விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்

மனிதன் தேவனை விசுவாசிக்கத் தொடங்கியதிலிருந்து எதை மனிதன் தனக்கென்று ஆதாயப்படுத்தியுள்ளான்? நீ தேவனைக் குறித்து என்ன தெரிந்து கொண்டிருக்கிறாய்? நீ தேவனை விசுவாசித்ததினால் எவ்வளவு மாறியிருக்கிறாய்? இன்றைக்கு, மனிதன் தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது அவனது ஆத்துமாவின் இரட்சிப்பிற்காகவும், அவனது உடல் நன்றாக இருப்பதற்காகவும், அல்லது தேவனை நேசிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையினைச் செழிப்பாக்கிக் கொள்வான் என்பதற்காகவும் அல்ல என இப்படி அநேகமானவற்றை நீங்கள் யாவரும் அறிந்து இருக்கிறீர்கள். இப்படியாக இருக்கும் வேளையில், நீ உன்னுடைய உடல் சார்ந்தவை நன்றாக இருப்பதற்காக அல்லது தற்காலிக சுகத்திற்காக தேவனை நேசிக்கிறேன் என்றும், இதற்கு மேல் நான் எதனையும் கேட்க மாட்டேன் என்கிற அளவிற்கு தேவனிடத்தில் கொண்டிருக்கும் உன் அன்பு அதனுடைய உச்சத்தைத் தொட்டு விட்டதாக இருந்தாலும், நீ தேடும் அந்த அன்பு அவ்வேளையிலும் கலப்படமான அன்பாக, தேவனுக்குப் பிரியமில்லாத ஒன்றாகவே காணப்படுகிறது. அவர்களது மந்தமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அல்லது அவர்களது இருதயங்களில் இருக்கின்ற வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தேவன் மீது தாங்கள் கொண்டிருக்கின்ற அன்பைப் பயன்படுத்துபவர்கள் சுகமான வாழ்க்கை வாழ பேராசைக் கொண்டவர்களாகவும், தேவனிடத்தில் மெய்யான அன்புகூரும்படி தேவனை உண்மையாகத் தேடாத வகையைச் சேர்ந்த ஜனங்களாக இருக்கின்றனர். இந்தவித அன்பு கட்டாயத்தின் பேரில் உண்டாகிறது, இது மனதின் இன்பத்திற்கான நாட்டமாகும், தேவனுக்கு இப்படிப்பட்ட அன்பு தேவையில்லை. அப்படியென்றால், உன்னுடைய அன்பு எப்படிப்பட்டது? எதற்காக தேவனிடம் அன்புகூருகிறாய்? தேவன் மீது எவ்வளவு மெய்யான அன்பைத் தற்பொழுது உனக்குள் கொண்டிருக்கிறாய்? உங்களில் பெரும்பாலானவர்களின் அன்பு மேற்சொல்லிய அன்பைப் போன்றே காணப்படுகின்றது. இந்த விதமான அன்பினால் முன்பிருந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ள மட்டுமே முடியும்; அது மாறாத நிலையை அடைய முடியாது அல்லது மனிதனுக்குள் ஆழமாக வேர்விட முடியாது. இந்த விதமான அன்பு மலரும் பூ ஒன்று கனி கொடுக்காமல் உதிர்ந்து விடுவதைப் போல் மட்டுமே இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இத்தகைய விதமாக தேவனை ஒரு கட்டத்தில் நேசித்துவிட்டு, உன்னை வழி நடத்துவதற்கு ஒருவரும் இல்லையென்றால், நீ விழுந்து போவாய். தேவனை நேசிக்கும் போது மட்டுமே உன்னால் தேவனை நேசிக்க முடிந்து, அதற்குப் பின் உன் வாழ்வின் மனநிலை மாற்றம் பெறாமல் இருக்கின்றது என்றால், நீ அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் மூடுதலில் இருந்து தப்பிக்க முடியாமல், சாத்தானின் கட்டுகள் மற்றும் சூழ்ச்சியில் இருந்து விடுபட முடியாதவனாக அப்படியே நின்று விடுவாய். இது போன்ற எவரையும் தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்திக் கொள்ள முடியாது; இறுதியில், அவர்களின் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் இன்னும் சாத்தானுக்கு சொந்தமானதாகவே இருக்கும். இது குறித்து எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட முடியாத அனைவரும் ஆரம்பத்தில் இருந்த இடத்திற்குத் திரும்புவார்கள், அதாவது, சாத்தானிடத்திற்குத் திரும்பிச் செல்வார்கள் மற்றும் தேவனிடத்தில் இருந்து வருகிற அடுத்த படியான தண்டனையைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்குச் செல்வார்கள். சாத்தானை உதறித் தள்ளி விட்டு அவனது ஆதிக்கத்தில் இருந்து தப்பி வருபவர்களே தேவனால் ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுபவர்கள். அவர்கள் அதிகாரப்பூர்வமாக ராஜ்யத்தின் மக்கள் மத்தியில் எண்ணப்பட்டிருக்கிறார்கள். ராஜ்யத்தின் மக்கள் இப்படித்தான் வருகிறார்கள். இந்த வகையான மனிதனாக நீயும் மாற விரும்புகிறாயா? நீயும் தேவனால் ஆதாயப்படுத்திக்கொள்ளப்பட விரும்புகிறாயா? நீயும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்து தேவனிடம் திரும்ப விரும்புகிறாயா? இப்பொழுது நீ சாத்தானுக்குரியவனா அல்லது ராஜ்யத்தின் ஜனமாக எண்ணப்பட்டவர்களில் ஒருவனாக இருக்கின்றாயா? இந்த விஷயங்கள் உனக்கு ஏற்கெனவே தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும், மேலும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த காலத்தில், அநேகர் கட்டுப்பாடற்ற குறிக்கோள்களுடனும் கருத்துக்களுடனும் தேடினர், அவர்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளின் விளைவாகத் தேடினர். இப்படிப்பட்ட பிரச்சினைகளை இப்போதைக்கு ஒதுக்கி வைப்போம்; நாம் தேவனுக்கு முன்பாக ஒரு சாதாரணமான நிலையினைக் கொண்டிருக்க வேண்டும், படிப்படியாக சாத்தானின் ஆதிக்கத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்று அதனால் தேவன் உங்களை ஆதாயப்படுத்தி, நீங்கள் தேவன் எதிர்பார்க்கின்றபடியான வாழ்க்கையை இந்த உலகில் வாழ உதவும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பதே இப்போதைய முக்கியமான தேவையாயிருக்கிறது. இந்த வழியாகத்தான் தேவனுடைய நோக்கங்களை உங்களால் நிறைவேற்ற முடியும். அநேகர் தேவனை விசுவாசிக்கிறார்கள், ஆனாலும் தேவன் எவற்றை விரும்புகிறார் அல்லது சாத்தான் எவற்றை விரும்புகிறான் என்பதை அறியாது இருக்கின்றனர். அவர்கள் குழப்பமான ஒரு வழியை நம்பி, அது செல்லும் வழியிலேயே செல்வதினால், ஓர் இயல்பான கிறிஸ்தவ வாழ்க்கையை ஒருக்காலும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் இயல்பான தனிப்பட்ட உறவுகளையும் பெற்றிருக்கவில்லை; தேவனுடன் சரியான உறவையும் கொண்டிருக்கவில்லை. மனிதனின் கஷ்டங்கள், மீறுதல்கள் மற்றும் பல காரணங்கள் தேவனுடைய சித்தத்திற்குத் தடையாக உள்ளன என்பதை இதன் மூலம் காணலாம். மனிதன் தேவனை விசுவாசிப்பதில் செல்ல வேண்டிய சரியான பாதையில் இன்னும் செல்லவில்லை, மனித வாழ்க்கையில் மெய்யான அனுபவத்திற்குள் செல்லவில்லை என்பதை நிரூபிக்க இதுவே போதுமானது. தேவனை விசுவாசிக்கும் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பது எதைக் குறிக்கிறது? தேவனுக்கு முன்பாக உன் இருதயத்தை எப்பொழுதும் அமைதலாக்கி தேவனுடன் ஓர் இயல்பான ஐக்கியத்தை அனுபவித்து, படிப்படியாக மனிதனில் என்ன குறை இருக்கின்றது என்பதை அறிந்து தேவனைக் குறித்து ஆழமான அறிவை மெதுவாகப் பெற்றுக் கொள்வதையே சரியான பாதையில் செல்வது என்பது குறிக்கின்றது. இதன் மூலமாக, உன் ஆவி புதிய நுண்ணறிவையும் புதிய பிரகாசிப்பித்தலையும் அனுதினமும் பெற்றுக் கொள்கிறது. உன் ஆர்வம் வளர்கின்றது, நீ சத்தியத்திற்குள் நுழைய முயற்சி செய்கிறாய், ஒவ்வொரு நாளும் புதிய வெளிச்சம் மற்றும் புதிய புரிதல் உண்டாகிறது. இந்தப் பாதையில் பயணிக்கும் போது, படிப்படியாக நீ சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று வாழ்க்கையில் வளருகிறாய். இப்படிப்பட்ட மக்கள் சரியான பாதையில் நுழைந்திருக்கின்றனர். உன்னுடைய நடைமுறை அனுபவங்களையும், நீ சென்ற உன் விசுவாசப் பாதையையும் சோதித்துப் பார். மேலே குறிப்பிட்டவற்றை நீ ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்பதைக் கண்டறிகிறாயா? சாத்தானின் ஆதிக்கத்தின் பிடிகளிலிருந்தும் சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்தும் எந்தக் காரியங்களில் விடுதலைப் பெற்று இருக்கிறாய்? இன்னும் சரியான பாதையில் செல்ல நீ ஆரம்பிக்கவில்லை என்றால் சாத்தானோடு நீ கொண்டிருக்கும் உறவு இன்னும் வேரோடு வெட்டப்படவில்லை என்றுதான் அர்த்தம். இப்படியாக உன் நிலை இருக்குமானால், தேவனிடம் அன்புகூருவதற்கான உனது தேடுதல் உன்னை நம்பகமான, ஒரே நோக்கமுடைய மற்றும் சுத்தமான அன்பிற்கு நேராக வழிநடத்துமா? தேவன் மீதான உன் அன்பு தடுமாற்றம் இல்லாததும் மனப்பூர்வமானதும் என்று நீ சொல்கிறாய், ஆனாலும் நீ சாத்தானுடைய கட்டுகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. நீ தேவனை முட்டாளாக்க முயற்சிக்கவில்லையா? தேவனிடம் நீ கொண்டிருக்கும் அன்பு கலப்படமில்லா நிலைக்கு வர வேண்டும் எனவும், தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட வேண்டும் எனவும், ராஜ்யத்தின் மக்களின் எண்ணிக்கைக்குள் வர வேண்டும் எனவும் நீ விரும்புவாயானால், தேவனை விசுவாசிக்கும் சரியான பாதையில் முதலில் நீ உன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முந்தைய: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 29

அடுத்த: சீர்கேடான மனிதன் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியில்லாதவன்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக