையில் இருக்கிறேன் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற திறமையான நபர்கள் தோன்றுவதைக் காண்பேன் என்று நம்புகிறேன். அவர்கள் இந்த மூன்று கட்ட கிரியைகளின் உண்மைக்கு சாட்சி கொடுப்பவர்களாக மாறுவார்கள். நிச்சயமாகவே, இந்த மூன்று கட்ட கிரியைகளுக்கு அவர்கள்தான் முதலில் சாட்சி பகருகிறவர்களாக இருப்பார்கள். ஆனால், தேவனுடைய கிரியை முடிவடையும் நாளில் இதுபோன்ற திறமையானவர்கள் வெளிப்படாவிட்டால் அல்லது மாம்சமாகிய தேவனால் பரிபூரணமாக்கப்படுவதை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்ட ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே இருந்தால், அதைவிட வேதனையும் வருத்தமும் மிக்கது எதுவுமில்லை. ஆனாலும், இது மிகவும் மோசமான சூழ்நிலைதான். எது எப்படி இருந்தாலும், உண்மையிலேயே பின்தொடர்பவர்களால்தான் இந்த ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆதிகாலம் முதற்கொண்டு, இதுபோன்ற கிரியைகள் இதற்கு முன்பு இருந்ததில்லை. இதுபோன்ற கிரியை மனித வளர்ச்சி வரலாற்றில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. தேவனை அறிந்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக உன்னால் உண்மையிலேயே மாற முடிந்தால், இது சகல சிருஷ்டிகளுக்கு மத்தியில் மிகவும் மேலான கெளரவமாக இருக்காதா? மனுக்குலத்தின் மத்தியில் எந்த சிருஷ்டியாகிலும் தேவனால் அதிகமாக பாராட்டப்படுவானா? இதுபோன்ற கிரியையை அடைவது எளிதானதல்ல, ஆனால் இறுதியில் இன்னும் வெகுமதிகளை அறுவடை செய்யும். அவர்களுடைய பாலினம் அல்லது நாடு என எதுவாக இருந்தாலும், தேவனைப் பற்றிய அறிவை அடையக்கூடிய அனைவரும் இறுதியில் தேவனுடைய மிகப் பெரிய கனத்தைப் பெறுவார்கள், மேலும் தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டவர்களாக மட்டுமே இருப்பார்கள். இதுதான் இன்றைய கிரியையாகும். இது எதிர்காலத்தின் கிரியையும் ஆகும். இது 6,000 ஆண்டுகால கிரியைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய கடைசி மற்றும் மிக உயர்ந்த கிரியையாகும், மேலும் இது ஒவ்வொரு வகை மனுஷரையும் வெளிப்படுத்தும் ஒரு கிரியை முறையாகும். தேவன் மனுஷனை அறிந்துகொள்ளச் செய்யும் கிரியையின் மூலம், மனுஷனுடைய வெவ்வேறு தராதரங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன: தேவனை அறிந்தவர்களே தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அவருடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தகுதியுள்ளவர்கள், அதேநேரத்தில் தேவனை அறியாதவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் அவருடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தகுதியற்றவர்கள். தேவனை அறிந்தவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள், தேவனை அறியாதவர்களை தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று அழைக்க முடியாது. தேவனுக்கு நெருக்கமானவர்களால் தேவனுடைய எந்த ஆசீர்வாதத்தையும் பெற முடியும், ஆனால் அவருக்கு நெருக்கமில்லாதவர்கள் அவருடைய எந்த கிரியைக்கும் தகுதியானவர்கள் அல்ல. இது உபத்திரவங்கள், சுத்திகரிப்பு அல்லது நியாயத்தீர்ப்பு என எதுவாக இருந்தாலும், இவை அனைத்தும் இறுதியில் தேவனைப் பற்றிய அறிவை மனுஷனை அடைய அனுமதிப்பதற்காகவே உள்ளன, இதன்மூலம் மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படிவான். இதுதான் இறுதியில் அடையப்படும் பலனாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

454. தேவனுடைய உடைமைகள் மற்றும் ஜீவிதம், தேவனுடைய சாராம்சம், தேவனுடைய மனநிலை என இவை அனைத்தும் அவருடைய வார்த்தைகளில் மனிதகுலத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. தேவனுடைய வார்த்தைகளை அவன் அனுபவிக்கும் போது, மனிதன் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில், தேவன் பேசும் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும், தேவனுடைய வார்த்தைகளின் மூலத்தையும் பின்னணியையும் புரிந்துகொள்வதற்கும், தேவனுடைய வார்த்தைகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும் உணர்ந்துகொள்வதற்கும் தொடங்குவான். மனிதகுலத்தைப் பொறுத்தவரையில், இவை அனைத்தும் சத்தியத்தையும் ஜீவனையும் அடைவதற்கும், தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவனுடைய மனநிலையில் மாற்றமடைவதற்கும், தேவனுடைய ஆளுகை மற்றும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதற்கும், மனிதன் அவற்றை அனுபவிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் அடைய வேண்டும். மனிதன் இவற்றை அனுபவிக்கும், புரிந்துகொள்ளும் மற்றும் அடையும் அதே நேரத்தில், அவன் படிப்படியாக தேவனைப் பற்றிய புரிதலைப் பெற்றிருப்பான். இந்த நேரத்தில் தன்னைப் பற்றியும் அவன் பல்வேறு அளவிலான அறிவைப் பெற்றிருப்பான். இந்த புரிதலும் அறிவும் மனிதன் கற்பனை செய்த அல்லது இயற்றிய ஒன்றிலிருந்து வெளிவருவதில்லை. மாறாக, அவன் தனக்குள்ளேயே புரிந்துகொள்ளும், அனுபவிக்கும், உணரும், உறுதிப்படுத்துகிறவற்றிலிருந்து வெளிவருகிறது. இவற்றைப் புரிதல், அனுபவித்தல், உணர்தல் மற்றும் உறுதிப்படுத்திய பின்னரே தேவனைப் பற்றிய மனிதனுடைய அறிவு உள்ளடக்கத்தைப் பெறுகிறது. இந்த நேரத்தில் மனிதன் பெறும் அறிவு மட்டுமே நிஜமானது, உண்மையானது மற்றும் துல்லியமானது. அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளுதல், அனுபவித்தல், உணர்தல் மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலையும் அறிவையும் அடைவதற்கான இந்த செயல்முறையானது மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான உண்மையான ஐக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த வகையான ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் உண்மையிலேயே தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். உண்மையிலேயே தேவனுடைய உடைமைகளைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். தேவனுடைய சாரத்தை புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் உண்மையிலேயே தொடங்குகிறான். படிப்படியாக தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். எல்லா சிருஷ்டிப்புகளிலும் தேவனுடைய ஆதிக்கத்தின் உண்மை பற்றிய உண்மையான உறுதியையும், சரியான வரையறையையும், தேவனுடைய அடையாளம் மற்றும் நிலையைப் பற்றிய கணிசமான தாக்கத்தையும் அறிவையும் பெறுகிறான். இந்த வகையான ஐக்கியத்தின் மத்தியில், தேவனைப் பற்றிய அவனது கருத்துக்கள், இனிமேல் ஒன்றும் இல்லாமையில் இருந்து அவரைக் கற்பனை செய்து கொள்ளுதல் அல்லது அவரைப் பற்றிய தனது சொந்த சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டைக் கொடுத்தல் அல்லது அவரை தவறாகப் புரிந்துகொள்ளுதல் அல்லது அவரைக் நிந்தித்தல் அல்லது விட்டுச் செல்லுதல் அவர்மீது நியாயத்தீர்ப்பு வழங்குதல் அல்லது அவரைச் சந்தேகித்தல் ஆகியவற்றை மனிதன் படிப்படியாக மாற்றுகிறான். இவ்வாறு, மனிதனுக்குத் தேவனுடனான தகராறுகள் குறைவாகவே இருக்கும், அவனுக்கு தேவனுடனான மோதல்கள் குறைவாகவே இருக்கும் மற்றும் மனிதன் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யும் சந்தர்ப்பங்களும் குறைவாகவே இருக்கும். அதற்கு மாறாக, தேவன் மீதான மனிதனுடைய அக்கறையும் தேவனுக்குக் கீழ்ப்படிதலும் பெரிதாக வளரும். தேவன் மீது அவன் கொண்டுள்ள மரியாதை மிகவும் உண்மையானதாகவும் ஆழமாகவும் மாறும். இத்தகைய ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் சத்தியத்தின் வழங்குதலையும் ஜீவனின் ஞானஸ்நானத்தையும் அடைவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் தேவனைப் பற்றிய உண்மையான அறிவையும் அடைவான். இத்தகைய ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் தனது மனநிலையில் மாற்றம் பெற்று இரட்சிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் தேவனை நோக்கி ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினத்தின் உண்மையான பயபக்தியையும் வழிபாட்டையும் பெறுவான். இந்த வகையான ஐக்கியத்தைக் கொண்டிருந்ததால், தேவன் மீதான மனிதனுடைய விசுவாசம் இனி ஒரு வெற்று காகிதத் தாளாகவோ அல்லது உதட்டளவில் வழங்கப்படும் வாக்குறுதியாகவோ அல்லது குருட்டுத்தனமான நாட்டம் மற்றும் விக்கிரகாராதனையாகவோ இருக்காது. இந்த வகையான ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே மனிதனுடைய ஜீவிதம் நாளுக்கு நாள் முதிர்ச்சியை நோக்கி வளரும். அப்போதுதான் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்படும். தேவன் மீதான அவனது விசுவாசம், படிப்படியாக, தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற நம்பிக்கையிலிருந்து உண்மையான கீழ்ப்படிதலுக்கும் அக்கறைக்கும், உண்மையான பயபக்திக்கும், செல்லும். மனிதனும் தேவனைப் பின்பற்றும் செயல்பாட்டில், படிப்படியாக ஒரு செயலற்ற நிலையில் இருந்து செயல்திறன்மிக்க நிலைப்பாட்டிற்கும், எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கும் முன்னேறும். இந்த வகையான ஐக்கியத்துடன் மட்டுமே மனிதன் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலுக்கும், உணர்தலுக்கும் வருவான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

455. உன் கற்பனையை நம்புவதன் மூலம் தேவனுடைய அதிகாரம், தேவனுடைய வல்லமை, தேவனுடைய சொந்த அடையாளம் மற்றும் தேவனுடைய சாராம்சம் பற்றிய அறிவை அடைய முடியாது. தேவனுடைய அதிகாரத்தை அறிய நீங்கள் கற்பனையை நம்ப முடியாது என்பதால், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய உண்மையான அறிவை எவ்வாறு அடைய முடியும்? இதைச் செய்வதற்கான வழி, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பதும், ஐக்கியப்படுவதும், தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதுமாக இருக்கிறது. எனவே, தேவனுடைய அதிகாரத்தின் படிப்படியான அனுபவமும் சரிபார்ப்பும் உங்களிடம் இருக்கும் மற்றும் படிப்படியாக புரிதலைப் பெறுவீர்கள் மற்றும் அதைப் பற்றிய அறிவை அதிகமாகப் பெறுவீர்கள். தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய அறிவை அடைய ஒரே வழியாக இது இருக்கிறது. குறுக்குவழிகள் எதுவும் இல்லை. நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம் என்று கேட்பது அழிவுக்காக காத்திருக்க உங்களை செயலற்ற முறையில் உட்கார வைப்பது அல்லது எதையும் செய்யவிடாமல் தடுப்பது போன்றதல்ல. சிந்திக்கவும் கற்பனை செய்யவும் உங்கள் மூளையைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது தர்க்கத்தை யூகிக்க பயன்படுத்தாமல் இருப்பது, பகுப்பாய்வு செய்ய அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பது, அறிவியலை அடிப்படையாகப் பயன்படுத்தாமல் இருப்பது என்பதல்ல. மாறாக, நீ நம்புகிற தேவனுக்கு அதிகாரம் உண்டு என்பதைப் புரிந்து சரிபார்த்து உறுதிப்படுத்துதல் மூலமாக, உன் தலைவிதியின் மீது அவர் ஆளுகையைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலமாக மற்றும் தேவனுடைய வார்த்தைகள் மூலமாகவும், சத்தியத்தின் மூலமாகவும், ஜீவிதத்தில் நீ சந்திக்கும் எல்லாவற்றின் மூலமாகவும் அவருடைய வல்லமை எல்லா நேரங்களிலும் அவரே உண்மையான தேவனாக இருப்பதை நிரூபிக்கிறது. தேவனைப் பற்றிய புரிதலை எவரும் அடையக்கூடிய ஒரே வழியாக இது இருக்கிறது. இந்த நோக்கத்தை அடைய ஒரு எளிய வழியைக் கண்டுபிடிக்க தாங்கள் விரும்புவதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அத்தகைய வழியை உங்களால் சிந்திக்க முடியுமா? நான் உனக்குச் சொல்கிறேன், சிந்திக்கத் தேவையில்லை: வேறு வழிகள் இல்லை! ஒரே வழி என்னவென்றால், அவர் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையினாலும், அவர் செய்யும் எல்லாவற்றினாலும் தேவனிடம் இருப்பதை மனசாட்சியுடன், உறுதியுடன் அறிந்து சரிபார்க்க வேண்டும் என்பதே ஆகும். தேவனை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாக இது இருக்கிறது. தேவன் என்ன கொண்டுள்ளார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதும், தேவனுடைய அனைத்தும் ஒன்றுமில்லாதவை மற்றும் வெறுமையானவை அல்ல, ஆனால் அவை உண்மையாக இருக்கின்றன.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

456. தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் கிரியையை, மனிதன் தன்னைப் பற்றிய ஞானத்தைப் பெறுவதற்காகவும், அவருடைய சாட்சியின் பொருட்டும் செய்கிறார். மனிதனின் சீர்கேடான மனப்பான்மை குறித்து அவர் தீர்ப்பு செய்யாமல், மனிதனால் அவரது நீதியான மனநிலையை அறிவது சாத்தியமில்லை, அது எந்தக் குற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் தேவனை பற்றிய தனது பழைய ஞானத்தைப் புதிதாக மாற்ற முடியாது. அவருடைய சாட்சியின் பொருட்டு, மற்றும் அவரது நிர்வகித்தலின் பொருட்டு, அவர் தன் முழுமையையும் வெளியாக்கி, இதனால் மனிதனை, அவரது பொது வெளிப்பாட்டின் மூலம், தேவனைப் பற்றிய ஞானத்தைப் பெறவும், அவனுடைய மனநிலையில் உருமாற்றமடையவும், மற்றும் தேவனுக்கு பெரும் சாட்சி அளிக்கவும் இயன்றவனாக்குகிறார். மனிதனின் மனநிலை மாற்றம் தேவனின் பல வகைப்பட்ட கிரியையின் மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் அவனது மனநிலையில் இல்லாமல், மனிதனால் தேவனுக்குச் சாட்சி பகிரவும், தேவனின் இருதயத்திற்குப் பின் தொடரவும் முடியாது. மனிதன் தன்னை சாத்தானின் கட்டுகளிலிருந்தும் இருளின் தாக்கத்திலிருந்தும் விடுவித்திருப்பதை மனிதனின் மனநிலையின் மாற்றம் குறிக்கிறது, மேலும் உண்மையிலேயே தேவனின் கிரியையின் சான்றாகவும், மாதிரியாகவும், தேவனின் சாட்சியாகவும், தேவனின் இருதயத்திற்குப் பின் தொடர்பவனாகவும் மாறியிருக்கிறான். இன்று, அவதரித்த தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வந்துவிட்டார், மனிதன் அவரைப் பற்றிய ஞானத்தையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்குச் சாட்சி பகிர்வதையும், அவருடைய செயல்படுகிற மற்றும் இயல்பான கிரியைகளை அறிந்து கொள்ளவும், அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவர் செய்யும் எல்லா மனிதனின் கருத்துக்களுக்கு உடன்படாத கிரியைகளுக்கும் கீழ்ப்படியவும், மனிதனை இரட்சிக்க அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளுக்கும் சாட்சி அளிக்கவும், அத்துடன் மனிதனை வென்றிட அவர் நிறைவேற்றும் எல்லாச் செயல்களும் அவருக்குத் தேவையாகிறது. தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் தேவனைக் குறித்த ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சாட்சிகள் மட்டுமே துல்லியமும், உண்மையுமானவை, இவ்வகையான சாட்சிகள் மட்டுமே சாத்தானை அவமதிக்க முடியும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலமாய் கடந்துபோய் தம்மை தெரிந்துகொண்டவர்களை, கையாண்டு நேர்த்தியாக்கி, அவருக்குச் சாட்சி பகிர பயன்படுத்துகிறார். சாத்தானால் சீர்கெட்டவர்களை அவருக்குச் சாட்சி அளிக்க அவர் பயன்படுத்துகிறார், அதேபோல், தங்கள் மனநிலையில் மாறியவர்களையும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களையும் அவர் தம்முடைய சாட்சியைப் பகிர பயன்படுத்துகிறார். மனிதன் அவரை வாயால் புகழ்வது அவருக்கு தேவையில்லை, அவரால் இரட்சிக்கப்படாத சாத்தானின் வகையானோரின் புகழ்ச்சியும் சாட்சியும் அவருக்குத் தேவையில்லை. தேவனை அறிந்தவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சி பகிர தகுதியானவர்கள், மற்றும் தங்கள் மனநிலையில் உருமாற்றம் பெற்றவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சி பகிர தகுதியானவர்கள். மனிதன் வேண்டுமென்றே தமது பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதை தேவன் அனுமதிக்க மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து

457. தேவனின் சாராம்சத்தை அறிந்து கொள்வது அற்பமான காரியம் அல்ல. அவருடைய மனநிலையை நீ புரிந்துகொள்ள வேண்டும். இந்த வழியில், நீ படிப்படியாகவும் அறியாமலும் தேவனின் சாராம்சத்தை அறிந்து கொள்வாய். இந்த அறிவுக்குள் நீ நுழைந்ததும், உயர்ந்த மற்றும் அழகான நிலைக்குள் நீ அடியெடுத்து வைப்பதை நீ காண்பாய். முடிவில், நீ உன் அருவருப்பான ஆத்துமாவைப் பற்றி வெட்கப்படுவாய், மேலும், உன் அவமானத்திலிருந்து மறைந்து கொள்ள இடமில்லை என்று உணருவாய். அந்த நேரத்தில், தேவனின் மனநிலையை புண்படுத்துவது குறைவாகவும் அதற்கான உன் நடத்தையும் குறைவாகவும் இருக்கும், உன் இருதயம் தேவனின் இருதயத்திற்கு அருகில் நெருக்கமாக வரும், மேலும் உன் இருதயத்தில் அவர் மீதான அன்பு படிப்படியாக வளரும். இது மனிதகுலம் ஒரு அழகான நிலைக்குள் நுழைவதற்கான அறிகுறியாகும். ஆனால் இதுவரை, நீங்கள் இதை அடைந்திருக்கவில்லை. உங்கள் விதியின் பொருட்டு நீங்கள் அனைவரும் விரைந்து செல்லும்போது, தேவனின் சாராம்சத்தை அறிய முயல்வதில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? இது தொடர வேண்டுமா, ஏனென்றால் நீங்கள் தேவனின் மனநிலையை மிகக் குறைவாகவே புரிந்துகொள்வதால் நீங்கள் அறியாமலேயே நிர்வாக கட்டளைகளுக்கு எதிராக அத்துமீறுவீர்கள். எனவே, நீங்கள் இப்போது செய்வது தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் குற்றங்களுக்கு ஒரு அஸ்திபாரத்தை அமைக்கிறது அல்லவா? நீங்கள் தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது எனது கிரியையுடன் முரண்படவில்லை. நிர்வாகக் கட்டளைகளுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி அத்துமீறினால், உங்களில் யார் தண்டனையிலிருந்து தப்புவார்கள்? அப்போது எனது கிரியை முற்றிலும் வீணாகியிருக்கும் அல்லவா? எனவே, நான் இன்னும் கேட்கிறேன், உங்கள் சொந்த நடத்தையை ஆராய்வதோடு மட்டுமல்லாமல், நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். நான் உங்களிடம் முன்வைக்கும் உயரிய கோரிக்கையும் இதுதான், நீங்கள் அனைவரும் இதை கவனமாகக் கருத்தில் கொண்டு உங்கள் ஊக்கமான நோக்கத்தை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கிரியைகள் என் ஆத்திரத்தை மிகுவும் தூண்டுகிற ஒரு நாள் வந்தால, பின்விளைவுகள் உங்களுடையதாக மட்டுமே கருத்தில் கொள்ளப்படும், உங்களுக்குப் பதிலாக தண்டனையைத் தாங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது” என்பதிலிருந்து

459. தேவனை விசுவாசிப்பதும் தேவனை அறிவதும் பரலோகச் சட்டமும் பூமியின் கொள்கையும் ஆகும், தேவன் அவதரித்து தமது கிரியையைத் தாமே நேரில் செய்யும் ஒரு காலத்தில், இன்று தேவனை அறிந்து கொள்வதற்கான ஒரு நல்ல நேரம். தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்வதற்கான அஸ்திபாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் அடையக்கூடிய ஒன்றே தேவனைத் திருப்திப்படுத்துவது என்பதாகும், மேலும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள, தேவனைப் பற்றி ஞானம் கொஞ்சம் இருப்பது அவசியம். தேவனைப் பற்றிய இந்த ஞானம் தேவனை விசுவாசிக்கிறவனுக்கு தரிசனமாக இருக்க வேண்டிது அவசியமாகும். இது தேவன்மீதான மனிதனின் விசுவாசத்தின் அடிப்படையாகும். இந்த ஞானம் இல்லையானால், தேவனின் மீதான மனிதனின் விசுவாசம் தெளிவற்ற நிலையிலும், வெற்றுக் கோட்பாட்டின் மத்தியிலும் இருக்கும். தேவனைப் பின்பற்றுதல் இது போன்றோர்களின் தீர்மானமாக இருந்தாலும், அவர்கள் எதையும் பெறுவதில்லை இந்த ஓட்டத்தில் எதையும் பெறாதவர்கள் அனைவருமே நீக்கப்படுவார்கள்—அவர்கள் அனைவரும் சுயநலவாதிகள். … மனிதனால் தரிசனங்களைப் பெற முடியாவிட்டால், தேவனின் புதிய கிரியையை அவனால் பெற முடியாது, தேவனின் புதிய கிரியைக்கு மனிதனால் கீழ்ப்படிய முடியாவிட்டால், மனிதனால் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள இயலாது, எனவே தேவனைப் பற்றிய அவனுடைய ஞானம் ஒன்றுமில்லை என்று எண்ணப்படும். மனிதன் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கு முன், தேவனுடைய வார்த்தையை அவன் அறிந்திருக்க வேண்டும். அதாவது, அவன் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாதையில் மட்டுமே தேவனின் வார்த்தையைத் துல்லியமான வகையிலும் தேவனின் சித்தத்தின் படியும் செயல்படுத்த முடியும். இது சத்தியத்தைத் தேடும் எல்லோரும் கொண்டிருக்க வேண்டிய ஒன்றாகும், மேலும் இந்தச் செயல் தேவனை அறிய முயலும் எல்லோரும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்முறையாகும். தேவனின் வார்த்தையை அறிந்து கொள்ளும் முறையானது தேவனையும் தேவனின் கிரியையையும் அறிந்து கொள்ளும் முறையாகும். எனவே, தரிசனங்களை அறிந்துகொள்வது தேவ அவதாரத்தின் மனித அம்சத்தை தெரிந்து கொள்வதை மட்டுமல்லாமல், தேவனின் வார்த்தையையும் கிரியையையும் அறிந்து கொள்வதையும் குறிக்கிறது. ஜனங்கள் தேவனின் வார்த்தையிலிருந்து தேவ சித்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள், தேவனின் கிரியையிலிருந்து அவர்கள் தேவனின் பண்பையும் தேவன் என்றால் என்ன என்பதையும் அறிந்துகொள்கிறார்கள். தேவ விசுவாசம் என்பது தேவனை அறிவதற்கான முதல்படி. தேவன் மீதான இந்த தொடக்க விசுவாசத்திலிருந்து அவரைப் பற்றிய மிக ஆழமான விசுவாசத்திற்கு முன்னேறுவதற்கான முறையே, தேவனை அறிந்துகொள்வதற்கான முறையும், தேவனின் கிரியையின் அனுபவத்தை உணரும் முறையுமாகும். நீ தேவனை, அவரை அறிந்து கொள்வதற்காக இல்லாமல், விசுவாசிப்பதற்காக மட்டுமே தேவனை விசுவாசித்தால், உன் விசுவாசத்தில் எந்த யதார்த்தமும் இல்லை, உன் விசுவாசம் தூய்மையானதாக மாற முடியாது—இதில் சந்தேகமேதும் இல்லை. தேவனின் கிரியையை மனிதன் அனுபவத்தை உணரும்போது, அவன் படிப்படியாக தேவனை அறிந்துகொள்கிறான் என்றால், அவனது மனநிலை படிப்படியாக மாறும், மேலும் அவனின் விசுவாசம் பெரிதான முறையில் உண்மையாகிவிடும். இவ்வழியில், தேவன் மீதான விசுவாசத்தில் மனிதன் வெற்றியடையும் போது, அவன் தேவனை முற்றிலுமாகப் பெற்றிருப்பான். தேவன் தனது கிரியையை தாமே நேரில் செய்ய இரண்டாவது முறையாக மாம்சமாக மாற தேவன் இவ்வளவு தூரம் சென்றதன் காரணம், அதனால் அவரை மனிதன் தெரிந்து கொள்ளவும், அவரைப் பார்க்கவும் வேண்டும் என்பதாகும். தேவனை அறிவது[அ] தேவனின் கிரியையின் தீர்வில் அடைய வேண்டிய இறுதிப் பலன்; இது மனிதகுலத்திற்கு தேவன் உருவாக்கும் கடைசி தேவையாகும். அவர் இதைச் செய்வதற்கான காரணம் அவருடைய இறுதி சாட்சியத்திற்காகவே. மனிதன் இறுதியாக முழுவதும் அவரிடம் திரும்புவதற்காகவே அவர் இந்தக் கிரியையைச் செய்கிறார். மனிதனால் தேவனை அறிவதன் மூலம் மட்டுமே தேவனை நேசிக்கத் துவங்க முடியும், தேவனை நேசிக்க அவன் தேவனை அறிந்திருக்க வேண்டும். அவன் எப்படி முயன்றாலும், எதைப் பெறுவதற்கு முயன்றாலும், அவனால் தேவனைப் பற்றிய ஞானத்தை அடைய இயல வேண்டும். இவ்வழியில் மட்டுமே மனிதன் தேவனின் இருதயத்தைத் திருப்தி செய்ய முடியும். தேவனை அறிவதன் மூலம் மட்டுமே மனிதனுக்கு தேவன் மீது உண்மையான விசுவாசம் இருக்க முடியும், தேவனை அறிவதன் மூலம் மட்டுமே அவன் தேவனை உண்மையாக மதிக்கவும், கீழ்ப்படியவும் முடியும். தேவனை அறியாதவர்கள் ஒருபோதும் தேவ கீழ்ப்படிதலுக்கும் பயபக்திக்கும் ஆளாகமாட்டார்கள். தேவனை அறிவது என்பதில் அவருடைய பண்பை அறிவதும், அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதும், அவர் யாரென்று தெரிந்துகொள்வதும் உள்ளடங்கும். எந்தவொரு அம்சத்தை ஒருவர் அறிய நேர்ந்தாலும், ஒவ்வொன்றுக்கும் மனிதன் ஒரு கிரையத்தைச் செலுத்த வேண்டும், மற்றும் கீழ்ப்படிவதற்கான மன உறுதி தேவைப்படுகிறது, இவை இல்லாமல் இறுதிவரை தொடர்ந்து செல்ல யாராலும் முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து

460. தேவனை அறிந்துகொள்ள கற்றுக்கொள்ளும் பாடத்தின் பலன்களை ஒன்றிரண்டு நாட்களில் அடைய முடியாது. மனிதன் அனுபவங்களைச் சேர்த்து, துன்பங்களுக்குள்ளாகி, உண்மையான அர்ப்பணிப்பைப் பெறவேண்டும். முதலாவதாக, தேவனின் கிரியையிலிருந்தும் வார்த்தைகளிலிருந்தும் தொடங்குங்கள். தேவனின் ஞானத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது, இந்த ஞானத்தை எவ்வாறு அடைவது, உங்கள் அனுபவங்களில் தேவனை எவ்வாறு பார்ப்பது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதுதான் இன்னும் தேவனை அறியாத நிலையில் எல்லோரும் செய்ய வேண்டியது. ஒரே நேரத்தில் தேவனின் கிரியையையும் வார்த்தைகளையும் ஒருவரால் புரிந்து கொள்ள முடியாது, மேலும் தேவனின் அறிவை முழுமையான ஒரு குறுகிய காலத்திற்குள் யாராலும் அடைய முடியாது. அனுபவத்தின் அவசியமான செயல்முறை ஒன்று உள்ளது, அது இல்லாமல் யாராலும் தேவனை அறியவோ அவரை நேர்மையாக பின்பற்றவோ முடியாது. தேவன் எவ்வளவு கிரியை செய்கிறாரோ, மனிதன் அவரை அவ்வளவே அறிவான். தேவனின் கிரியை மனிதனின் கருத்துக்களுடன் எவ்வளவு முரண்படுகிறதோ, அவ்வளவுதான் தேவனைப் பற்றிய மனிதனின் ஞானம் புதுப்பிக்கப்பட்டு ஆழமாகிறது. தேவனின் கிரியை என்றென்றும் நிலையாகவும் மாறாமலும் இருக்க வேண்டுமானால், அவரைக் குறித்த மனிதனின் ஞானம் அதிகம் இருக்காது. சிருஷ்டிப்பின் காலத்திற்கும் தற்போதைக்கும் இடையில், நியாயப்பிரமாண காலத்தில் தேவன் என்ன செய்தார், கிருபையின் காலத்தில் அவர் என்ன செய்தார், ராஜ்ஜியத்தின் காலத்தில் அவர் என்ன செய்கிறார்—நீங்கள் இந்த தரிசனங்களைப் பற்றி தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும். தேவனுடய கிரியையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து

461. பேதுரு இயேசுவைப் பின்தொடர்ந்த நேரத்தில், அவர் அவரைப் பற்றி அநேக கருத்துக்களை கொண்டிருந்தார், அவரை எப்போதும் தனது கண்ணோட்டத்திலிருந்தே கணித்தார். பேதுருவுக்கு ஆவியானவரைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவு புரிதல் இருந்தபோதிலும், அவருடைய புரிதல் ஓரளவு தெளிவாக இல்லை, அதனால்தான் அவர் இவ்வாறு சொன்னார், “பரலோகப் பிதாவினால் அனுப்பப்பட்டவரை நான் பின்பற்ற வேண்டும். பரிசுத்த ஆவியானவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்”. இயேசு செய்த காரியங்களை அவர் புரிந்துகொள்ளவில்லை, அவற்றைப் பற்றிய தெளிவும் இல்லை. சிறிது காலம் அவரைப் பின்பற்றிய பிறகு, பேதுரு, இயேசுவிலும் அவர் என்ன செய்தார், என்ன சொன்னார் என்பதில் ஆர்வமானார். பாசத்தையும் மரியாதையையும் இயேசு ஊக்கப்படுத்தினார் என்பதை அவர் உணர்ந்தார். பேதுரு அவருடன் ஐக்கியம் கொள்ளவும், அவருக்கு அருகில் தங்கி இருக்கவும் விரும்பினார், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பது அவருக்கு அருளையும் உதவியையும் அளித்தது. அவர் இயேசுவைப் பின்பற்றிய காலத்தில், பேதுரு இயேசுவுடைய செயல்கள், வார்த்தைகள், அசைவுகள் மற்றும் வெளிப்பாடுகள் என அவரது வாழ்க்கையைப் பற்றிய எல்லாவற்றையும் உற்றுக் கவணித்து மனதில் பதித்துக்கொண்டார். இயேசு சாதாரண மனிதர்களைப் போல இல்லை என்ற ஆழமான புரிதலைப் பெற்றார். அவரது மனித தோற்றம் மிகவும் சாதாரணமானது என்றாலும், அவர் மனிதனிடம் அன்பு, இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்தவராக இருந்தார். அவர் செய்த அல்லது சொன்ன அனைத்தும் மற்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது, பேதுரு இயேசுவிடம் இதுவரை கண்டிராத அல்லது பெறாதவற்றைக் கண்டு, பெற்றுக்கொண்டார். இயேசுவுக்கு ஒரு பெரிய அந்தஸ்தோ அல்லது அசாதாரண மனிதத்தன்மையோ இல்லை என்றாலும், அவரைப் பற்றி உண்மையிலேயே அசாதாரணமான மற்றும் அபூர்வமான காற்று இருப்பதை அவர் கண்டார். பேதுருவால் அதை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும், இயேசு எல்லோரிடமிருந்தும் வித்தியாசமாக நடந்துகொண்டார் என்பதை அவரால் காண முடிந்தது, ஏனென்றால் அவர் செய்த காரியங்கள் சாதாரண மனிதர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவையாக இருந்தன. இயேசுவோடு தொடர்பு கொண்ட காலத்திலிருந்தே, அவருடைய குணாதிசயம் ஒரு சாதாரண மனிதனின் தன்மையிலிருந்து வேறுபட்டது என்பதையும் பேதுரு கண்டார். அவர் எப்போதுமே சீராகவும், ஒருபோதும் அவசரமாகவும் செயல்படவில்லை, ஒருபோதும் மிகைப்படுத்தவோ அல்லது ஒரு விஷயத்தை குறைத்து மதிப்பிடவோ செய்யவில்லை, மேலும் அவர் தனது வாழ்க்கையை இயல்பான மற்றும் பாராட்டத்தக்க ஒரு குணாதிசயத்தை வெளிப்படுத்தும் வகையில் நடத்தினார். உரையாடும்போது, இயேசு தெளிவாகவும், கிருபையுடனும் பேசினார், எப்போதும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான முறையில் உரையாடினார்—ஆனாலும் அவர் ஒருபோதும் தனது கிரியையைச் செய்யும்போது அவருடைய மேன்மையை இழக்கவில்லை. இயேசு சில சமயங்களில் மவுனமாக இருப்பதை பேதுரு கண்டார், மற்ற நேரங்களில் அவர் இடைவிடாமல் பேசினார். சில நேரங்களில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் ஒரு சுறுசுறுப்பான மற்றும் உல்லாசமாக இருக்கும் புறாவைப் போல தோன்றினார், மற்ற நேரங்களில் அவர் மிகவும் சோகமாக இருந்ததால் அவர் பேசக்கூட செய்யவில்லை, அவர் ஒரு தளர்வுற்ற மற்றும் சோர்வுற்ற தாயாக இருப்பதைப் போல வருத்தத்துடன் தோன்றினார். சில நேரங்களில் அவர் ஒரு துணிச்சலான போர்ச்சேவகன் ஒரு எதிரியைக் கொல்லத் தாக்குவதைப் போல கோபத்தால் நிரம்பி வழிந்தார் அல்லது சில சந்தர்ப்பங்களில், அவர் ஒரு கர்ஜிக்கும் சிங்கத்தை ஒத்திருந்தார். சில நேரங்களில் அவர் சிரித்தார், மற்ற நேரங்களில் அவர் ஜெபித்து அழுதார். இயேசு எவ்வாறு செயல்பட்டாலும், பேதுரு அவர் மீது எல்லையற்ற அன்பும் மரியாதையும் கொண்டவரானார். இயேசுவின் சிரிப்பு அவரை மகிழ்ச்சியால் நிரப்பியது, அவருடைய துக்கம் அவரை வருத்தத்தில் ஆழ்த்தியது, அவருடைய கோபம் அவரைப் பயமுறுத்தியது, அதே நேரத்தில் அவருடைய இரக்கம், மன்னிப்பு மற்றும் அவர் ஜனங்களிடம் வைத்த கடுமையான கோரிக்கைகள் அவரை இயேசுவை உண்மையாக நேசிக்க வைத்தது, அவர் மீது உண்மையான பயபக்தியை ஏற்படுத்தியது, அவருக்காக ஏக்கம்கொள்ள வைத்தது. நிச்சயமாக, பேதுரு இயேசுவோடு அநேக வருடங்கள் வாழ்ந்த பிறகுதான் இவை அனைத்தையும் படிப்படியாக உணர்ந்தார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுரு இயேசுவை எப்படி அறிந்துகொண்டார்” என்பதிலிருந்து

462. நீ தேவனை அறிய விரும்பினால், அவரை உண்மையாக அறிந்து கொள்ள, அவரை உண்மையாக புரிந்து கொள்ள விரும்பினால், தேவனுடைய கிரியையின் மூன்று நிலைகளுக்கு மட்டும் அல்லது கடந்த காலத்தில் உனக்கு அவர் செய்த கிரியைகளின் கதைகளுக்கு மட்டும் உன்னைக் கட்டுப்படுத்த வேண்டாம். அந்த வகையில் நீ அவரை அறிய முயற்சித்தால், நீ தேவனுக்கு வரம்புகளை வைக்கிறாய், அவரைக் கட்டுப்படுத்துகிறாய். நீ தேவனை மிகச் சிறியதாக பார்க்கிறாய். அவ்வாறு செய்வது ஜனங்களை எவ்வாறு பாதிக்கும்? தேவனுடைய அதிசயத்தையும் மேலாதிக்கத்தையும், அவருடைய வல்லமை, சர்வ வல்லமை மற்றும் அவருடைய அதிகாரத்தின் நோக்கம் ஆகியவற்றையும் நீ ஒருபோதும் அறிய முடியாது. அத்தகைய புரிதல் தேவன் எல்லாவற்றிற்கும் அதிபதி என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான உன் திறனிலும், தேவனுடைய உண்மையான அடையாளம் மற்றும் அந்தஸ்தைப் பற்றிய உன் அறிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனைப் பற்றிய உன் புரிதல் வரம்பில் குறைவாக இருந்தால், நீ பெறக்கூடியதும் குறைவாகவே இருக்கும். இதனால்தான் நீ உன் நோக்கத்தை விரிவுபடுத்தி உன் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும். தேவனுடைய கிரியையின் நோக்கம், அவருடைய மேலாண்மை, அவருடைய ஆட்சி மற்றும் அவர் ஆளுகை செய்யும் எல்லாவற்றையும், அவர் ஆட்சி செய்யும் எல்லாவற்றையும் என இவை அனைத்தையும் நீ புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயங்களில் தான் நீ தேவனுடைய கிரியைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய புரிதலுடன், தேவன் அவர்களுக்குள் எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறார், ஆளுகை செய்கிறார், எல்லாவற்றிற்கும் வழங்குகிறார் என்பதை நீ அறியாமலேயே உணருவாய் என்பதையும் நீ எல்லாவற்றிலும் ஒரு அங்கமாகவும் உறுப்பினராகவும் இருப்பாய் என்பதையும் நீ உண்மையிலேயே உணருவாய். தேவன் எல்லாவற்றிற்கும் வழங்குவதால், நீ தேவனுடைய ஆட்சியையும் ஏற்பாட்டையும் ஏற்றுக்கொள்கிறாய். அது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VIII” என்பதிலிருந்து

463. தேவனைப் பற்றி ஜனங்களின் இதயங்களில் எவ்வளவு புரிந்துக்கொள்ளுதல் இருந்தாலும், அதுவும் அவர்களின் இருதயங்களில் தேவன் வைத்திருக்கும் நிலையின் அளவு ஆகும். தேவனைப் பற்றிய அறிவின் அளவு அவர்களுடைய இதயங்களில் எவ்வளவு பெரியதாக இருகிறதோ, தேவன் அவர்களுடைய இருதயங்களில் அவ்வளவு பெரியதாக இருக்கிறார். உனக்குத் தெரிந்த தேவன் வெறுமையான மற்றும் தெளிவற்றவராக இருந்தால், நீ நம்பும் தேவனும் வெறுமையானவர் மற்றும் தெளிவற்றவர் ஆவார். உனக்குத் தெரிந்த தேவன் உன் சொந்த ஜீவிதத்தின் நோக்கத்துடன் மட்டுப்படுத்தப்பட்டவர். அதற்கும் உண்மையான தேவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு, தேவனுடைய நடைமுறைக் கிரியைகளை அறிந்துக்கொள்வது, தேவனுடைய யதார்த்தத்தையும் அவருடைய சர்வ வல்லமையையும் அறிந்துக்கொள்வது, தேவனுடைய உண்மையான அடையாளத்தை அறிந்துக்கொள்வது, அவரிடம் உள்ளதை அறிந்துக்கொள்வது, அவர் சிருஷ்டித்த எல்லாவற்றிலும் அவர் வெளிப்படுத்திய கிரியைகளை அறிந்துக்கொள்வது என தேவனைப் பற்றிய அறிவைப் பின்பற்றும் இவை ஒவ்வொரு மனிதருக்கும் மிகவும் முக்கியமானதாகும். சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் ஜனங்கள் பிரவேசிக்க முடியுமா என்பதில் அவர்களுக்கு நேரடித் தாக்கம் உள்ளது. தேவனைப் பற்றிய உன் புரிதலை வெறும் வார்த்தைகளாக நீ மட்டுப்படுத்தினால், அதை உன் சொந்த சிறிய அனுபவங்களுடனோ, தேவனுடைய கிருபையாக நீ கருதுவதற்கோ அல்லது தேவனுக்கு நீ அளித்த சிறிய சாட்சிகளுக்கோ மட்டுப்படுத்தினால், நீ நம்புகிற தேவன் முற்றிலும் உண்மையான தேவன் இல்லை என்று நான் சொல்கிறேன். அது மட்டுமல்லாமல், நீ நம்பும் தேவன் ஒரு கற்பனையான தேவன், உண்மையான தேவன் அல்ல என்றும் சொல்லலாம். ஏனென்றால், உண்மையான தேவன் தான் எல்லாவற்றையும் ஆளுகிறார். அவர் எல்லாவற்றிற்கும் மத்தியில் நடப்பவர் மற்றும் எல்லாவற்றையும் நிர்வகிப்பவர். மனிதகுலம் மற்றும் எல்லாவற்றின் தலைவிதியையும் தன் கைகளில் வைத்திருப்பவர் அவரே. நான் பேசும் தேவனுடைய கிரியையும், அவர் கிரியைகளும் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமல்ல. அதாவது, தற்போது அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவை மட்டுப்படுத்தப்படவில்லை. அவருடைய கிரியைகள் எல்லாவற்றிலும், எல்லாவற்றின் பிழைப்பிலும், எல்லாவற்றையும் மாற்றுவதற்கான கட்டளைகளிலும் வெளிப்படுகின்றன.

தேவனுடைய சிருஷ்டிப்பின் எல்லாவற்றிலும் தேவனுடைய எந்தவொரு செயலையும் நீ காணவோ அங்கீகரிக்கவோ முடியாவிட்டால், அவருடைய எந்தவொரு செயலுக்கும் நீ சாட்சி கொடுக்க முடியாது. தேவனுக்காக நீ சாட்சி கொடுக்க முடியாவிட்டால், உனக்குத் தெரிந்த சிறிய “தேவன்” என்று நீ தொடர்ந்து பேசினால், உன் சொந்த யோசனைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் உன் மனதின் குறுகிய எல்லைக்குள் மட்டுமே இருக்கும் தேவனைப் பற்றி மட்டுமே நீ தொடர்ந்து பேசினால், பிறகு உன் விசுவாசத்தை தேவன் ஒருபோதும் புகழமாட்டார். நீ தேவனுக்காக சாட்சி கூறும்போது, தேவனுடைய கிருபையை நீ எவ்வாறு அனுபவிக்கிறாய், தேவனுடைய ஒழுக்கத்தையும் அவருடைய சிட்சையையும் நீ எவ்வாறு ஏற்றுக்கொள்கிறாய், அவருக்கான உன் சாட்சியில் அவருடைய ஆசீர்வாதங்களை நீ எவ்வாறு அனுபவிக்கிறாய் என்பதன் அடிப்படையில் மட்டும் நீ அவ்வாறு செய்தால், அது எங்கும் போதுமானதாக இருக்காது. அவரை திருப்திப்படுத்துவதற்கு கூட நெருக்கமாக இருக்காது. உண்மையான தேவனுக்கு சாட்சி அளிக்க, தேவனுடைய சித்தத்திற்கு இணங்க நீங்கள் தேவனுக்காக சாட்சி கொடுக்க விரும்பினால், தேவன் வைத்திருப்பதை அவருடைய கிரியைகளிலிருந்து நீங்கள் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் தேவனுடைய கட்டுப்பாட்டிலிருந்து நீங்கள் காண வேண்டும் மற்றும் அவர் மனிதகுலம் அனைத்துக்கும் எவ்வாறு வழங்குகிறார் என்ற உண்மையைப் பார்க்க வேண்டும். உன் அன்றாட ஜீவாதாரமும், ஜீவிதத்தில் உன் தேவைகளும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை மட்டுமே நீ ஒப்புக்கொண்டால், ஆனால் தேவன் தம்முடைய சிருஷ்டிப்பின் எல்லாவற்றையும் மனிதகுலத்தின் அனைவருக்கும் வழங்கியுள்ளார் மற்றும் எல்லாவற்றையும் ஆளுவதன் மூலம், அவர் மனிதகுலம் அனைத்தையும் வழிநடத்துகிறார் என்ற உண்மையை பார்க்க தவறினால் நீ ஒருபோதும் தேவனுக்காக சாட்சி கொடுக்க முடியாது. இதையெல்லாம் சொல்வதில் எனது நோக்கம் என்னவாக இருக்கிறது? எனவே இதை நீங்கள் இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நான் பேசிய இந்த தலைப்புகள் உங்கள் சொந்த ஜீவிதத்தில் நுழைவதற்கு பொருத்தமற்றவை என்று நீங்கள் தவறாக நம்பாதீர்கள் மற்றும் இந்த தலைப்புகளை ஒரு வகை அறிவு அல்லது கோட்பாடு என்று நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த மாதிரியான அணுகுமுறையுடன் நான் சொல்வதை நீங்கள் கேட்டால், நீங்கள் ஒரு விஷயத்தையும் பெற மாட்டீர்கள். தேவனை அறிவதற்கான இந்த சிறந்த வாய்ப்பை நீங்கள் இழப்பீர்கள்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IX” என்பதிலிருந்து

464. மனிதன் தனது விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் கட்டளைகளில் ஆழமாகச் செல்லலாம் என்றாலும், அந்த ஆராய்ச்சி வரம்பைப் பொறுத்த வரையில் அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தேவன் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார். மனிதனைப் பொறுத்தவரையில், தேவனுடைய கட்டுப்பாடு எல்லையற்றது. ஒரு மனிதன் தனது முழு ஜீவிதத்தையும் பயன்படுத்தி தேவனுடைய மிகச்சிறிய செயலை செய்தாலும் எந்தவொரு உண்மையான முடிவுகளையும் அடைய முடியாது. இதனால் தான், நீ வெறும் அறிவையும் தேவனைப் படிக்கக் கற்றுக்கொண்டவற்றையும் பயன்படுத்தினால், நீ ஒருபோதும் தேவனை அறியவோ அவரைப் புரிந்து கொள்ளவோ முடியாது. ஆனால் நீ சத்தியத்தைத் தேடுவதற்கும் தேவனைத் தேடுவதற்கும் வழியைத் தெரிந்துகொண்டு, தேவனைத் தெரிந்துகொள்ளும் கண்ணோட்டத்தில் தேவனைப் பார்த்தால், ஒரு நாள், தேவனுடைய கிரியைகளும் ஞானமும் எல்லா இடங்களிலும் இருப்பதை நீ அறிந்துகொள்வாய். தேவன் எல்லாவற்றிற்கும் எஜமானர் என்றும் எல்லாவற்றிற்கும் ஜீவித ஆதாரம் என்றும் அழைக்கப்படுவதற்கான காரணம் என்னவென்பதை நீ அறிவாய். அத்தகைய புரிதலை நீ எவ்வளவு அதிகமாகப் பெறுகிறாயோ, அந்தளவுக்கு தேவன் ஏன் எல்லாவற்றிற்கும் எஜமானர் என்று அழைக்கப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்வாய். நீ உட்பட, எல்லா விஷயங்களும், அனைத்தும் தேவனுடைய ஏற்பாட்டின் நிலையான ஓட்டத்தை தொடர்ந்து பெறுகின்றன. இந்த உலகத்திலும், இந்த மனிதர்களிடையேயும், தேவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதையும், அவர் எல்லாவற்றையும் ஆளக்கூடிய, ஆளுகை செய்யும் மற்றும் பராமரிக்கும் திறனையும் சாரத்தையும் கொண்டிருக்க முடியும் என்பதையும் நீ தெளிவாக உணர முடியும். இந்த புரிதலுக்கு நீ வரும்போது, தேவன் உன் தேவன் என்பதை நீ உண்மையிலேயே அங்கீகரிப்பாய். இந்த நிலையை நீ அடையும்போது, நீ உண்மையிலேயே தேவனை ஏற்றுக்கொண்டு, அவரை உன் தேவனாகவும், உன் எஜமானராகவும் அனுமதித்திருப்பாய். நீ அத்தகைய புரிதலைப் பெற்று, உன் ஜீவிதம் அத்தகைய நிலையை எட்டியவுடன், தேவன் இனி உன்னைச் சோதித்து உன்னை நியாயந்தீர்க்க மாட்டார் மற்றும் அவர் உன்னிடம் எந்த எதிர்பார்ப்பையும் வைக்க மாட்டார். ஏனென்றால், நீ தேவனைப் புரிந்துகொள்வாய். அவருடைய இருதயத்தை அறிந்துகொள்வாய். உண்மையாகவே உன் இருதயத்தில் தேவனை ஏற்றுக்கொள்வாய்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VIII” என்பதிலிருந்து

465. தேவனைப் பற்றி அறிந்துகொள்வது எளிதானது அல்ல என்று மக்கள் அடிக்கடி கூறுவதுண்டு. எப்படியாயினும், நான் கூறுகிறேன், தேவனைப் பற்றி அறிந்துகொள்வது ஒரு கடினமான விஷயமேயல்ல. ஏனெனில் மனிதன் தம்முடைய கிரியைகளை பார்க்கும்படிக்கு தேவன் அதை அடிக்கடி காட்சிப்படுத்துகிறார். மனிதகுலத்தோடு உரையாடுவதையும் தேவன் ஒருபோதும் நிறுத்திவிடவும் இல்லை, தம்மை மறைத்துக்கொள்ளவும் இல்லை. அவருடைய எண்ணங்கள், அவருடைய யோசனைகள், அவருடைய வார்த்தைகள் மற்றும் அவருடைய கிரியைகள் யாவும் மனித குலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே மனிதன் தேவனை அறிய விரும்புகிற வரை எல்லாவித வழிகளிலும் மற்றும் முறைகளிலும் அவரை புரிந்துகொள்ளவும் மற்றும் அறிந்துகொள்ளவும் முடியும். தேவன் தம்மைக் குறித்து அறியப்படுவதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார், தேவன் வேண்டுமென்றே தம்மை மனிதகுலத்திற்கு மறைத்திருக்கிறார், தம்மை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் மனிதனை அனுமதிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை, என்று மனிதன் கண்மூடித்தனமாக கூறுவதின் காரணமென்னவென்றால், மனிதன் தேவன் யாரென்று அறியவுமில்லை, தேவனை புரிந்துக்கொள்ள விரும்பவுமில்லை. அதற்கும் மேலாக சிருஷ்டிகருடைய எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது கிரியைகளின் மீது அவன் அக்கறை கொள்ளவுமில்லை…. உண்மையை கூறுவதென்றால், ஒரு மனிதன் தன்னுடைய மீதியான நேரத்தை சிருஷ்டிகரின் வார்த்தைகளை அல்லது கிரியைகளை அறிந்துகொள்ள பயன்படுத்தினால், சிருஷ்டிகரின் எண்ணங்களை மற்றும் அவருடைய இருதயத்தின் சத்தத்தை கேட்க சிறிது கவனத்தை செலுத்தினால், அந்த மனிதனுக்கு சிருஷ்டிகருடைய எண்ணங்களும், வார்த்தைகளும் மற்றும் கிரியைகளும் காணக்கூடியதாகவும், வெளியரங்கமாயும் இருக்கும் என்பதை அந்த நபர் அறிந்துகொள்ள கடினமாக இருக்காது. அதேப்போன்று மனிதருக்குள்ளே சிருஷ்டிகர் எல்லா காலங்களிலும் இருக்கிறார், அவர் மனிதனோடும் மற்றும் ஒட்டுமொத்த சிருஷ்டிகளோடும் எப்போதும் உரையாடலில் இருக்கிறார், மேலும் அவர் ஒவ்வொரு நாளும் புதிய கிரியைகளை நடப்பித்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள மனிதனுக்கு ஒரு சிறிய முயற்சியே போதுமானது. அவருடைய இயல்பும் மனநிலையும் மனிதனுடனான அவருடைய உரையாடலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவருடைய எண்ணங்கள் மற்றும் யோசனைகள் எல்லாம் அவருடைய கிரியைகளில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர் மனிதகுலத்தோடு எல்லா காலத்திலும் உடன் இருந்து, கவனித்துக் கொண்டு இருக்கிறார். “நான் பரலோகத்திலிருக்கிறேன், நான் என் சிருஷ்டிகளுக்குள் இருக்கிறேன், நான் அவற்றை கண்காணித்துக்கொண்டிருக்கிறேன்; நான் காத்துக்கொண்டிருக்கிறேன்; நான் உங்கள் பக்கமிருக்கிறேன்…” என்ற வார்த்தைகளால் மனிதகுலத்தோடும், அனைத்து சிருஷ்டிகளோடும் அவர் அமைதியாய் பேசுகிறார். அவருடைய கரங்கள் இதமாயும், உறுதியாயும் இருக்கிறது; அவருடைய அடிச்சுவடுகள் இலகுவானவை; அவருடைய சத்தம் மென்மையானது மற்றும் கிருபையுள்ளது; அவருடைய வடிவம் மனிதகுலத்தை தழுவி கடந்துப்போய் மறுபடியும் திரும்புகிறது; அவருடைய முகத்தோற்றம் அழகானது மற்றும் மென்மையானது. அவர் ஒருபொழுதும் விட்டு விலகுவதில்லை, ஒருபொழுதும் மறைந்துப்போவதில்லை; மனித குலத்தை விட்டு விலகாமல் இரவும் பகலும் அவர் அவர்களோடு இருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

466. ஜனங்கள் தேவனைப் புரிந்து கொள்ளாதபோது, அவருடைய மனநிலையை அறிந்து கொள்ளாதபோது, அவர்களுடைய இருதயங்கள் ஒருபோதும் அவருக்காக உண்மையாகத் திறக்கப்பட முடியாது. அவர்கள் தேவனைப் புரிந்துகொண்டவுடன், அவர்கள் அவருடைய இருதயத்தில் இருக்கிறதை ஆர்வத்தோடும் விசுவாசத்தோடும் புரிந்துகொள்ளவும், ருசிக்கவும் ஆரம்பிப்பார்கள். தேவனுடைய இருதயத்தில் இருப்பதை நீ புரிந்துகொண்டு, ருசிக்கும்போது உன்னுடைய இருதயம் படிப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக அவருக்காகத் திறக்கும். உன்னுடைய இருதயம் அவருக்காக திறக்கும்போது தேவனுடனான உன்னுடைய உரையாடல்கள், தேவனிடத்தில் நீ வைக்கிற கோரிக்கைகள் மற்றும் உன்னுடைய சொந்த மிதமிஞ்சிய ஆசைகள் எவ்வளவு வெட்கத்துக்குரியவையாக, வெறுக்கத்தக்கவையாக இருந்தன என்பதை நீ உணருவாய். உன்னுடைய இருதயம் உண்மையிலேயே தேவனுக்காக திறக்கும்போது, அவருடைய இருதயம் எத்தகைய முடிவில்லாத உலகம் என்பதை நீ காண்பாய். மேலும் நீ இதற்கு முன் அனுபவித்திராத ஒரு சாம்ராஜ்யத்திற்குள் நுழைவாய். இந்த சாம்ராஜ்யத்தில் ஏமாற்றுதல் இல்லை, வஞ்சகம் இல்லை, இருள் இல்லை, தீமை இல்லை. இங்கே நேர்மையும், விசுவாசமும், வெளிச்சமும், நேர்மையும், நீதியும், இரக்கமும் மட்டுமே உண்டு. இது அன்பும் அக்கறையும் நிறைந்தது, இரக்கமும் சகிப்புத்தன்மையும் நிறைந்தது, மேலும் இதன் மூலம் நீ ஜீவனுடன் இருப்பதன் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் உணருவாய். இவையே நீ உன் இருதயத்தை தேவனுக்காகத் திறக்கும்போது, அவர் உனக்கு வெளிப்படுத்துகிற காரியங்கள் ஆகும். இந்த முடிவில்லாத உலகம் தேவனுடைய ஞானமும், சர்வவல்லமையும் நிறைந்ததாகும். இது அவருடைய அன்பினாலும் அதிகாரத்தினாலும் நிறைந்ததாகும். இங்கே தேவனிடத்தில் இருக்கிற, தேவன் யாராய் இருக்கிறார் என்பதின் மற்றும் எது அவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும், ஏன் அவர் கவலைப்படுகிறார், ஏன் சோகமாகிறார், ஏன் கோபப்படுகிறார் என்பதின் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னால் காண முடியும். இதுவே தங்களுடைய இருதயத்தைத் திறந்து, தேவனை உள்ளே வர அனுமதிக்கும் ஒவ்வொரு நபரும் பார்க்கக் கூடியதாகும். நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனுக்காகத் திறந்தால் மட்டுமே அவரால் அதற்குள் வர முடியும். அவர் உன்னுடைய இருதயத்திற்குள் வந்திருந்தால் மட்டுமே, உன்னால் தேவனிடத்தில் உள்ளதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும், உனக்கான அவருடைய நோக்கங்களையும் பார்க்க முடியும். அந்த நேரத்தில், தேவனைப் பற்றின எல்லாமே மிகவும் விலைமதிப்பற்றவை என்பதையும், அவரிடம் உள்ளவையும், அவர் யாராக இருக்கிறார் என்பதும் உயர்வாய் மதிப்பதற்கு மிகவும் தகுதியானவை என்பதையும் நீ கண்டுபிடிப்பாய். அதனுடன் ஒப்பிடும்போது, உன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள், உன் வாழ்க்கையில் உள்ள பொருட்கள் மற்றும் நடந்த நிகழ்வுகள், மற்றும் உனக்கு அன்புக்குரியவர்கள், உன்னுடைய துணைவர் மற்றும் நீ விரும்புகிற விஷயங்கள் கூட குறிப்பிடப்படத் தகுதியுடையவை அல்ல. அவை மிகவும் சிறியவை, மிகவும் தாழ்ந்தவை; எந்த உலகப் பொருளும் உன்னை மறுபடியும் ஒருபோதும் கவர்ந்திழுக்க முடியாது, அல்லது எந்த உலகப் பொருளும் அதற்கான எந்த விலையையும் செலுத்தும்படி உன்னை மறுபடியும் மயக்க முடியாது என்பதை நீ உணருவாய். தேவனுடைய தாழ்மையில் நீ அவருடைய மகத்துவத்தையும், அவருடைய அதிகாரத்தையும் காண்பாய். மேலும் தேவனுடைய சில செயல்களில், முன்பு நீ அவருடைய எல்லையற்ற ஞானத்தையும், அவருடைய சகிப்புத்தன்மையையும் மிகச் சிறிய அளவில் விசுவாசித்ததையும் காண்பாய், அவருடைய பொறுமையையும், அவருடைய சகிப்புத்தன்மையையும், உன்னைக் குறித்த அவருடைய புரிதலையும் நீ காண்பாய். இது அவர் மீது ஒரு பக்தியை உனக்குள் உண்டாக்கும். அந்நாளில், மனிதகுலம் இத்தகைய இழிவான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும், உன் அருகில் உள்ள ஜனங்கள், உன் வாழ்க்கையில் நடக்கின்ற காரியங்கள், நீ நேசிப்பவர்கள், உனக்கான அவர்களுடைய அன்பு, அவர்களின் பாதுகாப்பு அல்லது அக்கறை என்றழைக்கப்படும் எதுவும் சொல்லப்படக்கூட தகுதியற்றவை என்பதையும், தேவன் மட்டுமே உனக்குப் பிரியமானவர், தேவனை மட்டுமே நீ மிகவும் மதிக்கிறாய் என்பதையும் நீ உணருவாய். அந்த நாள் வரும்போது சில ஜனங்கள் இவ்வாறு சொல்வார்கள் என்று நம்புகிறேன்: தேவனுடைய அன்பு மிகவும் பெரியது, அவருடைய சாராம்சம் மிகவும் பரிசுத்தமானது, அதில் எந்த வஞ்சகமும் எந்த தீமையும், எந்த பொறாமையும், எந்த சண்டையும் இல்லை. ஆனால் நீதியும், நம்பகத்தன்மையும் மட்டுமே இருக்கிறது, தேவனிடத்தில் இருக்கிற எல்லாமும், அவர் யாராய் இருக்கிறார் என்பதும் மனிதர்களால் விரும்பப்படவேண்டியவையாகும். ஜனங்கள் அதை அடையும்படி கடும்முயற்சி செய்து, இதைப் பெறும்படி பேராவல் கொள்ள வேண்டும். இந்த கட்டமைப்பை அடைவதற்கு மனுக்குலத்தின் திறன் எந்த அடிப்படையில் உள்ளது? இது தேவனுடைய மனநிலையைப் புரிந்து கொள்வதன் அடிப்படையிலும் அவருடைய சாராம்சத்தைப் பற்றிய புரிதலின் அடிப்படையிலும் கட்டப்பட்டுள்ளது. எனவே தேவனுடைய மனநிலையையும், அவரிடம் இருப்பதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்வது ஒவ்வொரு நபருக்கும் வாழ்நாள் முழுவதற்கான படிப்பினை ஆகும். இது தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொள்ளவும், தேவனை அறியவும் கடும்முயற்சி செய்யும் ஒவ்வொரு நபரும் அடையத் தொடரும் வாழ்நாள் இலக்காகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

467. தேவன் தாமே தேவன். அவர் ஒருபோதும் சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக மாற மாட்டார், மேலும் அவர் சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களில் ஓர் உறுப்பினரானாலும், அவருடைய இயல்பான மனநிலையும் சாராம்சமும் மாறாது. எனவே, தேவனை அறிந்துகொள்வது என்பது ஒரு பொருளை அறிந்துகொள்வது போன்றதல்ல; தேவனை அறிவது என்பது எதையாவது ஆராய்வதல்ல, அல்லது ஒரு நபரைப் புரிந்துகொள்வது போன்றதுமல்ல. ஒரு மனிதன் ஒரு பொருளை அறிந்து கொள்வதற்கான அல்லது ஒருவரை புரிந்து கொள்வதற்கான மையக் கருத்தையும் வழிமுறையையும் பயன்படுத்தி, தேவனை அறிந்து கொண்டால், நீ ஒருபோதும் தேவனைப் பற்றிய அறிவைப் பெற முடியாது. தேவனை அறிந்து கொள்வது அனுபவம் அல்லது கற்பனையை சார்ந்து இருக்காது, எனவே நீ உன்னுடைய அனுபவத்தையும் கற்பனையையும் ஒருபோதும் தேவன் மீது திணிக்கக்கூடாது. மேலும் உன்னுடைய அனுபவமும் கற்பனையும் எவ்வளவு முனைப்பானதாக இருந்தாலும் அவை வரம்புக்குட்பட்டதேயாகும். மேலும் என்னவென்றால், உன் கற்பனை உண்மைகளுடன் ஒத்துப்போவதில்லை, மேலும் சத்தியத்துடனும் ஒத்துப்போவதில்லை, மேலும் அது தேவனின் உண்மையான மனநிலை மற்றும் சாராம்சத்துடன் பொருந்துவதில்லை. தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துகொள்வதற்கு, உன்னுடைய கற்பனையின் மேல் நீ சார்ந்திருப்பாயானால், நீ ஒருபோதும் ஜெயம் பெற மாட்டாய். தேவனிடத்திலிருந்து வரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, பின்பு படிப்படியாக அனுபவித்து, அவைகளைப் புரிந்து கொள்வதுமே ஒரே வழி ஆகும். உன் ஒத்துழைப்பினாலும், சத்தியத்திற்கான உன் பசி தாகத்தினாலும், அவரை உண்மையாக புரிந்துகொள்ளவும், அறிந்து கொள்ளவும் தேவன் உன்னைத் தெளிவுபடுத்தும் ஒரு நாள் உண்டு.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

468. “தேவனுக்குப் பயப்படுவதும், தீமையைத் தவிர்ப்பதும்” மற்றும் தேவனை அறிவதும் எண்ணற்ற நூல்களால் பிரிக்கமுடியாமல் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கிடையேயான தொடர்பு பிரத்தியட்சமாகத் தெரிகிறது. ஒருவர் தீமையைத் தவிர்ப்பதற்கு விரும்பினால், முதலில் தேவன் மீது உண்மையான பயம் இருக்க வேண்டும். ஒருவர் தேவனைப் பற்றிய உண்மையான பயத்தை அடைய விரும்பினால், முதலில் தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இருக்க வேண்டும். தேவனைப் பற்றிய அறிவை அடைய ஒருவர் விரும்பினால், முதலில் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்க வேண்டும், தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும், தேவனுடைய சிட்சையையும் ஒழுக்கத்தையும் அனுபவிக்க வேண்டும், அவருடைய சிட்சையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க வேண்டும். ஒருவர் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்க விரும்பினால், ஒருவர் முதலில் தேவனுடைய வார்த்தைகளை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும், தேவனை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும், மற்றும் ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான சூழல்களின் வடிவத்திலும் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்க தேவனிடம் கேட்க வேண்டும். ஒருவர் தேவனோடு, தேவனுடைய வார்த்தைகளோடு நேருக்கு நேர் வர விரும்பினால், முதலில் ஒரு எளிய மற்றும் நேர்மையான இருதயம், சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கான தயார்நிலை, துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் விருப்பம், மனஉறுதி மற்றும் தீமையைத் தவிர்ப்பதற்கான தைரியம் மற்றும் ஒரு உண்மையான சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக ஆசை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு, படிப்படியாக முன்னேறும்போது, நீ தேவனிடம் இன்னும் நெருக்கமாக வருவாய், உன் இருதயம் இன்னும் தூய்மையாக வளரும் மற்றும் உன் ஜீவிதத்தையும் உயிருடன் இருப்பதன் மதிப்பையும், தேவனைப் பற்றிய உன் அறிவோடு, இன்னும் அர்த்தமுள்ளதாகவும், இன்னும் பிரகாசமானதாகவும் மாற்றுவாய். ஒரு நாள், சிருஷ்டிகர் இனி ஒரு புதிர் அல்ல என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து ஒருபோதும் மறைக்கப்படவில்லை என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து ஒருபோதும் முகத்தை மறைக்கவில்லை என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து வெகு தொலைவில் இல்லை என்றும், சிருஷ்டிகர் இனி உன் எண்ணங்களில் நீ தொடர்ந்து ஏங்கி, உணர முடியாமல் போனவர் அல்ல என்றும், அவர் உன் இடது மற்றும் வலதுபுறம் நிஜமாகவும் உண்மையாகவும் பாதுகாப்பாக நிற்கிறார் என்றும், உன் ஜீவனை வழங்குகிறார் என்றும், உன் விதியைக் கட்டுப்படுத்துகிறார் என்றும், நீ உணருவாய். அவர் தொலைதூர அடிவானத்தில் இல்லை, மேகங்களில் தன்னைத்தானே மறைக்கவில்லை. அவர் உன் பக்கத்திலேயே இருக்கிறார். உன்னை எல்லாவற்றிலும் வழிநடத்துகிறார். உன்னிடம் உள்ள அனைத்திடமும் உன்னிடமும் அவர் மட்டுமே இருக்கிறார். அத்தகைய தேவன், இருதயத்திலிருந்து அவரை நேசிக்கவும், அவருடன் ஒட்டிக்கொள்ளவும், அவரை நெருக்கமாகப் பிடித்துக் கொள்ளவும், அவரைப் போற்றவும், அவரை இழக்க பயப்படுவதற்கும், இனிமேல் அவரைத் துறக்க, அவருக்குக் கீழ்ப்படியாமலும் இருக்க அல்லது அவரைத் தவிர்க்க அல்லது தூரத்தில் அவரை தள்ளி வைக்க விரும்பாமல் இருப்பதற்கும் உன்னை அனுமதிக்கிறார். நீ விரும்புவதெல்லாம் அவர் மீது அக்கறைகொள்வதும், அவருக்குக் கீழ்ப்படிவதும், அவர் உனக்குக் கொடுக்கும் அனைத்தையும் கூறுவதும், அவருடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிவதும் மட்டுமே. நீ இனி வழிநடத்தப்படுவதை, உனக்கு வழங்கப்படுவதை, கவனிக்கப்படுவதை, அவரால் பாதுகாக்கப்படுவதை, அவர் கட்டளையிடுவதை, உனக்காக ஆணையிடுவதை, இனி மறுக்க மாட்டாய். நீ விரும்புவதெல்லாம் அவரைப் பின்பற்றுவதும், அவருடைய பக்கத்திலேயே நடப்பதும், அவரை உன் ஒரே ஜீவனாக ஏற்றுக்கொள்வதும், அவரை உன் ஒரே கர்த்தராக ஏற்றுக்கொள்வதும், உன் ஒரே தேவனாக ஏற்றுக்கொள்வதும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. மூல உரை “தேவனை அறிவதற்கான செயல்” என்று கூறுகிறது.

முந்தைய: J. அன்பான தேவனை பின்தொடர்வது எப்படி என்பது குறித்து

அடுத்த: L. தேவனுக்கு ஊழியம் செய்து அவருக்கு சாட்சி பகர்வது எப்படி என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக