XI. போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள்

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 580

ஒரு மின்னலின் பிரகாசத்தில், ஒவ்வொரு மிருகமும் அதன் உண்மையான வடிவத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. அவ்வாறே, என் வெளிச்சத்தால் ஒளிரூட்டப்பட்ட மனுஷன், முன்பு அவனிடமிருந்த புனிதத்தை மீண்டும் பெற்றிருக்கிறான். ஓ, சீர்கெட்ட பழைய உலகமே! கடைசியில், நீ அசுத்தமான தண்ணீரில் கவிழ்ந்து, நீரினுள் மூழ்கி, சேற்றோடு சேற்றாக கரைந்துவிட்டாய்! ஓ, என்னால் படைக்கப்பட்ட சகல மனுஷர்களே! கடைசியில் வெளிச்சத்தின் உதவியோடு நீங்கள் மீண்டும் உயிரோடு வந்து, ஜீவிதத்திற்கான அஸ்திபாரத்தைக் கண்டுபிடித்து, சேற்றில் போராடுவதை நிறுத்திவிட்டீர்கள்! ஓ, நான் என் கைகளில் வைத்திருக்கும் படைப்பின் எண்ணற்ற விஷயங்களே! என் வார்த்தைகளின் மூலம் நீங்கள் எவ்வாறு புதுப்பிக்க முடியாது போகும்? வெளிச்சத்தினால் உங்களின் செயல்பாடுகளுக்கு எப்படி உயிர் கொடுக்க முடியாது போகும்? பூமி இனி மரண அசைவில்லாமலும் அமைதியாகவும் இருப்பதில்லை, வானம் இனி பாழடைந்ததாகவும் சோகமாகவும் இருப்பதில்லை. வானமும் பூமியும் இனி வெற்றிடத்தால் பிரிக்கப்படாது, ஒன்றாக ஒன்றிணைக்கப்படுகின்றன, மீண்டும் ஒருபோதும் அழிக்கப்படாது. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், இந்த மன மகிழ்ச்சிமிக்க தருணத்தில், என் நீதியும் என் பரிசுத்தமும் பிரபஞ்சம் முழுவதும் விரிவடைந்துள்ளன, மேலும் எல்லா மனுஷர்களும் அவற்றை நிறுத்தாமல் புகழ்கிறார்கள். வானத்தில் இருக்கும் நகரங்கள் மகிழ்ச்சியுடன் சிரிக்கின்றன, பூமியின் ராஜ்யம் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது. இந்த நேரத்தில், யார் மகிழ்ச்சியடையவில்லை, யார் அழவில்லை? பூமி அதன் ஆதிகால நிலையில் வானத்திற்கு சொந்தமானது, வானம் பூமியுடன் ஒன்றிணைந்துள்ளது. மனுஷனே வானத்தையும் பூமியையும் ஒன்றிணைக்கும் நூல், மனுஷனின் புனிதத்தன்மை காரணமாக, மனுஷன் புதுப்பிக்கப்பட்டதன் காரணமாக, வானம் இனி பூமியிலிருந்து மறைக்கப்படுவதில்லை, பூமி இனி வானத்தை நோக்கி அமைதியாக இருப்பதில்லை. மனுஷரின் முகங்களில் மனநிறைவு கொண்ட புன்னகை என்ற மாலை அணிவிக்கப்படுகின்றன, மேலும் அவர்களின் எல்லா இருதயங்களிலும் மறைந்திருப்பது எல்லைகள் எதுவும் தெரியாத இனிமையான விஷயங்களாகும். மனுஷன் மற்றொரு மனுஷனுடன் சண்டையிடுவதில்லை, மனுஷர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதும் இல்லை. என் வெளிச்சத்தில், மற்றவர்களுடன் நிம்மதியாக வாழாதவர்கள் யாராவது உண்டா? என் நாளில், என் நாமத்தை இழிவுபடுத்தும் நபர் யாராவது இருக்கிறார்களா? எல்லா மனுஷர்களும் தங்கள் பயபக்தியான பார்வையை என்னை நோக்கி செலுத்துகிறார்கள், அவர்கள் இருதயங்களில் என்னிடம் ரகசியமாகக் கூக்குரலிடுகிறார்கள். மனுஷரின் ஒவ்வொரு செய்கையையும் நான் தேடினேன்: சுத்தமாக்கப்பட்ட மனுஷர்களில், எனக்கு கீழ்ப்படியாதவர்கள் யாரும் இல்லை, என்னை நியாயந்தீர்ப்பவர்கள் யாரும் இல்லை. எல்லா மனுஷர்களும் என் நியாயத்தால் நிரப்பப்பட்டுள்ளனர். எல்லா மனுஷர்களும் என்னை அறிந்துகொண்டு வருகிறார்கள், என்னிடம் நெருங்கி வருகிறார்கள், என்னை வணங்குகிறார்கள். நான் மனுஷனின் ஆவிக்குள் நிலைத்திருக்கிறேன், மனுஷனின் கண்களுக்கு மிக உயர்ந்த உச்சத்திற்கு உயர்ந்தவராக தெரிகிறேன், மனுஷனின் நரம்புகளில் இரத்தத்தின் வழியே பாய்கிறேன். மனுஷனின் இதயத்தில் இருக்கும் மகிழ்ச்சியான உயர்ந்த எண்ணம் பூமியின் முகத்தில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் நிரப்புகிறது; காற்று விறுவிறுப்பாகவும், புதியதாகவும் இருக்கிறது; அடர்த்தியான மூடுபனி இனி நிலப்பரப்பை போர்வை போல் மூடாது, சூரியன் பிரகாசமாக பிரகாசிக்கிறது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 18” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 581

ராஜ்யம் மனுஷருக்கு மத்தியில் விரிவடைகிறது, மனுஷருக்கு மத்தியில் உருவாகிறது, மனுஷருக்கு மத்தியில் நிற்கிறது; என் ராஜ்யத்தை அழிக்க எந்த சக்தியும் இல்லை. இன்றைய ராஜ்யத்தில் இருக்கும் என் ஜனங்களில், உங்களில் யார் மனுஷர்களுக்கு இடையே மனுஷராக இல்லை? உங்களில் யார் மனுஷ நிலைக்கு வெளியே உள்ளீர்கள்? எனது புதிய தொடக்கப் புள்ளி ஜனங்களுக்கு அறிவிக்கப்படும் போது, மனுஷர்கள் எவ்வாறு பிரதிபலிப்பர்? நீங்கள் மனுஷர்களின் நிலையை உங்கள் கண்களால் பார்த்திருக்கிறீர்கள்; நிச்சயமாக நீங்கள் இந்த உலகில் என்றென்றும் நிலைத்திருக்கும் நம்பிக்கையை இன்னும் கொண்டிருக்கவில்லையா? நான் இப்போது என் ஜனங்களிடையே நடந்து கொண்டிருக்கிறேன், நான் அவர்களுக்கு மத்தியில் வாழ்கிறேன். இன்று, என்மீது உண்மையான அன்பு செலுத்துபவர்கள் பாக்கியவான்கள். எனக்கு கீழ்படிகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிச்சயமாக என் ராஜ்யத்தில் நிலைத்திருப்பார்கள். என்னை அறிந்தவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிச்சயமாக என் ராஜ்யத்தில் அதிகாரம் செலுத்துவார்கள். என்னைத் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிச்சயமாக சாத்தானின் கட்டுகளிலிருந்து தப்பித்து என் ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள். தங்களைத் துறக்கக் கூடியவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிச்சயமாக என் வசம் நுழைந்து என் ராஜ்யத்தின் செல்வத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள். எனக்காக ஓடுபவர்களை நான் நினைவில் கொள்வேன், எனக்காக செலவு செய்பவர்களை நான் மகிழ்ச்சியுடன் அரவணைப்பேன், எனக்கு காணிக்கை கொடுப்பவர்களுக்கு நான் இன்பங்களைத் தருவேன். என் வார்த்தைகளில் இன்பத்தைக் கண்டவர்களை நான் ஆசீர்வதிப்பேன்; அவர்கள் நிச்சயமாக என் ராஜ்யத்தின் உத்திரத்தை தாங்கி நிற்கும் தூண்களாக இருப்பர், நிச்சயமாக அவர்களுக்கு என் வீட்டில் ஏராளமான நன்மைகள் இருக்கும், அவர்களுடன் யாரையும் ஒப்பிட முடியாது. உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களை நீங்கள் எப்போதாவது ஏற்றுக்கொண்டதுண்டா? உங்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நீங்கள் எப்போதாவது தேடியிருக்கிறீர்களா? நீங்கள் நிச்சயமாக, என் வெளிச்சத்தின் வழிகாட்டுதலின் கீழ் இருளினினுடைய ஆதிக்கங்களின் கழுத்தை நெரிப்பீர்கள். இருளின் நடுவே, உங்களுக்கு வழிகாட்டும் வெளிச்சத்தை நீங்கள் நிச்சயமாக இழக்க மாட்டீர்கள். நீங்கள் நிச்சயமாக எல்லா சிருஷ்டிகளுக்கும் எஜமானராக இருப்பீர்கள். நீங்கள் நிச்சயமாக சாத்தானின் முன்னே ஜெயிப்பவராக இருப்பீர்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ராஜ்யத்தின் வீழ்ச்சியில், என் வெற்றிக்கு சாட்சியம் அளிக்க, எண்ணற்ற கூட்டங்களுக்கு மத்தியில் நீங்கள் நிச்சயமாக எழுந்து நிற்பீர்கள். நீங்கள் நிச்சயமாக சீனீம் தேசத்தில் உறுதியாகவும் அசையாமலும் நிற்பீர்கள். நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களின் மூலம், நீங்கள் என் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள், நிச்சயமாக என் மகிமையை முழு பிரபஞ்சத்திலும் பரப்புவீர்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 19” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 582

என் வார்த்தைகள் முழுமையடைந்ததும், ராஜ்யம் படிப்படியாக பூமியில் உருவாகிறது, மனுஷன் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறான், இதனால் என் இதயத்தில் நிற்கும் ராஜ்யம் பூமியில் நிலைநாட்டப்படுகிறது. ராஜ்யத்தில், தேவனுடைய ஜனங்கள் அனைவரும் சாதாரண மனுஷனின் வாழ்க்கையை மீட்டுக்கொள்கிறார்கள். உறைபனி குளிர்காலம் சென்றுவிட்டது, அதற்கு பதிலாக வசந்தகால நகரங்களின் உலகமாக மாற்றப்படுகிறது, அங்கு வசந்தம் ஆண்டு முழுவதும் நீடிக்கும். மனுஷனின் இருண்ட, பரிதாபகரமான உலகத்தை இனி ஜனங்கள் எதிர்கொள்ள மாட்டார்கள், இனி அவர்கள் மனுஷ உலகின் குளிர்ச்சியைத் தாங்க மாட்டார்கள். ஜனங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில்லை; நாடுகள் ஒன்றோடொன்று போருக்குச் செல்வதில்லை; இனி படுகொலைகளும், படுகொலைகளிலிருந்து பாயும் ரத்தமும் இருப்பதில்லை; எல்லா நிலங்களும் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன, எல்லா இடங்களிலும் மனுஷர்களுக்கு இடையே அரவணைப்பு இருக்கிறது. நான் உலகம் முழுவதும் நகர்கிறேன், என் சிங்காசனத்தில் இருந்து நான் ரசிக்கிறேன், நான் நட்சத்திரங்களுக்கிடையில் வாழ்கிறேன். தேவதூதர்கள் எனக்கு புதிய பாடல்களையும், புதிய நடனங்களையும் வழங்குகிறார்கள். இனி அவர்களின் சொந்த பலவீனம் அவர்களின் முகத்தில் கண்ணீரை வரவழைக்காது. எனக்கு முன்பாக, தேவதூதர்கள் அழுகிற சத்தத்தை நான் இனி கேட்கவில்லை, இனி யாரும் என்னிடம் கஷ்டப்படுவதைப் பற்றி புகார் செய்வதில்லை. இன்று, நீங்கள் அனைவரும் எனக்கு முன்பு ஜீவித்திருக்கிறீர்கள்; நாளை, நீங்கள் அனைவரும் என் ராஜ்யத்தில் இருப்பீர்கள். இது மனுஷனுக்கு நான் அளிக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம் அல்லவா? இன்று நீங்கள் செலுத்தும் விலையின் காரணமாக, நீங்கள் எதிர்காலத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள், என் மகிமையின் மத்தியில் வாழ்வீர்கள். என் ஆவியின் பொருளுடன் நீங்கள் இன்னும் ஈடுபட விரும்பவில்லையா? நீங்கள் இன்னும் உங்களையே கொல்ல விரும்புகிறீர்களா? ஜனங்கள் தங்களுக்கு புலப்படும் வாக்குதத்தங்களை தொடர தயாராக இருக்கிறார்கள், அவை குறுகிய காலத்திற்கானதாக இருந்தாலும் கூட; நித்திய காலத்திற்கு நீடிக்கும் என்றாலும், நாளைய வாக்குதத்தங்களை ஏற்க யாரும் தயாராக இல்லை. மனுஷனுக்குத் தெரியும் காரியங்கள் நான் நிர்மூலமாக்கக்கூடிய காரியங்கள், மனுஷனுக்கு அசாத்தியமான காரியங்கள் நான் நிறைவேற்றக்கூடிய காரியங்கள். தேவனுக்கும் மனுஷனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 20” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 583

என் வெளிச்சத்தில், ஜனங்கள் மீண்டும் ஒளியைப் பார்க்கிறார்கள். என் வார்த்தையில், ஜனங்கள் தாங்கள் அனுபவிக்கும் விஷயங்களைக் கண்டுகொள்கிறார்கள். நான் கிழக்கிலிருந்து வந்திருக்கிறேன், நான் கிழக்கைச் சேர்ந்தவன். என் மகிமை பிரகாசிக்கும்போது, சகல தேசங்களும் ஒளிர்கின்றன, அனைத்தும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன, ஒன்று கூட இருளில் மிஞ்சியிருப்பதில்லை. ராஜ்யத்தில், தேவனின் ஜனங்கள் தேவனோடு ஜீவிக்கும் ஜீவிதம் அளவிட முடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜனங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட ஜீவிதங்களில் நீரானது மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது, மலைகள் ஜனங்களுடன் இணைந்து என் மிகுதியைக் கண்டு ரசிக்கின்றன. எல்லா மனுஷரும் என் ராஜ்யத்தில் பாடுபட்டு, கடினமாக உழைக்கிறார்கள், தங்கள் விசுவாசத்தைக் காட்டுகிறார்கள். ராஜ்யத்தில், இனி கிளர்ச்சி இருப்பதில்லை, எதிர்ப்பும் இருப்பதில்லை; வானங்களும் பூமியும் ஒன்றோடொன்று சார்ந்திருக்கின்றன, ஜீவிதத்தின் இனிமையான வாழ்த்துக்கள் மூலம் மனுஷனும் நானும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துகொண்டு, ஆழமான உணர்வுகளுக்குள் நெருங்கி வருகிறோம். இந்த நேரத்தில், நான் பரலோகத்தில் என் ஜீவிதத்தை முறையாகத் தொடங்குகிறேன். சாத்தானின் தொந்தரவு இனி இல்லை, மேலும் ஜனங்களும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார்கள். பிரபஞ்சம் முழுவதும், நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் என் மகிமைக்குள் வாழ்கிறார்கள், ஜனங்களிடையே வாழும் ஜனங்களாக அல்ல, தேவனுடன் வாழும் ஜனங்களாக ஒப்பற்ற வகையில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். மனுஷகுலம் முழுவதும் சாத்தானின் சீர்கேட்டைக் கடந்து, ஜீவிதத்தின் கசப்புத் தன்மையையும் இனிமையையும் வண்டல் வரை அருந்தியிருக்கிறார்கள். இப்போது, என் வெளிச்சத்தில் வாழ்ந்துகொண்டு, எவ்வாறு ஒருவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது? இந்த அழகான தருணத்தை எப்படி ஒருவனால் லேசாகக் கைவிட்டு அதை நழுவ விட முடியும்? ஆம் ஜனங்களே! உங்கள் இருதயங்களில் பாடலைப் பாடுங்கள், எனக்காக மகிழ்ச்சியுடன் நடனமாடுங்கள்! உங்கள் நேர்மையான இருதயங்களை உயர்த்தி, அவற்றை எனக்குக் காணிக்கையாகக் கொடுங்கள்! உங்கள் முரசுகளைக் கொட்டி, எனக்காக மகிழ்ச்சியுடன் அவற்றை வாசியுங்கள்! பிரபஞ்சம் முழுமைக்கும் நான் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன்! ஜனங்களுக்கு என் மகிமையான முகத்தை வெளிப்படுத்துகிறேன்! நான் உரத்த குரலில் கூப்பிடுவேன்! நான் பிரபஞ்சத்தையும் தாண்டுவேன்! ஏற்கனவே நான் ஜனங்கள் மத்தியில் ஆட்சி செய்கிறேன்! ஜனங்களாலே நான் உயர்த்தப்பட்டேன்! நான் மேலே நீல வானத்தில் நகர்கிறேன், ஜனங்கள் என்னுடன் நடந்து செல்கிறார்கள். நான் ஜனங்களிடையே நடக்கிறேன், என் ஜனங்கள் என்னைச் சூழ்ந்து கொள்கிறார்கள்! ஜனங்களின் இருதயங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன, அவர்களது பாடல்கள் பிரபஞ்சத்தை உலுக்கி, வானத்தை அதிரச்செய்கின்றன! பிரபஞ்சம் இனியும் மூடுபனிக்குள் மறைந்திருக்காது; மண் இருக்காது, கழிவுநீர் சேகரிப்பும் இருக்காது. பிரபஞ்சத்தின் பரிசுத்த ஜனங்களே! எனது கண்காணிப்பின் கீழ் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டுகிறீர்கள். நீங்கள் அசுத்தத்தால் மூடப்பட்ட மனுஷர் அல்ல, ஆனால் பச்சை மாணிக்கக் கல் போல தூய்மையான பரிசுத்தவான்கள், நீங்கள் அனைவருமே என் அன்புக்குரியவர்கள், நீங்கள் அனைவருமே என் மகிழ்ச்சிக்குரியவர்கள்! சகலமும் மீண்டும் உயிர்த்தெழுகின்றன! பரிசுத்தவான்கள் அனைவரும் பரலோகத்தில் எனக்கு ஊழியம் செய்யத் திரும்பி வந்திருக்கிறார்கள், என் அன்பான அரவணைப்பிற்குள் நுழைந்திருக்கிறார்கள், அவர்கள் இனியும் அழப்போவதில்லை, கவலைப்படப்போவதில்லை, அவர்கள் தங்களை என்னிடம் ஒப்புக்கொடுக்கிறார்கள், என் வீட்டிற்குத் திரும்பி வருகிறார்கள், தங்கள் தாயகத்தில் அவர்கள் என்னை முடிவில்லாமல் நேசிப்பார்கள்! எல்லா நித்தியத்திலும் இது ஒருபோதும் மாறாது! துக்கம் எங்கே! கண்ணீர் எங்கே! மாம்சம் எங்கே! பூமி ஒழிந்துபோகிறது, ஆனால் வானம் என்றென்றும் இருக்கிறது. நான் சகல ஜனங்களுக்கும் தோன்றுகிறேன், சகல ஜனங்களும் என்னைப் புகழ்கிறார்கள். இந்த ஜீவிதம், இந்த அழகு, ஆதியில் இருந்து அந்தம் வரை மாறப்போவதில்லை. இதுதான் ராஜ்யத்தின் ஜீவிதம்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “சகல ஜனங்களே, களிப்படையுங்கள்!” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 584

நான் உங்கள் மத்தியில் அநேகக் கிரியைகளைச் செய்திருக்கிறேன் மேலும், நிச்சயமாகவே பல கூற்றுக்களையும் கூறியிருக்கின்றேன். இருந்தும் என் வார்த்தைகளும், என் கிரியைகளும் இந்தக் கடைசி நாட்களில் என் கிரியைகளுக்கான நோக்கத்தை முற்றிலுமாக நிறைவேற்றவில்லை என்கிற உணர்வு ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. இந்தக் கடைசி நாட்களில் என் கிரியைகள் ஒரு குறிப்பிட்ட நபருக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களுக்காகவோ மாத்திரம் அல்ல, மாறாக என் உள்ளார்ந்த மனநிலையை வெளிப்படுத்தவே செய்யப்படுகின்றன. இருந்தும் எண்ணற்ற காரணங்களுக்காகவும், அதாவது, நேரமின்மை அல்லது தொடர்ந்த வேலை திட்டங்களாலும் என்னிடமிருந்து என் மனநிலையைப் பற்றி எந்த அறிவையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் நான் என் புதிய திட்டத்தையும் என் இறுதி கிரியையும் தொடங்கி, எனது கிரியையில் ஒரு புதிய பக்கத்தைத் திறக்கிறேன், இதனால் என்னைக் காண்பவர்கள் எல்லோரும் நான் ஜீவிப்பதன் நிமித்தம் தங்கள் மார்புகளில் அடித்துக்கொண்டு முடிவின்றி அழுது புலம்புவார்கள். இது ஏனென்றால் நான் இந்த உலகில் மனிதகுலத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவந்திருக்கிறேன், மேலும் இந்த நேரத்திலிருந்து என் மனநிலையையும் முழு மனிதகுலத்திற்கும் முன்பாக வைப்பேன், அப்பொழுது என்னை அறிந்தவர்கள் மற்றும் அறியாதவர்கள் அனைவரின் கண்களுக்கும் நான் விருந்தாவேன். நான் மெய்யாகவே இந்த மனு உலகத்திற்கும் எல்லாம் பலுகிப்பெருகுகிறதான நிலத்திற்கும் வந்திருக்கிறேன் என்றும் எல்லாக் கண்களும் காணும். இதுவே என் திட்டமும் நான் மனிதகுலத்தைப் படைத்ததுமுதல் எனது ஒரே “ஒப்புதல் வாக்காகவும்” இருக்கின்றது. என்னுடைய கோல் மீண்டும் மனிதகுலத்திற்கு, குறிப்பாக எனக்கு விரோதமாக இருக்கும் அனைவருக்கும் சமீபமாக அழுத்தப்பட்டிருப்பதால், நீங்கள் என்னுடைய ஒவ்வொரு அசைவிற்கும் உங்கள் சிதறாத கவனத்தைத் தரலாம்.

வானதி வானங்களோடும் கூட இணைந்து, நான் செய்யவேண்டிய காரியத்தைத் தொடங்கினேன். எனவே நான் திரளான ஜனங்களிடத்திற்குள்ளாக உட்புகுந்து, யாரும் என் அசைவுகளை உணராதபடியும் அல்லது என் வார்த்தைகளைக் கவனியாதபடியும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே அசைவாடுகிறேன். எனவே, என் திட்டம் சீராக முன்னேறி வருகின்றது. உங்களுடைய புலன்கள் மிகவும் உணர்வு இல்லாமல் போய்விட்டதால், என் கிரியையின் படிநிலைகளை நீங்கள் அறியவில்லை. ஆனால் நிச்சயமாகவே ஒரு நாள் வரும் அப்போது என் உள்ளார்ந்த நோக்கத்தை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். இன்று நான் உங்களுடனே வாழ்ந்து, உங்களுடனே பாடு அனுபவிக்கின்றேன், மேலும் மனுக்குலம் என்னைக் குறித்துக் கொண்டிருக்கும் மனநிலையையும் நான் வெகுகாலமாய் புரிந்துவைத்துக் கொண்டிருக்கின்றேன். நான் இதைக் குறித்து இன்னும் அதிகமாகப் பேச விரும்பவில்லை. நான் இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை, இந்த வலிமிகுந்த பாடத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகளைத் தந்து உங்களுக்கு இலச்சையைக் கொண்டுவரவும் விரும்பவில்லை. நீங்கள் செய்தவற்றை எல்லாம் உங்கள் இருதயத்தில் நீங்கள் ஞாபகப்படுத்திக்கொள்வீர்கள் என்று மாத்திரம் நான் நம்புகிறேன், இதனால் நாம் மீண்டும் சந்திக்கும்போது நம் கணக்குகளைச் சரிசெய்துகொள்ளலாம். நான் எப்போதும் நீதியோடும், நியாயத்தோடும் மற்றும் மரியாதையுடனும் நடந்துகொள்வதால், உங்களில் ஒருவரையும் தவறாகக் குற்றம்சாட்ட விரும்புவதில்லை. நீங்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றும், உங்கள் மனசாட்சியின்படி விண்ணகத்திற்கும், மண்ணகத்திற்கும் விரோதமாகச் செல்லக்கூடிய எதையும் நீங்கள் செய்திறாதபடி இருக்க வேண்டும் என்றும் நம்புகின்றேன். நான் உங்களிடம் கேட்கும் ஒரே காரியம் இதுதான். கொடூரமான பாவங்களைச் செய்ததினால் பலர் இளைப்பாறுதலின்றி எளிதில் புண்படுபவர்களாக உணருகிறார்கள், ஒரு நற்கிரியையும் செய்யாததினால் பலர் தங்களைக்குறித்தே வெட்கமடைந்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்படுவதை விடுத்து என் மனநிலையைச் சோதிக்கும்படி இன்னும் வெளியரங்கமாகாத தங்கள் அருவருப்பான அம்சங்களை மறைக்கிறதான முகமூடிகளை முற்றிலுமாகக் கலைந்துவிட்டு மோசத்திலிருந்து அதிக மோசத்திற்குக் கடந்து செல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மனிதனின் செயல்பாடுகளைக் குறித்து நான் அக்கறை கொள்வதோ அல்லது அதில் கவனம் செலுத்துவதோ இல்லை. மாறாக, தகவல்களைச் சேகரிப்பதாக இருந்தாலும், அல்லது இந்தப் பூமியில் பயணிப்பதாக இருந்தாலும் அல்லது என் ஆர்வத்திற்குட்பட்டு ஏதாவது செய்வதாக இருந்தாலும் நான் செய்ய வேண்டிய கிரியையை மாத்திரமே செய்கிறேன். முக்கியமான நேரங்களில், நான் ஆரம்பத்தில் திட்டமிட்டபடி மனிதரின் மத்தியில் ஒரு நொடி தாமதமாகவோ அல்லது விரைவாகவோ இல்லாமல் இயல்பாகவும், சீராகவும் என் கிரியைகளைத் தொடருகிறேன். ஆனாலும், என் கிரியையின் ஒவ்வொரு படியிலும் நான் அவர்களது முகஸ்துதியையும், பொய்யான தாழ்ச்சியையும் வெறுப்பதினால் சிலர் புறந்தள்ளப்படுகின்றனர். வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ என்னால் வெறுக்கப்படுக்கிறவர்கள் எல்லாம் நிச்சயமாகவே கைவிடப்படுவார்கள். சுருக்கமாகக் கூறின், என்னால் வெறுக்கப்படுகிறவர்கள் என்னைவிட்டு அகன்று போகும்படியாகும். என் வீட்டில் வசிக்கும் துன்மார்க்கரை நான் விட்டுவைப்பதில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் மனிதனின் தண்டனைக்குரிய காலம் சமீபமாயிருக்கிறது, எனக்கென்று என் சொந்தத் திட்டங்கள் இருப்பதால் என்னால் வெறுக்கத் தக்க ஆத்துமாக்களைப் புறம்பே தள்ள நான் அவசரப்படுவதில்லை.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 585

ஒவ்வொரு மனிதனின் முடிவையும் நான் தீர்மானிக்கும் நேரமாக இருக்கிறது. இது நான் மனிதனிடத்தில் கிரியையைத் தொடங்கும் காலம் இல்லை. நான் என் பதிவு புத்தகத்தில் ஒவ்வொரு நபருடைய வார்த்தைகளையும், செயல்களையும் என்னைப் பின் தொடர்ந்து வந்த பாதைகளையும், அவர்களுடைய உள்ளார்ந்த சுபாவங்களையும், அவர்கள் எப்படி முடிவில் தங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டார்கள் என்பதையும் ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இவ்விதமாக அவர்கள் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, ஒருவரும் என் கையிலிருந்து தப்புவதில்லை, அனைவரும் நான் ஒதுக்கும் தங்கள் வகையுடன் சேர்க்கப்படுவார்கள். நான் ஒவ்வொருவருடைய சேருமிடத்தையும் தீர்மானிக்க அவர்களுடைய வயது, அனுபவம், அவர்கள் பட்ட பாடுகளின் அளவு மற்றும் இவை எல்லாவற்றிலும் குறைவாக அவர்கள் பெற்றுக்கொண்ட இரக்கத்தின் அளவு போன்றவற்றை நான் அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்கள் சத்தியத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களா என்பதை அடிப்படையாகக் கொள்கிறேன். இது தவிர நீங்கள் வேறு எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. தேவனுடைய சித்தத்தின் வழி நடக்காதவர்களும் கூடத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டாயம் உணர்ந்துகொள்ள வேண்டும். இது மாற்றப்படமுடியாத உண்மை. எனவே, தண்டிக்கப்படுகிறவர்கள் எல்லாம் தேவனுடைய நீதியின் நிமித்தமும் மற்றும் தங்கள் பொல்லாத கிரியைகளின் தகுந்த பிரதிபலனாகவும் தண்டிக்கப்படுகிறார்கள். எனது திட்டத்தை அதன் ஆரம்பத்திலிருந்து நான் ஒரு மாற்றம்கூட செய்யவில்லை. எளிமையாகக் கூறப்போனால், மனிதனைப் பொறுத்தவரை, நான் உண்மையாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் குறைந்துவிட்டது போல என் வார்த்தைகளை நான் கற்பிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஆனாலும், என் திட்டம் ஒருபோதும் மாறாதபடிக்கு அதைப் பேணிக்காப்பேன். மாறாக மனிதனுடைய அன்பும், விசுவாசமும் எப்பொழுதும் மாறிக்கொண்டும், எப்பொழுதும் தேய்ந்துகொண்டும் உள்ளது, எந்த அளவுக்கென்றால் வெளிவேஷத்திலிருந்து குளிர்ந்தநிலைக்குச் சென்று முற்றிலுமாக என்னைப் புறந்தள்ளும் நிலைக்கும் கூடச் சென்றுவிடுகிறது. நான் வெறுப்பையும், அருவருப்பையும் உணர்ந்து முடிவாகத் தண்டனையை அனுப்பும்வரை உங்களைக் குறித்த என் மனப்பான்மை அனலும், குளிரும் அற்றதாக இருக்கும். எனினும் உங்கள் தண்டனையின் நாளில் நான் உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன், ஆனால் உங்களால் என்னைக் காண முடியாது. உங்கள் மத்தியில் வாழ்வது எனக்கு ஏற்கனவே நீண்டதும், மந்தமானதுமாக மாறிவிட்டதால், உங்கள் தீமையான வார்த்தைகளைத் தவிர்க்கும்படியாகவும், தாங்கமுடியாத அளவு நீசமான உங்கள் நடத்தைகளிலிருந்து தெளிவை நோக்கியும், நீங்கள் இனிமேலும் என்னை முட்டாளாக்காதபடிக்கும் அல்லது சிரத்தையற்ற முறையில் நடத்தாதபடிக்கும் நான் வசிப்பதற்கு வேறு சூழலைத் தெரிந்துகொண்டேன். உங்களை விட்டு விலகும் முன் சத்தியத்திற்கு ஒவ்வாத உங்கள் நடத்தைகளைத் தவிர்க்கும்படி உங்களுக்குக் கட்டாயமாக இன்னும் அதிகமாய் புத்தி சொல்லுவேன். மாறாக, எல்லோருக்கும் பிரியமானது எதுவோ, எல்லோருக்கும் பலன் தருவது எதுவோ, உங்களுடைய சொந்த இலக்கிற்குப் பிரயோஜனமானது எதுவோ அதையே செய்ய வேண்டும். இல்லையெனில் பேரழிவின் மத்தியில் பாடுபடப்போவது வேறு யாருமல்ல நீங்கள் மாத்திரமே.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 586

தன்னைத்தான் வெறுத்து என்னை நேசிப்பவர்களை நோக்கி என் இரக்கம் செல்லுகிறது, இதற்கிடையில், துன்மார்க்கர் மீது விதிக்கப்படும் தண்டனையானது என்னுடைய நீதியான மனநிலைக்குத் துல்லியமான ஆதாரமாகவும், அதற்கும் மேலே என் உக்கிரத்திற்குச் சாட்சியமாகவும் இருக்கிறது. பேரழிவு வரும்போது எனக்கு விரோதமாக இருப்பவர்கள் பஞ்சத்திற்கும், கொள்ளை நோய்க்கும் இலக்காகிப் புலம்புவார்கள். பலவருடங்களாக என்னைப் பின்தொடர்ந்து வந்திருந்தும் எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் செய்தவர்களும் தங்கள் பாவத்தின் பலன்களிலிருந்து தப்ப முடியாது; அவர்களும் கூடப் பேரழிவில் விழுவார்கள், இதைப் போன்ற ஒன்றை ஆயிரம் வருடங்களில் சில தடவைகள் காணமுடிந்திருக்கிறது, அவர்கள் தொடர்ந்து பயத்திலும், பீதியிலும் வாழ்வார்கள். எனக்கு உண்மையும் உத்தமுமாக இருந்தவர்கள் என்னுடைய வல்லமையை மெச்சிக் களிகூறுவார்கள். அவர்கள் சொல்லவொண்ணா திருப்தியை அனுபவித்து நான் ஒருபோதும் மனிதகுலத்திற்கு தந்திராததுமான மகிழ்ச்சியின் மத்தியில் வாழ்வார்கள். ஏனெனில் நான் மனிதர்களின் நற்கிரியைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து துர்க்கிரியைகளை அருவருக்கின்றேன். நான் முதன் முதலில் மனுகுலத்தை வழிநடத்தத் தொடங்கியதிலிருந்து என்னைப் போன்ற ஒத்த மனதுள்ள ஒரு கூட்ட ஜனங்களை ஆதாயப்படுத்தும்படி வாஞ்சையுடன் நம்பிக்கை கொண்டிருகிறேன். அதே நேரத்தில், என்னைப் போன்ற ஒத்த மனது இல்லாத ஜனங்களை நான் மறப்பதில்லை. என் இருதயத்தில் நான் அவர்களை எப்போதும் வெறுக்கிறேன். அவர்களை ஆக்கினைக்கு உள்ளாக்கித் தீர்ப்பதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன், அதனைக் கண்டு நான் நிச்சயமாகவே மகிழுவேன். இப்பொழுதோ என்னுடைய நாள் வந்துவிட்டது, நான் இதற்குமேல் காத்திருக்க வேண்டியதில்லை!

என்னுடைய இறுதி கிரியையானது மனிதனைத் தண்டிப்பது மாத்திரம் இல்லை, ஆனால் மனிதனுக்கான இலக்கை ஆயத்தம் செய்வதும்தான். மேலும் இதனால் ஜனங்கள் என்னுடைய நியமங்களையும், செயல்களையும் ஒப்புக்கொள்ளக்கூடும். ஒவ்வொரு மனிதனும் நான் செய்தவை எல்லாம் சரி என்றும், நான் செய்தவை எல்லாம் என் மனநிலையின் வெளிப்பாடுகள் என்றும் காண நான் விரும்புகின்றேன். இது மனிதனின் செயல் அல்ல, மனிதகுலத்தை வெளிக்கொண்டுவந்த இயற்கையுடையதும் அல்ல, ஆனால் படைப்பில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் போஷிக்கும் என் செயலே. நான் இல்லையென்றால் மனிதகுலம் அழிவதோடு பேரழிவு என்னும் சாட்டையடியால் பாடுபடும். எந்த மனிதனும் சந்திர, சூரியனின் அழகையோ அல்லது பசுமையான உலகத்தையோ மீண்டும் காண முடியாது. மனிதகுலம் குளிர்ந்த இரவுகளையும், இரக்கமில்லாத மரண இருளின் பள்ளத்தாக்கையும் மாத்திரமே எதிர்கொள்ளும். நானே மனுக்குலத்தின் ஒரே இரட்சிப்பு. நானே மனுக்குலத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறேன், அதற்கும் மேலே மனிதகுலத்தின் மொத்த ஜீவிப்பும் என்னையே சார்ந்திருக்கிறது. நானின்றி ஒட்டுமொத்த மனுக்குலமும் உடனடியாக ஓர் அசைவற்ற நிலைக்கு வந்துவிடும். நானின்றி மனிதகுலம் பெரும் அழிவில் அவதியுறும், எல்லாவகையான பிசாசுகளாலும் கால்களின் கீழ் மிதிக்கப்படும், ஆனாலும் ஒருவரும் என்மீது கவனம் செலுத்துவதில்லை. நான் வேறு ஒருவரும் செய்யமுடியாத கிரியையைச் செய்திருக்கின்றேன், இதனை மனிதன் சில நற்கிரியைகள் மூலம் எனக்கு ஈடு செய்வான் என்று நம்பியிருக்கின்றேன். ஒரு சிலரால் மாத்திரமே எனக்கு ஈடு செய்ய முடிகிறது என்றாலும், நான் மனிதனின் உலகத்தில் என் பயணத்தை முடித்து என் விரிவாக்கக் கிரியையின் அடுத்த கட்டத்தைத் தொடங்குவேன். ஏனெனில் மனிதரின் மத்தியில் இத்தனை வருடமாக என் போக்குவரத்தின் வேகம் எல்லாம் பலனுள்ளதாக இருந்திருக்கிறது, நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு மக்களின் எண்ணிக்கை முக்கியமில்லை மாறாக அவர்களது நற்கிரியைகளே முக்கியம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் உங்கள் இலக்கிற்காகப் போதுமான நற்கிரியைகளை ஆயத்தப்படுத்தியிருப்பீர்கள் என நம்புகிறேன். அப்போது நான் திருப்தியாவேன், அப்படியில்லாவிட்டால், உங்களில் ஒருவனும் உங்கள்மீது விழப்போகும் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாது. அந்தப் பேரழிவு என்னிலிருந்தே ஆரம்பிக்கப்படும், மேலும் அது நிச்சயமாகவே என்னாலே திட்டமிடப்படும். என் கண்களில் நீங்கள் செம்மையாய் காணப்படவில்லை என்றால், உங்களால் அந்தப் பேரழிவில் பாடுபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது. உபத்திரவத்தின் காலத்திலே உங்களுடைய அன்பும், விசுவாசமும் ஆழம் இல்லாமல் இருந்ததினால், அப்போது உங்களுடைய செயல்கள் முற்றிலும் பொருத்தமானது என்று கருத முடியாது, ஒன்று நீங்கள் உங்களைக் கோழையாகவோ அல்லது கடுமையாகவோ காட்டியிருப்பீர்கள். அதைப் பொறுத்தவரை நன்மையா அல்லது தீமையா என்று மாத்திரமே நான் ஒரு நியாயத்தீர்ப்பு வழங்குவேன். என் அக்கறை எல்லாம் நீங்கள் எந்த வழியில் நடக்கிறீர்கள் என்பதிலும், எப்படி உங்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதிலுமே தொடர்கிறது, அதன் அடிப்படையிலேயே உங்களுடைய முடிவை நான் தீர்மானிப்பேன். எனினும், என் இரக்கம் அதுவரையே நீட்டிக்கப் பட்டிருப்பதால், உபத்திரவத்தின் காலத்திலே சிறிதளவாயினும் விசுவாசத்தைக் காட்டாதவர்களுக்கு நான் நிச்சயமாக அதற்குமேல் இரங்குவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும். என்னைக் காட்டிக்கொடுத்த அல்லது துரோகம் செய்த யார்மீதும் நான் அதற்குமேல் என் விருப்பத்தை வைப்பதில்லை. தன் நண்பர்களின் நன்மையை விற்றுப் போடுபவர்களிடமும் நான் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. யார் அந்த நபராக இருந்தாலும் இதுவே என் நிலைப்பாடு. என் இருதயத்தை உடைப்பவர்கள் யாராயினும் என்னிடமிருந்து இரண்டாம் முறை கருணையைப் பெற முடியாது என்பதை நான் உங்களுக்கு அவசியம் சொல்ல வேண்டும். மேலும் எனக்கு உண்மையாக இருப்பவர்களோ என் இருதயத்தில் எப்போதும் நிலைத்திருப்பார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 587

இந்த பரந்த உலகில், எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. பெருங்கடல்கள் வயல்களுக்குள் பாய்ந்தன. வயல்கள் பெருங்கடல்களின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இது போல மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. பிரபஞ்சத்தின் சர்வத்தையும் ஆளக்கூடியவரைத் தவிர இந்த மனித இனத்தை வேறு எவராலும் வழிநடத்த முடியாது. தேவனையன்றி இந்த மனித இனத்திற்காக கிரியை செய்ய ஏற்பாடுகளைச் செய்ய வலிமைமிக்க ஒருவர் இல்லை. இந்த மனித இனத்தை ஒளியினிடம் வழிநடத்த பூமிக்குரிய அநீதிகளிலிருந்து விடுவிக்க வேறு எவரும் இல்லை. மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் குறித்து தேவன் புலம்புகிறார்; மனிதகுலத்தின் வீழ்ச்சியைக் கண்டு துக்கப்படுகிறார் மற்றும் மனிதகுலம் படிப்படியாகச் சிதைவை நோக்கி அணிவகுத்து வருவதாலும், திரும்பி வராத பாதையில் செல்வதாலும் வேதனைப்படுகிறார். தேவனுடைய இருதயத்தை உடைத்து, பொல்லாங்கனைத் தேட, இந்த மனிதகுலம் அவரைத் துறந்தது. அத்தகைய மனிதகுலம் எந்த திசையில் செல்லக்கூடும் என்று யாராவது சிந்தித்ததுண்டா? இதனால் தான் என்னவோ தேவனுடைய கோபத்தை யாரும் உணரவில்லை. தேவனைப் பிரியப்படுத்த ஒரு வழியைத் தேடவில்லை. அவரிடம் நெருங்கிச் செல்ல முயற்சிக்கவில்லை. வருத்தத்தையும் வேதனையையும் யாரும் புரிந்து கொள்ள முற்படுவதில்லை. அவர் சத்தத்தைக் கேட்ட பிறகும், மனிதன் தனது சொந்த பாதையில் தொடர்கிறான்; அவரிடமிருந்து விலகிச் செல்கிறான்; அவருடைய கிருபையையும் அக்கறையையும் தவிர்த்து விடுகிறான்; அவருடைய சத்தியத்தைத் தவிர்க்கிறான்; தேவனின் எதிரியான சாத்தானுக்குத் தன்னை விற்க விரும்புகிறான். தேவனை நிராகரித்து பின் அதைக் குறித்து சிந்திக்காத இந்த மனிதகுலத்தை நோக்கி தேவன் எவ்வாறு செயல்படுவார் என்பது பற்றியும் மனிதன் தனது பிடிவாதத்தைத் தொடர்வது பற்றியும் எவரேனும் எதையேனும் சிந்தித்ததுண்டா? தேவனுடைய தொடர்ச்சியான நினைவூட்டல்களுக்கும் அறிவுரைகளுக்கும் காரணம், அவர் இதுவரை இல்லாத அளவில் மனிதனின் மாம்சமும் ஆத்துமாவும் தாங்க முடியாத ஒரு பேரழிவைத் தன் கைகளில் தயார் செய்து வைத்திருப்பதே என்று யாருக்கும் தெரிவதில்லை. இந்த பேரழிவு மாம்சத்தின் தண்டனை மட்டுமல்ல, ஆத்துமாவின் தண்டனையும் கூட. தேவனுடைய சித்தம் நிறைவேறும்போது, அவருடைய நினைவூட்டல்களுக்கும் அறிவுரைகளுக்கும் எந்த பதிலும் இல்லையேல், எத்தகு ஆத்திரத்தை அவர் கட்டவிழ்த்துவிடுவார் என்பதை நீ அறிந்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினமும் இதுவரை அனுபவித்திராத அல்லது கேட்டிராத ஒன்று போல அது இருக்கும். எனவே நான் சொல்கிறேன், இந்த பேரழிவானது முன்னுதாரணங்கள் இல்லாமல் இருக்கிறது. அது ஒருபோதும் மீண்டும் நிகழாது. தேவனுடைய திட்டம் மனிதகுலத்தை ஒரு முறை மட்டுமே உருவாக்குவதும் ஒரு முறை மட்டுமே காப்பாற்றுவதும் ஆகும். இதற்கு, இதுவே முதலும் கடைசியுமாகும். எனவே, இம்முறை தேவன் மனிதனை இரட்சிக்க எடுத்துக்கொண்டுள்ள கடினமான நோக்கங்களையும் தீவிரமான எதிர்பார்ப்பையும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவன் தான் மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 588

இன்றைய கிரியை மற்றும் எதிர்காலக் கிரியைப் பற்றி மனிதன் கொஞ்சம் புரிந்துகொள்கிறான், ஆனால் மனிதகுலம் போய்ச்சேர வேண்டிய இடம் எது என்று அவன் புரிந்துகொள்ளவில்லை. ஒரு சிருஷ்டியாக, மனிதன் ஒரு சிருஷ்டிக்குரிய கடமையைச் செய்ய வேண்டும்: மனிதன் தேவனை அவர் செய்யக்கூடிய எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டும்; நான் உங்களுக்குச் சொல்லும் வழியில் நீங்கள் தொடர வேண்டும். விஷயங்களை நீயாகவே நிர்வகிக்க உனக்கு வழி இல்லை, உனக்கு உன்மீது அதிகாரம் இல்லை; இவை அனைத்தும் நிச்சயம் தேவனின் திட்டத்திடம் விடப்பட வேண்டும், எல்லா விஷயங்களும் அவருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்கின்றன. தேவனின் கிரியை மனிதன் போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்துடன் கூடிய ஒரு முடிவைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அளித்தால், மனிதனை ஈர்க்கவும், மனிதனைப் பின்தொடரச் செய்யவும் தேவன் இதைப் பயன்படுத்தினால்—அவர் மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தால்—அப்படியானால் இது ஜெயமாக இருக்காது, அல்லது அது மனிதனின் ஜீவனில் செய்தக் கிரியையாக இருக்காது. மனிதனைக் கட்டுப்படுத்தவும், இருதயத்தை ஆதாயப்படுத்தவும் தேவன் மனிதனின் முடிவைப் பயன்படுத்தினார் என்றால், இதில் அவர் மனிதனை பரிபூரணப்படுத்த மாட்டார், அல்லது அவர் மனிதனை ஆதாயப்படுத்தவும் மாட்டார், மாறாக அவனைக் கட்டுப்படுத்த போய்ச்சேரும் இடத்தைப் பயன்படுத்துவார். மனிதன் எதிர்கால முடிவு, இறுதியாகப் போய்ச்சேருமிடம், மற்றும் நம்புவதற்கு ஏதேனும் நல்லது இருக்கிறதா இல்லையா என்பதைத் தவிர வேறு எதையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஜெயங்கொள்ளுதல் கிருயையின்போது மனிதனுக்கு ஒரு அழகான நம்பிக்கை அளிக்கப்பட்டிருந்தால், மனிதனை ஜெயங்கொள்வதற்கு முன்னர், பின்தொடர அவனுக்குச் சரியான போய்ச் சேருமிடம் வழங்கப்பட்டால், மனிதனை ஜெயங்கொள்வது அதன் பலனை அடைவது என்பது மட்டுமல்ல, ஜெயங்கொள்ளும் கிரியையின் பலனும்கூட பாதிப்புக்குள்ளாகும். அதாவது, ஜெயங்கொள்ளும் கிரியையானது மனிதனின் தலைவிதியையும் வாய்ப்புகளையும் பறிப்பதன் மூலமும், மனிதனின் கலகத்தனமான மனநிலைக்கு நியாயத்தீர்ப்பு அளித்து சிட்சிப்பதன் மூலமும் அதன் பலனை அடைகிறது. இது மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்வதன் மூலம் அடையப்படவில்லை, அதாவது, மனிதனுக்கு ஆசீர்வாதங்களையும் கிருபையும் அளிப்பதன் மூலம் அல்ல, மாறாக மனிதனின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதன் மூலமாகவும், அவனது சுதந்திரத்தைப் பறிப்பதன் மூலமாகவும், அவனது வாய்ப்புகளை அழிப்பதன் மூலமாகவும் அடையப்படுகிறது. இதுதான் ஜெயங்கொள்ளும் கிரியையின் சாராம்சமாகும். மனிதனுக்கு ஆரம்பத்திலேயே ஒரு அழகான நம்பிக்கை அளிக்கப்பட்டு, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு கிரியைகள் பின்னர் செய்யப்பட்டிருந்தால், மனிதன் இந்த சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்வான், இறுதியில், சிருஷ்டிகருக்கு நிபந்தனையற்ற முறையில் கீழ்ப்படிவது மற்றும் அவரை தொழுதுகொள்வது ஆகியவை அவரது எல்லா ஜீவராசிகளாலும் அடையப்பட மாட்டாது; கண்மூடித்தனமான, அறியாமையுடனான கீழ்ப்படிதல் மட்டுமே இருக்கும், இல்லையென்றால் மனிதன் கண்மூடித்தனமாகத் தேவனுக்குக் கோரிக்கைகளை வைப்பான், மேலும் மனிதனின் இருதயத்தைப் பரிபூரணமாக ஜெயங்கொள்ள முடியாது. இதன் விளைவாக, அத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியை மூலமாக மனிதனை அடைவதும், மேலும், தேவனுக்குச் சாட்சியம் அளிப்பதும் சாத்தியமில்லை. அத்தகைய ஜீவராசிகள் தங்கள் கடமையைச் செய்ய இயலாது, மேலும் தேவனோடு பேரம் பேசுவதை மட்டுமே செய்வார்கள்; இது ஜெயமாக இருக்காது, ஆனால் இரக்கமும் ஆசீர்வாதமும் ஆக இருக்கும். மனிதனுடைய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவன் தனது விதி மற்றும் வாய்ப்புகளைத் தவிர வேறு எதையும் நினைக்கவில்லை, இந்த விஷயங்களை அவன் வழிபாட்டுப் பொருளாக்குகிறான். மனிதன் தனது விதி மற்றும் செல்லும் திசைகளுக்காகத் தேவனைப் பின்தொடர்கிறான்; அவன் தேவன் மீதுள்ள நேசத்தால் அவரை தொழுது கொள்வதில்லை. எனவே, மனிதனை ஜெயங்கொள்வதில், மனிதனின் சுயநலம், பேராசை மற்றும் தேவனைத் தொழுது கொள்வதை மிகவும் தடுக்கும் விஷயங்கள் அனைத்தும் கையாளப்பட வேண்டும், அதன் மூலம் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, மனிதன் மீதான ஜெயத்தின் பலன்கள் அடையப்படும். இதன் விளைவாக, மனிதனை ஜெயங்கொள்வதன் முதல் கட்டங்களில், மனிதனின் மூர்க்கத்தனமான இலட்சியங்களையும், மிக மோசமான பலவீனங்களையும் நீக்குவது அவசியம், இதன் மூலம், தேவன் மீதுள்ள அன்பை மனிதன் வெளிப்படுத்தவும், மனிதனின் வாழ்நாள் பற்றிய தனது அறிவை மாற்றவும், தேவனைப் பற்றிய அவனது பார்வை மற்றும் அவன் உயிர் வாழ்வதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்த வகையில், தேவன்மீதான மனிதனின் அன்பு சுத்திகரிக்கப்படுகிறது, அதாவது மனிதனின் இதயம் ஜெயங்கொள்ளப்படுகிறது. ஆனால் எல்லா ஜீவராசிகள் மீதுமான தேவனின் மனப்பான்மையில், தேவன் ஜெயங்கொள்ளும் பொருட்டு மட்டுமே ஜெயங்கொள்வதில்லை; மாறாக, மனிதனை ஆதாயப்படுத்துவதற்காகவும், தன் சொந்த மகிமைக்காகவும், மனிதனின் ஆரம்பக்கால, உண்மையான தன்மையை மீட்டெடுப்பதற்காகவும் அவர் ஜெயங்கொள்கிறார். அவர் ஜெயங்கொள்ளும் பொருட்டு மட்டுமே ஜெயங்கொள்ள வேண்டுமென்றால், ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கியத்துவம் இழக்கப்படும். அதாவது, ஜெயங்கொண்ட பிறகு, தேவன் அவரது மனிதக் கைகளைக் கழுவி, மனிதனுடைய ஜீவன் அல்லது மரணத்துக்குச் செவிசாய்க்கவில்லை என்றால், இது மனிதகுலத்தின் நிர்வாகமாகவோ, அல்லது மனிதனை ஜெயங்கொள்வது மனிதனின் இரட்சிப்புக்காகவோ இருக்காது. மனிதனை ஜெயங்கொள்வதைத் தொடர்ந்து மனிதனை ஆதாயப்படுத்துவதும், இறுதியாக அவன் போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு வருவதும் இரட்சிப்பின் அனைத்துக் கிரியைகளின் இருதயத்திலும் உள்ளது, மேலும் இது மட்டுமே மனிதனின் இரட்சிப்பின் நோக்கத்தை அடைய முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போய்ச்சேர வேண்டிய அழகான இடத்திற்கு மனிதனின் வருகையும், மீதமுள்ளவற்றுக்குள் பிரவேசிப்பதும் மட்டுமே அனைத்து ஜீவராசிகளிடமும் இருக்க வேண்டிய வாய்ப்புகளாகும், மற்றும் சிருஷ்டிகரால் செய்யப்பட வேண்டிய கிரியைகளாகும். மனிதன் இந்த கிரியையைச் செய்ய வேண்டியதிருந்தால், அது மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். இது மனிதனை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கக்கூடும், ஆனால் அது மனிதனை நித்தியமாக போய்ச்சேருமிடத்திற்குக் கொண்டுவந்திருக்க முடியாது. மனிதனின் விதியை மனிதனால் தீர்மானிக்க முடியாது, அல்லது மேலும், மனிதனின் வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்தையும் உறுதிப்படுத்த அவனால் முடியாது. இருப்பினும், தேவன் செய்யும் கிரியை வேறுபட்டது. அவர் மனிதனைச் சிருஷ்டித்ததிலிருந்து, அவனை வழிநடத்துகிறார்; அவர் மனிதனை இரட்சிப்பதால், அவர் அவனைப் பரிபூரணமாக இரட்சிப்பார், மற்றும் அவனைப் பரிபூரணமாக ஆதாயப்படுத்துவார்; அவர் மனிதனை வழிநடத்துவதால், அவனை போய்ச்சேர வேண்டிய சரியான இடத்திற்கு கொண்டு வருவார்; அவர் மனிதனைச் சிருஷ்டித்து நிர்வகிப்பதால், மனிதனின் தலைவிதி மற்றும் வாய்ப்புகளுக்கு அவர் அவசியம் பொறுப்பேற்க வேண்டும். சிருஷ்டிகரால் செய்யப்படும் கிரியை என்பது இதுதான். மனிதனின் வாய்ப்புகளைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் ஜெயங்கொள்ளும் கிரியை அடையப்பட்டாலும், மனிதன் இறுதியில் தேவனால் அவனுக்கென்று ஆயத்தம் செய்யப்பட்ட போய்ச்சேர வேண்டிய சரியான இடத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். தேவன் மனிதன் மீது கிரியை செய்வதால், மனிதனுக்குத் துல்லியமாக போய்ச்சேர வேண்டிய ஒரு இடம் இருக்கிறது, அவனுடைய தலைவிதி உறுதி செய்யப்படுகிறது. இங்கே, குறிப்பிடப்பட்ட பொருத்தமான போய்ச்சேருமிடம் மனிதனின் நம்பிக்கைகள் மற்றும் கடந்த காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட வாய்ப்புகள் அல்ல; இந்த இரண்டும் வேறுபட்டவை. மனிதன் எதிர்பார்க்கும் மற்றும் பின்தொடரும் விஷயங்கள் மனிதனுக்கு உண்டான போய்ச்சேருமிடம் என்பதைவிட, அவை மாம்சத்தின் ஆடம்பரமான ஆசைகளை தேடுவதிலிருந்து எழும் ஏக்கங்களாகும். இதற்கிடையில், மனிதனுக்காகத் தேவன் எதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்றால், மனிதன் தூய்மைப்படுத்தப்பட்டவுடன் அவனுக்குக் கிடைக்க வேண்டிய, உலகை சிருஷ்டித்தபின் தேவன் மனிதனுக்காக ஆயத்தம் செய்த ஆசீர்வாதங்களும் வாக்குத்தத்தங்களுமாகும், மற்றும் இவை மனிதனின் விருப்பங்கள், எண்ணங்கள், கற்பனைகள் அல்லது மாம்சத்தால் கறைபடாதவை. போய்ச்சேரும் இந்த இடம் ஒரு குறிப்பிட்ட நபருக்காக ஆயத்தம் செய்யப்படவில்லை, ஆனால் இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான இடமாகும். எனவே, போய்ச்சேரும் இந்த இடம் மனிதகுலத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாகும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 589

சிருஷ்டிகர் சிருஷ்டித்த அனைத்து ஜீவராசிகளுக்கும் திட்டமிட விரும்புகிறார். அவர் செய்யும் எதையும் நீ நிராகரிக்கவோ அல்லது கீழ்ப்படியாமல் இருக்கவோ கூடாது, அல்லது நீ அவருக்கு எதிராக கலகம் செய்யவும் கூடாது. அவர் செய்யும் கிரியை இறுதியில் அவருடைய நோக்கங்களை அடையும்போது, இதில் அவர் மகிமையைப் பெறுவார். இன்று, நீ மோவாபின் சந்ததி என்றோ, அல்லது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததி என்றோ ஏன் கூறப்படவில்லை? தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களைப் பற்றி ஏன் பேசவில்லை, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது? சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசி—இதுதான் மனிதனின் உண்மையான பெயர், அவனது உள்ளார்ந்த அடையாளமாக இருப்பது இதுவே. கிரியையின் காலம் மற்றும் காலகட்டங்கள் மாறுபடுவதால் மட்டுமே பெயர்கள் மாறுபடுகின்றன; உண்மையில், மனிதன் ஒரு இயல்பான ஜீவராசி. எல்லா ஜீவராசிகளும், அவை மிகவும் சீர்கெட்டவையாக இருந்தாலும், மிகப் புனிதமானவையாக இருந்தாலும், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியின் கடமையைச் செய்ய வேண்டும். தேவன் ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்யும்போது, உனது திசை, விதி அல்லது போய்ச்சேருமிடத்தைப் பயன்படுத்தி அவர் உன்னைக் கட்டுப்படுத்த மாட்டார். உண்மையில் இந்த வகையில் அவர் கிரியை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜெயங்கொள்ளும் கிரியையின் நோக்கம், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியின் கடமையை மனிதன் செய்ய வைப்பதும், சிருஷ்டிகரை அவன் தொழுது கொள்வதும் ஆகும்; இதற்குப் பிறகுதான் அவன் போய்ச்சேர வேண்டிய அற்புதமான இடத்திற்குள் பிரவேசிக்க முடியும். மனிதனின் தலைவிதி தேவனின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னைக் கட்டுப்படுத்த உன்னாலேயே இயலாது. மனிதன் எப்போதுமே தன் சார்பாக விரைந்து வந்து தன்னை மும்முரமாகப் பயன்படுத்தினாலும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது. நீ உன் சொந்த வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடிந்தால், உன் சொந்த விதியை உன்னால் கட்டுப்படுத்த முடிந்தால், நீ அப்போதும் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியாக இருப்பாயா? சுருக்கமாகக் கூறுவதென்றால், தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய எல்லாக் கிரியைகளும் மனிதனுக்காகவே செய்யப்படுகின்றன. உதாரணமாக, வானங்களையும் பூமியையும் மற்றும் மனிதனுக்குச் சேவை செய்யத் தேவன் சிருஷ்டித்த எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்: மனிதனுக்காக அவர் உருவாக்கிய சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள், வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம், மற்றும் இது போன்றவை எல்லாம் மனிதனின் ஜீவிதத்துக்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆகவே, தேவன் மனிதனை எவ்வாறு சிட்சிக்கிறார், நியாயந்தீர்க்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், இவை அனைத்தும் மனிதனின் இரட்சிப்பின் பொருட்டுதான் இருக்கின்றன. மனிதனை அவனது மாம்ச நம்பிக்கையிலிருந்து அவர் நீக்கினாலும், அது மனிதனைச் சுத்திகரிப்பதற்காகவே, மனிதனின் சுத்திகரிப்பு அவன் உயிர்வாழ்வதற்காகவே செய்யப்படுகிறது. மனிதன் யோய்ச்சேருமிடம் சிருஷ்டிகரின் கைகளில் உள்ளது, எனவே மனிதன் எப்படித் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியும்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 590

ஜெயங்கொள்ளும் கிரியையை முடித்ததும், மனிதன் ஒரு அழகான உலகத்திற்குக் கொண்டு வரப்படுவான். இந்த ஜீவிதம் அப்போதும் நிச்சயமாகப் பூமியில்தான் இருக்கும், ஆனால் அது இன்றைய மனிதனின் ஜீவிதத்தைப்போலல்லாமல் இருக்கும். மனிதகுலம் முழுவதையும் ஜெயங்கொண்ட பின்னர் மனிதகுலத்தின் ஜீவிதம் இதுதான், இது பூமியில் மனிதனுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும், மேலும் மனிதகுலத்திற்கு இதுபோன்ற ஒரு ஜீவிதம் இருப்பது மனிதகுலம் ஒரு புதிய மற்றும் அழகான உலகில் நுழைந்துள்ளது என்பதற்குச் சான்றாக இருக்கும். இது பூமியிலுள்ள மனிதன் மற்றும் தேவனின் ஜீவிதத்தின் தொடக்கமாக இருக்கும். அத்தகைய அழகான ஜீவிதத்தின் முன்மாதிரி என்னவென்றால், மனிதன் சுத்திகரிக்கப்பட்டு ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு, அவன் சிருஷ்டிகருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிறான். ஆகவே, மனிதகுலம் போய்ச்சேர வேண்டிய அற்புதமான இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, தேவனின் கிரியையின் கடைசிக் கட்டமே ஜெயங்கொள்ளும் கிரியையாகும். அத்தகைய ஜீவிதம் என்பது பூமியில் மனிதனின் எதிர்கால ஜீவிதமாகவும், பூமியில் மிக அழகான ஜீவிதமாகவும், மனிதன் ஏங்குகிற ஜீவிதமாகவும், உலக வரலாற்றில் மனிதன் இதற்கு முன் அடையாத ஒரு வகை ஜீவிதமாகவும் இருக்கிறது. இது 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியையின் இறுதிப் பலனாகும்; மனிதகுலம் இதற்குத்தான் வெகுவாக ஏங்குகிறது, மேலும் இது மனிதனுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தமும் ஆகும். ஆனால் இந்த வாக்குத்தத்தம் உடனடியாக நிறைவேறாது: கடைசிக் காலத்தின் கிரியைகள் முடிந்ததும், மனிதன் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்டதும், அதாவது சாத்தான் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டப் பின்னரே மனிதன் எதிர்காலத்தில் போய்ச்சேருமிடத்திற்குள் நுழைவான். மனிதன் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, அவன் பாவ இயல்பு இல்லாதவனாக இருப்பான், ஏனென்றால் தேவன் சாத்தானைத் தோற்கடித்திருப்பார், அதாவது விரோத சக்திகளால் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்காது, மனிதனின் மாம்சத்தைத் தாக்கக்கூடிய விரோத சக்திகள் எதுவும் இருக்காது. ஆகவே மனிதன் சுதந்திரமாகவும் பரிசுத்தமாகவும் இருப்பான்—அவன் நித்தியத்திற்குள் நுழைந்திருப்பான். அந்தகாரத்தின் வலிமைமிக்க விரோத சக்திகள் அடிமைத்தனத்தில் வைத்திருந்தால் மட்டுமே, மனிதன் எங்குச் சென்றாலும் சுதந்திரமாக இருப்பான், ஆகவே அவன் கிளர்ச்சியோ எதிர்ப்போ செய்யாமல் இருப்பான். சாத்தான் அடிமைத்தனத்தில் இருக்க வேண்டும், இதனால் மனிதனிடத்தில் அனைத்தும் நன்றாக இருக்கும்; தற்போதைய நிலைமை நிலவுவது ஏனென்றால் பூமியில் எல்லா இடங்களிலும் சாத்தான் இன்னமும் பிரச்சினையைத் தூண்டுகிறான், மேலும் தேவனின் நிர்வாகத்தின் முழு கிரியையும் அதன் முடிவை இன்னும் எட்டவில்லை. சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், மனிதன் முற்றிலுமாக விடுவிக்கப்படுவான்; சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து வெளியே வந்து மனிதன் தேவனைப் பெற்றதும், அவன் நீதியின் சூரியனைக் காண்பான். இயல்பான மனிதனுக்கு உரிய ஜீவிதம் மீண்டும் பெறப்படும்; தீமையிலிருந்து நன்மையை அறிந்துகொள்ளும் திறன், எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் ஆடை அணிய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது, இயல்பாக வாழக்கூடிய திறன் போன்ற இயல்பான மனிதனுக்கு இருக்க வேண்டியவை அனைத்தும் மீண்டும் பெறப்படும். ஏவாள் சர்ப்பத்தால் பரீட்சிக்கப்படாவிட்டால், ஆரம்பத்தில் சிருஷ்டிக்கப்பட்ட பிறகு மனிதன் இந்த மாதிரியான இயல்பான ஜீவிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவன் சாப்பிட்டு, ஆடை அணிந்து, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை நடத்தியிருக்க வேண்டும். மனிதன் சீரழிவு நிலைக்கு வந்தபின், இந்த ஜீவிதம் அடைய முடியாத மாயையாக மாறியது, இன்றும் கூட மனிதன் அத்தகைய விஷயங்களைக் கற்பனை செய்யத் துணியவில்லை. உண்மையில், மனிதன் ஏங்குகிற இந்த அழகான ஜீவிதம் ஒரு அவசியத் தேவையாகும். மனிதன் அத்தகைய போய்ச்சேருமிடம் இல்லாமல் இருந்திருந்தால், பூமியில் அவனது சீரழிந்த ஜீவிதம் ஒருபோதும் முடிவடையாது, இவ்வளவு அழகான ஜீவிதம் இல்லாதிருந்தால், சாத்தானின் தலைவிதிக்கு அல்லது பூமியின் மீது சாத்தான் அதிகாரம் வைத்திருக்கும் காலத்துக்கு எந்த முடிவும் இருக்காது. மனிதன் அந்தகாரத்தின் வலிமை கொண்ட சக்திகளால் எட்ட முடியாத ஒரு உலகிற்குள் வர வேண்டும், அவன் அவ்வாறு செய்யும்போது, சாத்தான் தோற்கடிக்கப்பட்டான் என்பதை இது நிரூபிக்கும். இந்த வகையில், சாத்தானால் எந்த இடையூறும் ஏற்படாத நிலையில், தேவனே மனிதகுலத்தைக் கட்டுப்படுத்துவார், மேலும் அவர் மனிதனின் முழு ஜீவிதத்தையும் கட்டளையிடுவார், கட்டுப்படுத்துவார்; அப்போதுதான் சாத்தான் உண்மையிலேயே தோற்கடிக்கப்படுவான். இன்று மனிதனின் ஜீவிதம் பெரும்பாலும் அசுத்தமான ஜீவிதம்; அது இன்னும் கஷ்டமான மற்றும் துன்பப்பட்ட ஜீவிதம் தான். இதைச் சாத்தானின் தோல்வி என்று சொல்ல முடியாது; மனிதன் இன்னமும் துன்பக் கடலிலிருந்து தப்பவில்லை, இன்னும் மனிதனின் வாழ்க்கையின் கஷ்டத்திலிருந்து, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பவில்லை, ஆனால் இன்னும் அவனுக்கு தேவனைப் பற்றிய சிறதளவு அறிவுகூட இல்லை. மனிதனின் கஷ்டங்கள் அனைத்தும் சாத்தானால் உருவாக்கப்பட்டவை; மனிதனின் வாழ்க்கையில் துன்பத்தைக் கொண்டுவந்தது சாத்தான்தான், மேலும் சாத்தான் அடிமைத்தனத்தில் வைக்கப்பட்ட பின்னரே மனிதனால் துன்பக் கடலில் இருந்து பரிபூரணமாகத் தப்பிக்க முடியும். ஆயினும், மனிதனின் இதயத்தை ஜெயிப்பதன் மூலமும், அதனை ஆதாயப்படுத்துவதன் மூலமும் சாத்தானுடனான போரில் வென்றெடுக்கப்பட்டவனாக மனிதனை ஆக்குவதன் மூலமும், சாத்தானின் அடிமைத்தனம் அடையப்படுகிறது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 591

இன்று, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை அடைவதற்கு முன்பு, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது மற்றும் பரிபூரணமாக்கப்படுவது ஆகியவையே மனிதன் பின்பற்ற வேண்டியவை, சாத்தான் அடிமைப்படுத்தி வைக்கப்படுவதற்கு முன்பு அவைதான் அவன் பெறவிரும்பும் நோக்கங்களாகும். அடிப்படையாகவே, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது மற்றும் பரிபூரணமாக்கப்படுவது அல்லது பெரிய அளவில் பயன்படுத்தப்படுவது இவற்றை மனிதன் பின்பற்றுவது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதற்கானது: மனிதனின் பின்பற்றல் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவதற்கானது, ஆனால் இறுதிப் பயன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதாக இருக்கும். சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதன் மூலம் மட்டுமே மனிதன் பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை, தேவனைத் தொழுது கொள்ளும் ஜீவிதத்தை ஜீவிக்க முடியும். இன்று, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுதல் மற்றும் பரிபூரணமாக்கப்படுதல் ஆகியவற்றை மனிதன் பின்பற்றுவது, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தைப் பெறுவதற்கு முன்னர் பின்பற்றப்படும் விஷயமாகும். அவை சுத்திகரிக்கப்படுவது, சத்தியத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் சிருஷ்டிகரை தொழுது கொள்வது ஆகியவற்றுக்காகவே முதன்மையாகப் பின்பற்றப்படுகின்றன. பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை, கஷ்டமோ உபத்திரவமோ இல்லாத ஒரு ஜீவிதத்தை மனிதன் கொண்டிருந்தால், மனிதன் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவதற்கான பின்பற்றுதலில் ஈடுபட மாட்டான். “ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது” மற்றும் “பரிபூரணமாக்கப்படுதல்” ஆகியவை மனிதன் பின்பற்றுவதற்குத் தேவன் கொடுக்கும் நோக்கங்களாகும், மேலும் இந்த நோக்கங்களை பின்பற்றுவதன் மூலம் மனிதன் சத்தியத்தை நடைமுறையாக்கும்படியும் ஒரு அர்த்தமுள்ள ஜீவிதத்தை வாழும்படியும் அவர் செய்கிறார். மனிதனை முழுமையடையச் செய்வதும், அவனை ஆதாயப்படுத்திக் கொள்வதும் இதன் நோக்கமாகும், மேலும் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது, பரிபூரணமாக்கப்படுவது இவற்றைப் பின்பற்றுவது அதற்கான ஒரு வழிமுறை மட்டுமேயாகும். எதிர்காலத்தில், மனிதன் அற்புதமான சென்றடையும் இடத்திற்குள் பிரவேசித்தால், ஒரு ஜெயங்கொண்டவனாக மாறியதற்கும் பரிபூரணமாக்கப்பட்டதற்கும் எந்தக் குறிப்பும் இருக்காது; தங்கள் கடமையைச் செய்யும் ஒவ்வொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் மட்டுமே இருக்கும். இன்று, மனிதன் வெறுமனே தனக்கான ஒரு நோக்கத்தை வரையறுக்கும் பொருட்டு இவற்றைப் பின்பற்றுமாறு செய்யப்பட்டுள்ளான், இதனால் மனிதனின் பின்பற்றுதல் அதிக இலக்கு மற்றும் நடைமுறை கொண்டதாக இருக்கும். இல்லையெனில், மனிதன் தெளிவற்ற புலனாகாதவற்றுக்கு மத்தியில் வாழ்வான், மேலும் நித்திய ஜீவனுக்குள் பிரவேசித்தலைத் தொடருவான், இது அப்படியானால், மனிதன் இன்னும் அதிகமாக பரிதாபத்துக்கு உரியவன் ஆகமாட்டானா? குறிக்கோள்களோ கொள்கைகளோ இல்லாமல் இந்த வகையில் பின்பற்றுவது—இது தன்னைத்தானே ஏமாற்றுவது அல்லவா? இறுதியில், இந்தப் பின்பற்றல் இயற்கையாகவே பயனற்றதாக இருக்கும்; முடிவில், மனிதன் இன்னும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வான், அதிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள அவனால் இயலாது. இத்தகைய நோக்கமற்ற பின்பற்றலுக்கு அவனை ஏன் உட்படுத்த வேண்டும்? மனிதன் நித்தியமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்கும்போது, சிருஷ்டிகரைத் தொழுது கொள்வான், மனிதன் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு நித்தியத்திற்குள் பிரவேசித்துள்ள காரணத்தால், மனிதன் எந்த நோக்கத்தையும் பின்பற்ற மாட்டான், அல்லது சாத்தானால் முற்றுகையிடப்படுவதைப் பற்றி அவன் கவலைப்பட மாட்டான். இந்த நேரத்தில், மனிதன் தனது இடத்தை அறிந்துகொள்வான், மேலும் தன் கடமையைச் செய்வான், அவர்கள் சிட்சிக்கப்படாவிட்டாலும் அல்லது நியாயந்தீர்க்கப்படவிட்டாலும்கூட, ஒவ்வொரு நபரும் தங்கள் கடமையைச் செய்வார்கள். அந்த நேரத்தில், மனிதன் அடையாளம் மற்றும் அந்தஸ்து இவை இரண்டிலும் ஒரு ஜீவனாக இருப்பான். உயர்வு மற்றும் தாழ்வு என்ற வேறுபாடு இனி இருக்காது; ஒவ்வொரு நபரும் ஒரு வித்தியாசமான செயல்பாட்டைச் செய்வார்கள். ஆயினும்கூட மனிதன் ஒழுங்காகவும் மனிதகுலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும் ஒரு சென்றடையும் இடத்தில் வாழ்வான்; சிருஷ்டிகரைத் தொழுது கொள்வதற்காக மனிதன் தன் கடமையைச் செய்வான், மேலும் இந்த மனுக்குலமே நித்திய மனுக்குலமாக மாறும். அந்த நேரத்தில், மனிதன் தேவனால் வெளிச்சம் பெற்ற ஒரு ஜீவிதம், தேவனின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ள ஒரு ஜீவிதம், தேவனுடன் இணைந்த ஒரு ஜீவிதத்தை ஆதாயப்படுத்தியிருப்பான். மனுக்குலம் பூமியில் ஒரு இயல்பான ஜீவிதத்தை நடத்தும், மேலும் அனைத்து மக்களும் சரியான பாதையில் பிரவேசிப்பார்கள். 6,000 ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் சாத்தானை முற்றிலுமாக தோற்கடித்திருக்கும், அதாவது மனிதன் சிருஷ்டிக்கப் பட்ட போது இருந்த அசலான சாயலைத் தேவன் மீட்டிருப்பார், அப்படி ஆகியிருந்தால் தேவனின் உண்மையான நோக்கம் நிறைவேறியிருக்கும். ஆரம்பத்தில், மனுக்குலம் சாத்தானால் சீர்கெட்டுப்போவதற்கு முன்பு, மனுக்குலம் பூமியில் ஒரு இயல்பான ஜீவிதத்தை நடத்தியது. பின்னர், மனிதன் சாத்தானால் சீர்கெட்டுப்போனபோது, மனிதன் இந்த இயல்பான ஜீவிதத்தை இழந்தான், அதனால் தேவனின் நிர்வாகக் கிரியையும், மனிதனின் இயல்பான ஜீவிதத்தை மீட்கச் சாத்தானுடனான யுத்தமும் தொடங்கியது. தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியைகள் முடிவுக்கு வரும்போதுதான், மனுக்குலத்தின் ஜீவிதம் அதிகாரப்பூர்வமாக பூமியில் தொடங்கும்; அதன்பிறகுதான் மனிதனுக்கு ஒரு அற்புதமான ஜீவிதம் கிடைக்கும், ஆரம்பத்தில் மனிதனை சிருஷ்டிப்பதில் தேவன் கொண்டிருந்த தனது நோக்கத்தையும், மனிதனின் அசல் சாயலையும் மீட்டெடுப்பார். ஆகவே, பூமியில் மனிதகுலத்தின் இயல்பான ஜீவிதம் மனிதனுக்கு கிடைத்தவுடன், மனிதன் ஜெயங்கொண்டவனாகவோ அல்லது பரிபூரணமாக்கப்பட்டவனாகவோ இருப்பதை பின்பற்ற மாட்டான், ஏனென்றால் மனிதன் பரிசுத்தவானாக இருப்பான். மக்கள் பேசும் “ஜெயங்கொண்டவர்கள்” மற்றும் “பரிபூரணமாக்கப்பட்டவர்கள்” என்பது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் போது மனிதன் பின்பற்றுவதற்கானவை, மேலும் அவை மனிதன் சீர்கேட்டுப்போனதால் மட்டுமே இருக்கின்றன. உனக்கு ஒரு நோக்கத்தைக் கொடுத்து, உன்னை இந்த நோக்கத்தைப் பின்பற்றச் செய்வதன் மூலம், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். நீ சாட்சியம் அளித்து சாத்தானை அவமானப்படுத்த, உன்னை ஒரு ஜெயங்கொண்டவன் அல்லது பரிபூரணமாக்கப்பட வேண்டியவன் அல்லது பயன்படுத்தப் படவேண்டியவனாக இருக்கும்படி கேட்பது தேவைப்படுகிறது. இறுதியில், மனிதன் பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை நடத்துவான், மனிதன் பரிசுத்தவானாக இருப்பான்; இது நிகழும்போது, மக்கள் இன்னும் ஜெயங்கொண்டவர்களாக மாற முற்படுவார்களா? அவர்கள் அனைவரும் சிருஷ்டிப்பின் ஜீவன்கள் அல்லவா? ஒரு ஜெயங்கொண்டவன் மற்றும் ஒரு பரிபூரணமாக்கப்பட்டவன் என்று பேசுகையில், இந்த வார்த்தைகள் சாத்தானையும், மனிதனின் இழிநிலையையும் குறிக்கின்றன. “ஜெயங்கொண்டவன்” என்ற இந்த வார்த்தை சாத்தானுக்கும் விரோதச் சக்திகளுக்கும் எதிராக ஜெயங்கொள்ளப்படுவதைக் குறிக்கவில்லையா? நீ பரிபூரணப்படுத்தபட்டாய் என்று நீ கூறும்போது, உனக்குள் உள்ள எந்தவொன்று பரிபூரணப்படுத்தப்பட்டது? உன் சீர்கெட்ட சாத்தானிய மனப்பான்மையிலிருந்து நீயே விலகிவிட்டாய், இதனால் நீ தேவனுடைய மிக உயர்ந்த அன்பை அடைய முடியும் என்பதுதான், இல்லையா? இதுபோன்ற விஷயங்கள் மனிதனுக்குள் இருக்கும் இழிவான விஷயங்கள் தொடர்பாக மற்றும் சாத்தான் தொடர்பானவற்றுடன் கூறப்படுகின்றன; அவை தேவன் தொடர்பாகப் பேசப்படவில்லை.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 592

மனிதன் பூமியில் மனிதனின் உண்மையான ஜீவிதத்தை அடையும்போது, சாத்தானின் முழுச் சக்திகளும் அடிமைப்படுத்தி வைக்கப்படும்போது, மனிதன் பூமியில் எளிதாக வாழ்வான். இன்று இருப்பதுபோல விஷயங்கள் சிக்கலானதாக இருக்காது: மனித உறவுகள், சமூக உறவுகள், சிக்கலான குடும்ப உறவுகள்—அவை மிகுந்த சிரமங்களையும், மிகுந்த வேதனையையும் தருகின்றன! இங்கே மனிதனின் ஜீவிதம் மிகவும் பரிதாபகரமானது! மனிதன் ஜெயங்கொள்ளப்பட்டதும், அவனது இருதயமும் மனமும் மாறும்: தேவன் மீது பயபக்தியாயிருந்து, அவரை நேசிக்கும் இருதயம் அவனுக்கு இருக்கும். தேவனை நேசிக்க முற்படும் பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைவருமே ஜெயங்கொள்ளப்பட்டதும், அதாவது சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும், சாத்தானின் சகல அந்தகார வல்லமைகளும் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டதும், பூமியில் மனிதனின் ஜீவிதம் தொந்தரவு இல்லாததாக இருக்கும், அவனால் பூமியில் சுதந்திரமாக வாழ முடியும். மனிதனின் ஜீவிதம் மாம்ச உறவுகள் மற்றும் மாம்சத்தின் சிக்கல்கள் இல்லாததாக இருந்திருந்தால், அது மிகவும் எளிதாக இருக்கும். மனிதனின் மாம்ச உறவுகள் மிகவும் சிக்கலானவை, மனிதனுக்கு இதுபோன்ற விஷயங்கள் இருப்பது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தன்னை இன்னும் அவன் விடுவிக்கவில்லை என்பதற்குச் சான்றாகும். உனது ஒவ்வொரு சகோதர சகோதரிகளுடனும் நீ ஒரே உறவைக் கொண்டிருந்தால், உன் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் ஒரே உறவைக் கொண்டிருந்தால், உனக்கு எந்த கவலையும் இருக்காது, யாரையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இவை எதுவும் சிறப்பாக இருக்க முடியாது எனும்போது, இந்த வழியில் மனிதன் தனது துன்பத்தில் பாதியிலிருந்து விடுபடுவான். பூமியில் ஒரு இயல்பான மனித ஜீவிதத்தை வாழ்ந்தால், மனிதன் தேவதூதர்களை ஒத்து இருப்பான்; அவன் இன்னும் மாம்சமாக இருந்தாலும், அவன் ஒரு தேவதூதரைப் போலவே இருப்பான். இது இறுதி வாக்குத்தத்தம், மனிதனுக்கு வழங்கப்பட்ட கடைசி வாக்குத்தத்தம். இன்று மனிதன் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்கிறான்; இதுபோன்ற விஷயங்களை மனிதனின் அனுபவிப்பது அர்த்தமற்றது என்று நீ நினைக்கிறாயா? சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியையை எந்தக் காரணமும் இல்லாமல் செய்ய முடியுமா? முன்னதாக மனிதனை சிட்சிப்பதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவனைப் பாதாளக்குழிக்குள் வைப்பதற்காகச் சொல்லப்பட்டது, அதாவது அவனது தலைவிதியையும் வாய்ப்புகளையும் பறிப்பது என்பது இதன் அர்த்தம். இது ஒரு விஷயத்திற்கானது: அது மனிதனின் சுத்திகரிப்பு. மனிதன் வேண்டுமென்றே பாதாளக்குழியில் வைக்கப்பட்டு, அதன்பிறகு தேவன் அவனை கை கழுவி விடுவதில்லை. மாறாக, அது மனிதனுக்குள் இருக்கும் கலகத்தனத்தைக் கையாள்வதற்கானது, இதனால் இறுதியில் மனிதனுக்குள் இருக்கும் விஷயங்கள் சுத்திகரிக்கப்படலாம், இதனால் அவன் தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறலாம், மேலும் அவன் ஒரு பரிசுத்தமான மனிதனைப் போல ஆகலாம். இது செய்யப்பட்டால், பின்னர் அனைத்தும் நிறைவேற்றப்படும். உண்மையில், மனிதனுக்குள் கையாளப்பட வேண்டிய விஷயங்கள் கையாளப்படும்போது, மனிதன் உறுதியான சாட்சியமளிக்கும் போது, சாத்தானும்கூட தோற்கடிக்கப்படுவான், மேலும் முற்றிலும் சுத்திகரிக்கப்படாத, மனிதனுக்குள் அசலாக இருக்கக் கூடிய சில விஷயங்கள் மனிதனுக்குள் இருந்தாலும் கூட, சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும் அதன்பின்னர் பிரச்சினையை ஏற்படுத்தாது, மேலும் அந்த நேரத்தில் மனிதன் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டிருப்பான். மனிதன் அத்தகைய ஜீவிதத்தை ஒருபோதும் அனுபவித்து உணர்ந்ததில்லை, ஆனால் சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும், அனைத்தும் தீர்ந்துவிடும், மனிதனுக்குள் இருக்கும் அற்பமான விஷயங்கள் அனைத்தும் தீர்க்கப்படும், அந்த முக்கிய பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன், மற்ற எல்லாக் கஷ்டங்களும் முடிவுக்கு வரும். பூமியில் தேவன் மனித உருவம் எடுத்த இந்தச் சமயத்தில், அவர் மனிதர்களிடையே தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்யும்போது, அவர் செய்யும் எல்லாக் கிரியைகளும் சாத்தானை தோற்கடிப்பதற்காகவே செய்யப்படுகின்றன, மேலும் மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் மூலமும், உங்களை முழுமையாக்குவதன் மூலமும் அவர் சாத்தானைத் தோற்கடிப்பார். நீங்கள் உறுதியான சாட்சியங்களை அளிக்கும்போது, இதுவும் சாத்தானின் தோல்வியின் அடையாளமாக இருக்கும். மனிதன் முதலில் ஜெயங்கொள்ளப்படுகிறான், சாத்தானை தோற்கடிப்பதற்காக இறுதியில் முழுமையாக பரிபூரணமாக்கப்படுகிறான். சாராம்சத்தில், எவ்வாறாயினும், சாத்தானின் தோல்வியுடன் சேர்ந்து, உபத்திரவங்கள் நிறைந்த இந்த வெற்றுக் கடலிலிருந்து எல்லா மனிதர்களுக்கும் இது இரட்சிப்பாகும். கிரியை மேற்கொள்ளப்படுவது பிரபஞ்சம் முழுவதிலும் அல்லது சீனாவிலா என்பதைப் பொருட்டாகக் கொள்ளாமல், சாத்தானைத் தோற்கடித்து, மனுக்குலம் முழுவதிலும் இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கு எல்லாம் வரிசையாக உள்ளன, இதனால் மனிதன் இளைப்பாறுதலான இடத்திற்குள் பிரவேசிக்க முடியும். மனித உருவான தேவன், இந்த இயல்பான மாம்சம், துல்லியமாகச் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆகும். வானத்தின் கீழே உள்ள தேவனை நேசிக்கும் அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கு மாம்சத்தில் தேவனின் கிரியை பயன்படுத்தப்படுகிறது, இது எல்லா மனிதர்களையும் ஜெயங்கொள்ளும் பொருட்டாகும், மேலும், சாத்தானைத் தோற்கடிப்பதற்கானதாகும். எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொடுப்பதற்கான தேவனின் அனைத்து நிர்வாகக் கிரியைகளின் உட்பொருளானது, சாத்தானின் தோல்வியிலிருந்து பிரிக்க முடியாதது. ஏன், இந்தக் கிரியையின் பெரும்பகுதிகளில், நீங்கள் சாட்சியம் அளிப்பது பற்றி எப்போதும் பேசப்படுகிறது? இந்த சாட்சியம் யாரை நோக்கி இயக்கப்படுகிறது? இது சாத்தானை நோக்கியதல்லவா? இந்தச் சாட்சியம் தேவனுக்குச் செய்யப்படுகிறது, மேலும் தேவனின் கிரியை அதன் பயனை அடைந்துள்ளது என்பதற்கான சாட்சியமளிக்கப்படுகிறது. சாட்சியம் அளிப்பது சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையுடன் தொடர்பு கொண்டது; சாத்தானுடன் ஒரு யுத்தம் இல்லாவிட்டால், மனிதன் சாட்சியம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், மனிதனை இரட்சிக்கும் அதே நேரத்தில், சாத்தான் தோற்கடிக்கப்பட வேண்டும், சாத்தானுக்கு முன்பாக மனிதன் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார், அது மனிதனை இரட்சிக்கவும் சாத்தானுடன் யுத்தம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, மனிதன் இரட்சிக்கப்படும் பொருள் மற்றும் சாத்தானைத் தோற்கடிப்பதற்கான ஒரு கருவி என இரண்டுமாகிறான், ஆகவே மனிதன் தேவனின் முழு நிர்வாக கிரியையின் உட்பொருளாக இருக்கிறான், அதே சமயம் சாத்தான் வெறுமனே அழிவின் பொருள், மற்றும் எதிரியாக இருக்கிறான். நீ எதுவும் செய்யவில்லை என்று நீ உணரலாம், ஆனால் உனது மனநிலையின் மாற்றங்கள் காரணமாக, சாட்சியம் அளிக்கப்படுகிறது, மேலும் இந்தச் சாட்சியம் சாத்தானை நோக்கிச் செய்யப்படுகிறது, அது மனிதனுக்குச் செய்யப்படவில்லை. அத்தகைய சாட்சியத்தை அனுபவிக்க மனிதன் தகுதியற்றவன். தேவன் செய்த கிரியையை அவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? தேவனுடைய யுத்தத்தின் நோக்கம் சாத்தான்; இதற்கிடையில், மனிதன் இரட்சிப்பின் பொருள் மட்டுமேயாவான். மனிதனிடம் சீர்கெட்ட சாத்தானிய மனப்பான்மை உள்ளது, மேலும் இந்தக் கிரியையைப் புரிந்துகொள்ள இயலாதவனாக இருக்கிறான். இதன் காரணம் சாத்தான் ஏற்படுத்தும் சீர்கேடு ஆகும், அது மனிதனுக்கு இயல்பானது அல்ல, ஆனால் அது சாத்தானால் இயக்கப்படுகிறது. இன்று, தேவனின் முக்கிய கிரியை சாத்தானைத் தோற்கடிப்பது, அதாவது மனிதனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவது, இதனால் மனிதன் சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கு இறுதி சாட்சியம் அளிக்க முடியும். இந்த வகையில், எல்லா விஷயங்களும் நிறைவேற்றப்படும். பல சந்தர்ப்பங்களில், உனது வெறுங்கண்ணுக்கு எதுவும் செய்யப்படவில்லை என்பதுபோல தோன்றுகிறது, ஆனால் உண்மையில், கிரியை ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டது. முடிக்கப்பட்டு விட்ட அனைத்து கிரியைகளும் கண்ணுக்குப் புலப்பட வேண்டும் என்று மனிதன் கோருகிறான், ஆனாலும் உன் கண்ணுக்குத் தெரியாமலேயே நான் என் கிரியையை முடித்துவிட்டேன், ஏனென்றால் சாத்தான் சரண் அடைந்துவிட்டான், அதாவது அவன் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டான், தேவனின் ஞானம், சக்தி மற்றும் அதிகாரம் அத்தனையும் சாத்தானை வென்று விட்டது. துல்லியமாக, இதுவே சொல்லப்பட வேண்டிய சாட்சியம், அதற்கு மனிதனிடம் தெளிவான வெளிப்பாடு இல்லை என்றாலும், அது வெறுங்கண்ணுக்குப் புலப்படவில்லை என்றாலும், சாத்தான் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டு விட்டான். இந்தக் கிரியை முழுதும் சாத்தானுக்கு எதிராக இயக்கப்பட்டு சாத்தானுடனான யுத்தம் காரணமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வெற்றி பெற்றதாக மனிதன் பார்க்காத பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அவை தேவனின் பார்வையில் வெற்றிகரமாக நீண்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டன. தேவனின் எல்லா கிரியைகளைப் பற்றிய உள்ளார்ந்த சத்தியங்களில் இது ஒன்றாகும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 593

பரிபூரணமாக்கப்படுவதற்கு விருப்பமாக உள்ள அனைவருக்கும் பரிபூரணமாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது, எனவே அனைவரும் இளைப்பாற வேண்டும்: எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிப்பீர்கள். ஆனால் நீ பரிபூரணமாக்கப்பட விரும்பவில்லை என்றால், அற்புதமான உலகில் நுழைய விரும்பவில்லை என்றால், அது உனது சொந்தப் பிரச்சினை. பரிபூரணமாக்கப்படுவதற்கு விருப்பமாக இருப்பவர்களும் விசுவாசமுள்ளவர்களும், தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அனைவரும், மற்றும் தங்கள் செயல்பாட்டை உண்மையாகச் செய்கிறவர்களும்—இவர்கள் அனைவருமே பரிபூரணமாக்கப் படக்கூடியவர்கள். இன்று, விசுவாசமாக தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் அனைவரும், மற்றும் தேவனுக்கு விசுவாசமில்லாதவர்கள் அனைவரும், தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அனைவரும், குறிப்பாகப் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் பெற்றவர்கள், ஆனால் அதை நடைமுறைக்குக் கொண்டு வராதவர்கள் அத்தகைய அனைவரும் பரிபூரணமாக்கப்பட முடியாதவர்கள். விசுவாசமுள்ளவர்களாகவும் தேவனுக்கு கீழ்ப்படிபவர்களாகவும் இருக்கத் தயாராக உள்ள அனைவரையும் பரிபூரணமாக்க முடியும், அவர்கள் கொஞ்சம் அறியாதவர்களாக இருந்தாலும்; இதனைப் பின்பற்றத் தயாராக உள்ள அனைவரையும் பரிபூரணமாக்க முடியும். இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. இந்தத் திசையில் நீ தொடரத் தயாராக இருக்கும் வரை, நீ பரிபூரணமாக்கப்படமுடியும். உங்களில் யாரையும் கைவிடவோ அல்லது நீக்கவோ நான் விரும்பவில்லை, ஆனால் மனிதன் நல்லவிதமாகச் செய்ய முயற்சிக்கவில்லை என்றால், பின்னர் உன்னை நீயே அழித்துக் கொள்கிறாய்; உன்னை நீக்குவது நானல்ல, நீயே உன்னை அவ்வாறு செய்கிறாய். உனக்கு நீ நல்லவிதமாகச் செய்ய முயற்சிக்கவில்லை என்றால்—நீ சோம்பேறியாக இருந்தால், அல்லது உனது கடமையைச் செய்யாவிட்டால், அல்லது விசுவாசமாக இல்லாவிட்டால், அல்லது நீ சத்தியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், நீ எப்போதும் நீ விரும்பியபடி செய்வதானால், நீ பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், உன் சொந்தப் புகழுக்காகவும், செல்வத்துக்காகவும் போராடுகிறவன் என்றால், மற்றும் எதிர் பாலினத்தவர்களிடம் நடந்துகொள்ளும் முறையில் நீ நேர்மையற்றவனாக இருந்தால், நீ உனது சொந்தப் பாவங்களின் சுமையைச் சுமப்பாய்; நீ யாருடைய பரிதாபத்திற்கும் தகுதியுள்ளவன் அல்ல. நீங்கள் அனைவரும் பரிபூரணமாக்கப்பட வேண்டும் என்பதும், குறைந்தபட்சம் ஜெயங்கொள்ளப்பட வேண்டும் என்பதும் எனது நோக்கம், இதனால் இந்தக் கட்டக் கிரியை வெற்றிகரமாக முடிக்கப்படலாம். ஒவ்வொரு மனிதனும் பரிபூரணமாக்கப்பட வேண்டும், இறுதியில் அவரால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும், அவரால் பரிபூரணமாகச் சுத்திகரிக்கப்பட வேண்டும், அவருக்குப் பிரியமான மக்களாக மாற வேண்டும் என்பதே தேவனின் விருப்பம். நான் உங்களுக்குச் சொல்வது பின்தங்கியதா அல்லது மோசமான திறமை வாய்ந்ததா என்பதெல்லாம் முக்கியமல்ல—இது எல்லாம் உண்மை. இதை நான் சொல்வதென்பது, நான் உங்களைக் கைவிட உத்தேசிக்கிறேன், நான் உங்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டேன், அதைக்காட்டிலும் உங்களை இரட்சிக்க நான் விரும்பவில்லை என்பதையெல்லாம் நிரூபிக்கவில்லை. இன்று நான் உங்கள் இரட்சிப்பின் கிரியையைச் செய்ய வந்திருக்கிறேன், அதாவது நான் செய்யும் கிரியை இரட்சிப்பின் கிரியையின் தொடர்ச்சியாகும். ஒவ்வொரு நபருக்கும் பரிபூரணமாக்கப் படுவதற்கு வாய்ப்பு உள்ளது: ஆனால் நீ அதற்குத் தயாராக இருக்க வேண்டும், நீ பின்பற்ற வேண்டும், இறுதியில் நீ இந்த முடிவை அடைய முடியும், உங்களில் ஒருவர் கூடக் கைவிடப்பட மாட்டார்கள். நீ மோசமான திறமை வாய்ந்தவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் மோசமான திறனுக்கேற்ப இருக்கும்; நீ அதிகத் திறன் கொண்டவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் உயர் திறனுக்கேற்ப இருக்கும்; நீ அறியாதவனாகவும், கல்வியறிவற்றவனாகவும் இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் கல்வியறிவின்மைக்கு ஏற்ப இருக்கும்; நீ கல்வியறிவு பெற்றவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் நீ கல்வியறிவு பெற்றவனாக இருப்பதற்கு ஏற்ப இருக்கும்; நீ வயதானவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் வயதுக்கு ஏற்ப இருக்கும்; நீ விருந்தோம்பல் வழங்க வல்லவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் இந்தத் திறனுக்கு ஏற்ப இருக்கும்; நீ விருந்தோம்பல் வழங்க முடியாது, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை மட்டுமே செய்ய முடியும் என்று நீ சொன்னால், அது ஒரு நற்செய்தியைப் பரப்புவதா, அல்லது தேவாலயத்தைக் கவனித்துக்கொள்வதா, அல்லது பிற பொது விவகாரங்களில் கலந்துகொள்வதா என்பதில் உன்னைப் பற்றிய எனது பரிபூரணமாக்கும் செயல் நீ செய்யும் செயல்பாட்டிற்கு ஏற்ப இருக்கும். விசுவாசமாக இருப்பது, கடைசிவரை கீழ்ப்படிதல், தேவன்மீது மிகுந்த அன்பு செலுத்த முற்படுவது—இதைத்தான் நீ நிறைவேற்ற வேண்டும், இந்த மூன்று விஷயங்களை விடச் சிறந்த நடைமுறைகள் எதுவும் இல்லை. இறுதியில், இந்த மூன்று விஷயங்களை மனிதன் அடைய வேண்டிய தேவையுள்ளது, அவனால் அவற்றை அடைய முடிந்தால், அவன் பரிபூரணமாகிவிடுவான். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, நீ உண்மையிலேயே பின்பற்ற வேண்டும், இந்த விஷயத்தில் நீ முன் நோக்கியும் மேல்நோக்கியும் தீவிரமான உந்துதல் செய்ய வேண்டும், அந்த விஷயத்தில் செயலற்றவனாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு நபருக்கும் பரிபூரமாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், பரிபூரமாக்கப்பட்டவராக ஆகும் திறன் உள்ளது என்றும் நான் சொல்லியிருக்கிறேன், இது உண்மைதான், ஆனால் நீ உன் பின்பற்றும் செயலில் சிறப்பாக இருக்க முயற்சிக்க வேண்டாம். இந்த மூன்று அளவுகோல்களை நீங்கள் அடையவில்லை என்றால், இறுதியில் நீ அவசியம் நீக்கப்படுவாய். எல்லோரும் இதைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எல்லோருக்கும் கிரியையும் பரிசுத்த ஆவியின் பிரகாசமும் இருக்க வேண்டும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிய இயல வேண்டும், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை இதுதான். நீங்கள் அனைவரும் உங்கள் கடமையைச் செய்தவுடன், நீங்கள் அனைவரும் பரிபூரணப்படுத்தப்பட்டிருப்பீர்கள், உங்களிடம் பலத்த சாட்சியம் இருக்கும். சாட்சியம் அளிப்பவர்கள் அனைவரும் சாத்தானை வென்றவர்களாகவும், தேவனின் வாக்குத்தத்தைப் பெற்றவர்களாகவும் உள்ளனர், மேலும் அவர்கள் அற்புதமான சென்றடையும் இடத்திலேயே வாழ்வார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 594

ஆதியில் தேவன் இளைப்பாறுதலில் இருந்தார். அக்காலத்தில் பூமியில் மனிதர்கள் அல்லது வேறு எதுவும் இருக்கவில்லை, மேலும், தேவன் இன்னும் எந்தக் கிரியையும் செய்திருக்கவில்லை. மனுக்குலம் வாழ்ந்திருக்கத் தொடங்கிய பின்னர் மற்றும் சீர்கெட்ட பின்னரே அவர் தமது நிர்வாகக் கிரியையைத் தொடங்கினார்; அதில் இருந்து அவர் ஒரு போதும் இளைப்பாறவில்லை, ஆனால் அதற்குப் பதில் அவர் மனுக்குலத்திற்கு மத்தியில் ஓய்வின்றி கிரியையாற்றத் தொடங்கினார். மனுக்குலத்தின் சீர்கேட்டால் மற்றும் பிரதான தூதனின் கலகத்தால் தேவன் தமது இளைப்பாறுதலை இழந்தார். அவர் சாத்தானைத் தோற்கடித்து சீர்கெட்ட மனுக்குலத்தை மீட்காவிட்டால், அவர் மீண்டும் ஒருபோதும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது. மனிதன் இளைப்பாறுதல் இல்லாமல் இருப்பதால் தேவனும் அவ்வாறே இருக்கிறார், அவர் இளைப்பாறும் போது மனிதனும் இளைப்பாறுவான். இளைப்பாறுதலில் வாழ்வது என்பது யுத்தம் இல்லாமல், அசுத்தம் இல்லாமல் மேலும் தொடர் அநீதி இல்லாமல் வாழ்வது ஆகும். இது சாத்தானின் இடையூறுகள் இல்லாத (இங்கு “சாத்தான்” என்பது சத்துருவின் வல்லமைகளைக் குறிக்கிறது) மற்றும் சாத்தானின் சீர்கேடுகள் இல்லாத வாழ்க்கை, மேலும் அது தேவனுக்கு எதிரான எந்த வல்லமைகளும் ஊடுறுவ முடியாத வாழ்க்கையாகும்; எல்லாம் தனது வகையைப் பின்பற்றும் மற்றும் சிருஷ்டிப்பின் கர்த்தரைத் தொழுதுகொள்ளும் வாழ்க்கை மேலும் அதில் வானமும் பூமியும் முற்றிலுமாக அமைதியில் இருக்கும்—இதுவே “மனிதர்களின் இளைப்பாறுதலான வாழ்க்கை” என்ற சொற்களின் அர்த்தமாகும். தேவன் இளைப்பாறும் போது, அநீதி பூமியின் மேல் இனிமேலும் நிலைநிற்க முடியாது, அல்லது சத்துருக்களின் வல்லமைகள் மேலும் ஊடுறுவ முடியாது, மற்றும் மனுக்குலம் ஒரு புதிய ராஜ்யத்துக்குள் நுழையும்—சாத்தானால் இனி ஒருபோதும் மனுக்குலம் சீர்கேடு அடைவதில்லை, ஆனால் மாறாக சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பிறகு இரட்சிக்கப்பட்ட ஒரு மனுக்குலமாக இருக்கும். மனுக்குலத்தின் இளைப்பாறுதல் நாளே தேவனின் இளைப்பாறுதல் நாளாகவும் இருக்கும். மனுக்குலத்தால் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாத காரணத்தால்தான் தேவன் தமது இளைப்பாறுதலை இழந்தாரே ஒழிய ஆதியிலேயே அவர் தம்மால் இளைப்பாற முடியாத காரணத்தால் அல்ல. இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பது என்பதற்கு எல்லாம் இயக்கத்தை நிறுத்துகிறது அல்லது வளராமல் போகிறது என்று அர்த்தமல்ல, அல்லது தேவன் கிரியையை நிறுத்துகிறார் அல்லது மனிதர்கள் வாழ்வதை நிறுத்துகிறார்கள் என்பதும் பொருளல்ல. சாத்தான் அழிக்கப்படுவதும், அவனது தீய செயல்களில் இணைந்துகொண்ட பொல்லாத ஜனங்கள் தண்டிக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுவதும் மற்றும் தேவனுக்கு எதிரான வல்லமைகள் இல்லாமல் போவதும் நிகழும் போதே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் அடையாளம் இருக்கும். மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக தேவன் தமது கிரியையை ஆற்ற மாட்டார் என்பதே தேவன் இளைப்பாறுதலுக்குள் பிரேவேசிக்கிறார் என்பதற்கு அர்த்தமாகும். முழு மனுக்குலமும் சாத்தானின் சீர்கேடு இல்லாமல் தேவனின் ஒளிக்குள்ளும் அவரது ஆசீர்வாதத்துக்குள்ளும் வாழும், மேலும் அநீதி ஒருபோதும் ஏற்படாது என்பதுதான் மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறது என்பதற்கு அர்த்தமாகும். தேவனின் பராமரிப்பிற்குள் மனிதர்கள் பூமியில் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ்வார்கள். தேவனும் மனுக்குலமும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, மனுக்குலம் இரட்சிக்கப்பட்டுவிட்டது, சாத்தான் அழிக்கப்பட்டுவிட்டான், மனுக்குலத்திற்குள் தேவனின் கிரியை முற்றிலுமாக முழுமையடைந்துவிட்டது என்று அர்த்தமாகும். தேவன் தொடர்ந்து மனிதர்களின் மத்தியில் கிரியை செய்ய மாட்டார், மேலும் அவர்கள் இனிமேலும் சாத்தானின் ஆதிக்கத்தின்கீழ் வாழ மாட்டார்கள். அப்படி இருக்க, தேவன் இனிமேலும் கிரியை ஆற்றிக்கொண்டிருக்க மாட்டார், மனுக்குலமும் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கவும் செய்யாது; தேவனும் மனிதர்களும் ஒரேநேரத்தில் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவன் தமது ஆதி ஸ்தலத்துக்கு திரும்புவார், மேலும் ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் இடத்துக்குத் திரும்பிச் செல்வார்கள். தேவனின் முழு நிர்வாகமும் முடிந்துவிட்ட பின்னர் தேவனும் மனிதர்களும் தங்கும் ஸ்தலங்கள் இவைகளே. தேவனுக்கு தேவனுக்கான போய்ச்சேரும் இடம் உண்டு, மற்றும் மனுக்குலத்திற்கு மனுக்குலத்திற்கான போய்ச்சேரும் இடம் உண்டு. இளைப்பாறுதலின்போது, பூமியின் மேல் மனிதர்களுடைய வாழ்வில் தேவன் தொடர்ந்து வழிகாட்டுவார், அதே வேளையில் அவருடைய ஒளியில், அவர்கள் பரலோகத்தில் இருக்கும் ஒரே மெய் தேவனைத் தொழுதுகொள்வார்கள். தேவன் இனிமேலும் மனுக்குலத்தின் மத்தியில் வாழமாட்டார், அல்லது அவரது ஸ்தலத்தில் மனுக்குலமும் அவருடன் வாழ முடியாது. ஒரே ஆட்சி எல்லைக்குள் தேவனும் மனிதர்களும் வாழ முடியாது; மாறாக, இருவருக்கும் அவர்களுக்கே உரித்தான வாழும் முறைகள் உள்ளன. தேவன் ஒருவர் மட்டுமே மனுக்குலத்தை வழிகாட்டுகிறார், மேலும் முழு மனுக்குலமும் தேவனின் நிர்வாகக் கிரியையினால் உண்டான பலனாகும். மனிதர்கள் வழிநடத்தப்படுபவர்களோ, அவர்கள் தேவனைப் போன்ற சாராம்சம் கொண்டவர்களோ அல்ல. “இளைப்பாறுதல்” என்பது ஒருவர் தன் ஆதி ஸ்தலத்துக்குச் செல்வது ஆகும். ஆகவே, தேவன் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார் என்றால் அவர் தமது ஆதி ஸ்தலத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டார் என்று அர்த்தமாகும். அவர் இனிமேலும் பூமியில் அல்லது மனுக்குலத்தின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்க அவர்களது மத்தியில் வாழ மாட்டார், மனிதர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார்கள் என்றால் அவர்கள் சிருஷ்டிப்பின் மெய்யான இலக்குகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தமாகும்; அவர்கள் பூமியின் மேல் இருந்து தேவனைத் தொழுதுகொள்வார்கள், மேலும் சாதாரண மனித வாழ்வை வாழ்வார்கள். ஜனங்கள் இனிமேல் ஒருபோதும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது அவரை எதிர்க்கமாட்டார்கள், மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின் ஆதி வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர் இது முறையே தேவன் மற்றும் மனிதர்களின் வாழ்வும் சென்றடையும் ஸ்தலமுமாகும். தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தில் அது தோற்கடிக்கப்படுவதே தவிர்க்கமுடியாத போக்காகும். இந்த வகையில், தேவன் தமது நிர்வாகக் கிரியையை முடித்த பின்னர் அவர் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதும், மனுக்குலத்தின் முழு இரட்சிப்பும் அவர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதும் அதுபோலவே தவிர்க்கமுடியாத போக்குகளாக மாறிவிட்டன. மனுக்குலத்தின் இளைப்பாறுதல் ஸ்தலம் பூமியிலும், மேலும் தேவன் இளைப்பாறுதல் ஸ்தலம் பரலோகத்திலும் உள்ளன. மனிதர்கள் தங்கள் இளைப்பாறுதலில் தேவனைத் தொழுதுகொள்ளும் போது, அவர்கள் பூமியில் வாழ்வார்கள், மற்றும் தேவன் மீதமுள்ள மனுக்குலத்தை இளைப்பாறுதலுக்குள் வழிநடத்தும்போது, அவர் அவர்களை பூமியில் இருந்தல்ல பரலோகத்தில் இருந்து வழிநடத்துவார். தேவன் இன்னும் ஆவியானவராகவே இருப்பார், மனிதர்கள் இன்னும் மாம்சமாகவே இருப்பார்கள். தேவனும் மனிதர்களும் வெவ்வேறு விதமாக இளைப்பாறுவார்கள். தேவன் இளைப்பாறுதலில் இருக்கும் போது அவர் வந்து மனிதர்களுக்கு மத்தியில் தோன்றுவார்; மனிதர்கள் இளைப்பாறும் போது, அவர்கள் பரலோகத்துக்குச் செல்லவும் அங்கு வாழ்க்கையை அனுபவிக்கவும் தேவன் வழிநடத்துவார். தேவனும் மனுக்குலமும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர், சாத்தான் ஒருபோதும் இருக்க மாட்டான்; அதுபோலவே பொல்லாத மனிதர்களும் இருக்க மாட்டார்கள். தேவனும் மனுக்குலமும் இளைப்பாறும் முன்னர், பூமியில் தேவனை துன்புறுத்திய பொல்லாத நபர்களும், அங்கே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்த விரோதிகளும் ஏற்கெனவே அழிக்கப்பட்டிருப்பார்கள்; கடைசி நாட்களின் பெரும் பேரிடர்களால் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டிருப்பார்கள். அந்தப் பொல்லாத ஜனங்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர், பூமி இனி ஒருபோதும் சாத்தானின் துன்புறுத்தலை அறியாது. அப்போதுதான் மனுக்குலம் முழு இரட்சிப்பை அடையும், மற்றும் தேவனின் கிரியை முழுமையாக நிறைவடையும். தேவனும் மனிதனும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க இவைகளே முன்நிபந்தனைகளாகும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 595

தேவனுடைய கிரியையின் நிறைவேறுதலை மட்டுமல்லாமல் மனுக்குலத்தின் வளர்ச்சியின் முடிவையும் அனைத்து விஷயங்களின் முடிவும் நெருங்கிவருவது சுட்டிக்காட்டுகிறது. சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் வளர்ச்சியின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டிருப்பார்கள், மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியார் தங்கள் பரவலை நிறைவுசெய்து விட்டிருப்பார்கள் என்பது இதற்கு அர்த்தமாகும். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட இத்தகைய மனுக்குலத்தால் தொடர்ந்து வளர்ச்சிபெறுவது என்பது சாத்தியமற்றது என்பதும் அதன் அர்த்தமாகும். ஆதியில் ஆதாமும் ஏவாளும் சீர்கெடுக்கப்படவில்லை, ஆனால் ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியே துரத்தப்பட்ட ஆதாமும் ஏவாளும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டனர். தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் வரும்போது, ஏதேன் தோட்டத்தில் இருந்து துரத்தப்பட்ட ஆதாமும் ஏவாளும்–அவர்களின் சந்ததியாரும் இறுதியாக ஒரு முடிவுக்கு வருவார்கள். எதிர்கால மனுக்குலமும் ஆதாம் ஏவாளின் சந்ததியாரையே கொண்டிருப்பார்கள், ஆனால் அந்த மனிதர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்பவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் இரட்சிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட ஜனங்களாக இருப்பார்கள். இந்த மனுக்குலம் நியாயந்தீர்க்கப்பட்டு சிட்சிக்கப்பட்டதாகவும், மேலும் அது பரிசுத்தமானதாகவும் இருக்கும். இந்த ஜனங்கள் ஆதியில் இருந்த மனித இனம் போல் இருக்க மாட்டார்கள்; ஆதியில் இருந்த ஆதாம் ஏவாளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வகையான மனுக்குலம் என்று கூட இதைக் கூறலாம். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட அனைவரிலும் இருந்து இந்த ஜனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள், மேலும் தேவனின் நியாயத்தீர்ப்பு மற்றும் கடிந்துகொள்ளுதலின் போது இறுதியாக உறுதியாக நின்றவர்களே இவர்கள்; சீர்கெட்ட மனுக்குலத்தின் மத்தியில் அவர்கள் மீந்திருக்கும் கடைசி குழுவாக இருப்பார்கள். இந்த ஜனங்கள் மட்டுமே தேவனோடு சேர்ந்து இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும். கடைசி நாட்களில்–அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக நிற்கக் கூடியவர்களே, தேவனோடு கூட இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பவர்கள் ஆவார்கள்; இவ்வாறிருக்க, இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் யாவரும் சாத்தானின் கட்டை உடைத்து விடுதலை ஆனவர்கள் மேலும் அவரது இறுதிக் கிரியையான சுத்திகரிப்பிற்கு உட்பட்டு தேவனால் ஆதாயம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். தேவனால் இறுதியாக ஆதாயம் செய்யப்படக் கூடிய இந்த மனிதர்கள் இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் முக்கிய நோக்கம் மனுக்குலத்தை சுத்திகரிப்பதும் அவர்களை அவர்களது இறுதி இளைப்பாறுதலுக்கு ஆயத்தம் செய்வதும் ஆகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும். தேவனின் கிரியையான சுத்திகரிப்பு மட்டுமே மனிதர்களை அவர்களின் அநீதியை நீக்கி சுத்திகரிக்கும், மேலும் சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்ற அவரது கிரியை மட்டுமே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமைக் கூறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதன் மூலம் இரட்சிக்கப்படக் கூடாதவர்களில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களையும், மீந்திருக்காதவர்களில் இருந்து மீந்திருப்பவர்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தக் கிரியை முடிவடையும் போது, மீந்திருக்க அனுமதிக்கப்படும் ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் மேலும் பூமியில் ஒரு மிக அற்புதமான இரண்டாம் மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ மனுக்குலத்தின் ஓர் உயரிய நிலைக்குள் பிரவேசிப்பார்கள்; வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவர்கள் தங்கள் மானுட இளைப்பாறுதல் நாளைத் தொடங்குவார்கள், மேலும் தேவனோடு ஒன்றாக வாழ்வார்கள். மீந்திருக்க அனுமதிக்கப்படாதவர்களின் உண்மை நிலை சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும், அதன் பின்னர் அவர்கள் சாத்தானைப் போல அழிக்கப்படுவார்கள், பூமியில் மேலும் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த வகையான ஜனங்களை எதிர்கால மனுக்குலம் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளாது; இறுதி இளைப்பாறுதல் நிலத்தில் இத்தகைய ஜனங்கள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள், மேலும் அவர்கள் தேவனும் மனுக்குலமும் பங்கேற்கும் இளைப்பாறுதல் நாளில் இணையத் தகுதி அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தண்டனைக்கு இலக்கான பொல்லாத, அநீதியான ஜனங்கள். அவர்கள் ஒரு தடவை மீட்டெடுக்கப்பட்டார்கள், மற்றும் அவர்கள் நியாயம் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்; அவர்களும் ஒருகாலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தவர்களே. இருப்பினும், கடைசி நாள் வரும்போது, அவர்கள் இன்னும் தங்கள் பொல்லாப்பாலும் தங்கள் கீழ்ப்படியாமையின் விளைவாலும் இரட்சிக்கப்பட இயலாமையாலும் அழித்தொழிக்கப்படலாம்; எதிர்கால உலகில் இருப்பதற்கு அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள், மேலும் எதிர்கால மனுக்குலத்தின் மத்தியில் ஒருபோதும் வாழ மாட்டார்கள். பரிசுத்த மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, மரித்தவர்களின் ஆவியாக இருந்தாலும் அல்லது மாம்சத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களாக இருந்தாலும், அனைத்து அக்கிரமக்காரரும் மற்றும் இரட்சிக்கப்படாத அனைவரும் அழிக்கப்படுவார்கள். இந்த அக்கிரமஞ்செய்யும் ஆவிகள் மற்றும் மனிதர்களையும், அல்லது நீதிமான்களின் ஆவிகள் மற்றும் நன்மை செய்பவர்களையும் பொறுத்தவரையில் அவர்கள் எந்த யுகத்தில் இருந்தாலும், தீமை செய்யும் அனைவரும் இறுதியாக அழிக்கப்படுவார்கள் மேலும் நீதிமான்கள் அனைவரும் பிழைப்பார்கள். ஒரு நபர் அல்லது ஆவி இரட்சிப்பைப் பெறுமா என்பது கடைசிக் காலத்தின் கிரியையின் அடிப்படையில் முழுவதுமாக தீர்மானிக்கப்பட மாட்டாது; மாறாக, அவர்கள் தேவனை எதிர்த்தார்களா அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்களா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். முந்திய யுகத்தில் தீமை செய்து இரட்சிப்பைப் பெற முடியாதவர்கள், சந்தேகமின்றி, தண்டனைக்கு இலக்காவார்கள், மற்றும் தற்போதைய யுகத்தில் தீமை செய்து இரட்சிக்கப்பட முடியாதவர்களும் தண்டனைக்கு இலக்காகவே இருப்பார்கள். மனிதர்கள் அவர்கள் வாழும் யுகத்தைப் பொருத்தல்லாமல், நன்மை தீமையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட உடன், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்படுவதில்லை அல்லது அவர்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படுவதில்லை; மாறாக, தேவன் கடைசி நாட்களில் தமது ஜெயங்கொள்ளுதல் கிரியையை முடித்த பின்னரே தீயோரைத் தண்டிக்கும் மற்றும் நல்லோருக்கு பிரதிபலன் அளிக்கும் தமது கிரியையைச் செய்வார். உண்மையில், மனிதர்களுக்கு மத்தியில் அவர் தமது கிரியையை செய்யத் தொடங்கியது முதல் அவர்களை நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என்று பிரிக்கத் தொடங்கிவிட்டார். அவரது கிரியை நிறைவடைந்த பின்னரே அவர் நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்துத் துன்மார்க்கரைத் தண்டிப்பார்; தமது கிரியை முடிவடைந்த உடன் அவர் அவர்களை வகைப்படுத்தி பின்னர் உடனடியாக நல்லவர்களுக்கு பிரதிபலன்களையும் துன்மார்க்கருக்கு தண்டனையும் அளிப்பார் என்பதல்ல. நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்து துன்மார்க்கருக்குத் தண்டனை அளிக்கும் தேவனின் இறுதி கிரியையின் முழு நோக்கமானது எல்லா மனிதர்களையும் முற்றிலுமாக சுத்திகரிப்பதன் மூலம் அவரால் ஒரு தூய்மையான பரிசுத்த மனுக்குலத்தை நித்திய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுவதற்குத்தான். கிரியையின் இந்தக் கட்டமே மிக முக்கியமானது; அவரது முழுமையான நிர்வாகக் கிரியையின் கடைசிக் கட்டம் இது. தேவன் துன்மார்க்கரை அழிக்காமல், ஆனால் அதற்குப் பதிலாக அவர்களை மீந்திருக்க அனுமதித்தால், பின் ஒவ்வொரு மனிதர்களும் இன்னும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாமல் போவார்கள், மேலும் தேவனால் முழு மனுக்குலத்தையும் ஒரு சிறந்த ராஜ்யத்துக்குள் கொண்டுவர முடியாமல் போகும். இத்தகையக் கிரியை நிறைவடையாது. அவரது கிரியை முடிவடைந்த உடன், முழு மனுக்குலமும் முற்றிலும் பரிசுத்தமாக இருக்கும்; இந்த வழியில் மட்டுமே தேவனால் சமாதானத்துடன் இளைப்பாறுதலில் வாழ முடியும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 596

இந்நாட்களில் ஜனங்களால் இன்னும் மாம்சத்தின் காரியங்களை விட்டுவிட முடியவில்லை; அவர்களால் மாம்ச இன்பம், உலகம், பணம், அல்லது அவர்களது சீர்கெட்ட மனநிலைகளை விட முடியவில்லை. பெரும்பாலான ஜனங்கள் தங்கள் தேடல்களை ஒரு அக்கறையற்ற முறையிலேயே நடத்துகின்றனர். உண்மையில், இந்த ஜனங்கள் தங்கள் இருதயங்களில் தேவனை வைத்துக்கொள்ளுவதே இல்லை; அதைவிட மோசமானது, அவர்கள் தேவனுக்கு பயப்படுவதில்லை. அவர்களது இருதயத்தில் தேவன் இல்லை, மற்றும் அதனால் தேவன் செய்யும் அனைத்தையும் அவர்களால் கண்டுணர முடிவதில்லை, மேலும் அவர் கூறும் வார்த்தைகளை நம்புவதற்கும் அவர்கள் மிகக் குறைந்த திறன் உடையவர்களாக இருக்கின்றனர். இந்த ஜனங்கள் மிக அதிகமான அளவில் மாம்ச சிந்தை உடையவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் மிகவும் சீர்கெட்டவர்களாக இருக்கின்றனர் மற்றும் சத்தியம் என்பதே இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் என்னவென்றால், தேவன் மாம்சமாக முடியும் என்று அவர்கள் நம்புவதில்லை. மாம்சமாகிய தேவன் மீது நம்பிக்கை இல்லாத எவரும்–அதாவது, கண்ணுக்குத் தெரியும் தேவனையோ அல்லது அவரது கிரியை மற்றும் வார்த்தைகளையோ நம்பாத எவரும், மேலும் அதற்குப் பதில் பரலோகத்தில் இருக்கும் அதரிசனமான தேவனை தொழுதால்–தன் இருதயத்தில் தேவன் இல்லாத ஒரு நபராக இருப்பான். இத்தகைய ஜனங்கள் கலகக்காரர்கள் மற்றும் தேவனை எதிர்ப்பவர்கள் ஆவார்கள். சத்தியத்தைப் பற்றி எதுவும் கூற அவர்களிடம் மனிதத்தன்மை மற்றும் பகுத்தறிவு இல்லை. மேலும், இந்த ஜனங்களுக்கு, கண்ணுக்குத் தெரியும் மற்றும் தொட்டுணரத்தக்க தேவன் முற்றிலுமாக நம்பமுடியாதவராக இருக்கிறார், இருப்பினும் அதரிசனமான மற்றும் தொட்டுணர முடியாத தேவன் அதிகமாக நம்பகமானவரும் மிகவும் சந்தோஷமளிப்பவராகவும் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் தேடுவது மெய்யான சத்தியத்தை அல்ல, அல்லது வாழ்க்கையின் மெய்யான சாராம்சத்தையும் அல்ல; தேவ சித்தத்தையும் அறவே இல்லை. மாறாக, அவர்கள் மனவெழுச்சியை நாடுகிறார்கள். தங்கள் சொந்த விருப்பங்களை அடைய மிகவும் உதவும் விஷயங்கள் எதுவாக இருந்தாலும் சந்தேகமின்றி அதுவே அவர்கள் நம்புவதும் நாடுவதும் ஆகும். சத்தியத்தைப் பின்பற்றுவதற்கு அல்லாமல் தங்கள் விருப்பங்களைத் திருப்திப்படுத்தவே அவர்கள் தேவனை நம்புகிறார்கள். இத்தகைய ஜனங்கள் அக்கிரமக்காரர் இல்லையா? அவர்கள் மிக அதிகமாக சுய-நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் அவர்கள் பரலோகத்தில் இருக்கும் தேவன் தங்களைப் போன்ற “நல்லவர்களை” அழிப்பார் என்று நம்பவே மாட்டார்கள். அதற்குப் பதில், தேவன் அவர்களை பிழைத்திருக்க அனுமதிப்பார் என்றும் மேலும் தேவனுக்காக அநேக காரியங்களைச் செய்ததாலும் அவரிடம் கணிசமான “விசுவாசத்தை” காட்டியதாலும் சிறந்த பிரதிபலனை அளிப்பார் என்றும் நம்புகிறார்கள். கண்ணுக்குப் புலனாகிற தேவனை பின்பற்றுவதிலும், தங்கள் விருப்பங்கள் நிறைவேறாத போது, அவர்கள் தேவனுக்கு விரோதமாக உடனடியாக எழும்புவார்கள் அல்லது மிகுந்த கோபத்துக்கு ஆளாவார்கள். தங்கள் விருப்பங்களைத் தாங்களே திருப்திப்படுத்தும் இகழத்தக்க ஜனங்களைப் போல காட்டிக் கொள்ளுகிறார்கள்; சத்தியத்தைப் பின்பற்றுவதில் அவர்கள் நேர்மையான ஜனங்கள் அல்ல. இத்தகைய ஜனங்களே கிறிஸ்துவைப் பின்பற்றுவதாக அழைக்கப்படும் துன்மார்க்கர். சத்தியத்தைப் பின்பற்றாத ஜனங்களால் சத்தியத்தை நம்பவும் முடியாது, மேலும் அவர்களால் மனுக்குலத்தின் எதிர்காலத்தை உய்த்துணரவும் முடியாது, ஏனெனில் அவர்கள் கண்ணுக்குப் புலனாகும் தேவனின் எந்த ஒரு கிரியையையும் வார்த்தைகளையும் நம்புவதில்லை–மேலும் மனுக்குலம் எதிர்காலத்தில் சென்றடையும் இடத்தை நம்ப முடியாததும் இதில் அடங்கும். ஆகவே, அவர்கள் கண்ணுக்குப் புலனாகும் தேவனைப் பின்பற்றினாலும், அவர்கள் இன்னும் தீமை செய்வார்கள், மேலும் சத்தியத்தைப் பின்பற்றவே மாட்டார்கள், அல்லது நான் கோரும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவும் மாட்டார்கள். மாறாக, தாங்கள் அழிக்கப்படுவோம் என்பதை நம்பாதவர்களே அழிக்கப்படப் போகும் ஜனங்கள். அவர்கள் எல்லோரும் தங்களைக் கெட்டிக்காரர்கள் என்று நம்புகிறார்கள், மேலும் அவர்கள் தாங்கள்தான் சத்தியத்தைப் பின்பற்றும் ஜனங்கள் என்று நம்புகிறவர்கள். அவர்கள் தங்களது துன்மார்க்கமான வழிதான் சத்தியம் என்று கருதி அதனால் அதில் மகிழ்கிறார்கள். இத்தகைய துன்மார்க்கர் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் சத்தியத்தைக் கோட்பாடாகக் கருதி தங்கள் துன்மார்க்கமான காரியங்களை சத்தியம் எனக் கொள்ளுகின்றனர், ஆனால் முடிவில், அவர்கள் தாங்கள் விதைத்ததையே அறுக்க முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை உடையவர்களாவும் அகந்தை கொண்டவர்களாகவும் இருக்கின்றனரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களால் சத்தியத்தை அடையமுடிவதில்லை; பரலோகத்தில் இருக்கும் தேவனை ஜனங்கள் அதிகமாக நம்பும்போதே அவர்கள் தேவனை அதிகமாக எதிர்க்கின்றனர். இந்த ஜனங்களே தண்டிக்கப்படப் போகிறவர்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 597

மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் முன்னர், அவர்கள் சத்தியத்தை நம்பினார்களா, அவர்கள் தேவனை அறிந்துள்ளார்களா, மற்றும் கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்குத் தங்களை அவர்களால் அர்ப்பணிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே ஒவ்வொரு வகையான நபரும் தண்டனைக்குரியவரா அல்லது பிரதிபலனுக்குரியவரா என்பது தீர்மானிக்கப்படும். கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்கு ஊழியம் செய்தும் அவரை அறியாமலும் அவருக்குக் கீழ்ப்படியாமலும் இருப்பவர்களிடம் சத்தியம் இல்லை. இத்தகைய ஜனங்கள் அக்கிரமக்காரர், மற்றும் அக்கிரமக்காரர் சந்தேகமின்றி தண்டனைக்குரியவர்கள்; மேலும் அவர்கள் தங்கள் துன்மார்க்கத்துக்கு ஏற்பத் தண்டிக்கப்படுவார்கள். தேவன் மனிதர்களின் விசுவாசத்திகுரியவர் மேலும் அவர் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உகந்தவர். தெளிவில்லாத மற்றும் அதரிசனமான தேவனில் விசுவாசம் உள்ளவர்களே தேவனை விசுவாசியாதவர்கள் மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிய இயலாதவர்கள் ஆவர். கண்ணுக்குப்புலனாகும் தேவனின் ஜெயங்கொள்ளும் கிரியை முடியும் போது இந்த ஜனங்களால் இன்னும் அவரை நம்புவதற்கு முடியாமல் போனால், மேலும் மாம்சத்தில் புலனாகும் தேவனுக்குத் தொடர்ந்து கீழ்ப்படியாமல் எதிர்த்தால், பின்னர் இந்த தெளிவற்றவர்கள், சந்தேகமின்றி, அழிவின் பொருளாக மாறுவார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் சிலர் போல–மாம்சமாகிய தேவனை வாயால் அங்கீகரித்தும் மாம்சமாகிய தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் சத்தியத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், இறுதியில் அழித்தொழிக்கப்படும் பொருளாவார்கள். மேலும், கண்ணுக்குப்புலனாகும் தேவனை வார்த்தையால் அங்கீகரிக்கும் யாரொருவரும், அவரால் கூறப்படும் சத்தியத்தைப் புசித்து மற்றும் பானம்பண்ணி, அதே நேரத்தில் தெளிவற்ற மற்றும் அதரிசனமான தேவனைப் பின் பற்றினால், வருங்காலத்தில் இன்னும் அதிகமாக அழிக்கப்படும் வாய்ப்புள்வர்கள் ஆவர். தேவனின் கிரியை நிறைவடைந்த பின்னர் வரும் இளைப்பாறுதல் காலத்தில் இந்த ஜனங்களில் ஒருவரும் மீந்திருக்க மாட்டார்கள் அல்லது இத்தகைய ஜனங்களைப் போன்றவர்களில் ஒரு தனி நபர் கூட இளைப்பாறுதல் காலத்தில் மீந்திருக்க மாட்டார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களே பேய்த்தனமான ஜனங்கள்; அவர்களின் சாராம்சம் தேவனை எதிர்ப்பதும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதும் ஆகும், மேலும் அவர்களிடம் அவருக்குக் கீழ்ப்படியும் எண்ணம் சிறிதளவும் இருப்பதில்லை. இத்தகைய ஜனங்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள். உன்னிடம் சத்தியம் இருக்கிறதா மற்றும் நீ தேவனை எதிர்க்கிறாயா என்பது உன் சாராம்சத்தைப் பொறுத்தது, உன் தோற்றத்திலோ அல்லது நீ எப்போதாவது பேசுவதிலோ அல்லது நீ நடந்துகொள்ளும் விதத்திலோ இல்லை. ஒரு தனி நபர் அழிக்கப்படுவானா இல்லையா என்பது ஒருவனின் சாராம்சத்தினால் தீர்மானிக்கப்படும்; ஒருவரின் நடத்தையும் ஒருவர் சத்தியத்தைப் பின்பற்றுவதும் வெளிப்படுத்தும் சாராம்சத்தை வைத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. ஜனங்கள் மத்தியில், கிரியை செய்வதில் ஒருவரைப் போல் ஒருவர் இருப்பவர்களும், ஒரே அளவிலான கிரியையை செய்பவர்களும், மனித சாராம்சம் நல்லதாக இருப்பவர்களும், சத்தியத்தைக் கொண்டிருப்பவர்களுமான ஜனங்களே மீந்திருக்க அனுமதிக்கபப்டுவார்கள், அதே சமயம் யாருடைய மனித சாரம்சம் தீமையானதோ மற்றும் யார் கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லையோ அவர்களே அழிவுக்குரிய பொருளாவார்கள். மனுக்குலம் சென்றடையும் இடத்தைப் பற்றிய அனைத்து தேவனின் கிரியை அல்லது வார்த்தைகள் ஒவ்வொரு தனிநபரின் சாராம்சத்தைப் பொறுத்து தகுந்த முறையில் ஜனங்களைக் கையாளும்; ஒரு சிறு தவறும் ஏற்படாது, மேலும் ஒரு சிறு பிழையும் நடைபெறாது. ஜனங்கள் செயலாற்றும் போதே மனித உணர்ச்சி அல்லது அர்த்தம் கலக்கிறது. தேவன் செய்யும் கிரியை மிகவும் பொருத்தமானது; அவர் எந்த சிருஷ்டிக்கும் எதிராகப் பொய்யான கூற்றைக் கொண்டுவர மாட்டார். மனுக்குலத்தின் வருங்கால சேருமிடத்தை கண்டுணராத மற்றும் நான் கூறும் வார்த்தைகளை நம்பாத அநேக ஜனங்கள் தற்போது உள்ளனர். நம்பாத அனைவரும் மட்டுமல்லாமல் சத்தியத்தைக் கடைப்பிடிக்காத எவரும் பிசாசுகளே!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 598

தற்பொழுது, தேடுபவர்களும் தேடாதவர்களும் இரு முற்றிலும் வேறான வகையான மக்களாக உள்ளனர், அவர்கள் சென்றடையும் இடமும் வேறானவை. சத்தியத்தைப் பற்றிய அறிவை நாடுபவர்களுக்கும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்குமே தேவன் இரட்சிப்பைக் கொண்டுவருவார். மெய்யான வழியை அறியாதவர்கள் பிசாசுகள் மற்றும் விரோதிகள்; அவர்கள் பிரதான தூதனின் சந்ததியார் மற்றும் அவர்களே அழிவின் பொருளாவார்கள். தெளிவற்ற தேவனின் பக்தியுள்ள விசுவாசிகள்—அவர்களும் கூட பிசாசுகள் இல்லையா? மெய்யான வழியை அறியாத நல்மனசாட்சி கொண்ட மக்களும் பிசாசுகள்; தேவனை எதிர்ப்பதே அவர்களுடைய சாராம்சம். மெய்யான வழியை ஏற்காதவர்களே தேவனை எதிர்ப்பவர்கள், இத்தகைய மக்கள் அநேக துன்பங்களை சகித்திருந்தாலும் அவர்களும் அழிக்கப்படுவார்கள். உலகத்தைக் கைவிட விருப்பம் அற்ற அனைவரும், தங்கள் பெற்றோரைப் பிரிய முடியாதவர்கள், மாம்சத்தின் பேரில் உள்ள தங்கள் இன்ப அனுபவத்தை விட்டுவிட முடியாதவர்கள் யாவரும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களே, மற்றும் அவர்கள் அழிவின் பொருட்களே. மாம்சமாகிய தேவனை விசுவாசிக்காத எவரும் பேய்த்தனம் கொண்டவர்கள், மற்றும், அவர்கள் அழிக்கப்படுவார்கள். விசுவாசம் இருந்தும் சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள், மாம்சமாகிய தேவனை விசுவாசிக்காதவர்கள், தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிக்காதவர்கள் ஆகியோரும் அழிவிற்குரிய பொருள் ஆவார்கள். துன்பப்படுதல் என்ற புடமிடுதலை அனுபவித்து உறுதியாக நின்ற மக்கள் அனைவரும் மீந்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்; இவர்களே உண்மையில் சோதனைகளைச் சகித்துக்கொண்டவர்கள். தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும் ஓர் எதிரி; அதாவது மாம்சமாகிய தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும்—இந்த பிரவாகத்துக்கு உள்ளே அல்லது வெளியே இருந்தாலும் இல்லாவிட்டாலும்—ஓர் அந்திக்கிறிஸ்துதான். சாத்தான் யார், பிசாசுகள் யார், தேவனை விசுவாசிக்காத எதிர்ப்பாளர்கள் இல்லை என்றால் தேவனின் விரோதிகள் யார்? தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அல்லவா அந்த மக்கள்? விசுவாசம் இருக்கிறது என்று கூறினாலும் சத்தியம் இல்லாமல் இருப்பவர்கள் அல்லவா அவர்கள்? தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியாமல் ஆசிர்வாதத்தை அடைவதற்கு நாடுபவர்கள் அல்லவா அவர்கள்? இன்று நீ இன்னும் அந்த பிசாசுகளுடன் இணைந்தும், அவற்றிடம் மனசாட்சியும் அன்புகொண்டும் இருக்கிறாய், ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் சாத்தானிடம் நல்நோக்கில் நீ இருக்கவில்லையா? நீ பிசாசுகளுடன் கூட்டாளியாக இருக்கவில்லையா? இந்த நாட்களில் மக்களால் நன்மை தீமைக்கு இடையில் வித்தியாசத்தைக் காண முடியாவிட்டால், மற்றும் தேவனுடைய சித்தத்தைத் தேடும் எண்ணம் இல்லாமல் குருட்டுத்தனமாகத் தொடர்ந்து அன்புடனும் இரக்கத்துடனும் இருந்தால், அல்லது தேவனின் எண்ணங்களைத் தங்களின் சொந்த எண்ணங்களாக எந்த வகையிலாவது கொண்டிருக்க முடியாதவர்களாக இருந்தால், பின்னர் அவர்களது முடிவும் மிகவும் இழிவானதாகவே இருக்கும். மாம்சத்திலுள்ள தேவனை விசுவாசிக்காத எவனும் தேவனின் விரோதியே. உனக்கு மனசாட்சி இருந்தும் மற்றும் ஒரு விரோதியை நேசித்தால், உனக்கு நீதியின் உணர்வு இல்லை அல்லவா? நான் வெறுப்பவர்களிடமும் நான் ஒத்துக்கொள்ளாதவைகளிடமும் நீ இணக்கமாக இருந்தால், மற்றும் அவைகளிடம் இன்னும் அன்பு கொண்டு அல்லது அவைகளிடம் தனிப்பட்ட உணர்வு கொண்டிருப்பாயானால் நீ கீழ்ப்படியாமல் இருக்கிறாய் அல்லவா? நீ வேண்டும் என்றே தேவனை எதிர்க்கவில்லையா? இத்தகைய நபர் சத்தியத்தைக் கொண்டிருப்பானா? விரோதிகளிடம் மனசாட்சி உடையவர்களாகவும், பிசாசுகளிடம் அன்புகொண்டவர்களாகவும், சாத்தானிடம் இரக்கம் கொண்டவர்களாகவும் இருக்கும் மக்கள் தேவனுடைய கிரியையைக்கு இடையூறு செய்யவில்லையா? கடைசி நாட்களில் இயேசுவை மட்டும் விசுவாசித்து மாம்சமாகிய தேவனை விசுவாசியாமல் இருக்கும் மக்களும், தேவனுடைய அவதாரத்தை வார்த்தைகளில் விசுவாசிப்பதாகக் கூறியும் தீமைகளைச் செய்பவரும், தேவனை விசுவாசியாமல் இருப்போர்களைப் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையே இல்லாமல், அனைவரும் அந்திக்கிறிஸ்துகளே. இந்த மக்கள் யாவரும் அழிவுக்கான பொருட்கள். மனிதர்கள் பிற மனிதர்களை மதிப்பிடும் அளவீடு அவர்களின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டது; யாருடைய நடத்தை நல்லதாக இருக்கிறதோ அவர்கள் நீதிமான்கள், அதே சமயம் யாருடைய நடத்தை அருவருப்பானதோ அவர்கள் துன்மார்க்கர். மனிதர்களின் சாராம்சம் அவருக்கு கீழ்ப்படிகிறதா இல்லையா என்பதை அளவீடாய்க் கொண்டு அதன் அடிப்படையில் தேவன் அவர்களை மதிப்பிடுகிறார்; தேவனுக்குக் கீழ்ப்படியும் ஒருவன் ஒரு நீதிமான், கீழ்ப்படியாத ஒருவன் ஒரு விரோதி மற்றும் ஒரு துன்மார்க்கன், இந்த நபரின் நடத்தை நல்லதா அல்லது மோசமானதா மற்றும் அவர்களது பேச்சு சரியானதா அலலது தவறானதா என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சிலர் நல்ல செயல்களைப் பயன்படுத்தி ஒரு நல்ல சென்றடையும் இடத்தை வருங்காலத்தில் அடைய விரும்புகிறார்கள், மற்றும் சிலரோ நல்ல சொற்களைப் பயன்படுத்தி ஒரு நல்ல சேருமிடத்தை அடைய விரும்புகிறார்கள். தேவன் அவர்களது நடத்தையைப் பார்த்து அல்லது அவர்களின் பேச்சைக் கேட்டு மக்களின் பலாபலன்களை தீர்மானிப்பதாக ஒவ்வொருவரும் தவறாக நம்புகிறார்கள்; ஆகவே பலர் இதை அனுகூலமாகப் பயன்படுத்தி தேவனை ஏமாற்றி தற்காலிக நன்மைகளைப் பெற விரும்புகின்றனர். வருங்காலத்தில், ஓர் இளைப்பாறுதல் நிலையில் வாழும் மக்கள் எல்லோரும் உபத்திரவ காலத்தை சகித்துக் கொண்டவர்களாகவும் மற்றும் தேவனுக்கு சாட்சியாக நின்றவர்களுமாக இருப்பார்கள்; அவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றியவர்களாகவும் உளமாற தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் இருப்பார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதை தவிர்க்கும் எண்ணத்தோடு மட்டும் ஊழியம் செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புவோர் மீந்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு நபரின் பலாபலனுக்கான ஏற்பாட்டிற்காக தேவன் பொருத்தமான அளவீடுகளை வைத்திருக்கிறார்; அவர் ஒருவரின் வார்த்தைகள் மற்றும் நடத்தையை வைத்து மட்டுமே இந்த முடிவுகளை எடுப்பதில்லை அல்லது ஓர் ஒற்றைக் கால கட்டத்தில் ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை வைத்தும் முடிவெடுப்பதில்லை. கடந்த காலத்தில் ஒருவர் அவருக்குச் செய்த சேவையின் காரணமாக ஒருவரின் பொல்லாத நடத்தை தொடர்பாக அவர் நிச்சயமாக இரக்கம் காட்டுவதில்லை, அல்லது ஒருவர் தேவனுக்காக ஒரே முறை செய்த செலவுக்காக அவர் ஒருவரை மரணத்தில் இருந்து தப்பிக்க விடுவதில்லை. ஒருவரும் தனது பொல்லாங்குக்காகப் பழிவாங்கப்படுதலை தவிர்க்க முடியாது, மேலும் ஒருவரும் தமது தீய நடத்தையை மறைக்க முடியாது மேலும் அதன் மூலம் அழிவின் வேதனையைத் தவிர்க்க முடியாது. மக்கள் தங்கள் சொந்தக் கடமைகளை உண்மையில் நிறைவேற்ற முடியுமானால், அவர்கள் ஆசீர்வாதங்களையோ அல்லது இக்கட்டில் துன்பங்களையோ அடைந்தாலும் பிரதிபலன்களைத் தேடாமல் நித்தியமாக தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆசீர்வாதங்களைக் காணும்போது தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாகவும், ஆனால் ஆசீர்வாதங்களைக் காணாதபோது தங்கள் விசுவாசத்தை இழந்தும், முடிவில் தேவனுக்கு சாட்சியாக நிற்க முடியாமல் அல்லது தங்கள் மேல் விழுந்த கடமைகளை அவர்களால் ஆற்ற முடியாமல் போனால், முந்தி ஒருகாலத்தில் அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ள ஊழியத்தைச் செய்திருந்தாலும் கூட அவர்கள் அழிவிற்கான பொருளாகவே இருப்பார்கள். மொத்தத்தில், துன்மார்க்கர் தப்பி நித்தியத்துக்குள் செல்ல முடியாது, அல்லது இளைப்பாறுதலுக்குள்ளும் அவர்களால் பிரவேசிக்க முடியாது; நீதிமான்கள் மட்டுமே இளைப்பாறுதலின் நாயகர்கள். மனுக்குலம் சரியான பாதைக்குத் திரும்பிய பின், மக்களுக்கு இயல்பான மானிட வாழ்க்கை அமையும். அவர்கள் யாவரும் தங்களுக்குரிய கடமைகளை ஆற்றுவார்கள் மேலும் தேவனுக்கு முழு விசுவாசமானவர்களாய் இருப்பார்கள். அவர்கள் தங்கள் கீழ்ப்படியாமையையும் சீர்கெட்ட மனநிலைகளையும் முற்றிலுமாக விட்டுவிடுவார்கள், மேலும் அவர்கள் தேவனுக்காகவும் மற்றும் தேவன் நிமித்தமாக கீழ்ப்படியாமையும் எதிர்ப்புமாகிய இரண்டும் இல்லாமல் வாழ்வார்கள். அவர்கள் யாவராலும் முழுமையாக தேவனுக்கு கீழ்ப்படிய முடியும். இதுவே தேவன் மற்றும் மனுக்குலத்தின் வாழ்க்கையாக இருக்கும்; இதுவே ராஜ்யத்தின் வாழ்க்கையாகவும் இளைப்பாறுதலின் வாழ்க்கையாகவும் இருக்கும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 599

முற்றிலும் அவநம்பிக்கை கொண்ட தங்கள் குழந்தைகளையும் உறவினர்களையும் சபைக்குள் இழுத்துக்கொண்டு வருபவர்கள் அதிக சுயநலம் கொண்டவர்கள், மேலும் அவர்கள் வெறுமனே இரக்கத்தை காட்சிப்படுத்துகிறார்கள். அவர்கள் நம்புகிறார்களா இல்லையா என்பதை எண்ணாமலும் மற்றும் அது தேவனின் சித்தம்தானா என்பதை எண்ணாமலும் இந்த மக்கள் நேசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சிலர் தங்கள் மனைவியை தேவனுக்கு முன் இழுத்து வருகிறார்கள், அல்லது தங்கள் பெற்றோரை தேவனுக்கு முன் இழுத்து வருகிறார்கள் மேலும் இதைப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் கிரியை செய்கிறாரா இல்லையோ, அவர்கள் குருட்டுத்தனமாக தொடர்ந்து தேவனுக்காகத் “தாலந்துள்ள மக்களைத் தத்தெடுக்கின்றனர்”. இந்த நம்பிக்கை அற்றவர்களுக்கு அன்பு காட்டுவதன் மூலம் என்ன நன்மையை அடைவது சாத்தியம்? பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் இல்லாத இவர்கள் தேவனைத் தடுமாற்றத்தோடு பின்பற்றினாலும், ஒருவர் நம்புவது போல அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது. இரட்சிப்பைப் பெறக்கூடியவர்களை அவ்வளவு எளிதில் பெற முடியாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மற்றும் சோதனைக்குள் பிரவேசியாதவர்கள், மற்றும் மாம்சமாகிய தேவனால் முழுமையாக்கப்படாதவர்கள் முற்றிலுமாக முழுமையாக்க முடியாதவர்கள் ஆவர். ஆகவே, பெயரளவில் அவர்கள் தேவனைப் பின்பற்றும் கணத்தில் இருந்து, தேவ ஆவியானவரின் பிரசன்னம் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களின் நிலை மற்றும் யதார்த்தத் தன்மைகளின் காரணமாக, அவர்களை முழுமையாக்க முடியவே முடியாது. இவ்வாறிருக்க, அவர்கள் மேல் அதிகமான ஆற்றலை செலுத்த வேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவர் முடிவு செய்கிறார், அல்லது அவர் உள்ளொளி எதுவும் அளிப்பதில்லை அல்லது எந்த வழியிலும் வழிகாட்டுவதில்லை; அவர் அவர்கள் வெறுமனே பின்பற்றுவதற்கு அனுமதிக்கிறார், மேலும் முடிவாக அவர்களது பலன்களை வெளிப்படுத்துவார்—இது போதுமானதாகும். மனுக்குலத்தின் உத்வேகம் மற்றும் உள்நோக்கங்கள் சாத்தானிடம் இருந்து வருகின்றன மேலும் இந்த விஷயங்களால் எந்த வகையிலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நிறைவுசெய்ய முடியாது. மக்கள் எவ்வாறு இருந்தாலும், அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியை தேவை. மனிதர்கள் மனிதர்களை முழுமையாக்க முடியுமா? ஒரு கணவன் ஏன் மனைவியை நேசிக்கிறான்? ஒரு மனைவி ஏன் கணவனை நேசிக்கிறாள்? பிள்ளைகள் ஏன் பெற்றோர்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்? தங்கள் பிள்ளைகள் மேல் பெற்றோர் ஏன் மிகையாக அன்புசெலுத்துகிறார்கள்? மக்கள் உண்மையில் எந்த வகையான உள்நோக்கங்களை வைத்திருக்கிறார்கள்? தங்கள் சொந்த திட்டங்களையும் சுயநல விருப்பங்களையும் திருப்திபடுத்துவது அவர்களின் உள்நோக்கம் இல்லையா? அவர்கள் உண்மையில் தேவனின் நிர்வாகத் திட்டத்துக்காக செயலாற்ற எண்ணுகிறார்களா? அவர்கள் உண்மையில் தேவனின் நிர்வாகத் திட்டத்துக்காக செயல்படுகின்றனரா? சிருஷ்டியின் கடமைகளை நிறைவேற்றுவது அவர்களின் எண்ணமாக இருக்கிறதா? தேவனை விசுவாசிக்கத் தொடங்கிய கணம் முதல், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தைப் பெற முடியாதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருபோதும் அடைய முடியாது; இவர்கள் அழிவிற்கான பொருட்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேல் ஒருவருக்கு எவ்வளவு அன்பு இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பதிலீடு செய்ய முடியாது. மக்களின் உத்வேகம் மற்றும் அன்பு மானிட உள்நோக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஆனால் தேவனின் நோக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் அவை தேவனின் கிரியைக்கு மாற்றாக இருக்க முடியாது. தேவனை விசுவாசிப்பது என்றால் என்ன என்பதை உண்மையில் அறியாமல் பெயரளவில் தேவனை நம்பி அவரைப் பின்பற்றுவது போல் பாசாங்கு செய்யும் மக்கள் மேல் ஒருவர் முடிந்த அளவில் மிக அதிகமாக அன்பையும் இரக்கத்தையும் காட்டினாலும் அவர்கள் தேவனிடம் இருந்து பரிவைப் பெற முடியாது, மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் அடைய முடியாது. தேவனை முழுமனதோடு பின்பற்றும் குறைந்த திறனுடையவர்களும் அதிகமான சத்தியங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களும் கூட பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எப்போதாவது அடையலாம்; இருப்பினும், ஒப்பீட்டளவில் நல்ல திறனிருந்தும் ஆனால் முழுமனதோடு விசுவாசிக்காதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை அடையவே முடியாது. இத்தகைய மக்களுக்கு இரட்சிப்பு அறவே சாத்தியமற்றது. அவர்கள் எப்போதாவது தேவனுடைய வார்த்தைகளை வாசித்தாலும், எப்போதாவது பிரசங்கங்களைக் கேட்டாலும், அல்லது தேவனுக்குத் துதி பாடினாலும், அவர்களால் இளைப்பாறுதலின் காலம் வரை முடிவாக நிலைத்திருக்க முடியாது. பிறர் எவ்வாறு அவர்களை மதிப்பீடு செய்கிறார்கள் அல்லது சுற்றிலும் உள்ள மக்கள் அவர்களை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைக் கொண்டு மக்கள் முழுமனதோடு தேடுகிறார்களா என்பது தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெறுகிறதா மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தைப் பெற்றிருக்கிறார்களா என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்படுகிறதா மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு உட்படுத்தப்பட்டு சில காலங்களுக்குப் பின்னர் அவர்கள் தேவனைப் பற்றிய அறிவை அடைந்திருக்கிறார்களா என்பதைப் பொறுத்துள்ளது அது. ஒருவர் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெற்றால், அந்த நபரின் மனநிலை படிப்படியாக மாறும், மேலும் தேவனை விசுவாசிப்பது பற்றிய அவர்களின் கண்ணோட்டம் படிப்படியாக தூயதாக மாறும். எவ்வளவு காலம் மக்கள் தேவனைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தல்லாமல், அவர்கள் மாற்றத்தை அடைந்திருந்தால், அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெறுகிறது என்று அர்த்தமாகிறது. அவர்கள் மாற்றம் அடையாவிட்டால், பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்கள் மேல் நடைபெறவில்லை என்பது பொருளாகும். இத்தகைய மக்கள் சில ஊழியங்களைச் செய்தாலும், நல்ல எதிர்காலத்தை அடையும் விருப்பமே அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. எப்போதாவது ஊழியம் செய்வது என்பது அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றத்தை அனுபவிப்பதைப் பதிலீடு செய்யாது. முடிவாக, அவர்கள் இன்னும் அழிக்கவே படுவார்கள், ஏனெனில் ராஜ்யத்தில் ஊழியம் செய்வோருக்குத் தேவை எதுவும் இல்லை, அல்லது பரிபூரணமாக்கப்பட்டு தேவனிடம் விசுவாசமுள்ளவர்களாய் இருப்பவர்களுக்கு மனநிலை மாற்றம் அடையாத எவரின் ஊழியமும் தேவையாக இருப்பதுமில்லை. “ஒருவன் கர்த்தரை நம்பும்போது, அவனது முழுக்குடும்பத்தின் மேலும் அதிர்ஷ்டம் புன்னகைபுரிகிறது” என்று கடந்த காலத்தில் பேசப்பட்ட வார்த்தைகள், கிருபையின் காலத்துக்குப் பொருத்தமானவை, ஆனால் அவை மனுக்குலம் சென்றடையும் இடத்துக்கு சம்பந்தமற்றவை. கிருபையின் காலத்தின் ஒரு கட்டத்துக்கே அவை பொருத்தமானவை. அந்த வார்த்தைகளின் கருத்து மக்கள் அனுபவித்த சமாதானம் மற்றும் பொருள்சார் ஆசீர்வாதங்களைப் பற்றியது; கர்த்தரை விசுவாசிக்கிறவனின் முழுக் குடும்பமும் இரட்சிக்கப்படும் என்பது அதன் பொருளல்ல, மேலும் ஒருவன் நல்லதிர்ஷ்டத்தை அடைந்தால் அவனது முழுக் குடும்பமும் இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படும் என்பதும் பொருளல்ல. ஒருவன் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் அல்லது துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைவதும் ஒருவனின் சாரம்சத்தைப் பொறுத்ததே தவிர ஒருவன் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் எந்தப் பொது சாராம்சத்தையும் பொறுத்தது அல்ல. அந்த வகையான கூற்று அல்லது விதிக்கு ராஜ்யத்தில் இடமே இல்லை. ஒரு நபரால் மீந்திருக்க முடியுமானால் அதற்குக் காரணம் அவர்கள் தேவனுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ததனால்தான், மேலும் இளைப்பாறுதல் காலம் வரை அவர்களால் மீந்திருக்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர்கள் தேவனிடம் கீழ்ப்படியாமல் இருந்ததும் தேவனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்யாமல் இருந்ததும்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பொருத்தமான போய்ச்சேருமிடம் உண்டு. ஒவ்வொரு தனிநபரின் சாரம்சத்தைப் பொறுத்து இந்தச் சேருமிடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன, மேலும் இதற்கும் பிறருக்கும் முழுமையாக சம்பந்தம் எதுவும் இல்லை. ஒரு குழந்தையின் பொல்லாத நடத்தையை, பெற்றொருக்கு மாற்ற முடியாது மற்றும் ஒரு குழந்தையின் நீதியைப் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒரு பெற்றோரின் பொல்லாத நடத்தையை, குழந்தைக்கு மாற்ற முடியாது மற்றும் ஒரு பெற்றோரின் நீதியைக் குழந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒவ்வொருவரும் தங்களது பாவங்களைச் சுமக்கிறார்கள், மேலும் தங்கள் அதிர்ஷ்டத்தை ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள். ஒருவரும் இன்னொருவருக்கான மாற்றாக இருக்க முடியாது; இதுவே நீதியாகும். மனிதனின் கண்ணோட்டத்தில் இருந்து, பெற்றோருக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைத்தால், பின் அவர்களது குழந்தைகளும் பெற முடியும், மேலும் குழந்தைகள் தீமை செய்தால், பின் அவர்களுடைய பெற்றோர்கள் அந்தப் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். இது மனிதனின் ஒரு கண்ணோட்டம் மற்றும் மனிதன் காரியங்களைச் செய்யும் ஒரு வழி ஆகும்; இது தேவனின் கண்ணோட்டம் அல்ல. ஒவ்வொருவரின் நடத்தையில் இருந்து வரும் சாராம்சத்தைப் பொறுத்து அவர்களின் பலாபலன் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அது எப்போதும் பொருத்தமாகவே தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரும் இன்னொருவரின் பாவத்தைச் சுமக்க முடியாது; இன்னும் கூறப்போனால், ஒருவருக்காக இன்னொருவர் தண்டனையை ஏற்க முடியாது. இது முழுமையானது. ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பால் செலுத்தும் மிகையான அன்பு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பதிலாக நீதியின் காரியங்களை ஆற்றலாம் என்பதைக் குறிக்காது அல்லது ஒரு குழந்தை தன் பெற்றோருக்காகச் செய்யும் கடமை சார்ந்த அன்பு தங்கள் பெற்றொருக்காக நீதியின் காரியங்களைச் செய்ய முடியும் என்று அர்த்தமாகாது. “அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் இதுவாகும். பெற்றோர் தீமை செய்யும் தங்கள் குழந்தைகளைத் தாங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பின் அடிப்படையில் இளைப்பாறுதலுக்குள் கொண்டுசெல்ல முடியாது, அல்லது தங்கள் மனைவியை (அல்லது கணவனை) தங்கள் சொந்த நீதியான நடத்தை மூலம் இளைப்பாறுதலுக்குள் கொண்டு செல்ல முடியாது. இது ஒரு நிர்வாக விதி; யாருக்கும் விதிவிலக்கு இருக்க முடியாது. முடிவில், நீதியைச் செய்பவர்கள் நீதியைச் செய்பவர்கள், மற்றும் தீமை செய்கிறவர்கள் தீமை செய்பவர்களே. நீதிமான்கள் இறுதியில் பிழைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள், அதேவேளையில் தீமைசெய்பவர்கள் அழிக்கப்படுவார்கள். பரிசுத்தவான்கள் பரிசுத்தமானவர்கள்; அவர்கள் அருவருப்பானவர்கள் அல்ல. அருவருப்பானவர்கள் அருவருப்பானவர்களே, அவர்களின் ஒரு பகுதி கூட பரிசுத்தமானது அல்ல. துன்மார்க்கரின் பிள்ளைகள் நீதியான செயல்களைச் செய்தாலும், மற்றும் நீதிமான்களின் பெற்றோர்கள் தீமைசெய்தாலும் அழிக்கப்படப் போகிறவர்கள் யாவரும் துன்மார்க்கரே, பிழைத்திருக்கப்போகிறவர்கள் யாவரும் நீதிமான்களே. விசுவாசிக்கும் கணவனுக்கும் மற்றும் அவிசுவாசியான மனைவிக்கும் இடையில் உறவில்லை, மற்றும் விசுவாசிக்கும் பிள்ளைகளுக்கும் அவிசுவாசிகளான பெற்றோருக்கும் இடையில் உறவில்லை; இந்த இரு வகையான மக்களும் முற்றிலும் இணக்கமற்றவர்கள். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் முன்னர், ஒருவருக்கு உடல்ரீதியான உறவினர்கள் இருப்பார்கள், ஆனால் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர், ஒருவருக்கு கூறுவதற்கு என உடல்ரீதியான உறவினர்கள் யாரும் இல்லை. தங்கள் கடமையைச் செய்கிறவர்கள் செய்யாதவர்களுக்கு விரோதிகள்; தேவனை நேசிக்கிறவர்களும் அவரை வெறுப்பவர்களும் ஒருவருக்கொருவர் எதிராக இருக்கின்றனர். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கப் போகிறவர்களும் அழிக்கப்பட போகிறவர்களும் இரு இணக்கமற்ற வகையான சிருஷ்டிகளாக இருக்கின்றனர். தங்கள் கடமையை ஆற்றுபவர்களால் பிழைத்திருக்க முடியும், அதேசமயம் தங்கள் கடமையை ஆற்றாதவர்கள் அழிவிற்கான பொருட்கள் ஆவர்; மேலும் என்னவென்றால், இது நித்தியத்தைக் கடந்து செல்லும். ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் கணவனை நேசிக்கிறாயா? ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் மனைவியை நேசிக்கிறாயா? ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் அவிசுவாசிகளான பெற்றோரை நேசிக்கிறாயா? தேவனை விசுவாசிப்பது என்ற மனிதப் பார்வை சரியா தவறா? நீ ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்? நீ எதை அடைய விரும்புகிறாய்? நீ எவ்வாறு தேவனை நேசிக்கிறாய்? சிருஷ்டிகளாக தங்கள் கடமையைச் செய்ய முடியாதவர்கள், மற்றும் முழுமுயற்சியை மேற்கொள்ள முடியாதவர்கள், அழிவிற்கான பொருள் ஆவார்கள். இன்றைய மக்களிடையே ஒரு உடல் ரீதியான உறவு உள்ளது, இரத்த உறவும் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில், இவை எல்லாம் கலைந்து போகும். விசுவாசிகளும் அவிசுவாசிகளும் இணக்கமானவர்கள் அல்ல, மாறாக அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மாறானவர்கள். இளைப்பாறுதலில் இருப்பவர்கள் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பார்கள் மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவார்கள், அதே சமயத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள். குடும்பங்கள் இனிமேல் பூமியில் இருப்பதில்லை; பெற்றோர் அல்லது குழந்தைகள் அல்லது மண உறவுகள் எவ்வாறு இருக்க முடியும்? விசுவாசம் மற்றும் அவிசுவாசத்திற்கு இடையில் இருக்கும் இணக்கமற்ற தன்மை இதுபோன்ற உடல் ரீதியான உறவுகளை முழுமையாகப் பிரித்துவிட்டிருக்கும்!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 600

ஆதியில் மனுக்குலத்தில் குடும்பங்கள் இல்லை; இரு வெவ்வேறு வகையான மனிதர்களான ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணே இருந்தனர். நாடுகள் எதுவும் இல்லை, சொல்லப்போனால் குடும்பங்கள் இல்லை, ஆனால் மனுக்குலத்தின் சீர்கேட்டின் காரணமாக, எல்லா வகையான மக்களும் தங்களைத் தனித்தனிக் குலங்களாக அமைத்துக்கொண்டனர், பின்னர் இவைகள் நாடுகளாகவும் தேசங்களாகவும் மாறின. இந்த நாடுகள் மற்றும் தேசங்கள் சிறு தனித்தனி குடும்பங்களைக் கொண்டிருந்தன, மேலும் இந்த வகையில், மொழி மற்றும் எல்லைகளின் வித்தியாசங்களின் அடிப்படையில் அனைத்து வகையான மக்களும் பல்வேறு இனங்களாகப் பிரிந்தனர். உண்மையில், பூமியில் எத்தனை இனங்கள் இருந்த போதிலும், மனுக்குலத்தின் முன்னோர் ஒருவரே. ஆதியில், இரு வகையான மனிதர்கள் மட்டுமே இருந்தனர், ஆணும் பெண்ணுமே அந்த இரு வகையான மனிதர்கள். இருப்பினும், தேவனின் கிரியையின் முன்னேற்றம், வரலாற்றின் நகர்வு, நிலவியல் மாற்றங்களால், இந்த இரு வகையான மனிதர்களும் வேறுபடும் அளவுகளுக்கு மேலும் பல வகையான மனிதர்களாக வளர்ச்சியுற்றனர். அடிப்படையில், மனுக்குலத்தை எத்தனை இனங்கள் உருவாக்கினாலும், மனுக்குலம் முழுமையும் இன்னும் தேவனின் சிருஷ்டியே. எந்த இனத்தை மக்கள் சேர்ந்தவர்களானாலும், அனைவரும் அவருடைய சிருஷ்டிகளே; அவர்கள் யாவரும் ஆதாம் ஏவாளின் சந்ததியாரே. அவர்கள் யாவரும் தேவனின் கரங்களால் சிருஷ்டிக்கப்படவில்லை எனினும், அவர்கள் யாவரும் தேவனால் தனியாகப் படைக்கப்பட்ட ஆதாம் ஏவாளின் சந்ததியாரே. மக்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் யாவரும் அவருடைய சிருஷ்டிகளே; அவர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால், அவர்களது சேருமிடம் மனுக்குலத்துக்கு இருக்க வேண்டிய ஒன்றே, மற்றும் அவை மனிதர்களை வகைப்படுத்தும் விதிகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மொத்தத்தில், அனைத்து துன்மார்க்கரும் அனைத்து நீதிமான்களும் சிருஷ்டிகளே. தீமை செய்யும் சிருஷ்டிகள் முடிவாக அழிக்கப்படுவார்கள், நீதியான செயல்களைச் செய்யும் சிருஷ்டிகள் பிழைத்திருப்பார்கள். இந்த இரு வகையான சிருஷ்டிகளுக்கும் இதுவே மிகவும் பொருத்தமான ஏற்பாடு. கீழ்ப்படியாமையின் காரணமாக துன்மார்க்கர் தேவனுடைய சிருஷ்டிகளாக இருந்தபோதிலும் அவர்கள் சாத்தானால் பிடிக்கப்பட்டுவிட்டனர், அதனால் அவர்களால் இரட்சிக்கப்பட முடியாது என்பதை மறுக்கின்றனர். தங்களை நீதியின்படி நடத்தும் சிருஷ்டிகள், அவர்கள் பிழைத்திருப்பார்கள் என்ற உண்மையின் அடிப்படையில், தாங்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னரும் இரட்சிப்பைப் பெற்றவர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. துன்மார்க்கர் தேவனுக்கு கீழ்ப்படியாத சிருஷ்டிகள்; இந்த சிருஷ்டிகளை இரட்சிக்க முடியாது மேலும் அவர்கள் ஏற்கெனவே முற்றிலுமாக சாத்தானால் பிடிக்கப்பட்டுவிட்டனர். தீமை செய்யும் மக்களும் மக்களே; அவர்கள் மிக அதிகமாக சீர்கெட்டுப்போன மனிதர்கள், மேலும் அவர்களை இரட்சிக்க முடியாது. அவர்கள் சிருஷ்டிகளாக இருப்பது போலவே, நீதியான நடத்தைகொண்ட மக்களும் சீர்கெடுக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் தங்கள் சீர்கெட்ட மனநிலையிலிருந்து தங்களை விடுவிக்க விருப்பம் கொண்ட மனிதர்கள், மேலும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்குத் திறன்கொண்டவர்களாக மாறினார்கள். நீதியான நடத்தை உள்ளவர்களுக்கு நீதி நிரம்பி வழிவதில்லை; மாறாக, அவர்கள் இரட்சிப்பைப் பெற்று தங்கள் சீர்கெட்ட மனநிலைகளை உடைத்து வெளிவந்தவர்கள்; அவர்களால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும். அவர்கள் முடிவில் உறுதியோடு நிற்பார்கள், இருந்தாலும் இது அவர்கள் ஒருபோதும் சாத்தானால் சீர்கெடுக்கப்படவில்லை என்று கூறுவதற்காக இல்லை. தேவனுடைய கிரியை முடிந்த பின்னர், அவருடைய எல்லா சிருஷ்டிகளுக்குள்ளும், அழிக்கப்படுபவர்களும் பிழைத்திருப்பவர்களும் இருப்பார்கள். இது அவருடைய ஆளுகைக் கிரியையின் தவிர்க்க முடியாத ஒரு போக்காகும்; இதை ஒருவரும் மறுக்க முடியாது. துன்மார்க்கர் பிழைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; தேவனுக்குக் கீழ்ப்படிந்து இறுதிவரை அவரைப் பின்பற்றுபவர்கள் நிச்சயமாகப் பிழைத்திருப்பார்கள். இந்தக் கிரியை மனுக்குலத்தின் ஆளுகையாக இருப்பதால், பிழைத்திருப்போரும் இருப்பார்கள் அழிக்கப்படப் போகிறவர்களும் இருப்பார்கள். வெவ்வேறு வகையான மக்களுக்கான வெவ்வேறு பலன்கள் இவை, மேலும் தேவனின் சிருஷ்டிகளுக்கு இவையே மிகவும் பொருத்தமான ஏற்பாடுகள் ஆகும். குடும்பங்களை உடைத்து, நாடுகளை நசுக்கி, நாடுகளின் எல்லைகளை சீர்குலைத்து அவர்களைப் பிரிப்பதான மனிதகுலத்துக்கான தேவனின் இறுதி ஏற்பாட்டில் குடும்பங்களும் தேசிய எல்லைகளும் இருக்காது ஏனெனில் மனிதர்கள் ஒரே மூதாதையாரில் இருந்து வந்தவர்களும், தேவனின் சிருஷ்டிகளுமாய் இருக்கிறார்கள். மொத்தத்தில், தீமை செய்யும் சிருஷ்டிகள் யாவரும் அழிக்கப்படுவார்கள், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படியும் சிருஷ்டிகள் பிழைத்திருப்பார்கள். இந்த வழியில், குடும்பங்கள் எதுவும் இருக்காது, நாடுகள் எதுவும் இருக்காது, மேலும் குறிப்பாக தேசங்கள் எதுவும் வர இருக்கும் இளைப்பாறுதலின் காலத்தில் இருக்காது; இந்த வகையான மனுக்குலமே மிகப் பரிசுத்தமான மனுக்குலமாக இருக்கும். பூமியில் இருக்கும் சகலத்தையும் பராமரிக்க ஆதியில் ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்டனர்; ஆதியில் மனிதர்களே சகலத்துக்கும் எஜமானர்கள். மனிதனை யேகோவா சிருஷ்டித்ததற்கான நோக்கம் அவர்களை பூமியில் வாழ அனுமதித்து பூமியின் மேல் உள்ள யாவையும் ஆண்டுகொள்ளவே, ஏனெனில் மனுக்குலம் ஆதியில் சீர்கேடு அடையவில்லை மேலும் அதற்குத் தீமை செய்ய இயலாமல் இருந்தது. இருப்பினும், மனுக்குலம் சீர்கெடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் எல்லாவற்றின் மேலும் பராமரிப்பாளர்களாக இருக்கவில்லை. தேவனின் இரட்சிப்பின் நோக்கம் மனுக்குலத்தின் இந்த செயல்பாட்டை மீட்டமைப்பதும், ஆதி காரணகாரிய அறிவையும் ஆதி கீழ்ப்படிதலையும் மீட்டமைப்பதுமாகும்; இளைப்பாறுதலில் இருக்கும் மனுக்குலமே தேவன் தம் இரட்சிப்பின் கிரியையின் மூலமாக அடைவதாக நம்பும் விளைவின் பிரதிநிதித்துவமாக இருக்கும். அது ஏதேன் தோட்டத்தில் இருந்த வாழ்க்கையைப் போன்றதாக இல்லாவிட்டாலும் அதன் சாராம்சம் ஒன்றேயாகும்; முந்தைய சீர்கேட்டை அடையாத மனுக்குலமாக இல்லாவிட்டாலும், மாறாக சீர்கேடு அடைந்து பின்னர் இரட்சிப்பைப் பெற்ற ஒரு மனுக்குலமாக இருக்கும். இரட்சிப்பைப் பெற்ற இந்த மக்கள் முடிவில் (அதாவது, தேவனுடைய கிரியை முடிவடைந்தபின்) இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். அதுபோல, தண்டிக்கப்பட்டவர்களின் பலன் முடிவில் முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்டு, அவர்கள் தேவனுடைய கிரியை முடிவடைந்த பின் அழிக்கவே படுவார்கள், வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவரது கிரியை முடிந்தவுடன், அந்தத் துன்மார்க்கர்கள் மற்றும் இரட்சிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்படுவர், ஏனெனில் அனைத்து வகை மக்களையும் வெளிப்படுத்தும் கிரியை (துன்மார்க்கராக இருந்தாலும் அல்லது இரட்சிக்கப்பட்டோர்க்குள்ளிருந்தாலும்) ஒரேநேரத்தில் செய்யப்படும். துன்மார்க்கர் அழித்தொழிக்கப்படுவர், மற்றும் பிழைத்திருக்க அனுமதிக்கப்பட்டோர் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தப்படுவர். ஆகவே, அனைத்துவகை மக்களின் பலாபலனும் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தப்படும். துன்மார்க்கரை ஒதுக்கிவைத்து மற்றும் அவர்களை ஒரு நேரத்தில் கொஞ்சமாக நியாயம்தீர்த்தல் அல்லது தண்டித்தலுக்கு முன்னர் இரட்சிப்பைக் கொண்டுவந்த ஒரு கூட்ட மக்களை இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க தேவன் அனுமதிக்க மாட்டார்; அது உண்மையோடு ஒத்துப் போகாது. துன்மார்க்கர் அழிக்கப்படும்போது மற்றும் பிழைத்திருக்கக் கூடியவர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, பிரபஞ்சம் முழுவதும் தேவனுடைய கிரியை நிறைவடையும். ஆசீர்வாதத்தைப் பெறுபவர்களுக்கும் துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைவோருக்கும் நடுவில் முன்னுரிமை வரிசை எதுவும் இருக்காது; ஆசீர்வாதத்தைப் பெறுபவர்கள் என்றென்றும் வாழ்வார்கள், துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைபவர்கள் நித்தியத்துக்கும் அழிந்து போவர்கள். கிரியையின் இந்த இரு படிகளும் ஒரே நேரத்தில் முடிக்கப்படும். சரியாகக் கூறப்போனால், கீழ்ப்படியாத மக்கள் இருக்கும் காரணத்தால்தான் கீழ்ப்படிபவர்களின் நீதி வெளிப்படுத்தப்படும், மேலும் ஆசீர்வாதம் பெற்றவர்கள் இருக்கும் காரணத்தால்தான் தங்கள் பொல்லாத நடத்தைக்காகத் துன்மார்க்கர் அடைந்த துரதிர்ஷ்டம் வெளிப்படுத்தப்படும். தேவன் துன்மார்க்கரை வெளிப்படுத்தாவிட்டால், பின்னர் தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிபவர்கள் ஒருபோதும் சூரியனைப் பார்க்க மாட்டார்கள்; தமக்கு கீழ்ப்படிந்ததவர்களை தேவன் பொருத்தமான சேருமிடத்துக்குக் கொண்டுசெல்லாவிட்டால், பின்னர் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் தங்களுக்குரிய பாவத்திற்கேற்ற தண்டனையை அடைவதற்கு முடியாமல் போவார்கள். இது தேவனுடைய கிரியையின் செயல்முறையாகும். அவர் தீயோரைத் தண்டித்து நல்லோர்க்கு பலாபலனை அளிக்கும் கிரியையைச் செய்யாவிட்டால், பின்னர் அவருடைய சிருஷ்டிகள் ஒருபோதும் தங்களது போய்ச்சேருமிடங்களுக்குள் முறையே பிரவேசிக்க முடியாமல் போகும். இளைப்பாறுதலுக்குள் மனுக்குலம் பிரவேசித்துவிட்டால், துன்மார்க்கர் அழிக்கப்படுவார்கள் மற்றும் முழு மனுக்குலமும் சரியான பாதையில் வந்துவிடும்; அனைத்து வகையான மக்களும் தாங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளுக்கு ஏற்ப தங்கள் சொந்த வகையோடு இருப்பார்கள். இதுவே மனுக்குலத்தின் இளைப்பாறுதலின் நாள், மனுக்குலத்தின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாதப் போக்கு, மற்றும் மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தால் மட்டுமே தேவனின் மாபெரும் மற்றும் இறுதி கிரியை நிறைவேற்றம் முழுமையை அடையும்; இதுவே அவரது கிரியையின் கடைசிப் பகுதி. இந்தக் கிரியை மனுக்குலத்தின் சீரழிந்த மாம்ச வாழ்க்கையோடு சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டு வரும். அதன் பின்னர் மனிதர்கள் ஒரு புதிய ஆட்சி எல்லைக்குள் பிரவேசிப்பார்கள். எல்லா மனிதர்களும் மாம்சத்தில் வாழ்ந்தாலும், வாழ்க்கையின் சாராம்சத்துக்கும் சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்க்கைக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளன. வாழ்வின் முக்கியத்துவமும் சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்வும் வேறுபடுகின்றன. இது ஒரு புதிய வகையான நபரின் வாழ்க்கையாக இல்லாவிட்டாலும், இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட ஒரு மனுக்குலத்தின் வாழ்க்கை என்பதோடு மனிதத்தன்மையும் பகுத்தறிவும் மீட்டெடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை எனக் கூறலாம். ஒரு காலத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்த மக்களான இவர்கள் தேவனால் ஜெயங்கொள்ளப்பட்டு அவரால் இரட்சிக்கப்பட்டவர்கள்; தேவனை அவமரியாதை செய்த இந்த மக்கள் பின்னர் தேவனுக்கு சாட்சியாக நின்றார்கள். அவரது சோதனைக்கு உட்பட்டு பிழைத்திருக்கும் அவர்களது வாழ்வுதான் மிகவும் அர்த்தமுள்ள வாழ்வாகும்; அவர்கள் சாத்தானுக்கு முன் தேவனுக்கு சாட்சியாக நின்றவர்கள், மேலும் வாழத் தகுதியான மனிதர்கள். தேவனுக்கு சாட்சியாக நிற்க முடியாதவர்களும் தொடர்ந்து வாழத் தகுதியற்றவர்களுமே அழிக்கப்படப் போகிறவர்கள். அவர்களுடைய பொல்லாத நடத்தையின் விளைவாகவே அவர்களது அழிவு இருக்கும், மற்றும் அத்தகைய அழிவுதான் அவர்களுக்கான சிறந்த சென்று சேருமிடம். வருங்காலத்தில், மனுக்குலம் அழகான ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கும் போது, மக்கள் தாங்கள் காணலாம் என்று கற்பனை செய்யும் கணவன் மனைவிக்கு இடையிலான உறவுகள், தந்தை மகளுக்கு இடையிலான உறவுகள் அல்லது தாய் மகனுக்கு இடையிலான உறவுகள் ஒன்றும் இருக்காது. அந்நேரத்தில், ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த வகையைப் பின்பற்றுவான், மற்றும் குடும்பங்கள் ஏற்கெனவே சிதறிப் போயிருக்கும். முற்றிலுமாக தோல்வியடைந்த, சாத்தான் ஒருபோதும் மனுக்குலத்தைத் தொந்தரவு செய்ய மாட்டான், மற்றும் அதன்பின் சீர்கெட்ட சாத்தானின் மனநிலையைக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்தக் கீழ்ப்படியாத மக்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டிருப்பார்கள், மற்றும் கீழ்ப்படியும் மக்கள் மட்டுமே பிழைத்திருப்பார்கள். இப்படியிருக்க, ஒரு சில குடும்பங்களே சீர்குலையாமல் இருக்கும்; எவ்வாறு உடல் ரீதியான உறவுகள் இருக்க முடியும்? மனுக்குலத்தின் முந்தைய மாம்ச ரீதியான உறவுகள் முற்றிலுமாகத் தடைசெய்யப்படும்; பின்னர் மக்களுக்கு இடையில் உடல் ரீதியான தொடர்புகள் எவ்வாறு இருக்க முடியும்? சாத்தானின் சீர்கெட்ட மனநிலைகள் இல்லாமல், மானிட வாழ்க்கை கடந்த காலத்தின் பழைய வாழ்க்கையாக இருக்காது, ஆனால் மாறாக ஒரு புதிய வாழ்க்கையாக இருக்கும். பெற்றோர் பிள்ளைகளை இழப்பார்கள், மேலும் பிள்ளைகள் பெற்றோரை இழப்பார்கள். கணவர்கள் மனைவிகளை இழப்பார்கள், மற்றும் மனைவிகள் கணவர்களை இழப்பார்கள். தற்போது உடல் ரீதியான உறவுகள் மக்களுக்கு இடையில் இருக்கின்றன, ஆனால் ஒவ்வொருவரும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர் அவை ஒருபோதும் இருக்காது. இத்தகைய மனுக்குலம் மட்டுமே நீதியையும் பரிசுத்தத்தையும் கொண்டிருக்கும்; இத்தகைய மனுக்குலம் மட்டுமே தேவனை ஆராதிக்க முடியும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 601

தேவன் மனிதர்களைப் படைத்து பூமியில் வைத்தார், மற்றும் அவர் அதுமுதற்கொண்டு அவர்களை வழிநடத்தினார், அவர் அவர்களை இரட்சித்து மனுக்குலத்திற்கு ஒரு பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தார். முடிவில், அவர் இன்னும் மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், மனுக்குலம் முழுவதையும் இரட்சிக்கவும், மற்றும் அவர்களை ஆதி நிலைக்கு மீட்டுக்கொள்ளவும் வேண்டியுள்ளது. ஆதியில் இருந்து அவர் இந்தக் கிரியையில்தான் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்—மனுக்குலத்தை அதன் ஆதி சாயலாகவும் ரூபமாகவும் மீட்டெடுத்தல். தேவன் தமது ராஜ்யத்தை அமைத்து மனிதர்களின் ஆதி சாயலை மீட்டெடுப்பார், அதாவது தேவன் தமது அதிகாரத்தை பூமியிலும் மற்றும் எல்லா சிருஷ்டிகள் மத்தியிலும் நிறுவுவார். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னர் மனுக்குலம் தங்கள் தேவனுக்குப் பயப்படும் இருதயத்தையும் தேவனுடைய சிருஷ்டிகள் ஆற்றவேண்டிய கடமையையும் இழந்து போனது, அதனால் தேவனுக்குக் கீழ்ப்படியாத விரோதியாக அவர்கள் மாறினர். பின்னர் மனுக்குலம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றியது; இவ்வாறு, தேவன் தமது சிருஷ்டிகளுக்கு நடுவில் கிரியை செய்ய வழி இல்லாமல் போனது, மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரால் அவர்களது பயம் நிறைந்த பக்தியைப் பெற முடியாமல் போய்விட்டது. மனிதர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும், ஆனால் உண்மையில் அவர்கள் அவரை நோக்கித் தங்கள் முதுகைத் திருப்பிக்கொண்டனர், மேலும் அதற்குப் பதிலாக சாத்தானை வணங்கினர். அவர்களது இருதயத்தில் சாத்தான் விக்கிரமாக மாறினான். இவ்வாறு, தேவன் அவர்களது இருதயத்தில் தம் இடத்தை இழந்தார், அதை வேறு வகையில் கூறினால் அவர் தாம் மனுக்குலத்தை படைத்ததன் அர்த்தத்தை இழந்துபோனார். ஆகவே, தாம் மனுக்குலத்தைப் படைத்ததன் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை மீட்டெடுக்க, அவர் அவர்களுடைய ஆதி சாயலை மீட்டெடுத்து மனுக்குலத்தின் சீர்கெட்ட மனநிலையைப் போக்க வேண்டும். சாத்தானிடம் இருந்து மனிதர்களை மறுபடியும் மீட்க, அவர் அவர்களைப் பாவத்தில் இருந்து இரட்சிக்க வேண்டும். இந்த வகையில் மட்டுமே தேவனால் அவர்களது ஆதி சாயலையும் செயல்பாட்டையும் படிப்படியாக மீட்டெடுத்து, முடிவாகத் தமது ராஜ்யத்தை மீட்க முடியும். மனிதர்கள் சிறந்த முறையில் தேவனை ஆராதிக்கவும் சிறந்த முறையில் பூமியின் மீது வாழவும் அனுமதிக்க கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை இறுதியாக அழிப்பதும் மேற்கொள்ளப்படும். தேவனே மனிதர்களை சிருஷ்டித்ததால், அவர் அவர்களை அவரை ஆராதிக்க வைப்பார்; ஏனெனில் அவர் மனுக்குலத்தின் ஆதி செயல்பாட்டை மீட்க விரும்புகிறார், அவர் அதை முற்றிலுமாக மற்றும் எந்த மாசுமருவின்றி மீட்பார். அவராது அதிகாரத்தை மீட்பது என்றால் மனிதர்களை அவரை ஆராதிக்க வைத்து அவருக்கு கீழ்ப்படிய வைப்பது என்று அர்த்தமாகும்; தேவன் மனிதர்களை அவரால் வாழவைப்பார் மற்றும் அவரது விரோதிகளை தமது அதிகாரத்தின் விளைவாக அழியவைப்பார். எவரிடம் இருந்தும் எதிர்ப்பின்றி தம்மைப் பற்றிய எல்லாவற்றையும் தேவன் நிலைநிற்கச் செய்வார். தேவனுடைய ராஜ்யம் அவரது சொந்த ராஜ்யத்தை நிறுவ விரும்புகிறது. அவரை ஆராதிக்கும், முற்றிலுமாக அவருக்கு கீழ்ப்படியும் மற்றும் அவரது மகிமையை வெளிப்படுத்தும் மனுக்குலமே அவர் விரும்பும் மனுக்குலமாகும். தேவன் சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்காவிட்டால், பின்னர் அவர் மனுக்குலத்தைப் படைத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போகும்; அவருக்கு மனுக்குலத்திடம் அதிகாரம் ஒன்றும் இல்லாமல் போகும், பூமியில் அவரது ராஜ்யம் இனிமேலும் நிலைநிற்க முடியாமல் போய்விடும். அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் எதிரிகளை அழிக்காமல் போனால் அவர் தமது மகிமையை முற்றிலுமாகப் பெறமுடியாமல் போகும், அல்லது பூமியில் அவர் தமது ராஜ்யத்தை நிறுவ முடியாமல் போகும். மனுக்குலத்துக்குள் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்களை முற்றிலுமாக அழித்தல், மற்றும் பரிபூரணமாக்கப்பட்டவர்களை இளைப்பாறுதலுக்குள் கொண்டுவருதல் இவையே அவர் தமது கிரியைகளை முடித்ததற்கான மற்றும் அவரது மாபெரும் கிரியை நிறைவேறுதலுக்கான அடையாளமாகும். மனிதர்கள் தங்கள் ஆதி சாயலில் மீட்கப்பட்ட பின், அவர்கள் தங்களுக்குரிய கடமைகளை முறையே நிறைவேற்ற முடிகின்றபோது, தங்களுக்கே உரிய முறையான இடங்களில் இருந்து மற்றும் தேவனின் விதிமுறைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும் போது, பூமியில் தம்மை ஆராதிக்கும் ஒரு கூட்ட மக்களை தேவன் ஆதாயப்படுத்தியிருந்திருப்பார், மற்றும் தம்மை ஆராதிக்கும் ஒரு ராஜ்யத்தை அவர் நிறுவி இருப்பார். பூமியின் மேல் அவர் நித்திய வெற்றியைப் பெறுவார், மற்றும் அவரை எதிர்த்த அனைவரும் நித்தியாமாய் அழிந்துபோவார்கள். இது மனுக்குலத்தை அவர் படைத்ததன் ஆதி நோக்கத்தை மீட்டெடுக்கும்; எல்லாவற்றையும் படைத்த அவர் நோக்கத்தை மீட்டமைக்கும், மற்றும் அது பூமியின் மேல், எல்லாவற்றின் மத்தியிலும், அவரது விரோதிகளின் மத்தியிலும் அவரது அதிகாரத்தை மீட்டெடுக்கும். இவை அவரது முழு வெற்றியின் சின்னங்களாய் இருக்கும். அதில் இருந்து, மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும், மற்றும் சரியான பாதையில் ஒரு வாழ்க்கையைத் தொடங்கும். மனுக்குலத்துடன் தேவனும் நித்திய இளைபாறுதலுக்குள் பிரவேசிப்பர், அவரும் மனுக்குலமும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நித்திய வாழ்வு தொடங்கும். அருவருப்பும் கீழ்ப்படியாமையும் பூமியில் இருந்து மறைந்து போயிருக்கும், மற்றும் புலம்பல் யாவும் காணாமற் போயிருக்கும், தேவனுக்கு எதிராக உலகில் இருந்த எல்லாம் இல்லாமல் போயிருக்கும். தேவனும் அவர் இரட்சிப்புக்குள் கொண்டுவந்த மக்கள் மட்டுமே இருப்பர்; அவரது சிருஷ்டிப்பு மட்டுமே மீந்திருக்கும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 602

ராஜ்யத்தின் காலத்தில் மனிதன் முற்றிலும் முழுமையாக்கப்படுவான். ஜெயங்கொள்ளுதல் கிரியைக்குப்பின்பு, மனுஷன் சுத்திகரிப்பு மற்றும் உபத்திரவத்திற்கு உட்படுத்தப்படுவான். இந்த உபத்திரவத்தின்போது சாட்சியங்களை வென்று நிற்கக் கூடியவர்கள்தான் இறுதியில் முழுமையடைவார்கள்; அவர்களே ஜெயித்தவர்களாக இருக்கிறார்கள். இந்த உபத்திரவத்தின்போது, மனுஷன் இந்தச் சுத்திகரிப்பை ஏற்கவேண்டும், மேலும் இந்தச்சுத்திகரிப்பு தேவனுடைய கிரியையின் கடைசிநிகழ்வாக உள்ளது. தேவனுடைய நிர்வாகக் கிரியைகள் அனைத்தும் முடிவடைவதற்கு முன்னர் மனுஷன் சுத்திகரிக்கப்படுவதற்கான கடைசிநேரமாக இது உள்ளது, மேலும் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் அனைவரும் இந்த இறுதிச் சோதனையை ஏற்கவேண்டும், மேலும் அவர்கள் இந்தக் கடைசிச் சுத்திகரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். உபத்திரவத்தால் குழப்பம் விளைவிக்கப் பட்டவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் தேவனுடைய வழிகாட்டுதலும் இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால் உண்மையிலேயே ஜெயங்கொள்ளப்பட்டவர்களும், தேவனை உண்மையாக நாடுபவர்களும் இறுதியில் உறுதியாக நிற்பவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் மனிதத்தன்மை கொண்டவர்களாய் இருக்கிறார்கள், மற்றும் தேவனை உண்மையாய் அன்புகூருகிறார்கள். தேவன் என்ன செய்தாலும், ஜெயங்கொண்ட இவர்கள் தரிசனங்களை இழக்கமாட்டார்கள், மற்றும் அவர்களின் சாட்சியத்தில் தவறாமல் சத்தியத்தை இன்னும் கடைப்பிடிப்பார்கள். இவர்கள்தான் பெரும் உபத்திரவத்திலிருந்து இறுதியாகவெளியே வருவார்கள். குழம்பிய குட்டையில் அவர்கள் மீன்பிடிப்பவர்களால் இன்னமும் இன்றைய நாட்களை சார்ந்திருக்க முடியும் என்றாலும், கடைசி உபத்திரவத்திற்கு எவரொருவரும் தப்பிக்க இயலாது, மற்றும் எவரொருவரும் இறுதிச் சோதனைக்குத் தப்பிக்க இயலாது. ஜெயிப்பவர்களுக்கு, இத்தகைய உபத்திரவம் மிகப்பெரியதொரு சுத்திகரிப்பாக உள்ளது; ஆனால் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களுக்கு, இதுமுழுமையாக நீக்கப்படுதலுக்கான கிரியையாக இருக்கிறது. தேவனை இருதயத்தில் வைத்திருப்பவர்கள் எப்படிச் சோதிக்கப்பட்டாலும், அவர்களின் பற்றுறுதி மாறாமல் இருக்கும்; ஆனால், இருதயத்தில் தேவனைக் கொண்டிராதவர்களுக்கு, தேவனுடைய கிரியை அவர்களின் மாம்சத்திற்குச் சாதகமாக இல்லாதிருந்தால், அவர்கள் தேவனைப்பற்றிய தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்கிறார்கள், மற்றும் தேவனை விட்டு விலகிக்கூடப் போகிறார்கள். முடிவு பரியந்தம் உறுதியாய் நிலை நிற்காதவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள், இவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை மட்டுமே நாடுகிறார்கள், மற்றும் இவர்கள் தேவனுக்காகத் தங்களைச் செலவுபண்ணுவதற்கும் மற்றும் தங்களையே அவருக்கு அர்ப்பணிப்பதற்கும் விருப்பம் எதுவும் கொண்டிருப்பதில்லை. தேவனுடைய கிரியை ஒரு முடிவுக்கு வருகின்றபோது, இப்படிப்பட்ட கீழ்த்தரமான ஜனங்கள் புறம்பே தள்ளப்படுவார்கள், மற்றும் இவர்கள் எந்த அனுதாபத்திற்கும் தகுதியற்றவர்களாய் இருக்கிறார்கள். மனிதப்பண்பு இல்லாத அவர்கள் உண்மையிலேயே தேவனை அன்புகூர முடியாதவர்களாக இருக்கிறார்கள். சூழல் பாதுகாப்பாக மற்றும் பாதுகாக்கபட்டதாக இருக்கும்போது அல்லது லாபம் ஈட்டப்படும்போது, அவர்கள் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிதலுடன் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் விரும்பும் விஷயங்கள் சமரசம் செய்யப்பட்டால் அல்லது இறுதியாக மறுக்கப்பட்டால், அவர்கள் உடனடியாகக் கலகம் செய்கிறார்கள். ஒரே ஒரு இரவின் இடைவெளியில்கூட, அவர்கள் புன்னகைக்கும், “கனிவான” நபராக இருப்பதில் இருந்து ஒரு அசிங்கமான தோற்றமுடைய மற்றும் கொடூரமான கொலையாளி நிலைக்குச் செல்லக்கூடும், அவர்கள் அர்த்தமின்றி அல்லது காரணமின்றி தங்களது நேற்றைய உபகாரியை திடீரென்று தங்கள் ஜென்ம விரோதியாக, நடத்துகிறார்கள். இந்தப் பேய்களை, கண்சிமிட்டாமல் கொல்லும் இந்தபேய்களை வெளியேற்றாவிட்டால், அவை மறைந்திருக்கும் ஆபத்தாக மாறாதா? ஜெயங்கொள்ளும் கிரியை முடிந்ததைத் தொடர்ந்து மனுஷனை இரட்சிக்கும் கிரியை அடையப்படவில்லை. ஜெயங்கொள்ளுதலுக்கான கிரியை முடிவுக்கு வந்தாலும், மனுஷனைச் சுத்திகரிக்கும் கிரியை முடிவுக்கு வரவில்லை; இப்படிப்பட்ட கிரியையானது, மனுஷன் முற்றிலுமாகச் சுத்திகரிக்கப்பட்டதும், தேவனுக்கு உண்மையாக அடிபணிந்தவர்கள் முழுமையாக்கப்பட்டதும், தங்கள் இருதயத்தில் தேவனற்று இருப்பவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டதும், மற்றும் தேவனற்றவர்களாக இருக்கிற அந்த வெளிவேடக்காரர்களின் இருதயம் சுத்திகரிக்கப்பட்டதும் ஆகியவை நிறைவேறிய பின்புமட்டுமே முடிவடையும். அவருடைய கிரியையின் இறுதிக்கட்டத்தில் தேவனைத் திருப்திப்படுத்தாதவர்கள் முற்றிலுமாக நீக்கப்படுவார்கள், மற்றும் நீக்கப்படுபவர்கள் பிசாசினுடையவர்களாக உள்ளனர். அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்த இயலாது என்பதால், அவர்கள் தேவனுக்கு எதிரான கலகக்காரர்களாக இருக்கிறார்கள், மற்றும் இந்த ஜனங்கள் இன்று தேவனைப் பின்பற்றினாலும், அவர்கள் முடிவு பரியந்தம் நிலைநிற்பார்கள் என்பதை இது நிரூபிக்கிறதில்லை. “முடிவு பரியந்தம் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்” என்ற வார்த்தைகளில், “பின்பற்றுதல்” என்ற வார்த்தை உபத்திரவத்தின் மத்தியில் உறுதியாக நிலைநிற்குதல் என்று அர்த்தம் கொண்டுள்ளது. இன்றைய நாட்களில், தேவனைப் பின்பற்றுதல் எளிதானதாக உள்ளது என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் தேவனுடைய கிரியை முடிவடைய இருக்கும்போது, “பின்பற்றுதல்” என்பதன் உண்மையான அர்த்தத்தை நீ அறிவாய். வெற்றிபெற்ற பின்னரும் நீ இன்னும் தேவனைப் பின்பற்றக் கூடியவனாக இருக்கிறாய் என்பதால், பரிபூரணமாக்கப் படுபவர்களில் நீயும் ஒருவன் என்பதை இது நிரூபிக்கிறதில்லை. சோதனைகளைச் சகித்துக்கொள்ள இயலாதவர்கள் எவர்களோ அவர்கள், உபத்திரவங்களுக்கு மத்தியில் ஜெயங்கொள்ள இயலாதவர்கள் எவர்களோ அவர்கள் இறுதியில் உறுதியாய் நிலைநிற்கக் கூடாதவர்களாக இருப்பார்கள் மற்றும் இறுதிவரைத் தேவனைப்பின்பற்ற இயலாதவர்களாக இருப்பார்கள். தேவனை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் கிரியையின் சோதனையைத் தாங்கிக்கொள்ள முடிகிறவர்களாக இருக்கிறார்கள், அதேசமயம் தேவனை உண்மையாகப் பின்பற்றாதவர்கள் தேவனின் எந்தவொரு சோதனையையும் தாங்கி நிற்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ புறம்பே தள்ளப்படுவார்கள், அதே நேரத்தில் ஜெயங்கொண்டவர்கள் ராஜ்யத்திற்குள் நிலைத்திருப்பார்கள். மனிதன் உண்மையிலேயே தேவனை நாடுகிறானா இல்லையா என்பது அவனது கிரியையின் சோதனையால், அதாவது தேவனின் சோதனைகளால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் மனிதன் தானே மேற்கொள்ளும் முடிவோடு இது எந்தத் தொடர்பும் கொண்டிருப்பது இல்லை. தேவன் எந்தவொரு நபரையும் ஒருகாரணமில்லாமல் நிராகரிக்கிறதில்லை; அவர் செய்கிற அனைத்தும் மனிதனை முற்றிலும் இணங்கப் பண்ணக்கூடும். மனிதனுக்குக் கண்ணால் காணமுடியாத எந்த விஷயத்தையும், அல்லது மனிதனை நம்பியிணங்கவைக்க முடியாத எந்தக் கிரியையையும் அவர் செய்கிறதில்லை. மனிதனின் நம்பிக்கை உண்மையா இல்லையா என்பது உண்மைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது, மற்றும் இது மனிதனால் தீர்மானிக்கப்பட முடியாது. “கோதுமையைக் களைகளாகமாற்றமுடியாது, மற்றும்களைகளைக் கோதுமையாகமாற்றமுடியாது” என்பது சந்தேகமற்றதாக உள்ளது. தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் அனைவரும் நிறைவாக ராஜ்யத்தில் நிலைத்திருப்பார்கள், தேவன் தம்மை உண்மையாக நேசிக்கும் எவரையும் தவறாக நடத்த மாட்டார். அவர்களின் மாறுபட்ட செயல்பாடுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், ஜெயங்கொள்ளுகிறவர்கள் ராஜ்யத்திற்குள் ஆசாரியர்களாகவோ அல்லது பின்பற்றுபவர்களாகவோ கிரியை செய்வார்கள், மற்றும் உபத்திரவங்களுக்கு மத்தியில் ஜெயங்கொள்பவர்கள் அனைவரும் ராஜ்யத்திற்குள் ஆசாரியர்களின் சரீரமாவார்கள். பிரபஞ்சம் முழுவதும் சுவிசேஷத்தின் கிரியை முடிவுக்கு வருகிறபோது ஆசாரியர்களின் சரீரம் உருவாகும். அந்த நேரம் வருகிறபோது, மனுஷனால் செய்யப்பட வேண்டியது எதுவோ அதைத் தேவனுடைய ராஜ்யத்திற்குள் அவன் செய்யவேண்டியது மற்றும் ராஜ்யத்திற்குள் அவன் தேவனோடு சேர்ந்து வாழ்வதும் அவனது கடமையாகும். ஆசாரியர்களின் சரீரத்தில் பிரதான ஆசாரியர்கள் மற்றும் ஆசாரியர்கள் இருப்பார்கள், மீதமுள்ளவர்கள் தேவனுடைய மகன்களும் ஜனங்களுமாக இருப்பார்கள். உபத்திரவத்தின்போது அவர்கள் தேவனுக்கு அளித்த சாட்சியங்களால் இவை அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன; அவை காரணமின்றி கொடுக்கப்பட்ட பட்டங்களாக இருப்பதில்லை. மனுஷனின் நிலை நிறுவப்பட்டவுடன், தேவனுடைய கிரியை நின்றுவிடும், ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் இனத்தின்படி வகைப்படுத்தப்பட்டு அவர்களின் தொடக்ககால நிலைக்குத் திரும்புகின்றனர், மேலும் இது தேவனுடைய கிரியையை நிறைவேற்றுவதற்கான அடையாளமாகும், இது தேவனுடைய கிரியையின் இறுதி பலனும் மனுஷனின் நடைமுறையுமாக உள்ளது, மற்றும் இது தேவனுடைய கிரியையின் தரிசனங்களின் பலனாக மற்றும் மனுஷனின் ஒத்துழைப்புமாக உள்ளது. முடிவில், மனுஷன் தேவனுடைய ராஜ்யத்தில் இளைப்பாறுதலைக் கண்டறிவான், தேவனும் இளைப்பாறுவதற்காக அவருடைய வாசஸ்தலத்திற்குத் திரும்புவார். இது தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான 6,000 ஆண்டுகால ஒத்துழைப்பின் இறுதிவிளைவாக இருக்கும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 603

சகோதரர்கள் மற்றும் சகோதரிகளில் எப்போதும் தங்கள் எதிர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துபவர்கள் சாத்தானின் சேவகர்கள், அவர்கள் திருச்சபையைத் தொந்தரவு செய்கிறார்கள். அத்தகையவர்கள் ஒரு நாள் வெளியேற்றப்பட்டு அகற்றப்பட வேண்டும். தேவன்மீது ஜனங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தில், தேவன் மீது பயபக்தியுள்ள இருதயம் இல்லாவிட்டால், தேவனுக்குக் கீழ்ப்படியும் இருதயம் அவர்களுக்கு இல்லாவிட்டால், அவருக்காக அவர்களால் எந்தக் கிரியையும் செய்ய முடியாமல் போகும் என்பது மட்டுமல்ல, மாறாக அவருடைய கிரியையைத் தொந்தரவு செய்பவர்களாகவும் மற்றும் அவரை எதிர்ப்பவர்களாகவும் மாறிவிடுவார்கள். தேவன் மீது விசுவாசம் கொண்டு, ஆனால் அவருக்குக் கீழ்ப்படியாமல் அல்லது அவரை வணங்காமல், மாறாக அவரை எதிர்ப்பது ஒரு விசுவாசிக்கு மிகப்பெரிய அவமதிப்பாகும். விசுவாசிகள் அவிசுவாசிகளைப் போலவே தங்கள் பேச்சிலும் நடத்தையிலும் சாதாரணமாகவும் கட்டுப்பாடற்றவர்களாகவும் இருந்தால், அவர்கள் அவிசுவாசிகளை விட தீயவர்கள்; அவர்கள் பிசாசுகளின் பிரதிநிதிகள். திருச்சபைக்குள் தங்கள் நச்சுமிக்க, தீங்கிழைக்கும் பேச்சை வெளிப்படுத்துபவர்கள், வதந்திகளைப் பரப்புகிறவர்கள், விரோதத்தைத் தூண்டுகிறவர்கள், மற்றும் சகோதர சகோதரிகளிடையே தனித்தனி குழுக்களை உருவாக்குகிறவர்கள்—அவர்கள் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் இப்போது தேவனின் கிரியையின் வேறுபட்ட யுகமாக இருப்பதால், இந்த ஜனங்கள் தடைசெய்யப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் சில அகற்றுதல்களை எதிர்கொள்கிறார்கள். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட அனைவருக்கும் சீர்கெட்ட மனநிலைகள் உள்ளன. சிலருக்கு சீர்கெட்ட மனநிலையைத் தவிர வேறொன்றும் இல்லை, மற்றவர்கள் வேறுபட்டவர்கள்: அவர்கள் சீர்கெட்ட சாத்தானிய மனநிலைகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவர்களின் இயல்பும் மிகவும் பொல்லாதது. அவர்களின் சொற்களும் செயல்களும் அவர்களின் சீர்கெட்ட, சாத்தானிய மனநிலையை வெளிப்படுத்துகின்றன என்பது மட்டுமல்ல; மேலும், இந்த ஜனங்கள் உண்மையான தீய சாத்தான்களாக இருக்கின்றனர். அவர்களின் நடத்தை தேவனின் கிரியையில் இடையூறு செய்கிறது மற்றும் தொந்தரவு செய்கிறது, இது சகோதர சகோதரிகள் ஜீவனுக்குள் நுழைவதை பாதிக்கிறது, மேலும் இது திருச்சபையின் சாதாரண வாழ்க்கையை சேதப்படுத்துகிறது. விரைவில், ஆட்டுத்தோல் போர்த்திய இந்த ஓநாய்கள் அகற்றப்பட வேண்டும்; சாத்தானின் இந்த சேவகர்களை நோக்கி ஒரு இரக்கமற்ற மனப்பான்மை, நிராகரிக்கும் மனப்பான்மை ஆகியவை பின்பற்றப்பட வேண்டும். இது மட்டுமே தேவனின் பக்கம் நிற்பதாகும், மற்றும் அவ்வாறு செய்யத் தவறியவர்கள் சாத்தானுடன் சேற்றில் புரள்கிறார்கள். தேவனை உண்மையாக விசுவாசிக்கிற ஜனங்கள் எப்பொழுதும் அவரை தங்கள் இருதயங்களில் வைத்திருக்கிறார்கள், மற்றும் அவர்கள் எப்போதும் தேவன் மீது பயபக்தி கொண்டிருக்கும் இருதயத்தை, தேவனை நேசிக்கும் இருதயத்தை அவர்களுக்குள் சுமக்கிறார்கள். தேவனை விசுவாசிப்பவர்கள் எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் காரியங்களைச் செய்ய வேண்டும், மற்றும் அவர்கள் செய்யும் அனைத்தும் தேவனின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் மற்றும் அவருடைய இருதயத்தைத் திருப்திப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தலைக்கனமிக்கவர்களாக, அவர்கள் விரும்பியதைச் செய்பவர்களாக இருக்கக்கூடாது; அது பரிசுத்த குணத்திற்குப் பொருந்தாது. ஜனங்கள் பித்துப்பிடித்து ஓடக்கூடாது, எல்லா இடங்களிலும் ஏமாற்றும்போது மற்றும் வஞ்சிக்கும்போது தேவனின் கொடியை எல்லா இடங்களிலும் அசைக்கக்கூடாது; இது மிகவும் கலகத்தனமான நடத்தையாகும். குடும்பங்களுக்கு அவர்களுக்கான விதிகள் உள்ளன, மற்றும் நாடுகளுக்கு அவற்றுக்கான சட்டங்கள் உள்ளன—மேலும் இது தேவனுடைய வீட்டில் மிக அதிகமாக இல்லையா? தரநிலைகள் இன்னும் கடுமையானவையாக இல்லையா? இன்னும் அதிகமான நிர்வாக ஆணைகள் இல்லையா? ஜனங்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் தேவனின் நிர்வாக ஆணைகளை விருப்பப்படி மாற்ற முடியாது. தேவன் என்பவர் மனுஷர்கள் செய்யும் குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளாத தேவன்; அவர் ஜனங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் தேவன். இது ஏற்கனவே ஜனங்களுக்குத் தெரியாதா?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 604

ஒவ்வொரு திருச்சபையிலும் திருச்சபைக்குச் சிக்கலை ஏற்படுத்தும் அல்லது தேவனின் கிரியையில் தலையிடும் நபர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மாறுவேடத்தில் தேவனின் வீட்டிற்குள் ஊடுருவிய சாத்தான்கள். அத்தகைய ஜனங்கள் நடிப்பதில் வல்லவர்கள்: அவர்கள் மிகுந்த பயபக்தியுடன், குணிந்துகொண்டு மற்றும் கொஞ்சி பசப்பிக் கொண்டு, கீழ்த்தரமான நாய்களைப் போல ஜீவித்து, தங்கள் சொந்த நோக்கங்களை அடைய அவர்களின் “அனைத்தையும்” அர்ப்பணிக்கிறார்கள்—ஆனால் சகோதர சகோதரிகளுக்கு முன்னால், அவர்கள் தங்கள் அசிங்கமான பக்கத்தைக் காட்டுகிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்களை அவர்கள் பார்க்கும்போது, அவர்கள் அவர்களைத் தாக்கி ஒதுக்கித் தள்ளுகிறார்கள்; தங்களைவிட வல்லமையானவர்களை அவர்கள் காணும்போது, அவர்கள் முகஸ்துதி செய்து அவர்களிடம் பசப்புகிறார்கள். அவர்கள் திருச்சபையில் வரம்பு மீறி நடந்துகொள்கிறார்கள். இதுபோன்ற “உள்ளூர் கொடுமைக்காரர்கள்” இது போன்ற “நாய்க்குட்டிகள்” பெரும்பான்மையான திருச்சபைகளில் உள்ளன என்று கூறலாம். அவர்கள் ஒன்றாகப் பதுங்கி, ஒருவருக்கொருவர் கண்சிமிட்டல்களையும் இரகசிய சமிக்ஞைகளையும் அனுப்புகிறார்கள், மற்றும் அவர்களில் யாரும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை. யாருக்கு அதிக விஷம் இருக்கிறதோ அவன் “தலைமைப் பிசாசு”, மிக உயர்ந்த கெளரவத்தைக் கொண்டவன் அவர்களை வழிநடத்துகிறான், அவர்களின் கொடியை உயரமாகத் தூக்கிப் பிடிக்கிறான். இந்த ஜனங்கள் திருச்சபையின் வழியாகச் செல்கிறார்கள், தங்கள் எதிர்மறை எண்ணங்களைப் பரப்புகிறார்கள், மரணத்தைத் தூண்டுகிறார்கள், அவர்கள் விரும்பியபடி செயல்படுகிறார்கள், அவர்கள் விரும்புவதைச் சொல்கிறார்கள், அவர்களைத் தடுக்க யாரும் துணிவதில்லை. அவர்கள் சாத்தானின் மனநிலையினால் நிரம்பியிருக்கிறார்கள். மரணத்தின் காற்று திருச்சபைக்குள் நுழைந்ததும் அவர்கள் தொந்தரவை ஏற்படுத்துகின்றனர். சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் திருச்சபைக்குள் உள்ளவர்கள், தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாமல் வெளியேற்றப்படுகிறார்கள், அதே நேரத்தில் திருச்சபையைத் தொந்தரவு செய்து மரணத்தை பரப்புபவர்கள் உள்ளுக்குள் கொந்தளிக்கிறார்கள், மேலும் என்னவென்றால், பெரும்பாலான ஜனங்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய திருச்சபைகள் சந்தேகமின்றி, சாத்தானால் ஆளப்படுகின்றன; பிசாசு அவர்களின் ராஜா. திருச்சபையார்கள் எழுந்து தலைமைப் பிசாசுகளை நிராகரிக்காவிட்டால், அவர்களும் இறுதியில் அழிந்து போவார்கள். இனிமேல், இதுபோன்ற திருச்சபைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொஞ்சம் சத்தியத்தைக் கடைப்பிடிக்கக்கூடியவர்கள் அதற்காக முயற்சிக்கவில்லை என்றால், அந்தத் திருச்சபை அகற்றப்படும். ஒரு திருச்சபையானது சத்தியத்தைக் கடைப்பிடிக்கத் தயாராக இல்லாதவர்கள் எவரையும், தேவனுக்காக சாட்சியாக நிற்கக்கூடிய எவரையும் கொண்டிருக்கவில்லை என்றால், அந்த திருச்சபை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும், மற்றும் மற்ற திருச்சபைகளுடனான அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட வேண்டும். இது “புதைக்கும் மரணம்” என்று அழைக்கப்படுகிறது; சாத்தானை விரட்டியடிப்பதன் அர்த்தம் இதுதான். ஒரு திருச்சபையில் பல உள்ளூர் கொடுமைக்காரர்கள் இருந்தால், முற்றிலும் ஞானம் இல்லாத “சிறிய ஈக்களால்” அவர்கள் பின்தொடரப்படுவார்கள், மேலும் சத்தியத்தைப் பார்த்த பிறகும் கூட, இந்த விசுவாசிகளின் கூட்டம், இந்த கொடுமைக்காரர்களின் பிணைப்புகளையும் கையாளுதல்களையும் நிராகரிக்க முடியாமல் இருந்தால், பிறகு அந்த அனைத்து முட்டாள்களும் இறுதியில் அகற்றப்படுவார்கள். இந்தச் சிறிய ஈக்கள் பயங்கரமான எதையும் செய்திராமல் இருக்கலாம், ஆனால் அவை இன்னும் வஞ்சிப்பதாய், நயமிக்கதாய் மற்றும் மழுப்பலானதாய் இருக்கும், மேலும் இது போன்ற அனைவரும் அகற்றப்படுவார்கள். ஒருவர் கூட மீதமிருக்கமாட்டார்! சாத்தானைச் சேர்ந்தவர்கள் சாத்தானிடம் திரும்பிச் செல்வார்கள், அதே சமயம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் நிச்சயமாக சத்தியத்தைத் தேடிச் செல்வார்கள்; இது அவர்களின் இயல்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. சாத்தானைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் அழிந்துபோகட்டும்! அத்தகைய ஜனங்களுக்கு எந்தப் பரிதாபமும் காட்டப்படாது. சத்தியத்தைத் தேடுவோருக்கு வழங்கப்படட்டும், மற்றும் அவர்கள் தேவனின் வார்த்தையில் தங்கள் இருதயங்கள் நிறையும் அளவிற்கு மகிழ்ச்சியைப் பெறுவார்கள். தேவன் நீதியுள்ளவர்; அவர் யாருக்கும் ஒருதலைபட்சமாக இருக்கமாட்டார். நீ ஒரு பிசாசு என்றால், உன்னால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலாது; நீ சத்தியத்தைத் தேடும் ஒருவன் என்றால், நீ சாத்தானால் சிறைபிடிக்கப்பட மாட்டாய் என்பது உறுதி. இது எல்லா சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 605

முன்னேற்றத்திற்காகப் பாடுபடாத ஜனங்கள் எப்போதும் மற்றவர்கள் தங்களைப் போலவே எதிர்மறையாகவும் சகிப்புத்தன்மையற்றவர்களாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் கடைப்பிடிப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள், மற்றும் குழப்பமாகவும், விவேகமற்றும் இருப்பவர்களை எப்போதும் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். இந்த ஜனங்கள் நிர்ப்பந்திக்கும் இந்த விஷயங்கள் உன்னை சீரழியச் செய்து, கீழ்நோக்கி வழுக்கச் செய்து, அசாதாரண நிலையை உருவாக்கி, இருள் நிறைந்திருக்கச் செய்யும். அவை உன்னை தேவனிடமிருந்து விலக்கி, மாம்சத்தைப் போற்றி, உன்னை ஈடுபடச் செய்யும். சத்தியத்தை நேசிக்காத, எப்போதும் தேவன் மீது ஈடுபாடற்று இருக்கும் ஜனங்கள் சுய விழிப்புணர்வைக் கொண்டிருக்க மாட்டார்கள், அத்தகைய ஜனங்களின் மனநிலை மற்றவர்களை பாவங்களைச் செய்வதற்கும் தேவனை எதிர்த்து நிற்பதற்கும் தூண்டுகிறது. அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை, மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. அவர்கள் பாவத்தை ஆதரிக்கிறார்கள், தங்கள் மீது வெறுப்பைக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தங்களையே தெரியாது, மற்றவர்கள் தங்களைத்தாங்களே தெரிந்து கொள்வதைத் தடுக்கிறார்கள்; மற்றவர்களும் சத்தியத்தை விரும்புவதை அவர்கள் தடுக்கிறார்கள். ஏமாற்றுவோரால் ஒளியைக் காண முடியாது. தங்களைத்தாங்களே அறியாதவர்கள் இருளில் விழுகிறார்கள், அவர்களுக்கு சத்தியத்தைப் பற்றி தெளிவாகத் தெரியாது, மற்றும் தேவனிடமிருந்து மேலும் மேலும் தொலைவில் போகிறார்கள். அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை, மற்றவர்களை சத்தியத்தைக் கடைப்பிடிக்கவிடாமல் தடுக்கிறார்கள், அந்த முட்டாள்கள் அனைவரையும் அவர்கள்முன் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வதை விட, அவர்கள் தங்கள் முன்னோர்களை விசுவாசிக்கிறார்கள், அல்லது அவர்கள் விசுவாசிப்பது அவர்களின் இதயத்தில் உள்ள விக்கிரகங்களை என்று சொல்வது சிறந்ததாக இருக்கும். தேவனைப் பின்பற்றுவதாகக் கூறும் ஜனங்கள் கண்களைத் திறந்து, அவர்கள் யாரை விசுவாசிக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகப் பார்ப்பதற்கு தெளிவாக ஆராய்ந்து பார்ப்பது சிறந்தது: நீ நிஜமாக தேவனை விசுவாசிக்கிறாயா அல்லது சாத்தானையா? நீ விசுவாசிப்பது தேவனை அல்ல, ஆனால் உனது சொந்த விக்கிரகங்களை என்று உனக்குத் தெரிந்தால், நீ ஒரு விசுவாசி என்று கூறிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. நீ உண்மையில் யாரை விசுவாசிக்கிறாய் என்று உனக்குத் தெரியவில்லை என்றால், பிறகு, மீண்டும், நீ ஒரு விசுவாசி என்று கூறிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. அப்படிச் சொல்வது தேவதூஷணமாக இருக்கும்! தேவனை விசுவாசிக்க யாரும் உன்னை கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்கள் என்று சொல்லாதீர்கள்; இதுபோன்ற பேச்சை நான் போதுமான அளவிற்கு கேட்டிருக்கிறேன், மற்றும் அதை மீண்டும் கேட்க விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் உங்கள் இருதயங்களில் உள்ள விக்கிரகங்களையும் உங்களிடையே உள்ள உள்ளூர் கொடுமைக்காரர்களையும் விசுவாசிக்கிறீர்கள். சத்தியத்தைக் கேட்கும்போது தங்கள் தலைகளை அசைத்து, மரணத்தைப் பற்றிய பேச்சைக் கேட்கும்போது பல்லிளிப்பவர்கள், அனைவரும் சாத்தானின் சந்ததியினர், அவர்கள் தான் அகற்றப்படுவார்கள். திருச்சபையில் உள்ள பலருக்கு பகுத்தறிவு இல்லை. ஏமாற்றம் தரும் ஒன்று நிகழும்போது, அவர்கள் எதிர்பாராதவிதமாக சாத்தானின் பக்கம் நிற்கிறார்கள்; அவர்கள் சாத்தானின் சேவகர்கள் என்று அழைக்கப்பட்டால் கோபப்படுகிறார்கள். தங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்று ஜனங்கள் கூறினாலும், அவர்கள் எப்போதும் சத்தியம் இல்லாத பக்கம் நிற்கிறார்கள், முக்கியமான நேரத்தில் அவர்கள் ஒருபோதும் சத்தியத்தின் பக்கம் நிற்க மாட்டார்கள், அவர்கள் ஒருபோதும் எழுந்து நின்று சத்தியத்திற்காக வாதிடுவதில்லை. அவர்களுக்கு உண்மையிலேயே பகுத்தறிவு இல்லையா? அவர்கள் ஏன் எதிர்பாராதவிதமாக சாத்தானின் பக்கம் நிற்கிறார்கள்? சத்தியத்திற்கு ஆதரவாக நேர்மையான மற்றும் நியாயமான ஒரு வார்த்தையைக்கூட அவர்கள் ஏன் ஒருபோதும் சொல்வதில்லை? அவர்களின் தற்காலிக குழப்பத்தின் விளைவாக இந்தச் சூழ்நிலை உண்மையிலேயே எழுந்ததா? ஜனங்களுக்கு எவ்வளவு குறைவான பகுத்தறிவு உள்ளதோ, சத்தியத்தின் பக்கம் அவர்களால் அவ்வளவு குறைவாகவே நிற்க முடியும். இது எதனைக் காட்டுகிறது? பகுத்தறிவு இல்லாதவர்கள் தீமையை நேசிக்கிறார்கள் என்பதை இது காட்டவில்லையா? அவர்கள் சாத்தானின் விசுவாசமான சந்ததியார் என்று அது காட்டவில்லையா? அவர்களால் ஏன் எப்போதும் சாத்தானின் பக்கம் நின்று அதன் மொழியைப் பேச முடிகிறது? அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் செயலும், அவர்களின் முகபாவங்கள் என அனைத்தும் அவர்கள் சத்தியத்தை நேசிப்போர் அல்ல என்பதை நிரூபிக்கப் போதுமானவையாக இருக்கின்றன; மாறாக, அவர்கள் சத்தியத்தை வெறுக்கும் ஜனங்கள். அவர்களால் சாத்தானின் பக்கம் நிற்க முடியும் என்பதே சாத்தானின் நிமித்தம் தங்கள் வாழ்க்கையை செலவழிக்கும் இந்தக் குட்டி பிசாசுகளை சாத்தான் உண்மையில் நேசிக்கிறான் என்பதை நிரூபிக்க போதுமானதாகும். இந்த உண்மைகள் அனைத்தும் மிகவும் தெளிவாக இல்லையா? நீ உண்மையிலேயே சத்தியத்தை நேசிக்கும் ஒரு நபராக இருந்தால், சத்தியத்தை கடைப்பிடிப்பவர்களை நீ ஏன் மதிக்கவில்லை, மற்றும் சத்தியத்தை சிறிதும் மதிக்காதவர்கள் இலேசாகப் பார்த்ததும் அவர்களை உடனடியாக ஏன் பின்பற்றுகிறாய்? இது என்ன வகையான பிரச்சினை? உனக்குப் பகுத்தறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நீ எவ்வளவு பெரிய விலை கொடுத்திருக்கிறாய் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. உனது வல்லமைகள் எவ்வளவு பெரியவை என்பதை நான் பொருட்படுத்தவில்லை, நீ ஒரு உள்ளூர் கொடுமைக்காரனா அல்லது கொடி ஏந்திய தலைவனா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. உனது வல்லமைகள் சிறந்தவை என்றால், அது சாத்தானின் பலத்தின் உதவியால் மட்டுமே சாத்தியம். உனது கெளரவம் உயர்வாக இருந்தால், சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் உன்னைச் சுற்றி மிகவும் அதிகமாக இருப்பதுதான் அதற்குக் காரணம். நீ வெளியேற்றப்படாவிட்டால், அதற்குக் காரணம் இது வெளியேற்றும் வேலைக்கான நேரம் அல்ல என்பதுதான்; மாறாக, அகற்றும் வேலைக்கான நேரம் இது. உன்னை வெளியேற்றுவதற்கு எந்த அவசரமும் இப்போது இல்லை. நீ அகற்றப்பட்ட பிறகு நான் உன்னை தண்டிக்கும் நாளுக்காக மட்டுமே காத்திருக்கிறேன். சத்தியத்தைக் கடைப்பிடிக்காத எவரும் அகற்றப்படுவர்!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 606

தேவனை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள் தேவனின் வார்த்தையைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர். தேவனுக்கு சாட்சியமளிப்பதில் உண்மையிலேயே உறுதியாக நிற்கக்கூடிய ஜனங்கள் அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பவர்களாகவும், உண்மையாக சத்தியத்தின் பக்கம் நிற்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். தந்திரத்தையும் அநீதியையும் நாடுகிற ஜனங்கள் அனைவரிடமும் சத்தியம் இருக்காது, அவர்கள் அனைவரும் தேவனுக்கு அவமானத்தைத் தருகிறார்கள். திருச்சபையில் சச்சரவுகளை ஏற்படுத்துபவர்கள் சாத்தானின் சேவகர்கள், அவர்கள் சாத்தானின் உருவகமாகவும் இருக்கின்றனர். அத்தகையவர்கள் மிகவும் தீங்கிழைக்கக்கூடியவர்கள். எந்தவிதமான பகுத்தறிவும் இல்லாதவர்களும், சத்தியத்தின் பக்கத்தில் நிற்க இயலாதவர்களும் தீய நோக்கங்களை மனதில் தேக்கிவைத்து, சத்தியத்தைக் களங்கப்படுத்துகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்கள் சாத்தானின் மூலப்படிம பிரதிநிதிகள். அவர்கள் மீட்பிற்கு அப்பாற்பட்டவர்கள், மற்றும் இயற்கையாகவே அகற்றப்படுவார்கள். தேவனின் குடும்பம் சத்தியத்தை கடைப்பிடிக்காதவர்களை நிலைத்திருக்க அனுமதிக்காது, திருச்சபையை வேண்டுமென்றே தகர்ப்பவர்களை நிலைத்திருக்க அனுமதிக்காது. இருப்பினும், வெளியேற்றும் வேலையைச் செய்ய இது நேரம் இல்லை; அத்தகைய ஜனங்கள் இறுதியில் அம்பலப்படுத்தப்படுவார்கள் மற்றும் அகற்றப்படுவார்கள். இந்த ஜனங்கள் மீது மேலும் பயனற்ற வேலை எதுவும் பயன்படுத்தப்படக்கூடாது; சாத்தானைச் சேர்ந்தவர்கள் சத்தியத்தின் பக்கம் நிற்க முடியாது, அதேசமயம் சத்தியத்தை நாடுபவர்களால் முடியும். சத்தியத்தை கடைப்பிடிக்காத மக்கள் சத்தியத்தின் வழியைக் கேட்க தகுதியற்றவர்கள், சத்தியத்திற்கு சாட்சியாக இருக்க தகுதியற்றவர்கள். சத்தியம் அவர்களின் காதுகளுக்கு மட்டுமே அல்ல; மாறாக, அதைக் கடைப்பிடிப்பவர்களை நோக்கி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு நபரின் முடிவும் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு, திருச்சபையைத் தொந்தரவு செய்வோர் மற்றும் தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவிப்போர் முதலில் இப்போதைக்கு ஒதுக்கி வைக்கப்படுவார்கள், பின்னர் அவர்கள் கையாளப்படுவார்கள். கிரியை நிறைவேறியதும், இந்த ஜனங்கள் ஒவ்வொருவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள், பின்னர் அவர்கள் அகற்றப்படுவார்கள். தற்போதைக்கு, சத்தியம் வழங்கப்படும்போது, அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். முழு சத்தியமும் மனுஷகுலத்திற்கு வெளிப்படுத்தப்படும் போது, அந்த ஜனங்கள் அகற்றப்பட வேண்டும்; எல்லா ஜனங்களும் தங்கள் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும் நேரமாக அது இருக்கும். பகுத்தறிவு இல்லாதவர்களின் அற்பமான தந்திரங்கள் துன்மார்க்கரின் கைகளில் அவர்கள் அழிவுக்கு வழிவகுக்கும், அவர்கள் ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்று அவர்களால் நயங்காட்டப்படுவார்கள். அத்தகைய கவனிப்புதான் அவர்களுக்குத் தேவை, ஏனென்றால் அவர்கள் சத்தியத்தை நேசிக்கவில்லை, ஏனென்றால் அவர்களால் சத்தியத்தின் பக்கம் நிற்க இயலவில்லை, ஏனென்றால் அவர்கள் தீயவர்களைப் பின்பற்றுகிறார்கள் மற்றும் தீயவர்களின் பக்கம் நிற்கிறார்கள், மற்றும் அவர்கள் தீயவர்களுடன் இணைந்து, தேவனை எதிர்க்கிறார்கள். அந்த தீயவர்கள் வெளிப்படுத்துபவை தீயவை என்பதை அவர்கள் பரிபூரணமாக அறிவார்கள், ஆனாலும் அவர்கள் இருதயங்களை கடினப்படுத்தி, அவர்களைப் பின்பற்றுவதற்காக சத்தியத்தைப் புறக்கணிக்கிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காத, ஆனால் அழிவுகரமான மற்றும் அருவருப்பான காரியங்களைச் செய்கிற இந்த ஜனங்கள் அனைவரும் தீமை செய்யவில்லையா? அவர்களில் தங்களை ராஜாக்களாக அலங்கரிப்பவர்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களுடைய தேவனை எதிர்க்கும் இயல்புகள் அனைத்தும் ஒன்றல்லவா? தேவன் அவர்களை இரட்சிக்கவில்லை என்பதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்ல முடியும்? தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று அவர்கள் கூறுவதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? அவர்களை அழிப்பது அவர்களின் சொந்த தீமை அல்லவா? அவர்களை நரகத்திற்குள் இழுத்துச் செல்வது அவர்களின் சொந்தக் கலகம் அல்லவா? சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் ஜனங்கள், இறுதியில், சத்தியத்தின் காரணமாக இரட்சிக்கப்பட்டு பரிபூரணப்படுவார்கள். சத்தியத்தை கடைப்பிடிக்காதவர்கள், இறுதியில், சத்தியத்தின் காரணமாக தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் கடைப்பிடிக்காதவர்களுக்கும் காத்திருக்கும் முடிவுகள் இவை. சத்தியத்தைக் கடைப்பிடிக்கத் திட்டமிடாதவர்கள் இன்னும் அதிகமான பாவங்களைச் செய்யாமல் இருக்க விரைவில் திருச்சபையை விட்டு வெளியேற வேண்டுமென்று நான் அறிவுறுத்துகிறேன். நேரம் வரும்போது, வருத்தப்பட்டு பயனில்லை. குறிப்பாக, குழுக்களை உருவாக்கி, பிளவுகளை உருவாக்குபவர்கள், மற்றும் திருச்சபைக்குள் இருக்கும் உள்ளூர் கொடுமைக்காரர்களும் விரைவில் வெளியேற வேண்டும். தீய ஓநாய்களின் இயல்பைக் கொண்ட இத்தகைய ஜனங்கள் மாறுவதற்கு தகுதியற்றவர்களாக இருக்கின்றனர். ஆரம்ப சந்தர்ப்பத்தில் அவர்கள் திருச்சபையைவிட்டு வெளியேறினால், சகோதர சகோதரிகளின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது, இதன் மூலம் தேவனின் தண்டனையைத் தவிர்க்க முடியும். உங்களில் அவர்களுடன் சென்றவர்கள் உங்களைக் குறித்து சிந்திக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள சிறப்பாகச் செயல்படுவார்கள். நீங்கள் தீயவர்களுடன் சேர்ந்து திருச்சபையை விட்டு வெளியேறுவீர்களா, அல்லது அங்கேயே இருந்து கீழ்ப்படிதலுடன் பின்பற்றுவீர்களா? இந்தக் காரியத்தை நீங்கள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். நான் உங்களுக்கு தேர்வு செய்வதற்கான இந்த ஒரு வாய்ப்பைத் தருகிறேன், உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 607

தேவனில் விசுவாசிக்கிற ஒருவராக, எல்லாவற்றிலும் அவரையல்லாமல் வேறு யாருக்கும் நீங்கள் விசுவாசமாக இருக்கக்கூடாது, எல்லாவற்றிலும் அவருடைய சித்தத்திற்கு ஒப்பாகக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஆகிலும், இந்த செய்தியை எல்லோரும் புரிந்துக்கொண்டாலும், மனிதனின் பல்வேறு சிரமங்கள் காரணமாக—உதாரணமாக, அவனுடைய அறியாமை, கோமாளித்தனம் மற்றும் கேட்டின் காரணமாக, எல்லாவற்றிலும் மிகத்தெளிவானதும் அடிப்படையானதுமாக இருக்கும் இந்தசத்தியங்கள் அவனில் முற்றிலும் வெளியரங்கமாகத் தெரியவில்லை, எனவே, உங்கள் முடிவுநிர்ணயிக்கப்படாமல் மாற்றி அமைப்பதற்கு முன்பு, உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களை நான் முதலில் உங்களுக்குச் சொல்லவேண்டும். நான் தொடர்வதற்கு முன்பு, நீங்கள் முதலில் இதை புரிந்துக்கொள்ளவேண்டும்: நான் பேசுகிற வார்த்தைகள் சகல மனுஷருக்கும் நேராக பேசப்படுகிற சத்தியங்களாகும்; அவை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு வகை நபருக்கு மட்டுமே கூறப்பட்டதல்ல. ஆகையால், சத்தியத்தின் நிலைப்பாட்டில் இருந்து என் வார்த்தைகளைப் புரிந்துக்கொள்வதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், மேலும் நீங்கள் முழுமையான கவனம் மற்றும் நேர்மையான மனப்பான்மையையும் கொண்டிருக்க வேண்டும்; நான் பேசுகிற ஒரு வார்த்தையையோ அல்லது சத்தியத்தையோ புறக்கணிக்காதீர்கள், மேலும் நான் பேசுகிற சகல வார்த்தைகளையும் லேசாகவும் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் சத்தியத்திற்குப் பொருத்தமில்லாத பல காரியங்கள் செய்திருப்பதை நான் காண்கிறேன், ஆகவே துன்மார்க்கத்தினாலும் அருவருப்பினாலும் அடிமைப்படுத்தப்படாமல், மேலும், நீங்கள் சத்தியத்தை மிதித்துப்போடவோ அல்லது தேவனுடைய வீட்டின் எந்த கோணத்தையும் தீட்டுப்படுத்தவோ கூடாதபடிக்கு, நீங்கள் சத்தியத்தின் ஊழியக்காரராகும்படிக்கு நான் குறிப்பாகக் கேட்கிறேன். இது உங்களுக்கான எனது புத்திமதி. இப்போது கையில் இருக்கும் தலைப்பைப் பற்றி நான் பேசுவேன்.

முதலாவதாக, உங்களது தலைவிதியின் பொருட்டு, நீங்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அது என்னவென்றால், நீங்கள் தேவனுடைய வீட்டிலே ஒரு உறுப்பினர் என்பதை ஒப்புக்கொள்ளுகிறபடியினால், தேவனுக்கு மனஅமைதியைக் கொண்டுவந்து எல்லாவற்றிலும் அவரை நீங்கள் திருப்திப்படுத்த வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், உங்களுடைய செயல்களில் கொள்கையுடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும், மற்றும் அவற்றில் உள்ள சத்தியத்திற்கு ஒப்பாக இருக்கவேண்டும். இது உனக்கு அப்பாற்பட்டது என்றால், நீ தேவனால் வெறுக்கப்படுவாய், நிராகரிக்கப்படுவாய், மற்றும் ஒவ்வொரு மனிதராலும் வெறுத்து ஒதுக்கப்படுவாய். நீ அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலைக்கு வந்துவிட்டால், தேவனுடைய வீட்டிலே ஒருவராக அவர்கள் மத்தியில் உன்னைக் கணக்கிட முடியாது, இதுதான் தேவனால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதன் அர்த்தமாகும்.

இரண்டாவதாக, நேர்மையானவர்களைத் தேவன் விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். பொருள் அடிப்படையில், தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார், எனவே அவருடைய வார்த்தைகளை எப்போதும் நம்பலாம்; அதுபோலவே அவருடைய செயல்கள் குற்றமற்றவை மற்றும் நிச்சயமானவைகளாக இருக்கின்றன, அதனால் தான் தம்முடன் முற்றிலும் நேர்மையானவர்களாக இருக்கிறவர்களைத் தேவன் விரும்புகிறார். நேர்மை என்பது உங்களுடைய இருதயத்தைத் தேவனுக்குக் கொடுப்பது, எல்லாவற்றிலும் தேவனுடன் உண்மையாக இருப்பது, எல்லாவற்றிலும் அவருடன் வெளிப்படையாக இருப்பது, உண்மைகளை ஒருபோதும் மறைக்காமல் இருப்பது, உங்களுக்கு மேலாக மற்றும் கீழாக உள்ளவர்களை ஏமாற்ற முயற்சிக்காமல் இருப்பது, மற்றும் தேவனிடத்தில் தயவைப் பெறுவதற்காக மட்டுமே காரியங்களைச் செய்யாமல் இருப்பதுமாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நேர்மையாக இருப்பது என்பது உங்களுடைய செயல்களிலும் வார்த்தைகளிலும் தூய்மையாக இருப்பது, மற்றும் தேவனையும் மனிதனையும் ஏமாற்றாமல் இருப்பதுமாகும். நான் என்ன சொல்கிறேன் என்பது மிகவும் எளிமையானது, ஆனால் உங்களுக்கு இது இரு மடங்கு கடினமானதாக இருக்கிறது. பலர் நேர்மையாகப் பேசுவதையும் செயல்படுவதையும் விட நரகத்திற்கு தண்டிக்கப்படுவதே மேலானதாக இருக்கும். நேர்மையற்றவர்களுக்காக நான் வேறு வழிமுறை வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமில்லை. நீங்கள் நேர்மையாக இருப்பது உங்களுக்கு எவ்வளவு கடினம் என்பதை மெய்யாகவே நான் நன்கு அறிவேன். ஏனெனில் நீங்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், உங்கள் சொந்த சிறிய அளவுகோல் கொண்டு மக்களை அளவிடுவதில் மிகவும் சிறந்தவர்கள், இது எனது வேலையை மிகவும் எளிமையாக்குகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இரகசியங்களை உங்கள் மார்போடு கட்டியணைத்துக் கொள்வதால், என் வார்த்தைகளில் உங்கள் நம்பிக்கையின்படியே நான் உங்களை ஒவ்வொருவராக பேரழிவின் அக்கினிக்குள் அனுப்புவேன், அதன்பிறகு நீங்கள் மரித்தவர்களாகலாம். இறுதியில், “தேவன் உண்மையுள்ள தேவன்” என்கிற வார்த்தைகளை உங்கள் வாயிலிருந்து நான் வர கைப்பற்றுவேன், அதன்பின் நீங்கள் உங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு, “மனிதனின் இதயம் வஞ்சகமானது!” என்று புலம்புவீர்கள். இந்த நேரத்தில் உங்களது மனநிலை என்னவாக இருக்கும்? நீங்கள் இப்போது இருப்பதைப்போல வெற்றிகரமாக இருக்கமாட்டீர்கள் என்று நான் கற்பனைசெய்துப் பார்க்கிறேன். நீங்கள் இப்போது இருப்பதைப் போலவே “ஆழ்ந்த நிலையிலும் மற்றும் எளிதில் புரிந்துக்கொள்ளமுடியாத” நபராகவும் இருப்பீர்கள். தேவனுடைய சமூகத்தில், சிலர் அனைத்திலும் முதன்மையானவர்கள் மற்றும் சரியானவர்கள், அவர்கள் “நன்னடத்தையுடன்” இருப்பதற்கு வலிகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் தங்களுடைய திறந்த நச்சுப்பற்களால், ஆவியானவரின் சமூகத்தில் தங்கள் நகங்களால் நாலாபுறமும் கீறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களை நீங்கள் நேர்மையானவர்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுவீர்களா? நீ ஒரு மாயக்காரனாக இருந்தால், “தனிப்பட்டவர்களுக்கிடையேயான உறவுகளில்” நீ திறமையான ஒருவராக இருந்தால், நிச்சயமாக நீ தேவனுடன் அற்பமான முயற்சியை செய்கிறாய் என்று நான் சொல்கிறேன். உன்னுடைய வார்த்தைகள் சாக்குபோக்குகள் மற்றும் பயனற்ற நியாயங்களுடன் புதிராக இருந்தால், நீ சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் வெறுக்கத்தக்க ஒரு நபர் என்று நான் சொல்கிறேன். நீ வெளிப்படையாக பகிர்ந்துக்கொள்ளத் தயங்குகிற பல இரகசியங்கள் உனக்கு இருக்குமானால், உன் இரகசியங்களையும் உன் சிரமங்களையும் மற்றவர்கள் வெளிச்சத்தின் வழியைத் தேடுவதற்கு முன்பாக நீ மிகவும் தயங்கி வெறுக்கிறாய் என்றால், நீ இரட்சிப்பை எளிதில் அடைய முடியாதபடிக்கு, இருளிலிருந்து எளிதில் வெளியே வராத ஒருவராகவே இருக்கிறாய். சத்தியத்தின் வழியைத்தேடும் காரியம் உன்னை மிகவும் மகிழ்விக்கிறது என்றால், நீ எப்போதும் வெளிச்சத்தில் வசிக்கும் ஒருவராக இருக்கிறாய். தேவனுடைய வீட்டில் ஒரு சேவை செய்பவராக இருப்பதில் நீ மிகவும் மகிழ்ச்சியடைகிறாய், மேலும் தெளிவற்ற நிலையிலும் விடாமுயற்சியுடன், மனசாட்சியுடன் பணிபுரிந்து, எப்போதும் கொடுப்பவராக ஒருபோதும் எடுத்துக்கொள்ளாதவராகவும் இருக்கிறாய் என்றால், நீ ஒரு விசுவாசமுள்ள பரிசுத்தவான் என்று நான் சொல்கிறேன், ஏனென்றால் நீ எந்த பிரதிபலனையும் தேடாமல், வெறுமனே ஒரு நேர்மையான நபராக மட்டுமே இருக்கிறாய். நீ கபடற்றவராக இருக்க விரும்பினால், உன்னுடைய அனைத்தையும் நீ செலவழிக்கத் தயாராக இருந்தால், தேவனுக்காக உன் உயிரையும் தியாகம் செய்து, அவருக்கு சாட்சியாக உறுதியாக உன்னால் நிற்க முடியுமானால், உன்னுடைய காரியங்கள் ஒன்றையும் கருத்தில் கொள்ளாமல் மற்றும் எதையும் எடுத்துக்கொள்ளாமல், தேவனைத் திருப்திப்படுத்துவது ஒன்று மட்டுமே உனக்குத் தெரிந்தக் காரியம் என்றால், அப்படிப்பட்டவர்கள் தான் வெளிச்சத்தில் வளர்க்கப்படுபவர்கள், மற்றும் இராஜ்யத்தில் என்றென்றும் வாழ்வார்கள் என்று நான் சொல்கிறேன். உனக்குள்ளாக உண்மையான நம்பிக்கையும் உண்மையான விசுவாசமும் இருக்கிறதா என்றும், தேவனுக்காக நீ பாடுகளை அனுபவித்ததற்கான பதிவு உன்னிளிடம் இருக்கிறதா என்றும், மற்றும் நீ தேவனுக்கு உன்னை முழுமையாகச் சமர்ப்பித்திருக்கிறாயா என்பதையும் நீ அறிந்துக்கொள்ள வேண்டும். இவை உன்னிடம் இல்லாவிட்டால், பிறகு உன்னிடம் கீழ்ப்படியாமை, வஞ்சகம், பேராசை மற்றும் முறையீடு ஆகியவையே உள்ளன. உன்னுடைய இருதயம் நேர்மையிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால் தான், நீ ஒருபோதும் தேவனிடமிருந்து நேர்மறையான அங்கீகாரத்தைப் பெறவில்லை, மேலும் நீ ஒருபோதும் வெளிச்சத்தில் வாழ்ந்ததுமில்லை. இவ்வாறாக, ஒருவருக்கு நேர்மையான மற்றும் சிவப்பு-இரத்த இருதயம் இருக்கிறதா, அவர்களுக்கு பரிசுத்தமான ஆத்துமா இருக்கிறதா என்பதைப் பொறுத்து ஒருவரின் தலைவிதி செயல்படும். நீ மிகவும் நேர்மையற்ற ஒருவராக இருக்கிறீர்கள் என்றால், தீங்கிழைக்கும் இருதயம் கொண்ட, அசுத்தமான ஆத்மாகொண்ட ஒருவர் என்றால், உன் தலைவிதியின் பதிவில் எழுதப்பட்டுள்ளபடியே, மனிதன் தண்டிக்கப்படும் இடத்தில் நீயும் சென்றடைவது உறுதி. நீ மிகவும் நேர்மையானவராக இருக்கிறாய் என்றுக் கூறுவாயானால், அதேநேரத்தில் ஒரு போதும் சத்தியத்திற்கு ஏற்பச் செயல்படவோ அல்லது சத்தியவார்த்தையைப் பேசவோ நீ ஒரு போதும் முற்படவில்லை என்றால், தேவன் உனக்கு வெகுமதி அளிப்பதற்காக நீ இன்னுமா காத்திருக்கிறாய்? தேவன் உன்னை அவருடைய கண்ணின் மணிபோலப் பாதுகாத்துக் கொள்வார் என்று நீ இன்னும் நம்புகிறாயா? இத்தகைய உன்னுடைய சிந்தனை போலித்தனமானதல்லவா? நீ எல்லாவற்றிலும் தேவனை ஏமாற்றுகிறாய்; அசுத்தமானகைகளைக் கொண்டுள்ள உன்னைப் போன்ற ஒருவருக்கு தேவனுடைய வீடு எப்படி இடமளிக்கும்?

மூன்றாவதாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் காரியம் இது தான்: தேவன் மீது விசுவாசமாக வாழ்கின்ற போக்கில், ஒவ்வொரு நபரும் தேவனை எதிர்க்கிற மற்றும் ஏமாற்றுகிறச் செயல்களையே செய்திருக்கிறார்கள். சில தவறான செயல்கள் ஒரு குற்றமாகப் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை, ஆனால் சில தவறுகள் மன்னிக்க முடியாதவையாகும்; தேவனுடைய நிர்வாக ஆணைகளை மீறும் பல செயல்கள் உள்ளன, அவை அவரின் மனநிலையைப் புண்படுத்துகின்றன. தங்களுடைய சொந்தத் தலைவிதிகளைப் பற்றிக் கவலைப்படுபவர்களில் பலர் இந்த செயல்கள் என்ன என்று கேட்கலாம். நீங்கள் ஆணவமும் மனமேட்டிமையும் கொண்டவர்கள் என்பதையும், உண்மைகளுக்கு அடிபணிய விரும்பாதவர்கள் என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த காரணத்திற்காகவே, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதை பிரதிபலித்தப் பிறகு நான் உங்களுக்கு சிறிது சிறிதாகச் சொல்கிறேன். தேவனுடைய நிர்வாக ஆணைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி நன்கு புரிந்துக் கொள்ளவும், அவரது மனநிலையை அறிந்துக் கொள்ள முயற்சி செய்யவும் வேண்டுமென்று நான் உங்களுக்கு புத்திச் சொல்லுகிறேன். இல்லையென்றால், உங்கள் உதடுகளை மூடிக் கொள்ளுவது உங்களுக்குக் கடினமாக இருக்கும், உங்கள் நாவுகள் அதிக பேச்சுச் சத்தத்துடன் இங்கும் அங்குமாக ஆடிக் கொண்டிருக்கும், மேலும் நீங்கள் அறியாமல் தேவனுடைய மனதைப் புண்படுத்தி இருளிலே விழுவீர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தையும் ஒளியையும் இழந்து விடுவீர்கள். ஏனென்றால், நீங்கள் உங்கள் செயல்களில் கொள்கை இல்லாதவர்கள், ஏனென்றால் நீ செய்யக் கூடாத மற்றும் சொல்லக் கூடாத காரியங்களையே செய்வதால், நீ அதற்குத் தகுந்த பிரதிபலனையே பெறுவாய். உன்னுடைய வார்த்தையிலும் செயலிலும் நீ கொள்கை இல்லாதவர் என்றாலும், தேவன் அப்படியிராமல் அவை இரண்டிலும் அவர் மிகவும் கொள்கை ரீதியானவர் என்பதை நீ அறிந்துக் கொள்ள வேண்டும். நீ இப்படி பிரதிபலனைப் பெறுவதற்கான காரணம், நீ ஒரு நபரையல்ல, தேவனைப் புண்படுத்தியதே ஆகும். உன் வாழ்க்கையில், தேவனுடைய மனநிலைக்கு எதிராக நீ பல குற்றங்களைச் செய்தால், பிறகு நீ நரகத்தின் பிள்ளையாக மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். மனிதனைப் பொறுத்தமட்டில், அவர்கள் சத்தியத்திற்கு முரணான ஒரு சில காரியங்களை மட்டுமே செய்துள்ளார்கள், அதற்கு மேல் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், தேவனுடைய பார்வையில் நீ ஏற்கனவே பாவ நிவாரண பலி எதுவும் இல்லாத ஒருவராக இருக்கிறாய் என்பதை நீ அறிவாயா? ஏனென்றால், நீ தேவனுடைய நிர்வாக ஆணைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீறியுள்ளாய், மேலும் நீ அவைகளில் இருந்து மனந்திரும்பின மனந்திரும்புதலின் அறிகுறியைக் காண்பிக்கவில்லை, ஆகவே வேறு எந்த வழியும் இல்லை, மாறாக தேவன் மனிதனை நரத்தில் தள்ளித் தண்டிக்கிற அந்த நரகத்தில் நீயும் மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தேவனைப் பின்பற்றுகிற போது, அவரது கொள்கைகளை மீறும் ஒரு சில செயல்களைச் செய்தார்கள், ஆனாலும் அதிலிருந்து மீண்டுவரும் வழிகாட்டுதல்களைப் பெற்ற பின்னர், அவர்கள் படிப்படியாக தங்கள் தவறுகளைக் கண்டுபிடித்தனர், அதன் பிறகு யதார்த்தத்தின் சரியான பாதைக்கு வந்தார்கள், அவர்கள் இன்று நன்கு உறுதியானவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் முடிவு வரையிலும் நிலைத்திருப்பார்கள். ஆகிலும், நான் தேடுவது நேர்மை மட்டுமே; நீ ஒரு நேர்மையான நபராகவும், கொள்கையின்படிச் செயல்படும் ஒருவராகவும் இருக்கிறீர் என்றால், பிறகு நீ தேவனுடைய நம்பிக்கைக்குரியவராக இருக்க முடியும். உன்னுடைய செயல்களில் நீ தேவனுடைய மனதைப் புண்படுத்தாமல், அவரது சித்தத்தை நாடி, அவர் மீது பயபக்தியுள்ள ஒரு இருதயத்தைக் கொண்டிருந்தால், உன் விசுவாசமானது சரியான நிலையைக் கொண்டதாகும். தேவனுக்கு பயந்து அவருக்கு நடுங்கும் இருதயம் இல்லாத எவரும் தேவனுடைய நிர்வாக ஆணைகளை மீறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்டவர்களே. பலர் தங்கள் ஆர்வத்தினுடைய பலத்தின் பேரில் தேவனுக்குச் சேவைச் செய்கிறார்கள், ஆனால் தேவனுடைய நிர்வாக ஆணைகளைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை, அவருடைய வார்த்தைகளின் தாக்கங்களைப் பொறுத்தமட்டில் இன்னும் குறைவாகவேக் கருதுகின்றனர். ஆகவே, அவர்களின் நல்ல நோக்கங்களுடன், தேவனின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விஷயங்களை அவர்கள் அடிக்கடி செய்கிறார்கள். கடுமையானச் சந்தர்ப்பங்களில், அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், தேவனைப் பின் தொடர்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இழக்கிறார்கள், மேலும் முடிவில் தேவனுடைய வீட்டிலே இணைந்திருக்கும் காரியத்தில் விடுபட்டு அவர்கள் நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். இந்த மக்கள் தங்களுடைய அறியாமை நல்ல நோக்கங்களின் பலத்தின் அடிப்படையில் தேவனுடைய வீட்டில் வேலை செய்கிறார்கள், பிறகு தேவனுடைய மனதைக் கோபப்படுத்துவதிலே முடிவடைகிறார்கள். மக்கள் தங்கள் அதிகாரிகளுக்கும் பிரபுக்களுக்கும் சேவை செய்யும் வழிமுறைகளைத் தேவனுடைய வீட்டிற்கும் கொண்டு வந்து எந்த ஒரு சிரமுமில்லாமல் எளிதில் காரியங்களை அடைய அவர்களைக் கொண்டு முயற்சிக்கலாம் என விருதாவாக நினைக்கிறார்கள். தேவனுக்கு ஆட்டுக்குட்டியின் மனநிலை இல்லை, ஆனால் ஒரு சிங்கத்தின் மனநிலை இருக்கிறது என்று அவர்கள் ஒருபோதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆகவே, முதன் முறையாக தேவனோடு இணைந்தவர்கள் அவருடன் தொடர்புக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் தேவனுடைய இருதயம் மனிதனைப் போலல்லாது இருக்கிறது. நீ பல உண்மைகளைப் புரிந்துக் கொண்ட பின்னரே நீ தொடர்ந்து தேவனை அறிந்துக் கொள்ள முடியும். இந்த அறிவு வெறுமனே சொற்களாலும் கோட்பாடுகளாலும் ஆனது அல்ல, மாறாக நீ தேவனோடு நெருங்கிய நம்பிக்கையில் நுழைவதன் மூலமாகவும், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகிறார் என்பதற்கான சான்றாகவும் நீ இதை ஒரு பொக்கிஷமாகப் பயன்படுத்தலாம். நீ இந்த அறிவின் யதார்த்தத்தைக் கொண்டிருக்காமல் மற்றும் சத்தியத்துடன பொருந்தவில்லை என்றால், உன் உணர்ச்சிவசப்பட்ட சேவையானது தேவனுக்கு வெறுப்பையும் விருப்பமற்றதையும் மட்டுமே உ மீது கொண்டு வர முடியும். தேவன் மீது நம்பிக்கை வைப்பது என்பது இறையியலின் வெறும் படிப்பைப் போன்றது அல்ல என்பதை இப்போது நீ கண்டுபிடித்திருக்க வேண்டும்!

நான் உங்களுக்கு புத்திச் சொல்லுகிற வார்த்தைகள் சுருக்கமாக இருந்தாலும், நான் விவரித்தவை அனைத்தும் உங்களிடம் மிகவும் இல்லாதவைகளாகும். நான் இப்போது பேசுகிற காரியம் மனிதனிடையேயான எனது இறுதி வேலைக்காகவும், மனிதனின் முடிவை தீர்மானிப்பதற்காகவும் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு நோக்கமும் இல்லாமல் அதிக வேலைகளை நான் செய்ய விரும்பவில்லை, பட்டுப்போன மரத்தைப் போல நம்பிக்கையற்றவர்களைத் தொடர்ந்து வழி நடத்த நான் விரும்பவில்லை, மற்றும் தவறான நோக்கங்களை இரகசியமாக வைத்திருப்பவர்களைத் தொடர்ந்து வழி நடத்துவதற்கு நான் இன்னும் சிறிதளவும் விருப்பமில்லாமல் இருக்கிறேன். என் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள தீவிரமான நோக்கங்களையும் மனிதகுலத்திற்காக நான் செய்த பங்களிப்புகளையும் ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உங்கள் சொந்த முடிவைத் தீர்மானிக்க உதவும் செய்தியை ஒரு நாள் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மூன்று புத்திமதிகள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 608

உங்களை ஜெயங்கொள்ளுவதை எண்ணமாகக் கொண்டு நான் உங்களுக்குப் பல எச்சரிக்கைகளை அளித்திருக்கிறேன் மேலும் பல சத்தியங்களை வழங்கியிருக்கிறேன். இப்போதெல்லாம், கடந்த காலத்தில் இருந்ததை விட குறிப்பிடத்தக்க அளவில் நீங்கள் அனைவரும் மிகவும் செழிப்படைந்து இருப்பதாக உணர்கிறீர்கள், ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பல உபதேசங்களைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் மற்றும் உண்மையுள்ள ஜனங்களுக்கு இருக்க வேண்டிய பொது அறிவை மிக அதிகமாகக் கொண்டிருக்கிறீர்கள். இவை எல்லாம் பல ஆண்டுகளின் போக்கில் நீங்கள் அறுவடை செய்துள்ள விளைச்சல் ஆகும். நான் உங்கள் சாதனைகளை மறுக்கவில்லை, ஆனால் இந்தப் பல ஆண்டுகளாக நீங்கள் எனக்கு எதிராகச் செய்துள்ள எண்ணற்ற கீழ்ப்படியாமைகளையும் கலகங்களையும் நான் மறுக்கவில்லை என்பதை மிகவும் வெளிப்படையாகக் கூற வேண்டும், ஏனெனில் உங்கள் மத்தியில் ஒரு பரிசுத்தவான் கூட இல்லை. நீங்கள் எந்த விதிவிலக்கும் இல்லாமல் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட ஜனங்கள்; நீங்கள் கிறிஸ்துவின் சத்துருக்கள். இந்நாள் வரை, உங்களது மீறுதல்களும் கீழ்ப்படியாமைகளும் எண்ணமுடியாத அளவுக்குப் பலவாக இருக்கின்றன, ஆகவே தொடர்ந்து நானே உங்களுக்குத் திரும்பத்திரும்பக் கூறிவருவதை அபூர்வமானதாகக் கருதமுடியாது. இந்த விதமாக உங்களோடு இருப்பதை நான் விரும்பவில்லை – ஆனால் உங்கள் எதிர்காலங்களின் பொருட்டு, நீங்கள் சென்றடையும் இடத்தின் பொருட்டு தற்போது மீண்டும் ஒருமுறை நான் ஏற்கெனவே கூறியதையே திரும்பவும் கூறுவேன். நீங்கள் நான் கூறுவதில் ஈடுபடுவதோடு, என்னுடைய ஒவ்வொரு பேச்சையும் உங்களால் நம்ப முடியும் என்றும் அதன் ஆழமான தாக்கங்களை அனுமானம் செய்ய முடியும் என்றும் நான் நம்புகிறேன். நான் கூறுவதை சந்தேகிக்காதீர்கள், மட்டுமல்லாமல் நீங்கள் விரும்பும் விதமாக என் வார்த்தைகளை எடுத்து விருப்பத்திற்கேற்ப அப்பால் எறியாதீர்கள்; இதை நான் சகிக்கமுடியாததாகப் பார்க்கிறேன். என்னுடைய வார்த்தைகளை மதிப்பீடு செய்யாதீர்கள், மேலும் அவற்றை நீங்கள் இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது அல்லது நான் எப்போதும் உங்களை சோதிக்கிறேன் என்றும் அல்லது அதைவிட மோசமாக, நான் உங்களிடம் கூறியது தவறானது என்றும் சொல்லக் கூடாது. இந்த விஷயங்களை நானும் சகிக்க முடியாதவைகளாகக் காணுகிறேன். ஏனெனில் நீங்கள் என்னையும் நான் கூறுபவைகளையும் அத்தகைய சந்தேகத்துடன் நடத்துகிறீர்கள், என்னுடைய வார்த்தைகளை ஏற்காமல் என்னைப் புறக்கணிக்கிறீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் எல்லா தீவிரத்தோடும் கூறுகிறேன்: நான் கூறுவதைத் தத்துவத்தோடு இணைக்காதீர்கள்; என்னுடைய வார்த்தைகளை ஒரு மோசடிக்காரனின் பொய்களோடு இணைக்காதீர்கள். அதை விட, வெறுப்போடு என் வார்த்தையைக் கேட்டு நடக்காதீர்கள். ஒருவேளை எதிர்காலத்தில் ஒருவரும் நான் உங்களுக்குக் கூறுவதை உங்களிடம் கூற முடியாது, அல்லது இவ்வளவு அன்போடு பேச முடியாது அல்லது அதைவிட இந்த கருத்துக்களின் வழியாக உங்களைப் பொறுமையாக நடத்த முடியாது. நீங்கள் நல்ல நேரங்களை நினைவுபடுத்திக்கொண்டும், அல்லது சத்தமாக விம்மிக்கொண்டும் அல்லது வலியால் முனகிக்கொண்டும், அல்லது இருண்ட இரவுகளின் ஊடாக சிறு துண்டு அளவிலான சத்தியம் அல்லது ஜீவனும் இன்றி வாழ்ந்துகொண்டு, அல்லது நம்பிக்கையின்றி காத்துக்கொண்டிருந்து, அல்லது எல்லா பகுத்தறிவையும் நீங்கள் இழந்து கசப்பான வருத்தங்களோடு வாழ்ந்துகொண்டு வரவிருக்கும் அந்த நாட்களைக் கழிப்பீர்கள்…. மெய்யாக உங்களில் யாரும் இந்த சாத்தியங்களில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனென்றால் உங்களில் ஒருவரும் உண்மையாக தேவனை ஆராதிக்கும் ஓர் இருக்கையில் அமரவில்லை, ஆனால் காமவெறியும் தீமையும் நிறைந்த உலகத்துக்குள் உங்களை மூழ்கடித்துக்கொண்டு, ஜீவனுக்கும் சத்தியத்திற்கும் சம்பந்தமற்றவையும் உண்மையில் அவற்றிற்கு எதிர்மாறாக இருப்பவைகளையும் உங்கள் நம்பிக்கைகளிலும், உங்கள் ஆவிகளிலும், ஆத்துமாக்களிலும், சரீரங்களிலும் கலந்துகொண்டு இருக்கிறீர்கள். ஆகையால் உங்களை வெளிச்சத்தின் பாதையில் கொண்டுவந்துவிடலாம் என்றே உங்களுக்காக நான் நம்பிக்கைகொள்கிறேன். உங்கள் நடத்தையையும் அலட்சியத்தோடு கூடிய மீறுதல்களையும் பார்க்கும் போது, உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளும், உங்களுக்காக நீங்களே கவனம் எடுத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக உங்களால் மாறமுடியும் மேலும் உங்களது சென்றடையும் இடம் குறித்து நீங்கள் மிக அதிகமான முக்கியத்துவம் அளிக்க மாட்டீர்கள் என்பதே என் ஒரே நம்பிக்கை.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 609

நீண்ட காலமாகவே, தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் எல்லோரும் ஓர் அழகான சென்றடையும் இடத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர், மேலும் அனைத்து தேவனுடைய விசுவாசிகளும் திடீரென நல்லதிர்ஷ்டம் தங்களுக்கு வரும் என்று நம்புகிறார்கள். தாங்கள் அறியும் முன்னரே தாங்கள் பரலோகத்தில் ஓர் இடத்தில் அல்லது இன்னொன்றில் சமாதானமாக இருப்பதைக் காண்போம் என்று அவர்கள் எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால், அவர்களுடைய அழகான எண்ணங்களுடன் பரலோகத்தில் இருந்து கீழே பொழியும் இத்தகைய நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவும் அங்கே ஓர் இருக்கையில் அமரவும் கூட தகுதி பெற்றிருக்கிறார்களா இல்லையா என்பதை இந்த ஜனங்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று நான் கூறுகிறேன். தற்போது நீங்கள், உங்களைப் பற்றிய சிறந்த அறிவைக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் கடைசி நாட்களின் பேரிடர்களில் இருந்தும் துன்மார்க்கரைத் தண்டிக்கும்போது சர்வவல்லவரின் கரத்தில் இருந்தும் தப்பிக்கும் நம்பிக்கையோடேயே இன்னும் இருக்கிறீர்கள். இனிய கனவுகளைக் கொண்டிருப்பதும் தாங்கள் விருப்பத்துக்கேற்ற பொருட்களையே விரும்புவதும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட எல்லா ஜனங்களின் பொதுவான அம்சம் போல் தோன்றுகிறது, மேலும் அது எந்த ஒரு தனி நபரின் அதியற்புதமான ஆலோசனை அல்ல. அது உண்மையாக இருந்தாலும், உங்களுடைய இந்த ஆடம்பரமான ஆசைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் ஆசீர்வாதங்களை அடையும் ஆர்வத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இன்னும் நான் விரும்புகிறேன். உங்கள் மீறுதல்கள் எண்ணற்றவையாகவும், உங்கள் கலகத்தன்மை வளர்ந்துகொண்டே போவது உண்மையாகவும் இருக்க, இந்த விஷயங்கள் உங்களுடைய அழகான எதிர்கால வரைபடங்களுக்கு எவ்வாறு பொருத்தமாக இருக்க முடியும்? உன்னை எதுவும் கட்டுப்படுத்தாமல் நீ பொல்லாங்கிலேயே இருந்துகொண்டு விரும்பிய வண்ணமே தொடர விரும்பி, ஆனால் அதே வேளையில் இன்னும் நீ உன் கனவுகள் உண்மையாக வேண்டும் என்று விரும்பினால், அந்த மயக்கத்திலேயே தொடர்வாயாக மேலும் ஒருபோதும் விழிக்காதே என்று நான் உன்னை வற்புறுத்துகிறேன்—ஏனெனில் உன்னுடையது ஒரு வெற்றுக் கனவு மேலும் நீதியுள்ள தேவனின் முன்னிலையில், அவர் உனக்காக ஒரு விதிவிலக்கை அளிக்க மாட்டார். நீ உன் கனவுகள் நனவாக வேண்டும் என்று மட்டும் விரும்பினால், பின்னர் ஒரு போதும் கனவு காணாதே; மாறாக, எப்போதும் சத்தியத்தையும் உண்மைகளையும் மட்டுமே எதிர்கொள். நீ இரட்சிக்கப்பட இது மட்டுமே ஒரே வழி. உறுதியான வகையில் இந்த முறைக்கான படிகள் என்ன?

முதலில், உன்னுடைய எல்லா மீறுதல்களையும் நோக்கிப்பார், மற்றும் சத்தியத்துக்கு இணங்காத ஏதாவது நடத்தையும் சிந்தனைகளும் உன்னிடம் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்.

இந்த ஒரு விஷயத்தை நீ எளிதாகச் செய்யலாம், மேலும் எல்லா புத்தியுள்ள ஜனங்களும் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், மீறுதல் மற்றும் சத்தியம் என்றால் என்ன என்று ஒருபோதும் அறியாதவர்கள் விதிவிலக்கு, ஏனெனில் அடிப்படை நிலையில், அவர்கள் புத்தியுள்ள ஜனங்கள் அல்ல. நேர்மையான, எந்த நிர்வாக கட்டளைகளையும் கடுமையான முறையில் மீறாத, மற்றும் தங்கள் மீறுதல்களை எளிதாக அறிந்துகொள்ளக் கூடிய தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஜனங்களிடம் நான் பேசுகிறேன். இந்த ஒரு விஷயத்தை நான் உங்களிடத்தில் வேண்டுவதாக இருந்தாலும், மேலும் அது நிறைவேற்றுவதற்கு உங்களுக்கு எளிதாக இருந்தாலும், நான் உங்களிடத்தில் வேண்டுவது இந்த ஒரு விஷயத்தை மட்டுமல்ல. எதுவாக இருந்தாலும், இந்த தேவையைப் பற்றி நீங்கள் தனிமையில் சிரிக்க மாட்டீர்கள், மேலும் குறிப்பாக அதை நீங்கள் தாழ்வாகப் பார்க்கமாட்டீர்கள் அல்லது இலேசானதாகக் கருதமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதைத் தீவிரமாகக் கருதவேண்டும், மேலும் அதைப் புறந்தள்ளக் கூடாது.

இரண்டாவதாக, உன்னுடைய ஒவ்வொரு மீறுதல்களுக்கும் கீழ்ப்படியாமைகளுக்கும் தொடர்பான ஒரு சத்தியத்தை நீ தேட வேண்டும் மற்றும் அந்த சத்தியங்களைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அதன் பின்னர், உன்னுடைய மீறுதல் நடவடிக்கைகளையும் கீழ்ப்படியாத எண்ணங்களையும் செயல்களையும் சத்தியத்தைக் கடைப்பிடித்து பதிலீடு செய்.

மூன்றாவதாக, நீ ஒரு நேர்மையான நபராக இருக்க வேண்டும், எப்போதும் தந்திரமுள்ளவனாகவும் தொடர்ந்து ஏமாற்றும் ஒருவனாகவும் இருக்கக் கூடாது. (இங்கே நான் மீண்டும் உங்களை ஒரு நேர்மையான நபராக இருக்கும்படி கேட்கிறேன்.)

இந்த மூன்று காரியங்களையும் உன்னால் நிறைவேற்ற முடிந்தால், அதன்பின் நீ அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக இருக்கிறாய்—கனவுகள் நனவாகப்பெற்று நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ஒரு நபர். ஒருவேளை நீங்கள் இந்த கவனத்தைக் கவராத மூன்று தேவைகளையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளலாம், அல்லது ஒருவேளை அவற்றைப் பொறுப்பற்ற தன்மையில் கையாளலாம். எதுவாக இருந்தாலும், உங்கள் கனவுகளை நனவாக்குவதும் உங்கள் இலட்சியங்களை நடைமுறைப்படுத்துவதும் என் நோக்கமே தவிர உங்களைக் கேலி செய்வதோ அல்லது உங்களை முட்டாள் ஆக்குவதோ இல்லை.

என் கோரிக்கைகள் எளிமையாக இருக்கலாம், ஆனால் நான் உங்களிடம் கூறுவது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல் அவ்வளவு எளிதானது அல்ல. நீங்கள் செய்வதெல்லாம் இதைப் பற்றி சாதாரணமாகப் பேசுவதும் அல்லது வெற்று, ஆரவார அறிக்கைகள் மூலம் உளறித்திரிவதுமாக இருந்தால், பின் உங்கள் வரைபடங்களும் உங்கள் விருப்பங்களும் எப்போதும் ஒரு வெற்றுப்பக்கமாக மட்டுமே இருக்கும். உங்களில் பல ஆண்டுகளாகத் துன்பப்பட்டும் கடுமையாக உழைத்தும் பலன் எதுவும் இன்றி இருப்போருக்காக நான் இரக்கம் கொள்ள மாட்டேன். மாறாக, என் கோரிக்கைகளை நிறைவேற்றாதவர்களுக்குப் பிரதிபலன்கள் அல்ல, தண்டனை அளிப்பேன், அதைவிட எவ்வித இரக்கமும் காட்ட மாட்டேன். பல ஆண்டுகளாகப் பின்பற்றும் ஒருவராக இருந்து, கடின உழைப்பு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் அளித்து, மேலும் வெறும் ஒரு சேவை செய்பவராக தேவனின் வீட்டில் இருந்ததற்கு உங்களுக்கு ஒரு கிண்ணம் சாதம் அளிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். உங்களில் பெரும்பான்மையோர் இவ்விதமாகவே சிந்திக்கிறீர்கள் என்று நான் கூறுவேன், ஏனெனில் எவ்வாறு விஷயங்களை சாதாகமாக்கிக்கொள்வது என்ற கொள்கையை எப்போதும் பின்பற்றி இருக்கிறீர்களேயன்றி சாதகமாக்கிக் கொள்ளக்கூடாது என்பதை அல்ல. இவ்வாறு, நான் இப்போது உங்களிடம் எல்லா தீவிரத்துடனும் கூறுகிறேன்: உன் கடின உழைப்பு எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், உன் தகுதிகள் எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தாலும், நீ எவ்வளவு நெருக்கமாக என்னைப் பின் தொடர்ந்தாலும், நீ எவ்வளவு புகழ்பெற்றவனாக இருந்தாலும், அல்லது உன் மனப்பான்மையை நீ எவ்வளவு தூரம் மேம்படுத்தி இருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்; என்னுடைய கோரிக்கைகளை நிறைவுசெய்யாத வரையில் நீ என் பாராட்டைப் பெற முடியாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக உங்களுடைய எல்லா எண்ணங்களையும் கணக்கீடுகளையும் தள்ளுபடி செய்துவிடுங்கள், மேலும் என்னுடைய கோரிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்குங்கள்; இல்லாவிட்டால், என்னுடைய கிரியையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர நான் உங்கள் அனைவரையும் சாம்பலாக மாற்றிவிடுவேன் மேலும், ஆகச் சிறந்த வகையில் ஆண்டாண்டான என் கிரியை மற்றும் துன்பத்தை ஒன்றுமில்லாமல் மாற்றுவேன், ஏனெனில் என்னுடைய சத்துருக்களையும் தீமையின் துர்நாற்றம் வீசும் மற்றும் சாத்தானின் தோற்றத்தையும் கொண்ட அந்த ஜனங்களையும் என் ராஜ்யத்துக்குள் என்னால் கொண்டுவர முடியாது அல்லது அவர்களை அடுத்த யுகத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 610

எனக்கு ஏராளமான நம்பிக்கைகள் இருக்கின்றன. நீங்கள் தகுந்த மற்றும் நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள், உங்கள் கடமைகளை உண்மையோடு நிறைவேற்றுவீர்கள், சத்தியமும் மனிதத்தன்மையும் உடையவர்களாக இருப்பீர்கள், தங்கள் ஜீவனும் உட்பட தங்களுக்குள்ள எல்லாவற்றையும் தேவனுக்காகத் தரும் ஜனங்களாக இருப்பீர்கள் என்றெல்லாம் நான் உங்களை நம்புகிறேன். இந்த நம்பிக்கைகள் எல்லாம் உங்கள் போதாமைகள் மற்றும் உங்கள் சீர்கேடு மற்றும் கீழ்ப்படியாமையில் இருந்து பிறக்கின்றன. நான் உங்களோடு நடத்திய உரையாடல்களில் ஒன்றும் உங்கள் கவனத்தைக் கவரப் போதுமானதாக இல்லை என்றால், என்னால் இப்போது செய்யக்கூடியது என்னவென்றால் இனிமேலும் சொல்லாமல் இருப்பதுதான். இருப்பினும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று உங்களுக்குப் புரிகிறது. நான் ஒருபோதும் ஓய்வு எடுப்பதில்லை, ஆகவே நான் பேசாவிட்டால், நான் ஜனங்கள் பார்க்கும் படி எதையாவது செய்வேன். யாரோ ஒருவரின் நாக்கு அழுகும் படி என்னால் செய்ய முடியும், அல்லது அவயவங்கள் துண்டிக்கப்பட்டு யாரையாவது சாகும்படி செய்யலாம், அல்லது ஜனங்களுக்கு நரம்புக் கோளாறுகளை அளிக்கலாம் மற்றும் அவர்களைப் பல வகையிலும் அருவருப்பான தோற்றமுடையவர்களாகச் செய்யலாம். பின்னர் மேலும், அவர்களுக்கென்றே குறிப்பாக நான் உருவாக்கும் வேதனைகளால் ஜனங்கள் துன்புறும்படி என்னால் செய்யமுடியும். இந்த வகையில் மகிழ்ச்சியாகவும், மிகவும் சந்தோஷமாகவும், மற்றும் அதிக நிறைவாகவும் என்னால் உணர முடியும். “நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் பலனாகக் கிடைக்கும்” என்று எப்போதும் சொல்லப்பட்டு வருகிறது, எனவே இப்போது ஏன் கூடாது? நீ என்னை எதிர்க்க விரும்பினால், மற்றும் என்னைக் குறித்து சில மதிப்பீட்டை உருவாக்கினால், பின் நான் உன் வாயை அழுகச் செய்வேன், மற்றும் அது முடிவற்ற வகையில் என்னை மகிழச் செய்யும். இது ஏன் என்றால் முடிவாக, நீ செய்துள்ளது சத்தியம் அல்ல, இன்னும் அதற்கும் ஜீவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதேசமயத்தில் நான் செய்வது எல்லாம் சத்தியம்; என்னுடைய செயல்கள் எல்லாம் எனது கிரியையின் கோட்பாடுகளுக்கும் நான் அமைத்துள்ள நிர்வாக ஆணைகளுக்கும் சம்பந்தப்பட்டவை. ஆகவே, கொஞ்சம் நற்குணங்களைத் திரட்டுங்கள், இவ்வளவு தீமைகளைச் செய்வதை நிறுத்துங்கள், மேலும் உங்கள் ஓய்வுநேரத்தில் என் கோரிக்கைகளைக் கேளுங்கள் என்று உங்கள் ஒவ்வொருவரையும் நான் வற்புறுத்துகிறேன். அப்படியானால் நான் மகிழ்ச்சியாக உணர்வேன். மாம்சத்துக்காக நீங்கள் செலவிடும் முயற்சியில் ஆயிரத்தில் ஒருபங்கை சத்தியத்திற்காக நீங்கள் வழங்கினால் (அல்லது கொடையளித்தால்) கூட, நீ அடிக்கடி மீறுதல்களைச் செய்ய மாட்டாய் மற்றும் அழுகிப்போன வாய்களைக் கொண்டிருக்க மாட்டாய். இது தெளிவாகத் தெரியவில்லையா?

நீ அதிகமாக மீறுதல்களைச் செய்யும்போது, ஒரு நல்ல சென்றடையும் இடத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உனக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். மாறாக, மிகக் குறைவான மீறுதல்களை நீ செய்யும் போது, தேவனால் புகழப்படுவதற்கு சிறந்த வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கும். உன்னை மன்னிப்பதற்கு என்னால் முடியாத அளவுக்கு உனது மீறுதல்கள் அதிகரித்தால், பின்னர் மன்னிக்கப்படுவதற்கான உன் வாய்ப்புகளை முற்றிலுமாக வீணாக்கி விட்டிருப்பாய். இப்படி இருக்க, உனது சென்றடையும் இடம் மேலே இருக்காது, ஆனால் கீழே இருக்கும். நீ என்னை விசுவாசிக்காவிட்டால், பின்னர் தைரியமாக பொல்லாங்கைச் செய், மேலும் அது உனக்கு என்ன கொண்டுவரும் என்று பார். நீ சத்தியத்தின் படி நடக்கும் ஓர் ஊக்கமுள்ள நபராக இருந்தால், உன் மீறுதல்களுக்காக மன்னிக்கப்பட நிச்சயமாக ஒரு வாய்ப்பைப் பெறுவாய், மேலும் உன் கீழ்ப்படியாமை குறைந்துகொண்டே போகும். சத்தியத்தைக் கடைப்பிடிக்க மனதில்லாத ஒரு நபராக நீ இருந்தால், பின் தேவனுக்கு முன்பான உன் மீறுதல்கள் நிச்சயமாக எண்ணிக்கையில் அதிகரிக்கும் மேலும் வரம்பை எட்டும்வரை மிகவும் அடிக்கடி நீ கீழ்ப்படியாமல் இருப்பாய், அதுவே உன் முழுமையான அழிவுக்கான நேரமாக இருக்கும். ஆசீர்வாதத்தைப் பெறும் உன்னுடைய மகிழ்ச்சியான கனவு சிதையும் போது இது நடக்கும். உன்னுடைய மீறுதல்களை ஒரு முதிர்வடையாத அல்லது முட்டாள்தனமான ஒரு நபரின் சாதாரணத் தவறே என்று எண்ணாதே; உனது மோசமான திறமையின் காரணமாக சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டது என்ற சமாதானத்தை பயன்படுத்தாதே. மேலும், உன்னால் செய்யப்பட்ட மீறுதல்கள் அதிகம் அறியாத ஒருவனின் செயல்கள் என்று வெறுமனே கருதாதே. உன்னை நீயே மன்னித்துக் கொள்வதில் நீ சிறந்தவனாக இருந்தால் மேலும் உன்னை நீயே பெருந்தன்மையோடு நடத்திக்கொண்டால், பின்னர் நான் உனக்குச் சொல்லுகிறேன் நீ ஒரு போதும் சத்தியத்தைப் பெற முடியாத ஒரு கோழை, மட்டுமல்லாது உன்னுடைய மீறுதல்கள் உன்னைச் சுற்றிச்சுற்றி வந்து வதைப்பதற்கு முடிவே இருக்காது; அவை சத்தியத்தின் தேவைகளை நீ நிறைவுசெய்வதை ஒருபோதும் அனுமதிக்கவிடாமல் உன்னை என்றென்றைக்கும் சாத்தானின் ஒரு விசுவாசமுள்ள கூட்டாளியாக இருக்கச் செய்யும். இன்னும் உனக்கு என் புத்திமதி இதுவே: உனது மறைவான மீறுதல்களைக் கவனிக்கத் தவறும் அதே வேளையில் நீ சென்றடையும் இடத்தின் மேல் மட்டும் கவனம் செலுத்தாதே; மீறுதல்களைத் தீவிரமாக எண்ணிப்பார், மேலும் உனது சென்றடையும் இடத்தின் மேல் உள்ள அக்கறையால் அவற்றில் ஒன்றையும் பார்க்கத் தவறாதே.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 611

என் வார்த்தைகள், அதிகாரம், மகத்துவம் மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை எல்லா நாடுகள் மற்றும் தேசங்களில் உள்ள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வண்ணம் எனது ஆரம்பக் கிரியை பிரபஞ்சம் முழுவதிலும் தகுந்தவாறும் பரிபூரணமாகவும் செய்யப்படுவதற்காக என் கிரியை சீராக முன்னேற்றம் அடையும் பொருட்டு இன்று, நான் உங்களது சொந்த உயிர்வாழ்விற்காக உங்களுக்கு புத்திமதி கூறுகிறேன். உங்களுக்கு மத்தியில் நான் செய்யும் கிரியைதான் பிரபஞ்சம் முழுவதிலும் என் கிரியைக்கான ஆரம்பம். ஏற்கெனவே இப்போது கடைசி நாட்களின் காலமாக இருக்கும் போதிலும், “கடைசி நாட்கள்” என்பது ஒரு காலத்தின் பெயர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்; நியாயப்பிரமாணத்தின் காலம் மற்றும் கிருபையின் காலம் போன்று, அது ஒரு காலத்தைக் குறிக்கிறது, மேலும், இறுதி சில ஆண்டுகள் அல்லது மாதங்கள் என்பதற்கு மாறாக, அது ஒரு முழுமையான காலத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் கடைசி நாட்கள் கிருபையின் காலத்தையும் நியாயப்பிரமாணத்தின் காலத்தையும் போல் அல்லாமல் முற்றிலும் மாறானவைகளாக இருக்கின்றன. கடைசி நாட்களின் கிரியை இஸ்ரவேலில் அல்ல, புறஜாதியார் மத்தியில் செய்யப்படுகிறது; அது பிரபஞ்சம் முழுவதுமான என் மகிமை பிரபஞ்சத்தையும் ஆகாயவிரிவையும் நிறைக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்குப் புறம்பாக இருக்கும் அனைத்து தேசங்கள் மற்றும் கோத்திரங்கள் மேல் நான் ராஜ்யபாரம் செய்வதற்கு முன்னான என் ஜெயங்கொள்ளுதல் ஆகும். நான் மேலான மகிமையைப் பெறுவதற்காகவும், பூமியின் மேலுள்ள எல்லா சிருஷ்டிகளும் என் மகிமையை ஒவ்வொரு தேசத்துக்கும், என்றென்றும் தலைமுறை தலைமுறையாகவும் கொண்டுசெல்லுவதற்காகவும், நான் பூமியில் பெற்ற சகல மகிமையையும் வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா சிருஷ்டிகளும் காணத்தக்கதாகவும் அது அவ்வாறாக உள்ளது. கடைசி நாட்களில் செய்யப்படும் கிரியை ஜெயங்கொள்ளுதலின் கிரியை ஆகும். அது உலக மக்கள் அனைவருக்குமான வாழ்க்கைக்கான வழிகாட்டி அல்ல, ஆனால் பூமியில் மனுக்குலத்தின் அழிவில்லாத, ஆயிரமாண்டு கால துன்ப வாழ்க்கையின் முடிவாகும். அதன் விளைவாக, கடைசி நாட்களின் கிரியையானது, இஸ்ரவேலில் நடந்த பல ஆயிரம் ஆண்டுகளின் கிரியையைப் போன்றோ, அல்லது யூதேயாவில் வெறும் பல ஆண்டுகள் நடைபெற்று தேவனின் இரண்டாவது மனுஷஅவதரிப்பு வரை இரண்டாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த கிரியையைப் போன்றோ இருக்க முடியாது. கடைசி நாட்களின் மக்கள் மாம்சத்தில் மீட்பரின் மறு தோற்றத்தைத்தான் காண்கின்றனர், மேலும் அவர்கள் தேவனின் தனிப்பட்ட கிரியை மற்றும் வார்த்தைகளைப் பெறுகின்றனர். கடைசி நாட்கள் முடிவுக்கு வருவதற்கு முன் இருப்பது இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இருக்காது, அவை இயேசு யூதேயாவில் நடத்திய கிருபையின் காலக் கிரியையைப் போன்று குறுகியவை. இது ஏன் என்றால், கடைசி நாட்கள் என்பது ஒரு முழு யுகத்தின் முடிவாகும். அவை தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் முழுமையும் முடிவுமாகும் மற்றும் அவை மனுக்குலத்தின் துன்ப வாழ்க்கைப் பயணத்தை முடித்துவைக்கின்றன. அவை ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் ஒரு புதிய காலத்துக்குள் கொண்டு செல்லவில்லை அல்லது மனுக்குலத்தின் வாழ்க்கை தொடரவும் அனுமதிக்கவில்லை; அது என் நிர்வாகத் திட்டத்துக்கு அல்லது மனிதனின் வாழ்வுக்கு முக்கியத்துவம் கொண்டிருக்காது. மனுக்குலம் இவ்வாறு சென்றுகொண்டிருந்தால், இன்று இல்லாவிட்டலும் ஒருநாள் அவர்கள் பிசாசினால் முழுவதுமாக விழுங்கப்படுவர், மேலும் எனக்குச் சொந்தமான அந்த ஆத்துமாக்கள் இறுதியில் அதன் கரங்களால் பாழாக்கப்படும். என் கிரியைகள் ஆறாயிரம் ஆண்டுகளாக நீடிக்கின்றன, மற்றும் முழு மனுக்குலத்தின் மீது தீயவனின் கட்டுப்பாடும் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு மிகாமல் நீடிக்கும் என நான் உறுதியளிக்கிறேன். ஆகவே, இப்போது நேரம் வந்திருக்கிறது. இனி மேலும் நான் தொடரவும் தாமதிக்கவும் மாட்டேன்: கடைசி காலங்களின் போது நான் சாத்தானை அழிப்பேன், நான் என் மகிமை யாவையும் திரும்பவும் பெறுவேன், எனக்கு உரிமையான அனைத்து ஆத்துமாக்களையும் மீட்டெடுப்பதன் மூலம் அந்தத் துயருற்ற ஆத்துமாக்கள் கடல்போன்ற துன்பத்தில் இருந்து விடுதலை பெறும், மேலும் இவ்வாறு பூமியின் மேல் எனது எல்லா கிரியைகளும் நிறைவடையும். இந்த நாள் முதற்கொண்டு, நான் பூமியில் ஒரு போதும் மாம்சமாக மாட்டேன், மற்றும் எனது அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆவியும் பூமியில் கிரியை செய்யாது. நான் ஒன்றே ஒன்றைத்தான் பூமியில் செய்வேன்: நான் மனுக்குலத்தை மீண்டும் பூமியில் மீண்டும் சிருஷ்டிப்பேன், அந்த மனுக்குலம் பரிசுத்தமானதாக இருக்கும் மற்றும் அதுவே பூமியில் என் உண்மையுள்ள நகரமாகவும் இருக்கும். ஆனால் நான் முழு பூமியையும் அழிக்க மாட்டேன் என்பதையும் அல்லது முழு மனுக்குலத்தையும் அழிக்க மாட்டேன் என்பதையும் அறிந்துகொள்ளவும். என்னை நேசிக்கும் மற்றும் என்னால் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்ட மூன்றாம் பங்கை—மீந்திருக்கும் மூன்றாம் பங்கை நான் வைப்பேன், மேலும் இந்த மூன்றாம் பங்கை நியாயப்பிரமாணத்தின் கீழ் இஸ்ரவேலர்களைப் போல பூமியில் பலன்தந்து பெருகச்செய்வேன், எண்ணற்ற ஆடுகள் மற்றும் மிருகஜீவன்கள் மற்றும் பூமியின் அனைத்து வளங்களாலும் போஷிப்பேன். இந்த மனுக்குலம் எப்போதும் என்னுடன் இருக்கும், ஆனால் இன்றைய மனுக்குலம் போல் வெறுக்கத்தகும்படி அசுத்தமானதாக இருக்காது, ஆனால் என்னால் ஆதாயப்படுத்தப்பட்ட அனைவரின் சபையாக இருக்கும். இத்தகைய மனுக்குலம் சாத்தானால் சேதமும், தொந்தரவும் அடைவதில்லை அல்லது முற்றுகையிடப்படுவதும் இல்லை, மேலும் நான் சாத்தானை மேற்கொண்ட பின் பூமியில் இருக்கும் ஒரே மனுக்குலமாக இருக்கும். இன்று என்னால் ஜெயங்கொள்ளப்படும் மனுக்குலம் இதுவே மற்றும் அது என் வாக்குத்தத்தை அடைந்துகொண்டது. ஆகவே, கடைசி நாட்களில் ஜெயங்கொள்ளப்படும் மனுக்குலமே தப்பித்துக்கொள்ளும் மற்றும் அது என் நித்திய ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும். அதுவே சாத்தானை நான் மேற்கொண்டதற்கான ஒரே சான்றாதாரம், மேலும் அதுவே சாத்தானோடான என் யுத்தத்தின் அழிவாகும். யுத்தத்தின் இந்த அழிவை சாத்தானின் அதிகார எல்லையில் இருந்து என்னால் இரட்சிக்கப்பட்டது, மற்றும் என் ஆறாயிர ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் ஒரே பலனும் கனியும் ஆகும். அவர்கள் பிரபஞ்சம் எங்கும் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் பிரிவிலும் இருந்தும், ஒவ்வொரு இடத்திலும் நாட்டிலும் இருந்தும் வருகிறார்கள். அவர்கள் வெவ்வேறு இனத்தினர், வெவ்வேறு மொழிகளும், பழக்கவழக்கங்களும், தோல் நிறமும் கொண்டவர்கள், மற்றும் அவர்கள் உலகின் ஒவ்வொரு தேசத்திலும் பிரிவிலும் மேலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரந்து இருப்பவர்கள். முடிவில், ஒரு முழுமையான மனுக்குலத்தை உருவாக்க ஒன்றாக வருவார்கள், அது சாத்தானின் படைகள் சென்றடையமுடியாத ஒரு மனிதர்களின் கூட்டமாகும். மனுக்குலத்தின் மத்தியில் என்னால் இரட்சிக்கப்பட்டு ஜெயங்கொள்ளப்படாதவர்கள் கடலின் ஆழத்துக்குள் அமைதியாக அமிழ்ந்து நித்தியமாக என் பட்சிக்கும் அக்கினியால் எரிக்கப்படுவார்கள். ஆட்டுக்குட்டியின் மாம்சம் புசித்து, ஆட்டுக்குட்டியின் இரத்தைத்தைப் பானம்செய்து, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தங்கள் கதவு நிலைகளை அடையாளப்படுத்திய இஸ்ரவேலர்களை மட்டுமே விட்டுவிட்டு, எகிப்தின் தலைச்சாண் பிள்ளைகளையும் மிருகஜீவன்களையும் நான் அழித்தது போல் இந்த பழைய, மிகவும் அசுத்தமான மனுக்குலத்தை அழித்தொழிப்பேன். என்னால் ஜெயங்கொள்ளப்பட்ட மக்களும் என் குடும்பமுமானவர்களும்தானே ஆட்டுக்குட்டியாகிய என் மாம்சத்தைப் புசித்து, ஆட்டுக்குட்டியாகிய என் இரத்தத்தைப் பானம்செய்பவர்கள் மற்றும் என்னால் இரட்சிக்கப்பட்டவர்கள் மற்றும் என்னைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அல்லவா? இத்தகைய மக்கள் எப்போதும் என் மகிமையோடு இணைந்திருக்கவில்லையா? ஆட்டுக்குட்டியாகிய மாம்சம் இல்லாமல் இருப்பவர்கள் அமைதியாகக் கடலின் ஆழத்துக்குள் ஏற்கெனவே அமிழ்ந்துவிடவில்லையா? இன்று நீங்கள் என்னை எதிர்க்கிறீர்கள், மேலும் இன்று என்னுடைய வார்த்தைகள் இஸ்ரவேலர்களின் பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் யேகோவா பேசிய வார்த்தைகள் போல் இருக்கின்றன. இருப்பினும் உங்கள் இருதயங்களின் ஆழத்தில் இருக்கும் கடினம் என் கோபாக்கினையை ஒன்றுதிரட்டி, உங்கள் மாம்சத்தின் மேல் அதிக வேதனையையையும், உங்கள் பாவங்களின் மேல் அதிக நியாயத்தீர்ப்புகளையும் உங்கள் அநீதியின் மேல் கூடுதல் கோபாக்கினையையும் கொண்டு வருகிறது. இன்று நீங்கள் என்னை இந்த விதத்தில் நடத்தும்போது என் கோபாக்கினை நாளில் யார் தப்ப முடியும்? என் தண்டனையின் கண்களில் இருந்து யாருடைய அநீதியால் தப்பிக்க முடியும்? சர்வவல்லவரான என் கரங்களில் இருந்து யாருடைய பாவங்கள் தப்பிக்க முடியும்? சர்வவல்லவரான என் நியாயத்தீர்ப்பில் இருந்து யாருடைய முரட்டாட்டம் தப்பிக்க முடியும்? நான், யேகோவா, புறஜாதியார் குடும்பத்தின் சந்ததியாரான உங்களிடம் இவ்வாறு பேசுகிறேன், மேலும் நான் உங்களிடம் பேசும் இந்த வார்த்தைகள் நியாயப்பிரமாணத்தின் காலத்திலும், கிருபையின் காலத்திலும் கூறப்பட்ட வார்த்தைகளை மிஞ்சுகிறது, ஆனாலும் நீங்கள் எகிப்தின் அனைத்து மக்களையும் விட கடினமானவர்களாக இருக்கிறீர்கள். நான் நிதானமாக என் கிரியையை செய்யும்போது என்னுடைய கோபாக்கினையை நீங்கள் குவித்து வைக்கவில்லையா? சர்வவல்லவரான என் நாளின் போது உங்களால் எவ்வாறு தீங்கின்றித் தப்பித்துக்கொள்ள முடியும்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 612

நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்பதையும், சத்தியம் எது என்பதையும் நீ இப்போது புரிந்துகொள்கிறாயா? நீ புரிந்துகொண்டாய் என்றால், நியாயந்தீர்க்கப்படுவதற்கு அடிபணிந்து கீழ்ப்படியும்படி நான் உன்னை அறிவுறுத்துகிறேன், இல்லையெனில் நீ ஒருபோதும் தேவனால் பாராட்டுதலைப் பெறுவதற்கோ அல்லது அவரால் அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கோ வாய்ப்பில்லை. நியாயத்தீர்ப்பை மட்டுமே ஏற்றுக்கொள்பவர்கள், ஆனால் ஒருபோதும் சுத்திகரிக்கப்பட முடியாதவர்கள், அதாவது நியாயத்தீர்ப்பின் கிரியைக்கு மத்தியில் தப்பி ஓடுபவர்கள் என்றென்றுமாய் தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள். அவர்களுடைய பாவங்கள் பரிசேயர்களின் பாவங்களை விட ஏராளமானதும் கடுமையானதுமாகும், ஏனென்றால் அவர்கள் தேவனைக் காட்டிக் கொடுத்து, தேவனுக்கு விரோதமாக கலகக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படி ஊழியத்தைச் செய்யக்கூட தகுதியில்லாத அத்தகைய நபர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள், அதாவது ஒரு நித்தியமான தண்டனையைப் பெறுவார்கள். ஒரு காலத்தில் வார்த்தைகளால் விசுவாசத்தை வெளிப்படுத்திய, ஆனால் அவரைக் காட்டிக் கொடுத்த எந்த துரோகியையும் தேவன் விடமாட்டார். இது போன்றவர்கள் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் தண்டனையின் மூலம் தண்டனையைப் பெறுவார்கள். இது தேவனுடைய துல்லியமான நீதியுள்ள மனநிலையின் வெளிப்பாடு அல்லவா? இது மனிதனை நியாயந்தீர்ப்பதிலும், அவனை வெளிப்படுத்துவதிலும் தேவனுடைய நோக்கம் அல்லவா? நியாயத்தீர்ப்பின் போது எல்லா வகையான துன்மார்க்கமான காரியங்களையும் செய்கிற அனைவரையும் தேவன் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்புகிறார், மேலும் இந்த அசுத்த ஆவிகள் தங்களுடைய சதையுள்ள உடல்களை அவர்கள் விரும்பியபடி அழிக்க அனுமதிக்கிறார், மேலும் அந்த ஜனங்களினுடைய உடல்களின் சடலங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. இது அவர்களுக்கான பொருத்தமான பதிலடி ஆகும். அந்த விசுவாசமற்ற பொய்யான விசுவாசிகள், பொய்யான அப்போஸ்தலர்கள் மற்றும் பொய்யான ஊழியர்களின் ஒவ்வொரு பாவங்களையும் தேவன் அவர்களின் பதிவு புத்தகங்களில் எழுதுகிறார்; பின்னர், நேரம் சரியாக இருக்கும்போது, அசுத்த ஆவிகள் மத்தியில் அவர்களைத் தூக்கி எறிகிறார், இந்த அசுத்த ஆவிகள் தங்கள் முழு உடல்களையும் விருப்பப்படி தீட்டுப்படுத்த அனுமதிக்கின்றன, இதனால் அவர்கள் ஒருபோதும் மறுஜென்மம் எடுக்கக்கூடாதபடிக்கும், மீண்டும் ஒளியைக் காணமலும் போவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியம் செய்துவிட்டு, ஆனால் கடைசிவரை விசுவாசமாக இருக்க இயலாத மாயக்காரர்கள் பொல்லாதவர்கள் கூட்டத்தில் தேவனால் எண்ணப்படுகிறார்கள், இதனால் அவர்கள் துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடந்துகொண்டு, ஒழுங்கற்ற கலகத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள்; இறுதியில், தேவன் அவர்களை முற்றிலுமாய் அழிப்பார். ஒருபோதும் கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை அல்லது தங்கள் பலத்தை ஒருபோதும் பங்களிக்காதவர்களை தேவன் ஒதுக்கித் தள்ளுகிறார், யுகத்தை மாற்றும்போது அவர் அனைவரையும் அழிப்பார். அவர்கள் இனி பூமியில் ஒருபோதும் இருக்க மாட்டார்கள், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதையை அடையவும் மாட்டார்கள். தேவனுக்கு ஒருபோதும் நேர்மையானவர்களாக இல்லாதவர்கள், ஆனால் சூழ்நிலையால் அவரைச் சரியாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், அவருடைய மக்களுக்காக ஊழியம் செய்பவர்கள் கூட்டத்தில் எண்ணப்படுகிறார்கள். ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உயிர்வாழ்வார்கள், அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் ஊழியம் செய்யக் கூட தகுதியில்லாதவர்களுடன் சேர்ந்து அழிந்து போவார்கள். இறுதியில், தேவனைப் போன்ற மனம் படைத்தவர்களையும், தேவனுடைய ஜனங்களையும் மற்றும் தேவனுடைய பிள்ளைகளையும், மற்றும் தேவனால் ஆசாரியர்களாக இருக்கும்படிக்கு முன்குறிக்கப்பட்டவர்கள் அனைவரையும் தேவன் தம்முடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வருவார். அவர்கள் தேவனுடைய கிரியையின் பலனாக இருப்பார்கள். தேவனால் நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு வகையிலும் வகைப்படுத்த முடியாதவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் அவிசுவாசிகளாக எண்ணப்படுவார்கள்—மேலும் அவர்களின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயமாக கற்பனை செய்து பார்க்கலாம். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் நான் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நீங்கள் செல்லும் பாதையை தேர்ந்தெடுக்கும் தேர்வு உங்களுடையது மட்டுமே. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: தேவனுடைய கிரியை அவருடன் ஒருமித்திருக்க முடியாத எவருக்காகவும் காத்திருக்காது, மற்றும் தேவனுடைய நீதியுள்ள மனநிலை எந்த மனிதனுக்கும் இரக்கம் காண்பிக்காது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

முந்தைய: ஜீவனுக்குள் பிரவேசித்தல் (5)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீதியைக் கடைப்பிடிக்கிறீர்களா மற்றும் உங்கள் செயல்கள் அனைத்தும் தேவனால் கண்காணிக்கப்படுகின்றனவா என்று...

கர்த்தரே சகல சிருஷ்டிகளின் தேவன்

முந்தைய இரண்டு யுகங்களின் கிரியைகளில் ஒரு படிநிலை இஸ்ரவேலில் செய்து முடிக்கப்பட்டது, மற்றொன்று யூதேயாவில் செய்து முடிக்கப்பட்டது. பொதுவாகச்...

அனுபவம் பற்றியவை

பேதுரு நூற்றுக்கணக்கான உபத்திரவங்களைத் தன்னுடைய அனுபவங்கள் முழுவதிலும் சந்தித்தான். இன்றைய ஜனங்கள் “உபத்திரவம்” என்னும் சொல்லைத்...

அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன

தேவனால் செய்யப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அக்காலத்தில், இயேசு வந்தபோது, அவர் ஆண்...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக