இரட்சகர் ஏற்கனவே ஒரு “வெண் மேகத்தின்” மீது திரும்பியுள்ளார்

பல ஆயிரம் ஆண்டுகளாக, இரட்சகரின் வருகையைக் காண்பதற்காக மனிதன் ஏங்குகிறான். இரட்சகராகிய இயேசு, அவருக்காக ஏங்கிய மற்றும் அவருக்காக காத்திருந்த ஜனங்களின் மத்தியில், ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நேரில் காண்பதற்காக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் ஏங்குகிறான். இரட்சகர் திரும்பி வந்து மீண்டும் அவர்களுடன் ஒன்றிணைய வேண்டுமெனவும் மனிதன் ஏங்குகிறான். அதாவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனங்களிடமிருந்து பிரிந்த இரட்சகராகிய இயேசு திரும்பி வருவதற்கும், யூதர்களிடையே அவர் செய்த மீட்பின் கிரியையை மீண்டும் செய்வதற்கும், மனிதனிடம் இரக்கமுள்ளவராகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்றும் ஏங்குகிறான். மனிதனுடைய பாவங்களை மன்னித்து, மனிதனுடைய பாவங்களைச் சுமந்து, மனிதனுடைய எல்லா மீறுதல்களையும் தாங்கி, மனிதனை பாவத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென மனிதன் ஏங்குகிறான். மனிதன் எதற்காக ஏங்குகிறான் என்றால், இரட்சகராகிய இயேசு முன்பு போலவே இருக்க வேண்டும் என்று, அதாவது இரட்சகர் அன்பானவராக, கனிவானவராக, மரியாதைக்குரியவராக, மனிதனிடம் ஒருபோதும் கோபப்படாதவராக, மனிதனை ஒருபோதும் நிந்திக்காதவராக, ஆனால் மனிதனுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்பவராக, முன்பு போலவே, மனிதனுக்காகச் சிலுவையில் மரிப்பவராக இருக்க வேண்டுமென மனிதன் ஏங்குகிறான். இயேசு புறப்பட்டதிலிருந்து, அவரைப் பின்பற்றிய சீஷர்களும், அவருடைய நாமத்தில் இரட்சிக்கப்பட்ட எல்லா பரிசுத்தவான்களும், அவருக்காக மிகுதியாக ஏங்கிக் காத்திருக்கிறார்கள். கிருபையின் யுகத்தில் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் இரட்சிக்கப்பட்ட அனைவருமே, இரட்சகராகிய இயேசு ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி, எல்லா ஜனங்களுக்கும் முன்பாகத் தோன்றும் அந்த மகிழ்ச்சியான கடைசி நாட்களுக்காக, ஏங்குகிறார்கள். இன்று, இரட்சகராகிய இயேசுவின் நாமத்தை ஏற்றுக் கொள்ளும் அனைவரின் ஒருமித்த விருப்பமும் இதுதான். இட்சகராகிய இயேசுவின் இரட்சிப்பை அறிந்திருக்கும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, தாம் திடீரென வந்து நிறைவேற்றுவேன் என்று சொன்னதை நிறைவேற்ற வேண்டுமென ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்: “நான் புறப்பட்டபடியே திரும்பி வருவேன்.” சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததைத் தொடர்ந்து, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு உன்னதமானவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்க மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார் என்று மனிதன் விசுவாசிக்கிறான். இதைப் போலவே, இயேசு மீண்டும் ஒரு வெண்மேகத்தின் மீது (இந்த மேகமானது இயேசு பரலோகத்திற்குத் திரும்பியபோது ஏறிச்சென்ற அதே மேகத்தைக் குறிக்கிறது) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தவர்களின் மத்தியில் அதே உருவத்துடனும் யூத வஸ்திரங்களுடனும் இறங்கி வருவார். அவர் மனிதனுக்குத் தோன்றியபின், அவர்களுக்கு ஆகாரத்தைக் கொடுப்பார், மேலும் அவர்களுக்காக ஜீவத்தண்ணீரைப் பாயச்செய்வார் மற்றும் மனிதர்களிடையே கிருபையும் அன்பும் நிறைந்த ஒருவராக, தெளிவானவராக மற்றும் உண்மையானவராக ஜீவிப்பார். இத்தகைய கருத்துக்கள் அனைத்தையும் ஜனங்கள் நம்புகின்றனர். ஆயினும், இரட்சகராகிய இயேசு இதைச் செய்யவில்லை. மனிதன் எண்ணியதற்கு நேர்மாறாக அவர் செய்தார். அவர் திரும்பி வர வேண்டுமென ஏங்கியவர்களிடையே அவர் வரவில்லை. வெண்மேகத்தின் மீது வரும் போது எல்லா ஜனங்களுக்கும் அவர் காட்சியளிக்கவில்லை. அவர் ஏற்கனவே வந்துவிட்டார், ஆனால் மனிதன் இதை அறியாமல் அறிவில்லாதிருக்கிறான். ஒரு “வெண்மேகத்தின்” மீது (அந்த மேகமானது அவரது ஆவியாகிய மேகம், அவருடைய வார்த்தைகள், அவருடைய முழு மனநிலை மற்றும் அவருடைய எல்லாம்) அவர் இறங்கி வந்துவிட்டார் என்பதையும், கடைசி நாட்களில் தாம் உருவாக்கும் ஒரு ஜெயங்கொள்ளும் கூட்டத்தின் மத்தியில் இப்போது அவர் இருக்கிறார் என்பதையும் மனிதன் அறியாமலேயே, அவருக்காக அவன் காரணமில்லாமல் காத்திருக்கிறான். மனிதனுக்கு இது தெரியாது: பரிசுத்த இரட்சகராகிய இயேசு மனிதனிடம் நேசத்துடனும் அன்புடனும் இருந்தபோதிலும், அசுத்தமான மற்றும் தூய்மையற்ற ஆவிகள் வசிக்கும் அந்த “தேவாலயங்களில்” அவர் எவ்வாறு கிரியை செய்ய முடியும்? மனிதன் அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், பாவிகளுடைய மாம்சத்தை புசிப்பவர்களுடனும், இரத்தத்தைக் குடிப்பவர்களுடனும், அவர்களுடைய வஸ்திரங்களை உடுத்துபவர்களுடனும், தேவனை விசுவாசித்தப் பின்னரும் அவரை அறியாதவர்களுடனும், அவரைத் தொடர்ந்து சுரண்டுபவர்களுடனும் அவர் எவ்வாறு இருக்க முடியும்? இரட்சகராகிய இயேசு அன்பு நிறைந்தவர் என்பதையும், இரக்கத்தால் நிரம்பி வழிகிறார் என்பதையும், மீட்பால் நிரப்பப்பட்ட பாவநிவாரண பலி என்பதையும் மட்டுமே மனிதன் அறிந்திருக்கிறான். இருப்பினும், அவர் தான் தேவன் என்பதையும், அவர் நீதியுடனும், மாட்சிமையுடனும், கோபத்துடனும், நியாயத்தீர்ப்புடனும், அதிகாரம் உடையவராகவும், கண்ணியமானவராகவும் இருக்கிறார் என்பதையும் மனிதன் அறியாதிருக்கிறான். ஆகையால், மீட்பர் திரும்பி வர வேண்டுமென மனிதன் ஆவலுடன் ஏங்கினாலும், அவர்களுடைய ஜெபங்கள் “பரலோகத்தையே” அசைத்தாலும், இரட்சகராகிய இயேசுவை விசுவாசித்தும் அவரை அறியாத மனிதருக்கு அவர் காட்சியளிக்க மாட்டார்.

“யேகோவா” என்பது இஸ்ரவேலில் நான் கிரியை செய்கையில் நான் வைத்துக் கொண்ட நாமம் ஆகும். அதன் அர்த்தம் என்னவென்றால் மனிதன் மீது பரிதாபப்படவும், மனிதனை சபிக்கவும், மனிதனுடைய வாழ்வை வழிநடத்தவும் கூடிய இஸ்ரவேலரின் (தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்) தேவன் என்பதாகும். மாபெரும் வல்லமையைக் கொண்ட தேவன், ஞானம் நிறைந்தவர் என்பதாகும். “இயேசு” என்றால் இம்மானுவேல், அதாவது அன்பு நிறைந்த, இரக்கமுள்ள, மனிதனை மீட்டுக்கொள்ளும் பாவநிவாரணபலி என்று அர்த்தமாகும். அவர் கிருபையின் யுகத்துடைய கிரியையைச் செய்தார், மற்றும் அவர் கிருபையின் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அதாவது, யேகோவா மட்டுமே தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும், மோசேயின் தேவனும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரின் தேவனும் ஆவார். ஆகவே, தற்போதைய யுகத்தில், யூத ஜனங்கள் அல்லாமல், இஸ்ரவேலர் அனைவரும் யேகோவாவை வணங்குகிறார்கள். அவர்கள் பலிபீடத்தின் மீது அவருக்குப் பலியிட்டு, ஆசாரியர்களின் வஸ்திரங்களை அணிந்து தேவாலயத்தில் அவருக்குச் சேவை செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது யேகோவா மீண்டும் தோன்றுவது ஆகும். இயேசு மட்டுமே மனிதகுலத்தின் மீட்பர். அவர் மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுத்த பாவநிவாரண பலியாவார். அதாவது, இயேசுவின் நாமமானது கிருபையின் யுகத்தில் தோன்றியது. அது கிருபையின் யுகத்தில் மீட்பின் கிரியைக்காக வந்ததாகும். கிருபையின் யுகத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பைப் பெறுவதற்காக இயேசுவின் நாமம் வந்தது. மேலும், இது முழு மனிதகுலத்தின் மீட்பிற்குமான ஒரு குறிப்பிட்ட நாமமாகும். ஆகவே, இயேசு என்ற நாமம் மீட்பின் கிரியையைக் குறிக்கிறது. மேலும், கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது. யேகோவா என்ற நாமம் நியாயப்பிரமாணங்களின் கீழ் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நாமம் ஆகும். ஒவ்வொரு யுகத்திலும், கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், எனது நாமம் ஆதாரமற்றதாக இருக்கவில்லை. ஆனால் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது: ஒவ்வொரு பெயரும் ஒரு யுகத்தைக் குறிக்கிறது. “யேகோவா” என்பது நியாயப்பிரமாணத்தின் யுகத்தைக் குறிக்கிறது, இது இஸ்ரவேல் ஜனங்களால் தேவன் என்று அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. “இயேசு” என்பது கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது, மற்றும் கிருபையின் யுகத்தில் மீட்கப்பட்ட அனைவரின் தேவனுடைய நாமமாக இருக்கிறது. கடைசி நாட்களில் இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக மனிதன் ஏங்கி யூதேயாவில் அவர் கொண்டிருந்த அதே உருவத்தில் அவர் வருவார் என்று மனிதன் இன்னும் காத்திருக்கிறான் என்றால், ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் மீட்பின் யுகத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும் மற்றும் அதைத் தாண்டி வந்திருக்க முடியாது. மேலும், கடைசி நாட்கள் ஒருபோதும் வராது. இந்த யுகம் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஏனென்றால், இரட்சகராகிய இயேசு மனிதகுலத்தின் மீட்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் மட்டுமே இருக்கிறார். கிருபையின் யுகத்தில் உள்ள அனைத்து பாவிகளுக்காகவும் நான் இயேசுவின் நாமத்தை எடுத்தேன், ஆனால் அது முழு மனிதகுலத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் நாமம் அல்ல. யேகோவா, இயேசு, மேசியா அனைவருமே என் ஆவியானவரைக் குறிக்கிறார்கள் என்றாலும், இந்த நாமங்கள் எனது நிர்வாகத் திட்டத்தின் வெவ்வேறு யுகங்களை மட்டுமே குறிக்கின்றன, மற்றும் என்னை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. பூமியிலுள்ள ஜனங்கள் என்னை அழைக்கும் நாமங்கள் எனது முழு மனநிலையையும், என்னுடைய அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவை வெவ்வேறு யுகங்களில் நான் அழைக்கப்படும் வெவ்வேறு நாமங்கள் ஆகும். எனவே, இறுதி யுகம், அதாவது கடைசி நாட்களின் யுகம் வரும்போது, என் நாமம் மீண்டும் மாறும். நான் யேகோவா என்றோ, இயேசு என்றோ, அல்லது மேசியா என்றோ அழைக்கப்படமாட்டேன்—நான் வல்லமை பொருந்திய சர்வவல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படுவேன். இந்த நாமத்தின் கீழ் நான் முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பால் எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான்தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான்தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானங்கள் மற்றும் பூமி மற்றும் சமுத்திரங்கள் முழுவதிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளுக்கும் நான்தான் தேவன்.

இரட்சகர் கடைசி நாட்களில் வந்து, இன்னும் இயேசு என்று அழைக்கப்பட்டு, மீண்டும் யூதேயாவில் பிறந்து அங்கே அவருடைய கிரியையைச் செய்திருந்தால், நான் இஸ்ரவேல் ஜனங்களை மட்டுமே படைத்தேன், இஸ்ரவேல் ஜனங்களை மட்டுமே மீட்டுக்கொண்டேன் என்பதையும் புறஜாதியினருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் இது நிரூபிக்கும். “வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன் நான்” என்ற என் வார்த்தைகளுக்கு முரணாக இது இருக்காதா? நான் யூதேயாவை விட்டு புறஜாதியினரிடையே என் கிரியையைச் செய்கிறேன். ஏனென்றால் நான் இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் தேவன். கடைசி நாட்களில் நான் புறஜாதியினரிடையே தோன்றுகிறேன். ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய யேகோவா மட்டுமல்ல, ஆனால் அதற்கு மேலாக, புறஜாதியினரிடையே நான் தேர்ந்தெடுத்த அனைவரையும் சிருஷ்டித்தவன். நான் இஸ்ரவேல், எகிப்து, லெபனான் ஆகியவற்றை மட்டுமல்ல, இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட அனைத்து புறஜாதி தேசங்களையும் படைத்தேன். இதன் காரணமாக, நான் எல்லா உயிரினங்களுக்கும் கர்த்தராக இருக்கிறேன். நான் என் கிரியையின் தொடக்கப் புள்ளியாக இஸ்ரவேலைப் பயன்படுத்தினேன். யூதேயா மற்றும் கலிலேயாவை எனது மீட்பின் கிரியையின் கோட்டைகளாகப் பயன்படுத்தினேன். இப்போது நான் புறஜாதி தேசங்களைப் பயன்படுத்துகிறேன். அதில் இருந்து முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் இஸ்ரவேலில் இரண்டு கட்ட கிரியைகளைச் செய்தேன் (இந்த இரண்டு கட்ட கிரியைகளும் நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகும்). மேலும், இரண்டு கட்ட கிரியைகளை (கிருபையின் யுகம் மற்றும் ராஜ்யத்தின் யுகம்) இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட நிலங்கள் முழுவதிலும் செய்து வருகிறேன். புறஜாதி தேசங்களிடையே, நான் ஜெயம் பெறும் கிரியையைச் செய்து, யுகத்தை முடிப்பேன். மனிதன் எப்பொழுதும் என்னை இயேசு கிறிஸ்து என்று அழைத்தாலும், கடைசி நாட்களில் நான் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியிருக்கிறேன், புதிய கிரியையைத் தொடங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரியவில்லை என்றால், இரட்சகராகிய இயேசுவின் வருகையை மனிதன் தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்திருந்தால், நான் அந்த ஜனங்களை, என்னை நம்பாதவர்கள் என்றும், என்னை அறியாதவர்கள் என்றும், என் மீது தவறான நம்பிக்கை உடையவர்கள் என்றும் அழைப்பேன். அத்தகையவர்கள் பரலோகத்திலிருந்து இரட்சகராகிய இயேசுவின் வருகையைப் பார்க்க முடியுமா? அவர்கள் எனது வருகைக்காக காத்திருக்கவில்லை, யூதர்களுடைய ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். இந்த தூய்மையற்ற பழைய உலகத்தை நான் நிர்மூலமாக்க வேண்டுமென அவர்கள் காத்திருக்கவில்லை, மாறாக, அவர்கள் மீட்கப்பட இயேசுவின் இரண்டாவது வருகைக்காக ஏங்குகிறார்கள். இந்தத் தீட்டுப்பட்ட மற்றும் அநீதியான தேசத்திலிருந்து மனிதகுலம் முழுவதையும் மீட்க அவர்கள் இயேசுவை எதிர்நோக்குகிறார்கள். அத்தகையவர்கள், கடைசி நாட்களில் எனது கிரியையை முடிப்பவர்களாக எப்படி மாற முடியும்? மனிதனுடைய ஆசைகளால் என் விருப்பங்களை நிறைவேற்றவோ அல்லது என் கிரியையை நிறைவேற்றவோ இயலாது. ஏனென்றால், நான் முன்பு செய்த கிரியையை மனிதன் வெறுமனே போற்றுகிறான் அல்லது மதிக்கிறான் மற்றும் நான் எப்போதும் பழமையாகிப் போகாத புதிய தேவன் என்று அவன் அறியாதிருக்கிறான். நான் யேகோவா, இயேசு என்று மட்டுமே மனிதனுக்குத் தெரியும். மனிதகுலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கடைசி நாட்களின் தேவன் நான் என்பதை அவன் அறியாதிருக்கிறான். மனிதன் ஏங்கும் மற்றும் அறிந்த அனைத்தும் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களிலிருந்தே வருகின்றன. அது அவர்கள் கண்களால் பார்க்கக்கூடியது மட்டுமே ஆகும். இது நான் செய்யும் கிரியைக்கு ஏற்ப இல்லை, ஆனால் அதனுடன் ஒத்துப்போகாமல் இருக்கிறது. என்னுடைய கிரியை மனிதனுடைய கருத்துக்களின்படி நடத்தப்பட்டால், அது எப்போது முடிவடையும்? மனிதகுலம் எப்போது ஓய்வெடுக்கும்? ஏழாம் நாளான ஓய்வு நாளில் நான் எப்படி நுழைய முடியும்? நான் என் திட்டத்தின்படி கிரியை செய்கிறேன், என் நோக்கத்தின்படி கிரியை செய்கிறேன்—மனிதனுடைய நோக்கங்களின்படி கிரியை செய்வதில்லை.

முந்தைய: கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது

அடுத்த: சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக