தேவனை அறிதல் I

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 1

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஜீவகாலம் முழுவதும் தேவனை எவ்வாறு விசுவாசித்தீர்கள் என்பதைப் புதிதாக ஆராய வேண்டும். இதன் மூலம் தேவனைப் பின்பற்றும் செயல்பாட்டில், நீ உண்மையிலேயே புரிந்துகொண்டிருக்கிறாயா, உண்மையிலேயே கிரகித்துக்கொண்டிருக்கிறாயா, தேவனை உண்மையாக அறிந்துகொள்கிறாயா, பல்வேறு வகையான மனிதர்களிடம் தேவன் என்ன மனநிலையைக் கொண்டிருக்கிறார், தேவன் உன் மீது நடப்பிக்கும் கிரியையை நீ உண்மையிலேயே புரிந்துகொள்கிறாயா, உன் ஒவ்வொரு கிரியையையும் தேவன் எவ்வாறு வரையறுக்கிறார் என்பதை நீ காணலாம். உன் பக்கத்திலிருக்கும் இந்த தேவன், உன் முன்னேற்றத்தின் திசையை வழிநடத்துகிறார், உன் விதியை நிர்ணயிக்கிறார், உன் தேவைகளை வழங்குகிறார் என இவை எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும்போது, இந்த தேவனை எவ்வளவாக நீ புரிந்துகொள்கிறாய். இந்த தேவனைப் பற்றி உனக்கு உண்மையில் எவ்வளவு தெரியும்? ஒவ்வொரு தனிப்பட்ட நாளிலும் உன்மீது அவர் என்ன கிரியை செய்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவருடைய ஒவ்வொரு கிரியையிலும் அவர் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் நோக்கங்களைப் பற்றி உனக்குத் தெரியுமா? அவர் உன்னை எவ்வாறு வழிநடத்துகிறார் என்று தெரியுமா? அவர் உனக்காக எந்த வழியை வழங்குகிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவர் உன்னை வழிநடத்தும் முறைகள் உனக்குத் தெரியுமா? அவர் உன்னிடமிருந்து எதைப் பெற விரும்புகிறார், உன்னிடம் அவர் எதை நிறைவேற்ற விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? நீ நடந்துகொள்ளும் பல்வேறு வழிகளைப் பற்றி அவர் வைத்திருக்கும் மனநிலை உனக்குத் தெரியுமா? நீ அவருக்குப் பிரியமான ஒரு மனிதனாக உள்ளாயா என்பது உனக்குத் தெரியுமா? அவருடைய மகிழ்ச்சி, கோபம், துக்கம் மற்றும் சந்தோஷம் ஆகியவற்றின் பிறப்பிடம், அவற்றின் பின்னால் உள்ள எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் மற்றும் அவருடைய சாராம்சம் பற்றி உனக்குத் தெரியுமா? இறுதியாக, நீ நம்பும் இந்த தேவன் எந்த வகையான தேவன் என்று உனக்குத் தெரியுமா? இந்தக் கேள்விகள் மற்றும் பிற கேள்விகள் எல்லாம் நீ ஒருபோதும் புரிந்துகொள்ளாத அல்லது சிந்திக்காத ஒன்றா? தேவன் மீதான உன் விசுவாசத்தைப் பின்பற்றுவதில், தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான புரிதல் மற்றும் அனுபவத்தின் மூலம், அவரைப் பற்றிய உன் தவறான புரிதல்களை நீக்கிவிட்டாயா? தேவனுடைய ஒழுக்கத்தையும் சிட்சையையும் பெற்ற பிறகு, உண்மையான கீழ்ப்படிதலையும் அக்கறையையும் அடைந்துவிட்டாயா? தேவனுடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் மத்தியில், மனிதனுடைய கலகத்தனத்தையும் சாத்தானுக்குரிய தன்மையையும் அறிந்து, தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி சிறிதளவு புரிதலையாவது பெற்றிருக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதல் மற்றும் வெளிச்சத்தின் கீழ், நீ ஜீவன் குறித்த ஒரு புதிய கண்ணோட்டத்தை வைத்திருக்கத் தொடங்கியிருக்கிறாயா? தேவன் அனுப்பிய சோதனைகளுக்கு மத்தியில், மனிதனுடைய குற்றங்களுக்கான அவருடைய சகிப்பின்மையையும், அவர் உன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதையும், அவர் உன்னை எவ்வாறு இரட்சிக்கிறார் என்பதையும் உணர்ந்திருக்கிறாயா? தேவனைத் தவறாகப் புரிந்துகொள்வது என்றால் என்ன அல்லது இந்தத் தவறான புரிதலை அகற்றுவது எவ்வாறு என உனக்குத் தெரியாவிட்டால், நீ தேவனுடன் உண்மையான ஐக்கியத்திற்குள் ஒருபோதும் நுழைந்ததில்லை, தேவனைப் புரிந்துகொள்ளவில்லை என்று ஒருவர் கூறலாம் அல்லது குறைந்தபட்சம் நீ அவரைப் புரிந்துகொள்ள ஒருபோதும் விரும்பவில்லை என்று சொல்லலாம். தேவனுடைய ஒழுக்கம் மற்றும் சிட்சை என்னவென்று உனக்குத் தெரியாவிட்டால், கீழ்ப்படிதல் மற்றும் அக்கறை என்னவென்று உனக்கு நிச்சயமாகவே தெரியாது அல்லது குறைந்தபட்சம் நீ உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் அல்லது அவர் மீது அக்கறை கொள்ளாமல் இருப்பாய். தேவனுடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் நீ ஒருபோதும் அனுபவித்திருக்கவில்லை என்றால், அவருடைய பரிசுத்தம் என்னவென்று உனக்குத் தெரியாமல் போகும் மற்றும் மனிதனுடைய கலகம் என்ன என்பதும் உனக்குத் தெரியாமல் போகும். நீ ஒருபோதும் ஜீவன் குறித்த சரியான கண்ணோட்டத்தை கொண்டிராமல் அல்லது ஜீவிதத்தில் சரியான குறிக்கோளைக் கொண்டிராமல், ஜீவிதத்தில் உன் எதிர்காலப் பாதையைப் பற்றி இன்னும் குழப்பமாக மற்றும் முன்னேறத் தயங்கும் அளவிற்கு சந்தேக மனநிலையில் இருந்தால், தேவனுடைய ஞானத்தையும் வழிகாட்டலையும் நீ ஒருபோதும் பெறவில்லை என்பதையே அது உறுதிப்படுத்தும். உண்மையிலேயே தேவனுடைய வார்த்தைகள் ஒருபோதும் உனக்கு வழங்கப்படவில்லை அல்லது நீ நிரப்பப்படவில்லை என்றும் ஒருவர் கூறலாம். நீ இன்னும் தேவனுடைய சோதனைகளுக்கு ஆளாகவில்லை என்றால், மனிதனுடைய குற்றங்களுக்கு தேவனுடைய சகிப்பின்மை என்ன என்பதை நீ நிச்சயமாக அறிய மாட்டாய் அல்லது முடிவாக தேவன் உன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதை நீ புரிந்துகொள்ள மாட்டாய் மற்றும் மனிதனை நிர்வகிக்கும் மற்றும் இரட்சிக்கும் அவருடைய கிரியை என்ன என்பதையும் நீ புரிந்துகொள்ள மாட்டாய் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மனிதர் எத்தனை வருடங்கள் தேவனை நம்பினாலும், அவர் ஒருபோதும் தேவனுடைய வார்த்தைகளில் எதையும் அனுபவித்திருக்கவில்லை அல்லது உணர்ந்திருக்கவில்லை என்றால், அவர் நிச்சயமாக இரட்சிப்பை நோக்கிய பாதையில் நடக்கவில்லை, நிச்சயமாகவே தேவன் மீது அவர் வைத்திருக்கும் விசுவாசம் உண்மையான உள்ளடக்கம் இல்லாத ஒன்றாக இருக்கும், நிச்சயமாகவே தேவனைப் பற்றிய அவருடைய அறிவும் பூஜ்ஜியமாக இருக்கும் மற்றும் தேவனிடம் பயபக்தியுடன் இருப்பது என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியாமல் இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 2

தேவனுடைய உடைமைகள் மற்றும் ஜீவிதம், தேவனுடைய சாராம்சம், தேவனுடைய மனநிலை என இவை அனைத்தும் அவருடைய வார்த்தைகளில் மனிதகுலத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. தேவனுடைய வார்த்தைகளை அவன் அனுபவிக்கும் போது, மனிதன் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில், தேவன் பேசும் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும், தேவனுடைய வார்த்தைகளின் மூலத்தையும் பின்னணியையும் புரிந்துகொள்வதற்கும், தேவனுடைய வார்த்தைகளின் நோக்க விளைவைப் புரிந்துகொள்வதற்கும் உணர்ந்துகொள்வதற்கும் தொடங்குவான். மனிதகுலத்தைப் பொறுத்தவரையில், இவை அனைத்தும் சத்தியத்தையும் ஜீவனையும் அடைவதற்கும், தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவனுடைய மனநிலையில் மாற்றமடைவதற்கும், தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதற்கும், மனிதன் அவற்றை அனுபவிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் அடைய வேண்டும். மனிதன் இவற்றை அனுபவிக்கும், புரிந்துகொள்ளும் மற்றும் அடையும் அதே நேரத்தில், அவன் படிப்படியாக தேவனைப் பற்றிய புரிதலைப் பெற்றிருப்பான். இந்த நேரத்தில் தன்னைப் பற்றியும் அவன் பல்வேறு அளவிலான அறிவைப் பெற்றிருப்பான். இந்த புரிதலும் அறிவும் மனிதன் கற்பனை செய்த அல்லது இயற்றிய ஒன்றிலிருந்து வெளிவருவதில்லை. மாறாக, அவன் தனக்குள்ளேயே புரிந்துகொள்ளும், அனுபவிக்கும், உணரும், உறுதிப்படுத்துகிறவற்றிலிருந்து வெளிவருகிறது. இவற்றைப் புரிதல், அனுபவித்தல், உணர்தல் மற்றும் உறுதிப்படுத்திய பின்னரே தேவனைப் பற்றிய மனிதனுடைய அறிவு உள்ளடக்கத்தைப் பெறுகிறது. இந்த நேரத்தில் மனிதன் பெறும் அறிவு மட்டுமே நிஜமானது, உண்மையானது மற்றும் துல்லியமானது. அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளுதல், அனுபவித்தல், உணர்தல் மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலையும் அறிவையும் அடைவதற்கான இந்த செயல்முறையானது மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான உண்மையான ஐக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த வகையான ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் உண்மையிலேயே தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். உண்மையிலேயே தேவனுடைய உடைமைகளையும் இருப்பையும் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். தேவனுடைய சாரத்தைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் உண்மையிலேயே தொடங்குகிறான். படிப்படியாக தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். எல்லா சிருஷ்டிப்புகளிலும் தேவனுடைய ஆதிக்கத்தின் உண்மை பற்றிய உண்மையான உறுதியையும், சரியான வரையறையையும், தேவனுடைய அடையாளம் மற்றும் நிலையைப் பற்றிய முக்கியமான தாக்கத்தையும் அறிவையும் பெறுகிறான். இந்த வகையான ஐக்கியத்தின் மத்தியில், தேவனைப் பற்றிய அவனது கருத்துக்கள், இனிமேல் ஒன்றும் இல்லாமையில் இருந்து அவரைக் கற்பனை செய்து கொள்ளுதல் அல்லது அவரைப் பற்றிய தனது சொந்தச் சந்தேகங்களுக்குக் கட்டுப்பாட்டைக் கொடுத்தல் அல்லது அவரைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் அல்லது அவரை நிந்தித்தல் அல்லது விட்டுச் செல்லுதல் அவர்மீது நியாயத்தீர்ப்பு வழங்குதல் அல்லது அவரைச் சந்தேகித்தல் ஆகியவற்றை மனிதன் படிப்படியாக மாற்றுகிறான். இவ்வாறு, மனிதனுக்கு தேவனுடனான தகராறுகள் குறைவாகவே இருக்கும், அவனுக்கு தேவனுடனான மோதல்கள் குறைவாகவே இருக்கும் மற்றும் மனிதன் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யும் சந்தர்ப்பங்களும் குறைவாகவே இருக்கும். அதற்கு மாறாக, தேவன் மீதான மனிதனுடைய அக்கறையும் தேவனுக்குக் கீழ்ப்படிதலும் பெரிதாக வளரும். தேவன் மீது அவன் கொண்டுள்ள மரியாதை மிகவும் உண்மையானதாகவும் ஆழமாகவும் மாறும். இத்தகைய ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் சத்தியத்தின் வழங்குதலையும் ஜீவனின் ஞானஸ்நானத்தையும் அடைவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் தேவனைப் பற்றிய உண்மையான அறிவையும் அடைவான். இத்தகைய ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் தனது மனநிலையில் மாற்றம் பெற்று இரட்சிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் தேவனை நோக்கி ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினத்தின் உண்மையான பயபக்தியையும் வழிபாட்டையும் பெறுவான். இந்த வகையான ஐக்கியத்தைக் கொண்டிருந்ததால், தேவன் மீதான மனிதனுடைய விசுவாசம் இனி ஒரு வெற்று காகிதத் தாளாகவோ அல்லது உதட்டளவில் வழங்கப்படும் வாக்குறுதியாகவோ அல்லது குருட்டுத்தனமான நாட்டம் மற்றும் விக்கிரகாராதனையாகவோ இருக்காது. இந்த வகையான ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே மனிதனுடைய ஜீவிதம் நாளுக்கு நாள் முதிர்ச்சியை நோக்கி வளரும். அப்போதுதான் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்படும். தேவன் மீதான அவனது விசுவாசம், படிப்படியாக, தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற நம்பிக்கையிலிருந்து உண்மையான கீழ்ப்படிதலுக்கும் அக்கறைக்கும், உண்மையான பயபக்திக்கும், செல்லும். மனிதனும் தேவனைப் பின்பற்றும் செயல்பாட்டில், படிப்படியாக ஒரு செயலற்ற நிலையில் இருந்து செயல்திறன்மிக்க நிலைப்பாட்டிற்கும், எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கும் முன்னேறும். இந்த வகையான ஐக்கியத்துடன் மட்டுமே மனிதன் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலுக்கும், உணர்தலுக்கும், உண்மையான அறிவுக்கும் வருவான். பெரும்பான்மையான ஜனங்கள் ஒருபோதும் தேவனுடன் உண்மையான ஐக்கியத்திற்குள் நுழைந்ததில்லை என்பதால், தேவனைப் பற்றிய அவர்களின் அறிவு கோட்பாட்டின் மட்டத்திலும், எழுத்துக்கள் மற்றும் சித்தாந்தங்களின் மட்டத்திலும் நின்றுவிடுகிறது. அதாவது, பெரும்பான்மையான ஜனங்கள், அவர்கள் எத்தனை வருடங்கள் தேவனை நம்பினாலும், தேவனை அறிந்துகொள்வதைப் பொறுத்தவரையில், பாரம்பரிய வடிவிலான மரியாதை என்னும் அடிப்படையில் சிக்கி, அவற்றுடன் தொடர்புடைய நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கைகள் மற்றும் கற்பனையுணர்வுச் சாயல்களுடன், அவர்கள் ஆரம்பித்த அதே இடத்திலேயே இருக்கிறார்கள். தேவனைப் பற்றிய மனிதனுடைய அறிவு அதன் தொடக்கக் கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று என்பதாகும். தேவனுடைய நிலைப்பாடு மற்றும் அடையாளத்தை மனிதன் உறுதிப்படுத்தியதைத் தவிர, தேவன் மீது மனிதனுடைய விசுவாசம் இன்னும் தெளிவற்ற நிச்சயமற்ற நிலையில்தான் உள்ளது. இது அவ்வாறு இருப்பதால், மனிதன் தேவனுக்கு எவ்வளவாக உண்மையான பயபக்தியைக் கொண்டிருக்க முடியும்?

தேவன் உண்டென்பதை நீ எவ்வளவு உறுதியாக நம்பினாலும், அது தேவனைப் பற்றிய உன் அறிவையோ தேவன் மீதான உன் பயபக்தியையோ மாற்றாது. அவருடைய ஆசீர்வாதங்களையும் அவருடைய கிருபையையும் நீ எவ்வளவு அனுபவித்திருந்தாலும், தேவனைப் பற்றிய உன் அறிவை அதனால் மாற்ற முடியாது. உனக்குள்ள அனைத்தையும் பரிசுத்தப்படுத்தவும், உனக்குள்ள அனைத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கவும் ஈடுபடுத்திக்கொள்ளவும் நீ எவ்வளவு தயாராக இருந்தாலும், அதனால் தேவனைப் பற்றிய உன் அறிவை மாற்ற முடியாது. தேவன் பேசிய வார்த்தைகளை நீ நன்கு அறிந்திருக்கலாம், அல்லது நீ அவற்றை உன் இருதயத்திலும் அறிந்திருக்கலாம் மற்றும் அவற்றை உன்னால் விரைந்து கூறமுடியலாம், ஆனால் இதனால் தேவனைப் பற்றிய உன் அறிவை மாற்ற முடியாது. எவ்வாறாயினும், மனிதனின் நோக்கம் தேவனைப் பின்பற்றுவதாக இருந்தாலும், அவன் ஒருபோதும் தேவனுடன் உண்மையான ஐக்கியம் கொண்டிருக்கவில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளில் உண்மையான அனுபவம் பெற்றிருக்கவில்லை என்றால், தேவனைப் பற்றிய அவனது அறிவு வெற்றுத் துண்டாகவோ அல்லது முடிவில்லாத மயக்கமாகவோ இருக்கும். நீ தேவனோடு தோள் உரச கடந்து சென்றிருக்கலாம் அல்லது அவரை நேருக்கு நேர் சந்தித்திருக்கலாம், எனினும் தேவனைப் பற்றிய உன் அறிவு இன்னும் பூஜ்ஜியமாகவே இருக்கும். தேவனைப் பற்றிய உன் மரியாதை வெற்று வார்த்தையாக அல்லது கற்பனையான கருத்தாக மட்டுமே இருக்கும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 3

பல ஜனங்கள், தேவனுடைய வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் படிக்க வைத்திருக்கிறார்கள். அதில் உள்ள அனைத்து உன்னதமான பத்திகளையும் மிகவும் மதிப்புமிக்க உடைமையாக நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்குக்கூட வைத்திருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கிறார்கள். மற்றவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை வழங்கி உதவுகிறார்கள். இதைச் செய்வது தேவனுக்கு சாட்சி கொடுப்பது என்றும் அவருடைய வார்த்தைகளுக்கு சாட்சி கொடுப்பது என்றும் தேவனுடைய வழியைப் பின்பற்றுவது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இதைச் செய்வது தேவனுடைய வார்த்தைகளின்படி ஜீவிப்பதேயாகும் என்றும் அவருடைய வார்த்தைகளை அவர்களின் உண்மையான ஜீவிதத்தில் கொண்டு வருவதேயாகும் என்றும் தேவனுடைய புரிந்துகொள்ளுதலைப் பெறவும், இரட்சிக்கப்பட்டு முழுமையடையவும் உதவும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும்போதும், அவர்கள் ஒருபோதும் தேவனுடைய வார்த்தைகளை நடைமுறையில் பின்பற்றுவதில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவற்றுடன் தங்களைத் தாங்களே ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிப்பதில்லை. மாறாக, தந்திரத்தின் மூலம் மற்றவர்களின் வணக்கத்தையும் நம்பிக்கையையும் பெறவும், சொந்தமாக ஆளுகையில் பிரவேசிக்கவும், தேவனுடைய மகிமையை ஏமாற்றவும் திருடவும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் பரப்புவதன் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதை அவர்கள் வீணாக நம்புகிறார்கள். இதனால் தேவனுடைய கிரியை மற்றும் அவரது பாராட்டு வழங்கப்படும் என்றும் நம்புகிறார்கள். எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன, எனினும் இந்த ஜனங்களால் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் கிரியையில் தேவனுடைய பாராட்டைப் பெற இயலாமல் இருப்பது மட்டுமல்லாமல், தேவனுடைய சாட்சி அளிக்கும் செயல்பாட்டில் அவர்கள் பின்பற்ற வேண்டிய வழியைக் கண்டறியவும் அவர்கள் இயலாமல் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளை மற்றவர்களுக்கு வழங்கி உதவுகையில் அவர்கள் தங்களுக்கு வழங்கி உதவுவதில்லை. எல்லாவற்றையும் செய்வதற்கான இந்தச் செயல்பாட்டில் அவர்கள் தேவனை அறியவோ அல்லது தேவனிடம் உண்மையான பயபக்தியை எழுப்பவோ இயலாது இருக்கிறார்கள். மாறாக, தேவனைப் பற்றிய அவர்களின் தவறான புரிதல்கள் இன்னும் ஆழமாக வளர்கின்றன. அவரைப் பற்றிய அவநம்பிக்கை எப்போதும் கடுமையாக இருக்கிறது. அவரைப் பற்றிய அவர்களின் கற்பனைகள் இன்னும் மிகைப்படுத்தப்படுகின்றன. தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய அவர்களின் கோட்பாடுகளால் வழங்கப்பட்ட மற்றும் வழிநடத்தப்பட்ட வார்த்தைகள், அவற்றின் அம்சங்களில் முழுமையாக இருப்பது போலவும், தங்கள் திறமைகளைச் சிரமமின்றி எளிதில் செலுத்துவது போலவும், ஜீவிதத்தில் தங்கள் நோக்கத்தையும் தங்களின் கிரியையையும் கண்டறிந்ததைப் போலவும், புதிய ஜீவனைப் பெற்று இரட்சிக்கப்பட்டது போலவும், தேவனுடைய வார்த்தைகள் நாவில் சரளமாக வருகையில், அவை உண்மையைப் பெற்றிருப்பது போலவும், தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொண்டது போலவும், தேவனை அறிவதற்கான பாதையைக் கண்டுபிடித்துக் கொடுப்பது போலவும், தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் கிரியையில், அவை பெரும்பாலும் தேவனுடன் நேருக்கு நேர் வந்திருப்பது போலவும் காணப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் அழுகைக்கு “நகர்த்தப்படுகிறார்கள்”. பெரும்பாலும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளில் “தேவனால்” வழிநடத்தப்படுவது போலவும், அவர்கள் அவருடைய உற்சாகமான தனிமை மற்றும் கனிவான நோக்கத்தை இடைவிடாமல் புரிந்துகொள்வதாகவும், அதே நேரத்தில் மனிதன் தேவனுடைய இரட்சிப்பைப் புரிந்துகொள்வதாகவும், அவருடைய நிர்வகித்தலைப் புரிந்துகொள்வதாகவும், அவருடைய சாராம்சத்தை அறிந்துகொள்வதாகவும், அவருடைய நீதியான மனநிலையைப் புரிந்துகொள்வதாகவும் காணப்படுகிறது. இந்த அஸ்திவாரத்தின் அடிப்படையில், அவர்கள் தேவன் இருக்கிறார் என்பதை இன்னும் உறுதியாக நம்புகிறார்கள். அவருடைய உயர்ந்த நிலையை நன்கு அறிந்திருக்கிறார்கள். அவருடைய மாட்சிமையையும் உன்னதத்தையும் இன்னும் ஆழமாக உணர்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய மேலோட்டமான அறிவில் மூழ்கி, அவர்களின் நம்பிக்கை வளர்ந்துள்ளது. துன்பத்தைத் தாங்குவதற்கான அவர்களின் மன உறுதி பலமடைந்துள்ளது. தேவனைப் பற்றிய அவர்களின் அறிவு ஆழமடைந்துள்ளது. தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் உண்மையில் அனுபவிக்கும் வரை, தேவனைப் பற்றிய அவர்களின் எல்லா அறிவும், அவரைப் பற்றிய அவர்களின் கருத்துக்களும் தங்கள் விருப்பமான கற்பனைகள் மற்றும் அனுமானங்களிலிருந்து வெளிவருகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுடைய விசுவாசம் தேவனுடைய எந்தவிதமான சோதனையின் கீழும் இருக்காது, அவர்களின் ஆவிக்குரிய ஜீவிதம் மற்றும் அந்தஸ்து என்று அழைக்கப்படுவது வெறுமனே தேவனுடைய சோதனை அல்லது பரிசோதனையின் கீழ் நிலைநிறுத்தப்படாது. அவர்களுடைய மன உறுதி மணல் மீது கட்டப்பட்ட ஓர் அரண்மனையாக இருக்கிறது, மேலும் தேவனைப் பற்றிய அவர்களுடைய பெயரளவிலான அறிவு அவர்களின் கற்பனையின் ஓர் உருவமே தவிர வேறில்லை. உண்மையில், தேவனுடைய வார்த்தைகளில் நிறைய முயற்சி செய்த இந்த ஜனங்கள், உண்மையான நம்பிக்கை எது, உண்மையான கீழ்ப்படிதல் என்ன, உண்மையான அக்கறை என்ன அல்லது தேவனைப் பற்றிய உண்மையான அறிவு என்ன என்பதை ஒருபோதும் உணரவில்லை. அவர்கள் கோட்பாடு, கற்பனை, அறிவு, பரிசு, பாரம்பரியம், மூடநம்பிக்கை மற்றும் மனிதகுலத்தின் நீதிநெறிக் கோட்பாடுகளை எடுத்துக்கொண்டு, தேவனை நம்புவதற்கும் அவரைப் பின்பற்றுவதற்கும் அவற்றை “மூலதனம்” மற்றும் “ஆயுதங்களாக” ஆக்குகிறார்கள். அவர்களின் நம்பிக்கை மற்றும் அவரைப் பின்பற்றுவதின் அஸ்திவாரங்களாகவும் ஆக்குகிறார்கள். அதே சமயம், அவர்கள் இந்த மூலதனத்தையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தேவனுடைய ஆய்வுகள், சோதனைகள், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்வதற்கும் கையாள்வதற்கும் அவர்கள் தேவனை அறிவதற்கான மாய தாயத்துக்களாக அவற்றை மாற்றுகிறார்கள். முடிவில், அவர்கள் பெறுவது தேவனைப் பற்றிய முடிவுகளைத் தவிர வேறொன்றும் இல்லை. அவை மத அர்த்தத்தில், நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கைகளில் மற்றும் கற்பனையான, கோரமான மற்றும் புதிரான எல்லாவற்றிலும் மூழ்கியுள்ளன. தேவனை அறிந்துகொள்வதற்கும் வரையறுப்பதற்குமான அவர்களின் வழியானது மேலே உள்ள பரலோகத்தை அல்லது வானத்தில் உள்ள பழைய மனிதரை மட்டுமே நம்பும் மனிதர்கள் போல ஒரே மாதிரியான அச்சில் முத்திரையிடப்பட்டுள்ளது, அதே சமயத்தில் தேவனுடைய யதார்த்தம், அவருடைய சாராம்சம், அவரது மனநிலை, அவருடைய உடைமைகள் மற்றும் இருப்பு மற்றும் உண்மையான தேவனோடு தொடர்புடைய அனைத்துமே அவர்களின் அறிவு புரிந்துகொள்ளத் தவறிய விஷயங்கள், அவற்றில் இருந்து அவர்களின் அறிவு வடக்கு மற்றும் தென் துருவங்கள் வரையிலாக முற்றிலுமாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இந்த ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளின் ஏற்பாடு மற்றும் ஊட்டச்சத்தின் கீழ் வாழ்கிறார்கள் என்றாலும், தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான பாதையை அவர்கள் உண்மையிலேயே அடைய முடியவில்லை. இதற்கு உண்மையான காரணம் என்னவென்றால், அவர்கள் ஒருபோதும் தேவனுடன் பழகவில்லை, அவருடன் உண்மையான தொடர்பு அல்லது ஐக்கியம் இருந்ததில்லை. எனவே, அவர்கள் தேவனுடன் பரஸ்பர புரிந்துணர்வை அடைவது சாத்தியமில்லை அல்லது தங்களுக்குள் உண்மையான நம்பிக்கையை எழுப்புவது, தேவனைப் பின்பற்றுவது அல்லது வணங்குவது சாத்தியமற்றதாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் இவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தேவனை இவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும்—இந்த பார்வை மற்றும் மனநிலை அவர்களின் முயற்சிகளிலிருந்து வெறுங்கையுடன் திரும்புவதற்கு அவர்களை உட்படுத்திவிட்டது, தேவனுக்குப் பயந்து, தீமைக்கு விலகிச்செல்லும் பாதையை நித்திய காலமாக அவர்கள் ஒருபோதும் மிதித்து விடமுடியாத நிலைக்கு அவர்களை உட்படுத்திவிட்டது. அவர்களுடைய நோக்கம் மற்றும் அவர்கள் செல்லும் திசையானது, அவர்கள் நித்தியத்துக்கும் தேவனுடைய எதிரிகள் என்பதையும், அவர்களால் ஒருபோதும் இரட்சிப்பைப் பெற முடியாது என்பதையும் குறிக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 4

பல ஆண்டுகளாக தேவனைப் பின்பற்றி, அவருடைய வார்த்தைகளைப் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த ஒரு மனிதரின் தேவனைப் பற்றிய வரையறையின் அடிப்படையில் விக்கிரகங்களுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிற ஒருவருக்கு சமமானதாக இருந்தால், இந்த மனிதர் தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்தை அடையவில்லை என்பதைக் குறிக்கிறது. ஏனென்றால், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் மட்டும் பிரவேசித்திருக்கவில்லை. இதனால் யதார்த்தம், உண்மை, நோக்கங்கள் மற்றும் மனிதகுலத்தின் மீதான கோரிக்கைகள் என தேவனுடைய வார்த்தைகளில் உள்ள இவை அனைத்துக்கும் அந்த மனிதருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, தேவனுடைய வார்த்தைகளின் மேலோட்டமான அர்த்தத்தில் அத்தகைய மனிதன் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அனைத்தும் பயனற்றது: ஏனென்றால், அவர்கள் பின்பற்றுவது வெறும் வார்த்தைகள் என்பதால், அவர்கள் பெறுவது அவசியமான வார்த்தைகள் மட்டுமே. தேவன் பேசும் வார்த்தைகள் வெளிப்படையானவையாக அல்லது வெளிப்புறத் தோற்றத்தில் ஆழமாக இருந்தாலும், அவை அனைத்தும் மனிதன் ஜீவனுக்குள் நுழைகையில் இன்றியமையாத சத்தியங்களாக இருக்கின்றன. அவை ஜீவத்தண்ணிரின் நீரூற்று ஆகும். அவை மனிதனை ஆவியில் மற்றும் மாம்சத்தில் ஜீவிக்க உதவுகின்றன. மனிதன் உயிருடன் இருக்க தேவையானதை அவை வழங்குகின்றன. அவனது அன்றாட ஜீவிதத்தை நடத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நம்பிக்கையையும், இரட்சிப்பைப் பெறுவதற்கான பாதை மற்றும் அதன் குறிக்கோளையும் திசையையும், தேவனுக்கு முன்பாக சிருஷ்டிக்கப்பட்ட ஒருவராக அவர் வைத்திருக்க வேண்டிய ஒவ்வொரு சத்தியத்தையும், மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிகிறான், வணங்குகிறான் என்பது பற்றிய ஒவ்வொரு சத்தியத்தையும் அவன் கொண்டிருக்க வேண்டும். அவை மனிதனுடைய ஜீவிதத்தை உறுதி செய்யும் உத்தரவாதம், அவை மனிதனுடைய அன்றாட அப்பம் மற்றும் அவை மனிதனை வலிமையாகவும் எழுந்து நிற்கவும் உதவும் உறுதியான ஆதரவும் ஆகும். சாதாரண மனிதத்தன்மையில் வாழும் மனுக்குலம் சிருஷ்டிக்கப்பட்ட சத்தியத்தின் யதார்த்தத்தில் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஏனெனில் சத்தியத்தால் நிறைந்திருக்கும் அது சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் மூலம் வாழ்கிறது. இதனால் மனிதகுலம் சீர்கேட்டிலிருந்து விடுபட்டு சத்தியத்தால் நிறைந்திருக்கும், சாத்தானின் கண்ணிகளுக்குத் தப்பித்து, மனிதகுலத்திற்கு சிருஷ்டிகர் தரும் சளைக்காத போதனை, அறிவுரை, ஊக்கம் மற்றும் ஆறுதல் ஆகியவற்றால் நிறைந்திருக்கும். அவை நேர்மறையானவை. அவை, அனைத்தையும் புரிந்துகொள்ள மனிதர்களுக்கு வழிகாட்டும் மற்றும் அறிவூட்டும் கலங்கரை விளக்கமாகும். அவை மனிதர்கள் வெளியே ஜீவிப்பதையும், நீதியான மற்றும் நன்மையான அனைத்தையும் வைத்திருப்பதையும் உறுதி செய்யும் உத்தரவாதம் ஆகும். அவை எல்லா ஜனங்களும், நிகழ்வுகளும், பொருட்களும் அளவிடும் அளவுகோல் ஆகும். அவை இரட்சிப்பு மற்றும் ஒளியின் பாதையை நோக்கி மனிதர்களை வழிநடத்தும் வழிகாட்டி ஆகும். தேவனுடைய வார்த்தைகளானது நடைமுறை அனுபவத்தில் மட்டுமே மனிதனுக்கு சத்தியத்தையும் ஜீவனையும் வழங்க முடியும். சாதாரண மனிதத்தன்மை என்றால் என்ன, அர்த்தமுள்ள ஜீவிதம் எது, உண்மையான சிருஷ்டிப்பு எது, தேவனுக்கு உண்மையான கீழ்ப்படிதல் எது என்பதை இங்கு மட்டுமே மனிதன் புரிந்துகொள்ள முடியும். தேவன் மீது எவ்வாறு அக்கறைகொள்ள வேண்டும், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனுடைய கடமையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும், உண்மையான மனிதனுடைய வெளிப்பாட்டை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதை மனிதன் இங்கு புரிந்துகொள்ள முடியும். உண்மையான விசுவாசம் மற்றும் உண்மையான வழிபாடு என்பதன் பொருள் என்ன என்பதை இங்கு மனிதன் புரிந்துகொள்ள முடியும். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர் யார் என்பதை இங்கு மனிதன் புரிந்துகொள்ள முடியும். எல்லா சிருஷ்டிப்புகளின் எஜமானராக இருப்பவர் சிருஷ்டிப்பை ஆளுகிறார், வழிநடத்துகிறார், வழங்குகிறார் என்பதை மனிதன் இங்கு புரிந்துகொள்ள முடியும். எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் எஜமானர் இருக்கும், வெளிப்படும் மற்றும் செயல்படும் வழியை மனிதன் இங்கு புரிந்துகொள்ள முடியும். தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்திலிருந்து பிரிக்கப்பட்ட மனிதனுக்கு தேவனுடைய வார்த்தைகள் மற்றும் சத்தியத்தைப் பற்றிய உண்மையான அறிவு அல்லது நுண்ணறிவு இல்லை. அத்தகைய மனிதர் ஒரு நேர்மையான உயிருள்ள சடலமாகவும், ஒரு முழுமையான கூடாகவும் சிருஷ்டிகருடன் தொடர்புடைய எல்லா அறிவுடனும் தொடர்பும் இல்லாதவராகவும் இருப்பார். தேவனுடைய பார்வையில், அத்தகைய மனிதர் ஒருபோதும் அவரை நம்பவில்லை. அவரை ஒருபோதும் பின்பற்றவில்லை. ஆகவே, தேவன் அவரை அவருடைய விசுவாசியாகவோ அல்லது அவரைப் பின்பற்றுபவராகவோ, உண்மையான சிருஷ்டியாகவோ அங்கீகரிக்க மாட்டார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 5

ஓர் உண்மையான சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன், சிருஷ்டிகர் யார், மனிதனுடைய சிருஷ்டிப்பு எதற்காக, ஒரு சிருஷ்டியின் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுவது மற்றும் எல்லா சிருஷ்டிப்புகளின் தேவனை எவ்வாறு வணங்குவது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சிருஷ்டிகரின் நோக்கங்கள், விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும், அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் கவனித்துக்கொள்ள வேண்டும். சிருஷ்டிகரின் வழிக்கு ஏற்பச் செயல்பட வேண்டும். தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்க வேண்டும்.

தேவனுக்கு பயப்படுவது என்றால் என்ன? ஒருவர் எவ்வாறு தீமையைத் தவிர்க்க முடியும்?

“தேவனுக்குப் பயப்படுவது” என்பது பெயரிடப்படாத பயம் மற்றும் திகில் என்று அர்த்தமல்ல, தவிர்த்தலும், தூரத்தில் வைத்தலும் அல்ல மற்றும் விக்கிரகாராதனையோ மூடநம்பிக்கையோ அல்ல. மாறாக, அது போற்றுதல், மரியாதை, நம்பிக்கை, புரிதல், அக்கறை, கீழ்ப்படிதல், பிரதிஷ்டை, அன்பு, அத்துடன் நிபந்தனையற்ற மற்றும் குறைகூறாத வழிபாடு, காணிக்கை மற்றும் ஒப்புக்கொடுத்தல் ஆகியனவாகும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான போற்றுதல், உண்மையான நம்பிக்கை, உண்மையான புரிதல், உண்மையான அக்கறை அல்லது கீழ்ப்படிதல் இருக்காது. ஆனால் பயம், கவலை, சந்தேகம், தவறான புரிதல், ஏய்ப்பு மற்றும் தவிர்ப்பு ஆகியவை இருக்கும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான பிரதிஷ்டை மற்றும் காணிக்கை இருக்காது. தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான வழிபாடும் ஒப்புக்கொடுத்தலும் இருக்காது. குருட்டு வழிபாடு மற்றும் மூடநம்பிக்கை மட்டுமே இருக்கும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலம் தேவனுடைய வழிக்கு ஏற்ப செயல்படவோ, தேவனுக்குப் பயப்படவோ அல்லது தீமையைத் தவிர்க்கவோ முடியாது. மாறாக, மனிதன் ஈடுபடும் ஒவ்வொரு செயலும் நடத்தையும் கலகம் மற்றும் எதிர்ப்பால் நிரப்பப்படும். அவதூறான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரைப் பற்றிய மோசமான நியாயத்தீர்ப்புகளால் நிரப்பப்படும். சத்தியத்திற்கு மாறாகவும் தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்கு மாறாகவும் செயல்படும் தீங்கான நடத்தையால் நிரப்பப்படும்.

மனிதகுலம் தேவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்தவுடன், அவர்கள் அவரைப் பின்பற்றுவதில் அவரைச் சார்ந்திருப்பதில் உண்மையானவர்களாக இருப்பார்கள். உண்மையான நம்பிக்கையுடன் இருப்பதாலும், தேவனைச் சார்ந்திருப்பதாலும் மட்டுமே மனிதகுலத்திற்கு உண்மையான புரிதலும் உணர்தலும் இருக்க முடியும். தேவனைப் பற்றிய உண்மையான புரிதலுடன் அவர் மீதான உண்மையான அக்கறையும் வருகிறது. தேவன் மீதான உண்மையான அக்கறையுடன் மட்டுமே மனிதகுலம் உண்மையான கீழ்ப்படிதலைக் கொண்டிருக்க முடியும். தேவனுக்கான உண்மையான கீழ்ப்படிதலால் மட்டுமே மனிதகுலம் உண்மையான பிரதிஷ்டை செய்ய முடியும். தேவனுக்கு உண்மையான பிரதிஷ்டை செய்வதன் மூலம் மட்டுமே மனிதகுலத்திடம் நிபந்தனையற்ற மற்றும் புகார் இல்லாத கைம்மாறு இருக்க முடியும். உண்மையான நம்பிக்கை மற்றும் சார்பு, உண்மையான புரிதல் மற்றும் அக்கறை, உண்மையான கீழ்ப்படிதல், உண்மையான பிரதிஷ்டை மற்றும் கைம்மாறு ஆகியவற்றால் மட்டுமே, தேவனுடைய மனநிலையையும் சாரத்தையும் மனிதகுலம் உண்மையிலேயே அறிந்துகொள்ள முடியும் மற்றும் சிருஷ்டிகரின் அடையாளத்தை அறிந்துகொள்ள முடியும். சிருஷ்டிகரை அவர்கள் உண்மையிலேயே அறிந்துகொண்டால்தான் மனிதகுலம் தங்களுக்குள் உண்மையான வழிபாட்டையும் ஒப்புக்கொடுத்தலையும் எழுப்ப முடியும். சிருஷ்டிகருக்கு உண்மையான வழிபாடும் ஒப்புக்கொடுத்தலும் இருக்கும்போது மட்டுமே, மனிதகுலத்தால் அவர்களின் தீய வழிகளை ஒதுக்கி வைக்க முடியும், அதாவது தீமையைத் தவிர்க்க முடியும்.

இது “தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான” முழு செயல்முறையையும் உருவாக்குகிறது. இது, தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான முழு உள்ளடக்கமாகும். இது, தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கு பயணிக்க வேண்டிய பாதையாகும்.

“தேவனுக்குப் பயப்படுவதும், தீமையைத் தவிர்ப்பதும்” மற்றும் தேவனை அறிவதும் எண்ணற்ற நூல்களால் பிரிக்கமுடியாமல் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கிடையேயான தொடர்பு பிரத்தியட்சமாகத் தெரிகிறது. ஒருவர் தீமையைத் தவிர்ப்பதற்கு விரும்பினால், முதலில் தேவன் மீது உண்மையான பயம் இருக்க வேண்டும். ஒருவர் தேவனைப் பற்றிய உண்மையான பயத்தை அடைய விரும்பினால், முதலில் தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இருக்க வேண்டும். தேவனைப் பற்றிய அறிவை அடைய ஒருவர் விரும்பினால், முதலில் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்க வேண்டும், தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும், தேவனுடைய சிட்சையையும் தண்டித்து திருத்துதலையும் அனுபவிக்க வேண்டும், அவருடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க வேண்டும். ஒருவர் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்க விரும்பினால், ஒருவர் முதலில் தேவனுடைய வார்த்தைகளை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும், தேவனை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும், மற்றும் ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான சூழல்களின் வடிவத்திலும் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்க தேவனிடம் கேட்க வேண்டும். ஒருவர் தேவனோடு, தேவனுடைய வார்த்தைகளோடு நேருக்கு நேர் வர விரும்பினால், முதலில் ஓர் எளிய மற்றும் நேர்மையான இருதயம், சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கான தயார்நிலை, துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் விருப்பம், மனஉறுதி மற்றும் தீமையைத் தவிர்ப்பதற்கான தைரியம் மற்றும் ஓர் உண்மையான சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக ஆசை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்…. இவ்வாறு, படிப்படியாக முன்னேறும்போது, நீ தேவனிடம் இன்னும் நெருக்கமாக வருவாய், உன் இருதயம் இன்னும் தூய்மையாக வளரும் மற்றும் உன் ஜீவிதத்தையும் உயிருடன் இருப்பதன் மதிப்பையும், தேவனையும் அறிந்துகொள்ளச் செய்யும், இன்னும் அர்த்தமுள்ளவனாகவும், இன்னும் பிரகாசமானவனாகவும் மாறுவாய். ஒரு நாள், சிருஷ்டிகர் இனி ஒரு புதிர் அல்ல என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து ஒருபோதும் மறைக்கப்படவில்லை என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து ஒருபோதும் முகத்தை மறைக்கவில்லை என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து வெகு தொலைவில் இல்லை என்றும், சிருஷ்டிகர் இனி உன் எண்ணங்களில் நீ தொடர்ந்து ஏங்கி, உணர முடியாமல் போனவர் அல்ல என்றும், அவர் உன் இடது மற்றும் வலதுபுறம் நிஜமாகவும் உண்மையாகவும் பாதுகாப்பாக நிற்கிறார் என்றும், உன் ஜீவனை வழங்குகிறார் என்றும், உன் விதியைக் கட்டுப்படுத்துகிறார் என்றும், நீ உணருவாய். அவர் தொலைதூர அடிவானத்தில் இல்லை, மேகங்களில் தன்னைத்தானே மறைக்கவில்லை. அவர் உன் பக்கத்திலேயே இருக்கிறார். உன்னை எல்லாவற்றிலும் வழிநடத்துகிறார். உன்னிடம் உள்ள அனைத்திடமும் உன்னிடமும் அவர் மட்டுமே இருக்கிறார். அத்தகைய தேவன், இருதயத்திலிருந்து அவரை நேசிக்கவும், அவருடன் ஒட்டிக்கொள்ளவும், அவரை நெருக்கமாகப் பிடித்துக் கொள்ளவும், அவரைப் போற்றவும், அவரை இழக்க பயப்படுவதற்கும், இனிமேல் அவரைத் துறக்க, அவருக்குக் கீழ்ப்படியாமலும் இருக்க அல்லது அவரைத் தவிர்க்க அல்லது தூரத்தில் அவரை தள்ளி வைக்க விரும்பாமல் இருப்பதற்கும் உன்னை அனுமதிக்கிறார். நீ விரும்புவதெல்லாம் அவர் மீது அக்கறைகொள்வதும், அவருக்குக் கீழ்ப்படிவதும், அவர் உனக்குக் கொடுக்கும் அனைத்தையும் திருப்பிக் கொடுப்பதும், அவருடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிவதும் மட்டுமே. நீ இனி வழிநடத்தப்படுவதை, உனக்கு வழங்கப்படுவதை, கவனிக்கப்படுவதை, அவரால் பாதுகாக்கப்படுவதை, அவர் கட்டளையிடுவதை, உனக்காக ஆணையிடுவதை, இனி மறுக்க மாட்டாய். நீ விரும்புவதெல்லாம் அவரைப் பின்பற்றுவதும், அவருடைய துணையுடன் அவரைச் சுற்றியே இருப்பதும், அவரை உன் ஒரே ஜீவனாக ஏற்றுக்கொள்வதும், அவரை உன் ஒரே கர்த்தராக ஏற்றுக்கொள்வதும், உன் ஒரே தேவனாக ஏற்றுக்கொள்வதும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 6

ஜனங்களுடைய நம்பிக்கைகள் சத்தியத்தின் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது

சிலரால் கஷ்டங்களைத் தாங்க முடிகிறது, விலைக்கிரயத்தைச் செலுத்த முடிகிறது, வெளிப்புறமாக மிகவும் நன்றாக நடந்துக்கொள்ள முடிகிறது, மிகவும் மரியாதைக்குரியவர்களாக, மற்றவர்களின் புகழைப் பெறுகிறவர்களாக இருக்க முடிகிறது. இத்தகைய வெளிப்புற நடத்தையானது சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்காக என்று கருதலாம் என்று கூறுகிறீர்களா? அத்தகையவர்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள் என்பதாக ஒருவர் தீர்மானிக்க முடியுமா? ஏன் ஒவ்வொரு நேரமும் ஜனங்கள் அத்தகைய மனிதர்களைப் பார்த்து, அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்துகிறார்கள், சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் பாதையில் நடக்கிறார்கள் மற்றும் தேவனுடைய வழியைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதாக நினைக்கிறார்கள்? சிலர் ஏன் இப்படி நினைக்கிறார்கள்? அதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டுமே உள்ளது. அந்த விளக்கம் என்னவாக இருக்கிறது? சத்தியத்தைக் கடைப்பிடிப்பது என்றால் என்ன, தேவனைத் திருப்திப்படுத்துவது என்றால் என்ன, சத்தியத்தின் யதார்த்தத்தை உண்மையாக வைத்திருப்பதன் அர்த்தம் என்ன என்பன போன்ற சில கேள்விகள் பலருக்கு மிகவும் தெளிவானவையாக இல்லை. ஆகவே, வெளிப்புறமாக ஆவிக்குரியவராகவும், உன்னதமானவராகவும், உயர்ந்தவராகவும் மற்றும் சிறந்தவராகவும் தோன்றுபவர்களால் பெரும்பாலும் ஏமாற்றப்படும் சிலர் இருக்கிறார்கள். எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றி சொற்பொழிவாற்றக்கூடிய மனிதர்களைப் பொறுத்தவரையில், யாருடைய பேச்சும் செயல்களும் போற்றத்தக்கவை என்று தோன்றுகிறதோ, அவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் ஒருபோதும் அவர்களுடைய செயல்களின் சாராம்சம், அவர்களுடைய செயல்களுக்குப் பின்னால் உள்ள கொள்கைகள் அல்லது அவர்களுடைய குறிக்கோள்கள் என்ன என்பதைப் பார்த்ததில்லை. மேலும், இந்த ஜனங்கள் உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படிகிறார்களா என்பதை அவர்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. இந்த ஜனங்கள் உண்மையிலேயே தேவனுக்கு அஞ்சுகிறார்களா, தீமையைத் தவிர்க்கிறார்களா என்பதை அவர்கள் ஒருபோதும் தீர்மானித்ததில்லை. இந்த ஜனங்களுடைய மனிதத் தன்மையின் சாராம்சத்தை அவர்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. மாறாக, அவர்களுடன் பழகுவதற்கான முதல் படியில் தொடங்கி, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, இந்த ஜனங்களைப் போற்றுவதற்கும் வணங்குவதற்கும் வருகிறார்கள். இறுதியில், இந்த ஜனங்கள் அவர்களுடைய விக்கிரகங்களாக மாறுகிறார்கள். மேலும், சிலரின் மனதில், அவர்கள் வணங்கும் மற்றும் நம்பும் விக்கிரகங்கள் அவர்களுடைய குடும்பங்களையும் வேலைகளையும் கைவிட்டுவிடலாம். வெளிப்புறமாக விலையைக் கொடுக்க முடியும் என்றும் நினைக்கிறவர்கள்—அவர்களே உண்மையிலேயே தேவனை திருப்திப்படுத்துகிறவர்கள். உண்மையில் நல்ல சென்றடையும் இடத்தை அடைய முடியும். இந்த விக்கிரகங்கள், தேவனால் அங்கிகரிக்கப்படுபவையென பார்க்கிறார்கள். அத்தகைய ஒரு விஷயத்தை அவர்கள் நம்புவதற்குக் காரணம் என்னவாக இருக்கிறது? இந்தக் காரியத்தின் சாராம்சம் என்னவாக இருக்கிறது? இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கின்றன? அதன் சாராம்சத்தின் விஷயத்தை முதலில் விவாதிப்போம்.

அடிப்படையில், ஜனங்களுடைய கண்ணோட்டங்கள், அவர்கள் நடைமுறையில் கடைப்பிடிப்பதன் முறைகள், எந்த நடைமுறைக் கொள்கைகளை அவர்கள் பின்பற்றத் தேர்வு செய்கிறார்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த முனைகின்ற காரியங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கும் மனிதகுலத்தின் மீது தேவனுடைய எதிபார்ப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜனங்கள் மேலோட்டமான விஷயங்கள் அல்லது ஆழமான பிரச்சனைகள் அல்லது எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் அல்லது யதார்த்தத்தில் கவனம் செலுத்தினாலும், அவர்கள் அதிகம் கடைப்பிடிக்க வேண்டியதை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை அல்லது அவர்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியவை அவர்களுக்குத் தெரிவதில்லை. இதற்குக் காரணம், ஜனங்கள் சத்தியத்தை விரும்புவதில்லை. எனவே, தேவனுடைய வார்த்தைகளில் காணப்படும் நடைமுறைக் கொள்கைகளைத் தேடுவதற்கும் கடைப்பிடிப்பதற்கும் அவர்கள் நேரத்தைச் செலவழிக்கவும், முயற்சி எடுக்கவும் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் குறுக்குவழிகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் புரிந்துகொள்வதையும், நல்ல நடைமுறை மற்றும் நல்ல நடத்தையையும் அறிந்திருக்கிறார்கள். இந்த சாராம்சமானது அவர்கள் பின்னர் தொடரும் சொந்த இலக்காகிறது. அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய சத்தியமாக எடுத்துக்கொள்கின்றனர். இதன் நேரடி பலன் என்னவென்றால், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கு மாற்றாக மனிதனின் நல்ல நடத்தையை ஜனங்கள் பயன்படுத்துகிறார்கள். அது தேவனிடம் தயவைப் பெறுவதற்கான அவர்களுடைய விருப்பத்தையும் பூர்த்தி செய்கிறது. அது அவர்களுக்கு சத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்கான மூலதனத்தை அளிக்கிறது. தேவனுடன் நியாயப்படுத்தவும் போட்டியிடவும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதே சமயம், ஜனங்களும் தேவனை நேர்மையற்ற முறையில் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் போற்றும் விக்கிரகங்களை அவருக்குப் பதிலாக வைக்கின்றனர். அதுபோன்ற அறியாமை செயல்கள் மற்றும் கண்ணோட்டங்கள் அல்லது ஒருதலைப்பட்ச கருத்துகள் மற்றும் நடைமுறைகளை ஜனங்கள் கொண்டிருக்கச் செய்வது ஒரே ஒரு மூல காரணம் மட்டுமே. இன்று அதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன்: காரணம், ஜனங்கள் தேவனைப் பின்பற்றினாலும், ஒவ்வொரு நாளும் அவரிடம் ஜெபம் செய்தாலும், ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளைப் படித்தாலும், அவர்கள் உண்மையில் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். இங்கே தான் பிரச்சனையின் வேர் உள்ளது. யாரேனும் தேவனுடைய இருதயத்தைப் புரிந்துகொண்டால், அவர் எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார், எதை விரும்புகிறார், எதை நிராகரிக்கிறார், அவர் எத்தகைய மனிதனை நேசிக்கிறார், அவர் எத்தகைய மனிதனை விரும்பவில்லை, ஜனங்களிடம் கோரிக்கைகளை வைக்கும்போது அவர் எத்தகைய தரத்தைப் பயன்படுத்துகிறார், அவற்றை முழுமையாக்குவதற்கு அவர் எத்தகைய மனநிலையை எடுத்துக்கொள்கிறார் என்பதை அறிந்துகொண்டால், பின்னர் அந்த மனிதனுக்கு அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் இருக்க முடியுமா? இது போன்றவர்கள் வெறுமனே சென்று வேறொருவரை வணங்க முடியுமா? ஒரு சாதாரண மனிதன் அவர்களுடைய விக்கிரகம் ஆக முடியுமா? தேவனைப் புரிந்துகொள்ளும் மனிதர்கள் அதை விட சற்றே பகுத்தறிவு பார்வையைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒரு சீர்கேடு நிறைந்த மனிதனை தன்னிச்சையாக விக்கிரகமாக்குவதில்லை. சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் பாதையில் நடக்கும்போது, சில எளிய விதிகள் அல்லது கொள்கைகளை கண்மூடித்தனமாக கடைப்பிடிப்பது சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஒப்பானது என்று அவர்கள் நம்ப மாட்டார்கள்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 7

ஜனங்களுடைய முடிவுகளை தேவன் தீர்மானிக்கும் தரத்தைப் பற்றி பல கருத்துக்கள் உள்ளன

ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த முடிவு குறித்தே அக்கறை கொள்கிறான் என்றால், அந்த முடிவை தேவன் எவ்வாறு தீர்மானிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருவரின் முடிவை தேவன் எந்த விதத்தில் தீர்மானிக்கிறார்? மேலும், அதைத் தீர்மானிக்க அவர் எத்தகைய தரத்தைப் பயன்படுத்துகிறார்? ஒரு மனிதனுடைய முடிவை இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், அதை வெளிப்படுத்த தேவன் என்ன செய்கிறார்? யாருக்காயினும் அது தெரியுமா? ஒரு கணம் முன்பு நான் கூறியது போல, ஜனங்களுடைய முடிவுகளைப் பற்றியும், இந்த முடிவுகள் பிரிக்கப்பட்டுள்ள வகைகளைப் பற்றியும், பல்வேறு வகையான ஜனங்களுக்கு காத்திருக்கும் பல்வேறு முடிவுகளைப் பற்றியும் தடயங்களைத் தேடும் முயற்சியில் தேவனுடைய வார்த்தைகளை ஆராய்வதற்கு ஏற்கனவே மிக நீண்ட நேரம் செலவிட்ட சிலர் உள்ளனர். தேவனுடைய வார்த்தை ஜனங்களுடைய முடிவுகளை எவ்வாறு ஆணையிடுகிறது, அவர் எத்தகைய தரத்தைப் பயன்படுத்துகிறார், ஒரு மனிதனுடைய முடிவை அவர் எவ்வாறு தீர்மானிக்கிறார் என்பதையும் அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்றும் நம்புகின்றனர். எவ்வாறாயினும், இறுதியில், இந்த ஜனங்கள் எந்த பதில்களையும் கண்டுபிடிப்பதில்லை. உண்மையில், தேவனுடைய வார்த்தைகளில் விஷயத்தைக் குறித்து மிகவும் குறைவாகவே சொல்லப்பட்டுள்ளது. அது ஏன்? ஜனங்களுடைய முடிவுகள் இன்னும் வெளிப்படுத்தப்படாத நிலையில், இறுதியில் என்ன நடக்கப் போகிறது என்பதை யாரிடமும் சொல்ல தேவன் விரும்பவில்லை அல்லது அவர்களுடைய இலக்கை யாரிடமும் முன்பே தெரிவிக்க அவர் விரும்பவில்லை, ஏனென்றால் அவ்வாறு செய்வது மனிதகுலத்திற்கு எந்த நன்மையும் அளிக்காது. தற்போது, தேவன் ஜனங்களுடைய முடிவுகளை நிர்ணயிக்கும் விதம் பற்றியும், இந்த முடிவுகளைத் தீர்மானிப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் அவர் தனது கிரியையில் பயன்படுத்தும் கொள்கைகளைப் பற்றியும், யாரேனும் பிழைக்க முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அவர் பயன்படுத்தும் தரத்தைப் பற்றியும் மட்டுமே நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இவை நீங்கள் மிகவும் அக்கறை கொண்ட கேள்விகள் அல்லவா? அப்படியானால், ஜனங்களுடைய முடிவுகளை தேவன் தீர்மானிப்பார் என்று ஜனங்கள் எவ்வாறு நம்புகிறார்கள்? அதன் ஒரு பகுதியை இப்போது குறிப்பிட்டுள்ளீர்கள்: ஒருவரின் கடமைகளை உண்மையாகச் செய்வதற்கும் தேவனுக்காக செலவு செய்வதற்கும் அது சம்பந்தப்பட்டிருப்பதாக உங்களில் சிலர் சொன்னீர்கள். சிலர் தேவனுக்கு அடிபணிந்து அவரை திருப்திப்படுத்துவதாக சொன்னீர்கள். தேவனுடைய திட்டத்திற்கு கீழ்ப்படிவதற்கு ஒரு காரணம் இருப்பதாக சிலர் சொன்னீர்கள். மேலும் சிலர், குறைந்த சுயவிவரத்தை வைத்திருப்பது முக்கியம் என்று சொன்னீர்கள்…. இந்த சத்தியங்களை நீங்கள் கடைப்பிடிக்கும்போது, நடைமுறையில் நீங்கள் சரியானது என்று நம்பும் கொள்கைகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்கும்போது, தேவன் என்ன நினைக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? இப்படி நடப்பது அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறதா இல்லையா என்பதை நீங்கள் எப்போதாவது பரிசீலித்திருக்கிறீர்களா? அது அவருடைய தரத்தைப் பூர்த்தி செய்கிறதா? அது அவருடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா? பெரும்பாலான ஜனங்கள் இந்தக் கேள்விகளை உண்மையில் அதிகம் சிந்திப்பதில்லை என்று நான் நம்புகிறேன். அவர்கள் தேவனுடைய வார்த்தையின் ஒரு பகுதியையோ, பிரசங்கங்களின் ஒரு பகுதியையோ, அவர்கள் வணங்குகிற சில ஆவிக்குரிய மனிதர்களின் தரத்தையோ இயந்திரத்தனமாகப் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் செய்யும்படி தங்களைத் தாங்களே கட்டாயப்படுத்துகிறார்கள். அதுதான் சரியான வழி என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே இறுதியில் என்ன நடந்தாலும் அதைப் பின்பற்றி அதைச் செய்கிறார்கள். “எனக்கு பல ஆண்டுகளாக விசுவாசம் இருக்கிறது. நான் எப்போதும் இந்த வழியில் நடக்கிறேன். நான் தேவனை உண்மையிலேயே திருப்திப்படுத்தியதாக உணர்கிறேன். அதிலிருந்து நான் நிறைய பெறுவதைப் போலவும் உணர்கிறேன். ஏனென்றால், இந்த நேரத்தில் பல சத்தியங்களையும், இதற்கு முன்பு எனக்குப் புரியாத பல விஷயங்களையும் நான் புரிந்துகொண்டேன். குறிப்பாக, எனது பல கருத்துக்களும் பார்வைகளும் மாறிவிட்டன. எனது ஜீவித மதிப்புகள் பெரிதும் மாறிவிட்டன. இப்போது இந்த உலகத்தைப் பற்றி எனக்கு நல்ல புரிதல் இருக்கிறது,” என்று சிலர் நினைக்கிறார்கள். இதுபோன்றவர்கள் இது ஓர் அறுவடை என்றும், இது மனிதகுலத்திற்கான தேவனுடைய கிரியையின் இறுதி முடிவு என்றும் நம்புகிறார்கள். உங்கள் கருத்துப்படி, இந்தத் தரநிலைகள் மற்றும் உங்கள் நடைமுறைகள் அனைத்தும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டால், நீங்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறீர்களா? உங்களில் சிலர், “நிச்சயமாக! தேவனுடைய வார்த்தையின்படி நாங்கள் நடக்கிறோம். மேலே பிரசங்கிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்டவற்றின்படி நாங்கள் நடக்கிறோம். நாங்கள் எப்போதும் எங்கள் கடமைகளைச் செய்கிறோம். தொடர்ந்து தேவனைப் பின்பற்றுகிறோம், நாங்கள் அவரை ஒருபோதும் விட்டுவிடவில்லை. ஆகவே நாங்கள் தேவனைத் திருப்திப்படுத்துகிறோம் என்று முழு நம்பிக்கையுடன் சொல்லலாம். அவருடைய நோக்கங்களைப் பற்றி நாங்கள் எவ்வளவு புரிந்துகொண்டாலும், அவருடைய வார்த்தையை நாங்கள் எவ்வளவு புரிந்துகொண்டாலும், நாங்கள் எப்போதும் தேவனுடன் ஒத்துப்போக விரும்பும் பாதையிலேயே இருக்கிறோம். நாங்கள் சரியாகச் செயல்பட்டு, சரியாக நடக்கும் வரை, நாங்கள் சரியான முடிவையே அடையப்போகிறோம்.” இந்தப் பார்வை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது சரியானதா? “நான் இதற்கு முன்பு இதைப் பற்றி நினைத்ததில்லை. நான் என் கடமையை நிறைவேற்றி, தேவனுடைய வார்த்தைகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படும் வரை, நான் உயிர்வாழ முடியும் என்று நினைக்கிறேன். தேவனுடைய இருதயத்தை என்னால் திருப்திப்படுத்த முடியுமா என்ற கேள்வியை நான் ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை. அவர் வகுத்துள்ள தரத்தை நான் சந்திக்கிறேனா என்று நான் ஒருபோதும் கருதவில்லை. தேவன் ஒருபோதும் தெளிவான அறிவுறுத்தல்களை என்னிடம் சொல்லவில்லை அல்லது எனக்கு வழங்கவில்லை என்பதால், நான் தொடர்ந்து கிரியை செய்து நிறுத்தாமல் இருக்கும் வரை, தேவன் திருப்தி அடைவார் மற்றும் என்னிடம் கூடுதல் எதிர்பார்ப்புகளை வைக்கமாட்டார் என்றும் நான் நம்புகிறேன்” என்று சொல்லுகிற சிலரும் இருக்கலாம். இந்த நம்பிக்கைகள் சரியானவையா? என்னைப் பொறுத்தவரையில், இவ்விதமாக நடைமுறையில் கடைப்பிடிப்பது, இவ்விதமாகச் சிந்திப்பது மற்றும் இந்தக் கண்ணோட்டங்கள் அனைத்தும் கற்பனைகளையும், அதே போல் ஒரு குருட்டுத்தன்மையையும் ஏற்படுத்துகின்றன. ஒருவேளை நான் இதைச் சொல்வது உங்களில் சிலருக்கு சற்று மனச்சோர்வை ஏற்படுத்தி, “குருட்டுத்தன்மை? அது குருட்டுத்தன்மை என்றால், இரட்சிப்பு மற்றும் உயிர்வாழ்வதற்கான எங்கள் நம்பிக்கை மிகச் சிறியது மற்றும் நிச்சயமற்றது, அல்லவா? இவ்வாறு கூறுவதன் மூலம், நீர் எங்களைக் குறைகூறவில்லையா?” என்று சிந்திக்க வைக்கலாம். நீங்கள் எதை நம்பினாலும், நான் சொல்வதும் செய்வதும் உங்களைக் குறை கூறுவது போல் நான் உணரவைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, அவை தேவனுடைய நோக்கங்களைப் பற்றிய உங்கள் புரிதலை மேம்படுத்துவதற்கும், அவர் என்ன நினைக்கிறார், அவர் எதை நிறைவேற்ற விரும்புகிறார், அவர் எத்தகைய மனிதனை விரும்புகிறார், எதை அருவருக்கிறார், எதை வெறுக்கிறார், எத்தகைய மனிதனை ஆதாயம் செய்ய விரும்புகிறார் மற்றும் அவர் எத்தகைய மனிதனை ஒதுக்குகிறார் என்பன பற்றிய உங்கள் புரிதலை மேம்படுத்துவதற்கும் ஆகும். அவை உங்கள் மனதிற்கு தெளிவைத் தருவதற்கும், உங்கள் ஒவ்வொருவரின் செயல்களும் எண்ணங்களும் தேவனுக்குத் தேவையான தரத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகிவிட்டன என்பது பற்றிய தெளிவான புரிதலை உங்களுக்குத் தருவதற்கும் ஆகும். இந்தத் தலைப்புகளைப் பற்றி விவாதிப்பது மிகவும் அவசியமானதா? ஏனென்றால், நீங்கள் இவ்வளவு காலமாக விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள் என்றும், இவ்வளவு பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறீர்கள் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் துல்லியமாக இவை உங்களிடம் அதிகம் இல்லாத விஷயங்களாகும். உங்கள் குறிப்பேடுகளில் ஒவ்வொரு சத்தியங்களையும் நீங்கள் பதிவு செய்திருந்தாலும், நீங்கள் தனிப்பட்ட முறையில் முக்கியமானவை என்று நம்பும் சில விஷயங்களை உங்கள் இருதயங்களில் மனப்பாடம் செய்து பொறித்திருந்தாலும், உங்கள் நடைமுறையில் தேவனைத் திருப்திப்படுத்த இந்த விஷயங்களைப் பயன்படுத்தவும், உங்களுக்கே தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்தவும், முன்னால் இருக்கும் கடினமான காலங்களைக் கடந்துச் செல்ல அவற்றைப் பயன்படுத்தவும் அல்லது நீங்கள் உங்கள் ஜீவிதத்தை வாழும்போது இந்த விஷயங்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கவும் திட்டமிட்டிருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் அதை எப்படிச் செய்தாலும், நீங்கள் உண்மையிலேயே அதைச் செய்தால், இது மிகவும் முக்கியமானதல்ல. அப்படியானால், மிக முக்கியமானது என்னவாக இருக்கிறது? நீ நடைமுறையில் கடைப்பிடிக்கும் போது, நீ செய்கிற ஒவ்வொன்றும்—ஒவ்வொரு செயலும்—தேவன் விரும்புகிறவற்றுக்கு ஏற்ப இருக்கின்றனவா இல்லையா, உன் எல்லா செயல்களும், உன் எண்ணங்களும், நீ அடைய விரும்பும் முடிவுகளும், குறிக்கோளும் உண்மையில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி, அவருடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கின்றனவா இல்லையா, அத்துடன் அவற்றை அவர் ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதை நீ உறுதியாக அறிந்துகொள்ள வேண்டும். இவை மிக முக்கியமானவையாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 8

தேவனுடைய வழியில் நடந்து செல்ல வேண்டும்: தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்க்க வேண்டும்

நீங்கள் கவனிக்க வேண்டிய பழமொழி ஒன்று உள்ளது. இந்தப் பழமொழி மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரையில், அது ஒவ்வொரு நாளும் எண்ணற்ற முறை நினைவுக்கு வருகிறது. ஏன் வருகிறது? ஏனென்றால், ஒவ்வொரு முறையும் நான் ஒருவரைப் பார்க்கிறேன், ஒவ்வொரு முறையும் ஒருவரின் கதையை நான் கேட்கிறேன், ஒவ்வொரு முறையும் ஒரு மனிதனுடைய அனுபவம் அல்லது தேவனை நம்புவதற்கான சாட்சிகளைக் கேட்கும்போது, தேவன் விரும்பும் மனிதனின் வகையில் மற்றும் தேவன் நேசிக்கும் மனிதனுடைய வகையில் இந்த மனிதன் இருக்கிறானா என்பதை என் இருதயத்தில் தீர்மானிக்க நான் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறேன். இந்நிலையில்: அது எத்தகைய சொற்றொடர்? நான் இப்போது உங்கள் அனைவரையும் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய மிகவும் ஆர்வப்படுத்தியிருக்கிறேன். நான் இந்த வார்த்தையை வெளிப்படுத்தும்போது, ஒருவேளை நீங்கள் ஏமாற்றமடைவீர்கள், ஏனென்றால், பல ஆண்டுகளாக உதட்டளவிலான ஊழியக்காரர்கள் சிலர் உள்ளனர். எவ்வாறாயினும், நான் ஒருபோதும் உதட்டளவில் ஊழியம் செய்யவில்லை. இந்தச் சொற்றொடர் என் இருதயத்தில் ஜீவிக்கிறது. எனவே, எத்தகைய சொற்றொடர் அது? அது: “தேவனுடைய வழியில் நடக்க வேண்டும்: தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்க வேண்டும்.” அது மிகவும் எளிமையான சொற்றொடர் அல்லவா? எனினும், எளிமையாக இருந்தபோதிலும், இந்த வார்த்தைகளைப் பற்றி உண்மையிலேயே ஆழமான புரிதல் உள்ளவர்கள் தாங்கள் அதிக கனம் கொண்டிருப்பதாகவும், இந்தச் சொல் ஒருவரின் நடைமுறைக்கு மிகவும் மதிப்புமிக்கது என்றும், அது சத்தியத்தின் யதார்த்தத்தைக் கொண்ட ஜீவனின் மொழியிலுள்ள ஒரு வரி என்றும் உணருவார்கள். அதாவது அது தேவனைத் திருப்திப்படுத்த விரும்புவோரின் ஜீவகால குறிக்கோளாகும் மற்றும் அது தேவனுடைய நோக்கங்களைக் கருத்தில் கொள்ளும் எவரும் பின்பற்ற வேண்டிய ஜீவகாலம் முழுமைக்குமான வழியாகும். எனவே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: இந்தச் சொற்றொடர்கள் சத்தியமல்லவா? அது முக்கியத்துவம் கொண்டது அல்லவா? மேலும், உங்களில் சிலர் இந்தச் சொற்றொடரைப் பற்றிச் சிந்தித்து, அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறீர்கள். ஒருவேளை உங்களில் சிலர் இதைப் பற்றிய சந்தேகத்தையும் உணரலாம்: அது மிகவும் முக்கியமான சொற்றொடரா? அது மிகவும் முக்கியமானதாகுமா? அதை இவ்வளவு வலியுறுத்த வேண்டியது அவசியமானதா? இந்தச் சொற்றொடரை அதிகம் விரும்பாத சிலரும் உங்களில் இருக்கலாம். ஏனென்றால், தேவன் கூறிய எல்லாவற்றையும் எடுத்து இந்த ஒரு பழமொழியாகக் குறைப்பது அது தேவனை மிகவும் முக்கியமற்றவராக ஆக்கிவிவதாக இருக்காதா? தேவன் சொன்னதையெல்லாம் எடுத்துக்கொண்டு, அதை ஒரு சொற்றொடருக்குள் வைப்பது தேவனை சற்று முக்கியமற்றவராக மாற்றுவதல்லவா? அது அவ்வாறுதான் அல்லவா? இந்த வார்த்தைகளின் ஆழமான அர்த்தத்தை உங்களில் பெரும்பாலானோர் முழுமையாகப் புரிந்துக்கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் அனைவரும் இதைப் பற்றி ஒரு குறிப்பைச் செய்திருந்தாலும், இந்தச் சொற்றொடரை உங்கள் இருதயங்களில் வைக்க உங்களுக்கு விருப்பமில்லை. உங்கள் ஓய்வு நேரத்தில் மறுபரிசீலனை செய்ய மற்றும் சிந்திக்க உங்கள் குறிப்பேடுகளில் அதை வெறுமனே எழுதியுள்ளீர்கள். உங்களில் சிலர் இந்தச் சொற்றொடரை மனப்பாடம் செய்யக்கூட கவலைப்பட மாட்டார்கள். ஆனால் அதை நல்ல பயன்பாட்டிற்குக் கொண்டு வர முயற்சிசெய்ய மாட்டார்கள். இருப்பினும், இந்தச் சொற்றொடரை நான் ஏன் குறிப்பிட விரும்புகிறேன்? உங்கள் பார்வையைப் பொருட்படுத்தாமல், நீங்கள் என்ன நினைத்தாலும், நான் இந்தச் சொற்றொடரைக் குறிப்பிட வேண்டியிருந்தது. ஏனென்றால், ஜனங்களுடைய முடிவுகளை தேவன் எவ்வாறு தீர்மானிக்கிறார் என்பதற்கு அது மிகவும் பொருத்தமானதாகும். இந்தச் சொற்றொடரைப் பற்றிய உங்களுடைய தற்போதைய புரிதல் என்ன அல்லது நீங்கள் அதை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல. இதை நான் இன்னும் உங்களுக்குச் சொல்வேன்: இந்தச் சொற்றொடரின் வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்து அவற்றை அனுபவிக்கவும், தேவனுக்கு பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்குமான தரத்தை அடைய முடிந்தால், அவர்கள் தப்பிப்பிழைப்பார்கள் என்பதும் நல்ல முடிவுகளைக் கொண்டிருப்பார்கள் என்பதும் உறுதி. எவ்வாறாயினும், இந்தச் சொற்றொடரால் வகுக்கப்பட்டுள்ள தரத்தை நீ பூர்த்தி செய்ய முடியாவிட்டால், உன் முடிவு என்னவென்று தெரியவில்லை என்று கூறலாம். ஆகவே, உங்கள் சொந்த மன தயாரிப்புக்காக இந்தச் சொல்லைப் பற்றி நான் உங்களிடம் பேசுகிறேன். இதனால் தேவன் உங்களை அளவிட எத்தகைய தரத்தைப் பயன்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 9

ஜனங்கள் தேவனுக்கு அஞ்சுகிறார்களா, தீமையைத் தவிர்க்கிறார்களா என்பதைச் சோதிக்க தேவன் பல்வேறு சோதனைகளைப் பயன்படுத்துகிறார்

தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு யுகத்திலும், அவர் ஜனங்களுக்குச் சில வார்த்தைகளை அளித்து, அவர்களுக்குச் சில சத்தியங்களைச் சொல்கிறார். இந்தச் சத்தியங்கள் ஜனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழி, அவர்கள் நடக்க வேண்டிய வழி, தேவனுக்கு அஞ்சுவதற்கும் பொல்லாப்பை விட்டு விலகுவதற்கும் உதவும் வழி மற்றும் ஜனங்கள் அவர்களுடைய ஜீவிதத்திலும் ஜீவகாலத்திலும் பின்பற்றும் மற்றும் நடைமுறையில் கொண்டு செல்லும் வழியாக இருக்கிறது. இந்தக் காரணங்களால்தான் தேவன் இந்த வார்த்தைகளை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்துகிறார். தேவனிடமிருந்து வரும் இந்த வார்த்தைகள் ஜனங்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அவற்றைக் கடைப்பிடிப்பது என்பது ஜீவனைப் பெறுவதாகும். ஒரு மனிதன் அவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால், அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை, தேவனுடைய வார்த்தைகளின்படி அவர்களுடைய ஜீவிதத்தில் வாழவில்லை என்றால், இந்த மனிதன் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில்லை என்பதாகும். மேலும், ஜனங்கள் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என்றால், அவர்களால் தேவனுக்குப் பயந்து தீமைகளைத் தவிர்க்கவும், தேவனைத் திருப்திப்படுத்தவும் முடியாது. தேவனைத் திருப்திப்படுத்த இயலாத ஜனங்கள் அவருடைய புகழைப் பெற முடியாது. அத்தகையவர்களுக்கு எந்தப் முடிவும் இல்லை. அப்படியானால், அவருடைய கிரியையின் போது, ஒரு மனிதனுடைய முடிவை தேவன் எவ்வாறு தீர்மானிக்கிறார்? ஒரு மனிதனுடைய முடிவைத் தீர்மானிக்க தேவன் என்ன வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார்? இந்த நேரத்தில் நீங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தச் செயல்பாடுகளைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லும்போது, அது தெளிவாகிவிடும். ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே இதை அனுபவித்திருக்கிறீர்கள்.

அவருடைய கிரியையின் போது, ஆரம்பத்தில் இருந்தே, தேவன் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளை வகுத்துள்ளார் அல்லது அவரைப் பின்பற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளை வகுத்துள்ளார் என்று நீங்கள் சொல்லலாம். இந்தச் சோதனைகள் பல்வேறு அளவுகளில் வருகின்றன. அவர்களது குடும்பத்தினரால் நிராகரிக்கப்படும் சோதனையை அனுபவித்தவர்கள், பாதகமான சூழல்களின் சோதனையை அனுபவித்தவர்கள், கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சோதனையை அனுபவித்தவர்கள், தேர்வுகளை எதிர்கொள்ளும் சோதனையை அனுபவித்தவர்கள் மற்றும் பணம் மற்றும் அந்தஸ்தின் சோதனைகளை எதிர்கொண்டார்கள். பொதுவாக, நீங்கள் ஒவ்வொருவரும் எல்லா விதமான சோதனைகளையும் எதிர்கொண்டீர்கள். தேவன் ஏன் இப்படிக் கிரியை செய்கிறார்? அவர் ஏன் எல்லோரிடமும் இப்படி நடந்துக்கொள்கிறார்? அவர் எத்தகைய முடிவை நாடுகிறார்? நான் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் விஷயம் இங்கே உள்ளது: இந்த மனிதன் தனக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதை தேவன் காண விரும்புகிறார். இதன் பொருள் என்னவென்றால், தேவன் உனக்கு ஒரு சோதனையை அளிக்கும்போது, தேவன் சில சூழ்நிலைகள் அல்லது வேறு சில சூழ்நிலைகள் மூலமாக உன்னை எதிர்கொள்ளும்போது, நீ அவருக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கும் மனிதனாக இருக்கிறாயா என்பதைச் சோதிப்பதே அவருடைய நோக்கமாகும். பலியைப் பாதுகாப்பதற்கான கடமையை யாரேனும் எதிர்கொண்டால், இந்தக் கடமை தேவனுடைய பலியுடன் தொடர்பு கொள்ள வழிவகுக்கிறது என்றால், அது தேவன் ஏற்பாடு செய்த ஒன்று என்று நீ கூறுவாயா? இதில் சந்தேகத்திற்கு இடமில்லை! நீ சந்திக்கும் அனைத்தும் தேவன் ஏற்பாடு செய்த ஒன்றாகும். இந்த விஷயத்தை நீ எதிர்கொள்ளும்போது, தேவன் உன்னை ரகசியமாகக் கவனிப்பார். நீ என்ன தேர்வுகள் செய்கிறாய், நீ எவ்வாறு நடைமுறையில் கடைபிடிக்கிறாய், உனக்கு என்ன எண்ணங்கள் உள்ளன என்பதைக் கவனிப்பார். தேவன் இறுதி முடிவுக்கு பெரும் அக்கறை காட்டுகிறார். ஏனென்றால் இந்தக் குறிப்பிட்டச் சோதனையில் நீ அவருடைய தரத்திற்கு ஏற்ப ஜீவித்தாயா இல்லையா என்பதை அளவிட இந்த முடிவு அவருக்கு உதவும். இருப்பினும், ஜனங்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போதெல்லாம், அவர்கள் ஏன் அதை எதிர்கொள்கிறார்கள், அவர்கள் எந்தத் தரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார், அவற்றில் அவர் எதைப் பார்க்க விரும்புகிறார் அல்லது அவர்களிடமிருந்து எதைப் பெற விரும்புகிறார் என்பதைப் பற்றி அவர்கள் அவ்வப்போது சிந்திப்பதில்லை. இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, அத்தகையவர்கள், “அது நான் எதிர்கொண்ட ஒன்றாகும். நான் கவனமாக இருக்க வேண்டும், கவனக்குறைவாக இருக்கக் கூடாது! எதுவாக இருந்தாலும், அது தேவனுடைய பலியாகும், என்னால் அதைத் தொடமுடியாது,” என்று எண்ணுகிறார்கள். இத்தகைய எளிமையான எண்ணங்களைக் கொண்ட ஜனங்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியதாக நம்புகிறார்கள். இந்தச் சோதனையின் பலன் தேவனுக்குத் திருப்தி அளிக்குமா அளிக்காதா? தொடர்ந்து அதைப் பற்றி பேசுங்கள். (ஜனங்கள் தங்கள் இருதயத்தில் தேவனுக்கு அஞ்சினால், தேவனுடைய பலியுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் ஒரு கடமையை எதிர்கொள்ளும்போது, தேவனுடைய மனநிலையைப் புண்படுத்துவது எவ்வளவு எளிது என்பதை அவர்கள் கருத்தில் கொள்வார்கள் மற்றும் எச்சரிக்கையுடன் தொடர அது உறுதி செய்யும்.) உன் பதில் சரியான பாதையில் உள்ளது. ஆனால் அது முழுமையானதல்ல. தேவனுடைய வழியில் நடப்பதென்பது மேலோட்டமான விதிகளைக் கடைப்பிடிப்பது அல்ல. மாறாக, நீ ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, அது தேவனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சூழ்நிலை, அவர் உனக்கு வழங்கிய பொறுப்பு அல்லது அவர் உன்னிடம் ஒப்படைத்த ஒரு பொறுப்பு என்று முதலாவதாகக் கருதுகிறாய். இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, தேவன் உனக்கு அளித்த ஒரு சோதனையாகவும் அதை நீ பார்க்க வேண்டும். இந்த பிரச்சனையை நீ எதிர்கொள்ளும்போது, உன் இருதயத்தில் ஒரு தரநிலை இருக்க வேண்டும். இந்த விஷயம் தேவனிடமிருந்து வந்தது என்று நீ நினைக்க வேண்டும். தேவனுக்கு விசுவாசமாக இருக்கும்போதே உன் பொறுப்பை நிறைவேற்றும் விதத்தில் அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும், அவரைக் கோபப்படுத்தாமல் அல்லது அவருடைய மனநிலையைப் புண்படுத்தாமல் அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் நீ சிந்திக்க வேண்டும். பலிகளின் பாதுகாப்பைப் பற்றி ஒரு சில நொடிகள் முன்பு பேசினோம். இந்த விஷயத்தில் பலிகள் அடங்கும். அது உன் கடமை மற்றும் உன் பொறுப்பையும் குறிக்கும். இந்தப் பொறுப்புக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். இருப்பினும், இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, ஏதேனும் சோதனை இருக்கிறதா? இருக்கிறது. இந்தச் சோதனையானது எங்கிருந்து வருகிறது? இந்தச் சோதனையானது சாத்தானிடமிருந்து வருகிறது மற்றும் அது மனிதர்களின் தீய, சீர்கேடான மனநிலையிலிருந்தும் வருகிறது. இந்தப் பிரச்சனையானது சோதனை இருந்தால், ஜனங்கள் சாட்சியாக நிற்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அது உன் பொறுப்பு மற்றும் கடமையும் கூட. சிலர், “அது ஒரு சிறிய விஷயமாகும். அதை இவ்வளவு பெரிய விஷயமாக்குவது உண்மையில் தேவையானதா?” இது மிகவும் அவசியமானதாக இருக்க முடியாது! ஏனென்றால், தேவனுடைய வழியைக் கடைப்பிடிப்பதற்காக, நமக்கு நடக்கும் அல்லது நம்மைச் சுற்றியுள்ள எதையும், சிறிய விஷயங்களைக்கூட நாம் விட்டுவிடக் கூடாது. எந்தவொரு விஷயமும் நம்மை எதிர்கொள்ளும் வரை, நாம் அதை கவனிக்கக்கூடாது என்று நாம் நினைத்தாலும் இல்லையென்றாலும், அதை நாம் விட்டுவிடக்கூடாது. நடக்கும் எல்லாவற்றையும் தேவன் நமக்குக் கொடுத்த சோதனைகளாகவே பார்க்க வேண்டும். விஷயங்களைப் பார்க்கும் இந்த வழியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உன்னிடம் இத்தகைய மனநிலை இருந்தால், மனதின் ஆழத்தில், நீ தேவனுக்கு அஞ்சுகிறாய் மற்றும் தீமையைத் தவிர்க்க தயாராக இருக்கிறாய் என்னும் உண்மையை அது உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் நீ தேவனை திருப்திப்படுத்த விரும்பினால், தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான தரத்தைப் பூர்த்தி செய்வதிலிருந்து நீ நடைமுறைக்குக் கொண்டு வந்தவை வெகு தொலைவில் இருக்காது.

அதிகக் கவனம் செலுத்தத் தேவையற்றது மற்றும் பொதுவாகக் குறிப்பிட அவசியமற்ற விஷயங்கள் என்று ஜனங்கள் நம்பும் காரியங்கள் பெரும்பாலும் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் எந்தச் சம்பந்தமும் இல்லாத அற்பமானவையாக இருக்கிறது. அதுபோன்ற ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, இந்த மனிதர்கள் அதைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டார்கள். பின்னர் அவர்கள் அதை விழுந்துபோக அனுமதிக்கிறார்கள். இருப்பினும், உண்மையில், இந்த விஷயம் நீ படிக்க வேண்டிய ஒரு பாடமாகும்—தேவனுக்கு எவ்வாறு பயப்பட வேண்டும், தீமையை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பதற்கான பாடமாகும். மேலும், நீ இன்னும் அக்கறை கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த விஷயம் உன்னை எதிர்கொள்ள எழும்போது தேவன் என்ன செய்கிறார் என்பதை அறிந்துக்கொள்வதுதான். தேவன் உன் பக்கத்திலேயே இருக்கிறார். உன் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் கவனித்து, நீ செய்யும் அனைத்தையும், உன் எண்ணங்களில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும் பார்க்கிறார். அது தேவனுடைய கிரியையாகும். சிலர், “அது உண்மை என்றால், நான் ஏன் அதை உணரவில்லை?” என்று கேட்கிறார்கள். நீ அதை உணரவில்லை, ஏனென்றால் நீ தேவனுக்குப் பயந்து, தீமையை விலக்கும் வழியை உன் முதன்மை வழியாகக் கொள்ளவில்லை. ஆகவே, தேவன் ஜனங்களில் செய்யும் நுட்பமான கிரியையை நீ உணர முடியாது. அது ஜனங்களுடைய பல்வேறு எண்ணங்கள் மற்றும் செயல்களின்படி வெளிப்படுகிறது. நீ ஒருமனமற்ற ஒருவன்! பெரிய விஷயம் என்னவாக இருக்கிறது? சிறிய விஷயம் என்னவாக இருக்கிறது? தேவனுடைய வழியில் நடப்பது சம்பந்தப்பட்ட விஷயங்கள் பெரிய அல்லது சிறிய விஷயங்களுக்கு இடையில் பிரிக்கப்படவில்லை, அவைகள் எல்லாம் பெரிய விஷயங்கள்—அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா? (எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியும்.) அன்றாட காரியங்களைப் பொறுத்தவரையில், ஜனங்கள் மிகவும் முக்கியமானதாக மற்றும் குறிப்பிடத்தக்கதாக கருதுகிற சில காரியங்கள் உண்டு, மேலும் சிறிய அற்பமானவைகளாகக் கருதப்படும் மற்ற காரியங்களும் உண்டு. ஜனங்கள் பெரும்பாலும் இந்த முக்கிய விஷயங்களை மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர் மற்றும் அவை தேவனால் அனுப்பப்பட்டவை என்று கருதுகின்றனர். எவ்வாறாயினும், இந்த முக்கிய விஷயங்கள் வெளிவருவதால், ஜனங்களுடைய முதிர்ச்சியற்ற வளர்ச்சி மற்றும் அவர்களுடைய மோசமான திறன் காரணமாக, ஜனங்களால் பெரும்பாலும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடிவதில்லை. அவர்களால் எந்த வெளிப்பாடுகளையும் பெற முடியாது, மதிப்புமிக்க எந்த உண்மையான அறிவையும் பெற முடியாது. சிறிய விஷயங்களைப் பொறுத்தவரையில், இவை வெறுமனே ஜனங்களால் கவனிக்கப்படுவதில்லை மற்றும் ஒவ்வொரு நேரமும் ஒரு சிறு பகுதியாக நழுவ விடப்படுகின்றன. ஆகவே, தேவனுக்கு முன்பாக ஆராயப்படுவதற்கும் அவரால் சோதிக்கப்படுவதற்கும் ஜனங்கள் பல வாய்ப்புகளை இழந்துவிட்டார்கள். தேவன் உனக்காக ஏற்பாடு செய்துள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் மற்றும் சூழ்நிலைகளை நீ எப்போதும் கவனிக்கவில்லை என்பதன் அர்த்தம் என்னவாக இருக்கிறது? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணத்திலும் கூட, தேவனுடைய பரிபூரணத்தையும், அவருடைய தலைமையையும் நீ தொடர்ந்து கைவிடுகிறாய் என்பதே இதன் பொருளாகும். தேவன் உனக்காக ஒரு சூழ்நிலையை ஏற்பாடு செய்யும் போதெல்லாம், அவர் இரகசியமாகப் பார்க்கிறார், உன் இருதயத்தைப் பார்க்கிறார், உன் எண்ணங்களையும் விவாதங்களையும் கவனிக்கிறார், நீ எப்படி நினைக்கிறாய் என்பதைப் பார்க்கிறார் மற்றும் நீ எவ்வாறு செயல்படுவாய் என்று காத்திருக்கிறார். நீ ஒரு கவனக்குறைவான மனிதனாக இருந்தால், தேவனுடைய வழி, அவருடைய வார்த்தைகள் அல்லது சத்தியம் குறித்து ஒருபோதும் அக்கறை கொள்ளாத ஒருவனாக இருந்தால், நீ நிறைவேற்ற வேண்டும் என்று தேவன் விரும்புவதையோ அல்லது அவர் உனக்காக ஒரு குறிப்பிட்ட சூழலை ஏற்பாடு செய்யும் போது நீ பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கும் தேவைகளையோ நீ கவனத்தில் கொள்ள மாட்டாய். நீ சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் எவ்வாறு சத்தியத்துடன் அல்லது தேவனுடைய சித்தத்துடன் தொடர்புபடுகின்றன என்பது உனக்குத் தெரியாது. நீ மீண்டும் மீண்டும் சூழ்நிலைகளையும் அதுபோன்ற சோதனைகளையும் எதிர்கொண்ட பிறகு, தேவன் உன்னிடம் எந்த முடிவுகளையும் காணவில்லை என்றால் அவர் எவ்வாறு தொடருவார்? பலமுறை சோதனைகளைச் சந்தித்தபின்னும், நீ உன் இருதயத்தில் தேவனைப் பெரிதுபடுத்தவில்லை, தேவன் உனக்கு ஏற்பாடு செய்த சூழ்நிலைகளையும் நீ பார்க்கவில்லை: தேவனுடைய சோதனைகள் மற்றும் பரீட்சைகளையும் நீ பார்க்கவில்லை. அதற்கு பதிலாக, ஒன்றன் பின் ஒன்றாக, தேவன் உனக்கு அளித்த வாய்ப்புகளை நீ நிராகரித்தாய், ஒவ்வொரு நேரத்திலும் மீண்டும் மீண்டும் அதை நழுவ விடுகிறாய். அது ஜனங்கள் வெளிப்படுத்தும் அதீதமான கீழ்ப்படியாமை அல்லவா? (ஆம்.) இதன் காரணமாக தேவன் வேதனைப்படுவாரா? (அவர் வேதனைப்படுவார்.) தவறு, தேவன் புண்பட்டதாக எண்ணமாட்டார்! நான் சொல்லும் இதுபோன்ற விஷயங்களைக் கேட்பது உங்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்: “தேவன் எப்போதுமே வேதனைப்படுவார் என்று முன்பு சொல்லவில்லையா? ஆகவே தேவன் வேதனைப்படமாட்டாரா? அப்படியானால், அவர் எப்போது காயப்படுகிறார்?” சுருக்கமாகச் சொன்னால், இந்த சூழ்நிலையில் தேவன் காயமடைய மாட்டார். அப்படியானால், மேலே குறிப்பிட்டுள்ள நடத்தை வகை குறித்து தேவனுடைய மனநிலை என்னவாக இருக்கிறது? தேவன் அனுப்பும் சோதனைகளையும் சிட்சைகளையும் ஜனங்கள் நிராகரிக்கும் போது, அவற்றிடமிருந்து அவர்கள் விலகிச்செல்லும்போது, அத்தகைய மனிதர்களிடம் ஒரே ஒரு மனநிலையை தேவன் வைத்திருப்பார். அது எத்தகைய மனநிலை? தேவன் இத்தகைய மனிதனை, அவரது இருதயத்தின் ஆழத்திலிருந்து அருவருக்கிறார். “அருவருப்பு” என்ற சொல்லுக்கு இரண்டு அடுக்கு அர்த்தங்கள் உள்ளன. எனது பார்வையில் இருந்து அதை எவ்வாறு விளக்கலாம்? ஆழமாக பார்த்தால், “அருவருப்பு” என்ற சொல் வெறுப்பு மற்றும் வெறுப்பின் அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அதன் பொருளின் மற்றொரு பகுதி என்னவாக இருக்கிறது? எதையாவது விட்டுவிடுவதைக் குறிக்கும் பகுதி அது. “விட்டுவிடு” என்றால் என்ன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அல்லவா? சுருக்கமாகச் சொன்னால், “அருவருப்பு” என்பது தேவனுடைய இறுதி எதிர்வினையையும், அவ்வாறு நடந்துக்கொள்ளும் மனிதர்களிடம் இருக்கும் மனநிலையையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். அது அவர்கள் மீதான மிகுந்த வெறுப்பு மற்றும் அருவருப்பு ஆகும். எனவே, அவர்களைக் கைவிடுவதற்கான முடிவை அது விளைகிறது. ஒருபோதும் தேவனுடைய வழியில் நடக்காத, ஒருபோதும் தேவனுக்கு அஞ்சாத, தீமையைத் தவிர்க்காதவர்களுக்கு இதுவே தேவனுடைய இறுதி முடிவு ஆகும். நான் முன்பு குறிப்பிட்ட அந்தச் சொல்லின் முக்கியத்துவத்தை நீங்கள் அனைவரும் இப்போது பார்க்க முடிகிறதா?

ஜனங்களுடைய முடிவுகளைத் தீர்மானிக்க தேவன் பயன்படுத்தும் முறை இப்போது உங்களுக்குப் புரிகிறதா? (அவர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சூழ்நிலைகளை ஏற்பாடு செய்கிறார்.) “அவர் வெவ்வேறு சூழ்நிலைகளை ஏற்பாடு செய்கிறார்”—இது ஜனங்கள் உணரக்கூடிய மற்றும் தொடக்கூடிய ஒரு விஷயமாகும். எனவே, இதைச் செய்வதற்கான தேவனுடைய நோக்கம் என்னவாக இருக்கிறது? ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் பல்வேறு வகையான சோதனைகளை வழங்குவதே அவரது நோக்கமாகும். ஒரு சோதனையின் போது ஒரு மனிதனுடைய எந்த அம்சங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன? நீ எதிர்கொள்ளும், கேட்கும், பார்க்கும் மற்றும் தனிப்பட்ட முறையில் அனுபவிக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் நீ தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்க்கும் மனிதனா என்பதை ஒரு சோதனை தீர்மானிக்கிறது. எல்லோரும் இத்தகைய சோதனையை எதிர்கொள்வார்கள், ஏனென்றால் தேவன் எல்லா ஜனங்களிடமும் நியாயமானவர். உங்களில் சிலர், “நான் பல ஆண்டுகளாக தேவனை நம்புகிறேன், அதனால் நான் எந்தச் சோதனைகளையும் எதிர்கொள்ளவில்லை?” என்று சொல்கிறார்கள். தேவன் உனக்காகச் சூழ்நிலைகளை ஏற்பாடு செய்த போதெல்லாம், நீ அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதால், தேவனுடைய வழியில் நடக்க விரும்பவில்லை என்பதால் நீ அதுவரை எதையும் எதிர்கொள்ளவில்லை என்று நினைக்கிறாய். எனவே, தேவனுடைய சோதனைகளை நீ உணரவில்லை. சிலர், “நான் சில சோதனைகளை எதிர்கொண்டேன். ஆனால் சரியாக நடைமுறையில் கடைப்பிடிப்பது எனக்குத் தெரியாது. நான் நடைமுறையில் கடைப்பிடித்தபோதும், தேவனுடைய சோதனைகளின் போது நான் உறுதியாக நின்றேனா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று சொல்வார்கள். இந்த வகை ஜனங்கள் நிச்சயமாகச் சிறுபான்மையினரில் இல்லை. அப்படியானால், தேவன் ஜனங்களை அளவிடும் தரநிலை என்னவாக இருக்கிறது? சில நிமிடங்களுக்கு முன்பு நான் சொன்னது போலவே: நீ செய்யும், சிந்திக்கும், வெளிப்படுத்தும் எல்லாவற்றிலும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறாயா இல்லையா என்பதாகும். நீ தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கும் மனிதனா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது அதுதான். இந்தக் கருத்து எளிமையானது, அல்லவா? சொல்வது எளிது. ஆனால் நடைமுறையில் வைப்பது எளிதானதா? (அது அவ்வளவு எளிதானது அல்ல.) ஏன் அது அவ்வளவு எளிதானது அல்ல? (ஏனென்றால் ஜனங்களுக்கு தேவனைத் தெரியாது, தேவன் ஜனங்களை எவ்வாறு பூரணப்படுத்துகிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே அவர்கள் விஷயங்களை எதிர்கொள்ளும்போது, அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சத்தியத்தை எவ்வாறு தேடுவது என்று அவர்களுக்குத் தெரியாது. தேவனுக்குப் பயப்படுவதன் யதார்த்தத்தை அவர்கள் பெறுவதற்கு முன்னர் பல்வேறு சோதனைகள், சுத்திகரிப்புகள், சிட்சைகள் மற்றும் நியாயத்தீர்ப்புகளுக்குள்ளாக அவர்கள் செல்ல வேண்டும்.) நீங்கள் அதை அப்படிச் சொல்லலாம். ஆனால் உங்களைப் பொறுத்தவரையில், தேவனுக்குப் பயப்படுவதும் தீமையைத் தவிர்ப்பதும் இப்போதே எளிதில் செய்யக்கூடியதாகத் தெரிகிறது. இதை நான் ஏன் சொல்கிறேன்? ஏனென்றால், நீங்கள் நிறைய பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறீர்கள். சத்தியத்தின் யதார்த்தத்திலிருந்து பெரிய அளவிலான காரியங்களைப் பெற்றுள்ளீர்கள். அது தேவனுக்கு பயப்படுவதையும், தீமையைத் தவிர்ப்பதையும், கோட்பாட்டளவில் மற்றும் அறிவுபூர்வமாகப் புரிந்துக்கொள்ள உங்களை அனுமதித்துள்ளது. தேவனுக்கான பயத்தையும், தீமையைத் தவிர்ப்பதையும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதைப் பொறுத்தவரையில், இந்த அறிவு அனைத்தும் மிகவும் உதவிகரமாக இருந்ததோடு, அதுபோன்ற ஒரு காரியத்தை எளிதில் அடையக்கூடியதாக உணரவைத்தது. அப்படியானால், ஜனங்கள் ஏன் அதை உண்மையில் அடைய முடியாது? ஏனென்றால், மனித சுபாவமும் சாராம்சமும் சாராம்சம் தேவனுக்கு அஞ்சாது. அது தீமையை விரும்புகிறது. அதுதான் உண்மையான காரணமாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 10

தேவனுக்கு பயப்படாமல் தீமையைத் தவிர்க்காமல் இருப்பது தேவனை எதிர்ப்பதாகும்

“தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கவும்” என்ற இந்த சொற்றொடர் எங்கிருந்து வந்தது என்று கேட்பதன் மூலம் ஆரம்பிக்கிறேன். (யோபுவின் புஸ்தகம்.) நாம் யோபுவைக் குறிப்பிட்டுள்ளதால், அவனைப் பற்றி விவாதிப்போம். யோபுவின் காலத்தில், மனிதகுலத்தின் இரட்சிப்பு மற்றும் ஜெயத்துக்காக தேவன் உழைத்தாரா? இல்லை. அது அப்படியல்லவா? மேலும், யோபுவைப் பொறுத்தவரையில், தேவனைப் பற்றி அவனுக்கு எவ்வளவு அறிவு இருந்தது? (அதிகம் இல்லை.) உங்களிடம் இப்போது இருப்பதை விட யோபுவுக்கு தேவனைப் பற்றி அதிகமான அறிவு இருந்ததா அல்லது குறைவாக இருந்ததா? நீங்கள் ஏன் பதிலளிக்கத் துணியவில்லை? அது பதிலளிக்க மிகவும் எளிதான கேள்வி. குறைவாக! அது நிச்சயம்! இந்த நாட்களில் நீங்கள் தேவனை நேருக்கு நேர் பார்க்கிறீர்கள், தேவனுடைய வார்த்தைகளை நேரடியாக பெறுகிறீர்கள். தேவனைப் பற்றி உங்களுக்கு யோபுவை விட அதிக அறிவு இருக்கிறது. இதை நான் ஏன் கொண்டு வருகிறேன்? இவற்றைச் சொல்வதில் எனது நோக்கம் என்னவாக இருக்கிறது? நான் உங்களுக்கு ஓர் உண்மையை விளக்க விரும்புகிறேன். ஆனால் நான் செய்வதற்கு முன்பு, நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: யோபு தேவனைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்தான், ஆனாலும் அவனால் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்க முடிந்தது. இந்த நாட்களில் ஜனங்கள் அவ்வாறு செய்யத் தவறியது ஏன்? (அவர்கள் அதிகமாகச் சீர்கெட்டுள்ளனர்.) “அவர்கள் ஆழமாய்ச் சீர்கெட்டவர்கள் என்பது” பிரச்சனையை ஏற்படுத்தும் மேலோட்டமான நிகழ்வாயிருக்கிறது, ஆனால் நான் அதை ஒருபோதும் அவ்வாறு பார்க்க மாட்டேன். “அதிகமானச் சீர்கேடு,” “தேவனுக்கு எதிரான கிளர்ச்சி,” “தேவனுக்கு எதிரான விசுவாசமின்மை,” “கீழ்ப்படியாமை,” “சத்தியத்தை விரும்பாதது” போன்ற பல கோட்பாடுகளையும் வார்த்தைகளையும் நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்கிறீர்கள் மற்றும் இந்தச் சொற்றொடர்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு பிரச்சனையின் சாராம்சத்தையும் விளக்குங்கள். நடைமுறையில், அது குறைபாடுடன் கடைபிடிக்கும் ஓர் முறையாகும். வெவ்வேறு இயல்புகளின் விஷயங்களை விளக்க ஒரே பதிலைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாமல் சத்தியத்தையும் தேவனையும் பற்றிய அவதூறான சந்தேகங்களை எழுப்புகிறது. இத்தகைய பதிலைக் கேட்பது எனக்குப் பிடிக்கவில்லை. தொடர்ந்து மற்றும் கடினமாக இதைப் பற்றி சிந்தியுங்கள்! நீங்கள் யாரும் இந்த விஷயத்துக்கு எந்த எண்ணமும் கொடுக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் என்னால் அதைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் என்னால் அதை உணர முடிகிறது. இவ்வாறு, நீங்கள் நடிக்கும் போது, நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏதாவது செய்யும்போது, அதன் சாராம்சத்தை உங்களால் உணர முடியாது. ஆனால் நான் பார்க்கும்போது, அதன் சாராம்சத்தை என்னால் காண முடிகிறது. அதன் சாராம்சத்தை என்னால் உணரவும் முடிகிறது. எனவே, இந்தச் சாராம்சம் என்னவாக இருக்கிறது? இந்த நாட்களில் ஜனங்கள் ஏன் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்க இயலாது? உங்கள் பதில்கள் இந்தப் பிரச்சனையின் சாராம்சத்தை விளக்க முடியாமல் வெகு தொலைவில் உள்ளன. அவற்றால் இவற்றைத் தீர்க்கவும் முடியாது. ஏனென்றால், நீங்கள் அறியாத ஓர் ஆதாரத்தை அது கொண்டுள்ளது. இந்த ஆதாரம் என்னவாக இருக்கிறது? நீங்கள் இதைப் பற்றி கேட்க விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எனவே, இந்தப் பிரச்சனையின் மூலத்தை நான் உங்களுக்கு கூறுவேன்.

தேவன் கிரியை செய்யத் தொடங்கியதிலிருந்து, அவர் மனிதர்களை எவ்வாறு கருதினார்? தேவன் அவர்களை மீட்டார். அவர் மனிதர்களைத் தனது குடும்பத்தினர்களாகவும், அவருடைய கிரியையின் பொருட்களாகவும், அவர் ஜெயிக்கவும் காப்பாற்றவும் விரும்பியவர்களாகவும், அவர் முழுமையாக்க விரும்பியவர்களாகவும் பார்த்திருக்கிறார். அவருடைய கிரியையின் ஆரம்பத்தில் மனிதகுலத்தின் மீதான தேவனுடைய மனநிலை அதுவாகும். இருப்பினும், அந்த நேரத்தில் தேவனைப் பற்றிய மனிதகுலத்தின் மனநிலை என்னவாக இருந்தது? தேவன் மனிதர்களுக்கு அறிமுகமில்லாதவர், அவர்கள் தேவனை ஓர் அந்நியன் என்று கருதினார்கள். தேவனைப் பற்றிய அவர்களுடைய மனநிலை சரியான பலனைப் பெறவில்லை என்றும், அவர்கள் தேவனை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது பற்றிய தெளிவான புரிதல் அவர்களுக்கு இல்லை என்றும் கூறலாம். எனவே, அவர்கள் தாங்கள் விரும்பியபடி அவரை நடத்தினார்கள். தாங்கள் விரும்பியதைச் செய்தார்கள். தேவனைப் பற்றி அவர்களுக்கு ஏதாவது கருத்து இருந்ததா? முதலில், அவர்களுக்கு இல்லை. அவர்களுடைய கருத்துக்கள் என்று அழைக்கப்படுவது வெறுமனே அவரைப் பற்றிய சில கருத்துகளையும் யூகங்களையும் உள்ளடக்கியது. அவர்கள் தங்கள் கருத்துக்களுக்கு இணங்குவதை ஏற்றுக்கொண்டார்கள். சில காரியங்கள் அவர்களுடைய கருத்துக்களுக்கு இணங்காதபோது, அவர்கள் அதை மேலோட்டமான நிலையில் கீழ்ப்படிந்தார்கள். ஆனால் அதன் ஆழத்தில் அவர்கள் கடுமையாக முரண்பட்டதாக உணர்ந்தார்கள். அவர்கள் அதை எதிர்த்தார்கள். ஆரம்பத்தில் தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு அதுதான்: தேவன் அவர்களைக் குடும்ப உறுப்பினர்களாகக் கருதினார். ஆனாலும் அவர்கள் அவரை அந்நியராகக் கருதினார்கள். இருப்பினும், தேவனுடைய கிரியையின் ஒரு காலத்திற்குப் பிறகு, அவர் எதை அடைய முயற்சிக்கிறார் என்பதை மனிதர்கள் புரிந்துக்கொண்டார்கள் மற்றும் அவர் உண்மையான தேவன் என்பதை அவர்கள் அறிந்தார்கள். அவர்கள் தேவனிடமிருந்து எதைப் பெற முடியும் என்பதை அறிந்துக்கொண்டனர். இந்த நேரத்தில் ஜனங்கள் தேவனை எவ்வாறு கருதினார்கள்? அவர்கள் அவரை ஓர் உயிர்நாடியாகக் கண்டார்கள். அவரிடமிருந்து கிருபையும் ஆசீர்வாதங்களும் வாக்குறுதிகளும் வழங்கப்படும் என்று நம்பினார்கள். இந்த நேரத்தில், தேவன் மனிதர்களை எவ்வாறு கருதினார்? அவர் தனது ஜெயத்துக்கான இலக்குகளாக அவர்களைக் கண்டார். தேவன் அவர்களை நியாயந்தீர்க்கவும், அவர்களைச் சோதிக்கவும், உபத்திரவங்களுக்கு உட்படுத்தவும் வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பினார். இருப்பினும், அப்போது ஜனங்களைப் பொறுத்தவரையில், தேவனைத் தங்கள் சொந்த இலக்குகளை அடைய பயன்படுத்தவேண்டிய ஒரு பொருள் மட்டுமே என்று கருதினர். தேவன் வழங்கிய சத்தியம் அவர்களை வென்று காப்பாற்ற முடியும் என்பதையும், அவரிடமிருந்து அவர்கள் விரும்பியவற்றைப் பெறுவதற்கும், அவர்கள் விரும்பிய இடங்களை அடைவதற்கும் ஒரு வாய்ப்பு இருப்பதையும் ஜனங்கள் கண்டார்கள். இதன் காரணமாக, அவர்களுடைய இருதயங்களில் ஒரு சிறிய நேர்மையானது உருவானது மற்றும் அவர்கள் இந்த தேவனைப் பின்பற்றத் தயாராக இருந்தார்கள். காலம் கடந்துவிட்டது மற்றும் அவர்கள் தேவனைப் பற்றிய மேலோட்டமான மற்றும் கோட்பாட்டு அறிவைப் பெற்றதன் காரணமாக, மனிதர்கள் தேவனோடும் அவர் சொன்ன வார்த்தைகளோடும், அவருடைய பிரசங்கம், அவர் வெளியிட்ட சத்தியங்கள் மற்றும் அவருடைய கிரியையோடும் “பரிச்சயமானவர்களாக” வளரத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே, தேவன் இனி அறிமுகமில்லாதவர் அல்ல என்றும், அவர்கள் ஏற்கனவே தேவனுடன் ஒத்துப்போகும் பாதையில் கால் வைத்திருந்தார்கள் என்றும் அவர்கள் தவறாகப் புரிந்துக்கொண்டனர். இப்போது, ஜனங்கள் சத்தியத்தைப் பற்றிய பல பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறார்கள் மற்றும் தேவனுடைய கிரியையை அதிகம் அனுபவித்திருக்கிறார்கள். ஆயினும்கூட, பல காரணிகளால் மற்றும் சூழ்நிலைகளால் ஏற்படும் குறுக்கீடு மற்றும் தடங்கல் காரணமாக, பெரும்பாலான ஜனங்களால் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் ஜெயம் பெற முடியவில்லை மற்றும் தேவனைத் திருப்திப்படுத்தவும் முடியவில்லை. ஜனங்கள் அதிகளவில் மந்தமாக வளர்ந்துள்ளனர் மற்றும் அதிகளவில் நம்பிக்கையில்லாமல் உள்ளனர். அவர்களுடைய சொந்த முடிவுகள் என்னவென்று தெரியவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு வளர்ந்து வருகிறது. எந்தவொரு ஆடம்பரமான யோசனைகளையும் கொண்டு வர அவர்கள் துணிவதில்லை மற்றும் அவர்கள் முன்னேற முற்படுவதில்லை. அவர்கள் படிப்படியாக தயக்கத்துடன் தொடர்ந்து செல்கிறார்கள், முன்னோக்கிச் செல்கிறார்கள். மனிதர்களின் தற்போதைய நிலையைப் பொறுத்தவரையில், அவர்கள் மீதான தேவனுடைய மனநிலை என்னவாக இருக்கிறது? இந்தச் சத்தியங்களை அவர்களுக்கு வழங்கவும், அவர்களை அவருடைய வழியில் உட்புகுத்தவும் மட்டுமே அவர் விரும்புகிறார். பின்னர் அவர்களை வெவ்வேறு வழிகளில் சோதிக்க பல்வேறு சூழ்நிலைகளை ஏற்பாடு செய்கிறார். இந்த வார்த்தைகளையும், இந்த சத்தியங்களையும், அவருடைய கிரியையையும் எடுத்துக்கொள்வதற்கும், மனிதர்கள் அவருக்குப் பயப்படுவதற்கும் தீமைகளைத் தவிர்ப்பதற்கும் ஒரு முடிவைக் கொண்டுவருவதே அவரது குறிக்கோள் ஆகும். நான் பார்த்த பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளை எடுத்து அவற்றை கோட்பாடுகளாக, வெறுமனே காகிதத்தில் உள்ள எழுத்துக்களாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளாக மட்டுமே கருதுகின்றனர். அவர்களுடைய செயல்களிலும் பேச்சிலும் அல்லது சோதனைகளை எதிர்கொள்ளும் போதும், தேவனுடைய வழியை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக அவர்கள் கருதுவதில்லை. குறிப்பாக, ஜனங்கள் பெரிய சோதனைகளை எதிர்கொள்ளும்போது அது உண்மையாகிறது. அதுபோன்று தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான திசையில் செயல்படும் எந்தவொரு மனிதனையும் நான் பார்த்ததில்லை. எனவே, மனிதர்களைப் பற்றிய தேவனுடைய மனநிலை மிகுந்த வெறுப்பும் அருவருப்பும் நிறைந்ததாகும்! நூற்றுக்கணக்கான முறை என அவர் பலமுறை சோதனைகளை வழங்கிய போதிலும், அவர்களுடைய உறுதியை நிரூபிக்க எந்தவொரு தெளிவான மனநிலையும் அவர்களிடம் இல்லை: “நான் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்க விரும்புகிறேன்!” இந்த தீர்மானத்தை ஜனங்கள் கொண்டிருக்கவில்லை மற்றும் இத்தகைய காட்சியைச் செய்யாததால், தேவனுடைய மனநிலை கடந்த காலங்களில் இருந்ததைப் போல தற்போது இல்லை. அவர் அவர்களுக்கு இரக்கம், தயவு, சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை ஆகியவற்றை அதிகரித்தார். ஆனால், அவர் மனிதகுலத்தில் பெரிதாக ஏமாற்றமடைந்துள்ளார். இந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது யார்? மனிதர்களைப் பற்றிய தேவனுடைய மனநிலை யாரைச் சார்ந்தது? அது அவரைப் பின்பற்றும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்துள்ளது. அவருடைய பல ஆண்டு கால கிரியைகளில், தேவன் ஜனங்களுடைய பல எதிர்பார்ப்புகளை முன்வைத்து, அவர்களுக்காகப் பல சூழ்நிலைகளை ஏற்பாடு செய்துள்ளார். அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனைப் பற்றிய அவர்களுடைய மனநிலை என்னவாக இருந்தாலும், தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான குறிக்கோளுக்கு இணங்க ஜனங்கள் தெளிவாகக் கடைபிடிக்கத் தவறிவிட்டனர். ஆகவே, நான் சுருக்கமான ஒரு சொற்றொடரை வழங்குவேன் மற்றும் தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான தேவனுடைய வழியில் ஜனங்கள் ஏன் நடக்க முடியாது என்பதைப் பற்றி நாம் சொன்ன அனைத்தையும் விளக்க அந்த சொற்றொடரைப் பயன்படுத்துகிறேன். அந்த சொற்றொடர் என்னவாக இருக்கிறது? அது அதுதான்: தேவன் மனிதர்களை தம்முடைய இரட்சிப்பின் பொருளாகவும், அவருடைய கிரியையின் பொருள்களாகவும் கருதுகிறார். மனிதர்கள் தேவனை தங்கள் எதிரியாகவும், அவர்களுடைய விரோதியாகவும் கருதுகின்றனர். இந்த விஷயத்தில் உனக்கு இப்போது தெளிவான புரிதல் இருக்கிறதா? மனிதகுலத்தின் மனநிலை என்ன, தேவனுடைய மனநிலை என்ன, மனிதர்களுக்கும் தேவனுக்கும் இடையிலான உறவு என்ன என்பவை மிகவும் தெளிவாக உள்ளன. நீங்கள் எவ்வளவு பிரசங்கம் கேட்டிருந்தாலும், தேவனுக்கு உண்மையாக இருப்பது, தேவனுக்கு அடிபணிவது, தேவனுடன் இணக்கமாக இருப்பதற்கான வழியைத் தேடுவது, தேவனுக்காக ஜீவகாலம் முழுவதும் செலவழிக்க விரும்புவது மற்றும் தேவனுக்காக ஜீவிப்பது என இவற்றில் உங்கள் சொந்த முடிவுகளை நீங்கள் எடுத்துள்ளீர்கள்—என்னைப் பொறுத்தவரையில், அந்த விஷயங்கள், தேவனுடைய வழியில் சுய எண்ணங்களுடன் நடப்பதற்கான எடுத்துக்காட்டுகள் அல்ல, அது தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். ஆனால் அதற்குப் பதிலாக, அவை வெறுமனே சில குறிக்கோள்களை அடையக்கூடிய பாதைகளாக இருக்கின்றன. அவற்றை அடைவதற்கு, நீங்கள் தயக்கத்துடன் சில விதிமுறைகளைக் கடைபிடிக்கிறீர்கள். துல்லியமாக இந்த விதிமுறைகள்தான் ஜனங்களை தேவனுக்கு பயப்படுவதற்கும் தீமைகளைத் தவிர்ப்பதற்குமான இடத்திலிருந்து தூரமாகக் கொண்டுசெல்கின்றன மற்றும் தேவனை மனிதகுலத்திற்கு எதிராக மீண்டும் ஒரு முறை நிறுத்துகின்றன.

இன்றைய தலைப்பு கொஞ்சம் கனமானது. ஆனால் எதுவாக இருந்தாலும், நீங்கள் வரவிருக்கும் அனுபவங்களையும், வரவிருக்கும் நேரங்களையும் கடந்து செல்லும்போது, நான் உங்களிடம் சொன்னதை நீங்கள் செய்ய முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். தேவன் உங்களுக்குப் பயன்படும்போது மட்டும் அவர் இருக்கிறார் ஆனால் நீங்கள் அவருக்கு எந்தப் பயனும் இல்லாதபோது அவர் இருப்பதில்லை என்பதாக—தேவனை வெறுமையான காற்றின் ஒரு கலவை என்பதாகக் கருத வேண்டாம். உன் ஆழ்மனதில் அதுபோன்ற ஓர் எண்ணத்தை நீ பெற்றவுடன், நீ ஏற்கனவே தேவனைக் கோபப்படுத்தியிருக்கிறாய். ஒருவேளை, “நான் தேவனை வெறுமனே வெறுமையான காற்று என்று கருதவில்லை. நான் எப்போதும் அவரிடம் பிரார்த்தனை செய்கிறேன், நான் எப்போதும் அவரைத் திருப்திப்படுத்த முயற்சிசெய்கிறேன், நான் செய்யும் அனைத்தும் தேவன் எதிர்பார்க்கும் வரம்பு, தரம் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டவையாகும். நான் நிச்சயமாக எனது சொந்த யோசனைகளின்படி நடைமுறையில் கடைப்பிடிக்கவில்லை,” என்று சொல்லும் ஜனங்கள் இருக்கலாம். ஆம், நீ கடைப்பிடிக்கும் இந்த முறை சரியானது ஆகும். ஆயினும்கூட, நீ ஒரு பிரச்சனையை நேருக்கு நேர் சந்திக்கும்போது என்ன நினைக்கிறாய்? நீ ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது எவ்வாறு நடைமுறையில் கடைப்பிடிக்கிறாய்? சிலர் அவரிடம் ஜெபிக்கும் போதும், அவரிடம் மன்றாடும் போதும் தேவன் இருக்கிறார் என்று நினைக்கிறார்கள். ஆனால் பின்னர் அவர்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போதெல்லாம், அவர்கள் தங்களுக்குள் சொந்த யோசனைகளை உருவாக்கி அவற்றுக்குக் கட்டுப்பட விரும்புகிறார்கள். அவர்கள் தேவனை வெறுமையான காற்றின் ஒரு கலவை மட்டுமே என்று கருதுகிறார்கள், அத்தகைய நிலையானது அவர்களுடைய மனதில் தேவனை இல்லாமல் ஆக்குகிறது என்பதே இதன் பொருள் ஆகும். தேவன் அவர்களுக்குத் தேவைப்படும்போது அவர் இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்குத் தேவையில்லை என்றால் அவர் இருக்கக் கூடாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஜனங்கள் தங்கள் சொந்த யோசனைகளின் அடிப்படையில் நடைமுறையில் கடைப்பிடிப்பது போதுமானது என்று நினைக்கிறார்கள். அவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். அவர்கள் தேவனுடைய வழியைத் தேட வேண்டும் என்பதை அவர்கள் நம்பவில்லை. தற்போது இத்தகைய சூழ்நிலையில் உள்ளவர்கள் மற்றும் இத்தகைய நிலையில் சிக்கித் தவிக்கும் ஜனங்களைப் பொறுத்தவரையில், அவர்கள் ஆபத்தை எதிர்கொள்ளவில்லையா? சிலர், “நான் ஆபத்தை எதிர்கொள்கிறேனா இல்லையா என்பதல்லாமல், பல ஆண்டுகளாக எனக்கு விசுவாசம் இருந்ததால், தேவனால் மனிதனைக் கைவிடுவதைத் தாங்க முடியாது என்பதால் தேவன் என்னைக் கைவிட மாட்டார் என்று நான் நம்புகிறேன்,” என்று சொல்கிறார்கள். மற்றவர்கள், “நான் என் தாயின் வயிற்றில் இருந்த காலத்திலிருந்தே தேவனை நம்புகிறேன். நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே காலத்தைப் பொறுத்தவரையில், நான் தேவனால் இரட்சிக்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன், பிழைக்க மிகவும் தகுதியானவன். இந்த நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களாக, நான் எனது குடும்பத்தையும் கிரியையையும் கைவிட்டுவிட்டேன். பணம், அந்தஸ்து, இன்பம் மற்றும் எனது குடும்பத்தினருடனான நேரம் என என்னிடம் இருந்த அனைத்தையும் விட்டுவிட்டேன். நான் பல சுவையான ஆகாரங்களைப் புசிக்கவில்லை, நிறைய கேளிக்கைகளை நான் அனுபவிக்கவில்லை, பல சுவாரஸ்யமான இடங்களை நான் பார்வையிடவில்லை, சாதாரண ஜனங்களால் தாங்க முடியாத துன்பங்களைக் கூட அனுபவித்திருக்கிறேன். இவை அனைத்தினாலும் தேவனால் என்னைக் காப்பாற்ற முடியாவிட்டால், நான் அநியாயமாக நடத்தப்படுகிறேன் என்பதாகும். இந்த வகை தேவனை என்னால் நம்ப முடியவில்லை,” என்று சொல்கிறார்கள். இத்தகைய பார்வையுடன் பலர் இருக்கிறார்களா? (இருக்கின்றனர்.) சரி, அப்படியானால், இன்று நான் ஓர் உண்மையைப் புரிந்துக்கொள்ள உங்களுக்கு உதவப் போகிறேன்: அத்தகைய பார்வை உள்ளவர்கள் அனைவரும் முட்டாள்களாக இருந்து தங்களுக்கே தீங்கு விளைவித்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் கற்பனைகளால் தங்களது கண்களை மூடிக்கொள்கிறார்கள். இந்தக் கற்பனைகளும், அவற்றின் சொந்த முடிவுகளும், தேவனுடைய உண்மையான நோக்கங்களை ஏற்றுக்கொள்வதிலிருந்து மனிதர்களைத் தடுத்து, தேவன் மனிதனிடம் எதிர்பார்க்கும் தரத்தின் இடத்தைப் பெறுகின்றன. அது, அவருடைய உண்மையான இருப்பை அவர்களால் உணரக் கூடாததாக்குகிறது மற்றும் தேவனுடைய வாக்குறுதியின் எந்தப் பகுதியையும் அல்லது பங்கையும் கைவிடச்செய்து தேவனால் பூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை இழக்கச் செய்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 11

ஜனங்களுடைய முடிவுகளையும் தரங்களையும் தேவன் எவ்வாறு தாம் செய்கிறவற்றின் மூலம் தீர்மானிக்கிறார்

எந்தவொரு கருத்துக்களிலும் முடிவுகளிலும் நீ தீர்வு காண்பதற்கு முன், உன்னைப் பற்றிய தேவனுடைய மனநிலை என்ன, அவர் என்ன நினைக்கிறார் என்பவற்றை நீ முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். பின்னர், உன் சொந்தச் சிந்தனை சரியானதா இல்லையா என்பதை நீ தீர்மானிக்கலாம். ஒரு மனிதனுடைய முடிவைத் தீர்மானிக்க தேவன் ஒருபோதும் நேரத்தை ஒரு அளவீட்டின் அலகாகப் பயன்படுத்தவில்லை. ஒரு மனிதன் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கிறான் என்பதில் அவர் அத்தகைய தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அப்படியானால், ஒரு மனிதனுடைய முடிவைத் தீர்மானிக்க தேவன் ஒரு தரமாக எதைப் பயன்படுத்துகிறார்? நேரத்தின் அடிப்படையில் அதைத் தீர்மானிப்பது என்பது ஜனங்களுடைய கருத்துக்களுக்கு மிகவும் ஒத்துப்போகும். மேலும், ஒரு கட்டத்தில் ஒரு பெரிய தொகையை அர்ப்பணித்து, நிறைய செலவு செய்து, பெரும் விலைக்கிரையம் கொடுத்துப் பின் பெரிதும் அவதிப்பட்ட மனிதர்களை நீங்கள் அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். இவர்கள்தான், நீங்கள் பார்க்கும் விதத்தில், தேவனால் காப்பாற்ற முடியும். இந்த மனிதர்கள் காண்பிக்கும் மற்றும் அனுபவிக்கும் அனைத்தும் ஒரு மனிதருடைய முடிவைத் தீர்மானிப்பதற்கான தேவனுடைய நிர்ணயிக்கப்பட்ட தரங்களைப் பற்றிய ஜனங்களுடைய கருத்துக்களுடன் துல்லியமாக ஒத்துப்போகின்றன. நீங்கள் எதை நம்பினாலும் சரி, இந்த உதாரணங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட மாட்டேன். இதைச் சுருக்கமாகச் சொல்வதானால், தேவனுடைய சொந்த சிந்தனையினுள் தரமற்றது எதுவும் மனிதக் கற்பனையிலிருந்து வருகிறது. அதுபோன்ற விஷயங்கள் அனைத்தும் மனிதக் கருத்துக்கள் ஆகும். உன் சொந்தக் கருத்துக்களையும் கற்பனைகளையும் நீ கண்மூடித்தனமாக வற்புறுத்தினால், அதன் முடிவு என்னவாக இருக்கும்? அதன் விளைவாக தேவன் உன்னை அருவருப்பதாக மட்டுமே இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், நீ எப்போதும் தேவனுக்கு முன்பாக உன் தகுதிகளை வெளிப்படுத்துகிறாய். அவருடன் போட்டியிடுகிறாய். அவருடன் வாதிடுகிறாய். அவருடைய சிந்தனையை புரிந்துக்கொள்ள நீ உண்மையிலேயே முயற்சிக்கவில்லை. அவருடைய சித்தத்தை அல்லது மனிதகுலம் மீதான அவருடைய மனநிலையைப் புரிந்துக்கொள்ள நீ முயற்சிக்கவில்லை. இந்நிலையில் முன்னேறுவது எல்லாவற்றிற்கும் மேலாக உன்னை உயர்த்தும் ஆனால் தேவனை உயர்த்தாது. உன்னையே நீ நம்புகிறாய். நீ தேவனை நம்பவில்லை. தேவன் அத்தகையவர்களை விரும்புவதுமில்லை, அத்தகையவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுப்பதும் இல்லை. இத்தகைய கண்ணோட்டத்தை நீ விட்டுவிட்டு, கடந்த காலங்களில் நீ கொண்டிருந்த தவறான கண்ணோட்டங்களைச் சரிசெய்ய முடிந்தால், தேவனுடைய எதிர்பார்ப்புகளின்படி உன்னால் தொடர முடிந்தால், தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியை உன்னால் கடைப்பிடிக்க முடிந்தால், எல்லாவற்றிலும் சிறந்தவராக தேவனை மதிப்பதை உன்னால் நடைமுறைப்படுத்த முடிந்தால், உன்னையும் தேவனையும் வரையறுக்க உன் சொந்த கற்பனைகள், கண்ணோட்டங்கள் அல்லது நம்பிக்கைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடிந்தால், அதற்குப் பதிலாக நீ எல்லா வகையிலும் தேவனுடைய நோக்கங்களைத் தேட முடிந்தால், மனிதகுலத்தைப் பற்றிய அவருடைய மனநிலையை உணர்ந்து புரிந்துக்கொள்ளவும், அவருடைய தரங்களைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவரைத் திருப்திப்படுத்தவும் முடிந்தால், அது அற்புதமாக இருக்கும்! நீ தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைத் தொடங்கப் போகிறாய் என்பதை அது குறிக்கும்.

தேவன் ஜனங்களுடைய பல்வேறு எண்ணங்கள், யோசனைகள் மற்றும் கண்ணோட்டங்களை அவர்களின் முடிவுகளைத் தீர்மானிப்பதற்கான தரங்களாகப் பயன்படுத்தாவிட்டால், ஜனங்களுடைய முடிவுகளைத் தீர்மானிக்க அவர் எத்தகைய தரத்தைப் பயன்படுத்துகிறார்? அவர்களின் முடிவுகளைத் தீர்மானிக்க அவர் சோதனைகளைப் பயன்படுத்துகிறார். ஜனங்களுடைய முடிவுகளைத் தீர்மானிக்க தேவன் சோதனைகளைப் பயன்படுத்துவதற்கு இரண்டு தரநிலைகள் உள்ளன: முதலாவது ஜனங்கள் அனுபவிக்கும் சோதனைகளின் எண்ணிக்கை, இரண்டாவதாக இந்தச் சோதனைகள் ஜனங்கள் மீது ஏற்படுத்தும் முடிவுகள். இந்த இரண்டு குறிகாட்டிகள்தான் ஒரு மனிதனுடைய முடிவை நிறுவுகின்றன. இப்போது, இந்த இரண்டு தரங்களையும் விரிவாகக் கூறுவோம்.

தொடக்கமாக, ஒரு மனிதன் தேவனிடமிருந்து ஒரு சோதனையை எதிர்கொள்ளும்போது (இந்தச் சோதனை உனக்குச் சிறியதாக இருக்கலாம், குறிப்பிடத் தகுதியற்றதாக இருக்கலாம்), அது உன் மீது அவர் வைத்திருக்கும் கரம் என்பதை அவர் உனக்குத் தெளிவாக உணர்த்துவார். இந்தச் சூழ்நிலையை உனக்காக ஏற்பாடு செய்தவர் அவர்தான். நீ இன்னும் வளர்ச்சியில் முதிர்ச்சியடையாமல் இருக்கிறாய், தேவன் உன்னைச் சோதிக்கும் பொருட்டு சோதனைகளை ஏற்பாடு செய்வார். இந்தச் சோதனைகள் உன் வளர்ச்சிக்கும், நீ புரிந்துக்கொள்ளக்கூடிய மற்றும் நீ தாங்கக்கூடிய காரியங்களுக்கும் ஒத்திருக்கும். உன்னில் எந்தப் பகுதி சோதிக்கப்படும்? தேவனைப் பற்றிய உன் மனநிலையாகும். இந்த மனநிலை மிகவும் முக்கியமானதாகுமா? நிச்சயமாக அது முக்கியமானதாகும்! அதற்கு விசேஷித்த முக்கியத்துவம் உள்ளது! மனிதர்களில் இந்த மனநிலை தேவன் விரும்பும் விளைவாகும். எனவே, அவரைப் பொறுத்தவரையில், அது எல்லாவற்றிலும் மிக முக்கியமான விஷயமாகும். இல்லையெனில், தேவன் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் தனது முயற்சிகளை ஜனங்கள் மீது செலவிட மாட்டார். இந்தச் சோதனைகளின் மூலம், தேவன் அவரைப் பற்றிய உன் மனநிலையைக் காண விரும்புகிறார். நீ சரியான பாதையில் செல்கிறாயா இல்லையா என்பதை அவர் பார்க்க விரும்புகிறார். நீ தேவனுக்குப் பயந்து பொல்லாப்பை விட்டு விலகுகிறாயா இல்லையா என்பதை அவர் காண விரும்புகிறார். எனவே, எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் நீ சத்தியத்தை அதிகம் அல்லது குறைவாக புரிந்துகொண்டாலும், நீ இன்னும் தேவனுடைய சோதனைகளை எதிர்கொள்வாய். நீ புரிந்துகொண்ட சத்தியத்தின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து, அவர் உனக்காகப் பொருத்தமான சோதனைகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்வார். நீ மீண்டும் ஒரு சோதனையை எதிர்கொள்ளும்போது, உன் கண்ணோட்டம், உன் கருத்துக்கள் மற்றும் அவரைப் பற்றிய உன் மனநிலை ஆகியவை இடைப்பட்டக் காலத்தில் ஏதேனும் வளர்ச்சியை அனுபவித்திருக்கிறதா என்பதை தேவன் பார்க்க விரும்புவார். சிலர் ஆச்சரியப்படுகிறார்கள், “தேவன் ஏன் எப்போதும் ஜனங்களுடைய மனநிலையைக் காண விரும்புகிறார்? அவர்கள் சத்தியத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை அவர் ஏற்கனவே பார்த்திருக்கவில்லையா? அவர்களுடைய மனநிலையை அவர் ஏன் இன்னும் பார்க்க விரும்புகிறார்?” இது முட்டாள்தனமான காரியமாகும்! தேவன் இந்த முறையில் செயல்படுகிறார் என்பதால், அவருடைய சித்தம் அதில் பொய் சொல்ல வேண்டும். தேவன் தொடர்ந்து பக்கத்திலிருந்து ஜனங்களைக் கவனிக்கிறார். அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும், அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் இயக்கத்தையும் கவனிக்கிறார். அவர் அவர்களுடைய ஒவ்வொரு சிந்தனையையும் யோசனையையும் கூட கவனிக்கிறார். ஜனங்களுக்கு நடக்கும் எல்லாவற்றையும்—அவர்களுடைய நற்செயல்கள், தவறுகள், மீறுதல்கள், அவர்களுடைய கலகங்கள் மற்றும் துரோகங்கள் போன்றவற்றையும் அவர்களுடைய முடிவுகளைத் தீர்மானிக்கும் ஆதாரமாக தேவன் குறித்துக் கொள்கிறார். படிப்படியாக, தேவனுடைய கிரியை உயர்த்தப்படுவதால், நீ அதிகமான சத்தியங்களைக் கேட்பாய். நேர்மறையான விஷயங்களையும் தகவல்களையும் ஏற்றுக்கொள்வாய். சத்தியத்தின் யதார்த்தத்தை நீ அதிகம் பெறுவாய். இந்தச் செயல்பாடு முழுவதிலும், உனக்கான தேவனுடைய எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். அவற்றைப் போலவே, இன்னும் தீவிரமான சோதனைகளை உனக்காக அவர் ஏற்பாடு செய்வார். இதற்கிடையில், அவரைப் பற்றிய உன் மனநிலை முன்னேறியுள்ளதா என்பதை ஆராய்வதே அவரது குறிக்கோளாகும். நிச்சயமாக, அது நிகழும்போது, தேவன் உன்னிடம் கோருகின்ற கண்ணோட்டம் சத்தியத்தின் யதார்த்தத்தைப் பற்றிய உன் புரிதலுடன் ஒத்துப்போகும்.

உன் வளர்ச்சி படிப்படியாக வளரும்போது, தேவன் உன்னிடம் கோரும் தரமும் படிப்படியாக அதிகமாகும். நீ முதிர்ச்சியடையாத நிலையில், நீ எதிர்கொள்ள அவர் மிகக் குறைந்தத் தரத்தை அமைப்பார். உன் வளர்ச்சி கொஞ்சம் அதிகமாக இருக்கும்போது, அவர் உன் தரத்தைச் சற்று உயர்த்துவார். ஆனால் நீ எல்லா சத்தியங்களையும் புரிந்துகொண்ட பிறகு தேவன் என்ன செய்வார்? அவர் உன்னை இன்னும் பெரிய சோதனைகளை எதிர்கொள்ளச் செய்வார். இந்தச் சோதனைகளுக்கு இடையில், தேவன் உன்னிடமிருந்து எதைப் பெற விரும்புகிறார், அவர் உன்னிடம் எதைப் பார்க்க விரும்புகிறார் என்பதானது அவரைப் பற்றிய ஆழமான அறிவும் அவரைப் பற்றிய உண்மையான பயபக்தியுமாகும். இந்த நேரத்தில், அவர் உன்னிடம் எதிர்பார்ப்பவை உன் வளர்ச்சி மிகவும் முதிர்ச்சியடையாதபோது இருந்ததை விட உயர்ந்ததாகவும், “கடுமையானதாகவும்” இருக்கும் (ஜனங்கள் அவற்றைக் கடுமையானவையாகக் கருதக்கூடும். ஆனால் தேவன் அவற்றை நியாயமானவையாகவே கருதுகிறார்). தேவன் ஜனங்களை சோதிக்கும்போது, அவர் எத்தகைய யதார்த்தத்தை உருவாக்க விரும்புகிறார்? ஜனங்கள் தங்கள் இருதயங்களை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறார். சிலர், “நான் அதை எப்படிக் கொடுக்க முடியும்? நான் என் கடமையை நிறைவேற்றினேன். நான் எனது வீட்டையும் ஜீவாதாரத்தையும் கைவிட்டேன். நானே செலவு செய்தேன். இவை அனைத்தும் நான் என் இருதயத்தை தேவனுக்குக் கொடுத்ததற்கான நிகழ்வுகள் அல்லவா? வேறு எப்படி நான் என் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்க முடியும்? இவை உண்மையில் என் இருதயத்தை அவருக்குக் கொடுக்கும் வழிகள் அல்லவா? தேவனுடைய குறிப்பிட்ட எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?” எதிர்பார்ப்பு மிகவும் எளிமையானதாகும். உண்மையில், சிலர் தங்கள் சோதனைகளின் பல்வேறு கட்டங்களில் ஏற்கனவே தங்கள் இருதயங்களைப் பல்வேறு அளவுகளில் தேவனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையான ஜனங்கள் ஒருபோதும் தங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுப்பதில்லை. தேவன் உன்னை சோதிக்கும்போது, உன் இருதயம் அவரோடு இருக்கிறதா, மாம்சத்தோடு இருக்கிறதா அல்லது சாத்தானோடு இருக்கிறதா என்று அவர் பார்க்கிறார். தேவன் உன்னைச் சோதிக்கும்போது, நீ அவருக்கு எதிராக நிற்கிறாயா அல்லது அவருடன் ஒத்துப்போகும் நிலையில் இருக்கிறாயா என்பதை அவர் காண்கிறார். உன் இருதயம் அவருடைய பக்கத்தில் இருக்கிறதா என்பதையும் அவர் காண்கிறார். நீ முதிர்ச்சியடையாத போது, சோதனைகளை எதிர்கொள்கையில், உனக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்ற நீ என்ன செய்ய வேண்டும் என்பதை உன்னால் சரியாக அறிய முடியவில்லை. ஏனென்றால் சத்தியத்தைப் பற்றிய உன் புரிதல் குறைவாகவே உள்ளது. இருப்பினும், நீ இன்னும் கண்ணியமாகவும் உண்மையாகவும் தேவனிடம் ஜெபிக்க முடிந்தால், உன் இருதயத்தை அவருக்குக் கொடுக்க நீ தயாராக இருந்தால், அவரை உன் மகாராஜாவாக்க வேண்டும் மற்றும் நீ மிகவும் விலைமதிப்பற்றவை என்று நம்புகிற எல்லாவற்றையும் அவருக்குக் கொடுக்கத் தயாராக வேண்டும். நீ ஏற்கனவே உன் இருதயத்தை தேவனுக்குக் கொடுத்திருப்பாய். நீ அதிகமான பிரசங்கங்களைக் கேட்கும்போது, சத்தியத்தை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்வதால், உன் வளர்ச்சியும் படிப்படியாக வளரும். தேவனுடைய எதிர்பார்ப்புகளின் தரமானது நீ முதிர்ச்சியற்ற நிலையில் இருந்ததைப் போல இப்போது இருக்காது. அவர் உன்னிடம் உயர்ந்த தரத்தைக் கோருவார். ஜனங்கள் படிப்படியாக தங்கள் இருதயங்களை தேவனிடம் ஒப்படைக்கும்போது, அவர்களுடைய இருதயங்கள் மெதுவாக அவரிடம் நெருங்கி வருகின்றன. ஜனங்கள் உண்மையிலேயே தேவனிடம் நெருக்கமாக வளர முடியும் என்பதால், அவர்களுடைய இருதயங்கள் அவரை மேலும் வணங்குகின்றன. தேவன் விரும்புவது அத்தகைய இருதயம் மட்டுமே.

தேவன் ஒருவரின் இருதயத்தைப் பெற விரும்பும்போது, அவர் அந்த மனிதனை பல சோதனைகளின் ஊடாகக் கடத்துவார். இந்தச் சோதனைகளின் போது, தேவன் அந்த மனிதனுடைய இருதயத்தைப் பெறாவிட்டால் அல்லது இந்த மனிதனுக்கு ஏதேனும் மனநிலை இருப்பதைக் காணவில்லை என்றால், அதாவது, இந்த மனிதன் அவருக்கான பயபக்தியை நடைமுறையில் கடைப்பிடிப்பதை அல்லது பயபக்தியுடன் நடந்துக்கொள்வதை தேவன் காணவில்லையென்றால் மற்றும் அவர் இந்த மனிதனில் தீமையைத் தவிர்ப்பதற்கான ஒரு மனநிலையையும் தீர்மானத்தையும் காணவில்லை என்றால்—பின்னர், பல சோதனைகளுக்குப் பிறகு, அவர்களுடனான தேவனுடைய பொறுமை திரும்பப் பெறப்படும் மற்றும் அவர் அவர்களைச் சகித்துக்கொள்ள மாட்டார். அவர் இனி இந்த மனிதனை சோதிக்க மாட்டார் மற்றும் அவர் இனிமேல் அவர்கள் மீது கிரியை செய்ய மாட்டார். எனவே, இந்த மனிதனுடைய முடிவைப் பொறுத்தவரையில் அது எதைக் குறிக்கிறது? இதன் பொருள் என்னவெனில் அவர்களுக்கு எந்த முடிவும் இல்லை என்பதே. ஒருவேளை இந்த மனிதன் எந்தத் தீங்கும் செய்யாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை அவர்கள் எந்தவிதமான இடையூறும் செய்யாமல் இருந்திருக்கலாம். எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை அவர்கள் தேவனை வெளிப்படையாக எதிர்க்காமல் இருந்திருக்கலாம். இருப்பினும், இந்த மனிதனுடைய இருதயம் தேவனிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருபோதும் தேவனைப் பற்றிய தெளிவான மனநிலையையும் கண்ணோட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய இருதயம் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளதா அல்லது அவர்கள் அவருக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கு முயல்கிறார்களா என்பதை தேவனால் தெளிவாகக் காண முடியாது. தேவன் அத்தகையவர்களிடம் பொறுமையை இழக்கிறார், இனி அவர்களுக்கு எந்த விலைக்கிரையமும் செலுத்தமாட்டார், அவர்களுக்கு எந்த இரக்கத்தையும் அளிக்க மாட்டார் அல்லது அவர்களுக்காகக் கிரியை செய்ய மாட்டார். அத்தகைய மனிதனுடைய தேவன் மீதான விசுவாசமுள்ள ஜீவிதம் ஏற்கனவே முடிந்துவிட்டது. ஏனென்றால், தேவன் அவர்களுக்குக் கொடுத்த பல சோதனைகள் அனைத்திலும், தேவன் அவர் விரும்பும் முடிவைப் பெறவில்லை. இவ்வாறு, பரிசுத்த ஆவியின் அறிவொளியையும் வெளிச்சத்தையும் நான் ஏராளமான ஜனங்களில் பார்த்ததில்லை. அதை எவ்வாறு காணலாம்? இந்த ஜனங்கள் பல ஆண்டுகளாக தேவனை நம்பியிருக்கலாம் மற்றும் மேலோட்டமாகப் பார்க்கையில், அவர்கள் உற்சாகத்துடன் நடந்து கொண்டார்கள். அவர்கள் பல புஸ்தகங்களைப் படித்திருக்கலாம், பல விவகாரங்களைக் கையாண்டிருக்கலாம், ஒரு டஜன் குறிப்பேடுகளை எழுதியிருக்கலாம் மற்றும் பல வார்த்தைகளையும் கோட்பாடுகளையும் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கலாம். இருப்பினும், அவர்களில் காணக்கூடிய வளர்ச்சி ஒன்றும் இல்லை. தேவன் பற்றிய அவர்களுடைய கருத்துக்கள் கண்ணுக்குத் தெரியாதவையாக இருக்கின்றன. அவர்களின் மனநிலைகள் இன்னும் தெளிவாக இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களுடைய இருதயங்களைக் காண முடியாது. அவை எப்போதும் மூடப்பட்டு முத்திரைப் போடப்படுகின்றன—அவை தேவனிடமிருந்து முத்திரையிடப்படுகின்றன. இதன் விளைவாக, அவர் அவர்களுடைய உண்மையான இருதயங்களைக் காணவில்லை. இந்த ஜனங்களிடம் அவர் மீதான உண்மையான பயபக்தியைக் காணவில்லை மற்றும் இந்த ஜனங்கள் எவ்வாறு அவருடைய வழியில் நடக்கிறார்கள் என்பதை அவர் காணவில்லை. தேவன் இப்போதும் அத்தகையவர்களைப் பெறவில்லை என்றால், எதிர்காலத்தில் அவர்களைப் பெற முடியுமா? அவரால் பெற முடியாது! பெற முடியாத விஷயங்களுக்கு அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பாரா? அவர் அழுத்தம் கொடுக்க மாட்டார்! அப்படியானால், அத்தகைய மனிதர்களிடம் தேவனுடைய தற்போதைய மனநிலை என்னவாக இருக்கிறது? (அவர் அவர்களை அருவருக்கிறார், புறக்கணிக்கிறார்.) அவர் அவர்களைப் புறக்கணிக்கிறார்! அத்தகையவர்களுக்கு தேவன் செவிசாய்ப்பதில்லை. அவர் அவர்களை அருவருக்கிறார். இந்த வார்த்தைகளை மிக விரைவாகவும், மிக துல்லியமாகவும் மனப்பாடம் செய்துள்ளீர்கள். நீங்கள் கேட்டதை நீங்கள் புரிந்துக்கொண்டது போல் தோன்றுகிறது!

சிலர் தேவனைப் பின்பற்றத் தொடங்கும் போது, முதிர்ச்சியற்றவர்களாகவும், அறிவற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவருடைய சித்தத்தை அவர்கள் புரிந்துக்கொள்வதில்லை. அவரை நம்புவது என்னவென்று அவர்களுக்குத் தெரிவதில்லை. தேவனை நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் மனிதனால் உருவான மற்றும் தவறான வழியை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அத்தகையவர்கள் சோதனைகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் அதை அறிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் தேவனுடைய வழிகாட்டுதலுக்கும் அறிவொளிக்கும் உணர்ச்சியற்றவர்களாக இருக்கின்றனர். தங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுப்பதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது அல்லது ஒரு சோதனையின் போது உறுதியாக நிற்பது என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. தேவன் அத்தகையவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கொடுப்பார். அந்த நேரத்தில், அவர் தனது சோதனைகள் என்ன என்பதையும் அவருடைய நோக்கங்கள் என்ன என்பதையும் புரிந்துகொள்ள அனுமதிப்பார். பின்னர், இந்த ஜனங்கள் தங்கள் கருத்துக்களை நிரூபிக்க வேண்டும். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு, தேவன் இன்னும் காத்திருக்கிறார். இன்னும் சில கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் இன்னும் தடுமாறி, தங்கள் இருதயங்களை தேவனிடம் ஒப்படைக்க விரும்பி ஆனால் அவ்வாறு செய்வதில் சமரசம் செய்யாதவர்களிடம் மற்றும் சில அடிப்படைச் சத்தியங்களை நடைமுறையில் வைத்திருந்தாலும், முக்கிய சோதனைகளை எதிர்கொள்ளும்போது மறைய மற்றும் அதைக் கைவிட முயற்சிப்பவர்களிடம் தேவனுடைய மனநிலை என்னவாக இருக்கிறது? அவர் இன்னும் அவர்களிடமிருந்து கொஞ்சம் எதிர்பார்க்கிறார். இதன் பலன் அவர்களுடைய மனநிலை மற்றும் செயல்பாடைப் பொறுத்ததாகும். ஜனங்கள் முன்னேறத் தயாராக இல்லை என்றால், தேவன் எதைச் செய்கிறவராக இருக்கிறார்? அவர் அவர்களைக் கைவிடுகிறார். ஏனென்றால், தேவன் உன்னைக் கைவிடுவதற்கு முன்பு, நீ ஏற்கனவே உன் மீது நம்பிக்கை இழந்துவிட்டாய். எனவே, அவ்வாறு செய்ததற்காக நீ தேவனைக் குறை கூற முடியாது, நீ தேவனுக்கு எதிராக ஒரு வருத்தத்தைக் கொண்டிருப்பது தவறாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 12

தேவனைப் பின்பற்றும்போது, ஜனங்கள் அவருடைய சித்தத்திற்கு எப்போதாவது கவனம் செலுத்துவார்கள். அவருடைய எண்ணங்களையும் மனிதர்களைப் பற்றிய அவருடைய மனநிலையையும் அவர்கள் கவனிப்பதில்லை. தேவனுடைய எண்ணங்களை ஜனங்கள் புரிந்துக்கொள்ளவில்லை. ஆகவே, அவருடைய நோக்கங்கள் மற்றும் மனநிலையைப் பற்றிய கேள்விகளைக் கேட்கும்போது, நீங்கள் குழப்பமடைகிறீர்கள். நீங்கள் ஆழ்ந்த நிச்சயமற்ற நிலையில் விழுகிறீர்கள். பின்னர் நீங்கள் யூகிக்கிறீர்கள் அல்லது சூதாட்டம் செய்கிறீர்கள். இது என்ன மாதிரியான மனநிலை? அது ஓர் உண்மையை நிரூபிக்கிறது: தேவனை நம்புகிற பெரும்பாலான ஜனங்கள் அவரை வெறுமையான காற்றின் கலவை என்றும் ஒரு நிமிடம் இருப்பதாகவும் பிறகு இல்லாமல் போவதாகவும் கருதுகிறார்கள். நான் ஏன் இதை அவ்வாறு சொல்கிறேன்? ஏனென்றால் நீங்கள் பிரச்சனையை எதிர்கொள்ளும்போதெல்லாம், உங்களுக்கு தேவனுடைய சித்தம் என்னவென்று தெரியாது. அவருடைய சித்தத்தை நீங்கள் ஏன் அறியவில்லை? இப்போது மட்டுமல்ல, தொடக்கத்தில் இருந்து முடிவு வரையில் இந்தப் பிரச்சனையைப் பற்றிய தேவனுடைய மனநிலை உங்களுக்குத் தெரிவதில்லை. நீ அதைப் புரிந்துக்கொள்ள முடியாது. தேவனுடைய மனநிலை என்னவென்று உனக்கு தெரியாது. ஆனால் நீ அதை அதிகம் சிந்தித்துள்ளாயா? நீ அதை அறிய முயன்றாயா? நீ அதைப் பற்றி பேசியுள்ளாயா? இல்லை! அது ஓர் உண்மையை உறுதிப்படுத்துகிறது: உன் நம்பிக்கையில் உள்ள தேவனுக்கு யதார்த்த தேவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. தேவன் மீதான உன் நம்பிக்கையில், உன் சொந்த நோக்கங்களையும் உன் தலைவர்களின் எண்ணங்களையும் மட்டுமே சிந்தித்துப் பார்க்கிறாய். தேவனுடைய சித்தத்தை உண்மையிலேயே அறியவோ தேடவோ முயலாமல், தேவனுடைய வார்த்தைகளின் மேலோட்டமான மற்றும் கோட்பாட்டு அர்த்தத்தை நீ சிந்திக்கிறாய். அது அப்படி அல்லவா? இந்த விஷயத்தின் சாராம்சம் மிகவும் கொடூரமானது! பல வருடங்களுக்குப் பிறகு, தேவனை நம்பும் பலரை நான் பார்த்திருக்கிறேன். மாற்றிய அவர்களுடைய நம்பிக்கை அவர்களுடைய மனதிற்குள் தேவனை என்னவாக மாற்றியது? சிலர் தேவனை வெறுமையான காற்றின் கலவை என்று நம்புகிறார்கள். தேவனுடைய இருப்பைப் பற்றிய கேள்விகளுக்கு இந்த ஜனங்களுக்கு எந்தப் பதிலும் இல்லை. ஏனென்றால் அவருடைய இருப்பை அல்லது அவர் இல்லாததை அவர்களால் உணரவோ அறியவோ முடியாது, அதைத் தெளிவாகப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ அவர்களால் கூடாது. ஆழ்மனதில், இந்த ஜனங்கள் தேவன் இல்லை என்று நினைக்கிறார்கள். மற்றவர்கள் தேவனை ஒரு மனிதனாக நம்புகிறார்கள். அவர்களால் செய்ய முடியாத எல்லாவற்றையும் அவரால் செய்ய முடியாது என்றும், அவர்கள் நினைப்பது போல அவர் சிந்திக்க வேண்டும் என்றும் இந்த ஜனங்கள் நினைக்கிறார்கள். தேவனைப் பற்றிய அவர்களுடைய வரையறை “கண்ணுக்குத் தெரியாத மற்றும் தீண்டத்தகாத மனிதர்” என்பதாகும். தேவனை ஒரு கைப்பாவை போல நம்புகிற ஒரு கூட்டமும் இருக்கிறது. தேவனுக்கு உணர்ச்சிகள் இல்லை என்று இந்த ஜனங்கள் நம்புகிறார்கள். தேவன் ஒரு களிமண் சிலை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, தேவனுக்கு எந்த மனநிலையும், கண்ணோட்டமும், யோசனைகளும் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர் மனிதகுலத்தின் தயவில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். ஜனங்கள் தங்கள் விருப்பம் போல நம்புகிறார்கள். அவர்கள் அவரைப் பெரியவராக மாற்றினால், அவர் பெரியவர். அவர்கள் அவரைச் சிறியதாக மாற்றினால், அவர் சிறியவர். ஜனங்கள் பாவம் செய்யும்போது, தேவனுடைய இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் அன்பு தேவைப்படும்போது, தேவன் அவருடைய இரக்கத்தைப் பெரிதாக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த ஜனங்கள் தங்கள் மனதில் ஒரு “தேவனை” கண்டுபிடித்து, பின்னர் இந்த “தேவன்” தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், அவர்களுடைய எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்யவும் செய்கிறார்கள். எப்போது என்றாலும் அல்லது எங்கு இருந்தாலும், அத்தகையவர்கள் என்ன செய்தாலும், அவர்கள் தேவனை நடத்துவதிலும், தங்கள் விசுவாசத்திலும் இந்த மனோபாவத்தைப் பின்பற்றுவார்கள். தேவனுடைய மனநிலையை மோசமாக்கி, அவர்களைக் காப்பாற்ற முடியும் என்று இன்னும் நம்புபவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் தேவனுடைய அன்பு எல்லையற்றது என்றும் அவருடைய மனநிலை நீதியானது என்றும் ஒருவர் தேவனை எவ்வளவு புண்படுத்தினாலும், அவர் அதில் எதையும் நினைவில் கொள்ள மாட்டார் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். மனித தவறுகள், மனித மீறுதல்கள் மற்றும் மனித ஒத்துழையாமை ஆகியவை ஒரு மனிதனுடைய மனநிலையின் உடனடி வெளிப்பாடுகள் என்பதால், தேவன் ஜனங்களுக்கு வாய்ப்புகளைத் தருவார், அவர்களுடன் சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் இருப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். முன்பு போலவே தேவன் இன்னும் அவர்களை நேசிப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு, அவர்கள் இரட்சிப்பை அடைவதற்கான அதிக நம்பிக்கையைப் பேணுகிறார்கள். உண்மையில், ஜனங்கள் தேவனை எப்படி நம்பினாலும், அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றாதவரை, அவர் அவர்களை நோக்கி எதிர்மறையான மனநிலையை வைத்திருப்பார். ஏனென்றால், தேவனிடமான உன் விசுவாச ஜீவிதத்தில், நீ தேவனுடைய வார்த்தைகளின் புஸ்தகத்தை ஒரு புதையலாகப் பார்த்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் அதைப் படித்தாலும் வாசித்தாலும், உண்மையான தேவனை நீ ஒதுக்கி வைத்தாய். நீங்கள் அவரை வெறும் வெறுமையான காற்றாக அல்லது ஒரு மனிதராக மட்டுமே கருதுகிறீர்கள்—உங்களில் சிலர், அவரை ஒரு கைப்பாவையாக கருதுகிறீர்கள். நான் ஏன் இதை இவ்வாறு கூறுகிறேன்? நான் அவ்வாறு கூறுகிறேன், ஏனென்றால் நான் அதை அவ்வாறு பார்க்கிறேன். நீங்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டாலும் அல்லது சில சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், உன் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களுக்கும், உனக்குள்ளாக நீ உருவாக்கும் விஷயங்களுக்கும், ஒருபோதும் தேவனுடைய வார்த்தைகளுடனோ சத்தியத்தைப் பின்தொடர்வதுடனோ எந்தத் தொடர்பும் இல்லை. நீ என்ன நினைக்கிறாய், உன் சொந்தப் பார்வை என்ன என்பது உனக்கு மட்டுமே தெரியும். பின்னர் உன் சொந்த எண்ணங்களையும் கருத்துக்களையும் தேவன் மீது கட்டாயப்படுத்துகிறாய். உன் மனதில் அவை தேவனுடைய கண்ணோட்டங்களாக மாறுகின்றன. நீ இந்தக் கண்ணோட்டங்களின் தரங்களை உறுதியற்ற முறையில் ஆதரிக்கிறாய். காலப்போக்கில், அதுபோன்று தொடர்வது உன்னை தேவனிடமிருந்து வெகுதூரம் அழைத்துச் செல்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 13

தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொண்டு, தேவனைப் பற்றிய அனைத்துத் தவறான கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து விட வேண்டும்

நீங்கள் தற்போது நம்புகிற இந்த தேவன் எத்தகைய தேவன்? நீங்கள் எப்போதாவது இதைப் பற்றி சிந்தித்திருக்கிறீர்களா? ஒரு தீய மனிதன் தீய செயல்களைச் செய்வதை அவர் காணும்போது, அவர் அதை வெறுக்கிறாரா? (ஆம், அவர் வெறுக்கிறார்.) அறிவற்றவர்கள் தவறு செய்வதைப் பார்க்கும்போது அவருடைய மனநிலை என்னவாக இருக்கிறது? (துக்கம்.) ஜனங்கள் அவருடைய பலிகளைத் திருடுவதை அவர் காணும்போது, அவருடைய மனநிலை என்னவாக இருக்கிறது? (அவர் அவர்களை வெறுக்கிறார்.) அது எல்லாம் மிகவும் தெளிவாக இருக்கிறது. சத்தியத்தை எந்த வகையிலும் பின்தொடராத ஒருவர், தேவன்மீதுள்ள நம்பிக்கையில் குழப்பமடைவதை தேவன் பார்க்கும்போது, தேவனுடைய மனநிலை என்னவாக இருக்கிறது? உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை, அல்லவா? “குழப்பம்” என்பது ஒரு மனநிலையாக இருப்பது ஒரு பாவமல்ல. அது தேவனைப் புண்படுத்தாது மற்றும் அது ஒரு வகையான பெரிய தவறு அல்ல என்று ஜனங்கள் உணர்கிறார்கள். எனவே, என்னிடம் சொல்லுங்கள்—இந்த விஷயத்தில் தேவனுடைய மனநிலை எத்தகையதாக இருக்கிறது? (அவற்றை ஒப்புக்கொள்ள அவருக்கு சித்தமில்லை.) “ஒப்புக்கொள்ள சித்தமில்லை”—அது எத்தகைய மனநிலை? தேவன் இந்த ஜனங்களைத் தாழ்வாகப் பார்க்கிறார் மற்றும் அவர்களை வெறுக்கிறார் என்று அர்த்தமாகும்! அத்தகையவர்களை அவர் கையாளும் விதம் அவர்களுக்குப் புறக்கணிப்பைக் கொடுப்பதாகும். தேவனுடைய அணுகுமுறை அவர்களை ஒதுக்கி வைப்பதாகும். அவர்கள் மீதான எந்த கிரியையிலும் ஈடுபடாமல் இருப்பதாகும் மற்றும் இதில் அறிவொளி, வெளிச்சம், சிட்சித்தல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் கிரியையும் அடங்கும். அத்தகைய மனிதர்கள் தேவனுடைய கிரியையில் கணக்கிடப்படுவதில்லை. தேவனுடைய மனநிலையை மோசமாக்கி, அவருடைய நிர்வாக ஆணைகளை மீறுபவர்களுக்கு தேவனுடைய மனநிலை என்னவாக இருக்கிறது? மிகுந்த வெறுப்பாகும்! தம்முடைய மனநிலையை மோசமாக்குவதில் வருத்தப்படாத ஜனங்களால் தேவன் மிகுதியாகக் கோபப்படுகிறார்! “கோபம்” என்பது ஓர் உணர்வு, மனநிலை மட்டுமல்ல. அது ஒரு தெளிவான மனநிலையுடன் ஒத்துப்போவதில்லை. இருப்பினும், இந்த உணர்வு—இந்த மனநிலை—அத்தகையவர்களுக்கு ஒரு முடிவைக் கொடுக்கும்: அது தேவனை மிகுந்த வெறுப்பால் நிரப்பும்! இந்த தீவிர வெறுப்பின் பலன் என்னவாக இருக்கிறது? தேவன் இந்த ஜனங்களை ஒதுக்கி வைப்பார். தற்போதைக்கு அவர் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார். “இலையுதிர்காலத்திற்குப் பிறகு” அவர்களுக்குப் பதிலளிக்க அவர் காத்திருப்பார். அது எதைக் குறிக்கிறது? இந்த ஜனங்களுக்கு இன்னும் முடிவுகள் இருக்குமா? அத்தகையவர்களுக்கு எந்தவொரு முடிவையும் வழங்க தேவன் ஒருபோதும் விரும்புவதில்லை! எனவே, தேவன் இப்போது அத்தகையவர்களுக்குப் பதிலளிக்கவில்லை என்பது சாதாரணமானதல்லவா? (ஆம், அது சாதாரணமானதாகும்.) அத்தகையவர்கள் எதைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்? அவர்களுடைய நடத்தை மற்றும் அவர்கள் செய்த தீய செயல்களின் எதிர்மறையான பலன்களைத் தாங்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அத்தகைய மனிதனுக்கு அது தேவனுடைய பதிலாகும். எனவே, இப்போது நான் அத்தகையவர்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன்: இனி உங்கள் பிரமைகளைத் தக்க வைத்துக் கொள்ளாதீர்கள் மற்றும் விருப்பமான சிந்தனையில் ஈடுபட வேண்டாம். தேவன் ஜனங்களை காலவரையின்றி சகித்துக்கொள்ளாமல் இருப்பார். அவர்களுடைய அத்துமீறல்களையோ, கீழ்ப்படியாமையையோ அவர் என்றென்றும் சகித்துக்கொள்ள மாட்டார். சிலர், “அதுபோன்ற சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஜெபிக்கும்போது, அவர்கள் குறிப்பாக தேவனால் தொட்டதாக உணர்கிறார்கள். பின்னர் அவர்கள் கடுமையாக அழுகிறார்கள். பொதுவாக அவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனுடைய பிரசன்னமும் தேவனுடைய வழிகாட்டுதலும் இருப்பதாகத் தெரிகிறது,” என்று சொல்வார்கள். அத்தகைய முட்டாள்தனத்தை உச்சரிக்க வேண்டாம்! தேவனுடைய வழிகாட்டுதல் ஒருபுறம் இருக்க, கசப்பான கண்ணீர் என்பது ஒருவர் தேவனால் தொடப்படுவதாகவோ தேவனுடைய இருப்பை அனுபவிப்பதாகவோ அர்த்தமல்ல. ஜனங்கள் தேவனைக் கோபப்படுத்தினால், அவர் இன்னும் அவர்களை வழிநடத்துவாரா? சுருக்கமாகச் சொன்னால், ஒருவரை புறம்பாக்கவும் கைவிடவும் தேவன் தீர்மானித்தபோது, அந்த மனிதனுடைய முடிவு ஏற்கனவே போய்விட்டது. அவர்கள் ஜெபிக்கும் போது அவர்களுடைய உணர்வுகள் எவ்வளவு சாதகமாக இருந்தாலும் அல்லது அவர்கள் இருதயங்களில் தேவன் மீது எவ்வளவு விசுவாசம் வைத்திருந்தாலும், அது இனி பலனளிப்பதில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால், தேவனுக்கு இத்தகைய விசுவாசம் தேவையில்லை. அவர் ஏற்கனவே இந்த ஜனங்களை நிராகரித்தார். எதிர்காலத்தில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பதும் முக்கியமற்றதாகும். முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஜனங்கள் தேவனைக் கோபப்படுத்தும் தருணத்தில், அவர்களுடைய முடிவுகள் அமைக்கப்படுகின்றன. அத்தகையவர்களைக் இரட்சிக்க வேண்டாம் என்று தேவன் தீர்மானித்திருந்தால், அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு விட்டுவைக்கப்படுவார்கள். அது தேவனுடைய மனநிலையாகும்.

தேவனுடைய சாராம்சம் அன்பின் ஒரு கூறைக் கொண்டிருந்தாலும், அவர் ஒவ்வொரு மனிதனிடமும் இரக்கமுள்ளவர் என்றாலும், அவருடைய சாராம்சம் கண்ணியத்தில் ஒன்றாகும் என்ற உண்மையை ஜனங்கள் கவனிக்கவில்லை மற்றும் அதை மறந்துவிட்டார்கள். அவருக்கு அன்பு இருக்கிறது என்பதற்கு ஜனங்கள் அவருடைய உணர்ச்சிகளை அல்லது எதிர்வினையைச் சுதந்திரமாகப் புண்படுத்தலாம் அல்லது தூண்டலாம் என்று அர்த்தமாகாது அல்லது அவர் இரக்கம் காட்டினார் என்பதன் அர்த்தம், அவர் ஜனங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதில் அவருக்கு எந்தக் கொள்கைகளும் இல்லை என்பதாகாது. தேவன் உயிருடன் இருக்கிறார். அவர் உண்மையிலேயே இருக்கிறார். அவர் கற்பனை செய்யப்பட்ட கைப்பாவை அல்லது வேறு எந்தப் பொருளும் இல்லை. அவர் இருக்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் எப்போதுமே அவருடைய இருதயத்தின் குரலைக் கவனமாகக் கேட்க வேண்டும். அவருடைய மனநிலையில் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அவருடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள வேண்டும். தேவனை வரையறுக்க நாம் மனித கற்பனைகளைப் பயன்படுத்தக்கூடாது. மனித எண்ணங்களையும் விருப்பங்களையும் அவர் மீது திணிக்கக் கூடாது. மனித கற்பனைகளின் அடிப்படையில் தேவன் மனிதர்களை மனித முறையில் நடத்தும்படி செய்கிறார். நீ இதைச் செய்தால், நீ தேவனைக் கோபப்படுத்துகிறாய், அவருடைய கோபத்தைத் தூண்டுகிறாய், அவருடைய கனத்திற்கு சவால் விடுகிறாய்! எனவே, இந்த விஷயத்தின் தீவிரத்தை நீங்கள் புரிந்துக்கொண்டவுடன், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் செயல்களில் எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பேச்சில் எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருங்கள். தேவனை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது குறித்து, நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருக்கிறீர்களோ அது அவ்வளவு சிறந்தது ஆகும்! தேவனுடைய மனநிலை என்னவென்று உனக்கு புரியாதபோது, கவனக்குறைவாகப் பேசுவதைத் தவிர்க்கவும். உன் செயல்களில் கவனக்குறைவாக இருக்காதே, சாதாரணமாக நாமங்களைப் பயன்படுத்த வேண்டாம். அதைவிட முக்கியமாக, எந்தவொரு தன்னிச்சையான முடிவுகளுக்கும் வர வேண்டாம். மாறாக, நீ காத்திருந்து தேட வேண்டும். இந்தச் செயல்களும் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான வெளிப்பாடாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீ இதை அடைய முடிந்தால், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மனநிலையை நீ கொண்டிருந்தால், உன் முட்டாள்தனம், அறியாமை மற்றும் விஷயங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது ஆகியவற்றைக் குறித்து தேவன் உன்னைக் குறை கூற மாட்டார். மாறாக, தேவனைப் புண்படுத்துவது குறித்த பயம், அவருடைய நோக்கங்களுக்கு மரியாதை மற்றும் அவருக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பம் ஆகியவற்றின் காரணமாக, தேவன் உன்னை நினைவில் கொள்வார், உனக்கு வழிகாட்டுவார், அறிவூட்டுவார் அல்லது உன் முதிர்ச்சியற்ற தன்மையையும் அறியாமையையும் பொறுத்துக்கொள்வார். மாறாக, அவரைப் பற்றிய உன் மனநிலை பொருத்தமற்றதாக இருந்தால்—நீ விரும்பியபடி அவரை நியாயந்தீர்க்க வேண்டும் அல்லது தன்னிச்சையாக யூகித்து அவருடைய கருத்துக்களை வரையறுக்க வேண்டும் என்றிருந்தால்—தேவன் உன்னைக் கண்டனம் செய்வார், உன்னை ஒழுங்குபடுத்துவார், உன்னை சிட்சிப்பார் அல்லது அவர் உன்னைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பார். ஒருவேளை இந்தக் கருத்து உன் முடிவை உள்ளடக்கும். ஆகையால், நான் மீண்டும் ஒரு முறை வலியுறுத்த விரும்புகிறேன்: நீங்கள் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து வரும் எல்லாவற்றையும் பற்றி எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருக்க வேண்டும். கவனக்குறைவாகப் பேசாதீர்கள், உங்கள் செயல்களில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். நீ எதையும் சொல்வதற்கு முன், அதை நிறுத்திச் சிந்திக்க வேண்டும்: என்னுடைய இந்த நடவடிக்கை தேவனுக்குக் கோபமளிக்குமா? அதைச் செய்வதில், நான் தேவனுக்கு மரியாதை தருகின்றேனா? சாதாரண விஷயங்களில் கூட, இந்தக் கேள்விகளைக் கண்டுபிடிக்க நீ முயற்சி செய்ய வேண்டும். அவற்றைக் கருத்தில் கொண்டு அதிக நேரம் செலவிட வேண்டும். எல்லா அம்சங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா நேரங்களிலும் இந்தக் கொள்கைகளின்படி உண்மையிலேயே உன்னால் செயல்பட முடியும். குறிப்பாக, உனக்கு ஏதாவது புரியாதபோது அத்தகைய மனநிலையைக் கடைப்பிடிக்க உன்னால் முடியும் என்றால், தேவன் எப்போதும் உனக்கு வழிகாட்டுவார் மற்றும் பின்பற்றுவதற்கான பாதையை உனக்கு வழங்குவார். ஜனங்கள் எத்தகைய நிகழ்ச்சியைப் போட்டாலும், தேவன் அவர்களை மிகவும் உன்னிப்பாகவும் தெளிவாகவும் பார்க்கிறார். உன்னுடைய இந்த வெளிப்பாடுகளைப் பற்றிய துல்லியமான மற்றும் பொருத்தமான மதிப்பீட்டை அவர் வழங்குவார். நீ இறுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, உன் முடிவைத் தீர்மானிக்க தேவன் உன் நடத்தை அனைத்தையும் எடுத்து அதை முழுவதுமாக தொகுப்பார். இந்த முடிவு ஒவ்வொரு மனிதனையும் ஒரு சந்தேகத்தின் நிழலுக்கு அப்பால் நம்ப வைக்கும். நான் இங்கே உங்களுக்குச் சொல்ல விரும்புவது அதுதான்: உங்கள் ஒவ்வொரு கிரியையும், உங்கள் ஒவ்வொரு செயலும், உங்கள் ஒவ்வொரு எண்ணமும் உங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 14

ஜனங்களுடைய முடிவுகளைத் தீர்மானிப்பது யார்?

விவாதிக்க மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு விஷயம் உள்ளது. அதுதான் தேவன் மீதான உங்கள் மனநிலையாகும். இந்த மனநிலை மிகவும் முக்கியமானதாகும்! நீங்கள் இறுதியில் அழிவை நோக்கிச் செல்வீர்களா அல்லது தேவன் உங்களுக்காகத் தயாரித்த அழகான இடத்திற்குச் செல்வீர்களா என்பதை அது தீர்மானிக்கிறது. ராஜ்ய யுகத்தில், தேவன் ஏற்கனவே இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கிரியை செய்துள்ளார். ஒருவேளை, இந்த இரண்டு தசாப்தங்களில், நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள் என்பது குறித்து உங்களுக்கு உறுதியாகத் தெரியாமல் இருக்கலாம். இருப்பினும், தேவனுடைய இருதயத்தில், உங்கள் ஒவ்வொருவரின் உண்மையான மற்றும் மெய்யான பதிவை அவர் செய்துள்ளார். ஒவ்வொரு மனிதனும் அவரைப் பின்பற்றவும், அவருடைய பிரசங்கங்களைக் கேட்கவும் தொடங்கிய காலத்திலிருந்து, படிப்படியாகச் சத்தியத்தை மேலும் மேலும் புரிந்துக்கொண்டு, ஒவ்வொரு மனிதனும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தொடங்கும் காலம் வரையிலான, ஒவ்வொரு மனிதனின் அனைத்து விதமான நடத்தைகளையும் தேவன் பதிவு செய்துள்ளார். தங்கள் கடமைகளை நிறைவேற்றும் போதும், எல்லா விதமான சூழல்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் போதும், ஜனங்களுடைய மனநிலைகள் என்னவாக இருக்கின்றன? அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? அவர்கள் இருதயங்களில் தேவனை நோக்கி எப்படி உணருகிறார்கள்? … இவை அனைத்திற்கும் தேவன் ஒரு கணக்கு வைத்திருக்கிறார். அவை அனைத்தையும் பற்றிய பதிவு அவரிடம் உள்ளது. ஒருவேளை, உங்கள் பார்வையில், இந்தப் பிரச்சினைகள் குழப்பமானவையாகும். இருப்பினும், தேவன் நிற்கும் இடத்திலிருந்து, அவை அனைத்தும் படிகம் போல தெளிவாக இருக்கின்றன மற்றும் மந்தமான ஒரு சிறிய குறிப்பு கூட இல்லை. அது ஒவ்வொரு மனிதனுடைய முடிவுகளையும் உள்ளடக்கிய ஒரு பிரச்சனையாகும். ஒவ்வொரு மனிதனுடைய தலைவிதியையும் எதிர்கால வாய்ப்புகளையும் அது தொடுகிறது. அதற்கும் மேலாக, தேவன் தனது கடினமான முயற்சிகள் அனைத்தையும் செய்கிறார். ஆகையால், தேவன் அதை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார். எந்தக் கவனக்குறைவையும் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். மனிதகுலத்தின் இந்தக் கணக்கைப் பற்றிய ஒரு பதிவை தேவன் உருவாக்கி வருகிறார். மனிதர்கள் தேவனைப் பின்தொடர்வதில் தொடக்கக் காலம் முதல் இறுதி வரையிலான முழுக் காலத்தையும் அவர் கவனிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவரைப் பற்றிய உன் மனநிலை உன் தலைவிதியைத் தீர்மானித்துள்ளது. அது உண்மையல்லவா? இப்போது, தேவன் நீதியுள்ளவர் என்று நீ நம்புகிறாயா? அவருடையச் செயல்கள் பொருத்தமானவையா? உங்கள் தலையில் தேவனைப் பற்றி வேறு ஏதேனும் கற்பனைகள் இருக்கிறதா? (இல்லை.) அப்படியானால், ஜனங்களுடைய முடிவுகளை தேவன் தீர்மானிக்க வேண்டும் அல்லது ஜனங்களே தங்களைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுவீர்களா? (அவர்களை தேவன் தீர்மானிக்க வேண்டும்.) அவர்களை தீர்மானிப்பது யார்? (தேவன்.) உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை, அல்லவா? ஹாங்காங்கைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே, பேசுங்கள் அவர்களை யார் தீர்மானிக்கிறார்கள்? (ஜனங்களே அவற்றைத் தீர்மானிக்கிறார்கள்.) ஜனங்களே அவற்றைத் தீர்மானிக்கிறார்களா? ஜனங்களுடைய முடிவுகளுக்கு தேவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று அது அர்த்தமாகிறது அல்லவா? தென் கொரியாவைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே பேசுங்கள். (தேவன் அவர்களுடைய செயல்கள் மற்றும் கிரியைகள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் எந்தப் பாதையில் செல்கிறார்கள் என்பதன் அடிப்படையில் ஜனங்களின் முடிவுகளைத் தீர்மானிக்கிறார்.) இது மிகவும் உண்மையான ஒரு பதிலாகும். இங்கே ஓர் உண்மை உள்ளது, அதை நான் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்: தேவனுடைய இரட்சிப்பின் போது, அவர் மனிதர்களுக்கு ஒரு தரத்தை அமைத்துள்ளார். இந்தத் தரநிலை என்னவென்றால், அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு தேவனுடைய வழியில் நடக்க வேண்டும். இந்தத் தரம்தான் ஜனங்களுடைய முடிவுகளை எடைபோடப் பயன்படுகிறது. தேவனுடைய இந்தத் தரத்திற்கு ஏற்ப நீ நடைமுறையில் கடைபிடித்தால், நீ ஒரு நல்ல முடிவைப் பெறலாம். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒரு நல்ல முடிவைப் பெற முடியாது. அப்படியானால், இந்த முடிவை யார் தீர்மானிக்கிறார்கள் என்று நீ கூறுவாய்? அதை நிர்ணயிப்பது தேவன் மட்டுமல்ல, மாறாக தேவனும் மனிதர்களும் ஒன்றாக இருக்கிறார்கள். அது சரியானதாகுமா? (ஆம்.) அது ஏன்? ஏனென்றால், மனிதகுலத்தின் இரட்சிப்பின் வேலையில் ஈடுபடவும், மனிதகுலத்திற்கு ஓர் அழகான இலக்கைத் தயாரிக்கவும் தேவன் தீவிரமாக விரும்புகிறார். மனிதர்கள் தேவனுடைய கிரியையின் நோக்கங்கள் ஆவர். இந்தப் முடிவையும், இந்த இலக்கையும் தேவன் அவர்களுக்காக ஆயத்தம் செய்கிறார். அவருக்குக் கிரியை செய்ய எந்தப் பொருளும் இல்லை என்றால், அவர் இந்த கிரியையைச் செய்ய அவசியமில்லை. அவர் இந்தக் கிரியையைச் செய்யவில்லை என்றால், மனிதர்கள் இரட்சிப்பைப் பெற வாய்ப்பில்லை. மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டியவர்கள். இரட்சிக்கப்படுவது இந்தச் செயல்பாட்டின் செயலற்றப் பகுதியாக இருந்தாலும், மனிதகுலத்தைக் காப்பாற்றும் தனது கிரியையில் தேவன் ஜெயம் பெறுவாரா இல்லையா என்பதை இந்தப் பங்கை வகிப்பவர்களின் மனநிலையே தீர்மானிக்கிறது. தேவன் உனக்குக் கொடுக்கும் வழிகாட்டுதலுக்காக இல்லாவிட்டால், அவருடைய தரத்தை நீ அறிய மாட்டாய். உனக்கு ஒரு குறிக்கோளும் இருக்காது. உன்னிடம் இந்தத் தரநிலை மற்றும் இந்த நோக்கம் இருந்தால், நீ இன்னும் ஒத்துழைக்கவில்லை என்றால், நடைமுறைக்கு கொண்டு வரவில்லை என்றால் அல்லது விலைக்கிரையத்தை செலுத்தவில்லை என்றால், நீ இந்த முடிவைப் பெற மாட்டாய். இந்தக் காரணத்திற்காக, ஒருவரின் முடிவை தேவனிடமிருந்து பிரிக்க முடியாது என்றும், அதை மனிதனிடமிருந்தும் பிரிக்க முடியாது என்றும் நான் சொல்கிறேன். இப்போது, ஜனங்களுடைய முடிவுகளை யார் தீர்மானிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிகிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 15

ஜனங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தேவனை வரையறுக்க முனைகிறார்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தி)

தேவனை அறிவது என்ற தலைப்பைப் பற்றி பேசும் போது, நீங்கள் ஏதாவது கவனித்தீர்களா? இந்த நாட்களில் அவருடைய மனநிலை ஒரு மாற்றத்திற்கு ஆளானது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? மனிதர்களைப் பற்றிய அவரது மனநிலை மாறாததா? அவர் எப்பொழுதும் இப்படி சகித்துக்கொள்வாரா, அவருடைய அன்பையும் இரக்கத்தையும் மனிதர்களுக்கு காலவரையின்றி நீட்டிப்பாரா? இந்த விஷயத்தில் தேவனுடைய சாராம்சமும் அடங்கும். … தேவன் மனிதகுலத்தை நேசிக்கிறார் என்பதை அறிந்தவுடன், அவர்கள் அவரை அன்பின் அடையாளமாக வரையறுக்கிறார்கள்: ஜனங்கள் என்ன செய்தாலும், அவர்கள் எப்படி நடந்துக்கொண்டாலும், அவர்கள் தேவனை எப்படி நடத்தினாலும், அவர்கள் எவ்வளவு கீழ்ப்படியாதவர்களாக இருந்தாலும், இவை எதுவும் உண்மையில் முக்கியமானதில்லை. ஏனென்றால், தேவனிடம் அன்பு இருக்கிறது, அவருடைய அன்பு வரம்பற்றது மற்றும் அளவிட முடியாதது. தேவனிடம் அன்பு இருக்கிறது, எனவே அவர் ஜனங்களைச் சகித்துக்கொள்ள முடியும். தேவனிடம் அன்பு உண்டு, ஆகவே அவர் ஜனங்களிடம் இரக்கமுள்ளவராகவும், அவர்களுடைய முதிர்ச்சியற்ற தன்மைக்கு இரக்கமுள்ளவராகவும், அவர்களுடைய அறியாமையை நோக்கி இரக்கமுள்ளவராகவும், கீழ்ப்படியாமையின் மீது இரக்கமுள்ளவராகவும் இருக்க முடியும். அது உண்மையில் அப்படித்தானா? சிலர், தேவனுடைய பொறுமையை ஒரு முறை அல்லது சில தடவைகள் அனுபவித்தபோது, அவர்கள் தேவனைப் பற்றிய தங்கள் சொந்தப் புரிதலில் இந்த அனுபவங்களை ஆதாரமாகக் கருதுவார்கள். அவர் என்றென்றும் பொறுமையாகவும் இரக்கத்துடனும் இருப்பார் என்று நம்புகிறார்கள். பின்னர், அவர்களுடைய ஜீவிதத்தில், தேவனுடைய இந்தப் பொறுமையை அவர் அவர்களை நடத்தும் தரமாகக் கருதுகிறார்கள். தேவனுடைய சகிப்புத்தன்மையை ஒரு முறை அனுபவித்தபின், தேவனை சகிப்புத்தன்மை கொண்டவர் என்று எப்போதும் வரையறுப்பவர்களும் உண்டு மற்றும் அவர்களுடைய மனதில், இந்தச் சகிப்புத்தன்மை காலவரையற்றது, நிபந்தனையற்றது மற்றும் முற்றிலும் கொள்கை ரீதியற்றது. இத்தகைய நம்பிக்கைகள் சரியானதாகுமா? ஒவ்வொரு முறையும் தேவனுடைய சாராம்சம் அல்லது தேவனுடைய மனநிலை பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்படும்போது, நீங்கள் திகைத்துப் போகிறீர்கள். உங்களை இப்படிப் பார்ப்பது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது. தேவனுடைய சாராம்சத்தைப் பற்றி நீங்கள் நிறைய சத்தியங்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவருடைய மனநிலையைப் பற்றிய பல விவாதங்களையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இருப்பினும், உங்கள் மனதில், இந்தப் பிரச்சனைகளும் இந்த அம்சங்களின் சத்தியமும், கோட்பாடு மற்றும் எழுதப்பட்ட வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுகள் மட்டுமே. உங்கள் அன்றாட ஜீவிதத்தில், தேவனுடைய மனநிலையை உண்மையில் என்னவென்று உங்களில் எவராலும் அனுபவிக்கவோ பார்க்கவோ முடியாது. இவ்வாறு, நீங்கள் அனைவரும் உங்கள் நம்பிக்கைகளில் குழப்பமானவர்கள். நீங்கள் அனைவரும் கண்மூடித்தனமாக நம்புகிறீர்கள், நீங்கள் தேவனைப் பற்றி ஒரு பொருத்தமற்ற மனநிலையைக் கொண்டிருக்கிறீர்கள். அவரை ஒதுக்கித் தள்ளுகிறீர்கள். தேவனைப் பற்றிய இத்தகைய மனநிலையைக் கொண்டிருப்பது எதற்கு வழிவகுக்கிறது? நீங்கள் எப்போதும் தேவனைப் பற்றி முடிவுகளை எடுப்பதை நோக்கி அது செல்கிறது. நீங்கள் சிறிது அறிவைப் பெற்றவுடன், நீங்கள் தேவனை முழுவதுமாகப் பெற்றிருப்பதைப் போல மிகவும் திருப்தி அடைகிறீர்கள். அதன்பிறகு, தேவன் இப்படித்தான் இருக்கிறார் என்று நீங்கள் முடிவு செய்கிறீர்கள். அவரைச் சுதந்திரமாக நகர்த்த நீங்கள் அனுமதிக்கவில்லை. மேலும், தேவன் புதிதாக ஏதாவது செய்யும்போதெல்லாம், அவர் தேவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். ஒரு நாள், “நான் இனி மனிதகுலத்தை நேசிப்பதில்லை. நான் இனி மனிதர்களிடம் இரக்கம் காட்ட மாட்டேன். அவர்களிடம் எனக்குச் சகிப்புத்தன்மையோ பொறுமையோ இல்லை. நான் அவர்களிடம் மிகுந்த வெறுப்பையும் விரோதத்தையும் கொண்டுள்ளேன்,” என இதுபோன்ற கூற்றுகள் ஜனங்களுடைய இருதயங்களில் ஆழமான மோதலை ஏற்படுத்தும். அவர்களில் சிலர், “இனி நீர் என் தேவன் இல்லை. இனி நீர் நான் பின்பற்ற விரும்பும் தேவன் இல்லை. இதனையே நீர் சொன்னால், நீர் இனி என் தேவனாக இருக்கத் தகுதியற்றவர். நான் உம்மைப் பின்பற்றத் தேவையில்லை. நீர் இனி எனக்கு இரக்கம், அன்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கொடுக்கவில்லை என்றால், நான் உம்மைப் பின்தொடர்வதை நிறுத்துவேன். நீர் காலவரையின்றி என்னைச் சகித்துக்கொண்டிருந்தால், எப்போதும் என்னுடன் பொறுமையாக இரும். அன்பு, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை கொண்டவர் என்பதைக் காண என்னை அனுமதித்தால், அப்போதுதான் நான் உம்மைப் பின்பற்ற முடியும், அப்போதுதான் கடைசிவரை உம்மைப் பின்பற்ற எனக்கு நம்பிக்கை இருக்கும். உமது பொறுமையும் இரக்கமும் எனக்கு இருப்பதால், எனது கீழ்ப்படியாமையும், மீறுதல்களும் காலவரையின்றி மன்னிக்கப்பட்டு இரக்கங்காட்டப்படலாம். நான் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பாவம் செய்யலாம். பாவமன்னிப்புக் கோரி எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் மன்னிக்கப்படலாம். எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கோபப்படலாம். உம்மிடம் எந்தக் கருத்தும் இருக்கக்கூடாது அல்லது என்னைப் பற்றி எந்த முடிவுகளையும் நீர் எடுக்கக்கூடாது,” என்று சொல்வார்கள். உங்களில் ஒருவர் கூட இத்தகைய பிரச்சனையைப் பற்றி அவ்வளவாக மனதால் அல்லது உணர்வுடன் சிந்திக்கவில்லை என்றாலும், உங்கள் பாவங்களை மன்னிக்க பயன்படும் ஒரு கருவியாக அல்லது ஓர் அழகான இலக்கைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு பொருளாக தேவனை நீங்கள் கருதும் போதெல்லாம், ஜீவனுள்ள தேவனை உனக்கு எதிராக உன் எதிரியாக நுட்பமாக வைத்தாய். இதைத்தான் நான் பார்க்கிறேன். “நான் தேவனை நம்புகிறேன்,” “நான் சத்தியத்தைத் தொடர்கிறேன்,” “நான் என் மனநிலையை மாற்ற விரும்புகிறேன்,” “இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட விரும்புகிறேன்,” “நான் திருப்தி அடைய விரும்புகிறேன் தேவனே,” “நான் தேவனுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறேன்,” “நான் தேவனுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன், என் கடமையைச் சிறப்பாகச் செய்ய விரும்புகிறேன்,” என்றும் மற்றும் பல காரியங்களையும் நீ தொடர்ந்து கூறலாம். இருப்பினும், உன் வார்த்தைகள் எவ்வளவு இனிமையாக இருந்தாலும், உனக்கு எவ்வளவாக கோட்பாடு தெரிந்திருந்தாலும், அந்தக் கோட்பாடு எவ்வளவாக திணிக்கப்பட்டாலும், கண்ணியமானதாக இருந்தாலும், இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், தேவனைப் பற்றிய முடிவுகளை எடுக்க நீ தேர்ச்சி பெற்றுள்ள ஒழுங்குமுறைகள், உபதேசங்கள், கோட்பாடுகள் என இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உங்களில் பலர் ஏற்கனவே கற்றுக்கொண்டுள்ளனர். அதனால் இயல்பாகவே அவரை நீ எதிராக நிறுத்துகிறாய். நீ எழுத்துக்களிலும் கோட்பாடுகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், நீ சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் உண்மையாக பிரவேசிக்கவில்லை. எனவே நீ தேவனிடம் நெருங்கி வருவதும், அவரை அறிந்துக்கொள்வதும், அவரைப் புரிந்துக்கொள்வதும் மிகவும் கடினமாகும். அது மிகவும் புலம்பத்தக்கது ஆகும்!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 16

அவருடைய கிரியையின் போது ஓடிப் போவோரிடமான தேவனுடைய மனநிலை

எல்லா இடங்களிலும் அதுபோன்றவர்கள் இருக்கிறார்கள்: தேவனுடைய வழியைப் பற்றி அவர்கள் உறுதியாக அறிந்த பிறகு, பல்வேறு காரணங்களுக்காக, அவர்கள் விடைபெறாமல் மௌனமாகப் புறப்படுகிறார்கள். வெளியேறி, தங்கள் இருதயங்கள் விரும்புவதனைத்தையும் செய்கிறார்கள். தற்போது, இந்த ஜனங்கள் விட்டுச் செல்லும் காரணங்களைப் பற்றி நாம் பேச மாட்டோம். இத்தகைய மனிதனிடம் தேவனுடைய மனநிலை என்ன என்பதை முதலில் பார்ப்போம். அது மிகவும் தெளிவாக உள்ளது. தேவனுடைய பார்வையில், இந்த ஜனங்கள் விலகிச் செல்லும் தருணத்தில், அவர்களுடைய விசுவாசத்தின் காலம் முடிந்துவிட்டது. அதை முடித்தது தனிப்பட்ட மனிதன் அல்ல, தேவனே அதை முடித்தார். இந்த மனிதன் தேவனை விட்டு வெளியேறினான் என்பதன் அர்த்தமானது அவர்கள் ஏற்கனவே தேவனை நிராகரித்தார்கள், அவர்கள் இனி அவரை விரும்பவில்லை மற்றும் அவர்கள் இனி தேவனுடைய இரட்சிப்பை ஏற்க மாட்டார்கள் என்பதாகும். அது போன்றவர்கள் தேவனை விரும்பவில்லை என்பதால், அவர் இன்னும் அவர்களை விரும்புகிறாரா? மேலும், அத்தகைய மனிதர்கள் இத்தகைய மனநிலையையும், இந்தப் பார்வையையும் கொண்டிருக்கும்போது, தேவனை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்போது, அவர்கள் ஏற்கனவே தேவனுடைய மனநிலையை மோசமாக்கியுள்ளனர். அவர்கள் கோபத்தின் உச்சத்தில் தேவனைச் சபித்திருக்க மாட்டார்கள் என்ற போதிலும், அவர்கள் எந்தவிதமான அசுத்தமான அல்லது அதிகப்படியான நடத்தைகளில் ஈடுபடவில்லை என்ற போதிலும், இந்த ஜனங்கள், “என் வெளியின் மகிழ்ச்சி முடிவடையும் நாள் வரும்போது அல்லது எதற்காயினும் இன்னும் எனக்கு தேவன் தேவைப்படும்போது, நான் திரும்பி வருவேன். அல்லது, தேவன் என்னை அழைத்தால், நான் திரும்பி வருவேன்,” என்று நினைக்கிறார்கள். அல்லது அவர்கள், “நான் வெளியில் காயப்படும்போது, அல்லது வெளி உலகம் மிகவும் இருட்டாகவும், மிகவும் பொல்லாததாகவும் இருப்பதைக் காணும்போது, நான் இனி அந்த ஓட்டத்துடன் செல்ல விரும்பாமல், நான் மீண்டும் தேவனிடம் வருவேன்,” என்று சொல்கிறார்கள். அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்பதை இந்த ஜனங்கள் தங்கள் மனதில் கணக்கிட்டிருந்தாலும், அவர்கள் திரும்புவதற்கான கதவைத் திறந்து விட முயற்சித்திருந்தாலும், அவர்கள் எதை நம்பினாலும் அல்லது எப்படித் திட்டமிட்டாலும், இவை அனைத்தும் விருப்பத்தின் அடிப்படையிலான சிந்தனை என்பதை அவர்கள் உணரவில்லை. அவர்கள் விட்டுச்செல்லும் ஆசை தேவனை எப்படி உணர வைக்கிறது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியாமல் இருப்பது அவர்களுடைய மிகப்பெரிய தவறாகும். அவர்கள் தேவனை விட்டு வெளியேற முடிவு செய்த தருணத்திலிருந்தே, அவர் அவர்களை முற்றிலுமாக கைவிடுகிறார். அதற்குள், அத்தகைய மனிதருடைய முடிவை அவர் ஏற்கெனவே தனது இருதயத்தில் தீர்மானித்துள்ளார். அது என்ன முடிவு? அதுதான் இந்த மனிதன் எலிகளில் ஒருவனாக இருந்து அவற்றுடன் சேர்ந்து அழிந்துவிடுவான் என்பதாகும். இவ்வாறு, ஜனங்கள் பெரும்பாலும் இத்தகைய சூழ்நிலையைப் பார்க்கிறார்கள்: ஒருவர் தேவனைக் கைவிடுகிறார், ஆனாலும் அவர் ஒரு சிட்சையையும் பெறுவதில்லை. தேவன் தனது சொந்த கொள்கைகளின்படி செயல்படுகிறார். சில விஷயங்களைக் காணலாம், மற்றவை தேவனுடைய இருதயத்தில் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன. எனவே, முடிவுகளை ஜனங்கள் பார்க்க முடியாது. மனிதர்களுக்குத் தெரியும் பகுதி என்பது விஷயங்களின் உண்மையான பக்கமல்ல, ஆனால் அந்த மறுபக்கம்—நீ காணாத பக்கம்—உண்மையில் தேவனுடைய உண்மையான இருதயப்பூர்வமான எண்ணங்களையும் முடிவுகளையும் கொண்டுள்ளது.

தேவனுடைய கிரியையின் போது ஓடிப்போகிறவர்கள் மெய்யான வழியைக் கைவிடுகிறவர்கள் ஆவர்

அவருடைய கிரியையின்போது ஓடிப்போய்விட்ட ஜனங்களுக்கு தேவன் ஏன் இத்தகைய கடுமையான சிட்சையை வழங்குகிறார்? அவர் ஏன் அவர்கள் மீது இவ்வளவு கோபப்படுகிறார்? முதலாவதாக, தேவனுடைய மனநிலை கம்பீரமும் கோபமுமானது என்பதை நாம் அறிவோம். அவர் யாராலும் வெட்டப்படும் ஆடு அல்ல. ஜனங்களால் அவர்கள் விருப்பம் போலக் கட்டுப்படுத்தப்படும் ஒரு கைப்பாவையுமல்ல. அவர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டிய வெற்றுக் காற்றுத் தொகுதி அல்லர். தேவன் இருக்கிறார் என்று நீ உண்மையிலேயே நம்பினால், நீ தேவனுக்குப் பயந்த இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய சாராம்சம் கோபப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதை நீ அறிந்துக்கொள்ள வேண்டும். இந்தக் கோபம் ஒரு சொல்லால் அல்லது ஒருவேளை ஒரு சிந்தனை அல்லது ஒருவித மோசமான நடத்தையால் அல்லது ஒருவேளை லேசான நடத்தையால் ஏற்படலாம்—அல்லது மனிதர்களின் கண்களிலும் நெறிமுறைகளிலும் கடந்து செல்லக்கூடிய நடத்தையாலும் அல்லது, ஒருவேளை அது ஓர் உபதேசத்தால் அல்லது ஒரு கோட்பாட்டால் அது தூண்டப்படலாம். இருப்பினும், நீ தேவனைக் கோபப்படுத்தியவுடன், நீ உனது வாய்ப்பினை இழக்கிறாய். உன் இறுதி நாட்கள் வந்துவிடுகின்றன. அது ஒரு பயங்கரமான விஷயமாகும்! தேவனைப் புண்படுத்தக்கூடாது என்பதை நீ புரிந்துக்கொள்ளவில்லை என்றால், ஒருவேளை நீ அவருக்குப் பயப்படாமல் இருக்கிறாய், ஒருவேளை நீ அவரை வழக்கத்தின்படி புண்படுத்துகிறாய் என்பதாகும். தேவனுக்கு எப்படி பயப்பட வேண்டும் என்று உனக்குத் தெரியாவிட்டால், நீ தேவனுக்கு அஞ்ச முடியாது. தேவனுடைய வழியில் நடப்பதற்கான பாதையில் உன்னை எவ்வாறு ஈடுபடுத்துவது என்று அதாவது தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பது என்று உனக்குத் தெரியாமல் போகும். நீ அதை அறிந்தவுடன், தேவனைப் புண்படுத்தக்கூடாது என்பதை அறிந்தவுடன், தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பது என்றால் என்ன என்பதை நீ அறிவாய்.

தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியில் நடப்பது என்பதானது, உனக்கு எவ்வளவு சத்தியம் தெரியும், எத்தனைச் சோதனைகளை அனுபவித்திருக்கிறாய் அல்லது எவ்வளவு ஒழுக்கமாக இருந்தாய் என்பவற்றைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, அது உன் இருதயத்தில் தேவனிடம் நீ வைத்திருக்கும் மனநிலையைப் பொறுத்ததாகும். நீ எந்தச் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்ததாகும். ஜனங்களுடைய சாராம்சங்களும் அவர்களின் மனம் சார்ந்த மனநிலைகளும் மிகவும் முக்கியமானவையாகும், மிகவும் அவசியமானவையாகும். தேவனைத் துறந்து விட்டுவிட்டவர்களைப் பொறுத்தவரையில், அவரைப் பற்றிய அவமதிப்பு மனநிலையும், சத்தியத்தை இழிவுபடுத்தும் இருதயங்களும் ஏற்கனவே அவருடைய மனநிலையை மோசமாக்கியுள்ளன. அவரைப் பொறுத்தவரையில், அவர்கள் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்கள். தேவனுடைய இருப்பைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர் ஏற்கனவே வந்துவிட்டார் என்ற செய்தி அவர்களுக்குத் தெரியவந்துள்ளது மற்றும் தேவனுடைய புதிய கிரியையை கூட அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவது ஏமாற்றப்பட்ட அல்லது குழப்பமான சூழலால் அல்ல. அவர்களுக்கு வெளியேற வேண்டிய கட்டாயமும் இல்லை. மாறாக, அவர்கள் தேவனை விட்டு வெளியேற வேண்டுமென்று உணர்வுப்பூர்வமாகவும், தெளிவான மனதுடனும் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் வெளியேறுவது அவர்களுடைய வழியை இழக்கும் விஷயமல்ல. அவர்கள் தூக்கி எறியப்படவில்லை. ஆகையால், தேவனுடைய பார்வையில், அவர்கள் மந்தையிலிருந்து விலகிச் சென்ற ஆட்டுக்குட்டிகள் அல்ல. வழியை இழந்த கெட்ட குமாரர்கள் அல்ல. அவர்கள் சிட்சையின்றி புறப்பட்டனர்—அத்தகைய நிலை, அத்தகைய சூழல், தேவனுடைய மனநிலையை மோசமாக்குகிறது மற்றும் இந்த மோசத்திலிருந்தே அவர் அவர்களுக்கு நம்பிக்கையற்ற முடிவுகளைத் தருகிறார். இத்தகைய முடிவு பயமுறுத்துவதல்லவா? எனவே, ஜனங்கள் தேவனை அறியாவிட்டால், அவர்கள் அவரைப் புண்படுத்தலாம். இது சாதாரண விஷயமல்ல! ஜனங்கள் தேவனுடைய மனநிலையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் திரும்பி வருவதை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பினால், அவர்கள் அவருடைய இழந்த ஆட்டுக்குட்டிகளில் சிலராக இருப்பதால், அவர்கள் மனதை மாற்றிக்கொள்ள அவர் இன்னும் காத்திருக்கிறார் என்றால், அவர்கள் தண்டனையின் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. தேவன் அவர்களை வெறுமனே ஏற்க மறுக்க மாட்டார்—அது, அவருடைய மனநிலையை மோசமாக்கும் இரண்டாவது முறை என்பதால், இந்த விஷயம் இன்னும் பயங்கரமானதாகும்! இந்த மனிதர்களின் பொருத்தமற்ற மனநிலைகள் ஏற்கனவே தேவனுடைய நிர்வாக ஆணைகளை மீறியுள்ளன. அவர் இன்னும் அவற்றை ஏற்றுக்கொள்வாரா? தேவனுடைய இருதயத்தில், இந்த விஷயத்தைப் பற்றிய அவருடைய கொள்கைகள் என்னவென்றால், மெய்யான வழி குறித்து யாரோ ஒருவர் உறுதியாகிவிட்டார்கள், ஆனாலும் இன்னும் உணர்வுப்பூர்வமாகவும் தெளிவான மனதுடனும் தேவனை நிராகரித்து தேவனிடமிருந்து விலகிச் செல்ல முடியும் என்றால், பின்னர் தேவன் அத்தகைய மனிதனுடைய இரட்சிப்பின் பாதையைத் தடுப்பார். இந்த மனிதனுக்கு, அதன் பின் ராஜ்யத்திற்குள்ளாக செல்வதற்கான ஒலிமுகவாசல் மூடப்படும். இந்த மனிதன் மீண்டும் ஒரு முறை தட்டும்போது, தேவன் கதவைத் திறக்க மாட்டார். இந்த மனிதன் என்றென்றுமாக வெளியேற்றப்படுவான். ஒருவேளை உங்களில் சிலர் மோசேயின் கதையை வேதாகமத்தில் படித்திருக்கலாம். மோசே தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு, 250 தலைவர்கள் மோசேயின் செயல்களாலும், வேறு பல காரணங்களாலும் கீழ்ப்படியவில்லை. அவர்கள் யாருக்குச் சமர்ப்பிக்க மறுத்தார்கள்? மோசே என்பவனுக்கு அல்ல. தேவனுடைய ஏற்பாடுகளுக்கு அடிபணிய அவர்கள் மறுத்துவிட்டார்கள். இந்தப் பிரச்சனையில் தேவனுடைய கிரியைக்கு அவர்கள் சமர்ப்பிக்க மறுத்துவிட்டனர். “சபையாரும் அவர்களில் ஒவ்வொருவரும் பரிசுத்தமாகவும், யேகோவா அவர்களுக்கு நடுவே இருப்பதையும் கண்டு நீங்கள் உங்களையே அதிகம் மெச்சிக்கொள்கிறீர்கள்.” என்பதை அவர்கள் சொன்னார்கள். மனிதனின் பார்வையில் இந்த வார்த்தைகளும் வரிகளும் மிகவும் தீவிரமானவையா? அவை தீவிரமாக இல்லை. குறைந்த பட்சம், இந்த வார்த்தைகளின் நேரடி பொருள் தீவிரமானது அல்ல. ஒரு சட்டபூர்வமான அர்த்தத்தில், அவை எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை. ஏனென்றால் அதனை மேலோட்டமாக பார்க்கையில், அது விரோதமான மொழி அல்லது வார்த்தை அல்ல. அதில் எந்தவொரு அவதூறான அர்த்தங்களும் இல்லை. இவை பொதுவான வாக்கியங்கள், அதற்கு மேல் எதுவும் இல்லை. அப்படியானால், இந்த வார்த்தைகள் ஏன் தேவனிடமிருந்து இத்தகைய கோபத்தைத் தூண்டியது? ஏனென்றால், அவை ஜனங்களிடம் பேசப்படவில்லை. ஆனால் தேவனிடம் பேசப்பட்டன. அவர்கள் வெளிப்படுத்திய அணுகுமுறையும் மனநிலையும் துல்லியமாக தேவனுடைய மனநிலையை மோசமாக்குகிறது மற்றும் புண்படுத்தக்கூடாத தேவனுடைய மனநிலையை அவை புண்படுத்துகிறது. அந்த தலைவர்களின் முடிவுகள் இறுதியில் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். தேவனைக் கைவிட்ட ஜனங்களைப் பற்றிய அவர்களுடைய பார்வை என்னவாக இருக்கிறது? அவர்களுடைய மனநிலை என்னவாக இருக்கிறது? தேவன் அவர்களிடம் இப்படி நடந்துக்கொள்ள அவர்களுடைய கண்ணோட்டமும் மனநிலையும் ஏன் காரணமாகின்றன? காரணம், அவர் தேவன் என்று அவர்கள் தெளிவாக அறிந்திருந்தாலும், அவர்கள் இன்னும் அவருக்குத் துரோகம் செய்ய தேர்வு செய்கிறார்கள். அதனால்தான் அவர்கள் இரட்சிப்பின் வாய்ப்புகளை முற்றிலுமாக பறிக்கிறார்கள். வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளபடி, “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்” (எபி. 10:26). இந்த விஷயத்தில் உங்களுக்கு இப்போது தெளிவான புரிதல் இருக்கிறதா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 17

தேவனிடமான ஜனங்களுடைய மனநிலைகளால் அவர்களுடைய தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது

தேவன் ஒரு ஜீவனுள்ள தேவன். ஜனங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாக நடந்துக்கொள்வதைப் போலவே, இந்த நடத்தைகள் குறித்த அவரது மனநிலையும் வேறுபடுகின்றன. ஏனெனில், அவர் ஒரு கைப்பாவை அல்ல. அவர் வெறுமையான காற்றின் கலவை அல்ல. தேவனுடைய மனநிலையை அறிந்துக்கொள்வது மனிதகுலத்திற்கான ஒரு தகுதியான நாட்டமாகும். தேவனுடைய மனநிலையை அறிந்துக்கொள்வதன் மூலம், தேவனுடைய மனநிலையைப் பற்றிய அறிவை அவர்கள் சிறிது சிறிதாக அடைய முடியும் மற்றும் அவருடைய இருதயத்தைப் புரிந்துக்கொள்ள முடியும் என்பதை ஜனங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய இருதயத்தை நீ படிப்படியாகப் புரிந்துக்கொள்ளும்போது, அவருக்குப் பயப்படுவதும் தீமையைத் தவிர்ப்பதும் எவ்வளவு கடினமான காரியம் என்பதை நீ உணர மாட்டாய். மேலும், நீ தேவனைப் புரிந்துகொள்ளும்போது, அவரைப் பற்றி நீ முடிவுகளை எடுக்க வாய்ப்பில்லை. தேவனைப் பற்றிய முடிவுகளை எடுப்பதை நீ நிறுத்தியவுடன், நீ அவரைப் புண்படுத்தும் வாய்ப்பும் இல்லாமல் போகும். நீ அதை அறியாமலேயே, தேவனைப் பற்றிய அறிவைப் பெற தேவன் உன்னை வழிநடத்துவார். அது உன் இருதயத்தை அவர் மீதான பயபக்தியால் நிரப்பும். நீ உபதேசங்கள், எழுத்துக்கள் மற்றும் நன்கு கற்றுக் கொண்ட கோட்பாடுகள் மூலம் தேவனை வரையறுப்பதை நிறுத்துவாய். அதற்கு பதிலாக, எல்லாவற்றிலும் தேவனுடைய நோக்கங்களைத் தொடர்ந்து தேடுவதன் மூலம், நீ அறியாமலேயே தேவனுடைய இருதயத்திற்குப் பின்செல்லும் ஒரு மனிதனாக மாறுவாய்.

தேவனுடைய கிரியை மனிதர்களால் காணப்படாதது மற்றும் தீண்டத்தகாதது ஆகும். ஆனால் அவரைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மனிதனுடைய செயல்களும்—அவரைப் பற்றிய மனநிலையுடன்—தேவனால் உணரக்கூடியவை மட்டும் அல்ல, ஆனால் அவரால் காணக்கூடியவையும் ஆகும். இது, எல்லோரும் அங்கீகரிக்க வேண்டிய மற்றும் தெளிவாக இருக்க வேண்டிய ஒன்றாகும். “நான் இங்கே என்ன செய்கிறேன் என்று தேவனுக்குத் தெரியுமா? நான் இப்போது என்ன நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரியுமா? ஒருவேளை அவர் செய்கிறார், ஒருவேளை அவர் அவ்வாறு செய்ய மாட்டார்,” என்று எப்போதும் உன்னை நீயே கேட்டுக்கொண்டிருக்கலாம். இத்தகைய கண்ணோட்டத்தை நீ கடைப்பிடித்தால், தேவனைப் பின்பற்றியப் பின் அவருடைய கிரியையையும் அவருடைய இருப்பையும் சந்தேகிக்கிறாய் என்றால், நீ உடனடியாக அல்லது பிற்பாடு அவருடைய கோபத்தைத் தூண்டும் ஒரு நாள் வரும். ஏனென்றால், நீ ஏற்கனவே ஓர் ஆபத்தான நிலையில் இருக்கிறாய். பல ஆண்டுகளாக தேவனை நம்பியவர்களை நான் பார்த்திருக்கிறேன், ஆனாலும் சத்தியத்தின் யதார்த்தத்தை அவர்கள் இன்னும் பெறவில்லை, தேவனுடைய சித்தத்தை அவர்கள் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை. இந்த ஜனங்கள் தங்கள் ஜீவிதத்திலும், வளர்ச்சிகளிலும் எந்த முன்னேற்றத்தையும் அடைவதில்லை. அவர்கள் ஆழமற்ற கோட்பாடுகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். ஏனென்றால், அத்தகைய மனிதர்கள் ஒருபோதும் தேவனுடைய வார்த்தையை ஜீவனாக எடுத்துக்கொள்ளவில்லை மற்றும் அவர்கள் ஒருபோதும் அவரை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகையவர்களைப் பார்த்தவுடன், தேவன் இன்பத்தால் நிரப்பப்படுகிறார் என்று நீ நினைக்கிறாயா? அவர்கள் அவரை ஆறுதல்படுத்துகிறார்களா? இவ்வாறு, ஜனங்கள் தேவனை எப்படி நம்புகிறார்கள் என்பது அவர்களுடைய தலைவிதியைத் தீர்மானிக்கிறது. ஜனங்கள் எவ்வாறு தேடுகிறார்கள், ஜனங்கள் தேவனை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதில் ஜனங்களுடைய மனநிலைகள் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். தேவனை உங்கள் தலையின் பின்புறத்தில் மிதக்கும் வெறுமையான காற்றின் கலவை போல அவரைப் புறக்கணிக்காதீர்கள். நீ நம்பும் ஜீவனுள்ள உண்மையான தேவனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அவர் ஒன்றும் செய்யாமல் மூன்றாம் வானத்தில் உட்கார்ந்திருக்கவில்லை. மாறாக, அவர் தொடர்ந்து அனைவரின் இருதயத்தையும் ஆராய்ந்து வருகிறார். நீ என்ன செய்கிறாய் என்பதைக் கவனித்து வருகிறார். உன் ஒவ்வொரு சிறிய வார்த்தையையும் ஒவ்வொரு சிறிய செயலையும் கவனித்து வருகிறார். நீ எவ்வாறு நடந்துகொள்கிறாய் என்பதைப் பார்க்கிறார். அவரைப் பற்றிய உன் மனநிலை என்ன என்பதைப் பார்க்கிறார். உன்னை தேவனுக்குக் கொடுக்க நீ தயாராக இருக்கிறாயா இல்லையா என்பதும், உன் நடத்தை மற்றும் உன் உள்ளார்ந்த எண்ணங்கள் மற்றும் யோசனைகள் என அனைத்தும் அவருக்கு முன்பாக வைக்கப்பட்டு அவரால் கவனிக்கப்படுகின்றன. உன் நடத்தை காரணமாகவும், உன் செயல்களின் காரணமாகவும், அவரைப் பற்றிய உன் மனநிலையின் காரணமாகவும், உன்னைப் பற்றிய தேவனுடைய கருத்தும், உன்னைப் பற்றிய அவருடைய மனநிலையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. சிலருக்கு நான் சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்: தேவன் உன்னை அதீதமாக நேசிப்பார் என்பது போலவும், அவர் உன்னை ஒருபோதும் விட்டுவிட மாட்டார் என்பது போலவும், உன்னைப் பற்றிய அவருடைய மனநிலை நிலையானது என்பது போலவும், ஒருபோதும் மாறமுடியாது என்பது போலவும், உன்னை தேவனுடைய கரங்களில் குழந்தைகளைப் போல வைக்காதே. கனவு காண்பதை விட்டுவிடுமாறு நான் உனக்கு அறிவுறுத்துகிறேன்! ஒவ்வொரு மனிதனையும் நடத்துவதில் தேவன் நீதியுள்ளவர். ஜனங்களை ஜெயித்து அவர்களை இரட்சிக்கும் கிரியைக்கான மனநிலையில் அவர் அக்கறையுள்ளவர். அது அவருடைய மேலாண்மையாகும். அவர் ஒவ்வொரு மனிதனையும் செல்லப் பிராணி போன்று நடத்தாமல் தீவிரமாக நடத்துகிறார். மனிதர்கள் மீதான தேவனுடைய அன்பு ஆடம்பரமான வகை அல்லது கெடுக்கும் வகையல்ல. மனிதகுலத்தின் மீது அவர் காட்டிய இரக்கமும் சகிப்புத்தன்மையும் மகிழ்ச்சியற்றதாக கவலையற்றதாகவோ இல்லை. மாறாக, மனிதர்களிடமான தேவனுடைய அன்பில் ஜீவனை நேசிப்பதும், அதற்குப் பரிதாபப்படுவதும், அதை மதிப்பதும் அடங்கும். அவருடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் அவர்களைப் பற்றிய அவருடைய எதிர்பார்ப்புகளை மற்றும் மனிதகுலம் பிழைக்க அவசியமானவற்றை வெளிப்படுத்துகின்றன. தேவன் ஜீவனுடன் இருக்கிறார். தேவன் உண்மையாகவே இருக்கிறார். மனிதகுலத்தைப் பற்றிய அவரது மனநிலை கொள்கை ரீதியானதாகும். அது ஓர் இறுமாப்புள்ள விதிகளின் தொகுப்பல்ல. அது மாறக்கூடியதாகும். மனிதகுலத்திற்கான அவரது நோக்கங்கள் படிப்படியாக மாறுகின்றன. அவை எழும் சூழ்நிலைகளைப் பொறுத்தும், ஒவ்வொரு மனிதனுடைய மனநிலையுடனும் காலப்போக்கில் அவை மாறுகின்றன. ஆகையால், தேவனுடைய சாராம்சமானது மாறாதது என்பதையும், அவருடைய மனநிலை வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு சூழல்களிலும் வெளிவரும் என்பதையும் நீ உன் இருதயத்தில் முழுமையான தெளிவுடன் அறிந்துக்கொள்ள வேண்டும். அது ஒரு தீவிரமான விஷயம் என்று நீ நினைக்கக்கூடாது. தேவன் எவ்வாறு காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் கற்பனை செய்ய உன் சொந்தக் கருத்துக்களைப் பயன்படுத்தலாம். இருப்பினும், உன் கண்ணோட்டத்தின் எதிர்வாதம் உண்மையாக இருக்கும் நேரங்களும் உள்ளன. தேவனை அளவிட முயற்சிக்க உன் சொந்தக் கருத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீ ஏற்கனவே அவரைக் கோபப்படுத்தியிருக்கிறாய். ஏனென்றால், தேவன் நீ நினைப்பதைப் போலச் செயல்படவில்லை. நீ சொல்வதைப் போல அவர் இந்த விஷயத்தை நடத்துவதுமில்லை. ஆகவே, உன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றைக் குறித்தும் உன் மனநிலையில் கவனமாகவும் விவேகமாகவும் இருக்கும்படி நான் உனக்கு நினைவூட்டுகிறேன். எல்லாவற்றிலும் தேவனுடைய வழியில் நடப்பதற்கான கொள்கையை எவ்வாறு பின்பற்றுவது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். தேவனுடைய சித்தம் மற்றும் தேவனுடைய மனநிலை தொடர்பான விஷயங்களில் நீ உறுதியான புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயங்களுடன் உன்னை தொடர்புகொள்வதற்கு நீ அறிவொளி பெற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் நீ ஆர்வத்துடன் முயற்சி செய்ய வேண்டும். உன் நம்பிக்கையின் தேவனை ஒரு கைப்பாவையாக பார்க்க வேண்டாம்—விருப்பப்படி அவரை நியாயந்தீர்க்க வேண்டாம், அவரைப் பற்றி தன்னிச்சையான முடிவுகளுக்கு வர வேண்டாம், அவருக்குத் தகுதியுள்ள மரியாதையுடன் அவரை நடத்தாமல் இருக்க வேண்டாம். தேவன் உனக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்து, உன் முடிவைத் தீர்மானிக்கும்போது, அவர் உனக்கு இரக்கம் அல்லது சகிப்புத்தன்மை அல்லது நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையை வழங்கக்கூடும். ஆனால் எப்படியிருந்தாலும், உன்னைப் பற்றிய அவருடைய மனநிலை சரி செய்யப்படாது. அது அவரைப் பற்றிய உன் சொந்த மனநிலையையும், அவரைப் பற்றிய உன் புரிதலையும் சார்ந்துள்ளது. கடந்து செல்லும் உன் அறிவின் ஓர் அம்சத்தை அல்லது தேவனைப் பற்றிய புரிதலை நிரந்தரமாக தேவனை வரையறுக்க அனுமதிக்காதே. மரித்த தேவனை நம்ப வேண்டாம். ஜீவனுள்ளவரை நம்ப வேண்டும். இதை நினைவில் கொள்ள வேண்டும்! உங்கள் தற்போதைய வளர்ச்சி மற்றும் தற்போதைய அந்தஸ்தின் வெளிச்சத்தில் நான் இங்கே சில உண்மைகளை, நீங்கள் கேட்க வேண்டிய உண்மைகளைப் பற்றி விவாதித்திருக்கிறேன்—, உங்கள் உற்சாகத்தைத் தணித்துவிடக்கூடாது என்பதற்காக நான் இப்போது உங்களிடம் பெரிய எதிர்பார்ப்புகளை வைக்க மாட்டேன். அவ்வாறு செய்வது உங்கள் இருதயங்களை அதிக இருளினால் நிரப்பக்கூடும் மற்றும் தேவன்மீது அதிக ஏமாற்றத்தை உணர வைக்கக்கூடும். அதற்கு பதிலாக, உங்கள் இருதயங்களில் நீங்கள் வைத்திருக்கும் தேவன் மீதான அன்பைப் பயன்படுத்தலாம் என்றும், முன்னோக்கிச் செல்லும் பாதையில் நடக்கும்போது தேவன்மீது மரியாதைக்குரிய மனநிலையைப் பயன்படுத்தலாம் என்றும் நம்புகிறேன். தேவனை எவ்வாறு நம்புவது என்ற விஷயத்தில் குழப்பமடைய வேண்டாம். அதை மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதுங்கள். அதை உங்கள் இருதயத்தில் வைத்து, அதை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் மற்றும் அதை நிஜ ஜீவிதத்துடன் இணைக்க வேண்டும். உதட்டளவில் மட்டும் ஊழியம் செய்ய வேண்டாம்—அது ஜீவனுக்கும் மரணத்துக்குமான விஷயமாகும். அது உன் விதியைத் தீர்மானிக்கும். இதை நகைச்சுவையாகவோ குழந்தையின் விளையாட்டாகவோ கருத வேண்டாம்! இந்த வார்த்தைகளை இன்று உங்களுடன் பகிர்ந்துக்கொண்ட பிறகு, உங்கள் மனம் எவ்வளவாகப் புரிந்துக்கொண்டிருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இன்று நான் இங்கு கூறியதைப் பற்றி நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா?

இந்தத் தலைப்புகள் சற்று புதியவை மற்றும் உங்கள் கருத்துக்களிலிருந்து, உங்கள் வழக்கமான முயற்சிகளிலிருந்து மற்றும் நீங்கள் கவனம் செலுத்த விரும்பும் விஷயங்களிலிருந்து சற்று விலகியிருந்தாலும், அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உங்களால் பேசப்பட்டவுடன், நான் இங்குக் கூறிய அனைத்தையும் பற்றிய பொதுவான புரிதலை நீங்கள் வளர்த்துக்கொள்வீர்கள். இந்தத் தலைப்புகள் அனைத்தும் மிகவும் புதியவை மற்றும் நீங்கள் இதற்கு முன் கருத்தில் கொள்ளாதவை ஆகும். எனவே, அவை எந்த வகையிலும் உங்களிடம் சுமையாகச் சேராது என்று நம்புகிறேன். உங்களைப் பயமுறுத்துவதற்காக நான் இன்று இந்த வார்த்தைகளைப் பேசவில்லை. உங்களைச் சமாளிக்கும் ஒரு வழியாக அவற்றை நான் பயன்படுத்தவில்லை. மாறாக, உண்மைத் தன்மைகளைப் பற்றிய மெய்யான உண்மைகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுவதே எனது நோக்கமாகும். ஜனங்கள் தேவனை நம்புகிறார்கள் என்றாலும், மனிதர்களுக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருப்பதால், அவர்கள் அவரை ஒருபோதும் புரிந்துகொள்வதில்லை அல்லது அவருடைய மனநிலையை அறிந்துகொள்வதில்லை. தேவனுடைய மனநிலையைப் பற்றிய அக்கறையில் மனிதர்கள் ஒருபோதும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததில்லை. மாறாக, அவர்கள் கண்மூடித்தனமாக நம்பி, செயல்படுகிறார்கள். தேவனைப் பற்றிய அறிவிலும் புரிதலிலும் கவனக்குறைவாக இருக்கிறார்கள். ஆகவே, உங்களுக்காக இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க நான் நிர்பந்திக்கப்படுகிறேன் மற்றும் நீங்கள் நம்புகிற இந்த தேவன் எத்தகைய தேவன், அதே போல் அவர் என்ன நினைக்கிறார், பல்வேறு வகையான ஜனங்களை அவர் நடத்துவதில் அவருடைய மனநிலை என்ன, அவருடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலிருந்து நீங்கள் எவ்வளவு தூரம் இருக்கிறீர்கள், உங்கள் செயல்களுக்கும் அவர் கோரும் தரத்திற்கும் இடையில் எவ்வளவு ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதைப் புரிந்துக்கொள்ள நான் உங்களுக்கு உதவுகிறேன். உங்களை அளவிடுவதற்கான ஓர்அளவுகோலை உங்களுக்குக் கொடுப்பதே இந்த விஷயங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதில் உள்ள குறிக்கோள் ஆகும். இதன் மூலம் நீங்கள் செல்லும் பாதை எத்தகைய அறுவடைக்கு வழிவகுக்கிறது, இந்தப் பாதையில் நீங்கள் பெறாதது என்ன மற்றும் நீங்கள் எந்தப் பகுதிகளில் ஈடுபடவில்லை என்பவற்றை நீங்கள் அறிவீர்கள். உங்கள் மத்தியில் கலந்துரையாடும்போது, விவாதிக்கப்படும் சில பொதுவான தலைப்புகளில் நீங்கள் பேசுவீர்கள். அவை மிகவும் குறுகலானவை மற்றும் உள்ளடக்கத்தில் ஆழமற்றவையாகும். நீங்கள் விவாதிப்பவற்றுக்கும் தேவனுடைய நோக்கங்களுக்கும், உங்கள் விவாதங்களுக்கும் தேவனுடைய எதிர்பார்ப்புகளின் நோக்கம் மற்றும் தரத்திற்கும் இடையில் ஒரு தூரம், இடைவெளி உள்ளது. காலப்போக்கில் இப்படி முன்னேறுவது தேவனுடைய வழியிலிருந்து உங்களை என்றென்றும் விலகச் செய்யும். நீங்கள் தேவனுடைய தற்போதைய வார்த்தைகளை எடுத்து அவற்றை வழிபாட்டுப் பொருட்களாக மாற்றுகிறீர்கள் மற்றும் அவற்றைச் சடங்குகள் மற்றும் விதிமுறைகளாகப் பார்க்கிறீர்கள். இவையே நீங்கள் செய்வதாகும்! உண்மையில், உங்கள் இருதயங்களில் தேவனுக்கு இடமில்லை. அவர் உங்கள் இருதயங்களை ஒருபோதும் பெறவில்லை. தேவனை அறிவது மிகவும் கடினம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது உண்மையாகும். அது கடினமாகும். ஜனங்கள் தங்கள் கடமைகளைச் செய்து, வெளிப்புறமாகக் காரியங்களைச் செய்து, கடினமாக உழைத்தால், தேவனை நம்புவது மிகவும் எளிதானது என்று அவர்கள் நினைப்பார்கள். ஏனென்றால், அந்த விஷயங்கள் அனைத்தும் மனிதத் திறனின் எல்லைக்குள் வருகின்றன. எவ்வாறாயினும், தலைப்பானது தேவனுடைய நோக்கங்களுக்கும் மனிதகுலத்தின் மீதான அவரது மனநிலைக்கும் மாறும் தருணத்தில் உண்மையாகவே அனைவரின் பார்வையிலும் விஷயங்கள் சற்று கடினமாகிவிடும். ஏனென்றால், ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துக்கொள்வதும், அவர்கள் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதும் இதில் அடங்கும். எனவே நிச்சயமாக ஒருவித சிரமம் இருக்கும்! ஆயினும்கூட, நீ முதல் வாசலைக் கடந்து பிரவேசம் பெறும்போது, விஷயங்கள் படிப்படியாக எளிதாகின்றன.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 18

தேவனுக்குப் பயப்படுவதற்கான தொடக்கப் புள்ளியானது அவரை தேவனைப் போலவே நடத்துவதாகும்

சிறிது நேரத்திற்கு முன்பு, ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: யோபுவை விட தேவனைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருந்தாலும், நம்மால் ஏன் அவருக்குப் பயபக்தியாயிருக்க முடியாது? இந்த விஷயத்தை நாம் சற்று முன்னர் விவாதித்தோம். இந்தக் கேள்வியின் சாராம்சத்தை நாம் முன்பே விவாதித்தோம். அதாவது யோபு தேவனை அப்போது அறியவில்லை என்றாலும், யோபு அவரை தேவனைப் போலவே நடத்தினான் மற்றும் வானங்களுக்கும் பூமிக்கும் மற்ற எல்லாவற்றிற்கும் அவரை எஜமானராகவும் கருதினான். தேவனை எதிரியாக யோபு கருதவில்லை. மாறாக, எல்லாவற்றையும் சிருஷ்டித்தவராக அவரை வணங்கினான். இப்போதெல்லாம் ஜனங்கள் தேவனை ஏன் எதிர்க்கிறார்கள்? அவர்களால் அவரை ஏன் வணங்க முடியவில்லை? ஒரு காரணம் என்னவென்றால், அவர்கள் சாத்தானால் ஆழமாகச் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் ஆழமாக வேரூன்றிய சாத்தானிய இயல்புடன் அவர்கள் தேவனுடைய எதிரிகளாகிவிட்டார்கள். இவ்வாறு, அவர்கள் தேவனை நம்புகிறார்கள், தேவனை ஏற்கிறார்கள் என்றாலும், அவர்களால் அவரைத் தடுக்கவும், அவரை எதிர்த்து நிற்கவும் முடிகிறது. அது மனித இயல்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. மற்ற காரணம் என்னவென்றால், தேவன் மீது நம்பிக்கை இருந்தபோதிலும், ஜனங்கள் அவரை தேவனாகவே கருதுவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் அவரை மனிதகுலத்திற்கு எதிரானவர் என்று கருதுகிறார்கள், அவரை தங்கள் எதிரி என்று கருதுகிறார்கள் மற்றும் தங்களை தேவனுடன் சமரசம் செய்யமுடியாதவர்கள் என்று உணர்கிறார்கள். அது அவ்வளவு எளிமையானதாகும். நமது முந்தைய அமர்வில் இந்த விஷயம் விவரிக்கப்படவில்லை? இதைப் பற்றி சிந்தியுங்கள்: அதுவே காரணம் அல்லவா? நீ தேவனைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்கலாம். ஆனால் இந்த அறிவு எதைக் குறிக்கிறது? எல்லோரும் பேசுவது அதுவல்லவா? தேவன் உன்னிடம் சொன்னது அதுவல்லவா? அதன் தத்துவார்த்த மற்றும் கோட்பாட்டு அம்சங்களை மட்டுமே நீ அறிந்திருக்கிறாய்—ஆனால் தேவனுடைய உண்மையான முகத்தை நீ எப்போதாவது கிரகித்திருக்கிறாயா? உனக்கு உள்ளுணர்வு சார்ந்த அறிவு இருக்கிறதா? உனக்கு நடைமுறை அறிவும் அனுபவமும் உள்ளதா? தேவன் உன்னிடம் சொல்லியிருக்கவில்லை என்றால், உன்னால் அறிந்திருக்க முடியுமா? உன் தத்துவார்த்த அறிவு உண்மையான அறிவைக் குறிக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால், நீ எவ்வளவு அறிந்திருந்தாலும் அல்லது அதை எப்படி அறிந்துக்கொண்டாலும், நீ தேவனைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெறும் வரை, அவர் உன் எதிரியாக இருப்பார். நீ உண்மையில் தேவனை தேவனாகக் கருதத் தொடங்கும் வரையில், அவர் உன்னை எதிர்ப்பார். ஏனென்றால் நீ சாத்தானின் உருவகமாக இருக்கிறாய்.

நீ கிறிஸ்துவுடன் ஒன்றாக இருக்கும்போது, ஒரு நாளைக்கு நீ அவருக்கு மூன்று வேளை ஆகாரம் பரிமாறலாம் அல்லது அவருக்குத் தேநீர் பரிமாறலாம் மற்றும் அவருடைய ஜீவிதத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யலாம். நீ கிறிஸ்துவை தேவனாகவே கருதியிருப்பதாய்த் தோன்றும். ஒவ்வொரு காரியம் நடக்கும்போதும், ஜனங்களுடைய பார்வைகள் எப்போதும் தேவனுக்கு முரணாக இயங்கும். தேவனுடைய பார்வையை ஜனங்கள் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் எப்போதும் தவறிவிடுகிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கையில், ஜனங்கள் தேவனுடன் பழகுகிறார்கள் என்றாலும், அவர்கள் அவருடன் ஒத்துப்போகிறார்கள் என்று அது அர்த்தப்படுத்துவதில்லை. ஏதேனும் நடந்தவுடன், மனிதகுலத்தின் கீழ்ப்படியாமையின் உண்மைத் தன்மை வெளிப்படுகிறது. இதன் மூலம் மனிதர்களுக்கும் தேவனுக்கும் இடையிலான விரோதப் போக்கை அது உறுதிப்படுத்துகிறது. இந்த விரோதமானது தேவன் மனிதர்களை எதிர்க்கும் ஒன்றோ அல்லது தேவன் அவர்களுக்கு விரோதமாக இருக்க விரும்புவதோ அல்லது அவர் அவர்களை தனக்கு எதிராக நிறுத்தி பின்னர் அவர்களை அப்படி நடத்துகிறார் என்பதோ அல்ல. மாறாக, தேவனுக்கு எதிரான இந்த முரண்பாடான சாராம்சம் மனிதர்களின் மனதின் சித்தத்திலும் அவர்களுடைய ஆழ் மனதிலும் பதுங்குகிறது. தேவனிடமிருந்து வரும் அனைத்தையும் ஜனங்கள் தங்கள் ஆராய்ச்சிக்கான பொருள்களாக கருதுவதால், தேவனிடமிருந்து வரும் விஷயங்கள் மற்றும் தேவன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் நோக்கிய அவர்களுடைய பதில், எல்லாவற்றிற்கும் மேலாக, யூகிப்பதும், சந்தேகிப்பதும், பின்னர் முரண்படுவதும் மற்றும் தேவனை எதிர்க்கும் ஒரு மனநிலையை விரைவாக பின்பற்றுவதுமாகும். அதன்பிறகு, அவர்கள் தேவனுடன் சச்சரவுகள் அல்லது போட்டிகளில் எதிர்மறையான மனநிலையை கொண்டு செல்கிறார்கள். அத்தகைய தேவனைப் பின்பற்றுவது மதிப்புள்ளதா என்று கூட சந்தேகிக்கக்கூடிய அளவிற்கு அது செல்கிறது. அவர்கள் இந்த முறையில் தொடரக்கூடாது என்று அவர்களுடைய பகுத்தறிவு அவர்களிடம் கூறினாலும், அவர்கள் தங்களைத் தாங்களே அவ்வாறு செய்யத் தெரிந்துக்கொள்வார்கள். அதாவது அவர்கள் இறுதிவரை தயங்காமல் அதைத் தொடருவார்கள். உதாரணமாக, தேவனைப் பற்றிய வதந்திகளையோ அல்லது அவதூறான பேச்சையோ கேட்கும்போது சிலருக்கு ஏற்படும் முதல் எதிர்வினை என்னவாக இருக்கிறது? அவர்களுடைய முதல் எதிர்வினை இந்த வதந்திகள் உண்மையா இல்லையா, இந்த வதந்திகள் இருக்கிறதா இல்லையா என்று ஆச்சரியப்படுவதும், பின்னர் காத்திருந்து பார்க்கும் மனநிலையை பின்பற்றுவதும் ஆகும். பின்னர் அவர்கள், “இதைச் சரிபடுத்த வழி இல்லை. அது உண்மையில் நடந்ததா? இந்த வதந்தி உண்மையானதா இல்லையா?” என்று சிந்திக்கத் தொடங்குகிறார்கள். அது போன்றவர்கள் அதை மேலோட்டமாக காட்டவில்லை என்றாலும், அவர்கள் இருதயத்தில் அவர்கள் ஏற்கனவே சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் ஏற்கனவே தேவனை மறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இத்தகைய மனநிலையின் சாராம்சம் மற்றும் அத்தகைய கண்ணோட்டம் என்னவாக இருக்கிறது? அது துரோகம் அல்லவா? இந்த விஷயத்தை அவர்கள் எதிர்கொள்ளும் வரை, இந்த மனிதர்களின் பார்வைகள் என்ன என்பதை நீ பார்க்க முடியாது. அவர்கள் தேவனுடன் முரண்படவில்லை மற்றும் அவர்கள் அவரை எதிரியாக கருதுவதில்லை என்பது போல் தெரிகிறது. இருப்பினும், அவர்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டவுடன், அவர்கள் உடனடியாகச் சாத்தானுடன் நின்று தேவனை எதிர்க்கிறார்கள். அது எதைப் பரிந்துரைக்கிறது? மனிதர்களும் தேவனும் எதிர் எதிராக இருப்பதை அது அறிவுறுத்துகிறது! தேவன் மனிதகுலத்தை எதிரி என்று கருதவில்லை, ஆனால் மனிதகுலத்தின் சாராம்சமே தேவனுக்கு விரோதமானதாக இருக்கிறது. ஒருவர் எவ்வளவு காலம் அவரைப் பின்பற்றினார் அல்லது எவ்வளவு பெரிய விலைக்கிரையம் கொடுத்தார், அவர்கள் தேவனை எப்படி துதிக்கிறார்கள், அவர்கள் எப்படி அவரை எதிர்த்து நிற்காமல் இருக்கக்கூடும், தேவனை நேசிக்கும்படி அவர்கள் எவ்வளவு கடுமையாகத் தங்களை வற்புறுத்துகிறார்கள் என்பதல்லாமல், அவர்களால் ஒருபோதும் தேவனை தேவனாக நடத்த முடியாது. அது ஜனங்களுடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படவில்லையா? நீ அவரை தேவனாகக் கருதி, அவர் தேவன் என்று உண்மையாக நம்பினால், இன்னும் அவரைப் பற்றி உனக்கு ஏதேனும் சந்தேகம் இருக்க முடியுமா? அவரைப் பற்றிய ஏதேனும் கேள்விக்குறிகளை உங்கள் இருதயம் இன்னும் வைத்திருக்க முடியுமா? இனி வைத்திருக்க முடியாது, அல்லவா? இந்த உலகத்தின் போக்குகள் மிகவும் தீயனவாகும். இந்த மனித இனமும் தீமையானதாகும். இந்நிலையில், அவர்கள் மீது நீ எந்தக் கருத்தையும் கொண்டிராமல் எவ்வாறு இருக்க முடியும்? நீயே மிகவும் பொல்லாதவனாக இருக்கிறாய். எனவே, எவ்வாறு அதைப் பற்றி உனக்கு ஒரு கருத்தும் இல்லாமல் இருக்க முடியும்? ஆனால், ஒரு சில வதந்திகள் மற்றும் சில அவதூறுகள் தேவனைப் பற்றிய இத்தகைய மகத்தான கருத்துக்களுக்கு வழிவகுக்கும் மற்றும் பல விஷயங்களை நீ கற்பனை செய்யவும் வழிவகுக்கும். அது உன் வளர்ச்சி எவ்வளவு முதிர்ச்சியற்றது என்பதைக் காட்டுகிறது! ஒரு சில கொசுக்கள் மற்றும் ஒரு சில அருவருப்பான ஈக்கள் ஆகியவற்றின் “சலசலப்பு” உன்னை ஏமாற்றுவதற்கு போதுமானதாகுமா? அது எத்தகைய மனிதனைக் குறிக்கிறது? அத்தகையவர்களைப் பற்றி தேவன் என்ன நினைக்கிறார் என்று அறிவாயா? அவர் அவர்களை எவ்வாறு நடத்துகிறார் என்பது குறித்து தேவனுடைய மனநிலை உண்மையில் தெளிவாக உள்ளது. இந்த மனிதர்களை தேவன் நடத்துவது அவர்களை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகும்—அவருடைய மனநிலையானது அவர்களுக்கு எந்த கவனமும் செலுத்தக்கூடாது மற்றும் இந்த அறிவற்ற ஜனங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதாகும். ஏன் அவ்வாறு இருக்கிறது? ஏனென்றால், தேவனுடைய இருதயத்தில், அவர் தன்னிடம் விரோதமாக இருப்பதாக உறுதியளித்தவர்களை இறுதி வரைக்குமாக ஆதாயம் செய்யவும், இணக்கமாக இருப்பதற்கான வழியைத் தேடுவதில் ஒருபோதும் திட்டமிடாதவர்களைப் பெறுவதற்கும் அவர் ஒருபோதும் திட்டமிடவில்லை. ஒருவேளை நான் பேசிய இந்த வார்த்தைகள் ஒரு சிலரைக் காயப்படுத்தக்கூடும். நீங்களும் எப்போதுமே உங்களை இப்படிக் காயப்படுத்த அனுமதிக்கிறீர்களா? நீங்கள் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும், நான் சொல்வது எல்லாம் உண்மையாகும்! நான் எப்போதும் உங்களைக் காயப்படுத்தி, அதுபோன்ற வடுக்களை அம்பலப்படுத்தினால், அது உங்கள் இருதயங்களில் நீங்கள் வைத்திருக்கும் தேவனுடைய உயர்ந்த உருவத்தைப் பாதிக்குமா? (அது பாதிக்காது.) அது பாதிக்காது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால், உங்கள் இருதயத்தில் தேவன் இல்லை. உங்கள் இருதயங்களில் வசிக்கும் உயர்ந்த தேவன்—நீங்கள் வலுவாக மறைத்துப் பாதுகாக்கும் தேவன்—தேவன் அல்ல. மாறாக, அவர் மனிதக் கற்பனையின் ஓர் உருவமாவார். அவர் ஜீவிக்கவே இல்லை. எனவே, இந்தப் புதிருக்கு நான் பதிலை அம்பலப்படுத்துவது நல்லதாகும். அது முழு உண்மையையும் அப்பட்டமாகக் காட்டவில்லையா? உண்மையான தேவன் மனிதர்கள் கற்பனை செய்யும் தேவனைப் போன்றவர் அல்ல. உங்கள் அனைவராலும் இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். தேவனைப் பற்றிய உங்கள் அறிவுக்கு அது உதவும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 19

தேவனால் ஏற்றுக்கொள்ளப்படாத ஜனங்கள்

தேவனுடைய இருதயத்திற்குள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளப்படாத சிலருடைய விசுவாசம் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தம்மைப் பின்பற்றுபவர்களாக அவர்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய நம்பிக்கைகளை அவர் புகழ்வதில்லை. இந்த ஜனங்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எத்தனை வருடங்கள் தேவனைப் பின்பற்றினாலும், அவர்களுடைய கருத்துக்களும் பார்வைகளும் ஒருபோதும் மாறவில்லை. அவர்கள் அவிசுவாசிகளைப் போன்றவர்கள். அவர்கள் அவிசுவாசிகளின் கொள்கைகள் மற்றும் காரியங்களைச் செய்வதற்கான வழிகள் மற்றும் அவிசுவாசிகளின் பிழைப்பு மற்றும் விசுவாச விதிகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் தேவனுடைய வார்த்தையைத் தங்கள் ஜீவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. தேவனுடைய வார்த்தை சத்தியம் என்று அவர்கள் ஒருபோதும் நம்பவில்லை. தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்வதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தேவனைத் தங்கள் தேவனாக அவர்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் தேவனை நம்புவதை ஒருவித கற்றுக்குட்டித்தனமான பொழுதுபோக்காகப் பார்க்கிறார்கள். அவரை வெறும் ஆவிக்குரிய ஜீவாதாரமாகக் கருதுகிறார்கள். எனவே, தேவனுடைய மனநிலையையோ சாராம்சத்தையோ முயற்சி செய்து புரிந்துகொள்வது மதிப்புக்குரியது என்று அவர்கள் நினைக்கவில்லை. உண்மையான தேவனுடன் ஒத்துப்போகிற அனைத்திற்கும் இந்த ஜனங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறலாம். அவர்கள் ஆர்வம் காட்டவில்லை மற்றும் செவிசாய்க்க அவர்கள் கவலைப்படவுமில்லை. ஏனென்றால், அவர்களுடைய இருதயங்களின் ஆழத்தில், “தேவன் கண்ணுக்குத் தெரியாதவர், தொட முடியாதவர் மற்றும் அவர் ஜீவிப்பதில்லை” என்று எப்போதும் சொல்லும் ஒரு தீவிரமான குரல் இருக்கிறது. இத்தகைய தேவனைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது என்பது அவர்களுடைய முயற்சிகளுக்கு ஏற்புடையது அல்ல என்றும், அவ்வாறு செய்யும்போது அவர்கள் தங்களைத் தாங்களே முட்டாளாக்குவார்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். எந்தவொரு உண்மையான நிலைப்பாட்டையும் எடுக்காமல் அல்லது எந்தவொரு உண்மையான செயலிலும் தங்களை முதலீடு செய்யாமல் தேவனை வார்த்தைகளால் ஒப்புக்கொள்வதன் மூலம், அவர்கள் தங்களைப் பெரிய புத்திசாலிகள் என்று நம்புகிறார்கள். அத்தகையவர்களை தேவன் எப்படிப் பார்க்கிறார்? அவர் அவர்களை அவிசுவாசிகளாகவே கருதுகிறார். சிலர் கேட்கிறார்கள், “அவிசுவாசிகள் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்க முடியுமா? அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியுமா? ‘நான் தேவனுக்காக ஜீவிப்பேன்’ என்ற வார்த்தைகளை அவர்களால் சொல்ல முடியுமா?” மனிதர்கள் அடிக்கடி பார்ப்பது ஜனங்கள் மேலோட்டமாகக் காண்பிக்கும் காட்சிகளாகும். அவர்கள் ஜனங்களுடைய சாராம்சங்களைக் காணவில்லை. இருப்பினும், தேவன் இந்த மேலோட்டமான காட்சிகளைப் பார்ப்பதில்லை; அவர் அவர்களுடைய உள்ளார்ந்த சாராம்சங்களை மட்டுமே பார்க்கிறார். ஆகவே, இதுவே இந்த ஜனங்கள் மீது தேவன் வைத்திருக்கும் மனநிலை மற்றும் வரையறை ஆகும். இந்த ஜனங்கள், “தேவன் இதை ஏன் செய்கிறார்? தேவன் ஏன் அதைச் செய்கிறார்? இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, அது மனிதக் கருத்துக்களுடன் ஒத்துப்போகவில்லை, அதை நீ எனக்கு விளக்க வேண்டும்….” என்று சொல்கிறார்கள். இதற்குப் பதிலாக, நான் கேட்கிறேன்: இந்த விஷயங்களை உனக்கு விளக்க வேண்டியது அவசியமானதாகுமா? உண்மையில் இந்த விஷயங்களுக்கும் உனக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? நீ யார் என்று நினைக்கிறாய்? எங்கிருந்து வந்தாய்? தேவனுக்கு ஆலோசனைகள் கொடுக்குமளவிற்கு நீ உண்மையில் தகுதியுள்ளவனா? நீ அவரை நம்புகிறாயா? அவர் உன் விசுவாசத்தை ஒப்புக்கொள்கிறாரா? உன் விசுவாசத்திற்கும் தேவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், உன்னுடைய எந்த காரியங்கள் தேவனுடைய செயல்களாக இருக்கின்றன? தேவனுடைய இருதயத்தில் நீ எங்கு நிற்கிறாய் என்றே உனக்குத் தெரியாது, இந்நிலையில் அவருடன் உரையாடலில் ஈடுபடுவதற்கு நீ எவ்வாறு தகுதி பெற முடியும்?

அறிவுரையின் வார்த்தைகள்

இந்தக் கருத்துகளைக் கேட்டபின் உங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது அல்லவா? நீங்கள் அவற்றைக் கேட்க விரும்பவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றாலும், அவை அனைத்தும் உண்மைகள் ஆகும். ஏனென்றால், கிரியையின் இந்தக் கட்டம் தேவன் செய்ய வேண்டியதாகும். நீ அவருடைய நோக்கங்களைப் பற்றி அக்கறை கொள்ளாவிட்டால், அவருடைய மனநிலையைப் பற்றி அக்கறை கொள்ளாவிட்டால், அவருடைய சாராம்சத்தையும் மனநிலையையும் புரிந்துகொள்ளாவிட்டால், இறுதியில், நீ இழந்துபோகிறவனாவாய். என் வார்த்தைகள் கேட்பதற்குக் கடினமாக இருப்பதால் குறை சொல்லாதீர்கள். உங்கள் உற்சாகத்தைக் குறைத்ததற்காக அவற்றைக் குறை கூறாதீர்கள். நான் சத்தியத்தைப் பேசுகிறேன். உங்களை அதைரியப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. நான் உங்களிடம் எதைக் கேட்டாலும், அதை நீங்கள் எவ்வாறு செய்யப்போகிறீர்கள் என்பதல்லாமல், நீங்கள் சரியான பாதையில் நடந்து தேவனுடைய வழியைப் பின்பற்றுவீர்கள் என்றும் சரியான பாதையிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலக மாட்டீர்கள் என்றும் நான் நம்புகிறேன். நீ தேவனுடைய வார்த்தையின்படி தொடரவில்லை அல்லது அவருடைய வழியைப் பின்பற்றவில்லை என்றால், நீ தேவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறாய் என்பதிலும், சரியான பாதையிலிருந்து விலகிவிட்டாய் என்பதிலும் சந்தேகமில்லை. ஆகவே, நான் உங்களுக்காகத் தெளிவுபடுத்த வேண்டிய சில விஷயங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். அவற்றைச் சந்தேகத்திற்கு இடமின்றி, தெளிவாகவும், நிச்சயமற்ற தன்மை இன்றியும் நான் உங்களை நம்ப வைக்க வேண்டும் மற்றும் தேவனுடைய மனநிலை, அவருடைய நோக்கங்கள், அவர் எப்படி இருக்கிறார் மனிதர்களை எவ்வாறு முழுமையாக்குகிறார் மற்றும் அவர் ஜனங்களுடைய முடிவுகளை எந்த விதத்தில் தீர்மானிக்கிறார் என்பதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற உங்களுக்கு உதவ வேண்டும். இந்தப் பாதையில் நீ தொடர முடியாத ஒரு நாள் வருமானால், அதற்கு நான் எந்தப் பொறுப்பையும் ஏற்கமாட்டேன். ஏனென்றால், இந்த வார்த்தைகள் உன்னிடம் ஏற்கனவே மிகத் தெளிவாகப் பேசப்பட்டுள்ளன. உன் சொந்த முடிவை நீ எவ்வாறு கையாளுகிறாய் என்பதைப் பொறுத்தவரையில், அது முற்றிலும் உன்னைப் பொறுத்ததாகும். பல்வேறு வகையான மனிதர்களின் முடிவுகளைப் பொறுத்தவரையில், தேவன் வெவ்வேறு மனநிலைகளைக் கொண்டிருக்கிறார், அவற்றை எடைபோடுவதற்கான தனது சொந்த வழிகளையும், அதேபோல் அவர்களுக்கான அவரின் சொந்தத் தரத்தையும் கொண்டிருக்கிறார். ஜனங்களுடைய முடிவுகளை எடைபோடுவதற்கான அவரது தரம் அனைவருக்கும் நியாயமான ஒன்றாகும்—அதில் எந்தச் சந்தேகமும் இல்லை! எனவே, சிலரின் அச்சங்கள் தேவையற்றவையாகும். நீங்கள் இப்போது நிம்மதியாக இருக்கிறீர்களா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 20

உண்மையில், தேவனுடைய மனநிலை அனைவருக்கும் வெளிப்படையாகவே இருக்கிறது. அது மறைக்கப்படவில்லை. ஏனென்றால், தேவன் ஒருபோதும் எந்தவொரு மனிதனையும் உணர்வுப்பூர்வமாகத் தவிர்த்ததில்லை மற்றும் ஜனங்கள் அவரை அறிந்துகொள்வதிலிருந்தோ அவரைப் புரிந்துகொள்வதிலிருந்தோ தடுக்க தன்னை ஒருபோதும் மறைக்க முயலவில்லை. ஒவ்வொரு மனிதனையும் ஒளிவுமறைவின்றி நேர்மையாக எதிர்கொள்வதற்கு தேவனுடைய மனநிலை வெளிப்படையாக இருந்து வருகிறது. தேவனுடைய நிர்வாகத்தில், தேவன் தமது கிரியையைச் செய்கிறார், அனைவரையும் எதிர்கொள்கிறார் மற்றும் அவருடைய கிரியை ஒவ்வொரு மனிதனிடமும் செய்யப்படுகிறது. அவர் இந்தக் கிரியையைச் செய்யும்போது, அவர் தொடர்ந்து தனது மனநிலையை வெளிப்படுத்துகிறார் மற்றும் தொடர்ந்து தனது சாராம்சத்தையும், தன்னிடம் இருப்பதையும், தன் இருப்பையும், ஒவ்வொரு மனிதனுக்கும் வழிகாட்டவும் வழங்கவும் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு கட்டத்திலும், சூழ்நிலைகள் நல்லதா கெட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய மனநிலை ஒவ்வொரு மனிதனுக்கும் எப்போதும் வெளிப்படையாகவே இருக்கிறது மற்றும் அவருடைய ஜீவன் இடைவிடாமல் தொடர்ந்து மனிதகுலத்திற்கு வழங்கப்படுவது மற்றும் அதை ஆதரிப்பதைப் போலவே, அவருடைய பொக்கிஷங்களும் அவருடைய ஜீவிப்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்போதும் வெளிப்படையாகவே இருக்கிறது. இவை அனைத்திற்கும் மத்தியில், தேவனுடைய மனநிலை சிலருக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஏன்? ஏனென்றால், இந்த ஜனங்கள் தேவனுடைய கிரியையில் வாழ்ந்து தேவனைப் பின்பற்றினாலும், அவர்கள் ஒருபோதும் தேவனைப் புரிந்துகொள்ளவும் முயலவில்லை அல்லது தேவனைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை, தேவனை நெருங்கி வரவும் இல்லை. இந்த மனிதர்களுக்கு, தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்வது என்பது அவர்களுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் குறிக்கிறது. அதாவது தேவனுடைய மனநிலையால் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள், கண்டிக்கப்படுவார்கள். ஆகவே, அவர்கள் ஒருபோதும் தேவனையோ அவருடைய மனநிலையையோ புரிந்துகொள்ள விரும்பவில்லை. தேவனுடைய சித்தத்தைப் பற்றிய ஆழமான புரிதலையும் அறிவையும் அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பின் மூலம் அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள முற்படுவதில்லை—அவர்கள் செய்ய விரும்பும் காரியங்களை என்றென்றும் அனுபவித்துச் செய்கிறார்கள் மற்றும் அதைச் செய்வதில் ஒருபோதும் சோர்ந்துபோவதில்லை. தாங்கள் நம்ப விரும்பும் தேவனை நம்புகிறார்கள். அவர்களுடைய கற்பனைகளில் மட்டுமே இருக்கும் தேவனை நம்புகிறார்கள். அவர்களுடைய கருத்துக்களில் மட்டுமே இருக்கும் தேவனை நம்புகிறார்கள். அவர்களுடைய அன்றாட ஜீவிதத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒரு தேவனை நம்புகிறார்கள். உண்மையான தேவனிடம் வரும்போது, அவர்கள் முற்றிலுமாக அலட்சியமுள்ளவர்களாக இருக்கிறார்கள், அவரைப் புரிந்துகொள்ளவோ அல்லது அவருக்குச் செவிசாய்க்கவோ அவர்களுக்கு விருப்பமில்லை. இன்னும் அவருடன் நெருக்கமாகவும் விரும்புவதில்லை. தங்களை அலங்கரிக்கவும், நன்மைகளைச் சேர்க்கவும் மட்டுமே தேவன் வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், அது ஏற்கனவே அவர்களை வெற்றிகரமான விசுவாசிகளாகவும், தங்கள் இருதயங்களுக்குள் தேவன் மீதான விசுவாசம் கொண்டவர்களாகவும் ஆக்குகிறது. அவர்களுடைய இருதயங்களில், அவர்களுடைய கற்பனைகளால், அவர்களுடைய கருத்துக்களால் மற்றும் தேவனைப் பற்றிய தனிப்பட்ட வரையறைகளால் வழிநடத்தப்படுகிறார்கள். மறுபுறம், உண்மையான தேவனுக்கு அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால், அவர்கள் உண்மையான தேவனைப் புரிந்துகொள்ளவும், தேவனுடைய உண்மையான மனநிலையைப் புரிந்துகொள்ளவும், தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் வேண்டுமென்றால், அவர்களுடையச் செயல்கள், விசுவாசம் மற்றும் அவர்களுடைய முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும். அதனால் தான் அவர்கள் தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துகொள்வதை வெறுக்கிறார்கள் மற்றும் தேவனை நன்கு புரிந்துகொள்ளவும், தேவனுடைய சித்தத்தை நன்கு அறிந்துகொள்ளவும், தேவனுடைய மனநிலையை நன்கு புரிந்துகொள்ளவும் தீவிரமாக முயல்வதையோ ஜெபிப்பதையோ வெறுக்கிறார்கள். அவர்களுக்கு, தேவன் சிருஷ்டிக்கப்பட்ட வெறுமையான மற்றும் தெளிவற்ற ஒன்றாக இருக்கிறார். அவர்களுக்கு அவர்களுடைய கற்பனையின்படியே தேவன் இருக்கிறார். அவர்களுக்குப் பின்னால் இருந்து அழைக்கக்கூடியவராக இருக்கிறார். அவர் வழங்குவதில் குறைவுபடாதவர் மற்றும் அணுகுவதற்கு எப்போதும் எளிமையானவர். அவர்கள் தேவனுடைய கிருபையை அனுபவிக்க விரும்பும்போது, அவர் அந்தக் கிருபையாக இருக்கும்படி தேவனிடம் கேட்கிறார்கள். தேவனுடைய ஆசீர்வாதம் அவர்களுக்குத் தேவைப்படும்போது, அவர் அந்த ஆசீர்வாதமாக இருக்கும்படி தேவனிடம் கேட்கிறார்கள். துன்பங்களை எதிர்கொள்ளும்போது, அவர்கள் தங்கள் பிறகே கேடயமாக இருந்து அவர்களைத் தைரியப்படுத்தும்படி தேவனிடம் கேட்கிறார்கள். தேவனைப் பற்றிய இந்த ஜனங்களின் அறிவு, கிருபை மற்றும் ஆசீர்வாதத்தின் எல்லைக்குள் சிக்கியுள்ளது. தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் என்பது பற்றிய அவர்களுடைய புரிதல் அவர்களுடைய கற்பனைகள், எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ள சிலர் உள்ளனர், அவர்கள் தேவனை உண்மையாகவே பார்க்க விரும்புகிறார்கள் மற்றும் தேவனுடைய மனநிலையையும், அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதையும் உண்மையாகப் புரிந்துகொள்கிறார்கள். இந்த ஜனங்கள் தேவனுடைய சத்தியத்தின் யதார்த்தத்தையும் இரட்சிப்பையும் தேடுகிறார்கள் மற்றும் தேவனால், ஜெயம், இரட்சிப்பு மற்றும் பரிபூரணம் ஆகியவற்றைப் பெற முற்படுகிறார்கள். தேவனுடைய வார்த்தையைப் படிக்க அவர்கள் தங்கள் இருதயங்களைப் பயன்படுத்துகிறார்கள், ஒவ்வொரு சூழ்நிலையையும், ஒவ்வொரு மனிதனையும், நிகழ்வையும் மற்றும் தேவன் அவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள விஷயங்களையும் கிரகித்துக்கொள்ள தங்கள் இருதயங்களைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் அவர்கள் ஜெபத்துடன் நேர்மையாகத் தேடுகிறார்கள். அவர்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புவது தேவனுடைய சித்தம் மற்றும் அவர்கள் இனி தேவனை புண்படுத்தாமல், அவர்களுடைய அனுபவங்களின் மூலம் தேவனுடைய அருமையையும் அவருடைய உண்மையான பக்கத்தையும் காண, தேவனுடைய உண்மையான மனநிலையையும் சாராம்சத்தையும் பெரியளவில் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். ஓர் உண்மையான தேவன் அவர்களுடைய இருதயங்களுக்குள் இருப்பதற்கும், தேவன் அவர்களுடைய இருதயங்களில் ஓர் இடத்தைப் பெறுவதற்கும் இதுவே காரணம். அவர்கள் இனி கற்பனைகள், கருத்துக்கள் அல்லது தெளிவற்ற தன்மைக்கு இடையில் ஜீவிக்க மாட்டார்கள். இந்த ஜனங்களைப் பொறுத்தவரையில், தேவனுடைய மனநிலையையும் அவருடைய சாராம்சத்தையும் புரிந்துகொள்ள அவர்களுக்கு ஓர் அழுத்தமான விருப்பம் இருப்பதற்குக் காரணம், தேவனுடைய மனநிலையும் சாராம்சமும் மனிதகுலத்திற்கு, அவர்களுடைய அனுபவத்தின் போது ஒவ்வொரு கணத்திலும் தேவைப்படுகிறது என்பதே ஆகும். ஒருவரின் ஜீவ காலம் முழுவதும் ஜீவனை வழங்குவது தேவனுடைய மனநிலையும் சாராம்சமும்தான். தேவனுடைய மனநிலையை அவர்கள் புரிந்துகொண்டவுடன், அவர்களால் தேவனை இன்னும் அதிகமாக மதிக்க முடியும், தேவனுடைய கிரியையுடன் இன்னும் அதிகமாக ஒத்துழைக்க முடியும் மற்றும் தேவனுடைய சித்தத்திற்கு அதிக அக்கறை காட்டுவதோடு, தங்களது திறன்களுக்கு ஏற்ப முடிந்தவரையில் மிகச் சிறப்பாக தங்கள் கடமையை அவர்களால் செய்ய முடியும். இவையே இரண்டு வகையான ஜனங்களின், தேவனுடைய மனநிலையைப் பற்றிய அவர்களுடைய மனநிலைகள் ஆகும். முதல் வகை ஜனங்கள் தேவனுடைய தன்மையைப் புரிந்துகொள்ள விரும்பவில்லை. தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்ளவும், தேவனைப் பற்றி அறிந்துகொள்ளவும், தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதைப் பார்க்கவும், தேவனுடைய சித்தத்தை உண்மையாகப் புரிந்துகொள்ளவும் விரும்புவதாக அவர்கள் சொன்னாலும், ஆழ்மனதில் தேவன் இல்லை என்று அவர்கள் பேசுவார்கள். ஏனென்றால், இந்த வகை ஜனங்கள் தொடர்ந்து தேவனுக்குக் கீழ்ப்படியாமல், அவரை எதிர்க்கிறார்கள். அவர்கள் தங்கள் இருதயத்தில் அந்தஸ்துக்காக தேவனுடன் சண்டையிடுகிறார்கள். பெரும்பாலும் தேவன் இருப்பதை சந்தேகிக்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள். தேவனுடைய மனநிலையோ உண்மையான தேவனோ அவர்களுடைய இருதயங்களை ஆக்கிரமிக்க அவர்கள் அனுமதிக்க விரும்பவில்லை. அவர்கள் தங்களது சொந்த ஆசைகள், கற்பனைகள் மற்றும் லட்சியங்களை மட்டுமே பூர்த்தி செய்ய விரும்புகிறார்கள். எனவே, இந்த ஜனங்கள் தேவனை நம்பலாம், தேவனைப் பின்பற்றலாம் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கிரியைகளையும் அவருக்காக விட்டுவிடலாம், ஆனால் அவர்கள் தங்களது தீய வழிகளில் இருந்து விலகுவதில்லை. சிலர் காணிக்கைகளைத் திருடுகிறார்கள், மோசடி செய்கிறார்கள் அல்லது தேவனைத் தனிப்பட்ட முறையில் சபிக்கிறார்கள். மற்றவர்கள் தங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் சாட்சியளிக்கவும், தங்களை மோசமாக்கவும், ஜனங்களுக்காகவும் அந்தஸ்துக்காகவும் தேவனுடன் போட்டியிடவும் தங்கள் நிலைகளைப் பயன்படுத்தலாம். ஜனங்களை வழிபடச் செய்ய அவர்கள் பல்வேறு முறைகளையும் நடவடிக்கைகளையும் பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து ஜனங்களை ஜெயித்து அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். சிலர் வேண்டுமென்றே தங்களை தேவன் என்று ஜனங்களை நினைக்கச் செய்து, இதனால் அவர்கள் தேவனைப் போலவே நடத்தப்படுவார்கள் என்று எண்ணி ஜனங்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். தாங்கள் சீர்கெட்டுள்ளதாக அவர்கள் ஒருபோதும் சொல்லமாட்டார்கள். அதாவது அவர்களும் சீர்கேடு நிறைந்தவர்கள், திமிர்பிடித்தவர்கள், அவர்களை வணங்கக் கூடாது, அவர்கள் எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் அவை அனைத்தும் தேவனுடைய மேன்மையின் விளைவுதான், எப்படியாயினும் அவர்கள் செய்ய வேண்டியதை மட்டுமே செய்கிறார்கள் என்று அவர்கள் ஒருபோதும் சொல்லமாட்டார்கள். இந்த விஷயங்களை அவர்கள் ஏன் சொல்வதில்லை? ஏனென்றால், ஜனங்களின் இருதயத்தில் தங்களது இடத்தினை இழப்பதற்கு அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். இதனால்தான் இதுபோன்றவர்கள் ஒருபோதும் தேவனை உயர்த்துவதில்லை, தேவனைப் பற்றி ஒருபோதும் சாட்சி அளிப்பதில்லை, ஏனென்றால், அவர்கள் ஒருபோதும் தேவனைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. தேவனைப் புரிந்துகொள்ளாமல் அவர்களால் அவரை அறிய முடியுமா? அது சாத்தியமற்றது! ஆகவே, “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும்” என்ற தலைப்பில் உள்ள சொற்கள் எளிமையானதாக இருக்கும்போது, அவை ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. தேவனுக்கு அடிக்கடி கீழ்ப்படியாத, தேவனை எதிர்க்கும், தேவனுக்கு விரோதமான ஒருவருக்கு, வார்த்தைகள் கண்டனத்தைக் குறிக்கின்றன. அதேசமயம், சத்தியத்தின் யதார்த்தத்தைப் பின்பற்றி, தேவனுடைய சித்தத்தைத் தேடுவதற்கு பெரும்பாலும் தேவனுக்கு முன்பாக வருபவர் இயற்கையாகவே அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்வார். ஆகவே, தேவனுடைய மனநிலை மற்றும் தேவனுடைய கிரியை பற்றி கேட்கும்போது உங்களில் சிலருக்கு தலைவலி வரத் தொடங்கும். அவர்களுடைய இருதயங்கள் எதிர்ப்பை வளர்த்துக் கொள்கின்றன மற்றும் அவர்கள் மிகவும் சங்கடமாகி விடுகிறார்கள். ஆனால் உங்களில் அந்தத் தலைப்புதான் சரியாகத் தங்களுக்குத் தேவையானது, ஏனென்றால் அது தங்களுக்கு மிகவும் பயனளிக்கிறது என்று நினைக்கிற மற்றவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களின் ஜீவித அனுபவத்திலிருந்து விடுபட முடியாத ஒன்றாகும். அது முக்கியமான காரியங்களில் மிக முக்கியமானதாகும். அது தேவன் மீதான விசுவாசத்தின் அடித்தளம் மற்றும் மனிதகுலத்தால் கைவிட முடியாத ஒன்றாகும். உங்கள் அனைவருக்கும், இந்தத் தலைப்பு அருகிலும் தொலைவிலும் என இரண்டாகவும் தெரியலாம். அது அறியப்படாத ஒன்றென்றாலும் பழக்கமானதாகத் தெரியலாம். ஆனால் எதுவாக இருந்தாலும், அது அனைவரும் கேட்க வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய ஒரு தலைப்பாகும். நீ அதை எவ்வாறு கையாளுகிறாய் என்பது முக்கியமல்ல, நீ அதை எப்படிப் பார்த்தாலும் அல்லது அதை எப்படிப் புரிந்துகொண்டாலும் இந்தத் தலைப்பின் முக்கியத்துவத்தை உன்னால் புறக்கணிக்க முடியாது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 21

மனிதகுலத்தை சிருஷ்டித்ததிலிருந்தே தேவன் தமது கிரியையைச் செய்து வருகிறார். ஆரம்பத்தில், அது மிகவும் எளிமையான கிரியையாக இருந்தது. ஆனால் அது எளிமையாக இருந்தபோதிலும், அதில் தேவனுடைய சாராம்சம் மற்றும் மனநிலையின் வெளிப்பாடுகள் இருந்தன. தேவனுடைய கிரியை இப்போது உயர்த்தப்பட்டாலும், அவரைப் பின்பற்றும் ஒவ்வொரு நபரிடமும் இந்தக் கிரியை மிகச்சிறந்ததாகவும், உறுதியானதாகவும் மாறிவிட்டது. அவருடைய வார்த்தையின் சிறந்த வெளிப்பாட்டுடன், தேவனுடைய ஆள்தத்துவம் மனிதகுலத்திலிருந்து முற்றிலுமாக மறைக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு முறை அவதரித்திருந்தாலும், வேதாகமக் கணக்குகளின் காலம் முதல் நவீன நாட்கள் வரை, யாரேனும் தேவனுடைய உண்மையான ஆள்தத்துவத்தைப் பார்த்துள்ளார்களா? உங்கள் புரிதலின் அடிப்படையில், தேவனுடைய உண்மையான ஆள்தத்துவத்தை யாராவது பார்த்திருக்கிறார்களா? இல்லை. தேவனுடைய உண்மையான ஆள்தத்துவத்தை யாரும் பார்த்ததில்லை. அதாவது தேவனுடைய உண்மையான சுயத்தை யாரும் பார்த்ததில்லை. அது எல்லோரும் ஒப்புக் கொள்ளும் ஒன்றாகும். அதாவது, தேவனுடைய உண்மையான ஆள்தத்துவம் அல்லது தேவனுடைய ஆவியானவர், அவர் உருவாக்கிய ஆதாம் மற்றும் ஏவாள் உட்பட, அவர் ஏற்றுக்கொண்ட நீதியுள்ள யோபு உட்பட எல்லா மனிதர்களிடமிருந்தும் மறைக்கப்படுகிறார். அவர்களில் யாரும் தேவனுடைய உண்மையான மனித ஆள்தத்துவத்தைக் காணவில்லை. ஆனால் தேவன் ஏன் தமது உண்மையான ஆள்தத்துவத்தை தெரிந்தே மறைக்கிறார்? சிலர் சொல்கிறார்கள்: “தேவன் பயப்படும் ஜனங்களுக்குப் பயப்படுகிறார்.” மற்றவர்கள் சொல்கிறார்கள்: “மனிதன் மிகச் சிறியவன், தேவன் மிகப் பெரியவர் என்பதால் தேவன் தம்முடைய உண்மையான ஆள்தத்துவத்தை மறைக்கிறார். மனிதர்கள் அவரைக் காணக்கூடாது, இல்லையென்றால் அவர்கள் இறந்துவிடுவார்கள்.” “தேவன் ஒவ்வொரு நாளும் தனது கிரியையை நிர்வகிப்பதில் மும்முரமாக இருக்கிறார், மற்றவர்கள் அவரைக் காணும்படியாக அவர்களுக்கு முன்பாகத் தோன்ற அவருக்கு நேரமில்லை” என்று கூறுபவர்களும் உண்டு. நீங்கள் எதை நம்பினாலும், எனக்கு இங்கே ஒரு முடிவு இருக்கிறது. அந்த முடிவு என்னவாக இருக்கிறது? தேவன் தமது உண்மையான ஆள்தத்துவத்தை ஜனங்கள் பார்ப்பதை விரும்பவில்லை என்பதுதான். மனிதகுலத்திடமிருந்து மறைந்திருப்பது தேவன் வேண்டுமென்றே செய்கிற ஒன்றாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய உண்மையான ஆள்தத்துவத்தை ஜனங்கள் காணக்கூடாது என்பது தேவனுடைய நோக்கமாகும். அது இப்போது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். தேவன் ஒருபோதும் தனது ஆள்தத்துவத்தை யாருக்கும் வெளிப்படுத்தவில்லை என்றால், தேவனுக்கு ஆள்தத்துவம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? (அவர் இருக்கிறார்.) நிச்சயமாக அவர் இருக்கிறார். தேவனுடைய ஆள்தத்துவம் இருப்பது எல்லா சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டதாகும். ஆனால் தேவனுடைய ஆள்தத்துவம் எவ்வளவு பெரியவர் அல்லது அவர் எப்படி இருக்கிறார் என்பதைப் பொறுத்தவரையில், இந்தக் கேள்விகளை மனிதகுலம் ஆராய வேண்டுமா? இல்லை. இதன் பதில் எதிர்மறையானதாகும். தேவனுடைய ஆள்தத்துவம் நாம் ஆராய வேண்டிய தலைப்பு அல்ல என்றால், தலைப்பு என்னவாக இருக்கிறது? (தேவனுடைய மனநிலை.) (தேவனுடைய கிரியை.) அதிகாரப்பூர்வ தலைப்பைப் பற்றி கலந்துரையாடத் தொடங்குவதற்கு முன், இதற்கு ஒரு கணம் முன்பதாக நாம் விவாதித்த விஷயங்களுக்குத் திரும்புவோம்: தேவன் ஏன் தனது ஆள்தத்துவத்தை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தவில்லை? தேவன் ஏன் தனது ஆள்தத்துவத்தை வேண்டுமென்றே மனிதகுலத்திலிருந்து மறைக்கிறார்? ஒரே ஒரு காரணம் இருக்கிறது, அதாவது: தேவன் சிருஷ்டித்த மனிதன், ஆயிரக்கணக்கான ஆண்டுகால கிரியைகளை அனுபவித்திருந்தாலும், தேவனுடைய கிரியை, தேவனுடைய மனநிலை மற்றும் தேவனுடைய சாராம்சம் ஆகியவற்றை ஒரு மனிதன் கூட அறிந்திருக்கவில்லை. அத்தகையவர்கள், தேவனுடைய பார்வையில், அவரை எதிர்க்கிறார்கள். தேவன் தன்னை விரோதிக்கிறவர்களுக்கு தன்னைக் காட்ட மாட்டார். தேவன் தமது ஆள்தத்துவத்தை மனிதகுலத்திற்கு ஒருபோதும் வெளிப்படுத்தாததற்கும், அவர் ஏன் வேண்டுமென்றே தனது ஆள்தத்துவத்தை மனிதகுலத்திடமிருந்து மறைக்கிறார் என்பதற்கும் இதுவே ஒரே காரணம். தேவனுடைய மனநிலையை அறிந்துகொள்வதன் முக்கியத்துவம் இப்போது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறதா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 22

தேவனுடைய நிர்வாகம் தோன்றிய காலம் முதல் தமது கிரியையைச் செய்வதற்கு அவர் எப்போதும் தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மனிதனிடமிருந்து தமது ஆள்தத்துவத்தை மூடிமறைத்த போதிலும், அவர் எப்போதும் மனிதனின் பக்கத்தில் தான் இருக்கிறார், மனிதனிடம் கிரியை செய்கிறார், அவருடைய மனநிலையை வெளிப்படுத்துகிறார், மனிதகுலம் முழுவதையும் அவருடைய சாராம்சத்துடன் வழிநடத்துகிறார் மற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவருடைய வல்லமை, அவருடைய ஞானம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் மூலம் கிரியை செய்கிறார். இதன் மூலம் நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் இன்றைய ராஜ்யத்தின் காலம் ஆகியவற்றை நடைமுறைக்கு கொண்டுவருகிறார். தேவன் தமது ஆள்தத்துவத்தை மனிதனிடமிருந்து மறைக்கிறார் என்றாலும், அவருடைய மனநிலை, அவர் இருப்பது மற்றும் அவருடைய உடைமைகள் மற்றும் மனிதகுலத்தின் மீதான அவரது சித்தம் ஆகியவை மனிதனுக்கு, பார்க்கவும் அனுபவிக்கவும் மனிதனுக்குத் தடையின்றி வெளிப்படுத்தப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதர்களால் தேவனைப் பார்க்கவோ தொடவோ முடியாது என்றாலும், மனிதகுலம் எதிர்கொள்ளும் தேவனுடைய மனநிலை மற்றும் சாராம்சம் முற்றிலும் தேவனுடைய வெளிப்பாடுகளே ஆகும். அது உண்மையல்லவா? தேவன் தமது கிரியைக்காக தேர்ந்தெடுக்கும் வழி அல்லது கோணத்தைப் பொருட்படுத்தாமல், அவர் எப்போதும் ஜனங்களைத் தமது உண்மையான அடையாளத்தின் மூலம் நடத்துகிறார், தம் மீது சுமத்தப்பட்டுள்ள கிரியையைச் செய்கிறார் மற்றும் அவர் பேச வேண்டிய வார்த்தைகளைப் பேசுகிறார். தேவன் எந்த நிலையில் இருந்து பேசுகிறார் என்பது முக்கியமல்ல—அவர் மூன்றாவது வானத்தில் நிற்கலாம் அல்லது மாம்சத்தில் நிற்கலாம் அல்லது ஒரு சாதாரண மனிதனாக இருக்கலாம்—அவர் எப்போதுமே மனிதனிடம் முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், எந்தவிதமான ஏமாற்றமும் மறைப்பும் இல்லாமல் பேசுகிறார். தேவன் தமது கிரியையைச் செய்யும்போது, தம்முடைய வார்த்தையையும் தம்முடைய மனநிலையையும் வெளிப்படுத்துகிறார் மற்றும் எந்தவிதமான ஒதுக்கீடும் இன்றி, தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறார். அவர் தமது ஜீவிதம் மற்றும் தமது இருப்பு மற்றும் உடமைகள் மூலம் மனிதகுலத்தை வழிநடத்துகிறார். “காணமுடியாத மற்றும் தொட்டுணர முடியாத” தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ், மனிதகுலத்தின் தொட்டில் காலமான நியாயப்பிரமாணத்தின் காலத்தில் மனிதன் இவ்வாறு ஜீவித்தான்.

நியாயப்பிரமாணத்தின் காலத்திற்குப் பிறகு தேவன் முதன்முறையாக மாம்சமானார்—அது முப்பத்தி மூன்றரை ஆண்டுகள் நீடித்த ஓர் அவதாரமாகும். ஒரு மனிதனைப் பொறுத்தவரையில், முப்பத்து மூன்றரை ஆண்டுகள் நீண்ட காலமா? (அது நீண்ட காலம் அல்ல.) ஒரு மனிதனின் ஆயுட்காலம் பொதுவாக முப்பது ஆண்டுகளை விட மிக அதிகமாக இருப்பதால், அது ஒரு மனிதனுக்கு மிக நீண்ட காலம் அல்ல. ஆனால் தேவனுடைய அவதாரத்தைப் பொறுத்தவரையில், இந்த முப்பத்து மூன்றரை ஆண்டுகள் உண்மையில் நீண்ட காலமாகும். அவர் ஒரு மனிதன் ஆனார். தேவனுடைய கிரியையையும் ஆணையையும் ஏற்றுக்கொண்ட ஒரு சாதாரண மனிதன் ஆனார். இதன் பொருள் என்னவென்றால், ஒரு சாதாரண மனிதனால் கையாள முடியாத கிரியையை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதே நேரத்தில் சாதாரண ஜனங்களால் தாங்க முடியாத துன்பங்களையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. கிருபையின் காலத்தின் போது, அவருடைய கிரியையின் ஆரம்பம் முதல் அவர் சிலுவையில் அறையப்பட்ட காலம் வரை, கர்த்தராகிய இயேசு அனுபவித்த துன்பத்தின் அளவு பற்றி, அதாவது அது இன்றைய ஜனங்கள் நேரில் கண்டிருக்கக்கூடிய ஒன்று அல்ல என்றாலும் உங்களால் வேதாகமத்தின் கதைகள் மூலம் அதைப் பற்றி சிறு யோசனை கூட பெற முடியவில்லையா? பதிவுசெய்யப்பட்ட இந்த உண்மைகளில் எத்தனை விவரங்கள் இருந்தாலும், மொத்தத்தில், இந்தக் காலகட்டத்தில் தேவனுடைய கிரியை கஷ்டங்களும் துன்பங்களும் நிறைந்ததாகும். ஒரு சீர்கெட்ட மனிதனுக்கு, முப்பத்து மூன்றரை ஆண்டுகள் நீண்ட காலம் அல்ல. ஒரு சிறிய துன்பமானது ஒரு சிறிய விஷயம் ஆகும். ஆனால் பரிசுத்தமான கறைபடாத தேவனுக்கு மனிதகுலத்தின் எல்லா பாவங்களையும் தாங்கிக்கொள்ளவும், பாவிகளுடன் புசிக்கவும், தூங்கவும், ஜீவிக்கவும் வேண்டும் என்னும் இந்த வலி நம்பமுடியாத அளவிற்கு மிகப்பெரியது ஆகும். அவர் சிருஷ்டிகராகவும், எல்லாவற்றிற்கும் தேவனாகவும், எல்லாவற்றிற்கும் அதிபதியாகவும் இருக்கிறார். ஆனாலும் அவர் உலகத்திற்கு வந்தபோது, சீர்கேடு நிறைந்த மனிதர்களின் அடக்குமுறையையும் கொடுமையையும் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய கிரியையை நிறைவு செய்வதற்கும், மனிதகுலத்தைத் துயரக் கடலில் இருந்து மீட்பதற்கும், அவர் மனிதனால் நிந்திக்கப்பட வேண்டும் மற்றும் முழு மனிதகுலத்தின் பாவங்களையும் தாங்க வேண்டும். அவர் அனுபவித்த துன்பத்தின் அளவை சாதாரண ஜனங்களால் புரிந்துகொள்ளவோ கிரகித்துக்கொள்ளவோ முடியாது. இந்த துன்பம் எதைக் குறிக்கிறது? அது மனிதகுலத்திற்கான தேவனுடைய பக்தியைக் குறிக்கிறது. மனிதனின் இரட்சிப்பிற்காக, அவர்களுடைய பாவங்களை மீட்பதற்கும், அவருடைய கிரியையின் இந்தக் கட்டத்தை நிறைவு செய்வதற்கும் அவர் அனுபவித்த அவமானத்தையும், அவர் செலுத்திய விலையையும் அது குறிக்கிறது. மனிதன் சிலுவையிலிருந்து தேவனால் மீட்கப்படுவான் என்பதும் இதன் பொருள் ஆகும். அது இரத்தத்தினாலும், ஜீவிதத்தினாலும் செலுத்தப்பட்ட விலை மற்றும் சிருஷ்டிக்கப்பட்ட எந்தவொரு ஜீவனும் தாங்க முடியாத விலையாகும். ஏனென்றால், அவர் இத்தகைய துன்பங்களைத் தாங்கி இத்தகைய கிரியைகளைச் செய்ய முடியும் என்ற தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார் மற்றும் தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதையும் அவர் கொண்டிருக்கிறார். அது அவரால் சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஜீவனும் அவருக்குப் பதிலாக செய்திருக்க முடியாதது ஆகும். அது கிருபையின் காலத்தின் போது தேவனுடைய கிரியை மற்றும் அவருடைய மனநிலையின் வெளிப்பாடு ஆகும். அது தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதைப் பற்றி எதையேனும் வெளிப்படுத்துகிறதா? இதைத் தெரிந்துக்கொள்வது மனிதகுலத்துக்குப் பயனுள்ளதாகுமா? அந்த காலத்தில், மனிதன் தேவனுடைய ஆள்தத்துவத்தைக் காணவில்லை என்றாலும், அவர்கள் தேவனுடைய பாவ நிவாரணப் பலியைப் பெற்றார்கள். தேவனால் சிலுவையிலிருந்து மீட்கப்பட்டனர். கிருபையின் காலத்தின் போது தேவன் செய்த கிரியையை மனிதகுலம் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்தக் காலகட்டத்தில் தேவனால் வெளிப்படுத்தப்பட்ட மனநிலையையும் சித்தத்தையும் யாராவது அறிந்திருக்கிறார்களா? மனிதன் பல்வேறு பாதைகள் மூலம் வெவ்வேறு காலங்களில் உள்ள தேவனுடைய கிரியைகளைப் பற்றிய விவரங்களை மட்டுமே அறிந்திருக்கிறான் அல்லது தேவன் தமது கிரியையைச் செய்து கொண்டிருந்த சமயத்தில் நிகழ்ந்த தேவனைச் சார்ந்த கதைகளைப் பற்றி அறிந்திருக்கிறான். இந்த விவரங்களும் கதைகளும் தேவனைப் பற்றிய சில தகவல்கள் அல்லது புனைவுகள் ஆகும். தேவனுடைய மனநிலை மற்றும் சாராம்சத்துக்கும் அவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகவே, தேவனைப் பற்றி ஜனங்கள் எத்தனை கதைகளை அறிந்திருந்தாலும், தேவனுடைய மனநிலை அல்லது அவருடைய சாராம்சத்தைப் பற்றிய ஆழமான புரிதலும் அறிவும் அவர்களுக்கு இருக்கிறது என்று அது அர்த்தமாகாது. நியாயப்பிரமாணத்தின் காலத்தைப் போலவே, கிருபையின் காலத்தில் உள்ளவர்கள் மாம்சத்தில் தேவனுடன் நேரடியான மற்றும் நெருக்கமான தொடர்பை அனுபவித்திருந்தாலும், தேவனுடைய மனநிலை மற்றும் தேவனுடைய சாராம்சம் பற்றிய அவர்களுடைய அறிவு கிட்டத்தட்ட இல்லாத ஒன்றாகும்.

தேவன் முதல் முறையாக செய்தது போலவே ராஜ்யத்தின் காலத்தில், மீண்டும் ஒரு முறை மாம்சமானார். இந்தக் கிரியையின் காலத்தில், தேவன் இன்னும் தடையின்றி தமது வார்த்தையை வெளிப்படுத்துகிறார், தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்கிறார் மற்றும் தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதே சமயம், மனிதனின் கீழ்ப்படியாமை மற்றும் அறியாமையை அவர் தொடர்ந்து சகித்துக்கொள்கிறார். இந்தக் கிரியையின் காலத்தில் தேவன் தொடர்ந்து தனது மனநிலையையும், தம்முடைய சித்தத்தையும் வெளிப்படுத்துகிறாரா? ஆகையால், மனிதனைச் சிருஷ்டித்ததிலிருந்து இப்போது வரை, தேவனுடைய மனநிலை, அவர் இருப்பது மற்றும் அவருடைய உடைமைகள் மற்றும் அவருடைய சித்தம் எப்போதும் ஒவ்வொரு நபருக்கும் வெளிப்படையாகவே இருக்கிறது. தேவன் ஒருபோதும் வேண்டுமென்றே தமது சாராம்சத்தை, தம்முடைய மனநிலையை அல்லது தம்முடைய சித்தத்தை மறைக்கவில்லை. அது, தேவன் என்ன செய்கிறார், அவருடைய சித்தம் என்ன என்பதைப் பற்றி மனிதகுலம் அக்கறை கொள்ளவில்லை என்பதேயாகும்—அதனால்தான் மனிதனுக்கு தேவனைப் பற்றி மோசமான புரிதல் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் தமது ஆள்தத்துவத்தை மறைக்கும்போது, அவர் ஒவ்வொரு தருணத்திலும் மனிதகுலத்தோடு நிற்கிறார். எல்லா நேரங்களிலும் அவருடைய சித்தம், மனநிலை மற்றும் சாராம்சத்தை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார். ஒரு விதத்தில், தேவனுடைய ஆள்தத்துவமானவர் ஜனங்களுக்கும் வெளிப்படையானவர். ஆனால் மனிதனின் குருட்டுத்தன்மை மற்றும் கீழ்ப்படியாமை காரணமாக, அவர்களால் ஒருபோதும் தேவனுடைய தோற்றத்தைக் காண முடியவில்லை. அப்படியானால், தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்வதும், தேவனைப் புரிந்துகொள்வதும் அனைவருக்கும் எளிதானதன்று அல்லவா? அது பதிலளிக்க மிகவும் கடினமான கேள்வி, அல்லவா? அது எளிதானது என்று நீங்கள் கூறலாம். ஆனால் சிலர் தேவனை அறிய முற்படுகையில், அவர்களால் அவரைப் பற்றி உண்மையிலேயே தெரிந்துக்கொள்ளவோ அவரைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறவோ முடிவதில்லை—அது எப்போதும் மங்கலானதாக மற்றும் தெளிவற்றதாகவே இருக்கிறது. ஆனால் அது எளிதானது அல்ல என்று நீங்கள் சொன்னால், அதுவும் சரியானதாகாது. இவ்வளவு காலமாக தேவனுடைய கிரியையின் பொருளாக இருந்ததால், ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களின் மூலம் தேவனுடன் உண்மையான பரிவர்த்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் தேவனைத் தங்கள் இருதயங்களில் உணர்ந்திருக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு தேவனோடு ஆவிக்குரிய ரீதியில் சிறு தொடர்பு இருக்க வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் தேவனுடைய மனநிலையைப் பற்றி சில மனம் சார்ந்த அறிவைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவரைப் பற்றிய சில புரிதல்களைப் பெற்றிருக்க வேண்டும். மனிதன் தேவனைப் பின்பற்றத் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை, மனிதகுலம் மிக அதிகமாகப் பெற்றுள்ளது. ஆனால் எல்லா வகையான காரணங்களாலும், அதாவது மனிதனின் மோசமான திறன், அறியாமை, கலகம் மற்றும் பல்வேறு நோக்கங்களாலும் மனிதகுலமும் அதில் அதிகமானவற்றை இழந்துவிட்டது. தேவன் ஏற்கனவே மனிதகுலத்திற்கு போதுமானதைக் கொடுக்கவில்லையா? தேவன் தமது ஆள்தத்துவத்தை மனிதகுலத்திலிருந்து மறைக்கிறார் என்றாலும், அவர் தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதையும், அவருடைய ஜீவிதத்தையும் மனிதர்களுக்கு வழங்குகிறார். தேவனைப் பற்றிய மனிதகுலத்தின் அறிவு இப்போது இருப்பதாக மட்டும் இருக்கக் கூடாது. அதனால்தான், தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் என்ற தலைப்பைப் பற்றி உங்களுடன் மேலும் கலந்துரையாடுவது அவசியம் என்று நான் நினைக்கிறேன். தேவன் மனிதனுக்கு அளித்துள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகாலமாக கவனித்துக்கொண்டது மற்றும் கருத்தில் கொண்டது வீணாக முடிவடையாது என்பதோடு, மனிதர்கள் தங்கள் மீதான தேவனுடைய சித்தத்தை உண்மையாக புரிந்துகொண்டு கிரகித்துக்கொள்ள முடியும் என்பதே இதன் நோக்கமாகும். தேவனைப் பற்றிய அறிவில் ஜனங்கள் ஒரு புதிய கட்டத்திற்கு முன்னேற முடியும். அது ஜனங்களின் இருதயங்களில் தேவனை அவரது உண்மையான இடத்திற்குத் திரும்பச் செய்யும். அதாவது, அவருக்கு நீதியானதைச் செய்யும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 23

ஆதாமுக்கு தேவனுடைய கட்டளை

ஆதி. 2:15-17  மனுஷனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்த யோகோவா தேவன், அதனை அவன் உழுது பேணும்படி அவனை அங்கு விட்டு வைத்தார். யோகோவா தேவன் அம்மனுஷனிடம்: தோட்டத்திலிருக்கும் சகல விருட்சங்களின் கனிகளையும் நீ புசிக்கலாம்; நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்காதே, ஏனென்றால் நீ அதைப் புசிக்கும் நாளில் நிச்சயம் மரித்துப்போவாய் என்று கட்டளையிட்டார்.

இந்த வசனங்களிலிருந்து நீங்கள் எதை அறிந்துகொள்கின்றீர்கள்? வேதாகமத்தின் இந்தப் பகுதி உங்களை எவ்வாறு உணரச் செய்கிறது? ஆதாமுக்கு வழங்கப்பட்ட தேவனுடைய கட்டளை பற்றி பேச நான் ஏன் முடிவு செய்தேன்? உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இப்போது தேவன் மற்றும் ஆதாமின் உருவம் இருக்கிறதா? நீங்கள் கற்பனை செய்ய முயற்சி செய்யலாம்: அந்தக் காட்சியில் நீங்கள் ஒருவராக இருந்தால், உங்கள் ஆழ்மனதில், தேவன் எப்படிப்பட்டவர் என்று நீங்கள் நினைப்பீர்கள்? இதைப் பற்றி சிந்திப்பது உங்களை எவ்வாறு உணரச் செய்கிறது? அது அசைக்கக்கூடிய மற்றும் மனதைக் கவரக்கூடிய படமாகும். அதில் தேவனும் மனிதனும் மட்டுமே இருந்தாலும், அவர்களுக்கிடையேயான நெருக்கம் உங்களிடம் ரசனையின் உணர்வை நிரப்புகிறது: தேவனுடைய அதீத அன்பு மனிதனுக்குச் சுதந்திரமாக வழங்கப்பட்டு, மனிதனைச் சூழ்ந்துள்ளது. மனிதன் மாசற்றவனாக, பரிசுத்தமானவனாக, பாரமில்லாதவனாக, கவலையற்றவனாக, ஆனந்தமாக தேவனுடைய கண்ணின் கீழ் ஜீவிக்கிறான். தேவன் மனிதனுக்கு அக்கறை காட்டுகிறார். அதே நேரத்தில், மனிதன் தேவனுடைய பாதுகாப்பிலும் ஆசீர்வாதத்திலும் ஜீவிக்கிறான். மனிதன் செய்யும் மற்றும் சொல்லும் ஒவ்வொன்றும் தேவனிடமிருந்து பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டவை மற்றும் பிரிக்க முடியாதவையாகும்.

மனிதனை உருவாக்கியபின் தேவன் வழங்கிய முதல் கட்டளை என்று அதை அழைக்கலாம். இந்தக் கட்டளை எதைத் தெரிவிக்கிறது? அது தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் மனிதகுலத்திற்கான அவருடைய கவலைகளையும் தெரிவிக்கிறது. அது தேவனுடைய முதல் கட்டளையும் தேவன் மனிதனுக்கான கவலையை வெளிப்படுத்தும் முதல் முறையுமாகும். அதாவது, மனிதனைச் சிருஷ்டித்தத் தருணத்திலிருந்து தேவன் ஒரு பொறுப்பை உணர்ந்திருக்கிறார். அவருடைய பொறுப்பு என்னவாக இருக்கிறது? அவர் மனிதனைப் பாதுகாக்க வேண்டும். மனிதனைக் கவனிக்க வேண்டும். மனிதன் தன் வார்த்தைகளை நம்பி அதற்கு கீழ்ப்படிய முடியும் என்று அவர் நம்புகிறார். அது மனிதனிடமான தேவனுடைய முதல் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்புடன்தான் தேவன் பின்வருமாறு கூறுகிறார்: “தோட்டத்திலிருக்கும் சகல விருட்சங்களின் கனிகளையும் நீ புசிக்கலாம்; நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்காதே, ஏனென்றால் நீ அதைப் புசிக்கும் நாளில் நிச்சயம் மரித்துப்போவாய்.” இந்த எளிய வார்த்தைகள் தேவனுடைய சித்தத்தை குறிக்கின்றன. அவருடைய இருதயத்தில், தேவன் மனிதனுக்கு அக்கறை காட்டத் தொடங்கியுள்ளார் என்பதையும் அவை வெளிப்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆதாம் மட்டுமே தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான். தேவனுடைய ஜீவ சுவாசத்துடன் ஜீவித்தது ஆதாம் மட்டுமே. அவனால் தேவனுடன் நடக்க முடியும் மற்றும் தேவனுடன் உரையாட முடியும். அதனால்தான் தேவன் அவனுக்கு இந்தக் கட்டளையை வழங்கினார். மனிதனால் என்ன செய்ய முடியும், செய்ய முடியாது என்பதை தேவன் தம்முடைய கட்டளையில் மிகத் தெளிவாகக் கூறினார்.

இந்தச் சில எளிய வார்த்தைகளில், தேவனுடைய இருதயத்தைக் காண்கிறோம். ஆனால் எத்தகைய இருதயம் தன்னைத்தானே காட்டும்? தேவனுடைய இருதயத்தில் அன்பு இருக்கிறதா? அதில் அக்கறை இருக்கிறதா? இந்த வசனங்களில், தேவனுடைய அன்பையும் அக்கறையையும் கிரகிப்பது மட்டுமல்லாமல் அதனை நெருக்கமாக உணரவும் முடியும். நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? இதை நான் சொல்வதைக் கேட்டபின்னும் இவை சில சாதாரண வார்த்தைகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் மேலாக அவை அவ்வளவு எளிதானவை அல்ல அல்லவா? இதை நீங்கள் முன்பே அறிந்திருக்கிறீர்களா? இந்த சில வார்த்தைகளை தேவன் தனிப்பட்ட முறையில் உன்னிடம் சொன்னால், நீ எப்படி உணருவாய்? நீ ஒரு மனிதாபிமானமற்ற நபராக இருந்தால், உன் இருதயம் கடினமாக இருந்தால், நீ ஒரு விஷயத்தையும் உணர மாட்டாய், தேவனுடைய அன்பை நீ கிரகித்துக்கொள்ள மாட்டாய் மற்றும் தேவனுடைய இருதயத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும் மாட்டாய். ஆனால் மனச்சாட்சி மற்றும் மனிதத்தன்மையின் உணர்வைக் கொண்ட ஒரு நபராக நீ வித்தியாசமாக உணருவாய். நீ அரவணைப்பை உணருவாய், நீ கவனிப்பை உணருவாய், நேசிக்கப்படுவதை உணருவாய் மற்றும் நீ மகிழ்ச்சியை உணருவாய். அது சரியானதல்லவா? இவற்றை நீ உணரும்போது, தேவனை நோக்கி நீ எவ்வாறு செயல்படுவாய்? நீ தேவனுடன் இணைந்திருப்பதை உணருவாயா? உன் இருதயத்தின் அடியிலிருந்து தேவனை நேசிப்பாயா? உன் இருதயம் தேவனிடம் நெருக்கமாக வளருமா? தேவனுடைய அன்பு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து நீ காணலாம். ஆனால் அதைவிட முக்கியமானது என்னவென்றால், தேவனுடைய அன்பை மனிதன் கிரகித்துக்கொள்வதும் புரிந்துகொள்வதும் ஆகும். உண்மையில், தேவன் தமது கிரியையின் இந்தக் கட்டத்தில் இதைப் போன்ற பல விஷயங்களைச் சொல்லவில்லையா? தேவனுடைய இருதயத்தைக் கிரகித்துக்கொள்ளும் ஜனங்கள் இன்று இருக்கிறார்களா? நான் இப்போது பேசிய தேவனுடைய சித்தத்தை உங்களால் கிரகித்துக்கொள்ள முடியுமா? அது இவ்வளவு உறுதியாக, திடமாக மற்றும் உண்மையானதாக இருக்கும்போது தேவனுடைய சித்தத்தை நீ உண்மையில் கிரகித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் உங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மையான அறிவும் புரிதலும் இல்லை என்று நான் சொல்கிறேன். அது உண்மையல்லவா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 24

தேவன் ஏவாளைச் சிருஷ்டிக்கிறார்

ஆதி. 2:18-20  பின்னர் தேவனாகிய யேகோவா: மனுஷன் தனியாக இருப்பது நல்லதல்ல; அவனுக்கான ஒரு துணையை நான் உண்டாக்குவேன் என்றார். நிலத்திலிருந்து சகலவித மிருகங்களையும், ஆகாயத்திலிருந்து சகலவிதப் பறவைகளையும் தேவனாகிய யேகோவா உருவாக்கி; ஆதாம் அவற்றை என்ன சொல்லி அழைப்பான் என்று பார்க்க அவற்றை அவனிடம் கொண்டுவந்தார்; ஆதாம் ஒவ்வொரு ஜீவஜந்துவையும் என்ன சொல்லி அழைத்தானோ அதற்கு அதுவே பெயரானது. ஆதாம் சகலவிதக் கால்நடைகளுக்கும், ஆகாயத்தின் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பெயரிட்டான்; ஆனால் ஆதாமுக்கான துணை இன்னும் கிடைக்கப்படவில்லை.

ஆதி. 2:22-23  மனுஷனில் இருந்து எடுத்த விலா எலும்பை யேகோவா தேவன் மனுஷியாக உருவாக்கி, அதை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இது என் எலும்புக்கு எலும்பாகவும், மாம்சத்திற்கு மாம்சமாகவும் இருக்கிறது, இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி என்றழைக்கப்படுவாள் என்றான்.

வேதாகமத்தின் இந்தப் பகுதியில் ஒரு முக்கிய வரி உள்ளது: “ஆதாம் ஒவ்வொரு ஜீவஜந்துவையும் என்ன சொல்லி அழைத்தானோ அதற்கு அதுவே பெயரானது.” எனவே, அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் பெயர்களைக் கொடுத்தது யார்? பெயர் கொடுத்தது ஆதாம், தேவன் அல்ல. இந்த வரி மனிதகுலத்திற்கு ஓர் உண்மையைச் சொல்கிறது: தேவன் மனிதனைச் சிருஷ்டித்தபோது அவனுக்குப் புத்திசாலித்தனத்தைக் கொடுத்தார். அதாவது, மனிதனின் புத்திசாலித்தனம் தேவனிடமிருந்து வந்ததாகும். அது நிச்சயமானதாகும். ஆனால் ஏன்? தேவன் ஆதாமைச் சிருஷ்டித்த பிறகு, ஆதாம் பள்ளிக்குச் சென்றானா? அவனுக்குப் படிக்கத் தெரியுமா? தேவன் பல்வேறு உயிரினங்களை உருவாக்கிய பிறகு, ஆதாம் இந்த உயிரினங்கள் அனைத்தையும் அங்கீகரித்தானா? அவற்றின் பெயர்கள் என்ன என்று தேவன் அவனிடம் சொன்னாரா? நிச்சயமாக, இந்த உயிரினங்களின் பெயர்களை எவ்வாறு கொண்டு வர வேண்டும் என்பதை தேவன் அவனுக்குக் கற்பிக்கவில்லை. அதுவே உண்மையாகும்! அப்படியானால், இந்த உயிரினங்களுக்கு அவற்றின் பெயர்களை எப்படிக் கொடுக்க வேண்டும், எத்தகைய பெயர்களைக் கொடுக்க வேண்டும் என்று ஆதாமுக்கு எப்படித் தெரிந்தது? ஆதாமை சிருஷ்டித்தபோது தேவன் அவனிடம் எதைச் சேர்த்தார் என்ற கேள்வியுடன் அது தொடர்புடையது. தேவன் மனிதனைச் சிருஷ்டித்தபோது, அவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தை அவனிடம் சேர்த்தார் என்பதை உண்மைகள் நிரூபிக்கின்றன. அது ஒரு முக்கியமான விஷயமாகும். எனவே கவனமாகக் கேளுங்கள். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது: ஆதாம் இந்த உயிரினங்களுக்கு அவற்றின் பெயர்களைக் கொடுத்த பிறகு, இந்த பெயர்கள் தேவனுடைய சொற்களஞ்சியத்தில் ஒன்றாகின. இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன்? ஏனென்றால் இதுவும் தேவனுடைய மனநிலையை உள்ளடக்கியது. இதைப் பற்றி நான் மேலும் விளக்க வேண்டும்.

தேவன் மனிதனைச் சிருஷ்டித்தார், அவனுக்குள் ஜீவசுவாசத்தை ஊதினார் மற்றும் அவருடைய புத்திசாலித்தனம், அவருடைய திறமைகள் மற்றும் அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பவற்றைக் கொடுத்தார். தேவன் மனிதனுக்கு இந்த எல்லாவற்றையும் கொடுத்த பிறகு, மனிதனால் சில விஷயங்களைச் சுதந்திரமாகச் செய்ய முடிந்தது மற்றும் சொந்தமாக சிந்திக்க முடிந்தது. மனிதன் கொண்டு வருவதும் செய்வதும் தேவனுடைய பார்வையில் நல்லது என்றால், தேவன் அதை ஏற்றுக்கொள்கிறார் மற்றும் தலையிட மாட்டார். மனிதன் செய்வது சரியானது என்றால், தேவன் அதை நிற்க அனுமதிப்பார். ஆகவே, “ஆதாம் ஒவ்வொரு ஜீவஜந்துவையும் என்ன சொல்லி அழைத்தானோ அதற்கு அதுவே பெயரானது” என்றச் சொற்றொடர் எதைக் குறிக்கிறது? இந்தப் பல்வேறு உயிரினங்களுக்கு கொடுக்கப்பட்ட எந்தப் பெயரையும் மாற்றுவதற்கு தேவன் தகுதியற்றவர் என்று அது குறிக்கிறது. ஆதாம் ஒவ்வொரு ஜீவஜந்துவையும் என்ன சொல்லி அழைத்தானோ அந்தப் பெயரை உறுதிப்படுத்தும் வகையில் “அப்படியே” என்று தேவனும் கூறுவார். இந்த விஷயத்தில் தேவன் ஏதாவது கருத்தை வெளிப்படுத்தினாரா? இல்லை, அவர் நிச்சயமாக அவ்வாறு செய்யவில்லை. எனவே, இதிலிருந்து நீங்கள் எதைப் பெற்றுக்கொள்கிறீர்கள்? தேவன் மனிதனுக்குப் புத்திசாலித்தனத்தைக் கொடுத்தார். மனிதன் தன் தேவனால் கொடுக்கப்பட்ட புத்திசாலித்தனத்தால் காரியங்களைச் செய்தான். மனிதன் செய்வது தேவனுடைய பார்வையில் நேர்மறையானதாக இருந்தால், அது எந்தவொரு நியாயத்தீர்ப்பும் விமர்சனமும் இல்லாமல் தேவனால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்படுகிறது. அது எந்தவொரு மனிதனோ அல்லது தீய ஆவியோ அல்லது சாத்தானோ செய்ய முடியாத ஒன்றாகும். தேவனுடைய மனநிலையின் வெளிப்பாட்டை இங்கே காண்கிறீர்களா? ஒரு மனிதனோ, சீர்கெட்டவனோ, சாத்தானோ வேறு எவரையேனும் தங்கள் பெயரில் ஏதாவது செய்ய அனுமதிப்பார்களா? நிச்சயமாக இல்லை! அவர்களிடமிருந்து வேறுபடும் அந்த மனிதனுடனோ வேறு பெலத்துடனோ இந்த நிலைக்காக அவர்கள் எதிர்த்துப் போராடுவார்களா? நிச்சயமாக அவர்கள் போராடுவார்கள்! அது ஒரு சீர்கேடு நிறைந்த மனிதனாகவோ அந்த நேரத்தில் ஆதாமுடன் இருந்த சாத்தானாகவோ இருந்திருந்தால், ஆதாம் என்ன செய்கிறானோ அதை அவர்கள் நிச்சயமாக நிராகரித்திருப்பார்கள். சுதந்திரமாகச் சிந்திக்கும் திறனும், அவற்றின் தனித்துவமான நுண்ணறிவுகளும் இருப்பதை நிரூபிக்க, ஆதாம் செய்த அனைத்தையும் அவர்கள் முற்றிலுமாக மறுத்திருப்பார்கள்: “இதை நீ இவ்வாறு அழைக்க விரும்புகிறாயா? சரி, நான் இதை இவ்வாறு அழைக்கப் போவதில்லை, அதை நான் அவ்வாறு அழைக்கப் போகிறேன். நீ அதை டாம் என்று அழைத்தாய். ஆனால் நான் அதை ஹாரி என்று அழைக்கப் போகிறேன். நான் எவ்வளவு புத்திசாலி என்பதை நான் காட்ட வேண்டும்.” அது எத்தகைய இயல்பு? அது பெருமளவில் ஆணவம் அல்லவா? தேவன் அதை என்னவென்று கருதுகிறார்? அவருக்கு அத்தகைய மனநிலை இருக்கிறதா? ஆதாம் என்ன செய்தான் என்பதில் தேவனுக்கு ஏதேனும் அசாதாரண ஆட்சேபனைகள் இருந்ததா? அதன் பதில் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை! தேவன் வெளிப்படுத்தும் மனநிலையில், வாக்குவாதம், ஆணவம் அல்லது சுயநீதி பற்றிய சிறிதளவு குறிப்பும் இல்லை. அது இங்கே தெளிவாக உள்ளது. அது ஒரு சிறிய புள்ளியாகத் தோன்றலாம், ஆனால் நீ தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், தேவன் எவ்வாறு செயல்படுகிறார், தேவனுடைய மனநிலை என்ன என்பதைக் கண்டுபிடிக்க உன் இருதயம் முயற்சிசெய்யவில்லை என்றால், நீ தேவனுடைய மனநிலையை அறிய மாட்டாய் அல்லது தேவனுடைய மனநிலையின் வார்த்தையையும் வெளிப்பாட்டையும் காண மாட்டாய். அது அப்படியல்லவா? நான் உங்களுக்கு விளக்கியதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? ஆதாமின் செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, “நீ நன்றாகச் செய்தாய், நீ சரியாகச் செய்தாய், நான் ஒத்துக்கொள்கிறேன்!” என்று தேவன் பெருமையுடன் அறிவிக்கவில்லை. ஆயினும் தன் இருதயத்தில், ஆதாம் செய்ததை தேவன் ஏற்றுக்கொண்டார், பாராட்டினார், போற்றினார். மனிதன் தேவனுடைய அறிவுறுத்தலின் பேரில் சிருஷ்டிப்பு தொடங்கி அவருக்காகச் செய்த முதல் காரியம் இதுதான். அது தேவனுக்குப் பதிலாக தேவனுடைய சார்பாக மனிதன் செய்த ஒன்றாகும். தேவனுடைய பார்வையில், இது மனிதனுக்கு அவர் அளித்த புத்திசாலித்தனத்திலிருந்து எழுந்ததாகும். தேவன் அதை ஒரு நல்ல விஷயம் என்றும், ஒரு நேர்மறையான விஷயம் என்றும் பார்த்தார். அந்த நேரத்தில் ஆதாம் செய்தது மனிதனில் காணப்பட்ட தேவனுடைய புத்திசாலித்தனத்தின் முதல் வெளிப்பாடாகும். தேவனுடைய பார்வையில் அது ஒரு சிறந்த வெளிப்பாடாகும். நான் இங்கே உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், மனிதகுலம் அவரை வெளிப்படுத்தும் ஜீவனுள்ள சிருஷ்டியாக இருக்க முடியும் என்பதற்காக மனிதனுக்கு தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதையும், அவருடைய புத்திசாலித்தனத்தையும் வழங்கியதில் தேவனுடைய நோக்கம் இருந்தது. குறிப்பாக, அத்தகைய ஒரு ஜீவன் அவர் சார்பாக செயல்படுவதையே தேவன் பார்க்க ஆவலாக இருந்திருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 25

தேவன் ஆதாம் மற்றும் ஏவாளுக்குத் தோலாடைகளை உருவாக்குகிறார்

ஆதி. 3:20-21  அவள் ஜீவனுள்ள அனைவருக்கும் தாயாக இருந்ததால், ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். யேகோவா தேவன், ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோலாடைகளை உருவாக்கி அவர்களுக்கு அணிவித்தார்.

“யேகோவா தேவன், ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோலாடைகளை உருவாக்கி அவர்களுக்கு அணிவித்தார்.” இந்தக் காட்சியில், ஆதாம் மற்றும் ஏவாளுடன் இருக்கும்போது எத்தகைய பாத்திரத்தை தேவன் ஏற்றுக்கொள்கிறார் என்பதாக நாம் காண்கிறோம்? இரண்டு மனிதர்கள் மட்டுமே உள்ள இந்த உலகில் தேவன் எவ்வாறு தன்னை வெளிப்படுத்துகிறார்? தேவனுடைய பாத்திரத்தில் அவர் தன்னை வெளிப்படுத்துகிறாரா? ஹாங்காங்கைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே, தயவுசெய்து பதிலளியுங்கள். (பெற்றோரின் பாத்திரம்.) தென் கொரியாவைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே, தேவன் எத்தகைய பாத்திரமாகத் தோன்றுகிறார் என்று நினைக்கிறீர்கள்? (குடும்பத் தலைவர்.) தைவானைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (ஆதாம் மற்றும் ஏவாளின் குடும்பத்தில் ஒருவரின் பங்கு, ஒரு குடும்ப உறுப்பினரின் பங்கு.) உங்களில் சிலர் தேவன் ஆதாம் மற்றும் ஏவாளின் குடும்ப உறுப்பினராகத் தோன்றுகிறார் என்று நினைக்கிறீர்கள். சிலர் தேவன் குடும்பத் தலைவராகத் தோன்றுகிறார் என்றும் மற்றவர்கள் ஒரு பெற்றோராக தோன்றுகிறார் என்றும் நினைக்கிறீர்கள். இவை அனைத்தும் மிகவும் பொருத்தமானவையாகும். ஆனால் நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் இந்த இருவரையும் சிருஷ்டித்து அவர்களைத் தனது நண்பர்களாகக் கருதினார். அவர்களுடைய ஒரே குடும்பமாக, தேவன் அவர்களுடைய ஜீவிதத்தைக் கவனித்து, அவர்களுடைய உணவு, உடை மற்றும் தங்குமிடம் ஆகிய தேவைகளை கவனித்துக்கொண்டார். இங்கே, தேவன் ஆதாம் மற்றும் ஏவாளின் பெற்றோராகத் தோன்றுகிறார். தேவன் இதைச் செய்யும்போது, தேவன் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை மனிதன் காணவில்லை. தேவனுடைய மேலாதிக்கத்தையும், அவருடைய மறைபொருளையும், குறிப்பாக அவருடைய கோபத்தையும் மாட்சிமையையும் அவன் காணவில்லை. அவன் பார்ப்பது எல்லாம் தேவனுடைய பணிவு, அவருடைய பாசம், மனிதன் மீதான அக்கறை மற்றும் அவரின் பொறுப்பு மற்றும் கவனம் ஆகும். ஆதாம் மற்றும் ஏவாளை தேவன் நடத்திய விதம் மற்றும் வழியானது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அக்கறை காட்டுவதைப் போன்றதாகும். அது பெற்றோர்கள் தங்கள் சொந்த மகன்களையும் மகள்களையும் நேசிப்பது, கவனிப்பது மற்றும் அக்கறை கொள்வது போன்றதாகும். அது உண்மையான, புலப்படும் மற்றும் உறுதியான காரியமாகும். தன்னை ஓர் உயர்ந்த மற்றும் வலிமைமிக்க நிலைக்கு உயர்த்துவதற்குப் பதிலாக, தேவன் தனிப்பட்ட முறையில் மனிதனுக்கு ஆடை தயாரிக்க தோல்களைப் பயன்படுத்தினார். இந்த கம்பளி ஆடை அவர்களுடைய தாழ்மையை மறைக்க அல்லது அவர்களைக் குளிரில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தப்பட்டதா என்பது முக்கியமல்ல. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மனிதனின் சரீரத்தை மறைப்பதற்காக தேவனால் தனிப்பட்ட முறையில் இந்த ஆடை அவருடைய கரங்களால் செய்யப்பட்டது. வெறுமனே ஆடைகள் இருப்பதைப் பற்றி யோசிப்பதை விட அல்லது வேறு சில அதிசயமான வழிகளைப் பயன்படுத்துவதை விட, தேவன் இதைச் செய்வார் என்று ஜனங்கள் நினைக்கும் காரியத்தைச் செய்வதை விட, தேவன் செய்ய மாட்டார், செய்யக்கூடாது என்று மனிதன் நினைக்கும் காரியத்தை தேவன் சரியாகச் செய்தார். அது ஓர் அற்பமான விஷயமாகத் தோன்றலாம்—சிலர் அதைக் குறிப்பிடுவது மதிப்பாக இருக்கும் என்று கூட நினைக்க மாட்டார்கள்—ஆனால் தேவனைப் பற்றிய தெளிவற்ற கருத்தாக்கங்களால் சூழப்பட்டுள்ள தேவனைப் பின்பற்றும் ஒருவர், தேவனுடைய உண்மையான தன்மை மற்றும் கனத்தைப் பற்றிய நுண்ணறிவைப் பெறவும், அவருடைய உண்மையையும், பணிவையும் பார்க்கவும் செய்கிறது. தேவனுடைய உண்மையான தன்மை மற்றும் தாழ்மை ஆகியவற்றின் முகத்தில் தாங்கள் உயர்ந்தவர்கள், வலிமை மிக்கவர்கள் என்று நினைக்கும் திமிர்பிடித்தவர்களை அது வெட்கப்பட வைக்கிறது. இங்கே, தேவனுடைய உண்மையான தன்மையும் தாழ்மையும் அவர் எவ்வளவு அன்பானவர் என்பதைக் காண ஜனங்களுக்கு உதவுகிறது. இதற்கு நேர்மாறாக, “மகத்தான” தேவன், “அன்பான” தேவன் மற்றும் “சர்வவல்லமையுள்ள” தேவன் என்று ஜனங்கள் தங்கள் இருதயங்களில் தேவனை வைத்திருக்கிறார்கள் என்பது அற்பமாகவும் அசிங்கமாகவும் மாறிவிட்டது மற்றும் தொட்டவுடன் நொறுங்குமளவில் மாறிவிட்டது. இந்த வசனத்தைப் பார்க்கும்போது, இந்தக் கதையைக் கேட்கும்போது, தேவன் அப்படிச் செய்தார் என்பதற்காக நீ அவரை அவமதிக்கிறாயா? சிலர் அவமதிக்கலாம், ஆனால் மற்றவர்கள் அதற்கு எதிராக செயல்படுவார்கள். தேவன் உண்மையானவர், அன்பானவர் என்று அவர்கள் நினைப்பார்கள். துல்லியமாக தேவனுடைய உண்மையான தன்மையும் அருமையான தன்மையும் அவர்களை அசையச் செய்யும். தேவனுடைய உண்மையான பக்கத்தை அவர்கள் எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக தேவனுடைய அன்பின் உண்மையான இருப்பையும், அவர்களுடைய இருதயங்களில் தேவனுடைய முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு கணத்திலும் அவர் அவர்களுக்கு அருகில் எப்படி நிற்கிறார் என்பதையும் அவர்கள் கிரகித்துக்கொள்ளலாம்.

இப்போது, எங்கள் விவாதத்தை நிகழ்காலத்துடன் தொடர்புப்படுத்துவோம். ஆரம்பத்தில் தாம் சிருஷ்டித்த ஜனங்களுக்காக தேவன் இந்தப் பல்வேறு சிறிய விஷயங்களைச் செய்ய முடிந்திருந்தால், இன்று, ஜனங்கள் ஒருபோதும் சிந்திக்கவோ எதிர்பார்க்கவோ கூடாத விஷயங்களை, தேவன் ஜனங்களுக்கு இப்படிச் செய்ய முடியுமா? சிலர், “ஆம்!” அது ஏன்? என்பார்கள். ஏனென்றால், தேவனுடைய சாராம்சம் வடிவமைக்கப்படவில்லை. அவருடைய அருமையான தன்மை வடிவமைக்கப்படவில்லை. தேவனுடைய சாராம்சம் உண்மையிலேயே உள்ளது. அது மற்றவர்களால் சேர்க்கப்பட்ட ஒன்றல்ல. நிச்சயமாக அது வெவ்வேறு நேரங்கள், இடங்கள் மற்றும் காலங்களுடன் மாறுபடும் ஒன்று அல்ல. குறிப்பிட முடியாதது மற்றும் அற்பமானது என்று ஜனங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்வதன் மூலம் மட்டுமே தேவனுடைய உண்மையான தன்மையையும் அருமையான தன்மையையும் உண்மையிலேயே வெளிப்படுத்த முடியும் என்பது மிகவும் அற்பமான ஒன்றாகும். அவர் அதைச் செய்வார் என்று ஜனங்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். தேவன் பகட்டானவர் அல்ல. அவருடைய மனநிலையிலும் சாராம்சத்திலும் மிகைப்படுத்தல், மாறுவேடம், பெருமை, ஆணவம் என இவை எதுவும் இல்லை. அவர் ஒருபோதும் பெருமை பேசுவதில்லை. மாறாக தாம் உருவாக்கிய மனிதர்களை நேசிக்கிறார், அவர்களிடம் அக்கறை காட்டுகிறார், அவர்களை உண்மையுடனும் நேர்மையுடனும் கவனித்துக்கொள்கிறார், மற்றும் வழிநடத்துகிறார். தேவன் என்ன செய்கிறார் என்பதை ஜனங்கள் எவ்வளவு குறைவாக பாராட்டினாலும், உணர்ந்தாலும், பார்த்தாலும், அவர் நிச்சயமாக அதைச் செய்து கொண்டிருக்கிறார். தேவனுக்கு அத்தகைய சாராம்சம் இருப்பதை ஜனங்கள் அறிந்துகொள்வது, அவர்மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பை பாதிக்குமா? அது தேவனுக்கான அவர்களுடைய பயத்தைப் பாதிக்குமா? தேவனுடைய உண்மையான பக்கத்தை நீ புரிந்துகொள்ளும்போது, நீ அவருடன் இன்னும் நெருக்கமாக வளருவாய் மற்றும் மனிதகுலத்தின் மீதான அவருடைய அன்பையும் அக்கறையையும் இன்னும் உண்மையாக உன்னால் கிரகித்துக்கொள்ள முடியும். அதேபோல் உன் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கவும், அவரைப் பற்றிய ஐய உணர்வு மற்றும் சந்தேகங்களிலிருந்து உன்னால் விடுபடவும் முடியும் என்று நான் நம்புகிறேன். தேவன் அமைதியாக மனிதனுக்காக எல்லாவற்றையும் செய்கிறார். அதையெல்லாம் தனது நேர்மையுடனும், உண்மையுடனும், அன்புடனும் அமைதியாகச் செய்கிறார். ஆனால் அவர் செய்யும் எந்தவொரு காரியத்திலும் அவருக்கு ஒருபோதும் எந்த பயமும் வருத்தமும் இல்லை. எந்த வகையிலும் அவருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என யாரையும் அவர் எதிர்பார்க்கவில்லை அல்லது மனிதகுலத்திடமிருந்து எதையும் பெறுவதற்கான நோக்கங்களை அவர் கொண்டிருக்கவில்லை. அவர் மனிதகுலத்தின் உண்மையான விசுவாசத்தையும் அன்பையும் பெற முடியும் என்பதே அவர் இதுவரை செய்த எல்லாவற்றின் ஒரே நோக்கமாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 26

தேவன் ஜலப்பிரளயத்தால் உலகை அழிக்கச் சித்தம் கொள்வதால் ஒரு பேழையை உருவாக்க நோவாவுக்கு அறிவுறுத்துகிறார்

ஆதி. 6:9-14  நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான். பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன். நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு.

ஆதி. 6:18-22  ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள். சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது. உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள். நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

இப்போது இந்த இரண்டு பத்திகளைப் படித்த பிறகு நோவா யார் என்பதைப் பற்றி உங்களுக்கு பொதுவான புரிதல் இருக்கிறதா? நோவா எப்படிப்பட்டவன்? ஆதாரமான வசனம் சொல்கிறது: “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்.” நவீன ஜனங்களின் புரிதலின் படி, அந்த நாட்களில் “ஒரு நீதிமான்” எப்படிப்பட்டவர்? நீதிமான் ஒரு பரிபூரணமான மனிதனாக இருக்க வேண்டும். இந்தப் பரிபூரணமான மனிதன், மனிதனுடைய பார்வையில் அல்லது தேவனுடைய பார்வையில் பரிபூரணமாக இருக்கிறானா இல்லையா என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்தப் பரிபூரணமான மனிதன் தேவனுடைய பார்வையில் ஒரு பரிபூரணமான மனிதனாக இருந்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மனிதனுடைய பார்வையில் பரிபூரணமாக இருக்கவில்லை. அது உண்மையாகும்! ஏனென்றால், மனிதன் குருடனாக இருக்கிறான். அவனால் பார்க்க முடியாது. தேவன் மட்டுமே முழு பூமியையும் ஒவ்வொரு மனிதனையும் பார்க்கிறார். நோவா ஒரு பரிபூரணமான மனிதன் என்பதை தேவன் மட்டுமே அறிந்திருந்தார். ஆகையால், உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழிக்க வேண்டும் என்ற தேவனுடைய திட்டம் நோவாவை அழைத்தபோதே தொடங்கிவிட்டது.

…………

நோவா அழைக்கப்பட்டான் என்பது ஓர் எளிய உண்மையாக இருக்கிறது. ஆனால் நாம் பேசும் முக்கிய காரியங்களாகிய தேவனுடைய மனநிலை, அவருடைய சித்தம் மற்றும் இந்தப் பதிவில் அவரது சாராம்சம் ஆகியவை அவ்வளவு எளிதானவை அல்ல. தேவனுடைய இந்தப் பல்வேறு வகையான அம்சங்களைப் புரிந்து கொள்ள, தேவன் எத்தகைய நபரை அழைக்க விரும்புகிறார் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அவருடைய மனநிலை, விருப்பம் மற்றும் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அது முக்கியமானது ஆகும். இந்நிலையில், தேவனுடைய பார்வையில், அவர் எத்தகைய நபரை அழைக்கிறார்? அந்த மனிதன் அவருடைய வார்த்தைகளைக் கேட்கக்கூடிய மற்றும் அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றக்கூடிய ஒரு மனிதனாக இருக்க வேண்டும். அதே சமயம், அந்த மனிதன் ஒரு பொறுப்புணர்வு கொண்ட நபராகவும் இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மற்றும் கடமையாகக் கருதி அதை நிறைவேற்றும் ஒருவராக இருக்க வேண்டும். இந்த மனிதன் தேவனை அறிந்த ஒருவனாக இருக்க வேண்டுமா? இல்லை. அந்த நேரத்தில், நோவா தேவனுடைய போதனைகளை அதிகமாக கேட்டதில்லை அல்லது தேவனுடைய எந்த கிரியையும் அனுபவித்ததில்லை. ஆகவே, நோவாவுக்கு தேவனைப் பற்றிய அறிவு மிகக் குறைவாகவே இருந்தது. நோவா தேவனுடன் நடந்தான் என்று இங்கே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவன் எப்போதாவது தேவனுடைய ஆள்தத்துவத்தைப் பார்த்தானா? நிச்சயமாக பதில் இல்லை என்பதே ஆகும்! ஏனென்றால், அந்த நாட்களில், தேவனுடைய தூதர்கள் மட்டுமே ஜனங்கள் மத்தியில் வந்தார்கள். விஷயங்களைச் சொல்வதிலும் செய்வதிலும் அவர்கள் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றாலும், அவர்கள் தேவனுடைய சித்தத்தையும் அவருடைய நோக்கங்களையும் மட்டுமே வெளிப்படுத்தினர். தேவனுடைய ஆள்தத்துவம் மனிதனுக்கு நேரடியாக வெளிப்படுத்தப்படவில்லை. வேதாகமப் புத்தகங்களின் இந்தப் பகுதியில், அடிப்படையாக, நோவா என்ன செய்ய வேண்டும், அவனுக்கு தேவனுடைய அறிவுறுத்தல்கள் என்ன என்பதை நாம் காண்கிறோம். எனவே, இங்கே தேவன் வெளிப்படுத்திய சாராம்சம் என்னவாக இருந்தது? தேவன் செய்யும் அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளன. ஒரு விஷயமோ சூழ்நிலையோ ஏற்படுவதை தேவன் காணும்போது, அதை அளவிட ஒரு தரநிலை அவருடைய பார்வையில் இருக்கிறது மற்றும் அதைக் கையாள அவர் ஒரு திட்டத்தைத் தொடங்குகிறாரா இல்லையா என்பதையும் அல்லது இந்த விஷயத்தையோ சூழ்நிலையையோ கையாள்வதில் எத்தகைய மனநிலை எடுக்க வேண்டும் என்பதையும் இந்தத் தரநிலை தீர்மானிக்கிறது. அவர் அலட்சியமாகவோ எல்லாவற்றையும் பற்றிய உணர்வுகள் இல்லாதவராகவோ இல்லை. அது உண்மையில் முற்றிலுமாக எதிர்மாறானதாகும். தேவன் நோவாவிடம் சொன்னதைக் குறிப்பிடும் ஒரு வசனம் இங்கே இருக்கிறது: “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.” தேவன் இதைச் சொன்னபோது, அவர் மனிதர்களை மட்டுமே அழிக்கிறார் என்று அர்த்தமாகியதா? இல்லை! தேவன் மாம்சத்தின் அனைத்து ஜீவன்களையும் அழிக்கப் போவதாகக் கூறினார். தேவன் ஏன் அழிவை விரும்பினார்? தேவனுடைய மனநிலையின் மற்றொரு வெளிப்பாடு இங்கே இருக்கிறது. தேவனுடைய பார்வையில், மனிதனுடைய சீர்கேடு, பொறுமை, வன்முறை மற்றும் எல்லா மாம்சத்தின் கீழ்ப்படியாமை ஆகியவற்றிற்கும் அவர் பொறுமையாக இருப்பதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது. அவருடைய வரம்பு என்னவாக இருக்கிறது? தேவன் சொன்னது போலவே: “தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.” “மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்” என்ற சொற்றொடரின் அர்த்தம் என்னவாக இருக்கிறது? தேவனைப் பின்பற்றியவர்கள், தேவனுடைய நாமத்தைக் கூப்பிட்டவர்கள், ஒரு முறை தேவனுக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தியவர்கள், தேவனை வாய்மொழியால் ஏற்றுக்கொண்டவர்கள் மற்றும் தேவனைப் புகழ்ந்தவர்களும் என அவர்களுடைய நடத்தை கேட்டினால் நிறைந்தவுடன், அவை தேவனுடைய கண்களுக்கு எதிர்பட்டவுடன், அவர் அவர்களை அழித்திருக்க வேண்டும். அது தேவனுடைய வரம்பாகும். ஆகவே, மனிதனுடைய மற்றும் எல்லா மாம்சத்தினுடைய கேட்டையும் தேவன் எதுவரையிலும் பொறுத்துக்கொள்வார்? தேவனைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அவிசுவாசிகளாக இருந்தாலும், எல்லா ஜனங்களும் அந்த அளவிற்கு சரியான பாதையில் நடந்ததில்லை. உலகம் தேவனால் ஆளப்படுகிறது என்றும், தேவன் ஜனங்களை வெளிச்சத்திலும் சரியான பாதையிலும் கொண்டு வர முடியும் என்றும் நம்பிய ஒவ்வொருவரும் ஒருபுறம் இருக்க, மனிதன் தார்மீக ரீதியாக சீர்கேடு நிறைந்தவனாகவும், தீமை நிறைந்தவனாகவும் இருந்ததோடு அல்லாமல், தேவன் இருப்பதை நம்பும் ஒருவர் கூட இல்லாத நிலையும் அவனிடத்தில் இருந்தது. மனிதன் தேவன் இருப்பதை வெறுக்கிறான். தேவன் இருப்பதை அவன் அனுமதிக்கவில்லை. மனிதனுடைய சீர்கேடு இந்த நிலையை அடைந்த பிறகு தேவனால் அதைத் தாங்க முடியாது. அதனை மாற்றுவது என்னவாக இருக்கும்? தேவனுடைய கோபம் மற்றும் தேவனுடைய சிட்சை ஆகியனவாகும். அது தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதி வெளிப்பாடாய் இருந்தது அல்லவா? இந்த தற்போதைய காலத்தில், தேவனுடைய பார்வையில் நீதிமான்கள் எவரும் இல்லையா? தேவனுடைய பார்வையில் பரிபூரணமான மனிதர்கள் எவரும் இல்லையா? இந்தக் காலத்தில், பூமியில் உள்ள அனைத்து மாம்சங்களின் நடத்தையும் தேவனுடைய பார்வையில் கேடாக இருக்கிறதா? இந்த நாளிலும், காலத்திலும், தேவன் பரிபூரணமாக்க விரும்புபவர்கள் மற்றும் தேவனைப் பின்பற்றி அவருடைய இரட்சிப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் தவிர மற்ற எல்லா மனிதர்களும் தேவனுடைய பொறுமையின் வரம்பை சோதிக்கவில்லையா? உங்கள் கண்களால் நீங்கள் பார்ப்பது மற்றும் உங்கள் காதுகளால் கேட்பது, இந்த உலகில் ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பது என உங்களுக்கு அருகில் நடக்கும் அனைத்தும் வன்முறை நிறைந்திருக்கிறது அல்லவா? தேவனுடைய பார்வையில், அத்தகைய உலகம், அத்தகைய காலம், முடிவுக்கு வர வேண்டாமா? தற்போதைய காலத்தின் பின்னணி நோவாவின் காலத்தின் பின்னணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றாலும், மனிதனுடைய சீர்கேடு குறித்த தேவனுடைய உணர்வுகளும் கோபமும் அப்படியே இருக்கின்றன. தேவன் தனது கிரியையின் காரணமாக பொறுமையாக இருக்க முடிகிறது என்றாலும் சூழ்நிலைகள் மற்றும் நிலைமைகளின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, தேவனுடைய பார்வையில் இந்த உலகம் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜலப்பிரளயத்தால் உலகம் அழிக்கப்பட்டபோது இருந்த சூழ்நிலைகள் மிகக் கடுமையானதாகும். ஆனால் வித்தியாசம் என்னவாக இருக்கிறது? அதுவும் தேவனுடைய இருதயத்தை அதிகமாக வருத்தப்படுத்தக்கூடிய விஷயமாகும். ஒருவேளை உங்களில் எவராலும் கிரகிக்க முடியாத ஒன்றாகவும் இருக்கலாம்.

அவர் ஜலப்பிரளயத்தால் உலகை அழித்தபோது, ஒரு பேழையைக் கட்டவும், சில ஆயத்தங்களைச் செய்யவும் தேவனால் நோவாவை அழைக்க முடிந்தது. இந்த தொடர்ச்சியான விஷயங்களை அவருக்காகச் செய்ய ஒரு மனிதனை அதாவது நோவாவை தேவனால் அழைக்க முடிந்தது. ஆனால் இந்தத் தற்போதைய காலத்தில், தேவன் யாரையும் அழைக்கவில்லை. அது ஏன்? இங்கே உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு நபரும் காரணத்தை நன்கு புரிந்திருக்கலாம் மற்றும் அறிந்திருக்கலாம். அதைச் சொல்ல நான் உங்களுக்கு தேவைப்படுகின்றேனா? வெளிப்படையாகச் சொல்வது உங்கள் அனைவரையும் மதிப்பிழக்கச் செய்யலாம் மற்றும் வருத்தப்படுத்தலாம். சிலர் இவ்வாறு கூறலாம்: “நாங்கள் நீதிமான்கள் அல்ல, தேவனுடைய பார்வையில் நாங்கள் பரிபூரணமான மனிதர்கள் அல்ல என்றாலும், எதையேனும் செய்யும்படி தேவன் எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தால், அதைச் செய்ய நாங்கள் இன்னும் திறமையாக இருந்திருப்போம். இதற்கு முன்னர், ஒரு பேரழிவு வந்து கொண்டிருந்தது என்று அவர் சொன்னபோது, ஆகாரம் மற்றும் அந்த பேரழிவில் தேவைப்படும் பொருட்களை நாங்கள் ஆயத்தம் செய்தோம். இவை அனைத்தும் தேவனுடைய கோரிக்கைகளுக்கு ஏற்ப செய்யப்படவில்லையா? தேவனுடைய கிரியைக்கு நாங்கள் உண்மையில் ஒத்துழைக்கவில்லையா? நாங்கள் செய்த இந்த விஷயங்களுடன் நோவா செய்ததை ஒப்பிட முடியவில்லையா? நாங்கள் செய்தது உண்மையான கீழ்ப்படிதலில்லையா? தேவனுடைய அறிவுறுத்தல்களை நாங்கள் பின்பற்றவில்லையா? தேவனுடைய வார்த்தைகளில் நம்பிக்கை இருப்பதால் தேவன் சொன்னதை நாங்கள் செய்யவில்லையா? தேவன் ஏன் இன்னும் சோகமாக இருக்கிறார்? தம்மைச் சந்திக்க எவரும் இல்லை என்று தேவன் ஏன் கூறுகிறார்?” உங்கள் கிரியைகளுக்கும் நோவாவின் கிரியைகளுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? எத்தகைய வேறுபாடு இருக்கிறது? (பேரழிவுக்காக இன்று ஆகாரத்தைத் ஆயத்தம் செய்து கொண்டிருப்பது எங்கள் சொந்த நோக்கமாக இருந்தது.) (எங்கள் கிரியைகள் “நீதியுள்ளவையாக” இருக்க முடியாது. அதேசமயம் நோவா, தேவனுடைய பார்வையில் ஒரு நீதிமானாக இருந்தான்.) நீங்கள் சொன்னது வெகு தொலைவில் இல்லை. ஜனங்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதற்கு நோவா செய்தது கணிசமாக வேறுபட்டிருக்கிறது. தேவன் அறிவுறுத்தியபடி நோவா செய்தபோது, தேவனுடைய நோக்கங்கள் என்னவென்று அவனுக்குத் தெரியாமல் இருந்தது. தேவன் எதைச் சாதிக்க விரும்புகிறார் என்பது அவனுக்குத் தெரியாமல் இருந்தது. தேவன் அவனுக்கு அதிக விளக்கம் இல்லாமல், ஒரு கட்டளையை மட்டுமே கொடுத்து, எதையேனும் செய்யும்படி அவனுக்கு அறிவுறுத்தியிருந்தார். நோவா முன்வந்து அதைச் செய்தான். அவன் தேவனுடைய நோக்கங்களை ரகசியமாகக் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை, தேவனை எதிர்க்கவில்லை அல்லது நேர்மையற்ற தன்மையைக் காட்டவில்லை. நோவா சென்று, பரிசுத்தமான எளிய இருதயத்துடன் அதை அப்படியே செய்தான். தேவன் எதைச் செய்யச் சொன்னாலும், நோவா அதைச் செய்தான். அவன் செய்த காரியத்தில் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதும் அதற்குச் செவிகொடுப்பதும் அவருடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. அவ்வாறு தேவன் ஒப்படைத்ததை அவன் நேர்மையாகவும் எளிமையாகவும் கையாண்டான். அவனுடைய கிரியைகளின் சாராம்சம் கீழ்ப்படிதல், இரண்டாவது சிந்தனை அல்ல, எதிர்ப்பல்ல, மேலும், தனது சொந்த நலன்களைப் பற்றியோ அவனது லாபங்கள் மற்றும் இழப்புகளைப் பற்றியோ சிந்திப்பதும் அல்ல—இவை அவனது சாராம்சமாகும். மேலும், ஜலப்பிரளயத்தால் உலகை அழிப்பேன் என்று தேவன் சொன்னபோது, நோவா எப்போது அல்லது என்னவாகிவிடும் என்று கேட்கவில்லை மற்றும் எப்படி உலகை அழிக்கப் போகிறார் என்று தேவனிடம் கேட்கவில்லை. தேவன் அறிவுறுத்தியபடி அவன் செய்தான். எவ்வாறாயினும், தேவன் அது செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். தேவன் கேட்டபடியே அவன் செய்தான் மற்றும் நடவடிக்கைகளை உடனடியாகவும் தொடங்கினான். தேவனைத் திருப்திப்படுத்த விரும்பும் மனநிலையுடன் தேவனுடைய அறிவுறுத்தல்களின்படி அவன் செயல்பட்டான். தான் பேரழிவைத் தவிர்க்க இது உதவும் என அவன் இதைச் செய்தானா? இல்லை. உலகம் அழிக்கப்படுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று அவன் தேவனிடம் கேட்டானா? அவர் அவ்வாறு செய்யவில்லை. பேழையைக் கட்ட எவ்வளவு காலம் ஆகும் என்று அவன் தேவனிடம் கேட்டானா அல்லது அவன் அறிந்திருந்தானா? அவனுக்கு அதுவும் தெரியாமல் இருந்தது. அவன் வெறுமனே கீழ்ப்படிந்தான், கவனித்தான் மற்றும் அதன்படி செயல்பட்டான். இப்போது ஜனங்கள் அதைப் போன்று இல்லை: தேவனுடைய வார்த்தையின் மூலம் ஒரு சிறிய தகவல் கசிந்தவுடன், காற்றில் இலைகளின் சலசலப்பை ஜனங்கள் உணர்ந்தவுடன், எதுவாக இருந்தாலும் சரி என்றும், விலையைப் பொருட்படுத்தாமலும், அவர்கள் எதைப் புசிப்பார்கள், குடிப்பார்கள் மற்றும் அதன் பிறகு எதைப் பயன்படுத்துவார்கள் என்பதைக் குறித்தும் பேரழிவு ஏற்படும் போது தப்பிக்கும் வழிகளைத் திட்டமிடுவதைக் குறித்தும் அவர்கள் விரைவாக செயல்படுகின்றனர். இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த முக்கிய தருணத்தில், மனித மூளை “வேலையை முடிப்பதில்” மிகச் சிறந்ததாக இருக்கின்றது. தேவன் எந்த அறிவுறுத்தல்களையும் வழங்காத சூழ்நிலைகளில், மனிதனால் எல்லாவற்றையும் மிகவும் சரியான முறையில் திட்டமிட முடிகிறது. அத்தகைய திட்டங்களை விவரிக்க “பரிபூரணமான” என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தலாம். தேவன் சொல்வதைப் பொறுத்தவரையில், தேவனுடைய நோக்கங்கள் என்ன அல்லது தேவன் எதை விரும்புகிறார் என்பவற்றைக் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை, அவற்றை எவரும் கிரகிக்க முயற்சிப்பதில்லை. இன்றைய ஜனங்களுக்கும் நோவாவுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் இதுவல்லவா?

நோவாவின் கதையின் இந்த பதிவில், தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியை நீங்கள் காண்கிறீர்களா? மனிதனுடைய சீர்கேடு, இழிநிலை மற்றும் வன்முறை ஆகியவற்றில் தேவனுடைய பொறுமைக்கு ஒரு வரம்பு இருக்கிறது. அவர் அந்த வரம்பை எட்டும்போது, அவர் இனி பொறுமையாக இருக்க மாட்டார். அதற்குப் பதிலாக அவருடைய புதிய நிர்வாகத்தையும் புதிய திட்டத்தையும் தொடங்குவார், தாம் செய்ய வேண்டியதைச் செய்யத் தொடங்குவார், தம்முடைய கிரியைகளை மற்றும் தம்முடைய மனநிலையின் மறுபக்கத்தை வெளிப்படுத்துவார். அவருடைய இந்தச் செயலானது, அவர் ஒருபோதும் மனிதனால் புண்படுத்தப்படக்கூடாது என்பதையும், அவர் அதிகாரமும் கோபமும் நிறைந்தவர் என்பதையும் நிரூபிப்பதற்காக அல்ல மற்றும் அவர் மனிதகுலத்தை அழிக்க முடியும் என்பதைக் காட்டுவதற்காகவும் அல்ல. இத்தகைய மனிதகுலம் அவருக்கு முன்பாக ஜீவிக்கவும், அவருடைய ஆதிக்கத்தின் கீழ் ஜீவிக்கவும் அவருடைய மனநிலையாலும் அவருடைய பரிசுத்த சாராம்சத்தாலும் இனிமேல் அனுமதிக்க முடியாது அல்லது அவற்றுக்கு பொறுமை கொள்ள முடியாது. அதாவது, மனிதகுலம் முழுவதுமே அவருக்கு எதிராக இருக்கும்போது, தாம் இரட்சிக்க பூமி முழுவதிலும் எவரும் இல்லாதபோது, அத்தகைய மனிதகுலத்திடம் அவருக்கு இனி பொறுமை இருக்காது மற்றும் இத்தகைய மனிதகுலத்தை அழிக்கும் தனது திட்டத்தில் எந்தவிதமான தவறும் இல்லாமல் அதை நிறைவேற்றுவார். தேவனுடைய அத்தகைய செயல் அவருடைய மனநிலையால் தீர்மானிக்கப்படுகிறது. அது ஓர் அவசியமான விளைவாகும். இது தேவனுடைய ஆதிக்கத்தின்கீழ் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் தாங்க வேண்டிய ஒரு விளைவாகும். இந்தத் தற்போதைய காலத்தில், தேவன் தனது திட்டத்தை முடிக்கவும், தாம் இரட்சிக்க விரும்பும் ஜனங்களை இரட்சிக்கவும் அவரால் காத்திருக்க முடியாது என்பதை அது காட்டவில்லையா? இந்தச் சூழ்நிலைகளில், தேவன் எதைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்? அவரைப் பின்பற்றாதவர்கள் அல்லது அவரை எதிர்ப்பவர்கள், அவரை எப்படி நடத்துகிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள் அல்லது மனிதகுலம் அவரை எப்படி அவதூறாகப் பேசுகிறது என்பதைப் பற்றி அல்ல. அவரைப் பின்பற்றுபவர்கள், அவருடைய நிர்வாகத் திட்டத்தில் அவருடைய இரட்சிப்பின் பொருட்கள், அவரால் பரிபூரணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும், அவருடைய திருப்திக்கு அவர்கள் தகுதியுள்ளவர்களா என்பதைப் பற்றியும் மட்டுமே அவர் அக்கறை காட்டுகிறார். அவரைப் பின்பற்றுபவர்கள் அல்லாத மற்ற ஜனங்களைப் பொறுத்தவரையில், அவர் தனது கோபத்தை வெளிப்படுத்த எப்போதாவது ஒரு சிறிய சிட்சையை வழங்குகிறார். உதாரணமாக: சுனாமி, பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள். அதே சமயம், அவரைப் பின்பற்றுபவர்களை அவர் கடுமையாகப் பாதுகாக்கிறார், அவர்களைக் கவனிக்கிறார் மற்றும் அவர்கள் இரட்சிக்கப்படப் போகிறார்கள். தேவனுடைய மனநிலை அதுதான்: ஒருபுறம், அவர் முழுமையாக்க விரும்பும் ஜனங்களிடம் அவரால் மிகுந்த பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கொண்டிருக்கவும் முடியும் மற்றும் அவர் தன்னால் முடிந்தவரை அவர்களுக்காகக் காத்திருக்கவும் முடியும். மறுபுறம், தேவன் தன்னைப் பின்பற்றாத மற்றும் அவரை எதிர்க்கும் சாத்தான்-வகை ஜனங்களை மனதார வெறுக்கிறார். இந்தச் சாத்தான்-வகை ஜனங்கள் அவரைப் பின்பற்றுகிறார்களா அல்லது அவரை வணங்குகிறார்களா என்பதை அவர் பொருட்படுத்துவதில்லை என்றாலும், அவர் தம்முடைய இருதயத்தில் பொறுமை காத்துக்கொண்டிருக்கும் போதே அவர்களை வெறுக்கிறார் மற்றும் இந்தச் சாத்தான்-வகை ஜனங்களின் முடிவை அவர் தீர்மானிக்கும் போது, அவரும் தமது நிர்வாகத் திட்டத்தின் படிகளின் வருகைக்காக க் காத்திருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 27

ஜலப்பிரளயத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட நோவாவிற்கான தேவனுடைய ஆசீர்வாதம்

ஆதி. 9:1-6  பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம். உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன், மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

நோவா தேவனுடைய அறிவுறுத்தல்களை ஏற்று, பேழையைக் கட்டியெழுப்பி, உலகத்தை அழிக்க தேவன் ஜலப்பிரளயத்தைப் பயன்படுத்திய நாட்களில் ஜீவித்தான். அவனுடைய எட்டு பேர் கொண்ட குடும்பம் முழுவதும் தப்பிப்பிழைத்தது. நோவாவின் எட்டு பேர் கொண்ட குடும்பத்தைத் தவிர, மனிதகுலம் அனைத்தும் அழிக்கப்பட்டது. பூமியில் உள்ள அனைத்து ஜீவன்களும் அழிக்கப்பட்டன. நோவாவுக்கு, தேவன் ஆசீர்வாதம் அளித்தார். அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சில விஷயங்களைச் சொன்னார். இந்த விஷயங்கள் தேவன் அவனுக்கு அளித்தவை மற்றும் அவனுக்கான தேவனுடைய ஆசீர்வதம் ஆகும். தேவனுக்குச் செவிகொடுத்து, அவருடைய அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவருக்கு தேவன் அளிக்கும் ஆசீர்வாதமும் வாக்குறுதியும் அதுதான். தேவன் ஜனங்களுக்கு பலன் அளிக்கும் முறையும் அதுதான். அதாவது, நோவா ஒரு பரிபூரணமான மனிதனா அல்லது தேவனுடைய பார்வையில் ஒரு நீதிமானா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனைப் பற்றி அவன் எவ்வளவாக அறிந்திருந்தாலும், சுருக்கமாக, நோவாவும் அவனுடைய மூன்று மகன்களும் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, தேவனுடைய கிரியைக்கு ஒத்துழைத்தார்கள் மற்றும் தேவனுடைய அறிவுறுத்தல்களின்படி தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்தார்கள். இதன் விளைவாக, ஜலப்பிரளயத்தால் உலகம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மனிதர்களையும் பல்வேறு வகையான ஜீவன்களையும் தேவனுக்காகப் பாதுகாத்து, தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்தார்கள். நோவா செய்த எல்லாவற்றின் காரணமாக, தேவன் அவனை ஆசீர்வதித்தார். இன்றைய ஜனங்களுக்கு, நோவா என்ன செய்தான் என்பது குறிப்பிடுவதற்கு கூட தகுதியற்றதாகக் காணப்படலாம். சிலர் நினைக்கலாம்: “நோவா எதுவும் செய்யவில்லை. அவனை இரட்சிக்க தேவன் மனம் வைத்திருந்ததால் அவன் நிச்சயமான முறையில் இரட்சிக்கப்பட்டான். அவனது பிழைப்பு அவனது சொந்த சாதனைகளால் அல்ல. தேவன் இதைச் செய்ய விரும்பினார். ஏனென்றால், மனிதன் செயல்பாடற்றவன்.” ஆனால் தேவன் நினைத்துக் கொண்டிருந்ததோ அதுவல்ல. தேவனைப் பொறுத்தவரையில், ஒரு மனிதன் பெரியவனா முக்கியமற்றவனா என்பது முக்கியமல்ல. அவருடைய சித்தத்தை மற்றும் அவருடைய திட்டத்தை சுமுகமாக நிறைவேற்ற முடியும் என்பதற்காக அவர்கள் அவர் சொல்வதைக் கேட்கும் வரையில், அவருடைய அறிவுறுத்தல்களுக்கும் அவர் ஒப்படைத்தவற்றிற்கும் கீழ்ப்படிந்து, அவருடைய கிரியை, அவருடைய சித்தம் மற்றும் திட்டத்துடன் ஒத்துழைக்க அவர்களால் இயலும் வரையில், அந்த நடத்தையானது, அவருடைய நினைவுகூரலுக்கும் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும் தகுதியானதாக இருக்கிறது. தேவன் அத்தகையவர்களைப் பொக்கிஷமாகக் கருதுகிறார். அவர்களுடைய கிரியைகளையும், அவருக்கான அவர்களுடைய அன்பையும் பாசத்தையும் அவர் மதிக்கிறார். அது தேவனுடைய மனநிலையாக இருக்கிறது. தேவன் ஏன் நோவாவை ஆசீர்வதித்தார்? ஏனென்றால், மனிதனுடைய அதுபோன்ற கிரியைகளையும் கீழ்ப்படிதலையும் தேவன் அவ்வாறு நடத்துகிறார்.

நோவாவிற்கான தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பற்றி, சிலர் கூறுவார்கள்: “மனிதன் தேவனுக்கு செவிகொடுத்து தேவனை திருப்திப்படுத்தினால், தேவன் மனிதனை ஆசீர்வதிக்க வேண்டும். அது வெளிப்படையானது அல்லவா?” நாம் அவ்வாறு சொல்லலாமா? சிலர், “இல்லை,” என்று கூறுகிறார்கள் நாம் ஏன் அவ்வாறு சொல்ல முடியாது? சிலர், “தேவனுடைய ஆசீர்வாதத்தை அனுபவிக்க மனிதன் தகுதியானவன் அல்ல,” என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் சரியல்ல. ஏனென்றால், தேவன் தம்மிடம் ஒப்படைத்ததை ஒரு மனிதன் ஏற்றுக் கொள்ளும்போது, அவர்களுடைய கிரியைகள் நன்மையானதா தீமையானதா என்பதையும், அந்த மனிதன் கீழ்ப்படிந்தானா இல்லையா என்பதையும், அந்த மனிதன் தேவனுடைய சித்தத்தைப் பூர்த்திசெய்தானா இல்லையா என்பதையும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அந்தத் தரத்தைப் பூர்த்திசெய்கிறதா இல்லையா என்பதையும் தீர்மானிப்பதற்கான ஒரு தரத்தை தேவன் கொண்டிருக்கிறார். ஒரு மனிதனின் இருதயத்தின்பால் தேவன் அக்கறை காட்டுகிறார், மேலோட்டமாக, அவர்களுடைய கிரியைகளில் அக்கறை காட்டுவதில்லை. ஒருவன் எவ்வாறு செய்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் எதையாவது செய்யும் வரை தேவன் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதாக அது இல்லை. அது தேவனைப் பற்றி ஜனங்கள் கொண்டிருக்கும் தவறான புரிதல் ஆகும். தேவன் விஷயங்களின் இறுதி முடிவை மட்டுமல்ல, ஒரு நபரின் இருதயம் எப்படி இருக்கிறது மற்றும் விஷயங்களின் வளர்ச்சியின் போது ஒரு நபரின் மனநிலை எவ்வாறாக இருக்கிறது என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் மற்றும் அவர்களுடைய இருதயத்தில் கீழ்ப்படிதல், அக்கறை மற்றும் தேவனை திருப்திப்படுத்தும் விருப்பம் உள்ளனவா என்பதை அவர் கவனிக்கிறார். அந்த நேரத்தில் நோவா தேவனைப் பற்றி எவ்வளவாக அறிந்திருந்தான்? இப்போது உங்களுக்குத் தெரிந்த கோட்பாடுகளைப் போலவே அது இருந்ததா? தேவனைப் பற்றிய கோட்பாடுகள் மற்றும் அறிவு போன்ற சத்தியத்தின் அம்சங்களைப் பொறுத்தவரையில், அவர் உங்களைப் போலவே தண்ணீரையும் மேய்ச்சலையும் பெற்றாரா? இல்லை. அவர் பெறவில்லை! ஆனால் மறுக்க முடியாத ஓர் உண்மை இருக்கிறது: இன்றைய ஜனங்களின் உணர்ச்சி, மனம் மற்றும் இருதயங்களின் ஆழத்தில் கூட, தேவனைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்கள் மற்றும் மனநிலைகள் நிச்சயமில்லாதவை மற்றும் தெளிவற்றவை. தேவனுடைய இருப்பைப் பற்றி ஒரு பகுதியினர் எதிர்மறையான மனநிலையைக் கொண்டுள்ளனர் என்றும் நீங்கள் கூறலாம். ஆனால் நோவாவின் இருதயத்திலும் அவனது உணர்விலும், தேவன் இருப்பது நிச்சயமானது மற்றும் சிறிதளவு சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது. இதனால் தேவனுக்கான அவனது கீழ்ப்படிதல் கலப்படமற்றது மற்றும் சோதனையைச் சகிக்கக் கூடியது. அவனுடைய இருதயம் பரிசுத்தமானது. அது தேவனை நோக்கி வெளிப்படையாக இருந்தது. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் பின்பற்றும்படி தன்னைச் சமாதானப்படுத்த அவனுக்குக் கோட்பாடுகளைப் பற்றி அதிக அறிவு தேவைப்படவில்லை. தேவன் அவனிடம் ஒப்படைத்ததை ஏற்றுக் கொள்ளவும், தேவன் அவனைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய வல்லவராகவும் இருப்பதற்காக, தேவன் இருப்பதை நிரூபிக்க நிறைய உண்மைகள் அவனுக்குத் தேவைப்படவில்லை. நோவாவுக்கும் இன்றைய ஜனங்களுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு அதுதான். தேவனுடைய பார்வையில் ஒரு பரிபூரணமான மனிதன் யார் என்பதற்கான துல்லியமான வரையறையும் அதுதான். தேவன் விரும்புவது நோவாவைப் போன்றவர்களைத்தான். தேவன் புகழும் மனிதனாக அவன் இருக்கிறான் மற்றும் தேவன் ஆசீர்வதிக்கும் மனிதனாகவும் இருக்கிறான். இதிலிருந்து உங்களுக்கு ஏதேனும் ஞானம் கிடைத்துள்ளதா? ஜனங்கள் வெளியில் இருந்து ஜனங்களைப் பார்க்கிறார்கள், அதே நேரத்தில் தேவன் ஜனங்களின் இருதயங்களையும் அவற்றின் சாராம்சத்தையும் பார்க்கிறார். தேவன் தன்னை நோக்கி எவரும் அரைமனமோ சந்தேகங்களோ கொண்டிருக்க அனுமதிப்பதில்லை, எந்த வகையிலும் அவரை சந்தேகிக்கவோ சோதிக்கவோ ஜனங்களை அனுமதிப்பதில்லை. ஆகவே, இன்றைய ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை நேருக்கு நேராக பார்த்தாலும்—அதை தேவனிடம் முகமுகமாக என்றும் நீங்கள் சொல்லலாம்—அவர்களுடைய இருதயங்களுக்குள் ஆழமான ஏதோ ஒன்று இருப்பதாலும், அதன் சீர்கேடு நிறைந்த சாராம்சம் இருப்பதாலும், அவர் மீது அவர்கள் கொண்டுள்ள விரோத மனநிலையாலும், ஜனங்கள் தேவன் மீது உண்மையான நம்பிக்கை வைப்பதில் இருந்தும், அவருக்குக் கீழ்ப்படிவதில் இருந்தும் தடுக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக, தேவன் நோவாவுக்கு அளித்த அதே ஆசீர்வாதத்தைப் பெறுவது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 28

தேவன் மனிதனுடனான உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லைப் பயன்படுத்துகிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆதி. 9:11-13  இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

வானவில் என்றால் என்ன என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். வானவில் தொடர்பான சில கதைகளையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். வேதாகமத்தில் வானவில் பற்றிய கதையைப் பொறுத்தவரையில், சிலர் அதை நம்புகிறார்கள், சிலர் அதை புராணக்கதை என்று கருதுகிறார்கள், மற்றவர்கள் அதை நம்பாமல் இருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும், வானவில் தொடர்பாக நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் தேவனுடைய கிரியை மற்றும் அவை மனிதனைப் பற்றிய தேவனுடைய நிர்வாகத்தின் செயல்பாட்டில் நிகழ்ந்தன. இந்த நிகழ்வுகள் வேதாகமத்தில் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகள் அந்த நேரத்தில் தேவன் என்ன மனநிலையில் இருந்தார் அல்லது தேவன் சொன்ன இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த நோக்கங்கள் என்ன என்று நமக்குச் சொல்ல்லவில்லை. மேலும், தேவன் அவற்றை சொன்னபோது தேவன் என்ன உணர்ந்தார் என்பதை எவரும் கிரகிக்க முடியாது. இருப்பினும், இந்த முழு நிகழ்வையும் பற்றிய தேவனுடைய மனநிலை வசனத்தின் வரிகளுக்கு இடையில் வெளிப்படுகிறது. அந்த நேரத்தில் இருந்த தேவனுடைய எண்ணங்கள் அவருடைய வார்த்தையின் ஒவ்வொரு வார்த்தை மற்றும் சொற்றொடரின் வழியாக உடனடியாகக் கவனத்தை ஈர்ப்பது போல் இருக்கிறது.

ஜனங்கள் எதைப் பற்றி கவலைப்பட வேண்டும், அவர்கள் எதைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதாக தேவனுடைய எண்ணங்கள் இருக்கின்றன. ஏனென்றால், தேவனுடைய எண்ணங்கள் தேவனைப் பற்றிய மனிதனுடைய புரிதலுடன் பிரிக்கமுடியாத வகையில் தொடர்புடையவை. தேவனைப் பற்றிய மனிதனுடைய புரிதலானது மனிதன் தன் ஜீவிதத்தில் பிரவேசிப்பதற்கு இன்றியமையாத இணைப்பாகும். ஆகவே, இந்த நிகழ்வுகள் நடந்த நேரத்தில் தேவன் எதனை நினைத்துக் கொண்டிருந்தார்?

ஆரம்பத்தில், தேவன் மனிதகுலத்தை சிருஷ்டித்தார். அவருடைய பார்வையில் அது அவருக்கு மிகவும் நன்றாக மற்றும் நெருக்கமாக இருந்தது. ஆனால் அவர்கள் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பின்னர், ஜளப்பிரளயத்தால் அழிக்கப்பட்டனர். அத்தகைய மனிதகுலம் அவ்வாறு உடனடியாக மறைந்து போனது தேவனைக் காயப்படுத்தியதா? நிச்சயமாக அது காயப்படுத்தியது! இந்தக் காயத்தின் வெளிப்பாடு என்னவாக இருந்தது? அது வேதாகமத்தில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டது? இந்த வார்த்தைகளின் மூலமாக அது வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது: “இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.” இந்த எளிய வாக்கியம் தேவனுடைய எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. உலகின் இந்த அழிவு அவரை மிகவும் வேதனைப்படுத்தியது. மனிதனுடைய வார்த்தைகளில், அவர் மிகவும் சோகமாக இருந்தார். நாம் கற்பனை செய்யலாம்: ஒரு காலத்தில் உயிர் நிறைந்த பூமி ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்ட பின்னர் எப்படி இருந்தது? ஒரு காலத்தில் மனிதர்களால் நிறைந்த பூமி, அந்த நேரத்தில் எப்படி இருந்தது? மனித வசிப்பிடங்கள் இல்லை, ஜீவன்கள் இல்லை, எல்லா இடங்களிலும் நீர் இருந்தது மற்றும் நீரின் மேற்பரப்பில் பேரழிவு இருந்தது. அவர் உலகைச் சிருஷ்டித்தபோது இந்தக் காட்சி தேவனுடைய மெய்யான நோக்கமாக இருந்ததா? நிச்சயமாக இல்லை! தேவனுடைய மெய்யான நோக்கம், நோவா மட்டுமே அவரை வணங்குவதையோ, தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை நிறைவு செய்வதற்கான அவரது அழைப்பிற்கு பதிலளிக்கக்கூடிய ஒரே ஒருவரையோ மட்டும் பார்ப்பது அல்ல. பூமியெங்கும் உள்ள ஜீவிதத்தைப் பார்ப்பது, தாம் சிருஷ்டித்த மனிதர்கள் அவரை வணங்குவதைப் பார்ப்பதே தேவனுடைய மெய்யான நோக்கம் ஆகும். மனிதகுலம் மறைந்தபோது, தேவன் முதலில் நினைத்ததை அல்ல, மாறாக அதற்கு நேர்மாறாக பார்த்தார். அவருடைய இருதயம் எப்படி வேதனையடையாமல் இருந்திருக்கக் கூடும்? ஆகவே, அவர் தம்முடைய மனநிலையை வெளிப்படுத்தி, தம்முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது, தேவன் ஒரு முடிவை எடுத்தார். அவர் எத்தகைய முடிவை எடுத்தார்? மனிதனுடனான ஓர் உடன்படிக்கையாக, தேவன் மீண்டும் மனிதனை ஜலப்பிரளயத்தால் அழிக்க மாட்டார் என்ற வாக்குறுதியாக, மேகத்தில் ஒரு வில்லை (அதாவது, நாம் காணும் வானவில்லை) சிருஷ்டித்தார். அதே சமயம், அது, தேவன் ஏன் இப்படி ஒரு காரியத்தைச் செய்வார் என்பதை மனிதகுலம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்படியாக, தேவன் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்துவிட்டார் என்று ஜனங்களுக்குச் சொல்வதற்குமாகும்.

அந்த நேரத்தில் உலக அழிவு தேவன் விரும்பிய ஒன்றுதானா? அது நிச்சயமாக தேவன் விரும்பிய ஒன்றல்ல. உலக அழிவுக்குப் பிறகு பூமியின் பரிதாபகரமான பார்வையின் ஒரு சிறிய பகுதியை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால் தேவனுடைய பார்வையில் அந்தக் காட்சி எப்படி இருந்தது என்பதை கற்பனை செய்வதற்குக் கூட நாம் நெருங்கிவர முடியாது. இப்போதைய ஜனங்களாக இருந்தாலும், அப்போதைய ஜனங்களாக இருந்தாலும், ஜலப்பிரளயத்தால் அழிந்த பின்னர் இருந்த உலகின் அந்தக் காட்சியைக் கண்டபோது தேவன் என்ன உணர்ந்தார் என்பதை யாராலும் கற்பனை செய்யவோ, கிரகிக்கவோ முடியாது என்று நாம் கூறலாம். மனிதனுடைய கீழ்ப்படியாமையால் இதைச் செய்ய தேவன் கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் ஜலப்பிரளயத்தால் இந்த உலகம் அழிக்கப்பட்டதால் தேவனுடைய இருதயம் அனுபவித்த வேதனையை யாராலும் புரிந்து கொள்ளவோ கிரகிக்கவோ முடியாது. அதனால்தான் தேவன் மனிதகுலத்துடன் ஓர் உடன்படிக்கை செய்தார். இதன் மூலமாக, தேவன் ஒரு முறை அதுபோன்ற கிரியைகளைச் செய்தார் என்பதை ஜனங்கள் நினைவில் வைத்துக் கொள்ளும்படியாகச் சொல்வதையும், தேவன் மீண்டும் ஒருபோதும் உலகை அழிக்க மாட்டார் என்று அவர்களிடம் சத்தியம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டார். இந்த உடன்படிக்கையில் நாம் தேவனுடைய இருதயத்தைக் காண்கிறோம்—இந்த மனிதகுலத்தை அழித்தபோது தேவனுடைய இருதயம் வேதனையடைந்ததைக் காண்கிறோம். மனிதனுடைய மொழியில், தேவன் மனிதகுலத்தை அழித்து, மனிதகுலம் மறைந்து போவதைக் கண்டபோது, அவருடைய இருதயம் அழுதது மற்றும் இரத்தம் சிந்தியது. இதை விவரிக்க அது சிறந்த வழி அல்லவா? இந்த வார்த்தைகள் மனித உணர்ச்சிகளை விளக்குவதற்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மனிதனுடைய மொழி மிகவும் குறைவு என்பதால், தேவனுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் விவரிக்க அவற்றைப் பயன்படுத்துவது எனக்கு மிகவும் மோசமானதாகத் தெரியவில்லை மற்றும் அவை மிகையாகவும் இல்லை. அந்த நேரத்தில் தேவனுடைய மனநிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றிய தெளிவான, மிகவும் பொருத்தமான புரிதலை அது உங்களுக்குத் தருகிறது. இப்போது மீண்டும் ஒரு வானவில்லைப் பார்க்கும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ஜலப்பிரளயத்தால் உலகை அழித்ததில் தேவன் ஒரு காலத்தில் துக்கத்தில் இருந்தார் என்பதை நீங்கள் நினைவில் கொள்வீர்கள். தேவன் இந்த உலகத்தை வெறுத்து, இந்த மனிதகுலத்தை இகழ்ந்த போதிலும், அவர் தனது சொந்தக் கரங்களால் சிருஷ்டித்த மனிதர்களை அழித்தபோது, அவருடைய இருதயத்திற்கு வலித்தது, விட்டுவிட அது போராடியது, தயக்கம் காட்டியது, அதைத் தாங்குவது கடினம் என்று கண்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்வீர்கள். அவருக்கு ஆறுதலாக இருந்தது நோவாவின் குடும்பத்தில் இருந்த எட்டு பேர் மட்டுமே. எல்லாவற்றையும் உருவாக்கும் தேவனுடைய கடினமான முயற்சிகள் வீணாகமல் காத்தது நோவாவின் ஒத்துழைப்பு மட்டுமே. தேவன் துன்பப்பட்ட நேரத்தில், அவருடைய வேதனையை ஈடுசெய்யக்கூடிய ஒரே விஷயமாக அது இருந்தது. அப்போதிருந்து, தேவன் மனிதகுலத்தின் மீதான அனைத்து எதிர்பார்ப்புகளையும் நோவாவின் குடும்பத்தின் மீது வைத்தார். அவர்கள் அவருடைய சாபத்துக்கு ஏற்றவாறு அல்லாமல் அவருடைய ஆசீர்வாதங்களின்படி ஜீவிக்க முடியும் என்று நம்பினார், தேவன் இனி உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழிப்பதை அவர்கள் ஒருபோதும் பார்க்க மாட்டார்கள் என்று நம்பினார் மற்றும் அவர்கள் அவ்வாறு அழிக்கப்பட மாட்டார்கள் என்று நம்பினார்.

தேவனுடைய மனநிலையின் எந்தப் பகுதியை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்? மனிதன் அவருக்கு விரோதமாக இருந்ததால் தேவன் மனிதனை வெறுத்தார். ஆனால் அவருடைய இருதயத்தில், அவருடைய அக்கறை, கவனம், மனிதகுலத்திற்கான தயவு ஆகியவை மாறாமல் இருந்தன. அவர் மனிதகுலத்தை அழித்தபோதும், அவருடைய இருதயம் மாறாமல் இருந்தது. மனிதகுலம் சீர்கேடு நிறைந்ததாகவும், தேவனிடம் கீழ்ப்படியாமலும் கடுமையாகவும் இருந்தபோது, தேவன் தம்முடைய மனநிலையினாலும், சாராம்சத்தினாலும், அவருடைய கொள்கைகளின்படி இந்த மனிதகுலத்தை அழிக்க வேண்டியிருந்தது. ஆனால் தேவனுடைய சாராம்சத்தின் காரணமாக, அவர்கள் தொடர்ந்து ஜீவிக்க முடியும் என்பதற்காக, பின்பும் அவர் மனிதகுலத்திடம் பரிதாபப்பட்டார் மற்றும் மனிதகுலத்தை மீட்பதற்கு பல்வேறு வழிகளைப் பயன்படுத்த விரும்பினார். இருப்பினும், மனிதன் தேவனை எதிர்த்தான், தொடர்ந்து தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தான், தேவனுடைய இரட்சிப்பை ஏற்க மறுத்துவிட்டான். அதாவது, அவருடைய நல்ல நோக்கங்களை ஏற்க மறுத்துவிட்டான். தேவன் எவ்வாறு அவர்களை அழைத்தார், அவர்களுக்கு நினைவூட்டினார், வழங்கினார், அவர்களுக்கு உதவினார் அல்லது சகித்துக்கொண்டார் என்றாலும், மனிதன் அதைப் புரிந்து கொள்ளவில்லை, கிரகிக்கவில்லை, அதனிடம் கவனம் செலுத்தவில்லை. தமது வேதனையில், மனிதன் அவனுடைய போக்கை மாற்றியமைக்கக் காத்திருந்து தேவன் மனிதனுக்குத் தமது அதிகபட்ச சகிப்புத்தன்மையை வழங்க மறக்கவில்லை. அவர் தனது வரம்பை அடைந்த பிறகு, தாம் செய்ய வேண்டியதை எந்த தயக்கமும் இல்லாமல் செய்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதகுலத்தை அழிக்க தேவன் திட்டமிட்டிருந்த தருணத்திலிருந்து மனிதகுலத்தை அழிப்பதில் அவருடைய கிரியையின் ஆரம்பம் வரையில் ஒரு குறிப்பிட்ட காலமும் செயல்முறையும் இருந்தது. இந்தச் செயல்முறை மனிதனைத் தலைகீழாக மாற்றுவதற்கான நோக்கத்திற்காக இருந்தது. அது தேவன் மனிதனுக்கு அளித்த கடைசி வாய்ப்பு ஆகும். மனிதகுலத்தை அழிப்பதற்கு முன்பு இந்தக் காலகட்டத்தில் தேவன் என்ன செய்தார்? தேவன் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் நினைவூட்டல் மற்றும் அறிவுறுத்தும் கிரியையைச் செய்தார். தேவனுடைய இருதயம் எவ்வளவு வேதனையையும் துக்கத்தையும் கொண்டிருந்தாலும், அவர் தொடர்ந்து தனது கவனிப்பு, அக்கறை மற்றும் மனிதகுலத்தில் ஏராளமான தயவு ஆகியவற்றைக் கொண்டிருந்தார். இதிலிருந்து நாம் எதனைப் பார்க்கிறோம்? சந்தேகத்திற்கு இடமின்றி, மனிதகுலத்தின் மீதான தேவனுடைய அன்பு உண்மையானது, அவர் உதட்டளவில் மட்டும் சேவையைச் செய்வதில்லை. அது உண்மையானது, உறுதியானது மற்றும் கிரகிக்கத்தக்கது. அது கற்பனை செய்யப்படவில்லை, கலப்படமாக இல்லை, வஞ்சகமாக அல்லது பாசாங்குத்தனமாக இல்லை. தேவன் ஒருபோதும் எந்த வஞ்சகத்தையும் பயன்படுத்துவதில்லை அல்லது பொய்யான உருவங்களை உருவாக்குவதில்லை. ஜனங்கள் அவருடைய அழகைக் காண அனுமதிக்க அல்லது அவருடைய அன்பையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்த அவர் ஒருபோதும் தவறான சாட்சிகளைப் பயன்படுத்துவதில்லை. தேவனுடைய மனநிலையின் இந்த அம்சங்கள் மனிதனுடைய அன்பிற்குத் தகுதியானவை அல்லவா? அவை வணங்குவதற்குத் தகுதியானவை அல்லவா? அவை மதிப்புக்குரியவை அல்லவா? இந்தக் கட்டத்தில், நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்: இந்த வார்த்தைகளைக் கேட்டபின், தேவனுடைய மகத்துவம் வெறும் காகிதத் தாளில் இருக்கும் வெறுமையான வார்த்தைகள் என்று நினைக்கிறீர்களா? தேவனுடைய அன்பு வெறும் வெறுமையான வார்த்தையா? இல்லை! நிச்சயமாக இல்லை! தேவனுடைய உன்னதம், மகத்துவம், பரிசுத்தம், சகிப்புத்தன்மை, அன்பு மற்றும் பல என தேவனுடைய மனநிலை மற்றும் சாராம்சத்தின் பல்வேறு அம்சங்களில் ஒவ்வொன்றின் ஒவ்வொரு விவரமும் அவர் தனது கிரியையைச் செய்யும் ஒவ்வொரு முறையும் நடைமுறை வெளிப்பாட்டைக் காண்கின்றன. அவை மனிதனைப் பற்றிய அவருடைய சித்தத்தில் பொதிந்துள்ளன மற்றும் அவை ஒவ்வொரு நபரிடமும் பூர்த்தி செய்யப்பட்டுப் பிரதிபலிக்கின்றன. நீ முன்பு உணர்ந்திருக்கிறாயா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மனிதனின் இருதயத்தையும் அனல் மூட்டவும், ஒவ்வொரு மனிதனின் ஆவியையும் எழுப்பவும் தேவன் தனது நேர்மையான இருதயம், ஞானம் மற்றும் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு விதத்திலும் கவனித்து வருகிறார். அது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 29

தேவன் மனிதனுடனான உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லைப் பயன்படுத்துகிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆதி. 9:11-13  இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

தேவன் மனிதகுலத்தைச் சிருஷ்டித்தார். அவர்கள் சீர்கெட்டிருக்கிறார்களா அல்லது அவரைப் பின்பற்றுகிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவன் மனிதர்களை தனது மிகவும் நேசத்துக்குரிய அன்புக்குரியவர்களாகக் கருதுகிறார் அல்லது மனிதர்கள் சொல்வது போல், ஜனங்கள் அவருக்குப் பிரியமானவர்கள் மற்றும் அவர்கள் அவருடைய விளையாட்டு பொருட்கள் அல்ல. தம்மைச் சிருஷ்டிகர் என்றும், மனிதன் தம்முடைய சிருஷ்டிப்பு என்றும் தேவன் சொன்னாலும், அந்தஸ்தில் சிறிதளவு வித்தியாசம் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால், மனிதகுலத்திற்காக தேவன் செய்த அனைத்தும் இந்த இயற்கையின் உறவை மீறுகின்றன. தேவன் மனிதகுலத்தை நேசிக்கிறார், மனிதகுலத்தை கவனித்துக்கொள்கிறார், மனிதகுலத்தின் மீது அக்கறை காட்டுகிறார், அதே போல் மனிதகுலத்திற்கு தொடர்ந்து மற்றும் இடைவிடாமல் வழங்குகிறார். அது கூடுதல் கிரியை அல்லது பல நன்மதிப்பு பெற வேண்டிய ஒன்று என்று அவர் ஒருபோதும் தனது இருதயத்தில் உணர்ந்ததில்லை. மனிதகுலத்தை இரட்சிப்பதும், அவர்களுக்கு வழங்குவதும், அவர்களுக்கு எல்லாவற்றையும் தருவதும் மனிதகுலத்திற்கு பெரும் பங்களிப்பை அளிப்பதாக அவர் உணரவில்லை. அவர் வெறுமனே மனிதகுலத்திற்கு அமைதியாகவும் சத்தமில்லாமலும், தனது சொந்த வழியிலும், தனது சொந்த சாராம்சத்தினாலும், அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதாலும் வழங்குகிறார். அவரிடமிருந்து மனிதகுலம் எவ்வளவு காரியங்களை மற்றும் எவ்வளவு உதவிகளைப் பெற்றாலும், தேவன் ஒருபோதும் அதைப் பற்றி சிந்திப்பதில்லை அல்லது அதற்கு நன்மதிப்பு பெற முயற்சிப்பதில்லை. அது தேவனுடைய சாரம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அது துல்லியமாக தேவனுடைய மனநிலையின் உண்மையான வெளிப்பாடாகும். இதனால்தான், அது வேதாகமத்திலோ வேறு ஏதேனும் புத்தகங்களிலோ இருந்தாலும், தேவன் தமது எண்ணங்களை வெளிப்படுத்துவதை நாம் ஒருபோதும் காணவில்லை. மனிதர்களை நன்றியுணர்வடையச் செய்ய வேண்டும் அல்லது அவரைப் புகழ்ந்து பேச வேண்டும் என்ற நோக்கத்துடன் தேவன் மனிதர்களிடம் விவரிப்பதையோ அறிவிப்பதையோ நாம் ஒருபோதும் காணவில்லை. அவர் ஏன் இவற்றைச் செய்கிறார் அல்லது மனிதகுலத்திற்காக ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறார். அவர் காயப்படும்போது கூட, அவருடைய இருதயம் மிகுந்த வேதனையில் இருக்கும்போதும், மனிதகுலத்தின் மீதான தனது பொறுப்பையோ அல்லது மனிதகுலத்தின் மீதான அக்கறையையோ அவர் ஒருபோதும் மறப்பதில்லை. அவர் இந்த காயத்தையும் வலியையும் மவுனமாக மட்டுமே தாங்குகிறார். மாறாக, தேவன் எப்பொழுதும் செய்வதைப் போலவே மனிதகுலத்திற்கு தொடர்ந்து வழங்குகிறார். மனிதகுலம் பெரும்பாலும் தேவனைப் புகழ்ந்தாலும் அல்லது அவருக்கு சாட்சியாக இருந்தாலும், இந்த நடத்தை எதுவும் தேவனால் எதிர்பார்க்கப்படுவதில்லை. ஏனென்றால், மனிதகுலத்திற்காக அவர் செய்யும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் நன்றியுணர்வுக்காக பரிமாறிக்கொள்ளவோ அல்லது திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதையோ தேவன் ஒருபோதும் விரும்புவதில்லை. மறுபுறம், தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்க்கக்கூடியவர்கள், தேவனை உண்மையாகப் பின்பற்றக்கூடியவர்கள், அவருக்குச் செவிகொடுத்து, அவருக்கு விசுவாசமாக இருப்பவர்கள், அவருக்குக் கீழ்ப்படியக்கூடியவர்கள் என இவர்கள் பெரும்பாலும் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். தேவன் ஒதுக்கீடு இல்லாமல் அத்தகைய ஆசீர்வாதங்களை வழங்குவார்கள். மேலும், தேவனிடமிருந்து ஜனங்கள் பெறும் ஆசீர்வாதங்கள் பெரும்பாலும் அவர்களுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவை மற்றும் அனைத்தையும் கடந்து மனிதர்கள், தாங்கள் என்ன செய்தார்கள் அல்லது என்ன விலை கொடுத்தார்கள் என்பதை நியாயப்படுத்த முடியும். தேவனுடைய ஆசீர்வாதங்களை மனிதகுலம் அனுபவிக்கும்போது, தேவன் என்ன செய்கிறார் என்று யாராவது கவலைப்படுகிறார்களா? தேவன் எப்படி உணருகிறார் என்பதில் யாராவது அக்கறை காட்டுகிறார்களா? தேவனுடைய வலியை யாராவது கிரகிக்க முயற்சிக்கிறார்களா? இல்லை என்பதே நிச்சயமாக பதிலாக இருக்கிறது! அந்த நேரத்தில் தேவன் உணர்ந்த வேதனையை நோவா உட்பட எந்த மனிதனாலும் கிரகிக்க முடிந்திருக்குமா? தேவன் ஏன் அத்தகைய உடன்படிக்கையை ஏற்படுத்துவார் என்று யாராவது கிரகிக்க முடியுமா? அவர்களால் புரிந்து கொள்ள முடியாது! தேவனுடைய வலியை மனிதகுலம் கிரகிப்பதில்லை. ஏனெனில், அவர்கள் தேவனுடைய வலியை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான இடைவெளியோ, அவர்களுடைய அந்தஸ்தின் வேறுபாடோ இதற்குக் காரணமாக இல்லை. மாறாக, தேவனுடைய எந்த உணர்வையும் மனிதகுலம் கவனிப்பதில்லை என்பதே காரணமாகும். தேவன் சுதந்திரமானவர் என்று மனிதகுலம் கருதுகிறது—தேவனைப் பொறுத்தவரையில், அவரைப் பற்றி மனிதகுலம் அக்கறை கொள்ளவோ, அவரைப் புரிந்து கொள்ளவோ அல்லது அவரைக் கருத்தில் கொள்ளவோ தேவையில்லை. தேவன் தேவனாகவே இருக்கிறார். எனவே, அவருக்கு வலி இல்லை மற்றும் உணர்ச்சிகள் இல்லை. அவர் சோகமாக இருக்க மாட்டார், அவர் துக்கத்தை உணர்வதில்லை, அவர் அழுவதில்லை. தேவன் தேவனாகவே இருக்கிறார். எனவே, அவருக்கு எந்தவிதமான உணர்ச்சிகரமான வெளிப்பாடுகளும் தேவையில்லை மற்றும் அவருக்கு எந்தவிதமான உணர்ச்சிகரமான ஆறுதலும் தேவையில்லை. சில சூழ்நிலைகளில், அவருக்கு இந்த விஷயங்கள் தேவைப்பட்டால், தேவனால் தனியாக சமாளிக்க முடியும் மற்றும் மனிதகுலத்திடமிருந்து எந்த உதவியும் அவருக்குத் தேவையில்லை. மாறாக, பலவீனமான, முதிர்ச்சியற்ற மனிதர்களுக்குதான் தேவனுடைய ஆறுதல், ஏற்பாடு, ஊக்கம் மற்றும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் தங்கள் உணர்ச்சிகளை ஆறுதல்படுத்துவதற்கு தேவைப்படும். அதுபோன்ற விஷயங்கள் மனிதகுலத்தின் இருதயங்களுக்குள் பதுங்கியிருக்கின்றன: மனிதன் பலவீனமானவன். எல்லா வழிகளிலும் அவர்களைக் கவனிக்க அவர்களுக்கு தேவன் தேவை. அவர்கள் தேவனிடமிருந்து பெறும் எல்லா கவனிப்பிற்கும் தகுதியானவர்கள். தங்களுடையது என்று அவர்கள் கருதும் அனைத்தையும் அவர்கள் தேவனிடமிருந்து கோர வேண்டும். தேவன் பலமானவர். அவரிடம் எல்லாமே இருக்கிறது. அவர் மனிதகுலத்தின் பாதுகாவலராகவும் ஆசீர்வாதங்களை அளிப்பவராகவும் இருக்க வேண்டும். ஏற்கனவே அவர் தேவன் என்பதால், அவர் சர்வவல்லமையுள்ளவர் மற்றும் மனிதகுலத்திடமிருந்து அவருக்கு எதுவும் தேவையில்லை.

தேவனுடைய எந்த வெளிப்பாடுகளுக்கும் மனிதன் கவனம் செலுத்தாததால், தேவனுடைய துக்கத்தையோ, வேதனையையோ, மகிழ்ச்சியையோ அவன் ஒருபோதும் உணரவில்லை. ஆனால் மாறாக, மனிதனுடைய வெளிப்பாடுகள் அனைத்தையும் தேவன் தனது உள்ளங்கை போல அறிந்திருக்கிறார். தேவன் ஒவ்வொருவரின் தேவைகளையும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் வழங்குகிறார். ஒவ்வொரு நபரின் மாறிவரும் எண்ணங்களை கண்காணித்து, அவர்களுக்கு ஆறுதலையும் அறிவுறுத்தலையும் அளித்து, அவர்களை வழிநடத்தி அவர்களை பிரகாசிக்கச் செய்கிறார். தேவன் மனிதகுலத்திற்குச் செய்த எல்லா விஷயங்களையும், அவற்றுக்காக அவர் செலுத்திய விலைகிரையங்களையும் கருத்தில் கொண்டு, வேதாகமத்தில் ஒரு பத்தியைக் கண்டுபிடிக்க முடியுமா அல்லது தேவன் இதுவரை கூறியுள்ள அதாவது மனிதனிடமிருந்து எதையாவது தேவன் கோருவார் என்று தெளிவாகக் கூறியுள்ள எதையாகிலும் பார்க்க முடியுமா? இல்லை! மாறாக, தேவனுடைய சிந்தனையை ஜனங்கள் எவ்வாறு புறக்கணித்தாலும், அவர் அவர்களுக்காகத் தயாரித்த அழகான இலக்கை அவர்கள் அடைய முடியும் என்பதற்காக அவர் இன்னும் பன்மடங்காக மனிதகுலத்தை வழிநடத்துகிறார், மனிதகுலத்திற்குப் பன்மடங்காக வழங்குகிறார் மற்றும் தேவனுடைய வழியைப் பின்பற்ற அவர்களுக்கு உதவுகிறார். தேவனைப் பொறுத்தவரையில், அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதும், அவருடைய கிருபையும், தயவும், அவருடைய பலன்களும், அவரை நேசிப்பவர்களுக்கும் பின்பற்றுபவர்களுக்கும் ஒதுக்கீடு இல்லாமல் வழங்கப்படும். ஆனால் எந்தவொரு நபருக்கும் தாம் அனுபவித்த வேதனையையோ தம்முடைய மனநிலையையோ அவர் ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. தன்னைப் பற்றி அக்கறையற்றவர்களாக இருப்பதையோ அவருடைய சித்தத்தை அறியாததையோ குறித்து அவர் ஒருவரைக் குறித்தும் ஒருபோதும் புகார் செய்வதில்லை. இவை அனைத்தையும் அவர் மௌனமாக தாங்குகிறார் மற்றும் மனிதகுலம் புரிந்து கொள்ளக்கூடிய நாளுக்காக காத்திருக்கிறார்.

இந்த விஷயங்களை நான் ஏன் இங்கே சொல்கிறேன்? நான் சொன்ன விஷயங்களில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? தேவனுடைய சாராம்சத்திலும் மனநிலையிலும் மிகவும் எளிதாக கவனிக்கத் தவறுகின்ற ஒன்று இருக்கிறது. அதனை தேவன் மட்டுமே கொண்டுள்ளார் மற்றும் பெரிய மனிதர்கள், நல்ல மனிதர்கள் அல்லது அவர்களுடைய கற்பனையின் தேவன் உட்பட எந்தவொரு நபரும் அதனைக் கொண்டிருக்கவில்லை என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். இந்த விஷயம் என்னவாக இருக்கிறது? அது தேவனுடைய தன்னலமற்ற தன்மை. தன்னலமற்ற தன்மையைப் பற்றி பேசும்போது, உன்னையும் மிகவும் தன்னலமற்றவன் என்று நீ நினைக்கலாம். ஏனென்றால் உன் பிள்ளைகள் என்று வரும்போது, நீ அவர்களுடன் ஒருபோதும் பேரம் பேசவோ, சண்டையிடவோ மாட்டாய் அல்லது உன் பெற்றோர் என்று வரும்போது, உன்னையும் மிகவும் தன்னலமற்றவன் என்று நீ நினைக்கிறாய். நீ என்ன நினைக்கிறாய் என்பது முக்கியமல்ல, குறைந்தபட்சம் உன்னிடம் “தன்னலமற்ற” என்ற வார்த்தையின் ஒரு கருத்து இருக்கிறது என்றும் அதை ஒரு நேர்மறையான வார்த்தையாகவும் நீ கருதுகிறாய் மற்றும் தன்னலமற்ற மனிதனாக இருப்பது மிகவும் உன்னதமானது என்றும் நீ கருதுகிறாய். நீ தன்னலமற்றவனாக இருக்கும்போது, நீ உன்னை மிகவும் உயர்வாக மதிக்கிறாய். ஆனால் ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் மற்றும் அவருடைய கிரியை என இவற்றில் உள்ள எல்லாவற்றிலும் தேவனுடைய தன்னலமற்ற தன்மையைக் காணக்கூடியவர்கள் எவரும் இல்லை. ஏன் அது அவ்வாறு இருக்கிறது? ஏனென்றால் மனிதன் மிகப்பெரிய சுயநலவாதி! நான் ஏன் அவ்வாறு சொல்கிறேன்? மனிதகுலம் ஒரு பொருள் மயமான உலகில் ஜீவிக்கிறது. நீ தேவனைப் பின்பற்றலாம், ஆனால் தேவன் உனக்கு எவ்வாறு வழங்குகிறார், உன்னை எவ்வாறு நேசிக்கிறார் மற்றும் எவ்வாறு உனக்காக அக்கறை காட்டுகிறார் என்பதை நீ ஒருபோதும் பார்க்கவில்லை அல்லது கிரகிக்கவில்லை. எனவே, நீ எதைப் பார்க்கிறாய்? உன்னை நேசிக்கும் அல்லது உன்னிடம் அதீத அன்பு கொண்டிருக்கும் உன் இரத்த உறவினர்களை நீ காண்கிறாய். உன் மாம்சத்திற்கு நன்மை பயக்கும் விஷயங்களை நீ காண்கிறாய். ஜனங்களைப் பற்றியும் நீ விரும்பும் விஷயங்களைப் பற்றியும் கவலைப்படுகிறாய். அது மனிதனுடைய தன்னலமற்ற தன்மை என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், அத்தகைய “தன்னலமற்ற” ஜனங்கள், தங்களுக்கு உயிரைக் கொடுக்கும் தேவனைப் பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. தேவனுக்கு எதிர்மாறாக, மனிதனுடைய தன்னலமற்ற தன்மை சுயநலமாகவும் வெறுக்கத்தக்கதாகவும் மாறுகிறது. மனிதன் நம்புகிற தன்னலமற்ற தன்மை, வெறுமையானது மற்றும் நம்பத்தகாதது, கலப்படம் செய்யப்பட்டது, தேவனுடன் பொருந்தாதது மற்றும் தேவனுடன் தொடர்பில்லாதது ஆகும். மனிதனுடைய தன்னலமற்ற தன்மை தனக்கெனவே இருக்கிறது. அதே நேரத்தில் தேவனுடைய தன்னலமற்ற தன்மை அவருடைய சாராம்சத்தின் உண்மையான வெளிப்பாடாகும். தேவனுடைய தன்னலமற்ற தன்மையால்தான் மனிதனுக்கு அவரிடமிருந்து தொடர்ந்து வழங்கப்படுகிறது. நான் இன்று பேசும் இந்த தலைப்பால் நீங்கள் பெரிதும் பாதிக்கப்படாமல் இருக்கலாம், வெறுமனே ஒப்புதலுடன் தலையசைக்கலாம், ஆனால் தேவனுடைய இருதயத்தை உன் இருதயத்தில் கிரகிக்க முயற்சிக்கும்போது, நீ அறியாமல் இதைக் கண்டுபிடிப்பாய்: இந்த உலகில் எல்லா ஜனங்களிடையேயும், விஷயங்களிலும், காரியங்களிலும், தேவனுடைய தன்னலமற்ற தன்மை மட்டுமே உண்மையானது மற்றும் உறுதியானது என்பதை நீ உணர முடியும். ஏனென்றால் உன்னிடமான தேவனுடைய அன்பு மட்டுமே நிபந்தனையற்றது மற்றும் களங்கமற்றது. தேவனைத் தவிர, வேறு எவருடைய தன்னலமற்ற தன்மை என அழைக்கப்படுகிறதும், மேலோட்டமானது மற்றும் நம்பத்தகாதது ஆகும். அது ஒரு நோக்கத்தை, சில காரணங்களைக் கொண்டுள்ளது, ஒரு பரிமாற்றத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதனை சோதனைக்கு உட்படுத்த முடியாது. அது இழிவானது என்றும் வெறுக்கத்தக்கது என்றும் நீங்கள் கூறலாம். இந்த வார்த்தைகளுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 30

தேவன் மனிதனுடனான உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லைப் பயன்படுத்துகிறார் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆதி. 9:11-13  இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

நோவாவின் கதையின் முடிவில், அந்த நேரத்தில் தேவன் தனது உணர்வுகளை வெளிப்படுத்த ஓர் அசாதாரண முறையைப் பயன்படுத்தினார் என்பதைக் காண்கிறோம். அது மிகவும் சிறப்பு வாய்ந்த முறையாகும்: அது, ஜலப்பிரளயத்தால் தேவனுடைய உலக அழிவின் முடிவை அறிவிக்கும் ஓர் உடன்படிக்கையை மனிதனுடன் செய்து கொள்ளும் முறையாகும். மேலோட்டமாகப் பார்க்கையில், ஓர் உடன்படிக்கை செய்வது மிகவும் சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். இரு பிரிவினர்களையும் பிணைக்க மற்றும் அவர்களுடைய உடன்பாட்டை மீறுவதைத் தடுப்பதற்கு வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை, இதனால் அவர்கள் இருவரது நலன்களையும் பாதுகாக்க முடியும். வடிவத்தில், அது மிகவும் சாதாரணமான விஷயம் என்றாலும் இந்தக் காரியத்தைச் செய்வதில் தேவனுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் மற்றும் எண்ணங்களிலிருந்து பார்த்தால், அது தேவனுடைய மனநிலை மற்றும் மனநிலையின் உண்மையான வெளிப்பாடு ஆகும். நீ இந்த வார்த்தைகளை ஒதுக்கி, அவற்றைப் புறக்கணித்தால், நான் ஒருபோதும் விஷயங்களின் சத்தியத்தை உங்களுக்குச் சொல்லவில்லை என்றால், தேவனுடைய எண்ணத்தை மனிதகுலம் ஒருபோதும் அறியாது. இந்த உடன்படிக்கையை அவர் செய்தபோது உன் கற்பனையில் தேவன் புன்னகைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது அவருடைய வெளிப்பாடு தீவிரமானதாக இருக்கலாம், ஆனால் தேவன் இதைக் கொண்டிருப்பார் என ஜனங்கள் எதைக் கற்பனை செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவரது தனிமை ஒருபுறமிருக்க, தேவனுடைய இருதயத்தையோ அவருடைய வேதனையையோ எவரும் பார்க்க முடியாது. தேவன் அவர்களை நம்பும்படியாகச் செய்ய அல்லது தேவனுடைய நம்பிக்கைக்குத் தகுதியுடையவராக இருக்க யாராலும் கூடாது அல்லது தேவன் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் மனிதனாகவோ அவருடைய வலியை பகிரும் மனிதனாகவோ இருக்க முடியாது. அதனால்தான் தேவனுக்கு அதுபோன்ற காரியத்தைத் தவிர வேறு வழியில்லை. மேலோட்டமாகப் பார்க்கையில், மனிதகுலத்திடமிருந்து விடைபெறுவதில் தேவன் ஒரு சுலபமான காரியத்தைச் செய்தார். கடந்த கால பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதோடு, ஜலப்பிரளயத்தால் உலகத்தை அழித்ததை ஒரு பரிபூரணமான முடிவுக்கு கொண்டு வந்தார். இருப்பினும், தேவன் இந்த தருணத்திலிருந்து வலியை தனது இருதயத்திற்குள் ஆழமாகப் புதைத்தார். தேவன் நம்புவதற்கு எவரும் இல்லாத நேரத்தில், அவர் மனிதகுலத்துடன் ஓர் உடன்படிக்கைச் செய்தார். அவர் மீண்டும் ஜலப்பிரளயத்தால் உலகை அழிப்பதில்லை என்று சொன்னார். ஒரு வானவில் தோன்றியபோது, அதுபோன்ற ஒரு விஷயம் நடந்ததை ஜனங்களுக்கு நினைவூட்டுவதாகவும், தீமையிலிருந்து விலகி இருக்குமாறு எச்சரிப்பதுமாக அது இருந்தது. அத்தகைய வேதனையான நிலையில் கூட, தேவன் மனிதகுலத்தைப் பற்றி மறக்கவில்லை மற்றும் இன்னும் அதிகமாக அவர்கள் மீது அக்கறை காட்டுகிறார். இது தேவனின் அன்பு மற்றும் தன்னலமற்ற தன்மை இல்லையா? ஆனால் ஜனங்கள் கஷ்டப்படுகையில் அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தேவன் அவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படும் நேரம் அதுவல்லவா? அதுபோன்ற சமயங்களில், தேவன் அவர்களை ஆறுதல்படுத்த முடியும் என்பதற்காக ஜனங்கள் எப்போதும் அவரை இழுத்துச் செல்கிறார்கள். நேரம் எதுவாக இருந்தாலும், தேவன் ஒருபோதும் ஜனங்களை விட்டுவிட மாட்டார் மற்றும் ஜனங்கள் தங்கள் இக்கட்டான நிலைகளில் இருந்து வெளியேறி வெளிச்சத்தில் ஜீவிக்க எப்போதும் அவர் உதவுவார். தேவன் மனிதகுலத்திற்கு அவ்வாறு வழங்கினாலும், மனிதனுடைய இருதயத்தில் தேவன் ஓர் இனிமையான மாத்திரை மற்றும் ஆறுதலளிக்கும் மருந்து பானம் தவிர வேறொன்றுமில்லை. தேவன் துன்பப்படுகையில், அவருடைய இருதயம் காயமடையும் போது, ஓர் உயிருள்ள ஜீவன் அல்லது யாரேனும் ஒரு மனிதன் அவருடன் இருப்பது அல்லது அவரை ஆறுதலடையச் செய்வது சந்தேகத்திற்கு இடமின்றி தேவனுக்கு ஓர் ஆடம்பரமான விருப்பமாக இருக்கும். மனிதன் ஒருபோதும் தேவனுடைய உணர்வுகளுக்கு கவனம் செலுத்துவதில்லை. ஆகவே, தன்னை ஆறுதல்படுத்தக்கூடிய ஒருவன் இருக்க வேண்டும் என்று தேவன் ஒருபோதும் கேட்கவோ எதிர்பார்க்கவோ இல்லை. அவர் தனது மனநிலையை வெளிப்படுத்த தனது சொந்த முறைகளைப் பயன்படுத்துகிறார். தேவன் சில துன்பங்களைச் சந்திப்பது ஒரு பெரிய கஷ்டம் என்று ஜனங்கள் நினைக்கவில்லை. ஆனால் உண்மையிலேயே நீ தேவனைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது, தேவனுடைய ஒவ்வொரு செயலிலும் தேவனுடைய ஊக்கமான நோக்கங்களை உண்மையாகக் கிரகிக்கும்போது, தேவனுடைய மகத்துவத்தையும் அவருடைய தன்னலமற்ற தன்மையையும் உன்னால் உணர முடியும். தேவன் வானவில்லைப் பயன்படுத்தி மனிதர்களுடன் ஓர் உடன்படிக்கை செய்திருந்தாலும், அவர் ஏன் இதைச் செய்தார் என்று—ஏன் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தினார் என்று—அதாவது தனது உண்மையான எண்ணங்களை அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஏனென்றால், தேவன் தனது சொந்தக் கரங்களால் சிருஷ்டித்த மனிதகுலத்தின் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ள எவரும் இல்லை மற்றும் அவர் மனிதகுலத்தை அழித்தபோது அவருடைய இருதயம் எவ்வளவு வேதனையை அனுபவித்தது என்பதைக் கிரகிக்கக்கூடியவராகவும் எவரும் இல்லை. ஆகையால், அவர் எப்படி உணர்ந்தார் என்பதை அவர் ஜனங்களுக்குச் சொன்னாலும், அவர்களால் இந்த நம்பிக்கையை மேற்கொள்ள முடியாது. வேதனையில் இருந்தபோதிலும், அவர் தனது கிரியையின் அடுத்த கட்டத்துடன் தொடர்கிறார். தேவன் எப்பொழுதும் தனது சிறந்த பக்கத்தையும் சிறந்த விஷயங்களையும் மனிதகுலத்திற்குக் கொடுக்கிறார். இந்த துன்பங்களை தேவன் ஒருபோதும் வெளிப்படையாக வெளிப்படுத்துவதில்லை. மாறாக, அவர் அவர்களைச் சகித்துக்கொண்டு மௌனமாக காத்திருக்கிறார். தேவனுடைய சகிப்புத்தன்மை குளிர்ச்சியானதோ உணர்ச்சியற்றதோ உதவியற்றதோ அல்ல, பலவீனத்தின் அறிகுறியும் அல்ல. மாறாக, தேவனுடைய அன்பும் சாராம்சமும் எப்போதும் தன்னலமற்றவை. அது அவருடைய சாராம்சம் மற்றும் மனநிலையின் இயல்பான வெளிப்பாடு மற்றும் உண்மையான சிருஷ்டிகராக அவருடைய அடையாளத்தின் உண்மையான உருவகம் ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

முந்தைய: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள்

அடுத்த: தேவனை அறிதல் II

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக