தேவனை அறிதல் IV

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 120

மேலோட்டமான மற்றும் நுட்பமான கண்ணோட்டங்களின் மூலம் தேவனுடைய அதிகாரத்தைப் புரிந்துகொள்ளுதல்

தேவனுடைய அதிகாரம் தனித்துவமானது. இது தேவனுடைய அடையாளத்தைப் பற்றிய குணத்தின் வெளிப்பாடும் விஷேசித்த சாராம்சமும் ஆகும். இது சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்தவொரு ஜீவனும் பெறாத ஒன்றாகும். சிருஷ்டிகர் ஒருவரே இந்த வகையான அதிகாரத்தைப் பெற்றுள்ளார். அதாவது, தனித்துவமான தேவனாகிய சிருஷ்டிகர் ஒருவரே இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறார். மேலும் அவரிடம் மட்டுமே இந்த சாராம்சம் உள்ளது. இந்நிலையில், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? மனிதன் தன் மனதில் கருதும் “அதிகாரம்” என்பதிலிருந்து தேவனுடைய அதிகாரம் எவ்வாறு வேறுபடுகிறது? இதன் விஷேசம் என்ன? குறிப்பாக இதைப் பற்றி இங்கே பேசுவது ஏன் முக்கியமானது? நீங்கள் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். பெரும்பாலான ஜனங்களுக்கு, “தேவனுடைய அதிகாரம்” என்பது ஒரு தெளிவற்ற கருத்தாக உள்ளது. இதனைப் புரிந்துக் கொள்ள அவர்களுக்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்கு, இதனைப் பற்றிய எந்தவொரு விவாதமும் சுருக்கமானதாகவே இருக்கும். ஆகையால், மனிதன் தன் திறனுக்கேற்ப பெற்றுக்கொண்ட தேவனுடைய அதிகாரம் பற்றிய அறிவிற்கும், தேவனுடைய அதிகாரத்தின் சாராம்சதிற்கும் இடையே நிச்சயமாக ஒரு இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியைக் குறைக்க, ஜனங்கள், நிகழ்வுகள், விஷயங்கள் மூலமாகவும் மற்றும் தங்கள் நிஜ வாழ்வில் அவர்களுடைய எல்லைக்குள்ளாக மற்றும் புரிந்துகொள்ளும் திறனுக்குள்ளாக இருக்கும் பல்வேறு சம்பவங்கள் மூலமாகவும் தேவனுடைய அதிகாரத்தை அனைவரும் படிப்படியாக அறிந்துகொள்ள வேண்டும். “தேவனுடைய அதிகாரம்” என்ற சொற்றொடர் புரிந்துகொள்ள முடியாததாகத் தோன்றினாலும், தேவனுடைய அதிகாரம் சுருக்கமானது அல்ல. மனிதனுடைய ஜீவிதத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் அவர் மனிதனுடன் இருக்கிறார், ஒவ்வொரு நாளும் அவனை வழிநடத்துகிறார். எனவே, நிஜ வாழ்வில், ஒவ்வொரு மனிதரும் தேவனுடைய அதிகாரத்தின் மிக உறுதியான அம்சத்தை நிச்சயமாகவே பார்த்து அனுபவிப்பார்கள். தேவனுடைய அதிகாரம் மெய்யாகவே உள்ளது என்பதற்கு இந்த உறுதியான அம்சம் போதுமான சான்றாகும். மேலும் தேவன் அத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்ற சத்தியத்தை ஒருவர் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இது முழுமையாக உதவுகிறது.

தேவன் அனைத்தையும் சிருஷ்டித்தார், அதனை சிருஷ்டித்ததனால், அவருக்கு எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் இருக்கிறது. அவருக்கு எல்லாவற்றின்மீதும் ஆதிக்கம் இருப்பதுடன், அனைத்தையும் அவர் கட்டுப்படுத்துகிறார். “தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்” என்ற கருத்தின் பொருள் என்ன? அதை எவ்வாறு விளக்க முடியும்? நிஜ வாழ்விற்கு இது எவ்வாறு பொருந்தும்? தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்ற சத்தியத்தைப் புரிந்துக்கொள்வது என்பது, அவருடைய அதிகாரத்தைப் புரிந்துக்கொள்ள எவ்வாறு வழிவகுக்கும்? “தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்” என்ற சொற்றொடரிலிருந்து, தேவன் கட்டுப்படுத்துவது கோள்களின் ஒரு பகுதியையோ, சிருஷ்டிப்பின் ஒரு பகுதியையோ அல்லது மனிதகுலத்தின் ஒரு பகுதியையோ அல்ல என்பதை நாம் பார்க்க வேண்டும். மாறாக பிரமாண்டமான பொருட்கள் முதல் நுண்ணிய பொருட்கள் வரை, காணக்கூடியது முதல் காணமுடியாதது வரை, பிரபஞ்சத்தின் நட்சத்திரங்கள் முதல் பூமியில் உள்ள உயிரினங்கள் வரை, அத்துடன் மனித கண்ணால் காணமுடியாத நுண்ணுயிரிகளும் பிறவடிவங்களில் இருக்கும் உயிரினங்கள் வரை அவர் அனைத்தையுமே கட்டுப்படுத்துகிறார். தேவன் “அனைத்தையும்” “கட்டுப்பாட்டில்” வைத்துள்ளார் என்பதற்கு இதுதான் மிகச் சரியான விளக்கமாகும். இது அவருடைய அதிகாரத்தின் வரம்பும், அவருடைய ராஜரீகம்மற்றும் ஆட்சியின் எல்லையும் ஆகும்.

இந்த மனிதகுலம் தோன்றுவதற்கு முன்னதாகவே இந்தப் பிரபஞ்சம்—வானத்தில் உள்ள அனைத்து கோள்கள் மற்றும் அனைத்து நட்சத்திரங்கள்—ஏற்கனவே இருந்தது. அந்த பிரமாண்டமான சூழலில், எத்தனை ஆண்டுகள் சென்றிருந்தாலும், வானத்திலுள்ள இந்தக் கோள்களும் நட்சத்திரங்களும் தாங்கள் இருக்க வேண்டுமென்பதற்காக தேவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கின்றன. எந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் கோள் எங்கு செல்கிறது; எந்தக் கோள் என்ன பணியைச் செய்கிறது, எப்போது எந்தக் கோள் எந்த சுற்றுப்பாதையில் சுழல்கிறது, மேலும் அது மறைவதும் அல்லது மாற்றப்படுவதும் என இவை அனைத்தும் சிறிதும் பிழையின்றி தொடர்கின்றன. கோள்களின் இருப்பிடங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான தூரங்கள் அனைத்தும் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன, இவை அனைத்தும் துல்லியமான தரவுகளால் விவரிக்கப்படலாம். அவை பயணிக்கும் பாதைகள், அவற்றின் சுற்றுப்பாதைகளின் வேகம் மற்றும் வடிவங்கள், மேலும் அவை பல்வேறு இடங்களில் நிலைகொண்டிருக்கும் நேரங்கள் என இவை அனைத்தும் துல்லியமாக அளவிடப்பட்டு விஷேசித்த விதிகளால் விவரிக்கப்படலாம். பல யுகங்களாக சிறிதளவுகூட விலகல் இல்லாமல், கோள்கள் இந்த விதிகளைப் பின்பற்றியுள்ளன. எந்தவொரு வல்லமையாலும் அவற்றின் சுற்றுப்பாதைகளை அல்லது அவை பின்பற்றும் வழிமுறைகளை மாற்றவோ, சீர்குலைக்கவோ முடியாது. அவற்றின் இயக்கத்தை நிர்வகிக்கும் விஷேசித்த விதிகளும் அவற்றை விவரிக்கும் துல்லியமான தரவுகளும் சிருஷ்டிகருடைய அதிகாரத்தால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்பதால், அவை சிருஷ்டிகருடைய ராஜரீகம் மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் தங்களது சொந்த விருப்பப்படி இந்தவிதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன. அந்தப் பிரமாண்டமான சூழலில், சில வழிமுறைகளையும், சில தரவுகளையும், சில விசித்திரமான மற்றும் விவரிக்க முடியாத விதிகள் அல்லது நிகழ்வுகளையும், மனிதன் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. தேவன் இருக்கிறார் என்பதை மனிதகுலம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், சிருஷ்டிகர் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், சிருஷ்டிகருடைய அதிகாரம் இருப்பதை அங்கீகரிக்கவில்லை என்றாலும், மனித விஞ்ஞானிகளும், வானியலாளர்களும், இயற்பியலாளர்களும், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள அனைத்தையும், அத்துடன் அவை இயங்குவதற்கு ஆணையிடும் அனைத்துக் கொள்கைகளைளையும் வழிமுறைகளையும் ஒரு பரந்த மற்றும் கண்ணுக்குத் தெரியாத இருண்ட ஆற்றல் நிர்வகித்துக் கட்டுப்படுத்துகின்றது என்பதையும் மட்டுமே மேலும் மேலும் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த உண்மையானது, அந்த இயக்கமுறைகளுக்கு மத்தியில் ஒரு வல்லமை வாய்ந்தவர் இருப்பதையும், அவர் அனைத்தையும் திட்டமிட்டு இயக்குகிறார் என்பதையும் மனிதன் எதிர்க்கொண்டு ஒப்புக்கொள்ளவும் கட்டாயப்படுத்துகிறது. அவருடைய வல்லமை அசாதாரணமானது. அவருடைய மெய்யான முகத்தை யாராலும் பார்க்க முடியாது என்றாலும், அவர் ஒவ்வொரு நொடியிலும் அனைத்தையும் நிர்வகித்துக் கட்டுப்படுத்துகிறார். எந்தவொரு மனிதனும் அல்லது வல்லமையும் அவருடைய ராகரீகத்தை மிஞ்ச முடியாது. இந்த உண்மையைக் கேட்பதன் மூலம், எல்லாவற்றின் இருப்பையும் நிர்வகிக்கும் விதிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதையும், யாராலும் மாற்ற முடியாது என்பதையும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்; இந்த விதிகளை மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதையும், அவை இயற்கையாகவே நிகழ்கின்றன என்பதையும், ஆனால் அவை ஒரு சர்வவல்லவரால் கட்டளையிடப்படுகின்றன என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் தேவனுடைய அதிகாரத்தின் வெளிப்பாடுகள் என்று ஒரு பிரமாண்டமான சூழலில் மனிதகுலத்தால் உணர முடியும்.

நுண்ணிய அளவில், பூமியில் மனிதன் காணக் கூடிய அனைத்து மலைகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள் மற்றும் நிலப்பரப்புகளும், அவன் அனுபவிக்கும் அனைத்துப் பருவங்களும், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் மற்றும் மனிதர்கள் உட்பட பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் தேவனுடைய ராஜரீகம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும். தேவனுடைய ராஜரீகம் மற்றும் கட்டுப்பாட்டின்கீழ், அனைத்துமே அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப உருவாகின்றன அல்லது மறைந்துவிடுகின்றன. அவற்றின் இருப்பை நிர்வகிக்கும் விதிகள் எழுகின்றன. மேலும் அவை விதிகளுடனேயே வளர்ந்து பெருகுகின்றன. எந்தவொரு மனிதனும் அல்லது விஷயமும் இந்த விதிகளுக்கு மேற்படவில்லை. இது ஏன்? ஒரே பதில் இதுதான்: இதற்குக் காரணம் தேவனுடைய அதிகாரமாகும். அல்லது, இதை வேறு விதமாகக் கூறினால், இதற்குக் காரணம் தேவனுடைய எண்ணங்களும், அவருடைய வார்த்தைகளும், அவருடைய தனிப்பட்ட செயல்களுமாகும். இதன் பொருள் என்னவென்றால் தேவனுடைய அதிகாரமும் தேவனுடைய எண்ணமும் தான் இந்த விதிகளுக்கு வழிவகுக்கின்றன. அவை அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப மாறுகின்றன. மேலும் இந்த மாற்றங்கள் அனைத்தும் அவரது திட்டத்தின் நிமித்தம் நிகழ்கின்றன அல்லது மறைந்துவிடுகின்றன. உதாரணமாக, தொற்றுநோய்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவை எச்சரிக்கையின்றி வருகின்றன. அவற்றின் தோற்றமோ அவை ஏன் நிகழ்கின்றன என்பதற்கான சரியான காரணங்களோ யாருக்கும் தெரிவதில்லை. மேலும் ஒரு தொற்றுநோய் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையும் போதெல்லாம், அங்குள்ளவர்கள் பேரழிவிலிருந்து தப்பமுடியாது. தீய அல்லது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் பரவலால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை மனித அறிவியல் புரிந்துகொள்கிறது. அவற்றின் வேகம், பரவும் தூரம் மற்றும் பரவும் முறை ஆகியவற்றை மனித அறிவியலால் கணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஜனங்கள் தொற்றுநோய்களை ஒவ்வொரு வழியிலும் எதிர்க்கிறார்கள் என்றாலும், தொற்றுநோய்கள் வரும் போது, மனிதர்கள் அல்லது விலங்குகள் தவிர்க்க முடியாமல் பாதிப்படைகின்றன என்பதை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. மனிதர்களால் செய்ய முடிந்ததெல்லாம் அவற்றைத் தடுப்பதற்கும், அவற்றை எதிர்ப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் எடுக்கும் முயற்சி மட்டுமே ஆகும். ஆனால் எந்தவொரு தனிப்பட்ட தொற்றுநோயின் தொடக்கத்தையும் முடிவையும் விளக்கும் மூலக்காரணங்கள் யாருக்கும் தெரிவதில்லை, அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு தொற்றுநோயின் எழுச்சி மற்றும் பரவலை எதிர்கொள்ள, மனிதர்கள் எடுக்கும் முதல் நடவடிக்கை ஒரு தடுப்பூசியை உருவாக்குவதே ஆகும். ஆனால் தடுப்பூசி தயாராகும் முன்பே தொற்றுநோய் தானாகவே மறைந்துவிடுகிறது. தொற்றுநோய்கள் ஏன் மறைகின்றன? கிருமிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள், மற்றவர்கள் பருவங்களின் மாற்றத்தால் மறைந்துவிட்டதாக கூறுகிறார்கள்…. இந்தக் கண்மூடித்தனமான யூகங்கள் நியாயமானவையா இல்லையா என்பதைப் பொறுத்தவரை, விஞ்ஞானம் எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது. துல்லியமான பதிலையும் கொடுக்க முடியாது. மனிதகுலம் இந்த யூகங்களை மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் தொற்றுநோய்களைப் பற்றிய புரிதல் இல்லாமை மற்றும் பயத்தையும் கணக்கிடவேண்டும். இறுதி ஆய்வில், தொற்றுநோய்கள் ஏன் தொடங்குகின்றன அல்லது அவை ஏன் முடிவடைகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் மனிதகுலத்திற்கு அறிவியலில் மட்டுமே நம்பிக்கை உள்ளது, அதை முழுவதுமாக நம்பியுள்ளது. மேலும், சிருஷ்டிகருடைய அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை அல்லது அவருடைய ராஜரீகத்தைஏற்றுக்கொள்ளவில்லை, ஆகையால் அவர்கள் ஒருபோதும் ஒரு பதிலையும் பெறமாட்டார்கள்.

தேவனுடைய ராஜரீகத்தின் கீழ், அவருடைய அதிகாரம் மற்றும் அவரது கட்டுப்பாட்டின் காரணமாக அனைத்துமே பிறந்து, ஜீவிக்கின்றன, மேலும் அழிந்துபோகின்றன. சில விஷயங்கள் வந்து பின் அமைதியாக செல்கின்றன, அவை எங்கிருந்து வந்தன என்பதை மனிதனால் சொல்லவோ அல்லது அவை பின்பற்றும் வழிமுறைகளைப் புரிந்துகொள்ளவோ முடியாது. அவை ஏன் வந்துசெல்கின்றன என்பதற்கான காரணங்களையும் புரிந்துகொள்ள இயலாது. எல்லாவற்றையும் கடந்து செல்வதற்காக வரும் அனைத்தையும் மனிதன் தன் கண்களால் பார்க்க முடிந்தாலும், காதுகளால் கேட்க முடிந்தாலும், அதை அவன் உடலால் அனுபவிக்க முடிந்தாலும்; இவை அனைத்தும் மனிதனின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், பல்வேறு நிகழ்வுகளின் ஒப்பீட்டளவில் உள்ள அசாதாரணத்தன்மை, வழக்கமான தன்மை அல்லது விசித்திரத்தன்மை என இவற்றை மனிதன் ஆழ்மனதில் புரிந்துகொண்டாலும், அவற்றின் பின்னால் என்ன இருக்கிறது என்பது பற்றி அவனுக்கு இன்னும் எதுவும் தெரியாது. இது சிருஷ்டிகருடைய சித்தமும் எண்ணமும் ஆகும். இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் பல கதைகள் உள்ளன, பல மறைக்கப்பட்ட உண்மைகள் உள்ளன. ஏனென்றால், சிருஷ்டிகருக்கு வெகுதூரத்தில் மனிதன் அலைந்து திரிவதாலும், சிருஷ்டிகருடைய அதிகாரம் அனைத்தையும் நிர்வகிக்கிறது என்ற சத்தியத்தை அவன் ஏற்றுக்கொள்ளாததாலும், சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் ராகரீகத்தின் கீழ்நடக்கும் அனைத்தையும் அவன் ஒருபோதும் அறிந்திருக்கவும் புரிந்து கொண்டிருக்கவும் மாட்டான். பெரும்பாலும், தேவனுடைய கட்டுப்பாடு மற்றும் ராஜரீகமானது மனித கற்பனை, மனித அறிவு, மனித புரிதல் மற்றும் மனித விஞ்ஞானம் என இவற்றின் எல்லைகளை மீறியதாக உள்ளது. இது சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. சிலர், “தேவனுடைய ராஜரீகத்தை நீ கண்டதில்லை என்பதால், அனைத்துமே அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நீ எவ்வாறு விசுவாசிக்கலாம்?” என்று கூறுவர். பார்த்தல் என்பது எப்போதும் விசுவாசித்தல் ஆகாது, எப்போதும் அறிந்துகொள்ளுதல் என்றும், புரிந்துகொள்ளுதல் என்றும் ஆகாது. எனவே, விசுவாசம் எங்கிருந்து வருகிறது? விசுவாசம் என்பது காரியங்களின் யதார்த்தம் மற்றும் மூலக்காரணங்களைப் பற்றி ஜனங்கள் கொண்டுள்ள எண்ணம் மற்றும் அனுபவத்தின் அளவீட்டிலிருந்தும் ஆழத்திலிருந்தும் வருகிறது என்று என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். தேவன் இருக்கிறார் என்று நீ விசுவாசித்தும், தேவனுடைய கட்டுப்பாட்டின் சத்தியத்தையும், எல்லாவற்றிலும் தேவனுடைய ராஜரீகத்தையும் நீ அடையாளம் காண முடியவில்லை என்றால், உணர முடியவில்லை என்றால், நீ தேவனுக்கு இந்த வகையான அதிகாரம் உண்டு என்பதையும் தேவனுடைய அதிகாரம் தனித்துவமானது என்பதையும் உன் இருதயத்தில் ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டாய். சிருஷ்டிகரை உன் கர்த்தர் என்றும் உன் தேவன் என்றும், உண்மையில் நீ ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டாய்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 121

மனிதகுலத்தின் விதியும் பிரபஞ்சத்தின் விதியும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்திலிருந்து பிரிக்க முடியாதவையாகும்

நீங்கள் அனைவரும் பெரியவர்கள். உங்களில் சிலர் நடுத்தர வயதுடையவர்கள்; சிலர் முதுமை அடைந்துள்ளீகள். நீங்கள் தேவனை விசுவாசியாத காலத்திலிருந்து அவரை விசுவாசிக்கும் வரையிலும், தேவனை விசுவாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் வரையிலும், அவருடைய கிரியை அனுபவிக்கும் வரையிலும், சென்றிருக்கிறீர்கள். தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது? மனித விதியைப் பற்றி எத்தகு நுண்ணறிவை நீங்கள் பெற்றுள்ளீர்கள்? ஜீவிதத்தில் தான் விரும்பும் அனைத்தையும் ஒருவர் அடையமுடியுமா? நீங்கள் இருந்த சில தசாப்தங்களில் எத்தனை விஷயங்களை நீங்கள் விரும்பிய வழியில் சாதிக்க முடிந்தது? நீங்கள் எதிர்பார்க்காத எத்தனை விஷயங்கள் நடந்துள்ளன? எத்தனை விஷயங்கள் இனிய ஆச்சரியங்களாக வருகின்றன? பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜனங்கள் இன்னும் எத்தனை விஷயங்களுக்காக காத்திருக்கிறார்கள்—இன்னது என்று அறியாமலேயே சரியான தருணத்திற்காக காத்திருக்கிறார்கள், பரலோகத்தின் சித்தத்திற்காக காத்திருக்கிறார்களா? எத்தனை விஷயங்கள் ஜனங்களை உதவியற்றவர்களாகவும், தடுக்கப்பட்டவர்களாகவும் உணரவைக்கின்றன? ஒவ்வொருவரும் தங்களது தலைவிதியைப் பற்றிய நம்பிக்கைகளால் நிறைந்தவர்கள். தங்களின் ஜீவிதத்தில் அனைத்துமே அவர்கள் விரும்பியபடி போகும் என்றும், உணவு அல்லது ஆடைகளை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், அவர்களுடைய செல்வம் பிரமிக்கதக்கதாக உயரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஏழ்மை மற்றும் நலிந்த, கஷ்டங்கள் நிறைந்த மற்றும் பேரழிவுகளால் சூழப்பட்ட ஒரு ஜீவிதத்தை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்த விஷயங்களை ஜனங்கள் முன்கூட்டியே பார்க்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. எனினும் சிலருக்கு, கடந்த காலம் என்பது அனுபவங்களின் தடுமாற்றமாக மட்டுமே உள்ளது; பரலோகத்தின் சித்தம் என்ன என்பதை அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை, அது என்னவென்றும் அவர்கள் கவலைப்படுவதில்லை. மிருகங்களைப் போலவே, நாள்தோறும் அவர்கள் சிந்தனையின்றி தங்களின் ஜீவிதத்தை ஜீவிக்கிறார்கள், மனிதகுலத்தின் தலைவிதியைப் பற்றியோ மனிதர்கள் ஏன் உயிருடன் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் எப்படி ஜீவிக்க வேண்டும் என்பது குறித்தோ அவர்கள் கவலைப்படுவதில்லை. அத்தகையவர்கள் மனிதவிதியைப் பற்றிய புரிதலை ஆதாயம் செய்யாமல் முதுமையை அடைகிறார்கள். அவர்கள் இறக்கும் தருணம்வரை அவர்களுக்கு ஜீவிதம் என்னவென்று தெரிவதில்லை. அத்தகையவர்கள் மரித்தவர்கள்; அவர்கள் ஆவி இல்லாத மனிதர்கள்; அவர்கள் மிருகங்கள். ஜனங்கள் சிருஷ்டிப்புகளின் நடுவே ஜீவித்து, உலகம் தங்களது பொருட்தேவைகளைப் பூர்த்திசெய்யும் பல வழிகளில் இருந்து இன்பத்தைப் பெற்றாலும், இந்தப் பொருள் உலகம் தொடர்ந்து முன்னேறுவதை அவர்கள் பார்த்தாலும், அவர்களுடைய சொந்த அனுபவங்களுக்கு—அவர்களுடைய இதயங்களும் ஆவிகளும் உணரும் மற்றும் அனுபவிக்கும் அனுபவங்கள்—பொருள் விஷயங்களுடன் எந்த தொடர்பும் இல்லை, மேலும், பொருள் எதுவும் அனுபவத்திற்கு ஈடாக இருக்க இயலாது. அனுபவம் என்பது ஒருவருடைய இருதயத்தில் இருக்கும் ஆழமான புரிதலாகும். இது மனித கண்ணால் பார்க்க முடியாத ஒன்றாகும். இந்தப் புரிதலானது மனிதனின் ஜீவிதம் மற்றும் மனித விதியை ஒருவர் புரிந்துகொள்வதிலும், ஒருவர் காணும் முறையிலும் உள்ளது. கண்ணுக்குத் தெரியாத ஒரு எஜமானர் அனைத்தையும் ஒழுங்குபடுத்துகிறார், மனிதனுக்காக அனைத்தையும் திட்டமிடுகிறார் என்ற புரிதலுக்கு பெரும்பாலும் இது வழிவகுக்கிறது. இத்தனைக்கும் மத்தியில், தலைவிதியின் ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களை ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; சிருஷ்டிகர் வகுத்துள்ள முன்னோக்கி செல்லும் பாதையை ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஒருவருடைய தலைவிதியின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது மறுக்கமுடியாத உண்மை. தலைவிதியைப் பற்றி ஒருவர் எத்தகு நுண்ணறிவு மற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்தாலும், இந்த உண்மையை யாராலும் மாற்ற முடியாது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் எங்கு செல்வீர்கள், நீங்கள் என்ன செய்வீர்கள், யாரை அல்லது எதனைச் சந்திப்பீர்கள், நீங்கள் என்ன சொல்வீர்கள், உங்களுக்கு என்ன நடக்கும் என இவற்றில் எதையேனும் கணிக்கமுடியுமா? இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஜனங்கள் முன்கூட்டியே அறிந்திருக்க முடியாது, இந்தச் சூழ்நிலைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கட்டுப்படுத்துவதும் முடியாத ஒன்றாகும். ஜீவிதத்தில், இந்த எதிர்பாராத நிகழ்வுகள் எல்லா நேரத்திலும் நடக்கும்; அவை அன்றாட நிகழ்வுகளாகும். இந்தத் தினசரி விசித்திரங்களும், அவை வெளிப்படும் விதங்களும் அல்லது அவை பின்பற்றும் முறைகளும், சீரற்ற முறையில் எதுவும் நடக்காது, ஒவ்வொரு நிகழ்வின் நடைமுறையும், ஒவ்வொரு நிகழ்வின் விரும்பத்தகாத தன்மையும் மனிதவிருப்பத்தால் மாற்ற முடியாது என்பதை மனிதகுலத்திற்கு தொடர்ந்து நினைவூட்டுகின்றன. ஒவ்வொரு நிகழ்வும் சிருஷ்டிகரிடமிருந்து மனிதகுலத்திற்கு ஒரு எச்சரிக்கையை அளிக்கிறது. மேலும் மனிதர்களால் தங்களது சொந்தத் தலைவிதிகளைக் கட்டுப்படுத்த முடியாது என்ற செய்தியையும் இது அனுப்புகிறது. மனிதகுலத்தின் முரட்டாட்டமான, பயனற்ற லட்சியத்துக்கும் மற்றும் தன் தலைவிதியை தனது கைகளில் எடுத்துக் கொள்ளும் விருப்பத்திற்கும் இந்த ஒவ்வொரு நிகழ்வும் மறுப்பு தெரிவிக்கிறது. இறுதியில், தங்களது தலைவிதியை நிர்வகிக்கிறவர் மற்றும் கட்டுப்படுத்துகிறவர் யார் என்று மீண்டும் மனதில்கொள்ள ஜனங்களை அவை கட்டாயப்படுத்தும் பொருட்டு மனிதகுலத்தின் முகத்தில் மீண்டும் மீண்டும் அறையப்படும் அடிகள் போன்றதாகும். அவர்களுடைய லட்சியங்களும் ஆசைகளும் மீண்டும் மீண்டும் முறியடிக்கப்பட்டு, சிதைந்துபோவதால், தலைவிதியானது தன்னிடம் வைத்திருக்கும் யதார்த்தத்தை, பரலோகத்தின் சித்தம் மற்றும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை மனிதர்கள் இயல்பாகவே அறியாமலேயே ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த அன்றாட விசித்திரங்கள் முதல் அனைத்து மனித ஜீவன்களின் தலைவிதிகள் வரை என சிருஷ்டிகருடைய திட்டங்களையும் அவருடைய ராஜரீகத்தையும் வெளிப்படுத்தாத எதுவும் இல்லை; “சிருஷ்டிகருடைய அதிகாரத்தை மீற முடியாது” என்ற செய்தியை அனுப்பாத எதுவும் இல்லை; “சிருஷ்டிகருடைய அதிகாரம் மிக உயர்ந்தது” என்ற இந்த நித்திய சத்தியத்தையும் தெரிவிக்காத எதுவும் இல்லை.

மனிதகுலத்தின் மற்றும் பிரபஞ்சத்தின் தலைவிதிகள் சிருஷ்டிகருடைய ராஜரீகத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கின்றன. அவை சிருஷ்டிகருடைய திட்டங்களுடன் பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளன; இறுதியில், அவை சிருஷ்டிகருடைய அதிகாரத்திலிருந்து பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. எல்லாவற்றின் விதிகளிலும், சிருஷ்டிகருடைய திட்டங்களையும் அவருடைய ராஜரீகமும் மனிதன் புரிந்துகொள்கிறான்; அனைத்தும் பிழைப்பதற்கான விதிகளிலும், சிருஷ்டிகருடைய ஆட்சியை மனிதன் உணர்கிறான்; அனைத்தின் தலைவிதிகளிலும், சிருஷ்டிகர் தனது ராஜரீகத்தையும் அவற்றின் மீதான கட்டுப்பாட்டையும் கையாளுகிற வழிகளையும் மனிதன் யூகிக்கிறான்; மேலும், சிருஷ்டிகருடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் அனைத்தும், பூமிக்குரிய விதிகள், சட்டங்கள் மற்றும் நிறுவனங்களையும், எல்லா வல்லமைகளையும், ஆற்றல்களையும் எவ்வாறு மீறுகின்றன என்பதை மனிதன் காண்பதற்காக, மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரிங்களின் ஜீவிதச் சுழற்சிகளிலும், மனிதனானவன் உண்மையிலேயே சிருஷ்டிகருடைய திட்டங்களையும், அனைத்துப் பொருட்களுக்கும் உயிரினங்களுக்குமான ஏற்பாடுகளையும் அனுபவிக்கிறான். இந்நிலையில், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை எந்தவொரு படைப்பாலும் மீற முடியாது என்பதையும், சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகளையும் விஷயங்களையும் எந்த சக்தியும் கைப்பற்றவோ மாற்றவோ முடியாது என்பதையும் மனிதகுலம் அறிந்துகொள்ள நிர்பந்திக்கப்படுகிறது. இந்தத் தெய்வீக விதிகள் மற்றும் ஆளுகைகளின் கீழ்தான் மனிதர்களும் மற்ற அனைத்து ஜீவன்களும் தலைமுறை தலைமுறையாக ஜீவிக்கிறார்கள், விருத்தியடைகிறார்கள். இது சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் உண்மையான வெளிப்பாடு அல்லவா? மெய்யான சட்டங்களின் வாயிலாக, சிருஷ்டிகருடைய ராஜரீகமும், எல்லா நிகழ்வுகளுக்கும் பொருளுக்குமான அவருடைய நியமனத்தையும் மனிதர்கள் பார்த்திருந்தாலும், பிரபஞ்சத்தின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தின் கொள்கையை எத்தனை மனிதர்களால் புரிந்துகொள்ள முடிகிறது? எத்தனை பேர் உண்மையிலேயே தங்களது சொந்தத் தலைவிதியின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தையும் ஏற்பாட்டையும் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், தங்களைச் சமர்ப்பிக்கவும் முடிகிறது? எல்லாவற்றின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை மெய்யாக விசுவாசித்து, சிருஷ்டிகர் மனிதர்களின் ஜீவிதத்தின் தலைவிதியைக் கட்டளையிடுகிறார் என்பதை உண்மையாக யார் விசுவாசிப்பார், அங்கீகரிப்பார்? மனிதனின் தலைவிதி சிருஷ்டிகருடைய உள்ளங்கையில் உள்ளது என்ற உண்மையை யார் உண்மையில் புரிந்துகொள்ள முடியும்? சிருஷ்டிகர் மனிதகுலத்தின் தலைவிதியை நிர்வகிக்கிறார் மற்றும் கட்டுப்படுத்துகிறார் என்ற சத்தியத்தை எதிர்கொள்ளும்போது சிருஷ்டிகருடைய ராஜரீகம் குறித்து மனிதகுலம் என்ன மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்? இதுதான் இந்த உண்மையை இப்போது எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு முடிவு ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 122

ஒரு மனித ஜீவிதத்தில் உள்ள ஆறு சந்தர்ப்பங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஒருவருடைய ஜீவிதத்தின் போக்கில், ஒவ்வொரு நபரும் தொடர்ச்சியான முக்கியமான சந்தர்ப்பங்களுக்கு வருகிறார்கள். ஜீவிதத்தில் ஒரு நபருடைய தலைவிதியை நிர்ணயிக்கும் மிக அடிப்படையான மற்றும் மிக முக்கியமான நிலைகள் இவை. இதில் பின்வருபவை, ஒவ்வொரு நபரும் தங்களது ஜீவிதத்தின் போக்கில் கடந்து செல்ல வேண்டிய இந்த வழித்தடங்களின் சுருக்கமான விளக்கங்களாகும்.

முதல் சந்தர்ப்பம்: பிறப்பு

ஒரு நபர் எங்கே பிறக்கிறார், அவர் எந்தக் குடும்பத்தில் பிறக்கிறார், அவரது பாலினம், தோற்றம் மற்றும் பிறந்த நேரம் என இவை ஒரு நபருடைய ஜீவிதத்தின் முதல் சந்தர்ப்பம் குறித்த விவரங்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தின் சில விவரங்களை யாராலும் தேர்வு செய்யமுடியாது. அவை அனைத்தும் சிருஷ்டிகரால் வெகுகாலங்களுக்கு முன்பே முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன. அவை எந்த வகையிலும் வெளிப்புறச் சூழலால் பாதிக்கப்படுவதில்லை. மேலும் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தக் காரணிகளும் இந்த உண்மைகளை மாற்ற முடியாது. அவை சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை. ஒரு நபர் பிறக்க வேண்டும் என்றால், அந்த நபருக்காகச் சிருஷ்டிகர் ஏற்பாடு செய்த தலைவிதியின் முதல்படியை அவர் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளார் என்று அர்த்தமாகும். இந்த விவரங்கள் அனைத்தையும் அவர் வெகுகாலங்களுக்கு முன்பே முன்கூட்டியே தீர்மானித்திருப்பதால், அவற்றில் எதையும் மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரு நபருடைய பிறப்பின் நிலைமைகளானது அவருடைய அடுத்தடுத்த தலைவிதியைப் பொருட்படுத்தாமல், முன்னரே தீர்மானிக்கப்படுகின்றன, அவை அப்படியே இருக்கின்றன; அவை ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியால் எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை, மேலும் ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியைப் பற்றிய சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அவை எந்த வகையிலும் பாதிப்பதில்லை.

1) சிருஷ்டிகருடைய திட்டங்களிலிருந்து ஒரு புதிய ஜீவிதம் பிறக்கிறது

முதல் சந்தர்ப்பத்தின் விவரங்களான ஒருவருடைய பிறந்த இடம், ஒருவருடைய குடும்பம், ஒருவருடைய பாலினம், ஒருவருடைய உடல் தோற்றம், ஒருவர் பிறந்த நேரம், என இவற்றுள், ஒரு நபர் எதனைத் தேர்வு செய்யக்கூடும்? வெளிப்படையாக, ஒருவருடைய பிறப்பு என்பது தானாக நடக்கும் நிகழ்வாகும். ஒருவர் விருப்பமின்றி, ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில், ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்துடன் பிறக்கிறார்; ஒருவர் விருப்பமின்றி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் உறுப்பினராகிறார், ஒரு குறிப்பிட்ட குடும்ப மரத்தின் கிளையாகிறார். இந்த முதல் ஜீவிதச் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு வேறு வழியில்லை, மாறாக சிருஷ்டிகருடைய திட்டங்களின்படி, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில், ஒரு குறிப்பிட்ட பாலினம் மற்றும் தோற்றத்துடன் நிர்ணயிக்கப்பட்ட சூழலில், மேலும் ஒரு நபருடைய ஜீவகாலத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளபடி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கிறார். இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஒரு நபர் என்ன செய்ய முடியும்? அனைத்திற்கும் மேலாக, ஒருவருடைய பிறப்பு தொடர்பான இந்த விவரங்களில், ஒன்றைக் குறித்தும் ஒருவர் தேர்வு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை. சிருஷ்டிகருடைய முன்னறிவிப்பு மற்றும் அவரது வழிகாட்டுதல் மட்டும் இல்லாவிட்டால், இந்த உலகில் புதிதாகப் பிறக்கும் ஒரு ஜீவனுக்கு எங்கு செல்ல வேண்டும், எங்கு தங்க வேண்டும், உறவுகள், சொந்தம், உண்மையான வீடு எனஎதுவும்தெரியாது. ஆனால் சிருஷ்டிகருடைய மிகச்சிறந்த ஏற்பாடுகள் காரணமாக, இந்த புதிய ஜீவிதத்தில் தங்குவதற்கு ஒரு இடம், பெற்றோர், தனக்குச் சொந்தமான இடம் மற்றும் உறவினர்கள் என இவற்றைப் பெற்றுள்ளது. எனவே ஜீவிதம் அதன் பயணத்தின் போக்கில் அமைந்திருக்கிறது. இந்தச் செயல்முறை முழுவதிலும், இந்தப் புதிய ஜீவிதத்தின் தோற்றம் சிருஷ்டிகருடைய திட்டங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் இந்த ஜீவன் வைத்திருக்கும் அனைத்தும் சிருஷ்டிகரால் வழங்கப்படுகிறது. தனக்கென எதுவுமில்லாமல் ஒரு விடுதலையான மிதக்கும் உடலில் இருக்கும் ஜீவன், படிப்படியாக ஒரு சதை மற்றும் இரத்தமாகப் புலப்பட்டு, உறுதியான மனிதனாக, தேவனுடைய சிருஷ்டிப்புகளில் ஒன்றாகவும், சிந்திக்கும், சுவாசிக்கும் ஒன்றாகவும், சூட்டையும் குளிரையும் உணர்கிற ஒன்றாகவும் மாறுகிறது; மேலும், பொருள் உலகில் சிருஷ்டிக்கப்பட்டவருடைய வழக்கமான அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்கக் கூடிய; படைக்கப்பட்ட ஒரு மனிதன் ஜீவிதத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்திற்கும் உட்படும் ஒன்றாக ஜீவன் மாறுகிறது. சிருஷ்டிகர் ஒரு நபருடைய பிறப்பை முன்கூட்டியே தீர்மானிப்பது என்றால் உயிர்வாழத் தேவையான அனைத்தையும் அவர் அந்த நபருக்கு வழங்குவார் என்று அர்த்தமாகும்; அதைப் போலவே, ஒரு நபர் பிறக்கிறார் என்றால் சிருஷ்டிகரிடமிருந்து உயிர்வாழத் தேவையான அனைத்தையும் அவர்கள் பெறுவார்கள் என்றும், அதுமுதல், அவர்கள் சிருஷ்டிகரால் வழங்கப்பட்ட மற்றும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்கு உட்பட்ட மற்றொரு வடிவத்தில் ஜீவிப்பார்கள் என்றும் அர்த்தமாகும்.

2) வெவ்வேறு மனிதர்கள் ஏன் வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறக்கின்றார்கள்

மனிதர்கள் மறுபிறவி எடுத்தால், ஒரு கற்பனை குடும்பத்தில் தோன்ற வேண்டும் என்று பெரும்பாலும் கற்பனை செய்ய விரும்புகிறார்கள். பெண்களாக இருந்தால், அவர்கள் ஸ்னோ ஒயிட்போல தோற்றமளிக்கவும், எல்லோராலும் நேசிக்கப்படவும் விரும்புவார்கள். ஆண்களாக இருந்தால், அவர்கள் இளவரசர் சார்மிங்போல, எதையும் செய்யாமலே, உலகம் முழுவதையும் தங்களது கையின் அசைவில் ஆட்சி செய்ய விரும்புவார்கள். தங்களது பிறப்பைப் பற்றி பலர் மாயையான காரியங்களை உருவாக்குகிறார்கள். மேலும் அதில் மிகுந்த அதிருப்தி அடைந்து, தங்களது குடும்பம், அவர்களுடைய தோற்றம், பாலினம், அவர்கள் பிறந்த நேரம் போன்றவற்றின் மீது கூடக் கோபப்படுகிறார்கள். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் ஏன் பிறக்கிறார்கள் அல்லது ஏன் ஒரு குறிப்பிட்டத் தோரணையில் உள்ளார்கள் என்பதை ஜனங்கள் ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் எங்கு பிறந்தார்கள் அல்லது எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் பல்வேறு செயல்களைச் செய்யவேண்டும் என்பதும் சிருஷ்டிகருடைய ஆளுகையில் வெவ்வேறு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. மேலும் இந்த நோக்கம் ஒருபோதும் மாறாது. சிருஷ்டிகருடைய பார்வையில், ஒருவர் பிறந்த இடம், ஒருவருடைய பாலினம் மற்றும் ஒருவருடைய உடல் தோற்றம் அனைத்தும் தற்காலிகமான விஷயங்களாகும். அவை முழு மனிதகுலத்தின் தனது சர்வவல்லமையின் ஒவ்வொரு கட்டத்திலும் கொண்டுள்ள சிறிய குறிப்புகளும், அடையாளங்களும் ஆகும். ஒரு நபருடைய உண்மையான இலக்கு மற்றும் விளைவு எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்திலும் அவர்களுடைய பிறப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக அவர்கள் தங்களது ஜீவிதத்தில் நிறைவேற்றும் பணி மற்றும் அவரது ஆளுகைத் திட்டம் முடிந்ததும் சிருஷ்டிகர் அருளும் தீர்ப்பால் தீர்மானிக்கப்படுகிறது.

ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் இருப்பதாகவும், எந்தவொரு விளைவும் காரணமின்றி இருக்காது என்றும் கூறப்படுகிறது. எனவே, ஒருவருடைய பிறப்பு ஒருவருடைய தற்போதைய ஜீவிதம் மற்றும் ஒருவருடைய முந்தைய ஜீவிதம் ஆகியவற்றுடன் நிச்சயமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருடைய மரணம் அவர்களுடைய தற்போதைய ஆயுட்காலத்தை முடிக்குமானால், ஒரு நபருடைய பிறப்பு ஒரு புதிய சுழற்சியின் தொடக்கமாக இருக்கிறது. ஒரு பழைய சுழற்சி ஒரு நபருடைய முந்தைய ஜீவிதத்தைப் பிரதிபலிக்கிறது என்றால், புதிய சுழற்சி இயற்கையாகவே அவர்களுடைய தற்போதைய ஜீவிதத்தைக் குறிக்கிறது. ஒருவருடைய பிறப்பு ஒருவருடைய கடந்த கால ஜீவிதத்துடனும், ஒருவருடைய தற்போதைய ஜீவிதத்துடனும் இணைக்கப்பட்டுள்ளதால், ஒருவருடைய பிறப்புடன் அவருடைய கடந்த கால இருப்பிடம், குடும்பம், பாலினம், தோற்றம் மற்றும் இது போன்ற பிற காரணிகள் அனைத்தும் அவருடைய தற்போதைய ஜீவிதத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றன. இதன்பொருள், ஒரு நபருடைய பிறப்பின் காரணிகள் ஒருவருடைய முந்தைய ஜீவிதத்தால் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், தற்போதைய ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியால் தீர்மானிக்கப்படுகின்றது. இது மனிதர்கள் பிறக்கும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு காரணமாகிறது: சிலர் ஏழைக்குடும்பங்களில் பிறக்கிறார்கள், மற்றவர்கள் பணக்காரக் குடும்பங்களில் பிறக்கிறார்கள். சிலர் சாதாரண முன்னோர்களைப் பெற்றுள்ளனர், மற்றவர்கள் சிறப்பான பரம்பரைகளைக் கொண்டுள்ளனர். சிலர் தெற்கிலும், மற்றவர்கள் வடக்கிலும் பிறக்கிறார்கள். சிலர் பாலைவனத்திலும், மற்றவர்கள் பசுமையான நிலங்களிலும் பிறக்கிறார்கள். சிலருடைய பிறப்புகளில் சந்தோஷம், நகைப்பு மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளன; மற்றவர்கள் கண்ணீர், பேரழிவு மற்றும் துயரத்தை கொண்டு வருகிறார்கள். சிலர் பொக்கிஷமாகப் பிறக்கிறார்கள், மற்றவர்கள் களைகளைப் போல ஒதுக்கி வைக்கப்படுவார்கள். சிலர் சிறந்த அம்சங்களுடன் பிறக்கிறார்கள், மற்றவர்கள் வக்கிரமானவர்களாகப் பிறக்கிறார்கள். சிலர் பார்ப்பதற்கு அழகானவர்கள், மற்றவர்கள் அசிங்கமானவர்கள். சிலர் நள்ளிரவில் பிறக்கிறார்கள், மற்றவர்கள் மதிய வெயிலின் அடியில் பிறக்கிறார்கள். … எல்லா வகையான ஜனங்களின் பிறப்புகளும் சிருஷ்டிகரால் அவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ள தலைவிதிகளால் தீர்மானிக்கப்படுகின்றன; அவர்களுடைய பிறப்புகள் தற்போதைய ஜீவிதத்தில் அவர்களுடைய தலைவிதியையும், அவர்கள் செய்யப்போகும் செயல்களையும், அவர்கள் நிறைவேற்றும் பணிகளையும் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்கு உட்பட்டவை, அவரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை; முன்னரே தீர்மானிக்கப்பட்ட இந்த இடத்திலிருந்து யாராலும் தப்ப முடியாது, யாராலும் தங்களுடைய பிறப்பை மாற்ற முடியாது, தங்களுடைய தலைவிதியை யாரும் தேர்வு செய்ய முடியாது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 123

ஒரு மனித ஜீவிதத்தில் உள்ள ஆறு சந்தர்ப்பங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

இரண்டாவது சந்தர்ப்பம்: வளர்ச்சி

மனிதர்கள் எந்த வகையான குடும்பத்தில் பிறந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அவர்கள் வெவ்வேறு வீட்டுச் சூழல்களில் வளர்ந்து தங்கள் பெற்றோரிடமிருந்து வெவ்வேறு படிப்பினைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். இந்த காரணிகளே ஒரு நபருடைய இளைஞராகும் நிலைமைகளைத் தீர்மானிக்கின்றன. மேலும் வளர்ச்சி ஒரு நபருடைய ஜீவிதத்தின் இரண்டாவது முக்கியமான சந்தர்ப்பத்தைக் குறிக்கிறது. இந்த நேரத்தில் ஜனங்களுக்கும் வேறு வழியில்லை என்று சொல்லத் தேவையில்லை. இதுவும் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றாகும்.

1) ஒருவர் வளரும் சூழ்நிலைகள் சிருஷ்டிகரால் திட்டமிடப்படுகின்றன

ஒரு நபர் வளரும்போது ஜனங்கள், நிகழ்வுகள் அல்லது அவர்களை ஒழுக்கப்படுத்திய மற்றும் ஊக்குவித்த விஷயங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஒருவர் பெறும் அறிவையோ அல்லது திறன்களையோ, ஒருவர் என்ன பழக்கத்தை உருவாக்குகிறார் என்பதையோ அவர் தேர்வு செய்யமுடியாது. ஒருவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் யார் என்பதில் அவர் எந்த முடிவும் செய்ய முடியாது. ஒருவர் எந்தவகையான சூழலில் வளர்கிறார்; மற்றவர்களுடனான உறவுகள், நிகழ்வுகள் மற்றும் ஒருவருடைய சூழலில் உள்ள விஷயங்கள் மற்றும் அவை ஒருவருடைய வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பது போன்ற அனைத்தும் ஒருவருடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை ஆகும். பின்னர், இந்த விஷயங்களை யார் தீர்மானிக்கிறார்கள்? அவற்றை யார் ஏற்பாடு செய்கிறார்கள்? இந்த விஷயத்தில் ஜனங்களுக்கு வேறு வழியில்லை என்பதால், அவர்களால் இந்த விஷயங்களைத் தீர்மானிக்க முடியாது என்பதால், அவை வெளிப்படையாக இயற்கையாகவே வடிவம் பெறாததால், ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்கள் என இவற்றின் உருவாக்கம் சிருஷ்டிகரின் கரங்களில் உள்ளது என்பதை வெளிப்படையாக் காட்டுகிறது. நிச்சயமாக, ஒவ்வொரு நபருடைய பிறப்பின் குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் சிருஷ்டிகர் ஏற்பாடு செய்வது போலவே, ஒருவர் வளரும் குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் அவர் ஏற்பாடு செய்கிறார். ஒரு நபருடைய பிறப்பானது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அந்த நபருடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் நிச்சயமாகவே அவற்றை பாதிக்கும். உதாரணமாக, சிலர் ஏழைக் குடும்பங்களில் பிறக்கிறார்கள், ஆனால் செல்வத்தால் சூழப்படுகிறார்கள்; மற்றவர்கள் வசதியான குடும்பங்களில் பிறக்கிறார்கள், ஆனால் அவர்களது குடும்பத்தின் செல்வம் குறைய காரணமாகிறார்கள், இதனால் அவர்கள் ஏழ்மைச் சூழலில் வளர்கிறார்கள். யாருடைய பிறப்பும் ஒரு நிலையான விதியால் நிர்வகிக்கப்படுவதில்லை, தவிர்க்க முடியாத, நிலையான சூழ்நிலைகளின்கீழ் யாரும் வளர்வதும் இல்லை. இவை ஒருநபர் கற்பனை செய்யக்கூடிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்கள் அல்ல. அவை ஒருவருடைய தலைவிதியின் விளைவுகளாகும். மேலும் அவை ஒருவருடைய தலைவிதியால் தீர்மானிக்கப்படுகின்றன. நிச்சயமாக, அவற்றின் மூலம் யாதெனில், ஒவ்வொரு நபருக்கும் சிருஷ்டிகர் முன்னரே தீர்மானித்துள்ள விதியால் இந்த விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அந்த நபருடைய தலைவிதி மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தாலும், சிருஷ்டிகருடைய திட்டங்களாலும் அவை தீர்மானிக்கப்படுகின்றன.

2) ஜனங்கள் வளரும் பல்வேறு சூழ்நிலைகள் வெவ்வேறு பாத்திரங்களை உருவாக்குகின்றன

ஒரு நபருடைய பிறப்பின் சூழ்நிலைகள், ஒரு அடிப்படை மட்டத்தில் அவர்கள் வளரும் சூழல் மற்றும் சூழ்நிலைகளை உருவாக்குகிறது. மேலும், ஒரு நபரின் வளரும் சூழ்நிலைகள் இதைப்போலவே அவர்களுடைய பிறப்பின் சூழ்நிலைகளின் விளைவாக இருக்கிறது. இந்த நேரத்தில், ஒருவர் மொழியைக் கற்கத் தொடங்குகிறார், ஒருவருடைய மனம் பல புதிய விஷயங்களைச் சந்திக்கவும் உள்வாங்கவும் தொடங்குகிறது. இந்தச் செயல்முறையின் போது ஒருவர் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். ஒருவர் தன் காதுகளால் கேட்கும் விஷயங்கள், கண்களால் பார்க்கும் மற்றும் ஒருவருடைய மனதில் கொள்ளும் விஷயங்கள் படிப்படியாக ஒருவருடைய மனதுக்குள் உள்ள உலகத்தை நிரப்பி உயிரூட்டுகின்றன. ஒருவர் தொடர்பு கொள்ளும் நபர்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்கள்; ஒருவர் கற்றுக் கொள்ளும் பகுத்தறிவு, அறிவு மற்றும் திறன்கள்; மற்றும் ஒருவருக்குப் புகட்டப்பட்டு அல்லது கற்பிக்கப்பட்டு ஒருவரை வழிநடத்தும் சிந்தனை முறைகள், என இவை அனைத்தும் ஜீவிதத்தில் ஒரு நபருடைய தலைவிதியை வழிநடத்தும் மற்றும் தாக்கத்தை ஏற்படத்தும். ஒருவர் வளரும்போது அவர் கற்றுக்கொள்ளும் மொழி மற்றும் அவருடைய சிந்தனை முறையானது அவர் தனது இளமையைச் செலவழித்த சூழலில் இருந்து பிரிக்க முடியாதது. மேலும் அந்தச் சூழலில் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள் மற்றும் பிற நபர்கள், நிகழ்வுகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் ஆகியவை உள்ளன. எனவே, ஒரு நபருடைய வளர்ச்சியின் போக்கு, அவர் வளரும் சூழலால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும், அவர் வளரும் காலகட்டத்தில் அவர் தொடர்புகொள்ளும் நபர்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களையும் சார்ந்துள்ளது. ஒரு நபர் வளரும் நிலைமைகள் நீண்ட காலத்திற்கு முன்பே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருப்பதால், இந்த செயல்பாட்டின் போது அவர் வாழும் சூழலும் இயற்கையாகவே, முன்னரே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது. இது ஒரு நபருடைய தேர்வுகள் மற்றும் விருப்பங்களால் தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் சிருஷ்டிகருடைய திட்டங்களின்படி, சிருஷ்டிகருடைய கவனமான ஏற்பாடுகள் மற்றும் ஜீவிதத்தில் ஒருநபருடைய தலைவிதியைப் பற்றிய அவரது ராஜரீகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, வளர்ந்து வரும் காலத்தில் எந்தவொரு நபரும் சந்திக்கும் வேறு நபர்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ளும் விஷயங்கள் அனைத்தும் இயற்கையாகவே சிருஷ்டிகருடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வகையான சிக்கலான தொடர்புகளை ஜனங்கள் முன்கூட்டியே பார்க்க முடியாது, அவற்றைக் கட்டுப்படுத்தவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாது. ஒரு நபர் வளரும் சூழலில் பலவிதமான விஷயங்களும் ஜனங்களும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர், மேலும் எந்தவொரு மனிதனும் அத்தகைய பரந்த இணைப்புகளை ஏற்பாடுசெய்யவோ அல்லது திட்டமிடவோ முடியாது. சிருஷ்டிகரைத் தவிர வேறு எந்த நபரோ அல்லது காரியமோ எல்லா மனிதர்களின் தோற்றத்தையும், விஷயங்களையும், நிகழ்வுகளையும் கட்டுப்படுத்த முடியாது. அவற்றைப் நிர்வகிக்கவோ அல்லது மறைந்து போவதைக் கட்டுப்படுத்தவோ முடியாது. மேலும், இது ஒரு பரந்த இணைப்பு மட்டுமே. இது சிருஷ்டிகர் முன்னரே தீர்மானித்தது போல, ஒரு நபருடைய வளர்ச்சியை வடிவமைத்து ஜனங்கள் வளரும் பல்வேறு சூழல்களை உருவாக்குகிறது. சிருஷ்டிகருடைய ஆளுகைப் பணிக்குத் தேவையான பல்வேறு பாத்திரங்களை உருவாக்குவதும், ஜனங்கள் தங்களது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற உறுதியான, வலுவான அடித்தளங்களை அமைப்பதும் இதுதான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 124

ஒரு மனித ஜீவிதத்தில் உள்ள ஆறு சந்தர்ப்பங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

மூன்றாவது சந்தர்ப்பம்: சுதந்திரம்

ஒரு நபர் குழந்தைப் பருவத்திலிருந்தும் இளமைப் பருவத்திலிருந்தும் கடந்து, படிப்படியாகவும் தவிர்க்க முடியாமலும் முதிர்ச்சி அடைந்த பிறகு, அடுத்த கட்டம் என்னவென்றால் அவர்கள் இளமையிலிருந்து முற்றிலுமாகப் பிரிந்து, பெற்றோரிடமிருந்து விடைபெற்று, சுதந்திரமான வயது வந்தவர்களாக முன்னேறும் பாதையை எதிர்கொள்வதாகும். இந்தக் கட்டத்தில், வயது வந்த ஒருவராக எதிர்கொள்ளவேண்டிய அனைத்து நபர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும், விரைவில் தங்களை முன்வைக்கும் அவர்களுடைய தலைவிதியின் அனைத்துப் பகுதிகளையும் எதிர்கொள்ள வேண்டும். ஒரு நபர் கடந்து செல்ல வேண்டிய மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

1) சுதந்திரமான பிறகு, ஒரு நபர் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அனுபவிக்கத் தொடங்குகிறார்

ஒரு நபருடைய பிறப்பு மற்றும் வளர்ச்சி ஒருவருடைய ஜீவிதத்தின் பயணத்திற்கான “ஆயத்தக் காலம்” எனவும், ஒரு நபருடைய தலைவிதியின் மூலைக்கல்லாகவும் அமைந்தால், ஒருவருடைய சுதந்திரம் என்பது ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதிக்கான வெளிப்படையான பேச்சாகும். ஒரு நபருடைய பிறப்பு மற்றும் வளர்ச்சி என்பது அவர்கள் ஜீவிதத்தில் அவர்களுடைய தலைவிதிக்குத் தயாராகும் வகையில் சேர்த்த செல்வமாக இருந்தால், அந்த நபருடைய சுதந்திரம் என்பது அவர்கள் அந்தச் செல்வத்தைச் செலவழிப்பதில் அல்லது சேர்க்கத் தொடங்குவதில் இருக்கிறது. ஒருவர் தன் பெற்றோரிடமிருந்து வெளியேறி, சுதந்திரமாக மாறும்போது, அவர் எதிர்கொள்ளும் சமூக நிலைமைகள் மற்றும் அவருக்குக் கிடைக்கக்கூடிய வேலை மற்றும் தொழில் ஆகிய இரண்டும் விதியால் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும், இவற்றுக்கும் பெற்றோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிலர் கல்லூரியில் ஒரு நல்ல முக்கிய பாடத்தை தேர்ந்தெடுத்து, பட்டப்படிப்பு முடிந்தபின் திருப்திகரமான வேலையைத் தேடி, தங்களது ஜீவிதத்தின் பயணத்தில் வெற்றிகரமான முதல் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். சிலர் பலவிதமான திறமைகளைக் கற்றுக் கொண்டு, தேர்ச்சி பெறுகிறார்கள், ஆனால் அவர்களுக்குப் பொருத்தமான ஒரு வேலையை ஒருபோதும் காண மாட்டார்கள் அல்லது அவர்களுடைய நிலையை ஒருபோதும் கண்டுபிடிக்க மாட்டார்கள், தொழிலையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்; அவர்களுடைய ஜீவிதம் பயணத்தின் தொடக்கத்தில், அவர்கள் ஒவ்வொரு திருப்பத்திலும் தாங்கள் தடுக்கப்படுவதைக் காண்கிறார்கள், கஷ்டங்களால் சூழப்படுகிறார்கள், அவர்களுடைய வாய்ப்புகள் மோசமானவை, அவர்களுடைய ஜீவிதம் நிச்சயமற்றது. சிலர் தங்களது படிப்புக்கு விடாமுயற்சியுடன் விண்ணப்பிக்கிறார்கள், ஆனால் உயர்கல்வியைப் பெறுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நூலளவில் இழக்கிறார்கள்; அவர்கள் ஒருபோதும் வெற்றியைப் பெறுவதற்கு விதிக்கப்படுவதில்லை என்பது போல தோன்றுகிறது, அவர்களுடைய ஜீவிதப் பயணத்தில் அவர்களுடைய முதல் வாஞ்சையே மெல்லிய காற்றில் கரைந்துவிடுகிறது. முன்னோக்கிச் செல்லும் பாதை மென்மையானதா அல்லது பாறை போன்றதா என்பதை அறியாமல், மனித விதி எவ்வளவு மாற்றங்கள் நிறைந்திருக்கிறது என்பதை அவர்கள் முதன்முறையாக உணர்கிறார்கள். எனவே, ஜீவிதத்தை எதிர்பார்ப்பு மற்றும் அச்சம் நிறைந்ததாக கருதுகின்றனர். சிலர் நன்கு படித்தவர்களாக இல்லாவிட்டாலும், புத்தகங்களை எழுதி, ஒரு அளவிலான புகழைப் பெறுகிறார்கள்; சிலர் கிட்டத்தட்ட முற்றிலும் கல்வியறிவற்றவர்களாக இருந்தாலும், வியாபாரத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள், இதனால் தங்களைத் தாங்களே ஆதரித்துக் கொள்கிறார்கள்…. ஒருவர் எந்தத் தொழிலைத் தேர்வு செய்கிறார், ஒருவர் எவ்வாறு ஒரு ஜீவிதத்தை உருவாக்குகிறார்: இந்த விஷயங்களில் ஒரு நல்ல தேர்வு செய்கிறார்களா அல்லது மோசமான தேர்வு செய்கிறார்களா என்பதில் ஜனங்களுக்கு ஏதேனும் கட்டுப்பாடு இருக்கிறதா? இந்த விஷயங்கள் ஜனங்களின் விருப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் பொருந்துமா? பெரும்பாலான ஜனங்கள் பின்வரும் விருப்பங்களைக் கொண்டுள்ளனர்: குறைவாக வேலை செய்து அதிகம் சம்பாதித்தல், வெயிலிலும் மழையிலும் உழைக்காதிருத்தல், நன்றாக ஆடை அணிதல், எல்லா இடங்களிலும் பிரகாசித்தல், ஜொலித்தல், மற்றவர்களுக்கு மேலே உயர்ந்திருத்தல், மற்றும் தங்களின் முன்னோர்களுக்கு மரியாதை அளித்தல் ஆகியன ஆகும். ஜனங்கள் பரிபூரணத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது ஜீவிதப் பயணத்தில் முதல் படிகளை வைக்கும்போது, மனித விதி எவ்வளவு பூரணமற்றது என்பதை அவர்கள் படிப்படியாக உணர்கிறார்கள். மேலும், ஒருவரது தைரியமான திட்டங்களை அவர் செய்ய முடியும் என்றாலும், துணிச்சலான கற்பனைகளை ஒருவர் கொண்டிருக்கலாம் என்றாலும், யாருக்கும் தங்களது சொந்தக் கனவுகளை நனவாக்கும் திறனும் ஆற்றலும் இல்லை மற்றும் யாரும் தங்களது சொந்த எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை என்று முதல்முறையாக அவர்கள் மெய்யாகப் புரிந்து கொள்கிறார்கள். ஒருவருடைய கனவுகளுக்கும் ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தங்களுக்கும் இடையில் எப்போதுமே சிறிது தூரம் இருக்கும்; விஷயங்கள் ஒருபோதும் அவர்கள் விரும்புவதைப் போலவே இருப்பதில்லை. அத்தகைய யதார்த்தங்களை எதிர்கொள்வதால், ஜனங்கள் ஒருபோதும் திருப்தியையும் மனநிறைவையும் அடைய முடியாது. சிலர் கற்பனை செய்யக்கூடிய எந்தத் தூரத்திற்கும் செல்வார்கள், பெரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காகவும் எதிர்காலத்துக்காகவும் தங்களது சொந்த விதியை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் பெரும் தியாகங்களைச் செய்வார்கள். ஆனால் இறுதியில், அவர்கள் தங்களது கடின உழைப்பின் மூலம் தங்களது கனவுகளையும் ஆசைகளையும் உணர முடிந்தாலும், அவர்களால் ஒருபோதும் தங்களது தலைவிதியை மாற்றமுடியாது. அவர்கள் எவ்வளவு வெறித்தனமாக முயற்சி செய்தாலும், அவர்களுக்கு விதி விதித்ததை அவர்கள் ஒருபோதும் கடந்து போக முடியாது. திறமை, புத்திசாலித்தனம் மற்றும் மன உறுதி ஆகியவற்றின் காரணமாக ஜனங்களுக்கு இடையே வேறுபாடுகள் இருப்பினும், ஜனங்கள் அனைவரும் விதியின் முன் சமமானவர்கள். விதியானது பெரியவை மற்றும் சிறியவை, உயர்ந்தவை மற்றும் தாழ்ந்தவை, பெருமைக்குரியவை மற்றும் சராசரியானவை என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஒருவர் என்ன தொழிலைச் செய்கிறார், ஒருவர் தன் ஜீவிதத்துக்காக என்ன செய்கிறார், ஜீவிதத்தில் ஒருவர் எவ்வளவு செல்வத்தைச் சேகரிக்கிறார் என்பது ஒருவருடைய பெற்றோரால், ஒருவருடைய திறமைகளால், ஒருவருடைய முயற்சிகளால் அல்லது ஒருவருடைய லட்சியங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால் சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது.

2) தன் பெற்றோரை விட்டுவிலகி, ஜீவிதத்தின் அரங்கில் தன் பாத்திரத்தை வகிக்க ஆர்வத்துடன் தொடங்குதல்

ஒருவர் முதிர்ச்சி அடையும்போது, ஒருவர் தன் பெற்றோரை விட்டுவிலகிச் சொந்தமாக வேலை செய்ய முடியும். இந்தக் கட்டத்தில் தான் ஒருவர் உண்மையிலேயே அவருடைய சொந்தப் பாத்திரத்தை வகிக்கத் தொடங்குகிறார், ஜீவிதத்தில் மூடுபனி விலகி ஒருவருடைய பணி படிப்படியாகத் தெளிவாகிறது. பெயரளவில், ஒருவர் இன்னமும் அவருடைய பெற்றோருடன் நெருக்கமாக இணைந்திருக்கிறார், எனினும் அவருடைய பணி மற்றும் ஜீவிதத்தில் அவர் வகிக்கும் பங்கிற்கும், அவருடைய தாய் தந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், அவர் படிப்படியாகச் சுதந்திரமாகும் போது, முக்கியமாக இந்த நெருக்கமான பிணைப்பு உடைகிறது. ஒரு உயிரியல் கண்ணோட்டத்தில், மனிதர்கள் இன்னும் ஆழ்மனதின் நிலைகளில் தங்களது பெற்றோரைச் சார்ந்திருக்காமல் இருக்க முடிவதில்லை. ஆனால் சொந்த உணர்ச்சிகளின் அடிப்படையில் இல்லாமல் மெய்மைகளை ஆராய்ந்து பேசினால், அவர்கள் முழுமையாக வளர்ந்தவுடன், அவர்கள் பெற்றோரிடமிருந்து முற்றிலும் தனித்தனியான ஜீவிதத்தைப் பெறுகிறார்கள். மேலும், அவர்கள் சுயாதீனமாக எடுத்துக் கொள்ளும் பாத்திரங்களை வகிப்பார்கள். பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பைத் தவிர, குழந்தைகளின் ஜீவிதத்தில் பெற்றோருடைய பொறுப்பு வெறுமனே அவர்கள் வளர்வதற்காக அவர்களுக்கு முறையான சூழலை வழங்குவதாகும். ஏனென்றால், சிருஷ்டிகருடைய முன்னறிவிப்பைத் தவிர வேறொன்றும் ஒரு நபருடைய தலைவிதியைப் பாதிக்காது. ஒரு நபருக்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கும் என்பதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது; இது முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது மற்றும் ஒருவருடைய பெற்றோரால் கூட ஒருவருடைய தலைவிதியை மாற்ற முடியாது. விதியைப் பொறுத்தவரை, எல்லோரும் சுதந்திரமானவர்கள், ஒவ்வொருவருக்கும் அவரவர் விதி உண்டு. எனவே, எவருடைய பெற்றோரும் ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியைத் தடுக்கவோ அல்லது ஜீவிதத்தில் ஒருவர் வகிக்கும் பாத்திரத்தில் சிறிதளவு செல்வாக்கை செலுத்தவோ முடியாது. ஒருவர் பிறக்க வேண்டிய குடும்பம் மற்றும் ஒருவர் வளரும் சூழல் ஜீவிதத்தில் ஒருவருடைய பணியை நிறைவேற்றுவதற்கான முன் நிபந்தனைகளைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறலாம். ஜீவிதத்தில் ஒரு நபருடைய தலைவிதியையோ அல்லது அந்த நபர் தன் பணியை நிறைவேற்றும் விதத்தையோ அவை எந்த வகையிலும் தீர்மானிக்கவில்லை. எனவே, ஒருவரது ஜீவிதத்தில் அவரது பணியை நிறைவேற்ற எந்தப் பெற்றோரும் உதவ முடியாது. அதைப் போலவே, ஜீவிதத்தில் ஒருவருடைய பங்கை அவர் நிறைவேற்ற அவருடைய உறவினர்களும் உதவ முடியாது. ஒருவருடைய பணியை ஒருவர் எவ்வாறு நிறைவேற்றுகிறார், எந்த வகையான ஜீவிதச் சூழலில் ஒருவர் அவருடைய பங்கைச் செய்கிறார் என்பது அவருடைய ஜீவிதத்தில் ஏற்படும் தலைவிதியால் முழுமையாகத் தீர்மானிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நபருடைய பணியை வேறு எந்தப் புற நிலைமைகளும் பாதிக்காது. இது சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. எல்லா ஜனங்களும் தாங்கள் வளரும் குறிப்பிட்ட சூழலில் முதிர்ச்சியடைகிறார்கள்; பின்னர் படிப்படியாக, படிப்படியாக, அவர்கள் ஜீவிதத்தில் தங்களது சொந்தப் பாதைகளை அமைத்து, சிருஷ்டிகரால் அவர்களுக்காக திட்டமிடப்பட்ட விதிகளை நிறைவேற்றுகிறார்கள். இயற்கையாகவே, விருப்பமின்றி, மனிதகுலத்தின் பரந்த கடலுக்குள் அவர்கள் நுழைந்து ஜீவிதத்தில் தங்களது சொந்தப் பதவிகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அங்கு சிருஷ்டிகருடைய முன்னறிவிப்புக்காகவும், அவருடைய ராஜரீகத்தின் பொருட்டும், சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களாக அவர்கள் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றத் தொடங்குகிறார்கள்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 125

ஒரு மனித ஜீவிதத்தில் உள்ள ஆறு சந்தர்ப்பங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

நான்காவது சந்தர்ப்பம்: திருமணம்

ஒருவர் வயது வந்த பின்பு, தன் பெற்றோரிடமிருந்தும், தான் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்தும் அதிகத் தொலைவிற்குச் செல்கிறார், அதற்குப் பதிலாக ஜீவிதத்தில் ஒரு திசையைத் தேடத் தொடங்குகிறார் மற்றும் தன் பெற்றோரிடமிருந்து வேறுபட்ட பாணியில் தன் சொந்த ஜீவித இலக்குகளைப் பின்தொடரவும் தொடங்குகிறார். இந்த நேரத்தில், ஒருவருக்கு அவருடைய பெற்றோர் இனி தேவைப்படுவதில்லை. ஆனால், அவருடைய ஜீவிதத்தைச் செலவிட அவருக்கு ஒரு கூட்டாளர் தேவைப்படுகிறார், அதாவது அவருடைய தலைவிதியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள ஒரு மனிதர், அதாவது ஒரு துணை தேவைப்படுகிறது. எனவே, சுதந்திரமானதிற்குப் பிறகு ஜீவிதத்தில் நிகழும் முதல் பெரிய நிகழ்வு திருமணம் ஆகும். இது கடந்து செல்ல வேண்டிய நான்காவது சந்தர்ப்பம் ஆகும்.

1) தனி மனித விருப்பம் திருமணத்திற்குள் பிரவேசிக்காது

எந்தவொரு நபருடைய ஜீவிதத்திலும் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்; இது ஒருவர் பல்வேறு வகையான பொறுப்புகளை ஏற்கவும், படிப்படியாக பல்வேறு வகையான பணிகளை முடிக்கவும் தொடங்கும் நேரம் ஆகும். திருமணத்தை அனுபவிப்பதற்கு முன்பே, அதைக் குறித்து ஜனங்கள் பல மாயைகளை மனதில் வைத்திருக்கிறார்கள். இந்த மாயைகள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. பெண்கள் தங்களது மறுபாதி இளவரசர் சார்மிங்காக இருப்பார்கள் என்று கற்பனை செய்கிறார்கள், ஆண்கள் ஸ்னோ ஒயிட்டை திருமணம் செய்து கொள்வார்கள் என்று கற்பனை செய்கிறார்கள். இந்தக் கற்பனைகளானது ஒவ்வொரு நபருக்கும் திருமணத்தைப் பற்றிய சில தேவைகளும், அவர்களுக்கே உரித்தான கோரிக்கைகளும் தரநிலைகளும் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. இந்தத் தீய யுகத்தில், ஜனங்கள், திருமணத்தைப் பற்றிய தவறான செய்திகளால் தொடர்ந்து நிரப்பப்படுகிறார்கள், இது இன்னும் கூடுதலான தேவைகளை உருவாக்கி ஜனங்களுக்கு எல்லா வகையான சுமைகளையும் விசித்திரமான மனநிலைகளையும் தருகிறது என்றாலும், ஒருவர் திருமணத்தை எப்படிப் புரிந்து கொண்டாலும், அதைப் பற்றிய ஒருவருடைய மனப்பான்மை எதுவாக இருந்தாலும், திருமணம் என்பது தனி மனித விருப்பமாக இருக்காது என்று திருமணத்தை அனுபவித்த எந்தவொரு நபருக்கும் தெரியும்.

ஒருவர் தன் ஜீவிதத்தில் பலரைச் சந்திக்கிறார், ஆனால் திருமணத்தில் அவருடைய துணை யார் என்று யாருக்கும் தெரியாது. திருமண விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்களும் தனிப்பட்ட நிலைப்பாடுகளும் இருந்தாலும், உண்மையிலேயே, இறுதியாக அவர்களுடைய மறுபாதியாக யார் மாறுவார்கள் என்று ஒருவராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது மற்றும் இந்த விஷயத்தில் ஒருவருடைய சொந்த யோசனைகளுக்கு மதிப்பொன்றும் இல்லை. நீ விரும்பும் ஒருவரைச் சந்தித்த பிறகு, நீ அந்த நபரைப் பின்தொடரலாம்; ஆனால் அவர்கள் உன்னிடம் ஆர்வமாக இருக்கிறார்களா, அவர்கள் உன் துணையாக மாறமுடியுமா என்பவற்றைப் பற்றி எடுக்கப்படும் முடிவு உன்னுடையது அல்ல. உன் பாசத்தின் நோக்கம் உன் ஜீவிதத்தை நீ பகிர்ந்து கொள்ளக்கூடிய நபராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; இதற்கிடையில், நீ ஒருபோதும் எதிர்பார்க்காத ஒருவர் அமைதியாக உன் ஜீவிதத்தில் நுழைந்து உன் துணையாக, உன் விதியின் மிக முக்கியமான பகுதியாக, உன் மறுபாதியாக மாறக்கூடும், அவருடன் உன் விதி பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்படக் கூடும். எனவே, உலகில் கோடிக்கணக்கானத் திருமணங்கள் இருந்தாலும், ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகும்: பல திருமணங்கள் திருப்தியற்றவை, பல திருமணங்கள் மகிழ்ச்சியானவை; பல திருமணங்களில் மணமக்கள் இருவரில், ஒருவர் கிழக்கிலிருந்தும் மற்றொருவர் மேற்கிலிருந்தும் வந்து சந்தித்து திருமணம் செய்துகொள்கின்றனர், பல திருமணங்களில் மணமக்கள் இருவரில், ஒருவர் வடக்கிலிருந்தும் மற்றொருவர் தெற்கிலிருந்தும் வந்து சந்தித்து திருமணம் செய்துகொள்கின்றனர்; பல திருமணங்கள் சரியான பொருத்தங்களாகும், பல சமமான சமூக அந்தஸ்துள்ளவையாகும்; பல திருமணங்கள் மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் இருக்கின்றன, பல வேதனையும் துக்கமும் பெறுகின்றன; பல திருமணங்கள் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டுகின்றன, பல திருமணங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் முகம் சுளிக்கப்படுகின்றன; பல திருமணங்களில் மகிழ்ச்சி நிறைந்துள்ளது, பல திருமணங்கள் கண்ணீரால் நிறைந்து விரக்தியையும் கொண்டு வருகின்றன…. இந்த எண்ணற்ற வகையான திருமணங்களில், மனிதர்கள் திருமணத்திற்கு விசுவாசத்தையும் ஜீவ காலம் முழுமைக்குமான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் அன்பு, பாசம் மற்றும் பிரிக்க முடியாத தன்மை அல்லது சகிப்புதன்மை மற்றும் புரிந்து கொள்ளமுடியாத தன்மையை வெளிப்படுத்துகின்றனர். சிலர் தங்களது திருமணத்தை ஏமாற்றுகிறார்கள், அல்லது அதை வெறுக்கிறார்கள். திருமணம் மகிழ்ச்சியை தருகிறதா வேதனையை தருகிறதா என்பதல்லாமல், திருமணத்தில் ஒவ்வொருவருடைய நோக்கமும் சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது, அது மாறாது; இந்தப் பணியானது எல்லோரும் முடிக்க வேண்டிய ஒன்றாகும். ஒவ்வொரு திருமணத்திற்கும் பின்னால் இருக்கும் ஒவ்வொரு நபருடைய தலைவிதியும் மாறாது. அது சிருஷ்டிகரால் நீண்டகாலத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

2) திருமணம் என்பது இரண்டு துணைகளின் தலைவிதிகளிலிருந்தும் பிறக்கிறது

திருமணம் என்பது ஒரு நபருடைய ஜீவிதத்தில் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இது ஒரு நபருடைய தலைவிதியின் விளைவு மற்றும் ஒருவருடைய தலைவிதியில் ஒரு முக்கியமான இணைப்பு ஆகும்; இது எந்தவொரு நபருடைய தனிப்பட்ட தேர்விலோ விருப்பங்களிலோ நிறுவப்படவில்லை மற்றும் இது எந்த வெளிப்புறக் காரணிகளாலும் பாதிக்கப்படவும் இல்லை. ஆனால் இரு தரப்பினர்களின் தலைவிதிகளாலும், சிருஷ்டிகருடைய ஏற்பாடுகள் மற்றும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தம்பதியினராகும் இருவருடைய தலைவிதிகளாலும் முற்றிலும் தீர்மானிக்கப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், திருமணத்தின் நோக்கம் மனித இனத்தைத் தொடர்வதே ஆகும். ஆனால் சத்தியம் என்னவென்றால், திருமணம் என்பது ஒருவர் தன் பணியை நிறைவு செய்ய அவர் மேற்கொள்ளும் ஒரு சடங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. திருமணத்தில், ஜனங்கள் அடுத்தத் தலைமுறையை வளர்ப்பதில் மட்டும் பங்கு வகிப்பதில்லை; ஒரு திருமணத்தை நிர்வகிப்பதிலும், ஒருவர் தான் நிறைவேற்ற வேண்டிய பணியை செய்வதிலும் உள்ள பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக்கொள்கின்றனர். ஒருவருடைய பிறப்பானது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள விஷயங்களால் ஏற்படும் மாற்றங்களைப் பாதிக்கும் என்பதால், ஒருவருடைய திருமணமும் இந்த ஜனங்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும் கண்டிப்பாகப் பாதிக்கும் மற்றும் அவை அனைத்தையும் பல்வேறு வழிகளில் மாற்றும்.

ஒருவர் சுதந்திரமாக மாறும்போது, ஒருவர் ஜீவிதத்தில் தனது சொந்த பயணத்தைத் தொடங்குகிறார், இது அவரைப் படிப்படியாக, ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவருடைய திருமணத்துடன் தொடர்பு கொண்டுள்ள விஷயங்களை நோக்கி வழிநடத்துகிறது. அதே நேரத்தில், அந்தத் திருமணத்தில் இருக்கும் மற்ற நபர் படிப்படியாக, அதே ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களை நோக்கி வருகிறார். சிருஷ்டிகருடைய ராஜரீகத்தின் கீழ், தொடர்புடைய தலைவிதிகளைக் கொண்டுள்ள தொடர்பில்லாத இரண்டு நபர்கள், படிப்படியாக ஒரே திருமண பந்தத்திற்குள் நுழைந்து, அதிசயமான முறையில் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள்: “ஒரே கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வெட்டுக்கிளிகளாக இருக்கிறார்கள்.” எனவே, ஒருவர் திருமண பந்தத்திற்குள் நுழையும்போது, ஒருவருடைய ஜீவிதப் பயணம் அவருடைய துணையைப் பாதிக்கும், அதைப் போலவே ஒருவருடைய துணையின் ஜீவிதப் பயணமும் அவருடைய ஜீவிதத்தில் அவருடைய சொந்த விதியைப் பாதிக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனித விதிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன மற்றும் ஜீவிதத்தில் ஒருவரது பணியை யாராலும் முடிக்கவோ அல்லது மற்றவர்களிடமிருந்து முழுமையான சுதந்திரத்தில் விலகி தன் பங்கை ஆற்ற முடியாது. ஒருவருடைய பிறப்பு ஒரு பெரிய உறவுகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது; ஒருவருடைய வளர்ச்சியும் ஒரு சிக்கலான உறவுகளின் சங்கிலியை உள்ளடக்கியுள்ளது; அதைப் போலவே, ஒரு திருமணம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது மற்றும் மனிதத் தொடர்புகளின் பரந்த மற்றும் சிக்கலான வலையில் நிர்வகிக்கப்படுகிறது. அந்த வலையின் ஒவ்வொரு உறுப்பினரையும் உள்ளடக்கி, அதன் ஒரு பகுதியாக இருக்கும் அனைவருடைய தலைவிதியையும் பாதிக்கிறது. திருமணம் என்பது இரு உறுப்பினர்களின் குடும்பங்கள், அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகள், அவர்களுடைய தோற்றங்கள், வயது, குணங்கள், திறமைகள் அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் விளைவு அல்ல; மாறாக, ஒரு பகிரப்பட்ட பணியிலிருந்தும், தொடர்பிலிருக்கும் ஒரு விதியிலிருந்தும் இது எழுகிறது. இதுவே சிருஷ்டிகரால் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மனிதவிதியின் ஒரு விளைவான திருமணத்தின் தோற்றமாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 126

ஒரு மனித ஜீவிதத்தில் உள்ள ஆறு சந்தர்ப்பங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஐந்தாவது சந்தர்ப்பம்: சந்ததி

திருமணமான பிறகு ஒருவர் அடுத்தத் தலைமுறையை வளர்க்கத் தொடங்குகிறார். ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர், எப்படிப்பட்ட குழந்தைகள் உள்ளனர் என்பதில் அவர் எந்த முடிவும் செய்ய முடியாது; இதுவும் ஒரு நபருடைய தலைவிதியால் தீர்மானிக்கப்படுகிறது, இது சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. இது, ஒரு நபர் கடந்து செல்ல வேண்டிய ஐந்தாவது சந்தர்ப்பமாகும்.

யாரோ ஒருவருடைய குழந்தையின் பாத்திரத்தை வகித்து நிறைவேற்றுவதற்காக ஒருவர் பிறந்தால், யாரோ ஒருவருடைய பெற்றோரின் பங்கை நிறைவேற்ற ஒருவர் அடுத்தத் தலைமுறையை வளர்க்கிறார். இந்தப் பங்கு வகிப்புகளின் மாற்றம், வெவ்வேறு கோணங்களில், ஒரு அனுபவத்தை ஜீவிதத்தின் வெவ்வேறு கட்டங்களாக மாற்றுகிறது. இது ஒரு வித்தியாசமான ஜீவித அனுபவத்தையும் தருகிறது, இதன் மூலம் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஒருவர் அறிந்து கொள்கிறார், இது எப்போதும் ஒரே மாதிரியாக இயற்றப்படுகிறது. மேலும், இதன் மூலம் சிருஷ்டிகரால் முன்தீர்மானிக்கப்பட்டதை யாராலும் மிஞ்சவோ மாற்றவோ முடியாது என்ற உண்மையை இது அறியச் செய்கிறது.

1) ஒருவருடைய சந்ததியால் என்ன நடக்கும் என்பதன் மீது ஒருவருக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது

பிறப்பு, வளர்ச்சி, திருமணம் அனைத்தும் பல்வேறு வகையான மற்றும் வெவ்வேறு அளவுகளில் ஏமாற்றங்களைத் தருகின்றன. சிலர் தங்களது குடும்பங்கள் அல்லது அவர்களுடைய சொந்த உடற்தோற்றத்தில் அதிருப்தி அடைந்துள்ளனர்; சிலர் தங்களது பெற்றோரை விரும்புவதில்லை; சிலர் வளர்ந்த சூழலைப் பற்றி மனக்கசப்பு அல்லது புகார்கள் கொண்டுள்ளனர். இந்த ஏமாற்றங்களுக்கிடையில், பெரும்பாலான ஜனங்களுக்கு, திருமணமே மிகவும் அதிருப்திகரமான ஒன்றாக இருக்கிறது. ஒருவர் தன்னுடைய பிறப்பு, முதிர்ச்சி அல்லது திருமணத்தைக் குறித்து எவ்வளவு அதிருப்தி அடைந்தாலும், இந்த விஷயங்களை அனுபவித்த அனைவருக்கும், அவர்கள் எங்கு, எப்போது பிறந்தார்கள், அவர்கள் எப்படி இருக்கிறார்கள், பெற்றோர் யார், அவர்களுடைய துணை யார் என்பதைக் குறித்து ஒருவர் தேர்வு செய்யமுடியாது என்றும், ஆனால் பரலோகத்தின் விருப்பத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரியும். ஆயினும், ஜனங்கள் அடுத்தத் தலைமுறையை வளர்ப்பதற்கான நேரம் வரும்போது, அவர்கள் தங்களது ஜீவிதத்தின் முதல் பாதியில் உண்மையாக்கத் தவறிய அனைத்து ஆசைகளையும் தங்களது சந்ததியினருக்கு முன் வைப்பார்கள், அவர்களுடைய சொந்த ஜீவிதத்தினுடைய முதல் பாதியின் அனைத்து ஏமாற்றங்களுக்கும் தங்களது சந்ததியினர் ஈடுசெய்வார்கள் என்று நம்புகிறார்கள். ஆகவே, ஜனங்கள் தங்களது குழந்தைகளைப் பற்றிய அனைத்து வகையான கற்பனைகளிலும் ஈடுபடுகிறார்கள்: தங்களுடைய மகள்கள் அசரவைக்கும் அழகிகளாக வளருவார்கள், தங்களுடைய மகன்கள் துணிச்சலும் பண்புமுள்ள மனிதர்களாக இருப்பார்கள்; அதனால் அவர்களுடைய மகள்கள் பண்பட்டவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருப்பார்கள், அவர்களுடைய மகன்கள் சிறந்த மாணவர்களாகவும் மற்றும் நட்சத்திர விளையாட்டு வீரர்களாகவும் இருப்பார்கள்; அவர்களுடைய மகள்கள் மென்மையானவர்களாகவும், நல்லொழுக்கமுள்ளவர்களாகவும், விவேகமானவர்களாகவும் இருப்பார்கள், அவர்களுடைய மகன்கள் புத்திசாலிகளாகவும், திறமையானவர்களாகவும், உணர்ச்சிகரமானவர்களாகவும் இருப்பார்கள். தங்களது சந்ததியினர், அவர்கள் மகள்களாக இருந்தாலும், மகன்களாக இருந்தாலும், தங்களது மூப்பர்களை மதிப்பார்கள், பெற்றோரை கவனித்துக் கொள்வார்கள், அனைவராலும் நேசிக்கப்படுவார்கள், புகழப்படுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்…. இந்தக் கட்டத்தில், ஜீவிதத்துக்கான நம்பிக்கைகள் புதிதாக உருவாகின்றன மற்றும் புதிய உணர்வுகள் ஜனங்களின் இதயங்களில் தூண்டப்படுகின்றன. இந்த ஜீவிதத்தில் அவர்கள் பெலன் அற்றவர்களாகவும் நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும், கூட்டத்தில் இருந்து தனித்து நிற்க அவர்களுக்கு இன்னொரு வாய்ப்போ அல்லது நம்பிக்கையோ கிடைக்காது என்பதையும், அவர்களுடைய தலைவிதிகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் ஜனங்கள் அறிவார்கள். எனவே, அவர்கள் தங்களின் நம்பிக்கைகள், அவர்களுடைய நிறைவேறாத ஆசைகள் மற்றும் இலட்சியங்களை அடுத்த தலைமுறையினரிடம் முன்வைக்கிறார்கள், தங்கள் கனவுகளை நனவாக்கவும் தங்கள் மனவிருப்பங்களை உணர்ந்து கொள்ளவும் தங்கள் சந்ததியினர் தங்களுக்கு உதவ முடியும் என்று நம்புகிறார்கள்; அதாவது அவர்களுடைய மகள்களும் மகன்களும் குடும்பப் பெயருக்கு புகழைச் சேர்ப்பார்கள், முக்கியமாவார்கள், பணக்காரராவார்கள் அல்லது பிரபலமாவார்கள் என்று கிறார்கள். சுருக்கமாகக் கூறுவதென்றால், அவர்கள் தங்களது குழந்தைகளின் செல்வங்கள் உயர்வதைப் பார்க்க விரும்புகிறார்கள். ஜனங்களின் திட்டங்களும் கற்பனைகளும் சரியானவையாக இருக்கின்றன; அவர்களிடம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுடைய குழந்தைகளின் தோற்றம், திறமைகள் மற்றும் அதுபோன்ற பலவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்றும், அவர்களுடைய குழந்தைகளின் தலைவிதிகளில் சிறு பகுதி கூட அவர்களுடைய கைகளில் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியாதா? மனிதர்கள் தங்களது சொந்த விதியின் எஜமானர்கள் அல்ல. எனினும், அவர்கள் தங்களின் இளைய தலைமுறையின் தலைவிதியை மாற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள்; அவர்கள் தங்களது சொந்த விதிகளிலிருந்து தப்பிக்கத் திராணியற்றவர்கள், ஆனாலும் அவர்கள் தங்களின் மகன்கள் மற்றும் மகள்களின் விதிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்களை மிகைப்படுத்திக் கொள்ளவில்லையா? இது மனித முட்டாள்தனமும் அறியாமையும் அல்லவா? ஜனங்கள் தங்களது சந்ததியினருக்காக எந்தத் தூரத்திற்கும் செல்வார்கள். ஆனால் இறுதியில், அவருடைய திட்டங்கள் மற்றும் ஆசைகளால் ஒருவருக்கு எத்தனைக் குழந்தைகள் உள்ளன அல்லது அந்தக் குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள் என்று கட்டளையிட முடியாது. சிலர் பணமில்லாதவர்களாக இருக்கிறார்கள், ஆனால் பல குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்; சிலர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள், ஆனால் ஒரு குழந்தைகூட இல்லை. சிலர் ஒரு மகளை விரும்புகிறார்கள், ஆனால் அந்த விருப்பம் மறுக்கப்படுகிறது; சிலர் ஒரு மகனை விரும்புகிறார்கள், ஆனால் ஒரு ஆண் குழந்தையை உருவாக்க இயலாமல் இருக்கிறார்கள். சிலருக்குக் குழந்தைகள் ஒரு ஆசீர்வாதம்; மற்றவர்களுக்கு அவர்கள் ஒரு சாபக்கேடு. சில தம்பதிகள் புத்திசாலிகள், ஆனால் மந்தமான அறிவுடைய குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்; சில பெற்றோர்கள் உழைப்பாளிகள், நேர்மையானவர்கள், ஆனாலும் அவர்கள் வளர்க்கும் குழந்தைகள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். சில பெற்றோர்கள் கனிவானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் குழந்தைகள் வஞ்சகமாகவும் தீயவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். சில பெற்றோர்கள் மனதளவிலும் உடலளவிலும் சிறப்பாக இருக்கிறார்கள், ஆனால் ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். சில பெற்றோர்கள் சாதாரணமானவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்கள், ஆனால் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் குழந்தைகளைப் பெற்றுள்ளார்கள். சில பெற்றோர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தும் மேன்மையான நிலைக்கு எழும்பும் பிள்ளைகளைக் கொண்டுள்ளனர். …

2) அடுத்தத் தலைமுறையை வளர்த்த பிறகு, ஜனங்கள் விதியைப் பற்றிய புதிய புரிதலைப் பெறுகிறார்கள்

திருமண பந்தத்திற்குள் நுழையும் பெரும்பாலான ஜனங்கள் முப்பது வயதிற்குள் அவ்வாறு செய்கிறார்கள். இது இன்னும் மனித விதியைப் பற்றிப் புரிந்துகொள்ளாத ஜீவிதத்தின் ஒரு காலப்பகுதி ஆகும். ஆனால் ஜனங்கள் குழந்தைகளை வளர்க்கத் தொடங்கும்போது, அவர்களுடைய சந்ததியினர் வளரும்போது, முந்தையத் தலைமுறையின் ஜீவிதத்தையும் அனைத்து அனுபவங்களையும் புதிய தலைமுறையியினர் மீண்டும் வாழ்வதைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய சொந்த கடந்த காலங்கள் அவற்றில் பிரதிபலிக்கப்படுவதைப் பார்க்கும்போது, தங்களது பாதையைப் போலவே, இளைய தலைமுறையினர் நடந்து சென்ற பாதையையும், அவர்கள் திட்டமிடவும் தேர்ந்தெடுக்கவும் முடியாது என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த உண்மையை எதிர்கொள்வதன் மூலம், ஒவ்வொரு நபருடைய தலைவிதியும் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருப்பதை ஒப்புக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமற்போகிறது. அதை உணராமல், அவர்கள் படிப்படியாக தங்களது சொந்த ஆசைகளை ஒதுக்கி வைக்கிறார்கள் அவர்களுடைய இருதயங்களில் உள்ள கனவுகள் சிதறி இறந்து போகின்றன…. இந்த காலகட்டத்தில் உள்ளவர்கள், ஜீவிதத்தின் முக்கிய வழித்தடங்களை கட்டாயமான முறையில் கடந்ததால், ஜீவிதத்தைப் பற்றிய ஒரு புதிய புரிதலை அடைந்து, ஒரு புதிய அணுகுமுறையைப் பின்பற்றினார்கள். இந்த வயதிற்குட்பட்ட ஒருவர் எதிர்காலத்தில் இருந்து எவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும், அவர்கள் என்ன முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும்? எந்த ஐம்பது வயதான பெண் இன்னும் இளவரசர் சார்மிங்கைக் கனவு காண்கிறாள்? எந்த ஐம்பது வயதான ஆண் இன்னும் தனது ஸ்னோ ஒயிட்டைத் தேடுகிறான்? ஓர் அசிங்கமான வாத்திலிருந்து ஓர் அன்னப் பறவையாக மாற இன்னும் எந்த நடுத்தர வயது பெண் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாள்? பெரும்பாலான வயதான ஆண்களுக்கு இளைஞர்களைப் போலவே தொழில் உந்துதல் இருக்கிறதா? மொத்தத்தில், ஒருவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த வயது வரை வாழ்ந்த எவருக்கும் திருமணம், குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து ஒப்பீட்டளவில் பகுத்தறிவும், நடைமுறை அணுகுமுறையும் இருக்கக் கூடும். அத்தகைய நபருக்கு அடிப்படையில் தேர்வுகள் எதுவும் இல்லை, விதியைச் சவால் செய்ய எந்தத் தூண்டுதலும் இல்லை. மனித அனுபவம் எவ்வளவாகப் பெருகுகிறதோ, அவ்வளவாக ஒருவர் இந்த வயதை அடைந்தவுடன், இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை அவர் வளர்த்துக் கொள்கிறார்: “ஒருவர் விதியை ஏற்கவேண்டும்; ஒருவருடைய குழந்தைகளுக்கு அவர்களுடைய சொந்த செல்வங்கள் உள்ளன; மனித தலைவிதி பரலோகத்தால் நியமிக்கப்படுகிறது.” சத்தியத்தைப் புரிந்துகொள்ளாத பெரும்பாலான ஜனங்கள், இந்த உலகத்தின் அனைத்து விசித்திரங்களையும், விரக்திகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்ட பிறகு, மனித ஜீவிதத்தைப் பற்றிய அவர்களுடைய உட்பார்வையை இரண்டு சொற்களால் சுருக்கமாகக் கூறுவார்கள்: “அது விதி!” இந்த சொற்றொடர் உலக ஜனங்களின் மனிதவிதியை உணர்ந்து கொள்வதையும் அவர்கள் கண்டுக்கொண்ட முடிவையும் உள்ளடக்கியது என்றாலும், அது மனிதகுலத்தின் உதவியற்ற தன்மையை வெளிப்படுத்தி, அது தெளிவாக மற்றும் துல்லியமானதாக விவரிக்கப்படலாம் என்றாலும், இது சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் புரிந்து கொள்வதிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. இது சிருஷ்டிகருடைய அதிகாரத்தைப் பற்றிய அறிவுக்கு மாற்றானது அல்ல.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 127

விதியை நம்புவதென்பது சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய அறிவுக்கு மாற்றானது அல்ல

பல ஆண்டுகளாக தேவனைப் பின்பற்றியதால், விதியைப் பற்றிய உங்களது அறிவிற்கும் உலக ஜனங்களின் அறிவிற்கும் இடையே முக்கியமான வேறுபாடு இருக்கிறதா? சிருஷ்டிகருடைய முன்குறித்தலை நீங்கள் உண்மையிலேயே புரிந்துகொண்டு, சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை உண்மையிலேயே அறிந்துகொண்டுள்ளீர்களா? சிலருக்கு “அது விதி” என்ற சொற்றொடரைப் பற்றிய ஆழ்ந்த, ஆழமான புரிதல் இருக்கிறது, ஆனால் அவர்கள் தேவனுடைய ராஜரீகத்தைச் சிறிதளவும் நம்பவில்லை; மனித விதி தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர்கள் நம்பவில்லை மற்றும் தேவனுடைய ராஜரீகத்துக்கு ஒப்புவிக்கவும் விரும்பவில்லை. அத்தகையவர்கள் கடலில் மிதந்து செல்கையில், அலைகளால் தூக்கி எறியப்பட்டு, நீரோட்டத்துடன் நகர்வது போல, வேறு வழியில்லாமல், செயலற்ற முறையில் காத்திருந்து தங்களது விதியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆயினும்கூட, மனித விதி தேவனுடைய ராஜரீகத்துக்கு உட்பட்டது என்பதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை; அவர்களுடைய சொந்த முயற்சியால் தேவனுடைய ராஜரீகத்தை அறிந்து கொள்ளவும், அதன் மூலம் தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய அறிவைப் பெறவும், தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவும், விதியை எதிர்ப்பதை நிறுத்தவும், தேவனுடைய பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் வாழவும் முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விதியை ஏற்றுக் கொள்வதென்பது சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்குக் கீழ்ப்படிவது போன்றதல்ல; விதியை நம்புவது என்பது சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஒருவர் ஏற்றுக்கொள்கிறார், அங்கீகரிக்கிறார், அறிவார் என்று அர்த்தமாகாது; விதியை நம்புவது என்பது அதன் உண்மையையும், அதன் மேலோட்டமான வெளிப்பாடுகளையும் அங்கீகரிப்பதாகும். சிருஷ்டிகர் மனிதகுலத்தின் தலைவிதியை எவ்வாறு ஆளுகிறார் என்பதை அறிந்துகொள்வதிலிருந்து இது வேறுபட்டது, எல்லாவற்றின் தலைவிதியின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆதாரமாக சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதை அங்கீகரிப்பதில் இருந்தும் இது வேறுபட்டது மற்றும் நிச்சயமாக சிருஷ்டிகருடைய திட்டங்களுக்கும் மனிதகுலத்தின் தலைவிதிக்கான ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிவதிலிருந்தும் வெகுதொலைவில் உள்ளது. ஒரு நபர் விதியை மட்டுமே நம்புகிறாவராக இருந்தால்—அவர்கள் அதைப் பற்றி ஆழமாக உணர்ந்தாலும்—ஆனால் அதன் மூலம் மனிதகுலத்தின் தலைவிதியின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்துகொள்ளவும், அதற்குக் கீழ்ப்படியவும், ஏற்றுக்கொள்ளவும் முடியாவிட்டால், அவர்களுடைய ஜீவிதம் ஒரு சோகமாக இருக்கும், வீணாக ஜீவித்த ஒரு ஜீவிதமாகவும், ஒரு வெற்றிடமாகவும் இருக்கும்; அவர்களால் இன்னும் சிருஷ்டிகருடைய ஆதிக்கத்தின் கீழ் வர முடியாது, ஒரு சிருஷ்டிக்கப்பட்ட, சரியான மனிதனாக மாறவும், சிருஷ்டிகருடைய அங்கீகாரத்தை அனுபவிக்கவும் முடியாது. சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை உண்மையாக அறிந்த மற்றும் அனுபவிக்கும் ஒரு நபர் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும், செயலற்ற அல்லது உதவியற்ற நிலையில் இருத்தல் கூடாது. அத்தகைய நபர் எல்லாவற்றையும் தலைவிதி அளிப்பதாக ஏற்றுக்கொள்வார், அவர்கள் ஜீவிதம் மற்றும் தலைவிதி பற்றிய துல்லியமான வரையறையைக் கொண்டிருக்க வேண்டும்: ஒவ்வொரு ஜீவிதமும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்கு உட்பட்டது. தான் நடந்து சென்ற பாதையை ஒருவர் திரும்பிப் பார்க்கும் போது, அவருடைய பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர் நினைவுபடுத்தும்போது, ஒவ்வொரு அடியிலும், ஒருவருடைய பயணம் கடினமானதாகவோ அல்லது சுமூகமாகவோ இருந்தாலும், தேவன் அவருடைய பாதையை வழிநடத்தி, அதைத் திட்டமிடுவதை அவர் காண்கிறார். தேவனுடைய உன்னிப்பான ஏற்பாடுகள், அவருடைய கவனமான திட்டமிடல், ஒருவரை அறியாமல், இன்று வரை வழிநடத்தியது. சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஏற்றுக்கொள்வதும், அவருடைய இரட்சிப்பைப் பெறுவதும் எவ்வளவு பெரிய செல்வம்! ஒரு நபருக்கு மனித விதியைப் பற்றி எதிர்மறையான அணுகுமுறை இருந்தால், தேவன் அவர்களுக்கு ஏற்பாடு செய்த எல்லாவற்றையும் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை அது நிரூபிக்கிறது. அவர்களுக்குக் கீழ்ப்படியும் மனப்பான்மை இல்லை. மனித விதியின் மீதுள்ள தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றி ஒருவர் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்தால், அவர் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, அவர் உண்மையிலேயே தேவனுடைய ராஜரீகத்தைப் பிடித்துக் கொள்கையில், தேவன் ஏற்பாடு செய்த எல்லாவற்றிற்கும் ஒப்புவிக்க அவர் அதிக ஆர்வத்துடன் விரும்புவார் மற்றும் அவருடைய தலைவிதியை தேவன் திட்டமிடவும், தேவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதை நிறுத்தவும் உறுதியுடனும் விசுவாசத்துடனும் இருப்பார். ஒருவர் தலைவிதியைப் புரிந்து கொள்ளாத போது, தேவனுடைய ராஜரீகத்தைப் புரிந்து கொள்ளாதபோது, ஒருவர் வேண்டுமென்றே கண்மூடித்தனமாக முன்னோக்கிச் செல்லும்போது, மூடுபனி வழியாகச் சென்று திகைப்படையும் போதும் தடுமாறும் போதும், பயணம் மிகவும் கடினமாகவும், மிகுந்த மன வருத்தமாகவும் இருக்கும். ஆகவே, மனித விதியின் மீதான தேவனுடைய ராஜரீகத்தை ஜனங்கள் உணரும்போது, தங்களது இரு கைகளாலும் ஒரு நல்ல ஜீவிதத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்த வேதனையான நாட்களிலிருந்து விடைபெறுவதற்கும், விதியை எதிர்த்துப் போராடுவதையும், “ஜீவித இலக்குகள்” என்று பெயரளவில் அழைக்கப்படுபவற்றை தங்களது சொந்த வழியில் பின்பற்றுவதை நிறுத்தவும், புத்திசாலிகள் அதை அறிந்து ஏற்றுக்கொள்வதை தெரிந்து கொள்வார்கள். ஒருவரிடம் தேவன் இல்லாத போது, அவர் தேவனைக் காணமுடியாத போது, தேவனுடைய ராஜரீகத்தை அவர் தெளிவாக அடையாளம் காணமுடியாத போது, ஒவ்வொரு நாளும் அர்த்தமற்றதாகவும், பயனற்றதாகவும், பரிதாபமானதாகவும் இருக்கும். ஒருவர் எங்கிருந்தாலும், அவருடைய வேலை எதுவாக இருந்தாலும், அவருடைய ஜீவித வழிமுறையும், அவர் இலக்குகளைப் பின்பற்றுவதும், முடிவில்லாத மனவருத்தம் மற்றும் விடுதலையற்ற துன்பத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டு வருவதில்லை, அதாவது அவரால் அவருடைய கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு அது இருக்கும். ஒருவர் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொண்டு, அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிந்து, உண்மையான மனித ஜீவிதத்தைத் தேடினால் மட்டுமே, ஒருவர் படிப்படியாக எல்லா மனவருத்தம் மற்றும் துன்பத்திலிருந்து விடுபடத் தொடங்குவார் மற்றும் ஜீவிதத்தின் எல்லா வெறுமையிலிருந்தும் விடுபடுவார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 128

சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்குக் கீழ்ப்படிகிறவர்கள் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்

தேவனுடைய திட்டங்களையும் தேவனுடைய ராஜரீகத்தையும் ஜனங்கள் உணராததால், அவர்கள் எப்போதுமே விதியை எதிர்ப்புடனும், கலகத்தனமான மனப்பான்மையுடனும் எதிர்கொள்கிறார்கள். மேலும், அவர்கள் எப்போதும் தேவனுடைய அதிகாரத்தையும் ராஜரீகத்தையும், விதியானது தன் வசம் கொண்டிருக்கும் விஷயங்களையும் கைவிட விரும்புகிறார்கள், தங்களுடைய தற்போதைய சூழ்நிலைகளை மாற்றி தங்களது தலைவிதியையும் மாற்றுவார்கள் என்றும் வீணாக நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது, ஒவ்வொரு முறையிலும் முறியடிக்கப்படுகிறார்கள். ஒருவருடைய ஆத்துமாவின் ஆழத்தில் நடைபெறும் இந்த போராட்டம், அவர் தன் ஜீவிதத்தை அதுவரையில் விலக்கி வைத்திருந்ததால், அது அவருக்கு எலும்புகளில் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் விதமான ஆழ்ந்த வேதனையைத் தருகிறது. இந்த வலிக்கு காரணம் என்ன? இதற்குக் காரணம் தேவனுடைய ராஜரீகமா அல்லது அந்த நபர் துரதிர்ஷ்டவசமாக பிறந்ததா? வெளிப்படையாக, இரண்டுமே உண்மை இல்லை. ஆழமாக பார்த்தால், ஜனங்கள் தேர்ந்தெடுக்கும் பாதைகள், அவர்கள் ஜீவிதத்தை வாழத் தேர்ந்தெடுக்கும் வழிகள் ஆகியவற்றால் இது ஏற்படுகிறது. சிலர் இந்த விஷயங்களை உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் நீ உண்மையிலேயே அறியும்போது, மனித விதியின் மீது தேவனுக்குச் ராஜரீகம் இருக்கிறது என்பதை நீ உண்மையிலேயே உணரும்போது, தேவன் உனக்காகத் திட்டமிட்டு உனக்காகத் தீர்மானித்த அனைத்தும் ஒரு பெரிய நன்மை மற்றும் பாதுகாப்பு என்பதை நீ உண்மையிலேயே புரிந்து கொள்ளும்போது, உன் வலி லேசாகத் தொடங்குவதை உணர்வாய். மேலும், உன் முழு ஜீவிதமும் நிதானமாகவும், சுதந்திரமாகவும், விடுவிக்கப்பட்டதாகவும் மாறும். பெரும்பான்மையான ஜனங்களின் நிலைகளிலிருந்து ஆராயும்போது, மனிதனின் தலைவிதி மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தின் நடைமுறை மதிப்பை, அதன் பொருளை, அவர்களால் புறநிலையாக உண்மையாக ஏற்க முடியவில்லை. ஒரு அகநிலைமட்டத்தில், அவர்கள் முன்பு ஜீவித்தது போல தொடர்ந்து ஜீவிக்க விரும்பவில்லை என்றாலும் அவர்களுடைய வேதனையிலிருந்து விடுதலை பெற விரும்பினாலும்; புறநிலை ரீதியாக, அவர்களால் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை உண்மையாக உணரவும், அதற்குக் கீழ்ப்படிவும் முடியவில்லை மற்றும் சிருஷ்டிகருடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை எவ்வாறு தேடுவது என்பதும், ஏற்றுக் கொள்வது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆகவே, சிருஷ்டிகருக்கு மனித விதியின் மீதும், எல்லா மனித விஷயங்களின் மீதும் ராஜரீகம் இருக்கிறது என்ற உண்மையை ஜனங்கள் உண்மையிலேயே அடையாளம் காண முடியாவிட்டால், சிருஷ்டிகருடைய ஆதிக்கத்திற்கு அவர்கள் உண்மையிலேயே கீழ்ப்படிய முடியாவிட்டால், “ஒருவருடைய தலைவிதி அவருடைய கைகளில் உள்ளது” என்ற கருத்தால் அவர்கள் இயக்கப்படாதிருப்பதும், அதில் பிணைக்கப்படாதிருப்பதும் கடினமாகும். விதி மற்றும் சிருஷ்டிகருடைய அதிகாரத்திற்கு எதிரான அவர்களுடைய தீவிரமான போராட்டத்தின் வேதனையைப் போக்குவது அவர்களுக்குக் கடினமாக இருக்கும் மற்றும் அவர்கள் உண்மையிலேயே விடுவிக்கப்பட்டு சுதந்திரமாகி, தேவனை வணங்கும் ஜனங்களாக மாறுவதும் கடினமாக இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மிகவும் எளிமையான வழி உள்ளது. இது ஒருவருடைய பழைய ஜீவித முறைக்கு விடை கொடுப்பது ஆகும்; ஜீவிதத்தில் ஒருவருடைய முந்தைய இலக்குகளுக்கு விடை கொடுப்பது ஆகும்; ஒருவருடைய முந்தைய ஜீவித முறை, ஜீவிதத்தைக் குறித்தக் கண்ணோட்டம், நாட்டங்கள், ஆசைகள் மற்றும் இலட்சியங்களைச் சுருக்கமாக்கிப் பகுப்பாய்வு செய்வதும்; பின்னர் தேவனுடைய விருப்பத்துடனும் மனிதனுக்கான கோரிக்கைகளுடனும் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றில் ஏதேனும் தேவனுடைய விருப்பத்திற்கும் கோரிக்கைகளுக்கும் இசைவானதா என்பதைப் பார்ப்பதும், அவற்றில் ஏதேனும் ஒன்று ஜீவிதத்தின் சரியான மதிப்புகளை வழங்குகிறதா என்பதைப் பார்ப்பதும், ஒருவரை சத்தியத்தைப் பற்றிய பெரிய புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா என்பதைப் பார்ப்பதும், மேலும் ஒருவரை மனித நேயத்துடனும் மனிதனாகவும் ஜீவிக்க அனுமதிப்பதும் ஆகும். ஜீவிதத்தில் ஜனங்கள் பின்பற்றும் பல்வேறு இலக்குகளையும் அவர்களுடைய எண்ணற்ற ஜீவித முறைகளையும் நீ மீண்டும் மீண்டும் ஆராய்ந்து, கவனமாகப் பிரிக்கும்போது, அவற்றில் ஒன்றுகூட சிருஷ்டிகருடைய உண்மையான மனித நோக்கத்துடன் ஒத்துப் போவதாக காணமாட்டாய். அவை அனைத்தும் சிருஷ்டிகருடைய ராஜரீகம் மற்றும் பராமரிப்பிலிருந்து ஜனங்களை விலகச் செய்கின்றன; அவை அனைத்தும் கண்ணிகளாக இருக்கின்றன, அவை ஜனங்களை ஒழுக்கத்திலிருந்து வழுவச் செய்கின்றன மற்றும் அவை நரகத்திற்கு இட்டுச் செல்கின்றன. இதை நீ உணர்ந்தபிறகு, உன் பணியானது ஜீவிதத்தைப் பற்றிய உன் பழைய பார்வையை ஒதுக்கி வைப்பது, பல்வேறு கண்ணிகளிலிருந்து விலகி இருப்பது, தேவன் உன் ஜீவிதத்தைப் பொறுப்பேற்று உனக்காக ஏற்பாடுகளைச் செய்ய வழிவிடுவது; தேவனுடைய திட்டங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் கீழ்ப்படிய முயற்சிப்பது, தனிப்பட்ட விருப்பமின்றி ஜீவிப்பது, மற்றும் தேவனை வணங்கும் நபராக மாறுவது மட்டுமேயாகும். இது கேட்க எளிதானது, ஆனால் செய்வதற்குக் கடினமான விஷயமாகும். சிலரால் அதன் வலியைத் தாங்கமுடியும், மற்றவர்களால் முடியாது. சிலர் இணங்கத் தயாராக உள்ளனர், மற்றவர்கள் விருப்பமில்லாதிருக்கின்றனர். விருப்பம் இல்லாதவர்களுக்கு அவ்வாறு செய்வதற்கான ஆசையும் தீர்மானமும் இல்லை; அவர்கள் தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றித் தெளிவாக அறிந்திருக்கிறார்கள், தேவன் தான் மனித விதியைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்துகிறார் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் உதைத்துப் போராடுகிறார்கள், தேவனுடைய உள்ளங்கையில் தங்களது விதிகளை வைப்பதற்கும் தேவனுடைய ராஜரீகத்துக்குக் கீழ்ப்படிவதற்கும் இணங்காமல் இருக்கிறார்கள்; மேலும், அவர்கள் தேவனுடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை எதிர்க்கிறார்கள். ஆகவே, தங்களால் என்ன முடியும் என்பதைத் தாங்களே பார்க்க விரும்பும் சிலர் எப்போதும் இருப்பார்கள்; அவர்கள் தங்களது இரு கைகளாலும் தங்களது விதிகளை மாற்ற விரும்புகிறார்கள், அல்லது தங்களது சொந்த திறனால் மகிழ்ச்சியை அடைய விரும்புகிறார்கள், தேவனுடைய அதிகாரத்தின் எல்லைகளை மீறி தேவனுடைய ராஜரீகத்துக்கு மேலே உயரமுடியுமா என்றும் பார்க்க விரும்புகிறார்கள். மனிதனுடைய சோகம் எதுவென்றால், அவன் ஒரு மகிழ்ச்சியான ஜீவிதத்தை நாடுகிறான் என்பதோ, அவன் புகழ்ச்சி மற்றும் செல்வத்தைத் பின்தொடர்கிறான் அல்லது மூடுபனி வாயிலாக தனது சொந்த விதியை எதிர்த்துப் போராடுகிறான் என்பதோ அல்ல. மாறாக, சிருஷ்டிகர் ஜீவிப்பதைக் கண்ட பின்னும், மனித விதியின் மீது சிருஷ்டிகருடைய ராஜரீகம் உள்ளது என்ற உண்மையை அவன் அறிந்த பிறகும், அவனால் இன்னும் தனது வழிகளைச் சரிசெய்ய முடியாது என்றும், தனது கால்களைச் சேற்றிலிருந்து வெளியேற்ற முடியாது என்றும், அவனது இருதயத்தைக் கடினப்படுத்துவதும், அவனது தவறுகளில் தொடர்வதும் ஆகும். அவன் சிறிதும் மனவருத்தம் இல்லாமல் சேற்றில் விழுவதைத் தொடர்கிறான், சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்கு எதிராகப் போராடுகிறான், கசப்பான இறுதிவரை அதை எதிர்க்கிறான். அவன் உடைந்து இரத்தப் போக்குடன் இருக்கும்போது தான், கடைசியில் தன் பழைய செயல்களைக் கைவிட்டு மனம் திரும்ப முடிவுசெய்கிறான். இதுவே உண்மையான மனித துக்கம். எனவே நான் சொல்கிறேன், கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுப்பவர்கள் புத்திசாலிகள் ஆவர் மற்றும் போராடி தப்பி ஓடுவோர் உண்மையில் முட்டாள்கள் ஆவர்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 129

ஒரு மனித ஜீவிதத்தில் உள்ள ஆறு சந்தர்ப்பங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆறாவது சந்தர்ப்பம்: மரணம்

இவ்வளவு சலசலப்புகளுக்குப் பிறகு, பல விரக்திகள் மற்றும் ஏமாற்றங்களுக்குப் பிறகு, பல சந்தோஷங்கள் மற்றும் துயரங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, மறக்கமுடியாத பல வருடங்களுக்குப் பிறகு, பருவங்கள் மீண்டும் மீண்டும் வருவதைப் பார்த்த பிறகு, ஒருவர் ஜீவிதத்தில் முக்கியமான வழித்தடங்களைக் கவனிக்காமல் கடந்துவிடுகிறார், ஒரு கணப்பொழுதில், ஒருவர் தன்னுடைய இறுதி ஆண்டுகளில் தன்னைக் காண்கிறார். நேரத்தின் அடையாளங்கள் ஒருவருடைய உடல் முழுவதும் முத்திரையிடப்படுகின்றன: ஒருவரால் இனிமேலும் கர்வத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படமுடியாது, ஒருவருடைய தலை முடி கருமையிலிருந்து வெள்ளை நிறமாக மாறும், அதே நேரத்தில் பிரகாசமாகவும் தெளிவாகவும் இருந்த கண்கள் மங்கலாகவும், மந்தாரமாகவும் மாறும் மற்றும் மென்மையான, மிருதுவான சருமம் சுருக்கம் பெற்று புள்ளிகளுடன் காணப்படும். ஒருவருடைய செவித்திறன் பலவீனமடைகிறது, ஒருவருடைய பற்கள் தளர்ந்து விழுகின்றன, ஒருவருடைய எதிர்வினைகள் மந்தமாகி விடுகின்றன, ஒருவருடைய அசைவுகள் மெதுவாக இருக்கின்றன…. இந்தக் கட்டத்தில், ஒருவர் உணர்ச்சி மிகுந்த இளமையின் வருடங்களுக்கு இறுதி விடைகொடுத்து, அவருடைய ஜீவிதத்தின் அந்திக்குள் நுழைந்தார்: முதுமை. அடுத்து, ஒருவர் மரணத்தை எதிர்கொள்வார், இது ஒரு மனித ஜீவிதத்தின் கடைசி சந்தர்ப்பமாகும்.

1) சிருஷ்டிகர் மட்டுமே மனிதனின் ஜீவன் மற்றும் மரணத்தின் மீது அதிகாரம் கொண்டிருக்கிறார்

ஒருவருடைய பிறப்பு ஒருவருடைய முந்தைய ஜீவிதத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அவருடைய மரணம் அந்த விதியின் முடிவைக் குறிக்கிறது. ஒருவருடைய பிறப்பு இந்த ஜீவிதத்தில் அவருடைய பணியின் தொடக்கமாக இருந்தால், அவருடைய மரணம் அந்தப் பணியின் முடிவைக் குறிக்கிறது. ஒரு நபருடைய பிறப்புக்கான ஒரு நிலையான சூழ்நிலையை சிருஷ்டிகர் தீர்மானித்திருப்பதால், அந்த நபருடைய மரணத்திற்கு ஒரு நிலையான சூழ்நிலைகளின் தொகுப்பையும் அவர் ஏற்பாடு செய்துள்ளார் என்று சொல்லாமலே உணர முடிகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யாரும் தற்செயலாக பிறக்கவில்லை, யாருடைய மரணமும் திடீரென வருவதில்லை, பிறப்பு மற்றும் மரணம் இரண்டும் ஒருவருடைய முந்தைய மற்றும் தற்போதைய ஜீவிதத்துடன் இணைந்திருக்க வேண்டும். ஒருவருடைய பிறப்பு மற்றும் மரணத்தின் சூழ்நிலைகள் சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை; இது ஒரு நபரின் தலைவிதி, ஒரு நபரின் விதி ஆகும். ஒரு நபருடைய பிறப்புக்கு பல விளக்கங்கள் இருப்பதால், ஒரு நபருடைய மரணமும் இயற்கையாகவே அதன் சொந்தமான பல்வேறு சூழ்நிலைகளின் சிறப்பு தொகுப்பின் விளைவாக நிகழும் என்பதும் உண்மையாகிறது. இது ஜனங்களின் மாறுபட்ட ஆயுட்காலம் மற்றும் அவர்களுடைய வெவ்வேறு வகையான மரணம் மற்றும் மரண நேரங்களுக்கான காரணம் ஆகும். சிலர் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள், ஆனால் இளமையிலேயே இறக்கிறார்கள்; மற்றவர்கள் பலவீனமானவர்களாகவும் நோயுற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் முதுமை வரை ஜீவித்திருந்து சமாதானமாக காலமாகிறார்கள். சிலர் இயற்கைக்கு மாறான காரணங்களால் அழிந்து போகிறார்கள், மற்றவர்கள் இயற்கையாகவே இறக்கின்றனர். சிலர் தங்களது ஜீவிதத்தை வீட்டிற்கு வெகுதொலைவில் முடிக்கிறார்கள், மற்றவர்கள் தங்களது அன்புக்குரியவர்களுடன் தங்களது கண்களை இறுதி நேரத்தில் மூடிக்கொள்கிறார்கள். சிலர் ஆகாயத்தில் இறக்கின்றனர், மற்றவர்கள் பூமிக்கு அடியில் இறக்கின்றனர். சிலர் தண்ணீருக்கு அடியில் மூழ்குவதாலும், மற்றவர்கள் பேரழிவுகளினாலும் காணாமல் போகின்றனர். சிலர் காலையிலும், மற்றவர்கள் இரவிலும் இறக்கின்றனர். … எல்லோரும் ஒரு சிறப்பான பிறப்பு, புத்திசாலித்தனமான ஜீவிதம் மற்றும் ஒரு புகழ்ச்சி பெற்ற மரணம் ஆகியவற்றை விரும்புகிறார்கள், ஆனால் யாரும் தங்களது விதியை மீற முடியாது, சிருஷ்டிகருடைய ராஜரீகத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. இதுவே மனித விதி. மனிதன் தனது எதிர்காலத்திற்காக அனைத்து வகையான திட்டங்களையும் வகுக்க முடியும், ஆனால் அவர்கள் பிறக்கும் முறை மற்றும் உலகத்திலிருந்து அவர்கள் புறப்படும் முறை ஆகியவற்றை யாராலும் திட்டமிட முடியாது. மரணம் வருவதைத் தவிர்ப்பதற்கும் எதிர்ப்பதற்கும் ஜனங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தாலும், அவர்களுக்குத் தெரியாமல், மரணம் அமைதியாக நெருங்குகிறது. ஒருவர் எப்போது மரணமடைவார் அல்லது அது எப்படி எங்கு நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. வெளிப்படையாக கூறுகையில், ஜீவன் மற்றும் மரணத்தின் மீதான அதிகாரத்தை வைத்திருப்பது மனிதகுலமோ அல்லது இந்த இயற்கை உலகில் உள்ள பிற உயிர்களோ இல்லை, மாறாக சிருஷ்டிகர். அவருடைய அதிகாரம் தனித்துவமானது. மனிதகுலத்தின் ஜீவனும் மரணமும் இயற்கையான உலகின் ஏதோ ஒரு விதியின் விளைவாக இல்லை, ஆனால் சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் ராஜரீகத்தின் விளைவாக இருக்கிறது.

2) சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறியாத ஒருவர் மரண பயத்தால் ஆட்கொள்ளப்படுவார்

ஒருவர் முதுமைக்குள் நுழையும்போது, ஒருவர் எதிர்கொள்ளும் சவால் என்பது ஒரு குடும்பத்திற்கு வழங்குவதோ அல்லது ஜீவிதத்தில் ஒருவருடைய மகத்தான லட்சியங்களை உருவாக்குவதோ அல்ல. ஆனால், அவருடைய ஜீவிதத்திலிருந்து விடை பெறுவது எவ்வாறு என்பதும், ஒருவருடைய ஜீவிதத்தின் முடிவை எவ்வாறு சந்திப்பது என்பதும், ஒருவர் தன் ஜீவித காலத்தை எப்படி நல்ல முறையில் முடிப்பது என்பதுமேயாகும். மேலோட்டமாக, ஜனங்கள் மரணத்தில் சிறிதளவு கவனம் செலுத்துவதாகத் தெரிந்தாலும், இந்த விஷயத்தை ஆராய்வதை யாராலும் தவிர்க்க முடியாது. ஏனென்றால், மரணத்திற்கு அப்பால் இன்னொரு உலகம் இருக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது, அது மனிதர்களால் காணவோ உணரவோ முடியாத ஒரு உலகம், அதாவது அவர்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. இது மரணத்தை நேராக எதிர்கொள்ள பயப்பட வைக்கிறது, அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதை எதிர்கொள்ளப் பயப்படுகிறார்கள்; அதற்குப் பதிலாக, அவர்கள் அந்த விஷயத்தைத் தவிர்ப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். எனவே இது ஒவ்வொரு நபரையும் மரணத்தைப் பற்றிய பயத்தால் நிரப்புகிறது மற்றும் இந்த தவிர்க்க முடியாத ஜீவிதத்தின் உண்மையை மர்மமாக மாற்றுகிறது, ஒவ்வொரு நபருடைய இருதயத்திலும் ஒரு நிலையான நிழலையும் செலுத்துகிறது.

ஒருவருடைய உடல் மோசமடைவதை ஒருவர் உணரும்போது, ஒருவர் மரணத்திற்கு அருகில் வருவதை ஒருவர் உணரும்போது, ஒருவர் தெளிவற்ற பயத்தை, விவரிக்க முடியாத பயத்தை உணர்கிறார். மரண பயம் ஒருவரை எப்போதும் தனிமையாகவும் உதவியற்றதாகவும் உணர வைக்கிறது. இந்த நேரத்தில் ஒருவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறார்: மனிதன் எங்கிருந்து வந்தான்? மனிதன் எங்கே போகிறான்? மனிதனுடைய ஜீவன் துரிதமாக அவனைவிட்டுக் கடந்துசென்றுவிட அவன் இவ்வாறுதான் இறக்கிறானா? இது மனிதனின் ஜீவிதத்தின் முடிவைக் குறிக்கும் காலமா? இறுதியில், ஜீவிதத்தின் பொருள் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக ஜீவிதத்தின் மதிப்பு என்ன? இது புகழ்ச்சி மற்றும் செல்வத்தைப் பற்றியதா? இது ஒரு குடும்பத்தை வளர்ப்பதா? … இந்த குறிப்பிட்ட கேள்விகளைப் பற்றி ஒருவர் சிந்தித்திருக்கிறாரா என்றில்லாமல், ஒருவர் மரணத்தைக் குறித்து எவ்வளவு ஆழமாக அஞ்சினாலும், ஒவ்வொரு நபருடைய இருதயத்தின் ஆழத்திலும் மர்மங்களை ஆராய்வதற்கான ஆசையும், ஜீவிதத்தைப் பற்றிய புரிதல் இல்லாத உணர்வும் மற்றும் இவற்றோடு கலந்த, உலகத்தைப் பற்றிய ஏக்கமும், வெளியேற ஒரு தயக்கமும் இருக்கும். மனிதன் எதைக் குறித்துப் பயப்படுகிறான், மனிதன் எதைத் தேடுகிறான், அவன் எதைப் பற்றி உணர்ச்சிவசப்படுகிறான், எதை விட்டு வெளியேற தயங்குகிறான் என்பதை யாராலும் தெளிவாகச் சொல்ல முடியாது …

ஜனங்கள் மரணத்திற்கு அஞ்சுவதால், அவர்களுக்குப் பல கவலைகள் உள்ளன; அவர்கள் மரணத்திற்கு அஞ்சுவதால், தங்களால் கைவிட முடியாத பலவற்றை வைத்திருக்கிறார்கள். சிலர் தாங்கள் இறக்கப்போகும் போது, எதைப் பற்றி எல்லாமோ கவலைப்படுகிறார்கள்; அவர்கள் தங்களது பிள்ளைகளைப் பற்றியும், தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றியும், செல்வத்தைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள். கவலைப்படுவதால், மரணம் தரும் துன்பங்களையும் அச்சத்தையும் அவர்கள் அழிக்க முடியும் என்றும், உயிருள்ளவர்களுடன் ஒருவித நெருக்கம் பேணுவதன் மூலம், மரணத்துடன் வரும் உதவியற்ற தன்மையில் இருந்தும் தனிமையிலிருந்தும் தப்பிக்க முடியும் என்றும் எண்ணுகிறார்கள். மனித இருதயத்தின் ஆழத்தில் ஒரு தெளிவற்ற பயம், தன்னுடைய அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்து விடுவேனோ என்ற பயம், நீல வானத்தின் மீது மீண்டும் ஒருபோதும் கண்களை வைக்க முடியாது என்ற பயம், பொருள் உலகத்தை மீண்டும் ஒருபோதும் பார்க்க முடியாது என்ற பயம். ஒரு தனிமையான ஆத்துமா, அதன் அன்புக்குரியவர்களின் துணையுடன் பழகிவிட்டது, தெரியாத மற்றும் அறிமுகமில்லாத ஒரு உலகத்திற்காக, அதன் பிடியை விடுவித்துத் தனியாக வெளியேறத் தயங்குகிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 130

புகழ் மற்றும் செல்வத்தைத் தேடுவதில் செலவிடப்பட்ட ஒருவருடைய ஜீவிதம் அவரை மரணத்தின் முன் அனைத்தையும் இழந்தவராக நிற்கச் செய்கிறது

சிருஷ்டிகருடைய ராஜரீகம் மற்றும் முன்னறிவிப்பு காரணமாக, தனக்கென ஒன்றுமில்லாமல் தொடங்கிய தனிமையான ஆத்துமா பெற்றோர்களையும் ஒரு குடும்பத்தையும் பெறுகிறது, மனித இனத்தில் உறுப்பினராகும் வாய்ப்பையும், மனித ஜீவிதத்தை அனுபவித்து உலகைப் பார்க்கும் வாய்ப்பையும் பெறுகிறது. இந்த ஆத்துமா சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அனுபவிப்பதற்கும், சிருஷ்டிகருடைய சிருஷ்டிப்பின் அற்புதத்தை அறிந்து கொள்வதற்கும், அதற்கும் மேலாக, சிருஷ்டிகருடைய அதிகாரத்தை அறிந்து கொள்வதற்கும் அதில் உட்படுவதற்குமான வாய்ப்பைப் பெறுகிறது. இன்னும் பெரும்பாலான ஜனங்கள் இந்த அரிய மற்றும் குறுகிய காலத்துக்கான வாய்ப்பை உண்மையில் பயன்படுத்தவில்லை. ஒருவர் விதியை எதிர்த்துப் போராடுவதில், அவருடைய முழு ஜீவ காலத்துக்குமான ஆற்றலை செலவழிக்கிறார், அவருடைய நேரத்தைச் செலவழிக்கிறார், அவருடைய குடும்பத்திற்கு உணவளிக்க முயற்சிக்கிறார் மற்றும் ஆஸ்திக்கும் அந்தஸ்துக்கும் இடையில் முன்னும் பின்னுமாக ஓடுகிறார். ஜனங்கள் பொக்கிஷங்களாக குடும்பம், பணம் மற்றும் புகழை பத்திரப்படுத்துகின்றனர் மற்றும் அவற்றை ஜீவிதத்தின் மிகவும் மதிப்புமிக்க விஷயங்களாகப் பார்க்கின்றனர். எல்லா ஜனங்களும் தங்களது தலைவிதிகளைப் பற்றி குறை கூறுகிறார்கள், ஆனாலும் அவர்கள் ஆராய்ந்து புரிந்து கொள்வதற்கு மிகவும் அவசியமான பிரச்சினைகளை மறந்து விடுகிறார்கள்: மனிதன் ஏன் உயிருடன் இருக்கிறான், மனிதன் எப்படி வாழ வேண்டும், ஜீவிதத்தின் மதிப்பு மற்றும் பொருள் என்ன ஆகியன அவசியமான பிரச்சனைகளாகும். அவர்கள் எவ்வளவு காலம் ஜீவித்தாலும், புகழ்ச்சி மற்றும் செல்வத்தைத் தேடுவதில் விரைந்து செல்கிறார்கள், அவர்களின் இளமை தப்பி ஓடி, அவர்கள் நரைத்தவர்களாகவும் மற்றும் சுருக்கம் உடையவர்களாகவும் மாறும் வரை, அவர்கள் தங்களது முழு ஜீவிதத்தையும் செலவிடுகிறார்கள். புகழ்ச்சி மற்றும் செல்வமானது முதிர்ச்சியை நோக்கிய அவர்களுடைய சரிவை நிறுத்த முடியாது, பணத்தால் இருதயத்தின் வெறுமையை நிரப்ப முடியாது, பிறப்பு, முதுமை, நோய் மற்றும் மரணம் ஆகிய சட்டங்களிலிருந்து யாரும் விலக்கப்படவில்லை. விதியானது தன்னிடம் வைத்திருப்பதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பவற்றை அவர்கள் பார்க்கும் வரையில் இந்த வழியில் ஜீவிக்கிறார்கள். ஜீவிதத்தின் இறுதிக் கட்டத்தை எதிர்கொள்ள அவர்கள் கட்டாயப்படுத்தப்படும்போது தான், ஒருவர் பரந்த செல்வத்தையும் விஸ்தாரமான சொத்துக்களையும் வைத்திருந்தாலும், ஒருவர் சலுகை பெற்றவராகவும், உயர்பதவியில் இருந்தாலும்கூட, ஒருவர் மரணத்திலிருந்து தப்ப முடியாது, அவருடைய மெய்யான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவர்கள் உண்மையிலேயே புரிந்து கொள்கிறார்கள்: ஒரு தனி ஆத்துமா, தனக்கென சொல்லிக் கொள்ள எதுவும் இல்லாத ஒன்று. ஜனங்களுக்கு பெற்றோர் இருக்கும்போது, பெற்றோர் தான் எல்லாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்; ஜனங்களுக்கு சொத்து இருக்கும் போது, பணம் தான் ஒருவருடைய பிரதானம் என்று அவர்கள் நினைக்கிறார்கள், அதாவது இதுவே ஒருவர் வாழும் வழிமுறையாகும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; ஜனங்களுக்கு அந்தஸ்து இருக்கும்போது, அவர்கள் அதை இறுக்கமாகக் கட்டிக்கொள்கிறார்கள். மேலும், அதன் பொருட்டு தங்களது உயிரையும் பணயம் வைப்பார்கள். ஜனங்கள் இந்த உலகத்தை விட்டு போகும் முன்னர் தான், அவர்கள் தங்களது ஜீவிதம் முழுமையும் பின்பற்றிய விஷயங்கள் யாவும் குறுகியக் கால மேகங்கள் போன்றதே தவிர வேறொன்றுமில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், அவற்றில் எதையும் அவர்கள் பிடித்து வைக்க முடியாது, அவற்றில் எதையும் தங்களுடன் எடுத்துச் செல்ல முடியாது, அவற்றில் எதுவும் அவர்கள் மரணத்திலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது, திரும்பிச் செல்லும் பயணத்தில் தனிமையான ஆத்துமாவுக்கு துணையோ அல்லது ஆறுதலோ அளிக்க முடியாது; எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விஷயங்கள் எதுவும் ஒரு நபரைக் காப்பாற்ற முடியாது மற்றும் மரணத்தை மீற அவர்களுக்கு உதவவும் முடியாது. பொருள் உலகில் ஒருவர் பெறும் புகழ்ச்சி மற்றும் செல்வம் தற்காலிகத் திருப்தியை அளிக்கின்றன, சிற்றின்பமாக இருக்கின்றன, தவறான உணர்வை எளிதில் தருகின்றன; செயல்பாட்டில், அவை ஒருவரை வழியிலிருந்து விலகச் செய்கின்றன. எனவே, ஜனங்கள், மனிதகுலம் என்னும் பரந்த கடலில் ஜீவிக்கும் போது, சமாதானம், ஆறுதல் மற்றும் மன அமைதி ஆகியவற்றுக்காக ஏங்கிக் கொண்டே, அலை அலையாய் வருபவற்றால் மூழ்கடிக்கப்படுகிறார்கள். புரிந்துகொள்ள மிகவும் முக்கியமான கேள்விகளை ஜனங்கள் இன்னும் கண்டறியாததால்—அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் ஏன் உயிருடன் இருக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், மற்றும் பல—அவர்கள் புகழ் மற்றும் செல்வத்தால் மயக்கப்படுகிறார்கள், தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், அவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் மீட்க முடியாத வண்ணம் இழந்து போகிறார்கள். நேரம் கடந்து போகிறது; ஒரு கண் சிமிட்டலில் ஆண்டுகள் கடந்து செல்கின்றன, அதை ஒருவர் உணர்ந்து கொள்வதற்கு முன்பு, அவருடைய ஜீவிதத்தின் சிறந்த வருடங்களுக்கு அவர் விடை கொடுக்கிறார். ஒருவர் விரைவில் உலகத்திலிருந்து புறப்பட வேண்டிய நேரம் வரும்போது, உலகில் உள்ள அனைத்தும் விலகிச் செல்கின்றன என்பதையும், முதலில் அவர்களுடையதாக இருந்த உடைமைகளை இனிமேல் வைத்திருக்க முடியாது என்பதையும் படிப்படியாக உணர்ந்து கொள்வார்; ஒருவர், தனக்கென எதுவும் இல்லாமல் உலகில் வெளிவரும், அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் போன்றவர் என்று அவர் உண்மையிலேயே உணர்ந்து கொள்வார். இந்தக் கட்டத்தில், ஒருவர் ஜீவிதத்தில் என்ன செய்திருக்கிறார் என்றும், உயிருடன் இருப்பது மதிப்புக்குரியது என்றும், அதன் அர்த்தம் என்ன என்றும், ஒருவர் ஏன் உலகத்திற்கு வந்தார் என்றும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த கட்டத்தில் தான் ஒருவர் உண்மையில் அடுத்த ஜீவிதம் இருக்கிறதா, பரலோகம் உண்மையிலேயே இருக்கிறதா, உண்மையில் பழிவாங்குதல் இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறார்…. மரணத்திற்கு வருபவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக ஜீவிதம் என்றால் உண்மையில் என்ன என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறார்; மரணத்திற்கு வருபவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ, அவ்வளவாக அவருடைய இருதயம் காலியாகத் தெரிகிறது; மரணத்திற்கு வருபவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ, அவ்வளவாக அவர் உதவியற்றவராக உணர்கிறார்; எனவே ஒருவருடைய மரணபயம் நாளுக்குநாள் அதிகமாகிறது. மரணத்தை நெருங்கும்போது இத்தகைய உணர்வுகள் ஜனங்களிடையே வெளிப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: முதலாவதாக, தங்களது ஜீவிதம் நம்பியிருந்த புகழையும் செல்வத்தையும் அவர்கள் இழக்கப் போகிறார்கள், உலகில் கண்ணால் காணும் அனைத்தையும் கைவிட்டு விடுவார்கள்; இரண்டாவதாக, அவர்கள் தனியாக, அறிமுகமில்லாத உலகத்தை, ஒரு மர்மமான, அறியப்படாத ஒரு சாம்ராஜ்யத்தை எதிர்கொள்ளப்போகிறார்கள், அங்கு அவர்கள் கால் பதிக்கப் பயப்படுகிறார்கள், அங்கு அவர்களுக்கு அன்புக்குரியவர்கள் இல்லை, ஆதரவும் இல்லை. இந்த இரண்டு காரணங்களுக்காக, மரணத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் மனக்குழப்பத்தை உணர்கிறார்கள், பெரும் அச்சத்தை அனுபவிக்கிறார்கள், அவர்கள் இதற்கு முன் அறியாத உதவியற்ற உணர்வை அனுபவிக்கிறார்கள். உண்மையில், இந்த நிலைக்கு ஒருவர் வரும்போதுதான் இந்த பூமியில் ஒருவர் காலடி வைக்கும்போது, அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, மனிதர்கள் எங்கிருந்து வருகிறார்கள், ஜனங்கள் ஏன் உயிருடன் இருக்கிறார்கள், மனித விதியை யார் ஆணையிடுகிறார், யார் வழங்குகிறார், யார் மனித ஜீவிதத்தின் மீது ராஜரீகம் பெற்றுள்ளார், என்று உணர்ந்து கொள்கிறார்கள். இந்த அறிவு ஒருவர் ஜீவிப்பதற்கான உண்மையான வழிமுறையாகும், இது மனித உயிர் ஜீவிப்பதற்கான இன்றியமையாத அடிப்படையாகும். ஒருவருடைய குடும்பத்திற்கு எவ்வாறு வழங்குவது அல்லது புகழ்ச்சி மற்றும் செல்வத்தை எவ்வாறு அடைவது என்பதைக் கற்றுக்கொள்வதோ, கூட்டத்திலிருந்து எவ்வாறு தனித்து நிற்க வேண்டும் அல்லது செல்வந்தர்களாக எவ்வாறு ஜீவிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதோ, சிறந்து விளங்குவது மற்றும் மற்றவர்களுக்கு எதிராக வெற்றிகரமாக போட்டியிடுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதோ ஜீவிதம் அன்று. ஜனங்கள் தங்களது ஜீவிதத்தைச் செலவழித்துக் கற்றுக்கொண்ட இந்த ஜீவனுக்கான திறன்கள் ஏராளமான பொருள் வசதிகளை அளிக்க முடியும் என்றாலும், அவை ஒருபோதும் உண்மையான சமாதானத்தையும் ஆறுதலையும் ஒருவருடைய இருதயத்திற்குக் கொண்டு வர முடியாது, ஆனால் ஜனங்களை தொடர்ந்து தங்களது திசையை இழக்கச் செய்யும். இதனால் ஜனங்கள் தங்களைக் கட்டுப்படுத்த சிரமப்படுகிறார்கள் மற்றும் ஜீவிதத்தின் பொருளைக் கற்றுக்கொள்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் இழக்கிறார்கள்; இந்த ஜீவனுக்கான திறன்கள் மரணத்தை எவ்வாறு சரியாக எதிர்கொள்வது என்பது குறித்த வியாகுலத்தை உருவாக்குகின்றன. ஜனங்களின் ஜீவிதம் இந்த வழியில் பாழாகிவிட்டது. சிருஷ்டிகர் அனைவரையும் நியாயமாக நடத்துகிறார், அனைவருக்கும் அவரது ராஜரீகத்தை அனுபவிக்கவும் அறிந்துக் கொள்ளவும் முழு ஜீவ காலத்துக்கும் ஈடாகும் மதிப்புமிக்க வாய்ப்புகளை அளிக்கிறார். ஆனாலும் மரணம் நெருங்கும்போதும், அதன் உருவம் தெரியும்போதும், ஒருவர் ஒளியைக் காணத் தொடங்குகிறார். எனினும் அது மிகவும் தாமதமானது!

ஜனங்கள் தங்களது ஜீவிதத்தைப் பணத்தையும் புகழையும் துரத்தச் செலவழிக்கிறார்கள்; அவர்கள் இந்த வைக்கோல்களைப் பிடித்துக்கொண்டு, அவற்றை தங்களின் ஒரே ஆதரவு என்று நினைத்து, அவற்றைக் கொண்டிருப்பதன் மூலம் அவர்கள் ஜீவிக்க முடியும், மரணத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இறக்கப் போகும் நேரத்தில் தான், இந்த விஷயங்கள் அவர்களிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன, மரணத்தை எதிர்கொள்ளும் போது அவை எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன, அவை எவ்வளவு எளிதில் சிதறுகின்றன, எங்கும் திரும்ப முடியாவண்ணம் எவ்வளவு தனிமையாகவும் உதவியற்றதாகவும் இருக்கின்றன என்று உணர்கிறார்கள். ஜீவிதத்தைப் பணத்தால் புகழால் வாங்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், ஒரு நபர் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், அவர்களுடைய நிலை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அனைவரும் மரணத்தை எதிர்கொள்ளும்போது சமமான ஏழைகள் மற்றும் அற்பமானவர்களே. பணத்தால் ஜீவிதத்தை வாங்க முடியாது, புகழ்ச்சி மரணத்தை அழிக்கமுடியாது, பணமோ புகழோ ஒரு நபருடைய ஜீவிதத்தை ஒரு நிமிடம் வரையிலோ, ஒரு நொடி வரையிலோ நீட்டிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இவ்வாறு ஜனங்கள் எவ்வளவு அதிகமாக உணர்கிறார்களோ, அவ்வளவாக அவர்கள் தொடர்ந்து வாழ ஆசைப்படுகிறார்கள்; இவ்வாறு, ஜனங்கள் எவ்வளவு அதிகமாக உணர்கிறார்களோ, அவ்வளவாக அவர்கள் மரணத்தின் அணுகுமுறையைக் கண்டு அஞ்சுகிறார்கள். இந்தச் சமயத்தில் தான் அவர்கள் உண்மையிலேயே தங்களது ஜீவிதம் தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்பதையும், கட்டுப்படுத்த ஜீவிதம் அவர்களுக்கு உரியது அல்ல என்பதையும், ஒருவர் ஜீவிப்பாரா அல்லது இறந்துவிடுவாரா என்பது பற்றியும் ஒருவரால் எந்த முடிவும் செய்ய முடியாது என்பதையும், இவை அனைத்தும் ஒருவருடைய கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளது என்பதையும் அவர்கள் உண்மையிலேயே உணர்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 131

சிருஷ்டிகருடைய ஆதிக்கத்தின்கீழ் வந்து மரணத்தை அமைதியாக எதிர்கொள்ளுங்கள்

ஒரு நபர் பிறக்கும் தருணத்தில், ஒரு தனிமையான ஆத்துமா பூமியிலுள்ள அதன் ஜீவிதத்தினுடைய அனுபவத்தைத் தொடங்குகிறது, சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் அனுபவத்தை சிருஷ்டிகர் அதற்காக ஏற்பாடு செய்துள்ளார். சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கும், அவருடைய அதிகாரத்தை அறிந்து கொள்வதற்கும், தனிப்பட்ட முறையில் அதை அனுபவிப்பதற்கும் மனிதனுக்கு—ஆத்துமாவுக்கு—இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சிருஷ்டிகரால் நிர்ணயிக்கப்பட்ட தலைவிதியின் சட்டங்களுக்குள் ஜனங்கள் தங்களது ஜீவிதத்தை ஜீவிக்கிறார்கள், மனசாட்சியுடன் கூடிய எந்தவொரு பகுத்தறிவுள்ள நபருக்கும், தன் ஜீவிதத்தின் பல தசாப்தங்களில், சிருஷ்டிகருடைய ராஜரீகத்துடன் இணங்குவதும், அவருடைய அதிகாரத்தை அறிந்து கொள்வதும், செய்வதற்கு ஒரு கடினமான விஷயம் அல்ல. ஆகையால், பல தசாப்தங்களில் பெற்ற தங்களது சொந்த ஜீவித அனுபவங்களின் மூலம், ஒவ்வொரு மனிதனும் அனைத்து மனித தலைவிதிகளும் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்பதை அடையாளம் காண்பது மிகவும் எளியதாக இருக்க வேண்டும் மற்றும் உயிருடன் இருப்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வது அல்லது அதன் சாராம்சத்தைக் கூறுவது எளிதாக இருக்கவேண்டும். ஒருவர் இந்த ஜீவிதப் பாடங்களைத் தழுவுகையில், படிப்படியாக வாழ்க்கை எங்கிருந்து வருகிறது என்பதை அவர் புரிந்துக்கொள்வார், உண்மையிலேயே இருதயத்துக்கு எது தேவை என்பதைப் புரிந்து கொள்வார், ஒருவரை ஜீவிதத்தின் உண்மையான பாதைக்கு எது அழைத்துச் செல்கிறது என்பதையும், ஒரு மனித ஜீவிதத்தின் நோக்கம் மற்றும் இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்வார். ஒருவர் சிருஷ்டிகரை வணங்கவில்லை என்றால், ஒருவர் சிருஷ்டிகருடைய ஆதிக்கத்தின் கீழ் வரவில்லை என்றால், மரணத்தை எதிர்கொள்ளும் நேரம் வரும் போது—அவருடைய ஆத்துமா சிருஷ்டிகரை மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள நேரிடும்போது—அவருடைய இருதயம் எல்லையற்ற அச்சம் மற்றும் கொந்தளிப்பால் நிறைந்து இருக்கும் என்பதை ஒருவர் படிப்படியாக உணர்ந்துகொள்வார். ஒரு நபர் பல தசாப்தங்களாக உலகில் இருந்தும், மனித ஜீவிதம் எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளவில்லை அல்லது யாருடைய உள்ளங்கையில் மனித விதி உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் மரணத்தை அமைதியாக எதிர்கொள்ள முடியாது என்பதில் ஆச்சரியமில்லை. மனித ஜீவிதத்தின் பல தசாப்த ராஜரீகத்தைப் பற்றிய அறிவைப் பெற்ற கால அனுபவத்தில், சிருஷ்டிகருடைய நபர் தான், ஜீவிதத்தின் அர்த்தத்தையும் மதிப்பையும் பற்றிய சரியான புரிதலைக் கொண்ட நபராக இருக்கிறார். அத்தகைய நபருக்கு சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய உண்மையான அனுபவமும் புரிதலும் நிறைந்த, ஜீவிதத்தின் நோக்கம் பற்றிய ஆழமான அறிவு உள்ளது, அதையும் கடந்து, அவர்களால் சிருஷ்டிகருடைய அதிகாரத்திற்கு அடிபணிய முடியும். அத்தகைய நபர், தேவன் மனிதகுலத்தை உருவாக்கியதன் அர்த்தத்தை புரிந்துகொள்கிறார், மனிதன் சிருஷ்டிகரை வணங்கவேண்டும், அதாவது மனிதனிடம் உள்ள அனைத்தும் சிருஷ்டிகரிடமிருந்து வந்தவை, எதிர்காலத்தில், விரைவில் அவை அவரிடம் ஒரு நாள் திரும்பும் என்பதைப் புரிந்து கொள்கிறார். சிருஷ்டிகர் மனிதனின் பிறப்பை ஏற்பாடு செய்கிறார், மனிதனின் மரணத்தின் மீது ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்பதையும், ஜீவன் மற்றும் மரணம் இரண்டும் சிருஷ்டிகருடைய அதிகாரத்தால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்பதையும் இந்த வகையான நபர் புரிந்துகொள்கிறார். ஆகவே, ஒருவர் உண்மையிலேயே இவற்றைப் புரிந்துகொள்ளும்போது, ஒருவர் இயல்பாகவே மரணத்தை அமைதியாக எதிர்கொள்ளவும், ஒருவருடைய உலக உடைமைகள் அனைத்தையும் அமைதியாக ஒதுக்கி வைக்கவும், பின்வரும் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கவும், சிருஷ்டிகரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜீவிதத்தின் இறுதி சந்தர்ப்பத்துக்குக் கண்மூடித்தனமாகப் பயந்து, அதற்கு எதிராகப் போராடாமல், அதை வரவேற்கவும் முடியும். சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அனுபவித்து, அவருடைய அதிகாரத்தை அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாக ஜீவிதத்தை ஒருவர் கருதினால், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக, தன்னுடைய ஜீவிதத்தைத் தன்னுடைய கடமையைச் செய்வதற்கான ஒரு அரிய வாய்ப்பாகக் கருதினால், தன்னுடைய பணியை நிறைவு செய்தால், நிச்சயமாகவே அவர் ஜீவிதத்தின் மீது சரியான கண்ணோட்டம் கொண்டிருப்பார், நிச்சயமாக சிருஷ்டிகரால் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வழிநடத்தப்பட்ட ஒரு ஜீவிதத்தை ஜீவிப்பார், நிச்சயமாக சிருஷ்டிகருடைய வெளிச்சத்தில் நடப்பார், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிவார், நிச்சயமாக அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வருவார், நிச்சயமாக அவருடைய அற்புதமான செயல்களுக்குச் சாட்சியாகவும், அவருடைய அதிகாரத்திற்கு சாட்சியாகவும் மாறுவார். அத்தகைய நபர் நிச்சயமாக சிருஷ்டிகரால் நேசிக்கப்படுவார், ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அத்தகைய நபர் மட்டுமே மரணத்தைப் பற்றி அமைதியான அணுகுமுறையை வைத்திருக்க முடியும் மற்றும் ஜீவிதத்தின் இறுதி சந்தர்ப்பத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கவும் முடியும். மரணத்தைப் பற்றி இந்த வகையான அணுகுமுறையை வெளிப்படையாகக் கொண்டிருந்த ஒருவன் யோபு. ஜீவிதத்தின் இறுதிக்கட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் நிலையில் யோபு இருந்தான். மேலும், தனது ஜீவிதத்தின் பயணத்தை ஒரு சுமூகமான முடிவுக்குக் கொண்டு வந்து ஜீவிதத்தில் தனது பணியை முடித்த அவன், சிருஷ்டிகருடன் இருக்கும்படி திரும்பிச் சென்றான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 132

ஜீவிதத்தில் யோபுவின் நோக்கங்களும் ஆதாயங்களும் மரணத்தை அமைதியாக எதிர்கொள்ள அனுமதிக்கின்றன

வேத வசனங்களில் யோபுவைப் பற்றி எழுதப்பட்டுள்ளது: “யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்” (யோபு 42:17). இதன் பொருள், யோபு மரித்த போது, அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை, வேதனையும் இல்லை, மாறாக இயற்கையாகவே இந்த உலகத்தை விட்டுப் புறப்பட்டான். யோபு உயிருடன் இருந்தபோது தேவனுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகினான் என்று எல்லோருக்கும் தெரியும். அவனது செயல்கள் தேவனால் பாராட்டப்பட்டன, மற்றவர்களால் நினைவுகூரப்பட்டன மற்றும் அவனது ஜீவிதத்துக்கு மற்ற அனைவரையும் விட மதிப்பும் முக்கியத்துவமும் இருந்ததாகக் கூறலாம். யோபு தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்தான், பூமியில் தேவனால் நீதியுள்ளவன் என்று அழைக்கப்பட்டான், அவன் தேவனால் சோதிக்கப்பட்டான் மற்றும் சாத்தானால் சோதிக்கப்பட்டான். அவன் தேவனுக்கு சாட்சியாக நின்றான், அவனால் ஒரு நீதியுள்ளவன் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானான். பல தசாப்தங்களில் அவன் தேவனால் சோதிக்கப்பட்ட பின்பு, அவன் முன்பைவிட மிகவும் மதிப்புமிக்க, அர்த்தமுள்ள, தாழ்மையான மற்றும் சமாதானமான ஒரு ஜீவிதத்தை ஜீவித்தான். அவனுடைய நீதியுள்ள செயல்களின் காரணமாக, தேவன் அவனைச் சோதித்தார், மேலும், அவனுடைய நீதியான செயல்களால், தேவன் அவனுக்குத் தோன்றி அவனுடன் நேரடியாகவும் பேசினார். ஆகவே, அவன் சோதிக்கப்பட்டதற்குப் பிறகான ஆண்டுகளில், யோபு ஜீவிதத்தின் மதிப்பை மிகவும் உறுதியான முறையில் கண்டுகொண்டான், புரிந்து கொண்டான், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்றான் மற்றும் சிருஷ்டிகர் எவ்வாறு தனது ஆசீர்வாதங்களை அளிக்கிறார், பறிக்கிறார் என்பதைப் பற்றிய துல்லியமான மற்றும் திட்டவட்டமான அறிவைப் பெற்றான். யேகோவா தேவன் யோபுவுக்கு, முன்பு கொடுத்ததை விட மிகப்பெரிய ஆசீர்வாதங்களை கொடுத்ததாக யோபு புத்தகம் பதிவு செய்கிறது. மேலும், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்து கொள்வதற்கும் மரணத்தை அமைதியாக எதிர்கொள்வதற்கும் யோபுவை இன்னும் சிறந்த நிலையில் தேவன் வைத்தார். ஆகவே, யோபு வயதாகி மரணத்தை எதிர்கொண்டபோது, நிச்சயமாக அவன் தனது உலக சொத்தினை பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டான். அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை, வருத்தப்படவும் ஒன்றுமில்லை மற்றும் நிச்சயமாக மரணத்திற்கு அஞ்சவில்லை, ஏனென்றால் அவன் தனது ஜீவ காலம் முழுவதையும் தேவனுக்குப் பயந்து தீமையை விட்டு விலகினான். அவன் தனது சொந்த முடிவைப் பற்றி கவலைப்பட எந்த காரணமும் இல்லை. தனது மரணத்தை எதிர்கொண்டபோது யோபு செய்தது போல இன்று எத்தனை பேர் செய்யமுடியும்? இவ்வளவு எளிமையான புற சகிப்பினை நிர்வகிக்க ஏன் யாருக்கும் இயலவில்லை? ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது: விசுவாசம், அங்கீகாரம் மற்றும் தேவனுடைய ராஜரீகத்துக்கு ஒப்புவித்தல் ஆகியவற்றின் அகநிலை நோக்கத்தில் யோபு தனது ஜீவிதத்தை ஜீவித்தான். இந்த விசுவாசம், அங்கீகாரம் மற்றும் ஒப்புவிப்பு ஆகியவற்றால்தான் அவன் ஜீவிதத்தின் முக்கியமான சந்தர்ப்பங்களைக் கடந்து, தனது கடைசி ஆண்டுகளில் ஜீவித்தான் மற்றும் தனது இறுதி சந்தர்ப்பத்தை வரவேற்றான். யோபு அனுபவித்ததல்லாமல், ஜீவிதத்தில் அவனது நோக்கங்களும் இலக்குகளும் வேதனையாக இருக்கவில்லை, மாறாக, மகிழ்ச்சியாக இருந்தன. சிருஷ்டிகரால் அவனுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்கள் அல்லது புகழ்சிகள் காரணமாக மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, அவனது நோக்கங்கள் மற்றும் ஜீவித இலக்குகளின் காரணமாகவும், தேவனுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகியதன் மூலம் அவன் அடைந்த சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய வளர்ந்து வரும் அறிவு மற்றும் உண்மையான புரிதல் காரணமாகவும் மற்றும் அவனது தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாகவும், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தில் ஒருவனாக இருந்ததன் காரணமாகவும், தேவனுடைய அற்புதமான செயல்கள், மென்மையான மற்றும் மறக்கமுடியாத அனுபவங்கள், மனிதனின் நினைவுகள் மற்றும் தேவனுடன் சகவாழ்வு, அறிமுகம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் காரணமாகவும் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். சிருஷ்டிகருடைய விருப்பத்தை அறிந்து கொள்வதன் மூலம் கிடைத்த ஆறுதல் மற்றும் மகிழ்ச்சியாலும், அவர் பெரியவர், அதிசயமானவர், அன்பானவர், உண்மையுள்ளவர் என்பதைக் கண்டபின் எழுந்த பயபக்தியின் காரணமாகவும் யோபு மகிழ்ச்சியாக இருந்தான். யோபு எந்த துன்பமும் இல்லாமல் மரணத்தை எதிர்கொள்ள முடிந்தது, ஏனென்றால் இறக்கும்போது, அவன் சிருஷ்டிகருடைய பக்கம் திரும்புவான் என்று அவன் அறிந்திருந்தான். ஜீவிதத்தில் அவனது நோக்கங்கள் மற்றும் ஆதாயங்களே அவனை மரணத்தை அமைதியாக எதிர்கொள்ள அனுமதித்தன, சிருஷ்டிகர் தனது ஜீவிதத்தை அமைதியாக திரும்பப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை எதிர்கொள்ள அனுமதித்தன மற்றும் சிருஷ்டிகருக்கு முன்பாக அவ பரிசுத்தமானவனாகவும் கவலையற்றவனாகவும் நிற்க அனுமதித்தன. யோபு பெற்ற மகிழ்ச்சியை ஜனங்கள் தற்போது அடைய முடியுமா? அவ்வாறு செய்வதற்குத் தேவையான நிபந்தனைகள் உங்களிடம் உள்ளதா? தற்பொது ஜனங்களிடம் இந்த நிபந்தனைகள் இருந்தும், யோபுவைப் போல அவர்களால் ஏன் மகிழ்ச்சியுடன் ஜீவிக்க முடியவில்லை? மரண பயத்தின் துன்பத்திலிருந்து அவர்களால் ஏன் தப்பமுடியவில்லை? மரணத்தை எதிர்கொள்ளும்போது, சிலர் கட்டுப்பாடில்லாமல் சிறுநீர் கழிக்கிறார்கள்; மற்றவர்கள் நடுங்குகிறார்கள், மயங்குகிறார்கள், பரலோகத்திற்கும் மனிதனுக்கும் எதிராக ஒரே மாதிரியாக அரற்றுகிறார்கள்; சிலர் ஓலமிடுகிறார்கள், கதறி அழுகிறார்கள். இவை எந்த வகையிலும் மரணம் நெருங்கும் போது திடீரென ஏற்படும் இயற்கை எதிர்வினைகள் அல்ல. ஜனங்கள் இந்தச் சங்கடமான வழிகளில் நடந்து கொள்வதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், இருதயத்தில் ஆழமாக, அவர்கள் மரணத்திற்குப் பயப்படுகிறார்கள், ஏனென்றால் தேவனுடைய ராஜரீகம் மற்றும் அவருடைய ஏற்பாடுகள் பற்றிய தெளிவான அறிவும் உணர்வும் அவர்களுக்கு இல்லை, உண்மையாகவே அவற்றுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். ஜனங்கள் இந்த வழியில் நடந்து கொள்கிறார்கள், ஏனென்றால் எல்லாவற்றையும் தாங்களாகவே ஒழுங்குபடுத்தி நிர்வகிக்க வேண்டும் என்றும், தங்களது சொந்த விதிகளையும், தங்களது ஜீவிதத்தையும், மரணங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். ஆகவே, ஜனங்கள் ஒருபோதும் மரணபயத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்றால், அது ஆச்சரியமில்லை.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 133

சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே ஒருவர் சிருஷ்டிகரிடம் மீண்டும் செல்லமுடியும்

தேவனுடைய ராஜரீகம் மற்றும் அவருடைய ஏற்பாடுகள் பற்றிய தெளிவான அறிவும் அனுபவமும் ஒருவரிடம் இல்லாதபோது, அவருடைய விதி மற்றும் மரணம் பற்றிய அறிவு நிச்சயமாகப் பொருத்தமற்றதாக இருக்கும். எல்லாம் தேவனுடைய உள்ளங்கையில் உள்ளது என்பதை ஜனங்கள் தெளிவாகக் காண முடியாது, அனைத்துமே தேவனுடைய கட்டுப்பாட்டிற்கும் ராஜரீகத்துக்கும் உட்பட்டவை என்பதை உணர இயலாது, மனிதனால் அத்தகைய ராஜரீகத்தை விட்டு வெளியேறவோ தப்பிக்கவோ முடியாது என்பதை உணரவும் இயலாது. இந்தக் காரணத்திற்காக, அவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் நேரம் வரும்போது, அவர்களுடைய கடைசி வார்த்தைகளுக்கும், கவலைகளுக்கும், வருத்தங்களுக்கும் முடிவே இருக்காது. அவர்கள் மிகுதியான சுமைகளால், தயக்கங்களால், குழப்பங்களால் நிறைந்திருகிறார்கள். இதனால் அவர்கள் மரணத்திற்கு அஞ்சுகிறார்கள். இந்த உலகில் பிறந்த எந்தவொரு நபருக்கும், பிறப்பு அவசியமாகும் மற்றும் மரணம் தவிர்க்க முடியாததாகும்; இந்த விஷயங்களுக்கு மேலாக எவரும் உயர முடியாது. ஒருவர் வலியின்றி இந்த உலகத்திலிருந்து விடைப்பெற விரும்பினால், ஒருவர் தயக்கமோ கவலையோ இல்லாமல் ஜீவிதத்தின் இறுதிச் சூழ்நிலையை எதிர்கொள்ள விரும்பினால், எந்த விசனமும் இல்லாமல் இருப்பதுதான் ஒரே வழி. விசனமின்றி புறப்படுவதற்கான ஒரே வழி, சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்து கொள்வது, அவருடைய அதிகாரத்தை அறிந்து கொள்வது, அவற்றிற்குக் கீழ்ப்படிவது ஆகியனவாகும். இந்த வழியில் மட்டுமே ஒருவர் மனித சச்சரவிலிருந்து, தீமையிலிருந்து, சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விலகி இருக்க முடியும். இந்த வழியில் மட்டுமே ஒருவர் யோபுவைப் போன்ற ஒரு ஜீவிதத்தை ஜீவிக்க முடியும், சிருஷ்டிகரால் வழிநடத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் விடுவிக்கப்பட்ட ஜீவிதத்தை, மதிப்புமிக்க மற்றும் அர்த்தமுள்ள ஜீவிதத்தை, நேர்மையான மற்றும் திறந்த மனதுடன்கூடிய ஜீவிதத்தை ஜீவிக்க முடியும். இந்த வழியில் மட்டுமே, யோபுவைப் போல, சிருஷ்டிகருடைய சோதனைகளுக்கும், பறித்தலுக்கும், சிருஷ்டிகருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய முடியும். இந்த வழியில் மட்டுமே ஒருவர் சிருஷ்டிகரை ஜீவகாலம் முழுவதும் வணங்குவார், யோபுவைப் போல, அவருடைய புகழ்ச்சியையும் பெற முடியும், அவருடைய குரலைக் கேட்கவும், அவர் தோன்றுவதைக் காணவும் முடியும். இந்த வழியில் மட்டுமே ஒருவர் யோபுவைப் போல, வேதனையோ, கவலையோ, வருத்தமோ இல்லாமல் மகிழ்ச்சியுடன் ஜீவிக்கவும் மரிக்கவும் முடியும். இந்த வழியில் மட்டுமே ஒருவர் யோபுவைப் போல, வெளிச்சத்தில் ஜீவிக்க முடியும் மற்றும் ஜீவிதத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வெளிச்சத்தில் கடந்து செல்ல முடியும், ஒருவருடைய பயணத்தை வெளிச்சத்தில் சுமுகமாக முடிக்க முடியும், ஒருவருடைய பணியை ஜெயமாக முடிக்க முடியும், சிருஷ்டிக்கப்பட்ட ஒருவராக சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அனுபவிக்கவும், கற்றுக் கொள்ளவும், அறிந்து கொள்ளவும் முடியும். மேலும், வெளிச்சத்தில் மரிக்கவும், சிருஷ்டிகருடைய பக்கத்தில் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக என்றென்றும் நிற்கவும், அவரால் புகழப்படவும் முடியும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 134

சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்து கொள்வதற்கான நல்வாய்ப்பை இழக்காதீர்கள்

ஒரு மனித ஜீவிதத்தை உருவாக்கும் பல தசாப்தங்களானது நீண்டதாகவோ குறுகியதாகவோ இல்லை. பிறப்புக்கும் வயதுக்கு வருவதற்கும் இடையிலான இருபது ஒற்றைப்படை ஆண்டுகள் கண்சிமிட்டும் நேரத்தில் கடந்து செல்கின்றன, ஜீவிதத்தின் இந்தக் கட்டத்தில் ஒரு நபர் வயது வந்தவராக கருதப்பட்டாலும், இந்த வயதினருக்கு மனித ஜீவிதம் மற்றும் மனித விதியைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் அதிக அனுபவத்தைப் பெறும்போது, அவர்கள் படிப்படியாக நடுத்தர வயதிற்குள் நுழைகிறார்கள். முப்பது மற்றும் நாற்பது வயதுகளில் உள்ளவர்கள், ஜீவிதம் மற்றும் விதியின் ஒரு புதிய அனுபவத்தைப் பெறுகிறார்கள். ஆனால், இந்த விஷயங்களைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்கள் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளன. தேவன் உருவாக்கிய மனிதகுலத்தையும், பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ளவும், மனித ஜீவிதம் எதைப் பற்றியது, மனித விதி என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும், சிலர் நாற்பது வயதுவரை முயற்சிப்பது இல்லை. சிலர் நீண்ட காலமாக தேவனைப் பின்பற்றுபவர்களாகவும், தற்போது நடுத்தர வயதினராகவும் இருக்கையிலும், இன்னும் அவர்களால் தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய துல்லியமான அறிவையும் வரையறையையும் கொண்டிருக்க முடிவதில்லை, உண்மையானக் கீழ்ப்படிதலும் அவர்களிடம் இல்லை. சிலர் ஆசீர்வாதங்களைப் பெறுவதைத் தவிர வேறொன்றையும் கவனிப்பதில்லை, அவர்கள் பல ஆண்டுகளாக ஜீவித்திருந்தாலும், மனித விதியின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய உண்மையை அவர்கள் சிறிதளவிலும் அறிந்திருக்கவில்லை அல்லது புரிந்திருக்கவில்லை மற்றும் தேவனுடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதற்கான மிகச் சிறிய அடிகூட நடைமுறையில் எடுத்து வைக்கவில்லை. அத்தகையவர்கள் முற்றிலும் முட்டாள்கள், அவர்களுடைய ஜீவிதம் வீணாக ஜீவிக்கப்படுகிறது.

ஒரு மனித ஜீவிதத்தின் காலங்கள், ஜனங்களின் ஜீவிதத்தினுடைய அனுபவம் மற்றும் மனித விதியைப் பற்றிய அறிவின்படி பிரிக்கப்பட்டால், அவை தோராயமாக மூன்று கட்டங்களாக பிரிக்கப்படலாம். முதல் கட்டமானது இளமை, அதாவது பிறப்புக்கும் நடுத்தர வயதுக்கும் இடையிலான ஆண்டுகள், அல்லது பிறப்பு முதல் முப்பது வயது வரை. இரண்டாவது கட்டம் முதிர்ச்சி, நடுத்தர வயது முதல் முதுமை வரை, அல்லது முப்பது முதல் அறுபது வயது வரை. மூன்றாம் கட்டம் ஒருவருடைய முதிர்ந்த காலம். இது அறுபது வயதில், முதுமையின் தொடக்கத்தோடு தொடங்கி, ஒருவர் உலகத்திலிருந்து புறப்படும்வரை நீடிக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிறப்பு முதல் நடுத்தர வயது வரை, விதியையும் ஜீவிதத்தையும் பற்றிய பெரும்பாலான ஜனங்களின் அறிவு, மற்றவர்களின் கருத்துக்களைப் பின்பற்றுவதில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் உண்மையான நடைமுறை சாராம்சம் எதுவும் இல்லை. இந்த காலகட்டத்தில், ஒருவருடைய ஜீவிதத்தைப் பற்றிய கண்ணோட்டமும், உலகில் ஒருவர் எவ்வாறு தன் வழியை உருவாக்குகிறார் என்பதை பற்றிய கண்ணோட்டமும் மிகவும் மேலோட்டமாகவும் அனுபவமற்றும் இருக்கின்றன. இது ஒருவருடைய இளமைக் காலமாகும். ஜீவிதத்தின் எல்லா சந்தோஷங்களையும் துக்கங்களையும் ஒருவர் ருசித்த பின்னரே ஒருவர் விதியைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெறுகிறார் மற்றும்—ஒருவருடைய உணர்விற்கு அப்பாற்பட்டு, ஒருவருடைய ஆழ்மனதில்—படிப்படியாக விதியின் மீளமுடியாத தன்மையை உணர்கிறார். மேலும், மனிதவிதியின் மீது சிருஷ்டிகருடைய ராஜரீகம் உண்மையிலேயே உள்ளது என்பதையும் மெதுவாக உணர்கிறார். இது ஒருவருடைய முதிர்ச்சியின் காலமாகும். ஒரு நபர் விதியை எதிர்த்துப் போராடுவதை நிறுத்திவிடும்போது, அவர் சச்சரவுகளுக்குள் தலையிடத் தயாராக இல்லாதபோது, முதிர்ச்சியடைந்த காலத்திற்குள் நுழைகிறார். மேலும், அதற்குப் பதிலாக, அவர் ஜீவிதத்தில் நிறைய விஷயங்களை அறிந்திருக்கிறார், பரலோக விருப்பத்திற்கு ஒப்புவிக்கிறார், ஜீவிதத்தில் அவர்கள் செய்த சாதனைகள் மற்றும் தவறுகளைச் சுருக்கமாகக் கூறுகிறார் மற்றும் அவர்களுடைய ஜீவிதத்துக்கான சிருஷ்டிகருடைய நியாயத்தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார். இந்த மூன்று காலகட்டங்களில் ஜனங்கள் பெற்ற வெவ்வேறு அனுபவங்கள் மற்றும் கையகப்படுத்தியவற்றை கருத்தில் கொள்ளும் போது, சாதாரண சூழ்நிலைகளில், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிவதற்கான ஒருவருடைய நல்வாய்ப்பின் வழி பெரிதல்ல. ஒருவர் அறுபது வயது வரை ஜீவித்தால், தேவனுடைய ராஜரீகத்தை அறிந்து கொள்ள அவருக்கு முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் மட்டுமே உள்ளது; ஒருவர் நீண்டகாலம் ஜீவித்திருக்க விரும்பினால், அவருடைய ஜீவிதம் நீண்டகாலம் நீடித்தால் மட்டுமே, அவர் ஒரு நூற்றாண்டு காலம் ஜீவிக்க முடிந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகவே, மனித ஜீவிதத்திற்கான சாதாரண விதிகளின்படி, சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றி அறிந்துகொள்வது முதல், அந்த ராஜரீகத்தின் உண்மையை ஒருவர் அடையாளம் காணும் காலம் வரை, பிறகு, அடையாளம் கண்ட காலம் முதல் ஒருவர் அதற்கு கீழ்ப்படியும் காலம் வரை, மிக நீண்ட செயல்முறை என்றாலும் நான் சொல்கிறேன், ஒருவர் உண்மையில் ஆண்டுகளைக் கணக்கிட்டால், இந்த வெகுமதிகளைப் பெறுவதற்கான நல்வாய்ப்புகளைக் கிட்ட முப்பது அல்லது நாற்பதுக்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகாது. பெரும்பாலும், ஜனங்கள் தங்களது ஆசைகளாலும், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான அவர்களுடைய லட்சியங்களாலும் இழுத்துச் செல்லப்படுகிறார்கள், இதனால் மனித ஜீவிதத்தின் சாராம்சம் எங்குள்ளது என்பதை அவர்களால் அறியமுடியாமல் போகிறது. மேலும், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. மனித ஜீவிதத்தையும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தையும் அனுபவிப்பதற்காக மனித உலகில் நுழைவதற்கான இந்த அருமையான வாய்ப்பை அத்தகைய ஜனங்கள் மதிக்கவில்லை மற்றும் சிருஷ்டிகருடைய தனிப்பட்ட வழிகாட்டுதலை ஒரு சிருஷ்டிக்கப்பட்டவர் பெறுவது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை அவர்கள் உணரவில்லை. ஆகவே, தேவனுடைய கிரியை விரைவாக முடிவடைய வேண்டும் என்று விரும்புபவர்கள், மனிதனின் முடிவை விரைவில் தேவன் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், இதன் மூலம் அவர்கள் அவரை உடனடியாக நேரடியாகக் காணலாம் என்றும், விரைவில் ஆசீர்வாதங்களைப் பெறலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கீழ்ப்படியாத மோசமானக் குற்றவாளிகள். மேலும், பயங்கரமான முட்டாள்கள். இதற்கிடையே, மனிதர்கள் மத்தியில் காணப்படும் ஞானிகளும், மிகுந்த மனக்கூர்மையைக் கொண்டவர்களும், தங்களுக்கானக் குறிப்பிட்ட நேரத்தில், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்து கொள்வதற்கான இந்த தனித்துவமான நல்வாய்ப்பைப் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த இரண்டு வெவ்வேறு ஆசைகள் இரண்டு மாறுபட்ட கண்ணோட்டங்களையும் நோக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன: ஆசீர்வாதங்களைத் தேடுபவர்கள் சுயநலவாதிகளும், இழிவானவர்களும் ஆவர். அவர்கள் தேவனுடைய சித்தத்தை கருத்தில் கொள்ளாதவர்கள். அவர்கள் ஒருபோதும் தேவனுடைய ராஜரீகத்தை அறிய முற்படுவதில்லை, ஒருபோதும் அதற்குக் கீழ்ப்படியவும் விரும்புவதில்லை. ஆனால் அவர்கள் இஷ்டம்போல வாழ விரும்புகிறார்கள். அவர்கள் வெறுக்கத்தக்கவர்கள் மற்றும் இந்த வகையான ஜனங்கள் தான் அழிக்கப்படுவார்கள். தேவனை அறிய முற்படுபவர்களால் தங்களது ஆசைகளை ஒதுக்கி வைக்க முடிகிறது, அவர்கள் தேவனுடைய ராஜரீகத்துக்கும் தேவனுடைய ஏற்பாட்டிற்கும் கீழ்ப்படிய தயாராக இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் நபர்களாக இருக்க முயற்சிக்கிறார்கள். அத்தகையவர்கள் வெளிச்சத்திலும் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு மத்தியிலும் ஜீவிக்கிறார்கள், அவர்கள் நிச்சயமாக தேவனால் புகழப்படுவார்கள். எதுவாக இருந்தாலும், மனிதனுடைய தேர்வு பயனற்றது, தேவனுடைய கிரியை எவ்வளவு காலம் செல்லும் என்று மனிதர்களால் எதுவும் சொல்லமுடியாது. ஜனங்கள் தேவனுடைய திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அவருடைய ராஜரீகத்துக்குக் கிழ்ப்படிவது நல்லது. அவருடைய திட்டத்தில் நீ ஈடுபடவில்லை என்றால், நீ என்ன செய்யமுடியும்? இதன் விளைவாக தேவன் எதையேனும் இழப்பாரா? அவருடைய திட்டத்தில் நீ உன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல், அதற்குப் பதிலாக நீயே உன்னை பொறுப்பில் வைக்க முயற்சித்தால், நீ ஒரு முட்டாள்தனமான தேர்வை செய்கிறாய், இறுதியில் நீ மட்டுமே இழப்பைச் சந்திப்பாய். ஜனங்கள் விரைவில் தேவனுடன் ஒத்துழைத்தால் மட்டுமே, அவருடைய திட்டங்களை ஏற்றுக் கொள்வதற்கும், அவருடைய அதிகாரத்தை அறிந்து கொள்வதற்கும், அவர்களுக்காக அவர் செய்த அனைத்தையும் புரிந்து கொள்வதற்கும் அவர்கள் விரைந்து சென்றால் மட்டுமே, அவர்களுக்கு நன்மை இருக்கும். இந்த வழியில் மட்டுமே அவர்களுடைய ஜீவிதம் வீணாக ஜீவிக்கப்படாமல், அவர்கள் இரட்சிப்பை அடைவார்கள்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 135

மனித விதியின் மீது தேவன் ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை யாராலும் மாற்ற முடியாது

தேவனுடைய அதிகாரத்தின் கீழ், ஒவ்வொரு நபரும் அவருடைய ராஜரீகத்தையும் அவருடைய ஏற்பாடுகளையும் தீவிரமாக அல்லது செயலற்ற முறையில் ஏற்றுக்கொள்கிறார்கள், ஒருவருடைய ஜீவிதத்தின் போக்கில் ஒருவர் எவ்வளவு சிரமப்பட்டாலும், எத்தனை கோணலான பாதைகளில் நடந்தாலும், இறுதியில் சிருஷ்டிகர் அவர்களுக்காகக் கண்டுபிடித்து வைத்த விதியின் சுற்றுப்பாதைக்கு அவர்கள் திரும்புவார்கள். இது சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் ஜெயிக்க முடியாத வல்லமை மற்றும் அவரது அதிகாரம் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும் முறையும் ஆகும். இவ்வாறு கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும், அதாவது அனைத்து ஜீவிதங்களையும் ஆணையிடும் விதிகளுக்குக் காரணமான ஜெயிக்க முடியாத வல்லமை, மனிதர்களை குறுக்கீடு இல்லாமல் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்க அனுமதிக்கிறது, நாள்தோறும், ஆண்டுதோறும், உலகத்தைத் தவறாமல் சுழன்று முன்னேறச் செய்கிறது. இந்த உண்மைகள் அனைத்தையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள், அவற்றை மேலோட்டமாகவோ அல்லது ஆழமாகவோ புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் உங்கள் புரிதலின் ஆழமானது, சத்தியத்தைப் பற்றிய உங்கள் அனுபவத்தையும் அறிவையும், தேவனைப் பற்றிய உங்கள் அறிவையும் சார்ந்துள்ளது. சத்தியத்தின் உண்மையை நீ எவ்வளவு நன்றாக அறிவாய், தேவனுடைய வார்த்தைகளை நீ எவ்வளவு அனுபவித்திருக்கிறாய், தேவனுடைய சாராம்சம் மற்றும் மனநிலையை நீ எவ்வளவு நன்கு அறிந்துள்ளாய் என இவை அனைத்தும் தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகள் பற்றிய உன் புரிதலின் ஆழத்தைப் பிரதிபலிக்கின்றன. தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளின் இருப்பானது, மனிதர்கள் அவற்றிற்கு கீழ்ப்படிகின்றனரா இல்லையா என்பதைப் பொறுத்ததா? இந்த அதிகாரத்தை தேவன் வைத்திருக்கிறார் என்ற உண்மையானது, மனிதகுலம் அதற்குக் கீழ்ப்படிந்ததா இல்லையா என்பதால் தீர்மானிக்கப்படுகிறதா? சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய அதிகாரம் உள்ளது. எல்லா சூழ்நிலைகளிலும், தேவன் ஒவ்வொரு மனித விதியையும், எல்லாவற்றையும் அவருடைய எண்ணங்களுக்கும் அவருடைய சித்தங்களுக்கும் ஏற்ப ஆணையிடுகிறார், ஏற்பாடு செய்கிறார். மனித மாற்றத்தின் விளைவாக இது மாறாது; இது மனிதனின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டது. மேலும், நேரம், இடம் மற்றும் புவியியல் ஆகியவற்றில் நிகழும் எந்த மாற்றங்களாலும் இதை மாற்ற முடியாது. ஏனென்றால், தேவனுடைய அதிகாரமே அவருடைய சாராம்சம் ஆகும். தேவனுடைய ராஜரீகத்தை மனிதனால் அறியவும் ஏற்றுக் கொள்ளவும் முடியுமா, மனிதனால் அதற்குக் கீழ்ப்படிய முடியுமா என்பதுமாகிய இந்த உண்மைகளில் எதுவுமே மனித விதியின் மீதுள்ள தேவனுடைய ராஜரீகத்தைச் சிறிதளவுக்கூட மாற்றாது. அதாவது, தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றி மனிதன் எந்த அணுகுமுறையை எடுத்துக்கொண்டாலும், மனித விதி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை மாற்ற முடியாது. நீ தேவனுடைய ராஜரீகத்துக்குக் கீழ்ப்படியவில்லை என்றாலும், அவர் உன் தலைவிதியைக் கட்டளையிடுகிறார்; அவருடைய ராஜரீகத்தை நீ அறிய முடியாவிட்டாலும், அவருடைய அதிகாரம் இன்னும் உள்ளது. தேவனுடைய அதிகாரம் மற்றும் மனித விதியின் மீதுள்ள தேவனுடைய ராஜரீகத்தின் உண்மை ஆகியவை மனித விருப்பத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் மனிதனின் விருப்பங்களுக்கும் தேர்வுகளுக்கும் ஏற்ப மாறாது. தேவனுடைய அதிகாரம் எல்லா இடங்களிலும், ஒவ்வொரு மணிநேரத்திலும், ஒவ்வொரு நொடியிலும் உள்ளது. வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் அவருடைய அதிகாரம் ஒருபோதும் ஒழியாது, ஏனென்றால் அவர் தான் தேவன், அவருக்கு தனித்துவமான அதிகாரம் உண்டு, அவருடைய அதிகாரம் ஜனங்கள், நிகழ்வுகள் அல்லது விஷயங்களால், விண்வெளி அல்லது புவியியலால் கட்டுப்படுத்தப்படவில்லை அல்லது வரையறுக்கப்படவில்லை. எப்பொழுதும் இருப்பதைப்போலவே, எல்லா நேரங்களிலும், தேவன் தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார், அவருடைய வல்லமையைக் காட்டுகிறார், அவருடைய ஆளுகைப் பணிகளையும் தொடர்கிறார்; அவர் எப்போதும் இருப்பதைப் போலவே, எல்லா நேரங்களிலும், எல்லாவற்றையும் அவர் ஆளுகிறார், எல்லாவற்றிற்கும் வழங்குகிறார், எல்லாவற்றையும் திட்டமிடுகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. இது உண்மை; பழங்காலத்தில் இருந்து மாறாத உண்மையாக இது இருக்கிறது!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 136

தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய விரும்பும் ஒருவருக்கான சரியான மனப்பான்மை மற்றும் பயிற்சி

தேவனுடைய அதிகாரம் மற்றும் மனித விதியின் மீது தேவனுடைய ராஜரீகத்தின் உண்மை ஆகியவற்றை மனிதன் இப்போது எந்த மனப்பான்மையுடன் அறிந்து கொள்ள மற்றும் கருத வேண்டும்? இது ஒவ்வொரு நபருக்கும் முன்னால் நிற்கும் ஒரு உண்மையான பிரச்சனை. அன்றாட ஜீவித சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, தேவனுடைய அதிகாரத்தையும் அவருடைய ராஜரீகத்தையும் நீ எவ்வாறு அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்? இந்த சிக்கல்களை நீ எதிர்கொள்ளும் போது, அவற்றைப் புரிந்துகொள்வது, கையாள்வது மற்றும் அனுபவிப்பது எப்படி என்று தெரியாத போது, தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளுக்கு நீ கீழ்ப்படிவதற்கான உன் நோக்கத்தை, விருப்பத்தை மற்றும் கீழ்ப்படிவதன் யதார்த்தத்தை நிரூபிக்க நீ என்ன மனப்பான்மையைப் பின்பற்றவேண்டும்? முதலில் நீ காத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும்; பிறகு நீ தேட கற்றுக் கொள்ள வேண்டும்; அதன் பின் நீ கீழ்ப்படிய கற்றுக் கொள்ள வேண்டும். “காத்திருத்தல்” என்பது தேவனுடைய நேரத்திற்காகக் காத்திருத்தல், அவர் உனக்காக ஏற்பாடு செய்துள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களுக்காகக் காத்திருத்தல், அவருடைய விருப்பம் படிப்படியாக உனக்கு வெளிப்படும்வரை காத்திருத்தல் என்பதாகும். “தேடுவது” என்பது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவர் வகுத்துள்ள விஷயங்கள் ஆகியவற்றின் மூலம் உனக்காக தேவனுடைய சிந்தனை மிகுந்த நோக்கங்களைக் கவனித்து புரிந்து கொள்வது, அவற்றின் மூலம் சத்தியத்தைப் புரிந்து கொள்வது, மனிதர்கள் எதைச் சாதிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகளையும் புரிந்து கொள்வது, தேவன் மனிதர்களில் எத்தகைய முடிவுகளை அடைய மற்றும் அவர்களில் எத்தகைய சாதனைகளை அடைய எண்ணுகிறார் என்பதையும் புரிந்து கொள்வதாகும். “கீழ்ப்படிதல்” என்பது, தேவன் திட்டமிட்டுள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களை ஏற்றுக் கொள்வது, அவருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொள்வது மற்றும் அதன் மூலம், சிருஷ்டிகர் மனிதனின் தலைவிதியை எவ்வாறு ஆணையிடுகிறார், அவர் தன் ஜீவினைக் கொண்டு மனிதனுக்கு எவ்வாறு வழங்குகிறார், அவர் மனிதனுக்குள் எவ்வாறு சத்தியத்தைச் செயல்படுத்துகிறார் ஆகியவற்றை அறிந்து கொள்வதைக் குறிக்கிறது. தேவனுடைய ஏற்பாடுகள் மற்றும் ராஜரீகத்தின்கீழ் உள்ள அனைத்தும் இயற்கையான விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன. மேலும், உனக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கட்டளையிட தேவனை அனுமதிக்க நீ தீர்மானித்தால், நீ காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், நீ தேட கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் நீ கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளவேண்டும். தேவனுடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிய விரும்பும் ஒவ்வொரு நபரும் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை இதுதான், தேவனுடைய ராஜரீகத்தையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு நபரும் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை குணம் இதுதான். அத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்க, அத்தகைய குணத்தைக் கொண்டிருக்க, நீ கடினமாக உழைக்கவேண்டும். உண்மையான யதார்த்தத்திற்குள் நீ நுழைவதற்கு ஒரே வழி இதுதான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 137

தேவனை உன் தனித்துவமான எஜமானராக ஏற்றுக் கொள்வது இரட்சிப்பை அடைவதற்கான முதல் படியாகும்

தேவனுடைய அதிகாரம் தொடர்பான சத்தியங்கள் ஒவ்வொரு நபரும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டிய, அனுபவிக்க வேண்டிய மற்றும் அவர்களுடைய இருதயத்துடன் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளாகும்; இந்த உண்மைகள் ஒவ்வொரு நபருடைய ஜீவிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; ஒவ்வொரு நபருடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; ஒவ்வொரு நபரும் ஜீவிதத்தில் கடந்து செல்ல வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களில்; தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய மனிதனின் அறிவு மற்றும் தேவனுடைய அதிகாரத்தை ஒருவர் எதிர்கொள்ளவேண்டிய மனப்பான்மையில்; மேலும் இயற்கையாகவே, ஒவ்வொரு நபரும் சென்று சேர்கின்ற இறுதியான இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் ஜீவ காலம் முழுமைக்குமான ஆற்றல் தேவை. தேவனுடைய அதிகாரத்தை நீ சரியாகப் பார்க்கும்போது, அவருடைய ராஜரீகத்தை நீ ஏற்றுக்கொள்ளும்போது, தேவனுடைய அதிகாரம் இருப்பதன் உண்மையை நீ படிப்படியாக உணர்ந்து புரிந்துக் கொள்வாய். ஆனால் நீ ஒருபோதும் தேவனுடைய அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை, அவருடைய ராஜரீகத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீ எத்தனை ஆண்டுகள் ஜீவித்தாலும், தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய சிறிதளவு அறிவையும் பெறமாட்டாய். தேவனுடைய அதிகாரத்தை நீ உண்மையிலேயே அறிந்திருக்கவில்லை, புரிந்து கொள்ளவில்லை என்றால், நீ ஜீவ பாதையின் முடிவை எட்டும்போது, நீ பல தசாப்தங்களாக தேவனை விசுவாசித்தாலும், உன் ஜீவிதத்துக்காக நீ காண்பிக்க எதுவும் இருக்காது, இயற்கையாகவே மனித விதியின் மீதுள்ள தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றி உனக்குச் சிறிதளவிலும் அறிவும் இருக்காது. இது மிகவும் துக்கமான விஷயம் அல்லவா? எனவே, நீ ஜீவிதத்தில் எவ்வளவு தூரம் நடந்து வந்தாலும், இப்போது உனக்கு எவ்வளவு வயதாகி இருந்தாலும், உன் பயணத்தின் எஞ்சிய காலம் எவ்வளவாக இருந்தாலும், முதலில் நீ தேவனுடைய அதிகாரத்தை அங்கீகரித்து அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தேவன் உனக்கே உனக்கான தனித்துவமான எஜமானர் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மனித விதியின் மீதான தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய இந்த சத்தியங்களைப் பற்றிய தெளிவான, துல்லியமான அறிவையும் புரிதலையும் பெறுவது அனைவருக்குமான கட்டாயப் பாடமாகும்; இது மனித ஜீவிதத்தை அறிந்து கொள்வதற்கும் சத்தியத்தை அடைவதற்கும் முக்கியமாகும். தேவனை அறிந்து கொள்வதற்கான ஜீவிதமானது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளவேண்டிய, யாரும் தவிர்க்க முடியாத, அடிப்படை கல்வி ஆகும். இந்த இலக்கை அடைய யாராவது குறுக்கு வழிகளை எடுக்க விரும்பினால், நான் இப்போது உனக்கு சொல்கிறேன், அது சாத்தியமற்றது! நீ தேவனுடைய ராஜரீகத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், அதுவும் சாத்தியமற்றது! தேவன் மனிதனின் ஒரே கர்த்தர், தேவன் மட்டுமே மனித விதியின் எஜமானர். எனவே, மனிதன் தனது சொந்த விதியை ஆணையிடுவது சாத்தியமில்லாதது, தனது விதிக்கு அப்பால் காலடி எடுத்து வைப்பதும் சாத்தியமில்லாதது. ஒருவருடைய திறமைகள் எவ்வளவு பெரியவையாக இருந்தாலும், மற்றவர்களின் தலைவிதிகளை அவர் பாதிக்க முடியாது, திட்டமிடவோ, ஏற்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ அல்லது மாற்றவோ முடியாது. தனித்துவமான தேவன் மட்டுமே மனிதனுக்காக எல்லாவற்றையும் ஆணையிடுகிறார். ஏனென்றால் தனித்துவமான தேவன் மட்டுமே மனித விதியின் மீதான ராஜரீகத்தைக் கொண்டிருக்கும் தனித்துவமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார், சிருஷ்டிகர் மட்டுமே மனிதனின் தனித்துவமான எஜமானர். தேவனுடைய அதிகாரம் சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் மீது மட்டுமல்ல, எந்தவொரு மனிதனும் பார்த்திராத, உருவாக்கப்படாத ஜீவன்கள் மீதும், நட்சத்திரங்கள் மீதும், பிரபஞ்சத்தின் மீதும் ராஜரீகத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு மறுக்கமுடியாத உண்மை, உண்மையாகவே இருக்கும் ஒரு உண்மை, எந்தவொரு நபரும் அல்லது விஷயமும் மாற்ற முடியாத ஒன்றாகும். இன்னும், உங்களில் ஒருவர், இந்த நிலையில் உள்ள விஷயங்கள் குறித்து அதிருப்தி அடைந்தால், உங்களுக்கு சில சிறப்புத் திறமை அல்லது திறன் இருப்பதாக நம்பினால் மற்றும் அதிர்ஷ்டத்தால் தங்களது தற்போதைய சூழ்நிலைகளை மாற்றலாம் அல்லது அவற்றிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தால்; மனித முயற்சியின் மூலம் தங்களது சொந்த விதியை மாற்ற முயற்சித்தால், அதன் மூலம் தங்களது கூட்டாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி புகழ்ச்சி மற்றும் செல்வத்தை ஜெயிக்க நினைத்தால்; பின்னர் நான் உனக்குச் சொல்கிறேன், நீயே விஷயங்களைக் கடினமாக்குகிறாய், நீ பிரச்சனையை மட்டுமே உருவாக்குகிறாய், நீ உன் சொந்த கல்லறையைத் தோண்டிக் கொண்டிருக்கிறாய்! உடனடியாகவோ அல்லது பின்னரோ, ஒரு நாள், நீ தவறான தேர்வு செய்துள்ளாய், உன் முயற்சிகள் வீணாகி விட்டன என்பதைக் கண்டு கொள்வாய். உன் லட்சியம், விதியை எதிர்த்துப் போராடுவதற்கான உன் விருப்பம் மற்றும் உன் சொந்த அருவருப்பான நடத்தை ஆகியவை உன்னைத் திரும்ப முடியாத பாதையில் இட்டுச் செல்லும். இதற்காக ஒரு கசப்பான விலையை நீ செலுத்துவாய். பின்விளைவுகளின் தீவிரத்தை நீ தற்போது காணவில்லை என்றாலும், தேவன் மனித விதியின் எஜமானர் என்ற சத்தியத்தை நீ தொடர்ந்து அனுபவித்து, ஆழமாக உணர்கையில், இன்று நான் பேசுவதையும் அதன் உண்மையான தாக்கங்களையும் நீ மெதுவாக அறிந்து கொள்வாய். உன்னிடம் உண்மையிலேயே ஒரு இருதயமும் ஆவியும் இருக்கிறதா இல்லையா, நீ சத்தியத்தை நேசிக்கும் ஒரு நபரா இல்லையா என்பதெல்லம், தேவனுடைய ராஜரீகத்தையும் சத்தியத்தையும் குறித்து நீ எத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்கிறாய் என்பதைப் பொறுத்தது. இயற்கையாகவே, தேவனுடைய அதிகாரத்தை நீ உண்மையிலேயே அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியுமா என்பதை இது தீர்மானிக்கிறது. தேவனுடைய ராஜரீகத்தையும் அவருடைய ஏற்பாடுகளையும் உன் வாழ்வில் நீ ஒருபோதும் உணரவில்லை என்றால், தேவனுடைய அதிகாரத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நீ முற்றிலும் பயனற்றவனாக இருப்பாய் மற்றும் நீ மேற்கொண்ட பாதை மற்றும் நீ செய்த தேர்வு ஆகியவற்றின் காரணமாக, தேவனுடைய வெறுப்பு மற்றும் நிராகரிப்பின் பொருளாக நீ இருப்பாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தேவனுடைய கிரியையில், அவருடைய சோதனையை ஏற்றுக் கொள்பவர்களும், அவருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொள்பவர்களும், அவருடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிகிறவர்களும் மற்றும் படிப்படியாக அவருடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்தைப் பெறுபவர்களும், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுவார்கள், அவருடைய ராஜரீகத்தைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெறுவார்கள் மற்றும் அவர்கள் உண்மையிலேயே சிருஷ்டிகருக்கு கீழ்ப்படிந்திருப்பார்கள். அத்தகையவர்கள் மட்டுமே உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். அத்தகையவர்கள் மட்டுமே உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். தேவனுடைய ராஜரீகத்தை அவர்கள் அறிந்திருப்பதால், அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதால், மனித விதியின் மீது தேவனுடைய ராஜரீகத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதும், அதற்குக் கீழ்ப்படிந்திருப்பதும் உண்மையானது மற்றும் துல்லியமானது. அவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும்போது, அவர்கள் யோபுவைப் போலவே, மரணத்தால் ஆட்கொள்ளப்படாத மனம் கொண்டவர்களாக இருப்பார்கள் மற்றும் எல்லாவற்றிலும் தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும், எந்தவொரு தனிப்பட்ட தேர்வு இல்லாமலும் தனிப்பட்ட விருப்பம் இல்லாமலும் கீழ்ப்படிவார்கள். அத்தகைய நபர் மட்டுமே உண்மையான, சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக சிருஷ்டிகரிடம் மீண்டும் செல்ல முடியும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 138

மனிதனுக்கு யேகோவா தேவனின் கட்டளை

ஆதி. 2:15-17  மனுஷனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்த யோகோவா தேவன், அதனை அவன் உழுது பேணும்படி அவனை அங்கு விட்டு வைத்தார். யோகோவா தேவன் அம்மனுஷனிடம்: தோட்டத்திலிருக்கும் சகல விருட்சங்களின் கனிகளையும் நீ புசிக்கலாம்; நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்காதே, ஏனென்றால் நீ அதைப் புசிக்கும் நாளில் நிச்சயம் மரித்துப்போவாய் என்று கட்டளையிட்டார்.

ஸ்திரீயின் மீது சர்ப்பத்தின் சோதனை

ஆதி. 3:1-5  யேகோவா தேவன் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களில் சர்ப்பம் அதிக தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கக் கூடாது என்று தேவன் எதற்காகக் கூறினார் என்றது. அந்த ஸ்த்ரீ சர்ப்பத்தை நோக்கி: தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனியை நாங்கள் புசிக்கலாம்; ஆனால் தோட்டத்தின் நடுவே இருக்கும் விருட்சத்தின் கனியைப் நீங்கள் மரிக்காதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். சர்ப்பம் அந்த ஸ்த்ரீயை நோக்கி: நீங்கள் நிச்சயமாகவே சாக மாட்டீர்கள்: ஏனென்றால், நீங்கள் அதைப் புசிக்கும் நாளில், உங்கள் கண்கள் திறக்கப்படும் தேவனைப்போல் நீங்கள் நன்மை தீமை அறிந்திருப்பீர்கள் என்று தேவன் அறிவார் என்றது.

இந்த இரண்டு வசனப் பகுதிகளும் வேதாகமத்தில் உள்ள ஆதியாகமப் புத்தகத்தின் பகுதிகளாகும். இந்த இரண்டு வசனப் பகுதிகளையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆரம்பத்தில் மனிதன் சிருஷ்டிக்கப்பட்டபோது நடந்த நிகழ்வுகளை அவை தொடர்புபடுத்துகின்றன; இந்த நிகழ்வுகள் உண்மையானவை. முதலில், யேகோவா தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என்ன மாதிரியான கட்டளை கொடுத்தார் என்று பார்ப்போம்; இந்த கட்டளையின் உள்ளடக்கம் இன்று நமது தலைப்புக்கு மிகவும் முக்கியமானது. “யோகோவா தேவன் அம்மனுஷனிடம்: தோட்டத்திலிருக்கும் சகல விருட்சங்களின் கனிகளையும் நீ புசிக்கலாம்; நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்காதே, ஏனென்றால் நீ அதைப் புசிக்கும் நாளில் நிச்சயம் மரித்துப்போவாய் என்று கட்டளையிட்டார்.” இந்த பத்தியில் மனிதனுக்கு தேவனின் கட்டளை சொல்வது என்ன? முதலில் தேவன் மனிதனுக்கு என்னவெல்லாம் சாப்பிடலாம் என்று சொல்கிறார், அதாவது பல வகையான மரங்களின் பழங்களைச் சொல்கிறார். எந்த ஆபத்தும் இல்லை, விஷமும் இல்லை; எந்தவொரு கவலையும் சந்தேகமும் இன்றி எல்லாவற்றையும் சாப்பிடலாம், மனிதன் தான் விரும்பியபடி சாப்பிடலாம். இது தேவனுடைய கட்டளையின் ஒரு பகுதியாகும். மற்றொரு பகுதி ஒரு எச்சரிக்கையாகும். நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிப்பது கூடாது என தேவன் மனிதனுக்கு சொல்கிறார். இந்த விருட்சத்தின் கனியை அவன் புசித்தால் என்னவாகும்? நீ அதிலிருந்து புசித்தால் நீ நிச்சயமாக சாவாய். இந்த வார்த்தைகள் நேரடியானவையாக இல்லையா? தேவன் அதை உன்னிடம் சொல்லியிருந்தும், அது ஏன் என்று உனக்குப் புரியவில்லை என்றால், அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய ஒரு சட்டமாக அல்லது கட்டளையாக கருதுவாயா? இத்தகைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆனால் மனிதனால் கீழ்ப்படிய முடிந்தாலும் முடியாவிட்டாலும், தேவனின் வார்த்தைகள் தெளிவானவையாக இருக்கின்றன. மனிதன் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று தேவன் மிகத் தெளிவாகக் கூறினார், அவர் சாப்பிடக்கூடாததை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்றும் கூறினார். தேவன் பேசிய இந்த சுருக்கமான வார்த்தைகளில், தேவனின் மனநிலையை நீங்கள் பார்க்க முடிகிறதா? தேவனின் இந்த வார்த்தைகள் உண்மையானவையா? வஞ்சனை ஏதும் உண்டா? ஏதேனும் பொய் உண்டா? ஏதாவது மிரட்டல் உண்டா? (இல்லை.) தேவன் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று நேர்மையாகவும், உண்மையாகவும், அக்கறையாகவும் மனிதனிடம் சொன்னார். தேவன் தெளிவாகவும் வெளிப்படைவாகவும் பேசினார். இந்த வார்த்தைகளில் மறைக்கப்பட்ட பொருள் ஏதேனும் உள்ளதா? இந்த வார்த்தைகள் நேரடியானவை அல்லவா? அனுமானத்திற்கு ஏதாவது தேவை உள்ளதா? யூக வேலை தேவையில்லை. அவற்றின் பொருள் ஒரே நோக்கில் தெளிவாகத் தெரிகிறது. அவற்றை வாசிக்கும்போது, அவற்றின் அர்த்தத்தைப் பற்றி ஒருவர் தெளிவாக உணர்கிறார். அதாவது, தேவன் என்ன சொல்ல விரும்புகிறார், என்ன வெளிப்படுத்த விரும்புகிறார் என்பது அவருடைய இதயத்திலிருந்து வருகிறது. தேவன் வெளிப்படுத்தும் விஷயங்கள் சுத்தமானவை, நேரடியானவை, தெளிவானவை. இரகசிய நோக்கங்களோ, மறைக்கப்பட்ட அர்த்தங்களோ இல்லை. அவர் மனிதனிடம் நேரடியாக பேசுகிறார், அவர் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார். அதாவது, தேவனின் இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் இதயம் வெளிப்படையானது மற்றும் உண்மையானது என்பதை மனிதன் பார்க்க முடியும். இங்கே பொய்யின் எந்த தடயமும் இல்லை; நீங்கள் உண்ணக்கூடியதை நீ சாப்பிடக்கூடாது என்று உங்களுக்கு சொல்வது அல்லது நீ சாப்பிட முடியாத விஷயங்களுடன் “அதைச் செய்தால் என்ன நடக்கிறது என்று பார்” என்று சொல்வது ஒரு காரியம் அல்ல. இது தேவன் சொல்லும் அர்த்தம் அல்ல. தேவன் தன் இருதயத்தில் என்ன நினைத்தாலும், அதைத்தான் அவர் கூறுகிறார். இந்த வார்த்தைகளுக்குள் தேவன் தன்னைக் காண்பிப்பதாலும் வெளிப்படுத்துவதாலும் தேவன் பரிசுத்தர் என்று நான் சொன்னால், நான் ஒரு மலையை ஒரு மடுவில் இருந்து உருவாக்கியுள்ளேன் அல்லது நான் ஒரு புள்ளியை சற்று தொலைவில் நீட்டியுள்ளேன் என்று நீங்கள் உணரலாம். அப்படியானால், கவலைப்பட வேண்டாம்; நாம் இன்னும் முடிக்கவில்லை.

நாம் இப்போது, “ஸ்திரீயை மயக்கிய சாத்தான்” குறித்து பேசுவோம். யார் சர்ப்பம்? சாத்தான். தேவனின் ஆராயிர வருட ஆளுகைத் திட்டத்தில் பிரதிபலிப்புப் படலம் என்ற பங்கை அது வகிக்கிறது. தேவனுடைய பரிசுத்தத்தன்மை குறித்து நாம் விவாதிக்கும் போது, அந்தப் பங்கைக் குறித்து நாம் குறிப்பிட வேண்டும். நான் ஏன் இதைச் சொல்கிறேன்? நீ சாத்தானின் தீமையையும் சீர்கேட்டையும் குறித்து அறியவில்லை என்றால், நீ சாத்தானின் சுபாவம் குறித்து நீ அறியவில்லை என்றால், உனக்கு பரிசுத்தத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் முடியாது, பரிசுத்தம் என்பது உண்மையில் என்ன என்று நீ தெரிந்துகொள்ளவும் முடியாது. மக்கள் குழப்பத்தில் சாத்தான் செய்வது சரி என்று நம்புகிறார்கள், ஏனென்றால் அவர்களும் இது போன்ற சீர்கேடான மனநிலையில் தான் வாழ்கிறார்கள். பிரதிபலிப்புப் படலம் இல்லாமல், ஒப்பிட கருத்தும் இல்லாமல், பரிசுத்தம் என்ன என்பதை உன்னால் அறிந்துகொள்ள முடியாது. எனவேதான் நாம் இங்கே சாத்தானைப் பற்றி குறிப்பிட வேண்டும். இப்படி குறிப்பிடுவது என்பது வெற்றுப் பேச்சு அல்ல. சாத்தானுடைய சொற்கள் மற்றும் செயல்கள் வாயிலாக சாத்தான் எப்படி கிரியை செய்கிறான் என்பதையும் மனிதகுலத்தை எப்படி சீர்கெடுக்கிறான் என்பதையும், சாத்தானின் சுபாவம் மற்றும் முகம் என்ன என்பதையும் நாம் பார்ப்போம். எனவே ஸ்திரீ சாத்தானிடம் என்ன சொன்னாள்? யேகோவா தேவன் தன்னிடம் சொன்னதை சாத்தானிடம் ஸ்திரீ சொன்னாள். இந்த வார்த்தைகளை அவள் சொன்ன போது, தேவன் தன்னிடம் சொன்னதை அவள் உண்மை என்று நிச்சயமாக அறிந்திருந்தாளா? அவளால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. புதிதாக சிருஷ்டிக்கபட்ட அவளுக்கு, நன்மையையும் தீமையையும் பகுத்தறியவும் இயலவில்லை, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற அறிவும் இல்லை. அவளது இருதயத்தில் தேவனுடைய வார்த்தை சரிதான் என்று நிச்சயம் இல்லாதிருந்தாள் என்பதை அவள் சர்ப்பத்துடன் பேசிய வார்த்தைகளை வைத்து நம்மால் தீர்மானிக்க முடிகிறது. அவளது மனப்பாங்கு அப்படித் தான் இருந்தது. எனவே, தேவனுடைய வார்த்தைகள் மீதான நிச்சயமற்ற மனப்பான்மையை பார்த்த சர்ப்பம் சொன்னது. “நீங்கள் நிச்சயமாகவே சாக மாட்டீர்கள்: ஏனென்றால், நீங்கள் அதைப் புசிக்கும் நாளில், உங்கள் கண்கள் திறக்கப்படும் தேவனைப்போல் நீங்கள் நன்மை தீமை அறிந்திருப்பீர்கள் என்று தேவன் அறிவார் என்றது.” இந்த வார்த்தைகளில் பிரச்சனைக்குரிய ஏதேனும் உள்ளதா? நீங்கள் இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது உங்களுக்கு சர்ப்பத்தின் நோக்கங்கள் குறித்து உங்களுக்கு ஏதும் புலப்படுகிறதா? அந்த நோக்கங்கள் எவை? அது இந்த ஸ்திரீயை சோதிக்க விரும்பியது, தேவனின் வார்த்தைகளுக்கு செவிக்கொடுக்க விடாமல் தடுக்கப் பார்த்தது. ஆனால் இவற்றை அது நேரடியாக சொல்ல வில்லை. எனவே, அது எப்படி மிக வஞ்சகமாக இருந்தது என சொல்லலாம். அதன் பொருளை அது மிகவும் கபடமாகவும் மழுப்பலாகவும் வெளிப்படுத்தி தன்னுடைய நோக்கத்தை அடையப் பார்க்கிறது. ஆனால் அதை மூடிமறைத்து, தன் மனதிற்குள் வைத்து மனிதனிடமிருந்து மறைக்கிறது. சர்ப்பம் இப்படி தான் தந்திரமானது. இது தான் எப்போதும் சாத்தானின் பேசும் முறையும் செயல்படும் முறையுமாக இருக்கிறது. “நிச்சயமாக இல்லை” என்பதை எந்தவொரு வழியிலும் உறுதி செய்யாமல் சொல்லுகிறது. ஆனால் இதைக் கேட்ட போது இந்த பேதை ஸ்திரீயின் மனது அசைக்கப்பட்டது. சர்ப்பம் சந்தோஷப்பட்டது, ஏனென்றால் அதனுடைய வார்த்தைகள் விரும்பிய பலனை தந்தன—சர்ப்பத்தின் தந்திரமான நோக்கம் இப்படிப்பட்டதாக இருந்தது. மேலும், மனிதர்களுக்கு விரும்பக்கூடியதாக தோன்றும் ஒரு பலனை வாக்குறுதியாக அளித்தது, அது அவளைப் பார்த்து, “நீங்கள் அதைப் புசிக்கும் நாளில், உங்கள் கண்கள் திறக்கப்படும்.” என்று சொல்லி மயக்கியது. எனவே அவள் அதை யோசித்தாள்: “கண்கள் திறக்கப்படுவது நல்லது தானே!” அதன் பின்னர் அது இன்னும் கவரக்கூடிய வேறு ஒன்றை சொன்னது, மனிதன் அதுவரை அறியாத வார்த்தைகளை, கேட்பவர் மனதில் பெரும் வல்லமையுடன் சோதனைக்குள்ளாக்கும் வார்த்தைகளை சொன்னது: “தேவனைப்போல் நீங்கள் நன்மை தீமை அறிந்திருப்பீர்கள்.” இவை மனிதனை மயக்கும் வல்லமை கொண்ட வார்த்தைகள் இல்லையா? அது உன்னிடம் ஒருவர்: “உன் முகம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த மூக்கு மட்டும் கொஞ்சம் குட்டையாக இருக்கிறது. அதை மட்டும் சரிசெய்து விட்டால், நீ தான் உலக அழகி!” என்று சொல்வது போன்றது. உண்மையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள எந்த எண்ணமும் இல்லாத ஒருவருக்கு கூட அவரது மனதை அசைத்துப் பார்க்குமா இல்லையா? இவை மயக்கும் வார்த்தைகள் இல்லையா? இந்த மயக்கம் உன்னை சோதிப்பதாக இல்லையா? இது ஒரு சோதனை இல்லையா? (ஆம்.) தேவன் இது போல் ஏதாவது சொல்லியிருக்கிறாரா? நாம் இப்போது கவனித்த தேவனின் வார்த்தைகளில் இது குறித்து ஏதாவது குறிப்பு இருந்ததா? தேவன் தன் இதயத்தில் என்ன நினைக்கிறாரோ அதைச் சொல்கிறாரா? மனிதனால் தேவனின் இருதயத்தை அவருடைய வார்த்தைகளால் பார்க்க முடியுமா? (ஆம்.) ஆனால் சர்ப்பம் அந்த வார்த்தைகளை ஸ்திரீயிடம் பேசியபோது, உன்னால் அதன் இருதயத்தைக் காண முடிந்ததா? இல்லை. மனிதனின் அறியாமை காரணமாக, மனிதன் சர்ப்பத்தின் வார்த்தைகளால் எளிதில் மயக்கப்பட்டு எளிதில் ஏமாற்றப்பட்டான். எனவே உன்னால் சாத்தானின் நோக்கங்களைக் காண முடியுமா? சாத்தான் சொன்னதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை உன்னால் காண முடிந்ததா? உன்னால் சாத்தானின் சதிகளையும் தந்திரங்களையும் காண முடிந்ததா? (இல்லை.) சாத்தானின் பேசும் முறை எந்த வகையான மனநிலையை குறிக்கிறது? இந்த வார்த்தைகளின் மூலம் நீ சாத்தானில் எந்த வகையான சாராம்சத்தைக் கண்டிருக்கிறாய்? இது நயவஞ்சகமானதல்லவா? ஒருவேளை மேலோட்டமாக அது உன்னைப் பார்த்து புன்னகைக்கலாம் அல்லது ஒரு வேளை அது எந்த வெளிப்பாட்டையும் காட்டாது இருக்கலாம். ஆனால் அதன் இதயத்தில் அதன் நோக்கத்தை எவ்வாறு அடைவது என்பதைக் கணக்கிடுகிறது, இந்த நோக்கத்தை தான் உன்னால் பார்க்க முடியவில்லை. அது உனக்கு அளிக்கும் அனைத்து வாக்குறுதிகளும், அது விவரிக்கும் அனைத்து நன்மைகளும், அதன் மயக்கத்தின் போர்வையால் வருவதாகும். நீ இந்த விஷயங்களை நல்லதாகக் கருதுகிறாய், எனவே அது சொல்வதை மிகவும் பயனுள்ளதாகவும், தேவன் சொல்வதை விட அதிகமானதாகவும் நீ கருதுகிறாய். இது நிகழும்போது, மனிதன் அடிபணிந்த கைதியாக மாறவில்லையா? சாத்தான் பயன்படுத்திய இந்த மூலோபாயம் கொடூரமானதல்லவா? நீ உன்னை சீரழிவில் மூழ்க அனுமதிக்கிறாய். சாத்தான் ஒரு விரலைக் கூட அசைக்காமல், இந்த இரண்டு வாக்கியங்களையும் பேசியதன் மூலம், சாத்தானுடன் இணங்கவும் செய்து சாத்தானை பின்பற்றுவதிலும் நீ மகிழ்ச்சியடைகிறாய். இவ்வாறு, சாத்தானின் நோக்கம் அடையப்பட்டுள்ளது. இந்த நோக்கம் கெட்டதல்லவா? இது சாத்தானின் மிக உண்மையான முகம் அல்லவா? சாத்தானின் வார்த்தைகளிலிருந்து, மனிதன் அதன் மோசமான நோக்கங்களைக் காணலாம், அதன் அருவருப்பான முகத்தையும் அதன் சாராம்சத்தையும் காணலாம். அப்படித்தானே இல்லயா? இந்த வாக்கியங்களை ஒப்பிடுகையில், ஆராய்ந்து பார்க்காமல் நீ யோகோவா தேவனின் வார்த்தைகள் மந்தமானவை, பொதுவானவை மற்றும் சாதாரணமானவை என உணரலாம், அவை தேவனின் நேர்மையை துதிப்பதில் உள்ள உற்சாகத்தை நியாயப்படுத்துவதில்லை. இருப்பினும், நாம் சாத்தானின் வார்த்தைகளையும் சாத்தானின் ஒளிந்திருக்கும் முகத்தையும் ஒரு பிரதிபலிப்புப் படலமாக எடுத்துக் கொள்ளும்போது, தேவனின் இந்த வார்த்தைகள் இன்றைய மக்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டவையாகயில்லையா? (ஆம்.) இந்த ஒப்பீட்டின் மூலம், தேவனின் தூய்மையான குறைபாடில்லா தன்மையை மனிதனால் உணர முடியும். சாத்தான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், சாத்தானின் நோக்கங்கள், எண்ணங்கள் மற்றும் அது பேசும் விதம்—இவை அனைத்தும் கலப்படம் செய்யப்பட்டவை. சாத்தானின் பேசும் முறையின் முக்கிய அம்சம் என்ன? உன்னை அதன் இரண்டகத் தன்மையைக் காண அனுமதிக்காமல், உன்னை கவர்ந்திழுக்க சாத்தான் மழுப்பல் பேச்சைப் பயன்படுத்துகிறான், அல்லது அதன் நோக்கத்தை நீ அறியவும் அனுமப்பதில்லை; இரையை எடுக்க சாத்தான் உன்னை அனுமதிக்கிறான், ஆனால் நீயும் அதன் சிறப்பைப் புகழ்ந்து பாட வேண்டும். இந்த சூழ்ச்சி சாத்தானின் பழக்கவழக்க முறை அல்லவா? (ஆம்.)

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IV” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 139

சாத்தானுக்கும் யேகோவா தேவனுக்கும் இடையேயான உரையாடல் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

யோபு 1:6-11  ஒரு நாள் தேவபுத்திரர் யேகோவாவின் சந்நிதியில் ஒன்று கூடியிருந்த போது, சாத்தானும் அவர்கள் நடுவிலே நின்றான். யேகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். அப்பொழுது சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்? அவனைச் சுற்றியும், அவன் வீட்டைச் சுற்றியும், அனைத்துப் பக்கத்திலும் அவன் கொண்டிருக்கும் எல்லாவற்றைச் சுற்றியும் நீர் வேலி அமைக்கவில்லையா? அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று. ஆனால் இப்பொழுது நீர் உம் கையை நீட்டி, அவனிடம் உள்ள சகலத்தையும் தொட்டீரானால், அப்பொழுது அவன் உம் முகத்திற்கு முன்பாக உம்மைத் தூஷிப்பான் என்றான்.

யோபு 2:1-5  பின்னொரு நாளிலே யேகோவாவினுடைய சந்நிதியில் தேவபுத்திரர் ஒன்று கூடியிருந்த போது, அவர்களிடையே சாத்தானும் யேகோவாவினுடைய சந்நிதியில் நின்றான். யேகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். முகாந்திரமில்லாமல் அவனை அழிக்க நீ என்னை ஏவின போதும், அவன் இன்னும் தன் நேர்மையில் உறுதியாக இருக்கிறான் என்றார். அதற்கு சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாக தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாக சகலத்தையும் கொடுப்பான் மனுஷன். ஆனால் இப்போது நீர் உமது கையை நீட்டி, அவன் எலும்பையும் மாம்சத்தையும் தொடும், அவன் உமது முகத்துக்கு முன்பாக உம்மை தூஷிப்பான் என்றான்.

இவ்விரண்டு பத்தியிலும் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையேயான உரையாடல் முழுமையாக இடம் பெற்றுள்ளது. இதில் தேவன் சொன்னதும் சாத்தான் சொன்னதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவன் அதிகம் பேசவில்லை, மேலும் அவர் மிகவும் எளிமையாக பேசியுள்ளார். தேவனுடைய இந்த எளிமையான வார்த்தைகளில் அவரது பரிசுத்தத்தை நாம் பார்க்க முடியுமா? அது அவ்வளவு எளிதல்ல என்று சிலர் சொல்லுவார்கள். எனவே சாத்தானுடைய ஒளிக்கும் தன்மையை அதன் பதில்களில் பார்க்க முடியுமா? முதலில் நாம் யேகோவா தேவன் சாத்தானிடம் என்ன விதமான கேள்விகள் கேட்டார் என்று பார்ப்போம். “நீ எங்கிருந்து வருகிறாய்?” இது ஒரு நேரடியான கேள்வி இல்லையா? இதில் ஏதாவது உள்ளர்த்தம் உள்ளதா? இல்லை இது ஒரு நேரடியான கேள்வி மட்டுமே. உங்களிடம் யாராவது, “நீ எங்கிருந்து வருகிறாய?” என்று கேட்டால் எவ்வாறு பதிலளிப்பீர்கள். நீங்கள் இப்படிச் சொல்வீர்களா: “அங்குமிங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன்”? (இல்லை.) நீங்கள் இப்படி பதிலளிக்க மாட்டீர்கள். எனவே, சாத்தான் இப்படி பதிலளிப்பதை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? (சாத்தான் விசித்திரமாக நடந்துகொள்கிறான், ஆனால் அது வஞ்சிப்பதாகவும் இருக்கிறது.) நான் என்ன உணர்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? ஒவ்வொரு முறையும் நான் இந்த வார்த்தைகளைப் பார்க்கும்போது, அருவருப்பாக இருக்கிறது. ஏனென்றால் சாத்தான் பேசுகிறான் அவன் வார்த்தையில் ஒரு பொருளும் இல்லை. சாத்தான் தேவனுடைய கேள்விக்குப் பதிலளித்தானா? இல்லை, சாத்தான் பேசிய வார்த்தைகளில் ஒரு பதிலும் இல்லை. அதனால் ஒரு பயனுமில்லை. அவை தேவனுடைய கேள்விக்கான பதிலுமில்லை. “பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன்.” இவ்வார்த்தைகளில் இருந்து நீ புரிந்து கொள்வது என்ன? சாத்தான் எங்கிருந்துதான் வருகிறான்? இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் பெற்றுள்ளீர்களா? (இல்லை.) இது சாத்தானின் தந்திரமான திட்டங்களின் “புத்திசாலித்தனம்”—இது உண்மையில் அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க யாரையும் அனுமதிப்பதில்லை. இந்தச் சொற்களைக் கேட்டபின், அது பதில் சொல்லி முடித்திருந்தாலும்கூட, அது என்ன சொன்னது என்பதை இன்னும் உன்னால் அறிய முடியவில்லை. ஆயினும்கூட, தான் மிகச்சரியாக பதிலளித்ததாக சாத்தான் நம்புகிறான். நீ எப்படி உணருகிறாய்? அருவருக்கிறாயா? (ஆம்.) இந்த வார்த்தைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இப்போது நீ அருவருப்பை உணர ஆரம்பித்திருக்கிறாய். சாத்தானின் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட இயல்புகளைக் கொண்டுள்ளன: சாத்தான் என்ன சொல்கிறானோ அதன் மூலம் அவன் உன்னை தலையைச் சொறிய விட்டுவிடுகிறான், அதனுடைய வார்த்தைகளின் ஆதாரத்தை உணர முடியவில்லை. சில நேரங்களில் சாத்தானுக்கு உள்நோக்கம்இருக்கிறது மேலும் வேண்டுமென்றே பேசுகிறது, சில சமயங்களில் அதன் சுபாவத்தால் நிர்வகிக்கப்பட்டு அத்தகைய வார்த்தைகள் தன்னிச்சையாக வெளிப்படுகின்றன மேலும், சாத்தானின் வாயிலிருந்து நேராக வருகின்றன. சாத்தான் சாத்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பற்றி சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுவதில்லை, மாறாக, அவை சிந்திக்காமலேயே வெளிப்படுத்தப்படுகின்றன. அது எங்கிருந்து வந்தது என்று தேவன் கேட்டதற்கு, சாத்தான் சில தெளிவற்ற வார்த்தைகளால் பதிலளித்தது. நீ மிகவும் புதிராக உணர்கிறாய், சாத்தான் எங்கிருந்து வருகிறான் என்று ஒருபோதும் தெரியாது. உங்களில் யாராவது இப்படி பேசுகிறார்களா? பேச இது என்ன வகையான வழி? (இது தெளிவற்றது மற்றும் ஒரு குறிப்பிட்ட பதிலைக் கொடுக்கவில்லை.) இந்தப் பேசும் முறையை விவரிக்க நாம் எந்த வகையான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? இது திசைதிருப்பல் மற்றும் தவறானது. நேற்று அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த யாராவது விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம். நீ அவர்களிடம் கேள்: “நான் உன்னை நேற்று பார்த்தேன். நீ எங்கே போயிருந்தாய்?” அவர்கள் எங்கு சென்றார்கள் என்று அவர்கள் உன்னிடம் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். மாறாக, அவர்கள் சொல்கிறார்கள்: “நேற்று என்ன ஒரு நாள். அது மிகவும் சோர்வாக இருந்தது!” உன் கேள்விக்கு அவர்கள் பதிலளித்தார்களா? அவர்கள் பதில் தந்தார்கள், ஆனால் நீ விரும்பிய பதிலை அவர்கள் கொடுக்கவில்லை. இது மனிதனின் பேச்சுக் கலையில் இருக்கும் “புத்திசாலித்தனம்”. உன்னால் ஒருபோதும் அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது, அல்லது அவர்களின் வார்த்தைகளின் ஆதாரத்தையும் நோக்கத்தையும் உணர முடியாது. அவர்கள் எதைத் தவிர்க்க முயற்சிக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாது, ஏனென்றால் அவர்களின் இதயத்தில் அவர்கள் சொந்தக் கதையை வைத்திருக்கிறார்கள்—இது நயவஞ்சகமானது. இப்படி அடிக்கடி பேசுபவர்கள் உங்களில் யாராவது இருக்கிறார்களா? (ஆம்.) அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன? சில நேரங்களில் உங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதா, சில சமயங்களில் உங்கள் சொந்தப் பெருமை, நிலை, மற்றும் பிம்பம் ஆகியவற்றைப் பராமரித்து, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களைப் பாதுகாக்கவா? எந்த நோக்கமாக இருந்தாலும், அது உங்கள் நலன்களுடன் பிரிக்க முடியாதது, உங்கள் நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மனிதனின் இயல்பு அல்லவா? இப்படிப்பட்ட சுபாவம் கொண்ட அனைவரும் சாத்தானுடன் இல்லை என்றால் அதன் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அல்லவா? இதை நாம் இப்படிச் சொல்லலாம் இல்லையா? பொதுவாக, இந்த வெளிப்பாடு வெறுக்கத்தக்கது மற்றும் அருவருப்பானது. நீங்களும் இப்போது அருவருக்கிறீர்கள், இல்லையா? (ஆம்.)

பின்வரும் வசனங்களைப் பார்ப்போம். யேகோவாவின் கேள்விக்கு சாத்தான் இப்படி பதிலளிக்கிறான்: “யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்?” யோபை குறித்த யேகோவாவின் மதிப்பீட்டை சாத்தான் தாக்கத் துவங்குகிறது, மேலும் அவனுடைய இந்த தாக்குதல் வெறுப்பு நிறம் கொண்டிருந்தது. “அவனைச் சுற்றியும், அவன் வீட்டைச் சுற்றியும், அனைத்துப் பக்கத்திலும் அவன் கொண்டிருக்கும் எல்லாவற்றைச் சுற்றியும் நீர் வேலி அமைக்கவில்லையா?” யோபு மீதான யேகோவாவின் கிரியை குறித்த சாத்தானின் புரிதலும் மதிப்பீடும் இதுதான். சாத்தான் அதை இவ்வாறு மதிப்பீடு செய்து, “அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று. ஆனால் இப்பொழுது நீர் உம் கையை நீட்டி, அவனிடம் உள்ள சகலத்தையும் தொட்டீரானால், அப்பொழுது அவன் உம் முகத்திற்கு முன்பாக உம்மைத் தூஷிப்பான்.” என்றான். சாத்தான் எப்போதும் தெளிவற்ற முறையில் பேசுகிறான், ஆனால் இங்கே அது சில குறிப்பிட்ட சொற்களில் பேசுகிறான். இருப்பினும், இந்த வார்த்தைகள், குறிப்பிட்ட சில சொற்களில் பேசப்பட்டாலும் அவை தாக்குதல் மற்றும் தேவதூஷனமாகும், அது யேகோவா தேவனுக்கே விரோதமான செயல்பாடாகும். இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? நீங்கள் வெறுப்பை உணர்கிறீர்களா? சாத்தானின் நோக்கங்களை உங்களால் காண முடிகிறதா? முதலாவதாக, தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்ற யோபுவைப் பற்றிய யேகோவாவின் மதிப்பீட்டை சாத்தான் மறுக்கிறான். யோபு சொல்லும் மற்றும் செய்கிற எல்லாவற்றையும் சாத்தான் மறுக்கிறது, அதாவது, அது யேகோவாவைப் பற்றிய தனது பயத்தை மறுக்கிறது. இது குற்றச்சாட்டு அல்லவா? யேகோவா செய்கிற மற்றும் சொல்லும் எல்லாவற்றையும் சாத்தான் குற்றம் சாட்டுகிறான், மறுக்கிறான், சந்தேகிக்கிறான். அது நம்பாமல், “நீர் விஷயங்கள் இப்படி இருக்கின்றன என்று சொன்னால், பின்னர் நான் அதை எப்படிப் பார்க்காமல் போனேன்? நீர் அவனுக்கு பல ஆசீர்வாதங்களை அளித்திருக்கிறீர், எனவே அவன் எப்படி உமக்கு பயப்படாமல் இருப்பானா?” தேவன் செய்யும் எல்லாவற்றையும் இது மறுப்பதல்லவா? குற்றச்சாட்டு, மறுப்பு, தேவதூஷணம் ஆகிய சாத்தானின் வார்த்தைகள் ஒரு தாக்குதல் அல்லவா? சாத்தான் தன் இதயத்தில் என்ன நினைக்கிறான் என்பதன் உண்மையான வெளிப்பாடு இவை அல்லவா? இந்த வார்த்தைகள் நிச்சயமாக நாம் இப்போது படித்த சொற்களைப் போல இல்லை: “பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன்.” அவை முற்றிலும் வேறுபட்டவை. இந்த வார்த்தைகளின் மூலம், சாத்தான் அவன் இருதயத்தில் உள்ளவைகளை—தேவன் மீதான அவனுடைய மனப்பாங்கு மற்றும் யோபுவின் தேவ பயத்தை வெறுப்பது ஆகியவற்றை முழுவதுமாக வெளிப்படுத்துகிறான். இது நிகழும்போது, அதன் தீமை மற்றும் தீய தன்மை முற்றிலும் வெளிப்படுகிறது. இது தேவனுக்குப் பயப்படுபவர்களை வெறுக்கிறது, பொல்லாப்புக்கு விலகுகிறவர்களை வெறுக்கிறது, இன்னுமதிகமாக மனிதனுக்கு ஆசீர்வாதங்களை அளிக்கிறார் என்பதால் யேகோவாவை வெறுக்கிறது. தேவன் தம்முடைய கையால் எழுப்பிய, யோபுவை அழிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த அது விரும்பி இப்படி சொல்கிறது: அவரை அழிக்க, “யோபு உமக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறான் என்று நீர் கூறுகிறீர். நான் அதை வித்தியாசமாகப் பார்க்கிறேன்.” இது யேகோவாவைத் தூண்டுவதற்கும் சோதிப்பதற்கும் பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறது, மேலும் யோபுவை விரும்பத்தகாத முறையில் கையாளும், சரிகட்டும், தீங்கிழைக்கும் மற்றும் தவறாகக் கையாளும் வேலையை சாத்தானிடம் ஒப்படைப்பதற்காக, அது பல்வேறு சூழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறது, இதனால் தேவனின் பார்வையில் நீதியும் பரிபூரணமும் கொண்ட இந்த மனிதனை அழிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த அது விரும்புகிறது. சாத்தானுக்கு இந்த வகையான இருதயம் ஏற்பட காரணம் அந்த சமயத்தில் ஏற்பட்ட ஒரு நொடிப்பொழுது தூண்டுதலா? இல்லை இது அப்படி இல்லை. இது தயாரிப்பில் நீண்ட காலமாக உள்ளது. தேவன்ஒரு நபருக்காக கிரியை செய்து, அக்கறைகொண்டு, இந்த நபரை கருத்தில் கொண்டு பார்த்து, மற்றும் இந்த நபரைப் பாராட்டி அங்கீகரிக்கும்போது, சாத்தானும் அந்த நபரை நெருக்கமாகப் பின் தொடர்ந்து, அவரை ஏமாற்றி, அவருக்குத் தீங்கு செய்ய முயற்சிக்கிறது. தேவன் இந்த நபரை ஆதாயப்படுத்த விரும்பினால், தேவனைத் தடுக்க சாத்தான் தன் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்யும், தனது மறைவான நோக்கத்தை அடைவதற்காக, தேவனுடைய கிரியையை மோசம்போக்கி, சீர்குலைத்து சேதப்படுத்த பல்வேறு தீய சூழ்ச்சிகளைப் பயன்படுத்தும். இது என்ன நோக்கம்? தேவன் யாரையும் ஆதாயப்படுத்துவதை அவன் விரும்பவில்லை; தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை ஆட்கொள்ள விரும்புகிறது, அது அவர்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறது, அவர்களை தன் பொறுப்பிலேற்க விரும்புகிறது. இதனால் அவர்கள் அதனை ஆராதிப்பார்கள், அதனால் அவர்கள் பொல்லாத செயல்களைச் செய்வதில் அதனுடன் இணைந்து, தேவனை எதிர்ப்பார்கள். இது சாத்தானின் கெட்ட நோக்கம் அல்லவா? சாத்தான் மிகவும் தீயவன், மிகவும் மோசமானவன் என்று நீங்கள் அடிக்கடி கூறுகிறீர்கள், ஆனால் நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்களா? மனுக்குலம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உங்களால் பார்க்க முடியும். உண்மையான சாத்தான் எவ்வளவு மோசமானவன் என்பதை நீங்கள் பார்த்ததில்லை. ஆயினும், யோபு விஷயத்தில், சாத்தான் எவ்வளவு பொல்லாதவன் என்பதை நீங்கள் தெளிவாகக் கவனித்திருக்கிறீர்கள். இந்த விஷயம் சாத்தானின் அருவருப்பான முகத்தையும் சாராம்சத்தையும் மிகவும் தெளிவுபடுத்தியுள்ளது. தேவனுடன் போரிடுவதிலும், அவருக்குப் பின்னாலே செல்வதிலும், தேவன் செய்ய விரும்பும் எல்லா கிரியைகளையும் தரைமட்டமாக்குவது, தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை ஆக்கிரமித்து கட்டுப்படுத்துவது, தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பது தான் சாத்தானின் நோக்கம். அவை அப்படி அழிக்கப்படாவிட்டால், அவர்கள் சாத்தானால் பயன்படுத்தப்படுவதற்கு அதன் வசமாகிறார்கள்—இது தான் அதன் நோக்கம். தேவன் என்ன செய்கிறார்? இந்த வசனப் பகுதியில் தேவன் ஒரு எளிய வாக்கியத்தை மட்டுமே கூறுகிறார்; தேவன் அதற்கு மேல் எதையும் செய்தார் என்று எந்தவொரு பதிவும் இல்லை, ஆனால் சாத்தான் என்ன செய்கிறான், என்ன சொல்கிறான் என்பதற்கு இன்னும் பல பதிவுகள் உள்ளன. பின்வரும் வேதாகம பகுதியில், யேகோவா சாத்தானிடம் கேட்கிறார், “நீ எங்கிருந்து வருகிறாய்?” சாத்தானின் பதில் என்ன? (அது இன்னும் “பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன்.”) அது இன்னும் அதே வாக்கியம் தான். இது சாத்தானின் குறிக்கோள், சாத்தானின் அழைப்பு அட்டை ஆகிவிட்டது. இது எப்படி? சாத்தான் வெறுப்பு நிறைந்தவன் இல்லையா? நிச்சயமாக இந்த அருவருப்பான வாக்கியத்தை ஒரு முறை மட்டுமே கூறினாலே போதுமானது. சாத்தான் ஏன் அதை திரும்ப திரும்ப சொல்கிறான்? இது ஒரு விஷயத்தை நிரூபிக்கிறது: சாத்தானின் இயல்பு மாறாதது. அதன் அசிங்கமான முகத்தை மறைக்க சாத்தானால் பாசாங்கை பயன்படுத்த முடியாது. தேவன் அதை ஒரு கேள்வி கேட்கிறார், அது இவ்வாறு பதிலளிக்கிறது பாருங்கள். இவ்வாறு இருப்பதால், அது மனிதர்களை எவ்வாறு நடத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள்! சாத்தான் தேவனைப் பார்த்து பயப்படுவதில்லை, தேவனுக்குப் பயப்படுவதில்லை, தேவனுக்குக் கீழ்ப்படிவதுமில்லை. ஆகவே, தேவனுக்கு முன்பாக வேண்டுமென்றே பெருமிதம் கொள்ளவும், தேவனின் கேள்வியை அலட்சியப்படுத்தவும், தேவனின் கேள்விக்கு இதே பதிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியும், தேவனைக் குழப்ப இந்த பதிலைப் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது. இது தான் சாத்தானின் அசிங்கமான முகம். அது தேவனின் சர்வவல்லமையை நம்பவில்லை, தேவனின் அதிகாரத்தை நம்பவில்லை, நிச்சயமாக தேவனின் ஆதிக்கத்திற்கு அடிபணியவும் தயாராக இல்லை. அது தொடர்ந்து தேவனுக்கு எதிராகவும், தேவன் செய்யும் எல்லாவற்றையும் தொடர்ந்து தாக்குகிறதாகவும், தேவன் செய்கிற அனைத்தையும் அழிக்க முயற்சிக்கிறதாவும் இருக்கிறது—இது அதனின் தீய நோக்கமாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IV” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 140

சாத்தானுக்கும் யேகோவா தேவனுக்கும் இடையேயான உரையாடல் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

யோபு 1:6-11  ஒரு நாள் தேவபுத்திரர் யேகோவாவின் சந்நிதியில் ஒன்று கூடியிருந்த போது, சாத்தானும் அவர்கள் நடுவிலே நின்றான். யேகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். அப்பொழுது சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்? அவனைச் சுற்றியும், அவன் வீட்டைச் சுற்றியும், அனைத்துப் பக்கத்திலும் அவன் கொண்டிருக்கும் எல்லாவற்றைச் சுற்றியும் நீர் வேலி அமைக்கவில்லையா? அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று. ஆனால் இப்பொழுது நீர் உம் கையை நீட்டி, அவனிடம் உள்ள சகலத்தையும் தொட்டீரானால், அப்பொழுது அவன் உம் முகத்திற்கு முன்பாக உம்மைத் தூஷிப்பான் என்றான்.

யோபு 2:1-5  பின்னொரு நாளிலே யேகோவாவினுடைய சந்நிதியில் தேவபுத்திரர் ஒன்று கூடியிருந்த போது, அவர்களிடையே சாத்தானும் யேகோவாவினுடைய சந்நிதியில் நின்றான். யேகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். முகாந்திரமில்லாமல் அவனை அழிக்க நீ என்னை ஏவின போதும், அவன் இன்னும் தன் நேர்மையில் உறுதியாக இருக்கிறான் என்றார். அதற்கு சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாக தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாக சகலத்தையும் கொடுப்பான் மனுஷன். ஆனால் இப்போது நீர் உமது கையை நீட்டி, அவன் எலும்பையும் மாம்சத்தையும் தொடும், அவன் உமது முகத்துக்கு முன்பாக உம்மை தூஷிப்பான் என்றான்.

யோபு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, சாத்தானால் பேசப்பட்ட இந்த இரண்டு பத்திகளும், அவன் செய்த காரியங்களும், தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தில், அவருக்கு எதிரான எதிர்ப்பின் பிரதிநிதிகளாகும்—இங்கே, சாத்தானின் உண்மையான தன்மைகள் வெளிப்படுகின்றன. சாத்தானின் வார்த்தைகளையும் செயல்களையும் நீ நிஜவாழ்க்கையில் பார்த்திருக்கிறாயா? நீ அவைகளைப் பார்க்கும்போது, அவை சாத்தானால் பேசப்பட்டவை என்று நினைக்காமல், அவை மனிதனால் பேசப்படும் விஷயங்கள் என்று நீ நினைக்கலாம். இதுபோன்ற விஷயங்கள் மனிதனால் பேசப்படும்போது, அது எதைக் குறிக்கிறது? சாத்தானைக் குறிக்கிறது. நீ அதை அடையாளங்கண்டாலும், அது உண்மையில் சாத்தானால் பேசப்படுகிறது என்பதை அப்போதும் உன்னால் உணர முடியாது. ஆனால், இப்பொழுது சாத்தான் தானே என்ன சொல்லி இருக்கிறான் என்று நீ தெளிவாகப் பார்த்திருக்கிறாய். நீ இப்போது சாத்தானுடைய கோரமான முகத்தையும், அவனுடைய தீமையையும் பற்றிய சந்தேகம் இல்லாத, தெளிவானப் புரிதலையும் கொண்டிருக்கிறாய். ஆகவே, சாத்தானின் இயல்பு பற்றிய அறிவைப் பெற இன்றைய மக்களுக்கு உதவுவதில் இந்த இரண்டு பத்திகளும் முக்கியமானவையா? சாத்தானின் கோரமான முகத்தையும், அவனுடைய நிஜமான, உண்மையான முகத்தையும் அடையாளங்காண, இன்று மனிதகுலத்திற்காகக் கவனமாக தக்கவைக்கப்பட, இந்த இரண்டு பத்திகளும் முக்கியமானவைகளா? இதைச் சொல்வது பொருத்தமான விஷயமாகத் தெரியவில்லை என்றாலும், இவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட இந்த வார்த்தைகள் துல்லியமானதாகக் கூட கருதப்படலாம். உண்மையில், இந்தக் கருத்தை நான் வெளிப்படுத்தக்கூடிய ஒரே வழி இதுதான், நீங்கள் அதைப் புரிந்துகொள்ள முடிந்தால், அதுவே போதுமானது. யேகோவா தேவனிடத்தில் யோபு கொண்டுள்ள பயத்தைக் குறித்த குற்றச்சாட்டுகளை வீசியெறிந்து, யேகோவா செய்கிற காரியங்களை சாத்தான் மீண்டும் மீண்டும் தாக்குகிறான். சாத்தான் பல்வேறு முறைகளால் யேகோவாவைக் கோபமூட்ட முயற்சிக்கிறான், யோபுவின் சோதனையை யேகோவா கவனியாமல் விட்டுவிடச் செய்யும்படி முயற்சிக்கிறான். எனவே, அவனுடைய வார்த்தைகள் மிகவும் கோபமூட்டும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆகவே, நீங்கள் சொல்லுங்கள்! சாத்தான் இந்த வார்த்தைகளைப் பேசியவுடன், அவன் என்ன செய்ய விரும்புகிறான் என்பதைத் தேவன் தெளிவாகக் காண முடியுமா? (ஆம்.) தேவனுடைய இருதயத்தில், தேவன் காண்கிற இந்த மனிதனான யோபு, நீதியுள்ள மனிதனாக தேவன் கருதும் இந்த தேவனுடைய ஊழியக்காரன், பரிபூரண மனிதனான இம்மனிதன் இவ்வகையான சோதனையைத் தாங்க முடியுமா? (ஆம்.) தேவன் அதைப் பற்றி ஏன் அவ்வளவு உறுதியாக இருக்கிறார்? தேவன் எப்போதும் மனிதனின் இதயத்தை ஆராய்கிறாரா? (ஆம்.) அப்படியானால், சாத்தானால் மனிதனின் இருதயத்தை ஆராய முடியுமா? அவனால் முடியாது. சாத்தானால் உன்னுடைய இருதயத்தைக் காண முடிந்தாலும், அவனுடைய பொல்லாத தன்மை ஒருபோதும் பரிசுத்தமானதைப் பரிசுத்தம் என்றும், அசுத்தமானதை அசுத்தம் என்றும் அவனை நம்பவொட்டாது. பொல்லாத சாத்தானால் ஒருபோதும் பரிசுத்தமான, நீதியான அல்லது பிரகாசமான எதையும் உயர்வாக மதிக்க இயலாது. அவனால் அவனுடைய இயல்பு, அவனுடைய தீமைகள் மற்றும் வழக்கமான முறைகள் ஆகியவற்றிற்கேற்ப ஓயாமல் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள முடியாது. தேவனால் அவன் தண்டிக்கப்படும்போதும் அல்லது அழிக்கப்படும்போதும்கூட, அவன் தேவனைப் பிடிவாதமாக எதிர்க்கத் தயங்குவதில்லை—இது பொல்லாங்கானது, இதுவே சாத்தானின் இயல்பாகும். அதனால் இப்பகுதியில் சாத்தான் கூறுகிறான்: “தோலுக்குப் பதிலாக தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாக சகலத்தையும் கொடுப்பான் மனுஷன். ஆனால் இப்போது நீர் உமது கையை நீட்டி, அவன் எலும்பையும் மாம்சத்தையும் தொடும், அவன் உமது முகத்துக்கு முன்பாக உம்மை தூஷிப்பான்.” தேவனிடத்திலிருந்து பல நன்மைகளை மனிதன் பெற்றுக் கொண்டதால்தான் அவன் அவருக்குப் பயப்படுகிறான், மனிதன் தேவனிடமிருந்து நன்மைகளைப் பெறுகிறான், எனவே தேவன் நல்லவர் என்று அவன் கூறுகிறான் என்று சாத்தான் நினைக்கிறான். ஆனால், தேவன் நல்லவர் என்பதால் அல்ல, தேவனுக்கு பயப்படத்தக்கதாய் மனிதன் இப்படி பல நன்மைகளைப் பெறுகிறதே அதன் காரணமாகும். தேவன் இந்த நன்மைகளை அவனிடமிருந்து பறித்துக் கொண்டவுடன், அவன் தேவனை விட்டுவிடுகிறான். சாத்தானின் பொல்லாத இயல்பில், மனிதனின் இருதயம் உண்மையிலேயே தேவனுக்குப் பயப்படக்கூடும் என்பதை அவன் நம்பவில்லை. அவனுடைய பொல்லாத தன்மையினால், பரிசுத்தம் என்றால் என்ன, பயபக்தி என்றால் என்னவென்று அவனுக்குத் தெரியாது. தேவனுக்குக் கீழ்ப்படிவது என்றால் என்ன அல்லது அவருக்குப் பயப்படுவது என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியாது. இக்காரியங்கள் எல்லாம் அவனுக்குத் தெரியாததினால், மனிதனும் தேவனுக்குப் பயப்பட முடியாது என்று அவன் நினைக்கிறான். எனக்குச் சொல்லுங்கள், சாத்தான் பொல்லாதவன் தானே? நமது சபையைத் தவிர, வேறு எந்த மதங்களோ, பிரிவினர்களோ அல்லது மத அல்லது சமுதாய குழுவினர்களோ தேவன் இருக்கிறதை நம்புவதில்லை. இன்னும், தேவன் மாம்சமானார் என்றும், நியாயத்தீர்ப்பின் கிரியைகளைச் செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர்கள் நம்புவதில்லை. மேலும் இந்தக் காரணத்தினால் நீ நம்புவது தேவன் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு ஒழுங்கற்ற மனிதன் அவனைச் சுற்றிப் பார்த்து, மற்ற அனைவரையும் தன்னைப்போலவே ஒழுங்கற்றவர்களாய்ப் பார்க்கிறான். ஒரு உண்மையற்ற மனிதன் சுற்றிப் பார்த்து, நேர்மையற்ற தன்மையையும் பொய்களையும் மட்டுமே பார்க்கிறான். ஒரு பொல்லாத மனிதன் மற்ற அனைவரையும் பொல்லாதவர்களாகப் பார்க்கிறான், அவன் பார்க்கும் அனைவரிடமும் சண்டையிட விரும்புகிறான். நேர்மையுள்ளவர்கள் மற்ற அனைவரையும் நேர்மையானவர்களாகவே பார்க்கிறார்கள், எனவே அவர்கள் எப்போதும் மோசம்போக்கப்படுகிறார்கள், எப்போதும் ஏமாற்றப்படுகிறார்கள், அதைக் குறித்து அவர்கள் எதுவும் செய்ய முடிவதில்லை. உங்களுடைய நம்பிக்கையில் உங்களைப் பலப்படுத்தும்படி நான் இந்த சில உதாரணங்களைக் கூறுகிறேன். சாத்தானின் பொல்லாத தன்மை தற்பொழுதைக்கான ஒரு நிர்ப்பந்தம் அல்ல அல்லது சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுவதும் அல்ல, அது எந்தவொரு காரணத்தினாலோ அல்லது சூழல்சார்ந்தோ எழும் தற்காலிக வெளிப்பாடுமல்ல. நிச்சயமாக இல்லை! சாத்தானால் மாற முடியாது, அவன் அப்படித்தான் இருப்பான்! அவனால் எந்த நம்மையும் செய்ய முடியாது. கேட்க இனிமையான ஒன்றை அவன் கூறினாலும் கூட, அது உன்னைக் கவர்ந்திழுப்பதற்காவே இருக்கும். அவனுடைய வார்த்தைகள் எத்தனை இனிமையானதாக, எவ்வளவு நயமுள்ளதாக, எத்தனை மென்மையானதாக இருந்தாலும், அவ்வார்த்தைகளுக்குப் பின்பாக அவ்வளவு தீங்கிழைக்கும், வஞ்சனையான நோக்கங்கள் இருக்கும். இந்த இரண்டு பத்திகளிலும் சாத்தான் எவ்வகையான முகத்தையும், தன்மையையும் காட்டுகிறான்? (நயவஞ்சகமான, தீங்கிழைக்கும் மற்றும் பொல்லாங்கான முகம் மற்றும் தன்மையைக் காட்டுகிறான்.) பொல்லாப்பே சாத்தானின் அடிப்படையான குணம் ஆகும்; எல்லாவற்றிற்கும் மேலாக, சாத்தான் பொல்லாதவன் மற்றும் தீங்கிழைக்கிறவனாவான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IV” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 141

தேவன் மனிதனை சிருஷ்டித்தார், அப்போதிலிருந்து மனுக்குலத்தின் வாழ்வை எப்பொழுதும் வழிநடத்திக் கொண்டு வருகிறார். மனிதகுலத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்குவதிலோ, மனிதர்களுக்கான சட்டங்களையும் கட்டளைகளையும் உருவாக்குவதிலோ, அல்லது வாழ்க்கைக்கான பல்வேறு விதிகளை நிர்ணயிப்பதிலோ, இந்த எல்லா காரியங்களைச் செய்கிறதிலும் தேவனுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? முதலாவதாக, தேவன் செய்வதெல்லாம் மனிதகுலத்தின் நன்மைக்காக என்று நீங்கள் உறுதியாகக் கூற முடியுமா? இவை பெரிய, வெற்றுச் சொற்களைப் போல உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் அதிலுள்ள விவரங்களை ஆராய்ந்தால், தேவன் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ மனிதனை வழிவகுக்கவும் வழிகாட்டவும் நோக்கமாயிருக்கிறாரல்லவா? மனிதனைத் தன்னுடைய கட்டளைகளைப் பின்பற்றச் செய்வதோ அல்லது தன்னுடைய நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ள வைப்பதோ, எதுவானாலும் மனிதனுக்கான தேவனுடைய திட்டம் என்னவென்றால், அவன் சாத்தானை ஆராதிப்பதில் விழுந்து விடக்கூடாது மற்றும் சாத்தானால் பாதிக்கப்படக் கூடாது என்பதேயாகும். இது மிக அடிப்படையானது மற்றும் ஆரம்பத்தில் இதுவே செய்யப்பட்டது. ஆதியில், மனிதன் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளாதபோது, தேவன் சில எளிய நியாயப்பிரமாணமங்களையும் கட்டளைகளையும் உருவாக்கி, மனதில் நினைக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளடக்கிய ஒழுங்குமுறைகளை உருவாக்கினார். இந்த ஒழுங்குமுறைகள் மிகவும் எளிமையானதாய் இருந்தாலும் அவைகளுக்குள்ளே தேவசித்தம் உள்ளது. தேவன் மனுக்குலத்தை மதிப்புள்ளதாய், நேசத்துக்குரியதாய்க் கருதுகிறார் மற்றும் மிக அன்பாக நேசிக்கிறார். அதனால் அவருடைய இருதயம் பரிசுத்தமானது என்று சொல்லலாமா? அவருடைய இருதயம் சுத்தமானது என்று சொல்லலாமா? (ஆம்.) தேவனுக்கு வேறு ஏதேனும் கூடுதல் நோக்கங்கள் உள்ளனவா? (இல்லை.) ஆகவே இது அவருடைய நீதியும் நேர்மறையான நோக்கம் அல்லவா? தேவனுடைய கிரியையின் பாதையில், அவர் உருவாக்கின எல்லா ஒழுங்குமுறைகளும் மனிதன் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை உண்டாக்கி அவனுக்காக வழியை உண்டாக்குகிறது. எனவே தேவனுடைய மனதில் ஏதேனும் சுய சேவைக்கான எண்ணங்கள் உள்ளனவா? மனிதன் சம்பந்தப்பட்ட ஏதேனும் கூடுதலான நோக்கங்கள் தேவனுக்கு உண்டா? தேவன் எவ்வகையிலாவது மனிதனை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரா? சிறிதளவும் இல்லை. தேவன் சொல்வதையே செய்கிறார், அவருடைய வார்த்தைகளும் கிரியைகளும் அவருடைய இருதயத்தில் உள்ள எண்ணங்களோடு பொருந்திப்போகின்றன. அதில் கறைபடிந்த நோக்கம் இல்லை, சுயசேவை எண்ணங்கள் இல்லை. அவர் எதையும் தனக்காகச் செய்வதில்லை; அவர் செய்யும் அனைத்தையும், எந்தவொரு தனிப்பட்ட நோக்கங்களும் இல்லாமல், மனிதனுக்காகச் செய்கிறார். அவர் மனிதன் மீது திட்டங்களும் நோக்கங்களும் வைத்திருப்பினும், அதில் எதுவுமே அவருக்கானதல்ல. அவர் செய்யும் அனைத்தும் மனுக்குலத்துக்காகவும், மனுக்குலத்தைப் பாதுகாப்பதற்காகவும், மனுக்குலத்தை வழிதவறிப் போகாமல் காப்பதற்காகவும் மட்டுமே செய்யப்படுகின்றன. எனவே அவருடைய இந்த இருதயம் விலைமதிப்பற்றதல்லவா? அத்தகைய விலைமதிப்பற்ற இதயத்தின் மிகச்சிறிய அடையாளத்தையாவது நீ சாத்தானில் பார்க்க முடியுமா? உங்களால் இதனுடைய சிறிய தடயத்தைக் கூட சாத்தானில் காண முடியாது, உன்னால் பார்க்கவே முடியாது. தேவன் செய்யும் அனைத்தும் இயல்பாகவே வெளிப்படுகிறது. இப்போது, தேவன் கிரியை செய்யும் முறையைப் பார்ப்போம்; அவர் எவ்வாறு தனது கிரியையைச் செய்கிறார்? தேவன் இந்த நியாயப்பிரமாணங்களையும் அவருடைய வார்த்தைகளையும் எடுத்து ஒவ்வொரு நபரின் தலையிலும், பட்டையை இறுக்கும் மந்திரத்தைப்போல,[அ] இறுக்கமாகக் கட்டி, ஒவ்வொரு மனிதனின் மீதும் அவற்றைச் சுமத்துகிறாரா? அவர் இவ்வாறு செயல்படுகிறாரா? (இல்லை.) அப்படியானால், தேவன் எவ்வகையில் தனது கிரியையைச் செய்கிறார்? அவர் பயமுறுத்துகிறாரா? அவர் உங்களிடம் சுற்றிவளைத்துப் பேசுகிறாரா? (இல்லை.) நீ சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதபோது தேவன் உன்னை எவ்வாறு வழிநடத்துகிறார்? அவர் உன் மீது ஒரு ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணி, இதைச் செய்வது சத்தியத்துடன் ஒத்துப்போகாது என்பதை உனக்குத் தெளிவாகச் சொல்லி, பின்னர் நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்குச் சொல்கிறார். தேவன் கிரியை செய்யும் இந்த வழிகளில் இருந்து, உனக்கு எந்த வகையான உறவு அவரிடத்தில் இருப்பதாக உணர்கிறாய்? தேவன் எட்ட முடியாதவர் என்று நீ நினைக்கிறாயா? (இல்லை.) தேவன் கிரியை செய்கிற இந்த வழிகளைப் பார்க்கும்போது, நீ எவ்வாறு உணர்கிறாய்? தேவனின் வார்த்தைகள் குறிப்பாக உண்மையானவை, மேலும் மனிதனுடனான அவரது உறவு குறிப்பாக இயல்பானது. தேவன் இயல்புகடந்த வகையில் உன்னுடன் நெருக்கமாக இருக்கிறார். உனக்கும் தேவனுக்கும் இடையே எந்த இடைவெளியும் இல்லை. தேவன் உன்னை வழிநடத்தும்போது, அவர் உன் தேவைகளைச் சந்திக்கும்போது, உனக்கு உதவும்போது, உன்னை ஆதரிக்கும்போது, தேவன் எவ்வளவு நேசிக்கத்தக்கவர் என்பதையும், அவர் உன்னில் தூண்டும் பயபக்தியையும் நீ உணர்கிறாய்; அவர் எவ்வளவு அன்பானவர் என்பதை நீ உணர்கிறாய், அவருடைய அரவணைப்பை நீ உணர்கிறாய். ஆனால், அவர் உன் சீர்கேடுகள் நிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளும்போது, அல்லது அவருக்கு எதிராகக் கலகம் செய்ததற்காக அவர் உன்னை நியாயந்தீர்க்கும்போது, கண்டிக்கும்போது அவர் எந்த முறையைப் பயன்படுத்துகிறார்? அவர் உன்னை வார்த்தைகளால் கடிந்துகொள்ளுகிறாரா? உன்னுடைய சூழ்நிலை மூலமாக, ஜனங்கள், செயல்பாடுகள் மற்றும் காரியங்கள் மூலமாக அவர் உன்னை ஒழுங்குபடுத்துகிறாரா? (ஆம்.) தேவன் உன்னை எந்த அளவுக்கு ஒழுங்குபடுத்துகிறார்? சாத்தான் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவிற்கு ஈடாக தேவன் மனிதனை ஒழுங்குபடுத்துகிறாரா? (இல்லை, மனிதனால் எந்த அளவிற்கு தாங்கிக்கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே அவர் அவனை ஒழுங்குபடுத்துகிறார்.) தேவன் இதமான, மென்மையான, அன்பான அக்கறையான, அசாதாரணமான, சரியான முறையில் கிரியை செய்கிறார். “தேவன் இதைச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும்” அல்லது “அதைச் செய்ய தேவன் என்னை அனுமதிக்க வேண்டும்” என்று நீ சொல்லும்படியாய் அவருடைய வழி உன்னில் தீவிரமான, உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளைத் தூண்டுவதில்லை. காரியங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடாத வகையில், தேவன் உனக்கு மனரீதியான அல்லது உணர்ச்சிரீதியான தீவிரத்தைக் கொடுக்கிறதில்லை. அப்படித்தானே? தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிக்கும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது, நீ எவ்வாறு உணருகிறாய்? தேவனுடைய அதிகாரத்தையும் வல்லமையையும் அறிந்து கொள்ளும்போது நீ எவ்வாறு உணருகிறாய்? தேவன் தேவத்துவம் உள்ளவரும் அவமதிக்க முடியாதவர் என்றும் உணருகிறாயா? இந்நாட்களில் உனக்கும் தேவனுக்கும் இடையே இடைவெளியை உணருகிறாயா? தேவனுக்குப் பயப்படுதலை உணருகிறாயா? இல்லை மாறாக, தேவனிடத்தில் பயத்துடனான பயபக்தியை உணருகிறாயா? இது தேவனுடைய கிரியை என்பதினால் அல்லவா ஜனங்கள் இக்காரியங்களை எல்லாம் உணருகிறார்கள்? இவை சாத்தானுடைய கிரியை என்றால் அவர்களுக்கு இந்த உணர்வுகள் இருக்குமா? நிச்சயமாக இருக்காது. தேவன் எப்போதும் மனிதனுடைய தேவையை சந்திக்கவும், அவனை ஆதரிக்கவும், தன்னுடைய வார்த்தைகளையும், தன்னுடைய சத்தியத்தையும், தன்னுடைய ஜீவனையும் பயன்படுத்துகிறார். மனிதன் பெலவீனமாக இருக்கும்போது, சோர்வுற்று இருக்கும்போது, தேவன் அவனிடம் “சோர்வாக உணராதே. எதற்காக நீ சோர்வடைகிறாய்? ஏன் பெலவீனமாக இருக்கிறாய்? பலவீனமாக இருக்கக் காரணம் என்ன? நீ எப்போதும் மிகவும் பெலவீனமாக இருக்கிறாய், எப்போதும் எதிர்மறையாக இருக்கிறாய்! நீ உயிரோடு இருக்கிறதினால் பலன் என்ன? அப்படியே செத்துப் போய் முடிந்து விடு!” என்று நிச்சயமாகக் கடினமாய்ப் பேசமாட்டார். தேவன் இவ்வாறு கிரியை செய்கிறாரா? (இல்லை.) இவ்கையில் கிரியை செய்ய தேவனுக்கு அதிகாரம் உண்டா? ஆம், அவர் செய்கிறார். ஆனாலும் அவர் அவ்வாறு கிரியை செய்வதில்லை. தேவன் இவ்வகையில் கிரியை செய்யாததற்கு காரணம் அவருடைய சாராம்சமே, அது தேவனுடைய பரிசுத்தம் என்னும் சாராம்சமாகும். மனிதனிடம் அவர் கொண்டுள்ள அன்பு, மனிதனை மதிப்புடன் கருதுவது, அன்புடன் பேணுவது ஆகியவைகளை ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் தெளிவாக வெளிப்படுத்த முடியாது. இது மனிதனின் வீண்பெருமையினால் நிறைவேற்றப்பட்டதல்ல, ஆனால் தேவன் உண்மையான நடைமுறையில் கொடுத்த ஒன்றாகும்; இது தேவனுடைய சாராம்சத்தின் வெளிப்பாடாகும். தேவன் கிரியை செய்யும் இந்த வழிகள் அனைத்தும் தேவனுடைய பரிசுத்தத்தை மனிதன் காணச் செய்யுமா? தேவன் செயல்படும் இந்த எல்லா வழிகளிலும், தேவனுடைய நல்ல நோக்கங்கள் உட்பட, மனிதனிடத்தில் தேவன் கொடுக்க விரும்பும் பலன்கள் உட்பட, மனிதனிடத்தில் கிரியை செய்வதற்காக தேவன் பின்பற்றும் பல்வேறு வழிகள், அவர் செய்யும் கிரியைகள், மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறவைகள் உட்பட, தேவனுடைய நல்ல நோக்கங்களில் ஏதேனும் பொல்லாப்பை அல்லது வஞ்சகத்தை நீ பார்த்திருக்கிறாயா? (இல்லை.) ஆகவே தேவன் செய்கிற எல்லாவற்றிலும், தேவன் பேசுகிற எல்லாவற்றிலும், தேவன் தன் இருதயத்தில் சிந்திக்கிற எல்லாவற்றிலும், அவர் வெளிப்படுத்தும் தேவனுடைய சாராம்சத்திலும் கூட, தேவனைப் பரிசுத்தமானவர் என்று அழைக்கலாமா? (ஆம்.) உலகிலாவது அல்லது தனக்குள்ளாவது இந்த பரிசுத்தத்தை எந்த மனிதனாவது கண்டிருக்கிறானா? தேவனைத் தவிர, நீ இதை எந்த மனிதனிடமோ அல்லது சாத்தானிலோ பார்த்திருக்கிறாயா? (இல்லை.) இதுவரை நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில், தேவனைத் தனித்துவமானவர், அவர் தாமே பரிசுத்த தேவன் என்று அழைக்கலாமா? (ஆம்.) தேவன் மனிதனுக்கு அளிக்கும் அனைத்தும், தேவனுடைய வார்த்தைகள், தேவன் மனிதனிடத்தில் கிரியை செய்யும் பல்வேறு வழிகள், தேவன் மனிதனுக்கு என்ன சொல்கிறார், அவனுக்கு என்ன நினைவூட்டுகிறார், அவர் என்ன அறிவுறுத்துகிறார், ஊக்குவிக்கிறார் என்பது உட்பட, இவை அனைத்தும் தேவனுடைய பரிசுத்தம் என்னும் ஒரு சாராம்சத்திலிருந்து உருவாகின்றன. இத்தகைய பரிசுத்த தேவன் இல்லை என்றால், அவர் செய்யும் கிரியையைச் செய்ய எந்த மனிதனும் அவருக்குப் பதிலீடு செய்ய முடியாது. தேவன் இந்த மனிதர்களை முழுவதுமாக சாத்தானிடம் ஒப்படைத்திருந்தால், நீங்கள் இன்று என்ன மாதிரியான நிலையில் இருப்பீர்கள் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? நீங்கள் எல்லோரும் இங்கே முழுமையாக, குற்றமற்றவர்களாக அமர்ந்து இருப்பீர்களா? நீங்களும் இப்படிச் சொல்வீர்களா: “பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன்” என்று. இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் மிகவும் தைரியமாக, அளவு கடந்த சுய நம்பிக்கைகொண்டு, ஆணவம் நிறைந்து, தேவனுக்கு முன்பாக பேசுவும், வெட்கமின்றி பெருமை கொள்ளவும் செய்வீர்களா? சந்தேகத்தின் நிழல் இல்லாமல் நீங்கள் நிச்சயமாக செய்வீர்கள்! மனிதனைக் குறித்த சாத்தானுடைய மனப்பான்மையானது, சாத்தானுடைய இயல்பும் சாராம்சமும் தேவனுடையதிலிருந்து முற்றிலும் எதிரானது என்பதை மனிதன் பார்க்க அனுமதிக்கிறது. தேவனுடைய பரிசுத்தத்திற்கு நேர்மாறான சாத்தானுடைய சாராம்சம் என்ன? (சாத்தானின் பொல்லாப்பு.) சாத்தானுடைய பொல்லாத தன்மை தேவனுடைய பரிசுத்தத்துக்கு நேர்மாறானதாகும். பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய இந்த வெளிப்பாட்டையும், தேவனுடைய இந்த பரிசுத்தத்தின் சாராம்சத்தையும் உணர்ந்து கொள்ளாததின் காரணம் என்னவென்றால், அவர்கள் சாத்தானுடைய ராஜ்யத்தின்கீழ், அவனுடைய சீர்கேட்டுக்குள், அவனுடைய வாழ்க்கை இணைப்பிற்குள் வாழ்கிறார்கள். பரிசுத்தம் என்றால் என்ன அல்லது பரிசுத்தத்தை எப்படி வரையறுப்பது என்று அவர்களுக்குத் தெரியாது. தேவனுடைய பரிசுத்தத்தை நீ புரிந்து கொண்டாலும், அவருடைய பரிசுத்தத்தை நீ இன்னும் உறுதிப்பாட்டுடன் வரையறுக்க முடியாது. இது தேவனின் பரிசுத்தத்தைப் பற்றி மனிதனின் அறிவில் உள்ள ஏற்றத்தாழ்வாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IV” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. “பட்டையை இறுக்கும் மந்திரம்” என்பது ஜர்னி டூ த வெஸ்ட் என்ற சீன நாவலில், துறவி டாங் சாங்சாங் பயன்படுத்திய ஒரு மந்திரமாகும். சன் வுகோங்கைக் கட்டுப்படுத்த அவர் இந்த மந்திரத்தைப் பயன்படுத்துகிறார், அவரின் தலையைச் சுற்றி ஓர் உலோகப் பட்டையை இறுக்கி, அவருக்குக் கடுமையான தலைவலியைக் கொடுத்து அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். ஒரு நபரைப் பிணைக்கும் ஒன்றை விவரிக்க இது ஓர் உருவகமாக மாறிவிட்டது.


தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 142

மனிதன் மீதான சாத்தானின் கிரியையை எது விவரிக்கிறது? உங்கள் சொந்த அனுபவங்களின் மூலம் இதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவன் மீண்டும் மீண்டும் செய்யும் காரியமும், ஒவ்வொரு நபரிடத்திலும் செய்ய முயற்சிக்கும் விஷயமுமாகிய இது சாத்தானின் தொன்மையான அம்சமாகும். ஒருவேளை உங்களால் அந்த அம்சத்தைப் பார்க்க முடியாது, அதனால், சாத்தான் மிகவும் பயமுறுத்துகிறவன், வெறுக்கத்தக்கவன் என்பதை நீங்கள் உணர்வதில்லை. இந்த அம்சம் எப்படிப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா? (அவன் மனிதனைத் தூண்டுகிறான், மயக்குகிறான், சோதிக்கிறான்.) அது சரியானது. இந்த அம்சம் பல வழிகளில் வெளிப்படுகிறது. சாத்தான் மனிதனை ஏமாற்றி, தாக்கி, குற்றஞ்சாட்டவும் செய்கிறான்—இவை அனைத்தும் அந்த அம்சத்தின் வெளிப்பாடுகள் ஆகும். இன்னும் ஏதாவது இருக்கிறதா? (அவன் பொய் சொல்கிறான்.) ஏமாற்றுவதும், பொய் சொல்வதும் சாத்தானுடைய இயற்கையான இயல்பு. இது பெரும்பாலும் இந்த விஷயங்களைச் செய்கிறது. ஜனங்களை அதிகாரம் செய்தல், அவர்களைத் தூண்டிவிடுதல், காரியங்களைச் செய்யும்படி அவர்களை வற்புறுத்துதல், அவர்களுக்குக் கட்டளையிடுதல், வலுக்கட்டாயமாக அவர்களை ஆட்கொள்ளுதல் ஆகியவையும் உள்ளன. இப்போது நான் உங்களுக்கு ஒன்றை விவரிக்கிறேன், அது உங்களை மிகவும் பயமுறுத்தும், ஆனால் உங்களை பயமுறுத்துவதற்காக நான் அதை செய்யவில்லை. தேவன் மனிதனில் கிரியை செய்கிறார், தன்னுடைய மனப்பான்மையிலும், இருதயத்திலும் மனிதனை நேசிக்கிறார். மறுபுறம், சாத்தான் மனிதனை சிறிதளவும் கருத்தில் கொள்வதே இல்லை, மேலும் அது மனிதனுக்கு எவ்வாறு தீங்கு விளைவிப்பது என்று தன் நேரம் முழுவதையும் செலவழிக்கிறது. அப்படித்தானே? மனிதனுக்குத் தீங்கு விளைவிக்க அவன் சிந்திக்கும்போது, அவன் அவசரமான மனநிலையுடன் இருக்கிறானா? (ஆம்.) ஆகவே, மனிதனிடத்திலான சாத்தானின் கிரியையைப் பொறுத்தவரையில், சாத்தானின் தீமை மற்றும் தீங்கிழைக்கும் தன்மையை முழுவதுமாய் விவரிக்கக்கூடிய இரண்டு சொற்றொடர்கள் என்னிடம் உள்ளன, அவை சாத்தானின் வெறுக்கத்தக்கத் தன்மையை அறிய உண்மையிலேயே உங்களை அனுமதிக்கும்: மனிதன் மீதான சாத்தானின் அணுகுமுறையில், மனிதன் மீதான முழுமையான கட்டுப்பாட்டைப் பெறவும், மனிதனுக்குக் கொடியதாய்த் தீங்கு செய்யும் அளவிற்கு ஒவ்வொரு மனிதனையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, ஆட்கொள்ள விரும்புகிறான், இதனால் அவன் தன் குறிக்கோளை அடையவும், காட்டுத்தனமான லட்சியத்தை அடைகிறான். “வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தல்” என்றால் என்ன? அது உன் சம்மதத்துடனா அல்லது சம்மதமில்லாமல் நடக்கிற ஒன்றா? அது உனக்குத் தெரிந்தா அல்லது தெரியாமல் நடக்கிறதா? அது முற்றிலும் உனக்குத் தெரியாமல் நிகழ்கிறது என்பதுதான் பதில்! நீ அறிந்திராத சூழ்நிலைகளில், அனேகமாய் அது உன்னிடம் எதுவும் சொல்லாமலும் அல்லது செய்யாமலும், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், எந்த சூழலும் இல்லாமல் அது நிகழ்கிறது—அங்கே சாத்தான் உன்னைச் சுற்றி சுற்றி வந்து உன்னைச் சூழ்ந்து கொள்ளுகிறான். அவன் தன் சுயநலத்திற்காக உன்னைப் பயன்படுத்த வாய்ப்பைத் தேடி, பின்னர் அவன் உன்னை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, உன்னை ஆட்கொண்டு, உன் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதும், உனக்குத் தீங்கு விளைவிப்பதுமான அவனுடைய நோக்கத்தை அடைகிறான். இது தேவனிடமிருந்து மனுக்குலத்தைப் பிரிக்க சாத்தான் போராடுகிறதின் முக்கியமான நோக்கமும் செயல்முறையும் ஆகும். இதைக் கேட்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? (இருதயங்களில் திகிலாகவும் பயமாகவும் உணருகிறோம்.) நீங்கள் வெறுப்படைகிறீர்களா? (ஆம்.) இந்த வெறுப்பை நீங்கள் உணரும்போது, சாத்தான் வெட்கமில்லாதவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சாத்தான் வெட்கமில்லாதவன் என்று நீங்கள் நினைக்கும் போது, உங்களை எப்போதும் கட்டுப்படுத்த விரும்பும், அந்தஸ்து மற்றும் நலன்களுக்கான காட்டுத்தனமான இலட்சியங்களைக் கொண்டவர்கள் மீது நீங்கள் வெறுப்படைகிறீர்களா? (ஆம்.) ஆகவே, மனிதனை வலுக்கட்டாயமாக ஆட்கொள்ளவும், ஆக்கிரமிக்கவும் சாத்தான் என்ன வழிமுறைகளைப் பயன்படுத்துகிறான்? இது குறித்து நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா? “வலுக்கட்டாயமான ஆக்கிரமித்தல்” மற்றும் “ஆட்கொள்ளுதல்” என்ற இந்த இரண்டு சொற்களையும் நீங்கள் கேட்கும்போது, நீங்கள் வெறுப்படைகிறீர்கள், இந்த வார்த்தைகளிலுள்ள தீமையை நீங்கள் உணர முடியும். உன்னுடைய சம்மதம் இல்லாமலோ உனக்குத் தெரியாமலோ, சாத்தான் உன்னை ஆட்கொள்ளுகிறான், உன்னை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கிறான், உன்னைக் கெடுக்கிறான். உன் இருதயத்தில் நீ எதை ருசிக்க முடியும்? நீ அருவருப்பையும் வெறுப்பையும் உணர்கிறாயா? (ஆம்.) சாத்தானின் இப்படிப்பட்ட வழிகளினால் இந்த அருவருப்பையும் வெறுப்பையும் நீ உணரும்போது, தேவனுக்காக நீ எந்த வகையான உணர்வைக் கொண்டிருக்கிறாய்? (நன்றியுணர்வு.) உன்னை இரட்சித்த தேவனுக்கு நன்றி. எனவே, இப்போது, இந்த நேரத்தில், நீ உன்னிடம் உள்ள அனைத்தையும், நீ இருக்கும் நிலையையும் தேவன் கையகப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் அவரை அனுமதிக்க விரும்புகிறாயா? (ஆம்.) எந்த சூழலில் இவ்வாறு பதிலளிக்கிறாய்? நீ சாத்தானால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டு, ஆட்கொள்ளப்படுவாய் என்று பயப்படுகிறதினால் “ஆம்” என்று சொல்கிறாயா? (ஆம்.) உன்னிடம் இந்த வகையான மனநிலை இருக்கக்கூடாது; அது சரியல்ல. பயப்படாதே, ஏனென்றால் தேவன் இங்கே இருக்கிறார். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. நீ சாத்தானுடைய பொல்லாத சாராம்சத்தைப் புரிந்து கொண்டவுடன், தேவனுடைய அன்பு, தேவனுடைய நல்ல நோக்கங்கள், மனிதனுக்காக தேவன் கொண்டுள்ள மனதுருக்கம் மற்றும் சகிப்புத்தன்மை, அவருடைய நீதியான மனநிலைக் குறித்த மிக துல்லியமான புரிதலோ அல்லது ஆழமான நேசமோ உனக்கு இருக்க வேண்டும். சாத்தான் மிகவும் வெறுக்கத்தக்கவன், ஆனாலும் இது தேவனின் மீதான உன் அன்பையும், தேவன் மீதான உன் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தூண்டவில்லை என்றால், நீ எந்த வகையான நபர்? சாத்தான் இப்படி உனக்குத் தீங்கு செய்ய விரும்புகிறாயா? சாத்தானுடைய பொல்லாப்பையும் அருவருப்பையும் பார்த்த பின்பு, நாம் மனந்திரும்பி தேவனைப் பார்க்கிறோம். தேவனைப் பற்றிய உன்னுடைய அறிவு இப்போது ஏதேனும் மாற்றத்திற்குள்ளாகி இருக்கிறதா? தேவன் பரிசுத்தர் என்று சொல்லலாமா? தேவன் குற்றமற்றவர் என்று சொல்லலாமா? “தேவனின் தனித்துவமான பரிசுத்தம்”—தேவன் இந்த அதிகாரத்திற்கு ஏற்ப வாழ முடியுமா? (ஆம்.) ஆகவே, மனிதனுக்கு இருக்கும் தேவனைப் பற்றிய இந்த புரிதலுக்கு ஏற்ப, தேவனால் மட்டுமே இந்த உலகிலும், மற்ற எல்லாவற்றுக்கு மத்தியிலும் வாழ முடியும் அல்லவா? (ஆம்.) ஆகவே தேவன் மனிதனுக்கு மிகச்சரியாக என்ன கொடுக்கிறார்? உனக்கே தெரியாமல் அவர் உனக்குக் கொஞ்சம் கவனிப்பு, அக்கறை மற்றும் முக்கியத்துவம் மட்டுமே தருகிறாரா? தேவன் மனிதனுக்கு என்ன கொடுத்திருக்கிறார்? தேவன் மனிதனுக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார், மனிதனுக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார், எதையும் கோராமல், எந்தவிதமான இரகசியமான உள்நோக்கமும் இல்லாமல், நிபந்தனையின்றி மனிதனுக்கு இதையெல்லாம் அளிக்கிறார். அவர் மனிதனுக்கு வழிகாட்டவும், அவனை வழிநடத்தவும் தன்னுடைய சத்தியத்தையும் தன்னுடைய வார்த்தைகளையும் தன்னுடைய ஜீவனையும் பயன்படுத்தி, சாத்தானுடைய கேடுகளில் இருந்தும், அவனுடைய சோதனைகளிலிருந்தும், தூண்டுதல்களிலிருந்தும் மனிதனைப் பிரித்து, சாத்தானுடைய பொல்லாத தன்மையையும், கொடூரமான முகத்தையும் மனிதன் பார்க்க அனுமதிக்கிறார். மனுக்குலத்துக்கான தேவனுடைய அன்பும் அக்கறையும் உண்மையானதா? அது நீங்கள் எல்லோரும் அனுபவிக்கக்கூடிய ஒன்றா? (ஆம்.)

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IV” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 143

உங்கள் விசுவாச வாழ்க்கையின் எல்லா வருடங்களிலும், தேவன் இம்மட்டும் உன்னிடத்தில் செய்த கிரியையைத் திரும்பிப் பார். இக்காரியம் உன்னிடத்தில் ஆழமான அல்லது மேலோட்டமான உணர்வுகளை உண்டாக்கினாலும், இது உனக்கு எல்லாவற்றையும்விட மிகவும் அவசியமான ஒரு விஷயமல்லவா? இது நீ பெற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் தேவையான ஒன்றல்லவா? (ஆம்.) இது சத்தியம் அல்லவா? இது ஜீவன் அல்லவா? (ஆம்.) எப்பொழுதாவது தேவன் உனக்கு ஞானத்தை அளித்துவிட்டு, பின்பு அவர் உனக்குக் கொடுத்த எல்லாவற்றிற்கும் ஈடாக, அவருக்காக எதையாகிலும் நீ கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறாரா? (இல்லை.) அப்படியானால் தேவனுடைய நோக்கம் என்ன? தேவன் இதை ஏன் செய்கிறார்? உன்னை ஆக்கிரமிக்கும் நோக்கம் தேவனுக்கு உண்டா? (இல்லை.) மனிதனின் இருதயத்திற்குள் தேவன் தனது சிங்காசனத்தை அமைக்க விரும்புகிறாரா? (ஆம்.) ஆகவே, தேவன் சிங்காசனம் அமைப்பதற்கும், சாத்தானுடைய வலுக்கட்டாயமான ஆக்கிரமித்தலுக்கும் என்ன வித்தியாசம்? தேவன் மனிதனுடைய இருதயத்தை ஆதாயப்படுத்த விரும்புகிறார், அவர் மனிதனுடைய இருதயத்தை ஆட்கொள்ள விரும்புகிறார் என்பதன் அர்த்தம் என்ன? மனிதன் தன்னுடைய கைப்பொம்மைகளாகவும், தன்னுடைய இயந்திரங்களாகவும் மாற வேண்டுமென தேவன் விரும்புகிறார் என்று அர்த்தமா? (இல்லை.) அப்படியானால் தேவனுடைய நோக்கம் என்ன? தேவன் மனிதனுடைய இருதயத்தை ஆட்கொள்ள விரும்புவதற்கும், சாத்தான் மனிதனை வலுக்கட்டாயமாக ஆட்கொள்ள, ஆக்கிரமிப்பு செய்ய விரும்புவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறதா? (ஆம்.) என்ன வித்தியாசம்? நீங்கள் எனக்குத் தெளிவாக சொல்ல முடியுமா? (சாத்தான் அதை கட்டாயத்தினால் செய்கிறான், தேவனோ மனிதன் தன்னார்வத்துடன் இடங்கொடுக்க அனுமதிக்கிறார்.) இதுவா வித்தியாசம்? உன்னுடைய இருதயத்தினால் தேவனுக்குப் பயன் என்ன? உன்னை ஆட்கொள்வதினால் தேவனுக்குப் பயன் என்ன? “தேவன் மனிதனுடைய இருதயத்தை ஆட்கொள்கிறார்” என்பதை உங்கள் இருதயத்தில் எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்? இங்கே, தேவனைப் பற்றி நாம் நியாயமாகப் பேச வேண்டும். இல்லையென்றால் ஜனங்கள் தவறாகப் புரிந்து கொண்டு, “தேவன் எப்பொழுதும் என்னை ஆக்கிரமிக்கவே விரும்புகிறார். அவர் என்னை எதற்காக ஆக்கிரமிக்க விரும்புகிறார்? நான் ஆக்கிரமிக்கப்பட விரும்பவில்லை, நான் எனக்கே எஜமானராக இருக்க விரும்புகிறேன். சாத்தான் ஜனங்களை ஆக்கிரமிக்கிறான் என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் தேவனும் ஜனங்களை ஆக்கிரமிக்கிறார். இந்த இரண்டும் ஒன்றுதானே? என்னை யாரும் ஆக்கிரமிப்பதை நான் விரும்பவில்லை. நான் நானே!” என்று நினைப்பார்கள். இங்கே இருக்கும் வித்தியாசம் என்ன? இதைக்குறித்து யோசியுங்கள். நான் உங்களிடத்தில் கேட்கிறேன், “தேவன் மனிதனை ஆட்கொள்கிறார்” என்பது வெறுமையான சொற்றொடரா? “தேவன் மனிதனை ஆட்கொள்கிறார்” என்பதற்கு அவர் உன்னுடைய இருதயத்தில் ஜீவித்து, உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துகிறார் என்று அர்த்தமா? அவர் உன்னை உட்காரச் சொன்னால், நீ நிற்பாயா? அவர் உன்னை கிழக்கே போகச் சொன்னால், நீ மேற்கே போவாயா? இந்த வாக்கியங்களில் “ஆக்கிரமிப்பு” என்பது சொல்லப்படுகிறதா? (இல்லை. அது அப்படிச் சொல்லவில்லை. தேவனிடத்தில் இருப்பதையும், அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் கொண்டு மனிதன் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.) தேவன் மனிதனை நிர்வகித்த இந்த ஆண்டுகளில், மனிதன் மீதான தனது கிரியையில், இந்த கடைசி கட்டம் வரையிலும், தேவன் பேசின எல்லா வார்த்தைகளினால் மனிதன் மேல் உண்டான திட்டமிட்ட பலன் என்ன? தேவன் கொண்டிருப்பதையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் கொண்டு மனிதன் வாழ்கிற காரியமா அது? “தேவன் மனிதனுடைய இருதயத்தை ஆட்கொள்கிறார்” என்ற வார்த்தைகளுக்குரிய பொருளைப் பார்த்தால், ஏதோ தேவன் மனிதனுடைய இருதயத்தில் நுழைந்து, அதை ஆக்கிரமித்து, அதில் ஜீவித்து, திரும்பவும் வெளியே வராதது போலத் தெரியலாம். அவர் மனிதனின் எஜமானராகிறார், மேலும் மனிதனின் இதயத்தை அவன் விருப்பதுடன் ஆதிக்கம் செலுத்தவும், கையாளவும் அவரால் முடியும், இதனால் தேவன் என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறாரோ, மனிதன் அதைச் செய்ய வேண்டும். இந்த அர்த்தத்தில், ஒவ்வொரு மனிதனும் தேவனாக முடியும் என்றும், அவரது சாராம்சத்தையும், மனநிலையையும் கொண்டிருக்க முடியும் என்றும் தோன்றும். ஆகவே, இந்த விஷயத்தில் மனிதனும் தேவனுடைய கிரியைகளைச் செய்ய முடியுமா? “ஆக்கிரமிப்பு” என்பதை இவ்வகையில் விளக்க முடியுமா? (இல்லை.) அப்படியானால் அது என்ன? நான் உங்களிடம் இதைக் கேட்கிறேன்: தேவன் மனிதனுக்குக் கொடுக்கும் எல்லா வார்த்தைகளும், சத்தியங்களும் அவருடைய சாராம்சம், அவரிடத்தில் இருக்கிற மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதின் வெளிப்பாடா? (ஆம்.) இது நிச்சயமான உண்மை. தேவன் மனிதனுக்குக் கொடுக்கும் எல்லா வார்த்தைகளையும் அவர் கடைப்பிடிப்பதும், கொண்டிருப்பதும் அத்தியாவசியமானதா? இதைக்குறித்து யோசியுங்கள். தேவன் மனிதனை நியாயந்தீர்க்கும்போது, ஏன் நியாயந்தீர்க்கிறார்? இந்த வார்த்தைகள் எப்படி உயிர்ப்பெறும்? தேவன் மனிதனை நியாயந்தீர்க்கும்போது, அவர் பேசும் இந்த வார்த்தைகளின் பொருள் என்ன? அவற்றின் அடிப்படை என்ன? மனிதனுடைய சீர்கேடான மனநிலை அவற்றின் அடிப்படையா? (ஆம்.) ஆகையால் மனிதனை நியாயந்தீர்க்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் அடையப்படுகிற பலன், தேவனுடைய சாராம்சத்தைச் சார்ந்ததா? (ஆம்.) ஆகவே, தேவன் “மனிதனை ஆக்கிரமித்தல்” என்பது வெறுமையான சொற்றோடரா? நிச்சயமாக அப்படி இல்லை. ஆகவே தேவன் ஏன் இவ்வார்த்தைகளை மனிதனிடம் கூறுகிறார்? அவர் இவ்வார்த்தைகளைச் சொல்வதில் உள்ள நோக்கம் என்ன? இவ்வார்த்தைகள் மனிதனுடைய ஜீவனாக இருக்க வேண்டும் என்று இவற்றை பயன்படுத்துகிறாரா? (ஆம்.) இவ்வார்த்தைகளில், தான் பேசின சத்தியம் முழுவதையும் மனிதனுடைய ஜீவனாக செயல்படும்படி தேவன் அவற்றைப் பயன்படுத்த விரும்புகிறார். இந்த சத்தியங்கள் அனைத்தையும் தேவனுடைய வார்த்தையையும் எடுத்து தன்னுடைய சொந்த ஜீவனாக மனிதன் மாற்றினால், அதன்பின் அவனால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியுமா? அதன் பின்பு மனிதன் தேவனுக்குப் பயப்படுவானா? அதன் பின்பு மனிதன் பொல்லாப்பை விட்டு விலகுவானா? மனிதன் இந்த நிலையை அடைந்தவுடன், தேவனுடைய ராஜரீகத்துக்கும் ஏற்பாட்டிற்கும் அவனால் கீழ்ப்படிய முடியுமா? இதன் பின்பு தேவனுடைய அதிகாரத்திற்கு மனிதன் தன்னை ஒப்புவிப்பானா? யோபைப் போன்ற அல்லது பேதுருவைப் போன்ற ஜனங்கள் தங்கள் வாழ்க்கையின் முடிவை அடையும்போது, அவர்களின் வாழ்க்கை முதிர்ச்சியை அடைந்ததாகக் கருதப்படும்போது, தேவனைப் பற்றிய உண்மையான புரிதல் அவர்களுக்கு இருக்கும்போது, இப்போதும் சாத்தானால் அவர்களை வழிமாற்றி நடத்த முடியுமா? இதன்பின்பும் சாத்தானால் அவர்களை ஆக்கிரமிக்க முடியுமா? சாத்தானால் இன்னும் அவர்களை வலுக்கட்டாயமாக ஆட்கொள்ள முடியுமா? (முடியாது.) ஆகவே எவ்வகையான நபர் இவர்? இவர் தேவனால் முழுவதும் ஆதாயமாக்கப்பட்டவரா? (ஆம்.) இந்த அளவிலான அர்த்தத்தில், தேவனால் முழுமையாகப் ஆதாயப்படுத்தப்பட்ட இந்த வகையான நபரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? தேவனின் பார்வையில், இந்த சூழ்நிலைகளில், அவர் ஏற்கனவே இந்த நபரின் இருதயத்தை ஆக்கிரமித்துவிட்டார். ஆனால் இந்த நபர் என்ன உணருகிறார்? தேவனின் வார்த்தை, தேவனின் அதிகாரம் மற்றும் தேவனின் வழி ஆகியவை மனிதனுக்குள் இருக்கும் ஜீவனாக மாறுகிறதா? மேலும் இந்த ஜீவன் மனித முழுவதுமாக ஆக்கிரமித்து, அவன் வாழ்க்கையையும், அவன் சாராம்சத்தையும் தேவனைத் திருப்திப்படுத்த போதுமானதாய் மாற்றுகிறதா? தேவனின் பார்வையில், இந்த தருணத்தில் மனிதகுலத்தின் இருதயம் அவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? (ஆம்.) இந்த அளவிலான அர்த்தத்தை இப்போது நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்? உங்களை ஆக்கிரமிப்பது தேவனின் ஆவியானவரா? (இல்லை, தேவனின் வார்த்தையே எங்களை ஆக்கிரமிக்கிறது.) தேவனுடைய வழியும் தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய சத்தியமும் உன்னுடைய ஜீவனாய் மாறியிருக்கிறது. இந்த நேரத்தில், தேவனிடத்திலிருந்து வருகிற ஜீவனை மனிதன் பெற்றிருக்கிறான், ஆனால் அந்த ஜீவன் தேவனுடையது என்று நாம் சொல்ல முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால், தேவனுடைய வார்த்தையில் இருந்து மனிதன் பெற வேண்டிய ஜீவன் தேவனுடைய ஜீவன் என்று நாம் கூற முடியாது. ஆகையால் மனிதன் எவ்வளவு காலம் தேவனைப் பின்பற்றினாலும், எத்தனை வார்த்தைகளைத் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டாலும், மனிதன் ஒருபோதும் தேவனாக முடியாது. “நான் உன் இருதயத்தை ஆட்கொண்டேன், இப்பொழுது நீ என்னுடைய ஜீவனைக் கொண்டிருக்கிறாய்” என்று தேவன் ஒரு நாள் சொன்னாலும், அதன் பின்பு, நீ உன்னைத் தேவனாக உணர்வாயா? (இல்லை.) பின்பு நீ யாராக மாறுவாய்? நீ தேவனிடத்தில் ஒரு முழுமையானக் கீழ்ப்படிதலைக் கொண்டிருப்பாய் அல்லவா? தேவன் உனக்கு அளித்த ஜீவனால் உன்னுடைய இருதயம் நிரப்பப்படவில்லையா? தேவன் மனிதனின் இருதயத்தை ஆக்கிரமிக்கும்போது என்ன நடக்கும் என்பதற்கான சாதாரண வெளிப்பாடாக இது இருக்கும். இது உண்மை. இந்தக் கோணத்திலிருந்து அதைப் பார்க்கும் போது, மனிதன் தேவனாக முடியுமா? மனிதன் தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்தின்படி வாழக்கூடியவனாக இருந்தால், தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்க்கும் ஒருவனாக மாறும் போது, மனிதனால் தேவனின் ஜீவ சாரத்தையும் பரிசுத்தத்தையும் கொண்டிருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது என்ன நடந்தாலும், எல்லாம் செய்து முடித்தபின்பும் மனிதன் இன்னும் மனிதனாகவே இருக்கிறான். நீ சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன்; நீ தேவனிடம் இருந்து தேவனின் வார்த்தையைப் பெற்று, தேவனின் வழியைப் பெறும்போது, தேவனின் வார்த்தைகளிலிருந்து வரும் ஜீவனை மட்டுமே நீ பெற்றிருக்கிறாய், மேலும் நீ தேவனால் புகழப்படுபவனாக மாறலாம், ஆனால் நீ ஒருபோதும் தேவனின் ஜீவ சாரத்தையும் அதைவிட தேவனின் பரிசுத்தத்தையும் உடையவனாக இருக்க மாட்டாய்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IV” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 144

சாத்தானுடைய சோதனை (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

மத். 4:1-4  அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

கர்த்தராகிய இயேசுவைச் சோதிக்க பிசாசு முதலில் பயன்படுத்திய வார்த்தைகள் இவை. பிசாசு சொன்னவற்றின் உள்ளடக்கம் என்ன? (“நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்.”) பிசாசு பேசிய இந்த வார்த்தைகள் மிகவும் எளிமையானவை, ஆனால் அவற்றின் சாரத்தில் பிரச்சனை உள்ளதா? பிசாசு, “நீர் தேவனுடைய குமாரனேயானால்,” என்று சொன்னது, ஆனால் அதனுடைய இருதயத்தில், இயேசு தேவனுடைய குமாரன் என்று தெரியுமா, தெரியாதா? அவர் கிறிஸ்து என்று தெரியுமா, தெரியாதா? (அதற்குத் தெரியும்.) பிறகு அது “நீரேயானால்” என்று ஏன் சொன்னது? (அது தேவனைச் சோதிக்க முயற்சித்தது.) ஆனால் அவ்வாறு செய்வதில் அதனுடைய நோக்கம் என்ன? அது, “நீர் தேவனுடைய குமாரனேயானால்.” என்று சொன்னது. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதைத் தன் இருதயத்தில் அது அறிந்திருந்தது. அதனுடைய இருதயத்தில் இந்த விஷயம் மிகவும் தெளிவாக இருந்தது. ஆனால் இதை அறிந்திருந்தாலும், அது அவருக்கு அடிபணிந்து அவரை வணங்கியதா? (இல்லை.) அது என்ன செய்ய விரும்பியது? கர்த்தராகிய இயேசுவைக் கோபப்படுத்தி, பின்னர் அதனுடைய நோக்கங்களுக்கு ஏற்ப அவரைச் செயல்படச் செய்து அவரை முட்டாளாக்க, இந்த முறையையும், இந்த வார்த்தைகளையும் பயன்படுத்த விரும்பியது. இது பிசாசின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த அர்த்தமல்லவா? சாத்தான் தன் இருதயத்தில், இவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதை தெளிவாக அறிந்திருந்தது. ஆனால் அது இந்த வார்த்தைகளைச் சொன்னது. இது சாத்தானுடைய குணம் அல்லவா? சாத்தானுடைய குணம் என்ன? (நயவஞ்சகமாகவும், தீமையாகவும், தேவன் மீது பயபக்தி இன்றியும் இருப்பதாகும்.) தேவன் மீது பயபக்தி இல்லாததால் ஏற்படும் விளைவுகள் என்ன? அது தேவனைத் தாக்க விரும்பியது அல்லவா? அது தேவனைத் தாக்க இந்த முறையைப் பயன்படுத்த விரும்பியது. எனவே, அது கூறியது: “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்;” இது சாத்தானுடைய தீய நோக்கம் அல்லவா? அது உண்மையில் என்ன செய்ய முயற்சித்தது? அதனுடைய நோக்கம் மிகவும் வெளிப்படையானது: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நிலைப்பாட்டையும் அவருடைய அடையாளத்தையும் மறுக்க இந்த முறையைப் பயன்படுத்த முயற்சித்தது. அந்த வார்த்தைகளால் சாத்தான் சொன்னது என்னவென்றால், “நீர் தேவனுடைய குமாரன் என்றால், இந்தக் கற்களை அப்பமாக மாற்றவும். உம்மால் இதைச் செய்ய முடியாவிட்டால், நீர் தேவனுடைய குமாரன் அல்ல, ஆகையால் நீர் இனி உம் கிரியையைச் செய்யக்கூடாது.” இது அப்படிப்பட்டது அல்லவா? அது தேவனைத் தாக்க இந்த முறையைப் பயன்படுத்த விரும்பியது. தேவனுடைய கிரியையை அகற்றவும் அழிக்கவும் விரும்பியது. இது சாத்தானுடைய தீமையாகும். அதனுடைய தீமை அதனுடைய குணத்தினுடைய இயல்பான வெளிப்பாடு ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும், தேவனுடைய அவதாரம் என்றும் அறிந்திருந்தாலும், இத்தகைய காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க இயலாமல், தேவனுக்குப் பின்னால் நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அவரைத் தொடர்ந்து தாக்குவதற்கும், தேவனுடைய கிரியையை சீர்குலைப்பதற்கும், நாசப்படுத்துவதற்கும் அதிக முயற்சிகளைச் செய்தது.

இப்போது, சாத்தான் பேசிய இந்தச் சொற்றொடரை ஆராய்வோம்: “இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்.” கற்களை அப்பங்களாக மாற்றுவது என்பது எதையேனும் குறிக்கின்றதா? ஆகாரம் இருந்தால், அதை ஏன் சாப்பிடக்கூடாது? கற்களை ஆகாரமாக மாற்றுவது ஏன் அவசியமாகிறது? இங்கே எந்த அர்த்தமும் இல்லை என்று சொல்ல முடியுமா? அந்நேரத்தில் அவர் உபவாசத்தில் இருந்தபோதிலும், நிச்சயமாகவே கர்த்தராகிய இயேசுவிடம் சாப்பிட ஆகாரம் இருந்ததா? (அவரிடம் இருந்தது.) ஆகவே, சாத்தானுடைய வார்த்தைகளின் போலித்தனத்தை இங்கே காணலாம். சாத்தானுடைய துரோகம், தீமை அனைத்துக்கும் மேலாக, அதனுடைய மோசடி மற்றும் அபத்தத்தை நாம் இன்னும் அதிகமாகக் காணலாம். சாத்தான், தன்னுடைய தீங்கிழைக்கும் குணத்தைக் காட்டக் கூடிய பல விஷயங்களைச் செய்கிறது. அது தேவனுடைய கிரியையை நாசப்படுத்தும் செயல்களைச் செய்வதை நீ காணலாம். அதை நீ பார்க்கும்போது, அதனை வெறுக்கத்தக்கதாகவும் மற்றும் அது எரிச்சலூட்டுவதாகவும் இருப்பதாக உணர்கிறாய். ஆனால், மறுபுறம், அதனுடைய சொற்களுக்கும் செயல்களுக்கும் பின்னால் ஒரு குழந்தைத்தனமான, அபத்தமான குணத்தை நீ காணவில்லையா? அது சாத்தானுடைய குணத்தைப் பற்றிய வெளிப்பாடு ஆகும். அது இத்தகைய இயல்பைக் கொண்டிருப்பதால், அது இத்தகைய காரியத்தைச் செய்யும். இன்றைய ஜனங்களுக்கு, சாத்தானுடைய இந்த வார்த்தைகள் போலித்தனமானவையாகவும் நகைப்புக்குரியவையாகவும் இருக்கின்றன. ஆனால் சாத்தான் உண்மையில் இத்தகைய வார்த்தைகளைச் சொல்வதில் வல்லவன். இது அறியாமை மற்றும் விசித்திரமானது என்று நாம் கூற முடியுமா? சாத்தானுடைய தீமை எல்லா இடங்களிலும் உள்ளது, அது தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. கர்த்தராகிய இயேசு அதற்கு எவ்வாறு பதிலளித்தார்? (“மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”) இந்த வார்த்தைகளுக்கு ஏதேனும் வல்லமை இருக்கிறதா? (அவற்றுக்கு இருக்கிறது.) அவற்றுக்கு வல்லமை இருக்கிறது என்று நாம் ஏன் சொல்கிறோம்? இந்த வார்த்தைகள் சத்தியம் என்பதால் தான். இப்போது, மனிதன் அப்பத்தால் மட்டுமே வாழ்கிறானா? கர்த்தராகிய இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார். அவர் மரிக்கத்தக்கதாக பட்டினி கிடந்தாரா? அவர் பட்டினி கிடக்கவில்லை. எனவே, சாத்தான் அவரை அணுகி, கற்களை ஆகாரமாக மாற்றும்படி அவரைத் தூண்டியது: “நீ கற்களை ஆகாரமாக மாற்றினால், நீ அதைச் சாப்பிட வேண்டும் அல்லவா? நீ உபவாசம் இருக்க வேண்டாம், பசியுடன் இருக்க வேண்டாம் அல்லவா?” ஆனால் கர்த்தராகிய இயேசு, “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல,” என்று சொன்னார். அதாவது, மனிதன் ஒரு உடலில் ஜீவித்தாலும், அவனது உடலை ஜீவிக்கவும் சுவாசிக்கவும் அனுமதிப்பது ஆகாரம் அல்ல. மாறாக, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் அனுமதிக்கிறது. ஒரு புறம், இந்த வார்த்தைகள் சத்தியமாக இருக்கின்றன; அவை ஜனங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன, அவை தேவனைச் சார்ந்து இருக்க முடியும் என்றும் அவரே சத்தியம் என்றும் உணர வைக்கின்றன. மறுபுறம், இந்த வார்த்தைகளுக்கு ஏதேனும் நடைமுறை அம்சம் உள்ளதா? நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசமிருந்த பிறகும் கர்த்தராகிய இயேசு உயிரோடு இருக்கல்லையா? இது ஒரு உண்மையான உதாரணம் அல்லவா? அவர் நாற்பது பகல் மற்றும் இரவுகளில் எந்த உணவையும் சாப்பிடவில்லை. எனினும், அவர் உயிருடன் இருந்தார். இது அவருடைய வார்த்தைகளின் சத்தியத்தை உறுதிப்படுத்தும் வல்லமை வாய்ந்த சான்றாகும். இந்த வார்த்தைகள் எளிமையானவை. ஆனால் கர்த்தராகிய இயேசுவைப் பொறுத்த வரையில், சாத்தான் அவரைச் சோதித்த போது தான் அவர் அவற்றைப் பேசினாரா, அல்லது அவை ஏற்கனவே இயல்பாகவே அவரின் ஒரு பகுதியாக இருந்ததா? இதை வேறு விதமாகக் கூறினால், தேவனே சத்தியமும், தேவனே ஜீவனுமாயிருக்கிறார், ஆனால் தேவனுடைய சத்தியமும் ஜீவனும் தேவைக்கு ஏற்பக் கூடுதலாக அவருக்குள் இருந்ததா? அவை பிற்கால அனுபவத்தால் பிறந்தவையா? இல்லை—அவை தேவனில் இயல்பானவை. அதாவது, சத்தியமும் ஜீவனும் தேவனுடைய சாராம்சமாகும். அவருக்கு என்ன நேர்ந்தாலும், அவர் வெளிப்படுத்துவதெல்லாம் சத்தியம் தான். இந்த சத்தியத்தால், இந்த வார்த்தைகளால் அவருடைய பேச்சின் உள்ளடக்கம் நீண்டதாகவும் அல்லது குறுகியதாகவும் என எவ்வாறு இருந்தாலும் மனிதனை ஜீவிக்க வைக்கவும் மனிதனுக்கு உயிரைக் கொடுக்கவும் முடியும். மனித ஜீவிதத்தின் பாதையைப் பற்றிய சத்தியத்தையும் தெளிவையும் பெற ஜனங்களுக்கு அவை உதவ முடியும். மேலும், தேவன் மீது நம்பிக்கை வைக்க அவர்களுக்கு உதவ முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த வார்த்தைகளை தேவன் பயன்படுத்துவதற்கான ஆதாரம் நேர்மறையானது. எனவே இந்த நேர்மறையான விஷயம் பரிசுத்தமானது என்று நாம் கூற முடியுமா? (ஆம்.) சாத்தானுடைய அந்த வார்த்தைகள் சாத்தானுடைய குணத்திலிருந்து வந்தவையாகும். சாத்தான் அதனுடைய தீய மற்றும் தீங்கிழைக்கும் குணத்தை எல்லா இடங்களிலும், தொடர்ந்து வெளிப்படுத்துகிறான். இப்போதும், இயற்கையாகவே சாத்தான் இந்த வெளிப்பாடுகளைச் செய்கிறதா? இதனைச் செய்ய யாராவது அதை இயக்குகிறார்களா? அதற்கு யாராவது உதவுகிறார்களா? யாராவது அதை கட்டாயப்படுத்துகிறார்களா? இல்லை. இந்த வெளிப்பாடுகள் அனைத்தையும், அது தனது சொந்த விருப்பப்படி செய்கிறது. இது சாத்தானுடைய தீய குணமாகும். தேவன் எதைச் செய்தாலும், எவ்வாறு அதைச் செய்தாலும், சாத்தான் அவரைப் பின்தொடர்ந்து செயல்படுகிறான். சாத்தான் சொல்லும் மற்றும் செய்யும் இந்த விஷயங்களின் சாராம்சம் மற்றும் உண்மையான தன்மையானது சாத்தானுடைய சாராம்சம் ஆகும்—தீய மற்றும் தீங்கிழைக்கும் ஒரு சாராம்சம் ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 145

சாத்தானுடைய சோதனை (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

மத். 4:5-7  அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி, நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

முதலில் சாத்தான் பேசிய வார்த்தைகளைப் பார்ப்போம். சாத்தான், “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்,” என்று கூறி, பின்பு அது வேதவசனங்களிலிருந்து மேற்கோள் காட்டியது: “தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.” சாத்தானுடைய வார்த்தைகளைக் கேட்கும்போது நீ எப்படி உணருகிறாய்? அவை மிகவும் குழந்தைத்தனமானவை அல்லவா? அவை குழந்தைத்தனமானவை, மோசமானவை, மற்றும் அருவருப்பானவை. ஏன் இதை நான் சொல்கிறேன்? சாத்தான் பெரும்பாலும் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறது, அது தன்னை மிகவும் புத்திசாலி என்று நம்புகிறது. அது பெரும்பாலும் வேத வசனங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறது—தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளைக்கூட மேற்கோள் காட்டுகிறது—தேவனைத் தாக்குவதற்கும், தேவனுடைய கிரியைத் திட்டத்தை நாசப்படுத்தும் அதனுடைய நோக்கத்தை அடைவதற்கான முயற்சியில் அவரைச் சோதிப்பதற்கும் இந்த வார்த்தைகளை தேவனுக்கு எதிராகத் திருப்ப முயற்சிக்கின்றது. சாத்தான் பேசும் இந்த வார்த்தைகளில் எதையேனும் நீங்கள் காண முடிகின்றதா? (சாத்தான் தீய நோக்கங்களைக் கொண்டிருக்கிறது.) சாத்தான் செய்யும் எல்லாவற்றிலும், அது எப்போதும் மனிதகுலத்தைச் சோதிக்க முயற்சிக்கின்றது. சாத்தான் நேராக பேசுவதில்லை. ஆனால் சோதனை, வஞ்சகம், மற்றும் மயக்கத்தைப் பயன்படுத்தி சுற்றி வளைத்து பேசுகிறது. சாத்தான் தேவனை ஒரு சாதாரண மனிதனாகக் கருதுகிறது. தேவனும் அறியாதவர், முட்டாள்தனமானவர், மற்றும் மனிதனைப் போலவே விஷயங்களின் உண்மையான உருவத்தை தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க முடியாதவர் என்று நம்புகிறது. தேவனும் மனிதனைப் போலவே சாத்தானுடைய சாராம்சம் மற்றும் அதனுடைய வஞ்சகம் மற்றும் கெட்ட நோக்கத்தினை பார்க்க இயலாதவர் என்று சாத்தான் நினைக்கிறது. இது சாத்தானுடைய முட்டாள்தனம் அல்லவா? மேலும், சாத்தான் வேதவசனங்களிலிருந்து வெளிப்படையாக மேற்கோள் காட்டுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் நம்பகத்தன்மையை அளிக்கிறது என்றும், அதனுடைய வார்த்தைகளில் ஏதேனும் குறைபாடுகளை உன்னால் கண்டுபிடிக்கவோ அல்லது முட்டாளாக்கப்படுவதைத் தவிர்க்கவோ முடியாது என்றும் நம்புகிறது. இது சாத்தானுடைய அபத்தமும் குழந்தைத்தனமும் அல்லவா? இது, ஜனங்கள் சுவிசேஷத்தைப் பரப்பி தேவனுக்குச் சாட்சி கூறுவது போன்று இருக்கின்றது: தேவனும் மனிதனும் ஒரே மாதிரியானவர்கள் என்று சாத்தான் நினைக்கிறது. அவிசுவாசிகள் சில சமயங்களில் சாத்தான் சொன்னதைப் போலவே ஏதாவது சொல்வார்கள் அல்லவா? இது போன்ற ஒன்றை ஜனங்கள் சொல்லி நீங்கள் கேட்டுள்ளீர்களா? இது போன்ற விஷயங்களை நீ கேட்கும்போது நீ எவ்வாறு உணருகிறாய்? நீ வெறுப்பாக உணருகிறாயா? (ஆம்.) நீ வெறுப்பாக உணர்ந்தால், நீ அருவருப்பையும் பகைமையையும் உணருகிறாயா? இந்த உணர்வுகள் உன்னிடம் இருக்கும்போது, சாத்தானும், மனிதனுக்குள் சாத்தான் உருவாக்கும் கேடான மனப்பான்மையும் பொல்லாதவை என்பதை உன்னால் அறிந்துகொள்ள முடிகின்றதா? உன்னுடைய இருதயங்களில், இந்த உணர்தல் எப்போதாவது இருந்திருக்கிறதா: “சாத்தான் பேசும்போது, இது போன்ற ஒரு தாக்குதலையும், சோதனையையும் தருகிறது. சாத்தானுடைய வார்த்தைகள் அபத்தமானவை, நகைப்புக்கு உரியவை, குழந்தைத்தனமானவை மற்றும் அருவருப்பானவை. இருப்பினும், தேவன் ஒருபோதும் அப்படி பேசவோ செயல்படவோ மாட்டார். உண்மையில் அவர் அவ்வாறு செய்யவில்லை”? நிச்சயமாக, இந்தச் சூழ்நிலையில் ஜனங்கள் அதைத் தெளிவற்ற நிலையில் மட்டுமே உணர முடிகிறது. மேலும், தேவனுடைய பரிசுத்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் உங்களது தற்போதைய அந்தஸ்துடன் மட்டுமே இதை உணர்கின்றீர்கள்: “தேவன் சொல்வது அனைத்தும் சத்தியம். அவை நமக்கு நன்மை பயக்கும். நாம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” இதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய வார்த்தை சத்தியம் என்றும் தேவன் சத்தியமாக இருக்கிறார் என்றும் நீங்கள் விதிவிலக்கு இல்லாமல் சொல்கின்றீர்கள். ஆனாலும் சத்தியமானது பரிசுத்தமுள்ளது என்றும், தேவன் பரிசுத்தர் என்றும் உங்களுக்குத் தெரிவதில்லை.

அப்படியானால், சாத்தானுடைய இந்த வார்த்தைகளுக்கு இயேசுவின் பதில் என்ன? இயேசு அதை நோக்கி: “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே.” என்றார். இயேசு சொன்ன இந்த வார்த்தைகளில் சத்தியம் இருக்கிறதா? நிச்சயமாகவே அவற்றில் சத்தியம் இருக்கிறது. மேலோட்டமாக, இந்த வார்த்தைகள் ஜனங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளையாகும். இது ஒரு எளிய சொற்றொடர். எனினும், மனிதனும் சாத்தானும் பெரும்பாலும் இந்த வார்த்தைகளை அவமதித்திருக்கிறார்கள். ஆகவே, கர்த்தராகிய இயேசு சாத்தானை நோக்கி, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக,” என்று சொன்னார். ஏனென்றால், இதைத் தான் சாத்தான் கடினமாக முயற்சித்து அடிக்கடி செய்தது. சாத்தான் இதை வெட்கமின்றி, அவமானமின்றி செய்தது என்று கூறலாம். தேவனுக்குப் பயப்படாமல் இருப்பதும் தன் இருதயத்தில் தேவனுக்கான மரியாதையை வைத்திராமல் இருப்பதும் சாத்தானுடைய சுபாவமும் சாராம்சமுமாகும். சாத்தான் தேவனுடைய அருகில் நின்று அவரைக் காண முடிந்தபோதும், தேவனைச் சோதிப்பதைச் சாத்தானால் தவிர்க்க முடியவில்லை. ஆகையால், கர்த்தராகிய இயேசு சாத்தானை நோக்கி, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக,” என்றார். தேவன் பெரும்பாலும் சாத்தானிடம் சொன்ன வார்த்தைகள் இவை. எனவே, இந்த சொற்றொடர் இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்படுவது பொருத்தமானதா? (ஆமாம், நாமும் அடிக்கடி தேவனைச் சோதிக்கின்றோம்.) ஜனங்கள் ஏன் பெரும்பாலும் தேவனைச் சோதிக்கிறார்கள்? ஜனங்கள், கேடு நிறைந்த சாத்தானிய மனநிலையால் நிறைந்துள்ளது அதற்குக் காரணமா? (ஆம்.) அப்படியானால், ஜனங்கள் அடிக்கடி சொல்லும் விஷயங்களுக்கு மேலாக சாத்தானுடைய வார்த்தைகள் உள்ளனவா? எந்தச் சூழ்நிலைகளில் ஜனங்கள் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்கள்? நேரம் மற்றும் இடத்தைப் பொருட்படுத்தாமல் ஜனங்கள் இது போன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள் என்று ஒருவர் கூறலாம். ஜனங்களின் மனநிலையானது சாத்தானுடைய கேடான மனநிலையிலிருந்து வேறுபட்டதல்ல என்பதை இது நிரூபிக்கிறது. கர்த்தராகிய இயேசு, ஜனங்களுக்குத் தேவையான, சத்தியத்தைக் குறிக்கும், சில எளிய வார்த்தைகளைச் சொன்னார். இருப்பினும், இந்த சூழ்நிலையில், கர்த்தராகிய இயேசு சாத்தானுடன் வாக்குவாதம் செய்கின்றாரா? அவர் சாத்தானிடம் சொன்னதில் ஏதேனும் மோதல் இருந்ததா? (இல்லை.) கர்த்தராகிய இயேசு தன் இருதயத்தில் சாத்தானுடைய சோதனையைப் பற்றி எப்படி உணர்ந்தார்? அவர் வெறுப்படைந்து விரட்டியடித்தாரா? கர்த்தராகிய இயேசு விரக்தியடைந்தார், வெறுப்படைந்தார், ஆனாலும் அவர் சாத்தானுடன் வாக்குவாதம் செய்யவில்லை, எந்தவொரு பெரிய கொள்கைகளையும் பேசவில்லை. அது ஏன்? (ஏனெனில் சாத்தான் எப்போதுமே இப்படி இருக்கும்; அதை ஒருபோதும் மாற்ற முடியாது.) சாத்தான் நியாயத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியுமா? (ஆம்.) தேவன் சத்தியமானவர் என்பதை சாத்தானால் அடையாளம் காண முடியுமா? தேவன் சத்தியமானவர் என்பதைச் சாத்தான் ஒருபோதும் அடையாளம் கண்டு கொள்ளாது, தேவனே சத்தியம் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது; இது அதனுடைய குணம். சாத்தானுடைய குணத்தின் மற்றொரு அம்சம் வெறுக்கத்தக்கது. அது என்ன? கர்த்தராகிய இயேசுவைச் சோதிப்பதற்கான அதனுடைய முயற்சிகளில் தோல்வியுற்றாலும், மீண்டும் அதைச் செய்ய முயற்சிக்க வேண்டும் என சாத்தான் நினைத்ததாகும். அது தண்டிக்கப்படும் என்றாலும், எப்படியும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்தது. அவ்வாறு செய்வதால் எந்த நன்மையும் கிடைக்காது என்றாலும், அது முயற்சிக்கும், அதனுடைய முயற்சிகளில் தொடர்ந்து நிலைத்திருக்கும் மற்றும் கடைசி வரை தேவனுக்கு எதிராக நிற்கும். இது எத்தகைய குணம்? இது தீமை அல்லவா? தேவனைப் பற்றிப் பேசுகையில் ஒரு மனிதன் கோபமடைந்து ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தால், அவர் தேவனைக் கண்டுள்ளாரா? அவருக்கு தேவன் யார் என்று தெரியுமா? தேவன் யார் என்று அவருக்குத் தெரியாது. அவர் தேவனை நம்பவில்லை. தேவன் அவருடன் பேசவில்லை. தேவன் அவரை ஒருபோதும் தொந்தரவு செய்யவில்லை. இந்நிலையில் அவர் ஏன் கோபப்பட வேண்டும்? இந்த நபர் தீயவர் என்று நாம் கூற முடியுமா? உலகப் போக்கின் வழக்கத்தில் இருப்பதும், புசிப்பதும், குடிப்பதும், சிற்றின்பம் தேடுவதும், பிரபலங்களைப் பின்பற்றுவதும் என இவை எதுவும் அத்தகைய மனிதனைப் பாதிக்காது. இருப்பினும், “தேவன்” என்ற வார்த்தையை அல்லது தேவனுடைய வார்த்தைகளின் சத்தியத்தைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கிறார். ஒரு தீய குணத்தை அவர் பெற்றிருப்பதை இது குறிப்பிடவில்லையா? இந்த குணத்தை மனிதனுடைய தீய குணம் என்று நிரூபிக்க இது போதுமானதாகும். இப்போது நீங்களே யோசித்துப் பாருங்கள், சத்தியம் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில், மனிதகுலத்திற்கான தேவனுடைய சோதனைகள் அல்லது மனிதனுக்கு எதிரான தேவனுடைய நியாயத்தீர்ப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில், நீங்கள் ஒரு வெறுப்பை உணர்கின்றீர்கள்; நீங்கள் துரத்தப்படுவதாக உணர்கின்றீர்கள். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் கேட்க விரும்புவதில்லையா? உங்கள் இருதயம் இவ்வாறு நினைக்கலாம்: “தேவனே சத்தியம் என்று ஜனங்கள் அனைவரும் சொல்வதில்லையா? இவற்றுள் சில வார்த்தைகளில் சத்தியம் இல்லை! அவை தெளிவாகவே மனிதனுக்கான தேவனுடைய அறிவுரைகள் ஆகும்!” சிலர் தங்கள் இருதயத்தில் ஒரு வலுவான வெறுப்பை உணர்ந்து கொண்டு, சிந்திக்கலாம்: “அவருடைய சோதனைகளும், அவருடைய நியாயத்தீர்ப்பும் ஒவ்வொரு நாளும் பேசப்படுகிறது, அது எப்போது முடிவடையும்? எப்போது அந்த நல்ல தலைவிதியைப் பெறுவோம்?” இந்த நியாயமற்ற கோபம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. இது எத்தகைய குணம்? (தீய குணம்.) இது சாத்தானுடைய தீய குணத்தால் இயக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. தேவனுடைய பார்வையில், சாத்தானுடைய தீய குணம் மற்றும் மனிதனுடைய கேடான மனநிலை குறித்து, அவர் ஒருபோதும் ஜனங்களுக்கு எதிராக வாதிடுவதில்லை அல்லது கோபப்படுவதும் இல்லை, ஜனங்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்ளும்போது, அவர் ஒருபோதும் கண்டுகொள்வதும் இல்லை. தேவன் மனிதர்களிடம் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருப்பதை நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள். மேலும், விஷயங்களைக் கையாள தேவன், மனிதகுலத்தின் கண்ணோட்டங்கள், அறிவு, அறிவியல், தத்துவம் அல்லது கற்பனை ஆகியவற்றைப் பயன்படுத்துவதை நீங்கள் காண மாட்டீர்கள். மாறாக, தேவன் செய்யும் அனைத்தும், அவர் வெளிப்படுத்தும் அனைத்தும் சத்தியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் சத்தியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சத்தியம் சில ஆதாரமற்ற கற்பனையின் விளைவாக இல்லை. இந்த சத்தியமும் இந்த வார்த்தைகளும் அவரது சாராம்சம் மற்றும் அவரது ஜீவனால் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த வார்த்தைகளும், தேவன் செய்த எல்லாவற்றின் சாராம்சமும், சத்தியம் என்பதால், தேவனுடைய சாராம்சம் பரிசுத்தமானது என்று நாம் கூறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் சொல்வது மற்றும் செய்வது அனைத்தும் ஜனங்களுக்கு ஆற்றலையும் வெளிச்சத்தையும் தருகின்றன. நேர்மறையான விஷயங்களையும் அந்த நேர்மறையான விஷயங்களின் யதார்த்தத்தையும் காண ஜனங்களுக்கு உதவுகின்றன. மேலும், அவர்கள் பரிபூரணமான பாதையில் செல்ல மனிதகுலத்திற்கான வழியை சுட்டிக்காட்டுகின்றன. இந்த விஷயங்கள் அனைத்தும் தேவனுடைய சாராம்சம் மற்றும் அவருடைய பரிசுத்தத்தின் சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 146

சாத்தானுடைய சோதனை (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

மத். 4:8-11  மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.

பிசாசான சாத்தான், அதனுடைய முந்தைய இரண்டு சூழ்ச்சிகளில் தோல்வியுற்றதால், இன்னொன்றை முயற்சித்தது: அது உலகில் உள்ள எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் கர்த்தராகிய இயேசுவிடம் காட்டி, அதை வணங்கும்படி அவரிடம் கேட்டது. இந்தச் சூழ்நிலையிலிருந்து பிசாசின் உண்மையான அம்சங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள முடிந்ததென்ன? பிசாசான சாத்தான் முற்றிலும் வெட்கமில்லாததா? (ஆம்.) அது வெட்கமற்றதாக இருப்பது எப்படி? எல்லாமே தேவனால் படைக்கப்பட்டவை, ஆனாலும் சாத்தான் திரும்பி எல்லாவற்றையும் தேவனுக்குக் காட்டி, “இந்த ராஜ்யங்கள் அனைத்தின் செல்வத்தையும் மகிமையையும் பாரும். நீர் என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குக் கொடுப்பேன்” என்றது. இது முற்றிலும் தலைகீழான காரியம் அல்லவா? சாத்தானுக்கு வெட்கமில்லையா? தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், ஆனால் எல்லாவற்றையும் அவர் தனது சொந்த இன்பத்திற்காக செய்தாரா? தேவன் எல்லாவற்றையும் மனிதகுலத்திற்குக் கொடுத்தார். ஆனால் சாத்தான் அதையெல்லாம் கைப்பற்ற விரும்பியது. அனைத்தையும் கைப்பற்றியதால், அது தேவனிடம், “என்னை வணங்கும்! என்னை வணங்கும், இதையெல்லாம் நான் உமக்குக் கொடுப்பேன்” என்றது. இது சாத்தானுடைய அசிங்கமான முகம். அது முற்றிலும் வெட்கமற்றது! “அவமானம்” என்ற வார்த்தையின் அர்த்தம் கூட சாத்தானுக்குத் தெரியாது. இது, அதனுடைய தீமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். அவமானம் என்றால் என்ன என்று கூட அதற்குத் தெரியாது. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பதையும், அவர் எல்லாவற்றையும் ஆளுகிறார், எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதையும் சாத்தான் தெளிவாக அறிந்திருந்தது. எல்லாம் மனிதனுடையது அல்ல, சாத்தானுடையதும் அல்ல. மாறாக தேவனுக்குச் சொந்தமானது. ஆனாலும் பிசாசான சாத்தான் எல்லாவற்றையும் தேவனுக்குக் கொடுக்கும் என்று வெட்கமின்றி சொன்னது. சாத்தான் மீண்டும் அபத்தமாகவும் வெட்கமின்றியும் நடந்து கொண்டதற்கு இது மற்றொரு உதாரணம் அல்லவா? இந்த செயல், தேவன், சாத்தானை இன்னும் அதிகமாக வெறுக்க வைக்கிறது, இல்லையா? ஆயினும், சாத்தான் என்ன முயற்சி செய்தாலும், கர்த்தராகிய இயேசு முட்டாளாக்கப்பட்டாரா? கர்த்தராகிய இயேசு என்ன சொன்னார்? (“உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.”) இந்த வார்த்தைகளுக்கு நடைமுறை அர்த்தம் உள்ளதா? (ஆம்.) எத்தகைய நடைமுறை அர்த்தம்? சாத்தானுடைய தீமையான மற்றும் வெட்கமற்ற குணத்தை அதனுடைய பேச்சில் காண்கிறோம். எனவே, மனிதன் சாத்தானை வணங்கினால், அதனுடைய விளைவு என்னவாக இருக்கும்? எல்லா ராஜ்யங்களின் செல்வத்தையும் மகிமையையும் அவர்கள் பெறுவார்களா? (இல்லை.) அவர்கள் எதைப் பெறுவார்கள்? மனிதகுலம் சாத்தானைப் போலவே வெட்கமில்லாமலும் நகைப்புக்கு உரியதாகவும் மாறுமா? (ஆம்.) அப்போது அவர்கள் சாத்தானிடமிருந்து வேறுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். ஆகையால், கர்த்தராகிய இயேசு ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.” இதன் அர்த்தம் என்னவென்றால், தேவனைத் தவிர, நீ வேறொருவருக்கு சேவை செய்திருந்தால், நீ சாத்தானை வணங்கினால், நீ சாத்தானைப் போலவே அசுத்தமாக இருப்பாய். நீ சாத்தானுடைய வெட்கமற்ற குணத்தையும் அதனுடைய தீமையையும் பகிர்ந்து கொள்வாய். சாத்தானைப் போலவே நீ தேவனைச் சோதித்து தேவனைத் தாக்குவாய். அதனுடைய விளைவு உனக்கு என்னவாக இருக்கும்? நீ தேவனால் வெறுக்கப்படுவாய். தேவனால் தாக்கப்பட்டு, தேவனால் அழிக்கப்படுவாய். கர்த்தராகிய இயேசுவை சாத்தான் வெற்றியின்றி பல முறை சோதித்தபின், அது மீண்டும் முயற்சித்ததா? சாத்தான் மீண்டும் முயற்சிக்கவில்லை. பின்னர் அது வெளியேறியது. இது எதனை நிரூபிக்கின்றது? சாத்தானுடைய தீய குணம், அதனுடைய தீமை மற்றும் அதனுடைய அபத்தம் மற்றும் முட்டாள்தனம் ஆகியவை தேவனுடைய முகத்தில் குறிப்பிடக்கூட தகுதியற்றவை என்பதை இது நிரூபிக்கின்றது. கர்த்தராகிய இயேசு சாத்தானை மூன்று வாக்கியங்களால் மட்டுமே தோற்கடித்தார். அதற்குப் பிறகு அவமானத்துடன், முகத்தைக்கூட காட்ட முடியாத வகையில் வெட்கத்துடன் விலகிச் சென்றது. அதன் பின் அது ஒருபோதும் கர்த்தராகிய இயேசுவைச் சோதிக்கவில்லை. கர்த்தராகிய இயேசு சாத்தானுடைய இந்தச் சோதனையைத் தோற்கடித்ததால், இப்போது அவர் செய்ய வேண்டிய கிரியையையும், அவர் முன் இருந்த பணிகளையும் எளிதில் தொடர முடிந்தது. இந்த சூழ்நிலையில் கர்த்தராகிய இயேசு செய்த மற்றும் சொன்ன அனைத்தும், இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் நடைமுறை அர்த்தத்தை கூறுகின்றதா? (ஆம்.) எத்தகைய நடைமுறை அர்த்தம்? சாத்தானைத் தோற்கடிப்பது எளிதான காரியமா? சாத்தானுடைய தீய குணத்தைப் பற்றி ஜனங்களுக்கு தெளிவானப் புரிதல் இருக்க வேண்டுமா? சாத்தானுடைய சோதனையைப் பற்றி ஜனங்களுக்குத் துல்லியமான புரிதல் இருக்க வேண்டுமா? (ஆம்.) உனது சொந்த ஜீவிதத்தில் சாத்தானுடைய சோதனையை நீ அனுபவிக்கும் போது, சாத்தானுடைய தீய குணத்தை நீ காண முடிந்தால், அதை நீ தோற்கடிக்க முடியாதிருக்குமா? சாத்தானுடைய அபத்தங்கள் மற்றும் போலித்தனத்தைப் பற்றி நீ அறிந்திருந்தால், நீ இன்னும் சாத்தானுடைய பக்கத்தில் நின்று தேவனைத் தாக்குவாயா? சாத்தானுடைய தீமை மற்றும் வெட்கமற்ற குணம் உன் மூலம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை நீ புரிந்து கொண்டால்—இந்த விஷயங்களை நீ தெளிவாக அறிந்து புரிந்து கொண்டால்—நீ இன்னும் தேவனை இவ்வாறு தாக்கிச் சோதிப்பாயா? (இல்லை, நாம் சோதிக்கமாட்டோம்.) நீங்கள் என்ன செய்வீர்கள்? (நாம் சாத்தானுக்கு எதிராகக் கலகம் செய்து அதை ஒதுக்கி வைப்போம்.) இது எளிதான காரியமா? இது எளிதானது அல்ல. இதைச் செய்ய, ஜனங்கள் அடிக்கடி ஜெபிக்க வேண்டும், அவர்கள் பெரும்பாலும் தங்களை தேவனுக்கு முன்பாக வைத்து தங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்கள் தேவனுடைய சிட்சிப்பையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும் கடிந்து கொள்ளுதலையும் தங்கள் மீது அனுமதிக்க வேண்டும். இது மட்டுமே ஜனங்கள் படிப்படியாக தங்களை சாத்தானுடைய வஞ்சகம் மற்றும் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளும் வழியாகும்.

இப்போது, சாத்தான் பேசும் இந்த வார்த்தைகள் அனைத்தையும் பார்ப்பதன் மூலம், சாத்தானுடைய சாராம்சத்தை உருவாக்கும் விஷயங்களைச் சுருக்கமாக நாம் கூறுவோம். முதலாவதாக, தேவனுடைய பரிசுத்தத்திற்கு எதிராக சாத்தானுடைய சாராம்சமாக இருப்பது, பொதுவாக தீமை என்று கூறலாம். சாத்தானுடைய சாராம்சம் தீமையானது என்று நான் ஏன் சொல்ல வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, சாத்தான் ஜனங்களுக்குச் செய்பவற்றின் விளைவை ஆராய வேண்டும். சாத்தான் மனிதனைச் சீர்கெடுத்துக் கட்டுப்படுத்துகிறது. மனிதன் சாத்தானுடைய கேடான மனநிலையின் கீழ் செயல்படுகிறான். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட ஜனங்கள் உலகில் ஜீவிக்கின்றனர். மனிதகுலம், அறியாமலேயே சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டு, சாத்தானால் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆகவே, மனிதனுக்கு சாத்தானுடைய கேடான குணம் உள்ளது. இது சாத்தானுடைய குணம். சாத்தான் சொன்ன மற்றும் செய்த எல்லாவற்றிலிருந்தும் அதனுடைய ஆணவத்தை நீங்கள் பார்த்தீர்களா? அதனுடைய வஞ்சகத்தையும் தீமையையும் பார்த்தீர்களா? சாத்தானுடைய ஆணவம் முதன்மையானதாக எவ்வாறு காட்டப்படுகிறது? தேவனுடைய இடத்தை ஆக்கிரமிப்பதற்கான விருப்பத்தைச் சாத்தான் எப்போதும் கொண்டுள்ளதா? சாத்தான் எப்பொழுதும் தேவனுடைய கிரியையையும், தேவனுடைய இடத்தையும் கிழித்தெறிந்து அதை தானே எடுத்துக் கொள்ள விரும்புகிறது. இதன் காரணமாக ஜனங்கள் சாத்தானைப் பின்பற்றுவார்கள், ஆதரிப்பார்கள், வணங்குவார்கள். இது சாத்தானுடைய திமிர்பிடித்த குணம். சாத்தான் ஜனங்களைக் கெடுக்கும்போது, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அது நேரடியாகச் சொல்கிறதா? சாத்தான் தேவனைச் சோதிக்கும் போது, அது வெளியே வந்து, “நான் உம்மை சோதிக்கிறேன், நான் உம்மைத் தாக்கப் போகிறேன்” என்று கூறுகிறதா? நிச்சயமாக இல்லை. இந்நிலையில், சாத்தான் எந்த முறையைப் பயன்படுத்துகிறது? அது மயக்கும், தூண்டும், தாக்கும், பொறிகளை அமைக்கும் மற்றும் வேத வசனங்களிலிருந்து மேற்கோள் காட்டும். தன்னுடைய தீய நோக்கங்களை அடைவதற்கும் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் சாத்தான் பல்வேறு வழிகளில் பேசுகிறது, செயல்படுகிறது. சாத்தான் இதைச் செய்தபின், மனிதனுடைய வெளிப்பாடாக எதனைக் காணலாம்? ஜனங்களும் ஆணவம் கொள்வதில்லையா? மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானுடைய கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளான். ஆகவே, மனிதன் திமிர்பிடித்தவனாகவும், வஞ்சகனாகவும், தீங்கிழைக்கிறவனாகவும், பகுத்தறிவில்லாதவனாகவும் மாறிவிட்டான். இந்த விஷயங்கள் அனைத்தும் சாத்தானுடைய குணத்தால் விளைகின்றன. சாத்தானுடைய குணம் தீமையானது என்பதால், மனிதனுக்கு இந்தத் தீய குணத்தைக் கொடுத்து, மனிதனிடம் இந்தத் தீய, கேடான மனநிலையை விளையச் செய்கிறது. ஆகையால், மனிதன் கேடு நிறைந்த சாத்தானிய மனநிலையின் கீழ் ஜீவிக்கிறான். சாத்தானைப் போலவே, தேவனை எதிர்க்கிறான், தேவனைத் தாக்குகிறான், அவரைச் சோதிக்கிறான். அதாவது அவரை வணங்கும் இருதயம் இன்றி, மனிதன் தேவனை வணங்க இயலாமல் இருக்கிறான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 147

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறது

அறிவு என்பது, எல்லோரும் எண்ணுவது போல, ஒரு நேர்மறையான விஷயமா? குறைந்தபட்சம், “அறிவு” என்ற வார்த்தையின் அர்த்தம் எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக இருப்பதாக ஜனங்கள் கருதுகின்றார்கள். இந்நிலையில், மனிதனைக் கெடுக்க சாத்தான் அறிவைப் பயன்படுத்துகிறான் என்பதை இங்கே ஏன் குறிப்பிடுகின்றோம்? பரிணாம வளர்ச்சிக் கொள்கை அறிவின் ஒரு அம்சமல்லவா? நியூட்டனின் அறிவியல் சட்டங்கள் அறிவின் ஒரு பகுதியாக இல்லையா? பூமியின் ஈர்ப்பு விசையும் அறிவின் ஒரு பகுதியாகும், அல்லவா? (ஆம்.) ஆகவே, மனிதகுலத்தை கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் விஷயங்களில் அறிவு ஏன் பட்டியலிடப்பட்டுள்ளது? இது குறித்து உங்கள் பார்வை என்ன? சத்தியத்தின் ஒரு சிறு பகுதியாகிலும் அறிவில் இருக்கின்றதா? (இல்லை.) பின்னர் அறிவின் சாராம்சம் என்ன? மனிதன் பெறும் அறிவு அனைத்தும் எதன் அடிப்படையில் கற்றுக்கொள்ளப்பட்டது? இது பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததா? ஆய்வு மற்றும் சாராம்சத்தின் மூலம் மனிதன் பெற்ற அறிவு நாத்திகத்தை அடிப்படையாகக் கொண்டதல்லவா? இந்த அறிவுக்கு, தேவனுடன் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? தேவனை வணங்குவதோடு இது தொடர்புடையதாக இருக்கிறதா? இது சத்தியத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா? (இல்லை.) அப்படியானால் மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறான்? இந்த அறிவு எதுவும் தேவனை வணங்குவதுடனும் அல்லது சத்தியத்துடனும் தொடர்புடையதல்ல என்று நான் சொன்னேன். சிலர் இதைப் பற்றி இவ்வாறு நினைக்கிறார்கள்: “அறிவுக்கு சத்தியத்துடன் எந்த தொடர்பும் இல்லை, எனினும், அது ஜனங்களை கெடுக்காது.” இது குறித்து உங்கள் பார்வை என்ன? ஒரு நபரின் மகிழ்ச்சி அவர்களின் இரு கைகளாலும் உருவாக்கப்பட வேண்டும் என்ற அறிவால் நீ போதிக்கப்பபட்டாயா? மனிதனுடைய தலைவிதி அவன் கைகளில் இருப்பதாக அறிவு உனக்குக் கற்பித்ததா? (ஆம்.) இது எத்தகையப் பேச்சு? (இது பேய்த்தனமான பேச்சு.) முற்றிலும் சரி! இது பேய்த்தனமான பேச்சு! அறிவு என்பது விவாதிக்க ஒரு சிக்கலான தலைப்பு ஆகும். அறிவுப் புலம் என்பது அறிவைத் தவிர வேறில்லை என்று நீங்கள் வெறுமனே கூறலாம். இது தேவனை வணங்காததன் அடிப்படையிலும், தேவனே எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பதைப் புரிந்து கொள்ளாததன் அடிப்படையிலும் கற்றுக் கொள்ளப்பட்ட அறிவுப் புலமாகும். ஜனங்கள் இத்தகைய அறிவைப் படிக்கும்போது, தேவன் எல்லாவற்றின் மீதும் ராஜரீகம் கொண்டிருப்பதை அவர்கள் பார்ப்பதில்லை. தேவன் எல்லாவற்றின் மீதும் பொறுப்பு ஏற்பதை அல்லது ஆளுகை செய்வதை அவர்கள் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் செய்வதெல்லாம் முடிவில்லாமல் ஆராய்ச்சி செய்து அறிவின் குறிப்பிட்ட பகுதியை ஆராய்ந்து, அறிவின் அடிப்படையில் பதில்களைத் கண்டுபிடிப்பது தான். இருப்பினும், ஜனங்கள் தேவனை நம்புவதற்குப் பதிலாக ஆராய்ச்சியை பின்பற்றினால், அவர்கள் ஒருபோதும் உண்மையான பதில்களைக் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்பது உண்மையல்லவா? அந்த அறிவானது உனக்கு வழங்கக்கூடியது ஒரு வாழ்வாதாரம், வேலை, மற்றும் வருமானம் மட்டுமே. இது நீ பசியின்றி இருப்பதற்கு மட்டுமே. ஆனால் அது ஒருபோதும் தேவனை வணங்கச் செய்யாது. அது உன்னை ஒருபோதும் தீமையிலிருந்து விலக்கி வைக்காது. ஜனங்கள் அறிவை எவ்வளவு அதிகமாகப் படிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை எதிர்த்துக் கலகம் செய்யவும், தேவனைத் தங்களது படிப்புகளுக்குள் உட்படுத்தவும், தேவனைச் சோதிக்கவும், தேவனை எதிர்க்கவும் விரும்புவார்கள். எனவே, அறிவு ஜனங்களுக்கு எதனைக் கற்பிப்பதாக நாம் இப்போது பார்க்கிறோம்? இது அனைத்தும் சாத்தானுடைய தத்துவமாகும். கேடு நிறைந்த மனிதர்களிடையே சாத்தான் பரப்பிய இந்தத் தத்துவங்கள் மற்றும் ஜீவிக்க தேவையான விதிகளுக்கு சத்தியத்துடன் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? அவற்றுக்கு சத்தியத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையில், அவை சத்தியத்திற்கு நேர்மாறானவை. “ஜீவிதம் என்பது இயக்கம்” மற்றும் “மனிதன் என்பவன் இரும்பாக இருக்கிறான், அரிசி என்பது எஃகு ஆகும், ஒரு நேர உணவைத் தவிர்த்தாலும் மனிதன் பசியாக உணர்கிறான்” என்று ஜனங்கள் அடிக்கடி கூறுகிறார்கள்; இந்தக் கூற்றுகள் என்ன? அவை தவறானவை, அவற்றைக் கேட்பது வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. பெரிதாகப் பேசப்படும் மனிதனுடைய அறிவில், சாத்தான் ஜீவிதத்துக்கான தத்துவத்தையும் தன்னுடைய சிந்தனையையும் கொஞ்சம் கொஞ்சமாகத் திணித்துள்ளது. சாத்தான் இதைச் செய்யும்போது, மனிதன் அதனுடைய சிந்தனை, தத்துவம் மற்றும் கண்ணோட்டங்களை பின்பற்ற அனுமதிக்கிறது. இதனால் மனிதன், தேவன் இருக்கிறார் என்பதை மறுக்கக் கூடும், எல்லாவற்றின் மீதும், மனிதனுடைய தலைவிதி மீதுமுள்ள தேவனுடைய ஆதிக்கத்தை மறுக்கக் கூடும். எனவே, மனிதனுடைய ஆய்வுகள் முன்னேறும்போது, அவன் அதிக அறிவைப் பெறும்போது, தேவன் இருக்கிறார் என்பது தெளிவின்றி இருப்பதாக அவன் உணர்கிறான். மேலும், தேவன் இருக்கிறார் என்று அவனால் அதற்குப் பின் உணர முடிவதில்லை. மனிதனுக்குள் சாத்தான் சில எண்ணங்களையும், கண்ணோட்டங்களையும், கருத்துகளையும் புகுத்தியுள்ளதால், மனிதனுக்குள் இந்த விஷத்தை சாத்தான் புகுத்தியதும், மனிதன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டும் சீர்கெடுக்கப்பட்டும் இருக்க மாட்டானா? ஆகையால் இன்று வாழும் ஜனங்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? சாத்தானால் புகுத்தப்பட்ட அறிவு மற்றும் எண்ணங்களில் அவர்கள் வாழமாட்டார்களா? மேலும் இந்த அறிவு மற்றும் எண்ணங்களுக்குள் மறைந்திருக்கும் காரியங்கள் சாத்தானின் தத்துவங்களாகவும் விஷமாகவும் இல்லையா? மனிதன் சாத்தானின் தத்துவங்களிலும் விஷங்களிலும் வாழ்கிறான். மனிதனுக்கான சாத்தானின் சீர்கேட்டின் மையத்தில் உள்ளது என்ன? சாத்தான் தான் செய்வது போலவே மனிதனையும் தேவனை மறுதலிக்கவும், எதிர்க்கவும் மற்றும் விரோதமாக நிற்கவும் வைக்க விரும்புகிறான்; இதுவே மனிதனை சீர்கெடுப்பதில் சாத்தானின் இலக்காகும், மேலும் சாத்தான் மனிதனைக் கெடுக்கும் வழிமுறையாகும்.

அறிவின் மிக மேலோட்டமான அம்சத்தைக் குறித்து பேசுவதிலிருந்து தொடங்குவோம். மொழிகளில் உள்ள இலக்கணமும் சொற்களும் ஜனங்களைச் சீர்கெடுக்க முடியுமா? வார்த்தைகளால் ஜனங்களைச் சீர்கெடுக்க முடியுமா? வார்த்தைகள் ஜனங்களைச் சீர்கெடுக்காது. வார்த்தைகளானது ஜனங்கள் பேசப் பயன்படுத்தும் ஒரு கருவியாகும். மேலும், ஜனங்கள் தேவனுடன் தொடர்புகொள்வதற்கான கருவியாகும். தற்போது, மொழியையும் சொற்களையும் கொண்டு தேவன் ஜனங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றார் என்பதைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அவை கருவிகளாகும். அவை ஒரு இன்றியமையாதத் தேவையாகும். ஒன்றோடு ஒன்றை கூட்டினால் ஒன்று இரண்டாகும். இரண்டையும் இரண்டையும் பெருக்கினால் நான்காகும். இது அறிவு இல்லையா? ஆனால் இந்த அறிவினால் உங்களைச் சீர்கெடுக்க முடியுமா? இது பொதுவான அறிவு—இது ஒரு நிலையான முறை—எனவே இது ஜனங்களைச் சீர்கெடுக்க முடியாது. எனவே, ஜனங்களை எத்தகைய அறிவு கெடுக்கின்றது? கெடுக்கும் அறிவு என்பது சாத்தானுடைய கண்ணோட்டங்களுடனும் எண்ணங்களுடனும் ஒன்றிணைந்த அறிவாகும். அறிவின் ஊடகம் மூலம் மனிதகுலத்திற்குள் இந்த கண்ணோட்டங்களையும் எண்ணங்களையும் உட்புகுத்த சாத்தான் முயல்கின்றது. உதாரணமாக, ஒரு கட்டுரையில் எழுதப்பட்ட சொற்களில் தவறில்லை. தவறானது, கட்டுரை எழுதியபோது ஆசிரியரின் பார்வைகளிலும், நோக்கங்களிலும், அவருடைய எண்ணங்களின் உள்ளடக்கத்திலும் உள்ளது. இவை ஆவியின் காரியங்களாகும். இவை ஜனங்களைச் சீர்கெடுக்கப்பதற்கான வல்லமை உடையவை. எடுத்துக்காட்டாக, நீ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கிறாய் என்றால், அதில் எத்தகைய விஷயங்கள் ஜனங்களின் பார்வையை மாற்றக்கூடும்? நடிப்பவர்கள் சொல்வதா, வார்த்தைகளால் ஜனங்களைச் சீர்கெடுக்க முடியுமா? (இல்லை.) எத்தகைய விஷயங்கள் ஜனங்களைக் கெடுக்கும்? அது நிகழ்ச்சியின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கமாக இருக்கும். இது அந்த நிகழ்ச்சியின் இயக்குநருடைய பார்வைகளைக் குறிக்கும். இந்த பார்வைகளில் கொண்டு செல்லப்பட்ட தகவல்கள் ஜனங்களின் இருதயங்களையும் மனதையும் திசை திருப்பக் கூடும். அது அப்படித்தானே அல்லவா? சாத்தானைப் பற்றிய எனது கலந்துரையாடலில் நான் குறிப்பிடுவதை இப்போது நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள், இல்லையா? எனவே, அடுத்த முறை நீ ஒரு நாவலை அல்லது ஒரு கட்டுரையைப் படிக்கும்போது, எழுதப்பட்ட சொற்களில் வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் மனிதகுலத்தைச் சீர்கெடுக்கிறதா இல்லையா என்பதை உன்னால் மதிப்பீடு செய்ய முடியுமா? (ஆமாம், ஒரு சிறிய அளவிற்கு.) அது மெதுவான வேகத்தில் படித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. அது இப்போதே எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. எடுத்துக்காட்டாக, அறிவின் ஒரு பகுதியை ஆராய்ச்சி செய்யும்போது அல்லது படிக்கும்போது, அந்த அறிவின் சில நேர்மறையான அம்சங்கள் அந்தக் களத்தைப் பற்றிய சில பொதுவான அறிவைப் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவக்கூடும். அதே நேரத்தில் ஜனங்கள் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறியவும் உங்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, “மின்சாரத்தை” எடுத்துக் கொள்ளுங்கள்—இது ஒரு அறிவின் புலம், இல்லையா? மின்சாரம் ஜனங்களை அதிர்ச்சியடையச் செய்யும், காயப்படுத்தும் என்று உனக்குத் தெரியாவிட்டால் நீ அறிவற்றவனாக இருக்க மாட்டாயா? ஆனால் இந்த அறிவுப் புலத்தை நீ புரிந்து கொண்டவுடன், மின்சாரமுள்ள பொருட்களைத் தொடுவதில் நீ கவனக்குறைவாக இருக்க மாட்டாய். மேலும், மின்சாரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நீ அறிந்து கொள்வாய். இவை இரண்டும் நேர்மறையான விஷயங்கள். அறிவு ஜனங்களை எவ்வாறு கெடுக்கிறது என்பதன் அடிப்படையில் நாம் விவாதித்து வருவது குறித்து இப்போது தெளிவாக இருக்கிறாயா? உலகில் பல வகையான அறிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு நீங்கள் உங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 148

மனிதனைக் கெடுக்க சாத்தான் எவ்வாறு அறிவியலைப் பயன்படுத்துகிறது

அறிவியல் என்றால் என்ன? ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் அறிவியல் உயர்ந்த கவுரவமான இடத்தில் வைக்கப்பட்டு ஆழமானதாகக் கருதப்படவில்லையா? அறிவியல் குறிப்பிடப்படும்போது, ஜனங்கள் இதை உணர்வதில்லையா: “இது சாதாரண ஜனங்களுக்கு எட்டாத ஒன்று. இது விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் அல்லது நிபுணர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் தலைப்பாகும். இது நம்மைப் போன்ற சாதாரண ஜனங்களுக்கானது இல்லை அல்லவா”? இதற்கும் சாதாரண ஜனங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? (ஆம்.) ஜனங்களைச் சீர்கெடுக்கச் சாத்தான் எவ்வாறு அறிவியலைப் பயன்படுத்துகிறான்? இங்கே நம் விவாதத்தில், ஜனங்கள் தங்கள் ஜீவிதத்தில் அடிக்கடி சந்திக்கும் விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவோம். மற்ற விஷயங்களைப் புறக்கணிப்போம். “மரபணுக்கள்” என்ற வார்த்தை ஒன்று உள்ளது. அதைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இந்த வார்த்தையை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கின்றீர்கள். அறிவியலின் மூலமாக மரபணுக்கள் கண்டுபிடிக்கப்படவில்லையா? மரபணுக்களுக்கும் ஜனங்களுக்கும் சரியாக என்ன தொடர்பு உள்ளது? உடல் ஒரு மர்மமான விஷயம் என்று ஜனங்களுக்கு அவை உணர்த்தவில்லையா? இந்தத் தலைப்பானது ஜனங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் போது, சிலர், குறிப்பாக ஆர்வமுள்ளவர்கள் மேலும் தெரிந்து கொள்ள, மேலும் விவரங்களை பெற்றுக் கொள்ள விரும்பும் சிலர் இருக்க மாட்டார்களா? இந்த ஆர்வமுள்ள நபர்கள் இந்த விஷயத்தில் தங்கள் ஆற்றலைச் செலுத்துவர். அவர்களுக்கு வேறு விஷயங்கள் இல்லாத போது, அதைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய புத்தகங்களிலும் இணையத்திலும் தகவல்களைத் தேடுவார்கள். அறிவியல் என்றால் என்ன? தெளிவாகச் சொல்வதானால், அறிவியல் என்பது மனிதன் அறியாத, ஆர்வமாக இருக்கும் விஷயங்களாகும். தேவனால் சொல்லப்படாத விஷயங்களைப் பற்றிய எண்ணங்களும் கோட்பாடுகளும் ஆகும். அறிவியல் என்பது மனிதன் ஆராய விரும்பும் மர்மங்களைப் பற்றிய எண்ணங்களும் கோட்பாடுகளும் ஆகும். அறிவியலின் நோக்கம் என்ன? இது மிகவும் விரிவானது என்று நீங்கள் கூறலாம். மனிதன் ஆர்வமுள்ள எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து படிக்கிறான். அறிவியல் இந்த விஷயங்களின் விவரங்களையும் சட்டங்களையும் ஆராய்ந்து பின்னர் அனைவரையும் சிந்திக்க வைக்கும் நம்பத்தகுந்த கோட்பாடுகளை முன்வைக்கிறது: “இந்த விஞ்ஞானிகள் உண்மையில் பயங்கரமானவர்கள்! இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள போதுமானதை அவர்கள் அறிந்துள்ளார்கள்!” அவர்களுக்கு விஞ்ஞானிகள் மீது அதீத அபிமானம் இருக்கிறது, அல்லவா? அறிவியலை ஆராய்ச்சி செய்யும் நபர்கள் எத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளனர்? அவர்கள் ஆர்வமுள்ள பகுதியில் உள்ள மர்மமான விஷயங்களை ஆராய்ச்சி செய்வதற்காக அவர்கள் உலகத்தை ஆராய்ச்சி செய்ய விரும்புவதில்லையா? அதன் இறுதியான பலன் என்ன? சில விஞ்ஞானங்களில், ஜனங்கள் தங்கள் முடிவுகளை அனுமானத்தால் வரைகிறார்கள். மற்றவற்றில் அவர்கள் முடிவுகளை எடுக்க மனித அனுபவத்தை நம்புகிறார்கள். விஞ்ஞானத்தின் பிற துறைகளில், ஜனங்கள் வரலாற்று மற்றும் பின்னணி கண்காணிப்புகளின் அடிப்படையில் தங்கள் முடிவுகளுக்கு வருகிறார்கள். அது அப்படித்தானே அல்லவா? எனவே அறிவியல் ஜனங்களுக்கு என்ன செய்கிறது? அறிவியல் செய்வது என்னவென்றால், உலகில் உள்ள பொருட்களைப் பார்க்க ஜனங்களை அனுமதிப்பதும், மனிதனுடைய ஆர்வத்தை பூர்த்தி செய்வதுமாகும். ஆனால் எல்லாவற்றின் மீதும் தேவன் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேவையான விதிகளை அறிவியலால் மனிதனுக்குக் காட்ட முடியாது. மனிதன் விஞ்ஞானத்தில் பதில்களைக் கண்டுபிடிப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் அந்தப் பதில்கள் குழப்பமானவை. தற்காலிகத் திருப்தியை மட்டுமே தருகின்றன. இந்தத் திருப்தியானது மனிதனுடைய இருதயத்தை பொருள்மயமான உலகிற்குள் கட்டுப்படுத்த உதவுகிறது. விஞ்ஞானத்திலிருந்து பதில்களைப் பெற்றதாக மனிதன் உணர்கிறான். எனவே எந்தப் பிரச்சினை எழுந்தாலும், அந்த சிக்கலை நிரூபிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தங்கள் விஞ்ஞானக் கருத்துக்களை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். தேவனை அறிந்து கொள்ள, தேவனை வணங்க, மற்றும் எல்லாமே தேவனிடமிருந்து வந்தவை என்றும், மனிதன் பதில்களுக்காக அவரை நோக்க வேண்டும் என்றும், நம்புவதற்கான மனம் மனிதனுக்கு இல்லாமல் போகும் அளவிற்கு மனிதனுடைய இருதயம் அறிவியலால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது மற்றும் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. அது அப்படித்தானே அல்லவா? ஒரு நபர் அறிவியலை எவ்வளவு அதிகமாக நம்புகிறாரோ, அவ்வளவாக அபத்தமாகி, எல்லாவற்றிற்கும் ஒரு விஞ்ஞானத் தீர்வு இருப்பதாக நம்புகிறார். ஆராய்ச்சி எதையும் தீர்க்க முடியும் என்று நம்புகிறார். அவர்கள் தேவனைத் தேடுவதில்லை. அவர் இருக்கிறார் என்று அவர்கள் நம்புவதில்லை. நீண்ட காலமாக தேவனை விசுவாசிக்கிற பலர், ஏதேனும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போது, விஷயங்களை ஆராயவும் பதில்களைத் தேடவும் கணினியைப் பயன்படுத்துவார்கள்; அவர்கள் அறிவியல் அறிவை மட்டுமே நம்புகிறார்கள். தேவனுடைய வார்த்தைகள்தான் சத்தியம் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை, தேவனுடைய வார்த்தைகள் மனிதகுலத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை, அவர்கள் மனிதகுலத்தின் எண்ணற்ற பிரச்சினைகளை சத்தியத்தின் கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. அவர்கள் எந்த பிரச்சனையை எதிர்கொண்டாலும், அவர்கள் ஒருபோதும் தேவனிடத்தில் ஜெபிப்பதில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளில் சத்தியத்தைத் தேடுவதன் மூலம் தீர்வைத் தேடுவதில்லை. பல விஷயங்களில், அறிவு பிரச்சினையைத் தீர்க்கும் என்று அவர்கள் விசுவாசிக்க விரும்புகிறார்கள்; அவர்களுக்கு, அறிவியலே இறுதியான பதிலாக இருக்கிறது. அத்தகையவர்களின் இருதயங்களில் தேவன் முற்றிலும் இல்லை. அவர்கள் அவிசுவாசிகள், மேலும் தேவன் மீதான விசுவாசம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி தேவனை ஆராய முயலும் பல புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடமிருந்து வேறுபட்டவை அல்ல. உதாரணமாக, பேழை அமர்வதற்கு வந்த மலைக்குச் சென்ற பல மத வல்லுநர்கள் உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் பேழை இருக்கின்றது என்பதனை நிரூபித்தனர். ஆனாலும் தேவன் இருக்கிறார் என்பதனைப் பேழையின் வழியாகப் பார்க்கவில்லை. அவர்கள் கதைகளிலும் வரலாற்றிலும் மட்டுமே நம்பிக்கை வைக்கிறார்கள். அது அவர்களின் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் பொருள்மயமான உலக ஆய்வின் விளைவாகும். நுண்ணுயிரியல், வானியல் அல்லது புவியியல் என நீ பொருள் விஷயங்களை ஆராய்ச்சி செய்தால், தேவன் இருக்கிறார் அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ராஜரீகம் உடையவராக இருக்கிறார் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முடிவை நீ ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டாய். எனவே அறிவியல் மனிதனுக்கு என்ன செய்கிறது? இது மனிதனை தேவனிடமிருந்து தூரமாக்கவில்லையா? ஜனங்கள் தேவனை ஆய்வுக்குள்ளாக உட்படுத்துவதற்கு இது காரணமாகவில்லையா? இது தேவன் இருக்கிறார் என்பதையும் ராஜரீகத்தையும் பற்றி ஜனங்கள் இன்னும் அதிகமாக சந்தேகம் அடையவும், அதன் மூலம் தேவனை மறுதலிக்கவும் காட்டிக்கொடுக்கவும் செய்கின்றதல்லவா? இதுதான் பின்விளைவாகும். அப்படியானால் மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும்போது, சாத்தான் எதை அடைய முயற்சிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது? ஜனங்களை ஏமாற்றுவதற்கும் அவர்களை உணர்வற்றவர்களாக்குவதற்கும் விஞ்ஞான முடிவுகளைப் பயன்படுத்த அது விரும்புகிறது, மேலும் தேவன் இருக்கிறார் என்பதை ஜனங்கள் தேட அல்லது நம்பக் கூடாது என்பதற்காக ஜனங்களின் இருதயங்களைப் பிடித்துக் கொள்ள அது தெளிவற்ற பதில்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, சாத்தான் ஜனங்களைக் கெடுக்கும் வழிகளில் ஒன்று அறிவியல் என்று நான் சொல்கிறேன்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 149

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பாரம்பரிய கலாச்சாரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது

பாரம்பரிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் விஷயங்கள் பல இருக்கின்றனவா இல்லையா? (இருக்கின்றன.) இந்தப் “பாரம்பரிய கலாச்சாரம்” என்றால் என்ன? சிலர் இது முன்னோர்களிடமிருந்து கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்—இந்தக் கூற்று ஒரு அம்சமாகும். குடும்பங்களிலும், இனக்குழுக்களிலும், முழு மனித இனத்திலும் கூட, ஆதி காலம் முதல், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், பழமொழிகள் மற்றும் விதிகள் இயற்றப்பட்டன. மேலும், அவை ஜனங்களின் எண்ணங்களில் ஊடுருவியுள்ளன. ஜனங்கள் அவற்றை தங்கள் ஜீவிதத்தின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக கருதுகின்றனர். மேலும், அவற்றை விதிகளாக கருதுகின்றனர். அவற்றைத் தங்களது வாழ்க்கையாகவே கருதுகின்றனர். உண்மையில், அவர்கள் ஒருபோதும் இந்த விஷயங்களை மாற்றவோ கைவிடவோ விரும்பவில்லை, ஏனென்றால் அவை மூதாதையர்களிடமிருந்து கொடுக்கப்பட்டவை ஆகும். கன்ஃபூசியஸ் மற்றும் மென்சியஸிடமிருந்து கொடுக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் சீன தாவோயிசம் மற்றும் கன்பூசியனிசத்தால் ஜனங்களுக்கு கற்பிக்கப்பட்ட விஷயங்கள், என இவற்றைப் போன்ற பாரம்பரியக் கலாச்சாரத்தின் பிற அம்சங்களும் ஜனங்களின் எலும்புகளில் பதிந்திருக்கின்றன. அது அப்படித் தானே அல்லவா? பாரம்பரிய கலாச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ள விஷயங்கள் யாவை? ஜனங்கள் கொண்டாடும் விடுமுறைகள் இதில் உள்ளனவா? வசந்த கால விழா, விளக்கு விழா, கல்லறை துடைக்கும் நாள், டிராகன் படகு விழா, அத்துடன் ஆவி விழா மற்றும் இலையுதிர் கால விழா ஆகியவை உதாரணங்களாகும். சில குடும்பங்கள், தங்கள் மூத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் நாட்களை அல்லது குழந்தைகள் ஒரு மாதம் அல்லது நூறு நாட்களை எட்டும் நாட்களைக் கூடக் கொண்டாடுகிறார்கள். இன்னும் இதுபோன்று பல உள்ளன. இவை அனைத்தும் பாரம்பரிய விடுமுறைகள். இந்த விடுமுறை நாட்களில் பாரம்பரிய கலாச்சாரம் இல்லையா? பாரம்பரிய கலாச்சாரத்தின் அடிப்படை என்ன? தேவனை வணங்குவதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? சத்தியத்தைக் கடைப்பிடிக்குமாறு ஜனங்களிடம் சொல்வதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? தேவனுக்குப் பலியிடுவதற்கும், தேவனுடைய பலிபீடத்திற்குச் சென்று அவருடைய போதனைகளைப் பெறுவதற்கும் ஜனங்களுக்கு ஏதேனும் விடுமுறைகள் உள்ளனவா? இது போன்ற விடுமுறைகள் ஏதேனும் உள்ளனவா? (இல்லை.) இந்த விடுமுறை நாட்களில் ஜனங்கள் என்ன செய்கிறார்கள்? நவீன காலங்களில் அவை சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், கேளிக்கை செய்வதற்கும் உரிய சந்தர்ப்பங்களாகக் கருதப்படுகின்றன. பாரம்பரிய கலாச்சாரத்தின் கீழுள்ள ஆதாரம் என்ன? பாரம்பரிய கலாச்சாரம் யாரிடமிருந்து வருகிறது? அது சாத்தானிடமிருந்து வருகிறது. இந்த பாரம்பரிய விடுமுறை நாட்களின் திரைக்குப் பின்னால், சாத்தான் மனிதனில் சில விஷயங்களை புகுத்துகிறது. அவை யாவை? ஜனங்கள் தங்கள் மூதாதையர்களை நினைவில் வைத்திருப்பதை உறுதிசெய்யும் விழா அவற்றுள் ஒன்றல்லவா? உதாரணமாக, கல்லறை துடைக்கும் நாளில், ஜனங்கள் தங்கள் மூதாதையர்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காக, கல்லறைகளைச் சுத்தம் செய்து, தங்கள் மூதாதையர்களுக்குப் பலியிடுகிறார்கள். மேலும், ஜனங்கள் தேசபக்தி கொண்டவர்கள் என்பதை நினைவில் கொள்வதை சாத்தான் உறுதிசெய்கிறது. அதற்கு ஒரு உதாரணம் டிராகன் படகு விழா. மத்திய இலையுதிர் திருவிழா என்றால் என்ன? (குடும்ப மறு இணைப்புகள்.) குடும்ப மறு இணைப்புகளின் பின்னணி என்ன? அதற்குக் காரணம் என்ன? உணர்ச்சிவசப்பட்டு தொடர்பு கொள்வதும் இணைந்து கொள்வதும் ஆகும். நிச்சயமாக, இது சந்திர புத்தாண்டுக் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி அல்லது விளக்கு விழாவாக இருந்தாலும் சரி, இந்தக் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை விவரிக்க பல வழிகள் உள்ளன. இருப்பினும் அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றும் சாத்தானுடைய தத்துவத்தையும் அதனுடைய சிந்தனையையும் ஜனங்களிடையே புகுத்தும் வழி என்று ஒருவர் விவரிக்கலாம். இதனால் அவர்கள் தேவனிடமிருந்து விலகி, தேவன் இருக்கிறார் என்று தெரியாமல், தங்கள் மூதாதையர்களுக்கோ அல்லது சாத்தானுக்கோ பலியிடுவார்கள், அல்லது புசித்து, குடிப்பார்கள் மற்றும் மாம்சத்தின் ஆசைகளுக்காகக் கேளிக்கைச் செய்வார்கள். இந்த விடுமுறைகள் ஒவ்வொன்றும் கொண்டாடப்படுவதால், சாத்தானுடைய எண்ணங்களும் பார்வைகளும் ஜனங்கள் அறியாத வண்ணம் அவர்களின் மனதிற்குள் ஆழமாக நடப்படுகின்றன. ஜனங்கள் தங்களது நாற்பது, ஐம்பது வயதுகளை அல்லது முதிர் வயதை எட்டும்போது, சாத்தானுடைய இந்த எண்ணங்களும் கண்ணோட்டங்களும் ஏற்கனவே அவர்களின் இருதயங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும். மேலும், இந்த யோசனைகள் சரியா, தவறா என்பதல்லாமல், அடுத்த தலைமுறைக்கு, இதனைக் கண்மூடித்தனமாகவும் எதையும் விட்டுவிடாமல் அவர்களுக்குக் கொடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். அது அப்படித்தானே அல்லவா? (ஆம்.) பாரம்பரிய கலாச்சாரமும் இந்த விடுமுறைகளும் ஜனங்களை எவ்வாறு கெடுக்கின்றன? உங்களுக்குத் தெரியுமா? (ஜனங்கள் தேவனைத் தேடுவதற்கு நேரமோ ஆற்றலோ இல்லாத வகையில் இந்த மரபுகளின் விதிகளுக்குள் சிறைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.) இது ஒரு அம்சமாகும். உதாரணமாக, சந்திர புத்தாண்டின் போது எல்லோரும் கொண்டாடுகிறார்கள்—நீ அதைக் கொண்டாடவில்லை என்றால், நீ வருத்தப்பட மாட்டாயா? உன் இருதயத்தில் ஏதேனும் மூடநம்பிக்கைகளை வைத்திருக்கிறாயா? “நான் புத்தாண்டைக் கொண்டாடவில்லை. சந்திர புத்தாண்டு நாள் ஒரு மோசமான நாள் என்பதால், ஆண்டின் பிற்பகுதி முழுவதும் மோசமாக இருக்காதா?” என்று நீங்கள் நினைக்கலாமா? உங்களுக்கு மன உளைச்சலாகவும், கொஞ்சம் பயமாகவும் இருக்காதா? சில ஆண்டுகளாக தங்களது மூதாதையர்களுக்குப் பலி செலுத்தாததால், திடீரென்று இறந்த ஒருவர் அவர்களிடம் பணம் கேட்பது போல கனவு கண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன உணருவார்கள்? “மரித்த இந்த நபர் செலவழிக்க பணம் கேட்டு வேண்டுவது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது! நான் அவர்களுக்காகச் சில காகிதப் பணத்தை எரிப்பேன். நான் முடியாது என்றால், அது சரியாக இருக்காது. இது உயிருள்ள ஜனங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்—துரதிர்ஷ்டம் எப்போது ஏற்படும் என்று யார் சொல்ல முடியும்?” எப்போதுமே ஒரு சிறு பயம் மற்றும் மனக்கவலை அவர்களுக்கு இருக்கும். இந்தக் கவலையை அவர்களுக்குக் கொடுப்பது யார்? இந்தக் கவலையின் ஆதாரமே சாத்தான் தான். சாத்தான் மனிதனைக் கெடுக்கும் வழிகளில் இது ஒன்றல்லவா? அது உன்னைக் கட்டுப்படுத்தவும், உன்னை அச்சுறுத்தவும், கட்டிப் போடவும் வெவ்வேறு வழிகளையும் சாக்குப்போக்குகளையும் பயன்படுத்துகிறது. இதனால் நீ ஒரு பீதியில் விழுந்து அதற்கு அடிபணிவாய். சாத்தான் மனிதனை இவ்வாறு கெடுக்கிறது. பெரும்பாலும் ஜனங்கள் பலவீனமாக இருக்கும்போது அல்லது நிலைமையை அவர்கள் முழுமையாக அறியாதபோது, அவர்கள் கவனக் குறைவாக குழப்பமாக ஏதாவது செய்யக் கூடும். அதாவது, அவர்கள் கவனக் குறைவாக சாத்தானுடைய பிடியில் சிக்கி, அறியாமல் செயல்படக் கூடும். தாங்கள் செய்வது என்ன என்று அறியாமல் காரியங்களைச் செய்யலாம். சாத்தான் மனிதனைக் கெடுக்கும் வழி இதுதான். நன்கு வேரூன்றிய பாரம்பரிய கலாச்சாரத்தை விட்டுப் பிரிந்து செல்லத் தயங்கும் ஒரு சில ஜனங்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களால் அதை விட்டுவிட முடியாது. குறிப்பாக அவர்கள் பலவீனமாகவும், செயலற்றவர்களாகவும் இருக்கும் போது, அவர்கள் இத்தகைய விடுமுறை நாட்களைக் கொண்டாட விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் சாத்தானைச் சந்தித்து மீண்டும் சாத்தானைத் திருப்திப்படுத்த விரும்புகிறார்கள். தங்களின் இருதயங்களுக்கு ஆறுதல் அளிக்க விரும்புகிறார்கள். பாரம்பரிய கலாச்சாரத்தின் பின்னணி என்ன? திரைக்குப் பின்னிருந்து சாத்தானுடைய கறுப்புக் கை இயக்குகின்றதா? சாத்தானுடைய தீய குணம் இயக்குகின்றதா மற்றும் கட்டுப்படுத்துகின்றதா? இவை அனைத்திலும் சாத்தான் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறதா? (ஆம்.) ஜனங்கள் ஒரு பாரம்பரிய கலாச்சாரத்தில் ஜீவிக்கையில், இந்த வகையான பாரம்பரிய விடுமுறைகளைக் கொண்டாடும்போது, இந்தச் சூழலானது, சாத்தானால் முட்டாளாக்கப்பட்டுச் சீர்கெடுக்கப்படுகின்ற ஒரு சூழல் என்றும், அவர்கள் சாத்தானால் முட்டாளாக்கப்பட்டுச் சீர்கெடுக்கப்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் சொல்ல முடியுமா? (ஆம்.) இது நீங்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒன்றாகும். இது உங்களுக்குத் தெரிந்த ஒன்றாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 150

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் மூடநம்பிக்கையை எவ்வாறு பயன்படுத்துகிறது

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் மூடநம்பிக்கையை எவ்வாறு பயன்படுத்துகிறான்? ஜனங்கள் அனைவரும் தங்கள் தலைவிதியை அறிய விரும்புகிறார்கள். எனவே, அவர்களைக் கவர்ந்திழுக்க சாத்தான் அவர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொள்கிறான். எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன நேரிடும், எத்தகைய பாதை முன்னால் உள்ளது என்பதை ஜனங்கள் அறிய அஞ்சனம் பார்த்தல், குறி சொல்லுதல் மற்றும் முகசோதிடத்தில் ஈடுபடுகிறார்கள். இறுதியில், ஜனங்கள் அக்கறை கொள்ளும் தலைவிதியும் வாய்ப்புகளும் யாருடைய கரங்களில் இருக்கின்றன? (தேவனுடைய கரங்களில்.) இந்த விஷயங்கள் அனைத்தும் தேவனுடைய கரங்களில் இருக்கின்றன. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதில், ஜனங்கள் எதை அறிந்து கொள்ள வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறது? முகசோதிடம் மற்றும் அதிர்ஷ்டத்தைச் சொல்வதை சாத்தான் பயன்படுத்த விரும்புகிறது. அது அவர்களின் எதிர்கால அதிர்ஷ்டத்தை அறிந்திருப்பதாகவும், அது இந்த விஷயங்களை அறிந்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவும் வெளிப்படுத்த விரும்புகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும், ஜனங்களைக் கட்டுப்படுத்த இந்த முறைகளைப் பயன்படுத்தவும் சாத்தான் விரும்புகிறது. அதாவது ஜனங்கள் அதில் மூடநம்பிக்கை வைத்து அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் கடைப்பிடிக்கிறார்கள். உதாரணமாக, நீ ஒரு முகசோதிடம் பார்த்திருந்தால், அதிர்ஷ்டம் சொல்பவர் கண்களை மூடிக்கொண்டு, கடந்த சில தசாப்தங்களாக உனக்கு நடந்த அனைத்தையும் பூரணமானத் தெளிவுடன் உனக்குச் சொன்னால், நீ எப்படி உனக்குள் உணருவாய்? “அவர் மிகவும் துல்லியமானவர்! நான் இதற்கு முன்பு யாரிடமும் சொல்லாததைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்? இந்தக் குறிசொல்பவரை நான் உண்மையாகவே வியந்து பார்க்கிறேன்!” என்று நீ உடனடியாக உணருவாய். சாத்தானைப் பொறுத்த வரையில், உனது கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் எளிதானதல்லவா? இன்று நீ இருக்கும் இடத்திற்கு தேவன் உன்னை வழிநடத்தியுள்ளார். எல்லா நேரங்களிலும் சாத்தான் ஜனங்களைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது, உன்னையும் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. உனது ஜீவிதத்தின் பல தசாப்தங்கள் சாத்தானுக்கு சாதாரண ஒன்றாகும். இந்த விஷயங்களை அறிந்து கொள்வது சாத்தானுக்கு கடினம் அல்ல. சாத்தான் சொல்வதெல்லாம் துல்லியமானது என்பதை நீ அறியும்போது, உனது இருதயத்தை அதற்கு நீ கொடுக்கின்றாய் அல்லவா? உனது எதிர்காலத்தையும் உனது அதிர்ஷ்டத்தையும் கட்டுப்படுத்த நீ அதைச் சார்ந்திருக்கின்றாய் அல்லவா? ஒரே நொடியில், உனது இருதயம் அதற்கான கொஞ்சம் மரியாதை அல்லது பயபக்தியை உணரும். மேலும் சிலருக்கு, இந்த நேரத்தில் அவர்களின் ஆத்துமாக்கள் ஏற்கனவே பறிக்கப்பட்டு விடலாம். நீ உடனடியாகக் குறிசொல்பவரைக் கேட்பாய்: “நான் அடுத்து என்ன செய்ய வேண்டும்? வரும் ஆண்டில் நான் எதைத் தவிர்க்க வேண்டும்? நான் என்ன செய்யக்கூடாது?” பின்னர், அவர் கூறுவார், “நீ அங்கு செல்லக்கூடாது, நீ இதைச் செய்யக்கூடாது, ஒரு குறிப்பிட்ட நிற ஆடைகளை அணியக்கூடாது, நீ சில இடங்களுக்கு குறைவாகச் செல்ல வேண்டும், சில விஷயங்களை அதிகமாகச் செய்ய வேண்டும்….” அவர் சொல்லும் அனைத்தையும் நீ உடனடியாக இருதயத்திற்கு எடுத்துக் கொள்ள மாட்டாயா? தேவனுடைய வார்த்தைகளை விட வேகமாக அவருடைய வார்த்தைகளை நீ மனப்பாடம் செய்வாய். அவற்றை ஏன் விரைவாக மனப்பாடம் செய்கிறாய்? ஏனென்றால் நீ நல்ல அதிர்ஷ்டத்திற்காக சாத்தானை நம்ப விரும்புகின்றாய். அது உனது இருதயத்தைக் கைப்பற்றும் போது இது நடக்கின்றது அல்லவா? அதனுடைய கணிப்புகள் நிறைவேறும் போது, ஒன்றன் பின் ஒன்றாக, அடுத்த ஆண்டு என்ன அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதைக் கண்டுபிடிக்க நீ அதனிடம் திரும்பிச் செல்ல விரும்பவில்லையா? (ஆம்.) சாத்தான் என்ன செய்யச் சொல்கிறதோ அதையே நீ செய்வாய், அது தவிர்க்கச் சொல்லும் விஷயங்களை நீ தவிர்ப்பாய். இவ்வாறு, அது சொல்லும் அனைத்தையும் நீ கடைப்பிடிக்கவில்லையா? மிக விரைவாக, நீ அதனுடைய அரவணைப்பில் விழுந்து, ஏமாற்றப்படுவாய். அதனுடைய கட்டுப்பாட்டின் கீழ் வருவாய். நடப்பது சத்தியம் என்று நீ நம்புவதாலும், உனது கடந்தகால ஜீவிதத்தைப் பற்றியும், உனது தற்போதைய ஜீவிதத்தைப் பற்றியும், எதிர்காலம் என்ன கொண்டு வரும் என்பதையும் அது அறிந்திருப்பதாக நீ நம்புவதாலும் இது நிகழ்கிறது. ஜனங்களைக் கட்டுப்படுத்த சாத்தான் பயன்படுத்தும் முறை இதுதான். ஆனால் உண்மையில், யார் மெய்யாக கட்டுப்படுத்துகின்றார்? தேவன் தாமே கட்டுப்படுத்துகிறார், சாத்தான் அல்ல. அறியாதவர்களை ஏமாற்றுவதற்கும், பொருள்மயமான உலகத்தை மட்டுமே பார்க்கும் ஜனங்களை ஏமாற்றுவதற்கும், தன்னை நம்புவதற்கும், சார்ந்து கொள்வதற்கும் சாத்தான் இந்த விஷயத்தில் தனது புத்திசாலித்தனமான சூழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறது. பின்னர், அவர்கள் சாத்தானுடைய பிடியில் விழுந்து அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் பின்பற்றுகிறார்கள். ஆனால் ஜனங்கள் தேவனை நம்பவும் பின்பற்றவும் விரும்பும் போது சாத்தான் அதனுடைய பிடியை எப்போதாவது தளர்த்துகின்றதா? சாத்தான் அவ்வாறு செய்வதில்லை. இந்த சூழ்நிலையில், ஜனங்கள் உண்மையில் சாத்தானுடைய பிடியில் சிக்கியிருக்கிறார்களா? (ஆம்.) இந்த விஷயத்தில் சாத்தானுடைய நடத்தையானது வெட்கமற்றது என்று நாம் கூற முடியுமா? (ஆம்.) நாம் ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனெனில் இவை மோசடி மற்றும் வஞ்சகத் தந்திரங்கள் ஆகும். சாத்தான் வெட்கமில்லாதது. அது ஜனங்களைச் சார்ந்த எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது என்றும் அது அவர்களின் தலைவிதியைக் கட்டுப்படுத்துகிறது என்றும் ஜனங்களைத் தவறாக நினைக்கச் செய்து வழிநடத்துகிறது. இது அறியாமையில் உள்ள ஜனங்கள் அதற்கு முழுமையாகக் கீழ்ப்படியக் காரணமாகிறது. அவர்கள் ஒரு சில வார்த்தைகளால் முட்டாளாக்கப்படுகிறார்கள். தங்களின் திகைப்பில், ஜனங்கள் அதற்கு முன் தலைவணங்குகிறார்கள். எனவே, சாத்தான் எத்தகைய முறைகளைப் பயன்படுத்துகிறது? அதனை நீ நம்புவதற்கு என்ன சொல்கிறது? உதாரணமாக, உனது குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நீ சாத்தானிடம் சொல்லியிருக்க மாட்டாய். ஆனால் எத்தனை பேர் இருக்கிறார்கள், உனது பெற்றோர் மற்றும் குழந்தைகளின் வயது ஆகியவற்றையும் உன்னிடம் அது சொல்லக் கூடும். இதற்கு முன்னர் சாத்தானைப் பற்றி உனக்கு சந்தேகங்களும் ஐயங்களும் இருந்திருக்கலாம். எனினும், இதைச் சொல்வதைக் கேட்டபின், அதை இன்னும் கொஞ்சம் நம்பக்கூடியதாக நீ உணர மாட்டாயா? அண்மையில் எவ்வளவு கடினமான வேலை உனக்கு இருந்தது, உனது மேலதிகாரிகள் உனக்குத் தகுதியான அங்கீகாரத்தை உனக்கு வழங்குவதில்லை, எப்போதும் உனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள், என்று பல காரியங்களைச் சாத்தான் சொல்லக்கூடும். அதைக் கேட்ட பிறகு, “அது சரியாக இருக்கிறது! வேலையில் விஷயங்கள் சீராக நடக்கவில்லை” என்று நீ எண்ணுவாய். எனவே, நீ சாத்தானை இன்னும் கொஞ்சம் அதிகமாக நம்புவாய். அது உன்னை ஏமாற்ற வேறு ஏதாவது சொல்லி, அதையும் நம்பும்படி செய்கிறது. சிறிது சிறிதாக, இனி நீ அதை எதிர்க்கவோ அல்லது சந்தேகப்படவோ முடியாமல் போகும். சாத்தான் ஒரு சில அற்ப தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, சிறிய சாதாரணத் தந்திரங்களைக் கூட பயன்படுத்துகிறது. இவ்வாறு உன்னைக் குழப்புகிறது. நீ குழப்பமடையும் போது, உனது சரியான நிலையைக் கண்டறிய முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாமல் நீ நஷ்டத்தில் இருப்பாய், சாத்தான் சொல்வதை நீ பின்பற்றத் தொடங்குவாய். மனிதனைக் கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் “புத்திசாலித்தனமான” முறை இதுதான். இதனால், நீ அறியாமலே சத்தானுடைய வலையில் விழுகிறாய், சத்தானால் மயக்கப்படுகின்றாய். ஜனங்கள் நல்லது என்று கற்பனை செய்யும் சில விஷயங்களை சாத்தான் உனக்குச் சொல்கிறது. பின்னர், என்ன செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று அது சொல்கிறது. இவ்வாறு தான் நீ அறியாமலே ஏமாற்றப்படுகிறாய். நீ அதில் ஒருமுறை விழுந்துவிட்டால், விஷயங்கள் உன்னுடன் ஒட்டிக் கொள்ளும். சாத்தான் சொன்னதையும், அது செய்யச் சொன்னதையும் பற்றி நீ தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பாய். நீ அறியாமலேயே அதனால் ஆட்கொள்ளப்படுவாய். இது ஏன்? ஏனென்றால், மனிதகுலத்திடம் சத்தியம் இல்லாததால், மனிதகுலத்தால் உறுதியாக நிற்கவும், சாத்தானுடைய மயக்கத்தையும் சோதனையையும் எதிர்க்கவும் முடியவில்லை. சாத்தானுடைய தீமை மற்றும் அதனுடைய வஞ்சகம், துரோகம் மற்றும் தீமையை எதிர்கொள்ளும் மனிதகுலம் பெரிதளவில் அறியாமையுடனும், முதிர்ச்சியற்றும், பலவீனமாகவும் இருக்கின்றது, அல்லவா? சாத்தான் மனிதனைக் கெடுக்கும் வழிகளில் இது ஒன்றல்லவா? (ஆம்.) சாத்தானுடைய பல்வேறு வழிமுறைகளால் மனிதன் அறியாமலேயே மயக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறான். ஏனென்றால், நேர்மறை மற்றும் எதிர்மறைகளை வேறுபடுத்தும் திறன் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இந்த வளர்ச்சியும், சாத்தானை வெல்லும் திறனும் இல்லை.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 151

மனிதனைக் கெடுக்க சாத்தான் சமூகப் போக்குகளை எவ்வாறு பயன்படுத்துகிறது

சமூகப் போக்குகள் எப்போது தோன்றின? அவை இந்தக் காலக்கட்டதில் மட்டுமே நடைமுறைக்கு வந்தனவா? சாத்தான் ஜனங்களைச் சீர்கெடுக்கத் தொடங்கிய போது சமூகப் போக்குகள் வந்தன என்று ஒருவர் கூறலாம். சமூகப் போக்குகள் என்பவை எதை உள்ளடக்குகின்றன? (ஆடை மற்றும் ஒப்பனையின் பாங்குகள்.) இவை ஜனங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் விஷயங்கள். ஆடை, நடப்பு வழக்கு மற்றும் போக்குகளின் பாங்குகள்—இந்த விஷயங்கள் ஒரு சிறிய அம்சத்தை உள்ளடக்குகின்றன. வேறு ஏதேனும் இருக்கின்றதா? ஜனங்கள் அடிக்கடி சொல்லும் பிரபலமான சொற்றொடர்களும் இதனுள் அடங்குமா? ஜனங்கள் விரும்பும் ஜீவித முறைகள் இதனுள் அடங்குமா? ஜனங்கள் விரும்பும் இசை நட்சத்திரங்கள், பிரபலங்கள், பத்திரிகைகள் மற்றும் நாவல்கள் இதனுள் அடங்குமா? (ஆம்.) உங்கள் மனதில், சமூகப் போக்குகளின் எந்த அம்சம் மனிதனைச் சீர்கெடுக்க முடியும்? இந்தப் போக்குகளில் எது உங்களை மிகவும் ஈர்க்கக்கூடியது? சிலர், “நாங்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியுள்ளோம், நாங்கள் எங்கள் ஐம்பதுகள் அல்லது அறுபதுகளில், எங்கள் எழுபதுகளில் அல்லது எண்பதுகளில் இருக்கிறோம். மேலும், இந்த போக்குகளுடன் எங்களால் பொருந்த முடியாது, அவை உண்மையில் எங்கள் கவனத்தை ஈர்க்காது,” என்று சொல்கிறார்கள். இது சரியா? மற்றவர்கள், “நாங்கள் பிரபலங்களைப் பின்தொடர்வதில்லை, அது இருபதுகளில் உள்ள இளைஞர்கள் செய்யும் ஒன்று. நாங்கள் நவநாகரீக ஆடைகளையும் அணிய மாட்டோம், இது உருவ உணர்வுள்ளவர்கள் செய்யும் ஒன்று,” என்று கூறுகிறார்கள். எனவே, இவற்றில் எது உங்களைக் கெடுக்க முடியும்? (பிரபலமான பழமொழிகள்.) இந்தப் பழமொழிகள் ஜனங்களைக் கெடுக்க முடியுமா? நான் ஒரு உதாரணம் சொல்கிறேன், அது ஜனங்களைக் கெடுக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் காணலாம். “பணம் உலகைச் சுற்ற வைக்கிறது.” இது ஒரு போக்கா? நீங்கள் குறிப்பிட்ட நவநாகரீக மற்றும் ஆடம்பர உணவுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் மோசமானதல்லவா? “பணம் உலகைச் சுற்ற வைக்கிறது” என்பது சாத்தானுடைய ஒரு தத்துவமாகும். இது ஒவ்வொரு மனித சமுதாயத்திலும் ஒட்டு மொத்த மனிதகுலத்திலும் நிலவுகிறது. இது ஒரு போக்கு என்று நீங்கள் கூறலாம். ஏனெனில் இது ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் புகுத்தப்பட்டுள்ளது, முதலில் இவர்கள் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் அதன் பின் மெய்யான ஜீவிதத்துடன் தொடர்பு கொள்ளும்போது அதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும், உண்மையில் இந்த வார்த்தைகள் சத்தியம் என்று உணரத் தொடங்கினர். இது சாத்தான் மனிதனைக் கெடுக்கும் செயல் அல்லவா? ஒருவேளை இந்த சொல்லை ஜனங்கள் ஒரே அளவில் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் மற்றும் அவர்களின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த சொல்லுக்கு வெவ்வேறு அளவில் விளக்கங்கள் மற்றும் ஒப்புதல்களைக் கொண்டுள்ளனர். அது அப்படித் தானே அல்லவா? இந்தச் சொல்லுடன் ஒருவர் எவ்வளவு அனுபவத்தைப் பெற்றிருந்தாலும், அது அவரின் இருதயத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை விளைவு என்ன? நீங்கள் ஒவ்வொருவரும் உட்பட, இந்த உலகில் உள்ள ஜனங்களின் மனித மனநிலையின் வழியாக ஏதோ ஒன்று வெளிப்படுகிறது. அது என்ன? அது பண வழிபாடாகும். ஒருவரின் இருதயத்திலிருந்து அதை அகற்றுவது கடினமா? அது மிகவும் கடினம்! சாத்தானுடைய மனித கேடானது உண்மையில் ஆழமானதாகத் தெரிகிறது! ஜனங்களைச் சோதிக்க சாத்தான் பணத்தைப் பயன்படுத்துகிறான், மேலும் பணத்தைத் தொழுதுகொள்ளவும், பொருள்சார்ந்த காரியங்களை வணங்கவும் செய்யும் அளவிற்கு அவர்களை சீர்கெடுக்கிறான். இந்தப் பணத்தைத் தொழுதுகொள்ளுதல் ஜனங்களிடம் எவ்வாறு வெளிப்படுகிறது? பணம் இல்லாமல் ஒரு நாள் கூட சாத்தியமில்லை என்றும், நீங்கள் பணம் இல்லாமல் இந்த உலகில் ஜீவிக்க முடியாது என்றும் நினைக்கின்றீர்களா? ஜனங்களின் நிலையானது அவர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அவர்களுடைய மரியாதையும் அதனைப் போன்றது. ஏழைகளின் முதுகு அவமானத்தால் வளைந்திருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் உயர்ந்து பெருமையாக நிற்கிறார்கள், சத்தமாகப் பேசுகிறார்கள், மற்றும் ஆணவத்துடன் ஜீவிக்கிறார்கள். இந்த வார்த்தை மற்றும் போக்கு ஜனங்களுக்கு எதைத் தருகிறது? பணத்தைத் தேடுவதில் பலர் எந்த தியாகத்தையும் செய்கிறார்கள் என்பது உண்மையல்லவா? அதிகமான பணம் தேடுவதில் பலர் தங்கள் கண்ணியத்தையும் நேர்மையையும் இழக்கவில்லையா? பணத்திற்காக தங்கள் கடமையைச் செய்வதற்கும் தேவனைப் பின்பற்றுவதற்குமான வாய்ப்பைப் பலரும் இழக்கவில்லையா? சத்தியத்தைப் பெற்று இரட்சிக்கப்படும் வாய்ப்பை இழப்பது ஜனங்களுக்கு இழப்புகளிலேயே மிகப்பெரிய இழப்பு அல்லவா? இந்த முறையையும் இந்தப் பழமொழியையும் பயன்படுத்தி மனிதனை இவ்வளவாகக் கெடுக்கும் சாத்தான் வஞ்சனையானதல்லவா? அது தீங்கிழைக்கும் தந்திரம் அல்லவா? இந்தப் பிரபலமான பழமொழியை எதிர்த்து இறுதியாக அதைச் சத்தியமாக ஏற்றுக் கொள்வதற்கு நீ முன்னேறும்போது, உனது இருதயம் முற்றிலும் சாத்தானுடைய பிடியில் விழுகிறது. எனவே, நீ கவனக்குறைவாக அந்தப் பழமொழியைப் போலவே ஜீவிக்க விழைகின்றாய். இந்தப் பழமொழி உன்னை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது? நீ உண்மையான வழியை அறிந்திருக்கலாம், நீ சத்தியத்தை அறிந்திருக்கலாம், ஆனால் அதைத் தொடர நீ வல்லமையற்றவனாக இருக்கின்றாய். தேவனுடைய வார்த்தைகள் சத்தியமுள்ளவை என்பதை நீ தெளிவாக அறிந்திருக்கலாம். ஆனால், சத்தியத்தைப் பெறுவதற்காக நீ விலைக்கிரயம் செலுத்தவோ துன்பப்படவோ விரும்பவில்லை. மாறாக, தேவனை இறுதிவரை எதிர்ப்பதற்காக உனது சொந்த எதிர்காலத்தையும் தலைவிதியையும் தியாகம் செய்வாய். தேவன் என்ன சொன்னாலும், தேவன் என்ன செய்தாலும், தேவ அன்பு உன்னிடம் எவ்வளவு ஆழமாக, எவ்வளவு பெரியதாக இருக்கின்றது என்பதை நீ புரிந்து கொண்டாலும், உனது சொந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்று பிடிவாதமாக வற்புறுத்துவாய். மேலும், இந்தப் பழமொழிக்கு உரிய விலையைச் செலுத்துவாய். அதாவது, இந்தப் பழமொழி ஏற்கனவே உனது எண்ணங்களை வஞ்சித்துள்ளது மற்றும் கட்டுப்படுத்தியுள்ளது, அது ஏற்கனவே உனது நடத்தையை ஆளுகை செய்துள்ளது, மேலும் ஐசுவரியத்தின் மீதான உனது நாட்டத்தை ஒதுக்கி வைப்பதைக் காட்டிலும் உனது தலைவிதியை அது ஆளுகை செய்வதற்கு அனுமதிப்பாய். அதனால் ஜனங்கள் இவ்வாறு செயல்படலாம், அதனால் சாத்தானின் வார்த்தைகளால் அவர்கள் கட்டுப்படுத்தப்படலாம் மற்றும் கையாளப்படலாம், சாத்தானால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதானே இதன் அர்த்தம்? சாத்தானுடைய தத்துவமும் மனப்போக்கும் மற்றும் சாத்தானின் மனநிலையும் உனது இருதயத்தில் வேரூன்றியிருக்கிறதல்லவா? நீ கண்மூடித்தனமாக ஐசுவரியத்தை நாடி, சத்தியத்தைப் பின்பற்றுவதைக் கைவிடும்போது, சாத்தான் உன்னை வஞ்சிக்கும் அதனுடைய இலக்கை அடைந்திருக்கிறதல்லவா? மிகச் சரியாக இந்த நிலைதான் காணப்படுகிறது. அப்படியானால் நீ சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு சீர்கெடுக்கப்படும்போது, உன்னால் அதை உணர முடிகிறதா? உன்னால் முடியாது. சாத்தான் உன் முன்னால் இருப்பதையே உன்னால் பார்க்க முடியவில்லை என்றால் அல்லது மறைமுகமாக சாத்தான் செயல்படுகிறான் என்பதை உணரவில்லை என்றால், சாத்தானுடைய பொல்லாப்பை உன்னால் பார்க்க முடியுமா? சாத்தான் மனிதனை எவ்வாறு சீர்கெடுக்கிறான் என்பதை உன்னால் அறிந்துகொள்ள முடியுமா? எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் சாத்தான் மனிதனைக் கெடுக்கிறது. இந்த கேட்டுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மனிதனைச் சாத்தியமற்றவனாக, அதற்கு எதிரில் மனிதனை உதவியற்றவனாக சாத்தான் ஆக்குகின்றது. நீ அறியாத சூழ்நிலைகளிலும், உனக்கு என்ன நடக்கிறது என்பதை நீ புரிந்து கொள்ளாத சூழ்நிலையிலும், தன்னுடைய எண்ணங்களையும், தன்னுடைய கண்ணோட்டங்களையும், அவற்றிலிருந்து வரும் தீய விஷயங்களையும் சாத்தான் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. ஜனங்கள் இந்த விஷயங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அதற்கு விதிவிலக்கல்ல. அவற்றை ஒரு பொக்கிஷத்தைப் போல அவர்கள் நேசித்துப் பிடித்துக் கொள்கிறார்கள். அவை தங்களைக் கையாளவும், இயக்கவும் அனுமதிக்கிறார்கள். இவ்வாறு தான் ஜனங்கள் சாத்தானுடைய வல்லமையின் கீழ் வாழ்கின்றனர், தங்களை அறியாமலேயே சாத்தானுக்குக் கீழ்ப்படிகின்றனர் மற்றும் சாத்தானுடைய மனிதச் சீர்கேடானது எப்போதுமே ஆழமாக வளர்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 152

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் இந்தப் பல வழிமுறைகளைப் பயன்படுத்துகிறான். மனிதனுக்கு விஞ்ஞானக் கொள்கைகளைப் பற்றிய அறிவும் சில புரிதலும் உண்டு. மனிதன் பாரம்பரிய கலாச்சாரத்தின் உந்துதலின் கீழ் ஜீவிக்கிறான். ஒவ்வொரு மனிதனும் பாரம்பரிய கலாச்சாரத்தின் வாரிசாகவும், பரிமாற்றம் செய்பவனாகவும் இருக்கிறான். சாத்தானால் தனக்கு வழங்கப்பட்ட பாரம்பரிய கலாச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் மனிதன் இருக்கிறான். மேலும், மனிதகுலத்துக்கு சாத்தான் வழங்கும் சமூக போக்குகளுடனும் மனிதன் ஒத்துப்போகிறான். மனிதன் சாத்தானிடமிருந்து பிரிக்க முடியாதவனாக இருக்கிறான். எல்லா நேரங்களிலும் சாத்தான் செய்கிற எல்லாவற்றையும் ஒத்துக்கொள்கிறான். அதனுடைய தீமை, வஞ்சகம், வன்மம் மற்றும் ஆணவத்தை ஏற்றுக்கொள்கிறான். சாத்தானுடைய இந்த மனநிலைகளை மனிதன் பெற்றவுடன், இந்தச் சீர்கேடு நிறைந்த மனிதகுலத்தின் மத்தியில் அவன் மகிழ்ச்சியாக ஜீவித்தானா அல்லது துக்கமாக ஜீவித்தானா? (துக்கமாக ஜீவித்தான்.) ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்? (இந்தக் கேடான காரியங்களால் மனிதன் கட்டப்பட்டு, கட்டுப்படுத்தப்படுவதால், அவன் பாவத்தில் ஜீவிக்கிறான், கடினமான போராட்டத்தில் மூழ்கிவிடுகிறான்.) சிலர் கண்ணாடியை அணிந்துகொள்கிறார்கள். மிகவும் அறிவார்ந்தவர்களாகத் தோன்றுகிறார்கள். அவர்கள் மிகவும் மரியாதையுடனும், சரளமாகவும், காரணத்துடனும் பேசக்கூடும். மேலும், அவர்கள் பல விஷயங்களைக் கடந்து வந்ததால், அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களாகவும், உலகத்துக்கேற்ப நடப்பவர்களாகவும் இருக்கலாம். பெரிய விஷயங்களைப் பற்றியும் சிறிய விஷயங்களைப் பற்றியும் அவர்களால் விரிவாகப் பேச முடியும். அவர்களால் விஷயங்களின் நம்பகத் தன்மையையும் காரணத்தையும் மதிப்பிட முடியும். சிலர் இந்த நபர்களின் நடத்தை மற்றும் தோற்றத்தையும், அவர்களின் குணம், மனிதநேயம், நடத்தை மற்றும் பலவற்றையும் பார்த்து, அவர்களிடம் எந்தத் தவறும் இல்லை என்று எண்ணலாம். இத்தகைய நபர்களால் குறிப்பாக தற்போதைய சமூகப் போக்குகளுக்கு ஏற்ப மாற முடிகிறது. இந்த நபர்கள் வயதானவர்களாக இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் காலத்தின் போக்குகளுக்கு தூரமாக மாட்டார்கள், எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பார்கள். மேலோட்டமாக, அத்தகைய நபரிடம் யாரும் தவறு கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் அவர்களுடைய உள் சாராம்சத்தில் அவர்கள் சாத்தானால் முற்றிலுமாக முழுவதுமாக கெடுத்துக் கொள்கிறார்கள். இந்த நபர்களிடம் எந்த வெளிப்புறத் தவறுகளையும் காணமுடியாது என்றாலும், மேலோட்டமாக அவர்கள் மென்மையாகவும், சுத்திகரிக்கப்பட்டவர்களாகவும், அறிவையும் ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கு நேர்மை இருக்கிறது மற்றும் அறிவின் அடிப்படையில் அவர்கள் எந்த வகையிலும் இளைஞர்களை விடத் தாழ்ந்தவர்கள் அல்ல என்றாலும், அவர்களின் குணம் மற்றும் சாராம்சத்தைப் பொறுத்தவரையில், அத்தகையவர்கள் சாத்தானுடைய முழுமையான மற்றும் ஜீவிக்கும் மாதிரியாவார்கள். அவர்கள் சாத்தானுடைய துல்லியமான சாயலாகவே இருக்கிறீர்கள். இது சாத்தானுடைய மனிதக் கேட்டின் “பலன்” ஆகும். நான் கூறியது உங்களைப் புண்படுத்தக்கூடும். ஆனால் அது அனைத்தும் உண்மைதான். சமூகப் போக்குகளுடன் பொருந்துவதற்காக மனிதன் கற்கும் அறிவு, அவன் புரிந்து கொள்ளும் அறிவியல் மற்றும் அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள், சாத்தானுடைய மனிதக் கேட்டுக்கு விதிவிலக்கு இல்லாமல் இருக்கின்றன. இது முற்றிலும் உண்மை. ஆகையால், சாத்தானால் முற்றிலுமாகச் சீர்கெடுக்கப்பட்ட ஒரு மனநிலையில் மனிதன் ஜீவிக்கிறான். தேவனுடைய பரிசுத்தம் என்ன அல்லது தேவனுடைய சாராம்சம் என்ன என்பதை அறிந்துகொள்ள மனிதனுக்கு வழி இல்லை. ஏனென்றால், மேலோட்டமாக, சாத்தான் மனிதனைச் சீர்கெடுக்கும் வழிகளில் ஒருவர் தவறு காண முடியாது. ஒருவரின் நடத்தையிலிருந்து எதேனும் ஒன்று தவறாக இருப்பதாக ஒருவர் சொல்ல முடியாது. எல்லோரும் சாதாரணமாக வேலைக்குச் சென்று சாதாரண ஜீவிதத்தை ஜீவிக்கிறார்கள். அவர்கள் பொதுவாக புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் படிக்கிறார்கள். அவர்கள் சாதாரணமாகப் படிக்கிறார்கள், பேசுகிறார்கள். சிலர் ஒரு சில நெறிமுறைகளைக் கற்றுள்ளார்கள். சிலர் பேசுவதில் சிறந்தவர்களாகவும், புரிந்துகொள்ளும் மற்றும் நட்புக்கொள்ளும் நபராகவும், உதவி மற்றும் தொண்டு செய்பவராகவும், சண்டைகளைத் தவிர்ப்பவராகவும் அல்லது ஜனங்களைக் கொண்டு லாபம் பார்க்காதவராகவும் இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் கேடு நிறைந்த சாத்தானிய மனப்பான்மை அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது. மேலும், மற்றவர்களின் முயற்சியை நம்புவதன் மூலம் இந்த சாராம்சத்தை மாற்ற முடியாது. இந்தச் சாராம்சத்தின் காரணமாக, மனிதனால் தேவனுடைய பரிசுத்தத்தை அறிய முடியவில்லை. மேலும், தேவனுடைய பரிசுத்தத்தின் சாராம்சம் மனிதனுக்கு வெளிப்படுத்தப்பட்ட போதிலும், மனிதன் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஏனென்றால், மனிதனுடைய உணர்வுகள், கருத்துக்கள், கண்ணோட்டங்கள் மற்றும் எண்ணங்களை சாத்தான் பல்வேறு வழிகளில் ஏற்கனவே தன்னிடம் வைத்திருக்கிறான். இந்த உடமை மற்றும் கெடுதல் தற்காலிகமானதோ அல்லது அவ்வப்போது நிகழ்வதோ அன்று. மாறாக எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருப்பதாகும். இவ்வாறு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக, அல்லது ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக தேவனை நம்பியிருக்கும் ஏராளமான ஜனங்கள், சாத்தான் அவர்களுக்குள் பொக்கிஷங்களாகப் புகுத்தியுள்ள இந்தத் தீய எண்ணங்கள், காட்சிகள், தர்க்கங்கள் மற்றும் தத்துவங்களை, ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களால் அதனை இன்னும் விடமுடியவில்லை. சாத்தானுடைய இயல்பிலிருந்து வரும் தீய, திமிர்பிடித்த மற்றும் தீங்கிழைக்கும் விஷயங்களை மனிதன் ஏற்றுக் கொண்டுள்ளதால், ஒருவருக்கொருவர் இடையே இருக்கும் மனிதனுடைய உறவுகளில் பெரும்பாலும், தவிர்க்க முடியாமல் மோதல்கள், வாதங்கள் மற்றும் பொருந்தாத தன்மை ஆகியவை உருவாகின்றன. அவை சாத்தானுடைய ஆணவ குணத்தின் விளைவாக வருகின்றன. சாத்தான் மனிதகுலத்திற்கு நேர்மறையான விஷயங்களை வழங்கியிருந்தால்—உதாரணமாக, மனிதன் ஏற்றுக்கொண்ட பாரம்பரிய கலாச்சாரத்தின் கன்பூசியனிசமும் தாவோயிசமும் நல்ல விஷயங்களாக இருந்தால்—அந்த விஷயங்களை ஏற்றுக்கொண்ட பிறகு இத்தகைய ஜனங்கள் ஒருவருக்கொருவர் அன்பாகப் பழக முடியும். இந்நிலையில், அந்த விஷயங்களை ஏற்றுக்கொண்ட ஜனங்களிடையே ஏன் இவ்வளவு பெரிய பிளவு இருக்கிறது? அது ஏன்? ஏனென்றால் அவை சாத்தானிடமிருந்து வந்தவையாகும். சாத்தான் ஜனங்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது. சாத்தானிடமிருந்து வரும் விஷயங்கள், அவை மேலோட்டமாக எவ்வளவு கண்ணியமாகவோ பெரியதாகவோத் தோன்றினாலும், அவை மனிதனிடம் வரும்போது மனிதனுடைய ஜீவிதத்தில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. இது சாத்தானுடைய தீய குணத்தின் ஏமாற்றமே அன்றி வேறொன்றுமில்லை. அது அப்படித்தானே அல்லவா? வேடமிட்டு ஜீவிக்க திறன் கொண்டவரும், அறிவுச் செல்வத்தைக் கொண்ட அல்லது நல்ல வளர்ப்பைக் கொண்ட ஒருவரும் தங்களது கேடு நிறைந்த சாத்தானிய மனநிலையை மறைக்க இன்னும் கடினமாகப் போராடுவார். அதாவது, இந்த நபர் தன்னைத் தானே மூடிமறைத்துக் கொண்டாலும், அவர்களை ஒரு துறவி என்று நீ நினைத்திருந்தாலும், அல்லது அவர்கள் பரிபூரணமானவர்கள் என்று நீ நினைத்திருந்தாலும், அல்லது அவர்கள் ஒரு தேவ தூதர் என்று நீ நினைத்தாலும், அவர்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்கள் என்று நீ நினைத்தாலும், திரைக்குப் பின்னால் அவர்களின் உண்மையான ஜீவிதம் எவ்வாறு இருக்கும்? அவர்களுடைய மனநிலையின் வெளிப்பாட்டில் நீ காணும் சாராம்சம் என்ன? துளியும் சந்தேகம் இல்லாமல் நீ சாத்தானுடைய தீய குணத்தைக் காண்பாய். அவ்வாறு சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? (ஆம்.) எடுத்துக்காட்டாக, நீங்கள் அறிந்த, உங்களுக்கு நெருக்கமான, நல்ல மனிதராக நினைக்கும், ஒருவேளை நீ ரசிக்கும் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உனது தற்போதைய நிலையில், நீ அவரைப் பற்றி என்ன நினைக்கிறாய்? முதலாவதாக, இந்த வகை நபருக்கு மனிதநேயம் இருக்கிறதா இல்லையா, அவர்கள் நேர்மையானவர்களா, ஜனங்கள் மீது உண்மையான அன்பு வைத்துள்ளார்களா, அவர்களின் சொற்களும் செயல்களும் பயனுள்ளவையா, மற்றவர்களுக்கு உதவுகின்றனவா என்பதை மதிப்பிடுங்கள். (அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்.) இந்த ஜனங்கள் வெளிப்படுத்தும் கருணை, அன்பு அல்லது நன்மை என அழைக்கப்படுபவை எவை? இது எல்லாம் தவறானது. இது ஒரு மாயத் தோற்றமாகும். இந்த மாயத் தோற்றத்துக்கு பின்னால் ஒரு தீய நோக்கம் உள்ளது: அந்த நபரை வணங்கச் செய்வதும் விக்கிரகமாக்குவதும் ஆகும். இதை நீங்கள் தெளிவாகப் பார்க்கின்றீர்களா? (ஆம்.)

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 153

ஜனங்களைச் சீர்கெடுக்கச் சாத்தான் பயன்படுத்தும் முறைகளில் மனிதகுலத்திற்கு கொண்டு வந்தவை யாவை? அவை நேர்மறையான எதையேனும் கொண்டு வருகின்றனவா? முதலாவதாக, மனிதனால் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ள முடியுமா? இந்த உலகில், எதையேனும் நன்மை அல்லது தீமை, சரியானது அல்லது தவறானது, என்று துல்லியமாகத் தீர்மானிக்க, ஒரு பிரபலமான அல்லது சிறந்த நபரையோ, அல்லது பத்திரிகைகள் அல்லது பிற வெளியீடுகளையோ தரநிலைகளாகப் பயன்படுத்துவார்கள் என்று நீ கூறுவாயா? நிகழ்வுகள் மற்றும் ஜனங்கள் பற்றிய அவர்களின் மதிப்பீடுகள் நியாயமானதா? அவற்றில் சத்தியம் இருக்கிறதா? இந்த உலகமும், இந்த மனிதநேயமும், சத்தியத்தின் தரத்தின் அடிப்படையில் நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை மதிப்பிடுகிறதா? (இல்லை.) ஜனங்களுக்கு ஏன் அந்த திறன் இல்லை? ஜனங்கள் இவ்வளவு அறிவைக் கற்றிருக்கிறார்கள், அறிவியலைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் சிறந்த திறன்களைக் கொண்டுள்ளனர், இல்லையா? அவர்களால் ஏன் நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை வேறுபடுத்த இயலாது? இது ஏன்? (ஏனென்றால் ஜனங்களிடம் சத்தியம் இல்லை. அறிவியலும் அறிவும் சத்தியம் ஆகாது.) சாத்தான் மனிதகுலத்திற்கு கொண்டு வரும் அனைத்தும் தீயவை, கேடு நிறைந்தவை மற்றும் வழியும் சத்தியமும் ஜீவனும் இல்லாதவை. சாத்தான் மனிதனிடம் கொண்டு வரும் தீமை மற்றும் கேட்டால், சாத்தானிடம் அன்பு இருக்கிறது என்று உன்னால் சொல்ல முடியுமா? மனிதனிடம் அன்பு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? சிலர் இவ்வாறு கூறலாம்: “நீ சொல்வது தவறு; உலகெங்கிலும் ஏழைகள் அல்லது வீடற்றவர்களுக்கு உதவி செய்யும் பலர் உள்ளனர். அந்த மனிதர்கள் நல்லவர்கள் இல்லையா? நல்ல கிரியையைச் செய்யும் தொண்டு நிறுவனங்களும் உள்ளன; அவர்களுடைய கிரியை நல்லதல்லவா?” அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பல வழிகளையும் கோட்பாடுகளையும் பயன்படுத்துகிறது. மனிதனுடைய இந்தக் கேடானது தெளிவற்ற கருத்தாகுமா? இல்லை, அது தெளிவற்றதல்ல. சாத்தான் சில நடைமுறை விஷயங்களையும் செய்கிறது. மேலும், அது இந்த உலகத்திலும் சமூகத்திலும் ஒரு பார்வை அல்லது ஒரு கோட்பாட்டை புகுத்துகிறது. ஒவ்வொரு ராஜாங்கத்திலும் ஒவ்வொரு சகாப்தத்திலும் இது ஒரு கோட்பாட்டை புகுத்துகிறது மற்றும் மனிதனுடைய மனதில் எண்ணங்களை புகுத்துகிறது. இந்த எண்ணங்களும் கோட்பாடுகளும் படிப்படியாக ஜனங்களின் இருதயங்களில் வேரூன்றி, பின்னர் அவற்றால் அவர்கள் ஜீவிக்கத் தொடங்குகின்றனர். இந்த விஷயங்களால் அவர்கள் ஜீவிக்கத் தொடங்கியவுடன், அவர்கள் அறியாமலே சாத்தானாக மாறவில்லையா? ஜனங்கள் சாத்தானுடன் ஒன்றாகவில்லையா? ஜனங்கள் சாத்தானுடன் ஒன்றாகிவிட்டால், இறுதியில் தேவனைப் பற்றிய அவர்களின் மனப்பான்மை என்னவாக இருக்கும்? இது, தேவனிடம் சாத்தான் வைத்திருக்கும் அதே மனப்பான்மை இல்லையா? இதை ஒப்புக்கொள்ள யாரும் துணிவதில்லை, அல்லவா? எவ்வளவு பயங்கரமானது இது! சாத்தானுடைய குணம் தீமையானது என்று நான் ஏன் சொல்கிறேன்? இதை நான் ஆதாரமின்றி சொல்லவில்லை. மாறாக, சாத்தானுடைய குணம் அது செய்த மற்றும் வெளிப்படுத்திய விஷயங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது மற்றும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாத்தான் தீமையானது என்று நான் சொன்னால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? “நிச்சயமாக சாத்தான் தீமையானது” என்று நீங்கள் நினைப்பீர்கள். எனவே, நான் உன்னிடம் கேட்கிறேன்: “சாத்தானுடைய எந்த அம்சங்கள் தீயவை?” “தேவனுக்கு எதிரான சாத்தானுடைய எதிர்ப்பு தீமையானது” என்று நீ சொன்னால், நீ இன்னும் தெளிவுடன் பேசவில்லை. இப்போதும் நான் இவ்வாறு குறிப்பிட்ட காரியங்களைப் பற்றி பேசியுள்ளேன். சாத்தானுடைய தீமையின் சாராம்சத்தின் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைப் பற்றி உங்களுக்குப் புரிதல் இருக்கிறதா? (ஆம்.) சாத்தானுடைய தீய குணத்தை நீங்கள் தெளிவாகக் காண முடிந்தால் உங்கள் சொந்த நிலைமைகளையும் காண்பீர்கள். இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? இது உங்களுக்கு உதவுமா, உதவாதா? (உதவும்.) தேவனுடைய பரிசுத்தத்தின் சாராம்சத்தைப் பற்றி நான் பேசும்போது, சாத்தானுடைய தீய சாராம்சத்தைப் பற்றி நான் பேசுவது அவசியமாகின்றதா? இது குறித்து உங்கள் கருத்து என்ன? (ஆம், அது அவசியமாகும்.) ஏன்? (சாத்தானுடைய தீமையானது தேவனுடைய பரிசுத்தத்தை விலக்கி வைக்கிறது.) அது எப்படி நடக்கின்றது? இது ஓரளவு சரியானது. இல்லை என்றால், தேவன் பரிசுத்தர் என்பதை ஜனங்கள் அறிய மாட்டார்கள். இதைச் சொல்வது சரியாக இருக்கும். இருப்பினும், சாத்தானுடைய தீமைக்கு முரணாக இருப்பதால் மட்டுமே தேவனுடைய பரிசுத்தம், இருக்கின்றது என்று நீ சொன்னால், அது சரியாக இருக்குமா? இந்த எதிர்மறையான சிந்தனை முறை தவறானது. தேவனுடைய பரிசுத்தமானது தேவனுடைய உள்ளார்ந்த சாராம்சம் ஆகும். தேவன் தனது செயல்களின் மூலம் அதை வெளிப்படுத்தும்போது கூட, அது இன்னும் தேவனுடைய சாராம்சத்தின் இயல்பான வெளிப்பாடாகத்தான் இருக்கும். அது இன்னும் தேவனுடைய உள்ளார்ந்த சாராம்சமாகும். அது எப்போதும் இருக்கின்ற ஒன்றாகும். மேலும், அது தேவனுக்கு உள்ளார்ந்ததாகவும், இயல்பாகவும் இருக்கின்றது. இருப்பினும் மனிதனால் அதைப் பார்க்க முடியாது. ஏனென்றால், மனிதன் சாத்தானுடைய கேடான மனப்பான்மைக்கும் சாத்தானுடைய உந்துதலுக்குக் கீழும் ஜீவிக்கிறான். மேலும், அவன் பரிசுத்தத்தையும், தேவனுடைய பரிசுத்தத்தின் குறிப்பிட்ட உள்ளடக்கத்தையும், அறியாதிருக்கிறான். எனவே, முதலாவதாக, சாத்தானுடைய தீய சாராம்சத்தைப் பற்றி நாம் பேசுவது அவசியமாகின்றதா? (ஆம், அது அவசியமாகின்றது.) சிலர் சில சந்தேகங்களை வெளிப்படுத்தக்கூடும்: “நீ தேவனைப் பற்றி பேசுகின்றாய், இந்நிலையில் சாத்தான் ஜனங்களை எவ்வாறு கெடுக்கிறான், சாத்தானுடைய குணம் எவ்வாறு தீமையானது என்பதைப் பற்றி ஏன் எப்போதும் பேசுகின்றீர்கள்?” இப்போது இந்த சந்தேகங்களை நீங்கள் தீர்த்துக் கொண்டீர்கள், அல்லவா? சாத்தானுடைய தீமையைப் பற்றி ஜனங்கள் புரிந்துக்கொள்ளும்போது, அதற்கு ஒரு துல்லியமான வரையறை இருக்கும்போது, தீமையின் குறிப்பிட்ட உள்ளடக்கத்தையும் வெளிப்பாட்டையும், தீமையின் மூலக் காரணத்தையும் சாராம்சத்தையும் ஜனங்கள் தெளிவாகக் காணும்போது தான், தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய விவாதத்தின் மூலமாக, தேவனுடைய பரிசுத்தம் என்றால் என்ன என்பதையும், பரிசுத்தம் என்றால் என்ன என்பதையும் ஜனங்கள் தெளிவாக உணர அல்லது அடையாளம் காண முடியும். நான் சாத்தானுடைய தீமையைப் பற்றி விவாதிக்கவில்லை என்றால், சமுதாயத்திலும் ஜனங்களிடையேயும், ஜனங்கள் செய்யும் சில விஷயங்கள் அல்லது இந்த உலகில் இருக்கும் சில விஷயங்கள், பரிசுத்தத்துடன் தொடர்பில் இருக்கும் என்று சிலர் தவறாக நம்புவார்கள். இது தவறான பார்வை அல்லவா? (ஆம், தவறான பார்வைதான்.)

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 154

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவைப் பயன்படுத்துகிறது, அவரைக் கட்டுப்படுத்த புகழையும் ஆதாயத்தையும் பயன்படுத்துகிறது (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தி)

சாத்தான் மனிதனைக் கெடுக்கும் ஐந்து வழிகளில், நான் முதலில் குறிப்பிட்டது அறிவு. எனவே, அமர்வுக்கான முதல் தலைப்பாக அறிவை எடுத்துக்கொள்வோம். சாத்தான் அறிவை தூண்டில் இரையாகப் பயன்படுத்துகிறது. உன்னிப்பாகக் கவனியுங்கள்: அறிவு என்பது ஒரு வகையான தூண்டில் இரையாகும். கடினமாகப் படித்து நாளுக்கு நாள் தங்களை மேம்படுத்துவதற்கும், அறிவை ஆயுதமாகுவதற்கும், தங்கள் மீது அந்த ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, பின்னர், விஞ்ஞானத்தின் வாசலைத் திறக்க ஜனங்கள் அறிவைப் பயன்படுத்துகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீ எவ்வளவு அதிகமாக அறிவைப் பெறுகிறாயோ, அவ்வளவு அதிகாமப் புரிந்துகொள்வாய். சாத்தான் இதையெல்லாம் ஜனங்களுக்குச் சொல்கிறது. ஜனங்கள் அறிவைக் கற்றுக் கொண்டிருப்பதால் உயர்ந்த இலட்சியங்களை வளர்க்கும்படி ஜனங்களுக்குச் சொல்கிறது. லட்சியங்களையும் நோக்கங்களையும் ஜனங்கள் கட்டமைக்க அது அவர்களுக்கு அறிவுறுத்துகிறது. மனிதனுக்குத் தெரியாமல், சாத்தான் இது போன்ற பல செய்திகளை அளிக்கிறது. இதனால் இவை சரியானவை அல்லது நன்மை பயக்கும் என்று ஜனங்கள் சுயநினைவின்றி நம்புகிறார்கள். அறியாமலேயே, ஜனங்கள் இந்தப் பாதையில் கால் பதிக்கிறார்கள். அறியாமலேயே, தங்கள் சொந்த இலட்சியங்கள் மற்றும் நோக்கங்களால் வழிநடத்தப்படுகிறார்கள். படிப்படியாக, சாத்தான் கொடுத்த அறிவிலிருந்து பெரியவர்கள் அல்லது பிரபலமானவர்கள் சிந்திக்கும் வழிகளை அவர்கள் அறியாமல் கற்றுக்கொள்கிறார்கள். தலைவர்கள் என்று கருதப்படும் ஜனங்களுடைய செயல்களிலிருந்தும் அவர்கள் சில விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மனிதனுக்காக இந்தத் தலைவர்களின் செயல்களில் சாத்தான் எதை வாதாடுகிறது? அது, மனிதனுக்குள் எதை உட்புகுத்த விரும்புகிறது? மனிதன் தேசபக்தனாக, தேசிய ஒருமைப்பாட்டைக் கொண்டவனாக, மற்றும் ஆவியில் சிறந்தவனாக இருக்க வேண்டும். வரலாற்றுக் கதைகள் அல்லது தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து மனிதன் எதைக் கற்றுக்கொள்கிறான்? தனிப்பட்ட விசுவாசத்தை உணர, ஒருவர் தன் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்காக எதையும் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். சாத்தானுடைய இந்த அறிவுக்குள், மனிதன் அறியாமலேயே நேர்மறையாக இல்லாத பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறான். சாத்தானால் தயார் செய்யப்பட்ட விதைகள், மனிதனுடைய அறியாமையின் மத்தியில், ஜனங்களுடைய முதிர்ச்சியற்ற மனதில் நடப்படுகின்றன. இந்த விதைகள் அவர்கள் பெரிய மனிதர்களாக இருக்க வேண்டும், பிரபலமாக இருக்க வேண்டும், தலைவர்களாக இருக்க வேண்டும், தேசபக்தராக இருக்க வேண்டும், தங்கள் குடும்பத்தை நேசிக்கும் மனிதர்களாக இருக்க வேண்டும், ஒரு நண்பருக்காக எதையும் செய்பவராக இருக்க வேண்டும், தனிப்பட்ட முறையில் விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உணர்த்துகின்றன. சாத்தானால் மயக்கமடைந்து, சாத்தான் தங்களுக்கு ஆயத்தம் செய்த பாதையில் அவர்கள் அறியாமல் நடக்கிறார்கள். அவர்கள் இந்த பாதையில் செல்லும்போது, சாத்தானுடைய வாழ்வதற்கான விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். முற்றிலும் அறியாமலேயே அவர்கள், தாங்கள் ஜீவிக்க சொந்த விதிமுறைகளை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் இவை சாத்தானுடைய விதிமுறைகளே தவிர வேறொன்றுமில்லை. அவர்களுக்குள் இதை சாத்தான் பலவந்தமாக திணித்துள்ளது. கற்றல் செயல்பாட்டின் போது, சாத்தான் அவற்றை உருவாக்குகிறது, சொந்தக் குறிக்கோள்களை வளர்க்கச் செய்கிறது. அவர்களுடைய சொந்த ஜீவித இலக்குகள், ஜீவிக்கத் தேவையான விதிமுறைகள் மற்றும் ஜீவிதத்தின் நோக்கத்தைத் தீர்மானிக்கிறது. எல்லா நேரங்களிலும் சாத்தானுடைய விஷயங்களை அவர்களுக்குள் புகுத்தி, கதைகள், சுயசரிதைகள் மற்றும் பிற எல்லா வழிகளையும் பயன்படுத்தி, அவர்கள் தூண்டிலில் சிக்கும் வரையில், ஜனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்திழுக்கிறது. இவ்வாறு, தங்களது கற்றலின் போது, சிலர் இலக்கியம், சிலர் பொருளாதாரம், மற்றவர்கள் வானியல் அல்லது புவியியல் ஆகியவற்றை விரும்புகிறார்கள். பின்னர், அரசியலுக்கு வர விரும்புவதாக சிலரும், இயற்பியலை விரும்புவதாக சிலரும், சிலர் வேதியியலையும், இன்னும் சிலர் இறையியலையும் விரும்புகிறார்கள். இவை அனைத்தும் முழுமையான உயரிய அறிவின் பகுதிகளாகும். இந்த விஷயங்கள் உண்மையில் என்னவென்று இருதயங்களில், உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். நீங்கள் ஒவ்வொருவரும் முன்பு அவற்றுடன் தொடர்பில் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அறிவின் கிளைகளில் ஒன்றைப் பற்றியோ மற்றொன்றைப் பற்றியோ முடிவில்லாமல் பேசும் திறன் கொண்டவர்கள். இந்நிலையில், இந்த அறிவு மனிதர்களின் மனதில் எவ்வளவு ஆழமாக நுழைந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஜனங்கள் மனதில் இந்த அறிவு ஆக்கிரமித்திருக்கிற இடம் மற்றும் அது அவர்களுக்கு எவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்பது எளிது. அறிவின் ஒரு அம்சத்தின் மீது ஒருவர் பாசத்தை வளர்த்துக் கொண்டால், ஒரு மனிதர் அதை ஆழமாக நேசிக்கும்போது, அவர்கள் அறியாமலேயே லட்சியங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்: சிலர் எழுத்தாளர்களாக இருக்க விரும்புகிறார்கள், சிலர் இலக்கிய எழுத்தாளர்களாக இருக்க விரும்புகிறார்கள், சிலர் அரசியலில் ஒரு எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறார்கள், மற்றும் சிலர் பொருளாதாரத்தில் ஈடுபட விரும்புகிறார்கள் மற்றும் வணிகர்களாக மாற விரும்புகிறார்கள். தலைவர்களாக, பெரியவர்களாக அல்லது பிரபலமாக விரும்பும் ஜனங்களுடைய பகுதி ஒன்று இருக்கிறது. ஒருவர் எத்தகைய நபராக இருக்க விரும்புகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த அறிவைக் கற்கும் முறையை எடுத்து அதைத் தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதும், அவர்களுடைய சொந்த ஆசைகளை, தங்கள் சொந்த லட்சியங்களை உணர்ந்துக்கொள்ள பயன்படுத்துவதும் அவர்களுடைய குறிக்கோள் ஆகும். அவை எவ்வளவு நன்றாக இருந்தாலும்—அவர்கள் கனவுகளை அடைய விரும்பினாலும், தங்கள் ஜீவிதத்தை வீணாக்கக் கூடாது என விரும்பினாலும் அல்லது ஒரு குறிப்பிட்டத் தொழிலைப் பெற வேண்டும் என விரும்பினாலும்—அவர்கள் இந்த உயர்ந்த இலட்சியங்களையும் குறிக்கோள்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள், ஆனால், இவை அனைத்தின் முக்கியத்துவமும் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை நீங்கள் எப்போதாவது பரிசீலித்திருக்கிறீர்களா? சாத்தான் ஏன் இவ்வாறு செயல்படுகிறது? இந்த விஷயங்களை மனிதனுக்குள் புகுத்துவதில் சாத்தானுடைய நோக்கம் என்ன? இந்தக் கேள்வியில் உங்கள் இருதயங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 155

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவைப் பயன்படுத்துகிறது, அவரைக் கட்டுப்படுத்த புகழையும் ஆதாயத்தையும் பயன்படுத்துகிறது (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

மனிதன் அறிவைக் கற்றுக்கொள்ளும் செயல்பாட்டின் போது, மனிதர்களுக்குக் கதைகளைச் சொல்வது, அவர்களுக்கு சில தனிப்பட்ட அறிவைக் கொடுப்பது அல்லது அவர்களுடைய ஆசைகள் அல்லது நோக்கங்களைப் பூர்த்தி செய்ய அனுமதிப்பது என சாத்தான் எல்லா விதமான முறைகளையும் பயன்படுத்துகிறது. சாத்தான் உன்னை எந்தப் பாதையில் கொண்டு செல்ல விரும்புகிறது? அறிவைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். அது முற்றிலும் இயற்கையான உணர்வாகும். அதைக் கவர்ந்திழுக்கும் வகையில், உயர்ந்த இலட்சியங்களை வளர்க்கும் வகையில் அல்லது லட்சியங்களைக் கொண்டிருக்கும் வகையில் உந்துதலைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே ஜீவிதத்தில் சரியான பாதையாக இருக்க முடியும். ஜனங்கள் தங்கள் சொந்த இலட்சியங்களை உணர முடிந்தால், அல்லது வெற்றிகரமாக ஒரு தொழிலை நிலைநாட்ட முடிந்தால், ஜனங்கள் ஜீவிப்பது மிகவும் புகழ்பெற்ற வழி அல்லவா? இந்த விஷயங்களைச் செய்வதன் மூலம், ஒருவரின் மூதாதையர்களை மதிக்க மட்டுமல்லாமல், வரலாற்றில் ஒருவரின் அடையாளத்தை விட்டுச்செல்லவும் வாய்ப்பு உள்ளது—இது ஒரு நல்ல விஷயம் அல்லவா? உலக ஜனங்களுடைய பார்வையில் இது ஒரு நல்ல விஷயம். அவர்களுக்கு இதுவே சரியானதாகவும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், சாத்தான் அதன் மோசமான நோக்கங்களுடன், ஜனங்களை இத்தகைய பாதையில் அழைத்துச் செல்வதற்கு தேவையான அனைத்தும் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. உண்மையில், மனிதனுடைய இலட்சியங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், மனிதனுடைய ஆசைகள் எவ்வளவு யதார்த்தமானவை அல்லது அவை எவ்வளவு சரியானதாக இருந்தாலும், மனிதன் அடைய விரும்பும் அனைத்தும், மனிதன் தேடும் அனைத்தும், இரண்டு வார்த்தைகளுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு சொற்களும் ஒவ்வொரு மனிதரின் ஜீவிதத்திலும் மிக முக்கியமானவையாகும். அவை மனிதனுக்குள் சாத்தான் புகுத்த விரும்பும் விஷயங்களாகும். அந்த இரண்டு சொற்கள் யாவை? அவை “புகழ்” மற்றும் “ஆதாயம்” ஆகும். சாத்தான் மிகவும் நுட்பமான ஒரு முறையைப் பயன்படுத்துகிறது. அது ஜனங்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போகின்ற ஒரு முறையாகும். அது தீவிரமானதல்ல. இவ்வாறு சத்தானுடைய ஜீவித முறையையும், அதன் விதிமுறைகளைப் பின்பற்றுவதையும், சாத்தான் உருவாக்கும் ஜீவித இலக்குகளையும் நோக்கங்களையும், ஜனங்கள் அறியாமையில் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. அவ்வாறு செய்யும்போது அவர்கள் அறியாமலேயே ஜீவிதத்தில் லட்சியங்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜீவித நோக்கங்கள் எவ்வளவு பெரியதாகத் தோன்றினாலும், அவை “புகழ்” மற்றும் “ஆதாயம்” ஆகியவற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு பெரிய அல்லது பிரபலமான மனிதரும்—உண்மையில் எல்லா ஜனங்களும்—பின்பற்றும் அனைத்தும் “புகழ்” மற்றும் “ஆதாயம்” என்ற இந்த இரண்டு சொற்களுடன் மட்டுமே தொடர்புடையவை ஆகும். புகழ் மற்றும் ஆதாயம் கிடைத்தவுடன், அதைப் பயன்படுத்தி தங்களால் உயர் அந்தஸ்தையும் பெரும் செல்வத்தையும் அனுபவிக்கவும், ஜீவிதத்தை அனுபவிக்கவும் முடியும் என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயம் என்பது ஜனங்கள் சிற்றின்பத்தையும் மாம்சம் விரும்பும் இன்பத்தையும் பெற்றுக்கொள்ளும் ஜீவிதத்தைப் பெற பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலதனம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மனிதகுலம் அதிகமாக விரும்பும் இந்த புகழ் மற்றும் ஆதாயத்திற்காக, ஜனங்கள் விருப்பமின்றி, அறியாமலேயே, தங்கள் சரீரங்களையும், மனங்களையும், அவர்களிடம் உள்ள அனைத்தையும், அவர்களுடைய எதிர்காலங்களையும், தலைவிதிகளையும் சாத்தானிடம் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் ஒரு கணம் கூட தயங்காமல் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் ஒப்படைத்த அனைத்தையும் மீட்டெடுப்பதன் அவசியத்தை ஒருபோதும் அறியாமல் இருக்கிறார்கள். இவ்வாறு சாத்தானில் தஞ்சமடைந்து, அதற்கு விசுவாசமாகி விட்டால், ஜனங்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டில் எதையாவது தக்க வைத்துக் கொள்ள முடியுமா? நிச்சயமாக இல்லை. அவை சாத்தானால் முழுமையாகவும் நிச்சயமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர்கள் முற்றிலுமாக மற்றும் நிச்சயமாக ஒரு புதைகுழியில் மூழ்கிவிட்டனர். அவர்களால் தங்களை விடுவிக்க முடியவில்லை. ஒருவர் புகழ் மற்றும் ஆதாயத்தில் மூழ்கியவுடன், பிரகாசமானதை, நீதியுள்ளதை அல்லது அழகானதையும் நலமானதையும் அவர்கள் இனி தேட மாட்டார்கள். ஏனென்றால், ஜனங்கள் மீது புகழ் மற்றும் ஆதாயம் வைத்திருக்கும் கவர்ச்சியின் வல்லமை மிக அதிகம். அவை, ஜனங்களை தங்கள் ஜீவகாலம் முழுவதும் பின்பற்றவும், முடிவில்லாமல் நித்தியமாக பின்பற்றவும் செய்கின்றன. இது உண்மையல்லவா? அறிவைக் கற்றுக்கொள்வது புத்தகங்களைப் படிப்பது அல்லது தங்களுக்கு முன்பே தெரியாத சில விஷயங்களைக் கற்றுக்கொள்வது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று சிலர் கூறுவார்கள். எனவே, காலத்தால் பின்தங்கி இருக்கக்கூடாது அல்லது உலகத்தால் பின்னால் விடப்படக் கூடாது என்பார்கள். அறிவு வெறுமனே கற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, அவர்கள் தேவையானவற்றையும், தங்கள் எதிர்காலத்திற்காக அல்லது அடிப்படை தேவைகளையும் வழங்க முடியும். உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, அடிப்படைத் தேவைகளுக்காக ஒரு தசாப்த காலமாகக் கடின படிப்பைத் தொடரும் யாராவது இருக்கிறார்களா? இல்லை, இதுபோன்று யாரும் இல்லை. ஒரு மனிதர் இந்த ஆண்டுகளில் ஏன் இந்தக் கஷ்டங்களை அனுபவிக்கிறார்? இது புகழ் மற்றும் ஆதாயத்திற்கானது. புகழ் மற்றும் ஆதாயம் தூரத்தில் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. அவர்களை அழைக்கின்றன. மேலும், அவர்கள் தங்கள் சொந்த விடாமுயற்சி, கஷ்டங்கள் மற்றும் போராட்டங்களின் மூலமாக மட்டுமே புகழ் மற்றும் ஆதாயத்தை அடைய வழிவகுக்கும் பாதையைப் பின்பற்ற முடியும் என்று நம்புகிறார்கள். அத்தகைய மனிதர்கள் தங்கள் எதிர்கால பாதைக்காகவும், அவர்களுடைய எதிர்கால இன்பத்துக்காகவும், சிறந்த ஜீவிதத்தைப் பெறவும், இந்தக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும். இவை எத்தகைய அறிவு என்று என்னிடம் நீங்கள் சொல்ல முடியுமா? இது, “கட்சியை நேசி, நாட்டை நேசி, உன் மதத்தை நேசி” மற்றும் “புத்தியுள்ள மனிதன் சூழ்நிலைகளுக்கு அடிபணிகிறான்” என்பன போன்ற சாத்தான் மனிதனுக்குள் புகுத்தும் வாழ்க்கை விதிமுறைகள் மற்றும் தத்துவங்கள் அல்லவா? சாத்தானால் மனிதனுக்குள் புகுத்தப்பட்ட ஜீவிதத்தின் “உயர்ந்த இலட்சியங்கள்” அல்லவா? உதாரணமாக, பெரிய மனிதர்களின் யோசனைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பிரபலமானவர்களின் ஒருமைப்பாடு அல்லது தலைவர்களின் துணிச்சலான உத்வேகம், அல்லது தற்காப்புக் கலையை எடுத்துக் கொள்ளுங்கள், புதினங்களில் கதாநாயகர்கள் மற்றும் வாள் வீரர்களின் வீரம் மற்றும் தயவை எடுத்துக் கொள்ளுங்கள்—இவை அனைத்தின் வழியாக சாத்தான் இந்த இலட்சியங்களை உட்புகுத்துகிறது அல்லவா? இந்தக் கருத்துக்கள் ஒரு தலைமுறையை ஒன்றன்பின் ஒன்றாகப் பாதிக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையினரும் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகின்றனர். அவர்கள் “மேட்டிமையான கருத்துக்களைப்” பின்தொடர்வதில் தொடர்ந்து போராடுகின்றனர், அவர்கள் அதற்காகத் தங்கள் ஜீவனையும் கூட தியாகம் செய்வார்கள். இதுதான் ஜனங்களைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவைப் பயன்படுத்துகிற வழிமுறையும், அணுகுமுறையும் ஆகும். ஆகவே, சாத்தான் ஜனங்களை இந்தப் பாதைக்கு அழைத்துச் சென்றபின், அவர்களால் தேவனுக்குக் கீழ்ப்படியவும் அவரைத் தொழுதுகொள்ளவும் முடியுமா? மேலும் அவர்களால் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, சத்தியத்தைப் பின்பற்ற முடியுமா? நிச்சயமாக முடியாது—ஏனென்றால் அவர்கள் சாத்தானால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். சாத்தானால் ஜனங்களுக்குள் புகுத்தப்பட்ட அறிவு, எண்ணங்கள் மற்றும் கருத்துக்களைப் பற்றி நாம் மீண்டும் பார்ப்போம். இந்த காரியங்களில் தேவனுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் தேவனைத் தொழுதுகொள்ளுதல் குறித்த சத்தியங்கள் இருக்கின்றனவா? தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கும் சத்தியங்கள் இருக்கின்றனவா? தேவனுடைய வார்த்தைகள் ஏதேனும் இருக்கின்றனவா. சத்தியம் தொடர்பான ஏதேனும் அவற்றில் இருக்கின்றனவா. உங்களுக்குத் துணிவில்லை—ஆனாலும் பரவாயில்லை. சாத்தானால் ஜனங்களுக்குள் புகுத்தப்படும் காரியங்களில் எந்த சத்தியமும் இல்லை என்பதில் உங்களால் உறுதியாக இருக்க முடியுமா? எதுவாயிருந்தாலும் நீங்கள் துணிவதில்லை. “புகழ்” மற்றும் “ஆதாயம்” என்பது தீமையின் பாதையில் ஜனங்களைக் கவர்ந்திழுக்க சாத்தான் பயன்படுத்தும் இரண்டு முக்கிய சொற்கள் என்பதை நீ அறிந்துகொண்டால் அதுவே போதுமானதாகும்.

இதுவரை நாம் விவாதித்தவற்றைச் சுருக்கமாக திருப்பிப் பார்ப்போம்: மனிதனை தன் கட்டுப்பாட்டில் உறுதியாக வைத்திருக்க சாத்தான் எதைப் பயன்படுத்துகிறது? (புகழ் மற்றும் ஆதாயம்.) ஆகவே, எல்லா ஜனங்களும் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பற்றி நினைக்கும் வரையில், மனிதனுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்த சாத்தான் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பயன்படுத்துகிறது. அவர்கள் புகழ் மற்றும் ஆதாயத்திற்காகப் போராடுகிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காகக் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவமானத்தைச் சகித்துக் கொள்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவர்கள் எந்தத் தீர்மானத்தையும் முடிவையும் எடுப்பார்கள். இவ்வாறு, சாத்தான் ஜனங்களைக் கண்ணுக்குத் தெரியாத கைவிலங்குகளால் கட்டிப் போட்டிருக்கிறது. அவற்றைத் தூக்கி எறியும் வல்லமையும் தைரியமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அறியாமலேயே இந்தக் கைவிலங்குகளை சுமந்து கொண்டு, மிகுந்த சிரமத்துடன் எப்போதும் முன்னேறுகிறார்கள். இந்தப் புகழ் மற்றும் ஆதாயத்திற்காக, மனிதகுலம் தேவனைத் தவிர்த்து, அவரைக் காட்டிக் கொடுத்து, பொல்லாதவர்களாக மாறுகிறது. எனவே, இவ்வாறு, சாத்தானுடைய புகழ் மற்றும் ஆதாயத்தின் மத்தியில் அடுத்தடுத்து ஒவ்வொரு தலைமுறையும் அழிக்கப்படுகிறது. இப்போதும் சாத்தானுடைய கிரியைகளைப் பார்க்கும்போது, அதன் மோசமான நோக்கங்கள் முற்றிலும் வெறுக்கத் தக்கவையாக இருக்கின்றன அல்லவா? புகழ் மற்றும் ஆதாயமின்றி ஒருவர் ஜீவிக்க முடியாது என்று நீங்கள் நினைப்பதால், இன்றும் நீங்கள் சாத்தானுடைய மோசமான நோக்கங்களைக் காண முடியவில்லை. ஜனங்கள் புகழ் மற்றும் ஆதாயத்தை விட்டுவிட்டால், அவர்களால் இனி முன்னோக்கிச் செல்லும் வழியைக் காண முடியாது, இனி அவர்களால் அவர்களுடைய குறிக்கோள்களைக் காண முடியாது, அவர்களுடைய எதிர்காலம் இருண்டதாகவும், மங்கலானதாகவும் மற்றும் தெளிவற்றதாகவும் மாறிப்போகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், மனிதனைக் கட்டிப்போட புகழும் ஆதாயமும் சாத்தான் பயன்படுத்தும் கொடூரமான கைவிலங்குகள் என்பதை நீங்கள் மெதுவாக ஒரு நாள் உணர்ந்து கொள்வீர்கள். அந்த நாள் வரும்போது, நீ சாத்தானுடைய கட்டுப்பாட்டை முற்றிலுமாக எதிர்ப்பாய். உன்னைக் கட்டிப்போட சாத்தான் பயன்படுத்தும் கைவிலங்குகளை முழுமையாக எதிர்ப்பாய். சாத்தான் உன்னில் உட்புகுத்திய எல்லாவற்றையும் தூக்கி எறிய விரும்பும் நேரம் வரும்போது, நீ சாத்தானுடன் ஒரு முழுமையான முறிவைக் கடைபிடிப்பாய். சாத்தான் உன்னிடம் கொண்டு வந்த அனைத்தையும் நீ உண்மையிலேயே வெறுப்பாய். அப்போது தான் மனிதகுலத்திற்கு தேவன் மீது உண்மையான அன்பும் ஏக்கமும் இருக்கும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 156

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவியலைப் பயன்படுத்துகிறது

மனிதனுடைய ஆர்வத்தை பூர்த்தி செய்ய சாத்தான் விஞ்ஞானத்தின் பெயரை, அறிவியலை ஆராய்ந்து மர்மங்களை ஆராய மனிதனுடைய விருப்பத்தைப் பயன்படுத்துகிறது. விஞ்ஞானத்தின் பெயரில், மனிதனுடைய பொருள் தேவைகளையும், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான மனிதனுடைய கோரிக்கையையும் சாத்தான் பூர்த்தி செய்கிறது. இவ்வாறு, இந்தச் சாக்குப்போக்குடன் தான் மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவியலைப் பயன்படுத்துகிறது. இவ்வாறு அறிவியலைப் பயன்படுத்தி சாத்தான் மனிதனுடைய சிந்தனையை மட்டும் கெடுக்கிறதா அல்லது மனிதனுடைய மனதையும் கெடுக்கிறதா? நம் சூழலில் உள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களில் நாம் காணக்கூடிய மற்றும் நாம் தொடர்பு கொள்ளும் விஞ்ஞானத்துடன், சாத்தான் வேறு எதைக் கெடுக்கிறது? (இயற்கையான சுற்றுச்சூழல்.) சரியானது. இதன் மூலம் நீங்கள் ஆழ்ந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளீர்கள் என்றும் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் தெரிகிறது. மேலும், மனிதனை ஏமாற்ற விஞ்ஞானத்தின் பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் முடிவுகளைச் சாத்தான் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கைச் சூழலை விரும்பத்தகாத அழிவு மற்றும் சுரண்டலுக்கு உட்படுத்தும் ஒரு வழியாகவும் சாத்தான் அறிவியலைப் பயன்படுத்துகிறது. மனிதன் விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொண்டால், மனிதனுடைய வாழ்க்கைச் சூழலும் வாழ்க்கைத் தரமும் தொடர்ந்து மேம்படும் என்ற சாக்குப்போக்கின் கீழ் இதைச் செய்கிறது. மேலும் விஞ்ஞான வளர்ச்சியின் நோக்கம் அதிகரித்து வரும் ஜனங்களுடைய அன்றாட பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், தொடர்ந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுமாகும். இது சாத்தானுடைய அறிவியல் வளர்ச்சியின் தத்துவார்த்த அடிப்படையாகும். இருப்பினும், அறிவியல் மனிதகுலத்திற்கு எதைக் கொண்டு வந்துள்ளது? நமது வாழ்க்கைச் சூழல் மற்றும் எல்லா மனிதர்களுடைய வாழும் சூழல் மாசுபடுத்தப்படவில்லையா? மனிதன் சுவாசிக்கும் காற்று மாசுபடுத்தப்படவில்லையா? நாம் குடிக்கும் நீர் மாசுபடுத்தப்படவில்லையா? நாம் உட்கொள்ளும் உணவு இன்னும் இயற்கையானதாக இருக்கிறதா? பெரும்பாலான தானியங்களும் காய்கறிகளும் மரபணு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அவை ரசாயன உரத்தைப் பயன்படுத்தி வளர்க்கப்படுகின்றன மற்றும் சில விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வகைகளாக இருக்கின்றன. நாம் உண்ணும் காய்கறிகளும் பழங்களும் கூட இனி இயற்கையானவை அல்ல. இயற்கையான முட்டைகளைக் கூட இனி காண்பது எளிதானது அல்ல. சாத்தானுடைய விஞ்ஞானம் என்று அழைக்கப்படுபவற்றால் ஏற்கனவே செயலாக்கப்பட்ட நிலையில், முட்டைகள் இனி முன்பு இருந்தது போல இனி சுவைக்காது. விரிவாகப் பார்த்தால், முழு வளிமண்டலமும் அழிக்கப்பட்டு மாசுபட்டுள்ளது. மலைகள், ஏரிகள், காடுகள், ஆறுகள், பெருங்கடல்கள் மற்றும் தரைக்கு மேலேயும் கீழேயும் உள்ள அனைத்தும் அறிவியல் சாதனைகள் என்று அழைக்கப்படுபவையால் அழிக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால், முழு இயற்கைச் சூழலும், தேவனால் மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட வாழ்க்கைச் சூழலும் அறிவியல் என்று அழைக்கப்படும் ஒன்றால் அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. தாங்கள் தேடும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் தங்கள் ஆசைகள் மற்றும் மாம்சம் இரண்டையும் திருப்திப்படுத்தும் தாங்கள் எப்போதும் எதிர்பார்த்ததைப் பலர் பெற்றுக்கொண்டாலும், மனிதன் வாழும் சுற்றுச்சூழலலானது விஞ்ஞானத்தின் வெவ்வேறு “சாதனைகளால்” அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டு வருகிறது. இப்போதும், சுத்தமான காற்றின் ஒரு சுவாசத்தை சுவாசிக்க இனி நமக்கு உரிமை இல்லை. இது மனிதகுலத்தின் துக்கம் அல்லவா? மனிதன் இத்தகைய இடத்தில் ஜீவிக்க வேண்டியிருக்கும் போது, பேசுவதற்கு ஏதேனும் மகிழ்ச்சி அவர்களுக்கு இருக்கிறதா? மனிதன் வாழும் இந்த இடமும் வாழ்க்கைச் சூழலும் ஆரம்பத்தில் இருந்தே மனிதனுக்காக தேவனால் உருவாக்கப்பட்டன. ஜனங்கள் குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, ஜனங்கள் உண்ணும் பல்வேறு வகையான உணவுகள், அத்தோடுகூட தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள், மலைகள், ஏரிகள் மற்றும் பெருங்கடல்கள்—இந்த வாழ்க்கைச் சூழலின் ஒவ்வொரு பகுதியும் மனிதனுக்கு தேவனால் வழங்கப்பட்டது. இது இயற்கையானதாகும். தேவன் விதித்த இயற்கை விதிப்படி செயல்படுகிறது. விஞ்ஞானம் இல்லாதிருந்தால், ஜனங்கள் தேவனால் தங்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளையே இன்னும் பின்பற்றியிருந்திருப்பார்கள், அவர்களால் ஆதியிலுள்ள, இயற்கையான அனைத்தையும் அனுபவித்திருக்க முடியும், மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். ஆயினும், இப்போது இவை அனைத்தும் சாத்தானால் அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டு விட்டன. மனிதனுடைய அடிப்படையான வாழ்விடம் இனி ஆதியிலுள்ளது போல் இருப்பதில்லை. ஆனால் இது எதனால் ஏற்பட்டது அல்லது இது எப்படி ஏற்பட்டது என்பதை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. மேலும் பலர் அறிவியலை அணுகி சாத்தானால் தங்களுக்குள் உட்புகுத்தப்பட்ட கருத்துக்கள் மூலம் அதைப் புரிந்து கொள்கிறார்கள். இது முற்றிலும் வெறுக்கத்தக்கது மற்றும் பரிதாபகரமானது அல்லவா? சாத்தான் இப்போது ஜனங்கள் இருக்கும் இடத்தையும், அவர்களுடைய வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்கொண்டு, அவர்களை இந்த நிலைக்குக் கெடுத்து, மனிதகுலம் தொடர்ந்து இவ்வாறு வளர்ச்சியடைந்து வருவதால், இந்த ஜனங்களை அழிக்க தேவனுக்கு தனிப்பட்ட முறையில் காரணம் இருக்கிறதா? ஜனங்கள் தொடர்ந்து இவ்வாறு வளர்ந்தால், அவர்கள் எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பார்கள்? (அவர்கள் அழிக்கப்படுவார்கள்.) அவர்கள் எவ்வாறு அழிக்கப்படுவார்கள்? புகழ் மற்றும் ஆதாயத்திற்கான ஜனங்களுடைய பேராசையான தேடல் தவிர, அவர்கள் தொடர்ந்து விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு ஆராய்ச்சியில் ஆழமாக மூழ்கி, பின்னர் தங்களது சொந்தப் பொருள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இடைவிடாமல் செயல்படுகின்றனர், இதனால் மனிதனுக்கு ஏற்படும் பின்விளைவுகள் என்ன? முதலாவதாக, சுற்றுச்சூழல் சமநிலை உடைந்து, இது நிகழும்போது, ஜனங்களுடைய சரீரங்கள், அவற்றின் உள் உறுப்புகள், இந்த சமநிலையற்ற சூழலால் கறைபட்டு சேதமடைகின்றன. மேலும், பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் வாதைகள் உலகம் முழுவதும் பரவுகின்றன. இது இப்போது மனிதனுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத சூழ்நிலையாக உள்ளது என்பது உண்மையல்லவா? இப்போது இது உங்களுக்குப் புரிகிறது. மனிதகுலம் தேவனைப் பின்பற்றாமல், எப்போதும் சாத்தானை இவ்வாறு பின்பற்றி தொடர்ந்து தங்களை வளப்படுத்த அறிவைப் பயன்படுத்தினால், மனித ஜீவிதத்தின் எதிர்காலத்தை இடைவிடாமல் ஆராய விஞ்ஞானத்தைப் பயன்படுத்தினால், தொடர்ந்து ஜீவிப்பதற்கு இந்த மாதிரியான முறையைப் பயன்படுத்தினால், இது மனிதகுலத்திற்கு எப்படிப்பட்ட முடிவைத் தரும் என்பதை நீங்கள் அடையாளம் காண முடியுமா? மனிதகுலம் இயற்கையாகவே அழிந்துவிடும்: படிப்படியாக, மனிதகுலம் அழிவை நோக்கி முன்னேறுகிறது, தங்களது சொந்த அழிவை நோக்கிச் செல்கிறது! இது தங்களின் மீது தாங்களே அழிவைக் கொண்டுவருவதில்லையா? மேலும் இது அறிவியல் முன்னேற்றத்தின் விளைவு அல்லவா? விஞ்ஞானம் என்பது மனிதனுக்காக சாத்தான் தயார் செய்த ஒரு வகையான மாய விஷம் என்று இப்போது தோன்றுகிறது. எனவே நீங்கள் விஷயங்களை ஒரு பனி மூட்டத்தில் காண முயற்சிக்கும்போது, நீங்கள் எவ்வளவு கடினமாகப் பார்த்தாலும், விஷயங்களை தெளிவாகக் காண முடியாது. நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. எவ்வாறாயினும், சாத்தான் விஞ்ஞானத்தின் பெயரைப் பயன்படுத்தி உன் பசியைத் தூண்டி உன்னைக் கட்டுப்படுத்தி ஒவ்வொரு அடியாக படுகுழியை மற்றும் மரணத்தை நோக்கி உன்னை வழிநடத்துகிறது. இந்த நிலையில், உண்மையில், மனுஷனுடைய அழிவு சாத்தானின் கையால் கொண்டுவரப்படுகிறது—சாத்தானே கலகத் தலைவன் என்பதை ஜனங்கள் தெளிவாகக் காண்பார்கள்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 157

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பயன்படுத்துகிறது

சாத்தான் மனிதனைக் கெடுக்க பாரம்பரிய கலாச்சாராத்தைப் பயன்படுத்துகிறான். பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் வித்தியாசம் என்னவென்றால், பாரம்பரிய கலாச்சாரத்தில் சில கதைகள், குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள் உள்ளன. வரலாற்றுப் புத்தகங்களில் காணப்படும் பல நாட்டுப்புறக் கதைகள் அல்லது கதைகளை சாத்தான் புனைந்து, பாரம்பரிய கலாச்சார அல்லது மூடநம்பிக்கையை மனிதர்களிடம் ஆழ்ந்த பதிவுகளாகப் பதித்துள்ளது. இதற்கு உதாரணமாக, “கடலைக் கடக்கும் எட்டு அழியாதவர்கள்,” “மேற்கை நோக்கிய பயணம்,” ஜேட் பேரரசர், “நேஷா டிராகன் ராஜாவை வென்றது,” மற்றும் “தேவர்களுடைய முதலீடு” ஆகியவை சீனாவில் உள்ளன. இவை மனிதனுடைய மனதில் ஆழமாக வேரூன்றவில்லையா? உங்களில் சிலருக்கு எல்லா விவரங்களும் தெரியாவிட்டாலும், பொதுவான கதைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் பொதுவான உள்ளடக்கம் தான் உன் இருதயத்திலும் உன் மனதிலும் ஒட்டிக்கொள்கிறது. எனவே அவற்றை நீ மறக்க முடியாது. இவை, நீண்ட காலத்திற்கு முன்பே மனிதனுக்காக சாத்தான் ஆயத்தம் செய்த பல்வேறு கருத்துக்கள் அல்லது புனைவுகள் ஆகும். அவை வெவ்வேறு காலங்களில் பரப்பப்படுகின்றன. இந்த விஷயங்கள் நேரடியாக ஜனங்களுடைய ஆத்துமாவுக்கு தீங்கு விளைவித்து ஆத்துமாவை அரித்து, ஜனங்களைத் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன. அதாவது, இதுபோன்ற பாரம்பரிய கலாச்சாரம், கதைகள் அல்லது மூடநம்பிக்கைகளை நீ ஏற்றுக் கொண்டவுடன், அவை உன் மனதில் நிலைபெற்றதும், அவை உன் இருதயத்தில் சிக்கியதும், நீ மந்திரத்தால் கட்டுப்படுத்தப்பட்டது போல இருப்பாய்—இந்தக் கலாச்சாரப் பொறிகள், யோசனைகள் மற்றும் பாரம்பரிய கதைகள் ஆகியவற்றால் நீ ஈர்க்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறாய். அவை உன் ஜீவிதத்தையும், ஜீவிதத்தைப் பற்றிய உன் கண்ணோட்டத்தையும், விஷயங்களைப் பற்றிய உன் கணிப்பையும் பாதிக்கின்றன. இன்னும் அதிகமாக, அவை உண்மையான ஜீவிதப் பாதைக்கான உன் நாட்டத்தைப் பாதிக்கின்றன: இது உண்மையில் ஒரு பொல்லாத மந்திரமாகும். உன்னால் முடிந்தவரை முயற்சி செய். உன்னால் அவற்றை அசைக்க முடியாது. நீ அவற்றை வெட்ட முயற்சிக்கிறாய். ஆனால் அவற்றை வெட்ட முடியாது. நீ அவர்களைத் தாக்குகிறாய், ஆனால் நீ அவர்களை ஜெயிக்க முடியாது. மேலும், ஜனங்கள் அறியாமலேயே இத்தகைய மந்திரத்துக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் அறியாமல் சாத்தானை வணங்கத் தொடங்குகிறார்கள். சாத்தானுடைய உருவத்தைத் தங்கள் இருதயங்களில் வளர்க்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் சாத்தானைத் தங்கள் விக்கிரகமாக, அவர்கள் வணங்குவதற்கும் ஏறெடுத்துப் பார்ப்பதற்கும் ஏற்ற பொருளாக நிலைநிறுத்துகிறார்கள். அதை தேவனாகக் கருதும் அளவிற்கு கூடச் செல்கிறார்கள். இந்த விஷயங்கள் ஜனங்களுடைய இருதயங்களில் அறியாமலேயே இருக்கின்றன. அவர்களின் சொற்களையும் கிரியைகளையும் கட்டுப்படுத்துகின்றன. மேலும், நீ முதலில் இந்த கதைகளையும் புனைவுகளையும் பொய் என்று கருதுகிறாய், ஆனால் நீ அறியாமல் அவை இருப்பதாய் ஒப்புக்கொள்கிறாய். அவற்றை உண்மையான ஜீவனாக உருவாக்கி அவற்றை உண்மையாக்கி, உண்மையாக இருக்கும் பொருள்களாக மாற்றுகிறாய். உன் அறியாமையில், இந்த யோசனைகளையும் இந்த விஷயங்கள் இருப்பதையும் நீ ஆழ்மனதில் பெறுகிறாய். பிசாசுகள், சாத்தான் மற்றும் விக்கிரகங்களை உன் சொந்த வீட்டிலும் உன் சொந்த இருதயத்திலும் ஆழ்மனதில் நீ பெறுகிறாய்—உண்மையில் இது ஒரு மந்திரமாகும். இந்த வார்த்தைகள் உங்களுடன் பேசுகிறதா? (ஆம்.) உங்களில் யாரேனும் தூபத்தை எரித்து புத்தரை வணங்கியதுண்டா? (ஆம்.) அப்படியென்றால் தூபம் எரிக்கும், புத்தரை வணங்கும் உங்கள் நோக்கம் என்ன? (சமாதானத்திற்காக ஜெபித்தல் ஆகும்.) இப்போது அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால், சமாதானத்திற்காக சாத்தானிடம் ஜெபிப்பது அபத்தமல்லவா? சாத்தான் சமாதானத்தைத் தருகிறதா? (இல்லை.) அப்போது, நீங்கள் எவ்வளவு அறியாமையில் இருந்தீர்கள் என்று தெரிகிறதா? இத்தகைய நடத்தை அபத்தமானது, அறியாமை மற்றும் சிறுபிள்ளைத்தனம் அல்லவா? உன்னை எவ்வாறு சீர்கெடுப்பது என்பதில் மட்டுமே சாத்தான் அக்கறையாக இருக்கிறது. சாத்தானால் உனக்குச் சமாதானத்தை அளிக்க முடியாது. ஒரு தற்காலிக ஓய்வு மட்டுமே தர முடியும். ஆனால் இந்த ஓய்வு பெற நீ ஒரு பொருத்தனை வேண்டும். உன் வாக்குறுதியையோ அல்லது சாத்தானுக்கு நீ செய்த பொருத்தனையையோ மீறினால், அது உன்னை எவ்வாறு வேதனைப்படுத்தும் என்பதை நீ காண்பாய். நீ ஒரு பொருத்தனை செய்யும்போது, அது உண்மையில் உன்னை கட்டுப்படுத்த விரும்புகிறது. நீங்கள் அமைதிக்காக ஜெபித்தபோது, நீங்கள் அமைதியைப் பெற்றீர்களா? (இல்லை.) நீங்கள் அமைதியைப் பெறவில்லை. மாறாக, உங்கள் முயற்சிகள் துரதிர்ஷ்டத்தையும் முடிவில்லாத பேரழிவுகளையும் கொண்டு வந்தன—உண்மையிலேயே எல்லையற்ற கசப்பு கடலாக இருந்தன. அமைதி என்பது சாத்தானுடைய களத்திற்குள் இல்லை. இதுதான் உண்மை. இதுவே நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கையும் பாரம்பரிய கலாச்சாரமும் மனிதகுலத்திற்கு கொண்டு வந்த பின்விளைவாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 158

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் சமூகப் போக்குகளைப் பயன்படுத்துகிறது

சாத்தான் மனிதனை சமூக போக்குகள் மூலமாகக் கெடுக்கிறான். சமூகப் போக்குகள் என்பவை பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளன, இவற்றில் புகழ்பெற்ற மற்றும் சிறந்த மனிதர்கள் மற்றும் சினிமா மற்றும் இசைக் கலைஞர் ஆகியோரை வணங்குதல் மற்றும் பிரபலங்களை வணங்குதல், இணைய விளையாட்டுகள் போன்றவை அடங்கும், இவை அனைத்தும் சமூகப் போக்குகளின் அங்கமாகும், மேலும் இதை விரிவாகப் பார்க்க வேண்டியதில்லை. சமூகப் போக்குகள் ஜனங்களிடையே கொண்டு வரும் கருத்துக்களை, உலகில் அவை ஜனங்களை நடத்தும் விதத்தை மற்றும் அவை ஜனங்களில் கொண்டு வரும் வாழ்க்கை இலக்குகளை மற்றும் கண்ணோட்டத்தைப் பற்றி மட்டுமே நாம் பேசுவோம். இவை மிக முக்கியமானவை ஆகும். இவை ஜனங்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் கட்டுப்படுத்தலாம் மற்றும் பாதிக்கலாம். இந்தப் போக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுகின்றன. அவை அனைத்தும் மனிதத்தன்மையை தொடர்ந்து இழிவுபடுத்தும் ஒரு தீய செல்வாக்கைக் கொண்டுள்ளன. இதனால் பெரும்பான்மையான ஜனங்களுக்கு இப்போது நேர்மை இல்லை, மனிதத்தன்மை இல்லை, அவர்களுக்கு எந்த மனசாட்சியும் இல்லை, எந்தவொரு பகுத்தறிவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஜனங்கள் மனசாட்சி, மனிதத்தன்மை மற்றும் பகுத்தறிவை இழக்க நேரிடுகிறது, மேலும், அவர்களுடைய ஒழுக்கத்தையும், அவர்களுடைய குணாதிசயத்தையும் அது இன்னும் பலவீனப்படுத்துகிறது. எனவே, எத்தகைய சமூகப் போக்குகள் இவை? இவை உன்னால் மனிதக் கண்ணால் பார்க்க முடியாத போக்குகள் ஆகும். ஒரு புதிய போக்கு உலகெங்கும் பரவும்போது, ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஜனங்கள் மட்டுமே வெட்டு விளிம்பில் அந்த போக்கின் தொடக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் சில புதிய காரியங்களைச் செய்யத் தொடங்குகிறார்கள். பின்னர் ஒருவித கருத்தை அல்லது ஒருவித கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். எவ்வாறாயினும், பெரும்பான்மையான ஜனங்கள் அறியாமலும், விருப்பமின்றியும் அதை ஏற்றுக்கொண்டு, அதில் மூழ்கி, அதைக் கட்டுப்படுத்தும் வரை, அவர்கள் அனைவரும் தங்கள் அறியாமையில் இந்தப் போக்கால் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள், ஈர்க்கப்படுவார்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்படுவார்கள். ஒன்றன் பின் ஒன்றாக, இத்தகைய போக்குகள் நல்ல உடலும் மனமும் இல்லாத, உண்மை என்னவென்று தெரியாத, நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாத ஜனங்களை மகிழ்ச்சியுடன் அவற்றையும், சாத்தானிடமிருந்து வரும் வாழ்க்கைக் கண்ணோட்டங்கள் மற்றும் மதிப்புகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன. ஜீவிதத்தை எவ்வாறு அணுகுவது என்பது பற்றியும், சாத்தான் அவர்களுக்கு “அளிக்கும்” ஜீவிப்பதற்கான வழி பற்றியும் சாத்தான் சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், அவர்களுக்கு எதிர்ப்பதற்கான வல்லமையும், திறனும், விழிப்புணர்வும் இல்லை. எனவே, இது போன்ற போக்குகளை அடையாளம் காண்பது எப்படி? நீங்கள் படிப்படியாக புரிந்து கொள்ளக் கூடிய ஒரு எளிய உதாரணத்தை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். உதாரணமாக, யாரும் ஏமாற்றப்படாத விதத்தில் கடந்த காலத்தில் ஜனங்கள் யாரும் தங்கள் தொழிலை நடத்தவில்லை. யார் வாங்குகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரே விலையில் பொருட்களை விற்றார்கள். நல்ல மனசாட்சி மற்றும் மனிதத்தன்மையின் சில கூறுகள் இங்கே தெரிவிக்கப்படவில்லையா? ஜனங்கள் தங்கள் வியாபாரத்தை இவ்வாறு நல்ல நம்பிக்கையுடன் நடத்தியபோது, அந்த நேரத்தில் அவர்களுக்கு இன்னும் சில மனசாட்சி மற்றும் கொஞ்சம் மனிதத்தன்மை இருந்ததைக் காணலாம். ஆனால் மனிதனுடைய பணத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜனங்கள் அறியாமலேயே பணத்தை, ஆதாயத்தை மற்றும் இன்பத்தை நேசிக்கிறார்கள். ஜனங்கள் பணத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கவில்லையா? ஜனங்கள் பணத்தை மிக முக்கியமானதாக பார்க்கும்போது, அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய மரியாதை, புகழ், நற்பெயர் மற்றும் நேர்மைக்கு குறைந்த முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தொடங்குகிறார்கள், இல்லையா? நீ வியாபாரத்தில் ஈடுபடும்போது, மற்றவர்கள் ஜனங்களை ஏமாற்றி ஐசுவரியவான்களாவதை நீ காண்கிறாய். சம்பாதித்தப் பணத்தை மோசமான வழியில் சம்பாதித்தாலும், அவர்கள் மேலும் மேலும் ஐசுவரியவான்களாக மாறுகிறார்கள். அவர்களுடைய குடும்பம் அனுபவிப்பதையெல்லாம் பார்ப்பது உன்னை விசனப்படுத்துகிறது: “நாங்கள் இருவருமே வியாபாரம்தான் செய்கிறோம், ஆனால் அவர்கள் ஐசுவரியவான்களாகிறார்கள். என்னால் ஏன் நிறைய பணம் சம்பாதிக்க முடியவில்லை? என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை—அதிக பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியை நான் கண்டறிய வேண்டும்” என்கிறாய். அதன்பிறகு, உன் செல்வத்தை எப்படி சம்பாதிப்பது என்பது பற்றியே நீ சிந்திக்கிறாய். “யாரையும் ஏமாற்றாமல் மனசாட்சிப்படி பணத்தை சம்பாதிக்க வேண்டும்” என்ற நம்பிக்கையை நீ கைவிட்டிருக்கும்போது, உன் செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்ள கோட்பாடுகள் மாறுவதுபோல உன் சொந்த நலன்களால் நீ தூண்டப்பட்டு உன் சிந்தனை முறை படிப்படியாக மாறுகிறது. நீ ஒருவரை முதல்முறையாக ஏமாற்றும்போது, உன் மனசாட்சியின் கடிந்துகொள்ளுதலை நீ உணருகிறாய், மேலும் உன் இருதயம் உன்னிடம் சொல்கிறது, “இது முடிந்ததும், நான் ஒருவரை ஏமாற்றுவது இதுதான் கடைசிமுறையாக இருக்கும். ஐனங்களை எப்போதுமே ஏமாற்றுவது தகுந்த தண்டனையைத் தந்துவிடும்!” இது மனிதனுடைய மனசாட்சியின் செயல்பாடாகும்—உன்னைத் துன்புறுத்துவதற்கும் உன்னை நிந்திப்பதற்குமாகும், அதனால் நீ ஒருவரை ஏமாற்றும்போது இயற்கைக்கு மாறானதாக உன் இருதயம் உணர்கிறது. ஆனால் நீ ஒருவரை வெற்றிகரமாக ஏமாற்றிய பிறகு, நீ முன்பு செய்ததை விட இப்போது உன்னிடம் அதிகப் பணம் இருப்பதை நீ காண்கிறாய். இந்த செயல்முறை உனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய். உன் இருதயத்தில் லேசான வலி இருந்தபோதிலும், உன் ஜெயத்துக்கு உன்னை வாழ்த்துவது போல் நீ இன்னும் உணர்கிறாய். நீ உன்னைப் பற்றி ஓரளவு மகிழ்ச்சியடைகிறாய். முதல் முறையாக, உன் சொந்த நடத்தை, உன் சொந்த ஏமாற்றும் வழிகளுக்கு நீ ஒப்புதலளிக்கிறாய். இந்த மோசடியால் மனிதன் மாசுபட்டவுடன், அது சூதாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஒரு சூதாட்டக்காரனாக மாறுவது போல இருக்கிறது. உன் அறியாமையில், உன் சொந்த மோசடி நடத்தைக்கு நீ ஒப்புதல் அளித்து அதை ஏற்றுக் கொள்கிறாய். அறியாமலேயே, நீ ஏமாற்றுவதை ஒரு முறையான வணிக நடத்தை மற்றும் உன் பிழைப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுள்ள வழிமுறையாக எடுத்துக்கொள்கிறாய். இதைச் செய்வதன் மூலம் நீ விரைவாக செல்வத்தைச் சம்பாதிக்க முடியும் என்று நீ நினைக்கிறாய். இது ஒரு செயல்முறை: ஆரம்பத்தில், ஜனங்களால் இத்தகைய நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்கள் இந்த நடத்தை மற்றும் நடைமுறையை குறைத்துப் பார்க்கிறார்கள். பின்னர் இந்த நடத்தையை அவர்களே பரிசோதிக்கத் தொடங்குகிறார்கள். அதை தங்கள் சொந்த வழியில் முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய இருதயங்கள் படிப்படியாக மாறத் தொடங்குகின்றன. இது எத்தகைய மாற்றம்? சமூகப் போக்கால் உனக்குள் உட்புகுத்தப்பட்ட இந்த கருத்தின், போக்கின் ஒப்புதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதை உணராமல், அவர்களுடன் வியாபாரம் செய்யும் போது நீ ஜனங்களை ஏமாற்றவில்லை என்றால், நீ மோசமாக இருப்பதாக உணர்கிறாய். நீ ஜனங்களை ஏமாற்றவில்லை என்றால், நீ எதையாவது இழந்துவிட்டதாக உணர்கிறாய். நீ அறியாத வண்ணம், இந்த மோசடி உன் ஆத்துமாவாகவும், உன் முதுகெலும்பாகவும், உன் ஜீவிதத்தில் ஒரு கொள்கையாகவும், ஒரு தவிர்க்க முடியாத நடத்தையாகவும் மாறும். இந்த நடத்தை மற்றும் இந்தச் சிந்தனையை மனிதன் ஏற்றுக்கொண்ட பிறகு, இது அவர்களுடைய இருதயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லையா? உன் இருதயம் மாறிவிட்டதால் உன் நேர்மையும் மாறிவிட்டதா? உன் மனிதத்தன்மை மாறிவிட்டதா? உன் மனசாட்சி மாறிவிட்டதா? உன் இருதயம் முதல் உன் எண்ணங்கள் வரை, உட்புறம் முதல் வெளிப்புறம் வரை, நீ முழுமையாக மாறியிருக்கிறாய், இது ஒரு தரமான மாற்றமாகும். இந்த மாற்றம் உன்னை மேலும் மேலும், தேவனிடமிருந்து விலக்குகிறது. நீ சாத்தானுடன் மேலும் மேலும் நெருக்கமாக இருக்கிறாய். நீ மேலும் மேலும் சாத்தானைப் போலவே மாறுகிறாய், இதன் விளைவாக சாத்தானுடைய சீர்கேடானது உன்னைப் பிசாசாக்குகிறது.

இந்தச் சமூக போக்குகளைப் பார்க்கும்போது, அவை ஜனங்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறுவீர்களா? அவை ஜனங்கள் மீது ஆழமான தீங்கு விளைவிக்கிறதா? அவை ஜனங்கள் மீது மிகவும் ஆழமான தீங்கை விளைவிக்கின்றன. சீர்கெடுப்பதற்கு இந்தப் போக்குகள் ஒவ்வொன்றிலும் மனிதனின் எந்த அம்சங்களை சாத்தான் பயன்படுத்துகிறான்? சாத்தான் முக்கியமாக மனசாட்சி, அறிவு, மனிதத்தன்மை, ஒழுக்கம் மற்றும் கண்ணோட்டங்களை சீர்கெடுக்கிறான். இந்த சமூகப் போக்குகள் படிப்படியாக ஜனங்களை சீர்குலைத்து, சீர்கெடுப்பதில்லையா? சாத்தான் இந்த சமூகப் போக்குகளைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒரு படி அதிகமாக ஜனங்களைப் பிசாசுகளின் கூட்டிற்குள் இழுக்கிறது. இதனால் சமூகப் போக்குகளில் சிக்கிய ஜனங்கள் அறியாமலேயே பணம் மற்றும் பொருள் ஆசைகள், துன்மார்க்கம் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆதரிக்கிறார்கள். இவை மனிதனுடைய இருதயத்தில் நுழைந்தவுடன், மனிதன் என்னவாகிறான்? மனிதன் பிசாசாகிறான், சாத்தானாகிறான்! ஏன்? ஏனெனில், மனிதனுடைய இருதயத்தில் என்ன மன விருப்பம் இருக்கிறது? மனிதன் எதை மதிக்கிறான்? மனிதன் துன்மார்க்கத்திலும் வன்முறையிலும் இன்பம் கொள்ளத் தொடங்குகிறான். அழகு, நன்மை அல்லது அமைதி மீது எந்த அன்பையும் காட்டவில்லை. சாதாரண மனிதத்தன்மையின் எளிமையான ஜீவிதத்தை ஜீவிக்க ஜனங்கள் ஆயத்தமாக இல்லை. மாறாக, உயர்ந்த அந்தஸ்தையும், பெரும் செல்வத்தையும் அனுபவிக்க விரும்புகிறார்கள். மாம்சத்தின் இன்பங்களில் மகிழ்ச்சி அடைகிறார்கள். தங்கள் மாம்சத்தைத் திருப்திப்படுத்த எந்த முயற்சியும் செய்வதில்லை. அவர்களைக் கட்டுப்படுத்த எந்தவிதமான கட்டுப்பாடுகளும், பிடிப்புகளும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் விரும்பியதைச் செய்கிறார்கள். ஆகவே, மனிதன் இத்தகைய போக்குகளில் மூழ்கியிருக்கும்போது, நீ கற்றுக்கொண்ட அறிவால் உன்னை விடுவிக்க உனக்கு உதவ முடியுமா? பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மூடநம்பிக்கைகளைப் பற்றிய உன் புரிதல் இந்த மோசமான இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க உனக்கு உதவ முடியுமா? மனிதனுக்குத் தெரிந்த பாரம்பரிய ஒழுக்கங்களும் சடங்குகளும், ஜனங்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஜனங்களுக்கு உதவ முடியுமா? உதாரணமாக, தத்துவத் தொகுப்புகள் மற்றும் தாவோ தே சிங்கைஎடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் போக்குகளின் புதைகுழியில் இருந்து ஜனங்கள் தங்கள் கால்களை வெளியேற்ற அதனால் உதவ முடியுமா? நிச்சயமாக முடியாது. இவ்வாறு, மனிதன் மேலும் மேலும் தீயவனாகவும், ஆணவம் உள்ளவனாகவும், கீழ்த்தரமானவனாகவும், சுயநலவாதியாகவும், தீங்கிழைக்கிறவனாகவும் மாறுகிறான். இனி ஜனங்களிடையே எந்தப் பாசமும் இல்லை. இனி குடும்ப உறுப்பினர்களிடையே எந்த அன்பும் இல்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எந்தப் புரிதலும் இல்லை. மனித உறவுகள் வன்முறையால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனிதரும் சக மனிதர்கள் மத்தியில் ஜீவிக்க வன்முறை வழிமுறைகளைப் பயன்படுத்த முற்படுகிறார்கள். அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தி தங்கள் அன்றாட உணவைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தி தங்கள் பதவிகளை ஜெயித்து, தங்கள் லாபத்தைப் பெறுகிறார்கள். மேலும், அவர்கள் விரும்பும் எதையும் செய்ய வன்முறை மற்றும் தீய வழிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மனிதகுலம் பயங்கரமானதல்லவா? இது உண்மையிலேயே அப்படித்தான்: அவர்கள் தேவனை சிலுவையில் அறைந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்பற்றும் எல்லாரையும் கொன்றுபோடுவார்கள்—ஏனென்றால், மனுஷன் மிகவும் துன்மார்க்கனாய் இருக்கிறான். நான் இப்போது பேசிய எல்லாவற்றையும் கேட்டபின், இந்த சூழலிலும், இந்த உலகத்திலும், இத்தகைய ஜனங்களிடையேயும் ஜீவிப்பது பயமுறுத்துவதாக நீங்கள் நினைத்தீர்கள், அல்லவா? (ஆம்.) எனவே, நீங்கள் எப்போதாவது பரிதாபப்படுவதாக உணர்ந்திருக்கிறீர்களா? இந்தத் தருணத்தில் நீங்கள் அதைக் கொஞ்சம் உணர வேண்டும், அல்லவா? (நான் செய்கிறேன்.) உங்கள் தொனியைக் கேட்டால், நீங்கள் இவ்வாறு நினைப்பது போல் தெரிகிறது, “சாத்தானுக்கு மனிதனைச் சீர்கெடுப்பதற்கு பல வழிகள் உள்ளன. அது நாம் திரும்பும் எல்லா இடங்களிலும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறது. இன்னும் மனிதனை இரட்சிக்க முடியுமா?” இனியும் மனிதனை இரட்சிக்க முடியுமா? மனிதரால் தங்களை இரட்சிக்க முடியுமா? (இல்லை.) ஜேட் பேரரசரால் மனிதனை இரட்சிக்க முடியுமா? கன்பூசியஸால் மனிதனை இரட்சிக்க முடியுமா? குவானின் போதிசத்வா என்பவரால் மனிதனை இரட்சிக்க முடியுமா? (இல்லை.) எனவே மனிதனை யார் இரட்சிக்க முடியும்? (தேவன்.) இருப்பினும், சிலர் தங்கள் இருதயங்களில் இது போன்ற கேள்விகளை எழுப்புவார்கள்: “சாத்தான் மிகவும் கொடூரமாக, இவ்வளவு மோசமான வெறியில் நம்மைக் காயப்படுத்துகையில், நமக்கு ஜீவிதத்தை ஜீவிக்க நம்பிக்கையோ, ஜீவிதத்தை ஜீவிப்பதற்கான தன்னம்பிக்கையோ இல்லை. நாம் அனைவரும் கேட்டின் மத்தியில் ஜீவிக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் எப்படியாயினும் தேவனை எதிர்க்கிறார்கள். இப்போது நம் இருதயங்கள் எவ்வளவு ஆழமாக செல்ல முடியுமோ அவ்வளவு ஆழமாக மூழ்கிவிட்டன. சாத்தான் நம்மைச் சீர்கெடுக்கும்போது தேவன் எங்கே? தேவன் என்ன செய்கிறார்? தேவன் நமக்காக என்ன செய்கிறாரோ அதை நாம் ஒருபோதும் உணர மாட்டோம்!” சிலர் தவிர்க்க முடியாமல் மனச்சோர்வடைந்து சற்றே சோகமாக உணர்கிறார்கள். உங்களுக்கு, இந்த உணர்வு மிகவும் ஆழமாக இருக்கிறது. ஏனென்றால் நான் சொல்லிக் கொண்டிருப்பது ஜனங்கள் மெதுவாகப் புரிந்து கொள்ள அனுமதிப்பதற்கும், அவர்கள் நம்பிக்கையில்லாமல் இருப்பதை மேலும் மேலும் உணரவும், அவர்கள் தேவனால் கைவிடப்பட்டதாக மேலும் மேலும் உணரவும், ஆனால் வருத்தப்படாமல் இருப்பதற்கும் ஆகும். ஆனால் கவலைப்படாதீர். இன்றைய நமது அமர்வின், “சாத்தானுடைய தீமை” என்னும் நம்முடைய தலைப்பு உண்மையான கருப்பொருள் அல்ல. தேவனுடைய பரிசுத்தத்தின் சாராம்சத்தைப் பற்றி பேசுவதற்கு, மனிதன் இப்போது எந்த மாதிரியான நிலையில் இருக்கிறான் என்பதை ஜனங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, சாத்தான் மனிதனை எவ்வாறு சீர்கெடுக்கிறான் என்பதையும் சாத்தானுடைய தீமையையும் முதலில் விவாதிக்க வேண்டும். இதைப் பற்றி பேசுவதற்கான ஒரு நோக்கம் சாத்தானுடைய தீமையை ஜனங்கள் அறிந்துகொள்ள அனுமதிப்பது ஆகும். மற்றொரு நோக்கம் உண்மையான பரிசுத்தம் என்ன என்பதை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஜனங்களை அனுமதிப்பது ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 159

தேவன் மனிதனுக்கு என்ன செய்கிறார் என்பதன் மூலம் அவருடைய பரிசுத்தத்தைப் புரிந்துகொள்ளுதல் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தி)

சாத்தான் மனிதனைச் சீர்கெடுக்கும்போதோ அல்லது மனிதனுக்குத் தடையற்ற தீங்கு விளைவிக்கும் போதோ, தேவன் சும்மா நிற்கவும் மாட்டார், அவர் ஒதுக்கித் தள்ளவும் மாட்டார் அல்லது அவர் தெரிந்துகொண்டவர்களிடம் கண்மூடித்தனமாக இருக்கவும் மாட்டார். சாத்தான் செய்யும் எல்லாவற்றையும் தேவன் பூரணமான தெளிவுடன் புரிந்து கொள்கிறார். சாத்தான் என்ன செய்தாலும், என்ன போக்கை அது ஏற்படுத்தினாலும், சாத்தான் செய்ய முயற்சிக்கும் அனைத்தையும் தேவன் அறிவார். தேவன் தான் தெரிந்துகொண்டவர்களை விட்டு விடுவதில்லை. அதற்குப் பதிலாக, எந்தக் கவனத்தையும் ஈர்க்காமல்—ரகசியமாக, அமைதியாக—தேவன் தேவையான அனைத்தையும் செய்கிறார். தேவன் ஒருவரிடம் கிரியை செய்யத் தொடங்கும் போது, அவர் ஒருவரைத் தெரிந்துகொள்ளும்போது, அவர் இந்தச் செய்தியை யாரிடமும் அறிவிப்பதில்லை, அதைச் சாத்தானிடமும் அறிவிப்பதில்லை, அதற்கான அடையாளங்களையும் காட்டுவதில்லை. அவர் மிகவும் அமைதியாக, மிகவும் இயல்பாக, தேவையானதைச் செய்கிறார். முதலில், அவர் உனக்காக ஒரு குடும்பத்தைத் தெரிந்துகொள்கிறார். உன் குடும்பப் பின்னணி, உன் பெற்றோர், உன் மூதாதையர்கள்—இவை அனைத்தையும் தேவன் முன்கூட்டியே தீர்மானிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் இந்த முடிவுகளை ஒரு விருப்பப்படி எடுப்பதில்லை. மாறாக, அவர் இந்தக் கிரியையை நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கினார். தேவன் உனக்காக ஒரு குடும்பத்தைத் தெரிந்து கொண்டவுடன், நீ பிறக்கும் தேதியை அவர் தேர்வு செய்கிறார். பின்னர், நீ பிறக்கும் போது, உலகத்திற்கு அழுது கொண்டே வரும் போது தேவன் கவனிக்கிறார். அவர் உன் பிறப்பைக் கவனிக்கிறார். உன் முதல் சொற்களை நீ உச்சரிக்கும்போது கவனிக்கிறார். நீ எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளும்போது உன் முதல் அடியெடுத்து வைப்பதில் தடுமாறி நடப்பதைக் கவனிக்கிறார். முதலில் நீ ஒரு அடி எடுத்து வைத்து, பின்னர் இன்னொரு அடி எடுத்து வைக்கிறாய், இப்போது நீ ஓடலாம், குதிக்கலாம், பேசலாம், உன் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். … ஜனங்கள் வளரும்போது, ஒரு புலி அதன் இரையை நோக்குவது போல, ஒவ்வொருவரின் மீதும் சாத்தானுடைய பார்வை நிலைபெறுகிறது. ஆனால், அவருடைய கிரியையைச் செய்வதில், ஜனங்கள், நிகழ்வுகள் அல்லது விஷயங்களிலிருந்தும், இடம் அல்லது நேரத்திலிருந்தும் எழும் எந்தவொரு வரம்புகளுக்குள்ளும் தேவன் ஒருபோதும் உட்பட்டதில்லை. எது தேவையோ எது அவசியமோ அதை அவர் செய்கிறார். வளர்ந்து வருகையில், நோய் மற்றும் விரக்தி போன்ற உன் விருப்பத்திற்கு மாறான பல விஷயங்களை நீ சந்திக்க நேரிடும். ஆனால் நீ இந்தப் பாதையில் செல்லும்போது, உன் ஜீவிதமும் எதிர்காலமும் கண்டிப்பாக தேவனுடைய பராமரிப்பில் இருக்கின்றன. உன் ஜீவகாலம் முழுவதும் நீடிப்பதற்கு தேவன் உனக்கு ஒரு உண்மையான உத்தரவாதத்தை அளிக்கிறார். ஏனென்றால் அவர் உனக்கு அருகிலேயே இருக்கிறார். உன்னைக் காத்து உன்னைக் கவனித்து வருகிறார். இதை நீ அறியாமல் வளர்கிறாய். நீ புதிய விஷயங்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கி, இந்த உலகத்தையும் இந்த மனிதகுலத்தையும் அறிந்து கொள்ளத் தொடங்குகிறாய். எல்லாம் உனக்கு வாடாததும், புதியதுமாகும். நீ செய்து மகிழும் சில விஷயங்கள் உன்னிடம் உள்ளன. நீ உன் சொந்த மனிதத்தன்மையில் ஜீவிக்கிறாய். நீ உன் சொந்த இடத்திலேயே ஜீவிக்கிறாய். தேவன் இருப்பதைப் பற்றிய எண்ணம் உனக்குச் சிறிதும் இல்லை. ஆனால் நீ வளரும்போது ஒவ்வொரு அடியிலும் தேவன் உன்னைப் பார்க்கிறார். நீ ஒவ்வொரு முன்னேற்றத்திலும் முன்னேறும்போது அவர் உன்னைப் பார்க்கிறார். நீ அறிவைக் கற்றுக் கொள்ளும்போது அல்லது அறிவியலைப் படிக்கும்போது கூட, தேவன் ஒருபோதும் உன் பக்கத்தை விட்டு ஒரு அடி கூட விலகியதில்லை. நீ மற்றவர்களைப் போலவே இருக்கிறாய். உலகைப் பற்றி அறிந்து கொண்டு, அதில் ஈடுபடும் நேரத்தில், நீ உன் சொந்தக் கொள்கைகளை, உன்னுடைய சொந்த பொழுதுபோக்குகளை, உன் சொந்த நலன்களை நிறுவியிருக்கிறாய். நீ உயர்ந்த லட்சியங்களையும் வைத்திருக்கிறாய். நீ அடிக்கடி உன் சொந்த எதிர்காலத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கிறாய். பெரும்பாலும் உன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வெளிப்புறத்தை வரைகிறாய். வழியில் எது மாறினாலும், அது தெளிவாக நடப்பதை தேவன் காண்கிறார். ஒருவேளை நீ உன் சொந்தக் கடந்த காலத்தை மறந்திருக்கலாம். ஆனால் தேவனைப் பொறுத்தவரையில், உன்னை நன்கு புரிந்து கொள்ள அவரை விட யாரும் இல்லை. நீ தேவனுடைய பார்வையின் கீழ் ஜீவிக்கிறாய், வளர்ந்து, முதிர்ச்சியடைகிறாய். இந்தக் காலகட்டத்தில், தேவனுடைய மிக முக்கியமான பணி என்பது யாரும் உணராத ஒன்றாகும். அது யாருக்கும் தெரியாத ஒன்றாகும். தேவன் நிச்சயமாக இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எனவே இந்த மிகவும் முக்கியமான விஷயம் என்ன? தேவன் ஒரு மனிதரை இரட்சிப்பார் என்பதற்கு இது உத்தரவாதம் என்று கூறலாம். இதன் பொருள் தேவன் இந்த மனிதரை இரட்சிக்க விரும்பினால், அவர் இதைச் செய்ய வேண்டும். இந்த பணி மனிதனுக்கும் தேவனுக்கும் மிக முக்கியமானது ஆகும். அது என்ன தெரியுமா? இதைப் பற்றி உங்களுக்கு எந்த உணர்வும் இல்லை, அல்லது எந்தவொரு கருத்தும் இல்லை என்று தெரிகிறது. எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீ பிறந்த காலம் முதல் இப்போது வரை, தேவன் உன்னிடம் நிறைய கிரியைகளைச் செய்துள்ளார். ஆனால் அவர் செய்த எல்லாவற்றையும் பற்றிய முழுமையான விவரத்தை அவர் உனக்குத் தரவில்லை. இதை நீ அறிய தேவன் அனுமதிக்கவும் இல்லை, அவர் உன்னிடம் சொல்லவும் இல்லை. இருப்பினும், மனிதகுலத்தைப் பொறுத்தவரையில், அவர் செய்யும் அனைத்தும் முக்கியமாகும். தேவனைப் பொறுத்தவரையில், அது, அவர் செய்ய வேண்டிய ஒன்றாகும். இவை அனைத்தையும் விட அதிகமாக அவர் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று அவருடைய இருதயத்தில் உள்ளது. அதாவது, ஒரு மனிதர் பிறந்தது முதல் இன்று வரை, அவர்களுடைய பாதுகாப்பிற்கு தேவன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளாதது போல் உணரலாம். “இது மிகவும் முக்கியமா?” என்று நீங்கள் கேட்கலாம். சரி, “பாதுகாப்பு” என்பதன் அர்த்தம் என்ன? அமைதியைக் குறிக்கும் வார்த்தையாக அல்லது எந்தவொரு பேரிடரையும் அல்லது பேரழிவையும் ஒருபோதும் அனுபவிக்காத நிலையைக் குறிக்கும் வார்த்தையாக, நன்றாக ஜீவிக்க வேண்டும், சாதாரண ஜீவிதம் ஜீவிக்க வேண்டும் என்பவற்றைக் குறிக்கும் வார்த்தையாக நீங்கள் இதற்கு அர்த்தம் கொண்டிருக்கலாம். ஆனால் உங்கள் இருதயங்களில், அது அவ்வளவு எளிதல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே, நான் பேசிக் கொண்டிருக்கும் விஷயம் என்னவென்றால், தேவன் செய்ய வேண்டியது என்ன? தேவனுக்கு பாதுகாப்பு என்றால் என்ன? இது உண்மையில் “பாதுகாப்பு” என்பதன் சாதாரண அர்த்தத்திற்கு உத்தரவாதம் கொடுக்குமா? இல்லை. எனவே தேவன் என்ன செய்கிறார்? இந்த “பாதுகாப்பு” என்பது நீ சாத்தானால் விழுங்கப்பட மாட்டாய் என்பதாகும். இது முக்கியமாகுமா? சாத்தானால் விழுங்கப்படாமல் இருப்பது—இது உன் பாதுகாப்பைப் பற்றியதா இல்லையா? ஆம், இது உன் தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றியது. இதைவிட முக்கியமாக எதுவும் இருக்க முடியாது. நீ சாத்தானால் விழுங்கப்பட்டவுடன், உன் ஆத்துமாவும் மாம்சமும் இனி தேவனுக்கு சொந்தமில்லாததாக மாறும். தேவன் இனி உன்னை இரட்சிக்க மாட்டார். தேவன் சாத்தானால் விழுங்கப்பட்ட ஆத்துமாக்களையும் ஜனங்களையும் கைவிடுகிறார். ஆகவே, தேவன் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், உன்னுடைய இந்தப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதும், நீ சாத்தானால் விழுங்கப்பட மாட்டாய் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதும் ஆகும். இது மிகவும் முக்கியமானது, அல்லவா? எனவே உங்களால் ஏன் பதிலளிக்க முடியவில்லை? தேவனுடைய பெரிய தயவை உங்களால் உணர முடியவில்லை என்பதாகத் தெரிகிறது!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 160

தேவன் மனிதனுக்கு என்ன செய்கிறார் என்பதன் மூலம் அவருடைய பரிசுத்தத்தைப் புரிந்துகொள்ளுதல் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தி)

ஜனங்களுடைய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது, அவர்கள் சாத்தானால் பட்சித்துப் போடப்பட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிப்பது தவிர இன்னும் அதிகமானவற்றை தேவன் செய்கிறார். ஒருவரைத் தெரிந்துகொண்டு இரட்சிப்பதற்கு முன்பு அவர் ஒரு பெரிய ஆயத்தப் பணியைச் செய்கிறார். முதலாவதாக, நீ எத்தகைய கதாபாத்திரத்தில் இருப்பாய், நீ எத்தகைய குடும்பத்தில் பிறப்பாய், உன் பெற்றோர் யார், உனக்கு எத்தனை சகோதர சகோதரிகள் இருப்பார்கள், உன் நிலைமை, பொருளாதார நிலை மற்றும் சூழ்நிலைகள் என்ன என்பது குறித்து தேவன் கவனமான ஆயத்தங்களை நீ பிறந்த குடும்பத்தில் இருக்கும்படியாகச் செய்கிறார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களில் பெரும்பாலானோர் எத்தகைய குடும்பத்தில் பிறந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்களின் குடும்பங்கள் உயரிய குடும்பங்களா? உயரிய குடும்பங்களில் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்று நாம் உறுதியாக சொல்ல முடியாது. சில இருக்கலாம், ஆனால் அவை மிகவும் குறைவு. அவர்கள் அதிகமான செல்வம் பெற்ற குடும்பங்களில், கோடீஸ்வரர்களின் குடும்பங்களில் அல்லது கோடிக்கணக்கானக் கோடிகளை உடைய குடும்பங்களில் பிறந்தவர்களா? இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட இத்தகைய குடும்பத்தில் பிறக்கவே இல்லை. இந்த ஜனங்களில் பெரும்பாலானோருக்கு தேவன் எத்தகைய குடும்பத்தை ஏற்பாடு செய்கிறார்? (சாதாரண குடும்பங்கள்.) எனவே எந்தக் குடும்பங்களைச் “சாதாரண குடும்பங்கள்” என்று கருதலாம்? அவற்றில் உழைக்கும் குடும்பங்களும் அடங்கும்—அதாவது, அன்றாடம் ஜீவிப்பதற்கான ஊதியத்தை சார்ந்து இயங்கும், அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்கக்கூடிய, மற்றும் அதிகப்படியான ஆரோக்கியம் இல்லாத குடும்பங்கள் ஆகும். அவற்றில் விவசாய குடும்பங்களும் அடங்கும். பசியாலோ குளிராலோ வாடாத மற்றும் தங்கள் உணவுக்காக பயிர்களை நடவு செய்தும், சாப்பிட தானியங்களையும், அணிய வேண்டிய ஆடைகளையும் சார்ந்து விவசாயிகள் உள்ளனர். பின்னர் சிறு தொழில்களை நடத்தும் சில குடும்பங்கள் உள்ளன. சில பெற்றோர்கள் புத்திஜீவிகளாக இருக்கிறார்கள், இவர்களையும் சாதாரணக் குடும்பங்களாக எண்ணலாம். அலுவலக ஊழியர்களாகவோ அல்லது சிறு அரசு அதிகாரிகளாகவோ இருக்கும் சில பெற்றோர்களும் உள்ளனர். அவர்களையும் முக்கியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகக் கணக்கிட முடியாது. பெரும்பாலானவர்கள் சாதாரணக் குடும்பங்களில் பிறந்தவர்கள். இவை அனைத்தும் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டவை. அதாவது, முதலில், நீ வாழும் இந்தச் சூழல் ஜனங்கள் கற்பனை செய்யக் கூடிய கணிசமான வழிமுறைகளின் குடும்பம் அல்ல. இது தேவனால் உனக்காகத் தீர்மானிக்கப்பட்ட குடும்பம் ஆகும். பெரும்பான்மையான ஜனங்கள் இத்தகைய குடும்ப எல்லைக்குள் ஜீவிப்பார்கள். எனவே சமூக அந்தஸ்தைப் பற்றிய உன் கருத்து என்ன? பெரும்பான்மையான பெற்றோரின் பொருளாதார நிலைமைகள் சராசரியானவை. அவர்களுக்கு உயர்ந்த சமூக அந்தஸ்து இல்லை—அவர்களுக்கு ஒரு வேலை கிடைப்பது நன்மையானது ஆகும். இதில் ஆளுநர்கள் உள்ளடங்குவார்களா? அல்லது நாட்டின் ஜனாதிபதிகள் உள்ளடங்குவார்களா? இல்லை, சரியா? பெரும்பாலும் அவர்கள் சிறு வணிக மேலாளர்களாக அல்லது சிறு வணிகங்களின் உரிமையாளர்களாக இருப்பவர்கள். அவர்களுடைய சமூக அந்தஸ்து நடுநிலையானது. அவர்களுடையப் பொருளாதார நிலைமைகள் சராசரியாக இருக்கின்றன. மற்றொரு காரணி குடும்பத்தின் வாழ்க்கைச் சூழல் ஆகும். முதலாவதாக, இந்தக் குடும்பங்களில், தங்கள் குழந்தைகளை அஞ்சனம் மற்றும் குறி சொல்லும் பாதையில் நடக்கச் செய்யும் பெற்றோர்கள் யாரும் இல்லை. இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுபவர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் மிகவும் சாதாரணமானவர்கள். தேவன் ஜனங்களைத் தெரிந்துகொள்ளும் அதே நேரத்தில், அவர்களுக்காக இத்தகையச் சூழலை அவர் அமைக்கிறார். இது ஜனங்களை இரட்சிக்கும் அவரது பணிக்கு பெரிதும் பயனளிக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், தேவன் குறிப்பாக மனிதனுக்கு அதிர்ச்சிகரமாக எதுவும் செய்யவில்லை என்று தெரிகிறது. அவர் தாழ்மையாகவும் மௌனமாகவும் செய்யும் எல்லாவற்றையும் அமைதியாகவும் ரகசியமாகவும் மட்டுமே செய்யத் தொடங்குகிறார். ஆனால் உண்மையில், தேவன் செய்யும் எல்லாவற்றுக்கும் காரணம் உன் இரட்சிப்புக்கு ஒரு அடித்தளத்தை அமைப்பதும், முன்னோக்கி செல்லும் பாதையைத் ஆயத்தப்படுத்துவதும், உன் இரட்சிப்புக்கு தேவையான அனைத்து நிபந்தனைகளையும் அவர் செய்வதும் ஆகும். அடுத்ததாக, தேவன் ஒவ்வொரு மனிதரையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனக்கு முன்பாகக் கொண்டு வருகிறார்: தேவனுடைய குரலை நீ கேட்கிறாய். நீ அவருக்கு முன்பாக வருகிறாய். இது நிகழும் நேரத்தில், சிலர் ஏற்கனவே பெற்றோர்களாகி விட்டனர், மற்றவர்கள் இன்னும் ஒருவரின் குழந்தையாக இருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிலர் திருமணமாகி குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள், சிலர் இன்னும் தங்கள் சொந்தக் குடும்பங்களைத் தொடங்காமல் தனிமையில் இருக்கிறார்கள். ஆனால் ஒருவரின் நிலைமையைப் பொருட்படுத்தாமல், நீ எப்போது தெரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதையும், அவருடைய நற்செய்தியும் வார்த்தைகளும் உன்னை எட்டும் நேரங்களையும் தேவன் ஏற்கனவே அமைத்துள்ளார். தேவன் சூழ்நிலைகளை நிர்ணயித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மனிதரை அல்லது ஒரு குறிப்பிட்ட சூழலைத் தீர்மானித்துள்ளார். இதன் மூலம் நீ தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கத்தக்கதாக சுவிசேஷம் உனக்கு அனுப்பப்படும். தேவையான அனைத்து நிபந்தனைகளையும் தேவன் உனக்காக ஏற்கனவே ஆயத்தம் செய்துள்ளார். இவ்வாறு அது நடக்கிறது என்று மனிதனுக்குத் தெரியாது என்றாலும், மனிதன் தேவனுக்கு முன்பாக வந்து தேவனுடைய குடும்பத்திடம் திரும்புகிறான். மனிதனும் அறியாமல் தேவனைப் பின்பற்றுகிறான். தேவன் மனிதனுக்காக ஆயத்தம் செய்த அவருடைய கிரியையின் ஒவ்வொரு அடியிலும் பிரவேசிக்கிறான். இந்த நேரத்தில் மனிதனுக்காக காரியங்களைச் செய்யும்போது தேவன் என்ன வழிகளைப் பயன்படுத்துகிறார்? முதலாவதாக, குறைந்தபட்சம் மனிதன் அனுபவிக்கும் கவனிப்பும் பாதுகாப்பும் ஆகும். இதைத் தவிர, தேவன் பல்வேறு மனிதர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும் வெளிப்படுத்துகிறார். இதன் மூலம் மனிதன், தேவன் இருப்பதையும் தேவனுடைய கிரியைகளையும் காண முடியும். உதாரணமாக, தங்கள் குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதால், தேவனை நம்புகிற சிலர் இருக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, அவர்கள் தேவனை நம்பத் தொடங்குகிறார்கள். தேவன் மீதான இந்த நம்பிக்கை சூழ்நிலையின் காரணமாக வருகிறது. இந்தச் சூழ்நிலையை ஏற்பாடு செய்தவர் யார்? (தேவன்.) இந்த நோயின் காரணமாக, குடும்பத்தில் உள்ள எல்லோரும் விசுவாசியாக இருக்கும் சில குடும்பங்கள் உள்ளன. மற்ற குடும்பத்தில் ஒரு சிலர் மட்டுமே நம்புகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால், உன் குடும்பத்தில் ஒருவருக்கு நோய் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அது உனக்கு வழங்கப்பட்ட ஒரு நிபந்தனையாக இருக்கலாம். இதனால் நீ தேவனுக்கு முன்பாக வரலாம்—இது தேவனுடைய கிருபை ஆகும். ஏனென்றால், குடும்ப ஜீவிதம் சிலருக்குக் கடினமானது, அவர்களுக்கு அமைதி கிடைக்காது. ஒருவேளை ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்—யாரோ ஒருவர், “கர்த்தராகிய இயேசுவை நம்புங்கள், உங்களுக்கு சமாதானம் கிடைக்கும்” என்று நற்செய்தியைச் சொல்லக் கூடும். இதனால், அறியாமலேயே, அவர்கள் மிகவும் இயற்கையான சூழ்நிலையில் தேவனை நம்புகிறார்கள். எனவே இது ஒரு வகையான நிலை அல்லவா? அவர்களுடைய குடும்பம் சமாதானமாக இல்லை என்பது, தேவன் அவர்களுக்கு வழங்கிய கிருபையாகுமா? வேறு காரணங்களுக்காக தேவனை நம்புகிறவர்களும் உண்டு. நம்பிக்கையின் வெவ்வேறு காரணங்களும் வெவ்வேறு வழிகளும் இருக்கின்றன. ஆனால் அவரை நம்புவதற்கு எந்த காரணம் உன்னை அழைத்திருந்தாலும், அவை அனைத்தும், உண்மையில் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டு வழிநடத்தப்படுகின்றன என்பதாகும். முதலில், தேவன் உன்னைத் தெரிந்துகொள்வதற்கும் உன்னை அவருடைய குடும்பத்திற்குள் கொண்டு வருவதற்கும் பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறார். இது, ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் அளிக்கும் கிருபையாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 161

தேவன் மனிதனுக்கு என்ன செய்கிறார் என்பதன் மூலம் அவருடைய பரிசுத்தத்தைப் புரிந்துகொள்ளுதல் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தி)

கடைசி நாட்களில், தேவனுடைய தற்போதைய கிரியையின் கட்டத்தில், அவர் முன்பு செய்ததைப் போலவே இனிமேல் மனிதனுக்கு கிருபையையும் ஆசீர்வாதங்களையும் வழங்குவதுமில்லை, மனிதனை மயக்கி முன்னோக்கி நகர்த்துவதுமில்லை. இந்தக் கிரியையின் போது, மனிதன் தான் அனுபவித்திருக்கிற தேவனுடைய கிரியையின் அனைத்து அம்சங்களிலிருந்தும் எதைக் கண்டான்? தேவனுடைய அன்பையும் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் மனிதன் கண்டான். இந்த காலகட்டத்தில், தேவன் மனிதனுக்கு வழங்கி ஆதரிக்கிறார், அறிவூட்டுகிறார் மற்றும் வழிநடத்துகிறார். இதனால் மனிதன் படிப்படியாக அவரது நோக்கங்களையும், அவர் பேசும் வார்த்தைகளையும் மனிதனுக்கு அளிக்கும் சத்தியத்தையும் அறிந்து கொள்கிறான். மனிதன் பலவீனமாக இருக்கும்போது, அவர்கள் சிதறடிக்கப்படும்போது, அவர்கள் திரும்ப எங்கும் இடம் இல்லாதபோது, மனிதனை ஆறுதல்படுத்தவும், அறிவுறுத்தவும், ஊக்குவிக்கவும் தேவன் தனது வார்த்தைகளைப் பயன்படுத்துவார். இதனால் மனிதனுடைய சிறிய அந்தஸ்து படிப்படியாக பெலத்தில் வளரவும், நேர்மறையில் உயரவும், தேவனுடன் ஒத்துழைக்க ஆயத்தமாக இருக்கவும் முடியும். ஆனால் மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படியாதபோது அல்லது அவரை எதிர்க்கும்போது, அல்லது மனிதன் அவர்களுடைய கேட்டை வெளிப்படுத்தும்போது, மனிதனை சிட்சிப்பதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் தேவன் தயவைக் காட்ட மாட்டார். இருப்பினும், மனிதனுடைய முட்டாள்தனம், அறியாமை, பலவீனம் மற்றும் முதிர்ச்சியற்ற தன்மை ஆகியவற்றிற்கு தேவன் சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் காண்பிப்பார். இவ்வாறு, தேவன் மனிதனுக்காகச் செய்யும் எல்லாக் கிரியைகளிலும், மனிதன் படிப்படியாக முதிர்ச்சியடைந்து, வளர்ந்து, தேவனுடைய நோக்கங்களை அறிந்து கொள்கிறான். சில உண்மைகளை அறிந்து கொள்கிறான். என்னென்ன விஷயங்கள் நேர்மறையானவை மற்றும் எதிர்மறையானவை என்பதை அறிந்து கொள்கிறான். எது தீமை மற்றும் இருள் என்பதை அறிந்து கொள்கிறான். மனிதனை எப்பொழுதும் சிட்சிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் ஒரே அணுகுமுறையை தேவன் எடுப்பதுமில்லை, அவர் எப்போதும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் காட்டிக் கொண்டிருப்பதுமில்லை. மாறாக, ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு நிலைகளில் மற்றும் அவர்களுடைய வெவ்வேறு நிலைகளில் மற்றும் திறனுக்கேற்ப அவர் வெவ்வேறு வழிகளில் வழங்குகிறார். அவர் மனிதனுக்காகப் பெரும் செலவில் பலவற்றைச் செய்கிறார். மனிதன் இந்த விஷயங்கள் அல்லது விலை என எதையும் உணரவில்லை. ஆனால் அவர் செய்யும் அனைத்தும் உண்மையிலேயே நடைமுறையில் ஒவ்வொரு மனிதரிடமும் செயல்படுத்தப்படுகின்றன. தேவனுடைய அன்பு நடைமுறைக்குரியது: தேவனுடைய கிருபையின் மூலம், மனிதன் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பேரழிவையும் தவிர்க்கிறான். எல்லா நேரங்களிலும் தேவன் சகிப்புத் தன்மையினை மனிதனுடைய பலவீனங்களுக்காக மீண்டும் மீண்டும் காட்டுகிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் மனிதகுலத்தின் கேடு மற்றும் சாத்தானிய சாராம்சத்தைப் படிப்படியாக அறிந்து கொள்ள ஜனங்களை அனுமதிக்கிறது. தேவன் அளிக்கும் விஷயங்கள், மனிதனைப் பற்றிய அவரது வெளிச்சம் மற்றும் அவரது வழிகாட்டுதல் அனைத்தும் மனிதகுலத்தை சத்தியத்தின் சாராம்சத்தை மேலும் மேலும் அறிய அனுமதிக்கிறது. ஜனங்களுக்கு என்ன தேவை, எந்தப் பாதையில் செல்ல வேண்டும், அவர்கள் எதற்காக ஜீவிக்கிறார்கள், அவர்களின் மதிப்பு மற்றும் ஜீவிதத்தின் அர்த்தம், மற்றும் முன்னோக்கி பாதையில் எப்படி நடப்பது என்பவற்றை அறிய அனுமதிக்கிறது. தேவன் செய்யும் இந்த விஷயங்கள் அனைத்தும் அவருடைய ஒரு உண்மையான நோக்கத்திலிருந்து பிரிக்க முடியாதவை. அப்படியானால், இந்த நோக்கம் என்ன? மனிதனைப் பற்றிய தனது கிரியையைச் செய்ய தேவன் ஏன் இந்த முறைகளைப் பயன்படுத்துகிறார்? அவர் என்ன முடிவை அடைய விரும்புகிறார்? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் மனிதனில் எதைப் பார்க்க விரும்புகிறார்? மனிதனிடமிருந்து அவர் எதைப் பெற விரும்புகிறார்? தேவன் பார்க்க விரும்புவது என்னவென்றால், மனிதனுடைய இருதயம் புத்துயிர் பெற முடியும் என்பதே. மனிதன் மீது கிரியை செய்ய அவர் பயன்படுத்தும் இந்த முறைகள், மனிதனுடைய இருதயத்தை எழுப்பவும், மனிதனுடைய ஆவியை எழுப்பவும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், யார் வழிகாட்டுகிறார், ஆதரிக்கிறார், அவர்களுக்கு வழங்குகிறார், மனிதனை இன்று வரை ஜீவிக்க அனுமதித்தார் என்பதைப் புரிந்து கொள்ளவும் செய்கிறது. சிருஷ்கர் யார், அவர்கள் யாரை வணங்க வேண்டும், அவர்கள் எந்த மாதிரியான பாதையில் நடக்க வேண்டும், எந்த விதத்தில் மனிதன் தேவனுக்கு முன்பாக வர வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள மனிதனுக்கு உதவும் ஒரு வழிமுறையாகும். அவை மனிதனுடைய இருதயத்தைப் படிப்படியாக புதுப்பிப்பதற்கான ஒரு வழியாகும். இதனால் மனிதன் தேவனுடைய இருதயத்தை அறிந்து கொள்கிறான். தேவனுடைய இருதயத்தைப் புரிந்து கொள்கிறான். மனிதனை இரட்சிக்க அவர் செய்த கிரியையின் பின்னணியில் உள்ள மிகுந்த அக்கறையையும் சிந்தனையையும் புரிந்து கொள்கிறான். மனிதனுடைய இருதயம் புத்துயிர் பெறும்போது, மனிதன் இனி ஒரு சீரழிந்த, கேடு நிறைந்த மனநிலையுடன் ஜீவிக்க விரும்புவதில்லை. மாறாக தேவனைத் திருப்திப்படுத்துவதற்காக சத்தியத்தைப் பின்தொடர விரும்புகிறான். மனிதனுடைய இருதயம் விழித்துக் கொள்ளும்போது, மனிதர் தங்களை சாத்தானிடமிருந்து முழுமையாகக் கிழிக்க முடியும். இனி அவர்கள் சாத்தானால் பாதிக்கப்படமாட்டார்கள். இனி சாத்தானால் கட்டுப்படுத்தப்பட அல்லது ஏமாற்றப்பட மாட்டான். அதற்கு பதிலாக, தேவனுடைய இருதயத்தைத் திருப்திப்படுத்த தேவனுடைய கிரியையிலும் அவருடைய வார்த்தைகளிலும் மனிதன் முன்கூட்டியே ஒத்துழைக்க முடியும். இதனால் தேவ பயம் கொண்டு தீமையைத் தவிர்க்கலாம். இது தேவனுடைய கிரியையின் மூலமுதலான நோக்கமாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 162

தேவன் மனிதனுக்கு என்ன செய்கிறார் என்பதன் மூலம் அவருடைய பரிசுத்தத்தைப் புரிந்துகொள்ளுதல் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தி)

சாத்தானுடைய தீமையைப் பற்றி நாம் இப்போது நடத்திய கலந்துரையாடலானது, மனிதன் மிகுந்த அதிருப்திக்கு மத்தியில் ஜீவிப்பது போலவும், மனிதனுடைய ஜீவிதம் துரதிர்ஷ்டத்தால் சூழப்பட்டதாகவும் உணரச் செய்கிறது. ஆனால் இப்போது நான் தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றியும் அவர் மனிதனுக்குச் செய்யும் கிரியையைப் பற்றியும் பேசும்போது, அது உங்களை எப்படி உணரச் செய்கிறது? (மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.) தேவன் செய்கிற அனைத்தும், மனிதனுக்காக அவர் சிரமமின்றி ஏற்பாடு செய்தவை அனைத்தும், மாசற்றவை என்பதை இப்போது நாம் காணலாம். தேவன் செய்யும் அனைத்தும் பிழையில்லாமல் இருக்கின்றன. அதாவது அது தவறற்றது. அதை யாரும் சரி செய்யவோ, அறிவுறுத்தவோ அல்லது அதில் எந்த மாற்றமும் செய்யவோ தேவையில்லை. ஒவ்வொரு மனிதருக்காகவும் தேவன் செய்கிறதெல்லாம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. அவர் அனைவரையும் கரம்பிடித்து வழிநடத்துகிறார். கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் உன்னைப் பார்த்துக் கொள்கிறார். ஒருபோதும் உன் பக்கத்தை விட்டு விலகவில்லை. இத்தகைய சூழலிலும், இத்தகைய பின்னணியிலும் ஜனங்கள் வளரும்போது, ஜனங்கள் உண்மையில் தேவனுடைய உள்ளங்கையில் வளர்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? (ஆம்.) எனவே இப்போது நீங்கள் இன்னும் இழப்பின் உணர்வை உணர்கிறீர்களா? யாரேனும் இன்னும் சிதறடிக்கப்படுகிறார்களா? தேவன் மனிதகுலத்தைக் கைவிட்டுவிட்டார் என்று யாரேனும் நினைக்கிறார்களா? (இல்லை.) அப்படியானால் தேவன் சரியாக என்ன செய்திருக்கிறார்? (அவர் மனிதகுலத்தைக் கண்காணித்து வருகிறார்.) தேவன் செய்யும் எல்லாவற்றிலும் அவர் வைக்கும் பெரிய சிந்தனையும் அக்கறையும் கேள்விக்கு அப்பாற்பட்டது ஆகும். மேலும் என்னவென்றால், அவருடைய கிரியையைச் செய்யும்போது, அவர் எப்போதும் நிபந்தனையின்றி செய்திருக்கிறார். அவர் உனக்காகச் செலுத்தும் விலையை உங்களில் எவராகிலும் அறிந்திருக்க வேண்டும் என்றும் அதனால் நீ அவருக்கு ஆழ்ந்த நன்றியை உணர வேண்டும் என்றும் அவர் ஒருபோதும் எதிபார்க்கவில்லை. தேவன் உங்களிடம் இதை எப்போதாவது எதிபார்த்த்துண்டா? (இல்லை.) மனித ஜீவிதத்தின் நீண்ட போக்கில், கிட்டத்தட்ட ஒவ்வொரு மனிதரும் பல ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டனர் மற்றும் பல சோதனையை எதிர்கொண்டனர். ஏனென்றால், சாத்தான் உனக்கு அருகில் நிற்கிறது. அதன் கண்கள் தொடர்ந்து உன் மீது நிலைபெறுகின்றன. பேரழிவு உன்னைத் தாக்கும்போது, சாத்தான் இதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறது. உனக்குப் பேரழிவுகள் ஏற்படும்போது, உனக்கு எதுவுமே சரியாக நடக்காதபோது, நீ சாத்தானுடைய வலையில் சிக்கிக் கொள்ளும்போது, சாத்தான் இவற்றிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுகிறது. தேவன் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்தவரையில், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் உன்னைப் பாதுகாக்கிறார். ஒவ்வொரு துரதிர்ஷ்டத்திலிருந்தும், ஒவ்வொரு பேரழிவிலிருந்தும் உன்னை வழிநடத்துகிறார். இதனால் தான் மனிதனுக்கு இருக்கும் அனைத்தும்—சமாதானம், மகிழ்ச்சி, ஆசீர்வாதம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு—உண்மையில் அனைத்தும் தேவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்று நான் சொல்கிறேன். ஒவ்வொரு மனிதரின் தலைவிதியையும் அவர் வழிநடத்துகிறார், தீர்மானிக்கிறார். ஆனால் சிலர் சொல்வது போல், தேவன் தனது நிலைப்பாட்டைப் பற்றி ஒரு நியாயமற்ற கருத்தை கொண்டிருக்கிறாரா? “நான் எல்லாவற்றிலும் பெரியவன். நான் தான் உனக்குப் பொறுப்பேற்கிறேன். இரக்கத்துக்காக நீங்கள் என்னிடம் கெஞ்ச வேண்டும், கீழ்ப்படியாமை மரண தண்டனைக்குரியது,” என்று தேவன் உன்னிடம் அறிவிக்கிறாரா? தேவன் எப்போதாவது இவ்வாறு மனிதகுலத்தை அச்சுறுத்தியுள்ளாரா? (இல்லை.) அவர் எப்போதாவது, “மனிதகுலம் சீர்கேடு நிறைந்ததாக இருக்கிறது. எனவே, நான் அவர்களை எப்படி நடத்துகிறேன் என்பது முக்கியமல்ல, அவர்கள் எந்த வகையிலும் நடத்தப்படலாம். அவர்களுக்காக நான் நல்ல ஏற்பாடுகளைச் செய்யத் தேவையில்லை,” என்று சொல்லியிருக்கிறாரா? தேவன் இவ்வாறு நினைக்கிறாரா? தேவன் இவ்வாறு செயல்பட்டாரா? (இல்லை.) மாறாக, ஒவ்வொரு மனிதரிடமும் தேவன் நடந்து கொள்வது மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புடனும் உள்ளது. நீ அவரிடம் நடந்து கொள்வதை விட அவர் உன்னை மிகவும் பொறுப்புடன் நடத்துகிறார். இது அப்படியல்லவா? தேவன் வெறுமனே இவ்வறு பேசமாட்டார். அவர் தனது உயர்ந்த நிலையை வெளிப்படுத்துவதில்லை அல்லது ஜனங்களை ஏமாற்றுவதில்லை. அதற்குப் பதிலாக அவர் நேர்மையாகவும் அமைதியாகவும் செய்ய வேண்டியதைச் செய்கிறார். இந்த விஷயங்கள் மனிதனுக்கு ஆசீர்வாதங்களையும், சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்றன. அவை மனிதனை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தேவனுடைய பார்வைக்குள்ளும் அவருடைய குடும்பத்திற்குள்ளும் கொண்டு வருகின்றன. பின்னர் அவர்கள் தேவனுக்கு முன்பாக ஜீவிக்கிறார்கள். தேவனுடைய இரட்சிப்பை சாதாரணக் காரணத்துடனும் சிந்தனையுடனும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆகவே, தேவன் தனது கிரியையில் மனிதனுடன் எப்போதாவது போலித்தனமாக இருந்திருக்கிறாரா? முதலில் மனிதனை ஒரு சில இனிப்புகளுடன் முட்டாளாக்கி, பின் அவர் எப்போதாவது ஒரு தவறான தயவைக் காட்டி, ஏமாற்றியிருக்கிறார? (இல்லை.) தேவன் எப்போதாவது ஒரு விஷயத்தைச் சொல்லி வேறு விஷயத்தைச் செய்திருக்கிறாரா? தேவன் எப்போதாவது வெற்று வாக்குறுதிகளை அளித்து பெருமிதம் கொண்டிருக்கிறாரா? ஜனங்களுக்கு இதைச் செய்ய முடியும் அல்லது அவர்களுக்காக அதைச் செய்ய உதவ முடியும் என்று ஜனங்களுக்குச் சொல்லியிருக்கிறாரா? (இல்லை.) தேவனில் எந்த வஞ்சகமும் இல்லை, பொய்யும் இல்லை. தேவன் உண்மையுள்ளவர். அவர் செய்யும் எல்லாவற்றிலும் அவர் உண்மையுள்ளவர். அவரை மட்டுமே ஜனங்கள் நம்ப முடியும். ஜனங்கள் தங்கள் ஜீவிதத்தையும் அவர்களிடம் உள்ள அனைத்தையும் ஒப்படைக்கக்கூடிய தேவன் அவர் மட்டுமே. தேவனில் எந்த வஞ்சகமும் இல்லை என்பதால், தேவன் மிகவும் நேர்மையானவர் என்று சொல்ல முடியுமா? (ஆம்.) நிச்சயமாக நம்மால் முடியும்! “நேர்மையானவர்” என்ற வார்த்தை மிகவும் பலவீனமானது, தேவனுக்குப் பொருந்தும்போது மிகவும் மனிதத்தன்மையில் இருக்கும் என்றாலும், வேறு எந்த வார்த்தையை நாம் பயன்படுத்த முடியும்? மனித மொழியின் வரம்புகள் அத்தகையவை. தேவனை “நேர்மையானவர்” என்று அழைப்பது ஓரளவுக்குத் தகுதியற்றது என்றாலும், இந்த வார்த்தையை இப்போதைக்குப் பயன்படுத்துவோம். தேவன் உண்மையுள்ளவர், நேர்மையானவர். எனவே இந்த அம்சங்களைப் பற்றிப் பேசும்போது, நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் நாம் குறிப்பிடுகிறோமா? ஆம், நாம் அதைச் சொல்லலாம். ஏனென்றால், தேவனில் சாத்தானுடைய சீர்கேடான மனநிலையின் ஒரு தடயத்தையும் மனிதனால் பார்க்க முடியாது. இதை நான் சரியாகச் சொல்கின்றேனா? ஆமென்? (ஆமென்!) சாத்தானுடைய தீமையான மனநிலை எதுவும் தேவனில் வெளிப்படுத்தப்படவில்லை. தேவன் செய்கிற மற்றும் வெளிப்படுத்தும் அனைத்தும் முற்றிலுமாக நன்மை பயக்கின்றன மற்றும் மனிதனுக்கு உதவுகின்றன. மனிதனுக்கு வழங்குவதற்காக அவை முழுமையாக செய்யப்படுகின்றன, அவை ஜீவனால் நிறைந்திருக்கின்றன. மனிதனுக்குப் பின்பற்ற ஒரு பாதையையும், எடுக்க வேண்டிய திசையையும் அவை தருகின்றன. தேவன் சீர்கேடு நிறைந்தவர் அல்ல. இப்போதும் தேவன் செய்யும் எல்லாவற்றையும் பார்த்து, தேவன் பரிசுத்தர் என்று சொல்ல முடியுமா? தேவனுக்கு மனிதகுலத்தின் சீர்கேடான மனநிலை அல்லது சீர்கேடான சாத்தானிய சாராம்சத்துக்கு ஒத்த எதுவும் இல்லை என்பதால், இந்தப் பார்வையில் தேவனைப் பரிசுத்தர் என்று நாம் முற்றிலுமாகக் கூறலாம். தேவன் எந்தக் கேட்டையும் காட்டவில்லை, அதேநேரத்தில் தேவன் கிரியை செய்யும்போது, தேவன்தம்முடைய சொந்த சாராம்சத்தை வெளிப்படுத்துகிறார், இது தேவன் தாமே பரிசுத்தர் என்பதை முற்றிலுமாக உறுதிப்படுத்துகிறது. இதைப் பார்க்கிறீர்களா? தேவனுடைய பரிசுத்தமான சாராம்சத்தை அறிய, இப்போதைக்கு இந்த இரண்டு அம்சங்களையும் பார்ப்போம்: 1) முதலாவது தேவனில் கேடான மனநிலைக்கான தடயம் இல்லை; 2) இரண்டாவதாக மனிதனைப் பற்றிய தேவனுடைய கிரியையின் சாராம்சம் தேவனுடைய சொந்த சாராம்சத்தைக் காண மனிதனை அனுமதிக்கிறது, மேலும் இந்தச் சாராம்சம் முற்றிலும் நேர்மறையானது. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு பகுதியும், மனிதனுக்குக் கொண்டு வரும் விஷயங்கள் அனைத்தும் நேர்மறையானவை. முதலில், மனிதன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார்—இது ஒரு நேர்மறையான விஷயம் அல்லவா? தேவன் மனிதனுக்கு ஞானத்தை அளிக்கிறார்—இது நேர்மறையானதல்லவா? தேவன் மனிதனை நன்மைக்கும் தீமைக்கும் இடையில் புரிந்துகொள்ளச் செய்கிறார்—இது நேர்மறையானதல்லவா? மனிதர்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களின் சாராம்சத்தை சத்தியத்திற்கு ஏற்பப் பார்க்க மனிதனை அவர் அனுமதிக்கிறார்—இது நேர்மறையானதல்லவா? நேர்மறையானது தான். இவற்றின் விளைவு என்னவென்றால், மனிதன் இனி சாத்தானால் ஏமாற்றப்படுவதில்லை, இனி சாத்தானால் பாதிக்கப்படவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ மாட்டான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தானுடைய கேட்டிலிருந்து தங்களை முற்றிலுமாக விடுவிக்க இந்த விஷயங்கள் அனுமதிக்கின்றன. எனவே, படிப்படியாக தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான பாதையில் நடக்க அனுமதிக்கின்றன.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 163

மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் ஆறு முதன்மையான தந்திரங்கள்

முதலாவது கட்டுப்பாடு மற்றும் வற்புறுத்தல் ஆகும். அதாவது, உன் இருதயத்தைக் கட்டுப்படுத்த சாத்தான் எல்லாவற்றையும் செய்வான். “வற்புறுத்தல்” என்றால் என்ன? இதன் அர்த்தம், உன்னை அதற்குக் கீழ்ப்படியச் செய்ய அச்சுறுத்துதல் மற்றும் பலமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்துதலும், நீ கீழ்ப்படியாவிட்டால் அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க வைப்பதும் ஆகும். அதற்கு நீ பயப்படுகிறாய். அதை மீறத் துணிவதில்லை. எனவே, அதற்கு அடிபணிந்து விட்டாய்.

இரண்டாவது வஞ்சித்தல் மற்றும் தந்திரம் ஆகும். “வஞ்சித்தல் மற்றும் தந்திரம்” என்றால் என்ன? சாத்தான் சில கதைகளையும் பொய்களையும் உருவாக்கி, அவற்றை நம்புவதற்கு உன்னை ஏமாற்றுகிறது. மனிதன் தேவனால் படைக்கப்பட்டான் என்று அது ஒருபோதும் உனக்குச் சொல்லவதில்லை. ஆனால் நீ தேவனால் படைக்கப்படவில்லை என்று நேரடியாகச் சொல்வதுமில்லை. அது “தேவன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. மாறாக உன்னை ஏமாற்றுவதற்காக வேறு எதையாவது மாற்றாக பயன்படுத்துகிறது. இந்த விஷயத்தைப் பயன்படுத்தி நீ தேவன் இருப்பதைப் பற்றி எதுவும் அறியாமல் இருக்கச் செய்கிறது. நிச்சயமாக, இது மட்டுமல்லாமல் இந்த “தந்திரம்” பல அம்சங்களை உள்ளடக்குகிறது.

மூன்றாவது பலவந்தமான போதனை ஆகும். ஜனங்கள் எதைக் கொண்டு வற்புறுத்தப்படுகிறார்கள்? மனிதனுடைய சொந்த விருப்பப்படி பலவந்தமான போதனை செய்யப்படுகிறதா? இது மனிதனுடைய சம்மதத்துடன் செய்யப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை. நீ சம்மதிக்கவில்லை என்றாலும், அதைத் தடுக்க நீ எதுவும் செய்ய முடியாது. சாத்தான், உன் அறியாமையில் உன்னைப் பயிற்றுவித்து, தன் சிந்தனை, தன் ஜீவித விதிமுறைகள் மற்றும் தன் சாராம்சத்தை உனக்குத் தருகிறது.

நான்காவது மிரட்டல் மற்றும் மோசடி ஆகும். அதாவது, நீ அதை ஏற்றுக்கொள்வதற்கும், அதைப் பின்பற்றுவதற்கும், அதன் பணியில் பணியாற்றுவதற்கும் சாத்தான் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறது. அதன் இலக்குகளை அடைய அது எதையும் செய்யும். அது சில நேரங்களில் உனக்கு சிறிய உதவிகளை அளிக்கிறது. எல்லா நேரங்களிலும் உன்னைப் பாவம் செய்ய தூண்டுகிறது. நீ அதைப் பின்பற்றாவிட்டால், அது உன்னை கஷ்டப்படுத்தி, தண்டிக்கும், உன்னைத் தாக்கி, உனக்கு எதிராக சதி செய்ய பல்வேறு வழிகளைப் பயன்படுத்தும்.

ஐந்தாவது வஞ்சகம் மற்றும் முடக்கம் ஆகும். “வஞ்சகம் மற்றும் முடக்கம்” கணப்படும் இடமாவது, ஜனங்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போகும் மற்றும் நம்பத்தகுந்தாற்போல் தோன்றும் சில இனிமையான சொற்களையும் யோசனைகளையும் சாத்தான் அவர்களுக்குள் புகுத்தும் போது, அது ஜனங்களுடைய மாம்ச நிலைமை, அவர்களுடைய ஜீவிதம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. உண்மையில் அதன் ஒரே குறிக்கோள் உன்னை முட்டாளாக்குவதாகும். எது சரியானது, எது தவறு என்று உனக்குத் தெரியாதபடி அது உன்னை முடக்குகிறது. இதனால் நீ அறியாமல் ஏமாற்றப்பட்டு அதன் மூலம் அதன் கட்டுப்பாட்டிற்குள் வருகிறாய்.

ஆறாவது உடல் மற்றும் மனதை அழிப்பதாகும். மனிதனுடைய எந்த பகுதியை சாத்தான் அழிக்கிறது? சாத்தான் உன் மனதை அழித்து, உன்னை எதிர்க்க வல்லமையற்றவனாக ஆக்குகிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக, உன்னை மீறி உன் இருதயம் சாத்தானை நோக்கித் திரும்புகிறது. ஒவ்வொரு நாளும், இந்த யோசனைகளையும் கலாச்சாரங்களையும் பயன்படுத்தி உன்னைக் கட்டுப்படுத்தி, உருவாக்கி, உன் நம்பிக்கையை சிறிது சிறிதாக குறைவான மதிப்பிற்கு உட்படுத்துகிறது. இதனால் இறுதியில் நீ இனி ஒரு நல்ல மனிதராக மாற ஆசைப்படுவதில்லை. இதனால் நீ இனி “நீதி” என்று அழக்கப்படுபவற்றுக்காக நிற்க விரும்புவதில்லை. நீரோட்டத்திற்கு எதிராக நீந்துவதற்கான மன உறுதி உங்களிடம் இல்லை என்பதை அறியாமல், அதனுடன் சேர்ந்து ஓடுவீர்கள். சாத்தான் ஜனங்களை மிகவும் துன்புறுத்துகிறதும் அவர்கள் இனி மனிதர்களாக இல்லாமல் தங்கள் நிழல்களாக மாறுகிறதும் “அழிவு” ஆகும். சாத்தான் தாக்கும்போது, அவர்களைக் கைப்பற்றி விழுங்கும்போது, இது நிகழும்.

மனிதனைக் கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் இந்தத் தந்திரங்கள் ஒவ்வொன்றும் மனிதன் சாத்தானை எதிர்க்க வல்லமையற்றவனாக ஆக்குகின்றது. அவற்றில் ஏதேனும் ஒன்று மனிதனுக்கு ஆபத்தானதாக இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தான் செய்யும் எதுவும், அது பயன்படுத்தும் எந்தத் தந்திரங்களும் உன்னை சீரழியச் செய்யலாம். உன்னைச் சாத்தானுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடும். தீமை மற்றும் பாவத்தின் புதைகுழியில் உன்னை மூழ்கடிக்கக் கூடும். மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்கள் அத்தகையவை ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 164

இப்போதைக்கு, தேவனுடைய சாராம்சத்தைப் பற்றிய உங்கள் புலனுணர்வு அடிப்படையிலான புரிதலைக் கடந்து இன்னும் கற்றுக்கொள்ளவும், உறுதிப்படுத்தவும், உணரவும், அனுபவிக்கவும் நீண்ட காலம் தேவைப்படுகிறது. ஒரு நாள் உங்கள் இருதயத்தின் மையத்திலிருந்து, “தேவனுடைய பரிசுத்தம்” என்றால் தேவனுடைய சாராம்சம் குறைபாடற்றது, தேவனுடைய அன்பு தன்னலமற்றது, தேவன் மனிதனுக்கு அளிக்கும் அனைத்தும் தன்னலமற்றவை, தேவனுடைய பரிசுத்தமானது கறைபடாதது மற்றும் மறுக்க முடியாதது என்பதாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். தேவனுடைய சாராம்சத்தின் இந்த அம்சங்கள் அவர் தனது நிலையை வெளிப்படுத்த அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் மட்டுமல்லாமல் மாறாக ஒவ்வொரு மனிதனையும் மிகவும் நேர்மையுடன் நடத்துவதற்கு தேவன் தனது சாராம்சத்தைப் பயன்படுத்துகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய சாராம்சம் வெறுமையாக இல்லை. அது தத்துவார்த்தமாகவோ அல்லது கோட்பாடாகவோ இல்லை. அது நிச்சயமாக ஒரு வகையான அறிவும் அல்ல. அது மனிதனுக்கு ஒரு வகையான கல்வியும் அல்ல. அதற்குப் பதிலாக அது தேவனுடைய சொந்தச் செயல்களின் உண்மையான வெளிப்பாடு மற்றும் தேவன், தேவனிடம் இருப்பதன் வெளிப்படையான சாராம்சம் ஆகும். மனிதன் இந்தச் சாராம்சத்தை அறிந்து அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தேவன் செய்யும் ஒவ்வொன்றும் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகுந்த மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தேவனுடைய பரிசுத்தத்தை நீ புரிந்து கொள்ளும் போது, உன்னால் உண்மையிலேயே தேவனை நம்ப முடியும். தேவனுடைய பரிசுத்தத்தை நீ புரிந்து கொள்ளும் போது, “தேவனே தனித்துவமானவர்” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை உன்னால் உண்மையில் உணர முடியும். நீ இனிமேல் கற்பனை செய்ய மாட்டாய். இதைத் தவிர வேறு பாதைகள் உள்ளன என்று நினைத்து நீ நடக்கத் தேர்வு செய்ய மற்றும் தேவன் உனக்காக ஏற்பாடு செய்துள்ள அனைத்தையும் காட்டிக் கொடுக்க நீ இனி ஆயத்தமாக இருக்க மாட்டாய். தேவனுடைய சாராம்சம் பரிசுத்தமானது என்பதால், இதன் அர்த்தம் என்னவென்றால், தேவன் மூலமாகத் தான் ஜீவிதத்தில் நீ வெளிச்சத்தின் நீதியான பாதையில் நடக்க முடியும் என்பதாகும். தேவன் மூலமாகத் தான் நீ ஜீவிதத்தின் அர்த்தத்தை அறிய முடியும். தேவன் மூலமாகத் தான் நீ உண்மையான மனிதத்தன்மையுடன் ஜீவிக்க முடியும். இருவரும் சத்தியத்தை வைத்திருக்கிறார்கள். அதை அறிவார்கள். தேவன் மூலமாகத் தான் நீ சத்தியத்திலிருந்து ஜீவனைப் பெற முடியும். தீமையைத் தவிர்ப்பதற்கும், சாத்தானுடைய தீங்கு மற்றும் கட்டுப்பாட்டிலிருந்து உன்னை விடுவிப்பதற்கும் தேவனால் மட்டுமே உனக்கு உதவ முடியும். நீ இனி துன்பப்படக்கூடாது என்பதற்காக உன்னைத் துன்பக் கடலில் இருந்து தேவனைத் தவிர யாரும் இரட்சிக்க முடியாது. இது தேவனுடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது. தேவன் மட்டுமே உன்னை மிகவும் தன்னலமின்றி இரட்சிக்கிறார். உன் எதிர்காலத்திற்கும், உன் விதிக்கும், உன் ஜீவிதக்கும் தேவன் மட்டுமே பொறுப்பாகிறார். அவர் உனக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்கிறார். இது சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எதுவும் சாதிக்க கூடிய ஒன்றல்ல. சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எதுவும் தேவனுடைய சாராம்சத்தைப் போன்ற ஒரு சாராம்சத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால், எந்தவொரு மனிதன் அல்லது பொருளாலும் உன்னை இரட்சிக்கவோ உன்னை வழிநடத்தவோ முடியாது. மனிதனுக்கான தேவனுடைய சாராம்சத்தின் முக்கியத்துவம் இதுதான். நான் சொன்ன இந்த வார்த்தைகள் கொள்கை ரீதியாக கொஞ்சம் உதவக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீ சத்தியத்தைத் தொடர்ந்தால், நீ சத்தியத்தை நேசித்தால், இந்த வார்த்தைகள் உன் விதியை எவ்வாறு மாற்றும் என்பதை நீ அனுபவிப்பாய். ஆனால் அதையும் கடந்து அவை உன்னை மனித ஜீவிதத்தின் சரியான பாதையில் கொண்டு வரும். இதை நீ புரிந்து கொள்கிறாய், அல்லவா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 165

இன்று நம்முடைய கூட்டத்தின் ஆரம்பத்தில் நீங்கள் செய்த, என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு காரியத்தைப் பற்றி நான் உங்களுடன் பேச விரும்புகிறேன். உங்களில் சிலர் நன்றியுணர்வை வளர்த்துக் கொண்டிருந்திருக்கலாம், ஒருவேளை நீங்கள் நன்றியுள்ளவர்களாக உணர்ந்திருக்கலாம், எனவே உங்கள் உணர்ச்சி அதனுடன் தொடர்புடைய செயலைக் கொண்டு வந்திருக்கிறது. நீங்கள் செய்தது கண்டனத்துக்கு உட்படும் ஒன்று அல்ல. அது சரியோ தவறோ அல்ல. ஆனால் நீங்கள் சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்? முதலில், நீங்கள் இப்போது என்ன செய்தீர்கள் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினீர்களா அல்லது ஆராதிப்பதற்கு முழங்கால்படியிட்டீர்களா? யாரேனும் என்னிடம் சொல்ல முடியுமா? (அது சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவது என்று நாங்கள் நம்புகிறோம்.) அது சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவது என்று நீங்கள் நம்புகிறீர்கள். எனவே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதன் அர்த்தம் என்ன? (ஆராதனை.) அப்படியானால், ஆராதிப்பதற்கு முழங்கால்படியிடுதல் என்றால் என்ன? இதைப் பற்றி நான் இதற்கு முன்பு உங்களுடன் கலந்துரையாடியதில்லை. ஆனால் இன்று அவ்வாறு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். உங்கள் வழக்கமான கூட்டங்களில் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதைச் செய்கிறீர்களா? (இல்லை.) உங்கள் ஜெபங்களைச் சொல்லும்போது நீங்கள் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதைச் செய்கிறீர்களா? (ஆம்.) ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜெபிக்கும்போது, சூழ்நிலை அனுமதிக்கும் போதெல்லாம் நீங்கள் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதைச் செய்கிறீர்களா? (ஆம்.) அது நல்லது. ஆனால் இன்று நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றால், தேவன் இரண்டு வகையான மனிதர்களின் மண்டியிடுதலை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். எந்தவொரு ஆவிக்குரிய மனிதர்களின் கிரியைகளையும் நடத்தைகளையும் நாம் ஆலோசிக்க வேதாகமமோ அல்லது கிரியைகளையோ தேவையில்லை. அதற்குப் பதிலாக, இங்கே, இப்போது, நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். முதலாவதாக, சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதும் முழங்கால்படியிடுவதும் ஒன்றல்ல. தங்களை சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதைச் செய்வோரின் முழங்கால்படியிடுதலை தேவன் ஏன் ஏற்றுக்கொள்கிறார்? ஏனென்றால், தேவன் ஒருவனை தன்னிடம் அழைத்து, தேவனுடைய ஆணையை ஏற்க இந்த மனிதனை வரவழைக்கிறார். ஆகவே, தேவன் தனக்கு முன்பாக சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதைச் செய்ய அனுமதிப்பார். இது முதல் வகை மனிதன். இரண்டாவது வகை, தேவனுக்கு பயந்து, தீமையைத் தவிர்க்கும் ஒருவன் தேவனை வணங்குவதற்காக முழங்கால்படியிடுதல் ஆகும். இந்த இரண்டு வகையான ஜனங்கள் மட்டுமே உள்ளனர். எனவே நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்? உங்களால் சொல்ல முடியுமா? இது உங்கள் உணர்வுகளைக் கொஞ்சம் புண்படுத்தக்கூடும் என்றாலும், இதுதான் உண்மை. ஜெபிக்கும் போது ஜனங்களுடைய முழங்கால்படியிடுதல்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது—இது சரியானது ஆகும் மற்றும் அவ்வாறு இருக்க வேண்டும். ஏனென்றால் ஜனங்கள் ஜெபிக்கும் போது பெரும்பாலும் ஏதேனும் ஒன்றுக்காக ஜெபிப்பார்கள், தேவனுக்கு தங்கள் இருதயங்களைத் திறப்பார்கள் மற்றும் அவருடன் நேருக்கு நேர் வருவார்கள். இது தேவனுடனான, இருதயத்திற்கு இருதயமாகச் செய்யும், தொடர்பு மற்றும் பரிமாற்றம் ஆகும். உங்கள் முழங்கால்களில் வழிபடுவது வெறும் சம்பிரதாயமாக இருக்கக்கூடாது. இன்று நீங்கள் செய்ததற்காக உங்களை கண்டிப்பதாக இதை நான் அர்த்தப்படுத்தவில்லை. இந்தக் கொள்கையை நீங்கள் புரிந்து கொள்வதற்காக நான் உங்களுக்கு இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்—இது உங்களுக்குத் தெரியும், அல்லவா? (ஆம், எங்களுக்குத் தெரியும்.) இது மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எனவே, தேவனுடைய முகத்துக்கு முன்பாக சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கவும் முழங்கால்படியிடவும் ஜனங்களுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இந்த வாய்ப்பு ஒருபோதும் இருக்காது என்பதல்ல. விரைவில் அல்லது பிற்பாடு அதற்கான நாள் வரும். ஆனால் இப்போது அந்த நேரம் வரவில்லை. நீங்கள் உணர்கின்றீர்களா? இது உங்களை வருத்தப்பட வைக்கிறதா? (இல்லை.) அது நல்லது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தற்போதைய இக்கட்டான நிலை மற்றும் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இப்போது எத்தகைய உறவு உள்ளது என்பதை உங்கள் இருதயங்களில் அறிந்து கொள்ள இந்த வார்த்தைகள் உங்களை ஊக்குவிக்கும் அல்லது உந்துதல் தரும். நாம் சமீபத்தில் சிலவற்றைப் பேசி பரிமாறிக் கொண்டிருந்தாலும், தேவனைப் பற்றிய மனிதனுடைய புரிதல் இன்னும் போதுமானதாக இல்லை. தேவனைப் புரிந்து கொள்ள முற்படும் இந்தப் பாதையில் செல்ல மனிதனுக்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. இதனை, உங்களை அவசர அவசரமாகச் செய்ய வைப்பது அல்லது இத்தகைய நோக்கங்களை அல்லது உணர்வுகளை வெளிப்படுத்த விரைந்து செல்வது எனது நோக்கம் அல்ல. இன்று நீங்கள் செய்தது உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிக்காட்டலாம் மற்றும் வெளிப்படுத்தலாம். நான் அவற்றை உணர்ந்தேன். எனவே, நீங்கள் அதைச் செய்யும்போது, நான் எழுந்து நின்று எனது நல்வாழ்த்துக்களைத் தர விரும்பினேன். ஏனென்றால் நீங்கள் அனைவரும் நலமாக இருக்க விரும்புகிறேன். எனவே, எனது ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு செயலிலும், உங்களுக்கு உதவவும், உங்களுக்கு வழிகாட்டவும், எல்லாவற்றையும் பற்றிய சரியான புரிதலையும் சரியான பார்வையையும் நீங்கள் பெறவும் என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்கிறேன். இதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், அல்லவா? (ஆம்.) அது நல்லது. தேவனுடைய பல்வேறு மனநிலைகள், தேவன் மற்றும் தேவனிடம் இருப்பதைப் பற்றிய அம்சங்கள் மற்றும் தேவன் செய்யும் கிரியைப் பற்றி ஜனங்களுக்கு சில புரிதல்கள் இருந்தாலும், இந்தப் புரிதலின் பெரும்பகுதி ஒரு பக்கத்தில் உள்ள சொற்களைப் படிப்பதை விடவும், கொள்கையளவில் அவற்றைப் புரிந்து கொள்வதற்கும் அல்லது அவற்றைப் பற்றி சிந்திப்பதற்கும் மேலானது ஆகும். உண்மையான அனுபவத்திலிருந்து வரும் உண்மையான புரிதலும் நுண்ணறிவும் ஜனங்களிடம் அதிகமாக இல்லை. ஜனங்களுடைய இருதயங்களை எழுப்ப தேவன் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தினாலும், இதைச் செய்வதற்கு முன்பாக இன்னும் நீண்ட பாதையில் மனிதன் நடக்க வேண்டியிருக்கும். தேவன் அவர்களைப் புறக்கணித்து விட்டார், தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டார் அல்லது அவர்களுக்குத் தன் முதுகைக் காட்டிவிட்டார் என்று யாரும் உணர நான் விரும்பவில்லை. நான் பார்க்க விரும்புவது எல்லாம் சத்தியத்தைத் தொடர்வதும், தேவனைப் புரிந்து கொள்ளவதும், எந்தவிதமான சந்தேகங்களோ அல்லது சுமைகளோ இன்றி, நிலையான உறுதியுடன் தைரியமாக முன்னேறுவதும் ஆகும். நீ என்ன தவறுகளைச் செய்திருந்தாலும், நீ எவ்வளவு தூரம் தவறானவனாக இருந்தாலும் அல்லது எவ்வளவு தீவிரமாக மீறியிருந்தாலும், தேவனைப் புரிந்து கொள்வதற்கான உன் முயற்சியில் நீ சுமக்க வேண்டிய சுமைகளாகவோ அல்லது அதிகப்படியான சாமான்களாகவோ இவற்றை மாற்ற வேண்டாம். தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். எல்லா நேரங்களிலும், தேவன் மனிதனுடைய இரட்சிப்பை தனது இருதயத்தில் வைத்திருக்கிறார். அது ஒருபோதும் மாறாது. அது தேவனுடைய சாராம்சத்தின் மிக விலையேறப்பெற்ற பகுதி ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

முந்தைய: தேவனை அறிதல் III

அடுத்த: தேவனை அறிதல் V

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக