II. தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 46
துதியானது சீயோனுக்கு வந்துவிட்டது. தேவனுடைய வாசஸ்தலம் தோன்றியுள்ளது. எல்லா ஜனங்களும் போற்றும் மகிமையுள்ள பரிசுத்த நாமம் பரவுகிறது. ஆ, சர்வவல்லமையுள்ள தேவனே! பிரபஞ்சத்தின் அதிபதி, கடைசி நாட்களின் கிறிஸ்து—அவர் சீயோன் மலையின் மீது எழுந்திருக்கும் பிரகாசிக்கும் சூரியன். இது பிரபஞ்சம் முழுவதிலும் மாட்சிமையோடும் மேன்மையோடும் உயர்கிறது…
சர்வவல்லமையுள்ள தேவனே! நாங்கள் உம்மை மகிழ்ச்சியுடன் அழைக்கிறோம், நாங்கள் ஆடிப் பாடுகிறோம். நீர் உண்மையிலேயே எங்கள் மீட்பர், பிரபஞ்சத்தின் மகா ராஜா! நீர் ஒரு ஜெயம்கொள்ளும் குழுவை உருவாக்கி தேவனுடைய ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளீர். எல்லா ஜனங்களும் இந்த பர்வதத்திடம் ஓடிவருவார்கள். எல்லா ஜனங்களும் சிங்காசனத்தின் முன் மண்டியிடுவார்கள்! நீர் ஒருவரே உண்மையான ஒரே தேவன். நீர் மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரமானவர். எல்லா மகிமையும், கனமும், வல்லமையும் சிங்காசனத்துக்கு உண்டாவதாக! சிங்காசனத்திலிருந்து ஜீவ ஊற்று பாய்கிறது. எண்ணிலடங்காத தேவ ஜனங்களுக்கு தண்ணீர் கொடுத்து போஷிக்கிறது. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை மாறுகிறது. புதிய வெளிச்சம் மற்றும் வெளிப்பாடுகள் நம்மைப் பின்தொடர்கின்றன, தொடர்ந்து தேவனைப் பற்றிய புதிய புரிதல்களைக் கொடுக்கின்றன. அனுபவங்களுக்கு இடையில், தேவனைப் பற்றிய முழுமையான உறுதிப்பாட்டை நாம் அடைகிறோம். அவருடைய வார்த்தைகள் தொடர்ந்து வெளிப்படுகின்றன. அவை சரியானவர்களுக்குள் வெளிப்படுகின்றன. நாம் உண்மையில் மிகவும் பாக்கியவான்கள்! ஒவ்வொரு நாளும் தேவனை நேருக்கு நேர் சந்திக்கிறோம், எல்லாவற்றிலும் தேவனுடன் தொடர்புகொள்கிறோம் மற்றும் எல்லாவற்றின் மீதும் தேவனுக்கு அதிகாரம் அளிக்கிறோம். தேவனுடைய வார்த்தையை நாம் கவனமாக சிந்திக்கிறோம். நம்முடைய இருதயங்கள் தேவனில் அமைதியாக இருக்கின்றன. இதனால் நாம் தேவனுக்கு முன்பாக வருகிறோம். அங்கு அவருடைய ஒளியைப் பெறுகிறோம். ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கை, செயல்கள், சொற்கள், எண்ணங்கள் மற்றும் யோசனைகளில் நாம் தேவனுடைய வார்த்தைக்குள் ஜீவிக்கிறோம். எல்லா நேரங்களிலும் நம்மால் வித்தியாசத்தைக் காண முடிகிறது. தேவனுடைய வார்த்தையானது, ஊசியில் நூல் கோர்ப்பது போல வழிநடத்துகிறது. எதிர்பாராத விதமாக, நமக்குள் மறைந்திருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன. தேவனுடனான ஐக்கியம் எந்த தாமதத்தையும் ஏற்படுத்தாது. நம்முடைய எண்ணங்களும் யோசனைகளும் தேவனால் அப்பட்டமாக வெளிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தருணத்திலும் நாம் கிறிஸ்துவின் சிங்காசனத்திற்கு முன்பாக ஜீவிக்கிறோம். அங்கே நாம் நியாயத்தீர்ப்புக்கு உட்படுகிறோம். நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு இடமும் சாத்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இன்று, தேவனுடைய ஆளுகையை மீட்டெடுக்க, அவருடைய திருச்சபை சுத்திகரிக்கப்பட வேண்டும். தேவனால் முழுமையாக ஆட்கொள்ளப்பட, நாம் ஒரு வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டும். நம்முடைய பழைய குணம் சிலுவையில் அறையப்பட்டால்தான் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஜீவன் மிக உயர்ந்ததாக ஆட்சி செய்ய முடியும்.
இப்போதும், நம்முடைய மீட்புக்காக யுத்தம் செய்ய பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஒவ்வொரு உடல் பாகத்திலும் சக்தியை ஏற்றுகிறார்! நாம் நம்மை மறுக்கவும், தேவனோடு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கும்போதே, தேவன் நிச்சயமாக, எல்லா நேரங்களிலும் நம்மை ஒளிரச் செய்து தூய்மைப்படுத்துவார். மேலும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நாம் தேவனால் முழுமையாக்கப்படும் பொருட்டு சாத்தான் ஆக்கிரமித்துள்ளதை புதிதாக மீட்டெடுப்பார். நேரத்தை வீணாக்காதீர்கள். தேவனுடைய வார்த்தையில் ஒவ்வொரு நொடியையும் வாழுங்கள். பரிசுத்தவான்களுடன் கட்டியெழுப்பப்பட்டு, ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்பட்டு, தேவனோடு மகிமைக்குள் பிரவேசியுங்கள்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் என்பதன் “அத்தியாயம் 1” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 47
பிலதெல்பியா சபையானது தேவனுடைய கிருபை மற்றும் இரக்கத்தின் காரணமாக, முற்றிலுமாக உறுதியான வடிவம் பெற்றுள்ளது. ஆவிக்குரிய பயணத்தில் தடுமாறாத எண்ணற்ற பரிசுத்தவான்களின் இருதயங்களில் தேவன் மீதான அன்பு தோன்றுகிறது. ஒரே உண்மையான தேவன் மாம்சமாகிவிட்டார், அவர் பிரபஞ்சத்தின் அதிபதி, அவர் எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார் என்ற நம்பிக்கையை அவர்கள் உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள்: இது பரிசுத்த ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மலைகளைப் போல அசையாதது! இது ஒருபோதும் மாறாது!
சர்வவல்லமையுள்ள தேவனே! இன்று நீர் தான் எங்கள் ஆவிக்குரியக் கண்களைத் திறந்து, குருடர்களைப் பார்வையடையச் செய்கிறீர், முடவனை நடக்க வைக்கிறீர் மற்றும் குஷ்டரோகிகளை சொஸ்தமாக்குகிறீர். நீரே பரலோகத்திற்கான வாசலைத் திறந்து, ஆவிக்குரிய ராஜ்யத்தின் மர்மங்களை உணர வைத்திருக்கிறீர். உம்முடைய பரிசுத்த வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறோம், சாத்தானால் கெடுக்கப்பட்ட எங்கள் மனிதத்தன்மையிலிருந்து இரட்சிக்கப்படுகிறோம், உம்முடைய விவரிக்கமுடியாத பெரிய கிரியையும், உம்முடைய விவரிக்கமுடியாத மிகப்பெரிய இரக்கமும் இத்தகையதாகும். நாங்கள் உம்முடைய சாட்சிகள்!
நீர் நீண்ட காலமாக, தாழ்மையுடன், அமைதியாக மறைந்திருக்கிறீர். நீர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலுக்கும், சிலுவையில் அறையப்படுதலுக்கும், மனித ஜீவிதத்தின் சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களுக்கும், துன்புறுத்தல் மற்றும் துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளீர். நீர் மனித உலகின் வலியை அனுபவித்து ருசித்திருக்கிறீர் மற்றும் நீர் அந்த யுகத்தினால் கைவிடப்பட்டிருக்கிறீர். மனுஷரூபமெடுத்த தேவனே தேவன். தேவனுடைய சித்தத்திற்காக, நீர் எங்களை குப்பையிலிருந்து இரட்சித்தீர். உம்முடைய வலது கரத்தால் எங்களைப் பிடித்துக் கொண்டு, உம்முடைய கிருபையை எங்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறீர். எந்த வேதனையும் இல்லாமல், உம்முடைய ஜீவனை எங்களுக்குள்ளாக கொடுத்திருக்கிறீர். உம்முடைய இரத்தம், வியர்வை, கண்ணீர் ஆகியவற்றால் நீர் செலுத்திய விலைக்கிரயம் பரிசுத்தவான்கள் மீது பூசப்பட்டிருக்கிறது. நாங்கள் உம்முடைய கடினமான முயற்சிகளின் பலன்களாக[அ] இருக்கிறோம். நாங்கள் நீர் செலுத்திய விலைக்கிரயமாக இருக்கிறோம்.
சர்வவல்லமையுள்ள தேவனே! உமது அன்பும் இரக்கமும், உமது நீதியும், கம்பீரமும், உமது பரிசுத்தமும், மனத்தாழ்மையுமே, எல்லா ஜனங்களும் உமக்கு முன்பாக பணிந்து, உம்மை நித்திய காலத்திற்கும் வணங்க காரணமாக இருக்கின்றன.
இன்று நீர் அனைத்து திருச்சபைகளையும் பிலதெல்பியா சபையாக பரிபூரணமாக்கியுள்ளீர். இதனால் உமது 6,000 ஆண்டு ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளீர். பரிசுத்தவான்கள் தாழ்மையுடன் உமக்கு முன்பாக தங்களைச் ஒப்புக்கொடுக்க முடியும், ஆவியில் இணைத்துக்கொள்ள முடியும், அன்போடு பின்தொடர முடியும் மற்றும் நீரூற்றின் பிறப்பிடத்துடன் இணைந்திருக்க முடியும். ஜீவத்தண்ணீர் இடைவிடாமல் ஓடி, திருச்சபையில் உள்ள அனைத்து சேற்று மற்றும் அசுத்தமான நீரையும் கழுவி தூய்மைப்படுத்துகிறது, மீண்டும் உமது ஆலயத்தை தூய்மைப்படுத்துகிறது. நடைமுறையில் உண்மையான தேவனை நாம் அறிந்திருக்கிறோம், அவருடைய வார்த்தைகளுக்குள் நடந்திருக்கிறோம், நமது சொந்த செயல்பாடுகளையும் கடமைகளையும் உணர்ந்திருக்கிறோம் மற்றும் திருச்சபையின் பொருட்டு நம்மை பயன்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறோம். உம்முடைய சித்தம் எங்களுக்குள் தடைப்படக்கூடாது என்பதற்காக, பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நாங்கள் உமக்கு முன்பாக அமைதியாக எப்போதும் கவனிக்க வேண்டும். பரிசுத்தவான்களிடையே பரஸ்பர அன்பு இருக்கிறது. சிலருடைய பலமானது மற்றவர்களின் தவறுகளுக்கு ஈடுசெய்யும். அவர்கள் எல்லா நேரங்களிலும் ஆவியில் நடக்க முடிகிறது, பரிசுத்த ஆவியானவரால் அறிவொளி பெற்று பிரகாசிக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தை புரிந்துகொண்ட உடனேயே அதை கடைபிடிக்கிறார்கள். அவர்கள் புதிய ஒளியுடன் இணைந்து செயல்படுகின்றனர் மற்றும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றனர்.
தேவனுடன் தீவிரமாக ஒத்துழையுங்கள். அவரை நம்மை கட்டுப்படுத்த அனுமதிப்பதுதான் அவரோடு நடப்பதாகும். நம்முடைய சொந்த யோசனைகள், எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் உலகப்பிரகாரமான பிரச்சனைகள் அனைத்தும் புகை போல மெல்லிய காற்றில் மறைந்துபோகின்றன. நாம் தேவனுடன் நடந்து, அவர் நம்முடைய ஆவிகளை ஆட்சி செய்ய அனுமதிக்கிறோம். இதனால் மேன்மை அடைந்து, உலகத்தை ஜெயிக்கிறோம், நம்முடைய ஆவிகள் சுதந்திரமாக பறந்து விடுதலையை அடைகின்றன: இதுவே சர்வவல்லமையுள்ள தேவன் ராஜாவாகும் போது கிடைக்கும் பலனாகும். தேவனைப் புகழ்ந்து ஆடிப் பாடாமலும், துதியின் பலிகளை செலுத்தாமலும், புதிய பாடல்களைப் பாடாமலும் எவ்வாறு இருக்க முடியும்?
தேவனைத் துதிப்பதற்கு உண்மையிலேயே பல வழிகள் உள்ளன: அவருடைய நாமத்தைக் கூப்பிடுவது, அவரிடம் நெருங்கி வருவது, அவரைப் பற்றி சிந்திப்பது, தியானிப்பது, கலந்துரையாடலில் ஈடுபடுவது, சிந்தித்துப் பார்ப்பது, ஆராய்வது, ஜெபிப்பது மற்றும் துதி பாடல்கள் பாடுவது ஆகியனவாகும். இந்த வகையான துதியில் இன்பம் இருக்கிறது, அபிஷேகம் இருக்கிறது. துதியில் வல்லமை இருக்கிறது மற்றும் ஒரு சுமையும் இருக்கிறது. துதியில் விசுவாசம் இருக்கிறது மற்றும் புதிய புரிதல் இருக்கிறது.
தேவனுடன் தீவிரமாக ஒத்துழையுங்கள், ஊழியத்தில் ஒருங்கிணைந்திடுங்கள், ஒன்றுபடுங்கள், சர்வவல்லமையுள்ள தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றுங்கள், பரிசுத்த ஆவியானவருடைய சரீரமாக மாறுங்கள், சாத்தானை மிதியுங்கள், சாத்தானின் தலைவிதிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். பிலதெல்பியா சபை தேவனுடைய சமூகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவருடைய மகிமையில் வெளிப்படுத்தப்படுகிறது.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் என்பதன் “அத்தியாயம் 2” என்பதிலிருந்து
அடிக்குறிப்பு:
அ. மூல உரையில் “பலன்களாக இருக்கிறோம்” என்ற சொற்றொடர் இல்லை.
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 48
ஜெயமுள்ள ராஜா தமது மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் மீட்பை நிறைவேற்றியுள்ளார். அவருடைய ஜனங்கள் அனைவரும் மகிமையில் தோன்ற வழிவகுத்துள்ளார். அவர் பிரபஞ்சத்தை தமது கரங்களில் வைத்திருக்கிறார். அவர் தமது தெய்வீக ஞானத்தினாலும் வல்லமையினாலும் சீயோனைக் கட்டி எழுப்பி ஸ்திரப்படுத்தியிருக்கிறார். தம்முடைய மாட்சிமையால் அவர் பாவ உலகத்தை நியாயந்தீர்க்கிறார். எல்லா தேசங்களுக்கும், எல்லா ஜனங்களுக்கும், பூமி, கடல்கள் மற்றும் அவற்றில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும், அதைப் போலவே ஒழுக்கக்கேடு என்னும் மதுவை அருந்துகிறவர்களுக்கும் அவர் நியாயத்தீர்ப்பை வழங்கியுள்ளார். தேவன் நிச்சயமாகவே அவர்களை நியாயந்தீர்ப்பார். அவர் நிச்சயமாகவே அவர்கள்மீது கோபப்படுவார். அதிலே தேவனுடைய மாட்சிமையானது வெளிப்படும். அவருடைய நியாயத்தீர்ப்பு உடனடியாக, தாமதமின்றி வழங்கப்படும். அவருடைய கோப அக்கினி நிச்சயமாக அவர்களின் கொடூரமான குற்றங்களை எரித்து, எந்த நேரத்திலும் அவர்களுக்கு பேரழிவைத் தரும். தாங்கள் தப்பிச் செல்வதற்கான எந்த வழியையும் அவர்கள் அறிய மாட்டார்கள். ஒளிந்துகொள்ள அவர்களுக்கு இடம் இருக்காது. அவர்கள் அழுது பற்களை நறநறவெனக் கடித்துக்கொள்வார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவைக் கொண்டுவருவார்கள்.
தேவனுக்குப் பிரியமான ஜெயமுள்ள புத்திரர்கள் நிச்சயமாக சீயோனில் தங்கியிருப்பார்கள். அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் விலகிப்போவதில்லை. பல ஜனங்கள் அவருடைய சத்தத்தை உன்னிப்பாகக் கேட்பார்கள். அவர்கள் அவருடைய கிரியைகளை கவனமாகக் கவனிப்பார்கள். அவர்களுடைய துதியின் சத்தங்கள் ஒருபோதும் நிற்காது. ஒரு உண்மையான தேவன் தோன்றியிருக்கிறார்! நாம் ஆவியில் அவரைப் பற்றி உறுதியாக இருப்போம். அவரை நெருக்கமாகப் பின்பற்றுவோம். நாம் நம்முடைய முழு வல்லமையுடன் விரைந்து செல்வோம், இனி தயங்க வேண்டாம். உலகத்தின் முடிவு நமக்கு முன்பாக வெளிப்படையாக இருக்கிறது. சரியான திருச்சபை வாழ்க்கையும், நம்மைச் சுற்றியுள்ள ஜனங்கள், விவகாரங்கள் மற்றும் விஷயங்களும் இப்போது கூட நமது பயிற்சியைத் தீவிரப்படுத்துகின்றன. உலகை மிகவும் நேசிக்கும் நம்முடைய இருதயங்களை அதிலிருந்து விலக்குவதற்கு துரிதப்படுவோம்! மிகவும் தெளிவற்ற நம் பார்வையை நாம் அதிலிருந்து விலக்குவதற்கு துரிதப்படுவோம்! நமது பாதைகளை விட்டு விலகாமல் இருப்போம், இதனால் நாம் நம்முடைய எல்லைகளைத் தாண்டாதிருப்போம். இனி நம்முடைய சொந்த லாபங்களையும் இழப்புகளையும் கருத்தில் கொண்டு செயல்படாமல், நாம் தேவனுடைய வார்த்தையில் நடக்கும்படி நம்முடைய வாய்களை அடக்குவோம். ஆ, அந்த மதச்சார்பற்ற உலகத்துக்கும் செல்வத்துக்குமான உங்களது பேராசையை விட்டுவிடுங்கள்! ஆ, கணவன், மகள்கள் மற்றும் மகன்களுடனான உங்களது பிணைப்பிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்! ஆ, உங்களது கண்ணோட்டங்களையும் தவறான அபிப்பிராயங்களையும் விட்டுவிடுங்கள்! ஆ, எழுந்திரு. காலம் குறைவாகவே உள்ளது! ஆவிக்குள்ளாக இருந்து கொண்டு மேலே பாருங்கள், மேலே பாருங்கள். தேவனே கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளட்டும். என்ன நடந்தாலும், மற்றொரு லோத்தின் மனைவியாக நீங்கள் மாற வேண்டாம். ஒதுக்கப்படுவது எவ்வளவு பரிதாபமனதாகும்! உண்மையில் எவ்வளவு பரிதாபமாகும்! ஆ, எழுந்திரு!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் என்பதன் “அத்தியாயம் 3” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 49
மலைகளும் ஆறுகளும் மாறுகின்றன, சமுத்திரமானது அதன் பாதையில் பாய்கிறது, மேலும் பூமியையும் வானத்தையும் போலவே மனுஷனின் ஜீவிதமும் நீடித்திருப்பதில்லை. சர்வவல்லமையுள்ள தேவன் மட்டுமே நித்தியமானவராகவும் உயிர்த்தெழுப்பப்பட்டவராகவும் இருக்கிறார், இது என்றென்றும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது! எல்லா விஷயங்களும் எல்லா நிகழ்வுகளும் அவருடைய கைகளில் இருக்கின்றன, சாத்தான் அவருடைய காலடியில் இருக்கிறான்.
இன்று, தேவனின் முன்குறிக்கப்பட்ட தெரிந்துகொள்ளுதலின் மூலமே அவர் சாத்தானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கிறார். அவர்தான் உண்மையிலேயே நமது மீட்பராக இருக்கிறார். கிறிஸ்துவின் நித்தியமான, உயிர்த்தெழுந்த ஜீவனால் உண்மையில் நமக்குள் கிரியை செய்யப்படுகிறது, நம்மால் உண்மையில் அவரை முகமுகமாய்க் காணவும், அவரைப் புசித்துக் குடிக்கவும், அவரை அனுபவிக்கவும் முடியும் என்பதற்காக தேவனின் ஜீவனோடு இணைவதற்கு கிறிஸ்துவின் ஜீவன் நம்மை விதிக்கிறது. தேவன் தம்முடைய இருதயத்தினுடைய இரத்தத்தின் விலைக்கிரயத்தில் வழங்கிய தன்னலமற்ற காணிக்கை இது.
பருவகாலங்களானது காற்று மற்றும் உறைபனி வழியாக வந்து செல்கின்றன, ஜீவிதத்தின் பல துன்பங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் உபத்திரவங்களையும், உலகின் பல மறுப்புக்கள் மற்றும் அவதூறுகளையும், அரசாங்கத்தின் பல தவறான குற்றச்சாட்டுகளையும் சந்தித்திருக்கின்றன, ஆனாலும் தேவனின் விசுவாசமோ அல்லது அவருடைய தீர்மானமோ சிறிதளவும் குறையவே இல்லை. தேவனின் சித்தம், தேவனின் நிர்வாகம் மற்றும் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக அவற்றுக்கு முழு மனதுடன் அர்ப்பணித்து, அவர் தமது சொந்த ஜீவிதத்தை ஒதுக்கி வைக்கிறார். பெருந்திரளான தம்முடைய ஜனங்களுக்கு, அவர் எந்த வேதனையையும் கொடுக்காமல், கவனமாக அவர்களுக்கு போஜனமளித்து, பருக தண்ணீர் தருகிறார். நாம் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும், அல்லது எவ்வளவு கடினமானவர்களாக இருந்தாலும், நாம் அவருக்கு முன்பாக மட்டுமே கீழ்ப்படிய வேண்டும், மேலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஜீவனானது நமது பழைய சுபாவத்தை மாற்றிவிடும்…. இந்த முதற்பேறான குமாரர்களுக்காக அவர் போஜனத்தையும் ஓய்வையும் துறந்து அயராது உழைக்கிறார். எவ்வளவு சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் உறைபனி குளிர் ஆகியவற்றின் மூலம் எத்தனை பகலிரவுகள் அவர் சீயோனில் முழு மனதுடன் கண்காணிக்கிறார்.
உலகம், வீடு, கிரியை மற்றும் அனைத்தும் மகிழ்ச்சியுடன், விருப்பத்துடன் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவையாக இருக்கின்றன, மேலும் உலக இன்பங்களுக்கு அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை…. அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நமக்குள் சென்று தாக்கி, நமது இருதயத்தில் ஆழமாக மறைந்திருக்கும் விஷயங்களை அம்பலப்படுத்துகின்றன. நாம்மால் எப்படி நம்பமுடியாமல் இருக்க முடியும்? அவருடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வாக்கியமும் எந்த நேரத்திலும் நமக்குள் நிறைவேறக்கூடும். அவருடைய பிரசன்னத்திலோ அல்லது அவரிடமிருந்து மறைந்திருந்தோ நாம் எதைச் செய்தாலும், அவருக்கு எதுவும் தெரியாமல் போவதும் இல்லை, அவருக்குப் புரியாமல் போவதும் இல்லை. நம்முடைய சொந்தத் திட்டங்களும் ஏற்பாடுகளும் இருந்தபோதிலும், அனைத்தும் உண்மையில் அவருக்கு முன்பாக வெளிப்படும்.
அவருக்கு முன்பாக அமர்ந்து, எளிமையாகவும் அமைதியாகவும் நம்முடைய ஆவிக்குள் மகிழ்ச்சியை உணர்கிறோம், ஆனால் எப்போதும் வெறுமையாகவும் தேவனுக்கு உண்மையிலேயே கடன்பட்டிருப்பதாகவும் உணர்கிறோம்: இது கற்பனைக்கு எட்டாத மற்றும் அடைய முடியாத ஒரு அதிசயமாகும். சர்வவல்லமையுள்ள தேவன் தான் ஒரே உண்மையான தேவன் என்பதை நிரூபிக்க பரிசுத்த ஆவியானவர் போதுமானவராக இருக்கிறார்! இது மறுக்க இயலாத சான்றாகும்! இந்தக் கூட்டத்தாராகிய நாம் விவரிக்க முடியாத வகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்! தேவனின் கிருபை மற்றும் இரக்கத்திற்காக இல்லாவிட்டால், நாம் கெட்டுப்போய் சாத்தானைத்தான் பின்பற்றவேண்டியதிருந்திருக்கும். சர்வவல்லமையுள்ள தேவனால் மட்டுமே நம்மை இரட்சிக்க முடியும்!
ஆ! சர்வவல்லமையுள்ள தேவனே, நடைமுறைத் தேவனே! ஆவிக்குரிய உலகின் இரகசியங்களைக் காண எங்களை அனுமதிக்க எங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறந்தது நீர்தான். ராஜ்யத்தின் வாய்ப்புகள் எல்லையற்றவையாக இருக்கின்றன. நாம் காத்திருக்கும்போது விழிப்புடன் இருப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இருக்க முடியாது.
யுத்தத்தின் தீப்பிழம்புகள் சுழல்கின்றன, பீரங்கிப் புகை காற்றை நிரப்புகிறது, வானிலை வெப்பமாக மாறுகிறது, காலநிலை மாறுகிறது, கொள்ளை நோய் ஒன்று பரவுகிறது, மேலும் உயிர்வாழும் நம்பிக்கையில்லாமல் ஜனங்கள் இறக்க மட்டுமே முடிகிறது.
ஆ! சர்வவல்லமையுள்ள தேவனே, நடைமுறைத் தேவனே! நீர் தான் எங்களது அசைக்க முடியாத கோட்டையாக இருக்கிறீர். நீர் தான் எங்களுக்கு அடைக்கலமாக இருக்கிறீர். நாங்கள் உமது சிறகுகளின் கீழ் தஞ்சமடைகிறோம், பேரழிவு எங்களை அணுக முடியாது. இதுவே உமது தெய்வீக பாதுகாப்பாகவும் பராமரிப்பாகவும் இருக்கிறது.
நாங்கள் அனைவரும் பாடலில் எங்கள் குரல்களை உயர்த்துகிறோம்; நாங்கள் துதித்துப் பாடுகிறோம், சீயோன் முழுவதும் எங்களது துதியின் சத்தம் ஒலிக்கிறது! நடைமுறைத் தேவனாகிய சர்வவல்லமையுள்ள தேவன் அந்த மகிமைமிக்க சென்றடையும் இடத்தை நமக்காக ஆயத்தப்படுத்தியிருக்கிறார். விழிப்புடன் இருங்கள்—ஓ, ஜாக்கிரதையாக இருங்கள்! இன்னும், நேரம் தாமதமாகிவிடவில்லை.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் என்பதன் “அத்தியாயம் 5” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 51
எல்லா திருச்சபைகளிலும் தேவன் தோன்றுவது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆவியானவர் தான் பேசுகிறார்; அவர் பொங்கி எழும் அக்கினியாக மகத்துவத்தை சுமந்துகொண்டு நியாயத்தீர்ப்பளிக்கிறார். அவர் பாதம்வரை தொங்கும் அங்கியொன்றை அணிந்து, தமது மார்பைச் சுற்றி பொற்கச்சை ஒன்றையும் அணிந்திருக்கும் மனுஷகுமாரனாக இருக்கிறார். அவருடைய தலையும் தலைமுடியும் வெண்பஞ்சைப்போலவும், அவரது கண்கள் அக்கினிஜுவாலைகள் போலவும் இருக்கின்றன; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலவும், அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலவும் இருக்கின்றன. அவர் தமது வலதுகரத்தில் ஏழு நட்சத்திரங்களையும், தமது வாயில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தையும் ஏந்தியிருக்கிறார், மேலும் அவருடைய முகமானது கொழுந்துவிட்டெரியும் சூரியனைப் போல கடுமையாகப் பிரகாசிக்கிறது!
மனுஷகுமாரன் சாட்சிக் கொடுத்திருக்கிறார், மேலும் தேவனே தம்மை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்கிறார். தேவனின் மகிமையானது வெளிப்பட்டு, கொழுந்துவிட்டெரியும் சூரியனைப் போல கடுமையாகப் பிரகாசிக்கிறது! அவரது மகிமையான முகமானது திகைப்பூட்டும் வெளிச்சத்தை வீசுகிறது; யாருடைய கண்களால் அவரை எதிர்க்க முடியும்? எதிர்ப்பு மரணத்திற்கு வழிவகுக்கிறது! உங்கள் இருதயத்தில் நீங்கள் நினைக்கும் எதற்கும், நீங்கள் சொல்லும் எந்த வார்த்தைக்கும், அல்லது நீங்கள் செய்யும் எதற்கும் சிறிதும் இரக்கம் காட்டப்படுவதில்லை. நீங்கள் எதைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துகொண்டு, அதைக் காண்பீர்கள்—அது எனது நியாயத்தீர்ப்பே தவிர வேறு எதுவும் இல்லை! நீங்கள் எனது வார்த்தைகளைப் புசித்துக் குடிக்க முயற்சிக்காமல், அதற்குப் பதிலாக தன்னிச்சையாகக் குறுக்கிட்டு எனது கட்டுமானத்தை அழிக்கும்போது என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியுமா? இவ்வாறான நபரை நான் கனிவாக நடத்த மாட்டேன்! உனது நடத்தை மிகவும் தீவிரமாக சீர்கெட்டுப்போனால், நீ அக்கினிஜுவாலைகளால் பட்சித்துப்போடப்படுவாய்! சர்வவல்லமையுள்ள தேவன், தலை முதல் பாதம் வரை சிறிதளவு கூட மாம்சத்தாலோ இரத்தத்தாலோ இணைக்கப்படாமல் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் வெளிப்படுகிறார். அவர் பிரபஞ்ச உலகத்தைத் தாண்டிச் சென்று மூன்றாம் வானத்தில் இருக்கும் மகிமையுள்ள சிங்காசனத்தில் அமர்ந்து, எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார்! பிரபஞ்சமும் சகலமும் எனது கரங்களுக்குள் இருக்கின்றன. நான்ஒன்றைச் சொன்னால், அது அப்படியே நடக்கும். நான் ஒன்றை நியமித்தால், அது அப்படியாகவே இருக்கும். சாத்தான் எனது பாதத்திற்குக் கீழே இருக்கிறான்; அவன் பாதாளத்தில் இருக்கிறான்! எனது குரல் வெளிப்படும் போது, வானமும் பூமியும் ஒழிந்து, ஒன்றுமில்லாமற்போகும்! அனைத்தும் புதுப்பிக்கப்படும்; இது முற்றிலும் சரியான மாற்றமுடியாத உண்மையாக இருக்கிறது. நான் உலகத்தையும், பொல்லாத அனைத்தையும் ஜெயங்கொண்டிருக்கிறேன். நான் இங்கே உட்கார்ந்து உங்களுடன் பேசுகிறேன், காதுள்ளவர்கள் அனைவருமே இதைக் கேட்க வேண்டும், ஜீவிக்கும் அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்கள் முடிவுக்கு வரும்; இந்த உலகில் உள்ள அனைத்தும் ஒன்றும் இல்லாத நிலைக்குச் செல்லும், மேலும் அனைத்தும் புதிதாகப் பிறக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள்! மறந்து விடாதீர்கள்! தெளிவின்மை இருக்கவே கூடாது! வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் எனது வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை! நான் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிவுறுத்துகிறேன்: வீணாக ஓடாதீர்கள்! விழித்தெழுங்கள்! மனந்திரும்புங்கள், இரட்சிப்பு சமீபித்திருக்கிறது! நான் ஏற்கனவே உங்களிடையே தோன்றியிருக்கிறேன், எனது சத்தம் தொனித்திருக்கிறது. எனது சத்தம் உங்களுக்கு முன்பாக தொனித்திருக்கிறது; ஒவ்வொரு நாளும் அது உங்களை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது, ஒவ்வொரு நாளும் எனது சத்தம் உங்களுக்குப் புதிதாக இருக்கிறது. நீ என்னைப் பார்க்கிறாய், நான் உன்னைப் பார்க்கிறேன்; நான் உன்னிடம் தொடர்ந்து பேசுகிறேன், உன்னுடன் நேருக்கு நேர் வருகிறேன். ஆயினும்கூட, நீ என்னை நிராகரிக்கிறாய், என்னை அறியாதிருக்கிறாய். எனது ஆடுகள் எனது சத்தத்துக்கு செவி கொடுக்கிறது, ஆனாலும் நீங்கள் தயங்குகிறீர்கள்! நீங்கள் தயங்குகிறீர்கள்! உங்கள் இருதயமானது உணர்ந்து குணப்படாமல், உங்கள் கண்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டுவிட்டன, எனது மகிமையான முகத்தை உங்களால் காண முடியாது—நீங்கள் எவ்வளவு பரிதாபகரமானவர்களாக இருக்கிறீர்கள்! எவ்வளவு பரிதாபகரமானவர்கள்!
எனது சிங்காசனத்திற்கு முன்னால் உள்ள ஏழு ஆவிகளும் பூமியின் எல்லா மூலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன, மேலும் நான் எனது தூதனை திருச்சபைகளிடத்தில் பேச அனுப்புவேன். நான் நீதியுள்ளவராகவும் உண்மையுள்ளவராகவும் இருக்கிறேன்; மனுஷனின் இருதயத்தின் ஆழமான பகுதிகளை ஆராயும் தேவன் நானே. பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறார், மேலும் எனது குமாரனுக்குள் இருந்து வெளிப்படும் வார்த்தைகளானது எனது வார்த்தைகள் தான்; காதுள்ளவர்கள் அனைவரும் கேட்க வேண்டும்! ஜீவிக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்! வெறுமனே அவற்றை புசித்துக் குடிக்க வேண்டும், சந்தேகப்படக் கூடாது. எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவற்றிற்குச் செவிசாய்க்கும் அனைவருக்கும் பெரும் ஆசீர்வாதம் கிடைக்கும்! எனது முகத்தை ஆர்வத்துடன் தேடும் அனைவருக்கும் நிச்சயமாக புதிய வெளிச்சம், புதிய தெளிவு மற்றும் புதிய நுண்ணறிவு ஆகியவற்றைப் பெறுவார்கள்; அனைத்தும் புத்தம் புதியதாக இருக்கும். எனது வார்த்தைகள் எந்த நேரத்திலும் உனக்குத் தோன்றும், மேலும் அவை உனது ஆவியின் கண்களைத் திறக்கும், இதன்மூலம் நீ ஆவிக்குரிய ராஜ்யத்தின் அனைத்து இரகசியங்களையும் காண்பாய், மேலும் ராஜ்யமானது மனுஷரிடையே இருப்பதையும் நீ காண்பாய். அடைக்கலத்திற்குள் பிரவேசித்துவிடு, எல்லா கிருபையும் ஆசீர்வாதங்களும் உன் மீது இருக்கும்; பஞ்சத்தாலும் வாதையினாலும் உன்னைத் தொட முடியாது, மேலும் ஓநாய்கள், சர்ப்பங்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் ஆகியவற்றால் உனக்கு தீங்கு செய்ய முடியாது. நீ என்னுடன் வருவாய், என்னுடன் நடப்பாய், என்னுடன் மகிமைக்குள் பிரவேசிப்பாய்!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் என்பதன் “அத்தியாயம் 15” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 52
சர்வவல்லமையுள்ள தேவன்! அவருடைய மகிமையான சரீரம் வெளியரங்கமாகத் தோன்றுகிறது, பரிசுத்த ஆவிக்குரிய சரீரம் எழும்புகிறது, அவரே பரிபூரணமான தேவன்! உலகமும் மாம்சமும் மாற்றப்பட்டிருக்கின்றன, மேலும் மலையில் அவரது மறுரூபமாவது தேவனாக இருக்கிறார். அவர் தமது சிரசின் மேல் பொற்கிரீடத்தை அணிந்திருக்கிறார், அவரது அங்கியானது மிக வெண்மையாக இருக்கிறது, அவரது மார்பைச் சுற்றி பொற்கச்சை ஒன்று இருக்கிறது, மேலும் உலகில் இருக்கும் அனைத்தும் அவரது பாதபடியாக இருக்கிறது. அவரது கண்கள் அக்கினிஜுவாலைகள் போன்று இருக்கின்றன; அவர் தமது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களையும், தமது வாயில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தையும் ஏந்தியிருக்கிறார். ராஜ்யத்திற்கான பாதையானது எல்லையற்ற பிரகாசத்தைக் கொண்டிருக்கிறது, அவருடைய மகிமை எழும்பிப் பிரகாசிக்கிறது; மலைகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன, சமுத்திரங்கள் சிரிக்கின்றன, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் அவற்றின் ஒழுங்கான ஏற்பாட்டில் சுழல்கின்றன, இவையனைத்தும் தனித்துவமான, மெய்த்தேவனை வரவேற்கின்றன, அவரது வெற்றிகரமான வருகையானது அவரது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டம் நிறைவடைவதை அறிவிக்கிறது. அனைவரும் குதித்தெழுந்து மகிழ்ச்சியுடன் நடனமாடுங்கள்! மகிழ்ச்சி கொள்ளுங்கள்! சர்வவல்லமையுள்ள தேவன் தம்முடைய மகிமையான சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்! பாடுங்கள்! சர்வவல்லவரின் வெற்றிக் கொடி மாட்சிமையான, அற்புதமான சீயோன் மலையின் மீது உயர்த்தப்பட்டிருக்கிறது! எல்லா தேசங்களும் மகிழ்ச்சியடைகின்றன, எல்லா ஜனங்களும் பாடுகிறார்கள், சீயோன் மலை மகிழ்ச்சியுடன் சிரிக்கிறது, மேலும் தேவனின் மகிமையானது எழும்பியிருக்கிறது! தேவனின் முகத்தை நான் காண்பேன் என்று நான் சொப்பனத்திலும் நினைத்ததில்லை, ஆனால் இன்று நான் அதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவருடன் நேருக்கு நேர் சென்று, நான் எனது இருதயத்தை அவரிடம் திறந்து காண்பிக்கிறேன். அவர் ஏராளமான போஜனத்தையும் பானங்களையும் வழங்குகிறார். ஜீவிதம், வார்த்தைகள், செயல்கள், எண்ணங்கள், கருத்துக்கள்—அவருடைய மகிமைமிக்க வெளிச்சம் இவை அனைத்தையும் ஒளிரச் செய்கிறது. பாதையின் ஒவ்வொரு அடியிலும் அவர் வழிநடத்துகிறார், மேலும் அவருடைய நியாயத்தீர்ப்பானது எந்தவொரு கலகக்கார இருதயத்திற்கும் உடனடியாக வருகிறது.
புசிப்பது, ஒன்றாக வசிப்பது, தேவனுடன் சேர்ந்து ஜீவிப்பது, அவருடன் ஒன்றாக இருப்பது, ஒன்றாக நடப்பது, ஒன்றாக மகிழ்வது, மகிமையையும் ஆசீர்வாதங்களையும் பெறுவது, அவருடன் ராஜ்யத்தைப் பகிர்ந்துகொள்வது, மற்றும் ராஜ்யத்தில் ஒன்றாக இருப்பது—ஆஹா, இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! ஆஹா, இது எவ்வளவு இனிமையான விஷயம்! நாம் ஒவ்வொரு நாளும் அவரை முக முகமாகப் பார்க்கிறோம், ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுகிறோம், தொடர்ந்து பேசுகிறோம், மேலும் ஒவ்வொரு நாளும் புதிய தெளிவும் புதிய நுண்ணறிவுகளும் வழங்கப்படுகின்றன. நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படுகின்றன, நாம் எல்லாவற்றையும் காண்கிறோம்; ஆவியின் இரகசியங்கள் அனைத்தும் நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. பரிசுத்தமான ஜீவிதமானது உண்மையில் கவலையற்றதாக இருக்கிறது; வேகமாக ஓடுங்கள், நிற்க வேண்டாம், தொடர்ந்து முன்னேறுங்கள்—இன்னும் அதிசயமான ஜீவிதம் காத்திருக்கிறது. வெறுமனே இனிமையான சுவையுடன் திருப்தி அடைய வேண்டாம்; தேவனுக்குள் பிரவேசிக்க தொடர்ந்து முற்படுங்கள். அவர் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர், தாராளமானவர், மேலும் நம்மிடம் இல்லாத எல்லா வகையான விஷயங்களும் அவரிடம் உள்ளன. முன்கூட்டியே ஒத்துழைத்து அவருக்குள் பிரவேசியுங்கள், எதுவும் மீண்டும் ஒரே மாதிரியாக இருக்காது. நமது ஜீவிதம் உயர்ந்ததாக இருக்கும், எந்தவொரு நபராலும், விஷயத்தாலும், காரியத்தாலும் நம்மை தொந்தரவு செய்ய முடியாது.
மகிமை! மகிமை! மெய்யான மகிமை! தேவனின் மகிமையான ஜீவிதம் உள்ளே இருக்கிறது, அனைத்து விஷயங்களும் உண்மையிலேயே தளர்ந்திருக்கின்றன! கணவர்களுடனோ அல்லது பிள்ளைகளுடனோ எந்தவிதமான தொடர்பையும் உணராமல், உலகத்தையும் உலக விஷயங்களையும் நாம் கடக்கிறோம். நோய் மற்றும் சூழல்களின் கட்டுப்பாட்டை நாம் கடக்கிறோம். சாத்தான் நம்மை தொந்தரவு செய்யத் துணிவதில்லை. எல்லா பேரழிவுகளையும் நாம் முற்றிலுமாக கடக்கிறோம். இது தேவனை அரசாட்சியை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது! நாம் சாத்தானைக் காலின்கீழ் மிதித்து, திருச்சபைக்கு சாட்சியாக நிற்கிறோம், மேலும் சாத்தானின் அசிங்கமான முகத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறோம். திருச்சபையின் கட்டுமானம் கிறிஸ்துவின் மீது உள்ளது, மேலும் மகிமையான சரீரமானது எழும்பியிருக்கிறது—இது எடுத்துக்கொள்ளப்படுதலில் ஜீவிக்கிறது!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் என்பதன் “அத்தியாயம் 15” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 53
சர்வவல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு, நமது தேவனே ராஜா! சர்வவல்லமையுள்ள தேவன் ஒலிவ மலையில் தனது பாதங்களை வைக்கிறார். அது எவ்வளவு அழகாக இருக்கிறது! கேளுங்கள்! ஜாமக்காரர்களாகிய நாங்கள் எங்கள் குரல்களை உயர்த்துகிறோம்; தேவன் சீயோனுக்குத் திரும்பியதால், எங்கள் குரல்களால் நாங்கள் ஒன்றாகப் பாடுகிறோம். எருசலேமின் பாழடைந்த தோற்றத்தை எங்கள் கண்களால் காண்கிறோம். நாங்கள் சந்தோஷமான சத்தத்திற்குள் நுழைந்து ஏகமாய் பாடுகிறோம், ஏனென்றால் தேவன் எங்களுக்கு ஆறுதல் அளித்து, எருசலேமை மீட்டுக்கொண்டார். தேவன் தம்முடைய பரிசுத்த கையை எல்லா தேசங்களின் கண்களுக்கு முன்பாகவும் வெளிப்படுத்துகிறார், தேவனின் உண்மையான நபர் தோன்றுகிறார்! பூமியின் எல்லா எல்லைகளில் உள்ளவர்களும் நம் தேவனின் இரட்சிப்பைக் காண்கிறார்கள்.
ஓ, சர்வவல்லமையுள்ள தேவனே! உமது மறைபொருட்கள் அனைத்தையும் வெளிப்படுத்த ஏழு ஆவிகள் உமது சிங்காசனத்திலிருந்து ஒவ்வொரு திருச்சபைக்கும் அனுப்பப்படுகின்றன. உமது மகிமையின் சிங்காசனத்தில் அமர்ந்து, உம்முடைய ராஜ்யத்தை நிர்வகித்து, அதை நேர்மையுடனும் நீதியுடனும் உறுதியாகவும், நிலையானதாகவும் ஆக்கியுள்ளீர்கள், எல்லா நாடுகளையும் உமக்கு முன்பாகக் கீழ்ப்படுத்தினீர். ஓ, சர்வவல்லமையுள்ள தேவனே! நீர் ராஜாக்களின் இடைக்கட்டுக்களை அவிழ்த்துவிட்டீர், நகரத்தின் வாசல்களை ஒருபோதும் மூடாதபடிக்கு உமக்கு முன்பாகத் திறந்துவிட்டிருக்கிறீர். உம்முடைய ஒளி வந்துவிட்டது, உம்முடைய மகிமை உயர்ந்து, அதன் பிரகாசத்தை வெளிப்படுத்துகிறது. இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடுகின்றன. ஓ, தேவனே! ஆயினும், நீர் தோன்றி, உமது ஒளியை எங்கள் மீது பிரகாசித்திருக்கிறீர், உம்முடைய மகிமை எங்கள்மீது காணப்படும்; எல்லா தேசங்களும் உம்முடைய வெளிச்சத்திற்கும், ராஜாக்கள் உம்முடைய பிரகாசத்திற்கும் வருவர். நீர் உமது கண்களை உயர்த்தி சுற்றிப் பார்க்கிறீர்: உமது குமாரர்கள் உமக்கு முன்பாகக் கூடிவருகிறார்கள், அவர்கள் தூரத்திலிருந்து வருகிறார்கள்; உமது குமாரத்திகள் கைகளில் சுமக்கப்படுகிறார்கள். ஓ, சர்வவல்லமையுள்ள தேவனே! உமது மிகுதியான அன்பு எங்களைப் பிடித்திருக்கிறது; உம்முடைய ராஜ்யத்திற்கான பாதையில் எங்களை முன்னோக்கி அழைத்துச் செல்வது நீர் தான், உம்முடைய பரிசுத்த வார்த்தைகளே எங்களுக்குள் ஊடுருவுகின்றன.
ஓ, சர்வவல்லமையுள்ள தேவனே! நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், நாங்கள் உம்மைப் புகழ்கிறோம்! நாங்கள் உம்மைக் கண்டு, உமக்கு சாட்சிக் கூறி, உம்மை உயர்த்தி, நேர்மையான, அமைதியான, முழு இருதயத்தோடு உம்மைப் பாடுகிறோம். நாம் ஒருமனப்பட்டு, ஒன்றாகக் கட்டியெழுப்பப்பட்டிருப்போம், விரைவில் உமது இருதயத்தை பின்தொடர்பவர்களாகவும், நீர் பயன்படுத்தும்படிக்கும் எங்களை மாற்றுவீராக. அதன்மூலம் உமது சித்தம் பூமியில் தடையின்றி நிறைவேற்றப்படும்!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் என்பதன் “அத்தியாயம் 25” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 57
கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனை பெற்றுக்கொள்ளும் வழியாகும். இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளும் ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருளாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சள் புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் ஞானத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள மறைபொருட்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே பரலோகத்திற்குச் சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.
கிறிஸ்து பேசும் சத்தியத்தை நம்பாமல் ஜீவனைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்படுவோர், பூமியின் மேல் மிகவும் பரியாசம் பண்ணுகிற ஜனங்களாவர், கிறிஸ்து கொண்டுவரும் ஜீவனுக்கான வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கற்பனையில் தொலைந்து போனவர்கள். ஆகையால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவனால் என்றென்றும் வெறுக்கப்படுவார்கள் என்று சொல்கிறேன். கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சுற்றிச் செல்லக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வழங்கும் ஜீவனை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி உன்னால் சிந்திக்கவே இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ எதிர்த்தால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ வெறுத்து ஒதுக்கினால், அதற்கான பின்விளைவுகளைத் தாங்கிக்கொள்ள வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். மேலும், இந்த நாள் முதல் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள உனக்கு வேறொரு வாய்ப்பும் கிடைக்காது; நீ உன்னைச் சரிக்கட்ட முயற்சி செய்தாலும், நீ தேவனுடைய முகத்தை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டாய். நீ எதிர்ப்பது ஒரு மனிதன் அல்ல, நீ வெறுத்து ஒதுக்குவது சில மோசமானவர்கள் அல்ல, ஆனால் கிறிஸ்துவையே எதிர்க்கவும், வெறுத்து ஒதுக்கவும் செய்கிறாய். இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று உனக்குத் தெரியுமா? நீ சிறு தவறு செய்யாமல், மிகவும் வெறுக்கத் தக்க ஒரு குற்றத்தைச் செய்திருப்பாய். ஆகையால், சத்தியத்திற்கு முன்னால் உன் நச்சுப்பற்களைத் திறக்க வேண்டாம், அல்லது கவனக்குறைவான பரியாசங்களைச் செய்ய வேண்டாம் என்று எல்லோருக்கும் அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் சத்தியத்தால் மட்டுமே உனக்கு ஜீவனைக் கொண்டு வர இயலும், மேலும் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் உன்னை மறுபடியும் பிறக்கச் செய்யவும், தேவனுடைய முகத்தை மீண்டும் பார்க்க வைக்கவும் உதவாது.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியை கொடுக்க இயலும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 59
திரளான ஜனங்கள் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள், திரளான ஜனங்கள் என்னைப் போற்றுகிறார்கள்; சகல வாய்களும் ஒரே மெய்யான தேவன் என்று அழைக்கிறார்கள், சகல ஜனங்களும் என் கிரியைகளைக் காணக் கண்களை உயர்த்துகிறார்கள். ராஜ்யமானது மனுஷரின் உலகில் இறங்குகிறது, என்னவர் பணக்காரராகவும், ஏராளமானவற்றைக் கொண்டவராகவும் இருக்கிறார். இதைப் பார்த்து யார் தான் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்? மகிழ்ச்சியின் காரணமாக யார் தான் நடனமாட மாட்டார்கள்? ஓ, சீயோனே! என்னைக் கொண்டாட உன் வெற்றிக் கொடியை உயர்த்து! என் பரிசுத்த நாமத்தைப் பரப்ப உன் ஜெயங்கொண்ட வெற்றிப் பாடலைப் பாடு! பூமியின் முனைகள் வரை இருக்கும் சகல சிருஷ்டிப்புகளே! நீங்கள் உங்களை எனக்கு ஒப்புக்கொடுக்க உங்களை நீங்களே சுத்திகரித்துக் கொள்ளுங்கள்! மேலே வானத்தில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களே! என் வல்லமைமிக்க சக்தியை வானத்தில் காட்ட உங்கள் இடங்களுக்கு விரைந்து செல்லுங்கள்! பூமியில் தங்கள் எல்லையற்ற அன்பையும் பயபக்தியையும் பாடலாக ஊற்றும் ஜனங்களின் குரல்களுக்கு நான் செவிசாய்க்கிறேன்! இந்த நாளில், எல்லா சிருஷ்டிப்புகளும் ஜீவனுக்குத் திரும்பும்போது, நான் மனுஷரின் உலகத்திற்கு வருகிறேன். இந்த தருணத்தில், இதே சந்தர்ப்பத்தில், பூக்கள் அனைத்தும் கட்டுக்கடங்காமல் பூக்கின்றன, சகல பறவைகளும் ஒரே குரலில் பாடுகின்றன, சகலமும் மகிழ்ச்சியுடன் துள்ளுகின்றன! ராஜ்யத்தின் வணக்கத்தின் சத்தத்தில், சாத்தானின் ராஜ்யம் கவிழ்ந்துபோகிறது, மீண்டும் ஒருபோதும் எழாதபடிக்கு ராஜ்ய கீதத்தின் இடி முழக்கத்தால் அழிக்கப்படுகிறது!
பூமியில் யார் எழுந்து எதிர்க்கத் துணிகிறார்கள்? நான் பூமிக்கு இறங்கும்போது, நான் நெருப்பைக் கொண்டுவருகிறேன், கோபத்தைக் கொண்டுவருகிறேன், எல்லா வகையான பேரழிவுகளையும் கொண்டு வருகிறேன். பூமிக்குரிய ராஜ்யங்கள் இப்போது என் ராஜ்யம்! வானத்தின் மேலே, மேகங்கள் கவிழ்ந்து நீர்த்திரை ஆகின்றன; வானத்தின் கீழ், ஏரிகளும் ஆறுகளும் துள்ளியெழுந்து மகிழ்ச்சியுடன் ஒரு கலவையான இன்னிசையை வெளிப்படுத்துகின்றன. ஓய்வெடுக்கும் மிருகங்கள் அவற்றின் குகைகளிலிருந்து வெளிப்படுகின்றன, சகல ஜனங்களும் என்னால் தங்கள் நித்திரையிலிருந்து எழுப்பப்படுகிறார்கள். பன்முக ஜனங்கள் எதிர்பார்த்த நாள் ஒருவழியாக வந்துவிட்டது! அவர்கள் மிக அழகான பாடல்களை எனக்கு ஏறெடுக்கிறார்கள்!
இந்த அழகான தருணத்தில், இந்தக் களிப்பூட்டும் நேரத்தில்,
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், சகல இடங்களிலும் புகழ் ஒலிக்கிறது. இதில் யார் தான் உற்சாகமாக இருக்க மாட்டார்கள்?
யாருடைய இதயம் ஒளிராது? இந்தக் காட்சியில் யார் தான் அழ மாட்டார்கள்?
வானம் பழைய வானம் அல்ல, இப்போது அது ராஜ்யத்தின் வானம்.
பூமி, முன்பிருந்த பூமி அல்ல, இப்போது அது பரிசுத்த நிலம்.
ஒரு கனமழைக்குப் பிறகு, இழிவான பழைய உலகம் முழுவதுமாக புதிதாக மாறுகிறது.
மலைகள் மாறுகின்றன… நீர்நிலைகள் மாறுகின்றன…
ஜனங்களும் மாறுகிறார்கள்… சகலமும் மாறுகின்றன….
ஓ, அமைதியான மலைகளே! எனக்காக எழுந்து நடனமாடுங்கள்!
ஓ, ஓடாமல் நிற்கும் நீர்நிலைகளே! சுதந்திரமாகப் பொங்கி வழிந்தோடுங்கள்!
சொப்பனங்காணும் மனுஷரே! நீங்களாகவே எழுந்து ஓடுங்கள்!
நான் வந்திருக்கிறேன்… நான் தான் ராஜா….
சகல மனுஷரும் தங்கள் கண்களால் என் முகத்தைக் காண்பார்கள், தங்கள் காதுகளால் என் குரலைக் கேட்பார்கள்,
ராஜ்யத்தின் ஜீவனை அவர்கள் ஜீவிப்பார்கள்….
எவ்வளவு இனிமையாக இருக்கிறது… எவ்வளவு அழகாக இருக்கிறது….
மறக்க முடியாதது… மறக்க இயலாதது….
கொழுந்துவிட்டெரியும் என் கோபத்தில், சிவப்பான பெரிய வலுசர்ப்பம் போராடுகிறது;
என் மகத்தான நியாயத்தீர்ப்பில், பிசாசுகள் அவற்றின் உண்மையான வடிவங்களைக் காட்டுகின்றன;
என் கடுமையான வார்த்தைகளில், ஜனங்கள் அனைவரும் ஆழ்ந்த அவமானத்தை உணர்கிறார்கள், தங்களை மறைத்துக்கொள்ள இடமேதும் இல்லை.
அவர்கள் கடந்த காலத்தையும், எப்படி என்னை கேலி செய்து தூற்றினார்கள் என்பதையும் நினைவுகூறுகிறார்கள்.
அவர்கள் தங்களை வெளிக்காட்டாத ஒரு காலமும், என்னை மீறாத ஒரு காலமும் இருந்ததில்லை.
இன்று, யார் தான் அழுவதில்லை? யார் தான் வருத்தப்படுவதில்லை?
பிரபஞ்ச உலகம் முழுவதும் அழுகையால் நிறைந்திருக்கிறது…
சந்தோஷ ஒலிகளால் நிறைந்திருக்கிறது… சிரிக்கும் குரல்களால் நிறைந்திருக்கிறது….
ஒப்பிடமுடியாத மகிழ்ச்சி… ஒப்பீடு இல்லாத மகிழ்ச்சி….
ஒரு சிறிய மழை பெய்கின்றது… சிறகடிகும் கனமான வெண்பனிச் சிம்புகளுடன்….
ஜனங்களுக்குள்ளே, துக்கமும் மகிழ்ச்சியும் மாறிமாறி வருகின்றன… சிலர் சிரிக்கிறார்கள்…
சிலர் அழுகிறார்கள்… சிலர் ஆரவாரம் செய்கிறார்கள்….
எல்லோரும் மறந்துவிட்டதைப் போல… இது மழை மற்றும் மேகங்களால் நிறைந்த வசந்த காலம் என்று,
மலர்கள் விரிந்து மலரும் கோடைக்காலம் என்று, வளமான அறுவடைகளின் இலையுதிர் காலம் என்று,
அல்லது உறைபனியும் பனிக்கட்டிகளும் இருக்கும் குளிர்காலம் என்று, யாருக்கும் தெரியாது….
வானத்தில் மேகங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன, பூமியில் சமுத்திரங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன.
புத்திரர்கள் தங்கள் கைகளை அசைக்கிறார்கள்… ஜனங்கள் நடனமாடுகையில் தங்கள் கால்களை நகர்த்துகிறார்கள்….
தேவதூதர்கள் கிரியை செய்கிறார்கள்… தேவதூதர்கள் மேய்க்கிறார்கள்….
பூமியிலுள்ள ஜனங்கள் அனைவரும் சந்தடி செய்கிறார்கள், பூமியில் உள்ள அனைத்தும் பலுகிப் பெருகுகின்றன.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “ராஜ்ய கீதம்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 60
மனிதகுலத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் என் ஆவியால் ஆராயப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் உன்னிப்பாக ஆராய வேண்டும், மேலும், எனது அதிசய செயல்களையும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். ராஜ்யம் பூமிக்கு வந்த நேரத்தில் அதை நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? என் புத்திரர்களும் மக்களும் என் சிங்காசனத்தை நோக்கி விரைந்து வரும்போது, பெரிய வெள்ளை சிங்காசனத்தின் முன்பாக நான் முறையாக நியாயத்தீர்ப்பைத் தொடங்குகிறேன். அதாவது, நான் பூமியில் எனது கிரியையை நேரில் சென்று தொடங்கும் போது மற்றும் நியாயத்தீர்ப்பின் சகாப்தம் அதன் முடிவுக்கு வரும்போது, எனது வார்த்தைகளை முழு பிரபஞ்சத்திற்கும் வழிநடத்தத் தொடங்குகிறேன், மேலும் என் ஆவியின் சத்தத்தை முழு பிரபஞ்சத்திற்கும் வெளியிடுகிறேன். பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றிலும் எல்லா ஜனங்களையும் பொருட்களையும், என் வார்த்தைகளின் மூலம் நான் சுத்தமாகக் கழுவுவேன், இதனால் பூமியானது இனிமேல் அசுத்தமாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இல்லாமல் ஒரு பரிசுத்த ராஜ்யமாக இருக்கும். எல்லாவற்றையும் நான் புதுப்பிப்பேன், இதனால் அவை என் பயன்பாட்டிற்கு வைக்கப்படும், இதனால் அவை இனி பூமியின் சுவாசத்தைத் தாங்கி இருக்காது, மேலும் மண்ணின் வாசனையால் அவை கறைபடாது. பூமியில், மனிதன் என் வார்த்தைகளின் குறிக்கோள் மற்றும் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிக் கொண்டான், என் செயல்களைக் கவனித்திருக்கிறான், ஆனாலும் என் வார்த்தைகளின் தோற்றத்தின் ஆரம்பத்தை யாரும் உண்மையிலேயே அறிந்திருக்கவில்லை, என் செயல்களில் உள்ள அதிசயத்தை யாரும் உண்மையிலேயே கண்டதில்லை. இன்றுதான், நான் நேரடியாக வந்து மனிதர்களிடையே என் வார்த்தைகளைப் பேசும்போது, அவர்களின் எண்ணங்களில் “நான்” என்பது ஆக்கிரமித்துள்ள இடத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நடைமுறை தேவனுக்கு அவர்களின் பிரக்ஞையில் ஒரு இடத்தை உருவாக்கும்போது, மனிதனுக்கு என்னைப் பற்றி கொஞ்சம் தெரிகிறது. மனிதனுக்கு எண்ணங்கள் உள்ளன, மிகுந்த ஆர்வம் உள்ளது; யார்தான் தேவனைப் பார்க்க விரும்பவில்லை? தேவனைச் சந்திக்க விரும்பாதவர் யார்? ஆயினும், மனிதனின் இதயத்தில் ஒரு திட்டவட்டமான இடத்தைப் பிடிக்கும் ஒரே விஷயம், தெளிவற்ற மற்றும் எண்ணத்தில் மனிதன் உணரும் தேவன். நான் அவர்களிடம் தெளிவாகச் சொல்லாவிட்டால் இதை யார் உணருவார்கள்? நான் உண்மையிலேயே இருக்கிறேன் என்று, இம்மியளவும் சந்தேகம் இல்லாமல், யார் உறுதியாக நம்புவார்கள்? மனிதனின் இருதயத்தில் உள்ள “நான்” மற்றும் யதார்த்தத்தில் உள்ள “நான்” ஆகியவற்றுக்கு இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது, மேலும் யாராலும் அவற்றுக்கிடையே ஒப்பீடுகளைச் செய்ய இயலாது. நான் மாம்சமாக மாறாவிட்டால், மனிதன் என்னை ஒருபோதும் அறியமாட்டான், அவன் என்னை அறிய நேர்ந்தாலும்கூட, அத்தகைய அறிவு அப்போதும் ஒரு எண்ணமாக இருக்காதா? ஒவ்வொரு நாளும் நான் ஜனங்கள் இடைவிடாமல் பாயும் ஜனங்கள் வெள்ளத்துக்கு மத்தியில் நடக்கிறேன், ஒவ்வொரு நாளும் நான் ஒவ்வொரு நபருக்குள்ளும் செயல்படுகிறேன். மனிதன் என்னை உண்மையாகப் பார்க்கும்போது, அவன் என் வார்த்தைகளால் என்னை அறிந்து கொள்ள முடியும், மேலும் நான் பேசும் வழிமுறைகளையும் என் நோக்கங்களையும் புரிந்துகொள்வான்.
ராஜ்யம் முறையாக பூமிக்கு வந்து சேரும்போது, எல்லாவற்றிற்கும் மேலாக, எது அமைதியாக இல்லாதது? எல்லா ஜனங்களிடையேயும் பயப்படாதவர் யார்? நான் பிரபஞ்ச உலகம் முழுவதிலும் எல்லா இடங்களிலும் நடக்கிறேன், எல்லாமே நேரடியாக என்னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், என் செயல்கள் அற்புதமானவை என்று யாருக்குத் தெரியாது? என் கைகள் எல்லாவற்றையும் உயர்த்திப் பிடிக்கின்றன, ஆனாலும் நான் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறேன். இன்று, என் மனத்தாழ்மை மற்றும் மறைவின் உண்மையான அர்த்தம் என் அவதரிப்பு மற்றும் மனிதர்களிடையே எனது தனிப்பட்ட பிரசன்னம் ஆகியவை அல்லவா? வெளிப்புறமாக, பலர் என்னை நல்லவர் என்று போற்றுகிறார்கள், என்னை அழகுள்ளவர் என்று துதிப்பார்கள், ஆனால் என்னை உண்மையாக அறிந்தவர் யார்? இன்று, என்னை அறிந்திருக்கிறீர்களா என்று உங்களை நான் ஏன் கேட்கிறேன்? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வெட்கப்படச் செய்வது என் நோக்கம் அல்லவா? என்னைத் துதிக்கும்படி மனிதனை வற்புறுத்த நான் விரும்பவில்லை, ஆனால் அவன் என்னை அறியும்படியும், அதன் மூலம் அவன் என்னை நேசிக்கும்படியும், அதனால் அவன் என்னைத் துதிக்கும்படியும் செய்வேன். இத்தகைய துதி அதன் பெயருக்குத் தகுதியானது, மேலும் இது வெற்றுப் பேச்சு அல்ல; இது போன்ற துதித்தல் மட்டுமே என் சிங்காசனத்தை அடைந்து வானத்தில் மேலே செல்லமுடியும். ஏனென்றால், மனிதன் சாத்தானால் தூண்டப்பட்டு, சீர்கேடு அடைந்துள்ளான், ஏனென்றால் அவன் எண்ணங்களாலும் சிந்தனையினாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறான், மனிதகுலம் முழுவதையும் தனிப்பட்ட முறையில் வெல்லவும், மனிதனின் எல்லா எண்ணங்களையும் வெளிப்படுத்தவும், மனிதனின் சிந்தனையைக் கிழித்து எறியவும் நான் மாம்சமாக மாறியுள்ளேன். இதன் விளைவாக, மனிதன் இனிமேல் எனக்கு முன்னால் வந்து எதிர்த்து நிற்க மாட்டான், இனிமேல் அவனது சொந்த எண்ணங்களைப் பயன்படுத்தி எனக்குச் சேவை செய்ய மாட்டான், இதனால் மனிதனின் எண்ணங்களில் உள்ள “நான்” முற்றிலும் அகற்றப்படுகிறது. ராஜ்யம் வரும்போது, நான் முதலில் செய்வது இந்தக் கட்டத்தின் வேலையைத் தொடங்குவது, மேலும் நான் என் மக்களிடையே அவ்வாறே செய்கிறேன். சிவப்பான பெரிய வலுசர்ப்ப நாட்டில் பிறந்த எனது ஜனங்கள் என்ற முறையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் விஷத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமல்ல, அல்லது ஒரு பகுதியாவது நிச்சயமாக உங்களுக்குள் இருக்கும். எனவே, எனது கிரியையின் இந்த கட்டம் முதன்மையாக உங்கள் மீது கவனம் செலுத்துகிறது, இது சீனாவில் எனது அவதரிப்பின் முக்கியத்துவத்தின் ஒரு அம்சமாகும். நான் பேசும் சொற்களின் ஒரு துணுக்கைக் கூட பெரும்பாலான ஜனங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை, அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அவர்களின் புரிதல் மங்கலாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. இதுதான் நான் பேசும் முறையின் திருப்புமுனையாகும். எல்லா ஜனங்களும் என் வார்த்தைகளைப் படித்து அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள முடிந்தால், மனிதர்களில் யார் பாதாளத்தில் தள்ளப்படாமல் காப்பாற்றப்படக் கூடும்? மனிதன் என்னை அறிந்திருக்கும்போது, எனக்குக் கீழ்ப்படியும்போது, அதுதான் நான் ஓய்வெடுக்கும் நேரமாக இருக்கும், அதுவே என் வார்த்தைகளின் அர்த்தத்தை மனிதனால் புரிந்துகொள்ளக்கூடிய நேரமாக இருக்கும். இன்று, உங்கள் அந்தஸ்து மிகச் சிறியது—இது கிட்டத்தட்டப் பரிதாபகரமான அளவுக்கு சிறியது, மேலே உயர்த்தப்படுவதற்குக் கூட தகுதியற்றது—என்னைப் பற்றிய உங்கள் அறிவைப் பற்றி எதுவும் கூறவேண்டியதில்லை.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 11” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 61
கிழக்கிலிருந்து மின்னல் வெட்டும் சமயம், நான் என் வார்த்தைகளைப் பேசத் தொடங்கும் தருணமும் அதுவே—மின்னல் வெட்டும்போது, பரலோகம் முழுவதும் ஒளிர்கிறது, அனைத்து நட்சத்திரங்களிலும் ஒரு மாற்றம் நிகழ்கிறது. மனித இனம் முழுவதும் நிவர்த்தி செய்யப்பட்டதைப் போல் இருக்கிறது. கிழக்கிலிருந்து வரும் இந்த வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ், மனுஷர் அனைவரும் அவர்களது உண்மையான வடிவத்தில் வெளிப்படுகின்றனர், அவர்களின் கண்கள் என்ன செய்வது என்று தெரியாமல், மேலும் தங்களது அசிங்கமான அம்சங்களை எவ்வாறு மறைப்பது என்று உறுதியாக தெரியாமல் திகைத்து நிற்கின்றன. அவர்கள் என் வெளிச்சத்திலிருந்து தப்பி மலை குகைகளில் தஞ்சம் புகும் விலங்குகளைப் போல இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட என் வெளிச்சத்திலிருந்து வெளியேற முடியவில்லை. எல்லா மனுஷரும் திகைத்துப்போகிறார்கள், அனைவரும் காத்திருக்கிறார்கள், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; என் வெளிச்சத்தின் வருகையால், அவர்கள் பிறந்த நாளில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள், அதேபோல் அவர்கள் பிறந்த நாளை சபிக்கவும் செய்கிறார்கள். முரண்பட்ட உணர்ச்சிகளை தெளிவாகப் பேசுவது சாத்தியமில்லாதது; சுய—சிட்சையினால் வழியும் கண்ணீர் ஆறுகளாகி, அவை நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன, ஒரு நொடியில் தடயமின்றி செல்கின்றன. மீண்டும், என் நாள் அனைத்து மனுஷரையும் நெருங்குகிறது, மீண்டும் மனுஷ இனத்தைத் தூண்டி மனுஷருக்கு மற்றொரு புதிய தொடக்கத்தை அளிக்கிறது. என் இருதயம் துடிக்கிறது, என் இருதய துடிப்பின் தாளங்களைப் பின்பற்றி, மலைகள் மகிழ்ச்சியுடன் குதிக்கின்றன, கடல் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது, அலைகள் கற்பாறைகள் மீது மோதுகின்றன. என் இருதயத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது கடினம். அசுத்தமான எல்லாவற்றையும் என் பார்வையினால் சாம்பலாக எரிக்க விரும்புகிறேன்; கீழ்ப்படியாமையின் மகன்கள் அனைவரும் என் கண்களுக்கு முன்பாக மறைந்து போக நான் விரும்புகிறேன், ஒருபோதும் காலம் தாழ்த்தப்போவதில்லை. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வசிப்பிடத்தில் நான் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், பிரபஞ்சத்தில் புதிய கிரியைகளையும் தொடங்கியிருக்கிறேன். விரைவில், பூமியின் ராஜ்யங்கள் என் ராஜ்யமாக மாறும்; விரைவில், என் ராஜ்யத்தின் காரணமாக பூமியின் ராஜ்யங்கள் என்றென்றும் முடிவிற்கு வரும், ஏனென்றால் நான் ஏற்கனவே வெற்றியை அடைந்துவிட்டேன், ஏனென்றால் நான் வெற்றிகரமாக திரும்பியிருக்கிறேன். பூமியில் எனது கிரியையை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனது திட்டத்தை சீர்குலைப்பதற்கு சாத்தியமான ஒவ்வொரு வழியையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டது, ஆனால் அதன் வஞ்சக தந்திரங்களால் என்னால் சோர்வடைய முடியுமா? அதன் அச்சுறுத்தல்களால் அஞ்சி என் நம்பிக்கையை என்னால் இழக்க முடியுமா? பரலோகத்திலோ பூமியிலோ நான் ஒருபோதும் என் உள்ளங்கையில் வைத்திருக்காத ஜீவன் எதுவுமில்லை; இந்தப் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனக்கு ஒரு சத்துருவாக செயல்படும் என்பது எந்தளவிற்கு உண்மை? இது என் கைகளால் கையாளப்பட வேண்டிய ஒரு பொருளல்லவா?
மனித உலகில் நான் அவதரித்த போது, மனுஷர் என் வழிகாட்டுதலின் கீழ், அவர்கள் அறியாமலேயே இன்றுவரை வந்துள்ளனர், அவர்கள் அறியாமலேயே என்னை அறிந்துகொண்டுள்ளனர். ஆனால், முன்னோக்கி செல்லும் பாதையில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது பற்றி யாருக்கும் சிறிதளவேனும் தெரிந்திருக்கவில்லை—மேலும் அந்தப் பாதை எந்த திசையில் செல்லும் என்பது பற்றி யாருக்கும் எந்த துப்பும் தெரிந்திருக்கவில்லை. சர்வவல்லவர் அவர்களைக் கவனிப்பதன் மூலம் மட்டுமே எவரும் இறுதியை நோக்கிச் செல்லும் பாதையில் நடக்க முடியும்; கிழக்கில் வெட்டும் மின்னலால் வழிநடத்தப்பட்டால் மட்டுமே என் ராஜ்யத்திற்கு வழிவகுக்கும் வாசலை யாராலும் கடக்க முடியும். மனுஷரிடையே, என் முகத்தைப் பார்த்த ஒருவர், கிழக்கில் மின்னலைக் கண்ட ஒருவர் என ஒருபோதும் எவரும் இருந்ததில்லை; என் சிங்காசனத்திலிருந்து ஒலிக்கும் சொற்களைக் கேட்ட ஒருவர் இருக்கிறாரா? உண்மையில், பண்டைய காலங்களிலிருந்து, ஒரு மனுஷன் கூட எனது ஆள்தத்துவத்துடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை; இன்று மட்டுமே, இப்போது நான் உலகிற்கு வந்திருப்பதால், மனுஷருக்கு என்னைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது கூட, மனுஷர் இன்னும் என்னை அறியவில்லை, ஏனென்றால் அவர்கள் என் முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள், என் குரலை மட்டுமே கேட்கிறார்கள், இன்னும் என் அர்த்தத்தை அறியவில்லை. எல்லா மனுஷரும் இப்படிப்பட்டவர்கள் தான். என் ஜனங்களில் ஒருவராக இருப்பதால், என் முகத்தைப் பார்க்கும்போது நீங்கள் ஆழ்ந்த பெருமையை உணரவில்லையா? நீங்கள் என்னை அறியாததால் நீங்கள் வெட்கப்படுவதை உணரவில்லையா? நான் மனுஷரிடையே நடக்கிறேன், மனுஷரிடையே வாழ்கிறேன், ஏனென்றால் நான் மாம்சமாகியிருக்கிறேன், மனுஷ உலகத்திற்கு வந்திருக்கிறேன். என் நோக்கம் வெறுமனே என் மாம்சத்தை மனுஷரைப் பார்க்க வைப்பது மட்டுமல்ல; மிக முக்கியமாக, மனுஷர் என்னை அறிந்துகொள்ள வைப்பதற்காகும். மேலும், நான் மனுஷனாக அவதரித்த மாம்சத்தின் மூலம், மனுஷர் செய்த பாவங்களை அவர்களுக்கு உணர்த்துவேன்; நான் என் மனுஷனாக அவதரித்த மாம்சத்தின் மூலம், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வென்று அதன் குகையை அழிப்பேன்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 12” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 62
பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் என் நாளின் வருகையை கொண்டாடுகிறார்கள், தேவதூதர்கள் என் எல்லா ஜனங்களிடையேயும் நடக்கிறார்கள். சாத்தான் பிரச்சனையை ஏற்படுத்தும்போது, தேவதூதர்கள், வானத்தில் அவர்கள் செய்யும் சேவையின் காரணமாக, எப்போதும் என் ஜனங்களுக்கு உதவுகிறார்கள். மனுஷ பலவீனம் காரணமாக அவர்கள் பிசாசால் ஏமாற்றப்படுவதில்லை, ஆனால் இருளின் சக்திகளின் தாக்குதலால், மூடுபனி ஊடே மனுஷனின் வாழ்க்கையை அனுபவிக்க மேலும் முயற்சி செய்கிறார்கள். என் ஜனங்கள் அனைவரும் என் பெயருக்குக் கீழ்ப்படிகிறார்கள், ஒருபோதும் என்னை வெளிப்படையாக எதிர்க்க யாரும் எழுந்திருப்பதில்லை. தேவதூதர்களின் உழைப்பால், மனுஷன் என் பெயரை ஏற்றுக்கொள்கிறான், அனைவரும் என் கிரியையின் நீரோட்டத்தின் மத்தியில் இருக்கிறார்கள். உலகம் வீழ்ச்சியடைகிறது! பாபிலோன் முடங்கி உள்ளது! ஓ, மத உலகமே! பூமியில் இருக்கும் என் அதிகாரத்தால் அதை எவ்வாறு அழிக்க முடியாமல் போகும்? எனக்குக் கீழ்ப்படியாமல் என்னை எதிர்க்கத் துணிந்தவர் யார்? எழுத்தாளர்களா? ஒவ்வொரு மத அதிகாரியுமா? பூமியில் இருக்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளுமா? தேவதூதர்களா? என் சரீரத்தின் பரிபூரணத்தையும் முழுமையையும் யார் கொண்டாடவில்லை? எல்லா ஜனங்களிடையேயும், யார் என் புகழை நிறுத்தாமல் பாடுவதில்லை, யார் மகிழ்ச்சியாக இல்லை? நான் பெரிய சிவப்பு வலுசர்ப்பத்தின் குகையில் வாழ்கிறேன், ஆனாலும் இது என்னை பயமுறுத்தி நடுங்கவைக்கவோ அல்லது ஓடவைக்கவோ செய்யாது, ஏனென்றால் அதன் ஜனங்கள் அனைவரும் ஏற்கனவே அதை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். வலுசர்ப்பத்தின் பொருட்டு அதன் முன் ஒருபோதும் அதன் “கடமையை” செய்யவில்லை; அதற்கு பதிலாக, எல்லாவற்றையும் அவர்கள் பொருத்தமாகப் பார்க்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழியில் செல்கின்றனர். பூமியில் உள்ள நாடுகள் எவ்வாறு அழியாமல்போகும்? பூமியில் உள்ள நாடுகள் எப்படி வீழாமல்போகும்? என் ஜனங்கள் எப்படி உற்சாகப்படாமல் இருப்பர்? அவர்களால் எப்படி மகிழ்ச்சியுடன் பாடாமல் இருக்கமுடியும்? இது மனுஷனின் கிரியையா? இதை மனுஷனின் கைகள் செய்கின்றனவா? நான் மனுஷனுக்கு அவனது இருப்பின் மூலத்தைக் கொடுத்தேன், அவனுக்குப் பொருள்களை வழங்கினேன், ஆனாலும் அவன் தனது தற்போதைய சூழ்நிலைகளில் அதிருப்தி அடைந்து என் ராஜ்யத்தில் நுழையக் கேட்கிறான். ஆனால், தன்னுடைய தன்னலமற்ற பக்தியை வழங்க விருப்பமில்லாமல், அதற்கான விலையைச் செலுத்தாமல், அவன் எப்படி என் ராஜ்யத்தில் இவ்வளவு எளிதில் நுழைய முடியும்? மனுஷனிடமிருந்து எதையும் பெறுவதற்குப் பதிலாக, பூமியில் என் ராஜ்யம் மகிமையால் நிரப்பப்படும்படி நான் அவனிடம் கேட்டு வாங்குகிறேன். தற்போதைய யுகத்திற்கு மனுஷன் என்னை வழிநடத்தியுள்ளான், அவன் இந்த நிலையில் தான் இருக்கிறான், மேலும் என் வெளிச்சத்தின் வழிகாட்டுதலின் மத்தியில் அவன் வாழ்கிறான். அவ்வாறு இல்லையென்றால், பூமியிலுள்ள ஜனங்களில் யார் தங்கள் வாய்ப்புகளை அறிவார்கள்? என் விருப்பத்தை யார் புரிந்துகொள்வார்கள்? மனுஷனிடம் கேட்டு வாங்கும் விஷயங்களில் எனது ஏற்பாடுகளைச் சேர்க்கிறேன்; இது இயற்கையின் விதிகளுக்கு ஏற்ப இல்லையா?
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 22” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 63
ராஜ்யத்தில், எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் புத்துயிர் பெற மற்றும் அவற்றின் உயிர் சக்தியை மீண்டும் பெறத் தொடங்குகின்றன. பூமியின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஒரு நிலத்துக்கும் மற்றொரு நிலத்துக்கும் இடையிலான எல்லைகளும் மாறத் தொடங்குகின்றன. ஒரு நிலம் மற்றொரு நிலத்திலிருந்து பிரிக்கப்படும்போது, ஒரு நிலமும் மற்றொரு நிலமும் ஒன்றிணையும்போது, இந்த நேரத்தில்தான் நான் எல்லா நாடுகளையும் துண்டு துண்டாக உடைப்பேன் என்று நான் தீர்க்கதரிசனம் கூறியுள்ளேன். இந்த நேரத்தில், படைக்கப்பட்ட அனைத்தையும் புதுப்பித்து முழு பிரபஞ்சத்தையும் நான் மறுபகிர்வு செய்வேன், இதன்மூலம் பிரபஞ்சத்தை ஒழுங்கமைத்து பழையதைப் புதியதாக மாறுதல் செய்வேன்—இதுதான் எனது திட்டம் மற்றும் இவைதான் எனது கிரியைகள். தேசங்களும் உலக மக்களும் அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி வரும்போது, நான் வானத்தின் அருட்கொடை அனைத்தையும் எடுத்து அதனை மனித உலகிற்கு ஒப்படைப்பேன், இதனால், என் நிமித்தம், அந்த உலகம் இணையற்ற அருட்கொடையுடன் இருக்கும். ஆனால் பழைய உலகம் தொடர்ந்து இருக்கும் வரை, நான் அதன் தேசங்களின் மீது என் கோபத்தை வெளிப்படுத்துவேன், பிரபஞ்சம் முழுவதும் எனது நிர்வாக ஆணைகளை வெளிப்படையாக பிரகடனம் பண்ணுவேன், அவற்றை மீறுபவர் எவராக இருந்தாலும் அவர் தண்டனை பெறுகிறாரா என்று பார்ப்பேன்:
நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக் கேட்பார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்ப்பார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனித காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றை புதியதாக ஆக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்கும் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லாத் தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது நீரோடைகளுக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெள்ளை மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்த சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்.
எனது சத்தம் தீவிரமாக ஆழம் அடையும்போது, பிரபஞ்சத்தின் நிலையையும் நான் கவனிக்கிறேன். என் வார்த்தைகள் மூலம், படைக்கப்பட்ட எண்ணற்ற வஸ்துக்கள் அனைத்தும் புதியவை ஆக்கப்படும். பூமியைப் போலவே வானமும் மாறுகிறது. மனித குலம் அதன் மூல முதல் வடிவத்திற்கு வெளிப்படுத்தப்படும், மற்றும் மெதுவாக, ஒவ்வொரு நபரும் அவரவர் வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் தங்களையும் அறியாமல், அவர்களது குடும்பத்தின் அரவணைப்புக்கு மீண்டும் வர தங்கள் வழியைக் கண்டுபிடிப்பார்கள். இது என்னைப் பெரிய அளவில் மகிழ்விக்கும். நான் தடைகளிலிருந்து விடுபட்டுள்ளேன், புரிந்துகொள்ள இயலாதவாறு, என் மாபெரும் கிரியை நிறைவேறியது, மேலும் எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் அனைத்தும் மாற்றம் பெற்றுள்ளன. நான் உலகத்தை உருவாக்கியபோது, எல்லாவற்றையும் அவற்றின் வகைக்கு ஏற்ப வடிவமைத்தேன், எல்லாவற்றிலும் அவற்றின் வடிவங்களுடன் அவற்றின் தன்மையை ஒன்றாக இணைத்தேன். எனது நிர்வாகத் திட்டத்தின் முடிவு நெருங்கி வருவதால், படைத்தவற்றின் முந்தைய நிலையை நான் மீட்டெடுப்பேன்; எல்லாவற்றையும் மூல முதலாக இருந்த விதத்திற்கு மீட்டெடுப்பேன், எல்லாவற்றையும் அளவிடமுடியாதவாறு மாற்றுவேன், இதனால் எல்லாமும் எனது திட்டத்தின் அரவணைப்புக்குத் திரும்பும். அதற்கான நேரம் வந்துவிட்டது! எனது திட்டத்தின் கடைசிக் கட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆ, அசுத்தமான பழைய உலகமே! நீ நிச்சயமாக என் வார்த்தைகளுக்குக் கீழே விழுவாய்! என் திட்டத்தால் நீ நிச்சயமாக ஒன்றுமில்லாமல் போவாய்! ஆ, எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்களே! நீங்கள் அனைவரும் என் வார்த்தைகளுக்குள் புதிய ஜீவனைப் பெறுவீர்கள்—உங்களை அரசாளும் கர்த்தர் உங்களுக்கு கிடைப்பார்! ஆ, தூய்மையான மற்றும் களங்கமற்ற புதிய உலகமே! என் மகிமைக்குள் நீ நிச்சயமாக மீண்டெழுவாய்! ஆ, சீயோன் மலையே! இனி அமைதியாக இருக்கவேண்டாம்—நான் வெற்றிபெற்றுத் திரும்பியுள்ளேன்! படைப்பின் நடுவிலிருந்து, நான் முழு பூமியையும் ஆராய்ந்து பார்க்கிறேன். பூமியில், மனிதகுலம் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி புதிய நம்பிக்கையை வென்றுள்ளது. ஆ, என் மக்களே! என் வெளிச்சத்திற்குள் நீங்கள் எப்படி மீண்டும் உயிர்பெற்று வராதிருக்க முடியும்? என் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் எப்படி மகிழ்ச்சியால் குதிக்காமல் இருக்க முடியும்? நிலங்கள் மகிழ்ச்சியால் கூச்சலிடுகின்றன, நீர்நிலைகள் மகிழ்ச்சியான சிரிப்பால் சலசலக்கின்றன! ஆ, உயிர்த்தெழுந்த இஸ்ரவேலே! என்னால் முன்னறுதி செய்யப்பட்டதற்காக நீங்கள் பெருமை கொள்ளாதிருப்பது எங்கனம்? யார் அழுகிறார்கள்? யார் புலம்புகிறார்கள்? பழைய இஸ்ரவேல் இல்லாது போய்விட்டது, இன்றைய இஸ்ரவேல் உலகில் உயர்ந்து, நிமிர்ந்து, எழுந்தது, மேலும் அனைத்து மனிதர்களின் இதயங்களிலும் எழுந்து நிற்கிறது. இன்றைய இஸ்ரவேல் நிச்சயமாக என் மக்கள் மூலமாக இருப்பதற்கான ஆதாரத்தை அடையும்! ஆ, வெறுக்கத்தக்க எகிப்து! நிச்சயமாக நீ இன்னும் எனக்கு எதிராக நிற்கவில்லை, அல்லவா? என் கருணையைப் பயன்படுத்திக் கொண்டு, என் தண்டனையிலிருந்து தப்பிக்க நீ முயற்சி செய்வது எங்கனம்? என் தண்டனையில்லாது நீ போகமுடிவது எங்கனம்? நான் நேசிக்கிறவர்கள் அனைவரும் நித்தியமாக வாழ்வார்கள், எனக்கு எதிராக நிற்பவர்கள் அனைவரும் நித்தியமாக என்னால் தண்டிக்கப்படுவார்கள். ஏனென்றால், நான் எரிச்சலுள்ள தேவன், அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் மனிதர்களைச் சும்மா விடமாட்டேன். நான் பூமி முழுவதையும் கவனிப்பேன், உலகின் கிழக்கில் நீதியுடனும், கம்பீரத்துடனும், கோபத்துடனும், தண்டனையுடனும் தோன்றுவேன், மனிதர்களின் எண்ணற்ற சேனைகளுக்கு நான் என்னை வெளிப்படுத்துவேன்!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 26” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 64
தேவதூதர்கள் என்னைத் துதித்து இசையை மீட்டும்போது, இது மனிதன் மீதான எனது அனுதாபத்தைத் தூண்டாமல் இருக்க முடியாது. என் இதயம் இக்கணமே சோகத்தால் நிரம்பியுள்ளது, இந்த வேதனையான உணர்ச்சியிலிருந்து என்னை விடுவிப்பது என்பது சாத்தியமில்லை. மனிதனிடமிருந்து விலகிய பின்னர் மீண்டும் மனிதனுடன் ஒன்றிணைவதால் ஏற்படும் சந்தோஷங்களிலும் துக்கங்களிலும், நம்மால் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள முடியவில்லை. மேலே பரலோகத்திலும், கீழே பூமியிலுமாகப் பிரிக்கப்பட்டிருப்பதால், மனிதனும் நானும் சந்திக்கக்கூடிய காலங்கள் அரிதானவை. முந்தைய நாட்களின் உணர்வுகளின் ஏக்கத்திலிருந்து யார் விடுபட முடியும்? கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருப்பதை நிறுத்தக்கூடியவர் யார்? கடந்த கால உணர்வுகள் தொடர்வதை எதிர்பாராதவர்கள் யார்? நான் திரும்பி வருவதற்காக ஏங்காதவர் யார்? நான் மனிதனுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு நீண்ட காலமாக ஏக்கம் கொள்ளாதிருப்பவர் யார்? என் இருதயம் ஆழ்ந்த சஞ்சலத்தில் உள்ளது, மனிதனின் ஆவி ஆழ்ந்த கவலையில் உள்ளது. ஆவியில் ஒருமித்தவர்களாக இருந்தாலும், நாம் அடிக்கடி ஒன்றாக இருக்க முடியாது, நாம் ஒருவருக்கொருவர் அடிக்கடி பார்க்க முடியாது. இவ்வாறு எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் துக்கத்தால் நிறைந்திருக்கின்றன, உயிர்ச்சக்தி இல்லாது போய்விட்டது, ஏனென்றால் மனிதன் எப்போதும் எனக்காக ஏங்குகிறான். ஏதோ மனிதர்கள் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்ட பொருட்கள் போல; அவர்கள் பூமியில் என் பெயரைச் சொல்லிக் கூக்குரலிடுகிறார்கள், அவர்கள் தங்கள் பார்வையைத் தரையிலிருந்து என்னிடம் உயர்த்துகிறார்கள்—ஆனால் அவர்கள் எப்படி பெரும்பசி கொண்ட ஓநாயின் தாடைகளிலிருந்து தப்பிக்க முடியும்? அதன் அச்சுறுத்தல்கள் மற்றும் தீயக் கவர்ச்சிகளிலிருந்து அவர்கள் எவ்வாறு தங்களை விடுவிக்க முடியும்? எனது திட்டத்தின் ஏற்பாட்டிற்குக் கீழ்ப்படிவதால் மனிதர்கள் எவ்வாறு தங்களைப் பலியாகத் தராமல் இருப்பார்கள்? அவர்கள் சத்தமாக மன்றாடும்போது, நான் என் முகத்தை அவர்களிடமிருந்து விலக்குகிறேன், இனிமேலும் பார்த்துக்கொண்டிருப்பதற்கு என்னால் முடியாது; ஆனால் அவர்களின் கண்ணீர் அழுகையை எப்படி நான் கேட்க முடியாமல் போயிற்று? மனித உலகின் அநீதிகளை நான் சரிசெய்வேன். சாத்தான் என் மக்களுக்கு மீண்டும் தீங்கு விளைவிப்பதையும் சத்துருக்கள் மீண்டும் அவர்கள் விரும்புவதைச் செய்வதையும் தடுத்து, உலகம் முழுவதிலும் என் சொந்தக் கைகளால் என் கிரியையைச் செய்வேன். நான் பூமியில் ராஜாவாகி, என் சிங்காசனத்தை அங்கே நகர்த்துவேன், என் சத்துருக்கள் அனைவரும் தரையில் விழுந்து, தங்கள் குற்றங்களை என் சமூகத்தின் முன்பாக ஒப்புக்கொள்வார்கள். என் சோகத்தில், கோபம் கலந்துள்ளது, நான் யாரையும் விட்டு வைக்காமல் முழு பிரபஞ்சத்தையும் தட்டையாக மிதித்துப் போடுவேன், என் சத்துருக்களின் இதயங்களில் அச்சத்தை உண்டுபண்ணுவேன். இனிமேல் அவர்கள் மனிதனை சீரழிக்கக்கூடாது என்பதற்காக நான் முழு பூமியையும் இடிபாடுகளாகச் சிதைத்து, என் சத்துருக்களை இடிபாடுகளுக்குள் தள்ளுவேன். எனது திட்டம் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது, வேறு யாரும், அவர்கள் யாராக இருந்தாலும் அதை மாற்றக்கூடாது. நான் பிரபஞ்சத்திற்கு மேலே கம்பீரமான ஆடம்பரத்துடன் சஞ்சரிப்பதால், மனிதர்கள் அனைவரும் புதியவர்களாக மாறுவார்கள், எல்லாமே புத்துயிர் பெறும். மனிதன் இனிமேல் அழமாட்டான், இனிமேல் என்னிடம் உதவிக்காக அழமாட்டான். அப்பொழுது என் இதயம் மகிழ்ச்சி அடையும், மக்கள் என்னிடம் கொண்டாட்டத்துடன் திரும்புவார்கள். பிரபஞ்சம் முழுவதும், மேலிருந்து கீழ்வரை, மகிழ்ச்சியில் குதூகலிக்கும்…
இன்று, உலகத்தில் இருக்கும் தேசங்களுக்கு இடையே, நான் நிறைவேற்றுவதற்காகத் திட்டமிட்டுள்ள கிரியைகளையே நான் செய்கிறேன். நான் மனிதரின் நடுவே உலாவுகிறேன், எல்லாக் கிரியைகளையும் என் திட்டத்திற்குள் செய்கிறேன், எல்லா மனிதர்களும் என் சித்தத்திற்கு ஏற்ப எஞ்சிய தேசங்களை உடைக்கிறார்கள். பூமியிலுள்ள மக்கள் தங்கள் சொந்த முடிவின் மீது தங்கள் கவனத்தை வைத்திருக்கிறார்கள், ஏனென்றால் அந்த நாள் உண்மையில் நெருங்கி வருகிறது, தேவதூதர்கள் தங்கள் எக்காளங்களை ஊதுகிறார்கள். இனி தாமதங்கள் இருக்காது, அதன்பிறகு எல்லா சிருஷ்டிகளும் சந்தோஷத்தில் நடனமாடத் தொடங்குவார்கள். அவர்கள் விருப்பத்தின்படி எனது நாளை நீட்டிக்கக் கூடியவர் யார்? பூமியில் உள்ள ஒருவரா? அல்லது வானத்தில் உள்ள நட்சத்திரங்களா? அல்லது தேவதூதர்களா? இஸ்ரவேல் மக்களின் இரட்சிப்பைத் தொடங்க நான் ஒரு உபதேசத்தைச் செய்யும்போது, மனிதர்கள் எல்லோருக்கும் எனது நாள் நெருங்குகிறது. ஒவ்வொரு மனிதனும் இஸ்ரவேல் திரும்பி வருவதைக் கண்டு அஞ்சுகிறான். இஸ்ரவேல் திரும்பி வரும்போது, அது என் மகிமையின் நாளாக இருக்கும், ஆகவே, எல்லாமே மாறி, புதுப்பிக்கப்படும் நாளாகவும் அது இருக்கும். நீதியான நியாயத்தீர்ப்பு முழு பிரபஞ்சத்தையும் நெருங்கி வரும்போது, எல்லா மனிதர்களும் அஞ்சி நடுங்கி பயம் கொள்கிறார்கள், ஏனென்றால் இது மனித உலகில் கேள்விப்படாத நீதியாகும். நீதியின் சூரியன் தோன்றும்போது, கிழக்கு வெளிச்சமடையும், பின்னர் அது முழு பிரபஞ்சத்தையும் வெளிச்சம் பெறச்செய்து, அனைவரையும் சென்றடையும். உண்மையிலேயே என் நீதியை மனிதன் நிறைவேற்றினால், பயப்படுவதற்கு என்ன இருக்கும்? என் மக்கள் அனைவரும் என் நாளின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் என் நாளின் வருகைக்காக ஏங்குகிறார்கள். நீதியின் சூரியன் என்ற எனது பங்குப்பணியில் மனிதர்கள் எல்லோரையும் பழிவாங்கவேண்டும், மனிதர்களின் முடிவை ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். எனது ராஜ்யம் முழு பிரபஞ்சத்திற்கும் மேலாக வடிவம் பெறுகிறது, என் சிங்காசனம் கோடானு கோடி மக்களின் இருதயங்களை ஆளுகை செய்யும். தேவதூதர்களின் உதவியுடன், எனது அரும்பெரும் சாதனை விரைவில் பலனளிக்கத் தொடங்கும். என் மகன்கள் மற்றும் என் மக்கள் அனைவரும் என் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள், மீண்டும் ஒருபோதும் பிரிக்கப்படாமல் அவர்களுடன் நான் ஒன்றிணைய வேண்டும் என்று ஏங்குகிறார்கள். நான் அவர்களுடன் ஒன்றாக இருப்பதால் என் ராஜ்யத்தின் மிகப் பெரிய திரளான மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் ஒருவருக்கொருவர் போட்டி போடமாட்டார்களா? இது எந்தவொரு விலைக்கிரயமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத ஒரு மறு ஐக்கியமாக இருக்க முடியுமா? எல்லா மனிதர்களின் பார்வையிலும் நான் கௌரவமானவன், அனைவரின் வார்த்தைகளிலும் இவ்வாறு நான் அறிவிக்கப்படுகிறேன். மேலும், நான் திரும்பி வரும்போது, எல்லா சத்துரு படைகளையும் நான் வெல்வேன். அதற்கான நேரம் வந்துவிட்டது! நான் என் கிரியைகளைத் தொடங்குவேன், மனிதர்களிடையே ராஜாவாக ஆட்சி செய்வேன்! நான் திரும்பி வரும் கட்டத்தில் இருக்கிறேன்! நான் புறப்படவிருக்கிறேன்! எல்லோரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் விரும்புவது இதுதான். மனிதர்கள் அனைவரையும் என் நாளின் வருகையைக் காணச் செய்வேன், அவர்கள் அனைவரும் என் நாளின் வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 27” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 65
சகலமும் உயிர்த்தெழுப்பப்பட்ட நாளில், நான் மனுஷனிடையே வந்து, அவனுடன் அற்புதமான பகல்களையும் இரவுகளையும் கழிக்கிறேன். இந்த கட்டத்தில் மட்டுமே மனுஷன் எனது அணுகலை கொஞ்சம் உணர்கிறான், என்னுடன் அவனுடைய தொடர்பு அடிக்கடி நிகழும்போது, என்னிடம் என்ன இருக்கிறது என்பதையும், நான் என்னவாக இருக்கிறேன் என்பதையும் அவன் காண்கிறான்—இதன் விளைவாக, என்னைப் பற்றிய சில அறிவை அவன் பெறுகிறான். எல்லா ஜனங்களிடையேயும், நான் என் தலையை உயர்த்திப் பார்க்கிறேன், அவர்கள் அனைவரும் என்னைப் பார்க்கிறார்கள். ஆனாலும் உலகிற்குப் பேரழிவு ஏற்படும்போது, அவர்கள் உடனடியாகக் கவலைப்படுகிறார்கள், என் உருவம் அவர்களின் இருதயங்களிலிருந்து மறைகிறது; பேரழிவின் வருகையால் பீதியடையும் அவர்கள், எனது புத்திமதிகளைப் பொருட்படுத்துவதில்லை. நான் மனுஷனிடையே பல வருடங்கள் கடந்துவிட்டேன், ஆனாலும் அவன் எப்போதும் அறியாமலேயே இருக்கிறான், என்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. இன்று இதை நான் என் சொந்த வார்த்தைகளால் அவனிடம் சொல்கிறேன், மேலும் எல்லா ஜனங்களையும் என்னிடமிருந்து எதையாவது பெறும்படி எனக்கு முன்பாக வரச் செய்கிறேன், ஆனால் அவர்கள் இன்னும் என்னிடமிருந்து தூரமாகவே இருக்கிறார்கள், அதனால் அவர்கள் என்னை அறியவில்லை. என் அடிச்சுவடுகள் பிரபஞ்சத்திலும் பூமியின் முனைகளிலும் படும்போது, மனுஷன் தன்னைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவான், எல்லா ஜனங்களும் என்னிடம் வந்து என் முன் தரைமட்டும் குனிந்து, என்னை வணங்குவார்கள். இதுவே எனது மகிமைக்கான நாளாகவும், நான் திரும்பும் நாளாகவும் மற்றும் நான் புறப்படும் நாளாகவும் இருக்கும். இப்போது, நான் எல்லா மனுஷரிடையேயும் எனது பணியைத் தொடங்கியிருக்கிறேன், எனது நிர்வாகத் திட்டத்தின் நிறைவாக பிரபஞ்சம் முழுவதும் நான் முறையாக இறங்குகிறேன். இந்த தருணத்திலிருந்து, எச்சரிக்கையற்ற எவரும் இரக்கமற்ற சிட்சையின் மத்தியில் மூழ்கடிக்கப்படுவார்கள், இது எந்த நேரத்திலும் நிகழக்கூடும். இது நான் இருதயமற்றவன் என்பதால் அல்ல; மாறாக, இது எனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு படிநிலை என்பதே ஆகும்; அனைத்தும் எனது திட்டத்தின் படிநிலைகள் படியே தொடர வேண்டும், இதை எந்த மனுஷனாலும் மாற்ற முடியாது. நான் எனது கிரியையை முறையாகத் தொடங்கும்போது, எல்லா ஜனங்களும் நான் நகரும்போது நகர்கிறார்கள், அதாவது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் என்னுடன் படிப்படியாக தங்களை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள், பிரபஞ்சம் முழுவதும் “மகிழ்ச்சி” நிறைந்திருக்கிறது, மேலும், மனுஷன் என்னால் முன்னோக்கித் தூண்டப்படுகிறான். இதன் விளைவாக, சிவப்பான பெரிய வலுசர்ப்பம் அதுவாகவே அதனை வெறித்தனமான மற்றும் திகைப்பூட்டும் நிலைக்குத் தள்ளுகிறது, அது என் கிரியைக்கு உதவுகிறது, மேலும், அது விருப்பமில்லாமல் இருந்தாலும், அதன் சொந்த ஆசைகளைப் பின்பற்ற முடியாமல் போகிறது, அதனால் என் கட்டுப்பாட்டுக்குச் சமர்ப்பிப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை. எனது எல்லா திட்டங்களிலும், சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனக்குத் தடையாகவும், என் சத்துருவாகவும், என் ஊழியக்காரனாகவும் இருக்கிறது; எனவே, அதற்கான எனது “தேவைகளை” நான் ஒருபோதும் தளர்த்துவதில்லை. எனவே, எனது மனுஷ அவதரிப்பின் கிரியையின் இறுதிக் கட்டம் அதன் வீட்டில் நிறைவடைகிறது. இவ்வழியில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் எனக்குச் சரியாக சேவையைச் செய்ய முடிகிறது, இதன் மூலம் நான் அதை வென்று எனது திட்டத்தை முடிப்பேன். நான் கிரியை செய்யும் போது, எல்லா தேவதூதர்களும் என்னுடன் தீர்க்கமான யுத்தத்தில் இறங்குகிறார்கள், இறுதிக் கட்டத்தில் என் விருப்பங்களை நிறைவேற்றத் தீர்மானிக்கிறார்கள், இதனால் பூமியிலுள்ள ஜனங்கள் தேவதூதர்களைப் போல எனக்கு முன்பாகக் கீழ்ப்படிகிறார்கள், மேலும் அவர்களுக்கு என்னை எதிர்க்க விருப்பமுமில்லை, எனக்கு எதிராகக் கலகம் செய்யும் எதையும் செய்யவும் மறுக்கிறார்கள். இவையே பிரபஞ்சம் முழுவதும் எனது கிரியையின் இயக்கவியலாக இருக்கிறது.
மனுஷரிடையே நான் வந்ததன் நோக்கமும் அதன் முக்கியத்துவமும் அனைத்து மனுஷரையும் இரட்சிப்பதும், எல்லா மனுஷரையும் மீண்டும் என் வீட்டுக்குக் கொண்டுவருவதும், பரலோகத்தை பூமியுடன் மீண்டும் ஒன்றிணைப்பதும் மற்றும் மனுஷன் பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையிலான “சமிக்ஞைகளை” தெரிவிக்கச் செய்வதற்குமே ஆகும், ஏனெனில் இதுவே மனுஷனின் இயற்கையான செயல்பாடு ஆகும். நான் மனுக்குலத்தை உருவாக்கிய நேரத்தில், மனுக்குலத்திற்காக எல்லாவற்றையும் தயார் செய்திருந்தேன், பின்னர், என் தேவைகளுக்கு ஏற்ப நான் அதற்குக் கொடுத்த செல்வத்தை மனுக்குலம் பெற அனுமதித்தேன். இவ்வாறு, என் வழிகாட்டுதலின் கீழ் தான் எல்லா மனுஷரும் இன்றைய தினத்தை வந்தடைந்திருக்கிறார்கள் என்று நான் சொல்கிறேன். இவை அனைத்தும் எனது திட்டம். எல்லா மனுஷரிடையேயும், எண்ணற்ற ஜனங்கள் என் அன்பான பாதுகாப்பின் கீழ் இருக்கிறார்கள், எண்ணற்ற எண்ணிக்கையிலானவர்கள் என் வெறுப்பின் சிட்சியின் கீழ் வாழ்கிறார்கள். ஜனங்கள் அனைவரும் என்னிடம் ஜெபித்தாலும், அவர்களால் தற்போதைய சூழ்நிலைகளை மாற்ற முடிவதில்லை; அவர்கள் நம்பிக்கையை இழந்தவுடன், இயற்கையை அதன் பாதையில் செல்ல அனுமதிப்பதும், மற்றும் எனக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதை நிறுத்தவும் மட்டுமே அவர்களால் முடியும், ஏனென்றால் மனுஷனால் இவற்றை மட்டுமே நிறைவேற்றிட முடியும். மனுஷனின் வாழ்க்கை நிலையைப் பார்க்கையில், மனுஷன் இன்னும் உண்மையான வாழ்க்கையை கண்டுபிடிக்கவில்லை, உலகின் அநீதி, பாழடைந்த தன்மை மற்றும் பரிதாபகரமான நிலைமைகளை அவன் இன்னும் காணவில்லை—அதனால், பேரழிவின் வருகைக்காக இல்லாவிடில், அநேக ஜனங்கள் இன்னும் இயற்கை அன்னையைத் தழுவிக் கொண்டு தான் இருந்திருப்பார்கள், இன்னும் “வாழ்க்கையின்” சுவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். இது தான் உலகின் யதார்த்தம் அல்லவா? இது மனுஷனிடம் நான் பேசும் இரட்சிப்பின் சத்தம் அல்லவா? ஏன், மனுஷரிடையே, யாரும் என்னை உண்மையாக நேசிப்பதேயில்லை? சிட்சை மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் மட்டுமே ஏன் மனுஷன் என்னை நேசிக்கிறான், ஏன் என் பாதுகாப்பில் இருக்கும்போது யாரும் என்னை நேசிப்பதில்லை? நான் என் சிட்சையை மனுக்குலத்திற்கு பல முறை வழங்கியிருக்கிறேன். அவர்கள் அதைப் பார்க்கிறார்கள், ஆனால் பின்னர் அவர்கள் அதைப் புறக்கணிக்கிறார்கள், இந்த நேரத்தில் அவர்கள் அதைப் படித்து சிந்திப்பதில்லை, எனவே தான் மனுஷனுக்கு வரும் அனைத்தும் இரக்கமற்ற நியாயத்தீர்ப்பாக இருக்கின்றன. இது எனது கிரியை செய்யும் முறைகளில் ஒன்றாகும், ஆனால் மனுஷனை மாறச் செய்து, அவனை என்னை நேசிக்க வைப்பதற்காகவே இது இன்னும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 29” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 66
நான் ராஜ்யத்தில் ஆட்சி செய்கிறேன், மேலும், முழு பிரபஞ்சத்திலும் நான் ஆட்சி செய்கிறேன்; நான் ராஜ்யத்தின் ராஜாவாகவும் மற்றும் பிரபஞ்சத்தின் தலைவராகவும் இருக்கிறேன். இந்த தருணத்திலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லாத அனைவரையும் நான் ஒன்று சேர்த்து, புறஜாதியினரிடையே எனது கிரியையைத் தொடங்குகிறேன், மேலும் எனது நிர்வாக ஆணைகளை முழு பிரபஞ்சத்திற்கும் அறிவிக்கிறேன், இதன்மூலம் எனது கிரியையின் அடுத்த கட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளுவேன். என் கிரியையை புறஜாதியினரிடையே பரப்ப நான் சிட்சையைப் பயன்படுத்துவேன், அதாவது புறஜாதியார் அனைவருக்கும் எதிராக நான் பெலத்தைப் பயன்படுத்துவேன். இயற்கையாகவே, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே எனது கிரியை செயல்படும் அதே நேரத்தில் இந்தக் கிரியை மேற்கொள்ளப்படும். என் ஜனங்கள் பூமியில் ஆட்சி செய்து அதிகாரம் செலுத்தும்போது, அந்த நாள், பூமியிலுள்ள ஜனங்கள் அனைவரையும் வென்ற நாளாகவும் இருக்கும், மேலும், அது நான் இளைப்பாறும் நேரமாகவும் இருக்கும்—அப்போதுதான் ஜெயங்கொள்ளப்பட்ட அனைவரின் முன்பாகவும் நான் தோன்றுவேன். நான் பரிசுத்த ராஜ்யத்திற்கு முன்பாகத் தோன்றுகிறேன், அதேசமயம் என்னை அசுத்த தேசத்திலிருந்து நானே மறைக்கிறேன். எனக்கு முன்பாக ஜெயங்கொண்டு கீழ்ப்படியும் அனைவராலுமே என் முகத்தை அவர்கள் கண்களால் பார்க்க முடிகிறது, மேலும் என் சத்தத்தை அவர்கள் காதுகளால் கேட்கவும் முடிகிறது. கடைசி நாட்களில் பிறந்தவர்களின் ஆசீர்வாதம் இதுதான், இது என்னால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஆசீர்வாதம், இதனை எந்த மனுஷனாலும் மாற்ற முடியாது. இன்று, எதிர்கால கிரியைக்காக நான் இவ்வழியில் கிரியை செய்கிறேன். எனது எல்லா கிரியைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, அவை அனைத்திலும், ஒரு அழைப்பும் ஒரு பதிலும் உள்ளது: ஒருபோதும் எந்த நடவடிக்கையும் திடீரென நிறுத்தப்படுவதில்லை, வேறு எந்த நடவடிக்கையும் சுயாதீனமாக மேற்கொள்ளப்படுவதும் இல்லை. இது அப்படியாக இல்லையா? கடந்த காலத்தின் கிரியை இன்றைய கிரியைக்கு அஸ்திபாரம் இல்லையா? கடந்த காலத்தின் வார்த்தைகள் இன்றைய வார்த்தைகளுக்கு முன்னோடியாக இல்லையா? கடந்த காலத்தின் படிநிலைகள் இன்றைய படிநிலைகளின் தோற்றம் இல்லையா? நான் சுருளை முறையாகத் திறப்பது தான், அதாவது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் சிட்சிக்கப்படுகையில், உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகையில், அதுவே எனது கிரியையின் உச்சக்கட்டமாக இருக்கிறது; எல்லா ஜனங்களும் வெளிச்சம் இல்லாத தேசத்தில் வாழ்கிறார்கள், எல்லா ஜனங்களும் தங்கள் சூழலால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிருஷ்டிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை மனுஷன் அனுபவிக்காத வாழ்க்கை இது, யுகங்கள் முழுவதும் யாரும் இந்த வகையான வாழ்க்கையை “அனுபவித்ததில்லை”, எனவே இதற்கு முன் செய்திடாத கிரியையை நான் இப்போது செய்திருக்கிறேன் என்று நான் கூறுகிறேன். இதுவே விவகாரங்களின் உண்மையான நிலை, இதுவே அதன் கருப்பொருள். ஏனென்றால், எனது நாள் எல்லா மனுஷரிடமும் நெருங்கி வருகிறது, ஏனென்றால் அது தொலைவில் தோன்றாமல் மனுஷனின் கண்களுக்கு முன்பாகவே தோன்றுகிறது, இதன் விளைவாக யார் பயப்படாமல் இருக்க முடியும்? இதில் யார் மகிழ்ச்சியாக இருக்க முடியாது? அருவருப்பான நகரமான பாபிலோன் கடைசியில் முடிவுக்கு வந்துவிட்டது; மனுஷன் மீண்டும் ஒரு புதிய உலகத்தை சந்திக்கிறான், வானமும் பூமியும் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.
நான் எல்லா தேசங்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாகத் தோன்றும்போது, வெண்மையான மேகங்கள் வானத்தில் கடையப்பட்டு என்னை சூழ்ந்து கொள்கின்றன. அவ்வாறே, பூமியிலுள்ள பறவைகள் எனக்காகப் பாடிக்கொண்டே மகிழ்ச்சியுடன் நடனமாடி, பூமியின் சூழ்நிலையை எடுத்துக்காட்டுகின்றன, இனியும் “மெதுவாக கீழ்நோக்கிச் செல்லாமல்”, ஆனால் அதற்கு பதிலாக உற்சாகமான சூழ்நிலையில் ஜீவித்திருக்கும்படி, பூமியிலுள்ள எல்லாவற்றையும் உயிர்த்தெழச் செய்கின்றன. நான் மேகங்களுக்கிடையில் இருக்கும்போது, மனுஷன் என் முகத்தையும் கண்களையும் மங்கலாகவே உணர்கிறான், மேலும் இந்த நேரத்தில் அவன் கொஞ்சம் பயப்படவும் செய்கிறான். கடந்த காலங்களில், புராணங்களில் என்னைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை அவன் கேள்விப்பட்டிருக்கிறான், இதன் விளைவாக அவன் என் மீது பாதியளவு நம்பிக்கையும், மீதியளவு சந்தேகத்தையும் கொண்டிருக்கிறான். நான் எங்கே இருக்கிறேன், அல்லது என் முகம் எவ்வளவு பெரியது என்று அவனுக்குத் தெரியாது—அது கடல் போன்று அகலமானதா, அல்லது பச்சைப்பசேலாக இருக்கும் மேய்ச்சல் நிலங்களைப் போல எல்லையற்றதா? இந்த விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இன்று மேகங்களில் மனுஷன் என் முகத்தைப் பார்க்கும்போதுதான், என்னைப் பற்றிய புராணம் உண்மையானது என்று மனுஷன் உணர்கிறான், அதன் காரணமாக அவன் என்னை நோக்கி இன்னும் கொஞ்சம் சாதகமாக வருகிறான், மேலும், என் காரியங்கள் காரணமாகவே என்னைப் பற்றிய அவனுடைய அபிமானம் சற்று அதிகரிக்கிறது. ஆனால் மனுஷன் இன்னும் என்னை அறிந்திருக்கவில்லை, அவன் என்னில் ஒரு பகுதியை மட்டுமே மேகங்களில் காண்கிறான். அதன்பிறகு, நான் என் கைகளை நீட்டி அவற்றை மனுஷனுக்குக் காட்டுகிறேன். மனுஷன் ஆச்சரியப்படுகிறான், என் கைகளால் தாக்கப்படுவோம் என்ற ஆழ்ந்த பயத்தால் அவன் அவனது வாய்க்கு முன்பாக கைதட்டுகிறான், அதன்மூலம் அவன் அவனது போற்றுதலுடன் சிறிது பயபக்தியையும் சேர்க்கிறான். அவன் கவனம் செலுத்தாதபோது என்னால் அவன் தாக்கப்படுவான் என்ற ஆழ்ந்த பயத்தில், மனுஷன் என் ஒவ்வொரு அசைவின் மீதும் தன் கண்களைப் பதிக்கிறான்—ஆனாலும் மனுஷனால் கவனிக்கப்படுவதால் நான் கட்டுப்படுத்தப் படுவதில்லை, நான் தொடர்ந்து என் கரங்களால் கிரியை செய்கிறேன். நான் செய்யும் அனைத்து காரியங்களின் நிமித்தமாகத்தான், மனுஷன் என்னிடம் ஒருவித தயவைக் கொண்டிருக்கிறான், இதனால் படிப்படியாக எனக்கு முன்பாக வந்து என்னுடன் கூட்டுறவு கொள்கிறான். நான் முழுவதுமாக மனுஷனுக்கு வெளிப்படும் போது, மனுஷன் என் முகத்தைக் காண்பான், அப்போதிருந்து நான் இனிமேல் மனுஷனிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ளவோ அல்லது மறைந்து கொள்ளவோ மாட்டேன். பிரபஞ்சம் முழுவதும், ஜனங்கள் அனைவரது முன்பாகவும் நான் பகிரங்கமாகத் தோன்றுவேன், மாம்சமும் இரத்தமும் கொண்ட அனைவரும் என் எல்லா காரியங்களையும் காண்பார்கள். ஆவிக்குரியவர்கள் அனைவரும் நிச்சயமாக என் வீட்டில் நிம்மதியாக வாழ்வார்கள், என்னுடன் சேர்ந்து அற்புதமான ஆசீர்வாதங்களை நிச்சயமாக அனுபவிப்பார்கள். நான் அக்கறை கொள்ளும் அனைவரும் சிட்சையிலிருந்து தப்பிப்பார்கள், மேலும் அவர்களை ஆவியின் வேதனையிலிருந்தும் மாம்சத்தின் வியாகுலத்திலிருந்தும் தவிர்ப்பேன். நான் எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் பகிரங்கமாகத் தோன்றி, ஆட்சி செய்து, என் அதிகாரத்தைப் பயன்படுத்துவேன், இதனால் சடலங்களின் துர்நாற்றம் இனி பிரபஞ்சத்தில் பரவாது; அதற்கு பதிலாக, என் மிருதுவான நறுமணம் உலகம் முழுவதும் பரவும், ஏனென்றால் எனது நாள் நெருங்கி வருகிறது, மனுஷன் தூக்கத்திலிருந்து விழிக்கிறான், பூமியில் உள்ள அனைத்தும் கிரமமாக இருக்கிறது, பூமியின் உயிர்பிழைக்கும் நாட்கள் இனியும் இருக்கப்போவதில்லை, ஏனென்றால் நான் வந்துவிட்டேன்!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 29” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 68
நான் என் கிரியையை புறஜாதியான தேசங்களிடையே பரப்புகிறேன். என் மகிமை பிரபஞ்சம் முழுவதும் பிரகாசிக்கிறது; எனது சித்தம் எண்ணிக்கைக்கு அடங்காத ஜனங்களுக்கு மத்தியில் உள்ளது. அவை அனைத்தும் என் கரத்தால் இயக்கப்படுகின்றன மற்றும் நான் நியமித்த பணிகள் ஆரம்பமாகின்றன. இந்தத் தருணம் முதல், நான் ஒரு புதிய யுகத்திற்குள் நுழைந்து, எல்லா மனிதர்களையும் வேறொரு உலகத்திற்கு கொண்டு வந்துள்ளேன். மனிதன் என்னை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் எனது “பிதாவின் வீட்டிற்கு” மீண்டும் சென்றபோது, எனது மெய்யான திட்டத்தில் உள்ள என்னுடைய கிரியையின் இன்னொரு பகுதியைத் தொடங்கினேன். நான் பிரபஞ்சத்தைக் குறித்து முற்றிலுமாக சிந்திக்கிறேன், இதுதான் என் கிரியைக்கு ஒரு சரியான நேரம் என்று காண்கிறேன்[அ]. எனவே, மனிதன் மீதான எனது புதிய கிரியையை நான் முன்னும் பின்னுமாக விரைந்து செய்கிறேன். அனைத்திற்கும் மேலாக, இது ஒரு புதிய யுகம் மற்றும் புதிய ஜனங்களைப் புதிய யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்கும், நான் அகற்ற வேண்டிய பலவற்றை ஒதுக்கி வைப்பதற்கும் நான் புதிய கிரியைகளைக் கொண்டு வந்துள்ளேன். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில், மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு கட்ட கிரியையை நான் செய்து, அவர்களைக் காற்றிலே தூற்றியுள்ளேன். அதன் பிறகு வீசும் காற்றில் பலர் அமைதியாக பறக்கடிக்கப்படுகிறார்கள். உண்மையிலேயே, இது நான் அகற்ற பயன்படுத்தவிருக்கும் “போரடிக்கும் களம்” ஆகும்; இதற்காகத்தான் நான் வாஞ்சித்து காத்திருக்கிறேன், இதுதான் எனது திட்டமும் ஆகும். நான் கிரியை செய்யும்போது பொல்லாதவர்கள் பலர் உள்ளே நுழைந்திருக்கிறார்கள், ஆனால் நான் அவர்களைத் துரத்த அவசரப்படவில்லை. மாறாக, சரியான நேரத்தில் நான் அவர்களைச் சிதறடிப்பேன். அதற்குப் பிறகு மட்டுமே நான் ஜீவஊற்றாக இருப்பேன். என்னை உண்மையாக நேசிப்பவர்கள் அத்தி மரத்தின் கனிகளையும் லீலிபுஷ்பத்தின் வாசனையையும் என்னிடமிருந்து பெற அனுமதிப்பேன். புழுதியின் நிலமான சாத்தான் தங்கியிருக்கும் தேசத்தில், பசும்பொன் இல்லை, மணல் மட்டுமே உள்ளது. எனவே, இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொண்டு, நான் அத்தகைய ஒரு கட்ட கிரியையைச் செய்கிறேன். நான் ஆதாயம் செய்வது சுத்திகரிக்கப்பட்ட பசும்பொன் ஆகும், மணல் அல்ல என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். துன்மார்க்கன் என் வீட்டில் எப்படி இருக்க முடியும்? என் பரலோகத்தில், நரிகளை ஒட்டுண்ணிகளாக இருக்க நான் எப்படி அனுமதிக்க முடியும்? இந்த விஷயங்களைத் துரத்த நான் ஒவ்வொரு சாத்தியமான முறையையும் பயன்படுத்துகிறேன். என் சித்தம் வெளிப்படுவதற்கு முன்பு, நான் என்ன செய்யப் போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நான் அந்த பொல்லாதவர்களைத் துரத்துகிறேன், அவர்கள் என் சமூகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள். துன்மார்க்கருக்கு நான் இதைத் தான் செய்கிறேன். எனினும், அவர்கள் எனக்கு சேவை செய்ய, இன்னும் ஒரு நாள் அவர்களுக்காக இருக்கும். ஆசீர்வாதங்களுக்கான மனிதர்களின் விருப்பம் மிகவும் வலுவானது; எனவே, நான் என் சரீரத்தைத் திருப்பி, எனது மகிமையான முகத்தை புறஜாதியினருக்குக் காண்பிப்பேன், இதனால் மனிதர்கள் அனைவரும் தங்கள் சொந்த உலகில் ஜீவித்து தங்களைத் தாங்களே நியாயந்தீர்ப்பார்கள். நான் சொல்ல வேண்டிய வார்த்தைகளைச் சொல்லும்போதே, மனிதர்களுக்குத் தேவையானதை அவர்களுக்கு வழங்குகிறேன். மனிதர்களுக்கு புத்தி தெளியும் போது, நான் ஏற்கெனவே நீண்ட காலமாக என் கிரியையைப் பரவச் செய்திருப்பேன். நான் என் சித்தத்தை மனிதர்களிடம் வெளிப்படுத்துவேன், மனிதர்களிடம் என் கிரியையின் இரண்டாம் பகுதியைத் தொடங்குவேன். என் கிரியையுடன் எல்லா மனிதர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், அவர்கள் என்னை நெருக்கமாகப் பின்பற்ற அனுமதிப்பேன். நான் செய்ய வேண்டிய என் கிரியையை மனிதர்கள் என்னுடன் இணைந்து செய்ய, மனிதர்களால் செய்ய முடிந்த அனைத்தையும் அவர்களைச் செய்ய அனுமதிப்பேன்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
அடிக்குறிப்பு:
அ. அசல் உரையில் “காண்கிறேன்” என்ற சொற்றொடர் இல்லை.
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 69
என் மகிமையை அவர்கள் காண்பார்கள் என்ற விசுவாசம் எவருக்கும் இல்லை. நான் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் என் மகிமையை மனிதகுலத்தின் மத்தியிலிருந்து அகற்றி வேறு உலகத்திற்கு எடுத்துச் செல்கிறேன். மனிதர்கள் மீண்டும் மனந்திரும்பும்போது, நான் என் மகிமையை எடுத்து, அதை இன்னும் அதிகமாக விசுவாசமுள்ளவர்களுக்குக் காண்பிப்பேன். இந்தக் கொள்கையின் படியே நான் கிரியை செய்கிறேன். என் மகிமை கானானை விட்டு வெளியேறும் ஒரு காலமும், என் மகிமை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை விட்டு வெளியேறும் ஒரு காலமும் இருக்கிறது. மேலும், என் மகிமை பூமி முழுவதையும் விட்டு வெளியேறி, அதை மங்கச்செய்து, இருளில் மூழ்கடிக்கும் ஒரு காலம் இருக்கிறது. கானான் தேசம்கூட சூரிய ஒளியைக் காணாது. எல்லா மனிதர்களும் தங்கள் விசுவாசத்தை இழக்க நேரிடும், ஆனால் கானான் தேசத்தின் வாசனையை விட்டு வெளியேறுவதை எவராலும் தாங்க முடியாது. நான் புதிய வானத்துக்கும் பூமிக்கும் செல்லும்போதுதான், என் மகிமையின் மற்ற பகுதியை எடுத்து, முதலாவதாகக் கானான் தேசத்தில் வெளிப்படுத்துவேன். இதன் மூலம் இரவின் பயங்கரமான இருளில் மூழ்கியிருக்கும் முழு பூமியையும் வெளிச்சத்திற்குள் அனுமதிக்க, பூமியெங்கும் ஒரு மங்கிய ஒளியைப் பிரகாசிக்கச் செய்வேன். பூமியின் எல்லா மனிதர்களும் ஒளியின் வல்லமையிலிருந்து பெலனைப் பெறட்டும். என் மகிமை ஒவ்வொரு தேசத்திற்கும் புதியதாகவும் பெரியதாகவும் தோன்ற அனுமதிப்பேன். நான் வெகு காலத்திற்கு முன்பே மனித உலகத்திற்கு வந்துள்ளேன் என்பதையும், நீண்ட காலத்திற்கு முன்பே இஸ்ரவேலிலிருந்து கிழக்கிற்கு என் மகிமையை கொண்டு வந்தேன் என்பதையும் மனிதகுலம் முழுவதும் உணரட்டும். ஏனெனில், கிருபையின் யுகம் முதல் இன்று வரை கொண்டு வரப்பட்டுள்ள என் மகிமை கிழக்கிலிருந்து பிரகாசிக்கிறது. ஆனால் இஸ்ரவேலிலிருந்தே நான் புறப்பட்டேன், அங்கிருந்துதான் கிழக்கிற்கு வந்தேன். கிழக்கின் ஒளி படிப்படியாக வெண்மையாக மாறும் போது தான் பூமியெங்கும் உள்ள இருள் வெளிச்சமாக மாறத் தொடங்கும். அப்போதுதான் நான் இஸ்ரவேலில் இருந்து வெகு காலத்திற்கு முன்பே கிழக்கிற்குச் சென்று அங்கு புதியதாக உயர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை மனிதன் கண்டறிவான். ஒருமுறை இஸ்ரவேலில் இறங்கி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டதால், நான் மீண்டும் இஸ்ரவேலில் பிறக்க முடியாது. ஏனென்றால் என் கிரியை பிரபஞ்சம் முழுவதையும் வழிநடத்துகிறது மற்றும் என்னவென்றால், மின்னல் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஒளிர்கிறது. இந்த காரணத்திற்காக நான் கிழக்கில் இறங்கி, கானானை கிழக்கிலிருக்கும் ஜனங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். பூமியெங்கிலும் உள்ள ஜனங்களைக் கானான் தேசத்திற்கு அழைத்து வர விரும்புகிறேன். ஆகவே முழுப் பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்த, கானான் தேசத்தில் தொடர்ந்து வெளிப்பாடுகளை வெளியிடுகிறேன். இந்த நேரத்தில், கானானைத் தவிர பூமியில் எங்கும் ஒளி இல்லை. எல்லா மனிதர்களும் பசியினாலும் குளிரினாலும் பாதிக்கப்படுகிறார்கள். நான் என் மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தேன், பின்னர் அதை எடுத்துக்கொண்டேன், பின்னர் நான் இஸ்ரவேலரையும், மனிதகுலம் அனைத்தையும் கிழக்கிற்குக் கொண்டு வந்தேன். அவர்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்படவும், ஒளியுடன் இணைந்திருக்கவும் அவர்கள் அனைவரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். எனவே, அவர்கள் இனி அதைத் தேட வேண்டியதில்லை. தேடும் அனைவரையும் மீண்டும் ஒளியைக் காணவும், இஸ்ரவேலில் எனக்கு இருந்த மகிமையைக் காணவும் அனுமதிப்பேன்; நான் வெகு காலத்திற்கு முன்பே ஒரு வெள்ளை மேகத்தின் மீது மனிதகுலத்தின் மத்தியில் வந்துள்ளேன் என்பதை அவர்கள் காண அனுமதிப்பேன். எண்ணற்ற வெள்ளை மேகங்களையும், ஏராளமான பழக் கொத்துக்களையும் பார்க்க அவர்களை அனுமதிப்பேன், மேலும், அவர்களை இஸ்ரவேலின் தேவனாகிய யேகோவாவைப் பார்க்க அனுமதிப்பேன். யூதர்களின் எஜமானரையும், எதிர்பார்க்கப்படுகிற மேசியாவையும், யுகங்கள் முழுவதும் ராஜாக்களால் துன்புறுத்தப்பட்ட என் முழு தோற்றத்தையும் அவர்கள் காண அனுமதிப்பேன். முழுப் பிரபஞ்சத்திலும் நான் கிரியை செய்வேன் மேலும் மாபெரும் கிரியையைச் செய்வார். கடைசி நாட்களில் என் மகிமையையும் என் கிரியைகளையும் மனிதனுக்கு வெளிப்படுத்துவேன். எனக்காக பல வருடங்கள் காத்திருந்தவர்களுக்கும், ஒரு வெள்ளை மேகத்தின் மீது வர வேண்டும் என்று ஏங்கியவர்களுக்கும், மீண்டும் ஒரு முறை தோன்ற வேண்டும் என்று ஏங்கிய இஸ்ரவேலுக்கும், என்னைத் துன்புறுத்திய எல்லா மனிதர்களுக்கும் என் மகிமையான முகத்தை முழுமையாகக் காண்பிப்பேன். எனவே நான் நீண்ட காலத்திற்கு முன்பே என் மகிமையைக் கிழக்கிற்கு எடுத்துக்கொண்டு வந்தேன் என்றும் அது யூதேயாவில் இல்லை என்றும் அனைவரும் தெரிந்துகொள்வார்கள். கடைசி நாட்கள் ஏற்கனவே வந்துவிட்டன!
பிரபஞ்சம் முழுவதும் நான் எனது கிரியையைச் செய்கிறேன், கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி, எல்லா நாடுகளையும் மதங்களையும் அசைக்கின்றன. எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது என்னுடைய சத்தம். எல்லா மனிதர்களையும் என் சத்தத்தால் ஜெயங்கொண்டு, இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்வேன். எனக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வேன். ஏனென்றால், நான் நீண்ட காலமாக என் மகிமையை பூமியெங்கிலும் இருந்து மீட்டெடுத்து கிழக்கில் புதிதாக வெளியிட்டேன். எனது மகிமையைக் காண விரும்பாதோர் யார்? எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்? நான் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்? எனது அன்புக்காக ஏங்காதோர் யார்? வெளிச்சத்திற்கு வராதோர் யார்? கானானின் செழுமையை நோக்காதோர் யார்? மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்? சர்வ வல்லவரை வணங்காதோர் யார்? எனது சத்தம் பூமியெங்கும் பரவுகிறது. நான் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு, அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேச விரும்புகிறேன். மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல, எனது வார்த்தைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும் மனிதகுலத்துக்கும் பேசுகிறேன். எனவே, என்னுடைய வாயில் உள்ள வார்த்தைகள் மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன. எல்லா மனிதர்களும் என் வார்த்தைகளை மதிக்கிறார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது. என்னுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான், அதே நேரத்தில் அவற்றை புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான். எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான். ஒரு குழந்தை பிறந்திருப்பது போலவே, எல்லா மனிதர்களும் என் வருகையை கொண்டாடுவதில் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். என் சத்தம் மூலம், நான் எல்லா மனிதர்களையும் என் முன் கொண்டு வருவேன். அதன்பின்னர், நான் மனித இனத்திற்குள் முறையாக நுழைவேன், இதன்மூலம் அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள வருவார்கள். எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வந்து, மின்னல் கிழக்கிலிருந்து ஒளிர்வதையும், நான் கிழக்கிலுள்ள “ஒலிவ மலையில்” இறங்கியிருப்பதையும் என் மகிமையின் பிரகாசம் மற்றும் என் வாயின் வார்த்தைகள் ஆகியவற்றைக் கொண்டு காணச் செய்வேன். யூதர்களின் குமாரனாக அல்லாமல் கிழக்கின் மின்னலாக நான் ஏற்கனவே நீண்ட காலமாகப் பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். ஏனென்றால், நான் உயிர்த்தெழுப்பப்பட்டு, நீண்ட காலமாக மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று, பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளேன். எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் நானே. இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட குழந்தை நானே. அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள, சர்வவல்லமையுள்ள தேவன் நானே! அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வந்து என் மகிமையின் முகத்தைக் காணட்டும், என் சத்தத்தைக் கேட்கட்டும், என் கிரியைகளைப் பார்க்கட்டும். இதுதான் எனது முழுமையான சித்தமாகும். இது எனது திட்டத்தின் முடிவு மற்றும் உச்சக்கட்டம் மற்றும் எனது ஆளுகையின் நோக்கம் இதுவாகும். ஒவ்வொரு தேசமும் என்னை வணங்கட்டும், ஒவ்வொரு நாவும் என்னை அறிக்கை செய்யட்டும், ஒவ்வொரு மனிதனும் என் மீது விசுவாசம் வைத்துக்கொள்ளட்டும், ஒவ்வொரு ஜனமும் எனக்குக் கீழ்ப்படியட்டும்!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 70
பல ஆயிரம் ஆண்டுகளாக, இரட்சகரின் வருகையைக் காண்பதற்காக மனிதன் ஏங்குகிறான். இரட்சகராகிய இயேசு, அவருக்காக ஏங்கிய மற்றும் அவருக்காக காத்திருந்த ஜனங்களின் மத்தியில், ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நேரில் காண்பதற்காக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் ஏங்குகிறான். இரட்சகர் திரும்பி வந்து மீண்டும் அவர்களுடன் ஒன்றிணைய வேண்டுமெனவும் மனிதன் ஏங்குகிறான். அதாவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனங்களிடமிருந்து பிரிந்த இரட்சகராகிய இயேசு திரும்பி வருவதற்கும், யூதர்களிடையே அவர் செய்த மீட்பின் கிரியையை மீண்டும் செய்வதற்கும், மனிதனிடம் இரக்கமுள்ளவராகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்றும் ஏங்குகிறான். மனிதனுடைய பாவங்களை மன்னித்து, மனிதனுடைய பாவங்களைச் சுமந்து, மனிதனுடைய எல்லா மீறுதல்களையும் தாங்கி, மனிதனை பாவத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென மனிதன் ஏங்குகிறான். மனிதன் எதற்காக ஏங்குகிறான் என்றால், இரட்சகராகிய இயேசு முன்பு போலவே இருக்க வேண்டும் என்று, அதாவது அன்பானவராக, கனிவானவராக, மரியாதைக்குரியவராக, மனிதனிடம் ஒருபோதும் கோபப்படாதவராக, மனிதனை ஒருபோதும் நிந்திக்காதவராக, ஆனால் மனிதனுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்பவராக, முன்பு போலவே, மனிதனுக்காக சிலுவையில் மரிப்பவராக இருக்க வேண்டுமென மனிதன் ஏங்குகிறான். இயேசு புறப்பட்டதிலிருந்து, அவரைப் பின்பற்றிய சீஷர்களும், அவருடைய நாமத்தில் இரட்சிக்கப்பட்ட எல்லா பரிசுத்தவான்களும், அவருக்காக மிகுதியாக ஏங்கிக் காத்திருக்கிறார்கள். கிருபையின் யுகத்தில் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் இரட்சிக்கப்பட்ட அனைவருமே, இரட்சகராகிய இயேசு ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி, எல்லா ஜனங்களுக்கும் முன்பாக தோன்றும் அந்த மகிழ்ச்சியான கடைசி நாளுக்காக, ஏங்குகிறார்கள். இன்று, இரட்சகராகிய இயேசுவின் நாமத்தை ஏற்றுக் கொள்ளும் அனைவரின் ஒருமித்த விருப்பமும் இதுதான். இட்சகராகிய இயேசுவின் இரட்சிப்பை அறிந்திருக்கும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, தாம் திடீரென வந்து நிறைவேற்றுவேன் என்று சொன்னதை நிறைவேற்ற வேண்டுமென ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்: “நான் புறப்பட்டபடியே திரும்பி வருவேன்.” சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததைத் தொடர்ந்து, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு உன்னதமானவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்க மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார் என்று மனிதன் விசுவாசிக்கிறான். இதைப் போலவே, இயேசு மீண்டும் ஒரு வெண்மேகத்தின் மீது (இந்த மேகமானது இயேசு பரலோகத்திற்குத் திரும்பியபோது ஏறிச்சென்ற அதே மேகத்தைக் குறிக்கிறது) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தவர்களின் மத்தியில் அதே உருவத்துடனும் யூத வஸ்திரங்களுடனும் இறங்கி வருவார். அவர் மனிதனுக்குத் தோன்றியபின், அவர்களுக்கு ஆகாரத்தைக் கொடுப்பார், மேலும் அவர்களுக்காக ஜீவத்தண்ணீரைப் பாயச்செய்வார் மற்றும் மனிதர்களிடையே கிருபையும் அன்பும் நிறைந்த ஒருவராக, தெளிவானவராக மற்றும் உண்மையானவராக ஜீவிப்பார். இத்தகைய கருத்துக்கள் அனைத்தையும் ஜனங்கள் நம்புகின்றனர். ஆயினும், இரட்சகராகிய இயேசு இதைச் செய்யவில்லை. மனிதன் எண்ணியதற்கு நேர்மாறாக அவர் செய்தார். அவர் திரும்பி வர வேண்டுமென ஏங்கியவர்களிடையே அவர் வரவில்லை. வெண்மேகத்தின் மீது வரும் போது எல்லா ஜனங்களுக்கும் அவர் காட்சியளிக்கவில்லை. அவர் ஏற்கனவே வந்துவிட்டார், ஆனால் மனிதன் அவரை அறியவில்லை. அவரை அறியாதவனாக இருக்கிறான். ஒரு “வெண்மேகத்தின்” மீது (அந்த மேகமானது அவரது ஆவியாகிய மேகம், அவருடைய வார்த்தைகள், அவருடைய முழு மனநிலை மற்றும் அவருடைய எல்லாம்) அவர் இறங்கி வந்துவிட்டார் என்பதையும், கடைசி நாட்களில் தாம் உருவாக்கும் ஒரு ஜெயங்கொள்ளும் கூட்டத்தின் மத்தியில் இப்போது அவர் இருக்கிறார் என்பதையும் மனிதன் அறியாமலேயே, அவருக்காக அவன் காரணமில்லாமல் காத்திருக்கிறான். மனிதனுக்கு இது தெரியாது: பரிசுத்த இரட்சகராகிய இயேசு மனிதனிடம் நேசத்துடனும் அன்புடனும் இருந்தபோதிலும், அசுத்தமான மற்றும் தூய்மையற்ற ஆவிகள் வசிக்கும் அந்த “தேவாலயங்களில்” அவர் எவ்வாறு கிரியை செய்ய முடியும்? மனிதன் அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், பாவிகளுடைய மாம்சத்தை புசிப்பவர்களுடனும், இரத்தத்தைக் குடிப்பவர்களுடனும், அவர்களுடைய வஸ்திரங்களை உடுத்துபவர்களுடனும், தேவனை விசுவாசித்தப் பின்னரும் அவரை அறியாதவர்களுடனும், அவரைத் தொடர்ந்து வஞ்சிப்பவர்களுடனும் அவர் எவ்வாறு இருக்க முடியும்? இரட்சகராகிய இயேசு அன்பு நிறைந்தவர் என்பதையும், இரக்கத்தால் நிரம்பி வழிகிறார் என்பதையும், மீட்பால் நிரப்பப்பட்ட பாவநிவாரண பலி என்பதையும் மட்டுமே மனிதன் அறிந்திருக்கிறான். இருப்பினும், அவர் தான் தேவன் என்பதையும், அவர் நீதியுடனும், மாட்சிமையுடனும், கோபத்துடனும், நியாயத்தீர்ப்புடனும், அதிகாரம் உடையவராகவும், கண்ணியமனவராகவும் இருக்கிறார் என்பதையும் மனிதன் அறியாதிருக்கிறான். ஆகையால், மீட்பர் திரும்பி வர வேண்டுமென மனிதன் ஆவலுடன் ஏங்கினாலும், அவர்களுடைய ஜெபங்கள் பரலோகத்தையே அசைத்தாலும், இரட்சகராகிய இயேசுவை விசுவாசித்தும் அவரை அறியாத மனிதருக்கு அவர் காட்சியளிக்க மாட்டார்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 71
தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு நிர்வகிப்புத் திட்டம் முடிவுக்கு வருகிறது, அவர் தோன்றுதலைத் தேடுகிறவர்கள் அனைவருக்கும் ராஜ்யத்தின் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? நீங்கள் தேவன் தோன்றுவதற்காகக் காத்திருக்கிறீர்களா? நீங்கள் அவருடைய கால்தடங்களை தேடுகிறீர்களா? தேவன் தோன்றுதலுக்காக ஒருவர் எப்படி ஏங்குகிறார்! தேவனின் கால்தடங்களைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம்! இது போன்ற ஒரு யுகத்தில், இது போன்ற உலகில், தேவன் தோன்றும் நாளைக் காண நாம் என்ன செய்ய வேண்டும்? தேவனின் காலடிச் சுவடுகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன் தோன்ற வேண்டுமென்று காத்திருக்கும் அனைவருமே இந்த வகையான கேள்விகளை எதிர்கொள்கின்றனர். நீங்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இது குறித்து யோசனை செய்திருப்பீர்கள்—ஆனால் இதன் விளைவு என்ன? தேவன் எங்கு தோன்றுவார்? தேவனின் கால்தடங்கள் எங்கே? உங்களுக்கு பதில் கிடைத்ததா? பலர் இவ்வாறு பதிலளிப்பார்கள்: “தேவன் அவரைப் பின்பற்றுபவர்களிடையே தோன்றுகிறார், அவருடைய கால்தடங்கள் நம் மத்தியில் உள்ளன; இது அவ்வளவு எளிதானது!” யார் வேண்டுமானாலும் ஒரு சூத்திரமான பதிலை வழங்கலாம், ஆனால் தேவன் தோன்றுதல் அல்லது அவருடைய கால்தடங்கள் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா? தேவன் தோன்றுதல் என்பது அவர் தனது கிரியையை நேரடியாகச் செய்ய பூமிக்கு வருவதைக் குறிக்கிறது. அவருடைய சொந்த அடையாளத்துடனும், மனநிலையுடனும், மற்றும் இயல்பான உள்ளார்ந்த விதத்திலும் ஒரு யுகத்தைத் தொடங்குவதற்கும், ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான கிரியையைச் செய்ய அவர் மனிதர்கள் மத்தியில் இறங்கி வருகிறார். இந்த வகையான தோன்றுதல் என்பது ஒரு வகை சடங்கு அல்ல. இது ஒரு அடையாளமோ, படமோ, அதிசயமோ அல்லது ஒருவிதமான பிரமாண்டமான காட்சியோ அல்ல, அதிலும், இது ஒரு வகை மதம்சார்ந்த சம்பிரதாயமும் அல்ல. இது யாராலும் தொடவும், தரிசிக்கவும் முடிகின்ற ஒரு நிஜமான, நிச்சயமான உண்மை. இந்த வகையான வெளிப்படுதல் ஏதோ ஒன்று இயங்கவேண்டும் என்பததற்காகவோ, அல்லது எந்தவொரு குறுகிய கால பொறுப்பினை நிறைவேற்றவோ நடைபெறுவது அல்ல; மாறாக, அவருடைய நிர்வகிப்புத் திட்டத்தில் கிரியையின் ஒரு கட்டம். தேவனின் இந்தத் தோன்றுதல் எப்போதுமே அர்த்தமுள்ளதாக இருக்கும், மேலும் அவருடைய நிர்வகிப்புத் திட்டத்துடன் எப்போதும் சில தொடர்பைக் கொண்டிருக்கும். இங்கே “தோன்றுதல்” என்று அழைக்கப்படுவது, தேவன் மனிதனை வழிநடத்தும், அழைத்துச் செல்லும், அறிவூட்டும் “தோன்றுதல்” வகையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒவ்வொரு முறையும் தன்னை வெளிப்படுத்தும்போது தேவன் தனது மகத்தான கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவேற்றுகிறார். இந்தக் கிரியை வேறு எந்த யுகத்திலிருந்தும் வேறுபட்டது. இது மனிதனால் கற்பனை செய்ய முடியாதது, மனிதனால் ஒருபோதும் அனுபவிக்கப்பட்டிராதது. இந்தக் கிரியை ஒரு புதிய யுகத்தைத் தொடங்கி பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும், இது மனிதகுலத்தை இரட்சிப்பதற்கான புதிய மற்றும் மேம்பட்ட கிரியை வடிவமாகும்; அது மட்டுமல்ல, இது மனிதகுலத்தை புதிய யுகத்திற்கு கொண்டுச் செல்லும் கிரியை. தேவன் தோன்றுதலும் இதைத்தான் குறிக்கிறது.
தேவன் தோன்றுதல் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டவுடன், தேவனின் கால்தடங்களை எவ்வாறு நாட வேண்டும்? இந்தக் கேள்வியை விளக்குவது கடினம் அல்ல: தேவன் எங்கெல்லாம் தோன்றுகிறாரோ, அங்கெல்லாம் நீங்கள் அவருடைய காலடிச் சுவடுகளைக் காண்பீர்கள். அத்தகைய விளக்கம் புரிந்துகொள்ள எளிதானதாகத் தோன்றினாலும், அது நடைமுறையில் அவ்வளவு எளிதானது அல்ல, ஏனென்றால் தேவன் எங்கு தோன்றுவார் என்பது பலருக்குத் தெரியவில்லை, அதிலும் அவர் எங்கு தோன்ற விரும்புகிறார், அவர் எங்கு தோன்ற வேண்டுமென்பது தெரியவில்லை. பரிசுத்த ஆவியானவர் எங்கு தனது கிரியையை மேற்கொண்டாலும், அங்கே தேவன் தோன்றுவார் என்று சிலர் உணர்ச்சிவசப்பட்டு நம்புகிறார்கள். இல்லையெனில் ஆவிக்குரிய உருவங்கள் எங்கிருந்தாலும் அங்கே தேவன் தோன்றுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இல்லையென்றால் உயர்ந்த புகழ் பெற்றவர்கள் எங்கிருந்தாலும் தேவன் அங்கே தோன்றுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இப்போதைக்கு, இதுபோன்ற நம்பிக்கைகள் சரியானதா, தவறானதா என்று பார்ப்பதைத் தள்ளிவைப்போம். அத்தகைய கேள்வியை விளக்க, நாம் முதலில் ஒரு தெளிவான குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும்: நாம் தேவனின் கால்தடங்களைத் தேடுகிறோம். நாம் ஆவிக்குரிய நபர்களைத் தேடவில்லை, அதிலும் நாம் புகழ்பெற்ற நபர்களைப் பின்தொடரவில்லை; நாம் தேவனுடைய கால்தடங்களை பின்தொடர்கிறோம். இந்தக் காரணத்திற்காக, நாம் தேவனின் கால்தடங்களைத் தேடுகிறோம் என்பதால், தேவனுடைய சித்தம், தேவனுடைய வசனங்கள், அவருடைய சொற்களைத் தேடும் கடமையை இது நமக்கு அளிக்கிறது—ஏனென்றால் எங்கெல்லாம் தேவனால் புதிய சொற்கள் பேசப்படுகிறதோ, அங்கு தேவனின் குரல் இருக்கும், தேவனின் அடிச்சுவடுகள் எங்கிருந்தாலும், அங்கு தேவனின் கிரியைகள் இருக்கும். தேவனின் வெளிப்பாடு எங்கிருந்தாலும், அங்கே தேவன் தோன்றுவார், தேவன் எங்கு தோன்றினாலும், அங்கே சத்தியம், வழி மற்றும் ஜீவன் இருக்கும். தேவனின் கால்தடங்களைத் தேடுவதில், நீங்கள் “தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்” என்கிற சொற்களை உதாசீனம் செய்துவிட்டீர்கள். எனவே, பலர், சத்தியத்தைப் பெற்றாலும், அவர்கள் தேவனின் கால்தடங்களைக் கண்டுபிடித்துவிட்டதை நம்புவதில்லை, அதிலும் அவர்கள் தேவனின் தோன்றுதலை ஒப்புக்கொள்வதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு! தேவன் தோன்றுதலை மனிதனின் கருத்துகளுடன் தொடர்புப்படுத்த முடியாது, அதிலும் தேவன் மனிதனின் கட்டளைப்படி தோன்ற மாட்டார். தேவன் தனது கிரியையைச் செய்யும்போது அவருடைய சொந்தத் தேர்வுகளையும், அவருடைய சொந்தத் திட்டங்களையும் வகுக்கிறார்; மேலும், அவர் தனது சொந்த குறிக்கோள்களையும் தனது சொந்த முறைகளையும் கொண்டிருக்கிறார். அவர் எந்த கிரியையைச் செய்தாலும், அதை மனிதனுடன் விவாதிக்க அல்லது அவனுடைய ஆலோசனையைப் பெற வேண்டிய தேவை அவருக்கு இல்லை. அதிலும், அவருடைய கிரியை குறித்து ஒவ்வொரு நபருக்கும் தெரிவிக்க வேண்டியதும் இல்லை. இது தேவனுடைய இயல்பான பண்பாகும், மேலும், இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். நீ தேவனின் தோன்றுதலைக் காணவும் தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவும் விரும்பினால், நீ முதலில் உன் சொந்த கருத்துக்களிலிருந்து வெளியேற வேண்டும். தேவன் இதைச் செய்ய வேண்டும் அல்லது அதைச் செய்ய வேண்டும் என்று நீ கேட்கக்கூடாது, அதிலும் நீ அவரை உன் சொந்த கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், உன் கருத்துகளுக்கேற்ப தடுக்கவும் கூடாது. அதற்கு பதிலாக, நீ தேவனின் கால்தடங்களை எவ்வாறு தேட வேண்டும், நீ தேவனின் தோன்றுதலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனின் புதிய கிரியைக்கு நீ எவ்வாறு அடிபணிய வேண்டும் என்று நீ கேட்க வேண்டும்: இதைத் தான் மனிதன் செய்ய வேண்டும். மனிதன் சத்தியம் அல்ல, சத்தியத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதால், அவன் அவரை நாட வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவன் தோன்றுதல் ஒரு புதிய யுகத்தைத் துவக்கியிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 72
நீங்கள் அமெரிக்கராகவோ, ஆங்கிலேயராகவோ, அல்லது வேறு எந்த தேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும், உங்கள் சொந்தத் தேசத்தின் கட்டுப்பாடுகளைத் தாண்டி வெளியே வர வேண்டும், உங்கள் சுயத்தைக் கடந்து, தேவனின் கிரியையை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் பார்வையில் பார்க்க வேண்டும். இந்த வழியில், நீங்கள் தேவனின் கால்தடங்களில் வரம்புகளை விதிக்க மாட்டீர்கள். ஏனென்றால், இப்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களிடையே தேவன் தோன்றுவார் என்பது கூடாத காரியம் என்று பலர் கருதுகிறார்கள். தேவனின் கிரியையின் முக்கியத்துவம் எவ்வளவு ஆழமானது, தேவன் தோன்றுதல் எவ்வளவு முக்கியமானது! மனிதனின் கருத்துகளுக்கும் சிந்தனைக்கும் இதனை மதிப்பிடுவதற்கான சாத்தியம் எப்படி இருக்கும்? எனவே நான் சொல்கிறேன், தேவன் தோன்றுதலைத் தேடுவதற்கு நீங்கள் தேசியம் மற்றும் இனத்தின் கருத்துக்களை உடைக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்கள் சொந்தக் கருத்துக்களால் கட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள்; இதன் மூலம் மட்டுமே தேவன் தோன்றுதலை வரவேற்க நீங்கள் தகுதி பெறுவீர்கள். இல்லையெனில், நீங்கள் நித்திய இருளில் இருப்பீர்கள், ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெற மாட்டீர்கள்.
தேவன் என்பவர் முழு மனிதஇனத்திற்கும் தேவனாயிருக்கிறார். அவர் தன்னை எந்தவொரு தேசத்தின் அல்லது மக்களின் தனிப்பட்ட சொத்தாகக் கருதுவதில்லை, ஆனால் அவர் எந்தவொரு வடிவத்தாலும், தேசத்தாலும், மக்களாலும் கட்டுப்படுத்தப்படாமல், திட்டமிட்டபடி தனது வேலையைச் செய்கிறார். ஒருவேளை நீ இந்த வடிவத்தை ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திராமல் இருக்கலாம், அல்லது ஒருவேளை இந்த வடிவத்தை ஒரு வகையில் மறுப்பது உன் அணுகுமுறையாக இருக்கலாம், அல்லது ஒருவேளை தேவன் தன்னை வெளிப்படுத்தும் தேசம் மற்றும் அவர் தன்னை யார் மத்தியில் வெளிப்படுத்துகிறாரோ அந்த மக்கள் ஆகியோர், அனைவராலும் பாகுபாடு காட்டப்படுபவர்களாகவும், பூமியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களாகவும் இருக்க நேரிடலாம். எனினும் தேவனுக்கு அவருடைய ஞானம் இருக்கிறது. அவருடைய மகா வல்லமையினாலும், அவருடைய சத்தியத்தினாலும், அவருடைய மனநிலையினாலும், அவருடைய எண்ணத்துடன் ஒத்துப்போகின்ற ஒரு ஜனக்குழுவையும், அவர் முழுமையாக்க விரும்பிய ஒரு ஜனக்குழுவையும் அவர் உண்மையிலேயே பெற்றுள்ளார்—இது அவரால் வெற்றி கொள்ளப்பட்ட, எல்லா விதமான சோதனைகளையும் இன்னல்களையும், எல்லா விதமான துன்புறுத்தல்களையும் சகித்துக் கொண்டு, அவரை இறுதிவரை பின்பற்ற முடிகின்ற ஒரு ஜனக்குழுவாக இருக்கும். தேவன் தோன்றுவதன் நோக்கமாவது, எந்தவொரு வடிவத்தின் அல்லது தேசத்தின் தடைகளிலிருந்தும் விடுவித்து, அவர் திட்டமிட்டபடி அவரது வேலையைச் செயல்படுத்தி முடிக்கவேண்டும் என்பதாகும். யூதேயாவில் தேவன் மாம்சமானது போலவே இதுவும் உள்ளது: மனித இனம் முழுவதையும் மீட்பதற்காகச் சிலுவையில் அறையப்படும் வேலையை முடிப்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஆயினும் யூதர்கள் இது தேவனால் கூடாத காரியம் என்று நம்பினர், மேலும் தேவன் மாம்சமாகி, கர்த்தர் இயேசுவின் ரூபத்தை ஏற்பது கூடாத காரியம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களுடைய “கூடாத காரியம்” அவர்கள் தேவனைக் கண்டித்து எதிர்த்ததற்கான அடிப்படையாக மாறியது, இறுதியில் இஸ்ரவேலின் அழிவுக்கு வழிவகுத்தது. இன்று, பலர் இதே போன்ற பிழையைச் செய்துள்ளனர். தேவனுடைய உடனடி பிரசன்னமாகுதலை அவர்கள் தங்கள் முழு பலத்தோடும் பறைசாற்றுகிறார்கள், ஆனால் அதே நேரத்தில் அவருடைய பிரசன்னமாகுதலை கண்டிக்கிறார்கள்; அவர்களுடைய “கூடாத காரியம்” தேவனின் பிரசன்னமாகுதலை அவர்களின் கற்பனையின் எல்லைக்குள் மீண்டும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, தேவனுடைய வசனங்களைக் கேட்ட பிறகு பலர் பலத்த, கடுமையான நகைப்பினால் பரியாசம்பண்ணுவதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இந்த நகைப்பு யூதர்களின் ஆக்கினையிலிருந்தும், தேவ தூஷணத்திலிருந்தும் வேறுபட்டதா? சத்தியத்தின் முன்னிலையில் நீங்கள் பயபக்தியுடன் இல்லை, அதிலும் குறைவாகவே நீங்கள் ஏக்கத்தின் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறீர்கள். நீ செய்வதெல்லாம் பகுத்தறியாமல் படிப்பது மற்றும் அக்கறையற்ற மகிழ்ச்சியுடன் காத்திருப்பது மட்டுமே. இப்படி படிப்பதிலிருந்தும் காத்திருப்பதிலிருந்தும் நீ என்ன பெற முடியும்? நீ தேவனிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதலைப் பெறுவாய் என்று நினைக்கிறாயா? தேவனுடைய வசனங்களை நீ நிதானித்து அறிய முடியாவிட்டால், தேவனுடைய பிரசன்னமாகுதலை காண நீ எந்த வகையில் தகுதியுடையவர்? தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம் இருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களால் மட்டுமே தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும், மேலும் அத்தகைய ஜனங்கள் மட்டுமே தேவனுடைய பிரசன்னமாகுதலைக் காண தகுதியுடையவர்களாவர். உன் கருத்துகளை விட்டுவிடு! நீங்களே அமைதியாக இருந்து, இந்த வார்த்தைகளைக் கவனமாக வாசி. நீ சத்தியத்திற்காக ஏங்குகிறாய் என்றால், தேவன் உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார், மேலும் நீ அவருடைய சித்தத்தையும் அவருடைய வார்த்தைகளையும் புரிந்துகொள்வாய். "கூடாத காரியம்" பற்றிய உங்கள் கருத்துக்களை விட்டுவிடுங்கள்! எது ஒன்றைக் கூடாத காரியம் என்று மக்கள் அதிகளவு நம்புகிறார்களோ, அது நிகழ்வதற்கான வாய்ப்பு அந்தளவிற்கு அதிகமாக உள்ளது, ஏனென்றால் தேவனின் ஞானம் வானங்களைவிட உயர்ந்தது, தேவனுடைய நினைவுகள் மனிதனின் நினைவுகளை விட உயர்ந்தவை, மேலும் தேவனுடைய கிரியை மனிதனின் நினைவு மற்றும் கருத்துக்களின் வரம்புகளைக் கடந்தது. எது ஒன்று அதிகளவு கூடாத காரியமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நாடிச்செல்லக்கூடிய சத்தியம் அதில் இருக்கும்; மனிதனின் கருத்துக்களுக்கும் கற்பனைக்கும் அதிகம் அப்பாற்பட்டதாக எது ஒன்று இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக அது தேவனுடைய சித்தத்தைக் கொண்டுள்ளது. ஏனென்றால், அவர் தன்னை எங்கு வெளிப்படுத்தினாலும், தேவன் இன்னும் தேவன் தான், அவருடைய தோன்றும் இடம் அல்லது முறை காரணமாக அவருடைய தன்மை ஒருபோதும் மாறாது. தேவனின் மனநிலை அவருடைய கால்தடங்கள் எங்கு இருந்தாலும் மாறாமல் அப்படியே இருக்கும், தேவனின் கால்தடங்கள் எங்கு இருந்தாலும், கர்த்தராகிய இயேசு எப்படி இஸ்ரவேலர்களின் தேவனாக மட்டுமல்லாமல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் எல்லா மக்களுக்கும், மேலும் அதற்கும் மேலாக அவர் முழுப் பிரபஞ்சத்திற்கும் ஒரே தேவனாக இருக்கிறாரோ அது போலவே அவர் எல்லா மனித இனத்திற்கும் தேவனாயிருக்கிறார். ஆகவே, தேவனுடைய சித்தத்தை நாடுவோம், அவருடைய வசனங்களில் அவருடைய தோன்றுதலைக் கண்டுபிடிப்போம், அவருடைய காலடிச் சுவடுகளின் வேகத்திற்கு ஈடுகொடுப்போம்! தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார். அவரது வார்த்தைகளும் அவரது தோன்றுதலும் ஒரே நேரத்தில் சந்திக்கின்றன, அவருடைய மனநிலையும் கால்தடங்களும் மனிதகுலத்திற்கு எல்லா நேரங்களிலும் திறந்திருக்கும். அன்புள்ள சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த வார்த்தைகளில் தேவனின் தோன்றுதலைக் காண முடியும் என்று நம்புகிறேன், புதிய யுகத்திற்கு முன்னேறிச் செல்கையில் அவருடைய காலடிச் சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கி, தேவன் பிரசன்னமாகுதலுக்காக காத்திருப்பவர்களுக்குத் தேவன் தயார் செய்திருக்கும் அழகான புதிய வானம் மற்றும் புதிய பூமிக்குள் நுழைந்திடுங்கள்!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவன் தோன்றுதல் ஒரு புதிய யுகத்தைத் துவக்கியிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 73
தேவன் மெளமாக இருக்கிறார், நம்மிடம் ஒருபோதும் தோன்றியதில்லை, ஆனாலும் அவருடைய கிரியை ஒருபோதும் ஓய்ந்துவிடவில்லை. அவர் பூமி முழுவதையும் கண்ணோக்கிப் பார்த்து, சகலத்தையும் கட்டளையிடுகிறார், மனுஷனுடைய எல்லா வார்த்தைகளையும் செயல்களையும் பார்க்கிறார். அவர் தனது மேலாண்மையை அளவிடப்பட்ட படிகளுடனும், அவருடைய திட்டத்தின் படியும், மெளனமாகவும், அளப்பெரிய பாதிப்பின்றி நடத்துகிறார், அவருடைய அடிச்சுவடுகள் ஒவ்வொன்றாக முன்னேறி, மனுக்குலத்துடன் எப்பொழுதும் நெருக்கமாக இருக்கின்றன. மேலும் அவரது நியாயத்தீர்ப்பின் சிங்காசனம் மின்னல் வேகத்தில் பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படுகிறது, அதைத் தொடர்ந்து அவருடைய சிங்காசனம் நம் மத்தியில் உடனடியாக இறங்குகிறது. என்ன ஒரு மாட்சியமையான காட்சி, என்ன ஒரு ஆரவாரமான மற்றும் ஆர்ப்பரிப்பான காட்சி! ஒரு புறாவைப் போலவும், கர்ஜிக்கிற சிங்கத்தைப் போலவும், ஆவியானவர் நமது மத்தியில் வருகிறார். அவர் ஞானமாயிருக்கிறார், அவர் நீதியாகவும் மாட்சிமையாகவும் இருக்கிறார், அவர் நமது மத்தியில் இரகசியமாக வருகிறார், அதிகாரம் செலுத்துகிறார், அன்பும் கிருபையும் நிறைந்தராக இருக்கிறார். அவருடைய வருகையை ஒருவரும் அறியார், அவருடைய வருகையை ஒருவரும் வரவேற்கவில்லை, மேலும் என்னவென்றால், அவர் செய்யவிருக்கும் அனைத்தையும் ஒருவரும் அறியார். மனிதனின் வாழ்க்கை முன்பைப் போலவே செல்கிறது, அவனுடைய இருதயத்தில் மாறுபாடில்லை, நாட்கள் வழக்கம் போல் செல்கின்றன. பிற மனுஷர்களுக்கு மத்தியில் ஒரு மனுஷன் வாசம்பண்ணுவது போலவும், எளிய விசுவாசிகளில் ஒருவரைப் போலவும், ஒரு சாதாரண விசுவாசியைப் போலவும் தேவன் நமக்கு மத்தியில் வாசம்பண்ணுகிறார். அவர் தமது சொந்த நோக்கங்களையும், தமது சொந்த குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறார்; மேலும் என்னவென்றால், சாதாரண மனிதர்கள் பெற்றிருக்காத தெய்வீகத்தன்மையைக் கொண்டிருக்கிறார். அவருடைய தெய்வீகத்தன்மை இருப்பதை யாரும் கண்டதில்லை, அவருடைய சாராம்சத்திற்கும் மனிதனுடைய சாராம்சத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவரும் புரிந்துகொண்டதில்லை. நாம் அவருடன் சேர்ந்து கட்டுப்படுத்தப்படாமலும் பயப்படாமலும் ஜீவிக்கிறோம், ஏனென்றால் நமது பார்வையில் அவர் ஒரு அற்பமான விசுவாசியாகவே இருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு அசைவையும் அவர் உற்றுநோக்கிப் பார்க்கிறார், நம்முடைய எண்ணங்கள் மற்றும் யோசனைகள் அனைத்தும் அவருக்கு முன்பாக வெளியரங்கமாக வைக்கப்பட்டுள்ளன. அவருடைய இருப்பின் மீது ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை, அவருடைய செயல்பாடு குறித்து ஒருவரும் கற்பனை செய்து பார்க்கவில்லை, மேலும் என்னவென்றால், அவருடைய அடையாளம் குறித்து யாருக்கும் லேசான சந்தேகமும் இல்லை. அவருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, நமது நோக்கங்களை மட்டுமே நிறைவேற்றுகிறோம் …
ஒருவேளை, பரிசுத்த ஆவியானவர் அவர் “மூலமாக” ஒரு பத்தி வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார் என்றால், அது மிகவும் எதிர்பாராததாக உணர்ந்தாலும், நாம் அதை தேவனிடமிருந்து வரும் ஒரு வார்த்தையாக உணர்ந்து, உடனடியாக அதை தேவனிடமிருந்து ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால், இந்த வார்த்தைகளை யார் வெளிப்படுத்துகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவை பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருவதனால், நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவற்றை மறுக்கக்கூடாது. அடுத்த வார்த்தை என் மூலமாகவோ அல்லது உன் மூலமாகவோ அல்லது வேறு ஒருவர் மூலமாகவோ வரலாம். அது யாராக இருந்தாலும், எல்லாம் தேவனுடைய கிருபையாகும். ஆனாலும், அது யாராக இருந்தாலும், நாம் இந்த நபரை தொழுதுகொள்ள இயலாது, என்னவாக இருந்தாலும், இந்த நபர் தேவனாக இருக்க இயலாது, இதுபோன்ற எந்தவொரு சாதாரண மனிதனையும் எக்காரணம் கொண்டும் நமது தேவனாக தேர்ந்தெடுக்க மாட்டோம். நமது தேவன் மிகவும் பெரியவர், கனத்திற்குரியவர்; இதுபோன்றதொரு அற்ப நபர் எப்படி அவருடைய இடத்தில் நிற்க முடியும்? மேலும் என்னவென்றால், தேவன் வந்து நம்மை மீண்டும் பரலோகராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நாம் காத்திருக்கிறோம், ஆகையால் மிகவும் அற்பமான ஒருவர் இதுபோன்றதொரு முக்கியமான மற்றும் கடினமான பணியை எவ்வாறு செய்ய இயலும்? கர்த்தர் மறுபடியும் வந்தால், எல்லா ஜனங்களும் பார்க்கும் வண்ணமாக அவர் வெண் மேகத்தின் மீது இருக்க வேண்டும். அது எவ்வளவு மகிமையுள்ளதாக இருக்கும்! சாதாரண ஜனங்கள் மத்தியில் அவர் தம்மை இரகசியமாக ஒளித்துக்கொள்வது எப்படி சாத்தியமாகும்?
ஆனாலும், இந்த சாதாரண மனிதர்தான் ஜனங்கள் மத்தியில் ஒளித்துக்கொண்டு, நம்மை இரட்சிக்கும் புதிய கிரியையை நடப்பிக்கிறார். அவர் நமக்கு எந்த விளக்கங்களையும் தருவதில்லை, அவர் ஏன் வந்தார் என்றும் அவர் நம்மிடம் சொல்வதில்லை, ஆனால் அவருடைய திட்டத்தின் படி அளவிடப்பட்ட படிகளைக் கொண்டு தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்கிறார். அவருடைய வார்த்தைகளும் சொற்களும் அடிக்கடி வெளிப்படுகின்றன. ஆறுதல் செய்தல், அறிவுரை வழங்குதல், நினைவூட்டுதல் மற்றும் எச்சரித்தல் முதல் கண்டித்தல் மற்றும் சிட்சித்தல் வரை; மென்மையான மற்றும் கனிவான ஒரு தொனி முதல் மிகவும் கடுமையான மற்றும் கம்பீரமான வார்த்தைகள் வரை என இவை அனைத்தும் மனிதன் மீது இரக்கத்தைப் பொழிகின்றன, அவனுக்குள் நடுக்கத்தை உண்டாக்குகின்றன. அவர் கூறும் அனைத்தும் நமக்குள் மறைந்திருக்கும் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றன; அவருடைய வார்த்தைகள் நமது இருதயங்களைக் குத்துகின்றன, நம்முடைய ஆவிகளைக் குத்துகின்றன, நம்மை தாங்கமுடியாத அவமானத்தால் நிரப்புகின்றன, நம்மை எங்கே மறைத்துக்கொள்வது என்று தெரிவதில்லை. இந்த மனிதரின் இருதயத்திலுள்ள தேவன் மெய்யாகவே நம்மை அன்பு செய்கிறாரா மற்றும் அவர் சரியாக என்ன செய்கிறார் என்று நாம் யோசிக்க ஆரம்பிக்கிறோம். ஒருவேளை நாம் இந்த பாடுகளை சகித்த பிறகே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? வரப்போகும் முடிவைப் பற்றியும் எதிர்கால தலைவிதியைப் பற்றியும் நமது மனதில் கணக்குப்போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆயினும், முன்பு போலவே, நமது மத்தியில் கிரியையைச் செய்வதற்கு தேவன் ஏற்கனவே மாம்ச ரூபமெடுத்தார் என்று நம்மில் யாரும் நம்புவதில்லை. அவர் இவ்வளவு நீண்ட காலமாக நம்முடனே இருந்தபோதிலும், அவர் ஏற்கனவே நம்முடன் பல வார்த்தைகளை முகமுகமாகப் பேசியிருந்தபோதிலும், இதுபோன்றதொரு சாதாரண மனிதனை நமது எதிர்காலத்தின் தேவனாக ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை, இன்னும் சொல்லப்போனால் நமது எதிர்காலம் மற்றும் நமது தலைவிதியின் கட்டுப்பாட்டை இந்த அற்பமான நபரிடம் ஒப்படைக்கவும் நாம் தயாராக இல்லை. நாம் அவரிடமிருந்து ஜீவ தண்ணீரை அளவில்லாமல் பெற்று அனுபவிக்கிறோம், அவர் மூலமாக நாம் தேவனை முகமுகமாகப் பார்த்து ஜீவிக்கிறோம். ஆனால், நாம் பரலோகத்திலுள்ள கர்த்தராகிய இயேசுவின் கிருபைக்கு மாத்திமே நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறோம், மேலும் தெய்வீகத்தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதனின் உணர்வுகளுக்கு நாம் ஒருபொழுதும் செவிசாய்த்ததில்லை. ஆயினும், முன்பு போலவே, மனுக்குலம் தன்னை புறக்கணிப்பதை அறியாதவர் போலவும், மனுஷனின் குழந்தைத்தனத்தையும் அறியாமையையும் நித்தியமாக மன்னிப்பதைப் போலவும், தம் மீது மனிதனுக்கு உண்டான பயபக்தியற்ற மனப்பான்மையை சதாகாலங்களிலும் சகித்துக்கொள்வது போலவும் அவர் மாம்சத்தில் மறைந்திருந்து தமது கிரியையை மனத்தாழ்மையுடன் நடப்பிக்கிறார்.
நமக்குத் தெரியாமலே, இந்த அற்பமான மனிதர் தேவனுடைய கிரியைக்கு நம்மை படிப்படியாக வழிநடத்திச் சென்றிருக்கிறார். நாம் எண்ணற்ற உபத்திரவங்களுக்கு ஆளாகிறோம், எண்ணற்ற ஆக்கினைத்தீர்ப்புகளைச் சுமக்கிறோம், மரணத்தால் சோதிக்கப்படுகிறோம். நாம் தேவனுடைய நீதியான மற்றும் மாட்சிமையான மனநிலையைப் பற்றி அறிந்துகொள்கிறோம். அவருடைய அன்பையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம். தேவனுடைய மாபெரும் வல்லமையையும் ஞானத்தையும் பாராட்டுகிறோம். தேவனுடைய அழகைக் காண்கிறோம், மேலும் மனிதனை இரட்சிப்பதற்கான தேவனுடைய ஆவல்மிக்க வாஞ்சையையும் காண்கிறோம். இந்த சாதாரண மனிதனின் வார்த்தைகளில், தேவனுடைய மனநிலையையும் இயல்பையும் அறிந்துகொள்கிறோம், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்கிறோம், மனிதனுடைய சுபாவத்தையும் சாராம்சத்தையும் அறிந்துகொள்கிறோம், இரட்சிப்புக்கும் பரிபூரணமாவதற்குகான வழியைக் கண்டடைகிறோம். அவருடைய வார்த்தைகள் நம்மை “மரிக்கச்” செய்கின்றன, மேலும் அவை நம்மை “மறுபடியும் பிறக்கச்” செய்கின்றன. அவருடைய வார்த்தைகள் நமக்கு ஆறுதலளிக்கின்றன, ஆனாலும் அவை நம்மை குற்ற உணர்ச்சியினாலும், கடன்பட்ட உணர்வினாலும் நம்மை நொறுங்கிபோகச் செய்கின்றன. அவருடைய வார்த்தைகள் நமக்கு அக்களிப்பையும் சமாதானத்தையும் தந்தருளுகின்றன, ஆனால் முடிவில்லா வேதனையையும் தருகின்றன. சில நேரங்களில் நாம் அவருடைய கரங்களில் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படுகிற ஆட்டுக்குட்டிகளாக இருக்கிறோம். சில நேரங்களில் நாம் அவருடைய கண்ணின் மணியைப் போன்றவர்களாக இருக்கிறோம், மேலும் அவருடைய இதமான அன்பை அனுபவிக்கிறோம். சில நேரங்களில் நாம் அவருடைய எதிரியைப் போல இருக்கிறோம், மேலும் அவருடைய பார்வையின் கீழ் அவருடைய கோபாக்கினையினால் சாம்பலாகிவிடுகிறோம். நாம் அவரால் இரட்சிக்கப்பட்ட மனித இனம், நாம் அவருடைய கண்களில் புழுக்களைப் போல இருக்கிறோம். நாம் காணாமற்போன ஆட்டுக்குட்டிகளாக இருக்கிறோம். இரவும் பகலும், அவர் நம்மை இடைவிடாமல் தேடுகிறார். அவர் நம்மீது இரக்கமுள்ளவராகவே இருக்கிறார், அவர் நம்மை வெறுக்கிறார், அவர் நம்மை உயர்த்துகிறார், அவர் நமக்கு ஆறுதலளிக்கிறார், நமக்கு புத்திசொல்கிறார், அவர் நமக்கு வழிகாட்டுகிறார், அவர் நமக்கு அறிவூட்டுகிறார், அவர் நம்மை சிட்சிக்கிறார், சீர்படுத்துகிறார், அவர் நம்மை சபிக்கவும் செய்கிறார். இரவும் பகலும், அவர் நம்மைப் பற்றி கவலைப்படுவதிலிருந்து ஒருபொழுதும் ஓய்வதில்லை, மேலும் இரவும் பகலும் அவர் நம்மைப் பாதுகாக்கிறார், நம்மை விசாரிக்கிறவராக இருக்கிறார், அவர் ஒருபொழுதும் நம்மைக் கைவிடுவதில்லை, ஆனால் நமக்காக அவருடைய இருதயத்தின் இரத்தத்தைச் சிந்துகிறார், மேலும் நமக்காக எந்தவொரு விலைக்கிரயத்தையும் கொடுக்கிறார். இச்சிறிய மற்றும் சாதாரண மாம்ச உடலின் வார்த்தைகளுக்குள், நாம் தேவனை முழுமையாக அனுபவித்திருக்கிறோம் மற்றும் தேவன் நம்மீது சுமத்திய தலைவிதியைக் கண்கிறோம். இவ்வாறு இருப்பினும், மாயையானது இன்னும் நமது இருதயங்களுக்குள் குழப்பத்தை கிளறிவிடுகிறது, மேலும் இதுபோன்ற ஒருவரை நமது தேவனாக ஏற்றுக்கொள்ள நாம் இன்னும் மனதில்லாதவர்களாகவே இருக்கிறோம். நாம் மிகவும் அதிகமாக அனுபவிப்பதற்காக அவர் நமக்கு மிகவும் அதிகமான மன்னாவைத் தந்தருளியபோதிலும், இது எதுவுமே நமது இருதயத்தில் கர்த்தருக்கு இடமளிக்க இயலவில்லை. இந்த மனிதருடைய விசேஷித்த அடையாளத்தையும் நிலையையும் மிகவும் தயக்கத்துடன் மாத்திரமே கனப்படுத்துகிறோம். அவர் தேவன் என்பதை ஒப்புக்கொள்ளுமாறு அவர் நம்மிடம் கேட்டுக்கொள்ள வாய் திறக்காத வரை, நாம் அவரை சீக்கிரமே வரப்போகிற தேவனாகவும், நீண்ட காலமாகவே நமது மத்தியில் கிரியையை நடப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் ஒப்புக்கொள்வதற்கு நாம் ஒருபொழுதும் முன்வர மாட்டோம்.
தேவன் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிவுறுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்தியும், அதே நேரத்தில் அவருடைய இருதயத்தில் பேசியும் தமது வார்த்தைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். அவருடைய வார்த்தைகள் ஜீவ வல்லமையை தாங்கியுள்ளன, நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டுகின்றன, சத்தியம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. அவருடைய வார்த்தைகளால் நாம் கவர்ந்துகொள்ளப்பட ஆரம்பிக்கிறோம், அவர் பேசும் தொனியிலும் விதத்திலும் நாம் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறோம், மேலும் நம்மை அறியாமலேயே இந்த சாதாரண மனிதனுடைய ஆழ்மன உணர்வுகளில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கிறோம். அவர் நமது சார்பாக கிரியையைச் செய்வதற்காக அவருடைய இருதயத்தின் இரத்தத்தை சிந்துகிறார், நம் நிமித்தமாக அவர் தூக்கத்தையும் பசியையும் தொலைக்கிறார், நமக்காக அழுகிறார், நமக்காக பெருமூச்சு விடுகிறார், நமக்காக நோயினால் அவதிப்படுகிறார், நமது முடிவுக்காகவும் இரட்சிப்பிற்காகவும் அவமானத்தை அனுபவிக்கிறார். நமது உணர்ச்சியற்ற நிலையும் கலகக் குணமும் அவருடைய இருதயத்திலிருந்து கண்ணீரையும் இரத்தத்தையும் வரவழைக்கிறது. இவ்வாறு இருப்பதும் எந்தவொரு சாதாரண மனுஷனுக்கும் சொந்தமானவராக இல்லாதிருப்பதும், எந்தவொரு கேடான மனுஷனாலும் பெற்றிருக்கவோ அல்லது அடையவோ இயலாததாக இருக்கிறது. எந்தவொரு சாதாரண மனுஷனிடமும் இல்லாத சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் அவர் காட்டுகிறார், மேலும் அவருடைய அன்பானது எந்தவொரு சிருஷ்டியிடத்திலும் காணப்படாத ஒன்றாகும். அவரைத் தவிர வேறு யாராலும் நமது எண்ணங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளவோ அல்லது நமது சுபாவத்தையும் சாராம்சத்தையும் தெளிவாகவும் மற்றும் முழுமையாகவும் புந்துகொள்ளவோ அல்லது மனுக்குலத்தின் கலகக் குணத்தையும் சீர்கேட்டையும் நியாயந்தீர்க்கவோ அல்லது நம்மிடம் பேசவோ, பரலோக தேவனின் சார்பாக இதுபோல நமது மத்தியில் கிரியை செய்யவோ முடியாது. அவரைத் தவிர வேறு யாரிடமும் தேவனுடைய அதிகாரமும், ஞானமும் மற்றும் மேன்மையும் கிடையாது; தேவனுடைய மனநிலையும் மற்றும் தேவனிடம் இருப்பதும், தேவன் யார் என்பதும் அவருக்குள் அவர்களுடைய பரிபூரணத்தில் உண்டாகின்றன. அவரைத் தவிர வேறு யாரும் நமக்கு வழியைக் காட்டவும் வெளிச்சத்தைக் கொண்டுவரவும் இயலாது. அவரைத் தவிர வேறு யாராலும் சிருஷ்டிப்பின் நாள் முதல் இன்று வரை தேவன் வெளிப்படுத்தாத மறைபொருட்களை வெளிப்படுத்த இயலாது. அவரைத் தவிர வேறு யாராலும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்தும், நம்முடைய சொந்த கேடான மனநிலையிலிருந்தும் நம்மை இரட்சிக்க இயலாது. அவர் தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் தேவனுடைய மிகவும் ஆழமான இருதயத்தையும், தேவனுடைய அறிவுரைகளையும், சகல மனுஷர்கள் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பு வார்த்தைகளையும் வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு புதிய யுகத்தையும், ஒரு புதிய சகாப்தத்தையும் ஆரம்பித்துள்ளார், மேலும் ஒரு புதிய வானத்தையும் பூமியையும் புதிய கிரியையையும் ஆரம்பித்துள்ளார். மேலும், அவர் நாம் தெளிவில்லாமல் வாழ்ந்த வாழ்வை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலமாகவும், நமது முழு சரீரமும் இரட்சிப்பின் பதையை முற்றிலும் தெளிவாகக் காண்பதற்கு உதவியதன் மூலமாகவும் அவர் நமக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளார். அவர் நம்மை முழுயாக ஆட்கொண்டு நமது இருதயங்களை ஆதாயப்படுத்தியிருக்கிறார். அந்தத் தருணம் முதல், நமது மனங்கள் உணர்வுள்ளதாகிவிட்டன, நமது ஆவிகள் புத்துயிர் பெற்றது போல தோன்றுகின்றன: நமது மத்தியில் வாசம்பண்ணும், நீண்ட காலமாக நம்மால் புறக்கணிக்கப்பட்ட இந்த சாதாரண, அற்பமான மனிதர் நமது எண்ணங்களிலும் நடையிலும் அல்லது கனவிலும் எப்பொழுதும் வீற்றிருப்பவரும் மற்றும் இரவும் பகலும் நாம் ஏங்கித்தவிக்கக்கூடியவரும் கர்த்தராகிய இயேசுதானல்லவா? அவரேதான் அது! உண்மையில் அவரேதான் அது! அவரே நமது தேவன்! அவரே நமது, சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்! நாம் மீண்டும் ஜீவிக்கவும், ஒளியைக் காணவும் நமக்கு உதவியிருக்கிறார், மேலும் நமது இருதயங்கள் அலைந்து திரிவதைத் தடுத்தாட்கொண்டுள்ளார். நாம் தேவனுடைய வீட்டிற்குத் திரும்யுள்ளோம், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக நாம் திரும்பியுள்ளோம், நாம் அவரை முகமுகமாக பார்க்கிறோம், நாம் அவருடைய முகத்தைக் கண்டிருக்கிறோம், நமக்கு முன்னால் உள்ள பாதையையும் பார்த்திருக்கிறோம். இந்த நேரத்தில், நம்முடைய இருதயங்கள் அவரால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்படுகின்றன; அவர் யார் என்று நாம் இனிமேலும் சந்தேகப்படுவதில்லை, அவருடைய கிரியையையும் அவருடைய வார்த்தையையும் இனிமேலும் எதிர்ப்பதில்லை, மேலும் அவருக்கு முன்பாக சாஸ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம். நமது வாழ்நாள் முழுவதும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதையும், அவரால் பரிபூரணமாக்கப்படுவதையும், அவருடைய கிருபையை திருப்பிச் செலுத்துவதையும், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைத் திருப்பிச் செலுத்துவதையும், அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிவதையும், அவருடைய கிரியைக்கு ஒத்துழைக்கவும், அவர் நம்மிடம் ஒப்படைத்ததை செய்து முடிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதையும் தவிர நாம் வேறு எதையும் செய்ய பிரயாசப்படுவதில்லை.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடையத் தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 74
தேவனையும் மனுஷனையும் சமமாகக் கருத முடியாது. அவரது சாரமும் அவரது கிரியையும் மனுஷனால் எவ்வகையிலும் ஆழங்காண முடியாதவை மற்றும் புரிந்துகொள்ள முடியாதவை. மனுஷ உலகில் தேவன் தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்யாமலும், தன் வார்த்தைகளைப் பேசாமலும் இருந்தால், மனுஷனால் ஒருபோதும் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, தங்கள் முழு ஜீவிதத்தையும் தேவனுக்காக அர்ப்பணித்தவர்களால் கூட அவருடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது. தேவன் கிரியை செய்யத் தொடங்கவில்லை என்றால், மனுஷன் எவ்வளவு நன்றாகச் செயல்பட்டாலும், அவை அனைத்தும் பயனற்றதாகவே இருக்கும், ஏனென்றால் தேவனின் எண்ணங்கள் எப்போதும் மனுஷனின் எண்ணங்களை விட உயர்ந்தவையாக இருக்கின்றன, மேலும் தேவனின் ஞானம் மனுஷனின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆகவே, தேவனையும் அவருடைய கிரியையையும் “முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்” என்று கூறுபவர்கள் தகுதியற்றவர்கள் என்று நான் சொல்கிறேன்; அவர்கள் அனைவரும் மிகைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அறிவற்றவர்கள் ஆவர். தேவனின் கிரியையை மனுஷன் வரையறுக்கக் கூடாது; மேலும், தேவனின் கிரியையை மனுஷனால் வரையறுக்க முடியாது. தேவனின் பார்வையில், மனுஷன் ஒரு எறும்பு போல அற்பமானவன்; ஆகையால் தேவனின் கிரியையை மனுஷன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? “தேவன் இவ்வாறாக அல்லது அவ்வாறாகச் செயல்படமாட்டார்,” அல்லது “தேவன் இப்படிப்பட்டவர் அல்லது அப்படிப்பட்டவர்,” என்று கூச்சலிட விரும்புவோர், ஆணவத்துடன் பேசவில்லையா? மாம்சத்திலிருந்து வந்த மனுஷன் சாத்தானால் சீர்கெட்டுப்போனான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். தேவனை எதிர்ப்பதே மனுஷகுலத்தின் இயல்பாக இருக்கிறது. மனுஷகுலம் தேவனுக்கு இணையாக இருக்க முடியாது, தேவனின் கிரியைக்கு அறிவுரை வழங்குவது என்பது மனுஷகுலத்திற்கு எட்டாக்கனியாக இருக்கிறது. தேவன் மனுஷனை வழிநடத்துவது என்பது தேவனின் கிரியையாக இருக்கிறது. இந்த அல்லது அந்தக் கருத்தை எதிர்க்காமல் மனுஷன் கீழ்ப்படிய வேண்டும் என்பது பொருத்தமானது தான், ஏனென்றால் மனுஷன் என்பவன் வெறும் மண் தான். தேவனைத் தேடுவது நம்முடைய நோக்கம் என்பதால், தேவனின் எண்ணப்படியான அவரது கிரியை மீதுள்ள நம் கருத்துக்களை நாம் மிகைப்படுத்தக் கூடாது, தேவனின் கிரியையை வேண்டுமென்றே எதிர்ப்பதற்கு நம்முடைய சீர்கேடான மனநிலையை அதிகம் பயன்படுத்தவே கூடாது. அப்படிச் செய்வது நம்மை அந்திக்கிறிஸ்துக்களாக மாற்றாதா? அத்தகையவர்கள் எப்படித் தேவனிடத்தில் விசுவாசமாக இருப்பார்கள்? தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நாம் விசுவாசிப்பதால், அவரை திருப்திப்படுத்தவும் அவரைப் பார்க்கவும் நாம் விரும்புவதால், நாம் சத்தியத்தின் வழியைத் தேட வேண்டும், மேலும் தேவனுடன் ஒத்துப்போக ஒரு வழியைத் தேட வேண்டும். நாம் அவரை எதிர்ப்பதில் வணங்காக் கழுத்துள்ளவர்களாக இருக்கக்கூடாது. அத்தகைய செயல்களால் என்ன நன்மை வரக்கூடும்?
இன்று, தேவன் புதிய கிரியையைச் செய்துள்ளார். உன்னால் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம், அவை உனக்கு வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் உன் இயல்புகளை நீ வெளிப்படுத்த வேண்டாம் என்று நான் உனக்கு அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் தேவனுக்கு முன்பாக நீதிக்காக உண்மையிலேயே பசியும் தாகமும் கொண்டவர்களால் மட்டுமே சத்தியத்தைப் பெற முடியும், உண்மையான பக்தியுள்ளவர்களால் மட்டுமே அவரால் அறிவூட்டப்பட முடியும். சச்சரவு மற்றும் சண்டையுடன் இல்லாமல், நிதானமான அமைதியுடன் சத்தியத்தைத் தேடுவதன் மூலம் முடிவுகள் பெறப்படுகின்றன. “இன்று, தேவன் புதிய கிரியையைச் செய்துள்ளார்,” என்று நான் கூறும்போது, தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் விஷயத்தைக் குறிப்பிடுகிறேன். ஒருவேளை இந்த வார்த்தைகள் உன்னைத் தொந்தரவு செய்யாமல் போகலாம்; ஒருவேளை நீ அவற்றை வெறுக்கலாம்; அல்லது அவற்றின் மீது உனக்கு அதிக ஆர்வம் இருக்கலாம். எது எப்படியிருந்தாலும், தேவன் தோன்றுவதற்கு உண்மையிலேயே ஏங்குகிற அனைவருமே அந்த உண்மையை எதிர்கொண்டு, அதைப் பற்றிய முடிவுகளுக்குச் செல்வதை விட, அவர்கள் அதனைக் கவனமாகக் கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்; ஒரு புத்திசாலி செய்ய வேண்டியது அதுதான்.
அத்தகைய ஒரு விஷயத்தை விசாரிப்பது கடினம் அல்ல, ஆனால் இந்த ஒரு சத்தியத்தை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்: தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் செய்ய விரும்பும் கிரியையை அவர் வெளிப்படுத்துவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியைச் சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், இது மனுஷன் இருளில் மூழ்கியுள்ளதையும், அவனது அறியாமையையும் காட்டுகிறது. வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டு சாராம்சத்தைத் தீர்மானிக்க முடியாது; மேலும், தேவனின் கிரியை ஒருபோதும் மனுஷனின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது. இயேசுவின் வெளிப்புறத் தோற்றம் மனுஷனின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கவில்லையா? அவருடைய உண்மையான அடையாளத்தைப் பற்றி எந்த தடயங்களையும் வழங்க அவரது முகம் மற்றும் உடைக்கு முடியவில்லை, இல்லையா? ஆரம்பகால பரிசேயர்கள் வெறுமனே இயேசுவின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பார்த்து, அவருடைய வாயில் உள்ள வார்த்தைகளை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளாமல் அவரை எதிர்க்கவில்லையா? தேவன் தோன்றுவதை எதிர்பார்க்கும் ஒவ்வொரு சகோதர சகோதரியும் இந்த வரலாற்றுச் சோகத்தை மீண்டும் நிகழ்த்த மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை. நீங்கள் நவீன காலத்தின் பரிசேயர்களாக மாறி, தேவனை மீண்டும் சிலுவையில் அறையக் கூடாது. தேவனின் வருகையை எவ்வாறு வரவேற்பது என்பதை நீங்கள் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்திற்குக் கீழ்ப்படியும் ஒருவராக எப்படி இருக்க வேண்டும் என்பதில் உங்களுக்குத் தெளிவான மனம் இருக்க வேண்டும். இயேசு ஒரு மேகத்தின் மீது வருவார் என்று காத்திருக்கும் அனைவரின் பொறுப்பும் இதுதான். நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் தெளிவுபடுத்துவதற்காகவே நாம் அவற்றைத் தேய்க்க வேண்டும், மிகைப்படுத்தப்பட்ட கற்பனையின் வார்த்தைகளில் நாம் மூழ்கிவிடக்கூடாது. தேவனின் நடைமுறையான கிரியைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், மேலும் தேவனின் நடைமுறையான அம்சத்தைப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தின் மீது வந்து, திடீரென்று உங்களிடையே இறங்கி, அவரை ஒருபோதும் அறியாத அல்லது பார்த்திராத மற்றும் அவருடைய சித்தத்தைச் செயல்படுத்தத் தெரியாத உங்களை அழைத்துச் செல்வார் என்பது போன்ற பகல் கனவுகளில் உங்களை நீங்களே இழக்க வேண்டாம். மேலும் நடைமுறையான விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது நல்லது!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதன் முகவுரையிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 75
பரிசேயர்கள் இயேசுவை, ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிய விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், மாறாக ஜீவிதத்தின் சத்தியத்தைத் தேடவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவிதத்தின் வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்கள் தேவனின் ஆசீர்வாதத்தை எவ்வாறு பெற முடியும்? அவர்கள் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் செயல்பாட்டை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை வீணாகப் போற்றும் தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் திமிர் பிடித்தவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உங்கள் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுள்ளதாக இருந்தாலும், உங்கள் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீங்கள் கிறிஸ்து அல்ல என்பதே. இந்தப் பார்வைகள் போலித்தனமானவை மற்றும் கேலிக்குரியவை அல்லவா? நான் உங்களிடம் மேலும் கேட்கிறேன்: இயேசுவைப் பற்றிய புரிதல் துளியளவும் உங்களிடம் இல்லாதிருந்தால், ஆரம்பகால பரிசேயர்களின் தவறுகளை நீங்களும் செய்வது உங்களுக்கு மிகவும் எளிதானதல்லவா? சத்தியத்தின் வழியை உங்களால் அறிந்துகொள்ள முடியுமா? கிறிஸ்துவை நீங்கள் எதிர்க்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பரிசுத்த ஆவியின் கிரியையை உங்களால் பின்பற்ற இயலுமா? நீங்கள் கிறிஸ்துவை எதிர்ப்பீர்களா என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஜீவிக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். மேசியாவை அறியாதவர்கள் அனைவரும் இயேசுவை எதிர்ப்பதற்கும், இயேசுவை நிராகரிப்பதற்கும், அவதூறு செய்வதற்கும் வல்லவர்களாவர். இயேசுவைப் புரிந்து கொள்ளாத ஜனங்கள் அனைவரும் அவரை நிராகரித்து அவதூறு செய்ய வல்லவர்கள். மேலும் இயேசுவின் வருகையைக் கூட சாத்தானின் வஞ்சகமாக அவர்கள் பார்க்க வல்லவர்கள். இன்னும் அதிகமான ஜனங்கள் இயேசு மாம்சத்திற்குத் திரும்பியதை குறைகூறுவார்கள். இவை அனைத்தும் உங்களை பயமுறுத்தவில்லையா? நீங்கள் எதிர்கொள்வது எல்லாம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான அவதூறும், பரிசுத்த ஆவியானவர் திருச்சபைக்கு வழங்கும் வார்த்தைகள் அழிக்கப்படுவதும், இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலும் ஆகும். நீங்கள் மிகவும் குழப்பமடைந்துவிட்டால், இயேசுவிடமிருந்து உங்களால் எதைப் பெற முடியும்? உங்கள் தவறுகளை நீங்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டால், ஒரு வெண்மேகத்தின் மீது, இயேசு மறுபடியும் மாம்சத்துக்கு திரும்பும்போது, இயேசுவின் கிரியையை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: வெண்மேகங்களின் மீது இயேசுவின் வருகையை கண்மூடித்தனமாக எதிர்பார்த்துக் காத்திருந்தும், சத்தியத்தைப் புரிந்துக்கொள்ளாத ஜனங்கள், நிச்சயமாக பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பார்கள். மேலும், இந்த வகையான ஜனங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். நீங்கள் இயேசுவின் கிருபையை மட்டுமே விரும்புகிறீர்கள். பரலோகத்தின் ஆனந்த சாம்ராஜ்யத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறீர்கள். ஆனால் இயேசு பேசிய வார்த்தைகளுக்கு நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிந்ததில்லை. இயேசு மாம்சத்தில் திரும்பி வருகையில் அவர் வெளிப்படுத்திய சத்தியத்தை ஒருபோதும் பெறவில்லை. ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பியதற்கு ஈடாக நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்து, அதன் பின் மீண்டும் மீண்டும் பாவமன்னிப்பு கேட்பது நேர்மையாகுமா? ஒரு வெண்மேகத்தின் மீது மறுபடியும் வரும் இயேசுவுக்கு பலியாக நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் பெருமையாகக் கருதும், உங்களுடைய ஆண்டுக்கணக்கான வேலையையா? திரும்பி வந்த இயேசு உங்களை நம்புவதற்கு நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எந்த சத்தியத்திற்கும் கீழ்ப்படியாத உங்கள் ஆணவ குணத்தையா?
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீங்கள் காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 76
உங்கள் விசுவாசம் வார்த்தையில் மட்டுமே உள்ளது. அறிவு சார்ந்த மற்றும் கருத்தியல் சார்ந்த அறிவு மட்டுமே உங்களிடம் உள்ளது. உங்கள் கிரியைகள் பரலோகத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே உள்ளது. எனவே உங்கள் விசுவாசம் எத்தகையதாய் இருக்க வேண்டும்? இன்று கூட, நீங்கள் சத்தியத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் செவி மடுக்கவில்லை. தேவன் என்றால் யாரென்று உங்களுக்குத் தெரியாது, கிறிஸ்து என்றால் யாரென்று உங்களுக்குத் தெரியாது, யோகோவாவை எவ்வாறு வணங்குவது என்று உங்களுக்குத் தெரியாது, பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குள் எவ்வாறு பிரவேசிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது, மேலும் தேவனுடைய கிரியையையும் மனிதனுடைய ஏமாற்று வேலையையும் எவ்வாறு வேறுபடுத்துவது என்றும் உங்களுக்குத் தெரியாது. உங்கள் சொந்த எண்ணங்களுடன் இணங்காத, தேவன் வெளிப்படுத்திய எந்த சத்திய வார்த்தையையும் நிந்திக்க மட்டுமே உங்களுக்குத் தெரியும். உங்களது தாழ்மை எங்கே? உங்களது கீழ்ப்படிதல் எங்கே? உங்களது விசுவாசம் எங்கே? சத்தியத்தைத் தேடுவதற்கான உங்கள் வாஞ்சை எங்கே? தேவன் மீதுள்ள உங்கள் பயபக்தி எங்கே? அடையாளங்களைக் காரணமாகக் கொண்டு தேவனை விசுவாசிப்பவர்கள் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டிய பிரிவினர் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மாம்சத்திற்குத் திரும்பிய இயேசுவின் வார்த்தைகளைப் பெற இயலாதவர்கள் நிச்சயமாக நரகத்தின் சந்ததியினரும், பிரதான தூதனுடைய சந்ததியினரும் மற்றும் நித்திய அழிவுக்கு உட்படுத்தப்படும் பிரிவினரும் ஆவர். நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன். இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நாழிகையாக இருக்கும். ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீங்கள் காணும் நேரம், நீங்கள் தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும். மேலும், நல்லவருக்கு, தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் காலத்தில் இந்த முடிவு இருக்கும். சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், மேலும் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். “ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து” எனக் கருதும் விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான தீர்ப்பையும், மெய்யான ஜீவிதத்தின் வழியையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களுக்கு நியாயம் செய்வார். அவர்கள், அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத கர்வமும் கொண்டவர்கள். இத்தகைய சீரழிவுகளுக்கு இயேசுவால் எவ்வாறு பலனளிக்க முடியும்? சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு இயேசுவின் வருகை ஒரு பெரிய இரட்சிப்பாகும், மாறாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, அது கண்டனத்தின் அடையாளமாகும். உங்கள் சொந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கவோ, சத்தியத்தை நிராகரிக்கவோ கூடாது. ஒரு அறிவற்ற, திமிரான நபராக நீங்கள் இருக்கக்கூடாது. மாறாக பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்தை எதிர்பார்க்கும் ஒருவராக இருக்கவேண்டும். இந்த வழியில் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள். தேவனுடைய விசுவாசத்தின் பாதையில் கவனமாக நடக்க வேண்டும் என நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். உடனடியாக முடிவுக்கு வந்துவிட வேண்டாம். மேலும் என்னவென்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தில் பொறுப்பற்றும் சிந்தனையின்றியும் இருக்காதீர்கள். குறைந்தபட்சம், தேவனை விசுவாசிப்பவர்கள் தாழ்மையும் பயபக்தியும் உடையவராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சத்தியத்தைக் கேட்டும், அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் முட்டாள்தனமானவர்கள் மற்றும் அறிவற்றவர்கள். சத்தியத்தைக் கேட்டும், கவனக்குறைவாக முடிவுகளுக்குச் செல்பவர்களும் அதைக் கண்டனம் செய்பவர்களும் ஆணவத்தால் சூழப்படுகிறார்கள். இயேசுவை விசுவாசிக்காத எவரும் மற்றவர்களை சபிக்கவோ கண்டிக்கவோ தகுதியற்றவர்கள். நீங்கள் அனைவரும் புத்திசாலித்தனமாகவும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவராகவும் இருக்க வேண்டும். ஒருவேளை, சத்திய வழியைக் கேட்டு, ஜீவ வார்த்தையைப் படித்த பிறகு, இந்த 10,000 வார்த்தைகளில் ஒன்று மட்டுமே உங்களது விசுவாசங்களுக்கும் வேதாகமத்துக்கும் இணங்குவதாக நீங்கள் நம்புகிறீர்களானால், பின்னர் இந்த 10,000 வார்த்தைகளில் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் தொடர்ந்து நாட வேண்டும். தாழ்மையுடன் இருக்கவும், அதீத நம்பிக்கை இல்லாதிருக்கவும், உங்களை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளாதிருக்கவும், நான் மறுபடியும் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். தேவனுக்கு இத்தகைய அற்ப பயபக்தியை உங்களது இருதயம் கொண்டிருப்பதால், நீங்கள் அதிக கவனத்தைப் பெறுவீர்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் கவனமாக ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் சிந்தித்தால், அவை சத்தியமா இல்லையா என்பதையும், ஜீவனா இல்லையா என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஒருவேளை, சில வாக்கியங்களை மட்டுமே வாசித்த சிலர், இந்த வார்த்தைகளை கண்மூடித்தனமாகக் கண்டிப்பார்கள். “இது பரிசுத்த ஆவியானவரின் சில வெளிப்பாடுகளே அன்றி வேறொன்றுமில்லை” அல்லது “இவர் ஜனங்களை ஏமாற்றுவதற்காக வந்த ஒரு கள்ளக்கிறிஸ்து” என்று கூறி இந்த வார்த்தைகளை கண்மூடித்தனமாகக் கண்டிப்பார்கள். இவ்வாறு சொல்பவர்கள் அறியாமையால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். தேவனின் கிரியை மற்றும் ஞானத்தை மிகக் குறைவாகவே நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் மீண்டும் புதிதாகத் தொடங்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்! கடைசி நாட்களில் கள்ளக்கிறிஸ்து தோன்றியதால் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகளை நீங்கள் கண்மூடித்தனமாக கண்டிக்கக்கூடாது. மேலும் நீங்கள் வஞ்சகத்திற்கு பயப்படுவதால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறு கூறும் ஒருவராக இருந்துவிடாதீர்கள். அது ஒரு பெரிய பரிதாபமாக இருக்கும் அல்லவா? பல பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்த வார்த்தைகள் சத்தியம் இல்லை, வழி இல்லை, தேவனின் வெளிப்பாடும் இல்லை என்று நீங்கள் இன்னும் நம்பினால், நீங்கள் இறுதியில் தண்டிக்கப்படுவீர்கள் மற்றும் நீங்கள் ஆசீர்வாதம் இல்லாமலும் இருப்பீர்கள். இவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் பேசப்படும் இத்தகைய சத்தியத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், தேவனின் இரட்சிப்புக்கு நீங்கள் தகுதியற்றவராக இருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்கு போதுமான பாக்கியம் இல்லாத ஒருவர் அல்லவா? யோசித்துப் பாருங்கள்! கண்மூடித்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்க வேண்டாம். தேவன் மீதான விசுவாசத்தை ஒரு விளையாட்டாக கருத வேண்டாம். உங்கள் இலக்குக்காகவும், உங்கள் வருங்காலத்துக்காகவும், உங்கள் ஜீவிதத்தின் நன்மைக்காகவும் சிந்தியுங்கள், தன்னிச்சையாக செயல்பட வேண்டாம். இந்த வார்த்தைகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீங்கள் காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது