Christian Movie Trailer 2022 | பரலோக ராஜ்யத்தைக் குறித்த என் கனவு (Tamil Subtitles)
ஜூலை 22, 2022
தென் கொரிய போதகர் ஒருவர், கர்த்தருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது, கர்த்தர் திரும்பி ஏற்கனவே திரும்பிவந்திருக்கிறார் என்று சாட்சி பகருகிற, சீனாவில் தோன்றியிருக்கிற கிழக்கத்திய மின்னலைப் பற்றித் தெரிந்துகொள்கிறார். அவர் மெய்யான வழியை ஆராய சீனா செல்கிறார். பல தடைகளுக்குப் பிறகு அவரால் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளை வாசிக்க முடிகிறது, ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் மூலம் கர்த்தருடைய சத்தத்தை அவர் அடையாளம் கண்டுகொண்ட உடனே, அவர் சிசிபி அரசாங்கத்தால் திடீரென கைது செய்யப்பட்டு கொரியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை வாசிக்க முடியாமல், மிகவும் வருத்தமாகவும், விரக்தியாகவும் உணர்கிறார்…. ஒரு நாள் திடீரென்று சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் சுவிசேஷ இணையதளத்தைக் கண்டுபிடித்து மீண்டும் திருச்சபையுடன் தொடர்பை ஏற்படுத்தினார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் சாட்சியளிப்பவர்களின் சாட்சி மற்றும் ஐக்கியத்தின் மூலம், சர்வவல்லமையுள்ள தேவனே கர்த்தராகிய இயேசுவின் வருகை என்பதை அவர் முழுமையாக தீர்மானிக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசி நாட்களின் கிரியையை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார் மற்றும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கான பாதையைக் கண்டுபிடிக்கிறார். இறுதியாக, பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கான அவருடைய வாய்ப்பு நிஜமாகிறது.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்