ஜீவனுக்குள் பிரவேசித்தல் VI

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 556

சத்தியத்தைப் பின்தொடர்வதன் மூலம் மட்டுமே ஒருவரால் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியும்: இது ஜனங்கள் முழுமையாகக் கிரகித்துப் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். சத்தியத்தைப் பற்றிய போதுமான புரிதல் உனக்கு இல்லை என்றால், நீ எளிதாக நழுவி வழிவிலகிச் செல்வாய். வாழ்க்கையில் வளர விரும்பினால், நீ எல்லாவற்றிலும் சத்தியத்தைத் தேட வேண்டும். நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, சத்தியத்தின் வழியில் நிற்க எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தேட வேண்டும், அதை மீறும் எந்தக் கறை உனக்குள் இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும்; இந்த விஷயங்களைப் பற்றிய தெளிவான புரிதல் உனக்கு இருக்க வேண்டும். நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை, அது சத்தியத்தோடு பொருந்துகிறதா இல்லையா, மேலும் அதற்கு மதிப்பும் அர்த்தமும் இருக்கிறதா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். சத்தியத்தோடு பொருந்தும் விஷயங்களை உன்னால் செய்ய முடியும், ஆனால் பொருந்தாத விஷயங்களை உன்னால் செய்ய முடியாது. உன்னால் செய்ய முடிந்த அல்லது செய்ய முடியாத விஷயங்களைப் பொறுத்த வரையில், அவற்றை விட்டுவிட முடியுமானால், அவற்றை நீ விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால், இந்த விஷயங்களை சில காலம் நீ செய்துவிட்டுப் பின்னர் அவற்றை விட்டுவிட வேண்டும் என்று கண்டால், துரிதமாக முடிவெடுத்து அவற்றை உடனே விட்டுவிடு. நீ செய்யும் எல்லாவற்றிலும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை இதுதான். சிலர் இந்தக் கேள்வியை எழுப்புவார்கள்: சத்தியத்தைத் தேடுவதும் அதைக் கடைப்பிடிப்பதும் ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது—நீரோட்டத்தை எதிர்த்து ஒரு படகை வலிப்பது போல், நீ முன்னோக்கித் துடுப்பை வலிப்பதை நிறுத்தி விட்டால் அது பின்னோக்கி மிதந்து திரியத் தொடங்கிவிடும். இருப்பினும், தீமையையும் அர்த்தமற்ற விஷயங்களையும் செய்வது ஏன் உண்மையில் ஒரு படகை ஆற்றின் போக்கில் கொண்டுபோவது போல மிகவும் எளிதாக இருக்கிறது? அது ஏன் அப்படி இருக்கிறது? இது ஏனெனில் தேவனுக்குத் துரோகம் செய்வதே மனிதனின் சுபாவமாக உள்ளது. மனிதனுக்குள் சாத்தானின் சுபாவம் ஆதிக்கம் செலுத்தும் பங்கை வகிக்கிறது, மேலும் இது ஒரு விரோதமான வல்லமையாகும். மனிதர்கள் தேவனுக்குத் துரோகம் செய்யும் சுபாவமுடையவர்களாக இருப்பதால், நிச்சயமாக, அவருக்குத் துரோகம் செய்யும் காரியங்களை செய்ய அதிக வாய்ப்புள்ளது, மேலும் நேர்மறையான செயல்களைச் செய்வது இயல்பாகவே அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. இது முழுவதுமாக மனிதனின் சுபாவத்தாலும் சாராம்சத்தாலும் தீர்மானிக்கப்படுகிறது. சத்தியத்தை ஒருதடவை உண்மையிலேயே நீ புரிந்துகொண்டு அதை உனக்குள் நேசிக்கத் தொடங்கிவிட்டால், சத்தியத்துக்கு இணக்கமான விஷயங்களைச் செய்ய உனக்கு வலிமை வந்துவிடும். நீ உன் கடமைகளை இயல்பாகச் செய்வாய்—முயற்சி எதுவும் இல்லாமலும் மகிழ்ச்சியுடனும் செய்வாய், மேலும் எதிர்மறையான எதைச் செய்வதற்கும் அதிக அளவிலான முயற்சி தேவைப்படும் என்று உணர்வாய். இது ஏனெனில் சத்தியம் உன் இருதயத்தில் ஆதிக்கம் செலுத்தும் பங்கை வகிக்கிறது. நீ உண்மையில் மனித வாழ்க்கைப் பற்றிய சத்தியங்களை புரிந்துகொண்டால், எந்த வகையான நபராக இருப்பது, ஒரு நீதியான மற்றும் நியாயமான நபராக எவ்வாறு இருப்பது, ஒரு நேர்மையான நபராகவும் தேவனுக்கு சாட்சி பகர்ந்து அவரைச் சேவிக்கும் ஒருவராகவும் இருப்பது எப்படி என்பதைப் பொறுத்தவரையில் பின்பற்ற ஒரு பாதை உனக்குக் கிடைக்கும். மேலும் நீ இந்தச் சத்தியங்களைப் புரிந்துகொண்டதும், அவருக்கு விரோதமான தீய செயல்களை உன்னால் ஒருபோதும் செய்ய முடியாது, அல்லது ஒரு போதும் நீ ஒரு போலித்தலைவர், போலி ஊழியர் அல்லது ஓர் அந்திக்கிறிஸ்துவின் பங்கை ஆற்ற மாட்டாய். சாத்தான் உன்னை வஞ்சித்தாலும் கூட அல்லது யாரோ ஒருவர் தீங்குசெய்ய உன்னைத் தூண்டினாலும் நீ அதைச் செய்ய மாட்டாய்; யார் உன்னை வற்புறுத்த முயற்சி செய்தாலும் நீ அவ்விதமாகச் செயல்பட மாட்டாய். ஜனங்கள் சத்தியத்தை அடைந்து, சத்தியம் அவர்கள் வாழ்க்கையாக மாறினால், அவர்களால் தீமையை வெறுக்க முடிவதோடு எதிர்மறையான விஷயங்களைப் பற்றிய ஓர் உள்ளார்ந்த வெறுப்பை அவர்களால் உணர முடியும். தீமை செய்வது அவர்களுக்குக் கடினமாக இருக்கும், ஏனெனில் அவர்களுடைய ஜீவித மனநிலைகள் மாறியிருக்கின்றன, மேலும் அவர்கள் தேவனால் பரிபூரணமாக்கப் பட்டிருக்கிறார்கள்.

உன் இருதயத்தில் நீ உண்மையாக சத்தியத்தைப் புரிந்து கொண்டால், அப்போது சத்தியத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது மற்றும் தேவனுக்குக் கீழ்படிவது என்பதை நீ அறிவாய், மேலும் இயல்பாகவே சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான பாதையில் நடக்கத் தொடங்குவாய். நீ நடக்கும் பாதை சரியானதாகவும், தேவனுடைய சித்தத்திற்கு ஏற்பவும் இருந்தால், அப்போது பரிசுத்த ஆவியானவரின் கிரியை உன்னை விட்டு விலகாது, இந்த விஷயத்தில் நீ தேவனைக் காட்டிக் கொடுக்கும் வாய்ப்பானது மிகக் குறைவாக இருக்கும். சத்தியம் இல்லாமல், பொல்லாப்பு செய்வது எளிது, நீ விரும்பாமல் கூட அதைச் செய்வாய். உதாரணமாக நீ அகந்தையும் இறுமாப்புமான மனநிலையைக் கொண்டிருந்தால், அப்போது தேவனை எதிர்க்க வேண்டாம் என்று கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, உன்னால் தடுக்க முடியாது, அது உன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. நீ அதை வேண்டுமென்றே செய்ய மாட்டாய்; நீ உன் அகந்தையான, இறுமாப்பான சுபாவத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் அதைச் செய்வாய். அகந்தையும் இறுமாப்பும் உன்னை தேவனை இழிவாகப் பார்க்கச் செய்து, முக்கியமற்றவராக பார்க்க வைக்கும்; அவை உன்னை நீயே உயர்த்த வைக்கும், தொடர்ந்து உன்னை வெளிக்காட்டிக் கொள்ளச் செய்யும், அவை உன்னை மற்றவர்களை இழிவுபடுத்த வைக்கும், உன்னைத் தவிர வேறு யாரையும் அவை உன் இருதயத்தில் விட்டு வைக்காது; அவை உன் இருதயத்தில் உள்ள தேவனுடைய இடத்தைப் பறித்துக் கொள்ளும், இறுதியில் உன்னை தேவனுடைய இடத்தில் உட்காரச் செய்து, ஜனங்கள் உனக்கு அடிபணிய வேண்டும் என்று கோர வைக்கும், மேலும் உன் சொந்த எண்ணங்கள், யோசனைகள் மற்றும் கருத்துகளை சத்தியமென்று வணங்கச் செய்யும். அகந்தையும் இறுமாப்புமான சுபாவத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிற ஜனங்களால் எத்தனையோ பொல்லாப்புகள் செய்யப்படுகின்றன! தீமை செய்யும் பிரச்சினையைத் தீர்க்க, அவர்கள் முதலில் தங்கள் சுபாவத்தை மாற்ற வேண்டும். மனநிலையில் மாற்றம் இல்லாமல், இந்தப் பிரச்சினைக்கு அடிப்படையான ஒரு தீர்வைக் கொண்டுவர சாத்தியம் இருக்காது. உனக்கு தேவனைப் பற்றிய கொஞ்சம் புரிதல் இருக்கும்போது, உன்னுடைய சொந்தச் சீர்கேட்டைக் காண முடிந்து, ஆணவம் மற்றும் அகந்தையின் அலங்கோலத்தையும் அருவருப்பையும் அறிந்துகொள்ள முடிந்தால் நீ வெறுப்பையும், பலவீனத்தையும் மனச்சோர்வையும் உணர்வாய். உன்னால் மனச்சாட்சியுடன் தேவனைத் திருப்திப்படுத்தும் சில காரியங்களை மனசாட்சியுடன் செய்ய முடியும் மேலும் அப்படிச் செய்யும்போது நிம்மதியாக உணர்வாய். உன்னால் தேவனுடைய வார்த்தையை மனச்சாட்சியுடன் படிக்கவும், தேவனைப் புகழவும், தேவனுக்கு சாட்சி பகரவும் முடியும். உன் இருதயத்தில் மகிழ்ச்சியை உணர்வாய். மனச்சாட்சியோடு உன்னை நீயே வெளிப்படுத்தி, உன் சொந்த அலங்கோலத்தை அம்பலப்படுத்துவாய், இவ்வாறு செய்வதன் மூலம், உள்ளுக்குள் நன்றாக உணர்வாய் மற்றும் ஒரு மேம்பட்ட மனநிலையில் இருப்பதை உணர்வாய். தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளுவதை நாடுவதும் சத்தியத்துக்குள் பிரவேசிப்பதும்தான் உன்னுடைய மனநிலையில் ஒரு மாற்றத்தைத் தேடுவதற்கான முதல் படியாகும். சத்தியத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே உன்னால் பகுத்தறிவை அடைய முடியும்; பகுத்தறிவு இருந்தால்தான் உன்னால் விஷயங்களை முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியும்; முற்றிலுமாக விஷயங்களைப் புரிந்து கொண்டால்தான் உன்னால் உன்னை உண்மையில் அறிய முடியும்; உன்னால் உன்னை உண்மையாக அறிந்தால் மட்டுமே உன்னால் மாம்சத்தை விடமுடியும், இவ்வாறு சத்தியத்தைக் கடைப்பிடிப்பது மெதுவாக உன்னை தேவனுக்குக் கீழ்ப்படிதலை நோக்கி வழிநடத்துகிறது, மேலும் படிப்படியாக தேவனிடத்தில் இருக்கும் உன் விசுவாசம் சரியான பாதையில் செல்லும். சத்தியத்தைப் பின்பற்றும்போது ஜனங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்பதோடு இது தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவர் உண்மையில் உறுதியாக இருந்தால், ஆறு மாதங்களில் அல்லது ஓர் ஆண்டில் அவர்கள் சரியான பாதையில் செல்ல ஆரம்பிப்பார்கள். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் அவர்கள் பலனைக் காண்பார்கள், மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதாக உணர்வார்கள். ஜனங்கள் தேவனை விசுவாசித்தும் சத்தியத்தைப் பின்தொடரவில்லை என்றால், மேலும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை என்றால், அவர்கள் பத்து அல்லது இருபது வருடங்கள் விசுவாசித்தாலும் எந்த மாற்றத்தையும் அனுபவிக்காமலே இருப்பார்கள். மேலும் முடிவில், தேவனை விசுவாசிப்பது என்பதன் அர்த்தம் அதுதான் என்று அவர்கள் நினைப்பார்கள்; அவர்கள் முன்பு உலகப்பிரகாரமான உலகில் எப்படி வாழ்ந்தார்களோ அநேகமாக அதே போல் தான் இதுவும் இருக்கிறது என்று நினைப்பார்கள், மேலும் உயிருடன் இருப்பது அர்த்தமற்றது என்று எண்ணுவாய். சத்தியம் இல்லாமல் வாழ்க்கையானது வெறுமையே என்பதை இது மெய்யாகக் காட்டுகிறது. உன்னால் அவர்களால் உபதேசத்தின் சில வார்த்தைகளைப் பேச முடியலாம், ஆனாலும் அவர்கள் இன்னும் ஆறுதலற்றும் அமைதியற்றும் உணருவார்கள்ய். மக்களுக்கு தேவனைப் பற்றிய கொஞ்ச அறிவு இருந்தால், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழத் தெரிந்திருந்தால், தேவனைத் திருப்திப்படுத்தும் சில காரியங்களைச் செய்ய முடிந்தால், அப்போது இது மெய்யான வாழ்க்கை என்றும், இந்த வழியில் வாழ்வதன் மூலம் மட்டுமே அவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும் என்றும், தேவனுக்குத் திருப்தி அளிப்பதற்காகவும், தேவனுக்குத் திருப்பிச் செலுத்துவதற்கும், மற்றும் ஆறுதலாக உணர்வதற்காகவும் அவர்கள் இந்த வழியில் வாழ்ந்தாக வேண்டும் என்றும் அவர்கள் உணருவார்கள். அவர்கள் மனப்பூர்வமாக தேவனை திருப்திப்படுத்தி, சத்தியத்தை நடைமுறைப்படுத்தி, தங்களைக் கைவிட்டு, தங்கள் சொந்தக் கருத்துக்களைக் கைவிட்டு, தேவனின் சித்தத்திற்கு கீழ்ப்படிதலுடனும் கருத்துடனும் இருக்க முடியுமானால்—இவை அனைத்தையும் சுய உணர்வுடன் செய்ய முடிந்தால்—இதுதான் துல்லியமாக சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது மற்றும் சத்தியத்தை உண்மையாக நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பதன் அர்த்தமாகும். முன்பு, கற்பனைகளைச் சார்ந்து, விதிகளைப் பின்பற்றி, மேலும் இதுவே சத்தியத்தைக் கடைப்பிடிப்பது என்று எண்ணிக்கொள்வது போல் இது இல்லை. உண்மையில், கற்பனைகளைச் சார்ந்து விதிகளைப் பின்பற்றுவது மிகவும் களைப்படையச் செய்கிறது, சத்தியத்தைப் புரிந்துகொள்ளாமல், கொள்கை இல்லாமல்; விஷயங்களைச் செய்வதும் மிகவும் களைப்படையச் செய்கிறது, மேலும் இலக்குகள் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு விஷயங்களைச் செய்வதும் அதைவிட மிகவும் களைப்பூட்டுவதாக உள்ளது. நீ சத்தியத்தைப் புரிந்துகொள்ளும்போது, நீ யாராலும் எதாலும் கட்டுப்படுத்தப்பட மாட்டாய், மேலும் உண்மையிலேயே உனக்கு சுதந்திரமும் விடுதலையும் இருக்கும். நீ கொள்கையின் அடிப்படையில் செயல்படுவாய், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பாய், மேலும் இதற்கு மிக அதிகமான முயற்சி தேவைப்படுகிறது அல்லது மிக அதிகமான துன்பத்தை ஏற்படுத்துகிறது என்று உணரமாட்டாய். இந்த நிலையில் நீ இருந்தால், உனக்குச் சத்தியமும் மனிதத்தன்மையும் இருக்கிறது, மனநிலை மாறிய ஒருவனாக நீ இருக்கிறாய்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைப் பின்தொடர்வதன் மூலம் மட்டுமே ஒருவர் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 557

ஜீவிய அனுபவச் செயல்முறையில், என்ன நடந்தாலும், நீ சத்தியத்தைத் தேடுவதைக் கற்க வேண்டும், மேலும் தேவனுடைய வார்த்தைகள் மற்றும் சத்தியத்துக்கு ஏற்ப விஷயத்தை முற்றிலுமாகச் சிந்திக்க வேண்டும். முற்றிலுமாக தேவனுடைய சித்தத்துக்கும் ஏற்ப விஷயங்களை எவ்வாறு செய்வது என்பதை நீ அறியும்போது உன்னுடைய விருப்பத்தில் இருந்து வரும் விஷயங்களை உன்னால் விட்டுவிட முடியும். தேவனுடைய சித்தத்துக்கு ஏற்ப எப்படிச் செயல்படுவது என்பதை நீ அறிந்ததும், இயல்பான ஓட்டத்தோடு செல்வது போல, இந்த விஷயங்களை நீ எளிதாகச் செய்ய வேண்டும். விஷயங்களை இந்த வகையில் செய்வது நிம்மதியாகவும் எளிதாகவும் இருக்கிறது, மேலும் சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் ஜனங்கள் இவ்வாறுதான் விஷயங்களைச் செய்கிறார்கள். நீ உன் கடமையைச் செய்யும்போது நீ உண்மையிலேயே பலனளிக்கும் முறையில் செய்கிறாய், நீ எவ்வாறு விஷயங்களைச் செய்கிறாய் என்பதில் கொள்கைகள் இருக்கின்றன, உண்மையில் உன் ஜீவித மனநிலை மாறியிருக்கிறது, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களுக்கு நீ பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறாய் என்று உன்னால் மக்களுக்குக் காட்ட முடியுமானால், நீ சத்தியத்தைப் புரிந்து கொள்ளுகிற ஒருவன் மற்றும் நிச்சயமாக மனிதனின் சாயலைக் கொண்டிருக்கிறாய்; மேலும் நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிக்கும் போது, போதுமான அளவுக்கு உறுதியாக ஒரு விளைவு இருக்கிறது. ஒருவர் சத்தியத்தை உண்மையாகப் புரிந்துகொண்டால், அவர்களுடைய பல்வேறு நிலைகளை அவர்களால் உய்த்தறிய முடியும், அவர்களால் சிக்கலான விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும், மேலும் எவ்வாறு தகுந்த முறையில் கடைப்பிடிப்பது என்பதை அவர்கள் அறிவார்கள். ஒரு நபர் சத்தியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், மேலும் தங்கள் நிலையை உய்த்தறிய முடியவில்லை என்றால், அவர்கள் தங்களை விட்டுவிட விரும்பினாலும், எதை அல்லது எப்படி விட்டுவிடுவது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தைக் கைவிட விரும்பினால், தங்கள் சொந்த விருப்பத்தில் என்ன தவறு இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது, அவர்கள் தங்கள் சொந்த விருப்பம் சத்தியத்திற்கு ஏற்ப இருக்கிறது என்று எண்ணுவார்கள், மேலும் தங்கள் சொந்த விருப்பம் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசிப்பித்தல் என்று கூட கருதுவார்கள். இத்தகைய நபர் எப்படி தன் சொந்த விருப்பத்தைக் கைவிடுவான்? அவர்களால் முடியாது, அதைவிட மாம்சத்தைக் கைவிட அவர்களால் முடியாது. ஆகவே, நீ சத்தியத்தைப் புரிந்துகொள்ளாத போது, உன் சொந்த விருப்பத்தில் இருந்து வரும் விஷயங்களை, மனித எண்ணங்கள், இரக்கம், அன்பு, துன்பம் ஆகியவற்றோடு பொருந்தும் விஷயங்களை, சரியானவையும் சத்தியத்துக்கு ஏற்ப இருப்பவையும் என்று எளிதாக தவறாகப் புரிந்து கொண்டு விலைக்கிரயம் செலுத்தலாம். அப்படியானால் எப்படி உன்னால் இந்த மனிதர்க்குரிய விஷயங்களை விட்டுவிட முடியும்? நீ சத்தியத்தைப் புரிந்துகொள்ளுவதில்லை, மேலும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது என்றால் என்ன என்பது உனக்குத் தெரியவில்லை. நீ முற்றிலும் இருளில் இருக்கிறாய், மேலும் என்ன செய்வது என்று உனக்குத் தெரியவில்லை, ஆகவே நீ நல்லது என்று நினைப்பதையே உன்னால் செய்ய முடியும், அதன் விளைவாக, சில விஷயங்களில் நீ விலகல்களை உருவாக்குகிறாய். இவற்றில் சில விதிகளைப் பின்பற்றுவதால், சில ஆர்வத்தினால், மேலும் சில சாத்தானின் இடையூறினால் உருவாகின்றன. சத்தியத்தைப் புரிந்துகொள்ளாத மக்கள் இப்படிதான் இருக்கிறார்கள். விஷயங்களை மிகவும் தவறாகச் செய்கிறார்கள், நடைமுறையில் இருந்து எப்போதும் விலகிச் செல்கிறார்கள், எந்தத் துல்லியமும் இருப்பதில்லை. சத்தியத்தைப் புரிந்துகொள்ளாத ஜனங்கள் அவிசுவாசிகளைப் போல விஷயங்களை அபத்தமான முறையில் பார்க்கிறார்கள். அவர்களால் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது எப்படிச் சாத்தியம் ஆகும்? அவர்களால் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படிச் சாத்தியம் ஆகும்? சத்தியத்தைப் புரிந்துகொள்ளுவது என்பது எளிமையான விஷயம் அல்ல. ஒருவருடைய செயல்திறன் எவ்வளவு உயர்வாக அல்லது தாழ்வாக இருந்தாலும் சரி, ஒரு ஜீவிய கால அனுபவத்திற்குப் பின்னும் கூட, அவர்களால் புரிந்துகொள்ளக் கூடிய சத்தியத்தின் அளவும் குறைவாகத்தான் இருக்கிறது, மேலும் அவர்களால் புரிந்துகொள்ளக் கூடிய தேவனுடைய வார்த்தையின் அளவும் குறைவாகத்தான் இருக்கிறது. சில சத்தியங்களைப் புரிந்துகொண்ட ஜனங்களே, ஒப்பீட்டளவில் இன்னும் அதிகமாக அனுபவம் உடையவர்கள், மேலும் தேவனை எதிர்க்கும் விஷயங்களைச் செய்வதை நிறுத்துவதும் வெளிப்படையான தீமைகள் செய்வதை நிறுத்துவதும்தான் அவர்களால் அதிகபட்சம் நிறுத்தக் கூடியது. தங்கள் சொந்த நோக்கங்கள் தரம்தாழாமல் செயலாற்றுவது அவர்களுக்கு சாத்தியமானதல்ல. மனுஷர்களுக்குச் சாதாரண சிந்தனைகள் இருப்பதாலும் அவர்களுடைய சிந்தனைகள் எப்போதுமே தேவனுடைய வார்த்தையோடு இணக்கமாக இருப்பதில்லை என்பதாலும், அவர்களுடைய சொந்த விருப்பம் தரம்தாழ்வது தவிர்க்க முடியாதது. ஒருவருடைய சொந்த விருப்பத்தில் இருந்து வரும் எல்லா விஷயங்களையும், தேவனுடைய வார்த்தைக்கு, சத்தியத்துக்கு மற்றும் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசிப்பித்தலுக்கு எதிராகப் போவதையும் உய்த்தறிவதே முக்கியமானது ஆகும். தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொள்ள இதனால் உனக்குக் கடின உழைப்பு தேவைப்படுகிறது; சத்தியத்தை நீ புரிந்துகொள்ளும் போதுதான் உன்னால் உய்த்தறிய முடியும், அப்போதுதான் நீ தீமை செய்ய மாட்டாய் என்பதை உன்னால் உறுதிப்படுத்த முடியும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைப் பின்தொடர்வதன் மூலம் மட்டுமே ஒருவர் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 558

உங்களை அறிந்துகொள்ள, உங்களது சீர்கெட்ட வெளிப்பாடுகள், உங்களது முக்கிய பலவீனங்கள், உங்களின் மனநிலை மற்றும் உங்களது சுபாவம் மற்றும் சாராம்சம் ஆகியவற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்களின் நோக்கங்கள், உங்களது பார்வைகள் மற்றும் ஒவ்வொரு விஷயத்தையும் பற்றிய உங்களது அணுகுமுறை—நீங்கள் வீட்டில் இருந்தாலும் அல்லது வெளியே இருந்தாலும், நீங்கள் கூட்டங்களில் இருக்கும்போதும், நீங்கள் தேவனின் வார்த்தைகளை உண்ணும் போதும் அருந்தும் போதும் அல்லது நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் என, உங்களது அன்றாட வாழ்வில் வெளிப்படும் விஷயங்களின் கடைசி விவரம் வரை அறிந்து கொள்ளவும் வேண்டும். இந்த அம்சங்கள் மூலம் நீங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக, உங்களை ஆழமாக அறிந்து கொள்வதற்கு, நீங்கள் தேவனின் வார்த்தைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்; அவருடைய வார்த்தைகளின் அடிப்படையில் உங்களை அறிவதன் மூலம் மட்டுமே நீங்கள் இலக்குகளை அடைய முடியும். தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும்போது துன்பம் அல்லது வேதனைக்குப் பயப்பட வேண்டாம், மேலும், தேவனுடைய வார்த்தைகள் உங்கள் இருதயங்களைத் துளைத்து உங்கள் அசிங்கமான நிலையை வெளிப்படுத்தும் என்று பயப்பட வேண்டாம். இவற்றுக்கெல்லாம் உள்ளாவது நன்மை பயக்கும். நீங்கள் தேவனை விசுவாசித்தால் ஜனங்களை நியாயந்தீர்க்கும் மற்றும் சிட்சிக்கும் தேவனுடைய வார்த்தைகளை, குறிப்பாக மனிதகுலத்தின் சீர்கேட்டின் சாராம்சத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளை, நீங்கள் அதிகம் படிக்க வேண்டும், நீங்கள் அவற்றை உங்கள் நடைமுறை நிலைக்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், மேலும் அவற்றை உங்களுக்கு அதிகமாகவும் மற்றவர்களிடம் குறைவாகவும் பயன்படுத்த வேண்டும். தேவன் வெளிப்படுத்தும் நிலைகள் ஒவ்வொரு நபரிடமும் உள்ளன, அவை அனைத்தும் உங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். நீ இதை நம்பவில்லை என்றால், அதை அனுபவித்துணர முயற்சி செய். நீ எவ்வளவு அதிகமாக அனுபவித்து உணர்கிறாயோ அவ்வளவு அதிகமாக உன்னை நீயே அறிந்து கொள்வாய், மேலும் தேவனுடைய வார்த்தைகள் மிகவும் துல்லியமானவை என்பதை அதிகமாக உணர்வாய். தேவனின் வார்த்தைகளைப் படித்த பின்னர், அவற்றைத் தங்களுக்குப் பொருத்திப் பார்க்க சிலரால் இயலவில்லை; இந்த வார்த்தைகளின் சில பகுதிகள் தங்களைப் பற்றியது அல்ல என்றும், மாறாக அவை மற்றவர்களைப் பற்றியது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, தேவன் சில ஜனங்களை பரத்தைகள் என்றும் அசுசியானவர்கள் என்றும் வெளிப்படுத்தும் போது, தங்கள் கணவர்களிடம் பிழைக்காமல் விசுவாசமாக இருக்கும் சில சகோதரிகள், அத்தகைய வார்த்தைகள் அவர்களைக் குறிக்கவில்லை என நினைக்கிறார்கள்; சில திருமணமாகாத சகோதரிகள் இதற்குமுன் உடலுறவு கொண்டதில்லை என்பதற்காக, அந்த வார்த்தைகள் அவர்களைப் பற்றியது அல்ல என நினைக்கிறார்கள்; சில சகோதரர்கள், அந்த வார்த்தைகள் பெண்களை மட்டுமே குறிப்பதாகவும் அவர்களுக்கு அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் நினைக்கிறார்கள்; சிலர் தேவனின் அத்தகைய வார்த்தைகள் குத்துவதாக இருக்கின்றன, அவை சத்தியதுடன் இணங்கவில்லை என்று நம்புகிறார்கள், எனவே அவர்கள் அவற்றை ஏற்க மறுக்கிறார்கள். சில சமயங்களில் தேவனின் வார்த்தைகளைத் தவறானவை எனக் கூறும் ஜனங்களும் இருக்கிறார்கள். தேவனின் வார்த்தைகளுக்கு இது சரியான அணுகுமுறையா? இது தெளிவாகத் தவறாகும். ஜனங்கள் அனைவரும் தங்கள் வெளிப்புற நடத்தைகளின் அடிப்படையில் தங்களைப் பார்க்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றிச் சிந்திக்கவும், தேவனுடைய வார்த்தைகளுக்கு மத்தியில் தங்களின் சீர்கெட்ட சாரம்சத்தை அறிந்து கொள்ளவும் இயலாதவர்கள். இங்கு, “பரத்தைகள்” மற்றும் “அசுசிகள்” என்பது சீர்கேட்டின் சாராம்சம், மனிதகுலத்தின் அசுத்தம் மற்றும் முறைகேடான கற்பு நிலையைக் குறிக்கிறது. ஆணோ, பெண்ணோ, திருமணமானவரோ ஆகாதவரோ, எல்லோருக்கும் முறைகேடான கற்பு நிலையின் சீர்கெட்ட எண்ணங்கள் உள்ளன, அப்படியென்றால், அதற்கும் உங்களுக்கும் எப்படி சம்பந்தம் இல்லாமல் இருக்கும்? தேவனுடைய வார்த்தைகள் மக்களின் சீர்கேடான மனநிலைகளைஅம்பலப்படுத்துகின்றன; ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒருவரின் சீர்கேட்டின் நிலை ஒன்றுதான். உண்மை தானே? வேறு எதையும் செய்வதற்கு முன், இந்தப் பேச்சுக்கள் கடுமையானவையாக இருந்தாலும் அல்லது மென்மையானவையாக இருந்தாலும் சரி, அவை நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் சரி அல்லது ஆசீர்வாதங்களாக இருந்தாலும் சரி, அவை கண்டனங்களாக இருந்தாலும் அல்லது சாபங்களாக இருந்தாலும் சரி, அவை ஜனங்களுக்கு கசப்பான உணர்வை அளித்தாலும் அல்லது இனிமையான உணர்வை அளித்தாலும் சரி, தேவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஜனங்கள் உணர வேண்டும். தேவனின் வார்த்தைகளைக் குறித்து ஜனங்கள் கொண்டிருக்க வேண்டிய மனப்பான்மை இதுதான். இது என்ன வகை மனப்பான்மை? இது ஒரு ஈடுபாடுமிக்க மனப்பான்மையா, ஒரு பக்தி மனப்பான்மையா, பொறுமையான மனப்பான்மையா அல்லது துன்பத்தைத் தழுவும் மனப்பான்மையா? நீங்கள் ஏதோகுழப்பத்தில் உள்ளீர்கள். இவை எவையுமல்ல என நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவர்கள் விசுவாசத்தில், தேவனின் வார்த்தைகளே சத்தியம் என்பதை ஜனங்கள் உறுதியாகப் பேண வேண்டும். அவையே சத்தியம் என்பதால், ஜனங்கள் அவற்றைப் பகுத்தறிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களால் அதை அங்கீகரிக்கவோ அல்லது ஒப்புக்கொள்ளவோ முடியாவிட்டாலும், தேவனின் வார்த்தைகளை முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை உங்களை அம்பலப்படுத்தவில்லை என்றால், அது யாரை அம்பலப்படுத்துகிறது? அது உங்களை அம்பலப்படுத்துவதற்காக இல்லை என்றால், அதை ஏற்றுக் கொள்ளும்படி நீங்கள் ஏன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்? இது ஒரு முரண்பாடு இல்லையா? தேவன் முழு மனிதகுலத்துடனும் பேசுகிறார், தேவன் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் சீர்கெட்ட மனுக்குலத்தை அம்பலப்படுத்துகிறது, மேலும் யாரும் விதிவிலக்கல்ல, இதில் இயற்கையாகவே நீங்களும் அடங்குவீர்கள். அவரது பேச்சுகளில் ஒரு வரி கூட வெளிப்புறத் தோற்றங்கள் பற்றியதோ அல்லது ஒரு வகையான நிலையைப் பற்றியதோ, புறவிதிகளைப் பற்றியதோ, ஜனங்களின் எளிய நடத்தையைப் பற்றியதோ அல்ல. அவை அப்படி இல்லை. தேவன் சொல்லும் ஒவ்வொரு வரியும் வெறுமனே மனிதனின் எளிய நடத்தை அல்லது புறத்தோற்றத்தை வெளிப்படுத்துவதாக நீங்கள் நினைத்தால், உங்களுக்கு ஆன்மீகப் புரிதல் இல்லை, சத்தியம் எதுவென்று உங்களுக்குப் புரியவில்லை. தேவனின் வார்த்தைகளே சத்தியம். தேவனுடைய வார்த்தைகளின் ஆழத்தை மக்கள் உணர முடியும். அவை எப்படி ஆழமானவை? தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஜனங்களின் சீர்கெட்ட மனநிலைகளையும் அவர்களின் வாழ்க்கையின் சாரமானதும் ஆழமாக வேரூன்றிய விஷயங்களைப் பற்றியதுமாகும். அவை வாழ்க்கையின் சாரங்களே தவிர, புறத்தோற்றங்கள் அல்ல, குறிப்பாக வெளிப்புற நடத்தைகள் அல்ல. ஜனங்களை அவர்களின் புறத்தோற்றங்களிலிருந்து பார்க்கும்போது, அவர்கள் அனைவரும் நல்ல ஜனங்களாகத் தோன்றலாம். ஆனால் ஏன் தேவன் சிலரைத் தீய ஆவிகள் என்றும் சிலரை அசுத்த ஆவிகள் என்றும் சொல்கிறார்? இது உங்களுக்குப் புலப்படாத ஒரு விஷயம். எனவே, தேவனுடைய வார்த்தைகளைக் கையாள நீங்கள் வெளிப்புற தோற்றத்தையோ அல்லது நீங்கள் கேட்பதையோ அல்லது கற்றுக்கொள்வதையோ சார்ந்து கொள்ள முடியாது. இவ்வாறு ஐக்கியங்கொண்ட பிறகு, தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த உங்கள் மனப்பான்மையில் ஒரு மாற்றத்தை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? மாற்றம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது சிறியதாக இருந்தாலும், அடுத்த முறை ஜனங்களை நியாயந்தீர்க்கும் மற்றும் வெளிப்படுத்தும் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, குறைந்தபட்சம் நீங்கள் தேவனுடன் விவாதிக்க முயற்சிக்கக் கூடாது. “தேவனுடைய வார்த்தைகள் உண்மையில் உருவக் குத்துகிறதாய் இருக்கின்றன. நான் இந்தப் பக்கத்தை படிக்கப் போவதில்லை, நான் அதை அப்படியே தவிர்த்து விடுவேன். ஆசீர்வாதங்கள் மற்றும் வாக்குத்தத்தங்களைப் பற்றிப் படிக்க ஏதாவது ஒன்றை நான் தேடட்டும், அதனால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்” என்று நீங்கள் சொல்லக்கூடாது. உங்கள் சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, தெரிந்துகொண்டு நீங்கள் இனி தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கக்கூடாது. நீங்கள் சத்தியத்தையும் தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அப்போதுதான் உங்களின் சீர்கெட்ட மனநிலை சுத்திகரிக்கப்பட முடியும், அப்போது தான் உங்களால் இரட்சிப்பை அடைய முடியும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதன் பின்தொடர்தலின் பாதை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 559

மனித சுபாவத்தை நீ எவ்வாறு புரிந்துகொள்கிறாய்? உண்மையில், உனது சுபாவத்தைப் புரிந்துகொள்வது என்பது உனது ஆத்துமாவிற்குள் இருக்கும் காரியங்கள்; உனது ஜீவிதத்தில் இருக்கும் காரியங்கள், நீ வாழ்ந்து வரும் சாத்தானின் அனைத்து தர்க்கங்களும் தத்துவங்களும், அதாவது நீ வாழ்ந்துவரும் சாத்தானின் வாழ்க்கை ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்வதைக் குறிக்கிறது என்பதுடன் சம்பந்தப்பட்டதாகும், மற்றும் நீ ஜீவிக்கிற சாத்தானின் கண்ணோக்கும் முறையாகும்; அதாவது, நீ ஜீவித்து வருகிற சாத்தானின் வாழ்க்கையாகும். உனது ஆத்துமாவின் ஆழத்திற்குள் இருக்கும் காரியங்களைத் தோண்டி எடுப்பதன் மூலம் மட்டுமே உனது சுபாவத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியும். இந்த விஷயங்களை எவ்வாறு தோண்டி எடுக்க முடியும்? வெறுமனே ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுகளின் மூலம் அவற்றைத் தேடிக்கண்டுபிடிக்கவோ அல்லது நுட்பமாக ஆய்வு செய்யவோ முடியாது; பல முறை, நீ ஏதாவது செய்து முடித்த பிறகும்கூட, நீ புரிதலுக்கு வரவில்லை. நீ ஒரு சிறிய அளவுக்கு உணர்தல் மற்றும் புரிதலைப் பெறுவதற்கு மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம். பல சூழ்நிலைகளில், நீ சுயமாக பிரதிபலிக்க வேண்டும் மற்றும் உன்னை நீயே அறிந்து கொள்ள வேண்டும், மேலும் ஆழமாகத் தோண்டி எடுப்பதை நீ நடைமுறைப்படுத்தும்போது மட்டுமே நீ பலன்களைப் பார்ப்பாய். சத்தியத்தைப் பற்றிய உனது புரிதல் மேலும் மேலும் ஆழமாக வளரும்போது, படிப்படியாக உனது சொந்தச் சுபாவத்தையும் சாராம்சத்தையும், சுய பிரதிபலிப்பு மற்றும் சுய அறிவு மூலம் அறிந்து கொள்வாய்.

உனது சுபாவத்தை அறிய, நீங்கள் சில விஷயங்களைச் செய்து முடிக்க வேண்டும். முதலில், நீ எதை விரும்புகிறாய் என்பது பற்றிய தெளிவானப் புரிதல் உனக்கு இருக்க வேண்டும். நீ எதனைச் சாப்பிட அல்லது அணிய விரும்புகிறாய் என்பதை இது குறிக்கவில்லை; மாறாக, நீ அனுபவிக்கும் விஷயங்கள், நீ பொறாமை கொள்ளும் விஷயங்கள், நீ ஆராதிக்கும் விஷயங்கள், நீ தேடும் விஷயங்கள் மற்றும் உன் இருதயத்தில் நீ கவனம் செலுத்தும் விஷயங்கள், உன்னிடம் தொடர்பு கொள்ளும் எவ்வகையான நபர்களுடன் மகிழ்ச்சியுறுகிறாய், நீ செய்ய விரும்பும் விஷயங்கள் மற்றும் உன் இருதயத்தில் நீ போற்றும் மற்றும் வணங்கும் மக்களின் வகைகள் ஆகியவற்றை இது குறிக்கிறது. உதாரணமாக, பெரும்பாலான மக்கள் உயர்ந்த கொள்கை கொண்டவர்கள், பேச்சு மற்றும் நடையுடை பாவனைகளில் நேர்த்தியானவர்கள் அல்லது தேனொழுக முகஸ்துதி செய்து பேசுவோர் அல்லது நடிப்பவர்களை விரும்புகிறார்கள். மேற்கூறியவை எல்லாம் மக்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களைப் பற்றியவையாகும். மக்கள் அனுபவிக்கும் விஷயங்களைப் பொறுத்தவரை, எளிதில் செய்யக்கூடிய சில விஷயங்களைச் செய்யத் தயாராக இருப்பது, மற்றவர்கள் நல்லது என்று நினைக்கும் விஷயங்களைச் செய்வதில் மகிழ்ச்சி அடைவது, மக்கள் தங்கள் புகழைப் பாடுவது மற்றும் பாராட்டுக்களைத் தெரிவிக்கும்படியான காரியங்களைச் செய்வது ஆகியவை இதில் அடங்கும். மக்களின் சுபாவங்களில், அவர்கள் விரும்பும் விஷயங்களில் ஒரு பொதுவான பண்பு உள்ளது. அதாவது, அவர்கள் வெளிப்புறத் தோற்றங்கள் காரணமாக மற்றவர்கள் பொறாமைப்படும் மக்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களை அவர்கள் விரும்புகிறார்கள், மற்றும் மிகவும் அழகாகவும் ஆடம்பரமாகவும் தோன்றும் மக்கள், நிகழ்வுகள், மேலும் பிறர் தங்களை ஆராதிக்க வைக்கும் விஷயங்கள் ஆகியவற்றை அவர்கள் விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும் இந்த விஷயங்கள் சிறந்தவை, கண்ணைக் கவர்பவை, அழகானவை, மற்றும் பிரம்மாண்டமானவை ஆகும். மக்கள் அனைவரும் இவற்றைப் போற்றி ஆராதிக்கிறார்கள். மக்கள் எந்தச் சத்தியத்தையும் கொண்டிருக்கவில்லை, உண்மையான மனிதர்களைப் போன்ற சாயலையும் கொண்டிருக்கவில்லை என்பதைக் காணலாம். இந்த விஷயங்களைப் போற்றி ஆராதிப்பதில் சிறிதளவுகூட முக்கியத்துவம் இல்லை, ஆனாலும் மக்கள் இன்னும் அதனை விரும்புகிறார்கள். தேவனை நம்பாதவர்களுக்கு மக்கள் விரும்பும் இந்த காரியங்கள் குறிப்பாக நல்லதாகத் தோன்றுகின்றன, மேலும் அவை அனைத்தும் மக்கள் குறிப்பாகப் பின்தொடர விரும்பும் விஷயங்களாகும். … ஜனங்கள் பின்தொடர்கிற மற்றும் ஆவலாய் விரும்புகிற விஷயங்கள் உலகப்போக்குகளைச் சேர்ந்தவை ஆகும், இவை சாத்தான் மற்றும் பிசாசுகளுக்கு உரியவை, இவை தேவனால் வெறுக்கப்படுகின்றன, மேலும் எந்தச் சத்தியமும் இல்லாமல் இருக்கின்றன. ஜனங்கள் விரும்பும் விஷயங்களிலிருந்து அவர்களின் சுபாவமும் சாராம்சமும் வெளிப்படுகின்றன. மக்களின் விருப்பங்களை அவர்கள் ஆடை உடுத்தும் விதத்தில் காணலாம்: சிலர் பிறர் கவனத்தை ஈர்க்கும் வகையில் வண்ணமயமான ஆடைகள் அல்லது வினோதமான ஆடைகளை அணிய தயாராக உள்ளனர். அவர்கள் முன்பு யாரும் அணிந்திராத அணிகலன்களை அணிவார்கள், மேலும் எதிர் பாலினத்தவர்களை ஈர்க்கக்கூடிய பொருட்களை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் இந்த உடைகள் மற்றும் அணிகலன்களை அணிவது அவர்களின் வாழ்க்கையில் இந்த பொருட்கள் மீது அவர்களுக்கு இருக்கும் விருப்பத்தையும் அவர்களின் இருதயத்தின் ஆழத்தையும் காட்டுகிறது. அவர்கள் விரும்பும் பொருட்கள் கண்ணியமானவை அல்லது நியாயமானவை அல்ல. அவை ஒரு சாதாரண மனிதன் பின்தொடர வேண்டிய விஷயங்கள் அல்ல. அவர்களைப் போலவே, அநீதியும் இருக்கிறது. அவர்களின் கண்ணோட்டம் உலக மக்களைப் போலவே உள்ளது. இதில் சத்தியத்துடன் ஒத்துப்போகும் எந்த ஒரு பகுதியையும் பார்க்க முடியாது. எனவே, நீ எதை விரும்புகிறாய், நீ எதில் கவனம் செலுத்துகிறாய், நீ எதனை ஆராதிக்கிறாய், நீ எதனைப் பார்த்துப் பொறாமைப்படுகிறாய், ஒவ்வொரு நாளும் உனது இதயத்தில் நீ என்ன நினைக்கிறாய் என்பவை அனைத்தும் உனது சுபாவத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவை ஆகும். உலக விஷயங்களுக்கான உன் முன்னுரிமை உனது சுபாவம் அநீதியை விரும்புகிறது, மேலும் தீவிரமான சூழ்நிலைகளில், உனது சுபாவம் தீங்கானதும் சீர்செய்ய முடியாததாகவும் உள்ளது என்பதை நிரூபிக்கப் போதுமானது. இப்படி பகுப்பாய்வு செய்ய வேண்டும்: நீ எதனை விரும்புகிறாய், உனது ஜீவிதத்தில் நீ எதை நிராகரிக்கிறாய் என்பதை ஆராய வேண்டும். நீ ஒருவருக்குக் கொஞ்சக் காலத்திற்கு நல்லவனாக இருக்கலாம், ஆனால் அவர்களை நீ விரும்புகிறாய் என்று அது நிரூபிக்காது. நீ உண்மையிலேயே எதனை விரும்புகிறாயோ அதுவே துல்லியமாக உனது சுபாவமாகும்; உனது எலும்புகள் உடைந்தாலும், நீ அதை இன்னும் அனுபவிப்பாய், அதனை ஒருபோதும் நீ கைவிடமுடியாது. இதை மாற்றுவது எளிதானது அல்ல. உதாரணமாக ஒரு துணையாளரைக் கண்டுபிடிப்பதை எடுத்துக்கொள்ளுங்கள், மக்கள் தங்களைப் போன்றவர்களையே தேடுகிறார்கள். ஒரு பெண் உண்மையில் ஒருவரை காதலித்தால், அவளை யாராலும் தடுக்க முடியாது. அவளுடைய கால்கள் உடைந்திருந்தாலும், அவள் அவனுடன் இருக்கவே விரும்புவாள்; அவள் இறக்க வேண்டியிருந்தாலும் அவள் அவனை திருமணம் செய்து கொள்ளவே விரும்புவாள். இது எப்படி இருக்க முடியும்? ஏனென்றால் மனிதர்களின் எலும்புகளுக்குள், அவர்களின் இதயங்களுக்குள் ஆழமாக இருப்பதை யாராலும் மாற்ற முடியாது. ஒரு நபர் இறந்தாலும், அவர்களின் ஆத்துமா அதே காரியங்களை விரும்புகிறது; இவை மனித சுபாவத்தின் காரியங்கள், அவை ஒரு நபரின் சாராம்சத்தைப் பிரதிபலிக்கின்றன. மக்கள் விரும்பும் காரியங்களில் சில அநீதிகள் உள்ளன. சிலர் அந்த காரியங்களில் தங்கள் அன்பில் வெளிப்படையானவர்கள், சிலர் இல்லை; சிலருக்கு அவர்களிடம் வலுவான விருப்பம் உள்ளது, மற்றவர்களுக்கு விருப்பமில்லை; சிலருக்கு சுய கட்டுப்பாடு உள்ளது, மற்றவர்களால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது. சிலர் இருண்ட காரியங்களில் மூழ்கிவிடுகின்றனர், இது அவர்கள் ஜீவனைக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது. அந்த காரியங்களால் மக்கள் ஆக்கிரமிக்கப்படவும் கட்டுப்படுத்தப்படவும் முடியாவிட்டால், அவர்களின் மனநிலைகள் சிறிது மாற்றப்பட்டு, அவர்களுக்கு ஒரு சிறிய வளர்ச்சி இருப்பதை இது நிரூபிக்கிறது. சிலர் சில சத்தியங்களைப் புரிந்துகொண்டு, தங்களுக்கு ஜீவன் இருப்பதாகவும், தேவனை நேசிப்பதாகவும் உணர்கிறார்கள். உண்மையில், இது இன்னும் முன்கூட்டியே உள்ளது, மேலும் ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுவது எளிமையான விஷயம் அல்ல. ஒருவரின் சுபாவத்தையும் சாராம்சத்தையும் எளிதில் புரிந்துகொள்ள முடியுமா? யாராவது கொஞ்சமாக புரிந்து கொண்டாலும், அந்தப் புரிதலை அடைய அவர்கள் பல வளைவுகளையும் திருப்பங்களையும் கடந்து செல்ல வேண்டும், மேலும் சிறிதளவு புரிதலால் கூட, மாற்றம் என்பது எளிதானது அல்ல. இவை அனைத்தும் ஜனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஆகும், சத்தியத்தைப் பின்தொடரும் விருப்பம் இல்லாமல் ஜனங்களால் தங்களை அறிந்து கொள்ள முடியாது. உன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், காரியங்கள் அல்லது காரியங்கள் எப்படி மாறலாம் மற்றும் உலகம் எப்படி தலைகீழாக மாறும் என்பதைப் பொருட்படுத்தாமல், சத்தியம் உனக்குள் இருந்து வழிகாட்டுகிறது என்றால், அது உனக்குள் வேரூன்றியிருந்தால் மற்றும் தேவனுடைய வார்த்தைகள் உன் வாழ்க்கை, உன் விருப்பங்கள், உன் அனுபவங்கள் மற்றும் உன் இருப்பு ஆகியவற்றுக்கு வழிகாட்டினால், அந்த நேரத்தில் நீ உண்மையிலேயே மாற்றமடைவாய். இப்போது ஜனங்களின் இந்தப் பெயரளவிலான மாற்றம் என்பது கொஞ்சம் ஒத்துழைப்பது, கிளைநறுக்குதல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றை தயக்கத்துடன் ஏற்றுக்கொள்வது, தங்கள் கடமைகளை உத்வேகத்துடன் நிறைவேற்றுவது மற்றும் கொஞ்சம் ஆர்வமும் விசுவாசமும் கொண்டிருப்பதாகும், ஆனால் இதை மனநிலை மாற்றமாக கருத முடியாது மேலும் மக்களுக்கு ஜீவன் இருக்கிறது என்பதை இது நிரூபிப்பதில்லை; இது மக்களின் விருப்பங்களும் நாட்டங்களுமே தவிர, வேறு எதுவும் இல்லை.

சுபாவங்களைப் பற்றிய புரிதலை அடைய, மக்கள் தங்கள் சுபாவங்களில் விரும்பும் விஷயங்களை வெளிக்கொணர்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் சுபாவங்கள் தொடர்பான பல முக்கியமான அம்சங்களையும் கண்டறிய வேண்டும். உதாரணமாக, காரியங்கள், மக்களின் முறைகள் மற்றும் வாழ்க்கையில் குறிக்கோள்கள், மக்களின் வாழ்க்கை மதிப்புகள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பார்வைகள், அத்துடன் சத்தியம் தொடர்பான அனைத்து விஷயங்கள் பற்றிய பார்வைகள் பற்றிய மக்களின் பார்வைகள். இவை அனைத்தும் மக்களின் ஆத்துமாவுக்குள் ஆழமானவை மற்றும் மனநிலையின் மாற்றத்துடன் அவற்றுக்கு நேரடி உறவு உள்ளது. அப்படியானால், சீர்கெட்ட மனித இனத்தின் வாழ்க்கைப் பார்வை என்ன? இதை இப்படிச் சொல்லலாம்: “ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து, துரதிர்ஷ்டசாலிகளை அவரவர் தலைவிதிக்கு விட்டுவிடட்டும்.” மக்கள் அனைவரும் தங்களுக்காக வாழ்கிறார்கள்; வெளிப்படையாகச் சொன்னால், அவர்கள் மாம்சத்திற்காக வாழ்கிறார்கள். அவர்கள் வாயில் உணவை வைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். இந்த இருப்பு விலங்குகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இப்படி வாழ்வதில் எந்த மதிப்பும் இல்லை, எந்த அர்த்தமும் இல்லை. ஒருவரின் வாழ்க்கைப் பார்வை, நீ உலகில் எதை நம்பியிருக்கிறாய், நீ எதற்காக வாழ்கிறாய், நீ எப்படி வாழ்கிறாய்—இவை அனைத்தும் மனித சுபாவத்தின் சாராம்சத்துடன் செய்ய வேண்டியவை. மக்களின் சுபாவங்களைப் பிரிப்பதன் மூலம், மக்கள் அனைவரும் தேவனை எதிர்க்கிறார்கள் என்பதை நீ காண்பாய். அவர்கள் அனைவரும் பிசாசுகள் மற்றும் உண்மையான நல்ல நபர் இல்லை. மக்களின் சுபாவங்களைப் பிரிப்பதன் மூலம் மட்டுமே நீ மனிதனின் சாராம்சத்தையும் சீர்கேட்டையும் உண்மையாக அறிந்து கொள்ள முடியும் மற்றும் மக்கள் உண்மையில் எதைச் சேர்ந்தவர்கள், மக்களுக்கு உண்மையில் என்ன இல்லை, அவர்கள் என்ன வசதியுடன் இருக்க வேண்டும், அவர்கள் எப்படி மனித சாயலில் வாழ வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு நபரின் சுபாவத்தைப் உண்மையாகப் பிரிப்பது எளிதல்ல, தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்காமல் அல்லது உண்மையான அனுபவங்களைப் பெறாமல் அதைச் செய்ய முடியாது.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒருவரின் மனநிலையை மறுரூபப்படுத்துவதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டியவை என்ன” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 560

ஒருவரின் சுபாவத்தை எப்படி அறிந்து கொள்வது? ஒரு நபரின் சுபாவத்தை எந்த விஷயங்கள் உருவாக்குகின்றன? மனிதனின் கருத்துகள், எதிர்மறையான எண்ணங்கள், கீழ்ப்படியாமை, குறைபாடுகள், குறைகள் மற்றும் நோக்கங்களைப் பற்றி மட்டுமே உனக்குத் தெரியும், மேலும் மனிதனின் சுபாவத்திற்குள் உள்ள விஷயங்களைக் கண்டறிய முடியாது. மனித சுபாவத்தின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், வெளிப்புற அடுக்கைப் பற்றி மட்டுமே உங்களுக்குத் தெரியும், மேலும் இது மனிதனின் சுபாவத்தைப் பற்றிய அறிவைக் கொண்டிருப்பதில்லை. சிலர் இந்த மேலோட்டமான விஷயங்களை மனிதனின் சுபாவம் என்று கூட நினைக்கிறார்கள், “நான் எனது சுபாவத்தைப் புரிந்து கொள்கிறேன்; என் அகந்தையை நான் அடையாளம் காண்கிறேன் என்பதை நீ பார். அது என் சுபாவம் இல்லையா?” என்று சொல்கிறார்கள். அகந்தை என்பது மனிதனுடைய சுபாவத்தின் ஒரு பகுதியாகும், அது உண்மைதான். இருப்பினும் கோட்பாட்டளவிலான அர்த்தத்தில் அதை ஒப்புக்கொள்வது போதாது. ஒருவரின் சொந்த சுபாவத்தை அறிவது என்றால் என்ன? அதை எப்படி அறிய முடியும்? எந்த அம்சங்களிலிருந்து அது அறியப்படுகிறது? ஒருவர் வெளிப்படுத்தும் விஷயங்களிலிருந்து ஒருவருடைய சுபாவம் எவ்வாறு குறிப்பாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்? முதலாவது, மனிதனின் சுபாவத்தை அவர்களின் விருப்பங்களின் மூலம் நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக, சிலர் குறிப்பாகப் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற நபர்களை வணங்குகிறார்கள், சிலர் குறிப்பாகப் பாடகர்கள் அல்லது திரைப்பட நட்சத்திரங்களை விரும்புகிறார்கள், மேலும் சிலர் குறிப்பாக விளையாட்டுகளை விளையாட விரும்புகிறார்கள். இந்த விருப்பங்களில் இருந்து, இந்த ஜனங்களின் சுபாவம் என்ன என்பதை நாம் காண முடியும். ஒரு எளிய உதாரணம் இதோ: சிலர் உண்மையில் ஒரு குறிப்பிட்ட பாடகரை வணங்கலாம். எந்த அளவிற்கு அவர்கள் அவர்களை வணங்குகிறார்கள்? இந்தப் பாடகரின் ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு புன்னகையிலும், ஒவ்வொரு வார்த்தையிலும் அவர்கள் வெறித்தனமாக இருக்கும் வரை அப்படிச் செய்கிறார்கள். அவர்கள் பாடகருடன் மிகவும் வெறித்தனமாக ஒட்டிக் கொள்கிறார்கள், மேலும் இந்தப் பாடகர் அணியும் அனைத்தையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை அப்படியே பின்பற்றுகிறார்கள். ஒரு நபரை இந்த அளவு வணங்குவது என்ன பிரச்சனையைக் காட்டுகிறது? அத்தகைய நபரின் இருதயத்தில் அந்த அவிசுவாச விஷயங்கள் மட்டுமே உள்ளன என்பதையும், அவர்களிடம் சத்தியம் இல்லை, அவர்களிடம் நேர்மறையான விஷயங்கள் இல்லை, மேலும் அவர்களின் இருதயத்தில் தேவனும் இல்லை என்பதை இது காட்டுகிறது. இந்த நபர் நினைக்கும், நேசிக்கும் மற்றும் தேடும் அனைத்தும் சாத்தானுடையதாகும்; அவை இந்த நபரின் இருதயத்தை ஆக்கிரமித்துள்ளன, இது அந்த விஷயங்களால் முழுவதும் பாதிப்படைகிறதாகும். அவர்களின் சாராம்சம் மற்றும் சுபாவம் என்ன என்பதை உங்களால் கூற முடியுமா? ஏதோ ஒரு காரியம் மிக அதிகமாக நேசிக்கப்பட்டால், அப்போது அந்த காரியம் ஒருவரின் ஜீவனாக மாறி அவர்களின் இருதயத்தை ஆக்கிரமித்து, அந்த நபர் தேவனை விரும்பாத, மாறாக பிசாசை நேசிக்கும் ஒரு உருவ வழிபாட்டாளர் என்பதை முழுமையாக நிரூபிக்கும். ஆகவே அத்தகைய நபரின் சுபாவம் பிசாசை நேசித்து ஆராதித்து, சத்தியத்தை நேசிக்காத, தேவனை விரும்பாத சுபாவம் என்று நாம் முடிவு செய்யலாம். ஒருவரின் சுபாவத்தைப் பார்ப்பதற்கு இது சரியான வழியல்லவா? இது முற்றிலும் சரியானது. இப்படித்தான் மனிதனின் சுபாவம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. உதாரணமாக, குறிப்பாக, சிலர் பவுலை அதிகமாக விரும்புகிறார்கள். அவர்கள் வெளியே சென்று பிரசங்கிக்கவும் கிரியை செய்யவும் விரும்புகிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் பிரசங்கிக்கவும் விரும்புகிறார்கள், மேலும் ஜனங்கள் அவர்களுக்குச் செவிகொடுப்பதையும், அவர்களை ஆராதிப்பதையும், அவர்களைச் சுற்றி வருவதையும் விரும்புகிறார்கள். அவர்கள் மற்றவர்களின் மனதில் அந்தஸ்தைப் பெற விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் முன்வைக்கும் தங்களது சாயலை மற்றவர்கள் மதிக்கும்போது அவர்கள் அதைப் பாராட்டுகிறார்கள். இந்த நடத்தைகளிலிருந்து அவர்களின் சுபாவங்களை ஆராய்ந்து அறிவோம்: அவர்களது சுபாவம் எப்படிப்பட்டது? உண்மையிலேயே, அவர்கள் இப்படி நடந்து கொள்வார்களானால், அவர்கள் அகந்தையும் கர்வமும் உள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்க இது போதுமானதாகும். அவர்கள் தேவனை கொஞ்சங்கூட ஆராதிப்பதில்லை; அவர்கள் ஒரு உயர்ந்த அந்தஸ்தைத் தேடுகிறார்கள் மற்றும் மற்றவர்கள் மீது அதிகாரத்தைப் பெற்றிருக்கவும், அவர்களை ஆட்கொள்ளவும், அவர்களது மனதில் அந்தஸ்தைப் பெற்றிருக்கவும் விரும்புகிறார்கள். இதுவே சாத்தானின் சரியான சாயலாகும். அகந்தை மற்றும் கர்வம், தேவனை ஆராதிக்க விருப்பமின்மை மற்றும் மற்றவர்களால் ஆராதிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் ஆகிய இவைகளே அவர்களது சுபாவத்தின் தனித்தன்மை வாய்ந்த அம்சங்களாகும். இத்தகைய நடத்தைகள் அவர்களது சுபாவத்தைப் பற்றிய தெளிவான பார்வையை உங்களுக்கு அளிக்க முடியும். உதாரணமாக, சிலர் குறிப்பாக மற்றவர்களின் செலவில் நியாயமற்ற நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள், மேலும் இந்த ஜனங்கள் எல்லாவற்றிலும் தங்கள் சொந்த நலன்களை நிறைவேற்ற முற்படுகிறார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அது அவர்களுக்கு பயனளிக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். அது சில நன்மைகளைத் தராத வரை, அவர்கள் எதைக் குறித்தும் கவலைப்பட மாட்டார்கள், மேலும் அவர்களின் எல்லா செயல்களுக்கும் பின்னால் மறைமுகமான நோக்கங்கள் உள்ளன. அவர்கள் தங்களுக்கு நன்மை செய்யும் யாரைப் பற்றியும் நன்றாகப் பேசுகிறார்கள் மற்றும் அவர்களைப் புகழ்ந்து பேசும் எவரையும் உயர்த்துகிறார்கள். தங்களுக்குப் பிடித்தவர்களுக்குப் பிரச்சினைகள் வந்தாலும், அந்த நபர்கள் சரியானவர்கள் என்று சொல்லி அவர்களை மறைக்கவும் பாதுகாக்கவும் கடுமையாக முயற்சிப்பார்கள். அத்தகையவர்களுக்கு என்ன சுபாவம் இருக்கிறது? இந்த நடத்தைகளில் இருந்து அவர்களின் சுபாவத்தை நீங்கள் முழுமையாகக் காணலாம். அவர்கள் தங்கள் செயல்களின் மூலம் நியாயமற்ற நன்மைகளைப் பெற பாடுபடுகிறார்கள், ஒவ்வொரு சூழ்நிலையிலும் வர்த்தக நடத்தையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள், மேலும் அவர்களின் சுபாவம் முழுமனதுடன் லாபத்தை பெரிதும் விரும்புவது என்று நீங்கள் உறுதியாகச் சொல்லலாம். அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவர்கள் தங்கள் நலன்களை மட்டுமே பார்த்துக் கொள்வார்கள். அப்படிச் செய்வது அவர்களுக்குப் பலனளிக்கும் வரையில் அவர்கள் சீக்கிரம் எழ மாட்டார்கள்; அவர்கள் ஜனங்களில் மிகவும் சுயநலவாதிகள், மற்றும் முற்றிலும் மனநிறைவடையாதவர்கள் ஆவர். அவர்களின் சுபாவம் அவர்களின் லாபத்திற்கான ஆசையாலும் மற்றும் சத்தியத்தின் மீதான அன்பின்மையாலும் நிரூபிக்கப்படுகிறது. சில ஆண்கள் பெண்களால் வசீகரிக்கப்படுகிறார்கள், அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடன் எப்போதும் தவறான உறவு வைத்துக் கொள்கிறார்கள். அழகான பெண்கள் அத்தகைய ஜனங்களின் உணர்ச்சியைத் தூண்டும் ஆட்களாவர் மற்றும் அவர்களின் இருதயங்களில் உயர்ந்த மதிப்பைக் கொண்டுள்ளனர். அழகான பெண்களுக்காக, அவர்கள் தங்கள் உயிரைக் கொடுக்கவும், எல்லாவற்றையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்; பெண்களே அவர்களின் இருதயங்களை நிரப்புகிறார்கள். இந்த மனிதர்களின் சுபாவம் என்ன? அழகான பெண்களை நேசிப்பதும் மற்றும் அவர்களை ஆராதிப்பதும் அவர்களின் சுபாவமாகும், அவர்கள் பொல்லாத, பேராசை சுபாவம் கொண்ட காமுகன்களாவர். இதுவே அவர்களின் சுபாவம் என்று நாம் ஏன் சொல்கிறோம்? அவர்களின் செயல்கள் பேராசை சுபாவத்தை வெளிப்படுத்துகின்றன; இந்த நடத்தைகள் வெறுமனே எப்போதாவது நடக்கும் மீறல்கள் அல்ல அல்லது அத்தகைய ஜனங்கள் சாதாரண ஜனங்களை விட சற்றே மோசமானவர்கள் அல்லர், மாறாக அவர்கள் இந்த விஷயங்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளனர், இது அவர்களின் சுபாவம் மற்றும் சாராம்சமாக மாறியிருக்கிறது. இவ்வாறு, இந்த விஷயங்கள் அவர்களின் சுபாவத்தின் வெளிப்பாடுகளாக மாறியிருக்கின்றன. ஒரு நபரின் சுபாவத்தின் உட்கூறுகள் தொடர்ந்து அவர்களை வெளிப்படுத்துகின்றன. ஒரு நபர் செய்யும் எதுவும், அது என்னவாக இருந்தாலும், அந்த நபரின் சுபாவத்தை வெளிப்படுத்த முடியும். ஜனங்கள் அவர்கள் செய்யும் அனைத்திற்கும் அவர்களின் சொந்த நோக்கங்கள் மற்றும் இலக்குகளைக் கொண்டுள்ளனர், அது விருந்தோம்பல் வழங்குதல், சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தல் அல்லது வேறு எந்த வகையான வேலையாக இருந்தாலும், அவர்கள் அதைக் குறித்து எந்த உணர்வும் இல்லாமல், தங்கள் சுபாவத்தின் பகுதிகளை வெளிப்படுத்த முடியும், ஏனென்றால் ஒருவரின் சுபாவமே அவர்களின் வாழ்க்கையாகும், மற்றும் ஜனங்கள் வாழும் வரை தங்களின் சுபாவங்களால் இயக்கப்படுகிறார்கள். ஒரு நபரின் சுபாவம் வெறும் சந்தர்ப்பத்தினாலோ அல்லது தற்செயலாகவோ வெளிப்படுவதில்லை; மாறாக, அது முற்றிலும் அந்த நபரின் சாராம்சத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஜனங்களின் எலும்புகள் மற்றும் இரத்தத்தில் இருந்து பாயும் அனைத்தும் அவர்களின் சுபாவம் மற்றும் வாழ்க்கையின் பிரதிநிதிகளாகும். சிலர் அழகான பெண்களை விரும்புகிறார்கள். மற்றவர்கள் பணத்தை விரும்புகிறார்கள். சிலர் குறிப்பாக அந்தஸ்தை விரும்புகிறார்கள். சிலர் குறிப்பாக நற்பெயர் மற்றும் அவர்களின் தனிப்பட்ட பிம்பத்தை உயர்வாக மதிக்கிறார்கள். சிலர் குறிப்பாக விக்கிரகங்களை நேசிக்கின்றனர் அல்லது ஆராதிக்கின்றனர். மேலும் சிலர் குறிப்பாக அகந்தை கொண்டவர்களாகவும் கர்வமுள்ளவர்களாகவும், தங்கள் இருதயங்களில் யாருக்கும் அடிபணியாமல், அந்தஸ்துக்காக பாடுபடுகிறார்கள், அவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் மீது அதிகாரம் கொண்டிருக்க விரும்புகிறார்கள். பல்வேறு வகையான சுபாவங்கள் உள்ளன, மேலும் அவை ஜனங்களிடையே வேறுபடலாம், ஆனால் அவற்றின் பொதுவான கூறுகள் தேவனை எதிர்ப்பவையாகவும் அவருக்கு துரோகம் செய்பவையாகவும் இருக்கின்றன. அந்த வகையில் அவை அனைத்தும் ஒரே மாதிரியானவை ஆகும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “மனுஷனுடைய சுபாவத்தை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 561

மனிதகுலம் முழுவதும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறது, மேலும் தேவனுக்குத் துரோகம் செய்வதே மனிதனின் சுபாவமாகும். இருப்பினும், சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட எல்லா மனிதர்களிலும், தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படிந்து சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய சிலர் இருக்கிறார்கள்; இவர்கள் சத்தியத்தை பெறக்கூடியவர்களும் மனநிலையில் மாற்றத்தை அடையக் கூடியவர்களும் ஆவர். சிலர் சத்தியத்தைப் பின் தொடர்வதில்லை, மாறாக வெறுமனே ஓட்டத்துடன் செல்கிறார்கள். நீங்கள் எதைச் செய்யச் சொன்னாலும், அவர்கள் கீழ்படிந்து செய்வார்கள், அவர்களால் அடக்கவும் ஒப்புக்கொடுக்கவும் முடியும், மேலும் அவர்களால் எந்தத் துன்பத்தையும் தாங்க முடியும். அத்தகையவர்களுக்குக் கொஞ்சம் மனசாட்சியும் பகுத்தறிவும் இருக்கிறது, அவர்களால் உயிர் வாழ முடியும், ஆனால் அவர்களின் மனநிலை மாற முடியாது, ஏனென்றால் அவர்கள் சத்தியத்தைப் பின்தொடரவில்லை மேலும் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதில் மட்டுமே திருப்தி அடைகிறார்கள். அவர்களால் தங்கள் கடமைகளை நேர்மையாகச் செய்ய முடியும், மேலும் எந்த ஒரு பிரச்சனை தொடர்பான சத்தியத்தைக் குறித்த ஐக்கியத்தை ஏற்றுக் கொள்ள முடியும். மனசாட்சியை மீறும் விஷயங்களை அவர்கள் சொல்லாவிட்டாலும் அல்லது செய்யாவிட்டாலும், அவர்கள் சத்தியத்தைத் தேட தீவிர முயற்சி எடுப்பதில்லை, அவர்களின் மனங்கள் குழம்பி இருக்கின்றன, மேலும் அவர்களால் ஒருபோதும் சத்தியத்தின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் இரட்சிக்கப்பட்டு உயிர் வாழ முடியும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது, ஆனால் அவர்களின் மனநிலைகள் மாற்றப்படுவதற்கு சாத்தியமில்லை. நீங்கள் சீர்கேட்டில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு, உங்கள் வாழ்க்கையின் மனநிலையில் மாற்றத்தை அடைய விரும்பினால், நீங்கள் சத்தியத்தின் மீது அன்பும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் திறனும் கொண்டிருக்க வேண்டும். சத்தியத்தை ஏற்றுக்கொள்வது என்பதன் அர்த்தம் என்ன? சத்தியத்தை ஏற்றுக்கொள்வது என்பது, நீ எவ்வகையான சீர்கேடான மனநிலையைக் கொண்டிருந்தாலும், அல்லது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் விஷங்கள், சாத்தானின் விஷங்கள் உன் சுபாவத்தில் இருந்தாலும், தேவனுடைய வார்த்தைகள் இந்த விஷயங்களை வெளிப்படுத்தும் போது, நீ ஒப்புக்கொண்டு, கீழ்ப்படிய வேண்டும், உன்னால் வேறு தேர்வு செய்ய முடியாது, மேலும் தேவனுடைய வார்த்தைகளின்படி உன்னை நீயே அறிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடிபவராக இருப்பதே இதன் பொருளாகும். அவர் எதைச் சொன்னாலும், அவருடைய பேச்சுக்கள் உன் இருதயத்தை எப்படித் துளைத்தாலும், அவர் எந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், அவர் சொல்வது சத்தியமாய் இருக்கும் வரையில் நீ அவற்றை ஏற்றுக்கொண்டு, அவை யதார்த்தத்திற்கு ஒத்துப்போகும் வரையிலும் நீ அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். தேவனுடைய வார்த்தைகளை நீ எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டாலும் நீ அவற்றிற்குக் கீழ்ப்படியலாம், மேலும் பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்ட மற்றும் உன் சகோதர சகோதரிகளின் ஐக்கியத்தால் வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சத்தை ஏற்றுக்கொண்டுக் கீழ்ப்படியலாம். அத்தகைய நபர் ஒரு குறிப்பிட்ட நிலை வரை சத்தியத்தைப் பின்தொடர்ந்தால், அவர்களால் சத்தியத்தைப் பெற்றுக்கொண்டு அவன் தங்களது மனநிலையில் ஒரு மறுரூபத்தை அடைய முடியும். சத்தியத்தை விரும்பாத மனிதர்கள் கொஞ்சம் மனிதத்தன்மையைக் கொண்டிருந்தாலும், சில நல்ல செயல்களைச் செய்ய முடிந்தாலும், தேவனுக்காக அடக்கவும் ஒப்புக்கொடுக்கவும் முடிந்தாலும், அவர்கள் சத்தியத்தைக் குறித்து குழப்பமடைந்து, சத்தியத்தைத் தீவிரமாகத் தேடாமல் இருக்கிறார்கள், அதனால் அவர்களின் வாழ்க்கை மனநிலை ஒருபோதும் மாறுவதில்லை. மற்ற சீஷர்களின் மனிதத்தன்மையைப் போலவே, பேதுருவும் கொண்டிருந்தான் என்பதை நீ காணலாம், ஆனால் அவன் சத்தியத்தின் தீவிரமான நாட்டத்தில் தனித்து நின்றான்; இயேசு சொன்னதைப் பொருட்படுத்தாமல், அவன் அதை ஆழ்ந்து சிந்தித்தான். “சீமோன் பேதுருவே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று இயேசு கேட்டார். பேதுரு நேர்மையாக, “நான் பரலோகத்தில் இருக்கிற பிதாவை மட்டும் நேசிக்கிறேன், ஆனாலும் பூமியில் உள்ள கர்த்தரை நேசிக்கவில்லை” என்று பதிலளித்தான். பின்னர் அவன், “இது சரியில்லை; பூமியில் உள்ள தேவனே பரலோகத்தில் உள்ள தேவன். பரலோகத்திலும் பூமியிலும் இருப்பவர் ஒரே தேவனல்லவா? நான் பரலோகத்தில் உள்ள தேவனை மட்டும் நேசிக்கிறேன் என்றால், என் நேசம் உண்மையானது அல்ல, நான் பூமியில் உள்ள தேவனை நேசிக்க வேண்டும் அப்போதுதான் என் நேசம் உண்மையானதாக இருக்கும்” என்று யோசித்துப் புரிந்து கொண்டான். இவ்வாறு, இயேசு கேட்டதிலிருந்து தேவனுடைய வார்த்தையின் உண்மையான அர்த்தத்தைப் பேதுரு புரிந்து கொண்டான். தேவனை நேசிப்பதற்கும், இந்த நேசம் உண்மையானதாக இருப்பதற்கும், பூமியின் மீதுள்ள மனுவுருவான தேவனை ஒருவர் நேசிக்க வேண்டும். தெளிவற்ற மற்றும் கண்ணுக்குத் தெரியாத தேவனை நேசிப்பது யதார்த்தமானதும் அல்ல நடைமுறையானதும் அல்ல, அதே சமயம் நடைமுறையிலுள்ள, காணக்கூடிய தேவனை நேசிப்பதே சத்தியமாகும். இயேசுவின் வார்த்தைகளிலிருந்து, பேதுரு சத்தியத்தையும் தேவனுடைய சித்தத்தைப் பற்றிய புரிதலையும் பெற்றான். தெளிவாக, தேவன் மீதான பேதுருவின் விசுவாசம் சத்தியத்தைப் பின்தொடர்வதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருந்தது; இறுதியில் அவன் பூமியின் மீதுள்ள நடைமுறை தேவனின் மீதான அன்பை அடைந்தான். சத்தியத்தைப் பின்தொடர்வதில் பேதுரு குறிப்பாக ஆர்வமாக இருந்தான். ஒவ்வொரு முறையும் இயேசு அவனுக்கு அறிவுரை கூறிய போதும், அவன் இயேசுவின் வார்த்தைகளை ஆர்வத்துடன் ஆழ்ந்து சிந்தித்தான். ஒருவேளை அவன் பரிசுத்த ஆவியானவர் அவனைப் பிரகாசிப்பிப்பதற்கு முன்பே மாதங்கள், ஒரு வருடம், அல்லது பல வருடங்களாக ஆழ்ந்து சிந்தித்து தேவனுடைய வார்த்தைகளின் சாரம்சத்தைப் புரிந்து கொண்டான்; இவ்வாறு பேதுரு சத்தியத்திற்குள் பிரவேசித்தான். பின்னர் அவனது வாழ்க்கை மனநிலை மறுரூபமடைந்து புதுப்பிக்கப்பட்டது. ஒரு நபர் சத்தியத்தைப் பின்தொடரவில்லை என்றால், அவர்கள் அதை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள். நீ எழுத்துக்களையும் உபதேசங்களையும் பத்தாயிரம் முறை சொல்லலாம், ஆனாலும் அவை வெறும் எழுத்துக்களாகவும் உபதேசங்களாகவும் மட்டுமே இருக்கும். சிலர், “கிறிஸ்துவே சத்தியமும், வழியும், ஜீவனுமாவார்” என்று வெறுமனே சொல்கின்றனர். நீ இந்த வார்த்தைகளைப் பத்தாயிரம் முறை திரும்பத் திரும்பச் சொன்னாலும், அது அப்போதும் பயனற்றதாகவே இருக்கும்; அவற்றின் அர்த்தம் உனக்குப் புரியாது. கிறிஸ்துவே சத்தியமும், ஜீவனும், வழியுமாய் இருக்கிறார் என்று ஏன் சொல்லப்படுகிறது? அனுபவத்திலிருந்து இதைப்பற்றி நீ பெற்ற அறிவை உன்னால் தெளிவாக எடுத்துரைக்க முடியுமா? நீ சத்தியம், வழி மற்றும் ஜீவன் ஆகியவற்றின் யதார்த்தத்திற்குள் பிரவேசித்திருக்கிறாயா? தேவன் அவருடைய வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார், அதனால் நீ அவற்றை அனுபவித்து அறிவைப் பெற முடியும்; எழுத்துக்களையும் உபதேசங்களையும் பற்றி மட்டுமே பேசுவதுவது பயனற்றதாகும். நீ தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொண்டு அவற்றுள் பிரவேசித்தவுடன் மட்டுமே நீ உன்னைப் பற்றியே அறிந்துகொள்ள முடியும். நீ தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாவிட்டால், உன்னால் உன்னையே அறிந்து கொள்ள முடியாது. நீ சத்தியத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே உன்னால் பகுத்தறிய முடியும்; நீ சத்தியத்தைப் புரிந்து கொள்ளாமல், உன்னால் பகுத்தறிய முடியாது. நீ சத்தியத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே, உன்னால் விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்; சத்தியத்தைப் புரிந்து கொள்ளாமல், உன்னால் விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாது. நீ சத்தியத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே, உன்னை நீயே அறிந்துகொள்ள முடியும்; சத்தியத்தைப் புரிந்து கொள்ளாமல், உன்னால் உன்னை அறிய முடியாது. நீ சத்தியத்தை அடைந்தால் மட்டுமே, உன் மனநிலை மாற முடியும்; சத்தியமின்றி, உன் மனநிலை மாறாது. நீ சத்தியத்தை அடைந்த பின்னரே, நீ தேவனுடைய சித்தத்திற்கேற்ப ஊழியஞ்செய்ய முடியும்; சத்தியத்தை அடையாமல், நீ தேவனுடைய சித்தத்திற்கேற்ப ஊழியஞ்செய்ய முடியாது. நீ சத்தியத்தை அடைந்த பின்னரே, உன்னால் தேவனை ஆராதிக்க முடியும், சத்தியத்தைப் புரிந்து கொள்ளாமல், நீ அவரை ஆராதித்தாலும் உன்னுடைய ஆராதனை மதச்சடங்குகளின் நிகழ்ச்சியாய் இருக்குமே தவிர, வேறு எதுவுமாக இருக்காது. சத்தியம் இல்லாமல், நீங்கள் செய்யும் எதுவும் உண்மையானது அல்ல; சத்தியத்தைப் பெறுவதன் மூலம், நீங்கள் செய்யும் அனைத்தும் உண்மையானவையாகும். இவை அனைத்தும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து சத்தியத்தைப் பெறுவதைச் சார்ந்ததாகும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “மனுஷனுடைய சுபாவத்தை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 562

தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய ஒரு உண்மையானப் புரிதலுக்கு வருவது எளிமையான விஷயம் அல்ல. இப்படி யோசிக்காதீர்கள்: “தேவனுடைய வார்த்தைகளின் நேரடி அர்த்தத்தை என்னால் விளக்கிச் சொல்ல முடியும், எல்லோரும் என் விளக்கம் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள், என்னை ஆதரிக்கிறார்கள், அப்படியானால் நான் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்கிறேன் என்றே அர்த்தமாகும்.” அது தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்வதற்குச் சமமானதல்ல. தேவனுடைய பேச்சுக்களிலிருந்து நீங்கள் கொஞ்சம் வெளிச்சத்தைப் பெற்றிருந்தால், அவருடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் உணர்ந்திருந்தால், அவருடைய வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தையும், அவை இறுதியில் என்ன விளைவை அடையப் போகிறது என்பதையும் உங்களால் வெளிப்படுத்த முடிந்தால்—இந்த விஷயங்கள் அனைத்தையும் குறித்து உங்களுக்குத் தெளிவான புரிதல் இருந்தால், தேவனுடைய வார்த்தைகளை ஓரளவிற்கு நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்று கருதலாம். இப்படியாக, தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்வது எளிதானதே அல்ல. தேவனுடைய வார்த்தைகளின் நேரடி அர்த்தத்தை உங்களால் அழகாக விளக்க முடியும் என்பதால் மட்டும், அவற்றை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்று அர்த்தமல்ல. அவற்றின் நேரடி அர்த்தத்தை நீங்கள் எவ்வளவு விளக்கினாலும், உங்கள் விளக்கமானது அப்போதும் மனிதக் கற்பனை மற்றும் சிந்தனை முறையையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். அது பயனற்றதாகும்! தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் எப்படி புரிந்துகொள்ள முடியும்? அவற்றின் உள்ளிருந்து சத்தியத்தைத் தேடுவதே திறவுகோலாகும். அவ்வழியில் மட்டுமே அவர் சொல்வதை நீங்கள் உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும். தேவன் ஒருபோதும் வெறுமையான வார்த்தைகளைப் பேசுவதில்லை. அவர் பேசுகிற ஒவ்வொரு வாக்கியத்திலும் தேவனுடைய வார்த்தைகளில் கூடுதலாக வெளிப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள் உள்ளன, மேலும் அவை வித்தியாசமாக வெளிப்படுத்தப்படலாம். தேவன் சத்தியத்தை வெளிப்படுத்தும் விதங்களை மனிதனால் புரிந்துகொள்ள முடியாது. தேவனுடைய பேச்சுக்கள் மிகவும் ஆழமானவையும் மனித சிந்தனை முறையால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதவையுமாகும். ஜனங்கள் முயற்சிக்கும் வரையிலும் சத்தியங்களின் ஒவ்வொரு அம்சத்தின் முழு அர்த்தத்தையும் அவர்களால் தோராயமாகக் கண்டறிய முடியும்; நீங்கள் இதைச் செய்தால், நீங்கள் அவற்றை அனுபவிக்கையில், பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பிரகாசிப்பிப்பதால் விவரங்களும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும். தேவனுடைய வார்த்தைகளை சிந்திக்கிறதும் புரிந்துகொள்வதும் அவற்றை வாசிப்பதன் மூலம் அவற்றில் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைத் தேடுவதும் ஒரு பகுதியாகும். தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலமும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அறிவொளியைப் பெறுவதன் மூலமும் அவ்வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது மற்றொரு பகுதியாகும். இந்த இரண்டு அம்சங்களில் நிலையான முன்னேற்றத்தின் மூலம், உங்களால் தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியும். நீ அதை ஒரு எழுத்தியல்பான, உரை மட்டத்திலோ அல்லது உன் சொந்த சிந்தனை மற்றும் கற்பனைகளிலிருந்தோ விளக்கினால், அப்போது நீ அதை அழகாகவும் சொற்பொழிவாகவும் விளக்கினாலும் கூட, நீ அப்போதும் சத்தியத்தைப் புரிந்து கொள்வதில்லை, மேலும் அவை அனைத்தும் அப்போதும் மனித சிந்தனை மற்றும் கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன. அது பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்திலிருந்து பெறப்படுவதில்லை. ஜனங்கள் தங்கள் கருத்துகள் மற்றும் கற்பனைகளின் அடிப்படையில் தேவனுடைய வார்த்தைகளை விளக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, மேலும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைச் சூழலுக்கு வெளியே தவறாகப் புரிந்து கொள்ளலாம், அது தேவனைத் தவறாகப் புரிந்து கொள்ளவும் நியாயந்தீர்க்கவும் அவர்களுக்கு எளிதாக்கிவிடும், மேலும் இது தொந்தரவானதாகும். எனவே, சத்தியமானது முக்கியமாக தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்வதன் மூலமும் பரிசுத்த ஆவியானவரால் பிரகாசிப்பிக்கப்படுவதன் மூலமும் பெறப்படுகிறது. எழுத்தியல்பான, உரை சார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விவரிக்க முடிகிறது என்பதற்கு நீங்கள் சத்தியத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகாது. தேவனுடைய வார்த்தையின் எழுத்தியல்பான, உரை சார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்வது, நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம் என்றால், அப்போது நீங்கள் ஒரு சிறிய கல்வி மற்றும் அறிவைப் பெற்றிருப்பது மட்டுமே தேவையானதாகும், அப்படியானால் உங்களுக்கு ஏன் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசம் தேவை? தேவனுடைய கிரியையானது ஏதோ மனித மனம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றா? எனவே, சத்தியத்தைப் புரிந்துகொள்வது என்பது மனித எண்ணங்கள் அல்லது கற்பனைகளின் அடிப்படையில் இல்லை. உண்மையான அனுபவத்தையும் அறிவையும் பெற உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசம், வெளிச்சம் மற்றும் வழிநடத்துதல் தேவை. இதுவே சத்தியத்தைப் புரிந்துகொண்டு அதைப் பெறுவதற்கான செயல் முறையாகும், மேலும் இது ஒரு அவசியமான நிபந்தனையும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “மனுஷனுடைய சுபாவத்தை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 563

மனிதனுடைய சுபாவத்தை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்? மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மனிதனின் உலகக் கண்ணோட்டம், வாழ்க்கைக் கண்ணோட்டம் மற்றும் மதிப்புகளின் கண்ணோட்டத்திலிருந்து அதைப் பகுத்தறிவதாகும். பிசாசினுடையவர் அனைவரும் தங்களுக்காகவே வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் மற்றும் முதுமொழிகளும் முக்கியமாகச் சாத்தானின் கூற்றுக்களான, “ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து, துரதிர்ஷ்டசாலிகளை அவரவர் தலைவிதிக்கு விட்டுவிடட்டும்” என்பவைகளிலிருந்தே வருகின்றன. அந்தப் பிசாசின் ராஜாக்கள், பெரியோர்கள் மற்றும் பூமியின் தத்துவவாதிகளால் பேசப்பட்ட வார்த்தைகள் மனிதனின் முக்கிய வாழ்க்கையாகிவிட்டன. குறிப்பாக, சீன மக்களால் “ஞானி” என்று புகழப்படும் கன்பூசியஸின் பெரும்பாலான வார்த்தைகள் மனிதனின் வாழ்க்கையாகிவிட்டன. புத்த மத மற்றும் தாவோயிசத்தின் புகழ்பெற்ற பழமொழிகள் மற்றும் பல்வேறு பிரபலமானவர்களின் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட உன்னதமான பழமொழிகளும் உள்ளன; இவை அனைத்தும் சாத்தானுடைய தத்துவங்களும் மற்றும் சாத்தானின் சுபாவத்தைப் பற்றிய பொருட் சுருக்கமும் ஆகும். மேலும் அவை சாத்தானுடைய சுபாவத்தைப் பற்றிய சிறந்த எடுத்துக்காட்டுகளும் விளக்கங்களும் ஆகும். மனிதனுடைய இருதயத்திற்குள் புகுத்தப்பட்ட இந்த விஷயங்கள் அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன; அவற்றின் ஒரு சிறு பகுதி கூட தேவனிடமிருந்து வருவதில்லை. இத்தகைய பேய்த் தன்மையுடைய வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைக்கு நேர் எதிரானவையாகும். எல்லா நேர்மறையான விஷயங்களின் யதார்த்தங்களும் தேவனிடமிருந்து வருகின்றன என்பதும், மனிதனை விஷமாக்கும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன என்பதும் மிகத் தெளிவாகிறது. ஆகையால், ஒரு நபரின் சுபாவத்தையும் மற்றும் அவன் யாருடையவன் என்பதையும் அவனுடைய வாழ்க்கைக் கண்ணோட்டம் மற்றும் மதிப்புகளிலிருந்து நீ அறியலாம். தேசிய அரசாங்கங்கள் மற்றும் புகழ்பெற்ற மற்றும் பெரியவர்களின் கல்வி மற்றும் செல்வாக்கின் மூலம் சாத்தான் மக்களை சீர்கெடுக்கிறான். அவர்களின் பேய்த்தன்மையான வார்த்தைகள் மனிதனின் வாழ்க்கையாகவும் சுபாவமாகவும் மாறிவிட்டன. “ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து, துரதிர்ஷ்டசாலிகளை அவரவர் தலைவிதிக்கு விட்டுவிடட்டும்” என்பது எல்லோருக்குள்ளும் புகுத்தப்பட்ட ஒரு பிரபலமான சாத்தானிய பழமொழியாகும், அதுவே மனிதனின் வாழ்க்கையாகிவிட்டது. இதைப் போலவே வாழ்வதற்கான தத்துவங்களின் வேறு வார்த்தைகளும் உள்ளன. சாத்தான் ஜனங்களுக்குக் கற்பிப்பதற்காகவும், அவர்களை வஞ்சிக்கவும், சீர்கெடுக்கவும் ஒவ்வொரு தேசத்தின் பாரம்பரியக் கலாச்சாரத்தையும் பயன்படுத்துகிறான், இதனால் மனுக்குலத்தை வீழ்த்தி எல்லையற்ற அழிவின் படுபாதாளத்தினுள் மூழ்கடிக்கவும் செய்கிறான், இறுதியில் ஜனங்கள் தேவனால் அழிக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் சாத்தானுக்கு ஊழியஞ்செய்து தேவனை எதிர்க்கிறார்கள். பல தசாப்தங்களாக சமூகத்தில் சிலர் அரசு அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர். அவர்களிடம் பின்வரும் கேள்வியைக் கேட்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்: “இந்தத் திறமையில் நீங்கள் நன்றாக பணியாற்றியிருக்கிறீர்கள், நீங்கள் எந்த முக்கியப் புகழ்பெற்ற பழமொழிகளின்படி வாழ்கிறீர்கள்?” “நான் புரிந்துகொள்ளும் ஒரு காரியம் இதுதான்: ‘வெகுமதிகளைக் கொண்டுவருபவர்களுக்கு அதிகாரிகள் சிரமம் தருவதில்லை, முகஸ்துதி செய்யாதவர்கள் எதையும் சாதிப்பதில்லை’” என்று கூறலாம். இதுதான் அவர்களுடைய தொழில் அடிப்படையாகக் கொண்டுள்ள சாத்தானிய தத்துவமாகும். இவ்வார்த்தைகள் அப்படிப்பட்ட ஜனங்களின் சுபாவத்தைப் பிரதிபலிக்கவில்லையா? பதவியைப் பெற எந்த வழியையும் நேர்மையற்ற முறையில் பயன்படுத்துவது அவர்களது சுபாவமாக மாறியுள்ளது, பதவியதிகாரம் மற்றும் தொழில் வெற்றி ஆகியவையே அவர்களது இலக்காக உள்ளது. ஜனங்களின் வாழ்க்கையில், அவர்களின் நடத்தையில் மற்றும் ஒழுக்கத்தில் இன்னும் பல சாத்தானிய விஷங்கள் உள்ளன. உதாரணமாக, வாழ்வதற்கான அவர்களின் தத்துவங்கள், காரியங்களைச் செய்யும் அவர்களின் முறைகள் மற்றும் அவர்களின் முதுமொழிகள் அனைத்தும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் விஷங்களால் நிரப்பப்பட்டுள்ளன, அவை அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன. இவ்வாறு ஜனங்களின் எலும்புகள் மற்றும் இரத்தம் வழியாகப் பாயும் அனைத்தும் சாத்தானின் விஷயங்களேயாகும். அதிகாரத்தை வைத்திருக்கும், மற்றும் சாதித்த அந்த அதிகாரிகள் அனைவருமே வெற்றிக்கான தங்கள் சொந்த வழிகளையும் ரகசியங்களையும் கொண்டுள்ளனர். இத்தகைய ரகசியங்கள் அவர்களின் சுபாவத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதில்லையா? அவர்கள் உலகத்தில் இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் திட்டங்கள் மற்றும் சூழ்ச்சிகளின் உண்மைத்தன்மையை ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களின் சுபாவம் எவ்வளவு நயவஞ்சகமானது மற்றும் விஷம் நிறைந்தது என்பதை இது காட்டுகிறது. மனுக்குலம் சாத்தானால் ஆழமாகச் சீர்கெடுக்கப்பட்டுள்ளது. சாத்தானின் விஷம் ஒவ்வொரு நபரின் இரத்தத்தின் வழியாகவும் பாய்கிறது, மேலும் மனிதனின் இயல்பு சீர்கேடானது, தீயது, பிற்போக்குத்தனமானது, தேவனுக்கு எதிரானது, சாத்தானின் தத்துவங்களால் மற்றும் விஷத்தால் நிரப்பப்பட்டு அதில் மூழ்கியுள்ளது என்று சொல்லலாம், இது முற்றிலும் சாத்தானின் சுபாவமாகவும் சாராம்சமாகவும் மாறியிருக்கிறது. இதனால்தான் ஜனங்கள் தேவனைத் தடுக்க முயன்று, தேவனுக்கு எதிராய் நிற்கிறார்கள். மனிதனின் சுபாவத்தை இப்படிப் பிரித்தாய்வு செய்ய முடியுமானால் மனிதன் தன்னையே எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “மனுஷனுடைய சுபாவத்தை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 564

சுய பரிசோதனைக்கும் உன்னையே அறிந்து கொள்வதற்குமான திறவுகோல் இதுதான்: சில பகுதிகளில் நீ நன்றாகச் செய்திருக்கிறாய் அல்லது சரியானதைச் செய்திருக்கிறாய் என்று நீ எவ்வளவு அதிகமாக உணர்கிறாயோ, சில பகுதிகளில் நீ தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும் அல்லது பெருமைபாராட்ட முடியும் என்று எவ்வளவு அதிகமாக நினைக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அந்தப் பகுதிகளில் உன்னையே அறிந்து கொள்வது உனக்குத் தகுதியானது, மேலும் உன்னில் என்ன அசுத்தங்கள் உள்ளன அதோடு கூட தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியாதபடி உனக்குள் என்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதைப் பார்க்க அவைகளுக்குள் ஆழமாகத் தோண்டுவது உனக்குத் தகுதியானது. பவுலை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். பவுல் குறிப்பாக அறிவார்ந்தவனாக இருந்தான், அவன் தன் பிரசங்க பணியில் மிகவும் கஷ்டப்பட்டான். அவன் குறிப்பாக அநேகரால் போற்றப்பட்டான். இதன் விளைவாக, மிகுதியான கிரியைகளை முடித்த பின்பு, தனக்காக ஒரு கிரீடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்று அவன் கருதினான். இது இறுதியாக, அவன் தேவனால் தண்டிக்கப்படும் வரை, அவனை இன்னும் தவறான பாதையில் அதிக தூரம் போகச் செய்தது. அந்த நேரத்தில், அவன் தன்னைப் பற்றி சிந்தித்துத் தன்னைத் துண்டித்திருந்தால், அவன் அதை நினைத்திருக்க மாட்டான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளில் இருந்த சத்தியத்தைத் தேடுவதில் பவுல் கவனம் செலுத்தவில்லை; அவன் தனது சொந்த எண்ணங்கள் மற்றும் கற்பனைகளை மட்டுமே நம்பினான். அவன் சில நல்ல விஷயங்களைச் செய்து சில நல்ல நடத்தைகளை வெளிப்படுத்தும் வரை, தான் தேவனால் புகழப்பட்டு வெகுமதியைப் பெற்றுக்கொள்வோம் என்று அவன் நினைத்திருந்தான். இறுதியில், அவனுடைய சொந்தக் கருத்துக்களும் கற்பனைகளும் அவனுடைய ஆவியைக் குருடாக்கி, அவனுடைய சீர்கேட்டின் உண்மையை மறைத்தன. ஆனால் ஜனங்களால் இதைப் பகுத்தறிய முடியவில்லை, இதை அறியவில்லை, இந்த விஷயங்களைப் பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை, தேவன் இதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பே, அவர்கள் தரத்தை அடையும்படி பவுலை முன்மாதிரியாக வைத்து, வாழ்வதற்கான ஒரு உதாரணமாகவும், அவனைப் போல இருக்க விரும்புகிறவர்களாகவும், அவர்கள் பின்தொடருகிற ஒரு விக்கிரகமாகவும் கருதினர். பவுலின் காரியம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு எச்சரிக்கையாகும். குறிப்பாக தேவனைப் பின்பற்றுகிற நாம் கஷ்டப்படவும் நம் கடமைகளில் விலைக்கிரயம் செலுத்தவும் முடியும் போது, நாம் தேவனுக்கு ஊழியம் செய்கையில், நாம் உண்மையுள்ளவர்களாகவும் தேவனை நேசிப்பவர்களாகவும் உணர்கிறோம், எனவே இது போன்ற சமயங்களில், நாம் நம்மைக் குறித்துச் சிந்தித்து, நாம் நடக்கும் பாதையைப் பற்றி இன்னும் அக்கறைகொண்டு நம்மை நாமே புரிந்து கொள்ள வேண்டும், இது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் நீ எது நல்லது என்று நினைக்கிறாயோ அதையே நீ சரி என்று தீர்மானிப்பாய், நீ அதைச் சந்தேகிக்க மாட்டாய், அதைப் பற்றிச் சிந்திக்க மாட்டாய் அல்லது தேவனை எதிர்க்கும் எதுவும் அதில் இருக்கிறதா என்று பகுப்பாய்வு செய்ய மாட்டாய். உதாரணமாக, தங்களை மிகவும் அன்பான இருதயம் கொண்டவர்கள் என்று நம்பும் நபர்கள் உள்ளனர். அவர்கள் ஒருபோதும் மற்றவர்களை வெறுக்கவோ அல்லது அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ மாட்டார்கள், மேலும் தேவை உள்ள ஒரு சகோதரர் அல்லது சகோதரியின் குடும்பத்துக்கு அவர்கள் உதவி செய்வார்கள், இல்லை என்றால் அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் போகும்; அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்தைக் கொண்டிருப்பார்கள், மேலும் தங்களால் இயன்ற அனைவருக்கும் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். அத்தகைய உதவும் தன்மையின் விளைவு என்ன? அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தொடராமல் நிறுத்தி இருக்கிறார்கள், ஆனாலும் தங்களைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் செய்த எல்லாவற்றிலும் மிகவும் திருப்தி அடைந்திருக்கிறார்கள். மேலும் என்னவென்றால், அவர்கள் அதில் மிகவும் பெருமிதம் கொள்கிறார்கள், அவர்கள் செய்த அனைத்தும் நிச்சயமாக தேவனுடைய சித்தத்தைத் திருப்திப்படுத்த போதுமானது என்றும், அவர்கள் தேவனின் உண்மையான விசுவாசிகள் என்றும் நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் இயல்பான இரக்க குணத்தை நன்மை பெரும்படி பயன்படுத்திக் கொள்வதற்கான ஒன்றாய்ப் பார்க்கிறார்கள், மேலும் அவர்கள் அப்படிச் செய்தவுடன், அதைத் தவிர்க்க முடியாதபடி சத்தியமாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். உண்மையில், அவர்கள் செய்வது எல்லாம் மனித நன்மையே. அவர்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்துவதே இல்லை, ஏனென்றால் அவர்கள் இதை மனிதனுக்கு முன்பாகச் செய்கிறார்கள், தேவனுக்கு முன்பாக அல்ல, மேலும் அவர்கள் தேவனுடைய தேவைகள் மற்றும் சத்தியத்தின்படி நடைமுறைப்படுத்துவதில்லை. எனவே அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணானவையாகும். அவர்கள் செய்யும் காரியங்களில் எதுவுமே சத்தியத்தை நடைமுறைப்படுத்துவது அல்ல, மேலும் எதுவும் தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைப்படுத்துவதும் அல்ல, அவர்கள் அவருடைய சித்தத்தைப் பின்பற்றுவதும் இல்லை. மாறாக, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ மனித இரக்க குணத்தையும் நல்ல நடத்தையையும் பயன்படுத்துகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், அவர்கள் தங்கள் செய்வதில் தேவனுடைய சித்தத்தைத் தேடுவதில்லை அல்லது அவருடைய தேவைகளுக்கு ஏற்பச் செயல்படுவதும் இல்லை. மனிதனின் இந்த வகையான நல்ல நடத்தையை தேவன் பாராட்டுவதில்லை; தேவனைப் பொறுத்தவரை, அது கண்டிக்கப்பட வேண்டியதாகும், மேலும் அவருடைய நினைவுகூருதலுக்குத் தகுதியற்றதாகும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒருவரின் சொந்த தவறான பார்வைகளைக் கண்டுணர்வதன் மூலம் மட்டுமே ஒருவரால் உண்மையிலேயே மாற முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 565

மனநிலையில் மாற்றத்தை அடைவதற்கு முக்கியமானது என்னவென்றால்ஒருவரின் சொந்த சுபாவத்தை அறிந்து கொள்வதேயாகும், மேலும் இது தேவனிடமிருந்து வரும் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். தேவனின் வார்த்தையில்தான் ஒருவர் தனது சொந்த அருவருப்பான சுபாவத்தை அறிந்து கொள்ள முடியும், ஒருவரின் சொந்த சுபாவத்தில் சாத்தானின் பல்வேறு விஷங்களை அடையாளம் காண முடியும், ஒருவர் முட்டாள்தனமானவர், அறிவற்றவர் என்பதை உணர முடியும், மேலும் ஒருவரின் சுபாவத்தில் உள்ள பலவீனமான மற்றும் எதிர்மறையான காரியங்களை அடையாளம் காண முடியும். இவற்றை முழுமையாக அறிந்துகொண்ட பின்னர், நீ உண்மையிலேயே உன்னை வெறுக்கவும், சரீரத்தைக் கீழ்ப்படுத்தவும், தொடர்ந்து தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றவும், உன் கடமைகளைச் செய்து வரும்போது தொடர்ந்து சத்தியத்தைப் பின்தொடரவும், உன் மனநிலையில் ஒரு மாற்றத்தை அடையவும் மேலும் தேவனை உண்மையிலேயே நேசிக்கும் ஒரு நபராக மாறவும் முடியும். அப்போது நீ பேதுருவின் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பாய். தேவனின் கிருபை இல்லாமல், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் பிரகாசம் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல், இந்தப் பாதையில் நடப்பது கடினம், ஏனென்றால் ஜனங்களிடம் சத்தியம் இல்லை, தங்களுக்குத் தாங்களே உண்மையாக இருக்க முடியவில்லை. பேதுருவின் பரிபூரணப் பாதையில் நடப்பது என்பது முதன்மையாக, தீர்மானத்துடன் இருத்தல், விசுவாசம் கொண்டிருத்தல், தேவனைச் சார்ந்திருப்பது இவற்றைப் பொறுத்து இருக்கிறது. இதற்கும் மேலாக, ஒருவர் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குக் கீழ்ப்படிய வேண்டும்; எல்லா விஷயங்களிலும், ஒருவர் தேவனின் வார்த்தைகள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இவைகளே முக்கிய அம்சங்களாகும், இவற்றில் எதுவுமே மீறப்படக் கூடாது. அனுபவத்தின் மூலம் தன்னைத்தானே அறிந்து கொள்வது மிகவும் கடினம்; பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல், அது வீணானது. பேதுருவின் பாதையில் நடக்க, ஒருவர் தன்னைத்தானே அறிந்துகொள்வதிலும், ஒருவர் தன் மனநிலையை மாற்றம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். பவுலின் பாதை ஜீவிதத்தை தேடுவதாகவோ அல்லது சுய அறிவில் கவனம் செலுத்துவதாகவோ இருக்கவில்லை; அவன் குறிப்பாக கிரியை செய்வதிலும், அதன் பலனிலும் மற்றும் வேகத்திலும் கவனம் செலுத்தினான். அவனுடைய கிரியை மற்றும் வேதனைகளுக்கு ஈடாக தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதும், தேவனிடமிருந்து வெகுமதிகளைப் பெறுவதும் அவனுடைய உள்நோக்கமாக இருந்தது. இந்த உள்நோக்கம் தவறானதாக இருந்தது. பவுல் ஜீவிதத்தில் கவனம் செலுத்தவில்லை, மனநிலையில் ஒரு மாற்றத்தை அடைவதற்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை; அவன் வெகுமதிகளில் மட்டுமே கவனம் செலுத்தினான். அவனிடம் தவறான குறிக்கோள்கள் இருந்ததால், அவன் நடந்து வந்த பாதையும் நிச்சயமாக தவறானதாக இருந்தது. இது அவனது ஆணவம் மற்றும் அகங்காரச் சுபாவத்தால் நடந்தது. பவுல் எந்த சத்தியத்தையும் கொண்டிருக்கவில்லை, அல்லது அவன் மனசாட்சியையோ அல்லது பகுத்தறிவையோ கொண்டிருக்கவில்லை. ஜனங்களை இரட்சிக்கும்போதும் மாற்றும்போதும், தேவன் பிரதானமாக அவர்களின் மனநிலையை மாற்றுகிறார். ஜனங்கள் மாற்றப்பட்ட மனநிலையைப் பெற்றிருப்பதன் விளைவுகளை அடைவதும் தேவனை அறிந்து கொள்ளும் திறனைப் பெறுவதும், அவருக்குக் கீழ்ப்படிந்து அவரை சரியான வழியில் ஆராதிப்பதுமே அவருடைய வார்த்தைகளின் நோக்கமாகும். தேவனின் வார்த்தைகள் மற்றும் அவருடைய கிரியையின் நோக்கம் இதுவேயாகும். பவுலின் தேடுதல் முறையானது தேவனுடைய சித்தத்தை நேரடியாக மீறுவதாகவும், முரண்படுவதாகவும் இருந்தது; அது முற்றிலும் அதற்கு எதிரானதாகவே இருந்தது. இருப்பினும், பேதுருவின் தேடுதல் முறையானது முற்றிலும் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இருந்தது: அவன் வாழ்க்கையின் மீதும் மனநிலையில் உள்ள மாற்றங்களின் மீதும் கவனம் செலுத்தினான், இதுவே துல்லியமாக மனிதர்களில் தம்முடைய கிரியைகளின் மூலம் தேவன் அடைய விரும்பும் விளைவாக்கும். ஆகையால் பேதுருவின் பாதை ஆசீர்வதிக்கப்பட்டது மேலும் தேவனின் பாராட்டுதலைப் பெறுகிறது. பவுலின் வழி தேவனுடைய சித்தத்தை மீறுவதாக இருப்பதால், தேவன் அதை வெறுக்கிறார், அதைச் சபிக்கிறார். பேதுருவின் பாதையில் நடக்க ஒருவன் தேவனுடைய சித்தத்தை அறிய வேண்டும். அவருடைய வார்த்தைகளின் மூலம் அவருடைய சித்தத்தை உண்மையில் ஒருவனால் முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியுமானால்—அதாவது தேவன் மனிதனைக் கொண்டு என்ன செய்ய விரும்புகிறார் மேலும், முடிவில், என்ன விளைவுகளை அடைய அவர் விரும்புகிறார்—அப்போது மட்டுமே எந்தப் பாதையைப் பின்தொடர வேண்டும் என்பதை பற்றிய ஒரு துல்லியமான புரிதலை ஒருவனால் கொண்டிருக்க முடியும். நீ பேதுருவின் பாதையை முற்றிலுமாகப் புரிந்துகொள்ள வில்லையானால், மேலும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே இருந்தால், பின் உன்னால் அதில் பயணத்தைத் தொடங்க முடியாது. வேறு வகையில் சொன்னால், உனக்கு ஏராளமான கோட்பாடுகள் தெரியலாம், ஆனால் முடிவில் யதார்த்தத்துக்குள் உன்னால் பிரவேசிக்க முடியாது. நீ ஒரு மேலோட்டமான பிரவேசத்தை அடைந்தாலும், உன்னால் மெய்யான விளைவுகளை அடைய முடியாது.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 566

இக்காலத்தில், பெரும்பாலான மக்கள் தங்களைக் குறித்து மிகவும் மேம்போக்கான புரிதலையேக் கொண்டுள்ளனர். அவர்களின் சுபாவத்தின் ஒரு பாகமாக இருக்கும் காரியங்களை அவர்கள் எவ்வகையிலும் இன்னும் தெளிவாக அறியவில்லை. அவர்கள் வெளிப்படுத்தும் ஒரு சில சீர்கெட்ட நிலைகள், அவர்கள் பெரும்பாலும் செய்யக்கூடிய காரியங்கள் அல்லது அவர்களின் சில குறைபாடுகள் ஆகிய இவற்றைப் பற்றிய அறிவு மட்டுமே அவர்களுக்கு உள்ளது, மேலும் இது அவர்கள் தங்களை அறிந்திருப்பதாக நம்ப வைக்கிறது. மேலும், அவர்கள் ஒரு சில விதிககளுக்குக் கட்டுப்பட்டால், சில பகுதிகளில் அவர்கள் தவறு செய்யாமல் இருப்பதை உறுதிசெய்து, சில மீறுதல்களைத் தவிர்க்க முடிந்தால், அவர்கள் தேவன் மீதான தங்கள் நம்பிக்கையில் அவர்கள் உண்மையைக் கொண்டிருப்பதாகக் கருதி, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைக்கின்றனர். இது முற்றிலும் மனிதக் கற்பனையாகும். நீ அந்த காரியங்ககளுக்குக் கட்டுப்பட்டால், நீ உண்மையில் எந்த மீறுதல்களையும் செய்யாமல் விலகி இருக்க முடியுமா? நீ மனநிலையில் உண்மையான மாற்றத்தை அடைந்திருப்பாயா? நீ உண்மையில் ஒரு மனிதனின் சாயலில் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? அவ்வகையில் உன்னால் தேவனை உண்மையாகத் திருப்திப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது, இது நிச்சயம். ஒருவருக்கு உயர்ந்த தரங்கள் இருக்கும்போதும், சத்தியத்தை அடைந்தும், ஒருவரின் வாழ்க்கையின் மனநிலையில் சில மறுரூபங்களையும் அடைந்தால் மட்டுமே தேவன் மீதான நம்பிக்கை செயல்படும். இதற்கு முதலில் தன்னை அறிவதற்கான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. ஜனங்களுக்கு தங்களைப் பற்றிய அறிவு மிகவும் ஆழமற்றதாக இருந்தால், அவர்களுக்குப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமற்றதாகத் தெரியும், அவர்களின் ஜீவிதத்தின் மனநிலைகள் அவ்வளவு எளிதில் மாறாது. ஓர் ஆழ்ந்த அளவில் தன்னை அறிந்து கொள்வது அவசியம், அதாவது ஒருவரின் சொந்தச் சுபாவத்தை அறிவது: அந்த சுபாவத்தில் என்ன காரியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இந்த விஷயங்கள் எவ்வாறு தோன்றின, அவை எங்கிருந்து வந்தன போன்றவை. மேலும், நீ உண்மையில் இந்த விஷயங்களை வெறுக்க முடியுமா? உன் சொந்த அருவருப்பான ஆத்துமாவையும் உன் தீய சுபாவத்தையும் நீ பார்த்திருக்கிறாயா? உன்னைப் பற்றிய உண்மையை நீ உண்மையிலேயே காண முடிந்தால், நீ உன்னையே வெறுப்பாய். நீ உன்னையே வெறுத்து, பின்னர் தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கும்போது, நீ சரீரத்தைக் கீழ்ப்படுத்தி, சத்தியத்தை நிறைவேற்றுவது கடினம் என்று நம்பாமல் அதை நிறைவேற்றும் வலிமை பெறுவாய். ஏன் பலர் தங்கள் மாம்ச விருப்பங்களைப் பின்பற்றுகிறார்கள்? ஏனென்றால், அவர்கள் தங்களை மிகவும் நல்லவர்கள் என்று கருதுகிறார்கள், தங்கள் செயல்கள் சரியானவை, நியாயமானவை என்று உணர்கிறார்கள், தங்களிடம் எந்தக் குறைபாடுகளும் இல்லை, அவை முற்றிலும் சரியாகவே உள்ளன என்று கூட உணர்கிறார்கள், ஆகவே நீதி தங்கள் பக்கம் இருக்கிறது என்ற அனுமானத்துடன் செயல்பட சாமர்த்தியமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஒருவரின் உண்மையான சுபாவம் என்ன, அது எவ்வளவு அருவருப்பானது, எவ்வளவு இழிவானது, எவ்வளவு பரிதாபகரமானது என்பதை ஒருவர் அடையாளம் காணும்போது, அவர் தன்னைப் பற்றி அதிகம் பெருமைப்படுவதில்லை, மிகவும் பண்பற்ற அகந்தை கொள்வதில்லை, முன்பு போலவே தன்னைப் பற்றி மகிழ்ச்சியடைவதில்லை. அத்தகைய நபர், “தேவனுடைய சில வார்த்தைகளைக் கடைப்பிடிக்க நான் உளப்பூர்வமாகவும் என்னை நானே தரைமட்டும் தாழ்த்துகிறவனாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால், நான் மனிதனாக இருப்பதற்கான தரத்தின் அளவுக்குத் தக்கதாக இருக்க மாட்டேன், தேவனின் சமூகத்தில் வாழ வெட்கப்படுவேன்.” என்று உணர்கிறார். பின்னர் அவர் தன்னை அற்பமானவராகவும், உண்மையிலேயே தனிச்சிறப்பற்றவராகவும் பார்க்கிறார். இந்த நேரத்தில், அந்த நபருக்குச் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது எளிதாகி விடும், மேலும் அந்த நபர் ஒரு மனிதன் ஓரளவுக்கு எப்படி இருக்க வேண்டுமோ அது போலத்தோன்றுவார். ஜனங்கள் உண்மையிலேயே தங்களைத் தாங்களே வெறுக்கும்போது மட்டுமே அவர்களால் சரீரத்தைக் கீழ்ப்படுத்த முடியும். அவர்கள் தங்களை வெறுக்காவிட்டால், அவர்களால் சரீரத்தைக் கீழ்ப்படுத்த முடியாது. உண்மையில் ஒருவன் தன்னைத்தானே வெறுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவற்றில் காணவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. முதலில், ஒருவர் தன் சொந்த சுபாவத்தை அறிவது; இரண்டாவதாக, தன்னைத் தேவையுள்ளவராகவும் பரிதாபகரமாகவும் பார்ப்பது, தன்னை மிக அற்பமானவராகவும், தனிச் சிறப்பற்றவராகவும் கருதுவது, ஒருவர் தன் பரிதாபகரமான மற்றும் அழுக்கான ஆத்துமாவைப் பார்ப்பது. ஒருவர் உண்மையிலேயே என்னவாக இருக்கிறார் என்பதை அவர் முழுமையாகப் பார்க்கும்போது, இந்த முடிவு அடையப்படும்போது, ஒருவர் உண்மையிலேயே தன்னைப் பற்றிய அறிவைப் பெறுகிறார், மேலும் ஒருவர் தன்னை முழுமையாக அறிந்துகொண்டார் என்று கூறலாம். ஒருவர் தன்னைத் தானே உண்மையிலேயே வெறுக்க முடியும்போது, தன்னைத் தானே சபிக்கும் அளவிற்குச் செல்லும்போதுதான், ஒரு மனிதரைக் கூட ஒத்திருக்காத வகையில் சாத்தானால் அவர் ஆழமாக சீர்கெட்டிருப்பதாக உண்மையிலேயே உணர முடியும். பின்னர், ஒரு நாள், மரண அச்சுறுத்தல் தோன்றும்போது, அத்தகைய நபர், “இது தேவனின் நீதியான ஆக்கினைத்தீர்ப்பு. தேவன் உண்மையில் நீதியுள்ளவர்; நான் உண்மையில் மரிக்க வேண்டும்!” என்று நினைப்பார். இந்தக் கட்டத்தில், அவர் எந்தவொரு குறைபாட்டையும் வெளிப்படுத்த மாட்டார், தேவனைக் குறை கூறமாட்டார், அவர் மிகவும் தேவையுள்ளவர், பரிதாபகரமானவர், மிகவும் இழிவானவர், சீர்கேடானவர், அவர் தேவனால் புறம்பாக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டும், அவரைப் போன்ற ஓர் ஆத்துமா உலகில் வாழத் தகுதியற்றது என்பதாக உணருவார். ஆகவே, இந்த நபர் தேவனுக்கு எதிராகக் குறைகூறி எதிர்க்க மாட்டார், இன்னும் சொல்லப் போனால் அவர் தேவனைக் காட்டிக் கொடுக்க மாட்டார். ஒருவர் தன்னைத் தெரிந்து கொள்ளாவிட்டால், தன்னை மிகவும் நல்லவர் என்று இன்னும் கருதினால், மரணம் வாசலில் வந்து தட்டும்போது, இந்த நபர் நினைப்பார், “நான் என் விசுவாசத்தில் மிகச் சிறப்பாக செய்திருக்கிறேன். நான் எவ்வளவு கடினமாக தேடினேன்! நான் அதிகமாகக் கொடுத்திருக்கிறேன், நான் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன், ஆனால் இறுதியில், தேவன் இப்போது என்னை மரிக்கச் சொல்கிறார். தேவனின் நீதியானது எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் என்னை ஏன் மரிக்கச் சொல்கிறார்? நான் மரிக்க வேண்டும் என்றால், பின்னர் யார்தான் இரட்சிக்கப்படுவார்கள்? மனித இனம் முடிவுக்கு வராதா?” முதலாவதாக, இந்த நபருக்கு தேவனைப் பற்றிய கருத்துக்கள் உள்ளன. இரண்டாவதாக, இந்த நபர் குறைகூறுகிறார், எதுவாக இருந்தாலும், எந்தவொரு கீழ்ப்படிதலையும் காட்டவில்லை. இது பவுலைப் போன்றது: அவன் மரிக்கும் தருணத்தில், அவன் தன்னை அறியவில்லை, தேவனின் தண்டனை நெருங்கிய நேரத்தில், அது எல்லாம் மிகவும் தாமதமாகிவிட்டது.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 567

துல்லியமாகச் சொல்வதென்றால், ஒருவருடைய விசுவாசத்தில் பேதுருவின் பாதையை எடுத்துக்கொள்வது என்றால் சத்தியத்தைப் பின்தொடரும் பாதையில் நடப்பது என்று அர்த்தமாகும், இது மெய்யாகவே ஒருவர் தன்னையே அறிந்துகொள்ளும் மற்றும் ஒருவருடைய மனநிலையை மாற்றுவதற்கான பாதையுமாகும். பேதுருவின் பாதையில் நடப்பதன் மூலம் மட்டுமே ஒருவர் தேவனால் பரிபூரணப்படுத்தப்படும் பாதையில் இருப்பார். பேதுருவின் பாதையில் எப்படி சரியாக நடக்க வேண்டும், அதை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதிலும் ஒருவர் தெளிவாக இருக்க வேண்டும். முதலாவதாக, ஒருவர் தனது சொந்த நோக்கங்கள், தவறான நாட்டங்கள் மற்றும் குடும்பத்தையும் தனது சொந்த மாம்சத்தின் சகல காரியங்களையும் கூட ஒதுக்கி வைக்க வேண்டும். ஒருவர் முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்; அதாவது, ஒருவர் தேவனுடைய வார்த்தைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுதில் கவனம் செலுத்த வேண்டும், சத்தியத்தைத் தேடுவதிலும், அவருடைய வார்த்தைகளில் தேவனுடைய நோக்கங்களைத் தேடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும், எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதுவே நடைமுறைப்படுத்துவதற்கான மிகவும் அடிப்படையான மற்றும் முக்கியமான முறையாகும். இயேசுவைப் பார்த்த பிறகு பேதுரு செய்தது இதுதான், இவ்விதமாக செயல்படுவதன் மூலமாக மட்டுமே ஒருவரால் சிறந்த பலன்களை அடைய முடியும். தேவனுடைய வார்த்தைகளுக்கு முழு மனதுடன் அர்ப்பணிப்பது என்பது சத்தியத்தைத் தேடுவது, தேவனுடைய நோக்கங்களை அவருடைய வார்த்தைகளுக்குள் தேடுவது, தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துவது மற்றும் தேவனுடைய வார்த்தைகளில் இருந்து அதிக சத்தியத்தைப் புரிந்துகொள்வது மற்றும் பெறுவது ஆகியவற்றுடன் முதன்மையானத் தொடர்புடையதாக இருக்கிறது. அவருடைய வார்த்தைகளை வாசிக்கும் போது, பேதுரு உபதேசங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தவில்லை, இறையியல் அறிவைப் பெறுவதிலும் அவன் கவனம் செலுத்தவில்லை. அதற்குப் பதிலாக, அவன் சத்தியத்தைப் புரிந்துகொள்வதிலும், தேவனுடைய சித்தத்தைக் கிரகித்துக்கொள்வதிலும், அத்துடன் அவருடைய மனநிலை மற்றும் அவருடைய அன்பைப் பற்றிய ஒரு புரிதலைப் பெறுவதிலும் கவனம் செலுத்தினான். அதோடு கூட தேவனுடைய வார்த்தைகள் மூலமாக மனுஷனுடைய பல்வேறு சீர்கேடான நிலைகளையும், அத்துடன் மனுஷனுடைய சுபாவத்தையும், சாராம்சத்தையும், உண்மையான குறைபாடுகளையும் புரிந்துகொள்ள பேதுரு முயற்சி செய்தான், இவ்வாறு அவரைத் திருப்திப்படுத்துவதற்கு தேவனுடைய தேவைகளை எளிதாக நிறைவேற்றினான். தேவனுடைய வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட பல சரியான நடைமுறைகளை பேதுரு கொண்டிருந்தான்; இதுவே தேவனுடைய சித்தத்திற்குப் பெரிதும் ஏற்புடையதாக இருந்தது, மேலும் இது தேவனுடைய கிரியையை அனுபவிக்கும் போது ஒருவர் ஒத்துழைக்கக்கூடிய சிறந்த வழியாக இருந்தது. பேதுரு தேவனிடமிருந்து வந்த நூற்றுக்கணக்கானச் சோதனைகளை அனுபவித்த போது, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தைக்கும், மனுஷனைக் குறித்த தேவனுடைய வெளிப்பாட்டுக்கும், மனுஷன் மீதான அவருடைய கோரிக்கைகளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிராகத் தன்னைத்தானே கண்டிப்பான முறையில் ஆராய்ந்து, அந்த வார்த்தைகளின் அர்த்தத்தைத் துல்லியமான வகையில் புரிந்துகொள்ள முயற்சி செய்தான். இயேசு தன்னிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் சிந்திக்கவும் மனப்பாடம் செய்யவும் அவன் வாஞ்சையோடு முயற்சி செய்து, நல்ல பலன்களை அடைந்தான். இவ்விதமான செயல்பாடுகளின் மூலம், அவனால் தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக தன்னைத்தானே புரிந்துகொள்ள முடிந்தது, மேலும் அவன் மனுஷனுடைய பல்வேறு சீர்கேடான நிலைகளைப் புரிந்துகொண்டது மட்டுமல்லாமல், மனுஷனுடைய சாராம்சம், சுபாவம் மற்றும் பல்வேறு குறைபாடுகளையும் புரிந்துகொண்டான். இதுதான் தன்னைத்தானே மெய்யாகவே புரிந்துகொள்வது என்பதன் அர்த்தமாகும். தேவனுடைய வார்த்தைகளிலிருந்து, பேதுரு தன்னைப் பற்றிய உண்மையான புரிதலை அடைந்தது மட்டுமல்லாமல், தேவனுடைய நீதியான மனநிலையையும், அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார், அவருடைய கிரியைக்கான அவருடைய சித்தம் மற்றும் மனுக்குலத்தின் மீதான அவருடைய கோரிக்கைகள் ஆகியவற்றையும் பார்த்தான். இந்த வார்த்தைகளின் மூலமாக அவன் தேவனை உண்மையிலேயே அறிந்துகொண்டான். அவன் தேவனுடைய மனநிலையையும் அவருடைய சாராம்சத்தையும் அறிந்துகொண்டான்; தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் அவர் என்னவாக இருக்கிறார், அவருடைய தயை மற்றும் மனுஷன் மீதான தேவனுடைய கோரிக்கைகள் ஆகியவற்றை அவன் அறிந்தும் புரிந்தும் கொண்டான். தேவன் அப்போது இன்று பேசுவதைப் போல பேசவில்லை என்றாலும், இந்த அம்சங்களில் கிடைத்த பலன்களைப் பேதுரு அடைந்தான். இது ஒரு அரிதான மற்றும் விலையேறப்பெற்ற காரியமாக இருந்தது. பேதுரு நூற்றுக்கணக்கான சோதனைகளைச் சந்தித்தான், ஆனால் அவன் விருதாவாகத் துன்பப்படவில்லை. அவன் தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியையின் மூலமாகத் தன்னைப் புரிந்துகொண்டது மட்டுமல்லாமல், அவன் தேவனையும் அறிந்துகொண்டான். மேலும், அவன் குறிப்பாக அவருடைய வார்த்தைகளுக்குள் மனுக்குலத்தின் மீதான தேவனுடைய தேவைகளில் கவனம் செலுத்தினான். தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இருக்க எந்த அம்சங்களில் எல்லாம் மனுஷன் தேவனைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதில், பேதுருவால் இந்த அம்சங்களில் பெரும் முயற்சியை மேற்கொள்ளவும் முழுத் தெளிவை அடையவும் முடிந்தது. இது அவனுடைய ஜீவப்பிரவேசம் தொடர்பாக மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தேவன் என்ன பேசினாலும், அந்த வார்த்தைகள் ஜீவனாக மாறவும், சத்தியமாக இருக்கும் வரை, பேதுருவால் அவற்றை அடிக்கடி சிந்திக்கவும் புரிந்துகொள்ளவும் இருதயத்தில் பொறித்து வைக்கவும் அடிக்கடி நன்றி பாராட்டவும் முடிந்தது. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அவனால் அவற்றை முக்கியப்படுத்த முடிந்தது, அவன் குறிப்பாக தேவனுடைய வார்த்தைகளில் கவனம் செலுத்தினான் என்பதையும், இறுதியில் அவன் மெய்யாகவே பலன்களை அடைந்தான் என்பதையும் இது காண்பிக்கிறது. அதாவது, அவனால் தேவனுடைய வார்த்தைகளை விடுதலையோடு நடைமுறைப்படுத்தவும், சத்தியத்தை மிகச் சரியாகக் கடைப்பிடிக்கவும் மற்றும் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இருக்கவும், தேவனுடைய நோக்கத்திற்கு ஏற்ப முழுமையாகச் செயல்படவும் மற்றும் தனது சொந்தக் கருத்துக்களையும் கற்பனைகளையும் விட்டுவிடவும் முடிந்தது. இவ்வாறு, பேதுரு தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசித்தான். பேதுரு இதைச் செய்திருந்ததனாலேயே அவனுடைய ஊழியம் முக்கியமாக தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப வந்தது.

ஒருவர் தனது கடமையை நிறைவேற்றும் போது தேவனைத் திருப்திப்படுத்த முடியுமானால், ஒருவருடைய வார்த்தைகளும் செயல்களும் சரியாக இருந்தால், சத்தியத்தின் எல்லா அம்சங்களின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முடியுமானால், அப்போதுதான் ஒருவர் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட நபராக இருக்கிறார். தேவனுடைய கிரியையும் வார்த்தைகளும் அவர்களுக்கு முற்றிலும் பயனுள்ளதாக இருந்தன என்று சொல்லலாம், தேவனுடைய வார்த்தைகள் அவர்கள் ஜீவனாகி விட்டன, அவர்கள் சத்தியத்தைப் பெற்றிருக்கின்றனர், மேலும் அவர்களால் தேவனுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப ஜீவிக்க முடிகிறது. இதன் பிறகு, அவர்களுடைய மாம்சத்தின் சுபாவம், அதாவது, அவர்களுடைய உண்மையான இருப்பின் அஸ்திபாரம் அசைந்து விழுந்து அழிந்து விடும். ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தங்களுடைய ஜீவனாகக் கொண்ட பிறகு, அவர்கள் புதிய ஜனங்களாக மாறுவார்கள். தேவனுடைய வார்த்தைகள் ஜனங்களுடைய வாழ்க்கையாக மாறினால், தேவனுடைய கிரியையைக் குறித்த தரிசனம், மனுக்குலத்தின் மீதான அவருடைய வெளிப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் மற்றும் ஜனங்கள் கையாளும்படி தேவன் கோரும் மனித ஜீவனுக்கான தரநிலைகள் அவர்களின் ஜீவனாக மாறினால், ஜனங்கள் இந்த வார்த்தைகள் மற்றும் சத்தியங்களுக்கு ஏற்ப ஜீவித்தால், அப்போது அவர்கள் தேவனுடைய வார்த்தைகளால் பரிபூரணமாக்கப்படுகின்றனர். இதுபோன்றவர்கள் மறுபடியும் பிறக்கின்றனர், மேலும் தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக புதியவர்களாகியிருக்கின்றனர். பேதுரு சத்தியத்தைப் பின்தொடர்ந்த பாதை இதுதான்; அது பரிபூரணப்படுத்தப்படுவதற்கான பாதையாக இருந்தது. அவன் தேவனுடைய வார்த்தைகளால் பரிபூரணப்படுத்தப்பட்டான், தேவனுடைய வார்த்தைகளிலிருந்து ஜீவனைப் பெற்றான். தேவன் வெளிப்படுத்திய சத்தியமானது அவனுடைய ஜீவனாக மாறியது, அப்போதுதான் அவன் சத்தியத்தைப் பெற்ற ஒருவனாக மாறினான்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பேதுருவின் பாதையில் நடப்பது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 568

ஜனங்கள் தேவனுடைய கிரியையை அனுபவித்து சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் வரை, சாத்தானின் சுபாவமேஆளுகை செய்து, உள்ளிருந்து அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக, அந்த சுபாவம் எதைக்உண்டாக்குகிறது? உதாரணமாக, நீ ஏன் சுயநலமாக இருக்கிறாய்? நீ ஏன் உன் சொந்த பதவியைப் பாதுகாக்கிறாய்? உன்னிடம் ஏன் இதுபோன்ற வலுவான உணர்ச்சிகள் உள்ளன? நீ ஏன் அநீதியான காரியங்களை அனுபவிக்கிறாய்? நீ ஏன் அந்தத் தீமைகளை விரும்புகிறாய்? இதுபோன்ற காரியங்களில் உன் விருப்பம் இருப்பதற்கான அடிப்படை காரணம் என்ன? இந்தக் காரியங்கள் எங்கிருந்து வருகின்றன? நீ ஏன் அவற்றை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறாய்? சாத்தானின் விஷம் மனிதனுக்குள் இருப்பதுதான் இந்தக் காரியங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்பதை இப்போது நீங்கள் எல்லோரும் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஆகவே சாத்தானின் விஷம் என்றால் என்ன? அதை முழுமையாக எப்படி வெளிப்படுத்த முடியும்? உதாரணமாக, நீங்கள் “மக்கள் எப்படி வாழ வேண்டும்? மக்கள் எதற்காக வாழ வேண்டும்?” என்று கேட்டால், “ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து, துரதிர்ஷ்டசாலிகளை அவரவர் தலைவிதிக்கு விட்டுவிடட்டும்” என்று ஜனங்கள் பதிலளிப்பார்கள். இந்த ஒற்றைச் சொற்றொடரானது பிரச்சனையின் மூலக் காரணத்தை வெளிப்படுத்துகிறது. சாத்தானின் தத்துவமும் பகுத்தறிவுக்கேதுவான எண்ணப்போக்கும் ஜனங்களுடைய ஜீவனாக மாறியிருக்கிறது. ஜனங்கள் எதைப் பின்தொடர்ந்து போனாலும், அவர்கள் அதைத் தங்களுக்காகவே செய்கிறார்கள், அதனால் அவர்கள் தங்களுக்காக மட்டுமே வாழ்கிறார்கள். “ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து, துரதிர்ஷ்டசாலிகளை அவரவர் தலைவிதிக்கு விட்டுவிடட்டும்”—இதுதான் மனுஷனுடைய வாழ்க்கை தத்துவமுமாக இருக்கிறது, மேலும் இது மனித சுபாவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த வார்த்தைகள் ஏற்கெனவே சீர்கேடான மனிதகுலத்தின் சுபாவமாகவும், சீர்கேடு நிறைந்த மனிதகுலத்தின் சாத்தானிய சுபாவத்தின் உண்மையான உருவப்படமாகவும் மாறிவிட்டன, மேலும் இந்தச் சாத்தானிய சுபாவம் ஏற்கனவே சீர்கேடான மனிதகுலத்தின் இருப்புக்கான அடிப்படையாக மாறிவிட்டது; பல ஆயிரம் ஆண்டுகளாக, சாத்தானின் இந்த விஷத்தின்படி இன்றுவரை சீர்கெட்ட மனிதகுலம் வாழ்ந்திருக்கிறது. சாத்தான் செய்யும் அனைத்தும் அதன் சொந்த ஆர்வத்துக்காகவும், இலட்சியங்களுக்காகவும் மற்றும் நோக்கங்களுக்காகவும் ஆகும்; அது தேவனை விஞ்சவும், தேவனிடமிருந்து விடுபடவும், தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் கைப்பற்றவும் விரும்புகிறது. இன்று, ஜனங்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டுள்ள அளவு இதுவாகும்: அவர்கள் அனைவரும் சாத்தானிய சுபாவங்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் அனைவரும் தேவனை மறுதலிக்கவும் எதிர்க்கவும் முயற்சிக்கின்றனர், அவர்கள் தங்கள் சொந்த விதிகளைக் கட்டுப்படுத்த விரும்புகின்றனர் மற்றும் தேவனுடைய திட்டங்களையும் ஏற்பாடுகளையும் எதிர்க்க முயற்சிக்கின்றனர், அவர்களின் இலட்சியங்கள் மற்றும் ஆர்வங்கள் அப்படியே சாத்தானுடையவைப் போன்றே இருக்கின்றன. ஆகையால், மனித சுபாவம் சாத்தானின் சுபாவமாக இருக்கிறது. உண்மையில் பலரின் பொன்மொழிகள் மற்றும் ஞானமான பழமொழிகள் மனித சுபாவத்தைக் குறிக்கின்றன மற்றும் மனித சீர்கேட்டின் சாரம்சத்தைப் பிரதிபலிக்கின்றன. ஜனங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் அவர்களின் சொந்த விருப்பங்கள் ஆகும், மேலும் அவை அனைத்தும் ஜனங்களின் மனநிலைகளையும் பின்தொடர்தல்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஒருவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும், அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும், அது எவ்வளவு வேஷம் போடப்பட்டிருந்தாலும், அவர்களால் தங்கள் சுபாவத்தை மறைக்க முடியாது. உதாரணமாக, பரிசேயர்கள் பொதுவாக மிகவும் நேர்த்தியாகப் பிரசங்கித்தனர், ஆனால் அவர்கள் இயேசு வெளிப்படுத்திய பிரசங்கங்களையும் சத்தியங்களையும் கேட்டபோது, அவற்றை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் அவற்றைக் கண்டனம் செய்தனர். இது பரிசேயர்களின் சுபாவத்தையும் சத்தியத்தைக் குறித்து வெறுத்துப் போயிருப்பதையும், வெறுப்பதையும் அம்பலப்படுத்துகிறது. சிலர் மிகவும் அழகாகப் பேசுகிறார்கள், மாறுவேடமிடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள், ஆனால் மற்றவர்கள் அவர்களுடன் சிறிது நேரம் பழகிய பின், மற்றவர்கள் அவர்களின் சுபாவம் மிகவும் தந்திரமாகவும் நேர்மையற்றதாகவும் இருப்பதைக் காண்கின்றனர். அவர்களுடன் நீண்ட காலம் பழகிய பிறகு, மற்ற அனைவரும் அவர்களின் சாரம்சத்தையும் சுபாவத்தையும் கண்டுபிடிக்கிறார்கள். இறுதியாக, மற்றவர்கள் பின்வரும் முடிவை எடுக்கின்றனர்: அவர்கள் ஒருபோதும் சத்தியத்தைப் பற்றிய ஒரு வார்த்தையையும் பேசுவதில்லை, மேலும் வஞ்சகராகவும் இருக்கிறார்கள். இக்கூற்று இதுபோன்ற ஜனங்களின் சுபாவத்தைக் குறிக்கிறது; இது அவர்களுடைய சுபாவம் மற்றும் சாராம்சத்தின் சிறந்த எடுத்துக்காட்டு மற்றும் சான்றாகும். ஜீவியத்தைப் பற்றிய அவர்களுடைய தத்துவம் என்னவென்றால் சத்தியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது, அத்துடன் யாரையும் நம்பக்கூடாது என்பதுதான். மனுஷனுடைய சாத்தானிய சுபாவமானது தத்துவங்களைப் பெருமளவில் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் உனக்கே அவற்றைப் பற்றித் தெரிவதில்லை, அவற்றைப் புரிந்துகொள்வதுமில்லை; ஆனாலும், உன் ஜீவியத்தின் ஒவ்வொரு தருணமும் அவற்றையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தத் தத்துவங்கள் மிகவும் சரியானது மற்றும் நியாயமானது என்றும், இதில் தவறேதும் இல்லை என்றும் நீ நினைக்கிறாய். சாத்தானின் தத்துவங்களே ஜனங்களுடைய சுபாவமாக மாறிவிட்டது என்பதையும், இப்படியாக வாழ்வது நல்லது என்று நினைத்தும், மனந்திரும்புதலின் உணர்வு சிறிதளவும் இல்லாமல், அவர்கள் அவற்றுடன் முழுமையாக இணங்கி ஜீவிக்கின்றனர் என்பதையும் நிரூபிக்க இது போதுமானதாகும். ஆகையால், அவர்கள் தொடர்ந்து தங்கள் சாத்தானிய சுபாவத்தை வெளிப்படுத்துகின்றனர், மேலும் எல்லா அம்சங்களிலும், அவர்கள் சாத்தானின் தத்துவங்களின்படியே தொடர்ந்து ஜீவிக்கின்றனர். சாத்தானின் சுபாவமானது மனுக்குலத்தின் ஜீவனாக இருக்கிறது, மேலும் அது மனிதகுலத்தின் சுபாவம் மற்றும் சாராம்சமாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பேதுருவின் பாதையில் நடப்பது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 569

நீங்கள் வெளிப்படுத்தும் சீர்கேடான மனநிலையை உங்களால் இப்போது ஓரளவு அடையாளங்காண முடிகிறது. எந்தச் சீர்கேடான விஷயங்களை நீங்கள் இன்னும் வெளிப்படுத்த பொறுப்பாக இருக்கிறீர்கள் மற்றும் சத்தியத்துக்கு முரணான எந்த விஷயங்களுக்கு நீங்கள் இன்னும் பொறுப்பாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தவுடன், உங்கள் சீர்கேடான மனநிலையைச் சுத்திகரிப்பது எளிதாக இருக்கும். ஏன், பல விஷயங்களில், ஜனங்களால் தங்களைக் குறித்தே புரிந்துகொள்ள முடிவதில்லை? ஏனென்றால், எல்லா நேரங்களிலும், எல்லா விஷயங்களிலும் அவர்கள் தங்கள் சீர்கேடான மனநிலைகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், அது எல்லா விஷயங்களிலும் அவர்களைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் தலையிடுகிறது. அவர்கள் சிக்கலில் இல்லாத போதும், கீழே விழுந்துவிடாத போதும் அல்லது எதிர்மறையாக மாறாத போதும், சிலர் எப்போதும் தங்களைத் தாங்களே வளர்ச்சியைக் கொண்டிருப்பவர்களாக நினைக்கிறார்கள், மேலும் ஒரு துன்மார்க்கர், ஒரு தவறான தலைவர், அல்லது அந்திக்கிறிஸ்து அம்பலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டால் அதைப் பற்றி எதுவும் நினைக்க மாட்டார்கள். “வேறு யாரும் கீழே விழலாம், ஆனால் நான் அல்ல. வேறு யாரும் தேவனை நேசிக்காமல் இருக்கலாம், ஆனால் நான் நேசிக்கிறேன்” என்று எல்லோரிடமும் அவர்கள் தற்பெருமையாகப் பேசக் கூடப் பொருத்தமானவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் அல்லது சூழலிலும் தங்கள் சாட்சியத்தில் தங்களால் உறுதியாக நிற்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். விளைவு என்ன? அவர்கள் சோதிக்கப்படும் ஒருநாள் வருகிறது, அவர்கள் தேவனைப் பற்றிப் புலம்புகிறார்கள். இது தோல்வியடைகிறது இல்லையா, இது கீழே விழுகிறது இல்லையா? ஜனங்கள் சோதிக்கப்படும்போது அம்பலப்படுத்துவதைப் போன்று வேறு எதுவும் அவர்களை அதிகமாக அப்படிச் செய்வதில்லை. தேவன் மனிதனின் உள்ளார்ந்த இருதயத்தை ஆய்வு செய்கிறார், ஜனங்கள் எந்த நேரத்திலும் தற்பெருமை பேசக் கூடாது. அவர்கள் எதைப் பற்றி தற்பெருமை பேசினாலும், விரைவில் அவர்கள் கீழே விழுவார்கள். ஒரு குறிப்பிட்ட சூழலில் மற்றவர்கள் கீழே விழுந்து தோல்வியடைவதைப் பார்த்து, அவர்கள் அதைப் பற்றி எதுவும் நினைப்பதில்லை, மேலும் அவர்களால் எந்தத் தவறும் செய்ய முடியாது என்று கூட நினைக்கிறார்கள், ஆனால், அவர்களும், அதே சூழலில் கீழே விழுந்து தோல்வியடைகிறார்கள். இது எவ்வாறு இருக்க முடியும்? இது ஏனென்றால் ஜனங்கள் தங்கள் சுபாவத்தை அல்லது சாராம்சத்தை முற்றிலுமாகப் புரிந்துகொள்ளுவதில்லை; அவர்களின் சொந்த சுபாவம் மற்றும் சாராம்சத்திலிருக்கும் பிரச்சனைகள் பற்றிய அவர்களுடைய அறிவு இன்னும் போதுமான அளவுக்கு ஆழமாக இல்லை, ஆகவே சத்தியத்தைக் கடைப்பிடிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கிறது. உதாரணமாக, சிலர் வார்த்தையிலும் செயலிலும் மிகவும் ஏமாற்றுக்காரர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும் இருக்கின்றனர், இருப்பினும் நீ அவர்களிடம் எதைப் பொறுத்தவரையில் அவர்களது சீர்கேடான மனநிலை மிகவும் கடுமையானதாக இருக்கிறது என்று கேட்டால், அவர்கள், “நான் கொஞ்சம் ஏமாற்றுக்காரனாக இருக்கிறேன்” என்று கூறுவார்கள். அவர்கள் வெறுமனே தாங்கள் கொஞ்சம் ஏமாற்றுக்காரர்களாக இருப்பதாகக் கூறுவார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சுபாவமே கபடமானது என்று கூறமாட்டார்கள், மேலும் அவர்கள் தாங்கள் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று கூறமாட்டார்கள். தங்கள் சொந்த சுபாவத்தைப் பற்றிய அவர்களின் அவ்வளவு ஆழமானதாக இல்லை, மேலும் அவர்கள் அதை முக்கியமான ஒரு விஷயமாகவோ, அல்லது முற்றிலுமாகவோ பிறரைப் போல பார்க்கமாட்டார்கள். இந்த நபர் பெரும் ஏமாற்றுக்காரனாகவும் மிகவும் வஞ்சகனாகவும் இருக்கிறான், அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் நயவஞ்சகம் இருக்கிறது மேலும் அவனுடைய வார்த்தைகளும் செயல்பாடுகளும் ஒருபோதும் நேர்மையாக இருக்காது என்பதை மற்றவர்கள் காண்பார்கள்—ஆனால் அவர்களால் மிக ஆழமாக தங்களுக்குள் பார்க்க முடியாது. ஏதாவது அறிவு அவர்களுக்கு இருக்குமேயானால் அது வெறும் மேலோட்டமானதே. எப்போதெல்லாம் அவர்கள் பேசுகிறார்களோ அல்லது செயல்படுகிறார்களோ, அப்போதெல்லாம் தங்கள் சுபாவத்தில் எதையாவது வெளிப்படுத்துவார்கள், இருப்பினும் அவர்களுக்கு அதைப்பற்றி தெரியாது. அவர்கள் இவ்வாறு செயல்படுவது சீர்கேட்டின் வெளிப்பாடு அல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள், அவர்கள் ஏற்கனவே சத்தியத்தைக் கடைப்பிடித்து விட்டதாக நினைக்கிறார்கள், ஆனால் பார்க்கும் ஜனங்களுக்கு, இந்த நபர் மிகவும் நயவஞ்சகமானவராகவும் தந்திரமானவராகவும் இருக்கிறார், அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் மிகவும் நேர்மையற்றவையாக இருக்கின்றன. அதாவது, ஜனங்கள் தங்கள் சொந்த சுபாவத்தைப் பற்றி மிகவும் மேலோட்டமான புரிதலையே கொண்டிருக்கிறார்கள், மேலும் இதற்கும் அவர்களை நியாயந்தீர்த்து அம்பலப்படுத்தும் தேவனின் வார்த்தைகளுக்கும் நடுவில் மாபெரும் வேறுபாடு உள்ளது. இது தேவன் எதை வெளிப்படுத்துகிறாரோ அதில் உள்ள தவறல்ல, ஆனால் இது தங்கள் சொந்த சுபாவத்தைக் குறித்து மனிதனுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லாமல் இருப்பதேயாகும். ஜனங்களுக்குத் தங்களைப் பற்றிய அடிப்படையான அல்லது அத்தியாவசியமான புரிதல் இல்லை; அதற்குப் பதிலாக, தங்கள் செய்கைகள் மற்றும் வெளியரங்கமான வெளிப்பாடுகளில் கவனம் செலுத்தி தங்கள் சக்தியை அர்ப்பணிக்கிறார்கள். எப்போதாவது யாரோ ஒருவர் தன்னைப் பற்றிய புரிதலைக் குறித்துக் கூறினாலும் அது மிகவும் ஆழமானதாக இருப்பதில்லை. ஒருவரும் ஒருபோதும் தாங்கள் குறிப்பிட்ட வகையான விஷயத்தைச் செய்ததனால் அல்லது குறிப்பிட்ட ஒன்றை வெளிப்படுத்தியதால், அவர்கள் குறிப்பிட்ட வகையான நபர் என்றோ அல்லது குறிப்பிட்ட வகையான சுபாவத்தை கொண்டிருப்பவர்கள் என்றோ சிந்தித்ததில்லை. தேவன் மனுக்குலத்தின் சுபாவத்தையும் சாராம்சத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார் மற்றும் அவர்கள் பேசும் விதம் தவறானதும் குறையுள்ளதுமாகும்; ஆகவே, சத்தியத்தைக் கடைப்பிடிப்பது என்பது ஜனங்களுக்குக் கடுமையான வேலையாகும். தங்கள் தவறுகள் தங்கள் சுபாவத்தின் வெளிப்பாடுகள் என்பதற்கு மாறாக அவை கவனமில்லாமல் வெளிப்படுத்தப்பட்ட வெறும் கணநேர வெளிப்பாடுகள் என்றே ஜனங்கள் நினைக்கிறார்கள். இவ்விதமாக ஜனங்கள் சிந்திக்கும் போது, அவர்களுக்கு உண்மையாக தங்களையே அறிந்துகொள்ள மிகவும் கடினமாக இருக்கும், மேலும் அவர்களுக்கு சத்தியத்தைப் புரிந்து கொள்ளவும் கடைப்பிடிக்கவும் மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கு சத்தியம் தெரியாது மற்றும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் போது, சத்தியத்தின்பால் தாகமுள்ளவர்களாக இல்லை, அவர்கள் முழுமையாக விதிகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். தங்கள் சுபாவம் மிகவும் சீர்கெட்டதாக இருக்கிறது என்று ஜனங்கள் பார்ப்பதில்லை, மேலும் அழிக்கப்படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும் தாங்கள் மிகவும் கெட்டவர்கள் அல்ல என்று நம்புகிறார்கள். இருந்தாலும் தேவனுடைய தராதரங்களின்படி, ஜனங்களின் சீர்கேடானது மிகவும் ஆழமானது, அவர்கள் இன்னும் இரட்சிப்பின் தரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளனர். ஏனெனில் சத்தியத்தை வெளிப்படையாக மீறாத சில செயல்பாடுகளே ஜனங்களிடம் உள்ளன, ஆனால் உண்மையில் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை.

ஒரு நபரின் நடத்தையிலோ அல்லது நடந்துகொள்ளும் விதத்திலோ ஏற்படும் மாற்றங்கள் அவரது சுபாவத்தில் இருக்கும் மாற்றத்தைக் குறிக்காது. இதற்குக் காரணம், ஒருவரின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களின் அசல் தோற்றத்தை அடிப்படையில் மாற்ற முடியாது, அது அவர்களின் சுபாவத்தையும் மாற்ற முடியாது. ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டு அவர்களின் சொந்த சுபாவம் மற்றும் சாராம்சத்தைப் பற்றிய அறிவைப் பெற்று, சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடிந்தால் மட்டுமே, அவர்களின் நடைமுறை ஆழமானதாகவும், விதிகளின் தொகுப்பைக் கடைப்பிடிப்பதைத் தவிர வேறொன்றாகவும் மாற முடியும். இன்று ஜனங்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் விதமானது இன்னும் தரமானதாக இல்லை, மேலும் சத்தியத்திற்குத் தேவையான அனைத்தையும் முழுமையாக அடைய முடியவில்லை. ஜனங்கள் சத்தியத்தின் ஒரு பகுதியை மட்டுமே கடைப்பிடிக்கிறார்கள், அவர்கள் சில நிலைகளிலும் சூழ்நிலைகளிலும் இருக்கும்போது மட்டுமே, அவர்களால் சிறிது சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடிகிறது; எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நிலைகளிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க அவர்களால் முடிவதில்லை. சில சமயங்களில் ஒரு நபர் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அவரது நிலை நன்றாக இருக்கும் போது, அல்லது அவர் மற்றவர்களுடன் ஐக்கியங்கொள்ளும்போது, அவர்களின் இருதயத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான பாதை இருக்கும்போது, அந்த நேரத்திற்கு மட்டும், அவர்களால் சத்தியத்தோடு இணங்கிப் போகும் சில காரியங்களைச் செய்ய முடிகிறது. ஆனால் அவர்கள் எதிர்மறையான மற்றும் சத்தியத்தைப் பின்தொடராத ஜனங்களுடன் வாழும்போது, அவர்கள் இந்த நபர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள், மேலும் அவர்களின் இருதயத்தில் அவர்கள் பாதையை இழந்து, சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சி மிகவும் சிறியது என்பதையும், அவர்கள் இன்னும் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. சில தனிநபர்கள் உள்ளனர், அவர்கள் சரியான நபர்களால் வழிகாட்டப்பட்டு வழிநடத்தப்பட்டால், அவர்களால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியும்; ஆனால் அவர்கள் ஒரு தவறான தலைவர் அல்லது அந்திக்கிறிஸ்து மூலம் ஏமாற்றப்பட்டுத் தொந்தரவு செய்யப்பட்டால், அவர்களால் சத்தியத்தைக் கடைபிடிக்க முடியாது என்பது மட்டுமில்லாமல், மற்றவர்களைப் பின்தொடர்வதில் ஏமாற்றப்படுவதற்கும் ஆளாகிறார்கள். அத்தகையவர்கள் இன்னும் ஆபத்தில் உள்ளனர், இல்லையா? இந்த மாதிரியான வளர்ச்சியை உடைய இத்தகையவர்களால் எல்லா விஷயங்களிலும் சூழல்களிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாது. அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடித்தாலும், அது அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கும்போது அல்லது மற்றவர்களால் வழிநடத்தப்படும் போது மட்டுமே இருக்கும்; அவர்களை வழிநடத்த நல்லவர்கள் இல்லாமல், அவர்கள் இன்னும் சத்தியத்தை மீறும் விஷயங்களைச் செய்யத் தகுதியுடையவர்களாக இருக்கும் நேரங்கள், அவர்கள் இன்னும் தேவனுடைய வார்த்தைகளில் இருந்து விலகிச் செல்லும் சில நேரங்கள் இருக்கும். இதற்கு என்ன காரணம்? உன்னுடைய சில நிலைகளைப் பற்றி மட்டுமே நீ அறிந்திருப்பதாலும், உன் சொந்த சுபாவம் மற்றும் சாராம்சத்தைப் பற்றிய அறிவு இல்லாததாலும், மாம்சத்தைத் துறந்து சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் வளர்ச்சியை நீ அடையாததும் தான் காரணம்; அதனால், எதிர்காலத்தில் நீ என்ன செய்வாய் என்பதில் உனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை, மேலும் உன்னால் எந்தச் சூழ்நிலையிலும் அல்லது சோதனையிலும் உறுதியாக நிற்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. நீங்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய நிலையில் இருக்கும் சில நேரங்கள் இருக்கின்றன, மேலும் நீங்கள் சில மாற்றங்களை வெளிப்படுத்துவது போலத் தெரியும், இருப்பினும், வேறுபட்ட சூழலில் உங்களால் அதைக் கடைப்பிடிக்க முடியாது. இது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. சில நேரங்களில் நீங்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கலாம், சில சமயங்களில் உங்களால் கடைப்பிடிக்க முடியாது. ஒரு கணம், நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், அடுத்த கணம், நீங்கள் குழப்பமடைகிறீர்கள். தற்போது, நீங்கள் மோசமாக எதையும் செய்யவில்லை, ஆனால் ஒருவேளை சிறிது காலத்தில் நீங்கள் செய்வீர்கள். உங்களுக்குள் இன்னும் சீர்கேடான காரியங்கள் இருக்கின்றன என்பதை இது நிரூபிக்கிறது, மேலும் உண்மையான சுய அறிவுக்குத் தகுதியற்றவராக நீங்கள் இருந்தால், அவற்றை எளிதில் தீர்க்க முடியாது. உங்கள் சொந்தச் சீர்கேடான மனநிலைப் பற்றிய முழுமையான புரிதலை உங்களால் அடைய முடியாவிட்டால், இறுதியில் தேவனை எதிர்க்கும் விஷயங்களை உங்களால் செய்ய முடிந்தால், அப்போது நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். உன்னால் உன் சுபாவத்தை ஊடுருவும் நுண்ணறிவை அடைந்து அதை வெறுக்க முடிந்தால், அப்போது உன்னால் உன்னைக் கட்டுப்படுத்தவும், உன்னை அடக்கவும், சத்தியத்தைக் கடைப்பிடிக்கவும் முடியும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 570

சத்தியத்தைத் தெளிவாக ஐக்கியம் கொள்வதன் நோக்கம் என்னவென்றால், ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளவும், கடைப்பிடிக்கவும், அவர்களின் மனநிலைகளில் மாற்றங்களை அடையவும் உதவுவதாகும். அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன் அவர்களின் இருதயங்களுக்கு வெறுமனே வெளிச்சத்தையும் சிறிது மகிழ்ச்சியையும் தருவது அல்ல. நீ சத்தியத்தைப் புரிந்து கொண்டும் சத்தியத்தைப் பின்பற்றவில்லை என்றால், பின்னர் சத்தியத்தை ஐக்கியங்கொள்வதிலும் புரிந்து கொள்வதிலும் எந்த அர்த்தமும் இல்லை. ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டும் அதை கடைபிடிக்காத போது ஏற்படும் பிரச்சனை என்ன? அவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை என்பதற்கும், அவர்கள் இருதயங்களில், அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்பதற்கும், இதனால் அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களையும் இரட்சிப்புக்கான வாய்ப்பையும் இழப்பார்கள் என்பதற்குமான சான்று இதுவாகும். ஜனங்களால் இரட்சிப்பை அடைய முடியுமா இல்லையா என்பதில், அவர்களால் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு கடைப்பிடிக்க முடியுமா என்பது தான் முக்கியமானதாகும். நீ புரிந்து கொண்ட அனைத்து சத்தியங்களையும் நீ கடைப்பிடித்திருந்தால், நீ பரிசுத்த ஆவியானவரின் பிரகாசம், வெளிச்சம் மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவாய், மேலும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முடியும், சத்தியத்தைப் பற்றிய ஆழமான புரிதலை அடைவாய், மேலும் சத்தியத்தைப் பெறுவாய் மற்றும் தேவனுடைய இரட்சிப்பை அடைவாய். சிலர் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள், அவர்கள் எப்போதும் பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் பிரகாசிப்பதில்லை அல்லது ஒளிரச் செய்வதில்லை என்றும், தேவன் அவர்களுக்குப் பெலனைக் கொடுப்பதில்லை என்றும் புகார் கூறுகிறார்கள். இது தவறாகும்; இது தேவனைத் தவறாகப் புரிந்து கொள்ளுதலாகும். பரிசுத்த ஆவியானவரின் பிரகாசமும் வெளிச்சமும் ஜனங்களின் ஒத்துழைப்பு என்னும் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது. ஜனங்கள் நேர்மையானவர்களாகவும், சத்தியத்தைக் கடைப்பிடிக்கத் தயாராகவும் இருக்க வேண்டும், மேலும் அவர்களின் புரிதல் ஆழமாக இருந்தாலும் அல்லது மேலோட்டமாக இருந்தாலும் அவர்களால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் பிரகாசிப்பிக்கப்படுவார்கள் மற்றும் ஒளியூட்டப்படுவார்கள். ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டும் அதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் செயல்பட்டு அவர்களை அதைக் கடைபிடிக்கக் கட்டாயப்படுத்தும்படி வெறுமனே காத்திருந்தால், அவர்கள் மிகவும் செயலற்றவர்களாக இருக்கிறார்கள் இல்லையா? தேவன் ஜனங்களை எதையும் செய்யும்படி ஒருபோதும் கட்டாயப்படுத்துவதில்லை. ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டும் அதைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை அல்லது அவர்களின் நிலை இயல்பாக இல்லை மற்றும் சில வகையான தடை உள்ளது என்பதை இது காட்டுகிறது. ஆனால் ஜனங்களால் தேவனிடம் ஜெபம் செய்ய முடிந்தால், தேவனும் செயல்படுவார்; அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்பாமல் மற்றும் தேவனிடம் ஜெபிக்காமல் இருந்தால் மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் எவ்வகையிலும் அவர்களில் கிரியை செய்ய முடியாது. உண்மையில், ஜனங்களுக்கு எந்த வகையான சிரமம் இருந்தாலும், அதை எப்போதும் தீர்க்க முடியும்; முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்களால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியுமா முடியாதா என்பதுதான். இன்று, உங்களில் உள்ள சீர்கேட்டின் பிரச்சினைகள் புற்று நோய் அல்ல, அவை ஏதோ குணப்படுத்த முடியாத நோய் அல்ல. உங்களால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க தீர்மானிக்க முடிந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவீர்கள், மேலும் இந்தச் சீர்கெட்ட மனநிலைகள் மாறுவது சாத்தியமாகும். இவை அனைத்தும் நீங்கள் சத்தியத்தை கடைப்பிடிக்க முடிவு செய்ய முடியுமா என்பதைப் பொறுத்ததாகும், இதுதான் முக்கியமானதாகும். நீ சத்தியத்தைக் கடைப்பிடித்தால், சத்தியத்தைப் பின்தொடரும் பாதையில் நீ நடந்தால், அப்போது உன்னால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக் கொள்ள முடியும், மேலும் நிச்சயமாக இரட்சிக்கப்பட முடியும். நீ நடக்கும் பாதை தவறானது என்றால், அப்போது நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இழந்து போவாய், ஒரு தவறான படி மற்றொன்றைப் பிறப்பிக்கும், மேலும் எல்லாம் உனக்கு முடிந்து போகும், நீ எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து விசுவாசித்திருந்தாலும் சரி, உன்னால் இரட்சிப்பை அடைய முடியாது. உதாரணமாக, அவர்கள் வேலை செய்யும்போது, சிலர் தேவனுடைய வீட்டிற்கு நன்மை பயக்கும் விதத்திலும், தேவனுடைய சித்தத்திற்கு இணங்கவும் வேலை செய்வது எப்படி என்பதைப் பற்றி யோசிக்க மாட்டார்கள், இதன் விளைவாக அவர்கள் சுயநலமான மற்றும் இழிவான, தேவன் அருவருக்கிற மற்றும் வெறுக்கக்கூடிய பல காரியங்களைச் செய்வார்கள்; இப்படிச் செய்யும்போது, அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். எல்லாவற்றிலும் ஜனங்களால் சத்தியத்தைத் தேடவும் சத்தியத்தின்படி நடக்கவும் முடிந்தால், அவர்கள் ஏற்கெனவே தேவன் மீதான விசுவாசத்தின் சரியான பாதையில் நுழைந்திருக்கிறார்கள், எனவே தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற ஒருவராக மாறுவதற்கான நம்பிக்கை இருக்கிறது. சிலர் சத்தியத்தைப் புரிந்து கொள்கிறார்கள் ஆனால் அதைக் கடைப்பிடிப்பதில்லை. அதற்குப் பதிலாக, சத்தியம் என்பது இதைவிட வேறொன்றும் இல்லை என்றும், தங்களின் சொந்த விருப்பங்களையும் சீர்கெட்ட மனநிலைகளையும் சத்தியத்தால் தீர்க்க இயலாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நகைப்பிற்குரியவர்கள் அல்லவா? அவர்கள் கேலிக்குரியவர்கள் அல்லவா? அவர்கள் எல்லோரை விடவும் தாங்கள் புத்திசாலிகள் என்று நினைப்பவர்கள் அல்லவா? ஜனங்களால் சத்தியத்தின்படி செயல்பட முடிந்தால், அப்போது அவர்களின் சீர்கெட்ட மனப்பான்மை மாறலாம். அவர்களின் விசுவாசமும் தேவனுக்குச் செய்யும் ஊழியமும் அவரவர் இயல்பான ஆளுமையின்படி இருந்தால், அப்போது அவர்களில் ஒருவராலும் அவர்களின் மனநிலைகளில் மாற்றங்களை அடைய முடியாது. சிலர் தங்கள் சொந்தத் தவறான தேர்வுகளால் உண்டான வருத்தத்தால் நாள் முழுவதும் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆயத்தமான சத்தியம் கொடுக்கப்பட்டால், அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்கவோ அல்லது அதைக் கடைப்பிடிக்கவோ முயற்சிப்பதில்லை, ஆனால் தங்கள் சொந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்துகிறார்கள். இப்படி நடப்பது என்ன ஒரு அபத்தமான காரியம் ஆகும்; உண்மையாகவே, அவர்கள் அதைப் பார்க்கும்போது அவர்களுக்கு நல்ல விஷயம் தெரியாது, மேலும் கடினமான காரியங்களைக் கொண்டிருக்க விதிக்கப்பட்டிருப்பார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதாகும்; நீ அதை கடைப்பிடிக்கிறாயா இல்லையா என்பது தான் முக்கியம். நீ சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடிவு எடுத்தவனாக இருந்தால், அப்போது உன் எதிர்மறையான தன்மை, பலவீனம் மற்றும் சீர்கெட்ட மனநிலை படிப்படியாகத் தீர்க்கப்பட்டு மாற்றப்படும்; இது உன் இருதயம் சத்தியத்தை நேசிக்கிறதா இல்லையா, உன்னால் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள முடிகிறதா இல்லையா, நீ சத்தியத்தைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு விலைக்கிரயம் செலுத்த முடிகிறதா இல்லையா என்பதைப் பொறுத்ததாகும். இது ஜனங்களால் இழிவுபடுத்தப்பட்டாலும் நியாயந்தீர்க்கப்பட்டாலும், அல்லது கைவிடப்பட்டாலும், நீ சத்தியத்தை உண்மையாக நேசித்தால், சத்தியத்தைப் பெறுவதற்காக உன்னால் எல்லா வகையான வேதனைகளையும் அனுபவிக்க முடியும்; எப்படியாயினும், தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் மற்றும் பாதுகாப்பார், அவர் உன்னைக் கைவிடமாட்டார் அல்லது புறக்கணிக்க மாட்டார், இது உறுதியானதாகும். நீ தேவனுக்குப் பயப்படுகிற இருதயத்துடன் அவரிடம் ஜெபித்தால், தேவனைச் சார்ந்து அவரை நோக்கிப் பார்த்தால், உன்னால் அடையமுடியாத எதுவும் இருக்காது. நீ ஒரு சீர்கேடான மனநிலையைக் கொண்டு இருக்கலாம், நீ மீறலாம், ஆனால் தேவனுக்குப் பயப்படுகிற இருதயம் உனக்கு இருந்தால், நீ சத்தியத்தைப் பின்தொடரும் பாதையில் அதிகக் கவனமாக நடந்தால், அப்போது உன்னால் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக நிற்க முடியும், மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி தேவனால் வழிநடத்தப்பட்டு பாதுகாக்கப்படுவாய்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 571

நீங்கள் சத்தியத்தைக் குறித்த புரிதலை அடைய விரும்பினால், தேவனுடைய வார்த்தைகளை எப்படிப் புசித்துப் பானம்பண்ணுவது என்பதை நீங்கள் அறிந்திருப்பது முக்கியமாகும். நீ தேவனுடைய வார்த்தைகளை மிகக் குறைவாகப் படித்தால், அவற்றை ஆர்வத்துடன் படிக்காமல், உன் இருதயத்திற்குள் சிந்திக்காமல் இருந்தால், அப்போது உன்னால் சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாது. உன்னால் புரிந்து கொள்ள முடிகிறது எல்லாம் சிறிதளவு கோட்டுபாடு மட்டுமே, எனவே தேவனுடைய சித்தத்தையும் அவருடைய வார்த்தைகளில் உள்ள தேவனுடைய நோக்கத்தையும் புரிந்து கொள்வது உனக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். தேவனுடைய வார்த்தைகள் அடைய விரும்புகிற நோக்கங்களையும் முடிவுகளையும் நீ புரிந்து கொள்ளவில்லை என்றால், அவருடைய வார்த்தைகள் மனிதரிடம் எதை அடையவும் பரிபூரணப்படுத்தவும் முயல்கின்றன என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை என்றால், நீ இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அப்போது நீ இன்னும் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை அது நிரூபிக்கிறது. தேவன் ஏன் தாம் சொல்கிறதையே சொல்கிறார்? அவர் ஏன் அந்தத் தொனியில் பேசுகிறார்? அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் ஏன் மிகவும் ஆர்வமுள்ளவராகவும் நேர்மையுள்ளவராகவும் இருக்கிறார்? அவர் ஏன் குறிப்பிட்ட சில வார்த்தைகளைப் பயன்படுத்தத் தெரிந்தெடுக்கிறார்? உனக்குத் தெரியுமா? உன்னால் உறுதியாகச் சொல்ல முடியாவிட்டால், நீ தேவனுடைய சித்தத்தையோ அல்லது அவருடைய நோக்கங்களையோ புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தமாகும். அவருடைய வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள சூழலை நீ புரிந்து கொள்ளவில்லை என்றால், பின் உன்னால் எப்படிச் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவோ அல்லது அதைக் கடைப்பிடிக்கவோ முடியும்? சத்தியத்தைப் பெற, நீ முதலாவது தேவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள அவருடைய நோக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், பின்னர் நீ புரிந்து கொண்டதைக் கடைப்பிடிக்க வேண்டும், இது நீ தேவனுடைய வார்த்தைகளை உன்னில் வாழவும் உன் யதார்த்தமாக மாறவும் வழிவகுக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம் நீ சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பாய். நீ தேவனுடைய வார்த்தையைக் குறித்த முழுமையான புரிதலைக் கொண்டிருந்தால் மட்டுமே, உன்னால் உண்மையாகவே சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியும். வெறுமனே சில எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளைப் புரிந்து கொண்ட பிறகு, நீ சத்தியத்தைப் புரிந்துகொண்டதாகவும் யதார்த்தத்தைக் கொண்டிருப்பதாகவும் நினைக்கிறாய். இது சுயத்தை ஏமாற்றுவதாகும். ஜனங்கள் சத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று தேவன் ஏன் கேட்கிறார் என்பது கூட உனக்குப் புரியவில்லை. நீ தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையும், நீ இன்னும் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் இது நிரூபிக்கிறது. உண்மையில், ஜனங்களை இரட்சிக்கவே தேவன் இந்தக் கோரிக்கையை வைக்கிறார், இதனால் ஜனங்கள் தங்கள் சீர்கேடான மனநிலைகளை ஒதுக்கித் தள்ளவும் தேவனுக்குக் கீழ்ப்படிப்பவர்களாகவும் தேவனை அறிந்தவர்களாகவும் மாறவும் முடியும். ஜனங்கள் சத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கோருவதன் மூலம் தேவன் அடைய விரும்பும் இலக்கு இதுதான்.

சத்தியத்தை நேசிக்கும், சத்தியத்திற்காகத் தாகம் கொள்ளும் மற்றும் சத்தியத்தைத் தேடும் ஜனங்களுக்கு தேவன் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் மீது அக்கறை கொண்டவர்கள் மற்றும் நீண்ட, தற்புகழ்ச்சி மிக்கப் பேச்சுக்களை வழங்க விரும்புபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒருபோதும் சத்தியத்தைப் பெற மாட்டார்கள்; அவர்கள் தங்களையே முட்டாளாக்கிக் கொள்கிறார்கள். சத்தியம் மற்றும் தேவனுடைய வார்த்தைகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டம் தவறானதாகும், நேர்மையானதைப் படிக்க அவர்கள் கழுத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள் அவர்களின் கண்ணோட்டம் அனைத்தும் தவறானதாகும். சிலர் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்க விரும்புகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் எவ்வாறு தேவனுடைய வார்த்தைகளானது சென்றடையும் இடம் அல்லது எப்படி ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகின்றன என்பதைப் பற்றிப் வாசிக்கிறார்கள். அவர்கள் இந்த வகையான வார்த்தைகளில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். தேவனுடைய வார்த்தைகள் அவர்களின் கருத்துகளுக்கு இணங்கவில்லை என்றால் மற்றும் ஆசீர்வாதங்களுக்கான அவர்களின் விருப்பத்தைத் திருப்திப்படுத்தவில்லை என்றால், அவர்கள் எதிர்மறையானவர்களாகி விடுவார்கள், அதற்குமேல் சத்தியத்தைப் பின்தொடர மாட்டார்கள் மற்றும் தேவனுக்காக அர்ப்பணிக்க விரும்ப மாட்டார்கள். சத்தியத்தில் அவர்களுக்கு ஆர்வமில்லை என்பதையே இது காட்டுகிறது. இதன் விளைவாக, அவர்கள் சத்தியத்தை முக்கியமானதாக எடுத்துக் கொள்வதில்லை; அவர்களால் தங்கள் கருத்துகள் மற்றும் கற்பனைகளுக்கு இணங்கக் கூடிய சத்தியத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிகிறது. அப்படிப்பட்டவர்கள் தேவன் மீதான விசுவாசத்தில் தீவிரமானவர்களாக இருந்தாலும், சில நல்ல செயல்களைச் செய்வதற்கும், மற்றவர்களுக்குத் தங்களை நன்றாகக் காட்டிக் கொள்வதற்கும், எல்லா வழிகளிலும் முயன்றாலும், அவர்கள் எதிர்காலத்தில் ஒரு நல்ல சென்றடையும் இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே அதைச் செய்கிறார்கள். அவர்கள் திருச்சபை வாழ்க்கையில் ஈடுபட்டு, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணினாலும் அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது அதைப் பெறவோ மாட்டார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும் சிலர் உள்ளனர், ஆனால் அவர்கள் வெறுமனே சிரத்தையற்று இருக்கின்றனர்; ஒரு சில எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளைப் புரிந்து கொண்டதன் மூலம் சத்தியத்தைப் பெற்றுள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். எப்படிப்பட்ட முட்டாள்கள் அவர்கள்! தேவனுடைய வார்த்தையே சத்தியம். இருப்பினும், தேவனுடைய வார்த்தைகளைப் படித்த பிறகு ஒருவர் நிச்சயமாக சத்தியத்தைப் புரிந்து கொண்டு அதைப் பெற மாட்டார். தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதன் மூலம் நீ சத்தியத்தைப் பெறத் தவறினால், அப்போது நீ பெறுவது எழுத்துக்களும் கோட்பாடுகளுமாயிருக்கும். உனக்கு எப்படிச் சத்தியத்தைக் கடைபிடிப்பது அல்லது கொள்கைகளின்படி எப்படிச் செயல்படுவது என்று தெரியாவிட்டால், அப்போது நீ சத்தியத்தின் யதார்த்தம் இல்லாமல் இருக்கிறாய். நீ அடிக்கடி தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கலாம், ஆனால் அதன் பிறகு நீ அப்போதும் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறுகிறாய், மேலும் சில எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் மட்டுமே பெறுகிறாய். சத்தியத்தைப் புரிந்து கொள்வதற்காக தேவனுடைய வார்த்தைகளை எப்படிப் புசித்துப் பானம்பண்ணுவது? முதலாவது, தேவனுடைய வார்த்தை மிகவும் நேரடியானது அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்; தேவனுடைய வார்த்தை முற்றிலும் ஆழமானதாகும். தேவனுடைய வார்த்தைகளில் ஒரு வாக்கியத்தை அனுபவித்துணரக் கூட வாழ்நாள் முழுவதும் தேவைப்படும். பல வருட அனுபவம் இல்லாமல் தேவனுடைய வார்த்தையை உங்களால் எப்படிச் சாத்தியமாகப் புரிந்து கொள்ள முடியும்? தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, நீ தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவருடைய வார்த்தைகளின் நோக்கங்கள், அவற்றின் தோற்றம், அவை அடைய விரும்பும் விளைவு அல்லது அவை எதை அடைய முயல்கின்றன என்பவற்றைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், சத்தியத்தைப் புரிந்து கொண்ட ஒருவனாக உன்னை எப்படி எண்ணுவது? நீ தேவனுடைய வார்த்தைகளைப் பலமுறை வாசித்திருக்கலாம், ஒருவேளை நீ பல பத்திகளை மனப்பாடமாக ஒப்பிக்கலாம், ஆனால் உன்னால் சத்தியத்தைக் கடைபிடிக்க முடியாது மற்றும் நீ மாறவே இல்லை, மேலும் தேவனுடனான உன் உறவு எப்போதும் போல மிகத் தொலைவாகவும் முரண்பாட்டுடனும் இருக்கிறது. உங்கள் கருத்துகளுக்கு முரணான ஒன்றைச் சந்திக்கும் போது, நீங்கள் அவரைப் பற்றிச் சந்தேகப்படுகிறீர்கள், நீங்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை, ஆனால் அவரிடம் சாக்குப்போக்குகளைச் சொல்கிறீர்கள், அவரைப் பற்றிய கருத்துகளையும் அவரைப் பற்றிய தவறான புரிதல்களையும் கொண்டிருக்கிறீர்கள், அவரை எதிர்க்கவும், அவரைத் தூஷிக்கவும் கூடச் செய்கிறீர்கள். இது என்ன வகையான மனநிலை? இது அகந்தை கொண்ட, சத்தியத்தைக் குறித்து அலுத்துப் போயிருக்கும் மனநிலையாகும். மிகுந்த அகந்தை கொண்டவர்களும் மற்றும் சத்தியத்தைக் குறித்து மிகவும் அலுத்துப் போனவர்களால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள அல்லது கடைப்பிடிக்க முடியும்? அப்படிப்பட்டவர்களால் ஒருபோதும் சத்தியத்தையோ அல்லது தேவனையோ நிச்சயமாக அடைய முடியாது.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 572

“முடிவுபரியந்தம் பின்பற்றுபவனே இரட்சிக்கப்படுவான்” என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் இதைக் கைக்கொள்ளுவது எளிதானதா? இல்லை, மேலும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் வேட்டையாடப்பட்டு துன்புறுத்தப்பட்ட பலரும் மிகவும் கோழைகளாகி, தேவனைப் பின்பற்றப் பயப்படுகிறார்கள். அவர்கள் ஏன் விழுந்துபோனார்கள்? ஏனென்றால், அவர்களுக்கு உண்மையான விசுவாசம் இல்லை. ஜனங்களில் சிலரால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும், தேவனிடத்தில் ஜெபிக்கவும், தேவனைச் சார்ந்திருக்கவும் முடிகிறது, மேலும் அவர்கள் சோதனைகளிலும் உபத்திரவங்களிலும் உறுதியாக நிற்கிறார்கள், அதே நேரத்தில், மற்றவர்களால் முடிவுபரியந்தம் பின்பற்ற முடிவதில்லை. சோதனைகள் மற்றும் உபத்திரவங்களின் ஒரு கட்டத்தில், அவர்கள் விழுந்துபோவார்கள், தங்கள் சாட்சியை இழந்துவிடுவார்கள், மேலும் தாங்களாகவே எழும்பித் தொடர்ந்து முன்னேற இயலாதவர்களாய் இருப்பார்கள். பெரிதோ அல்லது சிறிதோ, உன்னுடைய தீர்மானத்தை அசைக்கக்கூடிய, உன்னுடைய இருதயத்தை ஆக்கிரமிக்கக்கூடிய அல்லது உன்னுடைய கடமையைச் செய்வதற்கான மற்றும் உன் முன்னேற்றத்திற்கான உன் திறனைக் கட்டுப்படுத்தக்கூடியதான ஒவ்வொரு நாளும் எழும்பும் விஷயங்களுக்குக் கவனமான சிகிச்சை தேவை; நீ அவற்றைக் கவனமாக ஆராய்ந்து சத்தியத்தைத் தேட வேண்டும். இவை அனைத்தும் நீங்கள் அனுபவிக்கும் போது, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளாகும். சிலருக்குப் பிரச்சனைகள் ஏற்படும்போது, எதிர்மறையாக மாறுகிறார்கள், குறைகூறுகிறார்கள் மற்றும் தங்கள் கடமைகளை விட்டுவிடுகிறார்கள், மேலும் ஒவ்வொரு பின்னடைவுக்குப் பிறகும் அவர்களால் மறுபடியும் தங்கள் கால் ஊன்றி நிற்க முடிவதில்லை. இந்த ஜனங்கள் அனைவரும் சத்தியத்தை நேசிக்காத மூடர்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் விசுவாசித்தாலும் கூட அதைப் பெற மாட்டார்கள். இப்படிப்பட்ட மூடர்களால் எப்படி முடிவுபரியந்தம் பின்பற்ற முடியும்? இதே விஷயம் உனக்குப் பத்து முறை நடந்தாலும், நீ அதிலிருந்து எதையும் பெறவில்லை என்றால், நீ ஒரு சாதாரணமான, பயனற்ற நபராய் இருக்கிறாய். புத்திசாலிகள் மற்றும் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ளும் உண்மையான திறன் கொண்டவர்கள் சத்தியத்தைத் தேடுபவர்களாய் இருக்கிறார்கள்; பத்து முறை அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால், ஒருவேளை அதில் எட்டு நிகழ்வுகளில், அவர்களால் சில பிரகாசத்தைப் பெற முடியும், சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும், சில சத்தியங்களைப் புரிந்துகொண்டு, சில முன்னேற்றங்களை அடையமுடியும். ஒரு மூடனுக்குப் பத்து முறை விஷயங்கள் நேர்ந்தாலும்—ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ளாத ஒருவனுக்கு—அது ஒரு முறை கூட அவர்களின் வாழ்க்கைக்குப் பயனளிக்காது, ஒரு முறை கூட அவர்களை மாற்றாது, ஒரு முறை கூட அது அவர்களின் அசிங்கமான முகத்தை அவர்களுக்குத் தெரிய வைக்காது, இந்த விஷயத்தில் அவர்களுக்குரியது முடிந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஏதாவது நேரிடும்போது, அவர்கள் விழுந்துபோகிறார்கள், ஒவ்வொரு முறையும் அவர்கள் விழுந்துபோகும்போது, அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் இன்னொருவர் தேவை; ஆதரவும் ஊக்கமும் இல்லாமல், அவர்களால் எழும்ப முடியாது. ஒவ்வொரு முறையும் ஏதாவது நேரிடும்போது, அவர்கள் விழுந்துபோகும்போது அபாயத்தில் இருந்தால், ஒவ்வொரு முறையும் அவர்கள் சீரழிந்துபோகும் அபாயத்தில் இருந்தால், இது அவர்களுக்கான முடிவு அல்லவா? இவர்களைப் போன்ற பயனற்ற ஜனங்கள் இரட்சிக்கப்படுவதற்கு வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா? மனிதகுலத்தின் தேவனுடைய இரட்சிப்பு சத்தியத்தை நேசிப்பவர்களின் இரட்சிப்பாகும், விருப்பமும் உறுதியும் கொண்ட அவர்களுடைய ஒரு பகுதியின் இரட்சிப்பும், மற்றும் அவர்களின் இருதயத்தில் சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் ஏங்குகிற ஒரு பகுதியின் இரட்சிப்புமாகும். ஒரு நபரின் தீர்மானம் அவர்களின் இருதயங்களில் உள்ள, நீதி, நன்மை மற்றும் சத்தியத்திற்காக ஏங்குகிற, மற்றும் மனசாட்சியைக் கொண்ட பகுதியாகும். தேவன் மக்களின் இந்தப் பகுதியை இரட்சிக்கிறார், அதன் மூலம், அவர் அவர்களின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுகிறார், அதனால் அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் இயலும், அதனால் அவர்களின் சீர்கேடு சுத்திகரிக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை மனநிலை மறுரூபப்படும். உனக்குள் இந்த காரியங்கள் இல்லை என்றால், நீ இரட்சிக்கப்பட முடியாது. உனக்குள், சத்தியத்திற்கான அன்பு அல்லது நீதி மற்றும் ஒளிக்கான பேராவல் இல்லை என்றால்; நீ தீமையை எதிர்கொள்ளும் போதெல்லாம், தீய காரியங்களை தூக்கி எறியும் விருப்பமும் இல்லாமல் கஷ்டங்களை அனுபவிக்கும் தீர்மானமும் உனக்கு இல்லை என்றால்; மேலும், உன் மனசாட்சி உணர்வற்றதாக இருந்தால்; சத்தியத்தைப் பெறுவதற்கான உன் மனத்திறனும் பலவீனமாக இருந்தால், சத்தியத்திற்கும் எழும் நிகழ்வுகளுக்கும் நீ பொறுப்பற்றவனாய் இருந்தால்; நீ சகல காரியங்களிலும் பகுத்தறிவில்லாதவனாக இருந்தால், உனக்கு நேரிடும் எல்லாவற்றிலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சத்தியத்தைத் தேட முடியாமலும் தொடர்ந்து எதிர்மறையில் இருக்கிறாய் என்றால், அப்போது, நீ இரட்சிக்கப்பட வழியே இல்லை. அத்தகைய நபருக்கு பரிந்துரைக்க எதுவும் இல்லை, தேவன் கிரியை செய்யும்படிக்கான எவ்வித தகுதியும் அவர்களிடத்தில் இல்லை. அவர்களின் மனசாட்சி உணர்ச்சியற்றது, அவர்களின் மனம் கலக்கமுடையது, அவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை, தங்கள் இதயத்தின் ஆழத்தில் நீதிக்காக ஆழமாக ஏங்குவதுமில்லை, மேலும் தேவன் சத்தியத்தைப் பற்றி எவ்வளவு தெளிவாக அல்லது வெளிப்படையாகப் பேசினாலும், அவர்கள் கொஞ்சம் கூட எதிர்வினையாற்றுவதில்லை; அவர்களது இருதயம் ஏற்கனவே மரித்துவிட்டதைப் போல் உள்ளது. காரியங்கள் அவர்களுக்கு முடிவடையவில்லையா? அவர்களில் மீந்திருக்கும் மூச்சு இருக்கிற ஒரு நபர் செயற்கை சுவாசத்தால் காப்பாற்றப்படலாம், ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்து அவர்களின் ஆத்துமா வெளியேறியிருந்தால், செயற்கை சுவாசத்தினால் ஒன்றும் செய்யவியலாது. பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, ஒருவன் பின்வாங்கி அவற்றைத் தவிர்க்கிறான் என்றால், அவர்கள் ஒருபோதும் சத்தியத்தைத் தேடுவதில்லை என்றால், அவர்கள் எதிர்மறையாகவும், தங்கள் வேலையில் மந்தமாகவும் இருப்பதைத் தெரிந்துகொண்டால், அவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்று வெளிப்படுத்தப்படுகிறார்கள். அத்தகைய ஜனங்களுக்கு அனுபவமோ அல்லது சாட்சியோ எதுவும் இருப்பதில்லை. அவர்கள் வெறும் ஒட்டுண்ணிகளாகவும், வீண் சுமையாகவும் இருக்கிறார்கள், அவர்கள் தேவனுடைய வீட்டில் பயனற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் முற்றிலும் அழிவுக்கு நியமிக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். பிரச்சனைகளைத் தீர்க்க சத்தியத்தைத் தேடக்கூடியவர்கள் மட்டுமே வளர்ச்சியுள்ளவர்கள், அவர்களால் மட்டுமே சாட்சியுடன் உறுதியாக நிற்க முடியும். நீங்கள் பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை சந்திக்கும் போது, நீங்கள் நிதானமாக அவற்றை எதிர்கொள்ள வேண்டும், சரியான முறையில் பதிலளிக்க வேண்டும், மேலும் நீங்கள் ஒரு தேர்வு செய்ய வேண்டும். பிரச்சனைகளைத் தீர்க்க சத்தியத்தைப் பயன்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் சாதாரணமாகப் புரிந்துகொள்ளும் சத்தியங்கள் ஆழமானதாக இருந்தாலும் சரி அல்லது ஆழமற்றதாக இருந்தாலும் சரி, நீங்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். சத்தியங்கள் என்பது உங்களுக்கு ஏதாவது நேரிடும்போது வெறுமனே உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அல்ல, மற்றவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வெளிப்படையாகப் பயன்படுத்தப்படுபவையும் அல்ல; மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் சிரமங்களையும் தீர்க்கப் பயன்படுகின்றன. மேலும் உங்கள் சொந்தப் பிரச்சனைகளை நீங்கள் தீர்க்கும்போது மட்டுமே, நீங்கள் மற்றவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியவர்களாவீர்கள். பேதுரு ஒரு கனி என்று ஏன் கூறப்படுகிறது? ஏனென்றால் அவனிடத்தில் மதிப்புமிக்க விஷயங்கள் உள்ளன, பரிபூரணப்படுத்தத் தகுதியான விஷயங்கள் உள்ளன. அவன் எல்லாவற்றிலும் சத்தியத்தைத் தேடினான், உறுதியுடன் இருந்தான், சித்தத்தில் உறுதியாக இருந்தான்; அவனுக்குப் பகுத்தறிவு இருந்தது, துன்பங்களை அனுபவிக்கத் தயாராக இருந்தான், தன்னுடைய இருதயத்தில் சத்தியத்தை நேசித்தான்; அவன் நடந்ததை அப்படியே விட்டுவிடவில்லை, அவனால் எல்லாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. இவை அனைத்தும் வலுவான கருத்துகள். உன்னிடம் இந்த வலுவான கருத்துகள் எதுவும் இல்லை என்றால், அது சிக்கலைக் குறிக்கிறது. நீ சத்தியத்தைப் பெறுவதும் இரட்சிக்கப்படுவதும் உனக்கு எளிதானதாக இருக்காது. உனக்கு எப்படி அனுபவிப்பது என்று தெரியாவிட்டால் அல்லது அனுபவம் இல்லை என்றால், மற்றவர்களின் கஷ்டங்களை உன்னால் தீர்க்க முடியாது. ஏனென்றால், நீ தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளவும் அனுபவிக்கவும் திறனற்றவனாய் இருக்கிறாய், மேலும் உனக்கு ஏதாவது நேரிடும்போது என்ன செய்வது என்று தெரிவதில்லை, நீ பிரச்சனைகளை சந்திக்கும் போது வருத்தப்படுகிறாய்-சத்தமிட்டு அழுகிறாய், நீ சில சிறிய பின்னடைவுகளை சந்திக்கும்போது எதிர்மறையாகி ஓடிவிடும்போது, மேலும் சரியான வழியில் எப்போதுமே எதிர்வினையாற்ற இயலாமல் இருக்கிறாய்—இவை எல்லாவற்றின் நிமித்தமாக, ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு சாத்தியமில்லை. ஜீவ பிரவேசம் இல்லாமல் மற்றவர்களுக்கு எப்படி உன்னால் வழங்க முடியும்? ஜனங்களின் வாழ்க்கைக்கு வழங்க, நீ சத்தியத்தைக் குறித்துத் தெளிவாக ஐக்கியங்கொள்ள வேண்டும் மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடைமுறைக் கொள்கைகளைக் குறித்துத் தெளிவாக ஐக்கியங்கொள்ளக் கூடியவனாக இருக்க வேண்டும். இருதயமும் ஆவியும் உள்ள ஒருவருக்கு, நீ கொஞ்சம் சொன்னாலே போதுமானது, அவர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் சத்தியத்தைக் கொஞ்சம் புரிந்துகொள்வது மட்டுமே பலனளிக்காது. அவர்கள் கைக்கொள்வதற்கான பாதையையும் கொள்கைகளையும் கொண்டிருக்க வேண்டும். சத்தியத்தைக் கைக்கொள்ள இது மட்டுமே அவர்களுக்கு உதவும். ஜனங்கள் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ளும்போதும், அவற்றைப் புரிந்துகொள்ள சில வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்குத் தேவைப்படும்போதும் கூட, அவர்கள் சத்தியத்தைக் கைக்கொள்ளவில்லை என்றால், ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியாது. அவர்களால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அது அவர்களுக்கான நஷ்டமாகும், மேலும் அவர்களால் ஒருபோதும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முடியாது. நீ சிலருக்குப் போதிக்கும்போது அவர்களின் கைகளைப் பிடிக்கலாம், அவர்கள் அந்த நேரத்தில் புரிந்துகொள்வது போல் தோன்றும், ஆனால் நீங்கள் விட்டுவிட்டவுடன், அவர்கள் மீண்டும் குழப்பமடைகிறார்கள். இத்தகைய நபர் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்பவர் அல்லர். நீ எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் சரி, நீ எதிர்மறையாகவும் பலவீனமாகவும் இருந்தால், உன்னிடம் எந்த சாட்சியும் இல்லை என்றால், நீ செய்ய வேண்டியதிலும் நீ ஒத்துழைக்க வேண்டியதிலும் நீ ஒத்துழைப்பதில்லை என்றால், இது உன்னுடைய இருதயத்தில் தேவன் இல்லை என்பதையும், நீ சத்தியத்தை நேசிக்கும் நபர் அல்ல என்பதையும் நிரூபிக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை ஜனங்களை எவ்வாறு ஏவுகிறது என்பதைப் பொருட்படுத்தாதே, பல ஆண்டுகளாக தேவனுடைய கிரியையை அனுபவித்து, பல சத்தியங்களைக் கேட்பதன் மூலமும், கொஞ்சம் மனசாட்சியுடனும், சுய கட்டுப்பாட்டைச் சார்ந்தும் இருந்தால், ஜனங்களால் குறைந்தபட்சமாக, குறைந்தபட்ச தரத்தை அடையவும் அவர்களுடைய மனசாட்சியால் கடிந்துகொள்ளப்படாமல் இருக்கவும் முடியும். ஜனங்கள் இப்போது இருப்பதைப் போல உணர்ச்சியற்றவர்களாகவும் பலவீனமாகவும் இருக்கக்கூடாது, மேலும் அவர்கள் இந்த நிலையில் இருப்பதை நினைத்துப் பார்க்க முடியாது. ஒருவேளை நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக எவ்விதத்திலும் சத்தியத்தைப் பின்தொடராமலோ அல்லது எந்த முன்னேற்றத்தையும் அடையாமலோ குழப்பத்தில் சென்றிருக்கலாம். அப்படி இல்லையென்றால், உங்களால் எப்படி இன்னும் உணர்ச்சியற்றவராகவும் மந்தமாகவும் இருக்க முடிகிறது? நீங்கள் இப்படி இருக்கும்போது, அதற்கு முழுக்க முழுக்க உங்கள் சொந்த முட்டாள்தனமும் அறியாமையுமே காரணமாகும், மேலும் உங்களால் வேறுயாரையும் குறைசொல்ல முடியாது. சத்தியம் என்பது சிலருக்கு மற்றவர்களை விட பாரபட்சமானது அல்ல. நீ சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீ பிரச்சனைகளைத் தீர்க்க சத்தியத்தைத் தேடவில்லை என்றால், உன்னால் எப்படி மாற முடியும்? சிலர் தங்களுடைய திறமை மிகக் குறைவாக இருப்பதாகவும், புரிந்துகொள்ளும் திறன் தங்களுக்குக் குறைவாக இருப்பதாகவும் உணர்கிறார்கள், அதனால் அவர்கள் தங்களைத் தாங்களே மட்டுப்படுத்திக்கொள்கிறார்கள், மேலும் தாங்கள் எவ்வளவு பின்தொடர்ந்தாலும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் அது பயனற்றது, அவ்வளவுதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள், அதனால் அவர்கள் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறார்கள், அதன் விளைவாக, தேவனைப் பல வருடங்களாக விசுவாசித்த பிறகும் கூட, அவர்கள் எந்த சத்தியத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. சத்தியத்தைப் பின்தொடர்வதற்காகக் கடினமாக உழைக்காமல், உன் திறமை மிகவும் குறைவானது என்று நீ கூறினால், நீ சோர்ந்துபோவாயானால், நீ எப்போதும் எதிர்மறையான நிலையில் வாழ்ந்தால், அதன் விளைவாக, நீ புரிந்துகொள்ள வேண்டிய சத்தியத்தைப் புரிந்துகொள்வதில்லை அல்லது உன் திறமைக்கு ஏற்ப சத்தியத்தைக் கைக்கொள்ளுவதில்லை, அப்படியானால், உனக்குத் தடையாய் இருப்பது நீதான் அல்லவா? உன்னுடைய திறமை போதுமானதாக இல்லை என்று நீ எப்பொழுதும் கூறினால், இது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதும் உதறித்தள்ளுவதும் அல்லவா? உன்னால் பாடுபடவும், விலைக்கிரயம் செலுத்தவும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறவும் முடிந்தால், அப்போது, உன்னால் நிச்சயமாக சில சத்தியங்களைப் புரிந்துகொண்டு சில யதார்த்தங்களுக்குள் பிரவேசிக்க முடியும். நீ தேவனை நோக்கிப் பார்க்காமலோ அல்லது அவரைச் சார்ந்து கொள்ளாமலோ இருந்தால், எந்த முயற்சியும் செய்யாமல் அல்லது விலைக்கிரயமும் செலுத்தாமல் நீ சோர்ந்துபோவாயானால், மேலும் வெறுமனே ஒப்புக்கொடுத்தால், அப்போது, நீ பயனற்றவனாய் இருக்கிறாய், மற்றும் கொஞ்சம் கூட மனசாட்சியும் பகுத்தறிவும் இல்லாதவனாய் இருக்கிறாய். நீ திறனற்றவனாக இருந்தாலும் சரி அல்லது சிறந்த திறனுள்ளவனாக இருந்தாலும் சரி, உனக்குக் கொஞ்சம் மனசாட்சியும் பகுத்தறிவும் இருந்தால், நீ செய்ய வேண்டியதையும் உன் ஊழியத்தையும் சரியாக நிறைவேற்ற வேண்டும்; தப்பி ஓடுபவனாக இருப்பது ஒரு பயங்கரமான விஷயமும் தேவனுக்குத் துரோகம் செய்வதும் ஆகும். இது மீட்டுக்கொள்ள முடியாததாகும். சத்தியத்தைப் பின்தொடர்வதற்கு நிலையான மனவுறுதி தேவை, மிகவும் எதிர்மறையான அல்லது பலவீனமான ஜனங்கள் எதையும் சாதிக்க மாட்டார்கள். அவர்களால் இறுதிவரை தேவனை விசுவாசிக்க முடியாது, மேலும், அவர்கள் சத்தியத்தைப் பெறவும், மனநிலை மாற்றத்தை அடையவும் விரும்பினால், அவர்களுக்கு இன்னும் குறைந்த வாய்ப்பே இருக்கிறது. மனஉறுதியுடன் இருப்பவர்களும் சத்தியத்தைப் பின்தொடர்பவர்களும் மட்டுமே அதைப் பெற்றுக்கொள்ளவும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படவும் முடியும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 573

பலர் தங்கள் கடமையில் அலுவலாகி விட்டால், அனுபவிக்கும் திறனற்றவர்களாகி, இயல்பான நிலையைத் தக்க வைக்க முடியாமல், அதன் விளைவாக, ஒரு கூட்டம் வேண்டும் என்றும், மேலும் சத்தியம் தங்களுக்கு ஐக்கியப்படுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கேட்கிறார்கள். இங்கு என்ன நடக்கிறது? அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவில்லை, அவர்களுக்கு மெய்யான வழியில் அடித்தளம் இல்லை, அத்தகைய ஜனங்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது வைராக்கியத்தால் இயக்கப்படுகிறார்கள், மேலும் நீண்ட காலம் நிலைத்திருக்க முடிவதில்லை. ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளாத போது, அவர்கள் செய்யும் எதற்கும் கொள்கை இல்லை. அவர்கள் ஏதாவது செய்ய ஏற்பாடு செய்யப்பட்டால், அவர்கள் அதைக் குழப்புகிறார்கள், அவர்கள் செய்வதில் அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள், கொள்கையையும் தேட மாட்டார்கள், அவர்கள் இருதயங்களில் கீழ்ப்படிதல் இல்லை, இது அவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை என்பதையும், தேவனுடைய கிரியையை அனுபவிக்கும் திறனற்றவர்கள் என்பதையும் நிரூபிக்கிறது. நீ எதைச் செய்தாலும், நீ அதை ஏன் செய்கிறாய் என்றும், இந்தச் செயலைச் செய்யும்படி உன்னைத் தூண்டும் நோக்கம் என்ன என்றும், நீ அதைச் செய்வதில் உள்ள முக்கியத்துவம் என்ன என்றும், விஷயத்தின் தன்மை என்ன என்றும் மற்றும் நீ செய்கிறது நேர்மறையான காரியமா அல்லது எதிர்மறையான காரியமா என்றும் முதலில் நீ புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயங்களைப் பற்றிய தெளிவான புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும்; கொள்கையுடன் செயல்பட இது மிகவும் அவசியமானதாகும். உன் கடமையை நிறைவேற்ற நீ ஏதாவது செய்கிறாய் என்றால், அப்போது நீ சிந்திக்க வேண்டும்: நான் வெறுமனே என் கடமையை அக்கறையின்றிச் செய்யாதபடி அதை எப்படிச் சிறப்பாகச் செய்ய வேண்டும்? இந்த விஷயத்தில் நீங்கள் ஜெபித்து தேவனிடம் நெருங்கி வர வேண்டும். சத்தியத்தை, நடைமுறைப்படுத்துவதற்கான வழியை, தேவனுடைய நோக்கத்தை மற்றும் தேவனை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பதைத் தேடும்படி ஜெபிக்க வேண்டும். இந்த விளைவுகளை அடைவதற்காக ஜெபம் செய்யப்படுகிறது. தேவனிடம் ஜெபிப்பது, தேவனிடம் நெருங்கி வருவது, தேவனுடைய வார்த்தைகளைப் படிப்பது ஆகியவை மதச்சடங்குகளோ அல்லது வெளிப்புறமான செயல்களோ அல்ல. தேவனுடைய சித்தத்தை நாடிய பிறகு, சத்தியத்தின்படி நடைமுறைப்படுத்தும் நோக்கத்திற்காக இது செய்யப்படுகிறது. நீ எதுவும் செய்யாதபோது “தேவனுக்கு நன்றி” என்று நீ எப்போதும் கூறினால், நீ மிகவும் ஆவிக்குரியவனாகவும் நுண்ணறிவு உடையவனாகவும் தோன்றலாம், ஆனால், செயல்பட வேண்டிய நேரம் வரும்போது, நீங்கள் சிறிதளவேனும் சத்தியத்தைத் தேடாமல், இன்னும் நீங்கள் விரும்பியபடியே செய்கிறீர்கள் என்றால், அப்போது “தேவனுக்கு நன்றி” என்பது ஒரு மந்திரத்தைத் தவிர வேறில்லை, அது தவறான ஆவிக்குரிய தன்மையாகும். உன் கடமையை நிறைவேற்றும் போது: “இந்தக் கடமையை நான் எப்படி நிறைவேற்றுவது? தேவனுடைய சித்தம் என்ன?” என்று நீ எப்போதும் சிந்திக்க வேண்டும். உங்கள் செயல்களுக்கான கொள்கைகளையும் சத்தியங்களையும் தேடுவதற்காக தேவனிடம் ஜெபிப்பது மற்றும் தேவனிடம் நெருங்கி வருவது, நீங்கள் செய்யும் எதிலும் தேவனுடைய வார்த்தைகளையோ அல்லது சத்தியத்தின் கொள்கைகளையோ விட்டுவிலகாமல் இருப்பது-இந்த நபர் மட்டுமே உண்மையாக தேவனை விசுவாசிப்பவர் ஆவர்; சத்தியத்தை நேசிக்காதவர்களால் இதையெல்லாம் அடைய முடியாது. தாங்கள் என்ன செய்தாலும் தங்கள் சொந்த யோசனைகளைப் பின்பற்றுபவர்கள் பலர் உள்ளனர், மேலும் விஷயங்களை மிகவும் எளிமையான அடிப்படையில் கருதுகிறார்கள், மேலும் சத்தியத்தையும் தேடுவதில்லை. கொள்கை என்பது முற்றிலும் இல்லை, தேவன் கேட்பதற்கு ஏற்ப அல்லது தேவனைத் திருப்திப்படுத்தும் விதத்தில் எப்படிச் செயல்படுவது என்று அவர்கள் இருதயங்களில் சற்றும் சிந்திப்பதில்லை, மேலும் அவர்களுக்குத் தங்கள் சொந்த விருப்பத்தைப் பிடிவாதமாகப் பின்பற்றுவது மட்டுமே தெரியும். அப்படிப்பட்டவர்களின் இருதயங்களில் தேவனுக்கு இடமில்லை. சிலர், “நான் கஷ்டத்தைச் சந்திக்கும்போது மட்டுமே தேவனிடம் ஜெபம் செய்கிறேன், ஆனால் அப்போதும் அது எந்த விளைவையும் ஏற்படுத்தும் என்பது போலத் தெரியவில்லை, எனவே இப்போது பொதுவாக எனக்கு ஏதாவது நடக்கும் போது, நான் தேவனிடம் ஜெபிப்பதில்லை, ஏனென்றால் தேவனிடம் ஜெபிப்பது பயனில்லை” என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் இருதயங்களில் தேவன் முற்றிலும் இல்லை. அவர்கள் என்ன செய்தாலும் சத்தியத்தைத் தேடுவதில்லை; அவர்கள் தங்கள் சொந்த யோசனைகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். அப்படியானால் அவர்களின் செயல்களுக்குக் கொள்கைகள் உள்ளதா? நிச்சயமாக இல்லை. அவர்கள் எல்லாவற்றையும் எளிமையான அடிப்படையில் பார்க்கிறார்கள். ஜனங்கள் சத்தியத்தின் கொள்கைகளைப் பற்றி அவர்களுடன் ஐக்கியப்பட்டாலும், அவர்களால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அவர்களின் செயல்களுக்கு எந்தக் கொள்கையும் இருந்ததில்லை, தேவனுக்கு அவர்களின் இருதயங்களில் இடமில்லை, அவர்களின் இருதயங்களில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. தங்கள் நோக்கங்கள் நல்லவை என்றும், அவர்கள் பொல்லாப்பு செய்வதில்லை என்றும், அவர்களை சத்தியத்தை மீறுவதாகக் கருத முடியாது என்றும் அவர்கள் கருதுகிறார்கள், தங்கள் சொந்த நோக்கங்களின்படி செயல்படுவது சத்தியத்தைக் கடைபிடிப்பதாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படுவது தேவனுக்குக் கீழ்ப்படிவது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில், அவர்கள் இந்த விஷயத்தில் உண்மையாகத் தேடவோ அல்லது தேவனிடம் ஜெபிக்கவோ இல்லை, ஆனால் தூண்டுதலின் பேரில், அவர்களின் சொந்த ஆர்வமுள்ள நோக்கங்களின்படி செயல்படுகிறார்கள், அவர்கள் தேவன் கேட்பது போல தங்கள் கடமையைச் செய்வதில்லை, அவர்களிடம் தேவனுக்குக் கீழ்ப்படிகிற இருதயம் இல்லை, அவர்கள் இந்த விருப்பம் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். ஜனங்களின் நடைமுறையில் இது மிகப்பெரிய தவறாகும். நீ தேவனை விசுவாசித்தும் அவர் உன் இருதயத்தில் இல்லை என்றால், நீ தேவனை வஞ்சிக்க முயற்சிக்கவில்லையா? தேவன் மீதான அப்படிப்பட்ட விசுவாசம் என்ன விளைவை ஏற்படுத்தும்? நீ என்ன தான் அடைய முடியும்? தேவன் மீதான அப்படிப்பட்ட விசுவாசத்தின் பயன் என்ன?

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 574

சத்தியத்தின் கொள்கைகளை மீறுகிற மற்றும் தேவனுக்குப் பிடிக்காத ஒன்றை நீ செய்திருந்தால், நீ உன்னைப் பற்றி எப்படிச் சிந்திக்க வேண்டும் மற்றும் உன்னைக் குறித்து அறிந்து கொள்ள எப்படி முயற்சிக்க வேண்டும்? நீ அந்தக் காரியத்தைச் செய்யவிருந்தபோது நீ அவரிடம் ஜெபித்தாயா? “இப்படிச் செய்வது சத்தியத்துக்கு ஏற்புடையதாய் இருக்கிறதா? இந்த விஷயம் தேவன் முன் கொண்டு போகப்பட்டிருந்தால் அவர் எப்படிப் பார்த்திருந்திருப்பார்? இதைப் பற்றி அறிந்தால் அவர் மகிழ்ச்சியடைந்திருப்பாரா அல்லது எரிச்சலடைந்திருப்பாரா? அவர் அதை வெறுத்திருப்பாரா அல்லது அருவருத்திருப்பாரா?” என்று எப்போதாவது எண்ணிப் பார்த்தாயா? நீ அதைத் தேடவில்லை, இல்லையா? மற்றவர்கள் உனக்கு நினைவூட்டியிருந்தாலும், அப்போதும் விஷயம் பெரியதே அல்ல என்றும், அது எந்தக் கொள்கைகளுக்கும் எதிராக செயல்படவில்லை என்றும், பாவம் இல்லை என்றும் நீ நினைத்திருப்பாய். இதன் விளைவாக, நீ தேவனுடைய மனநிலையைப் புண்படுத்தி, அவர் உன்னை அருவருக்கும் அளவிற்கு அவரைக் கோபப்படுத்தினாய். இது ஜனங்களின் கலகத்தன்மையால் உருவாகிறது. ஆகையால், எல்லாவற்றிலும் நீங்கள் சத்தியத்தைத் தேட வேண்டும். நீ பின்பற்ற வேண்டியது இதுவேயாகும். உன்னால் முன்னதாகவே ஜெபிக்கும்படி தேவனுக்கு முன் ஆர்வத்துடன் வந்து, பின்னர் தேவனுடைய வார்த்தைகளின்படி சத்தியத்தைத் தேட முடிந்தால், நீ தவறு செய்ய மாட்டாய். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் சில விலகல்கள் உங்களிடம் இருக்கலாம், ஆனால் இதைத் தவிர்ப்பது கடினமாகும், நீங்கள் சில அனுபவங்களைப் பெற்ற பிறகு, உங்களால் சரியாக அதைக் கடைப்பிடிக்க முடியும். இருப்பினும், சத்தியத்திற்கு ஏற்ப எவ்வாறு செயல்படுவது என்று உனக்குத் தெரிந்திருந்தாலும், அதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், நீ சத்தியத்தை விரும்பாதது தான் பிரச்சனையாக இருக்கிறது. சத்தியத்தை நேசிக்காதவர்கள், தங்களுக்கு என்ன நேர்ந்தாலும், அதை ஒருபோதும் தேட மாட்டார்கள். சத்தியத்தை நேசிப்பவர்களுக்கு மட்டுமே தேவனுக்குப் பயப்படும் இருதயங்கள் இருக்கும், மேலும் அவர்களுக்குப் புரியாத விஷயங்கள் நடக்கும்போது, அவர்களால் சத்தியத்தைத் தேட முடியும். உன்னால் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் மற்றும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று தெரியாவிட்டால், அப்போது நீ சத்தியத்தைப் புரிந்து கொள்கிற ஒருவருடன் ஐக்கியங்கொள்வதன் மூலம் சத்தியத்தைத் தேட வேண்டும். சத்தியத்தைப் புரிந்து கொள்ளும் ஒருவரை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஒரே மனதோடு மற்றும் ஒரே இருதயத்தோடு தேவனிடம் ஜெபிக்க நீங்கள் ஒரு சிலரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும், தேவனிடத்திலிருந்து தேட வேண்டும், தேவனுடைய நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும், தேவன் உங்களுக்கு ஒரு வழியைத் திறப்பதற்காகக் காத்திருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் சத்தியத்திற்காக ஏங்கி, சத்தியத்தைத் தேடி, ஒன்றாக இணைந்து சத்தியத்தைக் குறித்து ஐக்கியங்கொள்ளும் வரை, உங்களில் ஒருவர் ஒரு நல்ல தீர்வைக் கொண்டு வரும் நேரம் வரலாம். நீங்கள் அனைவரும் தீர்வைப் பொருத்தமானதாகக் கண்டறிந்தால் மற்றும் ஒரு நல்ல வழி இருந்தால், அப்போது இது பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சம் மற்றும் ஒளியின் காரணத்தால் உண்டானதாக இருக்கும். மிகவும் துல்லியமான நடைமுறைப்படுத்துவதற்கான பாதையைப் பரிந்துரைப்பதற்கு நீங்கள் தொடர்ந்து இணைந்து ஐக்கியங்கொள்வதைத் தொடர்ந்தால், நிச்சயமாக அது சத்தியத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப இருக்கும். உங்கள் நடைமுறைப்படுத்துதலில், உங்கள் நடைமுறைப்படுத்தும் முறையானது இன்னும் ஓரளவு பொருத்தமற்றதாக இருப்பதை நீங்கள் கண்டறிந்தால், நீங்கள் அதை விரைவாகச் சரி செய்ய வேண்டும். நீ சிறிதளவு தவறு செய்தால், தேவன் உன்னைக் கண்டிக்க மாட்டார், ஏனென்றால் நீ செய்வதில் உன்னுடைய நோக்கங்கள் சரியானவை, மேலும் நீ சத்தியத்தின்படி நடைமுறைப்படுத்துகிறாய். நீ வெறுமனே கொள்கைகளைப் பற்றிச் சிறிது குழப்பமடைந்துள்ளாய், மேலும் நடைமுறைப்படுத்துவதில் நீ ஒரு தவறைச் செய்துள்ளாய், அது மன்னிக்கத்தக்கதாகும். ஆனால் பெரும்பாலான ஜனங்கள் காரியங்களைச் செய்யும்போது, அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவர்கள் கற்பனை செய்வதன் அடிப்படையில் அவர்கள் செய்கிறார்கள். சத்தியத்தின்படி எவ்வாறு நடைமுறைப்படுத்துவது அல்லது தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறுவது எப்படி என்பதை பற்றிச் சிந்திக்க அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அடிப்படையாகப் பயன்படுத்துவதில்லை. மாறாக, தங்களுக்குத் தாங்களே எப்படி நன்மை செய்வது, மற்றவர்களை எப்படித் தங்களை உயர்வாகப் பார்க்க வைப்பது, மற்றும் மற்றவர்களை எப்படித் தங்களை ரசிக்கும்படிச் செய்வது என்று மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் முற்றிலும் தங்கள் சொந்த யோசனைகளின் அடிப்படையிலும் மற்றும் முற்றிலும் தங்களைத் திருப்திப்படுத்தவும் விஷயங்களைச் செய்கிறார்கள், இது தொந்தரவானதாகும். அப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் சத்தியத்தின்படி காரியங்களைச் செய்ய மாட்டார்கள், மேலும் தேவன் அவர்களை எப்போதும் வெறுப்பார். நீங்கள் உண்மையிலேயே மனசாட்சியும் பகுத்தறிவும் உள்ளவராக இருந்தால், என்ன நடந்தாலும் உங்களால் தேவனுக்கு முன்பாக வந்து ஜெபிக்கவும் தேடவும், உங்கள் செயல்களில் உள்ள நோக்கங்களையும் கலப்படத்தையும் தீவிரமாக ஆராயவும் முடிய வேண்டும், தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கோரிக்கைகளின்படி எதைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடிய வேண்டும், மேலும் தேவனுக்குப் பிரியமான செயல்கள் எவை, எந்தச் செயல்கள் தேவனை அருவருப்படையச் செய்கின்றன, மற்றும் எந்தச் செயல்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறுகின்றன என்பதை மீண்டும் மீண்டும் சீர்தூக்கிப் பார்க்கவும் சிந்திக்கவும் முடிய வேண்டும். இந்த விஷயங்களை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வரை உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் இந்த விஷயங்களைக் குறித்து ஆராய வேண்டும். ஒரு செயலைச் செய்வதற்கான சொந்த நோக்கங்கள் உங்களுக்கு உள்ளன என்று உங்களுக்குத் தெரிந்தால், அப்போது உங்கள் நோக்கங்கள் என்ன, அது உங்களைத் திருப்திபடுத்துவதா அல்லது தேவனைத் திருப்திப்படுத்துவதா, அது உங்களுக்குப் பயனளிப்பதாக இருக்கிறதா அல்லது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்குப் பயனளிப்பதாக இருக்கிறதா, அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்…. உன் ஜெபங்களில் இது போன்றவற்றை நீ அதிகமாகத் தேடிச் சிந்தித்து, சத்தியத்தைத் தேட உன்னையே அதிகக் கேள்விகளைக் கேட்டால், அப்போது உன் செயல்களில் ஏற்படும் விலகல்கள் மிகவும் சிறியதாக மாறும். இந்த வழியில் சத்தியத்தை தேடக் கூடியவர்கள் மட்டுமே தேவனுடைய சித்தத்தை கருத்தில் கொண்டு தேவனுக்குப் பயப்படுபவர்கள் ஆவர், ஏனென்றால் நீ தேவனுடைய வார்த்தைகளின் தேவைகளுக்கு ஏற்பவும் கீழ்ப்படிதலுள்ள இருதயத்தோடும் தேடுகிறாய், மேலும் இந்த வழியில் சத்தியத்தைத் தேடுவதால் நீ அடையும் முடிவுகள் சத்தியத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப இருக்கும்.

ஒரு விசுவாசியின் செயல்கள் சத்தியத்தை அறியாததாக இருந்தால், அப்போது அவை அவிசுவாசியின் செயல்களைப் போலவே இருக்கும். தேவனை இருதயத்தில் கொண்டிராத தேவனை விட்டு விலகிச் செல்கிற வகையினர் இந்த வகை நபராவர், இப்படிப்பட்டவர் தேவனுடைய வீட்டில் தங்கள் எஜமானருக்குச் சில அற்பமான வேலைகளைச் செய்து கொஞ்சம் ஊதியம் பெற்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து கிளம்பிப் போகிற வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒரு வேலையாள் போன்றவராவர். இவர் முற்றிலும் தேவனை விசுவாசிக்கும் நபர் அல்ல. தேவனின் அங்கீகாரத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதே நீ காரியங்களைச் செய்யும்போது முதலில் யோசிக்க வேண்டியதும் கவனிக்க வேண்டியதுமான காரியமாகும்; அது உன் நடைமுறையின் கொள்கையாகவும் நோக்கமாகவும் இருக்க வேண்டும். நீங்கள் செய்வது சத்தியத்துக்கு ஏற்புடையதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டியதற்கான காரணம் என்னவென்றால், அது சத்தியத்துக்கு ஏற்ப இருந்தால் அப்போது அது நிச்சயமாக தேவனுடைய சித்தத்துடன் ஒத்துப் போகிறது. விஷயம் சரியானதா அல்லது தவறானதா அல்லது அது மற்றவர்களின் ரசனைகளுக்கு இணங்குகிறதா அல்லது உன் சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை நீ அளவிட வேண்டும் என்பது காரியமல்ல; மாறாக, அது சத்தியத்துக்கு இணங்குகிறதா அது திருச்சபையின் வேலை மற்றும் நலன்களுக்குப் பயனளிக்கிறதா இல்லையா என்பதை நீ தீர்மானிக்க வேண்டும். நீ இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டால், அப்போது நீ காரியங்களைச் செய்யும்போது, நீ மேலும் மேலும் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இருப்பாய். இந்த அம்சங்களை நீ கருத்தில் கொள்ளாமல், விஷயங்களைச் செய்யும்போது, வெறுமனே உன் சொந்த விருப்பத்தை மட்டுமே நம்பினால், அப்போது நீ உறுதியாக அவற்றைத் தவறாகச் செய்வாய், ஏனென்றால் மனிதனின் விருப்பம் சத்தியமல்ல, மேலும் நிச்சயமாக அது தேவனுடன் இணக்கமற்றதாய் இருக்கிறது. நீ தேவனால் அங்கீகரிக்கப்பட விரும்பினால், உன் சொந்த விருப்பத்தின்படி இல்லாமல் சத்தியத்தின்படி நீ பயிற்சி செய்ய வேண்டும். சிலர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் சில தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். அப்போது அவர்களின் சகோதர சகோதரிகள் இதைப் பொருத்தமற்றதாகக் கருதுகிறார்கள், அதற்காக அவர்களை நிந்திக்கிறார்கள், ஆனால் இந்த ஜனங்கள் பழியை ஏற்க மாட்டார்கள். இது திருச்சபையின் வேலை, நிதி அல்லது ஜனங்களுடன் தொடர்பில்லாத ஒரு தனிப்பட்ட விஷயமாக இருந்தது என்றும், அது பொல்லாப்பு செய்கிறது அல்ல என்றும், எனவே ஜனங்கள் தலையிடக்கூடாது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். சில விஷயங்கள் எந்தக் கொள்கையையோ அல்லது சத்தியத்தையோ உள்ளடக்காத தனிப்பட்ட விஷயங்களாக உனக்குத் தோன்றலாம். இருப்பினும் நீ செய்த காரியத்தைப் பார்த்தால், நீ மிகவும் சுயநலவாதியாக இருந்தாய். நீ திருச்சபையின் வேலை அல்லது தேவனுடைய வீட்டின் நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை, அல்லது இது தேவனுக்குத் திருப்திகரமாக இருக்குமா என்றும் கருத்தில் கொள்ளவில்லை; நீ உன் சொந்த நலனை மட்டுமே கருத்தில் கொண்டாய். இது ஏற்கெனவே பரிசுத்தவான்களின் உரிமையையும் ஒரு நபரின் மனிதத்தன்மையையும் உள்ளடக்கியதாகும். நீ செய்து கொண்டிருந்தது திருச்சபையின் நலன்களை உள்ளடக்கியதாக இல்லாமல் இருந்தாலும், அது சத்தியத்தை உள்ளடக்கியதாக இல்லை என்றாலும், உன் கடமையைச் செய்வதாக கூறிக்கொண்டு தனிப்பட்ட விஷயத்தில் ஈடுபடுவது சத்தியத்துக்கு இணங்கிப் போகிறதாக இல்லை. நீ என்ன செய்கிறாய், ஒரு விஷயம் எவ்வளவு பெரியது அல்லது சிறியது, மேலும் அது தேவனுடைய குடும்பத்திலுள்ள உன் கடமையா அல்லது உன் சொந்த தனிப்பட்ட காரியமா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ செய்வது தேவனுடைய சித்தத்திற்கு இணங்குவதாகவும், அதோடுகூட மனிதத் தன்மையுள்ள ஒரு நபர் செய்கிற செயலாகவும் இருக்கிறதா என்பதை நீ கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு, நீ செய்கிற எல்லாவற்றிலும் சத்தியத்தை நாடுவாயானால், அப்பொழுது, நீ உண்மையிலேயே தேவனை விசுவாசிக்கிற ஒரு நபராக இருப்பாய். நீங்கள் பக்தியுடன் ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு சத்தியத்தையும் இவ்வாறு நடத்தினால், அப்போது உங்கள் மனநிலையில் உங்களால் மாற்றங்களை அடைய முடியும். “நான் என் கடமையைச் செய்யும்போது சத்தியத்தை நடைமுறைப்படுத்துவது போதுமானது, ஆனால் எனது தனிப்பட்ட விஷயங்களை நான் கவனித்துக் கொள்ளும்போது, சத்தியம் என்ன சொல்ல வேண்டும் என்று நான் கவலைப்படுவதில்லை, நான் என்ன விரும்புகிறேனோ அதைச் செய்வேன், எனக்குப் பயனளிக்கும் எதையும் செய்வேன்” என்று நினைப்பவர்களும் உண்டு. இந்த வார்த்தைகளில் அவர்கள் சத்தியத்தை நேசிப்பவர்கள் அல்லர் என்பதை நீங்கள் காணலாம். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு எந்தக் கொள்கைகளும் இல்லை. தேவனுடைய வீட்டில் அது ஏற்படுத்தும் விளைவைக் கூட கருத்தில் கொள்ளாமல், அவர்கள் தங்களுக்கு எது நன்மையாய் இருக்கிறதோ அதைச் செய்வார்கள். அதன் விளைவாக, அவர்கள் எதையாவது செய்து விட்டால், தேவன் அவர்களில் இருக்க மாட்டார், அவர்கள் இருளாகவும் சோகமாகவும் உணர்கிறார்கள், என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறார்கள். இது வெறுமனே அவர்களின் தண்டனை அல்லவா? நீ உன் செயல்களில் சத்தியத்தைக் கடைப்பிடிக்காமல் தேவனை அவமதித்தால், அப்போது நீ அவருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய். ஒருவர் சத்தியத்தை விரும்பாமல் அடிக்கடி தன் விருப்பத்தின்படி நடந்து கொண்டால், அப்போது அவர்கள் அடிக்கடி தேவனைப் புண்படுத்துவார்கள். அவர் அவர்களை வெறுத்து, புறக்கணித்து, அவர்களை ஓரங்கட்டி விடுவார். அப்படிப்பட்ட ஒரு நபர் செய்வது அடிக்கடி தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற தவறிவிடுகிறது, மேலும் அவர்களுக்கு மனந்திரும்புதல் தெரியவில்லை என்றால், தண்டனை வெகு தொலைவில் இல்லை.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 575

நீ நிறைவேற்றும் எந்த ஒரு கடமையும் ஜீவப்பிரவேசத்தை உள்ளடக்கியது. உன் கடமை மிகவும் முறையானதாக அல்லது தப்பும்தவறுமானதாக, மந்தமாக அல்லது துடிப்புடையதாக இருந்தாலும், நீ எப்போதும் ஜீவப்பிரவேசத்தை அடையவேண்டும். சிலர் செய்யும் கடமைகள் மிகவும் சலிப்பூட்டுவவையாக இருக்கின்றன; அவர்கள் அதே விஷயத்தை ஒவ்வொரு நாளும் செய்கிறார்கள். இருந்தாலும். அவற்றைச் செய்யும்போது இந்த ஜனங்கள் வெளிப்படுத்தும் நிலைகள் அவ்வளவு தூரத்துக்கு ஒரே மாதிரியாக இல்லை. சிலவேளைகளில், நல்ல மனநிலையில் இருக்கும்போது, ஜனங்கள் கொஞ்சம் அதிகச் சுறுசுறுப்பாக இருந்து ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார்கள். மற்ற சமயங்களில், சில அறியாத தாக்கத்தால், அவர்களுடைய சாத்தானின் மனநிலைகள் அவர்களில் ஒழுங்கீனங்களைத் தூண்டுவதால், அவர்கள் முறையற்ற கருத்துக்களைக் கொண்டு மோசமான நிலையிலும் மோசமான மனநிலையிலும் இருக்கிறார்கள்; இதன் விளைவாக அவர்கள் தங்கள் கடமைகளை அக்கறையற்ற முறையில் செய்கிறார்கள். ஜனங்களின் அகநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது; அவர்களால் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மாற முடியும். உன் நிலை எப்படி மாறினாலும், உன் மனநிலையின் அடிப்படையில் செயல்படுவது எப்போதுமே தவறானதாகும். நீ நல்ல மனநிலையில் இருக்கும்போது சற்றே சிறந்த முறையில் செய்கிறாய், மேலும் நீ மோசமான மன்நிலையில் இருக்கும்போது கொஞ்சம் மோசமாகச் செய்கிறாய் என்றால்—இது ஒரு கொள்கையின் அடிப்படையில் விஷயங்களைச் செய்வதாகுமா? உன் கடமையை ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தில் செய்ய இது உன்னை அனுமதிக்குமா? ஜனங்களுடைய மனநிலை எப்படியாக இருந்தாலும் தேவனுக்கு முன்பாக ஜெபித்துச் சத்தியத்தைத் தேட ஜனங்கள் அறிய வேண்டும்; இந்த வழியில் மட்டுமே அவர்கள் தங்கள் மனநிலைகளால் கட்டுப்படுத்தப்பட்டு ஊசலாடுவதைத் தடுக்க முடியும். உங்கள் கடமையை நிறைவேற்றும் போது, நீங்கள் நியமத்தின்படி காரியங்களைச் செய்கிறீர்களா, உங்கள் கடமையின் செயல்திறன் தரமாக இருக்கிறதா, நீங்கள் வெறுமனே சிரத்தையற்ற விதத்தில் செய்கிறீர்களா இல்லையா, உங்கள் பொறுப்புகளைத் தவிர்க்க முயற்சிக்கிறீர்களா, உங்கள் அணுகுமுறை மற்றும் நீங்கள் சிந்திக்கும் விதத்தில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதைப் பார்க்க நீங்கள் எப்பொழுதும் உங்களைப் பரிசோதிக்க வேண்டும். நீங்கள் சுயபரிசோதனை செய்து, இந்த விஷயங்கள் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தவுடன், உங்கள் கடமையை நிறைவேற்றுவதற்கு உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது. உன் கடமையைச் செய்யும்போது நீ எதை எதிர்கொள்கிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல்—எதிர்மறை மற்றும் பலவீனம், அல்லது கையாளப்பட்ட பிறகு மோசமான மனநிலையில் இருப்பது—நீ அதைச் சரியாக நடத்த வேண்டும், மேலும் நீ சத்தியத்தைத் தேடவும் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளவும் வேண்டும். இந்தக் காரியங்களைச் செய்வதன் மூலம், நீ பயிற்சிக்கான ஒரு பாதையைப் பெற்றிருப்பாய். உன் கடமையை நிறைவேற்றுவதில் நீ ஒரு நல்ல வேலையைச் செய்ய விரும்பினால், அப்பொழுது உன் மனநிலையால் நீ பாதிக்கப்படக்கூடாது. நீ எவ்வளவு எதிர்மறையாக அல்லது பலவீனமாக உணர்கிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல், நீ செய்யும் எல்லாவற்றிலும் முழுமையான கண்டிப்புடனும் நியமங்களைப் பற்றிக்கொண்டும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நீ இதைச் செய்தால், மற்றவர்கள் உன்னை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், தேவனும் உன்னை விரும்புவார். அதுபோல, நீ பொறுப்பான மற்றும் சுமைக்குத் தோள் கொடுக்கிற ஒரு நபராக இருப்பாய்; நீ. உன் கடமைகளைத் தரத்திற்கு ஏற்ப நிறைவேற்றுகிற மற்றும் ஒரு உண்மையான நபரின் சாயலை முழுமையாக வாழ்ந்து காட்டுகிற ஓர் உண்மையான நல்ல மனுஷனாக இருப்பாய். அத்தகைய ஜனங்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது சுத்திகரிக்கப்பட்டு உண்மையான மறுரூபத்தை அடைகிறார்கள், மேலும் அவர்களைத் தேவனுடைய பார்வையில் நேர்மையானவர்கள் என்று கூறலாம். நேர்மையான ஜனங்கள் மட்டுமே விடாமுயற்சியுடன் சத்தியத்தைக் கைக்கொண்டு நியமங்களுடன் செயல்படுவதில் வெற்றிபெற முடியும், மேலும் தங்கள் கடமைகளைத் தரமானதாக நிறைவேற்ற முடியும். கொள்கைகளுடன் செயல்படும் ஜனங்கள் நல்ல மனநிலையில் இருக்கும்போது தங்கள் கடமைகளைக் கவனமாக நிறைவேற்றுகிறார்கள்; அவர்கள் சிரத்தையற்ற முறையில் வேலை செய்யவில்லை, அவர்கள் கர்வமுள்ளவர்கள் அல்ல, மற்றவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக நினைக்க அவர்கள் தங்களைப் பகட்டிக் கொள்வதில்லை. அவர்கள் மோசமான மனநிலையில் இருக்கும்போது, எவ்வாறாயினும், அவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை ஆர்வத்தோடும் பொறுப்புடனும் முடித்துவிடுகிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அவர்கள் மீது சிறிது அழுத்தத்தை ஏற்படுத்தும் அல்லது அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது இடையூறை ஏற்படுத்தும் ஒன்றை எதிர்கொண்டாலும், அவர்கள் தேவனுக்கு முன்பாக தங்கள் இருதயங்களை அமைதிப்படுத்தி, ஜெபிக்க முடிகிறது, “நான் எவ்வளவு பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறேன் என்பதைப் பொருட்படுத்தாமல்—வானங்கள் கவிழ்ந்து கீழே விழுந்தாலும்—நான் உயிரோடிருக்கும் வரை, என் கடமையை நிறைவேற்ற என்னால் முடிந்ததை செய்ய உறுதியாக இருக்கிறேன். நான் வாழும் ஒவ்வொரு நாளும், நான் என் கடமையை நன்றாகச் செய்யவேண்டும். இதனால், தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட இந்தக் கடமைக்கும் அவர் என் சரீரத்தில் வைத்திருக்கிற இந்த சுவாசத்திற்கும் கூட நான் தகுதியானவனாகிறேன், நான் எவ்வளவு சிரமத்தில் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், நான் அவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைப்பேன், ஏனென்றால் என் கடமையை நிறைவேற்றுவது மிக முக்கியம்!” எந்தவொரு நபர், நிகழ்வு, விஷயம் அல்லது சூழலால் பாதிக்கப்படாதவர்கள், எந்தவொரு மனநிலை அல்லது வெளிப்புற சூழ்நிலையாலும் கட்டுப்படுத்தப்படாதவர்கள், மற்றும் தங்கள் கடமைகளையும் தேவன் அவர்களிடம் ஒப்படைத்த கட்டளைகளையும் முதன்மையாக வைக்கிறவர்கள்—அவர்களே தேவனுக்கு உண்மையுள்ள ஜனங்களும் அவருக்கு உண்மையாகக் கீழ்ப்படிபவர்களுமாவர். இம்மாதிரியான ஜனங்கள் ஜீவ பிரவேசத்தை அடைந்து சத்தியத்தின் யதார்த்தத்தில் பிரவேசித்துள்ளனர். இது சத்தியத்தை வாழ்ந்து காட்டுவதற்கான மிகவும் உண்மையான மற்றும் நடைமுறையான வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஜீவப்பிரவேசமானது கடமையைச் செய்வதில் இருந்து தொடங்குகிறது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 576

சிலர் தங்கள் கடமைகளைச் செய்யும்போது எந்தச் சிக்கலை எதிர்கொண்டாலும், சத்தியத்தைத் தேட மாட்டார்கள், மற்றும் அவர்கள் தங்கள் சொந்தச் சிந்தனைகள், கருத்துக்கள், கற்பனைகள் மற்றும் விருப்பங்களின்படியே எப்போதும் செயல்படுவார்கள். அவர்கள் தொடர்ந்து தங்கள் சொந்த சுயநல விருப்பங்களையே திருப்திப்படுத்திக் கொள்ளுகிறார்கள், மற்றும் எப்போதும் அவர்களது சீர்கேடான மனநிலையே அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அவர்கள் எப்போதும் தங்கள் கடமைகளைச் செய்துவிட்டது போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாததால், மேலும் சத்தியத்தின் கொள்கைகளின்படி அவர்களால் விஷயங்களைச் செய்ய முடியாததால், அவர்கள் இறுதியில் சத்தியத்தையும் ஜீவனையும் அடையத் தவறிவிடுவார்கள், மேலும் பெயரளவில் ஒரு ஊழியக்காரராக மாறுவார்கள். ஆகவே, தங்கள் கடமைகளைச் செய்யும் போது இத்தகைய ஜனங்கள் எதைச் சார்ந்திருக்கிறார்கள்? அவர்கள் சத்தியத்தையோ அல்லது தேவனையோ சார்ந்திருக்கவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளும் சிறிதளவு சத்தியமும் அவர்களது இருதயத்தில் ஆளுகை செய்யவில்லை; அவர்கள் தங்கள் சொந்த வரங்களையும் தாலந்துகளையும், அவர்கள் பெற்றிருக்கும் எந்தவொரு அறிவையும், அதோடுகூட தங்கள் சொந்த மன உறுதியையும் அல்லது நல்லெண்ணங்களையும் இந்தக் கடமைகளைச் சார்ந்திருக்கிறார்கள். நிலைமை இப்படியாய் இருக்க, அவர்களால் தங்கள் கடமைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தரத்துக்கு செய்ய முடியுமா? ஜனங்கள் தங்கள் கடமைகளைச் செய்வதற்குத் தங்களுடைய இயற்கையான நிலை, கருத்துகள், கற்பனைகள், நிபுணத்துவம் மற்றும் கல்வியைச் சார்ந்திருக்கும்போது, அவர்கள் கடமையைத்தானே செய்கிறார்கள் தீமையை அல்ல என்று தோன்றினாலும், அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவில்லை, மேலும் தேவனுக்குத் திருப்திகரமான எதையும் செய்திருக்கவில்லை. அலட்சியப்படுத்த முடியாத இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது: உன் கடமையைச் செய்யும் செயல்முறையின் போது, உன் கருத்துக்கள், கற்பனைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் ஒருபோதும் மாறுவதில்லை என்றால் மேலும் அவை சத்தியத்தால் பதிலீடு செய்யப்படுவதில்லை என்றால், மேலும் உன் நடவடிக்கைகள் மற்றும் செயல்கள் ஒருபோதும் சத்தியத்தின் கொள்கையின்படி செய்யப்படுவதில்லை என்றால் இறுதி விளைவு என்னவாக இருக்கும்? உனக்கு ஜீவப்பிரவேசம் இருக்காது, நீ சேவை செய்யும் ஒருவனாய் மாறுவாய், இவ்வாறு கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் நிறைவேறும்: “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:22-23). முயற்சி செய்து சேவை ஆற்றும் இந்த ஜனங்களை தேவன் ஏன் “அக்கிரமச் செய்கைக்காரரே” என்று அழைக்கிறார்? ஒரு கருத்தில் நாம் உறுதியாக இருக்கலாம். அது என்னெவென்றால் இந்த ஜனங்கள் என்ன கடமைகளை அல்லது செய்கைகளைச் செய்தாலும், அவர்களது உள்நோக்கங்கள், உத்வேகம், எண்ணங்கள், மற்றும் சிந்தனைகள் முற்றிலும் அவர்களது சுயநல விருப்பங்களில் இருந்தே எழுகின்றன, அவர்கள் முற்றிலுமாக தங்கள் சொந்த நலன்களையும் வாய்ப்புகளையும் பாதுகாப்பதற்காகவும், தங்கள் சொந்த பெருமையை, வீண்பகட்டை மற்றும் அந்தஸ்தை திருப்திப்படுத்தவும் மட்டுமே இருக்கிறார்கள். எல்லாம் இந்த யோசனைகளையும் கணக்கீடுகளையுமே மையமாகக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இருதயங்களில் சத்தியம் இல்லை. தேவனுக்குப் பயந்து கீழ்ப்படியும் ஓர் இருதயம் அவர்களுக்கு இல்லை—இதுவே பிரச்சினையின் வேர் ஆகும். இன்று நீங்கள் தேடுவதற்கு எது முக்க்கியமானதாக இருக்கிறது? எல்லாவற்றிலும் நீங்கள் சத்தியத்தைத் தேட வேண்டும், மேலும் தேவனுடைய சித்தத்தின் படியும் தேவன் கேட்பதற்கும் ஏற்பவும் நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவேண்டும். நீங்கள் இதைச் செய்தால் தேவனுடைய பாராட்டைப் பெறுவீர்கள். ஆகவே, தேவன் கேட்பதற்கு ஏற்ப உங்கள் கடமையைச் செய்வதில் குறிப்பாக அடங்கி இருப்பது என்ன? நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீங்கள் தேவனிடத்தில் ஜெபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், உங்களுக்கு இருக்கும் உந்துதல்களைப் பற்றியும், உங்களுக்கு இருக்கும் நினைவுகளைப் பற்றியும், இந்த உந்துதல்களும் நினைவுகளும் சத்தியத்திற்கு ஏற்ப உள்ளனவா என்றும் சிந்திக்கவேண்டும்; அப்படி இல்லை என்றால் அவற்றைப் புறந்தள்ள வேண்டும், அதன் பின்னர் நீங்கள் சத்தியத்தின் கொள்கைப்படி செயல்பட்டு தேவனுடைய கண்காணிப்பை ஏற்கவேண்டும். இது நீங்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யும். உங்களுக்குச் சொந்த உந்துதல்களும் நோக்கங்களும் இருந்தால், மற்றும் அவை சத்தியத்தை மீறுகின்றன மேலும் தேவனுடைய சித்தத்துக்கு மாறாக இருக்கின்றன என்று நன்கு தெரிந்திருந்தும் தேவனிடம் ஜெபிக்காமல், தீவுக்காகச் சத்தியத்தை நாடாமல் இருந்தால், அது ஆபத்தானதாகும். தீமை செய்து தேவனுக்கு எதிரான காரியங்களைச் செய்வது உங்களுக்கு எளிதானது. ஒருமுறை அல்லது இருமுறை நீங்கள் தீமை செய்து மனந்திரும்பினால், இரட்சிப்புக்கான நம்பிக்கை இன்னும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து தீமை செய்தால்—நீங்கள் எல்லா வகையான பொல்லாத செயல்களையும் செய்தால்—அதன் பின்னும் மனந்திரும்பாவிட்டால், நீங்கள் பிரச்சினையில் இருக்கிறீர்கள்: தேவன் உங்களை ஒருபுறமாகத் தள்ளுவார் அல்லது கைவிடுவார், அதாவது நீங்கள் புறம்பாக்கப்படும் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று அதற்கு அர்த்தமாகும்; எல்லா விதமான பொல்லாத செய்கைகளையும் செய்யும் ஜனங்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட்டு புறம்பாக்கப்படுவார்கள்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 577

சிருஷ்டி கர்த்தர் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களை நடத்துவதற்கான ஒரு அடிப்படைக் கொள்கை உள்ளது, அது மிக உயர்ந்த கொள்கையாகவும் இருக்கிறது. சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களை அவர் எவ்வாறு நடத்துகிறார் என்பது முற்றிலும் அவரது நிர்வாகத் திட்டத்தின் அடிப்படையிலும் அவரது கிரியையினுடைய தேவைகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது; எந்த ஒரு நபரையும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை, எந்த ஒரு நபரையும் அவருடன் உடன்பட வைக்க வேண்டிய அவசியமுமில்லை. அவர் என்ன செய்ய வேண்டுமோ, அவர் எப்படி ஜனங்களை நடத்த வேண்டுமோ, அவர் செய்கிறார், அவர் என்ன செய்தாலும் அல்லது அவர் ஜனங்களை எப்படி நடத்தினாலும், அவை அனைத்தும் சத்தியத்தின் கொள்கைகளுடனும், சிருஷ்டி கர்த்தர் கிரியை செய்யும் கொள்கைகளுடனும் ஒத்துப்போகிறது. ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக, கீழ்ப்படிவது மட்டுமே நாம் செய்ய வேண்டியதாகும்; வேறு எந்த விருப்பமும் இருக்கக்கூடாது. இது எதைக் காட்டுகிறது? சிருஷ்டி கர்த்தர் எப்போதுமே சிருஷ்டிப்பின் கர்த்தராகவே இருப்பார் என்பதை இது காட்டுகிறது; சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஒரு ஜீவனையும் தாம் விரும்பியபடி திட்டமிடுவதற்கும், ஆளுகை செய்வதற்கும் அவர் வல்லமையையும் தகுதிகளையும் பெற்றிருக்கிறார், அவர் அப்படிச் செய்வதற்கு ஒரு காரணம் தேவையில்லை. இது அவருடைய அதிகாரம். சிருஷ்டி கர்த்தர் செய்வது சரியா தவறா, அல்லது அவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நியாயந்தீர்க்க உரிமையைப் பெற்றிருக்கிறவர்களோ அல்லது தகுதியுள்ளவர்களோ சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களில் யாரும் இல்லை. சிருஷ்டிகரின் ராஜரீகத்தையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்ந்தெடுக்க எந்த சிருஷ்டிக்கும் உரிமை இல்லை; மேலும் சிருஷ்டிகர் எவ்வாறு ஆளுகை செய்கிறார் மற்றும் தங்களது தலைவிதியை எவ்வாறு ஏற்பாடு செய்கிறார் என்று கேட்பதற்கு எந்த சிருஷ்டிக்கும் உரிமை இல்லை. இதுவே மிக உயரிய உண்மையாகும். சிருஷ்டி கர்த்தர் தாம் சிருஷ்டித்த ஜீவன்களுக்கு என்ன செய்தாலும் சரி, அதை எப்படிச் செய்தாலும் சரி, அவர் சிருஷ்டித்த மனுஷர்கள் ஒன்றே ஒன்றைச் செய்ய வேண்டும்: சிருஷ்டி கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட எல்லாவற்றையும் தேடவும், கீழ்ப்படியவும், அறிந்துகொள்ளவும், மற்றும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். சிருஷ்டி கர்த்தர் தமது நிர்வாகத் திட்டத்தை நிறைவேற்றி, தமது கிரியையை முடித்து, எந்தத் தடையும் இன்றி தமது நிர்வாகத் திட்டத்தை முன்னேறச்செய்திருப்பார் என்பதே இறுதி முடிவாக இருக்கும்; இதற்கிடையில், சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள் சிருஷ்டிகரின் ஆளுகையையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அவருடைய ஆளுகைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிந்திருப்பதால், அவர்கள் சத்தியத்தைப் பெற்றிருப்பார்கள், சிருஷ்டிகரின் சித்தத்தைப் புரிந்துவைத்திருப்பார்கள், அவருடைய மனநிலையை அறிந்துகொள்வார்கள். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய இன்னொரு கொள்கை உள்ளது: சிருஷ்டிகர் என்ன செய்தாலும் சரி, அவர் எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர் செய்வது பெரிய செயலாக இருந்தாலும் சரி சிறியதாக இருந்தாலும் சரி, அவர் இன்னும் சிருஷ்டிகராகவே இருக்கிறார்; அதேசமயம், அவர் சிருஷ்டித்த எல்லா மனுஷர்களும், அவர்கள் என்ன செய்திருந்தாலும், அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாகவோ அல்லது பிரியமானவர்களாகவோ இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களாகவே இருக்கிறார்கள். சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தைப் பொறுத்தவரை, சிருஷ்டிகரிடமிருந்து அவர்கள் எவ்வளவு கிருபையையும், எத்தனை ஆசீர்வாதங்களையும் பெற்றிருந்தாலும், எவ்வளவு இரக்கத்தையும், தயவையும், கருணையையும் பெற்றிருந்தாலும், அவர்கள் தங்களை திரளான ஜனங்களிடமிருந்து தனித்து நிற்பவர்கள் என்று நம்பவோ அல்லது தாங்கள் தேவனுக்குச் சமமாக இருக்க முடியும் என்றோ மற்றும் அவர்கள் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களின் மத்தியில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்களாகியுள்ளனர் என்றோ நினைக்கக்கூடாது. தேவன் உனக்கு எத்தனை வரங்களை வழங்கியுள்ளார், அல்லது அவர் உனக்கு எவ்வளவு கிருபையை அருளியிருக்கிறார், அல்லது அவர் உன்னை எவ்வளவு அன்பாக நடத்தியிருக்கிறார் அல்லது அவர் உனக்கு சில விசேஷித்த தாலந்துகளை அளித்திருக்கிறாரா என்பவைகள் ஒரு பொருட்டல்ல, இவை எதுவுமே உன்னுடைய சொத்துக்கள் அல்ல. நீ ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன், எனவே, நீ என்றென்றும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாகத்தான் இருப்பாய். “நான் தேவனுடைய கரங்களில் ஒரு செல்லப்பிள்ளை. தேவன் என்னை ஒருபோதும் ஒதுக்கித்தள்ள மாட்டார், என்னிடத்தில் தேவனுடைய அணுகுமுறை எப்போதுமே ஆறுதல் தரும் அன்பான வார்த்தைகளுடனும் உற்சாகப்படுத்துதலுடனும் கூடிய அன்பும், அக்கறையும் மற்றும் மென்மையான அரவணைப்புமாகவே இருக்கும்” என்று நீ ஒருபோதும் நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக, சிருஷ்டிகரின் பார்வையில், மற்ற எல்லா சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களைப் போலவே நீ இருக்கிறாய்; தேவனால் தாம் விரும்புகிறபடியே உன்னைப் பயன்படுத்த முடியும், மேலும் அவர் விரும்புகிறபடியே உனக்காகத் திட்டமிட முடியும், மேலும் அவர் விரும்பும் விதத்தில் நீ அனைத்து வகையான ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்கள் மத்தியில் நீ எந்தப் பாத்திரத்தை வகிக்க அவர் விரும்புகிறாரோ, அதையே அவரால் ஏற்பாடு செய்ய முடியும். இதுவே ஜனங்கள் பெற்றிருக்க வேண்டிய அறிவும் அவர்கள் கொண்டிருக்க வேண்டிய நல்ல உணர்வுமாகும். ஒருவரால் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள முடிந்தால், தேவனுடனான அவர்களின் உறவு மிகவும் இயல்பாக வளரும், மேலும் அவர்கள் அவருடன் மிகவும் முறையான உறவை ஏற்படுத்துவார்கள்; இந்த வார்த்தைகளை ஒருவரால் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள முடிந்தால், அவர்கள் தங்கள் நிலையை சரியாகக் கண்டறிந்து, தங்கள் பொறுப்பை உணர்ந்து, தங்கள் கடமையை நிலைநாட்டுவார்கள்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே ஒருவனால் தேவனுடைய செயல்களை அறிய முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 578

தேவனுடைய வார்த்தைகளைப் படிப்பது மற்றும் தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்து அனுபவிப்பது மூலம் மட்டுமல்லாமால் பல உபத்திரவங்கள், சுத்திகரிப்புகள், கிளைநறுக்குதல் மற்றும் கையாளப்படுதலை அனுபவிப்பதன் மூலமும் தேவனை அறிந்துகொள்ள வேண்டும்; அப்பொழுது மட்டுமே தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய மனநிலை பற்றிய உண்மையான அறிவை அடைவது சாத்தியம் ஆகும். சிலர் கூறுகிறார்கள்: “நான் மனுவுருவான தேவனை பார்த்ததில்லை, ஆகவே என்னால் எவ்வாறு தேவனை அறிய முடியும்?” உண்மையில், தேவனுடைய வார்த்தைகள் அவரது மனநிலையின் ஒரு வெளிப்பாடு ஆகும். தேவனுடைய வார்த்தைகளில் இருந்து, அவருடைய அன்பையும் மனுக்குலத்துக்கான இரட்சிப்பையும், அதுமட்டுமல்லாமல் அவர்களை இரட்சிக்கும் அவருடைய முறைகளையும் உன்னால் பார்க்க முடியும். இது ஏனென்றால் அவருடைய வார்த்தைகள் அவர் தம்மாலேயே வெளிப்படுத்தப்பட்டவை, மனிதர்களால் எழுதப்பட்டவையல்ல. அவைகள் தேவன் தம்மாலேயே வெளிப்படுத்தப்பட்டவை; தேவன் தாமே தம் வார்த்தைகளையும் அவருடைய இருதயத்தின் குரலையும் வெளிப்படுத்துகிறார், அவற்றை அவருடைய இருதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் என்றும் அழைக்கலாம். அவைகள் ஏன் இருதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் என்று அழைக்கப்படுகின்றன? இது ஏனென்றால், அவை ஆழத்தில் இருந்து வழங்கப்படுகின்றன, மேலும் அவரது மனநிலையை, அவரது சித்தத்தை, அவரது எண்ணங்களை மற்றும் சிந்தனைகளை, மனுக்குலத்திடம் அவருக்கு இருக்கும் அன்பை, அவரது மனுக்குலத்தின் இரட்சிப்பை, மற்றும் மனுக்குலத்திடம் அவருக்கு இருக்கும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகின்றன…தேவன் உரைப்பதில் கடுமையான வார்த்தைகளும், அன்புநிறைந்த வார்த்தைகளும் மட்டுமல்லாமல் மனுஷீக விருப்பங்களோடு ஒத்துப்போகாத சில வெளிப்படுத்தும் வார்த்தைகளும் அடங்கியுள்ளன. நீ வெளிப்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே நோக்கினால், தேவன் மிகவும் கடுமையாக இருப்பதாக உணரலாம். சாந்தமான வார்த்தைகளை மட்டுமே நீ நோக்கினால், தேவன் மிகவும் அதிகாரம் செலுத்துபவராக இல்லை என்பதை உணரமுடியும். ஆகவே அவற்றைச் சூழலுக்குப் புறம்பாக வைத்துப் பார்க்கக்கூடாது; மாறாக, அவற்றை ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் பார்க்க வேண்டும். சிலசமயங்களில் தேவன் ஓர் இரக்கமுள்ள கண்ணோட்டத்தில் இருந்து பேசும்போது ஜனங்கள் அவருக்கு மனுக்குலத்தின் மேல் உள்ள அன்பைப் பார்க்கிறார்கள்; சிலசமயங்களில் அவர் மிகவும் கடுமையான கண்ணோட்டத்தில் இருந்து பேசுகிறார். அப்போது ஜனங்கள் அவருடைய மனநிலை ஒரு குற்றத்தையும் சகித்துக்கொள்ளாததையும், மனிதன் வருந்தத்தக்க அளவில் இழிவானவனாக இருப்பதோடு தேவனின் முகத்தைப் பார்ப்பதற்கும் அவர் முன் வருவதற்கும் தகுதியற்றவனாக இருப்பதையும் பார்க்கிறார்கள். அவரது கிருபையினால் மட்டுமே இப்போது ஜனங்கள் அவர் முன் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். தேவன் கிரியை செய்யும் விதத்தில் இருந்தும் அவரது கிரியையின் முக்கியத்துவத்தில் இருந்தும் அவரது ஞானத்தைப் பார்க்க முடியும். தேவனுடன் நேரடியான எந்த ஒரு தொடர்பு இல்லாமல் இருந்தாலும் கூட ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளில் இந்த விஷயங்களைப் பார்க்கலாம். ஒருவர் உண்மையிலேயே தேவனை அறியும் போது, அவர் கிறிஸ்துவுடன் தொடர்புகொள்ளுகிறார். கிறிஸ்துவுடனான அவர்களுடைய சந்திப்பு அவர்களுக்கு இப்போது தேவனைப் பற்றி இருக்கும் அறிவுடன் ஒத்ததாக இருக்கிறது; இருப்பினும், வெறும் போதனை அளவிலான அறிவுடைய ஒருவர் கிறிஸ்துவைச் சந்திக்கும் போது, அவர்களால் அந்தத் தொடர்பைப் பார்க்க முடியாது. தேவனுடைய மனுவுருவெடுத்தலின் சத்தியமே இரகசியங்களில் எல்லாம் மிக ஆழமானது; மனிதனுக்கு இதை அளவிடுவது கடினமானதாக இருக்கிறது. மனுவுருவாதல் என்ற இரகசியத்தைப் பற்றிய தேவனுடைய வார்த்தைகளைத் திரட்டி அவற்றை எல்லாக் கோணத்தில் இருந்தும் பாருங்கள், பின்னர் ஒருமித்து ஜெபம் பண்ணுங்கள், சிந்தித்துப் பாருங்கள், மேலும் சத்தியத்தின் இந்த அம்சம் குறித்து ஐக்கியப்படுங்கள். இப்படிச் செய்யும் போது, நீ பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தை அடைந்து புரிந்து கொள்ளுவாய். மனுக்குலம் தேவனை நேரடியாகத் தொடர்புகொள்ள ஒரு வாய்ப்பு இல்லை என்பதால், தேவனைப் பற்றிய உண்மையான அறிவை முடிவாக அவர்கள் அடைய வேண்டுமானால், தங்கள் வழியை உணர்ந்து ஒவ்வொரு நேரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரவேசிப்பதற்கு அவர்கள் இந்த வகையான அனுபவத்தைச் சார்ந்திருக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 579

தேவனை அறிவது என்பதன் அர்த்தம் என்ன? அவரது சந்தோஷம், கோபம், துக்கம், மற்றும் மகிழ்ச்சியை புரிந்துகொள்ள முடிவது மற்றும் இவ்வாறு அவரது மனநிலையை அறிவது—உண்மையில் தேவனை அறிவது என்பது இதுவே. நீ அவரைப் பார்த்துவிட்டதாகக் கூறுகிறாய், எனினும் நீ அவரது சந்தோஷம், கோபம், துக்கம், மற்றும் மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ளவில்லை மேலும் அவரது மனநிலையை நீ புரிந்துகொள்ளவில்லை. அவரது நீதியையும் புரிந்து கொள்ளவில்லை அவரது இரக்கத்தையும் புரிந்து கொள்ளவில்லை, அல்லது அவருக்குப் பிடித்ததையும் புரிந்து கொள்ளவில்லை அவர் வெறுப்பதையும் நீ புரிந்து கொள்ளவில்லை. இது தேவனைப் பற்றிய அறிவல்ல. சிலரால் தேவனைப் பின்பற்ற முடிகிறது, ஆனால் அவர்கள் நிச்சயமாகவே உண்மையிலேயே தேவனை விசுவாசிப்பதில்லை. தேவனை உண்மையாக விசுவாசிப்பது என்பது தேவனுக்குக் கீழ்ப்படிவதாகும். தேவனுக்கு உண்மையிலேயே கீழ்ப்படியாதவர்கள் தேவனை உண்மையிலேயே விசுவாசிப்பதில்லை—இங்குதான் வேறுபாடு இருக்கிறது. நீ பல ஆண்டுகளாக தேவனைப் பின்பற்றி, தேவனைப் பற்றிய அறிவையும் புரிதலையும் கொண்டிருக்கும்போது, தேவனுடைய சித்தத்தைப் பற்றிய கொஞ்சம் புரிதலும் உணர்தலும் உனக்கு இருக்கும்போது, மனிதனை இரட்சிப்பதில் தேவனுக்கு இருக்கும் அக்கறை மிகுந்த எண்ணத்தைப் பற்றிய அறிவு உனக்கு இருக்கும்போதுதான், நீ உண்மையிலேயே தேவனை விசுவாசிக்கிறாய், தேவனுக்கு உண்மையிலேயே கீழ்ப்படிகிறாய், உண்மையிலேயே தேவனிடத்தில் அன்புகூருகிறாய், மேலும் உண்மையிலேயே தேவனை ஆராதிக்கிறாய். நீ தேவனை விசுவாசித்தும் தேவனைப் பற்றிய அறிவைத் தேடாவிட்டால், மேலும் தேவனுடைய சித்தத்தை, தேவனுடைய மனநிலையை மற்றும் தேவனுடைய கிரியையைப் பற்றிய புரிதல் உனக்கு இல்லை என்றால், நீ கூட்டத்தோடு கூட்டமாக தேவனுக்குப் பின்னாக சும்மா ஓடுபவனே. இதை உண்மையான அர்ப்பணிப்பு என்றோ அதைவிட மெய்யான ஆராதனை என்றோ கூறமுடியாது. மெய்யான ஆராதனை எவ்வாறு வருகிறது? தேவனைப் பார்க்கும் மற்றும் உண்மையிலேயே தேவனை அறியும் அனைவரும் விதிவிலக்கு இல்லாமல் அவரை ஆராதித்துப் பயபக்தியோடு வணங்குகிறார்கள்; அவர்கள் யாவரும் பணிந்து ஆராதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். தற்போது, மனுவுருவான தேவன் கிரியையில் இருக்கும் போது, அவரது மனநிலை மற்றும் அவர் என்ன கொண்டிருக்கிறார் அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் ஜனங்கள் எவ்வளவு அதிகமாகப் புரிந்துகொள்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் இந்த விஷயங்களைப் பெரும் பொக்கிஷமாகக் கருதுவார்கள் மேலும் அவர்கள் இன்னும் அதிகமான பயபக்தியுடன் வணங்குவார்கள். பொதுவாக, ஜனங்களிடம் தேவனைப் பற்றிய புரிதல் குறைவாக இருக்கும் போது, அவர்கள் அதிகக் கவனமின்றி இருப்பார்கள், மேலும் தேவனை மனிதனைப் போல நடத்துவார்கள். ஜனங்கள் உண்மையிலேயே தேவனை அறிந்து அவரைப் பார்த்தால், அவர்கள் பயந்து நடுங்கித் தரையில் விழுந்து வணங்குவார்கள். “எனக்குப் பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார். அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல” (மத்தேயு 3:11)—யோவான் இதை ஏன் கூறினான்? உள்ளத்தின் ஆழத்தில் அவனுக்கு தேவனைப் பற்றிய அதிகமான அறிதல் இல்லை என்றாலும், தேவன் பயங்கரமானவர் என்பதை அவன் அறிந்திருந்தான். இந்நாட்களில் எத்தனை ஜனங்கள் தேவனை பயபக்தியோடு வணங்கக்கூடியவர்கள்? அவர்களுக்கு அவரது மனநிலை தெரியவில்லை என்றால், அவர்களால் அவரை எவ்வாறு பயபக்தியோடு வணங்க முடியும்? ஜனங்களுக்குக் கிறிஸ்துவின் சாராம்சமும் தெரியாது தேவனின் மனநிலையையும் புரிந்துகொள்ள முடியாது என்றால், பின் அவர்களால் மெய்யான தேவனை உண்மையாக ஆராதிக்கவும் முடியாது. அவர்கள் கிறிஸ்துவின் சாதாரண மற்றும் இயல்பான வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்து, இதுவரை அவரது சாராம்சத்தை அறியாவிட்டால், பின்னர் அவர்கள் கிறிஸ்துவை ஒரு சாதாரண மனிதராக நடத்துவது எளிதாகப் போய்விடுகிறது. அவர்கள் அவரிடம் ஒரு பயபக்தியற்ற சிந்தையைக் கடைப்பிடித்து அவரை ஏமாற்றலாம், எதிர்க்கலாம், கீழ்ப்படியாமல் போகலாம், மேலும் அவர் மேல் தீர்ப்புகளைக் கூறலாம். அவர்கள் சுயநீதியுள்ளவர்களாக இருக்கலாம் மற்றும் அவரது வார்த்தைகளை முக்கியமானதாக ஏற்காமலும் போகலாம்; அவர்கள் கருத்துக்கள், கண்டனங்கள், மற்றும் தேவனுக்கு எதிராக தூஷணங்களையும் எழுப்பலாம். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, ஒருவன் கிறிஸ்துவின் சாராம்சத்தையும் தெய்வீகத்தையும் அறிய வேண்டும். இதுவே தேவனை அறிவது என்பதன் முக்கிய அம்சமாகும்; இதுவே நடைமுறை தேவனை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் பிரவேசித்து அடைய வேண்டியவை ஆகும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

முந்தைய: ஜீவனுக்குள் பிரவேசித்தல் V

அடுத்த: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக