சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது

அனைத்து ஜனங்களும் பூமியில் எனது கிரியையின் நோக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இறுதியில் நான் எதை அடைய விரும்புகிறேன், இந்தக் கிரியை முடிக்கப்படுவதற்கு முன்பு நான் இதில் எந்த நிலையை அடைய வேண்டும். இன்றுவரை என்னுடன் நடந்து வந்த பிறகும் எனது கிரியை எதைப் பற்றியது என்று ஜனங்களுக்குப் புரியவில்லை என்றால், அவர்கள் என்னுடன் நடந்தது வீணாகிவிடவில்லையா? ஜனங்கள் என்னைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அவர்களுக்கு எனது சித்தம் தெரிந்திருக்க வேண்டும். நான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூமியில் கிரியைகளை நடப்பித்து வருகிறேன், மற்றும் இன்றுவரை நான் தொடர்ந்து எனது கிரியையை இப்படியே மேற்கொண்டு வருகிறேன். எனது கிரியை பல செயற்திட்டங்களைக் கொண்டிருந்தாலும், அதன் நோக்கம் என்றும் மாறுவதில்லை; மனிதனுக்கான நியாயத்தீர்ப்பாலும் சிட்சையாலும் நான் நிறைந்திருந்தாலும், உதாரணமாக, நான் என்ன செய்தாலும் அவனை இரட்சிப்பதற்காகவும், மற்றும் எனது சுவிசேஷத்தைச் சிறந்த முறையில் பரப்புவதற்காகவும், மனிதன் முழுமையாக்கப்பட்டதும் எனது கிரியையை அனைத்து புறஜாதியார் தேசங்களின் மத்தியிலும் மேலும் விரிவுபடுத்துவதற்காகவும் செய்கிறேன். ஆகவே இன்று, அநேக ஜனங்கள் ஆழ்ந்த கலக்கத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில், நான் இப்போதும் எனது கிரியையைத் தொடர்கிறேன், நான் மனிதனை நியாயந்தீர்ப்பதற்காகவும் சிட்சிப்பதற்காகவுமே கிரியையைத் தொடர்கிறேன். நான் கூறுவதைக் கேட்டு மனிதன் சோர்ந்து போயிருப்பது உண்மை என்றாலும், எனது கிரியையில் தன்னைப் பற்றிக் கவலைப்பட அவனுக்கு விருப்பமில்லை என்ற போதிலும், எனது கிரியையின் நோக்கம் மாறாமல் இருக்கவும், எனது அசல் திட்டம் தடைபடாமல் இருக்கவும் நான் இன்னும் எனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன். மனிதன் எனக்குக் கீழ்ப்படிவதற்கு உதவுவது எனது நியாயத்தீர்ப்பின் செயல்பாடாகும், மனிதனை மிகவும் செயல்திறத்துடன் மாறச் செய்வது எனது சிட்சையின் செயல்பாடாகும். நான் என்ன செய்தாலும் அதனை எனது நிர்வாகத்தின் பொருட்டே செய்கிறேன் என்றாலும், நான் ஒருபோதும் மனிதனுக்குப் பலனளிக்காத எதையும் செய்ததில்லை, இஸ்ரவேலுக்கு வெளியே உள்ள தேசங்களில் நான் காலடி வைத்திருக்கக்கூடும் என்றாலும், இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட அனைத்து நாடுகளையும் இஸ்ரவேலர்களைப் போலவே கீழ்ப்படிபவர்களாக உருவாக்கவும், அவர்களை நிஜமான மனிதர்களாக உருவாக்கவும் நான் விரும்புகிறேன். இது எனது நிர்வாகம். இது புறஜாதி தேசங்களிடையே நான் செய்து வரும் கிரியையாகும். இப்போதும்கூட, பலருக்கு எனது நிர்வாகம் புரிவதில்லை, ஏனென்றால் இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை, மேலும் அவர்களின் சொந்த எதிர்காலங்களிலும் இலக்குகளிலும் மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள். நான் என்ன சொன்னாலும், நான் செய்யும் கிரியை குறித்து அவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள், அதற்குப் பதிலாக அவர்களின் நாளைய இலக்குகளில் மட்டுமே பிரத்தியேகமாக கவனம் செலுத்துகிறார்கள். எல்லாமும் இந்த வழியில் நடந்தால், எனது கிரியை எவ்வாறு விரிவடையும்? உலகம் முழுவதும் எனது சுவிசேஷம் எவ்வாறு பரவ முடியும்? என் கிரியை பரவும்போது, இஸ்ரவேலின் கோத்திரத்தார் ஒவ்வொருவரையும் யேகோவா தண்டித்தது போல நான் உங்களைச் சிதறடித்து, தண்டிப்பேன். எனது சுவிசேஷம் பூமியெங்கும் பரவும் விதத்திலும், எனது கிரியை புறஜாதியார் தேசங்களிலும் விரிவடையும் விதத்திலும், எனது நாமம் பெரியவர்களாலும் குழந்தைகளாலும் ஒரே மாதிரியாகப் மகிமைப்படுத்தப்படும் விதத்திலும், எனது பரிசுத்த நாமம் எல்லாக் கோத்திரம் மற்றும் தேசங்களைச் சேர்ந்த மக்களின் வாய்களிலும் ஒரேவிதமாக புகழப்படும் விதத்திலும் இவை அனைத்தும் செய்யப்படும். எனவே, இந்த இறுதி சகாப்தத்தில், எனது நாமம் புறஜாதியாரிடையே மகிமைப்படுத்தப்படக்கூடும், இதனால் எனது செயல்கள் புறஜாதியாரால் காணப்படக்கூடும், மேலும் அவர்கள் எனது செயல்களின் காரணமாக என்னை சர்வவல்லவர் என்று அழைப்பார்கள், எனவே எனது வார்த்தைகள் விரைவில் நிறைவேறும். நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் சபித்தவர்கள் உட்பட புறஜாதியாரின் எல்லா தேசங்களுக்கும் நானே தேவன் என்பதை எல்லா ஜனங்களையும் அறியச் செய்வேன். நானே எல்லா சிருஷ்டிகளுக்கும் தேவன் என்பதை ஜனங்களைப் பார்க்க வைப்பேன். இது எனது மிகச் சிறந்த கிரியை, கடைசி நாட்களுக்கான எனது கிரியைத் திட்டத்தின் நோக்கமாகும் மற்றும் கடைசி நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரே கிரியையாகும்.

கடைசி நாட்களில் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நான் நிர்வகித்து வரும் கிரியை முழுமையாக மனிதனுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதுதான் நான் எனது நிர்வாகத்தின் முழு இரகசியத்தையும் மனிதனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன், மற்றும் மனிதன் எனது கிரியையின் நோக்கத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறான், மேலும், எனது இரகசியங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டிருக்கிறான். மனிதன் கவலைப்படும் சென்று சேருமிடம் குறித்து அனைத்தையும் நான் அவனுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். 5,900 ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியங்களான எனது இரகசியங்கள் அனைத்தையும் நான் ஏற்கனவே மனிதனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன். யேகோவா யார்? மேசியா யார்? இயேசு யார்? உங்களுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். எனது கிரியை இந்த நாமங்களை அதன் திருப்புமுனையாகக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? எனது பரிசுத்த நாமம் எவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும்? என்னுடைய நாமங்களில் ஏதேனும் ஒன்றால் என்னை அழைத்த எந்த தேசத்திற்கும் எனது நாமம் எவ்வாறு பரப்பப்பட வேண்டும். எனது கிரியை விரிவடைந்து வருகிறது, அதன் பரிபூரணத்தை எந்தவொரு நாட்டிற்கும் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பரப்புவேன். எனது கிரியை உங்களிடத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இஸ்ரவேலில் தாவீதின் வம்சத்தின் மேய்ப்பர்களை யேகோவா அடித்ததைப் போல நான் உங்களை அடிப்பேன், இதனால் நீங்கள் ஒவ்வொரு தேசத்திற்கும் சிதறடிக்கப்படுவீர்கள். கடைசி நாட்களில், நான் எல்லா தேசங்களையும் சுக்குநூறாக இடித்துப் போடுவேன், அவர்களின் மக்களை புதிதாகக் கொடுப்பேன். நான் மீண்டும் திரும்பும்போது, எனது எரியும் அக்கினி ஜுவாலைகளால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில் தேசங்கள் ஏற்கனவே வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில், யேகோவாவாகிய நான், யூத கோத்திரத்தார் மத்தியில் ஒருமுறை நடந்ததைப் போல, நான் சுட்டெரிக்கும் சூரியனாகப் புதிதாக மனிதகுலத்திற்கு வெளிப்படுவேன், பலதரப்பட்ட நாடுகள் மத்தியில் நடந்து அவர்கள் ஒருபோதும் கண்டிராத பரிசுத்தரின் சாயலில் என்னை வெளிப்படையாகக் காண்பிப்பேன். அப்போதிருந்து, நான் பூமியில் மனிதனின் வாழ்க்கையை வழிநடத்துவேன். அங்கே அவர்கள் நிச்சயமாக என் மகிமையைக் காண்பார்கள், அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களை வழிநடத்த அவர்கள் காற்றில் மேகஸ்தம்பத்தை நிச்சயம் காண்பார்கள், ஏனென்றால் நான் பரிசுத்த ஸ்தலங்களில் பிரசன்னம் செய்வேன். மனிதன் என் நீதியின் நாளையும், எனது மகிமையான வெளிப்பாட்டையும் காண்பான். நான் பூமியெங்கும் ஆட்சி செய்யும் போதும், எனது குமாரர்கள் பலரை மகிமைப்படுத்தும்போதும் அது நடக்கும். பூமியெங்கும், மனிதர்கள் வணங்குவார்கள், மற்றும் இன்று நான் மேற்கொள்ளும் கிரியையின் பாறை மீது, மனிதர்கள் மத்தியில் எனது ஆசரிப்புக்கூடாரம் உறுதியாக கட்டப்படும். ஆலயத்திலும் மக்கள் எனக்கு ஊழியம் செய்வார்கள். அழுக்கானவற்றாலும் அருவருப்பானவற்றாலும் மூடியிருக்கும் பலிபீடத்தைத் துண்டுகளாக நொறுக்கி புதிதாகக் கட்டுவேன். புதிதாகப் பிறந்த ஆட்டுக்குட்டிகளும் கன்றுகளும் பரிசுத்தப் பலிபீடத்தின் மீது குவிக்கப்படும். நான் இன்றைய ஆலயத்தை இடித்து, புதிதாக ஒன்றைக் கட்டுவேன். இப்போது வெறுக்கத்தக்க ஜனங்கள் நிறைந்து, நின்று கொண்டிருக்கும் ஆலயம் இடிந்து விழும், மற்றும் நான் கட்டும் ஆலயம் எனக்கு விசுவாசமுள்ள ஊழியக்காரர்களால் நிரப்பப்படும். எனது ஆலயத்தின் மகிமைக்காக அவர்கள் மீண்டும் எழுந்து எனக்கு ஊழியம் செய்வார்கள். நான் மிகுந்த மகிமையைப் பெறும் நாளை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள், நான் ஆலயத்தை இடித்துப் புதிய ஒன்றைக் கட்டும் நாளையும் நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். மேலும், எனது ஆசரிப்புக் கூடாரம் மனிதர்களின் உலகத்திற்கு வரும் நாளை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். நான் ஆலயத்தை நொறுக்கும்போது, அவர்கள் எனது வம்சாவளியைக் காணுமாறு எனது கூடாரத்தை மனிதர்களின் உலகிற்கு கொண்டு வருவேன். நான் எல்லாத் தேசங்களையும் சுக்குநூறாக்கிய பின், நான் அவர்களை புதிதாக ஒன்றுதிரட்டி, எல்லோரும் எனக்குப் பலியிடுவதற்கும், எனது ஆலயத்தில் எனக்கு ஊழியம் செய்வதற்கும், புறஜாதியார் தேசங்களில் எனது கிரியைக்கு உண்மையாக அர்ப்பணிப்பதற்கும் அங்கிருந்து எனது ஆலயத்தைக் கட்டி, எனது பலிபீடத்தை ஸ்தாபிப்பேன். அவர்கள் இன்றைய இஸ்ரவேலர்களைப் போல இருப்பார்கள், ஓர் ஆசாரிய அங்கி மற்றும் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பார்கள், அவர்கள் மத்தியில் யேகோவாவாகிய எனது மகிமை இருக்கும் மற்றும் எனது மாட்சிமை அவர்கள் மீது அசைவாடி அவர்களுடன் நிலைத்திருக்கும். புறஜாதியார் நாடுகளிலும் எனது கிரியை அதே வழியில் செயல்படுத்தப்படும். இஸ்ரவேலில் எனது கிரியை இருந்ததைப் போலவே, புறஜாதியார் தேசங்களிலும் எனது கிரியை இருக்கும், ஏனென்றால் நான் இஸ்ரவேலில் என் கிரியையை விரிவுபடுத்தி புறஜாதியாரின் தேசங்களுக்குப் பரப்புவேன்.

இப்போது எனது ஆவியானவர் மாபெரும் கிரியையைச் செய்கிற நேரமாகும், புறஜாதியார் தேசங்களிடையே நான் எனது கிரியையைத் தொடங்கும் நேரமாகும். அதற்கும் மேலாக, எனது கிரியை இன்னும் விரைவாகவும் திறம்படவும் நடக்கும் விதத்தில் என்னால் சிருஷ்டிக்கப்பட்ட அனைவரையும் வகைப்படுத்தி ஒவ்வொருவரையும் அவரவர் வகையில் வைக்கும் நேரம் இதுவாகும். எனவே, நான் உங்களிடம் கேட்பது என்னவென்றால் நீ எனது கிரியை அனைத்திற்கும் உன்னை முழுமையாக ஒப்புக்கொடு, மேலும், நான் உன்னில் செய்த எல்லா கிரியைகளையும் தெளிவாக உணர்ந்து உறுதிப்படுத்திக் கொள், மற்றும் உனது முழு பெலத்தையும் எனது கிரியையில் செலுத்து, இதனால் அது மிகவும் பயனுள்ளதாக மாறும். இதைத்தான் நீ புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கிடையில் சண்டையிடுவதைத் தவிர்த்துவிடு, திரும்பிச் செல்வதற்கான வழியைத் தேடுவதை அல்லது மாம்ச சுகங்களை நாடுவதை விட்டுவிடு, இவை எனது கிரியையைத் தாமதப்படுத்தும், மற்றும் உனது அற்புதமான எதிர்காலத்தை தாமதப்படுத்தும். உன்னை பாதுகாப்பதற்குப் பதிலாக, அவ்வாறு செய்வது உனக்கு அழிவை ஏற்படுத்தும். இது உன் முட்டாள்தனமாக இருக்காதா? இன்று நீ பேராசையுடன் அனுபவிப்பது உன் எதிர்காலத்தை அழித்துவிடும் முக்கிய விஷயமாக இருக்கிறது, அதேசமயம் நீ இன்று அனுபவிக்கும் வேதனையே உன்னைப் பாதுகாக்கும் முக்கிய விஷயமாக இருக்கிறது. உன்னை நீயே விடுவித்துக் கொள்ள கடினமானதாக இருக்கும் இச்சைகளுக்கு இரையாகிவிடாமல் இருப்பதைத் தவிர்க்க, மற்றும் அடர்ந்த மூடுபனிக்குள் தவறாகச் சென்று, சூரியனைக் கண்டுபிடிக்க இயலாமல் போகும் நிலையைத் தவிர்க்க நீ இந்த விஷயங்களைப் பற்றித் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அடர்ந்த மூடுபனி தெளிவானால், மகாநாளின் நியாயத்தீர்ப்பின் மத்தியில் நீ உன்னைக் காண்பாய். அதற்குள், எனது நாள் மனிதகுலத்தை நெருங்குகிறது. எனது நியாயத்தீர்ப்பிலிருந்து நீ எவ்வாறு தப்புவாய்? சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்தை உன்னால் எவ்வாறு தாங்க முடியும்? நான் எனது நிறைவை மனிதனுக்கு அளிக்கும்போது, அவன் அதைத் தனது நெஞ்சத்தில் பேணிப் பாதுகாக்காமல், அதை யாரும் கவனிக்காத இடத்தில் ஒதுக்கி வைக்கிறான். எனது நாள் மனிதனின் மீது இறங்கும்போது, அவனால் இனி என் மிகுதியைக் கண்டுபிடிக்க முடியாது, அல்லது நான் அவனிடம் நீண்ட காலத்திற்கு முன்பு பேசிய சத்தியத்தின் கசப்பான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாது. அவன் ஒளியின் பிரகாசத்தை இழந்து, இருளில் விழுந்ததால் அவன் அழுவான். இன்று நீங்கள் பார்ப்பது எனது வாயின் கூர்மையான பட்டயத்தை மட்டுமே. எனது கரத்தில் உள்ள தடியையோ அல்லது நான் மனிதனை எரிக்கும் அக்கினி ஜுவாலையையோ நீங்கள் பார்த்ததில்லை, அதனால்தான் எனது சமூகத்தில் நீங்கள் இன்னும் பெருமிதமாகவும் மட்டுமீறியும் இருக்கிறீர்கள். அதனால்தான், நீங்கள் இன்னும் எனது வீட்டில் என்னுடன் சண்டையிடுகிறீர்கள், நான் எனது வாயால் பேசியதை உங்கள் மனித நாவால் வாக்குவாதம் செய்கிறீர்கள். மனிதன் எனக்கு அஞ்சமாட்டான், அவன் இன்றும் என்னிடம் தொடர்ந்து பகைமையைக் காட்டுகிறான் என்றாலும், அவன் எந்தப் பயமும் இல்லாமல் இருக்கிறான். உங்கள் வாய்களில் அநியாயக்காரர்களின் நாவும் பற்களும் உள்ளன. உங்கள் சொற்களும் செயல்களும் ஏவாளைப் பாவம் செய்யத் தூண்டிய சர்ப்பத்தைப் போன்றவை. நீங்கள் ஒருவருக்கொருவர் கண்ணுக்கு கண் மற்றும் பல்லுக்குப் பல் கேட்கிறீர்கள், அந்தஸ்து, புகழ் மற்றும் ஆதாயத்தை நீங்களே கைப்பற்றுவதற்காக என் சமூகத்தில் நீங்கள் போராடுகிறீர்கள், ஆனாலும் நான் உங்கள் வார்த்தைகளையும் கிரியைகளையும் இரகசியமாகப் பார்க்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் எனது சமூகத்திற்கு வருவதற்கு முன்பே, உங்கள் இதயங்களின் ஆழத்தில் நான் சத்தம் எழுப்பியிருக்கிறேன். மனிதன் எப்போதுமே எனது கரத்தின் பிடியில் இருந்து தப்பித்து என்னால் கவனிக்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகிறான், ஆனால் நான் ஒருபோதும் அவனுடைய வார்த்தைகளிலிருந்தோ கிரியைகளிலிருந்தோ விலகிச் சென்றதில்லை. அதற்குப் பதிலாக, நான் மனிதனின் அநீதியைத் தண்டித்து, அவனுடைய கலகத்தனத்தின் மீது நியாயத்தீர்ப்பை வழங்கும் விதத்தில், அந்த வார்த்தைகளையும் செயல்களையும் எனது கண்களுக்குள் நுழைய நான் வேண்டுமென்றே அனுமதிக்கிறேன். ஆகவே, மனிதனின் வார்த்தைகளும் கிரியைகளும் இரகசியமாக எனது நியாயாசனத்திற்கு முன் உள்ளன, எனது நியாயத்தீர்ப்பு மனிதனை ஒருபோதும் விட்டுவிடுவதில்லை, ஏனென்றால் அவனுடைய கலகத்தனம் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனது ஆவியானவரின் சமூகத்தில் மனிதனால் சொல்லப்பட்ட அனைத்து வார்த்தைகளையும் மற்றும் செய்யப்பட்ட செயல்களையும் புடமிட்டுச் சுத்திகரிப்பதே எனது கிரியையாகும். இந்த வழியில்,[அ] நான் பூமியை விட்டுச் செல்லும்போது, மக்கள் இன்னும் என்னிடம் விசுவாசத்தைக் கடைபிடிப்பார்கள், மற்றும் எனது பரிசுத்த ஊழியக்காரர்கள் எனது கிரியையில் செய்வது போலவே எனக்கு ஊழியம் செய்வார்கள், பூமியில் எனது கிரியை முடியும் நாள் வரை எனது கிரியையைத் தொடர அனுமதிப்பார்கள்.

அடிக்குறிப்பு:

அ. மூல உரையில் “இந்த வழியில்” என்ற சொற்றொடர் இல்லை.

முந்தைய: இரட்சகர் ஏற்கனவே ஒரு “வெண் மேகத்தின்” மீது திரும்பியுள்ளார்

அடுத்த: நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக