கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 77

மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாக்கிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மையில், இந்தக் கட்டம் ஜெயங்கொள்ளுதல் மற்றும் இரட்சிப்பின் கிரியையின் இரண்டாம் கட்டமாகும். வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம்தான் மனுஷன் தேவனால் ஆதாயப்படுத்தப்படுகிறான், மேலும், சுத்திகரிக்கவும், நியாயந்தீர்க்கவும், வெளிப்படுத்தவும் வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமே மனுஷனின் இருதயத்திற்குள் இருக்கும் அசுத்தங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவல்கள் அனைத்தும் முழுமையாக அம்பலப்படுத்தப்படுகின்றன. மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. உதாரணமாக, தாங்கள் மோவாபிலிருந்து வந்தவர்கள் என்பதை ஜனங்கள் உணர்ந்தபோது, அவர்கள் குறைசொல்லும் வார்த்தைகளைக் கொண்டு வந்தார்கள், ஜீவிதத்தைத் தொடரவில்லை, முற்றிலும் எதிர்மறையாகிப் போனார்கள். தேவனின் ஆளுகையின் கீழ் மனுஷகுலத்தால் இன்னும் முழுமையாக அடிபணிய முடியவில்லை என்பதை இது காட்டவில்லையா? இது துல்லியமாக அவர்களின் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை அல்லவா? நீ சிட்சைக்கு உட்படுத்தப்படாதபோது, உன் கைகள் மற்றவர்களை விட, இயேசுவின் கைகளை விட, உயரமாக செல்கின்றன. பின்னர் நீ உரத்த குரலில்: “தேவனுடைய அன்பான குமாரனாக இரு! தேவனுடன் நெருக்கமாக இரு! சாத்தானுக்கு வணங்குவதை விட நாம் மரித்துப்போவதே மேல்! பழைய சாத்தானுக்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வல்லமையை இழந்துப் பரிதாபமாக விழட்டும்! தேவன் நம்மை பூரணப்படுத்துவார்!” என்று கூக்குரலிட்டாய். உனது அழுகை மற்ற அனைவரையும் விட சத்தமாக இருந்தது. ஆனால் பின்னர் சிட்சிக்கும் காலம் வந்தது, மீண்டும், மனுஷகுலத்தின் சீர்கெட்ட மனநிலை வெளிப்பட்டது. பின்னர், அவர்களின் அழுகை நின்றுவிட்டது, அவர்களின் தீர்மானம் தோல்வியடைந்தது. இதுவே மனுஷனின் சீர்கேடு; பாவத்தை விட ஆழமாகச் செல்கிறது, இது சாத்தானால் பயிரிடப்பட்டு மனுஷனுக்குள் ஆழமாக வேரூன்றிய ஒன்று. மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 78

“நியாயத்தீர்ப்பு” என்று குறிப்பிடுகிற வார்த்தையில், யேகோவா ஒவ்வோரு பகுதியிலுமுள்ள ஜனங்களுக்குப் போதிக்க பேசிய வார்த்தைகளையும், பரிசேயர்களைக் கடிந்துகொள்ள இயேசு பேசிய வார்த்தைகளையும் நீ நினைவுகூர்வாய். அவை தீவிரத்தன்மையுள்ளவையாக இருந்தாலும், இந்த வார்த்தைகள் மனிதனுக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பு அல்ல; அவை வெவ்வேறு சந்தர்ப்பங்களில், அதாவது வெவ்வேறு பின்னணியில் தேவன் பேசிய வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகள், கடைசி நாட்களில் மனிதனை நியாயந்தீர்க்கும்போது கடைசி நாட்களின் கிறிஸ்து பேசும் வார்த்தைகளைப் போன்றதல்ல. மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும். நீ இந்தச் சத்தியங்களை முக்கியமானதாகக் கருதவில்லை என்றால், மேலும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதைத் தவிர்த்து வேறு எதையும் நீ சிந்திக்காமல் இருக்கிறாய் என்றால், அல்லது அவை சம்பந்தப்படாத ஒரு புதிய வழியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று எண்ணிக்கொண்டிருந்தால், நீ ஒரு மாபெரும் கொடும் பாவி என்று நான் சொல்கிறேன். நீ தேவன்மீது விசுவாசம் வைத்திருந்து அதேவேளையில், சத்தியத்தையோ தேவனுடைய சித்தத்தையோ தேடாமல், அல்லது உன்னைத் தேவனிடம் நெருங்கிக் கொண்டு வரும் வழியை நேசிக்கவில்லை என்றால், நீ நியாயத்தீர்ப்பைத் தவிர்க்க முயற்சிப்பவன் என்று நான் சொல்கிறேன், மேலும் நீ ஒரு பொம்மை மற்றும் பெரிய வெள்ளை சிங்காசனத்திலிருந்து தப்பி ஓடும் ஒரு துரோகியும் கூட. தம்முடைய கண்களுக்குக் கீழுள்ள கண்காணிப்பிலிருந்து தப்பிக்க முயலும் கலகக்காரர்களில் ஒருவரையும் தேவன் விடமாட்டார். அத்தகைய மனிதர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள். நியாயந்தீர்க்கப்பட தேவனுக்கு முன்பாக வந்து சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனுடைய ராஜ்யத்தில் என்றென்றும் வாழ்வார்கள். நிச்சயமாக, இது எதிர்காலத்திற்குச் சொந்தமான ஒன்றாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 79

நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனுடைய சொந்தக் கிரியையாயிருக்கிறது, எனவே அது இயற்கையாகவே தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும்; தேவனுக்குப் பதிலாக மனிதனால் அதைச் செய்ய முடியாது. நியாயத்தீர்ப்பானது மனிதகுலத்தை வெல்வதற்கு சத்தியத்தைப் பயன்படுத்துவது என்பதால், மனிதர்களிடையே இந்த கிரியையைச் செய்ய தேவன் இன்னும் மனித ரூபத்தில் தோன்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதாவது, உலகெங்கிலும் உள்ள ஜனங்களுக்கு போதிக்கவும், சகல சத்தியங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் கடைசி நாட்களின் கிறிஸ்து சத்தியத்தைப் பயன்படுத்துவார். இதுவே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையாகும். தேவனுடைய இரண்டாவது மனித அவதரிப்பைப் பற்றி பலருக்கும் ஒரு மோசமான உணர்வு இருக்கிறது, ஏனென்றால் நியாயத்தீர்ப்பை கொடுக்கும்படிக்கு தேவன் மாம்சமாவார் என்று மக்கள் நம்புவது கடினம். ஆயினும்கூட, தேவனுடைய கிரியையானது பெரும்பாலும் மனிதனின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது, மனித மனம் இதை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதை நான் உனக்குச் சொல்லியாக வேண்டும். தேவன் பிரபஞ்சத்தை நிரப்புகிற உன்னதமானவராக இருக்கிறார், அதே சமயம், ஜனங்கள் பூமியில் வெறும் புழுக்களாக இருக்கிறார்கள்; மனிதனின் மனதானது புழுக்களை மட்டுமே வளர்க்கும் ஒரு தவறான நீரின் குழி போன்றது, அதேசமயம் தேவனுடைய நினைவுகளால் செயல்படுத்தப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் தேவனுடைய ஞானத்தின் பலன் ஆகும். ஜனங்கள் எப்பொழுதும் தேவனோடு சண்டையிட முயற்சிக்கிறார்கள், இறுதியில் யார் தோற்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்களையே நீங்கள் தங்கத்தை விட அதிகம் மதிப்புமிக்கவர்களாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் நான் அறிவுறுத்துகிறேன். தேவனுடைய நியாயத்தீர்ப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், நீ ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? நீ மற்றவர்களைக் காட்டிலும் எவ்வளவு உயர்வாக நிற்கிறாய்? மற்றவர்கள் சத்தியத்திற்கு முன்பாக தங்கள் தலைகளைத் தாழ்த்த முடிந்தால், உன்னால் ஏன் முடியாது? தேவனுடைய கிரியையானது யாராலும் தடுத்து நிறுத்த முடியாத ஓர் உத்வேகத்தைக் கொண்டுள்ளது. நீ செய்திருக்கிற “பங்களிப்பு” காரணமாகவே அவர் மீண்டும் நியாயத்தீர்ப்பை வழங்க மாட்டார், மேலும் இதுபோன்ற ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டதற்காக வருத்தத்தால் நீ வெல்லப்படுவாய். நீ என்னுடைய வார்த்தைகளை நம்பவில்லை என்றால், வானத்தில் இருக்கும் அந்தப் பெரிய வெள்ளை சிங்காசனம் உன் மீது தீர்ப்பளிப்பதற்காகக் காத்திரு! இஸ்ரவேலர் அனைவரும் இயேசுவை நிராகரித்தார்கள் மற்றும் மறுதலித்தார்கள் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும், ஆனாலும் மனிதகுலத்திற்கான இயேசுவின் மீட்பைக் குறித்த உண்மை இன்னும் பிரபஞ்சம் முழுவதும் மற்றும் பூமியின் முடிவுபரியந்தம் விரிவடைந்துள்ளது. இது தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கிய ஒரு யதார்த்தம் அல்லவா? இயேசு உன்னைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நீ இன்னும் காத்திருந்தால், நீ ஒரு செத்துப்போன மரக்கட்டை[அ] என்று நான் சொல்கிறேன். சத்தியத்திற்கு விசுவாசமற்ற மற்றும் ஆசீர்வாதங்களை மட்டுமே நாடுகிற உன்னைப் போன்ற ஒரு போலியான விசுவாசியை இயேசு ஏற்றுக்கொள்ள மாட்டார். மாறாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உன்னை அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலில் தள்ளுவதில் அவர் இரக்கம் காட்ட மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. ஒரு செத்துப்போன மரக்கட்டை: “உதவிக்கு அப்பாற்பட்டது” என்னும் அர்த்தம் கொண்ட ஒரு சீன முதுமொழி.


தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 80

நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்பதையும், சத்தியம் எது என்பதையும் நீ இப்போது புரிந்துகொள்கிறாயா? நீ புரிந்துகொண்டாய் என்றால், நியாயந்தீர்க்கப்படுவதற்கு அடிபணிந்து கீழ்ப்படியும்படி நான் உன்னை அறிவுறுத்துகிறேன், இல்லையெனில் நீ ஒருபோதும் தேவனால் பாராட்டுதலைப் பெறுவதற்கோ அல்லது அவரால் அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கோ வாய்ப்பில்லை. நியாயத்தீர்ப்பை மட்டுமே ஏற்றுக்கொள்பவர்கள், ஆனால் ஒருபோதும் சுத்திகரிக்கப்பட முடியாதவர்கள், அதாவது நியாயத்தீர்ப்பின் கிரியைக்கு மத்தியில் தப்பி ஓடுபவர்கள் என்றென்றுமாய் தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள். அவர்களுடைய பாவங்கள் பரிசேயர்களின் பாவங்களை விட ஏராளமானதும் கடுமையானதுமாகும், ஏனென்றால் அவர்கள் தேவனைக் காட்டிக் கொடுத்து, தேவனுக்கு விரோதமாகக் கலகக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படி ஊழியத்தைச் செய்யக்கூட தகுதியில்லாத அத்தகைய நபர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள், அதாவது ஒரு நித்தியமான தண்டனையைப் பெறுவார்கள். ஒரு காலத்தில் வார்த்தைகளால் விசுவாசத்தை வெளிப்படுத்திய, ஆனால் அவரைக் காட்டிக் கொடுத்த எந்தத் துரோகியையும் தேவன் விடமாட்டார். இது போன்றவர்கள் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் தண்டனையின் மூலம் தண்டனையைப் பெறுவார்கள். இது தேவனுடைய துல்லியமான நீதியுள்ள மனநிலையின் வெளிப்பாடு அல்லவா? இது மனிதனை நியாயந்தீர்ப்பதிலும், அவனை வெளிப்படுத்துவதிலும் தேவனுடைய நோக்கம் அல்லவா? நியாயத்தீர்ப்பின் போது எல்லா வகையான துன்மார்க்கமான காரியங்களையும் செய்கிற அனைவரையும் தேவன் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்புகிறார், மேலும் இந்த அசுத்த ஆவிகள் தங்களுடைய சதையுள்ள உடல்களை அவர்கள் விரும்பியபடி அழிக்க அனுமதிக்கிறார், மேலும் அந்த ஜனங்களினுடைய உடல்களின் சடலங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. இது அவர்களுக்கான பொருத்தமான பதிலடி ஆகும். அந்த விசுவாசமற்ற பொய்யான விசுவாசிகள், பொய்யான அப்போஸ்தலர்கள் மற்றும் பொய்யான ஊழியர்களின் ஒவ்வொரு பாவங்களையும் தேவன் அவர்களின் பதிவுப் புத்தகங்களில் எழுதுகிறார்; பின்னர், நேரம் சரியாக இருக்கும்போது, அசுத்த ஆவிகள் மத்தியில் அவர்களைத் தூக்கி எறிகிறார், இந்த அசுத்த ஆவிகள் தங்கள் முழு உடல்களையும் விருப்பப்படி தீட்டுப்படுத்த அனுமதிக்கின்றன, இதனால் அவர்கள் ஒருபோதும் மறுஜென்மம் எடுக்கக்கூடாதபடிக்கும், மீண்டும் ஒளியைக் காணாமலும் போவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியம் செய்துவிட்டு, ஆனால் கடைசிவரை விசுவாசமாக இருக்க இயலாத மாயக்காரர்கள் பொல்லாதவர்கள் கூட்டத்தில் தேவனால் எண்ணப்படுகிறார்கள், இதனால் அவர்கள் துன்மார்க்கருக்குப் பங்காளிகளாகி, ஒழுங்கற்ற கலகத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள்; இறுதியில், தேவன் அவர்களை முற்றிலுமாய் அழிப்பார். ஒருபோதும் கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை அல்லது தங்கள் பலத்தை ஒருபோதும் பங்களிக்காதவர்களை தேவன் ஒதுக்கித் தள்ளுகிறார், யுகத்தை மாற்றும்போது அவர் அனைவரையும் அழிப்பார். அவர்கள் இனி பூமியில் ஒருபோதும் இருக்க மாட்டார்கள், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதையை அடையவும் மாட்டார்கள். தேவனுக்கு ஒருபோதும் நேர்மையானவர்களாக இல்லாதவர்கள், ஆனால் சூழ்நிலையால் அவரைச் சரியாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், அவருடைய மக்களுக்காக ஊழியம் செய்பவர்கள் கூட்டத்தில் எண்ணப்படுகிறார்கள். ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உயிர்வாழ்வார்கள், அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் தராதரமில்லாத ஊழியத்தைச் செய்பவர்களுடன் சேர்ந்து அழிந்து போவார்கள். இறுதியில், தேவனைப் போன்ற மனம் படைத்தவர்களையும், தேவனுடைய ஜனங்களையும் மற்றும் தேவனுடைய பிள்ளைகளையும், மற்றும் தேவனால் ஆசாரியர்களாக இருக்கும்படிக்கு முன்குறிக்கப்பட்டவர்கள் அனைவரையும் தேவன் தம்முடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வருவார். அவர்கள் தேவனுடைய கிரியையின் பலனாக இருப்பார்கள். தேவனால் நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு வகையிலும் வகைப்படுத்த முடியாதவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் அவிசுவாசிகளாக எண்ணப்படுவார்கள்—மேலும் அவர்களின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயமாகக் கற்பனை செய்து பார்க்கலாம். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நீங்கள் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு உங்களுடையது மட்டுமே. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: தேவனுடைய கிரியை அவருடன் ஒருமித்திருக்க முடியாத எவருக்காகவும் காத்திருக்காது, மற்றும் தேவனுடைய நீதியுள்ள மனநிலை எந்த மனிதனுக்கும் இரக்கம் காண்பிக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 81

தேவன் எந்த யுகத்திலும் கிரியையை நகல் எடுப்பதில்லை. கடைசிக் காலம் வந்துவிட்டதால், அவர் கடைசிக் காலத்தில் அவர் செய்யவேண்டிய கிரியையைச் செயல்படுத்துவார், கடைசிக் காலத்தில் அவருடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துவார். கடைசிக் காலத்தைப் பற்றிப் பேசும்போது, அது ஒரு தனி யுகத்தைக் குறிக்கிறது, அதில் நீங்கள் நிச்சயமாகப் பேரழிவைச் சந்திப்பீர்கள், பூகம்பங்கள், பஞ்சங்கள் மற்றும் வியாதிகளைச் சந்திப்பீர்கள் என்று இயேசு சொன்னார். இது இனியும் பழைய யுகமான கிருபையின் யுகம் இல்லை, ஆனால் ஒரு புதிய யுகம் என்பதைக் காண்பிக்கும். ஜனங்கள் சொல்வது போல, தேவன் என்றென்றும் மாறாதவராக இருந்தால், அவருடைய மனநிலை எப்போதும் இரக்கமுள்ளதாகவும் அன்பானதாகவும் இருந்தால், அவர் தன்னை நேசிப்பதைப் போல மனுஷனையும் நேசிக்கிறார் என்றால், ஒரு மனுஷனைக் கூட வெறுக்காமல் சகலவித மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கிறார் என்றால், அவருடைய கிரியையால் எப்போதாவது முடிவுக்கு வர இயலுமா? இயேசு வருகைதந்து சிலுவையில் அறையப்பட்டபோது, எல்லாப் பாவிகளுக்காகவும் தியாகம் செய்து பலிபீடத்தின்மீது தன்னை ஒப்புக்கொடுத்தபோது, அவர் ஏற்கனவே மீட்பிற்கான கிரியையை நிறைவுசெய்துவிட்டு, கிருபையின் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார். ஆகவே, அந்த யுகத்தின் கிரியையைக் கடைசிக் காலத்தில் மீண்டும் செய்வதில் என்ன பயன் இருக்கப்போகிறது? அதையே மீண்டும் செய்வது இயேசுவின் கிரியையை மறுப்பதாக இருக்காதா? தேவன் இந்தக் கட்டத்தில் தோன்றி சிலுவையில் அறையப்படவேண்டிய கிரியையைச் செய்யாமல், அன்பும் இரக்கமும் கொண்டவராக இருந்திருந்தால், அவரால் அந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்திருக்குமா? அன்பான, இரக்கமுள்ள தேவனால் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா? யுகத்தை முடித்துவைக்கும் அவரது இறுதிக் கிரியையில், தேவனின் மனநிலை ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு இவற்றில் ஒன்றாக இருக்கிறது, அதில் எல்லா ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்க்கவும், அவரை நேர்மையான இருதயத்துடன் நேசிப்பவர்களைப் பரிபூரணமாக்கவும் அவர் அநீதியான அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். இது போன்ற ஒரு மனநிலையால் மட்டுமே யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். கடைசிக் காலம் ஏற்கனவே வந்துவிட்டது. சிருஷ்டிப்பில் உள்ள சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். மனுஷரின் விளைவுகளையும் அவர்களின் இலக்கையும் தேவன் வெளிப்படுத்தும் தருணம் இது. ஜனங்கள் சிட்சைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் உட்படுத்தப்படாவிட்டால், அவர்களின் கீழ்ப்படியாமையையும் அநீதியையும் அம்பலப்படுத்த எந்த வழியும் இருக்காது. ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே அனைத்து சிருஷ்டிப்புகளின் விளைவுகளையும் வெளிப்படுத்த முடியும். மனுஷன் சிட்சிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பளிக்கப்படும்போது மட்டுமே அவனுடைய உண்மையான நிறங்களைக் காட்டுகிறான். தீமை தீமையுடனும், நன்மை நன்மையுடனும் வைக்கப்படுகின்றன, மனுஷர் அனைவரும் அவர்களது வகையின்படி பிரிக்கப்படுவர். ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், எல்லா சிருஷ்டிப்புகளின் விளைவுகளும் வெளிப்படும், இதனால் தீமை தண்டிக்கப்பட்டு, நன்மைக்கு வெகுமதி கிடைக்கப்பெறும், மேலும் எல்லா ஜனங்களும் தேவனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். இந்தக் கிரியைகள் அனைத்தும் நீதியான ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அடையப்பட வேண்டும். ஏனெனில் மனுஷனின் சீர்கேடு உச்சத்தை எட்டியிருக்கிறது மற்றும் அவனது கீழ்ப்படியாமை மிகவும் கடுமையானதாகிவிட்டது, முக்கியமாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் தேவனின் நீதியான மனநிலையால் மட்டுமே மனுஷனை முழுமையாக மாற்றி, அவனைப் பரிபூரணப்படுத்த முடியும். இந்த மனநிலையால் மட்டுமே தீமையை அம்பலப்படுத்த முடியும், இதனால் அநீதியான அனைவரையும் கடுமையாகத் தண்டிக்கவும் முடியும். ஆகையால், இது போன்ற ஒரு மனநிலையானது யுகத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் ஒவ்வொரு புதிய யுகத்தின் கிரியையின் பொருட்டு அவரது மனநிலையின் வெளிப்பாடு மற்றும் காண்பிக்கப்படுவது வெளிப்படும்படி செய்யப்படுகிறது. தேவன் தன்னுடைய மனநிலையைத் தன்னிச்சையாகவும் முக்கியத்துவமும் இல்லாமலும் வெளிப்படுத்துகிறார் என அர்த்தமாகாது. கடைசிக் காலத்தில் மனுஷனின் விளைவுகளை வெளிப்படுத்துவதில், தேவன் இன்னும் மனுஷனுக்கு எல்லையற்ற இரக்கத்தையும் அன்பையும் அளித்து, அவனிடம் தொடர்ந்து அன்பாக இருந்து, மனுஷனை நீதியான நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தாமல், அதற்குப் பதிலாகச் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைக் காட்டி, மனுஷன் எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்திருந்தாலும், சிறிதளவும் நியாயமான நியாயத்தீர்ப்பு இல்லாமல் அவனை மன்னிப்பார் என்று வைத்துக்கொண்டால்: தேவனின் ஆளுகை அனைத்தும் எப்போது முடிவிற்குக் கொண்டுவரப்படும்? இதுபோன்ற ஒரு மனநிலை மனுஷகுலத்திற்கான பொருத்தமான இலக்கிற்கு ஜனங்களை எப்போது வழிநடத்த முடியும்? உதாரணமாக, எப்போதும் அன்பாக இருக்கும் ஒரு நீதிபதி, கனிவான முகத்தையும், மென்மையான இருதயத்தையும் கொண்ட ஒரு நீதிபதியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஜனங்கள் செய்த குற்றங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களை நேசிக்கிறார், மேலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் அவர் அன்பு பாராட்டுகிறார். அவ்வாறான நிலையில், எப்போது அவரால் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க முடியும்? கடைசிக் காலத்தில், நீதியான நியாயத்தீர்ப்பால் மட்டுமே மனுஷனை அவர்களின் வகைக்கு ஏற்ப பிரித்து, மனுஷனை ஒரு புதிய ராஜ்யத்திற்குக் கொண்டு வர முடியும். இவ்வாறாக, தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலம் முழு யுகமும் முடிவுக்கு வருகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 82

மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை மிகவும் முக்கியமானதாகும், இது கிரியையைப் பற்றி பேசப்படுகிறது. மேலும், கிரியையை இறுதியில் முடிப்பவர் மாம்சமான தேவனேயன்றி, ஆவியானவர் அல்ல. தேவன் அறியப்படாத நேரத்தில் பூமிக்கு வந்து மனுஷனிடம் தோன்றி, அதன்பிறகு அவர் மனுக்குலம் முழுவதையும் தனிப்பட்ட முறையில் நியாயந்தீர்ப்பார், யாரையும் விட்டு வைக்காமல் அவர்களை ஒவ்வொருவராகச் சோதிப்பார் என்று சிலர் நம்புகிறார்கள். இவ்விதமாகச் சிந்திப்பவர்களுக்கு மனுஷ அவதரிப்பின் இந்த கட்டக் கிரியையைத் தெரியாது. தேவன் மனுஷனை ஒவ்வொருவராக நியாயந்தீர்ப்பதில்லை, மனுஷனை ஒவ்வொருவராகச் சோதிப்பதில்லை. அவ்வாறு செய்வது நியாத்தீர்ப்பின் கிரியையாக இருக்காது. சகல மனுஷரின் சீர்கேடும் ஒன்றுபோல இல்லையா? சகல மனுஷரின் சாரம்சமும் ஒன்றுபோல இல்லையா? மனுக்குலத்தின் சீர்கேடான சாராம்சம், சாத்தானால் சீர்கேடடைந்த மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷனுடைய சகல பாவங்கள் ஆகியவையே நியாயந்தீர்க்கப்படுகின்றன. மனுஷனுடைய அற்பமான மற்றும் முக்கியத்துவமில்லாத தவறுகளை தேவன் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பின் கிரியை ஒரு மாதிரியாகும். இது குறிப்பாக ஒரு குறிப்பிட்ட நபருக்குச் செய்யப்படுவதில்லை. மாறாக, இது மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பையும் குறிப்பிடும் பொருட்டு ஒரு கூட்ட ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படும் கிரியையாகும். ஒரு கூட்ட ஜனங்களின் மீது தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதன் மூலம், மனுக்குலம் முழுவதின் கிரியையையும் குறிப்பிட மாம்சத்திலுள்ள தேவன் தமது கிரியையைப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு அது படிப்படியாகப் பரவுகிறது. இவ்வாறும் நியாயத்தீர்ப்பின் கிரியை இருக்கிறது. தேவன் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தையோ நியாயந்தீர்க்க மாட்டார். மாறாக, மனுக்குலம் முழுவதின் அநீதியையும் நியாயந்தீர்க்கிறார். அதாவது, உதாரணமாக, தேவனை மனுஷன் எதிர்ப்பது அல்லது அவர் மீது மனுஷனுக்கு காணப்படும் பக்தியின்மை அல்லது தேவனுடைய கிரியையை மனுஷன் இடையூறு செய்வது மற்றும் இதுபோன்ற பலவற்றை நியாயந்தீர்க்கிறார். தேவனை எதிர்க்கும் மனுக்குலத்தின் சாராம்சமே நியாந்தீர்க்கப்படுகிறது. இந்தக் கிரியை கடைசி நாட்களின் ஜெயங்கொள்ளும் கிரியையாகும். மனுஷனால் சாட்சிகூறப்படும் மாம்சமான தேவனுடைய கிரியையும் வார்த்தையுமே கடைசி நாட்களில் பெரிய வெண்மையான சிங்காசனத்திற்கு முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பின் கிரியையாகும், இது கடந்த காலங்களில் மனுஷனால் செய்யப்பட்டதாகும். தற்போது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியையானது பெரிய வெண்மையான சிங்காசனத்தின் முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பாகும். இன்றைய மாம்சமான தேவன் கடைசி நாட்களில் மனுக்குலம் முழுவதையும் நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இந்த மாம்சம், அவருடைய கிரியை, அவருடைய வார்த்தை மற்றும் அவருடைய முழு மனநிலை ஆகியவை சேர்ந்துதான் அவருடைய முழுமையாகும். அவருடைய கிரியையின் எல்லை குறைவாக இருக்கின்றபோதிலும், முழு பிரபஞ்சத்தையும் நேரடியாக ஈடுபடுத்துவதில்லை என்றபோதிலும், நியாயத்தீர்ப்பின் கிரியையின் சாராம்சம் என்பது முழு மனுக்குலத்தின் நேரடி நியாயத்தீர்ப்பாகும். இது சீனாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்காகவோ அல்லது சிறு எண்ணிக்கையிலான ஜனங்களுக்காகவோ செய்யப்படும் நியாயத்தீர்ப்பு அல்ல. மாம்சத்திலுள்ள தேவன் கிரியை செய்யும் போது, இந்தக் கிரியையின் நோக்கம் முழு பிரபஞ்சத்தையும் ஈடுபடுத்தவில்லை என்றபோதிலும், அது முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் குறிக்கிறது. மேலும், அவர் தமது மாம்சத்தின் கிரியையின் எல்லைக்குள்ளாகவே கிரியையை முடித்த பிறகு, இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலைத் தொடர்ந்து இயேசுவைப் பற்றிய சுவிசேஷமானது பிரபஞ்சம் முழுவதும் பரவியதைப் போலவே அவர் இந்தக் கிரியையை உடனடியாக முழு பிரபஞ்சத்திற்கும் விரிவுபடுத்துவார். இது ஆவியானவரின் கிரியையாக இருந்தாலும் அல்லது மாம்சத்தின் கிரியையாக இருந்தாலும், இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் செய்யப்படும் கிரியையாக இருக்கிறது, ஆனால் இது முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் குறிக்கிறது. கடைசி நாட்களில், தேவன் தமது மாம்சமான அடையாளத்தில் தோன்றி தமது கிரியையைச் செய்கிறார். மேலும், மாம்சத்திலுள்ள தேவனே பெரிய வெள்ளைச் சிங்காசனத்தின் முன்பாக மனுஷனை நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். அவர் ஆவியானவராக இருந்தாலும் அல்லது மாம்சமாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறவர் தான் கடைசி நாட்களில் மனுக்குலத்தை நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இது அவருடைய கிரியையின் அடிப்படையில் தான் வரையறுக்கப்படுகிறது. இது அவருடைய வெளிப்புறத் தோற்றத்தினாலோ அல்லது பல காரணிகளின்படியோ வரையறுக்கப்படுவதில்லை. மனுஷன் இந்த வார்த்தைகளைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டிருக்கின்றபோதிலும், மாம்சமான தேவனுடைய நியாயத்தீர்ப்பு குறித்த உண்மையையும், முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொள்வதையும் யாராலும் மறுக்க முடியாது. மனுஷன் அதைப் பற்றி என்ன நினைத்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மைகள் உண்மைகளாகவே இருக்கின்றன. “தேவனால் கிரியை செய்யப்படுகிறது, ஆனால் மாம்சம் தேவன் அல்ல” என்று யாரும் சொல்ல முடியாது. இது முட்டாள்தனம், ஏனென்றால் இந்தக் கிரியையை மாம்சத்திலுள்ள தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. இந்தக் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டதால், இந்தக் கிரியையைத் தொடர்ந்து, மனுஷர் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை இரண்டாவது முறையாகத் தோன்றாது. தேவன் தமது இரண்டாவது மனுஷ அவதரிப்பில் முழு நிர்வாகத்தின் அனைத்துக் கிரியைகளையும் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். மேலும், தேவனுடைய கிரியையின் நான்காவது கட்டம் இருக்காது. ஏனென்றால், மாம்சமான மற்றும் சீர்கேடான மனுஷனே நியாயந்தீர்க்கப்படுகிறான், நேரடியாக நியாயந்தீர்க்கப்படும் சாத்தானுடைய ஆவி அல்ல, ஆகையால் நியாயத்தீர்ப்பின் கிரியை ஆவிக்குரிய உலகில் செய்யப்படாமல், மனுஷர் நடுவே செய்யப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 83

மனுஷனுடைய மாம்சத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்ப்பதற்கான கிரியையைச் செய்வதற்கு மாம்சத்திலுள்ள தேவனை விட வேறு யாரும் பொருத்தமானவராகவும் தகுதியானவராகவும் இல்லை. நியாயத்தீர்ப்பானது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டிருந்தால், அது பரந்ததாக இருந்திருக்காது. மேலும், இதுபோன்ற கிரியையை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும், ஏனென்றால் ஆவியானவரால் மனுஷனிடம் நேரில் வரமுடியாது. இதன் காரணமாக, பலன்கள் உடனடியாக கிடைக்காது, மனுஷனால் தேவனுடைய இடறலடைய இயலாத மனநிலையை மிகவும் தெளிவாகப் பார்க்கவும் முடியாது. மாம்சத்திலுள்ள தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்த்தால் மாத்திரமே, சாத்தானை முழுமையாகத் தோற்கடிக்க முடியும். சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட மனுஷனைப் போலவே இருக்கும் மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனுடைய அநீதியை நேரடியாக நியாயந்தீர்க்க முடியும். இது அவருடைய இயல்பான பரிசுத்தத்தன்மையின் மற்றும் அவருடைய தெய்வீகத்தன்மையின் அடையாளமாக இருக்கிறது. தேவன் மாத்திரமே மனுஷனை நியாயந்தீர்க்க தகுதியுடையவர், நியாயந்தீர்க்கும் நிலையில் இருக்கிறார், ஏனென்றால் அவர் சத்தியத்தையும் நீதியையும் கொண்டிருக்கிறார், ஆகவே அவரால் மனுஷனை நியாயந்தீர்க்க முடிகிறது. சத்தியமும் நீதியும் இல்லாதிருக்கிறவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்க தகுதியற்றவர்கள். இந்தக் கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டிருந்தால், அது சாத்தான் மீதான ஜெயத்தைக் குறிக்காது. ஆவியானவர் மனுஷர்களை விட இயல்பாகவே உயர்ந்தவர், தேவனுடைய ஆவியானவர் இயல்பாகவே பரிசுத்தமானவர், மாம்சத்தின் மீது வெற்றிசிறக்கிறார். இந்தக் கிரியையை ஆவியானவர் நேரடியாகச் செய்திருந்தால், மனுஷனுடைய கீழ்ப்படியாமை அனைத்தையும் அவரால் நியாயந்தீர்க்க முடியாது, மேலும் மனுஷனுடைய எல்லா அநீதியையும் வெளிப்படுத்த முடியாது. நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்கள் மூலமாகவும் செய்யப்படுவதனால், மனுஷனிடம் ஆவியானவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் கிடையாது. ஆகையால், மனுஷனுடைய அநீதியைச் சிறந்த முறையில் வெளிப்படுத்த ஆவியானவரால் முடியாது, இதுபோன்ற அநீதியை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. மாம்சமான தேவன் அவரை அறியாத அனைவருக்கும் சத்துருவாக இருக்கிறார். மனுஷனுடைய கருத்துக்களையும், அவரை எதிர்ப்பதையும் நியாயந்தீர்ப்பதன் மூலம், மனுக்குலத்தின் கீழ்ப்படியாமை அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார். ஆவியானவரின் கிரியையின் பலன்களைக் காட்டிலும் மாம்சத்தில் அவர் செய்த கிரியையின் பலன்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. ஆகையால், மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பும் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படாமல், மாம்சமான தேவனுடைய கிரியையால் செய்யப்படுகிறது. மாம்சத்திலுள்ள தேவனை மனுஷனால் காணவும், தொட்டுணரவும் முடியும். மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்ள முடியும். மாம்சத்திலுள்ள தேவனுடனான தனது உறவில், மனுஷன் எதிர்ப்பிலிருந்து கீழ்ப்படிதலுக்கும், துன்புறுத்துதலிலிருந்து ஏற்றுக்கொள்ளுதலுக்கும், கருத்துக்களிலிருந்து அறிவுக்கும் மற்றும் புறக்கணிப்பதிலிருந்து அன்புக்கும் முன்னேறுகிறான். இவைதான் மாம்சமான தேவனுடைய கிரியையின் பலன்களாகும். மனுஷன் அவருடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமாக மாத்திரமே இரட்சிக்கப்படுகிறான். மனுஷன் அவருடைய வாயின் வார்த்தைகளின் மூலமாக அவரைப் படிப்படியாக அறிந்துகொள்கிறான். மனுஷன் அவரை எதிர்க்கும்போது அவரால் ஜெயங்கொள்ளப்படுகிறான். அவருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ளும் போது அவர் வழங்கும் ஜீவனைப் பெறுகிறான். இந்தக் கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியையாகும், ஆனால் ஆவியானவர் என்ற அடையாளத்திலுள்ள தேவனுடைய கிரியை அல்ல. மாம்சமான தேவன் செய்த கிரியை மாபெரும் கிரியையாகவும், மிகவும் ஆழமான கிரியையாகவும் இருக்கிறது. தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களின் முக்கியமான பகுதியானது மாம்சமான தேவன் செய்யும் கிரியையின் இரண்டு கட்டங்களாகும். மனுஷனுடைய ஆழமான சீர்கேடானது மாம்சமான தேவனுடைய கிரியைக்குப் பெரும் தடையாக இருக்கின்றது. குறிப்பாக, கடைசிக்கால ஜனங்களின் மீது செய்யப்படும் கிரியைகள் மிகவும் கடினமானவையாகவும், சூழல் விரோதமானதாகவும், ஒவ்வொரு வகையான நபரின் திறமையும் மிகவும் மோசமானதாகவும் இருக்கின்றன. ஆனாலும், இந்தக் கிரியையின் முடிவில், எந்தக் குறைபாடுகளும் இல்லாமல், அது இன்னும் சரியான பலனை அடையும். இது மாம்சத்தின் கிரியையின் பலனாகும். ஆவியின் கிரியையைக் காட்டிலும் இந்தப் பலன் மிகவும் வல்லமையானதாகும். தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்கள் மாம்சத்தில் செய்து முடிக்கப்படும். அவை மாம்சமான தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும். மிகவும் அத்தியாவசியமான மற்றும் மிகவும் முக்கியமான கிரியை மாம்சத்தில் செய்யப்படுகிறது. மனுஷனுடைய இரட்சிப்பானது மாம்சத்திலுள்ள தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும். மாம்சத்திலுள்ள தேவன் மனுஷனுடன் தொடர்பில்லாதவர் என்று முழு மனுக்குலமும் உணர்கின்றபோதிலும், உண்மையில் இந்த மாம்சமானது மனுக்குலம் முழுவதின் தலைவிதியுடனும் வாழ்வுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 84

இன்று தேவன் உங்களை நியாயந்தீர்க்கிறார், உங்களை சிட்சிக்கிறார், மற்றும் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், ஆனால் உன் ஆக்கினைத் தீர்ப்பின் நோக்கத்தை அறிய வேண்டியது நீதான் என்பதை நீ அறியவேண்டும். நீ உன்னை அறிந்து கொள்ள முடிவதற்கும், உன் மனநிலை மாறக் கூடுவதற்கும், இன்னும், நீ உன் மதிப்பை அறிந்துகொள்ளக் கூடுவதற்கும், தேவனுடைய செயல்கள் எல்லாம் நீதியானவையும், அவரது மனநிலைக்கும் அவரது கிரியையின் தேவைக்கும் ஏற்றவையும், அவர் மனிதனுடைய இரட்சிப்பின் திட்டத்துக்கு இணங்க கிரியை செய்கிறார் மற்றும் அவரே மனிதனை நேசிக்கின்ற, இரட்சிக்கின்ற, நியாயந்தீர்க்கின்ற மற்றும் சிட்சிக்கின்ற நீதியுள்ள தேவன் என்று உணர்வதற்கும் அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், சபிக்கிறார், நியாயந்தீர்க்கிறார், மற்றும் சிட்சிக்கிறார். நீ மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ளவன், நீ சீர்கேடடைந்தவன் மற்றும் கீழ்ப்படியாதவன் என்று மட்டும் நீ அறிந்து, ஆனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம் இன்று உன்னில் அவர் செய்யும் அவரது இரட்சிப்பைத் தெளிவாக விளக்க விரும்புகிறார் என்று அறியாவிட்டால், அதன்பின் அனுபவத்தை அடைய உனக்கு வேறு வழியில்லை, அதைவிட தொடர்ந்து முன்னேற உனக்குத் திறனும் இருக்காது. தேவன் நியாயந்தீர்க்கவும், சபிக்கவும், சிட்சிக்கவும், இரட்சிக்கவும் வந்திருக்கிறாரே ஒழிய கொல்வதற்காகவோ அல்லது அழிப்பதற்காகவோ அல்ல. அவரது 6,000-ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் ஒரு முடிவுக்கு வரும் வரை—ஒவ்வொரு மனித வகையினரின் முடிவையும் அவர் வெளிப்படுத்தும் முன்—பூமியில் தேவனின் கிரியை இரட்சிப்புக்காகவே இருக்கும்; அவரை நேசிப்பவர்களை பரிபூரணப்படுத்துவதும், இவ்வாறு முற்றிலும் அவரது ஆளுகையின் கீழ் அடங்கியிருக்க அவர்களைக் கொண்டுவருவது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது. தேவன் ஜனங்களை எவ்வாறு இரட்சித்தாலும், அவர்களது பழைய சாத்தானின் சுபாவத்தில் இருந்து உடைத்து வெளியேறும்படி செய்வதன் மூலம் இவையெல்லாம் செய்யப்படுகின்றன; அதாவது, அவர்களை ஜீவனைத் தேடும்படி செய்து அவர் இரட்சிக்கிறார். அவர்கள் அவ்விதம் செய்யவில்லை என்றால், பின்னர் தேவனின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு ஒரு வழியும் இருக்காது. இரட்சிப்பு என்பது தேவன் தாமே செய்யும் கிரியையாகும், மேலும் ஜீவனைத் தேடுவது என்பது இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளுவதற்காக மனிதன் செய்யவேண்டிய ஒரு விஷயமாகும். மனிதனின் பார்வையில், இரட்சிப்பு என்பது தேவனின் அன்பாகும், மற்றும் தேவனின் அன்பானது சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் சாபங்களாக இருக்க முடியாது; இரட்சிப்பு என்பது அன்பு, மனதுருக்கம் மற்றும், அதற்குமேல் ஆறுதலின் வார்த்தைகளோடு தேவனால் வழங்கப்பட்ட வரம்பற்ற ஆசீர்வாதங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். தேவன் மனிதனை இரட்சிக்கும் போது, அவர்கள் தங்கள் இருதயங்களைத் தேவனுக்குக் கொடுக்கும்படியாக அவர்களைத் தமது ஆசீர்வாதங்கள் மற்றும் கிருபையைக் கொண்டு மனதை இளகச்செய்தே அவ்வாறு செய்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். அதாவது, மனிதனை அவர் தொடுவதே அவர்களை அவர் இரட்சிப்பதாகும். இது போன்ற இரட்சிப்பு ஓர் ஒப்பந்தத்தை செய்வதன் மூலமே செய்யப்படுகிறது. தேவன் நூறத்தனையாய் அளிக்கும்போதே மனிதன் தேவ நாமத்துக்கு முன்னால் கீழ்ப்படிய வருகிறான் மற்றும் அவருக்கு ஏற்புடையதை செய்ய முயன்று அவருக்கு மகிமையைக் கொண்டுவருகிறான். தேவன் மனுக்குலத்துக்கான நோக்கமாகக் கொண்டிருப்பது இதையல்ல. சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்கவே தேவன் பூமியில் கிரியை செய்ய வந்திருக்கிறார்; இதில் எந்தப் பொய்யும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர் தாமே இந்தக் கிரியையைச் செய்ய நிச்சயமாக வந்திருக்க மாட்டார். கடந்த காலத்தில், அளவிலா அன்பையும் மனதுருக்கத்தையும் காட்டுவது அவரது இரட்சிப்பின் வழிமுறையில் அடங்கி இருந்ததனாலேயே அவர் தமது எல்லாவற்றையும் முழு மனுக்குலத்திற்கும் ஈடாக சாத்தானுக்குக் கொடுத்தார். நிகழ்காலம் கடந்தகாலத்தைப் போல் இல்லை: இன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரட்சிப்பு கடைசி நாட்களின் காலத்தில், வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப் படும்போது நிகழ்கிறது; உங்களது இரட்சிப்பின் வழிமுறை அன்போ அல்லது மனதுருக்கமோ அல்ல, ஆனால் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும், இதனால் மனிதன் மிகவும் முழுமையாக இரட்சிக்கப்படலாம். இவ்வாறு, நீங்கள் பெறுவதெல்லாம் சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற முறையில் கடுமையாகக் கடிந்துகொள்ளுதலும் ஆகும், ஆனால் இதை அறியுங்கள்: இந்த இரக்கமற்ற கடிந்துகொள்ளுதல் என்பது சிறு அளவில் கூடத் தண்டனை அல்ல. என்னுடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி, ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு முற்றிலும் இரக்கமற்றதாக தோன்றுவதைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு நேரிடாது, மேலும் நான் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் மேல் என்ன பொழியும் என்றால் போதனையின் அமர்ந்த வார்த்தைகளே, மேலும் நான் உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது உங்களைக் கொன்றுவிடவோ எண்ணவில்லை. இது எல்லாம் உண்மை அல்லவா? இப்போதெல்லாம், அது நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் அல்லது இரக்கமற்ற புடமிடுதல் மற்றும் சிட்சையாக இருந்தாலும், யாவும் இரட்சிப்புக்கானவையே. இன்று ஒவ்வொன்றும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது மனிதர்களின் பிரிவுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியைகளின் நோக்கமும் தேவனை உண்மையிலேயே நேசிப்பவர்களை இரட்சிப்பதாகவே இருக்கிறது. நீதியான நியாயத்தீர்ப்பு மனிதனை சுத்திகரிப்பதற்குக் கொண்டுவரப்படுகிறது, மற்றும் இரக்கமற்ற புடமிடல் அவர்களைச் சுத்தமாக்கச் செய்யப்படுகிறது; கடுமையான வார்த்தைகள் அல்லது சிட்சை ஆகிய இரண்டும் சுத்திகரிப்பதற்காகச் செய்யப்படுகின்றன, மேலும் அவை எல்லாம் இரட்சிப்புக்காகவே செய்யப்படுகின்றன. இவ்வாறு, இன்றைய இரட்சிப்பின் முறை கடந்தகாலத்தைப் போன்றதல்ல. இன்று, நீங்கள் இரட்சிப்பிற்குள் நீதியான நியாயத்தீர்ப்பு மூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறீர்கள், மற்றும் இது உங்கள் ஒவ்வொருவரையும் வகையின் படி வகைப்படுத்த ஒரு நல்ல கருவியாகும். மேலும், இரக்கமற்ற சிட்சை உங்களது மாபெரும் இரட்சிப்புக்கு உதவுகிறது—மற்றும் இத்தகைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ளும்போது உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது? ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை நீங்கள் எப்போதும் இரட்சிப்பை அனுபவிக்கவில்லையா? நீங்கள் மாம்சமாகிய தேவனை கண்டிருக்கிறீர்கள் மற்றும் அவருடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் உணர்ந்திருக்கிறீர்கள்; மேலும் தொடர்ந்து கடுமையான கடிந்துகொள்ளுதலையும் சிட்சித்தலையும் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். இருப்பினும், நீங்கள் மேலான கிருபையையும் பெறவில்லையா? வேறு யாரையும் விட உங்கள் ஆசீர்வாதங்கள் பெரிதானவை அல்லவா? உங்கள் கிருபைகள் சாலொமோன் அனுபவித்த மகிமை மற்றும் செல்வங்களை விடவும் ஏராளமானவை! அதைப் பற்றிச் சிந்தியுங்கள்: என் வருகையின் நோக்கம் உங்களை இரட்சிப்பதற்காக அல்லாமல் மாறாக உங்களை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்ப்பதும் தண்டிப்பதுமாக இருந்தால், உங்கள் நாட்கள் இவ்வளவு நீண்டதாக நீடித்திருக்குமா? மாம்சமும் இரத்தமுமான பாவம் நிறைந்த மனிதர்களாகிய நீங்கள் இன்றுவரை உயிர்பிழைத்து வாழ்ந்திருக்க முடியுமா? உங்களைத் தண்டிப்பது மட்டுமே என் இலக்காக இருந்திருந்தால், பின் ஏன் நான் மாம்சமாகி இத்தகைய மாபெரும் காரியத்தில் இறங்க வேண்டும்? வெறும் மனிதர்களாகிய உங்களைத் தண்டிப்பதை ஒரு ஒற்றை வார்த்தையைக் கூறியே செய்திருக்கலாமே? நோக்கத்தோடு ஆக்கினைக்குள்ளாக உங்களைத் தீர்த்த பின்னர் உங்களை இன்னும் நான் அழிப்பது தேவையா? நீங்கள் என்னுடைய இந்த வார்த்தைகளை இன்னும் விசுவாசிக்கவில்லையா? நான் மனிதனை வெறும் அன்பாலும் மனதுருக்கத்தாலும் இரட்சிக்க முடியுமா? அல்லது மனிதனை இரட்சிக்க சிலுவையில் அறைதலை மட்டுமே என்னால் பயன்படுத்த முடியுமா? மனிதனை முற்றிலும் கீழ்ப்படிதலுள்ளவனாக மாற்ற என்னுடைய நீதியான மனநிலை இன்னும் அதிக அளவில் உகந்ததாக இல்லையா? மனிதனை முற்றிலுமாக இரட்சிக்க அது இன்னும் அதிகத் திறனுடையதாக இல்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 85

என் வார்த்தைகள் கடுமையானவையாக இருந்தாலும், அவை எல்லாம் மனிதனுடைய இரட்சிப்புக்காகக் கூறப்படுகின்றன, ஏனெனில் நான் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறேனே தவிர மனிதனுடைய மாம்சத்தைத் தண்டிக்கவில்லை. இந்த வார்த்தைகள் மனிதனை ஒளியில் வாழவும், ஒளி இருக்கிறது என்பதை அறியவும், ஒளி விலைமதிப்பற்றது என்பதை அறியவும், இன்னும் அதிகமாக இந்த வார்த்தைகள் அவர்களுக்கு எவ்வளவு நன்மையானவை என்பதை அவர்கள் அறிவதோடு தேவனே இரட்சிப்பு என்றும் அறியச் செய்கின்றன. சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த பல வார்த்தைகளை நான் கூறியிருந்தாலும், உண்மையில் அவை எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவோ அது உனக்குச் செய்யப்படவில்லை. நான் என் கிரியையைச் செய்யவும் என் வார்த்தைகளைக் கூறவும் வந்திருக்கிறேன், என் வார்த்தைகள் கண்டிப்பானவையாக இருந்தாலும், அவை உங்கள் சீர்கேடு மற்றும் உங்கள் மாறுபாட்டைக் குறித்த நியாயத்தீர்ப்பாகப் பேசப்படுகின்றன. சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து மனிதனை இரட்சிப்பதே நான் இதைச் செய்வதற்கான நோக்கமாக இருக்கிறது; நான் மனிதனை இரட்சிக்க என் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். என் வார்த்தைகளைக் கொண்டு மனிதனுக்குத் தீங்கு செய்வது என் நோக்கமல்ல. என் கிரியையில் முடிவுகளை அடையவே என் வார்த்தைகள் கடுமையாக இருக்கின்றன. இத்தகைய கிரியை மூலமே மனிதர் தங்களை அறிந்து தங்களது மாறுபாடான மனநிலையில் இருந்து விடுபட்டு வருவார்கள். சத்தியத்தைப் புரிந்துகொண்டபின் அதைக் கடைப்பிடிக்க ஜனங்களை அனுமதிப்பதும், தங்கள் மனநிலையில் மாற்றங்களை அடைவதும், தங்களைப் பற்றியும் தேவனின் கிரியையைப் பற்றியும் அறிவைப் பெறுவதுமே வார்த்தைகளின் கிரியையின் மாபெரும் முக்கியத்துவம் ஆகும். வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் கிரியையைச் செய்வது மட்டுமே தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பைச் சாத்தியப்படுத்தும், மற்றும் வார்த்தைகளால் மட்டுமே சத்தியத்தை விளக்க முடியும். இந்த வகையில் கிரியை செய்வதே மனிதனை ஜெயங்கொள்ளுவதற்கான சிறந்த வழியாகும்; வார்த்தைகளைக் கூறுவதை விட, சத்தியத்தையும் தேவனின் கிரியையையும் குறித்த தெளிவான புரிதலை வேறு எந்த முறையும் ஜனங்களுக்கு அளிக்கும் திறன் கொண்டது அல்ல. இவ்வாறு, தமது இறுதிக் கட்ட கிரியையில், இன்னும் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத சத்தியங்களையும் இரகசியங்கள் அனைத்தையும் அவர்களுக்காக வெளிப்படுத்த, சத்திய வழியையும் ஜீவனையும் தேவனிடம் இருந்து அடைய அவர்களை அனுமதித்து, அவ்வகையில் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற தேவன் மனிதனோடு பேசுகிறார். தேவ சித்தத்தை அவர்கள் நிறைவேற்ற அவர்களுக்கு உதவுவதுதான் மனிதன் மீது தேவன் செய்யும் கிரியையின் நோக்கமாகும், மேலும் அது அவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரச் செய்யப்படுகிறது. ஆகவே, மனிதனை இரட்சிக்கும் காலகட்டத்தின் போது, அவர்களைத் தண்டிக்கும் கிரியையை அவர் செய்வதில்லை. மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் வேளையில், தேவன் தீங்கைத் தண்டிப்பதோ நன்மைக்குப் பிரதிபலன் அளிப்பதோ இல்லை, அதுமட்டுமல்லாமல் பல வகையான ஜனங்களின் சென்றடையும் இடங்களை அவர் வெளிப்படுத்துவதும் இல்லை. மாறாக, அவரது இறுதிக் கட்ட கிரியை முடிவடைந்த பின்னர் மட்டுமே, தீங்கைத் தண்டித்து நன்மைக்குப் பிரதிபலன் அளிக்கும் கிரியையைச் செய்வார் மற்றும் அதன்பின் அவர் அனைத்து வெவ்வேறு வகையான ஜனங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்துவார். இரட்சிக்கப்படக் கூடாதவர்களே உண்மையில் தண்டிக்கப்படுகிறவர்களாக இருப்பார்கள், அதே வேளையில் தேவனின் இரட்சிப்பின் சமயத்தில் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றவர்களே இரட்சிக்கப்படுகிறவர்களாக இருப்பார்கள். தேவனுடைய இரட்சிப்பின் கிரியை செய்யப்படும் போது, முடிந்த வரையில் இரட்சிக்கப்படக் கூடிய ஒவ்வொரு தனி நபரும் இரட்சிக்கப்படுவார்கள், மற்றும் ஒருவரும் நிராகரிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் மனிதனை இரட்சிப்பதே தேவனுடைய கிரியையின் நோக்கமாகும். மனிதனைத் தேவன் இரட்சிக்கும் சமயத்தில், தங்கள் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியாத அனைவரும்—அது மட்டும் அல்லாமல் முற்றிலுமாக தேவனுக்குக் கீழ்ப்படிய முடியாதவர்களும்—தண்டனைக்குரிய பொருளாவார்கள். வார்த்தைகளின் கிரியை எனப்படும் இந்தக் கட்ட கிரியையானது ஜனங்கள் புரிந்துகொள்ளாத எல்லா வழிமுறைகளையும் இரகசியங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தும், அதனால் அவர்கள் தேவ சித்தத்தையும் மற்றும் அவர்களிடம் இருந்து தேவனுக்குத் தேவையானவற்றையும் புரிந்துகொள்ள முடியும், அதனால் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் படி நடக்கவும் தங்கள் மனநிலைகளில் மாற்றத்தை அடையவும் தேவையான முன்னிபந்தனைகளைக் கொண்டிருக்கவும் முடியும். தம்முடைய கிரியையைச் செய்ய தேவன் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறார் மேலும் சிறிதளவு கலகத்துடன் இருப்பதற்காக ஜனங்களைத் தண்டிப்பதில்லை; இது ஏனென்றால் இப்போதுதான் இரட்சிப்பின் கிரியைக்கான சமயம் ஆகும். கலகத்துடன் நடந்து கொள்ளுகிற எவரேனும் ஒருவர் தண்டிக்கப்பட்டால், பின்னர் இரட்சிக்கப்படுவதற்கு ஒருவருக்கும் வாய்ப்பு கிடைக்காது; எல்லோரும் தண்டிக்கப்பட்டு பாதாளத்தில் விழுவார்கள். மனிதனை நியாயந்தீர்க்கும் வார்த்தைகளின் நோக்கம் அவர்கள் தங்களை அறிவதற்கும் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும் அவர்களை அனுமதிப்பதுதான்; அத்தகைய நியாயத்தீர்ப்பைக் கொண்டு அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல. வார்த்தைகளின் கிரியையின் காலத்தில், பல ஜனங்கள் மாம்சமாகிய தேவனிடத்தில் தங்கள் மாறுபாட்டையும் விரோதத்தையும், அது மட்டும் அல்லாமல் தங்கள் கீழ்ப்படியாமையையும் வெளிப்படுத்துவார்கள். இருந்த போதிலும், அதன் விளைவாக அவர் இந்த எல்லா மக்களையும் தண்டிக்க மாட்டார், ஆனால் அதற்குப் பதில் முற்றிலுமாக சீர்கெட்டுப் போனவர்களையும் இரட்சிக்கப்படக் கூடாதவர்களையும் மட்டுமே புறம்பே தள்ளிவிடுகிறார். அவர் அவர்களுடைய மாம்சத்தைச் சாத்தானிடம் கொடுப்பார், மேலும், சில நேர்வுகளில், அவர்களுடைய மாம்சத்துக்கு முடிவுகட்டுவார். மீந்திருப்பவர்கள் தொடர்ந்து பின்தொடர்வார்கள் மேலும் அடக்கியாளப்பட்டுத் திருத்தப்படும் அனுபவத்தைப் பெறுவார்கள். பின்தொடரும் போது, இந்த ஜனங்களால் அடக்கியாளப்பட்டுத் திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மேலும் மேலும் சீரழிந்தால், பின்னர் அவர்கள் இரட்சிப்புக்கான தங்கள் கடைசி வாய்ப்பையும் இழந்து போவார்கள். தேவனுடைய வார்த்தைகளால் ஜெயங்கொள்ளப்பட்டு கீழ்ப்படியும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்புக்கான ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்; இந்த ஜனங்கள் ஒவ்வொருவருக்குமான தேவனின் இரட்சிப்பு அவரது மிகுந்த இரக்கத்தைக் காட்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்களிடத்தில் மிகவும் பொறுமை காட்டப்படும். ஜனங்கள் தங்கள் தவறான பாதைகளில் இருந்து திரும்பினால், மேலும் அவர்கள் மனந்திரும்ப முடியுமானால், அவரது இரட்சிப்பைப் பெற தேவன் அவர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பார். மனிதர்கள் தேவனுக்கு விரோதமாய் முதன்முதலில் கலகம் செய்யும்போது, அவர்களைக் கொன்றுபோட அவருக்கு விருப்பம் இல்லாதிருக்கிறது; மாறாக அவர்களை இரட்சிக்க அவரால் முடிந்ததை எல்லாம் அவர் செய்கிறார். யாருக்காவது இரட்சிப்புக்கான இடம் இல்லாத போது, தேவன் அவர்களைப் புறம்பே தள்ளிவிடுகிறார். சில ஜனங்களைத் தண்டிப்பதில் தேவன் நெடிய சாந்தமுள்ளவராக இருப்பதற்கான காரணம் அவர் இரட்சிக்கப்படக்கூடிய எல்லோரையும் இரட்சிக்க விரும்புவதே ஆகும். வார்த்தைகளை மட்டும் கொண்டு அவர் ஜனங்களை நியாயந்தீர்க்கிறார், அவர்களுக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கிறார், மற்றும் வார்த்தைகள் மூலம் வழிகாட்டுகிறார் மேலும் அவர் ஒரு கோலைப் பயன்படுத்தி அவர்களைக் கொல்வதில்லை. வார்த்தைகளைப் பயன்படுத்தி மனிதர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வருவதே இறுதிக்கட்ட கிரியையின் நோக்கமும் முக்கியத்துவமும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 86

தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையை, மனிதன் அவரைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காகவும், அவருடைய சாட்சியின் பொருட்டும் செய்கிறார். மனிதனின் சீர்கேடான மனநிலை குறித்து அவர் நியாயத்தீர்ப்பு செய்யாமல், மனிதனால் எந்தக் குற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத அவரது நீதியான மனநிலையை அறிந்துகொள்வதற்கு சாத்தியமில்லை, மேலும் தேவனைப் பற்றிய தனது பழைய அறிவைப் புதிதாக மாற்ற முடியாது. அவருடைய சாட்சியின் பொருட்டு, மற்றும் அவரது நிர்வகித்தலின் பொருட்டு, அவர் தம்மை முழுவதுமாக வெளியரங்கமாக்கி, இதனால் மனிதனை, அவரது பொது காட்சிப்படுத்துதலின் மூலம், தேவனைப் பற்றிய அறிவைப் பெறவும், அவனுடைய மனநிலையில் மறுரூபமடையவும், மற்றும் தேவனுக்கு நற்சாட்சி அளிக்கவும் இயன்றவனாக்குகிறார். மனிதனின் மனநிலை மாற்றம் தேவனின் பல வகைப்பட்ட கிரியையின் மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் அவனது மனநிலையில் இல்லாமல், மனிதனால் தேவனுக்குச் சாட்சிப் பகரவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாக இருக்கவும் முடியாது. மனிதன் தன்னைச் சாத்தானின் கட்டுகளிலிருந்தும் இருளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்திருப்பதை மனிதனின் மனநிலையின் மாற்றம் குறிக்கிறது, மேலும் உண்மையிலேயே தேவனின் கிரியையின் சான்றாகவும், மாதிரியாகவும், தேவனின் சாட்சியாகவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாகவும் மாறியிருக்கிறான். இன்று, மனுவுருவான தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வந்திருக்கிறார், மனிதன் அவரைப் பற்றிய அறிவையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்குச் சாட்சி பகிர்வதையும், அவருடைய நடைமுறையான மற்றும் இயல்பான கிரியைகளை அறிந்து கொள்ளவும், அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவர் செய்யும் எல்லா மனிதனின் கருத்துக்களுக்கு உடன்படாத கிரியைகளுக்கும் கீழ்ப்படியவும், மனிதனை இரட்சிக்க அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளுக்கும் சாட்சி அளிக்கவும், அத்துடன் மனிதனை ஜெயங்கொள்ள அவர் நிறைவேற்றும் எல்லாச் செயல்களும் அவருக்குத் தேவையாயிருக்கிறது. தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் தேவனைக் குறித்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சாட்சிகள் மட்டுமே துல்லியமும், உண்மையுமானவை, இவ்வகையான சாட்சிகளால் மட்டுமே சாத்தானை வெட்கப்படுத்த முடியும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, கையாள்தல் மற்றும் கிளைநறுக்குதல் மூலமாய் தம்மை தெரிந்துகொண்டவர்களை அவருக்குச் சாட்சிப் பகரப் பயன்படுத்துகிறார். சாத்தானால் சீர்கெட்டவர்களை அவருக்குச் சாட்சி அளிக்க அவர் பயன்படுத்துகிறார், அதேபோல், தங்கள் மனநிலையில் மாறியவர்களையும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களையும் அவர் தம்முடைய சாட்சியைப் பகர பயன்படுத்துகிறார். மனிதன் அவரை வாயால் புகழ்வது அவருக்குத் தேவையில்லை, அவரால் இரட்சிக்கப்படாத சாத்தானின் வகையானோரின் துதியும் சாட்சியும் அவருக்குத் தேவையில்லை. தேவனை அறிந்தவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சிப் பகர தகுதியானவர்கள், மற்றும் தங்கள் மனநிலையில் மாற்றம் பெற்றவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சிப் பகரத் தகுதியானவர்கள். மனிதன் வேண்டுமென்றே தமது பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதைத் தேவன் அனுமதிக்க மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 87

மனுஷனை தேவன் பரிபூரணமாக்குவது எவ்வாறாக நிறைவேற்றப்படுகிறது? இது அவருடைய நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், கடுங்கோபமும், மகத்துவமும், நியாயத்தீர்ப்பும், சாபமும் கொண்டது, மேலும் அவர் மனுஷனை முதன்மையாக அவருடைய நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணமாக்குகிறார். சிலர் புரிந்துகொள்ளாமல், ஏன் தேவனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சாபத்தின் மூலம் மட்டுமே மனுஷனைப் பரிபூரணமாக்க முடிகிறது என்று கேட்கிறார்கள். அவர்கள், “தேவன் மனுஷனை சபிப்பதாக இருந்தால், மனுஷன் இறந்துபோக மாட்டானா? தேவன் மனுஷனை நியாயந்தீர்ப்பதாக இருந்தால், மனுஷன் கண்டிக்கப்படமாட்டானா? பின்னர் எப்படி அவன் இன்னும் பரிபூரணமாக்கப்பட முடியும்?” என்கிறார்கள். தேவனின் கிரியையை அறியாத ஜனங்களின் வார்த்தைகள் அப்படியாக இருக்கின்றன. தேவன் மனுஷனின் கீழ்ப்படியாமையைத்தான் சபிக்கிறார், அவர் மனுஷனின் பாவங்களைத்தான் நியாயந்தீர்க்கிறார். அவர் கடுமையாக இரக்கமின்றி பேசினாலும், மனுஷனுக்குள் உள்ள அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார், மனுஷனுக்குள் இருக்கும் பிரத்தியேகமானவற்றை இந்தக் கடுமையான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், ஆனாலும் அத்தகைய நியாயத்தீர்ப்பின் மூலம், அவர் மாம்சத்தின் சாராம்சத்தைப் பற்றிய ஆழமான அறிவை மனுஷனுக்கு அளிக்கிறார், இதனால் தேவன் முன்பாக மனுஷன் கீழ்ப்படிகிறான். மனுஷனின் மாம்சமானது பாவத்தாலும் சாத்தானாலும் ஆனது, அது கீழ்ப்படியாதது, அது தேவனுடைய சிட்சைக்கான பொருளாகவும் இருக்கிறது. ஆகவே, மனுஷன் தன்னைத் தெரிந்துகொள்ள அனுமதிக்க, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அவனுக்கு நேரிட வேண்டும், மேலும் எல்லா வகையான புடமிடுதலையும் பயன்படுத்த வேண்டும்; அப்போதுதான் தேவனின் கிரியையானது பயனுள்ளதாக இருக்கும்.

தேவன் பேசிய வார்த்தைகளின் மூலம் அவர் ஏற்கெனவே மனுஷனின் மாம்சத்தைக் கண்டித்துள்ளார் என்பதைக் காணலாம். அப்படியானால், இந்த வார்த்தைகள் சபிக்கும் வார்த்தைகள் இல்லையா? தேவன் பேசும் வார்த்தைகள் மனுஷனின் உண்மையான சுபாவங்களை வெளிப்படுத்துகின்றன, அத்தகைய வெளிப்பாட்டின் மூலம் அவன் நியாயந்தீர்க்கப்படுகிறான், மேலும் அவனால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற இயலாது என்பதை அவன் காணும்போது, தனக்குள் அவன் துக்கத்தையும் வருத்தத்தையும் உணர்கிறான், அவன் தேவனுக்குக் கடன்பட்டிருப்பதாகவும், தேவனுடைய சித்தத்தை அடைய முடியாது என்றும் உணர்கிறான். பரிசுத்த ஆவியானவர் உன்னை உள்ளிருந்து தண்டித்து திருத்தும் காலங்களும் உள்ளன, இந்த தண்டித்து திருத்துதல் தேவனின் நியாயத்தீர்ப்பிலிருந்து வருகிறது; தேவன் உன்னை நிந்தித்து, அவரது முகத்தை உன்னிடமிருந்து மறைக்கும் காலம், அவர் உனக்கு செவிசாய்க்காமல், உன்னுள் கிரியை செய்யும் காலம், உன்னை சுத்திகரிப்பதற்காக உன்னை சத்தமில்லாமல் சிட்சிக்கும் காலம் ஆகிய காலங்களும் இருக்கின்றன. மனுஷனில் தேவனின் கிரியையானது முதன்மையாக அவருடைய நீதியான மனநிலையைத் தெளிவுபடுத்துவதற்காகவே செய்யப்படுகிறது. மனுஷன் இறுதியில் தேவனுக்கு என்ன சாட்சியம் அளிக்கிறான்? தேவன் நீதியுள்ள தேவன் என்று மனுஷன் சாட்சிக் கொடுக்கிறான், அவருடைய மனநிலை நீதியும், கடுங்கோபமும், சிட்சையும், நியாயத்தீர்ப்பும் கொண்டதாக சாட்சிக் கொடுக்கிறான்; தேவனின் நீதியான மனநிலைக்கு மனுஷன் சாட்சிக் கொடுக்கிறான். மனுஷனைப் பரிபூரணமாக்க தேவன் தமது நியாயத்தீர்ப்பைப் பயன்படுத்துகிறார், அவர் மனுஷனை நேசித்திருக்கிறார், மனுஷனை இரட்சித்திருக்கிறார்—ஆனால் அவருடைய அன்புக்குள் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன? நியாயத்தீர்ப்பு, மகத்துவம், கடுங்கோபம் மற்றும் சாபம் ஆகியவை இருக்கின்றன. கடந்த காலத்தில் தேவன் மனுஷனை சபித்த போதிலும், அவர் மனுஷனைப் பாதாளக்குழிக்குள் முழுமையாகத் தள்ளிடவில்லை, ஆனால் மனுஷனின் விசுவாசத்தைச் சுத்திகரிக்க அவ்வழியைப் பயன்படுத்தினார்; அவர் மனுஷனைக் கொல்லவில்லை, ஆனால் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகவே செயல்பட்டார். மாம்சத்தின் சாராம்சம் சாத்தானிடமிருந்து வந்தது—தேவன் அதைச் சரியாகச் சொன்னார்—ஆனால் தேவனால் மேற்கொள்ளப்பட்ட உண்மைகள் அவருடைய வார்த்தைகளின்படி முடிக்கப்படவில்லை. நீ அவரை நேசிப்பதற்காகவும், நீ மாம்சத்தின் சாராம்சத்தை அறிந்து கொள்வதற்காகவும் அவர் உன்னைச் சபிக்கிறார்; நீ விழித்துக் கொள்ளவும், உனக்குள் இருக்கும் குறைபாடுகளை நீ அறிந்துகொள்ள மற்றும் மனுஷனின் முழு தகுதியற்ற தன்மையை அறிய உன்னை அனுமதிக்கவும் அவர் உன்னை சிட்சிக்கிறார். ஆகவே, தேவனின் சாபங்கள், அவருடைய நியாயத்தீர்ப்பு, அவருடைய மகத்துவம் மற்றும் கடுங்கோபம்—இவை அனைத்தும் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகத்தான். இன்று தேவன் செய்கிற எல்லாவற்றையும், அவர் உனக்குள் தெளிவுபடுத்தும் நீதியான மனநிலையும்—இவை அனைத்தும் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகத்தான். இதுவே தேவனின் அன்பு.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 88

மனுஷனின் பாரம்பரியக் கருத்துக்களில், தேவனின் அன்பு என்பது அவருடைய கிருபை, இரக்கம் மற்றும் மனுஷனின் பலவீனத்திற்கான அனுதாபம் ஆகியவைதான் என்று அவன் விசுவாசிக்கிறான். இந்த விஷயங்களும் தேவனின் அன்புதான் என்றாலும், இவை ஒருதலைப்பட்சமானவை, மேலும் தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்கான முதன்மை வழிமுறையாக இது இருப்பதில்லை. சிலர் உடல்நலக்குறைவு காரணமாக தேவனை விசுவாசிக்கத் தொடங்குகிறார்கள். இந்த உடல்நலக் குறைவானதுதான் உனக்கான தேவனின் கிருபை; அது இல்லாமல், நீ தேவனை விசுவாசிக்க மாட்டாய், நீ தேவனை விசுவாசிக்கவில்லை என்றால் நீ இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டாய்—ஆகவே இந்தக் கிருபை கூட தேவனின் அன்புதான். இயேசுவை விசுவாசித்த காலத்தில், ஜனங்கள் தேவனுக்குப் பிடிக்காததைச் செய்தார்கள், ஏனென்றால் அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவில்லை, ஆனாலும் தேவனிடம் அன்பும் இரக்கமும் இருக்கிறது, மேலும் அவர் மனுஷனை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறார். மனுஷனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், மனுஷன் தம்மைப் பின்பற்ற தேவன் அனுமதிக்கிறார், மேலும், அவர் இன்றைய நாள் வரை மனுஷனை வழிநடத்தியிருக்கிறார். இது தேவனின் அன்பு இல்லையா? தேவனின் மனநிலையில் வெளிப்படும் விஷயங்களே தேவனின் அன்பாகும்—இது முற்றிலும் சரியானது! திருச்சபைக் கட்டிடம் அதன் முடிவடையும் நிலையை எட்டியபோது, தேவன் ஊழியம் செய்பவர்களின் கிரியைகளைச் செய்து, மனுஷனைப் பாதாளக்குழிக்குள் தள்ளினார். ஊழியம் செய்பவர்களின் காலத்தின் வார்த்தைகள் அனைத்தும் சாபங்களாக இருந்தன: உனது மாம்சத்தின் சாபங்கள், உனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையின் சாபங்கள் மற்றும் தேவனின் சித்தத்தை நிறைவேற்றாத உனது விஷயங்களின் சாபங்கள் ஆகியவைதான் அந்த சாபங்கள். அந்தக் கட்டத்தில் தேவன் செய்த கிரியைகள் மகத்துவம் மிக்கதாக வெளிப்பட்டன, அதன்பிறகு தேவன் சிட்சைக்கான கிரியையை மேற்கொண்டார், மேலும் மரண உபத்திரவமும் வந்தது. அத்தகைய கிரியையில், மனுஷன் தேவனின் கோபத்தையும், மகத்துவத்தையும், நியாயத்தீர்ப்பையும், ஆக்கினைத்தீர்ப்பையும் கண்டான், மேலும் தேவனின் கிருபையையும், அவருடைய அன்பையும், இரக்கத்தையும் அவன் கண்டான். தேவன் செய்த அனைத்தும், மற்றும் அவருடைய மனநிலையாக வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும், மனுஷன் மீதான தேவனின் அன்பாக மட்டுமே இருந்தது. தேவன் செய்த அனைத்தும் மனுஷனின் தேவைகளைப் பூர்த்தி செய்தன. மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகவே அவர் அதைச் செய்தார், மேலும் அவர் மனுஷனின் வளர்ச்சிக்கு ஏற்ப அவனுக்கு வழங்கினார். தேவன் இதைச் செய்திராவிட்டால், மனுஷனால் தேவனுக்கு முன்பாக வர முடிந்திருக்காது, மேலும் தேவனின் உண்மையான முகத்தை அறிய வழி இருந்திருக்காது. மனுஷன் முதன்முதலில் தேவனை நம்பத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை, மனுஷனின் வளர்ச்சிக்கு ஏற்ப தேவன் படிப்படியாக மனுஷனுக்கு வழங்கியிருக்கிறார், இதனால், தனக்குள் மனுஷன் படிப்படியாக அவரை அறிந்துகொண்டான். இன்றைய நாளுக்கு வந்திருப்பதால் மட்டுமே தேவனின் நியாயத்தீர்ப்பு எவ்வளவு அற்புதமானது என்பதை மனுஷன் உணருகிறான். சிருஷ்டிப்பின் காலத்திலிருந்து இன்று வரை சபிக்கும் கிரியையின் முதல் நிகழ்வுதான் ஊழியம் செய்பவர்களின் கிரியையின் படியாக இருந்தது. மனுஷன் பாதாளக்குழிக்குள் போக சபிக்கப்பட்டான். தேவன் அதைச் செய்திருக்கவில்லை என்றால், இன்று மனுஷனுக்கு தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இருந்திருக்காது; தேவனுடைய சாபத்தின் மூலம்தான் மனுஷன் அதிகாரப்பூர்வமாக அவரது மனநிலையை எதிர்கொண்டான். ஊழியம் செய்பவர்களின் உபத்திரவம் மூலம் மனுஷன் வெளிப்பட்டான். அவனது விசுவாசம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவனது வளர்ச்சி மிகச் சிறியது என்றும், தேவனின் சித்தத்தை அவனால் நிறைவேற்ற இயலாது என்றும், எல்லா நேரங்களிலும் தேவனைத் திருப்திப்படுத்துவதாக அவன் கூறியது வெறும் வார்த்தைகளைத் தவிர வேறில்லை என்றும் அவர் கண்டார். ஊழியம் செய்பவர்களின் கிரியையின் படியில் தேவன் மனுஷனை சபித்த போதிலும், இப்போது திரும்பிப் பார்க்கும்போது, தேவனுடைய கிரியையின் அந்தப் படியானது அற்புதமானதாக இருக்கிறது: இது மனுஷனுக்கு ஒரு சிறந்த திருப்புமுனையைக் கொண்டு வந்தது, மேலும் அவனது ஜீவித மனநிலையில் ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஊழியம் செய்பவர்களின் காலத்திற்கு முன்பு, மனுஷன் ஜீவிதத்தைப் பின்தொடர்வது என்றால் என்ன, தேவனை விசுவாசிப்பது என்றால் என்ன, அல்லது தேவனுடைய கிரியையின் ஞானம் ஆகியவற்றைப் பற்றி எதுவும் புரிந்துகொள்ளவில்லை, மேலும் தேவனின் கிரியையானது மனுஷனைச் சோதிக்க முடியும் என்பதையும் அவன் புரிந்துகொள்ளவில்லை. ஊழியம் செய்பவர்களின் காலம் முதல் இன்று வரை, தேவனின் கிரியை எவ்வளவு அதிசயமானது என்பதை மனுஷன் கண்டுவருகிறான்—இது மனுஷனால் புரிந்துகொள்ள முடியாதது. மனுஷன் தனது மூளையைப் பயன்படுத்தி அதன்மூலம் தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் கற்பனை செய்ய முடிவதில்லை, மேலும் தனது வளர்ச்சி எவ்வளவு சிறியது என்பதையும், தான் அதிகம் கீழ்ப்படியாமல் இருப்பதையும் அவன் காண்கிறான். தேவன் மனுஷனை சபித்தபோது, அது ஒரு விளைவை அடைவதற்காகவே செய்யப்பட்டது, அவர் மனுஷனைக் கொல்லவில்லை. அவர் மனுஷனை சபித்த போதிலும், அவர் வார்த்தைகளால்தான் அவ்வாறு செய்தார், அவருடைய சாபங்கள் உண்மையில் மனுஷனுக்கு ஏற்படவில்லை, ஏனென்றால் தேவன் மனுஷனின் கீழ்ப்படியாமையைத்தான் சபித்திருக்கிறார், ஆகவே மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்கும் அவருடைய சாபங்களின் வார்த்தைகள் பேசப்பட்டன. தேவன் மனுஷனை நியாயந்தீர்த்தாலும் சபித்தாலும், இரண்டுமே மனுஷனைப் பரிபூரணமாக்குகின்றன: இவை இரண்டும் மனுஷனுக்குள் தூய்மையற்றதைப் பரிபூரணமாக்கவே செய்யப்படுகின்றன. இதன் மூலம் மனுஷன் சுத்திகரிக்கப்படுகிறான், மேலும் மனுஷனுக்குள் இல்லாத விஷயங்கள் அவருடைய வார்த்தைகள் மற்றும் கிரியையின் மூலம் பரிபூரணமாக்கப்படுகின்றன. கடுமையான வார்த்தைகள் அல்லது நியாயத்தீர்ப்பு அல்லது சிட்சை என எதுவாக இருந்தாலும், தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியும் மனுஷனைப் பரிபூரணமாக்குகிறது, மேலும் அது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கிறது. யுகங்கள் முழுவதும் தேவன் இதுபோன்ற கிரியையைச் செய்ததில்லை; இன்று, நீங்கள் அவருடைய ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் உங்களுக்குள் கிரியை செய்கிறார். உங்களுக்குள் சில வேதனைகளை நீங்கள் அனுபவித்திருந்தாலும், உங்கள் இருதயங்கள் உறுதியும் சமாதானமும் அடைகின்றன; தேவனுடைய இந்தக் கட்ட கிரியையை உங்களால் அனுபவிக்க முடிகிறது என்பது உங்களது ஆசீர்வாதமாக இருக்கிறது. எதிர்காலத்தில் நீங்கள் எதை ஆதாயமாக்கிக்கொள்ள முடியும் என்பதைப் பொருட்படுத்தாமல் பார்த்தால், இன்று தேவனின் கிரியையில் நீங்கள் காண்பது அன்பு மட்டுமாகத்தான் இருக்கிறது. தேவனின் நியாயத்தீர்ப்பையும் புடமிடுதலையும் மனுஷன் அனுபவிக்காவிட்டால், அவனுடைய செயல்களும் ஆர்வமும் எப்போதும் மேற்பரப்பு மட்டத்திலேயே இருக்கும், மேலும் அவனது மனநிலையும் எப்போதும் மாறாமல் இருக்கும். இது தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறதா? இன்று, ஆணவமும் அகந்தையும் நிறைந்த மனுஷனுக்குள் இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும், மனுஷனின் மனநிலை முன்பை விட மிகவும் நிலையானதாக இருக்கிறது. தேவன் உன்னைக் கையாளுவது உன்னை இரட்சிப்பதற்காகச் செய்யப்படுகிறது, மேலும் அந்த நேரத்தில் நீ சிறிது வலியை உணர்ந்தாலும், உனது மனநிலையில் மாற்றம் ஏற்படும் நாள் வரும். அந்த நேரத்தில், நீ திரும்பிப் பார்த்து, தேவனின் கிரியை எவ்வளவு ஞானமானது என்பதைக் காண்பாய், அந்த நேரத்தில் உன்னால் தேவனின் சித்தத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று, சிலர் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்கள், ஆனால் அது மிகவும் யதார்த்தமானதாக இல்லை. உண்மையில், அவர்கள் பொய்யைப் பேசுகிறார்கள், ஏனென்றால் தேவனின் சித்தம் மனுஷனை இரட்சிப்பதா அல்லது மனுஷனை சபிப்பதா என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவேளை உன்னால் இப்போது அதைத் தெளிவாகக் காண முடியாமல் இருக்கலாம், ஆனால் தேவன் மகிமை அடையும் நாள் வந்துவிட்டது என்பதை நீ பார்க்கும் நாள் வரும், மேலும் தேவனை நேசிப்பது எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை நீ காண்பாய், இதன்மூலம் நீ மனுஷ ஜீவிதத்தை அறிந்து கொள்ளுவாய், உனது மாம்சம் தேவனை நேசிக்கும் உலகில் ஜீவிக்கும், இதன்மூலம் உனது ஆவி விடுவிக்கப்படும், உனது ஜீவிதம் மகிழ்ச்சியாக இருக்கும், மேலும் நீ எப்போதும் தேவனுக்கு நெருக்கமாக இருப்பாய், அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பாய். அந்த நேரத்தில், தேவனின் இன்றைய கிரியை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நீ உண்மையிலேயே அறிந்துகொள்வாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 89

தங்கள் பழைய மூதாதையனான சாத்தானைக் கைவிட்டு ஜனங்களை விலகச்செய்வதற்காகவே இப்போது கிரியைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வார்த்தையின் அனைத்து நியாயத்தீர்ப்புகளும் மனிதகுலத்தின் சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்தவும் வாழ்க்கையின் சாராம்சத்தை ஜனங்கள் புரிந்துகொள்ள உதவுவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தத் தொடர் நியாயத்தீர்ப்புகள் ஜனங்களின் இருதயங்களை உருவ குத்துகின்றன. ஒவ்வொரு நியாயத்தீர்ப்பும் அவர்களின் விதியோடு தொடர்புடையதாக இருக்கிறது மேலும் அது அவர்களுடைய இருதயங்களை காயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதனால் அவர்களால் அந்தக் காரியங்களையெல்லாம் விட்டுவிட முடிகிறது, மேலும் அதனால் அவர்கள் வாழ்க்கையை அறிந்து கொள்ளுகிறார்கள், இந்த அருவருப்பான உலகத்தை அறிகிறார்கள், தேவனின் ஞானத்தையும் சர்வவல்லமையையும் அறிகிறார்கள், மற்றும் சாத்தானால் சீர்குலைக்கப்பட்ட மனிதகுலத்தையும் அறிகிறார்கள். இத்தகையக் கடிந்துகொள்ளுதலையும் நியாயத்தீர்ப்புகளையும் மனிதன் எந்த அளவிற்கு அதிகமாகப் பெறுகிறானோ அந்த அளவிற்கு மனிதனின் இருதயம் காயப்படுவதோடு அவனுடைய ஆவி விழிப்படையும். இந்த அளவுக்கதிகமாக சீர்குலைக்கப்பட்ட மற்றும் மிக ஆழமாக வஞ்சிக்கப்பட்ட ஜனங்களின் ஆவியை விழிப்படையச் செய்வதே இந்த வகையான நியாயத்தீர்ப்புகளின் இலக்காகும். மனிதனிடம் ஆவி இல்லை, அதாவது, அவனுடைய ஆவி நீண்ட காலத்திற்கு முன்னமே மரித்துவிட்டது மேலும் பரலோகம் இருப்பதை அவன் அறியவில்லை, தேவன் ஒருவர் இருப்பதை அவன் அறியவில்லை, மற்றும் மரணப் பாதாளத்தில் அவன் போராடிக்கொண்டிருப்பதை அவன் நிச்சயமாக அறியவில்லை; பூமியில் இந்தத் தீய நரகத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பதை அவன் அறிந்துகொள்வது எவ்வாறு சாத்தியம்? அவனது இந்த அழுகிப்போன சடலம் சாத்தானால் சீர்குலைக்கப்பட்டு மரணப் பாதளத்தில் விழுந்துவிட்டதை அவன் அறிந்துகொள்வது எவ்வாறு சாத்தியம்? இந்த உலகத்தில் உள்ள யாவும் வெகு காலத்திற்கு முன்னமே மனிதகுலத்தால் சீர்ப்படுத்த முடியாதபடி பாழ்பட்டுப் போய்விட்டதை அவன் அறிந்துகொள்வது எவ்வாறு சாத்தியம்? மேலும் சிருஷ்டிகர் இன்று உலகத்திற்கு வந்துவிட்டதையும் அவரால் இரட்சிக்கப்படக் கூடிய சீர்கெட்ட ஒரு ஜனக் குழுவினரை அவர் தேடிக்கொண்டு இருப்பதையும் அவனால் அறிந்துகொள்ளுவது எவ்வாறு சாத்தியம்? சாத்தியமான ஒவ்வொரு புடமிடுதலையும் நியாயத்தீர்ப்பையும் மனிதன் அனுபவித்த பின்னரும், அவனது மந்தமான மனசாட்சி இன்னும் அசையவில்லை மற்றும் உண்மையில் ஏறக்குறைய உணர்வற்றதாகவே இருக்கிறது. மனிதகுலம் எவ்வளவு சீர்கெட்டதாக இருக்கிறது! இத்தகைய நியாயத்தீர்ப்பு வானத்தில் இருந்து விழும் கொடிய கல்மழையைப் போல் இருந்தாலும், அது மனிதனுக்கு மிகுந்த நன்மையை அளிப்பதாக இருக்கிறது. இது போல ஜனங்களை நியாயந்தீர்க்காவிட்டால், முடிவுகள் எதுவும் இருக்காது மற்றும் துன்பப் பாதளத்தில் இருந்து ஜனங்களை மீட்பது என்பது முற்றிலும் சாத்தியமற்றதாகிவிடும். இந்தக் கிரியை இல்லை என்றால், நரகத்தில் இருந்து வெளிவருவது ஜனங்களுக்கு மிகவும் கடினமாகிவிடும், ஏனெனில் நீண்ட நாட்களுக்கு முன்னரே அவர்களுடைய இருதயங்கள் மரித்துப்போய்விட்டன மேலும் அவர்களுடைய ஆவிகள் வெகு காலத்திற்கு முன்னரே சாத்தானின் காலால் மிதியுண்டு போயின. சீர்குலைவின் மிக ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் உங்களை இரட்சிக்க விடாமுயற்சியுடன் அழைப்பது, கடுமையாக நியாயந்தீர்ப்பது அவசியமாகிறது; அப்போதுதான் உங்கள் உறைந்துபோன இருதயங்களைத் தட்டி எழுப்புவது சாத்தியமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 90

தேவன் மிகவும் பின்தங்கிய மற்றும் அசுத்தமான இடத்தில் மாம்சமானார், இந்த வழியில்தான் தேவன் தம்முடைய பரிசுத்த மற்றும் நீதியுள்ள மனநிலையை முழுவதுமாக தெளிவாகக் காட்ட முடியும். எந்த வழியில் அவருடைய நீதியுள்ள மனநிலை வெளிப்படுத்தப்படுகிறது? அவர் மனுஷனுடைய பாவங்களை நியாயந்தீர்க்கும்போது, அவர் சாத்தானை நியாயந்தீர்க்கும்போது, அவர் பாவத்தை வெறுக்கும்போது, அவருக்கு விரோதமாகச் செயல்படும் மற்றும் கலகம் செய்யும் சத்துருக்களை அவர் வெறுக்கும்போது இது வெளிப்படுத்தப்படுகிறது. இன்று நான் பேசுகிற வார்த்தைகள் மனுஷனுடைய பாவங்களை நியாயந்தீர்ப்பதற்கும், மனுஷனுடைய அநீதியை நியாயந்தீர்ப்பதற்கும், மனுஷனுடைய கீழ்ப்படியாமையை சபிப்பதற்கும் ஆகும். மனுஷனுடைய மாறுபாடு மற்றும் வஞ்சகம், மனுஷனுடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள்—தேவனுடைய சித்தத்திற்கு முரணான அனைத்தும் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும், மேலும் மனுஷனுடைய எல்லா கீழ்ப்படியாமையும் பாவம் என்று கண்டனம் செய்யப்படுகிறது. அவருடைய வார்த்தைகள் நியாயத்தீர்ப்பின் கொள்கைகளைச் சுற்றி வருகின்றன; மனுஷனின் அநீதிக்கு நியாயத்தீர்ப்பு, மனுஷனின் கலகத்தனத்திற்கு சாபம் மற்றும் மனுஷனின் அசிங்கமான முகங்களை அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுதல் ஆகியவற்றை அவர் தமது சொந்த நீதியுள்ள மனநிலையை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்துகிறார். பரிசுத்தம் என்பது அவருடைய நீதியுள்ள மனநிலையின் பிரதிநிதித்துவமாகும், மேலும், உண்மையில் தேவனின் பரிசுத்தமானது அவருடைய நீதியுள்ள மனநிலையாகும். உங்கள் சீர்கெட்ட மனநிலை இன்றைய வார்த்தைகளின் சூழலாகும். நான் அவற்றைப் பேசுவதற்கும் நியாயத்தீர்ப்பளிப்பதற்கும் ஜெயங்கொள்ளுகிற கிரியையைச் செய்யவும் பயன்படுத்துகிறேன். இது மட்டுமே உண்மையான கிரியை, இது மட்டுமே தேவனுடைய பரிசுத்தத்தை முழுமையாக பிரகாசிக்கச் செய்கிறது. உன்னிடம் ஒரு சீர்கெட்ட மனநிலைக்கான எந்தத் தடயமும் இல்லை என்றால், தேவன் உன்னை நியாயந்தீர்க்கவும் மாட்டார், அவருடைய நீதியுள்ள மனநிலையை அவர் உனக்குக் காண்பிக்கவும் மாட்டார். நீ ஒரு சீர்கெட்ட மனநிலையைக் கொண்டிருப்பதால், தேவன் உன்னை அப்படியே விட்டு விடமாட்டார், இதன் மூலம்தான் அவருடைய பரிசுத்தம் காண்பிக்கப்படுகிறது. மனுஷனுடைய அசுத்தமும் கலகத்தனமும் மிகுதியாக இருப்பதை தேவன் கண்டும், அவர் உன்னுடன் பேசாமலும், நியாயத்தீர்ப்பளிக்காமலும், உன் அநீதிக்காக உன்னை சிட்சிக்காமலும் இருப்பாரானால், அவர் தேவன் அல்ல என்பதை இது நிரூபிக்கும், ஏனென்றால் அவருக்கு பாவத்தின் மீது வெறுப்பு இருந்திருக்காது; அவர் மனுஷனைப் போலவே அசுத்தமாய் இருப்பார். இன்று, உன்னுடைய அசுத்தத்தினால்தான் நான் உன்னை நியாயந்தீர்க்கிறேன், மற்றும் உன்னுடைய சீர்கேடு மற்றும் கலகத்தனத்தினால்தான் நான் உன்னை சிட்சிக்கிறேன். நான் என் வல்லமையை உங்களிடம் காட்டவில்லை அல்லது வேண்டுமென்றே உங்களை ஒடுக்கவில்லை; இந்த அசுத்த தேசத்தில் பிறந்த நீங்கள் அசுத்தத்தால் மிகவும் மோசமாக மாசுபட்டுள்ளதால் நான் இதைச் செய்கிறேன். அசுத்தமான இடங்களில் வாழும் பன்றிகளை ப் போல நீங்கள் வெறுமனே உங்கள் நேர்மையையும் மனிதத்தன்மையையும் இழந்துவிட்டீர்கள். உங்கள் அசுத்தம் மற்றும் சீர்கேட்டினால் தான் நீங்கள் நியாயந்தீர்க்கப்படுகிறீர்கள், நான் என் கோபத்தை உங்கள் மீது கட்டவிழ்த்து விடுகிறேன். இந்த வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு காரணமாகத்தான் நீங்கள் தேவன் நீதியுள்ள தேவன் என்பதையும், தேவன் பரிசுத்தமுள்ள தேவன் என்பதையும் காண முடிந்தது; அவருடைய பரிசுத்தம் மற்றும் நீதியின் காரணத்தினால்தான் அவர் உங்களை நியாயந்தீர்க்கிறார், அவருடைய கோபத்தை உங்கள்மீது கட்டவிழ்த்து விடுகிறார். மனிதகுலத்தின் கலகத்தன்மையை அவர் பார்ப்பதால்தான் அவர் தனது நீதியான மனநிலையை வெளிப்படுத்துகிறார். மனிதகுலத்தின் அசுத்தமும் சீர்கேடும் அவருடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தச் செய்கிறது, அவர் தேவன் தான் என்பதைக் காண்பிக்க இது போதுமானதாக இருக்கிறது, அவர் பரிசுத்தமும் புதுப்பொலிவும் உள்ளவர், ஆயினும் அவர் அசுத்த தேசத்தில் வாழ்கிறார். ஒரு நபர் மற்றவர்களுடன் சேற்றில் புரளுண்டால், அவரைப் பற்றிய பரிசுத்தமானது ஒன்றும் இல்லை, அவருக்கு நீதியுள்ள மனநிலையும் இல்லை, மேலும் அவர் மனிதனுடைய அக்கிரமத்தை நியாயந்தீர்ப்பதற்கு தகுதியுள்ளவர் அல்ல, மனிதனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றவும் அவர் தகுதியற்றவர். ஒருவருக்கொருவர் சமமான நிலையில் அசுத்தமானவர்களாக இருக்கின்றபோது எவ்வாறு ஜனங்கள் தங்களைப்போலவே உள்ள பிறரை நியாயந்தீர்ப்பதற்குத் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்? பரிசுத்த தேவன் ஒருவரால் மட்டுமே முழு மனிதகுலத்தையும் நியாயந்தீர்க்க முடியும். மனிதனின் பாவங்களை மனிதன் எவ்வாறு நியாயந்தீர்க்க முடியும்? மனிதனின் பாவங்களை மனிதன் எவ்வாறு பார்க்க முடியும், இந்தப் பாவங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க மனிதன் எவ்வாறு தகுதி பெற முடியும்? மனிதனின் பாவங்களை நியாயந்தீர்க்க தேவன் தகுதியற்றவராக இருப்பாரானால், அவர் எப்படி நீதியுள்ள தேவனாக இருக்க முடியும்? ஜனங்கள் சீர்கேடான மனநிலையை வெளிப்படுத்துவதால் தான், தேவன் அவர்களை நியாயந்தீர்க்கும் வகையில் பேசுகிறார், அப்போதுதான் அவர் பரிசுத்தமான தேவன் என்பதை அவர்களால் பார்க்க முடியும். மனிதனை அவனுடைய பாவங்களுக்காக அவர் தீர்ப்பளித்து, தண்டிக்கும்போது, மனிதனின் பாவங்களை அம்பலப்படுத்துகையில், எந்தவொரு நபரோ அல்லது காரியமோ இந்தத் தீர்ப்பிலிருந்து தப்ப முடியாது; அசுத்தமானவை அனைத்தும் அவரால் நியாயந்தீர்க்கப்படுகின்றன, இவ்வாறு தான் அவருடைய மனநிலை நீதியானது என்று வெளிப்படுகிறது. அது இல்லையெனில், நீங்கள் பெயர் மற்றும் உண்மை இரண்டிலும் பிரதிபலிப்புப்படலங்கள் என்று எப்படி கூற முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளுகிற கிரியையின் இரண்டாவது படியின் பலன்கள் எவ்வாறு அடையப்படுகின்றன” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 91

இஸ்ரவேலில் செய்யப்பட்ட கிரியைகளுக்கும் இன்றைய கிரியைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இஸ்ரவேலர்களின் வாழ்க்கையை யேகோவா வழிநடத்தினார், மேலும் அதிக அளவில் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இருந்ததில்லை, ஏனென்றால் அந்த நேரத்தில் ஜனங்கள் உலகத்தைப் பற்றி மிகக் குறைவாகவே புரிந்துகொண்டனர் மற்றும் அதிக சீர்கேடான மனநிலையைக் கொண்டிருக்கவில்லை. அப்பொழுது, இஸ்ரவேலர் யேகோவாவுக்கு முழுமனதுடன் கீழ்ப்படிந்தனர். பலிபீடங்களைக் கட்டும்படி அவர் சொன்னபோது, அவர்கள் விரைவாகப் பலிபீடங்களைக் கட்டினார்கள்; ஆசாரியர்களுக்குரிய வஸ்திரங்களை அணியும்படி அவர் சொன்னபோது, அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். அந்த நாட்களில், யேகோவா ஓர் ஆட்டு மந்தையை மேய்ப்பவனைப் போல ஒரு மேய்ப்பராக இருந்தார், மேய்ப்பரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் மந்தையைப் போல, அவர்கள் பசும்புல் மேய்ச்சலை அடைந்தனர்; அவர்கள் எப்படிப் புசித்து, உடை அணிந்து, வசித்தனர் மற்றும் பயணம் செய்தனரோ, அவ்வாறுதான் யேகோவா அவர்களின் வாழ்க்கையை வழிநடத்தினார். அது தேவனின் மனநிலையை வெளிப்படுத்துகிற நேரமாக இருக்கவில்லை; ஏனென்றால், அந்தக் காலத்தில்தான் மனிதகுலம் புதிதாகப் பிறந்திருந்தது; கலகக்காரர்களாகவும் விரோதமூட்டுபவர்களாகவும் இருந்தவர்கள் மிகக் குறைவு, மனுஷர்களின் மத்தியில் அதிக அளவு அசுத்தம் இல்லை, எனவே ஜனங்கள் தேவனின் மனநிலைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாகச் செயல்பட முடியவில்லை. அசுத்தமான தேசத்திலிருந்து வரும் ஜனங்கள் மூலம்தான் தேவனுடைய பரிசுத்தம் காட்டப்படுகிறது; இன்று, அவர் இந்த அசுத்தமான தேசத்தின் ஜனங்களால் வெளிப்படுத்தப்படுகிற அசுத்தத்தின் நிமித்தம் அவர் நியாயந்தீர்க்கிறார், இவ்வாறு நியாயத்தீர்ப்பின் மத்தியில் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார். அவர் ஏன் நியாயத்தீர்ப்பளிக்கிறார்? அவர் பாவத்தை வெறுப்பதால் அவரால் நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளைப் பேச முடிகிறது; மனிதகுலத்தின் கலகத்தை அவர் வெறுக்கவில்லையெனில் அவர் எப்படி மிகவும் கோபப்படுவார்? அவருக்குள் எந்த வெறுப்பும் இல்லை, முரண்பாடும் இல்லை, அவர் ஜனங்களின் கலகத்தைக் கண்டுகொள்ளவில்லையெனில், அது அவர் மனுஷனைப் போல அசுத்தமானவர் என்பதை நிரூபிக்கும். அவர் அசுத்தத்தை வெறுக்கிறபடியினாலும், அவர் வெறுக்கிற விஷயங்கள் அவரிடத்தில் இல்லை என்பதாலும், அவரால் மனுஷனை நியாயந்தீர்க்கவும் சிட்சிக்கவும் முடியும். அவரிடத்தில் எதிர்ப்பும் கலகத்தனமும் இருந்திருந்தால், விரோதமும் கலகமும் கொண்டவர்களை அவர் வெறுத்திருக்க மாட்டார். கடைசி நாட்களின் கிரியைகள் இஸ்ரவேலில் நடந்து முடிந்திருந்தால், அதில் எந்த அர்த்தமும் இருந்திருக்காது. எல்லாவற்றிலும் இருண்ட மற்றும் மிகவும் பின்தங்கிய இடமான சீனாவில் கடைசி நாட்களின் கிரியைகள் ஏன் செய்யப்படுகின்றன? அவருடைய பரிசுத்தத்தையும் நீதியையும் காண்பிப்பதற்காகவே. சுருக்கமாகச் சொன்னால், இருண்ட இடத்தில்தான், தேவனுடைய பரிசுத்தத்தை இன்னும் தெளிவாகக் காட்ட முடியும். உண்மையில், இவை அனைத்தும் தேவனின் கிரியைக்காகவே செய்யப்படுகின்றன. உங்கள் அசுத்தத்தாலும், கலகத்தனத்தாலும் முன்னதாகவே காட்டப்பட்டுள்ளபடி, தேவன் உங்கள் மத்தியில் நிற்க வானத்திலிருந்து இறங்கியிருக்கிறார் என்பதை இன்றுதான் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள், இப்போதுதான் நீங்கள் தேவனை அறிந்திருக்கிறீர்கள். இது மிகப் பெரிய உயர்வு அல்லவா? உண்மையில், நீங்கள் சீனாவில் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கூட்ட ஜனங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டு தேவனுடைய கிருபையை அனுபவிப்பதாலும், மேலும் இவ்வளவு பெரிய கிருபையை அனுபவிக்க நீங்கள் தகுதியற்றவர்கள் என்பதாலும், இவை அனைத்தும் உங்களுடைய மிக உயர்ந்த மேன்மை என்பதை இது நிரூபிக்கிறது. தேவன் உங்களிடத்தில் தோன்றியிருக்கிறார், அவருடைய பரிசுத்த மனநிலையை முழுவதுமாக உங்களுக்குக் காட்டியுள்ளார், அவை எல்லாவற்றையும் அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், மேலும் நீங்கள் அனுபவிக்கக்கூடிய எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கும்படி செய்திருக்கிறார். தேவனின் நீதியுள்ள மனநிலையை நீங்கள் ருசித்திருப்பது மட்டுமல்லாமல், இன்னும் அதிகமாக, தேவனின் இரட்சிப்பையும், தேவனின் மீட்பையும், தேவனின் குறைவற்ற, எல்லையற்ற அன்பையும் நீங்கள் ருசித்திருக்கிறீர்கள். எல்லாவற்றிலும் அசுத்தமான நீங்கள் இவ்வளவு பெரிய கிருபையை அனுபவித்திருக்கிறீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லவா? இது தேவன் உங்களை உயர்த்துவதல்லவா? ஜனங்களாகிய நீங்கள் அனைவரிலும் மிகத் தாழ்ந்த நிலைகளை உடையவர்கள்; இவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தை அனுபவிக்க நீங்கள் இயல்பாகவே தகுதியற்றவர்கள், ஆனாலும் தேவன் உன்னை உயர்த்துவதன் மூலம் ஒரு விதிவிலக்கை உண்டாக்கியுள்ளார். உனக்கு வெட்கமில்லையா? நீ உன் கடமையைச் செய்ய இயலாது என்றால், நீ இறுதியில் உன்னைப் பற்றி வெட்கப்படுவாய், மேலும் உன்னை நீயே தண்டித்துக்கொள்வாய். இன்று, நீ சிட்சிக்கப்படவுமில்லை, நீ தண்டிக்கப்படவும் இல்லை என்றால்; உன் மாம்சம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்—ஆனால் இறுதியில், இந்த வார்த்தைகள் உன்னை வெட்கப்படுத்தும். இன்றுவரை, நான் யாரையும் வெளிப்படையாகத் சிட்சித்ததில்லை; என் வார்த்தைகள் கடுமையாக இருக்கலாம், ஆனால் நான் ஜனங்களிடம் எவ்வாறு அப்படி செயல்படக்கூடும்? நான் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறேன், அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன், மற்றும் அவர்களுக்கு நினைவூட்டுகிறேன். உங்களை இரட்சிப்பதற்கே தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் நான் இதைச் செய்யவில்லை. உண்மையிலேயே, நீங்கள் என் சித்தத்தைப் புரிந்து கொள்ளவில்லையா? நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அதினால் ஏவப்பட வேண்டும். இப்போதுதான் அநேக ஜனங்கள் புரிந்துகொள்கிறார்கள். இது ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருப்பதற்கான ஆசீர்வாதம் அல்லவா? ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருப்பது என்பது மிகவும் ஆசீர்வாதமான விஷயம் அல்லவா? இறுதியில், நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசித்தம்பண்ணும்படி போகிற போது, நீங்கள் இதைச் சொல்வீர்கள்: “நாங்கள் பொதுவான பிரதிபலிப்புப் படலங்கள்.” அவர்கள் உங்களிடம் கேட்பார்கள், “நீங்கள் ஒரு பொதுவான பிரதிபலிப்புப் படலங்கள் என்பதன் அர்த்தம் என்ன?” நீங்கள் கூறுவீர்கள்: “நாங்கள் தேவனுடைய கிரியைக்கும் அவருடைய மகத்தான வல்லமைக்கும் பிரதிபலிப்புப் படலங்களாக இருக்கிறோம். தேவனுடைய நீதியுள்ள மனநிலை முழுதும் நம் கலகத்தனத்தால் வெளிச்சத்திற்கு வருகிறது; நாங்கள் கடைசி நாட்களில் தேவனுடைய கிரியைக்கான ஊழிய வஸ்துகள், நாங்கள் அவருடைய கிரியையின் பின் இணைப்புகள் மற்றும் அதற்கான கருவிகள்.” அவர்கள் அதைக் கேட்கும்போது, சதி செய்வார்கள். அடுத்து, நீ இவ்வாறு கூறுவாய்: “தேவன் முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் முடித்ததற்கும், எல்லா மனுஷர்கள் மீதும் அவர் ஜெயங்கொண்டதற்கும் நாங்கள் உதாரணங்கள் மற்றும் மாதிரிகளாக இருக்கிறோம். நாங்கள் பரிசுத்தமானவர்களாக இருந்தாலும், அசுத்தமானவர்களாக இருந்தாலும், மொத்தத்தில், உங்களை விட நாங்கள் இன்னும் பாக்கியவான்கள், ஏனென்றால் நாங்கள் தேவனைக் கண்டிருக்கிறோம், அவர் நம்மை ஜெயங்கொள்ளச் செய்கிற வாய்ப்பின் மூலம், தேவனின் மகத்தான வல்லமை காட்டப்படுகிறது; நாம் அசுத்தமானவர்களாகவும் சீர்கெட்டவர்களாகவும் இருப்பதால் மட்டுமே அவருடைய நீதியான மனநிலை செயல்படுத்தப்பட்டுள்ளது. கடைசி நாட்களில் தேவனுடைய கிரியைக்கு நீங்கள் சாட்சியளிக்க முடியுமா? நீங்கள் தகுதி அடையவில்லை! இது தேவன் நம்மை மேன்மைப்படுத்துவதைத் தவிர வேறில்லை! நாம் கர்வமுள்ளவர்களாக இல்லாவிட்டாலும், நாம் பெருமிதத்துடன் தேவனைத் துதிக்கலாம், ஏனென்றால் இவ்வளவு பெரிய வாக்குத்தத்தத்தை யாராலும் சுதந்தரிக்க முடியாது, மேலும் இத்தகைய பெரிய ஆசீர்வாதத்தை யாரும் அனுபவிக்க முடியாது. தேவனின் நிர்வாகத்தின் போது, மிகவும் அசுத்தமானவர்களாகிய நாங்கள் பிரதிபலிப்புப் படலங்களாகச் செயல்பட முடியும் என்பதால் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக உணர்கிறோம்.” அவர்கள், “உதாரணங்கள் மற்றும் மாதிரிகள் என்றால் என்ன?” என்று கேட்கும்போது நீங்கள், “நாங்கள் மனிதகுலத்தின் மிகவும் கலகக்காரர், அசுத்தமானவர்கள்; நாங்கள் சாத்தானால் மிகவும் ஆழமாக சீர்கெட்டுப்போய் இருக்கிறோம், நாங்கள் மாம்சத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் மற்றும் கீழானவர்கள். சாத்தானால் பயன்படுத்தப்பட்டவர்களுக்கு நாங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள். இன்று, ஜெயங்கொள்ளப்படும் மனுஷர்கள் மத்தியில் முதன்மையானவர்களாக நாங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம், மேலும் தேவனின் நீதியுள்ள மனநிலையைக் கண்டிருக்கிறோம், அவருடைய வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்திருக்கிறோம்; நாங்கள் அதிகமான ஜனங்களை ஜெயங்கொள்ளப்படுவதற்கு பயன்படுத்தப்படுகிறோம், ஆகவே நாங்கள் மனிதகுலத்தில் ஜெயங்கொள்ளப்பட்டவர்களுக்கு உதாரணங்கள் மற்றும் மாதிரிகளாக இருக்கிறோம்” என்று கூறுகிறீர்கள். இந்த வார்த்தைகளை விட சிறந்த சாட்சிகள் எதுவும் இல்லை, மேலும் இதுவே உங்களது சிறந்த அனுபவம்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளுகிற கிரியையின் இரண்டாவது படியின் பலன்கள் எவ்வாறு அடையப்படுகின்றன” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 92

ஜனங்களாகிய உங்கள் மீது செய்த ஜெயங்கொள்ளும் கிரியை மிக ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது: ஒருபுறம், இந்த கிரியையின் நோக்கம் ஒரு குழுவினரைப் பரிபூரணமாக்குவதே ஆகும், அதாவது, அவர்கள் ஜெயங்கண்ட ஒரு குழுவாக மாறுவார்கள் என்பதற்காகப் பரிபூரணமாக்குவது—முதன்முதலில் பரிபூரணமாக்கப்பட்ட குழுவாக இவர்கள் இருப்பார்கள், அதாவது முதன்முதலில் கனிந்த பழங்களாக இருப்பார்கள். மறுபுறம், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரை தேவனின் அன்பை அனுபவிக்க அனுமதிப்பது, தேவனின் முழுமையான மற்றும் மிகப் பெரிய இரட்சிப்பைப் பெற வைப்பது, இரக்கம் மற்றும் அன்பான தயவை மட்டுமல்ல, மிக முக்கியமாக சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க மனுஷனை அனுமதிப்பது ஆகியவை ஆகும். உலகத்தைச் சிருஷ்டித்ததிலிருந்து இப்போது வரை, தேவன் தம்முடைய கிரியையில் செய்ததெல்லாம் மனுஷனிடம் எந்த வெறுப்பும் காட்டாமல் அன்பு செலுத்தியது மட்டும் தான். நீ கண்ட சிட்சையும் நியாயத்தீர்ப்பும் கூட அன்புதான், உண்மையான மற்றும் மெய்யான அன்பு, மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையில் ஜனங்களை வழிநடத்தும் ஓர் அன்பு. இன்னொரு சார்பில் பார்த்தால், இது சாத்தான் முன்பாக சாட்சிக் கொடுப்பதாக இருக்கிறது. மற்றொன்றில், எதிர்கால சுவிசேஷக் கிரியைகளைப் பரப்புவதற்கு ஓர் அடித்தளத்தை அமைப்பதாக இருக்கிறது. அவர் செய்த எல்லா கிரியைகளும் மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையில் ஜனங்களை வழிநடத்தும் நோக்கத்திற்காகவே இருக்கின்றன, இதனால் அவர்கள் இயல்பான மனுஷராக ஜீவிக்க முடியும், ஏனென்றால் ஜனங்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்று தெரியவில்லை, மேலும் இந்த வழிகாட்டுதல் இல்லாமல் நீ வெற்று ஜீவிதம்தான் ஜீவித்திருப்பாய்; உன் ஜீவிதம் மதிப்பு அல்லது அர்த்தமற்றதாக இருக்கும், மேலும் உன்னால் ஒரு சாதாரண மனுஷனாக இருக்கவே இயலாது. இதுதான் மனுஷனை ஜெயங்கொள்வதன் ஆழமான முக்கியத்துவம் ஆகும். நீங்கள் அனைவரும் மோவாபின் சந்ததியினர்; ஜெயங்கொள்ளும் கிரியை உங்களில் மேற்கொள்ளப்படும்போது, அதுவே பெரிய இரட்சிப்பாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் பாவம் மிக்க மற்றும் ஒழுக்கக்கேடான தேசத்தில் ஜீவிக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் ஒழுக்கக்கேடானவர்கள் மற்றும் பாவம் மிக்கவர்கள். இன்று உங்களால் தேவனைப் பார்க்க முடிவது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, நீங்கள் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் பெற்றிருக்கிறீர்கள், நீங்கள் உண்மையிலேயே ஆழ்ந்த இரட்சிப்பைப் பெற்றிருக்கிறீர்கள், அதாவது தேவனின் மிகப்பெரிய அன்பைப் பெற்றிருக்கிறீர்கள். தேவன் செய்யும் எல்லாவற்றிலும், அவர் உங்களை உண்மையாக நேசிக்கிறார். அவருக்கு தவறான எண்ணம் இல்லை. உங்கள் பாவங்களால்தான் அவர் உங்களை நியாயந்தீர்க்கிறார், எனவே நீங்கள் உங்களை ஆராய்ந்து இந்த மகத்தான இரட்சிப்பைப் பெறுகிறீர்கள். இவை அனைத்தும் மனுஷனை பரிபூரணமாக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுகின்றன. ஆதி முதல் அந்தம் வரை, மனுஷனை இரட்சிக்க தேவன் தம்மால் முடிந்ததைச் செய்து வருகிறார், மேலும் அவர் தம்முடைய கைகளால் சிருஷ்டித்த மனுஷரை முற்றிலுமாக அழிக்க விரும்பவில்லை. இன்று, அவர் உங்களிடையே கிரியை செய்ய வந்திருக்கிறார், இந்த இரட்சிப்பு எல்லாவற்றையும் விட மேலானதல்லவா? அவர் உங்களை வெறுத்திருந்தால், உங்களைத் தனிப்பட்ட முறையில் வழிநடத்த அவர் இன்னும் இவ்வளவு பெரிய கிரியையைச் செய்வாரா? அவர் ஏன் அவ்வாறு கஷ்டப்பட வேண்டும்? தேவன் உங்களை வெறுக்கவில்லை அல்லது உங்களைப் பற்றிய எந்தவிதமான தவறான நோக்கங்களும் அவருக்கு இல்லை. தேவனின் அன்பு உண்மையான அன்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஜனங்கள் கீழ்ப்படியாததால்தான் அவர் நியாயத்தீர்ப்பின் மூலம் அவர்களை இரட்சிக்க வேண்டியதாக இருக்கிறது; இதற்காக இல்லையென்றால், அவர்களை இரட்சிப்பது சாத்தியமற்றதாகிவிடும். ஏனென்றால், உங்களுக்கு எப்படி ஜீவிக்க வேண்டும் என்று தெரியவில்லை, எப்படி ஜீவிக்க வேண்டும் என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை, மேலும் நீங்கள் இந்த ஒழுக்கக்கேடான மற்றும் பாவம் மிக்க தேசத்தில் ஜீவிக்கிறீர்கள், மேலும் நீங்களே ஒழுக்கக்கேடான மற்றும் இழிவான பிசாசுகளாக இருப்பதால், உங்களை இன்னும் மோசமாகிப்போக அவர் அனுமதிக்க மாட்டார், நீங்கள் இப்போது சாத்தானின் விருப்பப்படி ஜீவித்திருக்கும் இந்த இழிவான தேசத்தில் நீங்கள் ஜீவிப்பதைப் பார்க்க அவர் அனுமதிக்க மாட்டார், மேலும் நீங்கள் பாதாளத்தினுள் வீழ்த்தப்படுவதையும் அவர் அனுமதிக்க மாட்டார். அவர் இந்த நபர்களை ஆதாயப்படுத்த விரும்புகிறார் மற்றும் உங்களை முழுமையாக இரட்சிக்கவும் விரும்புகிறார். உங்களை ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்வதற்கான முக்கிய நோக்கம் இதுதான்—இது இரட்சிப்புக்காக மட்டுமே. உன்னிடம் செய்யப்படும் அனைத்தும் அன்பும் இரட்சிப்பும்தான் என்பதை உன்னால் பார்க்க முடியாவிட்டால், அது வெறுமனே ஒரு முறை மட்டுமே, மனுஷனைத் துன்புறுத்துவதற்கான ஒரு வழி, நம்பத்தகாத ஒன்று என்று நீ நினைத்தால், நீ வேதனையையும் கஷ்டத்தையும் அனுபவிக்க மீண்டும் உனது உலகத்திற்கே திரும்பிச் செல்லக்கூடும்! இந்த பிரவாகத்தில் நிலைத்திருக்க நீ தயாராக இருந்தால், இந்த நியாயத்தீர்ப்பையும் இந்த மகத்தான இரட்சிப்பையும் அனுபவிக்க நீ தயாராக இருந்தால், மனுஷ உலகில் எங்கும் காண முடியாத இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அனுபவிக்க நீ தயாராக இருந்தால், இந்த அன்பை அனுபவிக்க நீ தயாராக இருந்தால், நீ நல்லவனாக இரு: ஜெயங்கொள்ளும் கிரியையை ஏற்க இந்த பிரவாகத்திலேயே இரு, இதன்மூலம் நீ பரிபூரணமாக்கப்படுவாய். இன்று, தேவனின் நியாயத்தீர்ப்பின் காரணமாக நீ சிறிய வலியையும் சுத்திகரிப்பையும் சந்திக்க நேரிடும், ஆனால் இந்த வலியை அனுபவிப்பதற்கு மதிப்பும் அர்த்தமும் இருக்கிறது. தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பினால் ஜனங்கள் சுத்திகரிக்கப்பட்டு இரக்கமின்றி அம்பலப்படுத்தப்பட்டாலும்—அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பதும், அவர்களின் மாம்சத்தைத் தண்டிப்பதுமே இதன் நோக்கமாக இருக்கிறது—இந்தக் கிரியைகளில் எதுவுமே அவர்களின் மாம்சம் அழிவதற்குக் கண்டனம் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. வார்த்தையின் கடுமையான வெளிப்பாடுகள் அனைத்தும் உன்னை சரியான பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்திற்காகவே இருக்கின்றன. நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையை அதிகம் அனுபவித்திருக்கிறீர்கள், தெளிவாக, இது உங்களை ஒரு தீய பாதையில் அழைத்துச் செல்லவில்லை! உன்னைச் சாதாரண மனுஷத்தன்மையோடு ஜீவிக்க வைப்பதற்காகவே இவை அனைத்தும் உள்ளன, இவை அனைத்தும் உனது சாதாரண மனுஷத்தன்மையால் அடையக்கூடியவை. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு அடியும் உனது தேவைகளின் அடிப்படையில், உனது பலவீனங்களின்படி, மற்றும் உனது உண்மையான சரீரவளர்ச்சியின்படி தான் இருக்கிறது, தாங்க முடியாத சுமை உன் மீது வைக்கப்படுவதில்லை. இது இன்று உனக்கு தெளிவாகத் தெரியவில்லை, நான் உன்னிடம் கடுமையாக இருப்பதைப் போல நீ உணர்கிறாய், மேலும் ஒவ்வொரு நாளும் நான் உன்னை சிட்சிப்பதற்கும், நியாயத்தீர்ப்பளிப்பதற்கும், நிந்திப்பதற்கும் காரணம் நான் உன்னை வெறுப்பதுதான் என்று நீ எப்போதும் விசுவாசிக்கிறாய். ஆனால் நீ சிட்சை, நியாயத்தீர்ப்பினால் துன்புறுகிறாய் என்றாலும், இது உண்மையில் உனக்கான அன்பு மட்டும் தான், அதுவே மிகப்பெரிய பாதுகாப்பு. இந்த கிரியையின் ஆழமான அர்த்தத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், நீ தொடர்ந்து அனுபவிப்பது சாத்தியமில்லாமல் போய்விடும். இந்த இரட்சிப்பு உனக்கு ஆறுதலளிக்கும். நீ உன் சுயநினைவுக்கு வர மறுக்காதே. இவ்வளவு தூரம் வந்திருப்பதால், ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கியத்துவம் உனக்குத் தெளிவாக இருக்க வேண்டும், மேலும் இதைப் பற்றி நீ எவ்வழியிலும் கருத்துக்களைக் கொண்டிருக்க கூடாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 93

கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக நிற்கக் கூடியவர்களே, தேவனோடு கூட இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பவர்கள் ஆவார்கள்; இவ்வாறிருக்க, இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் யாவரும் சாத்தானின் கட்டை உடைத்து விடுதலை ஆனவர்கள் மேலும் அவரது இறுதிக் கிரியையான சுத்திகரிப்பிற்கு உட்பட்டு தேவனால் ஆதாயம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். தேவனால் இறுதியாக ஆதாயம் செய்யப்படக் கூடிய இந்த மனிதர்கள் இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் நோக்கம் என்னவென்றால் முக்கியமாக இறுதி இளைப்பாறுதலுக்காக மனுக்குலத்தை சுத்திகரிப்பதற்காகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும். தேவனின் கிரியையான சுத்திகரிப்பு மட்டுமே மனிதர்களை அவர்களின் அநீதியை நீக்கி சுத்திகரிக்கும், மேலும் சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்ற அவரது கிரியை மட்டுமே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமைக் கூறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதன் மூலம் இரட்சிக்கப்படக் கூடாதவர்களில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களையும், மீந்திருக்காதவர்களில் இருந்து மீந்திருப்பவர்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தக் கிரியை முடிவடையும் போது, மீந்திருக்க அனுமதிக்கப்படும் ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் மேலும் பூமியில் ஒரு மிக அற்புதமான இரண்டாம் மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ மனுக்குலத்தின் ஓர் உயரிய நிலைக்குள் பிரவேசிப்பார்கள்; வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவர்கள் தங்கள் மானுட இளைப்பாறுதல் நாளைத் தொடங்குவார்கள், மேலும் தேவனோடு ஒன்றாக வாழ்வார்கள். மீந்திருக்க அனுமதிக்கப்படாதவர்களின் உண்மை நிலை சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும், அதன் பின்னர் அவர்கள் சாத்தானைப் போல அழிக்கப்படுவார்கள், பூமியில் மேலும் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த வகையான ஜனங்களை எதிர்கால மனுக்குலம் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளாது; இறுதி இளைப்பாறுதல் நிலத்தில் இத்தகைய ஜனங்கள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள், மேலும் அவர்கள் தேவனும் மனுக்குலமும் பங்கேற்கும் இளைப்பாறுதல் நாளில் இணையத் தகுதி அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தண்டனைக்கு இலக்கான பொல்லாத, அநீதியான ஜனங்கள். அவர்கள் ஒரு தடவை மீட்டெடுக்கப்பட்டார்கள், மற்றும் அவர்கள் நியாயம் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்; அவர்களும் ஒருகாலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தவர்களே. இருப்பினும், கடைசி நாள் வரும்போது, அவர்கள் இன்னும் தங்கள் பொல்லாப்பாலும் தங்கள் கீழ்ப்படியாமையின் விளைவாலும் இரட்சிக்கப்பட இயலாமையாலும் புறம்பாக்கப்படலாம்; எதிர்கால உலகில் இருப்பதற்கு அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள், மேலும் எதிர்கால மனுக்குலத்தின் மத்தியில் ஒருபோதும் வாழ மாட்டார்கள். பரிசுத்த மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, மரித்தவர்களின் ஆவியாக இருந்தாலும் அல்லது மாம்சத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களாக இருந்தாலும், அனைத்து அக்கிரமக்காரரும் மற்றும் இரட்சிக்கப்படாத அனைவரும் அழிக்கப்படுவார்கள். இந்த அக்கிரமஞ்செய்யும் ஆவிகள் மற்றும் மனிதர்களையும், அல்லது நீதிமான்களின் ஆவிகள் மற்றும் நன்மை செய்பவர்களையும் பொறுத்தவரையில் அவர்கள் எந்த யுகத்தில் இருந்தாலும், தீமை செய்யும் அனைவரும் இறுதியாக அழிக்கப்படுவார்கள் மேலும் நீதிமான்கள் அனைவரும் பிழைப்பார்கள். ஒரு நபர் அல்லது ஆவி இரட்சிப்பைப் பெறுமா என்பது கடைசிக் காலத்தின் கிரியையின் அடிப்படையில் முழுவதுமாகத் தீர்மானிக்கப்பட மாட்டாது; மாறாக, அவர்கள் தேவனை எதிர்த்தார்களா அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்களா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். முந்தைய யுகத்தில் தீமை செய்து இரட்சிப்பைப் பெற முடியாதவர்கள், சந்தேகமின்றி, தண்டனைக்கு இலக்காவார்கள், மற்றும் தற்போதைய யுகத்தில் தீமை செய்து இரட்சிக்கப்பட முடியாதவர்களும் தண்டனைக்கு இலக்காகவே இருப்பார்கள். மனிதர்கள் அவர்கள் வாழும் யுகத்தைப் பொருத்தல்லாமல், நன்மை தீமையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட உடன், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்படுவதில்லை அல்லது அவர்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படுவதில்லை; மாறாக, தேவன் கடைசி நாட்களில் தமது ஜெயங்கொள்ளுதல் கிரியையை முடித்த பின்னரே தீயோரைத் தண்டிக்கும் மற்றும் நல்லோருக்குப் பிரதிபலன் அளிக்கும் தமது கிரியையைச் செய்வார். உண்மையில், அவர் மனிதர்களை இரட்சிக்கும் தமது கிரியையை செய்யத் தொடங்கியது முதலே அவர்களை நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என்று பிரிக்கத் தொடங்கிவிட்டார். அவரது கிரியை நிறைவடைந்த பின்னரே அவர் நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்துத் துன்மார்க்கரைத் தண்டிப்பார்; தமது கிரியை முடிவடைந்த உடன் அவர் அவர்களை வகைப்படுத்தி பின்னர் உடனடியாக நல்லவர்களுக்கு பிரதிபலன்களையும் துன்மார்க்கருக்கு தண்டனையும் அளிப்பார் என்பதல்ல. மாறாக, அவரது கிரியை முழுமையாக முடிந்த பிறகு மட்டுமே இந்தப் பணி செய்யப்படும். நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்து துன்மார்க்கருக்குத் தண்டனை அளிக்கும் தேவனின் இறுதி கிரியையின் முழு நோக்கமானது எல்லா மனிதர்களையும் முற்றிலுமாக சுத்திகரிப்பதன் மூலம் அவரால் ஒரு தூய்மையான பரிசுத்த மனுக்குலத்தை நித்திய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுவதற்குத்தான். கிரியையின் இந்தக் கட்டமே மிக முக்கியமானது; அவரது முழுமையான நிர்வாகக் கிரியையின் கடைசிக் கட்டம் இது. தேவன் துன்மார்க்கரை அழிக்காமல், ஆனால் அதற்குப் பதிலாக அவர்களை மீந்திருக்க அனுமதித்தால், பின் ஒவ்வொரு மனிதரும் இன்னும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாமல் போவார்கள், மேலும் தேவனால் முழு மனுக்குலத்தையும் ஒரு சிறந்த ராஜ்யத்துக்குள் கொண்டுவர முடியாமல் போகும். இத்தகைய கிரியை நிறைவடையாது. அவரது கிரியை முடிவடைந்த உடன், முழு மனுக்குலமும் முற்றிலும் பரிசுத்தமாக இருக்கும்; இந்த வழியில் மட்டுமே தேவனால் சமாதானத்துடன் இளைப்பாறுதலில் வாழ முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 94

பிரபஞ்சம் முழுவதும் மற்றும் பூமியின் எல்லைகள் வரை என் காலடிகள் அடியெடுத்து வைக்கின்றன, ஒவ்வொரு நபரையும் என் கண்கள் தொடர்ந்து ஆராய்கின்றன, மேலும், பிரபஞ்சத்தை நான் முழுமையாகக் கூர்ந்து நோக்குகிறேன். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் என் வார்த்தைகள் உண்மையில் கிரியை செய்கின்றன. எனக்காக ஊழியம் செய்யத் துணியாத யாராகிலும், என் மீது விசுவாசமற்றவராய் இருக்கத் துணியும் யாராகிலும், என் நாமத்தின் மீது நியாயத்தீர்ப்பு வழங்கத் துணியும் யாராகிலும், மற்றும் என் குமாரர்களை நிந்திக்கவும் பழி கூறவும் துணியும் யாராகிலும்—இத்தகைய விஷயங்களை உண்மையிலேயே செய்யக்கூடியவர்கள் கடுமையான நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். என் நியாயத்தீர்ப்பானது முழுமையாக நடக்கும், அதாவது, இப்போது நியாயத்தீர்ப்பின் சகாப்தமாகும், மேலும் கவனமாகக் கூர்ந்து நோக்குவதன் மூலம், பிரபஞ்ச உலகம் முழுவதும் என் நியாயத்தீர்ப்பு விரிவடைவதை நீங்கள் காண்பீர்கள். நிச்சயமாக, என் வீடு விதிவிலக்காகாது; யாருடைய எண்ணங்கள், வார்த்தைகள், அல்லது செயல்கள் எனது சித்தத்திற்கு இணங்கவில்லையோ அவர்கள் மீது என் நியாயத்தீர்ப்பு வரும். இதைப் புரிந்து கொள்ளுங்கள்! என் நியாயத்தீர்ப்பானது ஒட்டுமொத்தப் பிரபஞ்ச உலகை நோக்கியது தானே தவிர, ஒரு ஜனக்குழு அல்லது பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. இதை நீங்கள் உணர்ந்தீர்களா? மனதின் ஆழத்தில், என்னைப் பற்றிய உன் எண்ணங்களில் நீ முரண்படுகிறாய் என்றால், உடனடியாக உட்புறத்தில் நீ நியாயந்தீர்க்கப்படுவாய்.

என் நியாயத்தீர்ப்பானது அனைத்து வடிவங்களிலும் உருவங்களிலும் வருகிறது. இதைத் தெரிந்து கொள்ளவும்! பிரபஞ்ச உலகின் தனித்துவமான மற்றும் ஞானமுள்ள தேவன் நானே! எதுவும் என் வல்லமைக்கு அப்பாற்பட்டவையல்ல. என் நியாயத்தீர்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுவிட்டன: உங்களின் எண்ணங்களில் என்னைக் குறித்து நீங்கள் முரண்பட்டால், ஒரு எச்சரிக்கையாக, நான் உன்னைப் பிரகாசிப்பிப்பேன். நீ கேட்கவில்லை என்றால், நான் உன்னை உடனடியாகக் கைவிடுவேன் (என் நாமத்தில் சந்தேகம் கொள்வதைப் பற்றி இதில் நான் குறிப்பிடவில்லை, ஆனால் சரீர இன்பங்களுடன் தொடர்புடைய வெளிப்புற நடத்தைகளைக் குறிப்பிடுகிறேன்). என்னைப் பற்றிய உன் எண்ணங்கள் இணக்கமற்றதாக இருந்தால், நீ என்னிடம் புகார் செய்தால், சாத்தானின் யோசனைகளை நீ மீண்டும் மீண்டும் ஏற்றுக் கொண்டால், மற்றும் வாழ்க்கையின் உணர்வுகளை நீ பின்பற்றவில்லை என்றால், பின்னர் உன் ஆவி அந்தகாரத்தில் இருக்கும் மற்றும் உன் மாம்சம் வலியை அனுபவிக்கும். நீ எனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மட்டும் உன்னால் உன் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடியாது, மற்றும் உன் வாழ்க்கையானது வெளிப்படையாகப் பின்தங்கியிருக்கும். பேச்சில் ஒழுக்கம் கெட்டவர்களாக இருப்பவர்களுக்கு, உங்கள் வாய்கள் மற்றும் நாவுகளைத் தண்டித்துத் திருத்துவேன், மற்றும் உங்களின் நாவுகள் கையாளப்படுவதற்கு உட்படுத்துவேன். செயல்களில் கட்டுப்பாடின்றி ஒழுக்கம் கெட்டவர்களே, உங்களின் ஆவிகளில் நான் உங்களை எச்சரிக்கிறேன், மேலும், கேட்காதவர்களை நான் கடுமையாகச் சிட்சிப்பேன். என்னை வெளிப்படையாக நியாயந்தீர்த்து எதிர்ப்பவர்கள், வார்த்தையிலோ செயலிலோ கீழ்ப்படியாமையை வெளிப்படுத்துபவர்கள், நான் முற்றிலுமாக அவர்களைப் புறம்பாக்கிப்போட்டு, கைவிடுவேன், அதன் மூலம் அவர்கள் அழிந்து, உயர்வான ஆசீர்வாதங்களை இழக்கச் செய்வேன்; தெரிந்துகொள்ளப்பட்ட பின்னர் புறம்பாக்கப்படுபவர்கள் இவர்கள் தான். அறியாமையில் இருப்பவர்கள், பார்வைகளில் தெளிவில்லாமல் இருப்பவர்கள், நான் இன்னும் அவர்களைப் பிரகாசிப்பித்து அவர்களை இரட்சிப்பேன்; இருப்பினும், சத்தியத்தைப் புரிந்து கொண்ட பிறகும் அதைப் கடைப்பிடிக்காதவர்கள், அவர்கள் அறியாமையில் இருப்பவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மேற்கூறிய விதிகளின்படி நிர்வகிக்கப்படுவார்கள். ஆரம்பத்திலிருந்தே தவறான நோக்கங்களைக் கொண்ட அந்த ஜனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் என்றென்றைக்கும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதபடி நான் செய்வேன், மேலும், இறுதியில், அவர்கள் படிப்படியாக ஒவ்வொருவராக புறம்பாக்கப்படுவர். என் ஏற்பாட்டின்படி அவர்கள் இப்போது இருக்கிறார்கள் என்றாலும், ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள் (ஏனென்றால், விஷயங்களை நான் அவசரகதியில் செய்வதில்லை, ஆனால் ஒழுங்கான முறையிலேயே நான் செய்கிறேன்).

என் நியாயத்தீர்ப்பு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டது; இது தங்களுக்குரிய இடங்களை எடுக்க வேண்டிய பல்வேறு மக்கள் அனைவரையும் குறிப்பிடுகிறது. ஜனங்கள் எந்த விதிகளை மீறியுள்ளார்கள் என்பதன் அடிப்படையில் நான் அவர்களை நிர்வகித்து நியாயந்தீர்ப்பேன். இந்தப் பெயரில் இல்லாதவர்கள் மற்றும் கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு, ஒரே ஒரு விதி தான் பொருந்தும்: என்னை எதிர்ப்பவர்கள் எவரானாலும், அவர்களின் ஆவிகள், ஆத்துமாக்கள், மற்றும் சரீரங்களை நான் உடனடியாக எடுத்து, அவர்களைப் பாதாளத்திற்குள் தள்ளுவேன்; யாரெல்லாம் என்னை எதிர்க்கவில்லையோ, இரண்டாம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன் நீங்கள் முதிர்ச்சியடைவதற்காக நான் காத்திருப்பேன். என் வார்த்தைகள் அனைத்தையும் முழுமையானத் தெளிவுடன் விளக்குகின்றன, மேலும், எதுவும் மறைக்கப்படவில்லை. உங்களால் எப்போதும் அவற்றை மனதில் வைத்திருக்க முடியும் என்று மட்டும் நான் நம்புகிறேன்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 67” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 95

சகலத்தையும் ஜெயங்கொள்வதன் மூலம், அவற்றின் வகைகளின்படி வகைப்படுத்தப்படுவதே கடைசிக் காலம் ஆகும். ஜெயங்கொள்வதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொருவரின் பாவங்களையும் நியாயந்தீர்ப்பதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும். இல்லையெனில், ஜனங்களை எவ்வாறு வகைப்படுத்த முடியும்? உங்களிடையே செய்யப்படும் இந்த வகைப்படுத்துதல் கிரியை, முழு பிரபஞ்சத்திலும் நடைபெறும் இதுபோன்ற கிரியையின் தொடக்கமாகும். இதற்குப் பிறகு, சகல தேசங்களை சேர்ந்த சகல ஜனங்களும் ஜெயங்கொள்ளும் கிரியைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், சிருஷ்டிக்கப்படும் ஒவ்வொருவரும், நியாயந்தீர்க்கப்பட நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்டு, அவரவர் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவார்கள். எந்தவொரு நபரும் எந்தவொரு பொருளும் இந்த ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிப்பதில் இருந்து தப்ப முடியாது, எந்தவொரு நபரும் அல்லது பொருளும் வகைப்படுத்தப்படாமல் விடுவதில்லை; ஒவ்வொரு மனுஷனும் வகைப்படுத்தப்படுவான், ஏனென்றால் சகலத்தின் முடிவும் நெருங்கி வருகிறது, வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அதன் முடிவுக்கு வந்துவிட்டன. மனுஷ வாழ்வின் கடைசிக் காலத்தில் இருந்து மனுஷன் எவ்வாறு தப்பிக்க முடியும்? மேலும், உங்கள் கீழ்ப்படியாமை எவ்வளவு காலம் தொடர முடியும்? உங்கள் கடைசிக் காலம் வந்துவிட்டதை நீங்கள் உணரவில்லையா? தேவனை வணங்கி, அவர் தோன்றுவதற்கு ஏங்குகிறவர்கள் தேவனின் நீதி தோன்றும் நாளை எப்படி காணாமல் இருக்க முடியும்? நன்மைக்கான இறுதி வெகுமதியை அவர்கள் எவ்வாறு பெற முடியாதுபோகும்? நீ நன்மை செய்பவனா, அல்லது தீமை செய்பவனா? நீ நீதியுள்ள நியாயத்தீர்ப்பை ஏற்று அதன்பின்னர் கீழ்ப்படிகிறவனா, அல்லது நீதியுள்ள நியாயத்தீர்ப்பை ஏற்று அதன்பின்னர் சபிக்கப்படுபவனா? நீ வெளிச்சத்தில் நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக ஜீவிக்கிறவனா, அல்லது இருளுக்கு மத்தியில் பாதாளத்தில் வசிக்கிறவனா? உன் முடிவு வெகுமதிகளில் ஒன்றா, அல்லது தண்டனைகளில் ஒன்றா என்பதை மிகத் தெளிவாக அறிந்தவன் நீ மட்டுமே அல்லவா? தேவன் நீதியுள்ளவர் என்பதை மிகத் தெளிவாக அறிந்தவனும், மிக ஆழமாகப் புரிந்துகொள்பவனும் நீ மட்டுமே அல்லவா? ஆகவே உன் நடத்தையும் இருதயமும் எப்படிப்பட்டவை? இன்று நான் உன்னை ஜெயங்கொள்ளும்போது, உனது நடத்தை நல்லதா அல்லது தீயதா என்பதை நான் சொல்ல வேண்டுமா? நீ எனக்காக எவ்வளவு விட்டுக்கொடுத்திருக்கிறாய்? நீ என்னை எவ்வளவு ஆழமாக வணங்குகிறாய்? நீ என்னிடம் எப்படி நடந்துகொள்கிறாய் என்பது உனக்கு தெளிவாகத் தெரியாதா? நீ இறுதியில் சந்திக்கும் முடிவை மற்றவரை விட நீ நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்! மெய்யாகவே, நான் உனக்குச் சொல்கிறேன்: நான் மனுஷகுலத்தை மட்டுமே சிருஷ்டித்தேன், நான் உன்னை சிருஷ்டித்தேன், ஆனால் நான் உங்களை சாத்தானிடம் ஒப்படைக்கவில்லை; நான் வேண்டுமென்றே உங்களை என்னை எதிர்த்துக் கலகம் செய்யவோ அல்லது என்னை எதிர்க்கவோ செய்யவில்லை, அதன்மூலம் என்னால் நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. இந்த பேரழிவுகள் மற்றும் துன்பங்கள் அனைத்தும் உங்கள் இருதயங்கள் மிகவும் கடினமாகவும், உங்கள் நடத்தை மிகவும் இழிவானதாகவும் இருப்பதால் தான் அல்லவா? ஆகவே, நீங்கள் சந்திக்கும் முடிவு உங்களால் தீர்மானிக்கப்பட்டது தான் இல்லையா? உங்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை மற்றவர்களை விட உங்களுக்கு, உங்கள் இருதயத்திற்கு தெரியுமல்லவா? நான் ஜனங்களை ஜெயங்கொள்வதற்கான காரணம், அவர்களை வெளிப்படுத்துவதும், உனக்கு இரட்சிப்பைக் கொடுப்பதும்தான். இது உன்னை தீமை செய்யச் செய்வதல்ல, அல்லது வேண்டுமென்றே உன்னை அழிவின் நரகத்தில் நடக்க வைப்பதும் அல்ல. நேரம் வரும்போது, உன் பெரும் துன்பங்கள், உன் அழுகை மற்றும் பற்களைக் கடிப்பது—இவை அனைத்தும் உன் பாவங்களால் ஏற்பட்டதாக இருக்காதா? ஆகவே, உனது சொந்த நன்மை அல்லது உனது சொந்த தீமைதான் உனது சிறந்த நியாயத்தீர்ப்பு அல்லவா? உன் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த சான்று அல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 96

இடிமுழக்கம் போன்றதொரு சத்தம் உண்டாகி முழு பிரபஞ்சத்தையும் உலுக்குகிறது. ஜனங்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாதபடிக்கு இது காதுகளைச் செவிடாக்குமளவிற்கு உரத்த சத்தத்தில் ஒலிக்கிறது. சிலர் கொல்லப்படுகிறார்கள், சிலர் அழிக்கப்படுகிறார்கள், மேலும் சிலர் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். இது உண்மையிலேயே ஓர் அதிசயமான காட்சியாக இருக்கிறது, இது போன்றதை யாரும் இதுவரை பார்த்ததில்லை. கவனமாகக் கேளுங்கள்: இடிமுழக்கங்கள் அழுகையின் சத்தத்துடன் வருகின்றன, இந்தச் சத்தமானது பாதாளத்திலிருந்து வருகிறது; நரகத்திலிருந்து வருகிறது. இது என்னால் நியாயந்தீர்க்கப்பட்ட கலகக் குமாரர்களின் கசப்பான சத்தமாகும். நான் சொல்வதைக் கேட்காதவர்களும், எனது வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவர்களும் கடுமையாக நியாயந்தீர்க்கப்பட்டு, எனது கோபாக்கினையின் சாபத்தைப் பெற்றிருக்கிறார்கள். நியாயத்தீர்ப்பும் கோபாக்கினையும்தான் எனது குரலாக இருக்கிறது; நான் யாரையும் மென்மையாக நடத்துவதில்லை, யாருக்கும் இரக்கம் காட்டுவதில்லை, ஏனென்றால் நான் நீதியுள்ள தேவன், நான் கோபாக்கினையைக் கொண்டிருக்கிறேன்; நான் சுட்டெரித்தலையும், சுத்திகரிப்பையும் மற்றும் அழிவையும் கொண்டிருக்கிறேன். என்னில் எதுவும் மறைக்கப்பட்டிருக்கவில்லை அல்லது எதுவும் உணர்ச்சியைச் சார்ந்ததாகவும் இல்லை, மாறாக, எல்லாமே வெளிப்படையாக, நீதியுள்ளவையாக மற்றும் பாரபட்சமற்றவையாக இருக்கின்றன. ஏனென்றால், எனது முதற்பேறான குமாரர்கள் ஏற்கெனவே என்னுடன் சிங்காசனத்தில் அமர்ந்து, எல்லா தேசங்களையும் எல்லா ஜனங்களையும் ஆளுகிறார்கள், அநியாயமும் அநீதியுமாக இருக்கும் அந்த விஷயங்களும் ஜனங்களும் இப்போது நியாயந்தீர்க்கப்படப்போகிறார்கள். நான் அவர்களை ஒவ்வொருவராக விசாரிப்பேன், யாரையும் விடமாட்டேன், அவர்களை முழுமையாக வெளிப்படுத்துவேன். எனது நியாயத்தீர்ப்பானது முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு முழுமையாக வெளியரங்கமாக்கப்பட்டுள்ளது, நான் எதையும் மறைத்து வைக்கவில்லை; எனது சித்தத்திற்கு இணங்காத அனைத்தையும் நான் தூக்கி எறிவேன், அது பாதாளத்தில் நித்தியத்திற்கும் அழிந்து போகட்டும். அங்கே நான் அதனை என்றென்றும் எரிய அனுமதிப்பேன். இதுவே எனது நீதியும், எனது நேர்மையுமாகும். இதை யாரும் மாற்ற முடியாது, அனைவரும் எனது கட்டளைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

வார்த்தைகள் வெறும் வார்த்தைகள்தான் என்றும் உண்மைகள் வெறும் உண்மைகள்தான் என்றும் நினைத்துப் பெரும்பாலானவர்கள் எனது வார்த்தைகளைப் புறக்கணிக்கிறார்கள். அவர்கள் குருடர்கள்! நானே உண்மையுள்ள தேவன் என்று அவர்களுக்குத் தெரியாதா? எனது வார்த்தைகளும் உண்மைகளும் ஒரே நேரத்தில் தோன்றுகின்றன. இதுதான் உண்மை இல்லையா? ஜனங்கள் பொதுவாக எனது வார்த்தைகளைப் புரிந்துகொள்வதில்லை, மேலும் தெளிவு பெற்றவர்களால் மட்டுமே உண்மையிலேயே எனது வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுதான் உண்மை. ஜனங்கள் எனது வார்த்தைகளைப் பார்த்தவுடனேயே, அவர்கள் மிகவும் பயந்து, தங்களை மறைத்துக்கொள்ள எல்லா இடங்களுக்கும் சிதறி ஓடுகிறார்கள். எனது நியாயத்தீர்ப்பு வரும்போது இது இன்னும் அதிகமாகிறது. நான் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, உலகை அழிக்கும்போது, முதற்பேறான குமாரர்களைப் பரிபூரணமாக்கும்போது—இவை அனைத்தும் எனது வாயிலிருந்து வரும் ஒற்றை வார்த்தையால் நிறைவேற்றப்படுகின்றன. ஏனென்றால், எனது வார்த்தையே அதிகாரமாக இருக்கிறது; இதுவே நியாயத்தீர்ப்பு ஆகும். நானேதான் நியாயத்தீர்ப்பும் மகத்துவமும் என்று கூட சொல்லலாம்; இது மாற்ற முடியாத உண்மையாகும். இது எனது நிர்வாக ஆணைகளின் ஓர் அம்சமாக இருக்கிறது; இது ஜனங்களை நான் நியாயந்தீர்ப்பதற்கான ஒரு வழியாகும். எனது பார்வையில், அனைத்தும்—எல்லா ஜனங்களும், எல்லா விவகாரங்களும், எல்லா விஷயங்களும்—எனது கைகளிலும் எனது நியாயத்தீர்ப்பிற்குக் கீழும் இருக்கின்றன. யாரும் அல்லது எதுவும் மிருகத்தனமாக அல்லது வேண்டுமென்றே நடந்து கொள்ளத் துணிவதில்லை, மேலும் அனைத்தும் நான் சொல்லும் வார்த்தைகளின்படிதான் நிறைவேற வேண்டும். மனுஷனின் கருத்துக்களிலிருந்து, எல்லோரும் எனது வார்த்தைகளை விசுவாசிக்கிறார்கள். எனது ஆவியானவர் குரல் கொடுக்கும்போது, எல்லோரும் சந்தேகிக்கிறார்கள். எனது சர்வவல்லமையைப் பற்றி ஜனங்களுக்குச் சிறிதளவேனும் அறிவு இல்லை, மேலும் அவர்கள் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளையும் வைக்கிறார்கள். நான் இப்போது உனக்குச் சொல்கிறேன், யாரெல்லாம் எனது வார்த்தைகளைக் குறித்து சந்தேகப்படுகின்றனரோ, யாரெல்லாம் எனது வார்த்தைகளை அவமதிக்கின்றனரோ, அவர்கள்தான் அழிக்கப்படவேண்டியவர்கள்; அவர்கள்தான் அழிவின் நிரந்தர குமாரர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து முதற்பேறான குமாரர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவுதான் என்பதைக் காணலாம், ஏனென்றால் நான் இப்படித்தான் கிரியை செய்கிறேன். நான் முன்பு கூறியது போல், ஒரு விரலைக்கூட அசைக்காமல் நான் எல்லாவற்றையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறேன்; நான் எனது வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன். அப்படியானால், இதில்தான் எனது சர்வவல்லமை உள்ளது. எனது வார்த்தைகளில், நான் சொல்வதன் மூலக்காரணத்தையும் நோக்கத்தையும் யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஜனங்களால் இதை அடைய முடியாது, எனது வழிநடத்துதலைப் பின்பற்றும்போது மட்டுமே அவர்களால் செயல்பட முடிகிறது, எனது நீதியின்படி எனது சித்தத்திற்கு இணங்கிதான் எல்லாவற்றையும் செய்ய முடிகிறது, இதன்மூலம் எனது குடும்பமானது நீதியையும் சமாதானத்தையும் பெற்று என்றென்றும் ஜீவித்து, நித்தியமாக உறுதியுடனும் திடமாகவும் இருக்கும்.

எனது நியாயத்தீர்ப்பு அனைவருக்கும் வருகிறது, எனது நிர்வாக ஆணைகள் அனைவரையும் தொடுகிறது, எனது வார்த்தைகளும் எனது ஆள்தத்துவமும் அனைவருக்கும் வெளிப்படுத்தப்படுகின்றன. எனது ஆவியானவரின் மகத்தான கிரியைக்கான நேரம் இது (இந்த நேரத்தில், ஆசீர்வதிக்கப்பட இருப்பவர்களும், துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் வேறுபடுத்தப்படுகிறார்கள்). எனது வார்த்தைகள் வெளிவந்தவுடன், ஆசீர்வதிக்கப்பட இருப்பவர்களையும், துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க இருப்பவர்களையும் நான் வேறுபடுத்தியிருப்பேன். இவையனைத்தும் தெளிவாக இருக்கின்றன, மேலும் இதையெல்லாம் என்னால் ஒரே பார்வையில் பார்க்க முடிகிறது. (எனது மனுஷத்தன்மையைப் பொறுத்து நான் இதைச் சொல்கிறேன்; ஆகவே, இந்த வார்த்தைகள் எனது முன்னறிவிப்புக்கும் நான் தேர்ந்தெடுப்பதற்கும் முரணாக இருப்பதில்லை.) நான் மலைகள், ஆறுகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மத்தியிலும் சுற்றித் திரிகிறேன், பிரபஞ்சத்தின் இடைவெளிகளில் ஒவ்வொரு இடத்தையும் உற்று நோக்கிச் சுத்தப்படுத்துகிறேன், இதனால் அந்த அசுத்தமான இடங்களும் அந்த ஒழுங்கற்ற தேசங்களும் என அனைத்தும் இல்லாமல்போய், எனது வார்த்தைகளின் விளைவாக ஒன்றுமில்லாமல் எரிக்கப்படும். என்னைப் பொறுத்தவரை எல்லாம் எளிதானதுதான். உலகின் அழிவுக்கு நான் முன்குறித்த நேரமானது இதுதான் என்றிருந்தால், ஒரு வார்த்தையின் உச்சரிப்பில் உலகை என்னால் விழுங்க முடியும். எனினும், இப்போது அதற்கான நேரம் இல்லை. எனது திட்டமானது தொந்தரவு இல்லாமலும், எனது நிர்வாகமானது தடைபடாமலும் இருக்க நான் இந்தக் கிரியையைச் செய்வதற்கு முன்பு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். இதை நியாயமாக எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியும்: நான் எனது ஞானத்தைக் கொண்டிருக்கிறேன், மேலும் நான் என்னுடைய சொந்த ஏற்பாடுகளையும் கொண்டிருக்கிறேன். ஜனங்கள் ஒரு விரலைக்கூட அசைக்கக் கூடாது; எனது கையால் கொலையுண்டு போகாமல் கவனமாக இருங்கள். இது ஏற்கெனவே எனது நிர்வாக ஆணைகளுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. இதிலிருந்து எனது நிர்வாக ஆணைகளின் கடுமையையும், அவற்றின் பின்னால் உள்ள கொள்கைகளையும் என இதன் இரண்டு பக்கங்களையும் உங்களால் பார்க்க முடிகிறது: ஒருபுறம், எனது சித்தத்திற்கு இணங்காத மற்றும் எனது நிர்வாக ஆணைகளை மீறும் அனைவரையும் நான் கொல்கிறேன்; மறுபுறம், எனது நிர்வாக ஆணைகளை மீறும் அனைவரையும் எனது கடுங்கோபத்தால் சபிக்கிறேன். இந்த இரண்டு அம்சங்களும் இன்றியமையாதவையாகும், மேலும் இவையே எனது நிர்வாக ஆணைகளுக்குப் பின்னால் இருக்கும் செயல்பாட்டுக் கொள்கைகளாகவும் இருக்கின்றன. ஒருவன் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், இந்த இரண்டு கொள்கைகளின்படி எல்லோரும் உணர்ச்சியற்ற நிலையில் கையாளப்படுகிறார்கள். எனது நீதியையும், எனது மகத்துவத்தையும், எனது கோபாக்கினையையும் காட்ட இதுவே போதுமானது, இது எல்லா பூமிக்குரிய விஷயங்களையும், எல்லா உலக விஷயங்களையும், எனது சித்தத்திற்கு இணங்காத எல்லாவற்றையும் எரித்துப்போடும். எனது வார்த்தைகளில் இரகசியங்கள் மறைந்திருக்கின்றன, எனது வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களும் இருக்கின்றன. இவ்வாறு, மனுஷ கருத்துக்களின்படி, மற்றும் மனுஷ மனதில், எனது வார்த்தைகள் என்றென்றும் புரிந்துகொள்ள முடியாதவையாக இருக்கின்றன, எனது இருதயமும் என்றென்றும் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அதாவது, நான் மனுஷரை அவர்களின் கருத்துக்களிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் வெளியேற்ற வேண்டும். இது எனது நிர்வாகத் திட்டத்தின் மிக முக்கியமான விஷயமாகும். எனது முதற்பேறான குமாரர்களை ஆதாயப்படுத்துவதற்கும் நான் செய்ய விரும்பும் காரியங்களைச் செய்வதற்கும் நான் இதைச் செய்தாக வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 103” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 97

சீயோனே! களிகூரு! சீயோனே! கெம்பீரித்துப் பாடு! வெற்றியுடன் திரும்பியுள்ளேன், ஜெயத்துடன் திரும்பியுள்ளேன்! அனைத்து ஜனங்களே! ஒழுங்கின்படி வரிசைப்படத் துரிதப்படுங்கள்! அனைத்துச் சிருஷ்டிப்புகளே! இப்போது நிறுத்துங்கள், ஏனென்றால் என் ஆள்தத்துவம் முழுப் பிரபஞ்சத்தையும் எதிர்கொண்டு உலகின் கிழக்குத் திசையில் தோன்றுகிறார்! முழங்காற்படியிட்டு ஆராதிக்காமல் இருக்க யார் துணிகிறார்கள்? என்னை உண்மையான தேவன் என்று அழைக்காமல் இருக்க யார் துணிகிறார்கள்? யார் பயபக்தியுடன் நோக்கிப் பார்க்காமலிருக்க துணிகிறார்கள்? துதி செலுத்தாமலிருக்க யார் துணிகிறார்கள்? களிகூராமலிருக்க யார் துணிகிறார்கள்? என் ஜனங்கள் என் சத்தத்தைக் கேட்பார்கள், என் குமாரர்கள் என் ராஜ்யத்தில் பிழைப்பார்கள்! மலைகள், ஆறுகள் மற்றும் அனைத்துக் காரியங்களும் முடிவில்லாமல் ஆரவாரம் செய்யும், மேலும் இடைவிடாமல் துள்ளிக் குதிக்கும். இந்த நேரத்தில், யாரும் பின்வாங்கத் துணிய மாட்டார்கள், யாரும் எதிர்க்கும்படி எழும்பத் துணிய மாட்டார்கள். இது எனது அற்புதமான செயலாகும், அதை விட மேலாக, இது என்னுடைய பெரிதான வல்லமையாகும்! எல்லாவற்றையும் அவைகளின் இருதயத்தில் என்னை வணங்கும்படி செய்வேன், இதையும் தாண்டி, எல்லாவற்றையும் என்னைத் துதிக்கச் செய்வேன்! இதுவே எனது ஆறாயிரம் ஆண்டு கால நிர்வாகத் திட்டத்தின் இறுதி நோக்கமாகும், மேலும் இதுவே நான் நியமித்த ஒன்றாகும். எந்த ஒரு நபரோ அல்லது பொருளோ அல்லது ஒரு நிகழ்வோ என்னை தடுக்க அல்லது என்னை எதிர்க்கத் துணிகிறதில்லை. என் ஜனங்கள் அனைவரும் என் மலைக்கு (வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நான் பின்னர் உருவாக்கும் உலகத்திற்கு) ஓடி வருவார்கள் மற்றும் என்னிடம் மாட்சிமையும் நியாயத்தீர்ப்பும் இருப்பதால், நான் அதிகாரத்தைக் கொண்டிருப்பதால் அவர்கள் என் முன் சரணடைவார்கள். (இது நான் சரீரத்தில் இருக்கும் போது நடப்பதைக் குறிக்கிறது. எனக்கு மாம்சத்திலும் அதிகாரம் உண்டு, ஆனால் மாம்சத்தில் இருக்கையில் நேரம் மற்றும் இடத்தின் வரம்புகளைத் தாண்டிச் செல்ல முடியாது என்பதால் நான் முழு மகிமையைப் பெற்றேன் என்று கூற முடியாது. நான் மாம்சத்தில் முதற்பேறான குமாரர்களைப் பெற்றாலும் நான் மகிமை பெற்று விட்டேன் என்று சொல்ல முடியாது. நான் சீயோனுக்குத் திரும்பி எனது தோற்றத்தை மாற்றும் போது தான் நான் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாகக் கூறமுடியும், அதாவது நான் மகிமை பெற்றதாகக் கூறமுடியும்.) ஒன்றும் எனக்குக் கடினமாக இருக்காது. என் வாயின் வார்த்தைகளால் அனைத்தும் அழிக்கப்படும், என் வாயின் வார்த்தைகளால் அனைத்தும் உருவாகி முழுமையாக்கப்படும். இதுவே என் பெரிதான வல்லமையும் இதுவே என் அதிகாரமும் ஆகும். நான் வல்லமை நிறைந்தவராகவும் அதிகாரத்தால் நிரம்பியவராகவும் இருப்பதால் என்னைத் தடை செய்ய ஒரு நபரும் துணிய முடியாது. நான் ஏற்கனவே எல்லாவற்றையும் ஜெயித்து விட்டேன், கலகத்தின் குமாரர் யாவர் மீதும் ஏற்கனவே நான் ஜெயம் பெற்று விட்டேன். சீயோனுக்குத் திரும்புவதற்காக என் முதற்பேறான குமாரர்களை என்னுடன் அழைத்து வருகிறேன். நான் மட்டும் தனியாகச் சீயோனுக்குத் திரும்புவதில்லை. ஆகையால் அனைவரும் என் முதற்பேறான குமாரர்களைக் காண்பார்கள், இதனால் எனக்காகப் பயபக்தியுள்ள இருதயத்தை வளர்த்துக் கொள்வார்கள். முதற்பேறான குமாரர்களைப் பெறுவதில் இதுவே என் குறிக்கோளாகும், மேலும் இது உலகம் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து நான் கொண்ட என் திட்டமும் ஆகும்.

அனைத்தும் ஆயத்தமானதும், அது நான் சீயோனுக்குத் திரும்பும் நாளாக இருக்கும், மேலும் இந்த நாள் அனைத்து ஜனங்களாலும் நினைவுகூரப்படும். நான் சீயோனுக்குத் திரும்பும்போது, பூமியில் உள்ள அனைத்தும் அமைதியாக இருக்கும், மேலும் பூமியில் உள்ள அனைத்தும் சமாதானத்துடன் இருக்கும். நான் சீயோனுக்குத் திரும்பும்போது, அனைத்தும் அதன் உண்மையான தோற்றத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளும். பின்னர், நான் சீயோனில் என் கிரியையைத் தொடங்குவேன். நான் பொல்லாதவர்களைத் தண்டித்து நல்லவர்களுக்கு வெகுமதி அளிப்பேன், என் நீதியை நான் செயல்படச் செய்து, நான் என் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவேன். எல்லா ஜனங்களையும் எல்லாக் காரியங்களையும் என் தண்டிக்கும் கையை அனுபவித்து உணரச் செய்யும்படி, எல்லாவற்றையும் நிறைவேற்ற என் வார்த்தைகளை நான் பயன்படுத்துவேன், மேலும் எல்லா ஜனங்களையும் என் முழு மகிமையையும் என் முழு ஞானத்தையும் என் முழு தயாளகுணத்தையும் காணச் செய்வேன். எந்த நபரும் நியாயத்தீர்ப்பில் எழும்பத் துணிய மாட்டார்கள், ஏனென்றால் என்னில், அனைத்தும் நிறைவேற்றப்பட்டது; மேலும் இங்கே, ஒவ்வொரு மனிதனும் என் முழு மேன்மையைக் காணட்டும், என் முழு வெற்றியை ருசிக்கட்டும், ஏனென்றால் என்னில் அனைத்தும் வெளிப்படும். இதிலிருந்து, என்னுடைய பெரிதான வல்லமையையும் என் அதிகாரத்தையும் காண முடியும். யாரும் என்னை அவமதிக்கத் துணிய மாட்டார்கள், யாரும் என்னைத் தடுக்கவும் துணிய மாட்டார்கள். என்னில், அனைத்தும் திறக்கப்பட்டே உள்ளன. யார் எதையும் மறைக்கத் துணிவார்கள்? நான் அந்த நபருக்கு நிச்சயம் இரக்கம் காட்ட மாட்டேன்! இப்படிப்பட்டப் பாதகர்கள் என் கடுமையான தண்டனையைப் பெற வேண்டும், மேலும் அத்தகையக் கழிவுகள் என் பார்வையில் இருந்து அகற்றப்பட வேண்டும். நான் அவர்களை இருப்புக்கோலால் ஆட்சி செய்வேன், சிறிதும் இரக்கமில்லாமல் அவர்களின் உணர்வுகள் காயப்படுவதை கண்டுகொள்ளாமல், அவர்களை நியாயந்தீர்க்கும்படி நான் என் அதிகாரத்தைப் பயன்படுத்துவேன், ஏனென்றால் உணர்ச்சியும் மாட்சிமையும் இல்லாத, அவமதிக்கப்பட முடியாத தேவன் நானே. அனைவரும் இதைப் புரிந்து கொள்ளவும் காணவும் வேண்டும், இல்லையெனில் “எந்த நோக்கமும் அல்லது காரணமும் இல்லாமல்” என்னால் அடிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படுவார்கள், ஏனென்றால் என்னை அவமதிக்கும் அனைவரையும் என்னுடைய கோல் அடிக்கும். அவர்களுக்கு எனது ஆட்சிமுறை ஆணைகள் தெரியுமா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை; அது என்னிடம் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, ஏனென்றால் என்னுடைய ஆள்தத்துவம் யாராலும் அவமதிக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். நான் ஒரு சிங்கம் என்று கூறப்படுவதற்கு இதுவே காரணமாகும்; நான் யாரைத் தொட்டாலும், நான் அடிக்கிறேன். அதனால் தான் நான் இரக்கமுள்ள கிருபையுள்ள தேவன் என்று சொல்வது இப்போது தூஷணம் என்று கூறப்படுகிறது. சாராம்சத்தில், நான் ஒரு ஆட்டுக்குட்டி அல்ல, ஆனால் ஒரு சிங்கம். ஒருவரும் என்னை அவமதிக்கத் துணிவதில்லை; யார் என்னை அவமதித்தாலும் நான் உடனடியாக இரக்கமின்றி மரணத் தண்டனை அளிப்பேன். என் மனநிலையைக் காண்பிக்க இது போதுமானதாகும். ஆகையால் இறுதி காலத்தில் ஒரு பெரிய குழுவான ஜனங்கள் பின்வாங்குவார்கள், இதைத் தாங்கிக் கொள்வது ஜனங்களுக்குக் கடினமாக இருக்கும், ஆனால் என் பங்கிற்கு நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன், நான் இதைக் கடினமான வேலையாகவேப் பார்க்கவில்லை. என் மனநிலை அப்படிப்பட்டதாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 120” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 98

ராஜ்யத்தில், எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் புத்துயிர் பெற மற்றும் அவற்றின் உயிர் சக்தியை மீண்டும் பெறத் தொடங்குகின்றன. பூமியின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஒரு நிலத்துக்கும் மற்றொரு நிலத்துக்கும் இடையிலான எல்லைகளும் மாறத் தொடங்குகின்றன. ஒரு நிலம் மற்றொரு நிலத்திலிருந்து பிரிக்கப்படும்போது, ஒரு நிலமும் மற்றொரு நிலமும் ஒன்றிணையும்போது, இந்த நேரத்தில்தான் நான் எல்லா நாடுகளையும் துண்டு துண்டாக உடைப்பேன் என்று தீர்க்கதரிசனம் கூறியுள்ளேன். இந்த நேரத்தில், படைக்கப்பட்ட அனைத்தையும் புதுப்பித்து முழு பிரபஞ்சத்தையும் நான் மறுபகிர்வு செய்வேன், இதன்மூலம் பிரபஞ்சத்தை ஒழுங்கமைத்து பழையதைப் புதியதாக மாறுதல் செய்வேன்—இதுதான் எனது திட்டம் மற்றும் இவைதான் எனது கிரியைகள். தேசங்களும் உலக மக்கள் அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி வரும்போது, நான் வானத்தின் அருட்கொடை அனைத்தையும் எடுத்து அதனை மனித உலகிற்கு ஒப்படைப்பேன், இதனால், என் நிமித்தம், அந்த உலகம் இணையற்ற அருட்கொடையுடன் இருக்கும். ஆனால் பழைய உலகம் தொடர்ந்து இருக்கும் வரை, நான் அதன் தேசங்களின் மீது என் கோபத்தை வெளிப்படுத்துவேன், பிரபஞ்சம் முழுவதும் எனது நிர்வாக ஆணைகளை வெளிப்படையாக பிரகடனம் பண்ணுவேன், அவற்றை மீறுபவர் எவராக இருந்தாலும் அவர் தண்டனை பெறுகிறாரா என்று பார்ப்பேன்:

நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக் கேட்கிறார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்க்கிறார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனிதக் காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றைப் புதியதாக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்குமாய் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லாத் தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது பிரவாகத்துக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்தச் சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்.

எனது சத்தம் தீவிரமாக ஆழம் அடையும்போது, பிரபஞ்சத்தின் நிலையையும் நான் கவனிக்கிறேன். என் வார்த்தைகள் மூலம், படைக்கப்பட்ட எண்ணற்ற வஸ்துக்கள் அனைத்தும் புதியவை ஆக்கப்படும். பூமியைப் போலவே வானமும் மாறுகிறது. மனித குலம் அதன் மூல முதல் வடிவத்திற்கு வெளிப்படுத்தப்படும், மற்றும் மெதுவாக, ஒவ்வொரு நபரும் அவரவர் வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் தங்களையும் அறியாமல், அவர்களது குடும்பத்தின் அரவணைப்புக்கு மீண்டும் வர தங்கள் வழியைக் கண்டுபிடிப்பார்கள். இது என்னைப் பெரிய அளவில் மகிழ்விக்கும். நான் இடையூறிலிருந்து விடுபட்டுள்ளேன், கண்ணுக்குத் தெரியாத விதத்தில், என் மாபெரும் கிரியை நிறைவேறியது, மேலும் எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் அனைத்தும் மாற்றம் பெற்றுள்ளன. நான் உலகத்தை உருவாக்கியபோது, எல்லாவற்றையும் அவற்றின் வகைக்கு ஏற்ப வடிவமைத்தேன், எல்லாவற்றிலும் அவற்றின் வடிவங்களுடன் அவற்றின் தன்மையை ஒன்றாக இணைத்தேன். எனது நிர்வாகத் திட்டத்தின் முடிவு நெருங்கி வருவதால், படைத்தவற்றின் முந்தைய நிலையை நான் மீட்டெடுப்பேன்; எல்லாவற்றையும் மூல முதலாக இருந்த விதத்திற்கு மீட்டெடுப்பேன், எல்லாவற்றையும் அளவிடமுடியாதவாறு மாற்றுவேன், இதனால் எல்லாமும் எனது திட்டத்தின் அரவணைப்புக்குத் திரும்பும். அதற்கான நேரம் வந்துவிட்டது! எனது திட்டத்தின் கடைசிக் கட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆ, அசுத்தமான பழைய உலகமே! நீ நிச்சயமாக என் வார்த்தைகளுக்குக் கீழே விழுவாய்! என் திட்டத்தால் நீ நிச்சயமாக ஒன்றுமில்லாமல் போவாய்! ஆ, எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்களே! நீங்கள் அனைவரும் என் வார்த்தைகளுக்குள் புதிய ஜீவனைப் பெறுவீர்கள்—உங்களை அரசாளும் கர்த்தர் உங்களுக்குக் கிடைப்பார்! ஆ, தூய்மையான மற்றும் களங்கமற்ற புதிய உலகமே! என் மகிமைக்குள் நீ நிச்சயமாக மீண்டெழுவாய்! ஆ, சீயோன் மலையே! இனி அமைதியாக இருக்கவேண்டாம்—நான் வெற்றிபெற்றுத் திரும்பியுள்ளேன்! படைப்பின் நடுவிலிருந்து, நான் முழு பூமியையும் ஆராய்ந்து பார்க்கிறேன். பூமியில், மனிதகுலம் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி புதிய நம்பிக்கையை வென்றுள்ளது. ஆ, என் மக்களே! என் வெளிச்சத்திற்குள் நீங்கள் எப்படி மீண்டும் உயிர்பெற்று வராதிருக்க முடியும்? என் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் எப்படி மகிழ்ச்சியால் குதிக்காமல் இருக்க முடியும்? நிலங்கள் மகிழ்ச்சியால் கூச்சலிடுகின்றன, நீர்நிலைகள் மகிழ்ச்சியான சிரிப்பால் சலசலக்கின்றன! ஆ, உயிர்த்தெழுந்த இஸ்ரவேலே! என்னால் முன்குறிக்கப்பட்டதற்காக நீங்கள் பெருமை கொள்ளாதிருப்பது எங்ஙனம்? யார் அழுகிறார்கள்? யார் புலம்புகிறார்கள்? பழைய இஸ்ரவேல் இல்லாது போய்விட்டது, இன்றைய இஸ்ரவேல் உலகில் உயர்ந்து, நிமிர்ந்து, எழுந்தது, மேலும் அனைத்து மனிதர்களின் இதயங்களிலும் எழுந்து நிற்கிறது. இன்றைய இஸ்ரவேல் நிச்சயமாக என் மக்கள் மூலமாக இருப்பதற்கான ஆதாரத்தை அடையும்! ஆ, வெறுக்கத்தக்க எகிப்து! நிச்சயமாக நீ இன்னும் எனக்கு எதிராக நிற்கவில்லை, அல்லவா? என் கருணையைப் பயன்படுத்திக் கொண்டு, என் தண்டனையிலிருந்து தப்பிக்க நீ முயற்சி செய்வது எங்ஙனம்? என் தண்டனையில்லாது நீ போகமுடிவது எங்ஙனம்? நிச்சயமாக நான் நேசிக்கிறவர்கள் அனைவரும் நித்தியமாக வாழ்வார்கள், நிச்சயமாக எனக்கு எதிராக நிற்பவர்கள் அனைவரும் நித்தியமாக என்னால் தண்டிக்கப்படுவார்கள். ஏனென்றால், நான் எரிச்சலுள்ள தேவன், அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் மனிதர்களைச் சும்மா விடமாட்டேன். நான் பூமி முழுவதையும் கவனிப்பேன், உலகின் கிழக்கில் நீதியுடனும், பிரதாபத்துடனும், உக்கிர கோபத்துடனும், தண்டனையுடனும் தோன்றுவேன், பெருந்திரளான மனிதர்களுக்கு நான் என்னை வெளிப்படுத்துவேன்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26” என்பதிலிருந்து

முந்தைய: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை

அடுத்த: மனுஷ அவதரிப்பு

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக