மனுஷ அவதரிப்பு
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 99
“மனுஷரூபமெடுத்தல்” என்பது மாம்சத்தில் தேவனுடைய தோற்றமாகும்; மாம்ச சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார். ஆகவே, தேவன் மனுஷரூபம் எடுக்கவேண்டுமாயின், அவர் முதலில் மாம்சமாக இருக்கவேண்டும், அதாவது சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சமாக இருக்க வேண்டும்; இது மிகவும் அடிப்படையான முன் நிபந்தனையாகும். உண்மையில், தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார். மனுஷரூபமெடுத்து வந்த அவருடைய வாழ்க்கை மற்றும் கிரியையை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவதாக, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு அவர் வாழும் வாழ்க்கை. அவர் சாதாரண மனிதத் தேவைகள் நிறைந்த (உணவு, உடை, உறக்கம், உறைவிடம்), சாதாரண மனித பலவீனங்கள் மற்றும் சாதாரண மனித உணர்ச்சிகளுடன் ஒரு சாதாரண மனிதக் குடும்பத்தில், முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார், மனித வாழ்க்கையின் சாதாரண ஒழுக்கங்களையும் விதிகளையும் கடைபிடிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த முதல் கட்டத்தில் அவர் தெய்வீகத்தன்மையற்ற, எல்லாச் சாதாரண மனித நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறவராய் முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார். இரண்டாவது கட்டம், அவருடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபின் அவர் வாழும் வாழ்க்கையாகும். அவர் இன்னும் சாதாரண மனிதத்தன்மையில், தெய்வீகத்தின் வெளிப்புற அடையாளத்தைக் காண்பிக்காமல் ஒரு சாதாரண மனிதத் தோற்றத்தில் வாழ்கிறார். ஆயினும் அவர் தம்முடைய ஊழியத்திற்காகவே முற்றிலும் வாழ்கிறார், இந்தச் சமயத்தில் முற்றிலும் அவருடைய தெய்வீகத்தன்மையின் இயல்பான கிரியையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது இருக்கிறது, ஏனென்றால் அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றும் அளவிற்கு முதிர்ச்சியடைந்துள்ளது. ஆகவே, அவருடைய வாழ்க்கையின் இரண்டாவது கட்டமானது, அவரது இயல்பான மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டின் வாழ்க்கையாக இருக்கும்போது, அது அவருடைய ஊழியத்தை அவரது இயல்பான மனிதத்தன்மையில் செய்ய வேண்டியதிருந்தது. அவரது வாழ்வின் முதல் கட்டத்தில், அவர் முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்வதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய மனிதத்தன்மையினால் தெய்வீகத்தன்மையினுடைய கிரியையை முழுமையாக இன்னும் பராமரிக்க முடியவில்லை, அது இன்னும் முதிர்ச்சியடையவில்லை; அவருடைய மனிதத்தன்மை முதிர்ச்சியடைந்த பின்னரே, அவர் தமது ஊழியத்தைத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்று அவர் செய்து முடிக்கவேண்டிய ஊழியத்தைச் செய்ய ஆரம்பிக்கவும் முடியும். அவர் மாம்சமாக இருக்கிற நிலையில், வளர்ந்து முதிர்ச்சியடைய வேண்டும் என்பதால், அவருடைய வாழ்க்கையின் முதல் கட்டமானது சாதாரண மனிதத்தன்மையுடையதாகும்—இரண்டாவது கட்டத்தில், அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய கிரியையைச் செய்வதற்கும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றவும் வல்லது என்பதால், தேவன் மாம்சத்தில் அவதரித்த வாழ்க்கையானது அவருடைய ஊழியத்தின் போது மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டும் கொண்ட ஒன்றாகும். மனித அவதரிப்பாக மாம்சத்தில் வந்த தேவன் தாம் பிறந்த தருணத்திலிருந்து, தமது ஊழியத்தை ஊக்கத்துடனே ஆரம்பித்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்திருந்தால், பிறகு அவருக்கு எந்தவிதமான சரீரம் சார்ந்த சாராம்சமும் இருந்திருக்காது. ஆகையால், அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய மனித உடலின் சாராம்சத்தின் பொருட்டு உள்ளதாய் இருக்கிறது; மனிதத்தன்மை இல்லாமல் மாம்சம் இருக்க முடியாது, மனிதத்தன்மை இல்லாத ஒருவர் மனிதர் அல்ல. இந்த வகையில், தேவனுடைய மாம்சத்தின் மனிதத்தன்மை என்பது மனுஷரூபத்திலான தேவனுடைய மாம்சத்தின் ஓர் உள்ளார்ந்த குணமாகும். “தேவன் மாம்சமாகிறபோது அவர் முற்றிலும் தெய்வீகத்தன்மையுள்ளவர், மனிதரல்ல” என்று சொல்வது தேவதூஷணமாகும், ஏனென்றால் இந்த அறிக்கையானது வெறுமனே இல்லாததாயிருக்கிறது, மேலும் மாம்சமாகியதன் கொள்கையை மீறுகிறதாய் இருக்கிறது. அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கிய பிறகும், அவர் தம்முடைய கிரியையைச் செய்யும்போது மனிதத்தன்மையின் வெளிப்புறமான தோற்றத்தில் தெய்வீகத்தன்மையுடன் வாழ்கிறார்; அந்த நேரத்தில், அவருடைய தெய்வீகத்தன்மையைச் சாதாரண மாம்சத்தில் செய்கிறதான கிரியைகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்கு அவருடைய மனிதத்தன்மையானது உதவுகிறது. ஆகவே, கிரியையின் காரணகர்த்தா அவருடைய மனிதத்தன்மையில் வசிக்கும் தெய்வீகத்தன்மையாகும். அவருடைய மனிதத்தன்மை அல்ல, அவருடைய தெய்வீகத்தன்மையே செயல்பாட்டில் இருக்கிறது, ஆனாலும் இந்தத் தெய்வீகத்தன்மையானது அவருடைய மனிதத்தன்மைக்குள் மறைக்கப்பட்டிருக்கிறது; முக்கியமாக அவருடைய கிரியையானது அவருடைய மனிதத்தன்மையினால் அல்ல, அவருடைய முழுமையான தெய்வீகத்தன்மையினாலேயே செய்யப்படுகிறது. ஆனால் அந்தக் கிரியையைச் செய்வது அவருடைய மாம்சமாகும். அவர் ஒரு மனிதனாகவும் மற்றும் தேவனாகவும் இருக்கிறார் என்று ஒருவர் சொல்லலாம், ஏனென்றால் தேவன் மாம்சத்தில் வாழும் ஒரு தேவனாக மாறுகிறார், மனித வெளிப்புறத் தோற்றத்தில் மற்றும் மனித சாராம்சம் கொண்டவராக ஆனால் அதேவேளையில் தேவனின் சாராம்சம் உடையவராகவும் இருக்கிறார். அவர் தேவனுடைய சாராம்சம் கொண்ட ஒரு மனிதர் என்பதால், அவர் சிருஷ்டிக்கப்பட்ட எல்லா மனிதர்களுக்கும் மேலானவராகவும், தேவனுடைய கிரியையைச் செய்யக்கூடிய எந்த மனிதனுக்கும் மேலானவராகவும் இருக்கிறார். எனவே, அவரைப் போன்ற புறம்பான ஒரு மனிதத் தோற்றமுள்ள அனைவரிலும், மனிதத்தன்மையைக் கொண்ட அனைவரிலும், அவர் ஒருவர் மட்டுமே மாம்சமாகிய தேவனாக இருக்கிறார்—மற்றவர்கள் அனைவரும் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மனிதத்தன்மை இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு மனிதத்தன்மையைத் தவிர வேறொன்றும் இல்லை, அதே நேரத்தில் மாம்சமாகிய தேவன் வேறுபட்டவராக இருக்கிறார்: அவருடைய மாம்சத்தில் அவருக்கு மனிதத்தன்மை மட்டுமல்ல, மிக முக்கியமாக தெய்வீகத்தன்மையும் உள்ளது. அவருடைய மனிதத்தன்மையை அவருடைய மாம்சத்தின் வெளிப்புறத் தோற்றத்திலும் அவருடைய அன்றாட வாழ்க்கையிலும் காணலாம், ஆனால் அவருடைய தெய்வீகத்தன்மையை உணர்ந்துகொள்வது கடினமானதாகும். ஏனென்றால், அவருடைய தெய்வீகத்தன்மையானது அவருக்கு மனிதத்தன்மை இருக்கும்போது மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் ஜனங்கள் கற்பனை செய்வது போல இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, இதனை ஜனங்கள் காண்பது என்பது மிகவும் கடினமாகும். இன்றும் கூட, மாம்சமாகிய தேவனுடைய உண்மையான சாராம்சத்தை ஆராய்ந்து புரிந்துகொள்வதில் ஜனங்களுக்கு மிகுந்த சிரமம் உள்ளது. நான் அதைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசிய பிறகும், உங்களில் பெரும்பாலானோருக்கு இது இன்னமும் ஒரு இரகசியமாகவே இருக்கக்கூடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். உண்மையில், இந்தப் பிரச்சினையானது மிகவும் எளிதானதாகும்: தேவன் மாம்சமாக மாறுவதால், அவருடைய சாராம்சமானது மனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மையின் கலவையாக இருக்கிறது. இந்தக் கலவையானது தேவன் என்று, அதாவது பூமியிலுள்ள தேவன் என்றழைக்கப்படுகிறார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 100
பூமியில் இயேசு வாழ்ந்த வாழ்க்கை மாம்சத்தின் ஒரு இயல்பான வாழ்க்கையாகும். அவர் தமது மாம்சத்தின் இயல்பான மனிதத்தன்மையில் வாழ்ந்தார். அவருடைய கிரியையைச் செய்வதற்கும், அவருடைய வார்த்தையைப் பேசுவதற்கும், அல்லது பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளைத் துரத்துவதற்கும், இதுபோன்ற அசாதாரணமான காரியங்களைச் செய்வதற்குமான அவருடைய அதிகாரத்தை அவர் தம்முடைய ஊழியத்தைத் தொடங்கும் நாள்வரையிலும் பெரும்பாலான நிலையில் வெளிப்படுத்தவில்லை. இருபத்தொன்பது வயதிற்கு முன்னர், அதாவது அவர் ஊழியம் செய்வதற்கு முன்பு, அவர் ஒரு சாதாரண மாம்ச சரீரத்தில் இருந்தார் என்பதற்கு அவரது வாழ்க்கை போதுமான சான்றாகும். இதன் காரணமாகவும், அவர் இன்னும் அவருடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்காததினாலும், ஜனங்கள் அவரிடத்தில் தெய்வீகத்தன்மையிலான எதையும் காணவில்லை, ஒரு சாதாரண மனிதர் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் காணவில்லை—அதனால்தான் ஒரு சாதாரண மனிதர் என்னும் நிலையில் அந்த நேரத்தில் சிலர் அவரை யோசேப்பின் குமாரன் என்று நம்பினார்கள். அவர் ஒரு சாதாரண மனிதனின் குமாரன் என்றுதான் மக்கள் நினைத்தார்கள், அவர் மாம்சமாகிய தேவன் என்று சொல்வதற்கு அவர்களுக்கு வழி இல்லாதிருந்தது; அவருடைய ஊழியத்தைச் செய்தபோது, அவர் பல அற்புதங்களைச் செய்தபோதும் கூட, அவரை யோசேப்பின் குமாரன் என்றே பெரும்பாலான ஜனங்கள் கூறினார்கள், ஏனென்றால் அவர் வெளிப்புறத் தோற்றத்தில் சாதாரண மனிதத்தன்மையில் மாம்சத்தில் இருந்த கிறிஸ்துவாக இருந்தார். முதலில் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தை நிறைவேற்றுவதற்காகவும், தேவன் முற்றிலுமாய் மாம்சத்தில் வந்துவிட்டார் என்பதையும், அவர் முற்றிலும் சாதாரண மனிதராகிவிட்டார் என்பதையும் நிரூபிப்பதற்காகவே அவரது சாதாரண மனிதத்தன்மை மற்றும் அவரது கிரியை ஆகிய இரண்டும் இருந்தன. அவரது இயல்பான மனிதத்தன்மையானது அவர் தமது கிரியையைத் தொடங்குவதற்கு முன்பு அவர் ஒரு சாதாரண மாம்சம் என்பதற்கான சான்றாகும்; ஏனென்றால் அவர் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்து, பிணியாளிகளைக் குணப்படுத்தி, சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சத்தில் பிசாசுகளைத் துரத்தி அவர் ஒரு சாதாரண மாம்சம் என்பதை நிரூபித்தார். அவர் அற்புதங்களைச் செய்ய முடிந்ததற்கான காரணம், அவருடைய மாம்சம் தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டிருந்தது, மாம்சமானது தேவனுடைய ஆவியானவரை தரித்திருந்தது. தேவனுடைய ஆவியினாலே அவர் இந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தார், அதற்காக அவர் ஒரு மாம்சமல்ல என்று அர்த்தமல்ல. பிணியாளிகளைக் குணப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் அவருடைய ஊழியத்தில் அவர் செய்ய வேண்டிய கிரியையாக இருந்தது, அது அவருடைய மனிதத்தன்மையில் மறைந்திருக்கும் அவருடைய தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடாக இருந்தது, மேலும் அவர் எந்த அடையாளங்களைக் காண்பித்தாலும் அல்லது அவர் எவ்வாறு தமது அதிகாரத்தை விளங்கப்பண்ணினாலும், அவர் இன்னும் இயல்பான மனிதத்தன்மையிலேயே வாழ்ந்தார் மற்றும் இன்னும் ஒரு சாதாரண மாம்சமுடையவராகவே இருந்தார். அவர் சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்த நேரம் வரையிலும், அவர் சாதாரண மாம்சத்திற்குள் வசித்தார். கிருபை அளித்தல், பிணியாளிகளைக் குணப்படுத்துவது, மற்றும் பிசாசுகளைத் துரத்துவது யாவும் அவருடைய ஊழியத்தின் ஒரு பகுதியாக இருந்தன, அவை அனைத்தும் அவருடைய சாதாரண மாம்சத்தில் அவர் செய்த கிரியைகளாகும். சிலுவைக்குச் செல்வதற்கு முன்பு, செய்வது எதுவாக இருந்தாலும் அவர் ஒருபோதும் தமது இயல்பான மனித மாம்சத்திலிருந்து விலகவில்லை. அவர் தேவனாக இருந்து தேவனுடைய சொந்த கிரியையைச் செய்தார், ஆனாலும் அவர் மாம்சமாகிய தேவனாக இருந்ததால், அவர் போஜனம் பண்ணினார், வஸ்திரம் தரித்தார், சாதாரண மனித தேவைகளைக் கொண்டிருந்தார், சாதாரண மனிதனின் அறிவும் மற்றும் ஒரு சாதாரண மனித மனமும் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அவர் ஒரு சாதாரண மனிதர் என்பதற்கான சான்றாகும், இது மனுஷரூபமான தேவனுடைய மாம்சமானது இயல்பான மனிதத்தன்மையுடன் கூடிய மாம்சம் என்பதை நிரூபித்தது, மேலும் இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியது. தேவனுடைய முதல் மனுஷரூபமெடுத்தலின் கிரியையை முடிப்பதும், முதல் மனுஷரூபமெடுத்தல் செய்ய வேண்டிய ஊழியத்தை நிறைவேற்றுவதும் அவரது வேலையாயிருந்தது. மனுஷரூபமெடுத்தலின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு சாதாரண, இயல்பான மனிதர் தேவன் மட்டுமே செய்யக்கூடிய கிரியையைச் செய்கிறார்; அதாவது, தேவன் தம்முடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை மனிதத்தன்மையில் செய்கிறார், அதன் மூலம் சாத்தானையும் வெற்றி கொள்கிறார். மாம்சமாகுதல் என்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு மாம்சமாகிறார், அதாவது தேவன் மாம்சமாகிறார் என்று அர்த்தமாகும்; மாம்சம் செய்கிற கிரியையானது ஆவியானவரின் கிரியையாகும், இது மாம்சத்தில் உணரப்பட்டு, மாம்சத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. தேவனுடைய மாம்சத்தைத் தவிர வேறு எவரும் மாம்சமாகிய தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற முடியாது; அதாவது, இந்த இயல்பான மனிதத்தன்மையைக் கொண்ட மாம்சமாகிய தேவன் மட்டுமே வேறு எவராலும் வெளிப்படுத்த இயலாத—தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்கிறார். தேவன் தமது முதல் வருகையின் போது, இருபத்தொன்பது வயதிற்கு முன்பு இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றால்—அவர் பிறந்தவுடனே அற்புதங்களைச் செய்யக் கூடியவராக இருந்திருந்தார் என்றால், அவர் பேசக் கற்றுக்கொண்டவுடனே பரலோகப் பாஷையையும் பேசக்கூடியவராக இருந்திருந்தார் என்றால், அவர் பூமியில் முதன்முதலில் காலடி வைத்த தருணத்திலே அவர் எல்லா உலக விஷயங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவராக இருந்திருந்தார் என்றால், ஒவ்வொரு நபரின் எண்ணங்களையும் நோக்கங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவராக இருந்திருந்தார் என்றால்—அத்தகைய நபரை ஒரு சாதாரண மனிதர் என்று அழைத்திருக்க முடியாது, அத்தகைய மாம்சத்தை மனித மாம்சம் என்று அழைத்திருக்கவும் முடியாது. கிறிஸ்துவின் நிலை இதுவாக இருந்திருந்தால், தேவன் மாம்சமாகியதன் அர்த்தமும் சாராம்சமும் இழக்கப்பட்டுப் போயிருக்கும். அவர் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பது அவர் மாம்சத்தில் அவதரித்த தேவன் என்பதை நிரூபிக்கிறது; அவர் ஒரு சாதாரண மனித வளர்ச்சி செயல்முறைக்கு உட்படுகிறார் என்னும் காரியம் அவர் ஒரு சாதாரண மாம்சமுள்ளவர் என்பதை மேலும் நிரூபிக்கிறது; மேலும், அவர் தேவனுடைய வார்த்தை, தேவனுடைய ஆவியானவர், மாம்சமாக மாறினார் என்பதற்கு அவருடைய கிரியை போதுமான சான்றாக இருக்கிறது. தேவன் தமது கிரியையினுடைய தேவைகள் நிமித்தம் மாம்சமாகிறார்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தக் கட்ட கிரியையானது மாம்சத்தில் செய்யப்பட வேண்டும், அது சாதாரண மனிதத்தன்மையில் செய்யப்பட வேண்டும். இது “வார்த்தை மாம்சமாகிறது” என்பதற்கும், “வார்த்தை மாம்சத்தில் தோன்றுகிறது” என்பதற்கும் முன்நிபந்தனையாகும், இதுதான் தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளுக்குப் பின்னாலும் உள்ள மெய்யான உள்ளடக்கமாகும். இயேசு தமது வாழ்நாள் முழுவதும் அற்புதங்களைச் செய்தார் என்றும், பூமியில் அவர் செய்த கிரியை முடியும் வரையிலும் அவர் மனிதத்தன்மையின் எந்த அடையாளத்தையும் காண்பிக்கவில்லை என்றும், அவருக்குச் சாதாரண மனிதத் தேவைகள் அல்லது பலவீனங்கள் அல்லது மனித உணர்ச்சிகளே இல்லை என்றும், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அவருக்கு தேவையாயிருக்கவில்லை என்றும் ஜனங்கள் நம்பலாம். அவர்கள் அவரை ஒரு அசாதாரணமான இயற்கைக்கு அப்பாற்பட்ட மனதைக் கொண்டிருக்கிறவராகவும் மனிதரிலிருந்து மிகவும் அகன்ற ஒரு மனிதத்தன்மையைக் கொண்டிருப்பவராகவும் கற்பனை செய்கிறார்கள். அவர் தேவன் என்பதால், அவர் சாதாரண மனிதர்களைப் போலவே சிந்திக்கவோ வாழவோ கூடாது என்றும், ஒரு சாதாரண மனிதர், ஒரு நேர்மையான மனிதர் மட்டுமே சாதாரண மனித எண்ணங்களைச் சிந்தித்து ஒரு சாதாரண மனித வாழ்க்கையை வாழ முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இவை அனைத்தும் மனித கருத்துக்கள் மற்றும் மனித எண்ணங்களாகும், மேலும் இந்த கருத்துக்கள் யாவும் தேவனுடைய கிரியையின் மெய்யான நோக்கங்களுக்கு எதிராக செயல்படுகின்றன. சாதாரண மனித சிந்தனையானது சாதாரண மனித காரணத்தையும் சாதாரண மனிதத்தன்மையையும் நிலைநிறுத்துகிறது; சாதாரண மனிதத்தன்மை மாம்சத்தின் இயல்பான செயல்பாடுகளை நிலைநிறுத்துகிறது; மற்றும் மாம்சத்தின் இயல்பான செயல்பாடுகள் மாம்சத்தின் இயல்பான வாழ்க்கையை முழுவதுமாக செயல்படுத்துகின்றன. அத்தகைய மாம்சத்தில் கிரியை செய்வதன் மூலம் மட்டுமே தேவன் தாம் மாம்சமாகியதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். மாம்சமாகிய தேவன் மாம்சத்தின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே கொண்டிருந்தார், ஆனால் சாதாரண மனித எண்ணங்களை நினைக்கவில்லை என்றால், இந்த மாம்சமானது மனிதனின் அறிவைக்கொண்டிருக்காது, அதைவிட மெய்யான மனிதத்தன்மையையும் கொண்டிருக்காது. இது போன்ற ஒரு மாம்சம், மனிதத்தன்மை இல்லாமல், மனுஷரூபமெடுத்த தேவன் செய்ய வேண்டிய ஊழியத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்? ஒரு சாதாரண மனம் மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நிலைநிறுத்துகிறது; ஒரு இயல்பான மனம் இல்லாமல், ஒருவர் மனிதராக இருக்க மாட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாதாரண எண்ணங்களை நினைக்காத ஒரு நபர் மனநோயாளியாவார், மனிதத்தன்மையே இல்லாமல் தெய்வீகத்தன்மை மட்டுமே கொண்ட ஒரு கிறிஸ்துவை மாம்சமாகிய தேவன் என்று சொல்ல முடியாது. அப்படியானால், மாம்சமாகிய தேவன் எப்படி சாதாரண மனிதத்தன்மை இல்லாமல் இருப்பார்? கிறிஸ்துவிற்கு மனிதத்தன்மை இல்லை என்று சொல்வது தேவதூஷணம் அல்லவா? சாதாரண மனிதர்கள் ஈடுபடும் அனைத்து செயல்களும் ஒரு சாதாரண மனித மனதின் செயல்பாட்டை நம்பியே உள்ளன. அது இல்லாமல், மனிதர்கள் பிறழக்கூடியவர்களாக நடந்துகொள்வார்கள்; கருப்பு மற்றும் வெள்ளை, நன்மை மற்றும் தீமை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைக் கூட அவர்களால் சொல்ல முடியாது; மேலும் அவர்களுக்கு மனித நெறிமுறைகள் மற்றும் தார்மீகக் கொள்கைகள் எதுவும் இருக்காது. இதேபோல், மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனிதனைப் போல சிந்திக்கவில்லை என்றால், அவர் ஒரு உண்மையான மாம்சமாக அதாவது ஒரு சாதாரண மாம்சமாக இருந்திருக்க மாட்டார். இத்தகைய சிந்திக்கும் திறனற்ற மாம்சத்தால் தெய்வீகத்தன்மையின் கிரியையை எடுத்துக்கொண்டிருக்க முடிந்திருக்காது. சாதாரண மாம்சத்தின் செயல்களில் அவரால் பொதுவாக ஈடுபட முடிந்திருக்காது, பூமியில் மனிதர்களுடன் சேர்ந்து வாழ முடிந்திருக்காது. எனவே, தேவனுடைய மனுஷரூபமெடுத்தலின் முக்கியத்துவம், தேவன் மாம்சத்திற்குள் வருவதன் சாராம்சம் இழக்கப்பட்டிருந்திருக்கும். மாம்சத்தில் இயல்பான தெய்வீகத்தன்மையின் கிரியையை பராமரிக்கவே மாம்சமாகிய தேவனுடைய மனிதத்தன்மை உள்ளது; அவரது இயல்பான மனித சிந்தனையானது அவரது இயல்பான மனிதத்தன்மையையும் அவரது இயல்பான அனைத்துச் சரீரச் செயல்பாடுகளையும் நிலைநிறுத்துகிறது. மாம்சத்தில் தேவனுடைய எல்லாக் கிரியைகளையும் நிலைநிறுத்துவதற்காகவே அவருடைய இயல்பான மனிதத்தன்மையானது இருக்கிறது என்று ஒருவர் கூறலாம். இந்த மாம்சம் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவனால் மாம்சத்தில் கிரியை செய்ய முடிந்திருக்காது, மேலும் மாம்சத்தில் அவர் செய்ய வேண்டியதை ஒருபோதும் நிறைவேற்ற முடிந்திருக்காது. மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருந்தாலும், அவருடைய செயல் மனித சிந்தனையால் கலப்படம் செய்யப்படவில்லை; அவர் தமது கிரியையை சாதாரண மனித சிந்தனையின் சிந்தனையினால் அல்லாமல், மனிதத்தன்மை மனதுடன் கொண்டிருப்பதற்கான முன்னிபந்தனையின் கீழ், மனிதத்தன்மையின் ஒரு சாதாரண மனதுடன் மேற்கொள்கிறார். அவருடைய மாம்சத்தின் எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவருடைய கிரியை தருக்கத்தினாலோ அல்லது சிந்தனையினாலோ களங்கப்படுத்தப்படுவதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய செயல் அவருடைய மாம்சத்தின் மனதினால் சிந்திக்கப்படவில்லை, ஆனால் அவருடைய மனிதத்தன்மையில் தெய்வீகத்தன்மையினுடைய கிரியையின் நேரடி வெளிப்பாடாகும். அவருடைய செயல்கள் அனைத்தும் அவர் நிறைவேற்ற வேண்டிய ஊழியமாகும், அவற்றில் எதுவுமே அவருடைய மூளையில் தோன்றவில்லை. உதாரணமாக, பிணியாளிகளைக் குணப்படுத்துவது, பிசாசுகளைத் துரத்துவது, மற்றும் சிலுவையில் அறையப்படுவது அவருடைய மனித மனதில் தோன்றியவைகள் அல்ல, மனித மனதுள்ள எந்தவொரு மனிதனும் அவற்றை நிறைவேற்றியிருக்க முடியாது. அதேபோல், இன்றைய வெற்றியின் கிரியையானது மாம்சமாகிய தேவனால் செய்யப்பட வேண்டிய ஒரு ஊழியமாகும், ஆனால் அது ஒரு மனித சித்தத்தின்படியான கிரியை அல்ல, அது அவருடைய தெய்வீகத்தன்மை செய்ய வேண்டிய கிரியையாகும், அது எந்த மாம்ச மனிதனும் செய்ய முடியாத கிரியையாக இருக்கிறது. ஆகவே மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருக்க வேண்டும், சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அவர் மனிதத்தன்மையில் தனது கிரியையை சாதாரண மனதுடன் செய்ய வேண்டும். இது மாம்சமாகிய தேவனுடைய கிரியையின் சாராம்சமாகும், அதாவது மாம்சமாகிய தேவனின் சாராம்சமாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 101
இயேசு கிரியையைச் செய்வதற்கு முன்பு, அவர் தமது இயல்பான மனிதத்தன்மையில் வாழ்ந்தார். அவர் தேவன் என்று ஒருவராலும் சொல்ல முடியவில்லை, அவர் மாம்சமாகிய தேவன் என்பதை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை; ஜனங்கள் அவரை முற்றிலும் ஒரு சாதாரண மனிதராக அறிந்தார்கள். தேவன் மாம்சமாகினார் என்பதற்கும், கிருபையின் காலம் என்பது மாம்சமாகிய தேவனுடைய கிரியையின் காலமாகும், ஆவியானவருடைய கிரியையின் காலம் அல்ல என்பதற்கும் அவரது முற்றிலும் சாதாரண, இயல்பான மனிதத்தன்மை சான்றாகும். மாம்சமாகிய தேவனுடைய காலத்தில் அவருடைய மாம்சமானது ஆவியின் எல்லா கிரியைகளையும் செய்தது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் முழுமையாக உணரப்பட்டார் என்பதற்கான சான்றாகும். சாதாரண மனிதத்தன்மையுள்ள கிறிஸ்து ஆவியானவரால் உணரப்பட்ட ஒரு மாம்சமாவார், மேலும் சாதாரண மனிதத்தன்மை, இயல்பான உணர்வு மற்றும் மனித சிந்தனை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார். “உணரப்படுவது” என்பது தேவன் மனிதனாக மாறுதல், ஆவியானவர் மாம்சமாக மாறுதல் ஆகும்; இன்னும் தெளிவாகச் சொல்வதானால், தேவன் தாமே சாதாரண மனிதத்தன்மையுடன் ஒரு மாம்சத்தில் வசிக்கிறார், அதன் மூலம் அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்துகிறார்—இதுதான் உணரப்பட வேண்டும் அல்லது மனுஷனாக அவதரிக்க வேண்டும் என்பதாகும். அவருடைய முதல் மனுஷரூபமெடுத்தலின் போது, பிணியாளிகளைக் குணப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் தேவனுக்கு அவசியமாக இருந்தது, ஏனென்றால் மீட்பதே அவருடைய கிரியையாக இருந்தது. முழு மனித இனத்தையும் மீட்பதற்கு, அவர் இரக்கமுள்ளவராகவும் மன்னிப்பவராகவும் இருக்க வேண்டியது அவசியமாய் இருந்தது. அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர் செய்த கிரியை, பிணியாளிகளைக் குணப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் ஆகும், இது மனிதனை பாவத்திலிருந்தும் அசுத்தத்திலிருந்தும் இரட்சிப்பதற்கான முன்னோடியாயின. இது கிருபையின் காலம் என்பதால், பிணியாளிகளைக் குணப்படுத்துவது அவருக்கு அவசியமாக இருந்தது, இதன் மூலம் அந்த காலத்தில் கிருபையின் பிரதிநிதிகளாக இருந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்தார்—ஏனென்றால் கிருபையின் காலமானது கிருபையை வழங்குவதை மையமாகக் கொண்டிருந்தது, சமாதானம், சந்தோஷம், மற்றும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள், அனைத்தும் இயேசுவில் ஜனங்கள் வைத்த விசுவாசத்தின் அடையாளங்களும். அதாவது, பிணியாளிகளைக் குணப்படுத்துவது, பிசாசுகளைத் துரத்துவது, கிருபையை அளிப்பது ஆகியவை கிருபையின் காலத்தில் இயேசுவினுடைய மாம்சத்தின் இயல்பான திறன்களாக இருந்தன, அவை மாம்சத்தில் ஆவியானவர் உணர்ந்த கிரியையாகும். ஆனால் அவர் அத்தகைய கிரியையைச் செய்யும்போது, அவர் மாம்சத்தில் வாழ்ந்து வந்தார், மாம்சத்தை விட்டு வெளியேறவில்லை. அவர் என்னவிதமான குணப்படுத்தும் செயல்களைச் செய்தாலும், அவர் இன்னும் சாதாரண மனிதத்தன்மையையேக் கொண்டிருந்தார், இன்னும் ஒரு சாதாரண மனித வாழ்க்கையையே வாழ்ந்தார். மாம்சமாகிய தேவனுடைய காலத்தில் மாம்சம் ஆவியின் எல்லாக் கிரியைகளையும் செய்ததாக நான் சொல்லக் காரணம், அவர் என்ன கிரியை செய்தாலும், அவர் அதை மாம்சத்தில் செய்தார். ஆனால் அவருடைய கிரியையின் காரணமாக, ஜனங்கள் அவருடைய மாம்சத்தை ஒரு முழுமையான சரீரத்தின் சாராம்சமாகக் கருதவில்லை, ஏனென்றால் இந்த மாம்சம் அதிசயங்களைச் செய்யக்கூடும், மேலும் சில விசேஷித்த தருணங்களில் மாம்சத்தை மீறிய காரியங்களையும் செய்ய முடியும். நிச்சயமாக, இந்த நிகழ்வுகள் அனைத்தும் அவர் தமது ஊழியத்தைத் தொடங்கியபின் நிகழ்ந்தன, அதாவது அவர் நாற்பது நாட்கள் சோதிக்கப்பட்டார் அல்லது மறுரூப மலையில் மறுரூபமானார். எனவே இயேசுவுடன், தேவன் மாம்சமாகியதன் அர்த்தம் பூர்த்தி செய்யப்படவில்லை, ஆனால் ஓரளவுக்கு மட்டுமே நிறைவேறியது. அவருடைய கிரியையைத் தொடங்குவதற்கு முன்பு அவர் மாம்சத்தில் வாழ்ந்த வாழ்க்கை எல்லா வகையிலும் முற்றிலும் இயல்பானதாக இருந்தது. அவர் கிரியையைத் தொடங்கிய பிறகு, அவர் தனது மாம்சத்தின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே கொண்டிருந்தார். அவருடைய செயல் தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடாக இருந்ததால், அது மாம்சத்தின் இயல்பான செயல்பாடுகளை மிஞ்சியதாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷரூபமெடுத்த தேவனுடைய மாம்சமானது, மாம்சம் மற்றும் இரத்தமுமுள்ள மனிதர்களிடமிருந்து வேறுபட்டது ஆகும். நிச்சயமாக, அவருடைய அன்றாட வாழ்க்கையில், அவருக்கு உணவு, உடை, உறக்கம் மற்றும் உறைவிடம் தேவையாயிருந்தது, அவருக்கு எல்லா சாதாரண தேவைகளும் தேவைப்பட்டது, மற்றும் ஒரு சாதாரண மனிதனின் உணர்வு மற்றும் சிந்தனையைப் போலவே இருந்தது. அவர் செய்த கிரியையானது இயற்கைக்கு அப்பாற்பட்டது என்பதைத் தவிர, ஜனங்கள் அவரை ஒரு சாதாரண மனிதராகவே வைத்திருந்தார்கள். உண்மையில், அவர் என்ன செய்தாலும், அவர் ஒரு சாதாரண மற்றும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்ந்தார், மேலும் அவர் அந்த கிரியையைச் செய்யும்போது, அவருடைய உணர்வு குறிப்பாக இயல்பானதாகவே இருந்தது, வேறு எந்த சாதாரண மனிதனின் எண்ணங்களையும் விட அவருடைய எண்ணங்கள் குறிப்பாக தெளிவானவையாக இருந்தன. மனுஷரூபமெடுத்த தேவனுக்கு அத்தகைய சிந்தனையும் உணர்வும் இருப்பது அவசியமாக இருந்தது, ஏனெனில் தெய்வீகத்தன்மையின் கிரியை ஒரு மாம்சத்தால், அதாவது அதன் உணர்வு மிகவும் இயல்பானதாகவும் மற்றும் அதன் எண்ணங்கள் மிகவும் தெளிவானவையாகவும் இருக்கும் மாம்சத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டியதாயிருந்தது—இந்த வழியில் மட்டுமே அவருடைய மாம்சம் தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்த முடிந்தது. இயேசு பூமியில் வாழ்ந்த முப்பத்து மூன்றரை ஆண்டுகளில், அவர் தமது இயல்பான மனிதத்தன்மையைத் தக்க வைத்துக் கொண்டார், ஆனால் அவருடைய மூன்றரை ஆண்டு ஊழியத்தின் போது அவர் செய்த கிரியையின் காரணமாக, அவர் தமது இயல்பை மிகவும் மீறியவர் என்று மக்கள் நினைத்தார்கள், மேலும் அவர் முன்பை விட இயற்கைக்கு அப்பாற்பட்டவர் என்றும் மனித இயல்பிலிருந்து அகன்றவர் என்றும் நினைத்தார்கள். உண்மையில், இயேசு தமது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் தொடங்கியதற்குப் பின்னும் இயேசுவின் சாதாரண மனிதத்தன்மை மாறாமல் இருந்தது; அவருடைய மனிதத்தன்மை முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது, ஆனால் அவர் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் தொடங்கியதற்குப் பின்னும் இருந்த வித்தியாசத்தின் காரணமாக, அவருடைய மாம்சத்தைப் பற்றிய இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் வெளிவந்தன. ஜனங்கள் என்ன நினைத்தாலும், மாம்சமாகிய தேவன் தமது மெய்யான, சாதாரண மனிதத்தன்மையை முழு நேரத்திலும் தக்க வைத்துக் கொண்டார், ஏனென்றால் தேவன் மனுஷரூபமெடுத்ததிலிருந்து, அவர் மாம்சத்தில் வாழ்ந்தார், அந்த மாம்சம் இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிருந்தது. அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்தாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய மாம்சத்தின் சாதாரண மனிதத்தன்மையை அழித்துவிட முடியாது, ஏனென்றால் மனிதத்தன்மையானது மாம்சத்தின் அடிப்படை சாராம்சமாகும். இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு, அவருடைய மாம்சம் முற்றிலும் இயல்பாகவே இருந்தது, எல்லா சாதாரண மனித செயல்களிலும் ஈடுபட்டது; அவர் குறைவான அளவேனும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் தோன்றவில்லை, எந்த அற்புதமான அடையாளங்களையும் காண்பிக்கவில்லை. அந்த நேரத்தில், அவர் வெறுமனே தேவனை தொழுதுகொண்ட ஒரு பொதுவான மனிதராக இருந்தார், அவருடைய நாட்டம் மிகவும் நேர்மையானதாகவும் யாரையும் விடவும் கபடமற்றதாகவும் இருந்தது. அவருடைய முற்றிலும் இயல்பான மனிதத்தன்மையானது இப்படித்தான் வெளிப்பட்டது. ஏனென்றால், அவருடைய ஊழியத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அவர் எந்த கிரியையும் செய்யவில்லை, அவருடைய அடையாளத்தை யாரும் அறிந்திருக்கவில்லை, அவருடைய மாம்சம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது என்று யாராலும் சொல்ல முடியவில்லை, ஏனென்றால் அவர் ஒரு அதிசயத்தைக் கூடச் செய்யவில்லை, சிறிதளவேனும் கூட தேவனுடைய சொந்த கிரியையைச் செய்யவில்லை. இருப்பினும், அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபின், அவர் சாதாரண மனிதத்தன்மையின் வெளிப்புறத் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொண்டார், இன்னும் சாதாரண மனித காரணத்தோடு வாழ்ந்தார், ஆனால் அவர் தேவன் மட்டுமே செய்யக்கூடிய கிரியையைச் செய்யத் தொடங்கியதால், கிறிஸ்துவின் ஊழியத்தை ஏற்றுக்கொண்டு, மனிதர்களால் செய்ய இயலாத, மாம்சம் மற்றும் இரத்தமுள்ள மனிதர்களால் கூடாத செயல்களை, ஒரு மாம்சத்தில் செய்ததால், ஜனங்கள் அவருக்கு சாதாரண மனிதத்தன்மை இல்லை என்றும் முற்றிலும் சாதாரண மாம்சம் அல்ல, ஆனால் முழுமையற்ற மாம்சம் என்றும் கருதினார்கள். அவர் செய்த கிரியையின் நிமித்தமாக, சாதாரண மனிதத்தன்மை இல்லாத மாம்சத்தில் அவர் ஒரு தேவன் என்று மக்கள் சொன்னார்கள். தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தை ஜனங்கள் புரிந்து கொள்ளாததால், அவர்களுடைய அத்தகைய புரிதல் தவறானதாக இருந்தது. மாம்சத்தில் தேவன் வெளிப்படுத்திய கிரியையானது தெய்வீகத்தன்மையின் கிரியையாகும், இது சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட ஒரு மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டது என்பதிலிருந்து ஜனங்களின் இந்தத் தவறான புரிதல் எழுந்தது. தேவன் மாம்சத்தை உடுத்தியிருந்தார், அவர் மாம்சத்திற்குள் வசித்தார், அவருடைய மனிதத்தன்மையில் அவர் செய்த கிரியை அவருடைய மனிதத்தன்மையின் இயல்பை மறைத்தது. இந்தக் காரணத்திற்காக, தேவனுக்கு மனிதத்தன்மை இல்லை, ஆனால் தெய்வீகத்தன்மை மட்டுமே இருக்கிறது என்று ஜனங்கள் நம்பினார்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 102
தேவன் தமது முதல் மனுஷரூபமெடுத்தலில் மாம்சமாகியதன் கிரியையை முடிக்கவில்லை; மாம்சத்தில் தேவன் செய்ய வேண்டிய அவசியமான கிரியையின் முதல் கட்டத்தை மட்டுமே அவர் செய்து முடித்தார். ஆகவே, மாம்சமாகியதன் கிரியையை முடிப்பதற்காக, தேவன் மீண்டும் மாம்சத்திற்கு திரும்பியுள்ளார், மாம்சத்தின் இயல்பான தன்மையிலும் யதார்த்தத்திலும் வசித்து வருகிறார், அதாவது தேவனுடைய வார்த்தையை முற்றிலும் இயல்பான மற்றும் சாதாரண மாம்சத்தில் வெளிப்படுத்துகிறார், இதன் மூலம் அவர் மாம்சத்தில் செய்து முடிக்காமல் விட்டுப்போன கிரியையை முடிக்கிறார். முக்கியமாக, இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது முதல் மாம்சத்தைப் போன்றதுதான், ஆனால் அது இன்னும் உண்மையானது மற்றும் முதலில் இருந்ததை விட சாதாரணமானது. இதன் விளைவாக, இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது கடந்து செல்லும் துன்பமானது முதல் மாம்சம் கடந்து சென்ற துன்பத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது, ஆனால் இந்த துன்பம் மாம்சத்தில் அவர் செய்த ஊழியத்தின் விளைவாகும், இது சீர்கெட்ட மனிதனின் துன்பத்தைப் போலல்லாததாகும். இது அவருடைய மாம்சத்தின் இயல்பு மற்றும் யதார்த்தத்திலிருந்து உருவாகிறது. அவர் தம்முடைய ஊழியத்தை முற்றிலும் இயல்பான மற்றும் உண்மையான மாம்சத்தில் செய்வதால், மாம்சமானது பெரும் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இந்த மாம்சம் எவ்வளவு அதிகமாக சாதாரணமானதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவருடைய ஊழியத்தின் செயல்பாட்டில் அவர் அதிகம் வேதனையை அடைவார். தேவனுடைய கிரியையானது மிகவும் பொதுவான மாம்சத்தில் வெளிப்படுத்தப்படுகிறது, இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. ஏனென்றால், அவருடைய மாம்சம் இயல்பானது, மேலும் மனிதனை இரட்சிக்கும் கிரியையைச் செய்ய வேண்டும், அவர் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட மாம்சத்தை விட மிகப் பெரிய அளவில் பாடுபடுகிறார்—மேலும் இந்த பாடுகள் யாவும் அவருடைய மாம்சத்தின் யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மையிலிருந்து உருவாகின்றன. இரண்டு மனுஷரூபமான மாம்சங்களும் தங்கள் ஊழியங்களைச் செய்யும்போது ஏற்பட்ட பாடுகளிலிருந்து, மாம்சமாகியதன் சாராம்சத்தை ஒருவர் கண்டுகொள்ளலாம். மாம்சம் எந்த அளவிற்கு சாதாரணமானதாக இருக்கிறதோ, கிரியையைச் செய்யும்போது அவர் அந்த அளவிற்கு அதிகமாகக் கஷ்டங்களைச் சகிக்க வேண்டும்; கிரியையை மேற்கொள்ளும் மாம்சமானது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஜனங்களின் கருத்துக்கள் மற்றும் அதிக ஆபத்துகள் அவருக்கு ஏற்படக்கூடும். இன்னும், மாம்சமானது எந்த அளவிற்கு உண்மையானதோ, மேலும் சாதாரண மனிதனின் தேவைகளையும் முழுமையான உணர்வையும் மாம்சம் எந்த அளவிற்கு கொண்டிருக்கிறதோ, மாம்சத்தில் தேவனுடைய கிரியையை அவர் மேற்கொள்வதில் அவ்வளவு அளவிற்கு அதிக திறன் உள்ளவராக இருக்கிறார். இயேசுவின் மாம்சந்தான் சிலுவையில் அறையப்பட்டது, அவருடைய மாம்சத்தை அவர் பாவநிவாரணப்பலியாக ஒப்புக்கொடுத்தார்; சாதாரண மனிதத்தன்மையுடன் கூடிய ஒரு மாம்சத்தின் மூலம்தான் அவர் சாத்தானைத் தோற்கடித்து மனிதனை முழுமையாக சிலுவையிலிருந்து இரட்சித்தார். தேவன் தமது இரண்டாவது மனுஷரூபமெடுத்தலில் ஜெயங்கொள்ளுதலின் கிரியையைச் செய்து சாத்தானைத் தோற்கடிப்பது ஒரு முழுமையான மாம்சமாக இருக்கிறது. முற்றிலும் இயல்பான மற்றும் உண்மையான ஒரு மாம்சம் மட்டுமே ஜெயங்கொள்ளுதலின் கிரியையை முழுவதுமாக செய்ய முடியும் மற்றும் வல்லமையான சாட்சியத்தை அளிக்க முடியும். அதாவது, மனிதனை இரட்சிப்பது மாம்சத்தில் தேவனுடைய யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மை மூலம் திறம்படச் செய்யப்படுகிறது, மாறாக இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் மற்றும் வெளிப்பாடுகள் மூலம் அல்ல. இந்த மாம்சமாகிய தேவனுடைய ஊழியம் என்னவென்றால் பேசுவதும், அதன் மூலம் மனிதனை ஆட்கொண்டு பரிபூரணமாக்குவதும் ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாம்சத்தில் உணரப்பட்ட ஆவியானவரின் கிரியை, அதாவது மாம்சத்தின் கடமை என்னவென்றால் பேசுவதும் அதன் மூலம் ஜெயங்கொள்வதும், வெளிப்படுத்துவதும், பரிபூரணமாக்குவதும், மனிதனை முற்றிலுமாக புறம்பாக்குவதும் ஆகும். எனவே, ஜெயங்கொள்ளுதலின் கிரியையில் தான் மாம்சத்தில் தேவனுடைய கிரியை முழுமையாக நிறைவேற்றப்படும். மீட்பின் ஆரம்ப கிரியையானது மாம்சமாகியதன் கிரியையின் ஆரம்பம் மட்டுமே; ஜெயங்கொள்ளுதலின் கிரியையைச் செய்யும் மாம்சமானது மாம்சமாகியதன் முழு கிரியையையும் நிறைவு செய்யும். பாலினத்தில், ஒருவர் ஆண் மற்றவர் பெண், எனவே தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தை பூர்த்திசெய்து, தேவனைப் பற்றிய மனிதனின் கருத்துக்களை அகற்றுவார்: தேவன் ஆணும் பெண்ணுமாக மாறமுடியும், முக்கியமாக, மாம்சத்தில் மனுஷரூபமாக வந்த தேவன் பாலினமற்றவர். அவர் ஆண் மற்றும் பெண் இருவரையும் உருவாக்கினார், அவரைப் பொறுத்தவரை பாலினத்தில் பிரிவு இல்லை. கிரியையின் இந்தக் கட்டத்தில், தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதில்லை, இதனால் கிரியை அதன் முடிவுகளை வார்த்தைகளின் மூலம் அடையும். இதற்குக் காரணம், இந்த காலத்தில் மாம்சமாகிய தேவனுடைய கிரியை என்னவென்றால் பிணியாளிகளைக் குணப்படுத்துவதும் பிசாசுகளைத் துரத்துவதும் அல்ல, ஆனால் பேசுவதன் மூலம் மனிதனை ஆட்கொள்வதே ஆகும், அதாவது தேவனுடைய இந்த மனுஷரூபமெடுத்த மாம்சத்தால் சொந்த பூர்வீக திறன் என்று கூறுவது வார்த்தைகளை பேசுவதற்கும் மனிதனை ஆட்கொள்வதற்குமே ஆகும், பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும் பிசாசுகளைத் துரத்துவதற்கும் அல்ல. சாதாரண மனிதத்தன்மையில் அவர் செய்யும் கிரியை அற்புதங்களைச் செய்வதல்ல, பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளைத் துரத்துவதற்கும் அல்ல, ஆனால் பேசுவதற்காகும், எனவே இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது முதல் மாம்சத்தை விட மிகவும் சாதாரணமானதாக ஜனங்களுக்குத் தோன்றுகிறது. தேவன் மாம்சமாகியது பொய் அல்ல என்பதை ஜனங்கள் காண்கிறார்கள்; ஆனால் இந்த மாம்சமாகிய தேவன் மாம்சமாகிய இயேசுவிலிருந்து வேறுபட்டவர், அவர்கள் இருவரும் மாம்சமாகிய தேவனாக இருந்தாலும், அவர்கள் இருவரும் முற்றிலும் ஒன்றல்ல. இயேசு இயல்பான மனிதத்தன்மையையும் சாதாரண மனிதத்தன்மையையும் கொண்டிருந்தார், ஆனால் அவரைப் பல அடையாளங்களும் அதிசயங்களும் தொடர்ந்திருந்தன. இந்த மாம்சமாகிய தேவனில், மனித கண்கள் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பதில்லை, பிணியாளிகளை குணப்படுத்துவதோ, பிசாசுகளைத் துரத்துவதோ, கடல்மேல் நடப்பதோ, நாற்பது நாட்கள் உபவாசம் இருப்பதோ இல்லை…. இயேசு செய்த அதே கிரியையை அவர் செய்வதில்லை, ஏனெனில், முக்கியமாக, அவருடைய மாம்சம் இயேசுவிலிருந்து வேறுபட்டது என்பதற்காக அல்ல, ஆனால் பிணியாளிகளைக் குணப்படுத்தி பிசாசுகளைத் துரத்துவது அவருடைய ஊழியமல்ல. அவர் தமது சொந்தக் கிரியையை பாழ்படுத்துவதில்லை, மேலும் தமது சொந்த கிரியைக்கு அவரே இடையூறு செய்வதில்லை. அவர் தமது உண்மையான வார்த்தைகளின் மூலம் மனிதனை ஆட்கொள்வதால், அவர் அவனை அற்புதங்களால் அடக்க வேண்டிய அவசியமில்லை, எனவே இந்தக் கட்டம் மாம்சமாகியதன் கிரியையை முடிப்பதே ஆகும். இன்று நீ காணும் மாம்சமாகிய தேவன் முற்றிலும் ஒரு மாம்சமாவார், அவரில் இயற்கைக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. அவர் மற்றவர்களைப் போலவே நோய்வாய்ப்படுகிறார், மற்றவர்களைப் போலவே உணவும் உடைகளும் தேவைப்படுகின்றன; அவர் முற்றிலும் ஒரு மாம்சமாவார். இந்த காலத்தில், மாம்சமாகிய தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தியிருந்தால், அவர் பிணியாளிகளைக் குணப்படுத்தியிருந்தால், பிசாசுகளைத் துரத்தியிருந்தால், அல்லது ஒரே வார்த்தையால் கொல்ல முடிந்திருந்தால், ஜெயங்கொள்ளுதலின் கிரியை எவ்வாறு மேற்கொண்டிருக்க முடியும்? புறஜாதி தேசங்களிடையே இந்தக் கிரியையானது எவ்வாறு பரவக்கூடும்? பிணியாளிகளைக் குணப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் கிருபையினுடைய காலத்தின் கிரியை, இது மீட்பின் கிரியையின் முதல் படியாகும், இப்போது தேவன் மனிதனை சிலுவையிலிருந்து இரட்சித்திருந்தால், அவர் இனி அந்த கிரியையைச் செய்வதில்லை. கடைசி நாட்களில், இயேசுவைப் போலவே ஒரு “தேவன்” தோன்றியிருந்தால், அதாவது பிணியாளிகளைக் குணப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தி, மனிதனுக்காக சிலுவையில் அறையப்பட்டிருந்தார் என்றால், அந்த “தேவன்” வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தேவனுடைய விளக்கத்திற்கு ஒத்தவராகவும், மனிதன் ஏற்றுக்கொள்வதற்கு எளிதானவராகவும் இருந்தாலும், அதன் சாராம்சத்தில், தேவ ஆவியானவர் அணிந்துகொண்ட மாம்சமாக இருக்காது, மாறாக ஒரு அசுத்த ஆவி அணிந்துகொண்ட மாம்சமாகவே இருக்கும். ஏனென்றால், அவர் ஏற்கனவே முடித்ததை மீண்டும் செய்யக்கூடாது என்பது தேவனுடைய கொள்கையாக இருக்கிறது. எனவே, தேவனுடைய இரண்டாவது மனுஷரூபமெடுத்தலின் கிரியையானது முதல் கிரியையிலிருந்து வேறுபட்டது. கடைசி நாட்களில், ஒரு இயல்பான, சாதாரண மாம்சத்தில் ஜெயங்கொள்ளும் கிரியையை தேவன் உணர்கிறார்; அவர் பிணியாளிகளை குணப்படுத்தமாட்டார், மனிதனுக்காகச் சிலுவையில் அறையப்படமாட்டார், ஆனால் மாம்சத்தில் வெறுமனே வார்த்தைகளைப் பேசுகிறார், மற்றும் மாம்சத்தில் மனிதனை வெற்றி கொள்கிறார். அத்தகைய மாம்சம் மட்டுமே மாம்சமாகிய தேவனுடைய மாம்சமாகும்; அத்தகைய மாம்சத்தால் மட்டுமே மாம்சத்தில் தேவனுடைய கிரியையை முடிக்க முடியும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 103
இந்தக் கட்டத்தில் மாம்சமாகிய தேவன் பாடுகளை சகிக்கிறாரோ அல்லது அவருடைய ஊழியத்தைச் செய்கிறாரோ, மாம்சமாகியதன் அர்த்தத்தை முடிக்கவே அவர் அவ்வாறு செய்கிறார், ஏனென்றால் இது தேவனுடைய கடைசி மனுஷரூபமெடுத்தலாகும். தேவன் இரண்டு முறை மட்டுமே மனுஷனாக அவதரிக்க முடியும். மூன்றாவது முறையாக இருக்க முடியாது. முதல் அவதரிப்பு ஆண், இரண்டாவது பெண், எனவே தேவனுடைய மாம்சத்தின் உருவம் மனிதனின் மனதில் நிறைவடைகிறது; மேலும், இரண்டு மனுஷ அவதரிப்புகளும் ஏற்கனவே மாம்சத்தில் தேவனுடைய கிரியையை முடித்துவிட்டன. முதன்முறையாக, மாம்சமாகியதன் அர்த்தத்தை நிறைவேற்றுவதற்காக மாம்சமாகிய தேவன் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருந்தார். இந்த காலத்திலும் கூட அவர் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார், ஆனால் இந்த மாம்சமாகியதன் அர்த்தம் வேறுபட்டது: இது ஆழமானது, அவருடைய கிரியை மிகவும் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது. தேவன் மீண்டும் மாம்சமாக மாறியதற்கான காரணம் மாம்சமாகியதன் அர்த்தத்தை நிறைவு செய்வதாகும். தேவன் தம்முடைய கிரியையின் இந்தக் கட்டத்தை முழுவதுமாக முடித்தவுடன், மாம்சமாகியதன் முழு அர்த்தமும், அதாவது, மாம்சத்தில் தேவனுடைய கிரியை முழுமையடையும், மேலும் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியை எதுவும் இருக்காது. அதாவது, இனிமேல் தேவன் தம்முடைய கிரியையைச் செய்ய மாம்சத்திற்குள் வரமாட்டார். மனிதகுலத்தை இரட்சிப்பதற்கும், பரிபூரணப்படுத்துவதற்கும் மட்டுமே தேவன் மாம்சமாகியதன் கிரியையைச் செய்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிரியையின் நிமித்தமாக அல்லாமல், தேவன் மாம்சத்திற்குள் வருவது வழக்கமல்ல. கிரியை செய்ய மாம்சத்திற்குள் வருவதன் மூலம், தேவன் ஒரு மாம்சமானவர், ஒரு சாதாரண மனிதர், ஒரு இயல்பான மனிதர் என்று சாத்தானுக்குக் காண்பிக்கிறார்—ஆனாலும் அவரால் உலகம் முழுவதையும் வெற்றிபெற முடியும், சாத்தானை வெல்ல முடியும், மனிதகுலத்தை மீட்க முடியும், மனிதகுலத்தை வெற்றி கொள்ள முடியும்! சாத்தானுடைய வேலையின் குறிக்கோள் மனிதகுலத்தை சீர்கெட்டுப்போகப் பண்ணுவதே ஆகும், அதே நேரத்தில் தேவனுடைய குறிக்கோள் மனிதகுலத்தை இரட்சிப்பதாகும். சாத்தான் மனிதனை பாதாளத்தில் சிக்க வைக்கிறான், அதே சமயம் தேவன் அவனை மீட்கிறார். சாத்தான் எல்லா மனிதர்களையும் தன்னை வணங்கச் செய்கிறான், அதே சமயம் தேவன் அவர்களைத் தம் ஆதிக்கத்திற்கு உட்படுத்துவார், ஏனென்றால் அவர் சிருஷ்டிப்பின் கர்த்தர். இந்த கிரியைகள் அனைத்தும் தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகள் மூலம் அடையப்படுகின்றன. முக்கியமாக, அவருடைய மாம்சம் என்பது மனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மையின் கலவையாகும், மற்றும் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டுள்ளது. ஆகவே, மனுஷரூபமெடுத்த தேவனுடைய மாம்சம் இல்லாமல், மனிதகுலத்தை இரட்சிப்பதற்கான முடிவுகளை தேவனால் அடைய முடியவில்லை, அவருடைய மாம்சத்தின் சாதாரண மனிதத்தன்மை இல்லாமல், மாம்சத்தில் அவர் செய்த கிரியையால் இந்த முடிவுகளை இன்னும் அடைய முடியவில்லை. தேவன் மாம்சமாகியதன் சாராம்சம் என்னவென்றால், அவர் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்; இல்லையெனில் அது மனுஷரூபமெடுத்தலில் தேவனுடைய மெய்யான நோக்கத்தை எதிர்க்கிறதாய் இருக்கும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 104
இயேசுவின் கிரியையில் மாம்சமாகியதன் அர்த்தம் முற்றுபெறவில்லை என்று நான் ஏன் சொல்கிறேன்? ஏனெனில் வார்த்தை முற்றிலும் மாம்சமாக மாறவில்லை. இயேசு செய்தது மாம்சத்தில் தேவனுடைய கிரியையின் ஒரு பகுதி மட்டுமே; அவர் மீட்பின் கிரியையை மட்டுமே செய்தார், மனிதனை முழுமையாக ஆதாயப்படுத்தும் கிரியையைச் செய்யவில்லை. இந்த காரணத்திற்காக, தேவன் கடைசி நாட்களில் மீண்டும் மாம்சமாகியிருக்கிறார். கிரியையின் இந்த நிலையும் கூட ஒரு சாதாரண மாம்சத்தில் செய்யப்படுகிறது; இது முற்றிலும் சாதாரணமான ஒரு மனிதனால் செய்யப்படுகிறது, அவருடைய மனிதத்தன்மையானது சிறிதளவேனும் மீறப்படவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் ஒரு முழுமையான மனிதராகிவிட்டார்; அவர் தேவனுடைய அடையாளம், ஒரு முழுமையான மனிதர், கிரியையைச் செய்கிற ஒரு முழுமையான மாம்சமாவார். மனித கண்கள் ஒரு வரம்பு மீறாத மாம்ச உடலையும், பரலோக மொழியைப் பேசக்கூடிய, அதிசயமான அடையாளங்களைக் காண்பிக்காத, அதிசயங்களைச் செய்யாத, பெரிய அரங்குகளில் மதத்தைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தாத ஒரு சாதாரண மனிதரையும் காண்கின்றன. ஜனங்களைப் பொறுத்தவரை, மனுஷரூபமெடுத்த இரண்டாவது மாம்சத்தின் கிரியையானது முதல் கிரியையைப் போலல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாய் தெரிகிறது, இரண்டுக்கும் பொதுவானது எதுவுமில்லை என்று தோன்றுகிறது, முதல் கிரியையில் எதுவும் இந்த காலத்தில் காண முடியாது. மனுஷரூபமெடுத்த இரண்டாவது மாம்சத்தின் கிரியையானது முதல் கிரியையிலிருந்து வேறுபட்டிருந்தாலும், அவற்றின் ஆதாரம் ஒன்றாக இல்லை என்பதை இது நிரூபிக்கவில்லை. அவற்றின் ஆதாரம் ஒன்றா என்பது மாம்சப்பகுதியால் செய்யப்படும் கிரியையின் தன்மையைப் பொறுத்தது, அவற்றின் வெளிப்புற தோற்றத்தில் அல்ல. அவருடைய கிரியையின் மூன்று கட்டங்களில், தேவன் இரண்டு முறை அவதரித்திருக்கிறார், இரண்டு முறையும் மாம்சமாகிய தேவனுடைய கிரியையானது ஒரு புதிய யுகத்தைத் துவக்குகிறது, ஒரு புதிய கிரியையைத் தொடங்குகிறது; மனுஷ அவதரிப்புகள் ஒன்றையொன்று புகழுரை சூட்டிக்கொள்கின்றன. இரண்டு மாம்சங்களும் உண்மையில் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்று மனித கண்களால் சொல்ல முடியாது. இது மனிதக் கண்ணிற்கும் அல்லது மனித மனதிற்கும் உள்ள திறனுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லாமல் போகிறது. ஆனால் அவற்றின் சாராம்சத்தில், அவை இரண்டும் ஒன்றே, ஏனென்றால் அவற்றின் கிரியை ஒரே ஆவியானவரிடமிருந்து உருவாகிறது. இரண்டு மனுஷரூபமெடுத்த மாம்சங்களும் ஒரே மூலத்திலிருந்து எழுகின்றனவா என்பதை யுகம் மற்றும் அவை பிறந்த இடம், அல்லது இதுபோன்ற பிற காரணிகளால் தீர்மானிக்க முடியாது, ஆனால் அவர்கள் வெளிப்படுத்திய தெய்வீகத்தன்மையின் கிரியைகளால் அறிந்துகொள்ள முடியும். மனுஷரூபமெடுத்த இரண்டாவது மாம்சம் இயேசு செய்த எந்த கிரியையும் செய்வதில்லை, ஏனென்றால் தேவனுடைய கிரியை வழக்கத்திற்கு கட்டுப்படாது, ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பாதையைத் திறக்கிறது. இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சம் ஜனங்களின் மனதில் முதல் மாம்சத்தின் தோற்றத்தை ஆழமாக்குவதையோ அல்லது திடப்படுத்துவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அதை பூர்த்திசெய்து முழுமையாக்குவதையும், தேவனைப் பற்றிய மனிதனின் அறிவை ஆழப்படுத்துவதையும், ஜனங்களின் இதயங்களில் இருக்கும் அனைத்து விதிகளையும் முறிப்பதையும், அவர்களின் இதயங்களில் இருக்கும் தேவனுடைய தவறான உருவங்களை நீக்குவதையும் நோக்கமாக கொண்டிருக்கிறது. தேவனுடைய சொந்த கிரியையின் எந்தவொரு தனிப்பட்ட கட்டமும் மனிதனைப் பற்றிய முழுமையான அறிவை வழங்க முடியாது என்று கூறலாம்; ஒவ்வொன்றும் ஒரு பகுதியை மட்டுமே தருகிறது, முழுமையை அல்ல. தேவன் தமது மனநிலையை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தாலும், மனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட திறமை காரணமாக, தேவனைப் பற்றிய அவனது அறிவு இன்னும் முழுமையடையாததாக இருக்கிறது. தேவனுடைய மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த மனித மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை; மேலும், அவருடைய கிரியையின் ஒரு கட்டம் மட்டுமே எவ்வாறு தேவனை முழுமையாக வெளிப்படுத்த முடியும்? அவர் தமது இயல்பான மனிதத்தன்மையினுடைய மறைவின் கீழ் மாம்சத்தில் கிரியை செய்கிறார், மேலும் ஒருவர் அவருடைய தெய்வீகத்தின் வெளிப்பாடுகளால் அவரை அறிந்திருக்க முடியும், அவருடைய உடலின் புறத்தோற்றத்தால் அல்ல. தேவன் தமது பல்வேறு வேலையின் மூலம் மனிதனை அறிந்துகொள்ள அனுமதிக்க மாம்சத்திற்குள் வருகிறார், அவருடைய கிரியையின் இரண்டு கட்டங்களும் ஒரே மாதிரியாக இல்லை. இந்த வழியில் மட்டுமே மனிதன் மாம்சத்தில் தேவனுடைய கிரியையைப் பற்றிய முழு அறிவைக் கொண்டிருக்க முடியும், ஒரே ஒரு அம்சத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. மனுஷரூபமெடுத்த இரண்டு மாம்சங்களின் கிரியையும் வேறுபட்டிருந்தாலும், மாம்சப் பகுதிகளின் சாராம்சமும், அவற்றின் கிரியையின் மூலமும் ஒரே மாதிரியானவை; கிரியையின் இரண்டு வெவ்வேறு கட்டங்களைச் செய்வதற்கு அவை இருக்கின்றன, இரண்டு வெவ்வேறு யுகங்களில் எழுகின்றன. எதுவாக இருந்தாலும், மனுஷரூபமெடுத்த தேவனுடைய மாம்சங்கள் ஒரே சாராம்சத்தையும் ஒரே தோற்றத்தையும் பகிர்ந்து கொள்கின்றன—இது யாராலும் மறுக்க முடியாத ஒரு சத்தியமாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 105
மாம்சத்தில் வந்த தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், தேவனுடைய ஆவியால் அணிவிக்கப்பட்ட மாம்சமே கிறிஸ்து. இந்த மாம்சமானது மாம்சத்திலிருந்து வருகின்ற மற்றெந்த மனிதனையும் போல அல்ல. இந்த வித்தியாசம் எதற்காகவென்றால், கிறிஸ்து மாம்சம் மற்றும் இரத்தத்திற்குரியவர் அல்ல; அவர் மாம்சத்திலே வந்த ஆவியின் அவதாரம். அவர் ஒரு சாதாரண மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை கொண்டவர். அவரது தெய்வீகத்தன்மையானது எந்த மனிதனாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத்தன்மை தேவனுடைய கிரியையைச் செய்து நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அவருடைய இயல்பான மனிதத்தன்மை அவரது இயல்பான அனைத்துச் செயல்களையும் மாம்சத்தில் நிலைநிறுத்துகிறது. அவருடைய மனிதத்தன்மையாக இருந்தாலும் அல்லது தெய்வீகத்தன்மையாக இருந்தாலும், இரண்டுமே பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிகின்றன. கிறிஸ்துவின் சாராம்சம் ஆவியானவர் ஆவார், அதாவது தெய்வீகத்தன்மையுள்ளவர் ஆவார். ஆகையால், அவருடைய சாராம்சம் தேவனாகவே இருக்கிறது; இந்தச் சாராம்சம் அவரது சொந்தக் கிரியைக்கு இடையூறு விளைவிக்காது, மேலும் அவரால் தனது சொந்தக் கிரியையை அழிக்கும் எதையும் செய்ய முடியாது, மேலும் அவர் தனது சொந்தச் சித்தத்திற்கு எதிரான எந்த வார்த்தைகளையும் உச்சரிக்கவும் மாட்டார். ஆகையால், மாம்சத்தில் வந்த தேவன் தனது சொந்த நிர்வாகத்தைக் குறுக்கிடும் எந்த செயலையும் ஒருபோதும் செய்ய மாட்டார். இதைத்தான் ஜனங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சாராம்சம் மனிதனை இரட்சிப்பதே ஆகும், இது தேவனுடைய சொந்த நிர்வாகத்தின் பொருட்டே செய்யப்படுகிறது. இதேபோல், கிறிஸ்துவின் கிரியை மனிதனை இரட்சிப்பதாகும், மேலும் அது தேவனுடைய சித்தத்திற்காகவே செய்யப்படுகிறது. தேவன் மாம்சமாக வந்ததனால், அவரது கிரியையைச் செய்ய அவருடைய மாம்சம் போதுமானதாக இருக்கிறது என்பதை அவர் தமது மாம்சத்திற்குள் தமது சாராம்சத்தை உணர்ந்துகொள்கிறார். ஆகையால், கிறிஸ்துவின் மனித அவதாரத்தின் போது தேவனுடைய ஆவியின் அனைத்துக் கிரியைகளுக்கும் பதிலாக கிறிஸ்துவின் கிரியை இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த மனித அவதாரக் காலம் முழுவதுமுள்ள அனைத்துக் கிரியைகளின் பிரதான மையமாக கிறிஸ்துவின் கிரியை இருக்கிறது. இதை வேறு எந்தக் காலத்தின் கிரியையோடும் ஒன்றாகச் சேர்க்க முடியாது. தேவன் மாம்சமாக மாறுவதால், அவர் தம்முடைய மாம்சத்தின் அடையாளத்தில் செயல்படுகிறவராயிருக்கிறார்; அவர் மாம்சத்தில் வருவதால், அவர் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியையை செய்து முடிக்கிறார். அது தேவனுடைய ஆவியாக இருந்தாலும் அல்லது கிறிஸ்துவாக இருந்தாலும், இருவரும் தேவனே, அவர் தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்கிறார், மற்றும் அவர் தாம் செய்ய வேண்டிய ஊழியத்தைச் செய்கிறார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 106
தேவனுடைய சாராம்சமே அதிகாரம் செலுத்துகிறது, ஆனால் அவரிடமிருந்து வரும் அதிகாரத்திற்கு அவர் முழுமையாக கீழ்ப்படியக் கூடியவராக இருக்கிறார். அது ஆவியானவருடைய கிரியையாக இருந்தாலும் அல்லது மாம்சத்தின் கிரியையாக இருந்தாலும், அவை மற்றவற்றுடன் முரண்படுவதில்லை. எல்லா சிருஷ்டிப்புகள் மீதும் தேவனுடைய ஆவியானவர் அதிகாரமுடையவராக இருக்கிறார். தேவனுடைய சாராம்சத்தைக் கொண்ட மாம்சத்திற்கும் அதிகாரம் உண்டு, ஆனால் மாம்சத்தில் உள்ள தேவன் பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிகிறதான எல்லா கிரியைகளையும் செய்யக் கூடியவராக இருக்கிறார். இதை எந்த ஒரு தனிப்பட்ட நபராலும் அடையவோ அல்லது பெறவோ முடியாது. தேவனே முழு அதிகாரம் உடையவராக இருக்கிறார், ஆனால் அவருடைய மாம்சமானது அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படியக் கூடியதாக இருக்கிறது. “பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு கிறிஸ்து கீழ்ப்படிகிறார்” என்று கூறப்படும் போது, இவ்வாறுதான் அர்த்தம் கொள்ளப்படுகிறது. தேவன் ஒரு ஆவியாயிருக்கிறார், தேவன் மனிதனாக முடிகிறது போல அவராலே இரட்சிப்பின் கிரியையைச் செய்ய முடியும். எப்படியிருந்தாலும், தேவன் தாமே தமது சொந்த கிரியையைச் செய்கிறார்; அவர் குறுக்கிடவோ, தலையிடவோ செய்யாமல், அதையும்விட அவர் தம்மை முரண்படுத்தும் கிரியையை செய்வதில்லை, ஏனென்றால் ஆவியானவரும் மாம்சமாய் வந்தவரும் செய்யும் கிரியையின் சாராம்சம் ஒன்றாயிருக்கிறது. அது ஆவியானவராக இருந்தாலும் அல்லது மாம்சமாக வந்தவராக இருந்தாலும், இருவரும் ஒரே சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் மற்றும் ஒரே கிரியையை நிர்வகிப்பதற்குமே கிரியையை நடப்பிக்கிறார்கள். ஆவியானவரும் மாம்சமானவரும் இருவரும் முற்றிலும் வேறுபட்ட குணங்களைக் கொண்டிருந்தாலும், அவர்களின் சாராம்சங்கள் ஒன்றாயிருக்கின்றன; இருவருமே தேவனுடைய சாராம்சம் மற்றும் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்கள். கீழ்ப்படியாமையின் எந்த அம்சங்களையும் தேவன்தாமே தம்மில் கொண்டிருக்கவில்லை; அவரது சாராம்சம் நன்மையானதாக இருக்கிறது. அவர் தாமே சகல அழகு மற்றும் நன்மைகளின் வெளிப்பாடாக இருக்கிறார், அதேபோல் அவர் சகல அன்புள்ளவராகவும் இருக்கிறார். மாம்சத்தில் கூட, பிதாவாகிய தேவனுக்குக் கீழ்ப்படியாத செயல் எதையும் தேவன் செய்வதில்லை. தமது ஜீவனைப் பலியாகக் கொடுக்கும் விஷயத்தில் கூட, அவர் வேறு எதையும் தேர்ந்தெடுக்காமல், அவர் முழு மனதுடன் அவ்வாறே செய்யத் தயாராக இருந்தார். தேவன் சுய-நீதி அல்லது சுய-முக்கியத்துவமாகிய எந்த அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை, அல்லது வீண் பெருமை மற்றும் அகந்தை ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை; சீர்கேடான எந்த அம்சங்களையும் அவர் கொண்டிருக்கவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படியாத அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன; சகல அவலட்சணத்திற்கும் துன்மார்க்கத்திற்கும் சாத்தான்தான் ஆதாரம். மனிதன் சாத்தானால் சீர்கெட்டு அவனால் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதுதான், சாத்தானுக்கு இருக்கின்ற குணங்களைப் போன்று மனிதனுடைய குணங்களும் இருப்பதற்கான காரணமாகும். கிறிஸ்துவானவர் சாத்தானால் சீர்கெட்டுப்போகவில்லை, எனவே அவர் சாத்தானின் குணங்கள் எதுவும் கொண்டிராமல் தேவனுடைய குணங்களை மட்டுமே கொண்டிருக்கிறார். எவ்வளவு கடினமான கிரியை அல்லது பலவீனமான மாம்சமாக இருந்தாலும், தேவன் மாம்சத்தில் வாழும்போது, தேவனுடைய கிரியைக்கு இடையூறு விளைவிக்கும் எதையும் ஒருபோதும் செய்ய மாட்டார், மேலும் அதையும்விட கீழ்ப்படியாமையினால் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தைக் கைவிடவும் மாட்டார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு எதிராகப் போவதை விட அவர் மாம்சத்தின் வேதனையையே அனுபவிப்பதை விரும்பினார்; “பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” என்று இயேசு ஜெபத்தில் சொன்னது போலவே இருக்கிறது. ஜனங்கள் தங்கள் சொந்த விருப்பங்களையே தேர்வு செய்கிறார்கள், ஆனால் கிறிஸ்துவோ அவ்வாறு செய்யவில்லை. அவர் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருந்தாலும், அவர் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தையே நாடுகிறார், பிதாவாகிய தேவனால் தமக்கு ஒப்புவிக்கப்பட்டதை தமது மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்து நிறைவேற்றுகிறார். இது மனிதனால் அடைய முடியாத ஒன்றாகும். சாத்தானிடமிருந்து வருகிற எதுவும் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டிருக்க முடியாது; அது தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் அவரை எதிர்க்கும் ஒன்றை மட்டுமே கொண்டிருக்க முடியும். இது தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய முடியாது, இன்னும் சொல்வதானால் தேவனுடைய சித்தத்திற்கு மனமுவந்து கீழ்ப்படியாது. கிறிஸ்துவைத் தவிர்த்து மற்ற எல்லா மனிதர்களும் தேவனை எதிர்க்கும் செயலைச் செய்யலாம், தேவனால் ஒப்புவிக்கப்பட்ட கிரியையை ஒரு மனிதனாலும் நேரடியாக மேற்கொள்ள முடியாது; தேவனுடைய நிர்வாகத்தைத் தங்களுடைய சொந்த பொறுப்பாகக் கருதி ஒருவராலும் செயல்படுத்த முடியாது. கிறிஸ்துவின் சாராம்சமானது பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிதல் ஆகும்; தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமையானது சாத்தானின் குணமாகும். இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகும், சாத்தானின் குணங்களைக் கொண்டிருக்கிற எவரையும் கிறிஸ்து என்று அழைக்க முடியாது. தேவனுக்குப் பதிலாக தேவனுடைய கிரியையை மனிதனால் செய்ய முடியாது என்பதற்கான மூலக்காரணம், தேவனுக்குரிய எந்தவொரு சாராம்சமும் மனிதனிடம் இல்லை என்பதே ஆகும். மனிதன் தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காகவும் எதிர்கால வாய்ப்புகளுக்காகவுமே தேவனுக்கு வேலை செய்கிறான், ஆனால் கிறிஸ்துவோ பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்வதற்காகவே கிரியையை நடப்பிக்கிறார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 107
கிறிஸ்துவினுடைய மனிதத்தன்மை அவருடைய தெய்வீகத்தன்மையால் நிர்வகிக்கப்படுகிறது. அவர் மாம்சத்தில் இருந்தபோதிலும், அவருடைய மனிதத்தன்மையானது மாம்சத்திலிருக்கிற மனிதனைப் போன்றது அல்ல. அவர் தமக்கென்றுள்ள தனித்துவமான குணத்தைப் பெற்றிருக்கிறார், இதுவும் அவருடைய தெய்வீகத்தன்மையால் நிர்வகிக்கப்படுகிறது. அவருடைய தெய்வீகத்தன்மைக்கு பலவீனம் இல்லை; கிறிஸ்துவின் பலவீனம் என்பது அவருடைய மனிதத் தன்மையைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த பலவீனமானது அவருடைய தெய்வீகத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது, ஆனாலும் அத்தகைய வரம்புகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் நேரத்திற்கும் உட்பட்டவையாகும், மேலும் அவை வரம்பற்றவை அல்ல. அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையைச் செய்யும்படியான நேரம் வரும்போது, அது அவருடைய மனிதத்தன்மையைப் பொருட்படுத்தாமல் செய்யப்படுகிறது. கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையால் முழுமையாக வழிநடத்தப்படுகிறது. அவருடைய மனிதத்தன்மையின் இயல்பான வாழ்க்கையைத் தவிர்த்து, அவருடைய மனிதத்தன்மையின் மற்ற அனைத்து செயல்களும் அவருடைய தெய்வீகத்தன்மையால் செல்வாக்கைப் பெற்று, செயல் விளைவை அடைந்து, வழிநடத்தப்படுகின்றன. கிறிஸ்துவிடம் ஒரு மனிதத்தன்மை இருந்தபோதிலும், அது அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை சீர்குலைப்பதில்லை, துல்லியமாக இதன் காரணம் என்னவென்றால் கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையினால் வழிநடத்தப்படுகிறது; மற்றவர்களுடனான நடத்தையில் தம்மை எவ்வாறு நடத்துகிறது என்பதில் அவருடைய மனிதத்தன்மையானது முதிர்ச்சியடையவில்லை என்ற போதிலும், அது அவருடைய தெய்வீகத்தன்மையின் இயல்பான கிரியையைப் பாதிப்பதில்லை. கிறிஸ்துவினுடைய மனிதத்தன்மையானது சீர்கெட்டுப்போகவில்லை என்று நான் கூறும்போது, கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையால் நேரடியாகக் கட்டளையிடப்பட முடியும் என்றும், சாதாரண மனிதனை விட மிகவும் உயர்ந்த உணர்வு அவருக்கு உண்டு என்பதைத்தான் நான் சொல்கிறேன். அவருடைய மனிதத்தன்மையானது அவரது கிரியையின் தெய்வீகத் தன்மையால் வழிநடத்தப்படுவதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது; அவரது மனிதத்தன்மையானது தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்துவதற்கு மிகவும் வல்லது, மேலும் இதுபோன்ற கிரியைக்கு கீழ்ப்படிந்திருப்பதற்கும் வல்லதாக இருக்கிறது. தேவன் மாம்சத்தில் செயல்படுகிறார் என்பதால், மாம்சத்தில் ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமை மீதான தனது பார்வையை அவர் ஒருபோதும் இழப்பதில்லை; பரலோகத்திலுள்ள தேவனை அவர் ஓர் உண்மையான இருதயத்தோடு தொழுதுகொள்ள முடிகிறது. அவர் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் தேவனே அவருடைய அடையாளமாக இருக்கிறார். ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபராக மாறி அவர் பூமிக்கு வந்திருக்கிறார் என்பது, ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபரின் வெளிப்புற தோற்றத்துடன், இப்போது அவருக்கு இருக்கிற மற்றும் முன்னமே இல்லாத ஒரு மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பதையே குறிப்பிடுகிறது. அவரால் பரலோகத்திலுள்ள தேவனைத் தொழுதுகொள்ள முடிகிறது; இது தேவனாக இருப்பதாகும் மற்றும் இது மனிதனால் பார்த்துப் பின்பற்ற முடியாததுமாகும். தேவனாக இருக்கிறார் என்பதே அவரது அடையாளம். அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்தே தேவனைத் தொழுதுகொள்கிறார்; எனவே, “கிறிஸ்து பரலோகத்திலுள்ள தேவனைத் தொழுதுகொள்கிறார்” என்னும் வார்த்தைகள் தவறானவை அல்ல. அவர் மனிதனிடம் கேட்பது துல்லியமாக அவருடைய சுய பிரசன்னத்தையே ஆகும்; அத்தகையவற்றைக் கேட்பதற்கு முன்பே அவர் மனிதனிடம் கேட்கும் யாவற்றையும் அவர் ஏற்கெனவே அடைந்துள்ளார். அவரே அவர்களிடமிருந்து விடுபட்டவராக இருக்கிறபோது அவர் ஒருபோதும் மற்றவர்களிடம் கோரிக்கை வைக்க மாட்டார், ஏனென்றால் இவை அனைத்தும் அவருடைய பிரசன்னத்தை உள்ளடக்கியவை. அவர் தமது கிரியையை எவ்வாறு செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுக்குக் கீழ்ப்படியாத வகையில் அவர் செயல்பட மாட்டார். அவர் மனிதனிடம் எதைக் கேட்டாலும், எந்தவொரு கோரிக்கையும் மனிதனால் அடையக்கூடியதை விட அதிகமானது அல்ல. அவர் செய்வதெல்லாம் தேவனுடைய சித்தத்தைச் செய்வதும் மற்றும் அவருடைய நிர்வாகத்திற்குமே ஆகும். கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையானது சகல மனுஷருக்கும் மேலானது; ஆகையால், சிருஷ்டிக்கப்பட்ட எல்லா உயிரினங்களிலும் அவர் மிக உயர்ந்த அதிகாரம் உடையவராக இருக்கிறார். இந்த அதிகாரம் அவருடைய தெய்வீகத்தன்மையாகும், அதாவது தேவனுடைய மனநிலை மற்றும் பிரசன்னமாகும், அதுதான் அவருடைய அடையாளத்தைத் தீர்மானிக்கிறது. ஆகையால், அவருடைய மனிதத்தன்மையானது எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும், அவர் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கிறார் என்பது மறுக்க முடியாததாகும்; அவர் எந்த நிலைப்பாட்டில் இருந்து பேசினாலும், அவர் தேவனுடைய சித்தத்திற்கு எந்த அளவுக்கு கீழ்ப்படிந்தாலும், அவர் தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. மதிகெட்ட மற்றும் அறிவற்ற மனிதர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவின் சாதாரண மனிதத்தன்மையை ஒரு குறைபாடாகவே கருதுகின்றனர். அவர் தெய்வீகத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பதை எவ்வளவு எடுத்துரைத்தாலும் மற்றும் வெளிப்படுத்தினாலும், அவர் கிறிஸ்துதான் என்பதை மனிதன் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறான். கிறிஸ்து தமது கீழ்ப்படிதலையும் மனத்தாழ்மையையும் எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு மதிகெட்ட மனிதர்கள் கிறிஸ்துவை லேசாகக் கருதுகிறார்கள். அவர் மீது புறக்கணிப்பு மற்றும் அவமதிப்பு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறவர்கள் கூட இருக்கிறார்கள், ஆனாலும் “மகான்களின்” உயரமான உருவங்களை மேஜையின் மேல் வைத்து வழிபடவும் செய்கிறார்கள். மனிதனின் எதிர்ப்பும் கீழ்ப்படியாமையும் மாம்சத்தில் வந்த தேவனுடைய அவதாரத்தின் சாராம்சமானது தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதிலிருந்து வருகிறது, அதுபோலவே கிறிஸ்துவின் சாதாரண மனிதத்தன்மையிலிருந்தும் வருகிறது; இதுதான் தேவனுக்கு எதிரான மனிதனுடைய எதிர்ப்பிற்கும் கீழ்ப்படியாமைக்கும் பிறப்பிடமாகும். கிறிஸ்து அவருடைய மனிதத்தன்மை என்னும் மாறுவேடத்தைக் கொண்டிருக்கவில்லை மற்றும் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நாடாமல் இருந்து, மாறாக ஒரு மாபெரும் மேன்மையான மனிதத்தன்மையை மட்டுமே கொண்டவராக இருந்தால், பெரும்பாலும் மனிதர்களிடையே கீழ்ப்படியாமை இல்லாமல் இருந்திருக்கும். பரலோகத்தில் இருக்கும் அதரிசனமான ஒரு தேவனை மனிதன் எப்போதும் நம்புவதற்கான காரணம் என்னவென்றால், பரலோகத்தில் உள்ள தேவனுக்கு மனிதனுடைய தன்மையில்லை, அல்லது சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் ஒரு குணம் கூட அவரிடம் இல்லை என்பதேயாகும். ஆகவே, மனிதன் எப்போதும் அவரை மிகுந்த மரியாதையுடன் கனம் பொருந்தியவராகக் கருதுகிறான், ஆனால் அதேவேளையில் கிறிஸ்துவை அவமதிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறான்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 108
பூமியிலுள்ள கிறிஸ்து தேவனின் சார்பாகச் செயல்பட முடிந்தாலும், எல்லா மனிதர்களுக்கும் தம்முடைய உருவத்தை மாம்சத்தில் காண்பிக்கும் நோக்கத்துடன் அவர் வரவில்லை. எல்லா மனிதர்களும் அவரைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் வரவில்லை; தமது கையால் வழிநடத்த மனிதனை அனுமதிக்கவும், அதன் மூலம் மனிதன் புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவுமே அவர் வருகிறார். கிறிஸ்துவினுடைய மாம்சத்தின் செயல்பாடு தேவனுடைய கிரியைக்காகவே ஆகும், அதாவது மாம்சத்தில் செய்த தேவனுடைய கிரியையானது, மனிதன் தமது மாம்சத்தின் சாராம்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவவேண்டும் என்பதற்காக அல்ல. அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது முக்கியமல்ல, ஆனால் அவர் செய்யும் எதுவும் மாம்சத்தால் அடையக்கூடியதைத் தாண்டிச் செல்லாது. அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது முக்கியமல்ல, அவர் சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சத்தில் அவ்வாறு செய்கிறார், மேலும் தேவனுடைய மெய்யான முகத்தை மனிதனுக்கு முழுமையாக வெளிப்படுத்தவில்லை. மேலும், மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையானது ஒருபோதும் மனிதன் கருதுவது போல் இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்லது விவரிக்க முடியாதது அல்ல. கிறிஸ்து மாம்சத்தில் தேவனை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், தேவன் மட்டுமே செய்ய வேண்டிய வேலையை நேரில் செய்தாலும், அவர் தேவன் பரலோகத்தில் இருப்பதை மறுக்கவில்லை, மேலும் அவருடைய செயல்களை அவர் பரபரப்புடன் அறிவிக்கவுமில்லை. மாறாக, அவர் தம்முடைய மாம்சத்திற்குள் மறைந்து, தாழ்மையுடன் இருக்கிறார். கிறிஸ்துவைத் தவிர, கிறிஸ்து என்று பொய்யாகக் கூறுபவர்களுக்கு அவருடைய குணங்கள் இல்லை. அந்த பொய்யான கிறிஸ்துக்களின் திமிர்பிடித்த மற்றும் சுயத்தை மேன்மை பாராட்டும் மனநிலையை எதிர்த்துப் பேசும்போது, எந்த விதமான மாம்சம் உண்மையிலேயே கிறிஸ்துவினுடையது என்பது தெளிவாகிறது. அவர்கள் பொய்யானவர்கள், இதுபோன்ற கள்ளக்கிறிஸ்துக்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்துகிறார்கள், மேலும் மனிதனை ஏமாற்றுவதற்கான அடையாளங்கள் மற்றும் அதிசயங்களில் அவர்கள் அதிகத் திறமையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். கள்ளக்கிறிஸ்துக்களுக்கு தேவனுடைய குணங்கள் இல்லை; கள்ளக்கிறிஸ்துக்களுக்கு சொந்தமான எந்தவொரு அம்சத்தினாலும் கிறிஸ்து கறைபடுத்தப்படுவதில்லை. தேவன் மாம்சமாக மாறியது மாம்சத்தின் கிரியையை முடிப்பதற்காக மட்டுமேயாகும், வெறுமனே மனிதர்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பதற்காக அல்ல. மாறாக, அவர் தமது கிரியையை அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அனுமதிக்கிறார், மேலும் அவர் வெளிப்படுத்தியதைக் கொண்டு அவருடைய சாராம்சத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் அனுமதிக்கிறார். அவரது சாராம்சம் ஆதாரமற்றது அல்ல; அவரது அடையாளம் அவரது கையால் கைப்பற்றப்படவில்லை; அது அவருடைய கிரியை மற்றும் அவரது சாராம்சம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. அவர் தேவன் என்ற சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார் மற்றும் தேவனுடைய கிரியையைச் செய்ய வல்லவர் என்கிறபோதிலும், அவர் ஆவியானவரைப் போல இல்லாமல் மாம்சமாக இருக்கிறார். அவர் ஆவியானவருடைய குணங்களைக் கொண்ட தேவன் அல்ல; மாறாக அவர் மாம்சத் தோற்றம் கொண்ட தேவன். ஆகையால், அவர் எவ்வளவு சாதாரணமானவர், மற்றும் எவ்வளவு பலவீனமானவர் என்றாலும், பிதாவாகிய தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு எவ்வளவு முயன்றாலும், அவருடைய தெய்வீகத்தன்மையானது மறுக்க முடியாதது ஆகும். தேவன் மாம்சத்தில் வந்த அவதாரத்திற்குள் ஒரு சாதாரண மனிதத்தன்மையும் அதன் பலவீனங்களும் மட்டுமல்ல; அவருடைய தெய்வீகத் தன்மையின் அற்புதமும் புரிந்துகொள்ள முடியாத தன்மையும், மாம்சத்தில் அவர் செய்த எல்லாச் செயல்களும் அடங்கியுள்ளன. ஆகையால், மனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டும் கிறிஸ்துவுக்குள் உண்மையிலும் நடைமுறையிலும் உள்ளன. இது குறைந்தபட்சம் வெறுமையானதோ அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றோ அல்ல. கிரியையைச் செய்வதற்கான முதன்மை நோக்கத்துடன் அவர் பூமிக்கு வருகிறார்; பூமியில் கிரியைகளைச் செய்வதற்கு ஒரு சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருப்பது கட்டாயமாகும்; இல்லையெனில், அவருடைய தெய்வீகத்தன்மையின் வல்லமை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதன் மெய்யான செயல்பாட்டை நல்ல பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. அவருடைய மனிதத்தன்மையானது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அது அவருடைய சாராம்சம் அல்ல. அவருடைய சாராம்சம் தெய்வீகத்தன்மை மட்டுமேயாகும்; ஆகையால், அவர் பூமியில் தனது ஊழியத்தைச் செய்யத் தொடங்கும் அந்தத் தருணம், அவர் தனது தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தத் தொடங்கும் தருணம் ஆகும். அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய மாம்சத்தின் இயல்பான வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே உள்ளது, இதனால் அவருடைய தெய்வீகத் தன்மையானது மாம்சத்தில் இயல்பாகவே கிரியையைச் செய்ய இயலும்; அவருடைய கிரியையை முழுவதுமாக வழிநடத்துவது அவரது தெய்வீகத்தன்மையே ஆகும். அவர் தமது கிரியையை நிறைவு செய்யும்போது, அவர் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றியிருப்பார். மனிதன் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், அவருடைய கிரியையின் முழுமையும் ஆகும், மேலும் அவரது கிரியையின் மூலம் மட்டும்தான் அவரை அறிந்துகொள்ள அவர் மனிதனுக்கு உதவுகிறார். அவருடைய கிரியையின் போது, அவர் தமது தெய்வீகத்தன்மையை முழுமையாக வெளிப்படுத்துகிறார், இது மனிதகுலத்தால் கறைப்படுத்தப்பட்ட ஒரு மனநிலையோ அல்லது சிந்தனையாலும் மனித நடத்தையாலும் கறைப்படுத்தப்பட்டது அல்ல. அவருடைய ஊழியங்கள் அனைத்தும் முடிவுறும் நேரம் வரும்போது, அவர் வெளிப்படுத்த வேண்டிய மனநிலையை அவர் ஏற்கெனவே பரிபூரணமாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்தியிருப்பார். அவரது கிரியையானது எந்த மனிதனுடைய அறிவுறுத்தல்களாலும் வழிநடத்தப்படுவதில்லை; அவரது மனநிலையின் வெளிப்பாடும் மிகவும் தன்னிச்சையானது, மேலும் அது மனதால் கட்டுப்படுத்தப் படுவதில்லை அல்லது சிந்தனையால் செயலாக்கப் படுவதில்லை, ஆனால் அது இயற்கையாகவே வெளிப்படுகிறது. இது எந்த மனிதனும் சாதிக்க முடியாத ஒன்று. சுற்றுச்சூழல்கள் கடுமையானதாக இருந்தாலும் அல்லது நிலைமைகள் சாதகமற்றதாக இருந்தாலும், அவரால் தகுந்த நேரத்தில் தமது மனநிலையை வெளிப்படுத்த முடியும். கிறிஸ்துவாக இருக்கும் ஒருவர் கிறிஸ்துவின் பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறார், அதே சமயம் கிறிஸ்துவாக இல்லாதவர்கள் கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டிருப்பதில்லை. ஆகையால், அனைவரும் அவரை எதிர்த்தாலும் அல்லது அவரைப் பற்றிய எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் கூட, கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்படும் மனநிலையானது தேவனுடையது என்பதை மனிதனுடைய கருத்துகளின் அடிப்படையில் யாரும் மறுக்க முடியாது. உண்மையான இருதயத்தோடு கிறிஸ்துவைப் பின்தொடர்பவர்கள் அல்லது தேவனை உள்நோக்கத்துடன் தேடுபவர்கள் அனைவரும் அவருடைய தெய்வீகத்தன்மையினுடைய வெளிப்பாட்டின் அடிப்படையில் அவர் கிறிஸ்து என்பதை ஒப்புக்கொள்வார்கள். மனிதனின் கருத்துக்களுக்கு இணங்காத எந்தவொரு அம்சத்தின் அடிப்படையிலும் அவர்கள் ஒருபோதும் கிறிஸ்துவை மறுக்க மாட்டார்கள். மனிதன் மிகவும் மதி கெட்டவன் என்றாலும், மனிதனின் விருப்பம் என்ன, தேவனிடமிருந்து தோன்றியது எது என்பது அனைவருக்கும் மிகச் சரியாகத் தெரியும். பலர் தங்கள் நோக்கங்களின் விளைவாக வேண்டுமென்றே கிறிஸ்துவை எதிர்க்கிறார்கள். இதற்காக இல்லையென்றால், கிறிஸ்துவின் பிரசன்னத்தை மறுக்க ஒரு மனிதனுக்கும் ஒரு காரணம் கூட இருக்காது, ஏனென்றால் கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட தெய்வீகத்தன்மை உண்மையில் இருக்கிறது, அவருடைய கிரியையை வெறும் கண்களால் வெளியரங்கமாக அனைவராலும் காண முடியும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 109
கிறிஸ்துவின் கிரியையும் வெளிப்பாடும் அவருடைய சாராம்சத்தைத் தீர்மானிக்கிறது. அவரிடம் ஒப்படைக்கப்பட்டதை அவர் உண்மையான இருதயத்தோடு செய்துமுடிக்க முடிகிறது. அவரால் உண்மையான இருதயத்தோடு பரலோகத்தில் உள்ள தேவனை தொழுதுகொள்ள முடிகிறது, உண்மையான இருதயத்தோடு பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நாட முடிகிறது. இவை அனைத்தும் அவருடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. அப்படியே அவருடைய இயல்பான வெளிப்பாடும் அவருடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது; இதை நான் அவருடைய “இயற்கையான வெளிப்பாடு” என்று அழைப்பதற்கான காரணம், அவருடைய வெளிப்பாடு பார்த்துப் பின்பற்றக்கூடிய ஒன்று அல்ல, அல்லது மனிதனுடைய படிப்பறிவின் விளைவோ அல்லது மனிதனால் பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்த உழைப்பின் விளைவோ இல்லை. அவர் அதைக் கற்றுக்கொள்ளவுமில்லை அல்லது தம்மை அவ்வாறாக அலங்கரிக்கவுமில்லை; மாறாக, அது அவருக்குள் இயல்பாகவே இருக்கிறது. மனிதன் அவருடைய கிரியையையும், அவரது வெளிப்பாட்டையும், அவரது மனிதத்தன்மையையும், அவரது சாதாரண மனிதத்தன்மையின் முழு வாழ்க்கையையும் மறுக்கக்கூடும், ஆனால் அவர் உண்மையான இருதயத்தோடு பரலோகத்தில் உள்ள தேவனை தொழுதுகொள்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது; பரமபிதாவின் சித்தத்தை நிறைவேற்றவே அவர் வந்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது, மேலும் அவர் பிதாவாகிய தேவனைத் தேடும் நேர்மையையும் யாரும் மறுக்க முடியாது. அவருடைய உருவம் புலன்களுக்குப் பிரியமானதாக இல்லை என்றாலும், அவருடைய கலந்துரையாடல் ஒரு அசாதாரணமான காற்றைக் கொண்டிருக்கவில்லை, மற்றும் அவரது வேலை பூமியைத் தகர்ப்பதோ அல்லது மனிதன் கற்பனை செய்வது போல வானத்தை உலுக்குவதோ இல்லை, அவர் உண்மையில் பரமபிதாவிற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரது மரணம் வரை கீழ்ப்படிந்தவராகி பரமபிதாவின் சித்தத்தை உண்மையான இருதயத்துடன் நிறைவேற்றுகிற கிறிஸ்துவாக இருக்கிறார். ஏனென்றால், அவருடைய சாராம்சம் கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது. இந்த உண்மையை நம்புவது மனிதனுக்கு கடினமாக இருக்கிறது, ஆனால் இது ஒரு உண்மை. கிறிஸ்துவின் ஊழியம் முழுமையாக நிறைவேறியதும், மனிதன் அவருடைய கிரியையின் மூலம் அவருடைய மனநிலையும் அவருடைய பிரசன்னமும் மற்றும் பரலோகத்தில் உள்ள தேவனுடைய மனநிலையையும் பிரசன்னத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் கண்டுகொள்ள முடியும். அந்த நேரத்தில், அவருடைய எல்லா கிரியைகளின் சுருக்கமும், அவர் மெய்யாகவே வார்த்தையானது மாம்சமாக மாறியதுதான் என்பதை உறுதிப்படுத்த முடியும், ஆனால் அது மனிதனுக்குள்ள ஒரு மாம்சமும் இரத்தமும் அல்ல. பூமியில் கிறிஸ்துவினுடைய கிரியையின் ஒவ்வொரு படியிலும் அதன் பிரதிநிதித்துவ முக்கியத்துவம் உள்ளது, ஆனால் ஒவ்வொரு படியின் உண்மையான கிரியையை அனுபவிக்கும் மனிதனுக்கு அவருடைய கிரியையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. விசேஷமாக, தேவன் தமது இரண்டாவது அவதாரத்தில் மேற்கொண்ட பல கிரியைகளாய் இருக்கிறது. கிறிஸ்துவின் வார்த்தைகளை மட்டுமே கேட்டவர்களில் அல்லது பார்த்தவர்களில் பெரும்பாலோர் அவரைப் பார்த்ததில்லை, அவருடைய கிரியையைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை; கிறிஸ்துவைக் கண்டவர்கள், அவருடைய வார்த்தைகளைக் கேட்டவர்கள், மற்றும் அவருடைய கிரியையை அனுபவித்தவர்களுக்கு, அவருடைய கிரியையை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது. இது கிறிஸ்துவின் தோற்றமும் அவரது இயல்பான மனிதத்தன்மையும் மனிதனின் சுவைக்கு பொருந்தாததினால் தான் அல்லவா? கிறிஸ்து போன பிறகு அவருடைய கிரியையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு அத்தகையச் சிரமங்கள் இருக்காது, ஏனென்றால் அவர்கள் அவருடைய கிரியையை ஏற்றுக்கொள்கிறார்கள், கிறிஸ்துவினுடைய இயல்பான மனிதத்தன்மையுடன் ஐக்கியப்படுவதில்லை. மனிதன் தேவனைப் பற்றிய தனது கருத்துக்களை கைவிட முடியாதவனாக இருக்கிறான், அதற்குப் பதிலாக அவனை இன்னும் தீவிரமாக ஆராய்கிறான்; மனிதன் அவரது தோற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறான் என்பதும், அவருடைய கிரியை மற்றும் வார்த்தைகளின் அடிப்படையில் அவரது சாராம்சத்தை அடையாளம் காண முடியவில்லை என்பதும் தான் இதற்குக் காரணம். கிறிஸ்துவின் தோற்றத்திற்கு மனிதன் தன் கண்களை மூடிக்கொண்டால் அல்லது கிறிஸ்துவின் மனிதத்தன்மையைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து, அவரது தெய்வீகத்தன்மையைப் பற்றி மட்டுமே பேசுகிறான் என்றால், அவருடைய கிரியையும் வார்த்தைகளும் எந்த மனிதனுக்கும் கிடைக்கவில்லை என்றால், மனிதனின் கருத்துக்கள் பாதியாகக் குறையும், மேலும் அந்த அளவிற்கு மனிதனின் அனைத்து சிரமங்களும் கூட தீர்க்கப்படும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 110
தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால, அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், அந்த மனுஷன் மூடனாகவும் அறியாமையிலிருப்பதையும் காட்டுகிறது. வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டு சாராம்சத்தைத் தீர்மானிக்க முடியாது; மேலும், தேவனின் கிரியை ஒருபோதும் மனுஷனின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது. இயேசுவின் வெளிப்புறத் தோற்றம் மனுஷனின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கவில்லையா? அவருடைய உண்மையான அடையாளத்தைப் பற்றி எந்த தடயங்களையும் வழங்க அவரது முகம் மற்றும் உடைக்கு முடியவில்லை, இல்லையா? ஆரம்பக்கால பரிசேயர்கள் வெறுமனே இயேசுவின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பார்த்து, அவருடைய வாயில் உள்ள வார்த்தைகளை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளாமல் அவரை எதிர்க்கவில்லையா? தேவன் தோன்றுவதை எதிர்பார்க்கும் ஒவ்வொரு சகோதர சகோதரியும் இந்த வரலாற்றுச் சோகத்தை மீண்டும் நிகழ்த்த மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை. நீங்கள் நவீன காலத்தின் பரிசேயர்களாக மாறி, தேவனை மீண்டும் சிலுவையில் அறையக் கூடாது. தேவனின் வருகையை எவ்வாறு வரவேற்பது என்பதை நீங்கள் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்திற்குக் கீழ்ப்படியும் ஒருவராக எப்படி இருக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு தெளிவான மனம் இருக்க வேண்டும். இயேசு ஒரு மேகத்தின் மீது வருவார் என்று காத்திருக்கும் அனைவரின் பொறுப்பும் இதுதான். நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் தெளிவுபடுத்துவதற்காகவே நாம் அவற்றைத் தேய்க்க வேண்டும், மிகைப்படுத்தப்பட்ட கற்பனையின் வார்த்தைகளில் நாம் மூழ்கிவிடக்கூடாது. தேவனின் நடைமுறையான கிரியைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், மேலும் தேவனின் நடைமுறையான அம்சத்தைப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தின் மீது வந்து, திடீரென்று உங்களிடையே இறங்கி, அவரை ஒருபோதும் அறியாத அல்லது பார்த்திராத மற்றும் அவருடைய சித்தத்தைச் செயல்படுத்தத் தெரியாத உங்களை அழைத்துச் செல்வார் என்பது போன்ற பகல் கனவுகளில் அந்த நாளுக்காக ஏங்கி உங்களை நீங்களே இழக்க வேண்டாம். மேலும் நடைமுறையான விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது நல்லது!
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 111
மாம்சமாகிய தேவன், தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்யும்போது அவரைப் பின்தொடரும் ஜனங்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே அவர் தம்மை வெளிப்படுத்துகிறார், சகல ஜீவன்களுக்கும் தம்மை வெளிப்படுத்துவதில்லை. அவர் தமது கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவு செய்வதற்காக மட்டுமே மாம்சமாக மாறினார், மனுஷனிடம் தம்முடைய உருவத்தைக் காண்பிப்பதற்காக மாறவில்லை. இருப்பினும், அவருடைய கிரியையை அவரே செய்ய வேண்டும், ஆகவே அவர் மாம்சத்தில் அவ்வாறு செய்வது அவசியமாகும். இந்தக் கிரியை நிறைவடைந்ததும், அவர் மனுஷ உலகத்திலிருந்துப் புறப்பட்டுச் செல்வார்; வரவிருக்கும் கிரியையின் வழியில் குறுக்கே நின்றிடுவோம் என்ற பயத்தால் அவர் மனுஷரிடையே நீண்ட காலம் தங்கியிருக்க மாட்டார். அவருடைய நீதியுள்ள மனநிலையையும், அவருடைய எல்லா கிரியைகளையும் மட்டுமே பெருந்திரளான ஜனங்களுக்கு அவர் வெளிப்படுத்துகிறார்; அவர் இரண்டு முறை மாம்சமாக வந்தபோது இருந்த உருவங்களை வெளிப்படுத்துவதில்லை, ஏனென்றால் தேவனின் உருவத்தை அவருடைய மனநிலையால் மட்டுமே காட்ட முடியும், அதை அவருடைய மாம்சமாகிய உருவத்தால் மாற்ற முடியாது. அவருடைய மாம்சத்தின் உருவம், அவர் மாம்சத்தில் செயல்படுவதால் அவரைப் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜனங்களுக்கு மட்டுமே காட்டப்படுகிறது. இதனால்தான் இப்போது மேற்கொள்ளப்படும் கிரியைகள் இரகசியமாகச் செய்யப்படுகின்றன. அதேபோல், இயேசு தம்முடைய கிரியையைச் செய்தபோது அவர் யூதர்களுக்கு மட்டுமே தம்மை காட்டிக் கொண்டார், வேறு எந்த நாட்டிற்கும் பகிரங்கமாகத் தம்மைக் காட்டவில்லை. இவ்வாறு, அவர் தமது கிரியையை முடித்தவுடன், இங்கேயே தங்கிவிடாமல் உடனடியாக மனுஷ உலகத்திலிருந்துப் புறப்பட்டுச் சென்றார்; அதன் பின்னர், மனுஷனுக்குத் தம்மைக் காட்டிய இந்த மனுஷ உருவம் அவரல்ல, மாறாக, பரிசுத்த ஆவியானவரே நேரடியாகக் கிரியை செய்தார். மாம்சமாகிய தேவனின் கிரியை முற்றிலும் நிறைவடைந்தவுடன், அவர் மரணத்திற்குரிய உலகத்திலிருந்து புறப்பட்டுச் செல்வார், மேலும் அவர் மாம்சத்தில் இருந்தபோது அவர் செய்ததைப் போன்ற எந்த கிரியையையும் மீண்டும் ஒருபோதும் செய்ய மாட்டார். இதற்குப் பிறகு, கிரியைகள் அனைத்தும் நேரடியாகப் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில், மனுஷனால் தேவனின் மாம்ச சரீரத்தின் உருவத்தைக் காண முடியாது; அவர் மனுஷனுக்குத் தம்மைக் காட்டிக் கொள்ளாமல், ஆனால் என்றென்றும் மறைந்திருக்கிறார். மாம்சமாகிய தேவனின் கிரியைக்கான நேரம் குறைவாகவே உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட யுகம், காலம், தேசம் மற்றும் குறிப்பிட்ட நபர்களிடையே மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கிரியை தேவன் மாம்சமாகிய காலகட்டத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் இது ஒரு யுகத்தின் பிரதிநிதித்துவமாக இருக்கிறது; இது ஒரு குறிப்பிட்ட யுகத்திற்கான தேவ ஆவியானவரின் கிரியையை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அவருடைய முழு கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆகையால், மாம்சமாகிய தேவனின் உருவம் சகல ஜனங்களுக்கும் காட்டப்படாது. அவர் இரண்டு முறை மாம்சத்தில் வந்தபோது இருந்த அவருடைய உருவத்தை விட, தேவனின் நீதியும், அவருடைய மனநிலையுமே முழுவதுமாகப் பெருந்திரளான ஜனங்களுக்குக் காட்டப்படுகிறது. இது மனுஷனுக்குக் காட்டப்படும் ஒரே ஓர் உருவமோ, இரண்டு உருவங்கள் இணைக்கப்பட்ட ஓர் உருவமோ இல்லை. ஆகையால், மாம்சமாகிய தேவனின் மாம்சம், அவர் செய்ய வேண்டிய கிரியையை முடித்தவுடன் பூமியை விட்டுப் புறப்பட்டுச் செல்ல வேண்டியது அவசியமானதாகும், ஏனென்றால் அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே அவர் வருகிறார், அவருடைய உருவத்தை ஜனங்களுக்கு காட்ட வரவில்லை. மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் தேவன் இரண்டு முறை மாம்சமாகியபோது நிறைவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை ஒருபோதும் பார்த்திராத எந்தவொரு தேசத்திற்கும் அவர் வெளிப்படையாக தம்மை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். இயேசு மீண்டும் ஒருபோதும் யூதர்களுக்குத் தம்மை நீதியின் சூரியனாகக் காட்டிக்கொள்ள மாட்டார், ஒலிவ மலை உச்சியில் நின்று சகல ஜனங்களுக்கும் தோன்றமாட்டார்; இயேசு யூதேயாவில் இருந்தபோது இருந்த தோற்றத்தின் உருவப்படத்தைதான் சகல யூதர்களும் கண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இயேசு மாம்சமாகிய காலத்தில் அவர் செய்த கிரியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முடிந்தது; அவர் ஒரு யூதரின் சாயலில் யூதேயாவுக்குத் திரும்ப மாட்டார், எந்தவொரு புறஜாதி தேசங்களுக்கும் ஒரு யூதரின் உருவத்தில் தன்னைக் காட்டிக் கொள்ள மாட்டார், ஏனென்றால் மாம்சமாகிய இயேசுவின் உருவம் என்பது வெறும் யூதரின் உருவம்தான், யோவான் கண்ட மனுஷகுமாரனின் உருவம் அல்ல. தாம் மீண்டும் வருவேன் என்று இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தாலும், புறஜாதி தேசங்களில் உள்ள அனைவருக்கும் வெறுமனே தம்மை யூதரின் சாயலில் காட்டமாட்டார். மாம்சமாகிய தேவனின் கிரியை ஒரு யுகத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிரியை சில ஆண்டுகளுக்கென வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் தேவ ஆவியின் எல்லா கிரியைகளையும் அவரால் முடிக்க முடியாது. யூதராக இயேசுவின் உருவமானது யூதேயாவில் அவர் கிரியை செய்த தேவனின் உருவத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் அவரால் சிலுவையில் அறையப்படும் கிரியையை மட்டுமே செய்ய முடியும். இயேசு மாம்சத்தில் இருந்த காலகட்டத்தில், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அல்லது மனுஷகுலத்தை அழிக்கும் கிரியையை அவரால் செய்ய முடியவில்லை. ஆகையால், அவர் சிலுவையில் அறையப்பட்டு, அவருடைய கிரியையை முடித்தபின், அவர் மிகவும் உயர்ந்த இடத்தின் மீது ஏறி, மனுஷனிடமிருந்து தம்மை எப்போதும் மறைத்துக்கொண்டார். அப்போதிருந்து, புறஜாதி தேசங்களைச் சேர்ந்த உண்மையுள்ள விசுவாசிகள் இயேசுவாகிய கர்த்தரின் வெளிப்பாட்டைக் காண முடியவில்லை, ஆனால் சுவரில் ஒட்டப்பட்டிருந்த உருவப்படத்தை மட்டுமே அவர்கள் கண்டனர். இந்த உருவப்படம் மனுஷனால் வரையப்பட்ட ஒன்றாகும், ஆனால் தேவன் மனுஷனுக்குத் தம்மைக் காட்டிய உருவம் அல்ல. தேவன் இரண்டு முறை மாம்சத்தில் வந்தபோது இருந்த உருவத்திலேயே பெருந்திரளான ஜனங்களுக்குத் தன்னை வெளிப்படையாகக் காட்டவில்லை. மனுஷரிடையே அவர் செய்யும் கிரியை, அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ள அவர்களை அனுமதிக்கிறது. இவை அனைத்தும் வெவ்வேறு யுகங்களின் கிரியைகள் மூலம் மனுஷனுக்குக் காட்டப்படுகின்றன; இயேசுவின் வெளிப்பாட்டின் மூலம் அல்லாமல், அவர் அறிந்த மனநிலை மற்றும் அவர் செய்த கிரியையின் மூலமே அது நிறைவேற்றப்படுகிறது. அதாவது, தேவனின் உருவம் மனுஷனுக்குத் தெரியவருவது மாம்சமாவதன் மூலம் அல்ல, மாறாக உருவமும் வடிவமும் கொண்ட மாம்சமாகிய தேவனால் மேற்கொள்ளப்படும் கிரியையின் மூலமாகவே மனுஷனுக்குத் தெரியவருகிறது; அவருடைய கிரியையின் மூலம், அவருடைய உருவம் காட்டப்பட்டு, அவருடைய மனநிலை அறியப்படுகிறது. அவர் மாம்சத்தில் செய்ய விரும்பும் கிரியையின் முக்கியத்துவம் இதுதான்.
தேவனுடைய இரண்டு மாம்சத் தோற்றங்களின் கிரியைகளும் முடிவடைந்தவுடன், அவர் அவிசுவாசிகளின் தேசங்கள் முழுவதும் தம்முடைய நீதியுள்ள மனநிலையைக் காட்டத் தொடங்குவார், மேலும் அவருடைய உருவத்தைக் காணப் பெருந்திரளான ஜனங்களை அவர் அனுமதிப்பார். அவர் தமது மனநிலையை வெளிப்படுத்துவார், மேலும் மனுஷனுடைய வெவ்வேறு வகைகளின் முடிவுகளையும் தெளிவுபடுத்துவார், இதன் மூலம் பழைய யுகத்தை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவருவார். மாம்சத்தில் அவர் செய்த கிரியை பெரியளவிற்கு விரிவடையாததன் காரணம் (இயேசு யூதேயாவில் மட்டுமே கிரியை செய்தது போல, இன்று நான் உங்களிடையே மட்டுமே கிரியை செய்கிறேன்) ஏனெனில், மாம்சத்தில் அவர் செய்த கிரியைக்கு எல்லைகளும் வரம்புகளும் உள்ளன. அவர் வெறுமனே ஒரு சாதாரண மற்றும் இயல்பான மாம்சத்தின் உருவத்தில் ஒரு குறுகிய காலக் கிரியையைச் செய்கிறார்; அவர் இந்த மாம்சத்தை நித்திய கிரியையையோ அல்லது அவிசுவாசிகளுடைய தேசங்களின் ஜனங்களுக்குத் தோன்றும் கிரியையையோ செய்யப் பயன்படுத்துவதில்லை. மாம்சத்தில் செய்த கிரியைகள் வரம்புக்குட்பட்டதாக (யூதேயாவில் மட்டுமே கிரியை செய்வது அல்லது உங்களிடையே மட்டுமே கிரியை செய்வது போல) மட்டுமே இருக்க முடியும், பின்னர், இந்த எல்லைகளுக்குள் மேற்கொள்ளப்படும் கிரியைகளின் மூலம், அதன் எல்லை விரிவாக்கப்படலாம். நிச்சயமாக, விரிவாக்கத்தின் கிரியை அவருடைய ஆவியால் நேரடியாக மேற்கொள்ளப்பட வேண்டும், அது இனியும் அவருடைய மாம்சத்தின் கிரியையாக இருக்காது. மாம்சத்தில் செய்த கிரியைக்கு எல்லைகள் உள்ளன, மேலும் இது பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளிலும் விரிவடையாது—இதை நிறைவேற்ற முடியாது. மாம்சத்தில் செய்த கிரியையின் மூலம், அவருடைய ஆவியானவர் அதற்குப் பின்வரும் கிரியையைச் செய்கிறார். ஆகையால், மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது குறிப்பிட்ட எல்லைகளுக்குள் மேற்கொள்ளப்படும் துவக்கக் கிரியை ஆகும்; இதற்குப் பிறகு, அவருடைய ஆவியானவர் இந்தக் கிரியையைத் தொடர்கிறார், மேலும் அவர் இதனை ஒரு விரிவாக்கப்பட்ட எல்லையில் மேற்கொள்கிறார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (2)” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 112
யுகத்தை வழிநடத்துவதற்காக மட்டுமே தேவன் பூமியில் கிரியை செய்ய வருகிறார், ஒரு புதிய யுகத்தை ஆரம்பிப்பது, பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை மட்டுமே அவரது நோக்கமாகும். அவர் பூமியில் ஒரு மனுஷனின் ஜீவிதத்தை ஜீவிக்கவோ, மனுஷ உலக ஜீவிதத்தின் சந்தோஷங்களையும் துயரங்களையும் அனுபவிக்கவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை தமது கையால் பரிபூரணப்படுத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் வளர்வதைத் தனிப்பட்ட முறையில் பார்க்கவோ வரவில்லை. இது அவருடைய கிரியை அல்ல; அவரது கிரியை புதிய யுகத்தைத் தொடங்குவதும் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதும் மட்டுமே ஆகும். அதாவது, அவர் நேரடியாக ஒரு யுகத்தைத் தொடங்குவார், நேரடியாக மற்றொன்றை முடிவுக்குக் கொண்டுவருவார், மேலும் தமது கிரியையைச் செய்வதன் மூலம் அவர் நேரடியாகச் சாத்தானை தோற்கடிப்பார். ஒவ்வொரு முறையும் அவர் தமது கிரியையை நேரடியாகச் செய்யும்போது, அது அவர் யுத்தக்களத்தில் கால் வைப்பது போலாகும். முதலாவதாக, மாம்சத்தில் இருக்கும்போதே அவர் உலகை ஜெயங்கொண்டு, சாத்தானை விட மேலோங்கி நிற்கிறார்; அவர் எல்லா மகிமையையும் கைப்பற்றி, இரண்டாயிரம் ஆண்டுகாலக் கிரியையின் முழுமை மீது திரைச்சீலையை எழுப்புகிறார், இது பூமியிலுள்ள அனைவருக்கும் நடந்து செல்லச் சரியானப் பாதையை அமைக்கவும், அமைதி மற்றும் மகிழ்ச்சியான ஜீவிதத்தை ஜீவித்திருக்கவும் உதவுகிறது. இருப்பினும், தேவன் பூமியில் மனுஷனுடன் நீண்ட காலம் ஜீவித்திருக்க முடியாது, ஏனென்றால் தேவன் என்பவர் மனுஷன் அல்ல, தேவன். அவரால் ஒரு சாதாரண மனுஷனின் வாழ்நாளில் ஜீவித்திருக்க முடியாது, அதாவது சாதாரணமானதிலிருந்து வந்த ஒன்றுமில்லாத ஒரு நபராக அவரால் பூமியில் இருந்திருக்க முடியாது, ஏனென்றால் ஒரு சாதாரண மனுஷனின் சாதாரண மனுஷத் தன்மையின் குறைந்தபட்சப் பகுதியை மட்டுமே அவர் தமது மனுஷ ஜீவிதத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனால் எப்படிப் பூமியில் ஒரு குடும்பத்தைத் தொடங்கி, ஒரு தொழில் செய்து, குழந்தைகளை வளர்க்க முடியும்? இது அவருக்கு அவமானமாக இருக்காதா? அவர் சாதாரண மனுஷத் தன்மையுடன் இருக்கிறார் என்பது ஒரு சாதாரண முறையில் கிரியை செய்வதற்கான நோக்கத்திற்காக மட்டும்தான், ஒரு சாதாரண மனுஷனைப் போல ஒரு குடும்பத்தையும் தொழிலையும் பெறுவதற்காக இல்லை. அவருக்கு ஒரு சாதாரண மனுஷத்தன்மை தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க அவருடைய இயல்பான உணர்வும், சாதாரணமான மனமும், அவரது மாம்சத்தின் சாதாரண புசிக்கும் மற்றும் உடை உடுத்தும் தன்மையும் போதுமானது; அவர் ஒரு சாதாரண மனுஷத் தன்மையுடன்தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்க அவருக்கு ஒரு குடும்பமோ அல்லது ஒரு தொழிலோ இருக்க வேண்டிய அவசியமில்லை. இது முற்றிலும் தேவையற்றதாக இருக்கும்! தேவன் பூமிக்கு வருவது தான் மாம்சமாகிய வார்த்தை என்பது; அவர் வெறுமனே மனுஷனை அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் அவருடைய வார்த்தையைக் காணவும் அனுமதிக்கிறார், அதாவது, மாம்சத்தால் செய்யப்படும் கிரியையைப் பார்க்க மனுஷனை அனுமதிக்கிறார். அவருடைய நோக்கம் ஜனங்கள் அவருடைய மாம்சத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் நடத்த வேண்டும் என்பதல்ல, ஆனால் மனுஷன் கடைசிவரை கீழ்ப்படிய வேண்டும் என்பதாகவே இருக்கிறது, அதாவது, மனுஷன் அவரது வாயிலிருந்து வெளிவரும் எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவதும், அவர் செய்யும் எல்லா கிரியைகளுக்கும் கீழ்ப்படிவதும் மட்டுமே அவரது நோக்கமாக இருக்கிறது. அவர் வெறுமனே மாம்சத்தில் கிரியை செய்கிறார்; அவர் வேண்டுமென்றே மனுஷனைத் தமது மாம்சத்தின் மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும் உயர்த்தும்படிக் கேட்கவில்லை, மாறாக மனுஷனுக்கு அவருடைய கிரியையின் ஞானத்தையும் அவர் பயன்படுத்தும் அனைத்து அதிகாரத்தையும் காட்டுகிறார். ஆகையால், அவர் ஒரு சிறந்த மனுஷத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அவர் எந்த அறிவிப்புகளையும் வெளியிடுவதில்லை, மேலும் அவர் செய்ய வேண்டிய கிரியையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தேவன் மாம்சத்தில் வந்தும், அவருடைய சாதாரண மனுஷத்தன்மையை விளம்பரப்படுத்தவோ அல்லது சாட்சிக் கொடுக்கவோ செய்யாமல், வெறுமனே தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால், மாம்சமாகிய தேவனிடம் நீங்கள் காணக்கூடிய அனைத்தும் அவர் தெய்வீகமாக இருக்கிறார் என்பது மட்டுமேதான்; ஏனென்றால், மனுஷன் பின்பற்றுவதற்காக அவர் மனுஷனாக இருப்பதை அவர் ஒருபோதும் அறிவிக்க மாட்டார். மனுஷன் ஜனங்களை வழிநடத்தும்போதுதான், அவன் தனது மனுஷத்தன்மையைப் பற்றி பேசுகிறான். அவர்களுடைய போற்றுதலையும் நம்பிக்கையையும் பெற்று அதன் மூலம் மற்றவர்களைத் தலைமை தாங்குவதுதான் நல்லது. இதற்கு நேர்மாறாக, தேவன் தமது கிரியையின் மூலம் மட்டுமே மனுஷனை ஜெயங்கொள்கிறார் (அதாவது, மனுஷனால் அடைய முடியாத கிரியையை); அவர் மனுஷனால் போற்றப்படுவாரா அல்லது மனுஷனை வணங்க வைப்பாரா என்பது முக்கியமில்லை. அவர் செய்வதெல்லாம் மனுஷனுக்குள் அவரைப் பற்றிய பயபக்தியான உணர்வைச் செலுத்துவதோ அல்லது அவரைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாத தன்மையை உணர்த்துவதோ மட்டுமே ஆகும். தேவனுக்கு மனுஷனைக் கவர வேண்டிய அவசியமில்லை; அவருடைய மனநிலையை நீ சாட்சி கூறியவுடன் நீ அவருக்குப் பயபக்தியாயிருக்கவேண்டும் என்பதே அவருக்குத் தேவை. தேவன் செய்யும் கிரியை அவருடையது; அதை அவருக்குப் பதிலாக மனுஷனால் செய்ய முடியாது, அதை மனுஷனால் அடையவும் முடியாது. தேவனால் மட்டுமே அவரது சொந்தக் கிரியையைச் செய்ய முடியும், மேலும் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கி மனுஷனைப் புதிய ஜீவிதங்களுக்கு அழைத்துச் செல்லவும் முடியும். அவர் செய்யும் கிரியை, ஒரு புதிய ஜீவிதத்தை மனுஷனுக்குள் கொண்டு வந்து, அவனை ஒரு புதிய யுகத்திற்குள் நுழையவைக்க உதவுகிறது. மீதமுள்ள கிரியைகள் மற்றவர்களால் போற்றப்படும் சாதாரண மனுஷத்தன்மை உள்ளவர்களுக்கு ஒப்படைக்கப்படுகின்றன. ஆகையால், கிருபையின் யுகத்தில், மாம்சத்தில் அவர் ஜீவித்திருந்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் தமது இரண்டாயிரம் ஆண்டுகாலக்கிரியையை வெறும் மூன்றரை ஆண்டுகளில் முடித்தார். தேவன் தமது கிரியையைச் செய்ய பூமிக்கு வரும்போது, இரண்டாயிரம் ஆண்டுகால அல்லது ஒரு முழு யுகத்தின் கிரியையை எப்போதும் ஒரு சில ஆண்டுகளுக்குள் முடிக்கிறார். அவர் காத்திருப்பதில்லை, அவர் தாமதிப்பதும் இல்லை; அவர் வெறுமனே பல ஆண்டுகளின் கிரியையைச் சுருக்குகிறார், இதனால் அந்தக் கிரியை ஒரு சில குறுகிய ஆண்டுகளில் முடிக்கப்படுகிறது. ஏனென்றால், அவர் நேரடியாகச் செய்யும் கிரியை, ஒரு புதிய பாதையைத் திறந்து ஒரு புதிய யுகத்தை வழிநடத்துவதற்காக மட்டுமே செய்யப்படுகிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (2)” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 113
தேவன் தம்முடைய கிரியையைச் செய்யும்போது, அவர் எதையும் கட்டியெழுப்புவதற்கோ அல்லது இயக்கங்களை உருவாக்குவதற்கோ இங்கு வருவதில்லை, மாறாக அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்காகவே வருகிறார். ஒவ்வொரு முறையும் கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவேற்றுவதற்கும், புதிய யுகத்தைத் தொடங்குவதற்கும் மட்டுமே மாம்சமாகிறார். ராஜ்யத்தின் பயிற்சியைப் போலவே இப்போது ராஜ்யத்தின் யுகமும் வந்துள்ளது. கிரியையின் இந்தக் கட்டம் மனுஷனின் கிரியை அல்ல, இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மனுஷனை கிரியை செய்ய வைக்கும் கட்டமும் அல்ல, ஆனால் தேவனுடைய கிரியையின் ஒரு பகுதியை நிறைவு செய்வதற்கானக் கட்டம் ஆகும். அவர் செய்வது மனுஷனின் கிரியை அல்ல, பூமியை விட்டுப் புறப்படும் முன் மனுஷனுள் செய்யும் கிரியையில் ஒரு குறிப்பிட்ட முடிவை எட்டுவதற்காகவும் அல்ல; அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதும், அவர் செய்ய வேண்டிய கிரியையை முடிப்பதும் மட்டுமே ஆகும், அதாவது பூமியில் அவர் செய்யும் கிரியைகளுக்குச் சரியான ஏற்பாடுகளைச் செய்வதும், அதன் மூலம் மகிமை அடைவதுமே ஆகும். மாம்சமாகிய தேவனின் கிரியையானது பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியை போன்றது அல்ல. தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வரும்போது, அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதில் மட்டுமே அவர் அக்கறை காட்டுகிறார். அவருடைய ஊழியத்துடன் தொடர்பில்லாத மற்ற எந்த விஷயங்களிலும், கண்மூடித்தனமாகக் கூட எந்தப் பங்கையும் எடுப்பதில்லை. அவர் செய்ய வேண்டிய கிரியையை மட்டும் அவர் செய்கிறார், மேலும் மனுஷன் செய்ய வேண்டிய கிரியையைப் பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை. அவர் செய்யும் கிரியை, அவர் இருக்கும் யுகம் மற்றும் அவர் நிறைவேற்ற வேண்டிய ஊழியம் ஆகியவற்றுடன் மட்டும் தொடர்புடையதாக இருக்கிறது, மற்ற எல்லா விஷயங்களும் அவருடைய ஆதிக்க எல்லைக்கு வெளியே இருப்பதைப் போல்தான் அவர் இருக்கிறார். மனுஷரில் ஒருவராக ஜீவித்திருப்பதைப் பற்றிய அடிப்படை அறிவை அவர் கொண்டிருப்பதில்லை, மேலும் சமூகத் திறன்களையும் கற்றுக்கொள்வதில்லை, மனுஷன் புரிந்துகொள்ளும் வேறு எதையுமே அவர் கொண்டிருப்பதில்லை. மனுஷன் வைத்திருக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலை இல்லை, அவரது கடமையாக இருக்கும் கிரியையை மட்டுமே செய்கிறார். எனவே, மனுஷன் பார்வையில், மாம்சமாகிய தேவன் அதிக அளவில் குறைவுபட்டவராக இருக்கிறார், அதனால் மனுஷன் வைத்திருக்க வேண்டிய பல விஷயங்களை அவர் கவனிப்பது கூட இல்லை, அத்தகைய விஷயங்களைப் பற்றி அவருக்கு எந்தப் புரிதலும் இல்லை. ஜீவிதத்தைப் பற்றியப் பொதுவான அறிவு, அத்துடன் தனிப்பட்ட நடத்தை மற்றும் மற்றவர்களுடனான தொடர்புகளை நிர்வகிக்கும் கொள்கைகள் போன்றவை அவருடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் மாம்சமாகிய தேவனிடமிருந்து சிறிதளவு அசாதாரணத் தன்மையைக் கூட உன்னால் உணர முடியாது. அதாவது, அவருடைய மனுஷத்தன்மையானது, அவரது ஜீவிதத்தை ஒரு சாதாரண மனுஷனாகவும், அவரது மூளையை இயல்பான பகுத்தறிவு கொண்டதாகவும் மட்டுமே பராமரிக்கிறது. அது அவருக்குச் சரியானது எது தவறானது எது என்பதைக் கண்டறியும் திறனை அளிக்கிறது. இருப்பினும், மனுஷன் (சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள்) மட்டுமே வைத்திருக்க வேண்டிய வேறு விஷயங்கள் எதுவும் அவர் கொண்டிருக்கவில்லை. தேவன் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற மட்டுமே மாம்சமாகிறார். அவரது கிரியை எந்த ஒரு தனிநபரிடத்திலோ அல்லது இடத்திலோ அல்லாமல் முழு பிரபஞ்சத்திலும் செய்யப்படுகிறது. இதுவே அவருடைய கிரியையின் திசையும் அவர் செயல்படும் கொள்கையும் ஆகும். இதை யாராலும் மாற்ற முடியாது, மேலும் மனுஷனுக்கு அதில் ஈடுபட எந்த வழியும் இல்லை. ஒவ்வொரு முறை தேவன் மாம்சமாகும்போதும், அந்த யுகத்தின் கிரியையை அவர் தன்னுடன் கொண்டு வருகிறார், மேலும் அவரைப் பற்றி சிறப்பாகப் புரிந்துகொள்ளும் மற்றும் உள்ளார்ந்த அறிவைப் பெறும் பொருட்டு இருபது, முப்பது, நாற்பது, அல்லது எழுபது அல்லது எண்பது ஆண்டுகள் கூட மனுஷனுடன் சேர்ந்து ஜீவிப்பதற்கான எண்ணம் அவருக்கு இல்லை. அதற்கான தேவையும் இல்லை! அவ்வாறு செய்வது எந்த வகையிலும் தேவனின் உள்ளார்ந்த மனநிலையைப் பற்றிய மனுஷனின் அறிவை ஆழப்படுத்தாது; அதற்குப் பதிலாக, அது அவனது கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே செய்யும் மற்றும் அவனது கருத்துகளையும் எண்ணங்களையும் பழமையானதாக்கிவிடும். ஆகவே, மாம்சமான தேவனின் கிரியை என்ன என்பதை நீங்கள் அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நான் உங்களிடம் பேசிய வார்த்தைகளை நிச்சயமாக நீங்கள் புரிந்து கொள்ளத் தவறியிருக்க முடியாது: “நான் சாதாரண மனுஷனின் ஜீவிதத்தை அனுபவிப்பதற்காக வரவில்லையா?” “தேவன் பூமிக்கு ஒரு சாதாரண மனுஷனின் ஜீவிதத்தை ஜீவிக்க வருவதில்லையா?” என்ற வார்த்தைகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா? மாம்சமாக மாறுவதில் இருக்கும் தேவனின் நோக்கம் உங்களுக்கு புரியவில்லை, மேலும், “சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனுஷனின் ஜீவிதத்தை அனுபவிக்கும் நோக்கத்துடன் தேவன் எவ்வாறு பூமிக்கு வர முடியும்?” என்பதன் அர்த்தமும் உங்களுக்குத் தெரியவில்லை. தேவன் தமது கிரியையை நிறைவு செய்ய மட்டுமே பூமிக்கு வருகிறார், எனவே பூமியில் அவர் செய்யும் கிரியை குறுகிய காலத்திற்கானது. அவர் பூமிக்கு வருவது தேவ ஆவியானவர் தம்முடைய சரீர உடலை திருச்சபையை வழிநடத்தும் ஓர் உயர்ந்த மனுஷனாக உருவாக்க அல்ல. தேவன் பூமிக்கு வரும்போது, அதுவே மாம்சமாகும் வார்த்தை என்பதாகும்; இருப்பினும், மனுஷன் அவருடைய கிரியையைப் பற்றி அறிந்திருக்கவில்லை, அவரைப் பற்றிய விஷயங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறான். ஆனால் தேவன்தான், மாம்சமாகிய வார்த்தை என்பதையும், அவர் இப்போதைக்கு தேவனின் பங்கை ஏற்றுக்கொள்வதற்காக தேவ ஆவியானவரால் உருவாக்கப்பட்ட ஒரு மாம்ச சரீரம் அல்ல என்பதையும் நீங்கள் அனைவரும் உணர வேண்டும். தேவன் என்பவர் பயிரிட்டதனால் கிடைத்த விளைபொருள் அல்ல, ஆனால் அவர்தான் மாம்சமாகிய வார்த்தை, இன்று அவர் உங்களிடையே தமது கிரியையை அதிகாரப்பூர்வமாகச் செய்கிறார். தேவன் மாம்சமாகியது உண்மை என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறீர்கள், ஒப்புக்கொள்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் அதை புரிந்துகொண்டது போல் செயல்படுகிறீர்கள். மாம்சமாகிய தேவனின் கிரியை முதல் அவருடைய மாம்சத்தின் முக்கியத்துவம் மற்றும் சாராம்சம் வரை என உங்களால் இவற்றை மிகச் சிறிய அளவிற்குக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை, மேலும் ஞாபகசக்தியிலிருந்து வார்த்தைகளை மென்மையாக ஒப்பிப்பவர்களை மட்டுமே பின்பற்றுகிறீர்கள். நீங்கள் கற்பனை செய்வது போலத்தான் மாம்சமாகிய தேவன் இருப்பார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (3)” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 114
தேவன் யுகத்தை வழிநடத்துவதற்கும், புதிய கிரியையைத் தொடங்குவதற்கும் மட்டுமே மாம்சமாகிறார். இந்த விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். இது மனுஷனின் செயல்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, இரண்டையும் ஒருசேரக் குறிப்பிட முடியாது. கிரியை செய்ய மனுஷனைப் பயன்படுத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவனைப் பண்படுத்தி, பரிபூரணப்படுத்த வேண்டும், மேலும் அதற்குத் தேவைப்படும் மனுஷத்தன்மை குறிப்பாக உயர்ந்ததாக இருக்க வேண்டும். சாதாரண மனுஷத்தன்மையின் உணர்வை மனுஷன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுடனான அவனது நடத்தையை நிர்வகிக்கும் பல கொள்கைகளையும் விதிகளையும் அவன் மேலும் புரிந்து கொள்ள வேண்டும், மேலும், மனுஷனின் ஞானம் மற்றும் நெறிமுறை அறிவு பற்றி மேலும் கற்பதிலும் அவன் ஈடுபட வேண்டும். இதுதான் மனுஷனுக்கு வழங்கப்பட வேண்டும். இருப்பினும், மாம்சமாகிய தேவனுக்கு இது அவ்வாறு இல்லை, ஏனென்றால் அவருடைய கிரியை மனுஷனைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, அது மனுஷனின் கிரியையும் இல்லை; மாறாக, அவர் இருப்பது ஒரு நேரடி வெளிப்பாடு மற்றும் அவர் செய்ய வேண்டிய கிரியையை நேரடியாகச் செயல்படுத்துதல் மட்டுமே ஆகும். (இயற்கையாகவே, அவருடைய கிரியை தற்செயலாகவோ அல்லது சீரற்ற முறையிலோ இல்லாமல், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது, அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற வேண்டிய நேரம் வரும்போது இது தொடங்கப்படுகிறது.) அவர் மனுஷனின் ஜீவிதத்திலோ அல்லது மனுஷனின் கிரியையிலோ பங்கேற்பதில்லை அதாவது, அவருடைய மனுஷத்தன்மை இவற்றில் எதையுமே கொண்டிருப்பதில்லை (இருப்பினும் இது அவருடைய கிரியையைப் பாதிக்காது). அவர் ஊழியம் செய்ய வேண்டிய நேரம் வரும்போது மட்டுமே அவர் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார்; அவருடைய நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், அவர் செய்ய வேண்டிய கிரியையை அவர் வெறுமனே முன்னெடுத்துச் செல்கிறார். மனுஷன் அவரைப் பற்றி என்ன அறிந்திருந்தாலும், அவரைப் பற்றி மனுஷனின் கருத்து எதுவாக இருந்தாலும், அவருடைய கிரியை முற்றிலும் பாதிக்கப்படாது. உதாரணமாக, இயேசு தம்முடைய கிரியையைச் செய்தபோது, அவர் யார் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை, ஆனாலும் அவர் வெறுமனே தமது கிரியையில் முன்னேறினார். அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வதில் இவை எதுவும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. ஆகையால், அவர் முதலில் தமது சொந்த அடையாளத்தை ஒப்புக் கொள்ளவில்லை அல்லது அறிவிக்கவில்லை, ஆனாலும் மனுஷன் வெறுமனே அவரைப் பின்பற்றினான். இயற்கையாகவே இது தேவனின் தாழ்மை மட்டுமல்ல, தேவன் மாம்சத்தில் கிரியை செய்த முறையும் இதுதான். அவரால் இவ்வாறாக மட்டுமே கிரியை செய்ய முடியும், ஏனென்றால் மனுஷனுக்கு அவனது வெறும் கண்ணால் அவரை அடையாளம் காண வழியே இல்லை. மனுஷன் அவரைக் கண்டுணர்ந்திருந்தாலும், அவருடைய கிரியையில் அவனால் உதவ முடிந்திருக்காது. மேலும், மனுஷன் தமது மாம்சத்தை அறிந்து கொள்வதற்காக அவர் மாம்சத்தில் வரவில்லை; தமது கிரியையைச் செய்து, ஊழியத்தை நிறைவேற்றவே அவர் மாம்சத்தில் வந்தார். இந்தக் காரணத்திற்காக, அவர் தமது அடையாளத்தை வெளிப்படுத்த எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை. அவர் செய்ய வேண்டிய அனைத்துக் கிரியைகளையும் அவர் முடித்தவுடன், அவருடைய முழு அடையாளமும் நிலைப்பாடும் இயல்பாகவே மனுஷனுக்குத் தெரிய வந்தது. மாம்சமாகிய தேவன் மௌனமாக இருக்கிறார், எந்த அறிவிப்பும் செய்வதில்லை. அவர் மனுஷனுக்கோ அல்லது மனுஷன் அவரைப் பின்பற்றுவதில் எவ்வாறு ஈடுபடுகிறான் என்பதைக் கவனிக்கவோ கவனம் செலுத்துவதில்லை, ஆனால் அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதிலும், அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வதிலும் மட்டுமே முன்னேறிச் செல்கிறார். அவருடைய கிரியையின் வழியில் குறுக்கே யாராலும் நிற்க முடியாது. அவர் தமது கிரியையை முடிக்க வேண்டிய நேரம் வரும்போது, அது நிச்சயமாக முடிவுக்கு வரும், அதற்கு எதிராக வேறு எவராலும் பேசிட முடியாது. அவர் தமது கிரியையை முடித்தவுடன் மனுஷனிடமிருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரே, அவர் செய்யும் கிரியையை மனுஷன் புரிந்துகொள்வான், இருப்பினும் முற்றிலுமாக தெளிவாகப் புரிந்துகொள்வதில்லை. அவர் கிரியையை மேற்கொண்ட நோக்கத்தை மனுஷன் முழுமையாகப் புரிந்துகொள்ள நீண்ட காலம் எடுக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாம்சமாகிய தேவனின் யுகத்திற்கான கிரியை இரண்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் மாம்சமாகிய தேவன் அவராகவே செய்யும் கிரியையும், அவராகவே பேசும் வார்த்தைகளும் அடங்கும். அவருடைய மாம்சத்தின் ஊழியம் முழுமையாக நிறைவேறியதும், கிரியையின் இரண்டாவது பகுதி பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்களால் செய்யப்பட உள்ளது. இந்த நேரத்தில்தான் மனுஷன் தன் செயல்பாட்டை நிறைவேற்ற வேண்டும், ஏனென்றால் தேவன் ஏற்கெனவே பாதையைத் திறந்துவிட்டார், அந்தப் பாதையில்தான் மனுஷன் நடந்துசெல்ல வேண்டும். அதாவது, மாம்சமாகிய தேவன் கிரியையின் ஒரு பகுதியை நிறைவேற்றுகிறார், பின்னர் பரிசுத்த ஆவியானவரும், பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்களும் இந்தக் கிரியையை தொடர்ந்து செய்வார்கள். ஆகையால், இந்தக் கட்டத்தில் மாம்சமாகிய தேவனால் முதன்மையாகச் செய்யப்பட வேண்டிய கிரியை பற்றி மனுஷன் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அவர் செய்த கிரியை என்ன என்பதையும் அவன் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மனுஷனின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தேவனிடம் கோரிக்கைகளைக் கேட்கக்கூடாது. இங்கேதான் மனுஷனின் பிழை, அவனது கருத்து மற்றும் அதற்கும் மேலாக அவனது கீழ்ப்படியாமை ஆகியவை இருக்கின்றன.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (3)” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 115
தேவன் மாம்சத்தில் வருவது மனுஷனை தமது மாம்சத்தை அறிய அனுமதிக்கும் நோக்கத்திற்கோ அல்லது தேவனின் மாம்சத்திற்கும் மனுஷனின் மாம்சத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை வேறுபடுத்திப் பார்க்க மனுஷனை அனுமதிக்கும் நோக்கத்திற்கோ அல்ல; மனுஷனின் பகுத்தறியும் சக்திகளைப் பயிற்றுவிக்கவும் தேவன் மாம்சமாக மாறவில்லை, மேலும் மாம்சமாகிய தேவனை வணங்க மனுஷனை அனுமதித்து அதன் மூலம் பெரும் மகிமை அடையும் நோக்கத்தோடும் அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்த விஷயங்கள் எதுவும் தேவன் மாம்சமாவதன் நோக்கம் அல்ல. மனுஷனைக் கண்டிக்கவோ, வேண்டுமென்றே மனுஷனை வெளிப்படுத்தவோ, அவனுக்கு விஷயங்களை கடினமாக்கவோ தேவன் மாம்சமாகவில்லை. இந்த விஷயங்கள் எதுவும் தேவனின் நோக்கம் அல்ல. ஒவ்வொரு முறையும் மாம்சத்தில் வரும்போது, அது தவிர்க்க முடியாத ஒரு கிரியையாக இருக்கிறது. மனுஷன் கற்பனை செய்யும் காரணங்களுக்காக அல்ல, ஆனால் அவருடைய பெரிய கிரியைக்காகவும், அவருடைய பெரிய ஆளுகைக்காகவும் மட்டும் தான் அவர் செயல்படுகிறார். தமது கிரியைக்கு தேவை என்பதாலும், அவசியம் என்பதாலும்தான் தேவன் பூமிக்கு வருகிறார். அவர் வெறுமனே சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பூமிக்கு வருவதில்லை, ஆனால் அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே வருகிறார். வேறு எதற்காக அவர் இந்த கிரியையைச் செய்ய இவ்வளவு பெரிய சுமையை ஏற்றுக்கொண்டு இவ்வளவு பெரிய ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டும்? தேவன் அவர் மாம்சமாக வேண்டியபோதுதான் மாம்சமாகிறார், எப்போதும் தனித்துவமான முக்கியத்துவத்துடன் மாம்சமாகிறார். ஜனங்கள் அவரைப் பார்க்கவும், அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்தவும் அனுமதிப்பதற்காக மட்டுமே தேவன் மாம்சமாக வருவதாக இருந்திருந்தால், அவர் நிச்சயமாக ஜனங்களிடையே ஒருபோதும் இவ்வளவு எளிதாக வந்திருக்கமாட்டார். அவர் தமது ஆளுகைக்காகவும், அவருடைய பெரிய கிரியைக்காகவும், அதன் மூலம் அவர் மனுஷகுலத்தை அதிகம் ஆதாயம் செய்வதற்காகவும் பூமிக்கு வருகிறார். அவர் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வருகிறார், அவர் சாத்தானைத் தோற்கடிக்க வருகிறார், சாத்தானைத் தோற்கடிப்பதற்காக அவர் மாம்சத்தை அணிந்துகொள்கிறார். அதற்கும் மேலாக, முழு மனுஷகுலத்தையும் அவர்களின் ஜீவிதங்களை வழிநடத்துவதற்காக அவர் வருகிறார். இவை அனைத்தும் அவருடைய நிர்வகித்தலையும், முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் பற்றியது. மனுஷன் தமது மாம்சத்தை அறிந்து கொள்ளவும், ஜனங்களின் கண்களைத் திறக்கவுமே தேவன் மாம்சத்தில் வந்திருந்தால், அவர் ஏன் ஒவ்வொரு தேசத்திற்கும் பயணிக்கவில்லை? இது மிகவும் எளிதான விஷயமாக இருந்திருக்காதா? ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, அதற்குப் பதிலாக அவர் செய்ய வேண்டிய கிரியையைத் தொடங்கவும் அதற்கானப் பொருத்தமான இடத்தையும் தேர்ந்தெடுத்தார். இந்த மாம்சம் மட்டும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் ஒரு முழு யுகத்தைப் பிரதிநித்துவப்படுத்துகிறார், மேலும் ஒரு முழு யுகத்தின் கிரியையையும் செய்கிறார்; அவர் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய யுகத்தைத் தொடங்குகிறார். இவை அனைத்தும் தேவனின் நிர்வகித்தல் பற்றிய ஒரு முக்கியமான விஷயமாகும், மேலும் இவை அனைத்தும் தேவன் பூமியில் செய்வதற்கு வரும் கிரியையின் ஒரு கட்டத்தின் முக்கியத்துவமுமாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (3)” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 116
மனுஷனை தேவன் இரட்சிப்பது என்பது ஆவியானவரின் முறையையும், ஆவியானவரின் அடையாளத்தையும் பயன்படுத்தி நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் ஆவியானவரை மனுஷனால் தொடவோ அல்லது பார்க்கவோ முடியாது, மேலும் மனுஷனால் அவரை நெருங்கவும் முடியாது. ஆவியானவர் தன் வழிமுறையைப் பயன்படுத்தி மனுஷனை நேரடியாக இரட்சிக்க முயன்றால், மனுஷனால் அவனுக்கான இரட்சிப்பைப் பெற முடியாமல் போகும். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் வெளிப்புற வடிவத்தை தேவன் அணிந்திருக்கவில்லை என்றால், மனுஷனுக்கு இந்த இரட்சிப்பைப் பெற வழியே இருந்திருக்காது. ஏனென்றால் எப்படி யேகோவாவின் மேகத்தின் அருகே யாராலும் செல்ல முடியாமல் இருந்ததோ, அதுபோல மனுஷனுக்கு அவரை அணுக வழி இல்லை. சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக மாறுவதன் மூலம் மட்டுமே, அதாவது, அவர் மாறப்போகும் சரீர மாம்சத்தில் அவருடைய வார்த்தையை வைப்பதன் மூலம் மட்டுமே, அவரைப் பின்தொடரும் அனைவருக்கும் அவரால் தனிப்பட்ட முறையில் வார்த்தையால் கிரியை செய்ய முடியும். அப்போதுதான் மனுஷனால் தனிப்பட்ட முறையில் அவருடைய வார்த்தையைக் காணவும் கேட்கவும் முடியும், மேலும் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவும் முடியும், இதன் மூலம் மனுஷன் முழுமையாக இரட்சிக்கப்படுவான். தேவன் மாம்சத்தில் வந்திருக்காவிட்டால், மாம்சமும் இரத்தமும் கொண்ட எவராலும் இவ்வளவு பெரிய இரட்சிப்பைப் பெற்றிருக்கவும் முடியாது, ஒரு மனுஷன் கூட இரட்சிக்கப்பட்டிருக்கவும் மாட்டான். தேவனுடைய ஆவியானவர் மனுஷகுலத்தின் மத்தியில் நேரடியாகக் கிரியை செய்தால், சகலவித மனுஷரும் தாக்கப்படுவார்கள், இல்லையெனில், தேவனுடன் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாமல், அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவார்கள். மனுஷனை பாவத்திலிருந்து மீட்கவே தேவன் முதன் முதலில் மாம்சமாகினார், இயேசுவின் மாம்ச சரீரத்தின் மூலம் அவனை மீட்க மாம்சமாகினார், அதாவது அவர் மனுஷனை சிலுவையிலிருந்து இரட்சித்தார், ஆனாலும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை இன்னும் மனுஷனுக்குள்தான் இருந்தது. தேவன் இரண்டாவதாக மாம்சமாகியது பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய அல்ல, மாறாகப் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை முழுமையாக இரட்சிக்கவே ஆகும். மன்னிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுமையாகச் சுத்திகரிக்கப்படுவதற்காகவும், மற்றும் மாற்றப்பட்ட மனநிலையை அடைவதன் மூலம் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்காகவும் இது செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனை முழுமையாகப் பரிசுத்தப்படுத்த முடியும். நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிவுக்கு வந்தபின், கிருபையின் யுகத்திலிருந்து, தேவன் இரட்சிப்பின் கிரியையைத் தொடங்கினார், இது கடைசிக் காலம் வரை தொடர்கிறது, மனுஷ இனத்தை அவர்களின் கலகத்தன்மைக்காக அவர்களை நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சைக்கு உட்படுத்தி, அவர் மனுஷகுலத்தை முழுமையாகச் சுத்திகரிப்பார். அப்போதுதான் தேவன் தம்முடைய இரட்சிப்பின் கிரியையை முடித்துவிட்டு ஓய்வெடுப்பார். ஆகையால், கிரியையின் மூன்று கட்டங்களில், தேவன் தம்முடைய கிரியையை மனுஷர்களிடையே நிறைவேற்ற இரண்டு முறை மட்டுமே மாம்சமாகியிருக்கிறார். ஏனென்றால், கிரியையின் மூன்று கட்டங்களில் ஒன்று மட்டுமே மனுஷரை தங்கள் ஜீவிதத்தை வழிநடத்த வழிகாட்டும், மற்ற இரண்டுமே இரட்சிப்பின் கிரியைகளைக் கொண்டிருக்கும். மாம்சமாவதன் மூலம் மட்டுமே தேவன் மனுஷனுடன் இணைந்து ஜீவிக்கவும், உலகின் துயரங்களை அனுபவிக்கவும், சாதாரண மாம்ச சரீரத்தில் ஜீவிக்கவும் முடியும். இவ்வாறாக மட்டுமே அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களுக்குத் தேவையான நடைமுறைப் பாதையை வழங்க முடியும். மாம்சமாகிய தேவன் மூலம்தான் மனுஷன் தேவனிடமிருந்து முழு இரட்சிப்பைப் பெறுகிறான், அவனுடைய ஜெபங்களுக்கு பதில் பரலோகத்திலிருந்து நேரடியாக வருவதில்லை. ஏனென்றால், மனுஷன் மாம்சமாகவும் இரத்தமாகவும் இருப்பதால், அவனுக்கு தேவனுடைய ஆவியானவரைக் காணவும் வழி இல்லை, அவருடைய ஆவியானவரை அணுகவும் முடியாது. மனுஷன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரே விஷயம் மாம்சமாகிய தேவன் மட்டும்தான், மேலும் இதன் மூலம் மட்டுமே மனுஷன் எல்லா வழிகளையும் எல்லா சத்தியங்களையும் புரிந்துகொண்டு முழு இரட்சிப்பைப் பெற முடியும். தேவன் இரண்டாவது முறை மாம்சமாவது மனுஷனின் பாவங்களை நீக்குவதற்கும் அவனை முழுமையாக சுத்திகரிப்பதற்கும் போதுமானதாக இருக்கும். ஆகையால், தேவன் இரண்டாவது முறை மாம்சமாவதுடன், மாம்சத்தில் தேவனின் முழுக் கிரியையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் முழுமையாக்கப்படும். இதன்மூலம், மாம்சத்தில் தேவனின் கிரியை முற்றிலும் முடிவுக்கு வந்திருக்கும். தேவன் இரண்டாவது முறையாக மாம்சமாகியதற்குப் பிறகு, அவர் தமது கிரியைக்காக மூன்றாவது முறையாக மாம்சமாக மாற மாட்டார். அவருடைய முழு நிர்வகித்தலும் முடிவுக்கு வந்திருக்கும். தேவனின் கடைசிக் காலத்திற்கான மாம்சம் அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களை முழுமையாகப் பெற்றிருக்கும், கடைசிக் காலத்தின் மனுஷத்தன்மை அனைத்தும் வகையின்படி வகைப்படுத்தப்படும். அவர் இனியும் இரட்சிப்பின் கிரியையைச் செய்யமாட்டார், எந்தக் கிரியையும் செய்ய மாம்சத்திற்குத் திரும்பமாட்டார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 117
மனுஷன் இப்போது அடைந்திருப்பவை—அவனது தற்போதைய சரீர வளர்ச்சி, அறிவு, அன்பு, விசுவாசம், கீழ்ப்படிதல் மற்றும் நுண்ணறிவு—இவை வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் ஆகும். நீ விசுவாசத்தைக் கொண்டிருப்பதும், இந்த நாள் வரை தாக்குப்பிடித்திருப்பதும் வார்த்தையின் மூலமாகவே அடையப்பட்டிருக்கின்றன. மாம்சமாகிய தேவனின் கிரியை உண்மையில் அசாதாரணமானது என்பதையும், அதில் மனுஷனால் அடைய முடியாதவை நிறைய உள்ளன என்பதையும், அவை மறைபொருட்களும் அதிசயங்களும்தான் என்பதையும் இப்போது மனுஷன் காண்கிறான். எனவே, பலர் கீழ்ப்படிந்திருக்கின்றனர். சிலர் பிறந்ததிலிருந்து எந்தவொரு மனுஷனுக்கும் ஒருபோதும் கீழ்ப்படிந்ததில்லை, ஆனால் இந்த நாளில் தேவனின் வார்த்தைகளைக் காணும்போது, அவர்கள் அவ்வாறு செய்திருப்பதை அறியாமலேயே முழுமையாகக் கீழ்ப்படிகிறார்கள், மேலும் அவர்கள் வேறு எதையும் ஆராய்வதற்கோ அல்லது சொல்வதற்கோ துணிவதில்லை. மனுஷத்தன்மையானது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, வார்த்தையினுடைய நியாயத்தீர்ப்பின் கீழ் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறது. தேவனுடைய ஆவியானவர் மனுஷனிடம் நேரடியாகப் பேசியிருந்தால், மனுஷகுலம் அனைவரும் அந்தக் குரலுக்கு அடிபணிந்து, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் பவுல் தரையில் விழுந்த விதத்தில், வெளிப்படுத்தும் வார்த்தைகள் இல்லாமல் கீழே விழுந்துவிடுவார்கள். தேவன் இவ்வாறாக தொடர்ந்து கிரியை செய்தால், மனுஷன் ஒருபோதும் வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் தனது சொந்தச் சீர்கேட்டை அறிந்து கொள்ள முடியாது, அதன் மூலம் இரட்சிப்பையும் அடைய முடியாது. மாம்சமாக மாறுவதன் மூலம்தான் தேவன் ஒவ்வொரு மனுஷனுடைய செவிகளிலும் தனிப்பட்ட முறையில் தனது வார்த்தைகளைச் சொல்ல முடியும், இதனால் செவிகள் உள்ள அனைவருமே அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவருடைய நியாயத்தீர்ப்பை வார்த்தையால் பெற முடியும். மனுஷனை அடிபணியச் செய்ய ஆவியானவர் வெளிப்படுவதை விட, அவருடைய வார்த்தையால் அடையப்படும் விளைவு இதுதான். இந்த நடைமுறை மற்றும் அசாதாரணக் கிரியையின் மூலம்தான், மனுஷனின் பழைய மனநிலையை, பல ஆண்டுகளாக ஆழமாக மறைந்திருக்கும் மனநிலையை, முழுமையாக அம்பலப்படுத்த முடியும், இதனால் மனுஷன் அதை அடையாளம் கண்டு அதை மாற்றியமைக்க முடியும். இந்த விஷயங்கள் அனைத்தும் மாம்சமாகிய தேவனின் நடைமுறைக்கான கிரியைகளாகும், அதில், நியாயத்தீர்ப்பை ஒரு நடைமுறைக்கான முறையில் பேசுவது மற்றும் செயல்படுத்துவது ஆகிய முறைகளில், அவர் மனுஷனுக்கான நியாயத்தீர்ப்பின் முடிவுகளை வார்த்தையால் அடைகிறார். இதுவே மாம்சமாகிய தேவனின் அதிகாரம் மற்றும் தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவமும் ஆகும். மாம்சமாகிய தேவனின் அதிகாரத்தை அறிவதற்கும், வார்த்தையினுடைய கிரியையின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை அறிந்து கொள்வதற்கும், ஆவியானவர் மாம்சத்தில் வந்துள்ளார் என்பதையும், வார்த்தையால் மனுஷனை நியாயந்தீர்ப்பதன் மூலம் அவருடைய அதிகாரத்தை நிரூபிக்கிறார் என்பதைக் காட்டுவதற்கும் இது செய்யப்படுகிறது. அவருடைய மாம்சம் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனுஷகுலத்தின் வெளிப்புற வடிவம்தான் என்றாலும், அவர் அதிகாரம் மிக்கவர் என்றும், அவரே தேவன் என்றும், அவருடைய வார்த்தைகள் தேவனின் வெளிப்பாடு என்றும் மனுஷனுக்கு காண்பிக்கும் அவருடைய வார்த்தைகள் அடையும் முடிவுகள்தான் அது. இதன் மூலம் மனுஷர் அனைவருக்கும் அவர்தான் தேவன் என்றும், அவர்தான் மாம்சமாக மாறியவர் என்றும், அவர் யாராலும் புண்படுத்தப்படக்கூடாது என்றும், அவருடைய நியாயத்தீர்ப்பை வார்த்தையால் யாராலும் மிஞ்ச முடியாது என்றும், அந்தகாரத்தின் எந்த சக்தியும் அவருடைய அதிகாரத்தைத் தாண்டி மேலோங்க முடியாது என்றும் காட்டப்பட்டுள்ளது. அவர்தான் மாம்சமாகிய வார்த்தை என்பதால், அவரது அதிகாரத்தினால், மற்றும் அவரது வார்த்தையின் நியாயத்தீர்ப்பினால் மனுஷன் அவருக்கு முழுக்க முழுக்கக் கீழ்ப்படிகிறான். அவருடைய மாம்சத்தால் கொண்டுவரப்பட்ட கிரியையே, அவர் வைத்திருக்கும் அதிகாரம் ஆகும். அவர் மாம்சமாகியதன் காரணம் என்னவென்றால், மாம்சத்திற்கும் அதிகாரம் இருக்க முடியும், மேலும் அவரால் மனுஷரிடையே ஒரு நடைமுறைக்குரிய முறையில் கிரியையைச் செய்ய முடியும், அதை மனுஷனுக்குத் தெரியும் வகையிலும் மற்றும் உறுதியான முறையிலும் செய்ய முடியும். எல்லா அதிகாரங்களையும் கொண்ட தேவனின் ஆவியால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையை விட இந்தக் கிரியை மிகவும் யதார்த்தமானது, மேலும் அதன் முடிவுகளும் தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், மாம்சமாகிய தேவனால் ஒரு நடைமுறைக்குரிய வழியில் பேசவும் கிரியை செய்யவும் முடியும். அவருடைய மாம்சத்தின் வெளிப்புற வடிவம் எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை, மேலும் மனுஷனால் அதனை அணுக முடியும், அதேசமயம் அவருடைய சாராம்சமானது அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் அவருடைய அதிகாரம் யாருக்கும் தெரிவதில்லை. அவர் பேசும் போதும், கிரியை செய்யும்போதும், மனுஷனால் அவரது அதிகாரத்தின் இருப்பைக் கண்டுபிடிக்க முடிவதில்லை; இது ஒரு நடைமுறைக்குரிய இயல்புடைய கிரியையை செய்வதற்கு அவருக்கு உதவுகிறது. இந்த நடைமுறைக்குரிய கிரியைகள் அனைத்தாலும் முடிவுகளை அடைய முடியும். எந்தவொரு மனுஷனும் அவரிடம் அதிகாரம் இருப்பதை உணருவதில்லை, அல்லது அவர் இடறலடையப்படக்கூடாதவர் என்பவர் என்பதை, அல்லது அவரது கடுங்கோபத்தைக் காண்கிறான் என்றாலும், அவர் மறைத்து வைத்திருக்கும் அதிகாரம், மறைக்கப்பட்ட கோபம் மற்றும் அவர் வெளிப்படையாகப் பேசும் வார்த்தைகள் ஆகியவற்றின் மூலம் அவன் வார்த்தைகளின் திட்டமிடப்பட்ட முடிவை அடைகிறான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய குரல், அவரது பேச்சின் கடினத்தன்மை மற்றும் அவரது வார்த்தைகளில் இருக்கும் அனைத்து ஞானத்தின் மூலமும் மனுஷன் முற்றிலும் சமாதானப்படுத்தப்படுகிறான். இவ்வாறாக, மனுஷன், மாம்சமாகிய தேவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறான், அவனுக்கு அதிகாரமே இல்லை, இதன் மூலம் மனுஷனை இரட்சிப்பதற்கான தேவனின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. இது அவர் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தின் மற்றொரு அம்சமாகும்: இன்னும் யதார்த்தமாக பேசுவதும், அவருடைய வார்த்தைகளின் யதார்த்தம் மனுஷனுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிப்பதும், இதன்மூலம் மனுஷனால் தேவனுடைய வார்த்தையின் வல்லமையைக் காணவும்கூடும். எனவே, இந்தக் கிரியை மாம்சமாகிய தேவன் மூலம் செய்யப்பட்டிருக்காவிட்டால், அது சிறிதளவு முடிவுகளைக் கூட அடைந்திருக்காது, மேலும் பாவம் நிறைந்த ஜனங்களை முழுமையாக இரட்சிக்கவும் முடிந்திருக்காது. தேவன் மாம்சமாகி இருக்காவிட்டால், அவர் மனுஷனின் கண்ணுக்குத் தெரியாத மற்றும் அவனால் தொட்டுணர முடியாத ஆவியானவராக இருந்திருப்பார். மனுஷன் மாம்சத்திலான சிருஷ்டியாக இருப்பதால், அவனும் தேவனும் இரண்டு வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாக, வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தாலான மனுஷனுடன் இணக்கமில்லாதவராக இருக்கிறார், மேலும் அவர்களுக்கிடையில் உறவுகளை ஏற்படுத்த எந்த வழியும் இல்லை. மனுஷனால் ஒரு ஆவியாக மாற இயலாது. இது அவ்வாறு இருப்பதால், தேவனுடைய ஆவியானவர் அவருடைய உண்மையான கிரியையைச் செய்ய ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக மாற வேண்டும். தேவனால் மிக உயர்ந்த இடத்திற்கு ஏறி, ஒரு மனுஷ ஜீவனாக மாறுவதற்கு தம்மைத் தாழ்த்திக் கொள்ள முடியும், மனுஷரிடையே கிரியை செய்து, அவர்கள் மத்தியில் வாழவும் முடியும், ஆனால் மனுஷனால் உயர்ந்த இடத்திற்கு ஏறி ஒரு ஆவியாக மாற முடியாது, மேலும் மிகவும் தாழ்ந்த இடத்திற்கு இறங்கவும் முடியாது. இதனால்தான் தேவன் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாற வேண்டியிருந்தது. அதே அடையாளத்தின் மூலம், தேவன் முதல்முறை மாம்சமாகியபோது, மாம்சமாகிய தேவனின் மாம்சத்தால் மட்டுமே மனுஷனை மீட்டெடுக்க சிலுவையில் அறையப்பட முடியும், அதேசமயம் தேவனுடைய ஆவியானவர் மனுஷனுக்கான பாவநிவாரணப்பலியாக சிலுவையில் அறையப்படுவதற்கு எந்த வழியும் இருந்திருக்காது. மனுஷனுக்கான பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய தேவன் நேரடியாக மாம்சமாகியிருக்க முடியும், ஆனால் தேவன் தனக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பாவநிவாரணப்பலியை எடுக்க மனுஷனால் நேரடியாக வானத்திற்கு ஏற முடியாது. அப்படியானால், சாத்தியமானதெல்லாம், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் ஒரு சில முறை முன்னும் பின்னுமாக ஓடும்படி தேவனிடம் கேட்பது மட்டுமே, இந்த இரட்சிப்பை எடுக்க மனுஷன் வானத்திற்கு ஏற அல்ல, ஏனென்றால் மனுஷன் விழுந்துவிட்டான், மேலும், மனுஷனால் வெறுமனே வானத்திற்கு ஏற முடியாது, பாவநிவாரணப்பலியைப் பெறவும் முடியாது. ஆகையால், இயேசு மனுஷகுலத்தின் மத்தியில் வந்து மனுஷனால் வெறுமனே செய்ய முடியாத கிரியையை தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் தேவன் மாம்சமாக மாறும்போதும், அது முழுமையாக தேவையற்றதாக இருப்பதில்லை. எந்தவொரு கட்டமும் தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், மாம்சமாகும் இழிநிலைக்கு அவர் கீழ்படிந்திருக்க மாட்டார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 118
தேவன் மாம்சமாக மாறினார், ஏனென்றால் சாத்தானுடைய ஆவியோ அல்லது எந்தவொரு தொட்டுணரமுடியாத காரியமோ அவருடைய கிரியையின் இலக்கு அல்ல, மாம்சமானவனும் சாத்தானால் சீர்கெட்டுப்போனவனுமாகிய மனுஷனே அவருடைய கிரியையின் இலக்காக இருக்கிறான். மனுஷனுடைய மாம்சம் சீர்கெட்டுப் போயிருப்பதனாலே, தேவன் மாம்சமான மனுஷனைத் தமது கிரியையின் இலக்காக்கியுள்ளார்; மேலும், மனுஷனே சீர்கேட்டின் இலக்காக இருப்பதனால், தேவன் தமது இரட்சிப்பின் கிரியையின் அனைத்துக் கட்டங்களிலும் மனுஷனைத் தமது கிரியையின் ஒரே இலக்காக்கியுள்ளார். மனுஷன் மரணத்திற்கு ஏதுவானவனாக இருக்கிறான், மாம்சமாகவும் இரத்தமாகவும் இருக்கிறான், தேவன் ஒருவரால் மாத்திரமே மனுஷனை இரட்சிக்க முடியும். ஆகையால், தேவன் தமது கிரியையைச் செய்வதற்கு மனுஷனைப் போன்ற அதே இயற்பண்புகளைக் கொண்ட ஒரு மாம்சமாக மாற வேண்டும், இதன்மூலம் அவருடைய கிரியை சிறந்த பலன்களை அடையக்கூடும். மனுஷன் மாம்சமுள்ளவனாகவும், பாவத்தை மேற்கொள்ளவோ அல்லது மாம்சத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவோ இயலாதவனாக இருப்பதனால், தேவன் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாறியாக வேண்டும். மாம்சமான தேவனுடைய சாராம்சமும் அடையாளமும் மனுஷனுடைய சாராம்சத்திலும் அடையாளத்திலும் இருந்து பெரிதும் வேறுபட்ட போதிலும், அவருடைய தோற்றம் மனுஷனுடைய தோற்றத்திற்கு ஒப்பாகவே உள்ளது. அவர் ஒரு சாதாரண மனுஷனுடைய தோற்றமுள்ளவராக இருக்கின்றார், ஒரு சாதாரண மனுஷனுடைய வாழ்க்கையை வாழ்கின்றார், அவரைக் காண்கிறவர்கள் ஒரு சாதாரண மனுஷனுக்கும் அவருக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காண முடியாது. சாதாரண மனிதத்தன்மையில் தமது தெய்வீகக் கிரியையை செய்வதற்கு இந்த இயல்பான தோற்றமும் சாதாரண மனிதத்தன்மையும் அவருக்குப் போதுமானவையாக இருக்கின்றன. அவருடைய மாம்சமானது சாதாரண மனிதத்தன்மையில் அவருடைய கிரியையைச் செய்ய அவரை அனுமதிக்கின்றது. மேலும் மனுஷர் நடுவே தமது கிரியையைச் செய்யவும் அவருக்கு உதவுகின்றது. மேலும் அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது மனுஷர் நடுவே இரட்சிப்பின் கிரியையைச் செய்யவும் அவருக்கு உதவுகின்றது. அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது மனுஷர் நடுவே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளபோதிலும், இதுபோன்ற குழப்பமானது அவருடைய கிரியையின் வழக்கமான பலன்களைப் பாதிக்கவில்லை. சுருக்கமாகக் கூறுவதென்றால், அவருடைய சாதாரண மாம்சத்தின் கிரியையானது மனுஷனுக்கு மிகப் பெரிய அளவில் பயனை அளிக்கிறதாக இருக்கின்றது. பெரும்பாலான ஜனங்கள் அவருடைய சாதாரணமான மனிதத்தன்மையை ஏற்றுக்கொள்ளாதபோதிலும், அவருடைய கிரியையால் இன்னும் முடிவுகளை அடைய முடியும். மேலும் இந்த முடிவுகள் அவருடைய சாதாரண மனிதத்தன்மை மூலமாகவே அடையப்படுகின்றன. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மாம்சத்தில் செய்யப்படும் அவருடைய கிரியையின் மூலம், மனுஷன் தனது சாதாரண மனிதத்தன்மையைப் பற்றி மனுஷர் நடுவே காணப்படும் கருத்துக்களை காட்டிலும் பத்து மடங்கு அல்லது டஜன் கணக்கான மடங்கு அதிகமான காரியங்களைப் பெறுகிறான். இத்தகைய கருத்துக்கள் எல்லாம் இறுதியில் அவருடைய கிரியையால் விழுங்கிப்போடப்படும். அவருடைய கிரியை அடைந்த பலன், அதாவது மனுஷனிடம் அவரைக் குறித்து காணப்படும் அறிவானது அவரைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்களைக் காட்டிலும் மிகவும் அதிகமானதாகும். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையைக் கற்பனை செய்யவோ அளவிடவோ வழியேதும் கிடையாது, ஏனென்றால் அவருடைய மாம்சம் எந்த மாம்சமான மனுஷனுக்கும் இருப்பது போன்றதல்ல. வெளிப்புறத் தோற்றம் ஒத்ததாக காணப்பட்டாலும், சாராம்சம் ஒப்பானது அல்ல. அவருடைய மாம்சம் தேவனைப் பற்றி மனுஷர் நடுவில் பல கருத்துக்களை உண்டாக்குகின்றது. ஆனாலும் அவருடைய மாம்சமானது மனுஷன் மிகுந்த அறிவை பெறுவதற்கும் உதவக்கூடும். மேலும் ஒத்த வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு நபரையும் ஜெயங்கொள்ள இயலும். அவர் வெறுமனே மனுஷராக மட்டுமல்லாமல், ஆனால் மனுஷனுடைய வெளிப்புறத் தோற்றத்துடன் தேவனாகக் காணப்படுவதனால், அவரை யாரும் முழுமையாக அறிந்துகொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாது. அதரிசனமான மற்றும் தொட்டுணர முடியாத ஒரு தேவன் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். தேவன் மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆவியாக மாத்திரம் இருப்பாரேயானால், தேவனை நம்புவது மனுஷனுக்கு மிகவும் எளிதான காரியமாகும். ஜனங்கள் தங்கள் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடலாம், தங்களைத் தாங்களே மகிழ்விக்கவும், சந்தோஷமாக உணர வைக்கவும் தேவனுடைய உருவமாக அவர்கள் விரும்பும் எந்த உருவத்தையும் தேர்ந்தெடுக்கலாம். ஆகையால், ஜனங்கள் தங்கள் சொந்தத் தேவன் மிகவும் விரும்புவதையும், அவர்கள் செய்ய விரும்புவதையும் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் செய்யலாம். மேலும் என்னவென்றால், ஜனங்கள் தாங்கள் தேவன் மீது வைத்துள்ள விசுவாசத்தையும் பக்தியையும் காட்டிலும் அதிகமாக யாரிடமும் இல்லை என்றும், மற்றவர்கள் எல்லோரும் புறஜாதி நாய்கள் என்றும், தேவனுக்கு விசுவாசமில்லாமல் இருக்கிறார்கள் என்றும் நம்புகின்றனர். தேவன் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் தேடுவது தெளிவற்றதாகவும், கோட்பாட்டின் அடிப்படையிலும் இருப்பதாகக் கூறலாம். அவர்கள் தேடுவது எல்லாம் சிறிதளவு மாறுபாடு கொண்ட ஒரே மாதிரியான காரியமாகும். அவர்களின் கற்பனைகளில் மாத்திரமே தேவனுடைய உருவங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றனவே தவிர, அவர்களுடைய சாராம்சம் உண்மையில் ஒன்றுதான்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 119
சீர்கெட்ட மனுஷனுடைய தேவைகள் தான் மாம்சமான தேவன் மாம்சத்திற்குள் வந்ததற்கு ஒரே காரணமாகும். தேவனுடைய தேவைகள் அல்ல, மனுஷனுடைய தேவைகளே இதற்குக் காரணமாகும். தேவனுடைய தியாகப்பலிகள் மற்றும் பாடுகள் எல்லாமே மனுக்குலத்திற்காகவே ஆகும், அவருடைய நலனுக்காக அல்ல. தேவனுக்கு எந்தச் சாதக பாதகமோ அல்லது வெகுமதிகளோ கிடையாது. சில எதிர்கால அறுவடையை அவர் அறுவடை செய்ய மாட்டார், ஆனால் ஆதியிலேயே அவருக்குக் கடன்பட்டிருந்ததை அறுவடை செய்வார். அவர் மனுக்குலத்திற்காகச் செய்கிற மற்றும் தியாகம் செய்கிற எல்லாம் அவர் சிறந்த வெகுமதிகளைப் பெறுவதற்காக அல்ல, முற்றிலும் மனுக்குலத்திற்காகவே ஆகும். மாம்சத்தில் தேவனுடைய கிரியை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல சிரமங்களைக் கொண்டிருக்கிற போதிலும், அது இறுதியில் அடையும் பலன்கள் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியைகளின் பலன்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். மாம்சத்தின் கிரியை மிகுந்த கஷ்டத்தை உண்டாக்குகின்றது. மேலும் ஆவியானவர் கொண்டிருக்கின்ற அதே மாபெரும் அடையாளத்தை மாம்சமானவரால் கொண்டிருக்க முடியாது. ஆவியானவர் செய்கிற அதே தெய்வீகச் செயல்களை மாம்சமானவரால் செய்ய முடியாது. ஆவியானவர் கொண்டிருக்கிற அதே அதிகாரத்தை மாம்சமானவரால் கொண்டிருக்க முடியாது. ஆனாலும், சாதாரணமான இந்த மாம்சமானவரால் செய்யப்படும் கிரியையின் சாராம்சமானது ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாகும். மேலும் இந்த மாம்சமானவரே எல்லா மனுக்குலத்தின் தேவைகளுக்கும் பதிலாக இருக்கின்றார். இரட்சிக்கப்படுகிறவர்களைப் பொறுத்தவரையில், ஆவியானவரின் பயன்பாட்டு மதிப்பானது மாம்சமானவரின் பயன்பாட்டு மதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்: ஆவியானவரின் கிரியையால் எல்லா மலைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் சமுத்திரங்கள் உட்பட முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்க முடியும். ஆனால் மாம்சமானவரின் கிரியை அவர் தொடர்புகொள்ளும் ஒவ்வொரு நபருடனேயே மிகவும் பயனுள்ள முறையில் தொடர்புடையதாக இருக்கின்றது. மேலும் என்னவென்றால், காணக்கூடிய உருவத்திலுள்ள தேவனுடைய மாம்சத்தை மனுஷனால் நன்கு புரிந்துகொள்ளவும் நம்பவும் முடியும். மேலும் தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவை இன்னும் ஆழப்படுத்தவும் முடியும். மேலும் தேவனுடைய உண்மையான செயல்களைக் குறித்த மிகவும் ஆழமான தாக்கத்தை மனுஷனுக்கு ஏற்படுத்தவும் முடியும். ஆவியானவரின் கிரியை மறைபொருளில் மறைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு ஏதுவானவர்களால் அவற்றைப் புரிந்துகொள்வது கடினமாகும். மேலும் அவற்றைக் காண்பதும் கடினமாகும். ஆகவே அவர்கள் வெற்றுக் கற்பனைகளை மாத்திரமே நம்பியிருக்க முடியும். ஆனாலும், மாம்சத்தின் கிரியை இயல்பானது, யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் வளமான ஞானத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மனுஷனுடைய மாம்சக் கண்ணால் காணக்கூடிய ஒரு உண்மையாகும். தேவனுடைய கிரியையின் ஞானத்தை மனுஷன் தனிப்பட்ட முறையில் அனுபவிக்க முடியும். அவனுடைய வளமான கற்பனையைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இது மாம்சத்தில் தேவனுடைய கிரியையின் துல்லியமாகவும், உண்மையான மதிப்பாகவும் இருக்கிறது. மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாத மற்றும் அவன் கற்பனை செய்வதற்குக் கடினமான காரியங்களை மட்டுமே ஆவியானவரால் செய்ய முடியும். உதாரணமாக, ஆவியானவரின் அறிவொளி, ஆவியானவரின் அசைவு மற்றும் ஆவியானவரின் வழிகாட்டுதல் ஆகியவை மனம் கொண்ட மனுஷனுக்கு எந்தத் தெளிவான அர்த்தத்தையும் கொடுப்பதில்லை. அவை ஒரு அசைவையோ அல்லது பரந்த அர்த்தத்தையோ மாத்திரமே கொடுக்கின்றன, வார்த்தைகளாலான ஒரு அறிவுரையை வழங்க முடியாது. ஆனாலும், மாம்சத்தில் செய்யப்படும் தேவனுடைய கிரியை பெரிதும் வித்தியாசமானதாகும்: இது வார்த்தைகளின் துல்லியமான வழிகாட்டுதலைக் கொண்டுள்ளதோடு, தெளிவான சித்தத்தையும், தேவையான இலக்குகளையும் கொண்டுள்ளது. ஆகவே, மனுஷன் தட்டித் தடுமாறவோ அல்லது அவனுடைய கற்பனையைப் பயன்படுத்தவோ, ஊகங்கள் செய்யவோ வேண்டியதில்லை. இது மாம்சத்தில் செய்யப்படும் கிரியைக் குறித்த விளக்கமாகும். இது ஆவியானவரின் கிரியையிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும். ஆவியானவரின் கிரியையானது ஒரு குறுகிய வரம்பிற்கு மட்டுமே பொருத்தமானதாகும். இது மாம்சத்தின் கிரியைக்கு மாற்றாக முடியாது. மாம்சத்தின் கிரியையானது ஆவியானவரின் கிரியையைக் காட்டிலும் மிகவும் துல்லியமான மற்றும் தேவையான இலக்குகளையும், உண்மையான, மதிப்புமிக்க அறிவையும் மனுஷனுக்குக் கொடுக்கிறது. துல்லியமான வார்த்தைகளையும், பின்தொடர்வதற்குத் தெளிவான இலக்குகளையும் கொடுக்கும் கிரியையே சீர்கெட்ட மனுஷனுக்கு மாபெரும் மதிப்புடையதாக இருக்கும் கிரியையாகும், இதைக் கண்டும், தொட்டும் உணரலாம். யதார்த்தமான கிரியை மற்றும் சரியான நேரத்திலான வழிகாட்டுதல் ஆகியவை மட்டுமே மனுஷனுடைய சுவைகளுக்குப் பொருத்தமானவையாகும். மேலும் மெய்யான கிரியை மட்டுமே மனுஷனை அவனது சீர்கேடான மற்றும் ஒழுக்கக்கேடான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே இதை அடைய முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே மனுஷனை அவனுடைய முந்தையச் சீர்கேடான மற்றும் மோசமான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். ஆவியானவர் தேவனுடைய இயல்பான சாராம்சமாக இருக்கின்றபோதிலும், இத்தகைய கிரியையை அவருடைய மாம்சத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆவியானவர் தனியாகக் கிரியை செய்திருந்தால், அவருடைய கிரியை பயனுள்ளதாக இருக்க இயலாது என்பது ஒரு தெளிவான சத்தியமாகும். இந்த மாம்சத்தின் நிமித்தமாக பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய சத்துருக்களாக மாறியிருக்கின்றபோதிலும், அவர் தமது கிரியையை முடிக்கும் தருவாயில், அவருக்கு எதிரானவர்கள் அவருடைய சத்துருக்களாக இல்லாமல், அவருடைய சாட்சிகளாக மாறுவார்கள். அவரால் ஜெயங்கொள்ளப்பட்ட சாட்சிகளாகவும், அவருடன் இணக்கமாகி அவரிடமிருந்து பிரிக்க முடியாத சாட்சிகளாகவும் மாறுவார்கள். மனுஷனுக்கு மாம்சத்தில் செய்யப்படும் அவருடைய கிரியையின் முக்கியத்துவத்தை அவர் மனுஷனுக்குத் தெரியப்படுத்துவார். மேலும் மனித வாழ்வின் அர்த்தத்தில் இந்த மாம்சத்தின் முக்கியத்துவத்தை மனுஷன் அறிந்துகொள்வான். மேலும் மனித வாழ்வின் வளர்ச்சியில் அவனுடைய உண்மையான மதிப்பை அறிந்துகொள்வான். மேலும் இந்த மாம்சமானது வாழ்வின் நீரூற்றாக மாறும், இதிலிருந்து மனுஷனால் பிரிந்திருக்க இயலாது என்பதை அறிந்துகொள்வான். மாம்சமான தேவனுடைய மாம்சமானது தேவனுடைய அடையாளத்திற்கும் நிலைப்பாட்டிற்கும் மிகவும் பொருத்தமில்லாததாக இருக்கின்றபோதிலும், மனுஷன் அவருடைய உண்மையான நிலைப்பாட்டுடன் இணக்கமில்லாதவனாக தோன்றுகின்றபோதிலும், தேவனுடைய மெய்யான சாயலையோ அல்லது மெய்யான அடையாளத்தையோ கொண்டிராத இந்த மாம்சத்தினால் தேவனுடைய ஆவியினால் நேரடியாகச் செய்ய முடியாத கிரியையைச் செய்ய முடியும். இதுவே தேவனுடைய மனுஷ அவதரிப்பின் உண்மையான முக்கியத்துவமும் மதிப்பும் ஆகும். மேலும் இந்த முக்கியத்துவத்தையும் மதிப்பையும் தான் மனுஷனால் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சகல மனுஷரும் தேவனுடைய ஆவியை மேல்நோக்கிப் பார்க்கிறார்கள், தேவனுடைய மாம்சத்தை கீழ்நோக்கிப் பார்க்கிறார்கள். அவர்கள் அவற்றை எவ்வாறு பார்த்தாலும் அல்லது சிந்தித்தாலும், மாம்சத்தின் உண்மையான முக்கியத்துவமும் மதிப்பும் ஆவியானவருக்குரியவற்றை காட்டிலும் மிகவும் அதிகமானவையாகும். நிச்சயமாக, இது சீர்கெட்ட மனுக்குலத்துடன் மாத்திரமே தொடர்புடையதாகும். சத்தியத்தைத் தேடுகிற மற்றும் தேவன் தோன்றுவதற்காக வாஞ்சித்து ஏங்குகிற எல்லோருக்கும், ஆவியானவரின் கிரியை ஏவுதலையோ அல்லது தூண்டுதலையோ, விவரிக்க முடியாத மற்றும் கற்பனை செய்யமுடியாத அதிசய உணர்வையோ, மகத்துவமான, மேன்மையான மற்றும் போற்றத்தக்க, ஆனாலும் எல்லோராலும் அடைய முடியாத மற்றும் பெற முடியாத உணர்வையோ மட்டுமே கொடுக்க முடியும். மனுஷனும் தேவனுடைய ஆவியானவரும் தங்களுக்கு இடையில் மிகவும் அதிகமான தூரம் இருப்பது போலவே, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் மனுஷனும் தேவனும் கண்ணுக்குத் தெரியாத ஒரு பிளவினால் பிரிக்கப்பட்டிருப்பதைப் போலவே, அவர்களால் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. உண்மையில், இது ஆவியானவரால் மனுஷனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மாயையாகும். ஏனென்றால் ஆவியானவரும் மனுஷனும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல, ஒரே உலகில் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆவியானவர் மனுஷனுக்குரிய எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகையால் மனுஷனுக்கு ஆவியானவர் தேவையில்லை. ஏனென்றால் மனுஷனுக்குப் பெரிதும் தேவைப்படும் கிரியையை ஆவியானவரால் நேரடியாகச் செய்ய முடியாது. மாம்சத்தின் கிரியையானது மனுஷனுக்குப் பின்தொடர்வதற்கான உண்மையான இலக்குகளையும், தெளிவான வார்த்தைகளையும், அவர் உண்மையானவர், சாதாரணமானவர், அவர் தாழ்மையானவர், இயல்பானவர் என்ற உணர்வையும் கொடுக்கிறது. மனுஷன் அவருக்குப் பயப்படுகின்றபோதிலும், பெரும்பாலான ஜனங்களுக்கு அவர் எளிதாக தொடர்புகொள்ளக் கூடியவராக இருக்கிறார்: மனுஷனால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியும், அவருடைய குரலைக் கேட்க முடியும், அவன் அவரைத் தூரத்திலிருந்து பார்க்க வேண்டியதில்லை. இந்த மாம்சம் மனுஷனால் அணுகக்கூடியதாக உணர்கிறது. இது தொலைவில் இருப்பதாகவோ அல்லது புரிந்துகொள்ள இயலாததாகவோ இல்லாமல், கண்டும் தொட்டும் உணரக்கூடியதாக இருக்கிறது, ஏனென்றால் இந்த மாம்சம் மனுஷனுடைய அதே உலகில் உள்ளது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 120
மாம்சத்தில் வாழ்பவர்கள் எல்லோரும், தங்கள் மனநிலையை மாற்றுவதற்கு பின்தொடர்வதற்கான இலக்குகள் தேவைப்படுகின்றன, தேவனை அறிந்துகொள்வதற்கு உண்மையான செயல்களையும், தேவனுடைய உண்மையான முகத்தையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இரண்டையும் மாம்சமான தேவனுடைய மாம்சத்தால் மாத்திரமே அடைய முடியும். மேலும் இரண்டையும் சாதாரண மற்றும் உண்மையான மாம்சத்தால் மாத்திரமே நிறைவேற்ற முடியும். இதனால்தான் மனுஷனாக அவதரிப்பது அவசியமானதாகும். இது சீர்கெட்ட மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது. ஜனங்கள் தேவனை அறிந்துகொள்ள வேண்டியதிருப்பதால், தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வங்களின் உருவங்கள் அவர்களுடைய இருதயங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் சீர்கேடான மனநிலையைப் போக்க வேண்டியதிருப்பதால், அவர்கள் முதலில் தங்கள் சீர்கேடான மனநிலையை அறிந்துகொள்ள வேண்டும். ஜனங்களின் இருதயங்களிலிருந்து தெளிவற்ற தெய்வங்களின் உருவங்களை அகற்றுவதற்கான கிரியையை மனுஷன் மட்டுமே செய்தால், அவன் சரியான பலனை அடையத் தவறிவிடுவான். ஜனங்களின் இருதயங்களில் காணப்படும் தெளிவற்ற தெய்வங்களின் உருவங்களை வார்த்தைகளால் மாத்திரமே, வெளிப்படுத்தவோ, நீக்கவோ அல்லது முழுமையாக அப்புறப்படுத்தவோ முடியாது. அவ்வாறு செய்தால், ஆழமாக வேரூன்றப்பட்ட இந்த விஷயங்களை ஜனங்களிடமிருந்து அகற்றுவது இன்னும் சாத்தியமாக இருக்காது. நடைமுறை தேவன் மற்றும் தேவனுடைய உண்மையான உருவம் ஆகியவற்றைக் கொண்டும், ஜனங்களைப் படிப்படியாகத் தங்களை அறிந்துகொள்ள வைப்பதன் மூலமாகவும், இந்தத் தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை மாற்றுவதன் மூலமாக மட்டுமே சரியான பலனை அடைய முடியும். மனுஷன் தான் கடந்த காலங்களில் தேடிய தேவன் தெளிவற்றவராகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவும் இருப்பதை உணர்ந்துகொள்கிறான். இந்தத் பலனை ஆவியானவரின் நேரடி தலைமையினாலோ, ஒரு குறிப்பிட்ட நபரின் போதனைகளினாலோ அல்லாமல், மாம்சமான தேவனாலேயே அடைய முடியும். மாம்சமான தேவன் தமது கிரியையை அதிகாரப்பூர்வமாகச் செய்யும்போது, மனுஷனுடைய கருத்துக்கள் வெளியரங்கமாக்கப்படுகின்றன. ஏனென்றால் மாம்சமான தேவனுடைய இயல்பான தன்மையும் யதார்த்தமும் மனுஷனுடைய கற்பனையில் காணப்படும் தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனுக்கு நேர்மாறானவையாக இருக்கின்றன. மாம்சமான தேவனுக்கு நேர்மாறாக இருக்கும்போது மட்டுமே மனுஷனுடைய உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். மாம்சமான தேவனுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், மனுஷனுடைய கருத்துக்களை வெளிப்படுத்த இயலாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரதிபலிப்புப் படலம் என்ற யதார்த்தம் இல்லாமல், தெளிவற்ற காரியங்களை வெளிப்படுத்த முடியாது. இந்த கிரியையைச் செய்வதற்கு யாராலும் வார்த்தைகளைப் பயன்படுத்த முடியாது. வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த கிரியையை யாராலும் தெளிவாக பேசவும் முடியாது. தேவனால் மாத்திரமே தமது சொந்தக் கிரியையைச் செய்ய முடியும். வேறு யாராலும் அவர் சார்பாக இந்தக் கிரியையைச் செய்ய முடியாது. மனுஷனுடைய பாஷை எவ்வளவு வளமையாக இருந்தாலும் சரி, தேவனுடைய யதார்த்தத்தையும் இயல்பையும் அவனால் தெளிவாகப் பேச முடியாது. மனுஷனால் தேவனை மிகவும் நடைமுறையில் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். மேலும் தேவன் மனுஷர் நடுவே தனிப்பட்ட முறையில் கிரியை செய்து, தமது உருவத்தையும் தாம் உண்டென்பதையும் முழுமையாக வெளிப்படுத்தினால் மாத்திரமே, அவனால் அவரை மிகவும் தெளிவாகப் பார்க்க முடியும். மாம்சத்தாலான எந்த மனுஷனாலும் இந்த பலனை அடைய முடியாது. நிச்சயமாகவே, தேவனுடைய ஆவியானவராலும் இந்தப் பலனை அடைய முடியாது. சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து சீர்கெட்ட மனுஷனை தேவனால் இரட்சிக்க முடியும், ஆனால் இந்தக் கிரியையை தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக நிறைவேற்ற முடியாது. மாறாக, தேவனுடைய ஆவியானவர் அணிந்திருக்கும் மாம்சத்தினால், மாம்சமான தேவனுடைய மாம்சத்தினால் மட்டுமே செய்ய முடியும். இந்த மாம்சம் மனுஷனாகவும், தேவனாகவும் இருக்கிறது, சாதாரண மனிதத்தன்மை கொண்ட ஒரு மனுஷனாகவும், முழு தெய்வீகத்தன்மை கொண்ட தேவனாகவும் இருக்கிறது. ஆகையால், இந்த மாம்சம் தேவனுடைய ஆவியானவர் இல்லை என்றபோதிலும், ஆவியானவரிலிருந்து பெரிதும் மாறுபட்டது என்றபோதிலும், ஆவியானவராகவும் மாம்சமாகவும் இருக்கும் மாம்சமான தேவனே இன்னும் மனுஷனை இரட்சிக்கிறார். அவர் எவ்வாறு அழைக்கப்பட்டாலும் சரி, இறுதியில் தேவனே மனுக்குலத்தை இரட்சிக்கிறவராக இருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்திலிருந்து பிரிக்க இயலாதவராக இருப்பதால், மாம்சத்தின் கிரியையும் தேவனுடைய ஆவியானவரின் கிரியையாக இருக்கிறது. இந்தக் கிரியை ஆவியானவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி செய்யப்படவில்லை, ஆனால் மாம்சத்தின் அடையாளத்தைப் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட வேண்டிய கிரியைக்கு மனுஷனாக அவதரிக்கத் தேவவையில்லை. மாம்சம் செய்ய வேண்டிய கிரியையை ஆவியானவரால் நேரடியாகச் செய்ய முடியாது. மாம்சமான தேவனால் மட்டுமே செய்ய முடியும். இந்தக் கிரியைக்கு இதுதான் தேவைப்படுகிறது. இதுதான் சீர்கெட்ட மனுக்குலத்திற்குத் தேவைப்படுகிறது. தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களில், ஒரே ஒரு கட்டம் மட்டுமே ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டது. மீதமுள்ள இரண்டு கட்டங்களும் மாம்சமான தேவனால் செய்யப்படுகின்றன, ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஆவியானவரால் செய்யப்பட்ட நியாயப்பிரமாண காலத்தின் கிரியை மனுஷனுடைய சீர்கேடான மனநிலையை மாற்றுவதில் ஈடுபடவில்லை. தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவுக்கு எந்த தொடர்புடையதாகவும் இருக்கவில்லை. ஆனாலும், கிருபையின் காலத்திலும், ராஜ்யத்தின் காலத்திலும் தேவனுடைய மாம்சத்தின் கிரியையானது மனுஷனுடைய சீர்கேடான மனநிலையுடனும், தேவனைப் பற்றிய அறிவுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் இது இரட்சிப்பின் கிரியையின் முக்கியமான பகுதியாகும். ஆகையால், சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகமாக தேவைப்படுகிறது. மேலும் மாம்சமான தேவனுடைய நேரடி கிரியையும் அதிகமாக தேவைப்படுகிறது. மனுஷனை வழிநடத்துவதற்கும், அவனை ஆதரிப்பதற்கும், அவனுக்குத் தண்ணீர் கொடுப்பதற்கும், அவனைப் போஷிப்பதற்கும், அவனை நியாயந்தீர்ப்பதற்கும் சிட்சிப்பதற்கும் மாம்சமான தேவன் தேவைப்படுகிறார். மேலும் மாம்சமான தேவனிடமிருந்து அவனுக்கு அதிக கிருபையும், மாபெரும் மீட்பும் தேவைப்படுகிறது. மாம்சத்தில் உள்ள தேவனால் மட்டுமே மனுஷனுடைய ஆப்த நண்பராகவும், மனுஷனுடைய மேய்ப்பராகவும், மனுஷனுடைய தற்போதைய சகாயமாகவும் இருக்க முடியும். இவையெல்லாம் இன்றைக்கும் கடந்த காலங்களிலும் மாம்சத்தில் மனுஷனாய் அவதரிப்பதன் அவசியமாக இருக்கிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 121
தேவனுடைய சகல சிருஷ்டிகளிலும் மிகவும் உயர்ந்தவனான மனுஷன் சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கிறான். ஆகையால் மனுஷனுக்கு தேவனுடைய இரட்சிப்பு தேவைப்படுகிறது. தேவனுடைய இரட்சிப்பின் இலக்கு மனுஷனே தவிர, சாத்தான் அல்ல. இரட்சிக்கப்படுவது மனுஷனுடைய மாம்சமும், மனுஷனுடைய ஆத்துமாவுமே தவிர, பிசாசு அல்ல. தேவன் முற்றிலுமாக நிர்மூலமாக்குவதின் இலக்காக சாத்தான் இருக்கிறான். மனுஷன் தேவனுடைய இரட்சிப்பின் இலக்காக இருக்கிறான். மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்துள்ளது. ஆகையால் முதலில் இரட்சிக்கப்படுவது மனுஷனுடைய மாம்சமாக இருக்க வேண்டும். மனுஷனுடைய மாம்சமானது மிகவும் ஆழமாக சீர்கேடடைந்துள்ளது. இது தேவனை எதிர்க்கும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வாறே இது தேவன் இருக்கிறார் என்பதை வெளிப்படையாக எதிர்க்கவும் மறுக்கவும் செய்கிறது. இந்த சீர்கேடான மாம்சம் மிகவும் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது. மாம்சத்தின் சீர்கேடான மனநிலையை சரிக்கட்டுவதையோ மாற்றுவதையோ காட்டிலும் கடினமானது வேறு எதுவுமில்லை. தொல்லைகளைத் தூண்டுவதற்காகவே மனுஷனுடைய மாம்சத்திற்குள் சாத்தான் வருகிறான். தேவனுடைய கிரியையைத் தொந்தரவு செய்வதற்காகவும் தேவனுடைய திட்டத்தை நாசமாக்குவதற்காகவும் மனுஷனுடைய மாம்சத்தைப் பயன்படுத்துகிறான். இவ்வாறு மனுஷன் சாத்தானாக மாறி, தேவனுக்கு சத்துருவாகிவிட்டான். மனுஷன் இரட்சிக்கப்படுவதற்கு, அவன் முதலில் வெல்லப்பட வேண்டும். ஏனென்றால் தேவன் ஜெயங்கொள்வதற்காக எழுந்தருளி, தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்வதற்காகவும், சாத்தானுடன் யுத்தம் செய்வதற்காகவும் மாம்சத்திற்குள் வருகிறார். சீர்கெட்டுப்போன மனுஷனுடைய இரட்சிப்பும், அவருக்கு எதிராகக் கலகம் செய்யும் சாத்தானின் தோல்வியும் அழிவுமே அவரது நோக்கமாகும். மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையின் மூலம் அவர் சாத்தானை தோற்கடிக்கிறார், அதே நேரத்தில் சீர்கெட்ட மனுக்குலத்தை அவர் இரட்சிக்கிறார். இவ்வாறு, இது ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்களை அடையும் ஒரு கிரியையாக இருக்கிறது. அவர் மாம்சத்தில் கிரியை செய்கிறார், மாம்சத்தில் பேசுகிறார், மனுஷனுடன் சிறப்பாக செயல்படுவதற்கும், மனுஷனைச் சிறப்பாக ஜெயங்கொள்வதற்கும் மாம்சத்தில் எல்லா கிரியைகளையும் செய்கிறார். தேவன் மாம்சமாகும் கடைசி முறையில், கடைசி நாட்களில் அவருடைய கிரியை மாம்சத்தில் முடிவடையும். அவர் எல்லா மனுஷர்களையும் வகைவாரியாக வகைப்படுத்துவார். அவருடைய முழு நிர்வாகத்தையும் முடிப்பார். மேலும் மாம்சத்தில் அவருடைய கிரியையை எல்லாம் முடிப்பார். பூமியில் அவருடைய கிரியை எல்லாம் முடிந்த பிறகு, அவர் முற்றிலும் ஜெயங்கொள்கிறவராக இருப்பார். மாம்சத்தில் கிரியை செய்யும் தேவன் மனுக்குலத்தை முழுமையாக ஜெயங்கொண்டு, மனுக்குலத்தை முழுமையாக ஆதாயப்படுத்துவார். அவருடைய முழு நிர்வாகமும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்று அர்த்தமல்லவா? தேவன் மாம்சத்தில் தமது கிரியையை முடித்து, சாத்தானை முழுமையாக தோற்கடித்து, ஜெயங்கொண்டவராக இருக்கும்போது, மனுஷனை மோசம்போக்க சாத்தானுக்கு மேற்கொண்டு வாய்ப்பு இருக்காது. மனுஷனை மீட்பதும், மனுஷனுடைய பாவங்களை மன்னிப்பதுமே தேவனுடைய முதல் மனுஷ அவதரிப்பின் கிரியையாகும். இப்போது இது மனுக்குலத்தை ஜெயங்கொண்டு, முழுவதும் ஆதாயப்படுத்தும் கிரியையாக இருக்கிறது, இதனால் சாத்தானுக்கு இனிமேல் அதன் கிரியையைச் செய்ய எந்த வழியும் இருக்காது. அது முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டுப் போய்விடும். தேவனே முற்றிலும் ஜெயங்கொள்கிறவராக இருப்பார். இதுவே மாம்சத்தின் கிரியையாகும். இது தேவனால் செய்யப்படும் கிரியையாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 122
தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களின் ஆரம்பக் கிரியையானது ஆவியினால் நேரடியாகச் செய்யப்பட்டது, மாம்சத்தால் அல்ல. ஆனாலும், தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களின் இறுதிக் கிரியையானது மாம்சமான தேவனால் செய்யப்படுகிறது, நேரடியாக ஆவியினாவரால் அல்ல. இடைப்பட்ட கட்டத்தின் மீட்பின் கிரியையும் மாம்சத்திலுள்ள தேவனால் செய்யப்பட்டது. முழு நிர்வாகக் கிரியைகளிலும், மனுஷனைச் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து இரட்சிப்பதே மிகவும் முக்கியமான கிரியையாகும். சீர்கெட்ட மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்வதே முக்கியமான கிரியையாகும். இதனால் ஜெயங்கொள்ளப்பட்ட மனுஷனுடைய இருதயத்தில் தேவனுடைய உண்மையான பயபக்தியானது மீட்டெடுக்கப்படுகிறது. மேலும் ஒரு சாதாரண வாழ்க்கையை அதாவது தேவனுடைய ஒரு சிருஷ்டியின் சாதாரண வாழ்க்கையை அடைய அவனுக்கு உதவுகிறது. இந்தக் கிரியை முக்கியமானதாகும், இது நிர்வாகக் கிரியையின் மையப் பகுதியாகும். இரட்சிப்பின் மூன்று கட்டங்களில், நியாயப்பிரமாண காலத்தின் முதல் கட்டமானது நிர்வாகக் கிரியைகளின் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. இது இரட்சிப்பின் கிரியையின் சிறிய தோற்றத்தை மாத்திரமே கொண்டிருந்தது. மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை இரட்சிக்கும் தேவனுடைய கிரியையின் ஆரம்பமாக இருக்கவில்லை. முதல் கட்டக் கிரியை ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டது. ஏனென்றால், நியாயப்பிரமாணத்தின் கீழ், மனுஷன் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதை மாத்திரமே அறிந்திருந்தான், மனுஷனிடம் அதிக சத்தியமில்லை, நியாயப்பிரமாண காலத்தின் கிரியைகள் மனுஷனின் மனநிலையின் மாற்றங்களோடு தொடர்புடையவையாகவும் இல்லை, மேலும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை எவ்வாறு இரட்சிப்பது என்ற கிரியையைப் பற்றி அக்கறை கொண்டதாகவும் இல்லை. இவ்வாறு தேவனுடைய ஆவியானவர் மனுஷனுடைய சீர்கேடான மனநிலையைப் பற்றி அக்கறை கொள்ளாத மிகவும் எளிதான இந்தக் கட்டக் கிரியையை செய்து முடித்தார். இந்தக் கட்டக் கிரியையானது நிர்வாகத்தின் மையத்துடன் சற்றுத் தொடர்புடையதாக இருந்தது. மேலும் இது மனுஷனுடைய இரட்சிப்பின் அதிகாரப்பூர்வக் கிரியையுடன் பெரிய தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால், தேவன் தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதற்கு மாம்சமாக மாற வேண்டிய அவசியமில்லாமல் போனது. ஆவியானவரால் செய்யப்படும் கிரியையானது மறைமுகமானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கிறது. மேலும் இது மனுஷனை மிகவும் பயமுறுத்துவதாகவும், அவனால் அணுக முடியாததாகவும் இருக்கிறது. இரட்சிப்பின் கிரியையை நேரடியாகச் செய்வதற்கு ஆவியானவர் பொருத்தமானவர் அல்ல, மனுஷனுக்கு நேரடியாக ஜீவனை அளிப்பதற்கும் பொருத்தமானவர் அல்ல. மனுஷனுக்கு மிகவும் பொருத்தமானது என்னவென்றால் ஆவியின் கிரியையை மனுஷனுக்கு நெருக்கமான ஒரு அணுகுமுறையாக மாற்றுவதேயாகும். அதாவது, மனுஷனுக்கு மிகவும் பொருத்தமானது எதுவென்றால் தேவன் தமது கிரியையைச் செய்வதற்கு ஒரு சாதாரண, இயல்பான மனுஷனாக மாறுவதேயாகும். தேவன் தமது கிரியையில் ஆவியானவரின் இடத்தைப் பிடிக்க மனுஷனாக அவதரிக்க வேண்டியதிருக்கிறது. மேலும் மனுஷனைப் பொறுத்தவரை, தேவன் கிரியை செய்வதற்கு இதைவிடப் பொருத்தமான வழி இல்லை. இந்த மூன்று கட்டக் கிரியைகளில், இரண்டு கட்டங்கள் மாம்சம் மூலமாகச் செய்யப்படுகின்றன. மேலும் இந்த இரண்டு கட்டங்களும் நிர்வாகக் கிரியையின் முக்கியக் கட்டங்களாக இருக்கின்றன. இரண்டு மனுஷ அவதரிப்புகளும் ஒன்றுக்கொன்று இணக்கமுள்ளவையாகும். இவை ஒன்றுக்கொன்று பரிபூரணமாக இணங்கி இருக்கின்றன. தேவன் மனுஷனாக அவதரித்ததின் முதல் கட்டம் இரண்டாம் கட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது. மேலும் தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளும் ஒரு முழுமையை உருவாக்குகின்றன எனவும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இல்லை என்றும் கூறலாம். தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு கட்டங்களும் அவருடைய மாம்சமான அடையாளத்தில் தேவனால் செய்யப்படுகின்றன, ஏனென்றால் அவை முழு நிர்வாகக் கிரியைக்கும் மிகவும் முக்கியமானவையாகும். தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளின் கிரியை இல்லாமல், முழு நிர்வாகக் கிரியைகளும் நிறுத்தப்படும், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை வெற்றுப் பேச்சாக மட்டுமே இருக்கும் என்று ஏறக்குறைய சொல்லலாம். இந்தக் கிரியை முக்கியமானதா இல்லையா என்பது மனுக்குலத்தின் தேவைகள், மனுக்குலத்தின் சீர்கேட்டின் யதார்த்தம் மற்றும் சாத்தானின் கீழ்ப்படியாமையின் கடுமைத்தன்மை மற்றும் கிரியையின் இடையூறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். கிரியையைச் செய்யக்கூடிய சரியானவர், கிரியை செய்பவர் செய்யும் கிரியையின் தன்மை மற்றும் கிரியையின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறார். இந்த கிரியையின் முக்கியத்துவம் என்று வரும்போது, தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியை அல்லது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியை அல்லது மனுஷனால் செய்யப்படும் கிரியை ஆகியவற்றில் எந்தக் கிரியை முறையைப் பின்பற்றுவது என்பதன் அடிப்படையில், முதலில் அகற்றப்படுவது மனுஷனால் செய்யப்படும் கிரியையாகும். மேலும் கிரியையின் தன்மை மற்றும் மாம்சத்தின் கிரியைகளுக்கு எதிராக ஆவியானவரின் கிரியையின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையைக் காட்டிலும் மாம்சத்தால் செய்யப்படும் கிரியை மனுஷனுக்கு அதிக நன்மை பயக்கும் என்றும், அதிக நன்மைகளை வழங்கும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது. கிரியையை ஆவியானவர் செய்ய வேண்டுமா அல்லது மாம்சம் செய்ய வேண்டுமா என்று தேவன் தீர்மானித்த நேரத்தில் இதுவே தேவனுடைய சிந்தையாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டக் கிரியைக்கும் ஒரு முக்கியத்துவமும் ஒரு அடிப்படையும் உள்ளது. இவை ஆதாரமற்ற கற்பனைகளுமல்ல, இவை தன்னிச்சையாகச் செய்யப்படுபவையும் அல்ல. அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட ஞானம் உள்ளது. இதுவே தேவனுடைய எல்லாக் கிரியைகளுக்கும் பின்னால் உள்ள சத்தியமாகும். குறிப்பாக, மாம்சமான தேவன் தனிப்பட்ட முறையில் மனுஷர் நடுவே கிரியை செய்வதனால், இதுபோன்ற ஒரு மகத்தான கிரியையில் தேவனுடைய திட்டம் இன்னும் அதிகமாக உள்ளது. ஆகையால், தேவனுடைய ஞானமும், அவருடைய தன்மையின் முழுமையும் அவருடைய கிரியையில் உள்ள ஒவ்வொரு செயலிலும், சிந்தனையிலும், யோசனையிலும் பிரதிபலிக்கின்றன. இது தேவனுடைய மிகவும் உறுதியான மற்றும் முறையான இருப்பாகும். இந்த நுட்பமான சிந்தனைகளும் கருத்துக்களும் மனுஷனுக்குக் கற்பனை செய்து பார்ப்பதற்கும், நம்புவதற்கும் கடினமானதாகும், மேலும், அறிந்துகொள்வதற்கும் மனுஷனுக்கு கடினமானதாகும். மனுஷனால் செய்யப்படும் கிரியையானது பொதுவான கொள்கையின்படி செய்யப்படுகிறது, இது மனுஷனுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கின்றது. ஆனாலும், தேவனுடைய கிரியையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. தேவனுடைய செயல்கள் பெரியவையாகவும், தேவனுடைய கிரியை ஒரு பெரிய அளவில் இருக்கின்றபோதிலும், அவற்றின் பின்னால் மனுஷனால் கற்பனை செய்து பார்க்க முடியாத பல நுணுக்கமான மற்றும் துல்லியமான திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளன. அவருடைய ஒவ்வொரு கட்டக் கிரியையும் கொள்கையின்படி செய்யப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு கட்டத்திலும் மனுஷ பாஷையால் பேச முடியாத பல காரியங்களும் உள்ளன. இவை மனுஷனால் பார்க்க முடியாத காரியங்களாகும். இது ஆவியானவரின் கிரியையாகவோ அல்லது மாம்சமான தேவனுடைய கிரியையாகவோ இருந்தாலும், ஒவ்வொன்றும் அவருடைய கிரியையின் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவர் ஆதாரமின்றி கிரியை செய்வதில்லை, அவர் அற்பமான கிரியையைச் செய்வதில்லை. ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்யும்போது, அவருடைய இலக்குகளும் உடன் இருக்கின்றன. அவர் கிரியை செய்வதற்காக மனுஷனாக மாறும்போது (அதாவது, அவர் தமது வெளிப்புறத் தோற்றத்தை மாற்றும்போது), அதில் அவருடைய நோக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர் வேறு எதற்காகத் தமது அடையாளத்தை உடனடியாக மாற்றுவார்? அவர் வேறு எதற்காகத் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் நபராக உடனடியாக மாறி, பாடுகளை அனுபவிக்க வேண்டும்?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 123
மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை மிகவும் முக்கியமானதாகும், இது கிரியையைப் பற்றி பேசப்படுகிறது. மேலும், கிரியையை இறுதியில் முடிப்பவர் மாம்சமான தேவனேயன்றி, ஆவியானவர் அல்ல. தேவன் அறியப்படாத நேரத்தில் பூமிக்கு வந்து மனுஷனிடம் தோன்றி, அதன்பிறகு அவர் மனுக்குலம் முழுவதையும் தனிப்பட்ட முறையில் நியாயந்தீர்ப்பார், யாரையும் விட்டு வைக்காமல் அவர்களை ஒவ்வொருவராகச் சோதிப்பார் என்று சிலர் நம்புகிறார்கள். இவ்விதமாகச் சிந்திப்பவர்களுக்கு மனுஷ அவதரிப்பின் இந்த கட்டக் கிரியையைத் தெரியாது. தேவன் மனுஷனை ஒவ்வொருவராக நியாயந்தீர்ப்பதில்லை, மனுஷனை ஒவ்வொருவராகச் சோதிப்பதில்லை. அவ்வாறு செய்வது நியாத்தீர்ப்பின் கிரியையாக இருக்காது. சகல மனுஷரின் சீர்கேடும் ஒன்றுபோல இல்லையா? சகல மனுஷரின் சாரம்சமும் ஒன்றுபோல இல்லையா? மனுக்குலத்தின் சீர்கேடான சாராம்சம், சாத்தானால் சீர்கேடடைந்த மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷனுடைய சகல பாவங்கள் ஆகியவையே நியாயந்தீர்க்கப்படுகின்றன. மனுஷனுடைய அற்பமான மற்றும் முக்கியத்துவமில்லாத தவறுகளை தேவன் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பின் கிரியை ஒரு மாதிரியாகும். இது குறிப்பாக ஒரு குறிப்பிட்ட நபருக்குச் செய்யப்படுவதில்லை. மாறாக, இது மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பையும் குறிப்பிடும் பொருட்டு ஒரு கூட்ட ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படும் கிரியையாகும். ஒரு கூட்ட ஜனங்களின் மீது தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதன் மூலம், மனுக்குலம் முழுவதின் கிரியையையும் குறிப்பிட மாம்சத்திலுள்ள தேவன் தமது கிரியையைப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு அது படிப்படியாகப் பரவுகிறது. இவ்வாறும் நியாயத்தீர்ப்பின் கிரியை இருக்கிறது. தேவன் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தையோ நியாயந்தீர்க்க மாட்டார். மாறாக, மனுக்குலம் முழுவதின் அநீதியையும் நியாயந்தீர்க்கிறார். அதாவது, உதாரணமாக, தேவனை மனுஷன் எதிர்ப்பது அல்லது அவர் மீது மனுஷனுக்கு காணப்படும் பக்தியின்மை அல்லது தேவனுடைய கிரியையை மனுஷன் இடையூறு செய்வது மற்றும் இதுபோன்ற பலவற்றை நியாயந்தீர்க்கிறார். தேவனை எதிர்க்கும் மனுக்குலத்தின் சாராம்சமே நியாந்தீர்க்கப்படுகிறது. இந்தக் கிரியை கடைசி நாட்களின் ஜெயங்கொள்ளும் கிரியையாகும். மனுஷனால் சாட்சிகூறப்படும் மாம்சமான தேவனுடைய கிரியையும் வார்த்தையுமே கடைசி நாட்களில் பெரிய வெண்மையான சிங்காசனத்திற்கு முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பின் கிரியையாகும், இது கடந்த காலங்களில் மனுஷனால் செய்யப்பட்டதாகும். தற்போது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியையானது பெரிய வெண்மையான சிங்காசனத்தின் முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பாகும். இன்றைய மாம்சமான தேவன் கடைசி நாட்களில் மனுக்குலம் முழுவதையும் நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இந்த மாம்சம், அவருடைய கிரியை, அவருடைய வார்த்தை மற்றும் அவருடைய முழு மனநிலை ஆகியவை சேர்ந்துதான் அவருடைய முழுமையாகும். அவருடைய கிரியையின் எல்லை குறைவாக இருக்கின்றபோதிலும், முழு பிரபஞ்சத்தையும் நேரடியாக ஈடுபடுத்துவதில்லை என்றபோதிலும், நியாயத்தீர்ப்பின் கிரியையின் சாராம்சம் என்பது முழு மனுக்குலத்தின் நேரடி நியாயத்தீர்ப்பாகும். இது சீனாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்காகவோ அல்லது சிறு எண்ணிக்கையிலான ஜனங்களுக்காகவோ செய்யப்படும் நியாயத்தீர்ப்பு அல்ல. மாம்சத்திலுள்ள தேவன் கிரியை செய்யும் போது, இந்தக் கிரியையின் நோக்கம் முழு பிரபஞ்சத்தையும் ஈடுபடுத்தவில்லை என்றபோதிலும், அது முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் குறிக்கிறது. மேலும், அவர் தமது மாம்சத்தின் கிரியையின் எல்லைக்குள்ளாகவே கிரியையை முடித்த பிறகு, இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலைத் தொடர்ந்து இயேசுவைப் பற்றிய சுவிசேஷமானது பிரபஞ்சம் முழுவதும் பரவியதைப் போலவே அவர் இந்தக் கிரியையை உடனடியாக முழு பிரபஞ்சத்திற்கும் விரிவுபடுத்துவார். இது ஆவியானவரின் கிரியையாக இருந்தாலும் அல்லது மாம்சத்தின் கிரியையாக இருந்தாலும், இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் செய்யப்படும் கிரியையாக இருக்கிறது, ஆனால் இது முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் குறிக்கிறது. கடைசி நாட்களில், தேவன் தமது மாம்சமான அடையாளத்தில் தோன்றி தமது கிரியையைச் செய்கிறார். மேலும், மாம்சத்திலுள்ள தேவனே பெரிய வெள்ளைச் சிங்காசனத்தின் முன்பாக மனுஷனை நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். அவர் ஆவியானவராக இருந்தாலும் அல்லது மாம்சமாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறவர் தான் கடைசி நாட்களில் மனுக்குலத்தை நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இது அவருடைய கிரியையின் அடிப்படையில் தான் வரையறுக்கப்படுகிறது. இது அவருடைய வெளிப்புறத் தோற்றத்தினாலோ அல்லது பல காரணிகளின்படியோ வரையறுக்கப்படுவதில்லை. மனுஷன் இந்த வார்த்தைகளைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டிருக்கின்றபோதிலும், மாம்சமான தேவனுடைய நியாயத்தீர்ப்பு குறித்த உண்மையையும், முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொள்வதையும் யாராலும் மறுக்க முடியாது. மனுஷன் அதைப் பற்றி என்ன நினைத்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மைகள் உண்மைகளாகவே இருக்கின்றன. “தேவனால் கிரியை செய்யப்படுகிறது, ஆனால் மாம்சம் தேவன் அல்ல” என்று யாரும் சொல்ல முடியாது. இது முட்டாள்தனம், ஏனென்றால் இந்தக் கிரியையை மாம்சத்திலுள்ள தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. இந்தக் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டதால், இந்தக் கிரியையைத் தொடர்ந்து, மனுஷர் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை இரண்டாவது முறையாகத் தோன்றாது. தேவன் தமது இரண்டாவது மனுஷ அவதரிப்பில் முழு நிர்வாகத்தின் அனைத்துக் கிரியைகளையும் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். மேலும், தேவனுடைய கிரியையின் நான்காவது கட்டம் இருக்காது. ஏனென்றால், மாம்சமான மற்றும் சீர்கேடான மனுஷனே நியாயந்தீர்க்கப்படுகிறான், நேரடியாக நியாயந்தீர்க்கப்படும் சாத்தானுடைய ஆவி அல்ல, ஆகையால் நியாயத்தீர்ப்பின் கிரியை ஆவிக்குரிய உலகில் செய்யப்படாமல், மனுஷர் நடுவே செய்யப்படுகிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 124
மனுஷனுடைய மாம்சத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்ப்பதற்கான கிரியையைச் செய்வதற்கு மாம்சத்திலுள்ள தேவனை விட வேறு யாரும் பொருத்தமானவராகவும் தகுதியானவராகவும் இல்லை. நியாயத்தீர்ப்பானது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டிருந்தால், அது பரந்ததாக இருந்திருக்காது. மேலும், இதுபோன்ற கிரியையை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும், ஏனென்றால் ஆவியானவரால் மனுஷனிடம் நேரில் வரமுடியாது. இதன் காரணமாக, பலன்கள் உடனடியாக கிடைக்காது, மனுஷனால் தேவனுடைய இடறலடைய இயலாத மனநிலையை மிகவும் தெளிவாகப் பார்க்கவும் முடியாது. மாம்சத்திலுள்ள தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்த்தால் மாத்திரமே, சாத்தானை முழுமையாகத் தோற்கடிக்க முடியும். சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட மனுஷனைப் போலவே இருக்கும் மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனுடைய அநீதியை நேரடியாக நியாயந்தீர்க்க முடியும். இது அவருடைய இயல்பான பரிசுத்தத்தன்மையின் மற்றும் அவருடைய தெய்வீகத்தன்மையின் அடையாளமாக இருக்கிறது. தேவன் மாத்திரமே மனுஷனை நியாயந்தீர்க்க தகுதியுடையவர், நியாயந்தீர்க்கும் நிலையில் இருக்கிறார், ஏனென்றால் அவர் சத்தியத்தையும் நீதியையும் கொண்டிருக்கிறார், ஆகவே அவரால் மனுஷனை நியாயந்தீர்க்க முடிகிறது. சத்தியமும் நீதியும் இல்லாதிருக்கிறவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்க தகுதியற்றவர்கள். இந்தக் கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டிருந்தால், அது சாத்தான் மீதான ஜெயத்தைக் குறிக்காது. ஆவியானவர் மனுஷர்களை விட இயல்பாகவே உயர்ந்தவர், தேவனுடைய ஆவியானவர் இயல்பாகவே பரிசுத்தமானவர், மாம்சத்தின் மீது வெற்றிசிறக்கிறார். இந்தக் கிரியையை ஆவியானவர் நேரடியாகச் செய்திருந்தால், மனுஷனுடைய கீழ்ப்படியாமை அனைத்தையும் அவரால் நியாயந்தீர்க்க முடியாது, மேலும் மனுஷனுடைய எல்லா அநீதியையும் வெளிப்படுத்த முடியாது. நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்கள் மூலமாகவும் செய்யப்படுவதனால், மனுஷனிடம் ஆவியானவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் கிடையாது. ஆகையால், மனுஷனுடைய அநீதியைச் சிறந்த முறையில் வெளிப்படுத்த ஆவியானவரால் முடியாது, இதுபோன்ற அநீதியை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. மாம்சமான தேவன் அவரை அறியாத அனைவருக்கும் சத்துருவாக இருக்கிறார். மனுஷனுடைய கருத்துக்களையும், அவரை எதிர்ப்பதையும் நியாயந்தீர்ப்பதன் மூலம், மனுக்குலத்தின் கீழ்ப்படியாமை அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார். ஆவியானவரின் கிரியையின் பலன்களைக் காட்டிலும் மாம்சத்தில் அவர் செய்த கிரியையின் பலன்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. ஆகையால், மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பும் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படாமல், மாம்சமான தேவனுடைய கிரியையால் செய்யப்படுகிறது. மாம்சத்திலுள்ள தேவனை மனுஷனால் காணவும், தொட்டுணரவும் முடியும். மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்ள முடியும். மாம்சத்திலுள்ள தேவனுடனான தனது உறவில், மனுஷன் எதிர்ப்பிலிருந்து கீழ்ப்படிதலுக்கும், துன்புறுத்துதலிலிருந்து ஏற்றுக்கொள்ளுதலுக்கும், கருத்துக்களிலிருந்து அறிவுக்கும் மற்றும் புறக்கணிப்பதிலிருந்து அன்புக்கும் முன்னேறுகிறான். இவைதான் மாம்சமான தேவனுடைய கிரியையின் பலன்களாகும். மனுஷன் அவருடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமாக மாத்திரமே இரட்சிக்கப்படுகிறான். மனுஷன் அவருடைய வாயின் வார்த்தைகளின் மூலமாக அவரைப் படிப்படியாக அறிந்துகொள்கிறான். மனுஷன் அவரை எதிர்க்கும்போது அவரால் ஜெயங்கொள்ளப்படுகிறான். அவருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ளும் போது அவர் வழங்கும் ஜீவனைப் பெறுகிறான். இந்தக் கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியையாகும், ஆனால் ஆவியானவர் என்ற அடையாளத்திலுள்ள தேவனுடைய கிரியை அல்ல. மாம்சமான தேவன் செய்த கிரியை மாபெரும் கிரியையாகவும், மிகவும் ஆழமான கிரியையாகவும் இருக்கிறது. தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களின் முக்கியமான பகுதியானது மாம்சமான தேவன் செய்யும் கிரியையின் இரண்டு கட்டங்களாகும். மனுஷனுடைய ஆழமான சீர்கேடானது மாம்சமான தேவனுடைய கிரியைக்குப் பெரும் தடையாக இருக்கின்றது. குறிப்பாக, கடைசிக்கால ஜனங்களின் மீது செய்யப்படும் கிரியைகள் மிகவும் கடினமானவையாகவும், சூழல் விரோதமானதாகவும், ஒவ்வொரு வகையான நபரின் திறமையும் மிகவும் மோசமானதாகவும் இருக்கின்றன. ஆனாலும், இந்தக் கிரியையின் முடிவில், எந்தக் குறைபாடுகளும் இல்லாமல், அது இன்னும் சரியான பலனை அடையும். இது மாம்சத்தின் கிரியையின் பலனாகும். ஆவியின் கிரியையைக் காட்டிலும் இந்தப் பலன் மிகவும் வல்லமையானதாகும். தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்கள் மாம்சத்தில் செய்து முடிக்கப்படும். அவை மாம்சமான தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும். மிகவும் அத்தியாவசியமான மற்றும் மிகவும் முக்கியமான கிரியை மாம்சத்தில் செய்யப்படுகிறது. மனுஷனுடைய இரட்சிப்பானது மாம்சத்திலுள்ள தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும். மாம்சத்திலுள்ள தேவன் மனுஷனுடன் தொடர்பில்லாதவர் என்று முழு மனுக்குலமும் உணர்கின்றபோதிலும், உண்மையில் இந்த மாம்சமானது மனுக்குலம் முழுவதின் தலைவிதியுடனும் வாழ்வுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 125
தேவனுடைய ஒவ்வொரு கட்டக் கிரியையும் முழு மனுக்குலத்துக்காகவும் செயல்படுத்தப்பட்டு, மனுக்குலம் முழுவதையும் வழிநடத்துகிறது. இது மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையாக இருக்கின்றபோதிலும், இது இன்னும் முழு மனுக்குலத்தையும் வழிநடத்துகிறது. அவர் முழு மனுக்குலத்திற்கும் தேவனாக இருக்கிறார். சிருஷ்டிக்கப்பட்ட மற்றும் சிருஷ்டிக்கப்படாத எல்லா ஜீவராசிகளுக்கும் தேவனாக இருக்கிறார். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்றபோதிலும், இந்தக் கிரியையின் நோக்கமும் குறைவாக இருக்கின்றபோதிலும், அவர் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாறும் ஒவ்வொரு முறையும், அவர் தமது கிரியைக்கான ஒரு மிகவும் உயர்ந்த பிரதிநிதித்துவமான நோக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் கிரியை செய்ய எளிய மற்றும் சாதராணமான ஜனக்கூட்டத்தைத் தெரிந்துகொள்வதில்லை. மாறாக, அவருடைய கிரியைக்கான நோக்கத்திற்காக மாம்சத்தில் அவர் செய்யும் கிரியைக்கான பிரதிநிதிகளாக இருக்கத் தகுதியான ஒரு ஜனக்கூட்டத்தைத் தெரிந்துகொள்வார். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியைக்கான நோக்கம் வரம்புக்குட்பட்டதாக இருப்பதால், குறிப்பாக அவருடைய மாம்சமான மாம்சத்திற்காக ஆயத்தப்படுத்தப்படுவதால், இந்த ஜனக்கூட்டம் தெரிந்துகொள்ளப்படுகிறது, குறிப்பாக மாம்சத்தில் அவர் செய்யும் கிரியைக்காகத் தெரிந்துகொள்ளப்படுகிறது. தேவன் தமது கிரியைக்கான நோக்கத்தைத் தேர்ந்தெடுப்பது ஆதாரமற்றது அல்ல, ஆனால் இது கொள்கையின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது: கிரியைக்கான நோக்கம் மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியைக்கு நன்மை பயக்க வேண்டும், மேலும் மனுக்குலம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக, இயேசுவின் தனிப்பட்ட மீட்பை ஏற்றுக்கொள்வதில் மனுக்குலம் முழுவதையும் யூதர்களால் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. மேலும், மாம்சமான தேவனுடைய தனிப்பட்ட ஜெயங்கொள்ளுதலை ஏற்றுக்கொள்வதில் மனுக்குலம் முழுவதையும் சீனர்களால் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. மனுக்குலம் முழுவதையும் யூதர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒரு அடிப்படை நோக்கம் உள்ளது. தேவனுடைய தனிப்பட்ட ஜெயங்கொள்ளுதலை ஏற்றுக்கொள்வதில் மனுக்குலம் முழுவதையும் சீனர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ஒரு அடிப்படை நோக்கம் உள்ளது. யூதர்களிள் நடுவே செய்யப்படும் மீட்பின் கிரியையைக் காட்டிலும் அதிகமாக வேறு எதுவும் மீட்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவில்லை. சீனர்கள் நடுவில் செய்யப்படும் ஜெயங்கொள்ளுதல் கிரியையைக் காட்டிலும் அதிகமாக வேறு எதுவும் ஜெயங்கொள்ளுதல் கிரியையின் முழுமையையும் ஜெயங்கொள்ளுதலையும் வெளிப்படுத்தவில்லை. மாம்சமான தேவனுடைய கிரியையும் வார்த்தையும் சிறு ஜனக்கூட்டத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகத் தோன்றுகிறது, ஆனால் உண்மையில், இந்தச் சிறு ஜனக்கூட்டத்தின் நடுவே அவருடைய கிரியை முழு பிரபஞ்சத்தின் கிரியையாகவும், அவருடைய வார்த்தை மனுக்குலம் முழுவதையும் வழிநடத்துவதாகவும் இருக்கிறது. மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை முடிந்ததும், அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் செய்யும் கிரியையை அவர்கள் நடுவே பரப்ப ஆரம்பிப்பார்கள். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையைப் பற்றிய மிகச் சிறந்த காரியம் என்னவென்றால், அவரால் துல்லியமான வார்த்தைகளையும் அறிவுரைகளையும், அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு மனுக்குலத்திற்கான அவருடைய குறிப்பிட்ட சித்தத்தையும் விட்டுச்செல்ல இயலும். இதனால், அதன்பிறகு அவரைப் பின்பற்றுகிறவர்கள் மாம்சத்தில் செய்யும் அவருடைய எல்லாக் கிரியைகளையும், மனுக்குலம் முழுவதிற்குமான அவருடைய சித்தத்தையும் இதை ஏற்றுக்கொள்கின்றவர்களிடம் மிகவும் துல்லியமாகவும், உறுதியாகவும் பரப்ப இயலும். மனுஷர்கள் நடுவே மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியை மாத்திரமே தேவன் மனுஷனுடன் ஒன்றாக இருக்கிறார் மற்றும் ஒன்றாக சேர்ந்து ஜீவிக்கிறார் என்கிற உண்மையை மெய்யாகவே நிறைவேற்றுகிறது. தேவனுடைய முகத்தைக் காணவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், தேவனுடைய தனிப்பட்ட வார்த்தையைக் கேட்கவும் மனுஷனுடைய விருப்பத்தை இந்தக் கிரியை மாத்திரமே நிறைவேற்றுகிறது. யேகோவாவின் பின்புறம் மாத்திரமே மனுக்குலத்திற்குத் தோன்றிய போது மாம்சமான தேவன் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். மேலும், தெளிவற்ற தேவன் மீதான மனுக்குலத்தின் நம்பிக்கையின் காலத்தையும் அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். குறிப்பாக, கடைசியாக மாம்சமான தேவனுடைய கிரியையானது முழு மனுக்குலத்தையும் மிகவும் யதார்த்தமான, மிகவும் நடைமுறையான மற்றும் அழகான ஒரு காலத்திற்குக் கொண்டுவருகிறது. அவர் நியாயப்பிரமாணத்தின் மற்றும் கோட்பாட்டின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமின்றி, மிகவும் முக்கியமாக, உண்மையான மற்றும் சாதாரணமான, நீதியுள்ள மற்றும் பரிசுத்தமான, நிர்வாகத் திட்டத்தின் கிரியைகளைத் திறக்கும் மற்றும் மனுக்குலத்தின் மறைபொருட்களையும், போய்ச்சேருமிடத்தையும் விவரிக்கும், மனுக்குலத்தைச் சிருஷ்டித்து, நிர்வாகக் கிரியைகளை முடிவுக்குக் கொண்டுவரும், ஆயிரக்கணக்கான வருடங்களாக மறைந்திருக்கும் ஒரு தேவனை அவர் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார். அவர் தெளிவற்ற காலத்தை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் தேவனுடைய முகத்தைத் தேட விரும்பியும் காண முடியாத காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் சாத்தானுக்கு ஊழியம் செய்த காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவந்து, மனுக்குலம் முழுவதையும் ஒரு புதிய காலத்திற்குள் வழிநடத்துகிறார். இவையெல்லாம் தேவனுடைய ஆவியானவருக்குப் பதிலாக மாம்சத்திலுள்ள தேவனால் செய்யப்படும் கிரியையின் பலனாகும். தேவன் தம்முடைய மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் இனிமேல் இருப்பதும் இல்லாததும் போலத் தோன்றும் காரியங்களைத் தேடி அலைவதில்லை, தெளிவற்ற தேவனுடைய சித்தத்தை ஊகம் செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள். தேவன் மாம்சத்தில் தம்முடைய கிரியையைப் பரப்பும்போது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் மாம்சத்தில் செய்த கிரியையை எல்லா மதங்களிலும் மதப் பிரிவுகளிலும் அறிவிப்பார்கள். மேலும், அவர்கள் அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் மனுக்குலத்தின் காதுகளில் எடுத்துரைப்பார்கள். அவருடைய சுவிசேஷத்தைப் பெறுபவர்களால் கேட்கப்படுகின்ற அனைத்தும் அவருடைய கிரியையின் உண்மைகளாகவும், மனுஷனால் தனிப்பட்ட முறையில் காணக்கூடிய காரியங்களாகவும் இருக்கும், அவை உண்மைகளாக இருக்குமே தவிர, வதந்தியாக இருக்காது. இந்த உண்மைகள் அவர் கிரியையைப் பரப்புவதற்கான ஆதாரமாக இருக்கின்றன. இவை கிரியையைப் பரப்புவதற்கு அவர் பயன்படுத்தும் கருவிகளாகவும் இருக்கின்றன. ஜீவித்திருக்கிற உண்மைகள் இல்லாமல், அவருடைய சுவிசேஷம் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் பரவாது. உண்மைகள் இல்லாமல் மனுஷனுடைய கற்பனைகளைக் கொண்டு மட்டுமே, முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளும் கிரியையை அவரால் ஒருபோதும் செய்ய முடியாது. ஆவியானவர் மனுஷனால் தொட்டுணர முடியாதவராகவும், மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாதவராகவும் இருக்கிறார். தேவனுடைய கிரியையின் வேறு எந்தக் கூடுதல் ஆதாரத்தையோ அல்லது உண்மைகளையோ விட்டுச்செல்ல ஆவியானவரின் கிரியையால் முடியாது. தேவனுடைய உண்மையான முகத்தை மனுஷன் ஒருபோதும் காணமாட்டான். அவன் எப்போதும் இல்லாத ஒரு தெளிவற்ற தேவனையே நம்புவான். மனுஷன் ஒருபோதும் தேவனுடைய முகத்தைக் காணமாட்டான். தேவனால் தனிப்பட்ட முறையில் பேசப்படும் வார்த்தைகளையும் மனுஷன் ஒருபோதும் கேட்கமாட்டான். எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷனுடைய கற்பனைகள் வெறுமையாக உள்ளன, தேவனுடைய உண்மையான முகத்திற்கு அவை மாற்றாக முடியாது. தேவனுடைய இயல்பான மனநிலை மற்றும் தேவனுடைய கிரியை ஆகியவற்றை மனுஷனால் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. பரலோகத்திலுள்ள அதரிசனமான தேவனும், அவருடைய கிரியையும் மனுஷர் நடுவே தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்யும் மாம்சமான தேவனால் மட்டுமே பூமிக்குக் கொண்டுவர முடியும். இதுவே தேவன் மனுஷரிடம் தோன்றுவதற்கான மிகச் சிறந்த வழியாகும், இதில் மனுஷன் தேவனைப் பார்க்கிறான், தேவனுடைய உண்மையான முகத்தை அறிந்துகொள்கிறான். மாம்சமாகாத தேவனால் இதை அடைய முடியாது. இந்தக் கட்டத்தில் அவருடைய கிரியை செய்யப்பட்டதனால், தேவனுடைய கிரியை ஏற்கனவே சிறந்த பலனை அடைந்துள்ளது, மேலும் இது ஒரு முழுமையான ஜெயமாக இருக்கிறது. மாம்சத்தில் தேவனுடைய தனிப்பட்ட கிரியையானது ஏற்கனவே அவருடைய முழு நிர்வாகத்தின் தொண்ணூறு சதவீத கிரியைகளை முடித்துவிட்டது. இந்த மாம்சம் அவருடைய எல்லா கிரியைகளுக்கும் ஒரு சிறந்த துவக்கத்தையும், அவருடைய எல்லாக் கிரியைகளுக்கும் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது, மேலும் அவருடைய எல்லாக் கிரியைகளையும் அறிவித்துள்ளது. இந்தக் கிரியைகள் எல்லாவற்றிற்கும் கடைசி முழு நிறைவேறுதலையும் செய்துள்ளது. இனிமேல், தேவனுடைய நான்காவது கட்டக் கிரியையைச் செய்வதற்கு மற்றொரு மாம்சமான தேவன் இருக்க மாட்டார், மேலும் மூன்றாவது மாம்சமான தேவனுடைய எந்த அதிசயமான கிரியையும் ஒருபோதும் இருக்காது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 126
மாம்சத்தில் செய்யப்படும் தேவனுடைய ஒவ்வொரு கட்டக் கிரியையும் முழு காலத்திற்கும் அவருடைய கிரியையைக் குறிப்பிடுகிறது. இது மனுஷனுடைய கிரியையைப் போல ஒரு குறிப்பிட்ட காலத்தை குறிப்பிடுவதில்லை. ஆகையால், அவருடைய கடைசி மனுஷ அவதரிப்பின் கிரியையின் முடிவு என்றால் அவருடைய கிரியை ஒரு முழுமையான முடிவுக்கு வந்துவிட்டது என்று அர்த்தமல்ல, ஏனென்றால் அவர் மாம்சத்தில் செய்யும் கிரியை அவர் மாம்சத்தில் தமது கிரியையைச் செய்யும் காலத்தை மட்டுமே குறிப்பிடாமல், முழுக் காலத்தையும் குறிப்பிடுகிறது. அவர் மாம்சத்தில் இருக்கும் காலத்தில் அவர் முழுக் காலத்திலும் தமது கிரியையை முடிக்கிறார், அதன்பிறகு அது எல்லா இடங்களுக்கும் பரவுகிறது. மாம்சமான தேவன் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றிய பிறகு, அவர் தமது எதிர்காலக் கிரியைகளைத் தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் ஒப்படைப்பார். ஆகையால், முழுக் காலத்திலும் அவருடைய கிரியை தடையில்லாமல் செய்யப்படும். மனுஷ அவதரிப்பு காலம் முழுவதுக்குமான கிரியையானது முழு பிரபஞ்சத்திலும் பரவிய பிறகே முழுமையானதாகக் கருதப்படும். மாம்சமான தேவனுடைய கிரியை ஒரு புதிய யுகத்தைத் துவக்கி வைக்கிறது. அவருடைய கிரியையைத் தொடருபவர்கள் அவரால் பயன்படுத்தப்படுபவர்கள். மனுஷனால் செய்யப்படும் கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய ஊழியத்திற்குள் உள்ளன. இந்த எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது. மாம்சமான தேவன் தமது கிரியையைச் செய்வதற்காக வரவில்லை என்றால், மனுஷனால் பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது, ஒரு புதிய காலத்தைத் தொடங்கவும் முடியாது. மனுஷனால் செய்யப்படும் கிரியை வெறுமனே மனுஷனால் செய்யக்கூடிய கடமையின் எல்லைக்குள்ளேயே உள்ளது. இது தேவனுடைய கிரியையைக் குறிப்பிடவில்லை. மாம்சமான தேவனால் மட்டுமே அவர் வந்து செய்ய வேண்டிய கிரியையைச் செய்து முடிக்க முடியும். அவரைத் தவிர, அவர் சார்பாக இந்தக் கிரியையை யாராலும் செய்ய முடியாது. நிச்சயமாகவே, நான் மாம்சமான தேவனைக் குறித்தே பேசுகிறேன். இந்த மாம்சமான தேவன் முதலில் மனுஷனுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போகாத கிரியையின் ஒரு படிநிலையைச் செய்கிறார், அதன் பிறகு அவர் மனுஷனுடைய கருத்துக்களுக்கு இணங்காத அதிக கிரியைகளைச் செய்கிறார். மனுஷனை ஜெயங்கொள்வதுதான் கிரியையின் நோக்கமாகும். ஒருபுறம், தேவனுடைய மனுஷ அவதரிப்பு மனுஷனுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போவதில்லை, அது தவிர அவர் மனுஷனுடைய கருத்துக்களுக்கு இணங்காத அதிக கிரியைகளைச் செய்கிறார், ஆகையால் மனுஷன் அவரைப் பற்றி இன்னும் அதிகமான குறைகூறும் கருத்துக்களை உருவாக்கிக்கொள்கிறான். அவரைப் பற்றி எண்ணற்ற கருத்துக்களைக் கொண்ட ஜனங்கள் நடுவே அவர் ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்கிறார். அவர்கள் அவரை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் தமது ஊழியத்தை நிறைவேற்றியதும், எல்லா ஜனங்களும் அவருடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாவார்கள். இந்தக் கிரியையின் உண்மையானது சீனர்களுக்கு மத்தியில் பிரதிபலிப்பது மட்டுமின்றி, மனுக்குலம் முழுவதும் எவ்வாறு ஜெயங்கொள்ளப்படும் என்பதையும் இது குறிப்பிடுகிறது. இந்த ஜனங்கள் மீது அடையப்படும் பலன்கள் மனுக்குலம் முழுவதும் அடையப்படும் பலன்களுக்கு ஒரு முன்னோடியாகும். மேலும், எதிர்காலத்தில் அவர் செய்யும் கிரியையின் பலன்கள் இந்த ஜனங்கள் மீதான பலன்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியை மிகுந்த ஆரவாரத்துடன் தொடர்புடையதுமில்லை, அது தெளிவற்ற நிலையில் வைக்கப்படுவதுமில்லை. இதுதான் நிஜமானது மற்றும் உண்மையானது. இது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போன்ற வெளிப்படையான கிரியையாகும். இது யாரிடமிருந்தும் மறைக்கப்படவில்லை, இது யாரையும் ஏமாற்றவுமில்லை. நிஜமான மற்றும் உண்மையான காரியங்களையே ஜனங்கள் பார்க்கிறார்கள். உண்மையான சத்தியத்தையும் அறிவையுமே மனுஷன் பெறுகிறான். கிரியை முடிந்ததும், மனுஷன் அவரைப் பற்றிய புதிய அறிவைப் பெற்றிருப்பான். அவரை உண்மையிலேயே பின்தொடர்கிறவர்களுக்கு இனிமேல் அவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் இருக்காது. இது சீனர்கள் மீது அவர் செய்யும் கிரியையின் பலன் மட்டுமின்றி, மனுக்குலம் முழுவதையும் ஜெயங்கொள்வதில் அவர் செய்த கிரியையின் பலனையும் இது குறிப்பிடுகிறது, ஏனென்றால் இந்த மாம்சம், இந்த மாம்சத்தின் கிரியை மற்றும் இந்த மாம்சத்தைக் குறித்த எல்லாவற்றைக் காட்டிலும் அதிகமாக மனுக்குலத்தை முழுவதுமாக ஜெயங்கொள்ளும் கிரியைக்கு நன்மைபயக்கக்கூடியது எதுவுமில்லை. இவை இன்று அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கின்றன, எதிர்காலத்திலும் அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கும். இந்த மாம்சம் மனுக்குலம் முழுவதையும் ஜெயங்கொண்டு, மனுக்குலம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொள்ளும். மனுக்குலம் முழுவதும் தேவனைப் பார்ப்பதற்கும், அவருக்குக் கீழ்ப்படிவதற்கும், அவரை அறிந்துகொள்வதற்கும் இதைக் காட்டிலும் சிறந்த கிரியை எதுவுமில்லை. மனுஷனால் செய்யப்படும் கிரியை ஒரு குறிப்பிட்ட எல்லையை மாத்திரமே குறிப்பிடுகிறது. தேவன் தமது கிரியையைச் செய்யும்போது, அவர் ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டும் பேசாமல், முழு மனுக்குலத்திடமும், அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவர்களிடமும் பேசுகிறார். அவர் அறிவிக்கும் முடிவு ஒரு குறிப்பிட்ட நபரின் முடிவு அல்ல, முழு மனுக்குலத்திற்கான முடிவுமாகும். அவர் யாருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிப்பதில்லை, அவர் யாரையும் பாதிப்புக்குள்ளாக்குவதில்லை, அவர் முழு மனுக்குலத்திற்காகவும் கிரியை செய்கிறார், பேசுகிறார். ஆகையால், இந்த மாம்சமான தேவன் ஏற்கனவே முழு மனுக்குலத்தையும் வகையின்படி வகைப்படுத்தியுள்ளார். ஏற்கனவே மனுக்குலம் முழுவதையும் நியாயந்தீர்த்திருக்கிறார். முழு மனுக்குலத்திற்கும் பொருத்தமான இடத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். தேவன் தமது கிரியையை சீனாவில் மாத்திரமே செய்கின்றார் என்ற போதிலும், உண்மையில் அவர் ஏற்கனவே முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் தீர்த்து வைத்துள்ளார். அவருடைய வெளிப்பாடுகளையும் ஏற்பாடுகளையும் படிப்படியாகச் செய்வதற்கு முன்பு, அவருடைய கிரியை மனுக்குலம் முழுவதும் பரவும்வரை அவரால் காத்திருக்க முடியாது. அது மிகவும் தாமதமாக இருக்காதா? இப்போது அவரால் எதிர்கால கிரியையை முன்கூட்டியே செய்துமுடிக்க முடிகிறது. கிரியை செய்கிறவர் மாம்சத்திலுள்ள தேவனாக இருப்பதால், அவர் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வரம்பற்ற கிரியையைச் செய்கிறார், அதன் பிறகு மனுஷன் செய்ய வேண்டிய கடமையை மனுஷனைச் செய்ய வைப்பார். இதுவே அவருடைய கிரியையின் கொள்கையாகும். அவரால் மனுஷனுடன் ஒரு காலத்தில் மட்டுமே வாழ முடியும், முழு காலத்தின் கிரியையும் முடிவடையும் வரை அவரால் மனுஷனுடன் இருக்க முடியாது. அவர் தேவன் என்பதால், அவர் தமது எதிர்காலக் கிரியையை முன்கூட்டியே முன்னறிவிக்கிறார். அதன்பிறகு, அவர் தமது வார்த்தைகளால் மனுக்குலம் முழுவதையும் வகைப்படுத்துவார். மனுக்குலம் அவருடைய வார்த்தைகளின்படி அவருடைய படிப்படியான கிரியைக்குள் பிரவேசிக்கும். யாரும் தப்பிக்க மாட்டார்கள், எல்லோரும் இதன்படி நடக்க வேண்டும். ஆகையால், எதிர்காலத்தில் காலம் அவருடைய வார்த்தைகளால் வழிநடத்தப்படும், ஆவியானவரால் வழிநடத்தப்படாது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 127
மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்திருக்கிறது. இது மிகவும் ஆழமாக குருடாக்கப்பட்டு இருந்திருக்கிறது மற்றும் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சத்தில் கிரியை செய்வதற்கான மிகவும் அடிப்படையான காரணம் என்னவென்றால், அவருடைய இரட்சிப்பின் நோக்கம் மாம்சத்தாலான மனுஷனாவான், ஏனென்றால் தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்ய சாத்தானும் மனுஷனுடைய மாம்சத்தைப் பயன்படுத்துகிறான். சாத்தானுடனான யுத்தமானது உண்மையில் மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையாக இருக்கிறது. அதே நேரத்தில், மனுஷனும் தேவனுடைய இரட்சிப்பின் நோக்கமாக இருக்கிறான். ஆகவே, மாம்சமான தேவனுடைய கிரியை அத்தியாவசியமானதாகும். சாத்தான் மனுஷனுடைய மாம்சத்தைக் கெடுத்தான், இதனால் மனுஷன் சாத்தானின் உருவகமாகி, தேவனால் தோற்கடிக்கப்பட வேண்டிய இலக்காக மாறிவிட்டான். ஆகையால், சாத்தானுடன் யுத்தம் செய்து மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை பூமியில் நடக்கிறது. சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கு தேவன் மனுஷனாக மாற வேண்டும். இதுதான் மிகவும் நடைமுறையான கிரியையாகும். தேவன் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் உண்மையில் சாத்தானுடன் மாம்சத்தில் யுத்தம் செய்கிறார். அவர் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் ஆவிக்குரிய உலகில் தமது கிரியையைச் செய்து, ஆவிக்குரிய உலகில் தமது கிரியை முழுவதையும் பூமியில் உண்மையானதாக மாற்றுகிறார். அவருக்குக் கீழ்ப்படியாத மனுஷனே ஜெயங்கொள்ளப்படுகிறான், அவருக்கு விரோதமாக இருக்கிற சாத்தானின் உருவமே (உண்மையில், இதுவும் மனுஷன்தான்) தோற்கடிக்கப்படுகிறான், இறுதியில் மனுஷன்தான் இரட்சிக்கப்படுகிறவனாகவும் இருக்கிறான். ஆகையால், ஒரு சிருஷ்டியின் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்ட மனுஷனாக தேவன் மாறுவது மேன்மேலும் அவசியமானதாக இருக்கிறது, இதனால் அவர் சாத்தானுடன் உண்மையான யுத்தம் செய்யவும் அவருக்குக் கீழ்ப்படியாத, அவரைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிற மனுஷனை ஜெயங்கொள்ளவும், அவரைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிற மற்றும் சாத்தானால் தீங்கிற்குள்ளான மனுஷனை இரட்சிக்கவும் முடியும். அவருடைய எதிரி மனுஷன்தான், அவர் ஜெயங்கொள்ளும் இலக்கும் மனுஷன்தான், அவருடைய இரட்சிப்பின் நோக்கமும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷன் தான். ஆகையால், அவர் மனுஷனாக வேண்டும், இதனால், அவருடைய கிரியை மிகவும் எளிதாகிறது. அவரால் சாத்தானைத் தோற்கடித்து மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடிகிறது, மேலும், மனுக்குலத்தை இரட்சிக்கவும் முடிகிறது. இந்த மாம்சம் சாதாரணமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கின்றபோதிலும், அவர் பொதுவான மாம்சமல்ல: அவர் மனுஷனாக மட்டுமே உள்ள மாம்சம் அல்ல, ஆனால் மனுஷனாகவும் தெய்வீகமாகவும் உள்ள மாம்சம் ஆவார். இது அவருக்கும் மனுஷனுக்கும் உள்ள வித்தியாசமாகும். இதுதான் தேவனுடைய அடையாளத்தின் குறியீடாகும். இத்தகைய மாம்சத்தால் மட்டுமே அவர் செய்ய விரும்பும் கிரியையைச் செய்யவும், மாம்சத்தில் தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றவும், மனுஷர் நடுவில் அவருடைய கிரியையை முழுமையாகச் செய்து முடிக்கவும் இயலும். இவ்வாறு இல்லையென்றால், மனுஷர் நடுவே அவருடைய கிரியை எப்போதும் வெறுமையானதாகவும் குறைபாடுள்ளதாகவும் இருக்கும். தேவனால் சாத்தானின் ஆவியுடன் யுத்தம் செய்து ஜெயங்கொள்ள முடியும் என்றாலும், சீர்கேடான மனுஷனுடைய பழைய சுபாவத்தை ஒருபோதும் போக்க முடியாது. தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களும் அவரை எதிர்ப்பவர்களும் ஒருபோதும் அவருடைய ஆதிக்கத்திற்கு உண்மையாக உட்பட்டிருக்க முடியாது. அதாவது, அவரால் ஒருபோதும் மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடியாது, மனுக்குலத்தை ஒருபோதும் ஆதாயப்படுத்த முடியாது. பூமியில் அவருடைய கிரியைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால், அவருடைய நிர்வாகம் ஒருபோதும் முடிவுக்கு வராது, மனுக்குலம் முழுவதும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது. தேவன் தமது சிருஷ்டிகள் எல்லாவற்றுடனும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது என்றாலும், அத்தகைய நிர்வாகக் கிரியைக்கு ஒருபோதும் பலன் கிடைக்காது, இதன் விளைவாக தேவனுடைய மகிமை மறைந்துபோய்விடும். அவருடைய மாம்சத்திற்கு அதிகாரம் இல்லையென்றாலும், அவர் செய்யும் கிரியை அதன் பலனை அடைந்திருக்கும். இது அவருடைய கிரியையின் தவிர்க்க முடியாத திசையாகும். அவருடைய மாம்சம் அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் கொண்டிருக்காவிட்டாலும், தேவன் தமது கிரியையைச் செய்ய வல்லவராக இருக்கும் வரை, அவர்தாமே தேவனாக இருக்கிறார். இந்த மாம்சம் எவ்வளவு இயல்பானதாகவும் சாதாரணமானதாகவும் இருந்தாலும், அவர் செய்யவேண்டிய கிரியையை அவரால் செய்ய இயலும், ஏனென்றால் இந்த மாம்சம் மனுஷனாக மட்டுமின்றி தேவனாகவும் இருக்கிறது. இந்த மாம்சம் மனுஷனால் செய்ய முடியாத கிரியையைச் செய்ய முடியும் என்பதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய உள்ளான சாராம்சம் எந்தவொரு மனுஷனையும் போல இல்லை. அவரால் மனுஷனை இரட்சிக்க முடிவதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய அடையாளம் எந்த மனுஷனுடைய அடையாளத்திலும் இருந்து வேறுபட்டதாகும். இந்த மாம்சம் மனுக்குலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் அவர் மனுஷனாகவும், இன்னும் அதிகமாக, அவர் தேவனாகவும் இருக்கிறார், ஏனென்றால் சாதாரண மாம்ச மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவரால் செய்ய முடியும், பூமியில் அவருடன் சேர்ந்து வாழும் சீர்கேடான மனுஷனை அவரால் இரட்சிக்கவும் முடியும். அவர் மனுஷனைப் போலவே இருந்தாலும், மாம்சமான தேவன் எந்தவொரு மதிப்புமிக்க நபரைக் காட்டிலும் மனுக்குலத்திற்கு மிகவும் முக்கியமானவராவார், ஏனென்றால் தேவனுடைய ஆவியானவரால் செய்ய முடியாத கிரியையை அவரால் செய்ய முடியும், தேவனுடைய ஆவியானவரைக் காட்டிலும் அதிகமாக தேவனுக்குச் சாட்சி கொடுக்க முடியும், தேவனுடைய ஆவியானவரைக் காட்டிலும் அதிகமாக மனுக்குலத்தை முழுவதுமாக ஆதாயப்படுத்த முடியும். இதன் விளைவாக, இந்த மாம்சம் இயல்பானதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கின்றபோதிலும், மனுக்குலத்திற்கு அவர் அளித்த பங்களிப்பும், மனுக்குலம் வாழ்ந்திருப்பதற்கான அவரது முக்கியத்துவமும் அவரை மிகவும் விலையேறப்பெற்றவராக்குகின்றன. மேலும், இந்த மாம்சத்தின் உண்மையான மதிப்பும் முக்கியத்துவமும் எந்த மனுஷனாலும் அளவிட முடியாததாகும். இந்த மாம்சத்தால் சாத்தானை நேரடியாக அழிக்க முடியாது என்கின்றபோதிலும், மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், சாத்தானைத் தோற்கடிக்கவும், சாத்தானைத் தமது ஆதிக்கத்திற்கு முழுமையாக அடிபணியச் செய்யவும் அவர் தமது கிரியையைப் பயன்படுத்த முடியும். தேவன் மனுஷனாக அவதரித்திருப்பதால்தான், அவரால் சாத்தானைத் தோற்கடித்து, மனுக்குலத்தை இரட்சிக்க முடிகிறது. அவர் சாத்தானை நேரடியாக அழிப்பதில்லை, மாறாக சாத்தானால் சீர்கெட்டுப்போன மனுக்குலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்வதற்கு மாம்சமாக மாறுகிறார். ஆகையால், அவரால் தமது சிருஷ்டிகளுக்கு மத்தியில் தம்மைத்தாமே சிறப்பாகச் சாட்சி பகர முடிகிறது, சீர்கேடான மனுஷனைச் சிறப்பாக இரட்சிக்க முடிகிறது. மாம்சமான தேவன் சாத்தானைத் தோற்கடித்தது தேவனுடைய ஆவியானவரால் சாத்தானை நேரடியாக அழிப்பதைக் காட்டிலும் அதிகமாக சாட்சி பகர்கிறது, அதிக வல்லமையானதாகவும் இருக்கிறது. மனுஷன் சிருஷ்டிகரை அறிந்துகொள்ள மாம்சத்திலுள்ள தேவனால் அவனுக்குச் சிறப்பாக உதவ முடியும், தமது சிருஷ்டிகளுக்கு மத்தியில் தம்மைத்தாமே சிறப்பாகச் சாட்சி பகர முடியும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 128
மனிதர்களிடையே தம்முடைய கிரியையைச் செய்வதற்கும், மனிதனுக்குத் தனிப்பட்ட முறையில் தன்னை வெளிப்படுத்துவதற்கும், மனிதன் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதற்கும் தேவன் பூமிக்கு வந்துள்ளார்; இது ஒரு சிறிய விஷயமா? இது உண்மையில் அவ்வளவு எளிதல்ல! இது மனிதன் கற்பனை செய்வது போல அல்ல: தேவன் வந்துவிட்டார், அதனால் மனிதன் அவரைப் பார்க்கலாம், இதனால் தேவன் இருப்பது உண்மை, அது தெளிவற்ற அல்லது வெற்றுத்தனமான விஷயம் அல்ல என்பதையும், தேவன் உயர்ந்தவர், ஆனாலும் தாழ்மையுள்ளவர் என்பதையும் மனிதன் புரிந்துகொள்ள முடியும். அது அவ்வளவு எளிதாக இருக்க முடியுமா? இது துல்லியமாக, சாத்தான் மனிதனின் மாம்சத்தை சீர்கேடு அடையச் செய்ததால், மற்றும் மனிதனை தேவன் இரட்சிக்க விரும்புவதால், சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கும் மனிதனைத் தனிப்பட்ட முறையில் மேய்ப்பதற்கும் தேவன் மாம்ச உருவத்தைப் பெறவேண்டும் என்பதாகும். இது மட்டுமே அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கும். தேவனின் இரண்டு மனித உருவம் எடுத்த மாம்சங்கள் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவும், மனிதனைச் சிறப்பாக இரட்சிப்பதற்காகவும் இருந்தன. இது ஏனென்றால், தேவனின் ஆவியானவராக இருந்தாலும் சரி, தேவனின் மனித உருவ மாம்சமாக இருந்தாலும் சரி, சாத்தானுடன் யுத்தம் செய்யும் ஒருவர் தேவனாக மட்டுமே இருக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், சாத்தானுடன் யுத்தம் செய்கிறவர்கள் தேவதூதர்களாக இருக்க முடியாது, அப்படி இருக்கும்போது, அதனைக் காட்டிலும் குறைவாக, அது சாத்தானால் சீர்கேடடைந்த மனிதனாக இருக்க முடியாது. இந்த யுத்தத்தில் சண்டையிட தேவதூதர்கள் சக்தியற்றவர்கள், மனிதன் அதைக்காட்டிலும் பலமற்றவன். எனவே, மனிதனின் ஜீவித காலத்துக்கான கிரியையைச் செய்யத் தேவன் விரும்பினால், மனிதனை இரட்சிக்க அவர் தனிப்பட்ட முறையில் பூமிக்கு வர விரும்பினால், அவர் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டும்—அதாவது, அவர் தனிப்பட்ட முறையில் மாம்ச உருவத்தைப் பெறவேண்டும், மேலும் அவரது உள்ளார்ந்த அடையாளம் மற்றும் அவர் செய்ய வேண்டிய கிரியையுடன் அவர் தனிப்பட்ட முறையில் மனிதனை இரட்சிக்க மனிதர் மத்தியில் வருகிறார். இல்லையென்றால், இந்தக் கிரியையைச் செய்தது தேவனுடைய ஆவியானவர் அல்லது மனிதன் என்றால், இந்த யுத்தத்தில் எதுவும் முடிவுக்கு வரப்போவதில்லை, மேலும் அது ஒருபோதும் முடிவடையாது. மனிதர்களிடையே உள்ள சாத்தானுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் யுத்தத்துக்குச் செல்ல தேவன் மாம்சமாக மாறும்போதுதான் மனிதனுக்கு இரட்சிப்பின் வாய்ப்பு கிடைக்கும். மேலும், அப்போதுதான் சாத்தானை வெட்கமடையச் செய்து, அபகரிப்பதற்கான வாய்ப்புகள் அல்லது செயல்படுத்த எந்தத் திட்டமும் இல்லாமல் போகுமாறு செய்ய முடியும். மனுவுருவான தேவனால் செய்யப்படும் கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்ய முடியாதது, மேலும் எந்த மாம்ச மனிதனும் தேவனின் சார்பாக அதைச் செய்வது இன்னும் சாத்தியமற்றது, ஏனென்றால் அவர் செய்யும் கிரியை மனிதனின் ஜீவிதம் நிமித்தமானது, மற்றும் மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதற்கானது. இந்த யுத்தத்தில் மனிதன் பங்கேற்க வேண்டுமென்றால், அவன் மோசமாகக் குழப்பமடைந்து தப்பி ஓடுவான், மேலும் அவனது சீர்கெட்ட மனநிலையை வெறுமனே அவனால் மாற்ற இயலாது. மனிதனைச் சிலுவையிலிருந்து காப்பாற்றவோ, அல்லது கலகக்கார மனுக்குலம் அனைத்தையும் ஜெயங்கொள்ளவோ அவனால் இயலாது, ஆனால் கொள்கைகளுக்கு அப்பால் செல்ல இயலாத ஒரு சிறிய பழைய காரியத்தை, இல்லையெனில் சாத்தானின் தோல்விக்கு தொடர்பில்லாத காரியத்தை மட்டுமே செய்ய முடியும். அதனால் ஏன் கவலைப்படவேண்டும்? சாத்தானைத் தோற்கடிக்க முடியாதது, அதைக்காட்டிலும் குறைவாக, மனிதகுலத்தைக்கூட ஆதாயப்படுத்த முடியாத இந்தக் காரியத்தில் என்ன முக்கியத்துவம் இருக்கும்? எனவே, சாத்தானுடனான யுத்தத்தை தேவனால் தாமே மேற்கொள்ள முடியும், மனிதன் அதைச் செய்வது என்பது கொஞ்சமும் சாத்தியமில்லாதது. மனிதனின் கடமை கீழ்ப்படிதல் மற்றும் பின்பற்றுவதுதான், ஏனென்றால் வானத்தையும் பூமியையும் உருவாக்குவதற்கு ஒத்த கிரியையை மனிதனால் செய்ய முடியாது, மேலும், சாத்தானுடன் போரிடும் கிரியையையும் அவனால் செய்ய முடியாது. தேவன் தாமே அவரது தலைமையின் கீழ் மனிதன் சிருஷ்டிகரை திருப்திப்படுத்த மட்டுமே முடியும், இதன் மூலம் மட்டுமே சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான்; மனிதனால் செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான். எனவே, ஒரு புதிய யுத்தம் தொடங்கும் ஒவ்வொரு முறையும், அதாவது, புதிய காலத்தின் கிரியை தொடங்கும் ஒவ்வொரு முறையும், இந்தக் கிரியை தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகிறது, இதன் மூலம் அவர் அனைத்து யுகங்களையும் வழிநடத்தி, மனுக்குலம் முழுமைக்கும் புதிய பாதையைத் திறக்கிறார். ஒவ்வொரு புதிய காலத்தின் விடியலும் சாத்தானுடனான யுத்தத்தில் ஒரு புதிய தொடக்கமாகும், இதன் மூலம் மனிதன் ஒரு புதிய, அழகான உலகிற்குள், மற்றும் தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்படும் ஒரு புதிய காலத்திற்குள் பிரவேசிக்கிறான். எல்லாவற்றிற்கும் மனிதன் எஜமானன், ஆனால் ஆதாயமாக்கப்பட்டவர்கள் சாத்தானுடனான எல்லா யுத்தங்களிலும் விளை பலன்களாக மாறுவார்கள். சாத்தான் எல்லாவற்றையும் சீர்கேடு ஆக்குபவன், அவன் எல்லா யுத்தங்களின் முடிவிலும் தோற்கடிக்கப்படுபவன், மேலும் இந்த யுத்தங்களைத் தொடர்ந்து தண்டிக்கப்படும் ஒருவன். தேவன், மனிதன் மற்றும் சாத்தான் இவர்களில், சாத்தான் மட்டுமே வெறுக்கப்படுவான் மேலும் நிராகரிக்கப்படுவான். சாத்தானால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள், ஆனால் தேவனால் திரும்ப மீட்கப்படாதவர்கள், இதற்கிடையில், சாத்தானின் சார்பாகத் தண்டனையைப் பெறுவார்கள். இந்த மூவரில், தேவனை மட்டுமே எல்லோரும் தொழுது கொள்ள வேண்டும். சாத்தானால் சீர்கேடு ஆக்கப்பட்டவர்கள், ஆனால் தேவனால் மீட்கப்பட்டவர்கள் மற்றும் தேவனின் வழியைப் பின்பற்றுபவர்கள், இதற்கிடையில், தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றவர்களாகவும் தேவனுக்காகத் தீயவனை நியாயந்தீர்ப்பவர்களாகவும் மாறுகிறார்கள். தேவன் நிச்சயமாக ஜெயங்கொள்ளுவார், சாத்தான் நிச்சயமாகத் தோற்கடிக்கப்படுவான், ஆனால் மனிதர்களிடையே ஜெயம் பெறுபவர்களும் தோற்பவர்களும் இருக்கிறார்கள். ஜெயித்தவர்கள் ஜெயங்கொண்டவர்களுடன் ஒன்றிணைவார்கள், தோற்றவர்கள் தோல்வியுற்றவர்களுடன் சேர்வார்கள்; இதுதான் ஒவ்வொன்றின் தன்மைக்கேற்ப உள்ள வகைப்பாடு, இதுதான் தேவனின் எல்லாக் கிரியைகளின் இறுதி முடிவாகும். மேலும் தேவனின் எல்லா கிரியைகளின் நோக்கமும் இதுவேயாகும், மற்றும் இது ஒருபோதும் மாறாது. தேவனின் நிர்வாகத் திட்டத்தின் முக்கிய கிரியையின் உட்பொருள் மனிதனின் இரட்சிப்பின்மீது கவனம் செலுத்துகிறது, மேலும் தேவன் முதன்மையாக இந்த உட்பொருளின் பொருட்டு, இந்தக் கிரியையின் பொருட்டு மேலும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காக மாம்சமாக மாறுகிறார். தேவன் முதன்முதலில் மாம்சமாக மாறியதும்கூட சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவேயாகும்: அவர் தனிப்பட்ட முறையில் மாம்சமாக ஆனார், மனிதகுலத்தின் மீட்புக்கான கிரியையான முதல் யுத்தத்தின் கிரியையை முடிக்க, தனிப்பட்ட முறையில் சிலுவையில் அறையப்பட்டார். அதேபோல், இந்தக் கட்டத்தின் கிரியையும் தனிப்பட்ட முறையில் தேவனால் செய்யப்படுகிறது, அவர் மனிதர்களிடையே தனது கிரியையைச் செய்வதற்கும் அவருடைய வார்த்தையைத் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் மனிதர்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பதற்கும் மாம்சமாக மாறினார். நிச்சயமாக, அவர் அந்த வழியில் வேறு சில கிரியைகளையும் செய்வது தவிர்க்க முடியாதது, ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்வதற்கு முக்கிய காரணம் சாத்தானைத் தோற்கடிப்பது, மனுக்குலம் முழுவதையும் ஜெயங்கொள்வது, மேலும் இந்த மக்களை ஆதாயப்படுத்துவது ஆகியவையாகும். எனவே, தேவன் மனித உருவம் எடுத்த கிரியை உண்மையில் அவ்வளவு எளிதானது அல்ல. தேவன் தாழ்மையானவர், மறைபொருளாக உள்ளவர், தேவன் நிஜமானவர் என்பதை மனிதருக்குக் காண்பிப்பதே அவருடைய நோக்கம் என்றால், அவை இந்த கிரியையைச் செய்வதற்காக மட்டுமே என்றால், அவர் மாம்சமாக மாற வேண்டிய அவசியமில்லை. தேவன் மாம்சமாக மாறாவிட்டாலும், அவருடைய தாழ்மையையும் மறைபொருளாக இருப்பதையும், அவருடைய மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும் மனிதனுக்கு நேரடியாக வெளிப்படுத்த முடியும், ஆனால் இதுபோன்ற விஷயங்களுக்கும் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவற்றால் மனிதனை இரட்சிக்கவோ அல்லது அவனை முழுமையாக்கவோ இயலாது, அப்படி இருக்கும்போது அவற்றால் சாத்தானைத் தோற்கடிக்க முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. சாத்தானின் தோல்வியானது ஆவியானவர் ஒரு ஆவிக்கு எதிராக யுத்தம் செய்வதை மட்டுமே கொண்டிருக்குமானால், அத்தகைய கிரியை இன்னும் குறைவான நடைமுறை மதிப்பைக் கொண்டிருக்கும்; அதனால் மனிதனை ஆதாயப்படுத்த இயலாது மற்றும் அது மனிதனின் தலைவிதியையும் செல்லும் திசைகளையும் அழித்துவிடும். எனவே, இன்று தேவனின் கிரியை மிகவும் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதன் அவரைக் காணவேண்டும் என்பது மட்டுமல்ல, அல்லது மனிதனின் கண்கள் திறக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்ல, அல்லது செயல்படவும் ஊக்குவிப்பதற்கும் அவனுக்கு ஒரு சிறிய உணர்வை வழங்குவது மட்டுமல்ல; இத்தகைய கிரியைக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை. நீ இத்தகைய அறிவை பற்றி மட்டுமே பேச முடியும் என்றால், தேவன் மனித உருவம் எடுத்ததன் உண்மையான முக்கியத்துவத்தை நீ அறியவில்லை என்பதை இது நிரூபிக்கிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 129
தேவனால் செய்யப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அக்காலத்தில், இயேசு வந்தபோது, அவர் ஆண் ரூபத்தில் வந்தார், மேலும் தேவன் இம்முறை வரும்போது, அவருடைய ரூபம் பெண்ணாக இருக்கிறது. இதிலிருந்து, தேவன் தமது கிரியையில் பயன்படுத்துவதற்காகவே ஆண் பெண் இருபாலரையும் படைத்தார் என்பதை நீ பார்க்கலாம், மேலும் அவரிடத்தில் பாலின வேறுபாடு எதுவும் இல்லை. அவருடைய ஆவி வரும்போது, அவர் விரும்பும் எந்த மாம்சத்திலும் அவரால் தோன்ற முடியும், மற்றும் அந்த மாம்சம் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; ஆணோ அல்லது பெண்ணோ, அது அவரது அவதார மாம்சமாக இருக்கும் வரை அதனால் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். இயேசு வந்த போது அவர் ஒரு பெண்ணாகத் தோன்றியிருந்தால், அதாவது, ஓர் ஆண் குழந்தையாக இல்லாமல் ஒரு பெண் குழந்தை பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாகியிருந்தால், கிரியையின் அந்தக் கட்டம் அதே போன்றே நிறைவேறி இருக்கும். நிகழ்ந்தது அதுவாக இருந்திருந்தால், கிரியையின் தற்போதைய கட்டம் ஓர் ஆணால் நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்திருக்கும், ஆனால் அதே போன்றே கிரியை நிறைவேற்றப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் செய்யப்பட்ட கிரியையானது தனக்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது; இருகட்ட கிரியைகளும் ஒன்றுக்கொன்று திருப்பி செய்யப்படவில்லை, அல்லது ஒன்றோடொன்று முரண்படவும் இல்லை. அக்காலத்தில், இயேசு தம் கிரியையை செய்தபோது ஒரே பேறான குமாரன் என்று அழைக்கப்பட்டார் மேலும் “குமாரன்” என்பது ஆண்பாலை குறிக்கிறது. தற்போதைய நடப்புக் கட்டத்தில் ஒரே பேறான குமாரன் ஏன் குறிப்பிடப்படவில்லை? ஏனெனில் கிரியையின் தேவைகள் இயேசுவின் பாலினத்தில் இருந்து ஒரு மாற்றத்தின் தேவையை உருவாக்கியுள்ளது. தேவனை பொறுத்தவரையில் பாலின வேறுபாடு எதுவும் இல்லை. அவர் தாம் விரும்பும் படி தமது கிரியையை நடப்பிக்கிறார், மேலும் அவர் தமது கிரியையை செய்யும் போது எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவதில்லை, ஆனால் குறிப்பாக சுதந்திரமானவராக இருக்கிறார். ஆனால் கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டதாக இருக்கிறது. தேவன் இரு முறை மாம்சமானார், மேலும் கடைசி நாட்களில் அவரது அவதாரம் கடைசி முறையானது என்பது பிரத்தியட்சமானதாக இருக்கிறது. தமது கிரியைகள் அனைத்தையும் அறியச்செய்யவே அவர் வந்திருக்கிறார். இந்தக் கட்டத்தில் மனிதன் காணும்படியாகத் தாமே கிரியை புரிவதற்கு மாம்சம் ஆயிருக்கவில்லையெனில், தேவன் ஆணே, பெண்ணல்ல என்ற எண்ணத்தையே மனிதன் பற்றி பிடித்துக்கொண்டு இருந்திருப்பான். இதற்கு முன்னர், மனுக்குலம் யாவும் தேவன் ஆணாக மட்டுமே இருக்க முடியும், மேலும் ஒரு பெண்ணை தேவன் என்று அழைக்க முடியாது என்று நம்பியது, ஏனெனில் மனுக்குலம் யாவும் பெண்ணின் மேல் ஆணுக்கு அதிகாரம் உண்டு எனக் கருதியது. ஆண்கள் மட்டுமே அதிகாரத்தைப் பெற முடியும், ஒரு பெண்ணாலும் முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். மேலும் என்னவென்றால், ஆணே பெண்ணுக்குத் தலைவன், பெண் ஆணுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் அவனை மிஞ்சக் கூடாது என்றும் கூட அவர்கள் கூறினார்கள். கடந்த காலங்களில், ஆணே பெண்ணின் தலைவன் என கூறப்பட்டபோது, சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆதாம் மற்றும் ஏவாளை நோக்கி இது கூறப்பட்டது—ஆதியில் யேகோவாவால் படைக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணிடத்தில் அல்ல. நிச்சயமாக, பெண் கணவனுக்குக் கீழ்ப்படிந்து அவனை நேசிக்க வேண்டும், மேலும் ஒரு கணவன் தன் குடும்பத்தைப் போஷித்து ஆதரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இவையே மனுக்குலம் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காக யேகோவாவால் உருவாக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களும் கட்டளைகளும் ஆகும். யேகோவா பெண்ணிடம், “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார். மனுக்குலம் (அதாவது ஆண் பெண் இருவரும்) இயல்பான வாழ்க்கையை யேகோவாவின் ஆளுகையின் கீழ் வாழ வேண்டும், அதன் மூலம் மனுக்குலத்தின் வாழ்க்கையில் ஓர் அமைப்பு இருக்கும், மேலும் அது தனது தகுந்த ஒழுங்கில் இருந்து குலையாது என்பதற்காக மட்டுமே அவர் இவ்வாறு பேசினார். ஆகவே, ஆணும் பெண்ணும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக யேகோவா பொருத்தமான விதிகளை உருவாக்கினார். இது பூமியில் வாழும் அனைத்து சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டிகளுக்கானவை மட்டுமே தவிர தேவனின் அவதார மாம்சத்திற்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தம்மால் படைக்கப்பட்ட சிருஷ்டிகளைப் போலவே எவ்வாறு தேவன் இருக்க முடியும்? அவரது சிருஷ்டிப்பில் மனுக்குலத்தை நோக்கியே அவரது வார்த்தைகள் பேசப்பட்டன; மனுக்குலம் இயல்பான வாழ்க்கையை வாழவே அவர் ஆணுக்கும் பெண்ணுக்குமான விதிகளை உருவாக்கினார். ஆதியில், யேகோவா மனுக்குலத்தை சிருஷ்டித்தபோது அவர் ஆண் பெண் ஆகிய இரு வகை மனிதர்களைப் படைத்தார்; ஆகையால் அவரது அவதார மாம்சங்களில் ஆண் மற்றும் பெண் என்ற பிரிவு உள்ளது. ஆதாம் மற்றும் ஏவாளுடன் பேசிய வார்த்தைகளின் அடிப்படையில் அவர் தமது கிரியையைத் தீர்மானிக்கவில்லை. முதலில் அவர் மனுக்குலத்தை சிருஷ்டித்தபோது இருந்த அவரது சிந்தனையின் படியே அவர் இரு முறை மாம்சமானதும் முற்றிலுமாகத் தீர்மானிக்கப்பட்டன; அதாவது, ஆண் மற்றும் பெண்ணை அடிப்படையாகக் கொண்ட அவரது இரு அவதாரங்களின் கிரியையையும் அவை களங்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் நிறைவுசெய்துவிட்டார். சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட ஆதாம் மற்றும் ஏவாளிடத்தில் யேகோவா பேசிய வார்த்தைகளை மனுக்குலம் அவ்வாறே எடுத்துக்கொண்டு, அவற்றை தேவனின் அவதார கிரியைகளுக்குப் பிரயோகித்தால், இயேசுவும் தமது மனைவியை அவர் நேசிக்க வேண்டிய விதத்தில் நேசிக்க வேண்டும் அல்லவா? இவ்வகையில், தேவன் இன்னும் தேவனாக இருப்பாரா? இது இவ்வாறு இருந்தால், அவரால் தமது கிரியையை இன்னும் நிறைவேற்ற முடியுமா? தேவனின் அவதார மாம்சம் பெண்ணாக இருப்பது தவறு என்றால், தேவன் பெண்ணைப் படைத்ததும் மாபெரும் அளவிலான ஒரு தவறாக அல்லவா இருந்திருக்கும்? தேவன் பெண்ணாக அவதரிப்பது தவறு என்று மக்கள் இன்னும் நம்பினால், திருமணம் ஆகாத காரணத்தால் மனைவியை நேசிக்க முடியாத இயேசுவும் இந்த அவதாரத்தைப் போலவே தவறிழைத்தவராக அல்லவா இருந்திருப்பார்? தற்காலத்தில் தேவ அவதாரத்தின் சத்தியத்தை அளவிட நீ ஏவாளிடத்தில் யேகோவோ பேசிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், கிருபையின் காலத்தில் மாம்சமான கர்த்தராகிய இயேசுவை நியாயம் தீர்க்க ஆதாமிடம் யேகோவா கூறிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். இவை யாவும் ஒன்றேதான் அல்லவா? சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆணின் படி கர்த்தாராகிய இயேசுவை நீ அளவிடுகிறபடியால், இன்றைய அவதாரத்தின் சத்தியத்தை சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் படி நீ நியாயம்தீர்க்க முடியாது. அது நியாயமற்றதாக இருக்கும்! இவ்விதம் நீ தேவனை அளவிடுவது உன் பகுத்தறிவுக் குறைபாட்டை நிரூபிக்கிறது. யேகோவா இருமுறை மாம்சமான போது அவரது மாம்சத்தின் பாலினம் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆண் மற்றும் பெண்ணுடன் தொடர்புபடுத்தப்பட்டது; சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆண் மற்றும் பெண்ணோடு இணங்க அவர் இருமுறை மாம்சமானார். இயேசுவின் ஆண்தன்மை சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆதாமுடையது போன்றது என்று நினைக்க வேண்டாம். அவை இரண்டும் முற்றிலும் தொடர்பற்றவை, அவை இரு வித இயல்புகள் கொண்ட இரு வேறு ஆண்களுடையவை. இயேசுவின் ஆண் தன்மை அவரே எல்லா பெண்களுக்கும் தலைவர் ஆனால் எல்லா ஆண்களுக்கும் அல்ல என்று நிச்சயமாக இருக்க முடியாதல்லவா? அவர் யூதர்களின் அரசர் அல்லவா (ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட)? அவர்தாமே தேவன், அவர் வெறுமனே பெண்ணின் தலைவரோ அல்லது ஆணிண் தலைவரோ மட்டுமல்ல. அவர் சர்வ சிருஷ்டிகளின் கர்த்தர் மேலும் சகல சிருஷ்டிகளின் தலைவர். இயேசுவின் ஆண்தன்மை பெண்ணின் தலைமைக்கான சின்னமாக இருக்கிறது என்று எவ்வாறு உன்னால் தீர்மானிக்க முடியும்? இது தேவ நிந்தனை ஆகாதா? இயேசு களங்கப்படுத்தப்படாத ஓர் ஆண். அவர் தேவன்; அவர் கிறிஸ்து; அவரே கர்த்தர். அவர் எவ்வாறு களங்கமடைந்த ஆதாமைப் போன்ற ஓர் ஆணாக இருக்க முடியும்? தேவனின் மிகப் பரிசுத்தமான ஆவியால் அணியப்பட்ட மாம்சமே இயேசு. அவர் ஆதாமின் ஆண் தன்மையைக் கொண்ட தேவனே என்று உன்னால் எவ்வாறு கூற முடியும்? அப்படி என்றால், தேவனின் அனைத்து கிரியைகளும் தவறாக அல்லவா இருந்திருக்கும்? சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட ஆதாமின் ஆண் தன்மையை இயேசுவுக்குள் யேகோவா ஒருங்கிணைத்திருக்க மாட்டாரா? தற்காலத்தின் அவதாரம் பாலினத்தால் இயேசுவில் இருந்து வேறுபட்ட ஆனால் இயல்பில் அவரைப் போன்ற தேவ அவதாரக் கிரியையின் இன்னொரு நேர்வு இல்லையா? சர்ப்பத்தால் முதலில் வஞ்சிக்கப்பட்டது பெண் என்பதால் பெண் தேவ அவதாரமாக இருக்க முடியாது என்று நீ இன்னமும் சொல்வதற்கு துணிகிறாயா? பெண் மிகவும் அசுத்தமானவளாகவும் மனுக்குலத்தின் சீர்குலைவுக்கு ஆதாரமாகவும் இருப்பதால் தேவன் மாம்சத்தில் ஒரு பெண்ணாக முடியாது என்று நீ இன்னும் துணிந்து கூறுகிறாயா? “பெண் எப்போதும் ஆணுக்குக் கீழ்ப்படிய வேண்டும் மேலும் ஒருபோதும் தேவனை வெளிப்படுத்த அல்லது நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது” என்று கூறுவதில் நிலைத்துநிற்கிறாயா? கடந்த காலத்தில் நீ புரிந்துகொள்ளவில்லை, ஆனால் இப்போது நீ தேவனின் கிரியையை, குறிப்பாக தேவனுடைய அவதார மாம்சத்தை தொடர்ந்து தூஷணம் செய்துகொண்டே போவாயா? இது உனக்குத் தெளிவாகவில்லை எனில், உன் நாவை அடக்குவது நல்லது, அல்லது உன் முட்டாள்தனமும் அறிவீனமும் வெளிப்படுத்தப்பட்டு உன் அருவருப்பு வெளிக்கொண்டுவரப்படும். எல்லாவற்றையும் நீ புரிந்துகொள்வதாக எண்ணாதே. என்னுடைய நிர்வாகத் திட்டத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட புரிந்துகொள்ள நீ பார்த்ததும் அனுபவித்ததுமாகிய யாவும் போதுமானதல்ல என்று நான் உனக்குச் சொல்லுகிறேன். ஆகவே நீ ஏன் இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளுகிறாய்? உனக்கிருக்கும் சிறு அளவிலான தாலந்தும் சிறு அளவிலான அறிவும் இயேசு தமது கிரியையில் பயன்படுத்த ஒரு நொடிக்குக்கூட போதுமானது அல்ல! நீ உண்மையில் எவ்வளவு அனுபவத்தைக் கொண்டிருக்கிறாய்? நீ பார்த்தவை எல்லாம் மற்றும் நீ உன் வாழ்க்கைக் காலத்தில் கேட்டவை எல்லாம் மேலும் நீ கற்பனைசெய்து பார்த்தவை எல்லாம் நான் ஒரு நொடிப்பொழுதில் செய்யும் கிரியையைவிடக் குறைவானவையே! அற்பக் காரியங்களில் கவனம் செலுத்தி நீ குற்றம் கண்டுபிடிக்காமல் இருப்பது நல்லது. நீ விரும்பும் அளவுக்கு ஆணவம் கொண்டவனாக இருந்தாலும் ஓர் எறும்புக்கு கூட சமம் இல்லாத ஜந்துவே நீ! உன் வயிற்றுக்குள் நீ வைத்திருப்பதெல்லாம் ஓர் எறும்பின் வயிற்றுக்குள் இருப்பதை விடக் குறைவே! நீ கொஞ்சம் அனுபவங்களையும் மூப்புநிலையையும் அடைந்ததால் மூர்க்கமாக சைகை காட்டிப் பெரிதாகப் பேசலாம் என்று எண்ணாதே. நான் பேசிய வார்த்தைகளின் விளைபொருட்கள் அல்லவா உன் அனுபவமும் மூப்புநிலையும்? அவைகள் எல்லாம் உன் சொந்த வேலைக்கும் உழைப்புக்கும் பதிலாக கிடைத்தவை என்று நீ நம்புகிறாயா? இன்று, நான் மாம்சமாகியிருப்பதை நீ பார்க்கிறாய், அதன் காரணமாக மட்டுமே உன்னில் மிதமிஞ்சிய கருத்துக்கள், மேலும் அவற்றில் இருந்து பிறக்கும் எண்ணங்களுக்கு முடிவே இல்லை. என் அவதாரத்துக்காக இல்லை என்றால், நீ அசாதாரணமான தாலந்துகள் கொண்டவனாக இருந்தாலும், உனக்கு மிக அதிகமான கருத்துக்கள் இருந்திருக்காது; இவற்றில் இருந்தல்லவா உன் எண்ணங்கள் எழுகின்றன? முதல் முறை இயேசு மாம்சமாகாமல் இருந்திருந்தால், அவதாரத்தைப் பற்றி நீ அறிந்தாவது இருப்பாயா? முதல் அவதாரம் உனக்கு அறிவைக் கொடுத்ததனால்தானே, இரண்டாவது அவதாரத்தை நியாயந்தீர்க்க முயலுவதற்கு உனக்கு அகம்பாவம் ஏற்பட்டது? கீழ்ப்படிதலுடன் பின்பற்றுபவனாக இல்லாமல் நீ அதை ஆராய முற்படுவது ஏன்? இந்த நீரோடையில் நீ நுழைந்து அவதார தேவனின் முன்னிலையில் வந்த பின்னர், அவரை ஆராய்ச்சி செய்வதற்கு அவர் உன்னை அனுமதிப்பாரா? நீ உன் சொந்தக் குடும்ப வரலாற்றை ஆராய்ச்சி செய்யலாம், ஆனால் நீ தேவனின் “குடும்ப வரலாற்றை” ஆராய முயற்சி செய்தால், இன்றைய தேவன் அப்படிப்பட்ட ஆராய்ச்சியை செய்ய உன்னை அனுமதிப்பாரா? நீ குருடன் இல்லை அல்லவா? நீ உன் மேல் அவமதிப்பைக் கொண்டுவர மாட்டாயா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 130
இயேசுவும் நானும் ஒரே ஆவியில் இருந்து வருகிறோம். நாங்கள் எங்கள் மாம்சத்தில் தொடர்பற்றவர்களாக இருந்தாலும், எங்கள் ஆவிகள் ஒன்றே; நாங்கள் செய்வதன் உள்ளடக்கமும் நாங்கள் எடுத்துக்கொள்ளும் கிரியையும் ஒன்றாக இல்லாத போதும், நாங்கள் உட்சாரத்தில் ஒன்றுபோல் இருக்கிறோம்; எங்கள் மாம்சங்கள் வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றன, ஆனால் இது யுகத்தின் மாற்றத்தாலும் எங்கள் கிரியையின் வேறுபடும் தேவைகளின் காரணமாகவும் ஆகும்; எங்கள் ஊழியங்கள் ஒன்றுபோல் இல்லை, ஆகவே நாங்கள் கொண்டுவரும் கிரியையும் நாங்கள் வெளிப்படுத்தும் மனநிலைகளும் கூட வேறாக இருக்கின்றன. யுக மாற்றத்தின் காரணமாக மனிதன் இன்றைய நாளில் பார்ப்பதும் புரிந்து கொள்ளுவதும் கடந்த காலத்தைப் போலல்லாமல் இருக்கின்றன. அவர்கள் பாலினத்திலும் தங்கள் மாம்சத்தின் வடிவத்திலும் வேறாக இருந்தாலும், அவர்கள் ஒரே குடும்பத்தில் பிறக்கவில்லை எனினும், ஒரே கால கட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட, அவர்களது ஆவி ஒன்றே. அவர்களுடைய மாம்சங்கள் இரத்தத்தையோ அல்லது எந்த வகையான உடலியல் உறவுகளையோ பகிரவில்லை, அவர்கள் இருவேறு கால கட்டத்தில் தேவனின் அவதார மாம்சங்களாக இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவர்கள் தேவனுடைய மனுவுருவான மாம்சங்களாக இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். எனினும், அவர்கள் ஒரே இரத்தவழியைச் சேர்ந்தவர்கள் அல்ல மற்றும் ஒரே பொது மொழியைக் கொண்டவர்களும் அல்ல (ஒருவர் யூதர்களின் மொழியைப் பேசிய ஓர் ஆண் மற்றும் இன்னொருவர் சீன மொழியை மட்டுமே பேசும் ஒரு பெண்) எனினும் அவர்கள் தேவனின் அவதார மாம்சங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தக் காரணங்களால் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையின் பொருட்டு அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டத்திலும் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் ஒரே ஆவியாக இருக்கிறார்கள், ஒரே சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கும் போதிலும், அவர்களுடைய மாம்சத்தின் புறப்பகுதியில் முழுமையான எந்த ஓர் ஒற்றுமையும் இல்லை. அவர்கள் ஒரே மனிதத்தன்மையைப் பகிர்ந்துகொண்டாலும், அவர்களுடைய மாம்சத்தின் புறத் தோற்றத்தையும் அவர்களுடைய பிறப்பின் சூழ்நிலைகளையும் பொறுத்த வரையில் அவர்கள் ஒன்றுபோல் இல்லை. அவர்களுடன் தொடர்புடைய கிரியை அல்லது அவர்களைப் பற்றி மனிதன் கொண்டிருக்கும் அறிவின் மேல் இந்த விஷயங்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, ஏனெனில் இறுதி ஆய்வில், அவர்கள் ஒரே ஆவியாக இருக்கிறார்கள், மேலும் ஒருவரும் அவர்களைப் பிரிக்க முடியாது. அவர்கள் இரத்த சம்பந்தமான உறவுடையவர்கள் இல்லை என்றாலும், அவர்களுடைய முழு இருப்பும் அவர்களுடைய ஆவியின் கட்டுப்பாட்டில் உள்ளது, அது அவர்களுக்கு வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு கிரியைக்கும், அவர்களுடைய மாம்சங்கள் வெவ்வேறு இரத்தவழிகளைக் கொண்டவையாகும். யேகோவாவின் ஆவி இயேசுவினுடைய ஆவியின் பிதா அல்ல, மற்றும் இயேசுவின் ஆவி யேகோவாவினுடைய ஆவியின் குமாரனும் அல்ல: அவை ஒரே ஆவியாகும். அதுபோலவே, இன்றைய தேவ அவதாரமும் இயேசுவும் இரத்தத்தால் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் ஒன்றே, இது ஏனெனில் அவர்களது ஆவி ஒன்றே. இரக்கம் மற்றும் அன்பான கருணையின் கிரியையும், மனிதனை நீதியாக நீயாயந்தீர்த்து கடிந்துகொள்ளுதலையும் மற்றும் மனிதன் மேல் சாபங்களை வரவழைப்பதையும் தேவனால் செய்ய முடியும்; முடிவில் உலகத்தை அழித்துத் துன்மார்க்கரை தண்டிக்கும் கிரியையும் அவரால் செய்ய முடியும். இவற்றை எல்லாம் அவர்தாமே செய்வதில்லையா? இது தேவனின் சர்வவல்லமை அல்லவா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 131
தேவன் பிரபஞ்சம் மற்றும் அதற்கும் மேலே இருக்கும் பிரபஞ்சத்தில் மிகப் பெரியவராக இருக்கிறார், அவரால் ஒரு மாம்சத்தின் உருவத்தைப் பயன்படுத்தி தம்மை முழுமையாக விளக்கிக் காட்ட முடியுமா? தேவன் தமது கிரியையின் ஒரு கட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்த மாம்சத்தை அணிந்துகொள்கிறார். மாம்சத்தின் இந்த உருவத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, இது கடந்து செல்லும் யுகங்களுடனோ அல்லது தேவனின் மனநிலையுடனோ எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை. இயேசு தம்முடைய உருவத்தை நிலைத்திருக்க ஏன் அனுமதிக்கவில்லை? தம்முடைய உருவத்தைப் பிற்காலத் தலைமுறையினர் பார்க்கும் வகையில் அவர் ஏன் அதை வரைய அனுமதிக்கவில்லை? அவருடைய உருவம் தேவனின் சாயல் என்பதை ஜனங்களை அவர் ஏன் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை? மனுஷனின் உருவம் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும், மனுஷனின் தோற்றம் தேவனின் உயர்ந்த சாயலைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? தேவன் மாம்சமாகும்போது, அவர் பரலோகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட மாம்சத்தில் இறங்குகிறார். அவருடைய ஆவிதான் ஒரு மாம்சத்தில் இறங்குகிறது, அதன் மூலம் அவர் ஆவியானவரின் கிரியையைச் செய்கிறார். மாம்சத்தில் வெளிப்படுவது ஆவியானவர் தான், மேலும் மாம்சத்தில் அவருடைய கிரியையைச் செய்வதும் ஆவியானவர் தான். மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது ஆவியானவரை முழுமையாக பிரதிபலிக்கிறது, மாம்சமானது கிரியையின் பொருட்டு மட்டுமே உள்ளது, அதனால் மாம்சத்தின் உருவம் தேவனின் உண்மையான உருவத்திற்கு மாற்றாக இருக்கிறது என்று அர்த்தமல்ல; இது மாம்சமாகிய தேவனின் நோக்கமோ அல்லது முக்கியத்துவமோ அல்ல. அவர் மாம்சமாகிய காரணம், ஆவியானவர் அவருடைய கிரியைக்கு ஏற்ற ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பார் என்பதற்காகத் தான். மாம்சமாவது தான் அவருடைய கிரியையை அடையச் சிறந்தது, இதன்மூலம் ஜனங்கள் அவருடைய கிரியைகளைக் காணவும், அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ளவும், அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவருடைய கிரியையின் அதிசயத்தை அறிந்து கொள்ளவும் முடியும். அவருடைய நாமம் அவருடைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது, அவருடைய கிரியை அவருடைய அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது, ஆனால் மாம்சத்தில் அவரது தோற்றம் அவருடைய உருவத்தைப் பிரதிபலிக்கிறது என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை; அது வெறுமனே மனுஷனின் கருத்து மட்டுமே. எனவே, தேவன் மாம்சமாகியதன் முக்கியமான அம்சங்கள் அவருடைய நாமம், அவருடைய கிரியை, அவருடைய மனநிலை மற்றும் அவரது பாலினம் ஆகியவை மட்டுமே. இந்த யுகத்தில் அவருடைய ஆளுகையைப் பிரதிநிதித்துவப்படுத்த இவை பயன்படுத்தப்படுகின்றன. மாம்சத்தில் அவரது தோற்றம், அவருடைய ஆளுகையுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, அந்த நேரத்தில் அவருடைய கிரியையின் பொருட்டு மட்டுமே அந்த மாம்சம் இருக்கிறது. ஆயினும், மாம்சமாகிய தேவன் குறிப்பிட்ட தோற்றம் எதுவும் கொண்டிருக்காமலிருக்க சாத்தியமில்லை, எனவே அவருடைய தோற்றத்தைத் தீர்மானிக்கப் பொருத்தமானக் குடும்பத்தை அவர் தேர்வு செய்கிறார். தேவனின் தோற்றம் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தால், அவரைப் போன்ற முக அம்சங்களைக் கொண்ட அனைவருமே தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருப்பர். அது ஒரு மிகப் பெரிய தவறு அல்லவா? மனுஷன் இயேசுவை வணங்கக்கூடும் என்பதற்காகவே அவரது உருவப்படம் மனுஷனால் வரையப்பட்டது. அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் எந்தச் சிறப்பு அறிவுறுத்தல்களையும் கொடுக்கவில்லை, எனவே மனுஷன் அந்தக் கற்பனை உருவப்படத்தை இன்று வரை பயன்படுத்திவருகிறான். உண்மையில், தேவனின் உண்மையான நோக்கத்தின்படி, மனுஷன் இதைச் செய்திருக்கக்கூடாது. மனுஷனின் வைராக்கியத்தால் மட்டுமே இயேசுவின் உருவப்படம் இந்த நாள் வரை நிலைத்திருக்கிறது. தேவன் ஆவியானவர், இறுதி சோதனையில் தேவனின் உருவம் என்னவாக இருக்கும் என்பதைப் பொதுமைப்படுத்தும் திறன் மனுஷனுக்கு ஒருபோதும் இருக்க முடியாது. அவரது உருவத்தை அவருடைய மனநிலையால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அவரது மூக்கு, அவரது வாய், அவரது கண்கள் மற்றும் அவரது தலைமுடி ஆகியவற்றின் தோற்றத்தைப் பொறுத்தவரை, இவை உன் பொதுமைப்படுத்தும் திறனை மீறியவையாக இருக்கின்றன. யோவானுக்கு வெளிப்பாடு வந்தபோது, அவன் மனுஷகுமாரனின் உருவத்தைக் கண்டான்: அவருடைய வாய்க்கு வெளியே கூர்மையான இரட்டை முனைகள் கொண்ட வாள் ஒன்று இருந்தது, அவருடைய கண்கள் நெருப்புச் சுடர்கள் போலவும், தலை மற்றும் தலைமுடி இரண்டும் கம்பளி போல வெண்மையாகவும், அவரது கால்கள் மெருகூட்டப்பட்ட வெண்கலம் போலவும் இருந்தன, மற்றும் அவரது மார்பைச் சுற்றி ஒரு தங்கக் கவசம் இருந்தது. அவனது வார்த்தைகள் மிகவும் தெளிவாக இருந்தாலும், அவன் விவரித்த தேவனின் உருவம் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் உருவமாக இருக்கவில்லை. அவன் பார்த்தது ஒரு தரிசனம் மட்டுமே, பொருள் உலகைச் சேர்ந்த ஒருவனின் உருவத்தை அல்ல. யோவான் ஒரு தரிசனத்தைக் கண்டான், ஆனால் அவன் தேவனின் மெய்மையான தோற்றத்தைக் காணவில்லை. மாம்சமாகிய தேவனின் உருவம், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் உருவமாக இருப்பதால், அதனால் தேவனின் மனநிலையை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாது. யேகோவா மனுஷகுலத்தை சிருஷ்டித்தபோது, அவர் தம்முடைய சாயலிலேயே அவ்வாறு செய்தார் என்றும், ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்தார் என்றும் கூறினார். அந்த நேரத்தில், அவர் தேவனின் சாயலில் ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்ததாகக் கூறினார். மனுஷனின் உருவம் தேவனின் உருவத்தை ஒத்திருந்தாலும், மனுஷனின் தோற்றம் தான் தேவனின் உருவம் என்று அர்த்தப்படுவதாகக் கருத முடியாது. தேவனின் உருவத்தை முழுமையாக எடுத்துக்காட்டுவதற்கு உன்னால் மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் தேவன் மிகவும் உயர்ந்தவர், மகத்துவம் மிக்கவர், அதிசயமானவர், புரிந்துகொள்ள முடியாதவர்!
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 132
இந்த நேரத்தில், தேவன் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல, மாறாக மிகவும் சாதாரணமான நிலையில் கிரியையைச் செய்ய வருகிறார். மேலும், இது தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் சரீரம் மட்டுமல்ல, இது தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் சரீரமும் கூட. இது மிகவும் சாதாரண மாம்சம். அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் எதையும் உன்னால் பார்க்க முடியாது, ஆனால் நீ அவரிடமிருந்து முன்பு கேள்விப்படாத சத்தியங்களைப் பெறலாம். இந்த அற்பமான மாம்சம்தான் தேவனிடமிருந்து வரும் சத்திய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை மேற்கொள்கிறது, மேலும் மனிதன் புரிந்துகொள்வதற்காக தேவனுடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. பரலோகத்தில் இருக்கும் தேவனைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? பரலோகத்திலுள்ள தேவனைப் புரிந்துகொள்வதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? மனிதகுலம் சென்று சேரும் இடத்தைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் அவர் உனக்குச் சொல்லுவார்—அதாவது எந்த மனிதனும் உனக்குச் சொல்ல முடியாத இரகசியங்களைச் சொல்லுவார், மேலும் நீ புரிந்து கொள்ளாத சத்தியங்களையும் அவர் உனக்குச் சொல்வார். ராஜ்யத்திற்குள் அவரே உன் வாசலாகவும், புதிய யுகத்திற்கான உன் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அத்தகைய ஒரு சாதாரண மாம்சம் பல புரிந்துகொள்ள முடியாத இரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அவருடைய செயல்கள் உனக்கு விவரிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அவர் செய்யும் கிரியையின் முழுக் குறிக்கோளும், ஜனங்கள் நம்புகிறபடி, அவர் ஒரு எளிய மாம்சமல்ல என்பதை நீ காண அனுமதிக்கப் போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால், அவர் தேவனுடைய சித்தத்தையும், கடைசி நாட்களில் மனிதகுலத்தின் மீது தேவன் காட்டிய அக்கறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வானங்களையும் பூமியையும் அசைப்பதாகத் தோன்றும் அவரது வார்த்தைகளைக் கேட்கவும், அக்கினி ஜுவாலைகளைப் போல அவரது கண்களைப் பார்க்கவும், அவருடைய இருப்புக்கோலின் சீர்பொருந்தப் பண்ணுதலை நீ பெறவும் முடியாமல் போனாலும், தேவன் கோபமாக இருக்கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து உன்னால் கேட்க முடியும், மேலும் தேவன் மனிதகுலத்திற்கு இரக்கம் காட்டுகிறார் என்பதையும் நீ அறிந்துகொள்ள முடியும்; தேவனுடைய நீதியான மனநிலையையும் அவருடைய ஞானத்தையும் நீ கண்டுகொள்ளலாம், மேலும், முழு மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அக்கறையை உணரலாம். கடைசி நாட்களில் தேவனுடைய கிரியை என்னவென்றால், பரலோகத்திலுள்ள தேவன் பூமியில் உள்ள மனிதர்களிடையே வாழ்வதைக் காண மனிதனை அனுமதிப்பதும், அவன் தேவனை அறிந்துகொள்ளவும், கீழ்ப்படியவும், வணங்கவும், நேசிக்கவும் மனிதனுக்கு உதவுவதுமே ஆகும். இதனால்தான் அவர் இரண்டாவது முறையாக மாம்சத்திற்குத் திரும்பியுள்ளார். இன்று மனிதன் பார்ப்பது மனிதனைப் போன்ற ஒரு தேவனாக, அதாவது மூக்கு மற்றும் இரண்டு கண்களைக் கொண்ட தேவனாக, மற்றும் குறிப்பிட்டுக் கூற முடியாத தேவனாக இருந்தாலும், இறுதியில், இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானமும் பூமியும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்பதையும்; இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் மங்கலாகிவிடும், பூமி குழப்பத்தில் மூழ்கிவிடும், பஞ்சம் மற்றும் வாதைகளுக்கு மத்தியில் எல்லா மனிதர்களும் வாழ்வார்கள் என்பதையும் தேவன் உங்களுக்குக் காண்பிப்பார். கடைசி நாட்களில் மனுவுருவான தேவன் உங்களை இரட்சிப்பதற்கு வரவில்லை என்றால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே முழு மனுக்குலத்தையும் நரகத்தில் அழித்திருப்பார் என்பதையும்; இந்த மாம்சம் ஜீவித்திருக்கவில்லை என்றால், நீங்கள் என்றென்றும் பிரதான பாவிகளாக இருந்திருப்பீர்கள் மற்றும் நீங்கள் என்றென்றும் சடலங்களாகவே இருந்திருப்பீர்கள் என்பதையும் அவர் உங்களுக்குக் காண்பிப்பார். இந்த மாம்சம் ஜீவித்திராவிட்டால், எல்லா மனிதர்களும் தவிர்க்கமுடியாத பேரழிவை எதிர்கொள்வார்கள் என்பதையும், கடைசி நாட்களில் தேவன் மனிதகுலத்திற்கு அளிக்கும் இன்னும் அதிகக் கடுமையான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சாதாரண மாம்சம் பிறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் அனைவரும் வாழ முடியாமல் உயிருக்குப் பிச்சை எடுக்கும் ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள், மரிக்க முடியாமல் மரணத்திற்காக ஜெபிக்கிறவர்களாக இருந்திருப்பீர்கள்; இந்த மாம்சம் இல்லாதிருந்தால், நீங்கள் சத்தியத்தைப் பெற முடியாமல், இன்று தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக வரமுடியாமல், மாறாக, உங்களுடைய கடுமையான பாவங்களுக்காக நீங்கள் தேவனால் தண்டிக்கப்பட்டிருப்பீர்கள். தேவன் மாம்சத்திற்குத் திரும்பாமல் இருந்திருந்தால், யாருக்கும் இரட்சிப்பின் வாய்ப்பு இருந்திருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மாம்சத்தின் வருகை இல்லாமல் இருந்திருந்தால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார் அல்லவா? இது அவ்வாறாக இருக்க, தேவனுடைய இரண்டாவது மனுவுருவெடுத்தலை உங்களால் இன்னும் நிராகரிக்க முடியுமா? இந்தச் சாதாரண மனிதரிடமிருந்து நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும் என்பதால், நீங்கள் ஏன் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 133
தேவனுடைய கிரியை என்பது நீ புரிந்து கொள்ள முடியாத ஒன்று. உன்னுடைய தேர்வு சரியானதா என்பதையும் உன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அல்லது தேவனுடைய கிரியை வெற்றிபெற முடியுமா என்பதையும் உன்னால் அறிய முடியாவிட்டால், பிறகு இந்த சாதாரண மனிதர் உனக்குப் பெரிதும் உதவக்கூடும் என்பதைப் பார்க்கவும் மற்றும் தேவன் உண்மையில் பெரிய கிரியை செய்தாரா என்பதை அறியவும் உன் அதிர்ஷ்டத்தை ஏன் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது? இருப்பினும், நோவாவின் காலத்தில், மனிதர்கள் புசித்தும், குடித்தும், பெண்கொண்டும், பெண்கொடுத்தும் தேவனால் பார்க்க சகிக்கமுடியாத அளவிற்கு இருந்ததை நான் உனக்குச் சொல்லியே ஆக வேண்டும், எனவே அவர் மனிதகுலத்தை அழிக்க ஒரு பெரிய ஜலப்பிரளயத்தை அனுப்பினார், நோவாவின் குடும்பத்திலுள்ள எட்டுபேர் மற்றும் அனைத்து வகையான பறவைகள் மற்றும் மிருகங்களை மட்டுமே தப்பும்படிச் செய்தார். எவ்வாறாயினும், கடைசி நாட்களில், தேவனால் காப்பாற்றப்பட்டவர்கள் அனைவரும் கடைசி வரை அவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் ஆவர். இரண்டு யுகங்களும் தேவனால் பார்க்க சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு பெரும் சீர்கேடு நிறைந்த காலங்களாக இருந்தபோதிலும், இரு யுகங்களிலும் மனிதகுலம் மிகவும் சீர்கெட்டுப் போயிருந்தாலும், தேவன் தான் தங்களுடைய கர்த்தர் என்பதை மறுதலித்தபோதிலும், தேவன் நோவாவின் காலத்திலுள்ள ஜனங்களை மட்டுமே அழித்தார். இரு யுகங்களிலும் மனிதகுலம் தேவனுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது, ஆனாலும் தேவன் கடைசி நாட்களின் மனிதர்களிடம் இப்போது வரை பொறுமையாக இருக்கிறார். இது ஏன்? ஏன் என்று நீங்கள் ஆச்சரியப்படவே இல்லையா? உங்களுக்கு உண்மையிலேயே தெரியாவிட்டால், நான் உங்களுக்குச் சொல்கிறேன். கடைசி நாட்களில் தேவன் ஜனங்களுக்குக் கிருபையை அளிக்க முடிந்தது என்பதற்கான காரணம், அவர்கள் நோவாவின் காலத்தில் இருந்தவர்களை விட குறைவான அளவே சீர்கெட்டுப்போயிருந்தார்கள் என்பது அல்ல, அல்லது அவர்கள் தேவனிடத்தில் மனந்திரும்புதலைக் காண்பித்திருக்கிறார்கள் என்பதும் அல்ல, கடைசி நாட்களில் தேவன் அவர்கள் மேல் அழிவைக் கொண்டுவருவதற்கு முடியாதபடிக்கு தொழில்நுட்பமானது மிகவும் நவீனமாக உள்ளது என்பதும் அல்ல. மாறாக, கடைசி நாட்களில் ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தில் தேவன் செய்ய வேண்டிய கிரியை இருக்கிறது, மேலும் தேவன் தனது மனுவுருவில் இந்த கிரியையைத் தானே செய்வார். மேலும், தேவன் தனது இரட்சிப்பின் பாத்திரங்களாகவும், அவருடைய நிர்வாகத் திட்டத்தின் பலனாகவும் இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத் தேர்வுசெய்து, இந்த ஜனங்களை அடுத்த யுகத்திற்குக் கொண்டு வருவார். ஆகையால் எதுவாக இருந்தாலும், தேவன் செலுத்திய இந்த விலையானது, அவருடைய மனுவுருவான மாம்சம் கடைசி நாட்களில் செய்யும் கிரியைக்கான முழு ஆயத்தமாகவே இருந்தது. நீங்கள் இன்று வந்துவிட்டீர்கள் என்ற உண்மைக்கு இந்த மாம்சமே காரணமாக இருக்கிறது. தேவன் மாம்சத்தில் வாழ்கிறார் என்பதால்தான் நீங்கள் ஜீவனோடு வாழ வாய்ப்பு உள்ளது. இந்தச் சாதாரண மனிதரால் இந்த நல்ல அதிர்ஷ்டம் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இறுதியில் ஒவ்வொரு தேசமும் இந்தச் சாதாரண மனிதரை ஆராதிப்பதோடு, இந்த முக்கியமற்ற மனிதருக்கு நன்றி செலுத்திக் கீழ்ப்படிவார்கள், ஏனென்றால் எல்லா மனிதர்களையும் இரட்சித்த அவர் கொண்டுவந்த சத்தியமும், ஜீவனும் மற்றும் வழியுமாக அது இருக்கிறது, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான மோதலைத் தளர்த்தியது, இருவருக்கும் இடையேயான தூரத்தையும் குறைத்தது, தேவன் மற்றும் மனிதனுடைய நினைவுகளுக்கு இடையிலான தொடர்பைத் திறந்து கொடுத்தது. தேவனுக்காக இன்னும் பெரிய மகிமையைக் கொண்டுவந்தவரும் அவரே. இது போன்ற ஒரு சாதாரண மனிதர் உன் நம்பிக்கை மற்றும் போற்றுதலுக்கு தகுதியற்றவரா? அத்தகைய சாதாரண மாம்சம் கிறிஸ்து என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமாக இல்லையா? அத்தகைய சாதாரண மனிதர் மனிதர்களிடையே தேவனுடைய வெளிப்பாடாக மாற முடியாதா? மனிதகுலத்தைப் பேரழிவிலிருந்து இரட்சித்த அத்தகைய மனிதர், உங்களுடைய அன்பிற்கும், அவரைப் பற்றிக்கொள்ளுவதற்கான உங்கள் விருப்பத்திற்கும் தகுதியற்றவரா? அவருடைய வாயிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை நீங்கள் நிராகரித்து, உங்களிடையே அவர் ஜீவிப்பதை வெறுக்கிறீர்கள் என்றால், இறுதியில் உங்களின் நிலை என்னவாகும்?
தேவனுடைய கடைசி நாட்களின் கிரியைகள் யாவும் இந்தச் சாதாரண மனிதர் மூலமாகவே செய்யப்படுகின்றன. அவர் உனக்கு எல்லாவற்றையும் வழங்குவார், மேலும் என்னவென்றால், உன் தொடர்பான அனைத்தையும் அவரால் தீர்மானிக்க முடியும். குறிப்பிடத் தகுதியற்ற ஒரு மிகவும் எளிமையான ஒரு மனிதர் நீங்கள் விசுவாசிக்கும் இத்தகைய ஒரு மனிதராக இருக்க முடியுமா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய சத்தியம் போதுமானதாக இல்லையா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய செயல்களின் சாட்சி போதுமானதாக இல்லையா? அல்லது அவர் உங்களைக் கொண்டுவரும் பாதை நீங்கள் நடக்கத் தகுதியற்றதா? எல்லாவற்றையும் சொல்லி மற்றும் செய்து முடித்தவுடன், நீங்கள் அவரை வெறுக்கவும், அவரைத் தூக்கி எறிந்து, அவரைத் தவிர்க்கவும் என்ன காரணம்? இந்த மனிதரே சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், இந்த மனிதரே சத்தியத்தை அளிக்கிறார், இந்த மனிதரே உங்களுக்குப் பின்பற்றத்தக்கதாக ஒரு பாதையை அளிக்கிறார். இந்த சத்தியங்களுக்குள் தேவனுடைய கிரியையின் தடயங்களை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இயேசுவின் கிரியை இல்லாமல், மனிதகுலம் சிலுவையிலிருந்து இறங்கியிருக்க முடியாது, இன்றைய மனுவுருவெடுத்தல் இல்லாமல், சிலுவையிலிருந்து இறங்குவோர் ஒருபோதும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறவோ அல்லது புதிய யுகத்திற்குள் நுழையவோ முடியாது. இந்தச் சாதாரண மனிதரின் வருகை இல்லாமல், தேவனுடைய உண்மையான முகத்தைக் காண உங்களுக்கு ஒருபோதும் வாய்ப்பிருக்காது, அல்லது அதைக் காண நீங்கள் தகுதியடைந்திருக்க மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அனைவரும் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டிருக்க வேண்டிய பொருட்களாக இருக்கிறீர்கள். தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் வருகையால், தேவன் உங்களை மன்னித்து, உங்களுக்கு இரக்கம் காண்பித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்னும், நான் உங்களுக்கு கடைசியில் விட்டுப்போக வேண்டிய வார்த்தைகள் இவைதான்: தேவனின் மனுவுருவாக இருக்கும் இந்தச் சாதாரண மனிதர் உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். தேவன் ஏற்கனவே மனிதர்களுக்குள்ளே செய்திருக்கிற மிகப் பெரிய காரியம் இதுதான்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 134
நடைமுறை தேவனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஆவி, ஆள்தத்துவம் மற்றும் வார்த்தை ஆகியவற்றினால் ஆனவர்தான் நடைமுறை தேவன். இதுதான் நடைமுறை தேவன் என்பதற்கான உண்மையான அர்த்தமாகும். நீங்கள் அவருடைய ஆள்தத்துவத்தை மட்டுமே அறிந்திருந்தால், மேலும் நீங்கள் அவருடைய பழக்கவழக்கங்களையும் ஆளுமையையும் அறிந்திருந்து, ஆவியின் கிரியையையோ, ஆவி மாம்சத்தில் என்ன செய்யும் என்பதையோ அறியவில்லை என்றால், மேலும் நீங்கள் ஆவியின் மீதும், வார்த்தையின் மீதும் மட்டுமே கவனம் செலுத்தி, ஆவிக்கு முன்பாக மட்டுமே ஜெபம் செய்து நடைமுறை தேவனுக்குள் உள்ள தேவனுடைய ஆவியின் கிரியையை அறியவில்லை என்றால், நீங்கள் நடைமுறை தேவனை அறியவில்லை என்பதையே இது காட்டுகிறது. நடைமுறை தேவனைப் பற்றிய அறிவு என்றால் அவருடைய வார்த்தைகளை அறிந்து கொள்வதும் அனுபவிப்பதுமாகும், மேலும் பரிசுத்த ஆவியின் கிரியையின் விதிகளையும் கொள்கைகளையும் மற்றும் தேவனுடைய ஆவி மாம்சத்தில் எவ்வாறு கிரியை செய்கிறது என்பதையும் புரிந்து கொள்வதுமாகும். மாம்சத்தில் தேவனுடைய ஒவ்வொரு கிரியையும் ஆவியினால் ஆளுகை செய்யப்படுகிறது என்பதையும், அவர் பேசும் வார்த்தைகள் ஆவியின் நேரடி வெளிப்பாடு என்பதையும் அறிந்து கொள்வதும் இதில் அடங்கும். ஆகவே, நடைமுறை தேவனை அறிந்துகொள்ள, மனிதத் தன்மையிலும் தெய்வீகத் தன்மையிலும் தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். ஆதலால், இது ஆவியின் வெளிப்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது, இதன்மூலம் எல்லா மக்களும் ஈடுபடுகின்றனர்.
ஆவியின் வெளிப்பாடுகளின் அம்சங்கள் எவை? சிலநேரங்களில் தேவன் மனிதத் தன்மையிலும், சிலநேரங்களில் தெய்வீகத் தன்மையிலும் கிரியை செய்கிறார், ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆவியே கட்டளையிடுகிறது. மக்களுக்குள் இருக்கும் ஆவி எதுவாக இருந்தாலும், அவர்களின் வெளிப்புற வெளிப்பாடு இதுதான். ஆவி இயல்பாகவே கிரியை செய்கிறது, ஆனால் ஆவியினால் அவருடைய வழி நடத்துதலுக்கு இரண்டு பகுதிகள் உள்ளன: ஒரு பகுதி மனிதத் தன்மையில் அவர் செய்த கிரியை, மற்றொன்று தெய்வீகத் தன்மையின் மூலம் அவர் செய்த கிரியை. நீங்கள் இதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். ஆவியின் கிரியை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது: அவருடைய மனிதக் கிரியை தேவைப்படும் போது, ஆவி இந்த மனிதக் கிரியையை வழிநடத்துகிறது, அவருடைய தெய்வீகக் கிரியைத் தேவைப்படும் போது, அதைச் செய்ய தெய்வீகத் தன்மை நேரடியாகத் தோன்றுகிறது. தேவன் மாம்சத்தில் கிரியை செய்து மாம்சத்தில் தோன்றுவதால், அவர் மனிதத் தன்மை மற்றும் தெய்வீகத் தன்மை இரண்டிலும் கிரியை செய்கிறார். மனிதத் தன்மையில் அவரது கிரியை ஆவியால் வழிநடத்தப்படுகிறது, மேலும் மக்களின் மாம்ச தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவருடன் தங்கள் ஈடுபாட்டை எளிதாக்கிக் கெள்வதற்கும், தேவனுடய யதார்த்தத்தையும் சுபாவத்தையும் காண அவர்களை அனுமதிப்பதற்கும், தேவனுடைய ஆவி மாம்சத்தில் வந்து, மனிதர் மத்தியில் மனிதருடன் சேர்ந்து வாழ்வதையும், மனிதருடன் ஈடுபடுவதையும் காண அவர்களை அனுமதிப்பதற்கும் மனிதத் தன்மையில் அவரது கிரியை செய்யப்படுகிறது. மக்களின் வாழ்க்கையை வழங்குவதற்கும், மக்களை எல்லாவற்றிலும் நேர்மறையான பக்கத்திலிருந்து வழிநடத்துவதற்கும், மக்களின் மனநிலையை மாற்றுவதற்கும், மாம்சத்தில் ஆவியின் தோற்றத்தைக் காண அவர்களை உண்மையிலேயே அனுமதிப்பதற்கும் தெய்வீகத்தன்மையில் அவரது கிரியை செய்யப்படுகிறது. முக்கியமாக, மனிதனின் வாழ்க்கையில் வளர்ச்சியானது தெய்வீகத் தன்மையில் தேவனுடைய கிரியை மற்றும் வார்த்தைகளின் மூலம் நேரடியாக பெறப்படுகிறது. தெய்வீகத் தன்மையில் தேவனின் கிரியையை மக்கள் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே, அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றங்களை அடைய முடியும், அப்போது தான் அவர்கள் தங்கள் ஆவியில் நிரம்பியிருக்க முடியும்; மேலும், மனிதத் தன்மையில் தேவனுடைய மேய்ப்பர் பணி, ஆதரவு மற்றும் மனிதத் தன்மையில் உதவுதல் போன்ற கிரியைகள் செய்யப்பட்டால் மட்டுமே தேவனுடைய கிரியையின் பலன்களை முழுமையாக அடைய முடியும். இன்று பேசப்படும் நடைமுறை தேவன் தாமே மனிதத் தன்மையிலும் தெய்வீகத் தன்மையிலும் கிரியை செய்கிறார். நடைமுறை தேவனின் தோற்றத்தின் மூலம், அவருடைய வழக்கமான மனிதப் பணி மற்றும் ஜீவன் மற்றும் அவருடைய முழு தெய்வீகப் பணி ஆகியவை நிறைவேற்றப்படுகின்றன. அவரது மனிதத் தன்மையும் தெய்வீகத் தன்மையும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன, இரண்டின் கிரியையும் வார்த்தைகளால் நிறைவேற்றப்படுகின்றன; மனிதத் தன்மையினாலும் அல்லது தெய்வீகத் தன்மையினாலும் அவர் வார்த்தைகளை உதிர்க்கிறார். தேவன் மனிதத் தன்மையில் கிரியை செய்யும் போது, அவர் மனித மொழியைப் பேசுகிறார், இதனால் மக்கள் அதை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியும். அவருடைய வார்த்தைகள் தெளிவாகப் பேசப்படுகின்றன, புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கின்றன, அவற்றை எல்லா மக்களுக்கும் கொடுக்கலாம்; மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தாலும் அல்லது குறைவாக படித்திருந்தாலும், எல்லோருமே தேவனுடைய வார்த்தைகளைப் பெற முடியும். தெய்வீகத் தன்மையில் தேவனுடைய பணியானது வார்த்தைகள் மூலமாக செய்யப்படுகிறது, ஆனால் அது சிலாக்கியமும் ஜீவனும் நிறைந்ததாக இருக்கிறது, அது மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது, அது மனித விருப்பங்களுடன் தொடர்பில்லாதது, அது மனித வரம்புகளற்றது, அது எந்தவொரு சாதாரண மனிதனின் எல்லைக்கும் வெளியே உள்ளது; அது மாம்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் அது ஆவியின் நேரடி வெளிப்பாடாக இருக்கிறது. மனிதத் தன்மையில் செய்யப்படும் தேவனின் கிரியையை மாத்திரமே மக்கள் ஏற்றுக் கொண்டால், அவர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் அடைத்துக் கொள்வார்கள், இதனால் அவர்களுக்குள் ஒரு சிறிய மாற்றமாவது ஏற்பட வேண்டுமென்றால் நீண்ட கால கையாளுதல், கிளை நறுக்குதல் மற்றும் தண்டித்து திருத்துதல் ஆகியவை தேவைப்படும். ஆனாலும், பரிசுத்த ஆவியின் கிரியை அல்லது பிரசன்னம் இல்லாமல், அவர்கள் எப்போதும் தங்கள் பழைய வழிகளுக்கே திரும்பிச் செல்வார்கள்; தெய்வீகக் கிரியை மூலமாக மாத்திரமே இந்த மாறுபாடுகளையும் குறைபாடுகளையும் சரிசெய்ய முடியும், அப்போதுதான் மக்களைப் பரிபூரணமாக்க முடியும். தொடர்ச்சியான கையாளுதல் மற்றும் கிளை நறுக்குதலுக்குப் பதிலாக, அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்யும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல், மக்களின் ஒவ்வொரு நிலையையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல், அவர்களுடைய வாழ்க்கையையும், அவர்களுடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் வழிநடத்தும் மற்றும் அவர்களுடைய நோக்கங்களையும் ஊக்கங்களையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற நேர்மறையான வழிமுறைகளே தேவைப்படுகின்றன. இதுதான் நடைமுறை தேவனின் உண்மையான பணியாகும். ஆகவே, நடைமுறை தேவனுடனான உங்கள் அணுகுமுறையில், நீங்கள் அவருடைய மனிதத் தன்மைக்கு முன்பாக அவரை அங்கீகரித்து, ஏற்றுக் கொண்டு உங்களை உடனடியாக ஒப்புக் கொடுக்க வேண்டும், மேலும் அவருடைய தெய்வீகக் கிரியைகளையும் வார்த்தைகளையும் நீங்கள் ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிய வேண்டும். மாம்சத்தில் தேவனின் தோற்றம் என்றால் தேவனுடைய ஆவியின் அனைத்து கிரியைகளும் வார்த்தைகளும் அவருடைய சாதாரண மனிதத் தன்மை மூலமாகவும், அவருடைய மனித அவதாரம் எடுத்த மாம்சத்தின் மூலமாகவும் செய்யப்படுகின்றன என்று அர்த்தமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய ஆவி ஒரே நேரத்தில் அவருடைய மனிதக் கிரியையை வழிநடத்துகிறார் மற்றும் மாம்சத்தில் தெய்வீகக் கிரியை செய்கிறார், மேலும் தேவனுடைய மனித அவதாரத்தில் நீங்கள் மனிதனில் தேவனுடைய கிரியை மற்றும் அவருடைய முழு தெய்வீகக் கிரியை இரண்டையும் காணலாம். இதுதான் மாம்சத்தில் நடைமுறை தேவனின் தோற்றத்தின் உண்மையான முக்கியத்துவம் ஆகும். உங்களால் இதைத் தெளிவாகக் காண முடிந்தால், உங்களால் தேவனின் வெவ்வேறு பகுதிகளை இணைக்க இயலும்; தெய்வீகத்தில் அவர் செய்த கிரியையுடன் தேவையற்ற முக்கியத்துவத்தை இணைப்பதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள், மேலும் மனிதனில் அவர் செய்த கிரியையைத் தேவையற்ற நிராகரிப்புடன் பார்ப்பதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள், மேலும் நீங்கள் வரம்பு மீறிய நிலைக்குச் செல்லவோ, எந்த மாற்றுப்பாதைகளையும் தேர்ந்தெடுக்கவோ மாட்டீர்கள். ஒட்டுமொத்தமாக, நடைமுறை தேவன் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆவியால் வழிகாட்டப்பட்டபடி, அவருடைய மனித மற்றும் அவருடைய தெய்வீகக் கிரியையானது அவருடைய மாம்சத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது, இதன்மூலம் அவர் வெளிப்படையானவர் மற்றும் ஜீவனுள்ளவர், நிஜமானவர் மற்றும் உண்மையானவர் என்பதை மக்களால் காண இயலும்.
மனிதத் தன்மையில் தேவனுடைய ஆவியின் கிரியையானது மாறும் தன்மைகளைக் கொண்டுள்ளது. மனிதத் தன்மையைப் பரிபூரணமாக்குவதன் மூலம், ஆவியின் வழிநடத்துதலைப் பெற அவர் தனது மனிதத் தன்மையைச் செயல்படுத்துகிறார், அதன் பிறகு அவருடைய மனிதத் தன்மையானது திருச்சபைகளுக்கு வழங்கவும் அவற்றை வழி நடத்தவும் முடிகிறது. இது தேவனுடைய சாதாரண கிரியையின் ஒரு வெளிப்பாடாகும். ஆகவே, மனிதத் தன்மையில் தேவனுடைய கிரியையின் கொள்கைகளை நீங்கள் தெளிவாகக் காண முடியுமானால், மனிதத் தன்மையில் தேவனுடைய கிரியைகள் குறித்த கருத்துக்கள் உங்களிடம் இருக்க முடியாது. வேறு எதுவாக இருந்தாலும், தேவனுடைய ஆவி தவறாக இருக்க முடியாது. அவர் சரியானவர், மாசற்றவர்; அவர் எதையும் தவறாக செய்வதில்லை. தெய்வீகக் கிரியை என்பது மனிதத் தன்மையின் குறுக்கீடு இல்லாமல், தேவனுடைய சித்தத்தின் நேரடி வெளிப்பாடாகும். இது பரிபூரணத்திற்கு உள்ளாகாது, ஆனால் ஆவியிலிருந்து நேரடியாக வருகிறது. இருப்பினும், உண்மை என்னவென்றால் அவருடைய சாதாரண மனிதத் தன்மை காரணமாக அவரால் தெய்வீகத் தன்மையில் கிரியை செய்ய முடியும்; இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, இது ஒரு சாதாரண மனிதனால் செய்யப்படுவது போலத் தோன்றுகிறது. தேவன் முக்கியமாக தேவனுடைய வார்த்தைகளை மாம்சத்தின் மூலமாக வெளிப்படுத்துவதற்காகவும் தேவனுடைய ஆவியின் கிரியையை மாம்சத்தின் மூலம் நிறைவேற்றுவதற்காகவும் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 135
இன்று, நடைமுறை தேவனைப் பற்றிய மக்களின் அறிவு ஒருதலைப்பட்சமாகவே இருக்கிறது, மேலும் மனித அவதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. தேவனுடைய மாம்சத்தின் பொருட்டு, தேவனுடைய ஆவியை மிக அதிகமாக உள்ளடக்கியிருப்பதையும், அவர் மிகவும் செல்வச் செழிப்பானவர் என்பதையும் அவருடைய கிரியை மற்றும் வார்த்தைகளின் மூலம் மக்கள் பார்க்கிறார்கள். இது எவ்வாறு இருப்பினும், தேவனுடைய சாட்சியம் இறுதியில் தேவனுடைய ஆவியிலிருந்து வருகிறது: தேவன் மாம்சத்தில் என்ன செய்கிறார், அவர் எந்தக் கொள்கைகள் மூலம் செயல்படுகிறார், அவர் மனிதத் தன்மையில் என்ன செய்கிறார், அவர் தெய்வீகத் தன்மையில் என்ன செய்கிறார். மக்களுக்கு இது குறித்த அறிவு இருக்க வேண்டும். இன்று, உங்களால் இவரை தொழுதுகொள்ள முடிகிறது, ஆனால் உண்மையில் நீங்கள் ஆவியைத் தொழுதுகொள்கிறீர்கள், தேவனுடைய மனித அவதாரம் குறித்துத் தங்கள் அறிவில் குறைந்தபட்சம் மக்கள் அடைய வேண்டிய காரியம் இதுதான்: மாம்சத்தின் மூலமாக ஆவியின் இயல்பை அறிந்துகொள்ள வேண்டும், மாம்சத்தில் ஆவியின் தெய்வீகக் கிரியையையும் மாம்சத்தில் மனித கிரியையையும் அறிந்துகொள்ள வேண்டும், மாம்சத்தில் ஆவியின் எல்லா வார்த்தைகளையும் வாக்குகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், தேவனுடைய ஆவி மாம்சத்தை எவ்வாறு வழி நடத்துகிறது என்பதையும், மாம்சத்தில் அவருடைய வல்லமை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் காண வேண்டும். மனிதன் மாம்சத்தின் மூலம் பரலோகத்திலுள்ள ஆவியை அறிந்துகொள்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்; மனிதர்கள் மத்தியில் நடைமுறை தேவனின் தோற்றம் மக்களின் எண்ணங்களில் உள்ள தெளிவற்ற தேவனை நீக்கியுள்ளது. மக்கள் நடைமுறை தேவனைத் தொழுதுகொள்வது அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதை அதிகரித்துள்ளது, மேலும், மாம்சத்தில் தேவனுடைய தெய்வீகக் கிரியையின் மூலமாகவும், மாம்சத்தில் அவருடைய மனிதக் கிரியையின் மூலமாகவும், மனிதன் வெளிப்பாட்டைப் பெறுகிறான், வழிநடத்தப்படுகிறான், மேலும் மனிதனின் வாழ்க்கை மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுதான் மாம்சத்தில் ஆவி வருவதன் உண்மையான அர்த்தமாகும், இதன் முக்கியமான நோக்கம் என்னவென்றால் மக்கள் தேவனுடன் இணைந்து செயல்படலாம், தேவனை நம்பலாம், தேவனைப் பற்றிய அறிவைப் பெறலாம் என்பதாகும்.
முக்கியமாக, நடைமுறை தேவனைப் பற்றி மக்கள் என்ன மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்? மனுவுருவெடுத்தல், மாம்சத்தில் வார்த்தையின் தோற்றம், மாம்சத்தில் தேவனின் தோற்றம், நடைமுறை தேவனின் செயல்கள் போன்றவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இன்றைய விவாதத்தின் முக்கிய தலைப்புகள் எவை? மனுவுருவெடுத்தல், மாம்சத்தில் வார்த்தையின் வருகை, மற்றும் மாம்சத்தில் தேவனுடைய தோற்றம் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய பிரச்சினைகளாகும். உங்கள் அந்தஸ்தின் அடிப்படையிலும், காலகட்டத்தின் அடிப்படையிலும் நீங்கள் இந்தப் பிரச்சனைகளைப் படிப்படியாக புரிந்துகொள்ளவும், உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் அவற்றைப் பற்றிய தெளிவான அறிவைப் பெறவும் வேண்டும். தேவனுடைய வார்த்தைகளை மக்கள் அனுபவிக்கும் முறையும் மாம்சத்தில் தேவனுடைய வார்த்தைகளின் தோற்றத்தை அவர்கள் அறிந்துகொள்ளும் முறையும் ஒன்றாகும். தேவனுடைய வார்த்தைகளை மக்கள் எவ்வளவு அதிகமாக அனுபவிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுடைய ஆவியையும் அறிவார்கள்; தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலம், மக்கள் ஆவியின் கிரியையின் கொள்கைகளைப் புரிந்துகொண்டு, நடைமுறை தேவனை அறிந்துகொள்கிறார்கள். உண்மையில், தேவன் மக்களைப் பரிபூரணமாக்கி, அவர்களை ஆதாயப்படுத்தும் போது, அவர் நடைமுறை தேவனுடைய செயல்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்; அவர் மனித அவதாரத்தின் உண்மையான முக்கியத்துவத்தை மக்களுக்குக் காண்பிப்பதற்காகவும், தேவனுடைய ஆவி உண்மையில் மனிதனுக்கு முன்பாக தோன்றியிருப்பதைக் காண்பிப்பதற்காகவும் நடைமுறை தேவனுடைய கிரியையை அவர் பயன்படுத்துகிறார். மக்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு, பரிபூரணமாக்கப்படும் போது, நடைமுறை தேவனின் வெளிப்பாடுகள் அவர்களை வென்றுள்ளன; நடைமுறை தேவனுடைய வார்த்தைகள் அவர்களை மாற்றியுள்ளன, அவருடைய சொந்த ஜீவனை அவர்களுக்குள் புகுத்தியுள்ளன, அவர் என்னவாக இருக்கிறார் (அவர் மனிதத் தன்மையில் என்னவாக இருக்கிறார் அல்லது தெய்வீகத்தன்மையில் என்னவாக இருக்கிறார்) என்பதைக் கொண்டு அவர்களை நிரப்பியுள்ளன, அவருடைய வார்த்தைகளின் சாராம்சத்தினால் அவர்களை நிரப்பியுள்ளன மற்றும் அவருடைய வார்த்தைகளின்படி மக்களை வாழ வைத்துள்ளன. தேவன் மக்களை ஆதாயப்படுத்தும் போது, அவர் மிக மிக முக்கியமாக நடைமுறை தேவனுடைய வார்த்தைகளையும் வாக்குகளையும் மக்களின் குறைபாடுகளைக் கையாள்வதற்கும், அவர்களுடைய கலகக்கார மனநிலையை நியாயந்தீர்ப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் ஒரு வழியாகப் பயன்படுத்துகிறார், இதனால் அவர்களுக்குத் தேவையானதைப் பெறச் செய்கிறார் மற்றும் தேவன் மனிதர் மத்தியில் வந்துவிட்டார் என்பதைக் காண்பிக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, நடைமுறை தேவனால் செய்யப்படும் கிரியை என்னவென்றால், அவர் ஒவ்வொருவரையும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து இரட்சித்து, அவர்களை அசுத்தமான தேசத்திலிருந்து அழைத்துச் செல்கிறார், மேலும் அவர்களுடைய சீர்கேடான மனநிலையை நீக்குகிறார். நடைமுறை தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதன் மிக ஆழமான முக்கியத்துவம் என்னவென்றால், நடைமுறை தேவனை ஒரு முன்மாதிரியாகவும், உதாரணமாகவும் எடுத்துக்கொண்டு சாதாரண மனிதத் தன்மையில் வாழ வேண்டும், நடைமுறை தேவனுடைய வார்த்தைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப சிறிதளவு விலகலோ அல்லது மாறுபாடோ இல்லாமல் நடக்க வேண்டும், அவர் சொல்கிற வழியில் நடக்க வேண்டும் மற்றும் அவர் கேட்பதை நிறைவேற்ற வேண்டும். இவ்விதமாக, நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டிருப்பீர்கள். நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படும் போது, பரிசுத்த ஆவியின் கிரியையை மட்டுமே பெற்றிருப்பதில்லை; முக்கியமாக, நடைமுறை தேவனின் தேவைகளின்படி உங்களால் வாழ இயலும். பரிசுத்த ஆவியின் கிரியை மாத்திரம் உங்களிடம் இருப்பதனால் உங்களுக்கு ஜீவன் உள்ளது என்று அர்த்தமல்ல. உங்களுடைய நடைமுறை தேவனின் தேவைகளுக்கு ஏற்ப உங்களால் செயல்பட முடியுமா என்பதுதான் முக்கியமான காரியமாகும், இது நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட முடியுமா என்பதுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இவைதான் மாம்சத்தில் நடைமுறை தேவனுடைய கிரியையின் மாபெரும் அர்த்தமாகும். தேவன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றுவதன் மூலமும், தெளிவானவராகவும், ஜீவனுள்ளவராகவும் இருப்பதன் மூலமாகவும், மக்களால் பார்க்கப்படுவதன் மூலமாகவும், உண்மையில் மாம்சத்தில் ஆவியின் கிரியையைச் செய்வதன் மூலமாகவும், மாம்சத்தில் மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுவதன் மூலமாகவும் ஒரு கூட்ட மக்களை ஆதாயப்படுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். மாம்சத்தில் தேவனுடைய வருகை என்றால் முக்கியமாக மக்கள் தேவனுடைய உண்மையான செயல்களைக் காணவும், உருவமற்ற ஆவிக்கு மாம்ச உருவத்தைக் கொடுக்கவும், மக்கள் அவரைக் காணவும் தொடவும் அனுமதிக்க வேண்டும் என்பதாகும். இவ்விதமாக, அவரால் பரிபூரணமாக்கப்பட்டவர்கள் அவரைப் போல வாழ்வார்கள், அவரால் ஆதாயப்படுத்தப்படுவார்கள், அவருடைய இருதயத்திற்குப் பின்னால் இருப்பார்கள். தேவன் பரலோகத்தில் மாத்திரமே பேசிவிட்டு, உண்மையிலே பூமிக்கு வரவில்லை என்றால், மக்கள் தேவனை இன்னும் அறிய முடியாமல் இருப்பார்கள்; அவர்கள் வெற்றுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி தேவனுடைய செயல்களைப் பிரசங்கிக்க மட்டுமே முடியுமே தவிர, தேவனுடைய வார்த்தைகளை நிஜமாகக் கொண்டிருக்க மாட்டார்கள். தேவன் முக்கியமாகத் தன்னால் ஆதாயப்படுத்தப் பட்டவர்களுக்கு முன்மாதிரியாகவும் உதாரணமாகவும் செயல்படவுமே பூமிக்கு வந்துள்ளார்; மக்கள் இவ்வாறு மாத்திரமே உண்மையில் தேவனை அறிந்துகொள்ளவும், தேவனைத் தொடவும், அவரைப் பார்க்கவும் இயலும், அப்போதுதான் அவர்கள் உண்மையிலேயே தேவனால் ஆதாயப்படுத்தப்பட முடியும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 136
மாம்சமாகிய தேவனின் கிரியை இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும். அவர் முதன் முறையாக மாம்சமான பொழுது, ஜனங்கள் அவரை விசுவாசிக்கவில்லை அல்லது அவரை அறியவில்லை, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். பிறகு, அவர் இரண்டாவது முறையாக மாம்சமான பொழுதும், ஜனங்கள் அவரை விசுவாசிக்கவுமில்லை, அவரை அறிந்துகொள்ளவுமில்லை, மீண்டும் அவர்கள் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். மனிதன் தேவனின் சத்துரு அல்லவா? மனிதன் அவரை அறியாதிருந்தால், மனிதன் எவ்வாறு தேவனுடன் நெருக்கமாக இருக்க முடியும்? தேவனுக்கு சாட்சிக் கொடுக்க அவன் எவ்வாறு தகுதி பெற முடியும்? தேவனை நேசிப்பதாக, தேவனுக்கு ஊழியம் செய்வதாக, தேவனை மகிமைப்படுத்துவதாக மனிதன் கூறுபவை அனைத்தும் வஞ்சகப் பொய்கள் அல்லவா? நீ யதார்த்தமில்லாத, வழக்கத்துக்கு மாறான இந்த காரியங்களுக்கு உன் ஜீவனை அர்ப்பணித்திருந்தால், நீ வீணாக வேலை செய்யவில்லை என்பதாகும் அல்லவா? தேவன் யார் என்று கூட உனக்குத் தெரியாத பொழுது நீ தேவனுக்கு நெருக்கமானவனாக எவ்வாறு இருக்க முடியும்? அத்தகைய நாட்டம் தெளிவற்றதாகவும் விளக்கமற்றதாகவும் இருக்கிறது அல்லவா? இது வஞ்சகமில்லையா? ஒருவர் எவ்வாறு தேவனுடன் நெருக்கமாக இருக்க முடியும்? தேவனுடன் நெருக்கமானவராக இருப்பதன் நடைமுறை முக்கியத்துவம் என்ன? உன்னால் தேவனுடைய ஆவியானவருடன் நெருக்கமாக இருக்க முடியுமா? ஆவியானவர் எவ்வளவு சிறந்தவர் மற்றும் உன்னதமானவர் என்பதை உன்னால் காண முடிகிறதா? ஒரு அதரிசனமான, தொட்டுணர முடியாத தேவனின் நெருக்கம் தெளிவற்றதாகவும் விளக்கமற்றதாகவும் இருக்கிறது அல்லவா? அத்தகைய பின்தொடர்தலின் நடைமுறை முக்கியத்துவம் என்ன? இது எல்லாம் ஒரு வஞ்சகமான பொய் அல்லவா? நீ பின்தொடர்வது தேவனின் நெருக்கத்திற்தாக இருக்க வேண்டும், ஆனால் உண்மையில் நீ சாத்தானின் மடியில் இருக்கும் செல்ல நாயாக இருக்கிறாய், ஏனென்றால் நீ தேவனை அறியாதிருக்கிறாய், மேலும் அதரிசனமான, தொட்டுணர முடியாத, உன்னுடைய கருத்துக்களைக் கொண்ட, எங்கும் இல்லாத “எல்லாவற்றிற்குமான தேவனைப்” பின்தொடர்கிறாய். மறைமுகமாகச் சொன்னால், அத்தகைய ஒரு “தேவன்” சாத்தானே, நடைமுறையில் சொன்னால், அது நீதான். நீ உனக்கே நெருக்கமாக இருக்கப் பார்க்கிறாய், ஆனாலும் நீ தேவனுக்கு நெருக்கமாக மாற முயற்சிக்கிறேன் என்று சொல்கிறாய்—இது தூஷணமில்லையா? அத்தகைய பின்தொடர்தலின் மதிப்பு என்ன? தேவனுடைய ஆவியானவர் மாம்சமாக மாறாவிட்டால், தேவனின் சாராம்சமானது வெறுமையான, ஒரு அதரிசனமான, தொட்டுணர முடியாத ஜீவ ஆவியாக, ஒழுங்கற்ற மற்றும் உருவமற்ற, பொருளற்ற, அணுக முடியாத மற்றும் மனிதன் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இது போன்ற ஒரு உடலற்ற, ஆச்சரியமான, புரிந்து கொள்ள முடியாத ஆவியானவருக்கு எவ்வாறு மனிதன் நெருக்கமாக இருக்க முடியும்? இது ஒரு நகைச்சுவையல்லவா? இத்தகைய அபத்தமான பகுத்தறிவு தவறானது மற்றும் வழக்கத்துக்கு மாறானதுமாகும். சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தேவனுடைய ஆவியானவரிலிருந்து இயல்பாகவே வேறுபட்ட வகையைச் சேர்ந்தவனாக இருக்கிறான், ஆகவே அவர்கள் இருவரும் எவ்வாறு நெருக்கமானவர்களாக இருக்க முடியும்? தேவனுடைய ஆவியானவரை மாம்சத்தில் உணராதிருந்தால், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டியைப் போல தேவன் மாம்சமாகாமலும், தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமலும் இருந்திருந்தால், சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தகுதியற்று, அவருக்கு நெருக்கமானவனாக இருக்க முடியாமல் போயிருப்பான், மேலும் பரலோகத்திற்குள் அவர்களின் ஆத்துமாக்கள் நுழைந்த பின் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ள அந்த தேவபக்தியுள்ள விசுவாசிகளைத் தவிர, அநேக ஜனங்களால் தேவனுடைய ஆவியானவருக்கு நெருக்கமானவர்களாக மாறியிருக்க முடியாது. மாம்சமான தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் பரலோகத்திலுள்ள தேவனுக்கு நெருக்கமாக ஜனங்கள் மாற விரும்பினால், அவர்கள் ஆச்சரியப்படத்தக்க முட்டாள்தனமான மனிதரல்லாதவர்கள் அல்லவா? ஜனங்கள் ஒரு அதரிசனமான தேவனிடம் மட்டுமே “விசுவாசத்தைக்” காட்டுகிறார்கள், மேலும் காணக் கூடிய தேவனிடம் சிறிதளவும் கவனம் செலுத்துவதில்லை, ஏனென்றால் அதரிசனமான தேவனைப் பின்தொடர்வது மிகவும் எளிதாக இருக்கிறது. இருப்பினும், ஜனங்கள் விரும்பினால் இதைச் செய்யலாம், ஆனால் காணக் கூடிய தேவனைப் பின்தொடர்வது அவ்வளவு எளிதானது அல்ல. கற்பனை தேவர்களைத் தேடும் நபரால் தேவனை அடைய முடியாது, ஏனென்றால் மனிதனால் கற்பனை செய்யப்படுகின்ற, மனிதனால் அடைய இயலாத காரியங்கள் யாவும் தெளிவற்றும் விளக்கமற்றும் இருக்கின்றன. உங்களுக்கு நடுவில் வந்த தேவன் உங்களால் அணுக முடியாத ஒரு உயர்ந்த, உன்னத தேவனாக இருந்தால், அவருடைய சித்தத்தை உங்களால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? உங்களால் அவரை எவ்வாறு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியும்? அவர் தமது கிரியையை மட்டுமே செய்திருந்தாலும், மனிதனுடன் இயல்பான தொடர்பு இல்லாதவராகவோ, அல்லது இயல்பான மனிதத்தன்மை இல்லாதவராகவோ, மனுஷர்களால் அணுக முடியாதவராகவோ, அவர் உங்களுக்காக அதிகக் கிரியை செய்திருந்தாலும், அவரோடு உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல், அவரை உங்களால் காணவும் முடியவில்லை என்றால், உங்களால் அவரை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? இந்த மாம்சம் இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிராமல் இருந்திருந்தால், மனிதனுக்கு தேவனை அறிய வழி இருந்திருக்காது; தேவனுடைய மனுவுருவாதலின் நிமித்தமாக மட்டுமே மனிதன் மாம்சத்தில் தேவனுடன் நெருக்கமாக இருக்க தகுதியுடையவனாக உள்ளான். ஜனங்கள் தேவனுடன் நெருக்கமாகி வருகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவரோடு தொடர்பு கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவரோடு சேர்ந்து ஜீவிக்கிறார்கள், அவருடன் நட்புறவு கொள்கிறார்கள், அதனால் படிப்படியாக அவரை அறிந்துகொள்கிறார்கள். இவ்வாறு இல்லாதிருந்தால், மனிதனின் பின்தொடர்தல் வீணாகியிருந்திருக்காதா? அதாவது, மனிதன் தேவனுக்கு நெருக்கமானவனாக இருப்பது தேவனின் கிரியை காரணமாக மட்டும் அல்ல, மனுவுருவான தேவனின் யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மையும் காரணமாகும். தேவன் மாம்சமாக மாறுவதால் மட்டுமே, ஜனங்களுக்கு தங்கள் கடமையைச் செய்ய வாய்ப்பும், மெய்யான தேவனைத் தொழுவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இது மிகவும் யதார்த்தமான மற்றும் நடைமுறைச் சத்தியம் அல்லவா? இப்போது, நீ இன்னும் கூட பரலோகத்திலுள்ள தேவனுக்கு நெருக்கமாக இருக்க விரும்புகிறாயா? தேவன் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்ளும் பொழுது, அதாவது, தேவன் மாம்சமாக மாறும் பொழுதுதான், மனிதனால் அவருக்கு நெருக்கமானவனாகவும் நம்பிக்கையுள்ளவனாகவும் இருக்க முடியும். தேவன் ஆவியானாவராக இருக்கிறார்: உன்னதமான மற்றும் புரிந்துகொள்ள முடியாதவரான இந்த ஆவியானவருடன் நெருக்கமாக இருக்க ஜனங்கள் எவ்வாறு தகுதி பெறுகிறார்கள்? தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் இறங்கி, மனிதனைப் போலவே வெளித்தோற்றம் கொண்ட ஒரு சிருஷ்டியாக மாறும் பொழுதுதான், ஜனங்களால் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையில் அவரால் ஆதாயப்படுத்தப்பட முடியும். அவர் மாம்சத்தில் பேசுகிறார் மற்றும் கிரியை செய்கிறார், மனிதகுலத்தின் சந்தோஷங்கள், துக்கங்கள் மற்றும் உபத்திரவங்களில் பங்கு வகிக்கிறார், மனிதகுலத்தின் அதே உலகில் ஜீவிக்கிறார், மனித குலத்தைப் பாதுகாக்கிறார், அவர்களை வழிநடத்துகிறார், மேலும் இதன் மூலம் அவர் ஜனங்களைச் சுத்திகரித்து, அவருடைய இரட்சிப்பையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் அடைய அவர்களை அனுமதிக்கிறார். இவற்றை அடைந்த பிறகு, ஜனங்கள் தேவனின் சித்தத்தை உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்கள், அதன் பிறகு மட்டுமே அவர்களால் தேவனுடன் நெருக்கமானவர்களாக இருக்க முடியும். இது மட்டுமே நடைமுறைக்குரியது. தேவன் அதரிசனமானவராகவும், ஜனங்களால் புரிந்துகொள்ள முடியாதவராகவும் இருந்திருந்தால், அவர்கள் எவ்வாறு அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்க முடியும்? இது வெற்றுக் கோட்பாடு அல்லவா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 137
தேவன் பூமிக்கு வரும்போது, அவர் தமது கிரியையைத் தெய்வீகத்தன்மைக்குள் மட்டுமே செய்கிறார், இதைத்தான் பரலோக ஆவியானவர் மாம்சமாகிய தேவனிடம் ஒப்படைத்துள்ளார். அவர் வரும்போது, அவர் தமது வார்த்தைகளை வெவ்வேறு வழிகளிலும் வெவ்வேறு கண்ணோட்டங்களிலும் எடுத்துரைக்க, அவர் தேசம் முழுவதும் பேசுகிறார். அவர் தமது குறிக்கோள்களாகவும், செயல்படும் கொள்கையாகவும் முக்கியமாக மனிதனுக்குத் தேவையானதை வழங்குகிறார் மற்றும் மனிதனுக்குப் போதிக்கிறார், மேலும் தனிப்பட்ட உறவுகள் அல்லது ஜனங்களுடைய வாழ்க்கை விவரங்கள் போன்றவற்றில் அவர் தன்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆவியானவருக்காக பேசுவதே அவருடைய பிரதான ஊழியமாகும். அதாவது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் தொட்டுணரும்படியாகத் தோன்றும்போது, அவர் மனிதனுக்கான ஜீவனை வழங்கி, சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். அவர் மனிதனுடைய கிரியையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை, அதாவது அவர் மனிதகுலத்தின் கிரியையில் பங்கேற்பதில்லை. மனிதர்களால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடியாது. தேவன் மனிதனுடைய கிரியையில் பங்கேற்பதில்லை. தேவன் தமது கிரியையைச் செய்ய இந்த பூமிக்கு வந்த இத்தனை ஆண்டுகளில், அவர் அதை எப்போதும் ஜனங்கள் மூலமாகவே செய்திருக்கிறார். இருப்பினும், இந்த ஜனங்களை மாம்சமான தேவனாகக் கருத முடியாது, தேவனால் பயன்படுத்தப்படுபவர்களாக மட்டுமே கருத முடியும். இதற்கிடையில், இன்றைய தேவனால் தெய்வீகக் கண்ணோட்டத்தில் நேரடியாகப் பேசி, ஆவியானவரின் சத்தத்தை வெளிப்படுத்தவும், ஆவியானவரின் சார்பாகக் கிரியை செய்யவும் முடியும். அதேபோல், யுகங்கள் முழுவதுமாக தேவன் பயன்படுத்திய எல்லோருமே மாம்ச சரீரத்திற்குள் கிரியை செய்யும் தேவனுடைய ஆவியானவரின் நிகழ்வுகளாகவே இருக்கின்றனர், அப்படியானால் அவர்களை ஏன் தேவன் என்று அழைக்க முடியாது? ஆனால் இன்றைய தேவனும் மாம்சத்தில் நேரடியாகக் கிரியை செய்யும் தேவனுடைய ஆவியானவராக இருக்கிறார், மேலும் இயேசுவும் மாம்சத்தில் கிரியை செய்யும் தேவனுடைய ஆவியானவராக இருந்தார். அவர்கள் இருவருமே தேவன் என்று அழைக்கப்படுகின்றனர். அப்படியானால் வேறுபாடு என்ன? யுகங்கள் முழுவதுமாக தேவன் பயன்படுத்திய நபர்கள் எல்லோருமே சாதாரணமாகச் சிந்திக்கும் பகுத்தறியும் திறன்படைத்தவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் எல்லோருமே மனித நடத்தை குறித்த கொள்கைகளைப் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் சாதாரண மனித கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர், மேலும் அவர்கள் சாதாரண ஜனங்கள் கொண்டிருக்க வேண்டிய எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அசாதாரண திறமையையும், இயல்பான புத்திசாலித்தனத்தையும் பெற்றிருக்கின்றனர். இந்த நபர்கள் மீது கிரியை செய்வதில், தேவனுடைய ஆவியானவர் அவர்களுடைய தாலந்துகளைப் பயன்படுத்துகிறார், இந்தத் தாலந்துகள் தேவன் அவர்களுக்கு வழங்கிய வரங்களாகும். தேவனுடைய ஊழியத்தில் அவர்களுடைய பெலன்களைப் பயன்படுத்தி தேவனுடைய ஆவியானவர் அவர்களுடைய தாலந்துகளை உபயோகிக்கிறார். ஆனாலும், தேவனுடைய சாராம்சமானது கருத்துகள் அல்லது எண்ணங்கள் இல்லாமலும், மனித நோக்கங்கள் கலக்காமலும், சாதாரண மனிதர்கள் கொண்டிருப்பவை இல்லாமலும் இருக்கிறது. அதாவது, அவர் மனித நடத்தை குறித்தக் கொள்கைகளை அறிந்திருக்கவுமில்லை. இவ்வாறுதான் இன்றைய தேவன் பூமிக்கு வருகிறார். அவருடைய கிரியையும் அவருடைய வார்த்தைகளும் மனித நோக்கங்களோ மனித எண்ணங்களோ கலக்காதவையாக இருக்கின்றன, ஆனால் அவை ஆவியானவரின் நோக்கங்களின் நேரடி வெளிப்பாடாக இருக்கின்றன, அவர் தேவனுடைய சார்பாக நேரடியாகக் கிரியை செய்கிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஆவியானவர் நேரடியாகப் பேசுகிறார், அதாவது, தெய்வீகத்தன்மையானது மனிதனின் நோக்கங்களில் சிறிதளவுகூட கலக்காமல் நேரடியாகக் கிரியை செய்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மாம்சமாகிய தேவன் தெய்வீகத்தன்மையை நேரடியாக வெளிப்படுத்துகிறார், மனித எண்ணங்களோ கருத்துக்களோ இல்லாமல் இருக்கிறார், மேலும் அவரிடம் மனித நடத்தைகளின் கொள்கைளைப் பற்றிய புரிதல் எதுவும் இல்லை. தெய்வீகத்தன்மை மட்டுமே கிரியையில் ஈடுபட்டிருந்தால் (அதாவது தேவன் மட்டுமே கிரியை செய்கிறார் என்றால்), தேவனுடைய கிரியை பூமியில் செய்யப்படுவதற்கு எந்த வழியும் இருந்திருக்காது. ஆகவே, தேவன் பூமிக்கு வரும்போது, தெய்வீகத்தன்மையில் தேவன் செய்யும் கிரியையுடன் இணைந்து மனிதகுலத்திற்குள் கிரியை செய்ய அவர் பயன்படுத்தும் சிறு எண்ணிக்கையிலான நபர்களை அவர் கொண்டிருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அவர் தமது தெய்வீகக் கிரியையை நிலைநிறுத்த மனித கிரியையைப் பயன்படுத்துகிறார். இல்லையென்றால், மனிதன் நேரடியாக தெய்வீகக் கிரியையில் ஈடுபட வழி இருந்திருக்காது. இவ்வாறுதான் இயேசுவும் அவருடைய சீஷர்களும் கிரியை செய்தனர். உலகில் இயேசுவின் காலக் கட்டத்தில், அவர் பழைய நியாயப்பிரமாணங்களை ஒழித்து புதிதானக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவர் பல வார்த்தைகளையும் பேசினார். இந்தக் கிரியைகள் எல்லாம் தெய்வீகத்தன்மையில் செய்யப்பட்டன. பேதுரு, பவுல், யோவான் போன்ற மற்றவர்கள் எல்லோரும் இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் அடுத்தடுத்த கிரியைகளைத் தொடங்கினர். அதாவது, தேவன் அந்த யுகத்தில் தமது கிரியையைத் தொடங்கினார், கிருபையின் காலத்தின் தொடக்கத்தில் தொடங்கினார். அதாவது, அவர் பழைய யுகத்தை ஒழித்து, ஒரு புதிய யுகத்தைத் தொடங்கினார். மேலும், “தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்” என்ற வார்த்தைகளையும் நிறைவேற்றினார். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மனிதனானவன் தெய்வீகக் கிரியையை அடிப்படையாகக் கொண்டு மனித கிரியையைச் செய்ய வேண்டும். இயேசு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி, பூமியில் தனது கிரியையை முடித்ததும், அவர் மனிதனை விட்டுச் சென்றுவிட்டார். இதற்குப் பிறகு, கிரியை செய்த எல்லா ஜனங்களும் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட கொள்கைகளின்படியே செய்தார்கள் மற்றும் அவர் பேசிய சத்தியங்களின்படியே நடந்தனர். இந்த ஜனங்கள் எல்லோரும் இயேசுவுக்காகக் கிரியை செய்தனர். இயேசு மட்டுமே கிரியை செய்திருந்தால், அவர் எத்தனை வார்த்தைகள் பேசியிருந்தாலும், அவருடைய வார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஜனங்களுக்கு எந்த வழியும் இருந்திருக்காது. ஏனென்றால், அவர் தெய்வீகத்தில் கிரியை செய்தார், தெய்வீக வார்த்தைகளை மட்டுமே அவரால் பேச முடிந்தது, சாதாரண ஜனங்கள் அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு அவரால் காரியங்களை விவரிக்க முடியவில்லை. ஆகையால், அவருக்குப் பின் வந்த அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அவருடைய கிரியையை முடிக்க வேண்டியதாயிற்று. தெய்வீகக் கிரியையை முடிப்பதற்காக பேசவும் கிரியை செய்யவும் மாம்சமாகிய தேவனின் மாம்சத்தைப் பயன்படுத்தி, அதன்பின் அவருடைய கிரியையை நிறைவேற்ற தேவனுடைய சொந்த இருதயத்தைப் பின்பற்றுகிற ஒரு சில அல்லது அநேகமாக அதிக நபர்களைப் பயன்படுத்தினார், மாம்சமாகிய தேவன் தமது கிரியை செய்யும் விதத்தின் கொள்கை இதுதான். அதாவது, மனிதகுலத்திற்கு மேய்ச்சலைக் கொடுக்கும் மற்றும் தண்ணீரைப் பாய்ச்சும் கிரியையைச் செய்வதற்கு தேவன் தமது இருதயத்திற்கு ஏற்ற நபர்களைப் பயன்படுத்துகிறார், இதன்மூலம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கலாம்.
தேவன் மாம்சத்தில் வந்தபோது, அவர் தெய்வீகக் கிரியையை மட்டுமே செய்து, அவருடன் இணைந்து கிரியை செய்ய அவரது இருதயத்திற்கு ஏற்ற ஒருவரும் இல்லை என்றால், மனிதனால் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவோ தேவனுடன் இணைந்து செயல்படவோ முடியாது. தேவன் இந்தக் கிரியையைச் செய்து முடிக்கவும், திருச்சபைகளைக் கண்காணிக்கவும், மேய்க்கவும் அவருடைய இருதயத்திற்கு ஏற்ற சாதாரண நபர்களைப் பயன்படுத்த வேண்டும், இதனால் மனிதனின் அறிவாற்றல் செயல்முறைகளின் அளவு, அவனது மூளை ஆகியவை கற்பனை செய்யும் திறனுடையவையாக இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், தேவன் தமது தெய்வீகத்திற்குள் செய்யும் கிரியையை “மொழிபெயர்க்க” அவருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு சிறு எண்ணிக்கையிலான நபர்களைப் பயன்படுத்துகிறார், இதன்மூலம் தெய்வீகப் பாஷையை மனிதப் பாஷையாக மாற்ற முடியும், மேலும் இதன்மூலம் ஜனங்களால் அதைப் புரிந்துகொள்ளவும் முடியும். தேவன் அவ்வாறு செய்திருக்காவிட்டால், தேவனுடைய தெய்வீகப் பாஷையை ஒருவரும் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால், தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்கள்பொதுவாகவே சிறிய எண்ணிக்கையிலான சிறுபான்மையினராக இருக்கின்றனர், மேலும் மனிதனின் புரிந்துகொள்ளும் திறன் பலவீனமாகவே இருக்கிறது. அதனால்தான், மாம்சமாகிய தேவனின் மாம்சத்தில் கிரியை செய்யும் போது மட்டுமே தேவன் இந்த முறையைத் தேர்ந்தெடுக்கிறார். தெய்வீகக் கிரியை மட்டுமே இருந்திருந்தால், மனிதனுக்கு தேவனை அறிந்து கொள்ளவோ அல்லது தேவனுடன் செயல்படவோ வழி எதுவும் இருந்திருக்காது, ஏனென்றால் மனிதனுக்கு தேவனுடைய பாஷைப் புரிவதில்லை. தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற, அவருடைய வார்த்தைகளைத் தெளிவுபடுத்தும் பிரதிநிதிகள் மூலமாக மட்டுமே மனிதனால் இந்த பாஷையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனாலும், மனிதகுலத்திற்குள் இதுபோன்றவர்கள் மட்டுமே கிரியை செய்தால், அதனால் மனிதனின் சாதாரண வாழ்க்கையை மட்டுமே பராமரிக்க முடியும், மனிதனின் மனநிலையை அதனால் மாற்ற முடியாது. தேவனுடைய கிரியையால் ஒரு புதிய தொடக்கப் புள்ளியைக் கொண்டிருக்க முடியவில்லை. அதே பழைய பாடல்களும், அதே பழைய பயனற்ற கூற்றுகளும் மட்டுமே இருந்தன. மாம்சமாகிய தேவனுடைய பிரதிநிதி மூலமாக மட்டுமே, மாம்சமாகிய அவருடைய காலத்தில் அவர் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்கிறார் மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்கிறார், அதன் பிறகு ஜனங்கள் அவருடைய வார்த்தைகளின்படியே கிரியை செய்கின்றனர், அனுபவம் பெறுகின்றனர், இவ்வாறு மட்டுமே அவர்களுடைய வாழ்க்கை மனநிலை மாற முடியும், இவ்வாறு மட்டுமே அவர்களால் காலத்துடன் ஓட முடியும். தெய்வீகத்தன்மையில் கிரியை செய்கிறவர் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அதே நேரத்தில் மனிதத்தன்மையில் கிரியை செய்கிறவர்கள் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களாக இருக்கின்றனர். அதாவது, மாம்சமாகிய தேவன் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களிடமிருந்து முக்கியமாக வேறுபட்டவராக இருக்கிறார். மாம்சமாகிய தேவன் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிகிறது, அதே நேரத்தில் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களால் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு காலத்தின் துவக்கத்திலும், மனிதனைப் புதிய துவக்கத்திற்குள் கொண்டுவர தேவனுடைய ஆவியானவர் தனிப்பட்ட முறையில் பேசி, புதிய யுகத்தைத் தொடங்குகிறார். அவர் பேசி முடித்ததும், தேவனுடைய தெய்வீகத்தன்மையில் அவரது கிரியை செய்யப்படுகிறது என்பதை இது குறிக்கிறது. அதன் பிறகு, ஜனங்கள் எல்லோரும் தங்கள் ஜீவனின் அனுபவத்திற்குள் பிரவேசிக்க தேவனால் பயன்படுத்தப்படுபவர்களின் வழியைப் பின்பற்றுகின்றனர். மேலும், இந்தக் கட்டத்தில்தான் தேவன் மனிதனை புதிய யுகத்திற்குள் கொண்டு வந்து, மாம்சத்தில் தேவனுடைய கிரியை முடிக்கும் தருணமான ஒரு புதிய தொடக்கப் புள்ளியை ஜனங்களிடம் கொடுக்கிறார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 138
தேவன் தமது சாதாரண மனிதத்தன்மையைப் பரிபூரணப்படுத்துவதற்காகவோ, சாதாரண மனிதத்தன்மையின் கிரியையைச் செய்வதற்காகவோ பூமிக்கு வருவதில்லை. அவர் சாதாரண மனிதத்தன்மையில் தெய்வீகக் கிரியையைச் செய்வதற்காக மட்டுமே வருகிறார். தேவன் பேசும் சாதாரண மனிதத்தன்மை என்பது ஜனங்கள் கற்பனை செய்வது போன்றது அல்ல. மனிதன் “சாதாரண மனிதத்தன்மையை” ஒரு மனைவி அல்லது ஒரு கணவன், மற்றும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரைக் கொண்டிருப்பதாக வரையறுக்கிறான், இது ஒரு சாதாரண மனிதன் என்பதற்குச் சான்றாகும். ஆனால், தேவன் இதை இவ்வாறு பார்ப்பதில்லை. அவர் சாதாரண மனிதத்தன்மையைச் சாதாரண மனித எண்ணங்களாக, சாதாரண மனித ஜீவிதங்களாக மற்றும் சாதாரண நபர்களாகப் பிறப்பதாகப் பார்க்கிறார். ஆனால் சாதாரணத்தன்மை குறித்து மனிதன் பேசும் விதத்தில் அவருடைய சாதாரணத்தன்மையில் ஒரு மனைவி, அல்லது ஒரு கணவன், மற்றும் குழந்தைகள் ஆகியோரைக் கொண்டிருப்பது அடங்காது. அதாவது, மனிதனைப் பொறுத்தவரை, தேவன் பேசும் சாதாரண மனிதத்தன்மையை மனிதத்தன்மை இல்லாதது, கிட்டத்தட்ட உணர்ச்சி இல்லாதது மற்றும் மாம்ச தேவைகள் இல்லாதது என்று மனிதன் கருதுகிறான், அதாவது ஒரு சாதாரண மனிதனின் வெளிப்புறத்தை மட்டுமே கொண்டு, ஒரு சாதாரண நபரின் தோற்றத்தைப் பெற்று, ஆனால் உண்மையில் ஒரு சாதாரண மனிதன் கொண்டிருக்க வேண்டிய அனைத்தையும் முழுமையாகக் கொண்டிராத இயேசுவைப் போல இருப்பதாகக் கருதுகிறான். இதிலிருந்து மாம்சமாகிய தேவனுடைய சாராம்சமானது சாதாரண மனிதத்தன்மையை முழுவதுமாக உள்ளடக்காமல், சாதாரண மனித வாழ்க்கையின் வழக்கமான செயல்பாடுகளை ஆதரிப்பதற்காகவும், சாதாரண மனிதனின் பகுத்தறியும் சக்திகளை நிலைநிறுத்துவதற்காகவும் ஜனங்கள் கொண்டிருக்க வேண்டிய காரியங்களின் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். ஆனால் இந்தக் காரியங்களுக்கும் சாதாரண மனிதத்தன்மையாக மனிதன் கருதுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவைதான் மாம்சமாகிய தேவன் கொண்டிருக்க வேண்டியவையாகும். இருப்பினும், மாம்சமாகிய தேவன் ஒரு மனைவி, மகன்கள் மற்றும் மகள்கள், ஒரு குடும்பம் ஆகியவற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருப்பதாகக் கூற முடியும் என்று சொல்கிறவர்களும் இருக்கின்றனர். இந்த விஷயங்கள் இல்லாமல், அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் நான் உன்னிடம் கேட்கிறேன், “தேவனுக்கு ஒரு மனைவி உண்டா? தேவனுக்கு ஒரு கணவர் இருப்பது சாத்தியமா? தேவனால் குழந்தைகளைப் பெற முடியுமா?” இவை பொய்யானவை அல்லவா? ஆனாலும்கூட, மாம்சமாகிய தேவனால் பாறைகளுக்கு இடையிலான பிளவுகளிலிருந்து தோன்றவோ அல்லது வானத்திலிருந்து கீழே விழவோ முடியாது. அவரால் ஒரு சாதாரண மனிதக் குடும்பத்தில் மட்டுமே பிறக்க முடியும். அதனால்தான் அவருக்குப் பெற்றோரும் சகோதரிகளும் இருக்கின்றனர். இவைதான் மாம்சமாகிய தேவனுடைய சாதாரண மனிதத்தன்மை கொண்டிருக்க வேண்டியவையாகும். இதுதான் இயேசுவின் நிலையாக இருந்தது. இயேசுவுக்கு ஒரு தந்தை, தாய், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இருந்தனர், இவையெல்லாம் இயல்பானவையாக இருந்தன. ஆனால் அவருக்கு ஒரு மனைவி மற்றும் மகன்களும் மகள்களும் இருந்திருந்தால், மாம்சமாகிய தேவன் கொண்டிருக்க வேண்டுமென்று தேவன் விரும்பிய சாதாரண மனிதத்தன்மையாக அவருடையது இருந்திருக்காது. இதுதான் நிலைமையாக இருந்திருந்தால், அவரால் தெய்வீகத்தன்மையின் சார்பாக கிரியை செய்திருக்க முடிந்திருக்காது. இதற்கு சரியான காரணம் என்னவென்றால், அவர் ஒரு மனைவியையோ குழந்தைகளையோ கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் சாதாரண நபருக்குப் பிறந்திருந்தாலும், அவரால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிந்தது. இதை மேலும் தெளிவுபடுத்த, ஒரு சாதாரண நபர் என்று தேவன் கருதுபவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நபராக இருக்கிறார். அத்தகைய நபர் மட்டுமே தெய்வீகக் கிரியையைச் செய்வதற்கு தகுதியுடையவராக இருக்கிறார். மறுபுறம், ஒரு நபருக்கு ஒரு மனைவி, குழந்தைகள் அல்லது ஒரு கணவன் இருந்தால், அந்த நபரால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடியாது. ஏனென்றால், மனிதர்களுக்குத் தேவைப்படும் சாதாரண மனிதத்தன்மையை மட்டுமே அவர்கள் கொண்டிருப்பார்கள், ஆனால் தேவனுக்குத் தேவைப்படும் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்க மாட்டார்கள். தேவனால் கருதப்படுவதும், ஜனங்களால் புரிந்துகொள்ளப்படுவதும் பெரும்பாலும் மாறுபட்டவையாகவும், இணக்கமில்லாதவையாகவும் இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டத்தில், ஜனங்களின் கருத்துக்களிலிருந்து அதிகம் மாறுபடுகின்றன மற்றும் பெரிதும் வேறுபடுகின்றன. தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டத்தில் தெய்வீகத்தன்மையே முற்றிலும் பிரதான பங்கு வகிக்கிறது, மனிதத்தன்மை ஒரு துணைப் பங்கையே வகிக்கிறது என்று ஒருவர் கூறலாம். தேவன் பூமிக்கு தமது கிரியையைச் செய்ய வருவதால், மனிதனை அதில் கை வைக்க அனுமதிப்பதைக் காட்டிலும் அவரே தமது கிரியையைச் செய்ய மாம்சத்தில் (முழுமையற்ற, சாதாரண மனிதனாக) அவதரிக்கிறார். மனிதகுலத்தை ஒரு புதிய யுகத்திற்குள் வைக்கவும், மனிதகுலத்திடம் அவருடைய கிரியையின் அடுத்தக் கட்டத்தைப் பற்றி சொல்லவும், அவருடைய வார்த்தைகளில் விவரிக்கப்பட்டுள்ள பாதைக்கு ஏற்ப நடக்குமாறு ஜனங்களைக் கேட்டுக்கொள்ளவும் அவர் இந்த மாம்சமாகிய அவதரிப்பைப் பயன்படுத்துகிறார். இவ்வாறுதான் மாம்சத்தில் தேவனுடைய கிரியை முடிவடைகிறது. அவர் மனிதகுலத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லப் போகிறார், இனிமேலும் சாதாரண மனிதத்தன்மையுள்ள மாம்சத்தில் இருக்கப்போவதில்லை, மாறாக அவருடைய கிரியையின் மற்றொரு பகுதியைத் தொடர மனிதரிடமிருந்து விலகியிருக்கப்போகிறார். அதன்பின், தனது சொந்த இருதயத்திற்கு ஏற்ற ஜனங்களைப் பயன்படுத்தி, அவர்களுடைய மனிதத்தன்மையிலே இந்த ஜனக்கூட்டத்திற்கு நடுவே பூமியில் தமது கிரியையைத் தொடர்கிறார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 139
மாம்சமாகிய தேவனால் மனிதனுடன் என்றென்றும் இருக்க முடியாது, ஏனென்றால் தேவன் செய்ய வேண்டிய கிரியைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவரால் மாம்சத்திற்குள் கட்டுண்டு இருக்க முடியாது. அவர் மாம்சத்தின் சாயலில் அந்தக் கிரியையைச் செய்தாலும், அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய அவர் மாம்சத்தைத் துறக்க வேண்டியதிருக்கிறது. தேவன் பூமிக்கு வரும்போது, அவர் மரித்து மனிதகுலத்தை விட்டுச் செல்வதற்கு முன்பு சாதாரண நபர் அடைய வேண்டிய உருவத்தை அவர் அடையும் வரை அவர் காத்திருப்பதில்லை. அவருடைய மாம்சம் எத்தனை வயதுடையதாக இருந்தாலும், அவருடைய கிரியை முடிந்ததும், அவர் மனிதனை விட்டுச் சென்றுவிடுகிறார். அவருக்கு வயது என்பது போன்ற எந்தக் காரியமும் கிடையாது. மனித ஆயுட்காலத்துக்கு ஏற்ப அவர் தமது நாட்களை எண்ணுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர் தமது கிரியையின் படிகளுக்கு ஏற்ப மாம்சத்தில் தமது வாழ்க்கையை முடிக்கிறார். மாம்சத்திற்குள் வருவதில் தேவனுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வயது இருக்க வேண்டும், வயது வந்தவராக வளர வேண்டும், முதுமையடைய வேண்டும், அந்த சரீரம் மரிக்கும்போது மட்டுமே வெளியேற வேண்டும் என்று கருதுபவர்கள் இருக்கலாம். இது மனிதனின் கற்பனையாகும். தேவன் இவ்வாறு கிரியை செய்வதில்லை. அவர் தாம் செய்யவேண்டிய கிரியையைச் செய்வதற்காக மட்டுமே மாம்சத்திற்குள் வருகிறார், சாதாரண மனிதனின் செயல்பாடுகளான பெற்றோருக்குப் பிறந்து, வளர்ந்து, ஒரு குடும்பத்தை உருவாக்கி, ஒரு தொழிலைத் தொடங்கி, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது அல்லது வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பது போன்ற ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்வதற்கு அல்ல. தேவன் பூமிக்கு வரும்போது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தைத் தரித்துக்கொண்டு, மாம்சத்திற்குள் வருவதாக இது இருக்கிறது, ஆனால் தேவன் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்வதில்லை. அவர் தனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்ற வருகிறார். அதன் பிறகு அவர் மனிதகுலத்தை விட்டுச் சென்றுவிடுவார். அவர் மாம்சத்திற்குள் வரும்போது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தின் சாதாரண மனிதத்தன்மையை பரிபூரணமாக்குவதில்லை. மாறாக, தேவன் முன்குறித்த நேரத்தில், தெய்வீகத்தன்மை நேரடியாக கிரியை செய்கிறது. அதன்பின், அவர் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து, தமது ஊழியத்தை முழுவதுமாக முடித்தப் பிறகு, இந்தக் கட்டத்தில் தேவனுடைய ஆவியானவரின் கிரியை செய்யப்படுகிறது. அவருடைய மாம்ச சரீரம் அதன் நீண்ட ஆயுட்காலத்தில் வாழ்ந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல், மாம்சமாகிய தேவனுடைய வாழ்க்கையும் அந்த நேரத்தில் முடிவடைகிறது, அதாவது, மாம்ச சரீரமானது வாழ்வின் எந்தக் கட்டத்தை அடைந்தாலும், அது பூமியில் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், எல்லாமே ஆவியானவரின் கிரியை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. சாதாரண மனிதத்தன்மையில் இருக்க வேண்டும் என்று மனிதன் கருதுவதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இயேசுவை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் மாம்சத்தில் ஜீவித்தார். ஒரு மனித சரீரத்தின் ஆயுட்காலத்தின் அடிப்படையில், அவர் அந்த வயதில் மரித்திருக்கக்கூடாது, அவர் விட்டுச் சென்றிருக்கக்கூடாது. ஆனால் இது குறித்து தேவனுடைய ஆவியானவருக்கு எந்தக் கவலையும் இல்லை. அவருடைய கிரியை முடிந்ததும், அந்த நேரத்தில் அவரது சரீரம் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆவியானவருடன் மறைந்து சென்றது. இதுதான் தேவன் மாம்சத்தில் கிரியை செய்யும் கொள்கையாகும். ஆகையால், உறுதியாகக் கூறுவதென்றால், மாம்சமாகிய தேவனுடைய மனிதத்தன்மையானது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. அவர் மீண்டும் கிரியை செய்வதற்காகவே பூமிக்கு வருகிறார், சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்வதற்காக அல்ல. அவர் முதலில் ஒரு சாதாரண மனித வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டு, அதன்பின் கிரியை செய்ய ஆரம்பிப்பதில்லை. மாறாக, அவர் ஒரு சாதாரண மனித குடும்பத்தில் பிறந்ததனால், அவரால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிகிறது, இந்தக் கிரியையானது மனிதனின் நோக்கங்களால் களங்கப்படாததாகவும், மாம்சமல்லாததாகவும் இருக்கிறது, இது நிச்சயமாக சமூகத்தின் வழிகளைக் கடைப்பிடிப்பதில்லை அல்லது மனிதனின் எண்ணங்கள் அல்லது கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை, மேலும் இது வாழ்வதற்கான மனிதனின் தத்துவங்களையும் கொண்டிருப்பதில்லை. இதுதான் மாம்சமாகிய தேவன் செய்ய விரும்பும் கிரியையாகும். மேலும், இதுதான் அவர் மாம்சமாகியதன் நடைமுறை முக்கியத்துவமும் ஆகும். பிற அற்பமான செயல்முறைகளுக்கு உள்ளாகாமல், மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்யவே தேவன் பிரதானமாக மாம்சத்திற்குள் வருகிறார். ஒரு சாதாரண மனிதனின் அனுபவங்களைப் பொறுத்தவரை, அவர் அவற்றைக் கொண்டிருப்பதில்லை. மாம்சமாகிய தேவனுடைய மாம்சம் செய்ய வேண்டிய கிரியையில் சாதாரண மனித அனுபவங்கள் அடங்குவதில்லை. ஆகையால், தேவன் மாம்சத்தில் தாம் நிறைவேற்ற வேண்டிய கிரியையை நிறைவேற்றுவதற்காகவே மாம்சத்திற்குள் வருகிறார். மற்றவற்றுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பல அற்பமான செயல்முறைகளுக்கு உள்ளாவதில்லை. அவருடைய கிரியை முடிந்ததும், அவர் மாம்சமாகியதன் முக்கியத்துவமும் முடிவடைகிறது. இந்தக் கட்டத்தை முடிப்பது என்றால் அவர் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியை முடிந்துவிட்டது, அவருடைய மாம்சத்தின் ஊழியம் முழுமையடைந்துவிட்டது என்று அர்த்தமாகும். ஆனால் அவரால் முடிவின்றி தொடர்ந்து மாம்சத்தில் கிரியை செய்ய முடியாது. அவர் மாம்சத்திற்கு வெளியே உள்ள மற்றொரு இடத்திற்குக் கிரியை செய்யச் செல்ல வேண்டும். இவ்வாறு மட்டுமே அவருடைய கிரியையை முழுமையாகச் செய்து, அதிகப் பலனை அடைய முடியும். தேவன் தமது மூலமுதலானத் திட்டத்தின் படியே கிரியை செய்கிறார். அவர் என்ன கிரியை செய்ய வேண்டும், எந்தக் கிரியையைச் செய்து முடித்திருக்கிறார் என்பது அவருக்கு தமது உள்ளங்கையைப் போலத் தெளிவாகத் தெரியும். தேவன் ஒவ்வொரு நபரையும் தாம் ஏற்கனவே முன்குறித்த பாதையில் நடக்க வழிநடத்துகிறார். ஒருவரும் இதிலிருந்து தப்ப முடியாது. தேவனுடைய ஆவியானவரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும். ஒருவேளை, பிற்காலக் கிரியையில், மனிதனை வழிநடத்த தேவன் மாம்சத்தில் பேசாமல், ஆவியானவர் தொட்டுணரக்கூடிய உருவத்தில் மனிதனின் வாழ்க்கையை வழிநடத்துவார். அப்போதுதான் மனிதனால் தேவனைத் தொடவும், தேவனைக் காணவும், மேலும் நடைமுறைத் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு தேவனுக்கு தேவைப்படும் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவும் முடியும். இதுதான் தேவன் நிறைவேற்ற விரும்பும் மற்றும் அவர் நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிட்ட கிரியை ஆகும். இதன் மூலம், நீங்கள் செல்ல வேண்டிய பாதையை நீங்கள் எல்லோரும் காண வேண்டும்!
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 140
மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். தேவனின் சாராம்சத்தையும், மனிதனால் அடைய முடியாத தேவனின் மனநிலையையும், அவருடைய கிரியையில் இருக்கும் ஞானத்தையும் அவர் கொண்டிருப்பதால் எதுவும் கூடுதலாக இல்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் நம்பப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை ஒரு மனிதனால் பதிலீடுசெய்ய முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது. இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள், கிறிஸ்துவைப் போலப் பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் விழுந்துபோவார்கள், ஏனென்றால் அவர்கள் கிறிஸ்து என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடம் கிறிஸ்துவின் சாராம்சம் எதுவுமில்லை. ஆகையால் கிறிஸ்துவின் நம்பகத்தன்மையை மனுஷனால் வரையறுக்க இயலாது, ஆனால் தேவனால் பதிலளிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது என்று சொல்கிறேன். இவ்விதமாக, நீ உண்மையிலேயே ஜீவனுக்கான வழியைத் தேட விருப்பப்பட்டால், தேவன் பூமிக்கு வந்தே மனுஷனுக்கு ஜீவனுக்கான வழியைக் கொடுக்கும் கிரியையைச் செய்கிறார் என்பதை நீ முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் கடைசி நாட்களில்தான் அவர் பூமிக்கு வந்து மனுஷனுக்கு ஜீவனின் வழியைக் கொடுக்கிறார் என்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கடந்த காலத்தில் அல்ல; இது இன்று தான் நடக்கிறது.
கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.
கிறிஸ்து பேசும் சத்தியத்தை நம்பாமல் ஜீவனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பூமியின் மேல் மிகவும் முட்டாள்தனமான ஜனங்களாவர், கிறிஸ்து கொண்டுவரும் ஜீவனின் வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கற்பனையில் தொலைந்து போகிறார்கள். ஆகையால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவனால் என்றென்றும் வெறுக்கப்படுவார்கள் என்று சொல்கிறேன். கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சந்திக்கக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வாழ்வின் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி மட்டுமே உன்னால் சிந்திக்க இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூட செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ எதிர்த்தால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ வெறுத்து ஒதுக்கினால், அதற்கான பின்விளைவுகளை உன் சார்பாகத் தாங்கிக்கொள்ள வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். மேலும், இந்த நாள் முதல் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள உனக்கு வேறொரு வாய்ப்பும் கிடைக்காது; நீ உன்னைச் சரிக்கட்ட முயற்சி செய்தாலும், நீ தேவனுடைய முகத்தை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டாய். நீ எதிர்ப்பது ஒரு மனிதன் அல்ல, நீ வெறுத்து ஒதுக்குவது ஒரு பலவீனமான நபரை அல்ல, மாறாக கிறிஸ்துவையே அப்படிச் செய்கிறாய். இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று உனக்குத் தெரியுமா? நீ சிறு தவறு செய்யாமல், மிகவும் வெறுக்கத்தக்க ஒரு குற்றத்தைச் செய்திருப்பாய். ஆகையால், சத்தியத்திற்கு முன்னால் உன் நச்சுப்பற்களைக் காட்ட வேண்டாம், அல்லது கவனக்குறைவான பரியாசங்களைச் செய்ய வேண்டாம் என்று எல்லோருக்கும் அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் சத்தியத்தால் மட்டுமே உனக்கு ஜீவனைக் கொண்டு வர இயலும், மேலும் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் உன்னை மறுபடியும் பிறக்கச் செய்யவும், தேவனுடைய முகத்தை மீண்டும் பார்க்க வைக்கவும் உதவாது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து