தேவனை அறிதல் III

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 83

தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆதி. 1:3-5  தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

ஆதி. 1:6-7  பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

ஆதி. 1:9-11  பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

ஆதி. 1:14-15  பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

ஆதி. 1:20-21  பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

ஆதி. 1:24-25  பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

முதல் நாளில், தேவனுடைய அதிகாரத்தின் நிமித்தமாக மனிதகுலத்தின் பகலும் இரவும் பிறந்து நிலைபெற்றது

முதல் பத்தியைப் பார்ப்போம்: “தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று” (ஆதி. 1:3-5). இந்தப் பத்தியானது சிருஷ்டிப்பின் தொடக்கத்தில் நிகழ்ந்த தேவனுடைய முதல் கிரியையையும், தேவன் கடந்து வந்த முதல் நாளையும் விவரிக்கிறது. முதல் நாளில் ஒரு மாலை மற்றும் காலை இருந்தது. ஆனால், அது ஒரு அசாதாரண நாள்: தேவன் எல்லாவற்றிற்கும் வெளிச்சத்தைத் தயாரிக்கத் தொடங்கினார் மற்றும் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரித்தார். இந்த நாளில், தேவன் பேசத் தொடங்கினார், அவருடைய வார்த்தைகளும் அதிகாரமும் அருகருகே இருந்தன. அவருடைய அதிகாரம் எல்லாவற்றிலும் வெளிப்படத் தொடங்கியது. அவருடைய வார்த்தைகளின் விளைவாக அவருடைய வல்லமை எல்லாவற்றிலும் பரவியது. இந்த நாள் முதல், தேவனுடைய வார்த்தைகள், தேவனுடைய அதிகாரம் மற்றும் தேவனுடைய வல்லமை ஆகியவற்றின் காரணமாக சகலமும் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன மற்றும் தேவனுடைய வார்த்தைகள், தேவனுடைய அதிகாரம், வல்லமை ஆகியவற்றின் காரணமாக அவை செயல்படத் தொடங்கின. “வெளிச்சம் உண்டாகக்கடவது,” என்று தேவன் சொன்னபோது, வெளிச்சம் உண்டாகியது. தேவன் எந்தவொரு கிரியையின் திட்டத்தையும் தொடங்கவில்லை. அவருடைய வார்த்தைகளின் விளைவாக வெளிச்சம் தோன்றியது. தேவன் பகல் என்று அழைத்ததுமாகிய, மனிதன் இன்றும் தான் வாழ்வதற்கு சார்ந்திருப்பதுமாகிய வெளிச்சம் இதுதான். தேவனுடைய கட்டளைப்படி, அதன் சாராம்சமும் மதிப்பும் ஒருபோதும் மாறவில்லை, அது ஒருபோதும் மறைந்துவிடவில்லை. அதன் இருப்பு தேவனுடைய அதிகாரத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறது மற்றும் சிருஷ்டிகர் இருப்பதை அறிவிக்கிறது. அது மீண்டும் மீண்டும் சிருஷ்டிகருடைய அடையாளம் மற்றும் நிலையை உறுதிப்படுத்துகிறது. அது தொட்டுணர முடியாததோ மாயையானதோ அல்ல, ஆனால் மனிதனால் காணக்கூடிய ஒரு உண்மையான வெளிச்சமாக இருக்கிறது. அந்தக் காலத்திலிருந்து, இந்த வெறுமையான உலகில், “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது,” அங்கு முதல் பொருள் சிருஷ்டிக்கப்பட்டது. இந்த விஷயம் தேவனுடைய வாயின் வார்த்தைகளிலிருந்து வந்தது மற்றும் தேவனுடைய அதிகாரம் மற்றும் வார்த்தைகளால் எல்லாவற்றையும் சிருஷ்டித்தது முதல் செயலில் தோன்றியது. அதைத் தொடர்ந்து, வெளிச்சம் மற்றும் இருளைப் பிரிக்க தேவன் கட்டளையிட்டார்…. தேவனுடைய வார்த்தைகளால் எல்லாம் மாறியது மற்றும் நிறைவேறியது…. தேவன் இந்த வெளிச்சத்தைப் “பகல்” என்றும், இருளை “இரவு” என்றும் அழைத்தார். அந்த நேரத்தில், தேவன் சிருஷ்டிக்க விரும்பிய உலகில், முதல் மாலை மற்றும் முதல் காலை சிருஷ்டிக்கப்பட்டது. அதை முதல் நாள் என்று தேவன் கூறினார். எல்லாவற்றையும் சிருஷ்டித்த சிருஷ்டிகருடைய சிருஷ்டிப்பில் இது முதல் நாளாக இருந்தது, எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் தொடக்கமாக இருந்தது மற்றும் சிருஷ்டிகருடைய அதிகாரமும் வல்லமையும், அவர் சிருஷ்டித்த இந்த உலகில் வெளிப்படுத்தப்பட்ட முதல் முறையாகவும் இருந்தது.

இந்த வார்த்தைகளின் மூலம், தேவனுடைய அதிகாரத்தையும் தேவனுடைய வார்த்தைகளையும், தேவனுடைய வல்லமையையும் மனிதனால் காண முடிகிறது. ஏனென்றால், தேவன் மட்டுமே அத்தகைய வல்லமையைக் கொண்டிருக்கிறார். எனவே, தேவனுக்கு மட்டுமே அத்தகைய அதிகாரம் இருக்கிறது. ஏனென்றால், தேவன் அத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார், எனவே தேவனுக்கு மட்டுமே அத்தகைய வல்லமை இருக்கிறது. யாதொரு மனிதனுக்கோ பொருளுக்கோ அது போன்ற அதிகாரமும் வல்லமையும் இருக்க முடியுமா? உங்கள் இருதயங்களில் பதில் இருக்கிறதா? தேவனைத் தவிர, சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்தவொரு மனிதருக்காகிலும் அத்தகைய அதிகாரம் இருக்கிறதா? எந்தவொரு புஸ்தகத்திலும் அல்லது வெளியீட்டிலும் அதுபோன்ற ஒரு உதாரணத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? யாரேனும் வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்ததாக ஏதேனும் பதிவு இருக்கிறதா? அது வேறு எந்தப் புஸ்தகங்களிலும் பதிவுகளிலும் காணப்படவில்லை. தேவனுடைய அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரே அதிகாரப்பூர்வ மற்றும் வல்லமைவாய்ந்த வார்த்தைகள் இவை. அவை வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள் தேவனுடைய தனித்துவமான அதிகாரம் மற்றும் அடையாளத்தைப் பற்றிப் பேசுகின்றன. அத்தகைய அதிகாரமும் வல்லமையும் தேவனுடைய தனித்துவமான அடையாளத்தை அடையாளப்படுத்துகின்றன என்று கூற முடியுமா? அவை தேவனிடம் இருப்பதாக மற்றும் தேவனிடம் மட்டுமே இருப்பதாகக் கூற முடியுமா? அத்தகைய அதிகாரத்தையும் வல்லமையையும் தேவன் மட்டுமே கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை! இந்த அதிகாரம் மற்றும் வல்லமை எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத ஜீவனாலும் வைத்திருக்கவோ மாற்றவோ முடியாது! தனித்துவமான தேவனுடைய குணாதிசயங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறதா? நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த வார்த்தைகள், தேவன் தனித்துவமான அதிகாரம் மற்றும் தனித்துவமான வல்லமை, உயர்ந்த அடையாளம் மற்றும் அந்தஸ்தைக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை விரைவாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ள ஜனங்களை அனுமதிக்கின்றன. மேலே உரையாடியதிலிருந்து நீங்கள் நம்புகிற தேவன் தனித்துவமான தேவன் என்று சொல்ல முடியுமா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 84

தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

இரண்டாவது நாளில், தேவனுடைய அதிகாரம் ஜலத்தை ஏற்பாடு செய்கிறது மற்றும் ஆகாயவிரிவை உருவாக்குகிறது மற்றும் மனிதன் உயிர்வாழ்வதற்கான மிக அடிப்படையான இடம் தோன்றுகிறது

“பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று” (ஆதி. 1:6-7). “ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது” என்று தேவன் சொன்ன பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன? வேதவசனங்களில் அது கூறுகிறது: “தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்.” தேவன் இதைக் கூறி நிறைவேற்றியப் பின் முடிவு என்னவாக இருந்தது? பதில் பத்தியின் கடைசி பகுதியில் இருக்கிறது: “அது அப்படியே ஆயிற்று.”

இந்த இரண்டு குறுகிய வாக்கியங்களும் ஒரு அற்புதமான நிகழ்வைப் பதிவுசெய்கின்றன மற்றும் ஒரு அற்புதமான காட்சியை விவரிக்கின்றன—தேவன் ஜலத்தை நிர்வகித்த மகத்தான முயற்சியானது, மனிதன் இருக்கக்கூடிய ஒரு இடத்தை உருவாக்கிற்று …

இந்தக் காட்சியில், ஜலமும் காற்றும் ஒரே கணத்தில் தேவனுடைய கண்களுக்கு முன்பாகத் தோன்றுகின்றன மற்றும் அவை தேவனுடைய வார்த்தைகளின் அதிகாரத்தால் பிரிக்கப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்ட முறையில் “மேலே” மற்றும் “கீழே” என பிரிக்கப்படுகின்றன. அதாவது, தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆகாய விரிவு கீழே உள்ள ஜலத்தை மூடியது மட்டுமல்லாமல், மேலே உள்ள ஜலத்தையும் உயர்த்திப் பிடித்தது…. இதில், அவருடைய அதிகாரத்தின் மாட்சிமையிலும், சிருஷ்டிகர் ஜலத்தை நகர்த்தி கட்டளையிட்ட காட்சியின் சிறப்பையும், ஆகாயவிரிவை உருவாக்கிய காட்சியின் சிறப்பையும் மனிதனால் ஊமையாக வெறித்துப் பார்க்க, அவரைப் போற்ற மட்டுமே முடியும், அதற்கு ஈடாகச் செயல்பட முடியாது. தேவன் தனது வார்த்தைகளின் மூலமாகவும், தனது வல்லமை மற்றும் அதிகாரத்தின் மூலமாகவும், மற்றொரு பெரிய சாதனையை தேவன் படைத்தார். அது சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் மாட்சிமை அல்லவா? தேவனுடைய செயல்களை விளக்க வேதவசனங்களைப் பயன்படுத்துவோம்: தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசினார், தேவனுடைய இந்த வார்த்தைகளால் ஜலத்துக்கு நடுவில் ஒரு ஆகாய விரிவு இருந்தது. அதே சமயம், தேவனுடைய இந்த வார்த்தைகளால் இந்த இடத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அது ஒரு சாதாரண மாற்றமல்ல. ஆனால் ஒன்றும் இல்லாமையிலிருந்து ஒன்றாக உருவாகிய ஒரு வகையான மாற்றமாகும். அது சிருஷ்டிகருடைய எண்ணங்களிலிருந்து பிறந்தது மற்றும் சிருஷ்டிகரால் பேசப்பட்ட வார்த்தைகளால் ஒன்றும் இல்லாமையிலிருந்து ஒன்றாக ஆனது. மேலும், இது முதல் சிருஷ்டிகரின் நிமித்தமாக இருக்கும் மற்றும் உறுதியாக நிற்கும் மற்றும் இடம்பெயரும், மாறும் மற்றும் சிருஷ்டிகருடைய எண்ணங்களுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படும். இந்தப் பத்தியானது முழு உலகத்தையும் சிருஷ்டித்ததில் சிருஷ்டிகர் செய்த இரண்டாவது கிரியையை விவரிக்கிறது. அது சிருஷ்டிகருடைய அதிகாரம் மற்றும் வல்லமையின் மற்றொரு வெளிப்பாடாகும். அது சிருஷ்டிகருடைய மற்றொரு முன்னோடியான முயற்சியாகும். உலக அஸ்திவாரம் தொடங்கிய பின், சிருஷ்டிகர் கடந்து வந்த இரண்டாவது நாள் இந்த நாள். அது அவருக்கு இன்னொரு அற்புதமான நாள்: அவர் வெளிச்சத்தின் மத்தியில் நடந்தார், அவர் ஆகாயவிரிவைக் கொண்டு வந்தார், அவர் ஜலத்தை ஏற்பாடு செய்து ஆட்சி செய்தார். அவருடைய செயல்கள், அவருடைய அதிகாரம் மற்றும் அவருடைய வல்லமை ஆகியவை புதிய நாளில் கிரியைக்கு உள்ளாக்கப்பட்டன …

தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதற்கு முன்பு ஜலத்துக்கு நடுவில் ஆகாயவிரிவு இருந்ததா? நிச்சயமாக இல்லை! “ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது” என்று தேவன் சொன்ன பின்னர் நடந்தது என்ன? தேவன் சித்தம் கொண்ட விஷயங்கள் தோன்றின. ஜலத்தின் நடுவில் ஆகாயவிரிவு இருந்தது. ஜலம் பிரிந்தது. ஏனென்றால், “அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது.” என்று தேவன் சொன்னார். இவ்வாறு, தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றி, எல்லாவற்றின் மத்தியிலும் இரண்டு புதிய காரியங்கள், புதிதாகப் பிறந்த இரண்டு விஷயங்கள் தேவனுடைய அதிகாரம் மற்றும் வல்லமையின் விளைவாகத் தோன்றின. இந்த இரண்டு புதிய விஷயங்களின் தோற்றத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? சிருஷ்டிகருடைய வல்லமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்கிறீர்களா? சிருஷ்டிகருடைய தனித்துவமான மற்றும் அசாதாரண வல்லமையை நீங்கள் உணர்கிறீர்களா? அத்தகைய வல்லமை மற்றும் வல்லமையின் மகத்துவம் தேவனுடைய அதிகாரத்தின் விளைவாகவும், இந்த அதிகாரம் தேவனுடைய பிரதிநிதித்துவமுமாகவும், தேவனுடைய தனித்துவமான பண்பாகவும் இருக்கிறது.

இந்தப் பத்தி தேவனுடைய தனித்துவத்தைப் பற்றிய ஆழமான புரிதலை மீண்டும் கொடுத்துள்ளதா? உண்மையில், அது போதுமானதன்று. சிருஷ்டிகருடைய அதிகாரமும் வல்லமையும் இதற்கு அப்பாற்பட்டது. எந்தவொரு ஜீவனிடமும் இல்லாத ஒரு சாராம்சத்தைக் கொண்டிருப்பதாலும், மேலும் அவருடைய அதிகாரமும் வல்லமையும் அசாதாரணமானவை, வரம்பற்றவை, அனைத்திற்கும் மேலானவை, எல்லாவற்றிற்கும் மேலாக நிற்பவை மற்றும் அவருடைய அதிகாரம் மற்றும் அவர் என்ன கொண்டுள்ளார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பவை ஜீவனைச் சிருஷ்டிக்கலாம், அற்புதங்களைச் செய்யலாம் மற்றும் ஒவ்வொரு அற்புதமான மற்றும் அசாதாரணமான நிமிடத்தையும் நொடியையும் உருவாக்கலாம் என்பதனாலும் மட்டுமே அவர் தனித்துவமாக இல்லை. அதே சமயம், அவர் உருவாக்கும் ஜீவனை அவரால் நிர்வகிக்க முடியும். தாம் உருவாக்கும் அற்புதங்கள் மற்றும் ஒவ்வொரு நிமிடம் மற்றும் நொடியின் மீதும் அவரால் ராஜரீகத்தை வைத்திருக்க முடியும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 85

தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

மூன்றாம் நாளில், தேவனுடைய வார்த்தைகள் பூமிக்கும் சமுத்திரங்களுக்கும் பிறப்பைக் கொடுக்கின்றன மற்றும் தேவனுடைய அதிகாரம் உலகை ஜீவஜந்துக்களால் நிரம்பச் செய்கிறது

ஆதியாகமம் 1:9-11 வரையுள்ள வசனங்களில் முதல் வாக்கியத்தை வாசிப்போம்: “பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்.” “வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது” என்பதை மட்டும் தேவன் கூறிய பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன? இந்த இடத்தில் வெளிச்சம் மற்றும் ஆகாயவிரிவைத் தவிர வேறு என்ன இருந்தது? வேதாகமத்தில், இது எழுதப்பட்டுள்ளது: “தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.” அதாவது, இந்த இடத்தில் இப்போது பூமியும் சமுத்திரங்களும் இருந்தன. பூமியும் சமுத்திரங்களும் பிரிக்கப்பட்டன. இந்தப் புதிய விஷயங்களின் தோற்றம் தேவனுடைய வாயிலிருந்து வந்த கட்டளையால் விளைந்தது, “அது அப்படியே ஆயிற்று.” தேவன் இதைச் செய்யும்போது அவசரமாகச் செயல்பட்டதாக வேதாகமம் விவரிக்கிறதா? அவர் சரீரக் கிரியையில் ஈடுபட்டதாக அது விவரிக்கிறதா? இந்நிலையில், தேவன் இதை எவ்வாறு செய்தார்? இந்தப் புதிய விஷயங்களை தேவன் எவ்வாறு சிருஷ்டித்தார்? வெளிப்படையாகவே, இவை அனைத்தையும் நிறைவேற்ற மற்றும் இவற்றை முற்றிலுமாக சிருஷ்டிக்க தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

…………

இந்தப் பத்தியின் இறுதி வாக்கியத்தை நாம் தொடர்ந்து வாசிப்போம்: “அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.” தேவன் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த விஷயங்கள் அனைத்தும் தேவனுடைய எண்ணங்களைப் பின்பற்றி உருவாகின மற்றும் ஒரு நொடிப் பொழுதில், ஜீவித நிலைகளின் நுட்பமான சிறிய வகைப்பாடுகள் பூமிக்குள் இருந்து உறுதியற்ற நிலையில் தங்களது தலைகளைத் துளைத்துக் கொண்டிருந்தன மற்றும் அவை தம் சரீரங்கள் மீது படிந்துள்ள அழுக்குத் துணுக்குகளை அகற்றுவதற்கு முன்பாகவே அவை ஒன்றோடொன்று ஆவலுடன் கையசைத்து உலகிற்கு வாழ்த்து தெரிவித்து, தலையசைத்து புன்னகைத்துக் கொண்டிருந்தன. சிருஷ்டிகருக்கு, அவர்தாம் அளித்த ஜீவனுக்காக அவை நன்றி தெரிவித்தன மற்றும் அவை எல்லாவற்றிலும் ஒரு அங்கமாக இருப்பதாகவும், அவை ஒவ்வொன்றும் சிருஷ்டிகரின் அதிகாரத்தை வெளிப்படுத்த தங்கள் ஜீவனை அர்ப்பணிப்பதாகவும் உலகிற்கு அறிவித்தன. தேவனுடைய வார்த்தைகள் பேசப்பட்டபோது, பூமியானது செழுமையாகவும், பசுமையாகவும் மாறியது, மனிதனால் அனுபவிக்கக்கூடிய அனைத்து வகையான பூண்டுகளும் தரையில் முளைத்தன, விருட்சங்கள் மற்றும் காடுகளால் மலைகளும் சமவெளிகளும் அடர்த்தியாக மாறின…. ஜீவிதத்தின் எந்த தடயமும் இல்லாத இந்த தரிசான உலகமானது, புல், பூண்டுகள் மற்றும் விருட்சங்களால் ஏராளமாக சூழப்பட்டிருந்தது மற்றும் பசுமையால் நிரம்பி வழிந்தது…. புல்லின் நறுமணம் மற்றும் மண்ணின் நறுமணம் காற்று மூலமாகப் பரவியது மற்றும் தாவரங்களின் வரிசை காற்றின் சுழற்சியுடன் இணைந்து சுவாசிக்கத் தொடங்கியது மற்றும் வளர்ச்சி முறையினைத் தொடங்கியது. அதே சமயம், தேவனுடைய வார்த்தைகளை மற்றும் தேவனுடைய எண்ணங்களைப் பின்பற்றி, அனைத்துத் தாவரங்களும், தாம் வளர்ந்து, மலர்ந்து, கனிகளைத் தாங்கும் மற்றும் பெருகும் நிரந்தரமான ஜீவிதச் சுழற்சிகளைத் தொடங்கின. அவை தம்தம் ஜீவித ஓட்டங்களைக் கண்டிப்பான முறையில் கடைபிடிக்கத் தொடங்கின மற்றும் எல்லாவற்றிலும் தம்தம் கடைமைகளைச் செய்யத் தொடங்கின…. சிருஷ்டிகரின் வார்த்தைகளால் அவை அனைத்தும் பிறந்து ஜீவித்தன. சிருஷ்டிகரின் இடைவிடாத ஏற்பாட்டையும் ஊட்டத்தையும் அவை பெற்று, சிருஷ்டிகரின் அதிகாரத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்தும் பொருட்டு பூமியின் ஒவ்வொரு மூலையிலும் எப்பொழுதும் உறுதியுடன் ஜீவித்து சிருஷ்டிகர் தங்களுக்கு வழங்கிய ஜீவனின் வல்லமையை அவை எப்பொழுதும் வெளிப்படுத்தின …

சிருஷ்டிகரின் ஜீவிதம் அசாதாரணமானது, அவருடைய எண்ணங்கள் அசாதாரணமானவை மற்றும் அவருடைய அதிகாரம் அசாதாரணமானது. ஆகவே, அவருடைய வார்த்தைகள் உச்சரிக்கப்படும் போது, இறுதி விளைவாக “அது அப்படியே ஆயிற்று.” தேவன் செயல்படும்போது தன் கரங்களால் கிரியை செய்யத் தேவையில்லை என்பது தெளிவாகிறது. அவர் வெறுமனே தம்முடைய எண்ணங்களை, கட்டளையிடவும், தம்முடைய வார்த்தைகளை ஒழுங்குபடுத்தவும் பயன்படுத்துகிறார், இவ்வாறு, விஷயங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த நாளில், தேவன் ஜலத்தை ஒரே இடத்தில் சேகரித்து, வறண்ட பூமியைத் தோன்றச் செய்தார். அதன் பிறகு தேவன் பூமியிலிருந்து புல்லை முளைக்கச் செய்தார். அங்கே விதைகளை விளைவிக்கும் பூண்டுகள், பழங்களைத் தரும் விருட்சங்கள் வளர்ந்தன. தேவன், அவை ஒவ்வொன்றையும் வகைப்படுத்தினார். ஒவ்வொரு வகையிலும் அதன் சொந்த விதை இருக்கும்படியாகச் செய்தார். தேவனுடைய எண்ணங்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளின் கட்டளைகளுக்கும் ஏற்ப, இவை அனைத்தும் தோன்றின. ஒவ்வொன்றும், ஒவ்வொன்றாக இந்தப் புதிய உலகில் தோன்றின.

தேவன் தம்முடைய கிரியையைத் தொடங்குவதற்கு முன்பாகவே, அவருடைய மனதில் எதை நிறைவேற்ற விரும்புகிறார் என்பதற்கான ஒரு காட்சி அவரிடம் ஏற்கனவே இருந்தது மற்றும் இந்த விஷயங்களை தேவன் நிறைவேற்ற ஆயத்தமாகியபோதும், இந்தக் காட்சியின் உள்ளடக்கத்தைப் பற்றிப் பேச தேவன் வாய் திறந்தபோதும், தேவனுடைய அதிகாரம் மற்றும் வல்லமையின் காரணமாக எல்லாவற்றிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. தேவன் அதை எவ்வாறு செய்தார் அல்லது அவர் எவ்வாறு தம்முடைய அதிகாரத்தைச் செலுத்தினார் என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்தும் தேவனுடைய திட்டத்தின்படி படிப்படியாகவும், தேவனுடைய வார்த்தைகளாலும் நிறைவேற்றப்பட்டன மற்றும் தேவனுடைய வார்த்தைகள் மற்றும் அதிகாரத்தின் காரணமாக பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையில் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் சிருஷ்டிகரின் அதிகாரத்தையும், சிருஷ்டிகரின் ஜீவிதத்தின் வல்லமையின் அசாதாரண தன்மையையும் சிறப்பையும் வெளிப்படுத்தின. அவரது எண்ணங்கள் எளிமையான யோசனைகள் அல்லது வெறுமையான காட்சி அல்ல, ஆனால் ஜீவனின் வல்லமை மற்றும் அசாதாரண வலிமை கொண்ட ஒரு அதிகாரம் ஆகும். அவை அனைத்தும் மாற, புத்துயிர் பெற, புதுப்பிக்கப்பட மற்றும் அழிந்துபோகக் காரணமாக இருக்கின்ற வல்லமையாகும். இதன் விளைவாக, எல்லாம் அவருடைய எண்ணங்களால் செயல்படுகின்றன, அதே நேரத்தில், அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளால் நிறைவேற்றப்படுகின்றன …

எல்லாம் தோன்றுவதற்கு முன்பு, தேவனுடைய எண்ணங்களில் ஒரு முழுமையான திட்டம் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டது மற்றும் ஒரு புதிய உலகம் நீண்ட காலத்திற்கு முன்பே தேவனுடைய எண்ணங்களில் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் நாளில் பூமியில் எல்லா வகையான தாவரங்களும் தோன்றினாலும், இந்த உலகத்தைப் படைக்கும் நிலைகளை நிறுத்த தேவனிடம் எந்தக் காரணமும் இல்லாதிருந்தது. ஒவ்வொரு புதிய விஷயத்தின் படைப்பையும் தொடர்ந்து நிறைவேற்ற, தம்முடைய வார்த்தைகளைத் தொடர்ந்து பேச அவர் விரும்பினார். தேவன் பேசினார், தம் கட்டளைகளை வெளியிட்டார், தம் அதிகாரத்தைப் பயன்படுத்தினார், தம் வல்லமையை வெளிப்படுத்தினார் மற்றும் எல்லா காரியங்களுக்கும் மற்றும் தாம் சிருஷ்டிக்க எண்ணிய மனிதகுலத்திற்கும் தாம் ஆயத்தம் செய்யத் திட்டமிட்ட எல்லாவற்றையும் தேவன் ஆயத்தம் செய்தார் …

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 86

தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

நான்காம் நாளில், தேவன் மீண்டும் தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் மனிதகுலத்தின் பருவங்கள், நாட்கள் மற்றும் ஆண்டுகள் தோன்றுகின்றன

சிருஷ்டிகர் தம்முடைய திட்டத்தை நிறைவேற்ற தம்முடைய வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இவ்வாறு அவர் தம்முடைய திட்டத்தின் முதல் மூன்று நாட்களைக் கடந்தார். இந்த மூன்று நாட்களில், தேவன் தன்னை பரபரப்பானவராகவோ அல்லது சோர்வடைந்தவராகவோ காணவில்லை. மாறாக, அவர் தம்முடைய திட்டத்தின் அற்புதமான முதல் மூன்று நாட்களைக் கடந்து, உலகின் தீவிர மாற்றத்தின் பெரும் பொறுப்பை நிறைவேற்றினார். அவரது கண்களுக்கு முன்பாக ஒரு புதிய உலகம் தோன்றியது மற்றும் துண்டு துண்டாக, அவருடைய எண்ணங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அழகான காட்சி இறுதியாக தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்பட்டது. ஒவ்வொரு புதிய விஷயத்தின் தோற்றமும் புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறப்பைப் போன்றது. சிருஷ்டிகர் ஒரு காலத்தில் தம்முடைய எண்ணங்களில் வைத்திருந்த காட்சி, தற்போது ஜெநிப்பிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நேரத்தில், அவரது இருதயம் ஒரு திருப்தியைப் பெற்றது. எனினும், அவருடைய திட்டம் தொடக்கத்தை மட்டுமே பெற்றிருந்தது. கண்சிமிட்டும் நேரத்தில், ஒரு புதிய நாள் வந்துவிட்டது—மற்றும் சிருஷ்டிகரின் திட்டத்தின் அடுத்த பக்கம் என்னவாக இருந்தது? அவர் என்ன சொன்னார்? அவர் எவ்வாறு தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தினார்? இதற்கிடையில், இந்தப் புதிய உலகில் என்னென்ன புதிய விஷயங்கள் வந்தன? சிருஷ்டிகரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்த நான்காம் நாளை நோக்கி நம் பார்வை செல்கிறது. இந்த நாள் மற்றொரு புதிய தொடக்கமாக இருந்தது. நிச்சயமாக, சிருஷ்டிகரைப் பொறுத்தவரையில், இது சந்தேகத்திற்கு இடமின்றி மற்றொரு அற்புதமான நாளாக இருந்தது. அது இன்றைய மனிதகுலத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு நாளாக இருந்தது. நிச்சயமாக, அது மதிப்பிட முடியாத ஒரு நாளாக இருந்தது. அது எப்படிப்பட்ட அற்புதமானதாக இருந்தது, அது எப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது மற்றும் அது எத்தகைய மதிப்பிட முடியாததாக இருந்தது? முதலில் சிருஷ்டிகர் பேசிய வார்த்தைகளைக் கேட்போம் …

“பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:14-15). இது வறண்ட பூமியையும் அதன் மீது உள்ள தாவரங்களையும் அவர் சிருஷ்டித்ததைத் தொடர்ந்து சிருஷ்டிகளால் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய அதிகாரத்தின் மற்றொரு கிரியையாகும். தேவனைப் பொறுத்தவரையில், அத்தகைய செயல் அவர் ஏற்கனவே செய்ததைப் போலவே எளிதானது. ஏனென்றால், தேவனுக்கு அத்தகைய வல்லமை இருக்கிறது. தேவன் தம்முடைய வார்த்தையைப் போலவே சிறந்தவர் மற்றும் அவருடைய வார்த்தை நிறைவேறும். ஆகாயவிரிவில் சுடர்கள் தோன்றும்படி தேவன் கட்டளையிட்டார். இந்தச் சுடர்கள் ஆகாயவிரிவிலும் பூமியிலும் பிரகாசித்தது மட்டுமல்லாமல், பகல் மற்றும் இரவு, பருவங்கள், நாட்கள் மற்றும் வருடங்களுக்கு அடையாளங்களாக செயல்பட்டன. இவ்வாறு, தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசியது போல, தேவன் நிறைவேற்ற விரும்பிய ஒவ்வொரு செயலும் தேவனுடைய அர்த்தத்திற்கும் தேவனால் நியமிக்கப்பட்ட முறைக்கும் ஏற்ப நிறைவேற்றப்பட்டது.

ஆகாயவிரிவில் உள்ள சுடர்கள் ஆகாயவிரிவில் வெளிச்சம் வீசக்கூடியவை. அவற்றால் ஆகாயவிரிவையும் பூமியையும் சமுத்திரங்களையும் பிரகாசிக்கச் செய்ய முடியும். அவை தேவனால் கட்டளையிடப்பட்ட முறை மற்றும் வேகத்தின்படி சுழல்கின்றன மற்றும் பூமியில் வெவ்வேறு கால இடைவெளிகளைப் பிரகாசிக்கச் செய்கின்றன. இவ்வாறு, சுடர்களின் சுழற்சிகள் பூமியின் கிழக்கு மற்றும் மேற்கில் இரவையும் பகலையும் உருவாக்குகின்றன. அவை இரவு மற்றும் பகலுக்கான அறிகுறிகள் மட்டுமல்ல. இந்த வெவ்வேறு சுழற்சிகள் மூலம் மனிதகுலத்தின் பண்டிகைகளையும் பல்வேறு சிறப்பு நாட்களையும் அவை குறிக்கின்றன. தேவனால் வழங்கப்பட்ட வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் ஆகிய நான்கு பருவங்களுக்கு அவை சரியான நிறைவாக மற்றும் துணையாக இருகின்றன. அதனுடன் சுடர்கள் இணக்கமாகச் சேர்ந்து, சந்திரனின் காலங்கள், நாட்கள் மற்றும் மனிதகுலத்தின் ஆண்டுகளுக்கான வழக்கமான மற்றும் துல்லியமான குறியீடுகளாகச் செயல்படுகின்றன. வேளாண்மையின் வருகைக்குப் பிறகு தேவன் உருவாக்கிய சுடர்களால் ஏற்பட்ட சந்திரன் சார்ந்த கணிப்புகள், நாட்கள் மற்றும் ஆண்டுகள் ஆகியவற்றை மனிதன் புரிந்துகொண்டு எதிர்கொள்ளத் தொடங்கினாலும், உண்மையில் மனிதன் இன்று புரிந்துகொள்ளும் சந்திரனின் காலங்கள், நாட்கள் மற்றும் ஆண்டுகள் ஆகியவை வெகுகாலத்திற்கு முன்பே எல்லாவற்றையும் படைத்த தேவனால் சிருஷ்டிப்பின் நான்காம் நாளில் உருவாக்கம் பெறத் தொடங்கிவிட்டன. அதேபோல் மனிதன் அனுபவிக்கும் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தின் பரிமாற்ற சுழற்சிகளும், எல்லாவற்றையும் படைத்த தேவனுடைய சிருஷ்டிப்பின் நான்காம் நாளில் வெகு காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டன. தேவனால் உருவாக்கப்பட்ட சுடர்களானது, இரவையும் பகலையும் தவறாமல், துல்லியமாக, தெளிவாக வேறுபடுத்தி, நாட்களை எண்ணி, சந்திர காலங்களையும் ஆண்டுகளையும் தெளிவாகக் கண்காணிக்க மனிதனுக்கு உதவியது. (பௌர்ணமியின் நாள் ஒரு மாதம் நிறைவடைந்தது என்பதைக் குறித்தது. இதன் விளைவாக, சுடர்களின் வெளிச்சத்திலிருந்து ஒரு புதிய சுழற்சி தொடங்குகிறது என்பதை மனிதன் அறிந்தான். அரை நிலவின் நாள் என்பது ஒரு மாதத்தின் ஒரு பாதி நிறைவடைந்தது என்பதாகும். இது ஒரு புதிய சந்திர காலத்தைத் தொடங்குகிறது என்று மனிதனிடம் அது கூறியது. அதிலிருந்து ஒரு சந்திர காலத்தில் எத்தனை பகல் மற்றும் இரவுகள் இருந்தன, ஒரு பருவத்தில் எத்தனை சந்திர காலங்கள் உள்ளன மற்றும் ஒரு வருடத்தில் எத்தனை பருவங்கள் உள்ளன என்பதை ஊகிக்க முடியும். இவை அனைத்தும் மிகுந்த ஒழுங்குமுறையுடன் வெளிப்படுத்தப்பட்டன.) ஆகவே, சுடர்களின் சுழற்சிகளால் குறிக்கப்பட்ட சந்திர காலம், நாட்கள் மற்றும் ஆண்டுகளை மனிதன் எளிதாகக் கண்காணிக்க முடியும். இந்தக் கட்டத்தில் இருந்து, இரவு மற்றும் பகலின் ஒழுங்கான பரிமாற்றம் மற்றும் சுடர்களின் சுழற்சிகளால் உருவாக்கப்பட்ட பருவங்களின் மாற்றங்களுக்கு இடையில் மனிதகுலமும் மற்ற அனைத்தும் அறியாமலேயே ஜீவித்தன. நான்காவது நாளில் சிருஷ்டிகர் சுடர்களை உருவாக்கியதன் முக்கியத்துவம் இதுதான். இதேபோல், சிருஷ்டிகரின் இந்த கிரியையின் நோக்கங்களும் முக்கியத்துவமும் அவருடைய அதிகாரம் மற்றும் வல்லமையிலிருந்து பிரிக்க முடியாதவையாக இருந்தன. ஆகவே, தேவனால் உருவாக்கப்பட்ட சுடர்கள் மற்றும் விரைவில் அவை மனிதனிடம் கொண்டு வரும் மதிப்பு ஆகியவை சிருஷ்டிகரின் அதிகாரத்தின் கிரியையின் மற்றொரு சிறப்பான கிரியை ஆகும்.

இந்தப் புதிய உலகில், மனிதகுலம் இன்னும் தோற்றமளிக்காத நிலையில், சிருஷ்டிகர் மாலை மற்றும் காலையையும், ஆகாயவிரிவையும், பூமியையும், சமுத்திரங்களையும், புல், பூண்டுகள் மற்றும் பல்வேறு வகையான விருட்சங்களையும், சுடர்கள், பருவங்கள், நாட்கள் மற்றும் ஆண்டுகள் ஆகியவற்றையும் அவர் விரைவில் உருவாக்கவிருக்கும் புதிய ஜீவனுக்காக ஆயத்தம் செய்தார். சிருஷ்டிகரின் அதிகாரமும் வல்லமையும் அவர் உருவாக்கிய ஒவ்வொரு புதிய விஷயத்திலும் வெளிப்படுத்தப்பட்டன, அவருடைய வார்த்தைகளும் சாதனைகளும் ஒரே நேரத்தில், சிறிதளவு வேறுபாடும் இல்லாமல், சிறிதளவு இடைவெளியும் இல்லாமல் நிகழ்ந்தன. இந்த புதிய விஷயங்களின் தோற்றமும் பிறப்பும் சிருஷ்டிகரின் அதிகாரத்திற்கும் வல்லமைக்கும் சான்றாக இருந்தன: அவர் அவருடைய வார்த்தையைப் போலவே சிறந்தவர். அவருடைய வார்த்தை நிறைவேறும் மற்றும் அவர் நிறைவேற்றுவது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். அது கடந்த காலத்தில் இருந்ததால் அது இன்றும் உள்ளது, எனவே அது எல்லா நித்திய காலத்திற்கும் இருக்கும் என்ற இந்த உண்மை ஒருபோதும் மாறவில்லை. வேதாகமத்தின் அந்த வார்த்தைகளை நீங்கள் மீண்டும் பார்க்கும்போது, அவை உங்களுக்குப் புதியதாகத் தோன்றுகின்றனவா? புதிய உள்ளடக்கத்தைப் பார்த்துள்ளீர்களா மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளீர்களா? ஏனென்றால், சிருஷ்டிகரின் கிரியைகளானது, உங்கள் இருதயங்களை அசைத்து, அவருடைய அதிகாரம் மற்றும் வல்லமை பற்றிய உங்கள் அறிவின் திசையை வழிநடத்தி, சிருஷ்டிகரைப் பற்றிய உங்கள் புரிதலுக்கான கதவைத் திறந்துவிட்டன மற்றும் அவருடைய கிரியைகளும் அதிகாரமும் இந்த வார்த்தைகளுக்கு ஜீவனைக் கொடுத்துள்ளன. எனவே, இந்த வார்த்தைகளில், சிருஷ்டிகரின் அதிகாரத்தின் உண்மையான, தெளிவான வெளிப்பாட்டை மனிதன் கண்டிருக்கிறான், மெய்யாகவே சிருஷ்டிகரின் மேலாதிக்கத்தைக் கண்டிருக்கிறான் மற்றும் சிருஷ்டிகரின் அதிகாரம் மற்றும் வல்லமையின் அசாதாரணத் தன்மையைக் கண்டிருக்கிறான்.

சிருஷ்டிகரின் அதிகாரமும் வல்லமையும் அடுத்தடுத்ததாக அற்புதத்தை உருவாக்குகின்றன. அவர் மனிதனின் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் மனிதனால் அவருடைய அதிகாரத்தின் கிரியையிலிருந்து பிறந்த மிகவும் வியப்பான கிரியைகளைப் பார்க்க மட்டுமே முடியும், மனிதனால் அவற்றை மாற்றியமைக்க முடியாது. அவரது தனித்துவமான வல்லமை மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் மனிதன் திகைப்புக்குள்ளாகிறான், மகிழ்ச்சியடைகிறான், போற்றுதலில் மூச்சற்றுப்போகிறான், திகைக்கிறான் மற்றும் போற்றுகிறான். மேலும், மனிதன் அதைப் பார்க்கையில் அசைக்கப்படுகிறான், அவனுக்குள் சிருஷ்டிகர் மீது மரியாதை, பயபக்தி மற்றும் பிணைப்பு ஆகியவை உருவாகின்றன. சிருஷ்டிகரின் அதிகாரமும் கிரியைகளும் மனிதனின் ஆவியின் மீது பெரும் தாக்கத்தையும் சுத்திகரிப்பு விளைவையும் ஏற்படுத்துகின்றன. மேலும், அவை மனிதனின் ஆவியைத் திருப்பதிப்படுத்துகின்றன. அவருடைய ஒவ்வொரு எண்ணங்களும், அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும், அவருடைய அதிகாரத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும் எல்லாவற்றிலும் ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கிறது மற்றும் இது சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் ஆழ்ந்த புரிதலுக்கும் அறிவிற்கும் மிகவும் தகுதியாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 87

தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஐந்தாவது நாளில், வெவ்வேறான மற்றும் மாறுபட்ட வடிவங்களில் உள்ள ஜீவஜந்துக்கள் சிருஷ்டிகரின் அதிகாரத்தை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகின்றன

வேதாகமம் கூறுகிறது, “பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்” (ஆதி. 1:20-21). இந்த நாளில், தேவன் ஜலத்தின் ஜீவஜந்துக்களையும், காற்றின் பறவைகளையும் சிருஷ்டித்தார் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. அதாவது அவர் பல்வேறு மீன்களையும் பறவைகளையும் சிருஷ்டித்தார் மற்றும் அவை ஒவ்வொன்றையும் வகைப்படுத்தினார். இவ்வாறு, பூமி, வானங்கள் மற்றும் ஜலம் ஆகியவை தேவனுடைய சிருஷ்டிப்பால் வளப்படுத்தப்பட்டன …

தேவனுடைய வார்த்தைகள் பேசப்பட்டபோது, புதிய புதிய ஜீவஜந்துக்கள், ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவத்துடன், சிருஷ்டிகரின் வார்த்தைகளின் மத்தியில் உடனடியாக உயிரோடு வந்தன. அவை தம் நிலைக்குப் போராடி, குதித்து, மகிழ்ச்சிக்காக உல்லாசமாக உலகத்திற்கு வந்தன…. அனைத்து வடிவங்கள் மற்றும் அளவுகளில் இருக்கும் மீன்களும் நீரில் நீந்தின. எல்லா வகையான சிப்பிகளும் மணலில் இருந்து வளர்ந்தன. செதிலுள்ள, ஓடுள்ள மற்றும் முதுகெலும்பு இல்லாத ஜீவஜந்துக்கள் என அவை பெரியதாக அல்லது சிறியதாக இருந்தாலும், நீண்டதாக அல்லது குறுகியதாக இருந்தாலும், வெவ்வேறு வடிவங்களில் விரைவாக வளர்ந்தன. அவ்வாறே பல்வேறு வகையான கடற்பாசிகள் விறுவிறுப்பாக வளரத் தொடங்கின, பல்வேறு நீர்வாழ் ஜீவஜந்துக்களின் இயக்கத்தை அவை தூண்டின, அவற்றிடம் “காரியத்தைத் தொடங்கு! உன் நண்பர்களை அழைத்து வா! நீ இனி ஒருபோதும் தனியாக இருக்க மாட்டாய்!” என்று சொல்வது போல் அசைந்தன, தேங்கி நிற்கும் நீரை நீரோட்டமாகுமாறு வலியுறுத்தின. தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட பல்வேறு ஜீவஜந்துக்கள் ஜலத்தில் தோன்றிய தருணத்திலிருந்து, ஒவ்வொரு புதிய புதிய ஜீவஜந்துவும் இவ்வளவு காலமாக அமைதியாக இருந்த ஜலத்திற்கு ஜீவனின் வல்லமையைக் கொண்டு வந்து, ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது…. அந்த நேரத்திலிருந்து, அவை ஒன்றையொன்று சார்ந்து, ஒன்றோடொன்று துணையாக இருந்தன. அவை தங்களுக்கு மத்தியில் எந்த இடைவெளியையும் வைத்திருக்கவில்லை. ஜலமானது அதற்குள் இருக்கும் ஜீவஜந்துக்களுக்காக இருந்தது. அதன் அரவணைப்பிற்குள் ஜீவித்த ஒவ்வொரு ஜீவஜந்துவையும் வளர்த்துக்கொண்டது. ஒவ்வொரு ஜீவஜந்துவும் ஜலத்தின் ஊட்டச்சத்தின் காரணமாக ஜலத்தால் ஜீவித்தது. ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு ஜீவிதத்தை வழங்கின. அதே நேரத்தில், ஒவ்வொன்றும், அதே வழியில், சிருஷ்டிகரின் சிருஷ்டிப்பின் அதிசயம் மற்றும் மகத்துவத்திற்கும், சிருஷ்டிகரின் அதிகாரத்தின் மீறமுடியாத வல்லமைக்கும் சான்றாக இருந்தன …

அதற்கு மேல், கடல் அமைதியாக இல்லாதது போலவே, ஜீவஜந்துக்கள் ஆகாயவிரிவை நிரப்பத் தொடங்கின. பெரிய மற்றும் சிறிய பறவைகள் ஒவ்வொன்றாக, தரையிலிருந்து புறப்பட்டு ஆகாயவிரிவில் பறந்தன. கடலிலுள்ள ஜீவஜந்துக்களைப் போலல்லாமல், அவற்றின் மெலிதான மற்றும் அழகான உருவங்களை மூடியுள்ள இறக்கைகள் மற்றும் சிறகுகள் அவற்றுக்கு இருந்தன. அவை தங்கள் சிறகுகளை பறக்கவிட்டு, பெருமையுடன் மற்றும் பெருமிதத்துடன் தங்கள் அழகிய சிறகுகளின் சருமத்தையும், சிருஷ்டிகரால் அவற்றுக்கு வழங்கப்பட்ட சிறப்பான செயல்பாடுகளையும் திறன்களையும் காண்பித்தன. அவை சுதந்திரமாக உயரப் பறந்து, திறமையாக வானத்துக்கும் பூமிக்கும் இடையில், புல்வெளிகளையும் காடுகளையும் கடந்து சென்றன…. அவை காற்றின் அன்புக்குரியவை, அவை எல்லாவற்றிற்கும் அன்பானவை. அவை விரைவில் வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான பிணைப்பாக மாறின மற்றும் எல்லாவற்றிற்கும் செய்திகளை அனுப்பின…. அவை பாடின, அவை மகிழ்ச்சியுடன் ஓடின, முன்பு வெறுமையாக இருந்த உலகத்திற்கு அவை சந்தோஷம், சிரிப்பு மற்றும் உற்சாகம் ஆகியவற்றைக் கொண்டு வந்தன…. அவை தங்களது தெளிவான, மெல்லிசைப் பாடலைப் பயன்படுத்தின, தங்கள் இருதயங்களுக்குள் இருந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி சிருஷ்டிகரைப் புகழ்ந்து பாடின. சிருஷ்டிகரின் சிருஷ்டிப்பின் பரிபூரணத்தையும் அற்புதத்தையும் காட்ட அவை மகிழ்ச்சியுடன் நடனமாடின மற்றும் சிருஷ்டிகர், தம் அதிகாரத்தின் வழியாக அவற்றுக்கு வழங்கிய சிறப்பு ஜீவிதத்தின் ஆதாரத்திற்கு சாட்சியளிக்க தங்கள் முழு ஜீவனையும் அர்ப்பணித்தன …

சிருஷ்டிகரின் கட்டளைப்படி, அவை ஜலத்தில் அல்லது ஆகாயவிரிவில் என எங்கு இருந்தாலும் சரி, ஜீவிதத்தின் பல்வேறு கட்டமைப்புகளில் இந்த ஜீவஜந்துக்கள் ஏராளமாக இருந்தன மற்றும் சிருஷ்டிகரின் கட்டளைப்படி, அவை அந்தந்த இனங்களின்படி ஒன்று கூடின—இந்த சட்டம், இந்த விதி, எந்த சிருஷ்டியாலும் மாற்ற முடியாததாகும். சிருஷ்டிகரால் அவற்றுக்காக நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் செல்ல அவை ஒருபோதும் துணியவில்லை, அவற்றால் அதைச் செய்யவும் முடியவில்லை. சிருஷ்டிகரால் நியமிக்கப்பட்டபடி, அவை ஜீவித்து, பெருகி, சிருஷ்டிகரால் நிர்ணயிக்கப்பட்ட ஜீவிதப் போக்கையும் சட்டங்களையும் கண்டிப்பாக கடைப்பிடித்தன மற்றும் அவரால் சொல்லப்படாத கட்டளைகளையும், அவர் அவர்களுக்குக் கொடுத்த பரலோகக் கட்டளைகளையும் பிரமாணங்களையும் இன்று வரை உணர்வுடன் பின்பற்றுகின்றன. அவை சிருஷ்டிகருடன் தங்கள் சொந்த வழியில் உரையாடின மற்றும் சிருஷ்டிகரின் அர்த்தத்தை கிரகிக்கத் தொடங்கின, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தன. சிருஷ்டிகரின் அதிகாரத்தை யாதொரு ஜீவஜந்துவும் மீறவில்லை. அவருடைய ராஜரீகத்தையும் அவற்றின் மீதான கட்டளையும் அவருடைய எண்ணங்களின்படி பயன்படுத்தப்பட்டன. எந்த வார்த்தைகளும் வெளியிடப்படவில்லை, ஆனால் சிருஷ்டிகருடைய தனித்துவமான அதிகாரம் எல்லாவற்றையும் மௌனமாகக் கட்டுப்படுத்தியது. அதற்கு எந்த மொழி செயல்பாடும் இல்லை மற்றும் அது மனிதகுலத்திலிருந்து வேறுபடுகின்றது. இந்தச் சிறப்பான வழியில் அவரது அதிகாரத்தின் கிரியை மனிதனின் புதிய அறிவைப் பெறவும், சிருஷ்டிகரின் தனித்துவமான அதிகாரத்தைப் பற்றி ஒரு புதிய விளக்கத்தை உருவாக்கவும் மனிதனைக் கட்டாயப்படுத்தியது. இங்கே, இந்த புதிய நாளில், சிருஷ்டிகரின் அதிகாரத்தின் கிரியை சிருஷ்டிகரின் தனித்துவத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

அடுத்ததாக, இந்த வசனத்தின் கடைசி வாக்கியத்தைப் பார்ப்போம்: “தேவன் அது நல்லது என்று கண்டார்.” இதன் பொருள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தேவனுடைய உணர்ச்சிகள் இந்த வார்த்தைகளில் உள்ளன. தேவன் தாம் சிருஷ்டித்த அனைத்தும் தோற்றம் பெற்றதை, அவருடைய வார்த்தைகளால் நிலைபெற்றதை, படிப்படியாக மாறத் தொடங்கியதைப் பார்த்தார். இந்த நேரத்தில், தேவன் தம்முடைய வார்த்தைகளால் தாம் செய்த பல்வேறு விஷயங்களிலும், தாம் நிறைவேற்றிய பல்வேறு கிரியைகளிலும் திருப்தி அடைந்தாரா? பதில் “தேவன் அது நல்லது என்று கண்டார்.” நீங்கள் இங்கே எதைப் பார்க்கிறீர்கள்? “தேவன் அது நல்லது என்று கண்டார்” என்பது எதைக் குறிக்கிறது? இது எதைக் அடையாளப்படுத்துகிறது? தேவன் திட்டமிட்டதை மற்றும் பரிந்துரைத்ததை நிறைவேற்றவும், அவர் நிறைவேற்றுவதற்காக நிர்ணயித்த இலக்குகளை நிறைவேற்றவும் வல்லமையும் ஞானமும் தேவனுக்கு இருந்தது என்பதை அது குறிக்கிறது. தேவன் ஒவ்வொரு பணியையும் முடித்தபோது, அவர் வருத்தப்பட்டாரா? “தேவன் அது நல்லது என்று கண்டார்” என்பதே பதிலாக இன்னும் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் எந்த வருத்தத்தையும் உணரவில்லை, மாறாகத் திருப்தி அடைந்தார். அவர் எந்த வருத்தத்தையும் உணரவில்லை என்பதன் அர்த்தம் என்னவாக இருக்கிறது? தேவனுடைய திட்டம் சரியானது, அவருடைய வல்லமையும் ஞானமும் பூரணமானது, அவருடைய அதிகாரத்தால் மட்டுமே அத்தகைய பரிபூரணத்தை நிறைவேற்ற முடியும் என்பதே இதன் பொருளாக இருக்கிறது. மனிதன் ஒரு பணியைச் செய்யும்போது, தேவனைப் போலவே, அது நல்லது என்பதாக அவனால் பார்க்க முடியுமா? மனிதன் செய்யும் ஒவ்வொன்றும் பூரணமாக முடியுமா? மனிதன் ஒரே முறையாக, நித்திய காலத்திற்கு ஏற்றவாறு எதையாகிலும் நிறைவேற்ற முடியுமா? மனிதன் சொல்வது போல், “எதுவுமே பூரணமானதல்ல, கொஞ்சம் சிறந்தது மட்டுமே,” மனிதன் செய்யும் எதுவும் பூரணமாக முடியாது. அவர் செய்த மற்றும் நிறைவேற்றிய அனைத்தும் நல்லது என்று தேவன் கண்டபோது, தேவனால் செய்யப்பட்ட அனைத்தும் அவருடைய வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட்டன, அதாவது “தேவன் அது நல்லது என்று கண்டார்,” அவர் உருவாக்கிய அனைத்தும் நிரந்தரமான வடிவமாக இருந்தன, வகைக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன மற்றும் ஒரே முறையாக, நித்திய காலத்திற்கு ஏற்றவாறு ஒரு நிலையான நிலையும், நோக்கமும் செயல்பாடும் வழங்கப்பட்டன. மேலும், எல்லாவற்றின் மத்தியிலான அவற்றின் பங்கு, எல்லாவற்றையும் நிர்வகிக்கும் தேவனுடைய நிர்வாகத்தின் போது அவை மேற்கொள்ள வேண்டிய பயணம் ஆகியவை ஏற்கனவே தேவனால் நியமிக்கப்பட்டிருந்தன மற்றும் அவை மாறாதவை ஆகும். எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகர் கொடுத்த பரலோகச் சட்டம் இதுதான்.

“தேவன் அது நல்லது என்று கண்டார்,” இந்த எளிய, மதிப்பிடப்படாத வார்த்தைகள், பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன, அவை பரலோகச் சட்டத்தின் வார்த்தைகள் மற்றும் தேவனால் எல்லா ஜீவஜந்துக்களுக்கும் கொடுக்கப்பட்ட பரலோகக் கட்டளையாக இருகின்றன. அவை சிருஷ்டிகரின் அதிகாரத்தின் மற்றொரு உருவகமாகும், அவை மிகவும் நடைமுறைக்குரிய மற்றும் ஆழமானவையாக இருகின்றன. சிருஷ்டிகரால் தம்முடைய வார்த்தைகளின் மூலம், அவர் பெறத் திட்டமிட்ட அனைத்தையும் பெறவும், அவர் நிறைவேற்றத் திட்டமிட்ட அனைத்தையும் நிறைவேற்றவும் மட்டுமல்லாமல், அவர் உருவாக்கிய அனைத்தையும் அவருடைய கரங்களில் கட்டுப்படுத்தவும், தம்முடைய அதிகாரத்தின் கீழ் இருந்த அனைத்தையும் ஆளவும் முடிந்தது, மேலும், அனைத்தும் முறையானவையாக மற்றும் வழக்கமானவையாக இருந்தன. எல்லாம் அவருடைய வார்த்தையால் பெருகின, இருந்தன, அழிந்தன, மேலும், அவருடைய அதிகாரத்தினால் அவர் வகுத்த சட்டத்தின் மத்தியில் அவை இருந்தன. இதற்கு எதுவும் விதிவிலக்கல்ல! இந்த சட்டம் “தேவன் அது நல்லது என்று கண்டார்,” என்ற அதே தருணத்தில் தொடங்கியது. அது சிருஷ்டிகரால் ரத்து செய்யப்படும் நாள் வரை தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் பொருட்டு இருக்கும், தொடரும் மற்றும் செயல்படும்! சிருஷ்டிகரின் தனித்துவமான அதிகாரமானது, எல்லாவற்றையும் உருவாக்கும் மற்றும் எல்லாவற்றையும் உருவாக்கும்படி கட்டளையிடும் திறனில் மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாகவும், ராஜரீகத்தை நிலைநிறுத்துவதற்கும், எல்லாவற்றிற்கும் சத்துவம் மற்றும் ஜீவனின் வல்லமையை வழங்குவதற்குமான அவருடைய திறனிலும் வெளிப்பட்டது. மேலும், ஒரே முறையாக, நித்திய காலத்திற்கு ஏற்றவாறு, அவர் உருவாக்கும் உலகில், அனைத்தும் தோற்றமளிக்கும் மற்றும் தோன்றும் உலகில் அவர் உருவாக்கும் எல்லாவற்றையும் ஒரு முழுமையான வடிவத்திலும், ஒரு முழுமையான ஜீவித அமைப்பிலும், ஒரு முழுமையான பாத்திரத்திலும் ஏற்படுத்துவதற்கான அவருடைய திறனிலும் வெளிப்பட்டது. சிருஷ்டிகரின் எண்ணங்கள் எந்தவொரு தடைகளுக்கும் உட்பட்டவை அல்ல. நேரம், இடம் அல்லது புவியியல் சூழல் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டவையும் அல்ல என்பதில் இது வெளிப்பட்டது. அவருடைய அதிகாரத்தைப் போலவே, சிருஷ்டிகரின் தனித்துவமான அடையாளமும் நித்திய நித்தியமான காலங்களுக்கும் மாறாமல் இருக்கும். அவருடைய அதிகாரம் எப்போதுமே அவருடைய தனித்துவமான அடையாளத்தின் பிரதிநிதித்துவமாகவும் அடையாளமாகவும் இருக்கும். அவருடைய அதிகாரம் அவருடைய அடையாளத்துடன் எப்போதும் இணைந்து இருக்கும்!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 88

தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆறாம் நாளில், சிருஷ்டிகர் பேச, ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு வகையான ஜீவஜந்துவும் அவரது மனதில் அதன் தோற்றத்தைப் பெறுகின்றன

மிக நுட்பமாக, எல்லாவற்றையும் சிருஷ்டிக்கும் சிருஷ்டிகருடைய கிரியை ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்தது மற்றும் அதன் உடனடி தொடர்ச்சியாக, எல்லாவற்றையும் சிருஷ்டிக்கும் ஆறாவது நாளை சிருஷ்டிகர் தொடங்கினார். இந்த நாள் மற்றொரு புதிய தொடக்கமாகவும், மற்றொரு அசாதாரண நாளாகவும் இருந்தது. அப்படியானால், இந்தப் புதிய நாளுக்கு முன்பு சிருஷ்டிகருடைய திட்டம் என்னவாக இருந்தது? அவர் என்னென்ன புதிய ஜீவஜந்துக்களை உருவாக்குவார் மற்றும் எவற்றை அவர் சிருஷ்டிப்பார்? கவனியுங்கள், அதுவே சிருஷ்டிகருடைய குரலாக இருக்கிறது …

“பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்” (ஆதி. 1:24-25). என்னென்ன ஜீவஜந்துக்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன? வேதவாக்கியங்கள் கூறுகின்றன: பூமியிலுள்ள ஜாதிஜாதியான நாட்டுமிருகங்கள், ஊரும் பிராணிகள் மற்றும் காட்டுமிருகங்கள். அதாவது, இந்த நாளில் பூமியில் எல்லா வகையான ஜீவஜந்துக்களும் இருந்தது மட்டுமின்றி, அவை அனைத்தும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டன. அதேபோல், “தேவன் அது நல்லது என்று கண்டார்.”

முந்தைய ஐந்து நாட்களைப் போலவே, சிருஷ்டிகர் அதே தொனியிலேயே பேசினார் மற்றும் தாம் விரும்பிய ஜீவஜந்துக்களைப் பிறக்கும்படியாகக் கட்டளையிட்டார் மற்றும் அவை ஒவ்வொன்றும் அவற்றின் வகையின்படி பூமியில் தோன்றின. சிருஷ்டிகர் தனது அதிகாரத்தைச் செலுத்தும்போது, அவருடைய வார்த்தைகள் எதுவும் வீணாகப் பேசப்படவில்லை. ஆகவே, ஆறாவது நாளில், அவர் சிருஷ்டிக்க நினைத்த ஒவ்வொரு ஜீவஜந்துவும் நியமிக்கப்பட்ட நேரத்தில் தோன்றின. “பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களைப் பிறப்பிக்கக்கடவது,” என்று சிருஷ்டிகர் சொன்னது போலவே பூமியானது ஒரே நேரத்தில் ஜீவஜந்துக்களால் நிரம்பியது, அங்கே நிலத்தில் திடீரென அனைத்து வகையான ஜீவஜந்துக்களின் சுவாசமும் வெளிப்பட்டது…. புல்வெளி மிகுந்த பசுமையான வனாந்தரத்தில், தடித்த பசுக்கள், வால்களை முன்னும் பின்னுமாக ஆட்டிக் கொண்டு, ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின, கத்தும் ஆடுகள் தாங்களாகவே மந்தைகளாகக் கூடிக்கொண்டன மற்றும் கனைக்கும் குதிரைகள் ஓடத் தொடங்கின…. ஒரே நொடியில், அமைதியான புல்வெளியின் பரந்த வெளி ஜீவஜந்துக்களால் நிறைந்தன…. இந்த பல்வேறு நாட்டு மிருகங்களின் தோற்றம் அமைதியான புல்வெளியில் ஒரு அழகான காட்சியாக இருந்தது மற்றும் எல்லையற்ற ஜீவனின் வல்லமையைக் கொண்டு வந்தது…. அவை புல்வெளிகளின் துணையாளர்களாகவும், புல்வெளிகளின் எஜமானர்களாகவும் இருந்தன. அவ்வாறே அவை இந்த நிலங்களின் பொறுப்பாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் மாறின. இந்தப் புல்வெளிகள் அவற்றின் நிரந்தர வசிப்பிடமாக இருந்தன, அவற்றுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கின மற்றும் அவை ஜீவித்திருப்பதற்கான நித்திய சத்துவத்தின் ஆதாரமாக இருந்தன …

இந்தப் பல்வேறு நாட்டு மிருகங்கள் தோன்றிய அதே நாளில், சிருஷ்டிகருடைய வார்த்தையால், ஏராளமான பூச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. எல்லா ஜீவஜந்துக்களிடையேயும் அவை மிகச் சிறியவையாக இருந்தபோதிலும், அவற்றின் ஜீவ வல்லமை இன்னும் சிருஷ்டிகருடைய அதிசயமான சிருஷ்டிப்பாக இருந்தது மற்றும் அந்த ஏராளமான பூச்சிகள் தாமதமாக வரவில்லை…. சில ஜீவஜந்துக்கள் தங்கள் சிறிய சிறகுகளைப் பறக்கவிட்டன, மற்றவை மெதுவாக ஊர்ந்து சென்றன. சில ஜீவஜந்துக்கள் துள்ளிக் குதித்தன, மற்றவை தள்ளாடி நடந்தன. சில ஜீவஜந்துக்கள் முன்னோக்கிப் பாய்ந்தன, மற்றவை விரைவாக பின்வாங்கின. சில ஜீவஜந்துக்கள் பக்கவாட்டில் நகர்ந்தன, மற்றவை மேலும் கீழுமாக குதித்தன…. எல்லாம் தங்களுக்கான வீடுகளைத் தேடும் முயற்சியில் மும்முரமாக இருந்தன: சில ஜீவஜந்துக்கள் புல்லுக்குள் நுழைந்தன, சில ஜீவஜந்துக்கள் தரைக்குள் வளைகளை அமைத்தன, சில ஜீவஜந்துக்கள் மரங்களுக்கிடையே பறந்து, காடுகளில் மறைந்திருந்தன…. வயிற்றின் அளவு சிறியதாக இருந்தாலும், வெறுமையான வயிற்றின் வேதனையைத் தாங்க அவை விரும்பவில்லை. சொந்த வீடுகளைக் கண்டடைந்தபின், அவை புசிக்க தங்களுக்கான ஆகாரத்தை தேடி விரைந்தன. சில ஜீவஜந்துக்கள் புல்லின் மென்மையான கதிர்களைப் புசிக்க அதன் மீது ஏறின. சில ஜீவஜந்துக்கள் வாய் முழுவதையும் அழுக்கால் நிரப்பி, விழுங்கி அவற்றை வயிற்றில் சேர்த்தன. அவை மிகுந்த ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் புசித்தன (அவற்றுக்கு, அழுக்கு கூட ஒரு சுவையான விருந்தாக இருந்தது); சில ஜீவஜந்துக்கள் காடுகளில் மறைந்திருந்தன, ஆனால் அவை ஓய்வெடுக்கவில்லை. ஏனென்றால், பளபளப்பான அடர்த்தியான பச்சை இலைகளுக்குள் இருக்கும் தாவர உயிர்ச் சாறானது ஒரு சாறு நிறைந்த ஆகாரத்தை வழங்கியது…. பூச்சிகள் திருப்தியடைந்த பின்னும், அவை அவற்றின் செயல்பாட்டை நிறுத்தவில்லை. அளவில் சிறியதாக இருந்தாலும், அவை மிகப்பெரிய சத்துவத்தையும் வரம்பற்ற சத்துவத்தையும் கொண்டிருந்தன. எனவே, எல்லா ஜீவஜந்துக்காட்டிலும், அவை மிகவும் சுறுசுறுப்பானவையாக மற்றும் மிகவும் கடினமானவையாக இருந்தன. அவை ஒருபோதும் சோம்பேறிகளாக இருக்கவில்லை மற்றும் ஒருபோதும் ஓய்வெடுக்கவில்லை. அவற்றின் பசி தீர்ந்த பிறகும் அவை தங்கள் எதிர்காலத்திற்காக தங்கள் உழைப்பைத் தொடர்ந்தன, தங்களைத் தாங்களே மும்முரமாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுடைய அடுத்த நாளுக்காக, தாங்கள் உயிர்வாழ்வதற்காக விரைந்து செயல்பட்டன…. அவை தங்களைத் தாங்களே ஊக்குவிக்கவும் உற்சாகப்படுத்தவும் பல்வேறு மெல்லிசைப் பாடல்களை மற்றும் தாளங்களை மென்மையாக முனங்கின. அவை புல், மரங்கள் மற்றும் ஒவ்வொரு அங்குல மண்ணுக்கும் மகிழ்ச்சியைச் சேர்த்தன. ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு ஆண்டையும் தனித்துவமாக்கின…. அவை தங்கள் சொந்த மொழிகளாலும், தங்கள் சொந்த வழிகளாலும், பூமியில் உள்ள அனைத்து ஜீவஜந்துக்களுக்கும் தகவல்களை அனுப்பின. தங்கள் சொந்த சிறப்பு ஜீவிதப் போக்கைப் பயன்படுத்தி, அவை எல்லாவற்றையும் குறித்துக்கொண்டன, அதன் மேலாக அவை தடயங்களை விட்டன…. அவை மண், புல் மற்றும் காடுகளுடன் நெருக்கமாக இருந்தன மற்றும் மண், புல் மற்றும் காடுகளுக்கு அவை வீரியத்தையும் ஜீவனையும் கொண்டு வந்தன. அவை எல்லா ஜீவஜந்துக்களுக்கும் சிருஷ்டிகருடைய அறிவுரைகளையும் வாழ்த்துக்களையும் கொண்டு வந்தன …

சிருஷ்டிகருடைய பார்வை அவர் சிருஷ்டித்த எல்லாவற்றையும் கடந்து சென்றது மற்றும் அந்த நேரத்தில், காடுகள் மற்றும் மலைகள் மீது அவரது கண்கள் நின்றுநோக்கின, அவரது மனம் திரும்பிப் பார்த்தது. அவருடைய வார்த்தைகள் உச்சரிக்கப்படுகையில், அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும், முன்பு வந்ததைப் போல் அல்லாமல் ஒரு வகை ஜீவஜந்துக்கள் தோன்றின: அவை தேவனுடைய வாயால் சொல்லப்பட்ட காட்டு மிருகங்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒவ்வொன்றும் அவற்றின் தனித்துவமான முகத்துடன் தம் தலைகளையும் அசைத்து, வால்களையும் ஆட்டின. சில மிருகங்களுக்கு உரோமங்கள் இருந்தன, சில மிருகங்களுக்குக் கவசங்கள் இருந்தன, சில மிருகங்களுக்கு வெறித்தனமான பற்கள் இருந்தன, சில மிருகங்கள் சிரித்தன, சில மிருகங்களுக்கு நீண்ட கழுத்து இருந்தது, சில மிருகங்களுக்கு குறுகிய வால் இருந்தது, சில மிருகங்களுக்குப் பயங்கரமான கண்கள் இருந்தன, சில மிருகங்களுக்குப் பயமுறுத்தும் பார்வை இருந்தது, சில மிருகங்கள் புல் சாப்பிட குனிந்தன, சில மிருகங்களின் வாய் இரத்தக் கறையுடன் இருந்தது, சில மிருகங்கள் இரண்டு கால்களுடன் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் நான்கு கால்களில் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் மரங்களின் மேல் ஏறிக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் காடுகளில் காத்துக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் ஓய்வெடுக்க குகைகளைத் தேடிக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் சமவெளிகளில் உல்லாசமாக ஓடிக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் காடுகள் வழியாக ஓடிக் கொண்டிருந்தன…; சில மிருகங்கள் கர்ஜித்துக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் குரைத்துக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் கத்திக் கொண்டிருந்தன…; சில மிருகங்கள் கீச்சுக் குரலைக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் ஆழ்ந்த அடர்த்தியான குரலைக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் மிகுந்த சத்தம் ஏற்படுத்தக்கூடிய குரலைக் கொண்டிருந்தன, சில மிருகங்கள் தெளிவான மற்றும் மெல்லிசை கொண்ட குரலைக் கொண்டிருந்தன…; சில மிருகங்கள் கடுமையானவையாக இருந்தன, சில மிருகங்கள் அழகானவையாக இருந்தன, சில மிருகங்கள் அருவருப்பானவையாக இருந்தன, சில மிருகங்கள் அபிமானமானத்துக்கு உரியவையாக இருந்தன, சில மிருகங்கள் பயமுறுத்துகின்றவையாக இருந்தன, சில மிருகங்கள் வசீகரமான அப்பாவித்தன்மையுடன் இருந்தன…. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. அவை எவ்வாறாக உயர்ந்தவை மற்றும் வலிமையானவை, சுதந்திரமானவை, உற்சாகமானவை, ஒன்றுக்கொன்று அலட்சியத்துடன் இருப்பவை, ஒன்றுக்கொன்று பார்த்துக்கொள்வதற்குக்கூட எண்ணுவதில்லை என்பதைப் பாருங்கள்…. ஒவ்வொன்றும், சிருஷ்டிகரால் அவற்றுக்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட ஜீவிதத்தையும், அவற்றின் சொந்த வனப்பகுதியையும், மிருகத்தனத்தையும் தாங்கி, அவை காடுகளிலும் மலைகளிலும் தோன்றின. அனைவரையும் வெறுப்பவையாக, முற்றிலும் அகங்காரத்துடன்—அவை மலைகள் மற்றும் காடுகளின் உண்மையான எஜமானர்கள் தானே? சிருஷ்டிகரால் அவற்றினுடைய தோற்றம் கட்டளை இடப்பட்ட தருணத்திலிருந்து, காடுகளுக்கும் மலைகளுக்கும் அவை “உரிமை கோரின,” ஏனென்றால், சிருஷ்டிகர் ஏற்கனவே அவற்றின் எல்லைகளை முத்திரையிட்டு, அவற்றின் வாழ்வுக்கான எல்லையைத் தீர்மானித்தார். அவை மட்டுமே மலைகள் மற்றும் காடுகளை உண்மை யில் ஆள்பவைகள், அதனால்தான் அவை மிகவும் காட்டுத்தனமாகவும், இழிவாகவும் இருந்தன. அவை “காட்டு மிருகங்கள்” என்று அழைக்கப்பட்டதற்கு முழு காரணம் என்னவென்றால், உண்மையிலேயே எல்லா ஜீவஜந்துக்களையும்விட, அவை மிகவும் காட்டுத்தனமானவையாக, மிருகத்தனமானவையாக மற்றும் பழக்கப்படுத்த முடியாதவையாக இருந்தன. அவற்றைப் பழக்கப்படுத்த முடியவில்லை. எனவே, அவற்றை வளர்க்க முடியவில்லை. மனிதகுலத்துடன் இணக்கமாக வாழவோ மனிதகுலத்தின் சார்பாக உழைக்கவோ அவற்றால் முடியவில்லை. மனிதகுலத்திற்காக அவற்றை வளர்க்கவும் முடியவில்லை, கிரியை செய்ய வைக்கவும் முடியவில்லை என்பதனால், அவை மனிதகுலத்திலிருந்து தொலைவில் ஜீவிக்க வேண்டியிருந்தது மற்றும் அவற்றை மனிதனால் அணுக முடியவில்லை. அதனைத் தொடர்ந்து, அவை மனிதகுலத்திலிருந்து தொலைவில் ஜீவித்ததாலும், மனிதனால் அணுக முடியாததாலும், சிருஷ்டிகரால் அவற்றுக்கு வழங்கப்பட்ட, மலைகளையும் காடுகளையும் பாதுகாப்பதற்கான பொறுப்பை அவற்றால் நிறைவேற்ற முடிந்தது. அவற்றின் காட்டுத்தனமானது மலைகளைப் பாதுகாத்தன, காடுகளைப் பாதுகாத்தன, மேலும் இது அவற்றின் வாழ்க்கை மற்றும் இனப்பெருக்கத்துக்கான சிறந்த பாதுகாப்பாகவும் உறுதிப்பாடாகவும் இருந்தது. அதே நேரத்தில், அவற்றின் காட்டுத்தனமானது எல்லாவற்றிலும் சமநிலையை பராமரித்து உறுதி செய்தது. அவற்றின் வருகை மலைகள் மற்றும் காடுகளுக்கு ஆதரவையும் ஸ்திரத்தையும் கொண்டு வந்தது. அவற்றின் வருகை, நிலையான மற்றும் வெறுமையான மலைகள் மற்றும் காடுகளுக்குள் எல்லையற்ற வீரியத்தையும் உயிர்ப்பையும் செலுத்தியது. இந்தக் கட்டத்தில் இருந்து, மலைகள் மற்றும் காடுகள் அவற்றின் நிரந்தர வசிப்பிடமாக மாறின மற்றும் அவை ஒருபோதும் தங்கள் இருப்பிடத்தை இழக்கவில்லை. ஏனென்றால், மலைகளும் காடுகளும் அந்த மிருகங்களுக்காகவே தோன்றி இருந்தன. காட்டு மிருகங்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி, அவற்றைக் காக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தன. ஆகவே, காட்டு மிருகங்கள் தங்கள் நிலப்பரப்பைக் காத்துக் கொள்ளும்படி சிருஷ்டிகருடைய அறிவுரைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட்டு, சிருஷ்டிகரால் நிறுவப்பட்ட எல்லாவற்றின் சமநிலையையும் பராமரிக்க தங்கள் மிருக இயல்பைத் தொடர்ந்து பயன்படுத்துவதோடு, சிருஷ்டிகருடைய அதிகாரத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்துகின்றன!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 89

சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் கீழ், சகலமும் பரிபூரணமாக இருக்கின்றன

தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட நகரக்கூடிய மற்றும் நகரமுடியாதவை, அதாவது பறவைகள் மற்றும் மீன்கள், மரங்கள் மற்றும் பூக்கள் போன்றவை, மற்றும் ஆறாவது நாளில் சிருஷ்டிக்கப்பட்ட நாட்டு மிருகங்கள், பூச்சிகள் மற்றும் காட்டு மிருகங்கள் என இவை உட்பட அனைத்தும் தேவனுடைய பார்வையில் நன்றாக இருந்தன, மேலும், தேவனுடைய பார்வையில், இவை அனைத்தும், அவருடைய திட்டத்தின்படி, பரிபூரணத்தின் உச்சத்தை அடைந்தன மற்றும் தேவன் அடைய விரும்பிய தரங்களை அடைந்தன. படிப்படியாக, சிருஷ்டிகர் தமது திட்டத்தின்படி செய்ய நினைத்த கிரியையைச் செய்தார். ஒன்றன் பின் ஒன்றாக, அவர் சிருஷ்டிக்க விரும்பிய விஷயங்கள் தோன்றின. ஒவ்வொன்றின் தோற்றமும் சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் பிரதிபலிப்பாக மற்றும் நிறைவேறுதலாக இருகின்றன. இந்த நிறைவேறுதல்களின் விளைவாக, எல்லா ஜீவஜந்துக்களாலும் சிருஷ்டிகருடைய கிருபைக்கும் வழங்கலுக்கும் நன்றி சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. தேவனுடைய அதிசயமான கிரியைகள், தங்களைத் தாங்களே வெளிப்படுத்தியபோது, இந்த உலகம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி, குழப்பம் மற்றும் இருளில் இருந்து தெளிவு மற்றும் பிரகாசமாக மாறியது. மரண அமைதியிலிருந்து ஜீவாதாரம் மற்றும் வரம்பற்ற ஜீவனின் வல்லமை என்பதாக மாறியது. சிருஷ்டிப்பின் எல்லாவற்றிலும், பெரியது முதல் சிறியது வரை, சிறியது முதல் நுண்பொருள் வரை என சிருஷ்டிகருடைய அதிகாரம் மற்றும் வல்லமையால் சிருஷ்டிக்கப்படாத எதுவும் இல்லை. ஒவ்வொரு ஜீவஜந்துவும் இருப்பதற்கு ஒரு தனித்துவமான மற்றும் உள்ளார்ந்த தேவையும் மதிப்பும் இருந்தது. அவற்றின் வடிவம் மற்றும் கட்டமைப்பில் உள்ள வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அவை சிருஷ்டிகரால் சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் கீழ் இருக்குமாறுதான் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. சில நேரங்களில் ஜனங்கள் ஒரு பூச்சியைப் பார்ப்பார்கள், அது மிகவும் அருவருப்பானது என்பார்கள் மற்றும் அவர்கள், “அந்தப் பூச்சி மிகவும் கொடூரமானது, இதுபோன்ற ஒரு அருவருப்பான காரியத்தை தேவன் சிருஷ்டித்திருக்க வாய்ப்பில்லை—அவர் இவ்வளவு அருவருப்பான ஒன்றை சிருஷ்டிக்க வாய்ப்பில்லை” என்பார்கள். என்ன ஒரு முட்டாள்தனமான பார்வை! அவர்கள் சொல்ல வேண்டியது என்னவென்றால், “இந்தப் பூச்சி மிகவும் அருவருப்பாக இருந்தாலும், அது தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது, எனவே, அதற்கு அதன் தனித்துவமான நோக்கம் இருக்க வேண்டும்.” தேவனுடைய எண்ணங்களில், ஒவ்வொரு தோற்றத்தையும், எல்லா வகையான செயல்பாடுகளையும், பயன்பாடுகளையும், அவர் படைத்த பல்வேறு ஜீவஜந்துக்களுக்கு கொடுக்க அவர் விரும்பினார். எனவே, தேவன் சிருஷ்டித்த எந்தப் பொருட்களும் ஒரே துணியிலிருந்து வெட்டப்படவில்லை. அவற்றின் வெளிப்புறம் முதல் அவற்றின் உள் அமைப்பு வரை, அவற்றின் ஜீவித பழக்கத்திலிருந்து அவை ஆக்கிரமித்துள்ள இடம் வரை ஒவ்வொன்றும் வேறுபட்டவை. பசுக்களுக்கு பசுக்களின் தோற்றமும், கழுதைகளுக்கு கழுதைகளின் தோற்றமும், மான்களுக்கு மான்களின் தோற்றமும், யானைகளுக்கு யானைகளின் தோற்றமும் உண்டு. எது சிறந்தது மற்றும் எது அருவருப்பானது என்று நீ கூற முடியுமா? எது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் எந்த ஒரு ஜீவஜந்துவின் இருப்பு தேவையற்றது என்று நீ கூற முடியுமா? சிலர் யானையின் தோற்றத்தை விரும்புகிறார்கள், ஆனால் வயல்களை நடவு செய்ய யாரும் யானைகளைப் பயன்படுத்துவதில்லை. சிலர் சிங்கங்கள் மற்றும் புலிகளின் தோற்றத்தை விரும்புகிறார்கள். ஏனென்றால், அவற்றின் தோற்றம் எல்லாவற்றிலும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது, ஆனால் அவற்றைச் செல்லப்பிராணிகளாக உன்னால் வைத்திருக்க முடியுமா? சுருக்கமாகக் கூறுவதென்றால், சிருஷ்டிப்பின் எண்ணற்ற விஷயங்களைப் பார்க்கும்போது, மனிதன் சிருஷ்டிகருடைய அதிகாரத்தை மதிக்க வேண்டும், அதாவது எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகரால் நியமிக்கப்பட்ட ஒழுங்கை மதிக்க வேண்டும். இதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும். சிருஷ்டிகருடைய மெய்யான நோக்கங்களைத் தேடும் மற்றும் அதற்குக் கீழ்ப்படியும் அணுகுமுறை மட்டுமே சிருஷ்டிகருடைய அதிகாரத்தை உண்மையாக ஏற்றுக்கொள்வதும் அதைப் பற்றி உறுதியாக இருப்பதுமாக இருக்கிறது. இது தேவனுடைய பார்வையில் நன்றாக இருப்பதால் மனிதன் தவறு கண்டுபிடிக்க காரணம் என்னவாக இருக்கிறது?

இவ்வாறு, சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்தும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்திற்கு ஒரு புதிய ஒத்திசையை மீட்ட வேண்டும், புதிய நாளின் அவரது பணிக்கு ஒரு அற்புதமான முன்னுரையைத் தொடங்க வேண்டும் மற்றும் அந்த நேரத்தில் சிருஷ்டிகரும் அவரது நிர்வாகக் கிரியையில் ஒரு புதிய பக்கத்தைத் திறப்பார்! வசந்த காலத்தில் புதியதாக தளிர்த்தல், கோடையில் பழுத்தல், இலையுதிர்காலத்தில் அறுவடை செய்தல், குளிர்காலத்தில் சேமித்தல் என சிருஷ்டிகரால் நியமிக்கப்பட்ட பிரமாணத்தின்படி இவற்றைப் போன்ற அனைத்தும் சிருஷ்டிகருடைய நிர்வாகத் திட்டத்துடன் இணைந்து எதிரொலிக்கும் மற்றும் அவை தங்களின் புதிய நாள், புதிய ஆரம்பம் மற்றும் புதிய வாழ்க்கைப் பாதையினை வரவேற்கும். சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் ராஜரீகத்தின்கீழ் ஒவ்வொரு நாளையும் வரவேற்கும் பொருட்டு அவை முடிவில்லாமல் ஜீவிக்கும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் …

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 90

சிருஷ்டிக்கப்பட்ட மற்றும் சிருஷ்டிக்கப்படாத எந்தவொரு ஜீவஜந்துவும் சிருஷ்டிகருடைய அடையாளத்தை மாற்ற முடியாது

எல்லாவற்றையும் சிருஷ்டிக்கத் தொடங்கியதிலிருந்து, தேவனுடைய வல்லமை வெளிப்படுத்தப்படவும் வெளியரங்கமாகவும் தொடங்கியது. ஏனென்றால் தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்க வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவர் அவற்றை எந்த விதத்தில் படைத்தார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் ஏன் அவற்றைப் படைத்தார் என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாம் தேவனுடைய வார்த்தைகளால் சிருஷ்டிக்கப்பட்டு, நிலைபெற்றன மற்றும் ஜீவித்தன. இது சிருஷ்டிகருடைய தனித்துவமான அதிகாரமாக இருக்கிறது. உலகில் மனிதகுலம் தோன்றுவதற்கு முன்பு, சிருஷ்டிகர் மனிதகுலத்திற்காக எல்லாவற்றையும் சிருஷ்டிக்க தனது வல்லமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தினார் மற்றும் மனிதகுலத்திற்கு பொருத்தமான ஜீவிதச் சூழலை ஆயத்தம் செய்ய அவருடைய தனித்துவமான வழிமுறைகளைப் பயன்படுத்தினார். தேவன் செய்ததெல்லாம், விரைவில் அவருடைய சுவாசத்தைப் பெறவிருக்கும் மனிதகுலத்திற்கான ஆயத்தமாக இருந்தன. அதாவது, மனிதகுலம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பு, வானங்கள், சுடர்கள், சமுத்திரங்கள் மற்றும் பூமி போன்ற பெரிய விஷயங்களிலும், மிருகங்கள் மற்றும் பறவைகள், அத்துடன் அனைத்து வகையான பூச்சிகள் மற்றும் நுண்ணுயிரிகளிலும், நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத பல்வேறு பாக்டீரியாக்கள் உட்பட அனைத்து சிறிய விஷயங்களிலும் என மனிதகுலத்திலிருந்து வேறுபட்ட எல்லா சிருஷ்டிகளிலும் தேவனுடைய அதிகாரம் காட்டப்பட்டது. ஒவ்வொன்றும் சிருஷ்டிகருடைய வார்த்தைகளால் ஜீவனைப் பெற்றன, ஒவ்வொன்றும் சிருஷ்டிகருடைய வார்த்தைகளால் பெருகின, ஒவ்வொன்றும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தின்கீழ் ஜீவித்தன. சிருஷ்டிகருடைய சுவாசத்தை அவை பெறவில்லை என்றாலும், சிருஷ்டிகரால் அவற்றுக்கு வழங்கப்பட்ட ஜீவிதத்துக்கான ஜீவ வல்லமையை அவை வெவ்வேறு வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகள் மூலம் வெளிப்படுத்தின. சிருஷ்டிகரால் மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட பேசும் திறனை அவை பெறவில்லை என்றாலும், அவை ஒவ்வொன்றும் சிருஷ்டிகரால் அவற்றுக்கு வழங்கப்பட்ட தங்கள் ஜீவிதத்தை வெளிப்படுத்தும் வழியைப் பெற்றன மற்றும் இவை மனிதனின் மொழியிலிருந்து வேறுபடுகின்றன. சிருஷ்டிகருடைய அதிகாரமானது நிலையான பொருள்மயமான காரியங்களுக்கு, அவை ஒருபோதும் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக அதன் ஜீவனுக்குரிய ஜீவவல்லமையைக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவை ஒருபோதும் மறைந்துவிடாமல் இருக்க ஒவ்வொரு ஜீவஜந்துவையும் இனப்பெருக்கம் செய்வதற்கும் பெருக்குவதற்கும் உள்ளுணர்வைத் தருகின்றன. எனவே, தலைமுறை தலைமுறையாக, அவை சிருஷ்டிகரால் வழங்கப்படும் உயிர்வாழ்தலுக்கான சட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுசெல்லும். சிருஷ்டிகர் தனது அதிகாரத்தைச் செலுத்தும் விதம் என்பது ஒரு பிரமாண்டமான அல்லது நுண்ணிய கண்ணோட்டத்தைக் கடுமையாகப் பின்பற்றாது மற்றும் எந்தவொரு வடிவத்திற்குள்ளும் அடங்காது. அவரால் உலகத்தின் செயல்பாடுகளுக்குக் கட்டளையிட முடியும் மற்றும் எல்லாவற்றினுடைய ஜீவன் மற்றும் மரணத்தின் மீது ராஜரீகத்தை வைத்திருக்க முடியும். மேலும், அவருக்கு சேவை செய்வதற்காக எல்லாவற்றையும் அவரால் கையாள முடிகிறது. அவரால் மலைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளின் அனைத்து கிரியைகளையும் நிர்வகிக்க முடியும் மற்றும் அவற்றில் உள்ள எல்லாவற்றையும் ஆள முடியும். அதனினும் மேலாக, எல்லாவற்றிற்கும் தேவையானதை அவரால் வழங்க முடியும். மனிதகுலம் மட்டுமன்றி, இது மற்ற அனைத்திற்குமான சிருஷ்டிகருடைய தனித்துவமான அதிகாரத்தின் வெளிப்பாடாகும். அத்தகைய வெளிப்பாடு ஒரு ஜீவகாலம் முழுமைக்கு மட்டுமானதல்ல. அத்தகைய வெளிப்பாடு ஒருபோதும் நின்றுவிடாது, ஓய்வெடுக்காது, எந்தவொரு மனிதனாலும் அல்லது பொருளாலும் அதை மாற்றவோ சேதப்படுத்தவோ முடியாது மற்றும் எந்தவொரு மனிதனிடமோ அல்லது பொருளிலோ அதைச் சேர்க்கவோ குறைக்கவோ முடியாது. ஏனென்றால், சிருஷ்டிகருடைய அடையாளத்தை யாராலும் மாற்ற முடியாது. ஆகவே, சிருஷ்டிகருடைய அதிகாரத்தை எந்தவொரு சிருஷ்டியாலும் மாற்ற முடியாது மற்றும் சிருஷ்டிக்கப்படாத எந்தவொரு ஜீவஜந்துவாலும் அதை அடைய முடியாது. உதாரணமாக தேவனுடைய தூதுவர்களையும் தேவதூதர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தேவனுடைய வல்லமையைக் கொண்டிருக்கவில்லை, சிருஷ்டிகருடைய அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை, தேவனுடைய வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்கு இல்லாததற்குக் காரணம், சிருஷ்டிகருடைய சாராம்சத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதே. தேவனுடைய தூதர்கள் மற்றும் தேவதூதர்கள் போன்ற சிருஷ்டிக்கப்படாத மனிதர்கள், தேவனுடைய சார்பாக சில விஷயங்களைச் செய்ய முடியும் என்றாலும், தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மனிதனிடம் இல்லாத சில வல்லமையை அவர்கள் வைத்திருந்தாலும், தேவனுடைய அதிகாரத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றையும் சிருஷ்டிக்கவும், எல்லாவற்றையும் கட்டளையிடவும், எல்லாவற்றிலும் ராஜரீகத்தைக் கொண்டிருக்கவும் அவர்கள் தேவனுடைய அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. எனவே, தேவனுடைய தனித்துவத்தை எந்தவொரு சிருஷ்டிக்கப்படாத ஜீவஜந்துவாலும் மாற்ற முடியாது. அதேபோல், தேவனுடைய அதிகாரத்தையும் வல்லமையையும் எந்தவொரு சிருஷ்டிக்கப்படாத ஜீவஜந்துவாலும் மாற்ற முடியாது. எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுடைய தூதரைப் பற்றி நீ வேதாகமத்தில் படித்திருக்கிறாயா? எல்லாவற்றையும் சிருஷ்டிக்க தேவன் ஏன் தனது தூதர்களையோ அல்லது தேவதூதர்களையோ அனுப்பவில்லை? ஏனென்றால், அவர்கள் தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. எனவே, தேவனுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தும் திறனை அவர்கள் கொண்டிருக்கவில்லை. எல்லா ஜீவஜந்துக்களையும் போலவே, அவர்கள் அனைவரும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தின் கீழும், சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் கீழும் உள்ளனர். அதேபோல், சிருஷ்டிகரும் அவர்களுடைய தேவனாகவும், அவர்களுடைய ராஜாவாகவும் இருக்கிறார். அவர்கள் உன்னதமானவர்களாக இருந்தாலும், தாழ்ந்தவர்களாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் சிருஷ்டிகருடைய அதிகாரத்தை மிஞ்சக்கூடிய எதுவும் இல்லை. எனவே, அவர்களில், சிருஷ்டிகருடைய அடையாளத்தை மாற்றக்கூடிய ஒருவரும் இல்லை. அவர்கள் ஒருபோதும் தேவன் என்று அழைக்கப்படுவதில்லை. அவர்களால் ஒருபோதும் சிருஷ்டிகராக மாற முடியாது. இவை மாறாத சத்தியங்கள் மற்றும் உண்மைகள்!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 91

மனிதனுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்த தேவன் தனது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்

ஆதி. 9:11-13  இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்த பிறகு, சிருஷ்டிகருடைய அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டு, வானவில் உடன்படிக்கையினால் மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தப்படுகிறது

சிருஷ்டிகருடைய அதிகாரம் எல்லா ஜீவஜந்துக்களின் மத்தியில் எப்போதும் வெளிப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அவர் எல்லாவற்றின் தலைவிதியையும் ஆட்சி செய்வது மட்டுமல்லாமல், தனது சொந்தக் கரங்களால் சிருஷ்டிக்கப்பட்ட மற்றும் வேறுபட்ட ஜீவித கட்டமைப்பு மற்றும் ஜீவித வடிவம் கொண்டுள்ள விசேஷித்த சிருஷ்டியான மனிதகுலத்தையும் ஆளுகிறார். எல்லாவற்றையும் சிருஷ்டித்த பிறகு, சிருஷ்டிகர் தனது அதிகாரத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்துவதை நிறுத்தவில்லை. அவரைப் பொறுத்தவரையில், எல்லாவற்றிலும் அவர் ராஜரீகத்தைக் கொண்டிருக்குமாறு செய்த அவருடைய அதிகாரம் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் தலைவிதி ஆகியவை மனிதகுலம் அவருடைய கரத்திலிருந்து உண்மையிலேயே பிறந்தவுடன், முறையாகத் தொடங்கின. அவர் மனிதகுலத்தை நிர்வகிக்கவும், மனிதகுலத்தை ஆளவும் விரும்பினார். அவர் மனிதகுலத்தை இரட்சிக்கவும், மனிதகுலத்தை உண்மையிலேயே ஆதாயம் செய்யவும், எல்லாவற்றையும் ஆளக்கூடிய ஒரு மனிதகுலத்தை ஆதாயம் செய்யவும் விரும்பினார். அத்தகைய மனிதகுலத்தை அவருடைய அதிகாரத்தின்கீழ் வாழவைக்கவும், அவருடைய அதிகாரத்தை அவர்கள் அறிந்து அதற்குக் கீழ்ப்படியவும் அவர் விரும்பினார். இவ்வாறு, தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பயன்படுத்தி மனிதர்களிடையே அதிகாரத்தை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தத் தொடங்கினார் மற்றும் அவருடைய வார்த்தைகளை உணர அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். நிச்சயமாக, இந்தச் செயல்முறையின் போது எல்லா இடங்களிலும் தேவனுடைய அதிகாரம் வெளிப்படுத்தப்பட்டது. தேவனுடைய தனித்துவத்தையும் அவருடைய தனித்துவமான அதிகாரத்தையும் நீங்கள் புரிந்தும், அறிந்தும் கொள்ளக்கூடிய சில குறிப்பிட்ட, நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டுகளை மட்டும் நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.

ஆதியாகமம் 9:11-13 வரை உள்ள வசனப் பகுதிக்கும், தேவன் உலகைச் சிருஷ்டித்ததைப் பற்றிய பதிவுக்கும் மேலேயுள்ள வசனப் பகுதிகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றபோதிலும், ஒரு வித்தியாசமும் இருக்கிறது. ஒற்றுமை என்னவாக இருக்கிறது? தேவன், தாம் விரும்பியதைச் செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் ஒற்றுமை இருக்கிறது மற்றும் அதில் வித்தியாசம் என்னவென்றால், இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள வசனப் பகுதிகள் மனிதனுடனான தேவனுடைய உரையாடலைப் பிரதிபலிக்கின்றன. அதில், அவர் மனிதனுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார் மற்றும் உடன்படிக்கையில் உள்ளதை மனிதனிடம் கூறினார். தேவனுடைய அதிகாரத்தின் இந்த கிரியை மனிதனுடனான உரையாடலின் போது அடையப்பட்டது. அதாவது, மனிதகுலத்தை சிருஷ்டிப்பதற்கு முன்பு, தேவனுடைய வார்த்தைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டளைகள் ஆகியவை அவர் சிருஷ்டிக்க விரும்பிய ஜீவஜந்துக்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், அந்த நேரத்தில் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க யாரோ ஒருவர் இருந்தார். ஆகவே, அவருடைய வார்த்தைகள் மனிதனுடனான உரையாடலாகவும், மனிதனுக்கான ஒரு அறிவுரையாகவும் எச்சரிப்பாகவும் இருந்தன. மேலும், தேவனுடைய வார்த்தைகள் அவருடைய அதிகாரத்தைக் கொண்ட கட்டளைகளாக இருந்தன மற்றும் அவை எல்லாவற்றிற்கும் வழங்கப்பட்டன.

இந்த வசனப் பகுதியில் தேவனுடைய எந்த நடவடிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது? உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்தபின் மனிதனுடன் தேவன் ஏற்படுத்திய உடன்படிக்கையை இந்த வசனப் பகுதி பதிவு செய்கிறது. மீண்டும் இதுபோன்ற அழிவை தேவன் உலகில் உண்டாக்க மாட்டார் என்றும், இந்த முடிவுக்கு தேவன் ஒரு அடையாளத்தை உண்டாக்கினார் என்றும் அது மனிதனிடம் கூறுகிறது. இந்த அடையாளம் என்னவாக இருந்தது? வேதவசனங்களில், “நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்,” என்று கூறப்பட்டுள்ளது. சிருஷ்டிகர் மனிதகுலத்திடம் பேசும் மூல வார்த்தைகள் இவை. அவர் சொன்ன இந்த வார்த்தைகளைப் போலவே, மனிதனுடைய கண்களுக்கு முன்பாக ஒரு வானவில் தோன்றியது மற்றும் அது இன்றுவரை அங்கேயே இருக்கிறது. எல்லோரும் அத்தகைய வானவில்லைப் பார்த்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது, அது எவ்வாறு தோன்றுகிறது என்பதை நீ அறிந்திருக்கிறாயா? விஞ்ஞானத்தால் அதை நிரூபிக்கவோ அல்லது அதன் மூலஆதாரத்தை கண்டுபிடிக்கவோ அல்லது அதன் இருப்பிடத்தை அடையாளம் காணவோ இயலாது. ஏனென்றால், வானவில் என்பது சிருஷ்டிகருக்கும் மனிதனுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கிறது. அதற்கு எந்த விஞ்ஞான அடிப்படையும் தேவையில்லை. அது மனிதனால் சிருஷ்டிக்கப்படவில்லை. மனிதனுக்கு அதை மாற்றும் திறனும் இல்லை. சிருஷ்டிகர் தமது வார்த்தைகளைப் பேசியதன் பின் நிகழ்ந்த அவருடைய அதிகாரத்தின் தொடர்ச்சியாகும். மனிதனுடனான தமது உடன்படிக்கை மற்றும் வாக்குத்தத்தத்தைக் கடைப்பிடிப்பதற்கு சிருஷ்டிகர் தனது சொந்தக் குறிப்பிட்ட முறையைப் பயன்படுத்தினார். ஆகவே, சிருஷ்டிகரானாலும் சரி, சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலமானாலும் சரி, அவர் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லைப் பயன்படுத்துவது என்பது என்றென்றும் மாறாத ஒரு பரலோக கட்டளையாகவும் சட்டமாகவும் இருக்கிறது. இந்த மாறாத சட்டம் என்பது எல்லாவற்றையும் சிருஷ்டித்ததைத் தொடர்ந்து சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் மற்றொரு உண்மையான வெளிப்பாடாக இருக்கிறது என்றும் சொல்லப்பட வேண்டும், மேலும் சிருஷ்டிகருடைய அதிகாரமும் வல்லமையும் வரம்பற்றது என்றும் சொல்லப்பட வேண்டும். அவரது வானவில்லை ஒரு அடையாளமாகப் பயன்படுத்துவது என்பது சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் தொடர்ச்சி மற்றும் நீட்டிப்பாகும். தேவன் தமது வார்த்தைகளைப் பயன்படுத்தி நிகழ்த்திய மற்றொரு கிரியையாகவும், வார்த்தைகளைப் பயன்படுத்தி மனிதனுடன் தேவன் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாகவும் இது இருந்தது. அவர் கொண்டுவரத் தீர்மானித்ததை மற்றும் அது எந்த விதத்தில் நிறைவேற்றப்பட்டு அடையப்படும் என்பதை அவர் மனிதனிடம் சொன்னார். இவ்வாறு, தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளின்படி காரியம் நிறைவேறியது. தேவன் மட்டுமே அத்தகைய வல்லமையைக் கொண்டிருக்கிறார் மற்றும் அவர் இந்த வார்த்தைகளைப் பேசிய பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, தேவனுடைய வாயிலிருந்து சொல்லப்பட்ட வானவில்லை மனிதனால் இன்றும் பார்க்க முடிகிறது. தேவன் கூறிய அந்த வார்த்தைகளின் காரணமாக, இந்த விஷயம் இன்று வரை மாறாமலும், மாற்றம் பெறாமலும் இருக்கிறது. இந்த வானவில்லை யாராலும் அகற்ற முடியாது, அதன் சட்டங்களை யாராலும் மாற்ற முடியாது மற்றும் அது தேவனுடைய வார்த்தைகளால் மட்டுமே இருக்கிறது. இது தேவனுடைய அதிகாரமாக மட்டுமே இருக்கிறது. “தேவன் அவருடைய வார்த்தையைப் போலவே நல்லவர், அவருடைய வார்த்தை நிறைவேறும் மற்றும் அவர் நிறைவேற்றுவது என்றென்றும் நிலைத்திருக்கும்.” இத்தகைய வார்த்தைகள் இங்கே தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன மற்றும் இது தேவனுடைய அதிகாரம் மற்றும் வல்லமையின் தெளிவான அடையாளம் மற்றும் குணாதிசயமாகும். அத்தகைய அடையாளம் அல்லது குணாதிசயம் எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனிடமும் இல்லை அல்லது காணப்படவில்லை அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்தவொரு ஜீவனிலும் இது காணப்படவில்லை. இது தனித்துவமான தேவனுக்கு மட்டுமே சொந்தமானது மற்றும் சிருஷ்டிகர் மட்டும் கொண்டுள்ள அடையாளத்தையும் சாராம்சத்தையும் ஜீவஜந்துக்களிலிருந்து வேறுபடுத்துகிறது. அதே சமயம், தேவனைத் தவிர, சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்தவொரு ஜீவஜந்துவாலும் அதை ஒருபோதும் மிஞ்ச முடியாது என்பதற்கான அடையாளம் மற்றும் பண்பாக அது இருக்கிறது.

தேவன் மனிதனுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயலாகவும், ஒரு உண்மையை மனிதனிடம் பகிர்வதற்கும், அவருடைய சித்தத்தைச் சொல்வதற்கும் அவர் பயன்படுத்த விரும்பிய ஒன்றாகவும் இருந்தது. இந்த நோக்கத்திற்காக, மனிதனுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்த அவர் மனிதனுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையின் வாக்குத்தத்தமாக ஒரு விசேஷித்த அடையாளத்தைப் பயன்படுத்தும் ஒரு தனித்துவமான முறையை அவர் பயன்படுத்தினார். எனவே, இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியது ஒரு பெரிய நிகழ்வாக இருந்ததா? அது எவ்வளவு பெரியதாக இருந்தது? இதுவே உடன்படிக்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது: இது ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் அல்லது ஒரு ஜனக்கூட்டத்திற்கும் மற்றும் மற்றொரு ஜனக்கூட்டத்திற்கும் அல்லது ஒரு நாட்டுக்கும் மற்றும் மற்றொரு நாட்டுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை அல்ல. மாறாக, சிருஷ்டிகருக்கும் முழு மனிதகுலத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாக இருக்கிறது. சிருஷ்டிகர் எல்லாவற்றையும் அழிக்கும் நாள் வரை அது நிலைத்திருக்கும். இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுபவர் சிருஷ்டிகர். அதன் பராமரிப்பாளராகவும் சிருஷ்டிகர் இருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், மனிதர்களுடன் ஏற்படுத்தப்பட்ட வானவில் உடன்படிக்கை முழுமையடைந்து, சிருஷ்டிகருக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான உரையாடலின்படி நிறைவேற்றப்பட்டது. இன்று வரை, அது அப்படியே இருக்கிறது. சிருஷ்டிகருடைய அதிகாரத்திற்கு அடிபணிவது, கீழ்ப்படிவது, அதை நம்புவது, கிரகிப்பது, அதற்கு சாட்சி கொடுப்பது மற்றும் அதனைப் புகழ்வதைத் தவிர வேறு எதனை ஜீவஜந்துக்களால் செய்ய முடியும்? அத்தகைய உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான வல்லமை தனித்துவமான தேவனைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. வானவில்லின் தோற்றம், மீண்டும் மீண்டும் எப்போதும் மனிதகுலத்திற்கான ஒரு அறிவிப்பாக இருக்கிறது மற்றும் சிருஷ்டிகருக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான உடன்படிக்கைக்கு, மனிதனின் கவனத்தை ஈர்க்கிறது. சிருஷ்டிகருக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான உடன்படிக்கையின் தொடர்ச்சியான வெளிப்பாடுகளில், மனிதகுலத்திற்கு காண்பிக்கப்படுவது வானவில்லோ உடன்படிக்கையோ அல்ல, மாறாக சிருஷ்டிகருடைய மாறாத அதிகாரமாக இருக்கிறது. வானவில்லின் தொடர்ச்சியான தோற்றம் மறைக்கப்பட்ட இடங்களில் சிருஷ்டிகருடைய மகத்தான மற்றும் அற்புதமான கிரியைகளை விவரிக்கிறது. அதே நேரத்தில், ஒருபோதும் மங்காத மற்றும் ஒருபோதும் மாறாத சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் முக்கியப் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. இது சிருஷ்டிகருடைய தனித்துவமான அதிகாரத்தின் மற்றொரு அம்சத்தின் காட்சி அல்லவா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 92

தேவனுடைய ஆசீர்வாதம்

ஆதி. 17:4-6  நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

ஆதி. 18:17-19  ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், யேகோவா ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, யேகோவாவினுடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்.

ஆதி. 22:16-18  உன் ஒரே புத்திரனாகிய உன் மகன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தை நீ செய்ததால், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன், உன் சந்ததியை வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள் போலவும், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும் பெருகப்பண்ணுவேன்; உன் சந்ததியினர் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தமையால் உன்னுடைய சந்ததியினால் பூமியிலுள்ள சகல நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று என்மீது ஆணையிட்டிருக்கிறேன் என்று யேகோவா சொல்கிறார் என்றார்.

யோபு 42:12  ஆதலால், யோபுவின் முன்னிலைமையைக் காட்டிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார் யேகோவா: அவனிடம் பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் நுகம்பூட்டியகாளைகளும், ஆயிரம் பெண் கழுதைகளும் இருந்தன.

சிருஷ்டிகருடைய வார்த்தைகளின் தனித்துவமான முறை மற்றும் பண்புகள் ஆகியவை சிருஷ்டிகருடைய தனித்துவமான அடையாளம் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகும் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

பலர் தேவனுடைய ஆசீர்வாதங்களைத் தேடிப் பெற விரும்புகிறார்கள், ஆனால் எல்லோராலும் இந்த ஆசீர்வாதங்களைப் பெற முடியாது. ஏனென்றால், தேவன் தம்முடைய சொந்தக் கொள்கைகளைக் கொண்டிருக்கிறார் மற்றும் மனிதனை தமது சொந்த வழியில் ஆசீர்வதிக்கிறார். தேவன் மனிதனுக்கு அளிக்கும் வாக்குத்தத்தங்கள் மற்றும் மனிதனுக்கு அவர் அளிக்கும் கிருபையின் அளவு ஆகியவை மனிதனுடைய எண்ணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன. எனவே, தேவனுடைய ஆசீர்வாதங்கள் மூலம் காண்பிக்கப்படுவது என்னவாக இருக்கிறது? ஜனங்கள் தங்களுக்குள் எதனைப் பார்க்க முடியும்? இந்தக் கட்டத்தில், தேவன் எத்தகைய ஜனங்களை ஆசீர்வதிக்கிறார் மற்றும் மனிதனை தேவன் ஆசீர்வதிப்பதற்கான கொள்கைகள் யாவை என்ற விவாதத்தை ஒதுக்கி வைப்போம். அதற்குப் பதிலாக, தேவனுடைய அதிகாரத்தை அறிந்து கொள்ளும் கண்ணோட்டத்தில், தேவனுடைய அதிகாரத்தை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் மனிதனுக்கான தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பார்ப்போம்.

மேலேயுள்ள நான்கு வசனங்களும் மனிதனுக்கான தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பற்றிய பதிவுகளாக இருக்கின்றன. தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்ற ஆபிரகாம் மற்றும் யோபு ஆகியோரைப் பற்றிய விரிவான விளக்கத்தையும், தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை அளித்ததற்கான காரணங்களையும், இந்த ஆசீர்வாதங்களில் உள்ளவற்றையும் பற்றிய விரிவான விளக்கத்தை அவை வழங்குகின்றன. ஆசீர்வாதங்களை அளிப்பவர் மற்றும் அத்தகைய ஆசீர்வாதங்களைப் பெறுபவர் ஆகியோர் முற்றிலும் வேறுபட்ட அடையாளம், அந்தஸ்து மற்றும் சாராம்சம் ஆகியவற்றைக் கொண்டிருகிறார்கள் என்பதை ஜனங்கள் புரிந்துகொள்ள தேவனுடைய வார்த்தைகளின் தொனியும் விதமும் மற்றும் அவர் பேசிய நோக்கமும் நிலையும் உதவுகின்றன. இந்த வார்த்தைகளின் தொனியும் விதமும், அவை பேசப்பட்ட நிலையும், சிருஷ்டிகருடைய அடையாளத்தைக் கொண்ட தேவனுக்கு தனித்துவமாக இருக்கின்றன. சிருஷ்டிகருக்கு அதிகாரம் மற்றும் வல்லமை இருக்கிறது, அதேபோல் சிருஷ்டிகருடைய கனம் மற்றும் மாட்சிமையை அவர் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவொரு மனிதனுக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

முதலாவதாக ஆதியாகமம் 17:4-6 வரை வாசிப்போம்: “நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.” தேவன் ஆபிரகாமை ஜாதிகளின் தகப்பனாக்குவார், அவனுக்கு மிகுந்த பலனளிப்பார் மற்றும் அவனிடத்தில் ஜாதிகளை உருவாக்குவார் மற்றும் ராஜாக்கள் அவனிடமிருந்து வருவார்கள், என்னும் இந்த வார்த்தைகளே, தேவன் ஆபிரகாமுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையாகவும், ஆபிரகாமுக்கான தேவனுடைய ஆசீர்வாதமுமாகவும் இருந்தன. இந்த வார்த்தைகளில் தேவனுடைய அதிகாரத்தை நீ காண்கிறாயா? அத்தகைய அதிகாரத்தை நீ எப்படிப் பார்க்கிறாய்? தேவனுடைய அதிகாரத்தினுடைய சாராம்சத்தின் எந்த அம்சத்தை நீ காண்கிறாய்? இந்த வார்த்தைகளைத் தெளிவாக வாசிப்பதிலிருந்து, தேவனுடைய அதிகாரம் மற்றும் அடையாளம் ஆகியவை தேவனுடைய வார்த்தைகளின் நடையில் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. உதாரணமாக, “நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ…நான் உன்னை ஏற்படுத்தினபடியால்…நான் உன்னை பலுகப்பண்ணுவேன்…,” “நீ தகப்பனாவாய்” மற்றும் “நான் செய்வேன்,” போன்ற தேவனுடைய உறுதிப்படுத்தும் சொற்றொடர்கள் தேவனுடைய அடையாளம் மற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. ஒரு வகையில், இது சிருஷ்டிகர் தாம் உண்மையாக உள்ளதன் அடையாளமாகும். மற்றொரு வகையில், அவை தேவனால் பயன்படுத்தப்படும் விசேஷித்த வார்த்தைகளாகும், அதாவது அந்த வார்த்தைகள் சிருஷ்டிகருடைய அடையாளத்தைக் கொண்டிருக்கின்றன. அத்துடன் வழக்கமான வார்த்தைக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக இருகின்றன. எவரேனும் அதிகப் பலன் பெறுவார்கள், ஜாதிகள் அவர்களிடமிருந்து சிருஷ்டிக்கப்படும், ராஜாக்கள் அவர்களிடமிருந்து தோன்றுவார்கள் என்று யாரேனும் சொன்னால், சந்தேகத்திற்கு இடமின்றி அது ஒரு வகையான ஆசையாக மட்டுமே இருக்கிறது மற்றும் அது ஒரு வாக்குத்தத்தமோ ஆசீர்வாதமோ அல்ல. ஆகவே, “நான் உன்னை இவ்வாறு ஏற்படுத்துவேன், நீ இவ்வாறு இருப்பாய்” என்று ஜனங்கள் சொல்லத் துணிய மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் அத்தகைய வல்லமையைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். அது அவர்களால் நடப்பதன்று. அவர்கள் அப்படிச் சொன்னாலும், அவர்களுடைய வார்த்தைகள் அவர்களுடைய ஆசை மற்றும் லட்சியத்தால் உந்தப்படும் வெறுமையான முட்டாள்தனமாக இருக்கும். அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்தால் யாரேனும் இவ்வளவு பெரிய தொனியில் பேசத் துணிவார்களா? எல்லோரும் தங்கள் சந்ததியினருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள் மற்றும் அவர்கள் சிறந்து விளங்கி சிறந்த ஜெயத்தைப் பெறுவார்கள் என்று நம்புகிறார்கள். “அவர்களில் ஒருவர் பேரரசராக மாறுவது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! ஒருவர் ஆளுகை செய்பவராக இருக்க வேண்டும் என்றால், அவர்கள் முக்கியமான ஒருவராக இருக்கும் வரையில் அது நன்மையானதாகும்!” இவை அனைத்தும் ஜனங்களின் விருப்பங்களாகும், ஆனால் ஜனங்கள் தங்கள் சந்ததியினருக்கு மட்டுமே ஆசீர்வாதம் அளிக்க முடியும் மற்றும் அவர்களுடைய வாக்குத்தத்தங்கள் எதையும் நிறைவேற்றவோ அல்லது நிஜமாக்கவோ முடியாது. இதுபோன்ற விஷயங்களை அடைய அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். ஏனென்றால், அவர்களைப் பற்றிய அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆகவே, மற்றவர்களின் தலைவிதியை அவர்களால் எவ்வாறு கட்டளையிட முடியும்? தேவன் இதுபோன்ற வார்த்தைகளைக் கூறக் காரணம் என்னவென்றால், தேவன் அத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருப்பதாலும், மனிதனுக்கு அவர் அளிக்கும் எல்லா வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுவதற்கும், உண்மையாக்குவதற்கும், மனிதனுக்கு அவர் அளிக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் நிறைவேற்றுவதற்கும் அவர் வல்லவர். மனிதன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டான் மற்றும் ஒருவரை மிகுந்த பலனடையச் செய்வது தேவனுக்கு ஒரு குழந்தையின் விளையாட்டைப் போன்றதாகும். ஒருவரின் சந்ததியினரை செழிப்பானவர்களாக மாற்றுவதற்கு அவருடைய வார்த்தை ஒன்று போதும். அத்தகைய காரியத்திற்காக அவர் ஒருபோதும் வியர்வை சிந்தி கிரியை செய்ய வேண்டியதில்லை அல்லது அவரது மனதை ஆயத்தம் செய்ய வேண்டியதில்லை அல்லது அதன் மீது முடிச்சுகள் போல தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் தேவனுடைய வல்லமையாக, தேவனுடைய அதிகாரமாக இருக்கிறது.

“ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்” என்று ஆதியாகமம் 18:17 இல் வாசித்த பிறகு, தேவனுடைய அதிகாரத்தை உங்களால் உணர முடிகிறதா? சிருஷ்டிகருடைய அசாதாரணத்தன்மையை உங்களால் உணர முடிகிறதா? சிருஷ்டிகருடைய தெய்வீகத்தன்மையை உங்களால் உணர முடிகிறதா? தேவனுடைய வார்த்தைகள் நிச்சயமானவை. ஜெயத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாகவோ பிரதிநிதித்துவப்படுத்துவதன் காரணமாகவோ அத்தகைய வார்த்தைகளை தேவன் சொல்லவில்லை. அவை தேவனுடைய வார்த்தைகளின் அதிகாரத்திற்குச் சான்றாகவும் இருக்கின்றன மற்றும் அவை தேவனுடைய வார்த்தைகளை நிறைவேற்றும் கட்டளையாகவும் இருக்கின்றன. நீங்கள் இங்கு கவனம் செலுத்த வேண்டிய இரண்டு வெளிப்பாடுகள் உள்ளன. “ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,” என்று தேவன் கூறும்போது, இந்த வார்த்தைகளில் ஏதேனும் தெளிவின்மை உள்ளதா? கவலைக்குரிய அம்சம் ஏதேனும் உள்ளதா? பயத்தின் அம்சம் ஏதேனும் உள்ளதா? தேவனுடைய வார்த்தைகளில் “நிச்சயமாக” மற்றும் “இருக்க வேண்டும்” என்ற, குறிப்பாக மனிதனிடம் கூறப்படும் வார்த்தைகளின் காரணமாக, அவனுக்குள் பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்ட இந்த அம்சங்கள் ஒருபோதும் சிருஷ்டிகருடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மற்றவர்களை நன்றாக இருக்கும்படியாக வாழ்த்தும் எவரும் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தத் துணிய மாட்டார்கள். ஒரு பெரிய மற்றும் வல்லமைமிக்க தேசத்தைக் கொடுப்பது போல உறுதியுடன் மற்றொருவரை ஆசீர்வதிக்க யாரும் துணியமாட்டார்கள் அல்லது பூமியின் எல்லா ஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று வாக்குத்தத்தமளிக்கமாட்டார்கள். தேவனுடைய வார்த்தைகள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றன, அவை எதையாகிலும் நிரூபிக்கின்றன மற்றும் அந்த “எதையாகிலும்” என்பது என்னவாக இருக்கிறது? தேவனுக்கு அத்தகைய அதிகாரம் இருக்கிறது என்பதையும், அவருடைய அதிகாரத்தால் இவற்றை நிறைவேற்ற முடியும் என்பதையும், அவற்றை நிறைவேற்றுவது தவிர்க்க முடியாதது என்பதையும் அவை நிரூபிக்கின்றன. தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்த எல்லாவற்றிலும் சிறிதும் தயங்காமல், அதைக் குறித்து தமது இருதயத்தில் உறுதியாக இருந்தார். மேலும், இவை அனைத்தும் அவருடைய வார்த்தைகளின்படி நிறைவேற்றப்படும் மற்றும் எந்தவொரு வல்லமையும் அதன் நிறைவேறுதலையும் மாற்றவோ, தடுக்கவோ, பலவீனப்படுத்தவோ, தொந்தரவு செய்யவோ முடியாது. வேறு என்ன நடந்தது என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய வார்த்தைகளின் நிறைவேறுதலையும், செய்து முடித்தலையும் எதுவும் தடை செய்யவோ பாதிக்கவோ முடியாது. இது சிருஷ்டிகருடைய வாயிலிருந்து உச்சரிக்கப்படும் வார்த்தைகளின் வல்லமையாக இருக்கிறது மற்றும் மனிதனுடைய மறுப்பைப் பொறுத்துக்கொள்ளாத சிருஷ்டிகருடைய அதிகாரமாகவும் இருக்கிறது! இந்த வார்த்தைகளைப் படித்த பிறகும் உனக்குச் சந்தேகம் இருக்கிறதா? இந்த வார்த்தைகள் தேவனுடைய வாயிலிருந்து பேசப்பட்டன மற்றும் தேவனுடைய வார்த்தைகளில் வல்லமை, மாட்சிமை மற்றும் அதிகாரம் இருக்கிறது. அத்தகைய வல்லமையையும் அதிகாரத்தையும், உண்மையை நிறைவேற்றுவதற்கான தவிர்க்க முடியாத தன்மையையும், எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத ஜீவனாலும் அடையமுடியாது மற்றும் சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்தவொரு ஜீவனாலும் மிஞ்ச முடியாது. சிருஷ்டிகரால் மட்டுமே மனிதகுலத்துடன் அத்தகைய தொனியுடனும், உள்ளுணர்வுடனும் உரையாட முடியும் மற்றும் அவருடைய வாக்குத்தத்தங்கள் வெறுமையான வார்த்தைகள் அல்ல அல்லது செயலற்ற பெருமைகள் அல்ல என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன. ஆனால் எந்தவொரு மனிதராலும், நிகழ்வினாலும் அல்லது காரியத்தினாலும் மிஞ்சமுடியாத தனித்துவமான அதிகாரத்தின் வெளிப்பாடாக அவை இருக்கின்றன.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 93

தேவனுடைய ஆசீர்வாதம்

ஆதி. 17:4-6  நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

ஆதி. 18:17-19  ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், யேகோவா ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, யேகோவாவினுடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்.

ஆதி. 22:16-18  உன் ஒரே புத்திரனாகிய உன் மகன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தை நீ செய்ததால், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன், உன் சந்ததியை வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள் போலவும், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும் பெருகப்பண்ணுவேன்; உன் சந்ததியினர் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தமையால் உன்னுடைய சந்ததியினால் பூமியிலுள்ள சகல நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று என்மீது ஆணையிட்டிருக்கிறேன் என்று யேகோவா சொல்கிறார் என்றார்.

யோபு 42:12  ஆதலால், யோபுவின் முன்னிலைமையைக் காட்டிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார் யேகோவா: அவனிடம் பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் நுகம்பூட்டியகாளைகளும், ஆயிரம் பெண் கழுதைகளும் இருந்தன.

சிருஷ்டிகருடைய வார்த்தைகளின் தனித்துவமான முறை மற்றும் பண்புகள் ஆகியவை சிருஷ்டிகருடைய தனித்துவமான அடையாளம் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகும் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தி)

தேவன் பேசும் வார்த்தைகளுக்கும் மனிதன் பேசும் வார்த்தைகளுக்கும் வித்தியாசம் என்னவாக இருக்கிறது? தேவன் பேசும் இந்த வார்த்தைகளை நீ வாசிக்கும்போது, தேவனுடைய வார்த்தைகளின் வல்லமையையும் தேவனுடைய அதிகாரத்தையும் உணர்கிறாய். இதுபோன்ற வார்த்தைகளை ஜனங்கள் சொல்வதைக் கேட்கும்போது நீ எவ்வாறு உணருகிறாய்? அவர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்கள், பெருமை பேசுகிறவர்கள், தங்களை பெருமையாகக் காட்டிக் கொள்ளும் ஜனங்கள் என்று நீ நினைக்கிறாயா? அவர்களுக்கு இந்த வல்லமை இல்லாததனால், இத்தகைய அதிகாரம் அவர்களிடம் இல்லை. எனவே, இத்தகைய விஷயங்களை அடைய அவர்களால் ஒருபோதும் இயலாது. அவர்களுடைய வாக்குத்தத்தங்களானவை அவர்களுடைய கருத்துக்களின் கவனக்குறைவை மட்டுமே காட்டுகின்றன என்பது குறித்து அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். யாரேனும் இதுபோன்ற வார்த்தைகளைச் சொன்னால், அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி திமிர்பிடித்தவர்களாகவும், அதிக நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள் மற்றும் தள்ளப்பட்ட பிரதான தூதனுடைய மனநிலையின் ஒரு சிறந்த எடுத்துக்காடாக அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த வார்த்தைகள் தேவனுடைய வாயிலிருந்து வந்தன. ஆணவத்தின் எந்தக் அம்சத்தையாகிலும் இங்கே உணர்கிறாயா? தேவனுடைய வார்த்தைகள் வெறும் நகைச்சுவை என்று நீ நினைக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகள் அதிகாரமாகவும், தேவனுடைய வார்த்தைகள் உண்மையாகவும் இருக்கின்றன மற்றும் அந்த வார்த்தைகள் அவருடைய வாயிலிருந்து உச்சரிக்கப்படுவதற்கு முன்பு, அதாவது, அவர் எதையாகிலும் செய்ய முடிவெடுக்கும் போது, அந்த விஷயம் ஏற்கனவே நிறைவேறியிருக்கும். தேவன் ஆபிரகாமிடம் சொன்னதெல்லாம் தேவன் ஆபிரகாமுடன் ஏற்படுத்திய ஒரு உடன்படிக்கை மற்றும் தேவன் ஆபிரகாமுக்கு அளித்த ஒரு வாக்குத்தத்தம் என்று சொல்லலாம். இந்த வாக்குத்தத்தம் ஒரு நிறுவப்பட்ட உண்மை, அத்துடன் ஒரு நிறைவேற்றப்பட்ட உண்மை மற்றும் இந்த உண்மைகள் தேவனுடைய திட்டத்தின்படி படிப்படியாக தேவனுடைய எண்ணங்களில் நிறைவேற்றப்பட்டன. ஆகவே, தேவன் இத்தகைய வார்த்தைகளைச் சொல்வதால், அவர் ஒரு திமிர்பிடித்த மனநிலை கொண்டவர் என்று அதற்கு அர்த்தமாகாது. ஏனென்றால், தேவனால் அத்தகையவற்றை நிறைவேற்ற முடியும். அவருக்கு அந்த வல்லமையும் அதிகாரமும் இருக்கிறது மற்றும் இந்தச் செயல்களை நிறைவேற்ற முழுமையான திறன் கொண்டவர் அவர் மற்றும் அவற்றின் நிறைவேறுதல் முற்றிலுமாக அவருடைய திறனின் எல்லைக்குள் இருக்கிறது. இது போன்ற வார்த்தைகள் தேவனுடைய வாயிலிருந்து உச்சரிக்கப்படும்போது, அவை தேவனுடைய உண்மையான மனநிலையின் வெளிப்பாடாக மற்றும் வெளிப்படுத்துதலாக, தேவனுடைய சாராம்சம் மற்றும் அதிகாரத்தின் பரிபூரணமான வெளிப்பாடாக மற்றும் வெளிப்படுத்துதலாக இருக்கின்றன மற்றும் சிருஷ்டிகருடைய அடையாளத்திற்கு இதைவிட பொருத்தமான மற்றும் ஏற்ற சான்று எதுவும் இல்லை. இத்தகைய வார்த்தைகள் சொல்லப்படும் விதம், தொனி மற்றும் நடை ஆகியவை துல்லியமாக சிருஷ்டிகருடைய அடையாளத்தின் குறியீடாக இருக்கின்றன மற்றும் தேவனுடைய சொந்த அடையாளத்தின் வெளிப்பாட்டுடன் ஒத்துப்போவதாக இருக்கின்றன. அவற்றில் எந்த பாசாங்கும் இல்லை, களங்கமும் இல்லை. அவை, முற்றிலுமாக மற்றும் முழுவதுமாக, சிருஷ்டிகருடைய சாராம்சம் மற்றும் அதிகாரத்தின் பரிபூரணமான நிரூபணமாக இருகின்றன. ஜீவஜந்துக்களைப் பொறுத்தவரையில், அவை இந்த அதிகாரத்தையும், இந்த சாராம்சத்தையும் கொண்டிருக்கவில்லை, தேவன் கொடுத்த வல்லமையையும் அவை கொண்டிருக்கவில்லை. மனிதன் அத்தகைய நடத்தையை வெளிப்படுத்தினால், அது நிச்சயமாக அவனது சீர்கேடான மனநிலையின் முழுமையாக இருக்கும் மற்றும் இதன் வேரில் மனிதனுடைய ஆணவம் மற்றும் மோசமான லட்சியத்தின் தலையிடும் தாக்கமும் இருக்கும் மற்றும் அது வேறு யாருடையதாகவும் அல்லாமல் ஜனங்களை ஏமாற்றி, தேவனுக்குத் துரோகம் செய்ய அவர்களைக் கவர்ந்திழுக்க விரும்பும் சாத்தானாகிய பிசாசின் சீர்கெடுக்கும் நோக்கங்களின் வெளிப்பாடாகவும் இருக்கும். அத்தகைய மொழியால் வெளிப்படுத்தப்படுவதை தேவன் எவ்வாறு கருதுகிறார்? நீ அவருடைய இடத்தைப் பறிக்க விரும்புகிறாய் என்றும், நீ ஆள்மாறாட்டம் செய்து உன்னைக் கொண்டு அவருக்கு மாற்றாக விரும்புகிறாய் என்றும் தேவன் கூறுவார். தேவனுடைய வார்த்தைகளின் தொனியை நீ போலியாகச் செய்ய முற்படும்போது, ஜனங்களின் இருதயங்களில் இருக்கும் தேவனுடைய இடத்தை மாற்றுவதாக இருக்கிறது மற்றும் தேவனுக்குச் சொந்தமான மனிதகுலத்தினை எடுத்துக்கொள்வதுமாக இருக்கிறது. உண்மையில், இதுவே சாத்தான் ஆகும். இவை பரலோகத்தால் சகிக்க முடியாத, தள்ளப்பட்ட பிரதான தூதனுடைய சந்ததியினரின் செயல்களாக இருக்கின்றன! சில வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் ஜனங்களைத் தவறாக வழிநடத்தும் மற்றும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட, ஒரு குறிப்பிட்ட வழியில் தேவனைப் போல போலியாக செயல்படும், யாரேனும் உங்களிடையே இருக்கிறார்களா மற்றும் இந்த மனிதரின் வார்த்தைகளும் செயல்களும் தேவனுடைய அதிகாரத்தையும் வல்லமையையும் சுமந்ததைப் போல, இந்த மனிதரின் சாராம்சம் மற்றும் அடையாளம் தனித்துவமானது போல மற்றும் இந்த மனிதரின் வார்த்தைகளின் தொனி தேவனைப் போன்றது போலவும் உணர வைக்கின்றனவா? நீங்கள் எப்போதாவது இதுபோன்ற எதையாகிலும் செய்திருக்கிறீர்களா? உங்கள் பேச்சில் நீங்கள் எப்போதாவது தேவனுடைய தொனியை போலியாக செய்திருக்கிறீர்களா, தேவனுடைய மனநிலையை வேண்டுமென்றே பிரதிபலிக்கும் சைகைகளுடன், வல்லமையும் அதிகாரமும் இருப்பதாக நீங்கள் கருதுயிருக்கிறீர்களா? உங்களில் பெரும்பாலானோர் பெரும்பாலும் அப்படிச் செயல்படுகிறார்களா அல்லது செயல்படத் திட்டமிடுகிறார்களா? இப்போது, சிருஷ்டிகருடைய அதிகாரத்தை நீங்கள் உண்மையிலேயே காணும்போது, உணர்ந்து, அறிந்திருக்கும்போது, நீங்கள் என்னென்ன செய்தீர்கள் மற்றும் உங்களைப் பற்றி நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டதைப் பற்றி திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் வெறுப்படைந்திருக்கிறீர்களா? உங்கள் அறியாமை மற்றும் வெட்கமற்ற தன்மையை நீங்கள் அடையாளம் காண்கிறீர்களா? அத்தகைய மனிதர்களின் தன்மை மற்றும் சாராம்சத்தைப் பிரித்த பின்னர், அவர்கள் நரகத்தின் சபிக்கப்பட்ட சந்ததி என்று சொல்ல முடியுமா? இதுபோன்ற செயல்களைச் செய்கிற ஒவ்வொருவரும் தங்களுக்குள் அவமானத்தைத் தருகிறார்கள் என்று கூற முடியுமா? அவர்களுடைய இயல்பின் தீவிரத்தை நீங்கள் உணர்கிறீர்களா? அது எவ்வளவு தீவிரமானதாக இருக்கிறது? இவ்வாறு செயல்படும் ஜனங்களின் நோக்கம், தேவனைப் போன்று பாசாங்கு செய்வதாகும். அவர்கள் தேவனாக இருக்க விரும்புகிறார்கள். ஜனங்கள் தங்களை தேவனாக வணங்கும்படி செய்கிறார்கள். அவர்கள் ஜனங்களின் இருதயங்களில் தேவனுடைய இடத்தை அகற்றவும், மனிதர்களிடையே செயல்படும் தேவனை அகற்றவும் விரும்புகிறார்கள் மற்றும் ஜனங்களைக் கட்டுப்படுத்துதல், அவர்களை விழுங்குதல் மற்றும் அவர்களைக் கைப்பற்றுதல் ஆகியவற்றை அடையும் நோக்கில் அவர்கள் இதைச் செய்கிறார்கள். எல்லோருக்கும் இது போன்ற ஆழ்மனதின் ஆசைகளும் லட்சியங்களும் உள்ளன. எல்லோரும் இந்த வகையான சீர்கேடு நிறைந்த சாத்தானிய சாராம்சத்தில் ஜீவிக்கிறார்கள். ஒரு சாத்தானிய இயல்பைக் கொண்டு அவர்கள் தேவனோடு பகைமையுடன் இருக்கிறார்கள், தேவனுக்கு துரோகம் செய்கிறார்கள் மற்றும் தேவனாக மாற விரும்புகிறார்கள். தேவனுடைய அதிகாரம் என்ற தலைப்பிலான எனது ஐக்கியத்தைப் பின்பற்றி, தேவனைப் போல ஆள்மாறாட்டம் செய்ய அல்லது பாசாங்கு செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் இன்னும் தேவனாக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இன்னும் தேவனாக மாற விரும்புகிறீர்களா? தேவனுடைய அதிகாரத்தை மனிதனால் பாசாங்கு செய்ய முடியாது, தேவனுடைய அடையாளத்தையும் அந்தஸ்தையும் மனிதனால் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. தேவன் பேசும் தொனியைப் போல போலியாக பேசும் திறன் உனக்கு இருந்தாலும், தேவனுடைய சாராம்சத்தை உன்னால் பின்பற்ற முடியாது. நீ தேவனுடைய இடத்தில் நின்று தேவனைப் போல ஆள்மாறாட்டம் செய்ய முடிந்தாலும், தேவன் செய்ய விரும்புவதை உன்னால் ஒருபோதும் செய்ய முடியாது மற்றும் எல்லாவற்றையும் ஒருபோதும் ஆளவும் கட்டளையிடவும் முடியாது. தேவனுடைய பார்வையில், நீ என்றென்றும் ஒரு சிறிய ஜீவஜந்துவாக இருப்பாய் மற்றும் உன் திறமையும் திறனும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உன்னிடம் எத்தனை வரங்கள் இருந்தாலும், நீ முழுவதுமாக சிருஷ்டிகருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறாய். நீ சில உறுதியான வார்த்தைகளைச் சொல்லும் திறன் கொண்டவன் என்றாலும், இது உன்னிடம் சிருஷ்டிகருடைய சாராம்சம் இருப்பதைக் காட்டவோ, சிருஷ்டிகருடைய அதிகாரம் உன்னிடம் இருப்பதைக் குறிக்கவோ முடியாது. தேவனுடைய அதிகாரமும் வல்லமையும் தேவனுடைய சாராம்சமாக இருக்கின்றன. அவை வெளிப்புறமாக கற்கப்படவில்லை அல்லது சேர்க்கப்படவில்லை. ஆனால் அவை தேவனுடைய உள்ளார்ந்த சாராம்சமாக இருக்கின்றன. எனவே, சிருஷ்டிகருக்கும் சிருஷ்டிகளுக்கும் இடையிலான உறவை ஒருபோதும் மாற்ற முடியாது. சிருஷ்டிகளில் ஒருவனான மனிதன் தனது சொந்த நிலையில் இருக்க வேண்டும் மற்றும் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். சிருஷ்டிகரால் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கடமையாகக் காத்துக்கொள்ள வேண்டும். உன் எல்லையை மீறி செயல்படாதே அல்லது உன் திறனுக்கு அப்பாற்பட்ட அல்லது தேவன் வெறுக்கத்தக்க காரியங்களைச் செய்யாதே. பெரியவராக இருக்க முயற்சிக்காதே அல்லது ஒரு தேவ நிலையில் உள்ளவராக அல்லது மற்றவர்களுக்கு மேலாக, தேவனாக மாற முயற்சிக்காதே. இவ்வாறு மாற ஜனங்கள் ஆசைப்படக்கூடாது. பெரியவராக அல்லது தேவ நிலையில் உள்ளவராக மாற முற்படுவது அபத்தமானதாக இருக்கிறது. தேவனாக மாற முற்படுவது இன்னும் அவமானகரமானதாக இருக்கிறது. அது அருவருப்பானது மற்றும் வெறுக்கத்தக்கதாகும். எது பாராட்டத்தக்கது மற்றும் சிருஷ்டிகள் எல்லாவற்றையும் விட அதிகமாக வைத்திருக்க வேண்டியது என்னவென்றால், அது உண்மையான சிருஷ்டியாக மாறுவதாக இருக்கிறது. இதுவே எல்லா ஜனங்களும் பின்பற்ற வேண்டிய ஒரே குறிக்கோளாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 94

நேரம், இடம் அல்லது நிலப்பரப்பு ஆகியவற்றால் சிருஷ்டிகருடைய அதிகாரம் கட்டுப்படுத்தப்படுவதில்லை மற்றும் சிருஷ்டிகருடைய அதிகாரம் கணக்கீட்டிற்கு அப்பாற்பட்டு இருக்கிறது (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆதியாகமம் 22:17-18 வரைப் பார்ப்போம். இது, யேகோவா தேவன் பேசிய மற்றொரு பத்தியாகும். இதில் அவர் ஆபிரகாமிடம் சொல்கிறார், “நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன், உன் சந்ததியை வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள் போலவும், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும் பெருகப்பண்ணுவேன்; உன் சந்ததியினர் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தமையால் உன்னுடைய சந்ததியினால் பூமியிலுள்ள சகல நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும்.” யேகோவா தேவன் ஆபிரகாமை அவனுடைய சந்ததியினர் பெருகுவார்கள் என்று பலமுறை ஆசீர்வதித்தார். இந்நிலையில் அவர்கள் எந்த அளவிற்குப் பெருகுவார்கள்? வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது போல: “வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள் போலவும், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும்” அதாவது, வானத்து நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் ஆபிரகாமின் சந்ததியினரை ஏராளமானவர்களாக்க தேவன் விரும்பினார் என்று சொல்ல வேண்டும். தேவன் உருவகங்களைப் பயன்படுத்திப் பேசினார். இந்த உருவகங்களைப் பார்க்கும்போது, திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று தேவன் ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தம் செய்தபடியினால், தேவன் ஆபிரகாமிற்கு ஒன்று, இரண்டு அல்லது வெறும் ஆயிரக்கணக்கான சந்ததியினரை வழங்குவது மட்டுமின்றி, கணக்கிட முடியாத எண்ணிக்கையில், அவர்கள் ஏராளமான ஜாதிகளாக மாறுவார்கள் என்பதனைப் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்காது. இப்போதும், அந்த எண்ணிக்கை மனிதனால் தீர்மானிக்கப்பட்டதா அல்லது தேவனால் தீர்மானிக்கப்பட்டதா? தனக்கு எத்தனை பேர் சந்ததியினராக இருக்க வேண்டும் என்பதை மனிதனால் முடிவு செய்ய முடியுமா? அது அவனுடைய முடிவாக இருக்கிறதா? “வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும்.” ஏராளமான சந்ததியினர் இருப்பார்களா இல்லையா என்பதுகூட மனிதனால் முடிவு செய்ய இயலாது. தங்கள் சந்ததியினர் நட்சத்திரங்களைப் போல ஏராளமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார்? துரதிர்ஷ்டவசமாக, சூழ்நிலைகள் எப்போதும் நீங்கள் விரும்புவது போல மாறாது. மனிதன் எவ்வளவு திறமையானவன் அல்லது திறனுடையவன் என்பதைப் பொருட்படுத்தாமல், அது அவனுடைய கைகளில் இருப்பதில்லை. தேவனால் நியமிக்கப்பட்டவற்றிற்கு வெளியே எவராலும் நிற்க முடியாது. அவர் உன்னை எவ்வளவு அனுமதிக்கிறாரோ, நீ அவ்வளவு அளவே கொண்டிருப்பாய்: தேவன் உனக்கு கொஞ்சம் கொடுத்தால், உனக்கு ஒருபோதும் மிகுதியாக இருக்காது. தேவன் உனக்கு மிகுதியாகக் கொடுக்கும்போது, உன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்பதைக் குறித்து கோபப்படுவதால் பயனில்லை. அப்படித்தானே? இவை அனைத்தும் தேவனுக்குரியவை, மனிதனுக்குரியவை அல்ல! மனிதன் தேவனால் ஆளப்படுகிறான், யாருக்கும் விதிவிலக்கு இல்லை!

“நான் உன் சந்ததியை பெருகப்பண்ணுவேன்” என்று தேவன் சொன்னபோது, இது ஆபிரகாமுடன் தேவன் ஏற்படுத்திய ஒரு உடன்படிக்கையாகும். வானவில் உடன்படிக்கையைப் போலவே இது நித்திய காலத்திற்குமாக நிறைவேற்றப்படும் மற்றும் இது ஆபிரகாமிற்கு தேவன் அளித்த வாக்குத்தத்தமும் ஆகும். இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற தேவன் மட்டுமே தகுதி வாய்ந்தவராகவும் வல்லவராகவும் இருக்கிறார். மனிதன் அதை நம்புகிறானா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், மனிதன் அதை ஏற்றுக்கொள்கிறானா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், மனிதன் அதை எப்படிப் பார்க்கிறான், எப்படிக் கருதுகிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவன் பேசும் வார்த்தைகளின்படி அதன் ஒவ்வொரு எழுத்தும் நிறைவேறும். மனிதனுடைய விருப்பத்திலோ கருத்துகளிலோ ஏற்பட்ட மாற்றங்களால் தேவனுடைய வார்த்தைகள் மாற்றப்படாது மற்றும் எந்தவொரு மனிதன், நிகழ்வு அல்லது விஷயத்திலும் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அது மாற்றப்படாது. எல்லாமே மறைந்து போகக்கூடும், ஆனால் தேவனுடைய வார்த்தைகள் என்றென்றும் நிலைத்திருக்கும். உண்மையில், எல்லாம் மறைந்துபோகும் நாளே தேவனுடைய வார்த்தைகள் முழுமையாக நிறைவேறிய நாளாக இருக்கிறது. ஏனென்றால், அவர் சிருஷ்டிகராக இருக்கிறார், சிருஷ்டிகருடைய அதிகாரத்தையும், சிருஷ்டிகருடைய வல்லமையையும் அவர் கொண்டிருக்கிறார் மற்றும் அவர் எல்லாவற்றையும் எல்லா ஜீவ வல்லமையையும் கட்டுப்படுத்துகிறார். அவரால் ஒன்றுமில்லாமையில் இருந்து ஒன்றை உருவாக்க முடிகிறது அல்லது ஒன்றை ஒன்றுமில்லாததாக மாற்ற முடிகிறது மற்றும் எல்லாம் ஜீவனுள்ளவையாக இருப்பதிலிருந்து ஜீவனற்றவையாக மாற்றம் பெறுவதை அவர் கட்டுப்படுத்துகிறார். தேவனைப் பொறுத்தவரையில், ஒருவனுடைய சந்ததியைப் பெருக்கம் செய்யப்படுவதைவிட வேறு எதுவும் எளிமையானதாக இருக்க முடியாது. ஒரு கற்பனைக் கதையைப் போல மனிதனுக்கு இது நம்ப முடியாததாகத் தெரிகிறது, ஆனால் தேவனுக்கு, அவர் செய்யத் தீர்மானிப்பதும் வாக்குத்தத்தமளிப்பதும் நம்ப முடியாதது அல்ல, அது ஒரு கற்பனைக் கதையும் அல்ல. மாறாக, இது தேவன் ஏற்கனவே கண்ட ஒரு உண்மையாக இருக்கிறது மற்றும் அது நிச்சயமாக நிறைவேறும். இதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? ஆபிரகாமின் சந்ததியினர் ஏராளமாக இருந்தார்கள் என்பதை உண்மைகள் நிரூபிக்கின்றனவா? அவர்கள் எத்தனை பேராக இருந்தனர்? தேவனால் பேசப்பட்ட “வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும்” அவர்கள் ஏராளமாக இருந்தனரா? அவர்கள் எல்லா தேசங்களிலும் பகுதிகளிலும், உலகின் ஒவ்வொரு இடத்திற்கும் பரவி இருந்தனவா? இந்த உண்மை எதனால் நிறைவேற்றப்பட்டது? தேவனுடைய வார்த்தைகளின் அதிகாரத்தால் அது நிறைவேற்றப்பட்டதா? தேவனுடைய வார்த்தைகள் பேசப்பட்ட பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, தேவனுடைய வார்த்தைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டன மற்றும் தொடர்ந்து உண்மைகளாக மாறிக்கொண்டிருந்தன. இது தேவனுடைய வார்த்தைகளின் வல்லமையாக மற்றும் தேவனுடைய அதிகாரத்தின் சான்றாக இருக்கிறது. ஆரம்பத்தில், தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, தேவன் “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று சொன்னார், வெளிச்சம் உண்டானது. இது மிக விரைவாக நடந்தது, மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டது மற்றும் அதனைப் பூர்த்தி செய்ததில் மற்றும் நிறைவேற்றியதில் தாமதம் இல்லை. தேவனுடைய வார்த்தைகளின் விளைவுகள் உடனடியாக நிகழ்வதாக இருந்தன. இவை இரண்டும் தேவனுடைய அதிகாரத்தின் காட்சிகளாக இருந்தன. ஆனால், தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்தபோது, தம் அதிகாரத்தினுடைய சாராம்சத்தின் இன்னொரு பக்கத்தைக் காண தேவன் மனிதனை அனுமதித்தார். அதைப் போலவே சிருஷ்டிகருடைய அதிகாரம் கணக்கிட முடியாதது என்பதையும், மேலும், சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் மிகவும் உண்மையான, மிகவும் நேர்த்தியான பக்கத்தை மனிதன் காணவும் தேவன் அனுமதித்தார்.

தேவனுடைய வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டவுடன், தேவனுடைய அதிகாரம் இந்த கிரியையைக் கட்டளையிடுகிறது மற்றும் தேவனுடைய வாயால் வாக்குத்தத்தமளிக்கப்பட்ட உண்மையானது படிப்படியாக ஒரு யதார்த்தமாக மாறத் தொடங்குகிறது. இதன் விளைவாக, வசந்தத்தின் வருகையில், புல் பச்சை நிறமாக மாறுவது போல, பூக்கள் பூப்பது போல, மரங்களிலிருந்து மொட்டுகள் முளைப்பது போல, பறவைகள் பாடத் தொடங்குவது போல, வாத்துகள் திரும்பி வருவது போல மற்றும் வயல்கள் ஜனங்களால் நிரம்பியிருப்பது போல எல்லாவற்றிலும் மாற்றங்கள் உருவாகத் தொடங்குகின்றன…. வசந்த காலத்தின் வருகையினால் எல்லாம் புத்துயிர் பெறுகின்றன, இது சிருஷ்டிகருடைய அற்புதமான செயலாக இருக்கிறது. தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும்போது, பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்பப் புதுப்பிக்கப்பட்டு மாறுகின்றன, இதற்கு விலக்காக எதுவும் இல்லை. தேவனுடைய வாயிலிருந்து ஒரு வாக்குறுதி அல்லது வாக்குத்தத்தம் உச்சரிக்கப்படும்போது, சகலமும் அதன் நிறைவேற்றத்திற்காக ஊழியம் செய்கின்றன மற்றும் அதன் நிறைவேற்றத்திற்காகக் கையாளப்படுகின்றன. சகல ஜீவஜந்துக்களும் சிருஷ்டிகருடைய ஆதிக்கத்தின்கீழ் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டு, தம்தம் கடமைகளைச் செய்கின்றன, தம்தம் நோக்கங்களையும் செய்கின்றன. இது சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் வெளிப்பாடாகும். இதில் நீ எதனைப் பார்க்கிறாய்? தேவனுடைய அதிகாரத்தை நீ எவ்வாறு அறிந்துகொண்டாய்? தேவனுடைய அதிகாரத்திற்கு ஏதேனும் வரம்பு இருக்கிறதா? கால அவகாசம் இருக்கிறதா? இதற்கு ஒரு குறிப்பிட்ட உயரம் அல்லது ஒரு குறிப்பிட்ட நீளம் இருக்கிறது என்று கூற முடியுமா? இதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அல்லது வல்லமை இருக்கிறது என்று கூற முடியுமா? மனிதனுடைய அளவுகளால் அதை அளவிட முடியுமா? தேவனுடைய அதிகாரம் தோன்றி தோன்றி மறையாது, வந்து வந்து செல்லாது. எனவே, தேவனுடைய அதிகாரம் எவ்வளவு பெரியது என்பதை அளவிடக்கூடியவர்கள் எவரும் இல்லை. எவ்வளவு நேரம் கடந்து சென்றாலும், தேவன் ஒரு மனிதனை ஆசீர்வதிக்கும்போது, இந்த ஆசீர்வாதம் தொடரும், அதன் தொடர்ச்சியானது தேவனுடைய தவிர்க்கமுடியாத அதிகாரத்திற்குச் சான்றாக அமையும் மற்றும் சிருஷ்டிகருடைய பிரிக்கமுடியாத ஜீவ வல்லமை மீண்டும் தோன்றுவதை மனிதகுலம் பார்க்க மீண்டும் மீண்டும் அனுமதிக்கும். அவருடைய அதிகாரத்தின் ஒவ்வொரு காட்சியும் எல்லாவற்றிற்கும், மனிதகுலத்திற்கும் காண்பிக்கப்படும் அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளின் பரிபூரணமான காட்சியாகும். மேலும், அவருடைய அதிகாரத்தால் நிறைவேற்றப்பட்ட அனைத்தும் ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்டவையாகும் மற்றும் முற்றிலுமாக குறைபாடற்றவையாகும். அவருடைய எண்ணங்கள், அவருடைய வார்த்தைகள், அவருடைய அதிகாரம் மற்றும் அவர் நிறைவேற்றும் அனைத்து கிரியைகள் என இவை அனைத்தும் ஒப்பிடமுடியாத அழகான காட்சி என்றும், ஜீவஜந்துக்களைப் பொறுத்தவரையில், மனிதகுலத்தின் மொழியால் அதன் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் வெளிப்படுத்த இயலாது என்றும் கூறலாம். அவர்கள் வசிக்கும் இடமாக இருந்தாலும், அவர்கள் என்ன செய்தாலும், வாக்குத்தத்தத்தைப் பெறுவதற்கு முன்போ பின்னரோ உள்ள அவர்களுடைய பின்னணி என்னவாக இருந்தாலும் அல்லது அவர்களுடைய ஜீவித சூழலில் எழுச்சிகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் தேவன் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அளிக்கும்போது, அதனைப் பற்றிய அனைத்தும் அவருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கும். தேவனுடைய வார்த்தைகள் பேசப்பட்டபின் எவ்வளவு காலம் கழிந்தாலும், அவரைப் பொறுத்தவரையில், அவை இப்போது உச்சரிக்கப்பட்டிருப்பதைப் போலாகும். அதாவது தேவனுக்கு வல்லமை இருக்கிறது மற்றும் மனிதகுலத்திற்கு அவர் அளிக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், நிறைவேற்றவும் அவருக்கு அதிகாரம் இருக்கிறது. வாக்குத்தத்தம் என்னவாக இருந்தாலும், முழுமையாக நிறைவேற எவ்வளவு காலம் ஆகும் என்பதைப் பொருட்படுத்தாமல், மேலும், அதை அடையும் எல்லை எவ்வளவு பரந்த அளவில் இருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல்—உதாரணமாக, நேரம், நிலப்பரப்பு, இனம் மற்றும் பலவற்றைப் பொருட்படுத்தாமல்—இந்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்யப்படும் மற்றும் நிறைவேற்றப்படும். மேலும், அதைப் பூர்த்தி செய்வதற்காக மற்றும் நிறைவேற்றுவதற்காக அவர் சிறிதும் முயற்சி செய்யத் தேவையில்லை. இது எதனை நிரூபிக்கிறது? தேவனுடைய அதிகாரம் மற்றும் வல்லமையின் அகலமானது பிரபஞ்சம் முழுவதையும், முழு மனிதகுலத்தையும் கட்டுப்படுத்தப் போதுமானது என்பதை இது நிரூபிக்கிறது. தேவன் வெளிச்சத்தை உண்டாக்கினார், ஆனால் அதன் பொருள், தேவன் வெளிச்சத்தை மட்டுமே நிர்வகிக்கிறார் என்பதாகாது அல்லது அவர் தண்ணீரைச் சிருஷ்டித்ததால் அவர் தண்ணீரை மட்டுமே நிர்வகிக்கிறார் என்று பொருளாகாது, மற்ற அனைத்தும் தேவனுடன் தொடர்பில்லாதவை என்றும் அர்த்தமாகாது. இது ஒரு தவறானப் புரிதலாக இருக்காதா? ஆபிரகாமுக்கு தேவன் அளித்த ஆசீர்வாதம் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மனிதனுடைய நினைவிலிருந்து படிப்படியாக மங்கிவிட்டாலும், தேவனைப் பொறுத்தவரையில், இந்த வாக்குத்தத்தம் அப்படியே இருந்தது. அது இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய செயல்முறையில் இருந்தது மற்றும் அது ஒருபோதும் நின்றுவிடவில்லை. தேவன் தனது அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார், எல்லாவற்றையும் எவ்வாறு திட்டமிட்டார் மற்றும் ஏற்பாடு செய்தார், இந்த நேரத்தில் தேவனுடைய சிருஷ்டிப்பு எல்லாவற்றுக்கும் மத்தியில் எத்தனை அற்புதமான கதைகள் நிகழ்ந்தன என்பதை மனிதன் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை மற்றும் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆனால், தேவனுடைய அதிகாரத்தைக் காண்பிக்கும் ஒவ்வொரு அற்புதமான பகுதியும் அவருடைய கிரியைகளின் வெளிப்பாடும் நிறைவேற்றப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட மற்றும் சிருஷ்டிகருடைய அற்புதமான கிரியைகளைப் பற்றி பேசப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தப்பட்டன மற்றும் எல்லாவற்றின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றி அதிகமாகக் கூறும் ஒவ்வொரு கதையும் எல்லாவற்றாலும் என்றென்றும் அறிவிக்கப்படும். எல்லாவற்றையும் ஆளுகிற தேவனுடைய அதிகாரமும், தேவனுடைய வல்லமையும், எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் தேவன் இருப்பதைக் காட்டுகிறது. தேவனுடைய அதிகாரம் மற்றும் வல்லமை எங்கும் நிறைந்திருப்பதை நீ கண்டிருக்கும்போது, தேவன் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருப்பதைக் காண்பாய். தேவனுடைய அதிகாரமும் வல்லமையும் நேரம், நிலப்பரப்பு மற்றும் இடத்தால் அல்லது எந்தவொரு மனிதன் நிகழ்வு அல்லது விஷயத்தால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தேவனுடைய அதிகாரம் மற்றும் வல்லமையின் அகலம் மனிதனுடைய கற்பனையை மிஞ்சுகிறது. இது மனிதனால் புரிந்துகொள்ள முடியாததாக, மனிதனால் கற்பனை செய்ய முடியாததாக மற்றும் மனிதனால் ஒருபோதும் முழுமையாக அறிய முடியாததாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 95

நேரம், இடம் அல்லது நிலப்பரப்பு ஆகியவற்றால் சிருஷ்டிகருடைய அதிகாரம் கட்டுப்படுத்தப்படுவதில்லை மற்றும் சிருஷ்டிகருடைய அதிகாரம் கணக்கீட்டிற்கு அப்பாற்பட்டு இருக்கிறது (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தி)

சிலர் யூகிக்கவும் கற்பனை செய்யவும் விரும்புகிறார்கள். ஆனால் மனிதனுடைய கற்பனை எவ்வளவு தூரத்தை அடைய முடியும்? அதனால் இந்த உலகத்திற்கு அப்பால் செல்ல முடியுமா? தேவனுடைய அதிகாரத்தின் நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் மனிதனால் யூகிக்க மற்றும் கற்பனை செய்ய முடியுமா? மனிதனுடைய அனுமானம் மற்றும் கற்பனையால் தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய அறிவைப் பெற மனிதனை அனுமதிக்க முடியுமா? அவற்றால் மனிதனை தேவனுடைய அதிகாரத்தை உண்மையிலேயே புரிந்துகொள்ள மற்றும் தேவனுடைய அதிகாரத்திற்கு அடிபணியச் செய்ய முடியுமா? மனிதனுடைய அனுமானமும் கற்பனையும் மனிதனுடைய புத்தியினால் உண்டான விளைவு மட்டுமே, அவை தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய மனிதனுடைய அறிவுக்கு சிறிதளவு உதவியோ நன்மையோ அளிக்கவில்லை என்பதை உண்மைகள் நிரூபிக்கின்றன. அறிவியல் புனைவுக் கதைகளைப் படித்த பிறகு, சிலரால் சந்திரனைக் கற்பனை செய்ய முடிகிறது அல்லது நட்சத்திரங்கள் எப்படி இருக்கின்றன என்பதைக் கற்பனை செய்ய முடிகிறது. ஆயினும், தேவனுடைய அதிகாரம் குறித்து மனிதனுக்கு எந்தப் புரிதலும் இல்லை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. மனிதனுடைய கற்பனை, கற்பனையாக மட்டுமே இருக்கிறது. இந்த விஷயங்களின் உண்மைகளைப் பார்க்கும்போது, அதாவது, தேவனுடைய அதிகாரத்துடனான தொடர்பைப் பற்றி பார்க்கும்போது, அவனுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை. நீ சந்திரனுக்கு சென்றிருந்தாலும் அதன் பலன் என்னவாக இருந்திருக்கும்? தேவனுடைய அதிகாரம் குறித்து உனக்குப் பல பரிமாணப் புரிதல் இருப்பதை அது காண்பிக்கிறதா? தேவனுடைய அதிகாரம் மற்றும் வல்லமையின் அகலத்தை உன்னால் கற்பனை செய்ய முடிகிறது என்பதை அது காண்பிக்கிறதா? மனிதனுடைய அனுமானமும் கற்பனையும் தேவனுடைய அதிகாரத்தை அறிய அனுமதிக்க இயலாது என்பதால், மனிதன் எதனைச் செய்ய வேண்டும்? அனுமானம் செய்யாமல் அல்லது கற்பனை செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனமானத் தேர்வாக இருக்கும். அதாவது மனிதன் ஒருபோதும் கற்பனையை நம்பக்கூடாது, தேவனுடைய அதிகாரத்தை அறிந்து கொள்ளும்போது அனுமானத்தைச் சார்ந்து இருக்கக்கூடாது என்பதே அந்தத் தேர்வாக இருக்கும். நான் இங்கே உங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன்? உன் கற்பனையை நம்புவதன் மூலம் தேவனுடைய அதிகாரம், தேவனுடைய வல்லமை, தேவனுடைய சொந்த அடையாளம் மற்றும் தேவனுடைய சாராம்சம் பற்றிய அறிவை அடைய முடியாது. தேவனுடைய அதிகாரத்தை அறிய நீங்கள் கற்பனையை நம்ப முடியாது என்பதால், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய உண்மையான அறிவை எவ்வாறு அடைய முடியும்? இதைச் செய்வதற்கான வழி, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பதும், ஐக்கியப்படுவதும், தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதுமாக இருக்கிறது. எனவே, தேவனுடைய அதிகாரத்தின் படிப்படியான அனுபவமும் சரிபார்ப்பும் உங்களிடம் இருக்கும் மற்றும் படிப்படியாகப் புரிதலைப் பெறுவீர்கள் மற்றும் அதைப் பற்றிய அறிவை அதிகமாகப் பெறுவீர்கள். தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய அறிவை அடைய ஒரே வழியாக இது இருக்கிறது. குறுக்குவழிகள் எதுவும் இல்லை. நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம் என்று கேட்பது அழிவுக்காகக் காத்திருக்க உங்களைச் செயலற்ற முறையில் உட்கார வைப்பது அல்லது எதையும் செய்யவிடாமல் தடுப்பது போன்றதல்ல. சிந்திக்கவும் கற்பனை செய்யவும் உங்கள் மூளையைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது தர்க்கத்தை யூகிக்கப் பயன்படுத்தாமல் இருப்பது, பகுப்பாய்வு செய்ய அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பது, அறிவியலை அடிப்படையாகப் பயன்படுத்தாமல் இருப்பது என்பதல்ல. மாறாக, நீ நம்புகிற தேவனுக்கு அதிகாரம் உண்டு என்பதைப் புரிந்து சரிபார்த்து உறுதிப்படுத்துதல் மூலமாக, உன் தலைவிதியின் மீது அவர் ராஜரீகத்தைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலமாக மற்றும் தேவனுடைய வார்த்தைகள் மூலமாகவும், சத்தியத்தின் மூலமாகவும், ஜீவிதத்தில் நீ சந்திக்கும் எல்லாவற்றின் மூலமாகவும் அவருடைய வல்லமை எல்லா நேரங்களிலும் அவரே உண்மையான தேவனாக இருப்பதை நிரூபிக்கிறது. தேவனைப் பற்றிய புரிதலை எவரும் அடையக்கூடிய ஒரே வழியாக இது இருக்கிறது. இந்த நோக்கத்தை அடைய ஒரு எளிய வழியைக் கண்டுபிடிக்க தாங்கள் விரும்புவதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அத்தகைய வழியை உங்களால் சிந்திக்க முடியுமா? நான் உனக்குச் சொல்கிறேன், சிந்திக்கத் தேவையில்லை: வேறு வழிகள் இல்லை! ஒரே வழி என்னவென்றால், அவர் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையினாலும், அவர் செய்யும் எல்லாவற்றினாலும் தேவன் என்னவாக இருக்கிறார், என்ன கொண்டிருக்கிறார் என்பதை மனசாட்சியுடன், உறுதியுடன் அறிந்து சரிபார்க்க வேண்டும் என்பதே ஆகும். தேவனை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாக இது இருக்கிறது. தேவன் என்ன கொண்டுள்ளார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதும், தேவனுடைய அனைத்தும் ஒன்றுமில்லாதவை மற்றும் வெறுமையானவை அல்ல, ஆனால் அவை உண்மையாக இருக்கின்றன.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 96

எல்லாவற்றின் மீதான சிருஷ்டிகருடைய கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம் குறித்த உண்மையானது சிருஷ்டிகருடைய அதிகாரம் என்பது உண்மையிலேயே இருக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது

யோபுவிற்கான யேகோவாவின் ஆசீர்வாதம் யோபு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவன் யோபுவுக்கு என்னென்ன கொடுத்தார்? “ஆதலால், யோபுவின் முன்னிலைமையைக் காட்டிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார் யேகோவா: அவனிடம் பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் நுகம்பூட்டியகாளைகளும், ஆயிரம் பெண் கழுதைகளும் இருந்தன” (யோபு 42:12). மனிதனுடைய பார்வையில், யோபுவுக்கு வழங்கப்பட்ட இவை என்னவாக இருந்தன? அவை மனிதகுலத்தின் சொத்துக்களாக இருந்தனவா? இந்தச் சொத்துக்களுடன், அந்தக் காலத்தில் யோபு மிகவும் செல்வந்தனாக இருந்திருக்க மாட்டானா? பின்னர், அவன் எப்படி அத்தகைய சொத்துக்களைப் பெற்றான்? அவனது செல்வத்திற்கு காரணம் என்னவாக இருந்தது? யோபு அவற்றைக் கொண்டிருக்க தேவனுடைய ஆசீர்வாதமே காரணம் என்று சொல்லாமலேயே தெரிகிறது. இந்தச் சொத்துக்களை யோபு எவ்வாறு பார்த்தான், தேவனுடைய ஆசீர்வாதங்களை அவன் எவ்வாறு கருதினான் என்பது நாம் இங்கு விவாதிக்க வேண்டிய ஒன்றல்ல. தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பொறுத்தவரையில், தேவனால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று ஜனங்கள் எல்லாரும் இரவும் பகலும் ஏங்குகிறார்கள். ஆனாலும் மனிதன் தன் ஜீவகாலத்தில் எவ்வளவு சொத்துக்களைப் பெற முடியும் அல்லது தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற முடியுமா முடியாதா என்பதின் மீது அவனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை—இது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது! தேவனுக்கு அதிகாரம் இருக்கிறது மற்றும் எந்தவொரு சொத்துக்களையும் மனிதனுக்கு வழங்குவதற்கும், எந்தவொரு நன்மையையும் பெற மனிதனை அனுமதிப்பதற்கும், தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கென ஒரு கொள்கை இருக்கிறது. தேவன் எத்தகைய ஜனங்களை ஆசீர்வதிப்பார்? நிச்சயமாக, தாம் விரும்பும் ஜனங்களை தேவன் ஆசீர்வதிப்பார்! ஆபிரகாம் மற்றும் யோபு இருவரும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஆனாலும் அவர்கள் பெற்ற ஆசீர்வாதங்கள் ஒன்றாக இருக்கவில்லை. தேவன் ஆபிரகாமை, மணலைப் போலவும் நட்சத்திரங்களைப் போலவும் அவனுடைய சந்ததியினர் பெருகும்படியாக ஆசீர்வதித்தார். தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்தபோது, அவர் ஒரு தனி மனிதனுடைய சந்ததியினரை மற்றும் ஒரு ஜாதியினரை வல்லமை பெற்றவர்களாகவும் செழிப்பானவர்களாகவும் மாற்றினார். இதில், தேவனுடைய அதிகாரம் மனிதகுலத்தை ஆட்சி செய்தது. அவர் சகலத்திற்கும் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் தேவனுடைய சுவாசத்தை ஊதினார். தேவனுடைய அதிகாரத்தின் ராஜரீகத்தின்கீழ், இந்த மனிதகுலம் தேவனால் தீர்மானிக்கப்பட்ட வேகத்திலும், தேவனால் தீர்மானிக்கப்பட்ட வரம்பிலும் பெருகி இருந்தது. குறிப்பாக, இந்தத் தேசத்தின் நிலைத்தன்மை, விரிவாக்க விகிதம் மற்றும் ஆயுட்காலம் அனைத்தும் தேவனுடைய ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இருந்தன. இவை அனைத்தின் கொள்கையும் தேவன் ஆபிரகாமிற்கு அளித்த வாக்குத்தத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதாவது, சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் தடையின்றி தொடரும் மற்றும் தேவனுடைய அதிகாரத்தின்கீழ் நிறைவேற்றப்படும். உலகின் எழுச்சிகளைப் பொருட்படுத்தாமல், யுகத்தைப் பொருட்படுத்தாமல், மனிதகுலம் அனுபவித்தப் பேரழிவுகளைப் பொருட்படுத்தாமல், ஆபிரகாமிற்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தினால் ஆபிரகாமின் சந்ததியினர் நிர்மூலமாக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்ள மாட்டார்கள், அவர்களுடைய தேசம் அழியாது. ஆயினும், யோபுவிற்கான தேவனுடைய ஆசீர்வாதம் அவனை மிகவும் செல்வந்தனாக்கியது. தேவன் அவனுக்குக் கொடுத்த, ஜீவன்கள், சுவாசிக்கும் ஜீவஜந்துக்கள், அவற்றின் எண்ணிக்கை, அவற்றின் பரப்புதல் வேகம், ஜீவிக்கும் வீதங்கள், அவற்றின் சரீரத்தில் உள்ள கொழுப்பின் அளவு மற்றும் பல, என இவை அனைத்தும் தேவனால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஜீவஜந்துக்கள் பேசும் திறனைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அவை சிருஷ்டிகருடைய ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இருந்தன மற்றும் தேவன் யோபுவுக்கு வாக்குத்தத்தமளித்த ஆசீர்வாதங்களின் அடிப்படையில் அவற்றுக்கான தேவனுடைய ஏற்பாடுகளுக்குப் பின்னால் உள்ள கொள்கை உருவாக்கப்பட்டது. தேவன் ஆபிரகாமிற்கும் யோபுவிற்கும் அளித்த ஆசீர்வாதங்களில், வாக்குத்தத்தமாக சொல்லப்பட்டவை வேறுபட்டிருந்தாலும், சிருஷ்டிகர் எல்லாவற்றையும், ஜீவன்களையும் ஆட்சி செய்த அதிகாரம் ஒன்றாக இருக்கிறது. தேவனுடைய அதிகாரம் மற்றும் வல்லமை பற்றிய ஒவ்வொரு விவரமும் ஆபிரகாமுக்கும் யோபுக்கும் அவர் அளித்த வித்தியாசமான வாக்குத்தத்தங்கள் மற்றும் ஆசீர்வாதங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தேவனுடைய அதிகாரம் மனிதனுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதை மனிதகுலத்திற்கு மீண்டும் காண்பிக்கிறது. தேவனுடைய அதிகாரத்தை மனிதன் அறிய விரும்பினால், அவற்றை தேவனுடைய வார்த்தைகள் மூலமாகவும், தேவனுடைய கிரியையை அனுபவிப்பதன் மூலமாகவும் மட்டுமே அடைய முடியும் என்று இந்த விவரங்கள் மனிதகுலத்திற்கு மீண்டும் சொல்கின்றன.

எல்லாவற்றின் மீதான தேவனுடைய ராஜரீக அதிகாரம் மனிதனை ஒரு உண்மையைக் காணும்படியாக அனுமதிக்கிறது: “தேவன், வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டானது, வானம் உண்டாகக்கடவது என்றார், வானம் உண்டானது, பூமி உண்டாகக்கடவது என்றார், பூமி உண்டானது,” என்ற வார்த்தைகளில் மட்டும் தேவனுடைய அதிகாரம் இருப்பதில்லை, ஆனால், அவர் எவ்வாறு வெளிச்சத்தைத் தொடர்ந்து இருக்கச் செய்தார், வானத்தை மறைந்து போகாமல் தடுத்தார், பூமியை எப்போதும் தண்ணீரிலிருந்து பிரித்து வைத்திருந்தார் என்பவற்றிலும், அதைப் போலவே அவர் எவ்வாறு ஆட்சி செய்தார் மற்றும் தாம் உருவாக்கியவற்றை எவ்வாறு நிர்வகித்தார் என்ற விவரங்களான வெளிச்சம், ஆகாயவிரிவு மற்றும் பூமி ஆகியவற்றிலும் அவருடைய அதிகாரம் இருக்கிறது. மனிதகுலத்திற்கான தேவனுடைய ஆசீர்வாதத்தில் வேறு எதைப் பார்க்கிறீர்கள்? தேவன் ஆபிரகாமையும் யோபுவையும் ஆசீர்வதித்தபின், தேவனுடைய அடிச்சுவடுகள் நின்றுவிடவில்லை. ஏனென்றால், அவர் தம்முடைய அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கியிருந்தார் மற்றும் அவர் தனது ஒவ்வொரு வார்த்தையையும் உண்மையாக்கவும், உண்மையாக மாறிய அவரது பேச்சின் விவரங்களை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளவும் அவர் விரும்பினார். எனவே, அடுத்த ஆண்டுகளில், அவர் நினைத்த அனைத்தையும் அவர் தொடர்ந்து செய்தார். தேவனுக்கு அதிகாரம் இருப்பதால், தேவன் மட்டுமே பேச வேண்டும் என்றும், எந்தக் கிரியையும் செய்யாமல், எல்லா விஷயங்களும் காரியங்களும் நிறைவேற்றப்படுகின்றன என்றும் மனிதனுக்குத் தோன்றுகிறது. இத்தகைய கற்பனைகள் மிகவும் அபத்தமானவை! வார்த்தைகளைப் பயன்படுத்தி மனிதனுடனான உடன்படிக்கையை தேவன் நிறுவியதையும், வார்த்தைகளைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் தேவன் நிறைவேற்றுவதையும் ஒருதலைப்பட்ச பார்வையுடன் மட்டுமே நீ பார்த்தால், தேவனுடைய அதிகாரமானது எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கான பல்வேறு அடையாளங்களையும் உண்மைகளையும் உன்னால் காண முடியவில்லை என்றால், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய உன் புரிதல் வெறுமையாக மற்றும் அபத்தமாக மட்டுமே இருக்கிறது! தேவன் இவ்வாறு இருக்கிறார் என்று மனிதன் கற்பனை செய்தால், தேவனைப் பற்றிய மனிதனுடைய அறிவு இறுதி முயற்சிக்குள் தள்ளப்பட்டு, ஒரு பயனற்றதாக மாறியிருக்கிறது. ஏனென்றால், மனிதன் கற்பனை செய்யும் தேவன் ஒரு கட்டளைகளைப் பிறப்பிக்கும் இயந்திரம் மட்டுமே, அவர் அதிகாரம் கொண்ட தேவன் அல்ல. ஆபிரகாம் மற்றும் யோபுவின் உதாரணங்களின் மூலம் நீ எதைப் பார்த்தாய்? தேவனுடைய அதிகாரம் மற்றும் வல்லமையின் உண்மையான பக்கத்தை நீ பார்த்திருக்கிறாயா? தேவன் ஆபிரகாமையும் யோபுவையும் ஆசீர்வதித்தபின், தேவன் தாம் இருந்த இடத்திலேயே தங்கவில்லை, விளைவு என்னவாக இருக்கும் என்று காத்திருக்கும்போது அவர் தமது தூதர்களை கிரியைக்கு அமர்த்தவில்லை. மாறாக, தேவன் தம்முடைய வார்த்தைகளை உச்சரித்தவுடன், தேவனுடைய அதிகாரத்தின் வழிகாட்டுதலின் கீழ், எல்லாம் தேவன் செய்ய விரும்பிய கிரியைக்கு இணங்கத் தொடங்கின மற்றும் தேவனுக்குத் தேவையான ஆயத்தப்படுத்தப்பட்ட ஜனங்கள், விஷயங்கள் மற்றும் பொருட்கள் இருந்தன. அதாவது தேவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டவுடன், தேவனுடைய அதிகாரம் தேசம் முழுவதிலும் கிரியை செய்யத் தொடங்கியது மற்றும் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு முக்கிய கட்டத்திற்கும் தேவையான எல்லாவற்றிற்கும் சரியான திட்டங்கள் மற்றும் ஆயத்தங்களை மேற்கொள்வதற்கு அவர் திட்டமிட்ட அதே நேரத்தில் ஆபிரகாமிற்கும் யோபுவிற்கும் அவர் அளித்த வாக்குத்தத்தங்களைப் பூர்த்தி செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் அவர் ஒரு போக்கை அமைத்தார். இந்த சமயத்தில், தேவன் தம்முடைய தூதர்களை மட்டுமல்ல, அவரால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் வழிநடத்தினார். அதாவது, தேவனுடைய அதிகாரம் செலுத்தப்பட்ட நோக்கம் தூதர்களை மட்டுமல்ல, சிருஷ்டிப்பில் உள்ள எல்லாவற்றையும் உள்ளடக்கியது. அவர் நிறைவேற்ற விரும்பிய கிரியைக்கு இணங்குவதற்காக அவை வழிநடத்தப்பட்டன. இவையே தேவனுடைய அதிகாரம் செலுத்தப்பட்ட குறிப்பிட்ட வழிமுறைகளாக இருகின்றன. உங்கள் கற்பனைகளில், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றி சிலருக்கு பின்வரும் புரிதல் இருக்கலாம்: தேவனுக்கு அதிகாரம் இருக்கிறது, தேவனுக்கு வல்லமை இருக்கிறது. ஆகவே, தேவன் மூன்றாம் வானத்திலோ அல்லது ஒரு நிலையான இடத்திலோ மட்டுமே இருக்க வேண்டும் மற்றும் எந்தவொரு குறிப்பிட்ட கிரியையும் அவர் செய்யத் தேவையில்லை, தேவனுடைய முழு கிரியையும் அவருடைய எண்ணங்களுக்குள் நிறைவடைகிறது. தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்த போதிலும், தேவன் ஒன்றும் செய்யத் தேவையில்லை என்றும், அவருடைய வார்த்தைகளை வெறுமனே பேசினால் போதும் என்றும் சிலர் நம்பலாம். உண்மையில் இந்தக் காரியம் மட்டுமே நடந்ததா? நிச்சயமாக இல்லை! தேவன் அதிகாரம் மற்றும் வல்லமையைக் கொண்டிருந்தாலும், அவருடைய அதிகாரம் உண்மையானது, மெய்யானது மற்றும் அது வெறுமையாக இல்லை. தேவனுடைய அதிகாரம் மற்றும் வல்லமையின் நம்பகத்தன்மையும் யதார்த்தமும் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டு, எல்லாவற்றையும் அவர் படைத்ததிலும், எல்லாவற்றையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், மனிதகுலத்தை அவர் வழிநடத்தும் மற்றும் நிர்வகிக்கும் செயல்முறையிலும் பொதிந்துள்ளது. ஒவ்வொரு வழிமுறையும், ஒவ்வொரு கண்ணோட்டமும், மனிதகுலம் மற்றும் எல்லாவற்றின் மீதான தேவனுடைய ராஜரீகத்தின் ஒவ்வொரு விவரமும், அவர் நிறைவேற்றிய அனைத்து கிரியைகளும், எல்லாவற்றையும் பற்றிய அவரது புரிதலும் என இவை அனைத்தும் தேவனுடைய அதிகாரமும் வல்லமையும் உண்மையில் வெறுமையான வார்த்தைகள் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. அவருடைய அதிகாரமும் வல்லமையும் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு, தொடர்ந்து எல்லாவற்றிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்தக் காட்சிகள் மற்றும் வெளிப்பாடுகள் தேவனுடைய அதிகாரம் உண்மையாகவே இருக்கிறது என்பதைப் பற்றி பேசுகின்றன. ஏனென்றால், அவர் தமது அதிகாரத்தையும் வல்லமையையும் தமது கிரியையைத் தொடரவும், எல்லாவற்றையும் கட்டளையிடவும், எல்லாவற்றையும் ஒவ்வொரு நொடியிலும் ஆளவும் பயன்படுத்துகிறார். அவருடைய வல்லமைக்கும் அதிகாரத்திற்கும் தேவதூதர்களால் அல்லது தேவனுடைய தூதர்களால் மாற்றாக முடியாது. ஆபிரகாமிற்கும் யோபுவிற்கும் என்னென்ன ஆசீர்வாதங்களை வழங்க வேண்டும் என்பதை தேவன் தீர்மானித்தார். இது தேவனுடைய முடிவாக இருந்தது. தேவனுடைய தூதர்கள் ஆபிரகாமையும் யோபுவையும் தனிப்பட்ட முறையில் பார்வையிட்ட போதிலும், அவர்களுடைய நடவடிக்கைகள் தேவனுடைய கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டவை, அவர்களுடைய நடவடிக்கைகள் தேவனுடைய அதிகாரத்தின்கீழ் எடுக்கப்பட்டன மற்றும் அதைப் போலவே, தூதர்களும் தேவனுடைய ராஜரீகத்தின்கீழ் இருந்தனர். தேவனுடைய தூதர்கள் ஆபிரகாமைச் சந்திப்பதை மனிதன் காண்கிறான், ஆனால் வேதாகமத்தின் பதிவுகளில் யேகோவா தேவன் தனிப்பட்ட முறையில் எதையாகிலும் செய்வதைக் காணவில்லை என்றாலும், உண்மையில், வல்லமையையும் அதிகாரத்தையும் உண்மையாகச் செயல்படுத்துபவர் தேவன் மட்டுமே. இதில் எந்த மனிதனுக்கும் சந்தேகமில்லை! தேவதூதர்களும் தூதுவர்களும் பெரும் வல்லமையைக் கொண்டுள்ளனர், அற்புதங்களைச் செய்திருக்கின்றனர் அல்லது அவர்கள் தேவனால் நியமிக்கப்பட்ட சில காரியங்களைச் செய்திருக்கின்றனர் என்பதை நீங்கள் பார்த்திருந்தாலும், அவர்களுடைய கிரியைகள் தேவனுடைய ஆணையை நிறைவு செய்வதற்கானது மட்டுமே, அவை எந்த வகையிலும் தேவனுடைய அதிகாரமாகக் காட்சிப்படுத்தப்படுவதில்லை அதாவது எந்தவொரு மனிதனுக்கும் பொருளுக்கும் எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றையும் ஆளக்கூடிய சிருஷ்டிகருடைய அதிகாரம் இல்லை. எனவே, எந்தவொரு மனிதனாலும், பொருளாலும் சிருஷ்டிகருடைய அதிகாரத்தைச் செலுத்தவோ வெளிப்படுத்தவோ முடியாது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 97

சிருஷ்டிகருடைய அதிகாரம் மாறாதது மற்றும் மறுக்கமுடியாதது

1. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்

ஆதி. 1:3-5  தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

ஆதி. 1:6-7  பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

ஆதி. 1:9-11  பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

ஆதி. 1:14-15  பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

ஆதி. 1:20-21  பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

ஆதி. 1:24-25  பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

2. மனிதனுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்த தேவன் தனது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்

ஆதி. 9:11-13  இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

3. தேவனுடைய ஆசீர்வாதம்

ஆதி. 17:4-6  நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

ஆதி. 18:17,19 ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், யேகோவா ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, யேகோவாவினுடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்.

ஆதி. 22:16-18  உன் ஒரே புத்திரனாகிய உன் மகன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தை நீ செய்ததால், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன், உன் சந்ததியை வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள் போலவும், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும் பெருகப்பண்ணுவேன்; உன் சந்ததியினர் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தமையால் உன்னுடைய சந்ததியினால் பூமியிலுள்ள சகல நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று என்மீது ஆணையிட்டிருக்கிறேன் என்று யேகோவா சொல்கிறார் என்றார்.

யோபு 42:12  ஆதலால், யோபுவின் முன்னிலைமையைக் காட்டிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார் யேகோவா: அவனிடம் பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் நுகம்பூட்டியகாளைகளும், ஆயிரம் பெண் கழுதைகளும் இருந்தன.

வேதாகமத்தின் இந்த மூன்று பகுதிகளிலும் நீங்கள் எதனைப் பார்த்திருக்கிறீர்கள்? தேவன் தம்முடைய அதிகாரத்தைச் செலுத்துவதற்கான ஒரு கொள்கை இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உதாரணமாக, மனிதனுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்த தேவன் வானவில் ஒன்றைப் பயன்படுத்தினார். உலகத்தை அழிக்க அவர் மீண்டும் ஒருபோதும் ஜலப்பிரளயத்தைப் பயன்படுத்தமாட்டார் என்று மனிதனிடம் சொல்லும் பொருட்டு மேகங்களில் வானவில் ஒன்றை வைத்தார். தேவனுடைய வாயிலிருந்து சொல்லப்பட்ட அதே வானவில்லை ஜனங்கள் இன்றும் பார்க்கிறார்களா? அதன் தன்மையும் அர்த்தமும் மாறிவிட்டதா? அது மாறவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் கிரியையைச் செய்ய தேவன் தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தினார். மனிதனுடன் அவர் ஏற்படுத்திய உடன்படிக்கை இன்று வரை தொடர்கிறது, இந்த உடன்படிக்கை மாற்றப்படும் காலம் நிச்சயமாக தேவன் செய்யும் முடிவாக இருக்கும். “என் வில்லை மேகத்தில் வைத்தேன்,” என்று தேவன் சொன்ன பிறகு, இன்று வரை, தேவன் எப்போதும் இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டிருக்கிறார். இதில் நீங்கள் எதனைப் பார்க்கிறீர்கள்? அதிகாரம் மற்றும் வல்லமையை தேவன் கொண்டிருந்தாலும், அவர் மிகவும் கடுமையானவர், அவருடைய கிரியைகளில் கொள்கை ரீதியானவர் மற்றும் தம் வார்த்தைக்கு அவர் உண்மையாக இருக்கிறார். அவரது கடுமையும், அவருடைய கிரியைகளின் கொள்கைகளும், சிருஷ்டிகருடைய தீர்க்கமுடியாத தன்மையையும், யாரும் மேற்கொள்ள முடியாத சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் தன்மையையும் காட்டுகின்றன. அவர் மிக உயர்ந்த அதிகாரம் கொண்டவர் மற்றும் அனைத்தும் அவருடைய ஆதிக்கத்தின்கீழ் இருக்கின்றன, எல்லாவற்றையும் ஆளக்கூடிய வல்லமை அவருக்கு இருந்தாலும், தேவன் ஒருபோதும் தனது சொந்த திட்டத்தைச் சேதப்படுத்துவதில்லை அல்லது சீர்குலைப்பதில்லை. ஒவ்வொரு முறையும் அவர் தமது அதிகாரத்தை செலுத்தும்போது, அவருடைய சொந்தக் கொள்கைகளுடன் அது கண்டிப்பான இணக்கத்தில் இருக்கிறது, அவருடைய வாயிலிருந்து பேசப்பட்டதைத் துல்லியமாகப் பின்பற்றுகிறார் மற்றும் அவருடைய திட்டத்தின் படிகளையும் நோக்கங்களையும் பின்பற்றுகிறார். தேவனால் ஆளப்படும் அனைத்தும் தேவனுடைய அதிகாரம் செலுத்தும் கொள்கைகளுக்குக் கீழ்ப்படிகிறது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு மனிதனும் அல்லது காரியமும் அவருடைய அதிகாரத்தின் ஏற்பாடுகளிலிருந்து விலக்கப்படுவதில்லை. தேவனுடைய அதிகாரம் செலுத்தப்படும் கொள்கைகளை அவர்களால் மாற்றவும் முடியாது. தேவனுடைய பார்வையில், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவருடைய அதிகாரத்தால் கொண்டுவரப்பட்ட நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார்கள் மற்றும் சபிக்கப்பட்டவர்கள் தேவனுடைய அதிகாரத்தின் காரணமாகத் தண்டனையைப் பெறுகிறார்கள். தேவனுடைய அதிகாரத்தின் ராஜரீகத்தின்கீழ், எந்தவொரு மனிதனும் அல்லது காரியமும் அவருடைய அதிகாரம் செலுத்துதலிலிருந்து விலக்கப்படுவதில்லை. அவருடைய அதிகாரம் செலுத்தப்படும் கொள்கைகளை அவர்களால் மாற்றவும் முடியாது. சிருஷ்டிகருடைய அதிகாரம் எந்தவொரு காரணியிலும் ஏற்படும் மாற்றங்களால் மாற்றப்படுவதில்லை. அதைப் போலவே, அவருடைய அதிகாரம் செலுத்தப்படும் கொள்கைகளும் எந்த காரணத்திற்காகவும் மாறாது. வானமும் பூமியும் பெரும் எழுச்சிகளுக்கு ஆளாகக்கூடும், ஆனால் சிருஷ்டிகருடைய அதிகாரம் மாறாது. எல்லாமே மறைந்து போகக்கூடும், ஆனால் சிருஷ்டிகருடைய அதிகாரம் ஒருபோதும் மறைந்துவிடாது. இதுவே சிருஷ்டிகருடைய மாறாத மற்றும் மறுக்கமுடியாத அதிகாரத்தின் சாராம்சம் ஆகும். இது சிருஷ்டிகருடைய தனித்துவமாக இருக்கிறது!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 98

சாத்தானுக்கான தேவனுடைய கட்டளை

யோபு 2:6  அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையில் இருக்கிறான்; ஆனாலும் அவன் உயிரை மட்டும் விட்டுவிடு என்றார்.

சிருஷ்டிகரின் அதிகாரத்தை மீறுவதற்கு சாத்தான் ஒருபோதும் துணிந்ததில்லை, இதன் காரணமாக, சகலமும் ஒழுங்குடன் ஜீவிக்கின்றன

இது யோபு புத்தகத்திலிருக்கின்ற ஒரு பகுதியாகும். இந்த வார்த்தைகளில் உள்ள “அவன்” என்பது யோபுவைக் குறிக்கிறது. சுருக்கமாக இருந்தாலும், இந்த வாக்கியம் பல சிக்கல்களைத் தெளிவுபடுத்துகிறது. இது ஆவிக்குரிய உலகில் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட உரையாடலை விவரிக்கிறது. மேலும், தேவனுடைய வார்த்தைகளின் நோக்கம் சாத்தான்தான் என்று நமக்கு சொல்கிறது. தேவன் குறிப்பிட்டுச் சொன்னதையும் இது பதிவு செய்கிறது. தேவனுடைய வார்த்தைகள் சாத்தானுக்கான தேவனுடைய கட்டளை மற்றும் ஆணை ஆகும். இந்த ஆணையின் குறிப்பிட்ட விவரங்கள் யோபுவின் ஜீவனைக் காப்பாற்ற, யோபுவை சாத்தான் நடத்துவதற்கு தேவன் வரைந்த கோட்டுடன் தொடர்புடையவை—சாத்தான் யோபுவினுடைய ஜீவனை விட்டுவைக்க வேண்டியிருந்தது. இந்த வாக்கியத்திலிருந்து நாம் முதலில் தெரிந்துகொள்வது என்னவென்றால், இவை சாத்தானிடம் தேவன் பேசிய வார்த்தைகள் என்பதே. யோபு புத்தகத்தின் மூல உரையின்படி, இது போன்ற வார்த்தைகளின் பின்னணியை இது நமக்குக் கூறுகிறது: சாத்தான் யோபுவைக் குற்றம் சாட்ட விரும்பினான். ஆகவே, அவனை சோதிப்பதற்கு முன்பு அது தேவனுடைய சம்மதத்தைப் பெற வேண்டியிருந்தது. யோபுவைச் சோதிக்க வேண்டிக்கொண்ட சாத்தானின் வேண்டுகோளுக்கு சம்மதிக்கும்போது, தேவன் பின்வரும் நிபந்தனையை சாத்தானிடம் முன்வைத்தார்: “அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்” ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார். இந்த வார்த்தைகளின் தன்மை என்ன? தெளிவாக, அது ஒரு கட்டளை மற்றும் ஆணையாகும். இந்த வார்த்தைகளின் தன்மையைப் புரிந்துகொண்ட நீங்கள், நிச்சயமாக, இந்த ஆணையைப் பிறப்பித்தவர் தேவன் என்பதையும், இந்த ஆணையைப் பெற்று அதைக் கடைப்பிடித்தது சாத்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆணையில், தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான உறவு இந்த வார்த்தைகளைப் படிக்கும் எவருக்கும் வெளிப்படையானது என்று சொல்லத் தேவையில்லை. நிச்சயமாக, இதுவும், ஆவிக்குரிய உலகில் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான உறவாக இருக்கிறது, தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான அடையாளம் மற்றும் வேறுபாடு குறித்து தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான உரையாடல்கள் மூலமாக வேதவசனங்களில் வழங்கப்பட்டுள்ள பதிவுகளில் மற்றும் தேவன் மற்றும் சாத்தானுக்கு இடையிலான அடையாளம் மற்றும் அந்தஸ்துக்கு இடையில் இன்றுவரை உள்ள வேறுபாட்டை மனிதன் குறிப்பிட்ட எடுத்துக்காட்டு மற்றும் உரை பதிவின் மூலமாக தெரிந்துகொள்ள முடியும். இந்தக் கட்டத்தில், இந்த வார்த்தைகளின் பதிவானது மனிதனின், தேவனுடைய அடையாளம் மற்றும் நிலையைப் பற்றிய அறிவில் ஒரு முக்கியமான ஆவணம் என்று நான் சொல்லியே ஆகவேண்டும். மேலும், இது தேவனைப் பற்றிய மனிதகுலத்தின் அறிவுக்கு முக்கியமான தகவல்களை வழங்குகிறது. ஆவிக்குரிய உலகில் உள்ள சிருஷ்டிகருக்கும் சாத்தானுக்கும் இடையிலான இந்த உரையாடலின் மூலமாக, சிருஷ்டிகரின் அதிகாரத்தின் இன்னும் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மனிதனால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வார்த்தைகள் சிருஷ்டிகரின் தனித்துவமான அதிகாரத்திற்கு மற்றொரு சான்றாக இருக்கிறது.

வெளிப்படையாக, யேகோவா தேவன் சாத்தானுடன் உரையாடலில் ஈடுபடுகிறார். சாராம்சத்தைப் பொறுத்தவரை, யேகோவா தேவன் பேசும் மனநிலையும், அவர் நிற்கும் நிலையும் சாத்தானைவிட உயர்வானவை. அதாவது யேகோவா தேவன் ஒரு ஆணையின் தொனியுடன் சாத்தானைக் கட்டளையிடுகிறார் என்றும், யோபு சாத்தானின் கைகளில் ஏற்கனவே உள்ளதால் சாத்தான் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்றும் சாத்தானிடம் தேவன் சொல்கிறார். யோபு ஏற்கனவே சாத்தானின் கைகளில் உள்ளான் என்றும், யோபுவை தனது விருப்பம்போல் அது எவ்வாறு வேண்டுமானாலும் உபத்திரவப்படுத்திக் கொள்ளலாம் என்றும்—ஆனால் அது யோபுவின் ஜீவனைப் பறித்துவிடக் கூடாது என்றும் சொல்வதாக இது இருக்கிறது. இதில் அடங்கியிருப்பது என்னவென்றால், யோபு சாத்தானின் கைகளில் வைக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய ஜீவன் சாத்தானிடம் கொடுக்கப்படவில்லை; தேவனால் அனுமதிக்கப்படாவிட்டால் யாரும் யோபுவின் ஜீவனைத் தேவனுடைய கைகளிலிருந்து பறிக்கமுடியாது. தேவனுடைய மனநிலை சாத்தானுக்கு இந்தக் கட்டளையில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கட்டளை யேகோவா தேவன் சாத்தானுடன் உரையாடும் நிலையை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறது. இதில், யேகோவா தேவன் வெளிச்சத்தையும், காற்றையும், எல்லாவற்றையும், ஜீவராசிகளையும் சிருஷ்டித்த தேவனுடைய அந்தஸ்தை மட்டும் அவர் கொண்டிருக்கவில்லை, எல்லாவற்றின் மீதும், ஜீவராசிகள் மீதும் ராஜரீகத்தைக் கொண்டிருக்கும் தேவனுடைய அந்தஸ்தை மட்டும் அவர் கொண்டிருக்கவில்லை, மனிதகுலத்திற்கும் பாதாளத்திற்கும் கட்டளையிடும் தேவனுடைய அந்தஸ்தையும் அவர் கொண்டிருக்கிறார். எல்லா ஜீவராசிகளின் ஜீவிதம் மற்றும் மரணத்தையும் தேவனே கட்டுப்படுத்துகிறார். ஆவிக்குரிய உலகில், தேவனைத் தவிர வேறு யார் சாத்தானுக்கு அத்தகைய கட்டளையைப் பிறப்பிக்க துணிவார்? தேவன் ஏன் சாத்தானுக்குத் தனிப்பட்ட முறையில் தனது ஆணையை இட்டார்? ஏனென்றால், யோபு உட்பட, மனிதனின் ஜீவன் அனைத்தும் தேவனால் கட்டுப்படுத்தப்படுகின்றன. யோபுவிற்கு தீங்கு செய்யவோ அல்லது அவனது ஜீவனை பறிக்கவோ தேவன் சாத்தானை அனுமதிக்கவில்லை, யோபுவைச் சோதிப்பதற்கு தேவன் சாத்தானை அனுமதித்தபோதும்கூட அத்தகைய ஆணையை விசேஷமானதாக ஆணையிட வேண்டும் என்பதை இன்னும் நினைவில் கொண்டிருந்தார். மேலும், யோபுவின் ஜீவனைப் பறிக்கக்கூடாது என்று சாத்தானுக்கு மீண்டும் ஒருமுறை கட்டளையிட்டார். தேவனுடைய அதிகாரத்தை மீறுவதற்கு சாத்தான் ஒருபோதும் துணிந்ததில்லை மற்றும் தேவனுடைய ஆணைகளையும் குறிப்பிட்ட கட்டளைகளையும் எப்பொழுதும் கவனமாகக் கேட்டு, கீழ்ப்படிந்திருக்கிறான், அவற்றை ஒருபோதும் மீறத் துணிந்திருக்கவில்லை. நிச்சயமாக, தேவனுடைய எந்தக் கட்டளைகளிலும் சுதந்திரமாக மாற்றம் செய்யத் துணியவில்லை. தேவன் சாத்தானுக்கு விதித்துள்ள வரம்புகள் அத்தகையவை. எனவே, இந்த வரம்புகளை மீற சாத்தான் ஒருபோதும் துணிந்திருக்கவில்லை. இது தேவனுடைய அதிகாரத்தின் வல்லமை அல்லவா? இது தேவனுடைய அதிகாரத்திற்கு ஒரு சாட்சி அல்லவா? தேவனிடம் எப்படி நடந்துகொள்வது, தேவனை எப்படிப் பார்ப்பது என்பது பற்றி சாத்தானுக்கு மனிதகுலத்தைவிட தெளிவானப் புரிதல் உள்ளது. ஆகவே, ஆவிக்குரிய உலகில், சாத்தான் தேவனுடைய அந்தஸ்தையும் அதிகாரத்தையும் மிகத் தெளிவாகக் காண்கிறான் மற்றும் தேவன் அதிகாரம் செலுத்துவதற்கு பிறகே உள்ள அவருடைய வல்லமையையும் உபதேசங்களையும் ஆழமாகப் புரிந்து கொள்கிறான். அது அவற்றைக் கவனிக்கத் தவறவோ அல்லது அவற்றை எந்த வகையிலும் மீறவோ, தேவனுடைய அதிகாரத்தை மீறும் எதையும் செய்யத்துணியவோ இல்லை. மேலும், தேவனுடைய கோபத்தை எந்த வகையிலும் சவால் செய்ய அது துணிவதில்லை. அது தீமை மற்றும் இறுமாப்பைக் கொண்டுள்ளது என்றாலும், சாத்தான் ஒருபோதும் தேவனால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளையும் வரம்புகளையும் மீறத் துணியவில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக, அது இந்த எல்லைகளை கண்டிப்புடன் கடைப்பிடித்தது, தேவனால் வழங்கப்பட்ட ஒவ்வொரு கட்டளைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டு வருகிறது, மேலும், ஒருபோதும் அந்த அடையாளத்தை மீறத்துணியவில்லை. அது தீங்கிழைக்கும் என்றாலும், கேடு நிறைந்த மனிதகுலத்தைவிட சாத்தான் மிகவும் புத்திசாலி; அது சிருஷ்டிகரின் அடையாளத்தை அறிந்திருக்கிறது மற்றும், தன் சொந்த வரம்புகளையும் அறிந்திருக்கிறது. சாத்தானின் “அடிபணிந்த” செயல்களிலிருந்து, தேவனுடைய அதிகாரமும் வல்லமையும் சாத்தானால் மீறமுடியாத பரலோக கட்டளைகள் என்பதையும், தேவனுடைய தனித்துவம் மற்றும் அதிகாரம் காரணமாகவே சகலமும் மாற்றம் பெற்று ஒழுங்கான முறையில் பரவுகின்றன. இந்த ஒழுங்கை சீர்குலைக்கும் திறன்கொண்ட எந்தவொரு மனிதனோ அல்லது பொருளோ இல்லாமல், இந்த நியாயப்பிரமாணத்தை மாற்றும் திறன்கொண்ட எந்தவொரு நபரோ அல்லது பொருளோ இல்லாமல், தேவனால் நிறுவப்பட்ட போக்கில் மனிதகுலம் ஜீவிக்கவும் பெருகவும் முடியும்—ஏனென்றால் அவை அனைத்தும் சிருஷ்டிகரின் கைகளிலிருந்தும், ஆணையிலிருந்தும் மற்றும் சிருஷ்டிகரின் அதிகாரத்திலிருந்தும் வருகின்றன.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 99

சிருஷ்டிகரின் அடையாளத்தைக் கொண்ட தேவன் மட்டுமே, தனித்துவமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தி)

சாத்தானின் சிறப்பான அடையாளமானது பல ஜனங்களை அவனுடைய பல்வேறு அம்சங்களுடைய வெளிப்பாடுகளில் வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தச் செய்துள்ளது. சாத்தானும் அற்புதங்களைக் காண்பிக்க முடியும் என்பதால், மனுக்குலத்தால் முடியாத காரியங்களை அவனால் செய்ய முடியும் என்பதால், தேவனைப் போலவே, சாத்தானும் அதிகாரமுடையவன் என்று கூட நம்புகிற பல முட்டாள்கள் இருக்கிறார்கள். இவ்வாறு தேவனை ஆராதிப்பதோடு, மனுக்குலம் சாத்தானுக்கும் ஓரிடத்தைத் தன் இருதயத்தில் ஒதுக்கி வைக்கிறது, மேலும் சாத்தானை தேவனாகக் கூட ஆராதிக்கிறது. இப்படிப்பட்ட ஜனங்கள் பரிதாபகரமானவர்களும், வெறுக்கத்தக்கவர்களுமாவர். அவர்கள் அறியாமையால் பரிதாபகரமானவர்களாக இருக்கிறார்கள், மதங்களுக்கு எதிரான அவர்களுடைய கொள்கை மற்றும் இயல்பான, பொல்லாத சாராம்சத்தினால் அவர்கள் வெறுக்கத்தக்கவர்களாக இருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் அதிகாரம் என்றால் என்ன, அது எதைக் குறிக்கிறது, அது எதைப் பிரதிபலிக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். பொதுப்படையாகப் பேசினால், தேவன் தாமே அதிகாரமுள்ளவராய் இருக்கிறார், அவருடைய அதிகாரமானது தேவனுடைய உன்னதமான நிலையையும், சாராம்சத்தையும் குறிக்கிறது, மேலும் தேவனுடைய அதிகாரமானது தேவனுடைய அந்தஸ்தையும், அடையாளத்தையும் குறிக்கிறது. இதுவே உண்மை நிலை என்பதால், சாத்தானால் தானே தேவனென்று தைரியமாகச் சொல்ல முடியுமா? சாத்தானால் தானே எல்லாவற்றையும் சிருஷ்டித்தேன் என்றும், எல்லாவற்றின் மேலும் ராஜரீகம் கொண்டிருக்கிறேன் என்றும் தைரியமாகச் சொல்ல முடியுமா? நிச்சயமாக அவனால் சொல்ல முடியாது! அவனால் எல்லாவற்றையும் சிருஷ்டிக்க இயலாது; இன்றுவரை, அவன் ஒருபோதும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட எதையுமே உருவாக்கியதில்லை, மேலும் ஜீவனுள்ள எதையுமே அவன் உருவாக்கியதில்லை. அவனுக்குத் தேவனுடைய அதிகாரம் இல்லாத காரணத்தால், அவன் ஒருபோதும் தேவனுடைய அந்தஸ்தையும், அடையாளத்தையும் எவ்விதத்திலும் கொண்டிருக்க முடியாது, மேலும் இது அவனுடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது. தேவனைப் போலவே அவனுக்கு வல்லமை இருக்கிறதா? நிச்சயமாக அவனுக்கு இல்லை! சாத்தானுடைய செயல்களையும், சாத்தானால் வெளிப்படுத்தப்பட்ட அற்புதங்களையும் நாம் என்னவென்று அழைக்கிறோம்? அது வல்லமையா? அதை அதிகாரம் என்று அழைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது! சாத்தான் தீமையின் அலைகளை இயக்குகிறான், மேலும் தேவனுடைய கிரியைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் பாழ்படுத்துகிறான், பலவீனப்படுத்துகிறான் மற்றும் இடையூறு செய்கிறான். கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக மனுக்குலத்தை சீர்கெட்டுப்போகச் செய்து, துஷ்பிரயோகம் செய்து, மனிதனைச் சீரழிப்பதற்கும், தேவனை நிராகரிப்பதற்கும், இதனால் மனிதன் மரண இருளின் பள்ளத்தாக்கிற்கு நேராக நடக்கும்படி, மனிதனைக் கவர்ந்து, வஞ்சிப்பதைத் தவிர, சிறிதளவேனும் மனிதனால் நினைவுகூர, மெச்சிக்கொள்ளத் தகுதியான வகையில், அல்லது நேசிக்கப்படத்தக்கதாய், சாத்தான் எதையாவது செய்திருக்கிறானா? சாத்தான் அதிகாரத்தையும், வல்லமையையும் கொண்டிருந்தானானால், மனுக்குலம் அவனால் சீர்கெட்டிருக்குமா? சாத்தானுக்கு அதிகாரமும் வல்லமையும் இருந்திருந்தால், அவனால் மனுக்குலம் பாதிப்படைந்திருக்குமா? சாத்தானுக்கு அதிகாரமும் வல்லமையும் இருந்திருந்தால், மனுக்குலம் தேவனை கைவிட்டு விட்டு மரணத்திற்குத் திரும்பியிருக்குமா? சாத்தானுக்கு அதிகாரமும் வல்லமையும் இல்லாததால், அவன் செய்யும் எல்லாவற்றின் சாராம்சத்தையும் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்? சாத்தான் செய்யும் எல்லாவற்றையும் வெறும் தந்திரமாக வரையறுப்பவர்களும் இருக்கிறார்கள், இருப்பினும் அத்தகைய வரையறை அவ்வளவு பொருத்தமானதல்ல என்று நான் நம்புகிறேன். மனுக்குலத்தைச் சீர்கெடுக்கும் அவனுடைய பொல்லாத செயல்கள் வெறும் தந்திரங்களா? சாத்தான் யோபுவைக் கொடுமைப்படுத்த உபயோகித்த தீய சக்தியும், அவனைக் கொடுமைப்படுத்தி, விழுங்குவதற்கான அவனுடைய கொடிய விருப்பமும் வெறும் தந்திரத்தால் அடைய முடிந்திருக்காது. திரும்பிப் பார்த்தால், ஒரு நொடியில் குன்றுகளிலும் மலைகளிலும் தூரத்தில் சிதறியிருந்த யோபுவின் ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் இல்லாமல் போய்விட்டன; ஒரு நொடியில், யோபுவின் பெரிதான வளம் மறைந்து போனது. அது வெறும் தந்திரத்தால் அடையப்பட்டிருக்குமா? சாத்தான் செய்யும் எல்லாவற்றின் தன்மையும் எதிர்மறையான வார்த்தைகளான பலவீனப்படுத்துதல், இடையூறு செய்தல், அழித்தல், தீங்கு விளைவித்தல், தீமை, தீங்கிழைத்தல், இருள் ஆகியவற்றோடு ஒத்துப் போகிறது, பொருந்திப் போகிறது, ஆகவே அநீதியான மற்றும் தீமையான அனைத்து நிகழ்வுகளும் சாத்தானுடைய செயல்களுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை சாத்தானுடைய தீமையான சாராம்சத்திலிருந்து பிரிக்க முடியாதவை ஆகும். சாத்தான் எவ்வளவு “சக்திவாய்ந்தவனாக” இருந்தாலும், அவன் எவ்வளவு துணிச்சலுள்ளவனாக மற்றும் லட்சியமுள்ளவனாக இருந்தாலும், சேதத்தை ஏற்படுத்தும் அவனுடைய திறன் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், மனிதனைச் சீர்கெடச் செய்யும், கவரும் அவனுடைய நுட்பங்கள் எவ்வளவு பரந்த அளவில் இருந்தாலும், மனிதனை அச்சுறுத்தும் அவனுடைய தந்திரங்களும், திட்டங்களும் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தாலும், அவன் இருக்கும் வடிவம் எவ்வளவு மாறக்கூடியதாக இருந்தாலும், அவனால் ஒருபோதும் ஒரு உயிரினத்தைக் கூட உருவாக்க முடிவதில்லை, எல்லாவற்றையும் இருக்கச் செய்வதற்கான சட்டங்களையும் விதிகளையும் ஒருபோதும் அமைக்க முடிவதில்லை, மேலும் உயிருள்ள அல்லது உயிரற்ற எந்தவொரு பொருளையும் ஆளுகை செய்யவோ, கட்டுப்படுத்தவோ ஒருபோதும் முடிவதில்லை. பிரபஞ்சம் மற்றும் ஆகாயவிரிவுக்குள், அவனிடத்திலிருந்து பிறந்த நபரோ அல்லது பொருளோ ஒன்றுகூட இல்லை, அல்லது அவனால் இருக்கவுமில்லை; அவனால் ஆளப்படும் அல்லது அவனால் கட்டுப்படுத்தப்படும் நபரோ அல்லது பொருளோ ஒன்றுகூட இல்லை. மாறாக, அவன் தேவனுடைய இராஜ்யத்தின்கீழ் வாழ வேண்டியது மட்டுமல்லாமல், அதனோடுகூட, தேவனுடைய அனைத்து ஆணைகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். தேவனுடைய அனுமதியின்றி, சாத்தானால் ஒரு சொட்டு நீரையோ அல்லது நிலத்தின் மேலிருக்கும் சிறு மணலைக் கூடத் தொடுவது கடினமாகும்; தேவனுடைய அனுமதியின்றி, நிலத்தின் மேலிருக்கும் எறும்புகளைக் கூட அவனால் சுதந்திரமாய் இடமாற்ற முடியாது, அதைவிட தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தையும் இடமாற்ற முடியாது. தேவனுடைய பார்வையில், மலையிலுள்ள அல்லிகளை விட, காற்றில் பறக்கும் பறவைகளை விட, கடலில் உள்ள மீன்கள் மற்றும் பூமியில் உள்ள புழுக்களை விட சாத்தான் மட்டமானவன் ஆவான். எல்லாவற்றிற்கும் மத்தியில் அவனுடைய பங்கு என்னவென்றால், எல்லாவற்றிற்கும் சேவை செய்வது, மனுக்குலத்திற்காக கிரியை செய்வது மற்றும் அவருடைய நிர்வாகத் திட்டத்திற்குச் சேவை செய்வதாகும். அவனுடைய இயல்பு எவ்வளவு தீங்கிழைப்பதாக இருந்தாலும், மேலும் அவனுடைய சாராம்சம் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் அவன் செய்யக் கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், அவனுடைய செயல்பாட்டுடன் கடமையுணர்வோடு நிலைத்திருப்பது தான்: தேவனுக்கு ஊழியம் செய்து கொண்டும், தேவனுக்கு எதிர்ப்பைக் கொடுத்துக் கொண்டும் இருப்பது தான். இதுவே சாத்தானுடைய சாராம்சமும் நிலைமையும் ஆகும். அவனுடைய சாராம்சம் ஜீவனுடன் இணைக்கப்படாததும், வல்லமையுடன் இணைக்கப்படாததும், அதிகாரத்துடன் இணைக்கப்படாததுமாகும்; அவன் தேவனுடைய கரங்களில் ஒரு விளையாட்டுப்பொருள், தேவனுக்குச் சேவை செய்யும் ஒரு இயந்திரம் மட்டுமே!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 100

சிருஷ்டிகரின் அடையாளத்தைக் கொண்ட தேவன் மட்டுமே, தனித்துவமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

அதிகாரத்தையே தேவனுடைய வல்லமை என்று விளக்கமளித்துக் கொள்ளலாம். முதலாவதாக, அதிகாரம் மற்றும் வல்லமை ஆகிய இரண்டும் நேர்மறையானவை என்று உறுதியாகக் கூறலாம். அவற்றுக்கு எதிர்மறையான எதனுடனும் தொடர்பு இல்லை மேலும் அவை சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்த ஒரு உயிரினங்களுடனும் தொடர்பில்லாதவை ஆகும். தேவனுடைய வல்லமையால் எந்த வடிவத்திலும் ஜீவனையும், ஆற்றலுள்ளதுமான எதையும் உருவாக்கக் கூடும், இது தேவனுடைய ஜீவனால் தீர்மானிக்கப்படுகிறது. தேவன் ஜீவனாயிருக்கிறார், ஆகவே அவரே எல்லா உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார். மேலும் தேவனுடைய அதிகாரமானது, எல்லா உயிரினங்களையும் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்ப்படியப்பண்ண முடியும், அதாவது, தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளின்படி உயிர்பெற்று, தேவனுடைய கட்டளையின்படி வாழ்ந்து பெருகும், அதன்பிறகு தேவன் எல்லா உயிரினங்களையும் ஆளுகை செய்து, அதிகாரஞ்செலுத்துவார், அங்கே எந்த ஒரு மாறுபாடும் என்றென்றும் இருக்காது. எந்த ஒரு நபரோ அல்லது பொருளோ இக்காரியங்களைக் கொண்டிருக்கவில்லை; சிருஷ்டிகர் மட்டுமே இத்தகைய வல்லமையைப் பெற்றிருக்கிறார் மற்றும் கொண்டிருக்கிறார், எனவே இது அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே சிருஷ்டிகரின் தனித்துவமாகும். இவ்வார்த்தையின்படியே, “அதிகாரம்” என்ற வார்த்தை மட்டுமாக இருந்தாலும் அல்லது இந்த அதிகாரத்தின் சாராம்சமாக இருந்தாலும், ஒவ்வொன்றும் சிருஷ்டிகருடன் மட்டுமே தொடர்புடையதாக இருக்க முடியும், ஏனெனில் இது சிருஷ்டிகரின் தனித்துவமான அடையாளம் மற்றும் சாராம்சத்தின் அடையாளமாகும், மேலும் இது சிருஷ்டிகருடைய அடையாளம் மற்றும் அந்தஸ்தைக் குறிக்கிறது; சிருஷ்டிகரைத் தவிர, எந்த ஒரு நபரையோ அல்லது பொருளையோ “அதிகாரம்” என்ற வார்த்தையுடன் தொடர்புபடுத்த முடியாது. இதுவே சிருஷ்டிகரின் தனித்துவமான அதிகாரம் குறித்த விளக்கமாகும்.

சாத்தான் யோபுவைப் பேராசைக் கண்களால் பார்த்தபோதும், தேவனுடைய அனுமதியின்றி யோபுவின் சரீரத்திலுள்ள ஒரு தலை முடியைக் கூட அவன் தொடத் துணியவில்லை. சாத்தான் இயல்பாகவே தீயவனாகவும், கொடூரமானவனாகவும் இருந்தபோதும், தேவன் அவனுக்கு உத்தரவு பிறப்பித்தபின், தேவனுடைய கட்டளைக்குக் கட்டுப்படுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. இப்படி, சாத்தான் யோபுவினிடம் வந்தபோது, ஆடுகளிடையே இருக்கும் ஓர் ஓநாயைப் போல வெறித்தனமாக இருந்தபோதிலும், அவன் தேவனால் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மறக்கத் துணியவில்லை, தேவனுடைய கட்டளைகளை மீறத் துணியவில்லை, மேலும் அவன் செய்த எல்லாவற்றிலும், தேவனுடைய வார்த்தைகளின் கொள்கைகள் மற்றும் வரம்புகளிலிருந்து விலகிச் செல்ல சாத்தான் துணியவில்லை, இது உண்மை அல்லவா? இதிலிருந்து, யேகோவா தேவனுடைய எந்த வார்த்தைகளையும் மீற சாத்தான் துணிவதில்லை என்பதைக் காணலாம். சாத்தானைப் பொறுத்தவரை, தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு உத்தரவாகவும், பரலோகச் சட்டமாகவும் மற்றும் தேவனுடைய அதிகாரத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது, ஏனென்றால் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையின் பின்னாலும், தேவனுடைய கட்டளைகளை மீறுபவர்களுக்கும், பரலோகச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும், அவற்றை எதிர்ப்பவர்களுக்கும் தேவனுடைய தண்டனைக் குறிக்கப்பட்டுள்ளது. சாத்தான் தேவனுடைய உத்தரவுகளை மீறினால், தேவனுடைய அதிகாரத்தை மீறுவதின் மற்றும் பரலோகச் சட்டங்களை எதிர்ப்பதின் விளைவுகளையும் அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த விளைவுகள் என்ன? அது தேவனால் வழங்கப்படுகிற அவனுக்கான தண்டனை என்று சொல்லத் தேவையில்லை. யோபுவின் மீதான சாத்தானுடைய செயல்பாடுகளாவை அவன் மனிதனைச் சீர்கெடச் செய்த காரியத்தின் ஒரு நுண்ணிய பகுதியாக மாத்திரமே இருந்தன, மேலும் சாத்தான் இந்தச் செயல்களைச் செய்து கொண்டிருந்தபோது, தேவன் நிர்ணயித்த வரம்புகளும் மற்றும் சாத்தானுக்கு அவர் பிறப்பித்த கட்டளைகளும், அவன் செய்யும் எல்லாவற்றுக்கும் பின்னால் உள்ள கொள்கைகளின் நுண்ணிய பகுதியாக மட்டுமே இருந்தன. அதோடு கூட, இந்த விஷயத்தில் சாத்தானுடைய பங்கு மற்றும் தகுதி நிலையானது, தேவனுடைய நிர்வாகக் கிரியையில் அவனுடைய பங்கு மற்றும் தகுதி நிலையின் நுண்ணிய பகுதியாகவே இருந்தது. மேலும் யோபுவின் சோதனையில், தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த சாத்தானுடைய கீழ்ப்படிதலானது, தேவனுடைய நிர்வாகக் கிரியையில் எப்படிச் சிறிய ஒரு எதிர்ப்பையும் கூட தேவனிடத்தில் காண்பிக்க சாத்தான் துணியவில்லை என்பதன் ஒரு நுண்ணிய பகுதி மட்டுமே. இந்த நுண்ணியப் பகுதிகள் உங்களுக்கு என்ன எச்சரிப்பைத் தருகின்றன? சாத்தான் உட்பட எல்லாவற்றின் மத்தியிலும், சிருஷ்டிகரால் வகுக்கப்பட்ட பரலோகச் சட்டங்களையும் உத்தரவுகளையும் மீறுகிற எந்த ஒரு நபரோ அல்லது பொருளோ இல்லை, மேலும் இந்த பரலோகச் சட்டங்களையும் உத்தரவுகளையும் மீறத் துணியும் எந்த ஒரு நபரோ அல்லது பொருளோ இல்லை, ஏனென்றால் அவற்றுக்குக் கீழ்ப்படியாதவர்கள் மேல் சிருஷ்டிகர் சுமத்துகிற தண்டனையை எந்த நபரோ அல்லது பொருளோ, மாற்றவோ அதிலிருந்து தப்பிக்கவோ முடியாது. சிருஷ்டிகர் மட்டுமே பரலோகச் சட்டங்களையும் உத்தரவுகளையும் ஏற்படுத்த முடியும், அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான அதிகாரம் சிருஷ்டிகருக்கு மட்டுமே உள்ளது, மேலும் சிருஷ்டிகரின் வல்லமை மட்டுமே எந்த ஒரு நபராலோ அல்லது பொருளாலோ மீற முடியாததாகும். இதுவே சிருஷ்டிகருடைய தனித்துவமான அதிகாரமாகும், மேலும் இந்த அதிகாரம் எல்லாவற்றிலும் மிக உயர்வானதாகும், எனவே “தேவனே மிகவும் பெரியவர் என்றும், சாத்தான் இரண்டாவது இடத்தில் உள்ளான்” என்றும் சொல்லவே முடியாது. தனித்துவமான அதிகாரத்தையுடைய சிருஷ்டிகரைத் தவிர, வேறு எந்த தேவனும் இல்லை.

தேவனுடைய அதிகாரத்தைப் பற்றி உங்களுக்கு இப்போது புதிய அறிவு இருக்கிறதா? முதலாவதாக, இப்போது சொல்லப்பட்ட தேவனுடைய அதிகாரத்திற்கும், மனிதனுடைய வல்லமைக்கும் வித்தியாசம் உள்ளதா? என்ன வித்தியாசம் உள்ளது? இரண்டிற்கும் இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அது சரிதான்! இரண்டிற்கும் இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை என்று ஜனங்கள் கூறினாலும், மனிதனின் எண்ணங்களிலும் கருத்துக்களிலும், மனிதனுடைய வல்லமையானது பெரும்பாலும் அதிகாரத்துடன் சேர்த்துக் குழப்பப்படுகிறது, மேலும் இவை இரண்டும் பெரும்பாலும் அருகருகே வைத்து ஒப்பிடப்படுகின்றன. இங்கே என்ன நடக்கிறது? கவனக்குறைவாக, ஜனங்கள் ஒன்றை மற்றொன்றுக்கு மாற்றீடு செய்யும் தவறைச் செய்கிறார்கள் அல்லவா? இரண்டுமே தொடர்பில்லாதவை ஆகும், அவற்றுக்கிடையே எந்த ஒற்றுமையும் கிடையாது, ஆனாலும் ஜனங்களால் அதைச் செய்யாமல் இருக்க முடியவில்லை. இதை எவ்வாறு தீர்க்க வேண்டும்? நீ உண்மையிலேயே ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க விரும்பினால், அதற்கான ஒரே வழி, தேவனுடைய தனித்துவமான அதிகாரத்தைப் புரிந்து கொண்டு, அறிந்து கொள்வதுதான். சிருஷ்டிகருடைய அதிகாரத்தைப் புரிந்து, அறிந்து கொண்ட பிறகு, நீ மனிதனுடைய வல்லமையையும், தேவனுடைய அதிகாரத்தையும் ஒன்றாகக் குறிப்பிட மாட்டாய்.

மனிதனுடைய வல்லமை எதைக் குறிக்கிறது? எளிமையாகச் சொன்னால், அது ஒரு ஆற்றல் அல்லது திறனாகும். அது மனிதனுடைய சீர்கேடான மனநிலை, ஆசைகள் மற்றும் குறிக்கோள்களை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தவோ அல்லது நிறைவேற்றவோ உதவுகிறது. இது அதிகாரம் என்று கணக்கிடப்படுகிறதா? மனிதனுடைய குறிக்கோள்களும், ஆசைகளும் எவ்வளவு பெரியதாக அல்லது இலாபகரமானதாக இருந்தாலும், அந்த நபரை அதிகாரம் கொண்டவர் என்று சொல்ல முடியாது; அதிகபட்சமாக, இந்த ஆணவமும், வெற்றியும் மனிதர்களிடையே சாத்தானுடைய கோமாளித்தனத்தின் சான்றாகவே இருக்கின்றன. அதிகபட்சமாக, அது, தேவனாக இருக்கவேண்டும் என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக சாத்தான் அவனுடைய சொந்த மூதாதையராகச் செயல்படும் ஒரு கேலிக்கூத்தே ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 101

சிருஷ்டிகரின் அடையாளத்தைக் கொண்ட தேவன் மட்டுமே, தனித்துவமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

தேவனுடைய அதிகாரம் எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய அடையாளத்தை அடையாளப்படுத்துகிறதா? அது தேவனுடைய வல்லமையை அடையாளப்படுத்துகிறதா? அது தேவனுடைய தனித்துவமான அந்தஸ்தை அடையாளப்படுத்துகிறதா? எல்லாக் காரியங்களுக்கு மத்தியிலும், எதில் தேவனுடைய அதிகாரத்தை நீ பார்த்தாய்? நீ அதை எப்படிப் பார்த்தாய்? மனிதன் அனுபவித்த நான்கு பருவங்களைப் பொறுத்த வரையிலும், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலம் ஆகியவற்றுக்கு இடையிலான பரிமாற்றத்தின் சட்டத்தை யாராவது மாற்ற முடியுமா? வசந்த காலத்தில் மரங்கள் மொட்டு விடத் தொடங்கி, பூப்பூக்கும்; கோடையில் அவை இலைகளால் மூடப்பட்டிருக்கும்; இலையுதிர் காலத்தில் அவை கனி தரும், மற்றும் குளிர்காலத்தில் இலைகள் உதிரும். யாராவது இந்தச் சட்டத்தை மாற்ற முடியுமா? இது தேவனுடைய அதிகாரத்தின் ஒரு அம்சத்தைப் பிரதிபலிக்கிறதா? தேவன் “வெளிச்சம் உண்டாகக்கடவது,” என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அந்த வெளிச்சம் இன்னும் இருக்கிறதா? அது எந்தக் காரணத்தால் இருக்கிறது? அது தேவனுடைய வார்த்தைகளாலும், நிச்சயமாக, தேவனுடைய அதிகாரத்தாலும் இருக்கிறது. தேவனால் உருவாக்கப்பட்ட காற்று இன்னும் இருக்கிறதா? மனிதன் சுவாசிக்கும் காற்று தேவனிடமிருந்து வருகிறதா? தேவனிடமிருந்து வரும் காரியங்களை யாராவது பறிக்க முடியுமா? அவற்றின் சாராம்சத்தையும், செயல்பாடுகளையும் யாராவது ஒருவரால் மாற்ற முடியுமா? தேவன் ஒதுக்கிக் கொடுத்த இரவு பகலையும், தேவன் கட்டளையிட்ட இரவு மற்றும் பகலின் சட்டத்தையும் யாராவது ஒருவரால் சீர்குலைக்க முடியுமா? சாத்தானால் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய முடியுமா? நீ இரவில் தூங்காவிட்டாலும், இரவைப் பகலாக நினைத்துக் கொண்டாலும், அது அப்போதும் இரவு நேரமே ஆகும்; நீ உன்னுடைய தினசரி வழக்கத்தை மாற்றலாம், ஆனால் இரவுக்கும் பகலுக்கும் இடையேயான பரிமாற்றச் சட்டத்தை உன்னால் மாற்ற முடியாது, இந்தக் காரியமானது எந்த ஒரு நபராலும் மாற்ற முடியாதது, இல்லையா? யாராவது ஒருவரால் ஒரு சிங்கத்தை எருதைப் போல நிலத்தை உழப் பண்ண முடியுமா? யாராவது ஒருவரால் யானையைக் கழுதையாக மாற்ற முடியுமா? யாராவது ஒருவரால் ஒரு கோழியை கழுகைப் போல காற்றில் உயரப் பறக்கச் செய்ய முடியுமா? யாராவது ஒருவரால் ஓநாயை ஆடுகளைப் போல புல்லை சாப்பிடப் பண்ண முடியுமா? (முடியாது.) யாராவது ஒருவரால் நீரிலுள்ள மீன்களை வறண்ட நிலத்தில் வாழப் பண்ண முடியுமா? மனிதர்களால் அதைச் செய்ய முடியாது. ஏன் முடியாது? ஏனென்றால் தேவன் மீன்களைத் தண்ணீரில் வாழக் கட்டளையிட்டபடியால், அவைத் தண்ணீரில் வாழ்கின்றன. நிலத்தின் மேல் அவற்றால் உயிர் வாழ முடியாது, அவை இறந்துவிடும்; அவற்றால் தேவனுடைய கட்டளையின் வரம்புகளை மீற முடியாது. எல்லாவற்றின் இருப்புக்கும் ஒரு சட்டம் மற்றும் ஒரு வரம்பு உள்ளது, மேலும் அவை ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த உள்ளுணர்வுகளைக் கொண்டுள்ளன. இவை சிருஷ்டிகரால் நியமிக்கப்பட்டவையாகும், மேலும் இவை, எந்த மனிதனாலும் மாற்ற முடியாதவையும் மற்றும் மீற முடியாதவையுமாகும். உதாரணமாக, சிங்கம் எப்பொழுதும் காடுகளிலேயே வாழும், மனிதனுடைய சமூகங்களிலிருந்து தொலைவில் வாழும், மேலும் அதனால் ஒருபோதும் மனிதருடன் சேர்ந்து வாழ்ந்து, அவனுக்காக வேலை செய்யும் எருதைப்போல பணிவானதாகவும், விசுவாசமுள்ளதாகவும் இருக்க முடியாது. யானைகள் மற்றும் கழுதைகள் ஆகிய இரண்டு விலங்குகளும் நான்கு கால்கள் கொண்டவையாக மற்றும் காற்றைச் சுவாசிக்கும் உயிரினங்களாக இருந்தாலும், அவை வெவ்வேறு இனங்களாகும், ஏனென்றால் அவை தேவனால் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டன, அவை ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த உள்ளுணர்வைக் கொண்டுள்ளன, எனவே அவற்றை ஒருபோதும் ஒன்றோடொன்று பரிமாற்றம் செய்ய முடியாது. கோழிக்கு கழுகைப் போலவே இரண்டு கால்கள் மற்றும் இறக்கைகள் இருந்தாலும், அதினால் ஒருபோதும் காற்றில் பறக்க முடியாது; அதிகபட்சமாக அது ஒரு மரத்திற்கு மட்டுமே பறந்து செல்ல முடியும், இது அதன் உள்ளுணர்வால் தீர்மானிக்கப்படுகிறது. இவை எல்லாம் தேவனுடைய அதிகாரத்தின் கட்டளைகளால் தான் என்று சொல்லத் தேவையே இல்லை.

இன்றைய மனுக்குலத்தின் வளர்ச்சியில், மனுக்குலத்தின் விஞ்ஞானம் பெரும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதாக கூறலாம், மேலும் மனிதனுடைய விஞ்ஞான ஆய்வின் சாதனைகளை சுவாரஸ்யமானவை என்று வருணிக்கலாம். மனிதனுடைய திறன் இன்னும் அதிகதிமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லவேண்டும், ஆனால் மனுக்குலத்தால் செய்யமுடியாத விஞ்ஞான வளர்ச்சிநிலை ஒன்று உள்ளது: விமானங்கள், விமானத் தாங்கிகள் மற்றும் அணுகுண்டு ஆகியவற்றை மனுக்குலம் உருவாக்கியுள்ளது. மனுக்குலம் விண்வெளிக்குச் சென்று, சந்திரனில் நடந்து, இணையத்தைக் கண்டுபிடித்து, ஒரு அதிநவீன உயர்ந்த வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் மனுக்குலத்தால் ஜீவனுள்ள, சுவாசிக்கின்ற ஒன்றை உருவாக்க முடியாது. ஒவ்வொரு உயிரினத்தின் உள்ளுணர்வுகளும், அவை வாழும் சட்டங்களும், ஒவ்வொரு வகையான உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியுமாகிய இவை அனைத்தும் மனுக்குலத்தின் அறிவியலின் சக்திக்கு அப்பாற்பட்டவையாகும், மேலும் அதனால் கட்டுப்படுத்த முடியாதவையும் ஆகும். இந்தக் கட்டத்தில், மனிதனின் விஞ்ஞானத்தால், எந்த பெரிய உயரங்கள் அடையப்பட்டாலும், அதைச் சிருஷ்டிகரின் எந்த எண்ணங்களுடனும் ஒப்பிட முடியாது, மேலும் அதினால் சிருஷ்டிகருடைய சிருஷ்டிப்பின் அதிசயத்தன்மையையும் மற்றும் அவருடைய அதிகாரத்தின் வல்லமையையும் பகுத்தறிய முடியாது. பூமியின்மேல் ஏராளமான சமுத்திரங்கள் உள்ளன, ஆனாலும் அவை ஒருபோதும் தங்கள் வரம்புகளை மீறி, அவற்றின் விருப்பப்படி நிலத்தின் மேல் வருவதில்லை, ஏனென்றால் தேவன் அவை ஒவ்வொன்றுக்கும் எல்லைகளை நிர்ணயித்திருக்கிறார். அவர் எந்த இடத்தில் கட்டளையிட்டாரோ, அங்கேயே அவை நிலைத்திருக்கின்றன, மேலும் தேவனுடைய அனுமதியின்றி, அவற்றால் சுதந்திரமாக எங்கேயும் அலைய முடியாது. தேவனுடைய அனுமதியின்றி, அவை ஒன்றன் மேல் ஒன்று வரம்பு கடக்க முடியாது, தேவன் சொன்னால் மட்டுமே அவற்றால் நகர முடியும், மேலும் அவை எங்கு செல்கின்றன, எங்கு தங்குகின்றன என்பது தேவனுடைய அதிகாரத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

இதைத் தெளிவாகச் சொல்வதானால், “தேவனுடைய அதிகாரம்” என்பது தேவனுக்குரியதாகும். ஒன்றை எப்படிச் செய்வது என்பதைத் தீர்மானிக்கத் தேவனுக்கு உரிமை உண்டு, மேலும் அது அவர் விரும்பும் வழியில் செய்யப்படுகிறது. எல்லாவற்றினுடைய சட்டம் தேவனுக்கு உரியது, அது மனிதனுக்கு உரியதல்ல, அதை மனிதனால் மாற்றவும் முடியாது. அதை மனிதனுடைய விருப்பப்படி அசைக்க முடியாது, மாறாக அது தேவனுடைய எண்ணங்களாலும், தேவனுடைய ஞானத்தினாலும், மற்றும் தேவனுடைய உத்தரவுகளாலும் மாற்றப்படுகிறது; இது எந்த மனிதனாலும் மறுக்க முடியாத உண்மையாகும். வானங்களும், பூமியும் மற்றும் எல்லா காரியங்களும், பிரபஞ்சமும், விண்மீன்கள் நிறைந்த வானமும், வருடத்தின் நான்கு பருவங்களும், மனிதனால் பார்க்கக் கூடிய மற்றும் பார்க்க முடியாததுமாகிய இவை அனைத்தும் தேவனுடைய அதிகாரத்தின் கீழ், தேவனுடைய உத்தரவுகளின்படி, தேவனுடைய கட்டளைகளின்படி, மேலும் சிருஷ்டிப்பின் தொடக்கத்தினுடைய சட்டங்களின்படியும், சிறிதளவான பிழை கூட இன்றி, அனைத்தும் இருக்கின்றன, செயல்படுகின்றன மற்றும் மாறுகின்றன. எந்த ஒரு மனிதனோ அல்லது பொருளோ கூட, அவற்றின் சட்டங்களை மாற்றவோ அல்லது அவை செயல்படும் உள்ளார்ந்த போக்கை மாற்றவோ முடியாது. அவை தேவனுடைய அதிகாரத்தினால் தோன்றின, அவை தேவனுடைய அதிகாரத்தால் அழிந்து போகின்றன. இதுவே அவருடைய உண்மையான அதிகாரமாகும். இப்போது இத்தனை காரியங்கள் சொல்லப்பட்டிருந்தும், தேவனுடைய அதிகாரமானது தேவனுடைய அடையாளம் மற்றும் அந்தஸ்தின் சின்னம் என்பதை உன்னால் உணர முடிகிறதா? எந்த ஒரு சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத உயிரினத்தினாலும் தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டிருக்க முடியுமா? அதை எந்த ஒரு நபராலோ, காரியத்தாலோ அல்லது பொருளாலோ பின்பற்றவோ, ஆள்மாறாட்டம் செய்யவோ அல்லது மாற்றவோ முடியுமா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 102

சிருஷ்டிகருடைய அடையாளம் தனித்துவமானது, நீங்கள் பலதெய்வக் கொள்கையின் கருத்துக்குக் கட்டுப்படக்கூடாது

சாத்தானுடைய திறன்களும் ஆற்றல்களும் மனிதனின் திறன்கள், ஆற்றல்களை விட அதிகம் என்றாலும், மனிதனால் அடைய முடியாத காரியங்களை அவனால் செய்ய முடியும் என்றாலும், சாத்தான் செய்கிறவற்றைக் குறித்து நீ பொறாமையோ அல்லது பேராவலோ கொண்டாலும், இக்காரியங்களை நீ பகைத்தாலும், அல்லது அவற்றால் நீ வெறுப்படைந்தாலும், உன்னால் அவற்றைப் பார்க்க முடிந்தாலும் அல்லது முடியாவிட்டாலும், சாத்தானால் எவ்வளவு சாதிக்க முடியும் என்றாலும், அல்லது எத்தனை பேரை தன்னை ஆராதிப்பதற்கும், வணங்குவதற்கும் அவனால் வஞ்சிக்க முடிந்தாலும், நீ அவனை எப்படி வரையறுத்தாலும், அவனுக்கு தேவனுடைய அதிகாரமும் வல்லமையும் இருப்பதாக எவ்வகையிலும் உன்னால் சொல்ல முடியாது. தேவன் தேவன் தான் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும், ஒரே ஒரு தேவன் மட்டுமே உண்டு, மேலும் தேவனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பதையும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்தவும், ஆளுகை செய்யவும் தேவனுக்கு மட்டுமே வல்லமை உண்டு என்பதையும் நீ அறிந்து கொள்ள வேண்டும். சாத்தானுக்கு ஜனங்களை வஞ்சிக்கும் ஆற்றல் இருப்பதாலும், தேவனைப் போல ஆள்மாறாட்டம் செய்ய முடியும் என்பதாலும், தேவனால் செய்யப்பட்ட அடையாளங்களையும் அற்புதங்களையும் போலச் செய்ய முடிந்தாலும், தேவனைப் போலவே காரியங்களைச் செய்வதாலும் மட்டுமே, நீ தேவன் தனித்துவமானவர் அல்ல என்றும் பல தேவர்கள் இருக்கிறார்கள் என்றும் இந்த வெவ்வேறான தேவர்கள் மட்டுமே அதிக அல்லது குறைந்த ஆற்றல்களைக் கொண்டிருக்கின்றன என்றும், அவைப் பயன்படுத்தும் வல்லமையின் அளவில் வேறுபாடுகள் உள்ளன என்றும் நீ தவறாக நம்புகிறாய். நீ அவர்களின் வருகையின் வரிசையிலும், அவர்களின் வயதின்படியும் அவர்களின் மகத்துவத்தை மதிப்பிடுகிறாய், மேலும் தேவனைத் தவிர வேறு தெய்வங்கள் இருப்பதாக நீ தவறாக நம்புகிறாய், மேலும் தேவனுடைய வல்லமையும், அதிகாரமும் தனித்துவமானவையல்ல என்று நினைக்கிறாய். உன்னிடம் இது போன்ற எண்ணங்கள் இருந்தால், நீ தேவனுடைய தனித்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்றால், தேவன் மட்டுமே அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்று விசுவாசிக்காமல் இருந்தால், மேலும் நீ பலதெய்வக் கொள்கைக்கு மட்டுமே கட்டுப்பட்டால், நான் சொல்லுகிறேன், நீ சிருஷ்டிகளின் கழிசடையாக இருக்கிறாய், நீ சாத்தானுடைய உண்மையான உருவகமாக இருக்கிறாய், நீ முழுமையான தீமையுள்ள நபராய் இருக்கிறாய்! இந்த வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் நான் உங்களுக்குக் கற்பிக்க முயற்சிப்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? எந்த நேரமோ, இடமோ அல்லது உங்களுடைய பின்னணி எதுவாக இருந்தாலும், எந்த நபருடனும், விஷயங்களுடனும், பொருளுடனும் தேவனை வைத்துக் குழப்பக் கூடாது. தேவனுடைய அதிகாரத்தையும், தேவனுடைய சாராம்சத்தையும் நீ எவ்வளவு அறியமுடியாததாக மற்றும் அணுகமுடியாததாக நினைத்தாலும், சாத்தானுடைய செயல்களும் வார்த்தைகளும் உன் கருத்துடனும், கற்பனையுடனும் ஒத்துப்போனாலும், அவை உனக்கு எவ்வளவு திருப்திகரமாக இருந்தாலும், முட்டாளாக இருக்காதே, இந்தக் கருத்துக்களைக் குழப்பிக் கொள்ளாதே, தேவன் இருக்கிறார் என்பதை மறுக்காதே, தேவனுடைய அடையாளத்தையும், அந்தஸ்தையும் மறுக்காதே, தேவனை வெளியே தள்ளி, உன் இருதயத்திற்குள்ளிருக்கும் தேவனுக்குப் பதிலாக, சாத்தானை உள்ளே கொண்டு வந்து, அவனை உன் தேவனாக்காதே. இப்படிச் செய்வதன் விளைவுகளை உன்னால் கற்பனை செய்ய முடியும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 103

மனிதன் சீர்கெட்டுப்போயிருந்தாலும், அவன் இன்னும் சிருஷ்டிகரின் அதிகாரத்தினுடைய ராஜரீகத்தின் கீழ் வாழ்கிறான்

சாத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனுக்குலத்தைச் சீர்கெடுத்து வருகிறான். அவன் சொல்ல முடியாத அளவிலான தீமைகளைச் செய்துள்ளான், தலைமுறை தலைமுறையாக வஞ்சித்துள்ளான், உலகில் மிகக் கொடூரமான குற்றங்களைச் செய்துள்ளான். அவன் மனிதனைத் துஷ்பிரயோகம் செய்து, மனிதனை வஞ்சித்து, தேவனை எதிர்க்கும்படி மனிதனை மயக்கி, மேலும் தேவனுடைய நிர்வாகத் திட்டத்தைக் குழப்பமடையச் செய்யும் மற்றும் சேதப்படுத்தும் தீய செயல்களைத் தொடர்ந்து செய்துள்ளான். ஆனாலும், தேவனுடைய அதிகாரத்தின் கீழ், எல்லாக் காரியங்களும் உயிரினங்களும் தேவனுடைய விதிகளுக்கும் சட்டங்களுக்கும் தொடர்ந்து கட்டுப்படுகின்றன. தேவனுடைய அதிகாரத்துடன் ஒப்பிடுகையில், சாத்தானுடைய தீய இயல்பும், மூர்க்க நிலையும் அசிங்கமானவை, அருவருப்பானவை மற்றும் வெறுக்கத்தக்கவையாகும், மேலும் அவை மிகவும் அற்பமானவையும், பாதிக்கப்படக் கூடியவையுமாகும். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றின் மத்தியிலும் சாத்தான் நடந்தாலும், தேவனால் ஆளப்படுகிற மனிதனிலும், காரியங்களிலும் மற்றும் பொருட்களிலும் சிறிதளவு மாற்றத்தைக் கூட அவனால் நிகழ்த்த முடியாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துவிட்டன, மனுக்குலம் இன்னும் தேவன் அளித்த ஒளியையும், காற்றையும் அனுபவித்து வருகிறது, தேவனால் ஊதப்பட்ட சுவாசத்தை இன்னும் சுவாசிக்கிறது, தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட பூக்கள், பறவைகள், மீன்கள் மற்றும் பூச்சிகளை இன்னும் ரசிக்கிறது, மேலும் தேவனால் கொடுக்கப்பட்ட அனைத்தையும் அனுபவிக்கிறது; இரவும் பகலும் இன்னும் தொடர்ந்து ஒன்றுக்கொன்று மாறி மாறி வருகின்றன; நான்கு பருவங்களும் வழக்கம்போல் மாறி மாறி வருகின்றன; வானத்தில் பறக்கும் வாத்துக்கள் குளிர்காலத்தில் வேறிடம் புறப்பட்டுப்போய், அடுத்த வசந்தகாலத்தில் திரும்புகின்றன; தண்ணீரில் உள்ள மீன்கள் அவற்றின் வீடான ஆறுகளையும் ஏரிகளையும் ஒருபோதும் விட்டு வெளியேறுவதில்லை; கோடை நாட்களில் பூமியில் உள்ள சிள்வண்டுகள் மிகுந்த உற்சாகத்துடன் பாடுகின்றன; புல்வெளியில் உள்ள வெட்டுக்கிளிகள் இலையுதிர் காலத்தில் காற்றோடு சேர்ந்து ரீங்காரமிடுகின்றன; வாத்துக்கள் கூட்டமாகத் திரள்கின்றன, கழுகுகளோ தனிமையில் இருக்கின்றன; சிங்கக்கூட்டங்கள் வேட்டையாடுவதின் மூலம் தங்களை வாழவைத்துக் கொள்கின்றன; கடம்பைமான் புற்கள் மற்றும் பூக்களிலிருந்து விலகிச்செல்வதில்லை…. எல்லாவற்றிற்குமிடையே இருக்கும் ஒவ்வொரு வகையான உயிரினங்களும், ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குப் புறப்பட்டுப் போய், திரும்பி வருகின்றன, பின்னர் மீண்டும் புறப்பட்டுப் போகின்றன, கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு மில்லியன் மாற்றங்கள் நிகழ்கின்றன, ஆனால் மாறாதவை எவையென்றால் அவற்றின் உள்ளுணர்வுகளும், உயிர்வாழும் விதிகளுமே ஆகும். அவை தேவனுடைய ஏற்பாடு மற்றும் போஷிப்பின் கீழ் வாழ்கின்றன, அவற்றுடைய உள்ளுணர்வையும் ஒருவராலும் மாற்ற முடியாது, அவற்றின் உயிர்வாழும் விதிகளையும் ஒருவராலும் சேதப்படுத்த முடியாது. எல்லாவற்றிற்கும் மத்தியில் வாழும் மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டிருப்பினும், மனிதனால் இன்னும் தேவனால் உருவாக்கப்பட்ட நீரையும், தேவனால் உருவாக்கப்பட்ட காற்றையும் மற்றும் தேவனால் உருவாக்கப்பட்ட எல்லாவற்றையும் விலக்கி வாழ முடியாது, மேலும் மனிதன் இன்னும் தேவனால் உருவாக்கப்பட்ட இந்த இடத்தில் வாழ்கிறான் மற்றும் பெருகுகிறான். மனுக்குலத்தின் உள்ளுணர்வுகள் மாறவில்லை. மனிதன் இன்னும், பார்க்கும்படியாக தன் கண்களையும், கேட்கும்படியாக தன் செவிகளையும், சிந்திக்கும்படியாக தன் மூளையையும், புரிந்து கொள்ளும்படியாக தன் இருதயத்தையும், நடக்கும்படியாக தன் கால்களையும் பாதங்களையும், வேலை செய்யும்படியாக தன் கரங்களையும், இன்னும் பலவற்றையும் சார்ந்து கொள்கிறான்; தேவனுடைய ஏற்பாட்டை மனிதன் ஏற்றுக் கொள்ளும்பொருட்டு, தேவன் அவனுக்கு அளித்த அனைத்து உள்ளுணர்வுகளும் மாறாமல் இருக்கின்றன, தேவனுடன் ஒத்துப்போகும் மனிதனின் இயற்கையான ஆற்றல்கள் மாறவில்லை, ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினத்தின் கடமையைச் செய்வதற்கான மனுக்குலத்தின் இயற்கை ஆற்றல் மாறவில்லை, மனுக்குலத்தின் ஆவிக்குரியத் தேவைகள் மாறவில்லை, தன் தொடக்க நிலையைக் கண்டுபிடிப்பதற்கான மனுக்குலத்தின் விருப்பம் மாறவில்லை, சிருஷ்டிகரால் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற மனுக்குலத்தின் ஏக்கம் மாறவில்லை. தேவனுடைய அதிகாரத்தின் கீழ் வாழ்கிற, சாத்தானால் செய்யப்பட்ட இரத்தக்களரியான அழிவைத் தாங்கிக் கொண்ட மனுக்குலத்தின் தற்போதைய சூழ்நிலைகள் இவைகளே. மனுக்குலமானது சாத்தானுடைய அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், சிருஷ்டிப்பின் ஆரம்பத்திலிருந்தே ஆதாமும் ஏவாளும் அல்ல, மாறாக தேவனுக்கு விரோதமான விஷயங்களான அறிவு, கற்பனை, கருத்துக்கள் இன்னும் பல விஷயங்களால் முழுவதுமாக நிரம்பியுள்ளன, மேலும் அது சீர்கேடான சாத்தானுடைய மனநிலையால் நிரம்பியுள்ளன. மேலும் தேவனுடைய பார்வையில், மனுக்குலம் இன்னும் அவர் சிருஷ்டித்த அதே மனுக்குலமாகவே இருக்கிறது. மனுக்குலம் இன்னும் தேவனால் ஆளுகை செய்யப்பட்டு, கையாளப்படுகிறது, இன்னும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட பாதையில் வாழ்கிறது, ஆகவே தேவனுடைய பார்வையில், சாத்தானால் சீர்க்கெடுக்கப்பட்ட மனுக்குலமானது, வெறுமனே தூசிகளால் மூடப்பட்டு, கடகடவென்கின்ற வயிற்றுடன், சற்று மெதுவான எதிர்வினைகளுடன், முன்பு இருந்ததைப் போலிராத நினைவாற்றலுடன், சற்று பழையதாக இருக்கிறது, ஆனால் மனிதனின் அனைத்துச் செயல்பாடுகளும், உள்ளுணர்வுகளும் முற்றிலும் சேதமடையாமல் இருக்கின்றன. இதுவே தேவன் இரட்சிக்க விரும்பும் மனுக்குலமாகும். இந்த மனுக்குலமானது சிருஷ்டிகருடைய அழைப்புக்கு மட்டுமே செவிமடுக்க வேண்டும், சிருஷ்டிகருடைய குரலுக்கு மட்டுமே செவிமடுக்க வேண்டும், அப்பொழுதுதான் மனிதன் எழுந்து இக்குரலின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க விரைந்து செல்வான். இந்த மனுக்குலம் சிருஷ்டிகரின் உருவத்தை மட்டுமே காண வேண்டும், மற்றும் வேறெதைக் குறித்தும் கவனம் கொள்ளாமல், தன்னையே தேவனுக்கு அர்ப்பணிப்பதற்காக அவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவருக்காகத் தன் உயிரைக் கூடக் கொடுப்பான். சிருஷ்டிகருடைய இதயப்பூர்வமான வார்த்தைகளை மனுக்குலத்தின் இதயம் புரிந்து கொள்ளும்போது, மனுக்குலமானது சாத்தானை நிராகரித்து, சிருஷ்டிகரின் பக்கம் வரும்; மனுக்குலமானது தன் சரீரத்திலிருந்து அழுக்கை முழுவதுமாகக் கழுவும்போது, சிருஷ்டிகருடைய ஏற்பாட்டையும், போஷிப்பையும் மீண்டும் ஒருமுறைப் பெறும்போது, அதன்பின் மனுக்குலத்தின் நினைவாற்றல் மீட்கப்படும், மேலும் இந்த நேரத்தில் மனுக்குலமானது சிருஷ்டிகருடைய ஆளுகைக்கு உண்மையாகவே திரும்பியிருக்கும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 104

தேவனைப் பிடிவாதமாக எதிர்ப்பதால், மனிதன் தேவனுடைய கோபத்தால் அழிக்கப்படுகிறான் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆதி. 19:1-11  அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து: ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள். அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள். அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி, தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.

ஆதி. 19:24-25  அப்பொழுது யேகோவா, சோதோம் மீதும் கொமோராவின் மீதும் வானத்திலிருந்த யேகோவாவிடமிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியப்பண்ணி; அந்த நகரங்களையும், சகல சமவெளிகளையும், அந்நகரங்களின் சகல குடிகளையும், பூமியில் வளர்ந்தவற்றையும் அழித்துப்போட்டார்.

இந்த வசனப்பகுதியிலிருந்து, சோதோமின் துன்மார்க்கமும், சீர்கேடும், மனிதன் மற்றும் தேவன் ஆகிய இருவருக்கும் அருவருப்பாக இருக்கிற அளவை ஏற்கனவே அடைந்துள்ளன, அதனால் தேவனுடைய கண்களில் இந்தப் பட்டணம் அழிக்கப்படுகிறத் தகுதியைப் பெற்றது என்பதைப் பார்ப்பது கடினமானதல்ல. ஆனால் பட்டணம் அழிக்கப்படுவதற்கு முன் அதற்குள்ளே என்ன நடந்தது? இந்தச் சம்பவங்களின் மூலம் ஜனங்கள் என்ன உத்வேகத்தைப் பெற முடியும்? இந்தச் சம்பவங்கள் குறித்த தேவனுடைய அணுகுமுறையானது மக்களுக்கு அவருடைய மனநிலையைப் பற்றிக் காட்டுவது என்ன? இந்த முழு சம்பவத்தையும் புரிந்துக்கொள்ளுவதற்கு, வசனங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளதைக் கவனமாக படிப்போமாக …

சோதோமின் சீர்கேடு: மனிதனுக்கு எரிச்சல், தேவனுக்குக் கோபம்

அந்த இராத்திரியில், தேவனிடமிருந்து வந்த இரண்டு தூதர்களை லோத்து வரவேற்று, அவர்களுக்கு ஒரு விருந்தை ஆயத்தம் செய்தான். இரவு உணவு முடிந்து, அவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், அந்தப் பட்டணத்தைச் சுற்றியிருந்த எல்லா ஜனங்களும் லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு, அவனை வெளியே அழைத்தார்கள். அவர்கள் இப்படிச் சொன்னதாக வசனம் பதிவு செய்கிறது, “இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா.” இந்த வார்த்தைகளை யார் சொன்னது? இவைகள் யாருக்கு சொல்லப்பட்டன? இந்த வார்த்தைகள் லோத்து கேட்கும்படியாக லோத்தின் வீட்டிற்கு வெளியே கத்திக்கொண்டிருந்த சோதாம் மக்களுடையவை. இந்த வார்த்தைகள் கேட்பதற்கு எப்படி உணரப்படுகின்றன? நீ மிகுந்த கோபமாக உணர்கிறாயா? இந்த வார்த்தைகள் உன்னை வேதனைப்படுத்துகிறதா? நீ கோபத்தால் கொதிக்கிறாயா? இந்த வார்த்தைகள் சாத்தானுடைய துர் நாற்றமல்லவா? இவற்றின் மூலம் நீ அந்தப் பட்டணத்திலுள்ள தீமையையும், இருளையும் உணர முடிகிறதா? இந்த ஜனங்களுடைய மிருகத்தனமான, காட்டுமிராண்டித்தனமான நடத்தையை அவர்களுடைய வார்த்தைகளின் மூலம் உணர முடிகிறதா? அவர்களுடைய இந்த நடத்தையின் மூலம் அவர்களுடைய சீர்கேட்டின் ஆழத்தை உன்னால் உணர முடிகிறதா? அவர்களுடைய பேச்சின் உள்ளடக்கத்தில், அவர்களுடைய துன்மார்க்கமான இயல்பும், காட்டுமிராண்டித்தனமான மனநிலையும் அவர்களுடைய சொந்தக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலையை எட்டியிருந்ததை காண்பது கடினமானது அல்ல. லோத்தைத் தவிர, இந்தப் பட்டணத்திலுள்ள ஒவ்வொரு கடைசி மனிதனும் சாத்தானை விட மாறுப்பட்டவன் அல்ல; மற்ற மனிதனுடைய வெறும் பார்வையே இந்த மக்களைத் தீங்கு செய்யவும் பட்சிக்கவும் விரும்ப வைத்தது…. இந்தக் காரியங்கள் இந்தப் பட்டணத்தின் கொடூரமான உணர்வையும் மற்றும் அச்சுறுத்தும் இயல்பின் உணர்வையும் ஒருவருக்குத் தருவது மட்டுமல்லாமல், அதனைச் சுற்றியுள்ள மரணத்தின் பிரகாசத்தையும் தருகிறது, ஆனால் அவைகள் அதனுடைய துன்மார்க்கத்தனம் மற்றும் இரத்த வெறியின் உணர்வை ஒருவருக்குக் கொடுக்கின்றன.

அவன் மனிதாபிமானமற்ற அக்கிரமக்காரர்கள் கும்பலுடனும், மனித ஆத்துமாக்களைப் பட்சிக்கும் காட்டுத்தனமான ஆசை நிறைந்துள்ள ஜனங்களுடனும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது, லோத்து எவ்வாறு பதிலளித்தான்? வசனம் கூறுகிறது: “இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம்.” லோத்து இந்த வார்த்தைகளால் எதைப் பொருள்படுத்தினான் என்றால்: தூதர்களைப் பாதுக்காக்க அவன் தன்னுடைய இரு குமராத்திகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தான். நியாயப்படி பார்த்தால், இந்த ஜனங்கள் லோத்தினுடைய நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டு, இந்த இரு தூதர்களையும் தனியே விட்டு விட்டிருக்க வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தூதர்கள் அவர்களுக்கு முற்றிலும் அந்நியர்கள், அவர்களோடு எவ்வகையிலும் முமுமையான தொடர்பும் இல்லாதவர்கள் மற்றும் அவர்களின் ஆர்வங்களுக்கு ஒருபோதும் தீங்கு செய்யாத ஜனங்கள். ஆனாலும், தங்கள் துன்மார்க்க இயல்புகளால் உந்தப்பட்டவர்களாக, அவர்கள் இந்த விஷயத்தை அத்தோடு விட்டுவிடவில்லை, மாறாக அவர்கள் தங்கள் முயற்சியைத் தீவிரப்படுத்தினார்கள். இங்கே, சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களின் பேச்சுக்களில் மற்றொன்று இந்த மனிதர்களின் உண்மையான மற்றும் தீய இயல்பைப் பற்றிய அறிவை ஜனங்களுக்கு மேலும் அளிக்கிறது, அதே நேரத்தில் இந்தப் பட்டணத்தை அழிக்க தேவன் சித்தங்கொண்டதற்கான காரணத்தை ஜனங்கள் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

ஆகவே அவர்கள் அடுத்தப்படியாக என்ன சொன்னார்கள்? வேதம் கூறுகிறது: “அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.” அவர்கள் லோத்தின் கதவுகளை எதற்கு உடைக்க விரும்பினார்கள்? இதற்கு காரணமென்னவென்றால் இந்த இரண்டு தூதர்களின் மீதும் அவர்கள் தீங்கு விளைவிக்க ஆர்வமாக இருந்தார்கள். இந்தத் தூதர்களை சோதோமிற்கு கொண்டு வந்தது எது? இங்கு வருதற்கான அவர்களுடைய காரணமானது லோத்தையும் அவனுடைய குடும்பத்தையும் காப்பாற்றுவதாகும், ஆனால் அந்தப் பட்டணத்து ஜனங்கள் அவர்கள் அதிகாரப் பூர்வப் பதவிகளை ஏற்க வந்ததாகத் தவறாக நினைத்துக்கொண்டனர். தூதர்களின் காரணத்தைக் கேட்காமல், பட்டணத்து ஜனங்கள் இந்த இரண்டு தூதர்களுக்கும் மிருகத்தனமாகத் தீங்கு செய்ய யூகத்தின் அடிப்படையில் விருப்பங்கொண்டனர். அவர்களோடு எவ்விதத்திலும் தொடர்பில்லாத இரண்டு ஜனங்களுக்கு அவர்கள் தீங்கு செய்ய விரும்பினார்கள். இந்தப் பட்டணத்து ஜனங்கள் தங்கள் மனிதத்தன்மையையும், பகுத்தறிவையும் முற்றிலுமாக இழந்துவிட்டனர் என்பது தெளிவாகிறது. அவர்களுடைய பைத்தியக்காரத்தனம் மற்றும் காட்டுத்தனத்தின் அளவானது ஏற்கனவே மனிதர்களுக்குத் தீங்கு செய்து அவர்களைப் பட்சிக்கும் சாத்தானுடைய தீய இயல்புகளுக்கு எவ்விதத்திலும் வேறுபட்டதாக இருக்கவில்லை.

இந்தத் தூதர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அவர்கள் லோத்திடம் கோரியபோது, லோத்து என்ன செய்தான்? லோத்து அவர்களை ஒப்படைக்கவில்லை என்று வசனத்திலிருந்து நாம் அறிகிறோம். லோத்து இந்த இரண்டு தேவ தூதர்களையும் அறிந்திருந்தானா? நிச்சயமாக இல்லை! இருந்தாலும் இந்த இருவரையும் ஏன் அவனால் காப்பாற்ற முடிந்தது? அவர்கள் என்ன செய்ய வந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியுமா? அவர்கள் வந்ததன் காரணத்தைக் குறித்து அவனுக்குத் தெரியாவிட்டாலும், அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று அவன் அறிந்திருந்தான், மேலும் அவர்களை அவன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். அவன் இந்த ஊழியக்காரர்களை “ஆண்டவன்மார்களே” என்ற அடைமொழியோடு அழைப்பதானது, சோதோமின் மற்ற ஜனங்களைப் போன்றல்லாமல், லோத்து தேவனை வழக்கமாக பின்பற்றுகிறவன் என்பதைக் காட்டுகிறது. ஆகையால், தேவனுடைய தூதர்கள் அவனிடம் வந்தப்போது, அந்த இரண்டு ஊழியர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவன் தன்னுடைய உயிரை பணயம் வைத்தான்; மேலும் இந்த இரண்டு ஊழியர்களைப் பாதுக்காக்கும் விதமாக தன்னுடைய இரண்டு குமாரத்திகளையும் அவன் ஈடாகக் கொடுத்தான். இது லோத்தினுடைய நீதியான செயல்; இது லோத்தினுடைய உறுதியான இயல்பு மற்றும் சாராம்சத்தின் வெளிப்பாடு, மேலும் லோத்தை இரட்சிக்கும்படிக்கு தேவன் தம்முடைய தூதர்களை அனுப்பினதன் காரணமும் இது தான். ஆபத்தைச் சந்திக்கையில், லோத்து வேறு எதையும் பொருட்படுத்தாமல் இந்த இரண்டு ஊழியர்களையும் பாதுகாத்தான்; இந்த ஊழியர்களின் பாதுக்காப்பிற்கு ஈடாக தன் இரு குமாரத்திகளையும் வணிகப் பரிமாற்றம் செய்ய முயற்சிசெய்தான். லோத்தைத் தவிர, இந்தப் பட்டணத்திற்குள்ளிருக்கிற வேறு யாராவது இப்படிச் செய்திருக்க முடியுமா? நடந்த நிகழ்வுகளின்படி யாருமில்லை, எவரும் கிடையாது! ஆகையால், லோத்தைத் தவிர, சோதோமிலுள்ள ஒவ்வொருவரும் அழிவின் இலக்கு, அவர்கள் இதற்குப் பாத்திரவான்கள் என்பது சரியானது என்று சொல்லாமல் சொல்லுகிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 105

ஆதி. 19:1-11  அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து: ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள். அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள். அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி, தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.

ஆதி. 19:24-25  அப்பொழுது யேகோவா, சோதோம் மீதும் கொமோராவின் மீதும் வானத்திலிருந்த யேகோவாவிடமிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியப்பண்ணி; அந்த நகரங்களையும், சகல சமவெளிகளையும், அந்நகரங்களின் சகல குடிகளையும், பூமியில் வளர்ந்தவற்றையும் அழித்துப்போட்டார்.

தேவனுடைய கோபத்தை அவமதித்ததற்காக சோதோம் முற்றிலும் நீர்மூலமாக்கப்பட்டது

இந்த இரண்டு ஊழியர்களை சோதோம் ஜனங்கள் பார்த்தப்போது, அவர்களுடைய வருகையின் காரணத்தைப் பற்றி அவர்கள் கேட்கவுமில்லை, தேவனுடைய சித்தத்தைப் பரப்ப வந்திருக்கிறார்களா என்று எவரும் கேட்கவுமில்லை. இதற்கு மாறாக அவர்கள் ஒரு கலகக்காரர் கூட்டத்தை உருவாக்கினார்கள், விளக்கத்திற்கு காத்திராமல், காட்டு நாய்களைப் போல அல்லது கொடூரமான ஓநாய்களைப் போல இந்த இரண்டு ஊழியர்களையும் பிடித்துக்கொண்டார்கள். இந்த காரியங்கள் நடக்கும்போது தேவன் இவைகளை பார்த்தாரா? மனிதனுடைய இந்த வகையான நடத்தையை, இந்த விதமான நிகழ்வைப் பார்த்து தேவன் தம்முடைய இருதயத்தில் என்ன சிந்தித்துக்கொண்டிருந்தார்? இந்தப் பட்டணத்தை அழிக்க தேவன் தம்முடைய மனதை அமைத்துக்கொண்டார்; அவரால் தவிர்க்கவோ அல்லது காத்திருக்கவோ அல்லது இன்னமும் பொறுமையைக் காட்டவோ முடியவில்லை. அவருடைய நாள் வந்துவிட்டது, மேலும் அவர் சித்தங்கொண்டதைச் செய்ய ஆயத்தமானார். ஆதியாகமம் 19:24-25 இவ்வாறு கூறுகிறது: “அப்பொழுது யேகோவா, சோதோம் மீதும் கொமோராவின் மீதும் வானத்திலிருந்த யேகோவாவிடமிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியப்பண்ணி; அந்த நகரங்களையும், சகல சமவெளிகளையும், அந்நகரங்களின் சகல குடிகளையும், பூமியில் வளர்ந்தவற்றையும் அழித்துப்போட்டார்.” இந்த இரண்டு வசனங்களும் தேவன் இந்தப் பட்டணத்தை அழித்த முறையைப் பற்றியும் தேவன் அழித்த காரியங்களைப் பற்றியும் கூறுகின்றன. முதலாவதாக, தேவன் இந்தப் பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்ததாக வேதம் விவரிக்கிறது, மற்றும் இந்த அக்கினியின் அளவானது ஜனங்கள் அனைவரையும், பூயின் மீது வளர்ந்த அனைத்தையும் அழிக்கப் போதுமானதாக இருந்தது. அதாவது, வானத்திலிருந்த விழுந்த அக்கினியானது, பட்டணத்தை மட்டுமல்லாது, அதனுள் இருந்த ஜனங்கள் மற்றும் மிருக ஜீவன்கள் அனைத்தையும் ஒரு சுவடு கூட இல்லாமல் அழித்துப்போட்டது. அந்தப் பட்டணம் அழிக்கப்பட்டப் பிறகு இந்த நிலமானது உயிர் வாழ் இனங்களை இழந்துவிட்டது; அங்கே இனியும் உயிர்களே கிடையாது, உயிர்கள் இருப்பதற்கான அடையாளங்களும் கிடையாது. பட்டணமானது பாழ் நிலமாகவும், மரண அமைதி நிரம்பிய வெற்றிடமாகவும் மாறிப் போனது. அந்த இடத்தில் தேவனுக்கு விரோதமான தீய செயல்கள் இனியும் இருக்காது, இனியும் படுகொலை இருக்காது அல்லது இரத்தஞ்சிந்துதல் இருக்காது.

இந்தப் பட்டணத்தை இவ்வளவு முற்றிலுமாக அழிக்க தேவன் ஏன் சித்தங்கொண்டார்? நீங்கள் இங்கே என்ன பார்க்க முடிகிறது? மனிதகுலமும் மற்றும் இயற்கையும் அவருடைய சொந்த சிருஷ்ப்புகளும், இப்படி அழிக்கப்படுவதை உண்மையாகவே தேவனால் தாங்கிக்கொள்ள முடிகிறதா? வானத்திலிருந்து கீழே போடப்பட்ட அக்கினியிலிருந்து யேகோவாவின் கோபத்தை உங்களால் பகுத்தறியக் கூடுமானால், அவரது கடுங்கோபமானது எவ்வளவு பெரியது என்பதையும், அவருடைய அழிவின் இலக்குகளை நிதானிப்பதையும், மற்றும் இந்தப் பட்டணம் நிர்மூலமாக்கப்பட்டதன் அளவையும் பார்ப்பது கடினமாக இருக்காது. தேவன் ஒரு பட்டணத்தை வெறுக்கும்போது, அவர் தம்முடைய தண்டனையை அதன் மீது வரப்பண்ணுகிறார். தேவன் ஒரு பட்டணத்தின் மீது அருவருப்படையும்போது, அவர் தம்முடைய கோபத்தை ஜனங்களுக்கு அறிவிக்கும்படிக்கு மீண்டும் மீண்டுமாக எச்சரிக்கையை வெளியிடுவார். ஆனாலும், தேவன் ஒரு பட்டணத்தை முடிவிற்குக் கொண்டுவந்து அதை அழிக்க தீர்மானிக்கையில்—அதாவது அவருடைய கோபம் மற்றும் அவருடைய மகத்துமானது அவமதிக்கப்படும்போது—அவர் இனியும் தண்டனைகளையோ அல்லது எச்சரிக்கைகளையோ அளிக்கமாட்டார். மாறாக, அவர் நேரடியாக அதை அழிப்பார். அவர் அதை முற்றிலும் காணப்படாமல் போகச் செய்துவிடுவார். இதுவே தேவனுடைய நீதியான மனநிலை.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 106

ஆதி. 19:1-11  அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து: ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள். அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள். அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி, தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.

ஆதி. 19:24-25  அப்பொழுது யேகோவா, சோதோம் மீதும் கொமோராவின் மீதும் வானத்திலிருந்த யேகோவாவிடமிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியப்பண்ணி; அந்த நகரங்களையும், சகல சமவெளிகளையும், அந்நகரங்களின் சகல குடிகளையும், பூமியில் வளர்ந்தவற்றையும் அழித்துப்போட்டார்.

தேவனுக்கு விரோதமான சோதோமின் தொடர்ச்சியான எதிர்ப்பு மற்றும் விரோதப்போக்கிற்குப் பின்னர் தேவன் அதை முற்றிலும் அழிக்கிறார்

ஒரு மனிதக் கண்ணோட்டதிலிருந்து பார்க்கையில், சோதோம் பட்டணமானது மனிதனுடைய விருப்பத்தையும், மனிதனுடைய தீமையையும் முற்றிலும் திருப்திப்படுத்துகிற ஒரு பட்டணமாகும். இசையோடும் மற்றும் ஒவ்வொரு இரவிலும் நடனத்தோடும் நயங்காட்டி, மயக்குகிற அதன் செழிப்பு ஆண்களை மோகத்திற்கும் பைத்தியக்காரத்தனத்துக்கும் தூண்டியது. அதனுடைய தீமை ஜனங்களுடைய இருதயத்தைச் சிதைத்து அவர்களை சீரழிவிற்குள் மயக்கியது. இந்தப் பட்டணம் அசுத்தமும் மற்றும் அசுத்த ஆவிகளாலும் கட்டுக்கடங்காமல் இருந்தது; இது பாவம் மற்றும் கொலை ஆகியவற்றால் சூழப்பட்டு மற்றும் அதன் காற்று இரத்தக்களரியாகவும் துர்நாற்றத்துடனும் தடிமனாக இருந்தது. இது ஜனங்களுடைய இரத்தத்தைக் குளிரச் செய்த ஒரு பட்டணம், இந்தப் பட்டணத்திலிருக்கிற ஒருவர் திகிலுடன் ஒடுங்குகிற ஒரு பட்டணம் இது. இந்தப் பட்டணத்திலிருக்கிற எந்தவொரு மனிதனோ அல்லது மனுஷியோ, இளைஞனோ அல்லது முதியோரோ—மெய் வழியைத் தேடவில்லை; ஒருவரும் வெளிச்சத்திற்காக வாஞ்சிக்கவில்லை அல்லது பாவத்தை விட்டு விலகி நடக்கும் ஏக்கம் கொள்ளவில்லை. அவர்கள் சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள்ளும், சாத்தானுடைய சீர்கேடு மற்றும் வஞ்சகத்தின் கீழேயும் வாழ்ந்தனர், அவர்கள் தங்கள் மனிதத்தன்மையை இழந்திருந்தார்கள், அவர்கள் தங்கள் உணர்வை இழந்திருந்தார்கள், மற்றும் அவர்கள் மனிதனுடைய உண்மையான இலக்கை இழந்திருந்தார்கள். அவர்கள் தேவனுக்கெதிராக எண்ணற்ற பொல்லாத கிரியைகளை செய்திருந்தார்கள்; அவர்கள் அவருடைய வழிநடத்துதலை மறுத்தார்கள் மற்றும் அவருடையச் சித்தத்தை எதிர்த்தார்கள். இந்த ஜனங்களையும், பட்டணத்தையும் மற்றும் அதிலுள்ள ஒவ்வொரு உயிரினங்களையும் அவர்களுடைய பொல்லாத கிரியைகளே அவர்களை அழிவின் பாதைக்குள் படிப்படியாகக் கொண்டுச் சென்றன.

இந்த இரு வசனப்பகுதிகளும் சோதோம் பட்டணத்துச் சீர்கேட்டைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பதிவு செய்யவில்லையென்றாலும், அவர்களுடைய பட்டணத்திற்குள் பிற்பாடு வந்த இந்த தேவனுடைய இரண்டு ஊழியர்களுடனான அவர்களுடைய நடத்தையைப் பதிவு செய்கிறது, சோதோம் ஜனங்கள் எந்த அளவிற்குச் சீர்கேடடைந்திருந்தார்கள், தீயவர்களாயிருந்தார்கள் மற்றும் தேவனை எதிர்த்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஓர் எளிய உண்மை ஒன்று உள்ளது. இதன் மூலம், அந்தப் பட்டணத்து ஜனங்களுடைய உண்மையான முகமும் சாராம்சமும் வெளிப்பட்டது. இந்த ஜனங்கள் தேவனுடைய எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததுமல்லாமல், அவருடைய தண்டனைக்கும் பயப்படவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் தேவனுடைய கோபத்தை இகழ்ந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக தேவனை எதிர்த்தனர். அவர் என்ன செய்தார் அல்லது அவர் எப்படிச் செய்தார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்களுடைய பொல்லாத இயல்பு தீவிரமடைந்து, அவர்கள் தேவனை மீண்டும் மீண்டுமாக எதிர்த்தனர். சோதோமுடைய ஜனங்கள் தேவன் இருக்கிறார் என்பதற்கும், அவருடைய வருகைக்கும், அவருடைய தண்டனைக்கும், மற்றும் மற்ற பலவற்றிற்கும், அவருடைய எச்சரிக்கைகளுக்கும் விரோதமாக இருந்தனர். அவர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்களாக இருந்தனர். அவர்கள் எவர்களை எல்லாம் பட்சிக்க முடியுமோ மற்றும் எவர்களுக்கெல்லாம் தீமை செய்ய முடியுமோ அந்த எல்லா ஜனங்களையும் பட்சித்து, தீமை செய்தனர், மேலும் அவர்கள் தேவனுடைய ஊழியர்களை வேறுவிதமாக நடத்தவில்லை. சோதோம் ஜனங்களால் செய்யப்பட்ட பொல்லாத செயல்களில், தேவனுடைய ஊழியர்களுக்குப் பொல்லாப்புச் செய்வது ஒரு பனிப்பாறையின் நுனியளவு மட்டுமேயாகும், மற்றும் இவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட அவர்களுடைய பொல்லாத இயல்பின் அளவானது உண்மையில் ஒரு பரந்த சமுத்திரத்தின் ஒரு துளிக்கு மேல் இல்லை. ஆகையால் தேவன் அக்கினியால் அவர்களை அழிக்க முடிவு செய்தார். தேவன் ஒரு ஜலப்பிரளயத்தைப் பயன்படுத்தவில்லை, பட்டணத்தை அழிக்க ஒரு சூறாவளி, பூகம்பம், சுனாமி அல்லது வேறு எந்த முறையையும் தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அக்கினியைப் பயன்படுத்தி இந்தப் பட்டணத்தை அழிப்பது எதைக் குறிக்கிறது? இது ஒட்டுமொத்தப் பட்டணத்தின் அழிவைப் பொருள்படுத்துகிறது; இந்தப் பட்டணம் பூமியின் மீதும் மற்றும் ஒரு பட்டணமாக இருப்பதிலிருந்தும் முற்றிலுமாக மறைந்துப்போனதைப் பொருள்படுத்துகிறது. இங்கே “அழிவு” என்பது பட்டணத்தின் வடிவம் மற்றும் அமைப்பு அல்லது வெளிப்புறத் தோற்றம் ஆகியவைகள் மறைந்துப்போவதை மட்டுமே குறிப்பிடுவதில்லை; அந்த பட்டணத்திலுள்ள ஆத்துமாக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதால் அவைகள் இல்லாமல் போய்விட்டதை, முற்றிலும் அழிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. எளிமையாகக் கூறுவதென்றால் பட்டணத்துடன் தொடர்புடைய எல்லா ஜனங்களும், நிகழ்வுகளும், மற்றும் காரியங்களும் அழிக்கப்பட்டன. அங்கே அடுத்த வாழ்க்கையோ அல்லது மறு ஜென்மமோ இருக்காது; தேவன் அவர்களை அவருடைய சிருஷ்டிப்பிலிருந்து மனிதகுலத்தை முழு நித்திய காலத்திற்கும் அழித்துப்போட்டார். அக்கினியைப் பயன்படுத்துவது இந்த இடத்தில் பாவத்தின் முடிவையும் மற்றும் பாவம் அங்கே கட்டுப்படுத்தப்பட்டதையும் குறிக்கிறது; இந்தப் பாவமானது இல்லாமல் போய், பரவுவது நிறுத்தப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், சாத்தானுடைய தீமையானது அதனை வளர்க்கும் மண்ணையும், அது தங்குவதற்கும், வாழ்வதற்கும் தரப்பட்ட கல்லறையையும் இழந்துவிட்டது. தேவனுக்கும் சாத்தானுக்குமிடையேயான யுத்தத்தில், தேவன் அவருடைய வெற்றியின் முத்திரையாக அக்கினியை பயன்படுத்துகிறார், சாத்தானும் அதைக் கொண்டுதான் அடையாளப்படுத்தப்படுகிறான். மனிதர்களைச் சீர்கெடுத்துப் பட்சிப்பதின் மூலம் தேவனை எதிர்ப்பதற்கான இலட்சியத்தில் சோதோமின் அழிவானது சாத்தானுக்கு ஒரு மிகப்பெரிய மோசமான வீழ்ச்சியாகும், மேலும் மனிதன் தேவனுடைய வழிகாட்டுதலை நிராகரித்துத் தன்னைத் தானே கைவிடும்போது, மனிதகுல வளர்ச்சியில் காலத்தின் ஓர் அவமான அடையாளமாக இருக்கிறது. மேலும், இது தேவனுடைய நீதியான மனநிலையின் உண்மையான வெளிப்பாட்டைக் குறித்த ஒரு பதிவாகும்.

வானத்திலிருந்து தேவனால் அனுப்பப்பட்ட அக்கினியானது, சோதோமை வெறும் சாம்பலாக விட்டுச் சென்றது. அதாவது “சோதோம்” என்ற பெயரிடப்பட்ட பட்டணமும் அதிலுள்ள யாவும் இனியும் இல்லாமல் போனது. தேவனுடைய கோபத்தினால் அது அழிக்கப்பட்டு, தேவனுடைய கோபம் மற்றும் மகத்துவத்திற்குள் மறைந்துப்போனது. தேவனுடைய நீதியான மனநிலையின் காரணத்தினால், சோதோம் தன்னுடைய நீதியான தண்டனையையும் அதனுடைய சரியான முடிவையும் பெற்றது. சோதோமினுடைய இருப்பின் முடிவிற்கு அதன் பாவமும், இந்தப் பட்டணத்தையோ அல்லது அதில் வாழ்ந்த ஜனங்களையோ அல்லது அந்தப் பட்டணத்தில் வாழ்ந்த எந்த ஒரு ஜீவனையோ மீண்டும் பார்க்கக்கூடாது என்ற தேவனுடைய விருப்பமும் காரணமாக இருந்தது. “இந்தப் பட்டணத்தை ஒருபோதும் மறுபடியும் பார்க்கக் கூடாது என்ற தேவனுடைய விருப்பமானது” அவருடைய கோபமும் மற்றும் அவருடைய மகத்துவமுமாகும். இந்தப் பட்டணத்தின் துன்மார்க்கமும், பாவமும் அவரைக் கோபப்பட வைத்தப்படியாலும், அதின் மீது வெறுப்பையும் மற்றும் அருவருப்பையும் ஏற்படுத்தினப்படியாலும், தேவன் அதை எரித்துப்போட்டார், மேலும் அதையும் அல்லது அதன் ஜனங்களில் எவரையும் அல்லது அதிலுள்ள உயிரினங்களையும் ஒருபோதும் அவர் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. வெறும் சாம்பலை மட்டும் மீதம் வைத்துவிட்டு, அந்தப் பட்டணம் எரிந்து முடிந்தவுடன், அது தேவனுடைய கண்களிலிருந்து உண்மையாகவே இல்லாமல் போனது; அவருடைய நினைவிலிருந்தும் அது அற்றுப்போனது, அழிக்கப்பட்டது. அதாவது இதன் பொருள் என்னவென்றால் வானத்திலிருந்து அனுப்பப்பட்ட அக்கினியானது சோதோம் பட்டணத்தை அழித்தது மட்டுமல்லாமல், பாவத்தினால் நிறைந்த அந்தப் பட்டணத்திலுள்ள ஜனங்களை அழித்தது மட்டுமல்லாமல், பாவத்தினால் கறைப்பட்ட அந்தப் பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் அழித்தது மட்டுமல்லாமல்; இந்தக் காரியங்களுக்கு அப்பால், மனிதனின் தீமையான நினைவையும் மற்றும் தேவனுக்கு விரோதமான எதிர்ப்பையும் அக்கினியானது அழித்துப்போட்டது. பட்டணத்தை எரிப்பதின் தேவனுடைய நோக்கம் இது தான்.

இந்த மனிதத்தன்மையானது சீர்கேட்டின் உச்சநிலைக்கு மாறிப்போயிருந்தது. இந்த ஜனங்கள் தேவன் யாரென்றும், தாங்கள் எங்கிருந்து வந்தவர்களென்றும் அறியவில்லை. நீங்கள் ஒருவேளை அவர்களுக்கு தேவனைப் பற்றி எடுத்துக்கூறினால் அவர்கள் உங்களை தாக்கக்கூடும், அவதூறு செய்யக் கூடும், மற்றும் தூஷிக்கக் கூடும். தேவனுடைய ஊழியர்கள் அவருடைய எச்சரிக்கையைப் பரப்ப வந்தப்போதும் கூட, இந்தச் சீர்கெட்ட ஜனங்கள் மனந்திரும்புதலின் எந்த அறிகுறியையும் காட்டினதுமில்லை, தங்கள் பொல்லாத நடத்தையைக் கைவிடவுமில்லை, ஆனால் அதற்கு மாறாக, தேவனுடைய ஊழியர்களுக்கு வெட்கமில்லாமல் தீங்கு செய்தனர். அவர்கள் அவர்களுடைய இயல்பையும் மற்றும் தேவனுக்கு எதிரான அபரீதமான விரோதத்தின் சாராம்சத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்தச் சீர்கெட்ட ஜனங்களுடைய தேவனுக்கு விரோதமான எதிர்ப்பானது, அவர்களுடைய சீர்கெட்ட மனநிலையின் வெளிப்பாட்டை விட அதிகமாக இருந்ததை நாம் பார்க்கலாம். இது சத்தியத்தைப் புரிந்துக்கொள்வதின் குறைப்பாட்டிலிருந்து வந்த அவதூறு செய்தல் அல்லது கேலி செய்தல் போன்ற நிழ்வுகளின் சான்றாகும். அவர்களுடைய துன்மார்க்கமான நடத்தைக்கு முட்டாள்தனமோ, அல்லது அறியாமையோ காரணமாகவில்லை; இந்த விதத்தில் அவர்கள் செயல்பட்டது, வஞ்சிக்கப்பட்டதின் காரணத்தால் அல்ல, மற்றும் நிச்சயமாக அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாலும் அல்ல. அவர்களுடைய நடத்தையானது அப்பட்டமான வெட்கக்கேடான விரோத நிலை, எதிர்ப்பு மற்றும் தேவனுக்கு எதிராகக் கூச்சலிடும் நிலையை அடைந்தது. இவ்வகையான மனித நடத்தையானது தேவனைக் கோபப்படுத்தும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை, மேலும் இது அவருடைய மனநிலையைக் கோபப்படுத்தும்—இந்த மனநிலையானது கண்டிப்பாக புண்படுத்தப்படக்கூடாத ஒன்று. ஆகையால் தேவன் தம்முடைய கோபத்தையும், தம்முடைய மகத்துவத்தையும் நேரடியாக மற்றும் வெளிப்படையாகக் கட்டவிழ்த்துவிட்டார்; இது அவருடைய நீதியான மனநிலையின் உண்மையான வெளிப்பாடாகும். பாவத்தினால் நிரம்பி வழிகின்ற ஒரு பட்டணத்தை எதிர்கொண்ட தேவன், அதை விரைவான முறையில் அழிக்கவும் அதினுள்ளிருக்கும் ஜனங்களையும் ஒழிக்கும்படிக்கும், மற்றும் அவர்களுடைய பாவத்தின் முழுமையை ஒரு முழுமையான வழியில் ஒழிக்கவும், இந்தப் பட்டணத்து ஜனங்கள் இல்லாது போகும்படிக்கும் மற்றும் அந்த இடத்திலிருந்து பாவம் பெருகாதபடி தடுக்கவும் விரும்பினார். இதை அவ்வாறு செய்வதற்கான விரைவான மற்றும் முழுமையான வழியானது அதை அக்கினியால் அழித்துவிடுவதாகும். சோதோம் ஜனங்களைப் பற்றிய அவருடைய அணுகுமறையானது கைவிடுவதற்கோ அல்லது புறக்கணிப்பதற்கோ அல்ல. மாறாக அவர் தம்முடைய கோபத்தையும், மகத்துவத்தையும் மற்றும் அதிகாரத்தையும் தண்டிப்பதற்குப் பயன்படுத்தினார், அடித்து கீழே தள்ளி மற்றும் இந்த ஜனங்களை முற்றிலுமாக அழிக்கவும் பயன்படுத்தினார். அவர்கள் மீதான அவருடைய அணுகுமுறையானது வெறும் சரீர அழிவாக மட்டுமல்லாமல், அவர்களுடைய ஆத்தும அழிவாகவும், மற்றும் நித்திய அழிவாகவும் இருந்தது. “இல்லாது போதல்” என்ற வார்த்தைகளால் தேவன் குறிப்பிடும் உண்மையான அர்த்தம் இது தான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 107

தேவனுடைய கோபம் மனிதனுக்கு மறைவாகவும் அறியப்படாததாகவும் இருந்தாலும், அது எந்த அவமதிப்பையும் சகித்துக் கொள்வதில்லை

புத்தியீனமும், அறிவற்றதுமாக இருக்கும் மனுக்குலம் முழுவதையும் தேவன் நடத்தும் விதமானது இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை முதன்மையாகச் சார்ந்துள்ளது. மறுபுறத்தில் அவருடைய கோபம் பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான சம்பவங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அது மனிதனுக்குத் தெரியாமல் இருக்கிறது. இதன் விளைவாக, தேவனுடைய கோபத்தின் வெளிப்பாட்டைப் பார்ப்பதும், அவருடைய கோபத்தைப் புரிந்து கொள்வதும் மனிதனுக்குக் கடினமாகிறது. இதனால் மனிதன் தேவனுடைய கோபத்தை முக்கியமானதாகக் கருதுவதில்லை. மனிதனுக்கான தேவனுடைய கடைசி கிரியையும் சகிப்புத்தன்மையின் படியையும் மற்றும் மன்னிப்பின் நடவடிக்கையையும் மனிதன் காணும்போது, அதாவது தேவனுடைய இரக்கத்தின் கடைசி நிகழ்வு மற்றும் அவருடைய கடைசி எச்சரிப்பு மனுக்குலம் மேல் வரும்போது, இன்னும் ஜனங்கள் தேவனை எதிர்க்கும் அதே முறைமைகளைப் பயன்படுத்தி மனந்திரும்புவதற்கும், தங்கள் வழிகளைச் சீரமைப்பதற்கும், அவருடைய இரக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தால், தேவன் தன்னுடைய சகிப்புத்தன்மையையும் அவருடைய பொறுமையையும் இனிமேல் ஜனங்களுக்கு அளிக்க மாட்டார். மாறாக, இந்த நேரத்தில் தேவன் தன்னுடைய இரக்கத்தைத் திரும்பப் பெற்று விடுவார். இதைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய கோபத்தை மட்டுமே அனுப்புவார். எப்படி அவரால் ஜனங்களைத் தண்டிக்கவும், அவர்களை அழிக்கவும் வெவ்வேறான வழிமுறைகளைப் பயன்படுத்த முடியுமோ, அப்படியே அவரால் தன்னுடைய கோபத்தையும் பல வழிகளில் வெளிப்படுத்த முடியும்.

சோதோம் பட்டணத்தை அழிக்க தேவன் அக்கினியைப் பயன்படுத்தினார். இது ஒரு மனித இனத்தையோ அல்லது வேறொன்றையோ முற்றிலுமாக அழிக்கப் பயன்படுத்தும் அவரின் விரைவான வழிமுறையாகும். சோதோமின் ஜனங்களை எரிப்பது அவர்களுடைய மாம்ச சரீரத்தை அழித்ததை விட, அவர்களுடைய ஆவிகளின் முழுமையையும், அவர்களுடைய ஆத்துமாக்களையும், அவர்களுடைய சரீரங்களையும் அழித்துப்போட்டது. மேலும் இது பட்டணத்திற்குள்ளிருந்த ஜனங்கள் பொருள் உலகம் மற்றும் மனிதன் காணக்கூடாத உலகம் இரண்டிலும் வாழ்வதை நிறுத்துவார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது தேவன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும், தெரிவிக்கும் ஒரு வழிமுறையாகும். இவ்வகை வெளிப்படுத்துதலும், தெரிவித்தலும், தேவனுடைய கோபத்தின் சாராம்சத்தின் ஓர் அம்சமாகும். மேலும் இது இயல்பாகவே தேவனுடைய நீதியான மனநிலையின் சாராம்சத்தின் வெளிப்பாடுமாகும். தேவன் தன்னுடைய கோபத்தை அனுப்பும்போது, அவர் எந்த ஓர் இரக்கத்தையோ அல்லது கிருபையையோ வெளிப்படுத்துவதை நிறுத்திவிடுகிறார். மேலும் அவர் தன்னுடைய சகிப்புத்தன்மையையோ அல்லது பொறுமையையோ இனி ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. தொடர்ந்து பொறுமையாக இருக்கவும், அவருடைய இரக்கத்தை மீண்டும் வழங்கவும், அவருடைய சகிப்புத்தன்மையை மீண்டும் ஒருமுறை அளிக்கவும் அவரை வற்புறுத்தக்கூடிய ஒரு நபரோ, காரியமோ அல்லது காரணமோ இல்லை. இந்தக் காரியங்களுக்குப் பதிலாக, தேவன் ஒரு நொடி தாமதமின்றி தம்முடைய கோபத்தையும் மகத்துவத்தையும் அனுப்பித் தான் விரும்புவதைச் செய்கிறார். அவர் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப இந்தக் காரியங்களை மிக விரைவான, தெளிவான வகையில் செய்வார். இதுதான் தேவன் தனது கோபத்தையும் மகத்துவத்தையும் அனுப்பும் வழிமுறையாகும், மனிதன் இதை அவமதிக்கக் கூடாது. மேலும் இது அவருடைய நீதியான மனநிலையின் ஓர் அம்சத்தின் வெளிப்பாடாகும். தேவன் மனிதனிடம் அக்கறையையும் அன்பையும் காட்டுவதை ஜனங்கள் காணும்போது, அவர்களால் அவருடைய கோபத்தைக் கண்டறியவோ, அவருடைய மகத்துவத்தைக் காணவோ அல்லது அவமதிப்பைக் குறித்த அவரது சகிப்புத்தன்மையின்மையை உணரவோ முடிவதில்லை. இந்தக் காரியங்கள் தேவனின் நீதியான மனநிலையானது இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் அன்பு ஆகியவற்றால் மட்டுமே ஆனது என்று மக்கள் நம்புவதற்கு எப்போதும் வழிவகுத்துள்ளன. ஆயினும், தேவன் ஒரு நகரத்தை அழிப்பதையோ அல்லது மனிதகுலத்தை வெறுப்பதையோ ஒருவர் காணும்போது, மனிதனை அழிப்பதில் அவரின் கடுங்கோபமும், அவரின் மகத்துவமும் அவருடைய நீதியான மனநிலையின் மறுபக்கத்தைக் கணப்பொழுது பார்க்க மக்களை அனுமதிக்கின்றன. இது அவமதிப்பைக் குறித்த தேவனுடைய சகிப்புத்தன்மை இன்மை ஆகும். எந்தவொரு அவமதிப்பையும் சகித்துக்கொள்ளாத தேவனின் மனநிலை, எந்தவொரு சிருஷ்டிப்பின் கற்பனையையும் மிஞ்சுகிறது, மற்றும் சிருஷ்டிக்கப்படாதவைகளின் நடுவே, ஒன்று கூட அதில் குறுக்கிடவோ அல்லது அதைப் பாதிக்கவோ இயலாது; இன்னும் அதை ஆள் மாறாட்டம் செய்யவோ அல்லது அதைப் போல பாசாங்கு செய்யவோ முடியாது. ஆகவே, தேவனின் மனநிலையின் இந்த அம்சம் மனிதகுலம் மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். தேவனிடத்தில் மட்டுமே இவ்வகையான தன்மை உள்ளது, மேலும் தேவன் மட்டுமே இவ்வகையான மனநிலையைக் கொண்டிருக்கிறார். தேவன் இந்த வகையான நீதியுள்ள தன்மையைக் கொண்டிருக்கிறார், ஏனென்றால் அவர் துன்மார்க்கம், இருள், கலகத்தன்மை ஆகியவற்றையும் மற்றும் மனிதகுலத்தைக் கெடுத்து, பட்சிக்கும் சாத்தானின் பொல்லாத செயல்களையும் அறவே வெறுக்கிறார். ஏனென்றால், அவருக்கு எதிரான எல்லாப் பாவச்செயல்களையும் அவர் வெறுப்பதாலும், மேலும் அவருடைய பரிசுத்த மற்றும் கறையில்லாத சாராம்சத்தினாலுமே ஆகும். இதன் காரணமாகவே, சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்த ஒன்றும் அவரை வெளிப்படையாக எதிர்ப்பதை அல்லது விரோதிப்பதை, அவர் பொறுத்துக் கொள்ள மாட்டார். ஒரு முறை தனது இரக்கத்தைக் காண்பித்த ஒரு நபரோ அல்லது அவர் தெரிந்து கொண்ட ஒருவரோ கூட, அவருடைய மனநிலைக்கு எரிச்சலுண்டாக்கி, அவருடைய பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையின் கோட்பாடுகளை மீறினால், தேவன் ஒரு துளி இரக்கமும் தயக்கமும் இல்லாமல், அவமதிப்பைத் தாங்கிக் கொள்ளாத தன்னுடைய நீதியான மனநிலையைக் கட்டவிழ்த்து, அதை வெளிப்படுத்துவார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 108

எல்லா நீதியான வல்லமைகளுக்கும், எல்லா நேர்மறையான காரியங்களுக்கும் தேவனுடைய கோபம் ஒரு பாதுகாப்பாகும் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

அவமதிப்பைக் குறித்த தேவனின் சகிப்பின்மையானது அவரது தனித்துவமான சாராம்சமாகும்; தேவனின் கோபம் அவருடைய தனித்துவமான மனநிலை ஆகும்; தேவனின் மகத்துவம் அவருடைய தனித்துவமான சாராம்சமாகும். தேவனுடைய கோபத்தின் பின்னால் இருக்கும் கோட்பாடானது, அவர் மட்டுமே கொண்டிருக்கும் அவருடைய அடையாளம் மற்றும் அவருடைய தகுநிலையின் சான்றாகும். இந்தக் கோட்பாடானது தனித்துவமான தேவனுடைய சாராம்சத்தின் அடையாளமுமாகும் என்பது தெளிவாகிறது. தேவனுடைய மனநிலையானது அவருடைய இயல்பான சாராம்சமாகும், இது காலப்போக்கில் ஒருபோதும் மாறாது, புவியியல் இருப்பிடத்தின் மாற்றங்களால் மாற்றமுமடையாது. அவருடைய இயல்பான மனநிலையே அவரின் உண்மையான சாராம்சமாகும். அவர் யார் மீது தன்னுடைய கிரியையையை நடப்பிக்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய சாராம்சமானது மாறாது, அவருடைய நீதியான மனநிலையும் மாறாது. ஒருவர் தேவனைக் கோபப்படுத்தும்போது, தேவன் தன்னுடைய இயல்பான மனநிலையை வெளிப்படுத்துகிறார்; இந்த நேரத்தில் அவருடைய கோபத்தின் பின்னால் இருக்கும் கோட்பாடானது மாறுவதில்லை, அவருடைய தனித்துவமான அடையாளமும், நிலைப்பாடும் கூட மாறுவதில்லை. அவர் தனது சாராம்சத்தின் மாறுதலின் காரணமாகவோ அல்லது அவரது மனநிலையிலிருந்து வேறுபட்ட காரியங்கள் எழுவதாலோ அவர் கோபப்படுவதில்லை, ஆனால் தனக்கு எதிரான மனிதனின் எதிர்ப்பு அவருடைய மனநிலையைப் புண்படுத்துகிறது. மனிதன் தேவனைப் படு மோசமாகக் கோபமூட்டுவது, தேவனுடைய சொந்தமான அடையாளத்திற்கும், நிலைப்பாட்டுக்கும் கடுமையான சவாலாகும். தேவனின் பார்வையில், மனிதன் அவருக்குச் சவால் விடும்போது, மனிதன் அவருடன் போட்டியிட்டு, அவரது கோபத்தைச் சோதிக்கிறான். மனிதன் தேவனை எதிர்க்கும்போது, மனிதன் தேவனுடன் போட்டியிடும்போது, மனிதன் தொடர்ந்து தேவனுடைய கோபத்தைச் சோதிக்கும்போது—இப்படிப்பட்ட நேரங்களில் பாவமானது கட்டுக்கடங்காமல் போகிறது, தேவனுடைய கோபம் இயற்கையாகவே வெளிப்பட்டு, தோன்றத் தொடங்குகிறது. எனவே, தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது எல்லா பொல்லாத வல்லமைகளும் இருக்கப் போவதில்லை என்பதற்கான அடையாளமாகும். மேலும் அது எல்லா எதிரான வல்லமைகளும் அழிக்கப்படும் என்பதற்கான அடையாளமாகும். இது தேவனுடைய நீதியான மனநிலை மற்றும் தேவனுடைய கோபத்தின் தனித்தன்மையாகும். தேவனுடைய மகத்துவமும் பரிசுத்தமும் மறுக்கப்பட்டு, நீதியின் வல்லமைகள் தடை செய்யப்பட்டு, மனிதனால் பார்க்க முடியாமல் இருக்கும் போது, தேவன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவார். தேவனுடைய சாராம்சத்தினால், தேவனை விரோதிக்கிற, அவரை எதிர்க்கிற, அவருடன் வாதாடுகிற, பூமியில் இருக்கும் எல்லா வல்லமைகளும் பொல்லாதவைகளாக, கலகத்தன்மையுள்ளவைகளாக, அநீதியுள்ளவைகளாக இருக்கிறன. அவை சாத்தானிடத்திலிருந்து வருகிறதாகவும், சாத்தானுடையதாகவும் இருக்கின்றன. தேவன் நீதி உள்ளவராகவும், ஒளியானவராகவும், மாசற்ற பரிசுத்தராகவும் இருப்பதால், பொல்லாதவைகளாகக், கலகத்தன்மையுள்ளவைகளாகச், சாத்தானுக்குச் சொந்தமானதாக இருக்கிற எல்லா காரியங்களும், தேவனுடைய கோபம் கட்டவிழ்க்கப்படும் போது மறைந்து விடும்.

தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது, அவருடைய நீதியான மனநிலையின் வெளிப்பாட்டின் ஓர் அம்சம் என்றாலும், தேவனுடைய கோபம் எந்த வகையிலும் அதன் இலக்கைப் பற்றி கண்மூடித்தனமானதாகவும் இல்லை, கோட்பாடில்லாததாகவும் இல்லை. மாறாக, தேவன் சீக்கிரத்தில் கோபம் கொள்ளமாட்டார், அவருடைய கோபத்தையும் மகத்துவத்தையும் சுலபமாக வெளிப்படுத்தவுமாட்டார். மேலும், தேவனுடைய கோபம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அளவிடப்பட்டதாகவும் இருக்கிறது. மனிதன் எப்படி கோபத்தில் பற்றி எரிவானோ அல்லது கோபத்தை வெளிப்படுத்துவானோ என்பதோடு அதனை ஒப்பிடவே முடியாது. மனிதனுக்கும் தேவனுக்கும் இடையிலான பல உரையாடல்கள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிற சில தனிமனிதர்களின் வார்த்தைகள் மேலோட்டமாகவும், அறிவில்லாததாகவும், குழந்தைகளுக்குரியதாவும் இருந்தன, ஆனால் தேவன் அவர்களை அடித்துக் கீழே தள்ளவில்லை, அவர்களை ஆக்கினைக்குள்ளாக்கவும் இல்லை. குறிப்பாக, யோபுவினுடைய சோதனையின் போது, யோபுவின் மூன்று நண்பர்களும் மற்றவர்களும் அவரிடம் பேசின வார்த்தைகளைக் கேட்டபின், யேகோவா தேவன் அவர்களை எவ்வாறு கையாண்டார்? தேவன் அவர்களை ஆக்கினைக்குள்ளாக்கினாரா? அவர்களிடம் கோபப்பட்டாரா? அப்படி எதுவும் அவர் செய்யவில்லை! மாறாக, அவர் யோபுவிடம் அவர்கள் சார்பில் வேண்டுதல் செய்யவும், அவர்களுக்காக ஜெபிக்குமாறும் கூறினார். மேலும் அவர்களுடைய தவறுகளால் தேவன் தாமே பாதிக்கப்படவில்லை. இந்த எல்லா நிகழ்வுகளும் கலகத்தன்மையும், அறியாமையும் உள்ள மனுக்குலத்தைத் தேவன் கையாளும் முக்கிய மனப்பான்மையைக் குறிக்கின்றன. எனவே தேவனுடைய கோபத்தைக் கட்டவிழ்த்துவிடுவது எந்த வகையிலும் அவருடைய மனநிலையின் வெளிப்பாடும் அல்ல, அவருடைய உணர்ச்சிகளுக்கு வழி உண்டாக்கும் அவருடைய வழிமுறையும் அல்ல. மனிதனுடைய தவறான புரிதலுக்கு மாறாக, தேவனுடைய கோபமானது கடுங்கோபத்தின் முழுமையான சீற்றம் அல்ல. தேவனால் தன்னுடைய சொந்த மனநிலையைக் கட்டுப்படுத்த இயலாததாலோ அல்லது அவருடைய கோபம் கொதிநிலையை அடைந்து வெளியேற வேண்டியிருப்பதாலோ, அவர் தம் கோபத்தைக் கட்டவிழ்த்து விடுவதில்லை. மாறாக, அவருடைய கோபமானது அவருடைய நீதியான மனநிலையின் காட்சியுமாகும், உண்மையான வெளிப்பாடுமாகும். மேலும் அது அவருடைய பரிசுத்த சாராம்சத்தின் அடையாளமான வெளிப்பாடாகும். தேவன் கோபமாய் இருக்கிறார், அவர் அவமதிக்கப்படுவதைச் சகித்துக் கொள்வதில்லை, இதைச் சொல்வதினால் தேவனுடைய கோபம் காரணங்களிடையே பகுத்தறியாமல் அல்லது கோட்பாடில்லாமல் இருக்கிறது என்று அர்த்தமல்ல. சீர்கெட்ட மனித இனமே கோட்பாடில்லாத, காரணங்களுக்கு இடையே வித்தியாசப்படுத்தாதும், திடீரென வெடித்துச்சீறும் சீரற்ற கோபத்தின் மேல் பிரத்தியேகமான கோரிக்கைகளை கொண்டதாகும். ஒரு மனிதனுக்கு அந்தஸ்து கிடைத்ததும், அவனுக்குத் தன் மனநிலையைக் கட்டுப்படுத்துவது பெரும்பாலும் கடினமாகிறது, அதனால் அவன் அதிருப்தியை வெளிப்படுத்தவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், வாய்ப்புகளைத் துரிதமாய் பயன்படுத்திக் கொள்வதில் இன்பங்கொள்ளுகிறான்; அவன் தனது திறனை வெளிப்படுத்த, தெளிவான காரணமின்றி அடிக்கடி கோபத்தில் பற்றியெரிந்து, தன் அந்தஸ்தும், அடையாளமும் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவை என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவான். நிச்சயமாக, எந்தவொரு அந்தஸ்தும் இல்லாத சீர்கெட்ட ஜனங்கள் பெரும்பாலும் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு அடிக்கடி கோபம் ஏற்படுகிறது. தங்கள் சொந்த அந்தஸ்தையும் மேன்மையையும் பாதுகாப்பதற்காக, அவர்கள் அடிக்கடி தங்கள் உணர்ச்சிகளையும், அவர்களின் ஆணவத் தன்மையையும் வெளிப்படுத்துகிறார்கள். பாவத்தை அழியாமல் காக்கவும், நிலைநிறுத்தவும் மனிதன் கோபத்தில் பற்றியெரிந்து, தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவான். மேலும் இந்தச் செயல்கள் மனிதன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வழிமுறைகளாகும்; அவை அசுத்தங்களாலும், திட்டங்களாலும், சூழ்ச்சிகளாலும், மனிதனின் சீர்கேடுகளாலும் மற்றும் தீமைகளாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவை மனிதனின் காட்டுத்தனமான லட்சியங்களாலும், விருப்பங்களாலும் நிரம்பியிருக்கின்றன. நீதி துன்மார்க்கத்துடன் மோதுகையில், நீதியை அழியாமல் பாதுகாப்பதில் அல்லது அதை நிலைநிறுத்துவதில் மனிதனின் கோபம் பற்றியெரியாது; மாறாக, நீதியின் வல்லமைகள் அச்சுறுத்தப்படுகையில், துன்புறுத்தப்படுகையில், தாக்கப்படுகையில், மனிதனின் மனப்பான்மையானது, கண்டும் காணாதது போல், நழுவுகிறதாய் அல்லது விலகிச் செல்வதுமாய் இருக்கிறது. இருப்பினும், அசுத்த வல்லமைகளை எதிர்கொள்ளும்போது, மனிதனின் மனப்பான்மை இடமளிப்பதாகவும், பணிந்து போவதாகவும், கைக்கொள்வதாகவும் இருக்கிறது. ஆகையால், மனிதனின் வெளிப்படுத்தும் தன்மையானது அசுத்த வல்லமைகளுக்கு ஒரு தப்பிச் செல்லும் வழியாகும். மேலும் அது மாம்ச மனிதனின் கட்டுப்பாடற்ற, தடுக்க இயலாத, தீய நடத்தையின் வெளிப்பாடாகும். தேவன் தன்னுடைய கோபத்தை அனுப்பும்போது எப்படியாயினும் எல்லா பொல்லாத வல்லமைகளும் செயலிழக்கப்படும், மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் எல்லா பாவங்களும் கட்டுப்படுத்தப்படும், தேவனுடைய கிரியையைத் தடைசெய்யும் எல்லா எதிரான வல்லமைகளும் வெளிப்படையாக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, சபிக்கப்பட்டு, மேலும் தேவனை எதிர்க்கிற சாத்தானுடைய உடந்தையாளர்களும் தண்டிக்கப்பட்டு, வேரறுக்கப்படுவார்கள். அவர்களுடைய இடத்தில், தேவனுடைய கிரியை எந்தத் தடையுமின்றி தொடரும், தேவனுடைய நிர்வாகத் திட்டம் திட்டமிட்டபடி படிப்படியாகத் தொடர்ந்து வளர்ச்சியுறும். மேலும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் சாத்தானுடைய தொல்லைகளிலிருந்தும் வஞ்சகத்திலிருந்தும் விடுதலையாக்கப்படுவார்கள். மேலும் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் தேவனுடைய தலைமைத்துவத்தையும், ஏற்பாடுகளையும் கலக்கமற்ற, சமாதானமான சூழ்நிலைகளின் நடுவில் அனுபவிப்பார்கள். தேவனுடைய கோபமானது தீய வல்லமைகள் பெருகிக் கட்டுப்பாடற்றுப் போவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கிறது. மேலும் அது நீதியான, நேர்மறையான காரியங்களின் இருப்பையும், பெருக்கத்தையும் பாதுகாக்கும் ஒன்றாகும். மேலும் அவைகளை ஒடுக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் நித்தியமாய்ப் பாதுகாக்குகிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 109

எல்லா நீதியான வல்லமைகளுக்கும், எல்லா நேர்மறையான காரியங்களுக்கும் தேவனுடைய கோபம் ஒரு பாதுகாப்பாகும் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

தேவன் சோதோமை அழித்ததில் அவருடைய கோபத்தின் சாராம்சத்தை நீங்கள் பார்க்க முடிகிறதா? அவருடைய கோபத்தில் வேறு ஏதேனும் கலந்துள்ளதா? தேவனுடைய கோபம் தூய்மையானதா? மனிதனுடைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமானால், தேவனுடைய கோபம் கலப்படமில்லாததா? அவரின் கோபத்தின் பின்னால் ஏதாவது வஞ்சகம் இருக்கிறதா? ஏதாவது சதித்திட்டம் இருக்கிறதா? ஏதாவது சொல்லொணா இரகசியங்கள் இருக்கின்றனவா? என்னால் உங்களுக்கு உறுதியாகவும் வலியுறுத்தியும் சொல்ல முடியும். தேவனுடைய கோபத்தில் ஒரு பகுதி கூட ஒருவரைச் சந்தேகத்திற்கு நேராய் நடத்தாது. அவருடைய கோபம் தூய்மையானது, வேறு எந்த உள்நோக்கங்களையும், இலக்குகளையும் அது மறைத்து வைத்திராத கலப்படமில்லாத கோபமாகும். அவருடைய கோபத்திற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் தூய்மையானதும், குற்றமற்றதும் மற்றும் விமர்சனங்களுக்கு மேற்பட்டதுமாகும். அது அவரது பரிசுத்த சாராம்சத்தின் இயல்பான வெளிப்பாடும், காட்சியமைவும் ஆகும். இது எல்லா சிருஷ்டிப்புகளும் கொண்டிராத ஒன்றாகும். இது தேவனின் தனித்துவமான, நீதியான மனநிலையின் ஒரு பகுதியாகும். மேலும் இது சிருஷ்டிகர் மற்றும் அவரின் சிருஷ்டிப்புகளுக்குரிய சாராம்சங்களின் இடையே உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசமுமாகும்.

ஒரு நபர் மற்றவர்களின் பார்வைக்கு முன்னால் அல்லது அவர்கள் முதுகுக்குப் பின்னால் கோபப்படுகிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கோபத்திற்கு வெவ்வேறு உள்நோக்கமும் குறிக்கோளும் உள்ளன. ஒருவேளை அவர்கள் தனது சொந்த கவுரவத்தை நிலைநாட்டலாம், அல்லது தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கலாம், தன்னைப் பற்றின மற்றவர்களின் எண்ணங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கலாம் அல்லது தங்கள் மரியாதையைப் பேணிக் கொண்டிருக்கலாம். சிலர் தங்கள் கோபத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறார்கள், அதே சமயம் சிலர் மிகுந்த கோபமுற்று தாங்கள் விரும்பும்போதெல்லாம், துளியும் நிதானமின்றி தங்களுடைய கோபம் பற்றியெரிய இடங்கொடுக்கிறார்கள். சுருக்கமாகக் கூறுவதென்றால், மனிதனுடைய கோபம் அவனுடைய சீர்கேடான மனநிலையிலிருந்து உருவாகிறது. அதன் நோக்கம் எதுவாக இருப்பினும், அது மாம்சத்துக்குரியதும், இயல்பானதும் ஆகும். இதற்கு நீதி அல்லது அநீதியுடன் எந்த தொடர்பும் இல்லை, ஏனெனில் மனிதனின் இயல்பு மற்றும் சாராம்சம் எதுவும் சத்தியத்திற்கு ஒத்திருப்பதில்லை. எனவே, சீர்கேடான மனிதகுலத்தின் கோபமும் தேவனின் கோபமும் ஒருசேர குறிப்பிடப்படலாகாது. விதிவிலக்கில்லாமல், சாத்தானால் கெடுக்கப்பட்ட ஒரு மனிதனின் நடத்தை சீர்கேட்டைப் பாதுகாக்கும் விருப்பத்துடன் தொடங்குகிறது, மேலும் அது, உண்மையில் சீர்கேட்டை அடிப்படையாகக் கொண்டது; இதனாலேயே மனிதனுடைய கோபம் கோட்பாட்டில் எவ்வளவு சரியானதாகத் தோன்றினாலும், தேவனுடைய கோபமும் மனிதனுடைய கோபமும் ஒருசேர குறிப்பிடப்படலாகாது. தேவன் தனது கடுங்கோபத்தை அனுப்பும்போது, அசுத்த வல்லமைகள் தடுக்கப்படுகின்றன மற்றும் அசுத்த காரியங்கள் அழிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் நியாயமான மற்றும் நேர்மறையான விஷயங்கள் தேவனின் கவனிப்பைப், பாதுகாப்பை அனுபவிக்கவும், தொடரவும் அனுமதிக்கப்படுகின்றன. அநீதியான, எதிர்மறையான மற்றும் அசுத்தமான காரியங்கள் நீதியான, நேர்மறையான, காரியங்களின் இயல்பான செயல்பாடுகளைத் தடை செய்வதால், தொந்தரவு செய்வதால் அல்லது சேதப்படுத்துவதால் தேவன் தன்னுடைய கோபத்தை அனுப்புகிறார். தன்னுடைய சொந்த அந்தஸ்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பது தேவகோபத்தின் நோக்கமல்ல, மாறாக நியாயமான, நேர்மறையான, அழகான மற்றும் நல்ல விஷயங்களின் இருப்பைப் பாதுகாப்பதும், மனிதகுலத்தின் இயல்பான உயிர்வாழ்வின் சட்டங்களையும் ஒழுங்கையும் பாதுகாப்பதுமேயாகும். இதுவே தேவகோபத்தின் மூலகாரணமாகும். தேவனுடைய கோபம் மிகச் சரியானதும், இயல்பானதும், அவருடைய மனநிலையின் உண்மையான வெளிப்பாடும் ஆகும். அவருடைய கோபத்தில் எந்த ஓர் இரகசியமான நோக்கங்களும் இல்லை, எந்த ஒரு வஞ்சகமோ அல்லது சதித்திட்டமுமோ இல்லை, இன்னும் அழுத்தமான விருப்பங்கள், தந்திரங்கள், குரோதங்கள், வன்முறை, அசுத்தமான அல்லது எந்த ஒரு சீர்கேடான மனித இனத்தின் மற்ற பங்கான பண்புகளும் இல்லை. தேவன் தனது கோபத்தை அனுப்புவதற்கு முன்பு, ஒவ்வொரு விஷயத்தின் சாராம்சத்தையும் அவர் ஏற்கனவே மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் உணர்ந்தறிந்திருக்கிறார். மேலும் அவர் ஏற்கனவே துல்லியமான, தெளிவான வரையறைகளையும் முடிவுகளையும் வகுத்திருக்கிறார். இப்படி, அவர் செய்யும் எல்லாவற்றிலும், தேவனுடைய நோக்கம் அவருடைய மனப்பாங்கைப் போலவே மிகத் தெளிவானதாகும். அவர் குழப்பமானவரோ, கண்மூடித்தனமானவரோ, உணர்ச்சிவசப்படுபவரோ, அல்லது கவனக்குறைவு கொண்டவரோ அல்லர், மேலும் அவர் நிச்சயமாக கோட்பாடில்லாதவரும் அல்ல. இது தேவனுடைய கோபத்தின் நடைமுறை அம்சமாகும், மேலும் தேவனுடைய கோபத்தின் இந்த நடைமுறை அம்சத்தின் காரணமாகவே மனிதகுலம் அதன் இயல்பான இருப்பை அடைந்துள்ளது. தேவனுடைய கோபம் இல்லாவிட்டால், மனுக்குலம் அசாதாரணமான வாழ்க்கை சூழ்நிலைகளில் இறங்கியிருக்கும். மேலும் எல்லா நீதியான, அழகான, நல்ல காரியங்களும் அழிக்கப்பட்டு, இல்லாமல் போயிருக்கும். தேவனுடைய கோபம் இல்லாவிட்டால், சிருஷ்டிக்கப்பட்ட உயிர்களுக்கான இருப்புச் சட்டங்களும் ஒழுங்குகளும் உடைக்கப்பட்டு அல்லது முற்றிலுமாகக்கூட அழிக்கப்பட்டிருக்கும். மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து, மனிதகுலத்தின் இயல்பான இருப்பைப் பாதுகாக்கவும், தாங்கவும் தேவன் தொடர்ந்து தனது நீதியான மனநிலையைப் பயன்படுத்தினார். அவருடைய நீதியான மனநிலையில் கோபமும் மகத்துவமும் இருப்பதால், எல்லா பொல்லாத மனிதர்களும், விஷயங்களும், பொருட்களும், மனிதகுலத்தின் இயல்பான இருப்பைத் தொந்தரவு செய்யும் மற்றும் சேதப்படுத்தும் அனைத்து காரியங்களும், அவருடைய கோபத்தின் விளைவாக தண்டிக்கப்படுகின்றன, கட்டுப்படுத்தப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன. கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக, தேவனை எதிர்க்கும் மற்றும் மனிதகுலத்தை நிர்வகிக்கும் தேவனின் கிரியையில் சாத்தானின் கூட்டாளிகளாகவும், வேலையாட்களாகவும் செயல்படும் அனைத்து வகையான அசுத்தமான மற்றும் பொல்லாத ஆவிகளை அடித்துக் கீழே தள்ளி, அழிப்பதற்கு தேவன் தொடர்ந்து தனது நீதியான மனநிலையைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு, மனிதனுடைய இரட்சிப்புக்கான தேவனுடைய கிரியை எப்போதும் அவருடைய திட்டத்தின்படி முன்னேறியுள்ளது. அதாவது தேவனுடைய கோபம் இருப்பதால், மனிதர்களின் மிக நீதியான காரணங்கள் ஒருபோதும் அழிக்கப்படவில்லை.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 110

சாத்தான் மனிதாபிமானமுடையதாக, நியாயமானதாக, நல்லொழுக்கமுடையதாகத் தோன்றினாலும், சாத்தானின் சாராம்சம் கொடூரமானதும் பொல்லாங்கானதுமாகும்

ஜனங்களை வஞ்சிப்பதின் மூலம் சாத்தான் தன் மதிப்பை வளர்த்துக் கொள்கிறான், மேலும் பெரும்பாலும் தன்னை ஒரு முன்னணியாகவும் மற்றும் நீதியின் முன்மாதிரியாகவும் நிலைநிறுத்துகிறான். நீதியைப் பாதுகாக்கும் பொய்யான பாசாங்கில், அவன் ஜனங்களுக்குத் தீங்கு செய்கிறான், மக்களின் ஆத்துமாக்களைப் பட்சிக்கிறான், மக்களை உணர்ச்சியிழக்கவும், வஞ்சிக்கவும், தூண்டிவிடவும் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறான். மனிதனைத் தன்னுடைய தீய நடத்தையை ஏற்றுக்கொள்ளச் செய்து, தன்னுடன் இணையச் செய்து மற்றும் தன்னுடன் இணைந்து தேவனுடைய அதிகாரத்தையும் ராஜரீகத்தையும் எதிர்க்கச் செய்வதுமே அவனுடைய இலக்காகும். இருப்பினும், ஒருவர் அவனுடைய திட்டங்கள் மற்றும் சதிகளினூடாய்ப் பார்க்கும்போது, அவனுடைய மோசமான அம்சங்களினூடாய்ப் பார்க்கும்போது, ஒருவர் தொடர்ந்து மிதிக்கப்படுவதற்கும், அவனால் முட்டாளாக்கப்படுவதற்கும் அல்லது அவனால் அடிமைப்படுத்தப்படுவதற்கும், அல்லது அவனுடன் சேர்ந்து தண்டிக்கப்பட்டு, அழிக்கப்படுவதற்கு விரும்பாதபோதும், சாத்தான் தன் முந்தைய புனிதர் போன்ற அம்சங்களை மாற்றி, தன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும்படிக்கு, தன் தீய, கொடூரமான, அருவருப்பான மற்றும் காட்டுமிராண்டித்தனமான, போலியான முகமூடியைக் கிழித்துப் போடுகிறான். அவனைப் பின்பற்ற மறுக்கும் மற்றும் அவனுடைய தீய வல்லமைகளை எதிர்ப்பவர் அனைவரையும் அடியோடு அழிப்பதைத் தவிர வேறொன்றையும் அவன் விரும்ப மாட்டான். இந்தக் கட்டத்தில் சாத்தான் இனி நம்பகமான, மென்மையான தோற்றத்தைக் கொண்டவனாகப் பாவனை செய்ய முடியாது; அதற்குப் பதிலாக, அவனுடைய உண்மையான, அருவருப்பான மற்றும் பிசாசின் அம்சங்கள், ஆட்டுத்தோல் போர்த்தியிருப்பவையாக வெளிப்படுகின்றன. சாத்தானின் திட்டங்கள் வெளிச்சத்திற்கு வந்ததும், அவனின் உண்மையான அம்சங்கள் அம்பலப்படுத்தப்பட்டதும், அவன் கடுமையான கோபங்கொண்டு அவன் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்துவான். இதற்குப் பின்பு, ஜனங்களுக்குத் தீங்கு விளைவித்து, அவர்களைப் பட்சிக்கும் அவன் விருப்பம் தீவிரமடையும். ஏனென்றால், மனிதன் சத்தியத்தை உணர்ந்துகொள்ள ஆரம்பிக்கும்போது அவன் மூர்க்கமடைகிறான். மேலும் விடுதலையையும் வெளிச்சத்தையும் வாஞ்சித்து விரும்பி, அவனுடைய சிறையிலிருந்து விடுபட விரும்பும் அவர்களின் விருப்பத்தினால் மனிதர் மேல் ஒரு வலிமையான பழிவாங்கும் உணர்வை வளர்த்துக் கொள்ளுகிறான். அவனுடைய கடுங்கோபம் அவனின் தீமையைக் காக்கவும் நிலைநிறுத்தவும் நோக்கமுடையதும், மேலும் அவனின் காட்டுமிராண்டித்தனமான தன்மையின் உண்மையான வெளிப்பாடுமாகும்.

ஒவ்வொரு விஷயத்திலும், சாத்தானின் நடத்தை அவனுடைய பொல்லாத தன்மையை வெளிப்படுத்துகிறது. தன்னைப் பின்பற்றும்படி மனிதனை ஏமாற்றின சாத்தானுடைய ஆரம்பக்கால முயற்சிகளில் இருந்து அவன் மனிதனைச் சுரண்டி தன் தீய செயல்களுக்கு இழுக்கிற எல்லாப் பொல்லாத செயல்கள் வரைக்கும், மேலும் தன் உண்மையான அம்சங்கள் அம்பலப்படுத்தப்பட்டதும், மனிதன் அதை உணர்ந்து, அவனை விட்டு நீங்கின பின், மனிதனுக்கு எதிரான அவனுடைய பழிவாங்கும் தன்மை வரையிலும், இவற்றில் ஒன்று கூட சாத்தானின் பொல்லாங்கான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், அல்லது சாத்தானுக்கு நேர்மறையான விஷயங்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதையும், எல்லா பொல்லாத காரியங்களுக்கும் சாத்தான்தான் மூலக் காரணம் என்பதையும் நிரூபிக்கத் தவறவில்லை. அவனுடைய ஒவ்வொரு செயலும் அவனுடைய பொல்லாங்கைப் பாதுகாக்கிறது, அவனுடைய பொல்லாத செயல்களின் தொடர்ச்சியைப் பராமரிக்கிறது, நியாயமான மற்றும் நேர்மறையான விஷயங்களை எதிர்க்கிறது, மேலும் மனிதகுலத்தின் இயல்பான இருப்புக்கான சட்டங்களையும் ஒழுங்கையும் சீரழிக்கிறது. சாத்தானின் இந்த செயல்கள் தேவனுக்கு விரோதமானவை, அவை தேவனுடைய கோபத்தால் அழிக்கப்படும். சாத்தானுக்கு அவனுடைய சொந்த கோபம் இருந்தாலும், அவனுடைய கோபம் அவனுடைய பொல்லாங்கான இயல்பை வெளிப்படுத்தும் ஒரு வழிமுறையே ஆகும். சாத்தானுடைய சொல்லொணா திட்டங்கள் அம்பலப்படுத்தப்பட்ட காரணத்தினால் அவன் ஆத்திரமடைந்தவனாகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்கிறான். அவனுடைய சூழ்ச்சி எளிதில் தண்டனையிலிருந்து தப்பாது; அவனுடைய காட்டுத்தனமான லட்சியம் மற்றும் தேவனை மாற்றீடு செய்து, தேவனாகச் செயல்படுவதற்கான விருப்பம் ஆகியவை அடித்துக் கீழே தள்ளப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளன; மனுக்குலம் முழுவதையும் கட்டுப்படுத்தும் அவனுடைய குறிக்கோள் இப்போது முற்றிலும் தோல்வியுற்று விட்டது, அதை ஒருபோதும் அவன் அடைய முடியாது. தேவன் தன்னுடைய கோபத்தை அடிக்கடி, திரும்பத் திரும்ப அனுப்புகிறதால், சாத்தானுடைய சூழ்ச்சிகள் நிறைவேறாமல் மற்றும் சாத்தானுடைய தீமையின் பரவுதலும் மூர்க்கமும் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இக்காரணத்தினால், சாத்தான் தேவனுடைய கோபத்தை வெறுக்கவும், அதற்குப் பயப்படவும் செய்கிறான். ஒவ்வொரு முறையும் தேவனுடைய கோபம் இறங்கும்போது, அது சாத்தானின் உண்மையான, மோசமான தோற்றத்தை வேஷம் கலைப்பது மட்டுமல்லாமல், சாத்தானின் பொல்லாத ஆசைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது, மேலும் இந்தச் செயல்பாட்டில், மனிதகுலத்திற்கு எதிரான சாத்தானின் கோபத்திற்கான காரணங்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தப்படுகின்றன. சாத்தானுடைய கோபத்தின் சீற்றமானது அவனுடைய பொல்லாத சுபாவத்தின் உண்மையான வெளிப்பாடும் மற்றும் அவன் சூழ்ச்சிகளின் வெளிப்பாடுமாகும். நிச்சயமாக, சாத்தான் கோபப்படுகிற ஒவ்வொரு முறையும் பொல்லாத விஷயங்களின் அழிவும், நேர்மறையான விஷயங்களின் பாதுகாப்பும், தொடர்ச்சியும் முன்னறிவிக்கப்படுகின்றன; தேவனுடைய கோபம் அவமதிக்கப்பட முடியாதது என்ற உண்மையை இது முன்னறிவிக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 111

தேவனின் நீதியான மனநிலையை அறிய ஒருவர் அனுபவத்தையும் கற்பனையையும் சார்ந்திருக்கக் கூடாது

தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சையையும் நீ எதிர்கொள்ளும்போது, தேவனின் வார்த்தை கலப்படமானது என்று நீ கூறுவாயா? தேவனுடைய கோபத்தின் பின்னால் ஒரு கதை இருப்பதாகவும், அது கலப்படமுள்ளது என்றும் நீ கூறுவாயா? தேவனுடைய மனநிலை முற்றிலும் நீதியானது அல்ல என்று கூறி அவதூறு செய்வாயா? தேவனுடைய ஒவ்வொரு செயலையும் கையாளும்போது, தேவனுடைய நீதியான மனநிலை வேறு எந்தக் காரியங்களிலிருந்தும் விடுபட்டது என்பதிலும், அது பரிசுத்தமும் குற்றமற்றதுமாகும் என்பதிலும் நீ முதலில் உறுதியாயிருக்க வேண்டும். இந்தச் செயல்களில் தேவனுடைய அடித்தல், தண்டனை மற்றும் மனிதகுலத்தை அழித்தல் ஆகியவை அடங்கும். விதிவிலக்கு இல்லாமல், தேவனின் ஒவ்வொரு செயலும் அவருடைய இயல்பான மனநிலை மற்றும் அவரது திட்டத்திற்குக் கட்டாயமாய் இணங்கிச் செய்யப்படுகிறது. மேலும் அவை மனிதகுலத்தின் அறிவு, பாரம்பரியம் மற்றும் தத்துவத்தின் எந்தப் பகுதியையும் உள்ளடக்கியதல்ல. தேவனுடைய ஒவ்வொரு செயலும் அவரது மனநிலை மற்றும் சாராம்சத்தின் வெளிப்பாடாகும். அவை சீர்கேடான மனிதகுலத்திற்குச் சொந்தமான எதனோடும் தொடர்பில்லாததாகும். தேவனுடைய அன்பு, இரக்கம் மற்றும் மனிதகுலத்தின் மீதான சகிப்புத்தன்மை ஆகியவை மட்டுமே குற்றமற்றவை, கலப்படமற்றவை மற்றும் பரிசுத்தமானவை என்ற கருத்தை மனிதகுலம் கொண்டுள்ளது, மேலும் அதைப் போலவே தேவனுடைய ஆத்திரமும் அவருடைய கோபமும் கூட கலப்படமற்றவையே என்பது யாருக்கும் தெரிவதில்லை; மேலும், தேவன் ஏன் எந்த அவமதிப்பையும் பொறுத்துக்கொள்வதில்லை அல்லது ஏன் அவருடைய கோபம் மிகப் பெரியதாயிருக்கிறது போன்ற கேள்விகளை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மாறாக, தேவனுடைய கோபம் சீர்கேடான மனுக்குலத்தின் மோசமான குணம் போன்றது என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மேலும் தேவனுடைய கோபம் சீர்கேடான மனுக்குலத்தின் கோபம் போன்றதே என்றும் தவறாக புரிந்துகொள்கிறார்கள். தேவனுடைய கோபம் மனிதகுலத்தின் சீர்கேடான மனநிலையின் இயல்பான வெளிப்பாடு போன்றதே என்றும், தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது சீர்கேடான ஜனங்கள் சில மகிழ்ச்சியற்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது கோபப்படுவதைப் போன்றது என்றும் கூட அவர்கள் தவறாகக் கருதுகிறார்கள். மேலும் தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடானது அவருடைய மனநிலையின் வெளிப்பாடு என்று நம்புகிறார்கள். இந்த கூடுகைக்குப் பிறகு, இனி உங்கள் ஒவ்வொருவருக்கும் தேவனுடைய நீதியான மனநிலை குறித்த தவறான எண்ணங்கள், கற்பனைகள் அல்லது ஊகங்கள் இருக்காது என்று நம்புகிறேன். என் வார்த்தைகளைக் கேட்டபின், தேவனுடைய நீதியான மனநிலையின் கோபத்தைக் குறித்து, உங்கள் இதயங்களில் உண்மையான அடையாளம் காணுதலை நீங்கள் பெற முடியும் என்றும், தேவனுடைய கோபத்தைப் பற்றிய உங்களின் முந்தைய தவறானப் புரிதல்களை நீங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு, தேவனுடைய சாராம்சத்தைப் பற்றிய உங்கள் சொந்த தவறான நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை நீங்கள் மாற்றலாம் என்றும் நம்புகிறேன். மேலும், உங்கள் இருதயங்களில் தேவனுடைய மனநிலையைப் பற்றி ஒரு துல்லியமான வரையறையைக் கொண்டிருக்க முடியும் என்றும், தேவனுடைய நீதியான மனநிலையைக் குறித்து உங்களுக்கு இனி எந்த சந்தேகங்களும் இருக்காது என்றும், தேவனுடைய உண்மையான மனநிலையின் மீது நீங்கள் எந்த மனிதக் காரணங்காணலையும் அல்லது கற்பனையையும் திணிக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன். தேவனுடைய நீதியான மனநிலை தேவனுடைய சொந்த, உண்மையான சாராம்சமாகும். அது மனிதனால் எழுதப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட ஒன்று அல்ல. அவருடைய நீதியான மனநிலை அவருடைய நீதியான மனநிலையே ஆகும், மேலும் அதற்குச் சிருஷ்டிப்புகளுடன் எந்த சம்பந்தமோ, தொடர்போ இல்லை. தேவன் தாமே தேவன். அவர் ஒருபோதும் சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக மாற மாட்டார், மேலும் அவர் சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களில் ஓர் உறுப்பினரானாலும், அவருடைய இயல்பான மனநிலையும் சாராம்சமும் மாறாது. எனவே, தேவனை அறிந்துகொள்வது என்பது ஒரு பொருளை அறிந்துகொள்வது போன்றதல்ல; தேவனை அறிவது என்பது எதையாவது ஆராய்வதல்ல, அல்லது ஒரு நபரைப் புரிந்துகொள்வது போன்றதுமல்ல. ஒரு மனிதன் ஒரு பொருளை அறிந்து கொள்வதற்கான அல்லது ஒருவரை புரிந்து கொள்வதற்கான மையக் கருத்தையும் வழிமுறையையும் பயன்படுத்தி, தேவனை அறிந்து கொண்டால், நீ ஒருபோதும் தேவனைப் பற்றிய அறிவைப் பெற முடியாது. தேவனை அறிந்து கொள்வது அனுபவம் அல்லது கற்பனையை சார்ந்து இருக்காது, எனவே நீ உன்னுடைய அனுபவத்தையும் கற்பனையையும் ஒருபோதும் தேவன் மீது திணிக்கக்கூடாது. மேலும் உன்னுடைய அனுபவமும் கற்பனையும் எவ்வளவு முனைப்பானதாக இருந்தாலும் அவை வரம்புக்குட்பட்டதேயாகும். மேலும் என்னவென்றால், உன் கற்பனை உண்மைகளுடன் ஒத்துப்போவதில்லை, மேலும் சத்தியத்துடனும் ஒத்துப்போவதில்லை, மேலும் அது தேவனின் உண்மையான மனநிலை மற்றும் சாராம்சத்துடன் பொருந்துவதில்லை. தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துகொள்வதற்கு, உன்னுடைய கற்பனையின் மேல் நீ சார்ந்திருப்பாயானால், நீ ஒருபோதும் ஜெயம் பெற மாட்டாய். தேவனிடத்திலிருந்து வரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, பின்பு படிப்படியாக அனுபவித்து, அவைகளைப் புரிந்து கொள்வதுமே ஒரே வழி ஆகும். உன் ஒத்துழைப்பினாலும், சத்தியத்திற்கான உன் பசி தாகத்தினாலும், அவரை உண்மையாக புரிந்துகொள்ளவும், அறிந்து கொள்ளவும் தேவன் உன்னைத் தெளிவுபடுத்தும் ஒரு நாள் உண்டு.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 112

உண்மையான மனந்திரும்புதலின் மூலம் மனித இனம் தேவனுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பெறுகிறது (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

யேகோவா தேவனின் எச்சரிக்கை நினிவே ஜனங்களை அடைகிறது

யோனாவின் புத்தகம் மூன்றாம் அதிகாரத்தில் உள்ள இரண்டாம் பத்தியைக் கவனிப்போம்: “நகரத்தினுள் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம் செய்து: இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று கூறினான் யோனா.” நினிவே ஜனங்களிடம் சொல்லும்படி தேவன் நேரடியாக யோனாவிடம் சொன்ன வார்த்தைகள் இவை, ஆகவே, இவை நிச்சயமாக நினிவே ஜனங்களிடம் யேகோவா சொல்ல விரும்பிய வார்த்தைகளே ஆகும். ஜனங்களுடைய அக்கிரமம் தேவனுடைய சமுகத்தில் வந்து எட்டினதால், அவர் அந்நகரத்து ஜனங்களை அருவருக்கவும் வெறுக்கவும் தொடங்கி விட்டார் என்பதையும் அவர் அந்தப் பட்டணத்தை அழிக்க விரும்புகிறார் என்பதையும் இவ்வார்த்தைகள் ஜனங்களுக்குச் சொல்கின்றன. ஆயினும், தேவன் நகரத்தை அழிப்பதற்கு முன்பு, அவர் நினிவே ஜனங்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டார், அதே நேரத்தில், அவர்களுடைய அக்கிரமத்தினின்று மனந்திரும்பவும், புதிதாகத் தொடங்கவும் அவர்களுக்கு ஒரு தருணத்தைக் கொடுத்தார். இந்தத் தருணம் நாற்பது நாட்கள் நீடிக்கும், அதற்கு மேல் நீடிக்காது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நகரத்திற்குள் இருந்தவர்கள் நாற்பது நாட்களுக்குள் மனந்திரும்பாமல், தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, யேகோவா தேவனுக்கு முன்பாக மண்டியிடாமல் இருப்பார்களானால், தேவன் சோதோமை அழித்தபடியே நகரத்தை அழிப்பார். இதையே யேகோவா தேவன் நினிவேயின் ஜனங்களுக்குச் சொல்ல விரும்பினார். தெளிவாக, இது சாதாரணமான அறிவிப்பு அல்ல. இது யேகோவா தேவனின் கோபத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், நினிவேயர்கள் மீதான அவருடைய மனப்பான்மையையும் வெளிப்படுத்தி, அதே நேரத்தில் நகரத்தில் வாழும் ஜனங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும் செயல்படுகிறது. இந்த எச்சரிக்கை அவர்களுடைய பொல்லாத செயல்கள் யேகோவா தேவனின் வெறுப்பைப் பெற்றன என்றும் விரைவில் அவர்களைத் தங்களுடைய நிர்மூலமாக்கப்படுதலின் விளிம்பிற்குக் கொண்டு வரும் என்றும் சொன்னது. எனவே நினிவேயின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும் உடனடி ஆபத்தில் இருந்தது.

யேகோவா தேவனின் எச்சரிக்கைக்கு நினிவேயும் சோதோமும் நடந்துகொண்ட விதத்துக்கு இடையேயான முழுமையான வேறுபாடு

கவிழ்க்கப்பட்டுப்போவது என்பதின் அர்த்தம் என்ன? பேச்சுவழக்கில், இனி இருக்கப் போவதில்லை என்று பொருள்படும். ஆனால் எந்த வழியில்? ஒரு முழு நகரத்தையும் யாரால் கவிழ்த்துப் போட முடியும்? நிச்சயமாக இதுபோன்ற செயலை மனிதனால் செய்ய இயலாது. நினிவே மக்கள் முட்டாள்கள் அல்ல; இந்தப் பிரகடனத்தைக் கேட்டவுடனேயே அவர்களுக்கு யோசனை வந்தது. இந்தப் பிரகடனம் தேவனிடமிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், தேவன் தம்முடைய கிரியையைச் செய்யப் போகிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், அவர்களுடைய துன்மார்க்கம் யேகோவா தேவனைக் கோபப்படுத்தியதையும், அவருடைய கோபத்தை அவர்கள் மேல் கொண்டு வந்ததையும், இதனால் அவர்கள் விரைவில் தங்கள் நகரத்துடனேகூட அழிக்கப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். யேகோவா தேவனின் எச்சரிக்கையைக் கேட்டபின் நகர மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? ராஜா முதல் சாமானியர்கள் வரையிலான மக்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதைக் குறித்து வேதாகமம் குறிப்பான விளக்கமளிக்கிறது. பின்வரும் வார்த்தைகள் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன: “ஆதலால், நினிவேவின் ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர். நினிவேயின் ராஜாவுக்கு இந்தச் செய்தி எட்டியது, அவன் சிங்காசனத்திலிருந்து எழுந்து, தன் ராஜ அங்கியை அகற்றி விட்டு இரட்டுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான். மேலும் ராஜா மற்றும் அவனது பிரபுக்களின் ஆணையினால் அவர் அதை நினிவே முழுவதும் அறிவிக்கவும் வெளியிடவும் செய்து: மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. ஆனால் மனுஷன், மிருகம் என சகலமும் கோணியாடை உடுத்தி, தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள்…” (யோனா 3:5-9).

யேகோவா தேவனின் பிரகடனத்தைக் கேட்டபின், நினிவேயின் ஜனங்கள் சோதோம் மக்களின் மனப்பான்மைக்கு முற்றிலும் நேர்மாறான ஒரு மனப்பான்மையை வெளிப்படுத்தினர். சோதோமின் ஜனங்களோ தேவனை வெளிப்படையாக எதிர்த்து, பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு முன்னேறினர், இந்த வார்த்தைகளைக் கேட்ட நினிவே ஜனங்களோ காரியத்தைப் புறக்கணிக்கவில்லை, எதிர்க்கவுமில்லை. மாறாக, அவர்கள் தேவனை விசுவாசித்து உபவாசத்தை அறிவித்தனர். “விசுவாசித்து” என்ற சொல்லுக்கு இங்கே என்ன அர்த்தம்? இந்த வார்த்தையே விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் குறிக்கிறது. இந்த வார்த்தையை விளக்குவதற்கு நினிவே ஜனங்களின் உண்மையான நடத்தையை நாம் பயன்படுத்துவோமானால், அவர்கள் தேவனை விசுவாசித்தார்கள் என்றும், தான் சொன்னபடியே தேவனால் செய்ய முடியும் என்றும், செய்வார் என்றும் அவர்கள் நம்பினார்கள், அவர்கள் மனந்திரும்ப ஆயத்தமாக இருந்தார்கள் என்றும் அர்த்தப்படும். நினிவே ஜனங்கள் உடனடிப் பேரழிவை எதிர்கொள்ளும்போது பயத்தை உணர்ந்தார்களா? அவர்களின் விசுவாசமே அவர்களின் இருதயங்களில் பயத்தை ஏற்படுத்தியது. எனவே, நினிவேயர்களின் விசுவாசத்தையும் பயத்தையும் நிரூபிக்க நாம் எதைப் பயன்படுத்தலாம்? வேதம் சொல்லுகிறது: “… உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர்.” அதாவது நினிவேயர்கள் உண்மையிலேயே விசுவாசித்தார்கள், இந்த விசுவாசத்திலிருந்து பயம் பிறந்து, பின்னர் அவர்கள் உபவாசிக்கவும் மற்றும் இரட்டுடுத்திக் கொள்ளவும் அவர்களை வழிநடத்தியது. இவ்வாறு தாங்கள் மனந்திரும்பத் தொடங்கியதை அவர்கள் காண்பித்தார்கள். சோதோமின் ஜனங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், நினிவே ஜனங்கள் தேவனை எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் நடத்தை மற்றும் செயல்களின் மூலம் தங்கள் மனந்திரும்புதலையும் தெளிவாகக் காண்பித்தனர். நிச்சயமாக, இது நினிவேயின் சாதாரண ஜனங்கள் மட்டுமல்ல, ராஜாவும்கூட விதிவிலக்கில்லாமல் செய்த காரியமாகும்.

நினிவே ராஜாவின் மனந்திரும்புதல் யேகோவா தேவனின் பாராட்டைப் பெற்றது

நினிவேயின் ராஜா இந்த செய்தியைக் கேட்டபோது அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். பின்னர் அவன், மனுஷரும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டை உடுத்திக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள் என்று அறிவித்தான். இந்த தொடர்ச்சியான செயல்களை ஆராயும்போது, நினிவேயின் ராஜா தனது இருதயத்தில் உண்மையான மனந்திரும்புதலைக் கொண்டிருந்தான் என்று அறியலாம். அவரது சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தனது ராஜாவின் உடுப்பைக் கழற்றிப் போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்திருந்ததான அவர் எடுத்த இந்த தொடர் நடவடிக்கைகள், நினிவேயின் ராஜா தனது ராஜ அந்தஸ்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பொது ஜனங்களுடன் இணைந்து இரட்டை உடுத்தியிருந்ததை ஜனங்களுக்குக் கூறுகிறது. யேகோவா தேவனிடமிருந்து அறிவிப்பைக் கேட்டபின், நினிவேயின் ராஜா தனது பொல்லாத வழியையோ அல்லது தன் கைகளிலுள்ள கொடுமையையோ தொடர தனது ராஜ பதவியை வகிக்கவில்லை என்று சொல்லலாம்; மாறாக, அவன் கொண்டிருந்த அதிகாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, யேகோவா தேவனுக்கு முன்பாக மனந்திரும்பினான். இந்த கணத்தில் நினிவேயின் ராஜா ஒரு ராஜாவாக மனந்திரும்பவில்லை; அவன் மனந்திரும்பி, தனது பாவங்களை அறிக்கைச் செய்ய சாதாரண குடிமகனைப் போல தேவனுக்கு முன்பாக வந்திருந்தான். மேலும், முழு நகரத்தையும் மனந்திரும்பவும், தான் செய்ததைப் போலவே அவர்கள் பாவங்களை யேகோவா தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்யவும் சொன்னார்; மேலும், வேதவசனங்களில் காணப்படுவது போல், அதை எப்படிச் செய்வது என்பதற்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தை அவர் கொண்டிருந்தார்: “மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. … தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள்.” நகரத்தின் அரசனாக, நினிவேயின் ராஜா மிக உயர்ந்த அந்தஸ்தையும் அதிகாரத்தையும் கொண்டிருந்தார், மேலும் அவர் விரும்பிய எதையும் அவரால் செய்ய முடியும். யேகோவா தேவனின் அறிவிப்பை அவர் எதிர்கொண்டபோது, அவர் இந்த விஷயத்தைப் புறக்கணித்திருக்கலாம் அல்லது மனந்திரும்பி, தனது பாவங்களை மட்டும் அறிக்கை செய்திருக்கலாம்; நகரத்தின் ஜனங்கள் மனந்திரும்ப முடிவு செய்தார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் இந்த விஷயத்தை முற்றிலுமாகப் புறக்கணித்திருக்க முடியும். இருப்பினும், நினிவேயின் ராஜா இதைச் செய்யவேயில்லை. அவர் தனது சிங்காசனத்திலிருந்து எழுந்து, இரட்டை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பி, யேகோவா தேவனுக்கு முன்பாக தனது பாவங்களை அறிக்கை பண்ணினது மட்டுமல்லாமல், நகரத்திலுள்ள எல்லா ஜனங்களையும் கால்நடைகளையும் அவ்வாறே செய்யும்படி கட்டளையிட்டார். “தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்.” அவர் ஜனங்களுக்குக் கட்டளையிட்டார். இந்தத் தொடர்ச்சியான செயல்களின் மூலம், நினிவேயின் ராஜா ஓர் ஆட்சியாளர் செய்ய வேண்டியதை உண்மையிலேயே நிறைவேற்றினார். அவரது தொடர்ச்சியான செயல்கள் மனித வரலாற்றில் எந்தவொரு ராஜாவிற்கும் சாதிக்கக் கடினமாக இருந்த ஒன்றாகும், உண்மையில், வேறு எந்த ராஜாவும் இந்த விஷயங்களைச் சாதிக்கவில்லை. இந்தச் செயல்கள் மனித வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதவை என்று அழைக்கப்படலாம், மேலும் அவை மனிதகுலத்தால் நினைவுகூரப்படுவதற்கும், பின்பற்றப்படுவதற்கும் தகுதியானவைகளாகும். மனிதன் தோன்றியது முதல், ஒவ்வொரு ராஜாவும் தேவனை எதிர்க்கவும், விரோதிக்கவுமே தனது குடிமக்களை வழிநடத்தியிருந்தார்கள். தங்களின் துன்மார்க்கத்திற்கான மீட்பைத் தேடவும், யேகோவா தேவனின் மன்னிப்பைப் பெறவும், உடனடி தண்டனையைத் தவிர்க்கவும் தேவனிடத்தில் மன்றாடும்படி, ஒருவர் கூட தங்களின் குடிமக்களை வழிநடத்தவில்லை. இருந்தபோதிலும், நினிவேயின் ராஜா தனது குடிமக்களைத் தேவனிடம் திரும்பப் பண்ணவும், அவரவருடைய பொல்லாத வழிகளை விட்டுவிட்டு, தங்கள் கைகளிலிருந்து கொடுமையைக் கைவிடப்பண்ணவும் அவர்களை வழிநடத்த முடிந்தது. மேலும், அவர் தனது சிங்காசனத்தை ஒதுக்கி வைக்க முடிந்தது, அதற்குப் பதிலீடாக யேகோவா தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார், மனஸ்தாபப்பட்டார், அவருடைய உக்கிரக்கோபத்தைத் திரும்பப் பெற்றார், நகர மக்களை உயிர்வாழ அனுமதித்தார், அவர்களை அழிவிலிருந்து காத்தார். ராஜாவின் செயல்கள், மனித வரலாற்றில் ஓர் அரிய அதிசயம் என்றே கூறப்பட வேண்டும். மேலும் சீர்கேடான மனுக்குலம் மனந்திரும்பி, தங்கள் பாவங்களைத் தேவனுக்கு முன்பாக அறிக்கைச் செய்கிறதற்கான ஒரு மாதிரி எடுத்துக்காட்டு என்று கூட சொல்லாம்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 113

யோனா 3  யேகோவா இரண்டாவது முறையாக யோனாவிடம்: எழுந்திரு, மாநகரமான நினிவேக்குச் சென்று, நான் உனக்குச் சொல்லும் பிரசங்கத்தை அந்நகருக்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். ஆதலால், யோனா எழுந்து, யேகோவாவின் வார்த்தையின்படி நினிவேவுக்குச் சென்றான். அந்நகரின் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்குச் செல்ல மூன்று நாளாகும். நகரத்தினுள் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம் செய்து: இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று கூறினான் யோனா. ஆதலால், நினிவேவின் ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர். நினிவேயின் ராஜாவுக்கு இந்தச் செய்தி எட்டியது, அவன் சிங்காசனத்திலிருந்து எழுந்து, தன் ராஜ அங்கியை அகற்றி விட்டு இரட்டுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான். மேலும் ராஜா மற்றும் அவனது பிரபுக்களின் ஆணையினால் அவர் அதை நினிவே முழுவதும் அறிவிக்கவும் வெளியிடவும் செய்து: மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. ஆனால் மனுஷன், மிருகம் என சகலமும் கோணியாடை உடுத்தி, தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள். அப்போது ஒரு வேளை நாம் அழிந்துபோகாதபடி, தேவன் மனம்வருந்தி, தம் கடுமையான கோபத்தைவிடுத்துத் திரும்பினாலும் திரும்புவார். தேவன் அவர்கள் செய்ததைக் கண்டார், அவர்கள் தங்கள் தீய வழியிலிருந்து விலகியதைக் கண்டார்; தேவன், தாம் அவர்களுக்குச் செய்வதாய்ச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்து தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.

நினிவே ஜனங்களின் இருதயங்களின் ஆழத்தில் இருந்த உண்மையான மனந்திரும்புதலை தேவன் பார்க்கிறார்

தேவனுடைய அறிவிப்பைக் கேட்டபின், நினிவேயின் ராஜாவும் அவரது குடிமக்களும் சில தொடர் செயல்களைச் செய்தனர். இந்தச் செயல்கள் மற்றும் அவர்கள் நடத்தையின் தன்மை என்ன? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் நடத்தையின் முழுமையான சாரம் என்ன? அவர்கள் செய்ததை அவர்கள் ஏன் செய்தார்கள்? அவர்கள் தேவனுடைய பார்வையில் உண்மையிலேயே மனந்திரும்பினார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனிடம் மனப்பூர்வமான மன்றாடுதல்களை ஏறெடுத்ததோடு, அவர்கள் முன் செய்த பாவங்களை அறிக்கையிட்டார்கள் என்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் பொல்லாத நடத்தையைக் கைவிட்டார்கள். அவர்கள் இந்த வழியில் செயல்பட்டதின் காரணம் என்னவென்றால் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டபின், அவர்கள் நம்பமுடியாத அளவிற்குப் பயந்து, அவர் தாம் சொன்னபடியே செய்வார் என்று நம்பினார்கள். உபவாசத்தாலும், இரட்டை உடுத்திக்கொண்டும், சாம்பலில் உட்கார்ந்தும் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்திருத்துவதற்கான, துன்மார்க்கத்தைவிட்டு விலகுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த விரும்பினர். மேலும் யேகோவா தேவனிடம் அவர் தனது கோபத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள ஜெபித்தனர், அவருடைய தீர்மானத்தையும், அவர்கள் மேல் வேகமாய் வந்து கொண்டிருக்கும் பேரழிவையும் அவர் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் மன்றாடினர். அவர்களின் நடத்தை அனைத்தையும் நாம் ஆராய்ந்தால், அவர்களுடைய முந்தைய பொல்லாத செயல்களை யேகோவா தேவனுக்கு அருவருப்பானவைகள் என்பதை அவர்கள் ஏற்கனவே புரிந்துகொண்டதைக் காணலாம். மேலும் அவர் விரைவில் அவர்களை அழிப்பதற்கான காரணத்தை, அவர்கள் புரிந்துகொண்டதையும்கூட நாம் காணலாம். இதனால்தான் அவர்கள் அனைவரும் முழுமையாக மனந்திரும்ப, தங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திரும்பி, தங்கள் கைகளிலுள்ள கொடுமையைக் கைவிட விரும்பினர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யேகோவா தேவனின் அறிவிப்பை அவர்கள் அறிந்து கொண்டவுடன், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இருதயங்களில் பயத்தை உணர்ந்தனர்; அவர்கள் தங்கள் பொல்லாத நடத்தைகளை நிறுத்திவிட்டு, யேகோவா தேவன் மிகவும் வெறுக்கும் செயல்களைப் பின்பு செய்யாமல் விட்டனர். மேலும், அவர்களின் கடந்த கால பாவங்களை மன்னிக்கவும், கடந்த காலச் செயல்களுக்கு ஏற்ப அவர்களை நடத்த வேண்டாம் என்றும் அவர்கள் யேகோவா தேவனிடம் மன்றாடினார்கள். யேகோவா தேவனை மீண்டும் ஒருபோதும் கோபப்படுத்தாமல் இருக்கக் கூடுமென்றால், அவர்கள் மீண்டும் ஒருபோதும் துன்மார்க்கத்தில் ஈடுபடாதிருக்கவும், யேகோவா தேவனின் அறிவுறுத்தல்களின்படி செயல்படவும் தயாராக இருந்தனர். அவர்களின் மனந்திரும்புதல் நேர்மையானதாக மற்றும் முழுமையானதாக இருந்தது. அது அவர்களின் இருதயங்களுக்குள்ளிருந்து வந்தது. மேலும் பாசாங்கற்றதும் மற்றும் நிலையானதுமாக இருந்தது.

நினிவேயின் ஜனங்கள் அனைவரும், ராஜா முதல் சாமானியர்கள் வரை, யேகோவா தேவன் அவர்கள்மீது கோபமாய் இருக்கிறார் என்பதை அறிந்தவுடன், அவர்கள் ஒவ்வொருவருடைய அடுத்தடுத்த செயல்களையும், அவர்களின் நடத்தை முழுவதையும், அவர்கள் எடுத்த முடிவுகள் மற்றும் தெரிவுகளையும் தேவன் தெளிவாகவும் வெளிப்படையாகவும் காண முடிந்தது. அவர்களின் நடத்தைக்கு ஏற்ப தேவனுடைய இருதயம் மாறியது. அந்த நேரத்தில் தேவனின் மனநிலை என்ன? உனக்காக அந்த கேள்விக்கு வேதாகமம் பதிலளிக்க முடியும். பின்வரும் வார்த்தைகள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன: “தேவன் அவர்கள் செய்ததைக் கண்டார், அவர்கள் தங்கள் தீய வழியிலிருந்து விலகியதைக் கண்டார்; தேவன், தாம் அவர்களுக்குச் செய்வதாய்ச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்து தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்” (யோனா 3:10). தேவன் தனது மனதை மாற்றிக்கொண்டாலும், அவருடைய மனநிலையில் குழப்பம் எதுவும் இல்லை. அவர் தெளிவாக தனது கோபத்தை வெளிப்படுத்துவதில் இருந்து மாறி தனது கோபத்தை அமைதிப்படுத்தினார், பின்னர் நினிவே நகரத்தில் பேரழிவை ஏற்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார். நினிவே ஜனங்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனுடைய முடிவு மிகத் துரிதமாய் இருந்த காரணம் என்னவென்றால், நினிவேயிலிருந்த ஒவ்வொருவரின் இருதயத்தையும் தேவன் கவனித்தார். அவர்கள் இருதயத்தின் ஆழத்தில் இருந்த அவர்களின் உண்மையான மனந்திரும்புதல் மற்றும் பாவ அறிக்கை, அவர்மீது அவர்கள் கொண்ட உள்ளார்ந்த நம்பிக்கை, அவர்களுடைய பொல்லாத செயல்கள் அவருடைய மனநிலையை எவ்வாறு கோபப்படுத்தின என்பதைப் பற்றிய ஆழமான உணர்வு, இதன் விளைவாக யேகோவா தேவனின் வரவிருக்கும் தண்டனையைப் பற்றிய பயம், ஆகியவற்றை அவர் கண்டார். அதே சமயம், யேகோவா தேவனும் இந்தப் பேரழிவைத் தவிர்க்கத்தக்கதாய், இனிமேல் தங்கள்மீது கோபப்பட வேண்டாம் என்று அவரிடம் மன்றாடின அவர்கள் இருதயங்களின் ஆழங்களிலிருந்து வந்த ஜெபங்களைக் கேட்டார். இந்த உண்மைகளைத் தேவன் உற்று நோக்கியபோது, அவருடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது. முன்பு அவருடைய கோபம் அவர்கள் மேல் எவ்வளவு பெரிதாய் இருந்தது என்பதைப் பொருட்படுத்தாமல், ஜனங்களின் இருதயங்களின் ஆழத்தில் இருந்த உண்மையான மனந்திரும்புதலை அவர் பார்த்த போது, அவருடைய இருதயம் தொடப்பட்டது. மேலும் அவரால், அவர்கள் மேல் பேரழிவைக் கொண்டு வர இயலவில்லை, அவர்களிடத்தில் கோபமாய் இருப்பதை அவர் நிறுத்திக் கொண்டார். மாறாக அவர் தன்னுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கி, அவர்களைத் தொடர்ந்து வழிநடத்தவும் போஷிக்கவும் செய்தார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 114

யோனா 3  யேகோவா இரண்டாவது முறையாக யோனாவிடம்: எழுந்திரு, மாநகரமான நினிவேக்குச் சென்று, நான் உனக்குச் சொல்லும் பிரசங்கத்தை அந்நகருக்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். ஆதலால், யோனா எழுந்து, யேகோவாவின் வார்த்தையின்படி நினிவேவுக்குச் சென்றான். அந்நகரின் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்குச் செல்ல மூன்று நாளாகும். நகரத்தினுள் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம் செய்து: இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று கூறினான் யோனா. ஆதலால், நினிவேவின் ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர். நினிவேயின் ராஜாவுக்கு இந்தச் செய்தி எட்டியது, அவன் சிங்காசனத்திலிருந்து எழுந்து, தன் ராஜ அங்கியை அகற்றி விட்டு இரட்டுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான். மேலும் ராஜா மற்றும் அவனது பிரபுக்களின் ஆணையினால் அவர் அதை நினிவே முழுவதும் அறிவிக்கவும் வெளியிடவும் செய்து: மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. ஆனால் மனுஷன், மிருகம் என சகலமும் கோணியாடை உடுத்தி, தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள். அப்போது ஒரு வேளை நாம் அழிந்துபோகாதபடி, தேவன் மனம்வருந்தி, தம் கடுமையான கோபத்தைவிடுத்துத் திரும்பினாலும் திரும்புவார். தேவன் அவர்கள் செய்ததைக் கண்டார், அவர்கள் தங்கள் தீய வழியிலிருந்து விலகியதைக் கண்டார்; தேவன், தாம் அவர்களுக்குச் செய்வதாய்ச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்து தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.

தேவன் மீதான உங்கள் விசுவாசம் உண்மையாக இருந்தால், நீ திரும்பத் திரும்ப அவருடைய பராமரிப்பைப் பெறுவாய்

நினிவே ஜனங்களிடத்தில் தேவன் தனது நோக்கங்களை மாற்றுவதில் எந்தவித தயக்கமோ அல்லது சந்தேகமான அல்லது தெளிவற்ற எதையுமோ கொண்டிருக்கவில்லை. மாறாக, அது முழுமையான கோபத்திலிருந்து முழுமையான சகிப்புத்தன்மைக்கு மாற்றப்பட்ட ஒன்றாகும். இது தேவனுடைய சாராம்சத்தின் உண்மையான வெளிப்பாடாகும். தேவன் ஒருபோதும் திடசித்தமில்லாதவரோ அல்லது அவருடைய செயல்களில் தயங்குபவரோ அல்ல; அவருடைய கிரியைகளுக்குப் பின்னால் உள்ள கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் அனைத்தும் தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை, தூய்மையானவை மற்றும் குறைபாடற்றவை ஆகும். மேலும் அவைகளில் எந்தவொரு சட்டங்களோ அல்லது சூழ்ச்சிகளோ உள்ளாகக் கலந்திருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய சாராம்சம் எந்த இருளையோ அல்லது பொல்லாப்பையோ கொண்டிருக்கவில்லை. நினிவே ஜனங்களின் பொல்லாத செயல்கள் அவருடைய பார்வைக்கு முன் வந்ததால் தேவன் அவர்களிடம் கோபங்கொண்டார்; அந்நேரத்தில் அவருடைய கோபம் அவருடைய சாராம்சத்திலிருந்து உருவானது. இருப்பினும், தேவனுடைய கோபம் சிதறடிக்கப்பட்டு, அவர் நினிவே ஜனங்களுக்கு மீண்டும் ஒருமுறை சகிப்புத்தன்மையை அளித்தபோது, அவர் வெளிப்படுத்திய அனைத்தும் அவருடைய சொந்த சாராம்சமாகவே இருந்தன. இந்த மாற்றத்தின் முழுமையும் தேவன் மீதான மனிதனின் மனப்பான்மையில் ஏற்பட்ட மாற்றத்தினால் உண்டானதாகும். இந்த முழு காலகட்டத்திலும், தேவனின் அவமதிக்கப்பட முடியாத மனநிலை மாறவில்லை, தேவனின் சகிப்புத்தன்மையுள்ள சாராம்சம் மாறவில்லை, தேவனின் அன்பான மற்றும் இரக்கமுள்ள சாராம்சம் மாறவில்லை. ஜனங்கள் பொல்லாத செயல்களைச் செய்து தேவனை அவமதிக்கும் போது, அவர் தம்முடைய கோபத்தை அவர்கள்மீது செலுத்துகிறார். ஜனங்கள் உண்மையிலேயே மனந்திரும்பும்போது, தேவனுடைய இருதயம் மாறும், அவருடைய கோபம் முடிவுறுகிறது. ஜனங்கள் தொடர்ந்து பிடிவாதமாக தேவனை எதிர்க்கும்போது, அவருடைய கோபம் நீடிக்கும், மேலும் அவர்கள் அழிக்கப்படும் வரை அவருடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மீது வலிமையுடன் தொடர்ந்து வரும். இதுவே தேவனுடைய மனநிலையின் சாராம்சமாகும். தேவன் கோபத்தை அல்லது இரக்கத்தை அல்லது கிருபையை வெளிப்படுத்துகிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், மனிதன் தன் இருதயத்தின் ஆழத்தில் தேவனிடம் கொண்டுள்ள நடத்தை, ஒழுக்கம் மற்றும் அணுகுமுறையே தேவனுடைய மனநிலையின் வெளிப்பாட்டின் மூலம் வெளிப்படுகிறதை உத்தரவிடுகிறது. தேவன் தொடர்ந்து ஒருவரை தனது கோபத்திற்கு உட்படுத்தினால், இந்த நபரின் இருதயம் தேவனை எதிர்க்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இந்நபர் ஒருபோதும் உண்மையிலேயே மனந்திரும்பவில்லை, தேவனுக்கு முன்பாக தலை வணங்கவில்லை அல்லது தேவன் மீது உண்மையான விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை, அவர் ஒருபோதும் தேவனின் இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பெறவில்லை. யாராவது திரும்பத் திரும்ப தேவனுடைய கவனிப்பையும், அவருடைய இரக்கம் மற்றும் அவருடைய சகிப்புத்தன்மையைப் பெற்றால், சந்தேகத்திற்கு இடமின்றி இந்நபர் தன் இருதயத்தில் தேவன் மீது உண்மையான விசுவாசம் கொண்டிருக்கிறார் என்றும் அவருடைய இருதயம் தேவனை எதிர்க்கவில்லை என்பதாகும். இந்நபர் திரும்பத் திரும்ப தேவனுக்கு முன்பாக உண்மையிலேயே மனந்திரும்புகிறார்; எனவே, தேவனின் கண்டிப்பு திரும்பத் திரும்ப இந்த நபரின் மீது இறங்கினாலும், அவருடைய கோபம் வராது.

இந்தச் சுருக்கமான கணக்கு, தேவனின் இருதயத்தைப் பார்க்கவும், அவருடைய சாராம்சத்தின் யதார்த்தத்தைப் பார்க்கவும், தேவனின் கோபமும் அவருடைய இருதயத்தில் ஏற்படும் மாற்றங்களும் காரணமின்றி இல்லை என்பதைக் காண மக்களை அனுமதிக்கிறது. தேவன் கோபமாக இருந்த போதும், அவர் தனது மனதை மாற்றிக் கொண்டபோதும் அவர் வெளிப்படுத்தினதில் ஒரு முழுமையான வேறுபாடு இருந்தபோதிலும், இது ஜனங்களை, தேவனுடைய சாராம்சத்தின் கோபம் மற்றும் அவருடைய சகிப்புத்தன்மை ஆகிய இவ்விரண்டு அம்சங்களுக்கிடையே ஒரு பெரிய இணைப்பின்மை அல்லது வேறுபாடு இருப்பதாக நம்ப வைக்கிறது. மேலும் நினிவே ஜனங்களின் மனந்திரும்பின காரியத்தில் தேவனின் மனப்பான்மையான அவருடைய உண்மையான மனநிலையின் மற்றொரு பக்கத்தைக் காண ஜனங்களை மீண்டும் அனுமதிக்கிறது. இருப்பினும் தேவனுடைய மன மாற்றம் உண்மையிலேயே தேவனின் இரக்கம் மற்றும் கிருபையை மீண்டும் காணவும், தேவனுடைய சாராம்சத்தின் உண்மையான வெளிப்பாட்டைக் காணவும் மனிதகுலத்தை அனுமதிக்கிறது. தேவனின் இரக்கமும் கிருபையும் புனைகதைகளும் அல்ல, கட்டுக்கதைகளும் அல்ல என்பதை மனிதகுலம் ஒப்புக் கொள்ள வேண்டும். இது ஏனென்றால் அந்த நேரத்தில் தேவனுடைய உணர்வு உண்மையானது, தேவனுடைய மனமாற்றம் உண்மையானது, உண்மையாக தேவன் தன்னுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் மனுக்குலத்திற்கு மீண்டும் ஒருமுறை வழங்கினார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 115

யோனா 3  யேகோவா இரண்டாவது முறையாக யோனாவிடம்: எழுந்திரு, மாநகரமான நினிவேக்குச் சென்று, நான் உனக்குச் சொல்லும் பிரசங்கத்தை அந்நகருக்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். ஆதலால், யோனா எழுந்து, யேகோவாவின் வார்த்தையின்படி நினிவேவுக்குச் சென்றான். அந்நகரின் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்குச் செல்ல மூன்று நாளாகும். நகரத்தினுள் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம் செய்து: இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று கூறினான் யோனா. ஆதலால், நினிவேவின் ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர். நினிவேயின் ராஜாவுக்கு இந்தச் செய்தி எட்டியது, அவன் சிங்காசனத்திலிருந்து எழுந்து, தன் ராஜ அங்கியை அகற்றி விட்டு இரட்டுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான். மேலும் ராஜா மற்றும் அவனது பிரபுக்களின் ஆணையினால் அவர் அதை நினிவே முழுவதும் அறிவிக்கவும் வெளியிடவும் செய்து: மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. ஆனால் மனுஷன், மிருகம் என சகலமும் கோணியாடை உடுத்தி, தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள். அப்போது ஒரு வேளை நாம் அழிந்துபோகாதபடி, தேவன் மனம்வருந்தி, தம் கடுமையான கோபத்தைவிடுத்துத் திரும்பினாலும் திரும்புவார். தேவன் அவர்கள் செய்ததைக் கண்டார், அவர்கள் தங்கள் தீய வழியிலிருந்து விலகியதைக் கண்டார்; தேவன், தாம் அவர்களுக்குச் செய்வதாய்ச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்து தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.

நினிவே ஜனங்களுடைய இருதயத்தின் உண்மையான மனந்திரும்புதல் தேவனின் இரக்கத்தை அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது மற்றும் அவர்களின் சொந்த விளைவுகளை மாற்றுகிறது

தேவனுடைய இருதய மாற்றத்திற்கும் அவருடைய கோபத்திற்கும் ஏதாவது முரண்பாடு இருந்ததா? நிச்சயமாக இல்லை! ஏனென்றால், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தேவனின் சகிப்புத்தன்மைக்குக் காரணம் இருந்தது. அது என்ன காரணமாக இருக்கும்? இது வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றாகும்: “ஒவ்வொருவரும் அவரவர் பொல்லாத வழியிலிருந்து திரும்பினார்கள்,” “தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள்.”

இந்தப் “தீய வழி” என்பது ஒரு சில பொல்லாத செயல்களைக் குறிக்காமல் பொல்லாத ஆதாரத்திலிருந்து தோன்றும் ஜனங்களின் நடத்தையைக் குறிக்கிறது. “தீய வழியை விட்டும் திரும்பக்கடவர்கள்” என்பது, இப்பொழுது பேசப்படுகிறவர்கள் மீண்டும் ஒருபோதும் இந்தச் செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்று அர்த்தமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் மீண்டும் இந்தப் பொல்லாத வழியில் நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதாகும்; அவர்களின் செய்முறை, ஆதாரம், நோக்கம், எண்ணம் மற்றும் கொள்கை அனைத்தும் மாறிவிட்டன; அவர்கள் மீண்டும் ஒருபோதும் அந்தச் செய்முறைகளையும் கொள்கைகளையும் தங்கள் இருதயங்களில் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரப் பயன்படுத்த மாட்டார்கள். “தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள்” என்பதில் உள்ள “விட்டுத் திரும்பக்கடவர்கள்” என்ற பதம், கீழே போடுதல் அல்லது ஒதுக்கித் தள்ளுதல், பழைய காரியங்களிலிருந்து முற்றிலுமாக மாறி, ஒருபோதும் திரும்பாததைக் குறிக்கிறது. நினிவேயின் ஜனங்கள் தங்கள் கைகளிலுள்ள கொடுமையைக் கைவிட்டபோது, இது அவர்களின் உண்மையான மனந்திரும்புதலை நிரூபித்தது, குறிப்பிட்டுக் காட்டியது. தேவன் ஜனங்களின் வெளிப்புறத் தோற்றங்களோடு அவர்களின் இதயங்களையும் உற்றுக் கவனிக்கிறார். எந்த ஒரு கேள்வியும் இல்லாத உண்மையான மனந்திரும்புதலை நினிவே ஜனங்களின் இருதயங்களில் தேவன் உற்றுக் கவனித்தபோது, அவர்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டுவிட்டு, தங்கள் கைகளிலுள்ள கொடுமையைக் கைவிட்டதை உற்றுக் கவனித்தபோது, அவர் தனது இருதயத்தை மாற்றிக் கொண்டார். அதாவது இந்த ஜனங்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம், பல்வேறு முறைகளில் காரியங்களைச் செய்கிற விதம், மேலும் அவர்களுடைய உண்மையான அறிக்கை மற்றும் பாவங்களிலிருந்து தங்கள் இருதயத்தில் மனந்திரும்பின காரியம் ஆகியவை தேவனை அவருடைய இருதயத்தை மாற்றிக்கொள்ளவும், அவருடைய நோக்கங்களை மாற்றிக்கொள்ளவும், அவருடைய முடிவை திரும்பப் பெற்றுக் கொள்ளவும், அவர்களை தண்டிக்காமல் அல்லது அழிக்காமல் இருக்கவும் செய்தது. இவ்வாறு, நினிவேயின் ஜனங்கள் தங்களுக்கான ஒரு வித்தியாசமான முடிவை அடைந்தனர். அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை மீட்டுக் கொண்டனர், அதே நேரத்தில் தேவனுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பெற்றனர், அந்தச் சமயத்தில் தேவனும் தனது கோபத்தைத் திரும்பப் பெற்றார்.

தேவனுடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் அரிதானவையல்ல—மனிதனுடைய உண்மையான மனந்திரும்புதலே அரிதானது

நினிவே ஜனங்கள் மீது தேவன் எவ்வளவு கோபமாக இருந்தாலும், அவர்கள் உபவாசத்தை அறிவித்து, இரட்டுடுத்திச் சாம்பலில் அமர்ந்தவுடன், அவருடைய இருதயம் கனிவாக மாறத் தொடங்கி, அவர் தம்முடைய மனதை மாற்றத் தொடங்கினார். அவர் அந்த நகரத்தை அழிப்பதாக அவர்களுக்கு அறிவித்தப்பொழுது—அவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பும் அந்த நொடிக்கு முன்பு வரை தேவன் அவர்கள் மீது கோபமாகவே இருந்தார். அவர்கள் மனந்திரும்புதலின் செயல்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தப்பொழுது, நினிவே ஜனங்கள் மீதான தேவனுடைய கோபமானது கொஞ்சம் கொஞ்சமாக இரக்கமாகவும் சகிப்புத்தன்மையாகவும் மாறினது. அதே நிகழ்வில் தேவனுடைய மனநிலையின் இந்த இரண்டு அம்சங்களின் ஒருமித்த வெளிப்பாடு குறித்து எந்த முரண்பாடும் கிடையாது. அப்படியென்றால், இந்த முரண்பாட்டின் குறைப்பாட்டை ஒருவர் எப்படி புரிந்துகொள்ள முடியும்? நினிவே ஜனங்கள் மனந்திரும்பியதற்குப் பதிலீடாக அவர்கள் தேவனுடைய யதார்த்தமான மற்றும் காயப்படுத்தாதத் தன்மையைப் பார்க்கும்படி தேவன் இந்த இரு எதிரெதிர் பண்புகளை உணர்த்தினார் மற்றும் வெளிப்படுத்தினார். கீழ்க்காண்பவற்றை ஜனங்களுக்கு கூறுவதற்காக தேவன் தமது சிந்தையைப் பயன்படுத்தினார்: தேவன் ஜனங்களைச் சகித்துக்கொள்ளாததனால் அல்ல, அல்லது அவர்களுக்கு தம்முடைய இரக்கத்தைக் காட்ட விரும்பவில்லை என்பதனாலோ அல்ல, மாறாக அவர்கள் அரிதாகவே தேவனிடம் உண்மையில் மனந்திரும்புகிறார்கள், மற்றும் ஜனங்கள் தங்கள் தீய வழிகளிலிருந்தும், தங்கள் கரங்களிலிருக்கிற பொல்லாங்கிலிருந்தும் அரிதாகவே விலகுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்; மனிதனோடு தேவன் கோபமாக இருக்கும்பொழுது, அவன் உண்மையாக மனந்திரும்புவான் என்று அவர் நம்புகிறார், மெய்யாகவே அவர் மனிதனுடைய உண்மையான மனமாற்றத்தைக் காண விரும்புகிறார், அதற்குப் பின்னர் அவர் மனிதன் மேல் தம்முடைய இரக்கத்தையும், சகிப்புத்தன்மையும் தாராளமாகப் பொழிவதைத் தொடருகிறார். அதாவது மனிதனுடைய தீய நடத்தையானது தேவனுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது, அதேசமயம் தேவனுக்குச் செவிக்கொடுத்து, உண்மையாகவே மனமாற்றமடைந்து, தங்கள் தீய வழியிலிருந்தும், தங்கள் கரங்களின் பொல்லாங்கிலிருந்தும் விலகுகிறவர்கள் மேல் தேவனுடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் பொழியப்படுகிறது. தேவனுடைய சிந்தையானது நினிவே ஜனங்களை அவர் நடத்தும் விதத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது: தேவனுடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் பெற்றுக்கொள்வதற்குக் கடினமானவைகளல்ல, மேலும் அவருக்குத் தேவையானது எல்லாம் ஒருவருடைய உண்மையான மனந்திரும்புதல் மட்டுமேயாகும். ஜனங்கள் தங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்பினால், மற்றும் தங்கள் கரங்களின் பொல்லாப்பை விட்டு விலகினால், தேவன் தம்முடைய இருதயத்தையும், அவர்கள் மீதான தமது சிந்தையையும் மாற்றுவார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 116

சிருஷ்டிகருடைய நீதியான மனநிலை உண்மையானது மற்றும் தெளிவானது

நினிவே ஜனங்கள் மீது தம்முடைய இருதயத்தை தேவன் மாற்றிக்கொண்டபொழுது, அவருடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் போலியானதாக இருந்ததா? நிச்சயமாக இல்லை! அப்படியென்றால், இந்தச் சூழ்நிலையை தேவன் கையாளுகின்றப்பொழுது தேவனுடைய மனநிலையின் இந்த இரு பண்புகளுக்கிடையேயான மாற்றத்தில் என்ன வெளிக்காட்டப்பட்டது? தேவனுடைய மனநிலை பரிபூரணமானது—அதில் பிரிவினையே கிடையாது. அவர் ஜனங்களின் மீது கோபத்தையோ அல்லது இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மையையோ காட்டினாலும், இவைகளெல்லாம் அவருடைய நீதியான மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. தேவனுடைய மனநிலையானது முக்கியமானதும் தெளிவாக தெரிகிறதுமாக இருக்கிறது, மற்றும் காரியங்கள் உருவாகும் விதத்தின்படி அவர் தம்முடைய யோசனைகளையும் மற்றும் சிந்தைகளையும் மாற்றுகிறார். நினிவே ஜனங்கள் மீதான அவருடைய மனநிலையின் மாற்றமானது அவர் அவருக்கென்று சுய எண்ணங்களையும், யோசனைகளையும் கொண்டிருக்கிறார்; அவர் ஓர் இயந்திர மனிதனோ அல்லது களிமண் வடிவமோ அல்ல, மாறாக அவர் ஜீவனுள்ள தேவன் என்பதை மனுகுலத்திற்கு கூறுகிறது. நினிவே ஜனங்களுடைய சிந்தைகளின் காரணத்தினால், அவர்களுடைய கடந்தக்காலத்தை மன்னித்ததுப்போல, அவர்கள் மேல் கோபங்கொள்ளவும் அவரால் முடியும். அவர் நினிவே ஜனங்களின் மீது அழிவை தீர்மானிக்கவும், மற்றும் அவர்கள் மனந்திரும்பின காரணத்தினால் அந்தத் தீர்மானத்தை அவர் மாற்றவும் கூடும். தேவனுடைய மனநிலையை ஜனங்கள் புரிந்துகொள்ள முயற்சிசெய்ய சூத்திரங்களைப் பயன்படுத்த விரும்புவதுபோல, சட்டத்திட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவும், அதைப்போன்ற சட்டத்திட்டங்களைப் பயன்படுத்தி தேவனுக்கு எல்லையை வரையறுக்கவும், அவரை விவரிக்கவும் விரும்புகிறார்கள். ஆகவே, மனிதனுடைய எண்ணங்களின் களத்தைப் பொறுத்தவரை தேவன் யோசிப்பதுமில்லை, அவரிடம் உண்மையான சிந்தனைகளுமில்லை. ஆனால் உண்மையில், தேவனுடைய எண்ணங்கள், காரியங்கள் மற்றும் சூழ்நிலைகளின் மாற்றத்திற்கு ஏற்றார்போல் எப்பொழுதும் மாறக்கூடியதாக இருக்கிறது. இந்த யோசனைகள் மாறக்கூடியதாக இருக்கையில், தேவனுடைய சாராம்சத்தின் வெவ்வெறு பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த மாற்றங்களின் செயல்முறையின்போது, தேவன் ஒரு மாற்றமான இருதயத்தைக் கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுதில், அவர் மனிதகுலத்திற்குத் தாம் உண்மையாகவே ஜீவனுடையவராய் இருப்பதையும், அவருடைய நீதியின் மனநிலையானது வல்லமையாய்ச் செயல்படுவதையும் காட்டுகிறார். அதே நேரத்தில், அவருடைய கோபம், அவருடைய இரக்கம், அவருடைய தயவிரக்கம், மற்றும் அவருடைய சகிப்புத்தன்மை போன்றவற்றை நிரூபிக்க தேவன் தம்முடைய சொந்த உண்மையான வெளிப்பாடுகளைப் பயன்படுத்துகிறார். காரியங்கள் உருவாவதற்கு ஏற்றாற்போன்று, அவருடைய சாராம்சம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வெளிப்படுத்தப்படும். அவர் சிங்கத்தின் கோபத்தையும் மற்றும் ஒரு தாயின் இரக்கத்தையும், சகிப்புத்தன்மையையும் உடையவராக இருக்கிறார். அவருடைய நீதியான மனநிலையானது எவ்விதமான கேள்விக் கேட்பதையும், மீறுதலையும், மாற்றத்தையும் அல்லது எந்த மனிதனும் விலகிப்போவதையும் அனுமதிப்பதில்லை. தேவனுடைய நீதியான மனநிலை—அதாவது தேவனுடைய கோபம் மற்றும் தேவனுடைய இரக்கம் ஆகியவற்றை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வெளிப்படுத்தலாம். அவர் இந்த இயல்புகளுக்கு சிருஷ்டிப்பின் எல்லா மூலைகளிலும் தெளிவான வெளிப்பாட்டை கொடுக்கிறார். கடந்துபோகும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அவற்றை அவர் உயிர்துடிப்புடன் நடைமுறைப்படுத்துகிறார். தேவனுடைய நீதியான மனநிலையானது நேரத்தாலோ அல்லது இடத்தாலோ கட்டுப்படுத்தக்கூடியதல்ல; வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் தேவனுடைய நீதியான மனநிலையானது காலம் அல்லது இடத்தின் கட்டுப்பாடுகளினால் இயந்திரத்தனமாக உணர்த்தப்படுவதோ அல்லது வெளிப்படுத்தப்படுவதோ கிடையாது, மாறாக எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் மிகவும் எளிமையாகக் கிடைக்கப்பெறுகிறது. தேவன் ஒரு மாற்றமடைந்த இருதயத்தை உடையவராய், கோபத்தை வெளிப்படுத்துவதை நிறுத்தி, நினிவே பட்டணத்தாரை அழிவிலிருந்து விலக்குவதை நீ பார்க்கும்பொழுது, தேவன் இரக்கமுள்ளவர் மற்றும் அன்புள்ளவர் என்று உன்னால் கூற முடியுமா? தேவனுடைய கோபமானது வெறும் வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கிறதென்று உன்னால் கூற முடியுமா? தேவன் கடுங்கோபம் கொண்டு, தம்முடைய இரக்கத்திலிருந்து பின்வாங்கும்போது, அவர் மனிதகுலத்தின் மீது உண்மையான அன்பை வெளிப்படுத்தவில்லை என்று உன்னால் கூற முடியுமா? இந்தக் கடுங்கோபமானது மக்களுடைய பொல்லாத செய்கைகளுக்குப் பதிலாக தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது; அவருடைய கோபம் குறைப்பாடுள்ளதல்ல. மக்களுடைய மனமாற்றத்திற்குப் பதிலாக தேவனுடைய இருதயமானது அசைக்கப்படுகிறது, இந்த மனமாற்றமே அவருடைய இருதயத்தில் மாற்றத்தை உண்டுப்பண்ணுகிறது. அவர் அசைக்கப்பட்டதை உணரும்போது, அவர் மாற்றப்பட்ட இருதயத்தைக் கொண்டிருக்கும்போது, மற்றும் மனிதனிடம் அவர் தம்முடைய இரக்கத்தையும், சகிப்புதன்மையையும் காட்டும்போது, அவையெல்லாம் முற்றிலும் குறைபாடற்றவையாக இருக்கின்றன; அவை பரிசுத்தமானவை, சுத்தமானவை, குற்றஞ்சாட்டப்படாதவை மற்றும் கலப்படமற்றவை. தேவனுடைய கசகிப்புத்தன்மையை மிகச் சரியாகக் கூற வேண்டுமென்றால் சகிப்புத்தன்மை என்பது அவருடைய இரக்கமே, இரக்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை. மனிதனுடைய மனந்திரும்புதல் மற்றும் மனிதனுடைய நடத்தையின் மாறுபாடுகள் ஆகியவற்றிற்கு ஏற்ப அவருடைய மனநிலையானது கோபம் அல்லது இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அவர் எதை வெளிப்படுத்துகிறார் என்பது ஒரு பொருட்டல்ல, ஆனால் அவை யாவும் சுத்தமானதாகவும் மற்றும் நேரடியானதாகவும் இருக்கின்றன; அதனுடைய சாராம்சமானது வேறு எந்தச் சிருஷ்டிப்பைக் காட்டிலும் தனித்துவமானது. தேவன் தம்முடைய கிரியைகளின் அடிப்படைச் சட்டத்திட்டங்களை வெளிப்படுத்துகையில், அவை எவ்விதமான குறைப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவையாகும். அவருடைய எண்ணங்களும், அவருடைய யோசனைகளும், அவர் எடுக்கிற ஒவ்வொரு தீர்மானங்களும், அவர் செய்கிற ஒவ்வொரு செயல்களும் அதைப்போன்றே குறைப்பாடுகளற்றவையாகும். தேவன் அப்படித் தீர்மானித்தப்படியால் மற்றும் அவர் அப்படிக் கிரியை செய்கிறப்படியால், தம்முடைய பணிகளை நிறைவு செய்கிறார். அவருடைய பணிகள் சரியானதாகவும், குறைவற்றதாகவும் இருக்கின்றன, ஏனெனில் அவற்றின் ஆதாரம் குறைவற்றதும், குறைபாடற்றதுமாக இருக்கிறது. தேவனுடைய கோபம் குறைபாடற்றது. அதே போன்று, எந்தவொரு சிருஷ்டிப்பிடமும் இல்லாத அவருடைய இரக்கமும், சகிப்புத்தன்மையும் பரிசுத்தமானவையாகவும் மற்றும் குறைவற்றவையாகவும் இருக்கின்றன, மேலும் சிந்தனைமிக்க ஆழ்ந்து ஆராய்தலையும், அனுபவத்தையும் எதிர்கொள்ளக்கூடியவையாகவும் உள்ளன.

நினிவே சம்பவத்தில் உங்களுடைய புரிந்துகொள்ளுதலின் மூலம் தேவனுடைய நீதியான மனநிலையினுடைய சாராம்சத்தின் மறுபக்கத்தை உங்களால் தற்போது பார்க்க முடிகிறதா? தேவனுடைய நீதியான மனநிலையின் தனித்துவத்தின் மறுபக்கத்தை உங்களால் பார்க்க முடிகிறதா? மனிதகுலத்தில் யாராகிலும் இவ்விதமான இயல்பை உடையவர்களாக இருக்கிறார்களா? தேவனுடைய கோபத்தைப் போன்றதொரு கோபத்தை யாராகிலும் உடையவர்களாக இருக்கிறார்களா? தேவனிடம் இருக்கிறதைப்போல இரக்கமும் சகிப்புத்தன்மையையும் உடையவர்களாக யாராகிலும் இருக்கிறார்களா? சிருஷ்டிப்புகளிலே யார் இப்படிப்பட்ட கடுங்கோபத்தையும், அழிப்பதற்கான தீர்மானத்தையும் அல்லது மனிதகுலத்தின் மேல் அழிவையும் வரவழைக்கக் கூடும்? மனிதன் மீது சகிப்புத்தன்மை மற்றும் மன்னிப்பை அளிக்கும்படி இரக்கத்தை காட்டவும், மற்றும் மனிதனை அழிக்க முன்பு தீர்மானித்ததை மாற்றவும் யார் தகுதியுடையவர்? சிருஷ்டித்தவர் தம்முடைய நீதியான மனநிலையை தம்முடைய சொந்த வழியில் தனித்துவமான முறையிலும் மற்றும் நியமங்களிலும் வெளிப்படுத்துகிறார், மேலும் ஜனங்களாலும், சம்பவங்களாலும் மற்றும் பொருட்களாலும் அவர் கட்டுப்படுத்தப்பட அல்லது வரையறுக்கப்படக் கூடியவர் அல்ல. அவருடைய தனித்துவமான மனநிலையைக் கொண்டு, அவருடைய எண்ணங்களையும் யோசனைகளையும் எவரும் மாற்றவோ அல்லது அவரை வலியுறுத்தவோ மற்றும் அவருடைய தீர்மானங்களை மாற்றவோ முடியாது. அனைத்துச் சிருஷ்டிப்புகளில் இருக்கும் நடத்தை மற்றும் எண்ணங்களின் முழுமை அவருடைய நீதியான மனநிலையின் நியாயத்தீர்ப்பிற்குட்பட்டதாக இருக்கிறது. அவர் கோபத்தை உபயோகிக்கிறாரா அல்லது இரக்கத்தை உபயோகிக்கிறாரா என்பதில் எவரும் அவரை கட்டுப்படுத்த முடியாது; சிருஷ்டிகரின் சாராம்சம் மட்டுமே அதாவது வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் சிருஷ்டிகரின் நீதியான மனநிலை மட்டுமே இதைத் தீர்மானிக்க முடியும். இதுவே சிருஷ்டிகரின் நீதியான மனநிலையின் தனித்துவமான இயல்பாகும்!

நினிவே ஜனங்களின் மீதான தேவனுடைய சிந்தையின் மாற்றத்தை ஆராய்ந்து பார்ப்பது மற்றும் புரிந்துக்கொள்வதின் மூலம் “தனித்துவம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தேவனுடைய நீதியான மனநிலையில் காணப்படுகிற இரக்கத்தை உங்களால் விவரிக்க முடியுமா? தேவனுடைய கோபமானது அவருடைய தனித்துவமான நீதியான மனநிலையின் சாராம்சத்தின் ஒரு பண்பு என்று நாங்கள் எற்கனவே கூறினோம். இப்போது தேவனுடைய கோபம் மற்றும் தேவனுடைய இரக்கம் என்ற இரு பண்புகளை அவருடைய நீதியான மனநிலையாக விவரிக்கிறேன். தேவனுடைய நீதியான மனநிலையானது பரிசுத்தமானது; இது அவமதிக்கப்படுவதையோ அல்லது கேள்விக்கேட்கப்படுவதையோ சகித்துக்கொள்வதில்லை; இது சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாதவைகளில் எதிலும் இல்லாத ஒன்றை பெற்றிருப்பதாகும். இது தேவனுக்கு தனித்துவமானது மற்றும் பிரத்தியேகமானது ஆகும். தேவனுடைய கோபமானது பரிசுத்தமும் புண்படுத்தாததுமானது என்று இதனை சொல்லக் கூடும். அதைப்போன்றே தேவனுடைய நீதியான மனநிலையின் மற்ற பண்பான தேவனுடைய இரக்கமும் பரிசுத்தமும் குற்றப்படுத்தப்படாதாக இருக்கிறது. எந்த ஒரு சிருஷ்டிக்கப்பட்டவைகளோ அல்லது சிருஷ்டிக்கப்படாத ஜீவிகளோ தேவனுடைய செயல்களுக்கு மாற்றாகவோ அல்லது அவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது, அவர் சோதோமை அழிக்கும்பொழுதும், நினிவேயை இரட்சிக்கும்பொழுதும் அவருக்கு மாற்றாகவோ அல்லது அவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. இது தேவனுடைய தனித்துவமான நீதியான மனநிலையின் உண்மையான வெளிப்பாடாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 117

மனிதகுலத்தின் மீதான சிருஷ்டிகரின் உண்மையான உணர்வுகள்

தேவனைப் பற்றி அறிந்துகொள்வது எளிதானது அல்ல என்று மக்கள் அடிக்கடி கூறுவதுண்டு. எப்படியாயினும், நான் கூறுகிறேன், தேவனைப் பற்றி அறிந்துகொள்வது ஒரு கடினமான விஷயமேயல்ல. ஏனெனில் மனிதன் தம்முடைய கிரியைகளைப் பார்க்கும்படிக்கு தேவன் அதை அடிக்கடி காட்சிப்படுத்துகிறார். மனிதகுலத்தோடு உரையாடுவதையும் தேவன் ஒருபோதும் நிறுத்திவிடவும் இல்லை, தம்மை மறைத்துக்கொள்ளவும் இல்லை. அவருடைய எண்ணங்கள், அவருடைய யோசனைகள், அவருடைய வார்த்தைகள் மற்றும் அவருடைய கிரியைகள் யாவும் மனித குலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே மனிதன் தேவனை அறிய விரும்புகிற வரை எல்லாவித வழிகளிலும் மற்றும் முறைகளிலும் அவரை புரிந்துகொள்ளவும் மற்றும் அறிந்துகொள்ளவும் முடியும். தேவன் தம்மைக் குறித்து அறியப்படுவதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார், தேவன் வேண்டுமென்றே தம்மை மனிதகுலத்திற்கு மறைத்திருக்கிறார், தம்மை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் மனிதனை அனுமதிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை, என்று மனிதன் கண்மூடித்தனமாகக் கூறுவதின் காரணமென்னவென்றால், மனிதன் தேவன் யாரென்று அறியவுமில்லை, தேவனைப் புரிந்துக்கொள்ள விரும்பவுமில்லை. அதற்கும் மேலாக சிருஷ்டிகருடைய எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது கிரியைகளின் மீது அவன் அக்கறை கொள்ளவுமில்லை…. உண்மையைக் கூறுவதென்றால், ஒரு மனிதன் தன்னுடைய மீதியான நேரத்தைச் சிருஷ்டிகரின் வார்த்தைகளை அல்லது கிரியைகளை அறிந்துகொள்ள பயன்படுத்தினால், சிருஷ்டிகரின் எண்ணங்களை மற்றும் அவருடைய இருதயத்தின் சத்தத்தைக் கேட்கச் சிறிது கவனத்தைச் செலுத்தினால், அந்த மனிதனுக்குச் சிருஷ்டிகருடைய எண்ணங்களும், வார்த்தைகளும் மற்றும் கிரியைகளும் காணக்கூடியதாகவும், வெளியரங்கமாயும் இருக்கும் என்பதை அந்த நபர் அறிந்துகொள்ளக் கடினமாக இருக்காது. அதேப்போன்று மனிதருக்குள்ளே சிருஷ்டிகர் எல்லா காலங்களிலும் இருக்கிறார், அவர் மனிதனோடும் மற்றும் ஒட்டுமொத்த சிருஷ்டிகளோடும் எப்போதும் உரையாடலில் இருக்கிறார், மேலும் அவர் ஒவ்வொரு நாளும் புதிய கிரியைகளை நடப்பித்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள மனிதனுக்கு ஒரு சிறிய முயற்சியே போதுமானது. அவருடைய இயல்பும் மனநிலையும் மனிதனுடனான அவருடைய உரையாடலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவருடைய எண்ணங்கள் மற்றும் யோசனைகள் எல்லாம் அவருடைய கிரியைகளில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர் மனிதகுலத்தோடு எல்லாக் காலத்திலும் உடன் இருந்து, கவனித்துக் கொண்டு இருக்கிறார். “நான் பரலோகத்திலிருக்கிறேன், நான் என் சிருஷ்டிகளுக்குள் இருக்கிறேன், நான் அவற்றைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறேன்; நான் காத்துக்கொண்டிருக்கிறேன்; நான் உங்கள் பக்கமிருக்கிறேன்….” என்ற வார்த்தைகளால் மனிதகுலத்தோடும், அனைத்து சிருஷ்டிகளோடும் அவர் அமைதியாய் பேசுகிறார். அவருடைய கரங்கள் இதமாயும், உறுதியாயும் இருக்கிறது; அவருடைய அடிச்சுவடுகள் இலகுவானவை; அவருடைய சத்தம் மென்மையானது மற்றும் கிருபையுள்ளது; அவருடைய வடிவம் மனிதகுலத்தைத் தழுவி கடந்துப்போய் மறுபடியும் திரும்புகிறது; அவருடைய முகத்தோற்றம் அழகானது மற்றும் மென்மையானது. அவர் ஒருபொழுதும் விட்டு விலகுவதில்லை, ஒருபொழுதும் மறைந்து போவதில்லை; மனித குலத்தை விட்டு விலகாமல் இரவும் பகலும் அவர் அவர்களோடு இருக்கிறார். மனித குலத்தின் மீதான அவருடைய அர்ப்பணிப்பான பராமரிப்பும், விசேஷமான பாசமும், மற்றும் மனிதன் மீதான அவருடைய அக்கறையும், அன்பும் அவர் நினிவே பட்டணத்தை இரட்சிக்கும் சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தப்பட்டது. குறிப்பாக யேகோவா தேவனுக்கும் யோனாவிற்கும் இடையேயான வார்த்தைப் பரிமாற்றங்கள் அவர் தாம் படைத்த மனிதன் மீது சிருஷ்டிகருடைய பரிவை வெளிப்படுத்துகிறது. அந்த வார்த்தைகளின் மூலம் நீங்கள் தேவனுடைய உண்மையான உணர்வைக் குறித்து ஓர்ஆழ்ந்த புரிதலைப் பெற முடியும் …

கீழ்க்காணும் வசனப்பகுதியானது யோனாவின் புத்தகம் 4:10-11 உள்ள வசனங்களில் பதிவிடப்பட்டுள்ளது. “அதற்குக் கர்த்தர்: நீ நட்டு வைக்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரே இராத்திரியிலே மடிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக நீ இப்படி பரிதாபப்படுகிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வேறுபாடு தெரியாத இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு மிகுதியான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா என்றார்.” என்றார். இவை தேவனுக்கும் யோனாவுக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலில் பதிவிடப்பட்டுள்ள யேகோவா தேவனுடைய உண்மையான வார்த்தைகள். இந்த வார்த்தைப் பரிமாற்றங்கள் சுருக்கமாக இருந்தாலும், இது மனிதகுலத்தின் மீதான சிருஷ்டிகருடைய அக்கறையையும், மனிதகுலத்தைக் கைவிட அவர் தயங்குவதையும் காட்டுகிறது. இந்த வார்த்தைகள் சிருஷ்டிகள் மீது தேவன் தம்முடைய இருதயத்தில் கொண்டிருக்கும் அவருடைய உண்மையான மனப்பான்மையையும் மற்றும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. மனிதனால் அரிதாகக் கேட்கக்கூடிய இந்தத் தெளிவான மற்றும் துல்லியமான வார்த்தைகளின் மூலம் தேவன் மனிதகுலத்திற்கான தம்முடைய உண்மையான நோக்கத்தை அறிவிக்கிறார். இந்த வார்த்தைப் பரிமாற்றமானது தேவன் நினிவே மக்கள் மீது கொண்ட மனப்பான்மையைக் குறிப்பிடுகிறது—ஆனால் இது எவ்வகையான மனப்பான்மை? இந்த மனப்பான்மையானது நினிவே மக்கள் மனந்திரும்புவதற்கு முன்னும் அதற்குப் பின்னுமானதும் மற்றும் அவர் மனித குலத்தை நடத்தும் மனப்பான்மையாகும். இந்த வார்த்தைகளுக்குள்ளே அவருடைய எண்ணங்களும் இயல்புகளும் அடங்கியிருக்கின்றன.

இந்த வார்த்தைகளில் தேவனுடைய எந்த எண்ணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன? நீங்கள் வாசிக்கும்போது அந்த விவரங்கள் மேல் கவனம் செலுத்துவீர்களென்றால், “பரிதாபம்” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துகிறதை நீங்கள் கவனிப்பது கடினமாக இருக்காது; இந்த வார்த்தையின் பயன்பாடானது மனித குலத்தை நோக்கி தேவனுடைய உண்மையான மனப்பான்மையைக் காட்டுகிறது.

உண்மையான அர்த்தத்தின்படி, “பரிதாபம்” என்ற வார்த்தையை மக்கள் பல விதங்களில் மொழிபெயர்க்கக் கூடும். முதலாவதாக, இதன் அர்த்தமானது “அன்புக்கூருவது மற்றும் பாதுக்காப்பது, ஒன்றின் மீது பரிவாக உணர்வது;” இரண்டவதாக இதன் அர்த்தமானது “பிரியமுடன் நேசிப்பது” என்பவையாகும்; மற்றும் இறுதியாக இதன் அர்த்தமானது “ஒன்றை அவமானப்படுத்த விருப்பமில்லாமலிருப்பது மற்றும் அப்படிச் செய்வதற்கு இயலாமல் இருப்பது”. சுருக்கமாகக் கூறுவதென்றால், இந்த வார்த்தையானது மென்மையான பாசத்தையும் மற்றும் அன்பையும் அத்துடன் யாரோ ஒருவரை அல்லது ஒன்றை விட்டுவிட விருப்பமில்லாமலிருப்பதையும் குறிப்பிடுகிறது; இந்த வார்த்தையானது மனிதக் குலத்தை நோக்கிய தேவனுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது. மனிதர்கள் சாதாரணமாகப் பேசும் இந்த வார்த்தையை தேவன் பயன்படுத்தினார், மேலும் இது தேவனுடைய இருதயத்தின் சத்தத்தையும் மற்றும் மனிதகுலத்தை நோக்கிய அவருடைய மனப்பான்மையையும் வெட்ட வெளிச்சமாக்கக் கூடியதாக இருக்கிறது.

சோதோம் மக்களைப் போல சீர்கேடான, துன்மார்க்கமான மற்றும் வன்முறையான மக்களால் நினிவே நகரமானது நிரம்பி இருந்தாலும், அவர்களுடைய மனமாற்றமானது தேவனுடைய இருதயத்தை மாற்றுகிறதாகவும் மற்றும் அவர்களை அழிக்காதப்படி தீர்மானிக்கவும் செய்தது. தேவனுடைய வார்த்தைகளையும், கட்டளைகளையும் அவர்கள் நடத்திய விதம், சோதோமிய குடிகளின் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறுப்பட்ட அணுகுமுறை, தேவனுக்கு அவர்களுடைய நேர்மையான சமர்ப்பணம், மற்றும் பாவத்திலிருந்து அவர்களுடைய நேர்மையான மனந்திரும்புதல் அத்துடன் அவர்களுடைய உண்மையான மற்றும் எல்லா வித காரியங்களிலும் இருதயத்தில் உணர்ந்த நடத்தை ஆகியவற்றின் காரணத்தினால் தேவன் மீண்டுமொருமுறை தம்முடைய சொந்த இருதயத்திலிருந்து உணரப்பட்ட பரிதாபத்தை வெளிப்படுத்தி, அதை அவர்கள் மீது பொழிந்தருளினார். தேவன் மனிதகுலத்தின்மேல் அருளுகிறவற்றையும், மனித குலத்தை நோக்கிய அவருடைய பரிதாபத்தையும் அவர் தருவதைப்போன்று எவரும் தர முடியாது, மற்றும் தேவனுடைய இரக்கத்தையும், அவருடைய சகிப்புத்தன்மையையும், அல்லது மனித குலத்தின் மேல் அவர் கொண்டிருக்கிற உண்மையான உணர்வை கொண்டிருப்பதும் எந்த மனிதனுக்கும் சாத்தியமில்லாதது. மனிதகுலத்தின் மீது அல்லது சிருஷ்டிப்புகளின் மீது இப்படிப்பட்ட அறிக்கையைத் தரும் பெரிய மனிதராக அல்லது மனுஷியாக அல்லது தங்கள் உயர் நிலையிலிருந்து பேசும் இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதராக, ஒரு பெரும் மனிதராக, மனுஷியாக நீ கருதுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? தங்கள் உள்ளங்கையை அறிந்திருப்பது போல மனித வாழ்வை அறியக்கூடியவர் இந்த மனிதகுலத்தின் மத்தியில் யாராவது ஒருவர் உண்டா? மனிதகுலத்திலிருக்கிற பாரங்களை சுமக்கவும், பொறுப்பாளியாக இருக்கவும் தக்கவர் யார்? ஒரு நகரத்தின் அழிவை அறிவிக்கும் தகுதியுடையவர் யார்? மற்றும் ஒரு பட்டணத்தை மன்னிக்கத்தக்கவர் யார்? தனது சொந்த படைப்புகள் மீது பரிதாபப்படுவதாக யார் கூறக்கூடும்? சிருஷ்டிகர் மட்டுமே இப்படி கூற முடியும்! இந்த மனித குலத்தின் மீது பரிவைக் காட்ட சிருஷ்டிகரால் மட்டுமே முடியும். சிருஷ்டிகர் மட்டுமே மனிதக் குலத்தின் மீது மனதுருக்கத்தையும் மற்றும் பாசத்தையும் காட்ட முடியும். இந்த மனிதக் குலத்திற்கு சிருஷ்டிகர் மட்டுமே உண்மையான, தகர்த்தெறிய முடியாத பாசத்தையும் உடையவர். அதே போல சிருஷ்டிகர் மட்டுமே மனிதகுலத்தின் மீது இரக்கத்தையும், மற்றும் தம்முடைய சிருஷ்டிகளின் மீது பரிதாபத்தையும் பொழியக்கூடியவர். ஒவ்வொரு மனிதனுடைய செயல்களுக்காகவும் அவருடைய இருதயம் துடிக்கிறது மற்றும் வேதனைப்படுகிறது: அவர் கோபப்படுகிறார், துன்பப்படுகிறார், மனிதனுடைய பொல்லாப்பிற்கும் சீர்கேட்டிற்கும் துக்கப்படுகிறார்; மனிதனுடைய மனமாற்றத்திற்காகவும் மற்றும் விசுவாசத்திற்காகவும் அவர் பிரியப்படுகிறார், சந்தோஷப்படுகிறார், மன்னிக்கிறவராக இருக்கிறார் மற்றும் வெற்றி உவகைக் கொள்கிறார்; அவருடைய ஒவ்வொரு எண்ணங்களும் யோசனைகளும் மனிதகுலத்திற்காகவே மற்றும் அதை சுற்றியே சுழல்கிறது; அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன வைத்துக்கொண்டிருக்கிறார் என்பவைகள் முழுவதும் மனிதருக்காகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன; அவருடைய உணர்வின் பூரணமானது மனிதகுலத்தின் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. மனிதகுலத்திற்காகவே அவர் பயணிக்கிறார் மற்றும் விரைந்து செயல்படுகிறார்; அவர் தம்முடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அமைதியாக தருகிறார்; அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் விநாடியையும் அர்ப்பணிக்கிறார்…. தம்முடைய வாழ்வை எவ்வாறு நேசிப்பது என்று அவர் ஒருபொழுதும் அறியார், இருப்பினும் தாம் உண்டாக்கின மனிதகுலத்தின் மீது எப்பொழுதும் பரிதாபப்படுகிறார்…. தம்மிடமுள்ள யாவற்றையும் அவர் மனித குலத்திற்காகத் தருகிறார்…. அவர் தம்முடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் நிபந்தனையில்லாமலும், கைமாறு எதிர்பார்க்காமலும் அருளுகிறார். அவருடைய கண்களுக்கு முன்பாக மனித குலமானது தொடர்ந்து ஜீவிக்கும்படியாகவும், வாழ்விற்கான அவருடைய போஷிப்பை பெறும்படியாகவும் அவர் இப்படிச் செய்கிறார். மனித குலம் அவருக்குக் கீழ்படிந்து அவர் மட்டுமே மனிதனுடைய ஜீவிதத்தை வளமாக்குகிறவர், எல்லா சிருஷ்டிகளின் வாழ்விற்குத் தேவையானவற்றை வழங்குகிறவர் என்று ஒரு நாள் அவரை அறிந்துகொள்வார்கள் என்பதற்காக மட்டுமே அவர் இப்படிச் செய்கிறார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 118

யோனா 4  ஆனால் அது யோனாவை மிகவும் அதிருப்திப்படுத்தியது, அவன் கடுங்கோபம் கொண்டு யேகோவாவிடம்: யேகோவாவே, நான் என் நாட்டில் இருந்தபோது இதைத்தான் சொன்னேனஅல்லவா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; ஏனென்றால் நீர் கிருபைகொண்ட, இரக்கமுள்ள தேவன் என்றும், நீடிய பொறுமையும் நிறைவான அன்பும் கொண்டவர் என்றும், தீங்கு குறித்து மனம்வருந்தும் தேவனென்றும் அறிவேன். ஆகையால் யேகோவாவே, இப்போதே என் உயிரை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும், ஏனென்றால் நான் வாழ்வதினும் மரிப்பது நன்று என்றான். அதற்கு யேகோவா, நீ கோபம்கொள்வது சரியா? என்றார். ஆகவே, யோனா நகரத்தை விட்டு வெளியேறி, நகரின் கிழக்குப் பகுதிக்குச் சென்று, அங்கே ஒரு குடிசை அமைத்து, நகரத்திற்கு சம்பவிக்கப்போகிறதை காணுமட்டும் நிழலில் உட்கார்ந்திருந்தான். யேகோவா தேவன், யோனாவின் தலைக்கு மேல் நிழலாக இருக்கும்படியும் அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கும்படியும் ஆமணக்குச் செடியொன்றை முளைக்கச் செய்தார். அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனாவும் மகிழ்ச்சியுற்றான். ஆனால் மறுநாள் கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு புழுவை அனுப்பினார், அது ஆமணக்குச் செடியை அரிக்க, அது காய்ந்துபோயிற்று. சூரியன் உதித்தபோது, கிழக்கிலிருந்து வெப்பக் காற்று வரும்படி தேவன் கட்டளையிட்டார்; உச்சிவெயில் யோனாவின் தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோனான்; தனக்குள்ளே சாவை விரும்பி: நான் வாழ்வதினும் மரிப்பது நன்று என்றான். அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்குச் செடியைக் குறித்து கோபங்கொள்வது சரியா என்றார்; அதற்கு அவன், நான் மரண பரியந்தமும் கோபமாயிருப்பது சரியே என்றான். அதற்குக் கர்த்தர்: நீ நட்டு வைக்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரே இராத்திரியிலே மடிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக நீ இப்படி பரிதாபப்படுகிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வேறுபாடு தெரியாத இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு மிகுதியான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா என்றார்.

சிருஷ்டிகர் மனித குலத்திற்காக தன்னுடைய உண்மையான உணர்வை வெளிப்படுத்துகிறார்

யேகோவா தேவனுக்கும் மற்றும் யோனாவிற்கும் இடையே நடந்த இந்த உரையாடலானது மனிதகுலத்தின் மீதான சிருஷ்டிகருடைய உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடு என்பதில் சந்கேமில்லை. ஒரு புறத்தில் யேகோவா தேவன் சொன்னது போல, “வலதுகைக்கும் இடதுகைக்கும் வேறுபாடு தெரியாத இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு மிகுதியான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா?” என்று கூறுவதில் தம்முடைய ராஜரீகத்தின் கீழ் எல்லா சிருஷ்டிகளைக் குறித்த சிருஷ்டிகருடைய புரிதலை இது அறிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் நினிவேயைக் குறித்த தேவனுடைய புரிதலானது மேம்போக்கான ஒன்றல்ல. அந்த நகரத்திலுள்ள உயிரினங்களின் (மக்கள் மற்றும் மிருக ஜீவன்கள்) எண்ணிக்கையை அவர் அறிந்தது மட்டுமன்றி, எத்தனைப்பேர் வலது கரத்திற்கும் இடது கரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அதாவது எத்தனை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். மனித இனத்தைக் குறித்த தேவனுடைய பரந்தப் புரிதலுக்கு உறுதியான ஓர் ஆதாரமிது. இந்த உரையாடலானது மக்கள் மீதான சிருஷ்டிகருடைய மனப்பான்மையை அறிவிக்கிறது, அதாவது சிருஷ்டிகருடைய இருதயத்தில் மனிதகுலத்தைக் குறித்த பாரம் என்று இதைச் சொல்லாம். இது யேகோவா தேவன் “நீ நட்டு வைக்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரே இராத்திரியிலே மடிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக நீ இப்படி பரிதாபப்படுகிறாயே. நினிவே என்ற மாநகருக்காக நான் பரிதாபப்பட மாட்டேனா…?” என்று கூறினது போன்றதாகும். இவைகள் யோனாவை நோக்கிக் கடிந்துக்கொண்ட தேவனுடைய வார்த்தைகள், ஆனால் அவைகள் எல்லாம் உண்மையானவைகள்.

நினிவே மக்களுக்கு யேகோவா தேவனுடைய வார்த்தையை அறிவிக்கும் பொறுப்பு யோனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவன் யேகோவா தேவனுடைய நோக்கத்தைப் புரிந்துக்கொள்ளவில்லை, அந்த நகர மக்களுக்கான அவருடைய கவலையையும் மற்றும் எதிர்ப்பார்ப்பையும் அவன் புரிந்துக்கொள்ளவில்லை. இந்தக் கண்டிப்பில், மனிதகுலமானது தேவனுடைய கரங்களின் கிரியை என்பதை அவனுக்கு அவர் எடுத்துச்சொல்ல விரும்பினார், ஒவ்வொரு தனிநபரும் தேவனுடைய எதிர்ப்பார்ப்பைத் தங்கள் தோள்களின் மீது சுமந்துச் செல்லும்படிக்கும் மற்றும் ஒவ்வொரு தனி நபரும் தங்களுடைய வாழ்விற்கு தேவன் அளித்தவற்றை அனுபவிக்கும்படிக்கும் அவர் ஒவ்வொரு தனிநபர் மீதும் தம்முடைய கடின முயற்சியைப் பயன்படுத்தியிருக்கிறார், ஏனெனில் ஒவ்வொருவருக்காகவும் கடின முயற்சி என்ற விலையைக் கொடுத்து இருக்கிறார். இந்தக் கடிந்துக்கொள்ளுதலானது யோனா ஆமணக்குச் செடி மீது பரிதாபப்பட்டதுபோல தேவன் தம்முடைய சொந்தக் கரங்களின் கிரியைகளாகிய மனித குலத்திற்காகப் பரிதாபப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. அந்த நகரத்தில் பல குழந்தைகள் மற்றும் ஒன்றுமறியாத மிருக ஜீவன்கள் இருக்கிற காரணத்தினால் மனித குலத்தை தேவன் அவ்வளவு எளிதில் அல்லது சாத்தியமாகும் கணப்பொழுதுவரை எவ்விதத்திலும் அழிக்கமாட்டார். வலது கரத்திற்கும் இடது கரத்திற்கும் வித்தியாசம் தெரியாத தேவனுடைய கிரியைகளான இளைஞர்களோடு இடைபடும்போது தேவன் அவர்களுடைய வாழ்வை முடிப்பது மற்றும் அவர்களுடைய முடிவை அவசரகதியில் தீர்மானிப்பது சிறியதாகக் கருதப்பட்டது. அவர்கள் வளருவதைப் பார்க்க தேவன் விரும்பினார், அவர்கள் அவர்களுடைய முன்னோர்கள் சென்ற பாதையில் செல்ல மாட்டார்கள், அவர்கள் யேகோவா தேவனின் எச்சரிக்கையை மறுபடியும் கேட்கக் கூடாது என நம்பினார், அவர்கள் நினிவேயின் கடந்த காலத்திற்கு அத்தாட்சியாக இருப்பார்கள் என அவர் நம்பினார். சற்றுக் கூடுதலாக சொல்வதென்றால் தேவன் நினிவே நகரத்தை அது மனந்திரும்பின பிறகு பார்க்க விரும்பினார், மனந்திரும்புதலைப் பின்தொடர்ந்து அதன் எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினார், மிக முக்கியமாக நினிவே நகரம் தேவனுடைய இரக்கத்தின் கீழ் மறுபடியும் வாழ்வதை விரும்பினார். ஆகையால் தேவனுடைய கண்களில் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத அந்தச் சிருஷ்டிகள் நினிவேயின் எதிர்காலமாக இருந்தனர். அவர்கள் யேகோவா தேவனின் வழிகாட்டுதலின் கீழ் நினிவேயின் கடந்த காலம் மற்றும் அதனுடைய எதிர்காலம் ஆகிய இரண்டிற்கும் சாட்சியாக இருக்கும் முக்கியமான வேலையைச் சுமப்பது போன்று, நினிவேயின் அருவருக்கத்தக்கக் கடந்தகாலத்திற்கும் சாட்சியைச் சுமப்பார்கள். அவருடைய உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த அறிவிப்பில், யேகோவா தேவன் மனிதகுலத்திற்குச் சிருஷ்டிகரின் இரக்கத்தை அதனுடைய நிறைவான அளவில் அளித்தார். “சிருஷ்டிகரின் இரக்கம்” என்பது வெறும் சொற்றொடருமல்ல, வெற்று வாக்குத்தத்தமுமல்ல; அது உறுதியான கோட்பாட்டையும், முறைகளையும், நோக்கங்களையும் கொண்டது. தேவன் உண்மையுள்ளவராகவும், மெய்யானவராகவும் இருக்கிறார், அவர் பொய்யானவற்றைப் பயன்படுத்துவதில்லை அல்லது வேஷம் மாறுவதில்லை, இதைப்போன்று மனிதகுலத்தின் மீது அவருடைய இரக்கம் எல்லா நேரத்திலும் எல்லாக் காலங்களிலும் முடிவில்லாமல் பொழியப்பட்டிருக்கிறது. எப்படியாயினும், அவர் மனிதகுலத்திற்கு ஏன் இரக்கம் காட்டுகிறார் மனித குலத்திற்கு அவர் எவ்வாறு இரக்கம் காட்டுகிறார் மனித குலத்தின் மேல் எவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார் மற்றும் மனித குலத்திற்கான அவருடைய உண்மையான உணர்வுகள் எவை என்பதற்கு யோனாவுடன் பரிமாறப்பட்ட அறிக்கை ஒன்றே இன்று வரை பிரத்தியேக வாய்மொழி அறிக்கையாக இருக்கிறது. யேகோவா தேவனுடைய சுருக்கமான வார்த்தைகள் இந்த உரையாடலில் மனித குலத்துடனான அவருடைய எண்ணங்களை ஒருங்கிணைத்து முழுமையாக வெளிப்படுத்துகிறது; அவைகள் மனித குலத்துடனான அவருடைய இருதயத்தினுடைய அணுகுமுறையின் உண்மையான ஒரு வெளிப்பாடு, மேலும் அவைகள் மனித குலத்தின் மீது அவர் பொழிந்த இரக்கத்திற்கான உறுதியான ஆதாரம். அவருடைய இரக்கமானது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எப்பெழுதும் பொழியப்படுவதுப்போன்று, மனிதகுலத்தின் மூத்தவர்கள் மீது மட்டுமில்லாமல், மனிதகுலத்தின் இளைய உறுப்பினர்கள் மீதும் பொழியப்பட்டது. தேவனுடைய கோபமானது மனிதகுலத்தின் ஒரு சில மூலைகளில் மற்றும் ஒரு சில காலங்களில் அவ்வப்போது கீழிறங்கி வந்தாலும், தேவனுடைய இரக்கமானது ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. அவருடைய சிருஷ்டிகளை ஒரு தலைமுறைக்குப் பிறகு மற்றுமொரு தலைமுறைக்கு வழிநடத்துகிறார் மற்றும் வழிவகுக்குகிறார் ஒரு தலைமுறைக்குப் பின்னர் அடுத்த தலைமுறையை நேசிக்கிறார், ஏனெனில் யேகோவா தேவன் “நான் பரிதாபப்பட மாட்டேனா…?” என்று கூறினது போன்று மனிதகுலத்தை நோக்கிய அவருடைய உண்மையான உணர்வுகள் ஒருபோதும் மாறாதவை. அவர் தம்முடைய சொந்தச் சிருஷ்டிப்புகளுக்காக எப்பொழுதும் பரிதாபப்படுகிறார். இந்த இரக்கமானது சிருஷ்டிகருடைய நீதியின் இயல்பாகவும் மற்றும் சிருஷ்டிகருடைய முழுத் தனித்துவமாகவும் இருக்கிறது!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 119

ஐந்து வகையான ஜனங்கள்

அப்படியே சற்றுக் கடந்துச் சென்று, நீங்கள் இருக்கிற உங்களுடைய இப்போதைய நிலையையும், இப்போதைய அந்தஸ்தையும் நீங்கள் அறியும்படிக்கு, தேவனைப் பின்பற்றுகிறவர்களை, தேவனைப் பற்றிய அவர்களுடைய புரிந்துக்கொள்ளளுதலுக்கேற்றவாறும், அவருடைய நீதியான மனநிலையைக் குறித்த அனுபவத்தின்படியும் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்போகிறேன். தேவனைப் பற்றிய மக்களின் அறிவு மற்றும் தேவனுடைய நீதியான மனநிலையைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றைக் குறித்து மக்கள் பெற்றிருக்கிற வெவ்வேறு நிலைகள் மற்றும் உயரங்கள் அல்லது அந்தஸ்துகள் ஆகியவை பொதுவாக ஐந்து வகையாகப் பிரிக்கலாம். இந்தத் தலைப்பானது தனித்துவமான தேவனை அறிதல் மற்றும் அவருடைய நீதியான மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்தப் பின்வரும் உள்ளடக்கத்தை நீங்கள் படிக்க்கும் போது, தேவனுடைய தனித்துவத்தைப் பற்றியும், அவருடைய நீதியான மனநிலையைப் பற்றியும் உங்களுக்கு எவ்வளவு புரிதல் மற்றும் அறிவு இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டுப்பிடிக்கக் கவனமாய் முயற்சி செய்யுங்கள், அதன் பின்னர் அதன் முடிவைப் பயன்படுத்தி நீங்கள் எந்த நிலையைச் சார்ந்திருக்கிறீர்கள், உங்களுடைய உண்மையான உயரம் எவ்வளவாக இருக்கிறது, நீங்கள் உண்மையாகவே எவ்வகையான மனிதர் என்பதை நிதானியுங்கள்.

முதலாம் வகை: துணிகளில் சுற்றப்பட்ட குழந்தையின் நிலை

“துணிகளில் சுற்றப்பட்ட குழந்தையின் நிலை” என்பதின் பொருள் என்ன? துணிகளில் சுற்றப்பட்ட ஒரு குழந்தையின் நிலையானது, புதிதாகப் பிறந்த, தற்போதுதான் உலகத்தில் வந்த ஒரு குழந்தையைப் போன்றது. இது ஜனங்களின் மிகவும் முதிர்ச்சியற்ற நிலையாகும்.

இந்த நிலையிலுள்ள ஜனங்கள் தேவனில் கொண்டிருக்கும் விசுவாசத்தைப் பற்றிய காரியங்களில் விழிப்புணர்வையோ அல்லது உணர்வையோ கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் எல்லாவற்றையும் குறித்துக் குழப்பமாகவும், அறியாமையிலும் இருக்கிறார்கள். இந்த ஜனங்கள் நீண்ட நாளாகவோ அல்லது ஒருவேளை மிக நீண்ட நாட்களாக இல்லாமலோ தேவன் பேரில் விசுவாசம் கொண்டிருக்கலாம், ஆனால் அவர்களுடைய குழப்பமும், அறியாமையின் நிலையும் மற்றும் அவர்களுடைய உண்மையான உயரமும் அவர்களை துணிகளில் சுற்றப்பட்ட குழந்தை நிலையில் கொண்டு வந்து வைத்து விடுகிறது. துணிகளில் சுற்றப்பட்ட நிலையிலுள்ள ஒருவனுடைய நிலையைக் குறித்தத் துல்லியமான விளக்கம் என்னவென்றால்: இவ்வகையான மனிதன் எவ்வளவு நாள் தேவன் பேரில் விசுவாசமாக இருந்தாலும், அவர்கள் எப்பொழுதும் மனக்குழப்பமும், கலக்கமும் மற்றும் எளிய எண்ணமுடையவர்களாகவும் இருப்பார்கள்; அவர்கள் தாங்கள் தேவன் பேரில் எதற்கு விசுவாசம் கொண்டிருக்கிறோம் என்றோ அல்லது தேவன் எப்படிப்பட்டவர் அல்லது தேவன் யார் என்றோ அறியாதவர்கள். அவர்கள் தேவனைப் பின்பற்றினாலும், அவர்களுடைய இருதயத்தில் தேவனைக் குறித்தான தெளிவான விளக்கம் கிடையாது. அவர்கள் உண்மையிலேயே தேவனை மட்டுமே விசுவாசித்து பின்பற்றவது ஒருபுறமிருந்தாலும், தாங்கள் தேவனைத்தான் பின்பற்றுகிறோமா என்று அவர்களால் தீர்மானிக்க முடியாது. இந்த வகையிலுள்ள மனிதனின் உண்மையான நிலை இதுதான். இந்த ஜனங்களின் எண்ணங்கள் தெளிவற்றவை, எளிமையானவை, அவர்களுடைய விசுவாசமானது குழப்பம் நிறைந்தது. அவர்கள் எப்பொழுதும் குழப்பம் மற்றும் வெறுமை நிலையிலேயே இருக்கிறார்கள்; “மனக்குழப்பம்” “கலக்கம்” மற்றும் “எளிமையான எண்ணங்கள்” ஆகியவை இவர்களுடைய நிலையைக் குறித்துச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றன. அவர்கள் தேவனை ஜீவிக்கிறவராகப் பார்ப்பதுமில்லை, உணர்வதுமில்லை, எனவே தேவனை அறிவதைப் பற்றி அவர்களிடம் பேசுவது பழங்கால எழுத்து முறையில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைப் படிக்க வைப்பது போன்றதாகும்—அவர்கள் ஒருபொழுதும் அதைப் புரிந்துக்கொள்ளவும் மாட்டார்கள், ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை தேவனைப் பற்றி அறிந்துகொள்வது என்பது ஓர் அருமையான கதையைக் கேட்பது போன்றதாகும். அவர்களுடைய எண்ணங்கள் தெளிவில்லாமல் இருக்கும்போது, தேவனைப் பற்றி அறிந்துகொள்வது முற்றிலும் நேர விரயம் மற்றும் வீண் முயற்சி என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதுதான் முதலாம் வகை மனிதன்: துணிகளில் சுற்றப்பட்ட குழந்தை.

இரண்டாம் வகை: பால் குடிக்கும் கைக்குழந்தை

துணிகளில் சுற்றப்பட்ட குழந்தையோடு ஒப்பிடுகையில், இந்த வகை மனிதன் சற்று முன்னேற்றத்தை உண்டாக்கி இருக்கிறான். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களுக்கு தேவனைப் பற்றி இன்னும் எந்தப் புரிதலும் இல்லை. தேவனைக் குறித்த தெளிவான புரிதலிலும், தேவனைப் பற்றிய நுண்ணறிவிலும் அவர்கள் இன்னமும் குறைபாடுள்ளவர்களாக இருக்கிறார்கள், தேவனை எதற்கு விசுவாசிக்க வேண்டும் என்பதைக் குறித்த தெளிவுமிக்கவர்களாக அவர்கள் இல்லை, ஆனாலும் அவர்களுடைய இருதயங்களில் அவர்களுடைய சொந்த நோக்கங்களையும், தெளிவான சிந்தனைகளையும் உடையவர்களாக இருக்கிறார்கள். தேவன் பேரில் விசுவாசம் கொள்வது சரியானதா என்பதைக் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. தேவன் பேரில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் அவர்கள் தேடும் காரணமும் நோக்கமும் என்னவென்றால் அவருடைய கிருபையை அனுபவிப்பதும், சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்வதும், வசதியான வாழ்க்கை வாழ்வதும், தேவனுடைய அரவணைப்பையும், பாதுகாப்பையும் அனுபவிப்பதும் மற்றும் தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் வாழ்வதுமேயாகும். அவர்கள் தேவனைக் குறித்த அறிவின் அளவைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை; தேவனைக் குறித்த புரிதலைத் தேட அவர்களுக்கு எந்த வாஞ்சையுமில்லை, தேவன் என்ன செய்கிறார், அவர் என்ன செய்யச் சித்தம் கொள்கிறார் என்பதைக் குறித்த எந்த அக்கறையுமில்லை. அவர்கள் அவருடைய கிருபையை அனுபவிப்பதற்கும் அவருடைய ஆசீர்வாதங்களை அதிகமாகப் பெறுவதற்காக மட்டுமே கண்மூடித்தனமாக அவரைத் தேடுகிறார்கள்; அவர்கள் தற்காலத்திலும், எதிர் வரப் போகிற நித்திய காலத்திலும் நூறத்தனையாய் நன்மைகளைப் பெறுவதற்காக அவரைத் தேடுகிறார்கள். அவர்களுடைய யோசனைகளும், அவர்கள் தங்களை எவ்வளவு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும், அவர்களுடைய அர்ப்பணிப்பும் மற்றும் பாடுகளும் ஆகிய அனைத்தும் தேவனுடைய கிருபையையும், ஆசீர்வாதங்களையும் பெறும் நோக்கத்தையே பகிர்ந்துக்கொள்கின்றன. மற்ற எதைக் குறித்தும் அவர்களுக்கு அக்கறையில்லை. தேவன் ஜனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும், அவருடைய கிருபையை அவர்கள் மீது பொழியப்பண்ணுவார் என்பதில் மட்டுமே இவ்வகையான மனிதன் உறுதியாக இருக்கிறான். மனிதனை தேவன் ஏன் இரட்சிக்க விரும்புகிறார் என்பதிலோ, தேவன் தம்முடைய வார்த்தைகள் மற்றும் கிரியையின் விளைவைப் பெற விரும்புகிறார் என்பதைக் குறித்த எந்த ஆர்வமோ அல்லது அதைக் குறித்த எந்தத் தெளிவோ அவர்களுக்கு இல்லையென ஒருவர் சொல்லக் கூடும். அவர்கள் தேவனுடைய சாராம்சத்தையும் நீதியான மனநிலையையும் அறிந்துகொள்ள எந்த முயற்சியையும் எடுக்கவில்லை, அப்படிச் செய்ய அவர்கள் ஆர்வங்கொள்ளவுமில்லை. தேவனுடைய கிரியைகளைப் பற்றிக் கேட்க அவர்கள் விரும்பவில்லை, இந்தக் காரியங்களின் மீது கவனம் செலுத்த அவர்கள் ஆர்வக் குறைவாகவும், அவற்றை அறிய விரும்பாமலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனுடைய கிரியைகளைப் பற்றியும், மனிதன் தேவனுக்குச் செய்ய வேண்டியதைப் பற்றியும், தேவனுடைய சித்தம், அல்லது தேவனைச் சார்ந்தவைகள் எதைப் பற்றியும் கேட்க விருப்பமில்லை, மேலும் இவைகளைப் பற்றிக் கேட்க அவர்களுக்கு ஆர்வக் குறைபாடும் உள்ளது. இந்தக் காரியங்கள் யாவும் அவர்கள் அனுபவிக்கிற தேவனுடைய கிருபைக்குத் தொடர்பில்லாதவைகள் என்று அவர்கள் நம்புகிற காரணத்தினால் இப்படி நடக்கிறது, மேலும் அவர்களுடைய சொந்த ஆர்வத்தோடு நேரடியான தொடர்புடைய மற்றும் மனிதன் மீது கிருபையைப் பொழிகிற ஒரு ஜீவிக்கிற தேவனோடு மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், அவர்களுக்கு வேறு எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வமில்லை, எனவே அவர்கள் எத்தனை வருடங்கள் தேவனை விசுவாசித்திருந்தாலும், சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் அவர்களால் பிரவேசிக்க முடியாது. யாராவது அவர்களுக்கு அடிக்கடி தண்ணீர் கொடுக்காமல் அல்லது அவர்களைப் போஷிக்காமல் இருந்தால் தேவனை விசுவாசிக்கும் பாதையில் அவர்கள் தொடருவது கடினம். தங்களுடைய முந்தைய சந்தோஷத்தையும், தேவனுடைய கிருபையையும் அனுபவிக்காமல் போனால், அவர்கள் எளிதில் விலகிச் சென்றுவிடுவார்கள். இது இரண்டாம் வகையான மனிதன்: இந்த மனிதன் பால் குடிக்கும் கைக்குழந்தையின் நிலையில் இருக்கிறான்.

மூன்றாம் வகை: பால் மறக்கும் குழந்தை நிலை, அல்லது இளம் குழந்தை நிலை

இந்த வகை ஜனங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தெளிவான விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறார்கள். தேவனுடைய கிருபையை அனுபவிப்பது மட்டுமே உண்மையான அனுபவத்தைப் பெற்றிருப்பதாக அர்த்தமல்ல என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் மற்றும் கிருபையையும் தேடுவதில் ஒருபோதும் சோர்வடையாவிட்டாலும், அல்லது தேவனுடைய கிருபையின் அனுபவத்தைச் சாட்சியாகப் பகிர்ந்துகொள்ள முடிந்தாலும், அல்லது அவர்கள் மீது பொழியப்பட்ட ஆசீர்வாதங்களுக்காக தேவனை துதித்தாலும், இந்தக் காரியங்கள் அவர்கள் ஜீவனைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையோ அவர்கள் சத்தியத்தின் உண்மையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையோ அர்த்தப்படுத்தாது என்ற விழிப்புணர்வை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியிலிருந்து தொடங்கி, தேவனுடைய கிருபையோடு மட்டுமே இணைந்திருக்க வேண்டுமென்ற பொருந்தாத நம்பிக்கைகளை நிறுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் தேவனுடைய கிருபையை அனுபவித்துக்கொண்டிருக்கும், அதே நேரத்தில் தேவனுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்கள் தேவனுடன் ஒரளவு இணைந்து செயல்பட தங்கள் கடமையைச் செய்யவும், சிறிது கஷ்டத்தையும், சோர்வையும் சகிக்கவும் விரும்புகிறார்கள், எப்படியாயினும், தேவனைத் தொடரும் அவர்களின் விசுவாசம் அதிகக் கலப்படமாக இருக்கிற காரணத்தினாலும், தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் விருப்பங்கள் மிகவும் வலிமையானவைகளாக இருக்கிறப்படியாலும், அவர்களுடைய மனநிலை மிகவும் கர்வமாக இருக்கிறப்படியினாலும், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவது அல்லது தேவனுக்கு உண்மையாக இருப்பது அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாகும். எனவே அவர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பத்தை அடிக்கடி உணர முடிவதில்லை அல்லது தேவனுக்கு அவர்கள் செய்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடிவதில்லை. அவர்கள் தங்களை அடிக்கடி குழப்ப நிலையில் இருப்பவர்களாகவே காண்கிறார்கள்: பெருமளவில் தேவனைத் திருப்திப்படுத்த விரும்புகிறார்கள், இருந்தாலும் அவர்கள் அவரை எதிர்க்கத் தங்கள் முழுப் பலத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் அடிக்கடி தேவனுக்கு பொருத்தனை செய்கிறார்கள், ஆனால் தங்கள் பொருத்தனையைச் சீக்கிரத்திலேயே முறித்துக்கொள்கிறார்கள். மேலும் அவர்கள் தங்களை முரண்பாடுள்ள நிலையிலேயே காண்கிறார்கள்: அவர்கள் தேவனை உண்மையாக விசுவாசிக்கிறார்கள், ஆனால் அவரையும் அவரிடத்திலிருந்து வருகிற எல்லாவற்றையும் மறுதலிக்கிறார்கள்; அவர்கள் தேவன் அவர்களைப் பிரகாசிக்கச் செய்வார், வழி நடத்துவார், போஷிப்பார் மற்றும் உதவிச்செய்வார் என்று ஆவலாய் நம்புகிறார்கள், ஆனாலும் வெளியே வருவதற்கான தங்கள் சொந்த வழியை இன்னமும் தேடுகிறார்கள். அவர்கள் தேவனைப் புரிந்துகொள்ளவும், அறியவும் விரும்புகிறார்கள், ஆனால் அவரிடம் கிட்டிச் சேர விரும்புவதில்லை. மாறாக அவர்கள் எப்பொழுதும் தேவனைத் தவிர்க்கிறார்கள். அவர்களுடைய இருதயமானது அவருக்கு மூடப்பட்டிருக்கின்றன. தேவனுடைய வார்த்தைகள் மற்றும் சத்தியத்தைக் குறித்த அசாதாரணப் புரிதலையும், எழுத்துப்பூர்வமான அர்த்தத்தையும், மற்றும் தேவனைக் குறித்தும், சத்தியத்தைக் குறித்தும் அசாதாரண கருத்தையும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் ஆழ்மனதில் தேவன் உண்மையானவரா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது இன்னமும் தீர்மானிக்கவோ அல்லது தேவன் உண்மையாக நீதியுள்ளவரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவோ அவர்களால் முடிவதில்லை. அவர்களால் தேவன் ஜீவிக்கிறவராக இருக்கிறார் என்பதைத் தவிர அவருடைய மனநிலையையும் மற்றும் சாராம்சத்தையும் கூட தீர்மானிக்க முடிவதில்லை. தேவன் பேரில் அவர்கள் கொண்டுள்ள விசுவாசமானது சந்தேகத்தையும், தவறான புரிதலையும் உடையதாகவும், அது கற்பனைகளையும் மற்றும் தெளிவற்ற கருத்துக்களையும் கொண்டுள்ளதாகவும் இருக்கிறது. அவர்கள் தேவனுடைய கிருபையை அனுபவிக்கும் போது, தேவன் பேரில் கொண்டுள்ள தங்கள் விசுவாசத்தின் அனுபவத்தை விஸ்தரிக்கும்படியாகவும், தேவன் பேரில் கொண்டுள்ள விசுவாசத்தின் புரிந்துகொள்ளுதலை சரிப்பார்த்துக்கொள்ளவும், மற்றும் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட வாழ்வின் பாதையில் நடந்து தங்கள் மாயையைத் திருப்திப்படுத்திக்கொள்ளவும் மற்றும் மனுகுலத்திற்கு ஒரு நீதியை நிலைநிறுத்தவும், முயற்சியை நிறைவேற்றவும் தங்கள் விசுவாசத்தை வளப்படுத்திக்கொள்ள சாத்தியமாகக் கருதுகிறவற்றைத் தயக்கத்துடன் அனுபவிக்கிறார்கள் அல்லது சில சத்தியங்களைக் கடைபிடிக்கிறார்கள். அதே சமயம், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தங்கள் சொந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் இந்தச் செயல்களை எல்லாம் செய்கிறார்கள். இது மனித குலத்திற்கு அதிகமான ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பந்தயம் கட்டுவதில் ஒரு பகுதியாக இருக்கிறது. அவர்கள் தங்கள் இலட்சிய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும், மற்றும் வாழ்நாள் ஆசையை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வரை ஓயமாட்டார்கள். இந்த ஜனங்கள் தேவனுடைய பிரகாசிப்பித்தலை பெறுவது அரிதாக இருக்கிறது, ஏனெனில் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான அவர்களுடைய ஆசை மற்றும் நோக்கம் மட்டுமே அவர்களுக்கு மிகவும் முக்கியமானவைகள். இந்த ஆசையையும் நோக்கத்தையும் விட்டுவிடுவதற்கான எந்த விருப்பமும் அவர்களிடம் இல்லை, உண்மையில் இப்படிச் செய்வதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆசீர்வாதங்களைப் பெறும் ஆசையும், தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வரை ஓயாத ஒரு நீண்ட கால விருப்பமும் இல்லாமல் போனால் தேவனை விசுவாசிக்கும் நோக்கத்தையே இழந்துப்போய்விடுவோமென்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. எனவே அவர்கள் யதார்த்தத்தைச் சந்திக்க விரும்புவதில்லை. அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அல்லது தேவனுடைய கிரியைகளைச் சந்திக்க விரும்புவதில்லை, அவர்கள் தேவனுடைய மனநிலையையும் அல்லது சாராம்சத்தையும் சந்திக்க விரும்பாமல் தேவனை அறிதல் என்ற பாடத்தை மட்டும் அறிய விரும்புகிறார்கள். ஏனெனில் தேவனும், அவருடைய சாராம்சமும், மற்றும் அவருடைய நீதியான மனநிலையும் அவர்களுடைய கற்பனைகளை மாற்றிப்போட்டு விடும், அவர்களுடைய கற்பனைகள் புகையில் மறைந்துப் போய்விடும், மற்றும் இதுவரை சுத்தமான விசுவாசம் மற்றும் பல ஆண்டுகளாகக் கடின வேலையினால் சேர்த்துவைக்கப்பட்ட “தகுதிகள் அல்லது நற்பெயர்” ஆகியவைகள் ஒன்றுமில்லாமல் போய்விடும். அதேபோன்று அவர்கள் வியர்வையினாலும் இரத்தத்தினாலும் பல ஆண்டுகளாகச் சம்பாதித்த அவர்களுடைய “எல்லை” சரிவைச் சந்திக்கும். இவைகள் எல்லாம் அவர்களுடைய பல வருடக் கடின உழைப்பும், முயற்சியும் பயனற்றவை என்பதைச் சுட்டிக்காட்டி, அதன் பின்னர் அவர்கள் மறுபடியும் ஒன்றுமில்லாததிலிருந்து தொடங்க வேண்டியதாயிருக்கும். இது அவர்கள் இருதயத்தில் தாங்குவதற்கு மிக கடினமான வலியாக இருக்கிறது, மேலும் அவர்கள் இதைப் போன்றவற்றைக் குறைவாக பார்க்க விரும்புவதின் விளைவே இது. எனவேதான் அவர்கள் மீண்டும் திரும்பி வர மறுத்து, ஒருவிதமான மந்த நிலையில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவே மூன்றாம் நிலை மனிதன்: பால் மறக்கும் கைக்குழந்தையின் நிலையிலிருக்கிற மனிதன்.

மேற்குறிப்பிடப்படுள்ள மூன்று வகையான ஜனங்கள்—இந்த மூன்று நிலைகளிலிருக்கும் ஜனங்கள்—தேவனுடைய அடையாளத்திலும் மற்றும் நிலையிலும் அல்லது அவருடைய நீதியான மனநிலையிலும் எந்த ஒரு விசுவாசத்தையும் உடையவர்களாக இல்லை என்பதைப் பொருள்படுத்துகிறது, மற்றும் அவர்கள் தெளிவான, துல்லியமான எந்த அங்கீகாரத்தையோ அல்லது இந்தக் காரியங்களைக் குறித்த உறுதிப்பாட்டையோ உடையவர்களாக இல்லை. ஆகவே இந்த வகை ஜனங்கள் சத்தியத்தின் யாதார்த்தத்திற்குள் பிரவேசிப்பது மிகவும் கடினம், தேவனுடைய கிருபை, பிரகாசிப்பிக்கப்படுதல் அல்லது ஞானவொளி ஆகியவற்றைப் பெறுவதும் கடினம், ஏனெனில் தேவன் பேரில் அவர்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தின் நடத்தை மற்றும் தேவன் மீது அவர்கள் கொண்டிருக்கும் தவறான சிந்தை, ஆகியவைகள் அவர்களுடைய இருதயத்தில் அவரைக் கிரியை செய்ய இயலாமல் ஆக்கிவிடுகின்றன. அவர்களுடைய சந்தேகம், தவறான கருத்துக்கள் மற்றும் தேவனைப் பற்றிய கற்பனை ஆகியவை அவர்களுடைய விசுவாசம் மற்றும் தேவனுடைய அறிவு ஆகியவற்றை மீறிச் சென்றுவிடுகின்றன. மிகவும் சிக்கலான நிலையிலிருக்கும் மூன்று வகையான ஜனங்கள் இவர்களே, அந்த மூன்று நிலைகளும் மிகவும் ஆபத்தான நிலைகள். ஒருவன் தேவன் மீதும், தேவனுடைய சாராம்சத்தின் மீதும், தேவனுடைய அடையாளத்தின் மீதும், தேவன் சத்தியமானவர் என்ற விஷயத்தின் மீதும் மற்றும் அவர் ஜீவிப்பதின் உண்மைத்தன்மையின் மீதும் சந்தேகச் சிந்தையை பேணும்போது, இந்தக் காரியங்கள் மீது நிச்சயமில்லாதப்போது, தேவனிடமிருந்து வருகிற எல்லாவிதமான காரியங்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தேவனே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தேவனுடைய சிட்சையையும், நியாயத்தீர்ப்பையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இவ்வகையான மனிதன் தேவனுடைய உண்மையான வழிநடத்துதலையும், போஷிப்பையும் எப்படி பெற முடியும்? இந்த மூன்று நிலைகளிலுள்ள ஜனங்கள் தேவனை எதிர்க்கக் கூடியவர்கள், தேவன் மீது நியாயத்தீர்ப்பை அளிக்கக்கூடியவர்கள், தேவனைத் தூஷிக்கக் கூடியவர்கள், அல்லது எந்த நேரத்திலும் தேவனை மறுதலிக்கக்கூடியவர்கள். அவர்கள் உண்மையான வழியையும் தேவனையும் எந்த நேரத்திலும் கைவிடக் கூடியவர்கள். இந்த மூன்று நிலைகளிலுள்ள ஜனங்கள் சிக்கலான காலத்தில் இருக்கிறார்கள் என்று ஒருவர் சொல்லக் கூடும், ஏனெனில் அவர்கள் தேவனை விசுவாசிக்கும் சரியான பாதையில் பிரவேசிக்கவில்லை.

நான்காம் வகை: முதிர்ச்சியடைகின்ற குழந்தை அல்லது குழந்தைப் பருவம்

ஒரு மனிதன் பால் மறந்த பின்பு—அதாவது அவர்கள் போதுமான அளவு கிருபையை அனுபவித்தப் பின்பு—தேவனை விசுவாசிப்பதின் அர்த்தமென்ன என்பதை அவர்கள் ஆராய்ந்து பார்க்கத் தொடங்குகிறார்கள். மனிதன் ஏன் வாழ்கிறான், மனிதன் எப்படி வாழ வேண்டும், மற்றும் தேவன் தம்முடைய கிரியைகளை மனிதன் மேல் ஏன் செய்கிறார் என்பது போன்ற பலவிதமான கேள்விகளை அவர்கள் புரிந்துக்கொள்வதற்கு ஆவல் கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்த தெளிவற்ற எண்ணங்கள், மற்றும் குழப்பமான எண்ணங்களின் வடிவங்கள் அவர்களுக்குள் வெளிப்படுகின்றபோது மற்றும் அவர்களுக்குள் இருக்கும்போது, அவர்கள் தொடர்ச்சியாக நீர்ப்பாய்ச்சலைப் பெறுகிறார்கள், அவர்கள் தங்கள் கடமையையும் செய்ய முடிகிறது. இந்தக் காலக்கட்டத்தில், தேவன் இருக்கிறார் என்பது பற்றிய சத்தியத்தில் எந்த விதமான சந்தேகமும் அவர்களிடம் இல்லை, மேலும் தேவன் பேரில் விசுவாசம் கொள்வதின் அர்த்தத்தைத் துல்லியமான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் அவர்கள் தேவனைப் பற்றிய அறிவைப் படிப்படியாகப் பெறுகிறார்கள், மேலும் தேவனுடைய மனநிலையைக் குறித்தும், சாராம்சத்தைக் குறித்தும், அவர்களுடைய தெளிவற்ற எண்ணங்கள் மற்றும் குழப்பமான எண்ண வடிவங்களைக் குறித்த பதில்களையும் படிப்படியாகப் பெறுகிறார்கள். அவர்களுடைய மனநிலை மற்றும் தேவனைப் பற்றிய அறிவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக, இந்த நிலையிலுள்ள மக்கள் சரியான பாதையில் செல்லத் தொடங்குகிறார்கள், மேலும் அவர்கள் ஒரு மாற்றத்தின் காலத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். இந்த நிலையில்தான் ஜனங்கள் ஜீவனைப் பெறத் தொடங்குகிறார்கள். ஜனங்கள் தங்கள் இருதயங்களில் கொண்டிருக்கும் தவறான புரிதல், கற்பனைகள் செய்தல், கருத்துக்கள், மற்றும் தேவனைப் பற்றிய தெளிவற்ற விளக்கங்கள் போன்ற தேவனைப் பற்றி அறிவதைக் குறித்த கேள்விகளுக்கு படிப்படியாக தீர்வு காண்பதே ஜீவனைப் பெறுவதற்கான தெளிவான அறிகுறிகளாகும். மேலும் அவர்கள் உண்மையாகவே விசுவாசத்திற்குள் வருவது மட்டுமல்லாமல், தேவனுடைய ஜீவிக்கிற தன்மையின் யதார்த்தத்தை அறிந்துகொள்வது மட்டுமல்லாமல் தங்கள் இருதயத்தில் தேவனுக்குரிய துல்லியமான வரையறையும், தங்கள் இருதயத்தில் தேவனுக்குரிய சரியான இடத்தையும் வைத்திருக்கிறார்கள்; தேவனை உண்மையாகப் பின்பற்றுதலானது அவர்களுடைய தெளிவற்ற விசுவாசத்தை மாற்றுகிறது. இந்த நிலையின்போது, ஜனங்கள் தேவனைக் குறித்த தங்கள் தவறான எண்ணங்களையும், தவறான பின்தொடரல்களையும், விசுவாச வழிகளையும் படிப்படியாக அறிந்துக்கொள்கிறார்கள். அவர்கள் சத்தியத்தை வாஞ்சிக்கவும், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சையையும், மற்றும் ஒழுக்கத்தையும் அனுபவிப்பதை வாஞ்சிக்கவும், மற்றும் தங்கள் மனநிலையில் ஒரு மாற்றத்தையும் வாஞ்சிக்கவும் தொடங்குகிறார்கள். இந்த நிலையின்போது தேவனைக் குறித்த தங்கள் கருத்துக்களையும் கற்பனைகளையும் படிப்படியாகப் பின்னால் விட்டுவிடுகிறார்கள், அதே நேரத்தில் தேவனைப் பற்றிய தங்கள் தவறான அறிவை மாற்றி, மற்றும் அதைச் சரிப்படுத்தி, தேவனைப் பற்றிய சில சரியான அடிப்படை அறிவைப் பெறுகிறார்கள். இந்த நிலையிலுள்ள ஜனங்கள் பெற்றிருக்கிற அறிவின் ஒரு பகுதியானது குறிப்பிடும்படியானதாகவோ அல்லது துல்லியமானதாகவோ இல்லாவிட்டாலும், கடைசியில் அவர்கள் தங்கள் கருத்துக்களையும், தவறான புரிந்துகொள்ளுதலையும் மற்றும் தேவனைப் பற்றிய கற்பனைகளையும் படிப்படியாக கைவிடுகிறார்கள்; அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களையும், தேவனைப் பற்றிய கற்பனைகளையும் இனியும் தொடர்ந்து செயல்படுத்துவதில்லை. தங்கள் சொந்த கருத்துக்கள், அறிவிலுள்ள காரியங்கள், மற்றும் சாத்தானிடமிருந்து வரும் காரியங்கள் போன்றவைகளைக் கைவிட கற்றுக்கொள்கிறார்கள்; அவர்கள் சரியானவைகளுக்கும் மற்றும் நேர்மறையானவைகளுக்கும், தேவனுடைய வார்த்தைகளிலிருந்து வருகின்ற காரியங்களுக்கும் மற்றும் சத்தியத்திற்கு இணங்கி கீழ்ப்படிவதற்கும் ஆயத்தமாகத் தொடங்குகிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கும், அவருடைய வார்த்தைகளைத் தனிப்பட்ட விதமாக அறிவதற்கும், நிறைவேற்றுவதற்கும், அவருடைய வார்த்தைகளைத் தங்கள் செயல்களின் சட்டத்திட்டங்களாக ஏற்றுக்கொள்வதற்கும், மற்றும் தங்கள் மனநிலையின் மாற்றத்திற்கான அடிப்படையாகக் கொள்வதற்கும் முயற்சி செய்யத் தொடங்குகிறார்கள். இக்காலக்கட்டத்தில், ஜனங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சிப்பையும் தங்களையும் அறியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள், மேலும் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் வாழ்க்கையாகத் தங்களையும் அறியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சிப்பையும், மற்றும் அவருடைய வார்த்தைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள் விழிப்புணர்வில் பெருகவும், அவர்கள் தங்கள் இருதயத்திற்குள் விசுவாசிக்கிற தேவன் உண்மையாகவே இருக்கிறார் என்பதை உணரவும் முடிகிறது. தேவனுடைய வார்த்தைகளிலும், அவர்களின் அனுபவங்களிலும், மற்றும் அவர்களின் வாழ்க்கையிலும், மனிதனின் தலைவிதியின் மீது தேவன் எப்போதும் ஆளுகை செய்கிறார், எப்போதும் மனிதனை வழிநடத்தி போஷிக்கிறார் என்று மென்மேலும் உணர்கிறார்கள். தேவனுடனான இந்த ஐக்கியத்தின் மூலம், அவர்கள் தேவனை ஜீவிக்கிறவராகப் படிப்படியாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆகையால் அவர்கள் இதை உணர்ந்துக்கொள்வதற்கு முன், அவர்கள் தங்கள் ஆழ் மனதில் ஏற்கனவே அங்கீகரித்து, தேவனுடைய கிரியைகளை உறுதியாக விசுவாசிக்கத் தொடங்கியுள்ளனர், மேலும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அங்கீகரித்துள்ளனர். ஜனங்கள் தேவனுடைய கிரியையை மற்றும் தேவனுடைய வார்த்தைகளை அங்கீகரித்தவுடன், அவர்கள் இடைவிடாமல் தங்களை வெறுக்கிறார்கள், தங்கள் சொந்தக் கருத்துக்களை வெறுக்கிறார்கள், மற்றும் தங்கள் சொந்த அறிவை வெறுக்கிறார்கள், அவர்கள் தங்கள் சொந்தக் கற்பனைகளை வெறுக்கிறார்கள், அதே நேரத்தில் சத்தியத்தையும், மற்றும் தேவனுடைய சித்தத்தையும் இடைவிடாமல் தேடுகிறார்கள். இந்த வளர்ச்சியின் காலத்தில் தேவனைப் பற்றிய மக்களுடைய அறிவானது சற்று மேலோட்டமானது—இந்த அறிவை வார்த்தைகளால் கூட தெளிவாக விவரிக்கவோ அல்லது குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் விவரிக்கவோ அவர்களால் இயலாது—மேலும் அவர்கள் ஒரு கருத்தின் அடிப்படையிலான புரிதலை மட்டுமே கொண்டிருப்பார்கள்; எப்படியாயினும், முந்தைய மூன்று நிலைகளுடன் இணைந்திருக்கும்போது, இந்தக் காலத்தின் மக்களுடைய முதிர்ச்சியற்ற வாழ்க்கையானது ஏற்கனவே நீர்ப்பாய்ச்சலையும் தேவனுடைய வார்த்தைகளையும் பெறப்பட்டதாக இருக்கும். ஆகவே அவர்கள் ஏற்கனவே முளை விட தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய வாழ்வானது நிலத்தில் புதையுண்ட ஒரு விதையைப் போன்றிருக்கிறது; ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெற்ற பின்னர், அது மண்ணைப் பிளக்கும், மற்றும் அதன் முளை ஒரு புதிய ஜீவனின் பிறப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இந்த பிறப்பானது ஒருவனை வாழ்க்கையின் கண்ணோட்டத்தைக் காண அனுமதிக்கும். ஜனங்களுக்கு ஜீவன் இருக்கையில், அவர்கள் வளருகிறார்கள். எனவே, அந்த அஸ்திபாரங்களின் மேல்—படிப்படியாக தேவனை விசுவாசிக்கிறதும், தங்கள் சொந்தக் கருத்துக்களைக் கைவிடுகிறதும், மற்றும் தேவனுடைய வழிகாட்டுதலை பெறுகின்றதுமான சரியான பாதைக்குள் செல்கிறார்கள்—ஜனங்களுடைய வாழ்க்கையானது தவிர்க்க முடியாதபடிக்கு கொஞ்சங்கொஞ்சமாக வளரும். இந்த வளர்ச்சியானது எந்த அளவின் அடிப்படையில் அளக்கப்படுகிறது? தேவனின் வார்த்தையினுடனான மனிதனுடைய அனுபவத்தோடும், தேவனுடைய நீதியான மனநிலையின் உண்மையான புரிந்துகொள்ளுதலோடும் இது அளவிடப்படுகிறது. இந்த வளர்ச்சியின் காலக்கட்டத்தில் தேவனுடைய அறிவைக் குறித்தும், அவருடைய சாராம்சத்தைக் குறித்தும் தங்களுடைய சொந்த வார்த்தைகளால் துல்லியமாக விவரிப்பது அவர்களுக்கு கடினமாக காணப்பட்டாலும், இந்த வகை ஜனங்கள் தேவனுடைய கிருபையை அனுபவிப்பதின் மூலம் அவர்களுடைய மகிழ்ச்சியை தொடர்கிற அல்லது தங்கள் சொந்த நோக்கத்தைப் பின்தொடரும்படி தேவனுடைய கிருபையைப் பெற்று, தேவனை விசுவாசிக்கிற மனநிலையில் இல்லை. அதற்கு மாறாக, தேவனுடைய வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையைப் பின்தொடர விரும்புகிறவர்களாகவும், தேவனுடைய இரட்சிப்பிற்கு உட்பட்டவர்களாக மாறுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். எப்படியாயினும், அவர்கள் நம்பிக்கையுடனும், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சிப்பையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகவும் உள்ளனர். இது வளர்ச்சியின் நிலையிலுள்ள ஒரு மனிதனுடைய அடையாளமாகும்.

இந்த நிலையிலுள்ள ஜனங்கள் தேவனுடைய நீதியான மனநிலையைக் குறித்துச் சிறிது அறிவுடையவர்களாக இருந்தாலும், இந்த அறிவானது மிகவும் மங்கலானதும் தெளிவற்றதுமாகும். அவர்களால் இந்த காரியங்களைக் குறித்து தெளிவாக விவரிக்க முடியாவிட்டாலும், அவர்கள் தேவனைப் பற்றிய அறிவையும், சிட்சிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றின் மூலம் தேவனுடைய நீதியான மனநிலையைப் பற்றிய புரிதலையும் சிறிதளவு பெற்றிருக்கிறப்படியால், தாங்கள் ஏதோ சிலவற்றை ஏற்கனவே உள்ளுக்குள் அடைந்திருப்பதாக உணர்கிறார்கள். எப்படியாயினும் அவைகளனைத்தும் மேலோட்டமானதாகவும், இன்னமும் ஆரம்ப நிலையிலும் உள்ளவைகளாகும். இந்த வகையான ஜனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் உள்ளது, அந்தக் கண்ணோட்டத்துடன் அவர்கள் தேவனுடைய கிருபையை கண்ணோக்குகிறார்கள், இது அவர்கள் பின்பற்றும் குறிக்கோள்களின் மாற்றங்களிலும், அவற்றைப் பின்தொடர்கின்ற வழிகளிலும் வெளிப்படுத்தப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே தேவனுடைய வார்த்தைகளிலும் மற்றும் கிரியைகளிலும், மனிதனுடைய தேவனுக்கான கடமைகளிலும் மற்றும் மனிதனுக்கான தேவனுடைய வெளிப்பாடுகளிலும் கண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் சத்தியத்தைப் பின்தொடரவில்லை என்றால், முழுமையான யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவில்லை என்றால், அவர்கள் தேவனுடைய வாரத்தைகளை அனுபவிப்பது போல, அவரைத் திருப்திப்படுத்தவும், அறியவும் முயற்சிக்கவில்லை என்றால், தேவனை விசுவாசிப்பதின் அர்த்தத்தை இழந்துப்போவார்கள். அவர்கள் தேவனுடைய கிருபையை எவ்வளவு அனுபவித்தாலும், அவர்களால் தங்கள் மனநிலையை மாற்ற முடியாது, தேவனை திருப்திப்படுத்தவோ அல்லது தேவனை அறிந்துகொள்ளவோ முடியாது. ஜனங்கள் தேவனுடைய கிருபையில் தொடர்ந்து வாழ விரும்பினால், அவர்களால் ஒருபோதும் வளர்ச்சியையும், ஜீவனையும் அல்லது இரட்சிப்பையும் பெற்றுக்கொள்ள முடியாது. சுருக்கமாகக் கூறுவதென்றால், ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தைகளை உண்மையாக அனுபவிக்க முடியவில்லை என்றால், அவருடைய வார்த்தைகளின் மூலம் தேவனை அறிய முடியவில்லை என்றால், அவன் குழந்தை நிலையிலேயே நித்தியமாக தங்கிவிடுவான், மேலும் அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கான முன்னேற்றத்தில் ஒரு படியையும் அவர்களால் ஒருபோதும் எடுக்க முடியாது. ஒருவேளை நீ குழந்தை நிலையிலேயே எப்பொழுதும் இருந்துவிட்டால், தேவனுடைய வார்த்தையின் யதார்த்தத்திற்குள் ஒருபோதும் பிரவேசிக்காவிட்டால், உன்னுடைய வாழ்வில் தேவனுடைய வார்த்தை இல்லாவிட்டால், உண்மையான விசுவாசம் மற்றும் தேவனைப் பற்றிய அறிவை ஒருபோதும் கொண்டிராவிட்டால், நீ தேவனால் பரிபூரணப்படுவதற்கு உனக்கு சாத்தியக்கூறு ஏதாகிலும் உண்டா? ஆகையால் தேவனுடைய வார்த்தையின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கிற எவரும், தேவனுடைய வார்த்தையை தன் வாழ்க்கையாக ஏற்றுக்கொள்ளும் எவரும், தேவனுடைய தண்டனையையும் சிட்சிப்பையும் ஏற்கத் தொடங்கும் எவரும், சீர்கேடான மனநிலை மாறத் தொடங்குகிற எவரும், சத்தியத்தை வாஞ்சிக்கிற இருதயமுடைய எவரும், தேவனை அறியும் விருப்பமும், தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் விருப்பமும் உள்ள எவரும், உண்மையான ஜீவனைப் பெற்றுள்ள ஜனங்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையான நான்காம் வகை மனிதன், முதிர்ச்சியடையும் குழந்தை, குழந்தைப் பருவத்திலுள்ள மனிதன்.

ஐந்தாம் வகை: வாழ்வின் முதிர்ச்சி நிலை, அல்லது பெரியவரான நிலை

குழந்தை நிலையின் மூலம் அனுபவித்து, குறுநடை போட்டு, மேடுகளும், பள்ளங்களும் அடிக்கடி வருகிற ஒரு வளர்ச்சி நிறைந்த நிலையை அடைந்த பிறகு, ஜனங்களின் வாழ்வு நிலைப்படுத்தப்படுகிறது, அவர்களின் வேகம் இனியும் தடைப்படாது, மேலும் அவர்களை எவரும் தடை செய்யவும் முடியாது. அவர்கள் முன் இருக்கும் பாதையானது இன்னமும் கடினமானதாகவும், முரடானதாகவும் இருந்தாலும், அவர்கள் இனியும் பலவீனமானவர்களாகவும், பயப்படக் கூடியவர்களாகவும் இருக்க மாட்டார்கள், மற்றும் அவர்கள் இனியும் தடுமாற மாட்டார்கள் அல்லது தங்கள் முக்கியத்துவத்தை இழக்கிறவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுடைய அஸ்திபாரங்கள் தேவனுடைய வார்த்தையின் உண்மையான அனுபவத்தில் ஆழமாக வேரூன்றப்பட்டவைகள், மேலும் அவர்களுடைய இருதயங்களானவை தேவனுடைய கணத்தாலும் மகத்துவத்தாலும் இழுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேவனுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றவும், தேவனுடைய சாராம்சத்தை அறியவும், தேவனைப் பற்றி எல்லாவற்றையும் அறியவும் வாஞ்சிக்கிறார்கள்.

இந்த நிலையிலுள்ள ஜனங்களுக்கு தாங்கள் யாரை விசுவாசிக்கிறோமென்று ஏற்கனவே தெளிவாகத் தெரியும், மேலும் தேவனை ஏன் விசுவாசிக்க வேண்டும், தங்கள் சொந்த வாழ்வின் அர்த்தம், மற்றும் தேவன் வெளிப்படுத்துகிற அனைத்தும் சத்தியம் என்று அவர்களுக்குத் தெளிவாக தெரியும். அவர்களுடைய பல வருட அனுபவத்தில், தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை இல்லாமல் ஒரு மனிதன் ஒருக்காலும் திருப்தியடையவோ அல்லது தேவனை அறியவோ முடியாது, மற்றும் தேவனுக்கு முன் ஒருக்காலும் மெய்யாகவே வர முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். சோதிக்கப்படும்போது தேவனுடைய நீதியான மனநிலையைக் காணும்படியாகவும், சுத்தமான அன்பைப் பெறும்படியாகவும், அதே நேரத்தில் தேவனை இன்னும் அதிகமாக, உண்மையாக புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும், இந்த ஜனங்களுடைய இருதயத்தில் தேவனால் சோதிக்கப்பட வேண்டும் என்ற வலுவான ஆசை இருக்கிறது. இந்த நிலையிலுள்ள ஜனங்கள் ஏற்கனவே குழந்தைப் பருவத்திற்கும், தேவனுடைய கிருபையை அனுபவிக்கும் நிலைக்கும், மற்றும் தங்கள் அப்பத்தைத் தின்று நிரப்புதலுக்கும் முற்றிலும் பிரியாவிடை கொடுத்துள்ளனர். தேவன் தங்களைச் சகித்துக்கொண்டு, தங்கள் மேல் கிருபையைக் காட்ட வேண்டும் என்ற பொறுப்பில்லாத நம்பிக்கையை இனியும் வைக்க மாட்டார்கள்; மாறாக தேவனுடைய இடைவிடாத சிட்சையையும், நியாயத்தீர்ப்பையும் பெறுவதில் அவர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர், இதனால் சீர்கேடான மனநிலையிலிருந்து தங்களைப் பிரித்து தேவனைத் திருப்திப்படுத்துகிறார்கள். தேவனைப் பற்றிய அவர்களுடைய அறிவு, அவர்களுடைய பின்தொடரல்கள், அல்லது அவர்களுடைய பின்தொடரல்களின் இறுதி இலக்குகள் போன்றவைகள் அனைத்தும் அவர்களுடைய இருதயத்தில் மிகவும் தெளிவாக உள்ளது. ஆகையால், முதிர்ச்சிப் பருவத்திலுள்ள ஜனங்கள் ஏற்கனவே தெளிவற்ற விசுவாசத்தின் நிலைக்கும், அவர்கள் இரட்சிப்பிற்குக் கிருபையை சார்ந்திருக்கும் நிலைக்கும், சோதனைகளைத் தாங்க இயலாத முதிர்ச்சியற்ற வாழ்வின் நிலைக்கும், மயக்கமான நிலைக்கும், தடுமாறும் நிலைக்கும், அடிக்கடி நடப்பதற்குப் பாதையற்ற நிலைக்கும், அனலுக்கும் குளிருக்கும் இடையே மாற்றாக உள்ள நிலையற்ற நிலைக்கும், மற்றும் கண்ணை மூடிக்கொண்டு தேவனைப் பின்பற்றுகிற நிலைக்கும் முற்றிலும் பிரியாவிடைக் கொடுத்துள்ளனர். இந்த வகையான ஜனங்கள் தேவனுடைய அறிவொளியையும், ஞான வெளிச்சத்தையும் அடிக்கடி பெறுகிறார்கள், மேலும் தேவனுடன் உண்மையான ஐக்கியம் மற்றும் தொடர்பில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் வாழுகின்ற ஜனங்கள் தேவனுடைய சித்தத்தின் ஒரு பகுதியை ஏற்கனவே புரிந்துகொண்டுள்ளனர் என்றும், அவர்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் வாழ்விற்கான சத்தியத்தின் சட்டத்திட்டங்களை அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறது என்றும், தேவனுடைய சித்தத்தை எப்படி நிறைவேற்றுவது என்றும் அவர்களுக்குத் தெரியும் என்று ஒருவர் சொல்லக்கூடும். மேலும், அவர்கள் தேவனை அறிவதற்கான வழியைக் கண்டுப்பிடித்து, தேவனைப் பற்றிய அவர்களுடைய அறிவிற்குச் சாட்சி பகர தொடங்கியுள்ளனர். இந்தப் படிப்படியான வளர்ச்சியின் செயல்முறையின்போது, அவர்கள் படிப்படியான புரிந்துகொள்ளுதலையும், மனித குலத்தை உருவாக்குகின்ற தேவனுடைய சித்தத்தையும், மனித குலத்தை நிர்வகிக்கின்ற தேவனுடைய சித்தத்தின் அறிவையும் பெறுகின்றனர். அவர்கள் படிப்படியாகப் புரிந்துகொள்ளுதலையும், தேவனுடைய நீதியான மனநிலையை அதனுடைய சாராம்சத்தின் அடிப்படையில் அறிவையும் பெறுகின்றனர். மனிதனின் எந்த கருத்தோ அல்லது கற்பனையோ இந்த அறிவை மாற்றாது. ஐந்தாம் வகை மனிதனின் வாழ்வானது முற்றிலும் முதிர்ச்சிடைந்த வாழ்வென்றோ அல்லது இந்த மனிதன் நீதிமான் அல்லது பூரணமானவன் என்றோ கூற முடியாவிட்டாலும், இந்த வகையான மனிதன் வாழ்வின் முதிர்ச்சிக்கான நிலையை நோக்கி ஓர் அடியை எடுத்து வைத்துள்ளான், அவன் ஏற்கனவே தேவனுக்கு முன்பாக வரவும், தேவனுடைய வார்த்தையுடனும், தேவனுடனும் முக முகமாய் நிற்கவும் முடிகிறது. இவ்வகையான மனிதன் தேவனுடைய வார்த்தையை அதிகப்படியாக அனுபவித்திருக்கிறான், எண்ணற்ற சோதனைகளையும் அனுபவித்திருக்கிறான், மற்றும் எண்ணற்ற ஒழுக்க நிகழ்வுகளையும், நியாயத்தீர்ப்புகளையும் மற்றும் சிட்சிப்புகளையும் தேவனிடமிருந்து அனுபவித்திருக்கிறான், அவர்கள் தேவனுக்கு கீழ்படிவது ஓர் உறவாக இல்லாமல் முழுமையானதாக இருக்கிறது. தேவனைப் பற்றிய அவர்களுடைய அறிவானது அவர்களுடைய ஆழ் மனதைச் சுத்தமானதாகவும், துல்லியமான அறிவை மேலோட்டத்திலிருந்து ஆழத்திற்கும் மாற்றுகிறது, தடுமாற்றமான மற்றும் மங்கலான நிலையிலிருந்து துல்லிமான மற்றும் உறுதியான நிலைக்கு மாற்றுகிறது. அவர்கள் கடினமான தடுமாற்றம் மற்றும் செயலற்ற அறிவைத் தேடும் முயற்சியிலிருந்து முயற்சியற்ற அறிவிற்கும் செயலூக்கமான சாட்சிகளை நோக்கியும் நகர்ந்துள்ளனர். இந்த வகையிலிருக்கும் ஜனங்கள் தேவனுடைய வார்த்தையின் யதார்த்தத்தைப் பெற்று, பேதுரு நடந்ததுப்போல பரிபூரணத்தை நோக்கிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லக் கூடும். இதுவே முதிர்ச்சியின் நிலையிலுள்ள, அதாவது வாலிபப் பருவ ஐந்தாம் வகை மனிதன்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

முந்தைய: தேவனை அறிதல் II

அடுத்த: தேவனை அறிதல் IV

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக