ஜீவனுக்குள் பிரவேசித்தல் (4)

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 483

நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியால் பெரும்பாலான மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நடைமுறையிலான தேவன் மற்றும் பரலோகத்திலுள்ள தேவனைப் பற்றி அவர்கள் எப்போதுமே முற்றிலும் மாறுபட்ட இரு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர், இது தேவனுக்குக் கீழ்ப்படிவதற்காக அல்ல, ஆனால் சில நன்மைகளைப் பெறுவதற்காக அல்லது பேரழிவு ஏற்படுத்தும் துன்பங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது; அப்போதுதான் அவர்கள் ஓரளவு கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களின் கீழ்ப்படிதல் நிபந்தனையுள்ளதாகும்; அது அவர்களின் சொந்த வாய்ப்புகளுக்காகவும் அவர்கள் மீது திணிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. எனவே, நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இது உங்கள் வாய்ப்புகளுக்காகவும் மற்றும் உங்கள் தலைவிதிக்காகவும் மட்டுமே இருந்தால், நீங்கள் முற்றிலும் விசுவாசிக்காமலிருப்பதே நல்லது. இவ்வாறான விசுவாசமானது சுய-வஞ்சகம், சுய-நம்பிக்கை, மற்றும் சுய-போற்றுதல் சார்ந்ததாகும். உங்கள் விசுவாசமானது தேவனுக்குக் கீழ்படிதலின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை எனில், அவரை எதிர்த்ததற்காக நீங்கள் இறுதியில் தண்டிக்கப்படுவீர்கள். தங்கள் விசுவாசத்தில் தேவனுக்குக் கீழ்படிதலைத் தேடாதவர்கள் அனைவரும் அவரை எதிர்க்கின்றனர். மக்கள் சத்தியத்தைத் தேடவும், அவருடைய வார்த்தைகளுக்காக தாகம் கொள்ளவும், அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும், அருந்தவும், மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு அவற்றை கடைபிடிக்குமாறும் தேவன் கேட்டுக்கொள்கிறார். இவை உங்களுடைய உண்மையான நோக்கங்களாக இருந்தால், தேவன் நிச்சயமாக உங்களை உயர்த்துவார் மற்றும் உங்களிடம் கிருபையுள்ளவராக இருப்பார். இது சந்தேகிக்க இயலாத மற்றும் மாற்ற முடியாத ஒன்றாகும். உங்கள் நோக்கம் தேவனுக்குக் கீழ்படியாததாக இருந்தால் மற்றும் உங்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்குமானால், நீங்கள் சொல்வது மற்றும் செய்வது அனைத்தும், அதாவது தேவனுக்கு முன்பாக ஏறெடுக்கும் உங்கள் ஜெபங்களும் மற்றும் உங்களுடைய அனைத்துச் செயல்களும் அவருக்கு எதிரானதாக இருக்கும். நீங்கள் மென்மையாக பேசுபவராகவும் கனிவான நடத்தையுள்ளவராகவும் இருக்கலாம், உங்களுடைய ஒவ்வொரு செயலும் சொல்லும் சரியானதாக தோன்றலாம் மற்றும் நீங்கள் கீழ்படியும் ஒருவராக தோன்றலாம், ஆனால் உங்கள் நோக்கங்களுக்கும், தேவன் மீதான விசுவாசத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கும் வரும்போது, நீங்கள் செய்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதும், நீங்கள் செய்யும் அனைத்தும் தீமையானதுமாகும். ஆடுகளைப் போல கீழ்ப் படிந்தவர்களாகத் தோன்றினாலும், இதயத்தில் தீய நோக்கங்கள் கொண்டவர்கள், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களாவர். அவர்கள் நேரடியாக தேவனை புண்படுத்துகிறார்கள், மேலும் அவர்களில் ஒருவரையும் தேவன் விடமாட்டார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி வெளிப்படுத்துவார், நயவஞ்சகர்கள் அனைவருமே, நிச்சயமாக, பரிசுத்த ஆவியினால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள் என்பதை அனைவருக்கும் காண்பிப்பார். கவலைப்பட வேண்டாம். தேவன் அவர்களில் கடைசியில் உள்ளவர் வரை அனைவரையும் சரிக்கட்டி அப்புறப்படுத்துவார்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 484

தேவனிடமிருந்து வரும் புதிய ஒளியை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், மற்றும் இன்று தேவன் செய்கிற அனைத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், நீங்கள் அதை நாடாமல் அல்லது நீங்கள் அதை சந்தேகித்து, அதை நியாயந்தீர்த்தீர்களேயானால், அல்லது ஆராய்ந்து பகுப்பாய்வு செய்தால், தேவனுக்குக் கீழ்ப்படிய உங்களுக்கு மனம் இல்லை. இப்பொழுது இங்குள்ள ஒளி தோன்றும் பொழுது, நீங்கள் நேற்றைய தினத்தின் ஒளியை பொக்கிஷமாக மதித்து தேவனின் புதிய செயலை எதிர்த்தால், நீங்களும் அபத்தமானவரே, அதாவது தேவனை வேண்டுமென்றே எதிர்ப்பவர்களில் நீங்களும் ஒருவர். புதிய ஒளியைப் பாராட்டுவதும், அதை ஏற்றுக்கொண்டு அதை கடைபிடிப்பதும்தான் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கான திறவுகோல் ஆகும். இது மட்டுமே உண்மையான கீழ்ப்படிதல் ஆகும். தேவனை விரும்புவதற்கான ஆவல் இல்லாதவர்கள் வேண்டுமென்றே அவருக்குக் கீழ்ப்படிய இயலாதவராவர், மேலும் அவர்கள் அந்தஸ்தில் திருப்தி அடைந்ததன் விளைவாக தேவனை எதிர்க்கலாம். அந்த மனிதன் தேவனுக்கு கீழ்படிய முடியாது, ஏனெனில் அவன் முன்பு வந்ததின் பொருட்டு பீடிக்கப்பட்டுள்ளான். இதற்கு முன் வந்த காரியங்கள் தேவனைப் பற்றிய எல்லா விதமான கருத்துக்களையும் கற்பனைகளையும் மக்களுக்கு அளித்துள்ளன, மேலும் அவர்களுடைய மனதில் இவை தேவனின் உருவமாகிவிட்டன. இவ்வாறு, அவர்கள் விசுவாசிப்பது அவர்களின் சொந்த கருத்துக்களும், அவர்களின் சொந்த கற்பனைகளும் ஆகும். உங்கள் சொந்த கற்பனையிலுள்ள தேவனுடன் இன்று உண்மையான ஊழியம் செய்யும் தேவனை நீங்கள் அளவிட்டால், உங்கள் விசுவாசம் சாத்தானிடமிருந்து வருகிறது, மேலும் உங்கள் சொந்த விருப்பங்களால் கறைபட்டுள்ளது. தேவன் இந்த வகையான விசுவாசத்தை விரும்புவதில்லை. அவர்களுடைய உயர்ந்த சான்றுகளை பொருட்படுத்தாமல் மற்றும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் பொருட்படுத்தாமல், தேவனுடைய பணிக்காக அவர்கள் தம்முடைய ஜீவநாள் முழுவதும் முயற்சிகளை அர்ப்பணித்து, தங்களை தியாகம் செய்திருந்தாலும் கூட, இது போன்ற விசுவாசமுள்ள எவரையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் வெறுமனே அவர்களுக்கு ஒரு சிறிய கிருபையை அளித்து, அதை ஒரு காலத்திற்கு அனுபவிக்க அனுமதிக்கிறார். இது போன்ற மக்களால் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவர இயலாது. பரிசுத்த ஆவியானவர் இவர்களுக்குள் கிரியை செய்யமாட்டார், மேலும் தேவன் அவர்களில் ஒவ்வொருவரையும் அவரவர் முறைப்படி அகற்றி விடுவார். தங்கள் விசுவாசத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் தவறான நோக்கங்களைக் கொண்ட இளைஞர்களும் வயதானவர்களும்தான் எதிர்ப்பவர்களாகவும் குறுக்கிடுபவர்களாகவும் இருக்கின்றனர், அத்தகையவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி தேவனால் அகற்றப்படுவார்கள். தேவனுக்கு சிறிதளவும் கீழ்ப்படிதல் இல்லாமல், அவருடைய நாமத்தை வெறுமனே ஏற்றுக்கொண்டு, தேவனின் தயவு மற்றும் அன்பைப் பெற்றவர்களாக இருந்தாலும், பரிசுத்த ஆவியின் அடிச்சுவடுகளில் நடவாமல் மற்றும் பரிசுத்த ஆவியின் தற்போதைய செயல் மற்றும் சொல்லுக்குக் கீழ்படியாமல் இருப்பவர் தேவனின் கிருபையின் மத்தியில் ஜீவித்தாலும், இம்மாதிரியான மக்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படாமலும் பரிபூரணப்படுத்தப்படாமலும் இருப்பர். தேவன் மக்களை தங்கள் கீழ்ப்படிதலின் மூலமாகவும், தேவனுடைய வார்த்தைகளை புசிப்பதன் மூலமாகவும், அருந்துவதன் மூலமாகவும், அனுபவிப்பதன் மூலமாகவும், அவர்களின் ஜீவனில் ஏற்படும் துன்பங்கள் மற்றும் சுத்திகரிப்பு மூலமாகவும் பரிபூரணமாக்குகிறார். இது போன்ற விசுவாசத்தின் மூலம் மட்டுமே மக்களின் மனநிலையை மாற்ற முடியும், அப்போதுதான் அவர்கள் தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற முடியும். தேவனின் கிருபையின் மத்தியில் ஜீவித்திருப்பதில் திருப்தி அடையாமல், தீவிரமாக மிக்க ஆவல் கொள்வது மற்றும் சத்தியத்தை தேடுவது மற்றும் தேவனால் ஆதாயப்படுவதை நாடுவது ஆகியவையே உணர்வுபூர்வமாக தேவனுக்குக் கீழ்ப்படிவதாகும், மேலும் இதுதான் துல்லியமாக அவர் விரும்பும் விசுவாசமாகும். தேவனின் கிருபையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாதவர்களை பரிபூரணமாக்கவோ அல்லது மாற்றவோ முடியாது; மேலும் அவர்களின் கீழ்ப்படிதல், பக்தி, அன்பு மற்றும் பொறுமை அனைத்தும் மேலோட்டமானவை ஆகும். தேவனின் கிருபையை மட்டுமே அனுபவிப்பவர் உண்மையிலேயே தேவனை அறிந்துகொள்ள முடியாது, மேலும் அவர்கள் அவ்வாறு தேவனை அறிந்தாலும் கூட அவர்களுடைய அறிவானது மேலோட்டமானதாகும், மேலும் அவர்கள் “தேவன் மனிதனை நேசிக்கிறார்,” அல்லது “தேவன் மனிதனிடம் இரக்கமுள்ளவராக இருக்கிறார்” போன்ற விஷயங்களை கூறுகிறார்கள். இது மனிதனின் ஜீவனை குறிக்கவில்லை, மேலும் மக்கள் தேவனை உண்மையாக அறிந்திருக்கிறார்கள் என்பதையும் காட்டவில்லை. தேவனின் வார்த்தைகள் அவர்களைச் செம்மைப் படுத்தும்போது, அல்லது தேவனுடைய சோதனைகள் அவர்கள் மீது வரும்போது, மக்கள் தேவனுக்கு கீழ்படியாமல், அவர்கள் சந்தேகம் அடைந்து, விழுந்துபோனால், அவர்கள் குறைந்தபட்சம்கூட கீழ்ப்படிந்தவர்கள் அல்ல. அவர்களுக்குள் தேவன் மீதான விசுவாசத்தைப் பற்றிய பல விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன; பல வருட விசுவாசத்தின் விளைவாக ஏற்படும் பழைய அனுபவங்கள் அல்லது வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. இது போன்றவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியுமா? மனித காரியங்களால் நிறைந்துள்ளவர்களால் எவ்வாறு தேவனுக்கு கீழ்ப்படிய முடியும்? அவர்களின் “கீழ்ப்படிதல்” தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப ஆனதாகும். தேவன் இவ்வாறான கீழ்ப்படிதலை விரும்புகிறாரா? இது தேவனுக்குக் கீழ்ப்படிதல் அல்ல, மாறாக கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதாகும். அது சுய-திருப்தி மற்றும் சுய-சந்தோஷம் ஆகும். இது தேவனுக்கு கீழ்படிதல் என்று நீங்கள் கூறினால், நீங்கள் அவருக்கு எதிராக அவரை நிந்திக்கவில்லையா? நீங்கள் ஒரு எகிப்திய பார்வோன். நீங்கள் தீமையைச் செய்கிறீர்கள், தேவனை எதிர்க்கும் வேலையில் நீங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஈடுபடுகிறீர்கள். நீங்கள் இவ்வாறு ஊழியம் செய்வதைத்தான் தேவன் விரும்புகிறாரா? நீங்கள் மனந்திரும்ப விரைந்து, சுய விழிப்புணர்வைப் பெற முயற்சி செய்வது நல்லது. அதைச் செய்யத் தவறினால், நீங்கள் விலகிச் செல்வது நல்லது. தேவனுக்கு நீங்கள் வெளிப்படையாக செய்த ஊழியத்தை விட அது உங்களுக்கு அதிக நலனைத் தரும். நீங்கள் குறுக்கிட்டு தொந்தரவு செய்ய மாட்டீர்கள்; உங்கள் ஸ்தானத்தை நீங்கள் அறிந்து, நன்றாக ஜீவிப்பீர்கள். அது நன்றாக இருக்காதா? தேவனை எதிர்த்ததற்காக நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள்!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 485

பரிசுத்த ஆவியானவரின் கிரியை நாளுக்கு நாள் மாறுகிறது. அவருடைய கிரியையானது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அதிகரிக்கிறது, நாளைய வெளிப்படுத்துதல் இன்றைய வெளிப்படுத்துதலைக் காட்டிலும் அதிகமாக உள்ளது, எடுத்துவைக்கும் அடிக்கு அடி எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்கும் செயல் இதுவே. ஜனங்களால் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலவில்லை என்றால், அவர்கள் எந்த நேரத்திலும் வெளியே தள்ளப்படலாம். அவர்களிடம் கீழ்ப்படிதலுள்ள இருதயம் இல்லையென்றால், அவர்களால் இறுதிவரை பின்பற்ற இயலாது. முந்தைய காலம் கடந்துபோனது; இது ஒரு புதிய காலம். புதிய காலத்தில், புதிய கிரியை செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஜனங்கள் பரிபூரணமாக்கப்படும் கடைசி காலத்தில், தேவன் புதிய கிரியைகளை மிகவும் விரைவாகச் செய்வார், ஆகவே ஜனங்கள் தங்கள் இருதயங்களில் கீழ்ப்படிதல் இல்லாமல், தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற சிரமப்படுவார்கள். தேவன் எந்த விதிகளுக்கும் கட்டுப்பட்டவர் அல்ல, அவர் தனது எந்தக் கட்டத்தின் கிரியையையும் மாறாததாக பாவிப்பதில்லை. மாறாக, அவர் செய்யும் கிரியை எப்போதும் புதியதாகவும், எப்போதும் அதிகரித்துக்கொண்டேயும் இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும், அவருடைய கிரியை மேலும் மேலும் நடைமுறையானதாக மாறுகிறது, மேலும் மனுஷனின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப அதிகரித்தவாறு இருக்கிறது. ஜனங்கள் இதுபோன்ற கிரியையை அனுபவித்த பிறகே தங்கள் மனநிலையில் இறுதி மாற்றத்தை அடைய இயலும். ஜீவனைப் பற்றிய மனுஷனின் அறிவு எப்போதும் இல்லாத உயர்ந்த நிலைகளை எட்டுகிறது, ஆகவே அதேபோல, தேவனுடைய கிரியை எப்போதும் இல்லாத உயர்ந்த நிலைகளை எட்டுகிறது. இவ்விதமாக மாத்திரமே மனுஷன் பரிபூரணமாக்கப்பட்டு தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு தகுதியுள்ளவனாக இயலும். தேவன் ஒருபுறம் மனுஷனின் எண்ணங்களை எதிர்கொண்டு அவற்றை நேர்மாறாக மாற்றுகிறார், மறுபுறம் மனுஷனை உயர்ந்த மற்றும் மிகவும் யதார்த்தமான நிலைக்கும், தேவன் மீதான விசுவாசத்தின் மிகவும் உயர்ந்த ராஜ்யத்திற்கும் வழிநடத்திச் செல்கிறார், இதன் மூலம் அவனால் தேவனுடைய சித்தத்தை இறுதியில் நிறைவேற்ற இயலும். வேண்டுமென்றே எதிர்க்கும் கீழ்ப்படியாத சுபாவமுள்ளவர்கள் அனைவருமே தேவனுடைய விரைவான மற்றும் பலம் கொண்ட மேம்பட்ட கிரியையின் இந்த கட்டத்தில் வெளியே தள்ளப்படுவார்கள்; விருப்பத்துடன் கீழ்ப்படிகிறவர்களும் மகிழ்ச்சியுடன் தங்களைத் தாழ்த்துகிறவர்களும் மாத்திரமே சாலையின் இறுதி வரை பயணிக்க இயலும். இவ்வகையான கிரியையில், நீங்கள் எல்லோரும் எவ்வாறு கீழ்ப்படிவது, உங்கள் கருத்துக்களை எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், நீங்கள் நிச்சயமாகவே பரிசுத்த ஆவியானவரால் புறக்கணிக்கப்பட்டவராகவும், தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்கிறவராகவும் மாறிப்போவீர்கள். இந்த கட்டக் கிரியைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு, மனுஷனின் பழைய விதிகளும் சட்டங்களும் எண்ணற்றவையாக இருந்தன, அவன் அதையே அதிகமாகக் கடைபிடித்தான். இதன் விளைவாக, அவன் தற்பெருமை கொண்டு தன்னையே மறந்துவிட்டான். இவை அனைத்தும் தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள விடாமல் மனுஷனைத் தடுக்கும் தடைகளாகும்; இவைதான் தேவனைப் பற்றிய மனுஷனின் அறிவின் எதிரிகள். ஜனங்கள் தங்கள் இருதயத்தில் கீழ்ப்படிதல் இல்லாமலும், சத்தியத்திற்காக ஏங்காமலும் இருப்பது ஆபத்தானது. எளிய கிரியைக்கும் வார்த்தைகளுக்கும் மாத்திரமே கீழ்ப்படிந்தால் மற்றும் ஆழமான எதையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், நீ பழைய வழிமுறைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறாய், பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வேகத்துடன் உன்னால் ஈடுகொடுக்க இயலாது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 486

தேவனால் செய்யப்படும் கிரியைகள் காலத்திற்கு காலம் மாறுபடும். நீ ஒரு கட்டத்தில் தேவனுடைய கிரியைக்கு மிகுந்த கீழ்ப்படிதலுடன் இருந்து, ஆனால் அடுத்த கட்டத்தில் அவருடைய கிரியை மீதான உன் கீழ்ப்படிதல் மோசமாக இருந்தால் அல்லது உன்னால் கீழ்ப்படிய இயலவில்லை என்றால், தேவன் உன்னை கைவிடுவார். தேவன் இந்த அடியை எடுத்துவைக்கும்போது அவருடைய வேகத்துக்கு நீ ஈடுகொடுத்தால், அவர் அடுத்த படிக்குச் செல்லும்போது, நீ தொடர்ந்து அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும்; அப்போதுதான் நீ பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படியும் ஒருவனாக இருப்பாய். நீ தேவனை விசுவாசிப்பதால், உன் கீழ்ப்படிதலில் நீ இடைவிடாமல் நிலைத்திருக்க வேண்டும். வெறுமனே, நீ விரும்பும்போது கீழ்ப்படிந்து விருப்பமற்றபோது கீழ்ப்படியாமல் நீ இருக்கக்கூடாது. இவ்வகையான கீழ்ப்படிதல் தேவனால் பாராட்டப்படுவதில்லை. உன் சபை ஐக்கியத்திலுள்ள புதிய கிரியையின் வேகத்திற்கு உன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றால், முந்தைய நீதிமொழிகளை தொடர்ந்து கடைப்பிடித்தால், உன் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற்றம் காணப்படும்? தேவனுடைய வார்த்தைகளின் மூலம் உனக்குக் கொடுப்பதே தேவனுடைய கிரியையாகும். நீ அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உனக்குள் கிரியை செய்வார். பரிசுத்த ஆவியானவர் நான் பேசுவது போலவே கிரியை செய்கிறார்; நான் சொன்னது போலவே செய்கிறார், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் உடனடியாக கிரியை செய்வார். நீங்கள் தற்போதைய ஒளியைக் காண்பதற்கும் அதை உங்களுக்குள் கொண்டுவருவதற்காகவும், ஒரு புதிய ஒளியை வீசச் செய்கிறேன், நீ இந்த ஒளியில் நடக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உனக்குள் உடனடியாக கிரியை செய்வார். சிலர் “நீ சொல்வதை நான் செய்யமாட்டேன்” என்று கூறி, கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில், நீ இப்போது சாலையின் இறுதிக்கு வந்துவிட்டாய் என்று நான் உனக்குச் சொல்கிறேன்; நீ வறண்டு போய்விட்டாய், இனிமேலும் உனக்கு ஜீவன் இல்லை. ஆகவே, உன் மனநிலையின் மாற்றத்தை அனுபவிப்பதில், தற்போதைய ஒளியின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. தேவனால் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட ஜனங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வது மட்டுமின்றி, திருச்சபைக்குள்ளும் கிரியை செய்கிறார். அவரால் யாருக்குள்ளும் கிரியை செய்ய இயலும். அவரால் தற்காலத்திலும் உனக்குள் கிரியை செய்யக்கூடும், மேலும் நீ இந்த கிரியையை அனுபவிப்பாய். அடுத்த காலகட்டத்தில், அவர் வேறொருவருக்குள் கிரியை செய்யலாம், இந்த விஷயத்தில் நீ விரைந்து பின்பற்ற வேண்டும்; தற்போதைய ஒளியை நீ எவ்வளவு நெருக்கமாகப் பின்பற்றுகிறாயோ, அவ்வளவு அதிகமாக உன் வாழ்க்கை வளர்ச்சியடையும். ஒருவர் எவ்விதமான நபராக இருந்தாலும், அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தால், நீ பின்பற்ற வேண்டும். அவர்கள் அனுபவித்த விதமாகவே நீங்களும் அனுபவிப்பீர்கள், நீங்கள் இன்னும் மேலான காரிங்களையும் பெறுவீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீ மிக விரைவாக முன்னேறுவாய். இதுதான் மனிதர்களின் பரிபூரணத்துக்கான பாதையாகும், இதன் மூலமாகவே வாழ்க்கை வளர்ச்சியடைகிறது. பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நீ கீழ்ப்படிவதன் மூலமே பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையை அடைகிறாய். உன்னை பரிபூரணப்படுத்த தேவன் எந்த வகையான நபரின் மூலமும் கிரியை செய்வார் அல்லது எந்த நபர், சம்பவம் அல்லது காரியத்தின் மூலம் அவர் உன் காரியங்களைப் பெறவோ அல்லது பார்க்கவோ அனுமதிப்பார் என்பது உனக்குத் தெரியாது. இந்தச் சரியான பாதையில் நீ அடியெடுத்து வைக்க முடிந்தால், நீ தேவனால் பூரணப்படுத்தப்படுவாய் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையே இது காட்டுகிறது. உன்னால் முடியவில்லை என்றால், உன் எதிர்காலம் இருண்டும், ஒளியில்லாமலும் காணப்படும் என்பதையே இது காட்டுகிறது. நீ சரியான பாதைக்கு வந்ததும், எல்லா காரியங்களிலும் நீ வெளிப்படுத்துதலைப் பெறுவாய். பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களுக்கு எதை வெளிப்படுத்தினாலும், நீயே காரியங்களை அனுபவிக்க அவர்களுடைய அறிவின் அடிப்படையில் நீ செயல்பட்டால், இந்த அனுபவம் உன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும், மேலும் இந்த அனுபவத்திலிருந்து உன்னால் மற்றவர்களுக்கும் கொடுக்க இயலும். சொன்தையே மீண்டும் மீண்டும் சொல்வோர் எந்த அனுபவமும் இல்லாதவர்கள்; உன் சொந்த உண்மையான அனுபவத்தையும் அறிவையும் பற்றி பேச ஆரம்பிப்பதற்கு முன்பு, மற்றவர்களின் ஞானம் மற்றும் வெளிச்சத்தின் மூலம் ஒரு நடைமுறை வழியை கண்டுபிடிக்க நீ கற்றுக்கொள்ள வேண்டும். இது உன் சொந்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு தேவனிடமிருந்து வரும் அனைத்துக்கும் கீழ்ப்படிந்து நீ அனுபவிக்க வேண்டும். நீ சகலத்திலும் தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும், சகலத்திலும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், இதன் மூலம் உன் வாழ்க்கை வளர்சியடையலாம். இதுபோன்ற நடைமுறை மிக விரைவான முன்னேற்றத்தைக் கொடுக்கிறது.

உன் நடைமுறை அனுபவங்கள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் உனக்குப் போதிக்கிறார், மேலும் உன் விசுவாசத்தின் மூலமாக உன்னைப் பரிபூரணப்படுத்துகிறார். நீ உண்மையிலேயே பரிபூரணமடைய விரும்புகிறாயா? நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணமாக்கப்பட விரும்பினால், உன் மாம்சத்தை ஒதுக்கி வைக்கும் தைரியத்தை நீ பெறுவாய், தேவனுடைய வார்த்தைகளை உன்னால் நிறைவேற்ற முடியும், மேலும் நீ செயலற்றவனாகவோ பலவீனமானவனாகவோ இருக்க மாட்டாய். தேவனிடமிருந்து வரும் சகலத்திற்கும் உன்னால் கீழ்ப்படிய இயலும், மேலும் பொதுவிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ செய்யப்படும் உன் செயல்கள் அனைத்தும் தேவனுக்கு பணிவானதாக இருக்கும். நீ ஒரு நேர்மையான நபராக இருந்து, சகலத்திலும் சத்தியத்தைக் கடைப்பிடித்தால், நீ பரிபூரணப்படுவாய். மற்றவர்களுக்கு முன்னால் ஒரு விதமாகவும், அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் மற்றொரு விதமாகவும் செயல்படும் அந்த வஞ்சக ஜனங்கள் பரிபூரணமாக்கப்பட விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் நித்திய நாசம் மற்றும் அழிவின் புத்திரர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தேவனுக்கு அல்ல, சாத்தானுக்கே சொந்தமானவர்கள். அவர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் அல்ல! உன் செயல்களையும் நடத்தையையும் தேவனுக்கு முன்பாக வைக்கவோ அல்லது தேவனுடைய ஆவியால் ஏற்றுக்கொள்ளப்படவோ முடியாவிட்டால், உன்னிடம் ஏதோ தவறு உள்ளது என்பதற்கான ஆதாரம் இதுதான். தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் நீ ஏற்றுக்கொண்டு, உன் மனநிலையை மாற்றுவதில் கவனம் செலுத்தினால் மாத்திரமே, நீ பரிபூரணமாக்கப்படும் பாதையில் அடியெடுத்து வைக்க இயலும். நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணப்படுத்தப்படவும் தேவனுடைய சித்தத்தைச் செய்யவும் விரும்பினால், ஒரு வார்த்தைகூட குறைகூறாமலும், தேவனுடைய கிரியையை மதிப்பிடவோ அல்லது நியாயந்தீர்க்கவோ முயற்சிக்காமல், நீ தேவனுடைய சகல கிரியைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இவைதான் தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கான குறைந்தபட்ச தேவைகளாகும். தேவனால் பரிபூரணமாக்கப்பட விரும்புகிறவர்களுக்கான அத்தியாவசியமான தேவை பின்வருமாறு: சகலத்திலும் தேவனை அன்பு செய்யும் இருதயத்துடன் செயல்பட வேண்டும். தேவனை அன்பு செய்யும் இருதயத்துடன் செயல்படுதல் என்பதன் அர்த்தம் என்ன? அதாவது உன் செயல்கள் மற்றும் நடத்தை அனைத்தையும் தேவனுக்கு முன்பாக வைக்க வேண்டும் என்பதாகும். உன் செயல்கள் சரியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருந்தாலும், உன் நோக்கங்கள் சரியானதாக இருப்பதால், நீ அவற்றை தேவனிடமோ அல்லது உன் சகோதர சகோதரிகளிடமோ காண்பிக்க அஞ்சுவதில்லை, மேலும் நீ தேவனுக்கு முன்பாக சத்தியம் செய்யத் துணிகிறாய். உன் ஒவ்வொரு நோக்கத்தையும், சிந்தனையையும், யோசனையையும் தேவன் பரிசோதிப்பதற்காக நீ அவற்றை அவருக்கு முன்பாக வைக்க வேண்டும்; நீ அதன்படி நடந்து இந்த பாதையில் பிரவேசிப்பாயானால், உன் வாழ்க்கையில் முன்னேற்றம் விரைவாக இருக்கும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 487

நீ தேவனை விசுவாசிப்பதால், தேவனுடைய எல்லா வார்த்தைகள் மற்றும் அவருடைய எல்லா கிரியைகள் மீதும் நீ விசுவாசம் வைக்க வேண்டும். அதாவது, நீ தேவனை விசுவாசிப்பதால், நீ அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். உன்னால் இதைச் செய்ய இயலவில்லை என்றால், நீ தேவனை விசுவாசிக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. நீ பல வருடங்களாக தேவனை விசுவாசித்தாலும், இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய வார்த்தைகளின் பரிபூரணத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமலும், அதற்குப் பதிலாக தேவனை உனக்கு கீழ்ப்படிந்து, உன் கருத்துக்களின்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்வாயானால், நீ தான் அனைவரைக் காட்டிலும் மிகவும் கலகக்காரன், நீ ஒரு அவிசுவாசி. மனுஷனின் கருத்துக்களுக்கு இணங்காத தேவனுடைய கிரியைகளுக்கும் வார்த்தைகளுக்கும் இதுபோன்றவர்கள் எவ்வாறு கீழ்ப்படிய முடியும்? தேவனுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுப்பவர்களும் அவரை எதிர்ப்பவர்களுமே எல்லோரைக் காட்டிலும் பெரிய கலகக்காரர்கள். அவர்கள் தான் தேவனுடைய எதிரிகள், அந்திகிறிஸ்துக்கள். அவர்களுடையது எப்போதும் தேவனுடைய புதிய கிரியைக்கு எதிரான விரோதப் போக்காகும்; அவர்களிடம் ஒருபோதும் கீழ்ப்படிவதற்கான விருப்பம் சிறிதளவு கூட இருப்பதில்லை, அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்ததோ அல்லது தாழ்மைப்படுத்திக் கொண்டதோ கிடையாது. அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக தங்களை பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள், ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படிவதில்லை. தேவனுக்கு முன்பாக, வார்த்தையை பிரசங்கிப்பதில் சிறந்தவர்களாகவும், மற்றவர்களை இயக்குவதில் மிகவும் திறமையானவர்களாகவும் தங்களைக் கருதுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்களிடமுள்ள “பொக்கிஷங்களை” ஒதுக்கித் தள்ளுவதில்லை, ஆனால் அவற்றை தொழுகைக்கான, மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்கான குடும்ப பரம்பரைச் சொத்துக்களாகக் கருதுகிறார்கள், மேலும் அவற்றைப் பார்த்து பிரமிக்கும் முட்டாள்களுக்கு பிரசங்கிக்க அவற்றை பயன்படுத்துகிறார்கள். திருச்சபையில் உண்மையிலேயே இது போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்களை தலைமுறை தலைமுறையாக தேவனுடைய வீட்டில் தங்கியிருக்கும் “வெல்லமுடியாத கதாநாயகர்கள்” என்று சொல்லலாம். அவர்கள் வார்த்தையை (கோட்பாடு) பிரசங்கிப்பதை தங்களுடைய மிக உயரிய கடமையாக கருதுகிறார்கள். கால காலமாக, தலைமுறை தலைமுறையாக, அவர்கள் தங்கள் “பரிசுத்தமான மற்றும் மீற முடியாத” கடமையைத் தீவிரமாக செயல்படுத்த ஆரம்பிக்கிறார்கள். அவர்களைத் தொடக்கூட யாரும் துணிவதில்லை; ஒருவர் கூட அவர்களை வெளிப்படையாக கடிந்துகொள்ளத் துணிவதில்லை. அவர்கள் கால காலமாக மற்றவர்களை அடக்கி ஆண்டு வருவதனால் தேவனுடைய வீட்டில் “ராஜாக்கள்” ஆக மாறி கட்டுப்பாடற்றவர்களாக செயல்படுகிறார்கள். இந்த பிசாசுகளின் கூட்டம் ஒன்றாக கைகோர்த்து எனது கிரியையை அழிக்க எத்தனிக்கிறது; இந்த உயிருள்ள பிசாசுகள் என் கண் முன்னே இருப்பதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? பாதி கீழ்ப்படிதல் உள்ளவர்களும்கூட கடைசி வரை தொடர்ந்து பயணிக்க இயலாது. இன்னும் மோசமாக இந்த கொடுங்கோலர்கள் தங்கள் இருதயங்களில் சிறிதளவு கூட கீழ்ப்படிதல் இல்லாமல் இருக்கிறார்கள்! மனுஷன் தேவனை எளிதாக அடைவதில்லை. ஜனங்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தினாலும், அவர்களால் அதில் ஒரு பகுதியை மாத்திரமே அடைந்து, இறுதியில் தங்களை பரிபூரணமாக்க அனுமதிக்க இயலும். தேவனுடைய கிரியையை அழிக்க முற்படும் பிரதான தேவதூதனின் பிள்ளைகளுக்கு என்ன நடக்கும்? தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதற்கு அவர்களிடம் சிறிதளவு நம்பிக்கை கூட இல்லையா? ஜெயத்தின் கிரியையைச் செய்வதில் எனது நோக்கம் ஜெயத்தின் நிமித்தமாக ஜெயம் கொள்வது மட்டுமின்றி, நீதியையும் அநீதியையும் வெளிப்படுத்துவதற்காகவும், மனுஷனின் தண்டனைக்கான ஆதாரத்தைப் பெறுவதற்காகவும், துன்மார்க்கரைக் கடிந்துகொள்வதற்காகவும் ஜெயம் கொள்வதாகும், அத்துடன் விருப்பத்துடன் கீழ்ப்படிபவர்களை பரிபூரணமாக்கும் பொருட்டும் ஜெயம் கொள்வதாகும். இறுதியில், எல்லோரும் தங்கள் வகைக்கு ஏற்ப பிரிக்கப்படுவார்கள், மேலும் பரிபூரணமாக்கப்பட்டவர்கள் தங்களது எண்ணங்கள் மற்றும் யோசனைகளில் கீழ்ப்படிதலுடன் நிறைந்திருப்பார்கள். இதுதான் இறுதியில் நிறைவேற்றப்படும் கிரியை ஆகும். இதற்கிடையில், தங்கள் ஒவ்வொரு செயலையும் கலகமாக கொண்டிருப்பவர்கள் தண்டிக்கப்பட்டு, நித்திய சாபமான அக்கினியில் எரிக்கப்படுவதற்கு அனுப்பப்படுவார்கள். அந்த காலம் வரும்போது, கடந்த காலங்களில் அந்த “வீரதீர, வெல்லமுடியாத கதாநாயகர்கள்” இழிவான மற்றும் புறக்கணிக்கப்பட்ட “பலவீனமான மற்றும் வலுவற்ற கோழைகளாக” மாறிப்போவார்கள். இது மாத்திரமே தேவனுடைய நீதியின் ஒவ்வொரு அம்சத்தையும், மனுஷனால் அவமதிக்கமுடியாத அவரது மனநிலையையும் எடுத்துரைக்க இயலும், மேலும் இதனால் மாத்திரமே என் இருதயத்திலுள்ள வெறுப்பைத் தணிக்க இயலும். இது முற்றிலும் நியாயமானது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையா?

பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அனுபவிப்பவர்கள் அல்லது இந்த ஓட்டத்தில் உள்ள எல்லோராலும் ஜீவனைப் பெற இயலாது. ஜீவன் என்பது சகல மனிஷர்களாலும் பகிரப்படும் ஒரு பொதுச் சொத்து அல்ல, மேலும் மனநிலையின் மாற்றங்களை சகல ஜனங்களாலும் எளிதில் அடைய இயலாது. தேவனுடைய கிரியைக்கு ஒப்புக்கொடுப்பது நிஜமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும், அதன்படி வாழவும் வேண்டும். மேலோட்டமான கீழ்ப்படிதலினால் மாத்திரம் தேவனுடைய பாரட்டைப் பெற இயலாது, ஒருவருடைய மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல் தேவனுடைய வார்த்தையின் மேலோட்டமான அம்சங்களுக்குக் கீழ்ப்படிவது தேவனுடைய இருதயத்திற்குப் பிரியமானது அல்ல. தேவனுக்குக் கீழ்ப்படிவதும் தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படிவதும் ஒன்றுதான். தேவனுக்கு மாத்திரமே அடிபணிந்து, அவருடைய கிரியைக்கு கீழ்ப்படியாதவர்களை கீழ்ப்படிதலுள்ளவர்கள் என்று கருத இயலாது, இவர்கள் உண்மையிலேயே கீழ்ப்படியாமல் வெளிப்புறமாக துதிபாடுகிறவர்களாக இருக்கிறார்கள். தேவனுக்கு உண்மையிலேயே கீழ்ப்படிகிறவர்கள் அனைவருமே கிரியையின் மூலம் ஆதாயப்படவும், தேவனுடைய மனப்பாங்கையும் கிரியையையும் குறித்த புரிதலைப் பெறவும் இயலும். இதுபோன்றவர்கள் மாத்திரமே தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிகிறார்கள். இதுபோன்றவர்களால் புதிய கிரியையின் மூலம் புதிய அறிவைப் பெறவும், புதிய மாற்றங்களுக்கு உட்படவும் இயலும். இந்த ஜனங்கள் மாத்திரமே தேவனால் பாராட்டப்படுகிறார்கள், இந்த ஜனங்கள் மாத்திரமே பரிபூரணமாக்கப்படுகிறார்கள், இவர்களுடைய மனநிலைகள் தான் மாறுகின்றன. தேவனால் பாராட்டப்படுகிறவர்கள் தான் தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் கிரியைக்கும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிகிறார்கள். இதுபோன்ற ஜனங்கள் மாத்திரமே சரியானவர்களாக இருக்கிறார்கள், இதுபோன்ற ஜனங்கள் மாத்திரமே தேவனை உண்மையாக விரும்புகிறார்கள், தேவனை உண்மையாக நாடுகிறார்கள். தேவன் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை தங்கள் வாய் வார்த்தைகளால் மாத்திரமே பேசிவிட்டு, உண்மையில் அவரைச் சபிப்பவர்கள் வேடந்தரித்த, பாம்பின் விஷத்தைக் கொண்டிருக்கும் ஜனங்களாக இருக்கிறார்கள். இவர்கள் தான் எல்லோரைக் காட்டிலும் துரோகிகளாக இருக்கிறார்கள். இப்போது இல்லையென்றாலும் ஒருநாள் இந்த கயவர்கள் தங்கள் கீழ்த்தரமான வேடங்களைக் களைவார்கள். இதுதான் இன்று செய்யப்படும் கிரியை அல்லவா? துன்மார்க்கர்கள் எப்போதும் துன்மார்கர்களாகவே இருப்பார்கள், அவர்கள் ஒருபோதும் ஆக்கினைத்தீர்ப்பு நாளிலிருந்து தப்பிக்க மாட்டார்கள். நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள், தேவனுடைய கிரியை முடிவுக்கு வரும்போது அவர்கள் வெளிப்படுவார்கள். துன்மார்க்கர்களில் ஒருவனும் நீதிமானாக கருதப்படமாட்டான், நீதிமான்களில் ஒருவரும் துன்மார்க்கராக கருதப்படமாட்டார்கள். நான் எந்தவொரு மனுஷனையும் தவறாகக் குற்றஞ்சாட்டலாமா?

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 488

உங்கள் வாழ்க்கை முன்னேறும்போது, நீங்கள் எப்போதும் புதிய அணுகுமுறை மற்றும் புதிய, மிகவும் அதிகமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், இது நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆழமாக வளர்ச்சியடையும். இதற்குள்தான் சகல மனுஷர்களும் உட்பிரவேசிக்க வேண்டும். உரையாடுதல், பிரசங்கங்களைக் கேட்டல், தேவனுடைய வார்த்தையைத் தியானித்தல் அல்லது சில விஷயங்களைக் கையாளுதல் ஆகியவற்றின் மூலம், நீங்கள் புதிய அறிவையும் புதிய ஞானத்தையும் பெறுவீர்கள், மேலும் பழைய மற்றும் பழங்கால விதிகளுக்குள் வாழ மாட்டீர்கள்; நீங்கள் எப்போதும் புதிய ஒளியில் வாழ்வீர்கள், மேலும் தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிச் செல்லமாட்டீர்கள். அதாவது சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதே இதற்குரிய அர்த்தமாகும். சில மேலோட்டமான அளவில் விலைக்கிரயம் கொடுப்பது வேலைக்கு ஆகாது; நாளுக்கு நாள், தேவனுடைய வார்த்தை ஒரு உயர்ந்த ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறது, மேலும் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்கள் தோன்றுகின்றன, மனுஷனும் ஒவ்வொரு நாளும் புதிதான ஒன்றிற்குள் பிரவேசிக்க வேண்டும். தேவன் பேசும்போது, அவர் பேசிய சகலத்திலும் அவர் பலனைக் கொண்டுவருவார், மேலும் உங்களால் பின்பற்ற இயலவில்லை என்றால், நீங்கள் பின்தங்கிவிடுவீர்கள். உங்கள் ஜெபங்களில் நீங்கள் ஆழமாகச் செல்ல வேண்டும்; தேவனுடைய வார்த்தையை புசித்துக் குடிப்பதில் இடைவெளிவிட்டு விட்டு நடக்கக்கூடாது. நீங்கள் பெறும் ஞானத்தையும் வெளிச்சத்தையும் ஆழப்படுத்துங்கள், உங்கள் கருத்துக்களும் கற்பனைகளும் படிப்படியாக குறைய வேண்டும். உங்கள் விவேகத்தையும் நீங்கள் பலப்படுத்த வேண்டும், நீங்கள் எதை எதிர்கொண்டாலும், அதைப் பற்றிய உங்கள் சொந்த எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் உங்கள் சொந்த கண்ணோட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆவியில் சில விஷயங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் வெளிப்புற விஷயங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும் மற்றும் எந்தவொரு பிரச்சினையின் மையத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். உங்களிடம் இந்த விஷயங்கள் இல்லையென்றால், நீங்கள் திருச்சபையை எவ்வாறு வழிநடத்த இயலும்? எந்தவொரு யதார்த்தமும் இல்லாமலும், நடைமுறையில் நடக்காமலும் நீங்கள் எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றி மாத்திரமே பேசுவீர்களேயானால், உங்களால் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே தாக்குப்பிடிக்க இயலும். புதிய விசுவாசிகளுடன் பேசும்போது இது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படலாம், ஆனால் ஒரு காலத்திற்குப் பிறகு, புதிய விசுவாசிகள் சில உண்மையான அனுபவங்களைப் பெற்றிருக்கும்போது, உங்களால்அவர்களுக்கு அவற்றை இனிமேலும் கொடுக்க இயலாது. பிறகு எப்படி நீங்கள் தேவன் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவராக இருப்பீர்கள்? புதிய ஞானம் இல்லாமல், உங்களால் செயல்பட இயலாது. புதிய ஞானம் இல்லாதவர்கள் உணரத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள், இதுபோன்றவர்கள் புதிய ஞானத்தையோ அல்லது புதிய அனுபவ உணர்வையோ ஒருபோதும் பெற மாட்டார்கள். மேலும், ஜீவனைக் கொடுக்கும் விஷயத்தில், அவர்களால் தங்கள் செயல்பாட்டை ஒருபோதும் செய்ய இயலாது, அவர்களால் தேவன் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவராக மாறவும் இயலாது. இவ்விதமான நபர் ஒன்றிற்கும் பிரயோஜனமில்லாதவர், ஊதாரியாக மட்டுமே காணப்படுகிறார். உண்மையைச் சொன்னால், இதுபோன்றவர்கள் செயலில் தங்கள் செயல்பாட்டைச் செய்ய முற்றிலும் தகுதியில்லாதவர்கள், இவர்கள் அனைவரும் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவர்கள். அவர்கள் தங்கள் செயல்பாட்டைச் செய்யத் தவறுவது மட்டுமின்றி, அவர்கள் திருச்சபைக்கு உண்மையிலேயிலேயே தேவையில்லாத அதிக சிரமத்தைக் கொடுக்கின்றனர். இந்த “வணக்கத்திற்குரிய வயதானவர்கள்” இனிமேலும் நீங்கள் காணாதவாறு திருச்சபையை விட்டு அவசரமாக வெளியேற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இதுபோன்ற ஜனங்களிடம் புதிய கிரியையைப் பற்றிய புரிதல் இருப்பதில்லை, அவர்கள் முடிவில்லாத கருத்துக்களால் நிரப்பப்பட்டிருக்கின்றனர். அவர்கள் திருச்சபையில் எந்த செயல்பாட்டையும் செய்வதில்லை; மாறாக, அவர்கள் எல்லா இடங்களிலும் தீங்குகளையே செய்கிறார்கள் மற்றும் எதிர்மறையானவற்றையே பரப்புகிறார்கள், திருச்சபையில் எல்லா விதமான தவறான நடத்தைகளிலும் தொந்தரவுகளிலும் ஈடுபடுகிறார்கள், இதனால் பாகுபாடு இல்லாதவர்களை குழப்பத்திற்குள்ளும் சீர்கேடான நிலைக்குள்ளும் தள்ளுகிறார்கள். இந்த உயிருள்ள பிசாசுகள், இந்த பொல்லாத ஆவிகள் நிமித்தமாக திருச்சபை பாழாகிவிடாதவாறு விரைவிலேயே திருச்சபையை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இன்றைய கிரியைக்கு பயப்படாமல் இருக்கலாம், ஆனால் நாளைய தினத்தின் நீதியான ஆக்கினைக்கு பயப்படமாட்டீர்களா? திருச்சபைக்குப் பாரமான ஏராளமான ஜனங்களும், தேவனுடைய வழக்கமான கிரியைக்கு இடையுறு செய்ய முற்படும் ஏராளமான ஓநாய்களும் உள்ளனர். இந்த விஷயங்கள் அனைத்தும் பிசாசுகளின் ராஜாவால் அனுப்பப்பட்ட பிசாசுகளாகவும், ஒன்றுமறியாத ஆட்டுக்குட்டிகளை விழுங்க முயற்சிக்கும் பொல்லாத ஓநாய்களுமாக இருக்கின்றன. இந்த பெயரளவிலான ஜனங்கள் வெளியேற்றப்படவில்லை என்றால், அவர்கள் திருச்சபையில் ஒட்டுண்ணிகளாகவும் காணிக்கைகளை விழுங்கும் பூச்சிகளாகவும் மாறிப்போவார்கள். இப்பொழுது இல்லாவிட்டாலும், இந்த அருவருப்பான, அலட்சியமான, இழிவான மற்றும் வெறுக்கத்தக்க மாமிசப்புழுக்கள் தண்டிக்கப்படும் ஒரு நாள் வரும்!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 495

இன்றைக்கு நீங்கள் தேவனில் அன்புகூரவும் அவரை அறிந்துகொள்ளவும் நாடுவதால், ஒரு பக்கம் நீங்கள் வருத்தத்தையும் புடமிடப்படுதலையும் சகித்துக்கொள்ளவேண்டும்; இன்னொரு பக்கம் நீங்கள் ஒரு விலைக்கிரயத்தை செலுத்தவேண்டும். தேவனை நேசிப்பதைக் காட்டிலும் ஆழமான பாடம் எதுவும் இல்லை. தேவனை நேசிப்பது எப்படி என்ற பாடத்தை ஜனங்கள் வாழ்நாள் முழுவதுமான நம்பிக்கையில் கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறலாம். நீ தேவனில் விசுவாசம் வைத்தாயானால் அவரை நேசித்தே ஆக வேண்டும். நீ தேவனில் விசுவாசம் மட்டும் வைத்து அவரில் அன்புகூரவில்லையென்றால், தேவனைப் பற்றிய அறிவை அடையவில்லையென்றால், இருதயத்திலிருந்து வரும் உண்மையான அன்பினால் அவரை ஒருபோதும் நேசிக்கவில்லையென்றால் நீ தேவன்மேல் வைக்கும் விசுவாசம் வீண்; தேவனில் விசுவாசம் வைத்தும் அவரை நேசிக்கவில்லையென்றால் நீவீணாய் உன் வாழ்க்கையை வாழ்கிறாய், உன்னுடைய முழு வாழ்க்கையுமே மற்ற எல்லாருடைய வாழ்வைக் காட்டிலும் மிகவும் தாழ்ந்ததாகும். உன்னுடைய வாழ்க்கை முழுவதுமே நீ ஒருபோதும் தேவனை நேசிக்கவில்லையென்றால் அல்லது அவரை திருப்திபடுத்தவில்லையென்றால், பிறகு நீ வாழ்கிறதன் அர்த்தம் என்ன? தேவன்மேல் வைக்கும் உன்னுடைய விசுவாசத்தின் அர்த்தம் என்ன? அது ஒரு வீணான முயற்சியாகாதா? அது ஜனங்கள் தேவனில் நம்பிக்கை வைத்து அவரை நேசிக்க வேண்டுமானால் அவர்கள் ஒரு கிரயத்தை செலுத்தவேண்டும் என்று கூறுவதாகும். ஒரு குறிப்பிட்ட வெளிப்புறமான நிலையில் அவர்கள் முயற்சிப்பதற்கு பதிலாக, தங்கள் இருதயத்தின் ஆழத்தில் உண்மையான நுண்ணறிவினை அவர்கள் தேட வேண்டும். பாடுவதிலும் நடனமாடுவதிலும் நீங்கள் உற்சாகமாக இருந்தாலும் சத்தியத்தை நடைமுறைப்படுத்த இயலாவிட்டால், நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள் என்று கூற இயலுமா? தேவனை நேசிப்பதற்கு எல்லா காரியங்களிலும் தேவனுடைய சித்தத்தை நாடுவது அவசியம். உனக்கு ஏதாவது நேரிடும்போது, தேவனுடைய சித்தத்தை தெரிந்து கொள்ளவும், அந்த விஷயத்தில் தேவனுடைய சித்தம் என்ன என்பதை காணவும் முயற்சிப்பதோடு, அவர் உன்னை எதை அடையும்படிக்கு கேட்டுக்கொள்கிறார் என்பதையும், மற்றும் அவரது சித்தத்தின்மேல் எப்படி நினைவாயிருக்கவேண்டுமென்றும் கூறுகிறார் என்பது குறித்தும் ஆழமாக நோக்குவதாகும். உதாரணமாக, ஏதோ சம்பவித்ததில் நீ தீங்கநுபவிக்க நேர்ந்தால், அந்த நேரத்தில் தேவனுடைய சித்தம் என்ன என்பதையும் மற்றும் அவரது சித்தத்தின்மேல் நீ எவ்வாறு நினைவாயிருக்கவேண்டும் என்பதையும் நீ புரிந்துகொள்ள வேண்டும். நீ உன்னையே திருப்திசெய்து கொள்ளக்கூடாது: முதலில் உன்னை ஒரு பக்கம் வைக்க வேண்டும். மாம்சத்தைக் காட்டிலும் இழிவானது எதுவுமில்லை. தேவனை திருப்திப்படுத்துவதையே நீ நோக்கவேண்டும்; மற்றும் உனது கடமையை நீ நிறைவேற்றியாக வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனைகளில் இவ்விஷயத்தில் தேவன் விசேஷித்த அறிவொளியை உனக்குக் கொண்டு வருவார், மேலும் உன்னுடைய இருதயமும் ஆறுதல் அடையும். பெரிதோ அல்லது சிறிதோ எது ஒன்று உனக்கு நிகழ்ந்தாலும் நீ முதலாவது உன்னை ஒரு பக்கம் வைத்து, மாம்சத்தை எல்லாவற்றிலும் மிகவும் தாழ்ந்ததாகக் கருத வேண்டும். நீ எந்த அளவிற்கு அதிகமாக மாம்சத்தை திருப்தி படுத்துகிறாயோ அந்த அளவிற்கு அதிகமாக அது சுதந்திரம் எடுக்கிறது; இம்முறை அதை நீ திருப்தியாக்கினால், அடுத்த முறை அது இன்னும் அதிகமாக கேட்கும். இப்படியே நடக்கும்போது ஜனங்கள் மாம்சத்தை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பார்கள். மாம்சம் எப்போதுமே அளவுகடந்த ஆசைகள் கொண்டது; நீ சாப்பிடும் உணவுப்பொருட்களாக இருக்கட்டும்; உடுத்தும் ஆடையாக இருக்கட்டும்; பொறுமையை இழந்து முன்கோபப்படுவதாக இருக்கட்டும்; உன்னுடைய சொந்த; பலவீனங்கள் மற்றும் சோம்பேறித்தனத்திற்கு தீனிபோடுகிற காரியமாக இருந்தாலும், அது எப்போதுமே தன்னை திருப்திப்படுத்தும்படி கேட்கும், மற்றும் நீயும் அதற்குள் சுகித்திருப்பாய். நீ எந்த அளவிற்கு அதிகமாக மாம்சத்தை திருப்திப்படுத்துகிறாயோ அந்த அளவிற்கு அதன் ஆசைகள் அதிகமாக மாறி மற்றும் மாம்சமானது இன்னும் அதிகமாய் மோசமானதாகி, ஜனங்களின் மாம்சம் இன்னும் ஆழமான எண்ணங்களை உருவாக்கி, தேவனுக்குக் கீழ்ப்படியாமல், தன்னைத் தானே உயர்த்தி, தேவனின் செயல்களை குறித்து சந்தேகமுறும் அளவுக்கு அதீத இச்சையில் மூழ்கும். நீ எந்த அளவுக்கு மாம்சத்தை திருப்திபடுத்துகிறாயோ, அந்த அளவுக்கு மாம்சத்தின் பலவீனங்கள் அதிகமாகும்; உன் பலவீனங்களை குறித்து யாரும் பரிதபிக்கவில்லை என்று எப்போதும் உணர்வாய்; தேவன் அதிக தொலைவு சென்றுவிட்டதாக எப்போதும் நம்பி, “தேவன் எப்படி இவ்வளவு கடுமையாக இருக்கக்கூடும்? ஏன் அவர் ஜனங்களுக்கு சற்று நேரம் கொடுக்கக்கூடாது?” என்று கூறுவாய். ஜனங்கள் எப்போது மாம்சத்தை திருப்தியாக்கி, அதில் மகிழ்கிறார்களோ அப்போது அவர்கள் தங்களையே கெடுத்துக்கொள்கிறார்கள். நீ உண்மையாக தேவனை நேசித்து மாம்சத்தை திருப்திப்படுத்தாதிருந்தால், பிறகு தேவன் செய்யும் எல்லாம் மிகச் சரியானவையாகவும் நல்லதாகவும் இருப்பதை காண்பாய், மற்றும் அவர் சபித்த உன் கலகம் மற்றும் உன் அநீதியின் நியாயத்தீர்ப்பு நியாயமானதென்று தோன்றும். தேவன் உன்னை சிட்சித்து, சீர்பொருந்தப்பண்ணி, பக்குவத்தை அடையும்படியான சூழ்நிலைக்கு உயர்த்தி, தமக்கு முன்பாக வரும் கட்டாயத்தை உருவாக்குவார்—தேவன் என்ன செய்கிறார் என்பது ஆச்சரியமானதாக இருக்கிறது என்று எப்போதும் நீ உணர்வாய். இப்படியாக அதிக வேதனையில்லாதது போன்றும், தேவன் அதிக அன்பானவராக இருப்பதையும் நீ உணர்வாய். மாம்சத்தின் பலவீனங்களுக்கு நீதீனிப்போட்டு, தேவன் வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டார் என்று கூறுவாயானால், பிறகு நீ எப்போதும் வேதனையை உணர்வாய்; எப்போதும் மனச்சோர்வுடன் இருப்பாய், தேவனுடைய எல்லா செயல்பாடுகளையுங் குறித்து தெளிவற்றிருப்பாய். தேவன் மனுஷனுடைய பலவீனங்களைக் குறித்து பரிதபியாமல் இருப்பதுபோன்றும் மனுஷனுடைய வருத்தங்களை அறியாமல் இருப்பதுபோன்றும் தோன்றும். எப்போதும் பரிதாபமாகவும் தனிமையாகவும் இருப்பதுபோன்றும், உனக்கு அநியாயம் இழைக்கப்பட்டது போன்றும் உணர்வாய், அதே நேரத்தில் குற்றஞ்சாட்டவும் தொடங்குவாய். இதுபோன்று எந்த அளவிற்கு அதிகமாக மாம்சத்தின் பலவீனங்களுக்கு தீனி போடுகிறீர்களோ அந்த அளவிற்கு அதிகமாய் தேவன் உங்களைவிட்டு தூரமாய் போய்விட்டதாக உணர்வாய். அது தேவனுடைய செயலை மறுக்குமளவுக்கும் அவரை எதிர்க்குமளவுக்கும் முழுமையான கீழ்ப்படியாமைக்குள் உன்னைத் தள்ளும். இப்படியாக, நீ மாம்சத்தை ஆதரிக்காமல் அதற்கு விரோதமாக இருக்கவேண்டும்: “என் கணவர் (மனைவி), பிள்ளைகள், வசதிகள், திருமணம், குடும்பம்—இவை யாவுமே பொருட்டல்ல! என் இருதயத்தினுள் தேவன் மட்டுமே இருக்கிறார், மாம்சத்தை அல்ல, தேவனை திருப்திப்படுத்தவே இயன்ற அளவுக்கு நான் முயற்சி செய்ய வேண்டும்.” நீ இப்படி தீர்மானிக்கவேண்டும். நீ எப்போதும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டிருந்து உன்னை விலக்கி, சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால் அதிக சிரமம் இல்லாமல் எளிதாக இதைச் செய்ய முடியும். ஒருமுறை விவசாயி ஒருவர் சாலையில் விறைத்துப்போய் கிடந்த பாம்பு ஒன்றை கண்டார். அதை விவசாயி எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டார். அந்தப் பாம்பு புத்துயிர் பெற்றபோது, விவசாயியை கடித்தது; அவர் மரணமடைந்தார். மனுஷனின் மாம்சம் இந்தப் பாம்பைப் போன்றது: அதன் சாராம்சம் அவர்களுடைய வாழ்வுக்கு ஆபத்தை விளைவிப்பதாகும்—முற்றிலுமாக அதன் போக்கில் செல்லும்போது உங்கள் வாழ்க்கையே பறிபோய்விடும். மாம்சம் சாத்தானுக்குச் சொந்தமானது. அதன் அளவுக்கு மிஞ்சிய ஆசைகளுக்குள் அது தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்; வசதியையும் ஓய்வு நேரத்தில் கேளிக்கையையும் அனுபவிக்கவும், சோம்பேறித்தனத்தில் புரளவும் விரும்பும். குறிப்பிட்ட அளவு திருப்திக்குப்பின் அது முடிவாக உன்னை விழுங்கிவிடும். அதாவது இந்த முறை நீ அதை திருப்தியாக்கினால் அடுத்த முறை அது இன்னும் அதிகமாக கேட்கும். அதற்கு எப்போதும் அளவுக்கு மீறிய ஆசைகளும் புதிய கோரிக்கைகளும் உண்டு. மாம்சத்தை நீ ஆதரிப்பதைப் பொறுத்து அது உரிமை எடுத்துக்கொண்டு, உனக்கு மேலும் இன்பம் கொடுத்து, அதனுடைய சுகபோகத்திற்குள் வாழச் செய்யும்—நீ அதை மேற்கொள்ளாவிட்டால், இறுதியில் உன்னை நீயே அழித்துக்கொள்வாய். தேவனுக்கு முன்பாக நீ ஜீவனை அடைகிறாயா என்பதும் உன்னுடைய முடிவு என்னவாக இருக்கும் என்பதும் நீ மாம்சத்திற்கு விரோதமாக எப்படி உன்னுடைய கலகத்தைச் செயல்படுகிறாய் என்பதைப் பொறுத்தே அமையும். தேவன் உன்னை இரட்சித்திருக்கிறார், தெரிந்தெடுத்திருக்கிறார் மற்றும் முன்குறித்திருக்கிறார், ஆனாலும் இன்று நீ அவரை திருப்திபடுத்த மனமில்லாதிருந்தால், சத்தியத்தின்படி நடக்க மனமில்லாதிருந்தால், தேவனை உண்மையாய் நேசிக்கும் இருதயத்தோடு உன் சொந்த மாம்சத்திற்கு விரோதமாக செயல்பட மனமில்லாதிருந்தால், இறுதியில் உன்னை நீயே கெடுத்துக் கொள்வாய்; மற்றும் அதிகபட்ச வேதனையை சகிக்க வேண்டிய நிலை ஏற்படும். நீ எப்போதும் மாம்சத்திற்கேற்றபடி நடந்து கொண்டால் சாத்தான் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை விழுங்கி உள்ளே முழுவதும் இருளாகும் வரைக்கும் உன்னை ஜீவனற்றவனாக அல்லது ஆவியின் தொடுதல் இல்லாதவனாக விட்டுவிடுவான். நீ அந்தகாரத்தில் வசிக்கும்போது சாத்தானால் அடிமையாக்கப்படுவாய்; உன் இருதயத்தில் ஒருபோதும் தேவனைக் கொண்டிருக்க மாட்டாய். அப்போது நீ தேவன் இருப்பதை மறுதலித்து, அவரை விட்டு விலகிச்செல்வாய். இப்படியாக ஜனங்கள் தேவனை நேசிக்க விரும்பினால் அவர்கள் வேதனை மற்றும் தீங்கநுபவித்தல் ஆகிய விலைக்கிரயத்தை செலுத்தவேண்டும். வெளிப்படையான ஆர்வமோ, தீங்கநுபவித்தலோ, அதிகமான வாசிப்போ, இங்குமங்குமான அதிகமாய் ஓடுவதோ தேவையில்லை; மாறாக, அவர்கள் அதிகமான ஊதாரித்தனமான எண்ணங்கள், தனிப்பட்ட விருப்பங்கள், மற்றும் தங்களின் சொந்த பரிசீலனைகள், கருத்துகள் மற்றும் நோக்கங்கள் ஆகிய காரியங்களை தங்களுக்குள் ஒதுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். தேவனுடைய சித்தம் அப்படிப்பட்டதாக இருக்கிறது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை உண்மையில் விசுவாசித்தல் என்பது தேவனை நேசித்தல் மட்டுமே” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 496

ஜனங்களுடைய வெளிப்புற மனநிலையை தேவனின் கையாளுதலும் கூட அவருடைய கிரியையின் ஒரு பகுதியாக இருக்கிறது, உதாரணமாக அவர்கள் வாழ்க்கை முறை மற்றும் பழக்கங்கள், அவர்களது வழிமுறைகள் மற்றும் வழக்கங்கள், வெளிப்புற நடைமுறைகள் மற்றும் உணர்ச்சிகர ஆவல்கள் போன்றவை, இயல்புக்கு மாறான மனிதத் தன்மை இவற்றைக் கையாள்வதும் தேவனுடைய செயலின் ஒரு பகுதியாகும். ஆனால் ஜனங்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தி அவர்களுடைய மனநிலைகளை மாற்றவேண்டும் என்று அவர் கேட்கும்போது, அது அவர்களுக்குள் இருக்கும் நோக்கங்களும் கருத்துகளும் கையாளப்படுகின்றவற்றை முதன்மையாய் குறிக்கிறது. உன்னுடைய வெளிப்புற மனநிலையை மாத்திரம் கையாளுவது கடினமல்ல; நீ விரும்பி புசிக்கும் உணவைத் தவிர்க்க கேட்டுக்கொள்வது போன்று அது எளிதானது. ஆனால் உனக்குள் தொடுகின்ற உள்ளார்ந்த கருத்துகளை விட்டுவிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு ஜனங்கள் மாம்சத்திற்கு விரோதமாய் செயல்படுவதும் ஒரு விலைக்கிரயத்தை செலுத்துவதும் மற்றும் தேவனுக்கு முன்பாக பாடு அனுபவிப்பதும் தேவையாயிருக்கிறது. இது குறிப்பாக ஜனங்களுடைய நோக்கங்களைக் குறிப்பதாகும். ஜனங்கள் தேவனில் விசுவாசம் வைப்பதற்கு ஆரம்பித்ததிலிருந்து பல தவறான நோக்கங்களை கொண்டிருக்கிறார்கள். நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தாதபோது, உன்னுடைய நோக்கங்கள் அனைத்தும் சரியானவை என்றே நினைப்பாய், ஆனால் ஏதாவது ஒன்று உனக்கு நிகழும்போது உனக்குள் பல தவறான நோக்கங்கள் இருப்பதை காண்பாய். இப்படியாக, தேவன் ஜனங்களை பரிபூரணப்படுத்துகிறபோது, தேவனைக் குறித்த அறிவை தடைசெய்யும் பல எண்ணங்கள் தங்களுக்குள் இருப்பதை அவர்களை உணரும்படி செய்கிறார். உன் நோக்கங்கள் தவறானவை என்று நீ அறிந்துகொள்ளும்போது, நீ கொண்டிருக்கும் கருத்துகள் மற்றும் நோக்கங்களின்படி நடப்பதை நிறுத்தி, தேவனுக்கு சாட்சி பகர்ந்து, உனக்கு நேரிடும் எல்லாவற்றின் மத்தியிலும் உன் ஸ்தானத்தில் நிலைத்திருக்கவும் கூடுமானால், மாம்சத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளாய் என்பது நிரூபணமாகிறது. நீ மாம்சத்திற்கு விரோதமாக செயல்படும்போது, கண்டிப்பாக உனக்குள் ஒரு யுத்தம் எழுவது தவிர்க்க முடியாதது. சாத்தான், ஜனங்களை அவற்றை பின்பற்ற வைக்க முயற்சிப்பான்; மாம்சத்தின் கருத்துகளைப் பின்பற்றவும் மற்றும் விருப்பங்களை நிலைநிறுத்தவும் முயற்சிப்பான்—ஆனால் தேவனுடைய வார்த்தைகள் ஜனங்களுக்கு உள்ளான அறிவொளியையும் பிரகாசத்தையும் அளிக்கும். இந்த நேரத்தில் தேவனையா, அல்லது சாத்தானையா யாரை பின்பற்றுவது என்பது உன்னைப் பொறுத்ததாகும். தேவன், ஜனங்களுக்கு உள்ளிருக்கும் காரியங்களை, தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதாக இல்லாத எண்ணங்கள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றை முதன்மையாக கையாளுவதற்காக சத்தியத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்கிறார். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் இருதயங்களை தொட்டு அறிவொளியையும் பிரகாசத்தையும் அளிக்கிறார். ஆகவே சம்பவிக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னாக ஒரு யுத்தம் இருக்கிறது: ஜனங்கள் ஒவ்வொருமுறையும் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போதும் அல்லது தேவனை நேசிக்கின்றபோதும் ஒரு பெரிய யுத்தம் இருக்கிறது. மாம்சத்தில் எல்லாம் நன்றாக இருப்பதாக தோன்றினாலும், அவர்களுடைய இருதயங்களின் ஆழங்களில் உண்மையில், ஒரு வாழ்வா-சாவா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்—இந்தத் தீவிர யுத்தத்திற்கு பிறகுதான், மிகப் பெரிய அளவிலான தீவிர பிரதிபலிப்புக்குப் பிறகே வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படும். ஒருவருக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியாது. ஏனென்றால் ஜனங்களுக்குள் இருக்கும் பெரும்பாலான நோக்கங்கள் தவறானவை, இல்லையென்றால் தேவனுடைய அநேக செயல்கள் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளிலிருந்து மாறுபட்டவை, ஜனங்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, சம்பவங்களுக்கு பின்னாக ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது. இந்த சத்தியத்தை நடைமுறைப்படுத்திக்கொண்ட பிறகு, இக்காட்சிகளுக்குப் பின்னால் முடிவாக, தேவனை திருப்திபடுத்தும் வகையில் ஜனங்கள் தங்கள் மனதை மாற்றுவதற்கு முன்பு அளவிடமுடியாத அளவிற்கு கவலையின் கண்ணீரை வடிப்பார்கள். இந்தப் யுத்தத்தின் காரணமாக ஜனங்கள் வருத்தங்களையும் புடமிடப்படுதலையும் சகிக்கின்றனர்; இது உண்மையான பாடு. உன்மீது யுத்தம் வரும்போது, உண்மையில் உன்னால் தேவன் பட்சமாக நிற்க முடிந்தால், தேவனை உன்னால் திருப்திப்படுத்த இயலும். சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறபோது ஒருவர் உள்ளார்ந்த பாடுகளை அனுபவிப்பது தவிர்க்க முடியாதது. அவர்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஜனங்களுக்குள் எல்லாமே சரியாக இருந்தால், பிறகு அவர்களுக்கு தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டிய அவசியமிருக்காது, அங்கே யுத்தம் இருக்காது மற்றும் அவர்கள் பாடநபவிக்க மாட்டார்கள். அதேனென்றால் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றதல்லாத பல காரியங்கள் ஜனங்களுக்குள் இருப்பதாலும், மாம்சத்திற்கு எதிரான மனநிலையின் யுத்தம்அதிகம் இருப்பதாலும், ஜனங்கள் மாம்சத்திற்கு விரோதமாக செயல்படுவதற்கான பாடத்தை அதிக ஆழமாக படிக்க வேண்டியது அவசியம். இதுதான் தேவன் தம்முடன் பாடுகளின் வழியாக செல்லும்படியாக மனுஷனை அழைக்கிறார். நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, உடனடியாக தேவனிடம் சென்று, “ஆ தேவனே! நாம் உம்மை திருப்திபடுத்த விரும்புகிறேன், உம் இருதயத்தை திருப்தியாக்கக்கூடிய இந்த இறுதி தீங்கநுபவிக்க விரும்புகிறேன், எவ்வளவு அதிக பின்னடைவுகள் ஏற்பட்டாலும், நான் இன்னும் உம்மை திருப்திபடுத்தவேண்டும். நான் என் வாழ்க்கை முழுவதையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தாலும், உம்மை திருப்திபடுத்தியே ஆக வேண்டும்,” என்று ஜெபியுங்கள். இந்தத் தீர்மானத்தோடு நீ இப்படியாக ஜெபிக்கும்போது, உன்னுடைய சாட்சியில் உன்னால் நிலைத்து நிற்க இயலும். ஒவ்வொருமுறை அவர்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஒவ்வொருமுறையும் புடமிடப்படுதலின் வழியாய் செல்லும்போதும், ஒவ்வொருமுறை பரீட்சிக்கப்படும்போதும், தேவனுடைய செயல் அவர்கள்மேல் வரும் ஒவ்வொருமுறையும், மக்கள் அதிகமான வேதனை சகிக்கவேண்டியதிருக்கும். இவை அனைத்துமே ஜனங்களுக்கான ஒரு சோதனையாகும், ஆகவே, இவை எல்லாவற்றுக்குள்ளும் ஒரு யுத்தம் உண்டு. இதுவே அவர்கள் செலுத்தும் உண்மையான கிரயம். தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிப்பதும், அதிகமானவற்றுக்காக ஓடுவதும் இக்கிரயத்தின் ஒரு பகுதியாகும். இதை ஜனங்கள் செய்தே ஆக வேண்டும், இது அவர்களுடைய கடமையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புமாகும். ஆனால் ஜனங்கள் தங்களுக்குள் ஒதுக்கப்படவேண்டியவற்றை ஒதுக்கியாகவேண்டும். நீ அப்படி செய்யாவிட்டால், உன் வெளிப்புற பாடுகள் எவ்வளவு அதிகமாயினும், நீ எவ்வளவுதான் ஓடியலைந்தாலும் அத்தனையும் வீணாயிருக்கும்! உனக்குள் நடக்கும் மாற்றங்கள் மட்டுமே உன் புறம்பான பாடுகளுக்கு மதிப்பு உண்டா என்பதை தீர்மானிக்க இயலும். உனது உள்ளா மனநிலை மாற்றப்பட்டு, நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால், உன் புறம்பான பாடுகள் தேவனின் அங்கீகாரத்தை பெறும்; உன்னுடைய உள்ளார்ந்த மனநிலையில் எந்த மாற்றமும் இல்லையென்றால் புறம்பாக நீ எவ்வளவு பாடுகளை அனுபவித்தாலும், எவ்வளவுதான் ஓடினாலும் தேவனிடமிருந்து அங்கீகாரம் கிடைக்காது—தேவனால் உறுதிப்படுத்தப்படாத எந்த பாடும் வீணாகவே போகும். நீ செலுத்திய கிரயத்தை தேவன் அங்கீகரிக்கிறாரா இல்லையா என்பது உனக்குள் ஏற்படும் மாற்றத்தையும், சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறாயா இல்லையா என்பதையும் தேவனுடைய சித்தத்திற்கும் தேவனுடைய அறிவிற்கும் உகந்ததை செய்யும்படி உங்கள் சொந்த நோக்கங்கள் மற்றும் கருத்துகளுக்கு விரோதமாக செயல்படுகிறீர்களா என்பதையும், தேவனுக்கு விசுவாசமாக இருப்பதையும் பொறுத்தே தீர்மானிக்கப்படும். நீ எவ்வளவு ஓடுகிறாய் என்பது பொருட்டல்ல, உன் சொந்த நோக்கங்களுக்கு விரோதமாக செயல்பட ஒருபோதும் அறியாதிருந்து, புறம்பான செயல்கள் மற்றும் உணர்ச்சிபூர்வ ஆர்வத்தை மட்டுமே தேடினால், உன் வாழ்க்கையில் ஒருபோதும் கவனம் செலுத்தாமல் இருந்தால், உன்னுடைய பாடுகள் அத்தனையும் வீணாயிருந்திருக்கும். குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் நீ ஏதாவது ஒன்றை சொல்ல விரும்பியும், அப்படி கூறுவது சரியானது அல்ல என்றும், உன் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் அது பயனை தராது, மாறாக அவர்களைப் புண்படுத்தும் என்றும் உள்ளாக உணர்ந்ததால், உள்ளே வேதனை இருந்தாலும், அவ்வார்த்தைகள் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அதை கூறாமல் விட்டுவிடுவாய். அதுபோன்ற நேரத்தில் உனக்குள் ஒரு யுத்தம் நடைபெறும். ஆனால், நீ வேதனையை அநுபவிக்க மனதாய், நீ நேசிப்பதை விட்டுக் கொடுப்பாய். தேவனை திருப்திப்படுத்தும்படியாய் பாடு அநுபவிக்க மனதாயிருப்பாய். உள்ளே வேதனையை அநுபவித்தாலும் மாம்சத்திற்கேற்றபடி நடக்காததால் தேவனின் இருதயமும் திருப்திப்பட்டிருக்கும். ஆகவே, நீயும் உள்ளே ஆறுதல்படுத்தப்படுவாய். இதுவே உண்மையில் கிரயம் செலுத்துவதாகும்; தேவன் விரும்பும் கிரயமுமாகும். நீ இவ்வழியில் நடந்தால் தேவன் நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப்பார்; உன்னால் இதைச் செய்ய இயலாவிட்டால், நீ எவ்வளவு அதிகமாக புரிந்து கொண்டாலும், அல்லது நீ எவ்வளவு நன்றாக பேசினாலும், அதனால் எந்தப் பயனுமில்லை! தேவனை நேசிக்கும் பாதையில், சாத்தானுடனான தேவனுடைய யுத்தத்தில் உன்னால் அவர் பக்கம் நிற்க இயலுதல் வேண்டும். சாத்தானின் பக்கமாக திரும்பாதிருந்தால் நீ தேவனின் அன்பை சம்பாதிப்பாய்; உன்னுடைய சாட்சியில் நீ உறுதியாக நிற்பாய்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை உண்மையில் விசுவாசித்தல் என்பது தேவனை நேசித்தல் மட்டுமே” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 497

தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு அடியும் வெளிப் பார்வைக்கு ஜனங்களுக்கிடையேயான செயல்பாடுகளாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால், மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால், ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் சாத்தானுக்கும் தேவனுக்கும் நடக்கும் யுத்தம் இருக்கும்; ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டும். உதாரணமாக, யோபு சோதிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் சாத்தான் தேவனோடு பந்தயமிடுகிறான். யோபுவுக்கு நேரிட்டவை அனைத்தும் மனுஷரின் கிரியையினால், மனுஷர் தலையிட்டதினால் நிகழ்ந்தவை. தேவன் உங்களில் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் சாத்தானுக்கும் தேவனுக்குமான யுத்தம் இருக்கும். உதாரணமாக, உன் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் குறித்து நீ பட்சபாதம் கொண்டிருந்தால், நீ அவர்களிடம் கூற விரும்புகிற வார்த்தைகளையே கொண்டிருப்பாய்—அந்த வார்த்தைகள் தேவனுக்கு பிரியமில்லாதவையாக இருக்கக்கூடும்—ஆனால் அவற்றை கூறாமற்ப்போனால் உன் உள்ளுக்குள் திருப்தி இருக்காது, அந்தப் பொழுதில், “நான் பேசுவதா, வேண்டாமா?” என்கிற யுத்தம் உனக்குள் நடக்கும். இப்படி நீ எதிர்கொள்ளும் ஒவ்வொன்றிலும் ஒரு யுத்தம் இருக்கும். உனக்குள் யுத்தம் ஏற்படும்போது தேவன் உனக்குள் செயல்படுகிறார். ஆகவே, உன் உண்மையான ஒத்துழைப்பு, உண்மையான பாடுகள் பாராட்டத்தக்கவை. முடிவாக, நீ உனக்குள் இந்த விஷயத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ள முடியும். கோபம் இயல்பாகவே வடிந்துவிடும். இது தேவனுடனான உன் ஒத்துழைப்பின் பயன். ஜனங்கள் தங்கள் முயற்சிகளிலெல்லாம் குறிப்பிட்ட கிரயத்தை செலுத்தவேண்டும். உண்மையான உபத்திரவம் இல்லாமல் அவர்கள் தேவனை திருப்திப்படுத்த இயலாது; அவர்கள் தேவனை திருப்திப்படுத்தும் இடத்தை நெருங்கக்கூட இயலாது. வெற்றுக் கூச்சல்களை எழுப்பிக்கொண்டிருப்பார்கள்! இந்த வெற்றுக் கூச்சல்களால் தேவனை திருப்தியாக்க இயலுமா? தேவனும் சாத்தானும் ஆவிக்குரிய மண்டலத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது நீ எப்படி தேவனை திருப்திபடுத்த வேண்டும்; எப்படி அவருக்கு உறுதியான சாட்சியாக நிற்க வேண்டும்? உனக்கு நேரிடும் ஒவ்வொன்றும் ஒரு பெரிய சோதனை என்றும் நீ சாட்சியாக நிற்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்றும் நீ அறிந்திட வேண்டும். வெளிப்பார்வைக்கு இவை முக்கியத்துவம் இல்லாதவையாக தோன்றினாலும் இந்த காரியங்கள் நீ தேவனை நேசிக்கிறாயா இல்லையா என்பதை காண்பித்துவிடும். நீ செய்தால், தேவனுக்கான உன் சாட்சியில் உறுதியாக நிற்க இயலும். அவர் மீதான அன்பை நீ நடைமுறையில் வெளிப்படுத்தவில்லையென்றால், நீ சத்தியத்தை நடைமுறையில் வெளிப்படுத்தாதவர் என்றும், சத்தியம் இல்லாததால் ஜீவன் இல்லாதவர் என்றும் அதனால் பதர் போன்றவர் என்பதையும் காட்டும். ஜனங்கள் தேவனுக்கு உறுதியான சாட்சியாக நிற்கவேண்டிய தேவை எழும்போதுதான் இவையெல்லாம் மக்களுக்கு நேரிடுகிறது. அந்த குறிப்பிட்ட பொழுதில் உனக்கு பெரிதாக எதுவும் நடக்காவிட்டாலும், உனக்கு பெரிய சாட்சி இல்லையென்றாலும், உன் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு காரியமுமே தேவனுக்கான சாட்சியாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர், சுற்றியிருக்கும் அனைவருடைய பாராட்டுதலை பெற உனக்கு கூடுமானால், ஒருநாள் அவிசுவாசிகளும் வந்து நீ செய்த எல்லாவற்றையும் பாராட்டினால், தேவன் செய்பவை அனைத்தும் ஆச்சரியமானவை என்று கண்டால், உனக்கு சாட்சி இருக்கிறது. உனக்கு நுண்ணிய அறிவு இல்லையானாலும், நீ குறைந்த திறன் கொண்டவராக இருந்தாலும் தேவன் உன்னை பரிபூரணமாக்கியதன் மூலம் அவரை திருப்திப்படுத்தவும் அவரது சித்தம் குறித்து நினைவாயிருக்கவும், குறைந்த திறன் கொண்ட ஜனங்களில் அவரது மகத்தான கிரியையை மற்றவர்களுக்கு காட்டவும் முடியும். ஜனங்கள் தேவனை அறிந்து, சாத்தானுக்கு முன்பாக ஜெயம்பெற்று, சிறப்பான அளவில் தேவனுக்கு விசுவாசமாக இருப்பதே பெரிய சாட்சியாகும். இதுபோன்ற ஜனங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. மகத்தான காரியத்தை செய்ய உன்னால் இயலாவிட்டாலும் தேவனை திருப்திப்படுத்த முடியும். மற்றவர்களால் தங்கள் கருத்துகளை ஒதுக்க இயலாது; உன்னால் கூடும். தங்கள் உண்மையான அனுபவங்களின்போது மற்றவர்களால் தேவனுக்கு சாட்சியாக விளங்க இயலாது, ஆனால் நீ உன் உண்மையான வளர்ச்சி மற்றும் செயல்களை தேவனின் அன்புக்கு பிரதிபலன் செய்ய பயன்படுத்துவதோடு அவருக்கு சாட்சியாக ஒலிக்க இயலும். உண்மையில் இது தேவனை நேசிப்பதாக எண்ணப்படும். உங்களால் இவற்றை செய்ய இயலாவிட்டால், நீங்கள் குடும்ப உறுப்பினர்கள், சகோதர, சகோதரிகள் அல்லது உலகிலுள்ள ஜனங்கள் மத்தியில் சாட்சியாக விளங்க இயலாது. சாத்தானுக்கு முன்பாக உன்னால் சாட்சியாக விளங்க முடியாவிட்டால், சாத்தான் உன்னைப் பார்த்து நகைப்பான்; உன்னை கேலி செய்யலாம்; உன்னை அடிக்கடி முட்டாளாக்கி தன்னிலை மறந்த நிலைக்குத் தள்ளக்கூடும். எதிர்காலத்தில் பெரிய சோதனைகள் உனக்கு வரலாம்—ஆனால் இன்று, நீ உண்மையான இருதயத்தோடு தேவனை நேசித்தால், எத்தனை பெரிய சோதனைகள் எதிரே இருந்தாலும், உனக்கு என்ன நேர்ந்தாலும் உன்னால் சாட்சியில் உறுதியாக நிற்க முடிந்தால், தேவனை திருப்திப்படுத்த முடிந்தால், பிறகு உ இருதயம் தேற்றப்படும், எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய சோதனைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் பயப்படாதிருப்பாய். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை உங்களால் காண இயலாது; இன்றைய சூழலில் மட்டுமே நீங்கள் தேவனை திருப்திப்படுத்த முடியும். எந்த பெரிய செயலையும் செய்ய உங்களால் இயலாத நிலையில், தேவனுடைய வார்த்தைகளை உண்மை வாழ்வில் அனுபவிப்பதன் மூலம் அவரை திருப்தியாக்குவதில் கவனமாயிருப்பதோடு, சாத்தானுக்கு வெட்கமுண்டாகும்படி உறுதியான, எதிரொலிக்கும் சாட்சியை உடையவர்களாக இருக்கவேண்டும். உன் மாம்சமானது அதிருப்தியாக இருந்தாலும், வேதனையுற்றாலும் நீ தேவனை திருப்திபடுத்திக்கொண்டு சாத்தான்மேல் வெட்கத்தை கொண்டு வருவாய். நீ எப்போதும் இதுபோன்றே செயல்பட்டால் தேவன் உனக்கு முன்பாக ஒரு பாதையை திறப்பார். ஒருநாள் ஒரு பெரிய சோதனை வரும், மற்றவர்கள் விழுந்து போவார்கள், ஆனால் நீ இன்னும் உறுதியாக நிற்பாய்: நீ செலுத்தியிருக்கிற கிரயத்தின் காரணமாக நீ விழுந்துபோகாமல் உறுதியாக நிற்கும்படி தேவன் உன்னை பாதுகாப்பார். சாதாரணமாக சத்தியத்தை நடைமுறைப்படுத்த உன்னால் முடிந்தால், உண்மையாக தேவனை இருதயத்திலிருந்து நேசித்து திருப்திபடுத்தினால் தேவன் எதிர்கால சோதனைகளின்போது நிச்சயமாய் உன்னை பாதுகாப்பார். நீ பேதையாக, குறைந்த வளர்ச்சியுள்ளவனாய், செயல்திறன் குறைந்தவனாய் இருந்தாலும் தேவன் உன்னிடம் பாகுபாடு பார்க்கமாட்டார். அது உன் நோக்கங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை பொறுத்தது. இன்றைக்கு மிகச்சிறிய விஷயத்தில் கவனம் செலுத்தி, தேவனை உண்மையாய் நேசிக்கும் இருதயத்துடன், உண்மையாய் இருதயத்தை தேவனுக்குக் கொடுத்து, சிலவற்றை புரிந்து கொள்ள இயலாவிட்டாலும், உன் நோக்கங்களை சரிப்படுத்திக் கொள்ளும்படி தேவன் முன் வந்து, அவருடைய சித்தத்தை நாடி, எல்லா காரியங்களிலும் தேவனை திருப்திபடுத்த தேவையானவற்றை செய். உன் சகோதர, சகோதரிகள் ஒருவேளை உன்னை கைவிடலாம். ஆனால் உன் இருதயம் தேவனை திருப்திபடுத்தும், நீ மாம்சத்தின் இன்பங்களை நாடித் தேட மாட்டாய். எப்போதும் இம்முறையை நடைமுறைப்படுத்துவாயானால் பெரிய சோதனைகள் வரும்போது பாதுகாக்கப்படுவாய்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை உண்மையில் விசுவாசித்தல் என்பது தேவனை நேசித்தல் மட்டுமே” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 498

ஜனங்களுடைய எந்த உள்ளார்ந்த நிலையை சோதனைகள் குறி வைக்கின்றன? தேவனை திருப்திப்படுத்த இயலாத ஜனங்களின் கலகம்பண்ணுகிற மனநிலையை குறி வைக்கின்றன. ஜனங்களுக்குள் அசுத்தமானவை அதிகம் உள்ளன; மாய்மாலமானவை அதிகம் உள்ளன, ஆகவே தேவன் ஜனங்களை சுத்திகரிக்கும்படி அவர்களை உபத்திரவத்திற்கு உட்படுத்துகிறார். ஆனால் இன்று நீ தேவனை திருப்திப்படுத்தக்கூடுமானால் எதிர்கால உபத்திரவங்கள் உன்னை பரிபூரணப்படுத்துகிறவையாய் அமையும். இன்று உன்னால் தேவனை திருப்திப்படுத்த இயலாவிட்டால், எதிர்கால உபத்திரவங்கள் உன்னை சோதிக்கிறவையாய் அமையும். அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாமல் நீ விழுந்து போவாய், அதேவேளையில் உனக்கே உன்னால் உதவி செய்ய இயலாது, தேவனுடைய செயலை தொடரவோ, உண்மையான வளர்ச்சியை பெறவோ முடியாது. எதிர்காலத்தில் உறுதியாக நிற்கவேண்டுமென்றும், இன்னும் நல்லமுறையில் தேவனை திருப்திப்படுத்தவும், கடைசி வரைக்கும் அவரை பின்பற்றவும் விரும்பினால், இன்று நீ உறுதியான அஸ்திபாரத்தை போட வேண்டும். தேவனை திருப்திப்படுத்துவதற்கு எல்லாவற்றிலும் சத்தியத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்; அவரது சித்தத்தை நினைவுகூர வேண்டும். இம்முறையை நீ எப்போது கடைபிடிக்கும்போது உனக்குள் ஒரு அஸ்திபாரம் இருக்கும்; தம்மை நேசிக்கும்படி ஒரு இருதயத்தை தேவன் உன்னில் தூண்டுவார், உனக்கு விசுவாசத்தை அளிப்பார். ஒருநாள் உண்மையில் உபத்திரவம் உன்னை அணுகும்போது கொஞ்சம் வேதனையை அனுபவிக்கலாம்; குறித்த நிலை வரைக்கும் துன்புறலாம், நீ மரித்துவிட்டது போன்று கவலைப்படலாம்—ஆனால் தேவனுக்கான உன் அன்பு மாறாது, அது இன்னும் ஆழமாகும். அதுவே தேவனுடைய ஆசீர்வாதங்கள். தேவன் கூறும் எல்லாவற்றையும் உன்னால் ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், கீழ்ப்படிதலின் இருதயத்தோடு இன்றே அதை செய்யக்கூடுமானால், நீ நிச்சயமாகவே தேவனால் ஆசீர்வதிக்கப்படுவாய், தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக, அவரது வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்வாய். இன்று நீ நடைமுறைப்படுத்தவில்லையென்றால், ஒருநாள் உபத்திரவங்கள் உன்னை அணுகும்போது நீ விசுவாசமின்றியும், நேசிக்கிற இருதயம் இன்றியும் காணப்படுவாய், அப்போது உபத்திரவம் சோதனையாய் மாறும்; நீ சாத்தானின் சோதனைக்குள் சிக்கிக் கொள்வாய், தப்பிப்பதற்கு எந்த வழியும் இருக்காது. இன்று சிறு உபத்திரவம் வரும்போது உன்னால் உறுதியாய் நிற்க இயலலாம், ஆனால் ஒருநாள் பெரிய உபத்திரவம் வரும்போது உறுதியாய் நிற்க இயலவேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலர் தாங்கள் ஏற்கனவே கிட்டத்தட்ட பரிபூரணமடைந்து விட்டதாக நினைப்பார்கள்; தற்பெருமை பேசுவார்கள். இதுபோன்ற வேளைகளில் நீ ஆழமாக செல்லாமல் தொடர்ந்து நிறைவுடன் அமர்ந்திருந்தால், உனக்கு ஆபத்து வரும். இன்று தேவன் பெரிய உபத்திரவங்களை செயல்படுத்தாமல் இருக்கலாம், எல்லாம் நன்றாகத் தோன்றலாம். ஆனால் தேவன் உன்னை சோதிக்கும்போது நீ அதிக குறைபாடு உள்ளவன் என்பதை கண்டுபிடிப்பாய், உன் வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறபடியால் பெரிய உபத்திரவங்களை சகித்துக்கொள்ள இயலாத நிலையில் இருப்பாய். நீ இருப்பதுபோன்றே தொடர்ந்தால், இருக்கின்ற நிலையிலேயே அமர்ந்திருந்தால், உபத்திரவங்கள் வரும்போது விழுந்து போவாய். உங்கள் வளர்ச்சி எவ்வளவு குறைவாக இருக்கிறதென்று அடிக்கடி பார்க்கவேண்டும். இந்த வழியில் மட்டுமே நீங்கள் முன்னேற முடியும். உபத்திரவங்களின்போது மட்டுமே உன் வளர்ச்சி மிகவும் குறைவு என்றும் உன் மனவலிமை மிகவும் பலவீனமானது என்றும், உனக்குள் இருப்பது உண்மையில் குறைவு என்றும் தேவனுடைய சித்தத்திற்கு நீ போதுமானவனல்ல என்பதையும் காண்பாய். அப்போதுதான் இவற்றை உணர்வாயானால் அது தாமதமான கண்டுபிடிப்பாய் இருக்கும்.

நீ தேவனின் மனநிலையை அறியவில்லையென்றால், உபத்திரவங்களின்போது கண்டிப்பாக விழுந்துபோவாய். தேவன் ஜனங்களை எப்படி பரிபூரணப்படுத்துகிறார், என்ன செய்து பரிபூரணமாக்குகிறார், எப்போது தேவனுடைய உபத்திரவங்கள் உன்மேல் வரும் என்பதை அறிய மாட்டாய். உன் கருத்துகளுடன் உபத்திரவங்கள் பொருந்தாத காரணத்தினால் உன்னால் உறுதியாக நிற்க இயலாமல் போகும். தேவனுடைய உண்மையான அன்பே அவரது முழுமையான மனநிலையாகும். தேவனுடைய முழுமையான மனநிலை ஜனங்களுக்குக் காண்பிக்கப்படும்போது, அது உன் மாம்சத்துக்கு எதைக் கொண்டு வரும்? தேவனுடைய நீதியுள்ள மனநிலை ஜனங்களுக்குக் காண்பிக்கப்படும்போது அவர்களது மாம்சம் வேதனையை அநுபவிப்பது தவிர்க்க இயலாதது. நீ இந்த வேதனையை அநுபவிக்காவிட்டால், தேவனால் பூரணப்படுத்தப்படவும், தேவனுக்கு உண்மையான அன்பை அர்ப்பணிக்கவும் இயலாது. தேவன் உன்னை பூரணமாக்கினால், அவர் நிச்சயமாக தமது முழு மனநிலையையும் உனக்குக் காட்டுவார். சிருஷ்டிப்பின் நாள் முதல் இன்று வரைக்கும் தேவன் ஒருபோதும் தமது முழு மனநிலையை மனுஷனுக்கு காட்டியதில்லை—ஆனால் கடைசி நாட்களில் அவர் இதை தாம் முன்குறித்த மற்றும் தெரிந்து கொண்ட ஜனங்கள் குழுவினருக்கு வெளிப்படுத்துகிறார். ஜனங்களை பூரணப்படுத்துவதன் மூலம் அவர் தம் மனநிலைகளை வெளியரங்கமாக வைக்கிறார், அதன் மூலம் முழு ஜனக்குழுவை உருவாக்குகிறார். ஜனங்கள் மீதான தேவனுடைய உண்மையான அன்பு அத்தகையது. தேவனுடைய உண்மையான அன்பினை அநுபவிக்கிறதற்கு ஜனங்கள் அதிக வேதனையை சகிக்கவேண்டியதோடு, அதிக கிரயத்தையும் செலுத்தவேண்டும். அதன்பின்னரே அவர்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படுவர், தங்கள் உண்மை அன்பை திரும்பவும் தேவனுக்குக் கொடுக்க முடியும், அதன் பின்னரே தேவனுடைய இருதயம் திருப்தியடையும். தேவனால் பரிபூரணப்படுத்தப்படவேண்டுமென்று ஜனங்கள் விரும்பினால், அவரது சித்தத்தை செய்ய விரும்பினால், தங்கள் உண்மை அன்பை முழுமையாக தேவனுக்குக் கொடுத்தால், தங்கள் சூழ்நிலையில் அதிக பாடுகளையும் தொல்லைகளையும், மரணத்தை காட்டிலும் மோசமான வலியையும் அநுபவிக்க வேண்டியதாகும். முடிவில் அவர்கள் தங்கள் முழு இருதயத்தையும் தேவனிடம் திருப்பி தரவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவர் தேவனை உண்மையில் நேசிக்கிறாரா, இல்லையா என்பது தீங்கநுபவித்தல் மற்றும் புடமிடுதலின் காலத்தில்தான் வெளிப்படுத்தப்படும். ஜனங்களின் அன்பை தேவன் சுத்திகரிக்கிறார், இதுவும் தீங்கநுபவித்தல் மற்றும் சுத்திகரித்தலின் மத்தியில் மட்டுமே அடையப்படுகிறது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை உண்மையில் விசுவாசித்தல் என்பது தேவனை நேசித்தல் மட்டுமே” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 499

பெரும்பாலான ஜனங்களின் தேவன் மீதான விசுவாசத்தின் பொருள் மத நம்பிக்கையே ஆகும். அவர்களால் தேவனை நேசிக்க இயலாது, மேலும் இயந்திர மனிதனைப் போல மட்டுமே தேவனைப் பின்பற்ற முடியும், தேவனுக்காக உண்மையிலேயே ஏங்கவோ அல்லது அவரைத் தொழுதுகொள்ளவோ முடியாது. அவர்கள் வெறுமனே அவரை அமைதியாகப் பின்பற்றுகிறார்கள். பலர் தேவனை விசுவாசிக்கிறார்கள், ஆனால் தேவனை நேசிப்பவர்கள் மிகக் குறைவு, அவர்கள் பேரழிவிற்கு பயப்படுவதால் மட்டுமே, அவர்கள் தேவனை “வணங்குகிறார்கள்”, இல்லையென்றால் தேவன் உயர்ந்தவர் மற்றும் வலிமைமிக்கவர் என்பதால் அவர்கள் அவரைப் “போற்றுகிறார்கள்”. ஆனால் அவர்களின் பயபக்தியிலும் புகழ்ச்சியிலும், அன்போ உண்மையான ஏக்கமோ இல்லை. அவர்களின் அனுபவங்களில் அவர்கள் சத்தியத்தை மிகச்சிறிய அளவில் இல்லையெனில் சில குறிப்பிடத்தக்க மர்மங்களை நாடுகிறார்கள். பெரும்பாலான ஜனங்கள் வெறுமனே பின்பற்றுகிறார்கள், கலங்கிய நீரில் ஆசீர்வாதத்தை மீனைப்போல பிடிக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தைத் தேடுவதும் இல்லை, அவர்கள் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படிவதுமில்லை. எல்லா ஜனங்களுக்கு தேவன்மீது உள்ள விசுவாசத்தின் வாழ்க்கையும் அர்த்தமற்றது, அதற்கு மதிப்பு இல்லை, அதில் அவர்களின் தனிப்பட்ட கருத்துகளும் நோக்கங்களும் உள்ளன. அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்காகவேயன்றி தேவனை நேசிப்பதற்காக தேவனை விசுவாசிக்கவில்லை. பலர் தங்கள் விருப்பப்படி நடக்கிறார்கள். அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள், தேவனின் ஆர்வங்களையும் அல்லது அவர்கள் செய்வது தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கிறதா என்றும் ஒருபோதும் ஆலோசிக்க மாட்டார்கள். அத்தகையவர்களால் உண்மையான விசுவாசத்தைக்கூட அடைய முடியாது, தேவன் மீதான அன்பு ஒருபுறம் இருக்கட்டும். தேவனின் பொருள் மனிதன் நம்புவதற்காக மட்டுமல்ல, இன்னும், அது மனிதனால் நேசிக்கப்பட வேண்டும். ஆனால் தேவனை விசுவாசிக்கிறவர்களில் பலரால் இந்த “ரகசியத்தை” கண்டுபிடிக்க முடியாது. ஜனங்கள் தேவனை நேசிக்கத் துணிவதும் இல்லை, அவரை நேசிக்க முயற்சிப்பதும் இல்லை. தேவனைக் குறித்து அன்புகூற அதிகம் உண்டு என்று அவர்கள் ஒருபோதும் கண்டுபிடித்திருக்கவில்லை. தேவன் மனிதனை நேசிக்கும் தேவன் என்றும், மனிதனால் நேசிக்கப்பட வேண்டிய தேவன் என்றும் அவர்கள் ஒருபோதும் கண்டுபிடித்திருக்கவில்லை. தேவனின் அருமை அவருடைய கிரியையில் வெளிப்படுத்தப்படுகிறது. ஜனங்கள் அவருடைய கிரியையை அனுபவிக்கும் போது மட்டுமே அவர்களால் அவருடைய அமையைக் கண்டறிய முடியும். அவர்களின் உண்மையான அனுபவங்களில் மட்டுமே தேவனின் அருமையை அவர்களால் பாராட்ட முடியும். நிஜ வாழ்க்கையில் அதைக் கடைபிடிக்காமல், தேவனின் அருமையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. தேவனைப் பற்றி நேசிக்க அநேகம் இருக்கிறது, ஆனால் உண்மையில் அவருடன் ஐக்கியப்படாமல் ஜனங்களால் அதைக் கண்டுபிடிக்க இயலாது. அதாவது, தேவன் மாம்சமாக மாறவில்லை என்றால், ஜனங்களால் அவருடன் உண்மையாக ஐக்கியப்பட இயலாது, அவர்களால் உண்மையில் அவருடன் ஐக்கியப்பட முடியாவிட்டால், அவர்களால் அவருடைய கிரியையை அனுபவிக்கவும் முடியாது. எனவே அவர்களின் தேவன் மீதான அன்பு மிகவும் பொய் மற்றும் கற்பனையால் கறைபடுத்தப்படுகிறது. பரலோகத்தில் உள்ள தேவன் மீதான அன்பு பூமியிலுள்ள தேவன் மீதான அன்பைப் போல உண்மையானதல்ல, ஏனென்றால் ஜனங்கள் தங்களின் கண்களால் பார்த்ததையும் அவர்கள் தனிப்பட்ட முறையில் அனுபவித்ததையும் விட, பரலோகத்தில் தேவனைப் பற்றிய அறிவு அவர்களின் கற்பனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேவன் பூமிக்கு வரும்போது, அவருடைய உண்மையான கிரியைகளையும் அவருடைய அருமையையும் ஜனங்களால் காண முடிகிறது, மேலும் அவருடைய நடைமுறை மற்றும் இயல்பான தன்மையை அவர்கள் அனைவராலும் காண முடிகிறது, இவை அனைத்தும் பரலோகத்தில் உள்ள தேவனைக்குறித்த அறிவை விட ஆயிரக்கணக்கான மடங்கு உண்மையானவை. பரலோகத்தில் ஜனங்கள் தேவனை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த அன்பைக் குறித்து உண்மையானது எதுவுமில்லை, அது மனிதனின் கருத்துக்களால் நிறைந்துள்ளது. பூமியில் அவர்கள் தேவன்மீது எவ்வளவு குறைவாக அன்பு வைத்திருந்தாலும், இந்த அன்பு உண்மையானது. அதில் கொஞ்சம் மட்டுமே இருந்தாலும், அது இன்னும் உண்மையானது. தேவன் உண்மையான கிரியையின் மூலம் ஜனங்கள் அவரை அறிந்துகொள்ளச் செய்கிறார், இந்த அறிவின் மூலம் அவர் அவர்களின் அன்பைப் பெறுகிறார். இது பேதுருவைப் போன்றது, அவர் இயேசுவோடு வாழ்ந்திருக்காவிட்டால், இயேசுவை வணங்குவது அவருக்கு சாத்தியமில்லை. ஆகவே, இயேசுவுடனான ஐக்கியத்தின் அடிப்படையில் இயேசுவிடம் அவர் கொண்டிருந்த விசுவாசமும் கட்டப்பட்டது. மனிதனை அவனையே நேசிக்க வைப்பதற்காக, தேவன் மனிதர்களிடையே வந்திருந்து மனிதனுடன் சேர்ந்து வாழ்கிறார், மேலும் அவர், தேவனின் யதார்தத்தையே மனிதன் பார்க்கவும் அனுபவமாகவும் செய்கிறார்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 500

ஜனங்களை பரிபூரணமாக்க தேவன் யதார்த்தத்தையும் உண்மைகளின் தோற்றத்தையும் பயன்படுத்துகிறார், தேவனின் வார்த்தைகள் அவர் ஜனங்களை பரிபூரணபடுத்துவதன் ஒரு பகுதியை நிறைவேற்றுகின்றன, இதுவே வழிகாட்டுதலின் கிரியை மற்றும் வழியைத் திறப்பது ஆகும். அதாவது, தேவனின் வார்த்தைகளில் நீ நடைமுறையின் பாதையையும் தரிசனங்களின் அறிவையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், மனிதன் ஒரு பாதையையும் தரிசனத்தையும் தனது உண்மையான நடைமுறையில் கொண்டிருப்பான், மேலும் தேவனின் வார்த்தைகளின் மூலம் அவனால் வெளிச்சத்தைப் பெற முடியும். இவை தேவனிடமிருந்து வந்தவை என்பதையும், அதிகம் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொண்ட பிறகு, மனிதன் உடனடியாக இந்த யதார்த்தத்திற்குள் நுழைய வேண்டும், மேலும் தேவனின் வார்த்தைகளை அவனது நிஜ வாழ்க்கையில் தேவனைத் திருப்திப்படுத்த பயன்படுத்த வேண்டும். தேவன் எல்லாவற்றிலும் உன்னை வழிநடத்துவார், மேலும் உனக்கு நடைமுறையான பாதையைத் தருவார், மேலும் அவர் குறிப்பாக அருமையானவர் என்பதை உன்னை உணர வைப்பார், மேலும் உன்னில் தேவக் கிரியையின் ஒவ்வொரு அடியும் உன்னை முழுமையாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதைக் காண உன்னை அனுமதிப்பார். நீ தேவனின் அன்பைக் காண விரும்பினால், நீ உண்மையிலேயே தேவனின் அன்பை அனுபவிக்க விரும்பினால், நீ யதார்த்தத்திற்குள் ஆழமாகச் செல்ல வேண்டும், நீ நிஜ வாழ்க்கையில் ஆழமாகச் செல்ல வேண்டும், மேலும் தேவன் செய்கின்ற அனைத்தும் அன்பும் இரட்சிப்பும் தான் என்பதைக் காண வேண்டும், அவர் செய்கின்றவை எல்லாம் அசுத்தமானதை விட்டுவிட ஜனங்களை இயலச்செய்வதற்கும், தேவனின் விருப்பத்தை பூர்த்தி செய்ய இயலாத மனிதனுக்குள் உள்ள காரியங்களைச் செம்மைப்படுத்துவதற்கும் ஆகும். மனிதனுக்கு வழங்குவதற்கு தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். நிஜ வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஜனங்கள் அனுபவிக்க அவர் ஏற்பாடு செய்கிறார், மேலும் தேவனின் அநேக வார்த்தைகளை ஜனங்கள் புசித்துக் குடித்தால், அவர்கள் உண்மையில் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரும்போது, தேவனின் அநேக வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களால் தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து சிரமங்களையும் தீர்க்க முடியும். அதாவது, நீ யதார்த்தத்திற்குள் ஆழமாகச் செல்ல தேவனின் வார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டும். நீ தேவனின் வார்த்தைகளை புசித்துக் குடிக்காமலும் தேவனுடைய கிரியை இல்லாமலும் இருந்தால், நிஜ வாழ்க்கையில் உனக்கு பாதை இருக்காது. நீ ஒருபோதும் தேவனின் வார்த்தைகளை புசிக்கவோ, குடிக்கவோ இல்லை என்றால், உனக்கு ஏதாவது நேர்ந்தால் நீ குழப்பமடைவாய். நீ தேவனை நேசிக்க வேண்டும் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் நீ எந்த வேறுபாட்டிற்கும் தகுதியற்றவன் மற்றும் நடைமுறைக்குறிய பாதையை கொண்டிருக்கவில்லை. நீ தடுமாறிக் குழப்பமடைகிறாய், சில சமயங்களில் மாம்சத்தை திருப்திப்படுத்துவதன் மூலம் நீ தேவனை திருப்திப்படுத்தலாம் என்று கூட நம்புகிறாய். இவை அனைத்தும் தேவனின் வார்த்தைகளை புசியாமலும், குடிக்காமலும் இருப்பதன் விளைவாகும். அதாவது, நீ தேவனின் வார்த்தைகளின் உதவியின்றி இருந்து, யதார்த்தத்திற்குள் மட்டுமே இருந்தால், உன்னால் அடிப்படையில் நடைமுறைக்குறிய பாதையை கண்டுபிடிக்க இயலாது. இது போன்றவர்களுக்கு தேவனை விசுவாசிப்பதன் அர்த்தம் என்னவென்று வெறுமனே புரியவதில்லை, தேவனை நேசிப்பதன் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் மிகக் குறைவாகவே புரிந்துகொள்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளின் வெளிச்சம் மற்றும் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி, நீ அடிக்கடி ஜெபிக்கிறாய், ஆராய்கிறாய் மற்றும் தேடுகிறாய் என்றால், இதன் மூலம் நீ நடைமுறையில் வைக்க வேண்டியதைக் கண்டுபிடித்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, உண்மையிலேயே தேவனுடன் ஒத்துழைத்து, தடுமாற்றமாகவும் குழப்பமாகவும் இல்லாமல் இருக்கிறாய், பின்னர் நீ நிஜ வாழ்க்கையில் ஒரு பாதையைப் பெற்றிருப்பாய், மேலும் தேவனை உண்மையிலேயே திருப்திப்படுத்துவாய். நீ தேவனை திருப்திப்படுத்தியிருக்கும்போது, உனக்குள் தேவனின் வழிகாட்டுதல் இருக்கும், மேலும் நீ குறிப்பாக தேவனால் ஆசீர்வதிக்கப்படுவாய், இது உனக்கு இன்ப உணர்வைத் தரும். நீ தேவனை திருப்திப்படுத்தியிருப்பதால் நீ குறிப்பாக கவுரவிக்கப்பட்டவனாய் உணருவாய், நீ குறிப்பாக உனக்குள்ளே பிரகாசமாக இருப்பாய், உன் இருதயத்தில் நீ தெளிவாகவும் அமைதியாகவும் இருப்பாய். உன் மனசாட்சி ஆறுதலடைந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடும், உன் சகோதர சகோதரிகளைப் பார்க்கும்போது நீ உனக்குள்ளே இனிமையாக உணருவாய். தேவனின் அன்பை அனுபவிப்பதன் அர்த்தம் இதுதான், இது மட்டுமே உண்மையிலேயே தேவனை அனுபவிப்பது ஆகும். தேவனின் அன்பை ஜனங்கள் அனுபவிப்பது அனுபவத்தின் மூலம் அடையப்படுகிறது. கஷ்டங்களை அனுபவிப்பதன் மூலமும், சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதை அனுபவிப்பதன் மூலமும், அவர்கள் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். தேவன் உன்னை உண்மையிலேயே நேசிக்கிறார் என்று நீ சொன்னால், ஜனங்களுக்காக தேவன் உண்மையிலேயே ஒரு பெரிய கிரயத்தைச் செலுத்தியுள்ளார், அவர் பொறுமையாகவும் கனிவாகவும் பல வார்த்தைகளை பேசியுள்ளார், மற்றும் எப்போதும் ஜனங்களைக் இரட்சிக்கிறார், இந்த வார்த்தைகளை நீ உச்சரிப்பது தேவனின் இன்பத்தின் ஒரே ஒரு பக்கம் மட்டுமே ஆகும். ஆனாலும், ஜனங்கள் தங்கள் நிஜ வாழ்க்கையில் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதே அதிக சந்தோஷமும் உண்மையான சந்தோஷமும் ஆகும். அதன் பிறகு அவர்கள் அமைதியானவர்களாகவும், இருதயங்களில் தெளிவாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள்ளாக பெரிதாக அசைக்கப்பட்டதை உணர்கிறார்கள் மற்றும் தேவன் மிகவும் அன்பானவர் என்று உணர்கிறார்கள். நீ செலுத்திய கிரயம் நியாயமானதை விட அதிகம் என்பதை நீ உணருவாய். உன் முயற்சிகளில் ஒரு பெரிய கிரயத்தைச் செலுத்தியுள்ளதால், நீ குறிப்பாக உனக்குள்ளே பிரகாசமாக இருப்பாய். நீ உண்மையிலேயே தேவனின் அன்பை அனுபவித்து வருகிறாய் என்பதை நீ உணருவாய், மேலும் தேவன் ஜனங்களில் இரட்சிப்பின் கிரியையைச் செய்துள்ளார் என்பதையும், ஜனங்களைச் சுத்திகரிப்பது என்பது தூய்மைப்படுத்துவதாகும் என்பதையும் நீ புரிந்துகொள்வாய். அவர்கள், தேவனை உண்மையிலேயே நேசிக்கிறார்களா என்று அவர்களை சோதிக்க தேவன் முயற்சிக்கிறார். நீ எப்பொழுதும் இந்த வழியில் சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால், நீ படிப்படியாக தேவனின் பெரும்பாலான கிரியைகளைப் பற்றிய தெளிவான அறிவை வளர்த்துக் கொள்வாய், அந்நேரத்தில் நீ தேவனின் வார்த்தைகள் உனக்கு முன்பாக படிகத்தைப் போல தெளிவாக இருப்பதை நீ உணர்ந்து கொள்வாய். நீ பல உண்மைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தால், எல்லா விஷயங்களையும் நடைமுறைப்படுத்துவது எளிது என்றும், நீ எந்தவொரு பிரச்சினையையும் சமாளிக்கலாம் மற்றும் எந்தவொரு சோதனையையும் சமாளிக்க முடியும் என்றும் நீ உணர்ந்து கொள்வாய், மேலும் உனக்கு எதுவும் ஒரு பிரச்சனையல்ல என்பதை நீ கண்டு கொள்வாய், இது பெரிதும் உன்னை சுதந்திரமாக்கி விடுவிக்கும். இந்த நேரத்தில், நீ தேவனின் அன்பை அனுபவிப்பாய், மேலும் தேவனின் உண்மையான அன்பு உன் மீது வந்திருக்கும். தரிசனங்களைக் கொண்டவர்களையும், சத்தியம் உடையவர்களையும், அறிவுள்ளவர்களையும், அவரை உண்மையாக நேசிப்பவர்களையும் தேவன் ஆசீர்வதிக்கிறார். ஜனங்கள் தேவனின் அன்பைக் காண விரும்பினால், அவர்கள் நிஜ வாழ்க்கையில் உண்மையை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும், அவர்கள் வலியைத் தாங்கிக்கொள்ளவும், தேவனை திருப்திப்படுத்த தாங்கள் விரும்புவதை கைவிடவும் தயாராக இருக்க வேண்டும், மேலும் அவர்களின் கண்களில் கண்ணீர் இருந்தபோதிலும், அவர்களால் தேவனின் இருதயத்தை இன்னும் திருப்திப்படுத்த முடியும். இந்த வழியில், தேவன் நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப்பார், மேலும் இது போன்ற கஷ்டங்களை நீ சகித்தால், அது பரிசுத்த ஆவியானவரின் கிருயையைப் பின்பற்றியிருக்கும். நிஜ வாழ்க்கையின் மூலமாகவும், தேவனின் வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலமாகவும், ஜனங்கள் தேவனின் அருமையைக் காண முடிகிறது, மேலும் அவர்கள் தேவனின் அன்பை ருசித்திருந்தால் மட்டுமே அவரை உண்மையாக நேசிக்க அவர்களால் முடியும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 501

நீங்கள் எவ்வளவு உண்மையை நடைமுறைக்குக் கொண்டுவருகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் சத்தியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையை எவ்வளவு அதிகமாக நடைமுறைப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தேவனின் அன்பையும் நீங்கள் பெற்றிருப்பீர்கள். மேலும் நீங்கள் உண்மையை எவ்வளவு அதிகமாக நடைமுறைப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். நீ எப்பொழுதும் இந்த வழியில் பயிற்சி செய்தால், உன்னைக்குறித்த தேவனின் அன்பு படிப்படியாக பேதுரு தேவனை அறிந்தது கொண்டதைப் போலவே உன்னை பார்க்கும்படியாக செய்யும். பேதுரு, தேவனிடம் வானத்தையும் பூமியையும் மற்றும் எல்லாவற்றையும் உண்டாக்கும் ஞானம் மட்டுமல்ல, ஆனால், மேலும், மக்களில் உண்மையான கிரியையைச் செய்வதற்கான ஞானமும் அவரிடம் உள்ளது என்று சொன்னார். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கியதன் காரணமாக மட்டுமல்லாமல், மேலும் மனிதனை படைப்பதற்கும், மனிதனைக் இரட்சிப்பதற்கும், மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், அவனுடைய அன்பைப் பெறுவதற்குமான அவருடைய திறனின் காரணமாக அவர் ஜனங்களின் அன்பிற்கு தகுதியானவர் என்று பேதுரு கூறினார். ஆகவே, மனிதனின் அன்பிற்கு தகுதியானவை அவரிடத்தில் அதிகம் இருப்பதாக பேதுரு சொல்லத்தான் செய்தார். பேதுரு இயேசுவை நோக்கி, “வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கியதே ஜனங்களின் அன்பிற்கு நீர் தகுதியானவராக ஒரே காரணமா? உம்மில் உள்ள அநேகக் காரியங்கள் அன்புக்குறியவை. நீர் நிஜ வாழ்க்கையில் செயல்படுகிறீர், நகர்கிறீர், உம் ஆவி என்னை உள்ளே தொடுகிறது, நீர் என்னை ஒழுங்குபடுத்துகிறீர், நீர் என்னை நிந்திக்கிறீர்—இந்த விஷயங்கள் ஜனங்களின் அன்பிற்கு இன்னும் தகுதியானவை.” நீ தேவனின் அன்பைக் காணவும் அனுபவிக்கவும் விரும்பினால், நீ நிஜ வாழ்க்கையில் ஆராய்ந்து தேட வேண்டும், மேலும் உன் சொந்த மாம்சத்தை ஒதுக்கி வைக்க தயாராக இருக்க வேண்டும். இந்த தீர்மானத்தை நீ செய்ய வேண்டும். சோம்பேறியாகவோ அல்லது மாம்சத்தின் இன்பங்களை விரும்பாமலோ, மாம்சத்திற்காக வாழாமல் தேவனுக்காக வாழ்வனாகவும் இருந்து, எல்லாவற்றிலும் தேவனை திருப்திப்படுத்தக்கூடிய உறுதியான ஒருவராக நீ இருக்க வேண்டும். நீ தேவனை திருப்திப்படுத்தாத சமயங்கள் இருக்கலாம். ஏனென்றால், நீ தேவனின் விருப்பத்தை புரிந்து கொள்ளவில்லை. அடுத்த முறை, அதிக முயற்சி தேவை என்றாலும், நீ அவரை திருப்திப்படுத்த வேண்டும் மற்றும் மாம்சத்தை திருப்திப்படுத்தக்கூடாது. இந்த வழியில் நீ அனுபவம் பெறும்போது, நீ தேவனை அறிந்து கொண்டிருப்பாய். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் தேவனால் உண்டாக்க முடியும் என்பதையும், அவர் மாம்சமாகிவிட்டார் என்பதையும், அதனால் ஜனங்கள் உண்மையில் அவரைப் பார்க்கவும், அவருடன் உண்மையில் ஐக்கியப்படவும் முடியும் என்பதை நீ கண்டுகொள்வாய். அவர் மனிதர்களிடையே நடக்க முடிகிறது என்பதையும், அவருடைய ஆவியால் நிஜ வாழ்க்கையில் ஜனங்களை பரிபூரணமாக்க முடியும் என்பதையும், அவருடைய அருமையைக் காணவும், அவருடைய ஒழுக்கத்தையும், தண்டனையையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கவும் அவர்களை அனுமதிக்கிறது என்பதையும் நீ கண்டுகொள்வாய். நீ எப்போதுமே இந்த வழியில் அனுபவித்தால், நிஜ வாழ்க்கையில் நீ தேவனிடமிருந்து பிரிக்கமுடியாதவனாக இருப்பாய், ஒரு நாள் தேவனுடனான உன் உறவு சாதாரணமாகிவிட்டால், உன்னால் நிந்தனைக்கு ஆளாகி வருத்தத்தை உணர முடியும். நீ தேவனுடன் ஒரு சாதாரண உறவைக் கொண்டிருக்கும்போது, நீ ஒருபோதும் தேவனை விட்டு விலக விரும்பமாட்டாய், ஒரு நாள் தேவன் உன்னைத் தாம் கைவிட்டு விடுவதாக சொன்னால், நீ பயப்படுவாய், மேலும் நீ தேவனால் கைவிடப்படுவதை விட இறந்துவிடுவது மேல் என்று கூறுவாய். இந்த உணர்ச்சிகளை நீ பெற்றவுடன், உன்னால் தேவனை விட்டு விலக இயலாது என்று நீ உணர்ந்து கொள்வாய், இந்த வழியில், நீ ஒரு அடித்தளத்தை வைத்திருப்பாய், மேலும் தேவனின் அன்பை உண்மையிலேயே அனுபவிப்பாய்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 502

தேவனை தங்கள் வாழ்க்கையாக அனுமதிப்பதைப் பற்றி ஜனங்கள் அடிக்கடி பேசுகிறார்கள், ஆனால் அவர்களின் அனுபவம் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. தேவனே உன் வாழ்க்கை என்றும், ஒவ்வொரு நாளும் அவர் உன்னை வழிநடத்துகிறார் என்றும், நீ ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளை புசித்து, குடிக்கிறாய் என்றும், ஒவ்வொரு நாளும் நீ அவரிடம் ஜெபிக்கிறாய் என்பதால் அவர் உன் வாழ்க்கை ஆகிவிட்டார் என்று நீ வெறுமனே சொல்லிக்கொண்டிருக்கிறாய். இதைச் சொல்பவர்களின் அறிவு மிகவும் மேலோட்டமானது. பல மக்களிடத்தில் அஸ்திபாரம் இல்லை. தேவனின் வார்த்தைகள் அவர்களுக்குள் நடப்பட்டிருக்கின்றன, ஆனால் அவை இன்னும் முளைக்கவில்லை, அவை எந்தவொரு கனியையும் காய்க்கவில்லை. இன்று, நீ எந்த அளவிற்கு அனுபவித்திருக்கிறாய்? தேவன் உன்னை இவ்வளவு தூரம் வரும்படி கட்டாயப்படுத்திய பிறகு, இப்போதுதான், நீ தேவனை விட்டு விலக முடியாது என்று நினைக்கிறாயா? ஒரு நாள், உன் அனுபவம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டும்போது, தேவன் உன்னை விலகிப்போகச் செய்தால், உன்னால் முடியாது. உனக்குள் தேவன் இல்லாமல் இருக்க முடியாது என்பதை நீ எப்போதும் உணருவாய். நீ ஒரு கணவன், மனைவி அல்லது குழந்தைகள் இல்லாமல், ஒரு குடும்பம் இல்லாமல், ஒரு தாய் அல்லது தந்தை இல்லாமல், மாம்சத்தின் இன்பங்கள் இல்லாமல் இருக்க முடியும், ஆனால் உன்னால் தேவன் இல்லாமல் இருக்க முடியாது. தேவன் இல்லாமல் இருப்பது உன் வாழ்க்கையை இழப்பதைப் போன்றது. உன்னால் தேவன் இல்லாமல் வாழ முடியாது. இந்த கட்டம்வரை நீ அனுபவித்திருக்கிற போது, தேவன் மீதான உன் விசுவாசத்தில் உன் அடையாளத்தை அடைந்திருப்பாய், இந்த வழியில், தேவன் உன் வாழ்க்கையாக மாறியிருப்பார், அவர் உன் வாழ்வின் அஸ்திபாரமாக மாறியிருப்பார். நீ மீண்டும் ஒருபோதும் தேவனை விட்டு விலகிட முடியாது. நீ இந்த அளவிற்கு அனுபவித்திருக்கிற போது, நீ உண்மையிலேயே தேவனின் அன்பை அனுபவித்திருப்பாய், மேலும் நீ தேவனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும்போது, அவரே உன் வாழ்க்கையும் உன் அன்புமாயிருப்பார், மற்றும் அந்த நேரத்தில் நீ தேவனிடம் ஜெபித்து, “தேவனே! உம்மை நான் விட்டுவிட முடியாது, நீரே என் வாழ்க்கை, மற்றவை எல்லாம் இல்லாமல் என்னால் செல்ல முடியும்—ஆனால் நீர் இல்லாமல் என்னால் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.” இது ஜனங்களின் உண்மையான நிலை. இதுவே உண்மையான வாழ்க்கை. சிலர் இன்று இருப்பதைப் போல வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதை அவர்கள் தொடர வேண்டும், மேலும் அவர்கள் எப்போதும் ஒரு பாறைக்கும் கடினமான இடத்திற்கும் இடையில் சிக்கியிருப்பதைப் போல உணர்கிறார்கள். தேவனே உன் வாழ்க்கை என்று நீ அனுபவிக்க வேண்டும், அதாவது தேவன் உன் இருதயத்திலிருந்து பறிக்கப்பட வேண்டியதாய் இருந்தால், அது உன் வாழ்க்கையை இழப்பதைப் போன்றதாகும். தேவன் உன் வாழ்க்கையாக இருக்க வேண்டும், மேலும் நீ அவரை விட்டு விலக இயலாது இருக்க வேண்டும். இந்த வழியில், நீ உண்மையில் தேவனை அனுபவித்திருப்பாய், இந்த நேரத்தில், நீ தேவனை நேசிக்கும்போது, நீ உண்மையிலேயே தேவனை நேசிப்பாய், அது ஒரு தனித்துவமான, தூய அன்பாக இருக்கும். ஒரு நாள், உன் அனுபவங்களில் உன் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியிருக்கும்போது, நீ தேவனிடம் ஜெபித்து, தேவனுடைய வார்த்தைகளை புசித்து, குடிக்கும்போது, நீ உன்னுள் தேவனை விட்டுவிலகவும் முடியாது, நீ விரும்பினாலும் அவரை மறக்கவும் முடியாது. தேவன் உன் வாழ்க்கையாக மாறியிருப்பார். நீ உலகை மறக்க முடியும், உன் மனைவி, கணவர் அல்லது குழந்தைகளை நீங்கள் மறந்துவிடலாம், ஆனால் தேவனை மறப்பதில் உனக்கு சிக்கல் இருக்கும். அவ்வாறு செய்வது சாத்தியமற்றது, இது தேவனுக்கான உன் உண்மையான வாழ்க்கை மற்றும் உன் உண்மையான அன்பு ஆகும். ஜனங்கள் தேவனை நேசிப்பது ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியதும், தேவன் மீதான அவர்களின் அன்பிற்கு வேறு எதன் மீதும் அவர்கள் செய்யும் அன்பு சமம் ஆகாது. தேவன் மீதான அவர்களின் அன்பு முதலிடத்தைப் பெருகிறது. இந்த வழியில் உன்னால் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட முடிகிறது, மேலும் தேவனிடமிருந்து அனைத்து நடத்துதலையும் பராமரிப்பையும் ஏற்க தயாராக இருக்கிறாய். எல்லாவற்றிற்கும் மேலாக நீ தேவன் மீதான அன்பை அடைந்தவுடன், நீ யதார்த்தத்திலும் தேவனின் அன்பிலும் வாழ்வாய்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 503

தேவன் ஜனங்களுக்குள் ஜீவனாக மாறியவுடன், ஜனங்கள் தேவனை விட்டு விலக முடியாமல் போகிறார்கள். இது தேவனின் கிரியை அல்லவா? இதைவிட பெரிய சாட்சி இல்லையே! தேவன் ஒரு குறிப்பிட்ட கட்டம்வரை கிரியை செய்திருக்கிறார். ஜனங்கள் சேவை செய்யவோ, தண்டிக்கப்படவோ அல்லது மரணிக்கவோ ஜனங்கள் பின்வாங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார், இது அவர்கள் தேவனால் வெல்லப்பட்டதைக் காட்டுகிறது. சத்தியம் உள்ளவர்கள், தங்கள் உண்மையான அனுபவங்களில், தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்கவும், தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கவும், தேவனின் பக்கத்தில் நிற்கவும், எப்போதும் பின்வாங்காமல் இருக்கவும், தேவனை நேசிக்கும் ஜனங்களுடன் சாதாரண உறவை வைத்திருக்கவும் முடியும், அவர்களுக்கு காரியங்கள் நடக்கும்போது, அவர்களால் தேவனுக்கு முழுமையாக கீழ்ப்படிய முடிகிறது, மேலும் மரணம்வரை தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும். நிஜ வாழ்க்கையில் உன் நடைமுறை மற்றும் வெளிப்பாடுகளே தேவனின் சாட்சி, அவை மனித வாழ்வின் முடிவும் மற்றும் தேவனின் சாட்சியும் ஆகும், மற்றும் இது உண்மையிலேயே தேவனின் அன்பை அனுபவிப்பது ஆகும். இந்த கட்டம்வரை நீ அனுபவித்திருக்கிறபோது, உரிய பலனை அடைந்திருப்பாய். நீ உண்மையாக வாழ்ந்து முடிப்பதைப் பெற்றிருக்கிறாய், மற்றும் உன் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் போற்றப்படுகிறது. உன் உடைகள் மற்றும் வெளிப்புறத் தோற்றம் குறிப்பிடத்தக்கவை அல்ல, ஆனால் நீ மிகுந்த பக்தியுள்ள வாழ்க்கையை வாழ்கிறாய், மேலும் நீ தேவனுடைய வார்த்தைகளைத் தொடர்பு கொள்ளும்போது, நீ அவரால் வழிநடத்தப்பட்டு வெளிச்சத்தைப் பெறுகிறாய். நீ தேவனின் சித்தத்தை உன் வார்த்தைகளின் மூலம் பேசவும், யதார்த்தத்தைத் தொடர்புகொள்ளவும் முடியும், மேலும் ஆவியில் சேவை செய்வதைப் பற்றி நீ அதிகம் புரிந்துகொண்டிருக்கிறாய். உன் பேச்சில் நீ கபடற்றவன், நீ ஒழுக்கமானவன், நேர்மையானவர், மோதல் இல்லாதவன் மற்றும் அலங்காரமானவன், தேவனின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படியவும், காரியங்கள் உன்னை வீழ்த்தும் போதும் உன் சாட்சியில் உறுதியாக நிற்கவும் முடியும், மேலும் நீ எதைக் கையாண்டு கொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் உன்னால் அமைதியாக கலக்கமடையாமல் இருக்க முடியும். இதுபோன்றோர் தேவனின் அன்பை உண்மையிலேயே பார்த்தவர்கள். சிலர் இன்னும் இளமையாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் நடுத்தர வயதுடையவர்களாக செயல்படுகிறார்கள். அவர்கள் முதிர்ச்சியுள்ளவர்கள், சத்தியம் உடையவர்கள், மற்றவர்களால் போற்றப்படுகிறார்கள்—இவர்கள்தான் சாட்சி உடையவர்கள் மற்றும் தேவனின் வெளிப்பாடு ஆவர். அதாவது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அனுபவித்தவுடன், உள்ளுக்குள் அவர்கள் தேவனைப் பற்றிய ஒரு நுண்ணறிவைக் கொண்டிருப்பார்கள், மேலும் அவர்களின் வெளிப்புற மனநிலையும் உறுதிப்படுத்தப்படும். பலர் உண்மையை நடைமுறைக்குக் கொண்டுவருவதில்லை மற்றும் தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க மாட்டார்கள். அத்தகையவர்களில் தேவன் மீதான அன்போ அல்லது தேவனுக்கு சாட்சியோ இல்லை, தேவனால் மிகவும் வெறுக்கப்பட்டவர்கள் இவர்கள். அவர்களின் கூட்டங்களில் தேவனின் வார்த்தைகளைப் படிக்கிறார்கள், ஆனால் அவர்கள் வாழும் விதம் சாத்தான் தான், இது தேவனை அவமதிப்பது, தேவனை இழிவுபடுத்துவது மற்றும் தேவனை நிந்திப்பதாகும். அத்தகையவர்களில், தேவனின் அன்பின் அறிகுறியே இல்லை, அவர்களிடத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை எதுவும் இல்லை. எனவே, ஜனங்களின் வார்த்தைகளும் செயல்களும் சாத்தானைக் குறிக்கின்றன. உன் இருதயம் எப்போதும் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருந்தால், உன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள் மற்றும் விஷயங்கள் மற்றும் உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் நீ எப்போதும் கவனம் செலுத்துகிறாய் என்றால், தேவனின் பாரத்தை நீ கவனத்தில் வைத்திருந்தால், எப்போதும் தேவனை வணங்கும் இருதயம் இருந்தால், பின்னர் தேவன் உன்னை அடிக்கடி உனக்குள் வெளிச்சமூட்டுவார். தேவாலயத்தில் “மேற்பார்வையாளர்களாக” இருப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மற்றவர்களின் தவறுகளைக் காணவும், பின்னர் அவற்றை பிரதிபலித்து பின்பற்றவும் புறப்படுகிறார்கள். வேறுபடுவதற்கு அவர்களால் இயலாது, அவர்கள் பாவத்தை வெறுக்க மாட்டார்கள், சாத்தானின் காரியங்களால் பாவத்தை வெறுக்கவோ வெறுப்படையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள் சாத்தானின் காரியங்களால் நிரப்பப்படுகிறார்கள், அவர்கள் இறுதியில் தேவனால் முற்றிலும் கைவிடப்படுவார்கள். உன் இருதயம் தேவனுக்கு முன்பாக எப்போதும் பயபக்தியுடன் இருக்க வேண்டும், உன் வார்த்தைகளிலும் செயல்களிலும் நீ மிதமாக இருக்க வேண்டும், தேவனை எதிர்க்கவோ வருத்தப்படவோ விரும்பக் கூடாது. எதுவும் இல்லாமல் இருக்கவும் அல்லது நீ அனுபவித்த அனைத்து கஷ்டங்களையும் அனுமதிக்கவும் மற்றும் நீ நடைமுறையில் வைத்திருந்த அனைத்தும் ஒன்றுமில்லாமல் போகவும் உன்னில் தேவனின் கிரியைக்கு நீ ஒருபோதும் தயாராக இருக்கக்கூடாது. நீ கடினமாக உழைக்க தயாராக இருக்க வேண்டும், மேலும் வரும் பாதையில் தேவனை அதிகமாக நேசிக்க வேண்டும். இவர்கள்தான் ஒரு தரிசனத்தை தங்களது அஸ்திபாரமாக கொண்டவர்கள். இவர்கள்தான் முன்னேற்றத்தை நாடுகிறார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 504

ஜனங்கள் தேவனை விசுவாசித்தால், தேவனைப் போற்றும் இருதயத்துடன் தேவனின் வார்த்தைகளை அனுபவித்தால், அத்தகையவர்களில் தேவனின் இரட்சிப்பையும் தேவனின் அன்பையும் காண முடியும். இந்த ஜனங்களால் தேவனுக்கு சாட்சியளிக்க முடிகிறது. அவர்கள் சத்தியத்தில் வாழ்கிறார்கள், அவர்கள் சாட்சியளிப்பது சத்தியமும், தேவன் என்றால் என்ன என்பதும், தேவனின் மனநிலையும் ஆகும். அவர்கள் தேவனின் அன்பின் மத்தியில் வாழ்கிறார்கள், தேவனின் அன்பைக் கண்டிருக்கிறார்கள். ஜனங்கள் தேவனை நேசிக்க விரும்பினால், அவர்கள் தேவனின் அருமையை ருசித்து தேவனின் அருமையைக் காண வேண்டும். அப்போதுதான் தேவனை நேசிக்கும் ஒரு இருதயமும், தேவனுக்காக விசுவாசமாக தங்களைத் தாங்களே கொடுக்க ஜனங்களைத் தூண்டும் ஒரு இருதயமும் அவர்களில் எழுப்பப்பட்டிருக்க முடியும். தேவன் ஜனங்களை வார்த்தைகளாலும் வெளிப்பாடுகளாலும் அல்லது அவர்களின் கற்பனையினாலும் அவரை நேசிக்க வைப்பதில்லை, மேலும் தன்னை நேசிக்கும்படி ஜனங்களை அவர் கட்டாயப்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக, அவர் தங்களுடைய விருப்பப்படி அவரை நேசிக்க அனுமதிக்கிறார், மேலும் அவருடைய கிரியையிலும் சொற்களிலும் அவருடைய அருமையைக் காண அவர் அவர்களை அனுமதிக்கிறார், அதன் பிறகு அவர்களில் தேவன் மீதான் அன்பு இருக்கிறது. இந்த வழியில் மட்டுமே ஜனங்கள் உண்மையிலேயே தேவனுக்கு சாட்சி அளிக்க முடியும். மற்றவர்களால் அவ்வாறு செய்யும்படி அவர்கள் வற்புறுத்தப்படுவதால், ஜனங்கள் தேவனை நேசிப்பதில்லை, அல்லது இது ஒரு தருணத்தின் உணர்ச்சி தூண்டுதலும் அல்ல. அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள், ஏனென்றால் அவருடைய அருமையைக் கண்டிருக்கிறார்கள், ஜனங்கள் அன்பிற்கு தகுதியானவை அநேகம் அவரிடத்தில் இருப்பதைக் கண்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனின் இரட்சிப்பு, ஞானம் மற்றும் அதிசயமான செயல்களைக் கண்டிருக்கிறார்கள்—இதன் விளைவாக அவர்கள் உண்மையிலேயே தேவனைப் புகழ்கிறார்கள் உண்மையிலேயே அவருக்காக ஏங்குகிறார்கள், தேவனைப் பெறாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது என்ற ஒரு உணர்வு அவர்களில் எழுந்திருக்கிறது. தேவனுக்கு உண்மையாக சாட்சியளிப்பவர்கள் அவருக்கு ஒரு பெரும் சாட்சி அளிக்கக் காரணம், அவர்களுடைய சாட்சி உண்மையான அறிவின் அஸ்திபாரத்திலும் மற்றும் தேவனைக்குறித்த உண்மையான ஏக்கத்திலும் உள்ளது. இத்தகைய சாட்சி ஒரு உணர்ச்சித் தூண்டுதலின் படி வழங்கப்படாமல் அவர்களுடைய தேவனைப் பற்றிய அறிவு மற்றும் அவருடைய மனநிலையின் படி வழங்கப்படுகிறது. அவர்கள் தேவனை அறிந்திருப்பதால், அவர்கள் நிச்சயமாக தேவனுக்கு சாட்சி அளிக்க வேண்டும் என்றும், தேவனுக்காக ஏங்குகிற அனைவரும் தேவனை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தேவனின் அருமை மற்றும் அவருடைய யதார்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஜனங்களுக்கு தேவன் மீதுள்ள அன்பைப் போலவே, அவர்களின் சாட்சியும் தன்னிச்சையானது. இது உண்மையானது மற்றும் உண்மையான முக்கியத்துவத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளது. இது செயலற்ற அல்லது வெற்று மற்றும் அர்த்தமற்றது அல்ல. தேவனை உண்மையாக நேசிப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் அதிக மதிப்பும் அர்த்தமும் இருக்கிற காரணமும், அவர்கள் தேவனை உண்மையாக நம்புவதற்கான காரணமும் என்னவென்றால், இந்த ஜனங்கள் தேவனின் வெளிச்சத்தில் வாழ முடிகிறது, மேலும் தேவனின் கிரியை மற்றும் நிர்வகித்தலுக்காக வாழ முடிகிறது. அவர்கள் இருளில் வாழாமல், வெளிச்சத்தில் வாழ்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம். அவர்கள் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழவில்லை, ஆனால் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழுகிறார்கள். தேவனை நேசிப்பவர்கள் மட்டுமே தேவனுக்கு சாட்சியளிக்க முடியும், அவர்கள் மட்டுமே தேவனின் சாட்சிகள், அவர்கள் மட்டுமே தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள், அவர்களால் மட்டுமே தேவனுடைய வாக்குறுதிகளைப் பெற முடியும். தேவனை நேசிப்பவர்கள் தேவனுக்கு நெருங்கியவர்கள். அவர்கள் தேவன் பிரியமாயிருக்கிற ஜனங்கள், அவர்கள் தேவனோடு சேர்ந்து ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும். இது போன்றவர்கள் மட்டுமே நித்தியமாக வாழ்வார்கள், அவர்கள் மட்டுமே தேவனின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் எப்போதும் வாழ்வார்கள். ஜனங்களால் நேசிக்கப்படவே தேவன் இருக்கிறார், அவர் எல்லா ஜனங்களின் அன்பிற்கும் தகுதியானவர், ஆனால் எல்லா ஜனங்களும் தேவனை நேசிக்க வல்லவர்கள் அல்ல, எல்லா ஜனங்களும் தேவனுக்கு சாட்சியளிக்கவும் தேவனுடன் அதிகாரத்தை வைத்திருக்கவும் முடியாது. அவர்கள் தேவனைப் பற்றி சாட்சியளிக்கவும், தேவனின் பணிக்காக தங்கள் எல்லா முயற்சிகளையும் அர்ப்பணிக்கவும் முடிந்ததால், தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் யாராலும் துணிந்து எதிர்க்கப்படாமல் வானத்தின் கீழ் எங்கும் நடக்க முடியும், மேலும் அவர்கள் பூமியில் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் தேவனின் எல்லா ஜனங்களையும் ஆட்சி செய்யலாம். இந்த ஜனங்கள் உலகம் முழுவதும் இருந்து ஒன்றாக வந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள் மற்றும் வெவ்வேறு தோல் வண்ணங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் இருப்பதற்கு ஒரே அர்த்தம் உண்டு. அவர்கள் அனைவருக்கும் தேவனை நேசிக்கும் ஒரு இருதயம் இருக்கிறது, அவர்கள் அனைவரும் ஒரே சாட்சியை அளிக்கிறார்கள், ஒரே தீர்மானமும் ஒரே விருப்பமும் கொண்டவர்கள். தேவனை நேசிப்பவர்கள் உலகம் முழுவதும் சுதந்திரமாக நடக்க முடியும், மேலும் தேவனுக்கு சாட்சி அளிப்பவர்கள் பிரபஞ்சத்தின் குறுக்கே பயணிக்க முடியும். இந்த ஜனங்கள் தேவனால் நேசிக்கப்படுகிறார்கள், அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 505

தேவனை இன்று நீ எவ்வளவு நேசிக்கிறாய்? தேவன் உன்னிடத்தில் செய்த எல்லாவற்றைப் பற்றியும் நீ எவ்வளவு அறிந்திருக்கிறாய்? இவையெல்லாம் தான் நீ கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களாகும். தேவன் பூமிக்கு வரும்போது, அவர் மனுஷனில் செய்த விஷயங்கள் மற்றும் மனுஷனைப் பார்க்க அனுமதித்த விஷயங்கள் அனைத்தும் மனுஷன் அவரை நேசிப்பான், அவரை உண்மையாக அறிந்துகொள்வான் என்பதற்காகவே செய்யப்பட்டன. மனுஷன் தேவனுக்காக துன்பப்பட்டு, அவனால் இதுவரை வர முடிந்திருக்கிறது என்பதற்கு, ஒரு வகையில், தேவனின் அன்பு காரணமாகவும், மற்றொரு வகையில் தேவனின் இரட்சிப்பு காரணமாகவும் இருக்கின்றன; மேலும், இதற்கு நியாயத்தீர்ப்பு மற்றும் தேவன் மனுஷனில் மேற்கொண்ட சிட்சைக்கான கிரியை ஆகியவையும் காரணங்களாக இருக்கின்றன. நீங்கள் தேவனின் நியாயத்தீர்ப்பு, சிட்சை மற்றும் உபத்திரவங்கள் ஆகியவற்றை சந்திக்காமல் இருந்திருந்தால், தேவன் உங்களை துன்பப்படுத்தியிருக்கவில்லை என்றால், நீங்கள் உண்மையிலேயே தேவனை நேசிப்பதில்லை என்பது தான் உண்மையாக இருக்கும். மனுஷனில் தேவனின் கிரியை எவ்வளவு அதிகமாக உள்ளதோ மற்றும் மனுஷன் துன்பப்படுவது எவ்வளவு அதிகமாக உள்ளதோ, தேவனின் கிரியை எவ்வளவு அர்த்தமுள்ளது என்பதும் அவ்வளவு தெளிவாகத் தெரிகிறது, மேலும் மனுஷனின் இருதயத்தால் தேவனை அவ்வளவு அதிகமாக உண்மையாக நேசிக்கவும் முடிகிறது. தேவனை நேசிப்பது எப்படி என்பதை நீ எவ்வாறு கற்றுக்கொள்கிறாய்? தேவன் மனுஷனுக்கு அளித்தவை அனைத்தும் கிருபை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவையாக இருந்து, கடும்வேதனை மற்றும் சுத்திகரிப்பு ஆகியவையும், வேதனைமிகுந்த உபத்திரவங்களும் இல்லாமல் இருந்தால், தேவனை உண்மையாக நேசிக்கும் ஒரு நிலையை உன்னால் அடைய முடியுமா? ஒருபுறம், தேவன் தரும் சோதனைகளின் போது மனுஷன் அவனது குறைபாடுகளை அறிந்துகொள்வதோடு, அவன் அற்பமானவனாகவும், இழிவானவனாகவும், தாழ்ந்தவனாகவும் இருப்பதைக் காண்கிறான், தன்னிடம் எதுவுமே இல்லை, தான் ஒன்றுமேயில்லை என்பதையும் உணர்கிறான்; மறுபுறம், அவனது உபத்திரவங்களின் போது தேவன் மனுஷனுக்கு வெவ்வேறு சூழல்களை உருவாக்குகிறார், அவை தேவனின் சௌந்தரியத்தை மனுஷனை அதிகமாக அனுபவிக்க வைக்கிறது. வேதனையானது மிகப் பெரிதாகவும், சில சமயங்களில் தீர்க்கமுடியாததாகவும் இருந்தாலும், அதை அனுபவித்ததனால் அது கடுமையான துக்க நிலையை எட்டினாலும், தன்னுள் தேவன் எவ்வளவு அழகாக கிரியை செய்கிறார் என்பதை மனுஷன் காண்கிறான், இந்த அஸ்திபாரத்தில்தான் மனுஷனுக்கு தேவன்மீது உண்மையான அன்பு பிறக்கிறது. தேவனின் கிருபையுடனும், அன்புடனும், இரக்கத்துடனும் மட்டுமே, தன்னை உண்மையாக அறிந்துகொள்ள முடியாது என்பதை மனுஷன் காண்கிறான், மேலும் மனுஷனின் சாராம்சத்தையும் அவனால் அறிந்துகொள்ள முடியாது. தேவனின் சுத்திகரிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகிய இரண்டின் மூலமாகவும், மேலும் சுத்திகரிப்பு செயல்பாட்டின் போதும் மட்டுமே, மனுஷன் தனது குறைபாடுகளை அறிந்துகொள்ளவும், மேலும் தன்னிடம் எதுவும் இல்லை என்பதையும் அறிந்துகொள்ள முடியும். ஆகவே, தேவன் மீதான மனுஷனின் அன்பானது தேவனின் சுத்திகரிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு என்னும் அஸ்திபாரத்தின் மீது கட்டப்படுகிறது. நீ தேவனின் கிருபையை மட்டுமே அனுபவித்து, அமைதியான குடும்ப வாழ்க்கை அல்லது பொருள் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்து, நீ தேவனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், தேவன் மீதான உனது விசுவாசத்தை வெற்றிகரமானதாக கருத முடியாது. தேவன் ஏற்கனவே மாம்சத்தில் ஒரு கட்ட கிருபையின் கிரியையை மேற்கொண்டுள்ளார், ஏற்கனவே மனுஷனுக்குப் பொருள் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார், ஆனால் மனுஷனை கிருபை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றால் மட்டுமே பரிபூரணமாக்க முடியாது. மனுஷனின் அனுபவங்களில், அவன் தேவனின் சிறிதளவு அன்பை எதிர்கொள்கிறான், தேவனின் அன்பையும் இரக்கத்தையும் காண்கிறான், ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றை அனுபவித்திருப்பதால், தேவனின் கிருபை அவருடைய அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றால் மனுஷனை பரிபூரணமாக்க இயலாது என்பதையும், அவற்றால் மனுஷனுக்குள் எது சீர்கெட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்த முடியாது என்பதையும், அவற்றால் மனுஷனை அவனது சீர்கெட்ட மனநிலையிலிருந்து விரட்டவோ, அல்லது அவனது அன்பையும் விசுவாசத்தையும் பரிபூரணமாக்கவோ இயலாது என்பதையும் அவன் காண்கிறான். தேவனுடைய கிருபைக்கான கிரியையானது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கிரியையாகத்தான் இருக்கிறது, மேலும் தேவனை அறிந்து கொள்வதற்காக மனுஷன் தேவனின் கிருபையை அனுபவிப்பதை சார்ந்திருக்க முடியாது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 506

இன்று, பெரும்பாலான ஜனங்களுக்கு அந்த அறிவு இருப்பதில்லை. துன்பப்படுவதற்கு மதிப்பில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள், அவர்கள் உலகத்தால் கைவிடப்படுகிறார்கள், அவர்களின் குடும்ப வாழ்க்கை கலக்கமடைகிறது, அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்களாக இருப்பதில்லை, அவர்களின் வாய்ப்புகள் இருண்டவையாக இருக்கின்றன. சிலரின் துன்பம் ஒரு தீவிரத்தை அடைகிறது, அவர்களின் எண்ணங்கள் மரணமாக மாறுகின்றன. இது தேவன் மீதான உண்மையான அன்பு அல்ல; அத்தகையவர்கள் கோழைகள், அவர்களுக்கு விடாமுயற்சி இருப்பதில்லை, அவர்கள் பலவீனமானவர்கள், சக்தியற்றவர்கள்! மனுஷன் தன்னை நேசிக்க வேண்டுமென தேவன் ஆவலாக உள்ளார், ஆனால் மனுஷன் எவ்வளவு அதிகமாக தேவனை நேசிக்கிறானோ, அந்தளவிற்கு அவன் துன்பப்படுகிறான், மனுஷன் எவ்வளவு அதிகமாக தேவனை நேசிக்கிறானோ, அந்தவிற்கு அவனுக்கு உபத்திரவங்கள் இருக்கின்றன. நீ அவரை நேசிக்கிறாய் என்றால், ஒவ்வொரு விதமான துன்பமும் உனக்கு ஏற்படும்—நீ அவரை நேசிக்காவிட்டால், உனக்கு எல்லாமே சுமுகமாக நடக்கும், உன்னைச் சுற்றி அனைத்தும் அமைதியாக இருக்கும். நீ தேவனை நேசிக்கும்போது, உன்னைச் சுற்றியுள்ளவை ஈடுசெய்ய முடியாதவை என்பதை நீ உணருவாய், மேலும் உனது வளர்ச்சி மிகச் சிறியதாக இருப்பதால் நீ சுத்திகரிக்கப்படுவாய்; மேலும், உன்னால் தேவனை திருப்திப்படுத்த இயலாது, மேலும் தேவனின் சித்தம் மிக உயர்ந்தது, அதை மனுஷனால் எட்ட முடியாது என்பதை நீ எப்போதும் உணருவாய். இவை அனைத்தின் காரணமாகவும் நீ சுத்திகரிக்கப்படுவாய்—உனக்குள் அதிக பலவீனம் இருப்பதாலும், மேலும் தேவனுடைய சித்தத்தை உன்னால் நிறைவேற்ற முடியாது என்பதாலும், நீ உனக்குள் சுத்திகரிக்கப்படுவாய். ஆயினும் சுத்திகரிப்பு மூலம் மட்டுமே தூய்மையானது அடையப்படுகிறது என்பதை நீ தெளிவாகக் காண வேண்டும். எனவே, இந்த கடைசிக் காலத்தில் நீ தேவனுக்கு சாட்சிக் கொடுக்க வேண்டும். உனது துன்பம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீ இறுதி வரை நடக்க வேண்டும், உனது கடைசி மூச்சிலும் கூட, நீ தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மேலும் தேவனின் திட்டமிடலுக்குக் கீழ்படிந்திருக்க வேண்டும்; இதுதான் உண்மையிலேயே தேவனை நேசிப்பதாகும், இது மட்டுமே வலுவான மற்றும் உறுதியான சாட்சியம் ஆகும். நீ சாத்தானால் சோதிக்கப்படும்போது, நீ, “என் இருதயம் தேவனுக்கு சொந்தமானது, தேவன் ஏற்கனவே என்னை ஆதாயப்படுத்தியிருக்கிறார். என்னால் உன்னை திருப்திப்படுத்த முடியாது—தேவனை திருப்திப்படுத்துவதற்காக நான் என்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்,” என்று கூற வேண்டும். நீ எவ்வளவு அதிகமாக தேவனை திருப்திப்படுத்துகிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், மேலும் தேவன் மீதான உனது அன்பின் வலிமையும் அதிகமாகும்; ஆகவே, நீ விசுவாசத்தையும் மனவலிமையையும் பெறுவாய், மேலும் தேவனை நேசிப்பதால் கழிந்த ஜீவிதத்தை விட வேறு எதுவும் தகுதியானதாகவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ இல்லை என்று உணருவாய். மனுஷன் தேவனை நேசிக்கும் வரை, அவன் துக்கம் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறலாம். உனது மாம்சம் பலவீனமடைந்து, பல உண்மையான கஷ்டங்களில் நீ சிக்கித் தவிக்கும் காலநேரங்கள் இருந்தாலும், இப்படிப்பட்ட காலங்களில் நீ உண்மையிலேயே தேவனை நம்பியிருப்பாய், உனது ஆவிக்குள் நீ ஆறுதலடைவாய், மேலும் நீ சார்ந்திருக்க ஏதோ இருக்கிறதென்று உறுதியாக உணருவாய். இவ்வாறாக, உன்னால் பல சூழல்களை வெல்ல முடியும், எனவே நீ அனுபவிக்கும் வேதனையின் காரணமாக நீ தேவனைப் பற்றி குறைகூற மாட்டாய். அதற்குப் பதிலாக, நீ பாடுவதற்கும், நடனமாடுவதற்கும், ஜெபிப்பதற்கும், ஒன்றுகூடுவதற்கும், தொடர்புகொள்வதற்கும், தேவனைப் பற்றி சிந்தனை செய்யவும் விரும்புவாய், மேலும் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உன்னைச் சுற்றியுள்ள எல்லா ஜனங்களும், காரியங்களும், விஷயங்களும் பொருத்தமானவை என்பதை நீ உணருவாய். நீ தேவனை நேசிக்காவிட்டால், நீ பார்க்கும் அனைத்தும் உனக்குத் தொந்தரவாக இருக்கும், மேலும் உனது கண்களுக்கு எதுவுமே மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்காது; உனது ஆவியில் நீ விடுதலையோடு இருக்க மாட்டாய் அதற்குப்பதிலாக ஒடுக்கப்படுவாய், உனது இருதயம் எப்போதும் தேவனைப் பற்றி குறைசொல்லும், மேலும் நீ இவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாய், அது மிகவும் அநியாயமானது என்பதை நீ எப்போதும் உணருவாய். நீ மகிழ்ச்சிக்காகக் கடைப்பிடிக்காமல் தேவனை திருப்திப்படுத்தவும், சாத்தானால் குற்றம் சாட்டப்படாமலும் இருக்க வேண்டும் என்பதற்காகக் கடைப்பிடித்தால், அத்தகையக் கடைப்பிடித்தலானது தேவனை நேசிக்க உனக்கு பெரும் பலத்தைத் தரும். தேவனால் பேசப்படும் அனைத்தையும் மனுஷனால் செயல்படுத்த முடிகிறது, மேலும் அவன் செய்யும் அனைத்து விஷயங்களாலும் தேவனை திருப்திப்படுத்த முடிகிறது—இதுதான் யதார்த்தத்தை வைத்திருப்பதன் அர்த்தமாக இருக்கிறது. தேவனின் திருப்தியைக் கடைப்பிடிப்பது என்றால் தேவன் மீதான உனது அன்பைப் பயன்படுத்தி அவருடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும்; நேரத்தைப் பொருட்படுத்தாமல்—மற்றவர்கள் பலமில்லாமல் இருக்கும்போதும் கூட—உனக்குள்ளே தேவனை நேசிக்கும் ஒரு இருதயம் இன்னும் இருக்கிறது, அந்த இருதயமானது தேவனுக்காக ஆழமாக ஏங்குகிறது மற்றும் தவிக்கிறது. இதுவே உண்மையான வளர்ச்சியாகும். உனது வளர்ச்சி எவ்வளவு பெரியது என்பது தேவனுக்கான உனது அன்பு எவ்வளவு பெரியதாக இருக்கிறது, சோதனை செய்யப்படும்போது உன்னால் உறுதியாக நிற்க முடிகிறதா, ஒரு குறிப்பிட்ட சூழல் உன் மீது வரும்போது நீ பலவீனமாக இருக்கிறாயா, உனது சகோதர சகோதரிகள் உன்னை நிராகரிக்கும்போது உன்னால் நிலையாக நிற்க முடிகிறதா என்பதைப் பொறுத்ததாக இருக்கிறது; உண்மைகளின் வருகை தேவன் மீதான உனது அன்பு எப்படி இருக்கும் என்பதைக் காண்பிக்கும். மனுஷனுடைய ஆவிக்குரிய கண்கள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை என்றாலும், தேவனின் பெரும்பாலான கிரியைகளையும், அவருடைய சித்தத்தையும், அல்லது தேவனை பற்றிய பல அழகான விஷயங்களையும் அவனால் தெளிவாகக் காண முடியவில்லை என்றாலும், தேவன் உண்மையிலேயே மனுஷனை நேசிக்கிறார் என்பதை தேவனின் பெரும்பாலான கிரியைகளிலிருந்து காணமுடிகிறது; தேவன் மீதான மனுஷனின் உண்மையான அன்பு மிகக் குறைவாக இருக்கிறது. நீ இவ்வளவு காலமாக தேவனை விசுவாசித்திருக்கிறாய், இன்று தேவன் நீ தப்பிப்பதற்கான எல்லா வழிகளையும் துண்டித்துவிட்டிருக்கிறார். யதார்த்தமாகச் சொல்வதானால், சரியான பாதையை தெரிந்துகொள்வதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை, இந்த சரியான பாதையானது கடுமையான நியாயத்தீர்ப்பு மற்றும் தேவனின் உயர்ந்த இரட்சிப்பால் உன்னை வழிநடத்திய பாதையாகும். கஷ்டத்தையும் சுத்திகரிப்பையும் அனுபவித்த பின்னரே தேவன் அழகானவர் என்பது மனுஷனுக்குத் தெரிகிறது. இன்று வரை அனுபவித்த நிலையில், தேவனுடைய சௌந்தர்யத்தின் ஒரு பகுதியை மனுஷன் அறிந்திருக்கிறான் என்று கூறலாம், ஆனால் இது இன்னும் போதாது, ஏனென்றால் மனுஷன் மிகவும் குறைபாடுள்ளவனாக இருக்கிறான். தேவனின் அற்புதமான கிரியையை மனுஷன் அதிகம் அனுபவிக்க வேண்டும், மேலும் தேவன் ஏற்பாடு செய்த துன்பங்களின் சுத்திகரிப்புகளையும் மனுஷன் அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் மனுஷனின் ஜீவித மனநிலை மாறும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 511

நீ தேவனை விசுவாசித்தால், நீ தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் உன் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மேலும், நீ அனுபவிக்க வேண்டிய விஷயங்களை நீ புரிந்துகொள்ள வேண்டும். உன்னால் தேவனை அனுபவிக்க முடிந்தாலும், தேவன் உன்னை சிட்சிக்கும்போது அல்லது தேவன் உன்னோடு செயல்படும் போது உன்னால் உணர முடியாமல் இருந்தால், தேவன் உன்னோடு செயல்படுவதையும், உன்னை சிட்சிப்பதையும், நியாயந்தீர்ப்பதையும் மட்டுமே அனுபவித்தால்—இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். இந்த சுத்திகரிப்பின் நிகழ்வில், உன்னால் உறுதியாக நிற்க முடியும், ஆனாலும் இன்னும் போதுமானதாக இது இல்லை. நீ இன்னும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். தேவனை நேசிப்பதன் பாடம் ஒருபோதும் நின்றுவிடாது மற்றும் அதற்கு முடிவும் இல்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பது மிகவும் எளிமையான ஒன்று என்று பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் சில நடைமுறை அனுபவங்களைப் பெற்றவுடன், தேவனை விசுவாசிப்பது என்பது ஜனங்கள் கற்பனை செய்வது போல் எளிதல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். மனிதனைச் சுத்திகரிக்க தேவன் கிரியை செய்யும்போது, மனிதன் துன்பமடைகிறான். ஒரு மனிதனுடைய சுத்திகரிப்பு எவ்வளவு அதிகமாக இருக்குமோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை நேசிப்பார்கள் மற்றும் தேவனுடைய வல்லமை அவர்களில் வெளிப்படும். மாறாக, மனிதர் எவ்வளவு குறைவான சுத்திகரிப்பினைப் பெறுகிறாரோ, தேவன் மீதான அவர்களுடைய அன்பும் அவ்வளவு குறைவாகவே இருக்கும் மற்றும் தேவனுடைய வல்லமை அவ்வளவு குறைவாகவே அவர்களில் வெளிப்படும். அத்தகைய ஒரு மனிதன் எவ்வளவு அதிகமான சுத்திகரிப்பு மற்றும் வலியை மற்றும் எவ்வளவு அதிகமான வேதனையை அனுபவிக்கிறானோ, அவனிடம் தேவன் மீது அவ்வளவு ஆழமான அன்பு வளரும், தேவன்மீது அவன் கொண்டுள்ள விசுவாசம் அவ்வளவு உண்மையானதாகவும் தேவனைப் பற்றிய அவனுடைய அறிவு அவ்வளவு ஆழமானதாகவும் இருக்கும். உன் அனுபவங்களில், சுத்திகரிக்கப்பட்டதற்கு அதிகமாக துன்பப்படுபவர்களை, கையாளப்படுபவர்களை, ஒழுங்குபடுத்தப்படுபவர்களைக் காண்பாய் மற்றும் தேவன்மீது ஆழ்ந்த அன்பும், தேவனைப் பற்றிய ஆழமான மற்றும் கூர்மையான அறிவும் கொண்டவர்களை நீ காண்பாய். கையாளப்படுவதை அனுபவிக்காதவர்களுக்கு மேலோட்டமான அறிவு இருக்கிறது, ஆனால், “தேவன் மிகவும் நல்லவர், ஜனங்கள் அவரை அனுபவிக்கும்படிக்கு அவர் அவர்களுக்கு கிருபையை அளிக்கிறார்,” என்று மட்டுமே அவர்களால் சொல்ல முடியும். ஜனங்கள் கையாளப்படுவதையும் ஒழுங்குபடுத்தப்படுவதையும் அனுபவித்திருந்தால், தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பற்றி அவர்களால் பேச முடியும். ஆகவே, மனிதனில் தேவனுடைய கிரியை எவ்வளவு அதிசயமானதாக இருக்கிறதோ அவ்வளவாக அது மதிப்புமிக்கதாக மற்றும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. உனக்கு இது எவ்வளவு அசாத்தியமானதாக இருக்கிறதோ மற்றும் உன் கருத்துக்களுடன் எவ்வளவாக பொருந்தாமல் இருக்கிறதோ, அவ்வளவாக தேவனுடைய கிரியையால் உன்னை ஜெயங்கொள்ளவும், உன்னை ஆதாயப்படுத்தவும், உன்னை பரிபூரணமாக்கவும் முடியும். தேவனுடைய கிரியையின் முக்கியத்துவம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது! தேவன் மனிதனை இவ்வாறு சுத்திகரிக்கவில்லை என்றால், அவர் இந்த முறையின்படி கிரியை செய்யவில்லை என்றால், அவருடைய கிரியை பயனற்றதாக மற்றும் முக்கியத்துவம் இல்லாததாக இருந்திருக்கும். தேவன் இந்த கூட்டத்தைத் தேர்ந்தெடுத்து ஆதாயம் செய்வார் என்றும், கடைசி நாட்களில் அவர்களை பரிபூரணமாக்குவார் என்றும் கடந்த காலத்தில் கூறப்பட்டது. இதில், அசாதாரண முக்கியத்துவம் உள்ளது. அவர் உங்களுக்குள் எவ்வளவு பெரிய கிரியையைச் செய்கிறாரோ, அவ்வளவாக தேவன் மீதான உங்கள் அன்பு ஆழமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. தேவனுடைய கிரியை எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அவ்வளவாக மனிதனால் அவருடைய ஞானத்திலிருந்து ஏதேனும் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது மற்றும் அவரைப் பற்றிய மனிதனுடைய அறிவும் அவ்வளவு ஆழமானதாக இருக்கிறது. கடைசி நாட்களில், தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகம் முடிவுக்கு வரும். உண்மையில் அது எளிதாக முடிவுக்கு வந்துவிட முடியுமா? அவர் மனிதகுலத்தை ஜெயங்கொண்டதும், அவருடைய கிரியை முடிந்துவிடுமா? இது மிகவும் எளிமையானதாக இருக்க முடியுமா? இது மிகவும் எளிதானது என்றுகூட ஜனங்கள் கற்பனை செய்கிறார்கள். ஆனால் தேவன் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. தேவனுடைய கிரியையின் எந்தப் பகுதியை நீ குறிப்பிட விரும்பினாலும், அவை அனைத்தும் மனிதனுக்குப் புரியாதவையாக இருக்கின்றன. உன்னால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தால், தேவனுடைய கிரியை முக்கியத்துவம் அல்லது மதிப்பு இல்லாமல் இருக்கும். தேவன் செய்த கிரியை என்பது புரிந்துகொள்ள முடியாதது. இது உன் கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானதாக மற்றும் இது உன் கருத்துக்களுக்கு மிகவும் முரண்பட்டதாக இருக்கிறது. தேவனுடைய கிரியை அர்த்தமுள்ளதாக இருப்பதை இது காட்டுகிறது. அது உன் கருத்துக்களுடன் பொருந்தக்கூடியதாக இருந்தால், அது அர்த்தமற்றதாக இருக்கும். இன்று, தேவனுடைய கிரியை மிகவும் அதிசயமானது என்று நீ உணர்கிறாய். தேவனுடைய கிரியையை எவ்வளவு அதிகமாக அதிசயமானதென்று நீ உணர்கிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவன் புரிந்துகொள்ள முடியாதவர் என்று நீ உணர்கிறாய் மற்றும் தேவனுடைய கிரியைகள் எவ்வளவு பெரியவை என்பதை நீ காண்கிறாய். மனிதனை ஜெயங்கொள்ள அவர் மேலோட்டமான, செயலற்ற கிரியைகளை மட்டுமே செய்து, வேறு எதுவும் செய்யவில்லை என்றால், மனிதனால் தேவனுடைய கிரியையின் முக்கியத்துவத்தைக் கண்டிருக்க முடியாது. நீ இப்போது ஒரு சிறிய சுத்திகரிப்பு பெறுகிறாய் என்றாலும், உன் ஜீவிதத்தில் உன் வளர்ச்சிக்கு இது மிகவும் பயனளிக்கிறது. எனவே, நீங்கள் இத்தகைய கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. இன்று, நீ ஒரு சிறிய சுத்திகரிப்பு பெறுகிறாய், ஆனால் அதன் பிறகு நீ உண்மையாகவே தேவனுடைய கிரியைகளைக் காண முடியும். இறுதியில், நீ சொல்வாய்: “தேவனுடைய கிரியைகள் மிகவும் அதிசயமானவை!” இவை உன் இருதயத்தில் உள்ள வார்த்தைகளாக இருக்கும். சிறிது காலம் தேவனுடைய சுத்திகரிப்பினை அனுபவித்த பின்னர் (ஊழியக்காரர்களின் சோதனை மற்றும் சிட்சையின் காலத்திற்குப் பின்னர்), இறுதியாக சிலர் சொன்னார்கள்: “தேவனை விசுவாசிப்பது மிகவும் கடினம்!” “மிகவும் கடினம்” என்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தியிருப்பது, தேவனுடைய கிரியைகள் புரிந்துகொள்ள முடியாதவை என்பதையும், தேவனுடைய கிரியை மிகுந்த முக்கியத்துவத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளது என்பதையும், அவருடைய கிரியை மனிதனால் பொக்கிஷமாக காத்துக்கொள்ளப்படுவதற்கு மிகவும் தகுதியானது என்பதையும் காட்டுகிறது. நான் இவ்வளவு கிரியைகளைச் செய்த பிறகும், உன்னிடம் சிறிதளவு அறிவும் இல்லை என்றால், என் கிரியைக்கு மதிப்பு இருக்க முடியுமா? “தேவனுக்கு ஊழியம் செய்வது மிகவும் கடினம், தேவனுடைய கிரியைகள் மிகவும் அற்புதமானவை, தேவன் உண்மையாகவே ஞானமுள்ளவர்! தேவன் மிகவும் அழகானவர்!” என்று இது உன்னைச் சொல்ல வைக்கும். ஒரு காலகட்ட அனுபவத்திற்குப் பிறகு, நீ அத்தகைய வார்த்தைகளைச் சொல்ல முடிந்தால், நீ தேவனுடைய கிரியையை உனக்குள் பெற்றிருக்கிறாய் என்பதை இது நிரூபிக்கிறது. ஒரு நாள், நீ வெளிநாட்டில் சுவிசேஷத்தைப் பரப்புகையில், “தேவன் மீதான உன் விசுவாசம் எவ்வாறாக இருக்கிறது?” என்று ஒருவர் உன்னிடம் கேட்டால், “தேவனுடைய கிரியைகள் மிகவும் அற்புதமானவை!” என்று உன்னால் சொல்ல முடியும். உன் வார்த்தைகள் உண்மையான அனுபவங்களைப் பற்றி பேசுவதை அவர்கள் உணருவார்கள். உண்மையாகவே இது சாட்சி பகருவதாக இருக்கிறது. தேவனுடைய கிரியை ஞானத்தால் நிறைந்தது என்று நீ கூறுவாய், உன்னில் அவர் செய்த கிரியை உன்னை உண்மையாகவே சமாதானப்படுத்தி உன் இருதயத்தை ஜெயங்கொண்டது. நீ அவரை எப்போதும் நேசிப்பாய், ஏனென்றால் அவர் மனிதகுலத்தின் அன்பிற்கு தகுதியானவர்! இந்த விஷயங்களை உன்னால் பேச முடியும் என்றால், உன்னால் ஜனங்களின் இருதயங்களை அசைக்க முடியும். இவை அனைத்தும் சாட்சி பகருகிறவைகளாக இருக்கின்றன. உண்மையாகவே உன்னால் மாபெரும் சாட்சி கொடுக்க முடியுமானால், ஜனங்களை கண்ணீர் சிந்த வைக்க முடியுமானால், உண்மையாகவே நீ தேவனை நேசிக்கிறாய் என்பதை இது காட்டுகிறது. ஏனென்றால், தேவனை நேசிப்பதற்கு உன்னால் சாட்சியளிக்க முடிகிறது மற்றும் உன் மூலமாக, தேவனுடைய கிரியைகளால் சாட்சி கொடுக்க முடிகிறது. உன் சாட்சியின் மூலம், மற்றவர்கள் தேவனுடைய கிரியையை நாடுவதற்கும், தேவனுடைய கிரியையை அனுபவிப்பதற்கும், அவர்கள் அனுபவிக்கும் எந்தச் சூழலிலும் அவர்கள் உறுதியாக நிற்குமாறும் செய்யப்படுகிறார்கள். சாட்சி அளிப்பதற்கான ஒரே உண்மையான வழி இதுதான். இப்போது உன்னிடம் எதிபார்க்கப்படுவதும் இதுவே. தேவனுடைய கிரியை மிகவும் மதிப்புமிக்கது மற்றும் ஜனங்கள் பொக்கிஷமாக காத்துக்கொள்ள தகுதியானது என்பதை நீ காண வேண்டும். தேவன் மிகவும் விலைமதிப்பற்றவர் மற்றும் தாராளமானவர். பேசுவது மட்டுமல்லாமல், அவரால் ஜனங்களை நியாயந்தீர்க்கவும், அவர்களுடைய இருதயங்களைச் சுத்திகரிக்கவும், அவர்களுக்கு இன்பம் தரவும், அவர்களை ஆதாயப்படுத்தவும், ஜெயங்கொள்ளவும், அவர்களைப் பரிபூரணமாக்கவும் முடியும். தேவன் மிகவும் அன்பானவர் என்பதை உன் அனுபவத்திலிருந்து நீ காண்பாய். எனவே, நீ இப்போது தேவனை எவ்வளவாக நேசிக்கிறாய்? உண்மையாகவே இந்த விஷயங்களை உன் இருதயத்திலிருந்து உன்னால் சொல்ல முடியுமா? உன் இருதயத்தின் ஆழத்திலிருந்து இந்த வார்த்தைகளை உன்னால் வெளிப்படுத்த முடிந்தால், உன்னால் சாட்சி கொடுக்க முடியும். உன் அனுபவம் இந்த நிலையை அடைந்தவுடன், தேவனுக்கு உன்னால் சாட்சி கொடுக்க முடியும் மற்றும் நீ தகுதி பெறுவாய். உன் அனுபவத்தில் இந்த நிலையை நீ அடையவில்லை என்றால், நீ இன்னும் வெகுதொலைவில் இருப்பாய். சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது ஜனங்கள் பலவீனங்களைக் காண்பிப்பது இயல்பானது. ஆனால் சுத்திகரிப்புக்குப் பிறகு, “தேவன் அவருடைய கிரியையில் மிகவும் ஞானமுள்ளவர்!” என்று உன்னால் சொல்ல முடியும். இந்த வார்த்தைகளின் நடைமுறை புரிதலை உன்னால் உண்மையாகவே அடைய முடிந்தால், அது நீ மதிக்க வேண்டிய ஒன்றாக மாறும் மற்றும் உன் அனுபவத்திற்கு மதிப்பு இருக்கும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 512

இப்போது நீ எதனை நாட வேண்டும்? தேவனுடைய கிரியைக்கு நீ சாட்சி அளிக்க வல்லவனாக இருக்கிறாயா இல்லையா, உன்னால் ஒரு சாட்சியாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும் மாற முடியுமா இல்லையா மற்றும் நீ அவரால் பயன்படுத்தப்பட தகுதியுடையவனா இல்லையா என நீ தேட வேண்டியவை இவையே. தேவன் உண்மையில் உன்னில் எவ்வளவு கிரியை செய்திருக்கிறார்? நீ எவ்வளவாக பார்த்திருக்கிறாய் மற்றும் எவ்வளவாக உணர்ந்திருக்கிறாய்? நீ எவ்வளவாக அனுபவித்திருக்கிறாய் மற்றும் ருசித்திருக்கிறாய்? தேவன் உன்னைச் சோதித்தாரா, உன்னுடன் செயல்பட்டாரா அல்லது உன்னை ஒழுங்குபடுத்தினாரா என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய செயல்களும் அவருடைய கிரியையும் உன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தேவனை விசுவாசிப்பவனாகவும், அவரால் பரிபூரணப்படுத்தப்படுவதைத் தொடர விரும்பும் ஒருவனாகவும், உன் நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் தேவனுடைய கிரியைக்கு உன்னால் சாட்சி கொடுக்க முடியுமா? உன் நடைமுறை அனுபவத்தின் மூலமாக தேவனுடைய வார்த்தையின்படி உன்னால் ஜீவிக்க முடியுமா? உன் சொந்த நடைமுறை அனுபவத்தின் மூலம் மற்றவர்களுக்கு உன்னால் வழங்க முடியுமா மற்றும் தேவனுடைய கிரியைக்கு சாட்சி கொடுக்க உன் முழு ஜீவிதத்தையும் உன்னால் செலவிட முடியுமா? தேவனுடைய கிரியைக்கு சாட்சி கொடுக்க, உன் அனுபவம், அறிவு மற்றும் நீ செலுத்திய விலை ஆகியவற்றை நீ நம்ப வேண்டும். இவ்வாறு மட்டுமே நீ அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும். நீ தேவனுடைய கிரியைக்கு சாட்சி கொடுக்கிற ஒருவனாக இருக்கிறாயா? உன்னிடம் இந்த விருப்பம் இருக்கிறதா? அவருடைய பெயருக்கு உன்னால் சாட்சி அளிக்க முடிந்தால், இன்னும் அதிகமாக, அவருடைய கிரியைக்கு, அவருடைய ஜனங்களிடமிருந்து அவர் எதிர்பார்க்கும் அடையாளத்தில் உன்னால் ஜீவிக்க முடிந்தால், நீ தேவனுக்கு ஒரு சாட்சியாக இருக்கிறாய். தேவனுக்கு நீ எவ்வாறு உண்மையாக சாட்சி கொடுப்பாய்? தேவனுடைய வார்த்தையை நாடுவதன் மூலமும், உன் வார்த்தைகளால் சாட்சி அளிப்பதன் மூலமும், அவருடைய கிரியையை அறிந்துகொள்ளவும், அவருடைய கிரியைகளைக் காணவும் ஜனங்களை அனுமதிப்பதன் மூலமும் நீ இதைச் செய்கிறாய். இவை அனைத்தையும் நீ உண்மையாகவே நாடினால், தேவன் உன்னை பரிபூரணமாக்குவார். நீ தேடுவது அனைத்தும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்டு, இறுதியில் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தால், தேவன்மீது நீ வைத்திருக்கும் இந்த விசுவாசத்தின் கண்ணோட்டம் தூய்மையானதல்ல. நிஜ ஜீவிதத்தில் தேவனுடைய கிரியைகளை எவ்வாறு காண்பது, அவர் தம்முடைய சித்தத்தை உனக்கு வெளிப்படுத்தும்போது அவரை எவ்வாறு திருப்திப்படுத்துவது, அவருடைய அதிசயத்திற்கும் ஞானத்திற்கும் நீ எவ்வாறு சாட்சி அளிக்க வேண்டும் என்பதையும், அவர் எவ்வாறு உன்னை ஒழுங்குபடுத்துகிறார், சரிப்படுத்துகிறார் என்பதற்கு நீ எவ்வாறு சாட்சி கொடுக்க வேண்டும் என்பதையும் நீ தேட வேண்டும். இவை அனைத்தும் இப்போது நீ சிந்திக்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. தேவன் மீது நீ வைத்திருக்கும் அன்பானது அவர் உன்னை பரிபூரணமாக்கிய பிறகு தேவனுடைய மகிமையில் பகிர்ந்துகொள்ளக்கூடியதாக மட்டுமே இருந்தால், அது இன்னும் போதுமானதாக இல்லை மற்றும் தேவனுடைய எதிர்பார்ப்புகளை அதனால் பூர்த்தி செய்ய முடியாது. தேவனுடைய கிரியைக்கு உன்னால் சாட்சி கொடுக்கவும், அவருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவும், அவர் ஜனங்கள் மீது செய்த கிரியையை ஒரு நடைமுறை வழியில் அனுபவிக்கவும் முடியும். வலி, கண்ணீர், சோகம் எதுவாக இருந்தாலும், இவை அனைத்தையும் நடைமுறையில் நீ அனுபவிக்க வேண்டும். தேவனுக்கு சாட்சி கொடுக்கின்ற உன்னைப் பரிபூரணமாக்குவதற்காகவே அவை உள்ளன. நீ கஷ்டப்படுவதற்கும் பரிபூரணத்தைத் தேடுவதற்கும், சரியாக, இப்போது எது உன்னை வலியுறுத்துகிறது? உண்மையாகவே உன் தற்போதைய துன்பமானது தேவனை நேசிப்பதற்காகவும், அவருக்காக சாட்சி கொடுப்பதற்காகவும் இருக்கிறதா? அல்லது அது மாம்சத்தின் ஆசீர்வாதங்களுக்காகவும், உன் எதிர்கால வாய்ப்புகளுக்காகவும், தலைவிதிக்காகவும் இருக்கிறதா? உன் நோக்கங்கள், எண்ணங்கள் மற்றும் நீ பின்தொடரும் குறிக்கோள்கள் அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும் மற்றும் அவற்றை உன் சொந்த விருப்பத்தால் வழிநடத்த முடியாது. ஒரு மனிதன் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் அதிகாரத்திலிருந்து ஆட்சி செய்வதற்கும் பரிபூரணத்தை நாடினால், மற்றொரு மனிதன் தேவனை திருப்திப்படுத்தவும், தேவனுடைய கிரியைக்கு நடைமுறை சாட்சி அளிக்கவும் பரிபூரணத்தைத் தேடுகிறான் என்றால், பின்தொடர்வதற்கான இந்த இரண்டு வழிகளில் நீ எதைத் தேர்வு செய்வாய்? நீ முதலில் உள்ளதைத் தேர்வுசெய்தால், நீ இன்னும் தேவனுடைய தரத்திலிருந்து வெகுதொலைவில் இருப்பாய். எனது கிரியைகள் உலகங்கள் முழுவதிலும் வெளிப்படையாக அறியப்படும் என்றும் நான் உலகங்களில் ராஜாவாக ஆட்சி செய்வேன் என்றும் முன்பு சொன்னேன். மறுபுறம், உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது தேவனுடைய கிரியைக்கு சாட்சி அளிக்கும்படியாக வெளியே செல்வது என்பது, ராஜாக்களாகி உலகங்கள் முழுவதற்கும் தோன்றுவது அல்ல. தேவனுடைய கிரியைகள் அகிலத்தையும், ஆகாயவிரிவையும் நிரப்பட்டும். எல்லாரும் அவற்றைப் பார்த்து ஒப்புக்கொள்ளட்டும். இந்த வார்த்தைகள் தேவனோடு தொடர்புபடுத்தப்பட்டு பேசப்படுகின்றன மற்றும் மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் தேவனுக்கு சாட்சி கொடுக்க வேண்டும். இப்போது தேவனை உனக்கு எவ்வளவு தெரியும்? தேவனுக்கு உன்னால் எவ்வளவாக சாட்சி கொடுக்க முடியும்? தேவன் மனிதனை பரிபூரணமாக்குவதன் நோக்கம் என்னவாக இருக்கிறது? தேவனுடைய சித்தத்தை நீ புரிந்துகொண்டவுடன், அவருடைய சித்தத்தை எவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும்? நீ பரிபூரணமாக இருக்க விரும்பினால், நீ அனுபவிப்பதன் மூலம் தேவனுடைய கிரியைக்கு சாட்சி அளிக்க விரும்பினால், இந்த ஏவுதல் உன்னிடம் இருந்தால், எதுவும் மிகக் கடினமானதாக இருக்காது. இப்போது ஜனங்களுடைய தேவையாக விசுவாசம் இருக்கிறது. உன்னிடம் இந்த ஏவுதல் இருந்தால், எந்தவொரு எதிர்மறையான எண்ணம், செயலற்ற தன்மை, சோம்பல் மற்றும் மாம்சத்தின் கருத்துக்கள், ஜீவிப்பதற்கான தத்துவங்கள், கலகத்தனமான மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் பலவற்றை நீ விட்டுவிடுவது எளிதாக இருக்கும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 513

சோதனைகளுக்கு உள்ளாகும்போது, ஜனங்கள் பலவீனமாக இருப்பது அல்லது அவர்களுக்குள் எதிர்மறையான எண்ணம் இருப்பது அல்லது தேவனுடைய சித்தம் அல்லது நடப்பதற்கான அவர்களுடைய பாதை குறித்து தெளிவு இல்லாதிருப்பது ஆகியவை இயல்பானவை. எப்படியிருந்தாலும், நீ தேவனுடைய கிரியையில் விசுவாசம் வைத்திருக்க வேண்டும். யோபுவைப் போலவே தேவனை மறுக்கக்கூடாது. யோபு பலவீனமாக இருந்தபோதும், தன் பிறந்த நாளையே சபித்தாலும், மனித ஜீவிதத்தின் அனைத்தும் யேகோவாவால் வழங்கப்பட்டது என்பதையும், அவை அனைத்தையும் எடுத்துச் செல்லும் ஒருவராக இருப்பதும் யேகோவா என்பதையும் அவன் மறுக்கவில்லை. அவன் எவ்வாறு சோதிக்கப்பட்டாலும், அவன் இந்த நம்பிக்கையை நிலைநாட்டினான். உன் அனுபவத்தில், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் நீ எந்தச் சுத்திகரிப்புக்கு உட்பட்டாலும், மனிதகுலத்திடம் தேவன் விரும்புவது என்னவென்றால், சுருக்கமாகச் சொல்வதானால், அவர்களுடைய விசுவாசமும், அவர்மீதுள்ள அன்புமாக இருக்கின்றன. இவ்வாறு கிரியை செய்வதன் மூலம் அவர் ஜனங்களின் விசுவாசம், அன்பு மற்றும் விருப்பங்களைப் பரிபூரணப்படுத்துகிறார். தேவன் ஜனங்கள் மீது பரிபூரணத்தின் கிரியையைச் செய்கிறார், அவர்களால் அதைப் பார்க்க முடியாது மற்றும் உணர முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில், உன் விசுவாசம் தேவைப்படுகிறது. எதையாகிலும் மனிதக் கண்ணால் பார்க்க முடியாதபோது ஜனங்களின் விசுவாசம் தேவைப்படுகிறது மற்றும் உன் சொந்த கருத்துக்களை விட்டுவிட முடியாதபோது உன் விசுவாசம் தேவைப்படுகிறது. தேவனுடைய கிரியையைப் பற்றி உனக்கு தெளிவு இல்லாதபோது, உன்னிடம் எதிர்பார்க்கப்படுவது விசுவாசம் மற்றும் நீ உறுதியான நிலைப்பாட்டை எடுத்து சாட்சியாக இருப்பதும் ஆகும். யோபு இந்த நிலையை அடைந்தபோது, தேவன் அவனுக்குத் தோன்றி அவனிடம் பேசினார். அதாவது, உன் விசுவாசத்திலிருந்தே நீ தேவனைக் காண முடியும் மற்றும் உனக்கு விசுவாசம் இருக்கும்போது தேவன் உன்னை பரிபூரணமாக்குவார். விசுவாசம் இல்லாமல், தேவனால் இதைச் செய்ய முடியாது. நீ எதை எதிர்பார்க்கிறாயோ அதை தேவன் உனக்கு வழங்குவார். உனக்கு விசுவாசம் இல்லையென்றால், நீ பரிபூரணமாக்கப்பட முடியாது மற்றும் தேவனுடைய கிரியைகளை உன்னால் காண முடியாது, அவருடைய சர்வ வல்லமையையும் உன்னால் காண முடியாது. உன் நடைமுறை அனுபவத்தில் அவருடைய கிரியைகளை நீ காண்பாய் என்று உனக்கு விசுவாசம் இருக்கும்போது, தேவன் உனக்குத் தோன்றுவார் மற்றும் அவர் உனக்கு அறிவொளியைத் தருவார் மற்றும் உனக்குள்ளிருந்து உன்னை வழிநடத்துவார். அந்த விசுவாசம் இல்லாமல், தேவனால் அதைச் செய்ய முடியாது. நீ தேவன் மீதான நம்பிக்கையை இழந்திருந்தால், அவருடைய கிரியையை உன்னால் எவ்வாறு அனுபவிக்க முடியும்? ஆகையால், நீ விசுவாசம் வைத்திருக்கும்போது, நீ தேவன் மீது சந்தேகம் கொள்ளாமலும் இருக்கும்போது மற்றும் அவர் என்ன செய்தாலும் அவர் மீது உண்மையான விசுவாசம் இருக்கும்போது மட்டுமே, அவர் உன் அனுபவங்களின் மூலம் உனக்கு அறிவொளிவூட்டி உன்னை பிரகாசிக்கச் செய்வார். அப்போதுதான் உன்னால் அவருடைய கிரியைகளைக் காண முடியும். இந்த விஷயங்கள் அனைத்தும் விசுவாசத்தின் மூலம் அடையப்படுகின்றன. விசுவாசமானது சுத்திகரிப்பால் மட்டுமே வருகிறது மற்றும் சுத்திகரிப்பு இல்லாத நிலையில், விசுவாசம் வளர முடியாது. “விசுவாசம்” என்ற இந்த வார்த்தை எதைக் குறிக்கிறது? விசுவாசம் என்பது எதையாகிலும் பார்க்கவோ, தொடவோ முடியாதபோது, தேவனுடைய கிரியை மனித கருத்துக்களுடன் ஒத்துப்போகாதிருக்கும்போது, அது மனிதனுக்கு எட்டாத நிலையில் இருக்கும்போது, மனிதர் கொண்டிருக்க வேண்டிய உண்மையான நம்பிக்கை மற்றும் உண்மையான இருதயமாக இருக்கிறது. இதுதான் நான் பேசும் விசுவாசமாக இருக்கிறது. கஷ்டங்கள் மற்றும் சுத்திகரிப்பின் காலங்களில் ஜனங்களுக்கு விசுவாசம் தேவைப்படுகிறது மற்றும் விசுவாசம் என்பது சுத்திகரிப்புக்குப் பின்பு வரும் ஒன்றாக இருக்கிறது. சுத்திகரிப்பு மற்றும் விசுவாசத்தைப் பிரிக்க முடியாது. தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பது முக்கியமல்ல, உன் சூழலைப் பொருட்படுத்தாமல், உன்னால் ஜீவிதத்தைத் தொடரவும், சத்தியத்தைத் தேடவும், தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவைப் பெறவும், அவருடைய கிரியைகளைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது மற்றும் உன்னால் சத்தியத்தின்படி செயல்படவும் முடிகிறது. அவ்வாறு செய்வதுதான் உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருப்பதாக இருக்கிறது. அவ்வாறு செய்வது நீ தேவன்மீது விசுவாசத்தை இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. நீ தேவனை உண்மையாக நேசிக்க முடிந்தால், அவரைப் பற்றி சந்தேகங்களை வளர்த்துக் கொள்ளாதிருந்தால், நீ சுத்திகரிப்பு மூலம் சத்தியத்தைப் பின்தொடர முடிந்தால் மற்றும் உண்மையாகவே உன்னால் தேவனை நேசிக்க முடிந்தால், அவரைப் பற்றி சந்தேகங்களை வளர்த்துக் கொள்ளாதிருக்க முடிந்தால், அவர் என்ன செய்தாலும் நீ அவரை திருப்திப்படுத்த சத்தியத்தை கடைப்பிடிக்கிறாய் என்றால் மற்றும் அவருடைய சித்தத்திற்காக ஆழமாகத் தேடவும், அவருடைய சித்தத்தைக் குறித்து அக்கறையுடன் இருக்கவும் முடிந்தால் மட்டுமே உன்னால் தேவன் மீதான உண்மையான விசுவாசத்தைப் பெற முடியும். கடந்த காலத்தில், நீ ஒரு ராஜாவாக ஆட்சி செய்வாய் என்று தேவன் சொன்னபோது, நீ அவரை நேசித்தாய், அவர் உன்னை வெளிப்படையாகக் காட்டியபோது, நீ அவரைப் பின்தொடர்ந்தாய். ஆனால் இப்போது தேவன் மறைந்திருக்கிறார், உன்னால் அவரைக் காண முடியவில்லை மற்றும் உனக்கு தொல்லைகள் வந்துவிட்டன. இப்போதும், நீ தேவன் மீதான நம்பிக்கையை இழக்கிறாயா? எனவே, நீ எப்போதுமே ஜீவிதத்தைத் தொடர வேண்டும் மற்றும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முற்பட வேண்டும். இதுதான் உண்மையான விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது மிகவும் உண்மையான மற்றும் மிகவும் அழகான அன்பாக இருக்கிறது.

கடந்த காலங்களில், ஜனங்கள் அனைவரும், தீர்மானங்களை எடுக்க தேவனுக்கு முன்பாக வந்து, “வேறு யாரும் தேவனை நேசிக்காவிட்டாலும், நான் அவரை நேசிக்க வேண்டும்,” என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் இப்போது, சுத்திகரிப்பு உன் மீது வருகிறது, இது உன் கருத்துக்களுடன் ஒத்துப்போகாததால், நீ தேவன் மீதுள்ள விசுவாசத்தை இழக்கிறாய். இது உண்மையான அன்பாக இருக்கிறதா? யோபுவின் கிரியைகளைப் பற்றி நீ பலமுறை படித்திருக்கிறாய்—அவற்றைப் பற்றி மறந்துவிட்டாயா? உண்மையான அன்பு விசுவாசத்திற்குள் இருந்து மட்டுமே வடிவம் பெற முடியும். நீ அனுபவிக்கும் சுத்திகரிப்புகள் மூலம் நீ தேவன்மீது உண்மையான அன்பை வளர்த்துக் கொள்கிறாய் மற்றும் உன் விசுவாசத்தால் மட்டுமே உன் நடைமுறை அனுபவங்களில் உன்னால் தேவனுடைய சித்தத்தை கருத்தில் கொள்ள முடிகிறது மற்றும் விசுவாசத்தினால்தான் நீ உன் மாம்சத்தை கைவிட்டு ஜீவிதத்தைத் தொடர்கிறாய். இதைத்தான் ஜனங்கள் செய்ய வேண்டும். நீ இதைச் செய்தால், உன்னால் தேவனுடைய கிரியைகளைக் காண முடியும், ஆனால் உனக்கு விசுவாசம் இல்லாவிட்டால், உன்னால் தேவனுடைய கிரியைகளைப் பார்க்கவோ அவருடைய கிரியையை அனுபவிக்கவோ முடியாது. நீ தேவனால் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்றால், துன்பப்படுவதற்கான விருப்பம், விசுவாசம், சகிப்புத்தன்மை, கீழ்ப்படிதல் மற்றும் தேவனுடைய கிரியையை அனுபவிக்கும் திறன், அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளும் திறன், அவருடைய துக்கத்தை கருத்தில் கொள்ளும் திறன் மற்றும் பல என எல்லாவற்றையும் நீ கொண்டிருக்க வேண்டும். ஒரு மனிதனைப் பரிபூரணமாக்குவது எளிதானது அல்ல. நீ அனுபவிக்கும் ஒவ்வொரு சுத்திகரிப்புக்கும் உன் விசுவாசம் மற்றும் அன்பு தேவைப்படுகின்றன. நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், பாதையில் முன்னேறுவது மற்றும் தேவனுக்காக உன்னை அர்ப்பணித்தல் ஆகியவை மட்டும் போதாது. தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட ஒருவராக மாற நீ பல விஷயங்களை வைத்திருக்க வேண்டும். நீ துன்பத்தை எதிர்கொள்ளும்போது, நீ மாம்சத்தைப் பற்றிய அக்கறையை ஒதுக்கி வைக்கவும், தேவனுக்கு எதிராக குறைகூறாமல் இருக்கவும் வேண்டும். தேவன் உன்னிடமிருந்து தன்னை மறைக்கும்போது, அவரைப் பின்பற்றுவதற்கான விசுவாசத்தை நீ கொண்டிருக்க வேண்டும். உனது முந்தைய அன்பைத் தடுமாறவோ கலைக்கவோ அனுமதிக்காமல் பராமரிக்க வேண்டும். தேவன் என்ன செய்தாலும், அவருக்கு எதிராக குறைகூறுவதை விட, நீ அவருடைய வடிவமைப்பிற்கு கீழ்ப்படிந்து, உன் மாம்சத்தை சபிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். நீ சோதனைகளை எதிர்கொள்ளும்போது, நீ கடுமையாக அழும் போதிலும் அல்லது நீ அன்பு செலுத்தும் சில பொருட்களை விட்டுவிட விருப்பமில்லாமல் உணரும் போதிலும், நீ தேவனை திருப்திப்படுத்த வேண்டும். இதுவே, உண்மையான அன்பாகவும் விசுவாசமாகவும் இருக்கிறது. உன் உண்மையான வளர்ச்சி எதுவாக இருந்தாலும், நீ முதலில் கஷ்டத்தையும், உண்மையான விசுவாசத்தையும் அனுபவிக்கும் விருப்பத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் மாம்சத்தை கைவிடுவதற்கான விருப்பமும் உன்னிடத்தில் இருக்க வேண்டும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தனிப்பட்ட கஷ்டங்களைத் தாங்கவும், உன் தனிப்பட்ட ஆர்வங்களை இழக்கக் கொடுக்கவும் நீ ஆயத்தமாக இருக்க வேண்டும். நீ உன் இருதயத்தில் உன்னைப் பற்றி வருத்தப்படும் திறனுடனும் இருக்க வேண்டும்: கடந்த காலத்தில், உன்னால் தேவனை திருப்திப்படுத்த முடியவில்லை, எனவே, இப்போது நீ உன்னை வருத்திக் கொள்ளலாம். இந்த விஷயங்களில் நீ குறைவில்லாமல் இருக்க வேண்டும். இவற்றின் மூலம்தான் தேவன் உன்னை பரிபூரணமாக்குவார். இந்த அளவுகோல்களை உன்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், உன்னால் பரிபூரணமாக்கப்பட முடியாது.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 514

தேவனுக்கு ஊழியம் செய்யும் ஒருவர் அவருக்காக எப்படி துன்பப்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல; அதற்கும் மேலாக, தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் தேவனை நேசிப்பதே என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். தேவன் உன்னைச் சுத்திகரிப்பதற்காகவோ அல்லது உன்னைத் துன்பப்படுத்துவதற்காகவோ பயன்படுத்துவதில்லை. மாறாக, அவருடைய கிரியைகளை நீ அறிந்துகொள்ளவும், மனித ஜீவிதத்தின் உண்மையான முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும், குறிப்பாக, தேவனுக்கு ஊழியம் செய்வது எளிதான காரியம் அல்ல என்பதை நீ அறிந்துகொள்ளவும் உன்னைப் பயன்படுத்துகிறார். தேவனுடைய கிரியையை அனுபவிப்பது என்பது கிருபையை அனுபவிப்பதைப் பற்றியது அல்ல. மாறாக, நீ அவரை நேசிப்பதற்காக துன்பப்படுவதைப் பற்றியது. நீ தேவனுடைய கிருபையை அனுபவிப்பதால், அவருடைய சிட்சையையும் நீ அனுபவிக்க வேண்டும்; இவை அனைத்தையும் நீ அனுபவிக்க வேண்டும். தேவனுடைய அறிவொளியை நீ உனக்குள் அனுபவிக்க முடியும். மேலும், அவர் உன்னை எவ்வாறு நடத்துகிறார், உன்னை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார் என்பதையும் நீ அனுபவிக்க முடியும். இதனால், உனது அனுபவம் விரிவானதாக இருக்கும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் கிரியையை உன் மீது நடத்தியிருக்கிறார். தேவனுடைய வார்த்தை உன்னை நடத்தியிருக்கிறது, ஆனால் அது மட்டுமல்ல; அது உனக்கு அறிவொளியை அளித்துள்ளது மற்றும் உன்னை பிரகாசிக்கச் செய்துள்ளது. நீ எதிர்மறையான எண்ணத்துடன் பலவீனமாக இருக்கும்போது, தேவன் உனக்காக வருந்துகிறார். இந்த கிரியைகள் அனைத்தும் மனிதனைப் பற்றிய அனைத்தும் தேவனுடைய திட்டங்களுக்குள் உள்ளன என்பதை உனக்குத் தெரிவிப்பதற்காகவே செய்யப்படுகின்றன. தேவனை விசுவாசிப்பது துன்பத்தை அனுபவிப்பதைப் பற்றியது அல்லது அவருக்காக எல்லா விதமான காரியங்களையும் செய்வது என்று நீ நினைக்கலாம்; தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் உனது மாம்சம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்லது உனது ஜீவிதத்தில் எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும் என்பதற்காக அல்லது நீ வசதியாகவும் எல்லாவற்றிலும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக என்று நீ நினைக்கலாம். இருப்பினும், இவை எதுவும் தேவன் மீதுள்ள விசுவாசத்துடன் ஜனங்கள் பிணைக்க வேண்டிய நோக்கங்கள் அல்ல. இந்த நோக்கங்களுக்காக நீ விசுவாசித்தால், உனது கண்ணோட்டம் தவறானது. மேலும், நீ பரிபூரணப்படுத்தப்படுவதற்கு சாத்தியமில்லை. தேவனுடைய கிரியை, தேவனுடைய நீதியுள்ள மனநிலை, அவருடைய ஞானம், அவருடைய வார்த்தைகள் மற்றும் அவரது அதிசயமான மற்றும் புரிந்துகொள்ள முடியாத தன்மை ஆகியவை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாகும். இந்த புரிதலைக் கொண்டிருப்பதால், தனிப்பட்ட கோரிக்கைகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் அனைத்தையும் உனது இருதயத்திலிருந்து அகற்றுவதற்கு நீ இதைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை அகற்றுவதன் மூலம் மட்டுமே நீ தேவன் கோரிய நிபந்தனைகளை நிறைவேற்ற முடியும், இதைச் செய்வதன் மூலம்தான் நீ ஜீவனைப் பெற்று தேவனை திருப்திப்படுத்த முடியும். தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் அவரை திருப்திப்படுத்துவதும், அவர் விரும்பும் மனநிலையில் வாழ்வதும் ஆகும். இதனால் அவருடைய கிரியைகளும் மகிமையும் இந்த தகுதியற்ற ஜனக்கூட்டத்தின் மூலம் வெளிப்படும். தேவனை விசுவாசிப்பதற்கான சரியான கண்ணோட்டம் இதுதான். மேலும், நீ நாட வேண்டிய இலக்கு இதுவே ஆகும். தேவனை விசுவாசிப்பது குறித்து உனக்கு சரியான கண்ணோட்டம் இருக்க வேண்டும். மேலும், நீ தேவனுடைய வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிக்க வேண்டும், நீ சத்தியத்தின்படி ஜீவிக்க வேண்டும், குறிப்பாக அவருடைய நடைமுறை கிரியைகளையும், பிரபஞ்சம் முழுவதிலும் அவர் செய்கிற அதிசயிக்கத்தக்க கிரியைகளையும், அத்துடன் மாம்சத்தில் அவர் செய்கிற நடைமுறை கிரியைகளையும் உன்னால் காண முடியும். ஜனங்கள் தங்களது நடைமுறை அனுபவங்களின் மூலம், தேவன் தம்முடைய கிரியையை எவ்வாறு செய்கிறார் என்பதையும், அவரது சித்தம் அவர்களை நோக்கி என்ன செய்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இவை அனைத்தின் நோக்கமும் ஜனங்களின் கேடு நிறைந்த சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றுவதாகும். உனக்குள் இருக்கும் அசுத்தத்தையும் அநீதியையும் வெளியேற்றிவிட்டு, உனது தவறான நோக்கங்களைத் தள்ளிவிட்டு, தேவன் மீதான உண்மையான விசுவாசத்தை வளர்த்துக் கொண்டால் மட்டுமே—உண்மையான விசுவாசத்தினால் மட்டுமே நீ தேவனை உண்மையாக நேசிக்க முடியும். தேவன்மீது நீ வைத்திருக்கும் விசுவாசத்தின் அஸ்திபாரத்தில் மட்டுமே நீ தேவனை உண்மையாக நேசிக்க முடியும். தேவனை விசுவாசியாமல் அவரை நேசிக்க முடியுமா? நீ தேவனை விசுவாசிப்பதால், அதைப் பற்றி நீ குழப்பமடைய முடியாது. தேவன் மீதான விசுவாசம் அவர்களுக்கு ஆசீர்வாதத்தைத் தரும் என்பதைக் கண்டவுடன் சிலர் பெலன் நிறைந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சுத்திகரிப்புகளை அனுபவிக்க வேண்டியிருப்பதைக் கண்டவுடன் அவர்களது முழு பெலனையும் இழந்துவிடுகிறார்கள். அதுதான் தேவனை விசுவாசிப்பது என்பதா? இறுதியில், உனது விசுவாசத்தில் நீ தேவனுக்கு முன்பாக முழுமையான மற்றும் முற்றிலுமான கீழ்ப்படிதலை அடைய வேண்டும். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆனால் உனக்கு இன்னும் அவரிடம் முன்வைப்பதற்கு கோரிக்கைகள் உள்ளன. நீ கைவிட முடியாத பல மதக் கருத்துக்களை கொண்டுள்ளாய், உனது தனிப்பட்ட ஆர்வங்களை உன்னால் கைவிட முடியவில்லை, இருப்பினும் நீ மாம்சத்தின் ஆசீர்வாதங்களைத் தேடுகிறாய், தேவன் உனது மாம்சத்தை மீட்க வேண்டும் என விரும்புகிறாய், உனது ஆத்துமாவை அவர் இரட்சிக்க வேண்டும் என விரும்புகிறாய்—இவையே தவறான கண்ணோட்டம் கொண்ட ஜனங்களின் நடத்தைகள் ஆகும். மத நம்பிக்கையுள்ளவர்கள் தேவன்மீது விசுவாசம் வைத்திருந்தாலும், அவர்கள் தங்களது மனநிலையினை மாற்றிக்கொள்ள முற்படுவதில்லை, தேவனைப் பற்றிய அறிவைப் பின்தொடர்வதில்லை. மாறாக, தங்களது மாம்சத்தின் ஆர்வங்களை மட்டுமே தேடுகிறார்கள். உங்களில் பலருக்கு பல்வேறு வகைகளைச் சேர்ந்த மத நம்பிக்கைகள் உள்ளன; இது தேவன் மீதான உண்மையான விசுவாசம் அல்ல. தேவனை விசுவாசிப்பதற்கு, ஜனங்கள் அவருக்காக துன்பப்படத் தயாராக இருக்கும் ஒரு இருதயத்தையும் தங்களைத் தாங்களே அர்ப்பணிக்கும் விருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஜனங்கள் நிறைவேற்றாவிட்டால், தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் தவறானது, மேலும் அவர்களுடைய மனநிலையில் மாற்றத்தை அடைய முடியாது. சத்தியத்தை உண்மையாகப் பின்தொடர்ந்து தேவனைப் பற்றிய அறிவைத் தேடி, ஜீவிதத்தைத் தொடரும் மனிதர்கள் மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிக்கிறார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 515

சுத்திகரிப்பு கிரியையின் நோக்கம் முக்கியமாக ஜனங்களின் விசுவாசத்தை பரிபூரணமாக்குவதாகும். இறுதியில் அடையப்படுவது என்னவென்றால், நீ வெளியேற விரும்புகிறாய், ஆனால் அதே நேரத்தில், உன்னால் வெளியேற முடிவதில்லை; மிகச் சிறிய அளவிலான நம்பிக்கை இல்லாதபோதும்கூட சிலரால் விசுவாசிக்க முடிகிறது; மேலும், ஜனங்கள் தங்களது எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி இனி நம்பிக்கை கொண்டிருக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் மட்டுமே தேவனுடைய சுத்திகரிப்பு நிறைவடையும். மனிதன் இன்னும் ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் நிலையற்ற நிலையினை அடைந்திருக்கவில்லை, அவர்கள் மரணத்தை ருசிக்கவில்லை. ஆதலால், சுத்திகரிப்பு செயல்முறை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. ஊழியம் செய்பவர்களின் நிலையில் இருந்தவர்கள்கூட மிகச் சிறப்பாக சுத்திகரிக்கப்படவில்லை. யோபு தீவிர சுத்திகரிப்புக்கு உட்பட்டான், அவன் சார்ந்து இருப்பதற்கு அவனுக்கு எதுவும் இருக்கவில்லை. ஜனங்களுக்கு, தாங்கள் நம்பி இருக்க எதுவுமில்லை, சார்ந்து இருப்பதற்கு எதுவும் இல்லை என்ற அளவிற்கு அவர்கள் சுத்திகரிப்புகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்—இது மட்டுமே உண்மையான சுத்திகரிப்பாகும். ஊழியம் செய்பவர்களாக இருக்கும் நேரத்தில், உன் இருதயம் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருந்திருந்தால், அவர் என்ன செய்திருந்தாலும், உனக்காக அவருடைய விருப்பம் எதுவாக இருந்திருந்தாலும், நீ எப்போதும் அவருடைய ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிந்தால், இறுதியில் நீ தேவன் செய்த எல்லாவற்றையும் புரிந்துகொள்வாய். நீ யோபுவின் சோதனைகளுக்கு உட்படுகிறாய், அதே சமயம் பேதுருவின் சோதனைகளுக்கும் நீ உட்படுகிறாய். யோபு சோதிக்கப்பட்டபோது, அவன் சாட்சியாக நின்றான். இறுதியில், யேகோவா அவனுக்கு வெளிப்பட்டார். அவன் சாட்சியாக நின்ற பின்னரே தேவனுடைய முகத்தைப் பார்க்க தகுதியானவனாக அவன் இருந்தான். “நான் தீட்டான தேசத்திலிருந்து மறைந்துகொள்கிறேன், ஆனால் என்னை பரிசுத்த ராஜ்யத்திற்குக் காட்டுகிறேன்” என்று ஏன் கூறப்படுகிறது? அதாவது, நீ பரிசுத்தனாவும், சாட்சியாகவும் நிற்கும் போது மட்டுமே தேவனுடைய முகத்தைக் காணும் மேன்மையை நீ பெற முடியும். அவருக்காக நீ சாட்சியாக நிற்க முடியாவிட்டால், அவருடைய முகத்தைக் காண்பதற்கான மேன்மையை நீ பெற்றிருக்கமாட்டாய். நீ சுத்திகரிப்புகளை சந்திப்பதால் பின்வாங்கினால் அல்லது தேவனுக்கு எதிராக குறை கூறினால், அவருக்கு சாட்சியாக நிற்கத் தவறிவிட்டு, சாத்தானின் கேலிக்குரியவனாக மாறினால், நீ தேவன் தோன்றுவதை ஆதாயம் செய்ய மாட்டாய். சோதனைகளுக்கு மத்தியில் தன் மாம்சத்தை சபித்து, தேவனுக்கு எதிராக குறை கூறாமல், தனது வார்த்தைகள் மூலம் குறை கூறாமல் அல்லது பாவம் செய்யாமல் தன் மாம்சத்தை வெறுக்க முடிந்த யோபுவைப் போல நீ இருந்தால், நீ சாட்சியாக நிற்பாய். நீ ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சுத்திகரிப்புகளுக்கு உட்பட்டால், தேவனுக்கு முன்பாக முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரிடம் நீ பிற கோரிக்கைகளையோ, உனது சொந்த கருத்துக்களையோ முன்வைக்காமல், தேவனுக்கு முன்பாக முற்றிலும் கீழ்ப்படிந்து, நீயும் யோபுவைப் போல் இருக்க முடிந்தால், தேவனும் உனக்குத் தோன்றுவார். உன்னுடைய சொந்த கருத்துக்கள், தனிப்பட்ட பாரபட்சமான எண்ணங்கள், சுயநல எண்ணங்கள், தனிப்பட்ட தேவைகள் மற்றும் மாம்ச ஆர்வங்கள் ஆகியவற்றை நீ கொண்டிருப்பதால் இப்போது தேவன் உனக்குத் தோன்றவில்லை. அவருடைய முகத்தைப் பார்க்க நீ தகுதியற்றவன். நீ தேவனைக் காண நேர்ந்தால், உனது சொந்த கருத்துக்களால் நீ அவரை அளவிடுவாய், அவ்வாறு செய்யும்போது, அவர் உன்னால் சிலுவையில் அறையப்படுவார். உனது கருத்துக்களுடன் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உன்னிடம் வந்தாலும், அவற்றை நீ ஒதுக்கி வைத்துவிட்டு, இவற்றிலிருந்து தேவனுடைய கிரியைகளைப் பற்றிய அறிவை அடைய முடிகிறது. மேலும், சுத்திகரிப்புகளுக்கு மத்தியில் நீ தேவனை நேசிக்கும் உனது இருதயத்தை வெளிப்படுத்தினால், இதுவே சாட்சியாக நிற்பதாகும். உன் வீடு சமாதானமாக இருந்தால், நீ மாம்சத்தின் இன்பங்களை அனுபவிக்கிறாய், யாரும் உன்னைத் துன்புறுத்துவதில்லை, திருச்சபையில் உள்ள உனது சகோதர சகோதரிகள் உனக்குக் கீழ்ப்படிகிறார்கள், தேவனை நேசிக்கும் உனது இருதயத்தை காண்பிக்க முடியுமா? இந்தச் சூழல்உன்னைச் சுத்திகரிக்க முடியுமா? சுத்திகரிப்பு மூலமாக மட்டுமே தேவனை நேசிக்கும் உனது இருதயத்தைக் காண்பிக்க முடியும். மேலும், உனது கருத்துக்களுடன் ஒத்துப்போகாத விஷயங்கள் மூலம்தான் நீ பரிபூரணமானவனாக முடியும். பல முரண்பாடான மற்றும் எதிர்மறையான விஷயங்களின் மூலமாக, அனைத்து வகையான சாத்தானின் வெளிப்பாடுகளையும்—அதன் செயல்பாடுகள், குற்றச்சாட்டுகள், தொந்தரவுகள் மற்றும் வஞ்சித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சாத்தானின் அருவருப்பான முகத்தை தேவன் உனக்குக் தெளிவாகக் காண்பிக்கிறார். இதன் மூலம் சாத்தானை வேறுபடுத்தி பார்ப்பதற்கான உனது திறனை நீ பரிபூரணமாக்குகிறாய், இதனால் சாத்தானை வெறுத்து அதனை கைவிடுகிறாய்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 516

தோல்வி, பலவீனம், நீ எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்த காலங்கள் போன்ற பல்வேறு அனுபவங்கள் அனைத்தும் தேவனுடைய சோதனைகள் என்று கூறலாம். ஏனென்றால், சகலமுமே தேவனிடமிருந்து வருகின்றன, எல்லா விஷயங்களும் நிகழ்வுகளும் அவருடைய கரங்களில் உள்ளன. நீ தோல்வியுற்றாலும் சரி, நீ பலவீனமாக இருந்து தள்ளாடினாலும் சரி, இவை அனைத்தும் தேவனிடம் உள்ளன, அவருடைய பிடியில் உள்ளன. தேவனுடைய பார்வையில், இது உனக்கான சோதனையாகும், அதை நீ அடையாளம் காண முடியாவிட்டால், அது சோதனையாக மாறும். ஜனங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய இரண்டு வகையான நிலைகள் உள்ளன: ஒன்று பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகிறது, மற்றொன்று பெரும்பாலும் சாத்தானிடமிருந்து வருவதாக இருக்கலாம். ஒன்று, பரிசுத்த ஆவியானவர் உன்னை ஒளிரச் செய்து, உன்னை நீ அறிந்து கொள்ளவும், உன்னை நீ வெறுக்கவும், உன்னைப் பற்றி நீ வருந்தவும், தேவன் மீது உண்மையான அன்பு கொள்ளவும், அவரை திருப்திப்படுத்தும்படி உனது இருதயத்தை அமைக்கவும் உன்னை அனுமதிக்கும் ஒரு நிலை. மற்றொன்று உன்னை நீயே அறிந்திருக்கிற ஒரு நிலை, ஆனால் நீ எதிர்மறையான எண்ணத்தை கொண்டிருப்பவன் மற்றும் பலவீனமானவன். இந்த நிலை தேவனுடைய சுத்திகரிப்பு என்றும் அது சாத்தானின் சோதனை என்றும் கூறலாம். இது உனக்கான தேவனுடைய இரட்சிப்பு என்பதை நீ உணர்ந்தால், நீ இப்போது அவருக்கு கடன்பட்டிருப்பதாக பெரிதும் உணர்ந்தால், இப்போதிலிருந்து நீ அவருக்கு அதனை திரும்பச் செலுத்த முயற்சி செய்தால், இனிமேல் நீ அத்தகைய ஒழுக்கக்கேடான நிலைக்கு ஆளாக மாட்டாய் என்றால், நீ அவருடைய வார்த்தைகளை புசித்துக் குடிப்பதில் உனது முயற்சியை மேற்கொண்டால், நீ எப்போதுமே உன்னைக் குறைவாகக் கருதுகிற, ஏங்குகிற இருதயத்தை நீ கொண்டிருந்தால், இதுதான் தேவனுடைய சோதனையாகும். துன்பப்படுதல் முடிந்ததும், நீ மீண்டும் முன்னேறினாலும், தேவன் உன்னை வழிநடத்துவார், ஒளிரச் செய்வார், அறிவொளியூட்டுவார் மற்றும் உன்னைப் போஷிப்பார். ஆனால் நீ அதை அடையாளம் காணாமல் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டிருந்து, வெறுமனே, உன்னை நீயே நம்பிக்கையற்ற நிலையில் கைவிட்டுவிட்டது போன்று நீ நினைத்தால், சாத்தானின் சோதனையானது உன் மீது வந்திருக்கும். யோபு சோதனைகளுக்கு உட்பட்டபோது, தேவனும் சாத்தானும் ஒருவருக்கொருவர் பந்தயம் கட்டிக்கொண்டிருந்தார்கள், யோபுவை துன்புறுத்த தேவன் சாத்தானை அனுமதித்தார். தேவன் யோபுவைச் சோதித்தாலும், உண்மையில் சாத்தான் தான் யோபுமீது வந்தான். சாத்தானைப் பொறுத்தவரை, அதுதான் யோபுவை சோதித்தது, ஆனால் யோபு தேவனுடைய பக்கமாக இருந்தார். அப்படி இல்லாதிருந்தால், யோபு சோதனையில் விழுந்திருப்பார். ஜனங்கள் சோதனையில் விழுந்தவுடன், அவர்கள் ஆபத்தில் விழுகிறார்கள். சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவது தேவனிடமிருந்து வந்த சோதனை என்று கூறலாம், ஆனால் நீ ஒரு நல்ல நிலையில் இல்லை என்றால், அது சாத்தானிடமிருந்து வரும் சோதனை என்றும் கூறலாம். நீ தரிசனத்தைப் பற்றிய தெளிவை கொண்டிருக்கவில்லை என்றால், சாத்தான் உன் மீது குற்றம் சாட்டும், மேலும் தரிசனத்தைக் குறித்த அம்சத்தில் உன்னை தெளிவற்றதாகச் செய்யும். நீ அதை அறிவதற்கு முன்பு, நீ சோதனையில் விழுவாய்.

நீ தேவனுடைய கிரியையை அனுபவிக்கவில்லை என்றால், நீ ஒருபோதும் பரிபூரணப்படுத்தப்பட முடியாது. உனது அனுபவத்தில், நீ அனைத்துக் காரியங்களையும் நீ அறிந்திருக்கவும் வேண்டும். எடுத்துக்காட்டாக, கருத்துக்கள் மற்றும் அதிகப்படியான நோக்கங்களை வளர்ப்பதற்கு என்னென்ன விஷயங்கள் உன்னை வழிநடத்துகின்றன, மேலும் இந்த பிரச்சனைகளைத் தீர்க்க என்ன வகையான பொருத்தமான நடைமுறைகள் உன்னிடம் உள்ளன? தேவனுடைய கிரியையை உன்னால் அனுபவிக்க முடிந்தால், உன்னிடம் வளர்ச்சி இருக்கிறது என்று அர்த்தம். நீ பெலன் கொண்டவனாக மட்டுமே தோன்றினால், இது உண்மையான வளர்ச்சி அல்ல, உன்னால் உறுதியாக நிற்க முடியாது. உன்னால் தேவனுடைய கிரியையை அனுபவிக்க முடிந்தால் மட்டுமே, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நீ அதை அனுபவித்து சிந்திக்க முடியும். நீ மேய்ப்பர்களை விட்டு வெளியேறி, தேவனை விசுவாசித்து சுதந்திரமாக ஜீவித்து, தேவனுடைய உண்மையான கிரியைகளை உன்னால் காண முடிந்தால் மட்டுமே, தேவனுடைய சித்தம் நிறைவேறும். தற்போது, பெரும்பாலான ஜனங்களுக்கு எவ்வாறு அனுபவிக்க வேண்டும் என்று தெரியவில்லை, அவர்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, அதை எவ்வாறு கையாளுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை; அவர்களால் தேவனுடைய கிரியைகளை அனுபவிக்க இயலாது, அவர்களால் ஆவிக்குரிய ஜீவிதத்தை ஜீவிக்க முடியாது. நீ தேவனுடைய வார்த்தைகளை கைக்கொண்டு உனது நடைமுறை ஜீவிதத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்.

சில நேரங்களில் தேவன் உனக்கு ஒரு குறிப்பிட்ட வகை உணர்வைத் தருகிறார். இந்த உணர்வு, நீ உனது உள்ளார்ந்த இன்பத்தை இழக்கவும், தேவனுடைய பிரசன்னத்தை இழக்கவும் காரணமாகிறது. அதாவது, நீ அந்தகாரத்தில் மூழ்கிவிடுகிறாய். இது ஒரு வகையான சுத்திகரிப்பாகும். எதையும் நீ செய்யும்போதெல்லாம், அது எப்போதும் உனது திட்டத்தின்படி நடக்காமல் தவறாகப் போகும் அல்லது நீ அதில் மேற்கொண்டு முன்னேற முடியாமல் போகும். இது தேவனுடைய சிட்சையாகும். சில சமயங்களில், நீ தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் கலகத்தனமான ஒன்றைச் செய்யும்போது, அது வேறு யாருக்கும் தெரியாமல் போகலாம்—ஆனால் தேவனுக்கு அது தெரிந்திருக்கும். அவர் உன்னை விட்டுவிடமாட்டார், அவர் உன்னை சிட்சிப்பார். பரிசுத்த ஆவியானவரின் கிரியை மிகவும் விரிவானது. ஜனங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும், அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நகர்வையும், அவர்களின் ஒவ்வொரு சிந்தனையையும் யோசனையையும் அவர் மிகவும் கவனமாக கண்காணிக்கிறார். இதனால் ஜனங்கள் இந்த விஷயங்களைப் பற்றிய உள் விழிப்புணர்வை அடைய முடியும். நீ ஒரு முறை ஏதாவது செய்கிறாய், அது நீ திட்டமிட்டபடி நடக்காமல் தவறாகப் போகிறது, நீ மீண்டும் ஏதாவது செய்கிறாய், அது மேலும் தவறாகப் போகிறது, படிப்படியாக நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் புரிந்துகொள்வாய். பல முறை சிட்சிக்கப்படுவதன் மூலம், தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப என்ன செய்ய வேண்டும், அவருடைய சித்தத்திற்கு ஏற்ப எது இல்லை என்பதை நீ அறிவாய். இறுதியில், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்கான துல்லியமான பதில்கள் உனக்குள் இருக்கும். சில நேரங்களில், நீ கலகக்காரனாக இருப்பாய், மேலும் நீ தேவனால் உனக்குள்ளிருந்து கண்டிக்கப்படுவாய். இவை அனைத்தும் தேவனுடைய சிட்சையில் இருந்து வருகின்றன. தேவனுடைய வார்த்தையை நீ பொக்கிஷமாகக் கொள்ளாமல், அவருடைய கிரியையை நீ முக்கியமற்றதாகக் கருதினால், அவர் உன்னைப் புறந்தள்ளிவிடுவார். தேவனுடைய வார்த்தைகளை நீ எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவர் உனக்கு அறிவொளிவூட்டுவார். இப்போது, திருச்சபையில் குழம்பிய மற்றும் குழப்பமடைந்த விசுவாசத்தைக் கொண்டுள்ள சிலர் இருக்கிறார்கள், அவர்கள் நிறைய பொருத்தமற்ற காரியங்களைச் செய்கிறார்கள், ஒழுக்கமின்றி செயல்படுகிறார்கள். எனவே, பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களில் தெளிவாகக் காண முடிவதில்லை. சிலர் பணம் சம்பாதிப்பதற்காக, சிட்சிக்கப்படுவதை கைவிட்டு, ஒரு தொழிலை நடத்த வெளியே செல்வதற்காக தங்களது கடமைகளையும் விட்டுவிடுகிறார்கள்; அத்தகைய நபர் மேலும் அதிகமான ஆபத்தில் இருக்கிறார். தற்போது அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை தங்களுக்குள் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் அவர்கள் பரிபூரணமடைவது கடினமாக இருக்கும். தங்களுக்குள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் தேவனுடைய சிட்சையையும் காண முடியாத பலர் உள்ளனர். அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் பற்றி தெளிவற்றவர்களாக இருப்பவர்கள் மற்றும் அவருடைய கிரியையை அறியாதவர்கள் ஆவர். சுத்திகரிப்புகளுக்கு மத்தியில் நிலையாக இருக்கக்கூடியவர்கள், தேவன் என்ன செய்தாலும் அவரைப் பின்பற்றுபவர்கள், குறைந்தபட்சம் வெளியேறாதவர்கள் அல்லது பேதுரு அடைந்தவற்றில் 0.1 சதவீதத்தை அடைந்தவர்கள்கூட நன்றாகவே இருக்கிறார்கள், ஆனால் தேவன் அவர்களைப் பயன்படுத்துகிறதைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. பலர் விஷயங்களை விரைவாக புரிந்துகொள்கிறார்கள், தேவன்மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறார்கள், பேதுருவின் நிலையையும் மிஞ்சக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தேவன் அவர்கள் மீது பரிபூரணத்தின் கிரியையைச் செய்கிறார். அத்தகையவர்களுக்கு சிட்சையும் அறிவொளியும் கிடைக்கும், தேவனுடைய சித்தத்திற்கு இணங்காத ஒன்றை அவர்கள் கொண்டிருந்தால், அவர்கள் அதனை உடனடியாகத் தூக்கி எறியலாம். அத்தகையவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் போன்றவர்கள்—அவர்களின் மதிப்பு மிகவும் அதிகம்! தேவன் பல வகையான கிரியைகளைச் செய்திருக்கிறார். ஆனால் நீ இன்னும் மணல் அல்லது கல் போன்றவன் என்றால், நீ பயனற்றவனாவாய்!

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 517

சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் தேவனுடைய கிரியை அற்புதமானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கிறது. அவர் ஒரு ஜனக்கூட்டத்தை பரிபூரணமாக்குவார், வேறு சிலரை அழிப்பார். ஏனென்றால், திருச்சபையில் எல்லா வகையான ஜனங்களும் இருக்கிறார்கள். சத்தியத்தை நேசிப்பவர்களும், நேசிக்காதவர்களும் இருக்கிறார்கள்; தேவனுடைய கிரியையை அனுபவிப்பவர்களும், அனுபவிக்காதவர்களும் இருக்கிறார்கள்; தங்களது கடமையைச் செய்பவர்களும், செய்யாதவர்களும் இருக்கிறார்கள்; தேவனுக்காக சாட்சி கொடுப்பவர்களும், சாட்சி கொடுக்காதவர்களும் இருக்கிறார்கள்—அவர்களில் ஒரு பகுதியினர் அவிசுவாசிகளும் பொல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக அழிக்கப்படுவார்கள். தேவனுடைய கிரியையை நீ தெளிவாக அறியாவிட்டால், நீ எதிர்மறையானவனாக இருப்பாய்; ஏனென்றால், தேவனுடைய கிரியையை குறைந்த ஜனக்கூட்டத்தில் மட்டுமே காண முடியும். இந்த நேரத்தில், யார் தேவனை உண்மையாக நேசிக்கிறார்கள், யார் நேசிக்கவில்லை என்பது தெளிவாகிவிடும். தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை கொண்டிருப்பார்கள், அதே நேரத்தில் அவரை உண்மையாக நேசிக்காதவர்கள் அவருடைய கிரியையின் ஒவ்வொரு நிலையிலும் வெளிப்படுவார்கள். அவர்கள் அழிக்கப்படும் பொருட்களாக மாறுவார்கள். இந்த ஜனங்கள் ஜெயங்கொள்ளப்படும் கிரியையின் போது வெளிப்படுத்தப்படுவார்கள், மேலும் அவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள். பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் தேவனால் முழுமையாக ஆதாயம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பேதுருவைப் போலவே தேவனை நேசிக்க தகுதியானவர்கள். ஜெயங்கொள்ளப்பட்டவர்கள் இயல்பான அன்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் செயலற்ற அன்பை மட்டுமே அவர்கள் கொண்டுள்ளார்கள். மேலும், அவர்கள் தேவனை நேசிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். நடைமுறை அனுபவத்தின் மூலம் அடையப்பட்ட புரிதலின் மூலம் இயல்பான அன்பு உருவாகிறது. இந்த அன்பு ஒரு மனிதனின் இருதயத்தை ஆக்கிரமித்து, அவர்களை தானாக முன்வந்து தேவனுக்கு அர்ப்பணிக்க வைக்கிறது; தேவனுடைய வார்த்தைகள் அவர்களின் அஸ்திபாரமாக மாறும். மேலும், அவர்களால் தேவனுக்காக துன்பப்பட முடிகிறது. நிச்சயமாக, இவை தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட ஒருவன் கொண்டிருப்பதாகும். நீ ஜெயங்கொள்ளப்படுகிறதை நாடினால் மட்டுமே, நீ தேவனுக்காக சாட்சி பகர முடியாது; ஜனங்களை ஜெயங்கொள்வதன் மூலம் மட்டுமே தேவன் தமது இரட்சிப்பின் இலக்கை அடைந்தால், ஊழியம் செய்கிறவர்கள் எடுத்து வைக்கும் அடி அந்த கிரியையை நிறைவடையச் செய்யும். இருப்பினும், ஜனங்களை ஜெயங்கொள்வது தேவனுடைய இறுதியான இலக்கு அல்ல, அது ஜனங்களை பரிபூரணப்படுத்துகிறதே ஆகும். ஆகவே, இந்த நிலை ஜெயத்தின் கிரியை என்று சொல்வதை விட, அது பரிபூரணப்படுத்துதல் மற்றும் அழித்தல் ஆகியவற்றின் கிரியை என்று கூறலாம். சிலர் முழுமையாக ஜெயங்கொள்ளப்படவில்லை, அவர்களை ஜெயங்கொள்ளும் போக்கில், ஒரு ஜனக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவார்கள். இந்த இரண்டு கிரியைகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வளவு நீண்ட கால கிரியை முழுவதும்கூட ஜனங்கள் புறப்பட்டுச் செல்லவில்லை. மேலும், இது ஜெயங்கொள்ளுதலின் இலக்கு அடையப்பட்டுள்ளது என்பதைக் காண்பிக்கிறது—இதுவே ஜெயங்கொள்ளப்படுவது குறித்த உண்மையாகும். சுத்திகரிப்புகள் ஜெயங்கொள்ளப்படுவதற்காக அல்ல, மாறாக பரிபூரணப்படுத்தப்படுவதற்காகவே ஆகும். சுத்திகரிப்பு இல்லாமல், ஜனங்களை பரிபூரணப்படுத்த முடியாது. எனவே, சுத்திகரிப்புகள் உண்மையிலேயே மதிப்புமிக்கவை! இன்று ஒரு ஜனக்கூடடத்தைச் சேர்ந்தவர்கள் பரிபூரணப்படுத்தப்பட்டு ஆதாயம் செய்யப்படுகிறார்கள். முன்னர் குறிப்பிடப்பட்ட பத்து ஆசீர்வாதங்கள் அனைத்தும் பரிபூரணப்படுத்தப்பட்டவர்களை இலக்காகக் கொண்டவை. பூமியில் தங்களது அடையாளத்தினை மாற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளதென்பது பரிபூரணப்படுத்தப்பட்டவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. பரிபூரணப்படுத்தப்படாதவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பெற தகுதியற்றவர்கள் ஆவர்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 518

தேவனை விசுவாசிப்பதும் தேவனை அறிவதும் பரலோகச் சட்டமும் பூமியின் கொள்கையும் ஆகும், தேவன் அவதரித்து தமது கிரியையைத் தாமே நேரில் செய்யும் ஒரு காலத்தில், இன்று தேவனை அறிந்து கொள்வதற்கான ஒரு நல்ல நேரம். தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்வதற்கான அஸ்திபாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் அடையக்கூடிய ஒன்றே தேவனைத் திருப்திப்படுத்துவது என்பதாகும், மேலும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள, தேவனைப் பற்றி ஞானம் கொஞ்சம் இருப்பது அவசியம். தேவனைப் பற்றிய இந்த ஞானம் தேவனை விசுவாசிக்கிறவனுக்கு தரிசனமாக இருக்க வேண்டிது அவசியமாகும். இது தேவன்மீதான மனிதனின் விசுவாசத்தின் அடிப்படையாகும். இந்த ஞானம் இல்லையானால், தேவனின் மீதான மனிதனின் விசுவாசம் தெளிவற்ற நிலையிலும், வெற்றுக் கோட்பாட்டின் மத்தியிலும் இருக்கும். தேவனைப் பின்பற்றுதல் இது போன்றோர்களின் தீர்மானமாக இருந்தாலும், அவர்கள் எதையும் பெறுவதில்லை இந்த ஓட்டத்தில் எதையும் பெறாதவர்கள் அனைவருமே நீக்கப்படுவார்கள்—அவர்கள் அனைவரும் சுயநலவாதிகள். தேவ கிரியையின் எந்த படியை நீ அனுபவித்தாலும், உன்னுடன் நீ ஒரு வலிமையான தரிசனம் உடனிருக்க வேண்டும். இல்லையெனில், புதிய கிரியையின் ஒவ்வொரு அடியையும் ஏற்றுக்கொள்வது உனக்கு கடினமாக இருக்கும், ஏனென்றால் தேவனின் புதிய கிரியை மனிதனின் கற்பனை திறனைத் தாண்டி உள்ளது, மேலும் அது அவரின் எண்ணத்தின் எல்லைக்களுக்கு அப்பாற்பட்டது. எனவே, மனிதனை கவனிக்க ஒரு மேய்ப்பன் இல்லாமல், தரிசனங்களைப் பற்றி ஐக்கியத்தில் ஈடுபடுவதற்கு ஒரு மேய்ப்பன் இல்லாமல், இந்த புதிய கிரியையை மனிதனால் ஏற்க இயலாது. மனிதனால் தரிசனங்களைப் பெற முடியாவிட்டால், தேவனின் புதிய கிரியையை அவனால் பெற முடியாது, தேவனின் புதிய கிரியைக்கு மனிதனால் கீழ்ப்படிய முடியாவிட்டால், மனிதனால் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள இயலாது, எனவே தேவனைப் பற்றிய அவனுடைய ஞானம் ஒன்றுமில்லை என்று எண்ணப்படும். மனிதன் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கு முன், தேவனுடைய வார்த்தையை அவன் அறிந்திருக்க வேண்டும். அதாவது, அவன் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாதையில் மட்டுமே தேவனின் வார்த்தையைத் துல்லியமான வகையிலும் தேவனின் சித்தத்தின் படியும் செயல்படுத்த முடியும். இது சத்தியத்தைத் தேடும் எல்லோரும் கொண்டிருக்க வேண்டிய ஒன்றாகும், மேலும் இந்தச் செயல் தேவனை அறிய முயலும் எல்லோரும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்முறையாகும். தேவனின் வார்த்தையை அறிந்து கொள்ளும் முறையானது தேவனையும் தேவனின் கிரியையையும் அறிந்து கொள்ளும் முறையாகும். எனவே, தரிசனங்களை அறிந்துகொள்வது தேவ அவதாரத்தின் மனித அம்சத்தை தெரிந்து கொள்வதை மட்டுமல்லாமல், தேவனின் வார்த்தையையும் கிரியையையும் அறிந்து கொள்வதையும் குறிக்கிறது. ஜனங்கள் தேவனின் வார்த்தையிலிருந்து தேவ சித்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள், தேவனின் கிரியையிலிருந்து அவர்கள் தேவனின் பண்பையும் தேவன் என்றால் என்ன என்பதையும் அறிந்துகொள்கிறார்கள். தேவ விசுவாசம் என்பது தேவனை அறிவதற்கான முதல்படி. தேவன் மீதான இந்த தொடக்க விசுவாசத்திலிருந்து அவரைப் பற்றிய மிக ஆழமான விசுவாசத்திற்கு முன்னேறுவதற்கான முறையே, தேவனை அறிந்துகொள்வதற்கான முறையும், தேவனின் கிரியையின் அனுபவத்தை உணரும் முறையுமாகும். நீ தேவனை, அவரை அறிந்து கொள்வதற்காக இல்லாமல், விசுவாசிப்பதற்காக மட்டுமே தேவனை விசுவாசித்தால், உன் விசுவாசத்தில் எந்த யதார்த்தமும் இல்லை, உன் விசுவாசம் தூய்மையானதாக மாற முடியாது—இதில் சந்தேகமேதும் இல்லை. தேவனின் கிரியையை மனிதன் அனுபவத்தை உணரும்போது, அவன் படிப்படியாக தேவனை அறிந்துகொள்கிறான் என்றால், அவனது மனநிலை படிப்படியாக மாறும், மேலும் அவனின் விசுவாசம் பெரிதான முறையில் உண்மையாகிவிடும். இவ்வழியில், தேவன் மீதான விசுவாசத்தில் மனிதன் வெற்றியடையும் போது, அவன் தேவனை முற்றிலுமாகப் பெற்றிருப்பான். தேவன் தனது கிரியையை தாமே நேரில் செய்ய இரண்டாவது முறையாக மாம்சமாக மாற தேவன் இவ்வளவு தூரம் சென்றதன் காரணம், அதனால் அவரை மனிதன் தெரிந்து கொள்ளவும், அவரைப் பார்க்கவும் வேண்டும் என்பதாகும். தேவனை அறிவது[அ] தேவனின் கிரியையின் தீர்வில் அடைய வேண்டிய இறுதிப் பலன்; இது மனிதகுலத்திற்கு தேவன் உருவாக்கும் கடைசி தேவையாகும். அவர் இதைச் செய்வதற்கான காரணம் அவருடைய இறுதி சாட்சியத்திற்காகவே. மனிதன் இறுதியாக முழுவதும் அவரிடம் திரும்புவதற்காகவே அவர் இந்தக் கிரியையைச் செய்கிறார். மனிதனால் தேவனை அறிவதன் மூலம் மட்டுமே தேவனை நேசிக்கத் துவங்க முடியும், தேவனை நேசிக்க அவன் தேவனை அறிந்திருக்க வேண்டும். அவன் எப்படி முயன்றாலும், எதைப் பெறுவதற்கு முயன்றாலும், அவனால் தேவனைப் பற்றிய ஞானத்தை அடைய இயல வேண்டும். இவ்வழியில் மட்டுமே மனிதன் தேவனின் இருதயத்தைத் திருப்தி செய்ய முடியும். தேவனை அறிவதன் மூலம் மட்டுமே மனிதனுக்கு தேவன் மீது உண்மையான விசுவாசம் இருக்க முடியும், தேவனை அறிவதன் மூலம் மட்டுமே அவன் தேவனை உண்மையாக மதிக்கவும், கீழ்ப்படியவும் முடியும். தேவனை அறியாதவர்கள் ஒருபோதும் தேவ கீழ்ப்படிதலுக்கும் பயபக்திக்கும் ஆளாகமாட்டார்கள். தேவனை அறிவது என்பதில் அவருடைய பண்பை அறிவதும், அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதும், அவர் யாரென்று தெரிந்துகொள்வதும் உள்ளடங்கும். எந்தவொரு அம்சத்தை ஒருவர் அறிய நேர்ந்தாலும், ஒவ்வொன்றுக்கும் மனிதன் ஒரு கிரையத்தைச் செலுத்த வேண்டும், மற்றும் கீழ்ப்படிவதற்கான மன உறுதி தேவைப்படுகிறது, இவை இல்லாமல் இறுதிவரை தொடர்ந்து செல்ல யாராலும் முடியாது. தேவனின் கிரியை மனிதனின் கருத்துக்களுடன் எவ்வளவும் பொருந்தாது. தேவனின் பண்பும் தேவன் என்றால் என்னவென்றும் மனிதனுக்குத் தெரிந்து கொள்வது மிகவும் கடினம், தேவன் சொல்வதும் செய்வதும் எல்லாவற்றையும் எவ்வளவேனும் மனிதனுக்குப் புரிந்துகொள்ள முடியாதது. மனிதன் தேவனைப் பின்பற்ற விரும்பியும், அவருக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை என்றால், மனிதன் ஒன்றும் பெறமாட்டான். உலகைப் சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை, மனிதனுக்குப் புரியாத பல கிரியைகளைத் தேவன் செய்ததை ஏற்றுக்கொள்வதை மனிதன் கடினமாகக் கருதியிருக்கிறான், மேலும் மனிதனின் கருத்துக்களைக் குணமாக்குவது கடினம் என்று தேவன் அதிகம் கூறியுள்ளார். ஆனால் மனிதனுக்கு பல சிரமங்கள் இருப்பதால் அவர் ஒருபோதும் தனது கிரியையை நிறுத்தவில்லை. மாறாக, அவர் கிரியை செய்வதையும் பேசுவதையும் மேற்கொண்டார், மேலும் ஏராளமான “செயல்வீரர்கள்” வழியிலேயே வீழ்ந்திருந்தாலும், அவர் இன்னும் தமது கிரியையைச் செய்து வருகிறார், மேலும் இடைவெளியில்லாமல் அவரின் புதிய கிரியைக்கு தங்களை அர்பணிக்கும் மக்களின் ஒரு குழுவையடுத்து அடுத்த குழுவைத் தொடர்ந்து தேர்வு செய்கிறார். வீழ்ந்த “நாயகர்களைக் குறித்து” அவருக்குப் பரிதாபமில்லை, அதற்கு பதிலாக அவருடைய புதிய கிரியைகளையும் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்பவர்களை பொக்கிஷமாக்குகிறார். ஆனால் எந்த வரையில் அவர் படிப்படியாக இவ்வழியில் செயல்படுகிறார்? ஏன் அவர் சிலரை எப்போதும் நீக்கி, மற்றவர்களைத் தெரிவு செய்கிறார்? இத்தகைய முறையை ஏன் அவர் எப்போதும் பயன்படுத்துகிறார்? அவரது கிரியையின் நோக்கம் மனிதன் அவரை அறிந்து கொள்ள அனுமதிப்பதும், இதனால் அவரால் பெறப்படுவதும் ஆகும். அவருடைய கிரியையின் கொள்கை என்னவென்றால், அவர் இன்று செய்யும் கிரியைக்கு அர்ப்பணிக்கக் கூடியவர்களின் மேல் கிரியை செய்வதே தவிர, அவர் அன்று செய்த கிரியைக்கு அர்ப்பணித்து இன்று அவர் செய்யும் கிரியையை எதிர்ப்போரின் மேல் கிரியை செய்யமாட்டார். அவர் அநேகம்பேரை நீக்கிக் கொண்டிருப்பதற்கான காரணம் இதில்தான் உள்ளது.

தேவனை அறிந்துகொள்ள கற்றுக்கொள்ளும் பாடத்தின் பலன்களை ஒன்றிரண்டு நாட்களில் அடைய முடியாது. மனிதன் அனுபவங்களைச் சேர்த்து, துன்பங்களுக்குள்ளாகி, உண்மையான அர்ப்பணிப்பைப் பெறவேண்டும். முதலாவதாக, தேவனின் கிரியையிலிருந்தும் வார்த்தைகளிலிருந்தும் தொடங்குங்கள். தேவனின் ஞானத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது, இந்த ஞானத்தை எவ்வாறு அடைவது, உங்கள் அனுபவங்களில் தேவனை எவ்வாறு பார்ப்பது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதுதான் இன்னும் தேவனை அறியாத நிலையில் எல்லோரும் செய்ய வேண்டியது. ஒரே நேரத்தில் தேவனின் கிரியையையும் வார்த்தைகளையும் ஒருவரால் புரிந்து கொள்ள முடியாது, மேலும் தேவனின் அறிவை முழுமையான ஒரு குறுகிய காலத்திற்குள் யாராலும் அடைய முடியாது. அனுபவத்தின் அவசியமான செயல்முறை ஒன்று உள்ளது, அது இல்லாமல் யாராலும் தேவனை அறியவோ அவரை நேர்மையாக பின்பற்றவோ முடியாது. தேவன் எவ்வளவு கிரியை செய்கிறாரோ, மனிதன் அவரை அவ்வளவே அறிவான். தேவனின் கிரியை மனிதனின் கருத்துக்களுடன் எவ்வளவு முரண்படுகிறதோ, அவ்வளவுதான் தேவனைப் பற்றிய மனிதனின் ஞானம் புதுப்பிக்கப்பட்டு ஆழமாகிறது. தேவனின் கிரியை என்றென்றும் நிலையாகவும் மாறாமலும் இருக்க வேண்டுமானால், அவரைக் குறித்த மனிதனின் ஞானம் அதிகம் இருக்காது. சிருஷ்டிப்பின் காலத்திற்கும் தற்போதைக்கும் இடையில், நியாயப்பிரமாண காலத்தில் தேவன் என்ன செய்தார், கிருபையின் காலத்தில் அவர் என்ன செய்தார், ராஜ்ஜியத்தின் காலத்தில் அவர் என்ன செய்கிறார்—நீங்கள் இந்த தரிசனங்களைப் பற்றி தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும். தேவனுடய கிரியையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை அறிந்தவர்கள் மட்டுமே தேவனுக்கு சாட்சி பகர முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

அடிக்குறிப்பு:

அ. மூல உரை “தேவனை அறிவதற்கான செயல்” என்று கூறுகிறது.

தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 519

தேவ கிரியையை மனிதன் அனுபவத்தில் அறிகிறான், தன்னையே தெரிந்துகொள்கிறான், அவனுடைய பாழ்பட்ட மனநிலையைச் சுத்திகரிக்கிறான், வாழ்க்கையில் உயர்வைத் தேடுகிறான், அனைத்துமே தேவனை அறிந்து கொள்வதற்காகவே. நீ உன்னைப் பற்றி மட்டுமே தெரிந்து கொள்ளவும், உன் சொந்த பாழான மனநிலையைக் கையாளவும் மட்டுமே முயன்று, ஆனால் தேவன் மனிதன் மீது என்ன கிரியை செய்கிறார், அவருடைய இரட்சிப்பு எத்தனைப் பெரியது, அல்லது தேவக் கிரியையையும் செயல்களையும் நீ எப்படி அனுபவத்தில் அறிகிறாய் என்பதையும் பற்றி எந்த ஞானமும் இல்லை என்றால் உனது அனுபவ அறிவு பயனற்றதாகும். ஒருவன் சத்தியத்தை நடைமுறையாக்கி நீடித்திருப்பதால் அந்த ஒருவனின் வாழ்க்கை முதிர்ச்சி அடைந்ததாக நீ நினைத்தால், நீ இன்னும் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையோ அல்லது தேவனின் மனிதனை பூரணப்படுத்தும் நோக்கத்தையோ பெறவில்லை என்பதே அர்த்தம். ஒரு நாள், நீ தேவ பற்றுமிக்க சபைகளிலோ, மனந்திரும்புதலின் திருச்சபையின் அல்லது வாழ்வியல் திருச்சபையின் உறுப்பினர்களிடையேயோ இருக்கும்போது, நீ பல பக்தியுள்ள ஜனங்களைக் காண்பாய், அவர்களுடைய ஜெபங்களில் “தரிசனங்கள்” உள்ளடங்கியிருக்கும், அவர்கள் வாழ்க்கையைத் தொடரும்போது, வார்த்தைகளால் தொடப்பட்டு வழிநடத்தப்படுகிறார்கள். மேலும், அவர்கள் அநேக காரியங்களைத் தாங்கிக் கொள்ளவும், தங்களையே கைவிடவும் இயன்றவர்களாய் இருக்கிறார்கள், மற்றும் மாம்சத்தால் நடத்தப்படுது இல்லை. அந்நேரத்தில், உன்னால் வித்தியாசத்தை சொல்ல முடியாது: நீ அவர்கள் செய்வது எல்லாம் சரியானது என்று நம்புவாய் என்பது வாழ்க்கையின் இயற்கையான வெளிப்பாடாகும், மற்றும் அவர்கள் தவறான பெயரை விசுவாசிக்கிறார்கள் என்பது ஒரு பெரிய பரிதாபம். இதுபோன்ற கருத்துக்கள் முட்டாள்தனமானவை அல்லவா? ஏன் பலருக்கு வாழ்வில்லை என்று சொல்லப்படுகிறது? ஏனென்றால் அவர்கள் தேவனை அறியாதவர்கள், ஆகவே அவர்கள் தேவனைத் தங்கள் இருதயங்களில் பெறவில்லை, மற்றும் ஜீவனையும் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. தேவன் மீதான உன் விசுவாசம், நீ தேவனின் கிரியைகளையும், தேவனின் யதார்த்தத்தையும், தேவனின் கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் முழுவதும் தெரிந்து கொள்ளும் திறனுள்ள ஒரு நிலையை அடைந்துவிட்டால், நீ சத்தியத்தைப் பெற்றிருக்கிறாய். தேவனின் கிரியையும் மனநிலையும் உனக்குத் தெரியாவிட்டால், இன்னும் உன் அனுபவத்தில் ஏதோ ஒன்றைக் காணவில்லை. தன் கிரியையின் அந்தக் கட்டத்தை இயேசு எப்படி நடப்பித்தார், இந்தக் கட்டம் எப்படி நடப்பிக்கப்படுகிறது, கிருபையின் காலத்தில் தேவன் எவ்வாறு தனது கிரியையைச் செய்தார் மற்றும் என்ன கிரியை செய்யப்பட்டது, இந்தக் கட்டத்தில் என்ன கிரியை செய்யப்படுகிறது. உனக்கு இந்தக் காரியங்களைக் குறித்து முழுமையான ஞானத்தைக் கொண்டிருக்காவிட்டால், பின்னர் நீ ஒருபோதும் உறுதியுள்ளவனாக உணர மாட்டாய், நீ எப்போதும் பாதுகாப்பற்றவனாக இருப்பாய். ஒரு அனுபவ காலத்திற்குப் பிறகு, உன்னால் தேவன் செய்த கிரியையையும் அவருடைய கிரியையின் ஒவ்வொரு படியையும் அறிந்து கொள்ள முடிந்தால், மற்றும் அவருடைய வார்த்தைகளைப் பேசுவதில் தேவனின் நோக்கங்களைக் குறித்து நீ முழுமையான ஞானத்தைப் பெற்றிருந்தால், ஏன் அவர் கூறிய பல வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை, பின்னர் நீ தைரியமாகவும், முன்னாலிருக்கும் பாதையைத் தொடர்வதை நிறுத்தி வைக்காமலும் கவலையும் சுத்திகரிப்பும் இல்லாமலும் முன்னேறலாம். தேவன் தனது அநேக கிரியையை எதைக் கொண்டு சாதிக்கிறார் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவர் பேசுகிற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மனிதனைச் செம்மைப்படுத்துகிறார் மற்றும் அவனது கருத்துக்களை பலவிதமான வார்த்தைகளின் மூலம் உருமாற்றுகிறார். நீங்கள் அனுபவித்த எல்லா துன்பங்களும், நீங்கள் கடந்து சென்றிருக்கிற அனைத்து சுத்திகரிப்புகளும், உங்களுக்குள் நீங்கள் ஏற்றுக்கொண்ட கையாளுதலும், நீங்கள் அனுபவித்த அறிவொளியும்—தேவன் கூறிய வார்த்தைகளின் மூலம் இவை அனைத்தும் அடையப்பட்டுள்ளன. மனிதன் தேவனை எந்தக் காரணத்தால் பின்பற்றுகிறான்? தேவனின் வார்த்தைகளால் அவன் பின்பற்றுகிறான்! தேவனின் வார்த்தைகள் ஆழமும் மர்மமுமானவை, அதற்கும்மேல் அவை மனிதனின் இருதயத்தை அசைக்கவும், அதற்குள் ஆழத்தில் புதைந்திருக்கும் காரியங்களை வெளிக்கொணரவும், கடந்த காலத்தில் நடந்த காரியங்களை அவனுக்குத் தெரிவிக்கவும், அவனை எதிர்காலத்திற்குள் ஊடுருவ அனுமதிக்கவும் செய்யும். ஆகவே, தேவனின் வார்த்தைகளால் மனிதன் துன்பத்தைத் தாங்குகிறான், மேலும் தேவனின் வார்த்தைகளாலும் பரிபூரணமாக்கப்படுகிறான். இந்நேரத்தில் மட்டுமே மனிதன் தேவனைப் பின்பற்றுகிறான். இந்தக் கட்டத்தில் மனிதன் செய்ய வேண்டியது என்னவென்றால், அவன் பரிபூரணமாக்கப்பட்டானா அல்லது சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டானா என்பதைப் பொருட்படுத்தாமல் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதற்கு தேவனின் வார்த்தைகளே திறவுகோல் ஆகும். இது தேவனின் கிரியை, இதுவும்கூட மனிதன் இன்று தெரிந்து கொள்ள வேண்டிய தரிசனம் ஆகும்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனை அறிந்தவர்கள் மட்டுமே தேவனுக்கு சாட்சி பகர முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

முந்தைய: ஜீவனுக்குள் பிரவேசித்தல் (3)

அடுத்த: ஜீவனுக்குள் பிரவேசித்தல் (5)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்

மனிதன் தேவனை விசுவாசிக்கத் தொடங்கியதிலிருந்து எதை மனிதன் தனக்கென்று ஆதாயப்படுத்தியுள்ளான்? நீ தேவனைக் குறித்து என்ன தெரிந்து...

ஒரு தகுந்த மேய்ப்பன் என்னவிதத்தில் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்

பரிசுத்த ஆவியானவர் மக்கள் மீது கிரியை செய்யும் போது அவர்கள் இருக்கும் பல்வேறு நிலைகள் குறித்த ஒரு புரிதலை நீ பெற்றிருக்க வேண்டும்....

கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்

ஜீவனுக்கான வழி என்பது யாரும் வைத்திருக்கக்கூடிய ஏதோ ஒன்றல்ல, யாரும் எளிதில் அடையக்கூடிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், ஜீவனானது தேவனிடமிருந்து...

தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்காக திறனை வளர்த்தல்

“மக்களின் திறனை வளர்த்தல்” என்பதற்கு “நீங்கள் உங்களது புரிந்துகொள்ளும் ஆற்றலை மேம்படுத்துதல்” என்று அர்த்தமாகும். இதன் மூலம் உங்களால்...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக