தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 45

அக்டோபர் 20, 2022

இரட்சகர் கடைசி நாட்களில் வந்து, இன்னும் இயேசு என்று அழைக்கப்பட்டு, மீண்டும் யூதேயாவில் பிறந்து அங்கே அவருடைய கிரியையைச் செய்திருந்தால், நான் இஸ்ரவேல் ஜனங்களை மட்டுமே படைத்தேன், இஸ்ரவேல் ஜனங்களை மட்டுமே மீட்டுக்கொண்டேன் என்பதையும் புறஜாதியினருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் இது நிரூபிக்கும். "வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன் நான்" என்ற என் வார்த்தைகளுக்கு முரணாக இது இருக்காதா? நான் யூதேயாவை விட்டு புறஜாதியினரிடையே என் கிரியையைச் செய்கிறேன். ஏனென்றால் நான் இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் தேவன். கடைசி நாட்களில் நான் புறஜாதியினரிடையே தோன்றுகிறேன். ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய யேகோவா மட்டுமல்ல, ஆனால் அதற்கு மேலாக, புறஜாதியினரிடையே நான் தேர்ந்தெடுத்த அனைவரையும் சிருஷ்டித்தவன். நான் இஸ்ரவேல், எகிப்து, லெபனான் ஆகியவற்றை மட்டுமல்ல, இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட அனைத்து புறஜாதி தேசங்களையும் படைத்தேன். இதன் காரணமாக, நான் எல்லா உயிரினங்களுக்கும் கர்த்தராக இருக்கிறேன். நான் என் கிரியையின் தொடக்கப் புள்ளியாக இஸ்ரவேலைப் பயன்படுத்தினேன். யூதேயா மற்றும் கலிலேயாவை எனது மீட்பின் கிரியையின் கோட்டைகளாகப் பயன்படுத்தினேன். இப்போது நான் புறஜாதி தேசங்களைப் பயன்படுத்துகிறேன். அதில் இருந்து முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் இஸ்ரவேலில் இரண்டு கட்ட கிரியைகளைச் செய்தேன் (இந்த இரண்டு கட்ட கிரியைகளும் நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகும்). மேலும், இரண்டு கட்ட கிரியைகளை (கிருபையின் யுகம் மற்றும் ராஜ்யத்தின் யுகம்) இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட நிலங்கள் முழுவதிலும் செய்து வருகிறேன். புறஜாதி தேசங்களிடையே, நான் ஜெயம் பெறும் கிரியையைச் செய்து, யுகத்தை முடிப்பேன். மனிதன் எப்பொழுதும் என்னை இயேசு கிறிஸ்து என்று அழைத்தாலும், கடைசி நாட்களில் நான் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியிருக்கிறேன், புதிய கிரியையைத் தொடங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரியவில்லை என்றால், இரட்சகராகிய இயேசுவின் வருகையை மனிதன் தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்திருந்தால், நான் அந்த ஜனங்களை, என்னை நம்பாதவர்கள் என்றும், என்னை அறியாதவர்கள் என்றும், என் மீது தவறான நம்பிக்கை உடையவர்கள் என்றும் அழைப்பேன். அத்தகையவர்கள் பரலோகத்திலிருந்து இரட்சகராகிய இயேசுவின் வருகையைப் பார்க்க முடியுமா? அவர்கள் எனது வருகைக்காக காத்திருக்கவில்லை, யூதர்களுடைய ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். இந்த தூய்மையற்ற பழைய உலகத்தை நான் நிர்மூலமாக்க வேண்டுமென அவர்கள் காத்திருக்கவில்லை, மாறாக, அவர்கள் மீட்கப்பட இயேசுவின் இரண்டாவது வருகைக்காக ஏங்குகிறார்கள். இந்தத் தீட்டுப்பட்ட மற்றும் அநீதியான தேசத்திலிருந்து மனிதகுலம் முழுவதையும் மீட்க அவர்கள் இயேசுவை எதிர்நோக்குகிறார்கள். அத்தகையவர்கள், கடைசி நாட்களில் எனது கிரியையை முடிப்பவர்களாக எப்படி மாற முடியும்? மனிதனுடைய ஆசைகளால் என் விருப்பங்களை நிறைவேற்றவோ அல்லது என் கிரியையை நிறைவேற்றவோ இயலாது. ஏனென்றால், நான் முன்பு செய்த கிரியையை மனிதன் வெறுமனே போற்றுகிறான் அல்லது மதிக்கிறான் மற்றும் நான் எப்போதும் பழமையாகிப் போகாத புதிய தேவன் என்று அவன் அறியாதிருக்கிறான். நான் யேகோவா, இயேசு என்று மட்டுமே மனிதனுக்குத் தெரியும். மனிதகுலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கடைசி நாட்களின் தேவன் நான் என்பதை அவன் அறியாதிருக்கிறான். மனிதன் ஏங்கும் மற்றும் அறிந்த அனைத்தும் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களிலிருந்தே வருகின்றன. அது அவர்கள் கண்களால் பார்க்கக்கூடியது மட்டுமே ஆகும். இது நான் செய்யும் கிரியைக்கு ஏற்ப இல்லை, ஆனால் அதனுடன் ஒத்துப்போகாமல் இருக்கிறது. என்னுடைய கிரியை மனிதனுடைய கருத்துக்களின்படி நடத்தப்பட்டால், அது எப்போது முடிவடையும்? மனிதகுலம் எப்போது ஓய்வெடுக்கும்? ஏழாம் நாளான ஓய்வு நாளில் நான் எப்படி நுழைய முடியும்? நான் என் திட்டத்தின்படி கிரியை செய்கிறேன், என் நோக்கத்தின்படி கிரியை செய்கிறேன்—மனிதனுடைய நோக்கங்களின்படி கிரியை செய்வதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க