ஜீவனுக்குள் பிரவேசித்தல் (5)

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 520

பேதுரு இயேசுவைப் பின்தொடர்ந்த நேரத்தில், அவர் அவரைப் பற்றி அநேக கருத்துக்களை கொண்டிருந்தார், அவரை எப்போதும் தனது கண்ணோட்டத்திலிருந்தே கணித்தார். பேதுருவுக்கு ஆவியானவரைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவு புரிதல் இருந்தபோதிலும், அவருடைய புரிதல் ஓரளவு தெளிவாக இல்லை, அதனால்தான் அவர் இவ்வாறு சொன்னார், “பரலோகப் பிதாவினால் அனுப்பப்பட்டவரை நான் பின்பற்ற வேண்டும். பரிசுத்த ஆவியானவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்”. இயேசு செய்த காரியங்களை அவர் புரிந்துகொள்ளவில்லை, அவற்றைப் பற்றிய தெளிவும் இல்லை. சிறிது காலம் அவரைப் பின்பற்றிய பிறகு, பேதுரு, இயேசுவிலும் அவர் என்ன செய்தார், என்ன சொன்னார் என்பதில் ஆர்வமானார். பாசத்தையும் மரியாதையையும் இயேசு ஊக்கப்படுத்தினார் என்பதை அவர் உணர்ந்தார். பேதுரு அவருடன் ஐக்கியம் கொள்ளவும், அவருக்கு அருகில் தங்கி இருக்கவும் விரும்பினார், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பது அவருக்கு அருளையும் உதவியையும் அளித்தது. அவர் இயேசுவைப் பின்பற்றிய காலத்தில், பேதுரு இயேசுவுடைய செயல்கள், வார்த்தைகள், அசைவுகள் மற்றும் வெளிப்பாடுகள் என அவரது வாழ்க்கையைப் பற்றிய எல்லாவற்றையும் உற்றுக் கவணித்து மனதில் பதித்துக்கொண்டார். இயேசு சாதாரண மனிதர்களைப் போல இல்லை என்ற ஆழமான புரிதலைப் பெற்றார். அவரது மனித தோற்றம் மிகவும் சாதாரணமானது என்றாலும், அவர் மனிதனிடம் அன்பு, இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்தவராக இருந்தார். அவர் செய்த அல்லது சொன்ன அனைத்தும் மற்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது, பேதுரு இயேசுவிடம் இதுவரை கண்டிராத அல்லது பெறாதவற்றைக் கண்டு, பெற்றுக்கொண்டார். இயேசுவுக்கு ஒரு பெரிய அந்தஸ்தோ அல்லது அசாதாரண மனிதத்தன்மையோ இல்லை என்றாலும், அவரைப் பற்றி உண்மையிலேயே அசாதாரணமான மற்றும் அபூர்வமான காற்று இருப்பதை அவர் கண்டார். பேதுருவால் அதை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும், இயேசு எல்லோரிடமிருந்தும் வித்தியாசமாக நடந்துகொண்டார் என்பதை அவரால் காண முடிந்தது, ஏனென்றால் அவர் செய்த காரியங்கள் சாதாரண மனிதர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவையாக இருந்தன. இயேசுவோடு தொடர்பு கொண்ட காலத்திலிருந்தே, அவருடைய குணாதிசயம் ஒரு சாதாரண மனிதனின் தன்மையிலிருந்து வேறுபட்டது என்பதையும் பேதுரு கண்டார். அவர் எப்போதுமே சீராகவும், ஒருபோதும் அவசரமாகவும் செயல்படவில்லை, ஒருபோதும் மிகைப்படுத்தவோ அல்லது ஒரு விஷயத்தை குறைத்து மதிப்பிடவோ செய்யவில்லை, மேலும் அவர் தனது வாழ்க்கையை இயல்பான மற்றும் பாராட்டத்தக்க ஒரு குணாதிசயத்தை வெளிப்படுத்தும் வகையில் நடத்தினார். உரையாடும்போது, இயேசு தெளிவாகவும், கிருபையுடனும் பேசினார், எப்போதும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான முறையில் உரையாடினார்—ஆனாலும் அவர் ஒருபோதும் தனது கிரியையைச் செய்யும்போது அவருடைய மேன்மையை இழக்கவில்லை. இயேசு சில சமயங்களில் மவுனமாக இருப்பதை பேதுரு கண்டார், மற்ற நேரங்களில் அவர் இடைவிடாமல் பேசினார். சில நேரங்களில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் ஒரு சுறுசுறுப்பான மற்றும் உல்லாசமாக இருக்கும் புறாவைப் போல தோன்றினார், மற்ற நேரங்களில் அவர் மிகவும் சோகமாக இருந்ததால் அவர் பேசக்கூட செய்யவில்லை, அவர் ஒரு தளர்வுற்ற மற்றும் சோர்வுற்ற தாயாக இருப்பதைப் போல வருத்தத்துடன் தோன்றினார். சில நேரங்களில் அவர் ஒரு துணிச்சலான போர்ச்சேவகன் ஒரு எதிரியைக் கொல்லத் தாக்குவதைப் போல கோபத்தால் நிரம்பி வழிந்தார் அல்லது சில சந்தர்ப்பங்களில், அவர் ஒரு கர்ஜிக்கும் சிங்கத்தை ஒத்திருந்தார். சில நேரங்களில் அவர் சிரித்தார், மற்ற நேரங்களில் அவர் ஜெபித்து அழுதார். இயேசு எவ்வாறு செயல்பட்டாலும், பேதுரு அவர் மீது எல்லையற்ற அன்பும் மரியாதையும் கொண்டவரானார். இயேசுவின் சிரிப்பு அவரை மகிழ்ச்சியால் நிரப்பியது, அவருடைய துக்கம் அவரை வருத்தத்தில் ஆழ்த்தியது, அவருடைய கோபம் அவரைப் பயமுறுத்தியது, அதே நேரத்தில் அவருடைய இரக்கம், மன்னிப்பு மற்றும் அவர் ஜனங்களிடம் வைத்த கடுமையான கோரிக்கைகள் அவரை இயேசுவை உண்மையாக நேசிக்க வைத்தது, அவர் மீது உண்மையான பயபக்தியை ஏற்படுத்தியது, அவருக்காக ஏக்கம்கொள்ள வைத்தது. நிச்சயமாக, பேதுரு இயேசுவோடு அநேக வருடங்கள் வாழ்ந்த பிறகுதான் இவை அனைத்தையும் படிப்படியாக உணர்ந்தார்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுரு இயேசுவை எப்படி அறிந்துகொண்டார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 521

பேதுருவின் அனுபவங்களில் ஒரு முடிவு இருந்தது, அவருடைய உடல் கிட்டத்தட்ட முற்றிலுமாக உடைந்துவிட்டபோது, இயேசு இன்னும் அவருக்குள் ஊக்கத்தை அளித்தார். ஒரு முறை, இயேசு பேதுருவுக்கு காட்சியளித்தார். பேதுரு மிகுந்த துன்பத்தில் இருந்து, அவருடைய இருதயம் உடைந்துவிட்டதாக உணர்ந்தபோது, இயேசு அவருக்கு இவ்வாறு அறிவுறுத்தினார், “நீ பூமியில் என்னுடன் இருந்தாய், நான் உன்னுடன் இங்கே இருந்தேன். நாம் பரலோகத்தில் ஒன்றாக இருந்ததற்கு முன்பே, அது ஆவிக்குரிய உலகில் உள்ளது. இப்போது நான் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்பிவிட்டேன், நீ பூமியில் இருக்கிறாய், ஏனென்றால் நான் பூமியைச் சேர்ந்தவனல்ல, நீயும் பூமியைச் சேர்ந்தவன் அல்ல என்றாலும், நீ பூமியில் உன் கிரியையை நிறைவேற்ற வேண்டும். நீ ஒரு ஊழியனாக இருப்பதால், நீ உன் கடமையை நிறைவேற்ற வேண்டும்”. பேதுருவுக்கு தான் தேவனின் பக்கமாக திரும்பிட முடியும் என்று கேள்விப்பட்டது ஆறுதல் அளித்தது. அந்த நேரத்தில், பேதுரு மிகவும் வேதனையில் இருந்தார், அவர் கிட்டத்தட்ட படுத்த படுக்கையாக இருந்தார். “நான் தேவனை திருப்திப்படுத்த முடியாமல் மிகவும் சீர்கெட்டுவிட்டேன்” என்று சொல்லும் அளவிற்கு அவர் வருத்தப்பட்டார். இயேசு அவருக்கு காட்சியளித்து, “பேதுருவே, நீ ஒரு முறை எனக்கு முன் செய்த தீர்மானத்தை மறந்துவிட்டாயா? நான் சொன்ன அனைத்தையும் நீ உண்மையில் மறந்துவிட்டாயா? நீ என்னிடம் செய்த தீர்மானத்தை மறந்துவிட்டயா?” அவர் இயேசு என்பதைக் கண்டு, பேதுரு படுக்கையில் இருந்து எழுந்தார். “நான் பூமியைச் சேர்ந்தவனல்ல, நான் ஏற்கனவே உனக்கு சொல்லியிருக்கிறேன்—இதை நீ புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் நீ மறந்துவிட்டாயா? வேறு ஏதாவது நான் உன்னிடம் சொன்னேனா? ‘நீ பூமியிலிருந்து அல்ல, உலகத்திலிருந்து அல்ல.’ இப்போதே, நீ செய்ய வேண்டிய கிரியை இருக்கிறது. நீ இப்படி வருத்தப்பட முடியாது. நீ இப்படி துன்பப்பட முடியாது. மனிதர்களும் தேவனும் ஒரே உலகில் ஒன்றிணைந்து வாழ முடியாது என்றாலும், எனக்கு எனது கிரியை இருக்கிறது, உன்னிடம் உன்னுடையது உள்ளன, ஒரு நாள் உன் கிரியை முடிந்ததும், நாம் ஒரே உலகில் ஒன்றாக இருப்போம், நான் வழிநடத்துவேன் நீ என்றென்றும் என்னுடன் இருக்க வேண்டும்,” என்று இயேசு அவரை இவ்வாறு ஆறுதல்படுத்தினார். இந்த வார்த்தைகளைக் கேட்டபின் பேதுரு ஆறுதல் அடைந்தார், தைரியமானார். இந்த துன்பம் தான் தாங்கிக் கொள்ள வேண்டிய மற்றும் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பதை அவர் அறிந்திருந்தார், அப்போதிலிருந்து அவர் தூண்டப்பட்டார். ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் இயேசு அவருக்கு விசேஷமாக் காட்சியளித்தார், அவருக்கு சிறப்பு ஞானத்தையும் வழிகாட்டலையும் அளித்தார், மேலும் அவர் அவரில் அநேகக் கிரியைகளைச் செய்தார். “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்” என்று பேதுரு சொன்னபின், எதனால் பேதுரு மிகவும் வருத்தப்பட்டார்? இயேசு மற்றொரு கேள்வியை பேதுருவிடம் முன்வைத்தார். (இது வேதாகமத்தில் இவ்வாறு பதிவு செய்யப்படவில்லை என்றாலும்). “பேதுரு! நீ எப்போதாவது என்னை அன்பு செய்திருக்கிறாயா?” என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர் சொன்னதை பேதுரு புரிந்துகொண்டு, “ஆண்டவரே! நான் ஒரு முறை பரலோகத்திலுள்ள பிதாவை அன்பு செய்தேன், ஆனால் நான் உம்மை ஒருபோதும் அன்பு செய்ததில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்”. அப்போது, “ஜனங்கள் பரலோகத்திலுள்ள பிதாவை அன்பு செய்யவில்லை என்றால், அவர்கள் பூமியிலுள்ள குமாரனை எப்படி அன்பு செய்ய முடியும்? பிதாவாகிய தேவனால் அனுப்பப்பட்ட குமாரனை ஜனங்கள் அன்பு செய்யவில்லை என்றால், அவர்கள் பரலோகத்திலுள்ள பிதாவை எப்படி அன்பு செய்ய முடியும்? பூமியில் ஜனங்கள் குமாரனை உண்மையாக அன்பு செய்கிறார்கள் என்றால், அவர்கள் உண்மையிலேயே பரலோகத்திலுள்ள பிதாவை அன்பு செய்கிறார்கள்” என்று இயேசு சொன்னார். இந்த வார்த்தைகளை பேதுரு கேட்டபோது, தான் பின்தங்கியிருப்பதை உணர்ந்தார். “நான் ஒரு முறை பரலோகத்திலுள்ள பிதாவை அன்பு செய்தேன், ஆனால் நான் உம்மை ஒருபோதும் அன்பு செய்ததில்லை” என்ற அவரது வார்த்தைகளுக்கு அவர் எப்போதும் கண்ணீர் விட்டார். இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்குப் பிறகு, இந்த வார்த்தைகள் குறித்து அவர் இன்னும் குற்ற உணர்வையும் துக்கத்தையும் உணர்ந்தார். அவருடைய கடந்த கால கிரியையையும், அவருடைய தற்போதைய அந்தஸ்தையும் நினைவு கூர்ந்த அவர், அடிக்கடி ஜெபத்தில் இயேசுவுக்கு முன்பாக வருவார், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றாததாலும், தேவனின் தரத்தை அளவிடாததாலும் எப்போதும் வருத்தமும் கடன்பட்டவராகவும் உணர்கிறார். இந்த பிரச்சினைகள் அவருக்கு மிகப்பெரிய சுமையாக மாறின. “ஒரு நாள் நான் என்னிடம் உள்ள அனைத்தையும், என்னை முற்றிலுமாகவும் நான் உமக்காக அர்ப்பணிப்பேன், மிகவும் விலையேறப்பெற்ற யாவற்றையும் நான் உமக்குக் கொடுப்பேன்” என்று அவர் சொன்னார். “தேவனே! எனக்கு ஒரே ஒரு விசுவாசமும், ஒரே ஒரு அன்பும் இருக்கிறது. என் வாழ்க்கை ஒன்றும் மதிப்புக்குரியது அல்ல, என் உடலுக்கு மதிப்பு ஒன்றும் இல்லை. எனக்கு ஒரே ஒரு விசுவாசமும், ஒரே ஒரு அன்பும் இருக்கிறது. நான் என் மனதில் உம்மை விசுவாசிக்கிறேன், என் இருதயத்தில் உம்மை நேசிக்கிறேன். இந்த இரண்டு விஷயங்களையும் நான் உமக்கு கொடுக்க வேண்டும், வேறு ஒன்றும் இல்லை” என்று அவர் கூறினார். இயேசுவின் வார்த்தைகளால் பேதுரு பெரிதும் தைரியப்படுத்தப்பட்டார், ஏனென்றால் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, “நான் இந்த உலகத்திற்குரியவனல்ல, நீயும் இந்த உலகத்திற்குரியவனல்ல”, என்று அவர் பேதுருவிடம் சொன்னார். பின்னர், பேதுரு மிகுந்த வேதனையை அடைந்தபோது, “பேதுரு, நீ மறந்துவிட்டாயா? நான் உலகத்திற்குரியவனல்ல, என் கிரியைக்காக மட்டுமே நான் முன்பே புறப்பட்டு விட்டேன். நீயும் உலகத்திற்குரியவனல்ல, நீ உண்மையில் மறந்துவிட்டாயா? நான் உனக்கு இரண்டு முறை சொன்னேன், உனக்கு நினைவில் இல்லையா?”, என்று இயேசு அவருக்கு நினைவூட்டினார். இதைக் கேட்ட பேதுரு, “நான் மறக்கவில்லை!” என்றார். அப்போது “நீ ஒரு முறை என்னுடன் சேர்ந்து பரலோகத்தில் மகிழ்ச்சியான நேரத்தையும், என் பக்கத்தில் ஒரு கால கட்டத்தையும் செலவழித்தாய். நீ என் பிரிவை உணர்கிறாய், நான் உன் பிரிவை உணர்கிறேன். என் சிருஷ்டிப்புகள் என் கண்களுக்கு முன்பாகக் குறிப்பிடத்தக்கவை அல்ல என்றாலும், அப்பாவியான மற்றும் அன்பான ஒருவரை நான் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்? நீ என் வாக்குத்தத்தத்தை மறந்துவிட்டாயா? பூமியில் என் கட்டளையை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உன்னிடம் ஒப்படைத்த பணியை நீ நிறைவேற்ற வேண்டும். ஒரு நாள் நான் நிச்சயமாக உன்னை என் பக்கமாக வழிநடத்துவேன்”, இவ்வாறு இயேசு சொன்னார். இதைக் கேட்டபின், பேதுரு இன்னும் தைரியமடைந்து, இன்னும் பெரிய தூண்டுதலைப் பெற்றார், அதாவது அவர் சிலுவையில் இருந்தபோது, “தேவனே! உம்மைப் போதுமான அளவிற்கு என்னால் அன்பு செய்ய முடியவில்லை! நீர் என்னை மரிக்கச் சொன்னாலும், என்னால் இன்னும் உம்மை நேசிக்க முடியவில்லை. நீர் என் ஆத்துமாவை எங்கு அனுப்பினாலும், உம் கடந்த கால வாக்குத்தத்தங்களை நீர் நிறைவேற்றினாலும் நிறைவேற்றாவிட்டாலும், நீர் எதைச் செய்தாலும், நான் உம்மை அன்பு செய்கிறேன், உம்மை விசுவாசிக்கிறேன்” என்று அவரால் சொல்ல முடிந்தது. அவர் பற்றிக் கொண்டிருந்தது அவருடைய விசுவாசமும், உண்மையான அன்பும் ஆகும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுரு இயேசுவை எப்படி அறிந்துகொண்டார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 522

இப்போது நீ பேதுரு எடுத்த துல்லியமான பாதையை தெளிவாகக் காண முடியும். நீ பேதுருவின் பாதையை தெளிவாகக் காண முடிந்தால், இன்று செய்யப்படும் கிரியையைப் பற்றி நீ உறுதியாக இருப்பாய், எனவே நீ குறைகூறவோ அல்லது செயலற்றவனாக இருக்கவோ அல்லது எதற்கும் ஏங்கவோ மாட்டாய். அந்த நேரத்தில் நீ பேதுருவின் மனநிலையை அனுபவிக்க வேண்டும். அவர் துக்கத்தால் பாதிக்கப்பட்டார். அவர் இனியும் ஒரு எதிர்காலத்தையோ அல்லது எந்த ஆசீர்வாதங்களையுமோ கேட்கவில்லை. அவர் ஆதாயம், மகிழ்ச்சி, புகழ் அல்லது அதிர்ஷ்டத்தை உலகில் நாடவில்ல. அவர் மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையை மட்டுமே வாழ முயன்றார், இது தேவனின் அன்பிற்காக திருப்பிச் செலுத்துவதோடு அவர் தேவனுக்கு மிகவும் விலையேறப்பெற்றதாக இருந்ததை அர்ப்பணிப்பதுமாக இருந்தது. பின்னர் அவர் இருதயத்தில் திருப்தி அடைந்திருப்பார். அவர் அடிக்கடி இயேசுவிடம், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நான் ஒரு முறை உம்மை அன்பு செய்தேன், ஆனால் நான் உம்மை ஒருபோதும் அன்பு செய்யவில்லை. நான் உம்மை நம்புகிறேன் என்று சொன்னாலும், நான் உம்மை உண்மையான இருதயத்துடன் அன்பு செய்யல்லை. நான் உம்மை மட்டுமே பார்த்தேன், உம்மை வணங்கினேன், உம்மை தவறவிட்டேன், ஆனால் நான் உம்மை ஒருபோதும் அன்பு செய்யவில்லை, உம்மிடம் உண்மையாகவே விசுவாசம் வைத்திருக்கவில்லை” என்று ஜெபம் செய்தார். அவர் தனது தீர்மானத்தை எடுக்க தொடர்ந்து ஜெபித்தார், இயேசுவின் வார்த்தைகளால் அவர் எப்போதும் ஊக்கமடைந்து அவைகளிலிருந்து உந்துதலைப் பெற்றார். பின்னர், ஒரு அனுபவத்தின் காலத்திற்குப் பிறகு, இயேசு அவரைச் சோதித்தார், மேலும் அவருக்காக ஏங்கும்படி அவரைத் தூண்டினார். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே! நான் எப்படி உம்மை விட்டுப் பிரிவேன், உம் மீது ஏக்கமாக இருக்கிறேன். உம் அன்பை ஈடுசெய்ய முடியாதபடி அதிகமாக பின்தங்கியுள்ளேன். விரைவில் என்னை அழைத்துச் செல்லும்படி நான் உம்மிடம் கெஞ்சுகிறேன். உமக்கு நான் எப்போது தேவைப்படுவேன்? நீர் எப்போது என்னை அழைத்துச் செல்வீர்? உமது முகத்தை நான் எப்போது பார்ப்பேன்? இந்த உடலில் இனி வாழவோ, தொடர்ந்து சீர்கேடானவற்றைச் செய்யவோ நான் விரும்பவில்லை, மேலும் கிளர்ச்சி செய்யவும் விரும்பவில்லை. என்னிடம் உள்ள அனைத்தையும் என்னால் முடிந்தவரை விரைவில் அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன், மேலும் உம்மை இன்னும் வருத்தப்படுத்த நான் விரும்பவில்லை” என்று அவர் சொன்னார். அவர் இப்படித்தான் ஜெபம் செய்தார், ஆனால் இயேசு அவரிடம் எதை பரிபூரணப்படுத்துவார் என்று அப்போது அவருக்குத் தெரியாது. அவருடைய சோதனையின் வேதனையின்போது, இயேசு மீண்டும் அவருக்குக் காட்சியளித்து, “பேதுரு, நான் உன்னை பரிபூரணமாக்க விரும்புகிறேன், அதாவது நீ பழத்தின் ஒரு பகுதியைப் போல மாறுகிறாய், இது உன்னை நான் பரிபூரணபடுத்தும் செயல்முறையாகும், அதில் நான் மகிழுவேன். நீ உண்மையிலேயே எனக்கு சாட்சியளிக்க முடியுமா? நான் உன்னிடம் செய்யச் சொல்வதை நீ செய்திருக்கிறாயா? நான் பேசிய வார்த்தைகளில் நீ வாழ்ந்திருக்கிறாயா? நீ ஒரு முறை என்னை அன்பு செய்திருக்கிறாய், ஆனால் நீ என்னை அன்பு செய்திருந்தாலும், நீ என்னை வாழ்ந்து காட்டியிருக்கிறாயா? நீ எனக்காக என்ன செய்திருக்கிறாய்? நீ என் அன்பிற்கு தகுதியற்றவன் என்பதை நீ அடையாளம் கண்டுகொள்கிறாய், ஆனால் நீ எனக்காக என்ன செய்திருக்கிறாய்?” என்று கூறினார். அவர் இயேசுவுக்காக ஒன்றும் செய்திருந்ததில்லை என்பதைக் கண்ட பேதுரு, தேவனுக்கு உயிரைக் கொடுப்பதாக அவர் முன்பு செய்த சத்தியத்தை நினைவு கூர்ந்தார். எனவே, அவர் இனிமேலும் குறைகூறவில்லை, அன்றிலிருந்து அவருடைய ஜெபங்கள் மிகவும் சிறப்பாக மாறின. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே! நான் ஒரு முறை உம்மை விட்டு விலகிவிட்டேன், நீரும் ஒரு முறை என்னை விட்டு விலகிவிட்டீர். நாம் நேரத்தைத் தனியாகவும் நேரத்தை ஒன்றாகவும் செலவிட்டிருக்கிறோம். ஆனாலும் நீர் எல்லாவற்றையும் விட என்னை அதிகமாக நேசிக்கிறீர். நான் உமக்கு எதிராக மீண்டும் மீண்டும் கலகம் செய்தேன், உம்மை பலமுறை வருத்தப்படுத்தினேன். இதுபோன்ற விஷயங்களை நான் எப்படி மறக்க முடியும்? நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன், நீர் என்னிடம் செய்த கிரியையையும், நீர் என்னிடம் ஒப்படைத்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். நீர் என்னிடம் செய்த கிரியைக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். நான் என்ன செய்ய முடியும் என்பதை நீர் அறிவீர், மேலும் நான் என்ன பங்கு வகிக்க முடியும் என்பதையும் நீர் மேலும் அறிவீர். உமது திட்டங்களுக்கு ஒப்புக்கொடுக்க விரும்புகிறேன், என்னிடம் உள்ள அனைத்தையும் உம்மிடம் அர்ப்பணிப்பேன். உமக்காக நான் என்ன செய்ய முடியும் என்பதை நீர் மட்டுமே அறிவீர். சாத்தான் என்னை மிகவும் முட்டாளாக்கினாலும், நான் உமக்கு எதிராகக் கலகம் செய்தாலும், அந்த மீறுதல்களுக்காக நீர் என்னை நினைவில் கொள்ளவில்லை என்றும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு நீர் என்னை நடத்துவதில்லை என்றும் நான் விசுவாசிக்கிறேன். எனது முழு வாழ்க்கையையும் உமக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். நான் எதுவும் கேட்கவில்லை, எனக்கு வேறு நம்பிக்கைகளும் திட்டங்களும் இல்லை. உமது நோக்கத்தின்படி மட்டுமே செயல்படவும், உம் விருப்பங்களைச் செய்யவும் விரும்புகிறேன். உம்முடைய கசப்பான கோப்பையிலிருந்து நான் பானம்பண்ணுவேன், நீர் கட்டளையிடுவதற்கு நான் உம்முடையவன்” என்று அவர் ஜெபித்தார்.

நீங்கள் நடந்து செல்லும் பாதை குறித்து நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் எடுக்கும் பாதை, தேவன் பரிபூரணமாக்குவது எது, உங்களுக்கு ஒப்படைக்கப்பட்டவை எவை என்பதைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு நாள், ஒருவேளை, நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், அந்த நேரம் வரும்போது, நீங்கள் பேதுருவின் அனுபவங்களிலிருந்து தூண்டுதலைப் பெற முடிந்தால், நீங்கள் உண்மையிலேயே பேதுருவின் பாதையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை இது காண்பிக்கும். பேதுருவின் உண்மையான விசுவாசம் மற்றும் அன்பு மற்றும் தேவனுக்கு விசுவாசமாக இருப்பதற்காக தேவனால் கட்டளை பெற்றார். அவருடைய நேர்மைக்காகவும், அவருடைய இருதயத்தில் தேவனுக்காக ஏங்குவதற்காகவும் தேவன் அவரை பரிபூரணமாக்கினார். நீ உண்மையிலேயே பேதுருவைப் போலவே அன்பும் விசுவாசமும் கொண்டிருந்தால், நிச்சயமாக இயேசு உன்னை பரிபூரணமாக்குவார்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுரு இயேசுவை எப்படி அறிந்துகொண்டார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 523

அவர் தேவனால் தண்டிக்கப்பட்டபோது, “தேவனே! என் மாம்சம் கீழ்ப்படியாததாக இருக்கிறது, நீர் என்னைத் தண்டித்து என்னை நியாயந்தீர்க்கிறீர். உம்முடைய தண்டனையிலும் நியாயத்தீர்ப்பிலும் நான் களிகூருகிறேன், நீர் என்னை விரும்பாவிட்டாலும், உம்முடைய பரிசுத்த மற்றும் நீதியான மனநிலையை உம்முடைய நியாயத்தீர்ப்பில் நான் காண்கிறேன். நீர் என்னை நியாயந்தீர்க்கும்போது, உமது நியாயத்தீர்ப்பில் உமது நீதியுள்ள தன்மையை மற்றவர்கள் காணும்படி, நான் உட்கருத்தை உணர்கிறேன். அது உமது மனநிலையை வெளிப்படுத்தவும், உமது நீதியான மனநிலையை எல்லா சிருஷ்டிகளும் காணும்படியாக அனுமதிக்கவும், அது உமது மீதான என் அன்பை மேலும் தூய்மையாக்க முடியுமானால், நீதியுள்ள ஒருவரின் சாயலை நான் அடைந்திட முடியும், பின்னர் உம் நியாயத்தீர்ப்பு நல்லதாக இருக்கிறது, உம்முடைய இரக்கத்தின் சித்தமும் அதேபோல் இருக்கிறது. என்னுள் இன்னும் கலகத்தனம் அதிகமாக இருக்கிறது என்பதையும், நான் உம் முன் வருவதற்கு இன்னும் தகுதியற்றவன் என்பதையும், நான் அறிந்திருக்கிறேன். ஒரு விரோதமான சூழல் மூலமாகவோ அல்லது பெரும் இடுக்கண்களின் மூலமாகவோ நீர் என்னை இன்னும் அதிகமாக நியாயத்தீர்க்க விரும்புகிறேன். நீர் என்ன செய்தாலும், அது எனக்கு விலையேறப்பெற்றது. உமது நேசம் மிகவும் ஆழமானது, சிறிதும் புகார் இல்லாமல் உம் இரக்கத்தில் என்னை ஐக்கியப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்” என்று பேதுரு ஜெபித்தார். இது தேவனின் கிரியையை அனுபவித்த பின்பான பேதுருவின் அறிவாகும், இது தேவன் மீதான அவருடைய நேசத்திற்கு ஒரு சாட்சியாகும். இன்று, நீங்கள் ஏற்கனவே ஜெயம்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இந்த ஜெயம் உங்களில் எவ்வாறு வெளிப்படுகிறது? சிலர், “என் ஜெயம் தேவனின் உயர்ந்த கிருபையும் மேன்மையும் ஆகும். மனிதனின் வாழ்க்கை வெறுமையும் முக்கியத்துவம் இல்லாததும் என்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன். மனிதன் தனது வாழ்க்கையை, தலைமுறை தலைமுறையாக குழந்தைகளை உற்பத்தி செய்வதற்கும், வளர்ப்பதற்கும் விரைவாகச் செலவழிக்கிறான், கடைசியில் எதுவும் இல்லாமல் போகிறான். இன்று, தேவனால் ஜெயம்கொள்ளப்பட்ட பின்னரே, இந்த வழியில் வாழ்வதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைக் கண்டிருக்கிறேன். அது உண்மையில் அர்த்தமற்றி வாழ்க்கையாகும். நானும் மரித்து அதைச் செய்வது முடித்திருக்கலாம்!” என்று சொல்லுகின்றனர். ஜெயம்பெற்ற அத்தகையவர்களை தேவனால் ஆதாயப்படுத்த முடியுமா? அவை உதாரணங்களாக மற்றும் மாதிரிகளாக முடியுமா? அத்தகைய ஜனங்கள் செயலற்ற தன்மைக்கு ஒரு பாடமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஆசைகளும் இல்லை, தங்களை மேம்படுத்த முயற்சிக்க மாட்டார்கள். அவர்கள் ஜெயம்பெற்றதாக எண்ணினாலும், அத்தகைய செயலற்றவர்கள் பரிபூரணமாக இருக்க முடியாது. அவர் பரிபூரணமாக்கப்பட்ட பிறகு, அவருடைய வாழ்க்கையின் முடிவில், பேதுரு, “தேவனே! நான் இன்னும் சில வருடங்கள் வாழ்ந்தால், உம்முடைய தூய்மையானதும் ஆழமானதுமான அன்பை அடைந்திட விரும்புகிறேன்”, என்று சொன்னார். அவர் சிலுவையில் அறையப்படும் தருணத்தில், “தேவனே! உம் நேரம் இப்போது வந்திருக்கிறது. எனக்காக நீர் ஏற்பாடு செய்த நேரம் வந்துவிட்டது. நான் உமக்காக சிலுவையில் அறையப்பட வேண்டும், இந்த சாட்சியை நான் உமக்காக பகிர வேண்டும், மேலும் என் அன்பு உம் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்றும், அது மேலும் தூய்மையானதாக மாற முடியும் என்றும் விசுவாசிக்கிறேன். இன்று, உமக்காக மரித்து, உமக்காக சிலுவையில் அறையப்பட்டிருப்பது எனக்கு ஆறுதலளிக்கிறது, உறுதியளிக்கிறது, ஏனென்றால் உமக்காக சிலுவையில் அறையப்படுவதையும் உமது சித்தங்களை நிறைவேற்றுவதையும் விட வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்காது, என் ஜீவனை உமக்கு அர்பணிப்பதற்காக, என்னையே உமக்குக் கொடுக்க முடியும். ஓ தேவனே! நீர் மிகவும் அழகானவர்! நீர் என்னை வாழ அனுமதிப்பதாக இருந்தால், நான் உம்மை இன்னும் அதிகமாக நேசிக்கத் தயாராக இருப்பேன். என் ஜீவனுள்ள வரை, நான் உம்மை நேசிப்பேன். உம்மை இன்னும் ஆழமாக நேசிக்க விரும்புகிறேன். நான் பாவம் செய்ததாலும் நான் நீதிமானாக இல்லாததாலும் நீர் என்னை நியாயந்தீர்க்கவும், என்னைத் தண்டிக்கவும் செய்து எனக்கு வாய்ப்பளியுங்கள். உமது நீதியான மனநிலை எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இது எனக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறது, ஏனென்றால் என்னால் உம்மை இன்னும் ஆழமாக நேசிக்க முடிகிறது, மேலும் நீர் என்னை நேசிக்காவிட்டாலும் இந்த வழியில் உம்மை நேசிக்க நான் தயாராக இருக்கிறேன். உனது நீதியான மனநிலையைப் பார்க்க நான் தயாராக இருக்கிறேன், ஏனென்றால் இது சாராம்சமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு எனக்கு அதிகமாக உதவுகிறது. நான் இப்போதைய என் வாழ்க்கையை மிகவும் சாராம்சமுள்ளதாக உணர்கிறேன், ஏனென்றால் நான் உமக்காக சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன், உமக்காக மரிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆனாலும் நான் திருப்தி அடைந்ததாக உணரவில்லை, ஏனென்றால் உம்மைக்குறித்து நான் மிகவும் குறைவாகவே அறிவேன், உம்முடைய சித்தங்களை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியாது என்பதையும், உமக்கு மிகக் குறைவாக திருப்பிச் செலுத்தியதையும் நான் அறிந்திருக்கிறேன். என் வாழ்க்கையில், என்னை முழுமையாக உம்மிடம் திருப்பித் தர என்னால் இயலாவில்லை. நான் அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன். இந்த தருணத்தை நான் திரும்பிப் பார்க்கும்போது, நான் உம்மிடம் மிகவும் கடன்பட்டிருப்பதாக உணர்கிறேன், என் எல்லா குற்றங்களையும், நான் உமக்குத் திருப்பிச் செலுத்தாத எல்லா அன்பையும் ஈடுசெய்ய இந்த தருணத்தைத் தவிர எனக்கு வேறென்ன இருக்கிறது”, என்று அவர் தன் இருதயத்தில் ஜெபித்தார்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுருவின் அனுபவங்கள்: தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவரது அறிவு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 524

மனிதன் உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்கு தொடர வேண்டும், அவனுடைய தற்போதைய சூழ்நிலைகளில் திருப்தி அடைந்திருக்கக்கூடாது. பேதுருவின் சாயலில் வாழ்ந்திட, அவன் பேதுருவின் அறிவையும் அனுபவங்களையும் பெற்றிருக்க வேண்டும். மனிதன் உயர்ந்ததும் ஆழமானதுமான காரியங்களைத் தொடர வேண்டும். அவர் தேவனுக்கான ஆழமான, தூய்மையான அன்பையும், மதிப்பும் அர்த்தமும் கொண்ட வாழ்க்கையையும் தொடர வேண்டும். இது மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது. அப்போதுதான் மனிதன் பேதுருவைப் போலவே இருப்பான். நேர்மறையான பக்கத்தில் உன் பிரவேசத்தை நோக்கி செயலில் ஈடுபடுவதில் நீ கவனம் செலுத்த வேண்டும், மேலும் ஆழ்ந்த, மிகவும் குறிப்பிட்ட மற்றும் மிகவும் நடைமுறை உண்மைகளைப் புறக்கணிக்கும்போது, தற்காலிக சுலபத்திற்காக உன்னைப் பின்வாங்க அனுமதிக்கக்கூடாது. உன் அன்பு நடைமுறையானதாக இருக்க வேண்டும், மேலும் மிருகத்தின் வித்தியாசமில்லாத இந்த மோசமான, கவலையற்ற வாழ்க்கையிலிருந்து உன்னை விடுவிப்பதற்கான வழிகளை நீ கண்டுபிடிக்க வேண்டும். நீ உண்மையுள்ள ஒரு வாழ்க்கையை, மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ வேண்டும், மேலும் உன்னை நீயே முட்டாளாக்கவோ அல்லது உன் ஜீவனை விளையாடுவதற்கான ஒரு பொம்மையைப் போல நடத்தவோ கூடாது. தேவனை நேசிக்க விரும்பும் அனைவருக்கும், அடைந்திட முடியாத சத்தியங்களும் இல்லை, அவர்களால் உறுதியாக நிற்க முடியாத நீதியும் இல்லை. உன் வாழ்க்கையை நீ எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு நீ தேவனை நேசிக்க வேண்டும் மற்றும் அவருடைய சித்தத்தை பூர்த்தி செய்ய இந்த அன்பைப் பயன்படுத்த வேண்டும்? உன் வாழ்க்கையில் இதைவிட பெரிய காரியம் எதுவுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ அத்தகைய ஆசைகளையும் விடாமுயற்சியையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் முதுகெலும்பு இல்லாதவர்களைப் போலவும், பலவீனமானவர்களைப் போலவும் இருக்கக்கூடாது. ஒரு உண்மையுள்ள வாழ்க்கையையும் உண்மையுள்ள யதார்த்தம்களையும் எவ்வாறு அனுபவிப்பது என்பதை நீ கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் உங்களை அந்த வகையில் அக்கறையில்லாமல் நடத்தக்கூடாது. நீ அதை உணர்வதற்குள், உங்கள் வாழ்க்கை உன்னைக் கடந்து சென்றுவிடும். அதன் பிறகு, தேவனை நேசிக்க உனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா? மனிதன் மரித்த பிறகு தேவனை நேசிக்க முடியுமா? நீ பேதுருவைப் போல அதே ஆர்வங்களையும் மனசாட்சியையும் பெற்றிருக்க வேண்டும். உன்னுடைய வாழ்க்கை உண்மையுள்ளதாக இருக்க வேண்டும், நீயே உன் வாழ்க்கையில் விளையாடக் கூடாது. ஒரு மனிதனாக, தேவனைப் பின்தொடரும் ஒருவனாக, நீ உன் வாழ்க்கையை எவ்வாறாக நடத்த வேண்டும், தேவனுக்கு உன்னை எவ்வாறாக அர்பணிக்க வேண்டும், தேவன் மீது உனக்கு உண்மையுள்ள விசுவாசம் எவ்வாறாக இருக்க வேண்டும், நீ தேவனை நேசிப்பதால், எப்படி அவரை மிகவும் தூய்மையான, அழகான மற்றும் நன்மையான முறையில் நேசிக்க வேண்டும் என்பதை உன்னால் கவனமாக பரிசீலிக்க முடிய வேண்டும். இன்று, நீ எவ்வாறு ஜெயம்பெற்றாய் என்பதில் மட்டுமே நீ திருப்தியடைய முடியாது, ஆனால் எதிர்காலத்தில் நீ நடந்து செல்ல வேண்டிய பாதையையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீ ஆர்வங்களையும், பரிபூரணமாக்கப்படுவதற்கான தைரியத்தையும் கொண்டிருக்க வேண்டும், எப்போதும் உன்னை இயலாதவன் என்று நினைக்கக்கூடாது. சத்தியத்திற்குப் பிடித்தவை இருக்கின்றதா? சத்தியம் ஜனங்களை வேண்டுமென்றே எதிர்க்க முடியுமா? நீ சத்தியத்தைத் தொடர்ந்தால், அது உன்னை மூழ்கச் செய்ய முடியுமா? நீ உறுதியுடன் நீதிக்காக நின்றால், அது உன்னை கீழே அடித்து தள்ளிவிடுமா? ஜீவனைத் தொடர்வது உண்மையிலேயே உன் ஆர்வமாக இருந்தால், ஜீவனால் உன்னைத் தவிர்க்க முடியுமா? நீ சத்தியம் இல்லாமல் இருந்தால், அது சத்தியம் உன்னை புறக்கணிப்பதால் அல்ல, மாறாக நீ சத்தியத்திலிருந்து விலகி இருப்பதால். நீதிக்காக உறுதியாக நிற்க உன்னால் முடியாவிட்டால், அது நீதியில் ஏதோ தவறு இருப்பதால் அல்ல, மாறாக அது யதார்த்தம்களுக்கு முரணானது என்று நீ விசுவாசிப்பதாலாகும். அநேக ஆண்டுகளாக பின்தொடர்ந்த பிறகும் நீ ஜீவனை ஆதாயப்படுத்தியிருக்கவில்லை என்றால், ஜீவனுக்கு உன்னைக் குறித்து மனசாட்சி இல்லாததால் அல்ல, மாறாக உனக்கு ஜீவனைக் குறித்த மனசாட்சி இல்லாததாலும், ஜீவனை விரட்டியடித்ததாலுமாகும். நீ ஒளியினிடத்தில் வாழ்ந்து, ஒளியைப் பெற இயலாமல் இருந்திருந்தால், அது ஒளியால் உன்னை ஒளிரச் செய்ய இயலாது என்பதனால் அல்ல, மாறாக நீ ஒளி இருப்பதைப் பற்றி எந்த கவனமும் செலுத்தவில்லை என்பதாலாகும், அதனால் ஒளி சத்தமின்றி உன்னிடமிருந்து விலகியிருக்கிறது. நீ பின்தொடரவில்லை என்றால், நீ மதிப்பற்ற குப்பை, vக் குறித்த தைரியம் உனக்கு இல்லை, இருளின் வல்லமைகளை எதிர்க்கும் ஆவி இல்லை என்று மட்டுமே சொல்லப்பட முடியும். நீ மிகவும் பலவீனமானவன்! உன்னை முற்றுகையிடும் சாத்தானின் வல்லமைகளிடமிருந்து உன்னால் தப்ப முடியாது, மேலும் இந்த வகையான பாதுகாப்பான மற்றும் உறுதியான வாழ்க்கையை நடத்துவதற்கும் அறியாமையில் மரிப்பதற்கும் மட்டுமே தயாராக இருக்கிறாய். நீ ஜெயம் கொள்வதற்காகத் தொடர்வதே நீ அடைந்திட வேண்டியதாகும். இது உன் கடமைப்பட்ட வேலை. நீ ஜெயம் கொள்ள வேண்டுமென கருத்தாக இருந்தால், ஒளி இருப்பதை நீ விரட்டுகின்றாய். நீ சத்தியத்திற்காக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக உன்னையே கொடுக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக அவமானத்தை தாங்கிக் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்தை அதிகமாக ஆதாயம் செய்ய நீங்கள் அதிக துன்பங்களுக்குள்ளாக செல்ல வேண்டும். இதையே நீ செய்ய வேண்டும். அமைதியான குடும்ப ஜீவியத்தின் பொருட்டு நீ யதார்த்தத்தைத் தூக்கி எறியக்கூடாது, மேலும் உன் வாழ்க்கையின் கண்ணியத்தையும் நேர்மையையும் சிற்றின்பத்திற்காக இழந்துவிடக்கூடாது. நீ அழகானவை மற்றும் நன்மையானவை அனைத்தையும் பின்தொடர வேண்டும், மேலும் வாழ்க்கையில் ஒரு அர்த்தமுள்ள பாதையை நீ பின்தொடர வேண்டும். நீ அத்தகைய இழிவான ஜீவனம் நடத்தினால் மற்றும் எந்த நோக்கங்களையும் பின்பற்றவில்லை என்றால், நீ உன் ஜீவனை வீணாக்குகிறாயல்லவா? அத்தகைய ஜீவனிலிருந்து நீ என்ன ஆதாயம் செய்ய முடியும்? நீ ஒரு சத்தியத்திற்காக மாம்சத்தின் அனைத்து இன்பங்களையும் கைவிட வேண்டும், மேலும் ஒரு சிறிய இன்பத்திற்காக எல்லா சத்தியங்களையும் தூக்கி எறிந்துவிடக்கூடாது. இது போன்றவர்களுக்கு நேர்மையோ அல்லது கண்ணியமோ இருப்பதில்லை. அவர்கள் இருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுருவின் அனுபவங்கள்: தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவரது அறிவு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 525

தேவன் மனிதனைத் தண்டிக்கிறார் மற்றும் நியாயந்தீர்க்கிறார், ஏனென்றால் அது அவருடைய கிரியையால் தேவையானதாக இருக்கிறது, மேலும், அது மனிதனுக்குத் தேவைப்படுகிறது. மனிதன் தண்டிக்கப்பட வேண்டும், நியாயந்தீர்க்கப்பட வேண்டும், அப்போதுதான் அவனால் தேவனின் அன்பை அடைந்திட முடியும். இன்று, நீங்கள் முற்றிலும் நம்பபப்டுத்தப்பட்டு இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் சிறிய பின்னடைவை சந்திக்கும்போது, நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள். உங்கள் அந்தஸ்து இன்னும் மிகவும் சிறியது, மேலும் ஒரு ஆழமான அறிவைப் பெறுவதற்கு இதுபோன்ற அநேக தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் நீங்கள் இன்னும் அனுபவிக்க வேண்டும். இன்று, நீங்கள் தேவனிடம் கொஞ்சம் பயபக்தியைக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிறீர்கள், அவர் மெய்யான தேவன் என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் அவருக்காக மிகுந்த அன்பு நீங்கள் பெற்றிருக்கவில்லை, நீங்கள் தூய்மையான அன்பை மிகக் குறைவாகவே அடைந்துள்ளீர்கள். உங்கள் அறிவு மிகவும் மேலோட்டமானது, உங்கள் அந்தஸ்து இன்னும் போதுமானதாக இல்லை. நீங்கள் உண்மையிலேயே ஒரு நிலைமையை எதிர்கொள்ளும்போது, நீங்கள் இன்னும் சாட்சி பகிரவில்லை, உங்கள் பிரவேசத்தில் மிகக் குறைவானதே ஆற்றல்மிக்கது, மேலும் எவ்வாறு பயிற்சி செய்வது என்று உங்களுக்கு யோசனை இருக்காது. பெரும்பாலான ஜனங்கள் மந்தமானவர்கள் மற்றும் செயலற்றவர்கள். அவர்கள் தங்கள் இருதயங்களில் தேவனை ரகசியமாக மட்டுமே நேசிக்கிறார்கள், ஆனால் நடைமுறைக்குரிய எந்த வழியும் இல்லை, அவர்களின் இலக்குகள் என்ன என்பது பற்றியும் தெளிவாக இல்லை. பரிபூரணமாக்கப்பட்டவர்கள் யாவரும் சாதாரண மனிதநேயத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மனசாட்சியின் நடவடிக்கைகளை தாண்டியதும், மனசாட்சியின் தரங்களை விட உயர்ந்ததுமான சத்தியங்களைக் கொண்டவர்கள். அவர்கள் தேவனின் அன்பைத் திருப்பிச் செலுத்துவதற்கு தங்கள் மனசாட்சியைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தேவனை அறிந்தும் இருக்கிறார்கள், மேலும் தேவன் அழகானவர், மனிதனின் அன்பிற்கு தகுதியானவர் என்பதையும், தேவனை நேசிப்பதற்கானவை நிறைய இருக்கிறது என்பதையும் கண்டிருக்கிறார்கள். மனிதனால் உதவ முடியாது, ஆனால் அவரை நேசிக்க முடியும்! பரிபூரணமாக்கப்பட்டவர்களிடம் தேவன் மீதான அன்பு அவர்களின் சொந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே. அவர்களுடையது ஒரு இயல்பாகத் தோன்றுகிற அன்பு, திரும்ப எதுவும் கேட்காத ஒரு அன்பு, இது ஒரு பரிவர்த்தனை அல்ல. தேவனைக் குறித்த அறிவைத் தவிர வேறொன்றையும் குறித்தி அவர்கள் தேவனை நேசிக்கிறதில்லை. தேவன் தங்கள் மீது கிருபை புரிந்தாரா என்பதைக் குறித்து அக்கறைக் கொள்வதுமில்லை மேலும் தேவனை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறொன்றையும் கருத்தில் கொள்பவர்களாகவும் அத்தகையவர்கள் இல்லை. அவர்கள் தேவனோடு பேரம் பேசுவதில்லை, தேவனின் அன்பை மனசாட்சியால் அளவிடுகிறதில்லை: “நீர் எனக்குக் கொடுத்திருக்கிறீர், இதனால் நான் உம்மை நேசிக்கிறேன். நீர் எனக்குக் கொடுக்கவில்லை என்றால், உமக்குப் பதில் செய்ய என்னிடம் எதுவும் இல்லை”. “ஓ தேவனே சிருஷ்டிகர், அவர் தம்முடைய கிரியையை நம்மீது நடப்பிக்கிறார். இந்த வாய்ப்பு, நிலை மற்றும் தகுதி பரிபூரணமாக்கப்படுவதற்கு எனக்கு இருப்பதால், எனது நாட்டம் உண்மையுள்ள ஜீவியத்தை வாழ்வதாக இருக்க வேண்டும், நான் அவரை திருப்திப்படுத்த வேண்டும்” என்பதை பரிபூரணமாக்கப்பட்டவர்கள் எப்போதும் விசுவாசிக்கிறார்கள். இது பேதுரு அனுபவித்ததைப் போன்றதே. அவர் பலவீனமாக இருந்தபோது, “ஓ தேவனே! நேரமும் காலமும் எதுவாயினும், நான் உம்மை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன் என்பது உமக்குத் தெரியும். நேரமும் காலமும் எதுவாயினும், நான் உம்மை நேசிக்க விரும்புகிறேன் என்பதை நீ அறிவீர்கள், ஆனால் எனது அந்தஸ்து மிகவும் சிறியது, நான் மிகவும் பலவீனமாகவும் வல்லமையற்றவனாகவும் இருக்கிறேன், என் நேசம் மிகவும் குறைவானது, உம்மைக்குறித்த என் நேர்மை மிகவும் அற்பமானது. உம் அன்போடு ஒப்பிட்டால், நான் வாழத் தகுதியற்றவன். எனது வாழ்க்கை வீணாகவில்லை என்பதையும், உமது அன்பை என்னால் திருப்பிச் செலுத்த முடியாது என்பதையும், மேலும், என்னிடம் உள்ள அனைத்தையும் உமக்காக அர்ப்பணிக்க முடியும் என்பதையும் மட்டுமே நான் விரும்புகிறேன். ஒரு சிருஷ்டியாக நான் உம்மைத் திருப்திப்படுத்த முடிந்தால், எனக்கு மன அமைதி கிடைக்கும், மேலும் எதுவும் கேட்க மாட்டேன். நான் இப்போது பலவீனமாகவும் வல்லமையற்றவனாகவும் இருந்தாலும், உமது அறிவுரைகளை நான் மறக்க மாட்டேன், உமது அன்பை நான் மறக்க மாட்டேன். உங்கள் அன்பை திருப்பிச் செலுத்துவதைத் தவிர இப்போது நான் எதுவும் செய்து பெற்றிருக்கவில்லை. ஓ தேவனே, நான் மோசமாக உணர்கிறேன்! என் இருதயத்தில் உள்ள அன்பை நான் உமக்கு எவ்வாறு திருப்பித் தர முடியும், எப்படி நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து, உம்முடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும், மேலும் என்னிடம் உள்ள அனைத்தையும் உனக்கு அர்பணிக்க முடியும்? மனிதனின் பலவீனம் உமக்குத் தெரியும். உன் நேசத்திற்கு நான் எவ்வாறு பாத்திரவானாக இருக்க முடியும்? ஓ தேவனே! நான் சிறிய அந்தஸ்துள்ளவன், என் நேசம் மிகவும் அற்பமானது என்பது உமக்குத் தெரியும். இந்த வகையான சூழலில் என்னால் முடிந்ததை நான் எவ்வாறு செய்ய முடியும்? உம் அன்பை நான் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும், என்னிடம் உள்ள அனைத்தையும் நான் கொடுக்க வேண்டும் என்றும் எனக்குத் தெரியும், ஆனால் இன்று எனது அந்தஸ்து மிகச் சிறியது. நீர் எனக்கு பலத்தையும் தன்நம்பிக்கையையும் தருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன், இதன்மூலம் நான் உமக்காக அர்ப்பணிக்க தூய்மையான அன்பைப் ஆதாயம் செய்ய முடியும், மேலும் என்னிடம் உள்ள அனைத்தையும் உமக்காக அர்ப்பணிக்க முடியும். உமது அன்பை என்னால் திருப்பிச் செலுத்த முடியும் என்பது மட்டுமல்லாமல், உமது தண்டனை, நியாயத்தீர்ப்பு மற்றும் சோதனைகள் மற்றும் இன்னும் கடுமையான சாபங்களை நான் அனுபவிக்க முடியும். உமது அன்பைக் காண நீர் என்னை அனுமதித்திருக்கிறீர், இயலாதவனாய் உம்மை நேசிக்க என்னால் முடியவில்லை, இன்று நான் பலவீனமாகவும் வல்லமையற்றவனாகவும் இருந்தாலும், உம்மை நான் எப்படி மறக்க முடியும்? உமது நேசம், தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு எல்லாம் உம்மை நான் அறிந்து கொள்ள காரணமாகிவிட்டன, ஆனாலும் உம்முடைய அன்பை நிறைவேற்ற இயலாது என்றும் நினைக்கிறேன், ஏனென்றால் நீர் மிகவும் பெரியவர். என்னிடம் உள்ள அனைத்தையும் சிருஷ்டிகருக்கு எப்படி அர்ப்பணிக்க முடியும்?” என்று அவர் தேவனிடம் ஜெபித்தார். இது பேதுருவின் வேண்டுகோளாக இருந்தது, ஆனாலும் அவரது அந்தஸ்து போதுமானதாக இல்லை. இந்த நேரத்தில், அவர் இருதயத்தை ஒரு கத்தி சிதைப்பதைப் போல் உணர்ந்தார். அவர் வேதனையில் இருந்தார். அத்தகைய சூழ்நிலைகளில் என்ன செய்வது என்று அவருக்குத் தெரியாது. ஆனாலும், “ஓ தேவனே! மனிதன் குழந்தைத்தனமான அந்தஸ்துள்ளவன், அவனுடைய மனசாட்சி பலவீனமானது, உம் அன்பைத் திருப்பிச் செலுத்துவதே நான் அடைந்திடக்கூடிய ஒரே காரியம். இன்று, உம் விருப்பங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை, என்னால் முடிந்த அனைத்தையும் மட்டுமே செய்ய விரும்புகிறேன், என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்க வேண்டும், என்னிடம் உள்ள அனைத்தையும் உமக்காக அர்ப்பணிக்கிறேன். உமது நியாயத்தீர்ப்பைப் பொருட்படுத்தாமல், உம் தண்டனையைப் பொருட்படுத்தாமல், நீர் என் மீது என்ன பொழிகிறீர் என்பதைப் பொருட்படுத்தாமல், நீர் என்னிடமிருந்து எதைப் பறித்துக்கொள்கிறீர் என்பதைப் பொருட்படுத்தாமல், உம்மைக்குறித்த சிறிதளவு புகாரில் இருந்து என்னை விடுவியும். அநேக முறை, நீர் என்னைத் தண்டித்து, என்னை நியாயந்தீர்த்தபோது, நான் தான் முணுமுணுத்தேன், தூய்மையை அடைந்திடவோ அல்லது உமது விருப்பங்களை நிறைவேற்றவோ முடியவில்லை. உமது அன்பை நான் திருப்பிச் செலுத்துவது கட்டாயத்தால் பிறந்தது, இந்த நேரத்தில் நான் என்னை இன்னும் வெறுக்கிறேன்”, என்று அவர் தொடர்ந்து ஜெபம் செய்தார். அவர் தேவன் மீதான தூய்மையான அன்பை நாடியதால் தான் பேதுரு இந்த வழியில் ஜெபம் செய்தார். அவர் தேடிக்கொண்டிருந்தார், மன்றாடினார், மேலும், அவர் தன்னை மறுபரிசீலனை செய்து, தனது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டார். அவர் தேவனுக்குக் கடன்பட்டதாக உணர்ந்தார், தன்னைப் பற்றி வெறுப்பை உணர்ந்தார், ஆனாலும் அவர் சற்றே சோகமாகவும் செயலற்றவராகவும் இருந்தார். அவர் தேவனின் சித்தத்திற்கு போதுமானவர் அல்ல என்றும் அவருடைய சிறந்ததைச் செய்ய முடியவில்லை என்றும் எப்போதுமே அவர் இவ்வாறு உணர்ந்தார். இத்தகைய நிலைமைகளின் கீழ், பேதுரு இன்னும் யோபுவின் விசுவாசத்தைப் பின்பற்றினார். அவர் யோபுவின் விசுவாசம் எவ்வளவு பெரிதாக இருந்திருந்தது என்பதைக் கண்டார், ஏனென்றால், தான் பெற்றிருந்த எல்லாம் தேவனால் அருளப்பட்டவை என்பதை யோபு கண்டிருந்தார், மேலும் தேவன் தன்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்வது இயல்பானது, தமக்கு விரும்பமானவர்களுக்கு தேவன் கொடுப்பார், இதுதான் தேவனுடைய நீதியுள்ள மனநிலை. யோபு எந்த புகாரும் செய்யவில்லை, இன்னும் தேவனைப் புகழ்ந்து பேசினார். பேதுருவும் தன்னை அறிந்திருந்தார், “இன்று, என் எண்ணங்கள் மிகவும் சீர்கெட்டிருப்பதாலும், ஏனென்றால், உம்மை சிருஷ்டிகராக என்னால் பார்க்க இயலாததாலும், என்னுடைய மனசாட்சியை பயன்படுத்தியும் எவ்வளவு அதிகமாக அன்பை நான் திருப்பிச் செலுத்துவதியும் உம்முடைய அன்பைத் திருப்பி செலுத்துவதில் நான் கருத்தாய் இருக்கக்கூடாது. உம்மை நேசிக்க நான் இன்னும் தகுதியற்றவன் என்பதால், நான் என்னிடம் உள்ள அனைத்தையும் உமக்காக அர்ப்பணிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதை நான் விருப்பத்துடன் செய்வேன். நீர் செய்த அனைத்தையும் நான் அறிந்திருக்க வேண்டும், வேறு வழியும் இல்லை, உம்முடைய அன்பை நான் காண வேண்டும், மேலும் உம்மைப் புகழ்ந்து பேசவும், உமது புனிதமான நாமத்தைப் புகழ்ந்து பேசவும் முடிந்திட வேண்டும், இதனால் நீர் என் மூலம் பெரும் மகிமையைப் பெறக்கூடும். நான் உமக்கான இந்த சாட்சியில் உறுதியாக நிற்கத் தயாராக இருக்கிறேன். ஓ தேவனே! உன் நேசம் மிகவும் விலையேறப்பெற்றது மற்றும் அழகானது. பொல்லாதவனின் கைகளில் நான் எப்படி வாழ விரும்புகிறேன்? நான் உம்மால் சிருஷ்டிக்கப்படவில்லையா? நான் எப்படி சாத்தானின் இராஜ்ஜியத்தில் வாழ முடியும்? உனது தண்டனையின் மத்தியில் எனது முழு வாழ்க்கையும் வாழ விரும்புகிறேன். பொல்லாங்கனின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ நான் விரும்பவில்லை. நான் தூய்மையாக்கப்பட்டு, என் அனைத்தையும் உமக்காக அர்ப்பணிக்க முடிந்தால், நான் சாத்தானை வெறுப்பதால், அதன் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ விரும்பவில்லை என்பதால், என் உடலையும் மனதையும் உம்முடைய நியாயத்தீர்ப்புக்கும் தண்டனைக்கும் ஒப்புக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நீர் என்னை நியாயந்தீர்ப்பதன் மூலம், உம்முடைய நீதியுள்ள மனநிலையை விளங்கப்பன்னுகிறீர். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மற்றும் சிறிய புகாரும் இல்லை. ஒரு சிருஷ்டியின் கடமையை என்னால் செய்ய முடிந்தால், எனது முழு வாழ்க்கையும் உனது நியாயத்தீர்ப்போடு இணைந்திருக்க நான் தயாராக இருக்கிறேன், இதன் மூலம் உன்னுடைய நீதியான மனநிலையை நான் அறிந்துகொள்வேன், மேலும் பொல்லாங்கனின் ஆதிக்கத்திலிருந்து என்னை விடுவிப்பேன்”, என்று அவருடைய இருதயத்தில் அவர் ஜெபித்தார். பேதுரு எப்போதுமே இவ்வாறு ஜெபித்தார், எப்பொழுதும் இவ்வாறு முயன்றார், ஒப்பிட்டுக் கூறினால், அவர் உயர்ந்த சாம்ராஜ்யத்தை அடைந்தார். தேவனின் அன்பை அவர் திருப்பிச் செலுத்த முடிந்தது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, ஒரு சிருஷ்டியாக தனது கடமையையும் நிறைவேற்றினார். அவர் தனது மனசாட்சியால் குற்றம் படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், மனசாட்சியின் தரத்தையும் மேம்படுத்த அவரால் முடிந்தது. அவருடைய ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக தொடர்ந்து அதிகரித்தன, அவருடைய ஆசைகள் எப்போதும் உயர்ந்தவையாக இருந்தன, தேவன்மீது அவர் கொண்டிருந்த அன்பு எப்போதும் அதிகமாக இருந்தது. அவர் வேதனையான வலியை அனுபவித்த போதிலும், அவர் தேவனை நேசிக்க மறக்கவில்லை, இன்னும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ளும் திறனை அடைந்திட முயன்றார். அவர் தனது ஜெபங்களில் பின்வரும் வார்த்தைகளை உச்சரித்தார்: “உம்முடைய அன்பைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர வேறொன்றையும் நான் செய்யவில்லை. நான் சாத்தானுக்கு முன்பாக உமக்கு சாட்சி பகிரவில்லை, சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து என்னை விடுவித்திருக்கவில்லை, இன்னும் மாம்சத்தின் மத்தியில் வாழ்கிறேன். சாத்தானைத் தோற்கடிக்கவும், வெட்கப்படுத்தவும், அதன் மூலம் உம் சித்தத்தை நிறைவேற்றவும் என் அன்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். என்னை சிறிதளவும் சாத்தானிடம் கொடுக்காமல், என் முழுமையையும் உமக்குக் கொடுக்க விரும்புகிறேன், ஏனென்றால் சாத்தான் உமக்கு எதிரி”. இந்த திசையில் அவர் எவ்வளவு அதிகமாக முயன்றாரோ, அவ்வளவு அதிகமாக அவர் ஏவப்பட்டார், மேலும் இந்த காரியங்களைக் குறித்த அவரது அறிவு உயர்ந்தது. அதை உணராமல், அவர் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதையும், தன்னை முழுமையாக தேவனிடம் திருப்பித் தர வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டார். அவர் அடைந்த சாம்ராஜ்யம் இதுதான். அவர் சாத்தானின் ஆதிக்கத்தை மீறி, மாம்சத்தின் இன்பங்களையும் இன்பங்களையும் தன்னை விலக்கிக்கொண்டார், மேலும் தேவனின் தண்டனை மற்றும் அவருடைய நியாயத்தீர்ப்பு இரண்டையும் இன்னும் ஆழமாக அனுபவிக்க தயாராக இருந்தார். “நான் உங்கள் தண்டனையின் மத்தியிலும், உங்கள் நியாயத்தீர்ப்பின் மத்தியிலும் வாழ்ந்தாலும், கஷ்டங்களை பொருட்படுத்தாமல், சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ நான் விரும்பவில்லை, இன்னும் நான் சாத்தானின் தந்திரத்தை அனுபவிக்க விரும்பவில்லை. உமது சாபங்களின் மத்தியில் வாழ்வதிலிருந்து நான் மகிழ்ச்சியடைகிறேன், சாத்தானின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் வாழ்வதன் மூலம் வேதனையடைகிறேன். உமது நியாயத்தீர்ப்பின் மத்தியில் வாழ்வதன் மூலம் நான் உம்மை நேசிக்கிறேன், இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அது என்னை தூய்மைப்படுத்தும் பொருட்டு, இன்னும் அதிகமாக, என்னைக் இரட்சிக்கும் பொருட்டு, உமது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் நீதியும் பரிசுத்தமுமாக இருக்கிறது. உமது நியாயத்தீர்ப்பின் மத்தியில் எனது முழு ஜீவியத்தையும் செலவிட விரும்புகிறேன், இதனால் நான் உம் கவனிப்பின் கீழ் இருப்பேன். நான் ஒரு கணம் கூட சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ விரும்பவில்லை. நான் உம்மால் கழுவப்பட விரும்புகிறேன். நான் கஷ்டங்களை அனுபவித்தாலும், சாத்தானால் பயன்படுத்தப்படுவதற்கும் ஏமாற்றப்படுவதற்கும் நான் விரும்பவில்லை. இந்த சிருஷ்டியாகிய நான், உம்மால் பயன்படுத்தப்படவும், உம்மால் ஆட்கொள்ளப்படவும், உம்மால் தீர்மானிக்கப்படவும், உம்மால் தண்டிக்கப்படவும் வேண்டும். நான் உம்மால் சபிக்கப்படக் கூட வேண்டும். நீர் என்னை ஆசீர்வதிக்கத் தயாராக இருக்கும்போது என் இருதயம் களிகூறுகிறது, ஏனென்றால் உம்முடைய அன்பை நான் கண்டிருக்கிறேன். நீரே சிருஷ்டிகர், நான் ஒரு சிருஷ்டி. நான் உம்மைக் காட்டிக்கொடுத்து சாத்தானின் இராஜ்ஜியத்தில் வாழக்கூடாது, சாத்தானால் நான் பயன்படுத்தப்படக்கூடாது. நான் சாத்தானுக்காக வாழ்வதற்கு பதிலாக உமது குதிரையாகவோ அல்லது எருதுகளாகவோ இருக்க வேண்டும். உம் தண்டனையின் மத்தியில், உடல் ரீதியான ஆனந்தமின்றி நான் வாழ விரும்புகிறேன், உமது இரக்கத்தை நான் இழந்தாலும் இது எனக்கு மகிழ்ச்சியைத் தரும். உம்முடைய கிருபை என்னுடன் இல்லை என்றாலும், உம்மால் தண்டிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்படுவதை நான் அனுபவிக்கிறேன்; இது உம்முடைய சிறந்த ஆசீர்வாதம், உமது மிகப் பெரிய கிருபை. நீர் எப்போதும் என்னை நோக்கி கம்பீரமாகவும் கோபமாகவும் இருந்தாலும், உம்மை விட்டு வெளியேற என்னால் இன்னும் இயலாது, இன்னும் உம்மைப் போதுமான அளவிற்கு நேசிக்க முடியாது. நான் உம் வீட்டில் ஜீவிக்க விரும்புகிறேன், நான் உம்மால் சபிக்கப்படுவதற்கும், தண்டிக்கப்படுவதற்கும், அடிபடுவதற்கும் விரும்புகிறேன், மேலும் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ நான் விரும்பவில்லை, நான் மாம்சத்திற்காக மட்டுமே விரைந்து செல்லவும் சுறுசுறுப்பாக இருக்கவோ நான் விரும்பவில்லை, மிகவும் குறைவாகவே மாம்சத்திற்காக வாழ விரும்புகிறேன்”. பேதுருவின் நேசம் ஒரு தூய்மையான நேசம். இது பரிபூரணமாக்கப்பட்ட அனுபவமாகும், மேலும் இது பரிபூரணமாக்கப்படுவதற்கான மிக உயர்ந்த சாம்ராஜ்யமாகும். இன்னும் உண்மையுள்ள வாழ்க்கை இல்லை. அவர் தேவனின் தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொண்டார், தேவனின் நீதியான மனநிலையை அவர் பொக்கிஷமாகக் கருதினார், மேலும் பேதுருவைக் குறித்த எதுவும் விலையேறப்பெற்றதாக இல்லை. “சாத்தான் எனக்கு குறிப்பிடத்தக்க இன்பங்களைத் தருகிறான், ஆனால் நான் அவற்றைப் பொக்கிஷமாகக் கருதுவதில்லை. தேவனின் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் என்மீது வந்துள்ளன. இதில் நான் கிருபை பெற்றிருக்கிறேன், இதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன், இதில் நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன். தேவனின் நியாயத்தீர்ப்பிற்காக இல்லை என்றால் நான் ஒருபோதும் தேவனை நேசிக்க மாட்டேன், நான் இன்னும் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ்வேன், இன்னும் அவனால் கட்டுப்படுத்தப்பட்டு கட்டளையிடப்படுவேன். அப்படியானால், நான் ஒருபோதும் யதார்த்தமான மனிதனாக மாற மாட்டேன், ஏனென்றால் நான் தேவனை திருப்திப்படுத்த இயலாது, என் முழுமையை தேவனுக்காக அர்ப்பணித்திருக்க மாட்டேன். தேவன் என்னை ஆசீர்வதிக்காவிட்டாலும், எனக்குள் நெருப்பு எரிவது போல என்னை ஆறுதல்படுத்தாமல் விட்டுவிட்டு, அமைதியோ, மகிழ்ச்சியோ இல்லாமல், தேவனின் தண்டனையும் ஒழுக்கமும் என்னை ஒருபோதும் விலகியது இல்லை என்றாலும், தேவனின் தண்டனையிலும் நியாயத்தீர்ப்பிலும் அவருடைய நீதியான தன்மையைக் காண என்னால் முடிகிறது. இதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையில் மதிப்புமிக்க அல்லது உண்மையுள்ள காரியம் எதுவும் இல்லை. அவருடைய பாதுகாப்பும் கவனிப்பும் இரக்கமற்ற தண்டனை, நியாயத்தீர்ப்பு, சாபங்கள் மற்றும் அடிப்பது போன்றவையாக மாறியிருந்தாலும், இந்த காரியங்களில் நான் இன்பம் கொள்கிறேன், ஏனென்றால் அவற்றால் என்னைச் சுத்தப்படுத்தி என்னை மாற்ற முடியும், என்னை தேவனிடம் நெருங்கச் செய்ய முடியும், மேலும் தேவனை நேசிக்க என்னை அதிகமாக இயன்றவனாகச் செய்ய முடியும், தேவனின் மீதான என் அன்பை மேலும் தூய்மையாக்க முடியும். இது ஒரு சிருஷ்டியாக என் கடமையை நிறைவேற்ற எனக்கு உதவுகிறது, மேலும் என்னை சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விலக்கி தேவனுக்கு முன்பாகக் கொண்டு விடுகிறது, இதனால் நான் இனி சாத்தானுக்கு சேவை செய்யகிறதில்லை. நான் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழாதபோது, எதிலும் பின்வாங்காமல், நான் முழுமையாக திருப்தி அடைந்திருக்கும் போது என்னிடம் உள்ள அனைத்தையும், தேவனுக்கு என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் அர்ப்பணிக்க முடிகிறது. தேவனின் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் தான் என்னைக் காப்பாற்றியிருக்கிறது, தேவனின் தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து என் வாழ்க்கையைப் பிரிக்க முடியாதது. பூமியில் என் வாழ்க்கை சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் உள்ளது, அது தேவனின் தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இல்லாதிருந்தால், நான் எப்போதும் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ்ந்திருப்பேன், மேலும், உண்மையுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு எனக்கு வாய்ப்பு அல்லது வழிமுறைகள் கிடைத்திருக்காது. தேவனின் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் என்னை ஒருபோதும் விட்டு விலகவில்லை என்றால் மட்டுமே நான் தேவனால் சுத்திகரிக்கப்பட முடியும். தேவனின் கடுமையான வார்த்தைகள் மற்றும் நீதியான மனப்பான்மை மற்றும் தேவனின் கம்பீரமான நியாயத்தீர்ப்பால் மட்டுமே, நான் மிக உயர்ந்த பாதுகாப்பை ஆதாயம் செய்து, வெளிச்சத்தில் வாழ வந்து, தேவனின் ஆசீர்வாதங்களை ஆதாயம் செய்து கொண்டேன். சுத்திகரிக்கப்படுவதற்கும், சாத்தானிடமிருந்து என்னை விடுவிப்பதற்கும், தேவனின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வதற்கும் இதுவே இன்றைய என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்”, என்று அவர் சொன்னார். இது பேதுரு அனுபவித்த மிக உயர்ந்த சாம்ராஜ்யமாகும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுருவின் அனுபவங்கள்: தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவரது அறிவு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 526

மனிதன் மாம்சத்தின் மத்தியில் வாழ்கிறான், அதாவது அவன் ஒரு மனித நரகத்தில் வாழ்கிறான், தேவனின் நியாயத்தீர்ப்பும் தண்டனையும் இல்லாமல் மனிதன் சாத்தானைப் போல பாழானவனாவான். மனிதன் எப்படி பரிசுத்தமாக இருக்க முடியும்? தேவனின் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் மனிதனின் சிறந்த பாதுகாப்பும் மிகப் பெரிய கிருபையும் என்று பேதுரு நம்பினார். தேவனின் தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே மனிதன் விளித்தெழும்பி மாம்சத்தை வெறுக்க முடியும், சாத்தானை வெறுக்க முடியும். தேவனின் கண்டிப்பான ஒழுக்கம் மனிதனை சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கிறது, அவனது அவனுக்கு சொந்தமான சிறிய உலகத்திலிருந்து அவனை விடுவிக்கிறது, மேலும் தேவனின் பிரசன்னத்தின் வெளிச்சத்தில் அவனை வாழ அனுமதிக்கிறது. தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் விட சிறந்த இரட்சிப்பு எதுவுமில்லை! “ஓ தேவனே! நீர் என்னைத் தண்டித்து நியாயத்தீர்க்கும் வரை, நீர் என்னை விட்டு விலகவில்லை என்பதை நான் அறிவேன். நீ எனக்கு மகிழ்ச்சியையோ சமாதானத்தையோ கொடுக்காமல், என்னை துன்பத்தில் வாழவைத்து, எண்ணற்ற தண்டனைகளை என்மீது சுமத்தினாலும், நீர் என்னை விட்டு விலகாதவரை, என் இருதயம் அமைதியாக இருக்கும். இன்று, உம்முடைய தண்டனையும் நியாயத்தீர்ப்பும் எனது சிறந்த பாதுகாப்பாகவும், எனது மிகப்பெரிய ஆசீர்வாதமாகவும் மாறிவிட்டன. நீர் எனக்குக் கொடுக்கும் இரக்கம் என்னைப் பாதுகாக்கிறது. இன்று நீர் எனக்கு அளித்த கிருபை உமது நீதியுள்ள மனநிலையின் வெளிப்பாடாகும், மற்றும் இது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் ஆகும். மேலும், இது ஒரு சோதனை, அதை விட, இது துன்பத்தினாலான ஜீவனாகும்”, என்று பேதுரு ஜெபித்தார். தேவனின் தண்டனையிலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் இவ்வளவு கிருபையைப் பெற்றிருந்ததால், மாம்சத்தின் இன்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆழ்ந்த அன்பையும் அதிக பாதுகாப்பையும் தேடுவதற்கு பேதுருவுக்கு முடிந்தது. தனது வாழ்க்கையில், மனிதன் சுத்திகரிக்கப்பட்டு, அவனது மனநிலையில் மாற்றங்களை அடைந்திட விரும்பினால், உண்மையுள்ள வாழ்க்கையை வாழவும், ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றவும் விரும்பினால், அவன் தேவனின் தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், சாத்தானின் கையாளுதலிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தன்னை விடுவித்து, தேவனின் வெளிச்சத்தில் வாழும்படி, அவரிடமிருந்து விலகிச் செல்வதற்காக, தேவனின் ஒழுக்கப்படுத்துதலும் தேவன் அடிப்பதாலும் அவரிடமிருந்து விலகிட அனுமதிக்கக்கூடாது. தேவனின் தண்டனையும் நியாயத்தீர்ப்புமே ஒளி மற்றும் மனிதனின் இரட்சிப்பின் ஒளி என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், மேலும் மனிதனுக்கு இதைவிட சிறந்த ஆசீர்வாதம், கிருபை அல்லது பாதுகாப்பு எதுவும் இல்லை. மனிதன் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறான், மாம்சத்தில் இருக்கிறான். அவர் சுத்திகரிக்கப்படாமல், தேவனின் பாதுகாப்பைப் பெறாவிட்டால், மனிதன் இன்னும் பாழானவனாகிவிடுவான். அவர் தேவனை நேசிக்க விரும்பினால், அவர் சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்பட வேண்டும். “தேவனே, நீர் என்னைத் தயவாக நடத்தும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆறுதலை உணர்கிறேன். நீர் என்னைத் தண்டிக்கும்போது, நான் இன்னும் பெரிய ஆறுதலையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன். நான் பலவீனமாக இருந்தாலும், சொல்லப்படாத துன்பங்களை சகித்துக்கொண்டாலும், கண்ணீரும் சோகமும் இருந்தாலும், இந்த துக்கம் என் கீழ்ப்படியாமையின் காரணமாகவும், என் பலவீனம் காரணமாகவும் இருப்பதை நீர் அறிந்திருக்கிறீர். உமது ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடியாததால் நான் அழுகிறேன், உமது தேவைகளுக்கு நான் போதுமானவனாக இல்லாததால் கவலையும் வருத்தமும் அடைகிறேன், ஆனால் நான் இந்த சாம்ராஜ்யத்தை அடைந்திட தயாராக இருக்கிறேன், உம்மைத் திருப்திப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உம் தண்டனை எனக்கு பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது, மேலும் எனக்கு சிறந்த இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது. உம் நியாயத்தீர்ப்பு, உம் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் மேலோங்கச் செய்கிறது. உமது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், உமது இரக்கத்தையும் அன்பான கிருபையையும் நான் அனுபவிக்க மாட்டேன். இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக உம் அன்பு வானங்களைத் தாண்டி மற்ற எல்லாவற்றின் மேலும் சிறந்து விளங்குகிறது என்பதை நான் காண்கிறேன். உன் அன்பு இரக்கம் மற்றும் அன்பான கிருபை மட்டுமல்ல. அதை விட, அது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் ஆகும். உம் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் எனக்கு அதிகமாக கொடுத்திருக்கின்றன. உன் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், ஒருவர் கூட சுத்திகரிக்கப்பட மாட்டார்கள், மேலும் ஒரு மனிதனாலும் கூட சிருஷ்டிகரின் அன்பை அனுபவிக்க முடியாது. நான் நூற்றுக்கணக்கான சோதனைகளையும் இன்னல்களையும் தாங்கிக் கொண்டாலும், மரணத்திற்கு அருகில் வந்திருந்தாலும், உம்மை உண்மையாக அறிந்து கொள்ளவும், உயர்ந்த இரட்சிப்பைப் பெறவும் அவைகள் என்னை அனுமதித்திருக்கின்றன. உமது தண்டனை, நியாயத்தீர்ப்பு மற்றும் ஒழுக்கம் என்னிடமிருந்து விலகிவிட்டால், நான் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் இருளில் வாழ வேண்டும். மனிதனின் மாம்சத்திற்கு என்ன நன்மைகள் உள்ளன? உம்முடைய தண்டனையும் நியாயத்தீர்ப்பும் என்னை விட்டு விலகினால், நீர் இனி என்னுடன் இல்லை என்பது போல, உம்முடைய ஆவி என்னைக் கைவிட்டிருப்பதைப் போல இருக்கும். அப்படியானால், எப்படி நான் ஜீவிக்க முடியும்? நீர் எனக்கு சுகவீனத்தைக் கொடுத்து, என் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டாலும், நான் தொடர்ந்து ஜீவிக்க முடியும், ஆனால் உம்முடைய தண்டனையும் நியாயத்தீர்ப்பும் எப்போதாவது என்னை விட்டு விலகினால், எனக்கு வாழ்வதற்கான வழி இருக்காது. உமது தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல் நான் இருந்திருந்தால், உமது அன்பை நான் இழந்திருப்பேன், இது என்னால் விவரிக்க முடியாத ஆழமான அன்பாக இருக்கிறது. உமது அன்பு இல்லாமல், நான் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ் வேண்டியதாயிருக்கிறது மற்றும் உம்முடைய மகிமையான முகத்தைக் காண முடியாது. நான் எப்படி தொடர்ந்து வாழ்ந்திட முடியும்? அத்தகைய இருளை, அத்தகைய ஜீவியத்தை என்னால் தாங்க முடியவில்லை. உம்மை என்னுடன் வைத்திருப்பது உம்மைப் பார்ப்பதைப் போன்றதாகும், எனவே நான் உம்மை எப்படி விட்டுவிடுவேன்? உறுதியளிக்கும் ஒரு சில வார்த்தைகளாக இருந்தாலும், என் மிகப் பெரிய ஆறுதலை என்னிடமிருந்து எடுத்திட வேண்டாம் என்று நான் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன், நான் உம்மிடம் கெஞ்சுகிறேன். உமது அன்பை நான் அனுபவித்திருக்கிறேன், இன்று என்னால் உம்மிடமிருந்து விலகி இருக்க முடியாது. என்னால் உம்மை எப்படி நேசிக்க முடியவில்லை? உமது அன்பின் காரணமாக நான் அநேக துக்கத்தின் கண்ணீரை சிந்தியிருக்கிறேன், ஆனாலும் இது போன்ற ஒரு வாழ்க்கை மிகவும் உண்மையுள்ளதாகவும், என்னை வளப்படுத்தக்கூடியதாகவும், என்னை மாற்றக்கூடியதாகவும், அதிகமாக என்னை சிருஷ்டிகள் பெற்றிருக்க வேண்டிய சத்தியத்தை அடைந்திட அனுமதிப்பதுமாக இருக்கிறது என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்”, என்று பேதுரு ஜெபித்தார்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுருவின் அனுபவங்கள்: தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவரது அறிவு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 527

மனிதனின் முழு வாழ்க்கையும் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழப்பட்டு வருகிறது, மேலும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ளக் கூடியவர் ஒருவர் கூட இல்லை. அனைவரும் பாழான, சீர்கேடான மற்றும் வெறுமையான ஒரு உலகில் சிறிதளவும் அர்த்தமோ மதிப்போ இல்லாமல், அவர்கள் மாம்சத்துக்காகவும், காமத்துக்காகவும், சாத்தானுக்காகவும் இத்தகைய கவலையற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்கள் இருப்பதற்கு சிறிதும் மதிப்பு இருக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து அவனை விடுவிக்கும் சத்தியத்தை மனிதன் கண்டுபிடிக்க இயலாதவாக இருக்கிறான். மனிதன் தேவனை விசுவாசித்தாலும், வேதாகமத்தை வாசித்தாலும், சாத்தானின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் இருந்து தன்னை எவ்வாறு விடுவிப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. யுகங்கள் முழுவதும், மிகச்சில ஜனங்களே இந்த ரகசியத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், மிகச் சிலரே அதைப் புரிந்துகொண்டார்கள். ஆகவே, மனிதன் சாத்தானை வெறுக்கிறான் என்றாலும், மாம்சத்தை வெறுக்கிறான் என்றாலும், சாத்தானின் மோசமான ஆதிக்கத்திலிருந்து தன்னை எப்படி விடுவிப்பது என்று அவனுக்குத் தெரியாது. இன்று, நீங்கள் இன்னும் சாத்தானின் இராஜ்ஜியத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் கீழ்ப்படியாத கிரியைகளுக்கு நீங்கள் வருத்தப்படுவதில்லை, மேலும் நீங்கள் பாழானவர்கள் மற்றும் கீழ்ப்படியாதவர்கள் என்று நீங்கள் மிகக் குறைவாகவே உணர்கிறீர்கள். தேவனை எதிர்த்த பிறகு, உங்களுக்கு மன அமைதியும் கூட இருக்கிறது, மிகுந்த சமாதானத்தையும் உணர்கிறீர்கள். உன் சமாதானம் நீ சீர்கேடு நிறைந்தவன் என்பதால் அல்லவா? இந்த மன அமைதி உன் கீழ்ப்படியாமையால் வருகிறது அல்லவா? மனிதன் ஒரு மனித நரகத்தில் வாழ்கிறான், அவன் சாத்தானின் இருண்ட ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறான். நிலம் முழுவதும், பேய்கள் மனிதனுடன் சேர்ந்து வாழ்கின்றன, மனிதனின் மாம்சத்தை ஆக்கிரமிக்கின்றன. பூமியில், நீ ஒரு அழகான பரலோகத்தில் வாழ்கிறதில்லை. நீ இருக்கும் இடம் பிசாசின் சாம்ராஜ்யம், ஒரு மனித நரகம், ஒரு கீழுலகம். மனிதன் சுத்திகரிக்கப்படாவிட்டால், அவன் அசுத்தமானவன். அவன் தேவனால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படாவிட்டால், அவர் இன்னும் சாத்தானால் சிறைப்படுத்தப்பட்டவன். அவன் நியாயந்தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படாவிட்டால், சாத்தானின் இருளின் ஆதிக்கத்தின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க அவனுக்கு வழி இருப்பதில்லை. நீ காட்டும் சீர்கேடான மனநிலையும், நீ வாழும் கீழ்ப்படியாத நடத்தையும், நீ இன்னும் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ்கிறாய் என்பதை நிரூபிக்க போதுமானதாக இருக்கின்றன. உன் மனமும் எண்ணங்களும் சுத்தப்படுத்தப்படாமலும், உன் மனநிலையும் நியாயந்தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படாவிட்டால், உன் முழுமையும் இன்னும் சாத்தானின் இராஜ்ஜியத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, உன் மனம் சாத்தானால் கட்டுப்படுத்தப்படுகிறது, உன் எண்ணங்கள் சாத்தானால் கையாளப்படுகின்றன, மேலும் உன் முழுமையும் சாத்தானின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது. இப்போது, பேதுருவின் தரத்திலிருந்து நீ எவ்வளவு தூரத்தில் இருக்கிறாய என்று உனக்குத் தெரியுமா? அந்த திறனை நீ கொண்டிருக்கிறாயா? இன்றைய தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பைக் குறித்து நீ எவ்வளவு அறிந்து இருக்கிறாய்? பேதுருவுக்குத் தெரிந்த்தில் நீ எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாய்? இன்று, உன்னால் அறிய முடியாவிட்டால், இந்த அறிவை எதிர்காலத்தில் உன்னால் அடைய முடியுமா? சோம்பேறியாகவும் கோழைத்தனமாகவும் இருக்கும் உன்னைப் போன்ற ஒருவன் தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் அறிய இயலாமல் இருக்கிறான். நீ மாம்சத்தின் அமைதியையும், மாம்சத்தின் இன்பங்களையும் பின்பற்றினால், நீ சுத்திகரிக்கப்படுவதற்கு எந்த வழியும் இருக்காது, கடைசியில் நீ சாத்தானிடம் திரும்பி வந்திருப்பாய், நீ வாழ்வது எதுவோ அது சாத்தானாய் இருக்கிறது, அது மாம்சமாக இருக்கிறது. இன்று காரியங்கள் நிற்கும்போது, அநேகர் ஜீவனைத் தொடரவில்லை, அதாவது சுத்திகரிக்கப்படுவதைப் பற்றியோ அல்லது ஆழமான ஜீவனுக்குறிய அனுபவத்தில் பிரவேசிப்பதைப் பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை. அப்படி இருப்பதால், அவர்கள் எவ்வாறு பரிபூரணாமாக்கப்படுவது? ஜீவனைத் தொடராதவர்களுக்கு பரிபூரண ஆவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை, தேவனைக் குறித்ததான ஒரு அறிவைப் பின்தொடராதவர்களும், தங்கள் மனநிலையில் மாற்றங்களைத் தொடராதவர்களும், சாத்தானின் இருளின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க இயலாமல் இருக்கிறார்கள். வெறுமனே சடங்காச்சாரத்தைப் பின்பற்றி வழக்கமான ஆராதனைகளில் கலந்துகொள்கிறவர்களாய் மதத்தை விசுவாசிக்பவர்களைப் போலவே, அவர்கள் தேவனைக் குறித்த அறிவைப் பற்றியும், அவர்களின் மனநிலையின் மாற்றங்களில் அவர்கள் பிரவேசிப்பதைப் பற்றியும் அவர்கள் அக்கறையுள்ளவர்களாக இருக்கவில்லை. அது நேரத்தை வீணாக்குவது அல்லவா? தேவன் மீதான மனிதனின் விசுவாசத்தில், ஜீவனுக்குறிய காரியங்களில் அவன் அக்கறையுடல் இருக்கவில்லை, சத்தியத்திற்குள் பிரவேசிப்பதைத் தொடரவில்லை, அவனுடைய மனநிலையின் மாற்றங்களைத் தொடரவில்லை என்றால், தேவனின் கிரியையைக் குறித்த அறிவைப் பின்தொடர்வது மிகக் குறைவு என்றால், அவன பரிபூரணமாக்க முடியாது. நீங்கள் பரிபூரணமாக்கப்பட விரும்பினால், தேவனின் கிரியையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, அவருடைய தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பின் முக்கியத்துவத்தையும், இந்தக் கிரியை ஏன் மனிதனின் மீது மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீ ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்த வகையான தண்டனையின் போது, நீ பேதுருவைப் போன்ற அனுபவங்களையும் அறிவையும் அடைந்திட முடியுமா? நீ தேவனைப் பற்றியும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றியும் அறிவைப் பின்தொடர்ந்தால், உன் மனநிலையின் மாற்றங்களைத் தொடர்ந்தால், நீ பரிபூரணமாகப்பட வாய்ப்பு இருக்கிறது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுருவின் அனுபவங்கள்: தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவரது அறிவு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 528

பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்களுக்கு, ஜெயம் கொள்ள வேண்டிய இந்த படி தவிர்க்க முடியாதது. மனிதன் ஜெயம் பெற்றிருக்கும் போது ஒரு முறைதான் அவன் பரிபூரணமாக்கப்பட்ட கிரியையை அனுபவிக்க முடியும். ஜெயம் பெறும் பாத்திரத்தை மட்டுமே செய்வதில் பெரிய மதிப்பு இல்லை, இது தேவனின் பயன்பாட்டிற்கு உங்களைப் பொருந்தமானவர்களாக காண்பிக்காது. நீ சுவிசேஷத்தைப் பிரஸ்தாபப்படுத்துவதில் நீ பங்கெடுப்பதற்கான வழிமுறைகள் இருக்காது, ஏனென்றால் நீ ஜீவனைத் தொடரவில்லை, மேலும் மாற்றத்தையும் புதுப்பித்தலையும் நீ தொடரவில்லை, எனவே உனக்கு ஜீவியத்தின் உண்மையான அனுபவம் இருக்கவில்லை. இந்தப் படிப்படியான கிரியையின் போது, நீ ஒரு முறை சேவை செய்பவனாகவும், முரணாகவும் செயல்பட்டாய், ஆனால் கடைசியில் நீ பேதுருவாக இருக்கத் தொடரவில்லை என்பதாலும், உன் நாட்டம் பேதுரு பரிபூரணமாக்கப்பட்ட பாதையின்படி இல்லை என்பதாலும், இயற்கையாகவே, உன் மனநிலையில் மாற்றங்களை நீ அனுபவிக்க மாட்டாய். நீ பரிபூரணராக இருப்பதைத் தொடர்பவனாக இருந்தால், நீ சாட்சி பகிர்வாய், மேலும், “தேவனின் இந்தப் படிப்படியான கிரியையில், தேவனின் தண்டனைக்கான மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையை நான் ஏற்றுக்கொண்டேன், நான் மிகுந்த துன்பங்களைத் தாங்கினாலும், தேவன் மனிதனை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன், தேவனால் செய்யப்பட்ட கிரியையை நான் பெற்றுள்ளேன், தேவனின் நீதியைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கிறேன், அவருடைய தண்டனை என்னைக் காப்பாற்றியிருக்கிறது. அவருடைய நீதியான மனநிலை என்மேல் வந்து ஆசீர்வாதங்களையும் கிருபையையும் கொண்டு வந்திருக்கிறது. அவருடைய நியாயத்தீர்ப்பும் தண்டனையும் தான் என்னைப் பாதுகாத்து தூய்மைப்படுத்தியது. நான் தேவனால் தண்டிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்பட்டிருக்காவிட்டால், தேவனின் கடுமையான வார்த்தைகள் என்மீது வரவில்லை என்றால், நான் தேவனை அறிந்திருக்க முடியாது, நான் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. சிருஷ்டிகரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் ஒருவர் அனுபவிப்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, எல்லா சிருஷ்டிகளும் தேவனின் நீதியான மனநிலையையும் அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க வேண்டும், ஏனென்றால் தேவனின் மனநிலை மனிதனின் இன்பத்திற்கு தகுதியானது என்பதை ஒரு சிருஷ்டியாக இன்று நான் காண்கிறேன். சாத்தானால் பாழாக்கப்பட்டிருக்கிற ஒரு சிருஷ்டியாக, ஒருவர் தேவனின் நீதியான மனநிலையை அனுபவிக்க வேண்டும். அவருடைய நீதியான மனநிலையில் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் இருக்கிறது, மற்றும் அதற்குமேலாக, அங்கே மிகுந்த அன்பும் இருக்கிறது. இன்று தேவனின் அன்பை முழுமையாக ஆதாயம் செய்ய எனக்கு இயலாதவனாய் இருக்கிறேன் என்றாலும், அதைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்திருக்கிறது, இதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்”, என்றும் நீ கூறுவாய். பரிபூரணமாக்கப்படுவதை அனுபவிப்பவர்கள் நடந்துவந்த பாதை இதுதான், மற்றும் இது அவர்கள் பேசுவதின் அறிவாகும். அத்தகையவர்கள் பேதுருவைப் போன்றவர்கள். அவர்களுக்கும் பேதுருவைப் போன்ற அனுபவங்கள் உள்ளன. அத்தகையவர்களும் ஜீவனைப் பெற்றவர்கள், சத்தியத்தைக் கொண்டவர்கள். அவர்கள் கடைசி வரை அனுபவிக்கும் போது, தேவனின் நியாயத்தீர்ப்பின் போது அவர்கள் நிச்சயமாக சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தங்களை முற்றிலுமாக விடுவித்து, தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுருவின் அனுபவங்கள்: தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவரது அறிவு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 529

ஆரம்பத்தில் தேவனால் படைக்கப்பட்ட ஆதாமும் ஏவாளும் புனித ஜனங்களாக இருந்தார்கள், அதாவது ஏதேன் தோட்டத்தில் அவர்கள் இருந்த போது பரிசுத்தர்களாக இருந்தார்கள், அசுத்தத்தால் பாதிக்கப்படாதவர்களாக இருந்தார்கள். அவர்களும் யேகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள், யேகோவாவுக்கு துரோகம் செய்வது பற்றி எதுவும் தெரியாது. ஏனென்றால், அவர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் தொல்லை இல்லாமல் இருந்தனர், சாத்தானின் விஷம் இல்லாமல் இருந்தனர், எல்லா மனிதர்களிடமும் தூய்மையானவர்களாக இருந்தனர். அவர்கள், எந்த அசுத்தத்தாலும் மாசுபடாதவர்களாயும், மாம்சத்தால் கட்டப்படாதவர்களாயும், யேகோவாவிற்குப் பயபக்தியுடையவர்களாயும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தார்கள். பின்னர், அவர்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, அவர்கள் பாம்பின் விஷத்தையும், யேகோவாவைக் காட்டிக் கொடுக்கும் ஆசையையும் பெற்றிருந்தார்கள், அவர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தார்கள். ஆரம்பத்தில், அவர்கள் பரிசுத்தர்களாக இருந்தார்கள், அவர்கள் யேகோவாவிற்கு பயபக்தியுடையவர்கள், இந்த நிலையில் மட்டுமே அவர்கள் மனிதர்களாக இருந்தனர். பிற்காலத்தில், அவர்கள் சாத்தானால் சோதிக்கப்பட்ட பிறகு, அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க விருஷத்தின் கனியைப் புசித்தார்கள், சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தார்கள். அவர்கள் படிப்படியாக சாத்தானால் பாழாக்கப்பட்டனர், மேலும் மனிதனின் நிஜ சாயலை இழந்தனர். ஆரம்பத்தில், மனிதன் யேகோவாவின் சுவாசத்தைக் கொண்டிருந்தான், சிறிதும் கீழ்ப்படியாமை இல்லாதவனாகவும், அவன் இருதயத்தில் எந்த தீமையும் இல்லாதவனாகவும் இருந்தான். அந்த நேரத்தில், மனிதன் உண்மைடிலேயே மனிதனாக இருந்தான். சாத்தானால் பாழாக்கப்பட்ட பிறகு, மனிதன் ஒரு மிருகமாக ஆனான். அவனுடைய எண்ணங்கள் நன்மையும் பரிசுத்தமும் இல்லாமல் தீமையும் அசுத்தமும் நிறைந்தவையாக இருந்தன. இது சாத்தான் அல்லவா? தேவனின் பெரும்பாலான கிரியைகளை நீ அனுபவித்திருக்கிறாய், ஆனால் நீ மாற்றப்படவில்லை அல்லது சுத்தப்படுத்தப்படவில்லை. நீ இன்னும் சாத்தானின் இராஜ்ஜியத்தில் வாழ்கிறாய், இன்னும் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை. இவன் ஜெயம்கொள்ளப்பட்டும் ஆனால் பரிபூரணமாக்கப்படாதவனாய் இருக்கிறான். அத்தகைய நபர் பரிபூரணமாக்கப்படவில்லை என்று ஏன் கூறப்படுகிறது? ஏனென்றால், இந்த நபர் ஜீவனையோ அல்லது தேவனின் கிரியையைக் குறித்த அறிவையோ தொடரவில்லை, மேலும் மாம்சத்தின் இன்பங்களையும், தற்காலிக ஆறுதலையும் தவிர வேறொன்றையும் விரும்பவில்லை. இதன் விளைவாக, அவர்களின் ஜீவியத்தின் மனநிலையில் எந்த மாற்றங்களும் இல்லை, மேலும் தேவனால் படைக்கப்பட்டதைப் போன்ற மனிதனின் நிஜ சாயலைப் அவர்கள் மீண்டும் பெற்றிருக்கவில்லை. அத்தகையவர்கள் நடை பிணங்கள், அவர்கள் ஆவி இல்லாத இறந்தவர்கள்! ஆவியானவரிலுள்ள காரியங்களைக் குறித்த அறிவைப் பின்தொடராதவர்கள், பரிசுத்தத்தைத் தொடராதவர்கள், சத்தியத்தில் வாழ்வதைத் தொடராதவர்கள், எதிர்மறையான பக்கத்தில் ஜெயம்கொள்வதற்கு மட்டுமே திருப்தி உள்ளவர்கள், தேவனுடைய வார்த்தைகளால் வாழமுடியாத பரிசுத்தமான மனிதர்களாக முடியாதவர்கள். இவர்கள் இரட்சிக்கப்பட்டிராத ஜனங்கள். ஏனென்றால், அவன் சத்தியம் இல்லாமல் இருந்தால், தேவனின் சோதனைகளின் போது மனிதனால் உறுதியாக நிற்க முடியாது; இரட்சிக்கப்பட்டிருக்கிறவர்களால் மட்டுமே தேவனின் சோதனைகளின் போது உறுதியாக நிற்க முடியும். பேதுரு போன்றவர்களும், பரிபூரணமாக்கப்படுவதைத் தொடரும் ஜனங்களுமே நான் விரும்புகிறவர்களாவர். இன்றைய சத்தியம் அதற்காக ஏங்குகிறவர்களுக்கும் அதைத் தேடுவோருக்கும் கொடுக்கப்படுகிறது. தேவனால் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஏங்குகிறவர்களுக்கு இந்த இரட்சிப்பு அளிக்கப்படுகிறது, மேலும் அது உங்களால் மட்டுமே ஆதாயப்படுத்தப்பட வேண்டும் என்பதல்ல. அதன் நோக்கம் என்னவென்றால், நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படலாம். தேவன் உங்களை ஆதாயப்படுத்துவதற்காக நீங்கள் தேவனை ஆதாய செய்வீர்கள். இன்று நான் இந்த வார்த்தைகளை உங்களிடம் சொல்லியிருக்கிறேன், நீங்கள் அவற்றைக் கேட்டிருக்கிறீர்கள், நீங்கள் இந்த வார்த்தைகளின்படி நடைமுறைப்படுத்த வேண்டும். முடிவில், நீங்கள் இந்த வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் நேரம் இந்த வார்த்தைகளின் மூலம் நான் உங்களை ஆதாயம் செய்த தருணமாக இருக்கும். அதே நேரத்தில், நீங்கள் இந்த வார்த்தைகளை ஆதாயம் செய்தும் இருப்பீர்கள், அதாவது, இந்த உயர்ந்த இரட்சிப்பை நீங்கள் ஆதாயம் செய்து இருப்பீர்கள். நீங்கள் சுத்தப்படுத்தப்பட்டவுடன், நீங்கள் ஒரு உண்மையான மனிதராகிவிட்டீர்கள். சத்தியத்தின்படி வாழவோ, அல்லது பரிபூரணமாக்கப்பட்ட ஒருவரின் சாயலை வெளிப்படுத்தவோ உன்னால் இயலாது என்றால், நீ ஒரு மனிதன் என்று சொல்ல முடியாது, ஆனால் நடைப்பிணம் என்றும், மிருகம் என்றும் சொல்லலாம், ஏனென்றால், நீ சத்தியமில்லாமல் இருக்கிறாய், அதாவது நீ யேகோவாவின் மூச்சு இல்லாமல் இருக்கிறாய், ஆகவே நீ ஆவி இல்லாத இறந்த மனிதனாவாய்! ஜெயம்பெற்ற பிறகு சாட்யளிக்க முடியும் என்றாலும், நீ பெற்றிருப்பது ஒரு சிறிய இரட்சிப்புதான், மேலும் நீ ஒரு ஆவி கொண்ட ஒரு ஜீவனாக மாறவில்லை. நீ தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்திருந்தாலும், உன் மனநிலை புதுப்பிக்கப்படவில்லை அல்லது இதன் விளைவாக மாற்றம் பெறவில்லை. நீ இன்னும் உங்கள் பழைய சுயத்திலேயே இருக்கிறாய், நீ இன்னும் சாத்தானுக்கு உரியவன், நீ சுத்திகரிக்கப்பட்டிருக்கிற ஒருவன் அல்ல. பரிபூரணமாக்கப்பட்டவர்கள் மட்டுமே மதிப்பானவர்கள், இது போன்றவர்கள் மட்டுமே உண்மையான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுருவின் அனுபவங்கள்: தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவரது அறிவு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 530

இன்று, சிலர் தேவனால் பயன்படுத்தப்படுவதைத் தொடர்கிறார்கள், ஆனால் ஜெயம்பெற்ற பிறகு அவற்றை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இன்று பேசப்படும் வார்த்தைகளைப் பொறுத்தவரை, தேவன் ஜனங்களைப் பயன்படுத்தும் போது, நீ இன்னும் அவற்றைச் செய்ய முடியவில்லை என்றால், நீ இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதன் பரிபூரணமாக்கப்பட்ட காலத்தின் முடிவின் வருகை மனிதன் தேவனால் அகற்றப்படுவானா அல்லது பயன்படுத்தப்படுவானா என்பதைத் தீர்மானிக்கும். ஜெயம்பெற்றவர்கள் செயலற்ற தன்மை மற்றும் எதிர்மறையின் உதாரணங்கள் அல்லாமல் வேறில்லை. அவை மாதிரிகள் மற்றும் உதாரணங்கள், ஆனால் அவை ஒரு மாற்றானதைத் தவிர வேறில்லை. மனிதனின் ஜீவியத்தின் தன்மை மாறும்போது, உள்ளும் புறம்பும் அவன் மாற்றங்களை அடைந்தால் மட்டுமே, அவன் முற்றிலும் முழுமையடைவான். இன்று, நீ எதை விரும்புகிறாய்: ஜெயம் கொள்ளப்பட வேண்டுமா, அல்லது பரிபூரணமாக்கப்பட வேண்டுமா? நீ எதை அடைந்திட விரும்புகிறாய்? நீ பரிபூரணமாக்கப்படுவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளாயா? நீ இன்னும் எந்த நிபந்தனைகள் இல்லாதிருக்கிறாய்? நீ உன்னை எவ்வாறு சித்தப்படுத்த வேண்டும், உன் குறைபாடுகளை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும்? நீ பரிபூரணாமாக்கப்படுவதற்கான பாதையில் எவ்வாறு பிரவேசிக்க வேண்டும்? நீ எவ்வாறு முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்? நீ பரிபூரணமாக்கப்படும்படி கேட்கிறாய், எனவே நீ புனிதத்தை பின்பற்றுகிறாயா? நீ சுத்திகரிக்கப்படுவதற்காக தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க முற்படுபவனா நீ? நீ சுத்திகரிக்கப்படுவதைத் தொடர்கிறாய், எனவே நீ தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்கத் தயாரா? தேவனை அறிய வேண்டுமென நீ கேட்கிறாய், ஆனால் அவருடைய தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பைக் குறித்த அறிவு உனக்கு இருக்கிறதா? இன்று, அவர் உன் மீது செய்கிற பெரும்பாலான கிரியைகள் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் ஆகும். உன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த கிரியையைக் குறித்த உன் அறிவு என்ன? நீ அனுபவித்த தண்டனையும் நியாயத்தீர்ப்பும் உன்னை தூய்மைப்படுத்தியுள்ளனவா? இது உங்களை மாற்றியிருக்கிறதா? இது உன்னிடம் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? சாபங்கள், நியாயத்தீர்ப்புகள் மற்றும் வெளிப்பாடுகள் போன்ற இன்றைய கிரியைகளில் நீ சோர்வடைகிறாயா அல்லது இந்த காரியங்கள் உனக்கு பெரிதும் பயனளிக்கின்றன என்று நினைக்கிறாயா? நீ தேவனை நேசிக்கிறாய், ஆனால் நீ ஏன் அவரை நேசிக்கிறாய்? நீ ஒரு சிறிய கிருபையைப் பெற்றதால் தேவனை நேசிக்கிறாயா? அல்லது அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்ற பிறகு நீ தேவனை நேசிக்கிறாயா? அல்லது தேவனின் தண்டனையினாலும் நியாயத்தீர்ப்பினாலும் சுத்திகரிக்கப்பட்ட பிறகு நீ தேவனை நேசிக்கிறாயா? உன்னைத் தேவனை நேசிக்க வைப்பது சரியாக எது? பரிபூரணம் ஆவதற்கு பேதுரு எந்த நிபந்தனைகளை நிறைவேற்றினார்? அவர் பரிபூரணமாக்கப்பட்ட பிறகு, அது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான வழி என்ன? அவர் கர்த்தராகிய இயேசுவிற்காக ஏக்கம் கொண்டதாலோ, அவரைக் காண முடியாத காரணத்தினாலோ அல்லது அவர் நிந்திக்கப்பட்டதாலோ அவர் கர்த்தராகிய இயேசுவை நேசித்தாரா? அல்லது கர்த்தராகிய இயேசுவை அவர் இன்னும் அதிகமாக நேசித்தாரா, ஏனென்றால் அவர் இன்னல்களின் துன்பங்களை ஏற்றுக்கொண்டார், மேலும் அவருடைய அசுத்தத்தையும் கீழ்ப்படியாமையையும் அறிந்திருந்தார், கர்த்தருடைய பரிசுத்தத்தை அறிந்து கொள்ள வந்திருந்தார்? தேவனின் தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பின் காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலோ அவரின் தேவனைக் குறித்த அன்பு தூய்மையானதா? எது அது? தேவனின் கிருபையினால் நீ தேவனை நேசிக்கிறாய், இன்று அவர் உனக்கு கொஞ்சம் ஆசீர்வாதம் அளித்துள்ளார். இது உண்மையான அன்பா? நீ தேவனை எவ்வாறு நேசிக்க வேண்டும்? அவருடைய நீதியுள்ள மனநிலையைப் பார்த்தபின், நீ அவரை முழுமையாக நேசிக்க முடியும், அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்பதால் அவருடைய தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டுமா? பேதுருவைப் போலவே, நீங்கள் தேவனை போதுமான அளவு நேசிக்க முடியாது என்று சொல்ல முடியுமா? தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பின் பின்னர் நீ ஜெயம் கொள்ள முயற்சிக்கிறாயா, அல்லது தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பின் பின்னர் சுத்திகரிக்கப்படுகிறாயா, பாதுகாக்கப்படுகிறாயா? இவற்றில் நீ எதைத் தொடர்கிறாய்? உன் வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ளதா, அல்லது அது அர்த்தமற்றது மற்றும் மதிப்பு இல்லாததா? நீ மாம்சத்தை விரும்புகிறாயா, அல்லது சத்தியத்தை விரும்புகிறாயா? நீ நியாயத்தீர்ப்பை அல்லது ஆறுதலை விரும்புகிறாயா? தேவனின் கிரியையை அதிகம் அனுபவித்த பிறகு, தேவனின் பரிசுத்தத்தையும் நீதியையும் கண்ட பிறகு, நீ எவ்வாறு தொடர வேண்டும்? இந்த பாதையில் நீ எவ்வாறு நடக்க வேண்டும்? தேவனின் மீதான உன் அன்பை நீ எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும்? தேவனின் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் உன்னில் ஏதேனும் ஒரு பலனை அடைந்துவிட்டதா? தேவனின் தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பைப் பற்றி உனக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்பது நீ என்ன வாழ்கிறாய் என்பதையும், நீ தேவனை எந்த அளவுக்கு நேசிக்கிறாய் என்பதையும் பொறுத்து இருக்கிறது! உன் உதடுகள் நீ தேவனை நேசிக்கிறாய் என்று கூறுகின்றன, ஆனாலும் நீ வாழ்வது பழைய, பாழான மனப்பான்மையே. உனக்குத் தேவபயம் இல்லை, உனக்கு மனசாட்சியும் மிகக் குறைவாக இருக்கிறது. அத்தகையவர்கள் தேவனை நேசிக்கிறார்களா? அத்தகையவர்கள் தேவனுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா? அவர்கள் தேவனின் தண்டனையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்பவர்களா? நீ தேவனை நேசிக்கிறாய் என்றும், அவரை விசுவாசிக்கிறாய் என்றும் சொல்கிறாய், ஆனாலும் நீ உங்கள் எண்ணங்களை விட்டுவிடவில்லை. உங்கள் கிரியை, பிரவேசம், நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றும் உன் வாழ்க்கையில், உன்னுடைய தேவன் மீதான நேசத்தின் வெளிப்பாடு எதுவும் இல்லை, மேலும் தேவனுக்கு பயபக்தியும் இல்லை. தண்டனையும் நியாயத்தீர்ப்பும் பெற்றவர் இவரா? இது போன்ற ஒருவர் பேதுருவாக இருக்க முடியுமா? பேதுருவைப் போன்றவர்களுக்கு அறிவு மட்டுமே இருக்கிறதா, ஆனால் வாழ்ந்து காட்டுவதில்லையா? இன்று, மனிதன் ஒரு உண்மையான வாழ்க்கையை வாழ வேண்டிய நிலை என்ன? பேதுருவின் ஜெபங்கள் அவருடைய வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளைத் தவிர வேறொன்றுமில்லை அல்லவா? அவனுடைய இருதயத்திற்குள் இருந்த வார்த்தைகள் அவை அல்லவா? பேதுரு ஜெபிக்க மட்டும் செய்தாரா, மற்றும் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லையா? உன் நாட்டம் யாருக்காக? தேவனின் தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பின் போது நீங்கள் எவ்வாறு பாதுகாப்பையும் சுத்திகரிப்பையும் பெற வேண்டும்? தேவனின் தண்டனையும் நியாயத்தீர்ப்பும் மனிதனுக்கு எந்த நன்மையும் அளிக்கவில்லையா? அனைத்து நியாயத்தீர்ப்பும் தண்டனையா? அமைதியும் மகிழ்ச்சியும், பொருள் ஆசீர்வாதங்களும், தற்காலிக ஆறுதலும் மட்டுமே மனிதனின் ஜீவியத்திற்கு நன்மை பயக்குமா? நியாயத்தீர்ப்பு வாழ்க்கை இல்லாமல், மனிதன் ஒரு இனிமையான மற்றும் வசதியான சூழலில் வாழ்ந்தால், அவனை சுத்தப்படுத்த முடியுமா? மனிதன் மாற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட விரும்பினால், அவர் பரிபூரணராக இருப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும்? இன்று நீ எந்த பாதையை தேர்வு செய்ய வேண்டும்?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பேதுருவின் அனுபவங்கள்: தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவரது அறிவு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 531

பேதுரு பற்றிக் குறிப்பிடும்போது, ஜனங்கள் அவனைப் பற்றி சொல்லும் நல்ல விஷயங்களுக்கு முடிவே இல்லை. அவன் தேவனை மறுதலித்த மூன்று முறையும், சாத்தானைச் சேவிப்பதன் மூலம் தேவனை எவ்வாறு சோதித்தான், இறுதியில் அவன் தேவனுக்காக எவ்வாறு தலைகீழாகச் சிலுவையில் அறையப்பட்டான், மற்றும் பலவற்றை அவர்கள் உடனடியாக நினைவுகூர்கிறார்கள். இப்போது நான், பேதுரு என்னை எப்படி அறிந்திருந்தான், அவனுடைய இறுதி முடிவு என்ன என்பது பற்றி உங்களுக்கு விவரிப்பதில் கவனம் செலுத்தப் போகிறேன். பேதுரு நல்ல திறமை வாய்ந்தவன், ஆனால் அவனுடைய சூழ்நிலைகள் பவுலின் நிலைமைகளைப் போல இல்லை: அவனுடைய பெற்றோர் என்னைத் துன்புறுத்தினார்கள், அவர்கள் சாத்தானால் பீடிக்கப்பட்ட பேய்கள், இதன் விளைவாக அவர்கள் பேதுருவுக்கு தேவனைப் பற்றி எதுவும் கற்பிக்கவில்லை. பேதுரு புத்திசாலி, திறமையானவன், சிறு வயதிலிருந்தே அவனது பெற்றோரால் வாஞ்சையுடன் வளர்க்கப்பட்டான். ஆயினும், ஒரு வயது வந்தவனாக, அவன் அவர்களது விரோதியாக மாறினான் என்னைப் பற்றித் தெரிந்துகொள்வதை ஒருபோதும் நிறுத்தவில்லை, பின்னர் அவர்களுக்கு எதிராகத் திரும்பினான். ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, வானமும் பூமியும் எல்லாமே சர்வ வல்லவரின் கைகளில் உள்ளன என்றும், நேர்மறையான விஷயங்கள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்றும் சாத்தானால் செயலாக்கப்படாமல் அவரிடமிருந்து அவை நேரடியாக வந்துள்ளன என்றும் அவன் நம்பினான். பேதுருவின் பெற்றோரின் முரண்பாடானது அவனுக்கு என் அன்பையும் கருணையையும் பற்றிய அதிக அறிவைக் கொடுத்தது, இதனால் என்னைத் தேடுவதற்கான அவனது விருப்பத்தை உயர்த்தியது. அவன் என் வார்த்தைகளை ருசிப்பதிலும் குடிப்பதிலும் மட்டுமல்ல, மேலும், என் சித்தத்தைப் புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்தினான், மேலும் அவனது இருதயத்தில் எப்போதும் விழிப்புடன் இருந்தான். இதன் விளைவாக, அவன் எப்போதும் தனது ஆவியை உணர்ந்தவனாக இருந்தான், அதனால் அவன் செய்த எல்லாவற்றிலும் அவன் என் சொந்த இருதயத்திற்கு ஏற்றவனாகஇருந்தான். தோல்வியில் சிக்கிக் கொள்வது பற்றிய ஆழ்ந்த அச்சத்துடன், தன்னைத் தானே ஊக்குவிப்பதற்கு, கடந்த காலங்களில் ஜனங்களின் தோல்விகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தான். ஆகவே, காலங்கள் முழுவதிலும் தேவனை நேசித்த அனைவரின் நம்பிக்கையையும் அன்பையும் ஒருநிலைப் படுத்துவதிலுமே அவன் கவனம் செலுத்தினான். இப்படியாக—எதிர்மறை அம்சங்களில் மட்டுமல்ல, மிக முக்கியமாக, நேர்மறையான அம்சங்களிலும்—அவன் மிக விரைவாக முன்னேறினான், இதனால் எனக்கு முன்பாக அவனுடைய அறிவு எல்லாவற்றிலும் மிகப் பெரியதாக மாறியது. அப்படியானால், அவன் தன்னிடம் இருந்த அனைத்தையும் எப்படி என் கையில் ஒப்படைத்தான், உணவு, உடை, தூக்கம் மற்றும் அவன் வாழ்ந்த இடம் பற்றிய முடிவுகளை எடுப்பதில் கூட அவன் எப்படி என்னைச் சரணடைந்தான் என்பதை கற்பனை செய்து பார்ப்பது சிரமமில்லை, அதற்குப் பதிலாக எல்லாவற்றிலும் என்னை திருப்திப்படுத்தியதன் அடிப்படையில் எனது செல்வத்தை அனுபவித்தான். அவன் பாதி மரித்துப் போகும் படிக்கு—நான் அவனை எண்ணற்ற சோதனைகளுக்கு, இயற்கையாகவே சோதனைகளுக்கு உட்படுத்தினேன், ஆனால் இந்த நூற்றுக்கணக்கான சோதனைகளுக்கு மத்தியில், அவன் ஒருபோதும் என்மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை அல்லது என்னில் ஏமாற்றத்தை உணரவில்லை. நான் அவனைக் கைவிட்டேன் என்று நான் சொன்னபோதும், அவன் சோர்வடையவில்லை, ஒரு நடைமுறை வழியில் மற்றும் கடந்தகால நடைமுறைக் கொள்கைகளுக்கு ஏற்ப என்னைத் தொடர்ந்து நேசித்தான். அவன் என்னை நேசித்தாலும் நான் அவனைப் புகழ்ந்து பேச மாட்டேன், இறுதியில் அவனைச் சாத்தானின் கைகளில் தள்ளுவேன் என்று சொன்னேன். ஆனால் இதுபோன்ற சோதனைகளுக்கு இடையில், அவனுடைய மாம்சத்தின் மீது வராத ஆனால் வார்த்தைகளாக இருந்த சோதனைகளுக்கு இடையில், அவன் இன்னும் என்னிடம் ஜெபித்து, “தேவனே! வானம், பூமி மற்றும் எல்லாவற்றிலும், சர்வவல்லமையுள்ள உமது கைகளில் இல்லாத எந்த மனிதனும், எந்த உயிரினமும், அல்லது ஏதேனும் உள்ளதா? நீர் என்னிடம் இரக்கமாயிருக்கும்போது, உமது கருணையால் என் இருதயம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறது. நீர் என்னை நியாயந்தீர்க்கும்போது, நான் தகுதியற்றவனாக இருந்தாலும், உமது செயல்களின் புரிந்துகொள்ள முடியாத தன்மையைப் பற்றி நான் அதிகம் உணர்கிறேன், ஏனென்றால் நீர் அதிகாரமும் ஞானமும் பெற்று நிறைந்திருக்கிறீர்கள். என் மாம்சம் கஷ்டங்களை அனுபவித்தாலும், என் ஆவி ஆறுதலடைகிறது. உம்முடைய ஞானத்தையும் செயல்களையும் நான் எவ்வாறு புகழ்ந்து பேசாமல் இருக்க முடியும்? உம்மை அறிந்த பிறகு நான் மரித்தாலும், நான் எப்படி மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் அதைச் செய்யாதிருக்க முடியும்? சர்வவல்லமை உடைய ஒருவரே! உம்மைப் பார்க்க என்னை அனுமதிக்க உண்மையிலேயே நீர் விரும்பவில்லையா? உமது தீர்ப்பைப் பெற நான் உண்மையில் தகுதியற்றவனா? நீர் பார்க்க விரும்பாத ஒன்று என்னுள் இருக்கக்கூடும் என்பதாலா?” இத்தகைய சோதனைகளின் போது, பேதுருவுக்கு என் சித்தத்தைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அவன் என்னால் பயன்படுத்தப்படுவதில் பெருமையும் கௌரவமும் அடைந்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது (மனிதகுலம் என் மகத்துவத்தையும் கோபத்தையும் காணும்படி அவன் என் தீர்ப்பைப் பெற்றிருந்தாலும்), இந்த சோதனைகளால் அவன் துன்பப்படவில்லை. எனக்கு முன்பாக அவன் விசுவாசமாக இருந்ததாலும், அவனை நான் ஆசீர்வதித்ததாலும், அவன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனுக்கு ஒரு முன்மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் இருந்து வருகிறான். நீங்கள் பின்பற்ற வேண்டியது துல்லியமாக இது அல்லவா? பேதுருவைப் பற்றி நான் ஏன் இவ்வளவு நீண்ட விவரத்தைக் கொடுத்தேன் என்பதைப் பற்றி நீண்டதாகவும் கடினமாகவும் சிந்தியுங்கள்; இவை நீங்கள் செயல்படும் கொள்கைகளாக இருக்க வேண்டும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 6” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 536

தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் உயிருக்கு ஆபத்தான இடங்களில் ஓங்கி அடித்து, நம்மை காயப்படுத்தி, பயத்தினால் நிறைந்திருக்கச் செய்கிறது. அவர் நமது கருத்துகளையும், நமது கற்பனைகளையும், நமது கேடான மனநிலையையும் அம்பலப்படுத்துகிறார். நாம் சொல்லும் மற்றும் செய்யும் எல்லா காரியங்கள் முதற்கொண்டு, நம்முடைய எல்லா எண்ணங்கள் மற்றும் யோசனைகள் வரை, நம்முடைய சுபாவமும் சாராம்சமும் அவருடைய வார்த்தைகளில் வெளிப்பட்டு, நம்மை அச்ச நிலையில் ஆழ்த்தி, நமது அவமானத்தை மறைக்க இடமில்லாமல் நடுங்குகிறோம். நம்முடைய செயல்கள், நம்முடைய குறிக்கோள்கள், நோக்கங்கள் மற்றும் நாம் ஒருபொழுதும் கண்டுபிடிக்காத கேடான மனநிலை எல்லாவற்றையும் பற்றி அவர் ஒவ்வொன்றாக நம்மிடம் சொல்கிறார், நம்முடைய மோசமான குறைபாடு அனைத்தையும் அம்பலப்படுத்தியதாக உணரச் செய்து, நம்மை இன்னும் முழுமையாக ஆட்கொள்கிறார். நாம் அவரை எதிர்த்ததற்காக அவர் நம்மை நியாயந்தீர்க்கிறார், அவரை நிந்தித்ததற்காகவும், பழித்துரைத்ததற்காகவும் நம்மைத் தண்டிக்கிறார். அவருடைய பார்வையில், நாம் மீட்டுக்கொள்ளப்படும் ஒரு அம்சமாக இல்லாமல், நாம் வாழும் சாத்தானாக இருக்கிறோம் என்பதை நம்மை உணரச் செய்கிறார். நமது நம்பிக்கைகள் பாழாகிப்போய்விட்டன, எந்தவொரு நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்கவோ அல்லது அவரைப் பற்றிய நம்பிக்கைகள் எதையும் விளையாட்டாகக் கருதவோ நாம் இனிமுலும் துணிவதில்லை, நம்முடைய கனவுகள் கூட ஒரே இரவில் மாயமாகிவிடுகின்றன. இது நம்மில் யாராலும் கற்பனை செய்துபார்க்க முடியாத மற்றும் நம்மில் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு உண்மையாகும். ஒரு கணப்பொழுதில், நமது ஆழ்மனதின் சமநிலையை இழக்கிறோம், மேலும் முன்னால் உள்ள சாலையில் எவ்வாறு தொடர்ந்து பயணிக்கலாம் அல்லது நமது நம்பிக்கைகளில் எவ்வாறு தொடர்வது என்று நமக்கு தெரிவதில்லை. நமது விசுவாசம் சதுக்கம் ஒன்றிற்கு திரும்பிச் சென்றுள்ளது போலவும், நாம் ஒருபொழுதும் கர்த்தராகிய இயேசுவைச் சந்தித்ததில்லை அல்லது அவரைத் தெரிந்துகொண்டதில்லை என்பது போலவும் தோன்றுகிறது. நமது கண்களுக்கு முன்னால் உள்ள அனைத்தும் நம்மை குழப்பத்தில் ஆழத்துகின்றன, மேலும் நம்மை வெளிப்படையாகவே அங்கலாய்க்கச் செய்கின்றன. நாம் திகைத்து நிற்கிறோம், நாம் விரக்தி அடைகிறோம், நமது இருதயங்களின் ஆழத்தில் கட்டுப்படுத்த இயலாத கோபமும் அவமானமும் உள்ளன. நாம் வெளியேறவும், வெளியேறுவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்கவும் முயற்சி செய்கிறோம். மேலும் என்னவென்றால், நம்முடைய இருதயங்களை அவரிடம் ஊற்றுவதற்காக நம்முடைய இரட்சகராகிய இயேசுவுக்காக தொடர்ந்து காத்திருக்கிறோம். இறுமாப்போ அல்லது மனத்தாழ்மையோ இல்லாமல், ஒரு சமமான அடித்தளத்தில் இருக்க நாம் வெளிப்புறத்தில் தோன்றும் தருணங்களும் காணப்பட்டாலும், நாம் இதற்கு முன்பு உணராத இழப்பு உணர்வினால் நமது இருதயங்களில் வேதனைப்படுகிறோம். சில நேரங்களில் நாம் வெளிப்புறத்தில் அசாதாரணமாக அமைதியாக இருப்பது போல தோன்றினாலும், நமது மனமோ கொந்தளிக்கும் கடல் போல வேதனையுடன் சுழன்று கொண்டிருக்கிறது. அவருடைய நீயாயத்தீர்ப்பும் ஆக்கினைத்தீர்ப்பும் நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் அனைத்தையும் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு, நம்முடைய பகட்டான ஆசைகளுக்கு முடிவுகட்டி, அவர் நம்முடைய இரட்சகர் என்றும், நம்மை இரட்சிக்க வல்லவர் என்றும் நம்புவதற்கு நம்மை விருப்பமற்றவராக்கியுள்ளன. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் நமக்கும் அவருக்கும் இடையில் யாரும் கடக்க விரும்பாத மிகவும் ஆழமான ஒரு பெரிய பள்ளத்தை திறந்துவைத்துள்ளன. அவருடைய நியாயத்தீர்ப்பினாலும் சிட்சையினாலும் நமது வாழ்வில் இதுபோன்றதொரு பெரிய பின்னடைவையும், இதுபோன்ற பெரிய அவமானத்தையும் அனுபவிப்பது இதுவே முதல் முறையாகும். அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் தேவனுடைய கனத்தையும் மனுஷனின் குற்றத்தை சகித்துக்கொள்ள இயலாதத்தன்மையையும் உண்மையிலேயே பாராட்ட வைத்துள்ளன, இதனுடன் ஒப்பிடும்போது நாம் மிகவும் இழிவானவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் இருக்கிறோம். அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் நாம் எவ்வளவு இறுமாப்புள்ளவர்களாகவும் பகட்டானவர்களாகவும் இருக்கிறோம் என்பதையும், மனுஷன் ஒருபொழுதும் தேவனுக்கு சமமாக மாட்டான் அல்லது தேவனுக்கு இணையாக மாட்டான் என்பதையும் நமக்கு முதன்முறையாக உணர வைத்துள்ளது. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் இனிலும் இதுபோன்றதொரு கேடான மனநிலையில் வாழாமலிருக்கவும், இந்த சுபாவத்தையும் சாராம்சத்தையும் நம்மிலிருந்து முடிந்தவரை சீக்கிரமே விரட்டவும், அவரிடம் விரோதமாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருப்பதை நிறுத்தவும் நம்மை ஏங்க வைத்துள்ளது. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதிலும், இனிமேலும் அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் விரோதமாக கலகம் செய்யாமலிருப்பதிலும் நம்மை சந்தோஷப்படுத்தியுள்ளன. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் மீண்டும் ஒரு முறை உயிர்வாழும் ஆசையை நமக்குக் கொடுத்துள்ளன, மேலும் அவரை நம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொள்வதில் நமக்கு சந்தோஷத்தை அளித்துள்ளன…. நாம் ஜெயத்தின் கிரியையிலிருந்து, நரகத்திலிருந்து, மரண இருளின் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறிவிட்டோம்…. சர்வவல்லமையுள்ள தேவன் இந்த ஜனக்கூட்டமாகிய நம்மை ஆதாயப்படுத்தியுள்ளார்! அவர் சாத்தானை ஜெயங்கொண்டிருக்கிறார், அவருடைய திரளான எதிரிகளை தோற்கடித்திருக்கிறார்!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடையத் தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 537

உன்னுடைய சீர்கெட்ட மனப்பான்மையைத் தள்ளிவிட்டு, சாதாரண மனித வாழ்வை வாழ்ந்தால் மட்டுமே நீ பரிபூரணப்படுவாய். உம்மால் தீர்க்கதரிசனம் உரைக்கவும், எந்த மறைபொருளையும் பேச முடியாமற்போனாலும், நீ ஒரு மனித வாழ்வை வாழவும் மற்றும் ஒரு மனிதனின் சாயலை வெளிப்படுத்தவும் முடியும். தேவன் மனிதனைப் படைத்தார், ஆனால் பின்னர் மனிதன் சாத்தானால் சீர்கெட்டுப்போனான், அப்படியாக மக்கள் “மரித்தவர்களாக” மாறிப்போனார்கள். ஆகவே, நீ மாற்றமடைந்த பிறகு, இனி ஒருபோதும் இப்படி “மரித்தவர்களைப்” போல இருக்க மாட்டீர். தேவனுடைய வார்த்தைகள்தான் மக்களின் ஆவிகளைப் புத்துயிர் பெறச்செய்து அவர்களை மறுபடியும் பிறக்கச் செய்கின்றன, மேலும் மக்களின் ஆவிகள் மறுபடியும் பிறக்கும்போது, அவர்கள் ஜீவனிற்குள் வருகின்றனர். நான் “மரித்தவர்களைப்” பற்றி பேசும்போது, ஆவி இல்லாத மரித்த சடலங்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன், அவர்களுக்குள் ஆவிகள் இறந்துவிட்டன. ஜீவனின் புத்துயிர் மக்களின் ஆவிகளில் வரும்போது, மக்கள் ஜீவனிற்குள் வருவார்கள். முன்பு பேசப்பட்ட பரிசுத்தவான்கள், சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழிருந்து, பின்னர் சாத்தானை தோற்கடித்து, ஜீவனிற்குள் வந்தவர்களைக் குறிக்கிறது. சீன தேசத்திலுள்ள தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற துன்புறுத்தல்களையும் தந்திரங்களையும் சகித்திருக்கிறார்கள், அது அவர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கி, மேலும் வாழ்வதற்குத் தைரியம் கூட இல்லாமல் போகச்செய்தது. இவ்விதமாக, அவர்களுடைய ஆவிகளின் விழிப்புணர்வானது அவர்களின் சரீரத்திலிருந்து தொடங்க வேண்டும்: கொஞ்சம் கொஞ்சமாக, அவர்களின் சரீரத்திலிருந்து, அவர்களுடைய ஆவிகள் விழிப்புணர்வு பெறவேண்டும். அவை ஒரு நாள் ஜீவனிற்குள் வரும்போது, தடைகள் ஒன்றும் இருக்காது, அனைத்தும் சுமூகமாக நடக்கும். தற்போது, இது அடைய முடியாததாகவே உள்ளது. மரணத்தைக் கொண்டுவரும் விதங்களில் பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர்; அவர்கள் மரண உணர்வினால் சூழப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் இன்னும் அநேக காரியங்களில் குறைபாடுள்ளவர்களாக காணப்படுகின்றனர். சில மக்களுடைய வார்த்தைகள் மரணத்தை சுமந்து கொண்டிருக்கின்றன, அவர்களின் செயல்களும் மரணத்தை சுமக்கின்றன, மேலும் அவர்கள் வாழும் வாழ்க்கைக் கொண்டுவருகிற ஒவ்வொரு காரியமும் மரணத்தைக் கொண்டுள்ளன. இன்று, மக்கள் பகிரங்கமாக தேவனைக் குறித்த சாட்சி அளிக்கிறார்களானால், அவர்கள் இந்த விஷயத்தில் தோல்வியையே தழுவுவார்கள், ஏனென்றால் அவர்கள் இன்னும் முழுமையாக ஜீவனிற்க்குள் வரவில்லை, இப்படிப்பட்ட எண்ணற்ற மரித்தவர்கள் உங்களிடையே இருக்கிறார்கள். தமது கிரியையானது புறஜாதியினரிடையே விரைவாக பரவும்படிக்கு தேவன் ஏன் இன்று சில அடையாளங்களையும் அதிசயங்களையும் நடப்பிப்பதில்லை என்று சிலர் கேட்கிறார்கள். மரித்தவர்கள் தேவனுக்கு சாட்சியம் அளிக்க முடியாது; அது ஜீவனோடுள்ளவர்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று, ஆனாலும் இன்று பெரும்பாலான மக்கள் “மரித்த மனிதர்களே”; அநேகர் வெற்றியைப் பெற முடியாமல் மரணத்தின் பிடியில், சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழாக வாழ்கிறார்கள். இது இப்படியிருக்க, அவர்கள் தேவனுக்கு எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? அவர்கள் நற்செய்திப் பணியை எப்படி பரப்ப முடியும்?

இருளின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்பவர்கள் அனைவரும் சாத்தானால் பீடிக்கப்பட்டவர்களும் மரணத்தின் மத்தியிலே வாழ்பவர்களும் ஆவார்கள். தேவனால் இரட்சிக்கப்படாமலும், அவராலே நியாயந்தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படாமலும் இருக்கிற மக்கள் மரணத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்; அவர்களால் ஜீவனுள்ளவர்களாக மாற முடியாது. இந்த “மரித்த மனிதர்களால்” தேவனுக்கு சாட்சியம் அளிக்க முடியாது, மேலும் அவர்கள் தேவனாலே பயன்படுத்தப்படவும் முடியாது, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைவதும் கடினமான காரியமாயிருக்கும். தேவன் மரித்தவர்களுடைய சாட்சியத்தை அல்ல, ஜீவனுள்ளவர்களுடைய சாட்சியத்தையே விரும்புகிறார், மேலும் மரித்தவர்களையல்ல ஜீவனுள்ளவர்களையே அவருக்காக ஊழியம் செய்ய வேண்டுமென்று அவர் கேட்டுக்கொள்கிறார். “மரித்தவர்கள்” தேவனை எதிர்க்கிறவர்களும் கலகக்காரர்களுமாவார்கள்; அவர்கள் ஆவியில் உணர்வற்றவர்களும் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதவர்களுமாவார்கள்; அவர்கள் சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவராதவர்களாகவும், தேவனுக்கு சிறிதேனும் விசுவாசமாக இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்கள் சாத்தானுடைய அதிகார ஆதிக்கத்தின் கீழாக வாழ்ந்து அவனுக்கேற்றபடி செயல்படுவார்கள். மரித்தவர்கள் சத்தியத்திற்கு எதிராக நிற்பதன் மூலமும், தேவனுக்கு எதிராகக் கலகம் செய்வதன் மூலமும், இழிவானவர்களாகவும், அற்பமானவர்களாகவும், துர்க்குணமுள்ளவர்களாகவும், மிருகத்தனமானவர்களாகவும், வஞ்சகமானவர்களாகவும், மற்றும் நயவஞ்சகமானவர்களாகவும் வெளிப்படுவார்கள். அத்தகையவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடித்தாலும், அவர்களால் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ முடியாது; அவர்கள் உயிருடன் இருந்தாலும், அவர்கள் வெறுமனே நடக்கிற, சுவாசிக்கிற சடலங்களே. மரித்தவர்கள் தேவனை திருப்திப்படுத்த முற்றிலும் இயலாதவர்களாக இருக்கிறார்கள், அவருக்கு முழுமையாக கீழ்ப்படிந்திருப்பது என்பதும் மிகக் குறைவே. அவர்கள் அவரை ஏமாற்றவும், அவருக்கு எதிராக தேவதூஷணம் சொல்லவும், அவரைக் காட்டிக் கொடுக்கவும் மட்டுமே முடியும், மேலும் அவர்கள் வாழும் வாழ்க்கை கொண்டு வரும் அனைத்தும் சாத்தானின் சுபாவத்தை வெளிப்படுத்துகிறவைகளாகவே இருக்கின்றன. மக்கள் ஜீவனுள்ளவர்களாக மாறவும், தேவனுக்கு சாட்சியம் அளிக்கவும், தேவனால் அங்கீகரிக்கப்படவும் விரும்பினால், அவர்கள் தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவர்கள் அவருடைய நியாயத்தீர்ப்புக்கும் சிட்சைக்கும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொடுக்க வேண்டும், மேலும் தேவனுடைய சுத்திகரிப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அவரால் கையாளப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவன் எதிர்பார்க்கிற அனைத்து சத்தியங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும், அப்போதுதான் அவர்கள் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்று உண்மையில் ஜீவனுள்ளவர்களாக மாறுவார்கள். ஜீவனுள்ளவர்கள் தேவனாலே இரட்சிக்கப்பட்டவர்கள்; அவர்கள் தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு சிட்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறார்கள், மற்றும் தேவனுக்காக தங்கள் உயிரைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் மகிழ்ச்சியுடன் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். ஜீவனுள்ளவர்கள் தேவனுக்கு சாட்சியம் அளிக்கும்போதுதான் சாத்தானை வெட்கப்படுத்த முடியும்; ஜீவனுள்ளவர்கள் மட்டுமே தேவனுடைய நற்செய்திப் பணியைப் பரப்ப முடியும், ஜீவனுள்ளவர்கள் மட்டுமே தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள், ஜீவனுள்ளவர்கள் மட்டுமே மெய்யான மனிதர்கள். முதன்முதலில் தேவனால் உருவாக்கப்பட்ட மனிதன் ஜீவனுடன் இருந்தான், ஆனால் சாத்தானின் சூழ்ச்சி மற்றும் சீர்கேட்டின் நிமித்தம் மனிதன் மரணத்தின் மத்தியிலும் சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழும் வாழ்கிறான், ஆகவே, இவ்விதமாக, மக்கள் ஆவி இல்லாத மரித்தவர்களாய் மாறிப்போனார்கள், அவர்கள் தேவனை எதிர்க்கும் எதிரிகளாகிவிட்டார்கள், அவர்கள் சாத்தானின் கருவிகளாக மாறி, அவனுடைய சிறைக் கைதிகளாகிவிட்டார்கள். தேவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவனுள்ள மக்களும் மரித்த மனிதர்களாகிப்போனார்கள், ஆகவே தேவன் தம்முடைய சாட்சியத்தை இழந்துவிட்டார், மேலும் அவர் படைத்த மற்றும் அவருடைய சுவாசம் உள்ள ஒரே இனமாகிய மனிதகுலத்தையும் இழந்துபோனார். தேவன் தம்முடைய சாட்சியைத் திரும்பப் பெற்று, தம்முடைய கையால் சிருஷ்டிக்கப்பட்டு ஆனால் சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை மீட்க வேண்டுமென்றால், அவர் அவர்களை உயிரோடு எழுப்பவேண்டும், அப்படியாக அவர்கள் ஜீவனுள்ள மனிதர்களாக மாற வேண்டும், மேலும் அவர்கள் அவரது ஒளியில் வாழும்படிக்கு அவர்களை சீர்படுத்த வேண்டும். மரித்தவர்கள் ஆவி இல்லாதவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் அதீத நிலையில் உணர்ச்சியற்றவர்களும் தேவனை எதிர்க்கிறவர்களுமாய் இருக்கிறார்கள். தேவனை அறியாதவர்களில் அவர்கள் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்கிற சிறிய எண்ணம் கூட இந்த மக்களுக்கு இல்லை; அவர்கள் அவருக்கு எதிராக கலகம் மட்டுமே செய்து, அவரை எதிர்க்கிறார்கள், மேலும் அவர்களிடம் அவருக்கான விசுவாசம் சிறிதளவும் இல்லை. ஜீவனுள்ளவர்களோ தங்கள் ஆவியில் மறுபடியும் பிறந்தவர்கள், தேவனுக்குக் கீழ்ப்படியத் தெரிந்தவர்கள், மற்றும் தேவனுக்கு விசுவாசமுள்ளவர்கள். அவர்களிடம் சத்தியமும் சாட்சியும் உள்ளது, இந்த மக்கள் மட்டுமே தேவனுடைய வீட்டில் அவரைப் பிரியப்படுத்துகிறார்கள். ஜீவனுக்குள் வரக்கூடியவர்களை தேவன் இரட்சிக்கிறார், அவர்கள் தேவனுடைய இரட்சிப்பைக் காணக்கூடியவர்களாயும், தேவனுக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர்களாகவும், மற்றும் தேவனைத் தேடத் தயாராகவும் இருக்கிறார்கள். தேவனுடைய மனித அவதாரத்தையும் அவருடைய தோற்றத்தையும் விசுவாசிப்பவர்களை அவர் இரட்சிக்கிறார். சிலர் புதுவாழ்வுக்குள் வரலாம், சிலரால் வர முடியாமல் இருக்கலாம்; இது அவர்களின் சுபாவத்தை இரட்சிக்க முடியுமா இல்லையா என்பதைப் பொறுத்ததாகும். அநேகர் தேவனுடைய வார்த்தைகளை நிறைய கேள்விப்பட்டிருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் தேவனுடைய சித்தத்தை புரிந்து கொள்ளவில்லை, அவர்களால் அவற்றை இன்னும் நடைமுறைக்கு கொண்டுவர முடியவில்லை. அத்தகையவர்கள் எந்தவொரு சத்தியத்தையும் கைக்கொண்டு வாழ முடியாதவர்களாகவும், மேலும் தேவனுடைய கிரியையில் வேண்டுமென்றே தலையிடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுக்காக எந்த கிரியையையும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள், அவர்களால் எதையும் தேவனுக்காக அர்ப்பணிக்க முடியாது, மேலும் அவர்கள் திருச்சபையின் பணத்தை ரகசியமாக செலவழித்து தேவனுடைய வீட்டிலே இலவசமாக சாப்பிடுகிறார்கள். இந்த மக்கள் மரித்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள். தேவன் தம்முடைய கிரியையை இலக்காகக் கொண்டுள்ள அனைவரையும் இரட்சிக்கிறார், ஆனால் அவருடைய இரட்சிப்பைப் பெற முடியாத ஒரு பகுதியினரும் இருக்கிறார்கள்; ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அவருடைய இரட்சிப்பைப் பெற முடியும். ஏனென்றால், பெரும்பாலான மக்கள் மிகவும் ஆழமாக சீர்கெட்டு மரித்தவர்களாகிவிட்டார்கள், அவர்கள் இரட்சிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்கள் சாத்தானால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள், மேலும் அவர்கள் சுபாவத்தில் மிகுந்த தீங்கினால் நிறைந்திருக்கிறார்கள். அந்த சிறு எண்ணிக்கையிலான மக்களும் கூட தேவனுக்கு முழுமையாக கீழ்ப்படிய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஆதியிலிருந்தே தேவனுக்கு முற்றிலும் விசுவாசமாக இருந்தவர்கள் அல்ல, அல்லது ஆதியிலிருந்தே தேவன்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்கள் அல்ல; மாறாக, அவர்கள் தேவனுடைய கிரியையின் வெற்றியின் நிமித்தம் அவருக்கு கீழ்ப்படிகிறவர்களாய் மாறியிருக்கிறார்கள், தேவனுடைய உன்னதமான அன்பின் நிமித்தமாக அவர்கள் தேவனைப் பார்க்கிறார்கள், தேவனுடைய நீதியான மனநிலையின் காரணமாக அவர்களுடைய மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் அவர்கள் தேவனுடைய கிரியையின் காரணமாக தேவனைப் பற்றிய அறிவைப் பெறுகிறார்கள், அவருடைய கிரியை நடைமுறைக்குரியதும் மற்றும் இயல்பானதுமாகும். தேவனுடைய இந்த கிரியை இல்லாமல், இந்த மக்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், அவர்கள் இன்னும் சாத்தானுக்குரியவர்களாகவே இருப்பார்கள், அவர்கள் இன்னும் மரணத்திற்குரியவர்களாகவே இருப்பார்கள், அவர்கள் இன்னும் மரித்தவர்களாகவே இருப்பார்கள். இந்த மக்கள் இன்று தேவனுடைய இரட்சிப்பைப் பெற முடியும் என்பது அவர்கள் தேவனோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகும்.

ஜீவனுள்ளவர்கள் தேவனுக்கு விசுவாசமாக இருக்கிறபடியால், அவர்கள் தேவனாலே ஆதாயப்படுத்தப்பட்டு, அவருடைய வாக்குத்தத்தங்களின் மத்தியில் வாழ்வார்கள், மேலும் மரித்தவர்கள் தேவனுக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பின் காரணமாக, அவர்கள் தேவனால் வெறுக்கப்பட்டு, நிராகரிக்கப்படுவார்கள், மற்றும் அவருடைய தண்டனை மற்றும் சாபங்களுக்கு மத்தியில் வாழ்வார்கள். இதுதான் தேவனுடைய நீதியான மனநிலை, இது எந்த மனிதனாலும் மாற்ற முடியாததாகும். தங்களுடைய சொந்த தேடலின் காரணமாக, மக்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்று வெளிச்சத்தில் வாழ்கிறார்கள்; மக்களுடைய தந்திரமான திட்டங்கள் காரணமாக, அவர்கள் தேவனால் சபிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாகிறார்கள்; மக்கள் செய்த தீமையின் காரணமாக, அவர்கள் தேவனால் தண்டிக்கப்படுகிறார்கள், மேலும் மக்களுடைய ஏக்கம் மற்றும் விசுவாசம் நிமித்தமாக, அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். தேவன் நீதியுள்ளவர்: அவர் ஜீவனுள்ளவர்களை ஆசீர்வதிக்கிறார், மேலும் மரித்தவர்களை எப்போதும் மரணத்தின் மத்தியில் இருக்கத்தக்கதாகவும், ஒருபோதும் தேவனுடைய வெளிச்சத்தில் வாழக்கூடாதபடிக்கும், அவர்களை சபிக்கிறார். தேவன் என்றென்றுமாய் அவரோடு இருக்கத்தக்கதாக, ஜீவனுள்ளவர்களைத் தம்முடைய ராஜ்யத்திற்கும் அவருடைய ஆசீர்வாதங்களுக்கும் அழைத்துச் செல்வார். ஆனால் மரித்தவர்களைப் பொறுத்தவரை, அவர் அவர்களை அடித்து நித்திய மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்; அவர்கள் அவருடைய நாசத்தின் பொருளாய் இருப்பார்கள், அவர்கள் எப்போதும் சாத்தானுக்கு சொந்தமானவர்களே. தேவன் ஒருவரையும் அநியாயமாக நடத்துவதில்லை. உண்மையிலேயே தேவனைத் தேடுகிறவர்கள் அனைவரும் தேவனுடைய வீட்டில் இருப்பார்கள், அதேவேளையில் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களும் அவருடன் இணங்கி நடக்காதவர்களும் மெய்யாகவே அவருடைய தண்டனையின் மத்தியில் வாழ்வார்கள். ஒருவேளை மாம்சத்தில் தேவனுடைய கிரியைப் பற்றி நீ உறுதியற்றவராக இருக்கலாம்—ஆனால் ஒரு நாள், தேவனுடைய மாம்சமானது மனிதனின் முடிவை நேரடியாக ஏற்பாடு செய்யாமற்ப்போகும்; அதற்குப் பதிலாக, அவருடைய ஆவி மனிதன் போய்ச்சேருமிடத்தை ஏற்பாடு செய்யும், அந்த நேரத்தில் தேவனுடைய மாம்சமும் அவருடைய ஆவியும் ஒன்றாயிருக்கின்றன என்றும், அவருடைய மாம்சத்தால் தவறு செய்ய முடியாது என்றும், அவருடைய ஆவி இன்னும் முற்றிலும் மாசற்றது என்றும் மக்கள் அறிந்து கொள்வார்கள். இறுதியில், ஒருவர் அதிகமாகவோ அல்லது ஒருவர் குறைவாகவோ அல்ல ஜீவனிற்குள் வரும் அனைவரையும் அவர் தம்முடைய ராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்வார். ஜீவனிற்குள் வராத மரித்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சாத்தானின் குகையில் தள்ளப்படுவார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஜீவனிற்குள் வந்திருக்கிற ஒருவரா நீர்?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 545

தேவன் இப்போது ஒரு குறிப்பிட்ட ஜனக்குழுவை பெற விரும்புகிறார். அவருடன் ஒத்துழைக்க முயற்சிப்பவர்கள், அவருடைய கிரியைக்கு கீழ்ப்படியக்கூடியவர்கள், தேவன் பேசும் வார்த்தைகள் உண்மை என்று விசுவாசிப்பவர்கள், தேவனின் தேவைகளை கடைபிடிப்பவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு; அவர்கள் தங்களது இருதயங்களில் உண்மையான புரிதலைக் கொண்டவர்கள், அவர்கள் தான் பூரணப்படுத்தப்படக்கூடியவர்கள், அவர்கள் தவிர்க்க முடியாமல் பரிபூரணத்தின் பாதையில் நடக்க முடியும். தேவனின் கிரியையைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதவர்கள், தேவனின் வார்த்தைகளைப் புசித்துக் குடிக்காதவர்கள், அவருடைய வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தாதவர்கள், மற்றும் தேவனின் மீது தங்களது இருதயங்களில் எந்த அன்பும் இல்லாதவர்கள் பரிபூரணமாக்கப்பட முடியாதவர்கள் ஆவர். மாம்சத்தில் வந்த தேவனை சந்தேகிப்பவர்கள் அவரைப் பற்றிய நிச்சயமற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவருடைய வார்த்தைகளை ஒருபோதும் தீவிரமாக கருத்தில் கொள்லாமல் எப்போதும் அவரை வஞ்சிக்கிறவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள் மற்றும் சாத்தானுக்குச் சொந்தமானவர்கள் ஆவார்கள்; அத்தகையவர்களை பரிபூரணப்படுத்த வழியே இல்லை.

நீ பரிபூரணப்படுத்தப்பட்டவனாக இருக்க விரும்பினால், நீ முதலில் தேவனால் நேசிக்கப்படவேண்டும். ஏனென்றால், அவர்தாம் நேசிப்பவர்களையும் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களையும் அவர் பரிபூரணப்படுத்துகிறார். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் நீ இருக்க விரும்பினால், அவருடைய கிரியையைக்கு கீழ்ப்படியும் ஒரு இருதயம் உன்னிடத்தில் இருக்க வேண்டும், நீ சத்தியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும், சகலத்திலும் தேவனின் பரிசோதனை இருப்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். நீ செய்கிற அனைத்தும் தேவனின் பரிசோதனைக்கு உட்பட்டதா? உனது நோக்கம் சரியானதா? உனது நோக்கம் சரியாக இருந்தால், தேவன் உன்னைப் பாராட்டுவார்; உனது நோக்கம் தவறாக இருந்தால், உனது இருதயம் நேசிப்பது தேவனை அல்ல, மாம்சத்தையும் சாத்தானையும் என்பதை இது காட்டுகிறது. ஆகையால், சகலத்திலும் தேவனின் பரிசோதனையை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாக நீ ஜெபத்தைப் பயன்படுத்த வேண்டும். நீ ஜெபிக்கும்போது, நான் உனக்கு முன்னால் நேரில் நிற்கவில்லை என்றாலும், பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் இருக்கிறார், அது நானும், நீ ஜெபிக்கிற தேவனுடைய ஆவியானவர் ஆகியோருமே. இந்த மாம்சத்தை நீ ஏன் நம்புகிறாய்? தேவனின் ஆவியானவரை அவர் கொண்டிருப்பதால் நீ நம்புகிறாய். இந்த மனிதன் தேவனின் ஆவியினை கொண்டிருக்காமல் இருந்தால் நீ அவரை நம்புவாயா? இந்த மனிதனை நீ நம்பும்போது, நீ தேவனின் ஆவியை நம்புகிறாய். இந்த மனிதனுக்கு நீ பயப்படும்போது, நீ தேவனின் ஆவிக்கு பயப்படுகிறாய். தேவனின் ஆவியின் மீதான நம்பிக்கை இந்த மனிதன் மீதான நம்பிக்கை, இந்த மனிதனின் மீதான நம்பிக்கை தேவனின் ஆவியின் மீதான நம்பிக்கையும் ஆகும். நீ ஜெபிக்கும்போது, தேவனுடைய ஆவி உன்னிடத்தில் இருப்பதையும், தேவன் உனக்கு முன்பாக இருப்பதையும் உணர்கிறாய். ஆகவே, நீ அவருடைய ஆவியிடம் ஜெபிக்கிறாய். இன்று, பெரும்பாலான ஜனங்கள் தங்களது செயல்களை தேவனின் முன் கொண்டுவர மிகவும் பயப்படுகிறார்கள்; நீ அவருடைய மாம்சத்தை ஏமாற்றும்போது, அவருடைய ஆவியானவரை நீ ஏமாற்ற முடியாது. தேவனின் பரிசோதனையைத் தாங்க முடியாத எந்தவொரு விஷயமும் சத்தியத்துடன் முரண்படுகின்றன. அவை ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்; இல்லையெனில் அது தேவனுக்கு எதிராக பாவம் செய்வதாகும். ஆகவே, நீ ஜெபிக்கும்போதும், பேசும்போதும், உன் சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படும்போதும், உன் கடமையைச் செய்யும்போதும், உன் தொழிலை கவனிக்கும்போதும், எல்லா நேரங்களிலும் உன் இருதயத்தை தேவனுக்கு முன்பாக வைக்க வேண்டும். உன் செயல்பாட்டை நீ நிறைவேற்றும்போது, தேவன் உன்னுடன் இருக்கிறார், உனது நோக்கம் சரியானது மற்றும் தேவனின் வீட்டின் பணிக்காக நீ இருக்கும் வரை, நீ செய்யும் அனைத்தையும் அவர் ஏற்றுக்கொள்வார்; உனது செயல்பாட்டை நிறைவேற்ற நீ உண்மையிலேயே உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீ ஜெபிக்கும்போது, உன் இருதயத்தில் தேவன்மீது அன்பு வைத்திருந்தால், தேவனின் கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் பரிசோதனையை நாடினால், இவை உனது நோக்கமாக இருந்தால், உனது ஜெபங்கள் பலனளிக்கும். உதாரணமாக, நீ கூட்டங்களில் ஜெபிக்கும்போது, உனது இருதயத்தைத் திறந்து தேவனிடம் ஜெபம் செய்து, பொய்யைப் பேசாமல் உனது இருதயத்தில் இருப்பதை அவரிடம் கூறினால், உனது ஜெபங்கள் நிச்சயமாக பலனளிக்கும். உனது இருதயத்தில் தேவனை நீ ஊக்கமாக நேசிக்கிறாயானால், தேவனுக்கு ஆணையிடுவித்துக்கொள்: “வானத்திலும் பூமியிலும் சகலத்திலும் இருக்கும் தேவனே, நான் உம்மிடம் ஆணையிடுவித்துக்கொள்கிறேன்: உம்முடைய ஆவியானவர் நான் செய்யும் எல்லாவற்றையும் ஆராய்ந்து, எல்லா நேரங்களிலும் என்னைப் பாதுகாத்து கவனித்துக்கொள்வதோடு, உம்முடைய சமூகத்தில் நான் நிற்கும்படியாக நான் செய்யும் எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணும். என் இருதயம் எப்போதாவது உம்மை நேசிப்பதை நிறுத்திவிட்டாலோ அல்லது அது எப்போதாவது உமக்குத் துரோகம் செய்தாலோ என்னை கடுமையாக சிட்சித்து சபித்துவிடும். இந்த உலகத்திலோ அல்லது அடுத்த உலகத்திலோ என்னை மன்னிக்க வேண்டாம்!” அத்தகைய ஆணையிடுவித்துக்கொள்ள உனக்கு தைரியம் இருக்கிறதா? நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ தைரியமில்லாதவன் என்பதையும், நீ இன்னும் உன்னையே நேசித்துக்கொண்டிருக்கிறாய் என்பதையும் இது காட்டுகிறது. இந்த தீர்மானம் உன்னிடம் உள்ளதா? இது உண்மையிலேயே உனது தீர்மானமாக இருந்தால், நீ இந்த ஆணையைச் செய்துகொள்ள வேண்டும். அத்தகைய ஆணையைச் செய்துகொள்ள உனக்கு தீர்மானம் இருந்தால், தேவன் உனது தீர்மானத்தை நிறைவேற்றுவார். நீ தேவனிடம்ஆணையிடுவித்துக்கொள்ளும்போது, அவர்அதற்குச் செவிகொடுக்கிறார். உன் ஜெபத்தின் அளவையும் உனது கைக்கொள்ளுதலையும் பொறுத்து நீ பாவமுள்ளவனா அல்லது நீதிமானா என்பதை தேவன் தீர்மானிக்கிறார். இது இப்போது உன்னை பரிபூரணப்படுத்துவதற்கான செயல்முறையாகும். மேலும், நீ பரிபூரணமாக்கப்படுவதில் உனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால், நீ செய்யும் எல்லாவற்றையும் தேவனின் முன்பாகக் கொண்டு வந்து அவருடைய பரிசோதனையை ஏற்றுக்கொள்வாய்; நீ ஏதாவது மூர்க்கத்தனமான கலகத்தை செய்தால் அல்லது நீதேவனுக்குத் துரோகம் செய்தால், அவர் உனது ஆணையை நிறைவேற்றுவார், இதனால் உனக்கு என்ன நேர்ந்தாலும், அது அழிவோ சிட்சிப்போ எதுவாக இருந்தாலும், இது உன் சொந்த செயலாகும். நீஆணையிடுவித்துக்கொண்டாய், எனவே, நீ அதைக் கடைப்பிடிக்க வேண்டும். நீ ஆணையிடுவித்துக்கொண்டாலும், அதைக் கடைப்பிடிக்காவிட்டால், நீ அழிவை அனுபவிப்பாய். ஆணையிட்டுக்கொண்டது உன்னுடையது என்பதால், தேவன் உன் உறுதிமொழியை நிறைவேற்றுவார். சிலர் ஜெபித்த பிறகு பயந்து, “எல்லாம் முடிந்துவிட்டது! துஷ்பிரயோகம் செய்வதற்கான என் வாய்ப்பு போய்விட்டது; பொல்லாத காரியங்களைச் செய்வதற்கான என் வாய்ப்பு போய்விட்டது; என் உலக ஏக்கங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது!” என புலம்புகிறார்கள். இந்த ஜனங்கள் இன்னமும் உலகப்பற்றையும் பாவத்தையும் நேசிக்கிறார்கள். அவர்கள் அழிவை அனுபவிப்பது உறுதி.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களை பரிபூரணமாக்குகிறார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 546

தேவனை விசுவாசிப்பவனாக இருப்பதன் அர்த்தம், நீ செய்யும் அனைத்தும் அவர் முன் கொண்டுவரப்பட்டு அவருடைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீ செய்வதை தேவனின் ஆவியானவரின் முன் கொண்டுவர முடியும். ஆனால், தேவனின் மாம்சத்திற்கு முன் அல்ல. இது அவருடைய ஆவியானவரால் நீ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. தேவனுடைய ஆவியானவர் யார்? தேவன் சாட்சி கூறும் மனிதர் யார்? அவர்கள் இருவரும் ஒருவரே அல்லவா? பெரும்பாலான ஜனங்கள் அவர்கள் இரு வெவ்வேறானவர்களாக காண்கிறார்கள். தேவனின் ஆவியானவரை நம்புவதே தேவனின் ஆவியானவர் என்றும், தேவன் சாட்சியம் அளிப்பவர் வெறுமனே ஒரு மனிதரே என்றும் காண்கிறார்கள். ஆனால் நீ தவறாக நினைக்கவில்லையா? இந்த மனிதர் யாருடைய சார்பாக செயல்படுகிறார்? தேவனின் மாம்சத்தை அறியாதவர்களுக்கு ஆவிக்குரிய புரிதல் இருப்பதில்லை. தேவனின் ஆவியானவரும் அவருடைய மாம்சமும் ஒன்றே ஆகும். ஏனென்றால், தேவனின் ஆவியானவர் மாம்சத்தில் உருவானார். இந்த மனிதர் உனக்கு இரக்கமற்றவராக இருந்தால், தேவனின் ஆவியானவர் தயவு காட்டுவாரா? நீ குழப்பமடையவில்லையா? இன்று, தேவனின் பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாத அனைவருமே அவருடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது, மேலும் தேவனின் மாம்சத்தை அறியாதவர்கள் பரிபூரணப்படுத்தப்பட முடியாது. நீ செய்யும் எல்லாவற்றையும் பார், அதை தேவனின் முன் கொண்டுவர முடியுமா என்று பார். நீ செய்யும் எல்லாவற்றையும் தேவனின் முன் கொண்டு வர முடியாவிட்டால், நீ ஒரு பொல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. பொல்லாதவர்கள் பரிபூரணப்படுத்தப்பட முடியுமா? நீ செய்யும் அனைத்தும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு நோக்கமும், ஒவ்வொரு எதிர்வினையும் தேவனின் முன்பாகக் கொண்டுவரப்பட வேண்டும். உன் அன்றாட ஆவிக்குரிய ஜீவிதம்—உன் ஜெபங்கள், தேவனுடனான உனது நெருக்கம், தேவனுடைய வார்த்தைகளை நீ எப்படி புசித்துக் குடிக்கிறாய், உனது சகோதர சகோதரிகளுடனான உனது ஐக்கியம், திருச்சபைக்குள் உனது ஜீவிதம்—மற்றும் உனது ஊழியத்துக்கான பங்காளித்துவம் ஆகியவை தேவனுக்கு முன்பாக அவருடைய பரிசோதனைக்காக கொண்டு வரப்படலாம். இதுபோன்ற நடைமுறையே ஜீவிதத்தில் வளர்ச்சியை அடைய உதவும். தேவனின் பரிசோதனையை ஏற்றுக்கொள்வதற்கான செயல்முறை சுத்திகரிப்பு செயல்முறையாகும். தேவனின் பரிசோதனையை நீ எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்ள முடியுமோ, அவ்வளவு அதிகமாக நீ சுத்திகரிக்கப்படுகிறாய், தேவனின் விருப்பத்திற்கு இணங்க நீ அதிகமாக இருக்கிறாய், இதனால் நீ துஷ்பிரயோகத்திற்கு ஆளாக மாட்டாய். உனது இருதயம் அவருடைய சமூகத்தில் ஜீவிக்கும். அவருடைய பரிசோதனையை நீ எவ்வளவு அதிகமாக ஏற்றுக்கொள்கிறாயோ, அந்த அளவிற்கு சாத்தானின் அவமானப்படுத்தும் திறனும் மாம்சத்தை கைவிடுவதற்கான உன் திறனும் அதிகம். எனவே, தேவனின் பரிசோதனையை ஏற்றுக்கொள்வது ஜனங்கள் பின்பற்ற வேண்டிய கைக்கொள்ளுதலின் பாதையாகும். நீ என்ன செய்தாலும், உன் சகோதர சகோதரிகளுடன் உரையாடும்போது கூட, நீ உன் செயல்களை தேவனின் முன்பாகக் கொண்டு வந்து அவருடைய பரிசோதனையை நாடலாம், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நோக்கமாகக் கொள்ளலாம்; இது நீ கடைப்பிடிப்பதை மிகவும் சரியானதாக மாற்றும். நீ செய்யும் அனைத்தையும் தேவனின் முன்பாகக் கொண்டு வந்து தேவனின் பரிசோதனையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நீ தேவனின் சமூகத்தில் ஜீவிக்கும் ஒருவராக இருக்க முடியும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களை பரிபூரணமாக்குகிறார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 547

தேவனைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஒருபோதும் தேவனுக்குக் முழுமையாகக் கீழ்ப்படிய முடியாது. இது போன்றவர்கள் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள். அவர்கள் மிகவும் மூர்க்கமானவர்கள், அவர்களில் அதிகமான கலகங்கள் உள்ளன. எனவே, அவர்கள் தேவனிடமிருந்து தங்களைத் தூர விலக்குகிறார்கள், அவருடைய பரிசோதனையை ஏற்கத் தயாராக இல்லை. இது போன்றவர்களை எளிதில் பூரணப்படுத்த முடியாது. சிலர் தேவனின் வார்த்தைகளை எப்படி புசித்துக் குடிக்கிறார்கள் என்பதையும், தேவனின் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்பவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகின்ற தேவனுடைய வார்த்தைகளின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளுகிறார்கள், ஒத்துப்போகாத பகுதிகளைப் புறக்கணிக்கிறார்கள். இது தேவனுக்கு எதிரான மிகவும் அப்பட்டமான கலகமும் எதிர்ப்பும் அல்லவா? யாராவது தேவனைப் பற்றி ஒரு சிறிய புரிதலைக் கூட பெறாமல் பல ஆண்டுகளாக நம்பினால், அவர்கள் ஒரு அவிசுவாசி. தேவனின் பரிசோதனையை ஏற்கத் தயாராக இருப்பவர்கள் அவரைப் பற்றிய புரிதலைத் தொடங்குபவர்கள், அவருடைய வார்த்தைகளை ஏற்கத் தயாராக இருப்பவர்கள் ஆவர். அவர்கள் தான் தேவனின் சுதந்தரத்தையும் ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள், அவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தங்கள் இருதயத்தில் அவருக்கு இடம் அளிக்காதவர்களை தேவன் சபிக்கிறார், அத்தகையவர்களை அவர் சிட்சிக்கிறார் மற்றும் கைவிடுகிறார். நீ தேவனை நேசிக்கவில்லை என்றால் அவர் உன்னை கைவிடுவார், நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால், தேவனின் ஆவியானவர் உன்னை கைவிடுவார் என்று நான் உறுதியளிக்கிறேன். நீ நம்பவில்லை என்றால் முயற்சி செய்துபார்! இன்று நீ கடைபிடிக்க வேண்டிய பாதையை நான் தெளிவுபடுத்துகிறேன், ஆனால் நீ அதை கடைபிடிப்பாயா என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும். நீ அதை நம்பவில்லை என்றால், நீ அதை கடைபிடிக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் செயல்படுகிறாரா இல்லையா என்பதை நீயே காண்பாய்! நீ தேவனைப் புரிந்துகொள்வதைத் தொடரவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியைச் செய்ய மாட்டார். தம்முடைய வார்த்தைகளைப் பின்தொடர்ந்து அவற்றைப் பொக்கிஷமாகக் கருதுபவர்களில் தேவன் கிரியைச் செய்கிறார். தேவனின் வார்த்தைகளை நீ எவ்வளவு அதிகமாக பொக்கிஷமாகக் கருதுகிறாயோ, அவ்வளவு அதிகமாக அவருடைய ஆவி உன்னிடத்தில் கிரியைச் செய்வார். ஒரு மனிதன் தேவனின் வார்த்தைகளை எவ்வளவு அதிகமாகப் பொக்கிஷமாகக் கருதுகிறானோ, அவ்வளவு அதிகமாக தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். தம்மை உண்மையாக நேசிப்பவர்களை தேவன் பரிபூரணப்படுத்துகிறார். மேலும், அவருக்கு முன்பாக எவருடைய இருதயங்கள் அமைதியாக இருக்கின்றனவோ அவர்களை அவர் பரிபூரணப்படுத்துகிறார். தேவனின் எல்லா கிரியைகளையும் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் அறிவொளியைப் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் இருப்பைப் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் கவனிப்பையும் பாதுகாப்பையும் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் வார்த்தைகள் எவ்வாறு உன் யதார்த்தமாகின்றன, உன் ஜீவிதத்தை எவ்வாறு வழங்குகின்றன என்பதைப் பொக்கிஷமாகக் கொள்வது என இவை அனைத்தும் தேவனின் இருதயத்துடன் சிறந்தவையாக இசைந்து இருக்கின்றன. தேவனின் கிரியையை நீ பொக்கிஷமாகக் கருதினால், அதாவது, அவர் உன்மீது செய்த எல்லா கிரியைகளையும் நீ பொக்கிஷமாகக் கருதினால், அவர் உன்னை ஆசீர்வதிப்பார், உன்னுடைய அனைத்தையும் பெருகச் செய்வார். தேவனின் வார்த்தைகளை நீ பொக்கிஷமாகக் கொள்ளாவிட்டால், அவர் உன்னிடத்தில் செயல்பட மாட்டார். ஆனால் அவர் உன் விசுவாசத்திற்காக அற்பமான கிருபையை மட்டுமே வழங்குவார், அல்லது மிகக்குறைந்த செல்வத்தையும், உன் குடும்பத்தினரையும் மிகக் குறைந்த பாதுகாப்போடு ஆசீர்வதிப்பார். தேவனின் வார்த்தைகளை உன் யதார்த்தமாக்க நீ முயற்சி செய்ய வேண்டும், மேலும் அவரை திருப்திப்படுத்தவும் அவருடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருக்கவும் முடியும்; அவருடைய கிருபையை அனுபவிக்க நீ வெறுமனே பாடுபடக்கூடாது. தேவனின் கிரியையைப் பெறுவது, பரிபூரணத்தை அடைவது, தேவனுடைய சித்தத்தைச் செய்பவர்களாக மாறுவதை விட விசுவாசிகளுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. இது நீ தொடர வேண்டிய இலக்காக இருக்கிறது.

கிருபையின் யுகத்தில் மனிதன் நாடிய அனைத்தும் இப்போது வழக்கற்றுப் போய்விட்டன, ஏனென்றால், தற்போது உயர்ந்த தரம் வாய்ந்த நாட்டம் உள்ளது; தற்போது நாடப்படுவது அதைவிட மிகவும் உயர்ந்ததாகவும், மேலும் அதிகமாக நடைமுறைக்கு ஏற்றவாரும் உள்ளது. நாடப்படுவது மனிதனுக்குள் என்ன தேவை என்பதை சிறப்பாக பூர்த்தி செய்ய முடியும். கடந்த காலங்களில், தேவன் இன்று ஜனங்கள் மீது கிரியைச் செய்வதைப் போல அப்போது கிரியைச் செய்யவில்லை; அவர் இன்று பேசுவதைப் போல அப்போது அவர்களிடம் பேசவில்லை, அப்போது அவரின் தேவைகள் அவருடைய இப்போதைய தேவைகளைப் போல உயர்ந்தவை அல்ல. தேவன் இந்த விஷயங்களை உன்னிடம் பேசுகிறார் என்பது இப்போது தேவனின் இறுதி நோக்கம் இந்த ஜனக்குழுவில் உன் மீது கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், அதை உன் மைய இலக்காகப் பின்பற்று. நீ சுற்றித் திரிந்து, உன்னை அர்ப்பணிக்கிறாயா, ஒரு செயல்பாட்டைச் செய்கிறாயா, அல்லது தேவனின் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறாயா என்பது முக்கியமல்ல, இந்த குறிக்கோள்களை அடைவதற்கு எப்போதும் நோக்கம் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும், தேவனின் சித்தத்தை பூர்த்தி செய்ய வேண்டும். தேவன் மூலமாக பரிபூரணத்தை நாடுவதில்லை அல்லது ஜீவனுக்குள் பிரவேசிப்பதில்லை என்று யாராவது சொன்னால், மாம்ச அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே அவர்கள் நாடுகிறார்கள் என்றால், அவர்கள் மனிதர்களில் கண்மூடித்தனமானவர்கள். ஜீவிதத்தின் யதார்த்தத்தைத் நாடாதவர்கள், ஆனால், உலகத்தில் நித்திய ஜீவன் மற்றும் பாதுகாப்பை மட்டுமே நாடுவோரும், மனிதர்களில் கண்மூடித்தனமானவர்கள். எனவே, நீ செய்யும் அனைத்தும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்டு பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக செய்யப்பட வேண்டும்.

தேவன் ஜனங்களில் செய்யும் கிரியை அவர்களின் வெவ்வேறு தேவைகளின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்குவதாகும். ஒரு மனிதனின் ஜீவிதம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவாக அது தேவைப்படுகிறது. மேலும், அவ்வளவாக அவர்கள் நாடுகிறார்கள். இந்த கட்டத்தில் உனக்கு எந்த நாட்டமும் இல்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னை கைவிட்டுவிட்டார் என்பதை இது நிரூபிக்கிறது. ஜீவிதத்தைத் தொடங்குபவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்; அத்தகையவர்கள் எப்போதும் நாடுகிறார்கள், எப்போதும் தங்களது இருதயத்தில் ஏங்குகிறார்கள். அத்தகையவர்கள் தற்போது இருப்பது போலுள்ள விஷயங்களில் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒவ்வொரு நிலையும் உன்னில் ஒரு விளைவை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் நீ மனநிறைவுடன் வளர்ந்தால், உனக்கு இனி தேவைகள் இல்லையென்றால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ இனி ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர் உன்னை கைவிடுவார். ஜனங்களுக்கு ஒவ்வொரு நாளும் தேவனின் பரிசோதனை தேவைப்படுகிறது; அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தேவனிடமிருந்து ஏராளமான ஏற்பாடுகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தேவனின் வார்த்தையை புசித்துக் குடிக்காமலும் ஜனங்களால் சமாளிக்க முடியுமா? தேவனின் வார்த்தையை போதுமான அளவு புசிக்கவோ குடிக்கவோ முடியாது என்று யாராவது எப்போதும் உணர்ந்தால், அவர்கள் எப்பொழுதும் அதை நாடுகிறார்கள், அதற்கான பசியும் தாகமும் இருந்தால், பரிசுத்த ஆவியானவர் அவற்றில் எப்போதும் கிரியைச் செய்வார். ஒருவர் எவ்வளவு அதிகமாக ஏங்குகிறாரோ, அவ்வளவு நடைமுறை விஷயங்கள் அவர்களுடைய ஐக்கியத்திலிருந்து வெளிவரக்கூடும். ஒருவர் எவ்வளவு தீவிரமாக உண்மையை நாடுகிறாரோ, அவ்வளவு விரைவாக அவர்கள் தங்களது ஜீவிதத்தில் வளர்ச்சியை அடைகிறார்கள். அது அவர்களை அனுபவத்தில் பணக்காரர்களாகவும், தேவனுடைய வீட்டில் வசிப்பவர்களாகவும் ஆக்குகிறது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களை பரிபூரணமாக்குகிறார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 552

நீ பரிபூரணப்படுத்தப்பட வேண்டுமானால், சந்திக்கப்பட வேண்டிய கட்டளை விதிகள் உள்ளன. உனது தீர்மானம், உனது பொறுமை மற்றும் உனது மனசாட்சி மூலம், மற்றும் உனது தேடல் மூலம், நீ வாழ்க்கையை அனுபவித்து தேவ சித்தத்தை திருப்திசெய்ய முடியும். இது உன் நுழைவு, மற்றும் இந்த விஷயங்கள் பரிபூரணத்திற்கான பாதையில் தேவைப்படுவன. பரிபூரணப்படுத்தும் கிரியையை எல்லா ஜனங்களிடத்தும் நடத்தலாம். தேவனைத் தேடும் யாரொருவரும் பரிபூரணப்படுத்தப்படலாம். அவருக்கு பரிபூரணப்படக்கூடிய வாய்ப்பும் தகுதியும் உள்ளன. ஒருவர் பரிபூரணப்படுத்தப்படலாமா என்பது அவர் எதைத் தேடுகிறார் என்பதைப் பொறுத்தே உள்ளது. சத்தியத்தை நேசிக்கும் மற்றும் சத்தியத்தின்படி வாழக் கூடிய ஜனங்களை உறுதியாகப் பரிபூரணப்படுத்தப்பட முடியும். சத்தியத்தை நேசிக்காத மக்கள் தேவனால் பாராட்டப்படுவதில்லை; தேவன் கோரும் வாழ்க்கையை அவர்கள் கொண்டிருக்கவில்லை, மேலும் அவர்களைப் பரிபூரணப்படுத்த முடியாது. பரிபூரணப்படுத்தும் கிரியை ஜனங்களை ஆதாயப்படுத்தவே தவிர சாத்தானோடு போரிடும் வேலையின் ஒரு பகுதி அல்ல; ஜெயங்கொள்ளும் கிரியை சாத்தானிடம் போரிடுவதற்காக மட்டுமே, அதாவது மனிதனை ஜெயங்கொண்டு சாத்தானைத் தோற்கடிப்பது ஆகும். ஜெயங்கொள்ளும் வேலையே முதன்மையான வேலை, புத்தம்புதிய வேலை, காலங்கள் தோறும் ஒருபோதும் நடைபெறாத வேலை. இந்தக் காலகட்டத்தின் கிரியை முதன்மையாக அனைத்து மக்களையும் ஜெயங்கொண்டு சாத்தானைத் தோற்கடிப்பதே என்று ஒருவர் கூறலாம். ஜனங்களைப் பரிபூரணப்படுத்தும் வேலை—இது புதிய வேலை அல்ல. மாம்சத்தில் தேவனின் கிரியையின் போது அனைத்து கிரியையின் இலக்கின் மிகச்சிறந்த தன்மை ஜனங்களை ஜெயங்கொள்வதே. இது கிருபையின் காலத்தைப் போன்றது. அப்போது முக்கிய கிரியை சிலுவைமரணத்தின் மூலம் அனைத்து மனிதகுலத்தையும் மீட்பதாக இருந்தது. “ஜனங்களை ஆதாயப்படுத்துதல்” மாம்சத்தில் நடைபெற்ற கூடுதல் கிரியையாக இருந்தது மேலும் அது சிலுவைமரணத்திற்குப் பின்னரே நடைபெற்றது. இயேசு வந்து தம் வேலைகளை செய்தபோது, அவரது இலக்கு முக்கியமாகத் தமது சிலுவைமரணத்தைப் பயன்படுத்தி மரணத்தின் அடிமைத்தனத்தையும் பாதாளத்தையும் மேற்கொள்ளுவதே—அதாவது சாத்தானைத் தோற்கடிப்பது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னரே பரிபூரணத்தின் பாதையை ஒவ்வொரு படியாக பேதுரு வந்தடைந்தார். இயேசு கிரியை செய்துகொண்டு இருந்தபோது, அவரைப் பின்பற்றியவர்களுள் பேதுருவும் இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவர் பரிபரிபூரணம் அடையவில்லை. மாறாக, இயேசு தமது வேலைகளை முடித்த பின்னரே பேதுரு படிப்படியாக சத்தியத்தைப் புரிந்துகொண்டு அதன்பின்னர் பரிபரிபூரணம் அடைந்தார். ஒரு குறுகிய காலத்தில் கிரியையின் ஒரு முக்கிய, இறுதிக் கட்டத்தை முடிக்கவே தேவன் மாம்சத்தில் அவதாரமாக பூமிக்கு வந்தாரே தவிர, ஜனங்கள் மத்தியில் நீண்ட காலம் வாழ்ந்து அவர்களைப் பரிபூரணப்படுத்தும் எண்ணத்தோடு அல்ல. அவர் அந்த வேலையைச் செய்யவில்லை. மனிதன் முற்றிலுமாக பரிபூரணம் அடையும் வரை தன் கிரியை முடிக்கக் காத்திருக்கவில்லை. அது அவரது அவதாரத்துக்கான இலக்கும் முக்கியத்துவமும் இல்லை. அவர் மனிதகுலத்தை இரட்சிக்கும் குறுகிய கால வேலைக்கே வருகிறார், மனித குலத்தைப் பரிபூரணப்படுத்தும் நீண்ட கால வேலையைச் செய்ய வரவில்லை. மனித குலத்தை இரட்சிக்கும் வேலை பிரதிநிதித்துவமானது, ஒரு புதிய காலத்தைத் தொடங்கும் திறன் கொண்டது. அதை ஒரு குறுகிய கால அளவில் முடித்துவிடலாம். ஆனால் மனிதகுலத்தை பரிபூரணப்படுத்துவதற்கு மனிதனை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேலே கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது; இத்தகைய வேலைக்கு நீண்ட காலம் தேவைப்படும். இந்த வேலையை தேவ ஆவியானவர்தான் செய்ய வேண்டும், ஆனால் அது மாம்சத்தில் செய்யப்பட்ட வேலையின் போது பேசப்பட்ட சத்தியத்தின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. அவரது இலக்கான மனிதகுலத்தை பரிபூரணப்படுத்த மேலும் அது நீண்ட கால மேய்ப்பு வேலைக்காக அவரது அப்போஸ்தலர்களை எழுப்பி செய்யப்படுகிறது. தேவ அவதாரமானவர் இந்த வேலையைச் செய்யவில்லை. மக்கள் புரிந்து கொள்வதற்காக அவர் வாழ்க்கை முறையைப் பற்றி மட்டுமே பேசுகிறார், மேலும் அவர் மனித குலத்துக்கு சத்தியத்தை மட்டுமே அளிக்கிறார், சத்தியத்தைக் கடைபிடிக்க மனிதனோடு தொடர்ந்து இருக்கவில்லை, ஏனெனில் அது அவரது ஊழியத்துக்குள் வரவில்லை. ஆகவே, மனிதன் முற்றிலுமாக சத்தியத்தைப் புரிந்து கொண்டு சத்தியத்தை முழுமையாக பெறும் வரையில் அவர் மனிதனோடு இருக்கப்போவதில்லை. மனிதன் முறையாக தேவனிடத்தில் நம்பிக்கை என்ற சரியான பாதையில் நுழையும் போது, மனிதன் பரிபூரணப்படும் சரியான பாதையில் காலடி வைக்கும்போது மாம்சத்தில் அவரது கிரியை முடிவடைகிறது. அவர் முற்றிலுமாக சாத்தானை முறியடித்து உலகத்தை வெற்றி காணும்போதும் நிச்சயமாக இது நிகழும். அந்த நேரத்தில் மனிதன் முடிவாக சத்தியத்துக்குள் நுழைந்துவிட்டானா என்று அவர் கவலைப்படுவதில்லை, அல்லது மனிதனின் வாழ்க்கை பெரிதா அல்லது மிகச்சிறியதா என்றும் அவர் கவலைப்படுவதில்லை. மாம்சத்தில் இருக்கும் போது இவற்றில் ஒன்றையும் அவர் நிர்வகிப்பது இல்லை; தேவ அவதாரத்தின் ஊழியத்திற்குள் இவை ஒன்றும் இல்லை. அவர் எண்ணிய வேலையை அவர் முடித்தவுடன், மாம்சத்தில் அவர் தமது வேலையை முடித்துவிடுவார். ஆகவே, தேவ அவதாரம் செய்யும் ஒரே வேலை என்னவெனில் ஆவியால் நேரடியாக செய்யமுடியாத வேலையே. மேலும், அது இரட்சிப்பு என்னும் குறுகிய கால கிரியை, நீண்ட கால அடிப்படையில் பூமியில் அவர் செய்யப்போகிற காரியம் அல்ல.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 553

என்ன வேலை செய்யப்பட வேண்டுமோ அதற்கு இணங்க, இந்த வேலை உங்கள் மத்தியில் உங்களிடம் செய்யப்படுகிறது. இந்த ஜனங்களை ஜெயங்கொண்ட பின்னர், ஒரு குழுவினரான ஜனங்கள் பரிபூரணப்படுத்தப்படுவார்கள். ஆகவே, தற்போதைய அதிக அளவிலான கிரியையும் உங்களைப் பரிபூரணப்படுத்தும் இலக்கிற்கான தயாரிப்பாகவே உள்ளது, ஏனெனில் பரிபூரணப்படுத்தக் கூடிய பலர் சத்தியத்திற்காக தாகம் உள்ளவர்களாக இருக்கின்றனர். ஜெயங்கொள்ளும் வேலை உங்களிடம் நடைபெற வேண்டுமானால் மற்றும் அதன்பின்னர் கூடுதல் வேலை எதுவும் செய்யப்படாவிட்டால், அதன்பின் சத்தியத்திற்காக ஏங்குகிற யாரோ அதை அடைய முடியாத நிலையாக இருக்கும் அல்லவா? தற்போதைய கிரியை மக்களைப் பின்னர் பரிபூரணப்படுத்தும் பாதையைத் திறப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. என்னுடைய கிரியை ஜெயங்கொள்ளும் வேலையாக மட்டுமே இருப்பினும், நான் பேசுகின்ற வாழ்க்கை முறை மக்களைப் பின்னர் பரிபூரணப்படுத்துவதற்கான தயாரிப்பாக உள்ளது. ஜெயங்கொள்வதற்குப் பின்னர் வரும் வேலை மக்களைப் பரிபூரணப்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது, மேலும் பரிபூரணப்படுத்தும் வேலைக்கு ஓர் அடித்தளத்தை அமைப்பதற்காகவே ஜெயங்கொள்ளுதல் செய்யப்படுகிறது. ஜெயங்கொண்ட பின்னரே மனிதனைப் பரிபூரணப்படுத்த முடியும். இப்போது, முக்கிய பணி ஜெயங்கொள்வதே; பின்னர், சத்தியத்தைத் தேடி அதற்காக ஏங்குபவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவார்கள். பரிபூரணப்படுவது மக்களின் செயலாற்றும் நுழைவு அம்சங்களை உள்ளடக்கியது: உனக்கு தேவனை நேசிக்கும் ஒரு இருதயம் இருக்கிறதா? இந்தப் பாதையில் நடந்து வந்த உனது அனுபவத்தின் ஆழம் எதுவாக இருந்துவருகிறது? தேவன் பேரில் உனக்குள்ள அன்பு எவ்வளவு தூய்மையானது? சத்தியத்தை நீ எவ்வளவு தூரம் சரியாகக் கடைபிடிக்கிறாய்? பரிபூரணப்பட, ஒருவருக்கு மனிதகுலத்தின் அனைத்து அம்சங்கள் பற்றிய அடிப்படை அறிவும் தேவை. இது ஒரு அடிப்படையான தேவை. ஜெயங்கொண்ட பின்னர் பரிபூரணப்படுத்தப்பட முடியாத யாவரும் சேவைப் பொருட்கள் ஆவார்கள் மேலும் இறுதியாக கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டு மேலும் இன்னும் பாதாளத்தில் விழுவார்கள், ஏனெனில் உன்மனநிலை மாறவில்லை மேலும் நீ இன்னும் சாத்தானுக்கு உரியவனாகவே இருக்கிறாய். ஒரு மனிதன் பரிபூரணத்துக்கான இயல்புகளைக் கொண்டிராவிட்டால், அவன் பயனற்றவன்—அவன் வீணானவன், ஒரு முட்டாள், நெருப்பின் சோதனையில் நிற்கமுடியாத ஏதோ ஒன்று! இப்போது தேவன் பேரில் உனக்குள்ள அன்பு எவ்வளவு பெரியது? உன் மேல் உனக்குள்ள வெறுப்பு எவ்வளவு பெரியது? உண்மையில் சாத்தானை நீ எவ்வளவு தூரம் ஆழமாக அறிவாய்? நீங்கள் உங்கள் முடிவை வலிமைப்படுத்தி உள்ளீர்களா? உங்கள் மனித சமுதாயத்துக்குள் உங்கள் வாழ்க்கை நன்கு முறைப்படுத்தப்பட்டுள்ளதா? உங்கள் வாழ்க்கை மாறியுள்ளதா? நீங்கள் ஒரு புதிய வாழ்க்கையை வாழ்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைக் கண்ணோட்டம் மாறியுள்ளதா? இந்த விஷயங்கள் மாறவில்லை என்றால், நீ பின்வாங்க மாட்டாய் என்றாலும் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியாது; மாறாக, நீ ஜெயங்கொள்ளப்பட்டு மட்டுமே இருக்கிறாய். உன்னை சோதிக்கும் நேரம் எது, நீ சத்தியம் இல்லாமல் இருக்கிறாய், உன் மானிடத்தன்மை அசாதாரணமானதாக இருக்கும், மேலும் நீ ஒரு பொதி சுமக்கும் மிருகத்தைவிடக் கீழாக இருப்பாய். உன்னுடைய ஒரே சாதனை ஜெயங்கொள்ளப்படுதலே—என்னால் ஜெயங்கொள்ளப்பட்ட ஒரு வெறும் பொருளே நீ. ஒருமுறை எஜமானனின் சாட்டையை ருசிபார்த்த கழுதை, ஒவ்வொரு முறை எஜமானனை பார்க்கும் போதும் அச்சத்தோடேயே நடந்துகொள்ளும். அது போன்றே ஜெயங்கொள்ளப்பட்ட வெறும் கழுதைதான் நீ. ஒரு நபரிடம் அந்த நேர்மறை அம்சங்கள் இல்லாமல் இருந்தால் மேலும் அதற்குப் பதிலாக செயலற்றவனாகவும் அச்சமுள்ளவனாகவும், கோழையும் எல்லாவற்றிலும் தயங்கிறவனாகவும், எது ஒன்றையும் தெளிவாக அறிய முடியாதவனாகவும், சத்தியத்தை ஏற்க முடியாதவனாகவும், கடைபிடிக்க ஒரு பாதையற்றவனாகவும், மேலும் அதற்கு மேலாக தேவனை நேசிக்கும் ஒரு இருதயம் இல்லாதவனாகவும்—தேவனை எப்படி நேசிப்பது ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது அல்லது எவ்வாறு ஒரு உண்மையான நபராக இருப்பது—என்ற புரிதல் இல்லாத ஒரு நபராக இருந்தால்—எவ்வாறு இத்தகைய நபர் தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியும்? உன் வாழ்க்கை மதிப்பற்றது மற்றும் நீ அடக்கப்பட்ட ஒரு கழுதை மட்டுமே என்று இது காட்டும். நீ ஜெயங்கொள்ளப்படுவாய், ஆனால் அது, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைக் கைவிட்டு அதன் ஆட்சிக்கு அடங்க மறுத்துவிட்டாய் என்று மட்டுமே அர்த்தம்; ஒரு தேவன் இருக்கிறார் என்று நம்புகிறாய், தேவ திட்டத்திற்குக் கீழ்ப்படிய விரும்புகிறாய், மற்றும் முறுமுறுப்புகள் எதுவும் இல்லை என்று அது அர்த்தமாகும். நேர்மறை அம்சங்களைப் பொறுத்த வரையில், தேவ வார்த்தையின் படி வாழ்ந்து தேவனை உன்னால் வெளிப்படுத்த முடியுமா? இந்த அம்சங்களில் ஒன்று கூட உன்னிடம் இல்லை என்றால், நீ தேவனால் ஆதாயப்படுத்தப்படவில்லை என்பது பொருள், மேலும் நீ ஜெயங்கொள்ளப்பட்ட ஒரு கழுதை மட்டுமே. விரும்பத்தக்க ஒன்றும் உன்னிடம் இல்லை, மேலும் பரிசுத்த ஆவி உன்னில் கிரியை செய்யவில்லை. உன் மனிதத்துவம் மிகவும் குறைபாடுள்ளது; உன்னை தேவன் பயன்படுத்துவது சாத்தியமற்றது. நீ தேவனால் அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் நம்பிக்கையற்ற மிருகங்களையும் நடக்கும் சவங்களையும் விட நூறு மடங்கு சிறந்து இருக்க வேண்டும்—இந்த நிலையை அடைபவர்கள் மட்டுமே பரிபூரணப்பட தகுதியுடையவர்கள். மனிதத்துவமும் மனசாட்சியும் கொண்ட ஒருவனே தேவன் பயன்படுத்த தகுதி உள்ளவன். நீங்கள் பரிபூரணப்பட்டால் மட்டுமே மனிதன் என்று கருதப்படுவீர்கள். பரிபூரணமடைந்த மக்களே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள். இத்தகைய மக்கள் மட்டுமே தேவனுக்கு அதிக வலிமையான சாட்சியாக விளங்க முடியும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 554

தேவன் மனுஷனை பரிபூரணப்படுத்தும் பாதை எது? இதில் அடங்கும் அம்சங்கள் எவை? நீ தேவனால் பரிபூரணப்பட விரும்புகிறாயா? நீ அவருடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறாயா? இந்த கேள்விகளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? இதைப் பற்றி பேசுவதற்கான அறிவு உனக்கு இல்லை என்றால், தேவனுடைய கிரியைப் பற்றி உனக்கு இன்னும் தெரியவில்லை, அதாவது நீ பரிசுத்த ஆவியினால் தெளிவூட்டப்படவில்லை என்பதற்கு இதுதான் ஆதாரம். இதை போன்ற ஜனங்களை பரிபூரணப்படுத்தப்படுவதற்கு சாத்தியமில்லை. அதை சிறிதளவு அனுபவிக்க அவர்களுக்கு சிறிதளவு கிருபை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, அது நீண்ட காலம் நீடிக்காது. ஜனங்கள் தேவனின் கிருபையை மட்டுமே அனுபவித்தால், அவர்களை அவரால் பரிபூரணப்படுத்த முடியாது. தங்கள் மாம்சத்தில் சமாதானமும் இன்பமும் இருக்கும் போது, தங்கள் வாழ்க்கை எளிதாகவும், துன்பமோ, துரதிர்ஷ்டமோ இல்லாமல் இருக்கும் போது, தங்கள் முழு குடும்பமும் ஒற்றுமையுடன், சண்டையோ, சர்ச்சையோ இல்லாமல் வாழும் போது, சிலர் திருப்தி அடைகிறார்கள். இது தேவனின் ஆசீர்வாதம் என்று கூட அவர்கள் நம்பலாம். உண்மையில், இது தேவனுடைய கிருபை மட்டுமே. தேவனுடைய கிருபையை அனுபவிப்பதில் மட்டுமே நீங்கள் திருப்தி அடைந்துவிடக் கூடாது. இதுபோன்ற சிந்தனை மிகவும் மோசமானது. நீ ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, ஒவ்வொரு நாளும் ஜெபம் செய்தாலும், உன் ஆவி அதிக இன்பத்தை உணர்ந்தாலும், குறிப்பாக சமாதானமாக இருந்தாலும், இறுதியில் தேவன் மற்றும் அவரது கிரியை பற்றிய உனது அறிவைப் பற்றி பேச உன்னிடம் எதுவும் இல்லை என்றால், எதையும் அனுபவித்திருக்கவில்லை என்றால், நீ தேவனுடைய வார்த்தையை எவ்வளவு புசித்திருந்தாலும், குடித்திருந்தாலும், நீ உணர்வதெல்லாம் ஆவிக்குரிய சமாதானமும் இன்பமுமாக இருந்தாலும், உன்னால் போதுமான அளவு அனுபவிக்க முடியாது என்றிருப்பினும் தேவனுடைய வார்த்தை ஒப்பிடுவதற்கு அப்பால் இனிமையானதாக இருக்கிறது, அனால் உனக்கு ஏதாகிலும் தேவனுடைய வார்த்தைகளை பற்றிய எந்த நடைமுறையான அனுபவமும் இல்லையென்றால் மற்றும் அவருடைய வார்த்தைகளைக் குறித்த உண்மை முற்றிலும் தெரியவில்லை என்றால், தேவன் மீது வைத்துள்ள இதுபோன்ற விசுவாசத்தின் மூலம் நீ என்ன ஆதாயம் பெற முடியும்? தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சத்தின்படி உன்னால் வாழ முடியவில்லை என்றால், இந்த வார்த்தைகளை புசிப்பதும் குடிப்பதும் மற்றும் உன் ஜெபங்களும் வெறும் மத நம்பிக்கையாக இருக்குமே தவிர வேறு எதுவுமாக இருக்காது. ஜனங்கள் தேவனால் பரிபூரணமாக்கப்படவும் முடியாது, அவரால் ஆதாயப்படுத்தப்படவும் முடியாது. தேவனால் ஆதாயப்படுத்தப்பட்ட ஜனங்கள் சத்தியத்தைப் பின்தொடர்பவர்களாக இருக்கின்றனர். தேவன் ஆதாயப்படுத்தியது மனுஷனுடைய மாம்சத்தையோ, அவனுக்கு சொந்தமான காரியங்களையோ அல்ல, ஆனால் ஆதாயப்படுத்தியது அவனுக்குள் இருக்கும் தேவனுக்கு சொந்தமான பங்கு. இவ்வாறு, தேவன் ஜனங்களை பரிபூரணமடையச் செய்யும் போது, அவர் அவர்களுடைய மாம்சத்தை பரிபூரணமடையச் செய்வதில்லை, ஆனால் அவர்களுடைய இருதயங்களை பரிபூரணமடையச் செய்கிறார், அவர்கள் தங்களுடைய இருதயங்களை தேவனால் ஆதாயப்படுத்தப்பட அனுமதித்தார்கள். அதாவது, தேவன் மனுஷனை பரிபூரணமடையச் செய்கிறார் என்றால் மனுஷனின் இருதயத்தை பரிபூரணமாடையச் செய்கிறார் என்பதே சாரமாகும், இதனால் இந்த இருதயம் தேவனிடம் திரும்பி, அவரை நேசிக்க கூடும்.

மனுஷனின் மாம்சம் அழியக்கூடியது. மனுஷனின் மாம்சத்தை ஆதாயப்படுத்துவதில் தேவனுக்கு எந்த நோக்கமும் இல்லை, ஏனென்றால் அது தவிர்க்க முடியாமல் அழுகி கெட்டுப்போகிறதாகவும், அவருடைய சுதந்தரத்தையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியாததாகவும் இருக்கிறது. மனுஷனின் மாம்சமானது ஆதாயப்படுத்தப்பட்டிருந்தால், மனுஷனின் மாம்சம் மட்டுமே இந்த ஓட்டத்தில் இருந்தால், மனுஷன் பெயரளவில் இந்த ஓட்டத்தில் இருந்தாலும், அவனுடைய இருதயம் சாத்தானுக்கு சொந்தமானதாக இருக்கும். அப்படியானால், ஜனங்கள் தேவனுடைய வெளிப்பாடாக மாற முடியாது என்பது மட்டுமல்லாமல், அவர்கள் அவருக்கு பாரமாகவும் மாறுவார்கள், இதனால் தேவன் ஜனங்களை தேர்ந்தெடுப்பது அர்த்தமற்றதாகிவிடும். தேவன் பரிபூரணப்படுத்த சித்தமுள்ளவர்கள் அனைவரும் அவருடைய ஆசீர்வாதங்களையும் அவருடைய சுதந்தரத்தையும் பெறுவார்கள். அதாவது, அவர்கள் தேவனிடம் உள்ளதை எடுத்துக்கொள்கின்றனர், எனவே அது அவர்களுக்குள் உள்ளவையாக மாறுகின்றன. அவர்களுக்குள் உருவாக்கப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் அவர்களுக்குள் உள்ளன. தேவன் என்னவாக இருந்தாலும், உங்களால் அதையெல்லாம் சரியாக எடுத்துக்கொள்ள முடியும், இதன்மூலம் உங்களால் சத்தியத்தில் வாழ முடியும். இந்த மாதிரியான ஒருவன்தான் தேவனால் பரிபூரணப்பட்டவனாகவும் தேவனால் ஆதாயப்பட்டவனாகவும் இருக்கிறான். இதுபோன்ற ஒருவர் மட்டுமே தேவன் அருளும் ஆசீர்வாதங்களைப் பெற தகுதியுள்ளவனாக இருக்கிறான்:

1. தேவனுடைய முழு அன்பையும் பெறுகிறான்.

2. எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுகிறான்.

3. தேவனுடைய வழிகாட்டுதலைப் பெறுகிறான், தேவனுடைய வெளிச்சத்தில் வாழ்கிறான், தேவனுடைய ஞானத்தைப பெறுகிறான்.

4. தேவன் நேசிக்கும் சாயலில் பூமியில் வாழ்கிறான். தேவனுக்காக சிலுவையில் அறையப்படவும் மற்றும் தேவனுடைய அன்புக்கு ஈடாக மரிப்பதற்கும் தன்னை தகுதிப்படுத்திக்கொண்ட பேதுருவைப் போலவே தேவனை உண்மையாக நேசிக்கிறான். பேதுரு பெற்றுக்கொண்ட அதே மகிமையைக் கொண்டிருக்கிறான்.

5. பூமியிலுள்ள எல்லாராலும் நேசிக்கப்படுகிறான், மதிக்கப்படுகிறான் மற்றும் போற்றப்படுகிறான்.

6. மரணம் மற்றும் பாதாளத்தின் அடிமைத்தனத்தின் ஒவ்வொரு நிலையையும் வெற்றிகொள்கிறான், சாத்தானுக்கு அவனுடைய வேலையைச் செய்ய எந்த வாய்ப்பையும் கொடுக்கமாட்டான், தேவனால் ஆட்கொள்ளப்படுகிறான், புத்துணர்ச்சியான மற்றும் உயிரோட்டமான ஆவியில் வாழ்கிறான், சோர்வடைய மாட்டான்.

7. ஒருவர் தேவனுடைய மகிமையின் நாள் வருவதைக் காண்பது போல, வாழ்நாள் முழுவதும் எல்லா நேரங்களிலும் சொல்லி முடியாத உற்சாகம் மற்றும் மன எழுச்சியைக் கொண்டிருக்கிறான்.

8. தேவனுடன் சேர்ந்து மகிமையை வெற்றிகொள்கிறான் மற்றும் தேவனுக்குப் பிரியமான பரிசுத்தவான்களைப் போன்ற முகத்தைப் பெற்றிருக்கிறான்.

9. தேவன் பூமியில் நேசிக்கும் ஒருவராக, அதாவது தேவனுக்குப் பிரியமான மகனாக மாறுகிறான்.

10. உருமாற்றமடைந்து மாம்சத்தை விட்டு தேவனுடன் மூன்றாம் வானத்திற்கு ஏறிச்செல்கிறான்.

தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கக்கூடிய ஜனங்கள் மட்டுமே தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்டு ஆதாயப்படுத்தப்படுகின்றனர். நீ தற்போது எதையேனும் பெற்றிருக்கிறாயா? தேவன் உன்னை எந்த அளவுக்கு பரிபூரணப்படுத்தியுள்ளார்? தேவன் மனுஷனை தோராயமாக பரிபூரணப்படுத்துவதில்லை, அவரால் பரிபூரணப்படுத்தப்பட்ட மனுஷன் அவரைச் சார்ந்திருக்கிறான், தெளிவான, காணக்கூடிய முடிவுகளைக் கொண்டிருக்கிறான். இது மனுஷன் கற்பனை செய்வது போல அல்ல, அவன் தேவன் மீது விசுவாசம் வைத்திருக்கும் வரை, அவன் தேவனால் பரிபூரணப்படுத்தப்படவும் ஆதாயப்படுத்தப்படவும் முடியும், மேலும் அவன் பூமியில் தேவனுடைய ஆசீர்வாதங்களையும் சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற காரியங்கள் ஜனங்களின் உருவத்தை மாற்றுவது பற்றி எதுவும் கூறுவது மிகவும் கடினம். தற்போது, நீங்கள் முக்கியமாக தேட வேண்டியது என்னவென்றால் நீங்கள் எல்லாவற்றிலும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும், மேலும் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து ஜனங்கள், விஷயங்கள் மற்றும் காரியங்கள் மூலமாக தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும், இதனால் தேவனுக்குள் இருப்பதே பெரும்பாலும் உங்களுக்குள்ளும் உருவாக்கப்படும். நீங்கள் முதலில் பூமியில் தேவனுடைய சுதந்தரத்தைப் பெற வேண்டும்; அப்போதுதான் நீங்கள் தேவனிடமிருந்து அதிக அதிகமான ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க தகுதியுள்ளவர்களாவீர்கள். இவை தான் நீங்கள் தேட வேண்டியவையும், எல்லாவற்றிற்கும் முன்பு நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியவையும் ஆகும். எல்லாவற்றிலும் தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட நீங்கள் எவ்வளவு அதிகமாக முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் எல்லாவற்றிலும் தேவனுடைய கரத்தைப் பார்க்க முடியும், இதன் விளைவாக நீங்கள் பல்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் மூலமாக தேவனுடைய வார்த்தையாக இருப்பதற்குள்ளும் மற்றும் அவருடைய வார்த்தையின் யதார்த்தத்துக்குள்ளும் நுழைய தீவிரமாக முயற்சி செய்வீர்கள். பாவங்களைச் செய்யாதிருத்தல், அல்லது வாழ்வதற்கான எண்ணங்கள், தத்துவம் மற்றும் மனித விருப்பம் இல்லாதிருத்தல் போன்ற செயலற்ற நிலைகளினால் மட்டுமே உங்களால் திருப்தியடைந்துவிட முடியாது. தேவன் மனிதனை பல வழிகளில் பரிபூரணமாக்குகிறார். எல்லா காரியங்களிலும் பரிபூரணமாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, மேலும் நீ அளவில்லாமல் பெறுவதற்கு அவர் உன்னை நேர்மறையான வார்த்தைகளினால் மட்டுமல்ல, எதிர்மறையான வார்த்தைகளினாலும் பரிபூரணமாக்க முடியும். ஒவ்வொரு நாளும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும், ஆதாயப்படுத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வாறு அனுபவித்த பிறகு, நீ பெரிதும் மாற்றப்படுவாய், மேலும் நீ முன்பு அறிந்திராத பல விஷயங்களை இயல்பாகவே புரிந்துகொள்வாய். மற்றவர்களிடமிருந்து அறிவுரை தேவைப்படாது. உனக்குத் தெரியாமலே, தேவன் உனக்கு அறிவூட்டுவார், இதனால் நீ எல்லாவற்றிலும் ஞானத்தைப் பெறுவாய், மேலும் உன் அனுபவங்கள் அனைத்தையும் விரிவாக பெறுவாய். தேவன் உன்னை நிச்சயமாகவே வழிநடத்துவார், இதனால் நீ இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ திரும்பாமல், இவ்வாறு அவரால் பரிபூரணப்படுத்தப்படும் பாதையில் செல்வாய்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணப் படுத்தப்பட்டிருக்கிறவர்களுக்கான வாக்குத்தத்தங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 555

தேவனால் பரிபூரணப்படுவதை தேவனுடைய வார்த்தையை புசித்து குடிப்பதன் மூலம் பரிபூரணத்துடன் மட்டுப்படுத்த முடியாது. இதுபோன்ற அனுபவம் மிகவும் ஒருதலைப்பட்சமாக இருக்கும், இதில் மிகவும் குறைவானது அடங்கும், மேலும் ஜனங்களை மிகவும் சிறிய நோக்கெல்லைக்குள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இது அவ்வாறு இருப்பதால், ஜனங்கள் தேவையான ஆவிக்குரிய ஆகாரத்தில் மிகவும் குறைவுள்ளவர்களாக இருப்பார்கள். நீங்கள் தேவனால் பரிபூரணமாக்கப்பட விரும்பினால், எல்லா காரியங்களையும் எவ்வாறு அனுபவிக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் உங்களுக்கு நடக்கும் எல்லாவற்றிலிருந்தும் ஞானத்தைப் பெற முடியும். இது நல்லதாக அல்லது கெட்டதாக இருந்தாலும், இது உனக்கு நன்மைகளைக் கொண்டுவர வேண்டும், மேலும் அது உன்னை எதிர்மறையானவராக மாற்றிவிடக்கூடாது. எது எப்படி இருந்தாலும், தேவனுடைய பக்கத்தில் நிற்கும்போது, உன்னால் காரியங்களை கணிக்க முடிய வேண்டும், அவற்றை மனுஷனுடைய கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்யவோ அல்லது ஆராய்ந்து பார்க்கவோ கூடாது (இது உன் அனுபவத்தில் ஒரு விலகுதலாக இருக்கும்). நீ இவ்வாறு அனுபவித்தால், உன் இருதயம் உன் வாழ்க்கையின் பாரங்களால் நிரப்பப்படும். தேவனுடைய முகத்தின் வெளிச்சத்தில் நீ தொடர்ந்து வாழ்வாய், உன் பழக்கவழக்கத்திலிருந்து எளிதில் விலகாமல் இருப்பாய். இதுபோன்ற ஜனங்களுக்கு முன்னால் ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. இது நீங்கள் தேவனை உண்மையாக நேசிக்கிறீர்களா என்பதையும், தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கும், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதற்கும், அவருடைய ஆசீர்வாதங்களையும் சுதந்தரத்தையும் பெறுவதற்குமான தீர்வு உங்களிடம் உள்ளதா என்பதையும் பொறுத்துள்ளது. வெறும் தீர்வு மட்டும் போதாது, உங்களிடம் அதிக அறிவு இருக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் எப்போதும் உங்கள் பழக்கத்திலிருந்து விலகியிருப்பீர்கள். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் பரிபூரணமாக்க சித்தமுள்ளவராக இருக்கிறார். இப்போதைய நிலவரப்படி, பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தேவனுடைய கிரியையை மிகவும் நீண்ட காலமாக ஏற்றுக்கொண்டிருந்தாலும், தேவனுடைய கிருபையில் குளிர் காய்வதில் மட்டுமே அவர்கள் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களுக்கு மாம்சத்தின் சிறிய ஆறுதலைக் கொடுக்க மட்டுமே தேவனை அனுமதிக்க விரும்புகின்றனர், ஆனாலும் அதிகமான மற்றும் உன்னதமான வெளிப்பாடுகளைப் பெற விரும்பவில்லை. மனுஷனின் இருதயம் எப்போதும் வெளியில் இருப்பதையே இது காட்டுகிறது. மனுஷனின் வேலை, அவனது சேவை மற்றும் தேவனுக்கான அவனது அன்பின் இருதயம் ஆகியவை சில அசுத்தங்களைக் கொண்டிருந்தாலும், அவனது உள் அங்கம் மற்றும் அவனது பின்னோக்கிய சிந்தனையைப் பொருத்தவரை, மனுஷன் தொடர்ந்து மாம்சத்தின் சமாதானத்தையும் இன்பத்தையும் தேடுகிறான், மனுஷனை பரிபூரணமாக்கும் தேவனின் நிபந்தனைகள் மற்றும் நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்று எதையும் கவனிப்பதில்லை. ஆகையால், பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இன்னும் மோசமானதாகவும், தரம் தாழ்ந்ததாகவும் உள்ளது. அவர்களுடைய வாழ்க்கை சிறிதும் மாறவில்லை. அவர்கள் தேவன் மீதுள்ள விசுவாசத்தை ஒரு முக்கியமான விஷயமாகவே கருதுவதில்லை, அவர்கள் மற்றவர்களுக்காகவே விசுவாசம் வைத்திருப்பது போலவும், நோக்கங்கள் வழியாகச் செல்வது போலவும் நோக்கமில்லாத ஜீவியத்தில் நிலைதடுமாறி கவனமில்லாமல் சமாளிப்பது போலவும் இருக்கிறது. சிலர் மட்டுமே எல்லாவற்றிலும் தேவனுடைய வார்த்தைக்குள் பிரவேசித்து, அதிக மற்றும் செல்வச் செழிப்பான காரியங்களை ஆதாயப்படுத்திக் கொண்டு, இன்று தேவனுடைய வீட்டில் உள்ள மாபெரும் செல்வந்தர்களாகின்றனர் மற்றும் தேவனுடைய ஆசீர்வாதங்களை அதிகப்படியாகப் பெறுகின்றனர். நீங்கள் எல்லாவற்றிலும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், பூமியில் தேவன் வாக்குத்தத்தம் செய்தவைகளைப் பெற முடிந்தால், எல்லாவற்றிலும் தேவனால் ஞானமடைய முற்பட்டால் மற்றும் வருடங்களை வீணாக்கவில்லை என்றால், இதுதான் தீவிரமாக உட்பிரவேசிப்பதற்கான சிறந்த பாதையாகும். இவ்வாறு மட்டுமே நீ தேவனால் பரிபூரணமாக்கப்பட தகுதியுள்ளவனாக இருப்பாய். நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணமாக்கப்படுவதை நாடுகிறாயா? நீ உண்மையிலேயே எல்லா காரியங்களிலும் வாஞ்சையாக இருக்கிறாயா? பேதுருவைப் போலவே உனக்கும் தேவன் மீது அன்பின் ஆவி உள்ளதா? இயேசுவைப் போலவே உனக்கும் தேவனை நேசிக்கும் விருப்பம் உள்ளதா? நீ பல வருடங்களாக இயேசுவை விசுவாசித்திருக்கிறாய், இயேசு தேவனை எவ்வாறு நேசித்தார் என்பதை நீ பார்த்திருக்கிறாயா? நீ உண்மையிலேயே இயேசுவைத்தான் விசுவாசிக்கிறாயா? நீ இன்றைய நடைமுறை தேவனை விசுவாசிக்கிறாயா, மாம்சத்தில் உள்ள நடைமுறை தேவன் பரலோகத்தில் உள்ள தேவனை எவ்வாறு நேசிக்கிறார் என்பதை நீ பார்த்திருக்கிறாயா? நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறாயா, அது ஏனென்றால் மனிதகுலத்தை மீட்பதற்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டதும், அவர் செய்த அற்புதங்களும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளாகும். ஆனாலும் மனுஷனின் விசுவாசம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும் உண்மையான புரிதலிலும் இருந்து வருவதில்லை. நீ இயேசுவின் நாமத்தை மட்டுமே விசுவாசிக்கிறாய், ஆனால் நீ அவருடைய ஆவியை விசுவாசிக்கவில்லை, ஏனென்றால் இயேசு தேவனை எவ்வாறு நேசித்தார் என்பதில் நீ கவனம் செலுத்துவதில்லை. தேவன் மீதான உன் விசுவாசம் மிகவும் அனுபவம் இல்லாததாக இருக்கிறது. நீ இயேசுவை பல வருடங்களாக விசுவாசித்தாலும், தேவனை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்று உனக்கு தெரியவில்லை. இது உன்னை உலகின் மிகப்பெரிய முட்டாளாக்கவில்லையா? நீ பல வருடங்களாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போஜனத்தை விருதாவாக உண்கிறாய் என்பதற்கு இதுவே ஆதாரம். நான் இதுபோன்ற ஜனங்களை வெறுப்பது மட்டுமின்றி, நீ வணங்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவர்களை வெறுப்பார் என்று நம்புகிறேன். இதுபோன்ற ஜனங்களை எவ்வாறு பரிபூரணமாக்கப்பட முடியும்? சங்கடத்தினால் உன் முகம் சிவக்கவில்லையா? நீ அவமானமாக உணரவில்லையா? உன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சந்திக்க உனக்கு இன்னும் எரிச்சல் உள்ளதா? நான் சொன்னதின் அர்த்தம் உங்கள் அனைவருக்கும் புரிகிறதா?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணப் படுத்தப்பட்டிருக்கிறவர்களுக்கான வாக்குத்தத்தங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

முந்தைய: ஜீவனுக்குள் பிரவேசித்தல் (4)

அடுத்த: XI. போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

அனுபவம் பற்றியவை

பேதுரு நூற்றுக்கணக்கான உபத்திரவங்களைத் தன்னுடைய அனுபவங்கள் முழுவதிலும் சந்தித்தான். இன்றைய ஜனங்கள் “உபத்திரவம்” என்னும் சொல்லைத்...

சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்

சரியான திருச்சபை வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் பிரசங்கங்களில் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில் ஏன் இன்னும்...

ஒரு தகுந்த மேய்ப்பன் என்னவிதத்தில் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்

பரிசுத்த ஆவியானவர் மக்கள் மீது கிரியை செய்யும் போது அவர்கள் இருக்கும் பல்வேறு நிலைகள் குறித்த ஒரு புரிதலை நீ பெற்றிருக்க வேண்டும்....

மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்

பிரபஞ்சம் முழுவதிலும் தன் கிரியையின் தொடக்கத்திலிருந்தே, தேவன் அனைத்துத் தரப்பிலான ஜனங்கள் உட்பட, பல ஜனங்களைத் தனக்கு ஊழியம் செய்வதற்காக...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக