மெய் கிறிஸ்துவுக்கும் கள்ளக்கிறிஸ்துக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை என்னால் அறிய முடியும்

டிசம்பர் 13, 2022

முக்கிய கதாபாத்திரம் கர்த்தருடைய தோற்றத்தை எப்போதும் நம்புகிற ஒரு பக்தியுள்ள இளம் கிறிஸ்தவள். ஆனால் கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவனாக ஏற்கனவே திரும்பி வந்திருக்கிறார் என்று அவளுடைய அம்மா சாட்சி பகரும்போது, அவள் மனப் போராட்டத்திற்கு உள்ளாகிறாள். கடைசிக்காலத்தில் கள்ளக்கிறிஸ்துக்கள் தோன்றுவார்கள் என்று அவளுடைய போதகர் எப்போதும் கூறுகிறார், அதனால், அதை ஆராய்ந்தால் தவறாக வழிநடத்தப்பட்டுவிடுவோமோ என்று அவள் பயப்படுகிறாள். ஆனால் சர்வவல்லமையுள்ள தேவன்தான் உண்மையிலேயே திரும்பி வந்த கர்த்தராகிய இயேசு என்பதை ஆராயவில்லை என்றால், கர்த்தருடைய வருகையை வரவேற்கும் தனது வாய்ப்பை அவள் தவறவிட மாட்டாளா? இந்த போராட்டத்தின் மூலம், மெய்யான வழியை ஆராய்வதற்கு தேவனுடைய சத்தத்தைக் கேட்பதுதான் முக்கியம் என்பதையும், அவள் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தால், அவளால் கர்த்தரை வரவேற்க முடியாது என்பதையும் அவள் புரிந்துகொள்கிறாள். அவள் அதைத் தேடவும் ஆராயவும் முடிவு செய்கிறாள். அவள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, இறுதியாக தேவனுடைய சத்தத்தை அடையாளம் காண்கிறாள்; ஆகையால் அவள் கர்த்தருடைய தோற்றத்தை வரவேற்கிறாள். கள்ளக் கிறிஸ்துவைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்போது, கர்த்தருடைய வருகையை நம்மால் எப்படி வரவேற்க முடியும்? இந்த வீடியோவில் அதற்கான பதில் உள்ளது.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க